Contact us at: sooddram@gmail.com

 

சித்திரை 2013 மாதப் பதிவுகள்

ஏப்ரல் 30, 2014

ஜேவிபியின் தலைவர்

புதிய குமார என்னதான் செய்யப் போகின்றார்.....?

(சாகரன்)

ஏப்ரல் 27 ம் திகதி புலம் பெயர் தேசம் ஒன்றில் நடைபெற்ற ஜே.வி.பி. இன் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஜே.வி.பி. இன் புதிய தலைவராக அண்மையில் அனுர குமார திசநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார். ரோகண விஜய வீர, பிரேமதாச அரசாங்கத்தினால் கொல்லப்பட அப்போதைய மத்திய குழுவில் அங்கம் வகித்தவர்களில் உயிர் தப்பியவர் சோமவன்ச அமரசிங்க  மாத்திரமே. இவர் அன்றைய காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிக செல்வாக்குடன் விளங்கிய ஐ.தே கட்சியின் சிறீசென குரே யின் ஆசீர்வாதத்துடன் வெளிநாடு தப்பிச் சென்றார். பின்பு இவர் நாடு திரும்பாமலே ஜனநாயக நீரோடையில் இணைந்த ஜேவிபி யின் தலைவராக 1995 இல் தெரிவு செய்யப்பட்டார். கிட்டத்தட்ட 20 வருடங்களாக தலைமைப் பொறுப்பில் இருந்த காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் கூட ஜேவிபி வளரச்சியடையாது மட்டும் அல்லாது இறங்கு முகமாகவே அதன் வளர்ச்சி இருந்து வந்திருக்கின்றது. (மேலும்......)

ரயில் விபத்தில் 75 பேர் காயம்: ரயில் சேவைகள் பாதிப்பு

குருநாகல் பொத்துஹெர எனுமிடத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வவுனியா அதிசொகுசு ரயிலிலேயே ரஜரட்ட ரயில் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமிக்ஞை கோளாறு காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த அனர்த்தத்தினால் வடபகுதிக்கான ரயில் சேவைகள் முற்றாக சீர்குலைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

சூரிச் மாநிலத்தில் மே தின நிகழ்வுக்கு "புளொட்" ஏற்பாடு!!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் எதிர்வரும் மே 01ஆம் திகதியன்று (01.05.2014) கலந்து கொண்டு நடத்தும் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வினில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் பங்கேற்று உரிமைக்குரல் கொடுக்கவுள்ளனர். இந்த நிகழ்வின் போது தமிழ் இனத்தின்;பிரச்சனைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மறுக்கப்பட்டு வரும் இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கை பதற்ற சூழ்நிலையில் வைத்திருக்கும் அரசின் திட்டமிட்ட செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும், அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே! போன்ற கோரிக்கைகள் அடங்கிய சுலோகங்களை தாங்கிய வண்ணம் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், மற்றைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் மேதின நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். (மேலும்......)

தீர்க்கமான முடிவெடுக்க கூட்டமைப்பு இன்று கூடுகிறது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்க்கமான முடிவெடுப்பதற்காக கட்சியின் வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் இன்று புதன்கிழமை(30) திருகோணமலையில் கூடவுள்ளனர். திருகோணமலை நகரசபை மண்டபத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த முக்கிய சந்திப்பில் கூட்டமைப்பின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண அமைச்சர்கள், கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் உட்பட கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கட்சியாகப் பதிவு செய்வதா, இல்லையா என்பது உட்பட வடக்கு, கிழக்கின் சமகால நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடி முடிவெடுப்பதற்காக கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமே செவ்வாய்க்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. (மேலும்......)

பெண் வேடத்தில் மறைந்திருந்த எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபர் கைது

வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாஇ குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்ற இந்த சந்தேகநபர், வவுனியா, குட்ஷெட் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா பொலிஸாருக்கு கிடைக்க புலனாய்வுத் தகவலை அடுத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இவர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து பொய் முடியிட்டு தொப்பி அணிந்திருந்ததாக பொலிஸார் கூறினர். ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இம்மாதம் முதலாம் திகதி, அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி இரவு 11 மணியளவில், இவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, நேட்டோவின் இராணுவ செயற்பாடுகள் குறித்து ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் நெருக்கடிக்கு மத்தியில் ரஷ்ய எல்லைப் பகுதிக்கு அருகில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க மற்றும் நேட்டோ இராணுவ செயற்பாடுகள் அதிகரித்திருப்பது குறித்து ரஷ்யா கவலை தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் நேட்டோவின் ஆத்திரமூட்டும் கருத்துகளுக்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் கண்டனம் வெளியிட்டுள்ளார். கிழக்கு உக்ரைனில் ஒரு டஜனுக்கும் அதிகமான நகரங்களில் பல கட்டிடங்களையும் ரஷ்ய ஆதரவு செயற்பாட்டாளர்கள் முற்றுகையிட்டிருப்பதோடு ஸ்லோவின்ஸ் நகரில் இருக்கும் ஏழு ஐரோப்பிய இராணுவ அவதானிப்பு கட்டிடங்களையும் ஆக்கிரமித்துள்ளனர். இதற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் புதிதாக 15 இலக்குகள் மீது பொருளாதார தடைகளை விதித்திருப்பதோடு அமெரிக்காவும் அதனை பின்பற்றி தடைகளை விதித்துள்ளது. இதில் அமெரிக்கா ஏழு ரஷ்ய தனி நபர்கள் மற்றும் 17 நிறுவனங்களை இலக்குவைத்து தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருங்கியவர்களே இந்த தடைக்கு உள்ளாகியுள்ளனர். அமெரிக்கா, போலாந்து மற்றும் பல்டிக் நாடுகளுக்கு 600 துருப்புகளை அனுப்பியுள்ளது. தவிர, நேட்டோ படைக்கு மேலதிக துருப்புகளை வழங்கியுள்ளது. மறுபுறத்தில் உக்ரைன் எல்லையில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய படைகள் தனது நிரந்தர தளத்திற்கு செல்லுபடி அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனினும் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமிக்காது என n'hய்கு உறுதி அளித்ததாக பென்டகன் குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 29, 2014

Vinayagam The Deadly Agent Of The Defeated LTTE

By Camelia Nathaniel

Vinayagam is the mastermind behind the Central Bank bomb blast. When Sri Lanka dismantled the LTTE killing machine in May 2009, the bulk of the LTTE leaders and members that experienced the suffering of conflict regretted and repented. In rehabilitation, when they interacted with other communities for the first time, they realized there was no real difference between the Sinhalese, Muslims and Tamils. The LTTE cadres admitted they had been indoctrinated to hate the Sinhalese, Muslims and even the Indians. Nonetheless, a handful of LTTE terrorist leaders who evaded the security measures and fled the country harboured the prejudices and suspicions against the State and the other communities. Although they personally experienced the futility of war, to survive they linked up with the existing LTTE international networks that had supported the fight. As they had skills only in crime and terrorism, rather than lead mainstream lives, they started to reorganize the LTTE. (more.....)

இணைந்து செயற்படவேண்டும்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இணைத்தலைமை (டக்ளஸ் தேவானந்தா – சி.வி.விக்னேஸ்வரன்) ஏற்படுத்தப்பட்டது போல மத்திய அரசும் வடக்கு அரசும் இணைந்து செயற்படவேண்டும் என நான் எண்ணுகின்றேன் என்று வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா தனது கன்னியுரையில் தெரிவித்தார். வடமாகாண முதலமைச்சரினை இங்குள்ளவர்கள் தவறான வழிகளில் இட்டுச் செல்கின்றனர். அவரது செயற்பாடுகளை குழப்புகின்றனர் என்று தெரிவித்தார். மேலும் வடமாகாண சபையில் உள்ளதை ஒழுங்காக செய்த பின்னர் தொடர்ந்து இல்லாது பற்றி கதைப்போம். அதற்கு நாங்களும் ஆதரவு தருவோம். 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரங்கள் உள்ளிட்டவை பெற்றுக்கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சியினராகிய நாங்களும் ஆதரவு தருவோம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கின்ற போதும், வடமாகாண சபையில் இருந்து செல்கின்ற கடிதங்கள் ஆங்கிலத்திலேயே செல்கின்றன. ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் தறுதலை ஆசிரியர்களை நியமிக்க வேண்டாம் எனத் தெரிவித்திருந்தார். அது தவறானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் தொண்டர் ஆசிரியர்களை அவர்களின் தகைமைக்கேற்பவே நியமித்தோம் என்றார். இதன்போது, குறுக்கிட்ட சிவாஜிலிங்கம் ஏன் அதனை தொண்டர் ஆசிரியர்கள் மட்டும் என்று சொல்கின்றீர்கள்? ஏனைய ஆசிரியர்கள் நியமனங்களிலும் அவ்வாறான நியமனங்கள் அமையப்பெற்றன என்றார்.

இலங்கையின் சமாதானத்துக்கான உதவிகளை வழங்க தென்னாபிரிக்கா தயார்

இலங்கையின் சமாதான நடவடிக்கைகளுக்குத் தேவையான உதவிகளை வழங்க தாம் தயார் என்று தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.  கடந்த வருடம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தென்னாபிரிக்க ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தென்னாபிரிக்காவின் ஆளுங்கட்சியான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் துணைத் தலைவரும் தென்னாபிரிக்காவின் விசேட சமாதானத் தூதுவருமான சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார். இலங்கை மக்களுக்காக இவ்வாறானதொரு ஒத்துழைப்பை நல்குவதற்கு எம்மைத் தேர்ந்தெடுத்தமை எமக்கு கிடைத்த கௌரவமாகும். அவர்களுக்கு சொல்வதற்காக எம்மிடம் சிறந்தவொரு கதை உள்ளது. அதை இலங்கையர்கள் மிகவிரைவில் அறிந்துகொள்வர் என ரமபோசா தெரிவித்துள்ளார். அத்துடன், மிகக் குறுகிய காலத்துக்குள் தென்னாபிரிக்காவின் விசேட சமாதான தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்ய தயாராக உள்ளது என்றும் சிறில் ரமபோசா மேலும் கூறினார்.

யாழ்.மாநகர சபை ஓகஸ்ட் கலைக்கப்படும்

யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட்மாதம் கலைக்கப்படவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா இன்று திங்கட்கிழமை(28) தெரிவித்தார். யாழ். மாநகர சபையில் தற்காலிக தொழிலாளர்களாக கடமையாற்றிய 87 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ்.மாநகர சபையில் இன்று திங்கட்கிழமை(28) நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்.மாநகர சபை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கலைக்கப்படாலும், அடுத்த ஆட்சி வரும் வரையில் மாநகர சபை செயற்படும். உங்கள் தொழிலுக்கும் தொழில் தருநருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும். அத்துடன் மக்களின் தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும். நேர்மையான, நடைமுறைச் சாத்தியமான அரசியலை நான் பின்பற்றிக் கொண்டு வருகின்றேன். தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நானும் ஒரு வகையில் காரணம். ஒரு காலகட்டத்தில் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவன் என்ற காரணத்தினால் மக்களின் கருத்துக்களுடன் சேர்ந்து போவதற்கு இணங்கி வருகின்றேன். இன்று வழங்கப்படும் நியமனங்கள் எவரின் அழுத்தத்தினாலும் வழங்கப்படவில்லை என்பதனை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதார தடை - ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி; ஒபாமா தனது ஆசிய பயணத்தின் முதல்கட்டமாக ஜப்பான் வந்துள்ளார். அப்போது அவர் அந்நாட்டுப் பிரதமர் 'pன்சோ அபேவுடன் இணைந்து செய்தியா ளர்களை சந்திந்தப்போது கூறியதாவது:- ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு தேவையான ஆதரவு கிடைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். கிழக்கு உக்ரைனில் பதற்றத்தை தணிப்பதற்காக, கடந்த வாரம் nஜனீவாவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரஷ்யா பின்பற்றவில்லை. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மூலம் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துவரும் நடவடிக்கைகளில் இருந்தும் அந்நாடு பின்வாங்கவில்லை. சர்ச்சைக்குரிய அந்த தீவுக் கூட்டங்கள், வரலாற்று ரீதியாக ஜப்பான் ஆளுகையின் கீழ் இருந்துள்ளன. இப்பிரச்சினை தொடர்பாக ஜப்பானுக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தல் எழும் பட்சத்தில், அந்நாட்டுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஜப்பானுக்கு ஆதரவாகவே அமெரிக்கா செயல்படும். இந்த விவகாரத்தில் ஒருதலைபட்சமாக முடிவெடுப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அமைதியான முறையில் இதற்கு தீர்வு காண முயல வேண்டும் என்று ஒபாமா கூறியுள்ளார்.

ஏப்ரல் 28, 2014

நெடியவன் தலைமறைவு; நோர்வேயில் தேடுதல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டவர் எனக் கூறப்படும் பேரின்பநாயகம் சிவபரனை (நெடியவன்) கைது செய்வதற்கான சிவப்பு அறிவித்தல், சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்பட்டதை அடுத்து நோர்வேயில் அவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இடங்களிலிருந்து தலைமறைவாகியுள்ளார் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நெடியவனை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையில் நோர்வே பாதுகாப்பு தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் என்றும் இலங்கை பாதுகாப்பு தரப்பினரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன. சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவித்தலை அடுத்து, நோர்வேயில் நெடியவன் அடிக்கடி சென்றுவரும் இடங்கள் பாதுகாப்பு தரப்பினரால் சோதனையிடப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளார் என நோர்வே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நோர்வேயின் அனைத்து விமான நிலையங்கள் உள்ளிட்ட நாட்டை விட்டு வெளியேறும் இடங்கள் அனைத்திலும் நெடியவனைத் தேடி பாதுகாப்பு தரப்பினர் வலைவிரித்துள்ளதாக மேற்படி செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடியவன் உட்பட விடுதலை புலிகளின் வெளிநாட்டு பிரிவினருக்கு எங்கே வரும் சிக்கல்?

இலங்கை அரசு, பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக வெளிநாடுகளில் உள்ள 40 பேரின் பெயர்களை சர்வதேச போலீஸ் இன்டர்போலிடம் கொடுத்ததையடுத்து, அதில் சிலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுகளில் ஒன்றின் தலைவரான நெடியவன் எனப்படும் பேரின்நாயகம் சிவபரன் தொடர்பாக நார்வே அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடக்கின்றன. இன்டர்போல் மூலம் ‘சிவப்பு எச்சரிக்கை’ வழங்கப்பட்டுள்ள 40 பேரில், முதல் கட்டமாக 8 பேர் தற்போது வசிக்கும் நாடுகளுடன், இலங்கை வெளியுறவு அமைச்சு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. அந்த 8 பேரில் நெடியவனும் ஒருவராக உள்ளார். நார்வே நாட்டு வெளியுறவுத்துறையின் உள்துறை விவகாரங்களை கவனிக்கும் செயலாளர் Morten Hψglund, இலங்கை அரசின் கோரிக்கையை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக தமது அமைச்சு ஆராய்ந்து வருவதாக, நார்வே அரசு வானொலி NRK-க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.(மேலும்......)

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கை அரசியல் சட்டத்திலிருந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான பிரேரணை வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டது. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன் சமர்ப்பித்த தனிநபர் அவசர பிரேரணையே திங்கட்கிழமை(28) நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்வதற்கென்றே காலத்துக்கு காலம் ஆட்சி பீடமேறும் சிங்கள பேரினவாத அரசுகளால் திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசியல் சட்டத்திலிருந்தே நீக்க வேண்டும் என்றே அந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பிரேரணைக்கும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி யினரின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியிலும் இன்று (28.04.2014) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.1979 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த சிங்கள பௌத்த பேரினவாதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தால் 03 வருடங்களுக்கு என்று மட்டும் கொண்டு வரப்பட்ட குறித்த பயங்கரவாத தற்காலிக ஏற்பாட்டுச்சட்டம் அதனை தொடர்ந்து வந்த சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் 1982 ஆம் 1988 ஆம் ஆண்டுகளில் நிரந்தரச்சட்டமாக்கப்பட்டது.

சிங்கள அடிப்படை வாதிகளின் சிறைக்கைதியாக அரசாங்கம் - வாசுதேவ நாணயக்கார

சிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாகியுள்ள அரசாங்கம் வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காது அடிமைப்படுத்தி வைத்துள்ளது எனக் குற்றம் சாட்டும் அரசின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார வடக்கில் படையினர் வகை தொகையின்றி காணிகளை கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார். (மேலும்......)

நேற்று பிரசுரித்த கட்டுரையில் 'ஹோட்டல் ஏலகிரி’ பற்றி குறிப்பிட்டிருந்தது பற்றி பலரும் விசாரித்திருந்தார்கள் அக் கட்டுரை பற்றி. அதனால் இக் கட்டுரையை பிரசுரிக்கின்றோம்

நெகிழ வைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’

இல்லாதவர்களுக்கு விலை இல்லை... ஏழைகளுக்கோ பாதி விலை..!

(ஜெ.பாரதி)

'இப்படியும் நல்லவங்க உலகத்துல இருக்காங்களா..!’ என்று ஆச்சர்யப்பட வைப்பார்கள் சிலர். அந்த வரிசையில் இடம்பிடித்து உயர்ந்து நிற்கிறார்கள் சுஜாதா - நாகராஜ் தம்பதி! வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பு அருகே ஹோட்டல் வைத்திருக்கும் இந்த தம்பதி... மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர் என்று பலருக்கும் தினம்தோறும் இலவசமாகவே உணவைத் தந்துவருகிறார்கள். இதுமட்டுமா... குறைவான வருமானத்தை ஈட்டும் தொழிலாளர்கள் மற்றும் ஏழை மாணவர்களுக்கு... பாதி விலைதான்! (மேலும்......)

புனிதர்கள்

போப் ஜான் பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோருக்கு, வாடிகனில், நேற்று முன்தினம், புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. ஏசுநாதர் காட்டிய வழியில், நன்னெறியில் வாழ்ந்து, அற்புதங்கள் நிகழ்த்தும் வல்லமை பெற்ற கிறிஸ்தவ பெரியவர்களுக்கு, புனிதர் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் ஆலயம் எழுப்பி, அவரை வழிபட கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில், வாழ்நாளின் போதும், இறப்புக்கும் பின்பும் அற்புதங்கள் நிகழ்த்திய முன்னாள் போப் இரண்டாவது ஜான்பால் மற்றும் போப் 23வது ஜான் ஆகியோர், நேற்று முன்தினம், புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். வாடிகன் நகரில் நடந்த பிரமாண்ட விழாவில், போப் பிரான்சிஸ் தலைமையில் நடந்த பிரார்த்தனையின் போது, ஜான்பால் மற்றும் ஜான் ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பதவி விலகிய முன்னாள் போப், பெனிடிக்ட் உட்பட, 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 27, 2014

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியண்டா! (கடிதத் தொடர் - 4)

(அ. வரதராஜப்பெருமாள்)

முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவின் சர்வாதிகாரத்துக்கு எதிராக நீதி கேட்டு இந்நாள் ஜனாதிபதி மஹிந்த அவர்களும் ஜெனீவா சென்று முறையிட்ட ஒருவர்தான். ஆனால், இங்கு எனது பிரதானமான அரசியற் கேள்வி என்னவென்றால், இந்தியா,  சர்வதேசங்கள் என பயணங்கள் புரியும் தமிழ்த் தேசியக்காரர்கள், அதேயளவு அக்கறையை இலங்கைக்குள் ஏன் காட்டவில்லை என்பதுதான். உள்ளுரில் உழாத மாடு வெளியூரில் மட்டும் உழுது விடுமா என்று தமிழில் ஒரு பழம்பெரும் கேள்வியுண்டு. இலங்கைக்கு உள்ளேயே இருக்கிற சிங்கள அரசியற் தலைவர்கள், சிங்களப் பேராசிரியர்கள், சிங்கள வக்கீல்கள், சிங்கள எழுத்தாளர்கள், சிங்களக் கலைஞர்கள்,  சிங்கள சமூக நிறுவனங்கள், சிங்கள மதத் தலைவர்கள் போன்றவர்களின் மத்தியில் ஆதரவு தேட வேண்டும், அவர்களின் அநுதாபத்தைத் திரட்ட வேண்டும் என்ற அக்கறையும் உண்மையான தொடர்ச்சியான ஈடுபாடும் ஏன் தமிழ்த் தேசியக்காரர்களிடம் இல்லை?  (மேலும்......)

அரசுடன் ஒத்துழைக்க தயார்!

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதிபடத் தெரிவிப்பு

அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வடமாகாண மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தான் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொள்ளுமேயானால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்க நாங்கள் பின் நிற்கமாட்டோம். சகல விடயங்களிலும் எமது ஒத்துழைப்பை வழங்குவோம் என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்ட கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றபோது இணைத்தலைவராக பங்குகொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எமது மாகாண மக் கள் மற்றைய மாகாண மக்கள் போலல்ல. அவர்கள் போரின் உக்கிரத்தில் இருந்து விடுபட்டு வந்துள்ளார்கள். அவர்களின் பிரச்சினைகளும் தேவைகளும் விசேடமானதும் தனித்துவமானவையுமாகும். எல்லோருக்கும் ஒரே அளவுப் பாதணிகள் பொருந்தும் என்று நினைப்பது முறையாகாது என்பதை அன்று ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் காட்டினேன். எமது முடிவை மாற்றி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பங்கு பற்ற முன்வந்துள்ளோம். மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் அரசாங்கம் நடந்து கொண்டால் அவற்றிற்கு உறுதுணையாக இயங்க நாங்கள் பின் நிற்க மாட்டோம். எமது மக்களின் விமோசனமே எமக்கு முக்கியம் என்றார்.

விடுதலைப் புலிகளின் புத்தம்புது தலைவர் சந்தோஷம் மாஸ்டரின் பெயரில் ஏற்பட்ட குழப்பம்!

விடுதலைப்புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அடுத்த புதிய தலைவர் சந்தோஷம் மாஸ்டர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பலருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் தலைவரின் பெயர் சந்தோஷம் மாஸ்டர் எனக் குறிப்பிடப்பட்டிருந்ததால் ஏற்பட்டுள்ள பெயர் குழப்பம். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் ஏற்கனவே இருந்த சந்தோஷம் மாஸ்டர் (இவர்தன் புலிகள் ரெலோவை தடை செய்த போது திருமலைக் காட்டில் யாழ்பாணத்தில் அவர்கள் சண்டை பிடிக்கட்டும் நாம் இங்கு ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும் இதற்காக பேவாருங்கள் என்று ரோலேவை காட்டிற்கள் அழைத்து விருந்துண்ணவைத்து விருந்துண்ணும்போது அத்தனை ரெலோவையும் சட்டுக்கொன்ற 'நல்ல' மனிதர். மேலும் இவரின் வார்த்தைகளில் 'செந்தமிழ்...? ' நிறையவேவரும் நல் தமிழ் அதிகம் வராது. இதுபற்றி உலகில் எங்கேயோ ஒழிந்து வாழும் மு. திருநாவுக்கரசுடன் (அதுதான் புலிகளின் வரலாற்றுத் துறைப் பொறுப்பாளர்) தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்), 1980-களின் இறுதிப்பகுதியில் உயிரிழந்திருந்தார். அந்த சந்தோஷம் மாஸ்டருக்கும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள தலைவருக்கும் ஒரே பெயர் உள்ளதால் ஏற்பட்ட குழப்பம் அது. முன்பு இருந்த சந்தோஷம் மாஸ்டரின் நிஜ பெயர், கணபதிப்பிள்ளை உமைநேசன். அவர், இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்தபோது நடந்த யுத்தத்தில், 1987-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி உயிரிழந்தார். தற்போது புதிய தலைவராகியுள்ள சந்தோஷம் மாஸ்டர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்ததே, 1995-ம் ஆண்டுதான். (மேலும்......)

Leader of JVP, parliamentarian, comrade Anura Kumara Dissanayake At Toronto

Remember April Heroes in Canada
 The 43rd April Heroes commemoration - 2014 will be held on Sunday, April 27th 2014 at Etobicoke Civic Centre (399 The West Mall, Toronto) from 10:00am to 12:00pm. The commemorative speech will be delivered by the leader of JVP, parliamentarian, comrade Anura Kumara Dissanayake. JVP Committee in Canada is also planning to hold a Question and Answer session after the event. If you have any question or are seeking clarification about the present political development in Sri Lanka, this will be a good opportunity.  I hope you are able to accept this invitation and we look forward to seeing you there.

JVP Committee in Canada

 Email: jvpcanada@yahoo.com

நெடியவனுக்கு சிவப்பு அறிவித்தல்

தமீழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தலைவர் என கருதப்படும்  சிவபரன் பேரின்பநாயகன் எனும் நெடியவனுக்கு எதிரான சிவப்பு அறித்தல் சர்வதேச பொலிஸாரின் இணையதளத்தில் விடுக்கப்பட்டுள்ளது. நெடியவன் உட்பட 40 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்ய கோரும் சர்வதேச பிடியாணைகளை இலங்கை பொலிஸ் இம்மாத முற்பகுதியில் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தீர்வைக்   கண்டுவிடுவதற்காகவே பயணிக்கின்றோம் - சம்பந்தன்

'ஒன்றுபட்ட இலங்கை' என்ற கட்டமைப்புக்குள்ளேயே தமிழர் பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கண்டுவிடுவதற்காகவே, மிகவும் கடினமான ஒரு பாதை வழியாக - தமிழ் பேசும் மக்களும் அவர்களது அரசியல் தலைமைத்துவமும் பயணித்து வருகின்றார்கள் என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். (மேலும்......)

தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் மக்கள் ஆதரவை திரட்டுகின்றன

பிரதான அரசியல் கட்சிகள் தங்களுக்கென தொலைக்காட்சி சேவைகளை நடத்துகின்றன

கடந்தவாரம் இந்தக் கட்டுரைத் தொடரில் நாம் உலகின் இரண்டாவது பெரிய ஊடக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான ரூபட் மேடோச் கூட ஒரு தொலைக்காட்சி சாம்ராஜ்யத்தை நடத்துவது அவ்வளவு இலகுவான செயலல்ல என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பதையும் தொலைக்காட்சி சேவை முட்டாள்களின் விளையாட்டுத் திடல் அல்ல என்றும் மிகவும் சாதுர்யமாக அவர் தெரிவித்திருந்த கருத்தையும் ஞாபகப்படுத்தினோம். கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு அதிகமாக தமிழ்நாட்டின் அரசியலை ஆட்டிப்படைத்த வல்லமை தொலைக்காட்சி நிலையங்களின் கையிலேயே இருந்தது என்ற கூற்றை ஆதரித்து சில கருத்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன். தற்போது தமிழ்நாட்டில் 21 வெவ்வேறு தொலைக்காட்சி சேவைகள் செயற்படுகின்றன. இவற்றில் அனேகமாக 75 சதவீதமானவை செய்திகளையும் தொலைக்காட்சி நாடகங்களையும் திரைப்படங்களையும் ஒளிபரப்புகின்றன. (மேலும்......)

கோட், சூட் ஆக மாறிய பட்டு வேட்டியும் ஜிப்பாவும்

மேல் மாகாணசபை தேர்தலில் பிரசாரத்தின் போது பட்டு வேஷ்டி சட்டையுடன் வாக்கு கேட்க வந்தவர்கள் வெற்றி பெற்ற பின்பு முதல் அமர்வின் போது கோட்டு, சூட்டு, டை போன்ற ஆங் கிலேய நாகரிக பாணியில் பதவி ஏற்றது ஏன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பொதுச் செய லாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் தனித்துவத்தையும் தமிழ் உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காக தேர்தல் பிரசார ஆரம்ப காலம் முதல் இறுதி வரை பட்டு வேஷ்டி சட்டையுடன் கொழும்பு நகரெங்கும் வாக்கு வேட்டையாட உலா வந்தார்கள். ஆனால் வெற்றி பெற்ற பின்பு மேல் மாகாணசபை முதல் அமர்வின் போது ஏன் இவர்களால் தமிழர்களின் தனித்துவ அடையாளமான வேஷ்டி சட்டையுடன் பதவியேற்க முடியாமல் போனது. மாகாணசபை உடை விவகாரங்களைப் பொறுத்தவரையில் தமிழ் கலாசாரத்தின் படி வேஷ்டி, ஜிப்பா அணிந்து செல்வதற்கு அனுமதி உண்டு. இந்த விடயத்தில் கூட இவர்களால் நேர்மையாக நடக்க முடியவில்லை.

நான் தொடர்பாளராக மட்டுமே செயற்பட்டேன் - ருவிட்டரில் எரிக் சொல்ஹேம்

இலங்கை பாதுகாப்பு படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே யுத்தம் நடந்து கொண்டிருந்த வேளையிலும், அதற்குப் பின்னரும் கூட இரு தரப்பினருக்கும் இடையே தொடர்பாளராக மட்டுமே தாம் செயல்பட்டதாக எரிக் சொல்ஹேம் குறிப்பிட்டுள்ளார். நோர்வே பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி குழுவின் தலைவராக செயல்படும் எரிக் சொல்ஹேம், அந்த கால கட்டத்தில், இரு தரப்பினருடனும், பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளார். போர்க்காலத்தில் விடுதலைப் புலிகளுடன் பல்வேறு தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்று எரிக் சொல்ஹேம் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ருவிட்டர் சமூக வலைத்தளம் மூலம் சொல்ஹேம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதேவேளை, தாம் அடுத்த வருடத்தில் வெளியிடவுள்ள நூல் ஒன்றில் நோர்வே, விடுதலைப் புலிகளை சென்றடைந்த விதம் உட்பட்ட தகவல்களை வெளியிடப் போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெகிழவைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’

நிழல்... 'உஸ்தாத் ஹோட்டல்’ நிஜம்... 'ஏலகிரி ஹோட்டல்’!

லையாளத்தில் 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம், 'உஸ்தாத் ஹோட்டல்’. நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், திலகன் உள்ளிட்டோர் நடிக்க... அன்வர் ரஷீத் இயக்கியிருந்தார். பிரியாணிக்கு சிறப்பு பெற்ற உஸ்தாத் ஹோட்டலை திலகன் நடத்துகிறார். அவர் பேரன் (துல்கர்) வெளிநாட்டில் படித்துத் திரும்பும்போது, அப்பகுதியில் பெருகிவிட்ட நவீன ஹோட்டல் களுடன் போட்டி போட முடியாமல், தாத்தாவின் ஹோட்டல் மூடப்படும் நிலையில் இருக்கிறது. அதை எப்படி வெற்றிகரமாக பேரன் நடத்துகிறார் என்பதே கதை. கூடவே மனிதநேயம், அன்பு, பாசம் அனைத்தையும் கலக்கி அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள். (மேலும்......)

 

ஏப்ரல் 26, 2014

என் மனவலையிலிருந்து........

நீதி கேட்போம் எங்கள் மகளின் கொலைக்கு.....!

(சாகரன்)

'எனது மகள் கொல்லப்பட்டுள்ளார்' - மகள் கொன்சலிற்றா பற்றி நீதிமன்றத்தில் தந்தை சத்திய வாக்கு மூலம்.

'மருந்து வாங்கி தாருங்கள் என்று பாதிரியாருடன் தொலை பேசியில் கெஞ்சினாள்' - மகள் கொன்சலீற்றாவின் தாயின் கண்ணீர் வாக்கு மூலம்.

யாரங்கே.....! அழைத்து வாருங்கள் மன்னார் அருள் தந்தை இராயப்பு ஜோசப்பை. இசைப்பிரியா, பிரபாகரன் கொலை வகையறாக்களுக்கு உள்ளுரிலும், சர்வதேச அரங்கிலும் உரக்க குரல் எழுப்புபவரை, இக்கொலைக்கும் குரல் எழுப்ப.

யாரங்கே.....! அழைத்து  வாருங்கள் அருள் தந்தை தோமஸ் சௌந்தரநாயகத்தை. தனது கோவில் பற்றில் அவர் கண்காணிப்பு எல்லைக்குள் நடைபெற்ற கொலையைக்கு விளக்கம் கூற. (மேலும்......)

 

பாதிரியார் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளோம் - பொலிஸ்

யாழ். சென்பற்றிக்ஸ் கல்லூரிக்குப் பின்னாலுள்ள கிணற்றில் இருந்து 14 ஆம் திகதி  திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றாவின் மரணத்திற்கு காரணம் என பெற்றோர்களினால் கூறப்படும் இரு பாதிரியார்களையும் யாழ்.நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார். அவர் தொடர்ந்து பதிலளிக்கையில்,  கொன்சலிற்றாவின் தொலைபேசிக்கு இரு பாதிரியார்களின் கையடக்கத் தொலைபேசிகளிலிருந்து ஏற்படுத்திய அழைப்புக்களின் விபரங்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவின் பேரில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.  அந்த அழைப்புக்களின் விபரங்களுடனும், சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்று பரிசோதனையின் பிரகாரமும், மே மாதம் 12 ஆம் திகதி இரு பாதிரியார்களையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும், நீதிமன்றின் உத்தரவில் நீதிவான் விசாரணையும் இடம்பெற்று வருகின்றதாகவும் யாழ்.பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.

நெடியவன் மீதான சர்வதேச பிடியாணை தொடர்பில் நோர்வே ஆராய்வு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் புதிய தலைவரென கருதப்படும் ஒஸ்லோ வாழ் தமிழரான பேரின்நாயகம் சிவபரன் எனப்படும் நெடியவனை கைதுசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்து, நோர்வே அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ள சர்வதேச பிடியாணை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அணுகுமுறையை எவ்வாறு எதிர்கொள்வதென  தொடர்ந்து மதிப்பீடு செய்து வருவதாக  நோர்வே வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளதென 'தி லோக்கல்' செய்தி முகவரமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. நெடியவன் உட்பட 40 தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை கைது செய்ய கோரும் சர்வதேச பிடியாணைகளை இலங்கை பொலிஸ் இம்மாத முற்பகுதியில் விடுத்திருந்தது. இதே வேளை சிவபரனின் பெயர்  சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளத்தில் சேர்க்கப்படவில்லை. நெதர்லாந்தில் புலம்பெயர்தோரிடையே தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்தமை  தொடர்பில் விசாரிப்பதற்காக, நோர்வே 2011 ஆம் ஆண்டு சிவபரனை கைது செய்து சில நாட்கள் தடுத்து வைத்தது. பின்னர் அவரை பிணையில் விடுதலை செய்தது. ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றத்திற்காக ஹேக்கிலுள்ள நீதிமன்றம் 5 டச்சு புலம் பெயர்ந்தோருக்கு 6 மாதங்கள் சிறைதண்டனை வழங்கிய போதும் சிவபரனை நோர்வே பொலிஸார் மீண்டும் கைது செய்யவில்லை.

"கிழக்கில் மின்வழங்கும் திட்டங்கள் பாதித்தமைக்கு அமெரிக்காவே காரணம்"

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படவிருந்த கிராமிய மின்வழங்கும் திட்டங்களுக்கு நிதி வழங்கவிருந்த ஈரான் மீது, அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக அத்திட்டங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (25) தெரிவிக்கப்பட்டது. கிழக்கு மாகாண கிராம மின் வழங்கும் திட்டங்களை செயற்படுத்துவதற்கு தேவையான மின் உபகரணங்கள் மற்றும் பொருட்களை ஈரானிடமிருந்து கொள்வனவு செய்ய முடியாதிருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் கேள்விக்கு பதிலளித்த போதே மின்வலு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேற்கண்டவாறு கூறினார். கிழக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு மின் இணைப்பை பெறும் உதவிகள் வழங்கப்படுமா என சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பிய போது இவ்வாறான உதவிகள் சமூர்த்தி திட்டத்தில் உள்ளதாக அமைச்சர் கூறினார். மேலும் இவ்விடயம் தொடர்பில் தான் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஆதரவு தொடரும் - சீனா

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் இலங்கைக்கு ஆதரவளிக்க தாம் எப்போதும் தயார் என்று சீனா அறிவித்துள்ளது. இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியூ ஷென்மினுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சீன அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இம்முறை கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் போது இலங்கைக்கு சீனா ஆதவாகச் செயற்பட்டமை தொடர்பில் சீன பிரதியமைச்சரிடம் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த சீன பிரதியமைச்சர், இலங்கையில் முதலீடு, பொருளாதார மற்றும் வர்த்தக கொடுக்கல் வாங்கல்களில் சீனா காட்டிவரும் அக்கரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.

வெளிநாடுகளுக்கு களவாக ஆட்களை அனுப்பி

கோடிக்கணக்கில் பணம் சேர்க்கும் நோக்கில் செயற்பட்ட வர்த்தகர் வவுனியாவில் கைது

இரண்டு வருட குறுகிய காலத்தில் சட்டவிரோதமாக 500 க்கு மேற்பட்டவர்களை இரகசியமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த வர்த்தகர் ஒருவரை இரகசியப் பொலிஸார் வவுனியாவில் கைது செய்துள்ளனர். அருனானந்தன் தினேஷ்ராஜ் என்ற பெயருடைய இவர் 2012 முதல் இதுவரை ஆட்களை தொழில்களுக்கு அனுப்புவதற்காக பணம் பெற்று திருட்டுத்தனமாக கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். முல்லைத்தீவில் வசிக்கும் 37 வயதுடைய இவர் யுத்தம் முடிவுறுவதற்கு முன்னரும் தமிழர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கிடையில் அக்காலத்தில் இலங்கையிலிருந்து வேறு நாடுகளுக்கு தப்பிச் சென்ற நபர்களை யுத்தத்தினால் காணாமற் போனோரின் பட்டியலில் சேர்த்து இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்கள் மூலமாக இவர் நஷ்டஈடு பெற்ற பல சம்பவங்களும் வெளியாகியுள்ளன. இவ்வாறு அனுப்பப்பட்ட நபர்கள் பற்றிய விபரங்களை அறிந்து காணாமற் போனவர்கள் பட்டியலில் இவர்களும் பெயரிடப்பட்டுள்ளனரா என்று அறிவதற்கான விசாரணைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன. புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை வைத்திரு ந்ததாக சந்தேகிக்கப்படும் இந்த வர்த்தகர் புலி உறுப்பினர்களையும் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் சில தீவுகளுக்கு பலரை இவர் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரகசியப் பொலிஸார் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரித்து வருகின்றனர்.

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை

மத்திய அரசின் மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகின்றது. மேலும், 7 பேர் விடுதலை செய்யப்படுவது குறித்த வழக்கு விசார ணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. தீர்ப்பில், குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். 5 முதல் 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கும். அதில் 7 விதமான விஷயங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற வழக்கை முதன்முறையாக உச்ச நீதிமன்றம் எதிர்கொள்கிறது. 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான இடைக்கால தடை தொடரும் என்று கூறியுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம், ராஜீவ் கொலையாளிகள் விடுதலையாவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நரேந்திர மோடிக்கு ரூ. 1.65 கோடி சொத்து

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார். அதனுடன் அவர் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் தனக்கு ரூ. 1 கோடியே 65 இலட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். அவற்றில் கையிருப்பு ரூ. 32 ஆயிரத்து 700, வங்கி கணக்கில் ரூ. 26 இலட்சம், வைப்புநிதி ரூ. 32 இலட்சம் ஆகியவையும் அடங்கும். அவரது சொத்து மதிப்பு கடந்த 9ஆம் திகதி வதோதரா தொகுதியில் மனுதாக்கல் செய்தபோது இருந்ததைவிட ரூ. 14 இலட்சத்து 34 ஆயிரம் அதிகம் ஆகும். இதுபற்றி கேட்டபோது, அப்பணம் வாரணாசி தேர்தல் செலவுக்காக மோடியின் வங்கிக்கணக்கில் கட்சி சார்பில் வைப்பிலிடப்பட்ட பணம் என்று பா. ஜனதா சட்டப்பிரிவு அமைப்பாளர் கக்குபாய் தெரிவித்தார்.

ஏப்ரல் 24, 2014

லத்தீன் அமெரிக்காவின் தனிமை

(ஆர். விஜயசங்கர் )

“லத்தீன் அமெரிக்காவின் யதார்த்தம் நீங்கள் கற்பனையில்கூடத் தரிசிக்க முடியாத குரூரங்களையும் விநோதங்களையும் கொண்டது. அந்த யதார்த்தங்களை விவரிக்க மரபுரீதியான உத்திகள்கூட இல்லையென்பதுதான் எங்கள் தனிமையின் சாரம்.” காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் நோபல் பரிசு ஏற்புரைக்குப் பின் வரும் இந்த வரிகளுக்குள் பொதிந்து கிடப்பது ஐந்து நூற்றாண்டுகளின் சோகமும் கோபமும். 'தனிமையின் நூறு ஆண்டுகள்' அந்த வரலாற்றின் ஒரு செதுக்கல்தான். அந்த வரலாற்றுச் சோகம் 1492-ம் ஆண்டில் கொலம்பஸ் என்ற ஸ்பானிய மாலுமியின் வருகையில் துவங்கியது. (மேலும்......)

தோழர் டானியலுக்கு கண்ணீர் அஞ்சலி

யாழ்ப்பாணம் கைதடியைப் பிறப்பிடமாகவும்  சென்னை புழல் அகதிகள் முகாமை வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தகுமார்(தோழர் டானியல்) 22.4.14 அன்று புழல் அகதிகள் முகாமில் மாரடைப்பால் காலமானார். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பல செயற்பாடுகளில் காத்திரமான பங்களிப்பை செய்து வந்த தோழர்டானியல் இந்திய-இலங்கை ஒப்பந்த காலகட்டங்களில் பல அளப்பரிய பணிகளை செய்து கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு;ளார். இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் பாதுகாப்பு காரணமாக தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து மண்டபம் அகதிகள் முகாம் இறுதியாக புழல் அகதிகள் முகாம் என தனது இடம்பெயர்ந்த வாழ்க்கையை கழித்து வந்தார்.இந்த நிலையில் அவர் திடீரென மரணத்தை தழுவிக்கொண்டது எங்களையெல்லாம் மீளாத்துயரில் ஆழத்தியுள்ளது. அன்னாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம்

பத்மநாபா-ஈழ மக்கள் புரம்சிகர விடுதலை முன்னணி

ரி.ஐ.டி.யினரால் குடும்பஸ்தர் கைது

யாழ்.கரவெட்டி வளர்மதி கிழக்கு சனசமூக நிலையத்தடியினைச் சேர்ந்த ஆழ்வார்பிள்ளை தயாநிதி (42) பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் இன்று (24) தெரிவித்தனர். கடத்தல் குற்றச்சாட்டு ஒன்றின் விசாரணைக்காகவே மேற்படி குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி நபர் தற்போது யாழிலுள்ள ரி.ஐ.டி.யினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த நபர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டதாக கரவெட்டிப் பிரதேசத்தில் இன்று (24) பதற்ற நிலைமையொன்று உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்க்கட்சித் தலைவராக தவராசா

வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராக எஸ்.தவராசா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதால் ஜனாதிபதி தவராசாவினைத் தெரிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெகஷிசன் கொலை வழக்கில் கொலைக் குற்றவாளியாக குற்றஞ்சாட்டப்பட்டு  வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்   கந்தசாமி கமலேந்திரன் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுளார். அத்துடன், அவர் ஈ.பி.டி.பியில் இருந்தும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டார். இதனால் எஸ்.தவராசா வடமாகாண சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் புதன்கிழமை (23) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையிலே அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

மகள் கொல்லப்பட்டாள்: கொன்சலிற்றாவின் தந்தை

யாழ்.குருநகர் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்னாலுள்ள கிணற்றிலிருந்து 14 ஆம் திகதி திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்ட எனது மகளான ஜெரோம் கொன்சலிற்றா (வயது 23) கொலை செய்யப்பட்டுள்ளார் என நான் சந்தேகிப்பதாக அவரது தந்தையான புனோரி ஜெரோம் வாக்குமூலமளித்துள்ளார். இந்த யுவதி தொடர்பிலான நீதவான் விசாரணை யாழ். நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் முன்னிலையில் புதன்கிழமை (23) நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு வாக்குமூலமளித்துள்ளார். ஜெரோம் கொன்சலிற்றா கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதற்கு யாழ்.ஆயர் இல்லத்தில் மறைக்கல்வியினைப் போதிக்கும் பாதிரியார்கள் இருவர் தான் காரணமென யுவதியின் பெற்றோர் கூறிவந்த நிலையில், இந்த சம்வம் தொடர்பான நீதவான் விசாரணை புதன்கிழமை (23) நடைபெற்றது. (மேலும்......)

இலங்கை அகதியின் மனு நிராகரிப்பு

இந்திய குடியுரிமை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அகதியொருவரினால் சமர்ப்பிக்கபட்ட மனுவினை மதுரை மேல் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) நிராகரித்துள்ளது. வெளிநாட்டவர்களுக்கான 1946ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கும் தனது மகனை விடுதலை செய்துகொள்வதற்காகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பி.கருப்பதேவர் என்ற இலங்கை அகதியே இவ்வாறு குடியுரிமை பெறுவதற்கான மனுவினை சமர்ப்பித்துள்ளார். இவரது மகன், கடந்த 2012ஆம் ஆண்டில் திருப்பூரில் கடமையாற்றும் போது நபரொருவரை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாகக் கூறி இலட்சம் ரூபாவினை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என்பதற்கான சான்றுகளை மதுரை மேல் நீதிமன்ற நீதிபதிகளான எ.செல்வம் மற்றும் வி.எஸ்.ரவி ஆகியொர் முன்னிலையில் மனுதாரரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மனுதாரரான கருப்பதேவர், தான் முன்னாள் இந்திய குடிமகனாக இருந்ததாகவும் 1974ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை - இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இந்திய கடவுச்சீட்டுடன் யாழ்பாணத்தில் குடியேறியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலை புலிகளுடனான இலங்கைப் படையினரின் யுத்தம் காரணமாக 1996ஆம் ஆண்டு இந்தியாவுக்கு தனது மகனுடன் அகதிகளாக இடம்பெயர்ந்ததாகவும் அவ்வாறு இடம்பெயரும் போது தனது இந்திய கடவுச்சீட்டினை எடுத்து வரவில்லையெனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், அகதிமுகாமிலிருந்து அவரை விடுவிக்க முடியாது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், 1946ஆம் ஆண்டு வெளிநாட்டவர்களுக்கான சட்டத்தை நீதிமன்றத்தினால் பிரயோகிக்க முடியாது என்றும் கூறியது.

கைதி மரணம்

சிறைக்காவலருக்கு விளக்கமறியல்

யாழ்.சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியினை தாக்கி அவரது மரணத்திற்கு காரணமாகவிருந்த சிறைக் காவலரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் இன்று புதன்கிழமை(23) உத்தரவிட்டார். யாழ்.சிறைச்சாலையில் மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் கடந்த சனிக்கிழமை(12) சிறைக்காவலரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று(22) இரவு உயிரிழந்துள்ளார். வாகன மோசடி வழக்கொன்றிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த களனிப் பகுதியினைச் சேர்ந்த கிருஸ்ணசுவாமி பாலகிருஸ்ண செட்டியார் (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த கைதி நேற்று(22) உயிரிழந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட சிறைக்காவலர், இன்று(23) நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார்.

ஏப்ரல் 23, 2014

குஜராத்தின் இசைப்பிரியாவும் ஈழத்தின் இர்ஷாத் ஜகானும் (Ishrat Jahan)...

ஈழத்தில் இசைப்ரியாவின் மீது நடத்தப்பட்ட சிங்கள அரசபயங்கரவாத படுகொலை கண்டிக்க்கும் சிலர், அதே போன்ற அரச பயங்கரவாத படுகொலையை, குஜராத்தில் இர்ஷ்ரத் ஜகான் என்ற பெண்ணின் மீதும், பல நூறு முஸ்லிம் பெண்களின் மீதும் நிகழ்த்திய, மோடியை, பிஜேபியை ஆதரிப்பது எப்படி???? மோடியை ஆதரிப்பவர்களுக்கு, ஈழ இனவாத படுகொலைகளை கண்டிக்கவோ, இசைப்ரியா போன்றவர்களின் மீதான சிங்கள ராணுவ பயங்கரவாத படுகொலைகளை விமர்சிக்கவோ, அருகதையற்றவர்கள்...... இனப்படுகொலைகளை, பெண்களுக்கெதிரான குற்றங்களை யார் செய்தாலும், அவர்கள் எதிர்கப்படவேண்டியவர்களே.... நிராகரிக்கப்படவேண்டியவர்களே... மோடியையும் பாஜகவையும் நிராகரியுங்கள், புறக்கணியுங்கள்....

உக்ரைனில் நடப்பது என்ன...?

உக்ரைனில், பாஸிசத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியை ஜீரணிக்க மூடியாத மேற்கத்திய ஊடகங்கள், உண்மையை மறைத்து, பிரச்சார யுத்தம் ஒன்றை முடுக்கி விட்டுள்ளன. கிழக்கு உக்ரைனில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியை நசுக்குவதற்காக, பாசிச ஆட்சியாளர்கள் அனுப்பிய படையினர், மக்கள் பக்கம் சேர்ந்து விட்டனர். போராடும் மக்களை நோக்கி சுட விரும்பாத படையினர், தாம் கொண்டு சென்ற ஆயுத தளபாடங்களை மக்களிடம் ஒப்படைத்து வருகின்றனர். இது வரையில், எட்டு அல்லது ஒன்பது யுத்த தாங்கிகள், பாசிச எதிர்ப்பு புரட்சியாளர்கள் வசம் வந்துள்ளன. உக்ரைனிய படையினர் கீவில் இருந்து புறப்பட்ட பொழுது, தாங்கிகளில் பறந்து கொண்டிருந்த உக்ரைனிய தேசியக் கொடிகளை தாமே அகற்றி விட்டு, அவற்றில் ரஷ்யக் கொடிகளை பறக்க விட்டுள்ளனர். அதனை பொறுக்க முடியாத மேற்கத்திய ஊடகங்கள், "ரஷ்யா படையெடுத்து வந்து விட்டதாக" தமது மக்களுக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கின்றன. உக்ரைனில், கடந்த சில வாரங்களாக, தோல்விக்கு மேல் தோல்வியை தழுவிக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள், கோயபல்ஸ் பாணியிலான பொய்ப் பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளனர்.

உடப்பு கிராமத்துக்கென்றே தனித்துவமான சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு விழா

புத்தளம் மாவட்டத்திலே பரந்து வாழும் மக்களில் தமிழ் மக்களும் ஒரு குடியினர் அந்த வகையில் தமிழ் மக்கள் கூட்டாக செறிந்து வாழும் தமிழ் கிராமம் உடப்பூராகும். இந்தக் கிராமத்தில் ஜீவனோபாய தொழிலாகக் கடற்றொழில் உள்ளது. இவர்கள் கலை கலாசாரத்தைக் கண்ணியமாக மதித்து வந்ததை இன்றும் பல கலை நிகழ்ச்சியின் மூலம் காணக்கூடியதாக உள்ளது. அந்த வகையில் உடப்புக் கிராமத்தால் ‘சித்திரைச் செவ்வாய் முளைக்கொட்டு’ வம்சாவளியாக தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20)ம் திகதி ‘முளைப்பதித்தல் மூலம்’ ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின் இறுதி நிகழ்ச்சி எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை காலை வேளையில் இடம்பெறும். (மேலும்......)

இந்திய அரசியல் சாசனத்தை மதித்து அறிஞர் அண்ணா 1963ல் சுதந்திர திராவிட நாட்டு கோரிக்கையை கைவிட்டார்

1949ஆம் ஆண்டு சி.என்.அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகம் சினிமாவைப் பயன்படுத்தி 1967இல் தமிழ்நாட்டில் அவரை முதலமைச்சராக்கியது

உலகில் இரண்டாவது பெரிய ஊடக சாம்ராஜ்யத்தின் உரிமையாளரான ரூபட் மேர்டோச் கூட ஒரு தொலைக்காட்சி சாம்ராஜ்யத்தை நடத்துவது அவ்வளவு இலகுவான செயலல்ல என்பதை ஏற்றுக் கொள்வார். தொலைக்காட்சி சேவை முட்டாள்களின் விளையாட்டுத் திடல் அல்ல என்பதனாலேயே அவர் அவ்விதம் சிந்தித்திருக்கட்டும். இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியலை கடந்த இரண்டு தசாப்தங்களாக தொலைக்காட்சி நிலையங்களே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி சேவை அறிமுகம் செய்வதற்கு மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ் சினிமாவை பயன்படுத்தியது. (மேலும்......)

ரி.ஐ.டி யினரால் ஒருவர் கைது

பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கோப்பாய் பகுதியினைச் சேர்ந்த இராஜரட்ணம் சுதர்சன் (30) என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தனர். மானிப்பாய் வீதியில் கணினி வலைப்பின்னல் என்னும் நிலையத்தினை நடத்தி வந்த இவர், விடுதலைப்புலிகள் சார்பான துண்டுப் பிரசுரங்களை தனது கணினியில் தட்டச்சுச் செய்து அச்சிட்டு வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அத்துடன், இவரது நிலையத்திலிருந்த கணினிகள் மற்றும் ஏனைய உபகரணங்களை முத்திரையிட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவின் கொழும்பு தகவல் திணைக்கள பிரிவினர் கொண்டு சென்றுள்ளனர். முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான இவர் யுத்தத்தில் ஒரு காலை இழந்திருந்த நிலையில் மேற்படி நிலையத்தினை நடத்தி வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மோசமான வானிலை

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்

மலேசியாவின் தலைநகரான கோலாலம்பு+ரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜpங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ஆம் திகதி அதிகாலை நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. சீனக்கடலுக்கு மேலே சுமார் 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, வியட்நாம் அருகே தோ சூ தீவுக்கு 250 கி.மீ. தொலைவில் கடலில் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட தகவல் வெளியானது முதல், இதுவரை பல்வேறு முரண்பட்ட தகவல்களே வந்து கொண்டிருக்கின்றன. மலேசிய விமானம் ஆர்370 மாயமாய் மறைந்து போய் இன்றோடு 45 நாட்கள் ஆகின்றது. இதுவரை எட்டு நாடுகளின் மீட்பு படைகள் இரவு பகலாக கடலின் அனைத்து பகுதிகளிலும் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால், விமானத்தை தேடும் பணியை நிறுத்தப்போவதாக மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர். விமானத்தின் கருப்புப்பெட்டியின் பட்டரி செயல் இழக்கும் காலம் ஆகிவிட்டதாலும், கடல்பகுதியில் தற்போது வானிலை மிகவும் மோசமாக இருப்பதாலும், தேடும் பணி நிறுத்தப்படுவதாக மீட்பு படையினர் கூறியுள்ளனர். மேலும் இதுவரை கடல்பகுதியை அலசிவிட்டதாகவும், இந்திய பெருங்கடலில் 4000 அடி ஆழம் வரையிலும், சுமார் 50,000 சதுர கி.மீ பரப்பளவில் தேடுதல் பணியை முடித்துவிட்டதாகவும் கூறிய மீட்புப்படையினர்கள், தேடுதல் வேட்டையில் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினர். மேலும் ஆர்370 விமானம் கடலில் விழுந்ததா? என்பதே உறுதியாக தெரியாத நிலையில் இனிமேலும் கடலில் தேடிக்கொண்டிருப்பதில் எவ்வித பயனும் இருக்கபோவதில்லை என்று தாங்கள் முடிவெடுத்து இருப்பதாகவும், அவர்கள் தெரிவித்தனர். மலேசிய அரசும் தேடுதல் பணியை நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

தேவியன் பயன்படுத்திய வேன் புலனாய்வுப் பிரிவினரால் மீட்பு

வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தின் வெடிவைத்தகல் காட்டுப் பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் விமானிகளில் ஒருவரும் அந்த அமைப்பை மீன்டும் இலங்கையில் உருவாக்க முன்னின்றவர் எனவும் பாதுகாப்பு தரப்பால் அடையாளப்படுத்தப்பட்ட தேவியன் பயன்படுத்தியதாக கூறப்படும் வேன் வண்டியை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மீட்டுள்ளனர். யாழ். நல்லூர் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வேனானது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட குறித்த வேனானது தற்போது கொழும்பில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன , அது தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டுள்ள ஆரம்ப கட்ட விசாரணைகளில்  சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர் தமிழர் அமைப்புக்களால் வழங்கப்பட்ட நிதி ஊடாக தேவியனால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் இராணுவத்தினரால் கொல்லப்படுவதற்கு முன்னர் இந்த வேனை தேவியன் பயன்படுத்தியதாக நம்பும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அது தொடர்பிலான விரிவான விசாரணைகளையும் தொடர்கின்றனர்.

12 மாநிலங்களில் 117 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரு யூனியன் பிரதேசத்துக்கும் நாளை தேர்தல்

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 19 தொகுதிகளுக்கும், உத்தரபிரதேசத்தில் 12 தொகுதிகளுக்கும் மத்திய பிரதேசதில் 10 தொகுதிகளுக்கும் பீகார் மற்றும் சட்டீஸ்கரில் 7 தொகுதிகளுக்கும் அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 6 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 5 தொகுதிகளுக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி மற்றும் ஜம்முகாஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் நாளை 24ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில நேற்று மாலையுடன் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.. இந்த 6ம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக எதிர்கட்சி மக்களவை உறுப்பினர் சுஷ்மாசுவராஜ் , முன்னாள் மத்திய அமைசர் காந்திலால் பூரியா, மாநில காங்கிரஸ் தலைவர் அருண்யாதவ் ஆகியோர் உள்ளனர்.

நக்கீரன் கருத்து கணிப்பு

திமுக 22, அதிமுக 14, பாஜக 1, பாமக 1, தேமுதிக, மதிமுகவுக்கு முட்டை

40 தொகுதிகளுக்குமான நக்கீரன் இதழின் கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. இதில் 20 இடங்களை திமுக வெல்லும் என்றும் அதிமுகவுக்கு 14 இடம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, பாமகவுக்கு தலா ஒரு இடம் கிடைக்குமாம். பாண்டிச்சேரியில் காங்கிரஸ் வெல்லுமாம். தென் சென்னையில் இழுபறி நிலவுகிறது. தேமுதிக, மதிமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காதாம். முதல் கட்டமாக கடந்த வெள்ளியன்று வெளியான நக்கீரன் இதழில் 15 தொகுதிகளுக்கான ஆய்வு முடிவுகள் இடம்பெற்றிருந்தன. மீதமுள்ள சில தொகுதிகளுக்கான முடிவுகளும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன. தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே கடும் மோதல் நிலவுகிறது. இதில் ஜஸ்ட் பாஸ் ஆகிறார் அதிமுக வேட்பாளர் நட்டர்ஜ. அவருக்கு தொகுதியில் 175 பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. திமுக வேட்பாளருக்கு 173 வாக்குகள் கிடைத்தன.  மதிமுகவின் ஜோயல் 129 வாக்குகளுள் 3வது நிலையில் இருக்கிறார். காங்கிரஸு க்கு 4வது இடமும் ஆம் ஆத்மிக்கு 6வது இடமும் கிடைக்கும் என கணிப்பு தெரிவிக்கின்றது.

தென்கொரிய கப்பல் விபத்து

பலி எண்ணிக்கை 104 ஆக உயர்வு

தென்கொரியாவில் ஜpன்டோதீவுக்கு 473 பேருடன் புறப்பட்டு சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் மூழ்கியது. இச்சம்பவம் கடந்த வாரம் நடந்தது. இக்கப்பலில் 325-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பயணம் செய்தனர். இவர்கள் ஜpன்டோ தீவுக்கு சுற்றுலாவுக்கு சென்றார்கள். தொடக்கத்தில் இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதில் 200 படகுகளும், 35 விமானங்களும், 13 மீன்பிடி படகுகளும் ஈடுபடுத்தப்பட்டன. 641 பேர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து விபத்தில் உயிரிழந்தோர் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதுவரை 104 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. கப்பல் சாயத் தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் தலைகீழாக கவிழ்ந்து விட்டது. மீட்புக் குழுவினரால் 164 பேரை மட்மே மீட்க முடிந்தது. கப்பலுக்குள் இருக்கும் 'ஏர் பாக்கெட்' எனப்படும் தண்ணீர் புகாத அறைகளில் சிலர் சிக்கி உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கையில் மீட்பு பணி தொடர்ந்து நடக்கிறது. கடலுக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்த கப்பலின் அடிப்பகுதி முழுவதுமாக மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், அந்த இடத்தை எளிதில் அடையாளம் காண ராட்ச பலூன் மிதவைகளை மிதக்கவிட்டுள்ளனர் மீட்பு குழுவினர். (உள்படம்) கடலில் மேற்பரப்பில் தெரியும் கப்பலின் அடிப்பகுதி.

ஏப்ரல் 22, 2014

இனப்பிரச்சனை தீர வேண்டும் என்று மனசார விரும்புகிறார்களா?

(சுகு-ஸ்ரீதரன்)

தமிழ் இயக்கங்களின் போராட்டம் தான் பிரதானமாக இலங்கையில் அதிகாரப்பகிர்விற்கான அக்கறைகளை தோற்றுவித்தது. ஆனால் அது இலங்கையில் என்ன நிலையில் இருப்பினும் 13 வது திருத்தத்தை உருவாக்குவதில் இந்த இயக்கங்களின் போராட்டமும் இந்தியாவின் அரசியல் அழுத்தமும் முக்கிய பங்கு வகித்தன. ஆனால் அதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் பலர் இன்று மக்களின் பிரதிநிதிகளாகியுள்ளனர். இவர்கள் அதிகாரப் பகிர்விற்கான இயக்கத்தை உணமையிலேயே முன்னெடுத்துச் செல்கிறார்களா. அதுதான் இல்லை. நாம் ஜெனிவாவில் பேசுகிறோம். அமெரிக்க ராஜாங்கச் செயலகத்துடன் பேசுகிறோம். தென்னாபிரிக்காவுடன் பேசுகிறோம் என்று புலுடாவிட்டுக் கொண்டு திரிகிறார்கள். (மேலும்......)

கிளிநொச்சியில் நால்வர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்தபுரம் பிரதேசத்தை சேர்ந்த நால்வரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அப்பகுதியிலுள்ள வீடொன்றை சோதனைக்கு உட்படுத்திய போது போலியான இறப்பர் முத்திரை மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் அங்கிருந்த நால்வரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைகளை மீறிப் போய்விட்டது வடமாகாணசபை - டக்ளஸ்

மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய வடக்கு மாகாணசபை தமது கைகளை மீறிப் போய்விட்டதென கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் நடத்தப்படும் சொன்டா கிளப்பினால், யாழ். அரியாலை கிழக்கு பகுதியில் ஒரு கோடியே 35 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட  15 வீடுகள் பயனாளிகளிடம் ஞாயிற்றுக்கிழமை  (20) கையளிக்கப்பட்டன. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய வடக்கு மாகாணசபை எமது கைகளை மீறிப் போய்விட்டது. தற்போது மாகாணசபையில் உள்ளவர்கள் மக்களுடைய நலனைக் கருத்தில் கொள்ளாது, கடந்த கால செயற்பாடுகளை ஞாபகம் ஊட்டிக் கொண்டு, மக்களுக்கு கிடைக்கும் உதவிகளுக்கும் குறுக்கே நிற்கின்றனர். ‘மக்கள் அனைவரும் எமக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீண்டும் பிரிவினைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது' என்றார்.

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்பு

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் ஆராயப் பட்டிருந்தன. இக்கூட்டத்தில் அமைச்சருடன் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். வடமாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு குறித்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்ததுடன், வடமாகாணத்தின் கல்வி, சுகாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றிருந்தன.

அமெரிக்காவில் அட்டைப்பூச்சிகள் உதவியுடன் அறுந்த காது மீண்டும் ஒட்ட வைப்பு

அமெரிக்காவில் ரோத் தீவுகளை சேர்ந்த 19 வயது பெண்ணின் இடது காது நாய்கடித்து குதறியதில் முற்றிலும் அறுந்தது. உடனே, அவரை அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி முறையில் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் சத்திரசிகிச்சை செய்து தையல் போட்ட பகுதிக்கு இரத்த ஓட்டம் செல்லவில்லை. அதை தொடர்ந்து அங்கு மிக மெல்லிய இரத்த குழாய் பொருத்தப்பட்டது. அதில் இருந்து தையல் போட்ட பகுதிகளுக்கு மட்டும் இரத்த ஓட்டம் சென்றது. உடலின் மற்ற பகுதிக்கு செல்லவில்லை. அதை சீரமைக்க ஆலோசித்த டாக்டர்கள் இரத்தம் உறிஞ்சும் அட்டைப் பூச்சிகளை கொண்டு வந்து அப்பகுதியில் உலவவிட்டனர். அவை இரத்தத்தை உறிஞ்சும் போது அப்படியே தையல் போட்ட இடத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கும் இரத்தம் சென்றது. இதற்கிடையே சத்திரசிகிச்சை செய்த இடத்தில் புதிதாக இரத்த குழாய்கள் உருவாகி நிலைமை சீரானது. அதை தொடர்ந்து அந்த அட்டை பூச்சிகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. மொத்தத்தில் இந்த சத்திரசிகிச்சைக்கு அட்டை பூச்சிகளை மருந்து ஆக டாக்டர்கள் பயன்படுத்தி புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஏப்ரல் 21, 2014

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியண்டா! (கடிதத் தொடர் – 3)

(அ. வரதராஜப்பெருமாள்)

தமிழர்களின் அரசியல் சமூக அபிலாஷைகளுக்குச் சார்பாக இலங்கையின் அரசியல் யாப்பில் ஒரு சிறு மாற்றத்தைச் செய்வதாயினும் அது எவ்வளவு சிரமமானது என்பதை நீங்கள் அனுபவபூர்வமாகக் கண்டிருக்கின்றீர்கள். அதற்காக இலகுவாகக் கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பேராசையால் இந்த தமிழ்ச் சமூகம் நழுவ விட்டது. இது பஸ் அல்ல ஓடிப் பிடிப்பதற்கு. அது வரலாறாகிவிட்டது. அது மீண்டும் எப்போது எப்படி சுழன்று வரும் என்று சொல்ல முடியாது. அதிலும் இங்கே கடைசித் தமிழனும் கப்பலேறி மேலைத் தேச நாடொன்றைச்; சென்றடையும் வரை ஓய மாட்டான் என்ற போக்கைக் கொண்டிருக்கின்றது.   இப்போதிருக்கும் மாகாண சபைகள் தமிழர்களின் இன்றைய கால கட்ட நிலைமையில் குறைந்த பட்சமாயினும் அவை அவற்றின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பிரதேசத்;தின் அபிவிருத்திக்கும் அப்பிரதேசத்தில் இருக்கும் மக்களில் வாழ்வில் முன்னேற்றங்களை ஆக்குவதற்கும் உரிய அதிகாரங்கள் கொண்ட நிறுவன அமைப்பாக இருக்க முடியாத ஒரு அமைப்பா? அல்லது அவை எந்தவகையிலும் பயனற்றவையாக இருக்கும் வகையிற்தான் அதன்  சட்டங்கள் ஆக்கப்பட்டிருக்கின்றனவா? (மேலும்......)

மலேசிய விமானம் தரையிறங்கியது

விமானத்தை தரையிறக்குவதற்கான கியர் இயங்காமையால் நடுவானில் சுமார் நான்கு மணிநேரம் வட்டமிட்டுகொண்டிருந்த மலேசிய விமானம் நீண்டநேர முயற்சியின் பின் எவ்விதமான பாதிப்புகளுமின்றி தரையிறக்கப்பட்டது என்று மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன். மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரகத்தை சேர்ந்த எம்.எச்.192 என்ற மலேசிய பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தையே சுற்றி சுற்றி வந்தது. இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன் ஏனைய விமான சேவைகளும் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே அந்த விமானம் எவ்விதமான பாதிப்புகளும் இன்றி மிக கவனமாக தரையிறக்கப்பட்டது. எம்.எச்.370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று அடிக்கடி இயந்திர கோளாறு ஏற்படுவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் முடிவை மீளபரிசீலிக்குமாறு சங்கரி கோரிக்கை

பொதுநலவாய நாடுகளின் நிதிக்கு கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி இடைநிறுத்தப்படுவதான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கனேடிய பிரதமர் ஸ்டீபன் காப்பருக்கு அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, (மேலும்......)

 

புலி சந்தேகநபர் தப்பியோட்டம்

தமிழீழ விடுதலைப் புலி சந்தேக நபர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தடுப்புக் காவலில் இருந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.நோய் காரணமாக சிகிச்சைக்காக குறித்த புலிச் சந்தேகநபர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பொலிஸ் பாதுகாப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சந்தேக நபரே இன்று அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.ஆயர் இல்லத்தின் மீது கற்தாக்குதல்

யாழ்.ஆயர் இல்லத்தின் மீது நேற்று இரவு 7 மணியளவில் இனம்தெரியாத நபர்கள் கற்களைக்கொண்டு தாக்குதல் மேற்கொண்டதோடு கதவுகளை அடித்தும், உதைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினரும், பொலிஸாரும் ஆயர் இல்லத்தை சூழ குவிக்கப்பட்டதோடு பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர். குருநகரில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கொன்சலிற்றா என்ற இளம்பெண்ணின் மரணசடங்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் அவரின் உடல் தாங்கிய ஊர்தியுடன் நேற்றுமுன்தினம் காலை ஆயர் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்ணின் மரணத்திற்குக் காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தமக்கு நீதி வழங்கக் கோரி இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் இதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மேற்படித்தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மூன்று துவிச்சக்கர வண்டிகளில் வந்த இனம் தெரியாத நபர்கள் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கற்களால் ஆயர் இல்லத்தை நோக்கியும், ஆயர் இல்லத்திற்கு அருகிலுள்ள பேராலய வளாகத்திலுள்ள அருட்தந்தையர்களின் தங்குமிடத்தின் மீதும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனால் அங்கு நேற்றிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இருப்பினும் மேற்படிச்சம்பவம் தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் மூதாட்டி பயங்கரவாத பிரிவினரால் கைது

கிளிநொச்சியில் மூதாட்டி ஒருவரை பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். மீளிணைய முயற்சிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பினை அவர் மேற்கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு தற்போது வவுனியாவில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 64 வயதான பத்மாவதி என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார். மீளிணைவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள விடுதலைப் புலிகளின் எதிர்காலப் பயன்பாட்டிற்காக காணி ஒன்று இந்தப் பெண்ணின் பெயரில் வாங்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன  தெரிவித்தார். அதற்கான பணத்தை விடுதலைப்புலிகளே இந்தப் பெண்ணுக்கு வழங்கியிருப்பதாகவும் அது தொடர்பில் விசாரணை செய்வதற்காகவே அவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது அவர் பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் வவுனியாவில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் குரிப்பிடுள்ளார்.

படுவான்கரை, பட்டிப்பளை மக்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளோம் - பிரதியமைச்சர் முரளிதரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களாலும் எதிர்க்கட்சியின் சில அரசியல்வாதிகளாலும் உங்களால் வாழ்க்கையிலேயே செய்ய முடியாது என்று கூறிய காரியத்தை நாம் குறுகிய காலத்தில் செய்து முடித்து மக்களிடம் கையளித்துள்ளோம் என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.சிலரால் வேடிக்கையான விடயமாகப் பார்க்கப்பட்ட மண்முனை பால நிர்மாணத்தை நாம் இன்று நிஜப்படுத்தியுள்ளோம் என்றும் அவர் கூறினார். படுவான்கரை, பட்டிப்பளை உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்ட பொன்நாள் இன்றாகும். பொதுவாக பாலங்களுக்கு வரலாறு உள்ளது. அந்த வகையில் இப்பாலத்திற்கும் வரலாறு இருக்கின்றது. 2010ஆம் ஆண்டில் நான் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சராக இருந்தபோது ஜப்பானின் இலங்கைக்கான முன்னாள் தூதுவரை அழைத்து இப்பாலத்தை நிர்மாணிப்பதன் முக்கியத்துவத்தை அவருக்கு எடுத்துக் கூறினேன். அதைத் தொடர்ந்து ஜனாதிபதி அவர்களுடன் கலந்துரையாடி அவரது அங்கீகாரத்துடனும், வழிகாட்டலுடனும் இப்பாலம் நிர்மாணிக்கப்பட்டது. இம்மாபெரும் சேவையை எமக்கு செய்து தந்திருக்கும் ஜனாதிபதி அவர்கள் எம் நினைவில் என்றும் இருக்க வேண்டியவர். 1972ஆம் ஆண்டு முதல் இற்றைவரையும் இப்பாலத்தின் ஊடாக பயணித்த 30 பேர் உயிரிழந்துள்ளார்கள். அவர்களில் ஒருவர் உதவி அரசாங்க அதிபர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் என்றார்.

மண்முனை பாலம் ஊடாக கொழும்பிற்கான பஸ்சேவை இன்று ஆரம்பம்

மண்முனைப்பாலம் திறந்து வைக்கப் பட்டதைத் தொடர்ந்து கொக்கட்டிச் சோலையிலிருந்து கொழும்புக்கான பஸ்சேவை இன்று திங்கட்கிழமை முதற்தடவையாக முற்பகல் 11.மணிக்கு ஆரம்பித்துவைக்கப்பட இருப்பதாக கிழக்கு மாகாண போக்குவரத்து சபையின் செயலாற்று முகாமையாளர் செ.கனகசுந்தரம் தெரிவித்தார். இந்த சேவையை மட்டக்களப்பு டிப்போ மேற்கொள்கின்றது. இதேவேளை, நாளை செவ்வாய் முதல் இரவு 7 மணிக்கும் கொழும்பிற்கான பஸ் சேவை கொக்கட்டிச்சோலையிலிருந்து ஆரம்பித்து வைக்கப்படும். இச்சேவைகளை மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி டிப்போக்கள் இணைந்து மேற்கொள்ளும். இதுவரை மண்முனைத்துறை வரை நடைபெற்றுவந்த பஸ் சேவைகள் புதிய பாலத்தினூடாக கொக்கட்டிச்சோலைவரை நடைபெறுகின்றன. மண்முனைத்துறையருகே இரவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் வண்டிகள் தற்போது கொக்கட்டிச்சோலையில் நிறுத்திவைக்கப்பட்டு அதிகாலை மட்டக்களப்பிற்கான சேவையும் இடம்பெறும். இச்சேவைகள் அனைத்தும் யுத்தத்துற்குப் பின் இப்போதுதான் ஆரம்பமாகியுள்ளது.

ஆண்களையும் இணைத்துக் கொண்டு போராடுவதன் மூலமே பெண்கள் உண்மையான சம உரிமையைப் பெறலாம்

ஒரு சமுதாயம் முன்னேறுவதாயின் அதற்கு நிச்சயம் பெண்களின் பங்களிப்பும் மிகவும் அவசியம். பெண்களின் முன்னேற்றத்தின் மூலமாகத்தான் நாட்டின் முன்னேற்றமும் சாத்தியமாகும். அந்த வகையில் பெண்களுக்கு என்றுமே ஒரு சிறப்பிடம் தனியே உண்டு. உலகின் பல நாடுகளில் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதன் காரணமாக ஆற்றல்களை வெளிப்படுத்த முடியாது போகிறார்கள். அவர்களது ஆசைகள், சிந்தனைகள் மறுக்கப்படுகின்றன. வாழ்க்கை பற்றிய தேடுதல்களுக்கும் சுயதொழில் பற்றிச் சிந்திப்பதற்கும் முடியாமல் உள்ளது. மேலும், ஆக்கபூர்வமான ஆளுமைகள் இருந்தும் அவற்றை வெளிப்படுத்த முடியாத நிலையில் பெண்கள் இருக்கின்றார்கள். இதனால் இப்பெண்கள் தங்களது ஆற்றல்கள், திறமைகள், உணர்வுகள், விருப்பங்கள் போன்றவற்றை வெளிப்படுத்த தயங்குகின்றனர். (மேலும்......)

ஏப்ரல் 20, 2014

அந்தோ தமிழ்நாடே!

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (பாகம் 4)

நேரடியாக ஸ்ரீபெரும்புதூரின் துன்ப நிகழ்வுக்குப் போகும் முன்பு, கோடம்பாக்கம் சம்பவத்திற்கு பின்பும் ஸ்ரீபெரும்புதூரின் துன்ப நிகழ்வுக்கு முன்பும் இடையில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளைப் பார்ப்போம். அப்போதைய இந்திய ஜனாதிபதியாக இருந்தவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள். தமிழ்நாட்டுக்காரர். காமராஜர் காலத்தில், தமிழக தொழில்துறை அமைச்சராகவும், பின்பு மத்திய அரசில் பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு போன்ற முக்கிய பதவிகளையும் வகித்தவர். தஞ்சை மாவட்டத்தின் ராஜhமடம் கிராமம், பட்டுக்கோட்டை அவரது சொந்த ஊர். ஆகவே, தஞ்சையில் தமிழ்ப் போராளிகளின் ஆளுமையை அவர் அறிந்தே இருப்பார். (மேலும்......)

தெரிவுக் குழுவில் இணைகிறது TNA

கால வீணடிப்பால் தேவையற்ற பிரச்சினைகளுடன் மக்களது இயல்புவாழ்வு மீண்டும் பாதிப்பு

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை விரைவாகக் காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கட்சிக்குள்ளும், வெளியேயும் கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இவ்விடயத்தில் இதுவரை பிடிவாதப் போக்கிலிருந்த தமிழ்க் கூட்டமைப்பு அதன் போக்கில் நெகிழ்வுப் போக்கான நிலையை எடுத்துள்ளது. தென்னாபிரிக்க விஜயத்தினால் ஏற்பட்டுள்ள ஏமாற்றம் காரணமாக கூட்டமைப்பின் தலைமையில் ஏற்பட்டுள்ள இம்மாற்றத்தின் முடிவுகள் அடுத்த வாரங்களில் வெளிப்படுத்தப்படலாம் என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத் திலும் இது தொடர்பாக கருத்துப்பரிமாறல்களைக் காணக்கூடியதாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்......)

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம், "தமது எதிர்கால செயற்பாடுகள் குறித்து" விடுக்கும் பகிரங்க அறிக்கை..!

**சுவிஸ் புங்குடுதீவு விழிப்புணர்வு ஒன்றிய, புதிய நிர்வாகத்தின் சார்பில் ஆதரவற்ற ஒருவரின் மரணச் சடங்கிற்காக ஒரு சிறிய நிதியுதவியை முதலாவது செயற்திட்டமாக நாம் செய்திருக்கின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.

**அதேபோன்று எமது இரண்டாவது செயற்திட்டமாக, 

சில ஆண்டுகளுக்கு முன்பு புங்குடுதீவில் இனந்தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்ட செல்வி தர்சினியின் குடும்பத்திற்கு மாதாமாதாம் நிதிஉதவி செய்ய வேண்டுமென்று அவருடைய உறவுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது தெரிந்ததே. இதற்கு அமைவாக, இம்மாதம் முதல், மாதாமாதம் சிறியதோர் நிதி உதவியினை புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாக சபை உறுப்பினர் ஒருவர் "தனது குடும்பத்தின் சார்பில்" சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் ஊடாக வழங்குவதற்கு முன்வந்துள்ளார். (ஆயினும் அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது பெயர் இங்கு பகிரங்கப்படுத்தப்படவில்லை.) (மேலும்......)

TNA எம்.பி. ஒருவரை காணவில்லையாம்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்பு சார்பில் மூன்று உறுப்பினர்கள் பா‘ளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டிருந்தனர். சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கல நாதன், வினோநோகராதலிங்கம் ஆகியோரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்கள் ஆவர். இவர்களில் வினோ எம்.பியை காணவில்லை என வன்னி மக்கள் முறையிட்டுள்ளனர். இது தொடர்பில் இணையத்தளம் ஒன்றிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து கந்தையா சுப்பிரமணியம் என்பவர் கருத்துத் தெரிவிக்கையில். வன்னி தேர்தல் தொகுதியில் நாங்கள் மூன்று எம்பிமாரை தெரிவு செய்தும். ஆனந்தன் எம்.பி. அடிக்கடி வந்து போறார். அவருடைய இரண்டு பேர் இங்க மாகாண சபைக்கு தெரிவாகி இருக்கினம். அதால இங்க ஒரே வாறார். செல்வம் எம்பி எப்பாவது இருந்திட்டு வருவார். அவர் இந்தியா விவகாரம் கையாள்வதால் நாம் அடிக்கடி பார்க்க முடிவதில்லை. ஆனா இந்த வினோவைத் தான் கன நாளாக காணவில்லை. கடைசியா மாகாணசபைத் தேர்தல் மூட்டம் வந்தவர். இப்ப ஆள் இல்லை. வவுனியா, மன்னார் என எல்லா இடத்திலும், விசாரித்திட்டம் அங்கேயும் அவர் இல்லை என்கிறார்கள். மற்ற உறுப்பினர்களிட்டயும் கேட்டனான்கள், அவர்கள் அவரை தெரியாத மாதிரி கதைக்கிறார்கள். ஒரு வேளை மறந்திருப்பாங்களோ தெரியாது. நாம் வாக்கு போட்ட படியா மறக்கேல. வாற கிழமையும் பார்த்திட்டு அவரை கண்டு பிடிக்குமாறு கூட்டமைப்பிடம் முறைப்பாடு செய்யவுள்ளோம் என்றார்.

முதலமைச்சர் - அனந்தி பனிப்போர் தொடர்கிறது

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் அச்சபையின் உறுப்பினரான அனந்தி எழிலனுக்கு மிடையேயான முறுகல் நிலை தொடர்ந்து வருவ தாகத் தெரிவிக்கப் படுகிறது. முதலமைச்சரைச் சந்திக்க அனந்தி பல தடவைகள் முயன்ற போதிலும், அவரைச் சந்திக்க முடியவில்லை எனத் தெரிவித்தார். முன் கூட்டியே நேரம் ஒதுக்கினால் மட்டுமே முதலமைச்சரைச் சந்திக்கலாம் என அவரது செயலாளர்கள் கூறி வருவதாகவும் அனந்தி கவலையுடன் தெரிவித்துள்ளார். யாழ். வர்த்தகர் சங்கத்தினால் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளாமையையிட்டு அனந்தி தனது அதிருப்தியை அவரிடம் நேரடியாகத் தெரிவிக்க முயன்றுள்ளார். அத்துடன் ஜெனீவாவில் இடம்பெற்ற சில உட்கட்சி முரண்பாடுகள் தொடர்பாகவும் முதலமைச்சரிடம் அனந்தி தெரிவிக்க முற்பட்டுள்ளார். இதனை முன்கூட்டியே அறிந்தமையால், முதலமைச்சர் விக்னேஸ்வரன் அனந்தியைச் சந்திப்பதைத் தவிர்த்து வருவதாகத் தெரியவருகிறது. தேர்தலில் முதலமைச்சருக்கு அடுத்ததாக அதிகப்படியான வாக்குகளை எடுத்த தன்னாலேயே கடந்த ஒருமாத காலமாக முதல்வரைச் சந்தித்துரையாட முடியாவிடின், வாக்களித்த ஒரு சாதாரண பிரஜையின் நிலை எப்படியிருக்கும் என எண்ணி அனந்தி கவலைப்பட்டதாகவும் தெரியவருகிறது.

 

ஏப்ரல் 19, 2014

சீமான் முழக்கம்

“ஓவராய் சரக்கடிச்சாலும் கண்ணில் இரட்டை இலை தெரிய வேண்டும்”

“நாம் தமிழர் கட்சிக்கு அ.தி.மு.க.-வின் கொள்கைகள் ரொம்ப பிடித்துப்போய் விட்டதில், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக சீமான் செய்யும் உணர்வு பொங்கும் சொற்பொழிவுகளை கேட்டு அலறுகிறார்கள் எதிர்க்கட்சியினர்” என்று நாம் எழுதினால் அது செய்தியில்லை. “அலறுகிறார்கள், அ.தி.மு.க.வினர்” என்று எழுதினால், அதை என்ன வகையில் சேர்ப்பது என்று புரியவில்லை. எப்படியோ, மானத் தமிழனின் பேச்சுகளைக் கேட்டு மயங்கி விழாத குறையாக தள்ளாடுகிறார்கள், அ.தி.மு.க.வினர். அப்படி என்னதான் பேசினார் சீமான்?
“டாஸ்மாக் போய் சரக்கடித்துவிட்டு தள்ளாடி தள்ளாடி போதையில் சென்றாலும், சரியாக இரட்டை இலைக்கே ஓட்டு போடுங்க” என்று பரப்புரை செய்து வருகிறார் செந்தமிழன் சீமான்.
தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. வேட்பாளர் பரசுராமனை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உணர்ச்சிக் குழம்பாய் சொற்சிலம்பம் செய்தார். அப்போது அண்ணன், “பெரியார், அம்பேத்கர் ஆகியோர் பிறந்த மண்ணில் பா.ஜ.க. எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க.தான் வெற்றிபெற முடியும் (அ.தி.மு.க.வுக்கும் அம்பேத்காருக்கும் என்ன சம்பந்தம், ‘அ’னாவுக்கு, ‘அ’னா தவிர?).
(மேலும்......)

இலங்கை போர் குற்றவாளிகள் பட்டியல் ஐ.நா.வுக்கு போகிறது! சில போர் குற்றவாளிகளுக்கு feeding bottle தேவை!!

இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இலங்கை ராணுவத்தினர், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலரின் போட்டோக்களுடன் போர்க்குற்றவாளிகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது, பிரிட்டனில் இருந்து இயங்கும் தமிழ் அமைப்பான பிரித்தானிய தமிழ் ஒன்றியம். 6,000 பெயர்கள் அடங்கிய இவர்களது பட்டியலில், ராணுவ அதிகாரிகளின் 3 வயதுக் குழந்தைகள்கூட உள்ளார்கள். அதாவது, 2009-ம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தபோது பிறந்திராத குழந்தைப் போர்க் குற்றவாளிகள்! “இந்தப் பட்டியலில் காணப்படுவோர் உண்மையில் போர்க் குற்றங்களை இழைத்தார்களா என்பது குறித்த ஆதாரம் ஏதும் இருக்கிறதா?” என்று கேட்டதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் தமிழ் அமைப்பைச் சேர்ந்த ஆழியன், “இது குறித்த ஆதாரங்களை நாங்கள் ஐ.நா. போன்ற அமைப்புகளுக்கு தரவுள்ளோம்” என்று கூறினார். (மேலும்......)

துண்டுப்பிரசுர விவகாரம், மற்றுமொருவர் கைது

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.இணுவில் பகுதியினைச் சேர்ந்த மன்மதராசா வேணுகாந்தன் (24) என்ற மேலும் ஒரு இளைஞன் நேற்று (17) இரவு கைது செய்யப்பட்டதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன் நேற்று (17) கைது செய்யப்பட்டிருந்தார். யாழ்.இந்துக் கல்லூரிக்கு அருகில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த பொலிஸாரினால் அகற்றப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட  இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராஜீவ் கொலை

மத்திய அரசின் மனுமீதான தீர்ப்பு விரைவில்


இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு ஏப்ரல் 25 ஆம் திகதிக்குள்  வெளியாகும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் மற்றும் பாலியல் வழக்குகளை 3 முதல் 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் மத்திய அரசு சார்பில் ஆஜராகி வாதிட்ட அட்டர்னி ஜெனரல் வாகன்வதி, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையென்று கூறினார். ஆனால் இவ்விவகாரத்தில் 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கே அதிகாரம் உள்ளது என்ற வாதத்தை தமிழக அரசு வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி வலியுறுத்தினார். மத்திய, மாநில அரசு வாதம் முடிவடைந்ததால் உச்சநீதிமன்றம் இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு ஒருவாரத்திற்குள் வழங்கப்படும் என்று நீதிபதி சதாசிவம் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ஏப்ரல் 25 ஆம் திகதியுடன் சதாசிவம் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஆம் ஆத்மி கட்சிக்கு 2 நாளில் ரூ. 1 கோடி நன்கொடை

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடியையும், ராகுலையும் எதிர்த்து போட்டியிடும் தங்களுக்கு நிதியுதவி செய்யும்படி 2 நாட்களுக்கு முன் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த 2 நாளில் அவருக்கு ரூ.1 கோடிக்கு மேல் நிதியுதவி கிடைத்துள்ளது. கடந்த புதன்கிழமை ரூ. 80 இலட்சமும், வியாழக்கிழமை ரூ.35 இலட்சமும் நிதியுதவி கிடைத்துள்ளது. இந்த நிதி இந்தியாவில் இருந்தும், சிங்கப்பூர், அமெரிக்கா, பெல்ஜியம், ஓமன், கனடா, ஜப்பான், ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இருந்தும் ஆம் ஆத்மியின் ஆதரவாளர்கள் வழங்கியிருக்கிறார்கள் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த ஒருவரும் ரூ.1 இலட்சம் வழங்கியுள்ளார். மிக குறைந்த நிதியுதவியாக ரூ. 10 ஒருவர் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

உக்ரைனில் பதற்றத்தை தணிக்க ரஷ்யா ரகசிய ஒப்பந்தம்

உக்ரைனில் நிலவிவரும் பதற்றத்தை தணிக்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனுடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தை ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லவ்ரவ் அறிவித்துள்ளார். ஜெனிவாவில் இதுகுறித்து நேற்றுமுன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது: ஜெனிவாவின் அறிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு விட்டோம். அதன்படி, உக்ரைனில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணிப்பதற்கு தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், சட்டவிரோதமாக ஆயுதம் ஏந்திய குழுக்கள் அனைத்தும் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். சட்டவிரோதமாக கைப்பற்றப்பட்ட கட்டிடங்கள் அதற்குரிய உரிமையாளர்களிடம் திரும்பிக் கொடுக்கப்பட வேண்டும். உக்ரைனுக்கு படைவீரர்களை அனுப்புவதில் ரஷ்யாவிற்கு விருப்பமில்லை.  உக்ரைனுக்கு படை வீரர்களை அனுப்பும் உரிமையை ரஷ்யா பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இல்லை. உக்ரைனின் அனைத்து பிரச்சனைகளையும் அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியில் தீர்க்க முடியும் என்பதில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

ஏப்ரல் 18, 2014

தேவாலயங்களில் யுவதிகளை இணைக்க வேண்டாம் அமைச்சர் டக்ளஸிடம் யாழ். மக்கள் கோரிக்கை

கிறிஸ்தவ தேவாலயங்களில் உள்ள பாட்டுக் குழுக்களில் யுவதிகளை இணைப்பதை தவிர்க்குமாறும் ஆலய கடமைகளில் வயதானவர்களை இணைக்குமாறும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகத்திடம் வேண்டுகோள் விடுக்குமாறு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.எக்.டக்ளஸ் தேவானந்தாவிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்.பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாழ்.சென்பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக காணப்படும் கிணற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது 22) சடலமாக மீட்கப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பாக சந்தேகம் நிலவுவதாக தாயார் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். (மேலும்......)

நெடியவன் உள்ளிட்ட 96 பேருக்கு அபாய அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவன் உட்பட 96 இலங்கையர்களை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) அபாய அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த 96பேரில் 40பேர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொணடவர்கள் என்றும் ஏனைய 56பேரும் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். அத்துடன் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யுத்தம் நிறைவடைந்த காலப்பகுதி முதல் இன்றுவரை கைது செய்யப்பட்ட 100பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார். (மேலும்......)

துண்டுப்பிரசுரம் ஒட்டியவர் கைது

யாழ்.இந்து கல்லூரிக்கு அருகில் அநாமதேய துண்டுப்பிரசுரத்தினை ஒட்டியவர் என்ற குற்றச்சாட்டில் யாழ்.கொக்குவில் பகுதியினைச் சேர்ந்த ஜெயதாஸன் கஜானன் (24) என்ற இளைஞன்; நேற்று (17) கைது செய்யப்பட்டுள்ளதாகப் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞன் நேற்று (16) இரவு அவ்விடத்தில் தமிழீழம் மலரும் என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரத்தினை ஓட்டினார் என்ற குற்றச்சாட்டிலேயே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மேற்படி இளைஞன் ஒட்டிய துண்டுப்பிரசுரமும் அங்கிருந்த அகற்றப்பட்டுள்ளதுடன், இளைஞன் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஜெறோம் மரணம்

யாழ்.ஆயர் இல்லம் அறிக்கை

குருநகர் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து கடந்த திங்கட்கிழமை (14) மீட்கப்பட்ட யாழ்.குருநகரினைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (22) என்ற யுவதியின் மரணம் தொடர்பில் யாழ்.ஆயர் இல்லக் குருமார் இருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ்.ஆயர் இல்லம் இன்று (17) அறிக்கையொன்று வெளியிட்டுள்ளது. யாழ் பேராலயத்தில் நவம்பர் 2013 – பெப்ரவரி 2014 காலப் பகுதியில் மறையாசிரியராகக் கடமையாற்றிக் கடந்த திங்கட்கிழமை (14) மரணமடைந்த செல்வி ஜெறோம் கொன்சலிற்றா அவர்களுக்கு எமது ஆழ்ந்த அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரைப் பிரிந்து துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும், குறிப்பிட்ட மரணம் தொடர்பாக பேராலய உதவிப் பங்குத் தந்தையர்கள் இருவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இவ் விசாரணைக்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். தவறுகள் மறைக்கப்படக்கூடாது என்பதே எமதும் நிலைப்பாடாகும். எனினும் ஊடகங்களில் வெளிவரும் அனைத்துச் செய்திகளும் முற்றிலும் உண்மையானவை என்று ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.  மிகைப்படுத்தலும் வௌ;வேறு தரப்புக்கள் தமக்குச் சார்பாக விடயங்களை திரிபுபடுத்தலும் இன்றைய சூழலின் யதார்த்தம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பாக வெளியான செய்திகளால் குழப்பமடையாது விடயங்களைச் சீர்தூக்கிப் பார்த்து உண்மையை அறிய முயலவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

வன்னி, நுவரெலியா மாவட்டங்களில் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

2013ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படி நுவரெலியா மற்றும் வன்னி மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகை தலா ஒன்றினால் அதிகரித்துள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. இது தவிர குருநாகல் மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு ஒதுக்கப்படும் உறுப்பினர் தொகை தலா ஒன்றினால் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமட் குறிப்பிட்டார். 2013ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின்படி 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் தெரிவு செய்யப்படும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகைகள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியாவில் இருந்து தெரிவாகவும் உறுப்பினர் தொகை பதிவு செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பின் படி 7 இல் இருந்து எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து தெரிவாகும் உறுப்பினர் தொகை 5 இல் இருந்து 6 ஆகவும் உயர்ந்துள்ளது. இது தவிர மாத்தறையில் இருந்து தெரிவு செய்யப்படும் உறுப்பினர் தொகை 8 இல் இருந்து 7 ஆகவும் குருநாகல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்படும் தொகை 16 இல் இருந்து 15 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

அரசின் கதவுகள் திறந்தேயுள்ளன கூட்டமைப்பு எப்போதும் பேச வரலாம்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்த நேரமும் பேச்சு நடத்த அரசாங்கம் தயாராக இருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து ஆராய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவே உகந்த இடம் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று குறிப்பிட்ட அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.  தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கைக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தென் ஆபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட த.தே.கூ. பிரதிநிதிகள் தென்ஆபிரிக்கா வின் சமரசத்துடன் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர். தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவரும் சபை முதல்வருமான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் இது குறித்து வினவியதற்கு பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏப்ரல் 17, 2014

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா!

(அ. வரதராஜப்பெருமாள்)

தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களிற் பெரும்பாலோர் தாங்கள் முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநருக்கு முன்னால் சத்தியப்பிரமாணம் செய்யத் தயாராக இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உள்ளேயே கலகம் செய்யும் நிலைக்கு வழிவகுத்தது. அதுமட்டுமல்லாமல் வடக்கு கிழக்கில் இராணுவத்தை மீளப்பெறாத - இராணுவத்தின் பிரசன்னங்களை உடனடியாகக் குறைக்காத ஜனாதிபதிக்கு முன்னால் தமிழ் முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் செய்வது இனத் துரோகம் என தமது முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாண சபையின் ஆளும் கட்சியினரே அரசியற் குழப்பம் விளைவித்தனர் இந்த விநோதம் நிகழ்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் மேடைகளில் மேற்கொண்ட வீர முழக்கங்களே காரணமாகும்.  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியல் எப்படி இருக்கிறது என்றால், எதிரிக்குச் சகுனம் பிழைக்கும் வேலையைச் செய்யப் போய் தங்களது மூக்கைத் தாங்களே  அறுத்துக் கொள்ளும் வேலையைச் செய்வது போலவே அவர்களின் சாதனைகளும் அமைகின்றன. (மேலும்......)

புலி வருகிறது

பொதுவாக கூறுவதாயின் போர் முடிவடைந்த ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் தமது உரிமைகளைப் பற்றி மட்டுமே சிந்தித்தார்களேயல்லாமல் அரசாங்கத்தையும் சிங்கள மக்களையும் வென்றெடுக்க முயற்சிக்கவில்லை. அதேபோல் அரசாங்கமும் பாதுகாப்புப் படைகளும் வட பகுதியைப் பார்க்கச் சென்ற தென் பகுதி மக்களும் பாதுகாப்பு பிரச்சினைகளையும் தமது வெற்றியையும் பற்றி மட்டுமே சிந்தித்தார்களேயல்லாமல் தமிழ் மக்களை வென்றெடுப்பதைப் பற்றி சிந்திக்கவில்லை. இரு சாராரினதும் இந்த நிலைமை இன்னமும் நீடித்துக் கொண்டு இருக்கிறது. அதிகார பரவலாக்கலின் நன்மை தீமைகளைப் பற்றி சிங்கள மக்களுக்கோ தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கோ உண்மையிலேயே பெரிதாக தெளிவில்லை. ஆனால் இந்த விடயத்திலும் தமிழ் மற்றும் சிங்கள் அரசியல்வாதிகள் தொடர்ந்து முரண்பட்டுக் கொள்வதால் மேலும் மக்களிடையே விரிசல் ஏற்பட்டு வருகிறது. அரசியல்வாதிகள் அதைக் கொண்டு ஆதாயம் பெறுகிறார்கள். சிங்கள மக்களை கவரும் நோக்கிலும் தமது ஏனைய குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும் அரச தலைவர்கள் வட மாகாண சபைத் தேர்தலை போர் முடிவடைந்தும் நீண்ட காலமாக நடத்தவில்லை. பின்னர் மாகாண சபைச் சட்டத்தை ரத்துச் செய்யவும் முயற்சித்தார்கள். மாகாண சபைகளின் அதிகாரங்களை பறிக்க முயற்சித்தார்கள். தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களை கவர்வதற்காக தாயகம், சுய நிர்ணய உரிமை, சுயாட்சி போன்ற பதங்களால் சிங்கள மக்களை குழப்பி அவர்களின் மனதில் கிலியை ஏற்படுத்தி வருகிறார்கள். (மேலும்......)

நெடியவனை கண்ட இடத்தில் சுட அனுமதி கோருகின்றது இலங்கை அரசு?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தலைவர் என்று கூறப்படும் நெடியவனை கண்ட இடத்தில் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினூடாக (இன்டர்போல்) 'அபாய அறிவிப்பு' விடுக்க இலங்கை முயற்சித்து வருகின்றது. இவர் தற்போது நோர்வேயில் மறைந்திருப்பதாக இலங்கை புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள தகவலை அடுத்தே இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்க நெடியவன் முயற்சித்து வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுங்கேணியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்ட புலிகள் இயக்க உறுப்பினர்கள் மூவரும் நெடியவனின் ஆலோசனைக்கமையவே செயற்பட்டு வந்துள்ளனர் என்றும் இலங்கை புலனாய்வுப் பிரிவு அறிவித்துள்ளது. தாக்குதல் அல்லது குண்டுத் தாக்குதல் ஒன்றின் மூலம், இலங்கையில் புலிகள் இயக்கத்தின் செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பவை வெளி உலகுக்கு காட்டுவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுள்ளனர் என்றும் புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. புலிகள் இயக்கத்தை உயிர்ப்பித்து செயற்படுத்துவதற்கான நிதி திரட்டல் நடவடிக்கையின் பின்னால் நெடியவனே உள்ளார் என்றும் இவ்வாறு திரட்டப்படும் நிதியின் மூலம் புலிகள் இயக்கத்தினர் மறைந்திருப்பதற்கான வீடுகள் மற்றும் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன என்றும் தகவல் கிடைத்துள்ளதாக புலனாய்வுப் பிரிவு மேலும் கூறியுள்ளது.

இலங்கை போரில் இந்தியப்படை விவகாரம் - மனு தள்ளுபடி

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது இந்திய இராணுவம் போர்க்களத்தில் இருந்ததாகத் தெரிவித்து டெல்லி தமிழ் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை டெல்லி உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை போரில் இந்தியப்படையினர் பங்கேற்றமை தொடர்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் ராம் சங்கரினால் தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதிகள் குழு, மனு தாரரின் கோரிக்கையானது நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

கே.பி மீதான அபாய அறிவிப்பு நீக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச தலைவராக இருந்த கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் மீது சர்வதேச பொலிஸாரான இன்டர்போலினால் விடுக்கப்பட்டிருந்த அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியர்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார். 2009ஆம் ஆண்டின் பின்னர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்பதாலேயே கே.பி மீதான அபாய அறிவிப்பு நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

உறவுகளை மீண்டும் தொடங்கவுள்ளோம் - அமெரிக்கா

நல்லிணக்க மற்றும் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் முன்னேற்றம் கண்டதும் முழுமையான இராணுவ உறவுகளை மீண்டும் தொடங்க ஆவலாக இருப்பதாக அமெரிக்கா கூறியது. தெற்கு மற்றும் மத்திய ஆசிய விடயங்களுக்கான உதவிச் செயலாளர் நிஷா பிஸ்வாலே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஹவாட் பல்கலைகழகத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமெரிக்க தென்னாசிய வெளிநாட்டு கொள்கை செழிப்புக்கும் பாதுகாப்புக்குமான தொலைநோக்கு எனும் விடயம் தொடர்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் பொறுப்புக் கூறுதல் மற்றும் நீதி என்பவற்றை உறுதிசெய்வதற்கு நம்பகமான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்ததென கூறினார். 'இலங்கை அதிர்ஷ்ட வசமாக யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. ஆயினும் நல்லிணக்கம் என்பது சவாலாக இருந்து வருகின்றது.  மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட ஐநா  மனித உரிமை பேரவை தீர்மானத்தை தொடர்ந்து நாம் பொறுப்புக்கூறுதல் மற்றும் நீதி என்பவற்றை உறுதி செய்யுமாறு கூறிவருகின்றோம்'  என அவர் கூறியுள்ளார்.

கிழக்கு உக்ரைன் நெருக்கடி

புடினுடன் ஒபாமா தொலைபேசியில் பேச்சு

உக்ரைனில் தன்னாட்சி பகுதியாக இருந்த கிரிமியா பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைந்தது. அதைத் தொடர்ந்து கிழக்கு உக்ரைனிலும் ரஷ்ய ஆதரவா ளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அங்கு சுமார் 10 நகரங்களில் உள்ள அரசு கட்டடங்களை ஆக்கிரமித்து உள்ளனர். அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, அரசு கட்டிடங்களை விட்டு வெளியேறுவதற்கு உக்ரைனின் தற்போதைய ஜனாதிபதி அலெக்சாண்டர் டுர்ச்சினோவ் விதித்த கெடு நேற்று முன்தினம் முடிந்து விட்டது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் கெடுவுக்கு பணிய மறுத்ததோடு, புதிதாக கட்டிடங்களை கைப்பற்றி வருகின்றனர். அவர்கள் பொதுவாக்கெடுப்பு நடத்தி ரஷ்யாவுடன் இணைய வேண்டும் அல்லது தங்களுக்கு கூடுதல் சுயாட்சி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். இந்த விவகாரத்தில் ரஷ்யா பின்னணியில் இருந்து செயல்படுவதாக உக்ரைன் வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறது. இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது புடினிடம் ஒபாமா, "உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, கிழக்கு உக்ரைனில் கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை விட்டு வெளியேறச் செய்யுங்கள். அவ்வாறு செய்யாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக புதிய பொருளாதாரத்தடைகள் விதிக்கப்படும்" என கடுமையாக எச்சரித்தார். இதை வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை உறுதி செய்துள்ளது. மேலும், "உக்ரைன் பிரச்சினையில் ரஷ்யா பிடிவாதமாக இருந்தால் ஏற்கனவே கொடுத்துள்ள விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டிவரும்" என புடினிடம் ஒபாமா எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ரஷ்ய ஜனாதிபதி; மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ரஷ்யா மற்றும் ரஷ்ய மொழி பேசுகிற மக்களின் நலன்களை கருத்தில் கொள்வதற்கு உக்ரைன் தலைமை ஆர்வம் காட்டாததும், நடவடிக்கை எடுக்காததும்தான் கிழக்கு உக்ரைன் நெருக்கடிக்கு காரணம்" என கூறப்பட்டுள்ளது.

இதுபோதும் எனக்கு!' சந்தோஷத்தில் மோடியின் மனைவி

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்குச் சென்ற பிறகு, தன் வீட்டுக்கு வருவதையேகூட மோடி மறந்துவிட்டார். இன்னொருபுறம் யசோதா பென், சொந்த கிராமத்தில் 1972-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. முடித்துவிட்டு, ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேர்ந்து அதிலும் தேர்ச்சி பெற்றார். இதையடுத்து அவர் அகமதபாத்தில் இருக்கும் ஒரு ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மூன்றே மாதங்களில் பானஸ்கந்தா மாவட்டத்தில் இருக்கும் தேக்வாலி கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகிச் சென்றுவிட்டார்'' என்றார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது யசோதா பென் பணியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்பு 'ஓபன் மேகஸின்’ பத்திரிகையின் நிருபர் ஒருவர் யசோதா பென் பணியாற்றிவந்த பள்ளிக்கூடத்துக்கே சென்றி​ருக்கிறார். மோடியின் பெயரைச் சொன்னதுமே யசோதா பென்னின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பும் மகிழ்ச்சியும் வந்ததாக எழுதி​யிருக்​கிறார் அந்த நிருபர். யசோதா பென்னுடன் மேற்கொண்டு பேசுவதற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுமதி தரவில்லை. அத்துடன் யாருக்கோ அவர் போன் செய்ய, அந்தப் பள்ளிக்கூடத்துக்கு விரைந்த வந்த சிலர், யசோதா பென்னை ஆட்டோவில் வைத்து ஒரு சில கிலோ மீட்டர்கள் தள்ளியிருக்கும் பிரஹமன்வாதா என்ற ஊருக்கு அனுப்பிவிட்டார்களாம். அங்குதான் யசோதாவின் சகோதரர் நடத்தும் மளிகைக் கடை உள்ளது. (மேலும்......)

ஏப்ரல் 16, 2014

இலங்கை தமிழர்களுக்கான ராஜீவின் தியாகத்தை மறக்க வேண்டாம்

'இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை என்கின்றனர். காங்கிரசை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜிவ் இந்த மக்களுக்காக ரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக காங்கிரஸ் கட்சி எதுவும் செய்யவில்லை என அரசியல் கட்சியினர் குற்றம்சுமத்துகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்காக காங்கிரஸை விட எந்த கட்சி நன்மைகள் செய்தது என்பதை சொல்ல முடியுமா?. அருமை தலைவர் ராஜீவ் காந்தி, இலங்கைத் தமிழ் மக்களுக்காக இரத்தம் சிந்தியதை மறக்க முடியுமா? இதை விட என்ன தியாகம் செய்ய முடியும்' என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சி குறித்து யாரும் பொய் பிரசாரம் செய்ய வேண்டாம் என கேட்டு கொள்கிறேன். இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் தொடர்ந்து உதவி செய்யும்.  இங்கு வாழும் தமிழர்களுக்கு வீதிகள், பள்ளிக்கூடங்கள், மறுவாழ்வு மையம் அமைத்து கொடுத்துள்ளோம். அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரசை குறை கூற வேண்டாம். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண போதிய நடவடிக்கை எடுத்துள்ளோம். மீனவர்கள் படும் துன்பம் எனக்கு தெரியும். எனது அரசு மீனவர்களுக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் இரு தரப்பு மீனவர்களை சந்தித்து பேச்சு நடத்த காங்கிரஸ்தான் முழு ஏற்பாடு செய்தது. அ.தி.மு.க,. அரசு காலதாமதம் செய்தது என்பதை பகிரங்கமாக சொல்லி கொள்கிறேன்' என்று சோனியா காந்தி மேலும் கூறினார். (தினமலர்)

முற்போக்கு தமிழ் தேசிய கட்சி உதயம்

யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந்த் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி என்ற புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்துள்ளார். இக்கட்சி அங்குரார்ப்பண நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சனிக்கிழமை (12); யாழ்.குருநகர் சுவர்க்கா விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போது, கட்சி சின்னம் மற்றும் கட்சியின் யாப்புக்கள் வெளியிடப்பட்டன. இக்கட்சி வடமாகாணத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், இக்கட்சியின் செயலாளர் நாயகமாக சுதர்சிங் விஜயகாந்த் செயற்படவுள்ளதுடன், பிரதித் தலைவர் உட்பட 12 உறுப்பினர்கள் இக்கட்சியில் உள்ளனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இக்கட்சி புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.  நிறைகுடம் சின்னத்துடன், ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சியின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நீலம் ஆகிய நிறங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் சிவப்பு அர்ப்பணிப்பினையும், மஞ்சள் ஒழுக்கத்தினையும், நீலம் ஒற்றுமையினையும் எடுத்துக் காட்டுகின்றது.  தமிழ் மக்களின் நிலம், கலாசாரம், பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றினை மேம்படுத்தும் நோக்கத்துடனும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்படவேண்டுமென்றும் என்ற நோக்குடனும் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அந்தவகையில், தனி தமிழம் இனி வரும் காலங்களில் கிடைக்கப்போவதில்லை. அவ்வாறு தனி தமிழீழம் கிடைக்குமென்றால், மத்திய அரசாங்கத்துடன், இணைந்து செயற்பட தாம் தயாராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (பாகம் 3)

ராஜீவ் காந்தியைக் கொன்றது எப்படி? ஏன்?

அது மே மாதம் 21ஆம் திகதி 1991ஆம் வருடம், மாலை மங்கிய நேரம். சென்னை பாரிமுனை பஸ் நிலையத்திலிருந்து அந்தக் குழு ஸ்ரீபெரும்புதூர் நோக்கி, பல்லவன் பஸ்ஸில் புறப்பட்டது. ஹரிபாபு ஏற்கனவே கையில் பூம்புகாரில் வாங்கப்பட்ட சந்தன மாலையோடு காத்து நின்றார். சுமார் 8 மணியளவில் அங்கு சென்று சேர்ந்தனர் இரு ஆண்களும், மூன்று பெண்களும். சிவராசன் ஒரு பத்திரிக்கை நிரூபர் போன்று வெள்ளை குர்தா ஆடை உடுத்தி, தோளில் ஒரு பை, கையில் எழுதுவதற்கு ஒரு நோட்டு என்று தோற்றமளித்தார். தானு பச்சை மஞ்சள் நிறத்தில் ஒரு தொள தொள சல்வார் கமீசில் இருந்தாள். பஸ்ஸில் இருந்தபடியே மெதுவாக தனது உடுப்பைத் தொட்டுப் பார்க்கும்படி புன்முறுவலுடன் நளினியிடம் கூற, தடவிப் பார்த்த நளினி அதிர்ச்சியடைந்தாள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால் பஸ்ஸில் எதுவும் பேசவில்லை. (மேலும்......)

இறுதி யுத்தத்தில் இந்தியப் படை பங்கேற்றது

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது இந்திய படையினர் பங்கேற்றதாக இந்திய உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்திலும், ஜனாதிபதியிடமும் அனுமதி கோராமல், இந்திய படையினரை 2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற  யுத்தத்தில் ஈடுபடுத்தியதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் பிரகடனம் செய்யப்படாத நிலையில், இந்திய அரசியல் அமைப்பின் படி, இந்திய படையினரை இவங்கையில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு இந்திய உயர்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (17) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டில் மதுபோதையில் ஏற்பட்ட விபத்துக்களால் 38 பேர் உயிரிழப்பு

தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டு பெரும்பாலான மக்களால் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்ட போதிலும் மதுபோதை என்ற கொடிய அரக்கனின் தலையீட்டினால், நாட்டில் வன்முறைக ளும் வீதி விபத்துக்களும் இடம்பெற்றதனால் சில குடும்பங்க ளைச் சேர்ந்தவர்களின் நிம்மதியான புத்தாண்டு கொண்டாட்டங் களை சீர்குலைத்து விட்டது என்ற துக்ககரமான செய்தியையும் நாம் மறைத்து வைப்பது நல்லதல்ல.ஏப்ரல் 10ம் திகதி முதல் 15 வரை 5 நாட்களில் இலங்கையில் 417 வன்முறைச் சம்பவங்களும் வீதி விபத்துக்களும் இடம்பெற்றன. நாடெங்கிலும் ஏற்பட்ட 34 வீதி விபத்துக்களில் 38 பேர் இந்த 5 நாட்களில் மரணித்தார்கள். மது போதையில் வாகனங்களை செலுத்தியவர்களே இந்த பண்டிகைக் காலத்தின் போது நீதி தேவதையின் முன் நிறுத்தப்பட்டு தண்டனைக்கு உள்ளானார்கள்.(மேலும்......)

உக்ரைனுக்கு அமெரிக்கா ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி

கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் ஐரோப்பிய யு+னியனுடன் இணைவதில் ஏற்பட்ட பிரச்சினையில் அங்கு பதவியில் இருந்த ரஷ்ய சார்பு ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் பதவி விலகி இடைக்கால அரசு அமைந்தது. புதிய தேர்தலுக்கான ஏற்பாடுகளில் இந்த அரசு கவனம் செலுத்த உக்ரைனின் ஒரு பகுதியான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய தீர்மானித்தது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இதனை எதிர்த்தபோதும் ரஷ்யா கிரிமியாவைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த அரசியல் நெருக்கடிகள் அடங்குவதற்குள்ளாகவே உக்ரைனின் கிழக்கு பகுதிகளில் ரஷ்ய சார்பு கிளர்ச்சியாளர்கள் தங்களின் போராட்டங்களை துவக்கியுள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள காவல்நிலையத்தையும், அரசு கட்டிடங்களையும் சமீபத்தில் முற்றுகையிட்டுள்ள அவர்கள் ரஷ்யாவுடன் இணைவதற்கான வாக்கெடுப்பிற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொந்தளிப்பான இந்த நிலைமையில் உக்ரைன் அரசுக்கு ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா நேற்றுமுன்தினம் அந்நாட்டின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளுக்காக ஒரு பில்லியன் டொலர் மதிப்புடைய கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மலேசிய விமானத்தை கடலுக்கு அடியில் தேடும் நீர்மூழ்கி ரோபோ

239 பேருடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் 'எம்எச் 370', கோலாலம்பு+ரில் இருந்து சீனத் தலைநகர் பீஜpங் சென்ற வழியில், நடுவானில் மாயமாகி 37 நாட்கள் ஆகிவிட்டன. அந்த விமானம் என்ன ஆனது என்பதை இந்த நவீன அறிவியல், தொழில்நுட்ப உலகிலும் இதுவரை கண்டுபிடிக்க இயலாதது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற ரேடார் தகவலின் பேரில், விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வருகிற 'பிங்' சமிக்ஞையை கேட்டு, அது இருக்கிற இடத்தை தேடிக்கண்டு பிடிக்கும் 'டோவ்டு பிங்கர் லொக்கேட்டர்' என்னும் கருவிகளை ஓஸன் 'ல்ட் என்னும் அவுஸ்திரேலிய போர்க்கப்பலும், 'எச்.எம்.எஸ். எக்கோ' என்னும் இங்கிலாந்தின் நீர்நிலைப்பரப்பு ஆய்வு கப்பலும் இழுத்துச்சென்று தேடுகின்றன. இந்த நிலையில் மாயமான விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து 4 முறை 'பிங்' சமிக்ஞைகள் வந்தன. இதையடுத்து அந்த இடத்தைச் சுற்றிலும் (அவுஸ்திரேலியாவின் பேர்த் நகருக்கு வடமேற்கில் 2,280 கி.மீ. பகுதியை மையப்பகுதியாக கொண்டு, 57 ஆயிரத்து 923 சதுர கி.மீ. பரப்பளவு) கறுப்பு பெட்டியை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது. கறுப்பு பெட்டியில் பொருத்தப்பட்டிருந்த பட்டரியின் ஆயுள்காலம் ஒரு மாதம்தான். இந்த நிலையில் கடந்த 8-ம் திகதிக்கு பின்னர் 'பிங்' சமிக்ஞை ஒன்றுகூட வரவில்லை. எனவே பட்டரி காலாவதியாகி விட்டது என்று நம்பப்படுகிறது. இதையடுத்து விமானத்தின் சிதைவுகளை தேடும் வேட்டையில் அதிநவீன நீர்மூழ்கி 'ரோபோ' நேற்றுமுன்தினம் களமிறக்கப்பட்டது. இது 'புளுபின்-21' என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான இந்த ரோபோ, அதிநவீன கருவிகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டதாகும்.

ஏப்ரல் 15, 2014

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா? (பாகம் 2)

1983 இனக்கலவரம் - கொழும்பு எரிந்தது

விடுதலைப் புலிகள் தினசரி சட்டம் ஒழுங்கை மீறிய சம்பவங்கள் நிறைய உண்டு. ஒன்றை இங்கு கூறலாம். ஜ_ன் 03ஆம் திகதி 199இல் தஞ்சை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் மூன்று படகுகள், ஆயுதங்கள் - வெடி பொருட்கள் ஏற்றி கடலில் பயணித்த வேளையில், கடலோரக் காவல்படை அவர்களைத் தடுத்தது. சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். புலிகள் சீறினார்கள். துப்பாக்கியால் துவம்சம் செய்வோம் எனப் பயமுறுத்தினர். ஆயுதமில்லாத சுங்க அதிகாரிகள் பயந்தனர். புலிகள் வென்றனர். வெற்றிப்பயணம் தொடர்ந்தது. அடுத்த இரண்டு நாட்களில் - அதாவது கருணாநிதி டெல்லியில் இருக்கையில், ஜ_ன் 19ஆம் திகதி வெள்ளை அம்பாசிடர் TMA 3157இல், 3ஆம் தெரு, A5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கத்தில் நுழைந்த விடுதலைப் புலிகள், பத்மநாபா என்ற EPRLF போராளிக் குழுவின் தலைவனையும், 13 பேரையும் சுட்டுக் கொன்று, தப்பிச் சென்றனர். ஜுலை 22ஆம் திகதி சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது திரு. வாஜ் பாய் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "முதல்வர், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இருக்கிறார்கள்... ஆனால் அவர்களிடம் ஆயுதம் இல்லை என்று கூறினார்" என்று வருத்தத்துடன் சொன்னார். (மேலும்......)

பொதுநலவாயத்திற்கான நிதியை இடைநிறுத்தியது கனடா

பொதுநலவாய நாடுகளின் தலைமைப் பொறுப்பை இலங்கை வகிக்கின்ற காலப்பகுதியில் பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. இந்த அமைப்புக்கு 12 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க கனடா திட்டமிட்டிருந்தது. இலங்கையின் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விவகாரம் காரணமாகவே பொதுநலவாய அமைப்புக்கான நிதியை தாம் இடைநிறுத்துவதாக கனடா அறிவித்துள்ளது. ஆனால் தற்போது அந்த நிதி சிறுவர் மற்றும் சமூக விவகாரங்கள் தொடர்பான வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என கனடா அறிவித்துள்ளது.

கிளிநொச்சியில் கிளைமோர் மீட்பு

கிளிநொச்சியில் ரயில் பாதைக்கு அண்மையாகவுள்ள கிணறு ஒன்றிலிருந்து கிளைமோர் குண்டொன்று இன்று (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். கிணற்றினை துப்பரவு செய்யும் பணி முன்னெடுக்கப்பட்ட போது, கிணற்றினுள் குண்டு இருப்பதினை அவதானித்த துப்பரவு பணியில் ஈடுபட்டவர்கள் உடனடியாக இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிற்குத் தகவல் வழங்கினார்கள். தொடர்ந்து இராணுவத்தினருடன் குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் குண்டினை மீட்டுள்ளனர். அத்துடன், குறித்த கிணற்றின் சுத்திகரிப்புப் பணியினை நிறுத்தும் படியும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

The Watchful Eyes of Governments: LTTE Fronts to Come Under Scrutiny

(By Maya Anthony )

Sri Lankan authorities disrupted a network planning and preparing to revive the LTTE last week. The terrorist leaders, Selvanayagama Kajeepan alias Gopi (in charge of intelligence), Sundaralingam Kajeepan alias Thevihan (in charge of military matters) and Navaratnam Navaneethan alias Appan (in charge of propaganda), were killed in a confrontation with troops in the Nedunkerni jungle off Padaviya.in Sri Lanka on April 10, 2014.Together with INTERPOL designated Kumaran Pathmanathan, the LTTE leader Visuvanathan Rudrakumaran cofounded TGTE, a designated terrorist entity under UNSCR 1373. Rudrakumaran himself is a designated person under UNSCR 1373. (more....)

நெடியவன்,விநாயகம் இருவரை கைது செய்ய இன்டர்போல் உதவி

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டுவதற்கு முயற்சிப்பதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற நெடியவன், விநாயகம் ஆகிய இருவரையும் கைதுசெய்வதற்காக இன்டர்போல் - சர்வதேச பொலிசாரிடம் உஷார்ப்படுத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்திருக்கின்றார். வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவ சுற்றி வளைப்பின்போது சுட்டுக்கொல்லப்பட்ட கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவர் தொடர்பான விசாரணைகளில் நெடியவன் மற்றும் விநாயகம் ஆகியோர் பின்னணியில் இருந்து செயற்படுவது பற்றிய தகவல்கள் வெளியாகியிருந்தாக அவர் குறிப்பிட்டார். 'வெளிநாடுகளில் இருக்கின்ற நெடியவன், விநாயகம் ஆகிய இருவரும் நேற்று முன்தினம் சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரையும் நாட்டில் உள்ள வேறு பலரையும், அத்துடன் தமிழ்க் குழுக்களையும் நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து பிரச்சினைகளை உருவாக்குவதற்குத் தூண்டி வருகின்றார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது.  கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரும் கொல்லப்படுவதற்கு முன்பும், அவர்கள் கொல்லப்பட்டதன் பின்னரும் இடம்பெற்ற விசாரணைகளில் இது தெரியவந்திருக்கின்றது. இவர்கள் முன்னர் நாட்டில் இருக்கும்போது பல குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதற்காக அவர்களுக்கு எதிராக நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் இவர்கள் தொடர்பாக ஏற்கெனவே சர்வதேச பொலிசாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. இப்போது அவர்கள் தேடப்படுகின்றார்கள் என்று மீண்டும் சர்வதேச பொலிசருக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது' என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் சர்வதேச துணையுடன் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலி செயற்பாட்டாளர் நந்தகோபாலிடம் அவருடைய உத்தரவின்பேரில் நாட்டில் கையாளப்பட்டுள்ள நிதி மற்றம் விடயங்கள் தொடர்பாக தாங்கள் விசாரணைசெய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கோபியின் தாயார் விடுதலை

வவுனியா நெடுங்கேணியில் சுட்டுக் கொல்லப்பட்ட கோபியின் தாயார் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்திருக்கின்றனர். கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவருடனும் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டிருந்த 18 பேர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனாலும், இந்த எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக உடனடியாக உறுதி செய்ய முடியவில்லை. கொழும்பு தெஹிவளையில் கைது செய்யப்பட்ட, பேக்கரி ஒன்றில் பணியாற்றியவர்கள் என சொல்லப்படுகின்ற 8 பேரும் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.(பிபிசி)

ஏப்ரல் 14, 2014

அனைத்து இனிய நெஞ்சங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சமகால அரசியல் பற்றி வரதராஜப்பொருமாள்.......!

வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடக்கும் நிலைமை ஆரம்பித்து தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அறிக்கைகள் தேர்தல் விஞ்ஞாபனம் ஆகியவற்றைப் பார்த்த போது இலங்கைத் தமிழர்களின் அரசியல் வரலாற்றில் வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறப் போகிறதோ – எதிர்ப்பு அரசியல் மட்டும்தான் எப்போதும்  முன்னணி வகிக்கப் போகிறதோ – ஆளும் அரசியலிலும் தமிழர்களுக்கு உரிமைப் பங்குண்டு என்பது எக்காலத்தும் நிறுவப் படாது போகுமோ என்ற சந்தேகமே எழுந்தது. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குவேட்டை அரசியலை நடத்தினாலும் ஆட்சிக்கு வந்ததும் நடைமுறை யதார்த்தங்களைப் புரிந்து கொண்டு செயற்பட முடியும் - செயற்பட முயற்சிக்கும் என்ற எதிர்பார்க்கை என்னிடம் பல சந்தேகங்கள் மத்திலும் இருந்தது. அதிலும் குறிப்பாக நாற்பது ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவங்களும் கொண்ட திரு விக்கினேஸ்வரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சத்து முப்பதாயிரத்துக்கு மேற்பட்டவர்களின் வாக்குகளைப் பெற்று உட்கட்சி எதிர்ப்புக்களையும் மீறி அவர் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராக பதவியேற்ற போது தனக்கு சரியெனப்பட்டதை செய்வார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உள் முரண்பாடுகள், வெளிநாட்டுப் புலி ஆதரவாளர்களின் நெருக்குதல்கள் யாழ்ப்பாண மையத் தளங்களில் நிலவும் சிங்கள விரோத மற்றும் அரச விரோத அரசியலின் செல்வாக்கு போன்றனவற்றின் காரணமாக அவர் பல சிக்கலை எதிர்நோக்குவார் என்ற கணிப்புகளின் மத்தியிலும் சம்பந்தர், சுமந்திரன் போன்றோரின் ஆதரவுடன் திரு விக்கினேஸ்வரன் அதிகாரப் பகிர்வு விடயங்களை யதார்த்த பூர்வமாக நகர்த்துவார் என்ற எதிர்பார்க்கையும் அதைச் செய்யக் கூடிய அறிவும் ஆற்றலும் உடையவர் என்ற நம்பிக்கையும் எனக்குள் இருந்தன. (மேலும்......)

அந்தோ தமிழ்நாடே!

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா?(பாகம் 1)

பத்மநாபா கொலை

அது செவ்வாய்க்கிழமை ஜ_ன் மாதம் 19ஆம் திகதி 1990ஆம் வருடம், நேரம் மாலை 06.15 மணி. வெள்ளை அம்பாசடர் கார் TNA3157, 3ஆம் தெரு, யA5 பவர் அபார்ட்மெண்ட், ஜக்கரியா காலனி, கோடம்பாக்கம், சென்னை என்ற முகவரியின் வாசலில் நுழைந்து, உள்ளே வந்து நின்றது. ஒருவர் மட்டும் ஒட்டுனர் ஆசனத்தில் அமர்ந்தி ருக்க, நால்வர் இறங்கினர். அவர்கள் கைகளில் ஏ.கே.47 துப்பாக்கியும், வெடிகுண்டுகளும் இருந் தன. இருவர் காருக்கு வெளியே காவலுக்கு நிற்பது போல் நின்றனர். மற்ற இருவர் A5 அபார்ட் மெண்டை நோக்கி மாடியேறினர். அடுத்த சில நிமிடங்களில் துப்பாக்கி ரவை மழையோடு பயங்கர வெடிச்சத்தமும் கேட்டது. கீழே நின்ற இருவரும் தங்கள் கைகளிலிருந்த துப்பாக் கிகளால் கண்டதையும் சுட்டனர். வெடி குண்டுக ளையும் பல திசைகளில் வீசினர். ஒரே சத்தம்... அலறல்... கலவரம்... களேபரம்... நால் வரும் அதே காரில் ஏறிப் பறந்துவிட்டனர். விளைவு மொத்தம் 14 இலங்கையர், 2 சென்னைவாசிகள் கொல்லப்பட்டனர். 22 பேர் துப்பாக்கி, வெடிகுண்டு களால் காயப்பட்டனர். 164 துப்பாக்கி ரவைகள் படுக்கையறை, ஹால், வீட்டிற்கு வெளியே, சாலைப் பகுதி, ஆகிய பகுதிகளிலிருந்து பொறுக் கியெடுக்கப்பட்டன. பல இடங்களில் இரத்தக் கறைகள் படிந்திருந்தன. (மேலும்......)

வழிபாட்டு அரசியல் வேண்டாம் நானாகவே விலகிவிட்டேன். எனது நேர்மையான அரசியல் தொடரும். தமிழினத்திற்காக எனது குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்!

மனோ கணேசனே தலைவராகவும், பொதுச்செயலாளராகவும் உள்ள ஜனநாயக மக்கள் முன்னணியிலிருந்து மனோகணேசன் என்னை இடைநிறுத்தியுள்ளதாக பத்திரிகைகள் வாயிலாக அறியக்கிடைத்தது. குறித்த இடைநீக்கமும், பிரதித் தலைவர் பதவியிலிருந்து நீக்கலும் சட்ட ரீதியாகப் பிழையானது. இது போன்றதொரு முடிவெடுப்பதற்கான கூட்டம் இரவோடிரவாக கூட்டப்படமுடியாது, மாறாக குறித்த கால அவகாசத்தில் அரசியல் குழுவிலுள்ள யாவருக்கும் முறையான அழைப்பும், குறித்த பிரேரணை தொடர்பான முறையான அறிவித்தலும், நிகழ்ச்சிநிரலும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். கட்சியின் பிரதித் தலைவரும், அரசியல் குழு உறுப்பினருமான எனக்கும் கூட்டத்திற்கான அறிவிப்பும், பிரேரணை தொடர்பான அறிவித்தலும் அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும். (மேலும்......)

குமரகுருபரன் இந்தமாதிரி கீழ்த்தரமாக பேசக்கூடாது

குமரகுருபரனின் அறிக்கைக்கு குகவரதன், ராஜேந்திரன் கூட்டாக பதிலடி

விக்கிரமபாகுவின் கட்சி 100 வாக்குகளைகூட பெறவில்லை. இருந்தும் நாம் அவருக்கு அங்கீகாரம் அளித்து வருகிறோம். ஏனென்றால் நமது கட்சி, தமிழர் உரிமை கோஷம் எழுப்பும் கட்சியே தவிர, தமிழ் இனவாத கட்சி அல்ல. தலைவரின் வழிகாட்டல் இதுவாகும். இதை குமரகுருபரன் அறியாதவர் அல்ல. தமிழின தனித்துவ ஐக்கியம் நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வடபகுதி தேர்தல்களில் ஒத்துழைப்பு வழங்குகிறோம். அதுபோல் தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களுக்கு தெற்கில் ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்த அடிப்படையிலேயே நாடு முழுக்க வாழும் தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும் என்பது நமது கொள்கையாகும். ஐக்கிய தேசிய கட்சியுடன் போட்டியிட்டு நாம் பெறும் ஆசனங்களின் எண்ணிக்கையில் இந்த தமிழின ஐக்கியம் தீர்மானிக்கப்படுவதில்லை. தமிழின தனித்துவ ஐக்கியம் என்பது அதைவிட உயர்ந்த விடயம் ஆகும். ஆகவே நாம் இன்று தனித்துவமாக நாம் பெற்றுள்ள இரண்டு ஆசனங்கள் என்பது ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டு சேர்ந்து பெறும் நான்கு ஆசனங்களுக்கு சமன் என்பதை தமிழ் தேசிய உணர்வாளர்கள் அறிவார்கள். அடுத்த தேர்தலில் படிப்படியாக இந்த எண்ணிக்கையை நாம் அதிகரிக்கும் பயணத்தை ஆரம்பித்துள்ளோம். இந்நிலையில் பெரும்பான்மை கட்சி சின்னத்திலேயே கட்டாயமாக அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும் என குமரகுருபரன் சொல்வது நாம் ஏற்றுகொள்ள முடியாது. ஐதேகவுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டிருந்தால், வரையறுக்கப்பட நியமனங்களே கிடைத்திருக்கும்.(மேலும்......)

ராஜேந்திரன் மற்றும் குகவரதனது பெயரில் முழுப்பூசணியை சோற்றில்' மறைக்க முயல்கிறார் மனோ!  - ஜ.ம.மு. முன்னாள் பிரதி தலைவர் குமரகுருபரன் பதிலடி

பொய்களைக் கட்டவிழ்த்து விடும் மனோ கணேசன், ராஜேந்திரன் மற்றும் குகவரதனது பெயரில் உண்மையெனும் முழுப் பூசணிக் காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறார். விவாதம் தோற்றுப்போகும்போது தனிமனிதத் தாக்குதல் ஆயுதமாகிறது என்பார் சோக்ரடீஸ். என்மீது குறைகூற காரணங்கள் இல்லாமல் எனது உடல்பருமனைக் குறைகூறுமளவுக்கு இவர்கள் தாழ்ந்துவிட்டார்கள். பதிலுக்கு இவர்களது தனிமனித ஒழுக்கம் பற்றி நான் ஆதாரபூர்வமாகப் பேசுவதற்கு நிறையவே உண்டு, ஆனால் நான் அரசியல் நாகரீகமுள்ளவன், ஆனால் என்னுடைய பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை இவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். (மேலும்......)

மீள்குடியேறும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை

வடக்கில் பல சவால்களுக்கு மத்தியில் அமைச்சர் ரிசாட் துணிச்சலான சேவை

இந்த நாட்டின் தேசிய இனங்களான சிங்கள, தமிழ் மக்கள் எவ்வாறு நீண்ட காலம் வாழ்கிறார்களோ அவ்வாறே நீண்ட காலம் வாழ்ந்து வரும் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாகும். முஸ்லிம்கள் தென்னிலங்கையில் வாழும் சிங்கள மக்களுடனும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுடனும் அன்பு பேணி ஐக்கியம் வளர்த்து, வாழ்ந்து வருபவர்கள். சமய ரீதியான தனித்துவங்களும் வழிபாட்டு முறைகளும் வேறுபட்ட போதும் மொழியால் ஒன்றுபட்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்பவர்கள். வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் தாய் மொழியும் போதனா மொழியும் தமிழ் என்பதால் அங்கு வாழும் தமிழ் சகோதரர்களுடன் வாழ்வியல் ரீதியாக ஒன்றிணைந்து ஒன்றுபட்டு முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். விவசாயம், வர்த்தகம், மீன்பிடி, தோட்டச் செய்கை போன்ற தொழில்களிலே அப்துல் காதரும், ஐயா த்துரையும் ஒற்றுமையாக தொழில் புரி ந்து இன பேதமற்று வாழ்ந்தமை வரலாறு. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழ், முஸ்லிம் பாடசாலைகளிலே பாத்திமாவும் பரமேஸ்வரியும் அருகமர்ந்து அன்பைப் பரிமாறி நல்ல நண்பர்களாய் சோதரர்களாய் வாழ்ந்து வந்த இனிய இன உறவு வடக்கு கிழக்கில் நிலவியது. சிங்கள தமிழ் மக்களின் சமயக் கொள்கைகள், வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றுக்கு உரிய கண்ணியம் கொடுத்து மதித்து வாழும் இயல்பும் முஸ்லிம்களின் பண்பாகும். (மேலும்......)

ஏப்ரல் 13, 2014

கோபி, அப்பன், தேவியனின் இரத்தமாதிரிகளில் பரிசோதனை

வவுனியா,நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகியோரின் இரத்த மாதிரிகள் மற்றும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. சடலங்கள் மீதான மரண விசாரணையை கெப்பிட்டிகொல்லாவ நீதவான் ராஜா மஹேந்திர ராஜ நடத்தினார் என்றும், அவருடைய உத்தரவுக்கமைய அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தார். நீதவானுடைய உத்தரவுக்கமைய இந்தச் சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டது. உடற்பாகங்கள் மற்றும் இரத்தமாதிரிகள் பதவிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் கதிரேஷன் கோவிலின் குருக்கள் ஞானசந்திரன் இறுதி கிரிகைகளை நடத்தினார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட போது ஊடகவியலாளர்கள் எவரும் மயானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.எனினும் இறுதி கிரியைகளில் கோபியின் மனைவி பங்கேற்றிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திம்பு பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் அமைப்புகள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை கடைப்பிடிக்கவில்லை

தமிழ் மக்களின் இன்றைய அவல நிலைக்கு அதுவே பிரதான காரணம்

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு சமாதானத் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கம் 1985ம் ஆண்டு ஜூலை, ஓகஸ்ட் மாதங்களில் பூட்டானின் தலைநகரமான திம்புவில் அரசாங்க தூதுக்குழுவினருக்கும் பல்வேறுதரப்பட்ட தமிழ்த் தரப்பினருக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை முதல் தடவையாக நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு தலைமைத்தாங்கியவர் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் இளைய சகோதரரான எச். டபிள்யு. ஜயவர்தன என்ற பிரபல சட்ட மேதையாவார். இந்த பேச்சுவார்த்தைகளில் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ஈழம் புரட்சிகர மாணவர் அமைப்பு என்ற ஈரோஸ், தமழீழ விடுதலைப்புலிகள் (எல்.ரி.ரி.ஈ.), தமழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்), தமிbழம் விடுதலை அமைப்பு (டெலோ) தமிழீழ தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணி (ரி.யு.எல்.எப்) ஆகியன கலந்து கொண்டன. (மேலும்......)

ஏப்ரல் 12, 2014

Terrorist Infiltration Of Canadian Media

(By Camelia Nathaniel)

The LTTE was successful in creating a terrorist support base in Canada by systematically indoctrinating the Sri Lankan Tamil migrants, both old and new. The Tamil community, one of the most peaceful communities, came under the influence of misinformation and disinformation. The outcome was the subversion of a segment of the Tamil community and growth of a terrorist support base. Rather than coercing, those indoctrinated donated money voluntarily to a proscribed terrorist group, while those indoctrinated abandoned their traditions of peace and culture of non violence. Several hundred supported and a few participated in the unlawful killing, maiming and injuring of civilians including political leaders and security forces personnel in Sri Lanka. (more.....)

கொல்லப்பட்ட தேவியன் புலிகளின் விமானி?

இராணுவத்துடன் வவுனியா, நெடுங்கேணியில் வைத்து இடம்பெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட தேவியன், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ராதா படையணியின் முக்கிய விமானி ஆவார் என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது. விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்கள் இலங்கை இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்திய போது அதை செலுத்தியவர்களில் ஒருவர்தான் தேவியன் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விடுதலைப் புலிகளால்  பேரழிவுக்குட்படுத்தப்பட்ட அனுராதபுரம் விமானப் படை தளம் மீதும் கொலன்னாவை பெற்றோலிய  கிடங்கு மீதும் விடுதலைப் புலிகள் நடத்திய விமான தாக்குதலில் விமானியாக செயல்பட்டவர்தான் இந்த தேவியன் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் புலிகளின் 2 விமானங்களும் அழிந்தன. இதைத் தொடர்ந்து தமிழகத்துக்கு தப்பி சென்றார் தேவியன். ஐரோப்பாவில் இருந்து நெடியவனால் கோபி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தேவியனும் இலங்கைக்கு சென்று இணைந்திருக்கிறார். இதைத் தொடர்ந்து இலங்கை அரசு கோபியுடன் சேர்ந்து தேவியனைப் பற்றியும் தகவல் தரக்கோரி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில்தான் இன்று நடந்த மோதலில் கோபியுடன் சேர்ந்து தேவியனும் கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம்

அமெரிக்காவின் எச்சரிக்கை நிராகரிப்பு

ஈரானுடனான எண்ணெய் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா விடுத்த எச்சரிக்கையை ரஷ்யா நிராகரித்தது. அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அடிபணிய மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளது. ரஷ்ய-ஈரான் வர்த்தகம் என்பது ஓர் இயற்கையான நடைமுறை. இதில், எவ்வித அரசியல் நிலைப்பாட்டையோ அல்லது பொருளாதார சவால்களையோ யார் மீதும் திணிக்க முடியாது. ஈரானுடன் ரஷ்யா எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும'' என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெர்ரி அச்சுறுத்தியுள்ளார். ஈரான் ரஷ்யாவுடன் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் எதுவும் ஏற்படுத்தியுள்ளதா என்பது எனக்கு தெரியாது. ஆனால், ஈரானுடன் வழக்கமான பரிமாற்றங்களைதான் ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. விவசாயம், எண்ணெய் உள்ளிட்ட பொருளாதாரத் துறைகளில் பொருத்தமானவற்றின் உறவினை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறோம். அமெரிக்கா தன்னிச்சையாக பொருளாதாரத் தடை விதிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. எனினும், அவர்களின் (அமெரிக்கா) இலக்கு எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அவர்களது நிலைப்பாட்டை நிராகரிக்கிறோம் என்று ரஷ்யா தெரிவித்தது.

கோபியின் துப்பாக்கிச் சூட்டில் இராணுவ வீரர் பலியாகவில்லை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று தெரிவிக்கப்படும் கோபி என்பவரைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது இராணுவ வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். இராணுவ பயிற்சியொன்றின் போதே இராணுவ வீரர் உயிரிழந்தார் என்றும் குருணாகலைச் சேர்ந்த கே.கே.கமல் ராஜா (வயது 26) என்ற இராணுவ வீரரே இவ்வாறு பயிற்சியின் போது உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் கூறினார். இலங்கையின் நான்காவது யுத்த தாங்கி படையணியின் புலனாய்வுப் பிரிவு வீரரே இவ்வாறு உயிரிழந்தார் என்றும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்ய விண்கலம்

கஸகஸ்தான் நாட்டிலுள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து ரஷ்ய விண்வெளி ஓடம் கடந்த புதன்கிழமை விண்ணில் செலுத் தப்பட்டது. அந்த விண்வெளி ஓடம் சர்வதேச விண்வெளி நிலை யத்தை (வியாழக்கிழமை) நேற்றுமுன்தினம் சென்றடைந்தது. அவ்விண்வெளி ஓடத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 6 விண்வெளி வீரர்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், ஒட்சிசன் மற்றும் எரிபொருள் ஆகியவை உட்பட 2.4 டொன் எடை கொண்ட பொருட்கள் இடம்பெற்றிருந்தன. ஜப்பானின் முதல் விண்வெளி வீரரான கொய்ச்சி வாகடா, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின் தலைவராக உள்ளார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேரும், அமெரிக்க விண்வெளி வீரர்கள் 2 பேரும் உள்ளனர்.

வெருகல் படுகொலை நினைவு நாளில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் ஆற்றிய நினைவுப் பேரூரை

ஏனைய படுகொலை நினைவுகளை பேசுவது போலவோ அதையிட்டு எழுதுவதுபோலவோ அத்தினங்களை நினைவுகூருவது போலவோ இந்த வெருகல் படுகொலை பற்றி தமிழ் கூறும் இந்த நல்லுலகம் கண்டுகொள்வதில்லை. அது ஏன் என்றும் எமது மக்கள் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை.கேள்வி எழுப்புவதுமில்லை.எமது மக்கள் இன்னும் வளர்ச்சி காணாதிருப்பதற்கும் முன்னேறமுடியாதிருப்பதற்கும் இந்த மேத்தனபோக்கே காரணமாகும்.ஆம் நாம் கேள்வி எழுப்ப வேண்டும். ஏன் தமிழ் பத்திரிகைகளில் பெரும்பாலானவை  இந்த வெருகல் படுகொலையையிட்டு இன்றுவரை கள்ளமெளனம் காக்கின்றன? இந்த வெருகல் படுகொலை நடந்த போது மூடிக்கொண்ட இந்த இந்த தமிழ் பத்திரிகைகளின் கண்கள் இன்றுவரை ஏன் திறக்கப்படவில்லை? (மேலும்......)

ஏப்ரல் 11, 2014

கோபி, அப்பன், தேவியன் சுட்டுக்கொலை

இராணுவத்தினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என தெரிவிக்கப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் (வயது 32), அப்பன் என்றழைக்கப்படும் நவரத்னம் நவநீதன் மற்றும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களில் ஒருவரான தேவியன் (36 வயது) ஆகிய மூவரும் கொல்லப்பட்டதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். வவுனியா, நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களில் இம்மூவரும் மறைந்திருப்பதாகக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நேற்றிரவு (10) அப்பிரதேசங்களைச் சுற்றிவளைத்த இராணுவ புலனாய்வுப் பிரிவினர் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனையடுத்து சந்தேகநபர்கள், இராணுவத்தினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கிப் பிரயோகத்திலேயே கோபி, அப்பன், தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டனர் என்று இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டார்.  சம்பவத்தை அடுத்து நெடுங்கேணி மற்றும் புளியங்குளம் பிரதேசங்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்து சமுத்திரத்திலிருந்து பெறப்பட்ட சமிக்ஞைகள் மலேசிய விமானத்திலிருந்தே வெளிப்பட்டுள்ளன - ஆஸி. பிரதமர்

இந்து சமுத்திரத்தில் பெறப்பட்ட சமிக்ஞைகள் காணாமல்போன மலேசிய 'எம்.எச்.370' விமானத்தின் கறுப்புப்பெட்டி பதிவு கருவிகளிலிருந்து வெளிப்பட்டவை என்பதை அதிகாரிகள் உறுதியாக நம்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பொட் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள டோனி அப்பொட், அங்கு உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார். காணாமல்போன விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள குழுவினர் இதன்போது மிகவும் குறுகிய பிரதேசத்தில் தேடுதலை நடத்தி வருவதாக அவர் கூறினார். அவுஸ்திரேலிய கப்பலொன்று மேற்படி விமான பதிவு கருவிகளிலிருந்து வெளிப்படுவதையொத்த சமிக்ஞைகளை 4 தடவைகள் அவதானித்திருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை அவுஸ்திரேலிய விமானமொன்றால் ஐந்தாவது சமிக்ஞை அவதானிக்கப்பட்டது. எனினும் அந்த சமிக்ஞையை ஆய்வுக்குட்படுத்திய அவுஸ்திரேலிய ஒலி பகுப்பாய்வு நிலையம்,  அந்த சமிக்ஞையானது விமான கறுப்புப்பெட்டிகளுடன் தொடர்புபட்டதாக காணப்படவில்லை என தெரிவித்துள்ளதாக காணாமல்போன விமானத்தை தேடும் நடவடிக்கையை ஒருங்கிணைப்பதில் ஈடுபட்டுள்ள அமைப்பின் தலைவர் அங்கஸ் ஹுஸ்டன் தெரிவித்தார். அதனால் 'எம்.எச்.370' விமானத்தை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் திடீர் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் கூறினார்.

கோபிக்கு எதிரான முன்னெடுப்பில் 2,000 படையினர் பங்கேற்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இராணுவ முன்னெடுப்பில் இரண்டாயிரம் படையினர் ஈடுபட்டதாக வன்னி படைத் தலைமையகம் தெரிவித்தது. நெடுங்கேணி, வெடிவைத்தகல் பகுதியில் இடம்பெற் இராணுவ முன்னெடுப்பில் கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகிய மூவரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண எதிர்க்கட்சி உறுப்பினராக தவராசா நியமனம்

வடமாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடக பேச்சாளருமான சின்னத்துரை தவராசா நியமிக்கப்பட்டுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நியமனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. சிறையிலிருக்கும் கந்தசாமி கமலேந்திரனுக்கு பதிலாகவே வடமாகாண சபை உறுப்பினராக தவராசா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 9803 விருப்பு வாக்குகளைப் பெற்று 3ஆம் இடத்தை பெற்றுகொண்டார். நெடுந்தீவுப் பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷிசன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட கொலை வழக்கில் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் பிரதான குற்றவாளியாக கடந்த 3 மாதங்களாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், கமலேந்திரனை ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து கட்சியின் செயஷக்ளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தாக் நீக்கினார்.  தொடர்ந்து, தேர்தலில் கமலேந்திரன் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் கட்சியிலிருந்தும் வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் பதவியிலிருந்தும் கமலேந்திரனை நீக்கியது.  இதனால், வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமனம் பூரணப்படுத்தப்படாத நிலையில் இருந்தது. இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரினால் அவருக்கான நியமனக்கடிதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

கோபி உள்ளிட்ட குழுவினர் இராணுவத்தினரால் சுட்டுக்கொலை?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபி உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினருக்கும் கோபி உள்ளிட்ட குழுவினருக்கும் இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்திலேயே இவர்கள் மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் சம்பவத்தில் இராணுவ வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேலுபிள்ளை பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் இயக்கத்தின் தலைவர் என்று கூறப்படும் கோபி என்றழைக்கப்படும் பொன்னையா செல்வநாயகம் கஜீபனைத் தேடி வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவினரால் விசேட தேடுதல் நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, அப்பகுதியில் இராணுவத்தினருக்கும் கோபி குழுவினருக்கும் இடையில் பரஸ்பரம் துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் இராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் இன்று காலை பதவியா வைத்தியசாலைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து சந்தேகநபர்களான கோபி உள்ளிட்ட குழுவினர் அங்கிருந்த தப்பி வேறு இடத்துக்குச் சென்றதாகவும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ள இராணுவத்தினர் அவர்கள் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதை அடுத்து கோபி உள்ளிட்ட மூவர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், உயிரிழந்த மூவரின் சடலங்கள் தொடர்பில் இரர்ணுவத்தினர் விசாரணை நடத்தி வருவதாகவும் அவ்வாறு உயிரிழந்தவர்களில் கோபியும் அடங்குகின்றாரா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளவயது கர்ப்பம் தற்போது சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது

கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த கல்வித் திணைக்களத்துடன் இணைந்து இலங்கை குடும்பத் திட்டச் சங்கம் விழிப்புணர்வு நடவடிக்கை

குடும்ப சுகாதாரப் பணியகத்தின் ஆய்வின்படி இலங்கையில் இளம் வயதில் கர்ப்பம் தரிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கு இளவயதில் திருமணங்கள் செய்வதும் ஒரு காரணமாகும். இளவயது கர்ப்பங்கள் அதிகமாக மட்டக்களப்பிலே காணப்படுகின்றன. கடந்த கால போர்ச்சூழலால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். அரசாங்கத்தினால் அபிவிருத்தி கண்டுவரும் மாவட்டங்களில் இம்மாவட்டம் முதலிடம் வகிக்கின்றது. இம்மாவட்டத்திலுள்ள மக்களின் வறுமையை இல்லாதொழிப்பதற்கு அரசு பெருந்தொகை பணத்தை இவ்வருடம் ஒதுக்கீடு செய்துள்ளது. இங்குள்ள எல்லைப்புறங்களில் வாழும் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர். (மேலும்......)

யாழ். நகரில் புலிகளால் சேதமாக்கப்பட்ட அறிஞர் அஸீஸின் வீட்டை முதலமைச்சர் விக்னேஸ்வரன் கட்டிக்கொடுக்க வேண்டும்

வட மாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத் தில் பிறந்த மாபெரும் தமிழ் அறிஞரும், கல்விமானுமான மர்ஹம் ஏ. எம். ஏ. அசீஸின் வீட்டை மீண்டும் கட்டிக் கொடுப்பாரானால், அவர் முஸ்லிம் சமூகத்துக்குப் புரிந்த மாபெரும் சேவையாக அது அமையும். புலிப் பயங்கரவாதிகளால் யாழ்ப்பாணம் சோனகத் தெருவிலுள்ள அவரின் வீடு தரை மட்டமாக்கப்பட்டது. ஜெனீவாவுக்கு மனித உரிமை மீறல் தொடர்பாக ஆணைக்குழு நியமிக்க மனு அனுப்புவதற்குப் பதிலாக, செனட்டர் அசீஸ் மீதான மனித உரிமை மீறல், புலிகளால் யாழ்ப்பாணத்திலி ருந்து விரட்டியடிக்கப்பட்ட 75,000 மக்கள் மீதான உரிமை மீறல் தொடர்பாக விசாரணை நடத்த முதலமைச்சர் முதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.(மேலும்......)

ஏப்ரல் 10, 2014

வரதர் கூறுகின்றார் வாழ்வியல் பற்றி……

என் மதிப்பிற்குரிய புஸ்பராணி சிதம்பரி அவர்கள் தமது ஊர் நினைவுகளைப் பற்றி தமது முகநூலில் எழுதி வருவதில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “யுத்தத்தினால் சிதிலமடைந்து சுடுகாடாகப் போய் விட்ட எமது மண்ணின் ஒவ்வொரு துகள்களிலும் உயிர் கொண்ட நினைவுகள் திமிறிக் கொண்டே கண்ணீர் சிந்தி ஓலமிடுகின்றன ....ஆளப் பதிந்து போன அந்த அதியற்புத வண்ணச் சித்திரங்களை எவராலும் அழிக்க முடியாது ..அவற்றில் ஒவ்வொரு துளிகளாக இங்கு தெளிக்கவுள்ளேன். “மயிலிட்டி புலி” (பிரபாகரன் புலி அல்ல) முருகேசர் என்றால் அப்போது எல்லோருக்கும் பிரசித்தம். ஒவ்வொரு வருடமும் தொண்டைமானாறு சந்நிதி கோவில் திருவிழாவின் போதும். இவரது புலி ஆட்டத்துக்காக சிறுவர்கள் அனைவரும் தவம் கிடப்போம். கோவில் திருவிழாவின் பத்தாவது நாள் இவரின் ஆட்டம் - மயிலிட்டிச் சந்தியில் இருந்து ஆரம்பித்து விடும். மதியம் இரண்டு மணியளவில் புறப்பட்டு விடும் புலி. அப்புறம் என்ன ....உண்மையான புலி தோற்றுப் போய் விடும் . உடம்பு முழுக்க வண்ண வரிகளென்ன - பின்னால் பொருத்திய வால் என்ன - புலி போலவே பாவம் காட்டி உறுமும் முகமென்ன .....அடடா ......! உண்மையான புலி தோற்றுப் போய் விடும் போங்கள்.!  (மேலும்......)

வடக்கு கிழக்கைச்சேர்ந்த 7 பெண்கள் கைது - பி.பி.சி

தமிழீழ விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் என்று கூறப்படும் கோபியுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தில் கூறப்படும் வடக்கு கிழக்கை சேர்ந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களைச்சேர்ந்த 7 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது  செய்யப்பட்ட ஐவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை பிபிசியில் வெளியாகியுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சந்தேக நபர்களைத் தேடும் வேட்டை என்ற பெயரில் இலங்கையில் பெண்கள் தொடர்ந்து தொல்லைக்குள்ளாக்கப்படுகின்றனர் மார்ச் மாதம் மேலும் இரு பெண்கள் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்று பெண்கள் அமைப்பு குற்றம் சாட்டியிருக்கிறது. (மேலும்......)

தடுப்புக்காவலில் இருக்கும் நந்தகோபன் விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு

பயங்கரவாத விசார ணைப் பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் எல்.ரீ.ரீ.ஈ. முக்கியஸ்தர் நந்தகோபன் விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.  பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டி ருக்கும் நந்தகோபன் இலண்டனில் வசிக்கும் அவரது குடும்பத்தாருடன் தொடர்பு கொள்வதற்கான அனைத்து வசதிகளையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன் அவர் சிறந்த முறையில் கவனிக்கப்படுவ தாகவும் பிரிகேடியர் சுட்டிக் காட்டினார். எல்.ரீ.ரீ.ஈ. நெடியவன் படைப் பிரிவின் இரண்டாம் கட்டளைத் தளபதியாக செயற்பட்டு வந்த நந்தகோபன் இலங்கையிலிருந்து தப்பிச் சென்று தனது குடும்பத்தாருடன் மலேசியாவில் தலைமறைவாக வசித்து வந்துள்ளார். பின்னர் தனது மனைவியையும் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் லண்டனுக்கு அனுப்பி வைத்ததன் பின்னர் தானும் லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளார். சுமார் 07 மாதங்களுக்கு முன்பே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஈரானிலுள்ள போலிக் கடவுச் சீட்டு மூலம் தெஹ்ரான் விமான நிலையத்திற்கூடாக இவர் லண்டன் செல்ல முற்பட்ட போது தெஹ்ரான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு மலேசியாவுக்கு மீண்டும் நாடு கடத்தப்பட்டார். மலேசிய அதிகாரிகள் அந்நாட்டு சட்டத்திட்டங்களுக்கமைய அவரை அங்கு 06 மாத காலம் சிறை வைத்ததன் பின்னர் கடந்த 06ம் திகதியன்று நாடு கடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து நந்தகோபன் பயங்வரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரிகேடியர் தெரிவித்தார்.

ஏப்ரல் 09, 2014

நல்லிணக்கத்தின் தோல்வி

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஆளும் கட்சி இத் தேர்தலில் சரிவை கண்ட போதிலும் எதிர்க் கட்சிகள் அதனால் மகிழ்ச்சியடைய முடியாது. ஏனெனில் அடுத்து பதவிக்கு வரக் கூடிய அளவுக்கு பலமான ஐ.தே.க.விடம் மக்கள் சென்றடையவில்லை. அவர்கள் மக்கள் விடுதலை முன்னணியிடமும் ஜனநாயகக் கட்சியிடமுமே சென்றுள்ளனர். அக் கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்றும் அளவுக்கு முன்னேற நீண்ட காலம் எடுக்கும். எனவே ஆளும் கட்சியின் வாக்கு வங்கி தொடர்ந்தும் சரிந்தாலும் அடுத்த பொதுத் தேர்லிலும் அல்லது ஜனாதிபதி தேர்தலிலும் ஆட்சி மாறும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இந்த நிலைமை எதிர்க் கட்சிகளுக்கு ஒரு பலமான செய்தியை வழங்குகிறது. அதாவது எதிர்க் கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பதே. ஆனால் மக்கள் விடுலை முன்னணியும் ஜனநாயகக் கட்சியும் அதனை விரும்புமா என்பது சந்தேகமே.  மக்கள் தம்மை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்துள்ள ஆளும் கட்சி இந்த நிலையில் தமது எதிர்கால தோல்வியை தடுக்க இரண்டு உத்திகளை கையாளலாம். ஒன்றில் அரசாங்கம் எதிர்க் கட்சிகளிடையே விரிசலை அதிகரிக்கலாம். அல்லது ஐ.தே.க.வை மேலும் பலவீனப்படுத்தலாம். ஏனெனில் அப்போது அரசாங்கத்தை கைவிடும் மக்கள் ஐ.தே.க.விடம் செல்ல மாட்டார்கள். ஏனைய இரண்டு கட்சிகளிடம் சென்றாலும் அது இப்போதைக்கு ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
(மேலும்......)


மனோவின் கட்சியிலிருந்து குமரகுருபரன் நீக்கம்

தேர்தலில் தோல்வியுற்றதை கௌரவமாக ஏற்றுக்கொள்ளாமை, பொறுப்புவாய்ந்த பிரதி தலைவர் பதவியில் இருந்தபடி கட்சியின் அரசியல்குழு எடுக்கும் தீர்மானங்களை ஊடகங்களில் பகிரங்கமாக விமர்சனம் செய்தமை, தேர்தலின் போதும் தேர்தலின் பின்னரும் கட்சியில் தனக்கு இருக்கும் கூட்டுப்பொறுப்பை பகிரங்கமாக மீறியமை மற்றும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய காரணங்களை முன்வைத்தே அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குமரகுருபரன் நீக்கப்பட்டதை அடுத்து கட்சியின் உபதலைவர் வெற்றிடத்துக்கு கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக கடமையாற்றிய வேலணை வேணியன், அக்கட்சியின் அரசியல் குழுவினால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். (மேலும்......)

டெல்லியில் கெஜ் ரிவாலுக்கு மீண்டும் அடி

டெல்லியில் எதிர்வரும் 10ந் திகதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது.. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுல்தான்பு+ர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ் ரிவால் பிரசாரம் செய்தார். வீதி வீதியாக நகர்வலம் வந்து வாக்கு சேகரித்தார். அவர் செல்லுமிடங்களில் எல்லாம் கட்சியினர் குவிந்தனர். அப்போது ஆட்டோ சாரதி; ஒருவர் அரவிந்த் கெஜ் ரிவால் கன்னத்தில் ~பளார்' என்று அறைந்துவிட்டார். அரவிந்த் கெஜ் ரிவால் தொடர்ந்து மர்ம நபர்களால் தாக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் தட்சிணபுரி பகுதியில் பிரசாரம் செய்தார். அவர் தனது ஆதரவாளர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்து அவர்களோடு கை குலுக்கிக்கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு ஆசாமி அவரது முதுகில் ஒரு குத்து விட்டார். அவரது கன்னத்தில் அறையவும் முற்பட்டார். ஆனால் அங்கே கூடியிருந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் அவரை மடக்கிப்பிடித்து பொலிசில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கெஜ் ரிவால் இப்படி தாக்கப்படுவது ஒன்றும் புதிது இல்லை. எத்தனையோ முறை அவர் தாக்கப்பட்டுவிட்டார். கடந்த 28ந் திகதி கூட அவர் அரியானாவில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது அன்னா ஹசாரே ஆதரவாளர் என்று சொல்லப்படுகிற ஒருவரால் தாக்குதலுக்கு ஆளானார்.

ஏப்ரல் 08, 2014 

நெடியவன் குழுவின் 2ஆம் நிலை தலைவர் கைது

(டி.பி.எஸ்.ஜெயராஜ்)

தமிழீழ விடுதலைப் புலிகளின் நெடியவன் குழுவில்; இரண்டாம் நிலை தலைவரும் வெளிநாட்டில் இயங்கியவருமான கபிலன் அல்லது நந்தகோபன் ஈரானிய மற்றும் மலேஷிய அதிகாரிகளின் உதவியுடன் இலங்கை அதிகாரிகளினால் பிடிக்கப்பட்டாரென டெய்லிமிரருக்கு கிடைத்த செய்திகள் கூறின. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவரான நந்தகோபன் சரியாக ஒரு மாதத்துக்கு முன்னர் 2014 ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார். நெடியவனின் கட்டுப்பாட்டிலுள்ள வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் வலைமையப்பின் பிரதி தலைவர்களில் ஒருவராக நந்தகோபன் செயற்பட்டு வந்தார்.  தென் கிழக்காசியாவை தளமாக கொண்டு இவர் இயங்கினார். இவரது போலி கடவுச்சீட்டுடன் மலேசியாவிலிருந்து புறப்பட்டு தெஹ்ரான் வழியாக லண்டனுக்கு செல்லவிருந்தார். நந்தகோபன் தெஹ்ரானில் இருப்பதை தென்கிழக்காசிய தகவல் வாட்டாரமொன்று இலங்கைக்கு தெரியப்படுத்தியது.
(மேலும்......)
 

பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தியது தவறு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சமீபகால நடவடிக்கைகள் இந்தியாவுக்கு அதிருப்தியளித்து விட்டதாக நான் கருதுகிறேன். வடக்கு. கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது. அதற்கான தார்மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள் சார்பான விடயங்களை முதலில் இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அதனை விடுத்து மேற்கு நாடுகளிடம் சென்று கூறுவதனால் விளையப் போகும் பயன் எதுவுமில்லை. கூட்டமைப்பின் இத்தகைய போக்கினால் இந்தியா அதிருப்தியடை ந்துள்ளதென்பதே எனது அபிப்பிராயம்.    (மேலும்......)

இந்தியாவில் 32 விடுதலைப்புலிகள்

தடை செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த, 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் இந்திய செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விடுதலை புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க திட்டமிட்டுள்ளதாக, இலங்கை அரசு சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, விடுதலை புலிகள் அமைப்பு, குளோபல் தமிழ் போரம் உள்ளிட்ட, 16 அமைப்புகளுக்கு, இலங்கை அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு அமைப்புகளின் பெயரில் செயல்படும் விடுதலை புலிகள், இலங்கைக்கு வந்தால், அவர்களை உடனடியாக கைதுசெய்ய, இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில், 422 விடுதலை புலிகள் தங்கியுள்ளதாகவும், இவற்றில், 32 பேர், இந்தியாவில் தங்கியுள்ளதாகவும், இவர்களை கைதுசெய்ய, சர்வதேச பொலிசாரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், இலங்கை அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு ஐ.நா. பயங்கரவாத சட்டத்தில் பதிவு செய்துள்ள 424 தனி நபர்கள் பற்றிய விபரம்

இலங்கை அரசு வெளிநாடுகளில் இயங்கும் 16 தமிழர் அமைப்புகளையும், 424 தனி நபர்களையும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்துள்ளது. இந்த 424 தனி நபர்களும் இலங்கைக்குள் நுழைய தடை என்ற அர்த்தத்தில் அநேக மீடியாக்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இவர்கள் இலங்கைக்குள் நுழைய தடை என்பது நிஜம்தான். ஆனால், அது மட்டுமல்ல விஷயம். அதற்கு மேலும் சில சிக்கல்கள் அவர்களுக்கு ஏற்படலாம். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 1373-வது சட்டப்பிரிவு, ‘வெளிநாட்டு பயங்கரவாதம்’ என்ற பிரிவின்கீழ் வருகிறது. (மேலும்......)

ஜ.ம.மு மற்றும் தமிழ் ஊடகங்கள் முன்பாகவுள்ள கட்டாய பிராயச்சித்தம்

நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இல்லாமற் செய்வது போல இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மேலைத்தேய நாடுகள் எமது நாட்டு உள்விவகாரங்களில் தலையிட்டு ஒரு ஜனநாயக நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுத்த முனைந்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் தமது ஒற்றுமையை தமது வாக்குப் பலத்தின் மூலமாக மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளனர் என்றே கூற வேண்டும். (மேலும்......)

மே மாதத்தில் நிபுணர் குழு நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் கூறியதன் பிரகாரம் நிபுணர் குழுவொன்று அடுத்தமாதம் (மே மாதம்) நடுப்பகுதியில் நியமிக்கப்படலாம் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. 2002-2009 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இந்த விசாரணைக் குழு ஆராயவுள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணையானது நாடுகளால் அன்றி ஒரு நிபுணர்கள் குழுவினராலேயே நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மனித உரிமை ஆணையாளர் அலுவலகம், இலங்கையின் சொந்த விசாரணை செயன்முறை எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது. எனவும் மதிப்பீடு செய்யும். இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்றும் ஜெனீவா தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்பு பெட்டியின் ஒலி சமிக்ஞை கேட்டுள்ளதாக தகவல்

மாயமான மலேசிய விமானமான எம்.எச்.370ஐ தேடும் பணியில் ஈடுப்பட்டிருந்த குழுவினருக்கு விமானத்தின் கறுப்பு பெட்டியின் ஒலி சமிக்ஞை கேட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் இந்த ஒலி சமிக்ஞை திங்கட்கிழமை(07)கண்டறியப்பட்டுள்ளதாக தேடுதல் நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் அவுஸ்திரேலிய நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 4500 மீற்றர் ஆழத்தில் இருந்து இந்த ஒலி சமிக்ஞை பெறப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற விமானப்படை தளபதி எயாமார்ஷல் அங்குஸட் ஹீஸ்டன் தெரிவித்துள்ளார். சமிக்ஞை கிடைக்கும் இடத்தை தாம் திரையில் பார்த்ததுடன் கறுப்பு பெட்டியிலிருந்து வரும் ஒலியினையும் கேட்க முடிந்துள்ளதாகவும், அந்த இடத்தினை தாம் நெருங்கி விட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இன்னும் ஒரிரு தினங்களின் கருப்பு பெட்டியின் மின்கலம் செயலிழந்துவிட கூடிய சந்தர்ப்பம் இருப்பதால், கறுப்பு பெட்டியினை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஏப்ரல் 06, 2014 

தேன்பாடும் மக்களின் மான்மியம்......!

யாழ்பானத்தில சின்னவயசில எங்கட வீட்டில F.X.C நடராஜா எழுதிய "மடக்களப்பு மான்மியம் " என்ற புத்தகம் இருந்தது,அதை வரிக்குவரி வாசித்து,எப்படியும் ஒருநாள் வளர்ந்தபின்,கிழக்கு மாகாணத்துக்கு போய் அவர் எழுதிய எல்லா இடங்களையும் பார்கப்போரன் எண்டு என்னோட அம்மாவுக்கு சொல்ல,அவா "அங்க எல்லாம் போக்கக் கூடாது ,செய்வினை செய்து வீட்டோட,மாப்பிளை ஆக்கிப் போடுவான்கள்" எண்டு பனன்கொட்டை யாழப்பான " மெண்டாலிடியில் "சொன்னா...(மேலும்......)

கிளிநொச்சியில் பொறியியல், விவசாய பீடங்கள்

கிளிநொச்சி அறிவியல் நகரில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத் திற்கான பொறியி யல் மற்றும் விவ சாய பீடங்களை அமைத்து எதிர்கால கல்விச் சமூகத் திற்காக முன்னின்று அரும்பணி யாற்றியவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் என வடமாகாண கல்வியியலாளர்கள் புகழாரம் செய்துள் ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தி ற்காக 1974ஆம் ஆண்டு முதல் பொறியியல் பீடத்தை அமைப்பதற்கு பேராசிரியர் துறைராஜாவினால் பல்வேறுபட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அது இறுதிவரை கைகூடாமலே இருந்து வந்தது. அறிவியல் நகரிலுள்ள குறித்த கட்டிடத் தொகுதி படைத்தரப்பினரின் பாவனையில் இருந்த போது அங்கு விவசாய மற்றும் பொறியியல் பீடங்களை நிறுவுவது தொடர்பில் பலதரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் அவை தோல்வி கண்டிருந்தன. இந்நிலையில், ஜனாதி பதியுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து ரையாடியதன் பயனாக ஜனாதிபதி அவர்கள் அறிவியல் நகரிலுள்ள மேற்படி கட்டிடத் தொகுதியை யாழ். பல்கலைக்கழகத்தின் குறித்த பீடங்கள் இரண்டையும் செயற்பட வைப்பதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

சி. வி. யின் பக்கச்சார்பான தேர்தல் பிரசாரம்

வட மாகாண முதலமை ச்சர் முன்னாள் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் மேல் மாகாண சபைத் தேர்தலில் பக்கச்சார்பாக பிரசாரம் செய்வார் என நாம் ஒருபோதும் எதிர்பார்த் திருக்கவில்லை. முன்னாள் நீதியரசர் என்பதை யும் தாண்டி அவ்வாறான பிரசார நடவடிக்கைகளில் செயற்பட்டமையானது மிகுந்த மனவேதனையளிப்பதாக முன்னாள் பிரதியமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவருமான பெ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இனப் பிரச்சினைக்கான தீர்வானது அரச, தமிழ் தரப்பினரால் இழுபறியில் சென்று கொண்டிருக்கின்றது. அதனை ஜெனிவாவோ அல்லது சர்வதேச நாடுகளோ இணக்கப்பாடொன்றை ஏற்படுத்த முடியாது. இருதரப்பினருக்குமிடையில் மத்தியஸ்தம் வகித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்திற்கு வழிவகுக்கும் சக்தியை ஆறுமுகன் தொண்டமான் மட்டுமே கொண்டிருக்கின்றார் எனவும் இராதாகிருஷ்ணன் சுட்டிக்காட் டினார். மேல் மாகாண சபை தேர்தல் நிறைவடைந்த நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் போட்டியிட்ட வேட்பாளர்கள், தொழிலதிபர்கள், அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் ஆகியவர்களுக்கிடையிலான கலந்துரையாடல் அளுத்மாவத்தையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜ.ம.மு மற்றும் தமிழ் ஊடகங்கள் முன்பாகவுள்ள கட்டாய பிராயச்சித்தம்

நடைபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்களில் ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை இல்லாமற் செய்வது போல இத்தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. மேலைத்தேய நாடுகள் எமது நாட்டு உள்விவகாரங்களில் தலையிட்டு ஒரு ஜனநாயக நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படுத்த முனைந்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் தமது ஒற்றுமையை தமது வாக்குப் பலத்தின் மூலமாக மீண்டுமொரு தடவை நிரூபித்துள்ளனர் என்றே கூற வேண்டும். (மேலும்......)

ஏப்ரல் 05, 2014

காணாமல் போன விமானத்தில் இருந்து சமிக்ஞை?

தென் இந்தி பெருங்கடலில் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் ஈடுப்பட்டுள்ள சீன யுத்தக் கப்பல் ஒன்றுக்கு இலத்திரனியல் சமிக்ஞை கிடைத்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வினாடிக்கு 37.5 கிலோ ஹேர்ட்ஸ் அளவில் சமிக்ஞை  கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த சமிக்ஞையானது காணாமல் போன மலேசிய விமானத்தில் இருந்து வருவதற்கான எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லையென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியின் மின்கலம் இன்னும் சில நாட்களில் செயலிழந்துவிடும் என்பதால், அதனை தேடும் முயற்சி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானத்தின் கறுப்புப் பெட்டியில் உள்ள மின்கலம் ஏப்ரல் 7 ஆம் திகதிக்குள் செயலிழந்துவிடும் என்று நம்பப்படுகிறது. கடந்த மார்ச் 8ஆம் திகதி, 239 பயணிகளுடன் எம்.எச்.370 மலேசிய விமானம் காணாமல் போனதைத் தொடர்ந்து மலேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமைச்சரை நிந்தித்த ஜனாதிபதி

நீர்ப்பாசனத்துறை அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வாவை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது நிந்தித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. நடந்துமுடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு  வாக்குகள் குறைந்தமைக்கான காரணத்தை அமைச்சர் நிமல் சிறி பாலடி சில்வா தெரிவிக்கும் போது , பாரிய அபிவிருத்தி திட்டங்கள், வாக்குகளை சேகரிப்பதற்கு போதுமானதாக இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த கூற்றுதொடர்பிலேயே ஜனாதிபதி, அமைச்சரை நிந்தித்ததாகவும் இனிமேல் இவ்வாறான கூற்றுக்களை வெளியிடவேண்டாம் என்றும் ஜனாதிபதி கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

என் மனவலையிலிருந்து....

ஐ.நா. சபையின் தீர்மானத்தால்....தோற்றது

இலங்கை அரசா...? அமெரிக்க குழாமா....? அல்லது தமிழ் பேசும் மக்களா...?

(சாகரன்)

ஐ.நா சபையின் மனித உரிமைக் கூட்டத்தொடர் முடிவடைந்து தீர்மானங்களும் நிறைவேற்றியாகிவிட்டது. 2009 மே மாதம் இறுதி யுத்தத்தின் போது புலிகளை இலங்கை அரசு துவசம் செய்து அழித்தபோது பொதுமக்களும் பாதிப்படைந்துள்ளனர். தன்போது இலங்கை அரசினால் யுத்தக் குற்றங்கள் நிறைவேற்றப்பட்டன. எனவே இதற்கான விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்று ஐ. நா. சபையில் மேற்குலக நாடுகளினால் ஆரம்பிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, இலங்கை அரச தரப்பில் யுத்தத்தின் போது குற்றங்கள் இழைக்கப்பட்டுவிட்டன என்பது காரணம் என்பதை விட யுத்தத்திற்கு பின்னரான கால கட்டங்களில் இலங்கை அரசின் சீன அரசுடனான நெருக்கமே இந்த மேற்குலக நாடுகளுக்கு கண்ணை உறுத்தும் செயலாக இருந்து வருகின்றது. மேலும் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் எந்த நாடுகளை தமது காலடியில் விழ வைக்க முடியவில்லையோ அந்த நாடுகள் எல்லாம் இலங்கை அரசுடன் 'நல்ல' உறவிலும் இருக்கின்றன என்பது அடுத்த உறுத்தல். இறுதிக்கட்டப் போருக்கு உலக நாடுகள் அனைத்துமே இலங்கை அரசின் பக்கம் நின்று புலிகளை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றன என்பதே வரலாறு. இதற்கு தேவையான தார்மீக ஆதரவுகளை மட்டும் அல்ல தளபாட, உளவுத் தகவல்களையும் தாராளமாக மேற்குலக நாடுகளும் வழங்கி வந்தன. இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கின்றன, இதற்கான சாத்வீகப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுத்தது. ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக புலிகளின் ஏகபோகமும், ஏதேச்சாகாரமும், பாசிச செயற்பாடுகளும் இலங்கைத் தீவில் இரத்தக்கறழியை ஏற்படுத்தியது. இதில் பலியாக்கபட்டவர்கள் இலங்கை இராணுவம் மட்டும் அல்ல, தமிழ், முஸ்லீம், சிங்கள அப்பாவி மக்களும், கூடவே புலிகளின் செயற்பாட்டிற்கு மாற்றுக் கருத்துள்ள போராளிகளும்தான். இதற்கு பதிலடியாக இலங்கை அரசுகளும் செயற்பட்டன. அப்போது எல்லாம் புலிகள், இலங்கை அரசு என்ற இரு தரப்பினரதும் மனித விரோத செயற்பாடுகள் இவர்களின் கண்களுக்கு தெரியவில்லை. குறிப்பாக புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், ஜனநாயக மறுப்புக்கள், மாற்றுக் கருத்தாளர்கள் மீதான அடக்கு முறைகள், கொலைகள் போன்றவற்றை தாயகத்திற்கும் அப்பால் புலம் பெயர் தேசங்கள் எல்லாம் புலிகள் விரிவுபடுத்தி செயற்பட்டபோது மேற்குகங்கள் இவற்றை காணாதது போல் பாசாங்கு செய்திருந்ததே உண்மையானதாகும். புலிகளால் போர்தொடுக்கப்பட்டு 'தடை' செய்யப்பட்ட பல ஈழ விடுதலை அமைப்புக்கள் இடதுசாரி சிந்தனையின்பால் ஈர்க்கப்பட்வர்கள் என்பதினால் இவர்களின் அழிவை திறம்படச் செய்த புலிகளை 'அமெரிக்கம்' உலகம் ஆதரித்து நின்றதே வரலாறு. ஆனால் இன்று இந்த மேற்குலகம் வரிந்து கட்டி நிற்பது எல்லாம் தமிழ் பேசும் மக்களுக்கான சம உரிமைகாகவோ அல்லது போரின்போது ஏற்பட்ட குற்றங்களை நியாயத்துடன் விசாரித்து சம்மந்தப்பட்வர்களை தண்டிப்பதற்காவுவோ அல்ல. மாறாக இலங்கை அரசை தமது நலன்களை காக்கும் சகபாடியாக மாற்ற முயலும் செயற்பாடுகளின் வடிவத்திற்காகவே. இதன் அர்த்தம் இலங்கை அரசு இலங்கையில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமை விடயத்தில் நியாயமாக நடந்து கொள்கின்றது என்பது அல்ல. சரி இவற்றை சற்று ஒதுக்கிவிட்டு ஐ.நா. தீர்மானத்தையும். இதற்கு பதிலடியாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாட்டையும் பார்க்கும் போது இதில் என்னமோ வெற்றி? பெற்றது இலங்கை அரசுதான் என்று எண்ணத் தோன்றுகின்றது. ஐ. நா. மனித் உரிமை சபை 2009 மே இற்கு முன்பு தோரயமாக இரண்டு வருடங்களுக்கு உட்பட்ட யுத்தகாலத்தில் இருதரப்பினராலும் நடாத்தப்பட்ட யுத்தக் குற்றங்கள் பற்றி விசாரணைணை கோரி நிற்கின்து. இதனை இலங்கை அரசு இதற்கு ஒருபடி மேலே போய் 1983ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து தொடங்கி 2009 மே வரைக்கும் ஆன காலப்பகுதியில் இருதரப்பினரதும் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரி நிற்கின்றது. ஆக இலங்கை அரசு விசாரணையை மறுதலிக்வில்லை, மாறாக விசாரணைக்கான கால வரம்பை விரிவுபடுத்தி நிற்கின்றது. இது ஐ.நா வின் மேற்குலக சார்பு நிலை இலங்கை அரசிடம் 'ஈர்க்கை கொடுத்து தடியால் அடிவாங்கியது' ஐ போன்றது என்றே பார்க்க முடிகின்றது. இதில் இலங்கை அரசுக்கு வெற்றி என்பதையும் விட, ஐ.நா. வுக்கு பிரேரணை கொண்டு வந்த அமெரிக்க கூட்டத்திற்கு தோல்வி என்பதையும் விட, இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு உரிமை உறுதிப்படுத்தப்படாத தோல்விகளே இறுதியில் எஞ்சி, விஞ்சி நிற்பதையே தமிழ் பேசும் மக்கள் அறுவடை செய்தது நிற்கின்றனர். இதில் இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் தோற்றுள்ளனர் என்பதே பரிதாப நிலையாகும். இருப்பதையும் இல்லாமல் ஆக்கிவிட்டு மண்டியிட்டான் பிரபாகரன் என்றால் அவர்களின் வாரிசுகள் இனியும் இழப்பதற்கு ஏதும் இல்லாமல் செய்துவிடும் சாணக்கியமற்ற செயற்பாடுகளையே செய்து வருகின்றனர் என்பதுவே உண்மையாகும். உண்மை இனிக்கவா செய்யும்......?

(சாகரன்) (ஏப்ரல் 05, 2014)

தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு! 424 புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்குள் நுழையத் தடை (பெயர் விவரங்கள் இணைப்பு)

 
 
இலங்கை அரசினால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தொடர்புடைய நபர்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
இவ் வர்த்தமானியில் 16 புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்கள் 424 பேரின் பெயர் விவரங்கள் மார்ச் 21 ஆம் திகதியிட்ட விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியல் அடங்கிய வர்த்தமானியை பார்வையிடுவதற்கு  தரப்பட்டுள்ள லிங்கை அழுத்துங்கள்.

மைண்ட் வாய்ஸோடு மைக் பிடித்த வடிவேலு!

'உண்மையிலேயே மனோபாலா சொன்னது மாதிரி நான் ரெண்டு வருஷம் சினிமாவிலே இருந்து ஓய்வெடுத்தது சந்தோஷமாத்தான் இருந்துச்சு. என்னென்னமோ நடந்து போச்சு. காமெடித்தானே செஞ்சேன்... அதையெல்லாம் காமெடியா எடுத்துக்க வேண்டியதுதான். நான் முன்னாடி செய்த காமெடியத்தான் இப்போ எல்லோரும் வெளியில செஞ்சிகிட்டு இருக்காங்க. நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன். தமிழ்நாட்ல இருக்குற எல்லா வீட்டு ரேஷன் கார்டுல என் பேர் இல்லை. மத்தபடி அவங்க வீட்டுல நானும் ஒரு குடும்ப உறுப்பினர்தான். தெலுங்கு, மலையாள சினிமாவுல நடிக்கக் கூப்பிட்டாங்க. 'தமிழ்நாட்ல வடிவேலுவுக்கு சான்ஸ் இல்லை. அதான் வெளிமாநிலத்துக்கு நடிக்க ஓடிப் போயிட்டான்...’னு கிளப்பிவிடுவாங்க. அதனால போகலை. அப்படியும்மீறி சிலபேர் தமிழ் படத்துல நடிக்க அழைச்சாங்க. அப்படி ஏதாவது நடந்துடக் கூடாதுனு சிலபேர் வாடகைக்கு சைக்கிள் எடுத்துட்டுப் போயி தடுப்புக் கட்டை போட்டாய்ங்க. (மேலும்......)

வெளிவந்துவிட்டது வானவில் 38

இந்தியாவில் மத, இன, சாதி வெறி பிடித்த பாரதிய ஜனதாக்கட்சி ஆட்சிக்கு வர மக்கள் அனுமதிக்கக்கூடாது!

இந்தியாவில் எதிர்வரும் மே (2014) மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதையொட்டி தேசிய அளவலும், மாநிலங்கள் அளவிலும் புதிய அரசியல் கூட்டுகள் உருவாகியுள்ளன. இந்தத் தேர்தலில் பிரதான போட்டி காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான வலதுசாரிக் கூட்டணிக்கும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. கட்டுப்பாடற்ற திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுலுக்குக் கொண்டு வந்தவர். அத்துடன் அவர் மேற்கத்தைய, குறிப்பாக அமெரிக்க விசுவாசியும்கூட. அதனால்தான் மன்மோகனின் முதல் ஐந்தாண்டுகால ஆட்சிக்கு நிபந்தனையுடன் ஆதரவளித்து வந்த இடதுசாரிக் கட்சிகள், அவரது அரசு அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி உடன்படிக்கை காரணமாகவும், அவரது அரசு அதேநேரத்தில் இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால் சில கட்சிகள் ஒன்று சேர்ந்து 'மூன்றாவது அணி' என்ற பெயரில் ஒரு கூட்டை உருவாக்கியுள்ளனர். இந்தக் கூட்டு தேர்தலில் மக்களின் ஆதரவை எவ்வளவு தூரம் பெறும் அல்லது தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் இந்தக் கூட்டு ஒரு தீர்க்கமான சக்தியாக உருவெடுக்குமா என்பதை இப்போதைக்குக் கணிப்பிட்டுக் கூறமுடியாத நிலைமையே இருக்கின்றது. கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கமே இந்தியாவில் அதிகாரத்தில் இருந்து வருகின்றது. அந்த இரண்டு காலகட்ட அரசாங்கங்களிலும் மன்மோகன் சிங்கே பிரதமராக இருந்து வருகின்றார். கட்சித் தலைவியும், புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விதவை மனைவியுமான சோனியா காந்தி பிரதமராக வருவதற்கு காங்கிரஸ் கட்சியில் போதிய ஆதரவிருந்தும், அவர் இத்தாலியைச் சேர்ந்த வெளிநாட்டுக்காரர் என்ற தேசிய வெறியையும், அவதூறையும் பாரதீய ஜனதா கட்சி கிளப்பியதால், அவருக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.(மேலும்.....)

யாழில் பல மாற்றங்கள்

யுத்தத்தின் பின்னர் யாழ்ப்பாணத்தில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று வெள்ளிக்கிழமை (04) தெரிவித்தார். யாழ். பொதுநூலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் நான் யாழ்ப்பாணத்திற்கு இரண்டாவது தடவையாக வருகை தந்துள்ளேன். முதற்தடவையாக 2012ஆம் ஆண்டு வருகை தந்தபோது இங்குள்ள மக்கள் தமது தேவைகளைக் கூறினார்கள். அதன் பின்னர் சிங்கப்பூரில் பல தரப்பினரையும் சந்தித்து இலங்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்தோம். அந்தவகையில்தான் யாழ்ப்பாணத்தில் கல்வியைப் போற்றும் கலாசாரம் காணப்படுகின்றதால் கல்வித் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்தோம் என்று கூறினார். மக்களின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்பதுடன் அவர்களின் பிள்கைளின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கல்வித்திறனை மேம்படுத்த தீர்மானித்தோம். யாழில் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் பல கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அதிகமான மக்கள் வீதிகளில் நடமாடுகின்றார்கள். அத்துடன் வியாபார சூழல் அதிகரித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தென் சூடானில் உள்நாட்டு போர் உச்ச கட்ட நிலையில்

தென் சூடானில் உள்­நாட்டு போர் உச்ச கட்ட நிலையை அடைந்­துள்­ள­­து. தலை­நகர் ஜுபாவில் ஆரம்­ப­மான வன்­முறை மோதல்கள் நாட­ளா­விய ரீதியில் பர­வி­யுள்ள நிலை­யி­லேயே பராக் ஒபாமா எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது. கடந்த வாரத்­தி­லி­ருந்து அந்­நாட்டில் குறைந்­தது 500 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர். முன்னாள் உப ஜனா­தி­பதி றெயிக் மாசரே அங்கு இடம்­பெற்று வரும் வன்­மு­றை­க­ளுக்கு கார­ண­மென ஜனா­தி­பதி சல்வா கிர் குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். மோதல்கள் கார­ண­மாக அந்­நாட்­டி­லுள்ள ஐக்­கிய நாடுகள் வளா­கத்தில் சுமார் 34,000 பேர் அக­தி­க­ளாக தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர். தென் சூடானின் கிழக்கு எல்­லைக்கு அண்­மையில் அக­திகள் தங்­கி­யி­ருந்த ஐக்­கிய நாடுகள் தள­மொன்றின் மீது வியா­ழக்­ கிழமை நடத்தப்பட்ட தாக்­கு­தலில் 3 இந்­திய சமா­தான படைவீரர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்தத் தாக்­கு­த­லை­ய­டுத்து அகொபோ ஜொங்­லேயி மாநி­லத்­தி­லுள்ள மேற்­படி ஐக்­கிய நாடுகள் வளா­கத்தில் பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஐக்கிய நாடுகள் சபை அங்கிருந்து தனது உத்தியோகத்தர்களை வெளியேற்ற உலங்கு வானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளது. 2011 ஆம் ஆண்டு தென் சூடான் சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்னர் சூடானில் இடம்­பெற்ற 22 வருட கால உள்­நாட்டு போரில் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தனர்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சை

சிறந்த பெறுபேறுகள் பட்டியலில் வேம்படி மகளிர் 5வது இடம்

க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுக ளைக் கொண்ட பாடசாலைகளின் பட்டியலில் முதல் பத்து இடங்களில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி இடம்பெற்றுள்ளது. இக்கல்லூரி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 246 மாணவியர்களில் பெரு ம்பாலானவர்கள் அனைத்துப் பாடங் களிலும் சித்தியடைந்துள்ளனர். கொழும்பு 8 தேவி பாலிகா மகா வித்தியாலயம் கூடுதலான பெறுபேறு களைப் பெற்று முதலாவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பாடசாலையில் பரீட்சைக்குத் தோற்றிய 245 மாணவியர் களில் 124 மாணவியர் 9 ‘ஏ’ சித்திகளைப் பெற்றிருப்பதுடன், 83 வீதமானவர்கள் 8 ‘ஏ’ ற்கும் கூடுதலான புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இந்தப் பாடசாலையில் எந்தவொரு மாணவியும் எந்தவொரு பரீட்சையிலும் தோற்றத் தவறவில்லை யென கல்வியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. இரண்டாவது இடத்தில் கம்பஹா ரத்னாவளி பாலிகா மகா வித்தியால யமும், மூன்றாவது இடத்தில் மாத் தளை அரச விஞ்ஞானக் கல்லூரியும், நான்காவது இடத்தில் கொழும்பு விசாகா மகளிர் மகா வித்தி யாலயமும் காணப்படு கின்றன. சிறந்த பெறுபேறுகளை வழங்கிய பாட சாலைகளின் பட்டியலில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 24வது இடத்தில் காணப்படுகிறது. மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் பாடசாலை 44வது இடத்திலும் காணப்படுகிறது.

தென் மாகாண சபையில் எஞ்சிய அமைச்சுப் பொறுப்பு யாருக்கு என்பது இன்று முடிவு

தென் மாகாண சபையின் எஞ்சிய மாகாண சபை அமைச்சர் பதவிக்கு யாரை நியமிப்பது என இன்று (5) நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என கட்சி செயலாளர் சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். இதன்படி தென் மாகாண சபை இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் அடுத்தவாரம் ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்க உள்ளதாக அறிவிக்கப் படுகிறது. தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கு தெரிவான முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவி ஏற்றனர் தென் மாகாணத்தில் 3 பேரே அமைச்சர்களாக பதவி ஏற்றதோடு, நான்காவது நபராக இடதுசாரி கட்சியில் இருந்து ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். தென் மாகாண சபைக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூவரும் சமசமாஜகட்சி சார்பில் இருவரும் தெரிவாகியுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெரிவான மூன்று உறுப்பினர்களில் எவரை அமைச்சராக நியமிப்பது என இன்றைய கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்பட உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு தெரிவான மூவரில் பியசிறி மற்றும் பிந்து வீரசிங்க ஆகியோர் ஏற்கெனவே அமைச்சர் பதவி வகித்துள்ளதோடு, மாத்தறை மாவட்டத்தில் இருந்து தெரிவான வீரசுமன இதுவரை அமைச்சு பதவி வகித்தது கிடையாது. எனவே அவருக்கு அமைச்சு பதவி கிடைக்கலாம் என நம்பப்படுகிறது.

ஏப்ரல் 04, 2014

வாளோடு திரிந்தார் எழிலன், யாழில் சுவரொட்டிகள்…!!

(ஆண்ட பரம்பரை மீண்டும் ஆள நினைபதில் தவறொன்றும் இல்லையே என நினப்பவர்கள்.  இவர்கள். ஆண்ட பரம்பரையின் ஆயுதம் வாளைக் காவித்திரியாமல் வேறு என்னத்தைத்தான் காவித்திரிந்திருப்பார்கள் . - சாகரன்

ரொட்டானா ஜெட் விமான சேவை 9ம் திகதி

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ரொட்டானா ஜெட் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான முதலாவது விமான சேவையை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஆரம்பிக்கிறது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி அல்- பட்டின் விமான நிலையத்திலிருந்து 9ஆம் திகதி இரவு 11.45க்கு ஏ- 319 ரக விமானம் இலங்கை நோக்கிப் புறப்படும். இந்த விமானம் அதிகாலை 5.45 க்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையும். 10ஆம் திகதி மீண்டும் இந்த விமானம் மத்தள விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு இராச்சியம் நோக்கிப் புறப்படும். 12 பிஸ்னஸ் கிளாஸ் ஆசனங்களையும் 120 சாதாரண ஆசனங்களையும் கொண்ட இந்த விமானம் வாரத்தில் மூன்று தினங்கள் சேவையில் ஈடுபடும். 10 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து புறப்படும் இந்த விமானம் 7.15க்கு மத்தள விமான நிலையத்தை சென்றடையும். 8.15க்கு அபுதாபி நோக்கிப் புறப்படும். வெள்ளிக்கிழமைகளிலும் இதே நேர அட்டவணையின்படியே சேவை நடத்தப்படும் என சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார். சனி மற்றும் புதன்கிழமைகளில் காலை 10.45க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் இந்த விமானம் 11.45க்கு கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்டு மத்தள விமான நிலையத்தை சென்றடைந்து பகல் 1.30 க்கு மத்தள விமான நிலையத்திலிருந்து அபுதாபி நோக்கி பயணமாகும் என்றும் அமைச்சர் பிரயங்கர ஜயரட்ன தெரிவித்தார்.

உக்ரைன் உக்கிரம்

ரஷ்யாவுடன் விண்வெளி நிலைய உறவைத் தவிர மற்றதை ரத்து செய்த நாஸா!

உக்ரைன் விவகாரத்தால் ரஷ்யாவுடனான அனைத்து தொடர்புகளையும் அமெரிக்காவின் நாசா நிறுத்தி வைத்துள்ளது. இருப்பினும் சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பாக மட்டும் ரஷ்யாவுடன் அது இணைந்து செயல்படுமாம். ரஷ்யாவில் இருந்து ரஷ்யாவைச் சேர்ந்த அலெக்சாண்டர் ஸ்க்வார்ட்சோவ், ஓலக் ஆர்டம்யவ் மற்றும் அமெரிக்காவின் நாஸாவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்வான்சன் ஆகிய 3 விண்வெளி வீரர்களும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வான்வெளிக்கு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற விண்கலம் நேற்று வெற்றிகரமாக சர்வதேச ஆராய்ச்சி விண்கலத்தை போய் சேர்ந்தது. சர்வதேச ஆராய்ச்சி நிலையத்துக்குச் சென்ற வீரர்கள், இது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர். அங்கு அவர்கள் சில மாதங்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். இந்நிலையில் தொடர்ந்து சர்வதேச விண்வெளி நிலைய ஆராய்ச்சியில் மட்டும் ரஷ்யாவுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா அறிவித்துள்ளது. 2011ம் ஆண்டு அமெரிக்காவின் ஸ்பேஸ் 'ட்டில் விண்வெளிக் கலங்கள் வாபஸ் பெறப்பட்டுவிட்டையடுத்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப ரஷ்ய ரொக்கெட்கள், சோயுஸ் விண்வெளிக் கலங்களைத் தான் அமெரிக்கா சார்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த 3 ஆண்டுகளில் புதிய தொழில்நுட்பத்துடனான விண்வெளிக் கலங்களை அமெரிக்கா பயன்பாட்டுக்கு கொண்டுவரவுள்ளது.

ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு இல்லை நேட்டோ நாடுகள்  முடிவு

உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பகுதியாக கிரிமியா இருந்து வந்தது. ஆனால் அங்கு நடந்த பொது வாக்கெடுப்பில் மக்களின் ஏகோபித்த ஆதரவுக்கு பின்னர், கிரிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டது. ஆனால் இது அமெரிக்கா மற்றும் மேற் கத்திய நாடுகளின் விருப்பத்துக்கு மாறாக அமைந்தது. இதன் காரணமாக அவை, ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த நிலையில், பெல்ஜியத்தின் தலைநகர் பிரசல்ஸ் நகரில், நேட்டோ என்னும் அமெரிக்க நேசநாடுகளின் (28 நாடுகள்) வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், கிரிமியாவை உக்ரைனிலிருந்து பிரித்து தன்னோடு இணைத்துக்கொண்ட ரஷ்யாவுக்கு எந்த ஒத்துழைப்பும் வழங்குவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. இது குறித்து நேட்டோ அமைப்பின் தலைமைச் செயலாளர் அன்டர்ஸ் போக் ராஸ்முசன் கூறுகையில், 'ரஷ்யாவின் நடவடிக்கை, அங்கு வழக் கமான அலுவல்கள் இனி கிடையாது என முடிவு எடுக்க வைத்துள்ளது. எனவே ரஷ்யாவுடன் இராணுவம், சிவிலியன் என அனைத்து தரப்பிலான ஒத்துழைப்பையும் அளிப்பதில்லை என்று முடிவு எடுத்துள்ளோம்'' என்றார்.

ஏப்ரல் 03, 2014

முதலமைச்சர் சி.வி எனக்கு தம்பி - பிள்ளையான்

1970ஆம் ஆண்டு இவர்களின் பெரும் சிங்கங்கள் எல்லாம் தோல்வி கண்டவுடன்  1971,72ஆமஆண்டு காலப்பகுதிகளில் சிங்கக்கொடியை எரிக்கவேண்டும் என்று இளைஞர்களை ஊக்கவித்து சிங்க கொடியை எரிக்க வைத்தார்கள். 1965 தொடக்கம் 1970ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் அவர்களும் கலந்துகொண்டிருந்தனர். அப்போது எங்கும் சிங்கக்கொடி இறக்கப்படவும் இல்லை. எரிக்கப்படவும் இல்லை. இவ்வாறு இருக்க சமஷ்டியும் இல்லை, தனிநாட்டு பிரகடனம் வட்டுக்கோடை தீர்மானமும் இல்லை. 1988ஆம் ஆண்டு மாகாணசபை தேர்தல் வந்தது. அதனை பொறுப்பேற்கவில்லை. அல்லது அதனை பொறுப்பேற்றவர்களையும் விடவில்லை. 2007ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாணசபை தேர்தல் வந்தபோது அதிகாரங்கள் இல்லை. நாங்கள் வரமாட்டோம் என்று கூறினார்கள். அதனை நாங்கள் பொறுப்பேற்று எங்களால் முடிந்தவற்றை செய்துகொண்டிருந்தோம். 2012ஆம் ஆண்டு அதனை குழப்பிவிட்டு இன்றைய சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த கிழக்கு மாகாணசபை அமைச்சரவையினை உருவாக்கிக்கொடுத்த பெருமை கிழக்கு மாகாண தமிழ் மக்களையே சாரும். அமெரிக்காவின் தீர்மானத்தில் 13வது தீர்வுத்திட்டத்தினை அழியுங்கள் என கூறப்பட்டுள்ளது. இதனை இந்தியா 1987ஆம் ஆண்டே பொலிஸ் தருகின்றோம், நிதி தருகின்றோம், ஹெலியும் தருகின்றோம் என்று கூறியபோது அதனை யாரும் பொறுப்பேற்கவில்லை. இன்று மிகபெரும் முட்டாள்தனமான, சிரிக்கவைக்கும் நடவடிக்கையெல்லாம் வடபகுதியில் நடந்து வருகின்றன' என தெரிவித்தார்.
 (மேலும்....)

மலையக தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்கருதி பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும். - மக்கள் தொழிலாளர் சங்கம்

மலையக தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பொது இணக்கப்பாட்டுடன் பொது வேலைத்திட்டங்களை வகுத்துக் கொள்ளவும் அதனடிப்படையில் செயற்படவும் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து ஆரோக்கியமான கருத்தாடல்களை ஆரம்பிக்க வேண்டுமென மக்கள் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுக்கிறது. இவ்வழைப்பை மக்கள் தொழிலாளர் சங்கத்தின் 2வது மாநாட்டின் போது  பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி இ. தம்பையா அச்சங்கத்தின் இரண்டாவது மாநாட்டில் பேசும் போது தெரிவித்தார். 29.03.2014 அன்று இரத்தினபுரியில் நடைபெற்ற மக்கள் தொழிலாளர் சங்கத்தின் இரண்டவாது மாநாட்டில் ஆர். இராஜேந்திரன் சங்கத்தின் தலைவராகவும் எம். தியாகராஜா பொருளாளராகவும் மற்றும் ஏனைய புதிய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர். (மேலும்....)

கனடா வந்த  த்ரிஷா பற்றிய இந்திய செய்தி ஊடகம்

டக்ளஸ் தேவானந்தா ஆதரவாளர் விழா.. சிறப்பு விருந்தினர் த்ரிஷா

டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்றதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.நடிகை த்ரிஷா இப்போது கனடா சென்றுள்ளார். அங்கு தமிழர் அமைப்பு ஒன்று நடத்தும் விழாவில் பங்கேற்கிறார். ஆனால் இவர்கள் ராஜபக்சேவுக்கு சாதகமாக செயல்படும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்கள் என்பதை பிற தமிழ் அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.ஈழத்தில் இறுதிப் போருக்குப் பின் வெளிநாடுகளில் ஈழத் தமிழர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளதĬ