|
||||
|
பங்குனி 2014 மாதப் பதிவுகள் மார்ச் 31, 2014 2016ஆம் ஆண்டுவரை ஜனாதிபதி தேர்தல் இல்லை - மஹிந்த 2016ஆம் ஆண்டுவரை என்னிடம் ஜனாதிபதி தேர்தல் பற்றி கேட்காதீர்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை (29) தென் மாகாணத்தின் டி.ஏ.ராஜபக்ஷ மகாவித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவுசெய்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் பேசும்போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேற்படி கூறியுள்ளார். மக்கள் இப்பொழுது புலனாய்வு தகவல்கள் பற்றியெல்லாம் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் ஜனநாயகத்தினை விரும்புகிறார்கள். ஆகையினால், அவர்களின் எதிர்பார்ப்பு ஒருபோதும் வீண்போகாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். தனது வாக்கினை பதிவு செய்ததன் பின்னர், வாக்களிக்க வந்தவர்களிடமும் நட்புரீதியில் ஜனாதிபதி உரையாடியமை குறிப்பிடத்தக்கது. இனம்' திரைப்படம் இடைநிறுத்தம் ஒளிப்பதிவாளார் சந்தோஷ் சிவன் இயக்கி தாயாரித்திருக்கும் 'இனம்' திரைப்படம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையை அடுத்து அத்திரைப்படத்தை அனைத்து திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெற திரைப்படத்தின் வெளியீட்டாளரான லிங்குசாமி தீர்மானித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸ் சார்பாக வெளியிடப்பட்ட இனம் திரைப்படம் இன்று முதல் (31) திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும். இதனால் ஏற்படும் நட்டத்தைத் தாண்டியும் மனித உணர்வுகளையும் மக்களையும் நேசிப்பதிலேயே இந்த முடிவை எடுக்கிறேன் என்று லிங்குசாமி அறிவித்துள்ளார். (மேலும்....) ஐ. தே. க பலமிழந்ததனாலேயே ஜே. வி. பி உட்பட சில கட்சிகள் சற்று தலையெடுக்க முயற்சி மிகவும் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியாக விருந்த ஐக்கிய தேசியக் கட்சி இன்று பலமிழந்து காணப்படுவதாலேயே ஜனநாயகக் கட்சி மற்றும் ஜே.வி.பி. போன்ற கட்சிகள் சற்றுத் தலைதூக்க ஆரம்பித்துள்ளன. நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண தேர்தல் முடிவுகள் இதனை காட்டுகின்றன. என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 51 தொகுதிகளில் தனது பெரும்பான்மையை நிரூபித்து அமோக வெற்றியை ஈட்டியிருக்கிறது. மேல் மாகாணத்தில் சிறுபான்மையினர் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்திருப்பது மிகக் குறைவாகவே காணப்படுகிறது. இது குறிப்பாக தமிழ் மக்கள் தாம் எதிர்பார்க்கும் அபிலாஷைகளை அரசாங்கம் இன்னமும் சரியாக இனங்கண்டு அதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கவில்லையென்பதை உணர்த்துவதாக நான் நினைக்கிறேன். இதேபோன்று முஸ்லிம் மக்கள் மீது கடந்த காலங்களில் சில இனவாத சக்திகள் கட்டவிழ்த்துவிட்ட எதிர்ப்பலைகள் தொடர்பாக அவர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளதையும் காட்டுவதாக நினைக்கிறேன். பேருவளை தொகுதியைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அமோக ஆதரவை வழங்கியிருக்கிறார்கள் என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இப்பகுதியில் முஸ்லிம் மக்களும் பெரும்பான்மை இன மக்களும் இனவாதப் போக்குகள் எதுவுமின்றி மிகவும் அன்னியோன்யமாக வாழ்கின்றனர். இதன் பிரதிபலிப்பே இப்பகுதியில் அரசுக்கு அவர்கள் அமோக ஆதரவு வழங்குவற்கான காரணமாக இருக்கிறது என்றும் அமைச்சர் ராஜித தெரிவித்தார். வந்துவிட்டது சர்வதேச விசாரணை (எம்.எஸ்.எம். ஐயூப்)'முறையான பெறுபேறுகளுடனானதும் நம்பகமானதுமான உள்நாட்டு விசாரணை பொறிமுறை ஒன்றின் அவசியம் தொடர்பாகவும் தொடர்ந்து இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் உயர்ஸ்தானிகர் செய்த சிபாரிசுகளை கருத்தில் கொள்ளும் மனித உரிமை பேரவை, 'கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கான கால எல்லைக்குள் இலங்கையில் இரு சாராரினாலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அவற்றோடு சம்பந்தப்பட்ட குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணையொன்றை நடத்துமாறு உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திடம் கேட்டுக் கொள்கிறது.' (மேலும்....) ‘இனம்’ திரைப்படம்: காட்சிகள் வெட்டப்பட்டு, ஈழப் போராட்டம் காப்பாற்றப்பட்டது!சுவாரசியமான இந்த செய்தியை நண்பர்களுடன் பகிரலாமே: வெள்ளிக்கிழமை வெளியான ‘இனம்’ என்ற படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக போராட்டங்கள் நடத்தப்பட்டதை அடுத்து படத்தில் இருந்து ஐந்து காட்சிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளார் படத்தினை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் உரிமையாளர் இயக்குனர் லிங்குசாமி. சந்தோஷ் சிவன் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘இனம்’. இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் இது. இந்தப் படத்தில் விடுதலைப் புலிகளை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் படத்தை தடை செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து படத்தில் 3 நிமிடங்கள் இடம்பெறும் ஐந்து காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. (மேலும்....) பிணங்களுடன் கிடந்து மீண்டேன்
(ஏப்ரல்
2000 வெளியான அமுது
சஞ்சிகையில் வெளியிடப்பட்ட
'பிணங்களுடன் கிடந்து
மீண்டேன்' என்ற
ஆக்கம் புலிகளால்
மேற்கொள்ளப்பட்ட
கறுப்பு ஜுலை படுகொலைகளை
ஒத்த மார்ச் 30 படுகொலையின்
போது கொல்லப்பட்டவர்களின்
நினைவாக பிரசுரிக்கப்பட்டது.)
இரவுகள் பொதுவாக ஒரே மாதிரித்தான் இருளும் மௌனமும் துயிலும். ஆனால் அன்றைய இரவு 1987 மார்ச் 30ம் திகதிய யாழ்ப்பாணத்து இரவு அப்படி இருக்கவில்லை. அது ஒரு கோர இரவு அது படு கோரமாகத் தமக்கு அமையப் போகின்றது என்பதை உணராமல், நாளாந்தம் கடந்து போகும் சாதாரண இரவு போலக்கருதி மறுநாளைத் தரிசிக்கத் துயில்வதற்காகத் தமது இரவு உணவைப் புசித்து கொண்டிருந்தார்கள்... அவர்கள் புலிகள் இயக்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்க் கைதிகள். (மேலும்....) மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க பல ஆண்டு ஆகலாம்: - அமெரிக்கா இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக கூறப்படும் மலேசிய பயணிகள் விமானத்தைக் கண்டுபிடிக்க சில வருடங்கள் ஆகலாம் என அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. விமானத்தின் கருப்புப் பெட்டியை கண்டறியும் ஆளில்லா நீர்மூழ்கிக் கருவி, அமெரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்டு தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எனினும் கருப்புப் பெட்டியின் பேட்டரி செயலிழப்பதற்கு முன்னரே அதை கண்டறிந்தால் மட்டுமே அதில் பதிவான தகவல்களை பெற முடியும் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். கருப்புப் பெட்டியானது விபத்து நிகழ்ந்த 30 நாட்கள் வரை செயலில் இருக்கும். மலேசிய விமானம் காணாமல் போய் 3 வாரங்களுக்கு மேலாகி நிலையில் இதுவரை எந்த பொருட்களும் கண்டறியப்படவில்லை. ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து மேற்கே கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மார்ச் 30, 2014 மேல், தென் மாகாண சபைகளுக்கான ஆசனங்களின் விபரம்
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று
மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல் மாகாண சபை மற்றும் காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை
ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபை ஆகிய இரண்டு சபைகளுக்குமான
போனஸ் ஆசனங்களை உள்ளடக்கிய ஆசனங்களின் விபரங்கள் பின்வருமாறு
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1,363,675
ஆசனங்கள்-
56 தலைநகரை தன்வசப்படுத்தியது ஐ.ம.சு.மு
மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்டத்தின்
இறுதி முடிவுகள் தென் மாகாணம் ஐ.ம.சு.மு. வசமானது தென் மாகாணசபைத் தேர்தலின் இறுதி முடிவுகள். இந்த தேர்தல் முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தென் மாகாணசபையைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 699,408 வாக்குகளைப் பெற்று தென் மாகாணத்தில் 31 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 310,431 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 109,024 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது. முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி 75,532 வாக்குகளை மொத்தமாகப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோட்டை தேர்தல் தொகுதி
மேல் மாகாண சபைக்கான தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட
கோட்டை தேர்தல் தொகுதியில்: பொரளை தேர்தல் தொகுதி
மேல் மாகாண சபைக்கான தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட
பொரளை தேர்தல் தொகுதியில்: கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதி
மேல் மாகாண சபைக்கான தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட
கொழும்பு கிழக்கு தேர்தல் தொகுதியில்: கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதி
மேல் மாகாண சபைக்கான தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட
கொழும்பு மேற்கு தேர்தல் தொகுதியில்: ஹொரண தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட ஹொரண தேர்தல் தொகுதியில் கொலன்னாவ தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலுக்கான கொழும்பு மாவட்ட கொலன்னாவ தேர்தல் தொகுதியில் மஹர தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலில் கம்பஹா மாவட்ட மஹர தேர்தல் தொகுதியில் பாணந்துறை தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலுக்கான கம்பஹா மாவட்ட பாணந்துறை தேர்தல் தொகுதியில் மினுவாங்கொடை தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலில் கம்பஹா மாவட்ட மினுவாங்கொடை தேர்தல் தொகுதியில் ஜா-எல தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலில் கம்பஹா மாவட்ட ஜா-எல தேர்தல் தொகுதியில் தொம்பே தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலில் கம்பஹா மாவட்ட தொம்பே தேர்தல் தொகுதியில் களனி தேர்தல் தொகுதி
மேல்
மாகாண சபைக்கான தேர்தலில் கம்பஹா மாவட்ட களனி தேர்தல் தொகுதியில் இரத்மலானை தேர்தல் தொகுதி
மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்ட
இரத்மலானை தேர்தல் தொகுதியில் தெஹிவளை தேர்தல் தொகுதி
மேல் மாகாண சபைக்கான தேர்தலில் கொழும்பு மாவட்ட
தெஹிவளை தேர்தல் தொகுதியில் (தேர்தல் செய்திகள்: தமிழ் மிரர்) US company to build multibillion rupee oil pipeline hereA United States-based company has been selected to build a multibillion rupee
project to lay a pipeline from the Colombo Port to the Kolonnawa fuel storage
facility to expedite unloading of fuel from ships, a senior official said
yesterday.Ceylon Petroleum Storage Terminal Ltd (SPSTL) Chairman M.R.W.de Soysa
said the US company had been picked by the technical evaluation committee to
carry out the US$ 50 million (Rs. 6,500 million) project. He said the proposal
would be submitted to the Cabinet soon. The chairman said the new pipeline would
help to unload 45,000 metric tonnes of fuel within two days in contrast to four
days now.“At present, we are not in a position to use the existing pipeline to
its full capacity as there are leaks and fuel cannot be pumped at full pressure.
The pipeline is about 40 years old,” Retired Maj. Gen. Soysa said. He said that
though the main contract would be carried out by the US company, the civil
engineering sub contract would be handled by the Sri Lanka Army. மார்ச் 29, 2014
இறையாண்மை ஈழத் தமிழருக்கும் உண்டு! உடையார்கட்டில் ரி.ஐ.டி யினரால் ஒருவர் கைது முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் வைத்து சின்னத்துரை ஸ்ரீகாந்தன் (35) என்ற இளைஞன் வியாழக்கிழமை (27) இரவு 11 மணியளவில் பயங்கரவாதக் குற்றத்தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளியான இவர் புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்படடிருந்த நிலையில் மீண்டும் வியாழக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டார். யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கைச் சேர்ந்தவர் இவர் உடையார்கட்டுப் பகுதியில் வசித்து வருகின்றார். உடையார்கட்டுப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெதுப்பகம் ஒன்றில் பணியாற்றிய விசேட தேவையுடைய ஒருவரும் ரி.ஐ.டி யினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ரி.ஐ.டி யினாரால் சந்தேகத்தின்பேரில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் மணவாழ்க்கையை விரும்பாத பெண்கள் காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. 'இந்த பெண்களில் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் தொழில் செய்கின்றவர்கள், தொழில் செய்து ஓய்வுபெற்றவர்களும் அடங்குகின்றனர். ஆண்களை விட பெண்களின் சனத்தொகை அதிகரித்து காணப்படுகின்றது. இலங்கையில் உள்ள சகல அரச தனியார் நிறுவனங்களில் தொழில் செய்வோரில் பெண்களே அதிகமாகப் காணப்படுகின்றனர்' என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. கோபியின் நண்பனிடம் துப்பாக்கி ரவைகள் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு உயிர் கொடுப்பதற்காக பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கோபி என்ற நபரின் நண்பனிடம் இருந்து துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட தகவல்கள் பெற்றுக் கொண்டுள்ளதாக யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.பி.விமலசேன இன்று வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தார். 'கடந்த 23ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பகுதியில் வைத்து மன்னாரைச் சேர்ந்த கோபியின் நண்பனான மாணிக்கம் காந்தலயன் என்ற இளைஞர் பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அதன்போது, அநேகமான அப்பகுதி பொதுமக்கள் வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள குறித்த நபர் நல்லவர் எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாதவர் என்று கூறினார்கள். இருந்தும், அந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட புலன் விசாரணைகளின் போது அநேகமான துப்பாக்கி ரவைகள் மற்றும் கோபி சம்பந்தப்பட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன' என்றார். அத்துடன், தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் யாராவது நடந்து கொண்டால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். மார்ச் 28, 2014 வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் பலகோடி மோசடியில் ஈடுபட்டுள்ளார் !வடமாகாண சுகாதார சுதேச வைத்தியதுறை அமைச்சின் 2013ம் வருடத்துக்கான உலர் உணவு விநியோக ஒப்பந்தத்தில், அமைச்சர் ப.சத்தியலிங்கம் பல கோடி ரூபாய்கள் மோசடி செய்துள்ளமைக்கான உறுதியான ஆதாரங்களை முறைப்பாட்டாளர்களில் ஒருவரான கணபதிப்பிள்ளை கந்தசாமி வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ளார். வடமாகாண வைத்தியசாலைகளுக்கான உலர் உணவு பெறுகை கேள்வி கோரல்களில் குறைந்த விலைகளில் கேள்வி கோரல்களை கோரிய விண்ணப்பதாரிகளை நிராகரித்து விட்டு, உச்ச விலை கோரியவருடன் அமைச்சர் சத்தியலிங்கம் ஒப்பந்தத்தை செய்துள்ளமை உறுதியாகியுள்ளது. (மேலும்.....) பிரேரணை நிறைவேறியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக 23 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்துள்ளன. 47 நாடுகளை கொண்ட இந்த கவுன்ஸிலில் 12 நாடுகள் நடுநிலை வகித்துள்ளன. (மேலும்.....) இந்தியா ஏமாற்றிவிட்டது - த.தே.கூ அமெரிக்கா கொண்டுவந்த பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்காது நடுநிலையாக செயற்பட்டதன் மூலம் இந்தியா தமிழர்களை ஏமாற்றிவிட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைபு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளதாவது, அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளிற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த நிலையில் இந்திய தொலைக்காட்சிக்கு ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மனித உரிமைகள் நிலவரங்கள் குறித்து அமெரிக்கா தலைமையிலான நாடுகள் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஆதரித்துள்ள அவர் இந்த தீர்மானம் தொடர்பில் இந்தியா எடுத்த நிலைப்பாடு தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய ஏமாற்றம் என்று கூறியுள்ளார். அமெரிக்க பிரேரணை இலங்கையின் முன்னேற்றத்துக்கு தீங்கிழைப்பதாக அமைந்துள்ளது என இந்தியா அறிவிப்புஎல். ரி. ரி. ஈ.யின் படுகொலைகளை விசாரிப்பதற்கு பிரேரணை இடமளிக்கவில்லை பாகிஸ்தான் கண்டனம் ஜெனீவாவில் அமெரி க்கா முன்மொழிந்துள்ள பிரேரணை இலங்கை அரசாங்கம் கடந்த ஆண்டில் அடைந்த முன்னேற்றத்திற்கு தீங்கிழைப்பதாக அமைந்திருப்பதுடன் இதனால் ஆக்கபூர்வமான பயன் எதுவும் கிடைக்காது என்று இந்தியா அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின அனுசரணையுடன் ஜெனீவா மனித உரிமைப் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தமது நாடு நடுநிலை வகிக்கும் என்று இந்திய பிரதிநிதி தெரிவித்துள்ளார். இலங்கை அபிவிருத்தி தொடர்புடைய பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றங்களை வரவேற்றிருக்கும் இந்தியா இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பரவலாக்கும் விடயத்தில் மேலும் சிறப்பாக நடந்துகொள்ளல் அவசியம் என்ற கருத்தையும வலியுறுத்தியுள்ளது. 13ஆவது திருத்தப் பிரேரணையை முழுமையாக இலங்கை அரசு அமுலாக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் அமெரிக்காவின் அனுசரணையுடனான இந்த பிரேரணையை எதிர்த்து வாக்களித்துள்ளது. இந்தப் பிரேரணையில் எல். ரி. ரி. ஈயினால் மேற்கொள்ளப்பட்ட மனிதப் படுகொலைகள் கவனத்திற்கு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் இந்தப் பிரேரணை வேண்டுமென்றே இலங்கை போன்ற நாடுகளை இலக்கு வைத்து கொண்டுவரப்பட்டிருப்பது வருந்தத்தக்க செயலென்றும் கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தைவிட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது அசாம்: - ராகுல் காந்தி குஜராத்தைவிட அதிக வளர்ச்சி பெற்றுள்ளது அசாம் மாநிலம் என்று சோனித்பூர் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி பேசினார். குஜராத் மாநிலம் சோனித்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, ''இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களையும், பணக்காரர்களுக்கு எதிராக ஏழைகளையும் மோதச் செய்யும் நடவடிக்கைகளில் பாரதிய ஜனதா ஈடுபட்டு வருகிறது. இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டும் அரசியலை பாரதிய ஜனதா கட்சி பின்பற்றுகிறது. குஜராத் மாநிலத்தைவிட அசாம் அதிக வளர்ச்சி பெற்றுள்ளது. குஜராத் போன்ற வளர்ச்சி நாட்டிற்கு தேவையில்லை. கடந்த 10 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருந்த 14 கோடி மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மேலும் 70 கோடி மக்களின் முன்னேற்றத்திற்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளிக்கும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என சில ஊடகங்களில் வெளியாகும் கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும்" என்று அவர் பேசினார்.
மார்ச் 27, 2014 கிரிமியாவை தங்களுடன் ரஷ்யா சேர்த்துக் கொண்டது போன்று தங்களையும் அமெரிக்காவிடம் இருந்து பிரித்து சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அலாஸ்கா மக்கள் விம்புகின்றனர். உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியா ரஷ்யாவுடன் இணைந்துவிட்டது. இந்நிலையில் யாரோ ஒருவர் வெள்ளை மாளிகை இணையதளத்தில் அலாஸ்காவை அமெரிக்காவிடம் இருந்து பிரித்து ரஷ்யாவுடன் சேர்க்க வேண்டும் என்று கூறி இதற்கு எத்தனை பேர் உடன்படுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் இருக்கும் அலாஸ்கா மாநிலத்தை ரஷ்யாவுடன் இணைக்க இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பம் தெரிவித்து அந்த மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். இணையதளத்தில் உள்ள அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, ரஷ்யாவின் ஆதிக்கத்தில் இருந்த அலாஸ்காவை அமெரிக்கா கடந்த 1867ம் ஆண்டு 7.2 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுத்து வாங்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில் வரும் ஏப்ரல் மாதம் 20ம் திகதிக்குள் 1 இலட்சம் பேர் கையெழுத்திட்டால், மனு குறித்து அமெரிக்க அரசு விளக்கம் அளிக்கவேண்டிய கடப்பாடு ஏற்படுகிறது. இதற்கு முன்னர் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலமும் தம்மை அமெரிக்காவில் இருந்து பிரிய மனுச் செய்தது. அதற்கு 100,000 க்கும் அதிகமானவர்கள் ஆதரவளித்ததால் வெள்ளை மாளிகை பதிலளித்திருந்தது. அதில், "ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் அமைப்பை ஏற்படுத்திய எமது மூதாதையர் மேலும் ஸ்திரமான ஒன்றியத்தை அமைக்கவே முயற்சித்தனர். அமெரிக்கர்களின் தலைமுறைகள் அனைவரதும் பாதுகாப்பிற்காகவே போராடினார்கள். அதிலிருந்து விலகிச் செல்ல அவர்கள் வழிகாட்டவில்லை" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அமெரிக்காவின் மிகப்பெரிய மாநிலமான அலஸ்காவின் மேற்கு , தென் மேற்கு பகுதிகளில் பசிபிக் கடலை தாண்டி ரஷ்யாவின் சைபீரியா பகுதி அமைந்துள்ளது. விசாரணை அவசியம்: இலங்கை நிராகரிப்பு இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் தேவை அவசியமென ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தலைமையிலான நாடுகளினால் ஐ.நா மனித உரிமை பேரவையில் உத்தேச பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த உத்தேச பிரேரணை தொடர்பில் இடம்பெற்ற வாதப்பிரதிவாதங்களை அடுத்து மூன்றாவது முறையாகவும் திருத்தத்திற்கு உட்படுத்தி புதன்கிழமை மனித உரிமை பேரவையில் சமர்பித்து உரையாற்றும் போதே நவநீதம்பிள்ளை மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த பிரேரணை இன்று வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதேவேளை, நவநீதம்பிள்ளையில் ஜெனீவா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இறுதி வரைபினை இலங்கைக்கான ஜெனீவா மனித உரிமை பேரவையின் வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க நிராகரிப்பதாக சபையில் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு 1983 - 2009 வரையான சம்பவங்களை விசாரிக்க தீர்மானம்
காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக் குழு 1983இல் இருந்து 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி யில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய ஜனாதிபதி அவர்களினால் நியமிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்கள் எனக் கூறப்படும் நபர்கள் தொடர்பாகக் கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு வானது 1990ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தே இதுவரையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. (மேலும்.....) குஜராத்தில் ஜூ.வி. 'ரட்சகர்’ என்று சிலரும் 'ராட்சஷர்’ என்று சிலரும் அவரை அடையாளப்படுத்துகிறார்கள். 'திறமையான ஆளுமை கொண்டவர்’ என்று சிலரும் 'திமிரான நடத்தை கொண்டவர்’ என்று சிலரும் அவரைக் கணிக்கிறார்கள். 'ஆளுமைமிக்க அரசியல்வாதி முதன்முறையாக இந்தியாவுக்குக் கிடைத்துள்ளார்’ என்று சொல்லப்படும் நேரத்தில், 'ஒரு சர்வாதிகாரி, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுகிறார்’ என்று சிலர் கருத்துச் சொல்கிறார்கள். 'குஜராத் மாநிலத்தை பத்தே ஆண்டுகளில் வளர்ச்சியடைய வைத்துவிட்டார்’ என்று சிலர் மகிழ்ச்சியில் துள்ள, 'வளர்ச்சி என்ற பெயரால் அவர்கள் காட்டுவது அனைத்தும் பம்மாத்துதான்’ என்று சிலர் துள்ளத்துடிக்கக் கொத்திப்போடுகிறார்கள். 'இந்தியாவின் முதன்மை மாநிலமாக குஜராத் மாறிவிட்டது’ என்று சிலர் சொல்லும்போதே, 'வறுமை தோய்ந்து, வளர முடியாமல் இருக்கும் ஏழ்மையான மாநிலம் அது’ என்று சிலர் இருண்ட பக்கங்களை அடையாளம் காட்டுகிறார்கள். 'கொடூரக் கொலைகள் 2002-ல் அரங்கேற்றியதை மறக்கவில்லையா?’ என்று சிலர் கேட்கும்போது, '10 ஆண்டு காலத்தில் எந்த மத வன்முறையும் இல்லையே’ என்று சிலர் பதில் சொல்கிறார்கள். (மேலும்.....) நடிகை முதல் போராளிகள் வரை! பிரபலங்களை வளைப்பதுதான் ஆம் ஆத்மியின் மறைமுக திட்டமாக இருக்கும்போல! டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி, அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் களத்திலும் குதித்துள்ளது. அந்தந்த மாநிலங்களில் இருக்கும் சில முக்கியமாக நபர்களையும், மீடியாக்களால் அதிகம் பேசப்படுபவர்களையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு இந்தத் தேர்தலைச் சந்திக்க திட்டமிட்டுள்ளனர். சண்டிகரில், மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்ற குல் பனாக்; மும்பையில் சமூகப் போராளி மேதா பட்கர்; குஜராத்தில், காந்தியின் பேரனான ராஜ் மோகன்... இப்படி இந்தியா முழுவதும் நபர்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அவர்களைப் பற்றிய சின்ன அறிமுகம் இங்கே...(மேலும்.....) மார்ச் 26, 2014 இறுதிப் பிரேரணையினை சமர்ப்பித்தது அமெரிக்கா இலங்கை குறித்த அமெரிக்கப் பிரேரணையின் இறுதி வரைபு பல்வேறு திருத்தங்களின் பின்னர் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நேற்று அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நேற்றுக்காலை ஜெனிவா நேரப்படி 11.15 க்கு மனித உரிமைப் பேரவையில் இந்த இறுதி வரைபு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 3 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நகல் பிரேரணையில் மூன்றாவது தடவையாகவும் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரே இந்த இறுதி பிரேரணை மனித உரிமைப் பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா சமர்ப்பித்த்துள்ள இந்தப் பிரேரணைக்கு பிரிட்டன் மொன்டேக்னரோ மெசடோனியா மற்றும் மொரிஷியஷ் ஆகிய நாடுகள் அனுசரணை வழங்கியுள்ளன. அந்தவகையில் நல்லிணக்க ஆணைக்குழுவினால் கவனிக்கப்பட்ட காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து, விரிவான மற்றும சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றுஇ ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தை கேட்டுக் கொள்ளல் என திருத்தம் செய்யப்பட்ட நிலையில் அமெரிக்கப் பிரேரணை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. (மேலும்.....) ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ எமக்குப் பிரச்சினையில்லை; விசாரணை நடத்தப்பட்டால் ஆரம்ப காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும் ஜெனீவாவில் வெற்றியோ தோல்வியோ அது எமக்குப் பிரச்சினையில்லை. எமது நாட்டு மக்கள் எம்மை வெற்றியாளர்களாக எதிர்காலத்திலும் முன்னேற்றிச் செல்வார்களென்ற நம்பிக்கை எமக்குண்டு என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். விசாரணைகள் நடத்தப்பட்டால் அது யுத்தம் ஆரம்பித்த காலம் தொட்டு நடத்தப்பட வேண்டும். கடைசி ஐந்து நாள் என்றோ, 2010 ற்குப் பிறகோ நடத்தப்படக் கூடாது. இவ்வாறு செயற்படுவது சிலரைப் பாதுகாக்கவே என்பதை நாம் அறிவோம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி பல்லாயிரக் கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, கொழும்பு நகரில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்திகளை அனைத்து மக்களும் அறிவர். (மேலும்.....) வெளியேற்றப்பட்டவர்களைத் தவிர எந்தவொரு முஸ்லிமும் வடக்கில் மீள்குடியேற்றப்படவில்லை வடக்கிலிருந்து வெளியேற் றப்பட்டவர்கள் தவிர எந்தவொரு முஸ்லிமும் வடக்கில் மீள் குடியேற்றப்பட வில்லை. அவ்வாறு வெளிநபர்கள் யாராவது மீள் குடியேற்றியதாக நிரூபித்தால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் நேற்று தெரிவித்தார். வடக்கிலிருந்து புலிகளால் துரத்தப்பட்ட மக்களை மீள்குடியேற்றும் நடிவடிக்கைகள் முழுமை பெறாதிருப்பதாக குறிப்பிட்ட அவர், வில்பத்து சரணாலயத்தை அழித்து முஸ்லிம்களுக்கு வீடுகள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிப்பதாகவும் தெரிவித்தார். வட பகுதியில் இருந்த ஒரு இலட்சம் மக்கள் சில மணி நேரங்களில் அங்கிருந்து துரத்தப்பட்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. நாட்டைத் துண்டாட பங்களித்திருந்தால் அந்த மக்கள் துரத்தப்பட்டிருக்கமாட்டார்கள். சமாதானம் நிலைநாட்டப்பட்ட போதும், இன்னும் முஸ்லிம்கள் கஷ்டங்களுடனே உள்ளனர். சமாதானத்தின் பலன்கள் முழுமையாக அவர்களை சென்றடையவில்லை. இவர்களின் சில காணிகளில் படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, சிலவற்றில் தமிழ் மக்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் மாற்றுக் காணிகளில் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். துரத்தப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் பற்றி இந்தியாவோ, அமெரிக்காவோ வேறு முஸ்லிம் நாடுகளோ குரல் கொடுக்கவில்லை. கடத்திச் சென்றார்... கடலில் மூழ்கடித்தார்? மாயமான மலேசிய விமானம்... பைலட்டின் திகில் பின்னணி ''என்னுடைய 40 வருட அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்... 1997-ம் வருடம் சிங்கப்பூர் நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டது. அதன் பைலட் திடீரென்று விபரீதமான காரியத்தைச் செய்தார். மிக உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்றவர், வழியில் இந்தோனேஷியா நாட்டில் ஓடும் நதி ஒன்றை நோக்கி விமானத்தைச் செலுத்தி, விபத்தை ஏற்படுத்தினார். அந்தக் கோரச் சம்பவத்தில் 104 பயணிகள் இறந்தனர். அதாவது, பைலட் தானும் தற்கொலை முடிவை எடுத்து, மற்ற பயணிகளையும் கொலைசெய்யக் காரணமாக இருந்தார். அதே பாணியில்தான் இந்த மலேசிய நாட்டு விமான மர்மச் சம்பவம் அரங்கேறி இருக்குமோ என்ற சந்தேகம் இப்போது எழுந்துள்ளது. மலேசிய விமானத்தை ஓட்டிய விமானியின் வீட்டில் 'சிமுலேட்டர்’ என்கிற கருவி சிக்கியுள்ளது. அதை பரிசோதித்தபோது, தென்னிந்திய ஏர்போர்ட், மாலத்தீவின் ஏர்போர்ட்... போன்ற சிறிய விமான தளங்களில் பெரிய விமானத்தை எப்படி லேண்ட் ஆவது என்பது பற்றிய புரோகிராம்களை வைத்திருந்தாராம். இந்தக் கோணத்தில் அவர் ஏன் ரகசிய பயிற்சி எடுத்தார் என்று விசாரணை அதிகாரிகள் அதிர்ந்துபோயிருக்கிறார்கள். விமானிக்கும் அந்த ஏர்போர்ட்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. (மேலும்.....) மார்ச் 25, 2014 குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - நீதிமன்றம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது. கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராஜீவ் கொலைக் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 23 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர்களை, உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி விடுவிப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது. இதையடுத்து முருகன் உள்ளிட்ட மூவர் மட்டுமல்லாது, இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, ராபர்ட் பயாஸ் உள்ளிட்ட 4 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை முடிவு செய்தது. முருகன் உள்ளிட்ட மூவருக்கான தூக்குத் தண்டனையை ரத்து செய்ததற்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்த மத்திய அரசு, குற்றவாளிகளை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் முடிவுக்கு எதிராகவும் மனு தாக்கல் செய்தது. குற்றவாளிகளை விடுவிப் பதற்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் மனு தொடர்பாக பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. பின்னர், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், குற்றவியல் நடைமுறைச்சட்டத்தின்படி மத்திய அரசின் கருத்தை அறிந்த பின்பு, மாநில அரசு தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி குற்றவாளிகளை விடுவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பில் நான்கு இளைஞர்கள் கைது இராணுவத்தினரால் தேடப்படுவதாக விளம்பரப்படுத்தப்பட்ட நபர்கள் தொடர்பிலான சுவரொட்டிகளை அகற்றியுள்ளனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் கூழாமுறிப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து இன்று கைது செய்துள்ளனர். அத்துடன் இளைஞர்கள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதனால் இப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, தருமபுரம் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேடுப்படுகின்றவர்கள் தொடர்பாக வட பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவ்வாறு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சிலவற்றை குறிப்பிட்ட சிலபகுதிகளில் மர்ம நபர்கள் கிழித்தெறிந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த இராணுவமும் பொலிஸும் கூழாமுறிப்புக் கிராமத்தினைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை கைது செய்துள்ளனர். இச் சம்பவத்தில் கூழாமுறிப்புக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களான அகஸ்டின் சலூஜன் (வயது 24), இராசேந்திரம் கமலதாஸ் (வயது 19), சுரேஷன் (வயது 25), நஜீதரன் (வயது 25) ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனால் அப் பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற உறவினர்கள் தமது பிள்ளைகளை விடுதலை செய்யுமாறு கோரியபோது, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என்றும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னரே விடுதலை செய்யமுடியும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. திருத்தங்களுடன் பிரேரணை சமர்ப்பிப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு
எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை திருத்தத்துடன்
சமர்ப்பிக்கப்பட்டு அதன் பிரதிகள் உறுப்பு நாடுகளிடம் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த பிரேரணையின் 8வது பந்தியிலேயே திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின்
அழுத்தத்தையடுத்தே இந்த திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நல்லிணக்க ஆணைக்குழு விசாரணை நடத்திய காலப்பகுதியில் இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட
குற்றங்கள் தொடர்பில் விரிவாக சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டுக் கொள்வதாக அந்த திருத்தங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தியப் பெருங்கடலில் மலேசிய விமானம் மாயமான மலேசிய விமானம் MH370 குறித்து, மலேசிய பிரதமர் நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை மாலை (மலேசிய நேரம் இரவு 10.00 மணி) புத்ரா அனைத்துலக வர்த்தக மையத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்தார். நஜிப் கூறியதாவது:- “இதுவரை நடந்த தீவிர விசாரணையின் முடிவில், மலேசிய விமானம் MH370 தனது வழக்கமான பாதையில் இருந்து விலகிப் பறந்து, இறுதியாக இந்தியப் பெருங்கடலோடு முடிவுற்றிருக்கிறது என்று தெரியவந்துள்ளது. பயணிகளின் உறவினர்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான நேரம் என்பதை உணர முடிகிறது. அவர்களுக்கு இந்த செய்தி நிச்சயம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு துயரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ஊடகங்கள் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது குறித்த மேல் விபரங்கள் நாளை அறிவிக்கப்படும்” இவ்வாறு நஜிப் தெரிவித்தார். பார்மர் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார் ஜஸ்வந்த் சிங்ராஜஸ்தான் மாநிலம், பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிதி, இராணுவம், வெளியுறவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மந்திரி பதவி வகித்த பாரதீய ஜனதா மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்குக்கு, அவர் விரும்பியபடி ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் போட்டியிட டிக்கெட் வழங்கப்படாதது, அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஜஸ்வந்த் சிங், சித்தாந்தங்களுக்கு பெயர் போன தனது கட்சி, இப்போது போலிகளின் வசம் போய் விட்டதாக விமர்சித்தார். அவர் பாரதீய ஜனதாவிலிருந்து விலகி, சுயேச்சையாக பார்மர் தொகுதியில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில் ஜஸ்வந்த் சிங், ஜோத் பூரில் நேற்று முன்தினம் பி. டி. ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்புப் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘நான் பார்மர் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யப் போகிறேன். சுயேச்சை வேட்பாளராக அல்லது சுயேச்சையாக இல்லையா என்பது கட்சியின் மனப்பான் மையை பொறுத்து அமையும்’ என கூறினார். இந்நிலையில் பார்மர் தொகுதியில் ஜஸ்வந்த் சிங் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஜஸ்வந்த்சிங் சுயேட்சையாக வேட்பு மனு வை தாக்கல் செய்துள்ளார். மார்ச் 24, 2014 யாருக்கு எதிராக சர்வதேச விசாரணை? (எம்.எஸ்.எம். ஐயூப்)ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் வருடாந்த அறிக்கையிலும் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள நகல் பிரேரணைகளிலும் சர்வதேச விசாரணை என்று பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதேயொழிய யாருக்கு எதிராக என்று குறிப்பிடப்படவில்லை. ஆனால் அரசாங்கமும் புலிகளும் என்ற இரு சாராரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகிறது. கடந்த 14ஆம் திகதி அதாவது அமெரிக்கா இலங்கை தொடர்பான இவ் வருடத்திற்கான தமது முதலாவது நகல் பிரேரணையை சமர்ப்பிததன் பின்னர் அது தொடரபாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனும் கையெழுத்திட்டு ஒரு செய்தி அறிக்கையை வெளியிட்டு இருந்தனர். அதில் சர்வதேச விசாரணை என்று வரும் பல இடங்களில் 'இரு சாராரினதும்' மனித உரிமை மீறல்கள் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது நேரடியாக கூறாவிட்டாலும் அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான போர் முடிவடைந்த பின்னர் சர்வதேச சமூகமும் 'இரு சாராரினதும்' மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவே விசாரணை செய்ய வேண்டும் என்று கூறியது. இலங்கை விடயத்தில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான்-கி-மூனினால் நியமிக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தின் கடும் விர்சனத்திற்குள்ளான தருஸ்மான் குழுவும் 'இரு சாராருக்கும்' எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றே கூறியது. (மேலும்.....) தேவியன் தொடர்பில் தகவல் கோரும் பொலிஸ்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் தேவியன் என்று அறியப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்காக பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக இந்நபரை கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சந்தேகநபர், வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் நடமாடுவதுடன் கொழும்புக்கும் வந்து செல்ல வாய்ப்புக்கள் உண்டு. இவர் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றால் 0112451636 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொண்டோ அல்லது 0112321838 என்ற தொலைநகலுக்கு தகவல் அனுப்பியோ அறியத்தரவும். இச்சந்தேகநபரைக் கைது செய்வதற்குரிய சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும். தகவல் தருபவர் பற்றிய விபரம் இரகசிய முறையில் பேணப்படும்' என்று பொலிஸ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்குவதற்கு எவ்விதமான சாத்தியங்களும் கிடையாது. எனவே, படைத்தரப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்தார் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார. வடக்கில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைத் தேடியே படைத்தரப்பு சுற்றி வளைப்புகளை நடத்துகிறதென்றும் தெரிவித்தார். வடக்கில் மீண்டும் புலிகளின் பயங்கரவாதம் தலைதூக்குவதாக படைத்தரப்பினர் தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஏனென்றால் அவ்வாறு மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கான எந்தவிதமான சாத்தியங்களும் கிடையாது. அதற்கான வாய்ப்புகளும் இல்லை. எனவே, அரசியல் ரீதியாக படைத்தரப்பினரின் கருத்தை ஏற்க முடியாது. ஜெனீவாவில் எமக்கெதிரான நடவடிக்கைகள் முன் நகர்த்தப்படும் சூழ்நிலையில் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதால் சிக்கல்கள் தோன்றலாம். வடக்கில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடியே படையினரின் சுற்றிவளைப்பு தேடுதல்கள் நடத்தப்படுகின்றன. அதேவேளை, அங்கு மக்கள் குடும்பம் குடும்பமாக படையினரால் கைது செய்யப்படுகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேவேளை, வடக்கில் படையினரின் நடவடிக்கைகளின்போது சாதாரண பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகாத விதத்தில் படையினர் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார். புலித்தலைவர்களை தேடி கிழக்கிலும் சுவரொட்டிகள்
புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் எனக் கருதப்படும் கோபி எனப்படும் கசியன் மற்றும் நவநீதன் எனப்படும் அப்பன் ஆகிய இருவரும் தேடப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்தின் பட்டிதொட்டி எங்கும் பரவலான துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இரு நபர்களின் புகைப்படங்களும் பிரசுரத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடப்பட்ட இரு நபர்களும் அதிகளவிலான குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் இவர்களைப் பற்றிய தகவல்களைத் தருபவர்களுக்கு ஐந்து லட்ச ரூபாய் சன்மானம் பெற்றுத் தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறிந்தவர்கள் 0766911617 அல்லது 0113135680 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அறியத் தாருங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கில் யுத்தம் நடைபெற்றபோது புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சகல கிராமங்களிலும் காடு மேடுகளிலும் இந்தப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. புலிச்சந்தேக நபர்கள் கோபி, அப்பன் இருவரையும் பிடிக்கவே வடக்கில் தேடுதல்கள் நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் ‘கோபி’ என்றழைக்கப்படும் கதீபன் பொன்னையா செல்வநாயகம் மற்றும் ‘அப்பன்’ என்றழைக்கப்படும் நவரட்ணம் நவநீதன் ஆகிய எல்.ரி.ரி.ஈ. சந்தேக நபர்களைப் பிடிப்பதற்காகவே வடக்கில் தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றதேயொழிய அப்பாவி தமிழ்மக்களை துன்புறுத்தும் நோக்கம் இல்லையென பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தினகரனுக்குத் தெரிவித்தார். கிளிநொச்சியைச் சேர்ந்த கோபி மற்றும் அப்பன் ஆகியோர் வடக்கில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான சதித் திட்டங்களை வகுத்து வருவது தொடர்பிலான தகவல்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்துள்ளன. இதனடிப்படையிலேயே, இவ்விருவரையும் உடனடியாக கைது செய்வதற்கு பொலிஸார் பாதுகாப்பு படையினருடன் இணைந்து தேடுதல் நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். நிலவும் சமாதானத்தை பயன்படுத்தி மீண்டும் வடக்கிற்கு திரும்பியிருக்க வேண்டுமென்று சந்தேகமும் பாதுகாப்பு தரப்பினருக்கு எழுந்துள்ளது. இவர்களை உடனடியாக கைது செய்யா விட்டால் எதிர்காலத்தில் நாடும் நாட்டு மக்களும் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும். எனவே, இதனை புரிந்து கொண்டவர்களாக வடக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் கோபி மற்றும் அப்பனை கைதுசெய்வதற்கான ஒத்துழைப்பை எமக்கு தர வேண்டுமெனவும் பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்தார். (மேலும்.....) தப்பிச் செல்ல முயன்ற பொதுமக்களை இரத்தம் தோய்ந்த வாளுடன் நின்று எழிலன் அச்சுறுத்தினார் - புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கர்ணன் வடமாகாண சபையின் உறுப்பினர் ஆனந்தி சசீதரனின் கணவன் எழிலன் ஒரு ஈவிரக்கமற்ற எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதியாக இருந்து 2009ம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவடையும் இறுதி நாட்களில் இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்த அப்பாவி தமிழ் மக்களுக்கு கொடுமை இழைத்ததை தான் நேரில் கண்டதாக எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினரான யோ.கர்ணன் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். எல்.ரி.ரி.ஈயில் இணைந்து போராடிய போது ஏற்பட்ட காயத்தினால் கர்ணனின் ஒரு கால் துண்டிக்கப்பட்டது. இன்று புனர்வாழ்வளிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் சுதந்திரப் பிரஜையாக இருந்து வரும் யோ.கர்ணன் ஒரு எழுத்தாளராக மாறி எழுதியிருக்கும் ஒரு கட்டுரையில் யுத்தம் நடந்து கொண்டிருந்த இறுதி நாட்களில் எழிலன் இரத்தம் தோய்ந்த ஒரு வாளுடன் அங்கு நின்று கொண்டிருந்த மக்களை இராணுவத் தரப்புக்கு தப்பியோட வேண்டாம் என்று அச்சுறுத்திக் கொண்டிருந்ததை தான் கண்டதாகக் கூறுகிறார். முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இராணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல எத்தனித்தவர்களையே எழிலன் இவ்விதம் அச்சுறுத்தினார் என்று யோ.கர்ணன் மேலும் தெரிவித்தார். புதுமாத்தளனில் யுத்தம் நடந்து கொண்டிருந்த இறுதி நாட்களில் இரா ணுவத் தரப்புக்கு தப்பிச் செல்ல வேண்டும் என்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடக்குவதற்காக அங்குள்ள நால்வரை சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் தன் கையில் இருந்த இரத்தம் தோய்ந்த நீண்ட வாளை வைத்துக் கொண்டு பொதுமக்கள் இராணுவத் தரப்புக்கு செல்வதை தடுக்கக்கூடிய வகையில் அச்சுறுத்திக் கொண்டிருந்ததை தான் கண்டதாக இந்த முன்னாள் எல்.ரி.ரி.ஈ இயக்க போராளி மேலும் புலனாய்வு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். மார்ச் 23, 2014 தமிழ் ஈழத்திற்கு ஆதரவில்லை - பா.ஜ.க
இலங்கை ஒரே நாடாக இருக்க விரும்புவதாகவும், தமிழ்
ஈழத்திற்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என்று பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கையா நாயுடு
தெரிவித்துள்ளார். கவலைப்படாதீர்கள் ஐயா!ரி.என். ஏ. எவருக்கும் ஆதரவு இல்லைகட்சியின் பெயரை பாவிக்க வேண்டாம் - இரா. சம்பந்தன்தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேல் மாகாணத்தில் ஜனநாயக மக்கள் முன்ன ணிக்கு ஆதரவு வழங்கு வதாக வெளியான பத்திரி கைச் செய்திகளை அதன் தலைவர் இரா. சம்பந்தன் முற்றாக மறுத்துள்ளதாகத் தெரிய வருகிறது. அதனால் தமிழ்க் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கூட்டுக் கட்சியினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைப் பாவித்து பத்திரிகைகளுக்கு இத்தகைய அறிக்கைகளை விட வேண்டாமென சம்பந்தன் கண்டிப் பான உத்தரவு பிறப்பித்துள்ளதாக நம்பகரமாகத் தெரிய வந்துள்ளது. கொழும்பு அரசியல் வேறு, வடக்கு கிழக்கு அரசியல் வேறு எனத் தெரிவித்திருக்கும் சம்பந்தன் தமது கட்சிக்கு கொழும்பில் அரசியல் செய்யும் நோக்கம் தற்போதைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள கூட்டுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எவராவது யாருக்காவது ஆதரவு தெரிவிக்க விரும்பினால் தத்தமது கட்சியின் பெயரையும் தமது பெயரையும் பாவித்துச் செயற்படுமாறும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளாராம். சட்டம் படிக்கலாமா என ஆராய்ந்து வரும் அனந்தி கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்ற பழமொழி வட மாகாண உறுப்பினர் அனந்திக்குத்தான் சரியாகப் பொருந்துகிறது. அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ் என்று ஒரே பிஸியா இருக்கிறார். தனக்கு ஆங்கிலம் தெரியாது என்போரின் முகங்களில் கரிபூச ஆங்கிலம் கற்பதிலேயே அதிக ஆர்வத்துடன் இரவு பகலாக நேரத்தைச் செலவிடுகிறாராம். ஒருவருக்குப் போட்டியாக சட்டம் படிக்கலாமா எனவும் ஆராய்ந்து வருகிறாராம். பாராளுமன்றத் தேர்தல் இந்த வருடம் நடக்குமோ எனவும் கேட்கிறாராம். இதனால் யாழ். மாவட்டத்தில் ஏற்கனவே எம். பி. யாகவுள்ள இவருக்கு காய்ச்சல் பிடித்துள்ளதாம். மார்ச் 22, 2014 2014 இந்திய தேர்தல் (தோழர்ஸ்ரனிஸ்) இந்தியாவில் நடைபெறப்போகும் 16வது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அணிச்சேர்க்கைகள் ஏப்ரல் வெயிலையும் தாண்டி சூடு பிடித்து தமிழகத்தில் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளது. பத்து வருடங்களாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு இந்தமுறையும் ஆட்சி அமைக்குமா? என்பது ஒரு பெருத்த சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. பா.ஐ.க ஒரு மதவாத கட்சி என்ற பிரச்சாரத்தினை காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் கூறிவருகிறார்கள்,காங்கிரஸ் பல ஊழல்களை செய்த கட்சி என மற்றய கட்சிகள் காங்கிரஸ் மேல் குற்றச்சாட்டினை சுமத்துகிறது கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்றாவது அணி காப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் ஊழல் என காங்கிரஸ் மீதும்,மதவாதம் சிறுபான்மையினரின் எதிரி என பா.ஐ.க மீதும் குற்றங்களை சுமத்துகிறது. (மேலும்.....) புலிகள் அமைப்பின் புதிய தலைவர் கோபி? தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும் அவர் தொடர்பில் சரியான தகவல்களை வழங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர். (மேலும்.....)ரி.ஐ.டியினரால் ஒருவர் கைது பயங்கரவாதக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் (ரி.ஐ.டி) வட்டுக்கோட்டையில் வைத்து சனிக்கிழமை (22) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இரும்பு வியாபாரியான மன்னாரைச் சேர்ந்த காந்தலயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். யாழ்ப்பாணத்திலுள்ள ரி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து குறித்த நபர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, சனிக்கிழமை (22) வட்டுக்கோட்டைப் பிரதேசத்தில் காலையிலிருந்து மதியம் வரையிலும் இராணுவத்தினர் சுற்றுவளைப்புத் தேடுதல் ஒன்றினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. புலிகள் மீதான தடையை நீக்கவும் - மதிமுக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க வலியுறுத்துவோம் என்பது உட்பட மொத்தம் 46 வாக்குறுதிகளுடன் மதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கை இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட இந்த தேர்தல் அறிக்கையில் மொத்தம் 46 தலைப்புகளில் உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் பெயரை இந்திய ஐக்கிய நாடுகள் என மாற்றம் செய்வது முதலாவது உறுதி மொழியாகவும் 7 ஆவது உறுதிமொழியாக தமிழீழ விடுதலைப் புலிகள் தடையை நீக்கக் கோருவோம் எனவும் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுவதாகவும், இந்தியப் பகுதிகளையும் இணைத்துத் தனிநாடு கேட்பதாகவும், ஆதாரம் இல்லாத பொய்யான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மத்திய காங்கிரஸ் அரசு விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்தது. 'விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு வன்முறை இயக்கம் அல்ல் அவர்கள் இன விடுதலைப் போராளிகள்' என நியூசிலாந்து மற்றும் இத்தாலி நீதிமன்றங்கள் தீர்ப்பு அளித்து உள்ளன. எனவே, இந்தியாவில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்டு உள்ள தடையை நீக்க வலியுறுத்துவோம். மார்ச் 21, 2014 இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இந்தியா தீர்மானம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து கொண்டுவந்துள்ள பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை மீது எதிர்வரும் 28ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்னரும் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு முறை கொண்டுவரப்பட்ட பிரேரணைகளுக்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. விமான கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு ரகசிய பேச்சு? மாயமாகியுள்ள மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பயணிகளை மீட்க, கடத்தல்காரர்களுடன் மலேசிய அரசு இரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்று பயணிகளின் உறவினர்கள் உட்பட பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ஆம் திகதி பீஜிங் சென்ற விமானம் மாயமான பிறகு பலரும் பலவித சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், விமான கணினி தொடர்பில் நன்கு தொழில்நுட்பம் தெரிந்த யாரோ, விமான பாதையை மாற்றி பதிவு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. (மேலும்.....)தோழர் மோகன் அவர்களுக்கு அஞ்சலி மன்னார் அடம்பனை பிறப்பிடமாகக் கொண்ட கே.சிவலிங்கம்(தோழர்மோகன்),வயது-45 இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான அவர் 20.3.14 அன்று மதுரை கூடல்புதூர் அகதிகள் முகாமில் காலமானானர். இலங்கையில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறிய காலகட்டங்களில் மண்டபம் முகாமிற்கு இடம்பெயர்ந்த தோழர் மோகன் சில நாட்களின் பின்னர் புழல் அகதிகள் முகாமில் தோழர்களுடன் இருந்து வந்தார். தோழர்களுடன் அன்பாகவும் அவர்களுக்கு உறுதுணையாகவும் இருந்துள்ளார். எல்லோருடனும் அன்பாக பழகும் இயல்பான குணம் அவரிடம் காணப்பட்டது. தனது தயார் இடம் பெயர்ந்து கூடல்புதூர் முகாமில் இருப்பதை அறிந்த அவர், தனது பதிவையையும் அங்கு மாற்றிக்கொண்டு தாயாருடன் இருந்து வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட இருதய நோய் காரணமாக மரணம் அவரை தழுவிக் கொண்டது. அன்னரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். - தோழர்ஸ்ரனிஸ்
கருத்தரங்கம் வேஷம்...! எஸ். ஹமீத்
**சிங்கார
வதனந்தான்
**பளபளக்கும்
பாம்புதான்
**அழகான
ஏரிதான்
**அடர்ந்த
காடுதான்
**தகதகக்கும்
நெருப்புத்தான்
**வெண்ணிற
ஆடைதான் அச்சுறுத்தலால் பொய் சொன்னேன் - வைத்தியர் டி.வரதராஜா இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிட்டதாகவும் தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தினர் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவில் சேவையாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்துள்ளார். மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அனுபவத்தை தெரிவித்ததன் பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்.....)வடமாகாண முதல்வர் கொழும்பு மேயரை முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும்‘கொழும்பு மேயரை முன் உதாரணமாகக் கொண்டு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயற்பட வேண்டும்” என்று கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மில் வேண்டுகோள் விடுத்தார். கட்சி, பேதங்களை சுட்டிக்காட்டி அரசுடன் இணைந்து செயற்படுவதை தட்டிக்களிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்தி பணிகளுக்கு நான் ஒரு போதும் இடையூறாக செயற்பட மாட்டேன் என்று கூறிய அவர், இதனை கருத்திற்கொண்டே இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்தார். கொழும்பு நகர் தற்போது அழகிய தோற்றத்துடன் காட்சியளிக்க பாதுகாப்புச் செயலாளர் பிரதான காரணம். இதனை எவரும் மறக்க முடியாது. எனக்கு ஒரு குற்றச் சாட்டு உள்ளது. நான் அரசுடன் இணைந்து செயற்படுவதாக, நான் ஒரு சிறந்த ஒரு முதல்தர ஐ.தே.க. சார்ந்தவன். அதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை, எனக்கும் கட்சிக்கும், தலைமைத்துவத்திற்கும் பிரச்சினை கிடையாது. அதனை சகலரும் அறிவர். ஆனால் மக்களின் நலன் கருதியே பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து செயற்படுகின்றேன். அதேபோன்று கொழுபில் சட்டவிரோத மாக எந்தஒரு நிர்மாணங்களையும் மேற்கொள்ள நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். இதற்காக எவர் எனக்கு எதனை கூறினாலும் பரவாயில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு திருமலையில் ஹர்த்தால், கண்டன பேரணி நகரம் வெறிச்சோட்டம், கொடும்பாவிகளும் எரிப்புஜெனீவாவில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு எதிராக திருகோணமலை நகரத்தில் நேற்று வியாழக்கிழமை (20) ஹர்த்தால் அனுஷ்டிக்க ப்பட்ட தோடு கண்ட னப் பேரணியும் நடத்தப்பட்டது. சிங்கள, முஸ்லிம் தமிழ் மக்கள் ஒன்றியத்தின் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களால் இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஹர்த்தாலினால் வாகனப் போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்தது. வர்த்த நிலையங்கள் மூடப்பட்டிருந்தன வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பணிகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தன. தனியார் இலங்கை போக்குவரத்து சபை பிரதான பஸ் நிலையங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. அதுமட்டுமன்றி பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவும் மிக குறைந்தே காணப்பட்டது. ஹர்த்தாலில் மூவின மக்களும் பங்குகொண்டு முழுமையான ஆதரவுகளை வழங்கியிருந்தமை முக்கியம்சமாகும். நெடுந்தீவு, தலைமன்னார் கடற்பரப்பில் நேற்றும் அத்துமீறல்இலங்கையில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 172 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று மீண்டும் 74 தமிழக மீனவர்கள் கைதாகியுள்ளனர். நெடுந்தீவுக்கு வடக்கே 13 வள்ளங்களுடன் 53 தமிழக மீனவர்களும், தலைமன்னார் கடற்பரப்பினுள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் அவர்களது 5 வள்ளங்களுடனும் கைதாகியதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார். நெடுந்தீவு அருகே கைது செய்யப்பட்ட 53 மீனவர்களும் காங்கேசன் துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு கடலோர பாதுகாப்பு படையினர் ஊடாக கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். மன்னார் பகுதியில் கைதான 21 மீனவர்களும் அவர்களது 5 வள்ளங்களுடன் தலைமன்னார் கொண்டு செல்லப்பட்டு கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இலங்கையில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த 172 தமிழக மீனவர்களுள் 140 பேர் கடந்த திங்கட்கிழமையும் எஞ்சிய 32 பேர் நேற்று முன்தினம் புதன்கிழமையும் அவர்களது வள்ளங்களுடன் ஒப்படைக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. மலேசிய விமானத்தை தேட இந்திய கடல் பகுதியில் போர்க்கப்பல்கள் நுழைய அனுமதி கேட்கிறது சீனா5 இந்தியர்கள் உட்பட 239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசிய விமானம் கடந்த 8ந் திகதி மாயமான சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனால் அந்த விமானம் குறித்து இதுவரை எந்த தடயமும் கிடைக்காதது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலை நோக்கி பறந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாயமான மலேசிய விமானத்தில் சீனாவை சேர்ந்த 150 பேர் பயணம் செய்தனர். எனவே விமானத்தை தேடும் பணியில் சீனா மும்முரமாக இறங்கியுள்ளது. விமானத்தை தேடும் வேட்டை தற்போது இந்திய கடல் பகுதிகளை நோக்கி திரும்பியுள்ள நிலையில், அந்தமான கடல் பகுதியில் தேடும் பணிக்காக, அதிநவீன மீட்புக்கப்பல் உள்ளிட்ட 4 போர்க்கப்பல் களை இந்திய கடல்பகுதியில் நுழைய அனுமதிக்குமாறு இந்தியாவிடம் சீனா அனுமதி கேட்டுள்ளது. இந்திய கடல்பகுதியை சீனாவிடமிருந்து காப்பதற்காக இந்திய கடற்படை பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சீன போர்க்கப்பல்களை இந்திய கடல் பகுதியில் அனுமதித்தால், இந்தியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீனா தெரிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். எனவே சீனாவின் இந்த கோரிக்கை இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தி உள்ளது. எனினும் இது குறித்து இந்திய பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் குறிப்பாக கடற்படை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20, 2014 ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்க வேண்டாம் – இரா.துரைரெட்ணம்
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானங்களுக்கு எதிராக திருகோணமலையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டாம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பல படுகொலைகள் தொடர்பிலேயே சர்வதேச ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுவருவதாகவும் அதனை அனைத்து தமிழ் மக்களும் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். (மேலும்.....) காணாமல் போன விமானத்தின் இரு பொருட்கள் கண்டுபிடிப்பு? மாயமாகியுள்ள மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்தினது என்று சந்தேகிக்கப்படும் இரண்டு பொருட்கள், செயற்கைக் கோளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தை தேடும் பொறுப்பை அவுஸ்திரேலியா ஏற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் கூறுகையில், 'விமானம் தொடர்பான தேடலுடன் தொடர்புடைய தகவல் செயற்கைக்கோள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்துள்ளது. விஞ்ஞானிகள் அந்த செயற்கைக்கோள் புகைப்படத்தை ஆய்வு செய்து விமானத் தேடலுடன் தொடர்புடைய பொருட்கள் இரண்டு காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதை வைத்து உடனே எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது என்று மலேசிய பிரதமர் கூறியுள்ளார். கடந்த 8ஆம் திகதி 239 பயணிகளுடன் மலேசியாவிலிருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்ட விமானம் காணாமல் போயுள்ளது. தாழ்வாக பறந்த விமானத்தை கண்டோம் - மாலைதீவு மக்கள் எம்.எச் 370 என்ற மலேசிய விமானம் காணாமல் போன கடந்த 8ஆம் திகதியன்று காலை தங்களது தீவில் விமானமொன்று தாழ்வாகப் பறந்ததை கண்டதாக மாலைதீவின் ஹுதா ஹுவாதூ தீவு மக்கள் தெரிவித்ததாக மாலைதீவிலுள்ள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், மாலைதீவுகள், டீகோ கார்சியாவுக்கு இடையில் இவ்விமானத்தை தேடவுள்ளதாகவும் இணையதளச் செய்தி தெரிவிக்கின்றது. மலேசியாவிலிருந்து சீனாவின் பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்ட இவ்விமானம் கடந்த 8ஆம் திகதி காணாமல் போனது. இந்நிலையில், இவ்விமானம் காணாமல் போன அன்று காலை விமானமொன்று மிகவும் தாழ்வாகப் பறந்ததைக் கண்டதாக ஹுதா ஹுவாதூ தீவு மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மலேசிய விமானம் போன்றே வெள்ளை நிறத்தில் சிவப்பு கோடுகள் வரையப்பட்ட விமானத்தை தாங்கள் கண்டதாகவும் அது வடக்கிலிருந்து தென்கிழக்கு நோக்கி அதுவும் மாலைதீவிலுள்ள அட்டு தீவு நோக்கி பறந்ததாகவும் அம்மக்கள் கூறினர். மேலும், இவ்விமானம் தங்களது தீவினூடாக பயங்கரச் சத்தத்துடன் சென்றதாகவும் அம்மக்கள் கூறினர். காணாமல் போன இவ்விமானத்தை தென் சீன கடற்பரப்பிலிருந்து இந்திய பெருங்கடல்வரை தேடப்பட்டது. இருப்பினும், இவ்விமானத்தை பற்றிய எந்தவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை. தற்போது இவ்விமானம் மாலைதீவுகளில் பறந்தது தெரியவந்துள்ளது. மாலைதீவுகளுக்கு தெற்கேயுள்ள தீவொன்று இங்கிலாந்தின் கட்டுப்பாட்டிலுள்ளது. இங்குள்ள டீகோ கார்சியா என்ற இடத்தில் அமெரிக்க இராணுவத்தளம் உள்ளது. இவ்விமானத்தில் கோளாறு ஏற்பட்டு விமானத்தை திசை திருப்பி டீகோ கார்சியா இராணுவத்தளத்திலுள்ள ஓடுபாதையில் விமானத்தை தரையிறக்க விமானிகள் முயற்சித்திருக்கலாமென்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மாலைதீவுகள், டீகோ கார்சியாவுக்கு இடையில் தேடுதல் நடத்தப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத் தமிழ் பேசும் ஜேர்மனியப் பெண் ...
மாயமான விமானத்தின் செயற்கைக்கோள் படத்தை கண்டுபிடித்த ஐதராபாத் சொப்ட்வெயர் பொறியியலாளர்
மாயமான மலேசிய விமானம் மார்ச் 8ம் திகதி அந்தமான் தீவுகளில் மிகவும் தாழ்வாக பறந்தபோது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தை ஐதரா பாத்தைச் சேர்ந்த சொப்ட்வெயர் பொறியியலாளர் வெளியிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் சொப்ட்வெயர் பொறியியலாளராக இருப்பவர் அனூப் மாதவ் எஜ்ஜினா (29). அவர் தனது அலுவலகத்தில் மாயமான மலேசிய விமானம் பற்றி ஏதாவது தகவல் கிடைக்காதா என்று டிஜிட்டல் குளோப் செயற்கைக்கோள் க்யூபிவின் படங்களை ஆய்வு செய்தார். மாயமான விமானத்தின் செயற்கை படத்தை கண்டுபிடித்த ஐதராபாத் கோள் கொப்ட்வெயர் பொறியியலாளர் அப்போது அவர் கடந்த 8ம் திகதி அந்தமான் தீவுகளில் மிகவும் தாழ்வாக பறந்த விமானத்தின் புகைப்படத்தை பார்த்தார். அது மாயமான மலேசிய விமானத்தின் படமாக இருக்கும் என்று அவர் கருதினார். உடனே அந்தப்படத்தை பிரபல சி.என்.என். செய்தி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் அந்த புகைப்படத்தை இங்கிருந்து தான் எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள படம் தற்போது எடுக்கப்பட்டது அல்ல என்றும், 2012ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சிறுநீரக செயலிழப்பு ஏற்படாமல் தடுப்பதில் மிகுந்த அவதானம் அவசியம்சிறுநீரக நோய் தற்போது பாரிய பிரச்சினையாக பரிமாணமடைந்துள்ளது. இந்நோய் நாட்டில் தற்போது மிகவும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. வட மத்திய மாகாணத்தில் காணப்பட்ட இந்நோய் தற்போது ஊவா, கிழக்கு, வடக்கு, தெற்கு மாகாணங்களிலும் பரவியுள்ளது. 8000க்கும் மேற்பட்டோருக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிக் கப்படுகிறது. இந்நோய் ஐந்து நிலைகளில் காணப்படும். எனினும் முற்றிய மற்றும் குணப்படுத்த முடியாத கடுமையான நான்காம் ஐந்தாம் நிலைகளிலேயே அதிகமான சிறுநீரக நோயாளர்கள் இனம் காணப்படு கின்றனர். சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஐம்பது சதவீதமானது சிறுநீரக நோய் சிகிச்சைக்காகச் செலவிடப் படுகிறது. இந்நோய் காரணமாக இலங்கையில் தினமும் சராசரி ஒரு உயிரிழப்பு ஏற்படுகிறது. (மேலும்.....) மார்ச் 19, 2014 என் மனவலையிலிருந்து..... மீண்டு வருமா....? மலேசிய விமானம்!
ஆண்டிக்கா துருவத்தையும், அந்திலாந்து சமுத்திரத்தையும் அடுபங்கரைக்குள் கொண்டு வந்துவிட்டாகிவிட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் உருவாக்கியாவிட்டது. உடலில் காயங்கள் எற்படுத்தாமலே இதயத்தில் ஏற்பட்ட அடைப்பை நீக்கி மனித உயிர்களைக் காப்பாற்றும் வழிமுறைகள் கண்டாகிவிட்டது. வன்னிகாட்டில் இருந்துகொண்டே வடதுருவத்திலும் தென் துருவத்திலும் நிருவாகத்தை நடத்தி தொழில் செய்யும் தொழில் நுட்பம் நடைமுறையில் உள்ளது. அதுதான், 'Virtual Office' உருவாக்கியாகிவிட்டது. இயற்கை அனர்த்தங்களை முன்கூட்டியே அறியும் பலகருவிகள் கண்டு பிடித்தாவிட்டாகி விட்டது. எறும்புகளும், ஈசல்களும், மிருகங்களும், பழங்குடி மக்களும் இத் தொழில் நுட்பத்தை கண்டு பிடித்து பல லட்சம் வருடங்கள் ஆகிவிட்டன என்பது பழம் பெரும் பெருமை என்பது இன்னொரு கதை. எதனையும் மறைத்து செய்ய முடியாத அளவிற்கு சர்வமும் கண்காணிக்கப்படுகின்ற சாட்டிலைற் தொழில் நுட்பம் சர்வ மயமாகிவிட்டது. ஆனால் 239 மனிதர்களுடன் காணாமல் போன மலேசிய விமானம் பற்றி எந்த உருப்படியான தகவல்களும் இன்று வரை வெளியிடப்படவில்லை என்பதுதான் ஆச்சரியம். அதுவும் சீனா, இந்தியா, ரஷ்யா என்ற மிகப் பெரும் நாடுகளின் முக்கோண எல்லைக்குள் இது நடைபெற்று இருக்கின்றது. இவை எல்லாவற்றையும் விட உலகம் முழுவதிலும் வானிலும், கடலிலும், தரையிலும் தனது பகிரங்க, தலைமறைவு கண்காணிப்பகங்களை கணப் பொழுதிலும் செய்து கொண்டிருக்கும் அமெரிக்க கமராக்களுக்கும், சாட்டிலைட்டுகளுக்கும் இது தெரியாமல் போய் இருக்கின்றது என்றால்......? நம்ப முடியவில்லையே. கண்காணிப்பிற்குள் அகப்படக் கூடிய கருவிகளின் செயற்பாடுகளை முழமையாக துண்டித்த பின்பு விமானம் காணமல் போயிருப்பதற்கான வாய்ப்புகள் இவற்றில் ஒன்று. அப்படியாயின் அத்துண்டிப்பை விமானத்தில் ஏற்படுத்தும் திறமையான வல்லுனர் அந்த 239 பெயரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். இதன் பின்பு இவ் விமானம் ஒரு பெரிய 'சக்தி' யின் உதவியுடன் அல்லது தன்னிச்சையாக எங்கேயோ தரையிறக்கப்பட்டிருக்கவேண்டும். விமானம் காணமல் போன பின்பும் பதிலின்றி இயங்கு நிலையிலிருந்த தொலைபேசியும் சந்தேகத்தை வலுவடைய செய்திருக்கின்றது. அண்டத்திலுள்ள வேற்று கிரகவாசிகள் இதனைக் கடத்தி கொண்டு போய்யிருக்க முடியும் என்பதையும் நாம் இதுவரை அறிந்திராத அண்டத்து விஞ்ஞானம் உண்மையாக்கலாம். ஆனால் இவற்றை எல்லாவற்றையும் விட வானில் பறப்பில் ஈடுபட்டு சில மணித்தியாலயங்களின் பின்பு கண்காணிப்பு வளையங்களுக்குள் சிக்காமல் பறக்கும் முறமைக்குள் தள்ளப்பட்டிருக்க வேண்டும் விமானம். இதற்கான சாத்தியப்பாடுகள் மிகக்குறைவு, ஏன் எனில் எல்லா நாடுகளும் தரையில் மட்டும் அல்ல நீரிலும் தமது எல்லைகளை வரையறுத்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றன. இதற்கும் அப்பால் வானத்திலும் தமது எல்லைகளை வரையறுத்து கண்காணிக்கும் செயற்பாட்டில் தற்போது ஈடுபடுகின்றன. உலகுக்கு தெரியாமல் சிறப்பாக அமெரிக்காவிற்கு தெரியாமல் இந்தியா போக்கரணில் தனது அணு ஆயுத ஏவுகணைப் பரிசோதனையை ஜோர்ஜ் புஷ் காலத்தில் செய்து முடித்ததை உலகம் வியந்து பார்த்ததையும் நாம் மறந்து விடக் கூடாது. மறைப்பதற்கான தொழில் நுட்பங்கள், கண்காணிப்பதற்கான தொழில் நுட்டபங்களை மீறியும் செயற்படுத்தலாம் என்பதற்கு இது நல்ல உதாரணம். ஆனால் இது மிகப் பெரிய நாடுகளின் பலத்தினால் மட்டும் முடியும். அப்படியாயின் இந்த விமானத்தின் மறைப்பிற்கு பின்புலத்தில் ஒரு 'அதிபுத்தி' உள்ள மூளையும் ஒரு பலமான சக்தியின் (பெரும்பாலும் நாடு) கரங்களும் இருப்பதற்கான சாத்தியப்பாடுகளே அதிகம். விமானம் கடலில் அல்லது தரையில் விழுந்து அழிந்து போவதற்கான சாத்தியப்பாடுகளைத் தவிர்த்து பத்திரமாக தரையிறகப்பட்டு பதுக்கி வைத்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் எப்பதே என் 'சிறப்பு?' அறிவுக்கு தோன்றியுள்ள முடிவாகும். பலம்மிக்க கரங்களின் சித்து விளையாட்டுகளுக்கு மத்தியில் இதில் பயணம் செய்த உறவுகளின் வேதனைகள் மகா பெரியது. எனவே எவ்வழியிலும் இவர்கள் மீண்டு வரவேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய அவாவும் கூட. இதற்கு முன்பும் சில விமானங்கள் காணமல் போயிருக்கின்றன. அவை பெரும்பாலும் தொழிநுட்பம் வளர்ச்சி குறைந்த காலப்பகுதிகளில் நடைபெற்றவை. மேலும் அவ்வாறு காணமல் போனவை குறுகிய காலப்பகுதியில் விபத்திற்குள்ளான தடயங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் மலேசிய அரசின் ஒழித்து வைத்து வெளியிடும் அறிக்கைகளும், அளவோடு பேசும் சீனாவின் அறிக்கைகளும், வாக்குறுதி அளித்தால் மட்டும் தேடுதலை தொடருவோம் என்ற இந்தியாவின் செயற்பாடுகளும், அதிகம் அலட்டிக்கொள்ளாத அமெரிக்காவின் செயற்பாடுகளும் சந்தேகங்கள் வலுப்பெற காரணமாக அமைகின்றன. இதில் சுவாரிசம் என்னவென்றால் எம்மவரின் அம்புலி மாமா கதை..... 'பொட்டனைக் கொல்ல இந்த விமானத்தை கடத்தினார்கள் 239 பேரைப் பலி கொடுத்தார்கள்' என்பதுதான்! (Saakaran) (மார்ச் 19, 2014) காணாமல்போன மலேசிய விமானத்தை இலங்கையிலும் தரையிறக்கும் பயிற்சி கடத்தப்பட்ட விமான ஓட்டியின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட மென்பொருளில் இலங்கையிலும் இவ்விமானம் இறக்கப்படலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விபரங்கள் உள்ளடங்கியிருக்கின்றன. காணாமல் போனதாக அறிவிக்கப்படும் மலேசிய விமானத்தை செலுத்திய விமான ஓட்டியின் வீட்டில் இருந்து விமானம் ஓட்டுவதற்கான வழிகாட்டும் சாதனத்தை உள்ளடக்கும் மென்பொருள் (software) ஒன்றில் விமானத்தை இறக்குவதற்கான பயிற்சி பெறும் 5 இறங்கு தரைகளின் குறிப்புகள் இருந்ததாகவும் அதில் ஒன்று இலங்கை சம்பந்தப்பட்டதானது என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. தாங்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய மென்பொருளில் மாலைத்தீவு குடியரசின் மாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று விமான நிலைய ங்களும் டியாகோ காஸியாவில் அமெரிக் காவின் இராணுவத் தளத்தைக் கொண்ட விமான நிலையமும் குறிப்பிடப் பட்டிருக்கிறது. (மேலும்.....) வாக்குறுதிகளை வழங்கத் தவறியமையால் அரசுக்கு ஆதரவில்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தாமையினால், எதிர்வரும் தேர்தல்களில் எமது கட்சி தனித்து போட்டியிடுவதென கட்சியின் உயர்மட்டக்குழு முடிவெடுத்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். 'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எமது கட்சியின் அங்கத்தவரான அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி தருவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. ஆனாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆகையினால் எதிர்வரும் எந்தவொரு தேர்தலிலும் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடாது தனித்து போட்டியிடுவதென எமது கட்சியின் உயர்பீடம் ஏகமனதாக தீர்மானித்திருக்கிறது. அதற்கிணங்க மேல்மாகாணத்திலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுகின்றோம். எமக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றினால் எதிர்காலத்தில் அவர்களுடன் சேர்ந்து போட்டியிடுவது பற்றி மீண்டும் தீர்மானிப்போம். தெஹிவளை பள்ளிவாசலில் சத்தம் அதிகமென பொலிஸார் தேவையில்லாமல் முறையிட்டு, இறுதியில் நல்ல தீர்ப்பு கிடைத்திருக்கிறது. கொழும்பில் இருக்கின்ற இரவு விடுதிகளின் சத்தங்களை ஒழிக்கமுடியாத பொலிஸார், அநாவசியமாக மத விடயங்களில் தலையிடுகின்றனர். தேர்தல் வந்துவிட்டால் தங்களை வீரர்கள் போல் காட்டிக்கொள்வதில் ஹக்கீம் திறமையானவர். ஆனால், தேர்தல் முடிந்துவிட்டால், இரண்டு, மூன்றாக மடிந்து மண்டியிடுவதை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்திருக்கின்றோம். ஆகையினால், இன்றைய இவரின் வீரப்பேச்சு அவரின் வாக்கு வேட்டை என்பதை யாவரும் அறிவார்கள். அறுதிப் பெரும்பான்மையுடன் இருக்கும் அரசாங்கத்திற்கு இவரின் வீராப்பொன்றும் பெரிய விடயமல்ல' என்றார். கிளிநொச்சி கைதுகள் தொடர்பில் ஜெனீவாவில் விளக்கம் திருமதி பாலேந்திரன் ஜெயகுமாரி மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான அருட்தந்தை பிரவீன் மற்றும் ருக்கி பெர்னாண்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றமை குறித்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் நேற்று விரிவான அறிக்கை ஒன்றை ஜெனீவாவில் உள்ள பல நாடுகளின் தூதரங்களுக்கும், பல்வேறு சர்வதேச அமைப்புக்களுக்கும் நேற்றைய (18) திகதியிட்டு அனுப்பியிருந்தது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- திருமதி பாலேந்திரன் ஜெயகுமாரியின் கைது மற்றும் தடுப்புக் காவல் சம்பந்தமாக ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25ஆவது அமர்வை ஒட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பான தவறான புரிந்துகொள்ளல் ஏற்படாமல் தவிர்ப்பதற்காக இலங்கை அரசு பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. (மேலும்.....)ருக்கி பெர்னாண்டோ, அருட்தந்தை பிரவின் விடுதலை காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு அனுசரணையாக செயற்பட்டு வந்த நிலையில் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ருக்கி பெர்னாண்டோ மற்றும் அருட்தந்தை பிரவின் மகேசன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இன்று அதிகாலை 1.30 மணியளவில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார். ஆயுதங்களுடன் 6 மாணவர்கள் கைது பயங்கரமான ஒரு தொகுதி ஆயுதங்களுடன் ஒரே பாடசாலையைச்சேர்ந்த மாணவர்கள் அறுவரை கம்பஹா நாரன்வலயில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வலான ஊழல் ஒழிப்பு பிரிவினராலேயே இவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். இவர்களில் பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களிடம்; ஐந்து பெற்றோல் வெடிகுண்டுகளும், சைக்கிள் இரும்புக் குண்டுகளும், மரத்திலான பொய்துப்பாக்கி, கூரான இரண்டு கத்திகள் மற்றும் வீச்சுக்கத்தி என்பன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். பெற்றோல் குண்டு மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ளதாவும் கைது செய்யப்பட்ட அந்த பெண் குறித்த மாணவனின் தாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். மார்ச் 18, 2014 என் மனவலையிலிருந்து……. விளையாட்டுப் போர்களை திருவிழாக்களாக மாற்றுவோம்! (சாகரன்)
யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கிடையில் கிரிக்கட் போட்டிகள் என்றால் அது பிரபலமானது. கொழும்பு கண்டி போன்று இலங்கையின் பெரு நகரங்களிலும் இன்னும் பிரபலம் இது. உதைபந்தாட்ட போட்டிகளுக்கு இருக்கும் மவுசு அளவிற்கு இதற்கும் இருக்கின்றது. அதுவும் யாழ்ப்பாணத்து பிரபல கல்லூரிகள் பல ஆண்கள், பெண்கள் கல்லூரி என தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் கல்லூரிகள் ஆகும். மாணவர்களின் விடலை மனசுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகளை ஊஞ்சல் ஆட்டும் நிகழ்வாக இந்த விளையாட்டுப் போட்டிகளில் மிளிரும். பெண்கள் கல்லூரிகளுக்கு தங்களைப் பற்றிய செய்திகள் பறக்கும் அளவிற்கு விளையாட்டுகள் அனல் கக்கும். ஏதோ இதன் மூம்தான் ஒவ்வொருவரும் தமது பிறவிப்பயனை அடைந்தது போன்று கொணடாடி மகிழ்வர். எங்கள் பலரின் சினிமா ஆட்டோகிராப் இதுதான். இவற்றிற்கு உச்சம் வைத்து போல் ‘Big Match’ எனப்படும் கிரிக்கட் போட்டிகள் அமையும். யாழ்ப்பாணத்தில் மூன்று பிரதான போட்டிகள் வழமையாக நடை பெறுகினும் யாழ் மத்திய கல்லூரி - யாழ் பரியோன்வியா கல்லூரி இடையேயான கிரிக்கட் போட்டியே அதிகம் பிரபலமானதும் களை கட்டுவதாகவும் இருக்கும். இதற்கு காரணம் இரு பாடசாலைகளும் யாழ் நகரின் மத்தியில் அமைந்த பாடசாலைகள். இரண்டு கல்லூரிகளும், கிரிக்கட் விளையாட்டுத் தரத்தில் முன்னிலை வகிப்பது மற்றொரு காரணம். மூன்றாவதும் முக்கியமான காரணி? தேவதைகள் அதிகம் படிக்கும் வேம்படிமகளிர் கல்லூரி, சுண்டுக்குளி மகளிர் கல்லூரிகளின் கடைக்கண்பார்வை அதிகமாக வீழ்வதுவும் இந்த கிரிக்கட் போட்டியில்தான். மற்றை இரண்டு ‘Big Match’ உம் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி - காட்லி கல்லூரி; சென்ர் பற்றிக்ஸ் கல்லூரி - யாழ்ப்பாணக் கல்லூரிகளுக்கு இடையான போட்டிகள் இதன் அளவிற்கு பிரபல்யமானவை அல்ல. ஆனால் காக்கைகும் தன் குஞ்சு பொன் குஞ்சு போல் அவ் அவ் கல்லூரிகளுக்கு அவை எல்லாம் திருவிழாக்கள் தான். நான் யாழ் இந்து கல்லூரியில் எனது உயர்தர வகுப்பில் படித்த 1970 களின் நடுப்பகுதிகளில் எல்லாம் நாம் பாடசாலைகள் என்ற வேறுபாடுகளை மறந்து இந்த கிரிக்கட் திருவிழாகளில் கலந்து கொள்வோம். பாடசாலை நிர்வாகத்தின் அனுமதியுடன் குதியாட்டம் போட மறுப்பின்றி கிடைக்கும் இலவச அனுமதிகள் இவை வாய்ப்பு கிடைத்தால் நாம் பிளந்து தள்ள மாட்டோம் அதுவும் ஆண்கள் விடுதியில் காய்திருக்கும் எமக்கு கம்பு என்ன நல் பூஞ்சோலையே கிடைத்த சந்தோஷம். கூடவே கூக்குரலுடன் கவனத்தை கவரும், திருப்பும் செயற்பாடுகளில் சில 'வெற்றி'களையும் எமது தேவதைகளிடம் கண்டும் இருக்கின்றோம். இவ் கிரிக்கெட் திருவிழாக்களில் ஏதாவது ஒரு அணிக்காக உயிரை விடுவோம் என்ற அளவிற்கு ஆதரவாக செயற்பட்டும் இருக்கின்றோம். ஆனால் உயிரை நாம்யாரும் விடவும் இல்லை. எடுக்கவும் இல்லை. இந்த திருவிழாவிற்கு முதல் தினம் காங்கேசன் துறையிலிருது தினமும் கொழும்பு செல்லும் தாபால் புகையிரதம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வழமைக்கு மாறாக மாலை 7:15 இற்கு புறப்பட முடியாமல் எங்களின் ஆரவாரத்தினால் 1 மணி நேரமாவது தாமத்தித்தே புறப்படும். ஏதோ வெற்றி வீரர்கள் போல் நாம் எல்லாம் நாம் ஆதரிக்கும் கல்லூயின் கொடியை தாங்கி பயணிகள் தளத்தில் குறுக்கு நெடுக்காக ஓடுவோம். எதிர் அணியினரும் அப்போது போட்டியாக அவ்வாறு செய்வார்கள். ஆனால் நாம் ஆதரவு, எதிர் அணிக்கு அப்பால் எதிரிஅணியாக மற்ற அணியைப் பார்க்கவில்லை அப்போது. மிஞ்சிபோனால் எதிர் திசைகளில் ஓடும்போது தோள் மூட்டுக்கள் உரசும், சற்றே உரத்த கூச்சல் எதிர் திசைகளில் கொடிகளை தாங்கிய வண்ணம் ஓடிச் செல்வோம். அவ்வளவே! மாணவர்களுக்கு இடையேயான குறும்பும், உற்சாகங்களும் கொப்பளிக்கும். இங்கு கத்திகளுக்கோ, கம்புகளுக்கோ,கலகங்களுக்கோ இடம் இருந்தது இல்லை. எங்களிடம் அப்படியான சிந்தனைப் பூக்களை யாரும் விதைக்கவும் இல்லை. ஆனால் இன்று.............? ஆயுதக் கலாச்சாரம் விட்டுச் சென்ற நிந்தனைப் பூக்கள் கத்திகளையும், பொல்லுகளையும் ஏன் வெடிக்கும் ஆயுதங்களையும் மிச்சமாக விட்டுச் சென்றுள்ளன. இதற்கும் மேலாக கூடவே வன்முறைகளையும், கொலை வெறிகளையும் விட்டுச்சென்றிருக்கின்றது. கூடவே உயிர்பறிப்புக்களை சாதாரணமாக்கி மலினப்படுத்திவிட்டும் சென்றிருக்கின்றன. இதுதான் இன்றைய இரு மாபேரும் கிரிக்கட் திருவிழாக்களும்; 'விழா' என்ற அடைமொழியிலிருந்து 'போர்' என்று ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டு கொல்லும்? அளவிற்கு சென்றிருக்கிறது. வெல்லுவதற்கு பதிலாக கொல்லும் என்பதை நடந்து முடிந்து யுத்தம் போல் முடித்திருக்கின்றது ஒரு மாபெரும் கிரிக்கட் போட்டி. மற்றயதில் நடுவரின் தீர்ப்பை ஏற்காமல் போட்டியை (இடை)நிறுத்தி வைக்கும் அளவிற்கு விளையாட்டுப் போட்டிகளை கனவான் செயற்பாடாக எடுக்காமல் வெற்றிக் கொண்டாட்டங்களை வெறிக் கொண்டாட்டங்களாக ஆக்கியிருக்கின்றன. உலக சந்தையில் விளையாட்டு போட்டிகள் என்பது வியாபாரம் ஆக்கப்பட்ட நிலையில் இந்த வன்முறைகளும், கொலைகளும், சூதாட்டங்களும் மலிந்துதான் கிடக்கும், மாறாக இவை திருவிழாக்களாக இருக்கமாட்டாது. எதிர்காலத்தில் ஒரு சீரிய பண்பட்ட சமூகத்தை கட்டியமைத்து விளையாட்டுப் போட்டிகளை மாபெரும் போர் என்று இல்லாமல் திருவிழாக்களாக மாற்றுவோம். யுத்தத்தின் வடுக்களை. வெறிகளை மனங்களிலிருந்து நாம் அகற்றவோம். வெறிகளை அகற்றி வெற்றிகளை நிறுவி நிற்போம்.விளையாட்டுப் போர்களை தவிர்த்து விளையாட்டுத் திருவிழாக்களை கொண்டாடுவோம் (Saakaran)(மார்ச் 18, 2014) யாழ் பொதுநூலக உணவகத்தில் 09.03.2014 சர்வதேச பெண்கள் தின நிகழ்வு.
பெண்கள் விழிப்புணர்வு அரங்கத்தின் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு 09.03.2014 அன்று யாழ் பொது நூல் நிலைய உணவு விடுதியில் நிகழ்த்தப்பட்டது. யாழ்ப்பாணத்தின் சில கிராமங்களைச் சேர்ந்த பெண்களும் சமூக ஆர்வலர்களும் பங்கு பற்றினர். (மேலும்.....) மார்ச் 17, 2014
mugunthan வட்டுக் கோட்டையைப்
பிறப்பிடமாக கொண்ட தோழர் முருக நேசன் 1980களின் முற்பகுதியில் இலங்கை விவசாய
பீடத்தின் அனுராதபுரம் மகா இலுப்பள்ளமையிலும் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும்
ஆசிரியராக கடமையாற்றியவர்.
(மேலும்.....) மலேசியா விமானம் இரணைமடுவில்?
காணாமல் போன நிலையில் தேடப்பட்டுவரும் மலேசியன் எயார்லைன்ஸ் விமானம், தமிழீழ
விடுதலைப்புலிகள் பயன்படுத்திய இரணைமடு விமான ஓடுபாதையில் தரையிறக்கப்பட்டிருக்கலாம்
என்று ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிஸினஸின்சைடர் என்னும்
ஆங்கில இணையத்தளம் வெளியிட்ட தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, காணாமல் போன
மலேசிய விமானம் இறுதியாக ரேடாரில் பதிவாகிய உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா மற்றும்
வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு இடைப்பட்ட இடத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 4 மணி
நேரம் பயணித்துள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ ரேடார் தரவுகளின் அடிப்படையில் 239
பயணிகளுடன் இந்த ஜெட் விமானம் தீவிரவாதிகளால் அல்லது விமான குழுவினால்
கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கலாம் என தெரியவருகிறது.
(மேலும்.....) தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும் காலம் கனிகிறது. ஜனநாயக ரீதியான போராட்டங்களின் மூலமாக சகல இனங்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய சமத்துவமானதும், சாத்தியதுமான தீர்வுகளை நோக்கி நகரும் கட்டத்திற்கு எம்மை புடம்போட்டுக் கொள்ளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். (மேலும்.....) இலங்கை மிக சரியான பாதையில் முன்னேறி வரும் நாடு - சீன தூதுவர் இங்கையைப் பற்றி வேறு நாடுகளிலி ருந்து சிலர் தவறான அபிப்பிராயத்தைத் தெரிவிக்கின்ற போதும் நான் இந்நாட்டில் கண்டுணரும் உண்மை நிலையை அவர்களுக்குத் தெளிவுபடுத்தத் தவறுவதில்லை என இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் ஹெனயுங் தெரிவித்தார். காலி - மாத்தறைக்கான அதிவேக நெடுஞ்சாலை திறப்பு விழாவில் சிறப்பதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்; இலங்கை தவறான வழியில் பயணிக்கும் ஒரு நாடா என என்னிடம் கேட்டவர்களுக்கு, ‘இல்லை இலங்கை மிக நேர்மையான பாதையில் பயணித்து முன்னேறி வரும் நாடு’ என நான் கூறினேன். ஏனெனில் நான் பதவியேற்று இரண்டு வருடங்கள் இலங்கையில் தங்கியுள்ள காலத்தில் நான் கண்டுணர்ந்த உண்மை அது எனவும் தெரிவித்தார். நான் இலங்கைக்கான சீனத் தூதுவராகப் பதவியேற்று வந்த இரண்டு வருடங்கள் ஆகின்றன. நாளுக்கு நாள் இந்த நாடு முன்னேற்றமடைந்து வருவதை நான் கண்கூடாகக் கண்டு வருகிறேன். இலங்கை உலகின் முக்கிய அவதானத்திற்கு உட்பட்டு வரும் நாடு. இந்த நாட்டைப் பற்றி பலரும் பலவிதமாகக் கூறினாலும், இது சரியன பாதையில் பயணிக்கின்ற நாடு என்பதே எனது கருத்து, இந்த நாட்டில் இன்னும் மேற்கொள்ளக்கூடிய பல விடயங்கள் இருப்பது உண்மை. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு கடந்த நாலரை ஆண்டுகளில் ஆசியாவில் மட்டுமன்றி முழு உலகிலும் பிரபல்யமான நாடாக இலங்கை மாறி வருகிறது எனவும் அவர் தெரிவித்தார். தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை தெஹிவளை -- கல்கிசை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அமைந்திருக்கும் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை மேற்கொள்ள வேண்டாமென நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வாழ் முஸ்லிம்கள் மத்தியில் சற்று பதற்றமான சூழல் தென்பட்டது. தொழுகைகள் நடத்தப்படும் பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாமென்ற அச்சத்தின் காரணத்தினாலேயே அத்திடிய மஸ்ஜித்துல் ஹிபா, களுபோவில மஸ்ஜித்துல் தாரூல் சாபீய், தெஹிவளை தாரூல் அர்க்கம் ஆகிய மூன்று பள்ளிவாசல்களிலும் தொழுகைகளை நடத்த வேண்டா மென பொலிஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். குறித்த பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் உள்ள சில பெளத்த மத குருமாரும், பெளத்தர்களும் இணைந்து மேற்படி பள்ளிவாசல்கள் மூன்றும் சட்டவிரோதமானவை என பொலிஸாரிடம் முறையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் இன்று புதன்கிழமை சம்பந்தப்பட்டோருடன் பேச்சுவார்த்தையொன்று மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தேவைப்படும் பட்சத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவர விருப்பதாகவும் அமை ச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள் ளார். இதேவேளை, தெஹிவளை பிரதேச பள்ளிவாசல்களில் தொழுகைகளை மேற்கொள்ளவேண்டாமென பொலிஸா ரால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை மறுத்துள்ளர். மார்ச் 16, 2014 மீண்டு வருமா ஆர் 370? திட்டமிட்டே தொடர்பு துண்டிப்பு, உலகுக்கு அறிவித்தது மலேசியா
“நிச்சயம் விமானம் கடத்தப்பட்டிருக்க வேண்டும்" என்று தந்தையொருவர் கதறியழும் காட்சியை தொலைக்காட்சிகளில் பார்க்கக் கூடியதாகவிருந்தது. " எனக்கு அவன்தான் ஒரேயொரு பிள்ளை." அவனில்லாவிட்டால் நான் வாழ்ந்தென்ன பயன்" என்று அண்மையில் காணாமல்போன மலேசிய ஏர்லைன்ஸ_க்கு சொந்தமான ஆர் 370 விமானத்தில் பயணித்த 239 பயணிகளில் சீனாவைச் சேர்ந்த ஒருவரின் தந்தை அழும் காட்சிகளையும் இவ்விமானத்தில் பயணித்த ஏனையோரின் உறவுகளின் நிலைமைகளைப் பார்க்கும் போதெல்லாம் நடுவானில் அந்தரத்தில் பறத்தலின் அபாயம் சில்லென்று தண்டுவடத்தினைத் தாக்கிப்போகும். (மேலும்.....) அருமைலிங்கம் ஐயா அவர்களுக்கு அஞ்சலி
மட்டக்களப்பு குருக்கல்மடத்தை பிறப்பிடமாகவும்,கல்லடியை வதிவிடமாகவும் கொண்ட அருமைலிங்கம் ஐயா 14.3.14 அன்று அதிகாலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பல செயற்பாடுகளில் பல காலகட்டங்களில் அவரது பங்களிப்பு காத்திரமானதும் யாராலும் இலகுவாக புறந்தள்ள முடியாததுமாகும்.குறிப்பாக இந்திய இலங்கை ஒப்பந்த காலகட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது. வடக்கு-கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக இருந்த அவா,; பல மக்கள் நல பணிகளை செய்துள்ளார். ஆரையம்பதியில் அமைந்திருந்த கட்சி காரியாலயத்தின் அவரது பணியை என்றும் அப்பகுதி மக்கள் மறக்கமாட்டார்கள்.கந்தசாமி தோழருடன் தொழிற்சங்க நடவடிக்கைளிலும் மிகவும் பயனுள்ள பணிகளை அவர் ஆற்றினார்.மட்டக்களப்பு நகரத்தில் கட்சியின் தொழிற்சங்க காரியாலயத்தைத் திறந்து அதை நல்ல முறையில் செயற்பட வைத்தார். (மேலும்.....) சுமந்திரன் மீது கூட்டமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கை? மீண்டும் ஜெனீவாவிற்கு பயணமாகியுள்ள அனந்தி சசிதரனைக் குறிவைத்துத் தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் கொழும்பில் அவசர கூட்டமொன்றை கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஜெனீவாவில் பேசுவதற்கான உரிமையினைப் பறித்தெடுத்துக்கொண்டது தொடர்பாக அனந்தி யாழ். ஊடக அமையத்தில் நடந்த பத்திரிகையாளர் மாநாட்டில் போட்டுடைத்திருந்தார். இதனால் கடும் கோபமுற்றிருந்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் மூவர் சந்தர்ப்பம் பார்த்திருந்த நிலையில், ஜெனீவா கூட்டத்தொடரில் கலந்துகொள்ள அனந்தி மீண்டும் அங்கு பயணமாகியிருந்தார். அவரது பயணத்தினை குழப்பியடிக்க இறுதி நேரத்திலும் சுமந்திரன் தரப்பு மேற்கொண்ட முயற்சி பிசுபிசுத்துப்போயிருந்தது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவி லிருந்து திரும்பியிருந்த சுமந்திரன் மற்றும் இருவர் அவசரமாக ஒன்றுகூடி ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளை பற்றி ஊடகங்களிற்கு தகவல் ஏதும் வழங்கப்பட்டிருக் கவில்லை. எனினும் அனந்தி சசிதரன் இதுவரை தமிழரசுக்கட்சியின் உறுப்பினராக கூட சேர்த்துக்கொள்ளப் படாத நிலையினில், அவர் மீது எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக் கையினையும் எடுக்க முடியாதென தெரிவித்த அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரொருவர், தேவையாயின முதலில் சுமந்திரனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தாம் இணைந்து கட்சி தலைமையிடம் பிரேரணையினை முன்வைக்கப்போவதாக தெரிவித்தார். மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?மலேசியாவின் மாயமான விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் கடத் தப்பட்டுள்ளதை புலனாய்வாளர்கள் உறுதி செய்துள்ளதாக மலேசிய அரசு அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி கூறுகையில், விமானம் கடத்தப்படு வதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளது. விமானம்கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை விமானம் எங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் தெரியவில்லை என்று தெரிவித்தார். சக விமானி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தமிழருக்கு தமது சுயரூபத்தை வெளிக்காட்டிய சர்வதேசம்சர்வதேசம், சர்வதேசம் எனக் கூறி உலக நாடுகளின் பின்னால் சுற்றித் திரிந்து தமது சொந்த நாட்டிற்கு எதிராகவே விசாரணை நடத்தி சட்டநட வடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து வந்த தமிழ் அரசியல் தரப்பினருக்கு அச்சர்வதேசம் ஜெனீவாவில் நல்லதொரு பாடத்தைப் புகட் டியுள்ளது. உள்நாட்டு பயங்கரவாத அழிப்பு யுத்தத்தில் எமது படைவீரர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறிய தமிழ்த் தரப்பு உள்நாட்டில் அதனைத் தீர்க்க முயலாது சர்வதேசத்திடம் நியாயம் கேட்டுப் புறப்பட்டு இன்று இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.(மேலும்.....) மார்ச் 15, 2014 தாய்மை தன்னை இழந்தும் சேயை காக்குமோ...? காக்கும்!
(நன்றி: ஜெகன்) புகைப்படம் எடுக்கும் கரம் தாயைக் காக்காதோ....? காக்க வேண்டும் - - சாகரன்
சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும் இவர் முன்னாள் போராளி. தனையன் தாயைக் காப்பானோ....?
இவர் முன்னாள் போராளி. அவரின் ஒரு கை சிதைந்து, உருக்குலைந்து, எலும்புகளுக்கு பதிலாக தகடுகள் வைக்கப்பட்டு இயங்கமுடியாதிருக்கிறது. மற்றைய கையினாலும், வாயினாலுமே தண்ணீர் அள்ளுகிறார். உடைமாற்றுதற்கும் மற்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. மூன்றரை வயதான மகனை பராமரிக்கவும் உதவி தேவைப்படுகிறது. தனது சிதைந்துபோயிருக்கும் கையினை அகற்றாது காப்பாற்றிக் கொள்வதற்கான ஒரு அறுவைச்சகிச்சைக்காக தனது கிராமத்தில, 20.000 ரூபாய் வட்டிக்கு எடுத்தார். மாதாந்த வட்டி 1200 ரூபாய் கொடுக்கிறார். அவருடைய மாதாந்த வருமானம் 2000 ரூபாய். அதுவும் நிரந்தரமில்லை. ஒரு மாதத்திற்கு 800 ரூபாயே அவர்களிடம் இருக்கிறது. அறாவட்டிக்கு பணம் கொடுத்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள்; போராட்டத்தின் பெயரால் சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்ட புலம்பெயர் அமைப்புக்களோடும், அதற்குப் பொறுப்பாக உட்கார்ந்திருக்கும் பெரு மைந்தர்களோடும் ஒப்பிடும் போது.(நன்றி: ஜெகன்) அமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக்கி வன்முறைகளும் 11ஆயிரம் படுகொலைகளும் பதிவுஅமெரிக்கா பலதரப்பட்ட மனித உரிமைத் துஷ்பிரயோகங்களில் ஈடுபட்டுள்ளதென்றும் கெளடனாமாவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் வருடக்கணக்கில் கைதிகளை தடுப்புக் காவலில் வைத்திருத்தல், ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுத் தாக்குதல்கள் நடத்துதல், தேசிய பாதுகாப்பு அமைப்பின் மூலம் நாடுகளை வேவுபார்த்தல், நியாயமற்ற முறையில் மரண தண்டனை நிறைவேற்றுதல், துப்பாக்கிச் சூட்டு வன்முறை சம்பவங்கள் போன்ற மனித உரிமைகள் மீறல்களை அமெரிக்கா செய்துவந்துள்ளதாக அமெரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். (மேலும்.....) காலி - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை இன்று திறப்பு
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலி பின்னதுவ முதல் மாத்தறை கொடகம வரையிலான அதிவேக நெடுஞ் சாலை இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் மக்கள் பாவனைக்குத் திறந்துவைக்கப்படவுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் உள்ள சுபவேளையில் ஜனாதிபதி இதனைத் திறந்துவைக்கவுள்ளார். 30 கிலோ மீற்றர் நீளமான காலி மாத்தறை அதிவேக நெடுஞ் சாலை 18 பில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட் டிருப்பதுடன், இவ்வீதியில் 5 இடைமாறும் இடங்களும், 8 பெரிய பாலங்களும், 236 சிறிய பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. நான்கு வழிமார்க்கங் களைக் கொண்ட இவ்வீதி 19 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பின்னதுவை யிலிருந்து மாத்தறை வரையான பகுதியில் இமதுவ, கொக்மாதுவ ஆகிய இடங்களில் இரண்டு நுழை வாயில்கள் அமைக் கப்பட்டுள்ளன. இந்த அதிவேக நெடுஞ்சாலை திறக்கப்பட்டதும் மாத்தறையிலிருந்து கொட்டாவைக்கு ஒன்றரை மணித்தியாலங் களில் பயணிக்க முடியும். தயாநிதி மாறனை எதிர்த்து ஆம் ஆத்மியில் ஞாநி மூத்த பத்திரிகையாளரும் அரசி யல் விமர்சகருமான ஞாநி ஆம் ஆத்மி கட்சியில் இணைகிறார். அவர் அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. கட்சியில் சேருவது குறித்து தொடக்கத்தில் பிடிகொடுக்காமல் இருந்த ஞாநி தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கும் சு+ழலில் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் முடிவை எடுத்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் நாடு முழுவதும் ஏராளமான பிரபலங்கள் இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த உதயகுமார் உள்ளிட் டோரும் சில நாட்களுக்கு முன்பு ஆம் ஆத்மியில் இணைந்தனர். பத்திரிகைகளில் அரசியல் விமர்சகராக மட்டுமே அரசியலோடு தொடர்புகொண்டிருந்த அவர் இப்போது முதல்முறையாக ஆம் ஆத்மி கட்சியின் மூலம் நேரடி அரசியலில் கால் பதிக்கிறார். ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளது என்று இன்னமும் முடிவுசெய்யப்படாவிட்டாலும் ஆ.ராசா, தயாநிதி மாறன் இருவருக்கும் எதிராக வலுவான வேட்பாளர்களை நிறுத்துவதில் மட்டும் உறுதியாக இருக்கிறது. அரசியல் விமர்சகர் ஞாநிக்கு அரசி யல் புதிதல்ல. ஒரு முன்னணி ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றிய காலத்திலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் அவர். பின்னர் இடதுசாரி இயக்கம் சார்ந்த பல மேடைகளில் ஒரு விமர்சகராக பேச்சாளராக முழங்கியவர். பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது கொடுமை மிக்க பாவச் செயல்சுகமும், சுமையும் இணைந் ததுதான் வாழ்க்கை, பிரச் சினையே இல்லாமல் எம் மால் வாழ முடியாது. ஒருவேளை பிரச்சினையே இல்லாமல் நீங்கள் வாழ்ந்தால் கூட அது உப்பில்லாத உணவுக்கு சமமாகும். வலியும் வேத னையும் ஒவ்வொருவருக்கும் வந்தே தீரும். அவ்வேளைகளில் யார் சம யோசிதமாகச் செயல்படுகின்றார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றிகளை குவிப்பார்கள். ஒவ்வொரு பருவமும் எமக்கு வாழ்க்கையில் தடைதாண்டும் பரீட்சை தான். இதில் குழந்தைப் பருவம், இளமைப் பருவம், முதுமைப்பருவம் இம் மூன்று பருவங்களும் இயற்கையின் நியதி, அதிலும் இறுதியாக வரும் முதுமைப் பருவம் அனுபவத்தின் முதிர்ச்சி, பட்டறிவின்தெளிவு, வாழ்க்கை என்றால் இதுதான், உலகம் என்றால் இதுதான் என்ற கசப்பையும், இனிப்பையும் கற்றுக்கொண்ட ஒரு முழுமையான பாடப்புத்தகமே முதுமைப்பருவம். (மேலும்.....) மார்ச் 14, 2014 மலேசிய விமானம் கடத்தப்பட்டது? அமெரிக்க புலனாய்வாளர்கள் புது தகவல், விமானம் மாயமான பிறகும் 4 மணிநேரம் பறந்ததாம்
காணாமல் போன மலேசிய விமானம் இறுதியாக காணப்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட நேரத்திற்கு பின்னர் 4 மணி நேரமாக வானில் பறந்ததாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அந்த அதிகாரிகள் அந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக கருதுவதாக அமெரிக்க புலனாய்வாளர்கள் சந்தேகிப்பதாக அவர்களுக்கு நெருக்கமான உத்தியோகபூர்வமற்ற இரு வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க வோல் ஸ்றீட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த போயிங் 777 விமானம் பறந்த மொத்தம் சுமார் 5 மணி நேர காலத்திலான தரவுகள் அந்த விமானத்தின் இயந்திரங்களிலிருந்து தன்னியக்க ரீதியில் பதிவிறக்கம் செய்யப்பட்டு தரையிலுள்ள நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். அதனடிப்படையில் மேற்படி விமானம் 2,200 மைல் தூரத்திற்கு பறந்திருக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் அந்த விமானம் பாகிஸ்தானையோ அராபிய கடலையோ சென்றடைந்திருக்க கூடும். என புலன்விசாரணையாளர்கள் சந்தேகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மலேசிய எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனமோ தாம் காணாமல் அந்த விமானத்தை தொடர்புகொள்ள முயற்சித்த போது அதன் இயந்திரங்கள் தகவல்களை வழங்குவதை நிறுத்தியிருந்ததாக ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் ஆட்சேபனை பலவீனமடைகிறது அமெரிக்கப் பிரேரணைரஷ்யா, சீனா, கியூபா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் பிரேரணையிலுள்ள விடயங்களை நிராகரித்துள்ள நிலையில் ஜெனீவா பிரேரணை பலவீனமடைந்து வருகிறது. இது இலங்கைக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அமெரிக்க பிரேரணையிலுள்ள விடயங்களுக்கு எதிராக பல நாடுகள் ஜெனீவாவில் உரையாற்றியுள்ளன. அதனை நிராகரித்து அவை கருத்து வெளியிட்டுள்ளன. புலம்பெயர் அமைப்புக்களினதும் கருத்துக்கள் மேலைத்தேய நாடுகளினதும் கருத்துக்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜெனீவாவில் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் ஆற்றிய உரையைத் தொடர்ந்து பல நாடுகள் இலங்கைக்கு சாதகமாக உரையாற்றியுள்ளன. அமெரிக்கா அடங்கலான மேலைத்தேய நாடுகளின் தேவைப்படி ஏனைய நாடுகளைத் தவறாக வழி நடத்த முடியாது என்பது இதன் மூலம் புலனாகிறது. அமெரிக்க பிரேரணையிலுள்ள விடயங்கள் ஒவ்வொன்றாக நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் நெருங்கிய உறவு காணப்படுகிறது. அங்கு தேர்தல் நடைபெறும் நிலையில் அதனடிப்படையிலே இலங்கையின் முடிவும் இருக்கும். இந்திய பிரதமரை அண்மையில் ஜனாதிபதி சந்தித்தார். சில சில விடயங்கள் தொடர்பில் இரு தரப்பிற்குமிடையில் தொடர்ந்து பேச்சு நடக்கிறது. இலத்தின் அமெரிக்க நாடுகள் இலங்கை தொடர்பில் சாதகமான பேச்சையே கொண்டுள்ளன. முஸ்லிம்கள் விடயத்தில் விக்கி நீதி தவறுவதேன்?ஜெனீவா சென்று நீதிகேட்கும் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் முஸ்லிம் மக்களுக்கான நீதிபற்றி பேசத் தவறுவதேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நாம் பெற்றுக்கொண்ட இரகசிய தகவல்களுக்கடைய இம்முறை தென் மாகாணத்தில் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. நாட்டின் வரலாற்றை பின் நோக்கிப்பார்க்கும் போது எல்லாக் காலத்திலும் முஸ்லிம் மக்கள் நாட்டை நேசிக்கும் மக்களாகவே இருந்துள்ளனர். கண்டி ராஜதானியின் போது முஸ்லிம் மக்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நின்று செயற்பட்டுள்ளமை சகலரும் அறிந்ததே. போர்த்துக்கீசர் மற்றும் ஒல்லாந்தரை தூத்துக்குடி வரை துரத்தியவர்கள் முஸ்லிம்கள் என்பதை மறந்துவிட முடியாது. மார்ச் 13, 2014 ஒரு கோப்பையில் எம் குடியிருப்பு. இதில் தமிழ்மக்களின் இரத்தம் உள்ளிருப்பு
கிழக்கு மாகாண சபையிலும் ஆதரவை விலக்க நேரும் - ஹக்கீம்அரசாங்கத்தை விட்டு வெளியேற்றப்படும் சந்தர்ப்பத்தில், கிழக்கு மாகாண சபை ஆட்சியிலும் நாங்கள் நிலைத்திருக்க முடியாது. அவ்வாறான சந்தர்ப்பத்தில் அங்கு அரசாங்கத்திற்கு அளித்து வரும் ஆதரவை நாங்கள் விலக்கிக் கொள்ள நேரிடும். அவ்வாறானால் அங்கு ஆட்சியமைக்க முன்வருமாறு கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண ஆளுநர் கோருவார், அவ்வாறான சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை கூட்டமைப்பினர் கோரக்கூடும். அவ்வாறன்றி, பலத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில் மாகாண சபையை ஆளுநர் கலைத்து விடலாம். அவ்வாறானால், நிலைமை என்னவாகும்? மீண்டும் தேர்தல் நடாத்த வேண்டி வரும். வட மாகாண சபை தேர்தலிலும் தோல்வியடைந்து, கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சியைப் பறிகொடுத்தால் அரசாங்கத்தின் நிலைமை என்ன? அவ்வாறான நிலைமையில் முடியுமானால் மாகாண சபையை கலைத்து விட்டு, தேர்தல் நடத்தி வெற்றி பெற்றுக் காட்டட்டும். (மேலும்.....) காணாமல்போன மலேசிய விமான படங்களை சீனா வெளியிட்டது மலேசியாவிலிருந்து சீனா நோக்கிப் புறப்பட்டு காணாமல்போன விமானத்தின் உடைந்த பாகங்கள் தென் சீனக் கடலில் மிதந்து கொண்டிருப்பதாக சீன இராணுவம் செயற்கைக்கோள் படங்களை ஆதாரம் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. காணாமல்போன எம்.எச்.370 விமானம் சென்ற பாதையில் இந்த உடைந்த பாகங்கள் கிடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் விமானம் காணாமல் போன ஒரு நாள் கழித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. ஏன் இந்த படங்கள் இவ்வளவு தாமதாக வெளியிடப்படுகின்றன, ஏன் உடனடியாக இந்த தகவல்கள் மலேசியாவுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன. இந்த உடைந்த பாகங்கள் 70 அடிக்கும் மேலான நீளமும் அகலமும் உடையவை என்றும் விமானம் விழுந்து நொருங்கியிருக்கலாம் என்று கருதப்படும் கடல் பகுதியில் இவை மிதந்து கொண்டிருப்பது துணைக்கோள படங்களின் வழி அறியப்பட்டுள்ளதாகவும் சீன இராணுவ இலாகா அறிவித்துள்ளது. மலேசியாவுக்கும் வியட்னாமுக்கும் இடையில் உள்ள தென் சீனக் கடல் பகுதியில் இந்த உடைந்த பாகங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவை MH 370 விமானத்தின் உடைந்த பாகங்கள்தானா என்பதை உறுதிப்படுத்த மேலும் சில நாட்கள் பிடிக்கலாம் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன விமானத்தைத் தேடும் பணியில் சீனா, 10 துணைக்கோளங்களை பணியில் ஈடுபடுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வட, கிழக்கில் வைத்தியர் பற்றாக்குறை வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறை காரணமாக அங்குள்ள வைத்தியசாலைகள் மூடப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. வைத்தியர்களுக்கான உள்ளகப் பயிற்சியை நிறைவு செய்த 1100 பேருக்கு அரச சேவை ஆணைக்குழு நியமனங்களை வழங்காமல் இருக்கின்றது. இதனால், இவர்கள் சேவையாற்ற முடியாத வைத்தியர்களாகக் காணப்படுகின்றனர் என்றும் அச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. ரஜரட்ட மருத்துவக் கல்லூரியில் கல்வி பயின்ற மருத்துவ மாணவர்கள் இன்னமும் உள்ளகப் பயிற்சிகளை நிறைவு செய்யவில்லை என்று கூறி கடந்த டிசெம்பர் மாதத்தில் உள்ளகப் பயிற்சிகளை நிறைவு செய்த 1100 பேருக்கு நியமனங்களை வழங்குவதிலிருந்து அரச சேவைகள் ஆணைக்குழு அலட்சியப்போக்கினைப் பின்பற்றுகின்றது என மேற்படி சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்தார். இவ்வாறு நியமனம் வழங்காமலுள்ளவர்களில் சுமார் 400 பேர் வடக்கு, கிழக்கிலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையைப் பூர்த்தி செய்வதற்காகவும் வைத்தியர் இடமாற்றங்களின் போது ஏற்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காகவும் ஒதுக்கப்பட்டவர்களாவர். அதனால், வடக்கு, கிழக்கு வைத்தியசாலைகளின் நிலைமைகளை கருத்திற்கொண்டு வைத்தியர் வெற்றிடங்களைப் பூர்த்தி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க அரச சேவைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவிந்த சொய்சா கோரிக்கை விடுத்தார். அரிவரி தொடங்கி பல்கலைக் கழகம் வரை இலவசக் கல்வியைப் பெற்ற பின்பு மேற்கத்திய நாடுகளில் டாலர்களுக்காக மருத்து 'சேவை' செய்வதில் கண்ணும் கருத்துமாக இருப்பதினால் இது போன்ற எல்லாப்பற்றாக்குறையும் எற்படும்தானே...? தகவல் தருமாறு கோரிக்கை
பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக புகைப்படத்தில்
இருக்கின்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு அவசியமாகவுள்ளதால் அவர் தொடர்பிலான தகவல்களை
தந்துதவுமாறு பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளது. உக்ரெய்ன் ஜனாதிபதி வெளியேற்றப்பட்டமைக்கு இலங்கை கவலைஉக்ரெய்னில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரான, ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் பலவந்தமாக அகற்றப்பட்டமை கவலையளிப்பதுடன், உக்ரெயினில் ஏற்பட்டிருக்கும் அரசியல் ஸ்திரமற்ற நிலையை அதிகரித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. உக்ரெய்ன் நிலைமை தொடர்பாக வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு உருவாகியிருந்த பதற்ற சூழ்நிலையைக் குறைக்கும் வகையில் ரஷ்யா செயற்பட்ட அடைந்த அவர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட தரப்பினர் நிலைமையை மேலும் மோசமடையச் செய்யாமல், ஜனநாயக ரீதியில் செயற்பட்டு சுமுகமான தீர்வொன்றுக்கு வருவார்கள் என இலங்கை எதிர்பார்ப்பதாகவும், உக்ரெய்ன் மக்கள் மத்தியில் விட்டுக்கொடுப்பு ஏற்படுமென்று நம்புவதாகவும் வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12, 2014 ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் ஜெனிவாவில் தப்பித்திருக்கலாம் - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நாட்டிலிருக்கின்ற மதஸ்தலங்களை பாதுகாக்கவேண்டும் என்பதுடன் ஜனநாயகத்திற்கான நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் ஜெனீவாவில் இலங்கை தானாகவே பாதுகாக்கப்பட்டிருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான குழுவினருக்கும் இடையில் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டு மக்களும், அரசாங்கமும் இலங்கையும் ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்றியிருந்தால் இலங்கை தானாகவே ஜெனீவாவில் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்றார். மத ஒருமைப்பாட்டு கட்டியெழுப்புதல் அமைப்பின் சார்பிலேயே இரு குழுவினருக்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு கேட்டிருந்தேன். எனினும் இதுவரையிலும் நேரம் ஒதுக்கப்பட்டவில்லை. அமைச்சர்கள் சிலர் இந்த விடயம் தொடர்பில் என்னுடன் பேச்சு நடத்தியுள்ளனர் என்றார்.மலேசிய விமான பயணி ஒருவரின் தொலைபேசி பயன்பாட்டில் மலேசிய விமானம் மாயமானது தொடர்பில் பல்வேறு மர்மங்கள் நீடித்து வரும் நிலையில், பயணி ஒருவரின் கையடக்கத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக புதிய தகவலும் வெளியாகியுள்ளது. காணாமல் போன விமானத்தில் பயணம் செய்த ஒரு சீன பயணியின் கையடக்கத் தொலைபேசி இன்னும் பயன்பாட்டில் உள்ளதாக அவரது உறவினர்கள் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர். அவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டபோது, மணி ஒலித்துக்கொண்டே இருப்பதாகவும், யாரும் அதை எடுத்து பேசவில்லை என்றும் உறவினர் தெரிவித்துள்ளனர். மாயமான மலேசிய விமானம் மலேசியாவிற்கும், இந்தோனேசியாவிற்கும் இடையே உள்ள மலாக்கா நீரிணை அருகே சென்றுள்ளமை ராடாரில் பதிவாகியுள்ளதாக மலேசிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. ஐரோப்பிய பயணிகளுக்கு 72 மணித்தியாலங்களுக்குள் இடைத்தரிப்பு வசதியை வழங்கியிருந்த சீனா, அதற்காக வீசா கட்டுப்பாடுகளைத் தளர்த்தியிருந்தது. இந்த வசதியைப் பயன்படுத்திக்கொண்ட கடத்தல்காரர்கள் விமானத்துக்குள் நுழைந்திருக்கலாம் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது. காணாமல் போன விமானத்தில் போலி கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி இருவர் பயணித்துள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது. ஏழு பேர் விடுதலை பற்றி ஒரு வாசகர் கடிதம்!
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு கொலைக்குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக முதல்வர் அறிவித்தவுடன், இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடும் மனிதர்களை நினைத்தால், 'நெஞ்சு பொறுக்குதில்லை... இந்த நிலைக்கெட்ட மாந்தரை நினைந்துவிட்டால்’ என்ற மகாகவி பாரதியாரின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. ராஜீவ் காந்தி இந்திய திருநாட்டின் பிரதமராக இருந்து கம்ப்யூட்டர் வளர்ச்சிக்கு வித்திட்டவர். அவரே மீண்டும் பிரதமராக வருவார் என்ற நேரத்தில், வெளிநாட்டுத் தீவிரவாத கும்பலால் திட்டமிட்டு மனித வெடிகுண்டால் கொடுமையான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குக் காரணமானவர்களே... இன உணர்வு என்ற விஷத்தைத் தூவி விடுதலைப் புலிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் தீவிரமாக ஆதரித்தவர்கள்தான். ஏனென்றால், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு உதவியவர்கள் அவர்கள்தான். தமிழ், தமிழர் நலன் என்று பேசி, உணர்வுகளைத் தூண்டிவிட்டு, பிரிவினைவாதம் பேசி சுயலாபம் அடைய நினைப்பவர்களுக்குக் கீழ்க்கண்டவற்றை முன்வைக்கிறேன். (மேலும்.....) ஜோஷி இப்படிப் பேசலாமா? ஆதங்கப்படும் ஈழத் தமிழர்கள் 'ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை அழிக்க காங்கிரஸ் அரசுதான் துணை புரிந்தது!’ என்ற குற்றச்சாட்டு ஒரு புறம் இருக்க... இந்திய எதிர்க் கட்சியான பி.ஜே.பி-யிடம் நியாயம் பேசத் தொடங்கி இருக்கிறார்கள் பிரிட்டன் ஈழத் தமிழர்கள். அடுத்து, பி.ஜே.பி. ஆட்சிக்கு வரலாம் எனக் கூறப்படும் நிலையில், அவர்களாவது தமிழர்களின் நியாயத் துக்காக நிற்க வேண்டும் என்பதை உணர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் டெல்லிக்கு வந்த 'பிரித்தானிய தமிழர் பேரவை’யின் தலைவர்களில் ஒருவரான பத்மநாதன் தலைமையிலான குழுவினர், நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவரும் பி.ஜே.பி-யின் முன்னணித் தலைவருமான சுஷ்மா சுவராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன், தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உள்பட பலரையும் சந்தித்துப் பேசினர். (மேலும்.....) பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'என் மகன் கைது சம்பவத்தின்போது திராவிடர் கழகம் எங்கள் குடும்பத்தை கைவிட்டுவிட்டது’ என்று குற்றம் சொல்லியிருக்கிறாரே? அது அவரது ஆதங்கமாக இருக்கலாம். குற்றச்சாட்டாக ஏற்க முடியாது. ராஜீவ் வழக்கை 23 ஆண்டுகள் கழித்து இன்றைய நிலைமையை வைத்துக் கருத்துச் சொல்லக் கூடாது. சம்பவம் நடந்தபோது, 'ராஜீவ் கொலையில் கருணாநிதிக்குச் சம்பந்தம் இருக்கிறது’ என்று பிரசாரம் செய்தார்கள். அதனால்தான் தி.மு.க. கொடிக்கம்பங்கள் கொளுத்தப்பட்டன. முரசொலி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. மல்லிகை விசாரணைக் கூடத்தில் வைகோ, ஐந்து நாட்கள் விசாரிக்கப்பட்டார். பத்மநாபா கொலை வழக்கில் தி.மு.க-வைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், வைகோவின் தம்பி ரவி, உள்துறைச் செயலாளராக இருந்த நாகராஜன் ஆகியோர் சேர்க்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால்தான் விடுதலை செய்யப்பட்டார்கள். இந்த வழக்குகளிலும் கருணாநிதி, வைகோ சேர்க்கப்பட்டு சிக்க வைக்கப்பட்டிருக்க முடியும்.(மேலும்.....) இந்தியாவுக்கு செல்லலாம், திரும்ப முடியாது - டக்ளஸ்
இந்தியாவுக்கு தன்னால் செல்லமுடியும். ஆனால், திரும்பி வரமுடியாதென
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி
அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'இருநாட்டு மீனவர்களின்
பிரச்சினை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.
இப்பேச்சுவார்த்தையில் நான் கலந்துகொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டால்
கலந்துகொள்வேன். அத்துடன், இப்பேச்சுவார்த்தை இந்தியாவில்
நடைபெறுமாகவிருந்தால் நான் அங்கு செல்ல முடியாது. அவ்வாறு நான் சென்றாலும்
திரும்பி வரமுடியாது. அது ஒருவழிப்பாதை என்பது உங்களுக்கு புரியும்' என்றார்.
ஐ.நா. மற்றும் அமெரிக்கா எங்கள் மீதுள்ள (ஈ.பி.டி.பி. கட்சி மீது)
காழ்ப்புணர்ச்சிகளை அறிக்கைகள் மூலம் வெளிக்காட்டி வருகின்றன.
(மேலும்.....) அமெரிக்காவுக்கு ஆசியாவில் ஒரு வலுவான இராணுவ மற் றும் கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள்ள வேண்டு மென்ற நீண்ட நாள் குறிக்கோள் இருந்து வருகிறது. தற் போது சீனாவும், இந்தியாவும் ஒன்றிணைந்துவிட்டால் இவ் விரு நாடுகளின் இராணுவப் பலத்திற்கும் ஆசியப் பிராந் தியத்தில் அமெரிக்காவுக்கு முகம் கொடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலை உருவாகுவதை தவிர்ப்பதற்காக ஆசிய பிராந்தியத்தில் கேந்திர நிலையில் உள்ள இலங்கையில் தனது இராணுவ, கடற்படைத் தளத்தை அமைத்துக் கொள் ளும் நோக்கத்துடனேயே அமெரிக்கா இவ்விதம் இலங்கை க்கு எதிராக ஜெனீவாவில் செயற்படுகின்றது (மேலும்.....) தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டி? தற்போதைய நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை என்பதால் தமிழகத்தில் தனித்து போட்டியிட போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி 40 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த அ.தி.மு.க. பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது. தி.மு.க. சார்பில் 35 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைமை நேற்று முன்தினம் அறிவித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தப்படுவது தொடர்பாக சோனியாகாந்தி பல்வேறு ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஷகில் அகமது தமிழகத்தில் தற்பொழுது உள்ள நிலையில் எந்த கட்சியுடனும் கூட்டணி ஏற்பட வாய்ப்பில்லை என்றார். வேட்பாளர் பட்டியல் குறித்து மாநில தலைவர்களிடம் ஆலோசனை நடத்திவருவதாக தெரிவித்த அவர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அனுப்பப்பட்ட மனுக்கள் மீது குலாம்நபி ஆசாத் ஆய்வு கொள்ள உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் 1967ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் கை ஓங்கியிருந்தது. அந்த கட்சியின் தலைமையில் தான் தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. ஆனால், 1967ம் ஆண்டு நடந்த பாராளு மன்ற தேர்தலில் தி.மு.க. 25 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸை வீழ்த்தியது. தற்போது 45 ஆண்டுகள் ஆன நிலை யிலும், காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் எழுந்திருக்க முடியவில்லை. தமிழகத்தில், தி.மு.க. அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிதான் அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலை சந்தித்து வருகிறது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 பாராளுமன்ற தொகுதிகளிலும அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. பாராளுமன்ற தேர்தல் வரலாற்றில் அ.தி.மு.க., தி.மு.க. அதிகப்படியான தொகுதிகளில் மோதுவது இதுவே முதல்முறையாகும். அல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் 40000 டொலருக்கு விற்பனைகடந்த 1945 ஆம் ஆண்டில் அமெரிக்க வீரர் ஒருவருக்கு, பௌதீகவியலுக்கான நோபல் பரிசு பெற்ற உலகின் தலைசிறந்த விஞ்ஞானி அல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய கடிதம் ஒன்று 40,000 டொலருக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதுவரை வெளிவந்திராத இந்தக் கடிதத்தில் பிரபஞ்சத்தை நான்கு பரிமாண கோணங்களில் பார்க்கவேண்டும் என்பது குறித்த விளக்கத்தினை அவர் எழுதியுள்ளார். அமெரிக்கப் படையில் பணிபுரிந்து வந்த பிரான்க்.கே.பிளிகோரும் அவரது நண்பர்களும் தாங்கள் படித்து வியந்த ஒரு அறிவியல் கட்டுரையின் விளக்கத்தினை வேண்டி அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதியன்று 20 ஆம் நூற்றாண்டின் விஞ்ஞான மேதையான ஐன்ஸ்டீனுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் அவரிடமிருந்து தெளிவான பதில் வந்துள்ளது. வீரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இந்த கடிதமே அந்த வீரரின் குடும்பத்தினரால் தற்போது வரலாற்று ஆவண சேகரிப்பாளர்களான ரொப் கலெக்சன் நிறுவனம் மூலம் விற்பனைக்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மார்ச் 11, 2014 மன்னிப்பாயா.........? (மோகன்) அன்று புலிகள் அமிர்தலிங்கத்தை கொன்றபோது சீமான் சின்னதாய் புலிகளை பார்த்து சினத்திருந்தால், அன்று புலிகள் பத்மநாபாவோடு சேர்த்து பல உயிர்களை பலி எடுத்தபோது வை.கோ செல்லமாய் புலிகளை பார்த்து கோபித்திருந்தால், அன்று புலிகள் சிறீசபாரெத்தினத்தோடு பல நூறு உயிர்களை பந்தாடியபோது நெடுமாறன் நெஞ்சை நிமிர்த்தி புலிகளை பார்த்து முறைத்திருந்தால், அன்று புலிகள் அமைதிக்கு பாடுபட்ட கேதீஸ்வரனை வதம் செய்தபோது நல்லக்கண்ணு புலிகளை பார்த்து தன் நெற்றிக்கண்ணை திறந்திருந்தால் இன்று இவர்களோடு சேர்ந்து மன்னிப்புக்கு நாமும் குரல் கொடுக்கலாம் ஐ.ம.சு.மு.விலிருந்து கமலேந்திரன் நீக்கம் வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவினால் தனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார். 'கமலேந்திரன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என சுசில் பிரேம ஜயந்தவினால் கடந்த 6ஆம் திகதி எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கமலேந்திரனின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது தொடர்பாக தேர்தல் திணைக்களத்துடன் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படுமென அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்ததாக டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார். நெடுந்தீவுப் பிரதேச சபைத் தவிசாளர் டானியல் றெக்ஷசன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், கொலைக் குற்றச்சாட்டப்பட்டு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாயமான மலேசிய விமானம் அலி குறித்து விசாரணை
239 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் காணாமல் போயுள்ள மலேசியன் எயார் லைன்ஸ்
விமானத்தில் பயணித்த 5 மர்ம பயணிகள் குறித்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.
அதில் அலி என்ற பெயரில் பயணித்த ஒரு பயணி குறித்த சந்தேகமும்
வலுவடைந்துள்ளது. மேலும் இந்த விமானம் கடத்தப்பட்டிருக்கக் கூடும்
என்பதற்கான சாத்தியக்கூறுகளும் பிரகாசமாகியுள்ளதாக தெரிகிறது. இந்த
விவகாரத்தில் தற்போது இன்டர்போல் போலீஸாரும், ம்லேசிய விசாரணையாளர்களும்
மற்றும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகளும் படு தீவிரமாக இறங்கியுள்ளனர்.
விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடலில் தீவிர தேடுதல்
நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு பாகமும் கண்டுபிடிக்கப்படவில்லை.
(மேலும்.....) 'நான் தற்போது அரசியலில் இல்லை. இருப்பினும், நாட்டை அபிவிருத்திக்கு உட்படுத்தும் போரில் நானும் இணைந்திருப்பேன்' என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா தெரிவித்தார். நாட்டில் மாற்றமொன்றை ஏற்படுத்துவதற்காக அனைவரும் அதிகாரத்தைக் கோரி நிற்கின்றனர். அரசியல்வாதிகள் களவெடுக்காமலிருக்க பழகியிருந்தால் நாடு எப்போதோ முன்னேறியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹொரகொல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மர்மம் தொடர்கிறது...காணாமல்போன விமானம் தொடர்பில் மாறுபட்ட தகவல்கள்கோலாலம்பூரிலிருந்து பீஜிங்கிற்கு பறந்து கொண்டிருந்த மலேசிய விமானம் காணாமல்போய் மூன்று தினங்கள் கடந்துள்ள நிலையிலும் அது எங்கே என்ற மர்மம் தொடர்ந்தும் நீடித்து வருகிறது. இந்த விமானம் கடத்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்பையும் மறுக்கமுடியாது என்று மலேசிய சிவில் விமான சேவைத் தலைவர் அசாருதீன் அப்துல் ரஹ்மான் குறிப்பிட்டார். இந்த விமானம் வீழ்ந்திருக்கக் கூடுமென்று சந்தேகிக்கப்படும் கடற்பகுதியில் நேற்று ஒரு மஞ்சள் நிற உயிர்பாதுகாப்புப் படகு ஒன்று கண்டெடுக்கப் பட்டபோது அது இந்த சம்பவத்துடன் தொடர்பற்ற பொருள் என பின்னர் உறுதிசெய்யப்பட்டது. (மேலும்.....) ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?
சரஸ்வதி- அமைப்பாளர், நாடு கடந்த
தமிழீழ அரசுக்கான தோழமை மையம் மார்ச் 10, 2014 என் மனவலையிலிருந்து..... சர்வதேச பெண்கள் தினம் (சாகரன்)
போர்காலங்களிலும் போருக்கு பிந்தைய காலங்களிலும் மனித குலம் பல அழிவுகளை சந்தித்திருக்கின்றது. இயற்கையின் இயல்பான நீரோட்டததை மாற்ற முயன்று இதனால் ஏற்பட்ட இயற்கை அனர்ந்தங்களாலும் மனித குலம் பாரிய அழிவுகளை, அனர்த்தங்களை சந்தித்து வந்திருக்கின்றது, வருகின்றது. இவற்றின் போதெல்லாம் பாரிய கஸ்டங்களுக்கு முகம் கொடுப்பது பெண்களே! ஒரு தாயாக குடும்பத்தலைவியாக. கணவனை இழந்த கைம் பெண்ணாக முதுகில் தாங்கமுடியாத பாரங்களை சுமம்பவள் இவளே. ஆணில் தங்கியிருக்கும் மேலாதிக்க சமத்துமற்ற சமூக அமைப்பை தூக்கிப்பிடிக்கும் முதலாளித்து அமைப்பே ஆண், பெண் சமத்துவம் இன்மையை கட்டிக்காத்துவருகின்றது. கண்கள் தவிர ஏனை உடற்பகுதிகள் முழுவதும் மூடியிருக்க வேண்டும் என்று மதங்களை முன்னிறுத்தி வற்புறுத்தல் பெண்ணடிமைத்தனம் என்றால், பொது இடங்களை இதனை அணியவிடாது தடுத்து இதனை உரியச்சொல்வதும் பெண்அடிமைத்தனத்தின் உச்சக்கட்டம்தான். தனி மனித சுதந்திரத்தைப் பறிக்கும் மேலாண்மை செயற்பாடுகள்தான். இவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண் என்பவள் ஆண்களுக்கான போகப் பொருள் என்றும் இவள் இனத்தை விருத்தி செய்ய ஒருவாக்கிய பாவப்பட்ட இயந்திரம் என்ற மதிப்பீட்டின் அடிப்படையில் ஒடுகப்படுகின்றாள். சிறந்த நிர்வாகியாக குடும்ப சுமையை சுமந்து வெற்றிகளை ஈட்டி தனது ஆத்ம பலத்தை நிரூபித்துக்காட்டிய பின்பும் ஆணை விட பெண் இரண்டாம்தாரமா பார்க்கும் கண்ணோட்டமே மேலோங்கி இருக்கின்றது. ஆண்களால் வல்லுறவிற்கு உள்ளாக்கப்படும் சட்ட, சம்பிரதாய சட்டத்திற்கு மீறிய உறவுகளே ஆண்களால் பல சந்தர்பங்களில் பெண்கள் மீது திணிக்கப்படுகின்றன. இதற்கொல்லாம் பெண்கள் களங்கப்பட்டு விட்டாள் என்ற பழியையே அவள் சுமக்கவேண்டியுள்ளது. இது மேற்குலகம், கிழக்குலம், அரேபிய உலகம், ஆபிரிக்க உலகம், ஐரோப்பிய உலகம் என்ற வேறுபாடுகள் இன்றி நடைபெற்றே வருகின்றன. அழகில், வசீகரத்தில் பெண்கள் பௌதீகரீதியில் அமைந்திருப்பது பெண்களிடத்து இயற்கையாக கூர்ப்படைந்த நியதிகள் ஆகும். இதனை வக்கிரப்படுத்தி பார்க்கும் பார்வைகள் வெளிக்காட்ட முயலும் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கன. இந்திய சினிமாவிலும், என் மேற்கத்திய சினிமாக்களிலும் பெண்களின் அழகை மல்லினப்படுத்தி; குறுகிய நாட்களில் பணம் பண்ண முயல்பவர்களால் இந்த சமூகத்திற்கு பகுத்தறிவை ஊட்டுவதற்கு பதிலாக வக்கிரங்களையே போதிக்க முடிந்திருக்கின்றது. இவை கண்டிக்கத்தக்கவை. ஈந்த வக்கிரங்கள் தனம்பல் நிலை இளசுகளை தறிக்கெட்டலைய தூண்டுகின்றன. சமூக ஒழுங்குகளை போதிப்பதற்கு பதிலாக வக்கிரங்களை மிகை;கடுத்திக்காட்டும் இவ்வகை சினிமாக்களும், தொலைக்காட் நிகழ்ச்சிகளும், எழுத்தியல் ஊடகங்களும் நிராகரக்கப்பட வேண்டியவை. இதுவே இன்றைய பெண்கள் தின சத்தியங்களாக நாம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டியவையாகும். போருக்கு பிந்தைய இலங்கையில் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் போரனால் கணவனை இழந்த பெண்கள் கௌரவமான தொழில் முனைப்புடன் தமது வாழ்வை தொடங்க நாம் ஆவன செய்தா வேண்டும். கூடவே இவர்களின் இயல்பான மனித உணர்வுகள், விபச்சார நோக்குடன் வக்கிரமாக அணுகாமல் இணைந்து, தாங்கி வாழுதல் என்ற வரையறைக்குள் அணுகப்படவேண்டும். மத்தியில் தோட்டங்களில் குளிரிலும், மழையிலும் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் தமது மாதாந்த நியம உடற்கூற்றுச் செயற்பாட்டு தினங்களில் ஓய்வெடுக்க அனுமதியாத அடிமைவாழ்கை நடாத்தும் மலையகப் பெண்களின் விடிவிற்காக நாம் எல்லோரும் இணைந்து போராடியே ஆகவேண்டும் . புரட்சிகர சமூக மாற்றம் ஒன்றின் ஊடகவே சாத்தியப்படும் இவற்றை நிறுவி நிற்க உழைக்கும் சகல ஆண், பெண்கள் தொழிலாளர்கள் அனைவரும் இணைந்தே போராடுவோம். (மார்ச் 08, 2014) குஜராத் வளர்ச்சி மாநிலமா? 17 கேள்விகளை எழுப்பி மோடி அரசை நார் நாராக கிழிக்கும் கெஜ்ரிவால்! குஜராத் அனைத்து துறைகளிலும் ஒரு வளர்ச்சியடைந்த மாநிலம் என்றும், ஊழலற்ற நிர்வாகம் கொண்டது என்றும் அம்மாநில முதலமைச்சரும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி கூறிவரும் நிலையில், அதனை தவிடுபொடியாக்கும் விதமாக, தனது ட்விட்டர் தளத்தில் சூடு பறக்கும்17 கேள்விகளை எழுப்பி, மோடி அரசை நார் நாராக கிழித்து தொங்கவிட்டுள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால். அவர் எழுப்பி உள்ள கேள்விகளின் தொகுப்பு கீழே...(மேலும்.....) புலிகளின் சதி ராஜீவ் காந்தி கொலை சதி,இலங்கையின் வடக்குப் பகுதியில் தீட்டப்பட்டு,தமிழகத்தில் ஊடுருவியிருந்த விடுதலை புலிகளின் வலைப் பின்னல் உதவியோடு தற்கொலை படையால் நிறைவேற்றப்பட்டது. முக்கிய சதிகாரர்கள் • வி.பிரபாகரன் எல்.டி.டி.ஈ தலைவர் 2009ல் பேரில் கொல்லப்பட்டார் அமெரிக்க பிரேரணை’ சதிவலை பின்னியது யார்?முள்ளிவாய்க்காலில் ஈழவிடுதலைக்கான ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டபோது ஏற்பட்ட உணர்விற்கு அண்மித்த ஒரு வலியினை உலகத்தமிழினம் இன்று சந்தித்திருக்கிறது. ஜெனீவா கூட்டத் தொடர் சிங்களப் பேரினவாத அரசுக்கு மிகப் பெரும் சவாலாக அமையும் என்ற ஒரு எதிர்பார்ப்பு உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழ் மக்கள் மனங்களில் சிறு நம்பிக்கை தருவதாக அமைந்திருந்தாலும் இறுதி நேரத்தில் இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு அவகாசத்தைக் கொடுக்கும் ஒரு வரைபு அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டமை பலத்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. (மேலும்.....) “இது தமிழ் இனம் உணர வேண்டிய ரணம்!
''உலகம் முழுக்க நண்பர்கள்... பல நாடுகளில் அலுவலகங்கள்... இந்தியனா இருந்தாலும் ஏதோ எல்லைகளே இல்லாதவன் மாதிரி சுத்திட்டு இருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா இது எனக்கான பெருமை இல்லை; சினிமா என்ற கலைக்கான பெருமை!'' - கலகலவெனப் பேசத் தொடங்குகிறார் சந்தோஷ் சிவன். உலகம் அறிந்த இந்திய ஒளிப்பதிவாளர். 11 தேசிய விருதுகள் பெற்றவர். ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் 'அமெரிக்கன் சொஸைட்டி ஆஃப் சினிமாட்டோகிராபர்ஸ்’ அமைப்பின் உறுப்பினர்... என ஒவ்வோர் அடையாளத்திலும் கண்ணிய அங்கீகாரம் சேர்த்திருப்பவர். சாகச வித்தைகளுக்கு கமர்ஷியல் சினிமா, ரசனைப் பதிவுகளுக்கு கிளாசிக் சினிமா என இயங்குபவர், இப்போது 'இனம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையை விவரிக்கும் படத்தின் டீஸர் அதிரடிக்கிறது! (மேலும்.....) தெவுந்தர தமிழ் கைது இலங்கையில் போதைப்பொருள் வியாபாரத்தில் முன்னிலை வகிப்பவர் என அடையாளம் காணப்பட்ட 'தெவுந்தர தமிழ்' என்பவர் பொலிஸ் விசேட குழுவினரால் நேற்று (09) கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ள இவர், கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர், இலங்கைக்கு பாரியளவில் போதைப்பொருட்களைக் கொண்டுவந்து விநியோகித்தவர் என்று பொலிஸாரால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்தார். இருப்பினும், அரசியல் சகவாசங்கள் மற்றும் பொலிஸிலுள்ள உயரதிகாரிகள் சிலரின் தொடர்பு காரணமாக தலைமறைவாக இருந்து தனது வியாபாரத்தை முன்னெடுத்து வந்தார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். தெற்கில் பெரியவொரு வர்த்தகராக விளங்கிய தெவுந்தர தமிழ், இரு படுகொலைச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் எனவும் இவர் சிங்களப் புலி என அடையாளப்படுத்தப்படும் 'ஐஸ் மஞ்சு' என்பவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. தடுப்புக்காவல் உத்தரவுக்கிணங்க கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மார்ச் 09, 2014 சர்வதேச போர்க் குற்ற விசாரணை கோரிக்கை தானும் முன்வைக்கவில்லை என்னையும் பேச விடவில்லை சுமந்திரன் எம். பி. யுடன் அனந்தி முறுகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் ஜெனீவாவிற்கு அனுப் பப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப் பினர் சுமந்திரன் எந்த வொரு சந்திப் பிலும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை தொடர் பில் கோரிக்கை களை முன்வைக்க வில்லை. என்னை யும் எதுவும் பேச அனுமதிக்க வில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சாட்டியுள் ளார்.ஜெனீவா சென்று இறங்கியதுமே தேசியப் பட்டில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நான் விடுதலைப் புலி களது முக்கிய போராளியான எழிலனின் மனைவி என்பதால் என்னையும் சர்வதேச பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள் போராளியாகவே பார்ப்பார்களென தெரிவித்ததுடன். என்னை ஏதும் பேச வேண்டாமெனவும் தானே எல்லாவற் றினையும் பேசுவதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு ஒரு நிகழ்ச்சி நிரலில் அவர் என்னை அங்கு அழைத்து சென்றிருப்பார் என முன்கூட்டியே தெரிந்திருந்தால் நான் நிச்சயமாக அங்கு சென்றிருக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். வெறுமனே வேடிக்கை பார்க்கும் நபராக நான் இருந்தேன். குறுக்கிட்டு அங்கு பேசியிருக்க முடியுமாயினும், ராஜதந்திரிகளிடையே கெளரவத்தினை மதித்து தான் பேசாதிருந்ததாகவும் அனந்தி தெரிவித்தார். எது எவ்வாறிருப்பினும் இப்போது சர்வதேச விசாரணை என்பது செல்லாக்காசாகிவிட்டது. சுமந்திரன் எம். பி. ஒரு பிரபலமான சட்டத்தரணி, அவரைக் கேள்விகேட்க அனந்திக்கு அருகதை கிடையாது என தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் இது தொடர்பாகக் கருத்துக் கூறினார். உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுவான ஜனநாயகம், மனித உரிமை, இறையாண்மை, சுயநிர்ணயம் அப்படி ஏதும் இருக்கிறதா?
(சுகு-ஸ்ரீதரன்) உக்ரேனின் பாசிச அதிகாரம் நீடிக்கமுடியாது. ரஸ்சியாவிற்கெதிரான அமெரிக்க, ஐரோப்பிய கூட்டும் நீடிக்கமுடியாது. எல்லை மீறிப் போய்விட்டதால் உலகளாவிய அராஜகம் தலைதூக்கியுள்ளதால் நிலைமைகள் தலைகீழாகவும் மாறலாம். அவர்கள் ரஸ்சியா என்ற மாபெரும் நாடு இருக்க கூடாது என்று சிந்தித்தால் அது உலகளாவிய விபரீதமாகும். ஐரோப்பிய மக்களுக்கு பாசிசத்தின் கொடூர அனுபவம் இருக்கிறது. அது பற்றிய விழிப்புணர்வும் இருக்கிறது. சீனா, இந்தியா, ரஸ்சியா, கியூபா, பிறேசில், வெனிசூலா, வியட்னாம், தென்னாபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கநாடுகள் பிற மூன்றாம் உலக நாடுகள் புதிய மீள் அணிசேர்க்கைக்கு பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டிய அளவிற்கு நிலைமைகள் தீவிரமடைகின்றன. (மேலும்.....) இன்றைய யாழ் பட்டணம்
உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தின அறைகூவல் ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து உழைக்கும் வர்க்கப் பெண்கள் தங்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக உலக மகளிர் உரிமைகளுக்கான போராட்ட தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது. தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக உழைக்கும் வர்க்க பெண்கள் நீண்ட காலமாக போராட்டங்களை தொடர்ச்சியாக நடாத்திக் கொண்டு இருக்கின்றார்கள். 18ஆம் நூற்றாண்டில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். மகளிர் வீட்டு வேலைகளை செய்யும் பொருட்டு வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கூட மறுக்கப்பட்டது. மருத்துவமும் சுதந்திரமும் என்னவென்று கண்ணில் காட்டப்படாமல் இருந்த காலம் அது. (மேலும்.....) மேல்மாகாண சபைத் தேர்தல்TNA தமக்கே ஆதரவு என்பது ஜ.ம.மு வின் பொய்ப்பிரசாரமாம்மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமக்கே ஆதரவு என எந்தவொரு கட்சியும் பிரசாரம் செய்தால் அது பொய். ஏனெனில் தமிழ்க் கூட்டமைப்பு அப்படியானதொரு முடிவினை எடுக்கவில்லை. கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஐந்து கட்சிகளுள் எமது கட்சியும் ஒன்று. கூட்டமைப்பிலுள்ள ஒரு கட்சி அல்லது தனி நபர்களினால் மேற்கொள்ளப்படும் முடிவு தமிழ்க் கூட்டமைப்பின் தீர்மானமாக ஒருபோதும் அமையாது என தமிழ்க் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவருமான ஆனந்தசங்கரி தெரிவித்தார். கொழும்பில் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் சில உறுப்பினர்களால் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளமை பற்றிக் கேட்டபோதே ஆனந்தசங்கரி இவ்வாறு தெரிவித்தார். தமிழ்க் கூட்டமைப்பு இதுவரை எந்தவொரு கட்சிக்குமே ஆதரவு வழங்குவதாக அறிவிக்கவில்லை என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அதேவேளை தனிப்பட்ட சிலர் அல்லது அக்கட்சிகள் ஏதாவது அறிக்கைகளை விட்டிருந்தால் அதற்கு தமிழ்க் கூட்டமைப்பு பொறுப்பல்ல எனவும் அவர் தெரி வித்துள்ளார். இப்போது புரிகிறதா? தமிழக ஈழ ஆதரவு வேடதாரிகளின் சூட்சுமங்கள்?ஈழத்தமிழர்களின் பெயரில் இந் தியாவில் நடக்கும் வியாபாரம் எல்லைகடந்து செல்கிறது. ஈழதமிழருக்காக குரல்கொடுக்கின் றோம் ஆதரவு தருகின்றோம் அனை த்தையுமே இழக்கின்றோம் என்று தமிழக அரசியல்வாதிகள் கொடுத்து வரும் குரல்களில் உள்ள போலிகளை அம்பலப்படுத்துவதில் இல ங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் யாருமே அக்கறை கொள்வதில் லை. அவர்கள் எப்படி பேசினாலும் அது எமக்கு சாதகமானதே என் கின்ற ஒரு பொத்தாம் பொது சிந் தனை எமது மக்களின் மனதிலும் ஆழமாகவே வேரூன்றிவிட்டது. கே ட்டால் தமிழ் நாட்டு தமிழர்கள் எமது தொப்புகொடி உறவுகள் எம க்கு எதுமென்றால் அவர்கள் எமக்கு கரம்கொடுப்பார்கள் என்று சப்பை கட்டுகட்டி வரும் இலங்கை எழுத்தா ளர்களுக்கு மட்டும் குறைவில்லை. அப்படி என்றால் அது என்ன தொப் புள் கொடி உறவு? அப்படிபார்த் தால் இலங்கைத்தமிழர்கள் இந்தியா வில் இருந்து இங்குவந்து குடியேறி யவர்கள் என்றும் அவர்கள் இங்கு பூர்வீகம் கொண்டாடுவது பொய்யா னது என்றும் சிங்கள இனவாதிகள் சொல்லிவருவதுதான் உண்மையோ எனக்கு எதுவுமே விளங்கவில்லை. (மேலும்.....) 'எமது பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்' - கே.என்.டக்ளஸ் தேவானந்தா எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும் என்பதுடன், இதற்காக சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பிப் பயனில்லையென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும் என்பது போல், எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய பிரதான பொறுப்பு தமிழ் பேசும் கட்சிகளின் தலைமைகளுக்கே உண்டு. நாம் சர்வதேச நாடுகளை பிரதானமாக நம்பியிருக்க முடியாது. தேவையென்றால், பிரசவத்தின்போது ஒரு மருத்துவிச்சியின் கடமையை ஆற்றுவது போல், சர்வதேச நாடுகள் முன்வந்தால் அதை வரவேற்கலாம். ஏனெனில், எமது மக்கள் சுமந்த வலிகளையும் வதைகளையும் நாம் மட்டுமே உணர்வோம். எமது மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டிய பொறுப்புணர்வு எமக்கு மட்டுமே இருக்க முடியும். இதையே நாம் நீண்டகாலமாக தொலைதூர நோக்கில் தீர்க்கதரிசனமாக கூறி வருகிறோம். உலக நாடுகளிடம் முறையிட்டு எமது மக்களுக்குத் தீர்வு பெற்றுத் தருவோம் என்ற போலி வாக்குறுதிகளை இனியும் வழங்காமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மதிநுட்ப சிந்தனை வழி நின்று செயற்பட முன்வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 08, 2014 பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள்
(ஞானசக்தி யுத்தத்தினாலும் ,சுனாமியினாலும் ஆண்களை இழந்த பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் இன்று வரை பிரச்சனைகளாகவே இருக்கின்றன. மாகாண சபைகள் ,எத்தனையோ அரச சார்பற்ற நிறுவனங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும் இந்த ஆண்தலைவர்களை இழந்த குடும்பங்களின் இருப்பிடம் ,தொழில் ,பிள்ளைகளின் கல்வி பாதுகாப்பான வாழ்வு என்பவற்றுக்கு உத்தரவாதம் எதுவும் இல்லை. இவ்வளவு நிறுவனங்கள் இருந்தும் வடக்கிலும் கிழக்கிலும் 85 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றன என்று புள்ளி விபரங்கள் அடுக்கப்படுகின்றன. இது கையாலாகாத்தனமாகும். அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக பலத்த சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன. (மேலும்.....) சர்வதேச பெண்கள் தினம் இன்று உலகில் பழைமையான கட்டுக்கோப்புகளை தகர்த்து பெண்கள் முன்னேறி வருகின்றனர்ஆணுக்குப் பெண் நிகரெ னக் கொள்வதால் ‘அறி வில் ஓங்கி வையகம் தளைக்குமாம்’ என்ற புதுமை கவிஞன் பாரதியின்’ கருத்துக்களை ஏற்று இன் றைய நவீன உலகில் முறையாக கொள்ளப்படும் ஜனநாயகக் கட்ட மைப்புக்குள் பெண்களின் வரவு அவசியமாக தேவைப்படுகின்றது. உலகில் 1948 இல் ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் பற்றிய சமவாயத்தில் அடிப் படை உரிமைகள் பற்றி பல்வேறு கருத்துக்களில் வரையறுக்கப்பட்டி ருந்தாலும் பெண்கள், சிறுவர் சம் பந்தமான உரிமைகளும் அவற்றின் உறுதிப்படுத்தல்களும் காலப் போக்கிலேயே கவனத்தில் கொள்ளப் பட்டன. (மேலும்.....) கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் மாயம் மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து 239 பேருடன் பீஜிங் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை காலை மாயமாகியுள்ளதாக மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. எம்.எச்.370 என்ற விமானம் அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 2.40 மணியளவில் மலேசியாவிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. பீஜிங் விமான நிலையத்தில் காலை 6.30 மணிக்கு தரையிறக்கப்பட வேண்டிய விமானம் இதுவரை அங்கு வருகை தரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளிலும் பதற்றம் நிலவுகிறது. வான்பரப்பில் மாயமாகியுள்ள விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பயணிகளின் உறவினர்கள் பீஜிங் விமான நிலையத்துக்கு படையெடுத்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. புலிகள் இயக்கம் அமெரிக்காவில் மீண்டும் தடைநாடுகடந்த அரசின் பிரதமர் உருத்திரகுமாரன் அமெரிக்காவில் வாழத் தடையில்லைஅமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அமைப்பின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி, இலங்கையின் தமிbழ விடுதலை புலிகள் அமைப்பை அமெரிக்கா மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்த்துள்ளது. உலகில் உள்ள 60 தீவிரவாத அமைப்புகளை அமெரிக்கா 2014ம் ஆண்டில் தடை செய்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு 1997 ஒக்டோபர் 8ம் திகதி முதன் முதலில் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் புலிகள் அமைப்பு அமெரிக்காவில் தடை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழத்தில் விடுதலைக்காகப் போராடியவர்கள் பட்டினியில் - இலண்டனில் நாடுகடந்த கும்பல் குத்தாட்டம்!
தேசிய விடுதலைக்காகப் போராடிய போராளிகளும், போராளிகளுக்கு உறுதுணையாக நின்ற மக்களும் தமிழீழத்தில் வேலை வாய்ப்புக்கள் இன்றி பட்டினியால் வாடும் நிலையில் இலண்டனில் விசுவநாதன் உருத்திரகுமாரனின் தலைமையிலான நாடுகடந்த அரசு என்ற குழுவினரால் குத்தாட்ட நிகழ்வொன்று நடாத்தப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தின் இறுதி வாரத்தில் நடைபெற்ற இந்தக் குத்தாட்ட நிகழ்வில் நாடுகடந்த கும்பலின் இலண்டன் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு சம்பேய்ன், வைன் போன்ற மதுபானங்களை அருந்தித் திழைத்தும், நடனமாடியும் குத்தாட்டத்தை மேற்கொண்டதை உறுதிசெய்யும் நிழற்படங்கள் வெளிவந்துள்ளன. நாடுகடந்த அரசு என்ற கும்பலின் தாயக அபிவிருத்தி அமைச்சராக விளங்கும் பாலாம்பிகை முருகதாஸ் என்பவரும், அவரது அமைச்சுச் செயலாளரான தாமோதரம்பிள்ளை முருகதாஸ் என்பவரும் இணைந்து இந்தக் குத்தாட்ட நிகழ்வை நடத்தியுள்ளனர். என் மனவலையிலிருந்து...... இலங்கையைக் காப்பாற்றிய ரஷ்யா (சாகரன்) மார்ச் 03, 2014 திங்கள் கிழமை ஐ. நா சபையில் அமெரிக்க அனுசரணையுடன் இலங்கையிற்கு எதிராக சர்வதேச விசாணையைக் கோரி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படலாம் என்று முக்கியமாக புலிகளின் நலன் விரும்பிகளும், அவர்களின் அடிவருடிகளும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் உள்நாட்டு விசாரணை என்ற பொறிமுறைக்கான பரிந்துரைகளுடன் முடிவடைந்திருக்கின்றது இந்தக் கூட்டத்தொடர். ஆனாலும் இலங்கை அரசுக்கு சில காலக்கெடுக்களை முன்வைத்து அவை வாய்மூலம் பதிலளிக்க அடுத்த கூட்டத்தொடரையும் இதனைத்தொடர்ந்து அடுத்த கூட்டத்தொடரில் எழுத்து மூலம் அறிக்கையும் சமர்பிக்கப்படவேண்டும் என்றும் என்ற தீர்மானங்களுடன் முடிந்திருக்கின்றது கூட்டத்தொடர். இது அமெரிக்கா எல்லாவற்றையும் புடிங்கிப்போடும் மேய்சலுக்கு என நம்பியிருந்தவர்களுக்கு பெரும் ஏமாற்றம முடிவுதான். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்காலில் நடைபெற்ற கடைசியுத்தத்திலும், அதற்கு முந்தைய காலகட்டங்களிலும் இலங்கை அரசும், புலிகளும் ஒருவரை ஒருவர் விஞ்சும் வண்ணம் யுத்தக் குற்றங்களை செய்திருக்கின்றனர். எனவே இதுபற்றிய இருதரப்பு விசாரணைகளும் செய்வதே பக்கச்சார்பற்ற முடிவாகும். இதனை புலிகளின் விசுவாசிகளும், ஏன் இலங்கை அரச தரப்பும் புரிந்து கொள்ளவேண்டும். விசாரணை என்று கூக்கிரல் இடும் பிராந்தியச் செல்வாக்கை வேண்டி நிற்கும் பல நேட்டோ நாடுகளின் ஏனைய நாடுகள் மீதான வலிந்த இராணுவத்தாக்குதலில் பல இலட்சம் அப்பாவிப் பொது மக்கள் எந்த காரணமும் இன்றி கொல்லப்பட்டிருக்கின்றனர் பாதிக்ப்பட்டுள்ளனர் என்பது நடைமுறை வரலாறு ஆகும். கடந்த காலங்களில் குறிப்பாக இரண்டாம் உலகப்போரிற்கு பின்ரான காலகட்டங்களில் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் மீது நடாத்திய போர்களும், இவற்றின்போதான அத்துமீறல்களும் விசாரிகப்படவேண்டும் என்பதே பொது நியதி ஆகும். இதில் முக்கிய பங்காளிகளாக பிரிட்டனும் அதனைத் தொடர்ந்து இன்றைய காலகட்டங்களில் அமெரிக்காவும் முதன்மை குற்றவாளிகள் பட்டியலில் இருக்கின்றன. கூடவே ஈராக்கிலிருந்து ஆரம்பித்து சிரியாவரையிலான உள்நாட்டு கிளர்ச்சிகளுக்கு மறைமுகமாவும், நேரடியாகவும் உதவி வரும் நேட்டோ கூட்டணிகளும், அரேபிய நாடுகளின் அமெரிக்க அடிவருடிகளும் பதில் கூறியே ஆகவேண்டும். நாடுகளின் வழங்களை வறுகி எடுக்க உருவாக்கப்பட்ட வலிந்த யுத்தங்களை உருவாக்கியவர்கள் இவர்கள். இதனை இன்னமும் தொடர்ந்து செய்து வரவே துடிகின்றனர். இதில் அவர்களுக்கு ருசிக்க விரும்பிய கடைசி புதையல் உக்ரேன். வழமைபோல் உள்நாட்டுக்கலவரங்களை ஊற்படுத்தி கையை வைத்தால் வைத்த கால்களை உடைத்தெறுவேன் என்று ரஷ்யா புறப்படும் என்று நேட்டோ புலனாய்வுகளும், இராஜதந்திரிகளும் நம்பியிருக்கவில்லை. பிழையாக கணக்குடன் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு சிலகாலம் உக்ரேனில் விரலை விட்டு ஆட்ட முயன்றனர். ரஷ்யாவின் விழிப்பு நேட்டோ கூட்டணிகளை உக்ரேன் பக்கம் திருப்பிவிட்டது. இலங்கையில் இவர்களுக்கு கிடைப்பதை விட அதிகம் உக்ரேனில் கிடைக்கும் என்பதினால் ரஷ்யா பக்கம் இவர்களின் கவனச்சிதறல் ஏற்பட்டுவிட்டது இந்த கிழமையில். இதனால் இலங்கை விடயத்தில் சற்றே அடங்கி வாசிக்க வெளிக்கிட்டதன் விளைவுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் காரம் குறைந்ததற்கான முக்கிய காரணம் ஆகும். கூடவே இன்னொரு செய்தியையும் ரஷ்யா நேட்டோ கூட்டணிகளுக்கு கொடுத்திருக்கின்றது. இனிமேல் வெறும் வீற்ரோ அதிகாரத்தை பாவிப்பதற்கு அப்பால் படைகளையும் நகர்த்துவோம் என்ற செய்திதான் அது. ஆப்கானித்தானில் இடதுசாரி அரசை அமைக்க நேரடியாக உதவிய சோவியத் யூனியனின் செயற்பாட்டிற்கு பிறகு நடைபெற்ற பெரிய இராணுவ நகர்வு இது. இது அமெரிக்க கூட்டமைப்பை ஆடவைத்துவிட்டது. இது ஒருவகையில் இலங்கை அரசிற்கு காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாகிவிட்டது. இனிவரும் காலங்களிலும் இலங்கை அரசு தனது நாட்டில்; பல்லின மக்கள் சம உரிமையுடன் வாழ உறுதி செய்யாது இருக்கும் இடத்து இது போன்ற காகம் இருக்க பனம்பழம் விழும்காட்சிகளை நம்பிக் கொண்டேதான் இருக்க வேண்டும். எப்போதும் இக்கதை இலங்கை அரசியற்கு வாய்பாக அமையும் என்று நம்பியருப்பது புத்திசாலித்தனமானது அல்ல. மேலும்; இங்கு பனம் பழத்திலிருப்பவை இருப்பவை காகங்கள் அல்ல கழுகுகள் என்பதை இலங்கை மக்கள் புரிந்து கொண்டால்தான் எமக்கான தீர்வின் திறவுகோல் அமெரிக்க கூட்டாளிகளால் அல்ல ஏனைய முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் ஆதரவுகளுடன் மட்டுமே உறுதி செய்யப்படலாம் என்பதை புரந்து கொள்ள வேண்டும். இதற்கான காய் நகர்தல்களை நாம் செய்தால் இலங்கையில் சகல சமூகத்தவரும் சம உரிமையுடன் வாழமுடியும் அன்றேல் நாம் மீண்டும் மீண்டும் நாம் விழுந்துதான் கிடப்போம். (Saakaran) மார்ச் 08, 2014 மார்ச் 07, 2014 கொழும்பிலிருந்து பளை வரை விசேட சொகுசு ரயில் நேற்று முதல் ஆரம்பம்
கொழும்பில் இருந்து பளை வரை நேற்று முதல் குளிரூட்டப்பட்ட விசேட சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 1400 ரூபா கட்டணம் அறவிடப்படுகிறது. இந்த சொகுசு ரயில் பிற்பகல் 2.45க்குப் புறப்பட்டு 6 மணி நேரத்தில் பளைக்கு சென்றடையும் என ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது. கிளிநொச்சியில் இருந்து பளை வரையான ரயில் சேவை செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப் பட்டதையடுத்து தினமும் 3 ரயில்கள் கொழும்பில் இருந்து பளை வரை பயணிக்கிறது. இதேவேளை நேற்று முதல் விசேட சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதே வேளை சனிக்கிழமைகளில் மாத்தறையில் இருந்து பளை வரை ரயில் மற்றுமொரு சேவை இடம்பெற உள்ளது. விசேட சொகுசு ரயில் தினமும் பிற்பகல் 2.45 மணிக்குக் கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படுகிறது. இதற்கான பயணச் சீட்டுக்களை பளைவரையான சகல ரயில் நிலையங்களிலும் முன் பதிவு செய்து பெற முடியும் என அறிவிக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 6.50க்கு பளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் புறப்படுகிறது. ஏமாற்றிவிட்டதா அமெரிக்கா? (கே.சஞ்சயன்)ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்கும் பிரேரணையில், சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என்று எதிர்பார்த்திருந்தவர்களுக்கு கடந்த திங்கட்கிழமை ஏமாற்றம்தான் ஏற்பட்டது. அதுமட்டுமன்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25ஆவது அமர்வின் ஆரம்ப நாளன்று, உயர்நிலைப் பிரதிநிதிகளின் உரை நிகழ்வில் ஐ.நா.வுக்கான அமெரிக்க நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் உரையாற்றுவதாக இருந்தது. அவரது உரையும் முக்கியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதும், உக்ரேன் விவகாரம் அவரது ஜெனீவா பயணத்தை தடைப்படுத்தியிருந்தது. (மேலும்.....) 'மன்னார் மனித புதைகுழி, பழைய மயானம்' மன்னார், திருக்கேதீஸ்வரம் பகுதியில் மனித புதைகுழியென தோண்டப்பட்ட பகுதி பழைய மயானமொன்றாகும் என தொல்பொருட் ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்தது. மேற்படி புதைகுழியில் சடலங்கள் புதைக்கப்பட்டிருந்த விதம், சடலங்கள் மண்ணினால் மூடப்பட்டிருந்த முறை மற்றும் மனித எச்சங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமையை அடுத்தே மேற்படி மனித புதைகுழியானது பழைய மயானம் என்ற முடிவுக்கு வந்ததாகவும் இதனையடுத்து புதைகுழியைத் தோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் தொல்பொருட் ஆராய்ச்சி திணைக்களத்தின் அகழ்வுப் பிரிவு அதிகாரி ஏ.ஏ.வி.விஜேரத்ன தெரிவித்தார். இந்த சடலங்கள் வெவ்வேறு காலப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் இவை 50 - 60 வருடங்கள் பழைமையானவை. சில மனித எலும்புக்கூடுகள் 100 வருடங்கள் பழைமையானவை என்றும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார். இந்த சடலங்கள் புதைக்கப்பட்ட காலங்களில் சவப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டிருக்காமல் இருந்திருக்கலாம். எவ்வாறாயினும் 1936 மற்றும் 1937 ஆண்டுக் காலப்பகுதியில் உலர் வலயப் பகுதிகளில் பரவிய மலேரியா காய்ச்சலினால் உயிரிழந்தவர்களின் சடலங்களே இப்பகுதியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறினார்."இந்திய மீனவர்களால் பாதிக்கப்படும் எம்மவர் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவதில்லை" இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடித் தொழிலால் எம் நாட்டு மீனவர்கள் பெரும் பாதிப்புக்களையும் பொருளாதார பின்னடைவையும் சந்தித்து வருகின்றனர். இது தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் அக்கறை காட்டுவதில்லை என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். யுத்தத்தால் ஏழு சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்த வடமாகாணத்தின் மீன்பிடித்துறையை தற்போது 15 சதவீதமாக அதிகரித்துள்ளோம். குறிப்பாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் பாதுகாப்பு காரணங்களை காட்டி கடற்றொழில் செய்வதில் இருந்த தடைகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளாருடன் பேசி அதனை தீர்த்த போதும் பிரதேச இராணுவ அதிகாரிகள் அதனை நடைமுறைப்படுத்தாது இழுத்தடிப்பு செய்து வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்தும் எமது அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கைகள் அந்த தடைகளையும் நீக்கி இன்று நிம்மதியாக கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஏது நிலைகளை ஏற்படுத்தியுள்ளோம். கொட்டாவ - கடுவலை அதிவேக நெடுஞ்சாலை இன்று திறப்பு
கொட்டாவ கடுவலை அதிவேக நெடுஞ்சாலை சுற்றுவட்டம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்துவைக்கப்படவுள்ளது. 11 கிலோ மீற்றர் நீளமான இந்த சுற்றுவட்ட வீதி உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட பின்னர் இவ்வீதி மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது. காலிக்குச் செல்பவர்கள் கொழும்பில் காணப்படும் வாகன நெரிசல்களைத் தவிர்ப்பதற்கு இந்தச் சுற்றுவட்டப் பாதையைப் பயன்படுத்த முடியும். இந்த சுற்றுவட்டத்தின் வடக்கு நுழைவுப் பகுதி கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான அதிவேக நெடுஞ்சாலையுடனும், தெற்கு எல்லை கொழும்பு இரத்தினபுரி, வெல்லவாய மட்டக்களப்பு வீதிகளையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இதற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கான நுழைவும் இப்பகுதியில் அமைந்து ள்ளது. கொட்டாவ கடுவலை அதிவேக நெடுஞ்சாலை சுற்றுவட்டத்தின் முதல் பகுதி ஜப்பானின் நிதியுதவியுடன் 27 பில்லியன் ரூபா செலவில் அமைக் கப்பட்டுள்ளது. 2023 இல் இந்தியா பணக்கார நாடுஎதிர்வரும் 2023 ம் ஆண்டில் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 வது இடத்தில் இருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, ‘நைட் பிராங்’ என்ற தனியார் நிறுவனம் சொத்து மேலாண்மை குறித்து ஆய்வு நடத்த வருகிறது. இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களின் செல்வச் செழிப்பு மற்றும் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்து, ‘2014 செல்வச் செழிப்பு அறிக்கை’ ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, எதிர்வரும் 2023 ம் ஆண்டில் உலகிலேயே அதிக அளவில் பணக்காரர்கள் உள்ள நாடாக இந்தியா உருவாகும் உலக நாடுகளில் அதிக பணக்காரர்கள் உள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 4 வது இடத்தில் இருக்கும். மேலும் இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள பணக்காரர்களை விட இந்தியாவில் அதிக பணக்காரர்கள் இருப்பார்கள். இதே வேளை அதிக ஏழைகளைக் கொண்ட நாடு என்ற பட்டியலில் இந்தியா இணையாவிட்டால், அதுதான் பெருமைப்படக கூடிய விடயமாக அமையும். சர்வதேச மகளிர் தின நிகழ்வு 2014 மார்ச் 9 காலை 10 மணிக்கு யாழ் பொது நூல் நிலைய உணவகம் · பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும், · சுயாதீன பெண்கள் அமைப்பின் தேவை குறித்தும் தாங்களும் பங்கு பற்றிச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நன்றி பெண்கள் விழிப்புணர்வு அரங்கம் தொடர்புகளுக்கு ஞானசக்தி -0777667379 மார்ச் 06, 2014 என் மனவலையிலிருந்து..... ஐ.நா. சபை இலங்கைத் தமிழருக்கு விடிவை வாங்கித்தருமா...? (சாகரன்)
மீண்டும் ஒரு முறை ஐ.நா சபையில் இலங்கை அரசுக்கெதிரான போர்க்குற்றங்கள் குற்றச் சாட்டு, இதனைத் தொடர்ந்து உள்ளுரில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும், இதனைத் இலங்கை அரசு செய்யத்தவறும் பட்சத்தில் சர்வதேச விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் அமெரிக்க செல்வாக்கு சக்திகளினால் முன்வைக்கப்படுகின்றன. உண்மையில் இலங்கை மக்களின் சிறப்பாக இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களின் நலன்களின் அடிப்படையில்தான் இக் கோஷங்கள் எழுப்பப்படுகின்றனவா? என்றால் இல்லை என்பதே பதில். இக் குரல் எழுப்பலுக்கு பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் நின்று செயற்பட அதற்கு ஜால்ரா போடும் நாடுகளும் கூடவே குத்தாட்டம் ஆடுவதே உலக ஒழுங்காக தற்போது இருந்து வருவது கண்கூடு. இலங்கை அரசின் சீனாவுடனான நெருக்கமும், மேலும் அமெரிக்க முதலாளித்துவ முகாமிற்கு அடிபணியாத ஏனைய ரஷ்ய, தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கை அரசின் உறவு அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. இதன் எதிரொலிதான் இலங்கை அரசிற்கு எதிரான குரல்கள் எல்லாம். கவனிக்க இலங்கை அரசிற்கு எதிரான குரல்தான் இவையே ஒழிய அவை தமிழ் பேசும் மக்களுக்கான குரல்கள் அல்ல. இலங்கையில் ஐ.தே கட்சியுடன் எப்போதும் குடும்பம் நடத்தும் தமிழ் குறும் தேசியத் தலமைகளின் கையே தற்போது ஓங்கியிருக்கும் நிலையில் அவர்களும் இதனைத் ஆதரித்து நிற்பதில் புதினம் ஒன்றும் இல்லை. புலிகளின் தமிழ் நாட்டு அரசியல் விசுவாசிகளும், புலம் பெயர் தேசங்களில் வாழும் முன்னாள் புலிகளின் பணவசூல் விண்ணர்களுக்கும் மெல்லுவதற்கு தேவைப்படும் விடயமும் இதுதான். மாறாக அமெரிக்காவின் புனிதன் வேடமும் போர்குற்றங்களை விசாரிக்கு தீர்மானங்கள் எல்லாம் இலங்கை ஆளும் தரப்பு 'நான் உன் விசுவாசி' என்று மண்டியிட்டால் இல்லாமல் போய்விடும். வியட்நாமிலிருந்து ஆரம்பித்து இன்று உக்ரேன்வரைக்கும் தனது புஜத்தை உயர்த்தும் அமெரிக்காவின் செயல்களால் மீறப்பட்ட போர்குற்றங்களை விசாரிக்க விசாரணைக் கமிஷன்;கள் அமைக்க வேண்டும் குரல் எழுப்ப எந்த சிங்கனாலும், ஏன் ஐ. நா சபையாலும் முடியுமா? என்பதே இன்றைய கேள்வி. சோவியத் யூனியனின் உடைத்தலுக்கு பின்பு கெட்டதை தட்டிக கேட்க புஜம் உள்ள பலவான் இவ்வுலகில் இல்லாமல் இருப்பது அமெரிக்க கூட்டாளிகளின் ஏதாச்சேகாரங்களுக்கு வாய்பாக அமைந்துவிட்டது. இந்நிலைதான் எப்போதும் நீடிக்கும் என்றால் பகுத்தறிவுள்ள மனிதன் என்றும் தோற்றுப் போவான் என்றே வரலாறு அமைந்துபோகும்;. ஆனால் மனித குல வரலாற்றின்படி மனிதம் ஒருநாள் எழுச்சி பெற்று வென்றே தீரும். அன்று பொதுச்சபைகளில் கேட்கப்படும் நீதிகள் மனித குலத்திற்கு விடிவைத்தரும். அந்த மனித குலத்தின் ஒரு அங்கம்தான் இலங்கைத் தமிழ் பேசும் மக்களும். ம்.... அதுவரை முயல்வோம்....! (மார்ச் 06, 2014) சி.வி.க்கு ஆனந்தசங்கரி கடிதம் 'யாழ்ப்பாணத்திற்கு ஒரு ஆறு' என்ற திட்டத்தை இணைத்து செயற்படுவதே வெற்றியளிக்கும்....!
யாழ். குடாநாடு செழிப்புற வேண்டுமென நீங்கள் நினைத்தால் காலஞ்சென்ற
அருணாசலம் மகாதேவா அவர்களினால் 1947ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட
யாழ்ப்பாண களப்புத்திட்டத்தை அமுல்படுத்துங்கள். இத்திட்டத்தை செயற்படுத்த
சுண்டிக்குளத்தில் ஓர் நீர் தடுப்பணையையும் தொண்டமனாறு மற்றும் நாவற்குழி
ஆகிய இடங்களில் இரு தடுப்பணையையும் அமைப்பதுடன் ஆனையிறவு களப்பையும்
வடமராட்சி களப்பையும் இணைக்குமாறு 4 தொடக்கம் 5 மைல் நீளமான கால்வாய்
ஒன்றும் வெட்டப்பட வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்ற போதிய நிதியின்மையால்
கைவிடப்பட்டது.
(மேலும்.....)
வேதனையின் உச்சக்கட்டத்தில் மார்க்சிஸ்ட்கள் (தமிழகத்திருந்து அருள்) லோக்சபா தேர்தல் குறித்து விவாதிக்க, மார்க்சிஸ்ட் கம்யூ,கட்சியின் இரண்டு நாள், மாநில குழுக் கூட்டம், சென்னையில் 4.3.14 அன்று தொடங்கியது. முதல் நாளான நேற்று நடந்த கூட்டத்தில், மாநில குழு உறுப்பினர் பேசியதாவது.:- கூட்டணி என்ற பெயரில், அ.தி.மு.க வினர் நம்மை அலைக்கழிக்கின்றனர். அந்தக் கட்சியின், தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேசவே முடியவில்லை. எதற்கெடுத்தாலும், 'அம்மா' வை கேட்டு சொல்கிறோம் என, அவர்கள் கூறுவதால், தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கிறது. மாநில குழு உறுப்பினர்கள் புலம்பலை கேட்ட, கூட்டத்தில் பங்கேற்றிருந்த,கட்சியின் மேலிட பார்வையாளர் வரதராஜன்,'அ.தி.மு.க உடனான, கூட்டணி விஷயத்தில், எந்த முடிவையும், அவசரப்பட்டு எடுத்து விடக்கூடாது' என அமைதிப்படுத்தியுள்ளார். (மேலும்.....) யாழில் மாட்டிய மஸாச் கிளப் நடத்துனர் ரி.என்.ஏ மாநகரசபை உறுப்பினர் ராஐதேவன். (தாயகத்திலிருந்து விந்தன்)
இந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகதி வேட்பு மனுத் தாக்கல் 2014ஆம் ஆண்டிற்கான இந்தியப் பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 7ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணைக்குழு நேற்று அறிவித் துள்ளது. இந்த தேர்தல் 9 கட்டங்களாக நடத்தப்படும் என்பதுடன், தமிழகத்தின் புதுவை மாவட்ட உட்பட தமிழகமெங்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் மே மாதம் 16ம் திகதி நடைபெறும் என்பதுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 5ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என்றும் இந்திய பிரதம தேர்தல் ஆணையாளர் வீ. எஸ். சம்பத் அறிவித்து ள்ளார். 15ஆவது இந்திய பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. 543 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக இத்தேர்தல் நடைபெறவுள்ளது. 2014 மக்களவைத் தேர்தலில் 81.4 கோடி வாக்களர்கள் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையாளர் சம்பத் தெரிவித்தார். கடந்த மக்களைத் தேர்தலை விட இந்தத் தேர்தலில் 10 கோடி வாக்காளர்கள் அதிகம் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் மார்ச் 29 ஆம் திகதி முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 5ஆம் திகதி கடைசி நாள் என்று தேர்தல் ஆணையாளர் சம்பத் அறிவித்துள்ளார். கொலைக் குற்றம்இலங்கையருக்கு பிரித்தானியாவில் ஆயுள் தண்டனை!கடந்த வருடம் பிரித்தானியர் ஒரு வரை கொலை செய் தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த வருடம் கோபிநாத் வேலுசாமி என்பவர் மயூரதி என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவருடைய கொலை பொலிஸாரின் ஆடையில் பொருத்தியிருந்த புகைப்படக் கருவியில் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளரான இவரை, கொலை இடம்பெற்று ஒரு சில நிமிடங்களிலே பொலிஸார் கைது செய்து விட்டனர். புன்னகை ராஜா சேர்வராஜ் எனும் மற்றுமொரு இலங்கையருடன் மயூரதி புதிய உறவு முறையினை பேணியமை தொடர்பில் கோபமுற்ற கோபிநாத் அவரை கொலை செய்துள்ளார். அவரது வழக்கு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது அவர் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டது. அவர் குறைந்தபட்சம் 18 வருடங்கள் சிறையில் கழிக்க வேண்டும் என்று உத்தர விடப்பட்டுள்ளது. ஜெனீவா அமர்வில் நவிப்பிள்ளையின் அறிக்கையை நிராகரித்தது இலங்கைஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை இலங்கை நிராகரிக்கின்றது என வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஜெனீவாவில் தெரிவித்தார். சில நாடுகளின் சுயநலனுக்காக மனித உரிமைகள் அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடனான நெருக்கமான உறவை இலங்கை தொடர்ந்து பேணிவரும் எனவும் அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் தெரி வித்தார். உலகின் பல நாடுகளில் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட நிலைமைகள் குறித்து கவனம் செலுத்தப்படவேண் டியிருக்கும் சூழ்நிலையில், குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக மாத்திரம் மனித உரிமைகள் கவுன்சில் நடவடிக்கை எடுத்து வருவதானது பாரபட்சமாக அமைந்துள்ளது. அமெ. இராணுவ வீரரில் ஐவரில் ஒருவருக்கு மனநலம் பாதிப்புஅமெரிக்காவில் இராணுவ வீரர்கள் ஐவரில் ஒருவருக்கு மனநலம் சார்ந்த பாதிப்புகள் உள்ள தாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட் டுள்ளது. மன உளைச்சல் போன்றவற்றால் அதிக இராணுவத் தினர் பாதிப்ப டைந்துள்ளதும் இவர்களில் பெரும் பாலானோர் தற் கொலை செய்து கொள்ள முய்சித் துள்ளதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்கொலை பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 14 சத வீதத்தினர் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிந்தது. 5.3 சதவீதத்தினர் தற்கொலை பற்றித் திட்டமிட்டுள் ளனர். மன நலம், தற்கொலைக்கு முயற்சிக்கும் மன்நிலை போன்ற ஆய்வில் பெரும் பாதிப்பிற்குள்ளானவர்கள் எவ்வாறு இராணுவத்தில் சேர்க்கப்பட்டார்கள். என்னும் கேள்வி எழுந்துள்ளது. நைஜீரியாவில் அழிவின் விளிம்பில் உள்ளூர் மொழிகள்நைஜீரியாவில் பல டஜன் உள்ளூர் மொழிகளும் அழிவின் விளிம்பில் இருப்பதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. குறித்த மொழிகள் மீதான புறக்கணிப்பு மற்றும் வெளிச் செல்வாக்கு ஆகியவையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. நைஜீரியாவில் 529 உத்தியோகபூர்வ மொழிகள் உள்ளன. இதில் 62 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று அந்நாட்டின் கார்டியன் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று 200 க்கும் அதிகமான நைஜீரிய மொழிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. உலகில் அதிக மொழி பன்முகத்தன்மை கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாகும் என்கிறார். அடகுன்லே அஜசின் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கொலே ஒடோசோ, எனினும் பல குழந்தைகளும் தமது தாய் மொழியை கற்பதில்லை. “ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாபோன்று ஆபிரிக்காவில் பழங்குடி மக்களின் மொழி ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை” என்று அவர் விளக்கினார். நைஜீரியாவில் ஹவுசார, இக்போ மற்றும் யருபா ஆகிய மூன்று பிரதான மொழிகளுடன் ஆங்கிலமும் ஆதிக்கம் செலுத்துகிறது. அதேபோன்று உள்ளூர் மொழிகளை பாதுகாக்க அளவுக்கு அதிகமான சர்வதேச தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகள் ஒளி, ஒலிபரப்பப்படுவதை மட்டுப்படுத்த வேண்டும் என நாட்டின் முன்னணி தேசிய கலாசார குழுவொன்று கோரியுள்ளது. எவ்வாறாயினும் தகுந்த நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இந்த நூற்றாண்டு முடிவில் உலகின் 6000 மொழிகளில் அரைப்பங்கானவை அழிந்துவிடும் என்று யுனேஸ்கோ எச்சரித்துள்ளது. பிரேசிலில்உலக கோப்பை உதைபந்தாட்டம் 12 மைதானங்களில் , 64ஆட்டங்கள்உதைபந்தாட்ட போட்டிகளில் மிகவும் பிரசித்திப் பெற்றது உலக கோப்பை உதைபந்தாட்ட போட்டி ஆகும். உலகின் 2-வது மிகப் பெரிய விளையாட்டாக அந்த போட்டி திகழ்கிறது. உலக கோப்பை உதை பந்தாட்ட போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. 20-வது உலக கோப்பை உதைபந்தாட்ட போட்டியை தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில் நடத்துகிறது. ஜ_ன் 12-ம் திகதி முதல் ஜ_லை 13-ம்திகதி வரை நடக்கிறது. உலக கோப்பை உதைபந்தாட்ட திருவிழா நடைபெற இன்னும் 100 நாட்களே உள்ளது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பிரேசில் நாட்டு உதைபந்தாட்ட சங்கம் முழுவீச்சில் செய்து வருகிறது. உலககோப்பை போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக்அவுட்' (2-வது சுற்று) ரவுண்டுக்கு முன்னேறும். அங்குள்ள 12 மைதானங்களில் போட்டி நடைபெறுகிறது. மொத்தம் 64 ஆட்டங்கள் நடைபெறுகிறது. மார்ச் 05, 2014 ராஜீவ் காந்தி கொலையின் சூத்திரதாரியான சிவராசனின் டயரியில் உள்ள தகவல்கள் குறிப்புகள் அதிரவைக்கின்றன (இந்தியா டுடேயில் வெளியானது)
ஜீலை 1991,எல்.டி.டி.ஈ உளவுப் பிரிவைச் சேர்ந்த ஜெயக்குமார் ஒரு ரகசியத்தை தெரிவித்தார். இலங்கைத் தமிழரான இவர், மே 21,1991 ல் நிகழந்த ரரஜீவ்காந்தி கொலையில் சம்பந்தமுள்ளவராக சந்தேக வலைக்குள் இருந்தார். கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ யின் தலைமை விசாரனை அதிகாரி(ஐ.ஓ) கே.ரகோத்மனிடம், எல்.டி.டி.ஈ யினர் தங்கியிருந்த வீட்டின் சமையறையின் தரைக்குள் இருந்த ஓட்டையைபற்றி ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த வீடு 158,முத்தமிழ் நகர், கொடுங்கையூரில் இருந்தது. செப்டம்பர் 1990ல் எல்.டி.டி.ஈ தன்னுடைய பல போராளிகளை தமிழகத்தில் பாதுகாப்பான வீடுகளை எடுத்து தங்க அனுப்பியிருந்தது. இதில் ஒருவர் தான் ஜெயக்குமார். அந்த ஓட்டைக்கு கீழே என்ன இருந்தது என்று ஜெயக்குமாருக்கு தெரியாது. ஆனால் அது மிகவும் முக்கியமானது. ஏனெனில் ராஜீவ் கொலையின் சூத்திரதாரிகளில் ஒருவரான சிவராசன்(33) அந்த ஓட்டையை திறக்கும் போதெல்லாம் ஜெயக்குமாரை வெளியே அனுப்பிவிடுவார். ராஜீவ் கொலையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு(சிஐடி) அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளெ புகுந்தது. (மேலும்.....) ஜே.ஆர். அரசின் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடு நாட்டை பிரச்சினைக்கு உட்படுத்தியுள்ளது ஏற்கனவே ஜெனீவாவில் ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கூட்டத்தொடரின் முதல் நாள் அன்றே அமெரிக்கா பிரிட்டனின் அனுசரணையுடன் இலங்கை மீதான மனித உரிமை குற்றச்சாட்டு தொடர்பான பிரேரணையை சம ர்ப்பித்திருக்கும் இவ்வேளையில் நாம் எமது தாய்நாடு இந்த இக்கட் டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு பின்னணியில் இருந்தவர்களை முழு உலகத்துக்கும் நம்நாட்டு மக்களுக்கும் அம்பலப்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றோம். (மேலும்.....) மார்ச் 04, 2014 முல்லை. மனித எச்சங்கள்; புலிகளால் கொல்லப்பட்டவர்களுடையவை முல்லைத்தீவு, உடையார்க்கட்டு, 200 வீட்டுத்திட்ட காணியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவர்களுடையவை என தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமாக அஜித் ரோஹன தெரிவித்தார். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த கோபால் கோடீஸ்வரன் என்பவரால் வழங்கப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம், இந்த எச்சங்களுக்குரியவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று தெரியவந்ததாக பொலிஸ் பேச்சாளர் கூறினார். கடந்த 2009ஆம் ஆண்டு பெப்ரவரி 9ஆம் திகதி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் குறித்த பகுதியொன்றிலுள்ள காணியொன்றில் சடலங்கள் புதைக்கப்படுவதாக பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரால் கோபாலுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். அத்துடன், மேற்படி எச்சங்களுக்குரியவர்கள் அப்பகுதியில் புதைக்கப்படுவதை கோபால் நேரில் கண்டுள்ளார் என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார் என்று அஜித் ரோஹன கூறினார். முல்லைத்தீவு, உடையார்க்கட்டு 200 வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள காணியிலிருந்து கடந்த 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 9 பேருடைய மனித எச்சங்களும் அந்த எச்சங்களைச் சுற்றியுள்ள நிலையில் 9 பாய்களும், ஒருவரின் அடையாள அட்டையும் மீட்கப்பட்டன. குறித்த பகுதியில் விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்காக நிலத்தினைப் பண்படுத்தியபோது, நிலத்தினுள் மண்டையோடு இருப்பதை அவதானித்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் யாழ். மாவட்ட சட்ட மருந்துவ அதிகாரி ஆகியோர் முன்னிலையில் குறித்த நிலம் தோண்டப்பட்டது.இதன்போது 9 பேருடைய மனித எச்சங்களை மீட்டு, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில், குறித்த மனித எச்சங்கள் மரபணு பரிசோதனைக்காக யாழ். பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்றார். பளையை சென்றடைந்தது யாழ்தேவி கிளிநொச்சியிலிருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி கடுகதி ரயில் சற்று நேரத்திற்கு முன்னர் பளை ரயில் நிலையத்தைச் சென்றடைந்துள்ளது. வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தின்போது சேதமடைந்த ரயில் பாதை புதிதாக அமைக்கப்பட்டதை குறிக்கும் முகமாக கிளிநொச்சியிலிருந்து பளைவரை ரயில் பயணம் இடம்பெற்றுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா, பிரதியமைச்சர் ரோஹன திஸாநாயக்க, இந்திய உயர் ஸ்தானிகர் வை.கே.சின்ஹ ஆகியோர் இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதே இந்தியாவின் நோக்கம் - குர்ஷித் இலங்கையுடன் இந்தியா தொடர்புகளை வைத்திருப்பது வடபகுதியிலுள்ள தமிழ் மக்களுக்கு உதவுவதை பிரதானமாக நோக்கமாகக் கொண்டுள்ளதென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை தமிழ் குழுக்கள் கண்டித்தமைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மார்ச் 03, 2014 புலிகளுக்கு எதிராக 80 முறைப்பாடுகள் காணாமல் போதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 80 சதவீதமானவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரானவை என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கைச் சேர்ந்த பெரும்பான்மையானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினாலேயே கடத்தப்பட்டுள்ளனர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அரசாங்கப் படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தும் நோக்கில் புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் காணாமல் போனமை பற்றிய முறைப்பாட்டை ஏற்ற குழுவின் அமர்வைப்பற்றி அறிக்கையிட்ட தமிழ் ஊடக நிருபர்கள் பெரும்பான்மையான முறைப்பாடுகள் இராணுவத்துக்கும் அவர்களின் துணை படைகளுக்கும் எதிராக இருந்தன என கூறியிருந்தனர். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இந்த குழுவின் செயற்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருப்தியடையவில்லை என்று அறிவித்துள்ளது. கிளிநொச்சியில் இந்த குழுவின் அமர்வின் போது அரசாங்கம் சார்ப்பான ஒரு குழுவினர் முறைப்பாட்டார்களிடம் மரண சான்றிதழை ஏற்றுக்கொண்டு முறைப்பாடடை கைவிடுமாறு நிர்ப்பந்தித்தனர் என்று கூறும் ஒரு தீர்மானம் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூங்கிலாறு மனிதப் புதைகுழி விடுதலைப் புலிகளினுடையது - பொது மகன் ஒருவர் வாக்கு மூலம் முல்லைத்தீவு மூங்கிலாறு வடக்குப் பகுதியில் முல்லைத் தீவு பொலிஸாரினால் மீட்கப்பட்ட 9 மண்டை ஓடுகள் உள்ளிட்ட மனித எச்சங்கள் தொடர்பிலான விசாரணைகள் முடக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அம்மனிதப் புதைக்குழி தொடர்பில் ஒருவரின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் விஷேட அதிரடிப்படை தலைமையகத்தில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (மேலும்.....) வெளிவந்துவிட்டது வானவில் 37 உலக வல்லாதிக்க சக்திகளின் சூழ்ச்சித் திட்டங்களை இலங்கை மக்கள் உறுதியுடன் எதிர்க்க வேண்டும்! இலங்கையின் பிரதான பிரச்சனையாக இனப்பிரச்சனையை நிலைநிறுத்தி வந்த உள்நாட்டு சிங்கள - தமிழ் இனவாத பிற்போக்கு சக்திகளும், அவர்களது ஏகாதிபத்திய எஜமானர்களும், தொடர்ந்தும், அந்த பாதையிலேயே இலங்கையை கொண்டு செல்ல எத்தனிப்பதை சமீபத்தைய அரசியல் போக்குகள் எடுத்துக்காட்டுகின்றன. எமது நாட்டில் இனங்களுக்கிடையில் மோதலை உருவாக்கும் பொருட்டு திட்டமிட்ட முறையில் சில காரியங்களைச் செய்துவிட்டுத்தான் 200 வருடங்களுக்கும் மேலாக எமது நாட்டை ஆண்ட பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் 1948 இல் நாட்டை விட்டுச் சென்றார்கள். அவர்கள்திட்டமிட்டவாறு 1948 இல் அவர்கள் வெளியேறிச் சென்று சரியாக 10 வருடங்களில் நேரம் கணித்து வைத்த வெடிகுண்டைப்போல 1958 இல் முதலாவது இன வன்செயல் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாகப் பின்னர் 1977, 1981, 1983ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாகத் தமிழ் மக்கள் மேல் சிங்களப் பேரினவாத சக்கிகளால் இன வன்செயல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. (மேலும்.....) என்ன சொல்லப் போகின்றாய் இந்தக் கொடுமைக்கு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே....? அமிர்தசரஸ், பஞ்சாபில்
பிரிட்டீஷ் ஆட்சியின் போது, கிணற்றில் தள்ளி படுகொலை
செய்யப்பட்ட இந்திய வீரர்கள், 100 பேர் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயேர்களுக்கு எதிராக, 1857ல், நாடு முழுவதும், கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் இருந்த நம் வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களில், 'பெங்கால் நேட்டிவ் இன்பேன்ட்ரி' என்ற, ராணுவ படைப்பிரிவில் இருந்த, நம் வீரர்கள் பலர், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டில், அமிர்தசரஸ் பகுதியை நிர்வாகம் செய்த ஆங்கிலேய அதிகாரிகளான துணை கமிஷனர், பிரடெரிக் ஹென்சி கூப்பர் மற்றும் ராணுவ அதிகாரி, கர்னல், ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் ஆகியோர், இந்திய வீரர்கள் ஏராளமானோரை கொடூரமான முறையில் கொன்றனர். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், அவர்கள் கையில் சிக்கிய, வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 150 வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர், கை, கால்களை கட்டி, ஆற்றில் வீசப்பட்டனர். 283 வீரர்கள், கைகளை கட்டி, அமிர்தசரஸ் அருகே உள்ள அஜ்னாலா என்ற நகருக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை, அங்கிருந்த பாழுங்கிணற்றில் தள்ளி, 10 அடி உயரத்திற்கு மண்ணை போட்டு மூடிவிட்டனர், வெள்ளைக்கார அதிகாரிகள். (மேலும்.....) முஸ்லிம் கட்சியினால் ஜனாதிபதியுடன் முரண்பாடு ஏற்பட்டது - ஹக்கீம் 'வடமாகாண சபை தேர்தலில் தனித்துப் போட்டியிட நாம் தீர்மானித்த போது ஜனதிபதிக்கும் எனக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் ஏற்பட்டது. தனித்துப் போட்டியிட தீர்மானித்ததன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விடுவோம் என இந்த அரசாங்கத்தின் பாங்காளியான இன்னொரு முஸ்லிம் கட்சி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே அந்த முரண்பாடு ஏற்பட்டது' என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 'முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிடும் என்ற அச்சம் சிலரை ஆட்கொண்டிருக்கின்றது. இதனால், முக்கிய அமைச்சர்கள் சிலர் என்னுடன் கதைத்தார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை விட்டு வெளியேறிவிட்டால் ஆபத்தென்ற அச்சம் அவர்களிடம் மேலோங்கியிருக்கின்றது' என்றும் அவர் தெரிவித்தார். எமது கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சி என்ற காரணத்தினால் ஜனாதிபதியும் நானும் அடிக்கடி முரண்பட்டுக் கொள்கிறோம். இது புதிய விடயமல்ல. கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் என்னுடன் முரண்பட்ட ஜனாதிபதி காரசாரமான வார்த்தைகளை கூறினார். சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் மறைந்த தலைவர் அஷ்ரப் மட்டுமல்ல நானும் கூட அவருடன் முரண்பட்டிருக்கின்றோம்' என்றும் அவர் தெரிவித்தார்.ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் கிறீமிய குடாநாடு ரஷ்யப் படைகள் உக்ரைனின் கிறீமிய குடாநாட்டை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளன. ரஷ்யத் தலைமையுடன் நல்லுறவை பேணிவந்த உக்ரைன் ஜனாதிபதியை பதவி விலகி ஓடச்செய்த அரசியல் கிளர்ச்சிக்கு பதிலளிக்கும் வகையில், இராணுவ வலிமையை பயன்படுத்தும் அதிகாரத்தை ரஷ்ய நாடாளுமன்றம் ஜனாதிபதி விளாடிமிர்; புட்டினுக்கு வழங்கியது. ரஷ்ய இலச்சி;னை அகற்றப்பட்ட ரஷ்ய இராணுவ வாகனங்கள் கிறீமியவெங்கும் நிறைந்து காணப்பட்டன. அரசாங்கக் கட்டிடங்களும் பிரதான விமான நிலையமும் ரஷ்ய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன. கிறீமியாவில் மட்டுமன்றி உக்கிரைனின் எந்த பகுதியிலுமிருக்கும் ரஷ்ய பிரஜைகள், இராணுவத்தினரை பாதுகாக்க இராணுவ வலுவை பயன்படுத்தும் அதிகாரத்தை ரஷ்ய நாடாளுமன்றின் மேல் சபை புட்டினுக்கு வழங்கியதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்ய சார்பு மக்கள் கிழக்கு உக்ரைனிய நகரங்களில் அணி திரண்டுள்ளனர். இங்கு வன்செயல்கள் இடம்பெறுவதாகவும் கூறப்பட்டது. இனரீதியான கிளர்ச்சிகள் தூண்டப்படுவதற்கு இட்டுச்செல்லக் கூடுமோவென உக்ரைன் இடைக்கால அரசாங்கம் பயப்படுகின்றது. 90 நிமிடங்கள் புட்டினுடன் பேசிய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ரஷ்ய படைகளை கிறீமிய இராணுவத் தளங்களுக்குள் பின்வாங்கச் செய்யுமாறு கேட்டிருந்தார். கிழக்கு உக்ரைன் மற்றும் கிறீமியாவுக்குள் வன்செயல் இடம்பெறுமாயின் அங்குள்ள ரஷ்ய மொழி பேசுவோரை பாதுகாக்கும் உரிமை ரஷ்யாவுக்கு உள்ளதென புட்டின் ஒபாமாவுக்கு கூறியதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன. பளைக்கான சொகுசு ரயில் சேவை நாளை ஆரம்பம் கிளிநொச்சியிலிருந்து பளை வரையான சொகுசு ரயில் சேவை நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இந்த சொகுசு ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆரம்பித்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சொகுசுத் ரயில் சேவையானது கோட்டைக்கும், பளைக்கும் இடையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் தினமும் ஈடுபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்படுள்ளது. கோட்டே ரயில் நிலையத்திலிருந்து ஒவ்வொரு நாளும் பிற்பகல், 2.25 மணியளவில் புறப்படும் இந்த சொகுசுத் ரயில் இரவு 8.28 மணியளவில் பளையை சென்றடையும். பளையில் இருந்து மறுநாள் காலை புறப்பட்டு இந்த ரயில் மதியம், கோட்டேயை வந்தடையும் என்றும் அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. கூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியில் இணைவு கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தலைமையில் போராட்டக்காரர் ஆம் ஆத்மி கட்சியில் சனிக்கிழமை இணைந்தனர். ஆம் ஆத்மியின் பெயர் ‘எளிய மக்கள் கட்சி’ என்று தமிழில் பெயர் மாற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளம் கடலோரத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்துக்கு எதிராக அணு உலை எதிர்ப்பாளர்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கூடங்குளம் போராட்டக்காரர்கள் ‘ஆம் ஆத்மி’ கட்சியில் சேர வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று உதயகுமார் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் சனிக்கிழமை ‘ஆம் ஆத்மி’ கட்சியில இணைந்தார்கள். இதற்கான விழா சனி மாலையில் இடிந்தகரை கிராமத்தில் கிழக்கு அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்றது. ‘ஆம் ஆத்மி’ கட்சி தமிழக தேர்தல் பணிக்குழு தலைவர் டேவிட் பரூக்குமார் வந்து இருந்தார். அவரது முன்னிலையில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் மைபா ஜேசுராஜ், மில்டன், கெபிஸ்டன், முகிலன் ஆகியோரும், நூற்றுக்கணக்கானவர்களும் கட்சியில் இணைந்தனர். விழாவில் ‘ஆம் ஆத்மி’ என்ற வார்த்தைகளுக்கு, ‘எளிய மக்கள் கட்சி’ என்று தமிழில் மொழியாக்கம் செய்து, பெயர் சூட்டப்பட்டது. அதே நேரத்தில் கூடங்குளம் போராட்டக் குழுவின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வரும் புஷ்பராயன் கட்சியில் சேரவில்லை. குமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியடுவீர்களா? என்று கேட்டதற்கு கட்சி தலைமை என்ன சொல்கிறதோ? அதை ஏற்று முடிவு செய்வேன் என்று உதயகுமார் கூறினார். மார்ச் 01, 2014 உக்ரேன் ஊடாக ஐரோப்பிய பாசிசத்தின் மீள் பிரசன்னம். மனித குல விரோத கடந்த காலம் திரும்புகிறதா?
(சுகு-ஸ்ரீதரன் உக்ரேனில் வலதுசாரி நவபாசிச சாரம்சம் கொண்ட அதிகாரம் ஆட்சிக்கு வந்திருக்கிறது. உக்ரேனின் ஜனாதிபதி யார்க்கோவிச் ஜரோப்பிய- வட அமெரிக்க பொருளாதார மற்றும் பாதுகாப்பு பேரங்களுக்கு படியாததால் அங்கு இயல்பாக இருந்த மக்கள் கிளர்ச்சிகள் செயற்கையாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டது. எகிப்தின் தஹிரீர் சதுக்க கிளர்ச்சி போன்றதல்ல இது. இரும்புத் தொப்பி- முகமூடி- சுவஸ்திக்கா- கத்தி- துவக்கு- பெற்றோல-; குண்டுகளுடன் வந்த குண்டர் படைகள் தலை நகர் கீவில் நடந்த இந்த கிளர்ச்சியில் ஆதிக்கம் வகித்தன. (மேலும்.....) டக்ளஸுடன் அரசியலில் இணைய பல தடைகள் உள்ளன - சி.வி மனிதாபிமான ரீதியில் இணைந்து கொள்வோம், அரசியல் ரீதியில் இணைவதற்கு இருவருக்கும் இடையில் பல தடைகள் இருக்கிறன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தாவினைப் பார்த்துக் கூறினார். பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட மாணவர் தங்குமிட விடுதி திறப்பு விழாவில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, டக்ளஸ் தேவானந்தாவும், விக்னேஸ்வரனும் உரையாடும் போதே விக்னேஸ்வரன் இவ்வாறானதொரு கருத்தினை வெளியிட்டார். இதன் போது முதலமைச்சர் 'தனிப்பட்ட ரீதியில் மனிதாபிமானத்துடன் நாம் இணைந்து கொள்வோம். ஆனால் அரசியல் ரீதியில் இணைந்து கொள்வதற்கு பல தடைகள் இருக்கின்றன. இதனை ஊடகங்கள் வேறு விதமாக சித்தரிக்கும்' என்றார். அதற்குப் பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா 'எனக்கு கைலாகு கொடுப்பதில் பிரச்சினை இல்லை. அவருக்கு பிரச்சினை ஏற்படாமல் இருந்தால் சரி' என்று சிரித்தவாறே கைலாகு கொடுத்தார். இவர்கள் இருவரின் உரையாடலினை அங்கிருந்தவர்கள் பார்த்து சிரித்துக்கொண்டனர். ‘எனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி’ வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டார் விக்கி விரும்பாவிடின் அடுத்த நிமிடமே கொழும்பு திரும்பவும் தயாராம் தனக்கு எதிராகத் தமிழ்க் கூட்டமை ப்பிற்குள் சதி நடை பெறுவதாக வடமாகாண சபை முதலமைச்சர் சி. வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சராகத் தான் இருப்பதை தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள சிலர் விரும்பவில்லை என்பதை வெளிப் படையாகவே அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இத்தகையதொரு சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட பொதுச் சபைக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானமொன்றை நிறைவேற்றித் தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விடலாம். இத்தகைய சுலபமான தீர்மானமொன்றை நிறைவேற்றித் தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறிந்து விடலாம். இத்தகைய சுலபமான வழியொன்று இருக்கையில் பின்புறமாக நின்று கதைபேசி ஏன் கஷ்டப்பட்டு சதி வேலைகளில் ஈடுபடுகின்றார்கள் எனவும் அவர் நேரடியாகவே கேள்வியொன்றினையும் எழுப்பியுள்ளார். (மேலும்.....) சமூகத்தின் முன் பதவி பெரிதல்ல - ஹக்கீம் பதவியை துறந்து போராடுங்கள் அரசாங்கத்தில் நாம் அங்கம் வகிக்கின்ற போதும் முஸ்லிம் சமூகம் சவால்களையும் பிரச்சினைகளையும் சந்திக்கின்றபோது வாளாவிரு க்கமுடியாது. எனவே சமூகத்தைப் பாதுகாக்கின்ற பணியை மிகவும் கச்சிதமாக மேற்கொண்டு வருகின்றோம். அமைச்சுப் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக சமூகத்தைக் காட்டிக் கொடுக்கும் பணியை நாம் ஒரு போதும் செய்யப் போவதில்லை யென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கொழும்பு தாருஸ்ஸலாமில் கட்சியின் முக்கிய நிகழ் வொன்றில் அவர் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தை தூற்றித் திரிவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாதெனவும் அரசாங்கத்தில் இருப்பதென்றால் நேர்மையாக செயலாற்ற வேண்டுமெனவும் இன்றேல் அரசாங்கத்தை விட்டு அக்கட்சி வெளியேற வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொழும்பு மத்திய தொகுதி அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான பைசர் முஸ்தபா தெரிவித்தார். இதேவேளை பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பற்றியும் கட்சியின் செயற்பாடுகள் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளதுடன் அரசாங்கத்துடன் மு. கா. இணைந்து கொள்ள வந்த போது நாம் இது தொடர்பில் அரசு தலைமைக்கு விழிப்பூட்டி இருந்தோம் என்றும் குறிப்பிட்டார். ஐ.நா. மீது நம்பிக்கை ஏற்பட வேண்டுமாயின்...உலக நாடுகளையே உலுக்கிய இரு பயங்கரவாதிகளை கொன்று மக்களின் எதிர்கால வாழ்வில் பயமற்ற ஒரு சூழ்நிலையை ஏற்படுத்திய இரு நாட்டுத் தலைவர்கள் மீதும் ஐக்கிய நாடுகள் சபை இரு வகையான நிலைப்பாட்டினைக் கொண்டிருப்பது கவலை தரும் விடயமாகும். உண்மையிலேயே அமெரிக்கா அல் ஹைதா இயக்கத்தின் தலைவரை மட்டுமே அழித்துள்ளது. அதன் தலைவர்கள் உறுப்பினர்கள் இன்றும் ஆயுதப் போராட்டத்தில் அமெரிக்கா உட்படப் பல நாடுகளுக்கும் சவாலாகவே இருந்து வருகின்றனர். ஆனால் இலங்கையோ முப்பது வருட காலமாக இருந்து வந்த புலிகள் இயக்கத்தையே வேரோடு அழித்துள்ளது. அமெரிக்கா, கனடா, இந்தியா, அவுஸ்திரேலியா உட்பட பல உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட அமைப்பாகவே புலிகள் இயக்கம் இருந் துள்ளது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச உட்பட எத்தனையோ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எண் ணிலடங்காப் பொதுமக்கள் அதனைவிடவும் சகோதர இயக்கப் படுகொலைகள் என புலிகள் செய்த கொலைகளின் பட்டியல் மிக நீண்டதாகவே உள்ளது.(மேலும்.....) மார்ச் 01, 2014 அரசியலில் உதுவும் நடக்கலாம்....?
மு.கா.விடம் கோபத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் பெரும் பிளவுக்கு இட்டுச் செல்லக்கூடும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீதியமைச்சர் ஹக்கீமிடம் அரசாங்கத்தில் அவரது கட்சி இருக்கின்றதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்டில் இலங்கைக்கு வந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸினால் கொடுக்கப்பட்ட ஓர் ஆவணம் பற்றி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பாட்டலி சம்பிக்க ரணவக்க உட்பட பல அமைச்சர்கள் கேள்வி எழுப்பியதாக டெய்லிமிரருக்கு கிடைத்த நம்பகமான செய்திகள் கூறின. நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மீது ஆங்காங்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் பற்றிய விபரமும் அரசாங்கம் குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்ற விடயமும் இந்த 50 பக்க அறிக்கையில் இருந்ததாக மந்திரி சபை கூட்டத்தில் எடுத்துக்கூறப்பட்டது. தாக்குதல்கள் நடந்த இடங்களும் கடந்த வருடம் முஸ்லிம்கள் துரத்தப்பட்ட பகுதிகளும் குறிக்கப்பட்ட படமும் இந்த அறிக்கையில் சேர்கப்பட்டிருந்தது. நவநீதம்பிள்ளை இந்த ஆவணத்தை தமிழ் புலம்பெயர்ந்தோருக்கு கசியவிட்டார் எனவும் அவர்கள் இந்த அறிக்கையுடன் இலங்கையுடன் நட்பாகவுள்ள முஸ்லிம் நாடுகளுக்கு சென்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரும் பொழுது அந்த முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக வாக்களிக்கும் படி பரப்புரை செய்து வருகின்றனர் என ஜனாதிபதியிடம் அமைச்சர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்தே, கோபமடைந்துள்ள ஜனாதிபதி, அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் இருக்கின்றதா இல்லையா என்பதை தீர்மானிக்கும்படி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெனீவாவுக்கு த.தே.கூ குழு அனுப்ப தீர்மானம் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் அறிக்கை சர்வதேச விசாரணை ஒன்றை வலியுறுத்தியது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளதுடன் எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனிவாவிற்கு குழுவொன்றை அனுப்ப திட்டமிட்டு வருகின்றது எனவும் கட்சியின் முக்கியஸ்தர்கள் வெள்ளிக்கிழமை (28) தெரிவித்தனர். 'இந்த பிரச்சனைக்கு முடிவுகட்ட நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க முடியாது. இதற்கு தீர்வு காண வேண்டும். அரசியல் தீர்வுக்கான எமது கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால் நாம் சர்வதேச இணக்க செயற்பாட்டையே விரும்புகின்றோம்' எனவும் அவர் இதன்போது கூறினார். முல்லையில் மனித எச்சங்கள், பாய்கள், அடையாள அட்டை மீட்பு முல்லைத்தீவு, உடையார்க்கட்டு 200 வீட்டுத்திட்டப் பகுதியிலுள்ள காணியிலிருந்து 9 பேருடைய மனித எச்சங்களும் அந்த எச்சங்களைச் சுற்றியுள்ள நிலையில் 9 பாய்களும், ஒருவரின் அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் விவசாயி ஒருவர் விவசாயம் செய்வதற்காக நிலத்தினைப் பண்படுத்தியபோது, நிலத்தினுள் மண்டையோடு இருப்பதை அவதானித்துள்ளதுடன் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் தங்கராஜா பரஞ்சோதி, யாழ். மாவட்ட சட்ட மருந்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் ஆகியோக்ர் முன்னிலையில் குறித்த நிலம் தோண்டப்பட்டது. இதன்போது 9 பேருடைய மனித எச்சங்களை மீட்டு, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த யாழ். மாவட்ட சட்ட மருந்துவ அதிகாரி சின்னையா சிவரூபன், 'குறித்த விவசாய நிலத்தில் மனித எச்சங்கள் இருப்பதாக எனக்கு நேற்று (27) மாலை தகவல் கிடைத்ததையடுத்து, இன்றைய தினம் இந்த மீட்பு பணிகள் இடம்பெற்றது' என்றார். 'மீட்கப்பட்ட 9 பேருடைய மனித எச்சங்களுடன் தேசிய அடையாள அட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேசிய அடையாள அட்டையினை பொலிஸாரிடம் ஒப்டைத்துள்ளோம். அந்த அடையாள அட்டை மூலம் இறந்தவர் யார் என அடையாளம் காணக்கூடியதாக இருக்கும் எனவும் கூறினார். அத்துடன், இவர்கள் யுத்தத்தில் இறந்திருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டார். அமெரிக்காவின் ஜெனிவா பிரேரணை பொருளாதாரத் தடைக்கு வழிவகுக்கலாம் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையானது எதிர்காலத்தில் எமக்கெதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் நிலைமை வரை செல்லலாம் என எச்சரிக்கை விடுக்கும் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஜெனீவா தொடர்பாக அனைத்து எதிர்கட்சிகளும் ஓரணியில் இணைய வேண்டிய தருணத்தில் பலாத்காரமாக தேர்தலை புகுத்தி அரசாங்கமே கவனத்தை வேறுபக்கம் திசை திருப்பியது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கு அமெரிக்காவிற்கு அருகதை கிடையாது ஏனென்றால் உலகம் முழுவதும் நாடுகளுக்குள் பலாத்காரமாக அமெரிக்கா புகுந்து அட்டகாசம் புரிந்தது. மக்களை எதுவிதமான இரக்கமும் இல்லாமல் கொன்று குவித்தது. எனவே, எமது நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பிரேரணை கொண்டுவருவதை கடுமையாக எதிர்க்கின்றோம். எமது நாட்டுக்கு எதிராக பயங்கரமான பொய்யான குற்றச்சாட்டுக்கள் இப்பிரேரணையில் உள்ளன. அதேவேளை அரசாங்கத்தால் நிறைவேற்றக்கூடிய விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பொதுவாக இப்பிரச்சினையை நோக்கினால் அரசாங்கத்தின் பிழைகள் காரணமாகவே அமெரிக்கா தலையீடு உருவானது. நாட்டில் மனித உரிமைகளை ஜனநாயகத்தை அரசாங்கம் பாதுகாக்கவில்லை. கொலைகள், ஊடக அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்கள், கடத்தல், கொலை என நாட்டிற்குள் அராஜகங்கள் தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. |
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |