Contact us at: sooddram@gmail.com

 

ஒக்ரோபர் 2013 பதிவுகள்

ஒக்ரோபர் 31, 2013

ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்!

(எஸ்.ஹமீத்)

கடந்த ஞாயிறு நடுநிசியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது யாழ்ப்பாணம்-கண்டி A9  வீதியில் அமைந்திருந்த மகா பத்ரகாளி அம்மன் ஆலயம்.  பெரும் இயந்திரங்களைக் கொண்டு இந்த ஆலயம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது. ஓர் இனத்தின் மத தாற்பரியத்தின் மீது புல்டோசர்கள் பேயாட்டம் ஆடியிருக்கின்றன. ஒரு சமூகத்தின் இரத்த நாள-நாடிகளுடன் இரண்டறக் கலந்த நம்பிக்கைகளின் மீது அராஜகம் மீண்டும் தனது கோரத்தைப் பதிவு செய்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களும் வழிபாட்டுத் தளங்களும் . சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் புனிதமானவை, உயர்ந்தவை. அவற்றை மதித்து வாழ்வது மனித பண்பாடாகும். அதுமட்டுமன்றி,  மாற்று மதங்களை இழித்துரைப்பதே குற்றமென்றிருக்கையில் அவற்றை அழித்தொழிப்பதென்பது அநியாயமும் அநாகரீகமும் ஆகும். ஆனால், இவ்வாறான அக்கிரமங்கள் அண்மைக் காலங்களாக இலங்கையில் அதிகரித்தே வருகின்றன. (மேலும்....)

விக்னேஸ்வரன் சுகயீனம்

அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கார்

வாராந்த அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெறுவது வழக்கமாகும். அதில் மாத இறுதியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர்கள் பங்குபற்றுவது வழமையாகும். இந்த அடிப்படையில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முதலமைச்சர்கள் கலந்துகொள்ளும் அமைச்சரவை கூட்டம் முதற் தடவையாக இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நேற்று புதன்கிழமை நண்பகல் சுகயீனம் காரணமாக யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனாலேயே இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை உடனடியாக மீள்குடியேற்றுமாறு கோரி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் இன்று (31) பிற்பகல் 3.30 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் உள்ள தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் சகோதரத் துவ அமைப்பின் ஏற்பாட்டாளரும் முன்னாள் எம்.பி.யுமான மொஹமட் முஸம்மில், எம். எப். எம். பரூத் மெளலவி, உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஒரே மேடையில் மன்மோகன் சிங் - மோடி

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கும், பா.ஜனதாவின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியும் ஒரே மேடையில் பங்கேற்ற அரிய நிகழ்ச்சி, குஜராத் மாநிலத்தில் நடைபெற்றது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியும், குஜராத்தில் பிறந்த சுதந்திர போராட்ட வீரருமான சர்தார் வல்லபாய் படேலின் நினைவாக அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேல் நினைவு அறக்கட்டளை சார்பில் அந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. அருங்காட்சியக திறப்பு விழாவில், பிரதமர் மன்மோகன் சிங்கையும், குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடியையும் ஒன்றாக கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று அறக்கட்டளை முடிவு செய்தது. அதன்படி, நரேந்திர மோடியை சமீபத்தில் மத்திய மந்திரி திண்ட்சா படேல் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை மோடியும் ஏற்றுக் கொண்டார். அருங்காட்சியக திறப்பு விழா, நேற்று முன்தினம் அமதாபாத்தில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்கும் நரேந்திர மோடியும் பங்கேற்று ஒரே மேடையில் அமர்ந்தார்கள்.  அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைத்தார். இந்த மேடையில், பிரதமர் மன்மோகன்சிங், நரேந்திர மோடி இருவரின் பேச்சுகளுமே பரபரப்பாக அமைந்தன. சர்தார் வல்லபாய படேலை ‘மதசார்பற்றவர்’ என்று கூறியதன் மூலம், நரேந்திர மோடியை பிரதமர் மறைமுகமாக விமர்சித்ததாக கருதப் பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது, சர்தார் வல்லபாய் படேல், மதசார்பற்ற தலைவர் நாட்டின் முதலாவது உள்துறை மந்திரியாக இருந்தவர். துணை பிரதமராகவும் இருந்தார். சுதந்திரத்துக்கு பிறகு, 500 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்தார்.

லோகராணி பெண்களுக்கு எதிரான வன்முறையில் பாதிக்கப்பட்ட இறுதிப் பெண்ணாக இருப்பாரா?

 குடியியல் இயக்க நிகழ்வுகள் சுருங்கி வருவதும் மற்றும் அத்தகைய நிகழ்வுகளை நடத்த எந்த வகையான நிறுவனங்களாலோ மற்றும் அரசியல் கட்சிகளாலோ ஏற்படத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் இல்லாத இடத்தில் அக்கறையுள்ள பிரஜைகளால் ஆரம்பிக்கப்படும் எதிர்ப்புகளை இங்குள்ள குடிமக்கள் அலட்சியப் படுத்துகிறார்கள் அல்லது அதை ஏற்றுக்கொள்ள தவறிவிடுகிறார்கள்.

2013 ஒக்டோபர் 17 ந்திகதி கிட்டத்தட்ட மாலை 5 மணியளவில் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள், எங்களது நண்பர்களில் ஒருவர் (யாழ்ப்பாணவாசியான ஒரு இளைஞன்) எங்கள் வீட்டுக்கு வந்தார், (அங்கு எங்கள் நண்பர்கள் சிலர் கூடியிருந்தோம்) அவர் மிகவும் கலவரமடைந்தவரைப்போல காணப்பட்டார். அன்று மதியம்வரை எங்களுடன் கூடியிருந்துவிட்டு சற்றுமுன்னர்தான் சென்ற அவரை திரும்பவும் கண்டபோது, எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. தன்னை ஒரு நாற்காலியில் அமர்த்திக்கொண்ட பிறகு “ ஆடைகள் எதுவுமற்ற ஒரு பெண்ணின் இறந்த உடல் ஒன்று நாச்சிமார் அம்மன் கோவிலுக்கு அருகில் கண்டெடுக்கப் பட்டுள்ளது, நான் அதைக் கண்டேன் அந்தக் காட்சி என்னை அசௌகரியத்துக்கு உள்ளாக்கியது. மற்றும் சிலபேரும் அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்….. சீச்சீ… (அவர் வெட்கப்பட்டார்)’’ என்று அவர் சொல்லி முடித்தார். அதைக் கிரகித்துக்கொள்ளவும் மற்றும் அதைப்பற்றி யாராவது முதலில் பேச்செடுக்கவும் எங்கள் அனைவருக்கும் ஒரு நிமிட நேரம்வரை பிடித்தது. (மேலும்....)

ஒக்ரோபர் 30, 2013

சும்மா ஒன்றும் வரவில்லை

(சுகு-ஸ்ரீதரன்)

அதிகாரப்பரவலாக்கலை- ஜனநாயகத்தை உருவாக்குவதற்கு எத்தனை பேருடைய உயிர்த் தியாகம் நிகழ்ந்திருக்கிறது. இரத்தம் சிந்தியிருக்கிறது. சும்மா ஒன்றும் வரவில்லை. எனவே ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில் ஆட்சிக் கட்டமைப்பை உருவாக்குவதில் வரலாற்றில் நிகழ்ந்த தியாகங்களை மறவாதீர்கள் . வாழ்த்துக்கள். யுத்தத்திற்கு பிந்திய ஓரளவு சுதந்திரமான சூழலில் தேர்தலில் பங்குபற்றுவது வேறு. ஜனநாயக இடைவெளி அறவே இல்லாதிருந்த காலத்தில் பாசிச- அராஜக சூழலில் வடக்கு-கிழக்கில் மாகாணசபை, உள்ளூராட்சி தேர்தல்களில் பங்குபற்றி- இரத்தம் சிந்தி- சவால்களை எதிர்நோக்கிய அந்த மரபு -தியாகமே இன்றைய வடக்கு மாகாண சபைத் தேர்தல் வரை முன்னேறி வந்திருக்கிறது. வானத்தில் இருந்து எதும் வரவில்லை. புதிதாக எதுவும் ஆச்சரியங்களாக நிகழவில்லை. இதனை புதிய மாகாண சபையை இயக்குபவர்கள் புரிந்து செயற்படவேண்டும். செயற்படுவார்களா? (மேலும்....)

தம்புள்ளை காளி கோயில் இடித்து தரைமட்டம்

தம்புள்ளை மகா பத்திரகாளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவே இந்த ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அங்குள்ள தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது. அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் கொடுக்கப்பட்டுவந்தன. ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஆலய பரிபாலகரான கே.லட்சுமி, ஆலயத்திலுள்ள உடமைகளை அகற்றுவதற்கு நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் தான் கேட்டிருந்ததாகக் கூறுகின்றார். நேற்று திங்கட்கிழமை குறித்த விகாரையின் பிரதம பிக்குவினால் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்ட போது அதனை அகற்றுவதற்கு முன்னதாக சமய கிரியைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி இந்தக் கால அவகாசத்தை தான் கேட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

வடக்கில் சிங்கள மக்கள் குடியேற்றப்படுவதை எதிர்க்கிறேன் - வாசு­தேவ நாண­யக்­கார

அர­சாங்­கத்தின் தலை­யீட்­டுடன் தொகை தொகை­யாக வட மாகா­ணத்தில் சிங்­கள மக்­களை குடி­யேற்­று­வதை எதிர்க் கின்றேன். ஆனால், சிங்­கள மக்­க­ளா­கட்டும், தமிழ் மக்­க­ளா­கட்டும் அனை­வரும் சுய­வி­ருப்­ப­தோடு எங்கும் வாழலாம். அதனை தடை­செய்ய முடி­யாது என அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். வடக்கில் மக்கள் வாழும் இடங்­களில் இரா­ணுவ நடமாட் டத்தைத் தடை­செய்ய வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார். சிங்­கள மக்கள் தமது வர்த்­தகம் மற்றும் தொழில்கள் நிமித்­தமும், சுய­வி­ருப்­பத்­து­டனும் வடக்கில் குடி­யே­று­வதை தடுப்­பதும் எதிர்ப்புத் தெரி­விப்­பதும் ஏற்­றுக்­கொள்ள முடி யாதது. முத­ல­மைச்­சரின் அந்த நிலைப்­பாட்டை எதிர்க்­கின்றேன். வடக்கில் சிங்­கள மக்­க­ளுக்கு எதி­ராக அவ்­வா­றான ஒரு நிலை உரு­வானால் தெற்­கிலும் தமிழ் மக்கள் வந்து குடி­யேற முடி­யாது. அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என சிங்­கள மக்கள் மத்­தியில் எதிர்ப்­புக்கள் கிளம்பும். இது மீண்டும் இனங்­க­ளி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்கும். இன­வா­தத்­திற்கு சாத­க­மாக அமைந்­து­விடும். எனவே, சிங்­கள மக்கள் தமது சுய­வி­ருப்பின் பேரில் வடக்கில் மட்­டு­மல்ல எங்கும் வாழ­மு­டியும். அதே­போன்று தமிழ் மக்­களும் தமது சுய­வி­ருப்பின் பேரில் எங்கும் வாழ முடியும். இதற்குத் தடை­போட எவ­ருக்கும் அதி­காரம் இல்லை. இராணுவத்தைச் சார்ந்த ஒருவர் வட மாகாண ஆளுநராகப் பதவி வகிப்பதை நானே முதலில் எதிர்த்தேன். சிவிலியன் ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை இன்றும் வலியுறுத்துகிறேன் என்றும் அமைச்சர் வாசு தெரிவித்தார்.

புலிகளுக்காக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட கனேடியத் தமிழருக்கு சிறை

தமிbழ விடுதலைப் புலிகளுக்கு ஆயு தங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில் கனேடியத் தமிழரான சுரேஸ் சிறிஸ்கந்தராஜாவுக்கு இரண்டு வருட சிறைத் தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கனடாவின் வாட்டர்லூ பல்கலைக் கழகத்தில் பயின்ற போது விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டி வான் பொறியியல் கருவிகள், நீர் மூழ்கிகள், போர்க்கப்பல் களின் வடிவமைப்புகள் தொடர்பாக ஆய்வு செய்து பெற்றுக்கொடுக்கவும் இரவுப் பார்வை கருவிகள் மற்றும் தொடர்பாடல் கருவிகளையும் வாங்கிக் கொடுத்ததாக இந்நபர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. 2006 ஆம் ஆண்டில் சுரேஷ் அமெரிக்காவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக தீவிரவாத அமைப்புக்கு உதவியதாக குற்றம்சாட்டப் பட்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சுரேஸ் றிஸ்கந்தராஜா கடந்த ஜுலை மாதம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டி ருந்தார். இதையடுத்து இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு சட்டத்தரணி நீதிபதியிடம் கோரியிருந்தார். எனினும் இவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை மாவட்ட நீதிபதி விதித்துள்ளார்.

ஒக்ரோபர் 29, 2013

தமிழ்பேசும் மக்களின் தற்போதைய பொது எதிரி யார்...?

(எஸ். ஹமீத்)

கட்டுரைத் தலைப்புக்கு பதில் சொல்ல ஆழமான ஆய்வுகள் எவையும் அவசியமில்லை. ஸ்படிக நீரால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு நீச்சற் குளத்தில் மிதக்கின்ற பெரிய வண்ணப் பந்து போல அதற்கான பதில் மிகத் தெளிவானது. பந்தை எவ்வளவுதான் நீருக்குள் அமிழ்த்தி வைத்தாலும், அது மீண்டும் மேலே வந்துவிடுகிறது. பந்தைக் காணாதது போலப் பாசாங்கு பண்ணுபவர்கள் அரசியற் குருடர்களாக இருக்க வேண்டும். அவ்வாறே, அதனை  மறுத்துரைப்போர் மனசாட்சியை அடகு வைத்துவிட்ட  மாபாதகர்களாக இருக்க வேண்டும். கோர நகங்களையும் கொடுமையான பற்களையும் உடைய ஒரு  வெறிபிடித்த சிங்கத்தினால் குதறப்படும் அப்பாவி மான்களாகவும் முயல்களாகவும்தான் இலங்கையின் தமிழ், முஸ்லிம் இனங்கள் தம்மை உணர்கின்றன என்பதொன்றும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றல்ல. எதிர்த்து நின்ற புலிகளை மூர்க்கத்துடன் தின்று தீர்த்த பிற்பாடும் அடங்கிடாத பசியுடன் தணிந்திடாத சினத்துடன் எஞ்சியிருக்கும் அப்பாவிகளை வேட்டையாடும் வெறித்தனம்தான் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியல்ல.  (மேலும்....)

பிரேமதாஸ பிரபாகரனுடன் உறவை ஏற்படுத்தி

900 மில்லியன் ரூபா பணத்தை மத்திய வங்கியினூடாக வழங்கி, ஆயுதங்களையும் எல். ரீ. ரீ. ஈ. யினருக்கு வழங்கினார்.

1987 இல் இந்தியாவின் தலையீடு காணப்பட்டதுடன் புதிய ஒப்பந்தமொன்றும் எழுதப்பட்டது. அதற்கிணங்க வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு மாகாண சபைக்கான தேர்தலும் நடாத்தப்பட்டது. அதனையடுத்து முதலமைச்சர் வரதராஜப் பெருமாளிடம் நிருவாகப் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த வேளையில், அதே ஐ. தே. கட்சியின் ஆர். பிரேமதாஸ ஜனாதிபதியாகப் பதவி பெற்றதும் இந்திய இராணுவத்தை வெளியேற்றினார். எல். ரீ. ரீ. ஈ. யினரைப் போல மாகாண சபை மூலமான நிருவாகப் பகிர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். பிரபாகரனுடன் உறவை ஏற்படுத்தி 900 மில்லியன் ரூபா பணத்தை மத்திய வங்கியினூடாக வழங்கியதுடன் ஆயுதங்களையும் எல். ரீ. ரீ. ஈ. யினருக்கு வழங்கினார். மாகாண சபை உறுப்பினர்களை கொலை செய்யத் தூண்டினார். நிருவாக முறையினைச் சிதைத்தார்.  (மேலும்....)

கூட்டமைப்பின் கோரிக்கைக்கு நாம் ஆதரவு

வடமாகாண சபை பொலிஸ் அதிகாரிகள் தமிழர்களாக இருக்க வேண்டுமென கேட்கவில்லை - ஐ.தே.க

வடமாகாணத்துக்கு ஒரு சிவிலியனை ஆளுநராக நியமிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ள முன்மொழிவை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்பதாக இன்று திங்கட்கிழமை கூறியுள்ளது. 'வடமாகாண ஆளுநர் ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியாக இன்றி ஒரு சிவிலியனாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம்' என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கூறினார். வட பகுதியில் தமிழ் பேசும் பொலிஸ் அதிகாரிகள் கூடுதலாக இருக்க வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கேட்டுள்ளது நியாயமானதே எனவும் அவர் கூறினார். 'எனக்கு தெரிந்த வகையில் வடமாகாண சபை பொலிஸ் அதிகாரிகள் தமிழர்களாக இருக்க வேண்டுமென கேட்கவில்லை, ஆனால் அங்கு வரும் அதிகாரிகள் தமிழ் தெரிந்தவர்களாக இருக்க வேண்டுமென மட்டுமே அவர்கள் கேட்கின்றனர் இது நியாயமான வேண்டுகோள்' என அவர் கூறினார்.

தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் பிரச்சினையில்லை - சி.வி

'தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆளுநருக்கும் எந்தவிதமான  பிரச்சினையும் இல்லையென்பதனாலேயே நான் அவருடன் சிரித்துப்பழகி வருகின்றேன்" என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'வடமாகாண ஆளுநருக்கு அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் வடமாகாண சபையை திறமையாக வழி நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதியின் அதிகாரத்தினால் ஆளுநர் நியமிக்கப்படுவதால், ஆளுநரின் தீர்மானங்கள்  அரசியல் சார்புடையதாக அமைகின்றதுடன், வடமாகாண சபை நிர்வாகத்தை ஆளுநரின் தற்துணிவு அதிகாரம் முடங்கச் செய்கிறது. ஆளுநரின் இவ்வாறான அதிகாரங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்  பிரதிநிதிகளின் தீர்மானங்களை உதாசீனம் செய்யக்கூடியதாகவும் அமைந்துள்ளன. வடமாகாண ஆளுநரின் பின்னணி ஆணை கொடுத்துப் பழக்கப்பட்ட இராணுவப் பின்னணி. ஆகையால்; பாதிக்கப்பட்ட மக்களின் துன்பங்களையும், பிரச்சினைகளையும் மக்களின் எண்ணங்களையும் சரியாகப் புரிந்துகொள்ளக்கூடிய தன்மை அவர்களிடம் காணப்படவில்லை. இதனால் சிவில் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை ஆளுநராக நியமிக்கவேண்டும் என மிக ஆணித்தரமாக வலியுறுத்தி வருகின்றேன்.

அனந்தி சசிதரன் அமெரிக்கா விஜயம்

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எதிர்வரும் 31ஆம் திகதி வியாழக்கிழமை அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிதி சேகரிப்பதற்காகவே அமெரிக்க பயணம் மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அமெரிக்காவில் வாழும் புலம்பெயர் இலங்கை தமிழர்களை சந்தித்து நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.இந்த பயணம் வெற்றியளித்தால் வேறு நாடுகளுக்கும் செல்லத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வட மாகாண சபை உறுப்பினர்களில் முதலாவது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் முதலாவது உறுப்பினர் அனந்தி சசிதரன் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகென்ன உருத்திரகுமாரர் ஊடாக அமெரிக்க அரசின் ஆசீர்வாதமும் கிடைக்கும் அல்லவா....?

 

மேல்மாகாணத்தில் எங்களை பலவீனபடுத்தாதீர்கள், பிரதான தமிழ் கட்சிகளுக்கு மனோ தெரிவிப்பு

மேல்மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கொழும்பில் நேரடியாக போட்டியிடுமா அல்லது உங்கள் கட்சிக்கு ஆதரவு வழங்குமா என்று என்னை பலர் கேட்கிறார்கள். இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? இந்த கேள்வியை கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடம் கேளுங்கள் என்று நான் சொல்கிறேன். அதேபோல் சேவல் சின்னம் மேல்மாகாணத்தில் களமிறங்குமா என்றும் என்னிடம் கேட்கிறார்கள். இதற்கும் நான் என்ன சொல்ல முடியும்? இதுபற்றி சேவலுக்கு சொந்தக்காரரான அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கேளுங்கள் என்றுதான் நான் கூறியுள்ளேன். சமீபகால வடமாகாண, சப்ரகமுவ மாகாண தேர்தல் வரலாறுகளை எடுத்து பார்த்து, மேல்மாகாணத்தில் எங்களை பலவீனப்படுத்தாமல் இருக்கும் கடப்பாடு பெரியவர் சம்பந்தனுக்கும், நண்பர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் உள்ளது. அதை அவர்கள் செய்யவேண்டும். ஆனால், அவர்கள் அதை மறந்து செயல்பாட்டாலும், அதையிட்டு நான் என்ன செய்ய முடியும்? அவர்களுக்கு எதிராக நான் நீதிமன்றத்தில் வழக்கா தொடர முடியும்? எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கும் இந்நாட்டின் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிட சட்டப்படி உரிமை இருக்கின்றது. அதை நான் சட்டம் போட்டு தடுக்க முடியாது. கடந்த காலத்தில் நாங்கள் அவர்களுக்கு செய்துள்ளதை சுட்டிகாட்டி, மேல்மாகாணத்தில் எங்களை பலவீனப்படுத்தாமல் இருப்பதற்கு, கூட்டமைப்புக்கும், இதொகாவுக்கும் இருக்கின்ற கடப்பாட்டை ஞாபகப்படுத்த மட்டுமே எனக்கு முடியும்.

வலையிறவு பால திறப்பு விழாவில் பிரதியமைச்சர் முரளிக்கு அழைப்பில்லை

மட்டக்களப்பு வலையிறவுப் பாலத்தின் திறப்பு விழா வைபவத்திற்கு மீள் குடியேற்ற பிரதியமைச்சர் முரளிதரன் அழைக்கப்படாததை கண்டித்து திங்கட்கிழமை (28) சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இந்த வலையிறவுப் பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. திறப்பு விழா நடைபெற்ற வைபவத்தின் போது பாலத்திலிருந்து சற்று தொலைவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த பாலத்திற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் அம்மான் எங்கே, மட்டு மண்ணின் மைந்தன் அழைக்கப்பட வில்லையா, மாவட்ட அமைச்சருக்கு அழைப்பில்லாமல் திறப்பு விழாவா என்பன போன்ற சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர். இந்த பதாகைகள் பாலத்திற்கு செல்லும் வழியிலும் கட்டப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தை விவசாயிகள் மற்றும் மட்டக்களப்பு வர்த்தகர்கள் செய்வதாக அந்த பதாகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதாகைகள் மட்டக்களப்பு, நகரிலும் கட்டப்பட்டிருந்தன.

தமிழக அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண உதவாது - த எகொனமிக்ஸ் டைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

இந்தியாவின் பகிஷ்கரிப்பு தமிழர்களுக்கு செய்யும் உதவியாகாது

இலங்கைத் தமிழர்கள் மீது தமிழ் நாடு காட்டும் கரிசனை அவர்களுடைய போட்டி அரசியல் நலன் சார்ந்தது. பாக்கு நீரினைக்கு குறுக்கே உதவி செய்யும் மனப்பான்மையை விட பிரதான அரசியல் கட்சிகளுக்கிடையே போட்டித் தன்மையே காண முடிவதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘த எகொனமிக்ஸ் டைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது. (கடந்த 26ம் திகதி வெளியான பத்திரிகையில் இந்த தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.) தமிழ் நாடு, இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டுள்ளது போல் இக்கட்சிகள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உரத்த குரலில் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றன வேயொழிய வேறு எந்த உண்மையான நோக்கமும் கிடையாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

ஒக்ரோபர் 28, 2013

என் மனவலையிலிருந்து.....

வட மாகாண சபை தனது ஆட்சிக்காலத்தை பூர்த்தி செய்யுமா...?

(சாகரன்)

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தும் தனது முழு ஆட்சிக் காலத்தையும் பூர்த்தி செய்யாத அரசாகப் போகின்றது வட மாகாண சபை அரசு. வட மாகாண மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்ற அரசு தனது ஒரு மாத கால ஆட்சியின் சாதனையாக இதனைச் செய்து முடிக்கும் என்று சத்திய வாக்கு செய்துள்ளது போல் தனது செயற்பாடுகளினூடு காட்டி நிற்கின்றது. விக்னேஸ்வரனும், சம்மந்தனும், சுமந்திரனும் ஒரு பக்கமாகவும்; மாவையும், தவிசாளர் சிவஞானம் இன்னொரு பக்கமாகவும்; சுரேஷ் அணியினர் இன்னொரு பக்கமாகவும்; ஆனந்தசங்கரியை இவ் அணிக்குள் நுளையவிடாமல் தடுத்ததால் அவர் இன்னொரு அணியாகவும்;  தீவிரவாதி? சிறீதரன் இன்னொரு புறமாகவும்; சித்தார்த்தன் இவை எதிலும் இணையாது இருப்பவர் போல் காட்டிக் கொண்டாலும் சிவாஜிலிங்கம் போல் பதவி கிடைக்காததால் பல்லு பிடுங்கிய பாம்பாகவும் இருக்க இதுவல்லவோ கூட்டமைப்பின் 'ஐக்கியம்?' என்று தெரியத் தொடங்கியிருக்கின்றது. விக்னேஸ்வரன் மகிந்த அரசுக்கு வெளிப்படையில் பாடம் சொல்லும் நீதி அரசராக தோற்றம் அளித்தாலும் இவர் இலங்கை அரசின் செல்லப்பிள்ளையாக இருப்பதையே அதிகம் விரும்புகின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பலரும் பின் கதவால் இலங்கை அரசுடன் உறவு கொண்டாடும் நிலையில் விக்னேஸ்வரன் முதல் அமைச்சர் என்ற கோதாவில் பகிரங்கமாக? இலங்கை அரசின் செல்லப் பிள்ளையாக காட்சி தருகின்றார். சர்வ தேசமும், இந்தியாவும் விக்னேஸ்வரனின் இந்த பாத்திரத்தை சற்றே ரசிக்கின்றனர் என்பதுதான் உண்மை. இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு வழியில் இழுத்துக்கொண்டு போனால் மத்தியின் மூன்றில் இரண்டு மாகாணத்தின் மூன்றில் இரண்டை முழு ஆட்சிக்காலத்திற்குள் அவர்களே இல்லாமல் செய்து விட்டார்கள் என்று சர்வதேசத்திற்கு பறைசாற்றும் நாள் குறுகிய நாட்களிற்குள் நிறைவேறிவிடும் போல் தெரிகின்றது. இதிலிருந்து இவர்களை காப்பாற்றும் நாற்காலிக் கனவுகள் சிலவேளை வெற்றியடையலாம். ஆனால் இது பாராளுமன்ற நாற்காலிகள்போல் அவ்வளவு உறுதியானதாகத் தெரியவில்லை. இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை தனது ஆட்சிக்காலத்தை முழுமையாக செயற்படுத்தவிடாமல் தடுத்தவர்களில் புலிகளும், பிரேமதாஸ அரசும் முதன்மையானவர்களாக காணப்பட்டனர். இதற்கும் அப்பால் பிரேமதாஸாவினால் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள் செயற்படுத்தப்பட்டனர். கூடவே தமிழ்நாட்டின் அன்றைய முதல் அமைச்சர் கருணாநிதியும் இதில் பெரும்பங்காற்றினார். ஆனால் இன்று எதிர்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டு வடக்கு கிழக்கு மாகாணசபையை 'பொறுப்பெடுத்தவர்கள் துஷ்பிரயோகம் செய்தனர்' என்று வசனம் பேசுவது தவறான புரிதலின் அடிப்படையில் என்று எண்ணத் தோன்றுகின்றது. இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபை ஆட்சி நடைபெற்ற காலத்தில் நடந்த தவறுகளுக்கு பொது மக்களிடம் வருத்தம் தெரிவித்த நிலையிலும் இதனைத் திரும்ப திரும்ப கூறுவது ஆரோக்கியமான அரசிலை கொண்டு நடாத்த உதவப்போவது இல்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இன்று வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை அரசை குறை கூறாத இடத்து வட மாகாண சபை எதிர் கட்சி வரிசையினரின் இக் கூற்று பாரிய சந்தேகங்களை கிளப்பியே நிற்கின்றது. எவை எப்படி இருப்பினும் வடமாகாணத்தில் ஒரு பலமான முற்போக்கு மூன்றாம் அணி அமையாதவிடத்து வட மகாண சபையின் ஆளும், எதிர் கட்சிகளின் சறுக்கல்களால் பாதிக்கப்படப்போவது பொது மக்களே ஆவர். இதனை சகல ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் புரிந்து கொண்டு ஒரு பலமான செயற்பாட்டு ஐக்கிய முன்னணியை அமைப்பது உடனடித் தேவையாக அமைகின்றது.

(ஒக்ரோபர் 28, 2013)(Saakaran)

இலங்கை உயர்ஸ்தானிகரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும் - நாராயணசாமி

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ள கருத்துக்கள் கண்டனத்திற்குரியது. இன்னொரு நாட்டில் அமர்ந்து கொண்டு அந்த நாட்டைப்பற்றி அவர் கூறிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ள மத்திய மந்திரி நாராயணசாமி அந்த பேச்சு தொடர்பில் கண்டனம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  ''காரைக் கால் பகுதியை சேர்ந்த சுமார் 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துள்ளனர். அவர்களது 4 படகுகளையும் இலங்கை அரசு கையகப்படுத்தி உள்ளது. காரைக்கால் மீனவர்கள் அங்குள்ள திருகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதும் திருமுருகன் எம்.எல்.ஏ என்னிடம் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து இலங்கையில் உள்ள நமது தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி, நமது மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகிறது. (மேலும்....)

மெடி சித்தா கண்காட்சி


கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் சித்த மருத்துவ பீட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மெடி சித்தா கண்காட்சி இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் எஸ்.பி.திசாநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கே.கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர். திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள இந்து கலாசார மண்டபத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி, எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடைபெறவுள்ளது. சித்த மருத்துவ முறைகள், முன்னோர்கள் பயன்படுத்திய மருந்து உபகரணங்கள், அறுவை சிகிச்சையின் முன்னோடியாக  விளங்கிய சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட் உபகரணங்கள்,  நீர் சுத்திகரிப்பு முறைகள், நரம்பு குருதிச் சுற்றோட்டம் போன்ற பல துறைகளில் இங்கு காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்கள்

வடமாகாணத்தில் ஆறு புதிய மீன் பிடித்துறைமுகங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமுத்திர வள அபிவிருத்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு, மீசாலை, படுவக்கட்டை, இலங்கைத்துறை மற்றும் பளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இம்மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. இவற்றின் நிர்மாணப்பணிகள் எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படுமெனவும், நிர்மாணப்பணிகளை தாய்வான் நாட்டு நிறுவனமொன்று மேற்கொள்ளவுள்ளதாகவும் இப்பணிகளை 2015 இல் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதெனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. படகுகள் நங்கூரமிடல், களஞ்சியசாலை உட்பட பல வசதிகளுடன் மீன் பிடித்துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன் இலங்கையிலுள்ள சகல மீன்பிடித்துறைமுகங்களும் சர்வதேச தரத்தில் அபிவிருத்தி செய்யப்படுமெனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

பொதுநலவாய மாநாட்டில் நான் கலந்து கொள்வது உறுதி - சல்மான் குர்ஷித்

இலங்கையில் நடைபெற உள்ள பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தான் தமிழக மீனவர்கள் பிர்ச்சனை குறித்து பேசமுடியும். எனவே இந்தியா கலந்து கொள்வது உறுதி என இன்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல் குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும். இலங்கையில் நடக்க உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூட்டது என பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதோடு மட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேறப்பட்டது. இந்நிலையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க இந்த மாநாடு முக்கியமானதாகும். எனவே, இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது அவசியமாகும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் நேற்று தெரிவித்தார்.

தமிழ்க் கூட்டமைப்பின் முடிவு வாக்களித்த மக்களுக்கும் நாட்டிற்கும் பெரும் துரோகம்

பொதுநலவாய உச்சி மாநாட்டை பகிஷ்கரிக்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவிற்கு அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிக்காட்டியுள்ளது. அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான தினேஷ் குணவர்தன இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, அரசாங்கத்தின் கடும் அதிருப்தியை தெரிவித்ததுடன் உச்சி மாநாட்டிற்கான திகதி நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு தவறானதெனவும் சுட்டிக்காட்டினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் அன்று தொடக்கம் தாய் நாட்டிற்கும் மக்களுக்கும் எதிராக செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இலங்கையில் 53 நாடுகளின் அரச தலைவர்களுடன் மிகவும் கோலாகலமாக நடத்தப்பட ஏற்பாடாகி வரும் பொதுநலவாய உச்சி மாநாட்டினை இவர்கள் எதிர்ப்பதாக அறிவித்திருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை எனவும் அவர் கூறினார். கூட்டமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் தமிழ் தலைவர்களையே கொலைசெய்த தீவிரவாதிகளுக்கு சாதகமாக செயற்பட்டவர்கள். இவர்களது வரலாறு கறைபடிந்ததொரு அத்தியாயமாகும். புலம்பெயர் வாழ் தமிழர்கள் போடும் தாளத்திற்கெல்லாம் ஆடி பழகிய இவர்களால் சுயமாக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்க முடியவில்லை.

ஒக்ரோபர் 27, 2013

இலங்கை பூகோள அமைவில் சமஷ்டி நடைமுறை சாத்தியமாகுமா?

(ஏ.பி. முகுந்தன்)

இலங்கையில் மிக நீண்ட காலமாக ஒரு நிரந்தர தீர்வினை எட்டக்கூடிய வகையில் ஒரு காத்திரமான முடிவு ஏற்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் சர்வதேச ரீதியில் இனப்பிரச்சினை பற்றிய தீர்வுக்கான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகள் எவ்வாறான தீர்மானங்களை தம்முள் கூடி எடுத்துக் கொண்டாலும் அவை இன்றுவரையிலும் தமிழர்களுக்கு திருப்தியளிக்கும் முகமாக அமையவில்லை என்பது உலகறிந்த வெளிப்படையான உண்மையாகும். ஐ.நா. சபை தொடக்கம் ஐரோப்பிய ஒன்றியம் முதலாக ஆசிய பிராந்திய நாடுகள் வரைக்கும் இனப்பிரச்சினை தொடர்பாக அவரவர் சபைகளில் உரத்த தொனியில் குரல் எழுப்புகின்றதுடன் அவ்வப்போது ஏகமனதாக தீர்மானங்களையும்  நிறைவேற்றிய படியே இருக்கின்றனர். இவ்வாறான நாடுகளுக்கு மத்தியில் இந்தியா மத்திய மற்றும் மாநில மன்றத் தேர்தல்களில் இலங்கையின் பிரச்சினையினை ஒரு தாரக மந்திரமாக பயன்படுத்துவதும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. (மேலும்....)

பொதுநலவாயத்தில் முதலமைச்சர் பங்கேற்ககூடாது - த.தே.கூ.

எதிர்வரும் நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்க கூடாது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று யாழ். பொது நூலகத்தில்  நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகலில் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள், அந்த துறை சார்ந்த அவர்களது பொறுப்புக்கள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன. இதன்போதே, பொதுநலவாய அரச தலைவர் மாநாட்டில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்பதில்லையென்பதுடன் இந்த மாநாட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புறக்கணிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கார்த்திகேசன் நினைவுப் பேருரை

சிறந்த கல்விச் சிந்தனையாளரும் இலங்கை கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடிகளில் ஒருவருமான தோழர் மு.கார்த்திகேசன் அவர்களது மறைவின் 36ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து நினைவுப் பேருரை

தொனிப்பொருள்:

'சகலருக்கும் கல்வி – ஒரு சமகால நோக்கு'

தலைமை: தோழர் பி.பாலசுப்பிரமணியம்

உரை நிகழ்த்துபவர்: பேராசிரியர் ரி.தனராஜ்

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்

58 தர்மராம வீதி, கொழும்பு - 06

காலம்: ஒக்ரோபர் 27, 2013 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

கார்த்திகேசன் நினைவுக்குழு.

மேல் மாகாணசபைத் தேர்தலில் ஹிருணிகா?

இன்னும் சில மாதங்களில் நடைபெறலாம் என எதிர்ப்பார்க்கப்படும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐ.ம.சு.கூ. சார்பில் ஹிருணிகா பிரேமசந்திரவும் போட்டியிடப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கடந்த 2011 ஆம் ஆண்டு கொலைசெய்யப்பட்டார். இதன்பின்னர் அவரது மகளான ஹிருணிகா தந்தை வழியில் தானும் அரசியலில் இறங்கப்போவதாக தெரிவித்து வந்தார். இந்நிலையில் எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் மேல் மாகாணசபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாவை எம்.பிக்கு முதல்வர் விக்கி கூறுகின்றார்

1,33,000 விருப்பு வாக்குகளுடன் முதலமைச்சரானவன் நான் எனக்கு எவரும் ஆலோசனை வழங்கத் தேவையில்லை

கொழும்பில் நடைபெறவுள்ள முதலமைச்சர் மாநாட்டில் கலந்துகொள்வது என வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தீர்மானித்து உள்ளதாகவும், ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜா அதற்கு முன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என எதிர்ப்பு வெளியிட்டு உள்ளதாகவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். முதலமைச்சர் மாநாட்டுக்குச் செல்வதாக இருந்தால் அதற்கு முன்னர் பேச வேண்டிய விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் அபிப்பிராயங்கள் பெறப்பட வேண்டும் என மாவை சேனாதிராஜா கூறிய விடயங்களை விக்னேஸ்வரன் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அந்த முக்கியஸ்தர் தெரிவித்தார். ஒரு இலட்சத்து 33 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்று முதலமைச்சராக தெரிவான எனக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் விக்னேஸ்வரன் கூறியதாகவும் கூட்டமைப்பின் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் கருத்துக் கூற விரும்பவில்லை எனவும் கூட்டமைப்பின் அதி உயர் பீட மூவரணிக்கு நெருங்கிய முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பிற்கு கல்லறையா?

பயங்கரவாதிகளுக்கு கல்லறை அமைக்க அனுமதிக்க முடியாது என யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத் துருசிங்க தெரிவித்துள்ளார். புலிகள் போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஒன்றுக்கு நினைவுத் தூபிகள் மற்றும் கல்லறைகளை அமைப்பதற்கு உலகின் எந்தவொரு ஜனநாயக அரசாங்கமும் அனுமதியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் நீதவானும் கல்வியியலா ளருமான வட மாகாண சபையின் முதல்வர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தை நன்கு அறிவார் எனத் தெரிவித்துள்ளார். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்கத் துருப்பினர் கொலை செய்து பசுபிக் கடற் பகுதியில் புதைத்தனர் எனவும், எந்த இடத்தில் புதைத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து எவரும் கேள்விகளை எழுப்பவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாம் ஒன்றை நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கிறதா?

“நாம் ஒன்றை நினைக்க தெய்வம் இன்னொன்றை நினைக்கிறது” என்பார்கள். இதைப்போல தமிழ் மக்கள் ஒன்றை நினைக்க தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர்கள் இன்னொன்றை நினைக்கிறார்கள் போலுள்ளது. கூட்டமைப்பின் தலைமை ஒன்றை நினைக்க அதனுள்ளிருக்கும் பிறதலைவர்கள் இன்னொன்றை நினைக்கிறார்கள். சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் செல்வம் அடைக்கலநாதனும் சித்தார்த்தனும் எதிர்க்கிறார்கள். அல்லது புறக்கணிக்கிறார்கள். தமிழரசுக் கட்சி ஒன்றை நினைக்க அதன் தோழமைக்கட்சிகள் இன்னொன்றை நினைக்கின்றன. அதாவது, தமிழரசுக் கட்சி பதவியேற்கும் போது பிற கட்சிகளாக ஈ. பி. ஆர். எல். எவ். (சுரேஸ் அணி), ரெலோ, புளொட் போன்றவை அதைவிட்டு விலகியிருக்கின்றன.(மேலும்....)

ஒக்ரோபர் 26, 2013

உரிமை போராட்டத்தில் அனைத்தையும் இழந்ததுடன் எதனையும் பெறவில்லை  -  வட மாகாண சபைஎதிர்கட்சித் தலைவர் கமலேந்திரன்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்ட வரலாற்றில் இருந்தவற்றை இழந்தோமே தவிர எதையும் பெறவில்லை என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற வடமாகாண சபையின் கன்னியமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கை - இந்திய ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, புலிகளின் அறிவிப்புப்படி 651 புலிப் போராளிகளும் மிகக் குறைந்த மக்களுமே பலியாகி இருந்ததாக கூறப்பட்டது. இரு நாடுகளின் ஒப்பந்தம் எனும் அந்த வாய்ப்பை தமிழ் மக்கள் ஏற்று அரசியல் உரிமைக்கான போராட்ட வடிவத்தை நடைமுறை சாத்தியமான பாதையில் நகர்த்தி இருந்தால், 651ஆக இருந்த உயிரிழப்புக்கள் ஆயிரங்களாகவும், இலட்சங்களாகவும் அதிகரித்து இருக்காதுடன், ஈடு செய்ய முடியாத இழப்புக்களும் இங்கே நிகழ்ந்திருக்காது. (மேலும்....)  

வாழ்த்துகிறோம்

தமிழ் மக்களின் ஆணையைநிறைவேற்றுவது இன்றையதலைவர்களின் கடமையாகும்.

வடக்குமாகாணக் கவுன்சிலுக்கானதேர்தல் நடத்தப்பட்டு,மக்களின் விருப்பம் என்னவென்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் ஒன்றுபட்டுதங்கள் கருத்தைஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்கள். தமிழர்தலைமையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டபின்னரும் தமிழ் மக்கள் ஒன்றுபட்டுதங்கள் கொள்கையைஉலகுக்குத் தெரியபடுத்தியுள்ளார்கள். தமிழ் மக்களின் நீண்டகால கொள்கைக்கு நடத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்புத்தான் நடந்துமுடிந்த தேர்தலாகும். மக்கள் தங்கள் கடமையைசரிவரச் செய்துள்ளனர். இனிமேல் தலைவர்கள்தான் தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்யவேண்டும். ஆயுதப் போராட்டம் முடிவுற்று அமைதி வழிதிரும்பிவிட்டது, இனிமேல் சுகவாழ்வுதான் என்றுபலநாட்டவரும் கருதுகின்றனர். ஆயுதப் போராட்டம் முடிவடைந்ததுஉண்மைதான். ஆனால் தமிழ் மக்களின் உரிமை? விட்ட இடத்திலிருந்துமிகஆழமாகக் கீழ்நோக்கிசென்றுவிட்டது. (மேலும்....)  

வறுமைக்கோட்டிற்குட்பட்ட மக்களுக்கே எனது ஊதியம் - சித்தார்த்தன்

வடமாகாண சபை உறுப்பினராக இருந்து நான் பெற்றுக்கொள்ளும் ஊதியப் பணத்தினை வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு வழங்கவுள்ளதாக புளொட் அமைப்பின் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் கன்னியமர்வு இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்ற போது, உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் ஊதியங்களை வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு வழங்கும் பட்சத்தில் 100 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒக்ரோபர் 25, 2013

காணி, பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவோம - சி.வி

13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள மாகாண சபையின் அதிகாரங்களின் கீழுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவோம்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 'எமது மாகாண சபைகளுக்கு மத்திய அரசாங்கம் அனுசரணையாக இயங்க வேண்டுமே தவிர மத்திய அரசாங்கத்திற்கு தோள்கொடுக்க மாகாண சபைகள் முன்வரவேண்டும் என்று எதிர்பார்ப்பது அதிகாரப்பரவலின் தார்ப்பரியத்தினை மத்திய அரசாங்கம் அறிய முற்படவில்லை என்ற கருத்தையே வெளிப்படுத்தும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

இராணுவமானது உடனேயே அதன் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும் - விக்னேஸ்வரன்

இராணுவமானது வட மாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்கு முடக்கப்பட வேண்டும். மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவ போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாராத குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது. எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில் இருந்து இராணுவத்தைக் கட்டுப்படுத்தி படிப்படியாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எங்கள் கொள்கைகளை அவர்கள் மனமார அங்கீரித்துள்ளமை புலனாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம் இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே உரையாற்றும் போதே சீ.வி. விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார். படிப்படியான இராணுவ வெளியேற்றம் பற்றி அரசாங்கமும் கூறி வருவது மனமகிழ்வை ஏற்படுத்துகின்றது. உரிய பேச்சுவார்த்தையின் பின்னர் திடமான திட்டம் ஒன்றை இது சம்பந்தமாக வட மாகாண சபையினராகிய நாங்களும் அரசாங்கமும் தீட்ட வேண்டி வரும்.

அரசும் தமிழ்க் கூட்டமைப்பும் இணைந்தே பணிகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது

போருக்கு பிந்திய வட மாகாணத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அரசாங்கமும் இணைந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளதென வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாண சபையின் கன்னி அமர்வு நேற்று, கைதடியிலுள்ள மாகாண சபைக் கட்டடத்தில் இடம்பெற்றது. இங்கு சபை தவிசாளர், உப தவிசாளர் தெரிவின் பின்னர் கன்னியுரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, சர்வதேச சமூகம் வடபகுதி மக்களுக்கு தொழில் சார்ந்த நடவடிக்கைகளுக்கான உதவிகளை வழங்க வேண்டும். வடமாகாண சபையானது மக்களுக்கான தேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் சட்டவரையறைக்குள் செயற்படவுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் சில குறைபாடுகள் காணப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது” என்றும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறினார். (மேலும்....)

மட்டு. மாவட்டத்தில்

18 வயதுக்கு குறைந்த யுவதிகளில் 16 வீதமானோர் கருக்கலைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 18 வயதிற்கு குறைந்த யுவதிகள் கருத்தரிப்பு வீதம் 16 வீதமாக உள்ள நிலையில் இது தேசிய மட்டத்தில் 6. 5 வீதமாகவே காணப்படுகின்றது. இதற்கு காரணம் இனவிருத்தி சுகாதார அறிவு இளம் யுவதிகளிடம் இன்மையே என இலங்கை குடும்ப திட்டமிடல் சங்க திட்ட முகாமையாளர் கே. யோகேஸ்வரன் தெரிவித்தார்.  பாடசாலை மாணவர்களிடையே “வீழ்வதும் மீள்வதும்” எனும் தலைப்பில் சுகாதார ரீதியான அறிவையும் மற்றும் மாணவர்களை சீரழிக்கும் காரணிகளையும் வெளிப்படுத்தும் மேடைநாடகம் நேற்று வெள்ளிக்கிழமை (25.10.2013) மகாஜனக் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்; மாவட்டத்திலுள்ள சகல பாட சாலைகளிலும் இது போன்ற விழிப் புணர்வை ஏற்படுத்தும் மேடை நாடகங்களை அரங்கேற்ற எண்ணியுள்ளதாக தெரிவித்தார். இதில் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் இலத்திரனியல் உபகரணங்கள், இணையத் தளங்கள், பேஸ்புக்குகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரைகளைக் கேட்காமல் ஏற்படும் விளைவுகளின் தாக்கங்கள் மேடை நாடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டன.

ஒக்ரோபர் 25, 2013

தமிழ்-முஸ்லிம் உறவு

புனரமைக்க வேண்டிய பூந்தோட்டம்!

(எஸ்.ஹமீத் )

கால் நூற்றாண்டுக்கு முன்னம், எப்போதுமில்லாத அளவுக்கு வீசத் தொடங்கிய சந்தேகப் புயலில் அந்த அழகிய, நறுமணம் வீசிக் கொண்டிருந்த பூந்தோட்டம் அழியத் தொடங்கியது. வண்ணமும் வாசமுமாய் ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணைந்து பூத்த மலர்கள் தத்தம் இதழ்களைக் களைந்து மொட்டைக் கிளைகளோடு வாடி நின்றன. நல்லெண்ணம், புரிந்துணர்வு, சினேகம், பரஸ்பர உதவிகள் என்று பூந்தோட்டத்தில் பாட்டுப் பாடிப் பறந்து திரிந்த ஒற்றுமைப்  பட்டாம் பூச்சிகள், வீசத் தொடங்கிய சூறாவளிக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் கண் காணாத இடம் நோக்கிப் பறந்து போயின. இப்போது 25-35 வயதான பருவத்தினரில் பெரும்பாலானோர்க்குத்  தெரிந்ததெல்லாம் தமிழ் மக்களுக்கு முஸ்லிம்கள் விரோதிகள் என்பதும் முஸ்லிம்களுக்குத் தமிழர்கள் எதிரிகள் என்பதும்தான். இலங்கை சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மட்டுமல்லாது, சுயநல தமிழ், முஸ்லிம் அரசியல் வியாபார நிறுவனங்களும் இந்த நிலைமையைத் தோற்றுவிப்பதற்கான தமது எத்தனங்களில் பாரிய வெற்றியைக் கண்டிருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. (மேலும்....)

முன்னாள் புலி உறுப்பினருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனை

கெப்பித்திகொல்லாவ பகுதியில் பஸ் மீது நடத்தப்பட்ட கிளைமோர் குண்டுத் தாக்குதல் சம்பவத்துக்கு உதவி புரிந்த புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றம் 5 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குண்டுத் தாக்குதல் நடத்தவென மரம் ஒன்றின் மீது ஏறி தீவிரவாதிகளுக்கு சமிக்ஞை வழங்கியதாக சந்தே நபர் மீது குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அதனால் அவருக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்ற நீதிபதி மேமா ஸ்வர்ணாதிபதி தீர்ப்பளித்தார். 2009ம் ஆண்டு ஜூன் 15ம் திகதி கெப்பத்திகொல்லாவ - யக்கவெவ பிரதேசத்தில் இ. போ. ச பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 64 பேர் உயிரிழந்து மேலும் பலர் படுகாயமடைந்தமை குறிப்பிடத் தக்கது.

சவூதியுடனான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி

அமெரிக்காவின் மத்திய கிழக்கு நிலைப்பாடு தொடர்பில் சவூதி அரேபியாவுடன் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலையை சரிசெய்ய ஒபாமா நிர்வாகம் முயற்சித்து வருகிறது. அமெரிக்கா, சிரியாவின் உள்நாட்டு யுத்தம் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காதது, ஈரானுடனான இராஜதந்திர உறவை புதுப்பித்தது மற்றும் எகிப்தின் இராணுவ அரசை அமெரிக்கா ஆதரிக்காதது தொடர்பில் சவூதி அரேபியா வெளிப்படையாக அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவில் பாரிய மாற்றத்தை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக சவூதி எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக அமெரிக்காவின் மத்திய கிழக்கு பிராந்திய நடவடிக்கையில் பிரதான நட்பு நாடாக சவூதி செயற்பட்டு வருகிறது. சவூதியுடன் முரண்பாடு நிலவிய போதும் அதனுடன் தொடர்ந்தும் கபடமற்ற உறவை தக்க வைத்துக்கொள்ள எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஜெய் கெர்னி குறிப்பிட்டார். “சவூதியுடனான உறவு பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு ரீதியிலும் எமக்கு மிக முக்கியமானதாகும். முன்னதாக சிரிய சிவில் யுத்தத்திற்கு தீர்வுகாண தவறியது மற்றும் பலஸ்தீன விவகாரத்தை காரணம்காட்டி சவூதி அரேபியா கடந்த வாரம் தனது பாதுகாப்புச் சபை ஆசனத்தையும் புறக்கணித்தது. இந்நிலையில் சவூதி உளவுப் பிரிவு தலைவர் இளவரசர் பன்தர், சவூதி, அமெரிக்காவுடனான உறவில் இடைவெளியை பேணவிருப்பதாக எச்சரித்திருந்தார்.

ஒக்ரோபர் 24, 2013

பகையாளிகளான பங்காளிகள்

வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்று அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரலாற்று சாதனை வெற்றியைப் பெற்று இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியடைகின்ற போதும் அத்தேர்தல் வெற்றியினதும் அதன் விளைவுகளினதும் அதிர்வுகள் இன்னும் அடங்கிய பாடாக இல்லை. ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்திக் காணப்பட்ட இந்த அதிர்வுகள் தற்போது தமிழ்த்  தேசியக் கூட்டமைப்புக்குள்ளேயே ஏற்பட்டு பிளவுகள் தோன்றத்  தொடங்கியுள்ளன. தமிழ் அரசியல்  கட்சிகள், தமிழர் விடுதலைப் போராட்ட இயக்கங்களிடையே என்றுமே காணப்படாத ஒற்றுமையென்பது தமிழர் வரலாற்றில் ஒரு சாபக்கேடாகவே உள்ளது. இத்தனை அழிவுகள், கொடூரங்கள், வேதனைகள், அனுபவங்களுக்குப் பின்னரும் வரலாற்றிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாது தமக்கிடையே வெட்டுக்குத்துக்களிலும் கயிறிழுப்புகளிலும் ஈடுபடுவது இன்றும் தொடர்வது தமிழர் எத்தனை வெற்றிகளைப் பெற்றாலும் அது நிலைக்காது என்பதையே காட்டுகின்றது.(மேலும்....)  

வட மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது முதலமைச்சரின் பொறுப்பு

வடமாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் சீ.வி.விக்னேஸ்வரன் மக்கள் தனக்கு அளித்த ஆணையை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். வடமாகாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், தேசியப் பாதுகாப்புக்காக வடபகுதி உட்பட நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள கேந்திர நிலைகளில் இராணுவ முகாம்கள் வைக்கப்பட்டிருப்பதாக கூறினார். புதிய மாகாணசபை தேர்ந்தெடுக்கப் பட்டதை அடுத்து வடபகுதியில் இரா ணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப் பட்டுள்ளது. பொலிஸாரே அப்பிரதேசத் தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கின்றனர் என்றும் அதனால், இதுவரை காலமும் அமைதியாக இருந்த வடபகுதியில் மீண்டும் மக்களிடம் கொள்ளையிடும் சமூக விரோத செயல்க ளில் அதிகமானோர் இறங்கியிருக்கி றார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். இன்று வடமாகாணத் தின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச் சரின் கைக்கு வந்துள்ளது. அவரது நேரடி அதிகாரத்தின் கீழ் பொலிஸ்படை இல்லாதிருந்தாலும் தமது பிரதேசத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு முதலமைச்சர் பொலிஸாரின் உதவியை நாட வேண்டுமென்றும் அத்தகைய கோரிக்கைகளுக்கு பொலிஸார் மனமுவந்து ஒத்துழைப்பார்கள் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

அமெரிக்க கப்பல் கெப்டனுடன் உக்ரைன் தூதர் சிறையில் சந்திப்பு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமெரிக்க ஆயுத கப்பலின் கெப்டனை உக்ரைன் நாட்டு தூதுவர் சந்தித்து பேசினார். தூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த “சீமென் கார்டு ஒகியா” என்ற கப்பலை கடற்படை அதிகாரிகள் சிறைபிடித்தனர். அதிலிருந்த கப்பல் கெப்டன் டட்னிக் வாலன்டின் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்டனர். இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை தங்களது நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களை சந்தித்து சம்பவம் குறித்து விசாரித்தனர். இந்நிலையில் டில்லியிலுள்ள உக்ரைன் நாட்டு தூதர் ஒலிக்ப் ஸ்டார் மொக்கோனோஸ்கி விமானம் மூலம் நேற்று முன்தினம் தூத்துக்குடி வந்தார். அங்கிருந்து காரில் பாளை சிறைக்கு வந்த அவர் கப்பலின் கெப்டன் டட்னிக் வொலன்டின், தலைமை இன்ஜினியர் ட்ரிக்கோ வொலரின் மற்றும் லெவ்ஜென் சீமெனோவ் ஆகியோரை காலை 10.10 முதல் 12.20 மணி வரை சந்தித்துப் பேசினார்.

காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட மீண்டும் அமெரிக்காவின் தலையீட்டை விரும்பும் நவாஸ் ஷெரீப்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய இராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்தின் ஆரம்ப இடமும் இல்லை என்றும் புகழிடமும் இல்லை என்று கூறினார். மேலும், அமெரிக்காவுக்கு உள்ள செல்வாக்கினால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சினைகளை தீர்க்க அந்நாட்டால் உதவி செய் முடியும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே லண்டனில் இது தொடர்பாக பேசிய நவாஸ் ஷெரிப், காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட அமெரிக்கா தலையிட வலியுறுத்துவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காஷ்மீர் சென்ற உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஷெரிப்பின் கருத்தை நிராகரித்தார். மேலும், காஷ்மீர் எங்களுக்கு உரியது. இதில் மூன்றாவது நபரின் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார்.

சிங்கப்பூருக்கு

இலங்கையின் சிங்கிறால், நண்டுகள் அனுப்பி கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் தமிழக முதலாளிகள்

சிங்கப்பூரில் உள்ள நவீன ஹோட் டல்களில் இலங்கையின் சிங்கிறால்கள், நண்டுகள், பெரிய இறால்களை பெருமளவு விலைக்கு கோடீஸ்வரர்களுக்கு விற்று வருகிறார்கள். இதுபற்றி அறிந்து கொண்ட தான் இவை எங்கிருந்து இவ்வளவு பெருமளவில் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதென்று விசா ரித்த போது அவற்றை தமிழ்நாட்டில் உள்ள மீன் முதலாளிகள் தங்களுக்கு ஏற்றுமதி செய்வதாக ஹோட்டல் நிர்வாகிகள் எனக்கு தெரிவித்தார்கள். இவ்விதம் தான் இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்கு அத்துமீறி பிரவேசித்து எமது மீனவர்களின் வருமானத்தை சூறையாடுகிறார்கள். இந்த சம்பவத்தை பாதுகாப்பு செயலாளர் பத்திரிகை ஆசிரியர்களுக்கு விளக்கிக் கூறினார்.

விரிவுரையாளர்களுக்கு எழுபது வயது வரை சேவை நீடிப்பு

பல்கலைக் கழகங்களில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் விரிவுரையாளர்களுக்கு 70 வயது வரை ஒப்பந்த அடிப்படையில் சேவையை நீடிக்க அமைச்ச ரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதென உயர் கல்வி அமைச்சின் செய லாளர் டொக்டர் சுனில் ஜயந்த நவரட்ன தினகரனுக்குத் தெரி வித்தார். இதற்கிணங்க 65 வய தில் ஓய்வு பெறும் விரிவுரையா ளர்கள் மேலதிகமாக 05 வருடங்களுக்கு சேவையாற்ற முடியும். ஓய்வு பெறும் விரிவுரையாளரின் சேவை குறித்த பல்கலைக்கழகத்திற்கு இன்றியமையாதது என கோரும் பட்சத்தில் மாத்திரமே அவர்களுக்குரிய சேவைக் காலம் நீடிக்கப்படும். ஒப்பந்தங்கள் 70 வயது வரை வருடந்தோறும் புதுப்பிக்கப்படுமெனவும் அமைச்சின் செயலாளர் கூறினார். இருப்பினும் விரிவுரையாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றும் காலப்பகுதியில் உபவேந்தர், பீடாதிபதி, பிரிவுத் தலைவர் உள்ளிட்ட எந்தவொரு பதவியையும் வகிக்க முடியாது எனவும் அவர் உறுதியாக தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் இக்கால கட்டத்தில் அமைச்சரவையின் மேற்படி அங்கீகாரம் சாதகமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சின் செயலாளர், இதன் மூலம் சேவையிலிருக்கும் ஏனைய இளம் விரிவுரையாளர்களின் சேவை மற்றும் பதவி உயர்வு என்பன பாதிப்படையாத வகையிலேயே அனைத்து செயன்முறைகளும் முன்னெடுக்கப்படுமெனவும் கூறினார்.

ஒக்ரோபர் 23, 2013

இலங்கை குறித்து படம் எடுக்க கருத்து சுதந்திரம் இல்லையாம் - கமல்

நான் தெனாலி படத்தை எடுத்தேன். அதுவும் ஒரு இலங்கை குறித்த படம் தான். அது ஒரு பக்கத்தை சொல்கிறது. ஆனால் மறு பக்கம் தான் 'மெட்ராஸ் கஃபே' ஆகும். ஆனால் அதனை வெளியிட முடியவில்லை. நான் அதுபோன்று இலங்கையில் மறுபக்கம் குறித்து ஒரு படத்தை எடுக்க நினைத்தாலும் கூட அது என்னால் முடியாது. இங்கே கருத்து சுதந்திரம் என்பது கிடையாது என்று நடிகர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். இவர் அடிக்கடி பாவிக்கும் அந்த "மறு பக்கம்" என்ன என்று உங்களுக்கு சிலவேளை புரியாமல் இருக்கலாம். அதாவது இலங்கையில் தமிழர்கள் அனுபவித்த கொடுமைகளைப் பற்றி படமாக எடுக்கலாம். ஆனால் மறுபக்கம்(புலிகள் புரிந்த போரை) பற்றி ஏதாவது படம் எடுத்தால் அதற்கு சுதந்திரம் இல்லை என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் கமல். அட புலிகள் போர் புரிந்தார்களே அது நல்ல விடையம் தானே அதற்கு என்ன தடை என்று யோசிக்க வேண்டாம். இவர் நாசுக்காகக் குறிப்பிடுவது புலிகள் செய்த போரை மட்டுமல்ல. அவர்கள் கொலைசெய்ததாகக் கூறப்படும் மனிதர்களையும் சேர்த்து தான் குறிப்பிடுகிறார். அதாவது இவர் தெரிவிக்க வரும் கருத்து ராஜீவ் கொலைபற்றியது தான். இக் கொலை தொடர்பாக கமலுக்கு பெரும் சங்கடம் இருக்கிறது. ஆனால் எங்கே வாயை திறந்து மாட்டிக்கொள்வோமோ என்று பயமும் உள்ளது. இவர் நடிக்கும் படங்கள் இந்தியாவில் கோடிக்கணக்கில் வசூல் ஆவதுபோல வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்களாலும் மேலும் பணம் வசூல் ஆகிறது அல்லவா ! இதனால் அவர்களை பகைத்துகொள்ள முடியாமல் மற்றும் மனதில் உள்ள விடையத்தை வெளியே சொல்லவும் முடியாமல், மறு -பக்கம் .... மறு -பக்கம் என்று பேசியிருக்கிறார் கமல் !

வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்! - பொ.ஐங்கரநேசன்

வடமாராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண விவசாய, கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது இயற்கை வளங்கள் கடந்த காலத்தில அளவுக்கு அதிகமான முறையில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாண நீர் மாசடைந்துள்ளது. யாழ்ப்பாணத்தின் வரமான நீருடன் கடல் நீர் கலக்கின்றது. நீரில் அதிகளவு நச்சு தன்மை ஏற்படுகின்றது. இவை அனைத்தும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வடமாரட்சி கிழக்கில் ஈ.பி.பி.டி யின் மகேஸ்வரி நிதியம் பாரிய மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம். உண்மையில் ஒரு இயற்கை வளத்தினால் அந்த பகுதி மக்கள் பயனடைய வேண்டும். ஆனால் வடமாராட்சி கிழக்கில் உள்ள வளத்தை ஒரு நிறுவனம் சுரண்டித் தின்கின்றது. அது தொடர்பான தகவல்களை சேகரித்தவர்கள் கூட கடந்த காலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே மீண்டும் அனைத்து லொறிகளும் வடமராட்சி கிழக்கிலிருந்து மணலை ஏற்றிவர நடவடிக்கை எடுப்போம் என்றார்.

இது இருபத்து மூன்றாம் ஐப்பசி...

(எஸ்.ஹமீத்)

ஓர் ஒலிபெருக்கியின் வக்கிர அறிவித்தலில்  
ஊரைவிட்டு விரட்டப்பட்டவள்...
துப்பாக்கிகளின் உக்கிர குறிவைத்தலில்
தனதான மண்ணை விட்டுத்
துரத்தப்பட்டவள்...

கழுத்துத் தங்கச் சரட்டோடு
கைக்காப்பு தோடுகளையும் 
அவர்கள் கவர்ந்து கொண்டார்கள்...
கடும் உழைப்பால் சேமித்த காசையும்!

(மேலும்....)  

மொத்த செலவினம் ரூ.1,542 பில்லியன்,  பாதுகாப்புக்கு ரூ.253 பில்லியன்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவினமாக 1,542 பில்லியன் 250 மில்லியன் 518 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நாடாளுமன்றில் இன்று சமர்பித்தது. அந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திலேயே செலவினம் மதிப்பிடப்பட்டுள்ளது. பாதுக்காப்பு அமைச்சுக்கான செலவினமாக 253,802,915,000 ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 210,674,260,000 மீண்டுவரும் செலவினமாகும். 43,228,650,000 ரூபா மொத்த செலவினமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2014 வரவு செலவு திட்டத்தை நவம்பர் 21 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார். வரவு-செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர்;  அடுத்த நாள் முதல் வரவு செலவுத் திட்ட விவாதம் நவம்பர் 29 வரை நடைபெறும்.

கனடாவில் மாணவர் குழு மோதல், இலங்கை தமிழ் மாணவன் பலி

கனடா பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகமருகே இரு மாணவர் குழுக்களுக்கிடையில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இலங்கைத் தமிழ் மாணவர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் மேலும் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த இளைஞர் ரொறோன்ரோவிலிருந்து படிப்பதற்காக வந்த மாணவர் கௌதம் (கெவின் ) குகதாசன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மாணவர் கனடா பல்கலைக்கழகத்தின் வின்ட்சர் வளாகத்தின் அருகே தங்கியிருந்ததையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் கிடைத்தள்ளதால் விரைவில் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒக்ரோபர் 22, 2013

நன்றியற்ற, போலித்தனமான, மோசடியான, நச்சு அரசியல் அரங்கு துப்பரவு செய்யப்படவேண்டும்.

1988 இல் வடக்கு கிழக்கு மாகாண சபை அமைந்த போது பெரும் சவால்களுக்கு மத்தியில் அதனை அமைத்தவர்கள் சாமானியர்கள். பேரிடர்களைச் சந்திக்க உயிரை அர்ப்பணிக்க தயாராக இருந்தவர்கள். அந்த மாகாணசபை தீண்டத்தகாதது என்று சொன்னவர்கள், செயற்பட்டவர்கள் எமது சமூகத்தின் அதிகார வர்க்கத்தினரே. புலிகளும் அவர்களைத்தான் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். அன்று சவால்கள் மத்தியில் அந்த மாகாணசபையை எடுத்து நடத்தவில்லை எனில் ஒரு அடிப்படைக் கட்டமைப்பே உருவாகியிருக்காது. அந்த மாகாண சபை ஒரு வான வில்லாக அமைந்திருந்தது. ஆனால் அந்த காலகட்ட, சூழ்நிலையின் நெருக்கடிகள் ,சவால்கள், இழப்புகள் ,சரிபிழைகள், அராஜகங்கள் எல்லாவற்றுடனும் சேர்ந்தே அதுவும்  இருந்தது. நேர்த்தியாக எதையும் செய்யமுடிந்த காலம் அல்ல அது. (மேலும்....)  

பொதுநலவாய உச்சி மாநாடு ,கனடா பகிஷ்கரிக்க கூடாது பிரைன் மல்ரோனி

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டினை கனடா பகிஷ்கரிக்கக் கூடாதென கனேடிய முன்னாள் பிரதமர் பிரைன் மல்ரொனி வலியுறுத்தியுள்ளார். பொதுநலவாய அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் உறுப்புரிமை நாடுகளின் அரசாங்கம் மற்றும் அதன் செயற்பாடுகளில் திருப்தி காணவில்லை என்பதற்காக உச்சி மாநாட்டை பகிஷ்கரிப்பதன் மூலம் இறுதியில் பொதுநலவாயத்தில் ஒன்றாக அமர்ந்து தேநீர் அருந்துவதற்கு கூட போதுமானளவு உறுப்பினர்கள் இருக்க மாட்டார்களெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரச்சினைகளை எதிர்நோக்கும் பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் இந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. எனவே இந்த மாநாட்டினை பகிஷ்கரிப்பது இதற்குரிய தீர்வு ஆகாது. அதற்குப் பதிலாக மாநாட்டில் கலந்துகொண்டு ஒருநாடு என்ற வகையில் 146 வருடங்களாக தாம் கற்றுக்கொண்ட அனுபவங்கள் எமது ஜனநாயக முறைமை ஆகியவற்றை வெளியுலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் அவர் இச்சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார். கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இம்மாத தொடக்கத்தில், தான் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய உச்சிமாநாட்டினை பகிஷ்கரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இருப்பினும், இவர் சார்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சருக்கான பாராளுமன்றச் செயலாளர் தீபக் சப்ராய் தலைமையிலான பிரதிநிதிகள் குழு வொன்று பொதுநலவாய மாநாடு தொடர்பிலான கூட்டங்களில் கலந்து கொள்ளவுள்ளது.

மாகம்புர துறைமுகம் 460 மில்லியன் வருமானம்

ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் இதுவரை 460 மில்லியன் ரூபா வருமானம் பெறப் பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தீர்மானத்துக்கு அமைய நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகம் 2012 ஜுன் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் முதலாம் கட்டத்தில் 130 மில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப் பட்டது. ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்தில் 55000 க்கும் அதிகமான வாகனங்கள் இறக்கப்பட்டதுடன் இந்த வாகனங்கள் மீள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த துறைமுகத்தின் மூலம் 23000 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ருஹுணு மாகம்புர மஹிந்த ராஜபக்ஷ துறைமுகத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதில் அளித்துக் கொண்டே துறைமுகத்தின் செயற்பாடுகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை பொது மக்கள் பாவனைக்கு இன்று திறப்பு

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் மூன்று தினங்களுக்கு பொது மக்கள் பாவனைக்காக திறக்கப்படுவதாக துறைமுகங்கள் நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொதலாவல தெரிவித்தார். இதில் செல்வதற்கு வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் கால் நடையாக வந்து பார்க்கவே அனுமதிக்கப்படும் எனவும் அவர் கூறினார். இதேவேளை, 27ஆம் திகதி முதல் கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் அதி சொகுசு, இ. போ. ச. சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ள தாக போக்குவரத்து அமைச்சு கூறியது. முதலில் 12 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. தனியார் சொகுசு பஸ்களுக்கு இதுவரை அனுமதி வழங்கப்பட வில்லை. கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் கார், ஜீப் மற்றும் சிறிய ரக வேன்களிடம் 300 ரூபா கட்டணம் அறவிடப்பட உள்ளதோடு லொறி, பஸ்கள் என்பவற்றிடம் 600 ரூபா கட்டணம் அறவிடப்பட உள்ளதாக அறிவிக்கப் படுகிறது.

அமெரிக்க கப்பலில் திண்டுக்கல் வாலிபர்

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து பிடிபட்ட அமெரிக்க ஆயுத கப்பலில் இருந்து கைதான திண்டுக்கல் வாலிபர் குறித்து கியூ பிரிவு பொலிஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கியூ பிரிவு பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கப்பல் கப்டன் உட்பட 35 பேரை கைது செய்தனர். இவர்களில் 12 பேர் இந்தியர்கள். இதில் ஒருவர் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2008ம் ஆண்டு ஜுன் 16ம் திகதி முதல் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி கப்பல் கம்பெனியில் இருந்து வேலைக்கு கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைப்பர். ஒரு தடவை வேலைக்கு சென்றால் 500 டொலர் வரை சம்பளம் கிடைக்குமாம்.

நான் மலாலா!

உலகம் முழுவதும் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது... தலிபான் தீவிரவாதிகளால் தாக்குதலுக்குள்ளாகி, உயிர் பிழைத்திருக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலா எழுதி வெளியிட்டிருக்கும் 'ஐ ஆம் மலாலா’ (I AM MALALA) எனும் சுயசரிதை. அதன் விறுவிறுப்பான சில பக்கங்களை புரட்டுவோமா...

(மேலும்....)  

ஒக்ரோபர் 21, 2013

என் மனவலையிலிருந்து........

காணாமல் போனோரின் கணக்கெடுப்பு

(சாகரன்)

இரண்டு விதமான காரணங்களினால் இலங்கைத் தமிழர் தமது அகதி வாழ்விற்குள் தள்ளப்பட்டனர் ஒன்று இலங்கை அரசபடைகளின் நடவடிக்கைகளிலிருந்து தமது உயிர்களை காப்பாற்றுவதற்காக மற்றது தனிநாடு என்று புறப்பட்ட அமைப்புக்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு பயந்து, சிறப்பாக தமிழீழ விடுதலைப்புலிகளின் மாற்றுக்கருத்தாளர்கள் மீதான் கொலைகளுக்கு பயந்து. முதல் காரணியான அரசபடைகள் என்ற வகையில் ஏதோ ஒரு தளத்தில் நியாயம் கேட்பதற்கு வாய்ப்புக்கள் இருந்து கொண்ட இருந்தன, இருக்கின்றன. இந்த அரச படைகளின் அரசுகளும் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டில் இருந்தன, இருக்கின்றன. ஆனால் இரண்டாவது விடயத்திற்கு அதற்கான இடைவெளி எப்போதும் இருந்தது இல்லை. 2009 மே மாதம் போர் முடிவுற்ற பின்பு புலிகளின் கொலைகளுக்கு எதிரான கேள்வி கேட்கும் இடைவெளிகள் ஏற்படுத்தப்பட்டாலும் இது பெரும்பாலும் தொடப்படாத பக்கங்களாக இன்றும் இருந்து வருகின்றன. சர்வதேசமும், தமிழ் மக்கள் மத்தியில் உள்ள மனித உரிமை அமைப்புக்களும், ஏன் இலங்கை அரவும் கூட இந்தப்பக்கத்தை தொடவில்லை என்பது வருத்தத்திற்குரியது, கண்டனத்திற்குரியது. அண்மையில் வன்னிப்பிரதேசம் எங்கும் 1990 களின் இருந்து 2009 வரையிலான காணமல் போனவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பு என்ற விடயம் நடைபெற்று வருவதாக பத்திரிகைககளில் செய்தி வெளியாகி இருக்கின்றது. இது வரவேற்கத்தக்க விடயம்தான். இச்செயற்பாடானது சகலதரப்பினராலும் காணமல் போனவர்கள் என்ற பரந்துபட்ட வரையறைக்குள் நடத்தப்பட வேண்டும். மேலும் இது 1980 களிலிருந்து என்று விரிவடையச் செய்தல் என்பதே சரியானதாக அமையும். இச் செயற்பாட்டின் வடிவத்தில் உள்ள சந்தேகங்கள் என்னவென்றால், காணாமல் போனவர்களுக்கான பொறுப்புக் கூறலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளை தவிர்த்தல் என்பதாகும். புலிகளின் சிறப்பு வதைமுகாமாகிய துணுக்காய் முகாமில் தடுத்து வைத்திருக்கப்பட்டவர்களில் 95 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் இந்த காணமல் போனவர்கள் பட்டியலில் உள்ளனர். மேலும் சகல அமைப்புக்களையும் புலிகள் தடைசெய்து தனியாக செயற்பட்ட 1987 தொடக்கம் 2009 மே மாதம் வரைக்கும் புலிகளில் கைது செய்ப்பட்டு அவர்களின் சிறையில் அடைக்கப்பட்ட மிகச் சிலரே வெளியில் விடுவிக்கப்பட்டனர் என்ற உண்மை நிலையே உள்ளது. எனவே இவையும் விசாரிக்கப்பட வேண்டும். இதற்கான பொறுப்புக்களை தற்போது அமைந்திருக்கும் வடமாகாண சபை முன்னெடுக்குமா?. சரி இவர்களுக்குதான இதைவிட முக்கியமான வேலைகள் இருக்கின்றன, பழசை ஏன் தோண்டுவான் என்றாலும் சமூக ஆர்வலர்கள் அல்லது வன்னியில் காணாமல் போனவர்கள் பற்றி தற்போது கணக்கெடுப்பைச் செய்து கொண்டிருப்பவர்கள் இதனைச் செய்ய வேண்டும். இதனைச் பக்கச்சார்பின்றி செய்வார்களா? கணக்கெடுப்பின் பின்பு இதற்கு காரணமானவர்களை பற்றி பார்க்கலாம். இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் புலிகளால் காணாமல் போனவர்களுக்கான தார்மீகப் பொறுப்பை அவர்களுடன் அன்றைய காலகட்டத்தில் சேர்ந்தியங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எற்கவேண்டும் என்பதுதான்.

(Saakaran) (ஒக்ரோபர் 21, 2013)

முதலமைச்சர் விக்னேஸ்வரன்

மர்மங்களின் மொத்த உருவம்!

(எஸ். ஹமீத்) 

வட மாகாண சபைக்கான தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கும் வரை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி திருவாளர் C.V. விக்னேஸ்வரன் அவர்கள் ஒரு திறந்த புத்தகமாகத்தான் இருந்தார். பூஜை புனஸ்காரங்கள் என்று ஆன்மீக வழியில் அவரது ஓய்வு காலம் கழிந்து கொண்டிருந்தது. வருடாந்தம் நடக்கும் கம்பன் விழாக்களில் தலைமை தாங்குவதும் உரையாற்றுவதும் அவருக்கு மிகப் பிடித்திருந்தது. தனது பிள்ளைகள், அவர்களின் துணைகள், அவர்களது பிள்ளைகள், தேர்ந்தெடுத்த மிகச் சிறந்த நண்பர்கள், உறவினர்கள் என்ற வட்டத்துக்குள் அவரது வாழ்க்கை வெகு இயல்பாகக் கழிந்து கொண்டிருந்தது. (மேலும்....)  

எத்தகைய பிரச்சினைகளையும் எதிர்நோக்கி திரு. விக்னேஸ்வரன் நற்பணியை தொடருவார்

பல்லாண்டு காலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடைப்பிடித்த முரண்பாட்டு அரசியலை ஒதுக்கிவிட்டு இணக்கப்பாட்டு அரசியல் மூலம் வட பகுதி மக்கள் தங்களுக்கு அளித்த ஆணையை சிறப்பாக நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இணக்கப்பாட்டு அரசியலை மேற்கொண்டு வட மாகாணத்தின் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் வட மாகாண முதலமைச்சர் திரு. சி. வி. விக்னேஸ்வரன் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மாத்திரமன்றி தென் இந்தியாவிலிருந்தும் தென்னிலங்கையிலிருந்தும் அநாவசிய மாக முட்டுக்கட்டைகள் இப்போது போடப்படுவது வேதனையை அளிக்கிறது. (மேலும்....)  

உண்மை நிலையை நேரில் வந்து பாருங்கள் கனடா உட்பட பொதுநலவாய நாடுகளுக்கு வேண்டுகோள்

புலம்பெயர் தமிழர் அமைப்புக்களின் கட்டுக்கதைகளைக் கேட்டு பின்வாங்காமல் நேரில் வந்து உண்மை நிலையினைக் கண்டறியுமாறு கனடா, நியூசிலாந்து மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களை கேட்டுக்கொள்வதாக வெளிவிவகார பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். பொதுநலவாய உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா? இல்லையா? என்பது குறித்து இந்திய அரசாங்கம் இதுவரை திட்டவட்டமாக அறிவிக்காத போதிலும் அந்நாட்டின் முழுமையான ஒத்துழைப்பு மாநாட்டிற்கு கிடைக்குமென் பதில் நாம் உறுதியாகவிருக்கிறோமெனத் தெரிவித்த பிரதியமைச்சர், இந்திய பிரதமர் வரமுடியாத பட்சத்தில் அவர் சார்பில் வரக்கூடிய ஏனைய பிரதிநிதிகளை கெளரவிக்க அரசாங்கம் தயாராகவிருப்ப தாகவும் கூறினார். கனடா, நியூசிலாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்கள் பொதுநலவாய உச்சி மாநாட்டில் அந்நாட்டின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொள்வதனை தடுக்கும் முகமாக பல சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல கற்பனைக் கதைகளை உருவாக்குகிறார்கள். இவர்களை ஆசுவாசப்படுத்தும் வகையிலேயே கனடா இலங்கையில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டினை பகிஷ்கரித்துள்ளதுடன் நியூசிலாந்து மற்றும் பிரித்தானிய அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பில் அழுத்தம் கொடுப்பதற்காக மாநாட்டில் பங்கெடுக்கவிருப்பதாகவும் அறிவித்துள்ளன என்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார். கனேடிய அரசாங்கம் வெளியிலிருந்து இலங்கைக்கு கல்லடிப்பதனை விடுத்து நேரில் வந்து நிலைமைகளை ஆராய்வதன் மூலமே அவர்கள் மனக் கண் முன்னிருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு பிறக்கும் என்றும் அவர் கூறினார்.

காஷ்மீர் எல்லையில் ஒரே நாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் பீரங்கி தாக்குதல்

காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரே நாளில் 25 இடங்களில் பாகிஸ்தான் படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. காஷ்மீர் மாநில சர்வதேச எல்லையோர மாவட்டங்களான கதுவா, சம்பா, பூஞ்ச் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ முகாம்களை குறி வைத்து பாகிஸ்தான் இராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 14 ஆம் திகதி முதல் தீவிரமாகி உள்ள இந்த தாக்குதல்களில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர். கடந்த 17 ஆம் திகதி ஜம்மு மாவட்டத்தில் நடந்த தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட கிராம மக்கள் 6 பேரும் காயமடைந்தனர். இதனால் எல்லைப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் சம்பா மாவட்டத்தின் சர்வதேச எல்லைக்கோடு அருகே உள்ள குலியன் சுசெட்டிபூர் பகுதி வழியாக இந்திய பகுதிக்குள் சந்தேகிக்கப்படும் வகையில் சிலர் ஊடுருவ முயல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே எல்லை பாதுகாப்பு படையின் 9 வது பட்டாலியன் பிரிவை சேர்ந்த வீரர்கள் அப் பகுதியில் தாக்குதல் நடத்தினர். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

அமெரிக்க கப்பல் தலைமை பொறியியலாளர் தற்கொலை முயற்சி

அமெரிக்க கப்பலில் பராமரிப்புப் பணியைக் கவனிப்பதற்காக இருந்த தலைமைப் பொறியியலாளர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவரையும் கப்பல் கெப்டனையும் க்யூ பிரிவு பொலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய கடல் பகுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக இந்தக் கப்பலில் இருந்த மாலுமிகள், பாதுகாப்பு வீரர்கள் உள்ளிட்ட 35 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். கப்பல் பராமரிப்புப் பணிக்காக தலைமைப் பொறியியளாளர் ஷிடரன்கோ வேளரி என்பவரும், கப்பலின் கேப்டன் டட்னிக் வொலடைனும் கப்பலிலேயே இருந்தனர். பராமரிப்புப் பணிக்கு கப்பல் நிறுவனம் மாற்று ஏற்பாடு செய்ததும் இவர்களும் கைதுசெய்யப்படுவார்கள் என க்யூ பிரிவு பொலிஸார் தெரிவித்திருந்தனர். தற்கொலைக்கு முயன்ற தலைமைப் பொறியியலாளரை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த பிறகு ஒக்டோபர் 31 ஆம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் பொறியியலாளரும், கப்பல் கெப்டனும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஒக்ரோபர் 19, 2013

ஏதோ ஒன்றின் கைகளில் அகப்பட்ட மாலையாக அமைந்துவிடக் கூடாது

வடக்கு வாழ் தமிழ் மக்கள் விரும்பியோ விரும் பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குத் தமது வாக்குகளை வழங்கி அவர்களை ஆட்சி பீடமேற்றி அதிகாரத்தைக் கையளித்துள்ளனர். இந்த ஆட்சி யைக் கைப்பற்றுவதற்காக தமிழ்க் கூட்டமைப்பும் தமது இயலாமைக்கும் அப்பால் சென்று பொய்யான வாக்குறுதி களை வழங்கி மக்களைத் தம் பக்கம் கவர்ந்திழுத்து வாக்கு களை அபகரித்து வெற்றி பெற்றது. இவ்வாறு அம்மக்கள் வழங்கிய ஆணையை தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர்கள் சரிவரப் பயன்படுத்துகி றார்களா எனப் பார்த்தால் தேர்தல் நடைபெற்று இன்றுடன் சரியாக ஒரு மாதம் நிறைவடைகிறது. ஆனால் இதற்கு முன்னரே தமக்குள் பதவிகளுக்காக முட்டிமோதி முரண் பட்டு பல துருவங்களாகப் பிரிந்து செயற்படுவதைக் காண முடிகிறது. இது இவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்குப் பெரும் கவலையை அளித்துள்ளது. (மேலும்....)  

அமைச்சரே.. அடுத்த அறிவிப்பு என்ன?

இலங்கை தமிழ் அமைச்சர் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களுக்கு வைத்த வேட்டு!

இலங்கை வடக்கு மாகாணசபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்ததையடுத்து, அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களை (multinational enterprise) எதிர்த்து போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் ஐங்கரநேசன், “வடக்கு மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ கூட்டங்களிலோ கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு மென்பானங்கள் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளார். “வெளிநாட்டு மென்பானங்களை பயன்படுத்துவதன் மூலம் எமது பணம் வெளிநாடுகளுக்கு செல்லும்  நிலையை நாமே ஏற்படுத்தக் கூடாது” என்றும் விளக்கம் கொடுத்துள்ளார் இந்த அமைச்சர். “பின்தங்கியுள்ள தமிழர் மாகாணத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல, வெளிநாட்டு நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இங்கு அமைக்க முன்வர வேண்டும். வெளிநாட்டு முதலீடு எமது மாகாணத்தின் வளர்ச்சிக்கு அவசியம்” என்று வடக்கு மாகாணத்தின் முதல்வர் விக்கினேஸ்வரன், கூறி 24 மணி நேரத்துக்குள், அவரது கால்நடை துறை அமைச்சர், கோகோ கோலாவுக்கு தடை போட்டிருக்கிறார். வெளிநாட்டு முதலீடு வேண்டும் என்கிறார் அவர். எமது பணம் வெளிநாட்டுக்கு போகக்கூடாது என்கிறார் இவர். வெளிநாட்டு நிறுவனங்கள் தமது காசை முதலீடு செய்துவிட்டு, வரும் லாபத்தை அமைச்சர் ஐங்கரநேசனின் கால்நடைகளுக்கு தீனியாக போட்டுவிட்டு போவார்கள் என்பது அருமையான ஒரு லாட்ரல் திங்கிங்தான். அடுத்து என்ன அறிவிப்பு, அமைச்சரிடம் இருந்து வரப்போகிறதோ! அமைச்சரின் போட்டோவை பார்த்தால், ‘மென் பானங்கள்’ பற்றிய அறிவிப்பை அடுத்து ‘வன் பானங்கள்’ பற்றிய அறிவிப்பை வெளியிடும் ஆர்வம், அவரது கண்களில் தெரிகிறதே! (நன்றி: விறுவிறுப்பு)

விக்னேஸ்வரன் தெற்கில் ஏற்படுத்தும் தாக்கம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தென் பகுதி அரசியல்வாதிகள் விக்னேஸ்வரனிடமும் சம்பந்தனிடமும் சுமந்திரனிடமும் அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெற்கில் பலர் தனிப்பட்ட சந்திப்புக்களின் போது 'கஷுவலாக' கூறுகிறார்கள். கடும் போக்குள்ள பேரினவாதிகளையும் அரசாங்கத்தை சார்ந்தவர்களையும் தவிர்ந்த தெற்கில் பலர் வட மாகாண சபையின் தற்போதைய போக்கை முதிர்ந்த அரசியல் என்றே வர்ணிக்கிறார்கள். வட மாகாண சபையில் நடைபெறும் விடயங்களில் தெற்கில் சில கடும் போக்காளர்கள் வாயடைத்துப் போயுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இது வரை பிடி கொடுக்கவே இல்லை. அவர்களுக்கு கூச்சலிட இது வரை ஒரே ஓரு சந்தர்ப்பம் தான் கிடைத்தது. அது தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை சந்தித்த கூட்டத்தின் போது தேசிய கொடி ஏற்றாமல் இருந்த சம்பவம்.
(மேலும்....)

தமிழரசுக் கட்சி தனித்துச் செயற்படவில்லை

பதவிகளுக்கு கட்சியைவிட தகுதியே முக்கியமானது, குறை கூறுவோர் புரிந்துகொள்ள வேண்டுமென்கிறார் முதல்வர்

வட மாகாண சபையினை பொறுத்த வரையில் ஒவ்வொரு கட்சியிலுமுள்ள அங்கத்தவர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுத்து ஆட்சி நடத்துவது கடினமானது. நாம் எமக்கு கிடைத்துள்ள பதவிகளை கட்சி அடிப்படையில் பார்க்காது தகுதியடிப்படையிலேயே பார்க்கின்றோம் என்று வட மாகாண சபையின் முதல மைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதன் காரணத்தினாலேயே அண்மைக்காலங்களில் கட்சிக்குள் சில கருத்து முரண்பாடுகளும், மனஸ்தாபங்களும் ஏற்பட்டன. தமிழரசுக் கட்சி தனித்து செயற் படுகின்றது என்ற கூற்றினை ஏற்றுக் கொள்ள முடியாது.அத்துடன் நாம் முடிந்தவரை அரசாங் கத்தின் ஒத்துழைப்போடு வட மாகா ணத்தில் எம்மக்களுக்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். வெறுமனே அரசியல் காரணங்களினால் முரண்டு பிடித்துக் கொண்டு அரசாங்கத்தை பகைத்துக் கொள்வதினால் எவ்வித அர்த்தமுமில்லை. அதனால் நாம் அரசாங்கத்தை எதிர்க்கப் போவதுமில்லை என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கொள்கைக்காக அரசியல் என்றவர்கள் பதவிகளுக்காக குத்துவெட்டு

தமிழ்க் கூட்டமைப்பின் இரட்டை வேடம் அம்பலம் என புத்திஜீவிகள் குற்றச்சாட்டு

கொள்கைக்காகவே தாம் அரசியல் நடத்துவதாகவும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே தமது இலக்கு எனப் போர்க்கொடி தூக்கியும் அரசியல் நடத்தியவர்கள் இன்று அமைச்சுப் பதவிகளுக்கு ஆலாய்ப் பறப்பது விந்தையானது என புத்தி ஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெற்றால் அது தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமெனவும் அபிவிருத்தி அரசியல் ஒருபோதும் விடிவு தரப் போவதில்லை எனவும் மேடைகளில் கூறித் திரிந்தவர்கள் இன்று மாகாண சபை அமைச்சுப் பதவிகளுக்காக குடுமிச் சண்டையில் ஈடுபடுவது ஏனென்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். (மேலும்....)

ஈ.பி.ஆர்.எல்.எப் மீது திட்டமிட்ட முறையில் வசைபாடல்

முதலமைச்சர் விக்னேஸ்வரன் எங்களை கொச்சைப்படுத்துகிறார்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஈபிஆர்எல்எப் கட்சியினர் மீது திட்டமிட்டுக் குற் றஞ்சாட்டுவதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கவலை தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சர்கள் பங்கீட் டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் சம்பந்தரும் முதல மைச்சர் விக்னேஸ்வரனும் தமது கட்சியினரின் கோரிக்கைகளை கணக்கில் எடுக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி கோரியதைப் பற்றிக் கூறும் முதலமைச்சர், ஏன் முல்லைத்தீவு மாவட்டத்துக்காக அமைச்சுப் பொறுப்புக் கோரியதைப் பற்றி ஊடகவியலாளர்களிடம் வாய் திறக்கவில்லை என்றும் சுரேஷ் கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் நேர்மையாக நடந்திருந்தால் தங்கள் கட்சியினர் கோரிய முழுமையான விடயங்களையும் ஊடகங்களிடம் கூறியிருக்க வேண்டும் என்று சுரேஷ் தெரிவித்தார். பங்காளிக் கட்சிகள் பலவும் பதவிப் பிரமாண நிகழ்வைப் புறக்கணித்திருந்த நிலையில், தமது கட்சியை மட்டும் கொச்சைப்படுத்தும் விதத்தில் விக்னேஸ்வரன் கருத்துக் கூறியுள்ளதாகவும் சுரேஷ் கூறினார்.

தமிழ் கூட்டமைப்பை தனிக் கட்சியாக பதிவுசெய்யும் காலம் கனிந்துவிட்டது

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் மக்களின் உரிமைகளை விட வேறு பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடாது என்று மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங் காளிக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண் டும் என்பதே மக்களின் எதிர் பார்ப்பு என்றும் சுட்டிக்காட் டிய இராயப்பு ஜோசப், மக்களின் உரிமைகளை விட தமிழ்க் கட்சிகளுக்கு வேறு முன்னுரிமையான பிரச்சினைகள் இருக்க முடியாது என்றும் கூறினார். ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வதற்கு சிவில் அமைப்புக்களின் சார்பில் எடுக்கப் பட்ட முயற்சிகள் கடந்த காலங்க ளில் வெற்றியளிக்கவில்லை. தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒரே அணியாக ஒரே கொள்கைத் திரட்டின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்யப்படுவதற்கு காலம் கனிந்து விட்டதாகக் கூறிய மன்னார் ஆயர், அடுத்த கட்டமாக அதற்கான பேச்சுவார்த்தை கள் மீண்டும் முன்னெடுக்கப் படும் என்றும் தெரிவித்தார். வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை வென்றெடுப்பதற்கு கூட்டணிக் கட்சிகளுக்குள் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

யதார்த்தம்

பொதுநலவாய நாடுகளின் மகாநாடு

பல ஆயிரம் பேரை கொன்ற மோடியை இந்தியாவால் என்ன செய்ய முடிந்தது. இந்த மூஞ்சை வைத்துக்கொண்டு நான் எப்படி வெளிநாடு செல்வேன் என்று வாஜ்பாயால் சொல்ல மட்டும் தான் முடிந்தது. அதுக்கு மேல ஒன்றும் புடுங்க முடியல. நம்ப நாட்டுல நடந்த கொலைக்கு நம்பளால தண்டனை வாங்கி கொடுக்க முடியல. இதுல அந்நிய நாட்டுல போயி என்ன கிழிக்க முடியும். இதுதான் யதார்த்தம்: பல்லாயிரம் பேரை கொலை செய்த (மதம் காக்க) மோடி மூன்று முறை குஜராத் முதல்வர். பல்லாயிரம் பேரை கொலை செய்த (நாடு காக்க) ராஜபக்சே இலங்கையின் அதிபராக தொடர்வார். இவருக்கு பிறகு இவரது சகோதரர்கள், வாரிசுகள் அதிபராக தொடர்வார்கள். மோடிக்கு விசா கொடுக்காததால், அமெரிக்க, இங்கிலாந்து மற்றும் ஐய்ரோப்பிய நாடுகளுக்கு நஷ்டமா? இல்லை இந்தியாவுக்கு நஷ்டமா? இல்லை மோடிக்குத்தான் நஷ்டமா? யாருக்கும் இல்லை. இந்தியா இலங்கை மாநாட்டில் கலந்து கொள்ளவிட்டால், இலங்கைக்கு நஷ்டமில்லை. இலங்கைக்கு சீனா, பாகிஸ்தான் ஆதரவு தொடரும். இந்தியாவால் சமாதான பேச்சுவார்த்தை கூட பேசமுடியாது. இலங்கை இந்தியாவின் பேச்சை கேட்காது, சீனா மற்றும் பாகிஸ்தான் பேச்சை தான் கேட்கும். யதார்த்தம் உணர்ந்ததால் தான் ஈழத்து தமிழ் பெண் (முன்னால் விடுதலை புலி), எவனாவது என்னிடம் தனி ஈழம் என்று சொன்னால் விளக்குமாற்றால் அடிப்பேன் என்றார். யதார்த்தம் உணர்ந்ததால் தான் வடமாகான முதல்வர் தமிழகத்து அரசியல் கட்சிகளும், புலம் பெயர்ந்த தமிழர்களும் ஈழத்து பிரச்சனையில் தலையிடாது ஒதுங்கி இருங்கள் என்றார். போராட்டம் நடத்தும் ஈழ ஆதரவாழர்களால், இன்டர்நெட்டில் இடிமுழக்கம் செய்யும் புலம்பெயர் தமிழர்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது. இலங்கை தமிழர்கள் தான் அவர்களது தலைஎழுத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

(Rajavel)

ஒக்ரோபர் 19, 2013

மத்தியிலும், மூன்றில் இரண்டு; (வட)மாகாணத்திலும், மூன்றில் இரண்டு

(சாகரன்)

(இக் கட்டுரை வட மாகாணசபையின் மந்திரிசபை தெரிவு செய்வதற்கு முன்பு எழுதப்பட்டது)

மத்தியிலும் மூன்றில் இரண்டு வடக்கிலும் மூன்றில் இரண்டு. மத்தியில் வடமாகாணத்தில் தோற்றுப் போன மகிந்த அரசு மூன்றில் இரண்டு பலத்துடன் ஆட்சியில் உள்ளது. வட மாகாணத்தில் மகிந்த அரசை விரும்பாத? தமிழ் பேசும் மக்கள் மூன்றில் இரண்டு பலத்துடன் மாகாண அரசை அமைத்துள்ளனர். இரண்டு பலம்மிக்க அரசுகள் தமது அதிகார வரம்பிற்குள் என்ன சாதனைகளைப் புரியப் போகின்றார்கள் என்பதே இன்றைய கேள்வியாகும். மத்திய அரசு தமக்கு தேவையான அதிகாரங்களை வழங்கவில்லை என்று மாகாண அரசும், தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்விற்கு பாராளுமன்றத் தேர்வுக்குழவில் இணைந்து பேசவாருங்கள் என்று மத்திய அரசும் காரணங்களைக் காட்ட போகின்றன. மறுபுறத்தில் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் என்று இந்தியா இலங்கையை வேண்டி நிற்கப் போகின்றது. இன்னொரு புறத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துங்கள் என்று மேற்குலக அரசுகளும் கூறி நிற்கும். பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குங்கள் அன்றேல் தமிழீழம் தான் முடிந்த முடிவு என்று புலம் பெயர் புலி ஆதரவாளர்கள், தமிழ் நாட்டு சீமான்களும் கூறி நிற்க இடியப்ப சிக்கலாக மாறியுள்ளது வட மாகாண ஆட்சி. (மேலும்....)

செய்தியும் சிந்தனையும்(3)

(அபிமன்யு)

செய்தி

வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (11-10-2013) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வினை அக்கட்சியின் ஒன்பது உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

சிந்தனை

வட மாகாண சபைத் தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் கூட முற்றாக முடியவில்லை.  அதற்குள்தான் எத்தனை குடுமிச் சண்டைகள், குழிபறிப்புகள், வாதப் பிரதிவாதங்கள்!. இத்தனைக்கும் அத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம்  வகிக்கும் அனைத்துக் கட்சிகளாலும் முன்வைக்கப்பட்ட முதன்மைக் கோஷம் “ஒற்றுமையே தமிழர்களின் பலம்”. வட மாகாணசபைத் தமிழர்கள் ஒற்றுமையாகத்தான், தெளிவாகத்தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர்களுக்கு  பெருவாரியாக வாக்களித்து அமோக வெற்றி பெற வைத்துள்ளனர். (மேலும்....) 

ரவூப் ஹக்கீம் மற்றும் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் செய்து கொண்ட உடன் படிக்கையில் வடக்கிலிருந்து வெளியேறிய முஸ்லிம்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.

முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் அடையாளத்தையும் பேனிப்பாதுகாத்துக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செல்லும் அதே வேளை தென்னிலங்கையிலுள்ள பௌத்த சமூகத்துடனும் உடன் பட்டுச் செல்ல ஆயத்தமாக உள்ளோம் என வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் தெரிவித்தார். நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் காத்தான்குடியில் வெள்ளிக்கிழமை இரவு நடாத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் மேற்கண்டவாறு கூறினார். வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு போனஸ் ஆசனத்தின் மூலம் வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் அஸ்ஸெய்க் அஸ்மின் ஐய்யூப் முதல் தடவையாக கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தார். இதன் போது அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுரையாற்றினார்.
(மேலும்....) 

ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர் முதலமைச்சர் முன் சத்தியப்பிரமாணம்

சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாமல் இருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்;சியினைச் சேர்ந்த இவர் வவுனியாவில் தமது கட்சி அங்கத்தவர்கள் மூவர் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் போது, தான் முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வலி.மேற்கு சங்கானைப் பிரதேச சபை கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று வருகை தந்திருந்தார் இதன்போதே அவர் முன்னிலையில் இந்திராசா சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் திறப்பு விழா நிகழ்விற்கு வருகை தந்திருந்தபோதிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் இராமநாதர் இந்திரராசா சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளும் இடத்தில் அவர் இருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

காணாமல் போனோர் தொடர்பில் வவுனியாவில் பெருமளவானோர் பதிவு

காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த ஆணைக்குழுவுக்குரிய விபரங்களை பெறும் நோக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரம் திரட்டும் வேலைகள் வவுனியா  இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விபரங்களை சமர்ப்பிப்பதற்காக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு இந்த பதிவினை மேற்கொண்டுள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகியவற்றில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் வவுனியாவில் இப்பதிவு இடம்பெற்றது. 1990 தொடக்கம் 2009 வரையான யுத்தத்தின் காரணமாகவும் கடத்தப்பட்டும் காணாமல் போனவர்களினுடைய விபரங்கள் கோரப்பட்டுள்ளன. இதில் காணாமல் போனவர்களது தற்போதைய குடும்ப நிலை, எதிர்பார்க்கும் உதவி என பல வினாக்கள் கோரப்பட்டுள்ளன. பல குடும்பங்கள் கண்ணீருடன் வந்து எதிர்பார்ப்புக்களுடன் பதிந்து செல்வதை காணக்கூடியதாகவிருந்தது. இது தொடர்பில் காணாமல் போனவர்களின் உறவினர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்;  இப்படி எத்தனை தரம் நாங்கள் பதிவு செய்து விட்டோம். எத்தனை பேரினுடைய வாசல்படியெல்லாம் ஏறிவிட்டோம். ஆனால் என் மகனை இன்னமும் கண்டுபிடித்துத்  தரவில்லை. இதுவும் ஒரு ஏமாற்றும் வேலைதான் எனத் தெரிவித்தார்.

மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி கடும் பாதுகாப்பு

கிளிநொச்சி, கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை சுற்றி பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. மாவீரர் துயிலும் இல்லத்தை இன்று வெள்ளிக்கிழமை துப்பரவு செய்யவிருப்பதாக கிடைத்த தகவல்களையடுத்தே சுமார் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கரைச்சி பிரதேசத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்வதற்கான தீர்மானம் கரைச்சி பிரதேச சபையில் நேற்று வியாழக்கிழமை (17) நிறைவேற்றப்பட்டது.  இதன்பிரகாரம் கரைச்சி பிரதேச சபை ஊழியர்கள் மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஈடுபடவிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்தே பொலிஸார் அங்கு குழுமியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பரவு பணியில் யாரும் ஈடுபடவேண்டாமெனவும் அவ்வாறு ஈடுபட்டால் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் அவர்களை கைது செய்வோம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்ரோபர் 18, 2013

வட மாகாண  சபையின் எதிர்காலம் குறித்து

(எம்.ஆர். ஸ்டாலின் )

வட மாகாணசபை தேர்தல் நடந்த விதம் பற்றியும்அதில் பலரும் எதிர்பார்த்ததை விட தமிழரசு கட்சி அதிகூடிய வாக்குகளை பெற்று ஆட்சியை பிடித்திருப்பது பற்றியும் அரசின் தோல்விக்கான காரண காரியங்கள் பற்றியும் பல தோழர்கள்  இங்கு கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வட மாகாண  சபையின் எதிர்காலம் குறித்து சிலகருத்துக்களை முன்வைக்கலாம் என எண்ணுகின்றேன். முதலில் இந்த மாகாண சபை முறைமையை ஏற்றுக்கொள்ள  தமிழ் தேசிய கூட்டமைப்பு இப்போதாவது முன்வந்தமை சந்தோஷமான ஒரு விடயமாகும். காரணம் இந்த மாகாண சபையை அன்று வரதராஜபெருமாள் பொறுப்பெடுத்தபோதும் கிழக்கில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சந்திரகாந்தன் பொறுப்பெடுத்தபோதும் அவை துரோகங்களாகவே சித்தரிக்கப்பட்டன.ஒருவித அதிகாரமும் அற்ற "உது எதற்கு?"என்று எள்ளி நகையாடப்பட்டது. ஆனால் அதே மாகாண  சபையை    தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிகொண்ட போது ஏதோ தமிழீழத்தை வென்றெடுத்ததுபோல்  ஆரவாரங்களும் ஆர்ப்பரிப்புகளும் வானளாவ உயருகின்றன. (மேலும்....)

தமிழர்களின் அரசியல் தீர்வு யோசனை ஒப்பந்தங்களும் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கும் தமிழ்த் தலைமைகளும்

(யூ.எல் அப்துல் கபூர் (ஜின்னா))

இலங்கை அந்நியர் ஆட்சியின் பிடியிலிருந்து விடுபட்டதிலிருந்து சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான அமைதியின்மையும் நல்லுறவும் சீர்குலைந்தன. பாராளுமன்றம் நிறைவேற்றிய பிரஜாவுரிமைச் சட்டம் ,  சிங்களம்  மட்டும் ஆட்சி மொழி என்ற சட்டம் ஆகியவற்றின் மூலம் இரு சாராருக்குமிடையிலான நல்லுறவுகள் மேலும் சீர்குலைந்தன. பண்டா  செல்வா ஒப்பந்தம் 1957 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ,  எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்கும்  இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அது பண்டாரநாயக்க  செல்வநாயகம் ஒப்பந்தம் என்று சொல்லப்படும். அதில் தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை அடையாளம் காட்டியுள்ளார். ஒப்பந்தத்தில் சமஷ்டி அரசியல்முறை,  சுயாட்சி ,  வடக்கு ,  கிழக்கு மாகாணங்களில் இணைந்த அவ்விருமாகாணங்களும் தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடம் ,  பாரம்பரிய தமிழர் தாயகம் ,  உள்ளக சுயநிர்ணயம் ,  தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்ற கோட்பாடுகள் இன்று உரக்கப் பேசப்படுகின்றன. (மேலும்....)

ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில் சேவை

ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம்பெற்று வருகின்றன.  ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையான ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் நிறைவு பெற்று கடந்த மாதம் 14 ஆம் திகதி கிளிநொச்சி வரை ரயில் சேவை விரிவாக்கப்பட்டது. இதன் பின்னர் ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரையான ரயில் பாதை புனரமைப்பு  நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து பரீட்சார்த்தமான ரயில் சேவை கிளிநொச்சியிலிருந்து ஆனையிறவு வரை நீடிக்கப்பட்டுள்ளது. பளை வரையான ரயில் பாதைப் புனரமைப்புப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு மாதகாலத்துக்குள் அந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 

மீண்டும் மீண்டும்

சத்தியப்பிரமாணம் செய்யும் விக்னேஸ்வரன்

வட மாகாண சபையின் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிலையிர் வட மாகாண சபையில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அமைச்சு பொறுப்புக்களுக்கே சி.வி விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். காணி மற்றும் வீதி அபிவிருத்தி, சட்டம் ஒழுங்கு, வட மாகாண நீர் மற்றும் உணவு விநியோகம், புனர்வாழ்வு, உள்ளுராட்சி, நிதி திட்டமிடல், மின்சாரம் உள்ளிட்ட 16 அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வடக்கில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிப்பு

யுத்தம் காரணமாக வடக்கில் காணாமல் போனவர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான உண்மைத் தகவல்களை பதிவுசெய்து அவற்றை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கையொன்றை மன்னார் பிரஜைகள் குழு முன்னெடுத்து வருகின்றது. இக்குழுவானது, வடக்கின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் சென்று இத்தகவல்களைத் திரட்டி வருகின்றது. 1990ஆம் ஆண்டு முதல் இடைக்கிடையே இடம்பெற்ற யுத்தம் மற்றும் 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆரம்பமான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களைத் திரட்டும் நடவடிக்கை கடந்த 14ஆம் திகதி ஆரம்பமானது. இந்நடவடிக்கை நாளை 18ஆம் திகதியுடன் நிறைவுபெறவுள்ளது. இதற்கமைய, 'கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் 15ஆம் திகதி கிளிநொச்சியிலும், 16ஆம் திகதி முல்லைத்தீவிலும் இந்த தகவல் திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இன்று 17ஆம் திகதி வவுனியாவிலும் நாளை மன்னாரிலும் முன்னெடுக்கப்படவுள்ளது' என்று மேற்படி மன்னார் பிரஜைகள் குழுவின் பிரதித் தலைவர் சகாயநாயகம் தெரிவித்தார்.  'யுத்தம் காரணமாக வடக்கிலிருந்து காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை திரட்டியுள்ள தகவல்களுக்கும் தமது குழு திரட்டியுள்ள தகவல்களுக்கும் இடையில் பாரியளவில் வேறுபாடு காணப்படுகின்றது. பிரஜைகள் குழு திரட்டிய தகவல்கள் அதிகமாகக் காணப்படுகின்றது. இவ்வாறு திரட்டப்படும் தகவல்கள் அறிக்கையாகத் தயாரிக்கப்பட்டு கொழும்பிலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படும்' என்று மன்னார் பிரஜைகள் குழுவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

எல். ரி. ரி. ஈக்கு ஏவுகணை வாங்க திட்டம் தீட்டிய கனடிய பிரஜை கைது

இலங்கையில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்திற்கு விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடிய ஏவுகணை களை வாங்குவதற்கு திட்டமிட் டாரென்ற குற்றச்சாட்டினை டொரன்டோவில் வாழும் கனேடியப் பிரஜையான (37 வயது) பிரதீபன் நடராஜா, நியூயோர்க் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் இந்த சந்தேக நபர் தான் குற்றவாளி என்பதை எல்.ரி.ரி.ஈ யின் ஆயுத விநியோகத்தர் என்ற முறையில் செய்து இரண்டு குற்றங்களை ஏற்றுக் கொண்டதையடுத்து, அமெரிக்க மாவட்ட நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பு வழங்குவதை அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை ஒத்தி வைத்துள்ளது. எல்.ரி.ரி.ஈ க்கு ஆயுதங்களை விற்பனை செய்ய எத்தனித்த சதி முயற்சி தொடர்பாக ஏற்கனவே மூன்று கனேடிய பிரஜைகள் மீது 3 வருட குறைந்தபட்ச சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இவர்கள் நியூயோர்க்கில் லோங் ஐலன்ட் பகுதியில் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான ஏவுகணைகளை வாங்க எத்தனித்த போது கைது செய்யப்பட்டனர். இலங்கையில் இருந்த எல்.ரி.ரி.ஈ யின் சிரேஷ்ட தலைவர்களின் பணிப்புரைக்கு அமையவே நடராஜாவும் அவரது உதவியாளர்களும் கிபீர் விமானங்களை சுட்டு வீழ்த்தக்கூடிய ஏவுகணைகளை வாங்க முயற்சித்தனர். நடராஜா 2006ம் ஆண்டில் கைது செய் யப்பட்டார். வட அமெரிக்காவில் உள்ள அவரது உதவியாளர்கள் விசாரணை செய்யப்பட்டதை அடுத்தே இவர் பிடிபட்டார். கனடாவில் வாழும் பெரும்பாலான தமிழர்கள் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் ஆவர். இவர்கள் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வாங்குவதற்கு நிதி உதவி செய்து வந்தார்கள். நடா என்று அழைக்கப்படும் இவர் ஒரு தொழில்நுட்ப நிபுணர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒக்ரோபர் 17, 2013

தம்பியின்

சத்தியப்பிரமாண நிகழ்வை சுரேஸ் எம்.பி புறக்கணிப்பு

'அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியல் உலகத்திலே'

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைச் சேர்ந்த வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் கலந்துகொள்ளவில்லை. ஈ.பி.ஆர்.எல்.எப் வடமாகாண உறுப்பினர்கள் மூன்று பேரும் இன்று புதன்கிழமை  வவுனியாவில், சட்டத்தரணி க.தயாபரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். மன்னார் மாவட்ட உறுப்பினர் மயில்வாகனம் தியாகராஜா, முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், கந்தையா சர்வேஸ்வரன் ஆகியோரே சத்தியப்பிரமாணம் மேற்கொண்டனர். ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கட்சித் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வவுனியாவில் தங்கியிருந்தபோதும், வவுனியாவில் நடைபெற்ற தனது கட்சி அங்;கத்தவர்களின் சத்தியப்பிரமாண நிகழ்விற்குச் செல்லவில்லை. இருந்தும் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை வட மாகாணசபைக்கு இதே கட்சியின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட வவுனியாவை சேர்ந்த ஐ. இந்திரராஜா இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை. தான் வட மாகாண முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு தீர்மானித்துள்ளமையினால் இன்றைய சத்தியப்பிரமாண நிகழ்வை புறக்கணித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனது இமாலய வெற்றி பறிக்கப்பட்டு விட்டது - அனந்தி

நடந்து முடிந்த வடமாகாண சபைத் தேர்தலில் இமாலய வெற்றியொன்றை நான் பெற்றிருக்கவேண்டிய நிலையில் சில ஊடகங்களின் செயற்பாட்டால் அந்த வெற்றி கிடைக்கவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று புதன்கிழமை தெரிவித்தார். யாழ்.ஊடக அமையத்தினால் உருவாக்கப்பட்ட தராகி சிவராம் ஞாபகார்த்த கேட்போர் கூடத்திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இமாலய வெற்றி எனக்கு கிடைக்காமை எனது வாழ்வில் விழுந்த பெரிய அடியாகும். இருந்தும் எனக்கு கிடைத்திருக்கும் இந்த வெற்றியும் ஊடகங்களினாலேயே கிடைக்கப்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார். வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அனந்தி சசிதரன் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்காக 87 ஆயிரத்து 870 வாக்குகள் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 எல்லாக் கழுதைக்கும் பதவிதான் வேணுமாம்......

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து , ''மழை வருமா?'' எனக் கேட்டான்.'

'வராது'' என்றான் அமைச்சன்.

வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.

அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக்கொண்டிருந்த போது கடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.

திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து , ''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?'' எனக் கேட்டான்.

அவனோ,'' மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.'' என்றான்.

உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.

இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,'' அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்.

என்னவெனில் அது முதற்கொண்டு இன்று வரை எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன. 

உண்மைதானே நம்மூரிலும் பதவிக்காக அலையும் கழுதைகள் ஏராளம்.

வடமாகாண முதலமைச்சருக்கு புதுடில்லி அழைப்பு

அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு  வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் புதிய முதலமைச்சருக்கு இந்த அழைப்பை விடுத்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.  வடக்குக்கு விஜயம் செய்த குர்ஷித்துடன் மீனவர் பிரச்சினை பற்றி வடமாகாண முதலமைச்சர் பிரஸ்தாபித்ததாக சம்பந்தன் தெரிவித்திருந்தார். முதலமைச்சரும் இந்த பிரச்சினையை குர்ஷித்திடம் பேசியுள்ளர். ஏதோ ஒன்று நடைபெறமென நான் நினைக்கின்றேன் என சம்பந்தன் கூறினார். இந்நிலையில், வடமாகாண முதலமைச்சர் இந்தியாவுக்கு எப்போது செல்வாரென அறிவதற்கு அவருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை.

அமைச்சரவை கூட்டத்தில் முதலமைச்சர்களும் பங்கேற்பர்

அமைச்சரவை கூட்டத்திற்கு சகல மாகாணங்களின் முதலமைச்சர்களை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்திலேயே ஒன்பது மாகாணங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்கவிருக்கின்றனர். அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு முன்னர் முதலமைச்சர்கள் பங்கேற்ற போதிலும் சில காலங்களுக்கு முன்னர் அது நிறுத்தப்பட்டது. இம்மாதத்திற்கான இறுதி அமைச்சரவைக்கூட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும். இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் மாகாண முதலமைச்சர்கள் சகலரும் பங்கேற்பர் என்றும் அந்த தகவல்கள் தெரிவித்தன. வடமாகாண மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இணையம் மூலம் இலட்சக்கணக்கானோரின் விவரம் சேகரிப்பு

யாஹு, ஜீமெயில், பேஸ்புக், ஹொட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப் பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், இது குறித்து என்எஸ்ஏ அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “சாதாரண அமெரிக்கர்களின் விவரங்களை சேகரிப்பது எங்கள் நோக்கம் இல்லை. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை மட்டும்தான் நாங்கள் கண்காணிக்கிறோம். குறிப்பிட்ட முகவரிகளை மட்டுமே நாங்கள் கையகப்படுத்தி தகவல்களை சேகரித்து வருகின்றோம்” என்று தெரிவித்தார். யாஹு, ஜீமெயில், பேஸ்புக், ஹொட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை கொண்டு லட்சக்கணக்கான அமெரிக்க மக்களின் விவரங்களை என்எஸ்ஏ சேகரித்து வைத்துள்ளது. இதுபோல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க உளவுப் பிரிவுகளின் செயல்பாடுகளை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டிய ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் இது குறித்து தெரிய வந்துள்ளது. அவ்வாறு சேகரித்த மக்களின் விவரங்களை கொண்டு சர்வதேச அளவில் ஏதேனும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை என்எஸ்ஏ அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. கடந்த ஆண்டு 4,40, 000 க்கும் அதிகமான இ.மெயில் தொடர்புகளை என்எஸ்ஏ சேகரித்துள்ளது. இதுபோன்ற செயற்பாடுகளை பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்புடன் என்எஸ்ஏ செய்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது பிள்ளைகள் இழைக்கும் பாவச் செயல்

எல்லோரும் சிறுவராக நீண்ட காலம் இருக்க முடியாது. அவர்களும் முதிய நிலையை அடையும் போது முதியவர்கள் ஆகின்றனர். இது இயற்கை. பனை மரத்தில் இருந்து காவோலை விழ குருத்தோலை சிரிக்கிறது என்பார்கள். அதன் அர்த்தம் என்ன தெரியுமா? காய்ந்த ஓலை தனது பருவம் முடிந்ததும் மரத்தில் இருந்து கீழே விழும். அதனைப் பார்த்த குருத்து ஓலையின் நினைப்பு வியப்பானது. எப்போதும் அப்படியே மரத்தில் இருப்பேன் என்ற நினைப்பு அதற்கு. தானும் ஒருநாள் இதே ஓலைபோல் காய்ந்தவுடன் மரத்தில் இருந்து கீழே விழுவேன் என்று அதற்கு அப்போது புரியாது. இப்படித்தான் சில மனிதர்களும் இருக்கிறார்கள். (மேலும்....)

ஒக்ரோபர் 16, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!

இலங்கையில் மாத்திரமல்லாது சர்வதேச சமூகத்தின் பாரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வடக்கு மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. வடக்கில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்த தமிழர்களுக்கு சரியான சந்தர்ப்பமும் அமைந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் அந்த சந்தர்ப்பத்தை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டதுடன் தமது எண்ணப்பாட்டை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டினர். ஆனால் கூட்டமைப்புக்கு வாக்களித்ததன் மூலம் தமிழ் மக்கள் எதனை எதிர்பார்த்தார்களோ அதற்கு மாறான செயற்பாடுகளே தற்போது இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. வடக்கு மாகாண சபையின் கன்னியமர்வுக்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. (மேலும்....)

தமிழர்களின் உணர்வை மதித்தே இறுதி முடிவு எடுக்கப்படும் -  மன்மோகன்சிங்

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்கும் விவகாரத்தில், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளார். இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வரும் நிலையில் இந்த மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

சம்பூர் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தவும்

சம்பூர் பகுதியில் அனல் மின்நிலையம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ள உயர்நீதிமன்றம், அந்தப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியமர்த்துவதற்கு துரிதமான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரசாங்கத்துக்கு பணித்துள்ளது. 2006ஆம் ஆண்டில் இடம்பெயர்ந்த தம்மை தமது இருப்பிடங்களில் மீளக்குடியமர நடவடிக்கை எடுக்குமாறு கோரி சம்பூர்வாசிகள் சிலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்தபோதே இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. சம்பூர் மக்களில் பெரும்பாலானோர் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும், மிகச்சிலரே இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் கூறிய அரச தரப்புச் சட்டத்தரணி, அவர்களையும் மீளக் குடியமர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதற்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகவும் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால், அதனை நிராகரித்த மனுதாரர் தரப்புச் சட்டத்தரணி, சுமார் 200 குடும்பங்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை என்றும் அதற்கான இடங்கள் அடையாளங்காணப்படவில்லை என்றும் கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் மக்களை குடியமர்த்துவதற்கான இடங்களை அவர்களுக்கு அடையாளம் காட்ட உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.(பிபிசி)

சுவிஸ்  நாட்டில்  உதயம் விழா 24.11.2013

2004.12.26  ஆண்டு பேரழிவுதனை ஏற்படுத்திய சுனாமி பேரலை நமது நாட்டில் இலங்கையிலும்  ஆயிரக்கணக்கான மக்கள் உறவுகளின்றி  ஆதரவின்றி  துன்பதனை அனுபவித்துதை நாம் அறிவோம் அவரகளின் துயரங்களை  தங்களால் முடிந்தளவு  தீர்ப்பதெற்கென சுவிஸ்  நாட்டில்   வசிக்கும் இலங்கைவாழ் கிழக்குமாகாண மக்கள் உதயம்  அமைப்பினை உருவாக்கினர்  ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சி ஒன்றை நடாத்தி மக்கள் மனமுகர்ந்து தரும் உதவிகளை கொண்டு  நாட்டில் அனாதரவாக்கப்பட்ட நாம் உறவுகளுக்கு உதவிவருவது  வழமையானதொன்றாகும் இதேபோன்று இவ்வருடமும் உறவுகளுக்கு உதவும் கரங்கள் நிகழ்ச்சி தனை 24.11.2013 அன்று சிறப்பாக நடாத்தவுள்ளனர் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றோம் அதேவேளை இவ்சிறப்பு நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம்  உதயம் அமைப்பினர் அன்புடன் அழைக்கின்றனர்

இவ்வண்ணம்

உதயம் அமைப்பினர் 

சார்ள்ஸ் 14 ஆம் திகதி வருகைதருவார்

கொழும்பில் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கின்ற பொதுநலவாய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இளவரசர் சார்ள்ஸ் மற்றும் கமிலா ஆகியோர் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளனர் என்று வெளிநாட்டு ஊடகங்கள் இன்று அறிவித்தன. இவர்கள் அடுத்த மாதம் இலங்கை வரமுன்னர் இந்தியாவில் 9 நாட்கள் தங்கியிருப்பர். மகாராணியின் சார்பில் மாநாட்டில் கலந்து கொள்ளும் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டுக்கு புறம்பான நிகழ்வுகளிலும் தனது மனைவி காமிலா சகிதம் பங்குபற்றுவார். இவற்றில் மனநோய் வைத்தியசாலை, பொது வைத்தியசாலை தேயிலை தோட்டம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்தலும் அடங்குகின்றது. இளவரசர் சார்ள்ஸ் 1998இல் 2005இல் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். காமிலாவுக்கு இது இலங்கைக்கான முதலாவது விஜயமாகும்.

ஆஸியிலிருந்து மேலும் 33 பேர் திரும்பியனுப்பப்பட்டனர்

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றவர்களில் மேலும் 33 பேர் நாடுதிரும்பியுள்ளனர். பண்டாரநாயக்க கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியுள்ளனர். அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானத்தின் மூலமாக பலத்த பாதுகாப்புடன் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். அந்த குழுவில் 8 பெண்களும் 25 ஆண்களும் இருந்துள்ளதுடன் சிறுவர்கள் எட்டுபேரும் இருந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள், திருகோணமலையிலிருந்து மீன்பிடி படகுகள் மூலமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என்றும் அங்கு அரசியல் அகதி அந்தஸ்து கிடைக்காததையடுத்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து நேற்றும் 40 பேர் திருப்பியனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல் மீது வழக்கு

தூத்துக்குடி இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க கப்பல் மற்றும் அதன் கெப்டன் உள்ளிட்ட 35 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் கடலோரக் காவல் படையின் தூத்துக்குடி பிரிவுக்குச் சொந்தமான ‘நாயகி தேவி’ என்ற ரோந்துக் கப்பலில் கடலோர காவல்படை வீரர்கள் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 30 கடல் மைல் தொலைவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். (மேலும்....)

ஒக்ரோபர் 15, 2013

முதலமைச்சராக விக்னேஸ்வரன்

இணங்கிச் செல்லும் அரசியல் மூலம் வெற்றி காணலின் முதற்படி

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியைப் பெற்றிருந்த போதிலும், முதலமைச்சர் பதவியேற்பு, அமைச்சர்கள் நியமனம் குறித்து முடிவுகளை எடுப்பதற்கு இரண்டு வாரகாலம் பிடித்திருந்தது. தமது வெற்றிக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விவகாரங்களில் நீடித்த இழுபறியும் சிக்கல்களும், வடக்கு மாகாணசபையை வெற்றிகரமாக கொண்டு நடத்துவதில் உள்ள சவால்களை வெளிப் படுத்தியுள்ளன. முதலமைச்சர் யார் முன்னிலையில் பதவியேற்பது என்ற விவகாரத்திலும், அமைச்சர்கள் நியமனம் குறித்தும் எழுந்த இழுபறிகள், வெற்றிக்குப் பிந்திய சூழலை, கவலைக்குரிய விவகாரமாக்கியிருந்தது. எனினும் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தமையை பாராட்டவே வேண்டும். (மேலும்....)

கூட்டமைப்புக்குள் இன்னும் இழுபறி நிலை

சிவாஜிலிங்கம், இரு புளொட் உறுப்பினர்கள் ஜே.பி. முன்னிலையில் சத்தியப்பிரமாணம், சுரேஷ் அணியினர் இன்னும் முடிவு செய்யவில்லை

தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் வட மாகாண சபை உறுப்பி னர்கள் 9 பேரினது சத்தியப் பிரமாணம் தொடர்பில் கூட்டமை ப்பின் கட்சிகளிடையே நிலையான முடிவொன்று எட்டப்படாத நிலையில் நேற்று மேலும் மூன்று பேர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். எம். கே. சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க் காலில் சமாதான நீதவான் ஒருவர் முன்னி லையிலும் புளொட் உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோர் யாழ். கந்தரோடையில் அக்கட்சியின் செயலாளர் சமாதான நீதவான் சு. சதானந்தம் முன்னிலையிலும் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். சுரேஷ் அணியினர் இன்னும் சத்தியப் பிரமாணம் எடுக்கவில்லை. (மேலும்....)

ஆசிய நாடுகள் ஒன்றிணைந்தால் ஏகாதிபத்தியவாதிகளை பின்னடைய செய்யலாம் -  வாசுதேவ நாணயக்கார

ஆசிய நாடுகள் ஒன்றிணைந்தால் ஏகாதிபத்தியவாதிகளை பின்னடையச் செய்யலாம். நாடுகளுக்குள் உள்நாட்டுக் குழப்பங்களை ஏற்படுத்துகின்ற ஏகாதிபத்திய வாதிகளுக்கெதிராக ஆசிய நாடுகள் ஒன்றுபட வேண்டும், என தேசிய மொழிகள் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். மாத்தறையில் அமைந்துள்ள கூட்டுறவு மத்திய நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் ஒன்று கூடல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அமைச்சர் உரையாற்றும் போது, எமது நாட்டில் இருந்த சில முன்னாள் தலைவர்கள் நவீன ஏகாதிபத்தியவாதிகளுக்கு கதவுகளை திறந்து கொடுத்தனர். அதனால் எமது நாட்டு மக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதன் மூலம் மக்களுக்கு சிறந்த சலுகைகள், உரிமைகள் அதிகமானவை இல்லாது சென்றன. அரச சொத்துக்கள், வளங்கள் மிகவும் மலிவான விலையில் விற்கப்பட்டன. மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டதே மஹிந்த சிந்தனையாகும். தேசிய சுதந்திரத்தை நோக்கி, ஏகாதிபத்திய வாதிகளின் சவால்களை முறியடித்தமை மிகப் பெரிய பணியாகும். என்றாலும் எமக்கு இன்னும் கிடைக்க வேண்டிய சலுகைகள் உள்ளன. அதற்கு பல்வேறு நாடுகள், சர்வதேச அமைப்புகள் தடையாக உள்ளன. தேசிய சிந்தனையை உருவாக்குவது மஹிந்த சிந்தனை மாத்திரமே என்றார்.

முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை

முல்லைத்தீவு, கொக்குளாய் பிரதேசத்தில் அத்துமீறி குடியமர்ந்து கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வடமாகாண துணை அவைத் தலைவரும் பொறுப்பு நிலை அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அப்பகுதிக்குச் சென்ற வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து,கைத்தொழில், வர்த்தகம், வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபையின் துணை அவைத் தலைவரும் புனர்வாழ்வு, இன நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பு நிலை அமைச்சருமான அன்ரனி ஜெயநாதன் ஆகியோர் இது தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். குறிப்பாக 1984 ஆண்டுக்கு முன்னர் 32 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 350 தென்னிலங்கை மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அத்துடன் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளைப் பயன்படுத்தி தொழில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால் கடல்வளம் அழியும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையைக் கருத்திற்கொண்டு இனிவரும் காலத்தில் இவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தல், பதிவு செய்யப்படாத தொழிலாளர்களை வெளியேற்றுதல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஒக்ரோபர் 14, 2013

என் மனவலையிலிருந்து.....

அவன் நினைத்தானா இது நடக்கும் என்று

(சாகரன்)

சுரேஷ் இற்கும். சம்மந்தனுக்கும் ஓரேவகையான பிரச்சனைகளே உள்ளன. அவரும் சேனாதியைத் வடமாகாண முதலமைச்சராகாமல் தவிர்த்தது தனது முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதற்காகக்தான். சேனாதிராசா தமிழரசுக்கட்சியின் தலைவர், முதல்அமைச்சர் என்ற இரண்டையும் தன்னகத்தே கொண்டிருந்தால் சந்திக்க வரும் பிரமுமகர்கள் சேனாதியுடன் தமது சந்திப்பை குறுக்கிவிடுவர். இதனால் தனது முக்கியத்துவம் குறைந்துவிடும். இதைபோலவே சுரேஷ் உம் ஐங்கரநேசனின் அமைச்சர் பதவியை விரும்பாததற்கு காரணம் தனது முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதனால்தான். மற்றயபடி முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பது, அவ் அமைச்சரை தனது டம்மியாக செயற்படுத்துவதன் மூலம் தன்னை முதன்மைப்படுத்தலாம் என்பதே ஆகும். 1987 களில் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாண சபை அமைந்தபோது சுரேஷ் இற்குள் ஆரம்பமான 'ஈகோ' பிரச்சனை இன்றுவரை தீரவில்லை என்பது பரிதாபம். அன்றும் முதல் அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்தவருக்கு அது அவரைவிட பலமடங்கு தகுதியும். திறமையும் மிக்க வரதராஜப்பெருமாளிடம் சென்றதில் இருந்து ஆரம்பமானது இது. இதன் தொடர்ச்சியாக யாழில் இருந்து வவுனியாவிற்கு பாராளுமன்றத் தேர்தலில் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமைய முன்பு) மாறி நின்றது வரை தன்னை முன்னிலைப்படுத்துதல் என்பதிலேயே அவரின் செயற்பாடுகள் இருந்து வருகின்றது. இதில் சுரேஷ் இற்கு அண்மைய வட மாகாண முதல் அமைச்சர் வேட்பாளராக சேனாதியை தன்னைத் தவிர்த்து நிறுத்தக் கூடாது என்பதில் விக்னேஸ்வரனை ஆதரித்தது வரைக்கும் வெற்றிகள் போன்று தோற்றம் அளித்தது. தனது தம்பியையும், புலிகளின் முக்கிய செயற்பாட்டாளரும், தனது பால்ய நெருங்கிய நண்பனையும் முக்கிய வேட்பாளராக களம் இறக்கியது வரையும் தான் என்ற முதன்மைப்படுத்தும் விருப்பத்தின் செயற்பாடுகள் எல்லாம் தனது தனிநபரின் கட்டுக்குள் எல்லாம் இருக்கவேண்டும் என்ற தனிநபர் மேலாதிக்க செயற்பாடுகள்தான். இது ஒரு வகையில் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் சம்மந்தனின் ஏதேச்சகார முடிவுகளை எடுத்தல் என்ற செயற்பாடுகளுக்கு ஒத்ததே ஆகும். மறுபுறத்தில் ஐங்கரநேசன் என்ற நபர், கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாகவும், செத்த வீட்டில் சவமாகவும் இருந்து பிரபல்யம் தேட விரும்பும் நபர். 1970 களின் நடுப்பகுதிகளில் 10 வகுப்பிற்கு மேல் தனது கல்வியை தொடரமுடியாமல் 'ஐங்கரநேசன்' என்ற பெயரில் மட்டும் போஸ்ரல் அடித்து கந்தர்மடத்தில் ரியூட்டறி நடத்தியபோதிலிருந்தே சுயவிளம்பர விரும்பியாக இருக்கும் அவரிடம் 'நண்பேண்டா.... கவுத்துட்டான்...' என்று சுரேஷ் கவிழ்ந்து போனதுதான் அந்தோ பரிதாபம். வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்து சுரேஷ் தலைமையில் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டபோது நண்பன் ஐங்கரநேசன் புலியுடன் 'நல்ல?' தொடர்பில் இருந்தும் இருவரும் நாடகம் ஆடி ஐங்கரநேசனைக் கடத்துவதுபோல் கடத்தி இருவரும் தமது நட்பை கொண்டாடியதும் இவர்களுடன் நெருங்கிய உறவாடியவர்களின் சத்தியக் கூற்று. சுரேஷ் இன் புலிகளுடனான உறவுகளுக்கு பிற்காலதில் இவரையும் பயன்படுத்திக் கொணடதுவரை இந்த நண்பேண்டா நீண்டது. ஆனால் ஐங்கரநேசனுக்குள் இருக்கும் அதீத சுயவிளம்பர ஆசைகளும் தான்தான் எல்லாம் என்ற சுரேஷ் இன் ஏதாச்சாகார போக்கும், தனது நாற்காலிப் பதவிகளும், இதற்காக தனது சக தோழர்களை புலிகளிடம் காட்டிக்கொடுத்து பலியிட்டதுவரை எல்லாம் நடைபெற்றாலும் இன்று ஐங்கரநேசனிடம் தோற்று நிற்பது இருவரதும் 'நட்பை....?' எடுத்தியம்பியா? நிற்கின்றது. நட்பிற்குள் இருவரும் பல்வேறுகாலகட்டங்களில் துரோகம் செய்திருக்கின்றனர் என்பது இருவருக்கும் தெரிந்த விடயம். ஐங்கரநேசன் இதில் அடிவாங்கிய 'யானைப்புலி' இன்று மிதித்துவிட்டது சுரேஷை என்பதுவும் உண்மை. இதனைத்தான் '......நின்று கொல்லும்' என்பார்களோ. ஆனால் சுரேஷ் இற்கும் எவ்வளவுதான் சம்மந்தர் கோஷ்டி அடித்தாலும் வடிவேலுபாணியில் அடிக்க அடிக்க அடிவாங்கிவிட்டும் '...ரொம்ப நல்லவன் என்று சொல்லீட்டாங்கள் இதனால் வலிக்குது என்ற கூறவில்லை...... என்றுதான் தனது பதவிப் பயணங்களைத் தொடருவார். இதில் ஈபிஆர்எல்எவ் வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தமக்கு கிடைத்த வாய்ப்புகளை ஒரே மாதிரியாகத்தான் வீணாக்கி வருகின்றனர், வந்திருக்கின்றனர் என்பதே உண்மை நிலையாகும். பத்தமநாபாவின் மரணமும் அதன் பின்னரான கால கட்டங்களில் எற்பட்ட அரசியல் சதுரங்கங்களை சற்று ஆழமாகபார்த்தால் இது புரியும்.

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு பலத்தை வெளிக்காட்ட வேண்டும் - சம்மந்தன்

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வன்முறைகள் மூலம் அடக்கப்படுவதற்கு எதிராக ஒற்றுமையோடு எங்கள் பலத்தை வெளிக்காட்ட வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்துள்ளார். யாழில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளை நேற்று சனிக்கிழமை (12) சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,"யுத்தம் முடிந்த பின்னரும் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குரிய எண்ணம் அரசாங்கத்திடம் இருக்கவில்லை. ஏனெனில், வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் அவர்களுக்கு கிடைக்காது என்று தெரிந்திருந்தமையால் ஆகும்.இருந்தும் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை பல சர்வதேச நாடுகளின் அழுத்தங்களினால் நடத்தி முடித்திருக்கின்றது. சர்வதேச நாடுகளின் கண்காணிப்பின் கீழ் நடந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள வெற்றியினை கொண்டு அனைத்து இனங்களையும் சமமாக மதித்து, மக்களுக்கு நீதி வழங்கவும் பாதுகாப்பு கிடைக்கவும் ஏற்ற வழிமுறைகளை புதிய மாகாண சபை உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும். 1990ஆம் ஆண்டு வட பகுதியிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டது ஒரு கசப்பான அனுபவம். இனிமேலும் இவ்வாறான வன்முறைச் சம்பவம் நடைபெறமாட்டாது. அன்று தொடக்கம் இன்று வரை வட பகுதியில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை யாரும் மறந்து விடமுடியாது.

புளொட் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம், முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் சத்தியப்பிரமாணம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் இன்று திங்கட்கிழமை சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். புளொட் அமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தனன் மற்றும் , தாமோதரம்பிள்ளை லிங்கநாதன் ஆகியோர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். யாழ். வட்டுக்கோட்டை பிரதேசத்தில் புளொட் அமைப்பின் செயலாளர் சுப்பிரமணியம் சதானந்தம் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை புளொட் உறுப்பினர்கள் இருவர் உட்பட ஒன்பது வட மாகாண சபை உறுப்பினர் புறக்கணித்திருந்தனர். இந்த நிலையிலேயே புளொட் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள் இன்று சத்தியபிரமாணம் செய்துகொண்டனர். இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ரொலோ சார்பாக வட மாகாண சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தலிபான்களுக்கு தண்ணி காட்டும் மலலா! யார்?

பாகிஸ்தானில் தலிபான்களின் கட்டுபாட்டில் அடிக்கடி வந்து போக கூடிய பகுதிதான் ஸ்வாட் பள்ளத்தாக்கு! அந்த பகுதியில், உரிமைகள் மறுக்கபடுவது சர்வசாதாரணம். அதிலும் பெண்கள் நிலை கேவலம் என்றே, சொல்லலாம். இதை எப்படியும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்று விரும்பியது, உலகில் அதிகம் பேரால் கேட்கப்படும் ஒரு வானொலி! அங்கிருந்து கொண்டே, யாராவது தங்களை வெளிபடுத்தி கொள்ளாது தங்கள் நிலையை வெளியிட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். (மேலும்....)

4 1/2 தசாப்த காலத்துக்குப் பின்னர் கட்டுநாயக்க அதி நவீன பாதை

இலங்கையின் வர்த்தக நகரமான கொழும்புக்கும் பண்டாரநாயக்க விமான நிலையத்துக்கும் இடையே இலகு பயணத்தைக் குறைந்த நேரத்தில் மேற்கொள்ளக் கூடிய கடுகதிப் பாதையொன்றை அமைக்க வேண்டும் என்ற கனவும் எதிர்பார்ப்பும் நீண்டகாலமாக இருந்து வந்த ஒன்று. திடமற்ற அரசியல் போக்கும் வளக்குறைபாடுகளும் பாதை அமைப்பைப் பிற்போட வைத்தன. பாதை அமைப்புக்குத் தேவையான காணிகளை எடுக்கும்போது பாதிக்கப்படும் தனியாருடைய எதிர்பார்ப்புக்களும் பொருளாதார ரீதியான சிக்கல்களும் சூழல் சார்ந்த காரணிகளும் கூட பாதை அமைப்புக்குத் தடையாக அமைந்தன. எனினும் 45 ஆண்டுகளின் பின்னர் இலங்கையரின் கனவு நனவாகியுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தை இணைக்கும் நவீன பாதை அமைக்கப்பட்டு விட்டது. (மேலும்....)

அமெரிக்க பொருளாதாரம் முடங்கும் அபாயம்

கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட் டாலும், நிதிச் செலவினங்களுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டாலும் அமெரிக்காவின் பொருளாதாரம் முடங்கும் நிலை ஏற்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் தொடர்ந்து 13வது நாளாக அரசு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டு மக்களுக்கு ஒபாமா ஆற்றிய உரையில் “இந்த நிலைமையைக் கண்டு நீங்கள் அனைவரும் வருத்தம் அடைந்திருப்பீர்கள். சாதாரண நிலையில் நாடு இல்லை. 17 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க அரசு முடங்கியுள்ளது. இது அனைவரையும் பாதிக்கும். இதற்கு குடியரசுக் கட்சியினர் தான் காரணம். அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை. இந்த நிலை நீடித்தால் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் பாதிப்பு ஏற்படும். வர்த்தகம் தடைப்படும். வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும். பணியில் உள்ளவர்களுக்கு சம்பளம் கிடைக்காது. அவர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களைச் செலுத்த முடியாது. இதனால் அரசு செலுத்த முடியாமல், கடன் பாக்கி வைத்திருப்போர் பட்டியலில் அமெரிக்கா, இடம் பெறும். இதன் மூலம் நாட்டின் நம்பகத்தன்மை குலைந்துவிடும்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் மோதல்: 44 போராளிகள் பலி

சிரியாவின் அலப்போ நகரில் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் சுமார் 44 போராளிகள் கொல்லப்பட்டனர். அல் கொய்தா அமைப்புடன் தொடர்புபட்ட ஈராக் இஸ்லாமிய தேசம் மற்றும் அரபு மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற சுயாதீன சிரிய படைக்கு இடையில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான மோதல் மூன்று தினங்கள் நீடித்ததாக சிரியா தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இந்த இரு கிளர்ச்சிக் குழுக்களும் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசை வீழ்த்த போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதில் சிரிய சுயாதீனப் படையின் குறைந்தது. 30 பேராளிகளும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையின் 14 பேரும் இந்த மோதலில் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர் ரமி அப்தல் ரஹ்மான் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். நகரின் பல பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டதாக ரஹ்மான் விபரித்தார்.

தனி தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் முடிவு

தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 72 நாட்களாக தொடர்ந்த போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, மாநிலம் முழுவதும் இயல்பு நிலை திரும்பியது. வழக்கம் போல் பஸ்கள் ஓடியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு, மின் வாரியம், அரசு ஆசிரியர் சங்கம், தலைமைச் செயலக சீமாந்திரா ஊழியர்கள் சங்கம், சீமாந்திரா அரசு அதிகாரி சங்கம் மற்றும் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினர், 72 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் முதல் வழக்கம்போல் அரசு பஸ்கள் ஓடின. இதனால் சீமாந்திராவில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. மேலும், திருமலை, திருப்பதிக்கு வரும் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அரசு பஸ் ஊழியர் கூட்டமைப்பினர் கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் பி. சத்தியநாராயணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சீமாந்திரா பகுதிகளில் வெள்ளியன்று நள்ளிரவு முதலே அரசு பஸ் போக்குவரத்துத் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை முதல் வழக்கம்போல் அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

தூத்துக்குடி நடுக்கடலில் சிக்கிய மர்ம கப்பல்

கப்பலில் இருந்தவர்கள் எங்கே? ஆயுதங்கள் இருந்ததா?

இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தமிழக கடல் பகுதியில் 'அபிநவ்' ரோந்து கப்பலில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஒரு பெரிய கப்பல் கேட்பாரற்று நின்றது. இதனைப் பார்த்த கடலோர காவல்படையினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் ஒலிவாங்கி மூலம் பேசி யார் இருக்கிaர்கள்? என்று கேட்டனர். ஆனால் அந்த கப்பலில் இருந்து யாரும் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர் அந்த கப்பலை சுற்றி வளைத்தனர். பின்பு அந்த கப்பலுக்குள் அதிரடியாக சென்று பார்த்தனர். அப்போது அந்த கப்பலுக்குள் யாரும் இல்லை. ஏற்கனவே தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு உள்ளதால் தீவிரவாதிகள் யாரும் நுழைந்தார்களா? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் பொலிஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அந்த கப்பலில் ஏராளமான ஆயுதங்கள் இருப்பதாகவும் அந்த ஆயுதங்களை யாரோ மர்மநபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆயுதங்களுடன் மர்ம கப்பல் சிக்கியதாக பரவிய தகவல் குறித்து கடலோர காவல் படையினரும் கேட்டால் அதுபற்றி கூற மறுக்கிறார்கள். மேலும் நடுக்கடலில் சிக்கிய அந்த கப்பலை கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள மொரிசியஸ்

மொரிசியஸ் ஆபிரிக்க கண்டத்திற்கு தென் கிழக்கு கடலோரப் பகுதியில் இருக்கும் ஒரு தீவு நாடு. இது மடகஸ்கர் தீவுக்கு 900 கி.மீ.கிழக்கே அமைந்துள்ளது. மொரியஸ் குடியரசு கர்காடசு கராஜொஸ், ரொட்ரிகசு, அகலேகா தீவுகள் ஆகிய தீவுகளையும் கொண்டது. மொரிசியஸ் தீவு மசுகரீன் தீவுகளின் ஒரு பகுதியாகும். இத்தீவுக் கூட்டத்தில் மொரிசியசுக்குத் தென்மேற்கே 200 கி.மீ. தூரத்தில் பிரெஞ்சுத் தீவான ரியூனியனும், வடகிழக்கே 570 கி.மீ. தூரத்தில் ரொட்ரிகசும் உள்ளன. நெப்போலியப் போர்களின் போது பிரித்தானியர் இதன் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். 1968 ல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. இது ஒரு பாராளுமன்றக் குடியரசாகும். மேலும் ஆபிரிக்க ஒன்றியம், பொதுநலவாய நாடுகள், தெற்கு ஆபிரிக்க அபிவிருத்திச் சமூகம் போன்றவற்றின் அங்கத்தவராகவும் உள்ளது. (மேலும்....)

ஒக்ரோபர் 13, 2013

முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தம்

முல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வட மாகாண சபையின் ஒன்பது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒன்பது வட மாகாண சபை உறுப்பினர்கள் பகிஷ்கரித்தனர். இவர்கள் நாளை திங்கட்கிழமை முள்ளிவாய்காலில் சத்தியப்பிரமாண செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதகுருவொருவரின் தலையிட்டினை அடுத்து சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார். தன்னிச்சையாக செயற்பட வேண்டாம் எனவும் புறக்கணித்த கட்சிகளிடம் குறித்த மதகுரு வேண்டிக்கொண்டுள்ளார். இந்த ஒன்பது உறுப்பினர்களும் வட மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது முதலமைச்சர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆரம்பத்திலிருந்து ‘குரைப்பு’ சுரேஷ் அணியினரிடம் குறைந்தததை வாசகர்கள் அறிவீர்கள். இன்று வாலைச் சுரட்டிக் கொண்டதிலிருந்து இவர்கள் யார் என்று மக்கள் தீர்மானிக்கட்டும்.

தமிழ் அரசு கட்சி, முன்னாள்ஆயுத போராட்ட இயக்கங்களை புறம்தள்ளுகிறதா?

(தோழர்ஸ்ரனிஸ்)

அறிவாளர்களும், மெத்த படித்தவர்களும், பணம் படைத்தவர்களும் எங்கே, எங்கே என தேடிப்பிடித்த வேட்பாளர்கள் இப்போ அங்கத்தவர்களாகவும், மந்திரிகளாகவும் ஆகிவிட்டார்கள் வடக்கு மாகாணத்தில். இந்த தெரிவில் பலருக்கு சங்கடங்கள் இருக்கத்தான் செய்கிறது. இருந்தும் அவர்கள் முதல்வரும் ஆகி, மந்திரியும் ஆகி, உறுப்பினர்களும் ஆகி சத்தியப்பிரமானமும் எடுத்துவிட்டார்கள். சத்தியபிரமாணத்துக்கு முன்னர் மாவீரர்களுக்கு மரியாதையும் செலுத்தியுள்ளார்கள் செலுத்தட்டும்.  மற்றய இயக்கங்களில் இருந்து இறந்தவர்களின் தியாகத்தை மதிக்கத் தெரியாதவாளாக அவர்கள் மாறியது வேதனையாக உள்ளது. (மேலும்....)

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் யாழ். மஸ்ஜித் முஹம்மதியாவிற்கு விஜயம்

வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் மஸ்ஜித் முஹம்மதியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டு விசேட தூஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார். இதையடுத்து அங்குள்ள முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார். இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மக்கள் அழிவுகளை சந்தித்தபோது வாய்மூடி மெளனம்

இப்போது காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டும்

இறுதி யுத்தத்திலும், கடந்த முப்பது வருடங்களாகவும் மக்கள் அழிவுகளைச் சந்தித்தபோது சிந்திக்காது வாய்மூடி மெளனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது காணியும் பொலிஸ¤ம் தேவை என்ற கூறுவது மிகவும் நகைப்புக்குரியது. இதனை மக்கள் மிகவும் ஆழமாக அறிந்து கொள்ளவேண்டும். தற்போதைய வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தணித்தால் அது அவர்கள் காணும் ஒரு பகல் கனவாகத்தான் இருக்கு முடியும். இதுவரைக்கும் மக்களை ஏமாற்றிப் பிழைத்தது போல்தான் இந்த அதிகாரங்கள் கிடைத்ததும் மக்களை மேலும் ஏமாற்றிப் பிழைப்பார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை. (மேலும்....)

உள்கட்சியின் முரண்பாடுகளால் சிதைந்துள்ள ஐ.தே.க

கடந்த வாரக்கடைசியில் ரணிலுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமும் மற்றும் அதன்விளைவாக ஏற்பட்ட வெட்டுக் குத்துக்களும் நான்கு வகையில் பெரிதான ஓர் அரசியல் உண்மையை நாட்டுக்குத் தெரியப்படுத்தியுள்ளது. வாக்குகளையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இழந்து இரத்தக் கசிவுக்கு ஆளாகியுள்ள ஐ.தே.க இப்போது உடன்பிறப்புக்களைக் கொல்ல நினைக்கும் அரசியல் முரண்பாடு காரணமாக இரத்தம் சிந்தும் நிலைக்கு ஆளாகியுள்ளது. அடுத்தது என்ன? ரணிலுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் மீது கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்வதா? எனும் கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. (மேலும்....)

ஆயுதப்போராட்டத்தை யாரும் கொச்சைப்படுத்த முடியாது - தயா மாஸ்டர்

தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த முடியாது என விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ரில்கோ விடுதியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் நாயகம் சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்ட  ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சியினர், ஆயுதக்குழுக்களை தமிழரசுக்கட்சி கொச்சைப்படுத்தி வருகின்றது என்று தெரிவித்தனர். இதன்போது குறுக்கிட்ட  தயா மாஸ்டர் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப்போராட்டம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை யாரும் கொச்சைப்படுத்த முடியாது  என்று அங்கத்துவக் கட்சி உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

முதலமைச்சரின் இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் ஊழல் நிறைந்தவர்கள் - சுரேஸ்

வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய இலக்கை நோக்கிப் பயணிப்பதில் மிக உறுதியாகவும், கவனமாகவும் இருப்போம் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் தலைவருமாகிய சுரேஸ் பிரமேச்சந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடுத்தகட்டப் போராட்டம் சர்வதேசத்தின் முன்னால் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சுப் பதவி கொடுப்பதாக இருந்தால் முல்லைத்தீவிற்கு கொடுங்கள் என என்னால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அந்த கோரிக்கையினை தமிழரசுக்கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. அதேசமயம், கூட்டமைப்பின் கூட்டமொன்றில் மாவை சேனாதிராஜா முல்லைத்தீவிற்கு ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தியதாகவும், அதற்கு ஏனையோர் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் சுமந்திரன் தடுத்தாகவும், மாவை சேனாதிராஜா என்னிடம் தெரிவித்திருந்தார். (மேலும்....)

தெரிவுக்குகுழு மூலம் ஒருதலைப்பட்சமான தீர்வினைத் திணிப்பதற்கு அரசாங்கம் முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் பங்குபற்றுதலின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் எட்டப்படும் எந்த முடிவுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை என்று தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ரி.ஹஸன் அலி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக அரசாங்கம் ஒரு தலைப்பட்சமான தீர்வினைத் திணிக்க முயற்சிக்கிறதென்றும், இவ்வாறான தீர்மானங்கள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உதவப் போவதில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கென தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் ஒத்த கருத்தைக் கொண்டவர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இவர்கள் ஊடாக தீர்வுகளைக் கண்டு அதனையே தேசியப் பிரச்சினையின் சிபார்சுகளாக முன்வைக்க அரசு முயற்சிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் முஸ்லிம் காங்கிரஸினதும் பங்குபற்றுதலின்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவினால் எட்டப்படும் எந்த முடிவுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக ஒருபோதும் அமையப் போவதில்லை. (மேலும்....)

வடக்கில் மல்யுத்தம் ஆரம்பம் வாக்களித்த மக்கள் கவலை

சண்டையில் கூட்டுக்கட்சிகள் ஆளுங்கட்சியின் அருமையை இன்று உணர்வதாக மக்கள் தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமைப்புக் கட்சிகளிடையே வட மாகாண சபைத் தேர்தல் அறிவிப்புடன் பனிப்போராக ஆரம்பித்த உட்கட்சி முரண்பாடுகள் அத்தேர்தலில் அக்கட்சி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுத் தமது முதலமைச்சர் மற்றும் மாகாண அமைச்சர்கள் தெரிவிற்கு முன்னதாகவே அம்முரண்பாடுகள் பாரிய புயலாக உருமாறியுள்ளமை குறித்து அக்கட்சிக்கு வாக்களித்த மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒற்றுமை வேண்டி வாக்களித்த மக்களுக்கு வாக்களித்த தமது விரலின் மை காய முன்னரேயே கூட்டமைப்பின் கூட்டுக் கட்சிகள் தமக்குள்ளே முட்டி மோதி அறிக்கை விட்டு சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதை வடபகுதி மக்கள் கவலையுடன் எதிர்கொண்டு வருவதாக கல்விமான்கள் தெரிவித்தனர். யுத்தம் நிறைவடைந்த கடந்த நான்கு வருட காலத்தில் வடக்கு, கிழக்கில் ஆளுங்கட்சியும் அதன் தலைமையும் மேற்கொண்டு வந்த அபிவிருத்திகளும், மக்கள் நலன் கருதிய செயற்பாடுகளினதும் அருமையைத் தாம் தேர்தல் நிறைவடைந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே உணர்ந்து கொண்டதாகவும் மக்கள் தெரிவித்தனர். தமிழ்க் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இந்தளவிற்குப் பதவி ஆசையும், மோகமும் கொண்டலைவார்கள் எனத் தாம் ஒருபோதும் நினைக்கவில்லை எனவும் அவர்களை நம்பி வாக்களித்த மக்கள் கவலையுடன் தெரிவித்தனர். தமக்கிடையே ஒரு சிறு விடயத்தில் ஒற்றுமையைக் காண முடியாத இத்தலைவர்கள் எவ்வாறு மக்களாகிய எமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போகிறார்கள் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

(எஸ். சுரேஷ்)

அரசுடன் இணைந்து காரியங்களை சாதிக்க ஆரம்பம் முதல் அழைப்பு விடுத்தவன் நான்

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஐயா அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பினை அடுத்து வட மாகாண முதல மைச்சராகத் தெரிவு செய் யப்பட்ட சீ.வி. விக்னேஸ் வரனை ஜனாதிபதி அவர்கள் முன்னிலையில் பதவிப் பிர மாணம் செய்ய வைத்தமை யானது பெரு வரவேற்பிற்குரிய விடயம். இதன் மூலமாக சம்பந்தன் அவர்கள் தமிழ் மக்களின் நல்லெண்ணத்தை அரசுக்கும், ஜனாதிபதிக்கும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் முன்பாக விக்னேஸ்வரன் பதவியேற்றது உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு கிடைத்த பெருமையும் கெளரவமுமாகும் என ஜனாதிபதியின் இந்துமத அலுவல்கள் விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார். சம்பந்தன் ஐயாவின் சாதுரியமான முடிவினால் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன் பதவி ஏற்றதன் காரணமாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அவர்களும் வட மாகாண தமிழ்க் கூட்டமைப்பின் ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்திருந்தனர். இந்த பதவி ஏற்பும் அவர்களின் அழைப்புக்கு நல்ல சமிக்ஞையாக அமைகின்றது. ஒரு இந்து மத குரு பாரம்பரியத்தில் வந்தவன் என்ற வகையில் இன, மத வேறுபாடுகளை மறந்து யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வசந்தமயமான வாழ்வை ஏற்படுத்திக்கொடுப்பது அடிப்படை விடயமாக ஊடகங்கள் வாயிலாக கடந்த காலங்களில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

மலையக மக்களின் தனித்துவமான அரசியல் அபிலாஷைகள்: வட மாகாண சபையில் விசேட குழு அமைக்கவும்

வடக்கு, கிழக்குப் பகுதி களில் வாழ்கின்ற மலையக மக்களின் தனித்துவமான அரசியல் அபிலாஷைகளைபாதுகாக்கவென வட மாகாண சபையில் விசேட குழு நியமிக்கப்பட வேண்டும் என மலையக சிவில் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் மலையக சிவில் அமைப்புக்கான அடையாளம் மற்றும் மலையக சமூக ஆய்வு மையம் என்பன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சித் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். தெற்கின் கெடுபிடிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மலையகத்தின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் கடந்த காலங்களில் வன்னி நோக்கி வந்து குடியேறி தமது இருப்பைப் பலப்படுத்திக் கொண்டனர். கிடைக்கப் பெற்ற இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன்று மலையக மக்களையும் பிரதிநிதிப்படுத்தும் வகையில் சூழற்சி அடிப்படையில் பதவி கொடுக்கப்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுத்திருக்கும் தீர்க்கமான முடிவினையும் மலையக சிவில் அமைப்புகள் என்ற ரீதியில் வரவேற்கின்றோம்.

தலைமையுடன் எம்.பி பதவியையும் விடுமாறு கோரியதால்

பதவி விலகுவதாக அறிவித்த செல்வம் பெட்டிப் பாம்பானார்

வட மாகாண சபையில் மன்னாருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து தனது கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகப் பயமுறுத்தி வந்த ரெலோ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சிக்குள்ளே கிளம்பிய பாரிய எதிர்ப்பலையால் தனது முடிவை மக்களது முடிவாக தனக்குச் சாதகமாக மாற்றிய மைத்துவிட்டு விட்ட சவால் தெரியாது பெட்டிப்பாம்பாக அடங்கிவிட்டார். கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதானால் விலகுங்கள் அதனுடன் சேர்த்து அக்கட்சி தந்த பாராளுமன்றப் பதவியையும் துறவுங்கள் எனக் கட்சியிலுள்ள பலரும் தெரிவித்தமையால் அவர் தனது சவாலிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டதாக அவரது கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். கூடவே ஆயரின் 'கட்டளை' யை உம் மதித்துதான் இந்த முடிவாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழு நாட் டிற்குமே தலைவர் - சம்பந்தன்

வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியின் முன் னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ள எடுக்கப்பட்ட முடிவு, நல்லிணக்கத்தை கொண்டு வருவதற்கான சரியான வழி என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முழு நாட் டிற்குமே தலைவர். அத்தகைய நாட்டின் தலைவரின் முன்னால் விக்னேஸ்வரன் பதவிப்பிரமாணம் செய்துகொள்வதன் மூலம் தம்மை தெரிவு செய்த மக்களுக்கான சேவைகளை மேற்கொள்ள முடியும் என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கத்துக்கும் இடையில் நல்லுறவை பேண முடியும் என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். மத்திய அரசுடன் மோதி மக்களுக்கு ஆற்ற வேண்டி பணிகளை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். தற்போது மாகாண சபையை நடத்துவதற்கு ஓர் அலுவலகக் கட்டடம் கூட இல்லை. இந்த உண்மை நிலையை உணர வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார். போருக்கு பிந்தைய சமூகத்தில் தமிழ் மக்களுக்கு உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பல தேவைகள் இருக்கும் நிலையில் அந்தத் தேவைகளை பூர்த்தி செய்ய ஒரு அரசியல் தீர்வு அவசியம், இதை அடைய இலங்கையின் மத்திய அரசுடன் ஒரு நல்லுறவும் அவசியம். எனவே தான் ஒரு நல்லெண்ண சமிக்ஞையாக சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதியிடம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பட்ட வலிகள் போதும், இனியாவது நடப்பவை நல்லதாக அமையட்டும்

வடமாகாண முதலமைச்சராக சி.வி. விக்னேஸ்வரன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டார். என்னுடைய பதவியின் செயல் பண்புகளையும் கடப்பாடுகளையும் நான் நேர்மையுடனும், நம்பிக்கையுடனும் இயற்றுவேன் என்றுதான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது சத்தியப்பிரமாணத்தின்போது ஜனாதிபதியின் முன்பாக உறுதியளித்துள்ளார். இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல. இது சத்தியப்பிரமாணம். அதிலும் நாட்டின் தலைவருக்கு முன்பாகச் செய்து கொண்ட சத்திய வாக்குறுதி. இதற்குக் கட்டுப்பட்டு நடத்தல் அவசியம். விக்னேஸ்வரன் ஒரு சட்ட மேதை, உயர் நீதிமன்ற நீதவானாக இருந்தவர். அவருக்கு இவை பற்றியோ சட்டம் பற்றியோ எவரும் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை. (மேலும்....)

ஒக்ரோபர் 12, 2013

வடமாகாண சபை உறுப்பினர்கள் பதவியேற்பு

சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் உட்பட ஒன்பது உறுப்பினர்கள் பகிஷ்கரிப்பு

சுய இலாபங்களுக்காக மக்களை கலவரத்துக்குள் தள்ள முடியாது - முதலமைச்சர் விக்னேஸ்வரன்

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கேனஸ்வரன் முன்னிலையில் சந்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். சத்தியப் பிரமாண நிகழ்வு நேற்று முன்பகல் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளிலிருந்து தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்பது உறுப்பினர்கள் நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியில் அங்கம் வகிக்கும் ஐந்து உறுப்பினர்களும் நேற்றைய இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் தர்மலிங்கம் சித்தார்த்ததனின் புளொட் உறுப்பினர்கள் இருவரும் செல்வம் அடைக்கலநாதனின் டெலோ கட்சியில் அங்கம் வகிக்கும் இரு உறுப்பினர்களும் நேற்று சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கவில்லை. (மேலும்....)

சிரியாவில் கிளர்ச்சியார்களின் தாக்குதலில் 190 பொதுமக்கள் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நடத்திய தாக்குதலொன்றின் போது சுமார் 190 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 200 பேரை பயணயக் கைதிகளாக பிடித்துவைத்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இக்கொலைகள் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் பிரிவைச் சேர்ந்தவர்கள் வாழும் கிராமங்களிலேயே அதிகம் இடம்பெற்றுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது. இக்கொலைகள் மனிதாபிமானத்திற்கு எதிரானதென அவ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. அவ் அமைப்பு இதற்கு முன்னர் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆதரவுப் படையினரின் வன்முறைகள் தொடர்பாக தகவல் வெளியிட்டிருந்தது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமெரிக்க அமைப்பென்பது குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன் கட்சியிலிருந்து நீக்கம் - ஈ.பி.ஆர்.எல்.எவ்.

வடமாகாண சபைத்தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பொன்னுத்துரை ஐங்கரநேசனை தமதுகட்சியின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டமை காரணமாக கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.  ஈ.பி.ஆர்,எல்.எப். தமக்குரிய அமைச்சுப் பதவியினை முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்கவெனத் தீர்மானித்துள்ள நிலையில் தமிழரசுக்கட்சியினால் தமது கட்சிக்கென தீர்மானித்த அமைச்சுப் பதவியினை ஐங்கரநேசனுக்கு வழங்க தமிழ் தேசியக்கூட்டமைப்பு முடிவு செய்தது.  இதைனையடுத்து ஐங்கரநேசனுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டபோதும் அவர் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறிசெயற்பட்டமை காரணமாக அவரை எங்களது கட்சியிலிருந்து  விலக்கியுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் மூலமாக அறிவித்துள்ளதாகத் தெரிவித்தார்.

சகோதரருக்கு அமைச்சு பதவி வழங்காமையால் சுரேஸ் எம்.பி. குழப்பம் ஏற்படுத்துகிறார் - சி.வி

'நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வட மாகாணசபைக்கு தெரிவான அமைச்சர்கள், இன்று வெள்ளிக்கிழமை (11) வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் வைத்தே இந்த நியமனக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்துகொண்டார். வடமாகாண அமைச்சர்கள் தெரிவு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறத்து, இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சரிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர், 'நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், தனது சகோதரருக்கு அமைச்சுப் பதவி வழங்காமையினால் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி வருகின்றார். இது எல்லா கட்சிகளிலும் ஏற்படக்கூடிய பிரச்சினையே. இதற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்று கூறினார்.

ஐங்கரநேசன் தொடர்பில் மாவைக்கு கடிதம் - சுரேஷ்

தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஐங்கரநேசனுக்கு வழங்கப்பட்ட அமைச்சுப்பதவியானது எமது கட்சிக்காக வழங்கப்பட்ட அமைச்சாக கருதக்கூடாது என தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். “எமது கட்சியின் கோட்பாடுகளை மதிக்காமல் செயற்பட்டது மட்டுமல்லாமல், எமது கட்சிக்கும் தனக்கும் தொடர்பில்லை என்ற தோரணையில் அறிக்கையினையும் ஐங்கரநேசன் விட்டிருந்தார். இதனடிப்படையில் ஐங்கரநேசனுக்கும் எமது கட்சிக்கும் எந்தவித தொடர்பும் இல்லையென அவரே ஒத்துக்கொண்டுள்ளார். ஆகையினால், அவருக்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியானது ஈ.பி.ஆர்.எல்.எப். இற்கு வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியாக கருதக்கூடாது என மாவை சேனாதிராஜாவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்..” என சுரேஷ் பிரேமசந்திரன் மேலும் குறிப்பிட்டார்.

பதவியேற்பு நிகழ்வை ஏன் பகிஷ்கரித்தோம்? - புளொட்

2013 ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதியன்று இடம்பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. மேற்படி முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தெரிவித்துள்ளது. (மேலும்....)

புறக்கணித்த 9 பேரும் முள்ளிவாய்காலில் சத்தியப்பிரமாணம்?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளாத ஒன்பது உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் வைத்து சத்தியபிரமாணத்தை செய்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமையே இவர்கள்  சத்தியிப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் பதவிப்பிரமாண நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற போது, கூட்டமைப்பின் 9 மாகாண சபை உறுப்பினர் சத்தியப்பிரமாண நிகழ்வை புறக்கணித்தனர். இதனைத் தொடர்ந்து, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளாத மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய 9 உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்துடன் இணைந்து இறுதியுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் பகுதியில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளவுள்ளனர். சத்தியப்பிராமாண நிகழ்வை நடத்துவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள, யுத்திற்குப் பின்னர் மக்கள் இராணுவத்திடம் சரணடைந்த வட்டுவாகல் மற்றும் இறுதியுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்கால் ஆகிய இடங்கள் பரிசீலனை செய்யப்பட்டதாவும் இறுதியில் முள்ளிவாய்க்காலி;ல் பதவிப்பிரமாணம் செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டதாகவும் பெயர் குறிப்பிடவிரும்பாத அந்த உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் காரணங்களால் தான் நான் பங்கேற்கவில்லை -  குணசீலன்

பதவிப்பிரமாண நிகழ்வில் தான் பங்கேற்காமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன என்று தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ள வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிடுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வில் தான் கலந்து கொள்ளாமைக்காண எனது மனைவி விபத்தில் சிக்கியதே என வெளியான செய்திகளில் எவ்விதமான உண்மைகளும் இல்லை.எனது மனைவி அவ்வாறான விபத்தில் மாட்டிக்கொள்ளவும் இல்லை. நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது.அதனை வெகு விரையில் வெளியிடுவேன் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாணசபையை நாங்கள் புறக்கணிக்கவில்லை - சுரேஷ்

வடமாகாணசபையினை எமது ஈ.பி.ஆர்.டில்.எப். கட்சி புறக்கணிக்கவில்லை. மாறாக, இன்று நடைபெற்ற பதவியேற்பு வைபவத்தினையே நாங்கள் புறக்கணித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார். இன்று யாழில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் மாகாணசபைக்கான பதவியேற்பு வைபவத்தில், மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் பங்குபற்றாமை தொடர்பில் அக்கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....).

சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது- சி.வி

'அரசியலில் பிரவேசிப்பது பணம் சம்பாதிப்பதற்கும் பந்தாகாட்டுவதற்கும் என்ற நிலை இனிமேல் மாற வேண்டும். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் தள்ளக்கூடாது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களிற்கான பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்....)

பிரயோசனமற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்ற மாட்டோம் - சம்பந்தன்

'ஆக்கபூர்வமாகவும் விசுவாசமான முறையிலும் அரசியல் தீர்;வு கிடைக்குமாயின் நாம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கின்றோம். அதேசமயம் பிரயோசனமற்ற விசுவாசமற்ற பேச்சுவார்த்தையில் பங்குபற்றவும் மாட்டோம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 'நாங்கள் எவருடனும் மோத விரும்பவில்லை. மாறாக எல்லோருடனும் ஒத்துழைப்புடன் செயற்படவே விரும்புகின்றோம்' என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்று (11) யாழ். வீரசங்கம் மண்டபத்தில் நடைபெற்ற போது அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்

தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமேயில்லை - திஸ்ஸ விதாரண

தேசிய பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் தனித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமேயில்லை. மாறாக பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்வதன் மூலமே தீர்வு என்பது சாத்தியமாகும் என்று அமைச்சரும் முன்னாள் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். உலகில் இதுபோன்ற உள்நாட்டு பிரச்சினைகள் நிலவிய நாடுகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் இணைந்து ஒரு மேடையில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வு காணப்பட்டுள்ளது. தனித்து இரண்டு தரப்புக்கள் பேச்சு நடத்தித் தீர்வு எட்டப்படுவது சாத்தியமற்றதாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்....)

ஒக்ரோபர் 11, 2013

தகைமை, திறமை அடிப்படையிலேயே வடமாகாண அமைச்சுப் பதவி - த.தே.கூ

'போருக்குப் பின்னரான சூழலை கருத்திற்கொண்டு உறுப்பினர்களின் தகைமைகள், அனுபவங்கள், நிபுணத்துவங்கள், விருப்பங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வடமாகாண சபைக்கான அமைச்சுத் தேர்வு இடம்பெற்றுள்ளது' என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. வடமாகாண சபைக்கான அமைச்சரவை தெரிவு தொடர்பில் விளக்கமளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'எமது உறுப்பினர்களிடம் இருந்து அவர்களின் தகைமைகள், அனுபவங்கள், விருப்பங்கள் சம்பந்தமாக தரவுகளைப் பெறக் காலதாமதம் ஆகிவிட்டதால் எமது அமைச்சர்களையும் அமைச்சுக்களையும் அடையாளம் காணவும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஒருவரின் தரவுகள் இன்னும்கூட கிடைத்தபாடில்லை. (மேலும்....)

வடமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக கமலேந்திரன் தெரிவு

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் வடமாகாண சபையின் எதிர்க் கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிட்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கந்தசாமி கமலேந்திரன் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று (9) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பொதுச் செயலாளரினால் ஆளுநருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.டி.பியினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

வட மாகாண அமைச்சர் தெரிவிக்கு எதிர்ப்பு

இந்த அமைச்சரவைப் பெயர்ப்பட்டியல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களும் வடமாகாண முதலமைச்சரும் இணைந்து வெளியிடப்பட்ட பட்டியலே தவிர, தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டதல்ல என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈபிஆர்எல்எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள அந்த பெயர்ப்பட்டியலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமது கட்சிக்கு வழங்கப்படுகின்ற அமைச்சர் பதவியை பாதிக்கப்பட்ட பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இருவரில் ஒருவருக்கு வழங்குமாறு தாங்கள் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்குத் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறு செய்யாமல் அவர்கள் தமது விருப்பத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட ஒருவருக்கு அதனை வழங்கியிருப்பதை தமது கட்சிக்கு வழங்கியதாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே செய்யப்பட்ட காரியம் என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

விக்கி­னேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் ஜனா­தி­பதி விரித்த வலையில் விழுந்­து­விட்­ட­தாக நினைத்தால் அது முட்­டாள்­தனம்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் விருப்­பத்தை ஏற்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னுக்கு ஜனா­தி­பதி பதவிப்பிர­மாணம் செய்து வைத்­த­மை­யா­னது அர­சாங்கம் செய்த மிகச் சிறந்­த­தொரு அர­சியல் நட­வ­டிக்­கை­யாகும். வடக்கு மக்­களின் உணர்­வு­களைப் புரிந்து அர­சாங்கம் செயற்­ப­டு­மானால் அதை நாம் வர­வேற்­கின்றோம் என தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவரும் மத்­திய மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான அஸாத் சாலி தெரி­வித்­துள்ளார். விக்கி­னேஸ்­வ­ரனும் சம்­பந்­தனும் ஜனா­தி­பதி விரித்த வலையில் விழுந்­து­விட்­டார்கள் என பிரி­வி­னை­வா­திகள் நினைத்தால் அது அவர்­களின் முட்­டாள்­த­ன­மாகும் எனவும் அவர் தெரி­வித்தார். அதே­போன்று வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களை இனங்­கண்டு அவர்­களின் உணர்­வு­களைப் புரிந்து அர­சாங்கம் செயற்­பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பின் செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் இட­ம­ளித்து வடக்கு மக்­களின் உரி­மை­களை அங்கீகரித்து தடை­க­ளின்றி அவர்களை செயற்பட விட்டால் அதை அனை­வரும் வர­வேற்­பார்கள். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வட­ப­குதி மக்­க­ளுக்­காக அர­சுடன் இணக்­கப்­பாட்­டுடன் செயற்­பட முன்­வந்­துள்­ளதைப் போன்று அர­சாங்­கமும் கூட்­ட­மைப்­புடன் இணைந்து புரிந்­து­ணர்வு, விட்டுக் கொடுப்­புடன் வடக்கு வாழ் மக்­களின் வாழ்க்­கைக்­காக அவர்­களை சூழ்ந்­துள்ள இருளை துடைத்­தெ­றிய முன்­வர வேண்டும்.

ஹக்கீம் அரசிற்குள்ளிருந்தும் விக்கினேஸ்வரன் வெளியில் இருந்தும் பிரிவினைவாத சக்திகளாக செயற்படுகின்றனர்

பிரபாகரன் - ரணில் ஆகியோர் சர்வதேசத்துடன் இணைந்து நாட்டைப்பிரிக்க முற்பட்டதைப் போன்று இன்று விக்னேஸ்வரன் - ஹக்கீம் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகின்றது. ஹக்கீம் அரசாங்கத்திற்குள்ளிருந்தும், விக்னேஸ்வரன் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்தும் பிரிவினை சக்திகளாக செயற்படுகின்றனர் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு, கிழக்கில் தனி ஆட்சியமைத்து ஒரே நாட்டிற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதையே ரவூப் ஹக்கீமும் விக்னேஸ்வரனும் முயற்சிக்கின்றனர். இதை அரசாங்கம் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்திடம் கூட்டமைப்பினர் முன்வைத்த கோரிக்கையினையே ரவூப் ஹக்கீமும் முன்வைத்துள்ளார். கூட்டமைப்பினர் குறிப்பிட்ட மாகாணசபை அதிகாரங்களையே ஹக்கீமும் கோரியுள்ளமையானது இவ் இரு கட்சிகளும் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கெதிராக செய்யும் சூழ்ச்சியாகவே தெரிகின்றது. இவ்இருவரும் சர்வதேசத்தின் உதவியோடு அரசங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வடக்கையும் கிழக்கையும் தனிநாடாக ஒன்றிணைக்க முயற்சித்தால் அதன் விளைவுகள் பாரதூரமாகவே அமையும்.

ச்சின் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் அடுத்த மாதம் நடை பெறும் தனது 200 ஆவது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் 40 வயதான சச்சின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விடைபெறவுள்ளார். “நான் 11 வயதிலிருந்து விளையாடும் கிரிக்கெட் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்ப்பது கடினமாக இருக்கிறது” என்று தனது ஒய்வு குறித்து சச்சின் விபரித்தார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி களில் உலகில் அதிக ஓட்டங்களை பெற்றிருக்கும் சச்சின் 198 டெஸ்ட் போட்டிகளில் 15,837 ஓட்டங்களையும் 463 ஒருநாள் போட்டிகளில் 18,426 ஓட்டங்களையும் குவித்திருக்கிறார்.

சாதனை நாயகன் சச்சின்!

சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக்காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தில் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமையும் சச்சின் வசமே இருக்கிறது. சச்சினின் வெற்றிகள் சுலபமானதாக இருக்கவில்லை. பல ஆட்டங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற தனி ஆளாக அணியைத் தோளில் தாங்கி ஆடி அசத்தியவர். உலகக் கோப்பையில், இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு முறைகூட தோற்றது இல்லை. அந்த வரலாறுக்கு சச்சினே முக்கியக் காரணம். 2003 உலகக் கோப்பையில் 75 பந்துகளில் 98 ரன்கள். 2011 உலகக் கோப்பையில், அணியில் மற்றவர்கள் சொதப்பியபோது, 85 ரன்கள் அடித்தார். ஆனால், இந்தச் சாதனைகள் மட்டுமே அவரது புகழுக்குக் காரணம் இல்லை. அதையும் தாண்டி அவரது குணம் இத்தனை ரசிகர்களைக் கொடுத்து இருக்கிறது. (மேலும்....)

 

ஒக்ரோபர் 10, 2013

செய்தியும் சிந்தனையும்(2)

(அபிமன்யு)

செய்தி :

நேற்றைய தினம் (07-10-2013) இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா முன்னிலையில் வடக்கு மாகாணசபையின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

சிந்தனை:

பல வருடங்களுக்கு முன்னர் நடைபெற்றிருக்க வேண்டிய இந் நிகழ்வு, காலம் தாழ்த்தி இப்பொழுது நடைபெற்றிருக்கிறது. அதுவும், எண்ணிக்கையற்ற அனாவசிய அழிவுகள், அனர்த்தங்கள், இன்னல்கள், இழப்புகள், இடப் பெயர்வுகளின் பின்னர் நடைபெற்றிருக்கிறது. யுத்தம் தொடர்ந்தால், மேற்குறிப்பிட்ட அத்தனையும் தவிர்க்க முடியாது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வாதரங்களின் வீழ்ச்சிக்கும், சமூகத்தின் அழிவிற்குமே இட்டுச் செல்லும் என்று தீரக்கதரிசனத்துடன் எடுத்துக் கூறியும், அவற்றைத் தடுக்க முயன்றும் செயற்பட்ட தமிழ்த் தலைவர்கள் துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டு விரட்டப்பட்டார்கள். படுகொலை செய்யப்பட்டார்கள். வன்முறைகளுக்கு அடி பணிந்தும், மனச்சாட்சியை ஒதுக்கியும், அறம் சாராத வாழ்வும் வாழ வல்லவர்களே தமிழர்களின் தலைவர்களெனக் கோலோச்சி வலம் வந்தார்கள். (மேலும்....)

இலக்கிய களம் நிகழ்வு

நீர்வை பொன்னையனின் இலக்கிய தடம்
சிறுகதைகளை முன்னிறுத்தி..!

இடம்: கொழும்புத் தமிழ்ச் சங்கம்
காலம்: 11-10-2013(மாலை: 6.00 மணி)

தலைமை: திரு. அந்தனி ஜீவா (ஆட்சி மன்ற உறுப்பினர்)
உரை : திரு. லெனின் மதிவானம் (புதிய பண்பாட்டுத் தளம்)

கொழும்புத் தமிழ்ச் சங்கம்

அணையாத சாபத் தீ...!

(எஸ்.ஹமீத் )

எங்கள்
ஆன்ம வேர்களினை
அக்கினித் திராவகத்தால்
அபிஷேகம் செய்தார்கள்...!

எமது
இருப்பின் ஸ்திரத்தை
நெருப்பு வஸ்திரத்தால்
நீறாக்கிக் கரைத்தார்கள்...!


(மேலும்....)

இது அரசியல் முதிர்ச்சியேயன்றி பலவீனமல்ல

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து வட மாகாண சபையின் முதலாவது முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் பதவி ஏற்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த முடிவு அக்கட்சியின் மூத்த தலைவர்களின் அரசியல் முதிர்ச்சியையே எடுத்துக் காட்டுகிறது எனலாம். அது தமிழ் கூட்டமைப்புக்கு எதிர்க்காலத்தில் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக பாதுகாப்பாகவும் அமையலாம். நாட்டின் ஜனாதிபதியாக இருந்த போதிலும் மஹிந்த ராஜபக்ஷ ஆளும் கட்சியினதும் தலைவராக இருக்கிறார். அக் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு வட மாகாண சபையில் பதவிக்கு வருவதை தடுப்பதற்கு நீண்ட காலமாக பல்வேறு விதமாக செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் கூட்டமைப்பு வட மாகாண சபையின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் என்ற காரணத்தினாலேயே அரசாங்கம் நீண்ட காலமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருந்தது.
(மேலும்....)

நீயும் என் தோழனே!

சே குவேரா  14.05. 1928 - 09-10-1967

(பூ. கொ. சரவணன்)

சே குவேரா என்கிற இந்த பெயர் உலக வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கம் சொல்லில் அடங்காதது;இந்த தேசத்தின் பிள்ளை என ஒரு தேசத்துக்குள் குறுக்கிவிட முடியாத வாழ்க்கை வாழ்ந்த போராளி அவர். எங்கெல்லாம் அடக்குமுறையும்,ஏகாதிபத்தியமும் கட்டவிழ்த்து விடபட்டதோ அங்கெல்லாம் சே இருப்பார். வெனிசுலா, கொலம்பியா, பிரேசில், க்யூபா, பொலிவியா, காங்கோ எனப் பல இடங்களில் கொரில்லா போர் முறைகளின் பின்னே சே நின்று இருந்தார். அடிப்படையில் மருத்துவரான இவர் ஆஸ்துமா நோயாளியும் கூட; ஆனால் உடல் மருத்துவம் பார்த்து நோய்களை தீர்ப்பதை விட சமூகத்தின் அழுக்குகளை தீர்க்க வேண்டும் என்கிற உறுதி அவரிடம் இருந்தது. அதற்கு முக்கியமான காரணம் தன் மோட்டார் சைக்கிளில் தென் அமெரிக்கா முழுக்க சுற்றியது தான்;அதோடு கார்ல் மார்க்சையும்,லெனினையும் உள்வாங்கிப் படித்த அவர் ஏழைகளும்,பாட்டாளிகளும் படும் துன்பங்களையும்,சோகம் ததும்பும் அவர்களின் உண்மை நிலையை அறிந்த பொழுது போராளியானார். (மேலும்....)

கனடா மறுத்ததையிட்டு அரசாங்கம் அதிருப்தி

பொதுநலவாய நாட்டு தலைவர்களின் கூட்டத்திற்கு உயர்மட்ட தூதுக்குழுவை அனுப்ப கனேடிய அரசாங்கம் மறுத்ததையிட்டு இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட்டது.  கனடா இந்த மாநாடு தொடர்பில் உள்நாட்டு பிரச்சினைகளை பயன்படுத்தக் கூடாதென இலங்கை கூறியுள்ளது. பொதுநலவாயம் என்பது சுய விருப்பத்தின் அடிப்படையிலான ஒரு கூட்டமைப்பு இதில் எந்த ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டின் விடயத்தை மதிப்பிட உரிமையில்லையென வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறினார். பொதுநலவாயத்தில் உள்ள ஏராளமான நாடுகள் மாநாட்டில் பங்கு பெறவுள்ளன என அமைச்சர் கூறினார். கனேடிய பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றப் போவதில்லையெனும் தனது தீர்மானத்தை ஊர்ஜிதம் செய்துள்ளார். இலங்கை மனித உரிமை விடையத்தை கவனிக்க தவறிவிட்டது என அவர் கூறினார். கனடா பொதுநலவாயத்திற்கான தனது நிதி வழங்கலை நிறுத்தப் போவதாக கூறினாலும் அது செயற்படுத்தப்பட மாட்டாதென பொதுநலவாய வணிகப் பேரவையின் பணிப்பாளர் நாயகம் மோகன் கவுல் கூறினார். பொதுநலவாய மாநாட்டிற்கு சமாந்தரமாக இடம்பெறும் வணிக அரங்கில் 1000பேர் வரையில் பங்கேற்பர் எனவும் இதன் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொல் கிடைக்கும் எனவும் அவர் கூறினார்.

ஈரான் - பிரிட்டன் உறவை புதுப்பிக்க இணக்கம்

பிரிட்டன், மற்றும் ஈரானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகளை மீள ஆரம்பிக்கவும் அதனை மேம்படுத்துவ தற்கான பேச்சுவார்த் தையை தொடரவும் இரு நாடுகளும் இணங்கியுள்ளன. இதில் இரு நாடுகளுக்கும் இடையில் நிரந்தர வதிவிடமில்லா தூதுவர்களை நியமிக்க ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் சாரிப்புடன் இணக்கம் ஏற்பட்டிருப்பதாக பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று பிரிட்டனில் ஈரான் தூதரகத்தை மீள அமைப்பது ஈரானில் பிரிட்டன் தூதரகத்தை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அணு விவகாரம் தொடர்பில் கலகக்காரர்கள் எல்லை மீறி செயற்பட்டதையடுத்து டெஹ்ரானில் இருக்கும் பிரிட்டன் தூதரகம் மூடப்பட்டது. அதேபோன்று ஈரானும் தனது லண்டன் தூதரகத்தை மூடியது. ஈரானின் புதிய ஜனாதிபதியாக ஹஸன் ரவ்ஹானி தேர்வானதை அடுத்து ஈரானுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் சுமுக நிலை தோன்றியுள்ளது.

அமெரிக்காவில் நடப்பது என்ன?

அமெரிக்காவில் நடப்பது என்ன? ஓரு விரிவான அலசல்

ஏதோ இருத்தரப்பினர் சண்டையால் நம்மூரில் கடைகள் கதவடைப்பு செய்யும் நிலை போல இன்று அமெரிக்கா இருக்கிறது. உலக நாடுகளின் மூத்த அண்ணன் என்று கருதப்படும் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தேசிய பொழுதுப்போக்கு பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் போன்றவை அக்டோபர் முதல் தேதியிலிருந்து இழுத்து மூடப்பட்டன. இதற்கு கூறப்படும் காரணம் அமெரிக்காவின் பட்ஜெட் அவசரநிதி மசோதாவிற்கு எதிர்கட்சிகள் ஒப்புதல் தர மறுத்தது. இந்தியாவில் லோக்சபா, ராஜ்யசபா என்கிற இரு அவைகள் இருப்பது போல அமெரிக்காவில் காங்கிரஸ் மற்றும் செனட் என்ற அவை அமைப்புகள் உள்ளன. இந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ளது போல் அமெரிக்காவின் நிதி ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை உள்ளது. (மேலும்....)

ஒக்ரோபர் 09, 2013
 

சீ.வி.விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு பதவி இழக்கச் செய்யலாம்!

(பரமேஸ்வரன்)

வாக்குறுதிகளை அள்ளி வழங்கி, வீர வசனம் பேசிவிட்டு போ என மக்கள் அனுப்பி வைத்தவனை வா…வா…வா… என அழைத்து வந்து காலில் விழுந்து விருந்து வைத்தது எதற்காக என ஓட்டுப் போட்ட மக்களுக்கும் கூட்டமைப்புக்கு ஓட்டு போடுங்கள் என உறவினர்களுக்கும், சொந்தபந்தங்களுக்கு கூறிய எங்களுக்கும் உங்கள் பதிலை சொல்ல முடியமா? பல மாகாண சபை உறுப்பினர்கள் மனதிற்குள் புழுங்குகின்றார்கள், உங்கள் இந்தச் செயல் பற்றி வாய்திறக்க பலம் அற்ற சுயநலவாதிகளாகவும் சிலர் இருக்கின்றார்கள். ஆனால் வாக்களித்த மக்களையும், மகிந்தவிடம் பதவி ஏற்பு வேண்டாம் என தடுத்த பெருமக்களையும் புத்திஜீவிகளையும் புறக்கணித்து, மகிந்தவின் காலில் தஞ்சம் அடையவா நாம் வாக்களித்தோம் அதற்கு நாங்கள் மகிந்தவிற்கே வாக்களித்திருக்களாமே என்று மக்கள் கேட்பது உங்கள் காதில் விழவில்லையா? இல்லையென்றால் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், வரலாறு உங்களுக்கு பாடம் புகட்டும், இவைகளுக்காக பாதகங்களை நீங்களே சுமப்பீர்கள் இது உறுதி. (மேலும்....)

கூட்டமைப்புக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை முல்லைத்தீல் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் எற்பாட்டிலான ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவினை சேர்ந்த ஒருவருக்கு வட மாகாண சபையில் அமைச்சர் பதவி வழங்கப்படாமைக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். அமைச்சர் தெரிவில் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதிற்கான காரணத்தினை கோரிய மகஜர் ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.

‘கடவுளின் துகள்’ கோட்பாட்டுக்காக இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் விருது

கடவுளின் துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் போசன் கோட்பாடு பற்றிய ஆராய்ச்சிக்காக இரு விஞ்ஞானிகளுக்கு இந்த வருடத்தின் பெளதீகவியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் பீட்டர் ஹிக்ஸ் மற்றும் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பிரான்கொயிஸ் எங்லர்ட் ஆகிய இருவருக்கும் இந்த பரிசு பகிரப்படவுள்ளது. பிரபஞ்சத்தின் அடிப்படை மூலக் கூறுகளுக்கு ஏன் எடையுள்ளது என்பது குறித்து விளக்குவதற்கான ஒரு பொறிமுறையை 1960 களில் பிரேரித்த பல பெளதீக விஞ்ஞானிகளில் இவர்களும் அடங்குவார்கள். இறுதியாக, சுவிட்சர்லாந்தில் செர்ன் என்னும் இடத்தில் அணுமோதலுக்கான பெரிய பரிசோதனைக் கூடத்தில் 2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஹிக்ஸ் போசன் (கடவுள்) துகள்களை, அந்த பொறிமுறை தான் முதன் முதலில் எதிர்வு கூறியிருந்தது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் விருது விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. நோபல் விருதுக்கு தேர்வானது குறித்து எஸ்லர்ட் தனது மகிழ்ச்சியை வெளியிட்டிருந்தார். அதேபோன்று எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியரான ஹிக்ஸ¤ம் மகிழ்ச்சியை வெளியிட்டார். புதிய துகளை கண்டறிய பங்களிப்புச் செய்த அனைவருக்கும் தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் ஹிக்ஸ் குறிப்பிட்டார். இரசாயனம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரத்திற்கான விருதுகள் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும். ஒவ்வொரு விருதுக்கான பரிசு 1.2 மில்லியன் டொலர் பெறுமதியாகும். சுவீடன் நாட்டு வர்த்தகர் அல்பர்ட் நோபலின் பெயரில் 1901 ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் நோபல் விருதுகள் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10ம் திகதி இடம் பெறும் விசேட வைபவத்தின்போது வெற்றி பெற்றோருக்கு கையளிக்கப்படும்.

அமெ. அரசின் முடக்கம் தொடரும் அபாயம்

அமெரிக்காவில் பட்ஜெட் ஒதுக்கீடு பாராளுமன்றத்தில் நிறைவேறாததன் காரணமாக அங்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி இன்னும் பல வாரங்கள் தொடரும் என அஞ்சப்படுகிறது. ‘ஷட்டவுன்’ என அழைக்கப்படும் அரச நிறுவனங்களின் முடக்கம் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கான பிரேரணையை நிறைவேற்ற உதவும்படி ஜனாதிபதியும் ஜனநாயக கட்சி உறுப்பினர்களும் குடியரசு கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து குடியரசு கட்சியின் டெக்சாஸ் மாநில செனட் உறுப்பினர் ஜோர்ன் கார்ன் கூறுகையில், “அமெரிக்காவுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிரேரணையை அனுமதிப்பது குறித்து உடனடியாக ஜனாதிபதிக்கு உறுதி எதுவும் அளிக்க முடியாது. இந்த பிரேரணையை நிறைவேற்ற பல நிபந்தனைகள் உள்ளன” என்றார். அமெரிக்க அரசின் முடக்கத்தால் லட்சக்கணக்கான அரச ஊழியர்கள் சம்பளமில்லா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளனர்.

மலாலா மீது மீண்டும் தாக்குதலுக்கு தலிபான் முயற்சி

கல்வி உரிமை பிரசார கரான மலாலா யுசப்சாயை கொலை செய்யும் திட்டத்தை மீண்டும் புதுப்பித்திருப்பதாக தலிபானின் பாகிஸ்தான் கிளை அறிவித்துள்ளது. வாய்ப்பு கிடைத்தால் அவர் மீது தாக்குதல் நடத்துவதாக உறுதி அளித்துள்ளது. “அவர் ஒன்றும் தைரியமான துணிவு கொண்ட பெண்ணல்ல. எப்போது எமக்கு வாய்ப்பு கிடைத்தாலும் அவர் மீது தாக்குதல் நடத்துவோம்” என்று தலிபான் பாகிஸ்தான் கிளையான தஹ்ரீக் இ தலிபான் அமைப்பின் பேச்சாளர் ஷஹிதுல்லாஹ் ஷஹீத் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். கடந்த ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி மலாலா மீது தலிபான் ஆயுததாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தலையில் காயத்திற்குள்ளான அவர் பல மாத சிகிச்சைக்கு பின் சுகம் பெற்றார். ஆனால் அவரது கல்வி உரிமை பிரசாரத்திற்காக வன்றி இஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்காகவே தாக்குதல் நடத்தியதாக தலிபான் குறிப்பிட்டுள்ளது. “அவர் பாடசாலை செல்வதற்காக நாம் தாக்குதல் நடத்தவில்லை. தலிபான் மற்றும் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து வெளியிடுவதற்காகவே தாக்குதல் நடத்தினோம்” என்று ஷஹீத் குறிப்பிட்டார்.

தோழமையுடன்,  

புகலிட பெண்கள் சந்திப்பின் 30 வது தொடர் எதிர்வரும் 12-10-2013  திகதி பிரான்சில் நடைபெறஇருக்கின்றது. அதில் கலந்துகொள்ளுமாறு ஆர்வமுள்ள பெண்களை அழைக்கின்றோம். மற்றும் மறுநாள் 13-10-2010  15.00 மணிக்கு நடைபெற இருக்கும்  நடந்து முடிந்த வடமாகாண தேர்தல் கலந்துரையாடலில் கலந்துகொள்ள அக்கறையுள்ளஅனைவரையும் அழைக்கின்றோம்.

பெண்கள் சந்திப்பு குழுவினர் – பிரான்ஸ்

ஒக்ரோபர் 08, 2013

வட மாகாண சபைக்கான அமைச்சர்கள் விபரம்

வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக அமைச்சுப் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்தும் இழுபறி நிலை காணப்பட்ட போதிலும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கூட்டமைப்பிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் பிரகாரம் மாகாண அமைச்சுகள் வழங்கப்படவுள்ள உறுப்பினர்களின் விபரம் வருமாறு,

பொ. ஐங்கரநேசன் - விவசாயம், கால்நடை, நன்னீர் மீன்பிடித்துறை

பா. டெனிஸ்வரன் - உள்ளுராட்சி நிர்வாகம்

த. குருகுலராஜா - கல்வியமைச்சு

ப. சத்தியலிங்கம் - சுகாதாரம்

வட மாகாண முதலமைச்சராக சீ. வி. விக்னேஸ்வரன் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது பிடிக்கப்பட்ட படம் மத்தியில் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியும் காணப்படுகிறார்.

முற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

(எஸ்.ஹமீத்)

நேற்றைய தினம் (07-10-2013) காலை இலங்கை ஜனாதிபதி முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன், பதவிப் பிரமாணத்தின் பின்னர் வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களைப் பற்றி ஒரு வரி கூடக் குறிப்பிடாதது, இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் பலத்த விசனங்களையும் விமர்சனங்களையும் தோற்றுவிக்கலாம் என்ற அச்சத்துடனேயே எனது இந்த ஆக்கத்தினைப் பதிவு செய்கிறேன். வட மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களின் ஆதரவைக் கோரி நின்றவர், முஸ்லிம் இயக்கமொன்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றைச் செய்து கொண்டவர், முஸ்லிம் ஒருவரைத் தமது கட்சியினூடாகத் தேர்தல் களத்தில் இறக்கிப் பிரசாரங்களை மேற்கொண்டவர், அந்த முஸ்லிம் வேட்பாளருக்கு போனஸ் ஆசனம் வழங்கி அழகு பார்த்தவர், தனது பதவிப் பிரமாணம் முடிந்த கையோடு முஸ்லிம்களை மறந்து விட்டமை வியப்பாகவும் வேதனையாகவும் இருக்கிறது.(மேலும்....)

அர்த்தமுள்ள அதிகார பகிர்வுக்கான பேச்சுவார்த்தையை நடத்தவும் - குர்ஷித்

வடமாகாண சபை தேர்தல் வெற்றிகரமாக முடிந்துள்ளதை பாராட்டிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அர்த்தமுள்ள அதிகார பகிர்வை கொண்டுவருதற்காக பங்குதாரர் யாவருடனும் உள்ளக ஜனநாயக பேச்சுவார்த்தையை நடத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தமிழ் சமுதாயம் உட்பட இலங்கை பிரஜைகள் சமத்துவம்இ நீதிஇ கௌரவம் மற்றும் சுயமரியாதை உள்ளிட்ட வாழ்வை அனுபவிப்பதை உறுதி செய்யும் நேரகாலத்துடனான அரசியல் தீர்வையே இந்தியா எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளதெனவும் அவர் கூறினார். (மேலும்....)

பதவியை இராஜிநாமா செய்யும் யோசனையை கைவிட்டேன் - செல்வம் எம்.பி

தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ அமைப்பின் தலைமைப் பதவியை இராஜிநாமா செய்யும் யோசனையை பலருடைய வேண்டுகோள்களை ஏற்று கைவிடுவதாகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வடமாகாண சபையில் வன்னி மாவட்டத்திற்கென அமைச்சுப் பதவியொன்று வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. எனினும் கட்சித் தலைமை அந்தப் பதவியை யாழ். மாவட்டத்தில் சிவாஜிலிங்கத்திற்கு வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்ட போதிலும் வன்னி மாவட்ட மக்களுக்குப் பொறுப்பு கூறும் வகையில் தலைமைப் பதவியை ராஜிநாமா செய்ய உத்தேசித்திருந்தேன். ஆனால் எனது இந்த நடவடிக்கை கட்சியின் செயற்பாட்டுக்கும் மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் ஆரோக்கியமாக இருக்க மாட்டாது என்று சுட்டிக்காட்டி எனது இராஜிநாமா யோசனையைக் கைவிடுமாறு பலரும் கேட்டுக் கொண்டதையடுத்து அந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தன்மைமையை உணர்ந்து எனது இராஜிநாமா யோசனையைக் கைவிட்டுள்ளேன் என்றார்.

சல்மான் குர்ஷித் இன்று யாழ். விஜயம்

முதல்வர் விக்னேஸ்வரனுடன் சந்திப்பு, வீடமைப்பு திட்டத்தையும் பார்வையிடுவார்

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெல்லிப்பழை பிரதேசத்தில் இந்திய அரசின் உதவியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத் திட்டத்தை நேரில் சென்று பார்வையிடவுள்ளார். அதனைத் தொடர்ந்து வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதன்போது, வட மாகாண ஆளுநரினால் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு விஷேட பகல் போசன விருந்துபசாரமும் வழங்கப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து, வட மாகாண சபையின் புதிய முதலமைச்சருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்துக்கும் இடையில் சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் ரில்சோ ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த விஷேட சந்திப்பின்போது வட மாகாண சபைக்காக புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். வட மாகாண புதிய முதலமைச்சர் பதவி ஏற்ற பிறகு முதலாவது சந்திக்கும் வெளிநாட்டு பிரதிநிதி இவராவார். இதேவேளை, வடக்கில் நுண்கடன் திட்டத்தின் கீழ் சிறு வியாபாரம் மற்றும் வீட்டுத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்க ப்பட்டோருக்கு இரண்டாவது கட்டமாக உதவி வழங்கவுள்ளார். இத்திட்டத்தின் கீழ் பெரும் எண்ணிக்கையானோர் நன்மையடையவுள்ளனர்.

அமெ. படை நடவடிக்கை: விளக்கம் கேட்கிறது லிபியா

அமெரிக்க அதிரடிப் படையினர் தமது நாட்டுக்குள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து லிபிய பிரதமர் அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளார். லிபிய தலைநகர் திரிபோலியில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கப் படை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அல் கொய்தா அமைப்பின் முன்னணி தலைவராக கருதப்படும் அனஸ் அல் லிபி என்பவரை அமெரிக்க அதிரடிப்படை கடத்திச் சென்றது. இதுபற்றி அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு விளக்கம் கோரப்பட்டிருப்பதாக லிபிய பிரதமர் அலி சைதன் அறிவித்துள்ளார். அனஸ் அல் லிபி 1998 ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்தவராவார். ‘லிபியாவுக்குள் லிபிய பிரஜை மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை லிபிய அரசிடமே இருக்கிறது. அது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அது நிரூபிக்கப்படும் வரை நிரபராதிதான்’ என்று லிபிய பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 07, 2013

என் மனவலையிலிருந்து.....

விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்வது சரியா...?

(சாகரன்)

வட மாகண சபை முதல் அமைச்சர் யார் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்தல் என்ற நிகழ்வு சூடு பிடித்திருக்கின்றது. சம்மந்தன், விக்னேஸ்வரன் போன்றவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்த பின்பு ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தல் என்ற முடிவிற்கு வந்துள்ளார்கள் என்ற தோற்றப்பாடு தீவிர புலி ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. முதலாவது வட மகாணசபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதல் அமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தல் என்பது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆசீர்வாத்துடன்தான் நடைபெற்றது என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் இன்றைய மறுபதிப்பாக நம்பும் எவரும் ஏற்க மாட்டார்கள். எப்படி 1987 களில் ஏற்படுத்தப்பட்ட இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையின் இடைக்கால நிர்வாகத்தை புலிகள் தங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும் என்ற ஜே.ஆர் இடம் கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்றுக்கொண்டு உங்கள் இடைக்கால நிர்வாகத்தின் முதல் அமைசர் யார் என்று புலிகளிடம் கேட்டார். அதற்கு புலிகள் அன்றை யாழ்மாநரசபை கமிஷனர் சிவஞானத்தை முன் மொழிந்தனர். இதனை ஜேஆர் உடனடியாக மனமுவந்து எற்றுக் கொண்டார.; ஏன் எனில் இந்த சிவஞானம் ஜே.ஆர் இன் ஆள். இதே போலவேதான் தேர்தலுக்கு முன்பு விக்னேஸ்வரனின் நியமனமும். சரி இவை ஒருபுறம் இருக்கட்டும், இலங்கை அரசியல் சாசனத்தினபடி ஜனாதிபதியை பதவிப்பிரமாணம் செய்து வைப்பது உச்ச நீதிமன்ற நீதிபதி. அதாவது ஜனாதிபதி இல்லாத இடத்தில் இலங்கையின் உயர்பதவியில் உள்ளவர் பிரதம் நீதி அரசர். ஜனாதிபதியை நியமித்த பின்பும் பிரதம நீதி அரசர் உயர் பதவியில் இருபவர்போல் தோன்றினாலும் இவரைவிட அதிகாரத்தில் உயர்ந்தவர் ஜனாதிபதிதான். நாட்டிற்கு விசுவாசமாக அரசியல் அமைப்பை ஏற்று சத்தியப் பிரமாணம் செய்து விட்டால், அது ஆதியுயர் பீடத்தில் உள்ள ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுப்பதுதான் சம்பிரதாயம். இந்த சம்பிரதாயங்களைக் கூடப் புரிந்து கொள்ள முடியாத, ஏற்ற முடியாத நாங்கள் எப்படி தேர்தலில் மட்டும் பங்கு பற்றி பதவிகளைப் பெற முடியும் அதன் அடிப்படையில் இயங்க முடியும். இதனை சமான்ய மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். சரி சாமான்ய மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது புத்திஜீவிகளின் கடமையல்லவா. ஒரு நாட்டில் மத்திய அரசு, மகாண அரசு, ஜனாதிபதி, மாகாண முதல் அமைச்சர் என்ற சம்பிரதாய உறவுகள் எவ்வாறு தவிர்க்க முடியாமல் பேணப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியாவிட்டால், செயற்பட முடியாவிட்டால், அந்நாட்டுச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிட்டிருக்கக் கூடாது. நூம்தான் பதவியையும் படிக்க வேண்டும் ஆனால் அந்தப்பதவிக்கான சட்டதிட்டங்களை அனுசரித்து நடக்க முடியாது என்றால் ஜனநாயக முறைமையில் யாருமே செயற்படவே முடியாது.

முதலமைச்சர் பதவிப்பிரமாணத்திற்கு பின்பே அமைச்சரவை தெரிவு

வடமாகாண சபை முதலமைச்சரின் பதவிப்பிரமானம் நிறைவுபெற்றதன் பின்னர் வடமாகாண அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபை அமைச்சர்களைத்  தெரிவு செய்வது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களின் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அமைச்சரவை தெரிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தீர்மானம் எதுவும் எடுக்காத நிலையில் முடிவுற்றிருந்தது. தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை தொடர்பில் இறுதித்தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத்தலைவர் இரா.சம்பந்தன் 'வடமாகாண சபை அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரே முடிவெடுப்பார்' என்று தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், திங்கட்கிழமை ஜனாதிபதி முன்னிலையில் தான் முதலமைச்சராகப் சத்தியப்பிரமாணம் எடுத்த பின்னர்  அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் கூறிய கருத்தினை கூட்டத்தில்  கலந்துகொண்ட அனைத்துக்கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.

குர்ஷித் செவ்வாயன்று யாழ்.விஜயம்

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக யாழ். இந்திய துணைத்தூதரகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் அவர், இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் தெல்லிப்பழையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தினை பார்வையிடவுள்ளார். அதனை தொடர்ந்து வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வடமாகாணத்தின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார். அத்துடன், யாழ் ரில்கோ சிற்றி ஹோட்டலில் நடைபெறும் விசேட நிகழ்வு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளதாக  இந்திய துணைத்தூதரகம் இன்று தெரிவித்துள்ளது.

13th Amendment to top agenda of TNA-Salman Khurshid meet

Tamil National Alliance (TNA) leaders will urge India to push the Sri Lankan government to fully implement the 13th Amendment, in their meeting with External Affairs Minister Salman Khurshid. Mr. Khurshid will meet the TNA’s Chief Minister designate C.V. Wigneswaran — to be sworn in before the President on Monday — and senior leaders in Jaffna on Tuesday. Speaking to The Hindu on Sunday, TNA parliamentarian M.A. Sumanthiran said they would follow up on the Sri Lankan government’s commitment to India, to implement the 13th Amendment — which followed the India-Sri Lanka Accord of 1987 — and go beyond, as was promised by President Mahinda Rajapaksa. Now that the new provincial council has been elected — TNA recorded a massive victory, obtaining 30 out of the 38 seats in the Northern Province in the recent first-ever election to its council – the Alliance, as the next step, will take up the issue of meaningful devolution of powers, Mr. Sumanthiran said. Some sections have, for long, been questioning the Sri Lankan government’s intention to devolve power to the provinces but the recent provincial election in the north was seen as a welcome move. However, a recent Supreme Court judgment that said powers over land remained with the Centre only fuelled concerns about its intentions. In this context, the TNA’s meeting with Mr. Khurshid — its first major meeting in Jaffna after the September 21 elections, assumes further significance. Amid critical reports in the local press suggesting that the TNA seldom spoke on the issue of Indian fishermen reportedly poaching in Sri Lankan waters, Mr. Sumanthiran said: “We will discuss the fisheries issue as well. We have spoken to the Indian Prime Minister about it on two occasions earlier, and discussed options where in fishermen on both sides are given equipment to explore deep sea fishing as an alternative.” The local press is abuzz with reports of Mr. Khurshid’s visit, some openly sceptical of the outcome. Echoing a prevalent opinion that Tamil Nadu, to a significant degree, dictated Indo-Sri Lanka relations, The Sunday Times in its editorial on the Foreign Minister’s visit, published on Sunday, asked: “There is one thing the visiting Minister might wish to consider; i.e. whether India’s foreign policy vis-a-vis Sri Lanka will forever be Tamil Nadu-centric and if that be so, isn’t this alienating the rest of India from good neighbourly relations with Sri Lanka and losing the Sri Lankan people’s natural affinity and goodwill for his country?”

ஒக்ரோபர் 06, 2013

வெற்றிபெற்ற 28 பேரில் 20 பேர் அமைச்சர் பதவிக்காக உடும்புப்பிடி

அமிர், சிவா, நீலன், ஜோசப் போன்றோர் இல்லாமையின் நிலைமை உணரப்படுகிறது

அமைச்சர் பதவிக்காக விண்ணப்பம் கோருவது அனுபவமற்றதொரு செயல் கூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் பெருமளவில் வாக்களித்த மக்களை முட்டாள்களாக்கும் விதத்தில் அமைகிறது. ஐந்து கட்சிகளின் கூட்டு இப்போது நான்கா யிருக்கிறது. வீரவசனம் பேசி மக்களிடம் பெற்ற வாக்குகளை இப்போது குழிதோண்டிப் புதைப்பது போல அமைச்சுப் பதவிக்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இது ஒரு அனுபவம் வாய்ந்த தலைவரின் கருத்தாக இருப்பதும் வேதனை அளிக்கிறது. தற்போதுதான் மறைந்த தலைவர்களின் தீர்க்கமான முடிவெடுக்கும் தன்மை உணரப்படுகிறது என்று வடபுல புத்திஜீவிகள் தெரிவிக் கின்றனர். அமரர்கள் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நீலன் திருச்செல்வம், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் பலர் இன்று இல்லாத வெற்றிடம் உணரப்படுகிறது. வெற்றி பெற்ற 28 உறுப்பினர்களில் 20க்கும் மேற்பட்டோர் தமக்கு அமைச்சர் பதவி வேண்டும் என உடும்புப்பிடி பிடிப்பது கவலை தருகிறது. ஒரு போனஸ் ஆசனத்தை 5 வருடங்கள் பங்கிடுவது போல் அமைச்சுப் பதவிகளையும் வருடம் ஒரு தடவை ஒருவருக்கு என்று பகிர்வதுதான் இப்போ துள்ள பதவி மோகம் பிடித்தவர்களுக்கு சரியானதாக அமையும், எந்தவிதமான கட்டமைப்புமின்றி கூட்டுச் சேர்ந்த கட்சிகளின் சுயநலத்தை மக்கள் அடியோடு வெறுக்கும் நிலைக்கு ஆளாகாமல் உருப் படியான நீதியான தீர்வை எட்ட முற்ப டுங்கள் எனவும் புத்திஜுவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கரிக்கு போனஸ் சித்தாவுக்கு அமைச்சு?

கூட்டமைப்பிற்குள் வழமையான வெளிக்காட்டா குத்துவெட்டு

நடைபெற்று முடிந்த வடமாகாண சபை தேர்தலில் அதிகூடிய உறுப்பினர்களுடன் வட மாகாணசபையை கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் வழமையான வெளியே தெரியாத நிலையிலான குத்துவெட்டுக்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. தேர்தல் காலங்களில் கிளி நொச்சியில் வீடுவீடாக சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை ஆனால் ஆனந்தசங்கரிக்கு வாக்களிக்க வேண்டாமென பிரசாரம் செய்து வந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்போது மீண்டுமொரு போர்க்கொடியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் தூக்கியிருக்கின்றார். தனது இருப்பினை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற சிந்தனையுடன் மட்டுமே அரசியல் வியாபாரம் நடத்தும் கிளிநொச்சி எம்.பி ஒருவர் ஆனந்தசங்கரிக்கு போனஸ் ஆசனமோ அல்லது சித்தார்த்தனுக்கு அமைச்சு பதவியோ வழங்கப்படுமானால் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யப்போவதாகவும் ஒரு கதையைப் பரப்பிவிட்டிருக்கின்றார்.

காந்தியாரும் சமகால இலங்கையும்

(சுகு சிறீதரன்)

வெலவேரியாவில் குடி நீர் நஞ்சாவதை எதிர்த்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு ,பள்ளிவாசல் -தேவாலயங்கள் -சிறுபான்மையினரின் உடமைகள் மீதான தாக்குதல்கள், கன்னை கட்டி நிற்கும் இனப்பெருமித உணர்வுகள் இவற்றையெல்லாம் பார்க்கும் போது காந்தியடிகளின் அறவிழுமியங்கள் மிச்சமீதியாகத் தன்னும் எம்மிடம் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுகிறது. இலங்கையின் வரலாறு பூராவும் நிகழ்ந்த இனக்கலவரங்களாயினும் சரி ,1990இல் முஸ்லீம் மக்கள் வடக்கிலிருந்து உடுத்த துணியுடன் வெளியேற்றப்பட்ட அவலமாயினும் சரி ,இன்று மிக ஆரவாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரினவாத திட்டமிட்ட இனவிரோத நிகழ்ச்சி நிரலாயினும் சரி காந்திய விரோத நிலைப்பாடுகளே. (மேலும்....)

கனடாவில்

இரட்டைப் பிரஜா உரிமை பெற்றுத்தருவதாக மோசடி

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இரட்டை பிரஜா உரிமையினை பெற்றுக் கொள்ளும் நடைமுறைகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இது வரையில் அதனை மீள ஆரம்பிக்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரொரன்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கொன்சுயலர் அதிகாரியான கருணாரட்ன இதனை தெரிவித்துள்ளார். கனடாவில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிராஜா உரிமையினை பெற்றுத் தருவதாக கூறி ஒருவர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வசந்த அபயசிரி என்ற நபர் கனடாவில் வாழும் இலங்கையர்களுக்கு இலங்கையில் இரட்டைப் பிராஜா உரிமையினை பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாகவும் இதில் ரொரன்ரோவில் உள்ள இலங்கையின் கொன்சுயலர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பலரிடம் இருந்து இவர்கள் ஆயிரக்கணக்கான டொலர்களை மோசடியாக பெற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. (மேலும்....)

8 கோரிக்கைகளினை முன்வைத்து தம்பிராசா பாதயாத்திரை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்ட முத்தையாப்பிள்ளை தம்பிராசா, எட்டு அம்சக் கோரிக்கைகளினை முன்வைத்து வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பாதயாத்திரையினை மேற்கொண்டுள்ளார். இந்த பாதயாத்திரையினை இன்று காலை 10 மணிக்கு வவுனியா றம்பைக்குளம் கருமாரி அம்மன் கோவிலிருந்து ஆரம்பித்துள்ளார். இது பற்றி தம்பிராசா கருத்துக் கூறுகையில், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சத்தியப்பிரமாணத்தினை மேற்கொள்ள வேண்டும், அரசாங்கம் அரசியல் கைதிகளுக்கு தகுந்த பாதுகாப்பினை வழங்க வேண்டும், அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதும் அவர்களை சர்வதேச சமூகம் கண்காணிக்க வேண்டும் உள்ளிட்ட 8 அம்சக் கோரிக்கையினை முன்வைத்தே இந்த பாத யாத்திரியை மேற்கொள்வதாகத் தெரிவித்தார்

ரணில் ஆதரவு - எதிர்ப்பு குழுக்களிடையே மோதல்: துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் காயம்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை விலகும் படி வலியுறுத்தி இன்று மாத்தறையில் இன்று இடம்பெற்ற பேரணியின் போது மோதல் இடம்பெற்றுள்ளது. ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவாக மற்றுமொரு ஆர்ப்பாட்டமொன்றும் மாத்தறையில் இன்று இடம்பெற்றவேளையில் இரு குழுக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டதாக தெரியவருகின்றது. இதன்போது தெவிநுவர பகுதியில் வைத்து இரு குழுக்களும் ஒன்றுடன் ஒன்று சந்தித்த வேளையிலேயே ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தோர் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டுள்ளனர்.மேலும் இதன் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் அக்கட்சியின் தெற்கு மாகாணசபை உறுப்பினர் கிருசாந்த புஸ்பகுமார காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மாகாணசபை உறுப்பினர் தற்போது  மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் துப்பாக்கிச் சூட்டில் மேலும் அறுவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 அல்லது குறைந்தது 4 வருடங்களுக்கு முன் பேசியிருந்தால் பல உயிர்கள் தப்பியிருக்கும்

கூட்டமைப்பின் முடிவிற்கு தமிழ் மக்கள் வரவேற்பு

இதே வேகத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வினையும் கண்டுவிட வலியுறுத்தல்

ஜனாதிபதி மஹிந்தவின் பேராளுமைமிக்க தலைமைத்துவத்திற்கு புத்திஜீவிகள் பாராட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் வெள்ளியன்று நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அவர் தெரிவித்திருக்கும் தமிழ் மக்களுக்கு ஆறுதல் தரும் ஆக்கபூர்வமான கருத்துக்கள் குறித்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மட்டுமன்றி முழு நாட்டு மக்களுமே தமது வரவேற்பைத் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு இதேவேகத்தில் இணக்கமான, விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். இந்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக மக்கள் ஜனாதிபதிக்கும், சம்பந்தனுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர். (மேலும்....)

ஜனாதிபதியுடனான பேச்சுக்கள் தொடரும் மக்கள் விரும்பும் முடிவுகளை எடுப்போம் - சம்பந்தன்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தான் சந்தித்து பல முக்கிய விடயங்கள் குறித்து பேசியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரி வித்துள்ளார். இந்த பேச்சு வார்த்தை மேலும் தொடரக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்த அவர் தொடர்ந்து பேசி எங்களுடைய மக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடிய முடிவுகளை நாங்கள் எடுப்போம். அதற்கான திகதி இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் தாமதமில்லாமல் விரைவில் பொருத்தமான இடத்தில் அப்பேச்சுக்கள் நடைபெறும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார். இறுதி என்ற சொல்லில் அர்த்தம் இல்லை. நாங்கள் அந்தந்த காலத்திற்கு ஏற்ற வகையில் கருமங்களை கையாள வேண்டும். நாங்கள் பேசுறம் இறுதியில் நல்ல முடிவு எடுப்போம். எல்லாருக்கும் திருப்தி அளிக்கக்கூடிய வகையில் அந்த முடிவுகள் அமையும்.

வெனிசுலா பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி அமெரிக்க தூதரக அதிகாரிகள் வெளியேற மதுரோ உத்தரவு

வெனிசுலாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் சதிவேலையில் ஈடுபட்ட 3 அமெரிக்க தூதரக அதிகாரிகளை 48 மணி நேரத்தில் வெளியேற வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ உத்தரவிட்டுள்ளார்.தென் அமெரிக்காவில் உள்ள இடதுசாரி நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதில் கியூபா, வெனிசுலா, ஈக்வடார், பிரேசில், பொலிவியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த நாடுகளில் எப்படியாவது குழப்பதை ஏற்படுத்தி தனது மூக்கை நுழைக்க அமெரிக்க தொடர்ந்து முயன்று வருகிறது. குறிப்பாக வெனிசுலாவில் குழப்பதை ஏற்படுத்தி ஆதாயமடைய அமெரிக்கா தொடர்ந்து முயன்று வருகிறது. வெனிசுலாவின் மக்கள் தலைவர் ஹூவோ சாவேஸ் ஆட்சியின் போதே இத்தகைய சதி நடவடிக்கைகள் முறியடிக்கப்பட்டது. அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இறந்த பின்னர், அந்நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிக்கோலஸ் மதுரோ சாவேஸ் வழியில் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இதனால் மேலும் எரிச்சலுற்ற அமெரிக்கா தொடர்ந்து பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்க இருந்த மதுரோவை கொல்வதற்காக சதி திட்டம் தீட்டப்பட்டிருந்து கடைசி நேரத்தில் தெரிய வந்தது. (மேலும்....)

ஒக்ரோபர் 05, 2013

ஜனாதிபதி முன்னிலையிலேயே விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்

ஓய்வுபெற்ற நீதியரசரும் வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளவருமான  சி.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7ஆம் திகதி திங்கட்கிழமை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.  இவரது பதவியேற்பு நிகழ்வு  அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்புடன் இணைந்து அரசாங்கம் செயற்படும்

அரசாங்கம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் புரிந்துணர்வுடன் செயற்பட தயாராக உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு யதார்த்தமாக சிந்தித்து வடக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் என எதிர்பார்ப்பதாக ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார். வட மாகாண சபைக்கு ஐ. ம. சு. மு. சார்பில் தெரிவான உறுப்பினர்கள் அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்ய இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், மக்கள் வழங்கிய தீர்ப்பிற்கு தலைசாய்த்து வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட நாம் தயாராக உள்ளோம். த. தே. கூ. யதார்த்தத்தை புரிந்து நியாயமாக சிந்தித்து செயற்படும் என நம்புகிறோம். தேர்தல் முடிவுகளை அடுத்து ஐ. தே. க.வில் பிளவு உக்கிரமடைந்துள்ளது. உண்மை நிலையை உணர்ந்து ஐ. தே. க. செயலாளர் பதவி விலகியுள்ளார். ஏனையவர்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றார்.

செல்வம் எம்.பி. இராஜினாமா?

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்தார். நடைபெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பாக வன்னி மாவட்டத்திற்கு அமைச்சுப்பதவி வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக வன்னி மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த அமைச்சுப்பதவி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளது. கட்சியின் தீர்மானத்திற்கு நான் கட்டுப்பட்டவனாக இருந்தாலும் வன்னி மக்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய நிலை எனக்கு உள்ளது. 1998 ஆம் ஆண்டு தொடக்கம் வன்னி மக்கள் எமது கட்சியுடன்  இணைந்து செயற்பட்டு வந்தனர்.2013 ஆம் ஆண்டு வரை மக்கள் எமது கட்சிக்கு பெரும் ஆதரவு வழங்கி வந்துள்ளனர். ஆனால் அந்த மக்களின் எதிர்பார்ப்பான அமைச்சுப்பதவி வன்னி மாவட்டத்திற்கு கிடைக்காத நிலையில் அந்த மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இந்த மக்களுக்கு பெறுப்புக்கூறவேண்டிய தார்மீக பொறுப்பு என்னிடமுள்ளது. எனவே தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் தலைவர் பதவியை இராஜினாமா செய்ய உத்தேசித்துள்ளேன். இது தொடர்பில் சில தினங்களில் எனது இராஜினாமா கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கவுள்ளேன். என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

சத்தியப்பிரமாண முடிவுக்கு அங்கத்துவக்கட்சிகள் எதிர்ப்பு

வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியை இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன் பின்னர் கொழும்பு காரியாலயத்தில் நேற்று மதியம் வடமாகாண சபை அமைச்சர்கள் தெரிவு குழுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்திலேயே வடமாகாண முதலமைச்சரின் சத்தியப்பிரமாணம் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதியின் முன்னிலையில் நடக்குமென சம்பந்தன் தெரிவித்தார். அதற்கு, அங்கத்துவக் கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தியதுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.  ஆயினும், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளார். அதனால் இறுதி முடிவெதுவும் எட்டப்படாத  நிலையில் கூட்டம் முடிவுற்றது. அதேவேளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது வடமாகாண சபை உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ள கனகலிங்கம் சிவாஜிலிங்கம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைப்பானது, நடைபெறவுள்ள முதலமைச்சர் பதவிப்பிரமான நிகழ்வை புறக்கணிக்க உள்ளது. இதுதொடர்பில் ரெலோ செயற்குழு கூடி தீர்மானிக்கவுள்ளது. இதேபோன்றதொரு நிலைப்பாட்டினையே ஏனைய கட்சிகளும் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

த.தே.கூவின் தீர்மானம்: ஐ.தே.க.,ஜே.வி.பி பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ள தீர்மானத்தை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி) பாராட்டியுள்ளன. இந்த முடிவானது நல்லிணக்கத்துக்கு சாதகமான ஒரு சமிக்ஞை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது அவர்கள் தமது பிரிவினைத்திட்டத்திலிருந்து விலகிவந்துள்ளதை காட்டுகின்றது என்று மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளரான விஜித்த ஹேரத் எம்.பி தெரிவித்தார். தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் இந்த தீர்மானமானது புதுப்பாதையொன்றை காட்டுவதாக அமைந்துள்ளது எனவும், எதிர்காலத்தில் சாதகமான நிலைமைகள் ஏற்படுவதற்கான அடையாளமாக இதை கொள்ளலாம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் இனவாதிகளாக சித்திரிக்கப்படும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, தனது இந்த தீர்மானத்தின் மூலம் தன் மீதான இனவாத குற்றச்சாட்டிலிருந்து விடுபட்டுள்ளதெனவும் அவர் கூறினார்.

செய்தியும் சிந்தனையும்(1)

(அபிமன்யு)

செய்தி

கடந்த செப்ரம்பர் 21, 2013 நடைபெற்ற வடக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தமிழர்களின் வெற்றி.

சிந்தனை

ஒரு சிறு கதை

தண்ணீர்த் தாகத்த்தில் தவித்தவர்களுக்கு எதிர்பாராதவிதமான துரிதத்தில் ஒரு பானையில் தண்ணீர் கிடைத்தது.

நிறைவாக இல்லையெனினும், கணிசமான அளவு நீர் அப் பானையில். 

ஆனாலும், அத் தண்ணீர் போதாதென்றும், அது எமது தாகத்தைத் தீர்க்காதென்றும் கூத்தாடிக் கூத்தாடி அப்பானையைப் போட்டு உடைத்தனர்.

சன்னதம் ஆடிச் சிதறடித்தனர்.  

காலப்போக்கில் தாகம் தீர்க்கப்படாத நிலைமையில், உடைந்த அநதப் பானையின் ஒரு துண்டில் தேங்கியிருக்கும் தண்ணீரைத் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுகிறார்கள்.

வெற்றிக் களிப்பில் மிதக்கிறார்கள்.

இந்தப் பானை வேண்டாம், உடைத்தெறியுங்கள், உங்களுக்குத் தங்கத்திலான பானை பெற்றுத் தருகிறோம் என்றவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

அந்தப் பானை உடையைக் காரணமாக இருந்தவர்களில் பலரே, எதுவித சுரணையோ, கழிவிரக்கமோ, மன்னிப்புக் கேட்கும் மனப்பாங்கோ அற்றவர்களாக, அந்த உடைந்த துண்டில் இருக்கும் தண்ணீரைத் திரட்டித் தருகிறோம் என்று தாகத்தால் தவிப்பவர்களுக்கு உறுதிகள் வழங்குகிறார்கள்.

தாகத்தால் தவிப்பவர்களும், அவர்களே தங்கள் ஆபத்பாந்தவர்கள், அவர்களே தங்கள் தாகத்தைத் தீர்த்து வைக்க வல்லவர்கள் என்ற நினைப்பில் அந்த உடைந்த துண்டைக் கையில் வைத்திருப்பவர்களையும், அத் துண்டில் மிதக்கும் தண்ணீரையும் ஆவல் பொங்கப் பார்க்கிறார்கள்.  

                        *****

இந்தக் கதையில் வரும் பானையையும் தண்ணீரையும் 1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் 13வது அரசியல்யாப்பு திருத்தத்தினால் ஏற்படுத்தப்பட்ட இணைந்த வடக்கு- கிழக்கு மாகாண சபையாகவும், உடைந்த துண்டும் அதில் தேங்கியிருக்கும் தண்ணீரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலாகவும் நீங்கள் உருவகப்படுத்திக் கொள்வீர்களானால் இக் கதையில் வரும் கதாபாத்திரங்களை நீங்கள் இனம் காண முடியும்.

பானையை உடைத்துவிட்டு தமக்கும் அதற்கும் எதுவித சம்பந்தமில்லாததுபோல் இன்னமும் தம் பாட்டுக்கு அரசியலிலும் சமூகத்திலும் வலம் வரும் பிரகிருதிகளை ஏற்றுக் கொள்ளும் எம் இனத்தின் அறியாமையை நோவதா?

அல்லது, தனிமனிதனுக்கு இருப்பதாகக் கருதப்படும் விதி, ஒரு இனத்திற்கும் இருக்கிறது எனக் கொண்டு, அழிவது எனக் கங்கணம் கட்டிக் கொண்டதுபோல் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் எம் தமிழ் இனத்தின் விதி இது என்று கொள்வதா?

இனியாவது அறிவுடனும், தீர்க்கதரிசனத்துடனும், திண்மையுடனும் உடைந்த துண்டில் இருக்கும் தண்ணீரையாவது பேணிப் பெருக்குவார்கள், தவிப்பவர்களின் தாகத்தைத் தீர்ப்பார்கள் என்ற ஆசை எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

அதே சமயம், கடந்தகால துர் அனுபவங்கள் போல், அது வெறும் நப்பாசையாக, தமிழர்களின் நிலைமை இன்னமும் மோசமாகி விடுமோ என்ற  ஆதங்கத்தையும் விலக்க முடியவில்லை.  

அந்த உடைந்த துண்டையும், அதில் தேங்கியிருக்கும் தண்ணீரையும், சுயநலமே மேவும் பதவிப் போட்டிகளிலும்,  குறுக்குவழிப் பிரபல்ய வேட்கையிலும் போட்டடித்து வீணாக்கி விடுவார்களோ?.

மக்கள் தங்களுக்குத் தகுந்தவர்களையே, தங்கள் யோக்கியதைக்கு ஏற்பவே,  தங்களின் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறார்கள் என யோசப் டி மேயிஸ்ரி என்ற தத்துவஞானி கூறியதும் ஞாபகத்திற்கு வருகிறது!

புலிகளின் தடயங்கள் இனியும் தேவையில்லை

தமிழீழ விடுதலைப்புலிகளின் தடயங்களை இன்னும் வைத்துகொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அதனால் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்த நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டது என்று இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார். புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் தகர்க்கப்பட்ட பதுங்குழி புலித்தலைவருடையதா என்பது குறித்து எமக்கு சரியாக கூறமுடியாது. என்றாலும் அது புலிகளின் பதுங்கு குழியாகும் என்றும் அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளின் தலைவரின் பதுங்கு குழியும் இந்த பிரதேசத்திலேயே இருந்தது. மூன்று மாடிகளை கொண்ட இந்த பதுங்கு குழியிலிருந்து அவசரமாக வெளியேறுவதற்கான சுரங்க பாதையும் இருந்தது. அந்த பதுங்கு குழிக்கு முன்பாக பிரபாகரன் தன்னுடைய வீரர்களுடன் கலந்துரையாடுவதற்கான மண்டபமொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. புலிகளின் பதுங்கு குழிகள் பல அழிக்கப்பட்டுவிட்டன. இந்த பதுங்கு குழியை சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. ஆகையினால் இந்த பதுங்கு குழியை தகர்ப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. அந்த பதுங்கு குழிக்கு முன்பாக பாதுகாப்பு கூடாரங்களும் அமைக்கப்பட்டிருந்தன. பிரபாகரனின் வாகனம் அந்த வீட்டுக்குள் நுழைவதற்கான வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன. பதுங்கு குழியை சுற்றி ஆறு வரிசைகளில் முட்கம்பிகள் கட்டப்பட்டிருந்தன. ஒரு வரிசையிலிருந்து மற்றுமொரு வரிசைக்கான தூரம் 20 அல்லது 25 மீற்றராக இருந்தது. அவற்றுக்கு இடையிலும் பாதுகாப்பு கூடாரங்களும் இருந்தன என்றும் அவர் கூறினார்.
 

அமைச்சர்கள் தெரிவில் கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி

வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் தெரிவில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் தொடர்ந்தும் இழுபறி நிலை நிலவுவதனால் அமைச்சர்கள் தெரிவிற்கான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை 6 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வடமாகாண அமைச்சர்களைத் தெரிவு செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புக் காரியாலயத்திலேயே இந்த கூட்டம் நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போதே அமைச்சர்களின் பெயர்களை முன்வைக்குமாறு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் கோரியுள்ளார். அதன்போது, வவுனியா மாவட்ட உறுப்பினர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர் குருகுலராஜா ஆகியோரின் பெயர்களை இலங்கை தமிழரசு கட்சியினர் முன்வைத்துள்ளனர். அதேவேளை, ரெலோ அமைப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் மற்றும் மன்னார் மாவட்ட உறுப்பினர் குணசீலன் ஆகியோருடைய பெயர்களையும், புளொட் அமைப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுடைய பெயரினையும் பிரேரித்துள்ளனர். அதேவேளை, ஈ.பி.ஆர்.எல்.எப்  சார்பாக எவருடைய பெயர்களும் முன்வைக்கப்படவில்லையென்பதுடன், அமைச்சுக்கள் எவைஎவையென தெரிவிக்கும் பட்சத்தில் யாரை அமைச்சர்களாக பிரேரிப்பதென தீர்மானிக்கவுள்ளதாக அக்கட்சியினர் அக்கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே அமைச்சர்கள் தெரிவு தொடர்பான இறுதி முடிவுகள் எட்டப்படாத நிலையில், நாளை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மீண்டும் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

தேர்தல் தீர்ப்பை மதித்து காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்திய மத்திய அரசு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண சபைகளுக்கு முழு அதிகாரம் பெற்றுக்கொடுக்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இலங்கையில் வடக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று, இலங்கையின் அரசு நடந்து கொள்ளும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, பொலிஸ் மற்றும் காணி சம்பந்தப்பட்ட துறைகளில் அதிகாரம் செலுத்த இயலாது என்றும், அவை மத்திய அரசின் நேரடிப்பொறுப்பில் கொண்டுவரப்படும் என அறிவித்திருப்பது, தேர்தல் முடிவுகளை முற்றாக நிராகரிக்கும் செயலாகும்.  13 ஆம் திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு உள்ள நிலம் பொலிஸ் தொடர்பான அதிகாரங்களை மறுக்கவோ, குறைக்கவோ கூடாது என இந்திய அரசு வற்புறுத்தியதால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இலங்கை அரசால் கொண்டுவரப்பட்ட திருத்தச் சடட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்த அடிப்படையில் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டதால், அதனை இலங்கை அரசு நிறைவேற்றுவதை இந்திய அரசு கண்டிப்பான நிபந்தனை ஆக்கக்கோருகிறோம். வடக்கு மாகாண சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலின் போது, போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டணி, அதிகாரங்களைப்பெற்று மக்களின் உரிமைகளை மீட்டுத்தருவோம் என்றே பிரசாரம் செய்தது. அதனை ஏற்று மக்கள் பேராதரவு அளித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.  வடக்கு மாகாண தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணி 75 வீத வாக்குகளைப் பெற்றுள்ளது. தேர்தல் அறிக்கை வற்புறுத்துவதே மாநில அதிகாரங்கள் தான். இதனை இலங்கை அரசு நிராகரித்து, தமிழின அழிப்பை தொடர்ந்து சட்ட ரீதியில் செய்ய முற்படுவது கண்டிக்கத்தக்கது. இந்நிலையில் இந்திய மத்திய அரசு தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, தமிழின அழிப்பை தடுத்து, வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு முழு அதிகாரம் பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்துகிறோம் என்று அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒக்ரோபர் 04, 2013

என் மனவலையிலிருந்து....

'இறுதி மூச்சு உள்ள வரை.....?'

(சாகரன்)

அண்மையில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கும் இலங்கைத் தமிழர் விடயம் வட மகாணசபை முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் பற்றிய கவிஞர் காசியானந்தனின் பேட்டி ஆகும். தமிழீழம் முடிந்த முடிவு என்று அன்றில் இருந்து இன்றுவரை வாய்சவாட்டல் விடும் பேர்வழிகளில் காசியானந்தனும் ஒருவர். இவர் எக்காலத்திலும் எதிரிக்கு எதிராக விடாப்பிடியாக போராடியவர், செயற்பட்டவர் அல்ல. இவருடன் இலங்கைச் சிறையில் இருந்த பலரும் தமது அனுபவங்களினூடு கண்ட விடயம் இது. சிறைச்சாலைகளுக்குள் நடைபெறும் சாத்வீகப் போராட்டங்களில் சிறை அதிகாரிகளிடம் காட்டிக்கொடுக்கும் சமரசங்களுக்கு இவர் எப்போதும் முன் நிற்பவர். இதற்காக தனது தாடியை எடுத்து சிறை அதிகாரிகளைச் சந்தித்து சமரசங்கள் செய்வதற்கு முதல் நாளே தயாராகுபவர்.  1977 பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுயின் இரண்டு உறுப்பினர்களுக்கான உறுப்பினர்; தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் இராஜதுரையும், இளைஞர் பேரவை சார்பில் காசியானந்தனும் நிறுத்தப்பட்டு தேர்தலில் தோற்றுப் போனதற்கு பின்பு இவர் மேலும் வெற்றிகளில் நம்பிக்கை இழந்து போனவர். இதன் பின்பு மெதுவாக இலங்கையிலிருந்து நழுவி இந்தியாவில் அகதிப் போர்வையில் சுக போகம் காண்பவர். புலிகளின் முக்கிய வெளிப்படை செயற்பாட்டாளர். இதனை 'டபிள் ஏஜன்ட்' என்று கூறுவர். அவ்வப்போது இரத்தத் திலகமிடும் உணர்ச்சிகளை கொட்டுபவர். புலிகளும், அதன் ஆதரவாளர்களுக்கும் இது மிகவும் பிடிக்கும் விடயமும் கூட. ஏன் இதனையே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தனது தேர்தல் வெற்றிக்கான முதலீடாக கொண்டு செயற்பட்டு வருகின்றது. அப்போ, தமித் தேசியக் கூட்டமைப்பின் சுமந்தினுக்குப் பின்னரான விக்னேஸ்வரனும், காசியானந்தன் வகையறாக்களும் ஒன்றுதானே. ஏன் இந்த முரண்பாடு. இரு குறும் இனத் துவேசிகளிடையேயான போட்டிதான் இவை. என்னைவிட நீ அதிகம் இனத் துவேசம் பேசி மக்களிடம் வாக்குகள் பெற்று கதிரையைப் பிடித்துக் கொண்டுவிட்டாய் என்ற அங்கலாய்ப்பு. மற்றயபடி இவர்கள் இருவரும், இவர்கள் இருவரையும் துதிபாடும் யாவரும் ஒரு (நாற்றக்) குட்டையில் ஊறிய மட்டைகள்தான். விக்னேஸ்வரன் இடத்தில் காசியானந்தன் இருந்தால் இதேத்தான் விக்னேஸ்வரனும் செய்திருப்பார். குதிரை கஜேந்திரன் வகையறாக்களும் இலங்கையில் இருப்பதினால் சற்று அடக்கிவாசித்தாலும் இதையேதான் செய்கின்றனர். ஏன் வட மாகாண சபைத் தேர்தலில் சுரேஷ், சிறீதரன், சரவணபவன் வகையறாக்களிடத்தே இதுதான் போட்டி. யார் அதிகம் இனத்துவேஷம் பேசுவது என்பதே. தமிழ்த் தேசிக் கூட்டமைப்பில் சிலர் குறிப்பாக செல்வம் தனது கோவில்பற்றுக்குள் இதுவரை தானே தனிக்காட்டு ராஜா என்று ஆயரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதால் வெறும் கையை உயர்த்தி வீரம் காட்டிவிட்டு இடையிடையே ரிச்சாத்துடன் மட்டும் வீரம் பேசுகின்றார். மற்றபடி இவரின் கோவில் பற்றுக்குள் யாராவது முளைத்தால் இவரும் இதே 'அதிகம் துவேஷம்' பேசுதலையே கடைப்பிப்பார். மட்டக்களப்பில் அரியனேந்திரன், யோகேஸ்வரன் இடையேயும் இதுதான் தற்போது போட்டி.  'இந்த இறுதி மூச்சு உள்ளவரை....' எல்லாம் தொடர்ந்தும் மக்களை அடக்கியாள வெளிவந்த வீரப் பேச்சுக்களே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. இது யார் தரப்பிலிருந்து வந்தாலும் கூட. பாவம் மக்கள் கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியில் சற்றே மூச்சை விட துடிக்கின்றனர் தயவு வெய்து உங்கள 'இறுதி மூச்சு உள்ள வரை...' யை நிறுத்துங்கள்.  

உணர்ச்சிக் கவிஞருக்கோர் உணர்வு பூர்வமான கடிதம்

(நல்லையா குலத்துங்க்கன்)

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போராட்டம் எனும் பெயரில் சட்ட சீர்குலைவுகளுக்கள்ளாகி அடையாளத்தை இழந்து தவித்த எம் மக்கள் சிறிதளவுவாவது ஒரு நிலையான் வாழ்விற்குத் திரும்புவதை எதிர்ப்பதில் நீங்கள் காட்டும் தீவிரம் என்னைப் போன்றவர்களைத் திகைக்க வைக்கிறது. எம்மண்னிலே வந்து சிறிது காலம் வாழ்ந்து பார்த்தீர்களானால் எம் இன்னல்களின் ஆழம் உங்களுப் புரியும். ஒரு கட்டுபாடற்ற கலாச்சாரச் சீர்குலைவ்வுக்குள்ளாகும் என்னைப் போன்ற இளளைஞர், யுவதிகளின் அவலம் புரியும். எதிர்ப்பரசியலினால் 30 வருடங்களுக்கு மேலாக எதையும் சாதிக்க முடியவில்லை இணக்க அரசியலுக்கு ஏன் சிறிது கால அவகாசம் கொடுக்கத் தயங்குகிறீர்கள் ? (மேலும்......)

பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்ப்பு?

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிலக்கீழ் பதுங்கு குழி தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள நிலக்கீழ் பதுங்கு குழியே இவ்வாறு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரியவருவதாவது, குறித்த நிலக்கீழ் பதுங்குழி வீட்டுக்கு அருகிலுள்ள கிராமத்து  மக்களை இராணுவத்தினர் நேற்று மாலை அங்கிருந்து வெளியேறி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மிக நீண்ட நேரம் மைதானத்தில் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை 6.45 மணிக்கு  பாரிய வெடிப்புச் கேட்டதாகவும், இந்த வெடிப்புச் சத்தம் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் விதத்தில் இருந்தாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், குறித்த பகுதியிலிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலக்கீழ் பதுக்குகுழி வீடு தகர்க்கப்பட்டிருக்கலாம் என்று மக்கள் தெரிவித்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நிலக்கீழ் பதுங்கு குழி வீட்டினைப் பார்வையிடுவதற்கு பெருமளவான மக்கள் வந்து சென்றனர் இதனால் இது சுற்றுலா மையமாக இதுவரை காலமும் இருந்து வந்தது.  கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்த பதுங்கு குழி வீட்டினை பொதுமக்கள் பார்வையிடுவதற்கு படையினர் தடைவிதித்திருந்தனர். அந்த பதுங்கு குழி அமைந்துள்ள இடத்தைச்சுற்றி மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவற்றை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதையடுத்தே அந்த பதுங்கு குழியை மக்கள் பார்வையிடுவது தடைச்செய்யப்பட்டிருந்ததாக படைத்தரப்பினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். 

சென்னைவில் பத்திரமாக இருந்து கொண்டு திரு விக்னேஸ்வரனை வசை பாடுவது அயோக்கியத்தனம்! நக்கீரன்

(2009 மே மாதம் கடைசிவாரம் வெளிவந்த நக்கீரன் இதழின் அட்டைப்படம்)

நுணல் என்பது ஒருவகைத் தவளை.  வயல்வெளிகளில், தவளைகள் வழக்கமாக் கால்வாய்களில் ஓடும். சிறிய வாய்களைக் கொண்ட குழிகளில், ஓட்டைகளில், பள்ளங்களில் அந்தத் தவளைகள் ஓடி ஒளிந்து கொள்ளும். பாம்புகள்  இரை  தேடி அங்கே வரும். தவளைகள் என்றால் பாம்புகளுக்கு நல்ல விருப்பம்.  நுணல் என்ற தவளை வகை ” குவா, குவா” என்று கத்தும். அப்படிக் கத்தும்போது, இரவில் இரை தேடி வரும் பாம்புகளுக்கு அவை இருக்கும் இடம் தெரிந்து விடும். அதனால் அந்த நுணல்கள் மாட்டிக்கொள்ளும். பாம்புகள் அவற்றை விழுங்கி விடும். இதுதான் “நுணலும் தன் வாயால் கெடும்” என்ற பழமொழி பிறப்பதற்குக் காரணமாக இருந்தது. (மேலும்......)

வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி நிலவுவதால்

அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை வழங்குமாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை!

வடமாகாண அமைச்சர் தெரிவில் இழுபறி நிலவுவதால், அமைச்சர் பதவிக்கான விண்ணப்பங்களை வழங்குமாறு தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கோரியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை இரவு கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஆராயப்பட்ட வேளையில், இலங்கை தமிழரசு கட்சி முக்கிய அமைச்சுக்களான கல்வி மற்றும் சுகாதார அமைச்சுக்களை வழங்குமாறு தலைவரிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இக்கோரிக்கைகளை ஏனைய கட்சி தலைவர்கள் ஏற்க மறுத்ததைத் தொடர்ந்து, அமைச்சுப் பதவிகளை கோருபவர்கள் தமக்கான விண்ணப்பப் படிவங்களை வழங்குமாறு கட்சிகளுக்கு இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை, அமைச்சர் தெரிவு குறித்த கலந்துரையாடலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளை வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளார்.

‘வேறு கட்சிகளில் இணைய தயாரில்லை, தனிக் கட்சி ஆரம்பிக்கவுள்ளேன்’ -  முன்னாள் ஈபிடிபி உறுப்பினர்

புதிய அரசியற்கட்சி ஒன்றை அரம்பிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகின்றேன் என்று தெரிவித்த யாழ். மாநகர சபை சுகாதாரக் குழுத்தலைவர் சுதர்சிங் விஜயகாந் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் இணைவதற்கு தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி.யின் கட்சி உறுப்பினராக 14 வருடகாலமாக பணியாற்றி வந்திருந்தேன். ஆனால் அண்மையில் கட்சியிலிருந்து என்னை நீக்கியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஈ.பி.டி.பி.யில் இணைந்து செயற்படுவற்குத் நான் தயாராக இல்லை. தற்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராகவே இருப்பதுடன், தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவதற்கு தீர்மானித்திருக்கின்றேன். பல்வேறு கட்சிகளிடமிருந்து எனக்கு அழைப்புக்கள் வந்திருந்தபோதும், எந்தக் கட்சியிலும் இணைந்து கொள்வதற்கு எனக்கு விருப்பமில்லை என்றும்  அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தனிக்கட்சி ஒன்றை ஆரம்பிப்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் ஆலோசனை நடத்தி வருகின்றேன். விரைவில் இது தொடர்பில் அறிவிப்பு விடுக்கவுள்ளதோடு, எதிர்வரும் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடவும் இருக்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மோசமான நாடுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் உள்ளடக்கம்

வெளிநாடுகளுக்கு பயணிக்க விரும்புவோருக்கு உதவுவதில் மிக மோசமானதாக கருதப்படும் 10 நாட்டுகளின் கடவுச்சீட்டுகளில் இலங்கை கடவுச்சீட்டும் ஒன்றென வகைப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயண விதிகளின்போது ஆப்கானிஸ்த்தான், சோமாலியா, ஈரான், பாகிஸ்த்தான், எறிட்ரியா, பலஸ்தீனம், நேபால், சூடான், கொசொவோ மற்றும் லெபனான் ஆகிய நாட்டு மக்கள் எதிர்கொள்வது போன்ற வரையறைகளை இலங்கையர்கள் எதிர்கொள்வதாக 2013 ஹேன்லி அன்ட் பாட்னர்ஸ் விஸா வரையறைகள் அமைப்பு அறிவித்துள்ளது. நாடுகளின் பிரஜைகள் வேறு நாடுகளுக்கு பயணிப்பதற்கான சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த அமைப்பு தயாரித்த சுட்டி 219 நாடுகளை வரிசைப் படுத்தியுள்ளது. பின்லாந்து, சுவீடன், ஐக்கிய இராச்சியங்கள் என்பன 173புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பெற இலங்கை 32 புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது. தமது நாட்டுக்கு வருவோரை கட்டுப்படுத்துவதில் விஸா வரையறைகளை ஒரு பிரதான கருவியாக அரசாங்கங்கள் பயன்படுத்தி வருகின்றன. விஸா தேவைகள் நாடுகளுக்கிடையே உறவின் தன்மையை புலப்படுத்துவனவாக உள்ளது. துரதிஷ்ட வசமாக சர்வதேச சமுதாயத்தில் இலங்கை பற்றிய கணிப்பு உயர்நிலையில் இல்லை என்பதை இது காட்டுகிறது.

அமெரிக்க அரசு முடக்கம் தொடர்கிறது: ஒபாமா பேச்சு தோல்வி

அமெரிக்காவில் நான்காவது நாளாக தொடரும் அரசின் ஸ்தம்பித நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. ஜனாதிபதி பராக் ஒபாமா பிரதிநிதிகள் அவைகளின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர்களை நேற்று முன்தினம் புதன் கிழமை பட்ஜெட் இழுபறியை முடிவுக்குக் கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்திய போதும் இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சுமத்திக்கொண்டதோடு முடிவு எதுவும் எட்டப்படவில்லை. ஜனாதிபதியுடன் ஒரு மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில், ஒபாமா இணக்கப்பாட்டை எட்ட மறுத்து வருவதாக பிரதிநிதிகள் அவையின் சபாநாயகர் ஜோன் பெஹ்னர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினத்துடன் மூன்றாவது நாளை எட்டிய அமெரிக்க அரசின் முடக்கத்தால் லட்சக்கணக்கான அரச ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுமுறையை கழித்து வருகின்றனர். கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமான புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு பிரதிநிதிகள் அவை அங்கீகாரம் அளிக்காததை அடுத்தே அந்நாட்டின் பல அரச சேவைகளும் மூடப்பட்டன. இது குறித்து குடியரசு கட்சியை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதிநிதிகள் அவை மற்றும் ஜனநாயகக் கட்சியினரை பெரும் பான்மையாக கொண்ட செனட் அவை மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றன. பட்ஜெட் ஒதுக் கீட்டை அங்கீகரிக்க ஒபாமா கைச்சாத்திட்டி ருக்கும் சுகாதார சீர்திருத்த திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என குடியரசு கட்சி அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் ஒபாமா மற்றும் அவரது ஜனநாயக கட்சி அதனை மறுக்கிறது. மறுபுறத்தில் அரசின் முடக்கம் இராணுவ நடவடிக்கைகளில் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருவதாக அமெரிக்க இராணுவத்தின் உயர் ஜெனரல் ஒருவர் தெரிவித்தார். அதேபோன்று அச்சுறுத்தல் குறித்து கண்காணிக்கும் செயற்பாட்டை இது முடக்கி வருவதாக உளவுப் பிரிவு தலைவர்கள் கூறியுள்ளனர். அரசின் முடக்கத்தால் 800,000 க்கும் அதிகமான அரச ஊழியர்கள் சம்பளமற்ற கட்டாய விடுமுறையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் நாட்டின் தேசிய பூங்காக்கள், நூதனசாலைகள், மிருகக் காட்சிசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஒக்ரோபர் 03, 2013

கூட்டமைப்பு விஞ்ஞாபனத்திற்கு எதிரான மனுக்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களுக்கு பூர்வாங்க ஆட்சேபனையை தெரிவிப்பதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. பூர்வாங்க ஆட்சேபனைகளை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி மேலதிக விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியல் அமைப்பின் 157 (அ) உறுப்புரையையும் அரசியல் அமைப்;பிற்கான ஆறாவது திருத்தத்தையும்  மீறியுள்ளதாக உயர் நீதிமன்றில் ஆறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
 

ரோந்து சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

யாழ்.ஆணைக்கோட்டை பகுதியில் ரோந்து சென்ற பொலிஸார் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இன்றிரவு 10 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதிரோந்து சென்ற இரண்டு பொலிஸார்கள் மீதே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதில் மாத்தளை சேர்ந்த வசந்த அபேரத்ன (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒக்ரோபர் 02, 2013

வடமேல், மத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள், அமைச்சர்கள் ஜனாதிபதி முன் சத்தியப்பிரமாணம்

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் இன்று காலை 11.00 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்ய இருப்பதாக சுதந்திரக் கட்சி செயலா ளர் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தினகரனுக்குத் தெரி வித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பிரதமர் டி. எம். ஜெயரத்ன உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்கின்றனர். வடமேல் மாகாண முதலமைச்சராக முன்னாள் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட இருப்பதாக கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டன. நடந்து முடிந்த தேர்தலில் அவர் மாகாண சபை வரலாற்றில் அதிகூடுதல் வாக்குகளாக 3,36,327 வாக்குகளை பெற்றிருந்தார். மத்திய மாகாண சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க விருப்பு வாக்கு பட்டியலில் இரண்டாமிடத்தை பிடித்தார். இவர் 70,171 விருப்பு வாக்குகளை பெற்றதோடு பிரதமரின் மகனான அநுராத ஜெயரத்ன 107,644 வாக்குகளை பெற்றார். இருந்த போதும் முன்னாள் முதலமைச்சர் மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக அறிய வருகிறது. அமைச்சர்கள் நியமனத்தின் போது இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. இதேவேளை வடமேல் மாகாண முதலமைச்சராக தெரிவாகியுள்ள சீ. வி. விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநரிடம் தமது நியமனக் கடிதத்தை பெற்றுள்ளதோடு, யார் முன்னிலையில் அவர் சத்தியப் பிரமாணம் செய்வார் என்பது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆராய்ந்து வருகிறது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்கள் கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்றது தெரிந்ததே.

நெல்லியடி - பருத்தித்துறை வீதியை அகலமாக்கும் பணிகள் நிறைவு

நெல்லியடி – பருத்தித்துறை பிரதான வீதியை அகலமாக்கும் பணி நிறைவுற்றது. வீதியின் இரு மருங்கிலும் பாதசாரிகளுக்கான நடை பாதை மற்றும் வடிகான்கள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியை அகலமாக்கும் பணியின்போது இவ் வீதியில் உள்ள நெல்லியடி – பருத்தித்துறை பிரதான வீதி அகலமாக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து சீன நிறுவனத்தினால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவ் வீதி அகலமாக்கப்பட்டு காபெட் வீதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வீதி அகலமாக்கப்பட்டதையடுத்து நெல்லியடி – பருத்தித்துறை பிரதான வீதியின் இரு மருங்கிலும் பாதசாரிகளுக்கான நடைபாதை மற்றும் வெள்ளம் ஓடுவதற்கான வடிகான்கள் அமைக்கும் பணி தற்போது துரிதமாக்கப்பட்டுள்ளது. இப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்துக்குள் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப் படுகின்றது.

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழகங்களைத் தனியார்மயப்படுத்து வதற்கு எதிராகவும், மாணவர்களுக்கு தண் டனைகள் வழங்குவதற்கு எதிராகவும், வர்த்தக முகாமைத்துவத்திற்கு தனியான பீடம் அமைக்க கோரியும் பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பிற்பகல் பேராதனை கலஹா சந்தியிலிருந்து கண்டி மணிக்கூட்டு சந்திவரை ஊர்வலம் நடத்தினர். ஊர்வல முடிவில் ஆர்ப்பாட்டம் செய்து, மணிக்கூட்டு சந்தியினை சுற்றி அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் கண்டி மாநகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, வாகனங்கள் மாற்று வீதிகளினால் அனுப்பப்பட்டன. பேராதனையிலிருந்து கண்டிவரை ஊர்வலம் காரணமாக பேராதனை வீதி, வில்லியம் கொபல்லாவ வீதி, தலதாவீதி ஆகியனவற்றில் வாகன நெரிச்சல் ஏற்பட்டது. 2 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் மாலை 4 மணிவரை நடைபெற்று அதன்பின் பொது கூட்டமும் நடாத்தப்பட்டது.

வட மாகாண சபையுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் தயார்

வட மாகாணத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான மாகாணசபையுடன் இணை ந்து மக்கள் சேவையை சிறப்பாக நிறைவேற்று வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக வெளி விவகார அமைச்சர் பேராசிரி யர் ஜீ.எல். பீரிஸ் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலிசனிடம் உறுதியளித்துள் ளார். மனித குலத்திற்கு பேரழிவை ஏற்படுத்திய ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவனை மாமனிதனாக புகழ் உச்சியில் அமர்த்துவதற்கு வடமாகாண சபையின் நிர்வாகத்தின் ஆரம்பத்திலேயே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எடுக்கும் முயற்சி சிறந்த ஆளுமைக்கு நல்ல சகுனமல்ல என்றும் தெரிவித்தார். வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டுமென்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.அரசாங்கம் வட மாகாணத்தின் புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாகாண சபையுடன் இணைந்து மக்கள் சேவையை செய்வதற்கு தயாராக இருக்கிறதென்று தெரிவித்த பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், இப்போது அரசியல் நடவடிக்கைகள் இதற்கென ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளன என்று கூறினார்.

அமெரிக்க அரசின் முடக்கத்தால் ஒபாமாவின் மலேஷிய பயணம் ரத்து

அமெரிக்காவின் பகுதி அளவான அரச சேவைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமா தனது மலேஷிய நாட்டுக்கான விஜயத்தை ரத்துச் செய்துள்ளார். ஒபாமாவுக்கு பதில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி அடுத்த வாரம் மலேஷியா செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டுக்கு அங்கீகாரம் அளிக்க அமெரிக்காவின் இரு பிரதிநிதிகள் அவைகளும் தவறியதை அடுத்து அந்நாட்டின் பல்வேறு அரச நிறுவனங்களும் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மூடப்பட்டன. இதனால் 800,000 க்கும் அதிகமான அரச ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டனர். அமெரிக்காவின் தேசிய பூங்காக்கள், நூதனசாலைகள் மற்றும் பல அரச அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போ தைய பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஜனாதிபதி ஒபாமா ஈடுபட்டுள்ளார். ஒபாமா பொருளா தார உறவை வலுப் படுத்தும் நோக்கில் எதிர்வரும் சனிக்கிழமை நான்கு ஆசிய நாடுக ளுக்கான சுற்றுப் பயணத்தை ஆரம்பிக்கவிருந்தார். இதன்போது அவர் இந்தோனேஷியா, புரூனய் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் விஜயம் மேற்கொள்ள விருந்தார். ஒபாமாவின் சுகாதார காப்பீட்டு சீர்திருத்த திட்டத்திற்கு பிரதிநிதிகள் அவைகளின் குடியரசு கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டதைத் தொடர்ந்தே பட்ஜெட் ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்டது.

சேலம் மாம்பழம், திண்டுக்கல் பூட்டு

7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு

சேலம் மாம்பழம், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு உட்பட தமிழகத்தில் மேலும் 7 பொருட்களுக்கு விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கவுள்ளது. தஞ்சையில் அறிவுசார் சொத்துரிமை சட்டத்தரணி சங்கத் தலைவரும், சட்டத்தரணியுமான சஞ்சய் காந்தி தெரிவித்தார். புவிசார் குறியீட்டு பொருள் கள் சட்டம் 2003ல் அமுல்படுத்தப்பட்டது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கைவினை கலைஞர்களை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நம் நாட்டில் உள்ள தனிச் சிறப்பு தனி வரலாறு தயாரிப்பு முறை தனி அடையாளம் காணப்பதற்கான இடம் ஆகியவற்றை கொண்டுள்ள பொருட்கள் புவிசார் குறியீடு சட்டத்தில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டால் அப்பெயரை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது. உதாரணமாக இந்த சட்டத்தின் கீழ் தஞ்சாவூர் தலை யாட்டி பொம்மை பதிவு செய்யப்பட் டுள்ளது. இதை தஞ்சாவூரில் பாரம்பரியமாக தயாரித்து வரும் கைவினை கலைஞர்கள் பதிவு செய்தனர்.

சென்னை இளைஞன் கொலை, இலங்கையர் நால்வர் கைது

எஸ்ட்டின் பட்டியில் கொலைசெய்யப்பட்டு சடலம் கிணற்றில் போடப்பட்டிருந்தவரின் அடையாளம் தெரியாமல் எட்டு மாதங்களாக தின்டாடிக்கொண்டிருந்த பொலிஸார்இ கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை கண்டுபிடித்ததுடன் கொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படும் குற்றவாளிகளையும் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்டவர் பெரம்பலூரை சேர்ந்த பிரேம் ஆனந்த் (26) என்பவராவர். இவர் சூளைமேட்டில் வேலை செய்துவந்தார். காணாமல் போனவரின் நண்பரிடமிருந்து சென்னை பொலிஸார் முக்கிய தகவலை பெற்றனர். காணாமல் போனவர் தன் நண்பரிடம் ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்திருந்தார். விசாரனையில் இந்த தொலைபேசி எண்ணுக்குரிய ஸ்ரீபன் கொலை செய்தவர்களை காட்டியுள்ளார். ஸ்ரீபனின் மனைவியுடன் பிரேம் ஆனந்த் நட்பாக இருந்துள்ளனர்இ இவர்கள் நட்பு பேஸ்புக் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்ந்தது பிரேம் ஆனந்த் ஸ்ரீபனின் மனைவியை காணவந்த போது இப்பெண்ணின் சகோதரரான ராஜ்குமார் என்பவரும் ஸ்ரீபனும் இந்த பெண்ணுடன் நட்பை தொடரவேண்டாமென எச்சரித்தனர். ஆயினும் பிரேம் ஆனந்த் இந்த எச்சரிக்கையைப்பற்றி அக்கறைப்படவில்லை. இதனால் ஆத்திரம் கொண்ட இவர்கள் பிரேம் ஆனந்தை தந்திரமாக மதுரைக்கு வரச்செய்து அடித்துக் கொன்று உடலை கிணற்றில் போட்டுள்ளனர். இந்த கொலைக்கு மகோந்திரன், துரை ஆகிய இருவரும் உடந்தையாக  இருந்தனர்.கொலையோடு தொடர்புள்ள நால்வரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உச்சப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வாழ்ந்தவர்கள்.

ஒக்ரோபர் 01, 2013

வட மாகாண சபையை துரிதமாக இயங்கச் செய்யவேண்டும்

(தோழர் சுகு)

'காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்'; என்பது மாதிரி உடனடியாக ஆரம்பிக்கவேண்டும். வடக்கு மாகாண சபை சுத்திச் சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள் என்றமாதிரி இல்லாமல் முறிகண்டிக்கு மேலேயே கீழேயே அமையவேண்டும். வட பிரதேசத்தின் சீரான வளாச்சிக்கு அது அவசியமாகும். வாழ்நிலைதான் சிந்தனையைத் தீர்மானிக்கிறது. யாழ்ப்பாணத்தை மையமாகச் கொண்டு செயற்படும் போது இயல்பாகவே யாழ்ப்பாணமே முதன்மை பெறும். ஒரு பெரும் பிரச்சனை இருக்கிறது. யாழ்அரச ஊழியர்கள் ஆசிரியர்கள் வன்னியில் சென்று வேலைசெய்வதற்கு பஞ்சிப்படுகிறார்கள். போக்குவரத்து இருப்பிட வசதி இன்னோரன்ன பிரச்சனைகள் இருக்கின்றன. (மேலும்.......)

வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பனிப்போர் என்ற செய்தியில் உண்மையில்லை!

பதவியேற்கப்போகும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்காக பனிப்போர் நடப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியில் உண்மையில்லை என்றும், இது வழமை போல் புனையப்பட்டு சோடிக்கப்பட்டிருக்கும் பொய்த்தகவல் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும், வட மாகாண சபை உறுப்பினருமாகிய கந்தசாமி கமலேந்திரன் அவர்கள் விடுத்திருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். (மேலும்.......)

அரசு நிறுவனங்களை மூட ஒபாமா உத்தரவு: திவாலாகும் அமெரிக்கா!

அமெரிக்காவில் பல்வேறு அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிப்பால் அமெரிக்கா திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதார திட்டத்திற்கான செலவினங்கள் அதிகரிப்பால் நிலைமையை சமாளிக்க செலவின மசோதா, பட்ஜெட்டுக்கு ஆளும் ஜனநாயக கட்சி ஒப்புதல் அளித்தது. ஆனால், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி ஒத்துழைப்பு இல்லாததால் பட்ஜெட், செலவின மசோதா நிறைவேற்றப்படவில்லை. குடியரசு கட்சி எதிர்ப்பால் செனட் சபையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் கிடைக்காததால் நிதிநிலை கருதி பல்வேறு அரசு நிறுவனங்களை மூட அதிபர் ஒபாமா உத்தரவிட்டுள்ளார். ஆனால் முக்கிய நிறுவனங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஒபாமாவின் இந்த நடவடிக்கையால் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் மூடப்படுவது 18 ஆண்டுகளில் இதுவே முதல் முறை ஆகும்.

திரு. முருகுப்பிள்ளை நிர்மலன் – நிமோ

நிமோ எனக்கு பரிச்சயமானவர். எப்போதும் மனதில் நிற்பது வசீகரமான நட்பார்ந்த அவரது முகம். 2005 இல் முதன் முதலாக லண்டன் ரிபிசி அலுவலகத்தில் அவரை சந்தித்திருக்கிறேன். பின்னர் ஜேர்மனி, பிரான்ஸ், யாழ் இலக்கிய சந்திப்பு என பார்த்திருக்கிறேன். அவரது கண்களும் முகமும் நாமெல்லாம் தோழர்கள் என்று சொல்லிக் கொண்டது போல் ஒருபிரமை. தோழர் தமயந்தி - குட்டி விமலும் ,தோழர் கருணாகரனும் எழுதிய முக நூல் பதிவுகளையும் பார்த்தேன். அவர் விபத்தில்  சிக்கிய செய்தியை தோழர் கீரன் சொல்லியிருந்தார். செப்டெம்பர் 26 ஆம் திகதி அவரது மரணம் நேர்ந்தது. முள்ளியவளை ஆலடியிலிருந்து தண்ணீர் ஊற்றுவரை அஞ்சலி பதாகைள் தொங்கவிடப்பட்டிருந்தன . ஊரோடொட்டிய விடயங்களில் எல்லாம் பாடசாலை கோவில் வாசிகசாலை என மனிதர்களுடன் அவர் உறவாக வாழ்ந்திருக்கிறார். (மேலும்.......)

தமிழ் மொழி மூலம் வெட்டுப்புள்ளி விபரம்

5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களுக்கான வெட் டுப்புள்ளி விபரம் வருமாறு : ஆகக் கூடிய வெட்டுப்புள்ளியாக 156 புள்ளிகளும் குறைந்த புள்ளியாக 151 புள்ளியும் அறிவிக்கப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 156. மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 155. அம்பாறை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கான வெட் டுப்புள்ளி 154. கிளிநொச்சி, நுவரெலியா, மன்னார், மொனராகலை, முல்லைத்தீவு, இரத்தினபுரி, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் வெட்டுப்புள்ளி 153. புத்தளம், திருகோணமலை மாவட்டங்களுக்கான வெட்டுப்புள்ளி 152. அநுராதபுரம் மாவட்டத்துக்கான வெட்டுப்புள்ளி 151 ஆகும். பாடசாலைகளுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.

சிரிய இரசாயன ஆயுதங்களை அழிக்கும் செயற்பாடு ஆரம்பம்

சிரியாவின் இரசாயன ஆயுதங்களை அழிப்பதற்கான சர்வதேச நிபுணர் குழு தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா - ரஷ்யாவுக்கு இடையில் உடன்பாடு எட்டப்பட்டு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க சிரிய அரசு இணங்கியது. யுத்த சூழலில் குறித்த நாட்டின் இரசாயன ஆயுதங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இது முதல் முறையென அந்த திட்டத்தை செயற்படுத்தும் இரசாயன ஆயுத தடுப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த அமைப்பினர் பெரும் சவாலை சந்திக்க வேண்டி இருக்கும் என அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். சிரியாவின் 19 இரசாயன ஆயுதம் வைக்கப்பட்டிருக்கும் தளங்களில் 7 தளங்கள் யுத்த வலயத்தில் இருப்பதாக சிரிய வெளியுறவு அமைச்சர் வலித் முவல்லம் கூறியிருந்தார். இந்த பகுதிகளில் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. மேற்படி நிபுணர் குழு கடந்த திங்கட்கிழமை இரவு லெபனானில் தங்கிவிட்டு நேற்றைய தினமே சிரியாவை சென்றடைந்தது. இவர்கள் தமது செயற்பாடு குறித்து சிரிய வெளியுறவு அமைச்சில் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு குறித்த தளங்களில் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளனர். இதில் இரசாயன ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும் உபகரணங்கள் நிபுணர் குழுவால் அழிக்கப்படவுள்ளது. ரஷ்யா- அமெரிக்காவுக்கு இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின்படி இந்த செயற்பாடு எதிர்வரும் நவம்பருக்குள் முடிக்கப்பட வேண்டும்.

ஈரான் - அமெரிக்காவுக்கு இடையில் நேரடி விமான சேவைக்கு திட்டம்

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான நேரடி விமான சேவை ஆரம்பிப்பதற்கான சாத்தியம் குறித்து அவதானம் செலுத்தும்படி ஈரான் விமானப் போக்குவரத்து அதிகாரசபையிடம் அந்நாட்டு ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி கோரியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக நேரடி விமானப் போக்குவரத்து இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானின் அணுத்திட்டம் குறித்த இராஜதந்திர முயற்சியில் சுமுக நிலை ஏற்பட்டுள்ள சூழலிலேயே ஜனாதிபதி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஈரானின் சிரேஷ்ட அரச அதிகாரியான அக்பர் தொட்கான் அந்நாட்டு அரச செய்தி நிறுவனமான இஸ்னாவுக்கு திங்கள் அளித்த தகவலில், ஜனாதிபதி ரவ்ஹானி நேரடி விமான சேவை குறித்து ஆலோசித்து வருகிறார் என்றார். அமெரிக்காவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் வாழ்ந்து வருகின்றனர். எனினும் கடந்த 1979 இல் இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான சேவை ரத்துச் செய்யப்பட்டது.

ஒக்ரோபர் 01, 2013

ஈ.பி.டி.பிக்கு அரசியல் நாகரீகம் தெரியும் சிறீதரனின் குற்றச்சாட்டு கண்டனத்துக்குரியதாகும்

தமிழ்க் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது வன்னியிலும், தீவகப்பகுதியிலும் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாகவும், வடக்கு மாகாண சபையில் ஏற்பட்ட படுதோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள் கூட்டமைப்பின் ஆதரவாளர்களைத் தாக்கி வருவதாகவும். இத்தாக்குதல் சம்பவங்களில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கூறியிருப்பதை நாம் கண்டிக்கின்றோம். கிளிநொச்சியிலேயே அதிகமான தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், மக்கள் அஞ்சி வாழ்வதாகவும் சிறீதரன் குறிப்பிட்டிருக்கின்றார். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இவர் எழுந்தமானமாக குற்றம் சுமத்துவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஈ.பி.டி.பியாகிய நாம் எமது மக்களின் விருப்பங்களை எப்போதும் மதித்து நடந்துள்ளோம். ஜனநாயகத்தை மீண்டும் வடக்கில் ஏற்படுத்த துணிந்து செயலாற்றியவர்கள். எமக்கு யாரையும் தாக்கவேண்டிய அவசியமோ, எவரையும் அச்சுறுத்த வேண்டிய அவசியமோ இல்லை. (மேலும்.......)

13 க்கு ஆதரவான பிரேரணை : கிழக்கில் நிறைவேற்றம்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை பலப்படுத்துவதற்கு ஆதரவான பிரேரணை கிழக்கு மாகாண சபையில 15 மேலதிக வாக்குகளினால் சற்று முன்னர் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் சமர்ப்பித்த தனிநபர் பிரேரணை மீது விவாதம் நடத்தப்பட்டே அந்த பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இந்த தனி நபர் பிரேரணையை அவர் ஜூலை 23 ஆம் திகதி சமர்ப்பித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத்தலைவர் ஏ.எம்.ஜெமீல் இன்று விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றியதுடன் வாக்கெடுப்பு நடத்துமாறும் கோரிநின்றார். அதன்பிரகாரம்  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் பிரியந்த பத்திரண எதிராக வாக்களித்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுடன் ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

யாழ்.மாநகர தற்காலிக ஊழியர்கள் உண்ணாவிரதம்

யாழ். மாநகர சபையில் கடமையாற்றி வந்த தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் தீர்மானத்தை எதிர்த்து யாழ்.மாநகர சபை முன்பாக தற்காலிக ஊழியர்கள் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். யாழ். மாநகர சபை தற்காலிக கடமையாற்றிய ஊழியர்களை கடமையிலிருந்து நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.யாழ்.மாநகர சபையில் 2002 ஆம் ஆண்டு சீ.வி.கே.சிவஞானம் ஆணையாளராக இருந்த காலத்திலிருந்து யாழ்.மாநகர சபையில் கடமையாற்றியவர்கள இங்கு இருக்கின்றார்கள். ஆனால் 168 பேருக்கு நேர்முகப் பரீட்சை மூலம் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஆணையாளர் எழுத்து மூலம் தெரிவித்திருந்தார். 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றியவர்களுக்கு நியமனங்கள் வழங்காமல், கடந்த காலங்களில் இரண்டு தடவைக்கு மேல் நேர்முக பரீட்சைக்கு தோற்றியவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ள செயற்பாடானது, பொருத்தமற்றதொன்றாகும். மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோர் மாநகர சபையின் பாதுகாப்பு சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

15 ஆம் திகதி வட மாகாண சபையின் கன்னியமர்வு

வட மாகாண சபையின் கன்னியமர்வு எதிர்வரும் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண சபைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்ட விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்கண்ட விடயம் தொடர்பில் ஆராயப்பட்டது. இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் மற்றும் ஏனைய அமைச்சர்களின் நியமனங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது. முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனும்,  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரனுமே ஆளுநருடனான சந்திப்பில் பங்கேற்றனர். இந்த சந்திப்பு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு நீடித்திருந்தன. கொழும்பில் உள்ள மத்திய அரசுடன் ஆலோசித்து முதலமைச்சரின் நியமன கடிதத்தை தருவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆயினும் மாகாண சபைக்கான அமைச்சர்கள் நியமனம் பற்றி கூட்டமைப்பு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் ஓரிரு தினங்களில் அதை தீர்மானிக்க இருப்பதாக சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். மேலும் மாகாண சபைக்கான கட்டிடத்தில் தற்போது திருத்த வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் ஒக்டோபர் 12 ஆம் திகதி திருத்தவேலைகள் நிறைவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதலாவது அமர்வு நடைபெறும் என்றும் அவர் கூறினார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகாமையில் சிறிய தீவு

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு அருகாமையில் மற்றுமொரு சிறிய தீவொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடைத் தொகுதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கியதாக இத்தீவு உருவாக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இதற்காக 808 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலிடப்படவுள்ளதாகவும் இதற்கான நிதி எக்ஸிம் வங்கியிடமிருந்து பெறப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com