Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 2014 மாதப் பதிவுகள்

டிசம்பர் 31, 2014

மக்களின் காணிகள் மீள கையளிக்கப்படும் - சந்திரிக்கா

தமிழ் மக்களுடைய தனிப்பட்ட காணிகளை அரசாங்கம் இராணுவத்தேவைக்கென சுவீகரித்து வைத்திருப்பதை ஆதரிக்க முடியாது. மக்களுடைய தனிப்பட்ட காணிகள் மீள கொடுக்கப்பட்டு மீள்குடியேற்றம் நல்ல முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கா தெரிவித்தார். யாழ்.நல்லூர் சங்கிலியன் பூங்காவில்  செவ்வாய்க்கிழமை (30) மாலை இடம்பெற்ற பொது எதிரணி ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் சந்திரிக்கா இவ்வாறு தெரிவித்தார் அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், "தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் உரிய முறையில் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை. நாட்டின் பாதுகாப்பும் மிக முக்கியமாகும். இந்த வகையில் இராணுவத்தினரின் தேவைகளும் உண்டு. நாட்டு பாதுகாப்பையும் இராணுவத்தினரின் தேவைகளையும் கருத்திற்கொண்டு மக்களுடைய தனிப்பட்ட காணிகள் யாவும் மீள வழங்கப்படும். இதன்மூலம் தமிழ் மக்களுடைய மீள்குடியேற்றம் நல்லமுறையில் மேற்கொள்ளப்படும்" அவர் தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணிஉறுப்பினர்களில் நால்வர், ஐ.ம.சு.கூவில் இணைவு

தமிழர் விடுதலை கூட்டணியின் உறுப்பினர்கள் நால்வர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்துகொண்டுள்ளனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு இணைந்துகொண்டுள்ளனர்.

த.தே.கூ.க்கு எதிராக சுவரொட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் ஆகியோருக்கு எதிராக யாழ். வடமராட்சி பிரதேசத்தில் புதன்கிழமை (31) சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'இரணைமடுவின் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு தரமாட்டோம் கடலில் விடுவோம்' எனக்குறிப்பிட்டு இருவரது படங்களும் சேர்த்து இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. சுவரொட்டியின் கீழ் யாழ்.மக்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரணைமடுவின் வான் கதவுகள் கடந்த 22ஆம் திகதி திறக்கப்பட்ட போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களே சுவரொட்டியில் காணப்படுகின்றன.
 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏன் தேவைப்படுகிறது?

சிறப்பு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படவேண்டியதன் அவசியம் என்ன?
இலங்கை தழுவிய அரசியல் அதிகாரக் கட்டமைப்பில் தீவிர மாற்றங்கள் இல்லாமல் இலங்கையின் இனப்பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது சிரமமான காரியமாகும். மக்களின் அதிகாரங்கள் அனைத்தையும் மையத்தை நோக்கி உறிஞ்சி தனிமனிதரின் கையில் எல்லையற்ற அதிகாரத்தை குவிக்கிறது. இந்த சிறப்பு அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை பெரும் அனர்த்தங்களை இலங்கையின் சமூக பொருளாதார வாழ்வில் ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்தரப்பில் ஏகபிரதிநித்துவ அகங்காரம் போல,
பிரச்சனை அதிகாரத்திற்கு வரும் நபர் என்பதை விட இந்த சிறப்பு அதிகாரம் கொண்ட? கட்டமைப்பு இங்கு பிரச்சனை. (மேலும்....)

தோனியின் மவுனமான வெற்றி

தோனிக்கு வாய்ப்புகளை அள்ளித்தந்த சூழலோ, தங்கத்தட்டில் கிரிக்கெட் நுழைவோ அவருக்குச் சத்தியமாகத் தரப்படவில்லை. பீகார் அணியில் அவர் ஆடி ஆடி அணி தோற்றுப் போன போட்டிகளின் கதைகள் நமக்குத் தெரியாமல் இருக்கலாம். இரவுகளில் கண்கள் சிவக்க டிக்கெட்களைப் பரிசோதித்துவிட்டு பயிற்சிக்கு போன பொழுதுகளை அவரின் ஆறு சதங்கள் சொல்லிவிடாது. இலங்கையுடனான தொடரில் தான் இந்திய அணியில் அவர் சேர்க்கப்பட்டு இருந்தார். பந்தையே சந்திக்காமல் டக் அவுட்டாகி ஒரு நாள் போட்டி அவரை அன்போடு வரவேற்றது. டெஸ்ட் போட்டியும் பூமெத்தையாக அமையவில்லை. ஐந்து விக்கெட்டுக்களை 109 ரன்களுக்கு அணி இழந்திருந்த சூழலில் 'தோனி ஆடிவிட்டு வா!' என்று அனுப்பி வைத்தார்கள். மலைகளின் மீது ஏறி, ஏறி உரமேறி இருந்த கால்கள் சளைக்காமல் அன்று கைகளோடு இணைந்து போராடியது. முப்பது ரன்கள் அடித்திருந்த தோனி தான் கடைசி ஆளாக நடையைக் கட்டியிருந்தார். (மேலும்....)

பிரபாகரன்

மகிந்தாவிடம் பெருந்தொகை பணம் பெற்றுக்கொண்டது சாட்சிகளுடன் அம்பலம்

2005ம் ஆண்டு 180 மில்லியனை புலிகளிடம் எடுத்துச் சென்றவர் விபரங்கள் கசிந்தது

தேர்தல் செலவுகளுக்காகக் கிடைத்த டொலர்கள் மற்றும் ரூபாய் என்பன இரண்டு பயணப் பொதிகளில் எடுத்துவரப்பட்டு வழங்கப்பட்டன

2005ம் ஆண்டு தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்காக 180 மில்லியன் ரூபா நிதி விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டதுடன், அதனை பசில் ராஜபக்ஷ தனது அலுவலகத்தில் வைத்தே எமில்காந்தனிடம் வழங்கியதாக டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். நாவலயில் உள்ள தனது வீட்டில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மகிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டதற்கமையே இந்தப் பணம் கொடுக்கப்பட்டது.

2002ம் ஆண்டில் தாம் முதலில் எமில் காந்தனைச் சந்தித்ததாகவும், ஜயலத் ஜயவர்தனவினால் அவர் தனக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் எமில்காந்தன் புனர்வாழ்வு அமைச்சில் பணியாற்றி வந்ததாகவும் டிரான் அலஸ் கூறியுள்ளார். அப்போது பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளுடன் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ள ஒருவரை தேடித்தருமாறு கோரிக்கை விடுத்ததுடன் அவரிடம் தனது சகோதரர் பசில் ராஜபக்ஷவை அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டதாக அலஸ் தெரிவித்துள்ளார்.
இதன்பின்னர், தாம் எமில்காந்தனை பசில் ராஜபக்ஷவிற்கு அறிமுகப்படுத்தியதுடன் அவர்கள் இருவரும் தமது அலுவலகத்தில் சந்தித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பசில் ராஜபக்ஷ அடிக்கடி எமில் காந்தனை தனது அலுவலகத்தில் சந்தித்ததாகவும் இருவருக்கிடையில் விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். (மேலும்....)

சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் மக்கள் சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவினையே ஆதரிக்க வேண்டும். - ப.உதயராசா.(Sri TELO)
 

நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் சிறிரெலோகட்சி சனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினையே ஆதரிக்கும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கிலே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு வடக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இதனை ஏற்கனவே திட்டமிட்டு செயற்படுத்தி வரும் ஒருவரிடமே நாம் நாட்டை ஒப்படைக்க முடியும். எம்மைப்பொறுத்தவரை எவ்விதமான தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக இருந்தாலும் பாராளுமன்ற அங்கீகாரத்துடனே சாத்தியமாகும் என்பதில் அளப்பரிய நம்பிக்கையுண்டு. அந்த தீர்வினை அங்கீகரிக்க வேண்டுமாக இருந்தால் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. (மேலும்....)

கொடுக்கல் வாங்கலின் இறுதியில்

கூட்டமைப்பு மகிந்தவூடன் அல்ல ரணிலுடன் என அடையாளம் காட்டியது

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது தலைவர் ஆர்.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கூட்டம் தொடர்ந்தும் நடைபெறுகிறது. மைத்திரிக்கு ஆதரவளித்தமை ஏன்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விளக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பொதுஎதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்து தெர்தல் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு பிரதான வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும், பிரகடனங்களையும் கூர்ந்து கவனித்து வந்ததோடு, இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின், குறிப்பாக வடக்குக் கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களின் கருத்துக்களையும் மனதில் கொண்டு, வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் அந்த மக்களையும் மற்றைய பிரஜைகளையும் சரியாக வழிநடத்தும் பொறுப்பு எம்மிடமுள்ளது.

மைத்திரியை ஆதரிக்க த.கூட்டமைப்புக்கு எதிரணி வழங்கிய சன்மானம் என்ன? - ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி
 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நிபந்தனைகளுடன் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்தது என்பது பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கும் என்பது குறித்து ஏற்கனவே ஊகிக்கக் கூடியதாக இருந்தது எனச் சுட்டிக்காட்டிய அவர், மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்கு என்ன நிபந்தனைகள் எட்டப்பட்டுள்ளன என்பது மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமது தீர்மானத்தை அறிவிப்பதற்கு இரண்டு மூன்று கிழமைகளுக்கு முன்னரே கருத்துத் தெரிவித்த அதன் உறுப்பினர்கள், தமது கோரிக்கைகளைக் குறிப்பிட்டு அவற்றை நிறைவேற்றும் வேட்பாளருக்கே ஆதரவு வழங்கப்போவதாகக் கூறியிருந்தனர். இவ்வாறான நிலையில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் தீர்மானமானது எந்தவித நிபந்தனைகளும் இன்றி எடுக்கப்பட்ட தீர்மானமாக இருக்க முடியாது.

Prabakaran is dead but the LTTE is not

The figurehead of LTTE incorporated was killed on 19th May 2009 alongside a handful of other LTTE leaders. The fact that a little over 11,000 LTTE cadres surrendered or were captured during the final phase of the conflict should showcase that there are many more trained LTTE cadres still at large and we do not know how many live in either Sri Lanka or overseas. We also need to realize that the very entities that funded and ran the LTTE propaganda from abroad also remain very much in the picture as do others who have supported the LTTE by virtue of disbursements from the LTTE global kitty. Therefore, the Sri Lankan populace and the international community as well as India must be aware that LTTE even minus a figurehead remains a potential threat and there is need to be forever vigilant and conscious that there is a thin line dividing peace and terror. (more....)
 

மகிந்தாவின் முன்னாள் சகாவின் மனைவி சசி எழிலன் கூட்டமைப்புக்கு எதிராக போர்க்கொடி

தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அவர்களின் இந்தக் கருத்து வந்துள்ளது.
வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று தெரிவித்துள்ளார் . வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார். இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் மானமுள்ள ஒரு மறத்தமிழனும் இருவருக்கும் வாக்களிக்க மாட்டார்கள் என கூறுயுள்ளார்.

அரசாங்கம் புலிகளுடன்….


தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு அமைப்புக்கள் அசராங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் போது வடக்கு மக்கள் தேர்தலை புறக்கணிக்கச் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் சிரில் ரமபோசா இலங்கைக்கு விஜயம் செய்த போது இந்த திட்டம் முதல் முதலாக ஆரம்பிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் உள்ளிட்ட முக்கிய புலித் தலைவர்களுடன் அரசாங்கமே தொடர்புகளைப் பேணி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. வடக்கு மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் இவ்வாறு அரசாங்கம் இரகசிய திட்டமொன்றை தீட்டியுள்ளதாக தேசிய பிக்குகள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

த.தே.கூ., மு.காவுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை - மைத்திரி

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடனோ, முஸ்லிம் காங்கிரஸுடனோ எவ்விதமான ஒப்பந்தத்தையும் நான் செய்துகொள்ளவில்லை என்று பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். யாழ்ப்பாணம் கிட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அரசாங்கத்தினால் எனக்கெதிராக சேறுபூசும் பிரசாரங்களே முன்னெடுக்கப்படுகின்றன. நான்; யாருடனும் இரகசிய ஒப்பந்தங்களை செய்துகொள்ளவில்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டவர்களே என்னுடன் இணைந்துகொண்டனர். விசேடமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் எவ்விதமான ஒப்பந்தங்களையும் நான் செய்துகொள்ளவில்லை என்றார்.

The Voice of the Voiceless
Chef Ruwan wins Honorary Title

(By Kris Shanmugam)

Sri Lankan born Toronto Pastry Chef, Ruwan Jayakody, receives the honorary title by ‘AMITIE GASTRONOMIQUE FRANCOIS VATEL’ in Luxembourg at the recent International Culinary World Cup, 2014. Culinary World Cup Competition in Luxembourg is prominently known as one of the top 3 culinary competitions in the entire world.ruw medal The President of VATEL CLUB-WACS ‘World Association of Chefs Societies’ within Luxembourg, Mr. Armand Steinmetz, presented the special medal and the honorary certificate to Chef Ruwan Jayakody at the gala event held at the Alexis Heck hotel school in Diekirch, Luxembourg on the 28th of November, 2014. (more....)

மீண்டும் கூட்டாகக் கடத்தலில் ஈடுபடும் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்கள்....!!!


தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட, 3 கிலோ எடையுடைய தங்கத்தை, ஐந்து நாட்களுக்கு பின், சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனர்.இலங்கையில் இருந்து, தனுஷ்கோடிக்கு, நாட்டுப் படகில் தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக, ராமேஸ்வரம், 'கியூ' பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, கடந்த, ஐந்து நாட்களுக்கு முன், தனுஷ்கோடிக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை, கடத்தல்காரர்கள் மூவரும் பிரித்துக் கொண்டு தலைமறைவாயினர். இதில், கடந்த, டிச., 27ல், 2 கிலோ 300 கிராம் எடையுடைய தங்கத்தை கியூ போலீசார் மற்றும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து, தனுஷ்கோடியைச் சேர்ந்த, டெனிஸ்டன், முருகவேல் ஆகிய, இரு மீனவர்களை கைது செய்தனர். 700 கிராம் எடை கொண்ட தங்கத்துடன், தலைமறைவான, இலங்கை யாழ்ப்பாணம் அகதி பொன்சால் குமார், 47, என்பவரை தேடி வந்தனர். அவர், வத்தலக்குண்டு அருகே, புதுப்பட்டி அகதிகள் முகாமில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. அங்கு சென்ற சுங்கதுறையினர், குமாரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். மூவரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு, 85 லட்சம் ரூபாய் என, சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

இலங்கையில் எனது தமிழ் சகோதரிகள் தமது உடலை சிங்களவனுக்கு விற்றால் தான் ஒருவேளை உணவு கிடைக்கும் என்ற நிலை. - சீமான்.

'இலங்கையில் நமது பெண்கள் சிங்களவனுக்கு உடலை விற்றால் தான் ஒரு வேளை உணவா?, சீமானின் இந்த கருத்துக்கள் ரொம்ப அருவருப்பா உள்ளது..' இனியாவது இவர்கள் "என் தங்கையை... என் தாயை..." இப்படி உணர்ச்சி வசப்பட்டு கூவி ஈழ வியாபாரம் செய்வதை நிறுத்த வேண்டும். இலங்கையில தமிழர்கள் தமிழகத்தை விட ஓரளவு நல்லாத்தான் வாழ்கிறார்கள். பிரபாகரனோடு ஒரு படம் எடுத்திட்டா இவர்கள் மட்டுமா தமிழர்கள். இவர்களுக்கு புலி பினாமிகள் சொல்வது மட்டும் வேத வாக்கு, மற்றைய யார் சொன்னாலும் அது அடிமை வாக்கு. நாங்க ஒன்னும் அடிமையாக வாழவில்லை. யுத்தம் ஓய்ந்து சற்று நிம்மதியாக இருக்கிறோம். ஆங்காங்கே சில பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால் இந்த சீமான் போன்றவர்கள் நம்மை பற்றி சொல்வதெல்லாம் ஈழ வியாபாரத்துக்கான பொய்கள். சிங்கள ராணுவம் ரோட்டில போய் வாற தமிழ் பெண்களை எல்லாம் கற்பழிக்கவில்லை. யுத்த பகுதிகளில் நடந்திருக்கலாம். அதற்கு ஆயுதத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த புலிகளும் ஒரு காரணம். சீமான் போன்ற ஈழ வியாபாரிகளை தமிழக மக்கள் இனம் கண்டு அவர்களின் போலியான தமிழுணர்வுக்கு 2016 ல தகுந்த படம் புகட்ட வேண்டும்.(Ilangai Thamilan)

டிசம்பர் 30, 2014

த.தே.கூ. வின் முடிவு இரத்தக்களரிக்கு வழிகோலியுள்ளது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு, மேற்குலக நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கவும் அதன் மூலமாக இலங்கையில் மேலுமொரு இரத்தக்களரி ஏற்படவும் வழிகோலியுள்ளது என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் கடைசி நேரத்தில் எடுத்துள்ள முடிவு, நாட்டின் தென்பகுதியிலுள்ள சிங்கள மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் அணிதிரளச் செய்துள்ளது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையால், நஷ்டம் அடைந்தவை ஆயுதங்களை விற்கும் நாடுகள். ஏனென்றால், இங்கு இப்பொழுது ஆயுதங்களை நாம் வாங்குவதில்லை. ஆயுதங்கள் மோதிக்கொள்ளாமையால், எமது பிள்ளைகள் கொல்லப்படுவது இல்லை. அங்கவீனமாவதில்லை. அகதி வாழ்க்கை இல்லை. (மேலும்....)
 

ஏயார் ஏஷியா விமானம்; 40 பேரின் சடலங்கள் மீட்பு

இந்தோனேஷியாவின் காணாமல் போன ஏயார் ஏஷியா விமானத்தை தேடியபோது,குறைந்தபட்சம் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேஷிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இந்தோனேஷியாவின் ஒருபகுதியான போர்ணியோவுக்கு அப்பாலான ஜாவா கடற்பரப்பில் நொறுங்கிய விமானத்தின் பாகங்களுடன் மேற்படி சடலங்கள் மிதந்துகொண்டிருந்தன. ஏ 320 -200 ஏயார் பஸ் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபாயாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயிருந்தது.
 

சந்திரிகாவின் வாக்கு மீது நம்பிக்கை - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  

ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பதென்று கூட்டமைப்பினர் மத்தியில் தெரிவித்துள்ளார் அதன் தலைவர் இரா.சம்பந்தன்.நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாதப்பிரதிவாதங்களை செவிமடுக்காமலேயே மைத்திரபாலவிற்கு ஆதரவளிப்பதென சம்பந்தன் முடிவெடுத்துவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் ஊடாக தகவல்கள் வெளியாகியிருந்தன இந்த நிலையில் மருத்துவத்துக்காகத் தெரிவித்து சம்பந்தன் இந்தியா பயணமாகியிருந்தார். நேற்று நாடு திரும்பிய அவர், ஏனைய உறுப்பினர்களை அழைத்து மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவளிப்பதாகவும் அதற்காக அனைவரும் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். (மேலும்....)

மகிந்தாவின் தேர்தல் பிரச்சாரத்தில் இந்தி நடிகர்கள்


 

முஸ்லீம் காங்கிரஸ் vs மகிந்த ராஜபக்ச
(யஹியா வாஸித்)

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் சவூதிஅரேபிய அரசாங்கத்துடன் எண்ணெய் இறக்குமதிக்கான ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த எண்ணைய் வியாபாரத்தை முன்னின்று நடாத்தியவர் திருவாளர் நசீர் அகமட். ஆம் கிழக்கு மாகாண அமைச்சர். இது ஒரு பத்துவருடகால ஒப்பந்தம். பல அயிரம் கோடி ரூபா பெறுமதியான ஒப்பந்தம் இது. இதில் நம்மவர்களின் கமிஷன் மாதத்துக்கு 60 கோடிரூபா. இந்த அறுபது கோடியில் பாதி திருவாளர் ரவூப் ஹக்கீமுக்கும். பாதி திருவாளர் நசீர் அகமட்டுக்கும் என கொழும்பு வர்த்தக வட்டாரம் பேசிக் கொள்கின்றது. இதற்குரிய சகல ஆதாரங்களும் நமது நாட்டின் பெரும் தலைகளிடம் இருக்கின்றதாம். இதனால்தான் நமது தானைத்தலைவர் கக்கி முழுங்கிக் கொண்டிருக்கின்றாராம்.

அரச ஆதரவு பியசேன எம். பி நையப் புடைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தெரிவாகி அரசை ஆதரித்து வருகின்ற அம்பாறை மாவட்டத்தின் பொடியப்பு பியசேன எம். பி மர்ம நபர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவரை தேடி வந்த சில நபர்களே நையப் புடைத்து விட்டு இலாவகமாக தப்பிச் சென்று உள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கான ஆதரவை இவர் விலக்க வேண்டும், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று இவர் அச்சுறுத்தப்பட்டே தாக்கப்பட்டு உள்ளார் என்று குடும்பத்தினர் தெரிவித்து உள்ளார்கள். இவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டு அடிக்கப்பட்டமையால் பின்னணியில் தமிழ் அரசியல்வாதிகளே இருக்க வேண்டும் என்று பொலிஸ் சந்தேகிக்கின்றது.

அறியப்படாத இலக்கிய முகம்

இதே டிசம்பர் மாதத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய விவசாயிகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 1968-ம் ஆண்டு நடந்த இந்தச் சம்பவம் சமூகத்தில் பெரும் பாதிப்பை விளைவித்தது. ஞானக்கூத்தன், இன்குலாப், இந்திரா பார்த்தசாரதி, சோலை சுந்தரபெருமாள் உள்ளிட்ட பலரும் பல்வேறு காலகட்டங்களில் இந்தச் சமூகக் கொடுமையைத் தங்கள் படைப்புகளில் பதிவுசெய்துள்ளனர். ஆனால் அதற்கு ஆறாண்டுகளுக்கு முன்பு 1962-ல் இதே போன்ற ஓர் அடக்குமுறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் ‘சூத்திரதாரி’ என்னும் ஒரு சிறுகதை வெளிவந்திருந்தது. ஆர். என். கண்ணன் என்பவர் அந்தக் கதையை எழுதியிருந்தார். அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு. வெளிவந்தவுடனே பரவலாக வாசிக்கப்பட்டு கவனமும் பெற்றது. அந்த எழுத்தாளருக்கு அதுதான் முதல் கதை. (மேலும்....)

ஈரான் அரசும் மகிந்த அரசுக்கெதிராக வேலை செய்கின்றதா ?

(யஹியா வாஸித்)

ஈரான் அரசுக்கெதிராக ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார தடை விதிப்பதற்கு முன்னால். நமதுசிறிலங்கா அரசு கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்தே பெற்று வந்தது. திடீரென பொருளாதாரதடை வந்ததும் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டது. இது உலகறிந்த விடயம். ஆனால் நாம் அறியாத விடயம். அந்த எண்ணெய்கள் கடனுக்கே வாங்கப்பட்டது. அந்த எண்ணெய்க்காக நமது நாடு பல றில்லியன் ரூபாக்களை ஈரானுக்கு கொடுக்க வேண்டியிருந்தது. அந்த பணத்தை அறவிடுவதற்காக இரானிய தூதுவரும். ஈரானிலிருந்து பல அதிகாரிகளும் மாதத்துக் கொருதடவை. இருதடவை என இங்கு வந்து அரசின் காலில் கிடையாய் கிடந்தார்கள். இறுதியில் அந்த முழுப்பணமும் எங்களுக்கு தேவையில்லை. அந்தப் பணத்திற்கு பதிலாக உங்கள் நாட்டில் உற்பத்தியாகும் வாசனைத்திரவியங்களான கிராம்பு. சாதிக்காய். கறுவா. ஏலம் மற்றும் தேயிலை. கைவினைப்பொருட்கள் நாட்டு மருந்துகளை தாருங்கள். (மேலும்....)

ஈ.பி ஆர் எல் எஃப் வின் முடிவு தவறானது....எந்தவகையில் மைத்திரியை ஆதரிக்கிறீர்கள்?

மைத்திரி அவரது 40 வருட அரசியலில் தமிழருக்காக பரிந்து பேசினாரா? அல்லது அதற்கான சமிக்ஞை ஏதும் காட்டினாரா? காலம் காலமாக தமிழர்களை மாத்திரமல்ல சிங்கள்த்தொழிலாளர்களையும் ஒடுக்கும் முதலாளித்துவத்தின் அடிவருடிகளான ஐ.தே.கட்சியினரின் நரித்தனமான சூழ்ச்சியில் எடுபட்டுப்போன மைத்திரி பிரச்சனைகளை உள்ளீடாக ப்பேசித்தீர்க்காமல் மேற்குலக நாடுகளின் ( ஏகாதிபத்தியத்தின்) கையூட்டலில் திசைமாறிப்போனவர்களை ஆதரிப்பதற்கான காரணங்களைக்கூறுங்கள். கமுனிசம் சோசலிசம் என மக்களுக்கு முற்போகு கருத்துக்களை கூறிவிட்டு ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள்? வேண்டுமாயின் இரண்டுதரப்பையும் நிராகரித்திருக்கலாம். ஜனனாயக சோசலிச அமைப்பு சார்பில் ஓர் இடதுசாரிவேட்பாளராக ஒருவர் போட்டியிடுகிறாரே அவரை ஏன் ஆதரிக்கவில்லை? தொடர்ந்தும் வரலாற்றௌத்தவறுகளை விடுகிறீர்கள்...... சங்கரியண்ணை மைத்திரியை ஆதரிப்பதால் நீங்களும் ஆதரிக்கிறீர்களா? அல்லது சித்தார்த்தன் தலைமை மைத்திரியை ஆதரிப்பதால் நீங்களும் ஆதரிக்கிறீர்களா? மவுனமாக இருந்திருக்கலாம். காரணங்களை கூறுங்கள்...

(தோழர் கணேசலிங்கம் கணபதிபிள்ளை)
 

பிரதேச சபை உறுப்பினர்கள் ஆறு பேர் கூட்டமைப்புக்கு தாவினர், தம்புள்ள பிரதிமேயர், மைத்திரிக்கு ஆதரவு

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர்கள் 5 பேர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் என மொத்தமாக ஆறுபேர், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இன்று திங்கட்கிழமை(29) இணைந்து கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர். தம்புள்ள பிரதிமேயர் குசும்சிறி ஆரியதிலக்க மற்றும் நகர சபை உறுப்பினர் எச்.எம்.ருபசிங்ஹ ஆகிய இருவரும் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்துள்ளனர். அவ்விருவரும், தம்புள்ளையில் நடைபெற்ற பொது எதிரணியின் மேடையில் ஏறி மைத்திரிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தனர்.

பெண்களை ஏமாற்றி திருமணம்

ராமேஸ்வரத்தில் மதபோதகர் கைது

இருபெண்களை ஏமாற்றி மணந்த மதபோதகரை, ராமேஸ்வரம் மகளிர் போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சிமடத்தைச் சேர்ந்த தேவதாஸ் மகள் மரியரேகா,27. இவருக்கும், கன்னியாகுமரி இணையம் புத்தன்துறையைச் சேர்ந்த அல்போன்ஸ் ஜஸ்டின் பென்கர் ராஜ்,37, என்பவருக்கும் கடந்த ஜனவரியில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மாத ஆண் குழந்தை உள்ளது. அதன்பிறகு, கணவரால் கைவிடப்பட்ட மரியரேகா, ராமநாதபுரம் எஸ்.பி., மயில்வாகனிடம் புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம் அருகே உள்ள கிறிஸ்தவ சபைக்கு, பிரார்த்தனைக்கு சென்ற என்னிடம், மத போதகராக ஜஸ்டின் அறிமுகம் ஆனார். அவர், தன்னை ஒரு விஞ்ஞானி என்றும், லண்டனில் வேலை செய்வதாகவும், ஏழை பெண்ணை திருமணம் செய்வதுதான் நோக்கம் என்றும் கூறினார்.கிறிஸ்தவ சபை நிர்வாகிகள் பவுலோஸ், சரோஜம் ஏற்பாட்டில் எனக்கும், ஜஸ்டினுக்கும் 17.1.14 ல் திருமணம் நடந்தது. அதன்பிறகு தான், இதேபோல் ஆசை வார்த்தை கூறி பல பெண்களை ஜஸ்டின் ஏமாற்றி இருப்பது தெரிந்தது. (மேலும்....)

மகிந்த அரசை தோற்கடிப்பதற்காகவே மகிந்தவுடன் ஒரு கூட்டம்.

(யஹியா வாஸித்)

மகிந்தஅரசு தேர்தல் திகதியை அறிவித்ததும். மகிந்தமீதும். மகிந்த அரசின் பாரிய பொருளாதார அபிவிருத்தி மீதும் நம்பிக்கை வைத்துள்ள வெளிநாட்டில் வாழும் பல புத்திஜீவிகளும். உணர்வாளர்களும் மகிந்தவுக்கு சார்பாக வேலைசெய்வதற்காக சிறிலங்கா வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 6ஆம் திகதி சிறிலங்கா வந்த அவர்கள். அவரை சந்தித்து ஆதரவு தெரிவிக்கவும். அவருக்காக களத்தில் இறங்கி வேலை செய்யவும் பல முயற்சி எடுத்துள்ளார்கள். ஜனாதிபதியை சந்திக்க அவர்கள் அரசகட்சி அமைப்பாளர்கள். மாகாண அமைச்சர்கள். பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களையும் சந்தித்து. ஜனாதிபதி அல்லது அவரது சகோதரர்களை சந்திக்க அனுமதி பெற்றுத்தருமாறு வேண்டியுள்ளனர். ஆனால் இவர்கள் அவர்களை துச்சமாக மதித்ததுடன். அவர்களை ஏன் உங்களுக்கு இந்த தேவையில்லாத வேலை என்று சொல்லி திருப்பியும் அனுப்பியுள்ளனர். சிங்கள. தமிழ். முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த இவர்களில் பலர் நாடு முழுவதும் உள்ள பெயர் சொல்லக் கூடிய பல கல்லூரிகளின் பழைய மாணவர்களும். பல்கலைக்கழக பட்டதாரிகளும். அரசியல் பொருளாதார வல்லுனர்களும் ஆவர். மகிந்த சிந்தனை தலைநகரங்களில் உள்ளவர்களை மட்டும்தான் அடைந்திருக்கின்றது. ஒவ்வொரு கிராமப் புறத்தவனின் தொண்டைக்குளுக்குள்ளும் அது செல்லவேண்டும். அதை மகிந்தவின் ஒப்புதலுடன் பத்து நாட்களில் செய்து முடிப்போம். மகிந்தவை இந்நாட்டின் தொடர் ஜனாதபதியாக்குவோம் என்ற நம்பிக்கையுடன் வந்தோம். ஆனால் எங்களை இங்குள்ள அவரது கட்சியினரே வேண்டா வெறுப்புடன் நோக்குகின்றனர். பாவம் சிறிலங்கா மக்கள் என வேதனையுடன் அவர்கள் விமான நிலையத்தில் வைத்து நண்பர் ஒருவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளனர்.

எமது முஸ்லிம்களின் இப்போதய ஆயுதம் இணையமும் சமூக வலைத் தளங்களுமே என்று காரசாரமாக கருத்துக்களை முன் வைத்தார் - எஸ்.ரீ ரஊப்

கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இணைய வாசகர்களுக்கு நடுநிலையான செய்திகளை வழங்கி வந்த சிலோன் முஸ்லிம் இணையம் நேற்று (2014-12-26) அதன் புதிய நிர்வாக பணிப்பாளரும் நிறைவேற்று அதிகாரியும் ஷக்தி FM முகாமயாளருமாகிய சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.ரீ.ரவூப் தலைமையில் அக்கரைப்பற்று ஏசியா செப் உணவுவிடுதியின் கேட்போர் கூடத்தில் இலங்கை முஸ்லிம்களின் எதிர்காலம் எனும் தலைப்பில் ஊடகவியலாளர்களுடனான ஒரு கலந்துரையாடலையும் அவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வையும் நடாத்தியது. அங்கு தலைமை உரையாற்றிய எஸ்.ரி .ரஊப், எமது முஸ்லிம்களின் இப்போதய ஆயுதம் தொலைக்காட்சியோ வானொலியோ அன்றி இணையமும் சமூக வலைத் தளங்களுமே என்று காரசாரமாக கருத்துக்களை முன் வைத்தார். நிகழ்வில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சட்டத்தரணி உவைசுர்ரகுமான், வீரகேசரியின் முன்னாள் உதவி ஆசிரியர் ஏ.எல்.நிப்றாஸ் மற்றும் சேரண்டிப் தொலைக்காட்சியின் அலைவரிசை பிரதானி பஹத் ஏ.மஜீத் அவர்களும் கருத்துரை வழங்கினர். இங்கு சிரேஸ்ட ஊடகவியலாளர் பகுர்தீன் அவர்களால் எஸ்.ரீ.ரவூப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

பரீட்சையில் தேற முடியாதவர் குதிரை ஓடுவது போல் ரணிலுக்காக மைத்திரி களத்தில் குதிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமோக வெற்றியீட்டுவது உறுதியாகிவிட்டது. சென்ற இடமெல்லாம் மக்கள் வெள்ளம் அதனை நிரூபித்து விட்டது என அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமால் சிறிபால டி சில்வா ஆகியோர் தெரிவித்தனர். ஜனாதிபதியின் வெற்றி உறுதியாகிவிட்டதுடன் வெற்றியின் பின்னர் எம்மிடமிருந்து சென்றவர்கள் மீண்டும் எம்மிடமே திரும்பி வரவேண்டிய நிலை உருவாகும். அப்போது அவர்கள் மன்னிப்பு கேட்டே வர வேண்டும் என்பதுடன் எமது நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்களாகவே வரவேண்டும். இதற்காக ஜனாதிபதியின் சலூன் கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றும் தெரிவித்தனர். பரீட்சையில் பல தடவைகள் தோல்வியுற்ற ஒருவர் எப்படியாவது பரீட்சையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மற்றொருவரை “குதிரை ஓடுவதற்கு” நியமிப்பது போன்று 29 தடவைகள் தேர்தலில் தோல்வியுற்ற ரணில் எப்படியாவது பதவியேற்க வேண்டும் என்பதற்காக மைத்திரியை குதிரை ஓடுவதற்கு விட்டுள்ளார் என்றும் அமைச்சர் நிமால் தெரிவித்தார்.

காணாமல்போன இந்தோனேசிய விமானம் கடலுக்கடியில் இருக்கலாமென ஊகம்

காணாமல்போன ஏர் ஏசியா இந்தோனேசிய பயணிகள் விமானம் கடலுக்கடியில் இருக்கலாம் என்று இந்தோனேசியாவின் விமானத்தை தேடும் குழு குறிப்பிட்டுள்ளது. விமானம் தொடர்பை இழக்கும் போது இருந்த ஒருங்கிணைப்புகளை அடிப்படையா கக் கொண்டே இந்த கருதுகோளை எடுத் ததாக விமானத்தை தேடும் குழுவின் தலை வர் பம்பங் சொலிஸ்டியோ குறிப்பிட்டுள்ளார். விமானத்தை தேடும் பணிகள் இரண்டா வது நாளாக நேற்று நீடித்த நிலையில் இது வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. கடுமையான காற்றை தவிர்ப்பதற்காக பாதை மாறுவதாக காணாமல்போன விமானத்தின் விமானி கூறியிருந்தாரே தவிர அபாய எச்சரிக்கை எதுவும் அவரிடம் இருந்து வந்திருக் கவில்லை என்று கூறப்படு கின்றது. இந்த விமானத் திலிருந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் அனுப் பப்படும் சமிக்ஞைகள் எது வும் வரவில்லை என்றும் இந்தோனேசிய அதிகாரி கள் கூறினர். "விமானத்துடன் தொடர் பில் இருந்தவர்களை அடிப் படையாகக் கொண்டு விமா னம் விபத்துக்கு உள்ளான கடற் பகுதியை எம்மால் கணிக்க முடிகிறது. இந்த கருதுகோளின்படி விமானம் கடலுக்கு கீழ் இருக்க வாய்ப்பு உள்ளது" என்று ஜகார்த்தாவில் நேற்று நடந்த ஊடக மாநாட்டில் பம்பங் குறிப்பிட்டார்.

கூட்டமைப்பு சிறீதரன் நிலப்பிரபு ஆனது எப்படி

இன்று லங்காசிறி என்ற பெயரில் தலைகீழாக இருக்கும் சிறிலங்கா என்ற உண்மைப்பெயருக்குள் இருக்கும் லங்காசிறி மற்றும் தமிழ்வின் ஆகிய குழுமத்துக்கு தலைவராக இருக்கும் ஸ்ரீதரன் வன்னிக்கு வரும்போது ஒரு துண்டு காணியும் இல்லையாம்! இன்று 290 ஏக்கர் காணி அவருக்கு உள்ளதாம் மனம் தாங்கவில்லை, இந்த சிறிதரன் தான் ஒரு புலியின் ஆதரவாளனாகவும் ஈழத்தேசிய மக்களின் குரல் தான் என சொல்லும் மனிதனுக்கு எப்படி 290 ஏக்கர் காணி வந்தது தமிழர்களின் வாழ்க்கையை விற்று வாழும் வன்னித் தமிழர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும், சும்மா வந்த ஒருவன் புலிகளின் பெயர் சொல்லி வாழ்ந்த சரித்திரம் தொடரும்?

திருகோணமலை மாவட்ட பத்மநாபா E.P.R.L.F 

திருகோணமலை மாவட்ட பத்மநாபா E.P.R.L.F காரியாலயத்தின் கேட்போர் கூட்டத்தில் இன்று (29/12/2014) நடந்த ஆட்டோ ஓட்டுனர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது. இவ் நிகழ்வில் அமைப்பாளர் சத்தியன் மூத்த உறுப்பினர் வேலாயுதம் மற்றும் தோழர்கள் முன்னிலையில் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
மக்கள் முன்னிலையில் அமைப்பாளர் சத்தியன் பேசுகையில் 'எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் வேண்டும் என்றால் மக்கள் மைத்திரிக்கு வாக்களிக்க வேண்டும்' என்று கேட்டு கொண்டதுடன் அதற்கான காரணத்தையும் எடுத்துரைத்தார். அதனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல். அதற்காக 18வது திருத்த சட்டம் அகற்றப்பட வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்‌தத்தின் அடிப்படையில் உருவான மாகாணசபைக்கு 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஊழலற்ற பாராபட்சமில்லாத மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம் நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் நிலவ நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேற்படி எதிர்பார்ப்புடன் எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது அணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதுடன் வரும் 8ம் திகதி வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தமிழ் மக்கள் அணைவரும் வாக்களிக்க வேண்டும்மென்றும் கேட்டுக்கொண்டார். அதை தொடர்ந்து மூத்த ஊறுப்பினர் வேலாயுதம் அவர்கள் பாடசாலை பிள்ளைகளுக்கான அப்பியாச கொப்பிகள் கொடுப்பதை தொடக்கி வைத்தார்

டிசம்பர் 29, 2014

தேர்தலை ஒத்திவைக்க தீர்மானிக்கவில்லை - மஹிந்த

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கு இதுவரையிலும் எந்தவிதமான தீர்மானமும் எடுக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். சீரற்ற காலநிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை ஒத்திவைக்குமாறு யாரும் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு.
ஒன்று : மஹிந்த ராஜபக்‌ஷவை ஆதரிப்பது.
இரண்டு : மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது.
மூன்று : இருவரையும் நிராகரிப்பது.
இதில், எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்?

184 பேருடன் மாறியது மு.கா: நல்லாட்சிக்காய் பாடுபடபோவதாக சூளுரை

எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரரிக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தில் தாம் வகித்த அமைச்சு, பிரதியமைச்சு பதவிகள் உள்ளிட்ட சகல பதவிகளிலிருந்தும் உறுப்பினர்கள் இராஜினாமா செய்துள்ளதாகவும் காங்கிரஸ் அறிவித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு, கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்ட மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், இந்தத் தீர்மானத்தை அறிவித்தார். (மேலும்....)
 

பொதுக் கட்சியிடம் கோடிகள் பெற்றார் சேனாதியா -  சுரேஸ்


ஜனாதிபதி தோ்தலில், பொதுக்கட்சிகள் சார்பாகப் போட்டியிடுபவருக்கு ஆதரவளிப்பதாக் கூறி, அக் கட்சியிடம் இருந்து ஒரு 4 கோடி ரூபா பெறுமதியான வீடும் 6 கோடி ரூபாவும் கூட்டமைப்பின் தலைமைப்பீடத்தைச் சோ்ந்தவர்கள் பெற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வருங்காலத்தில், மைத்திரி ஜனாதிபதியாக வந்தால் பொருளாதார அமைச்சராக வருவார் என பலராலும் சொல்லப்பட்டும் குறித்த நபரும் அதைப் பற்றியே கனவு கண்டு கொண்டிருக்கும் மக்கள் ஆதரவு இல்லாமலே எம்.பி ஆகியவருமான கூட்டமைப்பின் நரி என கூறப்படும் நபருக்கு கொழும்பில் அந்த 4 கோடி ரூபா பெறுமதியான வீடு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சேனாதியார் தான் பெற்றுக் கொண்ட பணத்தில் சிறு பகுதியை செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட சிலருக்குப் பகிர்ந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  இப் பணம் போதாது என அவர்கள் அடம்பிடித்துக் கொண்டு நிற்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே வேளை தான் இந்தியாவில் நிற்கும் போது மாவை எப்படிப் பணத்தைப் பெறலாம். இவர் எப்படி பணத்தைப் பகிர்ந்து கொடுக்கலாம், யாரைக் கேட்டு இவற்றையெல்லாம செய்தார் என சுரேஸ் பிரேமச்சந்திரன் குமுறிக் கொண்டு இருப்பதாகத் தெரியவருகின்றது. மொத்தத்தில் தமிழருக்கு ஆப்படிக்க நினைக்கும் கட்சியுடன் சோ்ந்து, இருக்கும் கோவணத்தையும் பறிக்கு நிலைக்கு உள்ளாக்கும் வகையில் கூட்டமைப்புத் தலைமைகள் தங்களின் சுயநலத்திற்காக மக்களை விற்கும் நிலைக்கு வந்துவிட்டார்கள் என தமிழ்த் தேசியப் பற்றுமிக்கவார்கள் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு மகா தவறை அரங்கேற்றியது மு.கா - எம்.எச். சேகு இஸ்ஸதீன்

ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானம் முஸ்லிம் சமூகத்துக்கிழைத்த மற்றொரு மகா தவறு என மு.கா. முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்துள்ளார். மு.காவின் நீண்டகால மெளனத்துக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் நலன் சார்ந்த முடிவு வருமென்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முடிவு அரசாங்கத்தின் நல்லெண்ண நாட்டங்களுக்கு வேட்டு வைத்து சிங்கள - முஸ்லிம் கலவரங்களால் சீற்றமடைந்துள்ள வட-கிழக்கு முஸ்லிம்களின் வடிகான் தேடிய இன மத உணர்வுகளை இதமாக நெறிப்படுத்தும் சகல முயற்சிகளையும் தடுத்துள்ளது. மாறாக அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் போது இந்த உணர்வுகளையூட்டி முஸ்லிம்களை பகடை காய்களாக்கி தமது சுய அரசியல் பதவி வியாபார முதலீட்டுக்குப் பயன்படுத்தவுள்ளனர். இந்த முடிவு சமநிலைச் சமுகமான முஸ்லிம்களின் நாசூக்கான நாகரிக விழுமியங்களை நட்டாற்றில் தள்ளி, ஜனாதிபதித் தேர்தலைக் கேலிக்கிடமாக்கியுள்ளதன் மூலம் அடுத்த மகா தவறை முஸ்லிம் காங்கிரஸ் அரங்கேற்றியுள்ளது. ஜனாதிபதியின் பதவிக்காலங்களை இரண்டு தவணைகளுக்கு மேல் அதிகரிக்க பாராளுமன்றத்தில் தேவைப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்போது ஆதரவு வழங்கி விட்டு இப்போது தலைகீழாக சிந்திப்பதும் ஒரு தவறே.

ஜனாதிபதிகளின் பெயர்கள் மாறுவதால் மட்டும் மக்களுக்கு பலனில்லை -  ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜெயசூரிய

(செவ்வி : செவ்வி செய்தவர் – சேனன்)

சேனன்: மகிந்த ராஜபக்சவின் அரசினை எதிர்ப்பவர்கள் ஒண்றாக இணைந்து நின்று எதிர்ப் போட்டியாளரை ஆதாரிப்பதன் மூலம் எப்படியாவது மகிந்த அரசு தோற்கடிக்கப்படவேண்டும் என்று பேசப்படுகிறது. நீங்களும் மகிந்த அரசைக் கடுமையாக எதிர்ப்பவர். நீங்கள் ஏன் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறீர்கள் ?
சிறி: நாம் தற்போதய மகிந்த அரசைக் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த அரசை விழுத்துவதற்காக எல்லாவித நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து செய்து வருகிறோம். ஆனால் அதற்காக நாம் எந்த முதலாளித்துவக் கட்சிகளுடனும் சமரசம் செய்துகொள்ளத தயாராக இல்லை. இந்த கொடுங்கோலரசு நிச்சயமாக வீழ்த்தப்படவேண்டியதே. அதனாற்தான் இவ்வரசக்கு எதிராக மக்கள் திரட்சியை ஏற்படுத்த பாடுபட்டு வருகிறோம். இந்த அரசை தூக்கி எறிந்துவிட்டு அவ்விடத்தில் எதை வைத்து நிரப்புவது என்பது எமக்கு முக்கியமான கேள்வியாக இருக்கிறது. 1994ல் என்ன நடந்தது என்பது உங்களுக்கு ஞாபகமிருக்கலாம். 17 வருட காலம் நாட்டைச் சூறையாடிய ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் ஆட்சியை விழுத்துவதற்காக எல்லோரும் எதிர் கட்சிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. எதிர் கட்சி வென்றபின் என்ன நடந்தது? 80 களில் அமுலுக்கு வந்த எந்த மக்கள் எதிர்ப்புச் சட்டம் பின்வாங்கப்பட்டது? அல்லது என்ன கொள்கைகள் மாற்றப்பட்டது? அதற்குப் பதிலாக மேலும் கொடிய யுத்த வெறி அரசு ஆட்சியை கைப்பிடித்ததுதான் நிகழ்ந்தது. ஒரு முதலாளித்துவ கட்சிக்கு இன்னொரு முதலாளித்து கட்சி மாற்றல்ல. அவர்கள் வேறு உடை போட்ட ஓரே மனிதர்கள்தான். எதிர் கட்சி எந்த மாற்றையும் முன்வைக்கவில்லை. (மேலும்....)

தோழர் ஜீவாவோ தியாகத்தின் இமயம். முதல்வர் கருணாநிதியோ குடும்பப்பாசம் என்கிற சுயநலத்தின் ஒட்டுமொத்த உருவம்

தோழர் ப. ஜீவானந்தத்தின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்த கருணாநிதி வெளிப்படுத்தியிருக்கும் ஒரு கருத்து நகைப்பை வரவழைத்தது. அவர் பேசும்போது, தனக்கும் தோழர் ப. ஜீவானந்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று கூறித் தன்னைத் தோழர் ஜீவாவுக்கு நிகராக, தோழர் ஜீவாவின் தோழராக கருணாநிதி நிலைநிறுத்த முயன்றிருப்பது அப்பட்டமான சரித்திரப் புரட்டு. தொடர்பு என்றால் நெருங்கிய பழக்கமா? அல்லது அவரது வாழ்வுக்கும் இவரது வாழ்வுக்கும் ஒருமைப்பாடு உள்ளது போல் தோற்றமா? ஜீவா 1906-ம் ஆண்டு பிறந்தவர். இவரோ 1924-ம் ஆண்டு பிறந்தவர். வயது அளவில் 18 ஆண்டுகள் மூத்தவர் ஜீவா. அப்படியிருக்க பழக்கம் நெருங்கிய தொடர்பாக இருக்க வாய்ப்பில்லை. ஜீவாவுடைய வாழ்வுக்கும் கருணாநிதியின் வாழ்வுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதுபோல் பேசியிருப்பதன் மூலம் எவ்வளவு பெரிய பொய்யை சர்வசாதாரணமாக அவிழ்த்துவிட முயல்கிறார் முதல்வர் கருணாநிதி. (மேலும்....)

காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவின் வாக்குமூலம்,ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ளுங்கள்.

பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர் இந்தியாவின் தேசத்தந்தை அல்ல பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார். பாகிஸ்தான் பிரிவினைக்கு நாம் இணங்கியிருக்காவிட்டால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது என்று சிலர் கூறுவது தவறான கருத்து. தலைவர்கள் எடுத்த தவறான முடிவுக்கு அது வெறும் சாக்குப்போக்காகவே எனக்குத் தோன்றுகிறது. 1947 ஆகஸ்டு 15_ந்தேதி பாகிஸ்தான் சுதந்திர நாடானது எப்படி? பஞ்சாப், வங்காளம், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து முதலிய பகுதி மக்களின் உணர்வுகளுக்கும், கருத்துக்களுக்கும் எந்த மதிப்பும் தராமல் பாகிஸ்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரிக்கக்கூடாத பாரதம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதியில் மதவாத அரசு நிறுவப்பட்டது. முஸ்லிம்கள் தங்கள் தேச விரோத செயல்களுக்கு வெற்றிக்கனியை பாகிஸ்தான் வடிவில் பெற்றனர். பட்டப்பகலில் சுமார் 400 பேர் கூடியிருந்த கூட்டத்தில் காந்திஜியை நான் சுட்டேன். அது உண்மை. (மேலும்....)

ஒபாமாவை குரங்குடன் ஒப்பிடுகிறது வட கொரியா

தமது நாட்டின் இணையதள சேவைகளை அமெரிக்கா முடக்கியதாக குற்றம்சாட்டி, 'வெப்ப மண்டலக் காடுகளில் உலவும் குரங்குதான் ஒபாமா' என்று வட கொரிய பாதுகாப்பு ஆணையம் விமர்சித்துள்ளது. வட கொரியாவின் இணைய சேவைகள் கடந்த சில நாட்களாக அவ்வப்போது முடங்கிய வண்ணம் இருந்தன. இந்த முடக்கத்துக்கு அமெரிக்காதான் காரணம் என்று வட கொரிய பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், இதற்குக் காரணம் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா என்று குறிப்பிட்ட வட கொரிய பாதுகாப்பு ஆணையம், அவரை 'வெப்பமண்டலக் காட்டில் உலவும் குரங்கு' என்றும் விமர்சித்துள்ளது. இந்த விமர்சனத்துக்கு அமெரிக்கா தரப்பிலிருந்து எந்த பதிலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னைக் கொல்ல சதி நடப்பதாக கதைக்களம் கொண்ட 'தி இண்டர்வியு+' என்ற சர்ச்சைக்குரிய படம் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியிடப்படுவதற்கு தனிப்பட்ட முறையில் ஒபாமாவே பொறுப்பு என வடகொரிய தேசிய பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய படத்தை தயாரித்த சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மீது சைபர் தாக்குதலை நடத்தியதான குற்றச்சாட்டுகளை வடகொரியா மறுத்துள்ளது. தனது கணனிகளில் மேற்கொள்ளப்பட்ட ஊடுருவல்கள், அச்சுறுத்தல்களுக்குப் பின்னர் இந்தப் படத்தை வெளியிடுவதை சோனி பிக்சர்ஸ் நிறுவனம் நிறுத்திவைத்திருந்தது.

ஆண், பெண் சமத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பாடவிதானங்கள் அமைய வேண்டும்

பால் நிலையும் கல்வியும் அண்மைக் கால கலைத்திட்டச் செயற்பாடுகளில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. பால் நிலையானது சமூகத்தால் கட்டமைக்கப்படுகின்ற ஒரு விடயமாகும். குடும்பம், பாடசாலை, சமூக மட்டத்தில் ஆண், பெண் வேறுபாடுகள் பால்நிலைகளில் உருவாகியுள்ளன. பால் எனப்படுவது ஆண், பெண்களுக்கிடையிலான உயிரியல் ரீதியான வேறுபாட்டைக் குறிக்கும். பால் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்றி மிருகங்கள், தாவரங்களுக்கும் பொதுவானதாகக் காணப்படுகிறது. ஆனால் பால் நிலை என்பது மனிதர்கள் மத்தியில் மட்டுமே காணப்படுகிறது. பால் நிலை என்பது ஆண், பெண்களுக்கிடையிலான சமூக கலாசார ரீதியான வேறுபாட்டைக் குறிக்கும். பால் நிலை என்பது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமூகத்தினால் விதிக்கப்படும் குணவியல்புகளும் அது தொடர்பான பாத்திரங்களுமாகும். (மேலும்....)
 

டிசம்பர் 28, 2014

மு.கா. விலகியது, சந்திரிகா அணியில் இணைந்தது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து விலகி, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கவுள்ளதாக அக்கட்சி அறிவித்தது. கட்சியின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கட்சியின் தலைமையகமாக தாருஸ்ஸல்லாமில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கண்ட அறிவிப்பை விடுத்தார். தன்னுடைய அமைச்சுப்பதவியை இராஜினாமா செய்வதற்கான இராஜினாமா கடிதத்தையும் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காங்கேசன்துறையை அடைந்தது யாழ்தேவி

யாழ்ப்பாணம் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து காங்கேசன்துறையை நோக்கி யாழ்தேவி, ஞாயிற்றுக்கிழமை (28) தனது பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இந்த சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தையும் ஊடறுத்து யாழ்தேவி புகையிரதம் காங்கேசன்துறையை அடைந்தது. இந்த பரீட்சார்த்த சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து, காங்கேசன்துறைவரை புகையிரதத்தில் பயணத்தையும் மேற்கொண்டிருந்தார். எதிர்வரும் 2ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் யாழ்தேவி புகையிரத சேவை காங்கேசன்துறைவரை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

162 பயணிகளுடன் எயார் ஏசியா விமானம் காணாமல் போயுள்ளது

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த எயார் ஏசியா பயணிகள் விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது என்று இந்தோனேஷிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. QZ8501 என்ற இலக்கத்தை கொண்ட விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது. இந்த விமானத்தில் 7 விமானப்பணியார்களும் 155 பயணிகளும் இருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மகிந்தவின் தோல்வி தமிழர்களின் வெற்றி அல்ல....?

மகிந்தவின் தோல்வி தமிழர்களின் வெற்றி அல்ல – இருப்பை தக்க வைப்பதற்கான காலமாற்றம் என்கிறேன் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? புலம்பெயர்ந்து வாழும் ஊடக நண்பர் ஒருவருடன் இன்று காலை பேசினேன்.. அவருடனான உரையாடலில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் குறித்த விடயமே முக்கியம் பெற்றது.... அவர் சொன்னார் "குரு இந்த தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றால்தான் மேற்குலகு தமிழர்பக்கம் நிற்கும் என்ற கருத்து பலரிடம் நிலவுகிறது நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.. நீ என்ன நினைக்கிறாய்" என்று நான் சொன்னேன் இம்முறை மகிந்த தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் மக்களின் வாக்கு பலத்தால் 3 ஆவது தடவையாகவும் ஜனநாயகரிதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியாகவே உலகம் கருதும். அப்படி மக்கள் ஜனநாயகத்தின் ஊடாக தெரிவான ஜனாதிபதியை 2022 வரை பலாத்காரமாக கவிழ்ப்பதற்கு உலக நாகரீகமும் மேற்கத்தேய ஜனநாயகமும் இடமளிக்க மாட்டாது...(மேலும்....)

இதுதான் இந்தியாவின் அரசியல்!

தர்மம் வெல்லும்... உண்மை வெல்லும் என்று சொல்வதெல்லாம் நமது அரசியலுக்குப் பொருந்தாது

இந்திய விடுதலைப் போராட்டம் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்த சமயம், 1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான். சுதந்திரம் கேட்டுப் போராடினாயா" நீதிபதி கேட்கிறார். "இல்லை நான் போராடவில்லை... என்னை விட்டுவிடுங்கள் " என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை.. இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்! அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது! சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை! (மேலும்....)
 

யார் துரோகிகள்?

கூட்டமைப்பால் ஐந்து கோடிக்கு விலைபேச பட்டுள்ள தமிழர்களின் வாக்குகள்.


மைத்திரிக்கு ஆதரவு வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பால் செய்யப்பட்டுள்ள இரகசிய ஒப்பந்தம்.பற்றிய தகவல்கள் கசிகின்றன.

*சம்பந்தர் இந்தியாவில் போய் படுத்து விட்டார்.

*சுமந்திரன் தமிழ்மக்களின்வாக்குகளை விலைபேசி முடித்துவிட்டார்.

*ஆறு கோடி பெறுமதியான வீடு சுமந்திரனின் உறவினர் பெயரில் கொழும்பில் எழுதப்பட்டுள்ளது.

*ஐந்து கோடி கைமாறப்பட்டுள்ளது.

*மைத்திரி வென்றால் சுமந்திரனுக்கு அமைச்சுபதவி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

*அரை க்கோடியை மட்டும் சுரேசுக்கும்,சித்தருக்கும் அடைகலத்துக்கும் பிரித்து கொடுக்க முனைந்ததில் உட்பூசல் வெடிக்கிறது.

*தமிழா தமிழா இப்போது யோசி யார் துரோகி?

கிளிநொச்சி எம்.பி ஸ்ரீதரன்

அவரது தம்பி நடத்தும் இலங்கா சிறி இணையத்தளம்..

அண்டப்புளுகும்
ஆகாசப்புளுகும் சொல்லும்
அந்த இலங்கா சிறி...

இன்றும் ஒரு அண்டப்புளுகை
அவிட்டு விட்டிருக்கு.

கிளிநொச்சி விவசாயிகளுக்கு
சேர வேண்டிய நிதியை
அமைச்சர் டக்ளசும்
சந்திர குமார் எம் பியும்
சேர்ந்து தடுத்து வைத்திருக்கிறார்களாம்..

ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும்
சந்திர குமார் எம் பிக்கும் இடையில்;
உள் மோதல் என்று செய்தி போட்டு
புளுகுரைக்கும் இந்த இணையத்தளம் ...

இன்று இப்படி ஒரு ஆகாசப்புளுகை
அவிட்டு விட்டிருக்கிறது....

எது உண்மை?....

கிளி நொச்சி விவசாய மக்களிடம்
கேகளுங்கள்.

உண்மை தெரியும்....

(Sivachelvam Sellathamby Vinthan)

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது என்று பரீட்சைத் திணை க்களம் அறிவித்துள்ளது. பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சை கள் திணைக்களத்தின் http://www.doenets.lk/ என்ற இணையத் தளத்தில் பார்வையிட முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ். இந்துக் கல்லூரி மாணவன் கணிதப் பிரிவில் தேசிய ரீதி யில் முதலிடம். இன்று பிற்பகல் வெளியாகிய க.பொ.த. உயர் தரப் தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் கணிதப் பிரிவில் 3 ஏ சித்திகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலிடம் பெற்றுள்ளார். யாழ். இந்துக் கல்லூரி மாணவன் பாக்கியராஜா டாருகீசன் என்ற மாணவனே முதலிடம் பெற்றுள்ளார்.இதேவேளை கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் 8ஆம் இடத்தையும் யாழ். இந்து மாணவன் ஒருவர் பெற்றுள்ளார். கணிதப் பிரிவில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற டாருகீசனை இரங்கும் இல்லம் வாழ்த்துகின்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி கணித,விஞ்ஞான பிரிவுகளில் மாவட்ட நிலையில் முதலிடம்! கிளிநொச்சி மாவட்டத்தில் கிளி/மத்திய கல்லூரி மாணவர்கள் இருவர் கணிதப்பிரிவில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றுள்ளனர். மாவட்ட நிலையில் கு.கதீஸ்(3ஏ) முதலாம் இடத்தையும் கா.சங்கீர்த்தனன் (2ஏ,பி) இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத்துடன் விஞ்ஞானப்பிரிவில் மாவட்ட நிலை யில் முதலாமிடத்தை இதே பாடசாலை மாணவர் இராம மூர்த்தி ஜனத் (3ஏ) பெற்றுள்ளார்.

மேற்கு ஆபிரிக்காவில் உள்ளமாலி (Mali)

மாலி (Mali), மேற்கு ஆபிரிக்காவில் உள்ள, ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு. அரசின் அழைப்பில், தொழில் நிமித்தம் அங்கு பல தடவை சென்று வந்திருக்கிறேன். இதன் எல்லைகளாக வடக்கே அல்ஜீரியா, கிழக்கே நைஜர், தெற்கே புர்கினா பாசோ, மற்றும் ஐவரி கோஸ்ட்,தென்மேற்கே கினி, மேற்கே செனெகல், மௌரித்தானியா ஆகியன நாடுகள் உள்ளன. மாலியின் வடக்கெல்லை சகாராப் பாலைவனம் வரை நீண்டுள்ளது. அதேவேளை மக்கள் அதிகம் வாழும் இதன் தெற்கெல்லை நைஜர் மற்றும் செனெகல் ஆற்றுப் படுகை உள்ளன. மாலி நாட்டின் 65 சதவிகிதம் முழு பாலைவனம். (மேலும்....)

மகிந்தா மீதான கோபம் நியாயமானதானா........?

2009ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் புலிகள் தோற்கடிக்கப்பட்ட கோபத்தில், மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்களே என்ற ஆத்திரத்தில்தான் எல்லோருமே மகிந்தவுக்கு எதிராக வாக்களிக்கவேண்டும் என்று(அவரை ஆட்சிக்குக் கொண்டுவந்ததே தாம்தான் என்பதை மறந்து) அடம் பிடிக்கிறார்கள்.  2009இல் மகிந்த செய்தது போர்க்குற்றம் என்றால், அதை அதற்கு முன்னரே 1995இல் செய்து வழிகாட்டிய சந்திரிகா, போர் செய்யாமலே புலிகளை அழித்தவர் தாம்தான் என்று உரிமை கோரும் ரணில், 2009இல் மகிந்தவின் யுத்தத்தை முன்னின்று நடாத்திய பொன்சேகா ஆகியோருடைய கூட்டில், யுத்தம் நடைபெற்ற காலத்திலும் சரி, இப்போதும் சரி நடந்து முடிந்த அவலங்கள் குறித்து மூச்சும் காட்டாத மைத்திரிக்கு வாக்களித்து என்ன பலன் வரப்போகிறது என்றெல்லாம் லொஜிக்காச் சிந்தித்ததால்...................?( Rushangan Kodeeswaran)
டிசம்பர் 27, 2014

மைத்திரிக்கு வெற்றி நிச்சயம்! - சந்திரிகா

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெறுவார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சுனாமிப் பேரலையின் தாக்கத்தினால் 2004 ஆம் ஆண்டு அனைத்துக் கட்சிகளும் பேதமின்றி இணைந்து செயலாற்றின. இதனால் குறுகிய காலத்திலேயே நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடிந்தது. இதைப்போன்றே இப்போதும் அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. எனவே அடுத்த மாதம் ஜனவரி 8 ஆம் திகதி நடக்கும் தேர்தலில் வெற்றிபெறுவோம். 'ஹெல்பிங் அம்பாந்தோட்டை' நிதி முறைகேடு சம்பந்தமான வழக்கில் தீர்ப்பு வழங்கிய அப்போதைய பிரதம நீதியரசர் சரத் என் சில்வா பின்னர் தான் வழங்கிய தீர்ப்புத் தவறானது என்று கூறியிருந்தார். தற்போது நாட்டை ஆளும் அரசின் நடவடிக்கையால் நாடு பெரும் அழிவைச் சந்தித்தது. இதனால் நாட்டை மீளகட்டியெழுப்ப வேண்டும். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன நிச்சயம் வெற்றி பெற்று நாட்டை கட்டி எழுப்புவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆதரவு யாருக்கு?

முஸ்லிம் காங்கிரஸ் இன்று அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
 கட்சியின் உயர் மட்டக்குழு இன்று சந்திப்பொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முஸ்லிம் காங்கிரசின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னரும் குறித்த விடயம் தொடர்பில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பல சந்திப்புக்கள் இடம்பெற்ற போதும் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எஞ்சிய நான்கே நான்கு புலிகளும் ராஜபக்சங்களின் சீலைக்குள்! பிரபாகரன் எஞ்சியிருந்தால் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருப்பார்! - சரத்பொன்சேகா

இந்தநாட்டில் பயங்கரவாதம் நந்திக்கடலுடன் முடிவடைந்துள்ளதாகவும் அவற்றை முடிந்துக்கட்டிய நாங்கள் உயிருள்ளவரை அது மீள எழும்ப இடமளியோம் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பிலியந்தலவில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மேடை ஒன்றில் பேசிய அவர் மேற்கண்டவாறு தெவித்துள்ளதுடன் உலகிலே பயங்கரவாதத்தை முற்றாக துடைத்தெறிந்த நாடென்ற சாதனையை தாம் நிலைநாட்டியபோதும், நான்கே நான்கு புலிகள் எஞ்சியுள்ளதாகவும் அந்த நால்வரும் ராஜபக்சக்களின் சீலைக்குள் ஒழிந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கே.பி, கருணா, பிள்ளையான் மற்றும் எமில்காந்தன் என்கின்ற புலிகள் நால்வருமே அவ்வாறு எஞ்சியுள்ளனர் என்றும் தவறுதலாகவேனும் பிரபாகரன் எஞ்சியிருந்தால் அவர் இந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக இருந்திருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்னாள் இராணுவத் தளபதி அரசுடன் இணையப்போவதாக அரச சார்பு இணையங்கள் பொய்பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் இவ்வரசாங்கத்தால் வழங்கப்பட்ட அத்தனை சுகபோகங்களையும் துறந்து நாட்டு மக்களுக்காக இவ்வரசாங்கத்திற்கு எதிராக போர்கொடி தூக்கிய தான் அந்தக்காரியத்தை எட்டாமல் உறங்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நிஷேவிதா

ஆழிப்பேரலையை தலை குனியச் செய்தவள்

நிஷேவிதா – வடமொழியில் இருந்து வந்திருக்கக் கூடிய இந்தச் சொல்லுக்கு நேரடி அர்த்தம் எனக்குத் தெரியாது. ஆனால், நான் புரிந்துகொண்ட பொருள், நிஷேவிதா என்றால் அழகு என்பதே. மட்டக்களப்பு மருத்துவமனையில், உனது அம்மாவின் கட்டிலின் அருகே, உனது அம்மம்மா உன்னை தூக்கி வைத்திருக்க, கைக்குழந்தையாய் உன்னை முதன் முதலாக நான் பார்த்தபொழுது, இந்தப் பெயரைவிட நீ அழகாய் தெரிந்தாய். ஆனால், இப்போது அதனைவிட அழகாய் தெரிகிறாய். உனது அம்மாவும் (உமா அக்கா) அழகு. அவர்கள் வீட்டில் ஆண் சகோதரம் இல்லாததால், அவர்கள் அனைவருக்கும் தம்பியாய் அங்கு நுழைந்தவன் நான். அங்கு நான் சிரித்து, விளையாடியது, மகிழ்ச்சியாய் இருந்தது மிக, மிக அதிகம்.
அவர் எனது சகோதரி என்பதால் அவரது அழகை நான் அதிகமாகப் பேசக் கூடாது, ஆனால் எங்களுடைய அம்மா அடிக்கடி அதனைச் சொல்வார். எங்கள் அம்மா அந்த நாளில் மிகவும் அழகானவர். ஆனால், அவரே ‘’உமா ஒரு பதுமை போல, டோல் போல, அவ்வளவு அழகு என்று எப்போதும் சொல்வார். (மேலும்....)

தமிழர்களை வஞ்சித்த வஞ்சகர்கள் கூட்டம்.......?

தமிழர்களை வஞ்சித்த வஞ்சகர்கள் கூட்டம் ஒன்று ஜனாதிபதித்தேர்தலில் மாற்றத்தை நோக்கி ஒன்றிணைவோம் என மக்களை ஏமாற்றத் துணிந்துள்ளனர். இதற்கு தமிழ்த் தலைவர் என தம்மைக் கூறிக் கொள்ளும் அறிக்கை அரசியல் நடாத்தும் மிதவாதியும் வஞ்சகர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்து வருகின்றார் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேசசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஐயாத்துரை சிறி ரங்கேஸ்வரன் தெரிவித்தார். நேற்று பருத்தித்துறை கிழக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தில் மக்களுடனான கலந்துரையாடல் சமுர்த்தி மகா சங்கத் தலைவி அற்புதநாயகம் கோமதி தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

இப்படியும் ஒரு பெண்ணா?


8 பேர் அடங்கிய ஒரு கும்பலால் கற்பழிக்கப்படுகிறார், சுனிதா கிருஷ்ணன். அப்போது அவருக்கு வயது 15. வாழ்க்கை போச்சே என்று இடிந்து போய் முடங்கி விடவில்லை. அன்றே முடிவெடுத்தார், தன்னை போல் பாலியல் வன்முறைக்கு ஆளான குழந்தைகள், பெண்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும் என்று. களத்தில் இறங்கவும் செய்தார்.
மாலினி என்கிற 15 வயது சிறுமியை, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர், விபச்சார விடுதியில் விற்று விடுகிறார். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50,000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல். கேட்கவே மனம் பதறுகிறது. சிறைக் கைதியைப் போன்று அடைத்து வைக்கப்பட்ட அந்த குழந்தை வெளியே தப்பித்து வர 3 முறை முயன்றும், தோற்றுப் போன அந்தச் சிறுமி, இறுதியாக சுனிதா கிருஷ்ணனின் திறமையான செயல்பாடுகளால் காப்பாற்றப்பட்டு, ஐதராபாத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறாள்.  ஒரு முறை, சமூக விரோதிகளிடமிருந்து சிறுமிகளைக் காப்பாற்றப் போன இடத்தில் வாங்கிய அடி உதையால், இவரது வலது காது கேட்கும் திறனை இழந்திருக்கிறது. பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட 3000 க்கும் மேற்பட்ட குழந்தைகளை மீட்டெடுத்து மறுவாழ்வு அளித்துள்ளார். வாழ்க நவீன புரட்சி நாயகி. இதை பகிர்ந்து அவரது செயலுக்கு ஊக்கமும், ஆதரவும், மரியாதையும் தாருங்கள் சகோதரர்களே..!

வெட்கித்தலைகுனிந்த பிள்ளையான்….

மட்டக்களப்பு களுதாவளயில் நேற்று முன்தினம் (25/12/2014)மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து பிள்ளையான் கூட்டம் நடாத்தினார். வழமைபோன்று பிள்ளையானின் ஊதுகுழல் பிரசாந்தனும், செல்வியும் மகிந்தவுக்கு வக்காளத்து வாங்கி பேசிவிட்டு அமர்ந்தபின் பிள்ளையான் பேச்சைத் தொடந்தார். அவர்மகிந்தவினால் சமாதானம் வந்துள்ளதாகவும் அபிவிருத்தி பிரமாதமாகவுள்ளதாகவும் கொடுத்தபணத்திற்கு ஏதோபேசவேண்டும் என்றநோக்கில் பேசுக்கொண்டிருந்தார்.அந்த வேளையில் களுதாவளை 4ம் வட்
டாரத்தை சேர்ந்த அந்தோனிப்பிள்ளைஅற்புதராசா என்ற இளைஞன் பிள்ளையானிடம் மகிந்தவைப்பற்றி எங்களுக்குதெரியும் நீ செய்த கொலைகளையும் கொள்ளைகளையும் பற்றி கூறு பார்கலாம் புலிகள் இல்லாவிட்டால் உன்னால் அரசியலுக்கு வந்திருக்கமுடியுமா? உத்தமன் போல் அபிவிருத்தியை கதைக்கும் உனக்கு என்னயோக்கியம் இருக்கும்கிறது என பலகேள்விகளை அந்த இளைஞர் கேட்டன் அப்போது வெட்கித்தலைகுனிந்த பிள்ளையான்கேள்விகேட்ட இளஞரை தூக்கி வேனில் ஏற்றுமாறு சகபாடி பிரசாந்தனிடம் கூறினார் . உடனே அந்த இளைஞன் ஓடினார் பின்தொடர்ந்த பிள்ளையான குழுவினர் அந்த இளைஞரான அந்தோனி அற்புதராசாமீது மிருகத்தனமாய் தாக்குதல் மேற்கொண்டதால் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் நடாத்தியபிள்ளையான் குழுவினர்மீது பொலீசார் எந்த நடவடிக்கையும் இதுவரைக்கும் மேற்கொள்ளவில்லை என்பது ம் குறிப்பிடத்தக்கது.

26/12/2014 திருமலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்களுக்கு பத்மநாபா E.P.R.L.F சத்தியனால் சமைத்த உணவு வழங்கப்பட்டது

திருகோணமலையில் பெய்து வரும் கடும் மழையில் நகர பகுதியை தவிர்ந்த அனைத்து கிராமங்களிலும் வெள்ளத்தினால் மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். பாடசாலை கட்டடங்களிலும் கிராம அபிவிருத்தி சபை கட்டடங்களிலும் மக்கள் அதிகளவில் தஞ்சமடைந்துள்ளனர். திருகோணமலை நிலாவெளி 8ம் கட்டை அடம்போடை கிராம மக்கள், கிராம அபிவிருத்தி சபை கட்டடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுக்கு உடனடியாக இரவு சாப்பாடு வழங்கப்பட்டது. கிராம சேவகர் ரகுமான் , மகளிர் தலைவி கோணேஸ்வரி கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சபிக் ஆகிய இவர்களுடைய ஒத்துழைப்புடனும் தோழர்களுடைய ஒத்துழைப்புடனும் பத்மநாபா E.P.R.L.F சத்தியானால் சமைத்த உணவு வழங்கப்பட்டது.

டிசம்பர் 26, 2014

கையொப்பம் பிழையென கூறும் மைத்திரி அதில் உள்ள விடயங்களை மறுக்கவில்லை


ரணில் விக்ரமசிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க வெளியிட்ட ஆவணத்தில் உள்ள கையொப்பம் போலியெனக் கூறும் மைத்திரிபால சிறிசேன ஏன் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்களை மறுக்கவில்லையென அமைச்சர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார். வடக்கிலுள்ள இராணுவத்தினர் குறைக்கப்படும் என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த ஆவணம் பொய்யெனில் அதில் உள்ளவாறு இராணுவத்தினரைக் குறைக்க மாட்டேன் என மைத்திபால சிறிசேன கூறவேண்டும். அதேபோல 13வது திருத்தச்சட்டத்திற்கு அமைய காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன் எனக் கூறவேண்டும். அவ்வாறு எதனையும் கூறாமல் கையொப்பம் போலியானது எனக் கூறுவது மக்களை ஏமாற்றும் செயற்பாடாகும். நல்லாட்சி என அடிக்கடி கதைத்துவரும் மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அது பற்றி ஒரு வசனத்தைக் கூடக் குறிப்பிடவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்புக் குறித்து எதுவும் அதில் உள்ளடக்கப்படவில்லை. முடிந்தால் 13வது திருத்தச்சட்டம் தொடர்பான தனது உறுதியான நிலைப்பாட்டை மைத்திரிபால சிறிசேன அறிவிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச இங்கு சவால் விடுத்தார்.
 

பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும் மாறுவார்?

முதலீட்டு ஊக்குவிப்பு பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபாவும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தனது உத்தியோகபூர்வமான அறிவிப்பை இன்று வெள்ளிக்கிழமை விடுப்பார் என்றும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.
 

பிரபாகரனின் பிள்ளைகள் நாங்கள்...எதையும் செய்வோம் -  சீமான்

நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் எதையும் செய்வோம் என்றும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறியுள்ளார். மயிலாடுதுறையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அங்கு அவர் பேசியதாவதுஇ மீத்தேன் எடுப்பதற்கு அனுமதி வழங்கிய காங்கிரஸை அப்புறப்படுத்தி விட்டோம். புதிதாக ஆட்சியேற்றிருக்கும் பாஜக அரசு புதுப்பிக்க நினைத்தால் அவர்களையும் அகற்றுவோம். அதை விட்டு விட்டு தூய்மை இந்தியா என்று சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்டு வெற்றி பெற்று விடலாம் எனக் கனவு கண்டு வீதியில் ஓட்டு கேட்டு வந்தால் கழுத்தில் துண்டைப் போட்டு இழுத்து வந்து இங்குள்ள நிலைமையை உணர செய்வோம். நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள்இ எதையும் செய்ய தயங்க மாட்டோம் எனக் கூறியுள்ளார். இந்த கொசுத் தொல்லை தாங்கமுடியவில்லை.

 

காந்தியை சுட்ட கோட்சேவுக்கு கோயில் உ.பி. யில்

உத்திரபிரதேச மாநிலம் சிட்டாபூரில் காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பணிகள் துவங்கி விட்டதாக கோயில் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1948 ல் மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற கோட்சேவுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டது. கோட்சே இந்த நாட்டின் தேசியவாதி என்று சமீபத்தில் பா.ஜ., எம்.பி,. மகராஜ் தெரிவித்த கருத்துக்கு பாலி. யில் கடும் அமளி எழும்பியது. இதனையடுத்து தனது பேச்சை திரும்ப பெற்று கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் உ .பி., மாநிலம் சிட்டாபூரில் இந்து மகா சபா அமைப்பினர் கோட்சேவுக்கு கோயில் கட்டும் பணியில் இறங்கியுள்ளனர். இதற்கென பலரிடம் நிதி வசூலித்து தேவையான தளவாடச் சாமான்கள் வாங்கியுள்ளதாக இந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இதற்கிடையில் கோட்சே தொடர்பான ஜனவரி 30 ல் ஒரு திரைப்படம் தயாரித்து வெளிவரவுள்ளது. இந்த படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு ஓன்று புனோ கோர்ட்டில் நாளை ( வெள்ளிக்கிழமை ) விசாரணைக்கு வருகிறது.

 

மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?

ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு மாற்றாகவும் எதிராகவும் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியமும்தான் ஒரே தீர்வாக முடியும்.

கம்யூனிச அகிலத்தின் 150-ஆவது ஆண்டு நிறைவு : மூலதனத்தின் சர்வதேசியத்திற்கு முறிவு மருந்து பாட்டாளி வர்க்க சர்வதேசியமே!

“உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்!” – மார்க்சும் எங்கெல்சும் 1848-ல் பிரகடனப்படுத்திய இந்த முழக்கத்தை அன்று ஒருசில குரல்கள்தான் எதிரொலித்தன. ஆனால் 1864 செப்டம்பர் 28-ம் நாளன்று பெருவாரியான மேற்கு ஐரோப்பிய நாடுகளது பாட்டாளிகள் கைகோர்த்து நின்று இந்த முழக்கத்தை எதிரொலித்தார்கள். ஆம்! அன்றுதான் முதல் கம்யூனிச அகிலம் என்றறியப்படும் அனைத்துலகத் தொழிலாளர் சங்கம் நிறுவப்பட்டது. இம்முதலாவது அகிலம் தொடங்கி இன்று 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஐரோப்பாவில் முதலாளிகளது கொடிய சுரண்டலும் அடக்குமுறையும் நிலவிய காலம் அது. தொழிலாளர்களின் போராட்டங்களை உள்ளூர் கருங்காலிகளைக் கொண்டு ஒடுக்கிய முதலாளிகள், பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வருவோரைக் குறைந்த கூலிக்கு அமர்த்திக் கொண்டு தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களை உடைக்கவும் செய்தனர். இதற்கெதிராக பிரான்சு மற்றும் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் தங்களது இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து வர்க்க அடிப்படையில் ஒற்றுமையைக் கட்டிக் கொண்டு போராடினர். இதன் தொடர்ச்சியாக, அனைத்துலகத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்க ஐரோப்பிய நாடுகளது தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும், முற்போக்கு – சோசலிச சிந்தனையாளர்களுக்கும் அழைப்பு விடுத்தனர். (மேலும்....)

அமெரிக்காவில் மற்றொரு கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதையொட்டி மீண்டும் ஆர்ப்பாட்டம்


அமெரிக்காவின் மிசுரி மாநிலத்தில் துப்பாக்கி முனையில் மிரட்டிய மற்றுமொரு கறுப்பின இளைஞனை பொலிஸார் சுட்டுக் கொன்ற சம்பவத்தை அடுத்து அங்கு மீண்டும் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. 18 வயது அன்டோனியோ மார்டின் என்ற இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பார்க்லி பெற்ரோல் நிரப்பு நிலையத்திற்கு முன் கூடிய சுமார் 300 பேர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்தில் பாதுகாப்பில் ஈடுபட்ட 50 பொலிஸ் அதிகாரிகள் மீது ஆர்ப்பாட்டக்காரர் கள் கற்கள் மற்றும் நெருப்பு பிளம்புகளை எறிந்து தாக்குதல் நடத்தினர். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது துப்பாக்கியை காட்டி மிரட்டிய மார்டின் கடந்த செவ்வாயன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் போது பொலிஸார் மார்டின் மீது மூன்று முறை துப்பாக் கிச்சூடு நடத்தியுள்ளார். ஒரு துப்பாக்கி குண்டு மார்டி னின் உடலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்துள் ளார். முன்னதாக மிசுரி மாநிலத்தில் நிராயுதபாணியாக இருந்த மைக்கல் பிரவுன் என்ற கறுப்பின இளைஞன் வெள்ளையின பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
 

டிசம்பர் 25, 2014


ஜனாதிபதி தேர்தலில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் நிலைப்பாடு.

முதலாவதாக எதிர்வரும் தேர்தலில் மக்கள் தமது வாக்களிக்கும் உரிமையை முழுமையாக பிரயோகிக்க வேண்டும் என்று எதிர்பார்கிறோம். 1995 இல் இந்தநாட்டில் சமஷ்டி முறையிலான தீர்வைப்பற்றி சிங்கள மக்கள் மத்தியில் பேச முடிந்தது. இன்று துரதிஷ்டவசமாக இனப்பிரச்சனை நாட்டின் பிரதான கட்சிகளின் நிகழ்ச்சி நிரல்களில் இல்லாமல்போய் விட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், சகல இன மத சமூகங்களும் சமத்துவமாக வாழ்வதற்கான ஏதுநிலைகள் உருவாக்குதல், இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான மாகாண சபைகளுக்கு 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது முழுமைப்படுத்தப்படுத்தலுடன், அரசியல் அமைப்பின் 18வது திருத்தம் நீக்கப்பட்டு ரத்துச்செய்யப்பட்ட 17வது திருத்தத்தை மீளக் கொண்டு வருதல் மூலம் சுதந்திரமான பொலிஸ்சேவை, நீதிச்சேவை மற்றும் தேர்தல் ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என நாம் உணர்கிறோம். ஊழலற்ற பாரபட்சமில்லாத மக்களுக்கு நெருக்கமான நிர்வாகம் நாட்டின் எல்லா மட்டங்களிலும் நிலவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். மேற்படி எதிர்பார்ப்புக்களுடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பதற்கு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.

- தி.ஸ்ரீதரன் பொதுச்செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்

இ.தொ.கா உப-தலைவர் மைத்திரிக்கு ஆதரவு


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப-தலைவர்களில் ஒருவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம். உதயகுமார், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார்.

ரூ.2,500 மில்லியன் நட்டஈடு கோரி திஸ்ஸவுக்கு மைத்திரி நோட்டீஸ்

சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் 2,500 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, நீதிமன்றத்தினூடாக கோரிக்கைப் பத்திரமொன்றை அனுப்பி வைத்துள்ளார். போலி கையெழுத்துடனான ஒப்பந்தமொன்றைத் தயாரித்து தனக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டார் என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கா மீது குற்றஞ்சாட்டியே அவர் இந்த நட்டஈட்டுத் தொகையைக் கோரியுள்ளார். இந்த போலி ஒப்பந்ததத்தை தயாரித்து வெளியிட்டதன் ஊடாக தனக்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகக் கூறியே, அவர் இந்த கோரிக்கைப் பத்திரத்தை அனுப்பி வைத்துள்ளார்.

2015 தேர்தல்

மகிந்தவின் தோல்வி – தமிழர்களின் வெற்றிப் பயணத்திற்கான புதிய பாதை.

இலங்கையில் 2015 ஆண்டு தை மாதம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஒரு கூட்டத்தையும் கலந்துரையாடலையும் தேடகம் (தமிழர் வகைதுறை வள நிலையம் ஒழுங்கு செய்திருந்தது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜயகரன் புதிய அரசியல் பண்பாடு ஒன்றை கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டு இந் நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது எனக் குறிப்பிட்டார். அந்தவகையில் பல்வேறு அரசியல் கருத்து நிலைப்பாடு உள்ளவர்களை இக் கூட்டத்தில் கருத்துரைக்க அழைத்தமை வரவேற்க்கத்தக்கது. ஆனால் இது மட்டும் புதிய பண்பாடு ஒன்றை நமக்குள் உருவாக்காது. மாறாக இதற்கு சமாந்தரமாக ஒவ்வொரு தனி மனிதருக்குள்ளும் மாற்றம் ஏற்படும் போதே அவ்வாறான ஒரு புதிய பண்பாடு உருவாவதற்கான சாத்தியம் உள்ளது என்பதே எனது புரிதல். ஆனால் ஒருவரும் இதை உணரும் காலம் இன்னும் வரவில்லை என்றே நினைக்கின்றேன். இந்த நிகழ்வை இரட்ணம் கணேஸ் அவர்கள் தலைமை தாங்கி வழிநாடாத்தினார். (மேலும்....)

உண்மையைச் சொன்னால் நீயும் துரோகி, நானும் துரோகி

தமிழ்ச் சமூகத்தின் நிலை இது பொய்களை ருசித்தவர்கள் அதை ஒருபோதுமே விடமாட்டார்கள்.

பொய்யுக்கு உண்மையை விட கவர்ச்சிகள் அதிகம். பொய் ஒரு மாயை என்பதால் அதற்கு கவர்ச்சியும் அதிகம். ஆனால் உண்மை அப்படியானதல்ல. உண்மை சுடும். உண்மை சகித்துக்கொள்ளக் கடினமானது. அதனால் தான் உண்மையை விட பலரும் பொய்யை விரும்புகிறார்கள். தமிழர்கள் பொய் விரும்பிகள். பொய்யின் ருசியே அவர்களுடைய மூளையில் இனிப்பாகிறது. எவ்வளவுதான் இடித்து இடித்து உண்மையைச் சொன்னாலும் அவர்களால் ஒருபோதுமே அதனை ஏற்றுக்கொள்ளவும், சகித்துக்கொள்ளவும் முடியாது. பொய்யை ருசித்து ருசித்தே பழகியவர்களுக்கு உண்மை என்றால் கசக்கிறது. அச்சத்தை ஏற்படுத்துகிறது. பொய்யினால் எவ்வளவுதான் அழிவுகளும், ஆய்க்கினைகளும், பின்னடைவுகளும் பெரும் பாதிப்புகளும் ஏற்பட்டாலும் பொய்யிலிருந்து விடுபடுவதற்கு பலருமே விரும்புவதில்லை. (மேலும்....)

அமெரிக்க கூட்டணி யுத்த விமானத்தை சிரிய ஐ.எஸ். போராளிகள் சுட்டு வீழ்த்தினர்


வடக்கு சிரியாவுக்கு மேலால் பறந்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் யுத்த விமானம் ஒன்றை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். இந்த யுத்த விமானம் அரபு நாடொன்றைச் சேர்ந்தது என்று சிரியா தொடர்பின் கண்காணிக்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த விமானம் ரக்கா நகருக்க அருகிலேயே வீழ்த்தப்பட்டுள்ளது. விமான ஓட்டிகளுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிரிய கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது. எனினும் ஜோர்தானின் விமானப்படை வீரர் ஒருவரை ஆயுததாரிகள் சூழ்ந்துகொண்டிருக்கு புகைப்படம் ஒன்றை ஐ.எஸ். ஆதரவாளர்கள் இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளனர். சிரியாவில் ஐ.எஸ். இலக்குகள் மீது கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் வான் தாக்குதல் நடத்தும் நான்கு அரபு நாடுகளில் ஜோர்தானும் ஒன்றாகும். இந்த சம்பவம் குறித்து ஜோர்தான் நிர்வாகம் எந்த கருத்தையும் வெளியிட்டிருக்கவில்லை. ரக்கா நகருக்கு அருகில் விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் யுத்த விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்திய ஐ.எஸ். உறுப்பினர்கள் அரபு விமான ஓட்டி ஒருவரையும் சிறைப்பிடித்திருக்கும் செய்தி தமக்கு கிடைத்திருப்பதாக சிரிய கண்காணிப்புக் குழு குறிப்பிட்டுள்ளது.

மகிந்தாவிற்கு ஆதரவு குறைகின்றது

ஆளும் தரப்பைச் சேர்ந்த உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி பிரதேச அமைப்பாளர் உள்ளிட்ட 20 பேர் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர். வடமத்திய மாகாணசபை ஆளுங்கட்சி உறுப்பினர் பி.பி.திஸாநாயக்க, அனுராதபுரம் பிரதேச சபையின் 12 உறுப்பினர்களுமாக 13 பேர் இன்று திம்பிரிகஸ்யாயவில் உள்ள பொது வேட்பாளர் அலுவலகத்திற்கு சென்று எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர்.
அத்துடன் அநுராதபுரம் மாவட்ட ஜயஅபிமானி அமைப்பின் தலைவர் ஆர்.பி.ஞானதிலக மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அநுராதபுரம் மாவட்ட செயலாளர் சந்திரசிறி திஸாநாயக்க ஆகியோர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை சீதாவக்கை பிரதேச சபை உபதலைவர் அனந்த ரூபசிங்க உள்ளிட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் 5 பேர் இன்று பொது எதிரணி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'

கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார். அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.

"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."

"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.

டிசம்பர் 24, 2014

தோழர் சுபத்திரன் - றொபேட் இன்று அவரது 57 வது பிறந்த தினம்

இன்றைய தமிழ் சூழ்நிலையில் தோழர் றொபேட்டின் வெற்றிடம் தீவிரமாக உணரப்படுகிறது.
சமூகத்தை வெறும் மந்தைக் கூட்டமாக மாற்றி அரசியல் பண்ணும் மேய்ப்பர்கள் சமூகத்தில் அதிகரித்து விட்டார்கள். சமூகத்திற்கு அறிவு தேவையில்லை. புலம்பெயர் தளத்திலும் நாட்டினுள்ளும் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளை சமூகம் தாங்கிபிடித்தால் சரி என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. என்ன கஷ்டங்கள் துன்பங்கள், துயரங்கள் இருந்தாலும் தமிழ் மக்கள் இவர்களை சகிக்க வேண்டும் இவர்களுடைய நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்ற சீரழிந்த, பாசிச அரசியல் இங்கு புத்துயிராக்கப் படுகிறது. இதனால் இலங்கையில் தமிழர்களின் வாழ்வு மேலும் மேலும் மோசமடையும் நிலை தோன்றியுள்ளது. (மேலும்....)

ஊடகங்களுக்கான அறிக்கை

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் "உலகை வெல்லும் வழி"எனும் மகுடத்துடனான தேர்தல் விஞ்ஞாபனம் எமது மக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியுள்ளதனால் அதனை வரவேற்கின்றோம்.

நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் "யாரைஆதரிக்கவேண்டும் " என்ற தலைப்பில் எமது மக்களுக்கு நாம் கூறிய கருத்துக்கள் நிதர்சனமானவை என்பதை காலம் மீண்டுமொருமுறை உணர்த்தியிருக்கின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் மீண்டும் ஜனாதிபதியானால் எமது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார் என்று நாம் கூறினோம். எமது மக்களின் பிரதான தேவைகளை பத்து அம்சக் கோரிக்கையாக நாம் ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்தோம். அதில் அரசியல் தீர்வு, இழந்த நிலங்களை மீளப்பெறுவது, அர்த்தபூர்வமான மீள் குடியேற்றம், இழப்புக்களுக்கான போதிய நட்டஈடு, இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு, அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட தேசத்தின் மகுடம் திட்டத்தை வடக்கில் நிறைவேற்றுதல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்தும் திட்டம், சகல மதங்களையும் அனுசரிப்பதற்கான பூரண சுதந்திரம், சமூக ஒற்றுமைக்கான பாதுகாப்பு போன்ற முக்கியமான எமது கோரிக்கைகளை ஜனாதிபதி தனது மகிந்தசிந்தனையின் மூன்றாவது கட்டமான "உலகை வெல்லும் வழி" எனும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கரிசனையோடு உள்வாங்கி இருப்பதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம். (மேலும்....)

பிரபல இயக்குநர் பாலசந்தர் காலமானார்!

பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கே.பாலசந்தர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 84. தமிழ் திரையுலகின் முடிசூடா மன்னனாக விளங்கியவர் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஒருவாரத்திற்கு முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று (23ஆம் தேதி) இரவு சுமார் 7.30 மணியளவில் காலமானார். அனைவராலும் ‘கே.பி’ என்று அன்போடு அழைக்கப்பட்ட கே.பாலசந்தர், மறைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் தமிழ் சினிமா உள்ளவரை பேசக்கூடிய அளவுக்கு பல சாதனைகளைச் சேர்த்துவைத்துவிட்டுச் சென்றுள்ளார்! (மேலும்....)

இரணைமடுக் குளமும் சிறிதரனின் சின்னப்பிள்ளைத்தனமும்
 

ஒரு சிறுபிள்ளை வீட்டில் உள்ள ஒரு அத்தியாவசியமான பொருளை கையில் எடுத்து விளையாடத் தொடங்கினால் அப் பொருளை அதனிடம் இருந்து வாங்குவதற்குப் பெரும்பாடு படவேண்டி வரும் என்பது குழந்தைகள் பெற்ற அனைத்து அப்பா, அம்மாவுக்கும் தெரிந்த விசயம். அந்தக் குழந்தையிடம் அப் பொருளை பாதுகாப்பாகவும் அக் குழந்தையை அழ வைக்காமலும் அப் பொருளை வாங்க வேண்டும் எனின் சில மூளையுள்ள பெற்றோர்கள் அக் குழந்தையிடம் பெறுமதி இல்லாத கவா்ச்சிகரமான பொருளைக் காட்டும் போது அக் குழந்தை பெறுமதிவாய்ந்த பொருளை விட்டுவிட்டு கவா்ச்சிகரமான பொருளை வாங்கிவிடும். இதுதான் புத்திசாலித்தனமான குழந்தை வளாப்பாகும். எந்தவித அடையாளமும் இன்றித் திரிந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் சோ்ந்து பாராளுமன்ற உறுப்பினராகிய சிவஞானம் சிறிதரனும் தற்போது சின்னப்பிள்ளைத் தனமான முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். (மேலும்....)

காஷ்மீரில் பி.டி.பி. தனிப்பெரும் கட்சி, ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி

ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் 28 இடங்களை வென்று மக்கள் ஜனநாயகக் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஜார்கண்டில் 37 இடங்களைக் கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்கிறது. 87 தொகுதிகளுக்கான காஷ்மீர் தேர்தலில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும் வென்றுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு 15 இடங்களிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு 2 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னணி (மதச்சார்பற்ற) 1 இடத்திலும் சுயேச்சை வேட்பாளர் 1 இடத்திலும் வென்றுள்ளனர். (மேலும்....)

பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் மறைவு

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 84. பிரபல இயக்குநர் கே.பாலசந்தருக்கு சிறுநீர் பாதையில் ஏற்பட்ட நோய்த்தொற்று காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூத்த மருத்துவ நிபுணர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளான ரஜினி, குஷ்பு உள்ளிட்ட பலரும் அவரை சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில், இன்று மாலை 7 மணியளில் சிகிச்சை பலனின்றி கே.பாலசந்தர் காலமானார். அவருக்கு தற்போது திரையுலகினர் சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியைத் தெரிவித்து வருகிறார்கள். மறைந்த இயக்குநர் கே.பாலசந்தருக்கு 3 வாரிசுகள். அவரது மகன் கைலாசம் சில மாதங்களுக்கு முன்பு தான் உடல்நலம் சரியின்றி காலமானார். பிரசன்னா என்ற மகனும், புஷ்பா கந்தசாமி என்னும் மகளும் உள்ளனர். (மேலும்....)

பின்னடைவையே கண்டுள்ளோம் - ஹக்கீம்

அரசியலில் எந்த விடயத்துக்கும் அவசரப்படக்கூடாது என்றும் நிதானமாக தூரநோக்கோடு சிந்தித்து, இயன்றவரை கலந்தாலோசித்து ஒருமித்த கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சரியான தீர்மானத்துக்கு வருவதற்கு முயற்சித்து வருவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 'யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் நிறைவாகியுள்ள இன்றைய சூழ்நிலையில், இனங்களுக்கிடையிலும் சமயங்களுக்கிடையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் எல்லோரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதில் பின்னடைவையே கண்டுள்ளோம்' என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

மனிதநேயம் !

இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் அல்ல, லேடி காகா அல்ல, கேட் பெர்ரி அல்ல. நியுயார்க் நகர காவல் துறை அதிகாரி ஒருவரின் படம். அந்தப் படத்தில் அவர் கால்களில் காலணி இல்லாத ஒரு ஏழை மனிதனுக்கு ஷூக்களை கொடுக்கிறார். அவரது இரக்கம் மிகுந்த உதவி இணைய பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது. அரிசோனா மாகாணத்திலிருந்து விடுமுறைக்காக நியுயார்க் நகருக்கு வந்திருந்த ஜெனிஃபர் ஃபோஸ்டர்தான் இந்தப் புகைப்படத்தை எடுத்தது. அவரும் அவரது கணவரும் நியுயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தின் அருகே வந்துக் கொண்டிருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டிருக்கிறார்கள். (மேலும்....)

புலிகள் பற்றிய வாக்கு மூலம்

1991-ல் விடுதலைப் புலிகள் வசம் ஒரு பெரு நிலப்பரப்பு வந்தது எப்படி? போரிட்டு வென்றதா என்ன! இந்திய இராணுவத்தின் பிடி விலகியபோது பிரேமதாஸவுடனான சங்காத்தத்தில் கிடைத்த பரிசு அது. இக்காலப் பகுதியில் ஒட்டுமொத்தத் தமிழர்களும் இவர்களுடைய கைகளில் போடப்பட்டனர். அழிக்க முடியாத கறை படிந்த வரலாற்றைப் புலிகள் உருவாக்கினர். இவர்கள் நமது பொது எதிரியைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. தமது சொந்த இனத்தை அழிப்பதில் மும்முரமாக இயங்கினர். அது சிங்கள அரசை மகிழ்விக்கவும் இருந்திருக்கலாம். இந்தியப் படையின் துணையுடன் பலவந்தமாகப் பிடித்துச்செல்லப்பட்டு பயிற்சி கொடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் புலிகளால் சுற்றிவளைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். பொதுமன்னிப்புத் தருவோம் என்ற வாக்குறுதியுடன் கொண்டு செல்லப்பட்ட இளைஞர்களும் கொல்லப்பட்டனர். (மேலும்....)

அஞ்சலி: கே.பாலசந்தர்
நாயகத் தொழுகைக்குச் சவுக்கடி தந்தவர்!

புராணங்கள், பக்திரசம் இவற்றிலிருந்து விடுபட்டு, தமிழ் சினிமா சமூக விஷயங்களை மெல்ல மெல்லச் சொல்லத்துவங்கியிருந்த காலத்தில், நாடக உலகிலிருந்தே தமிழ் சினிமாவில் நிரம்பிக்கொண்டிருந்த கலைஞர்கள் அதே பாணியில் உரக்க முழங்கிக்கொண்டும், நீட்டிப் பாடிக்கொண்டுமிருந்த சூழலில், நாயக வழிபாடுகளும், நாயகியரை நினந்த கனவுகளுமாக ரசிகர்களின் வளர்ச்சி நறுங்கிக் கிடந்த அந்தநாளின் முந்தைய தலைமுறைக்கு ஒரு ஸ்ரீதர் இருந்தாரென்றால் எங்களைப் போன்றோரின் வாலிபத்தில் கே.பி.தான் ஆளுமைசெலுத்திக்கொண்டிருந்தார். (மேலும்....)

ரஷ்யாவின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் அணிசேரா அந்தஸ்திலிருந்து விலகியது உக்ரைன்

உக்ரைனின் அணிசேரா நாடு அந்தஸ்தை அகற்றிக்கொள்வதற்கு ஆதரவாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் வாக்களிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நேட்டோ அங்கத்துவத்தை பெறும் முயற் சிகளில் உக்ரைன் ஈடுபடவுள்ளது. உக்ரைனின் இந்த நடவடிக்கைக்கு ரஷ்யா உடனடியாக கண்டனம் வெளியிட்டுள்ளது. இது நட்புக்கு மாறான செயற்பாடு என்று குறிப்பிட்டி ருக்கும் ரஷ்யா இது இரு தரப்பு உறவுகளிலும் சிக்கலையே ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளது. கிழக்கு உக்ரைன் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா ஆதரவளிப்பதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டும் நிலையில், உக்ரைன் பிரிவினை வாதிகளுக்கு உதவும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்தபோதும் அதனை யொட்டி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றி யம் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைக ளையும் விதித்துள்ளன. அணிசேரா அந்தஸ்திலிருந்து விலகிக்கொள் ளும் தீர்மானத்திற்கு ஆதரவாக உக்ரைன் பாராளுமன்றத்தில் 303 வாக்குகள் பதிவானதோடு எதிராக எட்டு வாக்குகளே கிடைத்தன. உக்ரைன், இராணுவ கூட்டமைப்பான நேட்டோ வில் இணைவதை தடுப்பதற்கு ரஷ்யாவின் அழுத் தம் காரணமாகவே உக்ரைன் கடந்த 2010இல் அணிசேரா நாடு என்ற தீர்மானத்தை பாராளு மன்றத்தில் நிறைவேற்றியது.
 

டிசம்பர் 23, 2014

Ranawaka assures unitary character for SL

Executive powers will not be given to the Provincial Chief Ministers and it will not be taken away from the President under a government headed by the common candidate, Maithripala Sirisena, General Secretary of the Jathika Hela Urumaya (JHU) Patali Champika Ranawaka said.
Former Cabinet Minister Ranawaka, who is one of the major campaigners for Sirisena, stressed that the common Opposition will not end the unitary status of the country and the executive powers held by the provincial governors under the purview of the Head of the State will not be taken away.
"Certain government politicians claim that the common Opposition would make the country unstable. I assure that it would not happen and we would protect the unitary status of the country," he said. Ranawaka also noted that a constitutional amendment, which affects the unitary status of the country, can be done without conducting a referendum. He further criticized the economic policies of the present regime and stressed that the benefits of the development had not been transferred to the ordinary people.

அமைச்சர் ரிஷாத், மைத்திரிக்கு ஆதரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க முடிவுசெய்துள்ளார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அண்மையில் சத்தியப்பிமான செய்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் கலந்துகொண்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அவர்கள் இருவரும் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி கொண்டிருக்கின்றனர். அதில் பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மனச்சாட்சியின்படி இன்றும் நாளையும் வாக்குப்பதியவும் - ஹக்கீம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவின் போது தமது மனச்சாட்சியின்படி வாக்குபதியுமாறு கட்சியின் அரச ஊழியர்களிடம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வேண்டுகோள் விடுத்துள்ளார் என அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடக ஆலோசகர் டாக்டர்.ஏ.ஆர்.ஏ. ஹபீஸ் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பிய ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததானது, சமூகம் மற்றும் கட்சி ஆகியவற்றின் பாதுகாப்பையும் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக உரிமைகளையும் முதன்மைப்படுத்தி, 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள தபால் மூல வாக்குப்பதிவின் போது வாக்குபதியுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

திலீபன் என்னும் கொலைகாரன்

முதியவரை மின்கம்பத்தில் கட்டிவைத்து பகிரங்கமாக கொலை செய்த திலீபன் எனப்படும் ராசையா பார்த்தீபன் உங்களைப் பொறுத்தவரையில் தியாக தீபம் மாவீரனடா! எங்களைப் பொறுத்தவரையில் கொலைகாரனடா சனீஸ்வரா! அவன் உண்ணாவிரதம் இருந்ததே இந்தியா மதாமாதம் கொடுப்பதாக கூறிய காசைக் கொடுக்காததால்தான். கொடுக்காததன் காரணம் புலிகள் democratic processகளை நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி நிராகரித்ததுதான். தம்பி முன்னே போ..... நான் பின்னே வருகின்றேன்...... என்று பிரபாகரனால் சாகடிகப்பட்டவன். இடதுசாரி அண்ணாமலையின் கொலைக்கு ஆணையிட்டவன். பொன் குமாரசாமியை அவரின் இலுப்பையடிச் சந்தி கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு ஆள் அனுப்பி கொலை மிரட்டல் செய்தவன். சிறீ சபாரத்தினம் கட்டைப்பிராயிலிருந்து தப்பி பல்கலைக்கழக தபால் பெட்டி ஒழுங்கையினால் ஓடிஈரோஸ் வைகுந்தம்(சண் இன் அண்ணன்இ பிற்காலத்தில் திருநெல்வேலி சந்தையில் வைத்து புலிகளால் சுட்டம் கொல்லப்பட்டவர்) வீட்டில் அடைக்கலம் கேட்க விரைந்த போது அவர்களை ஏகே 47 உடன் துரத்தி வந்தும் அவர்களைப் பிடிக்க முடியாமல் போன கொலை வெறி பிடித்தவன். ஏன் என் மாணவன் கூட.

இரணைமடுக்குளம் வான்கதவுகள் திறப்பு

கடும்மழை காரணமாக இரணைமடுக் குளத்தின் நீர்மட்டம் நாளுக்குநாள் உயர்ந்துவந்த நிலையில் திங்கட்கிழமை (22.12.2014) காலை 31அடி 4 அங்குலத்தை எட்டியது. இதையடுத்து அணைக்கட்டுகளின் பாதுகாப்புக்கருதி, குளத்தின் 11 வான்கதவுகளும் காலை 8.30 மணியளவில் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. இரணைமடுக்குளத்தில் இருந்து பேரிரைச்சலோடு நீர் வெளியேறிவருகிறது. அதிவேகமாக நீர் வெளியேறும்போது அனர்த்தங்கள் நிகழலாம் என்பதைக் கருத்தில் கொண்டே, வான்கதவுகள் பகுதியளவில் திறக்கப்பட்டுள்ளன. இதனால், குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு குளத்துக்கு வந்துசேரும் நீரின் அளவைவிடக் குறைவாகக் காணப்படுகிறது. நண்பகல் நிலவரப்படி குளத்தில் இருந்து வெளியேறும் நீரின் கனவளவு செக்கனுக்கு 2,265.29 கன அடிகளாக இருக்க, குளத்துக்கான நீர்வரத்து செக்கனுக்கு 5920.29 கன அடிகளாக உள்ளது. இதனால்,காலையில் நீர் திறந்துவிடப்பட்டபோது இருந்த குளத்தின் நீர்மட்டத்தை விட நீர்மட்டம் மேலும் உயர்ந்து, தற்போது 32 அடி உயரத்தைகத் தாண்டியுள்ளது. மேலும் கடும் மழை பொழிந்து நீர்வரத்து அதிகரிக்குமாயின் வான்கதவுகள் முழமையாகத் திறக்கப்படவேண்டிய நிலை உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. வான்கதவுகள் முழுமையாகத் திறக்கப்பட நேர்ந்தால், நீர்ப்போக்குப் பாதையில் குடியிருப்புகளை அமைத்துள்ளவர்கள் தற்காலிகமாக இடம் பெயரவேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். இத்தகையவர்கள் தங்குவதற்காக அருகில் உள்ள பாடசாலைகளில்; ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

3இல் மூழ்கி 2ஐ இழந்தது அரசாங்கம்

மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வரம் கிடத்த போதிலும் அவர் தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம், நாடாளுமன்றத்தில் இருந்த மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நேற்று திங்கட்கிழமையுடன் இழந்தது. நாடாளுமன்றத்தில் 163 உறுப்பினர்களை அரசாங்கம் கொண்டிருந்தது. எனினும், அந்த எண்ணிக்கை நேற்றுடன் 148ஆக குறைந்துள்ளது. இதேவேளை, ஆளும் கட்சியிலிருந்து விலகிய 15 உறுப்பினர்களும் எதிரணியில் இணைந்துகொண்டனர். இதனால், எதிரணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 77ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான பிரகடனத்தில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டதை அடுத்து, கட்சித் தாவல்களும் குத்துக்கரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளன. முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் எம்.பி.யான அமீர் அலி ஆகிய இருவரும் (இச்செய்தி அச்சுக்கு போகும் வரையும் எதிரணியுடன் நேற்று இணைந்து கொண்டனர். இதேவேளை, எதிரணியிலிருந்து இருவர் ஆளும் தரப்புக்கும் இதுவரை மாறியுள்ளனர். 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தில் தனக்கு கிடைத்த மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்தபோதும் அக்கனவு நேற்றுடன் கலைந்துவிட்டது.
 

மைத்திரியை ஆதரிக்கும் அ.இ.மு.காவின் முடிவு முட்டாள் தனமானது


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க எடுத்த முடிவு பிழையான முடிவாகுமென பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் அ. இ. ம. கா. இன் தேசிய அமைப்பாளருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக எடுத்த முடிவையடுத்து காத்தான்குடியில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இரண்டு கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்போது எமது கட்சி முன்வைத்த கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுடன் அதனை நிறைவேற்றித் தருவதாகவும் வாக்குறுதியளித்தது. அதில் பிரதானமாக ஜாதிக்க ஹெல உருமய கட்சியினால் தடுத்து நிறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்காக கட்டப்பட்ட 500 வீடுகளையும் மீள முஸ்லிம்களுக்கு வழங்குவதற்காக குழுவொன்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது. இந்த கட்டத்தில் அ. இ. ம. கா. தலைவர் மைத்திரிபாலவை ஆதரிக்க தீர்மானித்துள்ளமை மிகுந்த கவலை யளிக்கிறது. இந்த முடிவை நான் மறுப்பதுடன் நான் உட்பட கொழும்பு மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ். எச். அஸ்வர் உட்பட காத்தான்குடி நகர சபை மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்றோம்.

14 மாவட்டங்களில் வெள்ளம்: சுமார் 5 இலட்சம் பேர் பாதிப்பு
 

நாட்டின் பல பகுதிகளிலும் நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக 14 மாவட்டங்களில் ஒரு இலட்சத்து 24 ஆயிரத்து 369 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 52 ஆயிரத்து 960 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். 14 மாவட்டங்களிலும் 12,855 குடும்பங்களைச் சேர்ந்த 46,746 பேர் 205 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்குக் காரணமாக கிழக்கு மாகாணமே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரத்து 354 குடும்பங்களைச் சார்ந்த 4 இலட் சத்து 4 ஆயிரத்து 609 பேரும் பாதிக்கப் பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டமே மிகவும் மோசமாகப் பாதிக் கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. வடமத்திய மாகாணத்தின் பொலன் னறுவை மற்றும் அநுராதபுர மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பொலன்னறுவை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 969 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 361 பேரும் அநுராதபுரம் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 224 குடும் பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 884 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வடமாகாணத்தில் ஆயிரத்து 980 குடும்பங்களைச் சேர்ந்த ஆறு ஆயிரத்து 608 பேரும், மத்திய மாகாணத்தில் 227 குடும்பங்களைச் சேர்ந்த 826 பேரும், வட மேல் மாகாணத்தில் ஆயிரத்து 615 குடும்பங்களைச் சேர்ந்த 4ஆயிரத்து 672 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி மேல் சபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

டெல்லி மேல் சபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே கடந்த 7ந் திகதி 57 பேர்; மதமாற்றம் செய்யப்பட்ட விவகாரம் பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. மதமாற்ற சம்பவம் பாராளுமன்றத்தில் தொடர்ந்து புயலை கிளப்பி வருகிறது. இதுதொடர்பாக டெல்லி மேல்-சபையில் விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சபைக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடு பட்டு வருகின்றன. இதனால் அவை 5 நாட்களாக தொடர்ந்து முடங் கியது. நேற்றுக் காலை மேல்-சபை தொடங்கியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு மதமாற்றம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து குறித்து விவாதிக்க வேண்டும் என்று இடதுசாரிகள் தரப் பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. சபை தொடங்கியதும் இப்பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட் டத்தில் ஈடுபட்டன. கருப்பு பணம் விவகாரம் தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ் வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம் எம்.பி.க்கள் போரட்டம் நடத்தினர்.

மக்கள் ஏமாறும் யுகம் இதுவல்ல
எமது கொப்பியே எதிரணியின் விஞ்ஞாபனம் - மஹிந்த ராஜபக்ஷ
 

பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிய யுகத்துக்கு முடிவு கட்டியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். தமது வரவு செலவுத் திட்டத்தையே கொப்பியடித்தது எதிரணி. தமது கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளதாகத் குறிப்பிட்ட ஜனாதிபதி அவை அனைத்தையும் நாம் நிறைவேற்றியாயிற்று என்றும் தெரிவித்தார். முப்பது வருட பயங்கரவாத யுத்தத்தை எளிதில் மறந்து விட முடியாது. அரந்தலாவயில் பெளத்த பிக்குகளும் காத்தான்குடியில் இஸ்லாமிய பக்தர்களும் இந்து கோயில்களில் இந்து பக்தர்களும் கொல்லப்பட்ட யுகத்தை நீங்கள் அறிவீர்கள். அந்த இருண்ட யுகத்தை நாம் மாற்றியுள்ளோம். நாட்டைச் சீர்குலைக்க இடமளிக்க முடியாது. ஒன்றுபடுத்தியுள்ள நாட்டை பிளவு படுத்த இனியும் தயாரில்லை. இன வாதம், மத வாதத்தை ஏற்படுத்தி நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல இடமளிக்க முடியாது. தமிழ் முஸ்லிம் சிங்களம் என நாட்டை பிளவு படுத்தாமல் ஐக்கியமான நாட்டைப் பாதுகாப்போம்.

இலங்கை சிறையில் இருந்து 66 தமிழக மீனவர்கள் விடுதலை

தமிழக மீனவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந் ததையடுத்து, இலங்கை சிறையில் அடைக்கப் பட்டுள்ள தமிழக மீனவர்கள் 81 பேரில், 66 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். டிசம்பர் 9-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப் பேட்டையைச் சேர்ந்த 14 மீனவர் களை 2 விசைப்படகுகளுடனும், காரைக்கால் கோட்டுச்சேரி, காசாகுடிமேடு பகுதிகளைச் சேர்ந்த 29 மீனவர்களை 3 விசைப் படகுகளுடன் என மொத்தம் 43 மீனவர்களையும், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனையின் பேரில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 30 பேரை விடுவிக்க மீன்வளத்துறை தரப்பில் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பேரில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு செய்ததையடுத்து, இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் 30 பேரும் இலங்கை கடற்படையிடம் இன்று ஒப்படைக் கப்படுகின்றனர்.
 

பிரான்ஸ்

பல இடங்களில் பாதசாரிகள் மீது காரை செலுத்திய நபர்

பிரான்சில் தீஜூன் நகரில் நபர் ஒருவர் ''அல்லாஹு அக்பர்'' என்று கோசமிட்டவாறு பாதசாரிகள் மீது காரொன்றை செலுத்திச் சென்றுள்ளார். பலர் காயமடைந்துள்ளனர். பிரான்சில் தீஜூன் நகரில் நபர் ஒருவர் ''அல்லாஹு அக்பர்'' என்று கோசமிட்டவாறு பாதசாரிகள் மீது காரொன்றை செலுத்திச் சென்றுள்ளார். இந்த சம்பவத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர். இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நபர் தொடர்ந்து பல வீதிகளில் மக்கள் கூட்டம் மீது வாகனத்தை செலுத்திச் சென்றுள்ளார். இவர் ஏற்கனவே குற்றப் பின்னணியை கொண்டவர் என்றும் கூறப்படுகின்றது. மனநல கண்காணிப்பில் இந்த நபர் வைக்கப்பட்டிருந்ததாக பிரான்ஸ் செய்தி நிறுவனத்திற்கு காவல்துறையினர் கூறியுள்ளனர். கடந்த சனியன்று, துவோ புறநகர்ப் பகுதியில் இதே வாசகத்தை கோசமிட்டவாறு, போலீஸ் நிலையம் ஒன்றில் மூன்று போலீஸ் அதிகாரிகளைத் தாக்கிய நபர் ஒருவரை போலீஸார் சுட்டுக்கொன்றமை குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 22, 2014

தேசிய அரசாங்கமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை ஆராயும் - மைத்திரிபால

தேசிய அரசாங்கமே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை ஆராயும்
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கம் ஒன்றே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆராயும் என்று இலங்கையின் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பி.பி.சிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் போர் முடிவுக்கு வந்துவிட்டாலும், தமிழர்களின் பிரச்சினை இன்னமும் தீரவில்லை என்றும் அதேவேளை முஸ்லிம்களும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளனர் எனவும் கூறி, இந்த சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கான பொதுவேட்பாளரின் திட்டம் என்ன என்று பி.பி.சி. நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த மைத்திரிபால சிறிசேன - தமது முதல் 100 நாள்களுக்கான நடவடிக்கை திட்டத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து உள்ளடக்கப்படவில்லை என்றும், தேர்தலின் பின்னர் அமைக்கப்படவிருக்கும் தேசிய அரசாங்கமே அதனை ஆராயும் என்றும் குறிப்பிட்டார். (மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்


வடமாகாண சபையால் கேட்க்கபடும் மேலதிக நிதிகள் அரசாங்கத்தால் தரப்படுவதில்லை இது நமது விக்கி ஐயா.
வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பாரியளவு நிதி திரும்பி செல்ல இருக்கிறது இது நமது டக்ளஸ் ஐயா.
இதில் எது உண்மை?

(மோகன்)

ஆனந்தசங்கரி, மைத்திரிக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிசேனவை ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கம் மாறியபோதும் எந்த அரசாங்கமும் தமிழ் மக்களது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்காத நிலையில் இன்று பல்வேறு கொள்கைகளோடு செயற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து எல்லோரையும் பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சினைகளில் தீர்வுக்கு ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்துவரும் வேளையில், (மேலும்....)

தமிழ் மக்கள் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் - மாவை

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று முன்னணி தமிழ் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என்று முன்னணி தமிழ் கட்சியான, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது. இந்தத் தேர்தலில், தமிழ் மக்கள் தமது வாக்குகளை நிச்சயமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரான, நாடளுமன்ற உறுப்பினர், மாவை சேனாதிராஜா அவர்கள், இந்த விடயம் தொடர்பில் தமது கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு தாம் வலியுறுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். அதேவேளை, தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து தமது கட்சி கிறிஸ்துமஸை அடுத்து வரும் நாட்களில் அறிவிக்கும் என்றும் அவர் பிபிசிக்கு கூறியுள்ளார். மாவட்ட வாரியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து மட்ட உறுப்பினர்களையும், தமது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களையும் தாம் சந்தித்து, இந்த விடயங்கள் குறித்து அவர்களது கருத்துக்களை அறிந்து வந்ததாகக் கூறிய மாவை சேனாதிராஜா அவர்கள், உடல் சுகவீனமுற்று இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் தமது அமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் நாடு திரும்பியதும், யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தமது கட்சி அறிவிக்கும் என்றும் தெரிவித்தார்.
 

அமெரிக்காவில் கறுப்பினத்தவரின் கொலைக்கு பழி தீர்க்க இரு பொலிஸார் சுட்டுக் கொலை

அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் கொல்லப்பட்டதற்கு பழிதீர்க்கும் வகை யில் கறுப்பின இளைஞர் ஒருவர் இரு பொலிஸாரை சுட்டுக் கொன்று தானும் சுட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார். பிரூக்லியில் ரோந்து சென்று கொண்டிருந்த இரு பொலி ஸாரே சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸ் ஆணையாளர் வில்லியம் பிரட்டோன் குறிப்பிட்டுள்ளார். "சம்பவம் குறித்து நாம் விசாரணை நடத்திவருகிறோம். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என் பது உறுதியானது" என்று நியூயோர்க் நகர மேயர் பில் டி பிளாசியோ குறிப் பிட்டுள்ளார். இஸ்மாயில் பிரின்ஸ்லி என்ற 28 வயது இளைஞனே இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். இவர் இரு பொலிஸாரையும் கொன்று விட்டு தப்பிச் சென்று மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.(மேலும்....)

ஆளும் கட்சிக்குள் மைத்திரிக்கு பெருகும் மறைமுக ஆதரவு!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 19 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே இம்முறை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. 66 பேரை கொண்ட அமைச்சரவையில், 5 பேர் விலகி மைத்திரிபால சிறிசேனவுக்காக நேரடியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 61 அமைச்சரவை அமைச்சர்களில் 42 பேர் அமைதியாக இருந்து வருகின்றனர். அமைச்சர்களான மேர்வின் சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, டியூ. குணசேகர, சீ.பி. ரத்நாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பீலிக்ஸ் பெரேரா, பீ. தயாரத்ன, சுமேதா ஜி. ஜயசேன, திஸ்ஸ கரலியத்த, சாலிந்த திஸாநாயக்க அமைதியாக இருக்கும் அமைச்சர்களில் முன்னணியில் இருக்கும் அமைச்சர்களாவர். அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷவும் தினேஷ் குணவர்தனவும் இவர்களுடன் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர். இரண்டு திட்ட அமைச்சர்கள் மற்றும் 38 பிரதியமைச்சர்களில் 7 பேர் மாத்திரமே மகிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாக ஆதரவை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெருந் தெருக்கள் மற்றும் துறைமுக திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வெளிப்படையாக தெரியும் வகையில் மகிந்தவுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். மகிந்த அணியில் இருக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர். தமது தேர்தல் பிரசாரத்தில் அரசாங்கத்திற்கு வெளியிலும் அரசாங்கத்திற்குள்ளும் செயற்பாடுகள் இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். மகிந்த அணியில் இருக்கும் அமைச்சர்கள் தற்போது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன் அவை மகிந்த ராஜபக்ஷவுக்கு பாதகமானதாக இருப்பதை காணமுடிகிறது. ஏனையவர்கள் அமைதியாக இருப்பதால், மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

மதுரைப் பெண் கொடுத்த குத்து டைலாக்

நேற்றயதினம் நண்பர்களின் இரவு விருந்துக்கு சென்றிருந்தேன். சிலர் குழுவாக இருந்து பாடிகொண்டிருந்தார்கள், சிலர் குழுவாக இருந்து மது அருந்தி பேசிக்கொண்டிருந்தார்கள், நானும் மேலும் இருபெண்களும் கதைத்துக்கொண்டிருந்தோம் அப்பொழுது அங்கு ஒருவர் வந்து எம்மை இடைமறித்து என்னுடன் இருந்த மதுரை பெண்ணை பார்த்து உங்களிடம் ஒரு கேள்வி கேக்கவேண்டும் என்றுவிட்டு... “நானும் உங்களை அடிக்கடி பார்ட்டிகளில் பார்த்திருக்கிறேன் எப்படி உங்கள் குடும்பத்தாரை கூட்டிக் கொண்டு வந்துவிட்டு கடைசிவரைக்கும் பொறுமையாக இருந்து கூட்டிக்கொண்டு போகின்றீர்கள் எனக்கேட்டார்?” ...அதற்கு அந்த மதுரைப்பெண் கொடுத்த பன்ச் டைலாக் “ம்ம்....குரங்காட்டி குரங்காட்டம் ஆடாலாமா” என்று. கேள்வி கேட்டவர்க்கு ஏண்டா கேட்டோம் என்று மெதுவாக மாறிவிட்டார். (Thano P)

டிசம்பர் 20, 2014

கூட்டத்தில் நிர்வாணமாக்கப்பட்ட மனதை வருத்தும் காட்சிகள் மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில்

மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதுடன் பலரை நிர்வானமாக்கி துன்புறுத்தியதாக தெரிவிக்கும் மங்களராம விகாராதிபதி மக்களை மதிக்கத் தெரியாத மிருகம் மகிந்த என கொழும்பு ஊடகம்..........மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி சுமணரட்ண தேரர் தலைமையிலான குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக் குழுவினரை கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குள் செல்ல முடியாதவகையில் மைதானத்தின் பிரதான வாயிலை பாதுகாப்புப் படையினர் இழுத்து மூடினர். புழுக்குணாவ மற்றும் வெவுளியாமடு மக்களின் அடிப்படைப் பிரைச்சினைகள், வாக்குரிமை இல்லை என்ற குற்றச்சாட்டுகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கச் செல்கிறோம் என விஹாராதிபதி அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளார்

பண்டார நாயக்க வம்சத்திற்கும், ராஜபக்ச வம்சத்திற்கும் இடையிலான போட்டி – தமிழ் மக்கள் பார்வையாளர்களா?

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேலும் உடைவது என்பது மஹிந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டும் அச்சுறுத்தலானது அல்ல. அதை அதன் தர்க்கபூர்வ விளைவுகளை கருதிக் கூறின் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஒரு விதத்தில் ஆபத்தானது தான். ரணிலைப் பொறுத்த வரை அவருக்கு வெற்றி வேண்டும். அதற்காக அவர் ஒப்பீட்டளவில் நீண்ட காலம் காத்திருந்து விட்டார். கிடைக்கப்போகும் வெற்றியைப் பொறுத்தே அவர் கட்சிக்குள் தன்னுடைய தலைமை ஸ்தானத்தையும் பாதுகாக்க வேண்டியிருக்கும். தனது தலைமைக்கு சவாலாக கட்சிக்குள் எழுச்சி பெற்று வரும் இரண்டாம் நிலை தலைவர்களை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவருக்கு வெற்றி அவசியம். ஆனால் அந்த வெற்றியானது திருமதி. சந்திரிக்காவை அளவுக்கு மிஞ்சி பலப்படுத்தும் ஒன்றாக அமைவதை ரணில் விரும்ப மாட்டார். (மேலும்....)

தமிழ் கூட்டமைப்பின் தீர்மானம் இறுதி 48 மணித்தியாலத்திலாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தேர்தல் தினத்திற்கு முன்னதான இறுதி 48 மணித்தியாலத்தில் அறிவிக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. ஜனாதிபதி தேர்தல் பிரசாரப் பணிகள் பூர்த்தியாக உள்ள எதிர்வரும் ஜனவரி மாதம் 5ம் திகதி நள்ளிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது தீர்மானத்தை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் பிரசாரக் காலத்தில் தமது நிலைப்பாட்டை அறிவித்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது. முன்கூட்டியே அறிவித்தால் பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட பிரசாரங்களை மேற்கொள்ள வாய்ப்பு உண்டு என்ற காரணத்தினால் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் அண்மிக்கும் காலத்தில் அவர் நாடு திரும்ப உள்ளார். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது பற்றி விரைவில் கட்சி தீர்மானம் எடுக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அறிவித்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ், டைரக்டர் பாராதிராஜா

எதிர்ப்பரசியலால் எதையும் செய்ய முடியாது என்பதுடன் இணக்க அரசியல் மூலமே எதையும் சாதிக்க முடியுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவிடம் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இயக்குனர் பாரதிராஜா அவர்களை நட்பின் நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவிக்கையில் 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் அப்போதே நாம் சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொள்ள முடிந்திருக்கும். அத்துடன் அப்போது அதனை எதிர்த்தவர்கள் இப்போது மாகாண சபை முறைமையை ஏற்றுக் கொண்டதானது காலம் கடந்த ஞானமாகும். (மேலும்....)
 

ரிஷாத்தும் மறுபரிசீலனை?

ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன்இ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கிய ஆதரவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துவதற்கு கலந்தாலோசித்து வருவதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கபோவதாக முன்னர் அறிவித்தவர்களில் பலர் தங்களுடைய முடிவை மாற்றிக்கொண்டு எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
 

“எனது அரசை சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள். இல்லையென்றால் பதவியிலிருந்து விலகிவிடுவேன்.” - நரேந்திர மோடி

“எனது அரசை சுதந்திரமாகச் செயல்பட விடுங்கள். இல்லையென்றால் பதவியிலிருந்து விலகிவிடுவேன்.” -இப்படி பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறாராம். அவரது கட்சியின் தலைமைப் பீடமாகிய ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து மதவாத அமைப்புகளின் தலைவர்களும் அவரது கட்சியின் மேல்மட்டத் தலைவர்களும் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தைக் கூட்டிய பிரதமர் இப்படிப் பேசியிருப்பதாகக் கூறப்படுகிறது.
“மக்கள் நம்மை வளர்ச்சிக்காகவும் நல்ல நிர்வாகத்துக்காகவும்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த நிலைமையில் நீங்கள் சர்ச்சைகளைக் கிளப்புவது அரசின் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.” என்று அவர் பேசினாராம். (மேலும்....)

சித்தர்கள் வகுத்த வியக்க வைக்கும் தமிழ் எண்ணியலின் சிறப்பு!

தற்பொழுது நாம் பயன்படுத்தி வரும் எண்கள் இந்தோ-அரேபிக் (INDO-ARABIC) எண்கள். ஆனால் உலகின் மூத்த மொழியான தமிழ்மொழியில் சிறப்பு எழுத்துக்களால் எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்று முதல் பத்து வரை மட்டுமின்றி நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனி எழுத்துகள் பயன்பட்டிருந்தன. கோடி, பத்து கோடி, நூறு கோடி, ஆயிரம் கோடி, இலட்சம் கோடி, கோடி கோடிக்கும் தமிழ் எண்கள் உள்ளன என்பது தமிழின் எண்ணியல் வலிமையை காட்டுகிறது. தமிழர்கள் உலகம் வியக்கும் கணக்கியலை அக்காலத்திலேயே பயன்படுத்தி உள்ளனர் என்பது இதன் மூலம் தெளிவாகி உள்ளது. (மேலும்....)

அன்று சீமை கருவேல் மரம்,! இன்று கற்பூரவள்ளி வாழை மரம்..!!
( நம்மாழ்வார் அய்யாவிற்கு சமர்ப்பணம்)

நாற்பது ஆண்டுகாலமாக வெரும் சீமை கருவேல மரமாக இருந்த இந்த ஓடை நிலத்தில் சென்ற வருடம் இதே மாதத்தில் அந்த விஷமரத்தை இயந்திரம் கொண்டு அகற்றி , அந்த பூமிக்கு 150 லோடு வண்டல் மண் ஓட்டி 500 தேன்வாழை கன்றை நடவு செய்தேன். அது இன்று முதல் அறுவடையாக 70 தார் வெட்டினோம். மொத்த எடை 1298 கிலோ கிடைத்து.. ஒரு தாரின் எடை 18 கிலோவுக்கும் மேல் வந்துள்ளது. (மேலும்....)

தாய்மையின் சிறப்பு

இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
"என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன். (மேலும்....)

சாதியக் கனவுகள்

ராமாயணம் முதலில் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்ட எண்பதுகளில் நான் பள்ளி மாணவன். எங்கள் வீட்டில் அப்போது டிவி வாங்கியிருக்கவில்லை. அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பியூனாக வேலை பார்த்த ஒருவரைத் தவிர எங்கள் தெருவில் மற்ற யார் வீட்டிலும் டிவி இல்லை. அவர் வீட்டில் ராமாயணம் பார்க்க வேண்டும் என்றால் அவருக்கு வயல் வேலையில் சிறிய சிறிய உதவிகள் செய்ய வேண்டும். அதனால் சிறுவர்கள் அனைவரும் ராமாயணம் பார்க்க அக்ரஹாரத்துக்குத்தான் போவோம். பியூனின் மகனும் எங்களோடு வந்துவிடுவான்.
பெரும்பாலான பிராமணர்கள் அப்போதே வேறு ஊர்களுக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார்கள். மொத்தம் ஐந்து குடும்பங்கள்தான் இருந்தன. இப்போதும் அந்த குடும்பங்கள் அங்கு இருக்கிறார்கள். (மேலும்....)

ஆதரவளித்த தமிழ், முஸ்லிம் தரப்பிற்கு முதுகில் குத்திய எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனம்

எதிரணிக் கூட்டணியில் இரகசியமாகவும், வெளிப்படையாகவும், இணைந்து செயற்பட்டு பொது வேட்பாளர் ஒருவரைக் கொண்டு வருவதில் பெரும் பங்காற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் உட்பட அவர்களுடன் இணைந்து கொண்ட திகாம்பரம், இராதாகிருஸ்ணன், அஸாத் சாலி, நல்லையா குமரகுருபரன், முஜிபுர் ரஹ்மான் போன்ற தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு சந்திரிகா, ரணில், மைத்திரிபால கூட்டணி தருணம் பார்த்து முதுகில் குத்திவிட்டது என்று அரச தரப்பு அரசியல் வாதிகள் பலரும் தெரி வித்துள்ளனர். தமிழ், முஸ்லிம் மக்களில் ஒரு சிறு குழுவினர் தமது பிரச்சினைகள் சிலவற்றுக்கு மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தீர்வு தருவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அம்மக்களது எதிர்பார்ப்புக்கள் யாவுமே தவிடு பொடியாகியுள்ளதாகிவிட்டதாகவும், அவர்கள் தெரிவித்தனர். தமிழ், முஸ்லிம்கள் குறித்து ஒரு வசனம் கூட இல்லாதமையினால் அம்மக்களில் ஒரு சிறு குழுவிற்கு மைத்திரி மேலிருந்த துளியளவு நம்பிக்கையும், இல்லாமற் போய்விட்டது. (மேலும்....)

தமிழ் மக்கள் ஜனாதிபதியுடன்

தட்டிக் கழிக்க முடியாத நிலையில் தவிக்கும் தமிழ் கூட்டமைப்பும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும்

ஜனாதிபதித் தேர்தலில் தங்களது கட்சியின் நிலைப்பாடு அதாவது எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்று கூற முடியுமா?

எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையே ஆதரிக்கும். நாம் அவரது தலைமையிலான ஆட்சியில் கடந்த பத்து வருடங்களாக பங்காளியாக இருந்து வருகின்றோம். இக்காலப் பகுதியில் எமது மக்களுக்குத் தேவையான பலவற்றை அவர் மூலமாக இலகுவாகப் பெற்று அம்மக்களுக்குச் சேவையாற்ற முடிந்துள்ளது. அது மீண்டும் தொடர்வதையே நாம் விரும்புகின்றோம். எமது மக்களும் விரும்புகின்றனர். அதனால் அவருக்கே எமது ஆதரவு.(மேலும்....)

பாகிஸ்தான் தலிபானின் கொடூரமான தாக்குதலில் யுத்த களமான பாடசாலை

கடந்த செவ்வாய்க்கிழமை காலை பெஷாவர் இராணுவ பொதுப் பாடசாலைக்குள் முதல் இரண்டு துப்பாக்கிச் சூட்டு சத்தங்களும் கேட்டபோது எவரும் கணக்கில் எடுக்கவில்லை.அந்த துப்பாக்கிச் சத்தங்கள் அசாதாரணமாக இருந்தது. ஆனால் இராணுவம் பயிற்சியில் ஈடுபடுவதாக இருக்கலாம் யாரும் பயப்பட வேண்டாம் என்று ஆசிரியை எமக்கு சொன்னார் என்று பாகிஸ்தான் தலிபானின் கொடூரமான தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய மாணவன் ஒருவன் குறிப்பிடுகிறான். ஆனால் இராணுவ வீரர் ஒருவர் ஓடிவந்து அந்த இரு துப்பாக்கிச் சூடுகள் மூலம் பாடசாலை கேட்போர் கூடத்திற்கு மேலால் இருந்த பாதுகாவலர் தாக்கப்பட்டதாக கூறும் வரை நிலைமையின் தீவிரத்தை எவரும் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் அதற்குள் பாடசாலை கேட்போர் கூடத்தில் படுகொலைகள் அரங்கேறி இருந்தன.(மேலும்....)

டிசம்பர் 19, 2014

கூட்டமைப்பின் அடாவடித்தனத்திற்கு கண்டனப் பேரணி

யாழ் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் ஈபிடிபியினர் மீது மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராண்டிதனமான தாக்குதலை கண்டித்தும், நீதியான விசாரனை கோரியும் யாழ் நகரில் இன்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதுடன் பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் மகயரும் கையளிக்கப்பட்டது

வடக்கில் சூடுபிடிக்கும் மகிந்த,மைத்திரி தேர்தல் பிரச்சாரம்!

தேர்தல் பரப்புரைக்காக ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச வடக்கிற்கு சென்றுள்ளதைத் தொடர்ந்து பொது எதிரணியினரும் எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கிற்கு விஐயம் மேற்கொள்ள உள்ளனர். எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலுக்கான பரப்புரைகள் தெற்கில் சூடு பிடித்திருந்த நிலையில் வடக்கில் எந்தவித முன்னேற்பாடுகளும் அற்ற நிலையில் அமைதியாக இருந்து வந்தது. இந்நிலையில் ஐனதிபதி மகிந்த ராஐபக்ச தனது தேர்தல் பரப்புரைகளை வடக்கில் இறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முல்லைத்தீவில் நேற்றைய தினம் ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் பரப்புரைகளை மேற்கொள்ளவுள்ளார். இதேபோன்று பொது எதிரணியிண் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட எதிரணியினர் எதிர்வரும் 30ம் திகதி பரப்புரைகளை வடக்கில் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஐனாதிபதித் தேர்தல் பரப்புரை தெற்கில் சூடு பிடித்திருக்கின்ற அதேவேளையில் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் வடக்கிலும் இத் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்கவுள்ளது.

தமிழ்ச்செல்வன் படுகொலை நடந்தது எப்படி? விக்கிலீக்ஸ் அம்பலம்!

விடுதலைப் புலிகளின் அரசியல் பேச்சாளர் சு.ப.தமிழ்ச்செல் வனும், மற்றத் தலைவர்களும் துல்லியமான இலங்கை ராணுவக் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதற்கு, பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என்ற சிஐஏ அறிக்கையின் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளின் போது, சக்திவாய்ந்த இலக்குகளை தகர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தொடர்பான, அமெரிக்க புலனாய்வு அமைப்பின் ரகசிய அறிக் கை ஒன்றை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்ட 21 பக்கங்களைக் கொண் ட இந்த அறிக்கை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிஐஏ யின், நாடுகடந்த விவகாரங்களுக்கான பிரிவினால் ‘கிளர்ச்சி முறியடிப்பில் மிகச்சிறந்த நடைமுறைகள்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கிறது. (மேலும்....)     

நவீன ஆராய்ச்சிகள் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்

நவீன ஆராய்ச்சிகள் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தப்படும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆராய்ச்சி பட்டறைகள் மூலம் பனைசார்ந்த தொழிற்துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் எதிர்கால நோக்கை கொண்டதாகவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்திட்டங்களுக்கு வலுவூட்டும் வகையிலும் மேம்படுத்தும் வகையிலும் ஆராய்ச்சியாளர்களும் துறைசார்ந்த பேராசிரியர்களும் தமது முழுமையான பங்களிப்பை வழங்குவது காலத்தின் கட்டாய தேவையுமாகும். பனைவளம் அதிகமாகவுள்ள வடக்கு கிழக்கு பகுதிகளில் மட்டுமன்றி நாடளாவியரீதியில் பனைசார்ந்த தொழிற்துறையை நவீனமயப்படுத்தி அதனூடாக அதுசார்ந்து வாழும் துறைசார்ந்தவர்களது வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்கு ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட கல்விப்புலம் சார்ந்தோர் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சிப் பயிற்சி பட்டறையில் பங்கெடுக்கும் முகமாக ஆராய்ச்சி பேராசிரியர் நிமல் சாவித்திரி குமார், பேராசிரியர்களான லலித் ஜயசிங்க, சாந்தினி, பாலகுமார், ஆகியோருடன் பனை அபிவிருத்தி சபையின் பொதுமுகாமையாளர் லோகநாதன், பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சிறிவிஜயேந்திரன் உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

அனந்தி, சிவாஜிலிங்கம் நடுநிலை: பட்ஜெட் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான் வாக்கெடுப்பின் போது தாங்கள் நடுநிலை வகிக்கப்போவதாக ஆளுங்கட்சி உறுப்பினர்களாக அனந்தி சசிதரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் தெரிவித்ததையடுத்து, மற்றைய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் வரவு-செலவுத்திட்டம் நிறைவேறியது. வடமாகாண சபை வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறிக்கு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தாங்கள் நடுநிலை வகிப்பதாக இருவரும் தெரிவித்தனர். வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் கடந்த புதன்கிழமை (17) தொடக்கம் வெள்ளிக்கிழமை (19)இடம்பெற்றது. வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் அலுவலகம், முதலமைச்சர், 4 அமைச்சுக்கள் மற்றும் பேரவை செயலகம் ஆகியவற்றுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆளுநருக்கு தனிப்பட்ட ரீதியில் ஒதுக்கப்பட்ட 60 மில்லியன் ரூபாய் நிதியும் முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா பிரதேச சபைக்கு வடமாகாண சபையால் ஒதுக்கப்பட்ட நிதியும் நிறுத்தி வைப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மிகுதி ஒதுக்கப்பட்ட நிதியை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டனர்.

மைத்திரியின் ஆதரவாளர்களால் இடதுசாரி முன்னணியின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இடது சாரி முன்னணியின் பொது வேட்பாளர் துமிந்த நாகமுவவின் பிரச்சார அணியினர் மீது இன்று கொலன்னாவ வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் கொலை வெறித்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இடதுசாரி முன்னணியின் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த இடதுசாரி முன்னணியின் பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் மீதே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களில் 7 பேர் இருந்தாகவும் வாகனத்தில் "மைத்திரியின் ஆட்சி" (மைத்திரி பாலனயக்) என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் இடதுசாரி முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமத்திக்கப்படுள்ளதுடன் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

மகிந்தவால் ஓரங்கட்டப்படும் பசில்! பொறுப்புகள் அனைத்தும் கோட்டாவிடம் ஒப்படைப்பு?

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பசில் ராஜபக்ச செயற்படுத்தி வந்த சகல பொறுப்புகளும் கோத்தபாய ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி தேர்தல் சம்பந்தமான சகல விடயங்களையும் பொறுப்புடன் செயல்படுத்தி வந்த பசில் ராஜபக்ச, கட்சி மாறிய திஸ்ஸ அத்தநாயக்காவிற்கு சுகாதார அமைச்சை கொடுப்பதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தார். அவரது எதிர்ப்பையும் பொருட்படுத்தாது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, திஸ்ஸ அத்தநாயக்காவை சுகாதார அமைச்சராக்கியதால், தற்பொழுது சூடுபிடித்துள்ள ஜனாதிபதி தேர்தல் பொறுப்பை பசில் ராஜபக்சவிடமிருந்து எடுத்து கோத்தாபாய ராஜபக்சவிற்கு அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல பிரசார வேலைகளுக்கும் கோத்தாபாயவே பொறுப்பாக இருக்கும் முகமாகவே தொலைகாட்சி நேரடி கலந்துரையாடல்களில் கோத்தபாய ராஜபக்சவே கலந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பசில் ராஜபக்சவை ஜனாதிபதி ஓரங்கட்டி வருவதாக பேசப்படுகின்றது. திஸ்ஸ அத்தநாயக்கவின் சுகாதார அமைச்சர் நியமனத்தால் ஸ்ரீ.ல.சு.கட்சிக்கு வாக்களிப்பில் பின்னடைவு ஏற்படும் என்று பசில் ராஜபக்ச ஜனாதிபதிக்கு தெரிவித்தும் அதை அவர் கணக்கெடுகாததும் ஓர் காரணம் என்றும் கூறப்படுகின்றது.

100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்துவிட மைத்திரியால் முடியாது
 

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியதைப் போன்று 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கமுடியாது. இது தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு பொது எதிரணியினரை அழைப்பதாக தேசிய தொழில் வல்லுனர்களின் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதாயின் இலங்கையில் தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அவ்வாறு அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதாயின் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம். இவை அனைத்தையும் 100 நாட்களுக்குள் செய்ய முடியாது. போலியான உத்தரவாதங்களை வழங்கி மக்களை ஏமாற்றுவதற்கு பொது எதிரணியினர் முயற்சிப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். ஆட்சிக்கு வந்ததும் 24 மணித்தியாலங் களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். இது சாத்தியமற்றதொன்று. அரசியலமைப்பில் இதற்கு இடமில்லை. அது மட்டுமன்றி மாற்றப்படவிருக்கும் அரசியலமைப்பின் திருத்தம் தொடர்பில் பொதுஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவதும் அவசியம். இவ்வாறான நிலையில் 100 நாட்கள் என்ற குறுகிய காலப்பகுதிக்குள் அவற்றை நிறைவேற்றுவது சாத்தியமற்றவிடயமாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டுமொரு வரலாற்றுத் தவறை இழைக்கக் கூடாது! - சங்கரத்ன தேரர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்கு உண்மையில் தமிழ் மக்கள் மீது சிறிதளவாவது அக்கறை இருந்தால் கூட்டு சக்திக் கும்பலுக்கு ஒருபோதும் ஆதரவளி க்கக்கூடாது. அப்படி ஆதரவு நல்கினால் அது மற்றுமொரு வரலாற்றுத்தவறாகும். நாட்டில் 18 வீதமுள்ள தமிழர்கள் தமது உரிமைகளுடன் வளமாக வாழ வேண்டும். அதேபோன்றுதான் முஸ்லிம்களுக்கும், அனைவருக்கும் இந்த நாடு சொந்தம் வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.கடந்த 30 வருடகால யுத்தத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஒரு தலைவனை இந்த நாடு அவ்வளவு எளிதாக மறந்து விடாது. சுதந்திரக் கட்சி வரலாற்றில் மைத்திரி கட்சிக்கு துரோகமிழைத்து காட்டிக்கொடுத்து மாறினார் என்பதற்காக பொலன்னறுவை மக்கள் மாறுவார்க ளென்று கனவிலும் எதிர்பார்க்க முடியாது. அவர் மாறினால் மக்களும் மாறுவார்களென எதிர்பார்க்க முடியாது. வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் ஜனாதிபதி ஆற்றிய பணிகள் ஏராளம். இத்துணை அபிவிருத்தியை 11 வருட காலம் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா அம்மையார் செய்தாரா? அல்லது அவரால் செய்ய முடியுமா? தமிழர்களின் பிரச்சினையைத் தீர்த்திருக்கலாமே? அல்லது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாமே! செய்தாரா? இவரை சிறுபான்மை மக்கள் நம்புவார்களா? இல்லை. ரணில் விக்கிரமசிங்க தோல்விக்கென்றே அரசியலில் இறக்கப்பட்டவர். அவர் தமிழர் பிரச்சினையை இழுத்தடித்து வந்தவர். அவர் தலைமைத்துவத்திற்கு லாயக்கற்றவரென கட்சிக்குள்ளேயே விமர்சிக்கப்பட்டவர். அவராலேயே ஐ.தே.கட்சி இழி நிலைக்கு வந்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அப்படிப்பட்டவர் மைத்திரியை ஜனாதிபதியாக்குவதா? தான் போக வழியில்லையாம் தவில் போல மாராப்பு.

கியூப - அமெரிக்க உறவு

1959: பிடெல் காஸ்ட்ரோ மற்றும் அவரது கொரில்லா படை புல்ஜென்சியொ படிஸ்டாவின் அமெரிக்க ஆதரவு கியூப அரசை வீழ்த்தினார்.
1960-1961: எந்த நஷ்டயீடும் வழங்கப்படாமல் கி யூபாவில் இருக்கும் அமெரிக்க வர்த்தகங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டது. பதிலடியாக கியூபாவுடனான இராஜதந்திர உறவை இரத்துச் செய்த அமெரிக்கா பொருளாதார தடைகளையும் விதித்தது.
1960-1961: சி.ஐ.ஏ. ஆதரவுடனான வெளிநாட்டில் இருக்கும் கியூபர்களைக் கொண்டு ஆட்சியை கவிழ்க்க மேற்கொண்ட படையெடுப்பு தோல்வியில் முடிந்தது.
1962: சோவியட் ஒன்றியம் கியூபாவில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நிறுவியது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
2001: உளவு வேலையில் ஈடுபட்டதாக ஐந்து கியூபர்கள் மியாமி சிறையில் அடைக்கப்பட்டனர்.
2008: ராவுல் காஸ்ட்ரோ கியூப ஜனாதிபதியாக பதவியேற்றார்.
2009: உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்க பிர ஜையான அலன் கிரோஸ் கியூபாவில் கைதுசெய்யப்பட்டார்.
2013 டிசம்பர்: நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியை நிகழ்வில் பராக் ஒபாமா மற்றும் ராவுல் காஸ்ட்ரோ கைலாகு கொடுத்துக்கொண்டனர். 1959 இலிருந்து பொது நிகழ்வில் இவ்வாறு நிகழ்ந்தது முதல் சந்தர்ப்பமாக பதிவானது.
2014 டிசம்பர் 17: அலன் கிரோஸை கியூபா விடுதலை செய்தது.

சி.ஐ.ஏ. புலன் விசாரணையும் வதை முகாம்களும்
 

கைதியின் கால் பகு தியை தலையை விடவும் மேலே உயர்த்தி மல்லாக்கப் படுக்கவைக்க வேண்டும். வேறு முறையில் சொல்வ தென்றால் சற்று சரிவாக தலைகீழாக படுக்கவைத்து கட்டிவைக்க வேண்டும். இப்போது கைதியின் முகத்தை துணி யால் மூட வேண்டும் அல்லது வாய்க் குள் நெருக்க வேண்டும். சில வேளை களில் பிளாஸ்டிக் சுருள்களும் பயன்படு த்தப்படும். இப்போது கைதியின் முகத்தில் மற்றும் மூக்கு, வாய் துவாரங்களில் தண்ணீரை ஊற்ற வேண்டும். இவ்வாறு நீர் ஊற்றப்ப ட்ட ஒருசில விநாடிகளிலேயே கைதி திணற ஆரம்பிப்பார். அந்த நேரத்தில் தண் ணீர் நுரையீரலில் நுழைய ஆரம்பிக்கும்.
இந்த சூழலில் கைதி தான் மூழ்கடிக்கப் படுவதாக உணர்வார். அவர் அதிர்ச்சிக் கும் தடுமாற்றத்திற்கும் ஆளாவார். அவர் துடிதுடிப்பார். இதனால் கைதியின் மூளையில் சேதம் ஏற்படவும், எலும்பு முறிவடையவும், உளவி யல் பாதிப்புக்கு உள்ளாகவும் செய்யும்.
இந்த கொ^ரமான சித்திரவதை முறைக்கு அகராதிகளை புரட்டி தமிழ் பெயர் தேடியபோதும் கிடை க்கவில்லை. ஆனால் இதற்கு ஆங் கிலத்தில் என்றால் பெயரிருக்கி றது. வோட்டர்போடிங் (Waterboar ding) என்பதுதான் அந்த பெயர். இந்த வோட்டர்போடிங் முறையை பிரபலமாக்கிய பெருமை அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவுக்குத் தான் சேரும்.
புலன் விசாரணைகளில் சி.ஐ.ஏ. வோட்டர்போடிங் உட்பட பல சித்திரவ தைகளை செய்வதாக கடந்த ஒரு தசாப்தத் திற்கு மேலாக அந்த சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்தவர்கள் மற்றும் உரிமைக் குழுக்கள் வாய் கிழிய கத்தி வருகின்றனர். ஆனால் அது வெறும் குற்றச்சாட்டாகவே இரு ந்து வந்தது. (மேலும்....)

செஞ்சோலை சிறுவர் இல்ல பணிப்பாளருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு

கிளிநொச்சியிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பணிப்பாளர் மற்றும் சிறுவர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடினார். கிளிநொச்சிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் பணிப்பாளர் கே.பி என அழைக்கப்படும் கே.பத்மநாதன் செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு முன்பாக இன்றையதினம் (18) ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருந்தபோது அமைச்சர் அவர்கள் அவ்விடத்திற்கு வருகைதந்த நிலையில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் முன்னேற்றம் தொடர்பில் பத்மநாதனுடன் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடி கேட்டறிந்து கொண்டார். அத்துடன் கே.பத்மநாதனின் சேவைக்கு தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்"
ஆசிரியராக பணிபுரியும் 'தேவயானி

வருமானம் நின்றதால் விபச்சாரம் செய்தேன் என்று ஒப்புவிக்கும் நடிகைகளுக்கும், வாய்ப்பு குறைந்ததும் துண்டைக்கானோம் துணியைக்காணோம் என குத்தாட்டம் போடும் நடிகைகளுக்கு மத்தியில்,தமிழே தெரியாமல் மும்பையில் இருந்து வந்து.. தமிழ் நாட்டு மருமகள் ஆகி.. இப்பொழுது ஆசிரியர் படிப்பை முடிந்து சென்னையின் பிரபல பள்ளி "சர்ச் பார்க் கான்வென்டில்" (ஜெயலலிதா படித்த பள்ளி) ஆசிரியராக பணிபுரியும் 'தேவயானி ஒரு ஆச்சரியம் தான்'

வாழ்த்துக்கள் ஆசிரியை தேவயானி

டிசம்பர் 18, 2014

வட மாகாண சபையிற்கான நிதியீட்டுப் பரம்பல்

இந்த வருடம் வட மாகாண சபைக்கு இருபதினாயிரத்தி ஐந்நூற்றி முப்பத்தி ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட மொத்த நிதி. இதில், பதின் நான்காயிரத்து ஐந்நூற்றி எண்பது மில்லியன் ரூபா வட மாகாண சபையின் மீள்வரும் செலவீன நிதியாக ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் வட மாகாண சபையின் நிர்வாக அதிகாரிகள் உரியபடி தமது மாதாந்;தச் சம்பளங்களைப் பெற்று வருகின்றனர். இதைவிடவும், வட மாகாண சபையின் கீழ் வாழும் எமது மக்களின் அபிவிருத்தி, மற்றும் எமது தேசத்தைத் தூக்கிநிறுத்தும் பணிகளுக்காக ஐயாயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்தி ஒன்பது மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இதில் 42 சதவீதம் மட்டுமே இதுவரை வட மாகாண சபையினால் செலவழிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், அவர்களின் தலைமையிலான வட மாகாண சபையின் ஆட்சியாளர்களினதும் பொறுப்பற்ற செயலால் வட மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் பெருந்தொகையான நிதி அரசாங்கத்தின் திறைசேரிக்குத் திரும்பிச் செல்கிறது.
 

புலிகள் தமிழ் நாடு , கேரளா , கர்நாடக இணைத்து பெரிய தமிழீழம் ஒன்றை உருவாக்க திட்டம் !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீடிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ்நாட்டின் கேரள பகுதி, கர்நாடக பகுதி, ஆந்திர பகுதி மற்றும் இலங்கையின் வடகிழக்கு பகுதிகளை இணைத்து பெரிய தமிழ்நாடு ஒன்றை அமைக்க முயற்சிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பு, இந்திய தேசத்துக்கு எதிரான அமைப்புக்களுடன் தொடர்புகளை கொண்டிருக்கிறதா ? என்பது தொடர்பில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. ஜம்மு காஸ்மீர் விடுதலை முன்னணியின் பிரித்தானிய பிரிவு, சீக்கியர் நடவடிக்கை வலைப்பின்னல் போன்றவற்றுடன் இந்த தொடர்புகள் பேணப்படுகிறதா ? என்று இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துவதாக இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் புதுடில்லியில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் தீர்ப்பாயத்தில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் பா.சிதம்பரம் மற்றும் வி.நாராயணசாமி ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சிகள் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்த நிலையில் மக்கள் தீர்ப்பாயத்தில் கருத்துரைத்துள்ள தமிழக அரசாங்கம், 2009ஆம் ஆண்டு போரில் தோல்வி கண்ட பின்னர், விடுதலைப்புலிகள் இன்னமும் தமிழீழ கொள்கையை கைவிடவில்லை. எனவே அவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கினால், அது ஏனைய தீவிரவாத அமைப்புக்களுக்கும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி விடும் என்று குறிப்பிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக ஜோ்மனியில் தமிழா்கள் பத்துப் பேருக்கு சிறை
 

விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பத்துப் பேருக்கு ஜேர்மனியின் பெர்லின் குற்றவியல் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை பெர்லின் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, இரு பெண்கள் உள்ளிட்ட பத்து இலங்கைத் தமிழர்களுக்கு, ஆறு தொடக்கம் 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணபதிப்பிள்ளை கோணேஸ்வரன் என்பவருக்கு 15 மாதங்களும், சுமதி உதயகுமார் என்பவருக்கு, 7 மாதங்களும், கோபாலபிள்ளை ஜெயசங்கர் என்பவருக்கு 8 மாதங்களும், பாலச்சந்திரன் பாலசுப்பிரமணியன் என்பவருக்கு 22 மாதங்களும், குமணன் தர்மலிங்கம் என்பவருக்கு 6 மாதங்களும், வைத்திலிங்கம் ஜோதிலிங்கம் என்பவருக்கு 1 ஆண்டும், யோகராஜா சிறீஸ்கந்தராஜா என்பவருக்கு 1 ஆண்டும், செந்தில்குமரன் கந்தசாமி என்பவருக்கு 1 ஆண்டும், துஸ்யந்தி அருணாசலம் என்பவருக்கு 9 மாதங்களும், தயாபரன் ஆறுமுகம் என்பவருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டுள்ள இவர்கள், 32 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர். இவர்களில் ஐவர் ஜேர்மனியில் குடியுரிமை பெற்றவர்கள். இவர்கள் 2007ம் ஆண்டு தொடக்கம், 2009ம் ஆண்டு வரை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக, ஒரு இலட்சம் யூரோவைத் திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இந்த தண்டனை இரண்டு ஆண்டுகள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாகவே இருக்கும் என்றும், இதற்கு எதிராக, ஒரு வார காலத்துக்குள் சமஸ்டி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும் என்றும் பெர்லின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு குற்றவியல் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுவதைத் தடுக்கின்ற சட்டத்தின் கீழேயே இவர்களுக்கான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

'மேற்கத்தேய நாடுகளுக்கு இங்கு பிரச்சினைகள் இருக்கவேண்டும்'

மேற்கத்தேய நாடுகளுக்கு இங்கு பிரச்சினைகள் இருக்கவேண்டும். யுத்தம் இடம்பெறவேண்டும். அதன் மூலம் தாம் பிழைப்பு நடத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். 'ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னரே சுதந்திரமாக வாழத்தொடங்கினோம். இதை ஏன் நாம் குழப்பவேண்டும்? பிரச்சினைகளுக்கு பின்னால் சர்வதேச சூழ்ச்சிகள் இருக்கின்றன. இலங்கை அபிவிருத்தி கண்டு வளர்ந்துவருவதை ஏனைய நாடுகள் விரும்பாது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலிருக்கும்வரை ஓர் அந்நியரும் எமது நாட்டினுள் நுழையமுடியாது. இதனாலேயே, நாம் நிம்மதியாக வாழ்ந்துவருகின்றோம். அனைத்து இன மக்களும் அந்நியோன்யமாக வாழ்ந்துவருகின்றனர். தங்களுடைய அபிவிருத்திப் பணிகளை நியாயமான முறையில் கதைத்துச் செய்யமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, எவ்வாறு தமிழ் மக்களை வாழவைக்கப் போகின்றது. வடக்கு, கிழக்கில் பல அபிவிருத்தித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வவுனியாவிலிருந்து புகையிரப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஏ -9 வீதி அமைக்கப்பட்டுள்ளது. வீடுகள் நிர்மாணித்து மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் செய்துகொடுத்த பின்னரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சண்டையிட்டார்கள். இது தமிழினத்துக்கே அநாகரிகமான செயல்.

50 ஆண்டுகளுக்கு பின் கியூப - அமெரிக்க இராஜதந்திர உறவை ஏற்படுத்த பிரகடனம்

அமெரிக்க கொள்கை காலாவதியானது என்கிறார் ஒபாமா

அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மீண்டும் ஏற்படுத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை வரவேற்றிருக்கும் கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ தனது நாட்டின் மீதான அமெரிக்காவின் 50 ஆண்டு பொருளாதார தடையை நீக்க வலியுறுத்தியுள்ளார். இரு தரப்புக்கும் இடையில் கடந்த 18 மாதங்களாக இடம்பெற்று வந்த இரகசிய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் காஸ்ட்ரோவுக்கு இடையில் கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் கைதிகள் பரிமாற்றம், இரு நாடுகளுக்கும் இடையில் பரஸ்பரம் தூதரகங்களை திறப்பது மற்றும் ஒருசில பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்து உடன்பாடு ஏற்பட்டுள்ளது. (மேலும்....)
 

டிசம்பர் 17, 2014

என் மனவலையிலிருந்து………

மக்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த இனம் அழிந்தேதான் போகும்…..?

(சாகரன்)

(கை கலப்பை காணொளியில் காண....)

போர் முடிந்து விட்டது. ஆயுதங்கள் களையப்பட்டுவிட்டன. தேர்தல் நடத்தபட்டது. தேர்தலில் மக்கள் தமது தீர்பையும் வழங்கிவிட்டனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும் பெற்றாகிவிட்டது மத்தியிலும், மகாணத்திலும். அதிகாரங்கள் மறுக்கப்படுகின்றன. இராணுவம் இன்னமும் இருக்கின்றது. பணம் தருகின்றார்கள் இல்லை. இணக்க அரசியல் மூலமே அதிகாரங்களை சிறுக சிறு பெறமுடியும். கிடைத்த அதிகாரங்களை சரியாக பயன்படுத்துகின்றார்கள் இல்லை. ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக பயன்படுத்தாமையினால் மீண்டும் திறைசேரிக்கு திரும்பி செல்கின்றது ஒதுக்கப்பட்ட பணம். மக்களிடம் பொய் வாக்குறுதிகளை வழங்கி தேர்தலில் வென்றிருக்கின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான போராட்டங்களை, இராஜதந்திர அணுகுமுறைகளை கையாளுகின்றனர் இல்லை. சொகுசு வாகனங்களை மட்டும் தமக்கு மத்திய அரசிடம் இருந்து பெற இணக்க அரசியல், உறவுகள் செய்கின்றனர். ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர் என்று இரு தரப்பும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. (மேலும்....)

பூதகரமாகும் ராதிகா விடயம்

முக்கிய அமைச்சர் ஜேசன் கென்னியும் கண்டனம்

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கனடியப் பாராளுமன்றத்தில் மாவீரர் தினத்தையொட்டி ஆற்றிய உரை தொடர்பாக கனடிய அரசில் பிரதமருக்கு அடுத்தபடியானவர் எனக் கருதப்படும் ஜேசன் கென்னி கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்த தனது பதிவில் “புதிய ஜனநாயகக் கட்சி தமிழ்ப்புலிகளின் நினைவு தினத்தையும் கனடியப் படைவீரர்களின் நினைவையும் ஒப்பிட்டது ஒரு நம்புதற்கரிய அவமரியாதையான விடயம்” எனக் குறிப்பிட்டுள்ளதோடு, மாவீரர் தினத்தை உருவாக்கிய தமிழ்புலிகள் ஒரு தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு என்றும், அவர்களே தற்கொலைத் தாக்குதல்கள், பொதுமக்களை வேண்டுமென்றே கொல்லுதல், சிறார்களை படையில் இணைத்தல்,
மற்றும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுதல், இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொண்றமை மற்றும் தங்களை எதிர்க்கும் தமிழர்களைக் கொல்வது போன்றவற்றைச் செய்தவர்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அமைச்சரால் கொடுக்கப்பட்ட ஆங்கிலப் பதிவு கீழே தரப்பட்டுள்ளது.
(“It’s unbelievably offensive that the NDP would draw a parallel between Remembrance Day and a Tamil Tiger commemoration.” “For the record, the Tamil Tigers (who created “Martyrs’ Day”) is a banned terrorist group that invented the tactic of suicide bombing, intentionally killed civilians, recruited child soldiers, engaged in ethnic cleansing, killed Indian Prime Minister Rajiv Gandhi, and murdered Tamil rivals.”)

நாடெங்கிலும் குடும்ப ஆட்சி; வடக்கில் சர்வாதிகார ஆட்சி - சி.வி

இலங்கை பூராகவும் குடும்ப ஆட்சி நடைபெறும் அதேவேளை, வட மாகாணத்தில் சர்வதிகார ஆட்சி இடம்பெற்று வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். 2015ஆம் ஆண்டில் வடமாகாண அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விபரங்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'போரின் போது வடமாகாணத்தில் இருந்த தாக்கம் தற்போதும் நீண்டுகொண்டு செல்கின்றது. போரால் விதவைகளாக்கப்பட்ட பெண்கள், வாழ்வாதாரங்களை இழந்த குடும்பங்கள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்படாமல் அரசாங்கத்தால் அபிவிருத்தி நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன' என்று சுட்டிக்காட்டினார். 'முறையான தகவல்கள் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் செயற்படுத்தப்படுகின்றன. வடபகுதியில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதார பிரச்சினைகள், வேலைவாய்ப்பு பிரச்சினைகள், சமூக ஏற்றத்தாழ்வு பிரச்சினைகள், வாழ்க்கை முறைகள் என்பவற்றை அரசாங்கம் கவனத்தில் எடுக்கவில்லை. வடமாகாண சபையால் கோரப்படும் மேலதிக நிதியை அரசாங்கம் தருவதில்லை. இதனால் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முறையாக செய்ய முடியவில்லை. எமது செயற்பாடுகளுக்கு ஆளுநர் தடையாகவுள்ளார். ஆளுநரின் அனுமதி பெற்று செயற்பட வேண்டிய தேவையிருப்பதால் எங்களால் வேலைத்திட்டங்களை திறம்பட செய்ய முடியவில்லை' எனக் கூறினார்.

பாக். சம்பவத்தைபோல் இந்தியாவிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்

பாகிஸ்தானில் நடைபெற்ற பள்ளி தாக்குதல் போல் இந்தியாவிலும் பள்ளிகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிக்கையில், முக்கிய நகரங்களில் உள்ள வணிக வளாகங்கள், சந்தைகள், கோயில்கள், பள்ளிகள் உட்பட மக்கள் கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில சிறையிலிருந்து தப்பிய 5 சிமி தீவிரவாதிகள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்து தப்பிய சிமி தீவிரவாதிகள் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உதவியுடன் மிகப்பெரிய தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் இந்தியாவில் சுற்றிவருவ தாகவும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவப் பள்ளி தாக்குதல்: தீவிரவாதிகளின் போட்டோ வெளியானது!


பாகிஸ்தானின் ராணுவப் பள்ளியில் நுழைந்து நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று குவித்த தீவிரவாதிகளின் போட்டோ வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராடி வரும் தெஹ்ரிக் இ தலிபான் கள் 6 பேர் பள்ளிக் குழந்தைகளின் பாடவேளையில் புகுந்து, குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 148 பேர்களைச் சுட்டு கொன்று குவித்தனர். உலகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும்,பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ள இந்த கோர சம்பவத்திற்கு கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளின் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு ஆறு தீவிரவாதிகளும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை நடத்துகிறார்கள், அவர்கள் பாகிஸ்தானின் ராணுவ சீருடையில் துப்பாக்கியை ஏந்தியபடிபோட்டோ எடுத்துக் கொள்கின்றனர், பாகிஸ்தானின் தெஹ்ரிக் இதலிபான் இயக்கத்தின் தலைவர் மவுலானா பசுல்லாஹ் 13 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட போட்டோ எனப் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன
 

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறானே!! “இவன் ரொம்ப நல்லவன்டா”

மூக்காலும் வாயாலும் இரத்தம் சொட்டினாலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மத்திய அமைச்சருடன் அன்பாக இருப்பதைப் பத்து யாரும் ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் இது அரசியல் நாடகம்.  ஒரு வேளை ஐங்கரநேசனைப் பார்த்து அமைச்சர் “இவன் ரொம்ப நல்லவன்டா! என்று சொல்லிப் போட்டாரோ??” இதே வேளை இன்று யாழ் கச்சேரியில் நடைபெற்ற சம்பவத்தில் ஐங்கரநேசன் அவர்கள் தனக்கு தானே தாக்கிக் கொண்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடகவியலாளார்களுக்கு கூறியுள்ளார். முதன் முதலாக போரில் விழுப்புண் அடைந்தார் ஐங்கரநேசன். தமிழீழ விடுதலைப் போராட்டத்தை வைத்து வாக்கு வாங்கி வடக்கு மாகாணசபைத் தோ்தலில் வெற்றியீட்டிய வடக்கு மாகாணசபை விவசாய அமைச்சர் முதல் முதலாக கச்சேரியில் இடம் பெற்ற போரில் விழுப்புண் அடைந்துள்ளார். அதுவும் தண்ணீர்ப் போத்தலால் தாக்கியதாக விழுப்புண் அடைந்ததாகத் தெரியவருகின்றது. அதுவும் இவர் தமிழீழத்தை மீட்பதற்காகவோ அல்லது தமிழ்மக்களின் விடிவுக்காகவோ விழுப்புண் அடையவில்லை. தனது கட்சிக்காரர்களின் அடாவடியான நடவடிக்கைகளுக்குத் துணை போய் யாழ் மாவட்ட மக்களின் நன்மைக்காக நடாத்தப்பட்ட அபிவிருத்திக் கூட்டத்தை குழப்பும் நடவடிக்கைக்காகவே விழுப்புண் அடைந்துள்ளார்.  இவ்வாறான குப்பாடிக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிர்வரும் காலம் பொதுமக்கள் வாக்குகளால் பதில் சொல்வார்கள் என்பது வெளிப்படை. அத்துடன் ஊடகங்களுக்கு முன்னாள் பொதுமக்கள் பார்ப்பதற்காக படம் காட்டும் இந்தக் குப்பாடிக் கூட்டமைப்பு வடக்கு மாகாணசபையின் எல்லையைத் தாண்டி ஏனைய மாகாண எல்லைக்குச் சென்றவுடன் நானும் நீயும் அண்ணணும் தம்பியும் என்ற தோரணையுடன் தென் பகுதி அரசசார்பு அரசியல்வாதிகளுடன் கொஞ்சிக் கூத்தாடுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும்.

சம்பந்தன் அவர்களே!

முடிவு தமிழ்மக்களிடமே அன்றி சர்வதேசத்திடமோ இந்தியாவிடமோ இல்லை!

நடைபெற இருக்கும் சிறிலங்கா சனாதிபதித் தேர்தலானது தமிழர்களது தலைவிதியைத் தீர்மானிக்கவோ, மாற்றியமைக்கவோ போவதில்லை என்பது மேலோட்டமான பார்வையிலேயே தெரிந்தபின்னரும் த.தே.கூட்டமைப்பினர் தமக்கேயுரிய குழப்பமான நிலையில் தொடர்வதும் அதேநேரத்தில் கடல் கடந்து முடிவின் வழியைத் தேடுவதும் எமக்கான அரசியல் வெளியின் உறுதிப்பாடின்மையினை வெளிப்படுத்தி நிற்கின்றது. சர்வதேச இராசதந்திரிகளின் பூகோள நலன் சார்ந்த கருத்துருவாக்கத்தில் புரையோடிப்போயுள்ள சிந்தனை வெளிக்குள்ளும், பிராந்திய நலன்சார்ந்து சிங்கள ஆட்சியாளர்களை தடவிக்கொடுக்கும் மென்போக்கு வெளியுறவுக் கொள்கைவாதிகளின் சிந்தனை வெளிக்குள்ளும் தமிழ் மக்களின் தலைவிதிக்கான வழியைத் தேடமுயற்சிப்பது தன்னை பழுத்த அரசியல் தலைவராகக் கூறிக்கொள்ளும் சம்பந்தன் அவர்களுக்கு ஏற்புடயதா என்பதை அவர் சிந்திக்க வேண்டும். (மேலும்....)

ருபிள் சரிவு

வட்டி வீதத்தை அதிரடியாக உயர்த்திய ரஷ்யா

ருபிளின் மதிப்பு வேகமாகச் சரிவ தைத் தடுக்கும் நோக்கில் வட்டி வீத த்தை ஒரேயடியாக 17 சதவீதம் என்ற அளவுக்கு ரஷ்யா உயர்த்தியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அமெரிக்க டொலருக்கு எதிரான ரஷ்ய நாணய த்தின் மதிப்பு 50 சதவீதம் குறைந் துள்ளது. இதனால் தனது வட்டி வீத த்தை 10.5 சதவீதத்திலிருந்து 17 சத வீதமாக ரஷ்யா உயர்த்தியுள்ளது. இதன்காரணமாக டொலருக்கு எதி ரான ருபிளின் மதிப்பு ஒரு டொலருக்கு 67 ருபிள் என்பதில் இரு ந்து 58 ருபிளாக உட னடியாக உயர்ந்தது. ஆனால் சிறிது நேரத் துக்கெல்லாம் இது 62 ருபிள் என்ற நிலை க்கு வந்தது. கடந்த வாரம்தான் ரஷ்யா தனது வட்டி வீத த்தை ஒரு சதவீதம் உயர்த்தியிருந்தது. இருந்தும் திங்க ளன்று ருபிளின் மதிப்பு 10 சதவீதம் சரிந்தது. வேகமாக விழுந்து வரும் மசகு எண்ணை விலை காரணமாக ரஷ்யப் பொருளாதாரம் கடும் நெருக்கடி களை சந்தித்து வருகிறது. வட்டி வீதத்தை அதிகரிப்பதன் மூல மாக தன்னுடைய நாட்டில் இருந்து மூல தனம் வெளிச்செல்லாமல் இருக்கும் என்று ரஷ்யா நம்புகிறது.

ஆளும் கட்சியில் இருந்து எதிரணிக்கு பாய்கிறார் ரட்ணசிறி?

முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்ரமநாயக்க இன்றைய தினம் ஆளும்கட்சியை விட்டு விலகி பொது எதிரணியுடன் இணைவார் என நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ரட்ணசிறி விக்ரமநாயக்க அதிருப்தி வெளியிட்டிருந்தார். ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்ரமநாயக்கவும் ஆளும் கட்சியிலிருந்து விலகலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநயாக்க குமாரதுங்க தலைமையில் நடைபெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில், ரட்ணசிறி விக்ரமநாயக்க இணைந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஏன் ஆதரவளிக்கின்றேன் என்ற விபரங்களை ரட்ணசிறி விக்ரமநாயக்க இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்ப்படுகிறது. மேலும் சில ஆளும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் சந்திரிக்காவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் தமிழர் தரப்பு இப்படி கூறுகின்றது.....?


தமிழர் தரப்போடு குறைந்தபட்சம் சுனாமி நிவாரண கட்டமைப்பையே செய்துகொள்ள மறுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் திட்டமிடல் மற்றும் நெறிப்படுத்தலில்......
அவர் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுத் திட்டப் பொதியொன்றை முன்வைத்தபோது பாராளுமன்றத்தில் அதை தீயிட்டு கொழுத்திய ரணில் விக்கிரமசிங்கா.......
நோர்வே அனுசரணையுடனான போர்நிறுத்த காலத்தில் யாழ் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஒரு அங்குலத்தைத்தானும் பின் நகர்த்தத் தயாரில்லை என்று பலாலி பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர்களை அவமதித்து உரைத்து திருப்பியனுப்பிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா.............
தமிழருக்கு குறைந்தபட்சம் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வைக்கூட முன்வைகக்கூடாது என்று வலியுறுத்தி வந்த சம்பிக்க ரணவக்க............
ஆகியோருடைய ஆதரவில்,
தமிழர் பிரச்சினை தொடர்பாக தன்னுடைய அரசியல் வரலாற்றில் சாதகமான ஒரு வார்த்தைகூடப் பேசியறிந்திராத ஜனாதிபதி வேட்பாளரான மைத்மதிரபால சிறிசேனவை ஆதரிப்பதா இல்லையா என்பதில் தமிழர் தரப்புக்களுக்கு அப்படி என்னதான் குழப்பம் இருக்கிறது..........?
(Rushangan Kodeeswaran)

மூத்த குடியினரை எமது அன்புள்ளங்களாக அரவணைப்போம்

பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் இருந்து வந்தது.
பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..
எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள். (மேலும்....)

எமது போராட்ட வரலாற்றில் "ஆலோசகர்" பதவித் தகமை?

"ஆலோசகர்" பதவித் தகமை என்பது, எமது போராட்ட வரலாற்றில் அனைத்து இயக்கங்களிலும் ‘’தலைமைக்கு’’ சேவகம் செய்யும் அடிமைத் தொழில் போன்றே அமைந்திருந்தது.  இவ் ‘’ஆலோசக புத்திஜீவிகளும்’’ இவ் அடிமைத்தன சேவகத்தின் மூலம், தங்கள் இருப்புக்கான அனைத்து பிரயோசனங்களையும் ,செளகரியங்களையும், அடையாளத்தையும் பெற்றுக்கொண்டனர். சிலர் பூரணமான அடிமை விசுவாசத்துடனும், ஒரு சிலர் சகித்துக்கொண்டும் தம் வாழ்வை கொண்டாடினர். இவ்வாறு சகித்தவர்கள் பட்டியலில் அன்ரன் பாலசிங்கம் அவர்களும் ஒருவர். அன்ரன் பாலசிங்கம் அவர்களோடு பழகிய சில பத்திரிகையாளர்களை நான் அறிவேன். அன்ரன் பாலசிங்கம் தன் தனிப்பட்ட உரையாடல்களில், மிகமோசமான வார்த்தை கொண்டு, தலைமையின் தவறான செயல்பாடுகளை திட்டித் தீர்க்கும் சங்கதிகளை இவர்கள் மூலம் நான் அறிந்தும் உள்ளேன். (மேலும்....)

10 ரூபாய் சாப்பாடு
மதுரையில் ஒரு மனிதாபிமானி

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்போம். அக்காலத்தில் அன்னசத்திரங்கள் கட்டி வழிப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு உணவளித்த பாரம்பரியம் மிக்கவர்கள் தமிழர்கள் என்கிறது தமிழர் வரலாறு. ஆனால் குடிநீரும் விலைக்கு வாங்க வேண்டிய இன்றைய நவீன உலகில் அன்னதானத்தின் நிலை பற்றி சொல்வதற்கில்லை.  ஆனால் ஆச்சர்யமாக கிட்டதட்ட அன்னதானம் என்று சொல்வதற்கு ஈடாக மதுரையில் ஒரு ஹோட்டலில் வெறும் 10 ரூபாய்க்கு இன்றும் உணவளிக்கப்படுகிறது என்பது ஆச்சர்யமான செய்தி.  இன்றைய பாஸ்ட் புட் காலத்தில் குடும்பத்துடன் சாதாரண ஒரு ஹோட்டலுக்கு சென்றாலும் செலவாகும் தொகை நிச்சயம் உங் கள் மாத சம்பளத்தில் ஒரு கணிசமான பங்காகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட சூழலில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கிறது இந்த 10 ரூபாய் சாப்பாடு. (மேலும்....)

டிசம்பர் 16, 2014

யாழ். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கைகலப்பு  

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பில் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (16) ஆரம்பமாகியது. வடமாகாண சபைக்கான நிதியை செலவு செய்வது தொடர்பில் வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உரையாற்றிக்கொண்டிருக்கையில், அவர் அருகே சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஆட்சிக்குட்பட்ட வேலணை பிரதேச சபையின் தவிசாளர் போல் சிவராசா, சிவாஜிலிங்கத்துடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது போத்தலால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் தாக்குதல் மேற்கொள்ள, கூட்டத்தில் அமளி துமளி ஏற்பட்டது. இதனையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கூட்டத்திலிருந்து வெளியேறினர். முதலமைச்சரும் வெளியேறினார். இந்நிலையில், ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தங்கள் உறுப்பினர்களில் ஐவருக்கு காயம்  - ஈ.பி.டி.பி

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இடம்பெற்ற கைகலப்பில் தமது தரப்பைச்சேர்ந்த உறுப்பினர்கள் ஐவர் காயமடைந்துள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி அறிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தாக்குதலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் இராஜ்குமார், அமைச்சரின் வடமராட்சி இணைப்பாளரும், பருத்தித்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிறிரங்கேஸ்வரன் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்றைய தினம் (16) இணைத்தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்திலேயே இணைத்தலைமைக்கு கட்டுப்படுமாறு இணைத்தலைவர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை மீறி கூட்டமைப்பினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். (மேலும்....)

பாகிஸ்தான் இராணுவ பாடசாலையில் தாக்குதல், 100 பேர் பலி

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாக்குதலில் குறைந்தபட்சம் 100 பேர் கொல்லப்பட்டுள்ளளதுடன், 40 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 80 சிறுவர்களும் அடங்குகின்றனர். பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷவாரிலுள்ள பாடசாலையொன்றைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களையும் ஆசிரியர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை தலிபான் துப்பாக்கிதாரிகள் பணயக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளதாக சம்பவ இடத்திலுள்ள இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேற்படி பாடசாலையை படையினர் சூழ்ந்தபோது, அப்பாடசாலையிலிருந்து மிகவும் பரபரப்பாக துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள் கேட்பதாகவும் இதில் காயமடைந்த மாணவர்களை அம்பியூலன்ஸ் வண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரால் நடத்தப்படுகின்ற இராணுவ பாடசாலையில் ஆயுதம் தாங்கிய 06 பேர் உள்நுழைந்ததாக இராணுவ அதிகாரி ஒருவர் கூறினார். இப்பாடசாலையில் சுமார் 500 ஆசிரியர்களும் மாணவர்களும் உள்ளனர் என்று நம்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் இருவர் மைத்திரிக்கு ஆதரவு

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள இரண்டு பிரதேச சபைகளில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் மேலும் இருவர், பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி பாலசிறிசேனவுக்கு ஆதரவளிக்கபோவதாக அறிவித்துள்ளனர். அத்தனகல பிரதேச சபையின் உறுப்பினர் இந்திக்க ராஜபக்ஷ மற்றும் மீரிகம பிரதேச சபையின் உறுப்பினர் சோமரத்ன ஜெயநீத்தி ஆகிய இருவருமே இவ்வாறு அறிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் மக்களை சிறைபிடித்தவர் சுட்டு கொலை, பிணை கைதிகள் மீட்பு!

ஆஸ்திரேலியாவில் பொதுமக்களை 17 மணி நேரம் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து வைத்திருந்த ஈரானைச் சேர்ந்த ஹரோன் மோனிஸ் என்பவரை அதிரடிப்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இந்தியர் இருவர் உள்பட பிணைக் கைதிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மையப்பகுதியில் மார்ட்டின் பிளேஸ் என்ற இடத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் லிண்ட் கபே என்ற ஓட்டல் உள்ளது. மேலும் அந்த பகுதியில் நியூசவுத் வேல்ஸ் மாகாணத்தின் நாடாளுமன்றம், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி, அமெரிக்க, இந்திய தூதரகங்கள், இந்திய சுற்றுலா கழக அலுவலகம், பாரத ஸ்டேட் வங்கி, பரோடா வங்கி மற்றும் பல வர்த்தக நிறுவனங்கள் அமைந்து உள்ளன. (மேலும்....)

தேர்தல் கூட்டத்தில் குழப்பம்! பாதியில் பேச்சை முடித்த? மகிந்த

தம்புள்ளையில் ஆளும் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றிய போது, அங்கிருந்தவர்கள் கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் தனது பேச்சை முடித்துக் கொண்டு கீழ் இறங்கிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் தம்புள்ளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்தில் பங்கேற்றிருந்த பொது மக்கள் தொடர்ச்சியாக கூச்சல் குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்தனர். இதனால், மகிந்த ராஜபக்ச கோபமடைந்து பலமுறை கூட்டத்தினரை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதையடுத்து அமைதியாவதும் பின்னர் அவர் உரையாற்றத் தொடங்கும் போது கூச்சல் எழுப்புவதுமாக கூட்டத்தினர் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் ஜனாதிபதி, கூச்சல் எழுப்பிக் கொண்டிருந்தால் தான் தொடர்ந்து பேச முடியாது என்றும் எச்சரித்தார். ஆனாலும், கூட்டத்தினர் அடங்காத நிலையில், உரையை பாதியிலேயே நிறுத்தி விட்டு மேடையில் இருந்து இறங்கிச் சென்று விட்டார். அதேவேளை, அவ்வாறு பாதியிலேயே உரை நிறுத்தப்படவில்லை என்றும் வேறொரு கூட்டத்தில் உரையாற்ற வேண்டியிருந்ததால் தான், அவசரமாக அவர் வெளியேறியதாகவும் அரசதரப்பு கூறியுள்ளது.

கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்! - சந்திரிக்கா

நாட்டில் நிலவி வரும் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க, சரத் பொன்சேகா மீதும் என் மீதும் புலி முத்திரை குத்தப்படுகின்றது. இது தொடர்பில் ஒரே விடயத்தை மட்டுமே நான் கூற விரும்புகின்றேன். கண்ணாடி வீடுகளிலிருந்து கொண்டு கல் எறிய வேண்டாம்.இந்த அரசாங்கம் வீதிகளை அமைக்க அதிகம் விரும்புகின்றது. ஏனெனில் நாங்கள் வீதி அமைக்க செலவிட்ட பணத்தை விடவும் இந்த அரசாங்கம் 18 மடங்கு அதிகளவில் செலவிடுகின்றது. ராஜபக்ச குடும்பத்தினர் அவர்களது உறவினர்களுக்கு இந்த நாடு சொர்க்க பூமியாகவே காணப்படுகின்றது. எனினும், இவர்களின் திருட்டுக்களை நிறுத்தினால் முழு இலங்கையையும் சொர்க்கபூமியாக மாற்ற முடியும். தெற்கு அதிவேக பாதை மற்றும் கட்டுநாயக்க அதிவேக பாதை என்பன எனது அரசாங்கத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. போரை வென்றெடுத்த காரணத்திற்காக காலத்திற்கும் ராஜபக்ச குடும்பம் ஆட்சியில் இருக்க அனுமதிக்க முடியாது. முதலில் மஹிந்த ராஜபக்ச பின்னர் அவரது சகோதரர்கள் பின்னர் ராஜபக்சவின் மூன்று பிள்ளைகள் இவ்வாறு ஆட்சி செய்தால் 200 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியும். பதவிகளை எதிர்பார்த்து நான் இந்த தேர்தல் பிரச்சாரப் பணிகளில் பங்கேற்கவில்லை. கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கமாகும் என சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

மைத்திரி மூளையில்லாத முட்டாள்! - சந்திரிக்கா

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தலையில் மூளையில்லாத முட்டாள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தன்னிடம் தெரிவித்தார் என புதிய சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கம்பளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். சந்திரிக்கா கூறியதாக மங்கள தெரிவித்த முட்டாளை எப்படி ஜனாதிபதி பதவியில் அமர்த்த முடியும். அது ரகசியமானது. முட்டாளை ஜனாதிபதியாக்குவது அவரை அந்த பதவியில் அமர வைப்பதற்கல்ல. மைத்திரிபால ஜனாதிபதியாக பதவியேற்றதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்படுவார் எனக் கூறினாலும் அப்படி நடக்க போவதில்லை. சந்திரிக்காவே பிரதமராக நியமிக்கப்படுவார். அதற்கான இரகசியமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், இதனை ஐக்கிய தேசியக் கட்சியினர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம். - சந்திரிகா  

”மஹிந்தவின் அரசாங்கத்தில் இருக்கும் 67 பேர் யானை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள்”; சந்திரிகா கூறுகிறார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, மக்களின் கட்சி என்ற நிலைமையில் இருந்து தற்போது மாறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார். தொம்பே பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திர் கட்சிக்கு இன்று என்ன நடந்துள்ளது. திருடர்கள், கெஸினோ சூதாட்டக்காரர்கள் மற்றும் சாராய முதலாளிமார் இதில் உள்ளனர். குறிப்பாக மிகப் பெரிய இரண்டு சாராய முதலாளிமார்கள் அமைச்சர்களாக உள்ளனர். இதன் காரணமாக சுதந்திரக் கட்சி திருடங்களின் இடமாக மாறியுள்ளது. இந்தக் கட்சி மக்களின் கட்சி என்ற நிலமை இன்று மாறியுள்ளது. இது தற்போது மக்களின் கட்சியல்ல. எனவே சுதந்திரக் கட்சியியை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளது. அதற்காகவே நாம் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். குறிப்பாக இதனுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்துள்ளது. பொது முன்னணியின் அரசாங்கம் ஒன்றையே மஹிந்த முன்னெடுக்கின்றார். அத்துடன் மஹிந்தவின் அரசாங்கத்தில் 67 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் அதாவது யானை சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள். எனவே நாமும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைவதில் பிரச்சினை இல்லையல்லவா? திருடுவதற்காகவோ அல்லது கொலை செய்வதற்காகவோ நாம் ஒன்றிணையவில்லை. இந்த நாட்டை முன்னேற்றுவதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.

Presidential Election And The Challenges Facing The Tamil National Alliance

(By Shanthan Thamba)

On the 9th of January 2014 the Sri Lankan Presidential election results would have been announced. It is needless to say that, this election is a two horse race between the incumbent Mr Mahinda Rajapaksa and his erstwhile secretary of his party turned his contender, Mr Maithiripala Srisena. One of them is expected to be declared elected as the President by the election commissioner on the 9th of January. There are about nineteen other names on the ballot paper, but every voter including those ‘candidates’ know that they are not in the running. (more....)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால் வழங்கப்பட்ட பொருட்கள், புங்குடுதீவுக்கு வைத்தியசாலைக்கு வழங்கப் பட்டது..!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316 3073GUMLIGEN) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. (மேலும்....)

ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு 6ஆவது நிபுணர் நியமனம்

காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவுக்கு, மற்றுமொரு சர்வதேச நிபுணரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார் என ஆணைக்குழுவின் தலைவரும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியுமான மெக்ஸ்வல் பராக்கிரம பரணகம தெரிவித்தார். முன்னாள் சர்வதேச நீதிபதியும் ஜப்பானைச் சேர்ந்தவருமான மொடூ நோகுச்சி என்பவரே ஆறாவது நிபுணராக நியமிக்கப்பட்டவர் ஆவார். குறித்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மேலைத்தேய மற்றும் ஆசிய நாடுகளிலிருந்து இதுவரை 6 நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். டெஸ்மென்ட் டி சில்வா, ஜோவெரி நைஸ், பேராசிரியர் டேவிட் கிரேன், அவ்தாஷ் கௌஷால் அஹ்மிர் பில்லாஹ் சூவ்பி மற்றும் நீதிபதி மொடூ நோகுச்சி ஆகியோரே இந்த அறுவர் ஆவர். இந்த ஆணைக்குழு, கடந்த 2004ஆம் ஆண்டு சட்ட அம்சங்கள் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ், முஸ்லிம் உறவுகளை வளர்த்துவருகிறோம்

30 வருடகாலமாக அறுந்துபோயிருந்த தமிழ், முஸ்லிம் உறவுகளை தாங்கள் வளர்த்துவருவதாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். 'இனப்பாகுபாடின்றி என்னாலான அனைத்து உதவிகளையும் அதிகமான தமிழ்ப் பிரதேசங்களுக்கு செய்துவருகின்றேன். அபிவிருத்திகளில் இனப்பாகுபாடு காட்டமுடியாது. அவ்வாறு நான் செய்வதுமில்லை. நான் வாழ்கின்ற பிரதேசத்தை விட, அபிவிருத்திகள் தேவையாகவுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் பல மடங்கு செய்துவருகின்றேன். இதை அனைவரும் நன்கறிவர். இவ்வாறான செயற்பாடுகள் மூலமே இன ஒற்றுமையை வளர்க்கமுடியும். ஜனாபதித் தேர்தல் நெருங்கிவருகின்ற இவ்வேளையில், பல கட்சிகள் தங்களின் முடிவை இதுவரையில் தீர்மானிக்காமல்; உள்ளபோதிலும், தங்களது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே தொடர்ந்து ஆதரிக்கும்' என்றார்.

ஊழல் செய்தோர் நாட்டைவிட்டு தப்பியோட முடியாது - மைத்திரி

ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில், தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஊழல் குற்றச்சாட்டுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேற அனுமதிக்க முடியாது என பொது எதிரணிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் நாம் வெற்றிபெற்றால் நாட்டை விட்டு வெளியேற காத்திருக்கும் பலர் உள்ளனர் ஊழலில் ஈடுபட்டதாக கூறப்படும் எவரையும் நாட்டை விட்டு வெளியேற நான் அனுமதிக்கமாட்டேன் என்றார். அதேபோல், தான் அரசாங்கத்தில் இருக்கும் போது ஊழலுக்கு எதிராக பேசுவது தடுக்கப்பட்டமையையும் நினைவூட்டினார்.

ஐ.தே.க உறுப்பினர் மஹிந்தவுடன் இணைவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஜானக திஸ்ஸ குட்டியாராச்சி ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மாளிகைக்கு இன்று (15) சென்ற திஸ்ஸ குட்டியாராச்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளார். கடந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மொனராகலை மாவட்டத்தில் போட்டியிட்ட திஸ்ஸ குட்டியாராச்சி சுமார் 18 ஆயிரம் விருப்பு வாக்குகள் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தில் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.தே.க.வின் தேர்தல் செயற்பாடுகள் சீர்குலைந்துள்ளன, வெற்றிபெறுவது கடினம் - திஸ்ஸ அத்தநாயக்க

ஐ.தே.க.வின். தேர்தல் செயற்பாடுகள் சீர்குலைந்துவிட்டன. இன்று நாட்டில் எங்குமே ஐ.தே.க.வின் அலுவலகங்களும் இல்லை என சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கம்பளையில் பிரதமர் டி.எம். ஜயரத்ன ஏற்பாடு செய்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார். ஐ.தே.கவின் தேர்தல் இயந்திரத்தின் சுவிட்சை அனைத்து விட்டே சிரிகொத்தாவில் இருந்து வெளியேறியதாகவும், முடியுமானால். அதனை மீண்டும் இயக்கிக் காட்டுமாறு தாம் ஐ.தே.க. தலைவர்களுக்கு சவால் விடுவதாகவும் அமைச்சர் கூறினார். மைத்திரிபால சிறிசேன என்பவர் பொருத்தமற்ற ஒருவரென சந்திரிகா பண்டாரநாயக்க கூறியதாக மங்கள சமரவீர என்னிடம் தெரிவித்தார். ஐ.தே.க. தலைவர்கள் இருட்டில் தட்டுத்தடுமாறி சுவிட்சை கண்டு பிடித்து மீண்டும் செயல்படச் செய்யும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் நாட்டின் ஜனாதிபதியாகி இருப்பார். மைத்திரிபால சிறிசேன ஒவ்வொரு கட்சிகளுடன் கைச்சாத்திடும் ஒப்பந்தங்கள் பயங்கரமான நிலைமையை ஏற்படுத்தும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இயலுமானால் மக்கள் முன் சமர்ப்பிக்குமாறு சவால் விடுகிறேன். மைத்திரிபால ஜனாதிபதியாகி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றினால். ஜனாதிபதி படைவீரர்களுடன் கஷ்டப்பட்டு வெற்றி கொண்ட சுதந்திரம். இல்லாமற் போகும் என்றும் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் தெரிவித்தார்.

டிசம்பர் 15, 2014

சிட்னியில் 13 பேர் தீவிரவாதிகளால் தடுத்துவைப்பு

அவுஸ்திரேலியா, சிட்னி நகரின் மத்தியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் துப்பாக்கியுடன் நுழைந்த நபரொருவர் அங்கிருந்த 13 பேரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது அந்த ஹோட்டலின் ஜன்னல் ஓரத்தில் கைகளை உயர்த்தியுள்ள மூன்று பேர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கொடியை உயர்த்திப்பிடித்துள்ள காட்சிகள் வெளிவந்துள்ளன. இதையடுத்து குறித்த ஹோட்டல் அமைந்துள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக அந்நாட்டு பிரதமர் டொனி அபார்ட் கூறியுள்ளார். இந்த ஹோட்டலினுள் எத்தனை தீவிரவாதிகள் உள்ளனர் என்பது தொடர்பிலும் பணயக்கைதிகளின் எண்ணிக்கை தொடர்பிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. எனினும் 13 பேர் பணயகைதிகளாக தடுத்து வைக்கப்ட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இடதுசாரிக் கட்சிஅரசியலும் தேர்தல்களும்
(சாந்தி)

நாம் கடந்தகாலத் தவறுகளுக்காக இடதுசாரிக் கட்சிகளை சிலுவையில் ஏற்றவரவில்லை. அவை தமது நோக்கங்களையும் செயற்பாடுகளையும் மூலோபாயங்களையும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்பதையே கேட்கின்றோம். எமக்கு ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் அரசியல் சமூகக் கட்டமைப்பே தேவை என்பது உண்மையாகில், அக் கட்டமைப்பினை ஒரு குழுவினர் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்வதால் மட்டும் அடைந்துவிட முடியுமா? அடி தொடங்கி நுனி வரை உருவாக வேண்டிய இம்மாற்றமானது சகல சமூகத்தினரதும், அல்லது குறைந்த பட்சம் சமூகத்தின் குறிப்பிடத்தக்க பகுதியினரது ஒத்துழைப்போடும் ஒருங்கிணைவோடும் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றமாகும். அதற்கு அம்மக்கள் மத்தியில் எத்துணை விழுமியமாற்றங்கள், மற்றும் கண்ணோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டும். அவர்களது நடத்தைப் பண்பாடுகளில் எத்துணை மாற்றங்கள் தேவை. (மேலும்....)

அவர் வருவாரா…?

சகோதரியின் சோகத்தில் கலந்து கொள்ள…. வருவாரா…?

திரு. திருமதி. திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் மகள்  விநோதினி இன் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் நேற்று (13.12.2014) கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதுதான் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உடன் பிறப்பு … சகோதரியின் கணவர் இயற்கை எய்திவிட்டார். இதனை அறிந்ததும் பிரபாகரன் ஓடோடி வருவார் என்று நம்பப்படுகின்றது. இயற்கை எய்தியவரின் ஈமக்கிரியைகள் 16 ம் திகதி நடைபெற இருக்கையில் கிரியைகளில் கலந்து கொள்ள அவர் கலந்து கொள்ள நிச்சயம் வருவார் என்று பிரபாகரன் உயிருடன் வாழுகின்றார் என்று நம்புபவர்களும், சொல்லுபவர்களும், சத்தியம் செய்பவர்களும் எதிர்பார்ப்பது நியாயம்தானே? ம்….. என்ன! தனது நெருங்கிய குடும்ப உறவின் துங்கங்களில் கலந்து கொள்ள நிச்சயம் இறுதி நேரத்திலலாவது பிரசன்னமாவார் பிரபாகரன் என்று எதிர்பார்க்கின்றது தமிழ் கூறும் நல்லுகம்.

தொடரும் கட்சித் தாவல்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர், எதிர்கட்சியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சிலாபம் நகர சபை உறுப்பினரான ஜீவனி காரியவசம் மற்றும் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினரான ஷிரோன் பெர்னாண்டோ ஆகியோரே மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக வென்னப்புவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொதுக்கூட்டங்களின்போது இந்த இரண்டு உறுப்பினர்களும் இணைந்துள்ளனர். கடந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த, பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுனில் திசாநாயக்க நேற்று மீண்டும் எதிர்கட்சியுடன் இணைந்துகொண்டார். பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக ஹெட்டிபொல நகரில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் மீண்டும் எதிர்கட்சியுடன் இணைந்துகொண்டார். இதேவேளை, திம்புலாகல பிரதேச சபையின் எதிர்கட்சித்த தலைவர் ஏ.ஆர். ரஞ்சித் கஹகல்ல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொலன்னறுவை மாவட்ட தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இணைந்துகொண்டிருந்தார். சூரியவெவ பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் சந்திம ரத்நாயக்கவும் தனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார்.

நீடித்த அரசியல் தீர்வுக்கு
அதிகாரத்தில் உள்ள தலைவரை தெரிவு செய்வதே பொருத்தம்
 

நீடித்த அரசியல் உரிமையையும் அபிவிருத்தியையும் வாழ்வாதார மேம்பாட்டையும் தொடர்வதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறு மக்களின் ஒன்றிணைந்த ஆதரவின் மூலமே இன்றுள்ள அமைதிச் சூழலை பாதுகாக்க முடியுமென்பதுடன் நீடித்த அரசியல் உரிமையையும் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்திலும் மேம்பாடு காணமுடியும். நாம் எமது மக்களின் நலன்சார்ந்து பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங் களை முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினரின் தேசியம் பொய்யானதும் மாயையானதுமாகும். அதுமட்டுமன்றி மக்களுக்கான பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஆற்றல் அக்கறை அவர்களுக்கு இருக்கின்றன. கடந்த கால தமிழ்த் தலைமைகளுக்கு பல வாய்ப்புகள் கிடைத்த போதிலும் அவற்றை சரியான முறையில் பயன்படுத்தாத காரணத்தினா லேயே எமது மக்கள் பல்வேறு பட்ட அவலங்களை எதிர்கொள்ள வேண்டி நேர்ந்தது. எமது மக்களின் வாழ்வாதாரத்தை ஒளிமயமானதாகவும் பயனுள்ளதாகவும் பெற்றுக் கொடுப்பது மட்டுமன்றி அரசியல் உரிமைகளையும் வென்றெடுக் கப்படல் வேண்டும். இதற்கு மக்கள் சரியான தலைமையின் பக்கம் அணிதிரண்டு ஆதரவளிக்கும் பட்சத்தில் மேலும் பாரிய முன்னேற்றங்களை காண முடிமென்றும் சுட்டிக்காட்டினார்.

துருக்கி நாட்டில் நடந்த உண்மை சம்பவம்

இரண்டு வயதே ஆன தங்கள் பெண் குழந்தைக்கு திடீரென்று நோய் ஏற்பட்டதால் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து விட்டு குழந்தையை காப்பாற்றுவது சற்று கடினமே என்றனர். ஆனால் இதே நோயால் இதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட ஒருவரின் இரத்தம் பெறப்பட்டு குழந்தைக்கு ஏற்றப்பட வேண்டும் அப்படி செய்தால் குணமாவதற்கு வாய்ப்புகள் உண்டு.
இரத்தத்திற்கு நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர். பெற்றோர்களின் முகத்தில் உடனே ஒரு நம்பிக்கை ஒளி பிறந்தது. தற்போது ஐந்து வயதிலுள்ள அவர்களது இன்னொரு மகன் குழந்தைப் பருவத்தில் அதே நோய்க்குள்ளாகி அபூர்வமாக குணமடைந்திருந்தான். இதை மருத்துவர்களிடம் சொன்ன போது மருத்துவர்களுக்கும் நம்பிக்கை அதிகரித்தது. (மேலும்....)

அன்ரன் பாலசிங்கம்

புத்திஜீவித்தனம் மிக்கவர். தமிழ்ஈழ விடுதலைப் புலிகளின் அனைத்து தவறுகளோடும் பயணித்தவர். தேசியத்தின் அறவியல் தன்மையை மறுத்து, தமிழ் ஈழவிடுதலைப் புலிகளின் "தமிழ் தேசியத்தை" தவறுகளால் நிரப்பியவர். ஒரு அறிவு ஜீவி, அனைத்து மனித உரிமை மிறல்களுக்கும், "நியாப்படுத்தல் கொண்ட" தத்துவ விளக்கங்களை கொடுக்க முடியும் என்று நிரூபித்தவர். வரலாற்றில் கோயபல்ஸின்னோடு இணைக்கப்படவேண்டியவர். (Shan. J)

நடந்து வந்த பாதை தன்னைத் திரும்பிப் பாரடா!

ரஜனி அவருடைய சூப்பர் ஸ்டார் இமேஜூக்கு அப்பால் ஒரு நல்ல நடிகர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஆனால், அவரைச் சூப்பர் ஸ்டாராக்கியதன் பின்னணியில் "லோ பட்ஜெட்" படங்கள், பரீட்சார்த்தப் படங்கள், மாற்று சினிமா முயற்சிகள் (மகேந்திரன், ருத்திரையா, பாலுமகேந்தரா போன்றோரது படங்கள்.) இருந்துள்ளன. அந்த வகையில் ரஜனி தான் வந்த பாதையை மறந்து வருடத்துக்கு வருடம் ஏறிச் செல்லும் "மெகா பட்ஜெட்" படங்களிலே மட்டுமே (தனது சொந்த மகளின் படம் உட்பட) நாட்டம் காட்டி வருவது கவலைக்குரிய விடயம். உண்மையில் ரஜனிகாந், குறைந்த செலவுப் படத் தயாரிப்புகளைத் தோற்கடிப்பது, சிறு முதலாளிகள்/தயாரிப்பாளர்களை இல்லாமற் பண்ணும் இந்தியச் சினிமாவின் பெரும் முதலாளிகளின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கிறார். இந்த விடயத்தில் கமல்ஹாசன் கூடப் பராவாயில்லை என நான் சொல்லுவேன். இது தற்செயலானது அல்ல. ரஜனியும் தமிழ்ச் சினிமாவின் பெரு முதலாளிகளும் இதனைத் நன்கு திட்டமிட்டே செய்து வருகின்றனர். ரஜனியால் ஒரு லோ பட்ஜெட் படத்தில் கூட நடிக்க முடியாது போனது ஏன்? ஏன் ஒரு பரீட்சார்த்த சினிமா முயற்சிக்கு ஆதரவு வழங்க முடியாது? (எந்திரன், கோச்சடையான் போன்ற படங்கள் பரீட்சார்த்த் முயற்சி அல்ல. அது ஹொலிவுட்டைக் காப்பி அடிக்கும் முயற்சிகள்.) அந்த வகையில் இன்றைய அவரது பிறந்த நாளில் நான் அவரைக் கண்டிக்கிறேன். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! (Yoganathan Appaiah)

இலங்கை அரசியல் களம் பற்றி நடேசன்

இலங்கை அரசியலில் அரைவாசி சிங்களவர்கள் எப்பொழுதும் ஆளுவார்கள். பெரும்பான்மையான இஸ்லாமியர் ஆட்சியின் பக்கத்தில் இருப்பார்கள். தலைவர் தொண்டமான் புண்ணியத்தால் மலையக் தமிழர்கள் ஆட்சியோடு இருக்க பழகிக் கொண்டார்கள். வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் தொடர்ச்சியாக வானரங்களைத் தலைமையாக வைத்திருப்பதால் எதிர்க்கட்சியாக இருப்பது மட்டுமல்ல தோற்பவர்களுக்கே தங்கள் வாக்குகளை கொடுத்துவிட்டு சூப்பின கொட்டை கூட கிடைக்காமல் தாங்கள் இராஜதந்திரம் நிறைந்தவர்கள் மூத்தகுடி ஆண்ட குடி என வாய்சவடால் அடிப்பார்கள். செம்மறிகள் கூட தங்களுக்கு திறமையான இடையனைத் தேடுகின்றன.

விடுதலைப்புலிகளுக்கு சிறைத்தண்டனை இன்று பெர்லின் நீதிமன்றத்தில்

8 ஆண்களுக்கும் , 2 பெண்களுக்கும் சிலருக்கு 6 மாதங்களும், சிலருக்கு 10 மாதங்களும்,சிலருக்கு 1 வருடமும் தீர்ந்து இருக்கிறது. இவர்கள் விடுதலிப்புலிகளின் அமைப்புக்கு பலாத்காரமாக பணம் சேர்த்து அனுப்பினார்கள் என்று குற்றம் கண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை கிடைத்துள்ளது. இந்த தண்டனைக்கு எதிராக 1 கிழமைக்குள் அப்பீல் செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு பக்கம் விடுதலைப் புலிகளுக்கெதிரான தடைகளை ஐரேபாப்பிய நாடுகளில் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்திகள், புழகாங்கிதங்களுக்கு மத்தியில் இவைகளும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

நாட்டு மக்களின் அச்சத்தைப் போக்கினேன் - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தது மட்டுமன்றி மக்கள் மனங்களிலிருந்த அச்சத்தைப் போக்கி, நாட்டை அபிவிருத்திப் பாதையில் கெண்டுசெல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 'நாட்டில் பயங்கரவாதம் தலைவிரித்தாடிய சந்தர்ப்பத்தில் அதனை முடிவுக்குக் கொண்டுவரும் வாய்ப்புக் கிடைத்தது. இப்பங்கரவாதத்தினால் சகல இன மக்களும் துன்பப்பட்டனர். முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை மட்டுமன்றி சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் இன்று மக்கள் அச்சமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் யுத்தம் முடிவடைந்தவுடன் அபிவிருத்தி வேலைகள் சகல பிரதேசங்கிலும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன. பாதைகள் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன. கண்டியிலிருந்து கொழும்புக்கு நாற்பத்தைந்து நிமிடங்களில் செல்லக்கூடிய வாய்ப்பு மிக விரைவில் கிடைக்கும். சுற்றுலாத்துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். இதனை நோக்கமாகக்கொண்டு வரவு - செலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டது' என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இப்ராஹிமை சுட்டுக் கொல்ல முயற்சிக்கையில் கடைசி நிமிடத்தில் கைவிடுமாறு கூறியது யார்?
 

இந்தியாவால் பல ஆண்டுகாலமாக தேடப்பட்டு வரும் நிழலுலக தாதா தாவு+த் இப்ராஹிமை சுட்டுக் கொல்ல இந்திய கமாண்டோ படையினர் பாகிஸ்தானின் கராச்சிக்குள் ஊடுருவியிருந்ததாக வும் ஆனால் கடைசி நிமிடத்தில் அந்த திட் டத்தை கைவிடுமாறு இந்திய தரப்பில் இருந்து ஒரு தொலைபேசி தகவல் சென்றதாகவும் பர பரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎன்7 செய்தி அலைவரிசை இதுகுறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கூறி யிருப்பதாவது: 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த சங்கிலி தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புள்ள நிழலுலக தாதா தாவூத்  இப்ராஹிமை 20 ஆண்டு காலமாக இந்தியா தேடி வருகிறது. பாகிஸ்தா னின் கராச்சி நகரில் அவர் பதுங்கி இருப்பது தெரிந்திருந்தும் அந்த நாட்டு அரசு இந்தியாவுக்கு உதவ மறுத்துவந்தது. (மேலும்....)

கறுப்பினத்தவர்களின் கொலைகளுக்கு எதிராக அமெரிக்க தலைநகரில் சிவில் உரிமை பேரணி

அமெரிக்காவில் அண்மையில் இடம்பெற்ற நிரா யுதபாணியான கறுப்பினத்தவர்கள் பொலி ஸாரினால் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு எதி ராக தலைநகர் வொ'pங்டன் டி.சியை நோக்கி மக்கள் பேரணி நடத்தியுள்ளனர். மிசுரி நகரான பேர்குசனில் வெள்ளையின பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கறுப்பின இளைஞன் மைக்கல் பிரவுனின் உறவினர்கள் மற்றும் நிய+யோர்க்கில் பொலிஸாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கறுப்பினத்தவரான எரிக் கார்னரின் உறவினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இந்த இரு கறுப்பினத்தவரும் பொலிஸ் தாக்கு தலில் கொல்லப்பட்டபோதும் இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்ய நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்த அமெரிக்காவெங்கும் ஆர்ப்பாட்டங் களும் இடம்பெற்றன. (மேலும்....)
 

டிசம்பர் 14, 2014

இன்று மார்கழி பதின்மூன்று!...

ஜேர்மனியில் கிட்லர், இத்தாலியில் முசோலினி, கம்பூச்சியாவில் பொல்பொட் போன்றவர்கள் மக்களை அடக்கி, ஒடுக்கி, தமது எதேச்சாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக சித்திரவதைகளுக்கும், கொலைகளுக்கும் பேர்போன பாசிஸ்டுகளாக வலம்வந்து இறுதியில் துயர முடிவை சந்தித்தார்கள். இவர்களின் மறு வடிவமாக ஏக பிரதிநிதித்துவ வெறி கொண்டு மக்களையும் சகோதர இயக்கங்களை சேர்ந்தவர்களையும் வேட்டையாடி தனக்குத் தானே சவக்குழி தோண்டிய பிரபாகரன் இலங்கையில் பாசிசத்தின் வாரிசு. இந்த பாசிசத்தின் வாரிசு ஈபிஆர்எல்எவ் மீது பாய்ந்த நாள் இன்றாகும்.

1986 மார்கழி 13.

தனிநபர் தலைமைக்குப் பதிலாக கூட்டுத்தலைமை, இயக்கத்திற்குள் ஜனநாயகம், விமர்சனம், சுயவிமர்சனம் மூலம் பிணக்குகளுக்குத் தீர்வு காணுதல், சகோதரப் படுகொலைகளுக்கு எதிர்ப்பு, இயக்கங்கள் மத்தியில் ஒற்றுமை, இனங்களுக்கிடையே ஐக்கியம், அமைப்புக்களுக்கும், தனி நபர்களுக்கும்,  பேசவும் எழுதவும்,  ஒன்று கூடவும், உள்ள அடிப்படை ஜனநாயக உரிமைகளை பேணுதல், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்த்தல், இயக்கங்களின் தவறான போக்குகளை விமர்சிக்கும் மக்களின் உரிமையை மதித்தல் என்பவற்றை வலியுறுத்தியும், நடைமுறைப்படுத்தியும் வந்ததுடன் சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசிய, உழைக்கும் மக்களின், பெண்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த பாட்டாளிவர்க்கத் தலைமையை கட்டியெழுப்ப முயன்ற ஈபிஆர்எல்எவ் இயக்கத்தின் சுயாதீனமான செயற்பாட்டுக்கு 13.12.1986 அன்று புலிகள் தடை விதித்தனர். (மேலும்....)

ராஜபக்சகளின் மாட மாளிகைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு!

ஐனாதிபதி மஹிந்தராஜபக்ச குடும்பத்தினருக்கு சொந்தமான 4 மாளிகை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐனாதிபதி மஹிந்தவின் சகோதரர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச குடும்பத்தினர் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள். இவர்களுக்கு ஐக்கிய அமெரிக்காவில் 2007ம் ஆண்டு இரண்டு வீடுகள் மாத்திரமே இருந்த நிலையில் தற்பொழுது நான்கு ஆடம்பர வீடுகள் இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அத்துடன் 2007ம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி இரட்டை பிரஜைகள் வெளிநாட்டு சொத்து விபரங்களை உறுதிப்படுத்த தேவையில்லை என்ற சட்டதிருத்த மூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று மார்கழி
பதின்மூன்று!...


யாரடா நீ?...

சுதந்திரத்திற்காக
போராடும் என்
சுதந்திர உணர்வை
நீ தடை செய்ய....

மொத்தப்போராட்டத்தையும்
குத்தகைக்கு எடுத்தவனா நீ?..

சரி நீ என் போராடும்
உரிமையை
தட்டிப்பறித்தாய்...

எதை தந்தாய்
என் மக்களுக்கு?..

முள்ளி வாய்க்காலின்
முடிவுதானே தந்தாய்.

இன்று எமது
ஈ பி ஆர் எல் எவ்
இயக்கம்

புலிகளின் தலைமையால்
தடை செய்யப்பட்ட
அராஜக தினம்....

மாத இறுதியில் முடிவு மாவை சேனாதிராசா

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று இந்த மாத இறுதியில் தீர்மானிக்கப்படும் எனவும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னரே எந்தவொரு முடிவையும் தாம் எடுக்கவுள்ளதாகவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்று நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. இந்த மாத இறுதியில் நாம் எமது முடிவை அறிவிப்போம். தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவந்த பின்னர் அது குறித்து நாம் தீர்மானிப்போம்” என்றார். அத்துடன், “கிராமம் கிராமமாக சென்று மக்களின் கருத்துக்களை நாம் அறிந்து வருகின்றோம். எவ்வாறெனினும், இன்று வ&#