Contact us at: sooddram@gmail.com

 

சித்திரை 2013 மாதப் பதிவுகள்

சித்திரை 30, 2013

இலங்கை தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர் இந்திய இணையமைச்சர்

அவுஸ்திரேலியா அனுப்புவதாகக்கூறி, தமிழகத்திலிருந்து இலங்கை தமிழர்கள் ஏமாற்றப்படுவதாக மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் தெரிவித்துள்ளார். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் 1100 பேர் இந்திய கடலோர காவற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக, லோக்சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங், கூறுகையில்,  தமிழக அரசு அளித்துள்ள தகவலின் அடிப்படையில், அவுஸ்திரேலியா அனுப்புவதாகக்கூறி, தமிழகத்திலிருந்து இலங்கைத்தமிழர்கள் ஏமாற்றப்படுகின்றனர். 2010 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை, 57 இந்தியர்கள் மற்றும் 1163 இலங்கைத்தமிழர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் மீது 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க பொலிஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி.,க்களை அறிவுறுத்துமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய மாநாடு நடைபெறாமல் தடுக்க 40 எம்.பிக்களும் இராஜினாமா செய்யவும் - பா.ஜ.க

இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடைபெறாமல் இருக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனத்தா கட்சி மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை இலங்கையில் நடத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும், இலங்கையில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக செய்திகள் வருகின்றன. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் இலங்கையில் மாநாடு நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 40 மக்களவை உறுப்பினர்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இலங்கை பொதுநலவாய மாநாடு நடைபெறாமல் தடுக்குமாறு வலியுறுத்த வேண்டும். இதனை பிரதமர் ஏற்கவில்லை என்றால் 40 எம்.பி.க்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் கூட்டமைப்பும் தனித்து பேசுவதில் அர்த்தமில்லை

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஆளும் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை. அரசியல் தீர்வைக் காண்பதற்கான இணக்கப்பாடு என்பது சகல கட்சிகளிடமும் இருந்துவரவேண்டியது அவசியமாகும். எனவே அனைத்துக் கட்சிகளும் பங்குகொள்ளக்கூடிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதே கூட்டமைப்புக்கு தற்போது உள்ள ஒரே தெரிவாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். வேண்டுமானால் நானும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் பேச்சுவார்த்தைகளை நடத்தலாம். ஆனால் அந்தப் பேச்சுக்கள் தீர்மானங்களை எடுக்கக்கூடியதாக அமையாது. காரணம் இரண்டு கட்சிகள் பேச்சு நடத்தியோ இரண்டு நபர்கள் பேச்சு நடத்தியோ அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டை அடைய முடியாது. இதற்கான ஆணையை மக்கள் வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்...)

உழைக்கும் வர்க்கத்துக்கு ஏமாற்றம் கொடுத்த கூட்டு ஒப்பந்தம்


பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் வெறும் 70 ரூபாவால் மாத்திரம் அதிகரிக்கப்பட்டு கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை மலையக மக்களின் வாழ்க்கைச் சுமையை தாங்கும் சக்தி குறித்து ஆழமாக சிந்திக்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் வாழ்க்கைச் செலவு அதிகரித்துச் செல்லும் தற்போதைய நடைமுறையில் இரு வருடங்களுக்கு இந்தச் சிறுதொகையை வழங்குவதற்கு ஒப்பந்தமாகியுள்ளது. நாளாந்த தேயிலை விலைபங்கீட்டுக் கொடுப்பனவு 30 ரூபாவாகவும் வரவுக் கொடுப்பனவு 140 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மொத்தமாக 620 ரூபா சம்பளம் தொழிலாளர்களுக்கு கிடைக்கப்பெறுவதாக கூறப்படுகின்ற போதிலும் சில நியமங்களின் அடிப்படையிலேயே அவை வழங்கப்படுகின்றன. (மேலும்...)

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை கனடா மாத்திரமே புறக்கணிக்கும்

இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை இறுதியில் கனடா மாத்திரமே புறக்கணிக்கும் என்று அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவ நாடுகளை புறக்கணிக்க வேண்டும் என்று அவுஸ்திரேலியாவை பல்வேறு தரப்பினர்கள் வலியுறுத்துகின்ற போதும், அவுஸ்திரேலியா அதனை புறக்கணிக்காது. எனினும் இந்த முறையில் இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டில் தாம் கலந்துக் கொள்ளப் போவதில்லை என்று கனடாவின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் கனடா மாத்திரமே இறுதியில் இந்த மாநாட்டை புறக்கணிக்கும் என்றும் ஏனைய நாடுகள் அனைத்தும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளும் என்று அவுஸ்திரேலிய வெளிவிகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர சபையின் ஆவணங்கள் சில தீக்கிரை

வவுனியா நகர சபையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணங்கள் சில தீயில் எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நகரசபை உறுப்பினர்கள் சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் போது கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தகமே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த நிலையில் பதிவேட்டுப் புத்தகத்தின் சில பகுதிகள் மக்களால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நகரசபை உறுப்பினர் ஒருவரை நகரசபையில் இருந்து இடைநிறுத்துவதற்கான முயற்சிகள் நகரசபை நிர்வாகத்தாலும் சில நகரசபை உறுப்பினர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதன் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில அவ் உறுப்பினர் ஒழுங்காக கூட்டங்களுக்கு வருவதில்லை என்பதை வெளிப்படுத்துவதற்கான கையொப்பம் இடப்படுகின்ற பதிவேட்டுப் புத்தக ஆவணமே எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வவுனியா நகரசபைத் தலைவர் ஜ.கனகையா இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். மேலும் நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் அவர்களிடம் கோட்டபோது, இது இதேவேளை, உண்மையான ஆவணங்கள் தான் எரிக்கப்பட்டவை என்று கண்டு பிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர் சட்ட ரீதியான பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என நகரசபைச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

கண்ணிவெடி அகற்றும் பணி 95 வீதம் பூர்த்தி

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மிதிவெடி அகற்றும் பணிகள் 95 வீதம் நிறைவடைந்துள்ளன. மேலும் 96 கிலோ மீற்றர் பிரதேசத்திலேயே மிதிவெடி அகற்ற வேண்டியுள்ளதோடு இந்தப் பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கூறியது. 2009 ஜூன் மாதமாகும் போது 2,064 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில் புலி களினால் மிதிவெடிகள் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த 4 வருட காலத்தில் 1,968 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்தில் இருந்து மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள பிரதேசம் பற்றைக்காடு நிறைந்த பிரதேசம் எனவும் அமைச்சு கூறியது. மிதிவெடி அகற்றும் பணிகள் வெற்றி கரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பல நிறுவனங்களின் செயற்பாடுகள் நிறைவடைந்துள்ளதாகவும் அறிவிக்கப் படுகிறது. இராணுவ பொறியியல் பிரிவு மிதிவெடி அகற்றும் பணியில் முக்கிய பங்காற்றி வருவதோடு அவுஸ்திரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, யுனெஸ்கோ ஆகிய நிறு வனங்கள் உட்பட பல உள்நாட்டு வெளி நாட்டு நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உதவி வருகின்றன.

ஹம்பாந்தோட்டையில் ரூ. 700 கோடியில் நவீன ஆஸ்பத்திரி

ஹம்பாந்தோட்டையில் 700 கோடி ரூபா செலவில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆஸ்பத்திரியொன்றை நிர்மாணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. 850 கட்டில்களுடன் கூடிய மேற்படி ஆஸ்பத்திரி நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச் சர் மைத்திரிபால சிறிசேன தனக்கு அறி வித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நெதர்லாந்து அரசாங்கம் இலங்கையில் இரு ஆஸ்பத்திரிகளை நிர்மாணிக்க நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. இதில் முதலாவது ஆஸ்பத்திரி நுவரெலியா ஆஸ்பத்திரிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வருவதோடு இரண்டாவது ஆஸ்பத்திரி ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட உள்ளது.

கிரீஸில் 15,000 அரச ஊழியர்களை பணிநீக்கும் சட்ட மூலம் நிறைவேற்றம்

நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் கிரீஸில் 15000 அரச ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்திற்கு ஆதரவாக 168 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 123 வாக்குகள் பதிவாயின. சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றின் 8.8 பில்லியன் யூரோ கடன் பிணையை பெறுவதற்காகவே கிaஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஏற்கனவே சர்வதேச கடன் பிணையை பெறுவதற்காக அந்நாட்டின் மைய வலதுசாரி கூட்டணி அரசு உள்நாட்டில் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. புதிய சட்டத்தின்படி சுமார் 2000 அரச ஊழியர்கள் எதிர்வரும் ஜூன் மாத நிறைவில் தமது வேலையை இழக்கவுள்ளதோடு மேலும் 2000 பேர் இந்த ஆண்டு நிறைவில் வெளியேறவுள்ளனர். தொடர்ந்து 2014ஆம் ஆண்டு நிறைவில் மேலும் 11,000 அரச ஊழியர்கள் பணி நீக்கப்படவுள்ளனர். இந்த சட்ட மூலத்திற்கு எதிராக தொழிலாளர் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நிஜ முகத்தை மறைக்க முகமூடியை பயன்படுத்துகிறார் நரேந்திர மோடி

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகில் உள்ள பாலேவாடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கருத்தரங்கில் பேசிய மத்திய மந்திரி கபில் சிபல் கூறியதாவது:- மோடிக்கு டில்லி வெகு தூரம் அவரை டில்லிக்கு வர யாரும் அனுமதிக்க மாட்டார்கள். பா.ஜ.க.வில் பிரதமர் பதவியை குறி வைத்து பலர் உள்ளனர். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளாக ஒருவர்(அத்வானி) நாற்காலி கனவுடன் நின்றுக்கொண்டே இருக்கிறார். தனது தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துவிட்டதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக நரேந்திர மோடி, தவறான புள்ளி விவரங்களை கூறி வருகிறார். ஆனால், உண்மை என்னவென்றால், புறநகர் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தொகையின் எண்ணிக்கையும், ஊட்டச் சத்து குறைபாடும் குஜராத்தில் பெருகிக் கொண்டே போகிறது. குஜராத்தில் ஏதாவது வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால் அது குஜராத் மக்களால் ஏற்பட்ட வளர்ச்சியே ஒழிய, மோடியால் ஏற்பட்ட வளர்ச்சி அல்ல. தனது நிஜ முகத்தை மறைக்க முகமூடியை அணிந்துக்கொள்கிறார் மோடி. அவருக்கு அருகில் சென்று பார்த்தால் தான் அவரது நிஜ முகம் வெளிப்படும் என்று அவர் கூறினார்.

உடப்பூரில் சித்திரை செவ்வாய் முளைக்கொட்டு

புத்தளம் மாவட்டத்திலே பரந்து வாழும் மக்களில் தமிழ் மக்களும் ஒரு குடியினர். அந்த வகையில் தமிழ் மக்கள் கூட்டாக செறிந்து வாழும் தமிழ் கிராமம் உடப்பூராகும். இந்த கிராமத்தில் ஜீவனோபாய தொழிலாக கடற்றொழில் இருந்தாலும், இவர்கள் கலை கலாசாரத்தை கண்ணியமாக மதித்து வந்ததை இன்றும் பல கலை நிகழ்ச்சிகளின் மூலம் காணக்கூடியதாக உள்ளது.  அந்த வகையில் உடப்பு கிராமத்தில் 'சித்திரைச் செவ்வாய்' முளைக்கொட்டு வம்சாவழியாக தொன்றுதொட்டு நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சி ஆரம்ப நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் திகதி 'முளைப்பதித்தல்' மூலம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். இந்நிகழ்வு இறுதி நிகழ்ச்சி நாளை (2013.05.01) புதன்கிழமை காலை வேளையில் இடம்பெறும். (மேலும்...)

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது அவசியம்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த் தைகள் ஸ்தம்பிதம் அடைந்திருப்பதற்கான முழுப் பொறுப் பையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பத்திரி கைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். பேச்சு வார்த்தைகளுக்கு அலரி மாளிகையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. இதனை கவனத்திற்கு எடுத்துக் கொள் ளாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வீணாக அரசைக் குற்றம் சாட்டுவது அர்த்தம் அற்றது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த வாரம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் நினைவு தின நிகழ்வில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தீர்வுப் பேச்சுக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமைக்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று குற்றஞ்சாட்டியிருந்தார். (மேலும்...)

சித்திரை 29, 2013

ஆர்ப்பாட்டப் பேரணியாகச் சென்றால் கைது செய்வோம்' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.



புகைப்படத்தை உற்று நோக்குங்கள்

வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரர் பலி

யாழ். அனலைத்தீவு நான்காம் வட்டாரத்தில் நேற்று மாலை இனந்தெரியாத நபர் ஒருவரின் வாள்வெட்டுக்கு இலக்காகி கடற்படை வீரரொருவர் உயிரிழந்துள்ளார். வாள் வெட்டில் படுகாயமடைந்த கடற்படை வீரர் அனலைத்தீவு கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், குறித்த கடற்படை வீரர் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனலைதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணி சுவிகரிப்புக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்தினால் வலி வடக்கில் மேற்க்கொள்ளப்பட்ட காணி சுவிகரிப்பு நடவடிக்கைக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. தெல்லிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வலி வடக்கிலிருந்து இருந்து இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினாகளான மாவை சேனாதிராசா, எஸ்.ஸ்ரீதரன், எம்.ஏ.சுமந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் ஆனந்த சங்கரி,  தமிழ் மக்கள் தேசிய முன்னனியை சேர்ந்த கஜேந்திரன் மற்றும் வலி வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் உட்பட எனப் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். இதனையடுத்து 11.00 மணியளவில் ஆத்திரமுற்ற மக்கள் பொலிஸ் காவலையும் மீறி பிரதேச செயலகத்தினுள் நுழைந்து தமது குறைகளை பிரதேச செயலாளரிடம் முறையிட முயன்றனர்.எனினும் பிரதேச வளாகத்திலிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் வாசலில் வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர்.

பொதுபல சேனாவிற்கு உதவவில்லை - நோர்வே

பொதுபல சேனாவிற்கு நிதி உள்ளிட்ட எந்தவொரு உதவியினையும் வழங்கவில்லை என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்திகளை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் இனங்களுக்கு எதிராக செயற்படும் எந்தவொரு அமைப்பிற்கும் உதவியளிக்கப்படமாட்டாது என நேர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத் துடன் முஸ்லிம்களுக்கு எதிரான எந்தவொரு நிகழ்ச்சி நிரலும் தங்களிடம் கிடையாது. எனினும், பொதுபல சேனாவின் உறுப்பினர்களுக்கு  தமது நாடு சில வருடங்களுக்கு முன்னர்  அழைப்பு விடுத்தமையையும் அவர்கள் அங்கு வந்தமையையும் ஏற்றுக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும் குறித்த பிக்குகள் உள்ளிட்ட எட்டு பேர் கொண்ட குழுவானது பேச்சுவார்த்தைக்காகவே அழைக்கப்பட்டதாகவும் அவர்களுக்கு நோர்வே எவ்வகையிலும் நிதி உதவி வழங்கவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உணவுத் தானியங்களையும் மனித உயிரையும் அழிக்கும் எலிகள் ஒழிக்கப்பட வேண்டும்

சாணம், வைக்கோல் உட்பட உயிரியல் சேதனப் பசளையை விவசாயிகள் இப்போது அதிகமாக பயன்படுத்துவதில்லை. அதற்கு பதில் நச்சுத்தன்மை வாய்ந்த உரப் பசளையையும் கிருமிநாசனிகளையும் தங்கள் விளைச்சல் நிலத்தில் அதிகமாக பயன்படுத்தி கூடுதல் விளைச்சலை பெறுவதற்கு முயற்சி செய் கிறார்கள். இவ்விதம் இயற்கை உரத்திற்கு பதில் நச்சுத்தன்மை வாய்ந்த உரத்தைப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் விளைச்சல் பொதுமக்களுக்கு தீங்கிழைப்பதாக இருக்கிறதென்று விஞ்ஞானி கள் இப்போது எச்சரிக்கை செய்துள்ளார்கள். இரசாயனப் பொருட்கள் கலந்த அரிசி மற்றும் காய்கறிகளை உண்பவர்களுக்கு பலவகையான நோய்கள் ஏற்படுவதை வைத்தியர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளார்கள். (மேலும்...)

குரோதங்களை எற்படுத்தும் வகையில் செயற்படும் இயக்கங்களுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரளவேண்டும் - பத்தேகம சமித்த தேரர்

 

நாட்டில் யுத்தம் முடிந்து அமைதியான சூழல் நிலவி கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் சில இயக்கங்கள் இனவாதம், மதத் துவேஷம் மற்றும் குரோதங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றன. இவ்வாறு செயற்பாடுகளால் நாட்டில் பாரிய இன்னல் தோன்றாலாம். எனவே இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இயக்கங்களின் செயற்பாடுகளை இல்லாதொழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும் என தென் மாகாண சபை உறுப்பினர் பத்தேகம சமித்த தேரர் தெரிவித்தார். 'எம்மை நாமே வெற்றியடைதல் ஆயிரம் யுத்தங்களில் வெற்றியடைவதிலும் சிறப்பானது" என்ற தொனிப்பொருளில் ஒருமைப்பாட்டுக்கான பேரணியால் இன்று முற்பகல் 11 மணியளவில் கொழும்பு தாமரை தடாகம் மாவத்தையில் அமைதிப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (மேலும்...)

4 கட்சிகள் இணைந்து 'த.தே.கூ'வை பதிவுசெய்ய தீர்மானம் நிறைவேற்றம்

தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளோட் மற்றும் டெலோ ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு' என்ற பெயரில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதன் அடிப்படையில் ஒரு முன்னணிக் கட்சியாக பதிவுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெலோ மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று மேற்படி மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (மேலும்...) 
TROPICAL CEYLON 1932.......... before you were born

Sound on !

http://www.youtube.com/embed/vIlI5fhZsxQ?rel=0

மன்மோகன் சிங், சோனியா இடையேயான கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரிப்பு

பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இதன் எதிரொலியாகத்தான் 2 ஜி அலைக்கற்றை ஜேபிசி குழப்பமும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஸ்வனி குமாரின் தன்னிச்சையான செயல்பாடும் காங்கிரஸ் மேலிடத்துக்குத் தலைவலியை ஏற்படுத்தி வருவதாக அந்தக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில் ஆட்சியைத் தக்க வைக்க உத்திகளைக் கையாளுவதா அல்லது கட்சிக்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுப்பதா என்ற தடுமாற்றத்தில் சோனியா காந்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி கடந்த 22 ஆம் திகதி தொடங்கியது முதல் கடந்த 26 ஆம் திகதி வரை மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகளின் அமளியால் முக்கிய அலுவல்கள் ஏதும் நடைபெறவில்லை.

From Afghanistan to Syria

Women’s Rights, War Propaganda and the CIA

(By Julie Lévesque) (Global Research, April 04, 2013)

Women’s rights are increasingly heralded as a useful propaganda device to further imperial designs. Western heads of state, UN officials and military spokespersons will invariably praise the humanitarian dimension of the October 2001 US-NATO led invasion of Afghanistan, which allegedly was to fight religious fundamentalists, help little girls go to school, liberate women subjected to the yoke of the Taliban. The logic of such a humanitarian dimension of the Afghan war is questionable. Lest we forget, Al Qaeda and the Taliban were supported from the very outset of the Soviet-Afghan war by the US, as part of a CIA led covert operation. (more....)

'முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது'

முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் என்ற சந்தேகம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ். சுபைர் தெரிவித்தார். இதனாலே யே பொது பல சேனா போன்ற அமுக்கக் குழுக்களை பயன்படுத்தி, இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்கு இந்த அரசாங்கம் முனைகிறது என அவர் குறிப்பிட்டார். "நாட்டில் தமிழர்கள் ஆயுதம் ஏந்தி போராடியது போன்று முஸ்லிம்களும் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் என்ற சந்தேகம் முஸ்லிம்கள் மீது அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவே பொது பல சேனா போன்ற அமுக்கக் குழுக்களை பயன்படுத்தி அவ்வாறான சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வதற்காக இந்த அரசாங்கம் முனைகிறது. அரசாங்கத்துடன் முஸ்லிம் சமூகம் அந்நியொன்னியத்துடன் இருந்து வருகின்ற இந்த நிலையில், அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்டுள்ள இந்த சந்தேகம் மிகவும் ஆபத்தானதாகும். இதனால் நாட்டில் இன முறுகல் ஏற்படக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. இந்த முஸ்லிம் சமூகத்தின் மீது இவ்வாறான சந்தேகங்கள் ஏற்பட்டால் அரசாங்கம் நேரடியாக முஸ்லிம் சமூக தலைவர்கள் மற்றும் உலமாக்களை சந்தித்து சந்தேகங்களை நிபர்த்தி செய்துகொள்ளலாம்.

May Day 2013 message from the Communist Party of Canada

On May Day, the International Workers' Day, the Communist Party of Canada extends warmest solidarity to all those in struggle against capitalist austerity and war.The systemic crisis of capitalism in Canada and internationally continues to deepen, reflected in ever‑widening social disparity, intensified economic and social attacks against the people, fresh assaults on labour and democratic rights, the further degradation of the national and global environment, and increasing militarism, aggression and war. The austerity policies pursued by ruling circles in the leading imperialist states, including Canada, to resuscitate economic activity and profits on the backs of the working class and working people in general, have failed miserably. The economies of the U.S., Europe and Japan ‑ the "tripod" epicentre of this global crisis ‑ remain stagnant or in decline. The crisis and the intense, all‑sided offensive launched by the ruling class are exacting a heavy economic, social, cultural physical, psychological and environmental cost on all humanity. (more.....)

சித்திரை 28, 2013

த.தே. கூட்டமைப்பு எம்பி சரவணபவனின்

சப்றா பினான்ஸ்' நிதி நிறுவன மோசடி குறித்து விசாரிக்க அரசாங்கம் முடிவு?

1980களில் யாழ்ப்பாணத்தில் செயல்பட்ட 'சப்றா பினான்ஸ்' நிதி நிறுவனத்தில் நடைபெற்ற பெரும் மோசடிகள் குறித்து அரசாங்கம் விசாரணைகளை நடாத்தத் தீர்மானித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இந்த நிறுவனம் அந்த நேரத்தில் அறிவித்த வட்டி வீதங்களால் கவரப்பட்ட வட பகுதி மக்கள் தமது கோடிக்கான பணத்தை இந்த நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்தனர். அவர்களில் பலதரப்பட்ட மக்கள், அதாவது தமது பிற்கால சீவியத்துக்கென பணத்தைச் சேமித்து வைத்திருந்தோர், பிள்ளைகளின் திருமணத்துக்காக பணம் வைத்திருந்தோர், காணி பூமிகளை விற்றுப் பணம் வைத்திருந்தோர் என பல வகையினர் அடங்கியிருந்தனர். (மேலும்...)

கனேடிய தமிழ் காங்கிரஸ் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது, ராதிகா சிற்சபேசன், புலிகளின் ஆதரவாளர் - திவயின

பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாடு இலங்கையில் நடைபெறுவதை தடுக்க கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் ஆகியோர் ஆதரவு வழங்கி வருவதாக தெரிய வந்துள்ளது என திவயின கூறியுள்ளது. கனேடிய தமிழ் காங்கிரஸ் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும் ராதிகா சிற்சபேசன், புலிகளின் ஆதரவாளர் எனவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. அவர்களுடன் இலங்கைக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ள லிபரல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேப்ரோவும் இணைந்துள்ளார். இதனை தவிர செனல் 4 தொலைக்காட்சியினால் தயாரிக்கப்பட்ட நோ பைர் ஷோன் திரைப்படத்தின் இயக்குனர் கெல்லம் மெக்ரேவும் கனேடிய பிரதமரின் முயற்சிக்கு உதவியுள்ளார். அவர் இந்த திரைப்படத்தை பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கு அனுப்பி வைத்து, மாநாடு இலங்கையில் நடைபெறுவதை நிறுத்துமாறு கோரியுள்ளதாகவும் திவயின தெரிவித்துள்ளது.

மே மாத நிகழ்வு- ( 04- மே-2013 ) மாலை 4.மணி

இந்த நிகழ்வில் கல்வியலாளர், ஆய்வாளர், படைப்பாளரான, ராஜ்கௌதமன் உரையாற்றவுள்ளார்.
தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.

 ஆய்வுகள்:
• க.அயோத்திதாசர் 
• பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும்
• ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
• தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு,
• அறம் அதிகாரம்
• அ.மாதவையா
• தலித்திய விமர்சனக் கட்டுரைகள்
• வடலூர் ராமலிங்கம்
படைப்புகள்
• சிலுவைராஜ் சரித்திரம்
• காலச்சுமை
• லண்டனில் சிலுவைராஜ்
உட்பட முப்பதற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.அவரது உரையை அடுத்து விரிவான கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
• நிகழ்வு புதிய இடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்பதனை கவனத்தில் கொள்ளவும். மேலதிக தகவல்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும்!
The London Tamil Sangam
369, High Street North,
Manor Park, London, E12 6PG
அனைவரையும் அழைக்கிறோம்.

சவுதியில் செத்து மடியும் தமிழர்கள்!

''சார், நான் ஆத்தூரில் இருந்து பேசுறேன். என் வீட்டுக்காரர் பேரு தங்கவேலு. நாலு வருஷத்துக்கு முன்னால சவுதிக்கு வேலைக்குப் போனார். அங்க சொன்னபடி சம்பளம் தரலை. அங்கிருந்து திரும்பி வரவும் முடியலை. ஏதோ ஆபத்துல மாட்டிக்கிட்டார். ரகசியமா போன் செஞ்சு 'இனி நான் உங்களைப் பார்க்க முடியாது’னு சொல்லி அழுறார். நான் இரண்டு குழந்தைகளை வச்சுக்​கிட்டு கஷ்டப்படுறேன். என்ன செய்றதுன்னே தெரியலை. நீங்கதான் உதவி செய்யணும்'' என்று, நமது ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66802929) போன் செய்து அழுதது அந்தப் பெண் குரல்.  (மேலும்...)

ரணிலின் பொறுப்பற்ற செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

வடக்கில் மீள் குடியேற்றம், வீடமைப்பு, வாழ்வாதாரம், வேலை வாய்ப்பு போன்ற நற்பணிகள் புரியும் இராணுவத்தினர் மீது எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்துவது தவறு. அவரது இக் கருத்துக்களை வட பகுதி மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற வேண்டுமென்று எதிர்க்கட்சித் தலைவர் பகிரங்கமாக அறிவிப்பது நல்லது. ஆனால் அதனை சரிவர நிறைவேற்றுவதற்கு அவரோ அல்லது அவரது கட்சியோ உருப்படியான எந்தவொரு ஒத்துழைப்பையும் அரசுக்கு இதுவரை வழங்கவில்லை. (மேலும்...)

சிவாஜிலிங்கத்தின் சின்னத்தனம்!

(ஊரிக்காட்டான்)

தனது தவறான நடைமுறைகளால் இந்தியாவுக்குச் செல்ல முடியாமல் சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்பட்ட சிவாஜிலிங்கம், தற்போது இலங்கையில் செய்து வரும் குளறுபடியான வேலைகளால், கிழக்கு மாகாணத்துக்கும், முஸ்லீம் பகுதிகளுக்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழரசுக் கட்சியின் ஆயுட்காலத் தலைவராக இருந்த சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகத்தின் நினைவு தினம் நேற்று முன்தினம் யாழ் நகரில் கொண்டாடப்பட்ட பொழுது, அதில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்வதற்கு சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தார். (மேலும்...)

சித்திரை 27, 2013

வடமாகாணசபைத் தேர்தல்

ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, விண்ணப்பங்களைக் கோரவுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 19 பேரையும் மன்னார் மாவட்டத்துக்கு 8பேரும் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 8 பேரும் வவுனியா மாவட்டத்துக்கு 9 பேரும் கிளிநொச்சி மாவட்டத்துக்கு 7 பேருமாக மொத்தம் 51 பேர் கட்சியால் தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்நிலையில், முதன்முறையாக வட மாகாணசபை நிறுவப்படவுள்ளது. முன்னர் வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணசபை இயங்கிய நிலையில் அது நீதிமன்ற உத்தரவின் பேரில் பிரிக்கப்பட்டது. மொத்தமாக நியமன உறுப்பினர்கள் உட்பட 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட இருக்கின்றார்கள். அரசியல் சாசன விதிகளின்படி வட மாகாணசபைத் தேர்தலை நடத்த ஜனாதிபதியினால் தேர்தல் நிறைவேற்று அதிகாரிக்கு அரச கட்டளை பிறப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் அவுஸ்திரேலியா கலந்துகொள்ளும்

இலங்கை மீது முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை கருத்தில்கொண்டு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வை புறக்கணிக்கப்போவதில்லையென அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பொப் கார் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கருத்து தெரிவிக்கும் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் கலந்துகொள்வதில் தான் சௌகரியமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். கனடாவைத் தவிர 55 பொதுநலவாய உறுப்பு நாடுகளில் அனைத்தும் இதில் பங்குபற்றுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிராக  ஐக்கிய நாடுகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களித்தாகவும், தற்போது அமர்வை புறக்கணிப்பதானது வேண்டத்தகாத விளைவை ஏற்படுத்துவதுடன் இலங்கையை தனிமைப்படுத்துமெனவும் பொப் கார் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தம் மற்றும் திருப்பி அனுப்பப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலும் பொப் கார் இதன் போது கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கை மீதான முதலீடுகளை அதிகரிக்கவுள்ள சீனா

சீனா, இலங்கை இடையிலான வர்த்தக தொடர்புகள் மற்றும் முதலீடுகளை மேலும் அதிகரிக்க போவதாக  சீனாவின் வர்த்தகத்துறை பிரதியமைச்சர் சென் ஜியாங் தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் அதிகரிப்பதற்காக சீனா இரண்டு துறைகள் குறித்து கவனம் செலுத்த எண்ணியுள்ளதாகவும்  இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்கும் அதேவேளை,  வர்த்தக பற்றாக்குறையை போக்க இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சீனா வழங்கி வரும் உதவிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்ட ஜனாதிபதி, சீனாவின் ஒத்துழைப்புடன் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நிர்மாணிப்புகளை இலங்கை மக்கள் நினைவில் வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

பொது மக்கள் மற்றும்  முன்னாள் புலிப் போராளிகளாக இருந்து புனர்வாழ்வு பெற்றவர்களையும் அணுகி வேலை பெற்றுத்தருவதாகவும், வாகனங்களை வட்டியில்லாக் கடனுக்கு பெற்றுத் தருவதாகவும் கூறி பலரிடம் மோசடி செய்து வந்த நபர் ஒருவர் அவரால் பாதிக்கப்பட்டவர்களினால் பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தாவடிப் பகுதயில் இவ்வாறு ஏமாற்றி புனர் வாழ்வு பெற்றவந்த முன்னாள் போராளிகள் மற்றும்  பொது மக்களிடம்  வேலை பெற்ற தருவதாகவும் வாகனம் பெற்றுத் தருவதாகவும் கூறியதுடன் முப்பதாயிரம் ரூபா முதல் ஐம்பதாயிரம் ரூபா வரையில் வங்கி இலக்கம் ஒன்றைக்கொடுத்து  வங்கியில் பணத்தை வைப்பிடுங்கள்  எனக்கூறி பணத்தை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். நேற்று பகல் குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் பகுதயில் நிற்பதைக் கண்ட பாதிக்கப்பட்ட இளைஞர்கள் குறித்த இளைஞரை பிடித்து கிராம அலுவலரிடம் ஒப்படைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞரிடம் இருந்து பல கையடக்கத் தொலைபேசிகள், சிம்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நவலோகாவிலிருந்து வெளியேறிய துமிந்த அலரி மாளிகையில்

கொழும்பு நவலோகா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, சற்று முன்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார். இவ்வாறு வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய அவர், முதன் முதலாக அலரி மாளிகைக்குச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் 11.25 மணிக்கு இருந்த நல்ல நேரத்தில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய துமிந்த சில்வாவை வரவேற்பதற்காக சுமார் மூவாயரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நவலோகா வைத்தியசாலையில் மலர் மாலைகளுடன் கூடி நின்று பட்டாசு கொளுத்தி அவரை வரவேற்றனர். பலத்த பொலிஸ் மற்றும் பிரத்தியேக பாதுகாப்புக்கு மத்தியில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய துமிந்த, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆசிர்வாதம் பெறுவதற்காக அலரி மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கில் பாதுகாப்பு தேவைக்காக காணி சுவீகரிக்கப்படவில்லை - ரணில்

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தேவைக்காக காணி அபகரிப்புப்படவில்லை மோசடி செய்வதற்கே சுவிகரிக்கப்படுகின்றது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இது தொடர்பில் கவனம் செலுத்தும் என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 'ஜெனீவா கூட்டத்தொடரின் போது, வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை உடனடியாக மீள்குடியேற்றம் செய்யுமாறு இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டது. அதற்கு இணக்கம் தெரிவித்த அரசாங்கம், விரைவில் மீள்குடியேற்றம் செய்வதாக வாக்குறுதியளித்தது. ஆனால் அரசாங்கம் இதுவரை அதனைச் செய்யவில்லை. இந்த வாக்குறுதியை மீறினால் அரசாங்கத்திற்கு மேலும் ஒரு நெருக்கடி ஏற்படும்' என்றார். 'யாழ்ப்பாணத்தில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் சீமேந்து தொழிற்சாலை அமைப்பதற்காக காணி சுவிகரிக்கப்படுகின்றது என்று சொல்கின்றார்கள். இத்தனை ஏக்கர் காணியை அம்பாந்தோட்டையில் அரசாங்கத்தினால் சுவிகரிக்க முடியுமா?' என்று கேள்வி எழுப்பினார். 'வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழ் மக்களின் காணிகள் சுவிகரிக்கப்படுவதாக சொல்லப்படுகின்றது. உண்மையில் எந்தவிதமான பாதுகாப்பு காரணங்களுக்காகவும் காணிகள் சுவிகரிக்கப்படவில்லை. இந்த அரசாங்கம் மோசடி செய்வதற்கே இந்த காணிகளை சுவிகரித்துள்ளது' என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை

பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தும் முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. லண்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, பொதுநலவாய அமைப்பின் தலைமைச் செயலாளர் கமலேஷ் ஷர்மா இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளார். 2013ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்த நிலையிலேயே தமது முடிவில் மாற்றமில்லை என்று பொதுநலவாய அமைப்பின் செயலகம் அறிவித்துள்ளது. பொதுநலவாய மாநாடு நடத்தப்படும் இடத்தை இலங்கையிலிருந்து மாற்றுமாறு வலியுறுத்தி லண்டனிலுள்ள புலம்பெயர் தமிழர்கள், பொதுநலவாய அமைப்பின்  செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது. பொதுநலவாய அமைப்பின் 23ஆவது மாநாடு, இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 15 திகதி முதல் 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (பிபிசி)

ஆஸி. வரும் இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படுவர்

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியாவுக்கு பிரவேசிக்கும் இலங்கையர்களுக்கு அகதி அந்தஸ்துக்கான தகமைகள் இல்லாவிடின் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அகதிகளாக அவுஸ்திரேலியா வருவோர், குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளால் விசாரணை செய்யப்படும் போது அகதிகளுக்கான விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுடையவர்கள் இல்லையெனின் திருப்பி அனுப்பப்படுவர் என்று அவுஸ்திரேலிய குடியுரிமை அமைச்சர் ப்ரெண்டன் ஓ கோனர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, '25 அகதிகளைக் கொண்ட ஒரு குழு மிக அண்மையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக' சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களது தகுதியின்மை குறித்து அறிவித்தும் அகதி விதிமுறைகளுக்கமைய அவர்களுக்கு புகலிடம் கோரும் தகுதி இருக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இங்கிருக்க அவர்களுக்கு விசாவும் இல்லை என்று சுட்டிக்காட்டியுள்ள கோனர், கடந்த வருடம் ஓகஸ்ட் முதல் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டோர் எண்ணிக்கை 1029 ஆகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இவர்களில் 89பேர் அவர்களின் சுயவிருப்பின் பேரில் சென்றனர்.

தமிழ் மக்கள் மீண்டும் போர் ஒன்றில் ஈடுபட நேரிடலாம் - அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர்

ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசவைக் கூட கொலை செய்த விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா அனைத்து வகையிலும் உதவியது. அமெரிக்காவும் பயங்கரவாதத்தை எதிர்நோக்கியுள்ள நாடு என்ற வகையில், பயங்கரவாதம் காரணமாக நாட்டில், சமூகத்தில் ஏற்படக் கூடிய பாதிப்புகளை நன்கு அறிந்துள்ளது. விடுதலைப்புலிகளை சர்வதேச ரீதியாக தடைசெய்யும் வேலைத்திட்டத்தின் அதிகளவான பங்களை அமெரிக்காவே வகித்தது. இந்த தடைக்காரணமாக விடுதலைப் புலிகளின் சர்வதேச ரீதியிலான உதவிகள் கிடைக்கும் வலையமைப்பை முடக்கவும் அதனை முடிவுக்கு கொண்டு வரவும் முடிந்தது. புலிகள் அமைப்பு இன்னும் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். (மேலும்...)

கடல் எல்லை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

சர்வதேச கடல் எல்லை குறித்து இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான 22ம் சர்வதேச கடல் எல்லை மாநாடே நடைபெறவுள்ளது. போதைப் பொருள் கடத்தல், மீனவர் பிரச்சினை போன்ற விடயங்கள் தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தையின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது. வட மாகாண கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரால் ஷிராந்த உடவத்த தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், தமிழக கடற்படை கட்டளைத் தளபதி ஏ.கே. மாதவன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இரு நாடுகளினதும் கடற்படையினருக்கு இடையில் வருடத்தில் இரண்டு தடவைகள் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது வழமையாகும். இதேவேளை, கேரள கஞ்சாவைக் கடத்திய நான்கு இந்தியர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வட கடற் பரப்பில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் இவர்களுடன் இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீரவன்சவின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி செவிசாய்த்தால் போர்க்கொடி தூக்குவோம் - திஸ்ஸவிதாரண

வடமாகாண சபை தேர்தல் தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களின் நிலைப்பாட்டிற்கு அரசாங்கம் முக்கியத்துவம் அளித்தால் ஆளும் கட்சியின் உள்ள இடதுசாரிகள் போர்க்கொடி தூக்குவோம். 13 ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க கூடாது என்பதனை ஜனாதிபதியிடம் கண்டிப்பாகவே கூறியுள்ளோம் என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். வடக்கில் காணிகள், உரிமைகள் உள்ளவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். மக்கள் காணிகளில் இராணுவம் நிலை கொண்டிருப்பதும் அரச காணிகளில் பொதுமக்கள் இருப்பதும் அனுமதிக்க முடியாது. எவ்வாறாயினும் நிலையான தீர்வொன்றிற்காக அனைத்து தரப்புகளும் விட்டுக் கொடுப்புடன் செயற்படுவதே முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். நிரந்தர அரசியல் தீர்வொன்றிற்காக சகல தரப்பினரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டியது கட்டாயமாகும். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் கிடைக்கப் பெற்ற சந்தர்ப்பங்கள் வீணடிக்கப்பட்டு விடும். ஆளும் கட்சியில் உள்ள இடதுசாரி கொள்கையுடையவர்கள் என்ற வகையில் எமது நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கு மிக தெளிவாக கூறியுள்ளோம். குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்வதோ அதிகாரங்களை குறைப்பதோ இடம்பெறக் கூடாது என்பதை கண்டிப்பாக வலியுறுத்தியுள்ளோம்.

சித்திரை 26, 2013

அரசியலில் சூழ்நிலைக் கைதியாக உள்ளேன் - ஹக்கீம்

'அரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாங்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்க வேண்டும். நாங்கள் தனித்துவமாக முடிவினை எடுக்கும் காலம் வரும். அக்காலம் வருவதற்கு நீண்ட காலம் எடுக்காது' என்று நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நீதி அமைச்சர், யாழில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (மேலும்...)
 

வட மாகாணசபைத் தேர்தல் நடந்தால் தான் உண்மை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வட மாகாண சபைக்கான தேர்தலை அடுத்த செப்டெம்பர் மாதம் நடத்துவதாக ஜனதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஒருமுறை கூறியிருக்கிறார். கடந்த வார இறுதியில் வெலிஒயாவில் விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியிருக்கிறார். ஆனால் வட மாகாண சபை தேர்தல் விடயத்தில் அரசாங்கம் இது கால வரை காட்டிய அச்சத்தை பார்க்கும் போது உண்மையிலேயே அரசாங்கம் செப்டெம்பர் மாதத்தில் அத் தேர்தலை நடத்துமா என்பது இன்னமும் சந்தேகமாகவே இருக்கிறது.(மேலும்...)

எல்லைக்குள் ஊடுருவிய படைகளை வாபஸ் பெற சீனா திடீர் நிபந்தனை

இந்தியாவுக்குள் ஊடுருவிய இராணுவத்தை வாபஸ் பெற வேண்டுமானால், எல்லையில் புதிதாக கட்டியுள்ள இந்திய இராணுவ அரண்களை இடிக்க வேண்டும் என்று சீனா நிபந்தனை வித்திதுள்ளது. இந்தியா இதை ஏற்க மறுத்து மேலும் படைகளை குவித்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் இந்தியா வர திட்டமிட்டுள்ள சீன பிரதமரின் வருகை ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காஷ்மீரில் லடாக் பகுதியில் கடந்த 15ம் திகதி இரவு இந்திய எல்லைக்குள் சீன இராணுவத்தினர் 10 கி.மீ. தூரம் ஊடுருவியதுடன் கூடாரம் அமைந்துள்ளனர். இது குறித்து அறிந்தவுடன் சீனாவின் கவனத்துக்கு மத்திய அரசு கொண்டு சென்று எல்லையில் இருதரப்பு இராணுவத்தினரும் பேச்சு நடத்தி வருகின்றனர். தூதரக அளவிலும் பேச்சுக்கள் நடக்கிறது. ஊடுருவலுக்கு முன்பிருந்த நிலைக்கு சீன வீரர்கள் திரும்ப வேண்டும் என்று இந்தியா கூறுகிறது. ஆனால் ஊடுருவலே இல்லை என்றும் எல்லைப் பகுதியில் தங்கள் வீரர்கள் ரோந்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சீனா கூறுகிறது. (மேலும்...)

Who is Behind "Al Qaeda in Iran"?

(By Tony Cartalucci)

Global Research, April 23, 2013

As the FBI reels from what now appears to be revelations it was directly involved in the Boston Marathon bombings, a deluge of FBI "success" stories have been "serendipitously" splashed across Western headlines. Among them was an allegedly "foiled" terror attack in Canada, reported to be the work of terrorists supported by "Al-Qaeda operatives in Iran." The Globe and Mail, in its report, "Canada joins U.S. in alleging al-Qaeda has operatives based in Iran," states: "To many, it came as a surprise that the RCMP is alleging that two terror suspects arrested in Canada on Monday were supported by al-Qaeda operatives in Iran. (more.....)

மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற குற்றச்சாட்டு

காத்தான்குடி நகர சபை உறுப்பினரை கைது செய்ய மட்டு. நீதிமன்றம் உத்தரவு

மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் காத்தான்குடி நகர சபை உறுப்பினரை கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி நேற்று முன்தினம் புதன்கிழமை காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். காத்தான்குடி நகர சபையின் ஆளும் தரப்பு உறுப்பினர் ஒருவர் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றதாக ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸார் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் குறித்த நகர சபை உறுப்பினருக்கு எதிராக நேற்று முன்தினம் புதன்கிழமை வழக்கொன்றை தாக்கல் செய்தனர். விசாரணைகளை தொடர்ந்து இந்த வழக்கை (மே மாதம்) அடுத்த மாதம்7ம் திகதி வரை ஒத்திவைத்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழக்கில் சந்தேக நபரான காத்தான்குடி நகர சபை உறுப்பினரை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

ஸ்பெயினில் 60 இலட்சம் பேருக்கு வேலையில்லை

ஸ்பெயினில் வேலையில்லா திண்டாட்ட வீதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அங்குள்ள வேலை செய்யக்கூடியவர் களில் 27 வீதத்தினர் அதாவது 60 இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். இந்த விபரங்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கு உரியவையாகும். 5 வருடங்களுக்கு முன்னதாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஸ்பெயினின் பொருளாதாரம் தடுமாறுகிறது என்பதனையே இது காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள். அங்கு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து கடுமையான கோபம் காணப்படுகிறது. அந்த சிக்கன நடவடிக்கைகள்தான் நிலைமையை மேலும் மோசமாக்கியதாக அதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள். வியாழனன்று பிற்பகல் ஸ்பெயின் நாட்டு பாராளுமன்றத்துக்கு முன்பாக அரசுக்கெதிராக பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குடும்பத்தில் ஒரு பைக், காரை தவிர கூடுதல் வாகனம் வாங்கினால் வரி - கேரள அரசு

ஒரு குடும்பத்தில் ஒரு பைக், ஒரு காரை தவிர மேலும் ஒரு வாகனம் வாங்கினால் கூடுதல் வரி விதிக்க கேரள அரசு பரிசீலித்து வருகிறது. திருவனந்தபுரத்தில் இளைஞர் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேரள முதல்வர் உம்மன்சாண்டி பேசியதாவது, கேரளாவில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே, வாகன பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. பெரும்பாலான குடும்பங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்துகின்றனர். இது அவசியமில்லாதது. எனவே, ஒரு வீட்டில் ஒரு இரு சக்கர வாகனமும், ஒரு காரும் இருந்தால் கூடுதலாக வாகனம் வாங்குவதை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேலும் ஒரு வாகனம் வாங்குபவர்களுக்கு கூடுதல் வரி விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சவுதி அரேபியாவில் சமீபத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தால் இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை செய்வதற்காக விரைவில் மத்திய அமைச்சர்கள் சவுதி அரேபியா செல்ல உள்ளனர். இக்குழுவில் கேரளாவை சேர்ந்த அமைச்சரும் செல்கிறார். இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.

சித்திரை 25, 2013

கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . (பாகம் 4)

(ஈழத்திலிருந்து நல்லையா குலத்துங்கன்)

இக்கடிதத்தை வரையும் போது உள்ளம் குதூகலத்தால் நிரம்பி வழியவில்லை. மாறாக கண்களில் நீர் தேங்கியுள்ளது. ஏன் என்கிறீர்களா ? என் உடன் பிறந்த தாய்மண் உறவுகளுக்காக தொப்புள் கொடி உறவுகளாகிய நீங்கள் காட்டும் பரிவினைக் கடிந்து கொள்ளும் நிலை எனக்கு ஏற்பட்டுள்ளதே எனும் ஏக்கமே அதற்குக் காரணம். ஆனால் அநீதியைக் கண்டு மெளனித்திருப்பது அவ்வநீதிக்குத் துணை போவதற்குச் சமனாகும் எனும் ஒரே ஆதங்கம் தான் இக்கடிதத்தை எழுதுவதற்கு என்னைத் தூண்டும் உள்ளுணர்வாகும். (மேலும்...)

ஆபாசத் தளங்களைவிட மோசமான செய்தித் தளங்கள்!

(எஸ்.ஹமீத்)

செய்தித் தளங்கள் என்ற பெயரில் வலம் வரும் சில இணையத் தளங்கள் இன்று ஆபாசம் நிறைந்த காமத் தளங்களை விடக் கேவலமாக மாறி வருவது வேதனையளிக்கிறது. அரசியல், நாட்டு நடப்புகள், சமூக முன்னேற்றக் கட்டுரைகள், வரலாறுகள், தமிழ் உரிமைக்கான குரல்கள் சார்ந்த ஆக்கங்கள் எனத் தரமான விடயங்களைத் தருகின்ற இந்த இணையத் தளங்களிற் சில, ஆபாசம் மிக்கதும் அருவருப்பானதுமான பின்னூட்டங்களை வெளியிட்டு வருவது கண்டனத்திற்குரியதாகும். வாசகர்களின் பின்னூட்டங்களைத் தணிக்கை செய்யாமல் அப்படியே வெளியிடும் இந்த இணையத் தளங்கள் அதன் தரமான நல்ல வாசகர்களையும் தான் சார்ந்த தமிழ்ச் சமூகத்தையும் வெட்கித் தலை குனிய வைப்பதை முதலில் உணர வேண்டும். (மேலும்...)

வட மாகாண தேர்தலில் ஐ.தே.க போட்டியிடும்

வடமாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 'அரசாங்கம் உடைத்து உடைத்து தேர்தலை நடத்தினால் இலக்கை அடைந்து விட முடியாது. அவ்வாறு உடைத்து உடைத்து 8 மாகாணங்களில் தேர்தலை நடத்தி விட்டது. மீதியாக இருப்பது வடக்கு தேர்தல் மாத்திரமே. இந்த வட மாகாணசபைத் தேர்தலை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். வடக்கு மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு முன் சுதந்திர ஆணைக்குழுக்களை நியமிக்க வேண்டும். வடக்கில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். வடக்கில் சுதந்திரமான ஒரு தேர்தலை அரசாங்கம் நடாத்த வேண்டுமென்றும், இ;த் தேர்தலை நடாத்தவதற்கு முன் குறிப்பாக, தேர்தலை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பகம் இலங்கைக்கு கொண்டு வரவேண்டும்.  வடக்கில் நிலவுகின்ற காணி சுவீகரிப்பு மற்றும் ஏனைய விடயங்களுக்கான தீர்வினை பெற்றுகொண்டே வடக்கை விட்டு வெளியேறுவேன். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட வேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அத்துடன், யாழில் 4 நாட்கள் இருப்பேன். இந்த நாட்களில் யாழில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிடவுள்ளேன். அதற்குப் பின்னர், இவ்வாறான விடயங்களுக்கான தீர்வினை பெற்றுத் தந்துவிட்டே வடக்கை விட்டு வெளியேறுவேன்' என்று உறுதியளித்தார்.

சூரிச் மாநகரில் மாபெரும் மேதின ஊர்வலம்

தோழமை உணர்வுள்ள சுவிஸ்  வாழ்  தமிழ்மக்களே! கழகத்தோழர்களே! தோழமைக்கட்சி உறுப்பினர்களே! ஆதரவாளர்களே!
சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில் 2013 மே முதலாம் திகதி சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் கலந்து கொள்ளும் தொழிலாளர் தினத்தில் பேதங்கள் இன்றி நாமும் கலந்துகொண்டு, இலங்கை தாயகத்தில் தமிழினத்தின் ஜனநாயக அரசியல் தீர்வை அரசு அங்கீகரிக்க சர்வதேசம் தனது நியாயமான பங்களிப்பை செய்யக்கோரி குரல் கொடுத்து எமதின உரிமைப் போராட்டத்தை ஜனநாயக வழியில் உறுதியான வெற்றிக்கு இட்டுச்செல்ல வலுச்சேர்ப்போமாக.   

எம் ஒவ்வொருவரையும் இந்த போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயக் கடமையில்  உள்ளோமென்பதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம், அந்தவகையில் கடைமையுணர்வுள்ள ஒவ்வொரு தமிழரும் தம்மாலியன்ற பங்களிப்பினை செய்ய வேண்டும் என  த.ம.வி.கழகம் தோழமையுடன் கேட்டுக் கொள்ளும்; அதேவேளையில், மக்களின் விடுதலைக்கு தோள் கொடுக்க விரும்பும் அனைவரையும் இவ்மேதின ஊர்வலத்திற்கு தோழமையுடன் அழைக்கின்றோம்.
 
இம்முறை மேதின ஊர்வலமானது சூரிச் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள Sihl Post (LagerStrasse)ல் இருந்து காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி BürkliPlatz (Bellevue) யில் முடிவடையும்!!!

மனித இனம் பெருகிக்கொண்டே நவீனமயப்படுகிறது அடக்குமுறையும் நவீன முறையில் பெருகிக்கொண்டேயிருக்கிறது.
 
அனைத்து அதிகாரங்களும்  உழைக்கும் மக்களுக்கே.!
 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ((P.L.O.T.E)  
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) 
சுவிஸ்கிளை

 
தொடர்புகொள்ள: 079 956 70 82, 079 624 90 04, 076 583 84 10, 077 948 52 14

கிழக்கு மாகாண அமைச்சர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு

கிழக்கு மாகாண அமைச்சர்களின் பிரத்தியோக உத்தியோகத்தர்களுக்கு விசேட பிராயாண கொடுப்பனவு வழங்க மாகாண அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதனால் முதலமைச்சர் மற்றும அமைச்சர்களின் பிரத்தியோகச் செயலாளர்கள், இணைப்புச் செயலாளர்கள், பொதுசன தொடர்பு அதிகாரிகள் மற்றும் பிரத்தியோக உதவியாளர் ஆகியோருக்கே இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இவர்களுக்கு விசேட பிராயாண கொடுப்பனவாக மாதாந்தம் 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கே மாகாண அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தலைமையில் அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ள என மாகாண அமைச்சரைவ பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். இதேவேளை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மேலதிகமாக மாதாந்தம் 45,000 ரூபா வழங்குவதற்கு அண்மையில் மாகாண அமைச்சரைவ அங்கீகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகை குண்டு வெடிப்பில் ஒபாமா காயம்: உலகை அதிரவைத்த டுவிட்!

வெள்ளை மாளிகையில் இரண்டு குண்டு வெடிப்புகள், ஒபாமா காயம் என்ற செய்தியை டுவிட்டரில் பார்வையிட்ட பலர் நேற்று  அதிர்ந்துதான் போய்விட்டனர். ஆம்,  AP (Associated Press) ஊடக நிறுவனத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கிலிருந்தே இச் செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இது உலகம் பூராகவும் பெரும் பரபரப்பை இச்செய்தி ஏற்படுத்தியிருந்தது. எனினும் ஹெக்கர்களின் கைவரிசையே இச் செய்தி என்பது பின்னர் தெரியவந்தது. பின்னர் இச்செய்தி பொய்யானது என ஏ.பி. அறிவித்தது. எனினும் ஹெக்செய்யப்பட்ட தனது டுவிட்டர் கணக்கினை தடைசெய்வதாக ஏ.பி. அறிவித்துள்ளது. இதேவேளை ஹெக்கிங் நடைபெறுவதற்கு முன்னர் ஏ.பி. பணியாளர்கள் சிலருக்கு பிஸிங் எனப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய  மின்னஞ்சல்களும் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் ஹெக்கிங் நடவடிக்கைக்கு சிரிய நாட்டைச் சேர்ந்த Syrian Electronic Army என்ற அமைப்பு உரிமைகோரியுள்ளது. இவ் அமைப்பு சிரிய ஜனாதிபதி பஷார் அல்- அசாத்துக்கு ஆதரவானதென தெரிவிக்கப்படுகின்றது. இதே குழுவே சி.பி.எஸ் செய்திச் சேவையின் டுவிட்டர் கணக்கினை கடந்த வாரம் ஹெக் செய்திருந்தது. தற்போது ஏ.பி. யை குறிவைத்து போலியான செய்தியையும் பரப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சின்ஜியாங்கில் மோதல், 21 பேர் பலி

சீனாவின் பதற்றம் மிகுந்த மாநிலமான சின்ஜியாங்கில் இடம்பெற்ற மோதலில் 15 பொலிஸார் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனர். பொலிஸார் வீடுவீடாக ஆயுதங்களை தேடி சோதனையில் ஈடுபட்ட போது கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் மோதல் வெடித்தது. இதில் ஆயுத கும்பலைச் சேர்ந்த 6 உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக சீன அரசு குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த மோதல் தொடர்பிலான விரிவான விபரம் எதுவும் வெளியிடப்படவில்லை. சின்ஜியாங் மாநிலத்தில் உய்குர் முஸ்லிம்களுக்கும் சீன சமுகத்திற்கும் இடையில் ஒரு சில ஆண்டுகளாக பதற்றம் நீடித்து வருகிறது. இங்கு 2009 ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். சின்ஜியாங் மாநிலத்தில் செய்தி சேகரிப்பதில் சர்வதேச ஊடக வியலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாக பி.பி.சிக்கான சீன செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று உள்ளூர் செய்திச் சேவைகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பொஸ்டன் குண்டுவெடிப்பு சந்தேக நபர்களின் விபரம் அறிய அமெரிக்க அதிகாரிகள் டஜஸ்தான் பயணம்

பொஸ்டன் மரதன் குண்டுத் தாக்குதல் சந்தேக நபர்களான இரு சகோதரர்களினதும் பெற்றோரிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். ரஷ்யாவின் டஜஸ்தான் பிராந்தியத்திற்கு சென்றே அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. சந்தேக நபர்களான சொகர் சர்னெவ் மற்றும் தமர்லன் சர்னெவ் ஆகியோர் அமெரிக்காவுக்கு புலம்பெயரும் முன்னர் டஜஸ்தான் பிராந்தியத்திலேயே வாழ்ந்து வந்தனர். இதில் பொலிஸாருடனான துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்ட தமர்லன் கடந்த 2012 இல் அங்கு சென்று நீண்ட காலம் தங்கி இருந்துள்ளார். இந்நிலையில் குண்டு தாக்குதல் தொடர்பில் மேலும் தகவல்களை திரட்டும் நோக்கில் டஜஸ்தான் பிராந்தியத்திற்கு அமெரிக்க அதிகாரிகள் சென்று விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இதில் சந்தேக நபர்கள் கடும்போக்கு கொள்கைகளை பின்பற்றியதற்கான ஆதராங்கள் மற்றும் தொடர்புகளை திரட்ட அமெரிக்க அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். (மேலும்...)

திருப்பிக் கட்டமுடியுமா?

(ஞாநி)

மண்ணில் விழுந்தால் மறுபடி விதையாக முளைப்போம் என்பது கண்ணி வெடிக்குப் பொருந்தாது. மண்ணில் நடப்போரை சவமாக ஆக்கும் விதை அது. மொத்தம் 640 கிராமங்கள் கண்ணிவெடிகளால் வீணாக்கப்பட்டு கிடக்கின்றன.முப்பது வருடங்களில் கண்ணி வெடிகளால் மட்டும் சுமார் 20 ஆயிரம் சிங்கள ராணுவத்தினரும்,  12 ஆயிரம் விடுதலைப்புலிகளும் பாதிக்கப்பட்டதாக ஒரு கணக்கு சொல்கிறது. . கடந்த 4 வருடங்களில் மட்டும் சுமார் 900 கோடி இலங்கைப் பணம் ( சுமார் 400 கோடி இந்திய ரூபாய்) கண்ணி வெடி அகற்ற செலவிடப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இன்னும் சுமார் 200 சதுர கிலோமீட்டர் பகுதிதான் பாக்கி என்றும் 90 சதவிகித கண்ணி வெடிகளை அகற்றியாகிவிட்டது என்றும் அரசு சொல்வது நம்பத் தகுந்ததாக இல்லை என்று தொண்டு நிறுவனங்கள் சொல்கின்றன. சரியான கணக்குகள் எதற்கும் கிடையாது. தமிழர் பகுதிகளில் இன்னும் ஏராளமான நிலங்களில் விவசாயம் செய்யமுடியாமலே இருக்கிறது என்கிறார்கள். (மேலும்...)

சித்திரை 24, 2013

செங்கலடி இரட்டைக்கொலை

பெற்றோரை பழிதீர்க்க மகளும், காதலனும் வகுத்த திட்டம்

மட்டக்களப்பு - செங்கலடி நகரில் கடந்த வாரம் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் மனிதாபிமானமிக்க அனைவரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. போர்ச் சூழல் ஓய்ந்த பின்னர் ஆயுத கலாசாரம், பஞ்சமா பாதக செயல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என எண்ணியிருந்த தமிழ் மக்கள் மத்தியில் இக்கொலைச் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கலடி நகரம் சித்திரை புத்தாண்டு காலத்தில் களைகட்டுவது வழக்கம். நாலாபுரத்திலுமிருந்தும் மக்கள் புத்தாண்டுக்கான பொருட்களை கொள்வனவு செய்யவரும் வர்த்தக மையமாக இப்பிரதேசம் அமைந்துள்ளது. அன்று சித்திரை மாதம் 7 ஆந் திகதி நள்ளிரவு செங்கலடி - பதுளை வீதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் வர்த்தகர்களையும் அந்த பிரதேசத்தையும் சோகத்துக்குள்ளாக்கியதோடு பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. (மேலும்...)

மத்தளை விமான நிலையம்

மார்ச் 18 முதல் ஏப்ரல் 18 வரை 53 வெளிநாட்டு விமானங்கள் வருகை

மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு நாளாந்தம் 3 முதல் 5 வெளிநாட்டு விமானங்கள் வரை வந்து செல்வதாக அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். பைடுபாய் விமானம் மே 21 முதல் இங்கு வரும். எயார் அரேபியா, கட்டார் எயார் வேய்ஸ் விமானங்கள் மத்தளை ஊடாக ஏற்கனவே செல்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். மார்ச் 18 முதல் ஏப்ரல் 18 வரை 53 வெளிநாட்டு விமானங்கள் இங்கு வந்து சென்றுள்ளன. எதியாட் விமான சேவையினர் ஏப்ரல் 26 ஆம் திகதி மத்தளை வந்து விமான நிலையத்தைப் பார்வையிட உள்ளதாக விமான நிலையங்கள் விமானச்சேவை விற்பனை பிரதானி கெளசல்யா முனசிங்க தெரிவித்தார்.

திருத்தச் சட்டமூலங்களுக்கு மாகாண சபைகள் அங்கீகாரம்

மாகாண சபைகளின் அங்கீகாரத் திற்காக அனுப்பப்பட்ட 4 திருத்தச் சட்டமூலங்களுக்கு மாகாண சபைகள் தமது அங்கீகாரங்களை வழங்கியி ருப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நேற்று அறி வித்தார். திருமணப் பதிவுத் திருத்தச் சட்ட மூலம், கண்டிய திருமண மண நீக்க திருத்தச் சட்ட மூலம், முஸ்லிம் மண நீக்கத் திருத்தச் சட்ட மூலம் மற்றும் பிறப்புக்கள், இறப்புக்கள் பதிவு திருத்த சட்ட மூலம் ஆகியவற்றுக்கே மாகாண சபைகள் தமது அங்கீகாரங்களை வழங்கியிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார். மேல், வட மேல், தென், கிழக்கு, ஊவா, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் மேற்படி சட்ட மூலத்தை பரிசீலித்ததன் பின்னர் இச் சட்ட மூலம் தொடர்பாக தமது அங்கீகாரத்தை தெரிவித்துள்ளன. மத்திய மாகாண சபை மேற்படி சட்ட மூலத்திலுள்ள விடயங்கள் இணைப்புப் பட்டியலில் உள்ளடக்காமை காரணமாக மாகாண சபையில் இது தொடர்பாக கலந்துரையாட வேண்டிய தில்லை என்று தெரிவித்துள்ளது.

மூன்று இலட்சம் தமிழர்களை குடியேற்றிவிட்டே வடக்கில் முஸ்லிம்களை குடியமர்த்த முயல்கிறேன்

தமிழ் முஸ்லிம் மக்களி டையே விரிசலை ஏற்படுத்தி வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்க சில தரப்பினர் முயல் கின்றனர். இடம்பெயர்ந்த 3 இலட்சம் தமிழ் மக்க ளையும் மீள்குடியேற்றும் வரை துரத் தப்பட்ட ஒரு முஸ்லிமை கூட மீள்குடி யேற்றாத தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்துவது குறித்து வேதனை அடைவதாக கைத் தொழில் வாணிப அமைச்சரும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப் புக் குழு தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியாவளையி லுள்ள கொட்டில்கள் தீ வைக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு எதுவித தொட ர்பும் கிடையாது என்று குறிப்பிட்ட அவர் மேற்படி சம்பவத்தைக் கண்டிப் பதோடு சம்பந்தப்பட்டவர்கள் சட்டத் தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். வடக்கில் காணி வழங்குவதற்கு தனக்கு எதுவித அதிகாரமும் கிடையாது எனவும் நல்லிணக்க ஆணைக் குழுவின் சிபார்சின்படி நியமிக்கப்பட்ட குழுவே புலிகளால் துரத்தப்பட்ட வட பகுதி முஸ்லிம்களுக்கு காட்டு பகுதியில் காணி வழங்க நடவடிக்கை எடுத்துள் ளதாகவும் தெரிவித்தார். வடக்கில் முஸ்லிம்களை குடியமர்த்த க்கூடாது என்ற புலிகளின் திட்டத்தையே சில த. தே. கூ. எம்.பிக்கள் முன்னெடுத்து வருகின்றனர். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தாமதப்படுத்தி வட மாகாண தேர்தலில் அவர்களின் வாக்குரிமையை பறிக்கவும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்கவும் சிலர் முயல்கின்றனர் என்றார்.

கனடாவில் ரயில் தாக்குதல் சதி முறியடிப்பு

பயணிகள் ரயிலில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு இரு வெளிநாட்டினர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஈரானுடன் தொடர்புபட்ட அல்கொய்தா பிரிவைச் சேர்ந்தவர்கள் என கனடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கனடா பிரஜை இல்லாத 30 வயதான சிஹாப் எஸ்ஸகை மற்றும் ராயெட் ஜெஸர் என்பவர்கள் மொன்ட்ரியல் மற்றும் டொரொன்டோ பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டதாக கனடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த இருவரும் ரயிலை கவிழ்த்து மக்களை கொல்ல திட்டமிட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் ஈரானுடன் தொடர்புபட்ட அல்கொய்தா பிரிவினரின் உதவியுடன் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக கனடா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேற்படி இருவர் மீதும் தாக்குதலுக்கு சதிசெய்தது, தீவிர வாதிகளுடன் தொடர்புபட்டது, கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதல் சதியை முறியடிக்க அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு மற்றும் அந்நாட்டு உளவுப் பிரிவான எப்.பி.ஐ. இன் உதவி பெறப்பட் டதாகவும் கனடா பொலிஸார் குறிப்பிட் டுள்ளனர். எனினும் இந்த சம்பவத்திற்கும் கடந்த வாரம் இடம்பெற்ற பொஸ்டன் குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

சித்திரை 23, 2013

கனடா வாழ் சிங்களவரின் பரிசில்களுடன் நாளை யாழ்பாணம் செல்கின்றார் கோத்தபாய.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச அவர்கள் நாளை யாழ்ப்பாணம் விஜயம் செய்கின்றார். 52 ஆவது படைப்பிரிவின் தலைமையகத்தில் நடைபெறும் விசேட நிகழ்வில் கலந்துகொள்ளும் அவர் 1500 மாணவர்களுக்கான கற்றல் உபகரங்களையும் வழங்கவுள்ளார். இந்த உபகரணங்கள் கனடா வாழ் பெரும்பாண்மை இனத்தைச் சேர்ந்த மொரிஸ் ஜெயதிலக எனப்படும் நலன்விரும்பி ஒருவரினால் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது சிறப்பம்சமாகும். கனடா வாழ் தமிழர் சீமானின் சுற்றுலாவுக்கு பணம் வழங்கும் அதே நேரத்தில் அங்கிருக்கின்ற சிங்களவர்கள் வடக்கிலுள்ள மாணவர்களின் கல்விக்கு உபகரணங்கள் அனுப்பும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சுரேஷ், செல்வம், சித்தாத்தன் இற்கு குட்டு

'கூட்டமைப்பை பதிவு செய்வது சாத்தியமில்லை'

முன்னாள் இராணுவ குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்  இருக்கும்போது அதனை ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யும் சாத்தியம் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான இலங்கை தமிழரசுக் கட்சி கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மன்னார் ஆயர் இராயப்பு ஜோஸப்புடன் பேசியபோது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர், முன்னாள் போராட்ட குழுக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும்போது அதனை பதிவு செய்ய முடியாது கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

வடமாகாண சபை தேர்தலை செப்டெம்பரில் நடத்த சாதகமான சூழ்நிலை - ஜனாதிபதி

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் வடமாகாண சபை தேர்தலை நடத்துவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி இருக்கிறது. தரைக் கண்ணிவெடிகள் துரிதமாக அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்து கொண்டிருப்பதுடன், யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் பெரும் பகுதியினரின் மீள்குடியேற்றமும் பூர்த்தியடைந்து கொண்டிருப்பதனால் அரசாங்கம் வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் ஊடக முக்கியஸ்தர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த சந்தர்ப்பத்தில் ஒரு ஆசிரியர்; வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தேர்தல் ஆணைக்குழு ஒன்றை நியமிப்பீர்களா? என்று பத்திரிகை ஆசிரியர் ஒருவர் ஜனாதிபதியிடம் கேட்டார். அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி; இப்போது தேர்தல் ஆணையாளர் இருக்கிறாரே, ஆணையாளர் இருக்கும் தேர்தல் ஆணைக்குழு ஒன்று அவசியம்தானா என்று திரும்பிக் கேட்ட அவர் “சரி..... சரி..... அவசியம் ஏற்படும் போது நாம் சரியான நடவடிக்கைகளை எடுப்போம்” என்று கூறினார்.

வடமாகாண தேர்தலை நடத்தக்கூடாது - விமல்

 வடமாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒருபோதும் நடத்தக்கூடாது. அதனை நாம் அனுமதிக்கவும் மாட்டோம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில், புலிகள் யுத்தத்தினால் பெற்றுக்கொள்வதற்கு முயன்றதை உத்தியோகபூர்வமாக வழங்கும் நடைமுறையாகவே வடமாகாண சபைத்தேர்தலை நான் கருதுகின்றேன் என்றார். மின்சார கட்டண அதிகரிப்பானது மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. மின்சார துறை முழுமையாக அரசு அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

புலிகளுக்குப் பின்னர் தமிழர்களின் எதிர்காலம்….?

(கே.சஞ்சயன்)

வடக்கு, கிழக்கிற்கு தனியான ஆட்சிமுறை என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயம் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில், இலங்கை வந்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் கொண்டுள்ள இறுக்கமான போக்கை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கிட்டத்தட்ட இதே கருத்தைத் தான் வலியுறுத்தியிருந்தார். இலங்கையில் இன, மத, மொழி அடிப்படையில் நிர்வாக கட்டமைப்புகள் ஒருபோதும் உருவாக்கப்படமாட்டாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட நிர்வாக அலகு ஒன்றை உருவாக்கும் தமிழர் தரப்பின் கோரிக்கைகளை நிராகரிக்கும் வகையிலேயே, அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.(மேலும்...)


Muttukumaru Chandrakumaran

Muttukumaru Chandrakumaran is an active volunteer in his community. He has served on the Town of Ajax Diversity Advisory Committee, as Director of Community Service for the Rotary Club of Pickering and as a member of the Ajax-Pickering Board of Trade. He has also been involved as a member of the Community Outreach Sub-Committee of the Durham Regional Police Race Relations Advisory Committee. Mr. Chandrakumaran has been in the auto/tire business for many years and is currently the President of a company that provides advice on automobile purchase and repairs.

 

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் - ஜனாதிபதி

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடாத்தத் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆதாரத்துடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலத்திரனியல் ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கவும் பாதுகாக்கவுமே அரசாங்கம் விரும்புகின்றது. சாதாரண குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்படுவதாகவும், இவை மனித உரிமை மீறல்களாக சித்தரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏதேனும் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டால் அது குறித்து விசாரணை நடாத்தத் தயார். உதயன் பத்திரிகையின் மீதான தாக்குதல் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இதேவேளை, இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும், காவல்துறையினர் சித்திரவதைகளை மேற்கொள்வதாகவும் கடந்த வாரம் அமெரிக்கா வெளியிட்டிருந்த மனித உரிமை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் அரசியல் நாடகத்தை பற்றி நாம் அலட்டிக்கொள்ளவில்லை - ஜனாதிபதி

தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் இப்போது தேர்தலை மையமாக வைத்து இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை முடுக்கி விட்டிருக்கிறார்கள். நாம் அவற்றைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. தமிழ் நாட்டு அரசியல்வாதிகளின் இத்தகைய ஆர்ப்பாட்டங்களினால் இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்படாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். சிலர் எமது அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அரசை கவிழ் த்துவிட முடியும் என்று கனவு காண் கின்றனர். ஒரு அரசாங்கத்தை கவிழ்க்கும் சக்தி எங்கள் கையில் மாத்திரமே இரு க்கிறது என்பதை முன்னர் ஒரு தடவை வீதி ஆர்ப்பாட்டங்கள், பாதயாத்திரிகைகள், சப்த கோஷம் ஆகிய எதிர்ப்புகளின் மூலம் நாம் நிரூபித்தோம். எங்கள் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு வெளிநாட்டு உதவியைப் பெற்றாலும் அது பயனளிக்கப் போவதில்லை. அத்தகைய சாதனைகளை எனக்கும் எனது கட்சிக்கும் மாத்திரமே செய்ய முடியும். அதனால்தான், இன்றும் கூட எனது அரசாங்கம் வலுவான அடித்தளத்துடன் ஆட்சி செய்து வருகிறது என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

தொழிலதிபர் கார்டஸ் பரகுவெ ஜனாதிபதியாக தேர்வு

பரகுவெ தொழிலதிபர் ஹொராசியோ கார்டஸ் அந்நாட்டு ஜனாதிபதியாக தேர்வாகியுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேர்தலில் கார்டஸ் 45.91 வீத வாக்குகளை வென்று ஜனாதிபதியாக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளும் லிபரல் கட்சியின் வேட்பாளர் எப்ரைன் அலக்ரே 36.84 வீத வாக்குகளையே வென்றார். இதன்மூலம் எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி 5ஆண்டு தவணைக்காக கார்டஸ் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார். எனினும் நாட்டில் வறுமை வீதம் அதிகரித்துள்ளதோடு கடந்த ஆண்டில் ஜனாதிபதி லுகொவை நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவி நீக்கியதால் தென் அமெரிக்க கூட்டாணி நாடுகள் பரகுவெவை இடைநீக்கியது. இந்த சவால்களுக்கு தேர்வாகியுள்ள புதிய ஜனாதிபதி முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 58 வயதான கார்டஸ் பரகுவெவின் அனைத்து செயல்பாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் சில உயர்தட்டு செல்வந்தர்களில் ஒருவராவார்.

‘மனித கம்ப்யூட்டர்’ சகுந்தலா தேவி மரணம்

“மனித கம்ப்யூட்டர்” என்று வர்ணிக்கப்படும் கணித மேதையான சகுந்தலா தேவி பெங்களூரில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80. கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய மற்றும் சிறுநீரக கோளாறும் ஏற்பட்டது. அவரது உடல்நிலை மேலும் மோசம் அடைந்து காலை 8.15 மணிக்கு மரணம் அடைந்தனர். சகுந்தலா தேவி கணக்கில் அபார திறன் உள்ளவராக விளங்கினார்.  கடந்த நூற்றாண்டில் ஏதவாது ஒரு வாரத்தில் ஒரு திகதியை சொன்னால் உடனடியாக அது எந்த நாள் என்று சொல்லிவிடுவார். 1977ம் ஆண்டு அவர் 201 இலக்கங்கள் கொண்ட எண்ணின் 23வது வர்க்கம் (ரூட்) என்ன என்பதை மனதிலேயே கணக்கிட்டு கூறிப் பார்வையாளர்களை வியப்பில் மூழ்கடித்தார். அவரது அபரிமித மான திறனுக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்தார்.

சித்திரை 22, 2013

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை!

கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி – 9)

(வரதர் பெருமாள்)

இன்னமும் தமிழர்கள் தாங்கள் அரசியற் காரணங்களுக்காகப் படுகொலை செய்யப்படலாம், என்ற பயத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை. காணாமற்போகும் நிலைக்கு உள்ளாக்கப்படக்கூடும் என்ற அச்சத்திலிருந்து நீக்கப்படவில்லை. முகமூடிபோட்ட மோட்டார் சைக்கிள் காரர்களின் இருட்டடிக்கு உள்ளாக நேரிடலாம் என்ற பீதியிலிருந்து விலக்கப்படவில்லை, பொலிஸ் அதிகாரிகள் மக்களின் குற்றச்சாட்டுகளை ஏற்று பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை சட்டப்படி எடுத்து கட்டாயம் சட்டத்தை நிலைநாட்டுவார்கள், நீதியை நிலைநாட்டும் கடமைகளை தவறாது செய்வார்கள் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு வழங்கப்படவில்லை. பிரபாகரனின் புலிகளிடமிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை. ஆனாலும் இப்போத  அரசபடை வீரர்களைக் கண்டாலே இலங்கைவாழ் தமிழர்களின் தொண்டையில் ஈரம் வற்றிவிடுகிறது. இராணுவ ரகசியப் பிரிவுகளைப் பற்றி யோசித்தாலே பிடரி குளிர்கிறது, அரசாங்கத்தோடு துணைக்கு நிற்கும் கட்சிகாரர்களைக் கண்டாலே மூளை காய்ந்து விடுகிறது. பிரபாகரனி் தமிழ்ப் புலிகள் இல்லாமற் போய்விட்டாலும் இப்போது கோத்தபாயாவின் தமிழ்ப் புலிகள் அரசின் ரகசியப் பிரிவின் கூலிகளாக  நடமாடுகிறார்கள் என்ற பயம் மக்களிடையே உள்ளது என்பது வெளிப்படை. (மேலும்...)

அமைச்சர் ஆறுமுகனுக்கும் பொலிஸாருக்கும் எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்வேன் - அமைச்சர் வாசு

கொட்டக்கலையில் இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் அதன் உறுப்பினர்களும் மலையக தொழிற்சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளேன். குறித்த சம்பவத்திற்கு யார் காரணம் என்பதை அனைவரும் அறிவர். எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் எதிராக நான் ஜனாதிபதியிடம் முறையிடவுள்ளேன். இச் சம்பவம் குறித்து நான் உடனடியாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவித்தேன். ஆனால் இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. இதேவேளை, குற்றவாளிகளை கைது செய்வதில் பொலிஸார் நேர்மையாக செயற்படாமையானது கவலையளிக்கும் செயற்பாடாகும். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவது ஜனாதிபதியின் பொறுப்பாகும். எனவே அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தனது குண்டர்களை அனுப்பி அமைதியான முறையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை குழப்பியமை தொடர்பில் நான் ஜனாதிபதிக்கு முறைப்பாடு செய்யவுள்ளேனென அவர் மேலும் தெரிவித்தார்.

பொஸ்டன் குண்டு தாக்குதலின் குறிக்கோள் குறித்து புலனாய்வுத்துறை தீவிர விசாரணை

கைது செய்யப்பட்ட பொஸ்டன் குண்டுத்தாக்குதல் சந்தேக நபர் கடும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த தாக்குதலுக்கான நோக்கம் குறித்து புலனாய்வுத்துறையினர் தீவிர விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். இதில் குண்டு தாக்குதலின் பின்னணியில் கைதான சுகர் சர்னயெவ்வும் கொல்லப்பட்ட அவரது சகோதரரும் மாத்திரமா உள்ளனர் என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் 19 வயதான சர்னயெவ் கடந்த வெள்ளிக்கிழமை பின்னேரம் அமெரிக்க பொலிஸாரிடம் சிக்கினார். அமெரிக்க சரித்திரத்தின் மிகப் பெரிய பொலிஸ் தேடுதல் வேட்டைகளில் ஒன்றாக 19 வயது சந்தேக நபர் சுகர் சர்னயெவ்வை தேடும் நடவடிக்கை அமைந்திருந்து. ஒரு வீட்டின் கொல்லைப்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகில் பதுங்கியிருந்த சர்னயெவ்வை பொலிஸார் பிடித்துள்ளனர். (மேலும்...)

போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படம் நாளை லண்டனில் திரையிடப்படுகிறது

சனல் 4 தொலைக்காட்சி தயாரித்துள்ள போர் தவிர்ப்பு வலயம் என்ற 90 நிமிட ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி மீண்டும் லண்டனில் திரையிடப்படவுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதி 138 நாட்களில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தை கல்லும் மக்ரே தயாரித்துள்ளார்.  இந்த ஆவணப்படத்தின் ஒரு பகுதி, கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையிலும், புதுடெல்லியிலும் வெளியிடப்பட்டது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிகளவு நாடுகள் ஆதரவு அளிப்பதற்கு இந்த ஆவணப்படம் ஒரு காரணியாக இருந்தது. இந்தநிலையில், இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டக்காட்சி நாளை செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் லண்டனில் உள்ள புரொன்ட்லைன் கிளப்பில் தரையிடப்படவுள்ளது. அதையடுத்து கேள்வி - பதில் கலந்துரையாடலும் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை லண்டனில் கொமன்வெல்த் அமைச்சரவை நடவடிக்கைக் குழுவின் முக்கிய கூட்டம் நடக்கவுள்ள நிலையிலேயே இந்த ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. இது கொமன்வெல்த் மாநாட்டை இலங்கையிலிருந்து இடமாற்றம் செய்வது குறித்து இலங்கை அரசுக்கு நெருக்கடியைக் கொடுப்பதாக இருக்கும் என்று அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம் - பாகம் 5

(கரு.முத்து)

ஏழாயிரம் கோடியில் எம்.ஏ.எம்.முக்கு வந்தது எவ்வளவு என்பதை அவர்தான் சொல்ல வேண்டும். ஆனால் அவரோ ‘‘என்னிடம் யாரும் எந்த பணமும் தரவில்லை’’ என்று முன்பு ஒருமுறை நம்மிடம் ஒரே போடாக போட்டு எல்லாவற்றையும் மறுத்து விட்டார். ஆனால் புரோக்கர்கள் அவரிடம் கொண்டுபோய் பணம் கொட்டிய தகவல்கள் லாரி லாரியாய் ஏற்றலாம் போல அவ்வளவு கதை சொல்வார்கள். வேலைக்கு பணம் வாங்கிய அவர், அவர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டுமே என்ற கவலையெல்லாம் படவில்லை. சம்பளம் கொடுப்பது பல்கலையின் கடமை நமக்கென்ன வந்தது என்று கல்லாவை இருக மூடிக்கொண்டார். அதோடு விட்டிருந்தால் கூட பரவாயில்லை. பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மூலமும் மற்ற வகைகள் மூலமும்  எவ்வளவு  வருமானம் வருகிறதோ அதற்கும் செலவு வைக்க ஆரம்பித்தார். (மேலும்...)

தன்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியோர் நீதியின் முன் நிறுத்தப்படமாட்டார்கள் - ரஷ்ய பெண்

தன்னைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி – தனது நண்பரை கொலை செய்த குற்றவாளிகளில் ஒருவரின் குடும்பம் இலங்கை ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானது என்பதால், குற்றவாளிகள் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படப் போவதில்லை என்று ரஸ்யப் பெண்ணான விக்ரோரியா கச்சேவா தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கையின் ஆளும்கட்சி உள்ளூர் தலைவர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட விக்ரோரியா கச்சேவா இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் முதல் முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். 24 வயதான விக்ரோரியா கச்சேவா ரஸ்ய மொழி பட்டதாரியாவார். அவருடன் இலங்கையில் விடுமுறையைக் கழிக்க வந்த ஆண் நண்பரான பிரித்தானியாவைச் சேர்ந்த 32 வயதான செஞ்சிலுவைப் பணியாளரான குரம் சேய்க் என்பவரே கொலை செய்யப்பட்டார். (மேலும்...)

போற்றுவோம் அண்ணல் அம்பேத்காரை!

விலக்குவோம்  அவரின் இந்திமயக் கொள்கையை!

ஒடுக்கப்பட்டவர்களின் உயர்விற்காகக் குரல் கொடுத்து உழைத்த உத்தமர் அண்ணல் அம்பேத்கார். இந்துச்சமயத்திலும் இந்தியாவிலும் உயர்வு தாழ்வு கற்பிக்கப்படாமல் சமஉரிமை நிலவப் பாடுபட்டவர் அண்ணல் அம்பேத்கார். அண்ணல் அம்பேத்கார் அவர்கள் தமிழின் சிறப்பை உணர்ந்து  போற்றியவர். மொழிச்சிறுபான்மையர் பற்றிப் பேசும்பொழுதுகூட அவர் எடுத்துக்காட்டிற்காகத் தமிழர்களைக் கூறுவதில் இருந்து தமிழ், தமிழர் மீது அவருக்கிருந்த பற்றினை நாம் உணரலாம். தங்களின் பணிநிமித்தம், பம்பாயில் வாழும் தமிழர்களுக்குத் தமிழ்க் கல்வி தருவது, பம்பாய் அரசினுடைய கடமை. இந்தக் கடமையை நான் சட்டப்பூர்வமான உரிமையாக அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடுகின்றேன் (அம்பேத்கார்  ஆங்கில நூல் தொகுப்பு 13 - தரவு : கீற்று) என அம்பேத்கார் அவர்கள் தமிழ்க்கல்வியை வலியுறுத்துகிறார். ஆனால், தமிழ்நாட்டிலேயே தமிழ்க்கல்வி என்பது மறைந்து வருகின்றது. தமிழ்வழிக்கல்வி என்பது கானல் நீராக மாறும் பேரிடர் உள்ளது.  எங்கும்  தமிழ்! என்றும் தமிழ்! என ஆராவாரமாக முழங்குவதுடன் நில்லாது முழுமையான தமிழ்க்கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் அண்ணல் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்! (மேலும்...)

சீனாவின் சிச்சுவான் மாகாண பூகம்பம்

பலியானோர் எண்ணிக்கை 203, 11,500 பேர் காயம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்துள்ளதோடு, 11,500 பேரளவில் காயமடைந்து ள்ளனர். எனினும், மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் தொடர்ந்து சிரமத்தை எதிர்நோக்குவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்தங்கிய கிராமப்பகுதிகளை மையம் கொண்டு கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 7.01 ரிச்டர் அளவான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட வீதிகள் சேதமடைந்துள்ளன. இதனால் அவசர பணியாளர்கள் நடைபாதையாகவே குறித்த பகுதிகளை அடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ள இராணுவத்தினர் இரவு முழுவதும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் தற்காலிக கூடாரங்கள் மற்றும் வாகனங்களிலேயே இரவை கழித்தனர். நிலநடுக்கத்தால் காயமடைந்தோரில் 960 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.

தனி நபர் வளர்த்த அதிசய காடு மாமனிதருக்கு... என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !!

உலக வரலாற்றிலேயே எவரும் செய்யாத ஒரு மாபெரும் சாதனையை செய்துவிட்டு மிக அமைதியாக அடக்கமாக இருக்கிறார் ஒருவர். மனித குலத்திற்கு அவர் செய்த சிறந்த சேவை இது... எல்லோருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். 'தனது சமூகத்திற்கு செய்ய வேண்டியது தனது கடமை' என ஒற்றை வரியுடன் தனது சாதனை குறித்து சொல்லி முடித்துகொள்கிறார். அப்படி என்ன செய்தார் ?!! கிட்டத்தட்ட 1,360 ஏக்கர் நிலப் பரப்பளவில் தனி நபராக ஒரு காட்டை உருவாக்கி இருக்கிறார்...!! மாமனிதருக்கு... என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !! (மேலும்...)

வட மாகாணம் மூவின மக்களுக்கும் உரியதாக கட்டி எழுப்பப்படவேண்டும் - அமைச்சர் ரிசாட் பதியுதீன்

வட மாகாணம் தமிழ், சிங்களம், முஸ்லிம்களென மூவின மக்களும் வாழும் மாகாணமாகக் கட்டியெழுப் பப்படவேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். வெலிஓயா பிரதேச மக்கள் புலிகளின் தாக்குதலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வர்கள் இப்பகுதி பெளத்த தேரர்களே அவர்களைப் பாதுகாத்தனர். பலர் இறந் தனர். பெருமளவிலானோர் அகதிகளாகினர். அக்காலத்தில் நான் புனர்வாழ்வு அமைச்சராக இருந்து மக்களின் துன்பங்களைக் கண்டு முடிந்தளவில் அவர்களுக்கு உதவினேன். ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் அமைச்சின் மூலம் இந்த மக்களுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இது இம்மக்களுக்கான பெரும் வரப்பிரசாதமாகும். இப்பகுதி பாராளுமன்ற பிரதிநிதி என்ற வகையில் இதற்காக நான் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.சிங்கள மக்களை மட்டுமன்றி மெனிக் பாமில் தங்கவைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை மீளக் குடியமர்த்தியதுடன் அவர்களுக்கு சகல வசதிகளையும் ஜனாதிபதியவர்கள் பெற்றுக்கொடுத்துள்ளார். அதேபோல புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருகின்றார். அதேபோன்று வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சகல சிங்கள மக்களையும் மீளக்குடியமர்த்த வேண்டும். வடக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து வாழும் மாகாணமாக வேண்டும். அதனை நிறைவேற்றி அதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி வழங்க வேண்டும். அதற்கான உச்சளவு ஒத்துழைப்பை வழங்க நாம் தயார் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

1200 ஒளி ஆண்டு தூரத்தில் பூமியைப் போன்ற 2 கிரகங்கள்

பூமியிலிருந்து 1200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பூமியைப் போன்ற இரு புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியங்கள் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் நாசா மையம் விண்வெளி குறித்து ஆய்வு மேற்கொள்ள கெப்லர் 62 விண்கலத்தை அனுப்பியுள்ளது. அதில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கி விண்வெளியை துல்லியமாக படம் எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் அனுப்பி வைத்துள்ள புகைப்படத்தில் பூமியை போன்று 2 கிரகங்கள் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் பாறைகள், கடல்கள் மற்றும் ஈரத் தன்மையுள்ள காற்று போன்றவை தெரியவந்துள்ளது. இந்த கிரகங்களில் நீர் இருப்பது கூட தெளிவாக தெரிகிறது. எனவே, இவை மனிதர்கள் வாழ முற்றிலும் தகுதியானவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விண்வெளி அறிஞர்கள். இந்த கிரகங்கள் புதன் கிரகத்தில் இருந்து 3 கோடியே 70 இலட்சம் கி.மீட்டர் தூரத்திலும் வியாழன் கிரகத்தில் இருந்து 6 கோடியே 50 லட்சம் கி.மீட்டர் தூரத்திலும் உள்ளன. மேலும் அங்கு உயிரினங்கள் வாழ தகுதியுடைய தட்பவெப்ப நிலை நிலவுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சூரியனை விட சிறியதாகவும், மங்கலாகவும் உள்ள நட்சத்திரத்தை அவை சுற்றி வருகின்றன. இந்த 2 புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டது குறித்து கெப்லர் விண்கல் ஆய்வு திட்ட தலைவர் வில்லியம் போருக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கெப்லர் தொலைநோக்கி கண்டு பிடித்துள்ள பல கிரகங்களில் இது மிகவும் பயனுள்ளது என்றார்.

சித்திரை 21, 2013

முள்ளியவளையில் மக்களின் குடிசைகள் இனந்தெரியாதோரால் எரிப்பு

முல்லைத்தீவு முள்ளியவளையில் இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள மக்களின் குடிசைகள் இனந்தெரியாதோரால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கே குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று கிராம அபிவிருத்தி அமைப்புக்களின் தலைவர் எஸ். ரவிகரன் தெரிவித்தார். காடழிப்பு தொடர்பாக இரு இனங்களுக்கிடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்ட பகுதியில் அமைந்துள்ள நான்கு குடிசைகளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது. இதனால் அக் குடிசையில் இருந்த உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சம்பவம் இடம்பெற்ற வேளை இவ் வீடுகளில் இருந்தவர்கள் தேவைகளின் பொருட்டு வேறு இடங்களுக்கு சென்றிருந்ததனால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் தெரிவித்தனர். திருமதி செந்தூரன் நிலோஜனா என்ற 27 வயதுடைய இரு பிள்ளைகளின் விதவைத்தாயின் குடிசையும் திருமதி தங்கமணி, திருமதி சுரேஸ்குமார் சுமங்கலி, செல்லத்தம்பி முகுந்தன் ஆகியோரது வீடுகளுமே இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதேவேளை இச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸில் பொது மக்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர். இந் நிலையில் அப்பகுதியியல் வாழும் ஏனைய பொது மக்கள் தம் அங்கு வசிப்பது தொடர்பில் அச்சுறுத்தலாக உள்ளதெனவும் தெரிவித்தனர். ஆண்டாண்டு காலமாக முள்ளியவளை தண்ணீர்ஊற்று பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்த தமிழ், முஸ்லீம்மக்களை முதலில் பிரித்தது புலிகள் தற்போது இதேவேலையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்ய முடியல்கின்றது கண்டிக்கதக்கது.

புலிகளுக்கு நிதி சேரித்த ரெஜி, புலிகளின் தலைவர்களில் ஒருவரான சிவராசா உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 பேரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையான இண்டர்போல் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது!

புலிகளுக்கு நிதி சேரித்த ரெஜி, புலிகளின் தலைவர்களில் ஒருவரான சிவராசா உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 பேரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையான இண்டர்போல் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது! பயங்கரவாத செயல் மற்றும் போலி காணி உரிமை சான்றிதழ்களை தயாரித்த உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 36 பேரை கைதுசெய்வதற்காக சர்வதேச காவற்துறையான இண்டர்போல் சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது. இவர்களில், சிங்கள, தமிழ், முஸ்லிம் தரப்பினர் அடங்குகின்றனர்.  இவர்களில் ஒருவர் சட்டத்தரணி,  அத்துடன்  புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட ஆறு பேர் உள்ளனர். புலிகளுக்கு நிதி சேரித்த ரெஜி, புலிகளின் தலைவர்களில் ஒருவரான சிவராசா ஆகியோரையும் கைதுசெய்ய இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. செலிங்கோ நிறுவனத்தின் தலைவரின் மனைவியை கைதுசெய்வதற்காகவும் சர்வதேச காவற்துறையினர் பிடியாணை பிறப்பித்துள்ளனர். 

'நல்ல நேரத்தில் வடக்கு தேர்தல் - ஜனாதிபதி

வடமாகாண தேர்தல் செப்டெம்பர் மாதம் நடைபெறும் என்றும் அதற்கான நல்லநேரம் பார்க்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 'எனது ஜோதிடர் எனக்கு வழங்கியிருக்கும் நாள் மற்றும் நேரத்தில் கட்டாயமாக வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெறும்'. 1987 ஆம் ஆண்டு மாகாண சபைகள் நிறுவப்பட்டதன் பின்னர் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகதான் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 'வெளிநாடுகளில் இருந்து பணம் வரும்வரையிலும் காத்துக்கொண்டிருக்காமல் இந்த நாட்டு மக்களின் பணத்தில் அபிவிருத்தி திட்டங்களையும் வேலைகளையும் முன்னெடுக்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணித்துள்ளேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிகரெட் விலைகள் அதிகரிக்கப்படும் போது எவரும் கூச்சலிடுவதில்லை. அதேபோல விற்பனையும் குறைவடைவதில்லை. எனினும் மின்சார கட்டணத்தை அதிகரித்தமையினால்; கூச்சலிடுகின்றனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம் - பாகம் 4

(கரு.முத்து)


ல்கலைக்கழக மானியக்குழு அனுமதித்திருக்கும் ஊழியர்களின்  எண்ணிக்கையை முதலில் தெரிந்து கொள்வோம்.பலகலைக்கழக மானியக்குழு  விதிகளின் படி அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் இருக்க வேண்டிய ஆசிரியர்கள்  எண்ணிக்கை 657. ஆனால் தற்போது அங்கிருக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை  3000 பேர்.மானியக்குழு அனுமதிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 1110  பேர்.ஆனால் இங்கு இருக்கும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 9600 பேர்.    ஆக பல்கலைகழகம் நடத்த நிதி மானியம் அளிக்கும் பல்கலைகழக மானியக்குழு  அனுமதித்திருக்கும் எண்ணிக்கை 1767 பேர்தான். ஆனால் இருப்பதோ 12,600  பேர்.அதாவது கிட்டத்தட்ட 9 மடங்கு ஊழியர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
(மேலும்...)

அப்பாவும் வேலைக்காரியும்!

(எஸ்.ஹமீத்)

சின்னப் பையன் அப்பாவிடம் கேட்டான்.'' அப்பா...அரசியல் என்றால் என்ன...?''

அப்பா யோசித்துவிட்டுச் சொன்னார்.

''நல்லது. உனக்கு நான் அதனை இப்படி விளங்கப்படுத்துகிறேன். நமது இந்தக் குடும்பத்தில் அதிகாரமுள்ளவன் நான். ஆகவே நான் அரசாங்கம்.  எனக்கு ஆலோசனை சொல்பவள் அம்மா. ஆகவே அவள் அமைச்சர்.  வேலைக்காரி நமது தயவில் வாழ்கிறாள். எனவே அவள் மக்கள். நீ அடிக்கடி கேள்வி கேட்பவன். ஆகவே நீ ஊடகம். உனது சின்னத் தம்பிப் பாப்பாதான் நாட்டின் எதிர்காலம்.''

பையனுக்குக் கொஞ்சம் புரிந்தது; மீதி புரியவில்லை. யோசித்துக் கொண்டே அவன் படுக்கைக்குப் போய் விட்டான்.

சிறிது நேரத்திற்குள் தம்பி அழும் சத்தம் கேட்டது. பையன் எழுந்து சென்று பார்த்தான். தம்பி சிறுநீர் கழித்துவிட்டு, ஈரத்தில் படுக்க முடியாமல் அழுது கொண்டிருந்தான். அவனுக்கு உடை மாற்ற வேண்டும்.

அம்மாவின் அறைக்குள் போனான் சிறுவன். அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

வேலைக்காரியின் அறைக்குள் போகுமுன், சாவித் துவாரத்தால் பார்த்தான். அங்கே வேலைக்காரியை அப்பா 'தும்சம்'  செய்து கொண்டிருந்தார்.

பையன் பேசாமல் வந்து படுத்துக் கொண்டான்.

காலையில் எழுந்ததும் அப்பாவிடம் சொன்னான்.''அப்பா..அரசியல் என்பதன் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது...!''

''கெட்டிக்காரன்...சரி; சொல் பார்க்கலாம்..'' என்றார் அப்பா.

மகன் சொன்னான்:

''அரசாங்கத்தால் மக்கள் கொடுமைக்குள்ளாகும் போது அமைச்சர்கள் குறட்டை விட்டுத் தூங்குவார்கள். ஊடகங்கள் எதுவும் பேசாமல் மௌனமாகிவிடும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க யாருமே இருக்க மாட்டார்கள்!''

எந்த நாட்டுக்கு இது பொருந்தும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை - மன்னார் பேராயர்

நாட்டை பிளவுபடுத்த வேண்டுமென தாம் ஒருபோதும் கோரியதில்லை என மன்னார் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது எனச் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் சில ஊடகங்களில் நாட்டை பிளவுபடுத்த கோரியதாக தகவல்கள் வெளியாகியிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைக்க இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இவ்வாறான எந்தவொரு கோரிக்கையையும் தாம் முன்வைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் சில ஊடகங்களில் இவ்வாறான கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்ததாகவும், இந்தத் தகவல்களில் உண்மையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்பொரு காலத்தில் தமிழச்செல்வனின் செல்லப்பிளளையாக இருந்த இவர் இன்று கோத்தபாயவின் செல்லப் பிள்ளையாக இருக்கின்றார். இவரிடம் வேறு என்ன அறிக்கையை நாம் எதிர்பார்க்க முடியும்.....?

தயா மாஸ்டர் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடலாம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போதிலும் போட்டியிடப் போவதா இல்லையா என்பதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை. எதிர்வரும் வாரங்களில் இது குறித்து அறிவிக்க உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சிரேஸ்ட உறுப்பினர்களான கருணா மற்றும் பிள்ளையான் ஆகியோர், ஆளும் கட்சியின் சார்பில் அரசியலில் களமிறங்கி முக்கிய பதவிகளை வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தயா மாஸ்டர் யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் கடமையாற்றி வருகின்றமை என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமானோர் பல்வேறு புற்றுநோய்களால் பாதிப்பு

இலங்கை சனத்தொகையில் சுமார் 8 வீதமானவர்கள் பல்வேறு புற்றுநோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடாந்தம் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 15,000 ஆக அதிகரித்திருப்பதானது இலங்கையின் சுகாதார துறையில் மேலும் சுமையை ஏற்படுத்தியிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. பழுதடைந்து வீசப்படும் ஒரு கையடக்கத் தொலைபேசி பற்றரி 30,000 லீற்றர் தண் ணீரை மாசடையச் செய்வதாக சுகாதார அமைச்சு அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வீசப்படும் சீ.எப்.எல். மின்குமிழ்களும் மனிதனின் உடல்களுக்குப் பாதிப்பை ஏற்படுதத்தக் கூடிய வகையில் தண்ணீரை மாசடையச் செய்வதாக இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இலத்திரனியல் கழிவுகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாமல் தண்ணீர் மாசடைவதாலேயே புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி நிஹால் ஜயதிலக தெரிவித்துள்ளார். பழுதடைந்து அகற்றப்பட்ட சீ.எப்.எல். மின் குமிழ்கள் மற்றும் இலத்திரனியல் சாதனங்களால் இயற்கை வளங்கள் மாசடைவதே புற்றுநோய் அதிகரிப்புக்கான முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தன் காலமானார்

 ‘தினத்தந்தி’ பத்தி ரிகை அதிபரும் இந் திய ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவரு மான டொக்டர் பா. சிவந்தி ஆதித்தன் வெள்ளி இரவு 9.55 மணிக்கு சென்னை யில் காலமானார். அவருக்கு வயது 76 அவரது இறுதிச் சடங்குகள் நேற்று (சனிக்கிழமை) சென்னையில் நடைபெற்றன. சி.பா. ஆதித்தனார் 1942ல் ‘தினத்தந்தி’யைத் தொடங்கி பத்திரிகை உலகில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தினார். எளிய மக்களுக்கும் பத்திரிகை படிக்கும் வழக்கத்தை உண்டாக்கினார். தந்தையைப் பின்பற்றி பத்திரிகைத் துறையில் ஈடுபட சிவந்தி ஆதித்தன் விரும்பினார். அதை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சி.பா. ஆதித்தனார் பத்திரிகைத் துறைக்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் அளித்தார். அந்தப் பயிற்சிகள் மிகக் கடுமையாக இருந்தன. அதிபரின் மகனாக இருந்தபோதிலும் அச்சுக் கோர்ப்பவராக - அச்சிடுபவராக - ‘பார்சல்’ கட்டி அனுப்புகிறவராக- பிழை திருத்துபவராக - நிருபராக - துணை ஆசிரியராக (பத்திரிகையின் அனைத்து துறைகளிலும்) சிவந்தி ஆதித்தன் பயிற்சி பெற்றார். தொழிலாளியுடன் தொழிலாளியாக பத்திரிகையாளர்களுடன் பத்திரிகையாளராக வேலை பார்த்தார். ஒரு சிறந்த பத்திரிகை யாளராக பட்டை தீட்டப்பட்ட பிறகு நிர்வாகத் துறையிலும் பயிற்சி பெற்றார்.

சித்திரை 20, 2013

தோழர் பொன் . சண் நினைவுக்கூட்டம்

அண்மையில் கனடாவில் காலமான தோழர் பொன். சண் அவர்களின் நினைவுக்கூட்டம் 20-04-2013 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஸ்காபரோ  சிவிக் சென்ரறில் (Scarborough Civic Centre )  அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடைபெறும் .அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள் . 

தொடர்புகட்கு : உஷா     416-431-0718, மித்திரன்: 416-264-2115, 647-858-6185

பொன் .சண் நண்பர்கள் வட்டம்

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 7

(எல்லாளன்)

நாட்டிற்குச் சென்ற மனோ மாஸ்ரர் இரு தினங்களுக்குள் கொல்லப்படவே எமது நிலைமை மோசமாகி விட்டது. ரெலோ தான் கொன்றார்கள் எனச் சென்னையில் புலிகளின் தயவில் இருந்த ரெலோவின் முன்னாள் இராணுவப் பொறுப்பாளர் ரமேஸ் குழுவினரும் பலரும் கூறினர். எமக்கு அந்தக் கொலையைச் செய்தவர் சம்பந்தமான தகவல்கள் கிடைத்திருந்தன. அதாவது அந்தக் கொலையைச் செய்தவர்கள் புலிகள் எனவும் அந்தக் கொலையைச் செய்த நபர்களின் தகவல்களும் கிடைத்திருந்தன. மனோ மாஸ்ரர் நாட்டிற்குச் சென்றவுடன் புலிகளினால் பின்தொடரப்பட்ட அவர் பருத்தித்துறைப் பிரதேசத்திலுள்ள திக்கம் தும்பளைப் பகுதியில் சனநெருக்கடியற்ற குடியிருப்புப் பகுதியில் கிட்டு மற்றும் ரவி என்ற இரு புலிகளினால் நிறுத்தப்பட்டதாகவும் அங்கே முப்பது நிமிடம் அளவில் அவர்கள் வாக்குவாதப்பட்டதாகக் கூறப்பட்டது. அதில் பிரச்சினைப்பட்ட விடயம் என்னவென்றால் ரெலோவில் இருந்து பிரிந்த எம்மைப் புலிகளுடன் சேர்த்து விட வேண்டும் என்பதே. (மேலும்...)

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம் -  பாகம் 3

கரு.முத்து

ஊழலும் லஞ்சமும் பெருத்த 2006 காலக்கட்டத்தில் பல்கலைகழகத்தில் துணைவேந்தராக இருந்தவர் வெங்கட்ரங்கன்.கல்வி விஷயத்தில் கவனம் செலுத்திய அவர்,மாணவர் சேர்க்கையில் அவ்வளவாக தலையிடவில்லை.அவருக்கு உதவியாக பல்வேறு ஆட்கள் இருந்தார்கள்.அவர்கள் செய்யும் சேவைக்கு பிரதிபலனாக அவ்ர்களுக்கெல்லாம் நல்ல பதவிகளை தருவார் வெங்கட்ரங்கன்.அவர்களும் அதை வைத்துக்கொண்டு சம்பாதிக்க ஆரம்பித்தனர். இவர் சேர்க்கையில் தலையிடாததால் பல்கலையை ஆட்டுவித்தவர் அப்போதைய பதிவாளரான ரத்தினசபாபதிதான் என்கிறார்கள்.ஒட்டுமொத்த பல்கலைகழகமும் இவரின் விரலசைவில்தான் இயங்கியதாம்.துணைவேந்தரை பார்ப்பதற்கு ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்.ஆனால் ரத்தினசபாபதியை பார்க்க கூட்டம் அலைமோதும்.வி.ஐ.பி.க்கள் கொடி கட்டிய கார்,ஒருநாளைக்கு பத்தாவது அவர் அலுவலக வாசலில் நிற்காமல் இருக்காது.  சீட் தருவதற்கான அதிகாரம் அவர் கையில் இருந்தது.இவரை வந்து சந்தித்து தொகை கொடுத்தால் சீட் உறுதியாக கிடைக்குமாம்.இதனால் இவரிடம் சீட்டுக்கு அலை மோதினார்கள்.ஒரு கட்டத்தில் இவரது மனைவியை சந்தித்தும் தொகை கொடுத்து சீட் வாங்கிக்கொண்டு போவார்களாம்.
(மேலும்...)

24 கிலோமீற்றர் நடந்து சென்று பயிலும் 4 ஆம் வகுப்பு மாணவன்

பாடசாலைக்கு செல்வதற்காக நாளொன்றுக்கு 24 கிலோமீற்றர் நடக்கும் நான்காம் வகுப்பில் பயிலும் மாணவன் ஒருவன் இரத்தினபுரி,பலாங்கொடை நான்பெரியல்ல தோட்டத்தில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாணவர் விவேகானந்தா வித்தியாலயத்திலேயே கல்விபயின்று வருகின்றார். இந்த பாடசாலை மற்றுமொரு தோட்டத்திலேயே இருக்கின்றது. சப்ரகமுவ மாகாண சபை உத்தியோகஸ்தர்கள் அடங்கிய குழு முதலமைச்சர் மஹிபால ஹேரத்துடன் இப்பகுதிக்கு விஜயம் செய்தது. நான்காம் வகுப்பில் கல்விப்பயிலும் மாணவன் பாடசாலை செல்வதற்கு அதிகாலை 4 மணிக்கே வீட்டிலிருந்து புறப்பட்டுவிடுவார் என்றும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்கு இரவு 7 மணியாகிவிடும் என்றும் இந்த குழுவினர் கண்டறிந்துக்கொண்டனர். (மேலும்...)

அமைச்சரவைக்கூட்டத்திலும் ஆராயப்பட்ட நீதியரசர் விக்கினேஸ்வரனின் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்

வடமாகாணசபைத் தேர்தல் குறித்தும் அதில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யார் போட்டியிடலாம் என்பது தொடர்பிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. இதன்போது வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றாரா? என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.இதற்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கனவானகிய நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்கு வருவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை என்று கூறியிருக்கின்றார். அதனை எப்படி உறுதியாக கூறமுடியும். நீதியரசர் விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டாலரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என்ற தோரணையில் ஜனாதிபதி இங்கு கருத்து தெரிவித்தாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆழ்கடல் வள்ளத்தில் அவுஸ்திரேலியா புறப்பட்ட 61 பேர் கிழக்கு கடலில் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த 61 இலங்கையரை கடற்படையினர் நேற்று முன்தினம் கிழக்கு கடற் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். 10 குழந்தைகள் 8 பெண்கள், உட்பட 61 பேரும் மதுஷான் யியி என்ற ஆழ் கடல் வள்ளத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே கடற் படையினரால் கைது செய்யப்பட்டனர். மட்டக்களப்பு கடற்படை தளத்திலிருந்து விரைந்த கடற்படையினரே இவர்களை கைது செய்துள்ளதாக கடற் படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 60 தமிழர்களும் ஒரு சிங்களவரும் இருப்பதாகவும் இவர்கள் திருகோணமலை, கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோண மலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை கைது செய்யப்பட்டவர் களுள் 4 பேர் முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சமூகப் பிரச்னைகளை சாதிச் சாயத்துடன் அணுக வேண்டாம்!

'நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ, கலப்புத் திருமணங்களுக்கோ தடைவிதிப்பது சரியில்லை. பல காதல் கலப்புத் திருமணங்களை நானே முன் நின்று நடத்திவைத்திருக்கிறேன்’ என்று நீங்கள் வழங்கியிருக்கும் வாக்குமூலம் வரவேற்கத்தக்கது.'பொருளாதார அடிப்படையில் வசதியான குடும்பப் பெண்களுக்கு வலை விரிப்பதும், காதல் வலையில் விழுந்த பின்பு கடத்திச் சென்று லட்சம், கோடிகளில் பேரம் பேசுவதும், ஏழைப் பெண்களைத் திருமணம் செய்து, சில மாதங்களில் வாழாவெட்டியாக்குவதும் காதல் நாடகமன்றி வேறென்ன?’ என்ற உங்கள் கேள்வியில் நிறைந்திருக்கும் நியாயத்தை யார்தான் நிராகரிக்க முடியும்? ஆனால், இந்த இழிந்த காதல் கபட நாடகத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டும்தான் ஈடுபடுகின்றனர் என்று சாதிக்க முயல்வது சரியா? அன்பு கூர்ந்து யோசியுங்கள். (மேலும்...)

சித்திரை 19, 2013

போராட்டமும் போதைகளும்

முதல் பக்கம்...

(ஞாநி)

தமிழ்நாட்டில் நடந்து முடிந்திருக்கும் மாணவர் போராட்டம் பற்றி பல்வேறு விவாதங்கள், சர்ச்சைகள் தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன.போராட்டம் ஒரு பெரும் எழுச்சியின் அடையாளம்; இல்லையில்லை – சின்ன அளவில் நடந்ததை தமிழ் தேசிய அமைப்புகள், புலிகள் ஆதரவு அமைப்புகளின் தீவிர இளைஞர்கள் பின்னின்று நடத்தி சேனல்களின் உதவியுடம் ஊதிப் பெரிதாக்கிக் காட்டிய போராட்டம்தான் இது; சிறுவன் பாலசந்திரனின் படுகொலை பற்றிய படங்கள் கிளறிவிட்ட அடிப்படை மனித நேய உணர்ச்சிகளுக்கப்பால் மாணவர்களுக்கு உலக அரசியல் தெரியவில்லை, உள்ளூர் அரசியலும் தெரியவில்லை, உணர்ச்சி மட்டுமே இருக்கிறது;ஈழத்தமிழர்களின் முதல் தேவை அங்கே ராணுவ நீக்கமும், வாழ்வாதார வாய்ப்புகளும், படிப்படியான அரசியல் உரிமைகளுமே தவிர, ராஜபக்‌ஷேவை தண்டிக்கக் கூக்குரலிடுவதால் ஒரு பயனுமில்லை; புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நலன் வேறு, ஈழத்திலேயே வாழும் தமிழர்களின் நலன் வேறு (மேலும்....)

கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . . (பாகம் 3)

(ஈழத்திலிருந்து நல்லையா குலோத்துங்கன்)

தமிழீழப் போராட்டத்தை தாமே குத்தகைக்கு எடுத்ததைப் போன்ற ஒரு நடவடிக்கையின் மூலம் ஈழத்தமிழ் மண்ணில் தமது இன்னுயிரைப் பயணம் வைத்துப் போராடிக் கொண்டிருந்த சக மாற்று இயக்கப் போராளிகளைச் சகோதரத்துவ மனப்பான்மையுடன் பார்க்காது மாற்றான் எனும் கண்ணோட்டத்தோடு பார்த்தது மட்டுமில்லால், தாம் அவர்களைத் தடை செய்கிறோம் என்று கூறி அனைவரையும் அடித்து விரட்டி எமது மக்களின் நியாயமான போராட்டக் கோரிக்கைகளை வலுவிழக்கச் செய்த பாசிசக் கும்பலான புலிகளின் எச்சங்களின் வாழ்வைப் புலம்பெயர் நாடுகளில் தக்க வைத்துக் கொள்வதற்காக நீங்கள் பயன் படுத்தப்படுகிறீர்கள் என்று உணராமல் இன்று ஒட்டு மொத்தமாக அனைத்து தமிழ் நாட்டு மக்களையுமே உபயோகிக்கிறார்கள் என்று நீங்கள் அறியாதது என்னை வியப்பிலாழ்த்துகிறது. (மேலும்....)

நாச்சிக்குடாவில் கடல் உணவின் விலைகள் குறைவு

கிளிநொச்சி நாச்சிக்குடா பகுதியில் கடல் உணவுகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாகவும், கடல் உணவுகளை பிடிப்பதற்கு ஏதுவாக இருக்கின்றதாகவும் நாச்சிக்குடா மீனவர்கள் தெரிவித்தனர். இந்திய ரோலர் படகுகளின் வருகையின்மையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த காலங்களில் இந்திய ரோலர் படகுகள் வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கடல் உணவுகளை பிடிக்கும் போது,  மீனவர்களாகிய தாம் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கியதாகவும் தற்போது எந்த சிரமமுமின்றி கடல் உணவுகளை பிடிப்பதாகவும் தெரிவித்தனர். தற்போது ஒரு கிலோ மீன், இறால், கணவாய், நண்டு போன்ற கடல் உணவுகள் 300 முதல் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றதாகவும், கொள்வனவு அதிகமாகவும் காணப்படுகின்றதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வாறான நிலமை சுமார் ஒரு வருடத்திற்கு நீடிக்குமாயிருந்தால், தாம் யுத்தத்தினால் இழந்தவற்றினை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமென்றும், அதேவேளை, தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள முடியுமென்றும் அவர்கள்  மேலும் தெரிவித்தனர்.

அதிஷ்டம் இருந்தால் நீங்களும் வாரிசாகலாம்!!!
சங்கிலி மன்னனின் 28 வது வாரிசு

நான் இலங்கையின் நாவலப்பிட்டி எனும் நகரத்திலேயே பிறந்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு. சங்கிலிய மன்னரை போத்துக்கீசர் இந்தியாவுக்கு கொண்டு சென்றனர். அதேநேரத்தில் அவர்கள் எங்கள் பரம்பரையை பூண்டோடு அழிக்கும் வேலைகளையும் செய்திருந்தனர். சங்கிலிய மன்னன் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டபின்னர், எமது குடும்பத்தை சேர்ந்த பலர் கொல்லப்பட்டனர். குறிப்பாக சங்கிலிய மன்னனின் எத்தனையோ மனைவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்ற வரலாறுகளை நீங்களும் படித்திருப்பீர்கள். இந்சந்தர்ப்பத்தில்தான் எமது பரம்பரையில் இருந்த வீரபாகு மன்னர் பூண்டுலோயோவிற்கு சென்று தலைமறைவு வாழ்வு வாழ்ந்து வந்தார். அவ்வாறு எஞ்சியவர்களில் வந்தவன்தான் நான். (மேலும்...)

 

நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட புலி சந்தேகநபர் தப்பி ஓட்டம்

பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்காக அழை த்துவரப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. சந்தேகநபரான கைதி சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரியின் பிடியிலிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ். றியாஸ் தெரிவித் தார். இச் சம்பவம் நேற்று முன்தினம் 17ஆம் திகதி பிற்பகல் 02.30 மணியளவில் நடைபெற்றுள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் பொலிஸ் விசேட குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ. இயக்க சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை யில் தொடர்ந்து அறுகம்பைகளப்பில் மறைத்துவைக்கப்பட்டிருந்த பல பயங்கர ஆயுத தளபாடங்கள் மீட்கப்பட்டன. இதனுடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.இவர்கள் நேற்று முன்தினம் 17 ஆம் திகதி பொத்துவில் மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு மட்டக்களப்பு சிறைசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்போது நீதிமன்ற வளாகத்திலுள்ள மலசல கூடத்திற்கு கூட்டிச் செல்லப்பட்ட இச்சந்தேக நபர், சிறைச்சாலை உத்தியோகத்தரின் பிடியிலிருந்து விடுபட்டு மதில் மேல் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளார். இக் கைதி பொத்துவில் கோமாரி 2ம் குறிச்சியை சேர்ந்த சசிகரன் என்பவராவார் இராணுவம், விசேட பொலிஸ் அதிரடி படையினர் ஈடுபட்டுள்ளனர்.

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம் - பாகம் 2

(கரு.முத்து)

2000 மாவது ஆண்டிலேயே ஆரம்பித்துவிட்டது காசுக்கு கல்வி கலாச்சாரம். அதுவரை பட்டும் படாமலும் முக்கிய சில படிப்புக்களுக்கு மட்டும் சில ஆயிரங்களை கொடுத்து சீட் வாங்கவேண்டியிருந்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டிலிருந்துதான் எல்லா படிப்புகளுக்குமே காசு வாங்குவது எழுதப்படாத சட்டமாக ஆனது. அதற்கு முந்தைய கால அண்ணாமலை பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு பொற்காலமாக விளங்கியது.  ஒரு மாணவன் அங்கு படிக்க வேண்டும் என்றால் முறைப்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே போதும். அழைப்புக் கடிதம் வீடு தேடி வந்துவிடும். விண்ணப்பத்தின் விலை ஐம்பது ரூபாயோ, நூறு ரூபாயோ படிப்புக்கு ஏற்றமாதிரி இருந்தது. அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் பல்கலைகழகத்துக்கு வந்து நேரடியாக சேர்ந்து கொள்ளலாம். எம்.ஏ, போன்ற படிப்புகளை ஒரு மாணவன் விடுதிகட்டணத்தோடு சேர்த்து ஆண்டுக்கு பத்தாயிரத்துக்குள் முடித்துவிடலாம்.(மேலும்...)

படகு மூலம் ஆஸி. சென்ற 40 இலங்கையர் நாடு திரும்பினர்

சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களில் 40 இலங்கையர்கள் நேற்று விமானம் மூலம் நாடு திரும்பினர். இவர்கள் விசேட விமானம் மூலம் பிற்பகல் நாடு திரும்பியதை குடிவரவு, குடி யகல்வுத் திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா உறுதிப்படுத்தினார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இலங்கையைச் சேர்ந்த 1000ற்கும் அதிகமான சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் நாடு திருப்பி அனுப்பியுள்ளது. கடந்தவாரம் சட்டவிரோத படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவை வந்தடைந்தவர்களே இவ்வாறு இலங்கைக்குத் திருப்பியனு ப்பப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் குடியுரிமை அமைச்சர் பிரன்டென் ஓ கோனர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனைச் சந்தித்தாரா சிதம்பரம்?

'இருக்காது' என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

லங்கைத் தமிழர்கள் பிரச்னையில் தங்களுக்கும் ஈடுபாடு உண்டு என்பதைக் காட்டிக் கொள்ள படாதபாடுபடுகிறது காங்கிரஸ். 'கோடம்பாக்கத்தில் இருந்த பிரபா​கரனை நானே கார் ஓட்டிச் சென்று சந்தித்தேன்’ என்று, ப.சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பேசினார். அந்த நாளில் இருந்து இன்றுவரை இலங்கைப் பிரச்னைகளில் தீவிரமாகச் செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அது​குறித்து விரிவாகப் பதில் அளிக்கிறார். (மேலும்...) 

பிரிந்து போவது பொருத்தமான தீர்வு அல்ல!

தனித் தமிழீழம் குறித்து சி.பி.எம். விளக்கம்

இலங்கையின் இன்றையச் சூழலில், அங்குள்ள தமிழர்​களுக்குத் தேவைப்படுவது, சமவாய்ப்பும் அந்தஸ்தும் உள்ள குடிமக்களாக அவர்கள் நடத்தப்படுவதே ஆகும். அரசியல் தீர்வின் ஒரு பகுதியாக அதிகாரப் பரவல் உறுதிசெய்யப்பட வேண்டும். மறுகுடியமர்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் துரிதமாகப் பூர்த்தியாக வேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நடந்த கடுமையான மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களுக்கான பொறுப்பாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இதற்கு, நம்பகத்தன்மையுடன் கூடிய சுயேச்சையான உயர்மட்ட விசாரணை நடத்த இலங்கை அரசு முன்வர வேண்டும். இதற்கான சர்வதேச நிர்பந்தத்தை இலங்கைக்கு உருவாக்க வேண்டும். (மேலும்...) 

சித்திரை 18, 2013

பனங்கொட்டையா .  .  ?   ஈரப்பலாக்காயா.  .  .  ?

(சபேசன் – கனடா)

எழுபதுகள் எண்பதுகளில் தமிழ்ஈழ தேசியவிடுதல ைபோராட்டத்தில் பிரதான பங்கு வகித்த ஜந்து இயக்கம்களினதும் கொள்கை விளக்கம்களை பார்த்தால் தெரியும்  இந்த ஜரோப்பிய தேசியத்தின் பாதிப்பை. பிற்காலங்களில் பிரதான ஜந்து இயக்கம்களின் அராஜகத்த மட்டும் நிராகரித்சிற அமைப்புகளான என்.எல்.எவ்.ரி.   பி.எல்.எவ்.ரி, புரோவா, பாதுகாப்பு பேரவை போன்றவர்களின் கொள்கைகளிலும்  இதன் பாதிப்புகள் முழுமையாக உள்ளது. வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இன்றுஏற்பட்டு வரும் தேசிய எழுச்சிகள் ,தேசிய பிரச்சனைகளுக்கான தோற்றுவாய்களும் தீர்வுகளும் உலகவல்லரசுகளாலும் ,பிராந்திய வல்லரசுகளாலும் ஏற்படுத்தப்படுகின்றன. (மேலும்...) 

பொதுநலவாய நாடுகளில் இலங்கையை நீக்குமாறு தீர்மானம் நிறைவேற்றம்

பொதுநலவாய நாடுகளில் இருந்து இலங்கையை நீக்குமாறு  தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கத்தினாலேயே இந்த தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற பொது நலவாய நாடுகளின் சட்டத்தரணிகளது மாநாட்டின் போது இந்த தீhமானம் நிறைவேற்றப்பட்டது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் சட்டத்தரணிகள் அமைப்பு, நீதிபதிகள் அமைப்பு மற்றும் கல்வி ஒழுங்கமைப்பு என்பன இணைந்து இந்த தீர்மானத்தை தாக்கல் செய்திருந்தன. இதில் தொடர்ந்து பல்வேறு வன்முறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இலங்கையை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே, நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை வேறு இடத்தில் நடத்துவது தொடர்பில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு ஆலோசிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுநலவாய அமைச்சர்களின் செயற்பாட்டு குழு கூட்டத்தின் போது இலங்கை விடயம் தொடர்பில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முஷாரப்பை கைதுசெய்ய உத்தரவு

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பை கைதுசெய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகளை தடுத்துவைத்திருந்தமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரபுக்கான பிணையை நீடிப்பதற்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நீதிபதி சௌகத் அஸீஸ் சித்திக்கியினால் பர்வேஷ் முஷாரபுக்கான பிணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து பர்வேஷ் முஷாரப் தப்பிச் சென்றுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. இவருக்கான பிணை மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக பொலிஸார் அவரை அண்மித்தபோதிலும், அவர் குண்டு துளைக்காத கறுப்பு வாகனத்தில் தனது பாதுகாவலருடன்  தப்பிச்சென்றுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் கூறியுள்ளன.

டெல்லியில் பாடசாலை மாணவி மீது வல்லுறவு !

டெல்லியில் பத்தாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியொருவர் உறவினர்கள் மற்றும் பக்கத்துவீட்டுகாரர்களால் காரில் கடத்தப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு  தூக்கி வீசப்பட்டுள்ளார். தெற்கு டெல்லி பகுதியில் சரோஜினி நகரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த போது மாணவியை அவளது உறவினரும், பக்கத்து வீட்டு இளைஞர்களும் சேர்ந்து காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து காரில் இருந்து தூக்கி எறிந்துள்ளனர். மேலும் மாணவியை இந்த விடயத்தை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் இந்த கொடூரத்தை தனது பெற்றோர்களிடம் கூற, இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றத்தில் ஈடுப்பட்ட ஒரு இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

முஸ்லிம்களைக் கொன்றோர்க்குத் தூக்கு!?

நயவஞ்சகனான நரேந்திர மோடி...!!

(எஸ்.ஹமீத்)

நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின்(கவ்சர் பீபீ)  வயிற்றை சூலாயுதத்தால் கிழித்துக் கொன்று, அவள் குழந்தையை வெளியே உருவி எடுத்து அதனை நெருப்பில் போட்டு எரித்த சம்பவத்தோடு,  இன்னும் முஸ்லிம்களுக்கெதிரான அநேக கொலைகளும் கொடுமைகளும் நடந்தேறிய குஜராத் கலவரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மனித குலம் வெட்கித் தலை குனியுமளவுக்கு, 2002ம் ஆண்டில் முஸ்லிம்களுக்கெதிராக நரேந்திர மோடியின் அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட அந்தக் கொடூரங்களையும் அட்டுழியங்களையும் பட்டியலிடப் போனால், அதற்குப் பல நாட்கள் தேவைப்படும். பின்னணியில் மோடி இருந்து கொண்டு இந்து வெறியர்களையும் கூலிப்படைகளையும் கொண்டு குஜராத்தில் ஆடிய வெறிச் செயலை, இன-மத பேதங்களுக்கு அப்பால் நின்று இந்திய தேசமே எதிர்த்தது. இங்கு இந்திய தேசமென்று சொல்வது, இந்திய தேசத்தில் வாழ்கின்ற அதிக எண்ணிக்கையான மனச்சாட்சியுள்ள மக்களைத்தான். (மேலும்...) 

அம்மா கைப்பற்றிய அண்ணாமலை பல்கலைக்கழகம்
(கரு.முத்து)

பாரம்பரியமும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் தற்போது அரசுடைமை ஆக்கப்பட்டிருக்கிறது. முதுபெரும் அறிஞர்களையும், தமிழ்ப் புலவர்களையும் உருவாக்கிய இந்த பல்கலைகழகத்தில்தான் திராவிட இயக்கத்தலைவர்களில் பெரும்பாலோனோர் உருவானார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெரும் தீயாய் கிளம்பியபோது இங்கு படித்த மாணவர்கள் காட்டிய கடுமையான இந்தி எதிர்ப்பு ராஜேந்திரன் என்ற மாணவரை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கியது. வரலாறு, இசை, பொறியியல், சமூகம், பொருளாதாரம், வேளாண்மை, மருத்துவம், கலை, விளையாட்டு என்று எல்லா துறைகளும் இயங்குகின்றன.
(மேலும்...)

துன்புறுத்தல் காரணமாகவே சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறினோம் - கைதடி சிறுவர் இல்ல சிறார்கள்

யாழ்ப்பாணம், கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்களை துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் அதன் பொறுப்பாளர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 30ம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி கருப்பையா ஜீவராணி உத்தரவிட்டுள்ளார். யாழ். கைதடி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 16 சிறுவர்களில் 12 பேர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து சிறுவர் இல்லத்தினரால் சாவகச்சேரி பொலிஸாரிடம் கடந்த திங்கட்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்படி முறைப்பாட்டை அடுத்து மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து காணாமல் போனதாக கூறப்பட்ட 11 சிறுவர்களும் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக சிறிவர்தன தெரிவித்தார். (மேலும்...)

போதைப் பொருள் பாவனையில் மட்டு. முதலிடம்

இலங்கையில் மட்டக்களப்பு மாவட்டம் போதை பொருள் பாவனையில் குறிப்பாக மதுபானத்தில் முதலாவது இடத்திலுள்ளது. எனவே, போதைவஸ்து பாவனை ஒழிப்புக்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய வேலைத்திட்டமொன்றை இந்து இளைஞர்கள் மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றத் தலைவருமான சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தினமும் 85,000 மதுபான போத்தல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு போதை வஸ்துப் பாவனை அதிகரித்து செல்வதால் அதை கட்டுப்படுத்துவதுடன் போதைவஸ்து பாவனையிலிருந்து நமது சமூகத்தையம், இளைஞர்களையும் மாணவ சமூகத்தையும் பாதுகாக்க வேண்டும். வறுமை மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பிரகடனப்படுத்தப்பட்டாலும் அது நாடளாவிய ரீதியில் 20ஆவது இடத்தில் தான் உள்ளது. ஆனால் போதைவஸ்துப் பாவனையில் எமது மாவட்டம் தன்னிகரற்ற ஓர் மாவட்டமாக முதலாவது இடத்தை தன்னகத்தே வைத்துக் கொண்டுள்ளது.

24 சிறுமிகளையும் மீண்டும் கைதடி சிறுவர் இல்லத்தில் இணைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

கைதடி சிறுவர் இல்லத்தில் இருந்து வெளியேறிய 24 சிறுமிகளையும் மீண்டும் அதே சிறுவர் இல்லத்தில் இணைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றத்தின் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்வேறு சிறுவர் இல்லங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 24 சிறுமிகளையும் மீண்டும் கைதடி சிறுவர் இல்லத்தில் இன்று புதன்கிழமை சேர்க்கப்பட்டுள்ளனர் என வட மாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் தங்கவேல் உமா தெரிவித்தார். இந்த சிறுவர் இல்லத்தின் நிர்வாக கட்டமைப்புக்கள் யாவும் மாற்றம் செய்யப்பட்டு பெண்கள் உள்வாங்கப்பட்ட புதிய நிர்வாகமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாக  அவர் தெரிவித்தார். அத்துடன் வட மாகாண சிறுவர் நன்நடத்தை பராமரிப்பு திணைக்களத்தின் நேரடி கண்காணிப்பில் இந்த இல்லம் செயற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில் இந்த சிறுவர் இல்லம் தொடர்பான பகுதிக்குரிய நன்நடத்தை உத்தியோகஸ்தரின் கண்கானிப்பு தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தங்கவேல் உமா தெரிவித்தார். குறித்த நன்நடத்தை உத்தியோகஸ்தர் ஒழுங்காக செயற்படவில்லை என்று அறியப்படும் பட்சத்தில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொஸ்டன் குண்டு வெடிப்பு

சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதில் தடுமாறுகிறது அமெரிக்கா

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் இரட்டைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்று இரண்டு நாட்கள் கடந்துள்ளபோதும் சூத்திரதாரிகள் யார்? எதற்காகச் செய்தார்கள் போன்ற கேள்விகள் தொடர்ந்தவண்ணமே இருக்கின்றன. கடந்த காலத்தில் அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சூத்திரதாரி ஒரு நாளில் கண்டுபிடிக்கப்பட்டார். செப்டெம்பர் 11 குண்டுத் தாக்குதலுடன் யார் தொடர்பு என்பது இரண்டு நாட்களுக்குள் அமெரிக்க அதிகாரிகளால் கண்டு பிடிக்கப்பட்டது. எனினும், பொஸ்டன் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் யார்? எதற்காக இதனைச் செய்தார்கள் என்ற இரண்டு கேள்விகளுக்கும் இதுவரை அமெரிக்க அதிகாரிகள் விடை கண்டுபிடிக்கவில்லை. பொஸ்டன் நகரில் மரதன் ஓட்டப் போட்டி நடைபெற்ற இடத்தில் போட்டி முடிவடையும் இடத்துக்கு அண்மையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு குண்டுகள் வெடித்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் உட்பட 3 பேர் உயிரிழந்ததுடன், 183 பேர் காயமடை ந்திருந்தனர். 15 செக்கன் இடைவெளியில் அடுத்தடுத்து வெடித்த இரண்டு குண்டுகள் குறித்து விசாரணைகளை எவ்.பி.ஐ. முடுக்கிவிட்டுள்ளது. கேக் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டே வெடித்துள்ளதாக எவ்.பி.ஐ. அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.

தங்கம் விலை வீழ்ச்சி!

கிரேக்கம், சைப்பிரஸ் பொருளாதார நெருக்கடியே விலை குறைய காரணம்

கிரேக்கம் மற்றும் சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் அந்த நாடுகள் தமது கையிருப்பிலிருந்த தங்கத்தை சந்தையில் விற்பனை செய்ததாலேயே உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஹோலி அவுன்ஸ் தங்கமொன்றின் விலை 1500 அமெரிக்க டொலரிலிருந்து 1380 அமெரிக்க டொலராக குறைந்தது.  இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்தது.மேற்படி இரு நாடுகளினதும் கையிருப்பிலிருந்த தங்கம் ஒரே நேரத்தில் சந்தையில் விற்பனைக்கு வந்ததால் ஏற்பட்ட நிரம்பல் காரணமாகவே இத்திடீர் விலைவீழ்ச்சி ஏற்பட்டது. சுமார் 30 வருடங்களின் பின்னர் தங்கத்தின் விலை ஒரேநாளில் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது என கொழும்பு செட்டியார்தெரு நகைக்கடை உரிமையாளர்கள் கூறுகின்றனர்.  இந்த விலை வீழ்ச்சியைத் தொடர்ந்து தங்கத்தைக் கொள்வனவு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக டுபாய் சந்தையில் தங்கத்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனா போன்ற நாடுகள் டுபாய் சந்தையிலிருந்து தங்கத்தை பெருமளவில் கொள்வனவு செய்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மூத்த இசையமைப்பாளர் டி. கே. ராமமூர்த்தி காலமானார்

பழம் பெரும் இசையமைப்பாளர் டி.கே. ராமமூர்த்தி நேற்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 92 மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக இராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுளளது. அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். திரையிசையில் தங்களுக்கென்று தனிப்பாணியை உருவாக்கிய விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் மெல்லிசை மன்னர்கள் என்று போற்றப்பட்டனர். இருவரும் இணைந்து 700 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். ராமமூர்த்தி, தனியாகவும் பல்வேறு படங்களுக்கு இசையமத்துள்ளனர். கலை உலக சேவைக்காக தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றவர் ராமமூர்த்தி.

ராஜஸ்தானில் 26 வது எண்ணெய் கிணறு கண்டுபிடிப்பு

இலங்கையில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் லங்கா நிறுவனத்தின் தூய் நிறுவனமான கெய்ன் இந்தியா நிறுவனம் ராஜஸ்தானில் தமது 26 வது எண்ணெய்க் கிணறை கண்டு பிடித்துள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனம் ராஜஸ்தானில் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது இக்கிணறை கண்டு பிடித்துள்ளது. பெப்ரவரி மாதம் 25ம் திகதி அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் ராஜஸ்தான் பகுதியிலுள்ள ராஜேஸ்வரி ஆற்று படுகையிலிருந்தே இவ் எரிபொருள் கிணறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பகுதியில் எவ்வளவு எரிபொருள் உள்ளதென்பது தொடர்பிலும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பிலும் மதிப்பீடுகள் தற்போது இடம்பெற்று வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் மன்னாரில் எரிபொருள் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடும் கெய்ன் லங்கா நிறுவனம் இதுவரையில் நான்கு எரிபொருள் கிணறுகளில் அகழ்வுகள் மேற்கொண்டதுடன் அதில் இரண்டு கிணறுகளில் ஹைதரோகார்பன் எரிவாயுவை கண்டெடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.

சித்திரை 17, 2013

அமெரிக்காவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: சிறுவன் உட்பட மூவர் பலி: 140 பேர் படுகாயம்

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு குண்டு வெடிப்புச் சம்பவங்களில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். மேலும் 140 க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டுவெடிப்பை அடுத்து அமெரிக்கா எங்கும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில் தீவிரவாத தாக்குதல் கோணத்தில் அமெரிக்க புலனாய்வுத் துறையான எப். பி. ஐ. விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளது. பொஸ்டன் பொலிஸாரின் விடுமுறைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டு அனைவரும் பணிக்கு திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோரில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. (மேலும்...)

பாஸ்டன் குண்டுவெடிப்பு, மூன்,முகர்ஜி கண்டனம்

அமெரிக்காவில் பாஸ்டன் தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மற்றும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் வெளியிட்டுள்ள செய்தியில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரவாத தாக்குதலாகும் இந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்லை தெரிவித்துக்கொள்வதுடன் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாஸ்டன் மாராத்தான் போட்டியின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உலகில் எந்த பகுதியிலும் பயங்கரவாதம் தலை தூக்ககூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தினை ஒழித்துக்கட்ட வேண்டும. குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும்இ காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகை மீதான தாக்குதலை கண்டிப்போம்! சம உரிமை இயக்கம்

இன்று (ஏப்ரல் 13) அதிகாலையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள உதயன் பத்திரிகை அச்சகத்தின் மீது தாக்குதல் நடாத்தி குழுவொன்று அச்சகத்திற்கும் தீ வைத்துள்ளது. இதற்கு முன்னர் ஏப்ரல் 03ம் திகதி இரவு கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் அலுவலகத்திற்குள் திடீரென நுழைந்த குழுவொன்று அதனை தாக்கி அங்கிருந்த பொருட்களை சேதமாக்கியது. உதயன் பத்திரிகை கூறுவதைப் போன்று 32 சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருப்பதோடு இது 33வது தாக்குதலாகும். அரசாங்கத்தோடு உடன்படாத கருத்துக்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக செயற்பட்டுவரும் வெட்கம் கெட்ட அடக்குமுறை குறித்து இது சிறந்த உதாரணமாகும். (மேலும்...)

Past Pupils’ Association Of St.Michael’s College, Batticaloa,        North America
Annual General Meeting - 2013
Saturday, April 20, 2013   at 11.00A.M.
J & J Swagat Convention Centre
415 Hood Road, Markham, Ontario L3R 3W2
(Warden and Dennison)
Lunch is available after the A.G.M. and for further details,
Please forward this invitation to your Michaelite Friends who live in North America.

ஒரு வருட வீசாவிலுள்ள வெளிநாட்டவருக்கு 8 வருடங்கள் செல்லுபடியாகும் சாரதி லைசன்ஸ்

இலங்கையில் தங்கியிருப்பதற்கென ஒருவருட வீசா வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் எட்டு வருடங்கள் செல்லுபடியாகும் சாரதி லைசன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது.இதனைப் பயன்படுத்தி அவர்கள் சட்டவிரோதமான முறையில் இலங்கையில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. ஒருவருட வீசா வழங்கப்படு கின்ற வெளிநாட்டவர்களுக்கு 8 வருடங்கள் செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரமொன்று ஏன் வழங் கப்படுகின்றது என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர கிளையின் பிரதி ஆணையாளர் சஞ்ஜீவ பந்துகீர்த்தியிடம் கேட்கப்பட்டது. ஒருவருடம் அல்லது அதற்கு மேற்பட்ட வீசா உள்ள வெளிநாட்டவர்களுக்கு இந்நாட்டிலே சாதாரண வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு வழங்கப்படுகின்ற எட்டு வருடங்கள் செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரமே வழங்கப்படுவதாகவும், ஆறு மாதங்கள் அல்லது அதிலும் குறைந்த காலத்திற்குரிய வீசா வழங்கப்பட்டுள்ளவர் களுக்கு மாத்திரம் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். திய சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கும் கணனி மயப்படுத்தப்பட்டுள்ள நடைமுறைக்கேற்ப ஒரு வருடத்திற்கு செல்லுபடியான வாகன அனுமதிப்பத்திரம் ஒன்றினை வழங்க முடியாத நிலை காணப்படு வதாகவும் அவர் மேலும் கூறினார்.

நிர்க்கதியாகியுள்ள இலங்கை பணியாளர் விவகாரம்

சவூதியில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 5000 பேரை கட்டம் கட்டமாக அழைத்துவர முடிவு

சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 5 ஆயிரம் இலங்கை பணியாளர்களையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு திருப்பி அழைத்துவர வுள்ளதாகவும் அது வரை அவர்கள் முன்பு தொழில்புரிந்த இடங்களில் தொடர்ந்து பணிபுரிய சவூதி அரசாங் கத்துடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ள தாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கூறியது. சவூதி அரேபியாவின் ஜித்தா சருபிய்யா பாலத்திற்கருகில் சுமார் 1200 இலங்கை பணியாளர்கள் கடந்த ஒரு மாதகாலமாக நிர்க்கதியான நிலையில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் உணவு, நீர் மற்றும் தங்குமிடமின்றி தவிப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன. இது குறித்து வினவியதற்கு பதிலளித்த அவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்த சுமார் 5 ஆயிரம் இலங்கையர்கள் வேலைத்தளங்களில் தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்காததாலும் வேறு பிரச்சினைகளினாலும் சட்டவிரோதமாக அங்கு இருக்கின்றனர். பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலே அவர்களுக்கு மீள இலங்கை வர முடியும்.

சித்திரை 16, 2013

வட மாகாண தேர்தலில் கூட்டமைப்பிற்கு ஜ.ம.மு. ஆதரவு

கொழும்பில் தேர்தல்களின்போது தன்னை நிலைநிறுத்தியுள்ள தமிழ் கட்சியான ஜனநாயக மக்கள் முன்னணி, வட மாகாண சபை தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துமென எதிர்ப்பார்க்கப்படும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கவுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரான கலாநிதி என்.குமரகுருபரன், தனது கட்சி வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஆதரிக்கும் என தெரிவித்தார். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் சீ.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆலோசித்து வருகின்றது. பொது வேட்பாளர் பட்டியலில் தனது கட்சி வேட்பாளர்கள் சேர்க்கப்படுவார்களா என்பதையிட்டு தீர்மானிக்கப்படவில்லை என கூறிய அவர், தனது கட்சி இந்த தேர்தலில் தனித்து போட்டியிடமாட்டாது என அவர் குறிப்பிட்டார். தற்போது வட மாகாணத்திலுள்ள நிலைமையை கவனத்தில் கொண்டால் தேர்தலின்போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவது அத்தியவசியமானது என அவர் கூறினார். எதிர்வரும் செப்டம்பரில் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கு உதவியளிக்கையில் நிபந்தனைகள் விதிப்பதில்லை - இந்தியா

வெளிநாடுகளுக்கு உதவியளிக்கும் போது நிபந்தனைகளை விதிப்பதில்லையென அறிவித்துள்ள இந்தியா உதவிபெறும் நாடுகளின் இறைமைக்கு குந்தகம் விளைவிப்பதில்லை எனவும் தனது உதவிகளை கேட்கும் நாடுகளுக்கு வழங்குவதாகவும் கூறியுள்ளது. இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கும் போது எவ்விதமான நிபந்தனைகளும் விதிக்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளது. 'எமது ஒத்துழைப்பு உதவிக்கான கேள்வியின் அடிப்படையிலேயே அமையும். அது பங்காளி நாடுகளின் முன்னுரிமை விருப்புகளுக்கு ஏற்பவே இருக்கும். நாம் உதவிகளை நிபந்தனைகளோடு இணைப்பதில்லை. நாம் அவற்றுக்காக கொள்கைகளை வகுக்கப்பபோவதுமில்லை நாம் இந்த நாடுகளின் இறைமைக்கு சவாலாக இருப்பதுமில்லை. நாம் அபிவிருத்தி அனுபவங்கள், மூலவளங்களை பரிமாறிக்கொள்வதை ஊக்குவிக்கின்றோம்' என இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மத்தாய் தெரிவித்தார்.

இலங்கைக்கான பிரிட்டிஷ் எயார்வேஸ் சேவை நேற்று முதல் ஆரம்பம்

பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் பதினைந்து வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான தனது விமான சேவையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. பிரிட்டிஷ் கெஸ்டிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயர்வேஸ்ஸின் அயன்பொய்ட் 777-200 என்ற விமானம் நேற்று நண்பகல் 12.25 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. இவ்விமான நிறுவனம் வாரத்திற்கு மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் அதாவது திங்கள், வியாழன், சனி ஆகிய மூன்று தினங்களிலும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திற்கு சேவை நடத்தவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் இலங்கைக்கு விமான சேவையை மீண்டும் ஆரம்பிப்பதனால் எமது ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் கூறினார். பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் 1998 ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய கடலில் 45 நாட்களுக்கு மீன்பிடி தடை

போலி குற்றச்சாட்டுகளை சுமத்தும் வாய்ப்பை இழந்தனர் தமிழக அரசியல்வாதிகள்

இலங்கைக்கும் இந்தி யாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் நேற்று முதல் பூரணை நிலவுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக் கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைக ளில் ஈடுபடலாகாது என்று இந்திய மத்திய அரசாங் கம் விடுத்துள்ள தடை உத்தரவை அடுத்து இந்த நிலை உருவாகியிருக்கி றது. மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரி னங்கள் முட்டையிட்டு இனவிருத்தி செய் வதற்கான காலம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் என்பதால், இக்காலப் பகுதியில் 45 நாட்களுக்கு மீன்பிடிக்கக் கூடாது என ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசினால் அறிவிக்கப்படுகிது. அந்த வகையில் இம்முறையும் இந்த 45 நாள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

சித்திரை 15, 2013

தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகம் - இந்தியபாராளுமன்ற உறுப்பினர்

இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்களை வழங்குவது சந்தேகமே என்று அண்மையில் இலங்கைக்;குப் பயணம் மேற்கொண்ட திரிணமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சௌகதா றோய் தெரிவித்துள்ளார். அண்மையில், இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவில் இடம்பெற்றிருந்த திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் சௌகதா றோய் இந்திய ஊடகம் ஒன்றுக்குத் தகவல் வெளியிடுகையில்: இலங்கையில் உள்ள தமிழர்கள் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விவகாரத்தில், இந்தியா தலையிட்டு, ஏதாவது செய்யாதா என, எதிர்பார்க்கின்றனர்.(மேலும்...)

இலங்கைக்கான உதவியில் 20 வீதம் குறைப்பு - அமெரிக்கா

இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் 20 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி முன்மொழிந்துள்ளார். மனித உரிமைகள், மீள்கட்டுமானம், அரசியல் ஒன்றிணைவு ஆகியன தொடர்பாக உண்டாகியுள்ள கசப்புணர்வை பிரதிபலிக்கும் வகையில் இலங்கைக்கான அமெரிக்காவின் உதவியில் குறைப்பினை மேற்கொள்வதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கெரியின் வரவு செலவுத்திட்ட ஆலோசனையில் தென் ஆசிய நாடொன்றுக்கான ஆகவும் கூடிய உதவி குறைப்பாக இது அமைவதாக கூறப்பட்டுள்ளது. இலங்கைக்கு 11 மில்லியன் டொலர் உதவி வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளார். இது 2012ஆம் ஆண்டு அமெரிக்காவினால் இலங்கைக்கு மேற்கொள்ளப்பட்ட உதவியுடன் ஒப்பிடுகையில் 20 சதவீத உதவி வெட்டை காட்டுகின்றது. "நாம் வடக்கிலுள்ள இடம்பெயர்ந்தோருக்கும் வழமையான வாழ்வுக்கு திரும்பவும் மீள் கட்டுமானதத்தில் உதவவும் பெரிதும் முயற்சி செய்தோம். ஆனால் நாம் ஆதரவளிக்க முயன்ற பல திட்டங்களில் அரசாங்கம் குறிப்பாக இராணுவம் தலையீடு செய்தது. எனவே எம்மால் அந்த திட்டங்களை தொடர முடியவில்லை" என ஒரு சிரேஸ்ட இராஜாங்க திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார்.

வெனிசூலா ஜனாதிபதி தேர்தலில் நிக்கலஸ் வெற்றி

வெனிசூலா ஜனாதிபதி தேர்தலில் மறைந்த சாவோசின் சமவுடமை கட்சியின் வேட்பாளரான நிக்கலஸ் மதுரோ வெற்றியீட்டியுள்ளார். 50.7 வீதமான வாக்குகளை பெற்று வெற்றியீட்டியுள்ளார்.அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றிக் கப்ரில்ஸ் 49.1 வீதமான வாக்குகளையும் பெற்றுள்ளார்.

சீனாவிடமிருந்து ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சி?

சீனாவிடமிருந்து ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாகத் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவுடன் வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்வதன் மூலம் இந்த சலுகைத் திட்டத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவருடன் ஏற்கனவே இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சலுகைத் திட்டத்தை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என ஏற்கனவே சீனா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இரத்துச் செய்தமையால் இலங்கையில் ஆடைக் கைத்தொழில்துறை பல சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் சீனாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டால் நீண்ட கால அடிப்படையில் பாரிய நன்மைகள் ஏற்படும் எனவும், இத்துறைக்கு புத்துயிர் அளிக்குமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுநலவாய செயலகம் அதிருப்தி

அண்மையில் திடீரென நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு பொதுநலவாய நாடுகள் செயலகம் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்ற நீதவான்கள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். மாவட்ட நீதவான்கள் 240 பேரில் 80 நீதவான்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இடமாற்றம் செய்யப்பட்ட நீதவான்களில் பெருமளவிலனாவர்கள் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் களைகட்டிய புத்தாண்டுக் கொண்டாட்டம்!

யாழ். மாவட்டத்தில் இம்முறை புத்தாண்டு மிகவும் எழுச்சிகரமாகவும் கோலகலமாகவும் கொண்டாடப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். நள்ளிரவு நேரம் புத்தாண்டு பிறந்த போதிலும் பொது மக்கள் நள்ளிரவிலேயே நீராடி இந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் நண்பர்கள் உறவினர்களுடன் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்கள். விசேடமாக கைவிசேசங்கள் வழங்குவதில் ஈடுபட்டதுடன் வர்த்தகப் பெருமக்களினால் வர்த்தக நடவடிக்கைகளும் நள்ளிரவில் இடம் பெற்றன. வங்கிகள் இன்று காலைமுதல் தன்து வாடிக்கையாளர்களுக்கு கைவிசேசங்கள் கொடுத்து வாடிக்கையாளர்களின் வைப்புக்களை பெற்றதடன் பரிசுப் பொருட்களையும் வழங்கின. வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் கைவிசேசங்கள் வாங்குவதில் சிறுவர்களும் பெரியவர்களும் முண்டியடித்தமையையும் காணக் கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ் காலமானார்

தமிழ் சினிமாவில் பழம்பெரும் பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் மோசமான நிலையில் இருந்து வந்தது. இதனால் சென்னை சிஐடி நகரில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 82. காலமான பி.பி.ஸ்ரீநிவாஸ் 1934-ம் ஆண்டு செப்டம்பர் 22ம் நாள் ஆந்திராவில் காக்கிநாடா மாவட்டத்தில் பிறந்தார். தமிழ்த் திரை இசை உலகில் டி.எம்.சௌந்தரராஜன் புகழின் உச்சியில் இருந்த காலத்தில் ஸ்ரீநிவாஸ் அவருக்கு அடுத்த இடத்தில் விளங்கினார். வெண்கலக் குரலில் பாடிவந்தோர் காலகட்டத்தில், மென்மையான குரலால் இனிமையைக் கூட்டி பாடுவதில் ஒரு புதிய பாணியை கொண்டுவந்தவர் பி.பி.ஸ்ரீநிவாஸ். 'காலங்களில் அவள் வசந்தம்', ‘மயக்கமா கலக்கமா’ ‘நிலவே என்னிடம் நெருங்காதே’ என காலத்தால் அழியா பாடல்களை பாடிய அற்புதமான பாடகர். தமிழ்ப் படங்களில் ஜெமினி கணேசன், கன்னடத்தில் ராஜ்குமார் ஆகியோரின் அனைத்துப் படங்களிலும் இவர்தான் பின்னணி பாடியுள்ளார். பி.பி.ஸ்ரீநிவாஸ் மறைவிற்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சித்திரை 14, 2013

தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் இனவாதத்தின் அரசியல் நோக்கங்கள

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தமிழ்நாட்டில் இலங்கையர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடாவடித்தனங்கள் இலங்கையில் பலரை விசனம் கொள்ளச் செய்துள்ளது. இலங்கை தமிழர்களின் பெயரில் அவை இடம்பெற்றாலும் இலங்கை தமிழ் தலைவர்களும் தமிழ்நாட்டில் இடம்பெற்ற பல வன்செயல்களை கண்டித்தனர். நகைப்புக்குறிய விடயம் என்னவென்றால் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் போலவே இலங்கையிலும் இனவாதத்தை பாவித்து வாழ்க்கை நடத்தும் பொது பல சேனா போன்ற அமைப்புக்களும் தமிழ்நாட்டவர்களை பாவித்து இனவாதிகள் என்று கூறுவதே. இலங்கையில் தமிழ் மக்களுக்காக தமிழ்நாட்டவர்கள் குரல் கொடுப்பதையோ அல்லது ஆர்ப்பட்டம் செய்வதையோ நியாயமாக சிந்திக்கும் எவரும் இனவாதம் என்று கூறுவதில்லை. அது இயல்பான இன உணர்வின் வெளிப்பாடாகும்.  (மேலும்...)

ராமேஷ்வரத்தில் இருந்து தலைமன்னார் வரையான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணக்கம்!

இராமேஷ்வரத்தில் இருந்து தலைமன்னார் வரையான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதற்கு இந்தியாவும் இலங்கையும் இணங்கியுள்ளனர். எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் பயணிகள் படகுச் சேவையை ஆரம்பிக்கக்கூடியதாய் இருக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சின் விசேட விவகாரங்களுக்கான செயலாளர் ஆர்.எஸ்.ராகவன் கிளிநொச்சியில் ஊடகவியலாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்ததாக பீ.பீ.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆயிரத்து 230 வர்த்தகர்களுக்கு சுமார் 50 கோடி ரூபா நிதியுதவியை பகிர்ந்தளிப்பதற்காக ஆர்.எஸ்.ராகவன் இலங்கை வந்திருந்தார். வீடற்றவர்களுக்கான வீடுகளை வழங்குவதுடன் அவர்களின் பொருளாதார மேம்பாடு மற்றும் விவசாய அபிவிருத்திக்காகவும் இந்திய உதவிகளை வழங்கி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

19 வருடங்களுக்கு பின் மீண்டும் பிறந்த மகள்!

வாழ்க்கையில் நிகழும் உண்மை சம்பவங்கள், கற்பனை கதைகளை விட மிகவும் சுவாரஸ்யமானது. இங்கிலாந்தில் வசிக்கும் 19 வயது யுவதியான பொப்பி ஒரு பிரச்சினையால் மிகவும் குழப்பமடைந்திருந்தாள். அவளது தாய் தந்தையரின் உடல் நிறமோ வெள்ளை. அவளுடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லோருமே வெள்ளை நிறம். ஆனால், அவள் மட்டும் கறுப்பு. பொப்பி சட்ட கல்லூரி மாணவி. இங்கிலாந்தில் மென்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்தாள். தன் நிற வேற்றுமையைக் கண்டு குழப்பமடைந்த அவள், இது தொடர்பில் தனது பெற்றோரிடம் முறையிட்டாள். மகளின் கேள்வியால், அவளது தாய் ஜெனியும், தந்தை கிளிப்பும் திகைத்து போனார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் இறுதியில் அவளிடம் உண்மையை கூறினார்கள். (மேலும்...)

அரசியலிலிருந்து விலகுகிறாரா சோனியா காந்தி?

தனது வாரிசுகளை அரசியல் களத்தில் ஈடுபடுத்துவதால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு அரசியலிலிருந்து விலகுவார் என்று எதிர் பார்க்கப் படுகிறது. இது தொடர்பில் இந்திய செய்திகள் வெளியிட்டுள்ள செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த ஜனவரி மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் போது, ராகுல்காந்திக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  பிரியங்காவையும் அரசியலுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை சோனியா தற்போது தீவிரப்படுத்தி உள்ளார். சோனியாவின் திடீர் உடல் நலக் குறைவு பிரியங்காவை, அரசியலில் குதிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.(மேலும்...)

அரசுடன் பின் கதவால் உறவாடும் சுரேஸ்

ஜனாதிபதி தனது பதவியை திறப்பதே பேருதவி என்கின்றார்

ஊடகங்களின் மீது தாக்குதல் மேற்கொள்பவர்கள் ஒருவரை கூட கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க முடியாத ஜனாதிபதி நிச்சயமாக தனது பதவியை திறப்பதுதான் நாட்டு மக்களுக்கு செய்யும் பேருதவி என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார். (மேலும்...)

மாங்குளத்தில் இராட்சத சிலந்தி

இலங்கையின் வடபுலத்தில் குடிகொண்டுள்ள விஷ ஜந்துகள் தொடர்பாக வெளிவரும் புதிய ஆராய்ச்சித் தகவல்கள் மக்களைத் திடுக்கிட வைப்பனவாக உள்ளன. நாம் வாழும் சூழலில் நமக்கு தெரியாமலேயே இத்தனை கொடிய விஷம் கொண்ட ஜந்துகள் இவ்வளவுகாலம் வாழ்ந்துள்ளனவே! என்ற பிரமிப்பையும் இந்த ஆராய்ச்சித் தகவல்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. மேலும், இவ்வாறான இன்னும் எத்தனை புதிய வகை விஷ ஜந்துகள் நமது சூழலில் உள்ளனவோ, என்ற பீதியையும் மக்கள் மனங்களில் இவை விதைத்துள்ளன என்றுதான் கூறவேண்டும். வடபகுதியை பொறுத்தவரையில், காடுகள், பற்றைக்காடுகள், சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள், மணற்பாங்கான இடங்கள் என பல்வேறுபட்ட இயற்கை தரைத்தோற்ற அம்சங்கள் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் வித்தியாசமான இயல்புகளைக் கொண்ட பல ஜந்துகளை காண முடிகிறது.  (மேலும்...)

சுரேஸ் எம்.பியை 4ஆம் மாடிக்கு அழைப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடக பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமசந்திரனுக்கு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் 4 ஆம் மாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது  அவர் இதனைத் தெரிவித்தார். இணையத்தளமொன்றில் செய்தி வெளியிடப்பட்டது தொடர்பாக குற்றவியல் சட்டகோவையின் பிரகாரம் கோப்பாய் பொலிஸாரின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நான்காம் மாடிக்கு கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த அழைப்பு விடுப்பதற்கான அறிக்கை நேற்றுமுன்தினம் இரவு 9.30 மணியளவில் தனது கையில் கிடைத்ததனாலும் வாகன சாரதி இல்லாமையினாலும் விசாரணைக்கு செல்ல முடியவில்லை என்றும் அவர் கூறினார். விசாரணைக்கு செல்வதற்கான மாற்று திகதி எடுத்து தருமாறு கோப்பாய் பொலிஸாரிடம் தான் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். த.தே. கூட்டமைப்பு எம்பி சிறீதரனை மதவாச்சயில் சுட்டும், கடந்தமாதம் 4ம் மாடிக்கு விசாரணைக்கு அழைத்தும் 'பிரமுகர்' ஆக்கிய மகிந்த அரசு தற்போது சுரேஸுக்கு அந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. வேறு ஒன்றும் இல்லை.

சித்திரை 13, 2013

ஒரு "தமிழீழப்" போராளியின் நினைவுக் குறிப்புக்கள் - பகுதி 6

(எல்லாளன்)

விடுதலையாக்கப்பட்ட சுதன் ரமேஸ் போன்றவர்களைச் சந்தித்து நடந்த சம்பவங்களை விளக்குமாறு கேட்டோம். அவர்கள் தாம் புலிகளின் வலைக்குள் விழுந்து விட்டது உண்மை என்பதை ஒப்புக்கொண்டனர். அத்துடன், புலிகளிடம் ஆயுதம் வாங்கி ரெலோத் தலைவரைக் கடத்திக் கொண்டு போய் மத்தியகுழு அமைப்பது தொடர்பாக சில முடிவு செய்தவுடன் தாம் அவரை விட்டு விடுவதாக நினைத்திருந்தோம் என்று தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் எனவும் கூறினர். நாம் கேட்ட கேள்விகள் சில. உங்களிடம் ஆயுதம் இல்லையா? மத்தியகுழுப் பிரச்சினையை இவ்வாறுதானா கையாளுவது? அக்கேள்விகளுக்கு அவர்களின் பதில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவில்லை. அதனால் அவர்களை வெளியேற்றி விட்டுத் தொடர்ந்து வேலை செய்வதாக முடிவு செய்தோம். அவர்கள் புலிகளுடன் சேர்ந்து வேலை செய்ய முடிவு செய்தனர். (மேலும்...)

வெளிவந்துவிட்டது வானவில் 27

மிழக மாணவர்கள் போராட்டத்தின் குறி இந்திய அரசே!

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அண்மையில் உருவாகியுள்ள மாணவர்களின் எதிர்ப்புப் போராட்டங்கள் ஒரு புதிய பரிமாணமாக அரசியல் நோக்கர்களால் நோக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தை விரும்பியோ விரும்பாமலோ ஏறத்தாழ அனைத்து தமிழகக் கட்சிகளும் ஆதரிக்கினற்ன. அதுமாத்திரமல்லாமல் இந்தப் போராட்டங்கள் காரணமாக இந்திய மத்திய அரசாங்கமும் பெரும் இக்கட்டில் சிக்கியுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக திராவிட இயக்கங்கள் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அக்கறை செலுத்தி வந்துள்ளன என்பது வரலாறு. ஆரமப் காலத்தில்
ஆங்குள்ள எல்லாக் குழுக்களினதும் வாக்கு வேட்டைக்கான முதலீடாகவும் மாறிவிட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்து திராவிட இயக்கங்கள் நடாத்தும் அலங்கார திருவிழாக்களால் மருண்டுபோன தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, இடதுசாரிக் கட்சிகள், பாரதிய ஜனதாக் கட்சி என்பனவும் கூட இப்பொழுது இந்த மலிவான விளையாட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளன.
(மேலும்...)

பொட்டு அம்மானின் மனைவி தற்கொலை செய்து கொண்டார்

பிரபாகரன்,சூசை தற்கொலை செய்துக்கொள்ளவில்ல - பொன்சேகா

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும் கடற்புலிகளின் தளபதி சூசை தற்கொலை செய்துக்கொள்ளவில்லை அவர்கள் இருவரும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே கொல்லப்பட்டனர் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். அவ்விருவரும் தற்கொலைச் செய்து கொண்டதாக ஊடகங்களில் வெளியான தகவல்களையும் அவர் நிராகரித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரன் மற்றும் 100 போராளிகளுடன் சூசையும் இலங்கை  இராணுவத்தினரால் கொல்லப்பட்டார். பிரபாகரன் மற்றும் சூசையின் குண்டுதுளைத்த உடல்களை நாம் கண்டெடுத்தோம்.அவர் கடைசிவரை போராடியே மரணமானார் என்பதை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் எமக்கு கிடைத்தன. பிரபாகரனும், சூசையும் சயனைட் உட்கோள்ளவோ, தற்கொலை செய்து கொள்ளவோ இல்லை. அத்துடன். புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மானின் மனைவி தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

இலங்கைத் தமிழருக்கு பிரித்தானியாவில் சிறை!

பிரித்தானியாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரதீப் மூர்த்தி என்ற குறித்த நபர் பொதுநலவாய நாடுகள் அமைப்புச் செயலகத்தின் 375000 ஸ்ரேலிங் பவுண்ட் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நிதி முகாமையாளராக பணியாற்றிய இவருக்கு   20 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் குறித்த பணத்தில் சூதாடியுள்ளதுடன் அமெரிக்கா லாஸ் வெகாஸிற்கு சுற்றுலா செல்லவும் உபயோகப்படுத்தியுள்ளார். பிரதீப் தனது பாடசாலை நண்பர்களுடன் இணைந்து பணச் சலவை ( Money Laundering) நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

உலகிலேயே மது அருந்துவோர் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில்!

உலகிலேயே மது அருந்துவோர் அதிகமாகவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காம் இடத்தில் உள்ளது. எனவே நாட்டில் மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என எப்படிக்கூறமுடியும் என தேசிய சங்க சமேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். பண்டிக்கைக்கு அன்று ஊருக்கு செல்லும்போது 'ஒரு கை வெற்றிலையுடனேயே செல்வார்கள். இன்று இரண்டு போத்தல் சாராயத்துடன் செல்லும் கலாசார சீரழிவு உருவாகியுள்ளதாகவும் தேரர் தெரிவித்துள்ளார். இது மதுவுக்கு 'முற்றுப்புள்ளி' என்பது இல்லை, இது மதுவுக்கு (கமா) என்றே கூறவேண்டும். அதாவாது, தொடர்கதையாகிவிட்டது என்று ரஜவத்தே வப்ப தேரர் குறிப்பிட்டுள்ளார்.

உதயன் மீது தாக்குதல்,துப்பாக்கிச்சூடு, எரித்து நாசம்

யாழ்ப்பாணத்திலுள்ள உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது இன்று சனிக்கிழமை அதிகாலை 4.50 மணியளவில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். யாழ். கஸ்தூரியார் வீதியிலுள்ள அலுவலகத்திற்குள் அத்துமீறி புகுந்த மூவர் அடங்கிய துப்பாக்கித்தாரிகளே அங்கு கடமையிலிருந்த காவலாளியை அச்சுறுத்தி துரத்திவிட்டு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், உதயன் இணையத்தள அறைக்குள்ளும் புகுந்து அங்கிருந்த இலத்திரனியல் பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  இயந்திரங்களுக்கான பிரதான மின்விநியோகத்தை துண்டித்தே துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் இயந்திரங்கள் மற்றும் கணினி அறை மற்றும் இயந்திரங்களுக்கும் விநியோகத்திற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த பத்திரிகைகளுக்கும் கழிவு எண்ணெய் இன்றேல் பெற்றோல் ஊற்றி எரியூட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்...)

'பொது பல சேனாவிற்கு எதிராக மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம்'

'பொது பல சேனாவிற்கு எதிராக மெழுகுவர்த்தி ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பில் நேற்ற நடத்தப்பட்டது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டு 10 அல்லது 15 நிமிடங்களுக்குள் அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் ஆர்ப்பாட்டத்தை நடத்தவிடாது கலைத்ததாக தெரிவித்தனர். கொழும்பு தும்முள்ள சந்தியிலேயே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 'பொதுபல சேனாவை கேள்விக்குள்ளாக்கும் பௌத்தர்களின் அமைப்பு' என்னும் அமைப்பே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. ஏனைய மதங்களை மதித்து நடப்பதே புத்தபிரானின் தத்துவம் என்றும், பொது பல சேனா அமைப்பின் கொள்கைகள் பௌத்த கொள்கைகளுக்கு முரணானது என்றும் அந்த அமைப்பினர் தெரிவித்தனர். சமூக வலைத்தளம் ஒன்றின் மூலமாகவே இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய திரைப்பட நட்சத்திரங்கள் திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் நடிக்கிறார்கள்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழகத்தின் நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள், திரை உலகுடன் தொடர்புடைய அனைவரும் கடந்த வாரத்தில் இலங்கைத் தமிழர்களையும் தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றக்கூடிய வகையில் தத்ரூபமாக சோகம் தோய்ந்த முகத்துடன் உண்ணாவிரப் போராட்டத்தில் பசிப்பட்டினியுடன் ஈடுபடுபவர்களைப் போன்று சொந்த வாழ்க்கையிலும் நடித்தார்கள். தமிழ்நாட்டின் இந்த கூத்தாடிகளை நேரில்வந்து பார்ப்பதற்கு விருப்பம் கொண்ட பொதுமக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வந்தார்களே ஒழிய இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென்று இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார். (மேலும்.....)

காங்கேசன்துறை சீமெந்து ஆலையை மீள இயக்குவதற்கு நடவடிக்கை

காங்கேசன்துறை சீமெந்து தொழிற் சாலையின் உற்பத்தி பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் புதிதாக சீமெந்து தொழிற் சாலை ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள் ளதாக அரச வளங்கள் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறித திசேரா தெரிவித்தார். இதன்மூலம், சந்தையில் எந்தவித தட்டுப்பாடுகளும் இன்றி, குறைந்த விலையில் சீமெந்தை வழங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை கடந்த கால யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அதன் உற்பத்தி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன. இந்நிலையில் மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் குறைந்த விலையில் தரமான சீமெந்தை மக்களுக்கு வழங்க முடியும் என்றார்.

தமிழக மீனவரின் அத்துமீறலுக்கு எதிராக தமிழ்நாட்டு தலைவர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை?

ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான பிரேரணையை மையமாகக் கொண்டு கடந்த பல வாரங்களாக இலங்கைக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான நல்லுறவு மோசமடைந்து இருப்பதனால் இரு தேசங்களின் மக்கள் இரு நாடுகளுக்கும் செல்வதற்குக் கூட அஞ்சுகின்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். தேர்தலை இலக்குவைத்து தமிழ் நாட்டின் ஆளும் கட்சியான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழ கமும் கடந்த சில வாரங் களாக இலங்கைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை செய்யு மாறு மாணவர்களையும் மற்றவர்களையும் தூண்டி விட்டு தங்கள் செல்வாக் கைப் பெருக்கிக் கொள்வதற்கு எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை. (மேலும்.....)

சித்திரை 12, 2013

முஸ்லிம்களுக்குப் பிரச்சினை ஏற்பட இடமளிக்க மாட்டோம்!, இலங்கையின் பாதுகாப்பு செயலர் கூறுகிறார்!

(எஸ்.ஹமீத்)

இன்று (11-04-2013) இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் சமய போதகர்கள் (உலமாக்கள்), பொதுமக்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளிவாசல் அமைப்புகளின் பிரதிநிதிகளென பலர் சிறப்பு விமானமொன்றில் தலைநகர் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டார்கள். அவ்வாறு வரவழைத்தவர் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஸ ஆவார். இலங்கை அரசியல் வட்டாரத்தில் இன்று பலம் பொருந்தியவராக உள்ளவர் இவர். ஆயினும், அண்மைக் காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கெதிராக பொது பல சேனா என்ற பௌத்த பிக்குகளின் அமைப்பு தீவிரவாத சிங்கள மக்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு நடாத்திய வெறியாட்டங்களின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்சவே இருந்தார் என்று பரவலான ஊகங்கள் நிலவின. (மேலும்.....)

புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டினார் - விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழகத்திலிருந்து விரட்டியடிக்க, முதல்வர் ஜெயலலிதா தீவிரம் காட்டியதாக அமெரிக்கா குறிப்பிட்டதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து தமிழகத்தில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட அனைத்து இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா, புலிகளை ஒடுக்குவதற்கு முயற்சித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலி ஆதரவாளர்கள் மற்றும் தொடர்புடையவர்களை சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்வதற்குக் கூட ஜெயலலிதா அஞ்சவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவை அமெரிக்கத் தூதுரக அதிகாரிகள் இரும்புப் பெண் என வர்ணித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தக் குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதராக் முதல்வர் கருணாநிதி செயற்பட்டதாக அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்த கருணாநிதி, 1989ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதன் பின்னர் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சுமந்திரன் - கீதாஞ்சலி கருத்து மோதல்

தமிழ்க் கூட்டமைப்பின் தவறான போக்கு இந்திய எம்.பிக்கள் சந்திப்பில் அம்பலம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய எம்.பிக்கள் குழுவுடனான சந்திப்பின் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரனுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளருமான திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரனுக்குமிடையில் காரசாரமான கருத்து மோதல்கள் இடம்பெற்றன. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய பிரதி உயர் ஸ்தானிகரகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. வடபகுதி அரசியல் பிரமுகர்களும் அரசசார்பற்ற பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இருவருக்குமிடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களால், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தவறான போக்கை இந்திய எம்.பிக்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. (மேலும்.....)

இந்தியாவிடம் கோட்டாபய விசாரணை நடத்தலாம் - ஹரிஹரன்

விடுதலைப்புலிகளுக்கு இந்தியா ஆயுத பயிற்சியளித்தது குறித்து சர்வதேச நாடுகள் விசாரிக்கவேண்டும் என்று கோருவதற்கு பதிலாக, அப்படியான விசாரணையை இலங்கையின் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவே நடத்தலாம் என்று இந்திய அமைதிப்படையில் இலங்கையில் பணிபுரிந்த இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ரதிமோகன் உட்பட 19 பேரையும் திருப்பும் அனுப்பும் நடவடிக்கை நிறுத்தம்

விடுதலைப் புலிகள் அமைப்பினர் நடத்திய தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த லோஹினி ரதிமோகன் உட்பட தற்போது துபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை லண்டனிலுள்ள அவரின் வழக்கறிஞர் குலசேகரம் கீதார்த்தனன் பிபிசி தமிழோசையிடம் உறுதிப்படுத்தினார். இது தொடர்பில் அபுதாபிலுள்ள ஐ.நா மன்ற அகதிகளுக்கான அமைப்பின் (யு.என்.எச்.சி.ஆர்)அதிகாரியிடமிருந்து எழுத்துபூர்வமான தகவல் வந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். புகலிடம் தேடி வருபவர்களுக்கு அகதி தஞ்சம் அளிக்கும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் மற்றும் பாதுகாப்பான இதர நாடுகளிடம் இவர்களை அகதிகளாக எடுக்கும்படி தாங்கள் மீண்டும் விண்ணபிக்கப் போவதாகவும் (யு.என்.எச்.சி.ஆர்)அமைப்பின் அதிகாரி தமது பதிலில் தெவித்துள்ளதாகவும் கீதார்த்தனன் கூறினார்.

படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்குள் நுழைந்த 66 இலங்கையர்களை நாடு கடத்த நடவடிக்கை

இலங்கையிலிருந்து 66 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் படகொன்று அவுஸ்திரேலியா சென்றமை குறித்த விசாரணைகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர். சட்டவிரோதப் புகலிடக் கோரிக் கையாளர்கள் 55 பேருடன் இலங்கையிலிருந்து படகொன்று இரண்டு தினங்களுக்கு முன்னர் அவுஸ்திரே லியாவின் மேற்குத் துறைமுகத்தைச் சென்றடைந்திருந்தது. இவர்களை நாடு கடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் ஜேசன் க்ளேர் தெரிவித்தார். இலங்கையைச் சேர்ந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட 66 பேர் மீன்பிடிப் படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியாவின் மேற்குத்துறைமுகத்தை சென்றடைந்திருந்தனர். இவர்களை உடனடியாக நாடு கடத்துவதற்கு நடவ டிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியாவின் உட்துறை அமைச்சர் ஜேசன் க்ளேர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக படகுகளில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைபவர்கள் உடனடியாக நாட்டுக்குத்திருப்பியனுப் பப்படுவார்கள் என்ற தெளிவான செய்தியைத் தாம் மீண்டும் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

பலஸ்தீன தேசத்துக்கு குவதமாலா அங்கீகாரம்

பலஸ்தீனத்தை ஒரு இறையா ண்மை கொண்ட நாடாக குவத மாலா அங்கீகரித் துள்ளது. மத்திய கிழக்கு அமைதி பேச்சுவார்த்தையை வேகப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குவதமாலா ஜனாதிபதி அலுவலகம் கூறியுள்ளது. இதன்மூலம் பலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கும் ஏனைய லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளுடன் குவதமாலாவும் இணைந்துகொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவு இஸ்ரேலுடனான தனது நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் இஸ்ரேலுடனான உறவை குவதமாலா அரசு மதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று குவதமாலா அரசு பலஸ்தீன தேசமும் இஸ்ரேல் தேசமும் சர்வதேச முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதை எதிர்பார்ப்பதாகவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் இஸ்ரேல் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சட்டவிரோத குடியிருப்புகளை அமைத்துவரும் நிலையில் இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தையை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் முற்றாக நிராகரித்து வருகிறார்.

சித்திரை 11, 2013

இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பிற்கு, ஈடாக இந்தியா விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியது - விக்கிலீக்ஸ்

இந்தியா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 50 இலட்ச ரூபா நட்ட ஈடு வழங்கியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களுக்கு நட்ட ஈடாக இந்தியா இந்தப் பணத்தொகையை புலிகளுக்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்த குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்திய அமைதி காக்கும் படையினரை அனுப்பி வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்படக் கூடிய வரி வருமான இழப்பிற்கு, ஈடாகவே இந்தத்தொகை வழங்கப்பட்டது என அப்போதைய இலங்கைக்கான இந்திய தூதுவர் டிக்ஸித் தெரிவித்தார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1987ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்த நட்டஈட்டுத் தொகை புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரகசிய இணக்கப்பாட்டுக்கு அமைய இந்தப் பணக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக புலிகளின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். வடக்கு கிழக்கு மாகாணசபையில் கூடுதல் ஆசனங்களை வழங்குதல், புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒரு பில்லியன் ரூபா பண உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த இரகசிய இணக்கப்பாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுக்கும் தமிழ்த் தலைமைகள்!
வெட்கத்தில் முகம் கவிழும் முஸ்லிம் தலைமைகள்!!

(எஸ்.ஹமீத்)

முஸ்லிம்கள் என்றும் இஸ்லாம் என்றும் மேடைகளில் முழக்கமிட்டு அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை நயவஞ்சகத்தனமாகக் கவர்ந்து அமைச்சர் பதவிகளையும் பிரதி அமைச்சர் பதவிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் இன்று ஆழ்ந்த உறக்கத்துக்குள் அமிழ்ந்திருக்க, 30 வருடங்களுக்கும் மேலாகத் துயரக் கடலில் தத்தளிக்கும் தமிழ் சமூகத்தின் விடிவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்கள், பாராளுமன்றத்திலே தமக்கு ஒதுக்கப்படுகின்ற பொன்னான நேரங்களைத் தமிழ் மக்களின் குறைகளை எடுத்துச் சொல்வதற்குப் பயன்படுத்தாமல், அந்த அரிய நேரங்களை முஸ்லிம் மக்களின் அவலங்களை எடுத்துக் கூறுவதற்குப் பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கையில் அவர்களை நினைத்துப் பெருமையும் நமது தலைவர்களை நினைத்து வெட்கமும் துக்கமும் அடைய வேண்டிய நிலைமையில் நாம் இருக்கின்றோம். (மேலும்.....)

சம்பந்தனின் முதலைக் கண்ணீரை முஸ்லிம்கள் நம்பக்கூடாது

சம்பந்தனின் முதலைக் கண்ணீரை முஸ்லிம்கள் நம்பக்கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தற்போது நாட்டில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்  பாராளுமன்றத்தில் நேற்று  விசேட கூற்றினை முன்வைத்து உரையாற்றியிருந்தார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள மொஹமட் முஸம்மில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளால் முஸ்லிம் பாரிய இன்னல்களை சந்தித்ததாகவும் அதன்போது சம்பந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புலிகளின் கைப்பொம்மைகளாக செயற்பட்டதுடன், மௌனமாக இருந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்ப்பாட்டத்துக்கு அழைத்து வரப்பட்டோர் கூட்டமைப்பு எம்.பிக்கள் மீது சீற்றம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனுசரணையில் நேற்று புதன்கிழமை முல்லைத்தீவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து வரப்பட்ட மக்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் மீது சீறிப்பாய்ந்து கடும் கோபத்தை வெளிப்படுத்தினர். முல்லைத்தீவு மக்களின் பிரச்சினை குறித்து கலந்துரையா டல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்து மகஜரொன்றை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகவும் புதிதாக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனான அமைப்பொன்று இதற்கு அழைப்பு விடுத் திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அழைக்கப்பட்ட மக்க ளிடம் மின்சாரம் பெற்றுத் தருவதாகவும், வீடுகள் இல்லாதவர்களின் பட்டியல் களை பெற்றுத்தருமாறு அரசாங்க அதிகாரிகள் கோரியதாகவும் கூறியே தங்களை அழைத்து வந்ததாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். (மேலும்.....)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்நாட்டு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதன் மூலமே, அவர்கள் செய்த தவறுகளை உணர்ந்துள்ளார்கள் என்பதை உணர முடியும் என்று பாரா ளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் நேற்று சபையில் தெரிவித்தார். முஸ்லிம்கள் விரட் டப்பட்ட போது மெளனம் சாதித்ததுடன், இந்திய வீட்டுத் திட்டத்திலிருந்து ஒரு வீட்டையேனும் முஸ்லிம்களுக்கு தரவிரும்பாத சம்பந்தன், முஸ்லிம்கள் பற்றி பேசுவது கேலிக்குரிய விடயமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். நான்கு திருத்தச் சட்டமூலங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில், முஸ்லிம்களை கொலை செய்தவர்கள், விரட்டியடித்தவர்கள் முஸ்லிம்கள் பற்றி பேச அருகதையற்ற வர்கள். எனவே சம்பந்தனின் பேச்சுக்கு ஒரு தடவையல்ல சகல தடவைகளிலும் குறுக்கீடு செய்வேன் என்றார். (மேலும்.....)

ுலிகளின் வான்தாக்குதலை தடுக்க அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டது - விக்கிலீக்ஸ்

தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க முடியாமல் போனதால் இந்தியா கொடுத்த ராடார்களை மேம்படுத்த அமெரிக்காவிடம் இலங்கை உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமானப்படை தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் 2007ஆம் ஆண்டு வான்வழித் தாக்குதலை நடத்தினர். அப்போது இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணிபுரிந்தவர் ராபர்ட் பிளேக். அப்போது இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சே அவருடன் நடத்திய உரையாடல் பற்றி வாஷிங்டனுக்கும் இதர அமெரிக்க தூதரகங்களுக்கும் பிளேக் அனுப்பிய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருப்பதாவது.. (மேலும்.....)

அ.இ.மு.கா பிரதிநிதிகளை டில்லிக்கு வருமாறு இந்திய எம்.பிக்கள் குழு அழைப்பு

இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்காக டெல்லிக்கு வருமாறு இலங்கைக்கு வருகைத் தந்துள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுத்தனர். குறிப்பாக இலங்கையில் தமிழ் பேசும் ஒரே சமூகம் என்ற வகையில் தமிழ்-முஸ்லிம் மக்களுக்கிடையில் எவ்வித பிரச்சினைகள இல்லையென்பதை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு  கொண்டுவரப் பட்டது டன், இம்மக்களுக்கிடையில் சில அரசியல்வாதிகளும், மதவாதிகளும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வேலைகளை செய்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதே வேளை  சிறுபான்மையாக வாழும் ஒரு சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சினைகள் உற்று நோக்கப்பட வேண்டியதொன்று என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு கருத்துரைத்தனர். தாங்கள் அறிந்து கொண்ட இந்த விடயங்களை இந்தியா திரும்பியதும், சக பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்றைய சந்திப்பின் தொடராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரதி நிதிகள் குழுவொன்றை டில்லிக்கு வருகைத் தருமாறும் அழைப்பும் விடுத்தனர்.

இலங்கை தமிழ் செய்தியாளரான

'ரதிமோகனை இலங்கைக்கு திருப்பியனுப்பக்கூடாது'

ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்து பெற்றிருக்கின்ற நிலையிலும், ஐக்கிய அரபு இராட்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழ் செய்தியாளரான லோஹினி ரதிமோகன் குறித்து எல்லைகளற்ற செய்தியாளர்களுக்கான அமைப்பான ஆர் எஸ் எஃப் கவலை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய அரபு இராட்சியத்தால், இலங்கைக்கு ஏப்ரல் 11 ஆம் திகதி (இன்று)திருப்பி அனுப்பப்படவுள்ள 19 பேரில் இவரும் அடங்குகிறார். இலங்கையில் அண்மைய நிகழ்வுகள் மற்றும் அங்கு தமிழ் செய்தி ஊடகங்கள் எதிர்நோக்கும் மோசமான சூழ்நிலை ஆகியவற்றுக்கு மத்தியில் லோஹினி ரதிமோகனை அங்கு திருப்ப அனுப்பக் கூடாது என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. இலங்கையில் ஜனநாயகத்துக்கான செய்தியாளர் அமைப்பும் ஆர் எஸ் எஃப் உடன் சேர்ந்து இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. அவர்கள் திருப்பி அனுப்பப்படுவதை தடுப்பதற்கு ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளன.

'காபட் வீதியில் கற்பூரம் எரித்தால் 10,000 ரூபா தண்டம்'

திரிஸ்டி கழிப்பதற்காக காபட் வீதியில் கற்புரம் எரித்தால் 10 ஆயிரம் ரூபா தண்ட பணம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா நேற்று புதன்கிழமை தெரிவித்தார். வெள்ளிக் கிழமைகளில் வர்த்தக நிலையங்களில் திரிஸ்டி கழிப்பதற்காக கற்பூரம் எரிக்கும் போது, கற்பூரம்காபட்; வீதியில் எரிக்கப்படுகின்றது. இதனால், காபட் வீதியில் துவாரம் ஏற்பட்டு, காபட் ஊடாக தண்ணீர் சென்று காபட் சிதைவடைந்து வீதி பழுதடைந்து விடும். யாழ். நகரில் 1 கிலோ மீற்றர் வீதிக்கு காபட்; இடுவதற்கு 10 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுகின்றதாகவும் அவர் கூறினார். அத்துடன், அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கு இடமளிக்க முடியாதென்றும் அவற்றினை தவிர்க்கும் முகமாக காபட் வீதியில், கற்பூரம் எரிப்பதை தவிர்க்குமாறு வர்த்தகர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவித்தலை மீறி செயற்படும் வர்த்தக நிலையங்களுக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்படுமென்றும் யாழ். மாநகர முதல்வர் மேலும் கூறினார்.

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது -  தயான்

இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு மாத்திரம் சொந்தமான நாடு கிடையாது என முன்னாள் சிரேஸ்ட ராஜதந்திரி கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற போதிலும் ஏனைய இன மத சமூகங்களின் நம்பிக்கைகள் ஒடுக்கப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒரு பகுதியினர் அல்லது சில அமைப்புக்கள் சிங்கள பௌத்த கடும்போக்குவாதத்தை நிலைநாட்ட முயற்சித்தால் அது பாதக நிலைமைகளையும், பிரிவினைவாதத்த தூண்டக் கூடிய வகையிலும் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சகல இன சமூகங்களினதும் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுப்பதன் மூலம் முரண்பாடுகளை களைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரபாகரனின் சிறுபான்மை கடும்போக்குவாதமும், சிங்கள சிவில் சமூகத்தின் சில தரப்பினரின் பெரும்பான்மை கடும்போக்குவாதமுமே யுத்தம் ஏற்படக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு - கனடா இந்திய மாணவன்

கனடாவில் பள்ளியில் படித்துவரும் அர்சூன் நாயர்(16) என்ற மாணவன் நுண்ணுயிர் எதிரிகளை ஒன்று சேர்த்து சிறிய மாற்றங்களுடன் புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு புதிய சோதனை ஒன்றை செய்துள்ளார். இதை மூத்த விஞ்ஞானிகள் குழுவும் வரவேற்றுள்ளனர். கான்சர்போட்டோதெர்மல் சிகிச்சை என்ற இந்த புதிய முறையின் மூலம் நோயாளியின் உடம்பில் தங்கத் துகள்கள் செலுத்தப்படுகிறது. பின்னர் அது ஒரு கட்டியைபோன்று ஒன்றுதிரள்கிறது. அப்போது ஒளியை பாய்ச்சி புற்றநோய் செல் கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த முறை பயனுள்ளதாக இருந்தாலும், மிகுந்த பயனுள்ளதாக அமையவில்லை. புற்றுநோய் செல்கள் தாக்கப்படுகிறபோது, வெப்ப அதிர்ச்சி புரதங்கள் அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. எப்படியோ புற்றுநோய் செல்கள் அதிகரிப்பதை தடுக்க முடியும் என்பதால் இந்த முறை மிகவும் பயனுள்ள ஒரு முறையாக உருவாகும் என்று கருதப்படுகிறது. இதனால் இரண்டு வருடங்களாக தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவன் அர்சூன் நாயருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

சித்திரை 10, 2013

கண்ணீருடன் ஒரு கடிதம் . . . . (பாகம் 2)

(நல்லையா குலோத்துங்கன்) (ஈழத்திலிருந்து)

1984ம் ஆண்டு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தைத் தவிர்த்து ஏனைய மூன்று விடுதலை அமைப்புக்களுடன் கைகோர்த்தார் தானைத் தலைவர் , தமிழினத்தின் ஒட்டு மொத்தமான பிரதிநிதி வே.பிரபாகரன் . கைகோர்த்துக் கொண்டது மட்டுமில்லாமல் மற்றைய அமைப்புக்களின் தலைவர்களுடன் கரங்களை இணைத்து புகைப்படம் எடுத்து அவ்விணைவை பிரபலப்படுத்தினார். (மேலும்.....)

வடக்கு கிழக்கை இணைக்க வழிசமைக்கவும்

இந்திய எம்.பிக்களிடம் தமிழ்க்கட்சிகள் வேண்டுகோள்

டக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு மற்றும் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தி வடக்கு கிழக்கை இணைத்து சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்று தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு சுயாட்சி அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால மாகாண அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமாகும் என்றும் அந்த பிரதிநிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். (மேலும்.....)

அமெரிக்கா தீர்மானத்திற்கு ஏற்ப நடக்கமாட்டோம் -  அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் மார்ச் மாதம் 22 ஆம் திகதி அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக நடக்கப்போவதில்லை என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று மீளவும் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கையால் இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வருடம் செப்டம்பரில் நடைபெறும் 24 ஆவது அமர்வில் இலங்கைப்பற்றி வாய்மொழியாகவும் 2014 இல் 25 ஆவது அமர்வில் முழுமையாகவும் அறிக்கை வழங்கப்படவேண்டுமென இந்த தீர்மானம் கூறுகின்றது. இதற்கமைய ஐ.நாவின் நிகழ்ச்சி நிரலில் இலங்கைபற்றி ஆறுமாதத்திற்கு ஒருதடவை பேசப்படும். உலக நிலையையை கவனிக்கும்போது இலங்கை பிரச்சினையுள்ள நாடல்ல. இந்த தீர்மானத்தின் இலங்கை பற்றிய தேவையில்லாத அக்கறை ஏற்புடையதல்ல. எனவே, இந்த தீர்மானத்தை ஏற்கமுடியாது என்றும் அமைச்சர் பீரிஸ் கூறினார். இந்த தீர்மானம் தருஸ்மன் அறிக்கையென கூறப்படும் நிபுணர்கள் அறிக்கைளையும் ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவனீதம்பிள்ளையின் அறிக்கையையும் கருத்தி எடுத்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம்பிள்ளை சர்வதேச விசாரணைத்தேவையென கூறியதை நாம் நிராகரிக்கின்றோம் என அவர் கூறினார். இந்த தீர்மானம் கருத்து மோதலுக்கும் வன்முறைக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது எனவும் அது இப்போது கிரிக்கெட்டுக்கும் சினிமாவுக்கும் பரவியுள்ளது என்றும் கூறினார்.

விடுதலைப் புலிகள் தமிழக மீனவரை கொலை செய்த கதை! சென்சிடிவ் விக்கிலீக்ஸ் கேபிள்!

தமிழகத்தில் இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து, தி.மு.க. உட்பட அனைத்துக் கட்சிகளும் அரசியல் செய்து கொண்டிருக்கும் நேரத்தில் விநோதமான ஒரு சிக்கல். இந்த நேரத்தில் பார்த்து விக்கிலீக்ஸின் சென்சிட்டிவ்வான கேபிள் ஒன்று வெளியாகியுள்ளது. தி.மு.க.வுக்கும், அதன் தலைவர் கருணாநிதிக்கும் சங்கடமான விவகாரம் இது. “தமிழக மீனவர்களை கடத்தி படுகொலை செய்தது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர்தான் என்று தமிழக சட்டசபையில் முதல்வராக இருந்தபோது கருணாநிதி அறிவித்தது ஆச்சரியமானது” என்று அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்திருக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருக்கிறது. இந்த விவகாரம், 2007-ம் ஆண்டில் நடந்தது. அந்த ஆண்டில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 12 மீனவர்கள் கடத்தப்பட்டனர். இந்த மீனவர்களை கடத்தியதும் படுகொலை செய்ததும் இலங்கை கடற்படை அல்ல, விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தான் என்று அப்போது சட்டசபையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசியிருந்தார். அப்போது, அவர்தான் முதல்வர். இலங்கையில் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. (மேலும்.....)

தெரிவுக்குழுவில் கூட்டமைப்பை இணையுமாறு வலியுறுத்தவும், இந்திய தூதுக்குழுவிடம் ஈ.பி.டி.பி

அரசியல் தீர்வை காண்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள  நாடாளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் இணையுமாறு தேசியக் கூட்டமைப்பை இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று இந்திய நாடாளுமன்ற குழுவிடம்  ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி) கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் யாழ் இந்திய துணைத்தூதரகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே இதனை ஈ.பி.டி.பி.வலியுறுத்தியுள்ளது.(மேலும்.....)

கேவலம்பொல்லாத புலிகளையே வென்று நின்ற இலக்கிய சந்திப்பு புலிகள் இன்று சருகு புலிகளிடம் மண்டியிட்டிருப்பது கேவலம்

சாத்திரியார் 2009 மே 18வரை மனித உரிமைகள் குறித்து பென்மெழிகளை தமிழ் மக்களின் பண்பாட்டுக் கலாச்சாரக் காவல் பத்திரிகையான ”ஒரு பேப்பரிலும்” தனது இணையத் தளத்திலும் உதிர்த்து வந்திருக்கின்றார். இப்பெரும் மகானை  வெறும் பேச்சாளராக அழைத்திருப்பதில் எமக்கு உடன்பாடில்லை.  பாரட்டி விருது வழங்கும் தகுதி கெண்ட சாத்திரி அவர்களை வெறும் பேச்சாளராக அழைத்தது அவரது கடந்தகால சேவையை களங்கப்படுத்தும் செயலாகும்.  இலக்கியச் சந்திப்பின்  தூண்களாக  செயலாற்றிய புஸ்பராஜா, சபாலிங்கம் பேன்றவர்களின்  சேவையை பாராட்டி புகழ்ந்தவரல்லவா எங்கள் சாத்திரி!!! ஏன் பெண்கள் சந்திப்பு, தலித் மாநாடு குறித்து அவரது சாத்திரப்பார்வை அழிந்து பேகக் கூடியதென்றா?! எனவே அவருக்கு வாழ் நாள் விருதொன்றை கொடுத்து கௌரவிப்பதே சாலச் சிறந்த செயல். பல் கருத்துக்களை பரப்புவதற்கான தளம் இலக்கியச் சந்திப்பு. எனவே நாம் பொறுமை காத்து சாத்திரியாரின் நடிப்பை பார்க்க தயாராவோம். (மேலும்.....)

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ். விஜயம்

இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய குழு இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் வருகை தந்த குழுவினரை யாழிலுள்ள இந்திய துணை உயர் ஸ்தானிகர் வே. மகாலிங்கம் வரவேற்றார். இந்த குழுவில் நாடளுமன்ற உறுப்பினர்களான சௌகத்தா றோய், சந்தீப் தீக்த், அனுரா தக்கூர் தனஞ்சய சிங், கௌட் யஸ்கி மற்றும்  பிரகா ஜவதேகர ஆகியோரும்  இந்திய வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாகத்தின் சிறப்பு செயலாளர் பி.எஸ். இராகவன், இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகருமமான பிமல் ஜுல்கா ஆகியோர் உள்ளடங்குகின்றனர். இரண்டு நாட்கள் வட மாகாணத்தில் தங்கியிருந்து; இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை இக்குழுவினர் பார்வையிடவுள்ளனர்.

முஸ்லிம்கள் புலிகளால் துரத்தப்பட்டபோது

மௌனம் காத்த தமிழ் கூட்டமைப்பு இன்று நீலிக்கண்ணீர் வடிக்கிறது

வடக்கில் இருந்து 80 ஆயிரம் முஸ்லிம்கள் புலிகளினால் துரத்தப்பட்டபோது மெளனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று முஸ்லிம்கள் குறித்து நீலிக் கண்ணீர் வடிப்பதாகவும் முஸ்லிம்களுக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது பிரதமர் தி.மு. ஜயரட்ன குறிப்பிட்டார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணைக்குப் பதிலளித்த அவர், சத்தியத்துடன் அசத்தியத்தை கலக் காதே என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவ்வாறு மெய்யுடன் பொய்யைக் கலப்பது மதத் தலைவர்களை அவமதிப்பதாகும்.1990 இல் வடக்கிலிருந்து துரத்தப்பட்ட 80 ஆயிரம் முஸ்லிம்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் குறித்து தமிழ் கட்சிகள் குரல் கொடுக்கவில்லை. எல். ரி.ரி.ஈ. யின் தனி ஈழம் குறித்து பேசினாலும் தமிழ், தலைவர்கள் முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து பேசவில்லை. இனங்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியை குழப்ப தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. இன்று முஸ்லிம்கள் குறித்து முதலைக் கண்ணீர் வடிக்கிறது. முதலில் அவர்கள் வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேற்ற உதவ வேண்டும். தென் இந்தியாவில் தனிநாடு கோரி, போராட்டம் நடத்தப்படுகிறது. ரஷ்யாவைப் போன்று இந்தியாவையும் துண்டாடவே சர்வதேச நாடுகள் இலங்கை விடயங்களில் தலையிடுகிறது. இந்தியா தனியான ராஜ்யமாக இருப்பதையே நாம் விரும்கிறோம்.

முஸ்லிம்கள் பாதிக்கப்படும்போது பொருட்படுத்தாமல் இருக்க முடியாது

முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெறும் இடைஞ் சல்களை பெரும்பான்மை யான சிங்கள மக்கள் அனு மதிக்கவில்லை. எமது சகோதர முஸ்லிம் சமூகத்திற்கு பிரச் சினை ஏற்படுகையில் அது குறித்து எம்மால் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் பாராளுமன்றத் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கவனயீர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைத்து உரை யாற்றிய அவர் மேலும் கூறிய தாவது, முஸ்லிம் மக்கள் ஏனைய சமூகங்களுடன் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்ற னர். அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக கசப்பான சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன. அவர்களுக்கு எதி ராக வன்முறையை தூண்டிவிட முயற்சி நடைபெறுகிறது. முஸ்லிம்கள் அணியும் உடை தொடர் பிலும் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும். அவர் களுக்கு எதிராக குரோதத்தை தூண்டி வருவதைத் தடுக்க வேண்டும். ஒவ்வொரு வரும் தாம் விரும்பிய மதத்தை பின்பற்ற உரிமை உள்ளது. அதனை மதிக்க வேண்டும். இனங்களிடையே நல்லிணக் கத்தை உருவாக்க வேண்டும் என்றார். இதன்போது பிரதி அமைச்சர் அப்துல் காதர், ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. ஆகியோர் எழுந்து நின்று கோஷம் எழுப்பி இடையூறு செய்தனர். வடக்கில் இருந்து முஸ்லிம்களை புலிகள் துரத்தினதாகவும் காத்தான்குடியில் முஸ்லிம்கள் கொல்லப் பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

சித்திரை 09, 2013

இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் - அமெரிக்கா

இலங்கையில் மீண்டும் வன்முறைகள் வெடிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாவிட்டால் மீளவும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த நிலையில், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்டப் பணிகளையேனும் இன்னமும் பூர்த்தி செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை உரிய முறையில் ஏற்படுத்தாமை போன்ற காரணிகளினால் மீளவும் முரண்பாடுகள் வெடித்த சந்தர்ப்பங்கள் பல வரலாற்றில் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், இந்த நடவடிக்கை மிகவும் கடினமானது என அவர் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

கருணாநிதியை புலிகள் அச்சுறுத்தியிருக்கலாம் - விக்கிலீக்ஸ்

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி முதலமைச்சராக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவருக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கலாம் என அமெரிக்கா கருதியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் 1989ஆம் ஆண்டில் தமிழகத்தில் ஆயுத வன்முறைகளை வெடிக்கச் செய்வோம் எனவும் போதியளவு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் வன்முறைகளில் ஈடுபடுவோம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான உதவிகளை கருணாநிதி அதிகளவில் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக தமிழீழம் தொடர்பான கடும்போக்குவாதத்தை கருணாநிதி பின்பற்றியதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்துடன் நடைபெற்ற சந்திப்பினைத் தொடர்ந்து கருணாநிதி ஏனைய ஆயுதக் குழுக்களை உதாசீனம் செய்து, புலிகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்கியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பை பதிவு செய்ய தூண்டவும், மன்னார் ஆயரிடம் கோரிக்கை

வட மாகாண தேர்தலுக்கு முன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும்படி அதன் தலைமைத்துவத்திற்கு தூண்டுதல் வழங்குமாறு மன்னர் ஆயர் இராயப்பு ஜோஸப்பிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் கேட்டுள்ளன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம், தமிழ் விடுதலை கூட்டணி மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய ஐந்து கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் தவிர ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் ஆயரை சந்தித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை ஓர் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய தமிழரசுக் கட்சியை தூண்டும்படி அவரிடம் கேட்டுள்ளனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி கூடுதல் ஆதிக்கம் செலுத்துவதாக இந்த நான்கு கட்சிகளும் குற்றஞ்சாட்டியுள்ளன. எதிர்வரும் செப்டம்பரின் பின்னர் வட மாகாண சபை தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சிக்கும் ஏனைய கட்சிகளுக்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்துள்ளன. சர்வதேசத்தின் கவனம் வட மாகாண சபை தேர்தல் மேல் உள்ளது. மேலும் முதலமைச்சர் பதவி மீது பலர் கண்வைத்து காய்களை நகர்த்தி வருகின்றனர்.

'தூத்துக்குடி-கொழும்புக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை'

தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே சிறிய ரக பயணிகள் கப்பல் இயக்குவதற்கு துரிதநடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழக தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் நிறுத்தப்பட்டது. ஆயிரம் பயணிகள் பயணிக்கும் வகையிலான தனியார் கப்பல் இயக்கப்பட்டது. பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தமையினால் அந்தச்சேவை இடைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல்களை இயக்குவது குறித்து கப்பல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. இதில் 150 முதல் 250 எண்ணிக்கையிலான பயணிகள் செல்லும் வகையில் சிறியரக கப்பல்களை இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்குள் இதற்கான அனுமதி பெறப்பட்டு தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்றார்.

சு.கவிற்குள் சூழ்ச்சி சிறிசேனவை தூக்கலாம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தற்போது சூழ்சிகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவை அந்தப்பதவியிலிருந்து தூக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்  மைத்திரிபால சிறினேவின் இடத்திற்கு அக்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை நியமிப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.'நீல அலை' என்ற புதிய நடவடிக்கையினை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையிலிருந்து அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். 'நீல அலை' நடவடிக்கைக்காக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பஷில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் புகைப்படங்களே இருக்கின்றன.

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை என்று மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.‘’இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும், அதிகாரம் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலை. காங்கிரஸ் கட்சி தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளாது. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியில் இலங்கை தமிழர் பிரச்சினையில் முன்பு என்ன சொன்னார்கள் என்பது சட்டசபை அவை குறிப்பிலேயே உள்ளது. இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, சம அந்தஸ்து, குடியுரிமை வழங்கப்பட வேண்டும். (மேலும்.....)

அமெரிக்காவின் மேலும் பல இரகசிய ஆவணங்களை வெளியிட்டது விக்கிலீக்ஸ்

அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை வெளியிட்டுவரும் விக்கிலீக்ஸ் இணையதளம் நேற்று மேலும் 1.7 மில்லியனுக்கும் அதிகமான ஆவணங்களை அம்பலப்படுத்தியது. 1970 களைச் சேர்ந்த அமெரிக்காவின் இராஜதந்திர மற்றும் உளவுப் பிரிவு ஆவணங்களே வெளியிடப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியின் அசாஞ்ச் தெரிவித்தார். இந்த ஆவணங்கள் கேபிள்கள், உளவு அறிக்கைகள் மற்றும் கொங்கிரஸ் அறிக்கைகள் மூலம் பெறப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. லண்டனில் இருக்கும் இக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அசாஞ்ச் இந்த ஆவணங்களை வெளியிடுவதற்கான செயற்பாடுகளை அங்கிருந்தே முன்னெடுத்துள்ளார். இந்த ஆவணங்கள் மூலம் அமெரிக்கா சர்வதேச அளவில் ஏற்படுத்திவரும் தாக்கத்தை வெளிப்படுத்துவதாக அசாஞ்ச் ஏ. பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் அசாஞ்ச் பிரிட்டனில் இருந்து சுவீடனுக்கு நாடு கடத்தப்படும் அபாயத்தை தவிர்க்க கடந்த 9 பாதங்களாக அங்கிருக்கும் இக்வடோர் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்கா தொடர்பான இராணுவ மற்றும் இராஜதந்திர ரகசியங்களைக் கொண்ட 250,000 கும் அதிகமான ஆவணங்களை அம்பலப்படுத் தியதைத் தோடர்ந்து சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சித்திரை 08, 2013

கூட்டமைப்பிற்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக முல்லைத்தீவில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றதுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேறவரும் முஸ்லிம்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையிலும் இந்த பிரதேசத்தில்  இனக்கலவரமொன்றுக்கு தூபமிடும் வகையில் செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை கண்டித்தே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. (மேலும்.....)

இலங்கை பொருட்களை புறக்கணிக்குமாறு தமிழகத்தில் பிரசாரம்

தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணிக்க வலியுறுத்தி சென்னை மெரீனா கடற்கரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும். ஆனால், மத்திய அரசோ இதை கண்டுக்கொள்ளவில்லை. இதற்கு எதிராக இலங்கையுடனான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்; இலங்கைப் பொருட்களை தமிழகத்தில் பயன்படுத்துவதை கைவிட வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள தமிழர் பண்பாட்டு நடுவம் முன்னெடுத்துள்ளது. தமிழகத்தில் பல கடைகளில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிஸ்கட், பழங்கங்கள், இறைச்சி, பருத்தி ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன அவற்றை புறக்கணிக்கவேண்டும் என்றும் நடுவம் கோரியுள்ளது.

காணாமல் போன

'இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம்'

'காணாமல் போனவிடயங்கள் பற்றி வாய்திறப்பாரா...? '

தமிழீழ விடுதலைப் புலிகளின் பேச்சாளராக இருந்த இராசையா இளந்திரையனின் மனைவி, பிள்ளைகளுக்கு சுவீடன் தஞ்சம் வழங்கியுள்ளது என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களுடன் படகில் சென்றிருந்த இலங்கைத் தமிழ்ப் பெண் லோகினி ரதிமோகனே இந்த தகவலை தங்களுக்கு தந்ததாக பிபிசி செய்தி சேவை மேலும் தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் இலங்கை இராணுவத்திடம் சரணைந்த இளந்திரையன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்றே தமக்குத் தெரியாது என இளந்திரையன் குடும்பத்தார் தன்னிடம் கூறியதாக லோகினி மேலும் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

வடக்கு கிழக்கை இணைக்கவும்

டெலோ மாநாட்டில் தீர்மானம்

இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தில் இணைப்பாட்சி (சமஸ்டி) அரசியல் முறையின் கீழ் பூரண சுயாட்சியை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வே முன்வைக்கப்படல் வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8 ஆவது தேசிய மாநாட்டில் இத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கைத்தீவில் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் அபிலாசைகளை நனவாக்ககூடிய விதத்தில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் எம் இனத்தின் மரபுவழி தாயகம் இணைந்த வடக்கு கிழக்காகும் என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

பொதுபல சேனாவின் செயற்பாடுகளை கண்டும் காணாது இருக்கும் இன்னுமொரு பிக்குவே மஹிந்த ராஜபக்ஷ -  குமரகுருபரன்

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகளை கண்டும் காணாது போல் இருக்கும் இன்னுமொரு பௌத்த பிக்குவே மஹிந்த ராஜபக்ஷ ஆவார். இவ்வாறு பொதுபல சேனாவினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் பாரிய பிரச்சிiiயை ஏற்படுத்தும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நல்லையா குமரகுருபரன் தெரிவித்தார்.ஜெனீவா பிரச்சினையை மறைப்பதற்காக அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட இனவாத அமைப்பே இந்த பொதுபல சேனா என்ற அமைப்பு. 1915 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் வாழ்ந்த சக்திவாய்ந்த இனமாக முஸ்லிம், தமிழ் இனங்கள் காணப்படுகின்றன. எனவே இந்த நாட்டை யாரும் சொந்தமாக்கி விட முடியாது. இவ்வாறிருக்க பொதுபல சேனாவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பௌத்த இனவாதத்தை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மாத்தளை மனித புதைகுழி

உண்மையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு

மாத்தளையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாரிய மனித புதைகுழி குறித்து முழுமையான விசாரணையை நடத்துவதற்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதற்கான குழுவை நியமித்துள்ளார். மாத்தளை ஆஸ்பத்திரிக்கு அருகில் தோண்டப்பட்ட பாரிய புதைகுழி ஒன்றிலிருந்து நூற்றுக்கணக்கான மனித தலைகளும், உடல் எச்சங்களும் கண்டெடுக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக உடனடியாக விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டுமென்று ஜே.வி.பி அர சாங்கத்திடம் வேண்டுகோள் விடுத் திருந்தது. மாத்தளை ஆஸ்பத்திரியில் ஒரு கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணியில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போதே மனிதத் தலைகளையும், எலும்புக்கூடுகளையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அந்த புதைகுழிகளை தோண்டும் பொறுப்பு தொல்பொருள் பட்டப்பின்படிப்பு நிலையத்திற்கு கொடுக்கப்பட்டது. (மேலும்.....)

வடகொரிய பதற்றத்தால் அமெரிக்க ஏவுகணை சோதனை ஒத்திவைப்பு

வட கொரியாவுடனான போர் பதற்றம் காரணமாக அமெரிக்கா தனது ஏவுகணை சோதனையை ஒத்திவைத் துள்ளது. கலிபோர்னியாவில் அடுத்த வாரம் நடத்தப்படவிருந்த ஏவுகணை சோதனை தவறுதலாக புரிந்துகொள்ளப்பட வாய்ப்பு இருப்பதால் ஒத்திவைக்கப் பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட் டுள்ளது. கடந்த பல வாரமாக வட கொரியாவின் எச்சரிக்கைகளை அடுத்து முன் அவதான மாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நம்பப்படுகிறது. வட கொரியா கடந்த மாதம் தன் மீது ஐ.நா. பொருளாதார தடை விதித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, தென் கொரியா மீது தாக்குதல் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்த எச்சரிக்கைகளால் தென் கொரிய பங்குச் சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. (மேலும்.....)

சித்திரை 07, 2013

ஜெய்ஹோ... ஜெயா ஹோ!

தமிழீழம் முதல் கூடங்குளம் வரை...

(ப.திருமாவேலன்)

ண்ணாவின் ஞாபகம் அதிகமாக அம்மாவுக்கு வந்துள்ளது. 'நமது அரசியல் சட்டம் நிலையானது அல்ல. ஏனென்றால், ஒரு ஜனநாயக நாட்டில் அரசியல் சட்டத்தைத் திருத்த அந்த மக்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு’ என்ற அண்ணாவின் வாசகத்தை 'கெயில்’ விவகாரத்தில் உதாரணம் காட்டினார். 'தமிழன் யாருக்கும் தாழாமல் - யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல் - எவராலும்  சுரண்டப்படாமல், எவருக்கும் எஜமானனாக இருக்காமல் - உலகில் எவருக்கும் அடிமையாக இல்லாமல் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதே எங்களது தலையாய கொள்கை’ என்று 'ஈழத் தமிழர்’ தீர்மானத்தில் சொன்னார். இது வரை தன் வழி யில் போய்க்கொண்டு இருந்த ஜெயலலிதா, இப்போதுதான் அண்ணா வழிக்கு வந்துள்ளார். இதற்கு நாடாளுமன்றத் தேர்தல்தான் மிக முக்கியக் காரணம் என்பதை மறுப்பதற்கு இல்லை. 'நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்தை மூன்று மாதங்களுக்கு முன்பு வைத்தவர், அதற்கான ஃபார்முலாவை இப்போது செயல்படுத்த ஆரம் பித்துவிட்டார். குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலமாக, லட்சக்கணக்கான பொதுமக்களைத் தன்னுடைய கட்சியின் பக்கமாகத் திருப்புவதுதான் அது! (மேலும்.....)

ஜே.வி.பி தலைமைத்துவத்தில் மாற்றம்

மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பியை) உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையிலும் நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமையும் வகையிலும்  திறமைக்கொண்ட இளைய தலைமுறையினரிடம் தலைமைத்துவத்தை ஒப்படைக்கவிருப்பதாக அக்கட்சியின் தலைவர் சோமசிங்க அமரசிங்க தெரிவித்தார். குருணாகலில் கடந்தவாரம் இறுதியில் நடைபெற்ற 'ஏப்ரல் 71 வீரர்கள்' தினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்படி அறிவிப்பை அவர் விடுத்தார். ஜே.வி.பி. தலைவர் ஒரு சக்கர நாற்காலியில் செல்லும் வரையிலும் கட்சி தலைமையாகவே இருப்பதற்கு விரும்பவில்லை.
வாழ்க்கை வர்க்க போராட்டமானது தலைமுறை இருந்து தலைமுறைக்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். 'நாங்கள் எப்போதும் தலைவர்கள் இருக்க விரும்பவில்லை,' என கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோ சமீபத்தில் தனது ஓய்வு அறிவிப்பை அறிவித்தார். அதனை ஒரு முன்னோடியாக அமைத்துக்கொள்ளவேண்டும்  என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'தமிழ் தேசிய முன்னணி' உதயமானது

'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. வவுனியா பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை இந்தக் கட்சி  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சியின் அங்குரார்ப்பண நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இந்தக் கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது. இதன்போது கட்சியின் நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தக் கட்சியின் தலைவராக சரவணபவானந்தம் துஸ்யந்தன், பொதுச் செயலாளராக பரமு செந்தில்நாதன், பொருளாளராக தர்மலிங்கம் சிறிதரன், கொள்கைப் பரப்பு செயலாளரும் ஊடகப் பேச்சாளருமாக நடராசா ஜனாதீபன் (ஜனகன்), தேசிய அமைப்பாளராக பரராசசிங்கம் ரோன் கனிசியஸ், இளைஞர் அணி செயலாளராக விநாயகமூர்த்தி சசிதரன், உபதலைவராக  வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன், துணை பொதுச் செயலாளராக கணபதிப்பிள்ளை கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளியவளை காணி வழங்கலில் இரு இனங்களுக்கிடையில் முறுகல்

முல்லைத்தீவு முள்ளியவளை மத்தியில் உள்ள வன வள திணைக்களத்திற்குரிய காணியை துப்பரவு செய்து மீள்குடியேறியோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டபோது இரு இனங்களுக்கிடையில் நேற்று முறுகல் நிலை ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இடம்பெயர்ந்தவர்கள் என்ற ரீதியில் முஸ்லிம் மக்களுக்கு காணிகளை முல்லைத்தீவு முள்ளியவளை மத்தியில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்காக வன வள திணைக்களத்திற்குரிய காணிகளை மாவட்ட செயலகத்தின் ஊடாக அனுமதி பெற்று துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. முள்ளியவளை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன் காணியற்ற தமிழ் மக்களுக்கு முதலில் காணிகளை வழங்கிய பின்னர் ஏனையோருக்கு வழங்குங்கள் என தர்க்கத்தில் ஈடுபட்டனர். சுமார் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடி காடழிப்பை தடுத்ததுடன் கனரக வாகனங்களை அப்புறப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தனர். (மேலும்.....)

ஆளில்லா விமான தாக்குதலுக்கு எதிராக நியூயார்க்கில் போராட்டம்

அமெரிக்கா உலக நாடுகள் மீது தனது ஆளில்லா விமானத்தை கொண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா மீது மற்ற நாடுகள் ஆளில்லா விமானதாக்குதல் நடத்தும் முன் உடனடியாக தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலக அமைதியை விரும்பும் பல்வேறு குழுவினர் நியூயார்கில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவில் உள்ள பலர் ஏப்ரல் மாதத்திற்கான நடவடிக்கை என அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலை சிலர் ஆதரித்து வருகின்றனர். குறிப்பாக இராணுவம் சார்ந்த கட்டமைப்பினர், பல்கலைகழகத்தினர், தனியார் நிறுவனங்கள் அமெரிக்காவின் உலகளாவிய ஆளில்லாத விமான தாக்குதலை ஆதரித்து வருகின்றனர். ஆனால் இதுகுறித்த பொது விவாதத்திற்கு அமெரிக்கா அனுமதிப்பதில்லை. (மேலும்.....)

ரணில் - பண்டாரநாயக்க இரகசிய சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு 7இல் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் இல்லத்திலேயே இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாகவும், அச்சந்திப்பில் சுமார் இரண்டு மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருவரும் பல்வேறு அரசியல் விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை இந்த இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஜனாதிபதி தேர்தல், 2014ஆம் ஆண்டில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையிலேயே இந்த இரகசிய சந்திப்பு கடந்தவாரம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது தற்போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான நோக்கிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க. இலங்கை தமிழர்களை ஆதரிப்பதாக நடிக்கிறது

இலங்கைத் தமிழர்கள் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பார்கள் என்று பாரதீய ஜனதா கட்சி திடீரென்று பல்டி அடித்து, தனது கொள்கையை மாற்றி இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதற்கு யஷ்வந்த் சின்ஹா மூலம் தமிழ் நாட்டு மக்களுக்கு அறிவித்திருக்கிறது. பாரதீய ஜனதா கட்சி இலங்கைத் தமிழர் மீது கொண்டுள்ள அன்போ, அனுதாபமோ, கருணையோ இதற்குக் காரணமல்ல. அடுத்த தேர் தலில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவிருக்கும் தமிழ் நாட்டு மக்களின் வாக்குகளை தங்கள் கட்சிக்கு பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடனேயே பாரதீய ஜனதா கட்சித் தலைவர்கள் தங்கள் கொள்கையை மாற்றியிருக்கிறார்கள். பாரதீய ஜனதாக் கட்சி, இந்திய காங்கிரஸ் கட்சியை அடுத்த பொதுத் தேர்தலில் தோல்வியடையச் செய்து மத்திய அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணத்துடனேயே தமிழர்களுக்கு சாதகமான கொள்கையை இன்று கடைப்பிடித்து வருகிறது.

சட்டவிரோத ஆஸி பயணம்

கடலில் தத்தளித்த 120 இலங்கையர் இந்திய அதிகாரிகளால் மீட்பு

தமிழ் நாட்டிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 120 இலங்கையர்களை இந்திய கடலோர காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தின் தென்காசி, கடைய நல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அகதி முகாங்களில் இருந்த இலங்கை தமிழ் அகதிகள் 120 பேர் ஆழ்கடல் வள்ளமொன்றில் அவுஸ்திரேலியா செல்ல புறப்பட்டுள்ளனர். அவர்கள் சென்ற படகு நாகபட்டினம் அருகே சர்வதேச கடல்பரப்பில் சென்று கொண்டிருந்த போது படகு பழுதானதால் நடுக்கடலில் தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இச் செய்தியை அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் அவர்களை தீவிரமாக தேடினர். இந்நிலையில் நேற்றுக் காலை சர்வதேச கடல் எல்லையில் 120 பேரையும் மீட்டு கைது செய்தனர். இவர்கள் அனைவரும் கரைக்கு அழைத்து வரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.

சாவேஸ் அரசை சீர்குலைக்க ஐந்தம்சத் திட்டம்   சதிவேலையில் ஈடுபட்ட அமெரிக்க தூதரகம்  - விக்கிலீக்ஸ் இணையதளம்

வெனிசுலாவில் சாவேஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்ற போது வெனிசுலாவிற்கான அமெரிக்க தூதரகம் ஐந்தம்ச திட்டங்களை உருவாக்கி சாவேஸ் தலைமையிலான அரசை சீர்குலைக்க செய்த சதி திட்டங்களை தற்போது விக்கிலீக்ஸ் இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது. விக்கிலீக்ஸ் இணையதளம் உலக அளவில் அமெரிக்க தூதரகங்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த சதி திட்டங்களை அம்பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக உலக நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க தலைமையகம் பென்டகன் மற்றும் வெள்ளை மாளிகைக்கு அனுப்பிய ரகசிய தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெனிசுலாவில் இருந்த அமெரிக்க தூதரகம் சாவேஸ் தலைமையிலான அரசை சீர்குலைக்க எவ்வாறு திட்டமிட்டது என்பது குறித்து வெனிசுலாவிற்கான அமெரிக்க தூதர் ப்ரோவின் பைல்ட் பென்டகனுக்கு அனுப்பிய ரகசிய கேபிள் வெளியிட்டுள்ளது. (மேலும்.....)

கொரிய தீபகற்பத்தில்  போர் வேண்டாம்!  - பிடல் காஸ்ட்ரோ

கொரிய தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் கியூபப் புரட்சியின் மகத்தான தலைவர் பிடல் காஸ்ட்ரோ கொரிய போரை தவிர்ப்பது நமது கடமை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள வேண்டுகோள் வருமாறு : மனித இனம் மிகப்பெரிய சவாலை சந்திக்கக் காத்திருக்கிறது என நான் சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்ததை மீண்டும் நினைவுபடுத்துகிறேன். சுமார் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனித இனம் இந்த பூகோளத்தில் அறிவார்ந்த வாழ்க்கையை வாழத் துவங்கிவிட்டது. தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளும், வேறு சிலவும் செயல்வடிவம் பெற்று வருகின்றன. 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி உருவான பெருவெடிப்புக் கோட்பாட்டைப் பின்பற்றி மிகச்சிறப்பு வாய்ந்த அறிவியலா ளர்கள், விஞ்ஞானிகள் ஒலியை செயற்கை வடிவில் உருவாக்கினர். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றங்களின் காரணமாக இன்று எண்ணிலடங்கா வாழ்க் கை வடிவங்கள் மாறியுள்ளன. (மேலும்.....)

 

சித்திரை 06, 2013

கண்ணீருடன் ஒரு கடிதம் (பகுதி 1)

(நல்லையா குலத்துங்கன்) (ஈழத்திலிருந்து)

சரியோ , தவறோ ஒரு இயக்கத்தின் தலைவனாயிருந்து உயிர் நீத்த "உயர்திரு மேதகு வே.பிரபாகரன்" அவர்களின் மறைவையே சோக நிகழ்வாக வீரவணக்கம் செய்ய முடியாத வகையில் அந்த முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து வைத்து வரலாறு தேடிக் கொண்ட உன்னத இனமல்லவா எம் ஈழத்தமிழர் ? தொப்புள் கொடி உறவுகளே ! உங்களில் யாருக்காவது ஈழம் சென்று "மேழக்குடி யாழ்ப்பாணத்தவரின்" இன்றைய நிலையை கண்ணால் பார்த்து விட்டு போராட வேண்டும் எனும் எண்ணம் எழவில்லையா? அரசியல் பலிகடாக்களாக தமிழ்நாட்டு மாணவர்கள் தம்முயிரைத் தியாகம் செய்யும் போது , புலம்பெயர் தேசத்தில் சரி அன்றி ஈழத் தமிழ்ப்பிரதேசங்களில் சரி எத்தனை பேர் தீக்குளித்துள்ளார்கள்? ஓ உயிர் தமிழ்நாட்டுத் தமிழருக்கு துச்சம்தானே ! ஈழத்தமிழனின் உயிர் மட்டும், மிகவும் போற்றப்பட வேண்டியது அல்லவா? (மேலும்.....)

இந்திய எம்.பிக்கள் குழு திங்கள் இலங்கைக்கு விஜயம்

இந்திய நாடாளுமன்றம் உறுபினர்கள் குழு எதிர்வரும் 8 ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தக்குழு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் என்றும் வடக்கிற்கான விஜயத்தையும் அந்த குழுவினர் மேற்கொள்வார்கள் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. ஆறு பேர் கொண்ட இந்த குழுவில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்  ஒருவர் கூட  அங்கம் வகிக்கவில்லை. எனினும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிர்வாக அதிகாரிகள் இருவர்; அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த குழுவில் பகுஜன் சமாஜ்,பாஜக , திரிணமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் மட்டுமே அடங்குகின்றனர். இவர்கள் இலங்கை தமிழர்கள் நலவாழ்வுக்கான புனரமைப்பு பகுதிகளை பார்வையிட்டு ஆய்வுகளை மேற்கோள்ள  உள்ளனர் என்றும் அந்தச்செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைத் தமிழர்களின் நலவாழ்வுக்காக இந்தியா  பல்வேறு கட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த உதவிகள் சரியாக பயன்படுத்த படவில்லை என்றும், இன்னமும் தமிழ் மக்களுக்கு புணரமைப்புத் திட்டங்கள் சென்றடையாமல் இன்னமும்  துயரத்தில்தான் மக்கள் வாழ்கிறார்கள் என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இந்நிலையிலேயே இந்த குழு இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

தனித்தமிழ் ஈழமே நிரந்தர தீர்வு

தமிழ்நாடு மாணவர்களின் கூட்டத்தில் தீர்மானம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு தனித்தமிழீழமே தீர்வாகும் உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சட்டக் கல்லூரி மாணவர் ஆர்.முருகானந்தம் தெரிவித்தார்.

  • இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இன படுகொலை. அதற்கு நமபத்தகுந்த சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்துவதுட் அந்த படுகொலைகளுக்கு காரணமாக இருந்தவர்களை தண்டிக்க வேண்டும்.

  • தனித்தமிழ் ஈழமே நிரந்திர தீர்வு. அதற்கு ஐ.நா. சபை சார்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

  • இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கும் அதே வேளை இலங்கை அரசு உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.

  • தமிழக மீனவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலை நிறுத்தும் அதே வேளையில் கட்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும்.

  • தமிழ் ஈழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும்.

ஆகிய தீர்மானங்களே நிறைவேற்றப்படடுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 5

(எல்லாளன்)

எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான கட்டமாக ரெலோவில் நடந்த பிரச்சினையும் அந்தப் பிரச்சினையில் நான் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுமே இன்று வரையும் என்னை மனிதனாக வாழ வைக்கிறது. 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில் ஒருநாள் இரவு சில பொறுப்பாளர்கள் எமது அறைக்கு வந்தனர். எமது தலைவரான சிறி சபாரெத்தினத்தை அடுத்த கட்டத்திலுள்ள உபதலைவர்களான அரசியல் பிரிவை சேர்ந்த சுதன் மற்றும் இராணுவபிரிவைச் சேர்ந்த, ரமேஸ் என்பவர்கள் புலிகளிடம் ஆயுதம் வாங்கிக் கடத்திச் செல்ல எடுத்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் இருவரும் தம்மிடம் தான் உள்ளனர் என்றும் சொன்னார்கள். அதனால் புலிகள் ஆத்திரப்பட்டு சிலவேளைகளில் எமது பாதுகாப்பிற்கே ஆபத்துக்கள் கொண்டு வரலாம், ஆகவே எவரும் வெளியே போக வேண்டாம் என்றும் கூறினார்கள். (மேலும்.....)

இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிகாரத்தைப் பணயம் வைத்து செயற்பட்டது

இலங்கை விவகாரத்தில் இந்தியா அதிகாரத்தைப் பணயம் வைத்து செயற்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார். உள்நாட்டைச் சேர்ந்த சில கட்சிகள் இலங்கைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் எது நியாயமானதோ அந்தத் தீர்மானத்தை மத்திய அரசாங்கம் எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தியதாகவும அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இந்தத் தீர்மானத்தை மத்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்த போதிலும், தமிழக சட்ட மன்றில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதவரளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையை தொடர்ந்தும் நட்பு நாடாக கருத வேண்டாம் என தமிழகஅரசாங்கம் கோரியிருந்ததாகவும், இதனை மத்திய அரசாங்கம் ஏற்கவில்லை எனவும் சல்மன் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய முன்னணியின் அங்குரார்ப்பண மாநாடு வவுனியாவில்

'தமிழ் தேசிய முன்னணி' எனும் அரசியல் கட்சியின் அங்குரார்ப்பண மாநாடு எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் இடம்பெறவுள்ளது என்று  அக்கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் வீதி, பூந்தோட்டம் என்னும் முகவரியில் அமைந்துள்ள அக் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் இம் மாநாடு காலை 9.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட உள்ளதுடன் பிரதேச அமைப்புகள், மாவட்ட அமைப்புக்களும் உருவாக்கப்படவுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் ஜனகன் தெரிவித்துள்ளார்.

அங்கஜனே என்னை கடத்தி தாக்கினார் - நிசாந்தன்

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனே கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் வைத்து கடந்த 03 ஆம் திகதி தன்னை கடத்தி அறையொன்றில் அடைத்து வைத்து தாக்கியதாக   யாழ். மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில்  யாழ் மனித உரிமை ஆணைக்குழு மற்றும் வெள்ளத்தை மற்றும் யாழ் பொலிஸ் நிலையங்களிலும்  முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

பாரிய சத்தத்துடன் வானிலிருந்து வீழ்ந்தது மர்மப் பொருள்

பள்ளம அம்பகெலே கிராமத்தில் வானிலிருந்து விழுந்துள்ள ஒரு மர்மப் பொருளினால் அக்கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. 1 1/2 அடி நீளமான 6 அங்குலம் அகலமாக 7 கிலோ பாரமானதாக இந்த மர்மப்பொருள் இருந்துள்ளது. அம்பகெலே கிராமத்திலுள்ள குமார என்பவரின் வீட்டுத் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தின் மீதே இந்தப் பொருள் விழுந்துள்ளது. இது தொடர்பாக விளக்கமளித்த குமார தாம் வீட்டிலிருந்த சமயம் கேட்ட பாரிய சத்தத்தையடுத்து என்னவென்று பார்க்க தோட்டத்திற்குள் வந்தேன். அதன்போது வீட்டுக்கு அருகே உள்ள தென்னை மரத்தின் பகுதிகள் சேதமடைந்திருந்தன. தொடர்ந்து பார்த்த போது மர்மப் பொருளொன்று விழுந்து கிடந்துள்ளது. இரும்பு சட்டம் போன்ற அமைப்பில் அந்த பொருள் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலாபம் பொலிஸாருக்குத் தகவல் கொடுத்திருப்பதாக குமார தெரிவித்தார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத பயணம்; பேருவளையிலிருந்து புறப்பட்ட 35 பேர் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக அவு ஸ்திரேலியா செல்ல முற்பட்ட 35 பேர் கடற் படையினரால் கைது செய் யப்பட்டுள்ளனர். பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் வள் ளத்தில் புறப்பட்ட 35 பேரையும் காலி கடற்படையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களுள் 11 பெண்கள் இருப்பதாகவும் சிறு பிள் ளைகளும் இருப்பதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ண குலசூரிய தெரிவித்தார். மகாபாகே, அம்பாறை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, பேருவளை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, புத்தளம் மற்றும் கல்முனை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

2005 அளவ்வ பஸ் - ரயில் கோர விபத்து சம்பவம்

41 பேரின் மரணத்துக்கு காரணமான பஸ் சாரதி, நடத்துனருக்கு மரண தண்டனை

அளவ்வ யாங்கல்மோதர பகுதியில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளாகி 41 பேர் உயிரிழப்பதற்குக் காரணமாகவிருந்த தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்துனருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு குருநாகல் - கொழும்பு வீதியில் அளவ்வ யாங்கல்மோதர பகுதியில் ரயில் கடவை மூடப்பட்டிருந்த சமயத்தில் ரயில் பாதையைக் கடக்க முற்பட்ட தனியார் பஸ் வண்டியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 41 பேர் உயிரிழந்ததுடன், 35 பேர் படுகாயமடைந்தனர். இவ்விபத்துச் சம்பவம் இடம்பெறுவதற்குக் காரணமாகவிருந்த பஸ் சாரதியும், நடத்துனருக்கும் குருநாகல் மேல் நீதிமன்றம் நேற்று மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. மரண தண்டனைக்கு மேலதிகமாக 10 வருட கடூழியச் சிறைத்தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தும் குருநாகல் மேல்நீதிமன்ற நீதிபதி பிரியந்த பெர்னான்டோ தீர்ப்பளித்தார். அப்துல் வாஹிட் ஹப்ருல் அசாத் என்ற சாரதிக்கும், மில்லவானகெதர புத்திக்க ருவன் குமார என்ற நடத்துனருக்குமே இவ்வாறு மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சித்திரை 05, 2013

கேலிச்சித்திரம் அல்ல... கேலிக்கூத்து...

டி.கே.ரங்கராஜன், எம்.பி.,

குமுதம் ரிப்போர்ட்டர் ஏட்டில்(7-4-2013) ஒரு கார்ட்டூன் வெளியிடப்பட் டுள்ளது. ஈழத்திற்காக பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என்ற தமி ழக சட்டமன்ற தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஏற்காததால் ராஜபக்சேவுடன் தோழர்கள் பிரகாஷ் காரத்தும், ஜி.ராம கிருஷ்ணனும் சேர்ந்து நிற்பது போல இந்தக் கேலிச்சித்திரம் வரையப்பட்டுள் ளது. இலங்கை தமிழ் மக்களின் பிரச்ச னைக்கு தனி ஈழம் தீர்வல்ல, அந்த மக் களின் இப்போதைய உடனடித் தேவை மறுவாழ்வு, மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை என்று வலியுறுத்து பவர்கள் அனைவருமே ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் என்று கூறுவது கேலிச் சித்திரம் அல்ல, கேலிக்கூத்து என்றே கூற வேண்டும். (மேலும்.....)

மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் நால்வர் இந்தியாவில் கைது

அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை வர்த்தகர் ஒருவரை கடத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் இலங்கையர் நால்வரை இந்திய பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவே இவர்களை கைதுசெய்துள்ளது. மேற்படி நால்வராலும் குறித்த வணிகர் இந்தியாவிற்கு தந்திரமாக வரசெய்யப்பட்டுள்ளார். இவர் கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்தவேளையில் மேற்படி குழுவினர் இந்நபரை கடத்தியுள்ளனர். 'அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள். கனடா மற்றும் ஏனைய நாடுகளில் தொழில்வாய்ப்பை பெற்றுள்ள அவர்கள் 2.5கோடி ரூபா மோசடியில் ஈடுபட்டுள்ளனர்' என்று பாதிக்கப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். சேலையூரை சேர்ந்த ஜெயன் மௌலான (வயது 40), மன்னடியை சேர்ந்த மொஹமட் பஸ்மி (வயது 30), வேங்கம்பக்கத்தை சேர்ந்த துவன் கபிர் (வயது 37), மொஹமட் ராஜ்மன் (வயது 23) ஆகியோரே இக்கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

டெலோவின் 8ஆவது தேசிய மாநாடு வவுனியாவில் நாளை ஆரம்பம்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) 8ஆவது தேசிய மாநாடு நாளை சனிக்கிழமையும்  நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் வவுனியா நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கட்சியின் 7ஆவது தேசிய மாநாட்டின் பதவியியல் தலைமைக்குழு நாளை சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஒன்றுகூடி மாலை 5 மணிவரை நடைபெறும். மாவட்ட ரீதியாக 8ஆவது தேசிய மாநாட்டிற்கான தெரிவுகள் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். இதன்போது மாவட்ட ரீதியாக 72 பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள். 20 பேர் சர்வதேச ரீதியாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இந்த 92 பேரும் கூடி 23 பேரை தேசியப்பட்டியல் மூலமாக தெரிவு செய்யவுள்ளனர். பொதுக்குழு அங்கத்தவர்கள் 115 பேரும் இணைந்து தலைவர், செயலாளர் நாயகம், பொருளாளர், தேசிய அமைப்பாளர் உட்பட ஏனைய பதவி நிலைகளுக்கான தெரிவுகள் மேற்கொள்வார்கள் எனவும் அவர் கூறினார். இந்த தெரிவுகளுக்குப் பின் கடந்தகால, நிகழ்கால, எதிர்கால அரசியல் நிலைமைகள், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.

வெளியாகியது கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு

இன்று மாலை கல்விப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இம்முறை பரீட்சைக்கு சுமார் மூன்று லட்சம் மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர். இலங்கை பரீட்சை திணைக்களத்தின் http://www.doenets.lk/exam/ என்ற இணைய தளத்தின் ஊடாக பெறுபேறுகளை பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டுப் பிரச்சினையை வைத்து முழு இந்தியாவையும் பகைக்க முடியாது

தமிழ்நாட்டுப் பிரச்சினையை வைத்துக்கொண்டு முழு இந்தியாவையும் பகைத்துக்கொள்வது நியாயமான தீர்மானமல்ல என பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். எமது விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய மாநிலங்களில் விளையாடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். அந்த பிராந்திய மாநிலங்களும் அதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சிறியதொரு பிரச்சினையைப் பெரியதாக பூதாகரமாக்கிக்கொள்ள நினைப்பது முறையல்ல. நாம் மத்திய அரசுடனேயே தொடர்புகளைக் கொண்டுள்ளோம். சில சமயம் தமிழ் நாட்டின் கோரிக்கையை மத்திய அரசே ஏற்காது. இந்த நிலையில் தமிழ் நாட்டின் செயற்பாடுகள் குறித்து அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. மத்திய அரசுடன் சிறந்த தொடர்பு எமக்குள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்படட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கே.கே.எஸ். துறைமுக அபிவிருத்திக்காக இந்தியாவிடம் கடன் பெற நடவடிக்கை

வர்த்தக நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை, இந்தியாவிடமிருந்து 44.3 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறவுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. யுத்தத்தின்போது உண்டான சேதங்கள் காரணமாக பல தசாப்தங்களாக அது முழு அளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளது.  யுத்தத்தின்போது அழிக்கப்பட்ட கப்பல்களின் பகுதிகளும் இங்கு உள்ளன. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் இந்தியா வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்த துறைமுகத்தை புனரமைக்க உதவி செய்வதாக உறுதியளித்திருந்தது. இந்தியா இந்தத் திட்டத்துக்கு நன்கொடை மற்றும் சலுகை அடிப்படையிலான உதவியை வழங்கப்போவதாக கூறியிருந்தது. இது தொடர்பாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் 21ஆம் திகதி  ஜுலை மாதம் 2011ஆம் ஆண்டு கைச்சாத்தானது. முதற்கட்ட வேலைகளுக்காக இந்தியா 20 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்க ஒப்புக்கொண்டது. மண்வாருதலின் இரண்டாம் கட்ட வேலையை ஒரு இந்திய கம்பனி இன்று தொடங்கவுள்ளது.  அலைத்தடை அணையை புனரமைக்கவும் இறங்குதுறை ஒன்றை அமைக்கவும் கடன் பெறப்படும் என துறைமுக அபிவிருத்தி அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 'நாம் இந்தக் கடனை பெறவுள்ளோம். வட்டி வீதம் பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இது சலுகை அடிப்படையிலான கடனாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்' என அவர் கூறினார்.

பொது பல சேனவை தடை செய்யக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை

பொது பல சேன அமைப்பை தடை செய்யக் கோரி கல்முனை மாநகர சபையில் கண்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சபை அமர்வு அண்மையில் இடம்பெற்றது. இதன்போது பொது பல சேனா இயக்கம் தடை செய்யப்பட வேண்டும் என அரசாங்கத்தை கோரும் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.பிர்தௌஸினால் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்வுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் தீவிலிருந்து 20 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து இலங்கையை சேர்ந்த 20 புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குடிவரவு அமைச்சர் பிரென்டன் ஓ கொனோர் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு இங்கு தங்குவதற்கு சட்ட உரிமை இல்லை எனவும் அவர் கூறினார். இந்த 20 பேரும் கட்டாயத்தின்; பேரிலேயே திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஓகஸ்ட் மாதத்திலிருந்து இலங்கையைச் சேர்ந்த 963 புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 200 பேர் மாத்திரம் தங்களது சுயவிருப்பின் பேரில் திரும்பிச் சென்றதாகவும் அமைச்சர் பிரென்டன் ஓ கொனோர் தெரிவித்துள்ளார்.

பரிந்துரைகளை நிறைவேற்ற ஒன்றரை வருடம் தேவை - அரசாங்கம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற எமக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் தேவையாக உள்ளதென பதில் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். ஊடக அமைச்சின் கேட்போர்கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் மாநாட்டில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ள தீர்மானங்களில் ஒரு பகுதியை நாம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளோம். மிகுதி தீர்மானங்களை நடைமுறைப்படுத்த எமக்கு குறைந்தது ஒன்றரை வருடங்களாவது தேவையாகவுள்ளது. இதேவேளை, ஆணைக்குழுவின் ஒவ்வொரு தீர்மானங்களையும் நிறைவேற்ற எமக்கு 24 மாதம், 12 மாதம் மற்றும் 6 மதங்கள் கூட எடுக்கும். இந்நிலையில் அவற்றினை அடிப்படையாக வைத்தே எமக்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

சவூதியில் புதிய தொழிலாளர் சட்டத்தால் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்

சவூதி அரேபியாவின் புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக அங்குள்ள பல பாடசாலைகளும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு கடத்தப்படும் அபாயம் இருப்பதால் பல ஆசிரியர்களும் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பதை தவிர்த்து வருவதால் சிறுவர்கள் கல்விகற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தில் ஒவ்வொரு நிறுவனமும் குறிப்பிடத்தக்க அளவான சவூதி நாட்டவர்களை பணியில் அமர்த்தியதை உறுதிசெய்ய வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அந்நிறுவனங்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும். அதேபோன்று புதிய சட்டத்தின்படி வெளிநாட்டு தொழிலாளர்களை அனைவரும் பணியில் அமர்த்த முடியாது. அவர்களுக்கு அனுசரணை வழங்குவோர் மாத்திரமே பணியில் அமர்த்த முடியும் என நிபந்தனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மில்லியன் கணக்கான வெளிநாட்டு பணியாளர்கள் பாதிக் கப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டு ஆசிரியர்கள் ஒரு பாடசாலைக்கு மேல் பணியில் ஈடுபட்டுள்ளனர். புதிய சட்டம் இவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் புதிய தொழிலாளர் சட்டத்தால் சவூதி நகரங்களில் உள்ள 60 க்கும் அதிகமான சர்வதேச பாடசாலைகள் மூடப்படும் அபாயம் உள்ளதோடு இதனால் 40,000க்கும் அதிகமான மாணவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

"அடுத்த தலைமுறையும் போராடும் நிர்பந்தம்!”

(ஈழ நிதர்சனம்)

செயற்கைக் கால்களைப் பெறும் பொருட்டு நீண்டிருந்த வரிசையில் நின்றிருந்த இளம் தாய், கால் கருகிய சிறுவனைத் தன் இடுப்பில் காவி வந்திருந்தாள். 'என்ரை பிள்ளைக்கும் ஒரு கால் தாங்கோ...’ என்று கைகளை நீட்டியபடி அவள் கெஞ்சினாள். அந்தச் சிறுவன் வளர வளர, தன் வாழ்க்கையில் எத்தனை பொய்க் கால்களுக்காக அலைய வேண்டும்?’ - 'கிளிநொச்சி - போர் தின்ற நகரம்’ என்னும் நூலில் தீபச்செல்வன் ஈழ மக்களைப் பற்றி எழுதிய வரிகள் இவை. யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான தீபச்செல்வன், இப்போது சென்னைப் பல்கலைக்கழக மாணவர். ''யுத்தம் தின்றது போக எஞ்சியிருப்பவற்றை ராணுவத்திடம் இருந்து காப்பாற்றிக்கொள்வதே போருக்குப் பிந்தைய பெரும் போராக மக்கள் மீது கவிந்திருக்கிறது'' எனும் தீபச்செல்வன், தன் எழுத்துகள் மூலம் ஈழ மக்களின் இப்போதைய வாழ்க்கைப்பாடுகளை உலகின் கவனத்துக்குக் கொண்டுவருகிறார். (மேலும்.....) 

இந்தியாவில்

பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

பாலியல் பலாத்கார குற்றத்துக்கு மரண தண்டனை அளிக்க வகை செய்யும் புதிய சட்டம் நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்தது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார். அசிற் வீச்சு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை அளிக்க, புதிய சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. டில்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல், 2 வாரத்தில் அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இந்த பலாத்கார சம்பவத்தால் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் சட்டத்தை திருத்தும்படி பல்வேறு அரசியல் கட்சிகளும், பெண்கள் அமைப்புகளும் போர்க்கொடி தூக்கின. (மேலும்.....)

உலகின் மிக எளிதான பொருளை உருவாக்கி   விஞ்ஞானிகள் சாதனை

சீனாவின் ஜிகிஜீயங் பல்கலைகழக விஞ்ஞானிகள் 0.16 மில்லிக்கிராம் / கண செட்டிமீட்டர் அடத்தி கொண்ட கார்பன் ஏரோஜெல் என்ற ஒரு திடப்பொருளை கண்டுபிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். கடந்தாண்டு ஜெர்மன் விஞ்ஞானிகள் கிராபிபைட் ஏரோஜெல் என்ற ஒளி ஊடுருவும் ஒரு ஜெல்லை கண்டறிந்தனர். இதன் எடையளவு 0.18 மி.கி ஆகும். இதனை எரிசக்திக்கு மாற்றாக இந்த ஜெல்லை பயன்படுத்த முடியும். இதுதான் இதுவரை உலகின் மிகவும் குறைவான அடர்த்தி கொண்ட எளிதான பொருள் என இருந்தது. ஆனால் தற்போது சீன விஞ்ஞானிகள் கார்பன் ஏரோ ஜெல் திடப்பொருளை கண்டறிந்துள்ளனர். இது ஜெர்மன் விஞ்ஞானிகளின் சாதனையை முறியடித்துள்ளது. இதன் வடிவமைப்பு கடற் பாசிகள் போன்றது ஆகும். இந்த கார்பன் ஏரோஜெல் சுற்றுசூழலை பாதுகாப்பதற்கு ஏதுவாக எண்ணெய் கசிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். நீரை சுத்திகரிப்பு, காற்று சுத்திகரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளுக்கு பயன்படுத்த முடியும் என கார்பன் ஏரோஜெல் கண்டுபிடிப்பை வழிநடத்திய பேராசிரியர் ஹவோ ஷாவோ தெரிவித்துள்ளார்.

சித்திரை 04, 2013

உலகளாவிய கெடுபிடிகளிலிருந்து  விடுபட ஒரு புதிய வங்கி

பொதுவாக உலக நாடுகளுக்கு இடையேயான அமைப்புகளின் வழக்கமான கூட்டங்களும், உச்சிமாநாடுகளும் நடக்கிறபோது அவை ஏதோ சம்பிரதாயத்துக்குக் கூடுவதாகவே இருந்து வந்துள்ளன. அல்லது, பெரிய நாடுகளின் அரசுகள் தங்களது சந்தைத் தேவைகளுக்கு உடன்படும்படி சிறிய நாடுகளை நிர்ப்பந்திப் பதற்கான சந்திப்புகளாகவும் அக்கூட்டங்கள் நடந்துள்ளன. புதனன்று (மார்ச் 27) தென்னாப் பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பாகிய ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு அவற்றிலிருந்து மாறுபட்டதாக ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்து விவாதித்த இந்த நாடுகளின் அரசுத் தலைவர் கள் எடுத்துள்ள ஒரு முக்கியமான முடிவு ‘பிரிக்ஸ் வங்கி’ ஏற்படுத்துவதாகும். (மேலும்.....)

The many Balachandrans of Jaffna

P. Jayaram)

The killing of Prabakaran’s son allegedly by Sri Lankan forces has evoked horror, but there can be no forgetting the children who were the LTTE’s cannon fodder. Way back in 1994, four Colombo-based Indian journalists and the Sinhalese correspondent of an international news agency got a rare permission to visit Jaffna. Rare because, at that time, the northern peninsula was almost totally controlled by the Tamil Tigers, who had driven out the government forces in conventional battles. Journalists required permission from both sides to the island’s festering conflict — the government and the LTTE — as well as from the International Committee of the Red Cross, the only agency which had been allowed access to the region by the Tigers. (more.....)

திறந்து காட்டும் பெண்ணுடன் சீமான் தொடர்பு

இரவினில் ஆட்டம், பகலினில் கூட்டம் என்று ஒரு பாட்டு இருக்கே ... தெரியுமா ? தமிழ கவிஞன் சும்மாவா சொன்னான் ! அது நம்ம சீமான் அண்ணைக்கு நன்றாகப் பொருந்தும் போல இருக்கே ! மலேசியாவில் இருக்கும் ஒரு தமிழ் பெண்ணோடு சீமான் சார் மிக நெருக்கமா பழகுவாராம். அந்தப் பெண் தமிழகம் சென்று சீமானுடன் ஒட்டி உறவாடுவாராம். சேர்ந்து நின்று ஸ்டில் படம் எடுத்து கொள்ளுவாங்களாம் .... ஆனால் ஒண்ணுமே இல்லை எண்டு சொல்லுவாங்களாம்... இது எப்படி இருக்கு மவணே ? இங்க உள்ள புகைப்படங்களை பாருங்க. சீமானுடன் ஒட்டிக்கொண்டு படம் எடுத்த பிள்ளை. மலேசியாவில் அவர் சட்டிங் செய்யும் நபர்களுக்கு திறந்தும் காட்டுவார். ஆபாசமாக மலேசியாவில் பணம் பறிக்கும் இந்தப் பெண்ணுக்கு மலேசிய நாம் தமிழர் இயக்கம் முக்கிய இடம் ஒன்று கொடுத்துள்ளதாம். (மேலும்.....) (படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

 

சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் அரசியல் கைதிகளை பார்வை

கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு சென்ற சர்வதேச செஞ்சிலுவை சங்க பிரதிநிதிகள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை பார்வையிட்டுள்ளனர். சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னரே அந்த பிரதிநிதிகள் சிறைச்சாலைக்கு நேற்று புதன்கிழமை சென்று அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனர் சந்திரரத்ன பல்லேகம இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்படிக் கூறுகின்றது தமிழ் மணம் என்றும் இணையம்

புலிகளை குறை சொல்லும் கேவலமான காங்கரசே இந்த வினாகளுக்கு பதில் சொல்.

இனிமேல் சோனியாவின் பாவாடை காணமல் போனால் கூட புலிகளை தான் சொல்வார்கள் போலும்..(மேலும்.....)

தமிழீழ விடுதலை புலிகளின்

162 போலி ஏ.ரீ.எம். அட்டைகளை பயன்படுத்திய குழு கைது

தாய்லாந்தில் 10 மில்லியன் பாட் பணத்தை 100 ஏ.ரீ.எம். அட்டைகளை பயன்படுத்தி களவாக பெற்றுக்கொண்ட மலேஷியர்கள் நால்வர் மற்றும் இலங்கையர்கள் இருவர்களை கொண்ட குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. ஏ.ரீ.எம். இயந்திரத்திலிருந்து 43 வயதான எஸ்.சசீலன்  பணத்தை பெற்றுக்கொண்டிருந்தபோது பிடிபட்டார். இவரிடம் 10 போலி ஏ.ரீ.எம் காட்கள் இருந்தன. பின்னர் மேலும் 5 சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 162 இலத்திரனியல் அட்டைகள் 18,000 பாட் பணமும் கைப்பற்றப்பட்டது. சந்தேகநபர்கள் ஒரு மாதத்தில் 10 மில்லியன் பாட் பணத்தை களவாக பெற்றுக்கொண்டதாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர். இலங்கையை சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் முன்னாள் தமிழீழ விடுதலை புலிகள் உறுப்பினர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எட்டுக் கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டிவிட்டு அதை தனிநாடு ஆக்கி சிக்கலில் விழ வேண்டாம் மனோ கணேசன்

இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என சாபமிட வேண்டாமெனஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.  இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள் தனமான சிங்கள பௌத்த தீவிரவாதம் மூலம் எட்டுக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம். (மேலும்.....)

சிறுவர், பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறை ஒழிக்க வேண்டும் என யாழ்.மாவட்ட பெண்கள் என்னும் அமைப்பின் சிலரால் ஆர்ப்பாட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இன்று மெற்கொள்ளப்பட்டது. யாழ். பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டமானது, வைத்தியசாலை வீதி வழியே கண்டி வீதியின் ஊடாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நிறைவு பெற்றது. இதன்போது யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

அனுராதபுரத்திலுள்ள இஸ்லாமிய மத பாடசாலையை பலவந்தமாக அகற்ற பொதுபல சேனா முயற்சி

அனுராதபுரம் மல்வத்துஓய டிக்சன் ஒழுங்கையில் நடத்தப்பட்டு வரும், இஸ்லாமிய மத பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்காது போனால், அதனை பலவந்தமாக அகற்றப் போவதாக பொதுபல சேனா அமைப்பு பிரசாரப்படுத்தியுள்ளதாக பொலிஸ் புலனாய்பு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக அனுராதபுரம் பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் மஹேஷ் சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பு அனுராதபுரத்திற்கு வந்து, குறித்த இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை அகற்றினால், நகரத்தில் உள்ள சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையில் பதற்றமான நிலைமை ஏற்படும் எனவும் அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் குறித்த முஸ்லிம் அறநெறி பாடசாலை மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

‘உதயன்’ பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் கிளிநொச்சி அலுவலகம் இனந் தெரியாதோரால் நேற்று அதிகாலை தாக்கப்பட்டதாக உதயன் நிறுவனத்தி னர் தெரிவித்தனர். நேற்று விநியோகப்பணிகளை ஆரம்பிக்கும் நோக்கோடு கிளிநொச்சி அலுவலகத்தில் தமது பணியாளர்கள் அதிகாலை 4.50 மணியளவில் கட மையில் ஈடுபட்டிருந்த சமயம் அங்கு வந்த 7 பேர் அடங்கிய இனம் தெரி யாத நபர்கள் தாக்குதலை நடத்தினர். இதேவேளை, கிளிநொச்சி அலுவல கத்தில் இருந்து கணனிகள் உட்பட சில பொருட்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதுடன் தமது அலுவலக மோட்டார் சைக்கிள்கள் இரண்டு உட்பட விநியோக வாகனமும் சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். காயமடைந்த இருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வெனிசுலா

நிக்கோலஸ் மதுரோ வெற்றி பெறுவார்- பல்வேறு கருத்துக்கணிப்பில் தகவல்

வெனிசுலாவில் வருகிற ஏப்ரல் 14 அன்று நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் வெனிசுலா ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் நிக்கோலஸ் மதுராவே வெற்றி பெறுவார். இவரை எதிர்த்து களம் காணும் அமெரிக்க ஆதரவு வலதுசாரி வேட்பாளர் ஹென்றி கெப்ரில்ஸ் தோல்வியையே தழுவுவார் என பல்வேறு கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. (மேலும்.....)

சித்திரை 03, 2013

இன்று கடமைக்குத் திரும்பாதோர் பதவி இழந்தவர்களாக கருதப்படுவர்

சுகாதார அமைச்சின் நியாயமான முடிவுக்கு எதிராகச் செயற்பட்டு இன்று கடமைக்கு வரத்தவறும் கொழும்பு பெரியாஸ்பத்திரி சிகிச்சைப் பிரிவு பதிலீட்டு ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டவர் களாகவே கருதப்படுவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரியும் மேற்படி பதிலீட்டு ஊழியர்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் செய்த குற்றத்திற்காக அவர்களுக்கு ராகம வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கெதிராகவே இன்றைய தினம் கடமையைப் பகிஷ்கரிக்க மேற்படி ஊழியர்கள் முடிவு செய்திருப்பதாகவும் அவ்வாறு ஆஸ்பத்திரி நடவடிக்கைகளை சீர்குலைக்க அவர்கள் நினைத்தால் அவர்களை வேலையிலிருந்து நீக்குவதற்குத் தீர்மானம் எடுக்கப்படுமெனவும் சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

பெபிலாயான தாக்குதல் சம்பவம்

17 சந்தேக நபர்களும் எச்சரிக்கப்பட்டு நேற்று விடுதலை

பெபிலியான ‘பெஷன் பக்’ களஞ்சியசாலை மீதான தாக்குதல் தொடர்பில் கைதான 17 சந்தேக நபர்களையும் கடுமையாக எச்சரித்த நீதவான், பின்னர் அவர்களை விடுதலை செய்தார். சந்தேக நபர்கள் நேற்று அடையாள அணிவகுப்புக்காக நுகேகொடை நீதவான் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தனர்.அணிவகுப்பை நடத்துமாறு சந்தேக நபரின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கேட்டபோது, இச்சம்பவத்தை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வந்து முறைப்பாட்டை வாபஸ் பெற வர்த்தக நிறுவனத்தின் உரிமையாளர் உத்தீக் ஒமர்தீன் இணக்கம் தெரிவித்திருப்பதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்கா நீதிமன்றில் தெரிவித்தார். அதற்கு மற்றைய தரப்பினர் இணக்கம் தெரிவித்ததன் பின் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதில்லையென பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களை விடுவிக்க உத்தரவிட்ட மாஜிஸ்ரேட், மீண்டும் இவ்வாறான சம்பவத்தில் சம்பந்தப் பட்டால் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கடுமையாக எச்சரிக்கையும் செய்தார்.

கிளிநொச்சியில் சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் அமைக்க நடவடிக்கை

சர்வதேச சமாதான பல்கலைக்கழகமொன்று வட மாகாணத்தில் ஸ்தாபிக்கப்படும். இதற்கான சகல ஏற்பாடுகளையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற் கொண்டு வருவதாக ஜனாதிபதி செயலக சமூக அபிவிருத்தி திட்ட பணிப்பாளர் கலாநிதி நந்தன விஜேசிங்ஹ தெரிவித்தார். உத்தேச சர்வதேச சமாதான பல்கலைக்கழகம் கிளிநொச்சியில் உள்ள பளை எனுமிடத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான நிதி உதவியை இலங்கையில் சமாதானத்தில் அக்கறையுள்ள உலக நாடுகளும், புலம்பெயர் நன்கொடை யாளர்களும் வழங்கவுள்ளனர். இப்பல்கலைக்கழகத்தில் ஆறு பீடங்களும், பட்டப்பின்படிப்பு வசதிகளும், க. பொ. த. (சா/த), க. பொ. த (உ/த) பயின்றவர்களுக்கான சான்றிதழ் கற்கைநெறிகளும் நடாத்தப்படும். விசேடமாக தெற்காசிய நாடுகளின் மாணவர்களும், சார்க் நாடுகளின் மாணவர்களும் இப்பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

இரட்டை கோபுர தாக்குதல் இடிபாடுகள் மீண்டும் ஆய்வு

செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதலின் இடிபாடுகளில் 11 ஆண்டுகள் கழித்து மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் சுமார் 60 டிரக் வண்டிகளளவு இடிபாடுகள் சேகரிக்கப் பட்டுள்ளன. இந்த இடிபாடுகளில் மனித உடல் பாகங்கள் தேடப்பட்டு அதில் டி. என். ஏ. ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த ஆராய்ச்சிகள் 10 வாரங்கள் நியூயோர்க் நகரில் உள்ள ஸ்டேடன் தீவுகளில் நடைபெறும் என நியூயோர்க் நகர துணைமேயர் காஸ் ஹொலொவெய் குறிப்பிட்டார். 2001 செப்டம்பர் 11 தாக்குதலில் சுமார் 2,750 பேர் கொல்லப்பட்டனர். இதில் 1634 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் எஞ்சியோரை அடையாளம் காண இந்த சோதனை உதவும் என நம்பப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இதுவரை கொல்லப்பட்ட 34 பேரே அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும் 1000க்கும் அதிகமானோரது எந்த ஒரு உடற்பாகமும் தமது உறவினர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. இரட்டை கோபுரங்கள் இருந்த இடத்தில் வானளாவிய புதிய கட்டிடம் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 02, 2013

இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க கோரி நடிகர், நடிகைகள் உண்ணாவிரதம்

இலங்கை தமிழ் மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்க இந்திய அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனித் தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் உள்பட அனைத்து பிரிவினரும் தொடர் போராட்டத்தி்ல் ஈடுபட்டனர். இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் சென்னையில் அண்மையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க இந்திய அரசை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இன்று உண்ணாவிரத அறப்போராட்டம் நடந்து வருகிறது. இந்த உண்ணாவிரத்தில் நடிகர்கள் அஜீத்குமார், சூர்யா, கார்த்திக், சத்யராஜ், பிரகாஷ்ராஜ் சிவகுமார், விஜயகுமார் மற்றும் நடிகைகள் தேவயானி, ராதிகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். ஆனால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இதுவரை கலந்து கொள்ளவில்லை.

பழைய காணிச் சட்டங்களை திருத்தி புதிய சட்டங்கள் வகுக்க வேண்டும், மோசடிகள் இடம்பெறுவதற்கு பழைய சட்டங்களும் காரணமாகின்றன

காணிகள் தொடர்பான பழைமை யான சட்ட திட்டங்கள் இல்லாதொழிக்கப் பட்டு காலத்துக்கு பொரு த்தமான சட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர் கள் காணியமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரி களுக்கு பணிப்புரை விடுத்தார். தற்போது நடைமுறை யிலுள்ள காணிச் சட்டங்கள் மற்றும் சரத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கேட் டுக் கொண்ட ஜனாதிபதி, விரைவாக இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன் காணி தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் பல்வேறு காரணங்களுக்காக மக்களிடமிருந்து பெறப்பட்ட காணி களுக்கான நட்டஈடு வழங்கும் செயற் பாடுகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கேட் டுக் கொண்டார்.

பெபிலியான வர்த்தக நிலைய தாக்குதல்

‘தனிப்பட்ட காதல் விவகாரத்தை சமூக மோதலாக காண்பிக்க முயற்சி’

வாலிபர், யுவதியின் காதல் விவகாரத்தைக் காரணமாக்கி இன மோதல்களை உருவாக்கி, சமூக நல்லெண்ணத்தை சீரழிக்க சிலர் கங்கணம் கட்டி செயற்படுகின்றனர். இதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். இந்த குழப்பநிலையை உருவாக்கி இனநல உறவை சீர்குலைப்பவர்கள் யாராக இருந்தா லும் உரிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இல்லாமல் மேற்கொள்வோம். மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா இவ்வாறு உறுதியளித்தார். ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்சன் சமரசிங்க வானொலியில் நடத்தும் ‘தஸதெஸ’ நிகழ்ச்சியில் நேற்றுக்காலை பேசிய அவர், பெபிலியான சம்பவங்கள் தொடர்பான பல சந்தேகங்களை தெளிவுபடுத்தி உண்மை நிலையை விளக்கினார். பெபிலியான தாக்குதலின் போது சிங்களக் கடைகளும் தாக்கப்பட்டுள்ளன. இது குழப்பக்காரர்கள் செய்த திட்டமிட்ட வேலையாகும். தாக்குதலில் பிக்குமாறும் சம்பந்தப்பட்டமை தொடர்பாக வர்த்தக பிரஸ்தாப நிறுவன கமெராக்களில் பதியப்பட்டுள்ளது. இப்படி குழப்பங்களை உருவாக்கி இன முறுகல்களை சீர்குலைக்கவே ஒரு சக்தி திட்டமிட்டு வேலை செய்கிறது.

1938 இல் எடுக்கப்பட்ட வீடியோவில் கையடக்க தொலைபேசி

நவீன கையடக்க தொலைபேசி போன்ற கருவி மூலம் பெண் ஒருவர் உரையாடுவது போன்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ 1938 ஆம் ஆண்டு எடுக்கப் பட்டதே இந்த பரபரப்புக்கு காரணமாகும். கறுப்பு வெள்ளை வீடியோவில் இளம் பெண் ஒருவர் கையடக்க தொலைபேசி போன்ற கருவி ஒன்றின் மூலம் உரையாடுவது பதியப்பட்டுள்ளது. கையடக்க தொலைபேசியே கண்டுபிடிக்கப்படாத அந்த காலத்தில் அவ்வாறான ஒரு கருவி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் யூடியுப் பயனர் ஒருவர் இந்த மர்மத்திற்கு பதில் அளித்துள்ளார். அதில் அவர், குறித்த வீடியோவில் இருப்பது தனது பூட்டி என்றும் அவரது 17 வயதில் இந்த வீடீயோ எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது கையில் இருப்பது தான் பணிபுரிந்த நிறுவனத்தால் ஆய்வுக்காக வழங்கப்பட்ட வயர்களற்ற தொலைபேசி என்று மேற்படி யூடியுப் பயனர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று 1928 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சர்லி சப்லினின் திரைப்படம் ஒன்றிலும் பெண் ஒருவர் கையடக்க தொலைபேசி போன்ற கருவி மூலம் உரையாடும் மர்மமும் இதுவரை தீர்க்கப்படவில்லை. முதலாவது கையடக்க தொலைபேசி 1973 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப் பட்டது. எனினும் 1990 களிலேயே கையடக்க தொலைபேசிகளுக்கு வர்த்தக பெறுமதி ஏற்பட்டது.

பேரழிவை நோக்கி இந்தியா போய்க் கொண்டிருக்கிறது

ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரே, ‘ஜனதந்திர யாத்திரை’ என்ற பெயரில் நாடு தழுவிய ஓராண்டு கால விழிப்பு ணர்வு பிரசார யாத்திரை மேற்கொள்கிறார். பஞ்சாப் மாநிலம், ஜாலியன்வாலா பாக் நகரில் நேற்று முன்தினம் தனது யாத்திரையை தொடங்கிய அன்னா ஹசாரே பேசிய தாவது, ஊழலுக்கு எதிரான புனிதப் போரை எனது உயர் உள்ள வரை தொடர்வேன். நாடு பேரழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இருந்து நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். பெரிய அளவிலான விழிப்புணர்வு இயக்கங்களின் மூலமாக மட்டுமே இந்த மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று அவர் பேசினார்.

சித்திரை 01, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவு?

செப்டம்பரில் நடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் வட மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் பிளவுபடும் அளவிற்கு கருத்து வேறுபாடுகள் அதிகரித்திருப்பதாக டெய்லிமிரருக்கு கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், டொலோ, புளோட் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி ஆகிய ஐந்து கட்சிகள் சேர்ந்து உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பாகும். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தனியொரு அரசியல் கட்சியாக பதிவு செய்வது தொடர்பாக இந்த கூட்டிலுள்ள கட்சிகள் பேசி வந்துள்ளன. எனினும் புதிய கட்சியின் பதவிகளை பகிர்வது தொடர்பாக இரா. சம்பந்தன் மற்றும் ஏனைய கட்சித் தலைவர்களிடையே கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன. தற்போது கருத்து முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஏனைய கட்சிகள் தமிழரசுக் கட்சியை புறந்தள்ளிவிட்டு தமக்குள் ஒரு தேர்தல் ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள எண்ணுவதாக கூறப்படுகின்றது. வட மாகாண தேர்தலை கருத்திற்கொண்டு கட்சி பிளவுபடுவதை தவிர்ப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இரா. சம்பந்தனிடம் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கேட்டிருப்பதாக அறியப்படுகின்றது.

வன்னி எம்.பி.க்கள் தொகையில் மாற்றமில்லை

வன்னியில் வாக்காளர் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாததால் இந்த மாவட்டத்துக்கான நாடாளுமன்ற பிரதிநிதிகளின் தொகை அதே அளவிலேயே இருக்கும் என தேர்தல்கள் திணைக்களம் குறிப்பிட்டது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் ஆறிலிருந்து ஐந்தாகக் குறைவடையும் என வன்னி மற்றும் முல்லைத்தீவு பிரதி தேர்தல்கள் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி கடந்த வாரம் கூறியிருந்தார். வன்னியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தொகை 219,196ஆக குறைந்துவிட்டதாக கருணாநிதி சுட்டிக்காட்டியிருந்தார். இதனை மறுத்துள்ள தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, 'பிரதி ஆணையாளரான கருணாநிதிக்கு இவ்வாறான அறிக்கைகளை ஊடகங்களுக்கு வழங்க முடியாது' எனவும் குறிப்பிட்டார். 'இது அவரது அதிகாரத்தை மீறிய விடயம். இது தொடர்பில் நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்' என்றும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார். 'ஒரு தொகுதியில் பதியப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அந்த தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகை தேர்தல்கள் திணைக்களம் தீர்மானிக்கும். அந்த வகையில் அண்மையில் பதுளை மாவட்டத்தில் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறைக்கப்பட்டது. நுவரெலியாவுக்கு ஓரிடம் அதிகரிக்கப்பட்டது' என்று தேர்தல்கள் ஆணையாளர் மேலும் கூறினார்.

மாத்தளை மனிதப்புதைகுழி தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் - ஜே.வி.பி.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாத்தளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கட்டட நிர்மாண வேலையின் போது தோண்டப்பட்ட குழிகளில் இருந்து மீட்கப்பட்ட 154 மனித எச்சங்கள் தொடர்பில் அரசாங்கம் விசேட நீதிமன்றமொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இச் சம்பவம் 1987-1989 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ளதாகவும், அனைவரும் பல்வேறு வகையான சித்திரவதைகளுக்கு உட்படுத்திய பின்னரே கொல்லப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய பரிசோதனை அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் இந்த விடயத்தில் மௌனமாகவிருந்து இதனை மூடி மறைக்க முற்படக் கூடாது. அக்கால கட்டத்தில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்திடமும் மாத்தளை பிரதேசத்திற்கு பொறுப்பாக இருந்த இராணுவ, பொலிஸ் மற்றும் வேறு சிவில் அதிகாரிகளிடமும் விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் ஜே.வி.பி. மேலதிக தகவல்களை திரட்டும் நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை நாட்டின் அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கு ஒரு கடிதம்

(எஸ். ஹமீத்)

'வேறு வழி இருக்கவில்லை'  என்பது தங்கள் தரப்பு நியாயமாக இருக்கலாம். ஆனால், பல்லாயிரக் கணக்கான மக்களும் ஆயிரக் கணக்கான இராணுவத்தினரும், கோடிக்கணக்கான சொத்துக்களும் அழிந்து போவதை ஓரளவாவது தவிர்த்துப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வழிகளைப் பின்பற்றியிருக்கலாம் என்பது வேறு பல தரப்பினரின் கருத்தாக இருக்கிறது. எனினும் இந்த விடயங்கள் பற்றியும் இந்த நேரத்தில் எனது செறிவைச் செலுத்த நான் முனையவில்லை. எவ்வாறாயினும், யுத்தம் முடிந்ததே என்ற மகிழ்ச்சியும், அழிவு நேர்ந்ததே என்ற துயரமும் என் மனதில் இருக்கின்றன. (மேலும்.....)

பௌத்தர்கள் ஏனைய மதத்தினரை மதிக்க வேண்டும் -  ஜனாதிபதி

இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே சகல மதத்தினருக்கு தத்தமது மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருக்கின்றது. இதேவேளை பௌத்தர்கள், ஏனைய மதத்தினரை கட்டாயம் மதித்து நடக்க வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மாத்தறை வெஹெரஹேன ரஜ மஹா விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இனம் மற்றும் மத நல்லிணக்கத்தை பாதுகாத்து பௌத்த மக்கள் ஏனைய சமூகத்தினருக்கு முன்மாதிரியானவர்களாக செயற்பட வேண்டும். இனவாதம் அல்லது மத தீவிரவாதத்தை அனுமதிக்க முடியாது. எங்களுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்த காத்திருப்பவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது. மாறாக உலகமே நம்மை அவதானித்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்மாதிரியானவர்கள் இருக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என்றார்.

புதிய இனவாதக் குழுக்களின் தோற்றம் நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும்

புதிய இனவாதக் குழுக்களின் தோற்றம் இந்நாட்டை மீண்டும் அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். கடந்தகால வரலாற்றை சிலர் மறந்த நிலையில் செயற்படுவது கவலை தரும் விடயமென நீதி அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார். பெளத்த சாசனத்தை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு குரோதத்தையும், வெறுப்பையும் வளர்ப்பவர்கள் இந்த நாட்டிற்கு சாபக் கேடாகும் என மகாநாயக்க தேரர்கள் கூறியுள்ளனர். அவ்வாறான தீய சக்திகளுக்கு தமது ஆசீர்வாதம் அல்லது அனுமதி வழங்கப்படமாட்டாது என்று மதிப்பிற்குரிய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளார்கள். இது காலவரை நாம் இன, சமய, குரோதங்களை மறந்து அமைதியாக வாழ்ந்து வந்தோம். யுத்தத்தின் பின் அமைதிச் சூழல் ஏற்பட்டு நாடு அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் இவ்வேளை சில தீய சக்திகள் அதனை அழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதனை தொடர்ந்து வளரவிட அனுமதிப்பது நாட்டை வீழ்ச்சியில் தள்ளி விடும்.

ஈரான் - எகிப்துக்கு இடையில் 34 ஆண்டுகளின் பின் விமானசேவை

எகிப்துக்கும் ஈரானுக்கும் இடையில் 34 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நேரடி வர்த்தக விமானப் பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எகிப்து வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான எயார் மெம்புஸ் என்ற வர்த்தக விமான 8 ஈரான் நாட்டவர்களுடன் கடந்த சனிக்கிழமை கெய்ரோவில் இருந்து தெஹ்ரானை சென்றடைந்தது. 1979 ஆம் ஆண்டு ஈரானிய புரட்சிக்கு பின்னர் இரு நாட்டு உறவில் சுமுக நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்தே விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2010 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் அரசில் எகிப்து - ஈரானுக்கு இடையிலான வர்த்தக விமான சேவையை ஆரம்பிக்க ஒப்பந்தமானபோதும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஈரான் புரட்சிக்கு பின்னர் ஷா மன்னருக்கு அடைக்கலம் வழங்கியது இஸ்ரேலுடனான எகிப்தின் அமைதி உடன்படிக்கை காரணமாக ஈரான் எகிப்துக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டன. எனினும் 2012 ஆம் ஆண்டு மொஹமத் முர்சி எகிப்து ஜனாதிபதியாக தேர்வானதைத் தொடர்ந்து இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இனங்களுக்கு எதிராக யார் செயற்பட்டாலும் அரசாங்கம் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும்

இலங்கையில் வாழும் எந்தவொரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஒரு சமூகத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையிலோ நடந்துகொள்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இலங்கையிலுள்ள சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தக்கூடியதான வன்முறைச் சம்பவங்கள் கடந்த சில தினங்களில் இடம்பெற்றுள்ளன. இவ்வாறான சம்பவங்களை அரசாங்கம் என்ற ரீதியில் கடுமையாகக் கண்டிப்பதுடன், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக அமைச்சர் நேற்றுத் தெரிவித்தார். அத்துடன், இனங்களுக்கிடையில் குழப்பநிலையை ஏற்படுத்தும் வகையிலான விடயங்களில் கலந்துகொள்ளவோ, ஈடுபடவோ வேண்டாம் என நாட்டு மக்களிடம் அரசாங்கம் என்ற ரீதியிலும், சிரேஷ்ட அரசியல்வாதி என்ற ரீதியிலும் கேட்டுக்கொள்கின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வட கொரியா யுத்த பிரகடனம்: கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம்

தென்கொரியாவுக்கு எதிராக வட கொரியா யுத்த பிரகடனம் மேற்கொண் டதை அடுத்து கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. ஆத்திரமூட்டும் எந்தவொரு செயற்பாடும் இடம்பெற்றால் யுத்தத்தை தொடுப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது. மூன்றாவது அணு ஆயுத சோதனை மேற்கொண்ட தற்காக ஐ.நா.வினால் பொருளாதார தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து வட கொரியா, அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக நாளாந்தம் எச்சரிக்கை விடுத்து வருகிறது. எவ்வாறாயினும் கடந்த 1953 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்திற்கு பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் எந்த யுத்த நிறுத்த உடன்படிக்கையும் செய்துகொள்ளப்படாத சூழலில் கடந்த 6 தசாப்தங்களாக அங்கு போர்ப் பதற்றம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை தென்கொரியா தொடருமேயானால் அணு ஆயுதப் போர் வெடிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பப் பகுதியில் போர் பதற்றம் உச்சத்தை அடைந்திருக்கிறது. இப் போர்ப் பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com