Contact us at: sooddram@gmail.com

 

ஆவணி  2013 மாதப் பதிவுகள்

ஆகஸ்ட் 31, 2013

ஓமந்தை சோதனை சாவடியில் சோதனைகள் நிறுத்தம்

ஓமந்தை இராணுவ சோதனையில் சகல சோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக வன்னி கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்தார். இந்த சோதனை சாவடியில் இன்று சனிக்கிழமையிலிருந்தே சகல சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும்  இந்த சோதனை சாவடி பிரதானமாக செயற்பட்டது. வடக்கில் இருந்த தெற்கிற்கும் தெற்கிலிருந்து வடக்கிற்கும் செல்வோர் இந்த சோதனை சாவடியில் இறக்கப்பட்டு அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டதன் பின்னரே அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனங்களின் பதிவு மட்டும் இடம்பெறும் எனவும் போக்குவரத்து பயணிகளை வாகனங்களில் இருந்து இறக்கி சோதனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறாது என்றும் அவர் தெரிவித்தார். அத்துடன் வாகனங்களில் கொண்டு செல்லப்படும் பொருட்களும் சோதனை நடவடிக்கைகளுக்காக இறக்கி ஏற்றப்படாது எனவும் தெரிவித்தார். அத்துடன், யுத்தக்காலத்தின் போது ரிமோட் கொன்றோல்கள், வயர்கள், தொலை நோக்கிகள், திசை காட்டிகள், சிறிய ரக பற்றரிகள், இராணுவ பயன்பாட்டுக்கான பொருட்களை கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்காக இந்த சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சென்னையில் விடுதலை புலிகள் இருவர் கைது

கடலூரில், வெடிகுண்டு சோதனை நடத்திய வழக்கில், தேடப்பட்டு வந்த, விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த இருவர், சென்னையில், கைது செய்யப்பட்டனர். விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிவனேசன் மற்றும் மகேஸ்வரன் என்ற கோபி. முள்ளிவாய்க்கால் சம்பவத்தை தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இவர்கள் இருவரும், இலங்கையின் முக்கிய பகுதிகளில் குண்டு வைக்க திட்டமிட்டனர். இத்திட்டத்தை செயல்படுத்த, முன் சோதனை செய்வதற்காக, தமிழகத்திற்கு தப்பி வந்தனர். இவர்கள், கடலூர் மாவட்டத்தின் முந்திரிக் காட்டில், மேலும் நால்வருடன் சேர்ந்து, சோதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து, கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சோதனையிட்ட போது, உடன் இருந்த, நால்வரும் பிடிபட்டனர். சிவனேசன், கோபி இருவரும் தப்பிவிட்டனர். இவர்களை, போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் சிவனேசனும், கோபியும் சுற்றித் திரியும் தகவல் கிடைத்து, அவர்கள் இருவரையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின்

சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு - நவநீதம்பிள்ளை

'ஏற்புடைய தேசிய மட்டவிசாரணைகள் இல்லாதுவிடின் சர்வதேச விசாரணைக்கான கோரிக்கைகள் தொடரும் சாத்தியங்கள் உண்டு' என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் தன்னை விரும்பிய இடங்களுக்கு செல்வதற்கு அனுமதியளித்தது எனவும் இலங்கை ஓர் எதேச்சதிகார அரசுக்கான சில அறிகுறிகளை காட்டியது எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேலும் தெரிவித்தார். இலங்கைக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று சனிக்கிழமை நாடு திரும்புவதற்கு முன்னர் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்.....)

படுகொலையும், சிறுமியர் மீதான பாலியல் கொடுமையும் புரிந்த

காமுக சுவாமி பிரேமானந்தாவின் பக்தர்கள் வசமாகுமா வடமாகாண நிர்வாகம்?

ஒருவரின் ஆளுமை, தகைமைகள், அனுபவங்கள் ஆகியவை அடங்கிய விண்ணப்பத்தை அல்லது மனுவை பொதுவாக Bio-Dataஎன்பார்கள்.  இதே விண்ணப்ப வடிவத்தை Curriculum Vitae என்றும் சொல்லுவார்கள். இது லத்தீன் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் வழக்கத்திற்கு வந்த சொல். சுருக்கமாக 'CV' என்று குறிப்பிடுவார்கள். ஒருவரின் ஆளுமை, தகைமை, அனுபவம், சிறப்பியல்புகள் அடங்கிய பட்டோலையையே 'CV'என அழைக்கிறோம். இப்போது நடைபெறும் வடமாகாண சபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களின் சிறப்பை, தகைமையை, ஆளுமையை வெளிப்படுத்தும் இரண்டு 'CV' க்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். (மேலும்.....)

கொழும்பு - கிளிநொச்சி ரயில் சேவை 14ம் திகதி முதல் ஆரம்பம்

28 வருடங்களின் பின்னர் கொழும்பில் இருந்து கிளிநொச்சி வரையான யாழ்தேவி ரயில் சேவை எதிர்வரும் செப்டம்பர் 14ம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது. இதற்கு முன்னோடியாக ஓமந்தையில் இருந்து கிளிநொச்சி வரை இரு தடவைகள் பரீட்சார்த்த ரயில் சேவை வெற்றிகரமாக இடம்பெற்றன. ஓமந்தைக்கும் கிளிநொச்சிக்குமிடையிலான 62 கிலோ மீட்டர் தூர ரயில் பாதை இந்திய இர்கொன் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. புதிய ரயில் பாதை ஜனாதிபதியினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளது. 1989 ஜனவரி 19ம் திகதி கிளிநொச்சி கொக்காவில் பகுதியில் வைத்து வடபகுதி ரயில் பாதை புலிகளினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 28 வருடங்களாக வடபகுதி ரயில் சேவை துண்டிக்கப்பட்டது. வடக்கு மீட்கப்பட்ட பின் மதவாச்சியில் இருந்து காங்சேகன்துறை வரையான ரயில் பாதை மீளமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வருட நடுப்பகுதியில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளதோடு தற்பொழுது ஓமந்தை வரை ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் வகையில் வடபகுதிக்கான ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்திய இழுவைப்படகுகளினால் பாதிக்கப்படும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் அவலங்களுக்கு நிரந்தரத்தீர்வு காண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடும் முயற்சி!

இந்திய இழுவைப்படகுகள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைவதால்
வடபகுதி கற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டு வரும் அவலங்களுக்கு நிரந்தர
தீர்வு காணும் கடும் முயற்சியில் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஈடுபட்டு வருவதாக ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் உயர் அரசியல் பீடம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்.....)

அம்பலத்திற்கு வரும் உலகத் தமிழர் பேரவை

2009 போரின் முடிவில் புலம்பெயர் தமிழர்களின் குரலாக ஈழத் தமிழர்களின் வலிகளை பிரதிபலிக்கும் குரலாக உலகத் தமிழர்கள் எல்லோரினது குரலாக, உலகத் தமிழர்களை இணைக்க ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும், அவர்களே புலம்பெயர் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்ற காரணாத்துடன் உருவாக்கப்பட்டது உலகத் தமிழர் பேரவை. மிக நம்பிக்கையுடன் உலகத்தில் உள்ள ஐந்து கண்டங்களில் இருந்து தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் பாரிஸ் நகரில் ஒன்று கூடி உருவாக்கப்பட்டது உலகத் தமிழர் பேரவை. 15 நாடுகளின் அமைப்பாக உருவாக்கப்பட்ட அமைப்பு இன்று எப்படி இருக்கிறது, தமிழர்களின் உரிமைகளை இவர்கள் எப்படி பாதுகாக்கிறார்கள் என்பதை நாம் எல்லோரும் புரிந்து கொள்கிற நேரம் இன்று உருவாகி இருக்கிறது. (மேலும்.....)

அறிக்கை முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதென மக்கள் கருதுகின்றனர் - நவீயிடம் ஜனாதிபதி

உங்களால் தயாரிக்கப்படவிருக்கின்ற அறிக்கையானது முன்கூட்டியே தீர்;மானிக்கப்பட்டதொன்று என மக்கள் கருதுகின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இருவருக்கும் இடையில் அலரிமாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு எடுத்துரைத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

எம்மிடம் ஆயுதங்கள் இருந்திருந்தால் சமஷ்டிக்கும் அப்பால் சென்றிருக்கலாம் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் தான் சமஷ்டி தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சமஷ்டித் தீர்வை விட கூடுதலான தீர்வை நோக்கிக் கூட நாம் பேச்சு வார்த்தைகளை நடத்தலாம் என்று தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், எங்களிடம் கைவசம் ஆயுதங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு எதுவுமே நடக்காது என்று கூறினார். (மேலும்.....)

ஆகஸ்ட் 30, 2013

பொது மக்களிடையே சமத்துவம், நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் -  ஜனாதிபதியிடம் நவிபிள்ளை வலியுறுத்தல்

பௌதிக அபிவிருத்திகளுடன் சேர்த்து பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உ ரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்தி ராஜபக்ஷவுக்கும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றது. இதன்போதே நவநீதம்பிள்ளையிடம் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். பௌதிக அபிவிருத்திகளுடன் சேர்த்து பொது மக்களிடையே சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானது. (மேலும்.....)

ஜனாதிபதி - நவீபிள்ளை சந்திப்பு,  எதிர்கட்சித்தலைவர் - நவீபிள்ளை சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்'விற்கும் இடையில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.இச்சந்திப்பு நிகழ்விற்கு முன்பு நவிபிள்ளையும் ஜனாதிபதியும் பள்ளிச் சிறுவர்களை சந்தித்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இன்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார்.

 

நவீபிள்ளை - த.தே.கூ சந்திப்பு

சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்தல்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. காலை 8.15க்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாணசபைத் தேர்தலின் த.தே.கூ முதலமைச்சர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். (மேலும்.....)

இந்தியாவில்

மாநிலங்களின் பிரிப்பு பலம் சேர்க்குமா..? பலவீனப்படுத்துமா...?

(ஈஸ்வர்)

இந்தியாவின் கோதாவரி, கிருஸ்ணா என்ற முக்கிய ஆறுகளை தன்னகத்தே கொண்ட ஆந்திர மாநிலத்திலிருந்து கடல் சாரா மத்திய பகுதிகளைப் பிரித்து தனித் தெலுங்கானா என்ற 29 வது புதிய மாநிலம் அமைக்கப்படுவதற்கான அறிவிப்பை இந்திய மத்திய அரசு ஜுலை 30, 2013 அன்று வெளியிட்;டது. இதற்கான பூர்வாங்க வேலைகள் 4 மாதற்திற்குள் முடிவடைந்துவிடவேண்டும் என்று நேர அட்டவணையும் குறித்துள்ளது. தெலுங்கானாவின் தலைநகரமாக தற்காலிகமாக ஹைத்தராபாத் இருக்கப் போகின்றது. இவ் அறிவித்தலைத் தொடர்ந்து இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று ஓய்திருக்கின்றன? (மேலும்.....)

மக்கள் மீது சவாரி விடுபவர்களுக்குப் பதிலாக மக்கள் நேய அரசியல் கலாச்சாரம் வேண்டும்

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு கிழக்கு இணைந்த முதலாவது மாகாண சபையில் ஒரு உறுப்பினராக இருந்தவர் நீங்கள். குறுகிய காலமே செயற்பட்டாலும், அவ்வாறு ஏற்கனவே மாகாணசபை அனுபவம் பெற்ற ஒருவராக இத்தேர்தலில் போட்டியிடுபவர் நீங்கள் மட்டுமே. இம்முறை போட்டியிடுவது பற்றி என்ன கூறுவீர்கள்?

இத்தேர்தல் மிகவும் முக்கியமானது. மாகாண சபையே வேண்டாம் என்று 20 வருடங்களாக சொல்லி வந்தவர்கள் இம்முறை தேர்தலில் போட்டியிடுகிறார்கள் இது காலம் கடந்த ஞானம். அப்போதே ஒற்றுமையாக நாம் மாகாண சபையை கையேற்றிருந்தால் இந்த 20 வருட பேரழிவுகளுக்கு இடம் இருந்திருக்காது. ஒரு வலுவான மாகாண சபையை நாம் கொண்டவர்களாக இன்று இருந்திருப்போம். ஆனால் எல்லாம்  முடிந்த பின் தோத்லில் பங்கு பற்றுகிறார்கள் . குதிரை ஓடிய பின் லாயத்தை மூடும் கதைதான். ஆனால் ஒன்று மாகாண சபையின் அதிகாரங்கள் கவனிக்காமல் விட்டு காலத்தால் தேய்வடைந்திருந்தாலும் அதனை நாம் புத்துயிராக்க முடியும். இலங்கை அரசாங்கமுறைமையில் ஒரு அதிகாரபரவலாக்கல் கட்டமைப்பில் எம்மவர்கள் செயற்படுவது நல்லதே. காலம் காலமாக நடந்த நிராகரிப்பு புறக்கணிப்பு அரசியலுக்கு பதிலாக பங்குபற்றுதல் ,அதற்கூடாக துன்புறும் எமது  மக்களுக்கு உருப்படியாக காரியமாற்றல். மாகாண சபை வெறும்பானையாகவே இருந்தாலும்? அதில் மனம் இருந்தால் பிரயாசை இருந்தால் தண்ணீர் விட்டு -அரிசிபோட்டு -பால் விட்டு பொங்கவைக்க எம்மால் முடியும். (மேலும்.....)

நவநீதம்பிள்ளை

உடைந்துபோன விம்பம்

பல மாதங்களாக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின், இலங்கைப் பயணம் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு வந்த நவநீதம்பிள்ளை, கொழும்பில் ஒரு சுற்றுச் சந்திப்புக்களை நடத்தி விட்டு, நேற்றுடன் வடபகுதிக்கான பயணத்தையும் முடித்துள்ளார். நேற்று முன்தினமிரவே திருகோணமலை வந்தடைந்த அவர், இன்று கிழக்கில் பயணங்களை மேற்கொண்ட பின்னர், கொழும்பு திரும்பி, அரசாங்கத் தரப்புடனும், எதிர்க்கட்சிகளுடனும், அடுத்த கட்டப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். (மேலும்.....)

செவ்வாயிலிருந்து பூமிக்கு உயிர் வந்ததற்கு சாத்தியம்

உயிர்கள் பற்றி ஆராயும் ஆராய்ச்சியாளர்களின் மாநாடு இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு உயிர்கள் வந்திருக்கலாம் என்ற கருத்து குறித்து பேசப்பட்டது. நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே சிகப்பு கிரகமான செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்தன என்ற கருத்துக்கு புதிய ஆராய்ச்சிகள் ஆதரவளிக்கின்றன. உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகளான ஆர்.என்.ஏ., டி.என்.ஏ. மற்றும் புரோட்டீன்கள் எப்படி ஒன்று சேர்ந்தன என்று ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியப்படுகின்றனர். இது குறித்த ஆராய்ச்சியின் விபரங்களை பேராசிரியர் ஸ்டீவன் பென்னெர் எடுத்துரைத்தார். உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணமான ஆர்.என்.ஏ.வை உருவாக்குவதற்கு தேவையான தாதுப்பொருட்கள் செவ்வாய் கிரகத்தில் நிறைந்துள்ளன. இது பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்து இருக்கலாம் என்று அவர் கூறினார்.

ஆகஸ்ட் 29, 2013

வடமாகாண தேர்தலில் TNA யினரை தெரிவு செய்தால் தமிழர்களின் பிரச்னைகள் தீர்க்கப்படுமா?

(அபிமன்யு)

-        TNAல், தமிழரசுக் கட்சியுடன் இதர கட்சிகளான TULF, PLOTE, EPRLF சுரேஷ் குழு, TELO ஆகிய கட்சிகள் உள்ளடக்கப்பட்டிருப்பது போல், தேர்தல் ஆணையத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக செயற்பட்டு வரும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியும் TNAயின் ஒரு அங்கமாக இணைக்கப்பட வேண்டும், இது தமிழர்கள் ஒற்றுமையை அங்கீகரிப்பதாகவும் இருக்கும் என்ற பத்மநாபா ஈபிஆர்எல்எவ்ன் கோரிக்கைகளும், முயற்சிகளும் TNAயில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களின், பல்வேறு தகிடுதத்தங்களாலும், சாக்குப்போக்குகளாலும், தில்லுமுல்லுகளாலும், பசப்பு வார்த்தைகளாலும், காப்பாற்றப்படாத வாக்குறுதிகளாலும் உதாசீனப்பட்டமை. அவர்கள் எந்தளவிற்கு நேர்மையானவர்கள், நம்பகத்தன்மை கொண்டவர்கள், ஒற்றுமையில்  இதயசுத்தியான அக்கறை கொண்டவர்கள், தமிழர் நலன கருதிச் செயற்படுபவர்கள் என்பதனைக் கோடிட்டுக் காட்டுவதாக அமைகின்றன.இவர்களா தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்கப்போகிறார்கள்! (மேலும்.....)

மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும்

(வவுனியன்) (இலங்கையிலிருந்து.....)

இலங்கையில் போருக்கு பிந்திய காலப்பகுதியில் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இது இலங்கை ஒரு பல்லின சமூகமாக இணைந்த வாழுதலுக்கு பெரும் தடையாக அமையும் விடயம் ஆகும். சிறப்பாக அதிகப்படியாக முஸ்லீம் மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்களே அதிகரித்து வருகின்றன. மேலும் இந்துக் கோவில்களும் தாக்குதலுக்கு உள்ளான துபோல் பௌத்த கோவில்களும் தாக்குதலுக்கு(பௌதிக தாக்குதல் என்பதற்கு அப்பால் உளவியல் தாக்குதல்) உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. புத்த கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதைவிட உருவாக்கப்பட்டன என்பதே உண்மை நிலை ஆகும். இதுவே இவ் கோவில்கள் ஏனைய மத, இன மக்களால் பௌதிக ரீதியில்லாமல் உளவியல் வெறுப்பிற்கு உள்ளாகி இருக்கின்றன. மத, இன நல்லிணக்கத்துடன் இலங்கையராக வாழுதல் என்று விரும்பும் யாரும் இவற்றை வரவேற்க மாட்டார்கள்.(மேலும்.....)

உண்மையும், உறுதியும் இருந்தால் ஒரே மேடையில் இருவரும் பேச முடியும் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு E.P.D.P முதன்மை வேட்பாளர் அழைப்பு

நமது பாதங்கள் நாளைய தலைமுறைக்கு சரியான திசையைக் காட்ட வேண்டும். யார் வெற்றி பெற்றாலும் அதன் பலாபலன்களை அனுபவிப்பவர்கள் நமது மக்களாகவே இருக்க வேண்டும். அடுத்தவரை இழிவுபடுத்துவதும், அவர்கள் மீது சேறுபூசுவதும், அவதூறு சுமத்துவதும் அரசியலின் பெயரால் எவருக்கும் இலகுவாக செய்து விட முடிகின்றது. இந்த நாகரீகமற்ற போக்கை நாம் மாற்றியமைக்க முடியும். இவ்வாறு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் எஸ். தவராசா கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களுக்கு பகிரங்க அழைப்பொன்றை விடுத்துள்ளார். அவ்வழைப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சகவேட்பாளர் என்பதற்கு அப்பால் நீதிபதி என்ற மரியாதைக்குரியவராக நீங்கள் இருந்திருக்கின்றீர்கள். அந்த மரியாதை காரணமாகவும் உங்கள் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவும் ஒர் அழைப்பை விடுகின்றேன். (மேலும்.....)

அங்கஜன் ராமநாதனின் தந்தை கைது

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமாகாண  சபையின் வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தை ராமநாதன்  கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் சிக்கேரா தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் தேர்தல் வன்முறைகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவரை இன்று புதன்கிழமை மாலைகைது செய்துள்ளதாகவும் அவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவங்கள் தொடர்பில் அவரிடம் இன்று புதன்கிழமை மேற்கொண்ட நீண்டநேர விசாரணைகளின் பின்னரே சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கான இயக்கத்தின் கூட்டம்

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தைப் பாதுகாப்பதற்கான இயக்கமொன்றை இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ( மாவோ ) முன்னெடுத்திருக்கின்றது. இதன் முதற்கட்டமாக எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணிவரை கொழும்பு மருதானை டீன்ஸ் றோட்டில் 281 ஆம் இலக்கத்தில் அமைந்திருக்கும் சமூக சமய நடுநிலையத்தில் கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மாவோவாத கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுரேந்திர அஜித் ரூப சிங்க தலைமையில் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் தேசிய ஒற்றுமைக்கான சமயங்களுக்கிடையிலான ஒன்றியத்தைச் சேர்ந்த ஹிக்கடுவ பியரதன தேரர் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் , புதிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளர் சி.கா. செந்திவேல் , நீதிக்கும் சமாதானத்துக்குமான ஒன்றியத்தைச் சேர்ந்த எம்.ஆர்.நஜா முஹம்மத் , ஜனநாயகத்துக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தைச் சேர்ந்த சந்திரபால குமாரகே ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 28, 2013

சம்பூர் மக்கள் தொடர்பிலும் பேசுவேன் -  நவீ

சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் பேசுவேன் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவீபிள்ளை தெரிவித்துள்ளார். "எனது விஜயத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்திக்கவுள்ளேன். இதன்போது சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து பேசுவேன்" என அவர் குறிப்பிட்டார். சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படாது மாற்று இடத்தில் குடியேற்றப்பட்டதனால் நீங்கள் எதிர்நேக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நான் அறிவேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

ராமநாதனை கைது செய்யாவிடின் விலகுவோம்; நான்கு வேட்பாளர்கள் சூளுரை

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அங்கஜன் ராமநாதனின் தந்தையான ராமநாதனை கைது செய்யாவிடின் தாங்கள் வேட்பாளர் நியமனத்தை மீளப்பெற்று தேர்தலிலிருந்து விலகிக்கொள்ளபோவதாக கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களில் நால்வர் சூளுரைத்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துதெரிவித்த போதே அந்த நான்குவேட்பாளர்களும் மேற்கண்டவாறு சூளுரைத்துள்ளனர். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில், வேட்பாளர்களான குமார் சர்வானந்தன், முடியப்பு ரெமிடியாஸ், எஸ். பொன்னம்பலம் மற்றும் அகிலதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்களே மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு அவர்கள் தொடர்ந்து தெரிவிக்கையில், நாங்கள் ஆயுத கலாசாரத்தை விரும்பவில்லை. ஆனால், யாழ்ப்பாணத்தில் ஆயுத கலாசாரம் தலைத்தூக்கியுள்ளது. வேட்பாளர் அங்கஜனின் தந்தையான ராமநாதனுக்கு ஆயுதம் வழங்கியது யாரென்று ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் கேட்டிக்கின்றோம். இந்த சம்பவம் தொடர்பில் நவடிக்கை எடுப்பதாக எங்களிடம் தெரிவித்துள்ளார். சாவக்கச்சேரியில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோக சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுவிட்டு நீதிமன்றத்திற்கும் செல்லவிருக்கின்றோம். வேட்பாளர் அங்கஜன் ஆயுதம் பயன்படுத்தியது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளது மட்டுமன்றி காலஅவகாசமும் கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.

சிரியா மீதான இராணுவ தலையீடு குறித்து ரஷ்யா, சீனா எச்சரிக்கை

சிரியா மீதான இராணுவத் தலையீடு குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் சீனாவும் ரஷ்யாவும் புதிதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அவ்வாறான ஒரு தலையீடு பிராந்தியத்திலேயே பேரழிவுச் சூழலை ஏற்படுத்தும் என ரஷ்யா குறிப் பிட்டுள்ளது. கடந்த வாரம் இடம்பெற்ற இரசாயன தாக்குலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியா மீது தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதற்கான மறுக்க முடியாத ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. மறுபுறத்தில் ஐ. நா. வின் இரசாயன ஆயுதம் தொடர்பான நிபுணர் குழு தாக்குதல் இடம்பெற்ற டமஸ்கஸின் புறநகர் பகுதியில் இரண்டாவது நாளாக நேற்றைய தினத்திலும் தனது சோதனைகளை மேற்கொண்டது. இங்கு பயணம் மேற்கொள்ளும் போது ஐ. நா. குழுவின் வாகனம் மீது நேற்று முன்தி னம் ஸ்னைப்பர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

இலங்கையின் அவமானச் சின்னம் மேவின்

நவீபிள்ளையை திருமணம் முடிக்க தயார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நவநீதம்பிள்ளைக்கு நாட்டை சுற்றிக்காட்டுவதற்கு தான் தயாரென்றும் இலங்கையின் வரலாற்றை கற்பித்துக்கொடுத்து அவரை திருமணம் முடித்துக்கொள்வதற்கு தயாரென்றும் பொதுமக்கள் தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மருதானையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இராவணன் முதல் விஜயகுமாரவிற்கு இடம்கொடுத்து குவேனியை திருமணம் முடித்துகொடுத்தவர்கள் நாம், நவனீதம்பிள்ளை விரும்பினால் அவரை நான் திருமணம் முடித்துகொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன் என்றார்.

என்னிடம் பல கேள்விகள் உள்ளன - நவீபிள்ளை

இலங்கையில் மனித உரிமை நிலைமையை பற்றிய முழு அறிக்கையை கொடுக்க தனக்கு காலம் எடுக்குமெனவும், இலங்கையில் மனித உரிமை நிலைமை தொடர்பில் என்னிடம் பல கேள்விகள் உள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள யு.என்.என்.சீ.ஆர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அமுலாகும் செயற்றிட்டங்கள் மற்றும் அமுலாக்கப்பட்ட கொள்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அபிப்பிராயம் பெறப்பட்டதா என தான் அறிய விரும்புவதாக அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் கேட்டுள்ளார். இலங்கை விஜயத்தின் போது தனக்கு அளிக்கப்பட்ட பணி இலங்கையின் மனித உரிமை நிலைப்பற்றிய தகவலை சேகரிப்பததாகும் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் இடம்பெறும் மீள்கட்டுமான செயன்முறையிலிருந்து மக்கள் நன்மையடைவர் என்பதனை தன்னால் தெளிவாக காணமுடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 27, 2013

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத்தருவதாக நவீபிள்ளை உறுதி

'தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வைப் பெற்றுத்தர முடியும்' என்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை உறுதியளித்ததாக வடமாகாண பிரஜைகள் குழு தெரிவித்தது. இன்று  செவ்வாய்க்கிழமை யாழில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வடமாகாண பிரஜைகள் குழுவைச் சந்தித்து கலந்துரையாடும் போதே, அவர் மேற்கண்ட உறுதியினை வழங்கியதாக பிரஜைகள் குழு தெரிவித்தது. குறிப்பாக யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் இடம்பெற்று வரும் காணி சுவீகரிப்பு, திட்டமிட்ட குடியேற்றங்கள், காணாமல் போனோர் விவகாரம், தமிழ் கைதிகளின் விடுதலை மற்றும் உயர் பாதுகாப்பு வலயம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் நவநீதம்பிள்ளைக்கு விளக்கமளிக்கப்பட்டதாக பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியது. இப்பிரச்சினைகளை செவிமடுத்த அவர், 'இவை தொடர்பில் நான் நன்கு அறிந்து வைத்திருக்கிறேன். இவை குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன்  கலந்துரையாடி விரைவில் தீர்வைப் பெற்றுத்தருவேன்' என்று உறுதியளித்தால் என்று பிரஜைகள் குழு சுட்டிக்காட்டியது.

காணாமல் போனோர் சங்க ஆர்ப்பாட்டத்தை கண்டுகொள்ளாது சென்றார் நவீபிள்ளை

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அங்கு பல்வேறு சந்திப்புகளை இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணம் பொது நூலகத்தில்  இந்த சந்திப்பு இன்றுக்காலை 9.30 மணிமுதல் 10.30 மணிவரையிலும் நடைபெற்றது. இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர்கள் உட்பட அரச பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில்,  காணாமல் போனோரின் சங்கத்தினர் தங்களுடைய உறவுகளை கண்டுப்பிடித்து தருமாறு யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். வவுனியா,மன்னார்,கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த காணாமல் போனோர் சங்கத்தினரும் பங்கேற்றனர். இதில் தமிழ்,சிங்கள் மற்றும் முஸ்லிம்களும் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். பொது நூலகத்தில்   இடம்பெற்ற சந்திப்பிற்காக முன்வழியாக வருகைதந்த ஆணையாளர் நவனீதம்பிள்ளை சந்திப்புகளை முடித்துக்கொண்டு பொது நூலகத்தின் பின்வழியாக சென்றுவிட்டார் என்று அறியமுடிகின்றது.(தமிழ்மிரர்)

இலங்கை – பெலாரஸுக்கு இடையில் 7 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் பெலாரஸுக்குமிடையில் இருதரப்பு உடன்படிக்கைகள் ஏழு கைச்சாத்திடப்பட்டுள்ளன. பெலாரஸ் நாட்டுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அந்நாட்டு ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகன்ஷன்கோ ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை, இராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விமான பயணச் சீட்டுடையவர்களை விசாக்களிலிருந்து விடுவித்தல். குற்றவியல் தொடர்பான விடயங்களின்போது பரஸ்பர சட்ட ஒத்துழைப்பு தொடர்பான சாசனம், சட்டம் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இரு நாடுகளுக்குமிடையிலான இரட்டை வரிவிதிப்பை தடுக்கும் உடன்படிக்கை, சுற்றுலாத்துறையின் ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கை மற்றும் இராணுவ துறையில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான உடன்படிக்கைகளே கைச்சாத்திடப்பட்டன. (மேலும்.....)

ஒரு நிமிடத்தில் அனைத்தையும் தீர்த்துவைத்த முன்னாள் புலி உறுப்பினர்...?

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரன் சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள யு.என்.சி.எச்.ஆர் காரியாலயத்தில் வைத்தே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.அனந்தியுடன் நவீப்பிள்ளை ஒரு நிமிடம் மட்டுமே கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண பிரஜைகள் குழுவுடன் சென்றே அனந்தி நவநீதம்பிள்ளையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த காரியாலயத்தில் வைத்து பல்வேறு சிவில் சமூக பிரதிகளையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அதன் காணாமல் போன தங்களுடைய உறவுகளை தேடிதருமாறு தாயொருவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார். அவரை கட்டியணைத்த நவீபிள்ளை உங்களுடைய நிலைமைகளை நானறிவேன் என்று தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இங்கையில் 'ஸ்லீப்பர் செல்கள்', கியூ பிரிவு பொலிஸார் தகவல்

தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக இலங்கையில் 'ஸ்லீப்பர் செல்கள்' (மக்களோடு மக்களாக இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் பிரிவினர்) பதுங்கியிருப்பது உண்மையே என்று தமிழக மாநில கியூ பிரிவு பொலிஸார் உறுதி செய்துள்ளனர். தீவிரவாதிகள் அச்சுறுத்தல் குறித்து தமிழகத்துக்கு இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் இலங்கையில் இருந்து கிடைக்கப்பெற்ற மர்ம தொலைபேசி அழைப்பொன்றில், தமிழகத்துக்குள் 32 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து கடலோர பகுதிகளிலும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தைத் தாக்கக் கூடிய பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்களுடன் கூடிய ஸ்லீப்பர் செல்கள் இலங்கையில் பதுங்கியிருப்பது உண்மைதான் என்று தமிழக கியூ பிரிவு பொலிஸார் உறுதி செய்துள்ளனர். இருப்பினும் அவர்களால் உடனே தமிழகத்துக்கு ஆபத்து இல்லை என்றாலும் எதிர்காலத்தில் ஆபத்து இருக்கிறது என்றும் கியூ பிரிவு பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.

வடக்கு அதிகாரிகளினால் கிழக்கு மாகாண சபையில் சலசலப்பு

வட மாகாணத்தை சேர்ந்த அதிகாரிகளினால் கிழக்கு மாகாண சபையில் இன்று செவ்வாய்க்கிழமை பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடைவடிக்கைகள் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. கிழக்கு மாகாண சபை அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் காலை 9.40 க்கு  ஆரம்பமானது. கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வினை பார்வையிடுவதற்காக வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அனுமதிகப்பட்டனர். இவர்கள் சபை நடவடிக்கைகளை அவைக்குள் அமர்ந்தே பார்வையிட்டனர். இதனையடுத்து ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய ஆளும் தரப்பு உறுப்பினர் ஜயந்த விஜயசேகர இந்த செயற்பாடு சட்டத்துக்கு முரணானது என அவையின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இதனையடுத்து சபை அமர்வை 10 நிடங்களுக்கு தவிசாளர் ஒத்திவைத்தார். ஆளும் தரப்பு உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய கட்சி தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டது. சபையினுள் அமர்ந்திருந்த வட மாகாண சபையின் உயர் அதிகாரிகள் வெளியேற்றப்பட்டு பார்வையாளர் கலரியிலிருந்து சபை நடவடிக்கையை அவதானிப்பதற்கு இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. இதனையடுத்து வட மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள்  கிழக்கு மாகாண சபையிலிருந்து வெளியேற்றப்பட்டதுடன் அவர்கள் கலரியிலிருந்தே அவை நடவடிக்கையை பார்வையிட்டனர்.

3 தசாப்தங்களுக்கு பின்னரான வியட்நாம் யுத்த வடுக்கள்

தென் வியட்நாம் யுத்தம் நிறைவடைந்து 3 தசாப்தங்கள் ஆனாலும் அதன் தாக்கம் தற்போதைய மூன்றாவது தலைமுறையினரிடமும் காணக்கூடியதாக உள்ளதென அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ள வியட்நாம் பற்றிய ஆவண குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வியட்நாம் யுத்தத்தின்போது அமெரிக்க படையினரால் பாவிக்கப்பட்ட (ஏஜன்ட் ஒரேஞ்ச்) நச்சு வாயுவின் தாக்கம் இன்று பிறக்கும் குழந்தைகளில் பிரதிபலிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரை மையமாக கொண்டு இயங்கும் புகைப்படக்கலைஞரான பிரெய்ன் டிரிஸ்கோல் என்பவர் வியட்நாமின் தற்போதைய நிலைமை தொடர்பில் அறிந்துகொள்வதற்காகவும் அதனை ஆவணப்படுத்தவும் வியட்நாமிற்கு பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். (மேலும்.....)

மும்மொழிக் கொள்கை, சமத்துவம்

அமைச்சின் செயற்பாடுகளுக்கு நவநீதம்பிள்ளை பாராட்டு

வட மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கம் சில அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் எனவும் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு சமுகமளிக்கும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை நேற்று சந்தித்த பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அதுபற்றி விளக்கமளித்த அமைச்சர் சமத்துவத்தைப் பேணல், மும்மொழிக்கொள்கை, தேசிய ஒருமைப்பாடு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பாராட்டு தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். (மேலும்.....)

செவ்வாய் கிரகத்தில் குடியேற 1,800 இந்தியர்கள் விருப்பம்

நெதர்லாந்து நாட்டில் ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு இயங்கி வருகின்றது. இந்த அமைப்பு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும். செவ்வாய்க் கிரகத்திற்கு செல்ல ஆரம் பிப்பது முதல் அங்கு சென்று வாழும் வரை ஒளிபரப்பு செய்வதன் மூலம் இந்தத் திட்டத்திற்கு உதவி புரிய அந்த அமைப்பு எண்ணுகின்றது. 2022 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்டுள்ள செவ்வாய்க் கிரகத்திற்கான மனிதர்களின் பயணத்திற்கு வெறும் 7 டொலர் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். மனநிலை தெளிவாக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் முன் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு இதுவரை பதிவு செய்துள்ளவர்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒரு இலட் சத்தைத் தாண்டியுள்ளது. அதில் 30,000 பேர் அமெரிக்காவிலிருந்து பதிவு செய்துள்ளனர். இந்தப் பயணத்திற்குப் பதிவு செய்துள்ள இந்தியர்களின் எண் ணிக்கை தற்போது 1,800 ஆக உள்ளது என்றும், இதில் பெரும்பான்மையானோர் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்றும் இந்நிறுவனத்தின் தகவல் அதிகாரி ஆஷிமா டோக்ரா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 26, 2013

யாழ்ப்பாணம் சென்றடைந்தார் நவீபிள்ளை பிள்ளை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவீபிள்ளை இன்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார். விசேட ஹெலிக்கப்டர் மூலம் யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர், யாழ். வைத்தியாசலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவரை யாழ் மாநகர மேயர் உட்பட பல பிரமுகர்கள் அழைத்துச் சென்றனர்.

வாசு, ஹக்கீம் உடன் நவநீதம்பிள்ளை, பல விடயங்கள் குறித்து ஆராய்வு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தேசிய மொழிகள் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் வசுதேவநாணயக்கரவை இன்று காலை இராஜகிரியவிலுள்ள அவ்வமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று சந்தித்து கலந்துரையாடினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் சுயாதீனமாக செயற்படுவது எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. பல பொதுவான விடயங்களை நாம் பேசினோம். அவர் என்னிடம் பல கேள்விகளை கேட்டார். குறிப்பாக குற்றவியல் சட்டங்களில் கொண்டுவரப்படும் புதிய திருத்தங்கள் தொடர்பாகவும் நீதிமன்ற அணுகு முறை தொடர்பாகவும் என்னிடம் கேட்டறிந்து கொண்டார். யுத்தத்திற்கு பின்னரான தற்போதைய நிலைமைகள், புரிந்துணர்வு நடவடிக்கைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் ஆராய்ந்தார். இது தொடர்பில் எமது அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பரிந்துரைகள் குறித்து தெளிவுபடுத்தினேன். தடுப்புக் காவலில் உள்ளவர்களின் பல வழக்குகள் ஏன் நிலுவையில் இருப்பதாகவும் அவர்களை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்கப்படாமை தொடர்பிலும் கேட்டறிந்தார். இதேவேளை, பள்ளிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது மற்றும் சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் தொடர்பிலும் அவரது கவனம் உள்ளதுடன் இது தொடர்பில் எனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு கேட்டார்.

நவீபிள்ளைக்கு எதிராக 'ராவணா சக்தி' ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகையை கண்டித்து 'ராவணா சக்தி' எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகி;ன்றது. இதனால் பௌத்தாலோக மாவத்தை மற்றும் தும்முள்ள சந்தியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைவு

இலங்கை இராணுவத்தில் மேலும் 45 தமிழ் பெண்கள் இணைந்துகொண்டனர். வவுனியாவில் அமைந்துள்ள வன்னி இராணுவ கட்டளைத் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை இராணுவத்தில் புதிதாக உருவாக்கப்படவுள்ள படைப்பிரிவில் இணைப்பதற்காகவே இவர்கள் தெரிவாகியுள்ளனர். அண்மையில் நாடு பூராகவும் இடம்பெற்ற நேர்முகத் தேர்வுகளில் தோற்றிய தமிழ் பெண்களில் 45 பேர் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கு மற்றும் மலையகத்தை சேர்ந்த தமிழ் யுவதிகளுடன் 10 சிங்கள யுவதிகளும் இன்றைய தினத்தில் இராணுவத்தில் இணைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தில் இணைத்துக்கொள்வதற்காக வன்னி தலைமையகத்தில் சிறப்பு நிகழ்வொன்று இன்று இடம்பெற்றது.

பெயர்: சீமான் துரை

வயது: மேக்கப் முருகனின் கைகளில் உள்ளது

தொழில்: போலி அரசியல்

உண்மையான தொழில்: அரைகுறை திரைப்பட இயக்குனர்

சைட் பிஸினஸ்: மேடைப் பேச்சுக்காக புலத்திலிருந்து கிடைப்பது

வருமானம்: குறைவில்லாது பல பக்கங்களால் வருகிறது

பொழுதுபோக்கு: ஆர்ப்பாட்டங்களை நடத்துவது

அதிகம் ரசிப்பது: சிறை செல்கையில் படம் எடுப்பதை

அசைக்க முடியாத பலம்: கூட இருக்கும் நாலு சினிமாக்காரர்

அசைக்கக் கூடிய பலம்: நாம் தமிழர் அமைப்பு

நண்பர்கள்: இலங்கைத் தமிழருக்காக போலிக் குரல் கொடுப்போர்

எதிரிகள்: கட்சி மாறி போலிக் குரலைத் தாழ்த்துவோர்

எதிர்பார்ப்பு: எம்.எல்.ஏ. ஆகி பின்னர் தமிழக முதல்வராவது

மறந்தது: விதவையான முன்னாள் புலி உறுப்பினரை

மறக்காதது: சினிமா சூட்டிங்கை

கண்டுபிடித்தது: தமிழக மக்களை எப்படி ஏமாற்றுவது என்பதை

தவறவிட்டது: மெட்ராஸ் கபேயில் பிரபாகரனாக நடிப்பதை

நிறைவேறாத ஆசை: பிரபாகரனை நேரில் பார்க்க முடியாமை

நிறைவேறிய ஆசை: மெரினா பீச்சில் தனியாக நீராடியமை

மிகவும் பிடித்தது: சிறையில் கிடைக்கும் கழியும், பச்சைக் கடலையும்

சாதனை: கத்திக் கத்தியே புலிகளை அழித்தமை

அதிக மரியாதை வைத்திருப்பது: பிரசாரம் தேடித்தரும் ஊடகவியலாளர்கள் மீது

மனம் வெதும்பிய சந்தர்ப்பம்: மணிவண்ணனின் மறைவிற்காக

எதிர்கால இலட்சியம்: தொண்டை கிழிய கத்திக் கொண்டிருப்பது

கோபம் கொண்டது: தன்னை விடவும் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடப்பது

எதிர்பார்த்துக்கொண்டிருப்பது: கடலூடாக நடந்தே இலங்கை வருவது.

(நன்றி: தினகரன்)

எகிப்திய அரசியல் நிலவரம் கொந்தளிப்பில்

(பஸ்லி எம். அவ்ஃபு)(எம் . ஏ . மொஸ்கோ)

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் எகிப்திய ஜனாதிபதி முர்ஸி தேர்தலின் போது கிடைத்த வாக்குகள் 51 சதவீதத்தை யாவது அடையவில்லை. எவ்வாறான போதிலும் கூட எப்படியோ இவர் ஜனாதிபதியாக ஒருவருட காலம் செயல்பட அதிகாரிகள் அதிகாரம் வழங்கினர். இதன் மறுபக்கம் சரியாக எகிப்து நாட்டு வாக் காளர்களில் பாதிப்பேர் அல்லது அரைவாசி சனத்தொகையே முர்ஸிக்கு வாக்களிக்கவில்லை என்பதனை காட்டுகின்றது. அல்லது தமது ஆதரவை வழங்காமல் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புக்கு எதிர்ப்பை காட்டினார்கள் என்ற முடிவுக்கு வரலாம். முப்பது வருடகால முபாறக் அரசினை கவிழ்ப்பது முர்ஸிக்கும் அவரது அமைப்புக்கும் மக்களுடன் சேர்ந்த இராணுவ ஆதரவை வழங்கியது. (மேலும்.....)

இலண்டன் மாநகரில் நடைபெற்ற 'இலக்கிய மாலை'

வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின..!

இலண்டன் மாநகரில் நடைபெற்ற நான்காவது 'இலக்கிய மாலை' நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் மூத்த எழுத்தாளர் வி. ரி. இளங்கோவனின் ஆறு நூல்கள் அறிமுகமாகின.  கடந்த சனிக்கிழமை (10 - 08 - 2013) மாலை இலண்டன் 'மனோர் பார்க்' என்ற இடத்தில் அமைந்துள்ள சைவ முன்னேற்றச் சங்க மண்டபத்தில், சமூகத் தொண்டரும் இலக்கிய அபிமானியுமான திரு செல்லையா வாமானந்தன் தலைமையில் 'இலக்கிய மாலை' நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் வி. ரி. இளங்கோவனின் நூல்களான 'இப்படியுமா..?' - சிறுகதைத் தொகுதி, 'அழியாத தடங்கள்' - கட்டுரைத் தொகுதி, 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா..?', 'மண் மறவா மனிதர்கள்', 'பிரான்ஸ் மண்ணிலிருந்து தமிழ்க் கதைகள்' - (இளங்கோவன் கதைகள் இந்தி மொழிபெயர்ப்பு) மற்றும் இளங்கோவன் பதிப்பித்த 'இலக்கிய வித்தகர்' த. துரைசிங்கத்தின் 'தமிழ் இலக்கியக் களஞ்சியம்' ஆகிய ஆறு நூல்களே அறிமுகமாகின. (மேலும்.....)

ஆகஸ்ட் 25, 2013

விமர்சிக்க வரவில்லை - நவீபிள்ளை

இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் செய்துள்ள நான், யாரையும் எதனையும் விமர்சிக்க வருகைதரவில்லை ஆனால், மனித உரிமைகளில் கவனம் செலுத்துவேன் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சபையின் கொழும்பு அலுவலக பிரதிநிதிகளை கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் சந்தித்ததன் பின்னர் அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கையில் ஒருவார காலத்திற்கு மட்டுமே நான் தங்கியிருப்பேன். அக்காலப்பகுதியில் வடக்கு கிழக்கிற்கு விஜயம் செய்யவிருப்பதுடன் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் சமூக பிரதிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.

சம்பந்தன் மறுப்பாரா?

முழுப் பூசணியை சோற்றில் மறைக்க அனந்தி முயற்சி; ஏமாறத் தமிழர்கள் தயாரில்லை, எழிலனின் சிபார்சிலேயே புலிகளின் கொலை பட்டியலில் தான் முதலிடத்தில் இருந்ததை

திருகோணமலை மாவட்ட புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன் செய்த சிபார்சுகளின்படியே விடுதலைப் புலிகளின் கொலைப் பட்டியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பெயர் முதலிடத்தைப் பிடித்திருந்தது. இதனை கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் மறுக்க மாட்டார் என்றே கருதுகிறேன். தேர்தலுக்காக முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க அனந்தி எழிலன் முற்பட்டாலும் மூன்று தசாப்தகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் இன்னுமொரு அழிவை சந்திக்கத் தயாராக இல்லை.(மேலும்.....)

போராட்ட காலத்தில் பாராமுகம் அமைதி சூழலில் பதவி மோகம்

மூன்றாவது கட்டப் போராட்டம் நடக்கின்றது என்று வீரச் சூளுரைத்த முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் இப்போது பெட்டிப்பாம்பாக அடங்கியிருக்கிறார். ஜனநாயக வழிகளில் வந்த போராட்டம் முதலாவது கட்டமாம். ஆயுதப் போராட்டம் இரண்டாவது கட்டமாம். இப்போது நடப்பது மூன்றாவது கட்டமாம். தமிழ் மக்களின் போராட்டம் பற்றித் திரும்பியும் பார்க்காமல் தனது பதவியையும் பதவிசார் நலன்களையும் பாதுகாப்பதிலேயே அக்கறையாக இருந்தவர் இப்போது வடக்கில் கட்டங்கள் பிரித்துப் போதனை செய்கிறார். அதனை மக்கள் இரசித்து தன்னை அரியாசனம் ஏற்றுவர் எனப் பகல் கனவும் கண்டு வருகிறார். பதவிப் போட்டி காரணமாக ஒற்றுமை என்றால் என்ன என்பதை மறந்து நிற்கும் தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இவர் தோற்கடிக்கப்பட்டு விட்டார். (மேலும்.....)

மெட்ராஸ் கபே' படத்தை உலகில் எங்குமே திரையிடவிடக் கூடாது - தேசியத் தலைவர் சீமான்.

மெட்ராஸ் கபே திரைப்படத்தில் புலிகளைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்துள்ளார்களாம். புலிகள் வீடு புகுந்து பெண்களைக் கொலை செய்வது. தலைவர் ராஜிவ் காந்தியைப் புலிகள் கொலை செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இவை புலிகள் பற்றிய தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்திவிடும். எனவே இப்படத்தை எங்குமே திரையிட விடக் கூடாது என புதிய தேசியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். (இந்தப் படத்தைத் தடை செய்ய முயல்வதும் ஒரு வகையில் கருத்துச் சுதந்திர மறுப்புத்தான்.) ராஜிவ் காந்தியை கொன்றதைப் புலித் தலைவன் பிரபாகரனே ஒப்புக்கொண்டு, அது ஒரு துன்பியல் நிகழ்வு எனக் கூறியுள்ளான். மேலும் புலிகள் பெண்கள் சிறுவர்களைக் கொலை செய்ததற்கு நூற்றுக் கணக்கான சம்பவங்கள் இருக்கின்றன. உலக நாடுகளே புலிகளைப் பயங்கரவாதிகளாகப் புறந்தள்ளி வைத்துள்ளன. இதற்குப் போய் சீ மானும் இந்த செல்லாக்காசு அமைப்புக்களும் துள்ளிக்குதிப்பானேன். இந்தப் படத்தில் மலையாளிகளை நல்லவர்களாகக் காட்டி இருக்கிறார்கள். அதையும் செந்தமிழன் சைமன் எனப்படும் சீமான் ஆட்சேபித்திருக்கிறார். இந்த இடத்தில் செபஸ்ரியன் சீமான் முக்கியமான ஒன்றை மறந்து விட்டார். சீமான் வழிபடும் பயங்கரவாதி பிரபாகரனின் தாயார் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒரு தமிழ்ப்பெண். ஆனால் பிரபாகரனின் தந்தை திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் கேரளாவைச் சேர்ந்த ஒரு மலையாளி. அப்படியென்றால் புலித்தலைவன் பிரபாகரனும் ஒரு மலையாளி தானே. ஆக செந்தமிழன் செபஸ்ரியன் சைமன் எனப்படும் சீமானின் தலைவன் ஒரு மலையாளி. எனவே சீமான் அண்ணே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இந்தப் படத்தில் பிரபாகரன் என்ற மலையாளியை கெட்டவனாக, பயங்கரவாதியாகத் தான் காட்டியுள்ளார்கள். எனவே தயவுசெய்து தடையை விலக்கிக் கொள்ளுங்கள்.

முட்டுக்கட்டைகள் அனைத்தும் நீக்கம்

வெகு விரைவில் பெயர் மாறுகிறது வெள்ளவத்தை 57 ஆவது ஒழுங்கை

கொழும்பு தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள வெள்ளவத்தை 57 ஆவது ஒழுங்கையை ‘தமிழ்ச் சங்க வீதி’ எனப் பெயர் மாற்றம் செய்வதில் நிலவி வந்த முட்டுக் கட்டைகள் அனைத் தும் நீங்கியிருப் பதாக தேசிய மொ ழிகள் மற்றும் ஒரு மைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வார மஞ்சரிக்குத் தெரி வித்தார். மாகாண சபை மட்டத்தில் இது விடயத்தில் சிறு தாமதம் இருந்ததாகவும் தற்போது இந்தப் பெயர் மாற்றத்திற்கு முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க இணக்கம் தெரிவித்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி கவனத்திற்கு இவ்விடயம் கொண்டு வரப்பட்டு அவரது செயலாளர் திரு. லலித் வீரதுங்க மூலமாக இந்தப் பிரச்சினையைத் தீர்த்திருப்பதாகக் கூறிய அமைச்சர் வாசுதேவ, கொழும்பு மாநகர ஆணையாளர் திருமதி சமரக்கோனுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.வெகு விரைவில் கொழும்பு தமிழ்ச் சங்க வீதி திறந்து வைக்கப்படுமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த வீதிப் பெயர் மாற்றம் இழுபறி நிலைக்குத் தீர்வு காண்பதற்காக முதலமைச்சருடன் கலந்துரையாடலொன்றை ஏற்கனவே தான் முதலமைச்சர் காரியாலயத்தில் ஏற்பாடு செய்தி ருந்ததாகவும் ஆனால், தான் அங்கு சென்றிருந்த போதிலும் சம்பந்தப்பட்ட எந்தவொரு தரப்பினரும் சமுகமளித்திருக்கவில்லை எனவும் குறிப்பிட்ட அமைச்சர் இதனால், நீண்ட நேரம் காத்திருந்துவிட்டுத் தான் திரும்பி வந்ததாகவும் அமைச்சர் வாசுதேவ குறிப்பிட்டார்.

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர் நடந்தது என்ன?

ஜனா­தி­பதி புனித நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்­தி­களை ஊட­கங்கள் மூலம் முஸ்­லிம்­க­ளுக்குத் தெரி­வித்­தி­ருந்த மறுதினம் கொழும்பு நகரில் பள்­ளி­வா­ச­லொன்று தாக்­கப்­பட்­டு­விட்­டது என்ற செய்­தியை அறிந்­ததும் ஜனா­தி­பதி நிலை தடு­மாறிப் போய்­விட்டார். கடந்த 10 ஆம் திகதி முஸ்­லிம்கள் மஃரிப் தொழு­கையை ஆரம்­பிக்க முற்­பட்­ட­போது பெளத்த தேரர் ஒரு­வ­ரது தலை­மையில் வந்த குழு­வினர் கிராண்ட்பாஸ் மஸ்­ஜிதுல் தீனுல் இஸ்லாம் பள்­ளி­வா­சலைத் தாக்­கி­னார்கள். கண்­ணா­டிகள் உடைந்து சித­றின. இந்­நி­லை­யிலும் அங்கு இரண்டாம் மாடியில் தொழுகை நடை­பெற்­றது. தாக்­குதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து ஜனா­தி­பதி, பாது­காப்புச் செய­லாளர்,  முஸ்லிம் அமைச்­சர்­க­ளுக்கு செய்­திகள் பர­வின. சுமார் இரவு 7 மணி­ய­ளவில் தாக்­குதல் சம்­ப­வத்தை ஜனா­தி­பதி அறிந்து கொண்டார். பள்­ளி­வாசல் தாக்­குதல் சம்­பவம் உட­ன­டி­யாக கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வ­ரப்­ப­டா­விட்டால் நாட்டில் ஏற்­ப­டப்­போகும் அசா­தா­ரண நிலை­மையை ஜனா­தி­பதி நன்கு உணர்ந்­தி­ருந்தார். முஸ்லிம் அமைச்­சர்­களும், ஜனா­தி­ப­தியின் முஸ்லிம் நண்­பர்­களும் நிலை­மையை ஜனா­தி­ப­திக்கு விளக்­கி­னார்கள்.(மேலும்.....)

‘சிங்கள கன்னுக்குட்டி மீது தாக்குதல்

சீமான் அதிரடி படை பிரிவுகளுக்கு போர் நிறுத்த உத்தரவு!

அண்ணி பூஜா ஆரம்ப காலத்திலிருந்தே ஈழ உணர்வு மிகுந்தவராகக் காணப்பட்டதாக அண்ணன் சீமான்.

சிங்கள திரையுலகின் பிரபல நடிகை பூஜா நடிக்கும் விடியும் முன் படத்தின் தயாரிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. செந்தமிழன் காலத்திலிருந்து நடித்திருந்தாலும், பூஜாவுக்கு வர்த்தக ரீதியாக ஹிட் கொடுத்த படங்கள், சிங்கள படங்கள்தான்.அஞ்சலிகா, ஆசைமான் பியாபனா, சுவன்ட தெனுன ஜீவித, குச பபா என்று அடுத்தடுத்து சிங்கள் படங்களில் தொடர்ந்து ஹிட் கொடுத்த பூஜா மீண்டும் தமிழுக்கு வரும் படம்தான், ‘விடியும் முன்’. பூஜா மீண்டும் தமிழுக்கு வருவது யாருக்கு மகிழ்ச்யை ஏற்படுத்தியுள்ளதோ, இல்லையோ, செந்தமிழன் சீமானுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள கன்னுக்குட்டி வந்துட்டியா .. வா.. வா.. என்று தன்மானத் தமிழன் சீமானால் வாய் நிறைய வரவேற்கப்பட்டார் பூஜா. இதையடுத்து, தமிழக தமிழுணர்வில் பூஜா மீள்வருகைக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்.....)    

TRO, money to TNA

(By Thomas Anthony in Toronto)

Several ethical and legal questions raised by Canadians with Sri Lankan origin, on the TNA leaders’ recent visit to Toronto. Sri Lankans in Toronto claim that TNA leader R. Sambandan in their recently concluded trip to Toronto had several fundraising events organized by Pro LTTE fund raisers. Specially the one held at Jaasmine Banquet Hall, no. 90 Nolan Court, Markham, Ontario, raise more concern; as they doubt whether the fundraising was carried out by the LTTE funding arm TRO. (more....)

மும்பையில் இளம்பெண் மீது வல்லுறவு!

மும்பையில் இளம்பெண் புகைப்படவியலாளரொருவர் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகளில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் எஞ்சிய 4 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் மும்பை பொலிஸார் அறிவித்துள்ளனர். மும்பையில் பிரபல பத்திரிக்கையொன்றின் பெண் புகைப்படவியலாளர் நேற்று மாலை 5 மணியளவில் தெற்கு மும்பை மகாலெட்சுமி மில் பகுதிக்கு நண்பர் ஒருவருடன் சென்றுள்ளார். இதன்போது அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்கள் கும்பல் ஒன்று அப்பெண்ணை அவரது நண்பரைத் தாக்கிவிட்டு வல்லுறவுக்குட்படுத்தியுள்ளது. அப்போது அந்த பெண் எழுப்பிய கூக்குரலைக் கேட்டு அக்கம்பக்கத்தவர் ஓடிவர மர்ம கும்பல் தப்பி ஓடியது. தப்பி ஓடிய  கும்பலை கைது செய்ய பொலிஸார் 12 தனிப்படைகளை அமைத்து தீவிரமாகத் தேடினர். தப்பி ஓடியவர்களில் இருவரது பெயரையும் கூட பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருந்தார். மேலும் சந்தேக நபர்கள் 5 பேரின் வரைபடமும் வெளியிடப்பட்டிருந்தது. விடிய விடிய மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் தற்போது 5 குற்றவாளிகளும் அடையாளம் காணப்பட்டனர். இதில் ஈடுபட்டவர்களில் ஒருவன் கைது செய்யபப்பட்டுள்ளான். எஞ்சியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்படும். சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு குறைந்தது 20 ஆண்டுகால தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை மேற்கொள்வோம் என பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு முன்னால் கைகட்டி வாய்மூடி நின்றவர்கள்தான் TNA தலைவர்கள்

வடக்கில் இன்று சுதந்திரமாகத் தேர்தலில் போட்டியிடும் அமைதியான சூழ்நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தோற்றுவித்தமை யினாலேயே தமிழ் கூட்டமைப்பினர் அங்கு பயமின்றி பிரசாரம் செய்கின்றனர். இதற்காக அவர்கள் முதலில் ஜனாதிப திக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். ஆனால், அவர்கள் நன்றி மறந்த நிலையில் செயற்படுகிறார்கள் என ஜனாதிபதியின் இந்து மத விவகார இணைப்பாளர் பிரம்மஸ்ரீ பாபு சர்மா இராமசந்திரக் குருக்கள் தெரிவித்தார். முன்னொரு காலத்தில் புலிகள் இருந்த போது கைகட்டி வாய்மூடி நின்ற இவர்களால் அன்று தேர்தலில் போட்டியிட முடிந்ததா? புலிகளுக்காக பல தேர்தல்களையே புறக்கணித்தவர்கள் இவர்கள். பதவி மீது ஆசை இருந்தும் பயனத்தினால் கட்டுண்டு கிடந்த இவர்கள் இன்று சுதந்திரமாகச் செயற்பட வழிவகுத்தவர் ஜனாதிபதியே என்பதை மறந்து விட்டனர். அன்று அத்தகைய கெடுபிடிகளுக்கு மத்தியிலும் துணிச்சலுடன் சகல தேர்தல்களிலும் போட்டியிட்டு அதன் மூலமாக அரசாங்க நிதியைப் பெற்று தமிழ் பேசும் மக்களது குறைகளைத் தீர்த்து வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என தெரிவித்த பாபு சர்மா இத்தேர்தலிலும் வட பகுதி மக்கள் ஆளுங் கூட்டணியின் பங்களாளிகளாக இருக்கும் ஈ.பி.டி.பி. வேட்பாளர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் தமது ஆதரவுகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கொழும்பு, காங்கேசன்துறை ரயில் சேவை 2014 ஏப்ரல் மாதம் ஆரம்பமாகும்

1987ம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்து, இலங்கையில் வெடித்த எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளின் வன்முறைகளை அடுத்து வட பகுதிக்கான ரயில்சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டது. ரயில் சேவை இடைநிறுத்தப்பட்ட வுடன் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் தண்டவாளங்களையும், ரயில் கட்டைகளையும் எடுத்துச் சென்று தங்கள் முகாம்களுக்கு அருகிலும், கேந்திர நிலையங்களுக்கு அருகிலும் ரயில்கட்டைகளை பயன்படுத்தி, பாதுகாப்பு பங்கர்களை அமைத்தார்கள். இதையடுத்து, ரயில்வே இரும்பு பாதைகளை கழற்றிச் சென்று எல்.ரி.ரி.ஈ.யினர் ஆயுதங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்தினார்கள்.  (மேலும்.....)

ஆகஸ்ட் 24, 2013    

நவியின் வருகை குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக்கூடாது''

'இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். "யுத்தம் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்கால் பகுதியில் எமது மக்கள் துன்பப்படும்போது அவர்களை நவநீதம்பிள்ளையோ சர்வதேச நாடுகளோ பாதுகாக்கவில்லை. எமது இராணுவத்தினரே இங்கிருந்து மக்களை மீட்டு அவர்களை பாதுகாத்தனர். இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சர்வதேச நாடுகளோ ஐ.நாவோ உரிய தீர்வினை பெற்றுத்தரப் போவதில்லை. எமது பிரச்சினைக்கு நாமே தீர்வு காணமுடியும். தென்னிலங்கை போன்று வடபகுதியிலும் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்க முடியாது. ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக தென்னிலங்கையில் எவ்வாறு பாதுகாப்பு வலயங்கள் இருக்கிறதோ அதேபோன்று வடக்கிலும் பாதுகாப்பு வலயங்கள் இருப்பதை தவிர்க்கமுடியாது.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணையர்

நவநீதம்பிள்ளை நாளை இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் நவநீதம்பிள்ளை நாளை (25) ஞாயிற்றுக்கிழமை இலங்கை வருகின்றார். அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் நவநீதம்பிள்ளை எதிர் வரும் ஐந்து நாட்களுக்கு நாட்டில் தங்கியிருப்பாரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. நவநீதம்பிள்ளை இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில் அவர் செல்லவிருக்கும் இடங்கள் மற்றும் சந்திக்கவுள்ள நபர்கள் குறித்த நிகழ்ச்சி நிரலை வெளிவிவகார அமைச்சு ஜெனீவாவிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலகம் ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்துள்ளது. இதற்கிணங்க நவநீதம் பிள்ளை வடக்கிற்கும் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கும் விஜயம் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இவரது வருகையை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெ டுத்துள்ளது.

கொழும்பிலிருந்து விசேட ஹெலிகொப்டர் மூலம் கிளிநொச்சி செல்லவுள்ள நவநீதம் பிள்ளை, அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிடக் கூடிய வகையில் அங்கிருந்து தரை மார்க்கமாகவே ஏனைய பிரதேசங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவார். மேலும் வடக்கில் சிவில் சமூகத்தினரை சந்தித்து உரையாடுவதற்கும் அரசாங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையுடன் ஜெனீவாவிலிருந்து 05 பேர் கொண்ட குழுவொன்று இலங்கை வருவதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன. பிள்ளை தலைமையிலான குழு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசாங்கத்தின் முக்கிய பிரதிநிதிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏனைய அரசியல் கட்சித் தலைவர்கள் பலரையும் நேரில் சந்தித்து உரையாடுவார்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் நவநீதம் பிள்ளை நாட்டில் முன்னெ டுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கச் செயற்பாடுகளை நேரில் பார்வையிடுவதன் மூலம் ஜெனீவா விலுள்ள மனித உரிமைகள் ஆணைக் குழுவில் இலங்கைக்கெதிராக எழுந் துள்ள அழுத்தங்களுக்கு தீர்வு கிடை க்குமென அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.

நான் ஏன் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

வறுமை, ஆதரவின்மை, சமூக ரீதியாக ஒடுக்கபட்டவர்களின் நலன்களுக்காகவே நான் போட்டியிடுகின்றேன். அவர்களின் குரலாக இருக்கவே விரும்புகின்றேன். வீடில்லாமல், தொழில் இல்லாமல், மலசலகூட வசதியில்லாமல், பிள்ளைகளுக்கு சரியான கல்வியில்லாமல் ,அடிப்படையான மருத்துவ வசதியில்லாமல், மின்சாரம் இல்லாமல், சரியான, செப்பனான பாதை இல்லாமல், போக்குவரத்து வசதியில்லாமல், குடிநீர் அன்னறாட தேவைகளுக்கு நீர் இல்லாமல் வாழ்பவர்களுக்காகவே நான்செயற்பட விரும்புகிறேன்; (மேலும்.....)

சகடமுனியின் விகடசங்கடம் – 5

தொகுப்பு – முனிதாசபூதன்

குமாஸ்த்தாமுனி:- குருவே! முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனே முதலமைச்சர் வேட்பாளர் என தமிழரசுக்கட்சிக்காரர்கள் அறிவித்த நேரம்; தொடக்கம் அவர் அரச படைகள் தொடர்பாகவும் 13வது அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் கருத்துக்களையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளார்;. ஆதையெல்லாம் ஒரு பட்டியல் போட்டு உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன் குருவே.

சகடமுனி:- நல்லது! குமாஸ்த்தா! கூறு பார்க்கலாம்

குமாஸ்த்தாமுனி:-

1. வடக்கு கிழக்கில் உள்ள அரச படைகள் முகாம்களுக்குள் முடக்கப்பட வேண்டும்

2. வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரின் படை அளவு குறைக்கப்பட வேண்டும்

3. இராணுவத்தினர் மக்களின் அன்றாட விவகாரங்களில் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும்

4. வடக்கு கிழக்கின் அரச சிவில் நிர்வாகங்களில் இராணுவத்தினர் தலையிடுவது நிறுத்தப்பட வேண்டும்.

5. மாகாண சபைகளின் ஆளுநராக இராணுவ அதிகாரிகளை நியமிக்கக் கூடாது

இவற்றோடு 13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ள அதிகாரப் பகிர்வுகள் தொடர்பாக:

6. மாகாண சபையின் நிறைவேற்று அதிகாரங்களெல்லாம் ஆளுநருக்கே வழக்கப்பட்டுள்ளன. அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாகாண சபை அர்த்தமற்றதாக ஆக்கப்பட்டுள்ளது

7. ஆளுநரின் முன்அனுமதியும் பின் அனுமதியும் இல்லாமல் மாகாணசபைகள் சட்டங்கள் எதையும் ஆக்க முடியாத அளவுக்கு மாகாண சபைகளின் சட்டவாக்க அதிகாரங்கள் அவற்றின் ஆளுநருக்கு உட்பட்டவையாகவே ஆக்கப்பட்டுள்ளன.

8. மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான பொலிஸ் அதிகாரங்கள் மற்றும் மாகாண அபிவிருத்திகளுக்கு அவசியமான நிலங்கள் மீதான அதிகாரங்கள் இல்லாவிடின் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு அர்த்தமற்ற ஒன்றாகும்

கழுதைமுனி:- குருவே! நம்ம குமாஸ்த்தா அடுக்கியிருக்கிறவைகளைப் பார்த்தால் நீதவான் விக்கினேஸ்வரன் சொல்லியுள்ளவற்றில் என்ன பிழைகள் உள்ளன குருவே?

சகடமுனி:- அவர் அடுத்தடுத்து 13வது அரசியல் யாப்புத் திருத்தம் தொடர்பாக  வெளியிட்டுள்ள விமர்சனங்களும் அரச படைகள் தொடர்பாக அவர் கேட்பவைகளும் முழுமையாக சரியானவைகள் என்றோ சாத்தியமானவைகள் என்றோ இல்லாவிட்டாலும் அவை அர்த்தமற்றவை என்றோ அல்லது அவசியமற்றவை என்றோ புறக்கணிக்க முடியாது.

இவை பற்றி அரசாங்கம் மிகவும் அக்கறையோடு கவனத்திற் கொள்ள வேண்டியதுவும் ஆவன செய்ய வேண்டியதுவும் அவசியமே. இவை தொடர்பாக தமிழ்த் தலைவர்கள் தமக்கிடையே உள்ள கட்சி; பேதங்களுக்கு அப்பால் ஜனாதிபதியுடனும் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவான மற்றும் ஒத்துழைக்கக் கூடிய அமைச்சர்களுடனும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரமுகர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதும் அவசியமானவையே.

அத்தோடு அனைத்து இன அறிவு ஜீவிகளையும் சமயத் தலைவர்களையும் சந்தித்து தமது கோரிக்கைகளில் உள்ள நியாயங்களை எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும். சிங்கள இனவாதிகள் செய்யும் பிரச்சாரங்கள் சரியானவையல்ல என பெரும்பான்மையான சிங்கள மக்களும் உணரும் வகையில் பரஸ்பர நம்பிக்கைகளை ஏற்படுத்தும் பிரச்சாரங்களை சிங்களத் தலைவர்களோடு இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இவையெல்லாம் அவசியமானவைகளே மேற்கொள்ளப்பட வேண்டியவைகளே. ஆனால் நல்ல சரியான முயற்சிகளை விட்டு விட்டு குறுக்கு வழியில் சுருக்கமான முறையில் தாங்கள் நினைப்பதை முடித்து விடும் அவாவில் சிங்கள மக்களை மிரள வைக்கும் நோக்கில் முழங்குவதிலும் தமிழர்களை மீண்டும் அரசியற் கனவுலகில் சஞ்சரிக்க விடுகின்ற வகையில் உசுப்பேத்தும் வீரவசனங்களை சினிமாப் பாணியில் வெளியி;டுவதிலும் திரு.விக்கினேஸ்வரனும் சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் கிளிநொச்சி சிறீதரன் கூட்டத்தாரோடு இணைந்திருப்பது போல எனக்குத் தெரிகிறது. அதுதான் எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

கழுதைமுனி:- குருவே! உங்களுக்கு இவ்வாறு பெரும் சங்கடத்தை உண்டு பண்ணும் விதமாக நீதியரசர் விக்கினேஸ்வரன் அப்படி என்னதான் சொல்லுகிறார்.

சகடமுனி:- அட கழுதைமுனியே! வடக்கு கிழக்கில் உள்ள இராணுவ பிரசன்னம் இராணுவ தலையீடுகள் பற்றி திரு. கனக. விஸ்வ. விக்கினேஸ்வரன் கூறியவை பற்றியல்ல எனது சங்கடங்கள். அவர் தான் சொன்னவற்றிற்கெல்லாம் முடி சூட்டுவது போல ஒரு வசனம் சொல்லியிருக்கிறார் பாரு. அது எனது மண்டையை மட்டும் குழப்பவில்லை. என்னுடைய அடி வயித்தையும் கலக்குது.

கழுதைமுனி:- குருவே! நீதவான் விக்கினேஸ்வரன் எப்பவும் அவர் தான் சொன்னதையெல்லாம் செய்வாராம் அதோட அவர் தான் செய்யிறவையாத்தான் சொல்வாராம், அவர் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி என்று அவரைப்பற்றி நல்லூர் தேரடியிலே கடலை கச்சானோட குந்தியிருக்கிற சைவ பக்தர்கள் எல்லாரும் சொல்லுகினம். அப்படியான அவர் உங்களையே சங்கடப்படுத்திற மாதிரி என்னதான் கூறியிருக்கிறார் குருவே!.

சகடமுனி:- அட மண்டூகமே! அவர் மூன்றாம் கட்ட போராட்டம் நடத்தப் போகிறாராம். திரு செல்வநாயகம் திரு அமிர்தலிங்கம் ஆக்கள் தமிழர் போராட்டத்தில் ஒரு காண்டம் நடத்தினவையாம். பிறகு புலித் தலைவர் பிரபாகரன் நாலு கட்டப் போர்கள் கொண்ட இரண்டாம் போராட்ட காண்டத்தை நடாத்தினவராம். அதெல்லாம் தமிழர்களுக்கு ஒரு பிரயோசனமும் தரவில்லையாம்.

அதனால, கௌரவ விக்கினேஸ்வரன் மாகாண சபை முதல்வர் ஆனபிறகு மூன்றாம் போராட்ட காண்டத்தை நடத்தப் போறாராம். அதுக்கு இந்தியாவும் சர்வதேச சமூகங்களும் ஆதரவு தரும் என்றும் கூறுகிறார்.

தனக்கு அரசியல் தெரியாது. தான் அரசியலுக்காக மாகாணசபைக்கு வரவில்லை என்று சொன்னதோட கடந்த கால யுத்தத்ததால் பாதிக்கப்பட்டிருக்கும் சீரழிந்து கிடக்கும் அனைத்துப் பகுதி மக்களின் வாழ்வையும் வடக்கின் சமூக பொருளாதார கட்டுமானங்களை கட்டியெழுப்பும் சேவைகளைச் செய்வதற்கான ஒரு மக்கள் சேவகனாகவே மாகாண சபைக்கு வருவதாகக் கூறினார்.

இப்ப பார்த்தால் சம்பந்தர், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கூட அசரும் வகையில் சவால்கள் சங்கநாதங்களை முழங்குகிறார். பிரபாகரன் தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொண்டு போய் விட்டார். இவர்; தமிழர்களை எந்த வாய்க்காலில் கொண்டு போய் விடப் போகிறார் என்றுதான் தெரியவில்லை. இதெல்லாம் சொந்த அறிவு அநுபவத்திலிருந்து சொல்கிறாரா அல்லது வக்கிரம் பிடித்துப் போய்க்கிடக்கும் தமிழீ;ழத் தேசவாதிகளின் குரலாக வெளிக்கிட்டிருக்கிறாரா அல்லது தானும் தனது பங்கிற்கு தேர்தல் மேடை வாய்ச்சவடால்களை அவிழ்த்து விட்டு தன்னையும் தமிழீழ தேசியத் தலைவர் தரத்துக்கு ஆக்கிக் கொள்ள முற்படுகிறாரா என்றுதான் புரியவில்லை.

ஏல்லாரும் ஏறி விழுந்த குதிரையில சக்கடத்தாரும் ஏறினாராம் என்ற கதையைத்தான் இவரும் தொடர முற்படுகிறாரா என்பதுதான் புரியவில்லை.

1977ம் ஆண்டு உதயசூரியனுக்கு தமிழர்கள் எல்லாரும் தவறாமல் வாக்குப் போட்டால் தமிழீழம் மலரும் என்றும் மரம் பழுத்தால் வெளவால்கள் வரும் என்றும் கூவி வாக்குகளுக்கு அழைப்பு விட்ட பழுத்த அரசியல்வாதிகளைக் கொண்ட தமிழர் கூட்டணியினர் நடத்திய தேர்தல் மேடை நாடகத்தைப் போல இப்போது திரு கனக. விஸ்வ. விக்கினேஸ்வரனும் ஒரு தேர்தல் நாடகத்தை தனது பாணியில் நடத்த முற்படுகிறாரா என்ற கேள்வியே எனது தலையை நிறைத்த சங்கடமாகி நிற்கிறது.

“சிங்கள கன்னுக்குட்டி.. வந்துட்டியா? வா.. வா..” சிங்கத் தமிழன் சீமான் சிலிர்ப்பு!

 “கன்னுக்குட்டி சென்னைக்கு வந்துருக்கியாமே? நல்லாயிருக்கியா…” தமிழகத்தில் ஒரு சிங்கள நடிகையிடம் இப்படி யாராவது கேட்டால் என்னாகும்? சிங்கிள் எலும்புகூட சேதமில்லாமல் போக முடியாதபடி, போட்டுத் தாக்கிவிடுவார்கள், மறத்தமிழர் சீமான் படையணி.
ஒருவேளை கன்னுக்குட்டியை குசலம் விசாரித்தது, சீமானாக இருந்துவிட்டால்? சேச்சே.. அப்படியெல்லாம்கூட நடக்குமா?  நடந்திருச்சே ஐயா.. நடந்திருச்சே!
பிரபல சிங்கள நடிகை பூஜா, கொழும்புவில் இருந்து சென்னைக்கு வந்திருந்தார். இவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘விடியும் முன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்புக்குதான் இந்த ஸ்பெஷல் வரவு.
(நடிகை அசின், அவுட்டோர் ஷூட்டிங்குக்காக இலங்கை சென்ற காரணத்தால், அவரது படங்களை தமிழகத்தில் புறக்கணிக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிய சீமான் படையணி, ஒரு சிங்கள நடிகை நடிக்கும் ‘விடியும் முன்’ படத்தை தமிழகத்தில் திரையிட விடுவார்களா? பிச்சுப்புட மாட்டார்களா.. பிச்சு..)
நடிகை பூஜா, ‘விடியும் முன்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது, “கன்னுகுட்டி சென்னைக்கு வந்துருக்கியாமே? நல்லாயிருக்கியா. பிரஸ்மீட்ல தமிழ்லதான் பேசணும். இல்லேன்னா அடி விழும்னு என்னை ஆசையோடு ஆசிர்வாதம் செய்தார் செந்தமிழன் சீமான்” என்று மேடையிலேயே சொல்லி, தனக்கும் சீமானுக்குமான ஃபிரண்ட்ஷிப் இன்னும் ஃபிரஷ்ஷாகவே இருப்பதை உறுதி செய்து ஆனந்தப்பட்டுக் கொண்டார்.
ஆனந்தம் இருக்காதா என்ன? ஏழு ஆண்டுகளுக்குமுன் தொடங்கிய ‘சிங்கள – தமிழ்’  நட்பல்லவா?
2006-ம் ஆண்டு சீமான் டைரக்ட் செய்த ‘தம்பி’ (விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு மற்றொரு பெயர், தம்பி) படத்தில் ஹீரோயினாக நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டவர், நடிகை பூஜா. ஒருவேளை அந்த நாட்களில் இந்திய நடிகைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கலாம். அல்லது, “சிங்களவர்களை போட்டுத் தாக்க வேண்டும்” கொள்கை, அப்போது சஸ்பென்ஷனில் இருந்திருக்கலாம்.
அல்லது, ஒருவேளை பூஜா, சிங்கள நடிகை என்று நம்ம நெசமாலுமே நம்ம செந்தமிழனுக்கு தெரியாமல் இருந்திருக்குமோ?
அப்படியும் இருந்திருக்க முடியாது.
காரணம், அதே 2006-ம் ஆண்டு, பூஜா டபுள் ரோலில் நடித்த சிங்களப் படமான ‘அஞ்சலிகா’ இலங்கையில் ரிலீஸ் ஆகி, சூப்பர் ஹிட் ஆகியது.
அஞ்சலிகா, உத்தரா என்ற இரண்டு கேரக்டர்களில் பூஜா நடித்திருக்க, சன்னா பெரேரா ஹீரோவாக நடித்திருந்தார். பிரபல சிங்கள எழுத்தாளர் மகேஷ் ரத்சர எழுதிய கதையை மாலித் பிலியகுருகே ‘அஞ்சலிகா’ என்ற பெயரில் சிங்கள திரைப்படமாக தயாரித்திருந்தார்.
அந்தப் படத்தின் வெற்றிக்குப் பின் நடிகை பூஜா, ‘அசைமான் பியபானா’, ‘யாஹாலுவோ’, ‘ஸ்வன்ட தெனுன ஜீவிதே’ ஆகிய சிங்களப் படங்களில் நடித்துவிட்டு சென்னை வந்தபோதே, “ஹையா.. கன்னுக்குட்டி வந்தாச்சு” என்று ஆர்ப்பரித்துள்ளார், செந்தமிழன் சீமான்.
இப்போது சிக்கல் என்னவென்றால், நாம் தமிழர் படையணிக்கு பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
ஒருவேளை சந்தேகம் சீமான் மீதா? ஐயகோ, உங்க வாய் வெந்துபோகும்!  ராமபிரான் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்!!
அப்படியானால் என்ன சந்தேகம்?
“தமிழகத்துக்கு வந்த சிங்கள பக்தர்கள், பெண்கள், குழந்தைகளை எல்லாம் நையப் புடைந்து, நடுநடுங்க வைத்து, துரத்தி துரத்தி அடித்தோம் அல்லவா? தமிழகம் வந்துள்ள நம்ம ‘பூஜா கன்னுக்குட்டி’க்கும் அதே சிருஷை அளிப்பதா?” என்பதே நாம் தமிழர் சீறும் சிங்கங்களின் சீரிய சந்தேகம்!

(Viruvirupu )

ஏய்க்கவென்றுபிறப்பெடுத்தால் யேசுவென்ன? சிலுவையென்ன?

மதங்கள்கடந்தமனிதவிழுமியத்தோடுஉலகின் பலபாகங்களிலிருந்துதமிழ் பேசும் மக்கள் ஒன்றுகூடுவதும்.தமிழில் பூசை,திருப்பலிஒப்புக்கொடுத்தல் எனஐரோப்பியவரலாற்றில் ஒருஆச்சரியமாகக் கடந்த 26 வருடங்கள் தொடர்கிறதுஜேர்மனியின் கேவிலார்நகர்த் தேவாலயஉற்சவம். வருடாவருடம் ஆவணிமாதத்தில் இணர்டாவதுசனியன்று இடம்பெறும் அன்னைமரியாளின் இத் தேவாலய உற்சவமானது எண்ணிப் பார்க்கவே சிரமமான சிறப்மமைந்த உறவுகளின் சங்கமம்,மதத்துக்கப்பாலும் மனிதநேயத்துக்குஒருமேடை.(மேலும்.....)

தோழர் குமரனின் (வி. பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வு!

மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக ஓர் நிகழ்வு கனடாவின் டொரோண்டோ பெரும்பாகத்தின் பகுதியில் அமைந்துள்ள தமிழர்களின் அங்காடிகள்... வர்த்தக... சேவை நிலையங்கள் உள்ள கட்டிடத் தொகுதியான GTA SQUARE MALL இல் கடந்த ஞாயிரன்று இடம்பெற்றது. ஆரம்ப காலங்களில் இலங்கை கம்யூனிச கட்சி; (மாஸ்கோ பிரிவு) செந்தமிழர் இயக்கம்; காந்தீயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பட்டவராகவும் பின்னர் தமிழீழ மக்கள்  விடுதலைக்கழகத்தின் (PLOTE) உறுப்பினராகவும் இருந்த மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அவர்களின் நினைவுகளை பகிருமுகமாக நிகழ்வு... பலதரப்பட்ட அமைப்பை... பின்புலத்தை... கொண்டவர்கள் கொண்ட... மண்டபம் நிறைந்த...  நிகழ்வாக தோழர் குமரனின் மனித நேய செயர்ப்பாடுகளுடனான நினைவுகளுடான சீலன் அவர்களின் தலமையுரையுடன்  ஆரம்பித்து... (மேலும்.....)    

ஆகஸ்ட் 18, 2013

விருப்பு வாக்குகளை பெற தீவிர கோஷ்டி மோதல்கள்

வடக்கில் வீரவசனங்களுடன் களமிறங்கிய விக்னேஸ்வரன் அலுவலகத்தில் முடங்கினார்

வடக்கில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தாம் அதிக விருப்பு வாக்குகளைப் பெறுவதற்காக தமக்கிடையே கோஷ்டி மோதல்களில் உக்கிரமாக ஈடுபட்டு வருவதைக் காண முடிகிறது.  ஒருவர் ஒட்டும் போஸ்டருக்கு மேலாக உடனே அடுத்தவர் வந்து தமது போஸ்டர் களை ஒட்டி தமக்கிடையே கைகலப்பிலும் அவர்கள் ஈடுபட்டு வருவதைப் பரவலாக அவதானிக்க முடிகிறது. இதில் அதிகமாக தமிழரசுக் கட்சியினரின் வேட்பாளர்களே ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளிடையேயும் பாரிய போட்டி நிலவுவதைக் காண முடிகிறது. வேட்பாளர் தெரிவில் புறக்கணித்தமை, சம்பந்தன் மற்றும் சுமந்திரனின் கனடா விஜயம் தொடர்பாக எழுந்துள்ள நிதிச் சர்ச்சைகள் தொடர்பாக சுரேஷ் பிரமச்சந்திரன் தனது அதிருப்தியை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார். தனது அணி வேட்பாளர்கள் தோற்றாலும் பரவாயில்லை தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் படுதோல்வி அடைய வேண்டும் என்பதில் இவர் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதாகத் தெரிய வருகிறது. அதேபோன்று கூட்டணிக் கட்சிகளின தலைவர்களான ஆனந்தசங்கரி, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோரும் தமது எதிர்ப்பை நேரடியாக வெளிக்காட்டாது தமது வேட்பாளர்கள் மூலமாகச் சாதித்து வருகின்றனர். (மேலும்.....)  

த.ம.வி.பு கட்சியின் உறுப்பினர் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரொருவர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்திவெளி பிரதேசத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு இடம்பெற்ற பூசகரொருவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவரை ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நான்கு பேர் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையிலேயே  மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றைய சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட

3 பயங்கரவாத அமைப்புக்கள் இணையலாம்

லக்ஷர் ஈ. தைபா, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தலிபான் ஆகிய மூன்று பயங்கரவாத அமைப்புக்கள் ஒன்றிணையலாம் என இந்திய புலனாய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றிணைவு எதிர்காலத்தில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு இந்தியா வரும் மற்றொரு சவாலாக உள்ளது எனவும் இந்திய புலனாய்வு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

பயங்கரவாதத்திற்கு துணைபோயுள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு

நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை ஏற்படுத்தி நாட்டை அராஜகத்திற்கு இட்டுச் செல்லும் புலம்பெயர் தமிழர்களின் சூழ்ச்சிக்கு, வெளிநாடு சென்று ஆதரவு வழங்கும் நோக்கில், பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவொன்று, லண்டன் நோக்கி பயணமாகியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. தமிழ் நிழல் அரசாங்கத்தின் தலைவரெனத் தன்னைத்தானே கூறிக் கொள்ளும் வீ. உருத்திரகுமார் என்பவரின் நாட்டுக்கு வெளியிலான தமிழ் இராச்சிய செயற்பட்டறையில் கலந்து கொள்வதற்காக நாட்டுக்கு எதிரான இந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர் குழுவொன்று லண்டன் நோக்கிப் பயணமாகியுள்ளதாக தற்போது ஊர்ஜிதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், லண்டன் சென்றடைந்துள்ளதாக புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. புலம்பெயர் தமிழர்களின் நேரடி தலையீட்டுடன், உருத்திரகுமாரினால் வழிநடத்தப்படும் இந்த மாநாட்டின் நோக்கம், இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் கடுமையான நிலைப்பாட்டை கட்டியெழுப்புவதாகும்.  இதற்காக புத்திஜீவிகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதும், இதன் நோக்கமாகும். இந்தப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கடமை விடுமுறையை பெற்றுக்கொண்டு லண்டனில் ஆய்வு நடத்துவதாக கூறிக்கொண்டு லண்டன் சென்றுள்ளனர். போலியான காரணங்களை காட்டி விடுமுறைகளை பெற்றுக்கொண்டு, நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத்திற்கு துணைபோகும் செயற்பாடுகளில் கலந்து கொள்வது, நாட்டின் தற்போதைய சட்டதிட்டங்கள்படி, கடுமையான குற்றமாகுமென சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

பலஸ்தீன கைதிகள் விடுதலை

இஸ்லாமிய - அரபு உலகின் அரசியல் கடந்த வாரம் இரண்டு முக்கியமான சம்பவங்களை கண்டது. இவை இரண்டும் சில வருடங்களுக்கு தொடரக் கூடிய சிக்கலான விடயங்கள். மதங்களும் அரசியலும் சங்கமித்துள்ள விடயம் இவை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு காண வேண்டியுள்ள விடயங்களாகும். இஸ்ரேலுடன் இஸ்லாமிய உலகம் கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது கஷ்டமான விடயமாக இதுவரைக்கும் இருந்து வருகின்றது. இருந்த போதிலும் கூட சில முக்கியமான பிரச்சினைகளுக்கு சமீபத்தில் முடிவு காணப்பட்டது ஒரு நல்ல அறிகுறியை காட்டுகின்றது. தலைநகர் டெல் அவிவ் பலஸ்தீனியர்களை வைத்திருந்த சிறைச்சாலையான அயலோனில் இருந்து வெகு தூரத்தில் இல்லை. பயங்கரவாதிகள் என்று இஸ்ரேல் கூறும் பல பலஸ்தீனியர்கள் இந்த சிறைச்சாலையில் பல வருடங்களாக கைதிகளாக உள்ளனர். சிலர் வாழ் நாள் பூராகவும் இருந்துள்ளனர். இன்னும் சிலர் இருக்கவுள்ளனர். (மேலும்.....)  

ஆகஸ்ட் 17, 2013

என் மனைவலையிலிருந்து.....

அனந்தி எழிலன் இற்கு ஒரு பகிரங்க மடல்

(சாகரன்)

'யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன்' – புலிகளின் முக்கியஸ்தர் எழிலன் இன் மனைவி என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கணவருக்காக சிலம்பைத் தூக்கியுள்ளார். நல்ல விடயம்தான். யுத்தகாலம் என்று குறிபிடுவது தோரயமாக 1983 தொடக்கம் 2009 மே மாதம் 18ம் திகதிவரை என்றுதான் நான் எண்ணுகின்றேன். அப்படியாக இருப்பின் இதற்காக உங்களுடன்; இணைந்து நானும் குரல் கொடுக்கவும், தொடர்ந்து போராடவும் தயாராக இருக்கின்றேன் அம்மணி. அல்லாது இறுதி யுத்த காலகட்டத்தில் மட்டும் காணமல் போன, அல்லது சரணடைந்த புலிகளின் நலன்களிற்காக வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்ற கோதாவில் சொல்வார் ஆகின் என்னிடத்தில் அவருக்கு எதிரா பல கேள்விகள் உள்ளன. ஒரு கேள்வியை மட்டும் முன்வைக்கின்றேன், மாற்று இயக்கங்களை புலிகள் தடைசெய்தபோது புலிகளால் காணாமல் போன மாற்று இயக்கத்தினர் அல்லது புலிகளிடம் சரணடைந்த மாற்று இயக்க போராளிகள் அல்லது மாற்றுக் கருத்துடைய பொது மக்கள் இவர்கள் எல்லாம் உயிர்கள் இல்லையா....? இன்று வரை திரும்பி வருவார் என்று ஏக்கிக்கொண்டிருக்கும் பல தாய்மார்கள், சகோதரிகள், ஏன் கணவன்மார்கள், மனைவிமார்கள் பிள்ளைகள் என்று நிறையப்பேர் ஈழத்திலும், புலம்பெயர் தேசத்திலும் உள்ளனர். இவர்கள் யாரும் உங்கள் கண்களுக்கு தெரியவில்லையா? அல்லது தெரிய விரும்பவில்லையா...?. இவற்களுக்காகவும் குரல் கொடுக்கத் தயாரா...? சனல் 4 உம் மேற்கத்திய நாடுகள் பலவும் மாற்று இயக்க போராளிகள் புலிகளால் கொலை செய்யப்பட்டபோது சிறைபிடிக்கப்பட்டு

துணுக்காய் போன்ற முகாங்களில் வைத்து சித்திரைவதையின் பின்பு காணாமல் போனபோது குரல் கொடுக்கவில்லை. இவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் இல்லையா...? ஏன் தமிழநாட்டில் உள்ள 'தமிழ் உணர்வாளர்கள்' யாரும் குரல் கொடுத்ததாக வரலாறு இல்லை. (கருணாநிதி கொடுத்த குரல் அரசியலுக்காக மட்டுமே) ஏன் அதிக தூரம் போவான் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சிகளான தமிழரசுக் கட்சி, சுரேஷ் அணி ஈ.பி,ஆர்.எல்.எவ், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புலிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைத்து பாராளுமன்ற கதிரைகளை அலங்கரித்தபோது இந்த கொலைகளைப்பற்றி அல்லது காணாமல் போதல் பற்றி பிரபாகரனிடமோ அல்லது தமிழ்செல்வனுடனோ அன்று கேட்கவில்லை. இன்றும் மூச்சும் விடவில்லை. சரி ஒரு பேச்சுக்கு எற்றுக்கொள்வோம் அன்று இவற்றை கண்டித்திருந்தால் தங்களையும் புலிகள் புதைத்து இருப்பார்கள் இதனால்தான் தமது தலைவன் அமிர்தலிங்கம், பத்மநாபா, சிறீசபாரத்தினம் பற்றி நாம் மூச்சும் விடவில்லை என்று காரணம் கூறலாம்.. இன்றுதானே புலியும் இல்லை, புலிகளின் பூனையும் இல்லை உள்ளத்தில் சுத்தம் இருந்தால் நெஞ்சில் உரம், நீதி, நியாயம் இருந்தால் இவற்றை கண்டிக்கலாம்தானே இன்று. எனவேதான் கூறுகின்றேன் முள்ளிவாய்காலில் பொது மக்களின் மரணத்திற்கு காரணமானர்களின் ஒரு தரப்பினரான இலங்கை அரசை விட நீங்களே மிகவும் கொடியவர்கள். மனச்சாட்சி இருந்தால் நவநீதம்பிள்ளையை சந்திக்கும்போது புலிகள் செய்த சகல தரப்பு கொலைகளையும் அங்கு பட்டியல் இடுங்கள். கூடவே இலங்கை அரசு செய்தவற்றையும் பட்டியல் இடுங்கள், நீங்கள் மக்களால் தேர்தலில் தேர்தெடுக்கப்படாவிட்டாலும் மக்கள் மனங்களில் என்றென்றும் நிறுத்தப்படுவீர். (ஆகஸ்ட் 17, 2013)   

தோற்றுப்போன சமூகம் நாம் இல்லை - அனந்தி எழிலன்

யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன் என்று நடைபெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எழிலனின் மனைவி அனந்தி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்த காலத்தில் பலர் காணமல் போயியுள்ளனர். அவர்களுக்காகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையையும் கருத்திக்கொண்டே நான் போட்டியிடுகின்றேன். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் எனற நம்பிக்கை எனக்கிருக்கிறது என்றார். கடந்த காலத்தில் காணாமல் போனவர்களிற்காக நாம் குரல்கொடுத்து வந்துள்ளளோம் இதற்கு எமக்கு ஒரு பலம் தேவைப்பட்டது நான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதன் மூலம் காணாமல் போனவர்களின் பிரச்சினையை சர்வதேச மட்டத்திற்குகொண்டு செல்லமுடியும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். இந்தத் தேர்தலில் போட்டியிடுவற்கு பல்வேறு எதிர்ப்புக்கள் மத்தியில் நான் போட்டியிடுகின்றேன்.  தோற்றுப்போன சமூகம் நாம் இல்லை என்பதை வெளிப்படுத்த வேண்டிய தேவையிருக்கின்றது. இதுவரை காலமும் எங்கள் செய்த தியாகங்களும் சிந்திய குருதிகளும் வீண் போகாது எந்த என்பதை இந்த தேர்தலில் நாங்கள் நிரூபிப்போம் என்றார்.

கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வட மாகாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஜக்கிய முன்னனி எனும் கட்சியினாலேயே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கட்சியே இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் வட மாகண சபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நவிபிள்ளையை நானும் சந்திப்பேன் -  எழிலன் மனைவி

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும், வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரனுடன் சந்திக்கவுள்ளதாக அனந்தி சசிகரன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று மதியம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ள மனித உரிமைகள் ஆணையாளர் வடபகுதிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவ்விஜயத்தின் போது, முன்னாள் போராளி எழிலனின் மனைவியாகிய தன்னை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அச்சந்திப்பின் போது, போரின் சாட்சியங்களா இருக்கும் தாங்கள், காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டவர்கள், முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளேன்' என்று அவர் மேலும் கூறினார்.

கனடாவில் புலிகளின் மீள்கட்டமைப்பு சம்மந்தமாக

சிறிதரன் எம்.பியிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனிடம் பயங்கரவாதப் தடுப்பு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். இன்று காலை கிளிநொச்சியில் அமைந்துள்ள சிறிதரனின் அலுவலகத்தில் வைத்து 2 மணிநேரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் கனடாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது அங்கு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் 'விடுதலைப் புலிகளை இலங்கையில் மீண்டும் உருவாக்க முடியாது. எனவே, கனடாவில் அந்த அமைப்பை உருவாக்கி, இலங்கையில் வந்து தாக்குதல் நடத்த வேண்டும். இராணுவத்தில் பெண்களை இணைத்து அவர்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்று அரசு சார்பு ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பிலே இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் தன்னிடம் காலை 9.45 தொடக்கம் 11.45 மணி வரை பயங்கரவாத தடுப்பு பிரிவின்  கொழும்பு அலுவலகப் பொறுப்பாளர் பிரசன்ன டி.அல்விஸ் தலைமையிலான குழுவினர் இந்த விசாரணைகளை நடத்தி, இந்தச் செய்தி தொடர்பில் வாக்குமூலங்கள் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 16, 2013

என் மனவலையிலிருந்து.......

வட மாகாண மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்

(சாகரன்)

தமிழர் தரப்பு என்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசு தரப்பு என்கின்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு என்ற இரு கூட்டமைப்புகளின் தாக்குதலுக்குள் மட்டும் தவிர்க்க முடியாமல் சிக்கிவிட்டது  வட மாகாணசபைத் தேர்தல். வடக்கு மக்களும் இதில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்தாக வேண்டும் என்ற நிலையில் உள்ளனர். ஐ.தே. கட்சி, ஜே.வி.பி. என்பன இங்கு பெரிதும் கருத்தில் கொள்ளப்படப்போவது இல்லை. முஸ்லீம் காங்கிரஸ் மட்டுப்படுத்திய பிரதேசங்களில் மட்டும் அரசில் அங்கம் வகித்த வண்ணம் போட்டியிடுகின்றது. சுயேச்சைக் குழுக்கள் சுயநலக் குழுக்கள் என்று உதற முடியாவிட்டாலும் மக்களால் இவர்களை இனம் காணுவது கஷ்டமாக இருக்கும். காரணம் இவர்கள் பெரும்பாலும் தேர்தல் நேரத்தில் உருவாக்கப்படுபவை. எனவே இவர்களின் தொடர்ச்சியான செயற்பாடுகளை மதிப்பீடுசெய்வது மக்களுக்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப் பார்த்தால் இரு கூட்டமைப்புகளிடையே மக்கள் பிரிந்து கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் உள்ளனர். இதில் ஒன்று புலி என்றால் மற்றது சிங்கம் இதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் சிங்கம் தன்னகத்தே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகளை கொண்டுள்ளது. இன்று அரசுடன் உள்ள கட்சிகளில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சரியோ பிழையோ விடாப்பிடியாக பல ஆண்டு காலமாக குரல் கொடுத்து போராடிவரும் கட்சிகள் இவை. மேலும் ஈபிடிபி யின் செயற்பாடுகளை விமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் இன்றுவரை தன்னால் இயன்றவரை கஷ்டப்பட்ட மக்களுக்காக அவர்தம் பிரதேசங்களில் செயற்பாட்டைக் கொண்டிருப்பவர்கள். இவ் இரு கூட்டமைப்பில் இந்தக் கூட்டமைப்பில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இணைந்து போட்டியிடுவதே இருப்பதில் சிறந்த முடிவாகும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பன்கதவால் அரசுடன் உறவாடிக் கொண்டு அரசை குறை கூறுவதைத் தவிர வெறு எதையும் செய்வது இல்லை. உள்ளுர் ஆட்சி சபைகளில் கணிசமான சபைகளை தன்னகத்தே வைத்திருந்தும் இச்சபைகளில் எவ்வித செயற்பாட்டடையும் இவர்கள் கொண்டிருக்கவில்லை. உள்ளுர் ஆட்சி சபைகளைக் கூட நிர்வகிக்கும் செயற்படச் செய்யும் திறமை அற்றவர்கள், விருப்பு அற்றவர்கள இவர்கள். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசு செய்யும் எல்லாவற்றையும் குறை கூறுவதைத் தவிர வேறு ஏதும் இவர்களின் செயற்பாட்டில் இல்லை. உள்ளுர் ஆட்சி சபைகளுக்கு ஒதுக்கிய நிதிகளை தமது அதிகார வரம்பிற்கு உள்பட்டு பயன்படுத்தத் தெரியாத கையாலாகாதவர்கள், திறமையற்றவர்கள். இவர்கள் வெறும் வெத்து வேட்டுகள். ஓன்றை மட்டும் சொல்லலாம் இவர்கள் அது நாம் அரசிற்கு எதிரரனவர்கள்(கள்ளவாசல் உறவு அரசுடன் எப்போதும் உண்டு) என்று. இது ஒன்று மட்டும் மக்களின் பிரநிதிகளாக மாற போதுமானதா? என்பது கேள்விக்குறியே. எனவே இருக்கும் இரு கூட்டமைப்பு நிலமைகளில் இடதுசாரிகள் , ஈபிடிபி யைக் கொண்ண கூட்டமைப்பிற்கு வட மாகாண மக்கள் வாக்களிப்பதே சிறந்த தெரிவாகும். (ஆகஸ்ட் 16, 2013)   

மதங்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வெளியீடுகளை தடை செய்ய புதிய சட்டம்

நாட்டின் பிரதான சமயங்களின் போதனைகளுக்கும் மரபுகளுக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் அச்சு அல்லது இணைய வெளியீடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் புதிய சட்டமொன்றை உருவாக்க பௌத்த சாசன சமய விவகார அமைச்சு அனுமதி கோரியுள்ளது. இதன் முதற்கட்டமாக பௌத்த மதத்தை அவமதிக்கும் எந்தவொரு வெளியீட்டையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்துடன் கூடிய பௌத்த வெளியீடுகளில் ஒழுங்குவிதி சபையொன்றை அமைப்பதற்கு வகை செய்யும் ஒரு சட்டமூலத்தை மேற்படி அமைச்சு வரைந்துள்ளது. இந்த சட்டமூலத்தின் கீழ் அமையும் சபையில் அமைச்சின் செயலாளர், பௌத்த சாசன ஆணையாளர் நாயகம் ஆகிய உத்தியோகபற்றற்ற அலுவலர்கள் இருப்பர். இதற்கு மேலாக நான்கு பௌத்த பீடங்களினால் நியமிக்கப்படும் அங்கத்தவர்கள் உட்பட 14 அங்கத்தவர்கள் இருப்பர். இந்த சட்டமூலம் சட்டமா அதிபரின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்பட்டுள்ளது. அவரது அங்கீகாரம் கிடைத்ததும் இது அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக அனுப்பப்படும் என அமைச்சின் செயலாளர் எம்.கே.பீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

கச்சதீவில் இந்திய கொடியேற்றச் சென்ற 69பேர் கைது

கச்சதீவில் இந்திய தேசிய கொடியை ஏற்றச் சென்ற தேவர் தேசியப் பேரவையைச் சேர்ந்த 69பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர். கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு நேற்று வியாழக்கிழமை கூடினர். சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள் கச்சத்தீவுக்குச் செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளனர். தகவலறிந்த பொலிஸார் அங்கு விரைந்து, கே.சி.திருமாறன் உள்ளிட்ட 69 பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களை திருமண மண்டபத்தில் தங்கவைத்த பின்னர் மாலையில் விடுவித்தாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். (நக்கீரன்)

யாழில் நான்கு இளைஞர்கள் கைது

சந்தேகத்தின் பேரில் 4 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யு.எல். விக்கிரமராச்சி இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலய வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமாக நடமாடிய வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. கைதுசெய்யப்பட்ட 4 இளைஞர்களையும், விசாரணையின் பின்னர் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

வடக்கு கிழக்கிற்கு நவிபிள்ளை விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளை வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை நவநீதம் பிள்ளையின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று செல்லும் நவநீதம் பிள்ளை ஓகஸ்ட் 25ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார். இந்த விஜயத்தின் இறுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்".

கைகலப்பில் ஈடுபட்ட யாழ். பல்கலை மாணவர் அறுவருக்கு இரு வருட தடை

யாழ். பல்கலைக்கழகத்தில் கைகலப்பில் ஈடுபட்ட கலைப்பீட மாணவர்கள் அறுவருக்கு பல்கலைக்கழகத்திற்கான இரண்டு வருட தடையினை யாழ். பல்கலைக்கழகம் விதித்துள்ளது. கடந்த 31ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கலைப்பீட மூன்றாம் வருட மாணவர்களுக்கும் நான்காம் வருட மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்ட போது, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்ததுடன், இருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த 31ஆம் திகதி முதல் இரண்டு வருட மாணவர்களையும் நேற்று புதன்கிழமை வரையிலான 14 நாட்கள் பல்கலைக்கழத்திற்கான அனுமதியினை மறுந்திருந்த நிலையில், இன்று வியாழக்கிழமை மீண்டும் பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் வழங்கியிருந்தது. இந்நிலையில், கைகலப்பில் சம்பந்தப்பட்ட மூன்றாம் வருட மாணவர்கள் மற்றும் இறுதி ஆண்டு மாணவர்கள் அறுவருக்கான பல்கலைக்கழக அனுமதியினை இரண்டு வருடத்திற்கு மறுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பத்ரகாளி கோவிலை அகற்ற முயற்சி

தம்புள்ள, கண்டலம சந்தியிலுள்ள மகா பத்ரகாளி கோவிலை அகற்றுவதற்கான முயற்சிகள் மீண்டும்  அரங்கேற்றப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். "இந்த கோவிலின் சிலையை  எடுத்துச் செல்வதற்கான முயற்சிகள் நேற்று வியாழக்கிழமை இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 31 வருடங்களாக இயங்கி வந்த இந்தக் கோவிலில் இறுதி 13 வருடங்கள் தேர்த்திருவிழாவும் இடம்பெற்று வந்துள்ளது. இந்த நிலையிலேயே தற்போது குறித்த கோயிலை அகற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த கோயிலைச் சுற்றி வாழ்ந்து வந்த 25 அப்பாவி தமிழ் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு அங்கிருந்து அகற்றியுள்ளனர். இதனால் அவர்கள் தற்போது நிரந்தர வசிப்பிடமின்றி நிர்க்கதி நிலையை அடைந்துள்ளனர். தாங்கள் தற்போது தற்காலிகமாக தங்கியுள்ள பகுதியிலிருந்து பூசை வழிபாட்டிற்காக இந்தக் கோயிலை நாடிவருகின்றனர்.  தம்புள்ள புனித பிரதேசத்தில் கோவிலோ, பள்ளிவாசலோ இருப்பது புனிதத்துவத்தை எவ்வகையிலும் பாதிக்காது. மாறாக தம்புள்ள நகரில் இருக்கும் கசாப்புக் கடைகளை அகற்றாது புனித தலங்களை அகற்றுவது எவ்வகையில் நியாயமாகும்?.

பாக்யா  பதிப்பகம் - எழுநா வெளியீடு இணைந்து  நடாத்தம் தோழர் வி.டி.தர்மலிங்கம் சரிநிகர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்

மலையகம் எழுகிறது அறிமுக  நிகழ்வு

வரவேற்பு: தலவாக்கலை தமிழ் சங்கததினர்
தலைமை: மு.சிவலிங்கம்
(எழுத்தாளர் : செயற்பாட்டாளர்)
அறிமுகம் : மல்லியப்புசந்தி  திலகர்
(பாக்யா பதிப்பகம்)
உரைகள்: வ.செல்வராஜா   (ஆய்வாளர்-விரிவுரையாளர்) 
சயந்தன் கதிர் - எழுநா வெளியீடுகள்
நன்றியுரை : பாக்யா பதிப்பகத்தினர்

நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு : தலவாக்கலைத் தமிழச் சங்கம்
தலவாக்கலை கதிரேசன் மண்டபம்  2013 -08- 18 ஞாயிறு காலை 10 மணி

ஆகஸ்ட் 15, 2013

என் மனவலையிலிருந்து....

வட மாகாணசபைத் தேர்தலில் மூன்றாவது அணி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்

(சாகரன்)

செப்ரம்பர் மாதம் இலங்கையில் மூன்று முக்கிய மகாண சபைகளின் தேர்தல் நடைபெற இருந்தாலும் வட மாகாண சபைத் தேர்தலே பலரின் கவனத்தையும் ஈர்ந்திருக்கின்றது. இலங்கையில் உள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஓரேயளவான அதிகாரங்கள் இருந்தாலும் தற்போது ஏதோ வட மாகாணம்தான் அதிக அதிகாரம் கொண்ட மாகாணமாகவும் (ஒரு காலத்தில் இந்த பட்டியலில் கிழக்கு மாகாணமும் இருந்தது. பிரபாகரன் செய்த கைங்கரியத்தனால் ஏற்பட்ட கருணாவின் பிரிவு இதனை மாற்றியமைத்துவிட்டது என்பது கசப்பான உண்மை.) இவ் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாரிய வெற்றியை சந்திக்கா விட்டாலும் இவர்களே பெரும்பான்மை பலத்தை பெறக்கூடிய வாய்புக்கள் இருக்கின்றது. இதற்கு பல காரணங்கள் இருப்பினும் ஒரு காரணம் முக்கிய காரணமாக அமைகின்றது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக அடுத்த பலமான அணியாக அமையப்பெற்றிருப்பது ஐக்கிய மக்கள் சுதந்திர  கூட்டமைப்புதான். இதில் என்னதான் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டி.பி, சிறீ ரெலோ போன்ற தமிழ் அமைப்புக்கள் அங்கம் வகித்தாலும் இது அரசாங்கக் கூட்டமைப்பு என்ற பார்வையே பொது மக்கள் மத்தியில் மேலோங்கி நிற்கின்றது. அரசாங்கத்தின் மீதான பொது மக்களின் வெறுப்பு ஈ.பி.டி.பி போன்ற அரசுடன் இணக்கப்பாட்டுடன் செயற்படும் தமிழ் கட்சிகள் மீதான மக்கள் விருப்பையும் மீறி மேலோங்கியே இருக்கின்றது என்பது யதார்த்தமான உண்மை. தமிழ் தேசிக் கூட்டமைப்பிற்கு மாற்றாக வடபகுதியில் இருக்கின்ற ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள் தமக்கிடையே ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் ஒரு ஐக்கிய முன்னணியை கட்டிமைத்து சுயேச்சை குழுவிற்கு அப்பால் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கம் என்ற இரு தரப்பனருக்கும் அப்பால் மக்கள் இந்தக் ஐக்கிய முன்னணியிற்கு தமது வாக்குகளை அளிக்க முன்வருவார்கள். சிலவேளைகளில் இந்த முறைத் தேர்தலில் இந்த மூன்றாவது அணி கணிசமான மக்கள் ஆதரவைப் பெறமுடியாவிட்டாலும் இனிவரும் காலங்கள் அமையவிருக்கும் தேர்தல்களில் கணிசமான மக்கள் ஆதரவை பெற்று ஆட்சியை அமைத்திருக்க முடியும். இதில் டக்ளஸ் தேவானந்தாவின் ஈபிடிபி கட்சியும் இணைந்திருக்கவேண்டும். கூடவே அவர்கள் கட்சி முற்போக்கு பாராளுமன்ற பாரம்பரியத்திற்குரிய தமது செயற்பாடுகளை மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படும் வண்ணம் மேலும் வெளிக்காட்டவும் வேண்டும். ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்பிலிருந்து வந்தவர்கள் என்பதினால் இவர்களிடம் காணப்படும் அந்தக் கலாச்சார வெளிப்பாடுகள் களையப்பட வேண்டும். இது மிகவும் கடினமான வேலை என்றாலும் இந்த வேள்வியில் அவர்கள் புடம்போட்டே ஆகவேண்டும். இப்படி இவர்கள் செய்வார்களானால் வரலாற்றில் மேலும் இவர்கள் பெயர்கள் பதிய வாய்ப்புக்கள் அதிகம். மகிந்த அரசானது தனது அரசியலில் (சிறப்பாக சிறுபான்மை இனங்கள் விடையத்தில்) தனக்கென ஒரு வேலைத் திட்டத்தை மட்டும் கொண்டுள்ளது. அது இதற்குள் சகலரையும் அடங்கி வருமாறு நிர்பந்திக்கும் செயற்பாட்டையே தன்னக்கே கொண்டுள்ளது. இந்நிலையில் வட மாகாண சபைத் தேர்தலில் மூன்றாம் அணியின் அவசியம் இங்கு முக்கியம் பெறுகின்றது. தமிழ் தலைமைகள் எப்போதும் போலவே தற்போதும் அணி அமைப்பதில் இராஜதந்திர தவறுகளையே செய்கின்றன என்பது வருந்தத்தக்கது ஆகும். (ஆகஸ்ட் 15, 2013) 

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்களை கொல்ல புலிகள் முயன்றனர்'

யுத்தநிறுத்த காலத்தில் முக்கியஸ்தர்கள் பலரை விடுதலைப்புலிகள் படுகொலைச்செய்வதற்கு முயற்சித்துள்ளனர் என்று சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தார். முக்கியஸ்தர்களை கொலைச்செய்வதற்கு முயன்றது மட்டுமன்றி பொருளாதார மையங்களை தாக்குவதற்கும் திட்டமிட்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வைத்தே அவர் மேற்கண்டவாறு நேற்று புதன்கிழமை தெரிவித்தார். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் சைக்களிக்களிலும் முச்சக்கரவண்டிகளிலும் வெடிப்பொருட்களை பொருத்தியே புலிகள் தாக்குதல் நடத்த முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். அமையில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் சந்தேகநபரான பெர்னாண்டோ எமில்டன் என்பவரின் அளித்த வாக்குமூலத்திலேயே புலிகளின் திட்டங்கள் அம்பலமாகியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆயினும், யுத்தநிறுத்தம் முடிவுக்கு வந்தபோது அந்த திட்டங்களை கைவிடவேண்டியதாயிற்று என்றும் சட்டமா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தலைதூக்கும் சர்வதேச போர்க்குற்ற விசாரணை

(கே.சஞ்சயன்)

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் குறித்து மீண்டும் பேசப்படும் நிலை உருவாகியுள்ளது. பெரும்பாலும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை அமர்வுகளை ஒட்டியே, இத்தகைய கோரிக்கைகளும், வாதப் பிரதிவாதங்களும் எழுவது இயல்பு. ஆனால், இப்போது எழுந்துள்ள இந்தக் கோரிக்கைக்கு முக்கியமான காரணம், வெலிவேரியவில் இடம்பெற்ற பொதுமக்கள் மீதான தாக்குதலேயாகும். அதற்கு அப்பால், இந்தமாத இறுதி வாரத்தில், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதும் இன்னொரு காரணமாக உள்ளது. 2009ஆம் அண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதில் இருந்து, அவ்வப்போது இந்த விவகாரம் பூதாகாரமாக வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது. போரின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரால் இழைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து, நடுநிலையான - நம்பகமான - சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகளையெல்லாம் இலங்கை அரசாங்கம் நிராகரித்து விட்டது.(மேலும்.....)

பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பதவியை வீ. சிவகுமார்  இன்று புதன்கிழமை இராஜினாமா செய்துள்ளார். இந்த இராஜினாமா கடிதத்தை பிரதேச சபையின் செயலாளரிடம்  கையளித்துள்ளார். அரசாங்கத்துடன் இணைத்து வட மாகாண சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் சிராஸிற்கு ஆதரவு வழங்கவுள்ளமையினாலேயே பிரதேச சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

'தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்'

மத்திய மற்றும் மாகாண அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என ஜரோப்ப நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளர் ரூபினி வரதலிங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் பில் பென்னியன் யாழ். மாவட்ட மேலதிக செயலாளருடன் இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது, மத்திய மற்றும் மாகாண அதிகாரங்களின் ஊடாக தமிழ் மக்களுக்கான அனைத்து வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக பில் பென்னியன் மாவட்ட செயலாளரிடம் வினவியுள்ளார். அதன்போது, தற்போதைய நிலவரங்கள் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக விளக்க படங்களுடன் விளக்கமளிக்கப்பட்டுள்ளன. அத்துடன், யாழ்ப்பாண மாவட்டம் 15 பிரதேச செயலகங்களிலும் இளைஞர், யுவதிகளுக்கான  தொழில் வாய்ப்புக்களும், வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் வரலாறு காணாத தோல்வியடையும்

வரலாற்றில் ஒருபோதுமில்லாதவாறு இம்முறை தேர்தலில் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் எனவும் எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் பலர் ஐ.ம.சு.மு.வுடன் இணைய உள்ளனர் எனவும் ஐ.ம.சு.மு. தலைவர்கள் தெரி வித்தனர். ஐ.தே.கவும் ஜே.வி.பியும் பல வீனமடைந்துள்ள நிலையில் கட்சி ஆதரவாளர்கள் அரசாங்கத்துடன் இணைந்து ஐ. ம. சு. மு. வை பெரு வெற்றியீட்ட பங்களித்து வருவதாகவும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் அரசுடன் இணைவதை நிறுத்த முடியாதுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிரிசேன, எதிர்பார்த்ததை விட பெருமளவு எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் அரசுடன் இணைந்து வருகின்றனர். கிராம மட்டத்தில் அதிகமானவர்கள் எம்முடன் இணைகின்றனர். இம்முறை தேர்தலில் நாம் பெரு வெற்றியீட்டுவோம். ஜனாதிபதி தலைமையிலான முதலாவது பிரசார கூட்டம் செப்டம்பர் 2 இல் குருணாகலையில் நடைபெறும் என்றார்.

14ஆவது நாளாக நேற்றும் போராட்டம்

தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்கக் கூடாது

தெலுங்கானாவை தனி மாநிலமாக பிரிக்கக் கூடாது, தொடர்ந்து ஐக்கிய ஆந்திராவாகவே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திரா மற்றும் ரோயல்சீமா பகுதிகளில் போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 14 ஆவது நாளாக போராட்டம் நீடித்தது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளதால் ஆந்திரா பகுதியே ஸ்தம்பித்து விட்டது. 13 மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களும் பூட்டியே கிடக்கின்றன. பஸ்களும் தொடர்ந்து இயக்கப்படவில்லை. தற்போது திருப்பதி, திருமலை இடையேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.  அதன் பிறகு நடந்த பேச்சுவர்த்தையில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. (மேலும்.....)

எகிப்தெங்கும் ஆர்ப்பாட்டம்; வன்முறை வெடிப்பு; 100 க்கும் அதிகமானவர்கள் பலி

எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி மொஹமட் முர்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்ட முகாம்களை பாரிய உயிர்ச் சேதத்திற்கு பின் பாதுகாப்பு படையினர் அகற்றியுள்ளனர். கெய்ரோவின் ரபா அல் அதவியா பள்ளிவாசலுக்கு முன்னால் இருந்த ஆர்ப்பாட்ட முகாம் மற்றும் கிஸாவின் நஹ்தா சதுக்க ஆர்ப்பாட்ட முகாம்களையே பாதுகாப்பு படை நேற்று அகற்றியது. இதில் 40 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறியபோதும் 200 க்கும் அதிகமானவர்கள் பலியானதாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இராணுவ நடவடிக்கையின்போது 200 பேரளவில் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதில் ரபா அல் அதவியாவில் 50 பேரளவும் நஹ்தா சதுக்கத்தில் 150 பேரளவும் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்.....)

ஆகஸ்ட் 14, 2013

என் மனவலையிருந்து.....

இன, மத பேதமின்றிச் செயற்படுகின்றது இலங்கை அரசு

(சாகரன்)

இலங்கையை ஆண்டுவரும் மகிந்த அரசு இன, மத பேதமின்றிச் செயற்படுகின்றது. நம்பினால் நம்புங்கள். இது உண்மையிலும் உண்மை. புலிகளால் சிறைப்பிடிகப்பட்டு முள்ளிவாய்காலில் அடைக்கப்பட்ட பொது மக்களை கொலை செய்ததில் இருந்து நேற்றுவரை நடைபெற்ற வெலிவேரிய, ரத்துபஸ்வல படுகொலை வரை இன, மத பேதமின்றிச் செயற்படுகின்து என்பது உண்மைதானே. சுத்தமான தண்ணீர் கேட்டும் பல காலமாக போராடிவரும் மக்களின் பிரச்சனைகு அடிப்படையாக அமைந்த தொழிற்சாலையை அகற்றுதல் அல்லது தண்ணீர்  மாசுபடா வண்ணம் செயற்படுவதற்கு ஆவன செய்வதற்கு பதிலாக இதற்காக போராடிய மக்களை அடக்க முள்ளிவாய்காலில் புலிகளுக்கு எதிராக போராடிய இராணுவத்தை அனுப்பியது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல.  1970 களில் ஜேவிபியின் கிளர்ச்சியை அடக்குதல் என்ற போர்வையில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி சிங்கள இளைஞர்களைக் கொன்று கங்கைகளில் வீசியதும் இதே இலங்கை அரசுதான் பின்பு 1987 களில் ஜேவிபி இற்கு எதிரான இராணுவச் செயற்பாட்டின் மூலம் ஒரு தொகை சிங்கள் இளைஞர்களைக் கொன்றதும் இதே இலங்கை அரசுதான். தமிழ் மக்கள் உரிமை கேட்டுப் போராடிய போதெல்லாம் இது பயங்கரவாதப் பிரச்சனை என்று கூறி போராளிகளையும், பொது மக்களையும் கொன்று குவித்ததும் இதே இலங்கை அரசுதான். தமிழ் மக்களின் போராட்டம் புலிகளிடம் ஏகபோகமாக மாறிய பின்பு அது பயங்கரவாதப் போரட்டமாக மாறியது என்னவோ உண்மைதான். இதன்பின்பு புலிகளும், இலங்கையை ஆண்ட அரசுகளும்; மாறி மாறி அப்பாவி மூவின மக்களையும் இன, மத வேபாடுகள் இன்றிக் கொலை செய்வதில் போட்டி போட்டன என்பது நாம் அறிந்த உண்மைகள். இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டபோது பாரிய அளவில் சிங்கள் மக்கள் தமது எதிர்ப்புக் குரலைக் காட்டவில்லை. இதற்கு ஒரு படி மேலே போய் தமிழ் மிதவாதத் தலைமைகள் சிங்கள இளைஞர்கள் கொல்லப்படும்போது அவற்றைக் காணாது மௌனமாக இருந்தனர். தற்போதும் இலங்கை இராணுவத்தின் செயற்பாட்டை இதே தமிழ் தலைமை காணாதது போல் இருக்கின்றனர். ஆனால் சுடரேத்திய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைதுகள் உட்பட அண்மைய இலங்கை அரசின் தமிழ் மக்களுக்க எதிரான செயற்பாடுகளை சிங்கள மக்கள் மத்தியில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் கண்டித்ததையும், அதற்கான போராட்டங்களை நடாத்தியும் நாம் மறந்து விடக் கூடாது. சிங்கள் மக்களின் பிரச்னைகளுக்காக தமிழ் மக்கள் குரல் கொடுக்காவிட்டால் அவர்கள் தொடர்ந்தும் எமது பிரச்சனைகளை புரிந்து கொள்ள வாய்புக்கள் குறைந்த கொண்டே செல்லும். சிங்கள் மக்களின் ஆதரவு இன்றி தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட முடியாது. எனவே சிங்கள மக்களுடன் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளவாவது தமிழ் மக்கள் சிங்கள் மக்களுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளுக்கு குரல் கொடுத்தே ஆக வேண்டும்.

வெலிவேரிய சம்பவம்

ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டம்

வெலிவேரிய தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக பொது எதிரணியினரின் சார்பில்  தற்போது ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இவ்வார்ப்பாட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயக மக்கள் முனனணியின் தலைவர் மனோ கணசேன், நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரபாகு கருணாரட்ன, புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத் மனமேந்திர, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஐக்கிய சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய, தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் அசாத் சாலி, ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களான சஜித் பிரேமதாச, திஸ்ஸ அத்தநாயக்க, கிரான் விக்கிரமரட்ன, ஹரின் பெர்னாண்டோ, மங்கள சமரவீர உட்பட எதிர்க்கட்சிகளின் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சுதந்திரத்துக்கான அரங்கம் மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கம், சட்டத்தரணிகள் சங்கம், ஊடக அமைப்புக்களின் ஒன்றியம் உட்பட ஏனைய பல அமைப்புக்களின் சார்பிலும் பிரதிநிதிகள் உட்பட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் வெலிவேரிய பகுதி மக்களும் கலந்துகொண்டனர்.

இந்திய எல்லைக்குள் நுழைந்த சீனப் படை

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் சீன இராணுவம் 30 கிலோ மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. லடாக்கில் சீனா தொடர்ந்தும் ஊடுருவி வருகிறது. இந்நிலையில் அருணாசலப் பிரதேசத்தின் அஞ்சவ் மாவட்டத்தில் சங்கலஹாம் பகுதியில் சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவு இந்தியாவுக்குள் ஊடுருவியிருக்கின்றனர். சங்கலஹாம் பகுதிக்கு உரிமை கோரி சீன இராணுவ வீரர்கள்  சுற்றி வந்ததாகவும் அவர்களை வெளியேறும்படி இந்திய இராணுவத்தினர் எச்சரித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வரை அங்கு கூடாரங்கள் அமைத்து சீன இராணுவத்தினர் தங்காத நிலையில் அவர்கள் தங்களது பகுதிக்கு இன்று திரும்பக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலை மாணவர் கொலை

விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்ந்தும் விளக்க மறியலில்

திருகோணமலை மாணவர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 12 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களின் விளக்க மறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஐந்து மாணவர்கள் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பன்னிரெண்டு விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடாத்துமாறு திருகோணமலை நீதவான் ஏ.எல். அஷ்ரா உத்தரவிட்டுள்ளார். சந்தேக நபர்களை எதிர்வரும் 26ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த ஒரு மாணவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வந்ததுடன் ஏனைய மாணவர்கள் சில பல்கலைக்கழகங்களில் கல்வித் தொடர்வதற்காக காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலிக்கொடியுடன் ஓடியவரை சர்வதேச குற்றசெயல் கிளை தேடுகிறது

ஐக்கிய இராஜியத்தில் கார்டிஃப் நகர மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடிய சந்தேகநபரை, மான்செஸ்டர் பொலிஸின் சர்வதேச குற்றச்செயல் கிளை தேடிவருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு நீதவானிடம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். சந்தேகநபரான லோகேஸ்வர்ன மணிமாறன் இன்னும் கைது செய்யப்படாது மறைந்து வாழ்வதால் விசாரணையை முடிக்க முடியவில்லை. ஆகையால், ஏற்கெனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேகநபர்களான குலதீபன் மற்றும் உதயனை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளிக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவினர் அனுமதி கோரினர். இதேவேளை, புலிக்கொடியுடன் ஓடியவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய ஜூலை மாதம் 30 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.யசோதார சடாச்சரமூர்த்தி எனும் பெயரில் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 08 ஆம் திகதி பெற்றுக்கொண்ட கடவுச்சீட்டையே பறிமுதல் செய்யுமாறு நீதவான் அன்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அவர் வருகைதந்தால் கைது செய்யுமாறு ஜுன் 15 ஆம் திகதி திங்கட்கிழமை உத்தரவிட்ட நீதவான் சிவப்பு அறிவிப்பு விடுத்துள்ளார். புலிக்கொடியுடன் மைதானத்திற்குள் ஓடி குழப்பம் விளைவித்த லோகேஸ்வரின் மணிமாரன் என்பவருக்கே இவ்வாறு சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிரான வழக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியா விரைகிறார் ஜீ.எல்.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவை கலந்துகொல்லுமாறு அழைப்பு விடுப்பதற்காகவே அவர் இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தின்போது இரு தரப்பு உறவு குறித்தும் இந்திய அரச தலைவர்களுடன் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கலந்துரையாடவுள்ளார். இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் இந்திய கலந்துகொள்ளக்கூடாது என இந்தியாவிலுள்ள சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விக்கினேஸ்வரனை வைத்து அரங்கேற்றப்படும் நாடகத்தை தோற்கடிக்க இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும் - வீரவன்ச

வடக்கில் விக்கினேஸ்வரனை வைத்துக் கொண்டு கூட்டமைப்பால் அரங்கேற்றப்படும் புதிய ஈழப்போராட்ட நாடகத்தை தோற்கடிக்கும் முக்கிய தேர்தலே இத்தேர்தலாகும். இதன்படி நாட்டின் மீது பற்றுள்ளவர்கள் இத்தேர்தலின்போது நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியலமைப்பினூடாக வெற்றிபெற நினைக்கும் ஈழப்போராட்டத்தை தோற்கடிப்பதுடன் இத்தேர்தலினூடாக நாட்டிற்காக சேவை செய்யக்கூடிய தலைவர்களை உருவாக்க வேண்டியது மக்களிடமுள்ள பாரிய பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார். மத்திய மாகாண சபை தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பள்ளிவாசல் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் திருப்தியளிக்கின்றன - ஹக்கீம்

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது ஆயுதங்களுடன் வந்த குழுவொன்றினால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தமக்கு திருப்தியளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இன்று அக்கட்சி உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டது. இதன்போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். முஸ்லிம் சமூகத்தினை நோக்கிய மதம் சார்ந்த குரோதமான செயல்களை தடுத்த நிறுத்த வேண்டும். மேலும் இச்சம்பவம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இவ்விசாரணைகள் எமக்கு திருப்தியளிக்கின்றன. இதேவேளை எமது கட்சியும் இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

இலங்கையிடம் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட இந்தியா

இந்திய அரசானது இலங்கையிடமிருந்து கடந்த 3 வருடத்தில் ஆயுதம் கொள்வனவு செய்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி இத்தகவல்களை லோக்சபாவில் வெளியிட்டுள்ளார். லோக் சபாவில் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு எழுத்து மூலமாக பதிலளித்துள்ள அவர் இந்திய ஆயுதக்கொள்வனவு தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளார். இதன்படி இந்திய முப்படைகளானது கடந்த 3 வருட காலப்பகுதியில் சுமார் 2.35 கோடி ரூபாக்களை ஆயுதக் கொள்வனவுக்கென செலவிட்டுள்ளது. ரஸ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், போலாந்து, ஸ்லோவாக்கியா, பின்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிடமிருந்தே இக்கொள்வனவை மேற்கொண்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

வெலிவேரிய சம்பவம்

நாளை எதிர்க் கட்சியின் எதிர்ப்பு அலை

வெலிவேரிய, ரத்துபஸ்வல சம்பவம் மற்றும் நாட்டில் சட்ட ஆட்சியை வலியுறுத்தி பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை நாளை கொழும்பில் நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாட்டை கண்டித்தும் நாட்டில் நல்லாட்சியை வலியுறுத்தியும் நாளை புதன்கிழமை பகல் 1 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதில் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் ஏனைய எதிர்ப்பு எதிர்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதேநேரம் எதிர்வரும் நாட்களில் நாடளாவிய ரீதியில் இப் எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கில் 650 குளங்களை புனரமைக்க ரூ. 3000 மில். ஒதுக்கீடு

யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள 650 குளங்களை துரிதமாக புனரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்தது. இதற்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் சுனில் வீரசிங்க தெரிவித்தார். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் குளங்களை புனரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் உள்ள சேதமடைந்த குளங்கள் புனரமைக்கப்படும். இதனூடாக மக்களுக்கு விவசாயத்திற்கும் ஏனைய தேவைகளுக்குமான நீர் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். செப்டம்பர் மாதம் 30 ற்கு முன்னர் குளங்களை புனரமைக்கும் நடவடிக்கைகளை நிறைவு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆஸி. பயணம்

111 பேரை மடக்கி பிடித்தது கடற்படை, 108 தமிழர்கள்; 3 சிங்களவர்கள் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக படகில் சென்ற 111 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த மூன்று சிங்களவர்களும் 108 தமிழர்களுமே அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமான முறையில் செல்ல முயற்சித்திருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கைப்பற்றப்பட்டிருக்கும் படகில் 46 ஆண்கள் 20 பெண்கள் மற்றும் 45 சிறுவர்கள் இருந்துள்ளதனையும் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் ஊர்ஜிதம் செய்தார். அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட இவர்கள், மட்டக்களப்பு, புல்மோட்டை, முல்லைத்தீவு, திருகோணமலை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனவும் ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் அவர் கூறினார். குறித்த படகு கடந்த 09ம் திகதி வெள்ளிக்கிழமை காலி துறைமுகத்திலிருந்து சுமார் 220 கிலோமீற்றர் தொலைவில் கடலில் வைத்து இலங்கை கடற்படை யினரால் முற்றுகையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்தே படகில் பயணம் செய்தவர்கள் காலிக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றுக் காலை துறைமுகத்தை வந்தடைந்தனர்.

ஆகஸ்ட் 13, 2013

ஏறுகிறது கோவில்களில் கொடி, இறங்குகிறது தமிழரின் மானமும் பகுத்தறிவும்!

பசியும், பயமும் பின் தொடரும் நிழல்களாக துரத்த அவர்கள் மரணத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள். கனத்த மழை பெய்து கரிய இருள் போர்த்திய இரவு நேரத்திலும் அவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள், குருதிப்போக்கு குறையாமல் இறுதி மூச்சை விட்டுக் கொண்டிருந்தவர்கள் மனிதத்தின் எதிரிகளிடம் போய்க் கொண்டிருந்தார்கள். காத்திருப்பது மரணம், சித்திரவதை, பாலியல் வன்முறை, பரிகாசம் என்று தெரிந்தும் அவர்கள் பிணம் தின்னும் கழுகுகளிடம் உயிர்ப்பிச்சை கேட்டு போய்க்கொண்டிருந்தார்கள். (மேலும்.....)

ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் 16 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புகின்றவர்களில் 16 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக மாத்தறை பிரிவு குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். பிரதான முகவரான திருகோணமலையைச்சேர்ந்த வர்த்தகர் உட்பட கடற்படையை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில், கடற்படையின் சமிக்ஞை பிரிவு ஆலோசகர், சமிக்ஞை பிரிவில் கடமையாற்றுவோர் இருவர், ஊழியர்களும் அடங்குவதாக அந்த பிரிவினர் அறிவித்துள்ளனர். இவர்கள் வடக்கு கிழக்கை சேர்ந்தவர்களையே சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைத்துவருபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கந்தளாய், களுவாஞ்சிகுடி மற்றும் கல்குடா ஆகிய இடங்களில் வைத்தே இவர்களை கைது செய்துள்ளதாக அப்பிரிவினர் அறிவித்துள்ளனர். மாத்தறையிலிருந்து சென்ற விசேட குழுவினரே கடந்த 11 நாட்களாக மாறுவேடத்தில் இருநது இவர்களை கைது செய்ததாக அந்த பிரிவினர் அறிவித்துள்ளனர். இந்த குழுவினர் புலி சந்தேகநபர்களையும் கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவுஸ்திரேயாவுக்கு சட்டவிரோதமாக செல்வோரிடமிருந்து பெருந்தொகையான பணத்தை அறவிட்டுக்கொண்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

கனடாவில்

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்!

கனடியத் தமிழ் அரசியலில் வழமை போலவே வியாபார சக்திகளின் ஆதிக்கம் தொடர்கின்றது. சனநாயகத்தின் ஆணி வேரான தேர்தல் தொட்டு, சமுகத்தை சீர்திருத்த வேண்டிய புனித ஆலயங்கள் வரை தமிழ்த் தேசியத்தின் பெயரால் வியாபாரங்கள் தொடர்ந்து வருவது சமுக நீதிக்கு உகந்ததல்ல. தமிழ்ச் சமுகத்தின் விழுமியங்கள் பாதுகாக்கப் படவேண்டும் என்ற பெயரில் உணர்வு பூர்வமான அரசியலுக்கு இட்டுச் செல்லப்பட்ட காலம் தொட்டு ஓர் தெளிவற்ற  அரசியல் தளமின்றி ஏற்படுத்தப்பட்ட உணர்வு பூர்வமான அரசியலை மெல்ல வியாபார வழிக்குத்  திருப்பியதில்  புலம் பெயர்ந்த சமுகத்தில் முளை விட்ட சில வர்த்தக அன்பர்களுக்கு வெற்றி என்பது மட்டும் தெளிவாகின்றது. இவ்வாறான அரசியல் வியாபாரத்தில் தற்போது "தமிழ்த் தேசிய உணர்வாளர்கள்" எனத்  தம்மைக் காட்டிக்  கொள்கின்ற வியாபாரிகளுக்கிடையே  உள்ள வியாபாரப் போட்டியில் தமிழ் மக்களுக்கான தொலைக் காட்சி மற்றும் வானொலிச்  சேவை யொன்று சிக்குண்டு தவிப்பது கேலிக்கிடமாகின்றது. கனடியத் தமிழர்கள் அமைதி காப்பது இந்த வியாபாரத் தமிழ்த் தேசியக் கும்பலுக்கு கொண்டாட்டமாய் அமைகின்றது. நாம் பணத்தை மக்களிடம் இருந்து பெறுவதற்காக "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்று கீதம் இசைப்பது சரியா? என தமிழ்த் தேசிய வியாபாரிகளே சற்றுச் சிந்தியுங்கள்!

செப்டெம்பரில் சூறாவளிப் பிரசாரத்தை ஆரம்பிக்கவுள்ள பிரதான கட்சிகள்

வட மாகாண சபை வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களுக்கான பிரதான பிரசாரப் பணிகளை ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திலேயே ஆரம்பிக்கவுள்ளன. குறிப்பாக வடக்குத் தேர்தல் களத்தில் பிரசாரப் பணிகள் செப்டெம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் இருந்தே சூடுபிடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கைப் பொறுத்தவரை பிரதானமாக களத்தில் இறங்கியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியனவும் செப்டெம்பர் மாதத்திலேயே வடக்கில் பிரதான பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் செப்டெம்பர் மாதத்தில் பிரதான பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளது. அத்துடன் மக்கள் சந்திப்புக்களையும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட அனைத்து மாவட்டடங்களிலும் நடத்தவுள்ளது. இதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் பிரதான பிரசாரக் கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.மேலும் ஐக்கிய தேசிய கட்சியும் வடக்கின் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் வடக்கில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தார். அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியும் வடக்கில் பல்வேறு இடங்களிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

சர்ச்சைக்குரிய தொழிற்சாலையினை இடமாற்ற உத்தரவு

வெலிவேரிய பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலையினை இடமாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் புதிதாக அமைக்கப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் முதலீட்டு சபையின் வலயத்திற்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை மட்டும் முதன்மைப்படுத்தி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களை மட்டும் முதன்மைப்படுத்தி தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். வரலாறு தொட்டே இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழ்வதால் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடியதான தீர்வொன்றே அவசியமானது எனவும் அமைச்சர் தெரிவித்தார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் 8 வது நினைவு தின நிகழ்வுகளில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், விடுதலைப் புலிகள் இயக்கத்தை 34 நாடுகள் தடை செய்வதற்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர் லக்ஷ்மன் கதிர்காமர் எனவும் இலங்கையின் உண்மை நிலையை சர்வதேசத்திற்குத் தெளிவுபடுத்தியவர் அவரே எனவும் தெரிவித்தார். சிறுவர்களை படைகளில் சேர்ப்பது தொடர்பில் உலகில், கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள அவர், இதனைத் தடுக்கும் செயற்பாடுகளுக்கு சர்வதேச ரீதியில் முன்னின்று செயற்வட்டவராவர். தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது என்ற போர்வையில் புலிகள் பேச்சுவார்த்தைகளில் இதய சுத்தியுடன் பங்குபற்றவில்லை. வேறு உள்நோக்கங்களை வைத்துக் கொண்டு அரசாங்கத்தை ஏமாற்றுவதற்காகவே வெறுமனே பேச்சுவார்த்தைகளில் முகங்களைக் காட்டினர்.

ஆகஸ்ட் 12, 2013

என் மனவலையிருந்து.....

பிழைக்க கற்றுக்கொண்டுவிட்ட விக்னேஸ்வரன்

(சாகரன்)

ஒரு பக்கம் 'மூன்றாம் கட்டப் போர் ஆரம்பம்' என்று அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக இருந்த காலத்து மக்களை உசுப் பேத்தும் பேச்சுக்கள், மறு புறத்தில் ஆயுததாரிகளுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதை நசூக்காக சொல்லிக் கொண்டு அந்த ஆதரவு எமக்கு இருப்பதை சர்வ தேசத்திற்கு நிரூபிக்க தங்களுக்கு வாக்களியுமங்கள் என்ற நாற்காலிக் கனவுகளை வெளிப்படுத்தும் தந்திரோபாயம் என்று ஜமாய்த்துத் தள்ளுகின்றார் விக்னேஸ்வரன். சும்மா போங்கள் எங்களுக்கே புல்லரிக்குது என்றால் சாமான்ய தமிழ் மகனைக் கேட்கவா வேண்டும். இதிலும் சிறப்பாக நித்திரையால் எழும்பி ஒன்றும் யோசிக்காமல் 40 வருடங்களாக வீட்டுக்கு நேரே புள்ளடி போட்டுவரும் அப்பாவித் யாழ்ப்பாணத் தமிழன் எம்மாத்திரம். சரியான அப்புக்காத்து அரசியலை நடாத்த சுமத்திரனுக்கு துணையாக சம்மந்தர் ஒருவரை களத்தில் இறக்கிவிட்டார். பின்பு என்ன, இப்படியே போய்கொண்டு இருந்தால் இன்னும் ஒரு 30 வருடச் சுழற்சியில் (போகின்ற போக்கைப் பார்த்தால் 30 வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை போல் இருக்கின்றது) கிழக்கில் ஒரு தமிழ் அமைச்சரும் இல்லாமல் ஆட்சி அமைந்ததைப்போல் வடக்கிலும் வேணும் என்றார் ஒரு தமிழ் அமைச்சருடன் மட்டும் ஆட்சியை அமைக்கவேண்டி சூழலை இன்னும் ஒரு முள்ளிவாய்கால் நிகழ்வுடன் நடத்திவிடுவார் விக்னேஸ்வரன் என்றே தோன்றுகின்றது. என்ன ஒன்று தற்போது 70 வயதில் இருக்கும் விக்னேஸ்வரனுக்கு பதிலாக சுரேஸ் போன்ற பச்சோந்தி ஒன்று தொடர்ந்து இதனை நடத்தி செல்லும் நிலைமைகள் சிலவேளைகளில் எற்படலாம்....?. இதற்காகத்தான் இவர்கள் ஒற்றைக்காலில் நிற்கின்றனர் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கான மாற்றுத் தலைமையைக் கொடுக்க ஜனநாயக, முற்போக்கு சக்திகள் முன்வரவேண்டும். இதற்கான வேலைத் திட்டங்களை அவர்கள் முன்னெடுக்க வேண்டும். அதுவரை மகிந்த சகோதரைய பொறுத்திருப்பாரோ தெரியாது. விக்னேஸ்வரன் வகையறாக்களின் இருப்பை உறுதி செய்வதே இலங்கையை ஆண்டுவரும் அரசுகளே. இதன் ஊடாகவே தமது இருப்பையும் இவர்கள் உறுதி செய்துகொள்கின்றனர் என்பதை சிங்கள் மக்கள் புரிந்து கொள்வதற்கு முன்பே தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டும் ஒரே சமயத்தில் நடப்பதற்கான சாத்தியப்பாடுகள் சற்று குறைவாகத்தான் எப்போதும் போல் இருக்கின்றது. (ஆகஸ்ட் 12, 2013)

நல்லூர்க் கந்தனின் கொடியேற்றம் இன்று

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய கொடியேற்ற நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது. அந்தண குருமார்களினால் வேத மந்திரங்கள் ஒலிக்க முருக பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் பக்திப்பரவசமாக கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அதிக எண்ணிக்கையான முருக பக்தர்கள் கலந்து கொண்டதுடன் ஆலய சுற்றாடலில் அமைந்துள்ள மடங்களில் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆலய பாதுகாப்புக் கடமையில் பொலிசார், சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் தொண்டர்கள், சாரணர்கள் மற்றும் யாழ் மாநகரசபை ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் பல எண்ணிக்கையான முருக பக்தர்கள் கொடி ஏற்ற நிகழ்வையடுத்து அங்கப்பிரதட்சணையில் ஈடுபட்டனர். நல்லூர்க் கந்தனின் உற்சவத்தில் செப்டெம்பர் மாதம் 3ஆம் திகதி சப்பறத்திருவிழாவும் மறுநாள் தேர்த்திருவிழாவும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி தீர்த்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.

த.தே. கூ. இனவாதத்தை கைவிட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படவேண்டும் -  திஸ்ஸ விதாரண

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குத் தேர்தல் விடயத்தில் இனவாத பாதையில் பயணிக்காமல் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும். இனவாத செயற்பாட்டிலிருந்து கூட்டமைப்பு மீளவேண்டும் என்று லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். வடக்குத் தேர்தல் விடயம் குறித்தும் பிரசார செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் கூறியதாவது, வடக்குத் தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவமிக்கதாகும். வடக்கில் பல தசாப்தங்களின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனினும் வடக்குத் தேர்தல் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை கையில் எடுத்து செயற்படுவதாக தெரிகின்றது. இது ஆரோக்கியமான விடயமாக அமையாது. வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக கூட்டமைப்பு இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத செயற்பாடுகளை விடுத்து அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்து செயற்படவேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலைமையில் கூட்டமைப்பு இனவாத இடத்தில் இருப்பதாகவே தெரிகின்றது. எனவே அதனைவிட்டு விலகி கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும்.

நீர்வை பொன்னையன் அவர்களின் “நினைவுகள் அழிவதில்லை”

(சிறுகதைத் தொகுதி)

ஆய்வரங்கு

தலைமை: வ. இராசரத்தினம்

நெறிப்படுத்தல்: ஆ. தேவகௌரி

இடம்: கேட்போர் கூடம்

பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

58;;; தர்மாராம வீதி கொழும்பு – 06

காலம்: 18 ஓகஸ்ட் 2013 - ஞாயிற்றுக்கிழமை, நேரம்: மாலை 4.30 மணி

இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம்
18–06-1  கொலிங்வுட் பிளேஸ்
கொழும்பு – 06
E-Mail: kailashpath@yahoo.com

மீண்டும் 1990, கிளிநொச்சியில் புகையிரதம்

இருபத்தி மூன்று வருடங்களிற்குப் பின்னர் இன்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி புகையிரத நிலையத்திற்கு இரண்டு புகையிரதங்கள் வருகை தந்துள்ளன. யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டு ஜூலை மாத்துடன் கிளிநொச்சிக்கான புகையிரதச் சேவை துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புகையிரதப்பாதை புனரமைப்புச் செய்யப்பட்டு இன்றைய தினம் இரண்டு புகையிரதங்கள் கிளிநொச்சியை வந்தடைந்தன. வடக்கு கிழக்கு இணைந்த நிலையில் அமைக்கப்பட்ட மாகாண சபை அரசு காலத்தில் யாழ்ப்பாணம் வரைக்கும் நடைபெற்ற புகையிரத சேவை இதற்கு பின்னரான புலிகள் மட்டும் தமிழ் பிரதேசங்களில் ஆயுததாரிகளா செயற்பட்டபோது இப்புகையிரத சேவை புலிகளால் இல்லாமல் செய்யப்பட்டன என்பது இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது

அவுஸ்திரேலியாவுக்கு ஆட் சேர்க்கும் விளையாட்டுத்துறை (புலிப்)பாப்ப !

2009ம் ஆண்டு காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் பாரிய பின்னடைவைச் சந்தித்தவேளை, இயக்கத்தில் இருந்து பலர் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றார்கள். இதில் புலிகள் தரப்பில் இருந்து முக்கியமான சிலர் இலங்கை அரசுடன் இணைந்தார்கள். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், தயா மாஸ்டர், ஜோர் மாஸ்டர் மற்றும் விளையாட்டுத் துறை பொறுப்பாளர் பாப்பா ஆகும். ஆரம்ப காலங்களில் பாப்பா பலரை காட்டிக்கொடுத்து வந்தார். வெளிநாடுகளில் இருந்துவரும் தமிழர்கள் பலரை இவர் பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து காட்டிக்கொடுத்தார். அதுமட்டுமல்லாது ஊரில் உள்ள பலரை இவர் இராணுவத்திற்கு அடையாளம் காட்டினார். தற்போது உள்ள சூழ் நிலையில் இது அவசியமற்றதாகியுள்ளது. அதனால் இவரை இலங்கை இராணுவம் வேறு விதத்தில் பயன்படுத்தி வருகிறது. (மேலும்.....)

மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் சி.வி.விக்கினேஸவரன்

'தமிழ் மக்களாகிய நாம், கடந்த 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக முறைப்படி எமது உரிமைகளுக்காக போராடி வந்தோம். அது தோற்றுப்போனதை அடுத்து ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் தோற்றுப்போன நிலையில், இப்போது எமது மூன்றாம் கட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்' தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 'ஆயுதப் போராட்டத்தினால் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளதால் எமது மூன்றாம்கட்டப் போராட்டம் மீண்டும் ஜனநாயக முறைப்படி, அதுவும் சர்வதேச நாடுகளின் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் தொடரப்போகிறது' என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்.....)

ஆடு நனையுது என்று ஓநாய் அழுததாம்...?

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இன்று வெட்டவெளிச்சமாகியுள்ளது - அமெரிக்கா

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தனது கவலையை தெரிவித்துள்ள அமெரிக்கா, இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் இச் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. சுவர்ண சைத்திய வீதியிலுள்ள முஸ்லிம் பள்ளிவாசல் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைள் இத்தாக்குதல் சம்பவம் மூலம் வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இவ்வாறு மதஸ்தலங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். மேலும் இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு இச்சம்பவம் தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு அமைதியான முறையில் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

வடக்கு மாகாண சபை தேர்தல் கூட்டமைப்புக்கு சவால் நிறைந்ததாக அமையப்பெறும் - சிவநேசதுரை

வடக்கு மாகாண சபை தேர்தல் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பிற்கு சவால் நிறைந்த தேர்­த­லாக அமை­யலாம். கொள்கை ரீதி­யாக தோல்வி கண்­ட­வர்­க­ளா­கவும் கோட்டை விட்­ட­வர்­க­ளா­கவும் உலா வரு­வதால் அவர்­க­ளுக்கு இது சவா­லான கால­மா­கவே அமையும் என கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்­சரும் கிழக்கு மாகண சபை உறுப்­பி­ன­ரு­மான சிவ­நே­ச­துரை சந்­தி­ர­காந்தன் தெரி­வித்தார். எம் வசம் இருந்த கிழக்கு மாகாண சபையை பிரித்­த­வர்கள் யார்?மாகாண சபை ஆட்சி முறை வேண்டாம் என்று உத­றி­ய­வர்கள் அவற்­றினை வேண்டும் என இன்று நிற்­பது ஏன்? இவர்கள் கோரிய தமி­ழீழம் எங்கே? சமஷ்டி ஆட்சி எங்கே? வட கிழக்கு இணைந்த ஆட்சி எங்கே?அனைத்து கொள்­கை­க­ளிலும் கோட்டை விட்டு இன்று கொள்­கைகள் அற்­ற­வர்­க­ளாக திணறி நிற்­கின்­றனர்.பதவி ஆசை, பண ஆசை பிடித்­த­வர்கள் எங்கே இருக்­கின்­றார்­களோ அங்கு எவற்­றி­னையும் சாதிக்க முடி­யாது. (மேலும்.....)

40 ஆண்டு வனவாசம்

தந்தை - மகன் மீட்பு

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாம் போரின் போது காணாமல் போன ஒரு தந்தையும் அவரது மகனும், அங்கு ஒரு காட்டுப் பிரதேசத்தில் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 82 வயதாகும் ஹோ வான் தான் மற்றும் அவரது மகன் ஹோ வான் லாங் (41) ஆகிய இருவரும் வியட்நாம் போரின் போது ஒரு குண்டுத் தாக்குதலில் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டதை அடுத்து தாங்கள் வசித்து வந்த கிராமத்தை விட்டு வெளியே தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது. வியட்நாமின் மத்திய பகுதியில் இருக்கும் குவாங் இங்காய் மாகாணத்தில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் அப்பகுதிவாசிகள் சுள்ளி சேகரிக்கச் சென்றிருந்த போது இவர்கள் இருவரையும் கண்டனர். பழம் மற்றும் கிழங்குகளை சாப்பிட்டு இந்த இருவரும் உயிருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் சோளமும் பயிரிட்டனராம். தரை மட்டத்திலிருந்து சுமார் ஐந்து மீற்றர் உயரத்தில் உயர மரக்குடிசையைக் கட்டி வெளியுலகத் தொடர்பே இல்லாமல் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். தந்தைக்கு சிறுபான்மை மொழியான கோர் மொழி கொஞ்சம் பேசத் தெரியும். மகனுக்கு அதில் ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேச முடியும்.

ஆகஸ்ட் 11, 2013

வீரவன்சவும் விக்னேஸ்வரனும் இந்தியாவும்

வட மாகாண சபை தேர்தலுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமது முதலமைச்சர் வேட்பாளராக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை நியமித்ததையிட்டு விளக்கமளிக்கும் நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள் மற்றும் வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச, சில விசித்திரமான கருத்துக்களை முன்வைத்துள்ளார். இந்திய நெருக்குதலின் காரணமாகவே கூட்டமைப்பு தமது மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராஜாவை ஒதுக்கித் தள்ளிவிட்டு நீதியரசர் விக்னேஸ்வரனை பிரதம வேட்பாளராக தெரிவு செய்துள்ளது என்பது அவற்றில் ஒன்றாகும். ஆயுத பலத்தினால் வென்றெடுக்கத் தவறிய தமிழீழத்தை சட்ட நுணுக்கங்களை பாவித்து வென்றெடுப்பதற்காகவே கூட்டமைப்பானது முன்னாள் நீதியரசரை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது என்பது மற்றொரு வாதமாகும். (மேலும்.....)

கிராண்ட்பாஸ் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிவரையிலேயே இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கிராண்ட்பாஸ்,  ஸ்வர்ணசித்திய வீதியில் அமைந்துள்ள பள்ளிவாயலை உடைக்க முற்பட்ட சம்பவம் தொடர்பில் முறுகல்நிலை ஏற்பட்டதையடுத்தை அடுத்தே இந்த ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதியில் அமைதியை தோற்றுவிக்கும் வகையிலேயே பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கான பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவித்தார்.

நாவற்குழி விஹாரை மீது கைக்குண்டுவீச்சு

யாழ்ப்பாணம், நாவற்குழியில் பெரும்பான்மையின மக்கள் வாழ்கின்ற இடத்திலுள்ள விஹாரையொன்றினுடைய தியானமண்டபத்தின்  மீது இனந்தெரியாத நபர்கள் இன்றிரவு கைக்குண்டுவீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காரில் வந்த இனந்தெரியாத நபர்களே கைக்குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புலம்பெயர் தமிழரிடம் பாரிய நிதி சேகரிப்பு மோசடி முயற்சியில் TNA

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கனடா மற்றும் அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டுள்ளமை குறித்து வடபகுதி மக்களும், தமிழ்க் கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் கனடா சென்று அங்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணத்திற்கு இதுவரை என்ன நடந்தது எனத் தெரியாத நிலையில் இவ்வருடமும் இவர்கள் அங்கு நிதி சேகரிக்கச் சென்றிருப்பது வடக்கில் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. கனடா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்குப் பகுதிகளில் அரசாங்கம் மேற்கொள்ளும் பாரிய அபிவிருத்தி நடவடி க்கைகள் எதனையும் கூறாது மூடிமறைத்து இங்கு மக்கள் கஷ்டப்படுவதாகக் கூறி சேகரிக்கப்படும் பணத்திற்கு என்ன நடக்கிறது எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த காலங்களில் இவ்வாறு சேகரிக்கப்பட்ட பெருந்தொகைப் பணம் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவற்றிலிருந்து ஒரு சதம் கூட தமிழ் மக்களுக்காகச் செலவிடப்படவில்லை எனவும் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். அவுஸ்திரேலியாவிலிருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் சிலரால் சேகரித்து அனுப்பி வைக்கப்பட்ட சுமார் எண்பது இலட்ச ரூபா பணத்திற்கு என்ன நடந்தது என்பது இதுவரை தெரியாமலுள்ளதாகக் குறிப்பிட்ட தமிழ்க் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அப்பணம் மாவை சேனாதிராஜா எம்.பி.யின் பெயரிலேயே வைப்பிலிடப் பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

சொந்தத் தேவைகளுக்கு அரசின் பின் கதவை தட்டும் TNA தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளையும் இவ்வாறே தீர்க்கலாமே - டக்ளஸ்

சொந்த சலுகைகளை பெறுவதற்காக அரசின் பின் கதவு தட்டி, இணக்கமாகப் பேசி வெற்றிபெறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களின் பிரச்சினைகளையும் அதே வழிமுறையில் பெறுவதற்கு ஏன் முன்வருவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்றும், வெறுமனே அரசியல் கோசம் அல்ல. தேர்தல் காலத்தில் மட்டும் கோசம் எழுப்பி விட்டு, தேர்தல் முடிந்தவுடன் காற்றோடு பறந்து போகும் தேர்தல் கால வாக்குறுதியும் அல்ல. எமது மக்களின் நிலங்கள் மக்களுக்கு சொந்தம் என்றும், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த எமது மக்களின் நிலங்களை எமது ஆக்கபூர்வ இணக்க அரசியல் வழிமுறை மூலம் அரசுடனும், படைத் தரப்புடனும் பேசி நாமே தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுங்கள் - ராஜித

எமது கடற்பிரதேசத்தில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கடற்படையினருக்கு அமைச்சர் ராஜித சேனாரத்தன உத்திரவிட்டுள்ளார். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்த அமைச்சர், மாதகல் பகுதிக்குச் சென்று அங்குள்ள மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போது, குறித்த பகுதியில் இந்திய இழுவைப் படகுகள் மற்றும் சாதாரண படகுகளில் பெருமளவான இந்திய மீனவர்கள் வந்து தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு தொழிலில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையை கடற்படையினரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என்று மாதகல் கடற்தொழிலாளர்கள் - அமைச்சரிடம் தெரிவித்தனர். இது தொடர்பில் குறித்த பிரதேச கடற்படை அதிகாரியை அழைத்த அமைச்சர், எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று பணிப்புரை விடுத்தார். இவ்வாறு கைது செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் மட்டுமே எம்மால் கைது செய்யமுடியும் என்று கடற்படை அதிகாரி தெரிவிக்க, இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் நான் பேசிக்கொள்கிறேன், கடற்தொழில் சார்ந்த அமைச்சராக நான் இருக்கிறபடியால் இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டிய தேவை எனக்கும் இருக்கிறது.

ஆகஸ்ட் 10, 2013

போராளிகள் கண்காணிக்கப்படுவதற்கு புலம்பெயர் தமிழர்களே பொறுப்பு - ஈ.பி.டி.பி

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் கண்காணிக்கப்படுவதற்கு வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்களே காரணம் என்று ஈ.பி.டி.பி கட்சியின் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் சிவன் சிவகுமார் தெரிவித்தார். வட மாகாணசபையை அரச தரப்பினர் கைப்பற்றினால் சிங்கள குடியேற்றங்கள் தள்ளி வைக்கப்படும் என்பதுடன் பொலிஸ் காணி அதிகாரங்களையும் எடுத்துக்கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை ஆதரித்து நிற்கும் கட்சிகளை மக்கள் ஆதரித்தால் மக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையும் சந்தர்ப்பம் உள்ளது. ஏனெனில் வன்னியில் தான் யுத்தத்தின் கடைசி கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்று வன்னிப்பரதேசம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது. இதனை கட்டியெழுப்பவும் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் வேண்டுமாயிருந்தால் அரசாங்கத்துடன் இணைந்த கட்சிகளாலேயே அது சாத்தியமாகும். வேறு யாராலும் அது முடியாத காரியம் என்றே நாம் நம்புகின்றோம். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கைகளில் மாகாணசபை செல்லுமாக இருந்தால் தற்போது அவர்களது ஆளுகைக்குட்பட்ட பிரதேசசபை, நகரசைபகள் போன்றே எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லாது மாகாணசபையும் காணப்படும். இவ் மாகாணசபை ஈ.பி.டி.பி யின் கையில் கிடைக்குமாயின் மக்களுக்கான நல்லதொரு எதிர்காலம் அமையும் என்பது உண்மையான நிலையாகும்.

வடக்குத் தேர்தலில் கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும் -  ஹக்கீம்

வடக்கு உட்பட மூன்று மாகாணசபைகளுக்குமான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதனை வைத்து கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான குள்ளநரிகளின் தந்திரத்திற்கு அஞ்சுகின்ற ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்காது எமது கட்சியின் ஒற்றுமையை விலைபேசி மாற்றுத்தரப்பிற்கு அங்கத்தவர்களை தாரைவார்த்துக்கொடுக்கின்ற சில சகுனிவேலைகள் கட்சிக்குள்ளேயே இடம்பெறுகின்றன என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருக்குமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். வடக்கைப் பொறுத்தமட்டில் இந்தத்தேதலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதிக பெரும்பான்மையை பெறும். அந்த அடிப்படையில் நாம் தனித்து போடியிடுவதால் பெரிய அரசியல் சாகசங்களைச் செய்யப்போவதில்லை. எமது முடிவினால் பாரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படாது. ஆனாலும், முஸ்லிம் காங்கிரஸை அரச தரப்பில் இணைத்துக்கொண்டு எங்கள் முதுகில் சவாரி செய்து தங்களுடைய உறுப்பினர்களை அதிகரிக்க அரசதரப்பு முஸ்லிம் அமைச்சர் ஒருவர் முயற்சித்தார். அதற்கு உடந்தையாக அரச தரப்பில் அபிவிருத்தி அமைச்சர் ஒருவரும் ஒத்தாசை வழங்கினார். இவை அனைத்தும் எங்களை பலவீனப்படுத்துவதற்காஅன முயற்சியின் அங்கமாகத்தான் அரங்கேறுகின்றன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வெளிநாட்டுக்கு செல்லவிருந்த 34 பேர் கைது

வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் இருந்ததாக கூறப்படும் 34 பேர் ராகம - தெல்பே - குருகுலாவ பகுதியில், ஹோட்டலொன்றில் தங்கியிருந்தபோது நேற்றிரவு மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 3 பெண்களும், 21 ஆண்களும் 4 சிறுவர்களும் 6 சிறுமிகளும் உள்ளடங்குவதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் யாழ்ப்பாணம் பிரதேசததை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களை கடல் மாரக்கமாக அனுப்புவதற்கு அழைத்து வந்ததாக கூறப்படும் இருவரையும் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படத்தப்பட்டுள்ள குறித்த நபர்களை நீதி மன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற இலங்கை அகதிகள் 49 பேர் இந்தியா, நாகை மாவட்டத்தின் வேளாங்கண்ணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 08, 2013

என் மனவலையிலிருந்து.....

சரியான தலைமை அற்ற எந்த ஆட்சி மாற்றமும் நிலைத்து நீடிக்கப் போவதில்லை

(சாகரன்)

எகிப்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் குழப்பங்கள் ஒன்றை கூறி நிற்கின்றது. சரியான தலைமை அற்ற எந்த ஆட்சி மாற்றமும் நிலைத்து நீடிக்கப்போவது இல்லை என்பதுதான். துனீஷியாவில் ஆரம்பித்த இந்தப் போராட்டப் பொறி லிபியாவரை பாய்து சென்றது. இவ் மேற்கு ஆபிரிக்க நாடுகளின் முன்னைய ஆட்சியாளர்களிடம் மக்கள் விரோத செயற்பாடுகள் இருந்தன. இதனால் மக்கள் அரசுகளுக்கு எதிராக போராடத்தயாராக இருந்தனர் என்பதுவும் உண்மைதான். ஆனால் இவ் நாடுகளில் நடைபெற்ற போராட்டங்களில் எல்லாம் ஒரு சரியான முற்போக்கு தலைமை உருவாக்கப்பட்டதா? இவற்றின் தலைமையில் போராட்டம் நடைபெற்றதா என்றால் இல்லை என்பதே பதில். இவ் நாடுகளில் போராடத் தயாராக இருந்த மக்கள் தமக்கிடையே ஒரு தலைமையைக் கட்டியமைக்க விடாமல் அவ் நாடுகளுக்கு புறம்பாக அமெரிக்க சார்ப்புச் சக்திகள் வழங்கிய பாரிய ஆயுத, பொருளாதார, இராஜதந்திர ஆதரவுக்களை ஒழுங்கமைக்கப்படாத உள்நாட்டு கிளச்சிக் குழுக்கள் பெறு;றுக் கொண்டன. இவை அவ்அவ் நாடுகளில் ஆட்சியில் இருந்த ஆட்சித் தலைவர்களை கொலை செய்யும் அளவிற்வு வெறியூட்டப்பட்டு அத்தலைவர்கள் கொல்லவும் பட்டனர். இதன் மூலம் உள்ளுரில் மக்களிடையே ஒரு தீராத ஆயுதக் கிளிர்ச்சி நடைபெற்றன, நடைபெற்று வருகின்றன. இதவே அமெரிக்க நேசஅணிகளின் எதிர்பார்ப்பு ஆகும். ஒரு உள்நாட்டுப் போரை உருவாக்கி இருக்கும் இடைவெளியில் அவ் நாட்டு வழங்களை உறுஞ்சி எடுத்தல்(சிறப்பாக எண்ணை வழங்களை) முடியுமாயின் தமது பொம் அரசுகளை நிறுவுதல். இதுவே ஈராக்கில் ஆரம்பித்து இன்று சிரிய, ஈரான் போன்ற நாடுகள் வரையிலான முயற்சிகள் ஆகும். இதில் நாம் ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் இலங்கையை ஆண்டு வரும் அரசுகள் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்க மறுப்பது உண்மைதான். இதற்காக தமிழ் மக்கள் போராடத் தயார் நிலையில் பல்வேறு காகட்டங்களில் இருந்தார்கள். போராடினார்கள், இனியும் போராடுவார்கள். ஆனால் இதற்கான தலைமைகள் சரியான சக்திகளிடம் இருந்ததா என்பதே கேள்விக்குறி. இதுவே தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் இதுவரை வெற்றியடையாததற்கு காரணம் ஆகும். இனிவரும் வடமாகாணத் தேர்தலிலும் தலைமையை சரியான சக்திகளிடம் மக்கள் வாக்கு மூலம் வழங்காமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கினால் வடக்கு, கிழக்கில் நாம் ஒரு எகிப்தைதான் காண முடியும். சரியான தலைமையிலான ஆட்சி மாற்றம் நிலைத்த மக்கள் ஆட்சியைத் தரும் என்பதற்கு பல தென், மத்திய அமெரிக்க நாடுகள் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருக்கின்றன. இவற்றிடம் இருந்து பாடங்கள் கற்றுக்கொள்வோம். (ஆகஸ்ட் 08, 2013)

தாயகம் என்ற கோட்பாட்டு இல்லை - அரசாங்கம்

காலனித்துவ காலத்திலிருந்து தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மாகாணங்களின் எல்லைகள்  வரையறுக்கப்படவில்லை  என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விஜத்த பேருகொடவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், கிழக்கு,வடக்கு,மத்திய மற்றும் மேற்கு மாகாணங்கள் 1833 இல் உருவாக்கப்பட்டன. வடமேல் மாகாணம் 1845 இலும் வடமத்திய மாகாணம் 1873 இலும் ஊவா மாகாணம் 1886 இலும் சப்ரகமுவ மாகாணம் 1889 இலும் உருவாக்கப்பட்டன. மேலும்,1988 ஆம் ஆண்டு செப்டெம்பர் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இணைந்த வடக்கு-கிழக்கு மாகாணம் அமைந்தது. பின்னர் 2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் அவை வடக்கு, கிழக்கு மாகாணங்களாக பிரிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

சீமானின் திருமணச் செய்திபற்றி ஒரு பத்திரிகை வாசகர் கருத்து...

எனக்குத் தெரிந்த வரை, சீமான் தேவர், காளிமுத்துவும் தேவர். சீமான் கிறிஸ்துவர், காளிமுத்துவும் கிறிஸ்துவர். எல்லா ஜாதி மதம் பார்த்துத் தான் திருமணம் பண்ணியிருக்கிறார். இலங்கையிலோ இல்லை இந்திய அகதி முகாமிலோ இருக்கும் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு கூட தகுதி இல்லையா. ஈழம் பெற்றுத் தருபவர் ஈழத் தமிழச்சியை மணந்தால் , ”'ஆணும் பெண்ணும் இணைந்துதான் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் “ என்பது ஆணித்தர உண்மையாக இருந்திருக்குமே. ஈழப் பிரச்சனையில் உறவாடிக் கெடுப்பவர்களே அதிகம். ஈழத் தமிழர்களே, உங்கள் பிரச்சனைக்கு தீர்வு உங்களிடமிருந்தே பிறக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள். இந்த மாதிரி ஆட்களுக்கு நீங்கள் பணமளிப்பது காங்கிரஸை கருவறுக்க உதவும் என்று நினைத்து ஏமாறாதீர்கள். - Manithan

ஊடக அறிக்கை!

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம்! இணக்க வழிமுறையில் தொடர்ந்தும் பெற்றெடுப்போம்.

எமது மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் என்றும், வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த எமது மக்களின் நிலங்களை எமது ஆக்க பூர்வ இணக்க அரசியல் வழிமுறை மூலம் அரசுடனும், படைத்தரப்புடனும் பேசி நாமே தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்போம் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

தோழர் குமரனின் (வி. பொன்னுத்துரை) நினைவுகளை பகிர்தல் நிகழ்வு!

மறைந்த தோழர் குமரன் (வி. பொன்னுத்துரை) அரம்ப காலங்களில் இலங்கை கம்யூனிச கட்சி; (மாஸ்கோ பிரிவு) செந்தமிழர் இயக்கம் காந்தீயம் ஆகிய அமைப்புக்களில் செயற்பட்டவராகவும் பின்னர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் அரம்ப கால உறுப்பினராகவும் அதன் மத்திய குழுவிலும் பங்காற்றியவராவார். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தில் நிகழ்ந்த உட்கட்சி போராட்டத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்து தளமாநாட்டை நடத்துவதற்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர். அன்னாரின் நினைவுகளை பகிரும் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
காலம் : 18-08-2013 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணி

இடம் : GTA SQUARE MALL

2nd Floor

5215 FINCH AVE , SCARBOROUGH ONT, M1S OC2, CANADA

சீலன் : 416 804 8905
திலீபன் : 647 883 8859
போத்தார்: 514 827 8392

கரையோர பிரதேசங்களில் படையினர் ரோந்து

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற் படையினர் ஆகியோர் இணைந்த ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் இந்த ரோந்து நடவடிக்கைள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியாவிற்கு செல்பவர்கள் தொடர்பில் அவதானிப்பதற்காகவே இந்த ரோந்து நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையோரங்களிலுள்ள விடுதிகளில் தங்குபவர்கள், நடமாடுபவர்கள், வெளிப் பிரதேசங்களில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்து கடற்கரை ஓரங்களில் காணப்படுபவர்கள் தொடர்பில் ரோந்து செல்லும் பாதுகாப்பு படையினர் அவதானம் செலுத்தி வருகின்றனர். அண்மை காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் செல்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெலிவேரிய

“முன்னை இட்ட தீ”

(கே.சஞ்சயன்)

சிங்கள மக்கள், தமிழர்கள் மீதான மீறல்களைக் கண்டிக்காமல் ஊக்குவித்ததன் விளைவு என்று கூட இதனைக் குறிப்பிடலாம். இன்னொரு புறத்தில், வெலிவேரிய தாக்குதலை தமிழ்கட்சிகள் பெரியளவில் கண்டிக்கவில்லை என்பது தவறான அணுகுமுறையாகவே பார்க்க வேண்டும். தமிழர்களின் உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன என்ற நியாயத்தை சிங்கள மக்கள் உணர முனையும் போது, அவர்களுடன் இணைந்து கைகோர்ப்பது தான் நியாயமானது, தமிழர்களின் பலத்தை அதிகரிக்கக் கூடியது. இந்த உண்மை, தமிழர் தலைமைகளால் உணரப்பட வேண்டும். சிங்களக் கட்சிகளும், தலைமைகளும் இழைத்த தவறை அவர்களும் இழைத்து விடக் கூடாது. (மேலும்.....)

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இரு தரப்பு இராணுவ மோதல்கள்

இந்தியா- பாக். எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தின் விபரீதம் இன்னும் மறையாத நிலையில் நேற்று மீண்டும் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளன. இதனால் இந்தியா- பாக். இடையே போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் காஷ்மீரின் ஊரி என்ற இராணுவ முகாம் பகுதியில், இந்திய நிலைகள் மீது மீண்டும் பாக். இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து சுதாகரித்துக்கொண்ட இந்திய படைகள் பதில் தாக்குதல் நடத்தியதால் அங்கு இரு தரப்பிலும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி பாக். தரப்பில் இரு வீரர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்று வருவதால் எல்லை போர் பதட்டம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. இந்தியா- பாக் போர் நிறுத்த ஒப்பந்தம் பல ஆண்டுகளாக அமுலில் உள்ளது. எனினும் பாக். இராணுவம் தொடர்ந்து எல்லை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் தாக்குதல் நடைபெற்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு குறித்து இராணுவ தளபதி பிக்ரம் சிங் ஆய்வு செய்து வரும் நிலையில் அப்பகுதியில் மீண்டும் தாக்குதல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 07, 2013

செய்தி: முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார்.

என் மனவலையிலிருந்து.....

திருக் கல்யாணம்! தமிழீழக் கல்யாணம்!! தமிழ்க் கல்யாணம்!!!

(சாகரன்)

ஆமாம் செப்ரம்பர் 8ம்  தினம் சீறும் சிறுத்தைத் தமிழன் சீமானுக்கு கல்யாணம் நடைபெறவுள்ளது. அது யாருடன்.... நடிகையுடனா...? அல்லது புலம் பெயர் தேசத்து இலங்கைத் தமிழ் பெண்ணுடனா? அல்லது தமிழீழப் போராளி விதவைப் பெண்ணுடனா? இல்லவே இல்லை தமிழ்நாடு அரசியல் புள்ளி காளிமுத்துவின்மகளுடன். காளிமுத்து எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே திமுக, அதிமுக கட்சிகளில் முக்கிய புள்ளி அமைச்சரவை பிரமுகர். பின்பு சொல்ல வேண்டுமா? தமிழக அரசியலில் பணக்காரர். இவரின் பணக்கார வீட்டுச் செல்லப் பிள்ளையுடன் திருமணம் நடைபெறவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.  அப்ப இது திருக் கல்யாணமா? அல்லது தமிழீழக் கல்யாணமா...? அல்லது தமிழ்க் கல்யாணமா...?  இல்லவே இல்லை இது பணக் கல்யாணம். பிறகென்ன திழ்நாட்டில் உள்ள சகல அரசியல் கட்சிப் பிரமகர்களும் ஆளாளுக்கு ஆள் முண்டியடித்துக்கொண்டு கலந்து கொள்ளும் கல்யாணம் இது. சீமானின் கடைசியாக பெண்பார்த்த தமிழீழ விதவைப் பெண் கண்ணீர்விட்டு இன்னும் ஒருமுறை விதவை? (தமிழ்க் கலாச்சார முறைப்படி) ஆகவேண்டியதுதான். பிரபாகரனின் ஒரே வாரிசு புலம் பெயர் தேசத்து புலிச் சிறுத்தைகளின் மீட்போன் இப்படிப் பண்ணலாமா...? என்ற கேட்கலாம் நீங்கள். தலைவரே இன்னொருவர் காதலித்தவரை கவர்ந்து வந்து கல்யாணம் செய்தவர் ஆயிற்றே. தலைவன் இத்தனை அடி பாய்தால் அவர் வழிச் சிறுத்தை இத்தனையடி கூடப் பாயக்கூடாதா....? அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா. விட்டிட்டு வேலையைப் பார்பீர்களோ இல்லையோ இது நடைபெறத்தான் போகின்றது. என்ன நாளை நாம் எல்லோரும் இதனை மறந்து மன்னித்து தலைவனாக சீமானை ஏற்போம் மீண்டும் ஒரு முள்ளிவாய்காலுக்கு மக்களை அழைத்துச்செல்வோம் பிறகென்ன எல்லாம் சங்காரம்தான். தமிழ் மக்கள் சிலர் திருந்தவே போகப்போறது இல்லை. அப்புக்காத்திற்கு எல்லாம் அப்புக்காத்து விக்னேஸ்வரனை நாம் ஏற்கவில்லையா...? பொனம்பலத்தானால் கையைச் சுட்ட நாங்கள் இந்த புதிய அப்புக்காததுதக்கெல்லாம் அப்புக்காத்தை ஏற்றவில்லையா...? இது போலத்தான் இதுவும். மீண்டும் உண்டியல் குலுக்கவும் பணம் சம்பாதிக்கவும் நாங்கள் தயார் நீங்கள் தயாரா...? என சீமான் வகையறாக்கள் கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டே கேட்பது எனக்கு கேட்கின்றது உங்களுக்கு கேட்கவில்லையா.....? இந்தத் திருமணத்திற்கு என்ன விளக்கம் சொல்லப் போகின்றார்கள் சினிமாக்காரர்கள் அமீர், சேரன், சத்தியராஜ்... போன்றோர். (ஆகஸ்ட் 07, 2013)

சர்வதேச அழுத்தங்களே தேர்தலை நடத்துவற்கு காரணம் - சித்தார்த்தன்

'இந்தத் தேர்தலை சாதாரண ஒரு மாகாணசபைத் தேர்தலாக நாங்கள் பார்க்க முடியாது. இந்தத் தேர்தல் நடைபெறுவதற்கு சர்வதேசத்தின் அழுத்தங்கள்தான் காரணமாக இருந்திருக்கின்றது' தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை வேட்பாளரும் புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 'சர்வதேச நாடுகள் அனைத்துமே மிகப் பெரிய அழுத்தத்தை இலங்கை அரசுமீது கொடுத்திருந்தது. அதனால்தான் இந்த மாகாணசபைத் தேர்தல் வருகின்றது. இந்தத் தேர்தலின் பெறுபேறுகளை எங்களுடைய விடயத்திலே அக்கறையுள்ள உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன. ஆகவே தமிழ்மக்கள் ஒரு சரியான பதிலை, ஒரு உறுதியான செய்தியை இந்தத் தேர்தல் மூலம் கொடுக்க வேண்டும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 'இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு மக்கள் அக்கறையெடுத்து செல்வார்களா? என்ற கேள்வியெழுகிறது. ஏனென்றால் கடந்தகால தேர்தல்களைப் பார்க்கின்றபோது மக்கள் தேர்தல்களிலே ஆர்வம் காட்டுவது குறைவு. இப்போதுகூட மக்கள் மத்தியில் அந்த ஆர்வம் நிச்சயமாக இல்லை. எனவே அந்த ரீதியிலே நாங்கள் மக்களை ஊக்குவிக்க வேண்டும்.

பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றி

வடக்கிற்கான ரயில்தடம் அமைக்கும் பணிகளில் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரையான பரீட்சார்த்த ரயில் பயணம் வெற்றியளித்துள்ளது. கிளிநொச்சி, அறிவியல் நகர்வரை பரீட்சார்த்த நடவடிக்கையாக ரயில் சேவை ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாலை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த ரயில் அறிவியல் நகர்வரை வந்தடைந்தது. இது இவ்வாறிருக்க, எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் கிளிநொச்சிக்கு உத்தியோகபூர்வமான பயணிகள் ரயில் சேவை ஆரம்பமாகும் என ரயில்வே திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்ததுடன் மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் ஏற்கெனவே இரயில் நிலையங்கள் இருந்த இடங்களில் புதிதாக இரயில் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதுடன் இதன் பணிகள் மற்றும் ரயில் பாதையை நிர்மாணிக்கும் பணிகளும் துரிதமாக நடை பெற்று வருகின்றது.

தமிழ் சமூகத்தில் பெண்கள் அதிகாரத்திற்கு வருவதற்கான இடைவெளி அவசியம்

(ஞான சக்தி ஸ்ரீதரன். )

எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்து  பொதுஜன முன்னணியின் வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் சமூக தளத்தில் செயற்பட்டிருக்கின்றேன். 1970 களின் பிற்பகுதியில் தமிழ் மகளிர் பேரவை, பின்னர் 1980 களின் முற்பகுதியில் ஈழ மாணவர் பொது மன்றம் ஆகியவற்றினூடாக எனது அரசியல் பிரவேசம் நிகழ்ந்தது. இலங்கையில் ஜனநாயகத்திற்காகவும் இனங்களின் உரிமைகளுக்காகவும் 1980களின் முற்பகுதியில் முற்போக்கான பெண்கள் இயக்கம் நடத்திய ஆர்பாட்டத்திலும் சர்வதேச பெண்கள் தினத்திலும் பங்குபற்றி உரையாற்றியமை, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமை வழிகாட்டலின் கீழ் கிராமப் புறங்களில் உழைக்கும் வர்க்க பெண்களின் மத்தியில் வேலைகளை முன்னெடுத்தமை, பால்நிலை சமத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு கருத்தரங்குகளை சக தோழர்களுடன் இணைந்து நிகழ்த்தியது., தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிக்கொண்ட இயக்கங்களிடையே ஜனநாயகத்தையும், ஐக்கியத்தையும் வலியுறுத்தியது, (மேலும்.....)

EPRLF புறக்கணிக்கப் பட்டது அனைத்து புத்திஜீவிகள் மத்தியிலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலில் பல அதிர்ச்சிகரமான அறுவை சிகிச்சைகளும், புறக்கணிப்புக்களும், வெளியேற்றங்களும், உள்நுழைவுகளும் அரங்கேறியுள்ளன. அவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரனின் தெரிவு மிகப் பொருத்தமானதாகவும், தமிழ் மக்களுக்கு வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ள அதேவேளையில் இலங்கை அரசிற்கு மீளமுடியாத மின்சார அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்விடயம் கூட்டமைப்பு எனக் கூறிக் கொள்ளும் குழுக்களுக்கு ஜீரணிக்க முடியா விட்டாலும் கூட எதிர்க்க திரணியற்ற நிலையில் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டனர் என்று தான் கூற வேண்டும். (மேலும்.....)

''இளவரசன் - திவ்யாவோடு என் மகள் காதலை ஒப்பிடாதீர்கள்!''

சேரன் உருக்கம்...

செல்லமாய் வளர்த்த கடைக்குட்டி தாமினி, இப்போது மைலாப்பூர் மகளிர் காப்பகத்தில் இருக்கிறார். எப்போதும் கலகலப்பாய் இருக்கும் இயக்குநர் சேரனின் வீடு சோகமயமாக காட்சி அளிக்கிறது. அழுது, அழுது வீங்கிய முகத்தோடு இருந்த இயக்குநர் சேரனை ஆசுவாசப்படுத்திப் பேசினோம். ''இதுவரைக்கும் 10 சினிமா எடுத்து இருக்கேன். ஒண்ணுலகூட சினிமாத்தனம் இருக்காது. எல்லாமே யதார்த்த நிகழ்வுகளின் பதிவுகள். நான் காதலுக்கு எதிரி இல்லை; என்னோட திருமணமே காதல் திருமணம்தான். 18 வயசுல எனக்கும் காதல் வந்துச்சு. இப்ப என் பொண்ணுக்கும் வந்திருக்கு. வரணும். இல்லைன்னா, உடலில் ஏதோ ஹார்மோன் குறைபாடு இருக்குதுனு அர்த்தம். மூணு வருஷத்துக்கு முன்னாடி 'கிட்ஸ்’ என்கிற டான்ஸ் புரோகிராம் போயிருந்தேன். என்கூட வந்த தாமினியை அங்கே விட்டுட்டு, வேறொரு நிகழ்ச்சிக்கு நான் போயிட்டேன் அப்போ சந்துருவைச் சந்திச்சு இருக்கா. ரெண்டு பேரும் செல்போன் நம்பரை எக்சேஞ்ச் பண்ணியிருக்காங்க. ஃபேஸ்புக் மூலமாவும் பழகியிருக்காங்க. (மேலும்.....)

வடக்கு அதிவேகப் நெடுஞ்சாலை பணிகளைத் துரிதப்படுத்தவும் -  ராஜபக்ஷ

வடக்கு அதிவேகப் நெடுஞ்சாலை பணிகளைத் துரித்தப்படுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார். லீ ஜியான்ஹொங் தலைமையிலான சீன வர்த்தகர்கள் குழுவின் தூதுக்குழுவினருடனான சந்திப்பின் போதே வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் பணிகளைத் துரிதப்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த குழுவினருடனான சந்திப்பின் போதே வடக்கில் இடம்பெறுகின்ற அபிவிருத்திப் பணிகளைப்பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி ராஜபக்ஷ, வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் மக்கள் இலகுவாகவும் துரிதமாகவும் பயணம்செய்வதற்கு அதிவேகப் பாதையின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார். தற்பொழுது சீன வர்த்தக குழு வடக்கு அதிவேகப் பாதை கருத்திட்டத்தின் சாத்தியக்கூற்று ஆய்வுகளை மேற்கொள்கின்ற அதேவேளையில் தொழில்நுட்ப அறிக்கைகளையும் நிதி அறிக்கைகளையும் தயாரிக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது.

விகடசங்கடம் 4

(முனிதாசபூதன்)

முன்னாள் நீதவான் விக்கினேஸ்வரன் திடீரென வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக்கப்பட்டார்? அதுக்கு அவர் எப்படி ஒத்துக் கொண்டார்? ஏப்படி இது நடந்தது? என்ன காரணங்களுக்காக இது நடந்தது? யாரின் வேண்டுதலின் பேரில் இது நடந்தது? இந்த விடயத்துக்காக சம்பந்தர் யாரால் மடக்கப்பட்டார்? சேனாதிராஜா இதற்காக எப்படி விட்டுக்கொடுக்க வைக்கப்பட்டார்;? இந்த முதலமைச்சர் பதவி கனவுகளோடு கடந்த இரண்டு வருடங்களாக வாழ்ந்த பல பிரமுகர்கள் எப்படி தமது ஆசைகளை அடக்கி ஒடுக்கி ஒரே நாளிலேயெ சுருண்டு போனார்கள்? இதுகள்தானப்பா என்ர மண்டையைக் குடைஞ்சு சங்கடப்படுத்திக் கொண்டிருக்குதுகள். சுமந்திரனும் சுரேஸ் பிரேமச்சந்திரனும் இதற்கான முன்கட்ட தயாரிப்பு வேலைகளையெல்லாம் நகர்த்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.  அதெல்லாவற்றுக்கும் மேலாக இன்றைய பதவி பணக்குவிப்பு அரசியற் காலகட்டத்தில் எந்த அளவுக்கு பப்பாவில் ஏத்தல்கள் கழுத்தறுப்புகள் முதுகில் குத்தல்கள் என பலதும் உள்ளன என்பதை திரு விக்கினேஸ்வரன் தெரிந்தேதான் இருப்பார். அதிலும் முக்கியமாக தன்னை ஏத்தி விடும் யாழ்ப்பாண – கொழும்பு தமிழ்ப் பிரமுகர்கள் நண்டுகள் மாதிரி முன்னால ஏறவிட்டு பின்னால காலில் பிடித்து இழுத்து விழுத்துபவர்கள் என்பதையும் இந்தப் பிரமுகர்களும் அறிவுப் பிழைப்பாளிகளும்தான்  பிரபாகரனை உசுப்பேத்தியே முள்ளிவாய்க்காலில் உடல் ரணகளமாக மண்டை பிளந்து கிடக்க விட்டு மறந்து போனவர்கள் என்பதையும்  தெளிவாகப் புரிந்து வைத்திருக்கக் கூடிய அளவுக்கு திரு விக்கினேஸ்வரன் நன்கு தகவலறிவும் சிந்தனையறிவும் உடையவர். கௌரவ விக்கினேஸ்வரன் தமது எழுபது கால வாழ்விலும் முப்பது வருடகால சட்டத்துறை நீதித்துறை அநுபவங்களினூடாகவும் கற்றுக்கொண்டிருக்கக்கூடியது எப்படி நோகாமல் நொங்கு தின்பது என்பதைத்தான். (மேலும்)

"13 ஐ அழிக்க நினைக்கு பேரினவாதிகளின் கனவு பலிக்காது"

13 ஆவது திருத்தச் சடட்டத்தின் பூரண காப்பாளனான இந்திய வல்லரசு இருக்கிறது.  இதனை இல்லாதொழித்து விடலாம் என்ற பேரினவாதிகளின் கனவு என்றைக்கும் பலிக்காது என்று வடமாகாண சபையின் வேட்பாளர் வைத்திய கலாநிதி சி.சிவமோன் தெரிவிதார். இவர், வடமாகாண சபைத் தேர்தலில் முல்லை மாவட்டத்தில்  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய், கொக்குதொடுவாய்  பிரதேச மக்களைச் சந்தித்து வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டம் கொக்குளாய், கொக்குதொடுவாய்  பிரதேசங்களில வாழ்ந்த மக்கள் தாங்கள்  பூர்வீகமாக வாழ்ந்த  காணிகளை பறிகொடுத்து வருகின்றோம். எதிர்கால சிங்கள குடியேற்றத்தின் ஆரம்பமாக கொக்குளாயில் எமது காணிகள் அரசு கனகச்சிதமாக சுவீகரித்து வருகின்றது. நாம் வெற்றி பெற்றால் காணி,பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய  13 ஆவது திருத்தச்சட்டம்  நடைமுறைப்படுத்தப்படும் 13 ஆவதுதிருத்தச் சட்டம்  என்பது 1988 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும். இதன் பூரணகாப்பாளனாக இந்திய பேரரசு இருக்கிறது. எனவே, இதை சுக்குநூறாக உடைத்துவிடலாம் எனக்கங்கணம் கட்டிநிற்கும் பேரினவாதிகளின் கனவு பலிக்காது என்று அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற தெரிவுக் குழுவின் மூன்றாவது அமர்வு இன்று

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் மூன்றாவது அமர்வு இன்று பாராளுமன்றத்தில் கூட்டப்படுமென தெரியவருகிறது. அதேவேளை, தெரிவுக்குழுவுக்கு உள்வாங்கப்படவிருந்த பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாகவும் சபை முதல்வரும் தெரிவுக்குழுவின் தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். பொது மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கு ஜூலை 10 முதல் ஓகஸ்ட் 09 ம் திகதி வரையே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் முடிவுத் திகதி ஓகஸ்ட் 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் முதலாவது அமர்வு ஜூலை 09 ம் திகதியன்று நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2வது அமர்வு திட்டமிட்டபடி ஜூலை 26ம் திகதியன்று கூடியது. அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த 19 உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்கும் அதேவேளை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும் எவரும் அதில் கலந்து கொள்ளாமை குறிப்பிடத் தக்கது.

நடவடிக்கை எடுப்பதற்கு நான் பின்வாங்கமாட்டேன் - அமைச்சர் பவித்ரா

மின்சார சபையில் ஊழல் மோசடிகள் நடைபெறுவதாக இருந்தால் அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க தான் ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். நான் பதவியில் இருக்கும் வரை மின்சார சபையில் திருட்டோ மோசடிகளோ இடம்பெற அனுமதிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எஞ்சியுள்ள சகல மின் ஏற்பத்தி நிலையங்களையும் துரிதமாக செயற்படுத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது. நுரைச்சோலை இரண்டாம் கட்டத்தினூடாக மேலும் 300 மெகாவோர்ட் மின் உற்பத்தி இந்த வருட இறுதியில் தேசிய மின்கட்டமைப் புடன் இணைக்கப்படும். சம்பூர் அனல் மின்நிலையத்தினூடாகவும் 500 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளோம். புரொட்லண்ட் நீர்மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பணிகள் 2017ல் பூர்த்தி செய்யப்பட்டு 39 மெகாவோர்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்பிற்குக் கிடைக்க உள்ளது. உமா ஓயா மின் உற்த்தி நிலைய பணிகளும் துரிதமாக இடம்பெறுகின்றன. நான் அமைச்சு பதவியை ஏற்கும் போது மின்சார சபை ஏனைய நிறுவனங்க ளுக்கு 364 மில்லியன் செலுத்த வேண்டியிருந்தது. இதற்கு 2 மாற்றுவழிகளே இருந்தன. மின்வெட்டு, அல்லது மின் கட்டணத்தை அதிகரிப்பது என்பன அவை. வறிய மக்களுக்கு மின்சாரத்தை துண்டிக்காமல் வழங்குவதே எமது நோக்கம் என்றார்.

வெளிநாட்டு இராஜதந்திரிகள் எகிப்தில் புதிய சுற்று சமரச முயற்சி

இராணுவ சதிப்புரட்சி மூலம் எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டதை தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தை முடிவுக்கு கொண்டுவரும் புதிய சுற்று இராஜதந்திர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. மத்திய கிழக்கிற்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பெர்காடினோ லியோன் மற்றும் அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் வில்லியம் பேர்ன்ஸ் ஆகியோர் கெய்ரோவில் தொடர்ந்து தரித்து நின்று முர்சி ஆதரவாளர்கள் மற்றும் இராணுவ ஆதரவு பெற்ற இடைக்கால தலைமைகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிறையில் இருக்கும் முஸ்லிம் சகோரத்துவ அமைப்பின் துணைத் தலைவர் கைரத் அல் ஷாதிரை சந்தித்த லியோன், நேற்று முன்தினம் பிரதமர் ஹஸம் அல் பப்லாவியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மறுபுறத்தில் அமெரிக்காவின் அழுத்தத்தை அதிகரிக்க அமெரிக்க செனட்டர்களான ஜோன் மக்கைன் மற்றும் லின்சி கிரஹம் எகிப்து சமரச முயற்சியில் இணைந்து கொண்டனர். இருவரும் பதற்றத்தை தணிக்க கெய்ரோவில் புதிய சுற்று இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகஸ்ட் 06, 2013

என் மனவலையிருந்து.....

இலங்கை அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இதைவிட்டால் வேறு வழியில்லை

(சாகரன்)

1989 மே மாதம் யுத்தம் முடியுற்ற பின்னர் இலங்கை அரசின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது என்பது உண்மையே. சிறப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பற்றிய பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு முன்பு இலங்கையை ஆண்ட அரசுகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை இலங்கையின் பாகங்கள் என்ற கண்ணோட்டத்திற்கு அப்பால் மாற்றான் தாய் பார்வையில் அபிவிருத்து விடயத்தில் அணுகி வந்தன. ஆனால் தற்போது வடக்கு, கிழக்கும் இலங்கையின் பாகங்கள் என்ற கண்ணோட்டம் வலுவாக இலங்கை அரசிற்கு ஏற்பட்டிருக்கின்றது. இங்கு கூறப்பட்ட விடயத்தை நன்கு ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் மட்டுமே இதன் அர்த்தம் புரியும். அதாவது தற்போது வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் மட்டும் அல்ல இதுவும் தென் மாகாணங்கள் போன்று ஒரு மாகாணங்களே, இதன் அடிப்படையில் அபிவிருத்தி, உள்கட்டுமான வேலைகள், அமைச்சர்களின் வருகைகள் ஏன் குடியேற்றம் என்பன யாவும் நடைபெற்று வருகின்றன. ஆனால் அரசு நினைத்தாலும் ஒரளவிற்கு மேல் குடிசனப் பரம்பலை மாற்றி அமைக்க முடியாது. இது உலகத்தில் வாழும் சகல இன மக்களுக்கும் பொதுவான நடைமுறை யதார்த்தம் ஆகும். ஆனால் உலகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களின் ஒரு அங்கமாக ஒரு நாட்டில் பல் தேசிய இனங்கள் சேர்ந்து வாழ்தல் என்ற நிலையை நோக்கி இலங்கையும் நகர்ந்துதான் ஆகவேண்டும். இதுவே நடைபெறப் போகின்றது. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால் பல் தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில் சகல இனங்களும் (ஓரளவுக்கேனும்) சமஉரிமை பெற்று வாழுதல் என்பதே ஆகம். இதில் இலங்கை அரசு தனது பெரும்பான்மைக் கொள்கையை கைவிடுமா...? என்பதே இங்கு கேள்வியாகும். இதற்கு பல காரணங்கள் இருப்பினும் ஒரு விடயம் மிக முக்கியமா அமைகின்றது. இலங்கை தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் பாரம்பரியமாக சிங்கள் மொழி பேசும் இனம் என்று ஒன்று இல்லை. எனவே இலங்கையை வி;ட்டால் சிங்கள மக்களுகளுக்கு என்று ஒரு நாடு இல்லை. இதன்காரணமாக மற்றயஎ ந்த இனத்தையும் விட ஒருபடி மேலே சென்று இலங்கை அரசு இலங்கை முழுவதும் தமது நாடு என்ற சிங்களப் பேராண்மையுடன் இருக்கவே செய்யும். ஆனால் இலங்கை அரசு ஒரு யதார்த்தத்தை மறந்துவிட்டது. இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் என்ற மூன்று பாரிய இனங்களுடன் ஏனைய இனங்களும் சம உரிமையுடன் வாழும் பொறிமுறை ஒன்றின் ஊடாகத்தான் சிங்கள இனமும் வாழ முடியும். வாழ்ந்தால் யாவரும் வாழவோம்! வீழ்ந்தால் யாவரும் வீழ்வோம்!! என்பதை இலங்கை அரசுகள் இதுவரை புரிந்ததாக அறிய முடியவில்லை. இவற்றின் தொடர்சியான செயற்பாடுகளே தேர்தல் காலத்தை நோக்காக கொண்டு மக்கள் நல அறிவித்தல் வெளிவந்தாலும் புதிய அபிவிருத்தித் திட்டங்களும், இராணுவ முகாம் மூடல்களும் ஏனைய தமிழ் மக்களின் வேண்டு கோள்களை நிறைவேற்றும் விடயங்களும். இலங்கை அரசு தனது சொந்த அட்டவணைப்படியே செயற்படுகின்றதே ஒழிய, மாறாக வேறு யாரின் விருப்பத்தையும், வேண்டுதலையும் ஏற்று செயற்படவில்லை. ஆனால் சர்வதேச நாடுகளின் 'வேண்டுதலை' தந்திரோபாயமாக சில சிக்கலில் இருந்து தப்பிப்பதற்காக குறிப்பாக இந்திய, அமெரிக்க அரசுகளின் அட்டவணைப்படி செயற்படுகின்றது. மற்றபடி அது தனது சொந்த அட்டவணைப்படியே இயங்குகின்றது. இலங்கை அரசுடன் இணக்க அரசியலை நடத்தும் தமிழ் அரசியல் தலைவர்களே உங்களுக்கும் இது தெரியும். உங்களுக்கும் வேறு வழியில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியல் அல்ல மறுப்பு அரசியலே நடாத்துகின்றது, நடாத்;தும். அதுதான் அதன் வாக்கு வங்கிக்கான குறுகிய செயற்பாடு ஆகும். அதற்கு தேவை மக்கள் நலன் அல்ல, வாக்குவங்கியும், நாற்காலிக் கனவுகளுமே. இதில் முன்னுக்கு ஓடும் குதிரை சுரெஷ் பிரேமசந்திரன் மட்டும் அல்ல சித்தார்த்தன் ஆனந்தசங்கரி, செல்வம் ஏன் மாவை சேனாதிராஜவும் அடக்கம்தான். (ஆகஸ்ட் 07, 2013)

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப் படையினர்!

விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க விமானப் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்று வரும் இந்த மருத்துவமுகாமில் 10 மேற்பட்ட அமெரிக்கப் படையினர் கலந்துகொண்டுள்ளனர். உலகின் பலநாடுகளிலும் கால் பதித்துள்ள அமெரிக்க படையால் அந்நாட்டு மக்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் நாம் தினம் தினம் செய்திகளாக அறிந்ததே. இந்நிலையில் இலங்கையில் அமெரிக்க படையினரின் வரு இலங்கை மக்களுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணியாகும் இதற்கான தீவிர பிரச்சாரத்தை புலம் பெயர் தேசத்து புலிபிபினாமிகள் மேற்கொண்டு வருவதும் இதற்கான ஆதரவுத் தளத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருப்பதும் யாவரும் அறிந்ததே.

வடமாகாண சபைத்தேர்தலை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

வடமாகாண சபைத்தேர்தலை ரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் வடமாகாண சபைத்தேர்தலை ரத்து செய்வதற்கும் மறுத்துவிட்டது. சிங்கள ஜாதிக பெரமுன அமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரித்த பின்னரே நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை இன்று வழங்கியுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய வடமாகாண சபைக்கு தேர்தல் நடக்கவுள்ளதால், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம்  இந்த மனுவை விசாரிக்க நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று அரச தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் சிங்கள ஜாதிக பெரமுன ஒரு அரசியல் கட்சி என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், தேர்தல்கள் ஆணையாளர் அந்தக் கட்சியை இதுவரை அங்கீகரிக்கவில்லை என்று வழக்கு விசாரணையின் போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஸ்ரீரீஸ்கந்தராஜா சுட்டிக்காட்டினார். ஆகவே இந்த வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்றும் நீதிபதி கூறிவிட்டார். அதன் பிறகு மனுவை நிராகரிக்க நீதிபதி முடிவெடுத்தாக சிங்கள ஜாதிக பெரமுனவின் தேசிய அமைப்பாளர் விஜித ரோஹன விஜயமுனி தெரிவித்தார். இந்த வழக்கை தாக்கல் செய்த சிங்கள ஜாதிக பெரமுனவின் தேசிய அமைப்பாளர் விஜித ரோஹன விஜயமுனியே இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொழும்பு சென்றிந்த வேளையில், இராணுவ மரியாதையை பார்வையிட்டபோது துப்பாக்கியால் தாக்க முயற்சித்தவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

புதுமாத்தளனை ஒத்த சம்பவமே வெலிவேரியவில் இடம்பெற்றுள்ளது  - ஜே. வி. பி.

புதுமாத்தளனில் இடம்பெற்ற சம்பவத்தை ஒத்த சம்பவமே அண்மையில் வெலிவேரிய, ரத்துபஸ்வல அப்பாவிப் பொதுமக்களுக்கு இடம்பெற்றுள்ளதாக ஜே.வி.பி. யின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன் நெத்தி தெரிவித்தார். குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய அப்பாவிப் பொது மக்களுக்கு அரசாங்கம் இராணுவத்தை பாவித்து அம் மக்களின் உயிர்களை காவுகொண்ட மிலேச்சத்தனம் புதுமாத்தளனில் இடம்பெற்ற சம்பவத்தை ஒத்ததாகும். இராணுவத்திற்கு சுடுமாறு உத்தரவிட்டது யார் என்பதை உரிய தரப்பினர் தெரிவிக்க வேண்டும். குறித்த சம்பவத்திற்கு வேறு ஒரு தரப்பினர் சம்பந்தப்பட்டுள்ளதாக அரசு கூறுகின்றது. இது சாதாரண மக்களின் குடிநீர் பிரச்சினை. இதற்கு எவரும் பின்னின்று செயற்படவும் இல்லை. கட்சி பேதங்களும் இல்லை. இதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க வேண்டும் அல்லது வேறு தரப்பினர் மீது பழியை சுமத்த வேண்டும். இதனடிப்படையில் எம்மீதும் பழி போடப்பட்டுள்ளது. இப்படியான தருணத்தில் நாம் பின்னால் நின்று செயற்படப்போவதில்லை. முன்னிற்கு நின்று மக்களுக்காக கூரல் கொடுப்பதே எமது செயற்படாகும். நாட்டு மக்களின் தேவைகளை அரசாங்கத்தால் பூர்த்திசெய்ய முடியாதுள்ளது. ஆனால் உகண்டா நாட்டின் நீர்த் தேவையை பூர்த்தி செய்ய இந்த அரசாங்கம் நிதியுதவியை வழங்கியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இனவாதம் ஒழிக்கப்பட வேண்டும், மக்கள் சேவைக்கு முதலிடம் - பத்தரமுல்லே சீலரத்ன தேரர்

அழிவுகளையும் துன்பங்களையும் சந்தித்த வட பகுதி மக்களுக்கு வாழ்வதற்கு வீடும் வாழ்வாதாரம் தேவையே தவிர இனவாதமோ மதவாதமோ அவசியமில்லை. எனவே மக்கள் தேவையறிந்து சேவை செய்யும் ஜனசெத பெரமுனவையை மக்கள் நலன்புரி முன்னணியை வெற்றி பெறச் செய்து இனவாதத்தை தோற்கடிக்க வேண்டுமென அதன் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் தெரிவித்தார். அரசுடன் தொடர்பிருந்தால் இணைந்து போட்டியிட்டிருப்போம். எமக்கு சிறப்புரிமைகள் தேவையில்லை. மக்கள் சேவையே எமது இலக்காகும் என்றும் தேரர் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள ஜனசெத பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பத்தரமுல்லே சீலரத்னதேரர் இதனைத் தெரிவித்தார்.

ஊடக அறிக்கை!

கோழி கூவி பொழுது விடிவதில்லை!

ரி.என்.ஏ யின் கூற்றுக்கு ஈ.பி.டி.பியின் விளக்கம்.

எமது மக்களின் நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம். இதை இலக்காக கொண்டு, எமது வழிமுறையில் நின்று எமது மக்களின் நிலங்களை மக்களிடமே மீட்டுக்கொடுப்பதில் நாம் படிப்படியாக வெற்றி கண்டு வருகின்றோம். இதை கண்டு அச்சப்படுகின்ற கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அழுதத்தங்களால்  மக்களின் நிலங்கள் மீட்டப்படவில்லை என்றும், நவநீதப்பிள்ளையின் வருகையை ஒட்டி, சர்வதேச சமூகத்திற்கு வெளிக்காட்டுவதற்காகவே மக்களின் நிலங்கள் மீட்கப்படுவதாக ஒரு கதையும், தேர்தல் பிரச்சாரத்திற்காகவே நிலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன என்று இன்னொரு கதையினையும், கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்தரின் அவர்கள் இரு வேறு கதைகளை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். (மேலும்.....)

விக்னேஸ்வரன் நியமனம் குறித்தும் புலம்பெயர்ந்த தமிழர்கள் குறித்தும் தாயக மக்களின் நம்பிக்கைகள்

“புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டி வருவதையும் சிங்கள தேசத்தால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி எம்மக்கள் அழிந்து வருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டு வருவதையும் சிங்களப் பேரினவாதத்தால் சகிக்கமுடியவில்லை. எனவேதான் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிட சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்து வருகிறது. இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன”(மேலும்.....)

வடக்கு தேர்தல்; சர்வதேச கண்காணிப்பு குழு விரைவில் இலங்கை விஜயம்

வடமாகாண சபை தேர்தலை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்புக் குழு விரைவில் வருகை தரவுள்ளதாக பொதுநலவாய அமைப்பு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகளான ஆம்னா ஜதோய் மற்றும் மார்டின் குசிர்யே ஆகியோர், இன்று திங்கட்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போது, வடமாகாணசபைத் தேர்தல் கண்காணிப்புக்காக சர்வதேச கண்காணிப்புக்குழு விரைவில் இலங்கை வருகை தரவுள்ளதாக அரசாங்க அதிபரிடம் அவ்வதிகாரிகள் குறிப்பிட்டனர். இதன்போது, வடமாகாண சபை தேர்தலின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அரசாங்க அதிபரிடம் பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டனர். விரைவில் சர்வதேச மற்றும் உள்ளூர் கண்காணிப்பாளர்கள் யாழ். மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதால், அவர்களுக்கான உதவிகளை எவ்வாறு மேற்கொள்வீர்கள் என்றும் பொதுநலவாய அமைப்பின் அதிகாரிகள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

வெலி­வே­ரிய சம்­ப­வத்­துக்­கான பொறுப்பை ஜனா­தி­பதி மஹிந்­தவே ஏற்கவேண்டும்: வாசு­தேவ நாண­யக்­கார

வெலி­வே­ரி­யவில் மக்கள் ஆர்ப்­பாட்­டத்தில் இரா­ணுவம் யுத்­த­மொன்றில் செயற்­பட்­டது போன்று அப்­பாவி மக்­களை சுட்டு தாக்­கி­ய­மை­யா­னது மன்­னிக்­கக்­கூ­டிய குற்­ற­மல்ல. எனவே, இதற்­கான பொறுப்­பினை ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவே ஏற்க வேண்­டு­மென ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணி­யின் ­செ­ய­லா­ளரும் சிரேஷ்ட அமைச்­ச­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்­துள்ளார். சர்­வ­தேச நெருக்­க­டிகள் மேலோங்கி இருக்கும் இந்­நி­லை­யிலும் பொது­ந­ல­வாய மாநாடு நடை­பெ­ற­வி­ருக்கும் இத்­த­ரு­ணத்தில் அர­சுக்­கெ­தி­ராக உள்­ளி­ருந்து கொண்டு யாரும் இவ்வாறு சூழ்ச்சி செய்­கி­றார்­களா என்ற சந்­தேகம் தோன்­று­கி­றது எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.(மேலும்.....)

ஆகஸ்ட் 05, 2013

அரசியல் சூனியம் – வேறு வழியில்லை

(யோகன்)

தமிழரசுக் கட்சி: தமிழ் பகுதிகளில் ஒரு பெயரும், தென்னிலங்கையில் வேறு ஒரு பெயரும் வைத்து மகிழ்ந்தோம்: ஏன் செய்தோம் இதை விட்டால்வேறு வழியில்லை.

அது தான் எங்கள் ஸ்டைல்,

உழைக்கும் மலையக மக்களை நாடற்றவராக்க இனவாதக் கட்சிக்கு நண்டுக்கு வளையானோம், ஏன் செய்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.

தமிழக்கட்சிகள்; சுதந்திர கட்சியுடன் சேர்ந்து வேலை செய்ய மறுத்தோம்; ஏன் மறுத்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.

சிங்கள சட்டத்தை எதிர்த்த இடதுசாரிகளை ஆதரிக்க மறுத்தோம்; எஜமான்களின் உத்தரவின் படி மறுத்தோம். ஏன் ஆதரிக்க மறுத்தோம் இதை விட்டால் நமக்கு வேறு வழியில்லை.(மேலும்.....)

கற்பதைக் கற்கண்டாய்  மாற்றிய ஓர் அரசுப் பள்ளி

(ஜி. ராமகிருஷ்ணன்)

கல்வி கற்பதற்கான உரிமைக் குறியீடு களை எய்துவது குறிப்பாக மொத்தப் பள்ளிச் சேர்க்கை மற்றும் இடை நிற்றல் அளவு களில் மிகச் சிறப்பாகக் கருதப்படும் மாநிலங் களுள் தமிழகம் ஒன்று என மாநில நிதிய மைச்சர் சமர்ப்பித்த நடப்பாண்டுக்கான ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வி குறித்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக்கூற்று சரியானதே. இருப்பினும் தமிழ கத்தில் பள்ளிக் கல்வி நிலை குறித்து நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது. திருப்தி அடைந்தால் இத்துறையில் உள்ள குறைபாடு களைப் போக்கிட முடியாது. உதாரணமாக, “அசர்’ (ஆய்வு நிறுவனம்) செய்த ஆய்வின் அடிப்படையில் ஐந்தாம் வகுப்பு மாணவர் களில் 53 விழுக்காடு குழந்தைகள் இரண் டாம் வகுப்பிற்கான பாடத்தை வாசிக்க இய லாத நிலையில் உள்ளனர். கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் இந்த விழுக்காடு 58 சத விகிதமாக இருந்தது. மேலும், மாணவர் சேர்க் கை விகிதத்தைப் பொருத்தவரை மக்கள் அரசுப் பள்ளிகளை விடுத்து தனியார் பள்ளி களை நாடும் போக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. (மேலும்.....)

இந்தியாவின் அடிமைகளாக கூட்டமைப்பு செயற்படுவது வடக்கு மக்களையே பாதிக்கும் - தேசிய சுதந்திர முன்னணி

அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென் இந்தியாவின் கடல் வள ஆக்கிரமிப்பை பற்றி ஏன் பேசுவதில்லை? தென் இந்தியாவின் அடிமைகளாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுவதானது வடக்கு மக்களையே அதிகம் பாதிக்கும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான மொஹமட் முசம்மில் தெரிவித்தார். வடக்கு மக்களின் தேவைகளைப் பற்றி சிந்திக்காத சம்பந்தன் கூட்டணி எவ்வாறு தமிழர்களை பாதுகாக்கப் போகின்றது எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்கத்தைப் பற்றி தவறாக விமர்சிக்கும் சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றோர் இந்தியாவின் செயற்பாடுகளை அனுசரித்து வாய் மூடிச் செயற்படுகின்றனர். 13ஆவது திருத்தச் சட்டம் மாகாண சபை போன்று இந்தியாவின் திட்டங்களை எமது நாட்டிற்குள் திணிக்கவிட்டு எம் நாட்டின் வளங்களையும் செல்வங்களையும் கொள்ளையடிக்கின்றனர். இதை நன்றாக விளங்கிக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாயை மூடி செயற்படுகின்றனர். அரசாங்கம் வடக்கு மக்களை ஒரு போதும் கைவிடப் போவதில்லை. விக்னேஸ்வரன் சம்பந்தன் என எவர் நாட்டினைக் குழப்பினாலும் இந்த அரசாங்கம் யாரையும் விடப்போவதில்லை. பத்தரமுல்லையில் நேற்று தேசிய சுதந்திர முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

இயற்கையைச் சீண்டினால் என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு

உலகத்தையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்த அந்த துயரச் சம்பவம்

அனர்த்தம் இடம்பெற்று ஒரு மாதமாகப் போகின்றது. ஒரு மாதமாகியும் நிலைமை கட்டுக்குள் வராத நிலையில் சடலங்கள் அகற்றும் பணி இன்னும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என்றால் பலர் நம்ப மாட்டார்கள். எடுக்க எடுக்க சடலங்கள் வந்துகொண்டே இருப்பதாகக் கூறுகிறார்கள். நெருங்கவே முடியாத அளவுக்குப் பிண நாற்றம். உலகத்தையே ஒரு கணம் ஸ்தம்பிக்க வைத்தது அந்தத் துயரச் சம்பவம். வீறுகொண்டு எழுந்த கங்கை சீறிப் பாய்ந்து, கேதார்நாத்திலிருந்து ஹரித்வார் வரையிலுள்ள புனித யாத்திரையில் கலந்து கொண்டவர்கள் பலரின் இறுதி யாத்திரையாக்கிய இயற்கைப் பேரிடர், உலக சரித்திரத்தின் பக்கங்களில் இதுவரை கண்டறியாத பேரழிவாகப் பதிவாகி இருக்கிறது. (மேலும்.....)

இன்ஸ்பெக்டர் ஜயரத்தினம் உட்பட

80 தமிழர்களை எரித்து கொலை செய்தமை தொடர்பில் ஒருவர் கைது

பொலிஸ் இன்ஸ் பெக்டர் ஜயரத் தினம், ஒரு இராணுவ கப்டன் உட்பட 80 தமிழர்களைக் கொன்று, எரித்தமை தொடர்பாக பயங்கர வாத விசாரணைப் பிரிவினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர். எல். ரி. ரி. ஈ யினர் இந்த படுகொலையைச் செய்தமை தெரியவந்துள்ளது. புதுக்குடியிருப்பு, வல்லிபுனம் பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிய அல்பா. 5, அல்பா-2, எல். ரி. ரி. ஈ. சிறை முகாம்களில் தடுத்து வைக்கப் பட்டிருந்தவர்களே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தடுத்து வைக்கப்பட்ட வர்களுள் 30 பேர் 2006 மே மாதத்தில் ஒட்டுசுட்டான் காட்டில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டுள்ளனர். மற்றும் 50 பேரும் இதே இடத்திலேயே ஜுலை மாதத்தில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டனர். பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெயரத்தினம் எல்.ரி.ரி.ஈ. யினரின் இஸ்டர் என்ற பெயருடைய ஆஸ்பத்திரியின் பின்னாலுள்ள காட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டதாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இராணுவ கப்டன் விஸ்வமடு தோட்டி அடி பகுதியில் முகாமில் தடுத்து வைக் கப்பட்டு 2009 - ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கொலைகளுடன் தொடர்புடைய மற்றும் மூவரும் தற்போது கைதாகியுள்ளன. கொலையுண்டவர்கள் மற்றும் எரிக்கப் பட்ட இடங்கள் தொடர்பாக நீதிமன்றுக்கு காரணங்களை அறிக்கை செய்து, மாஜிஸ் திரேட் விசாரணைக்காக மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. (English Ver....)

தமிழ் சமூகம் தோற்கடிக்கப்படவில்லை, தவறான தலைமைகளே அழிந்தொழிந்தன - டக்ளஸ் தேவானந்தா

இருப்பதைப் பாதுகாக்கும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தினால் வடக்கு தமிழ் மக்கள் பன்மடங்கு முன்னேற்றங்களைப் பெற்றுக்கொள்ள முடியுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ் சமூகம் தோற்றுப்போன சமூகமல்ல. தவறான தலைமைத்துவமும் தவறான வழிநடத்தல்களுமே தோற்றுப் போயுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வருகின்ற சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றங்களை அனுபவிக்க தமிழ் சமூகம் சிந்தித்துச் செயற்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். வவுனியா ஒமேகாலைன் ஆடைத் தொழிற்சாலை திறப்பு விழாவில் சிறப்பதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்.....)

சிம்பாப்வே ஜனாதிபதி தேர்தலில் முகாபே மீண்டும் பெரும் வெற்றி

சிம்பாப்வே ஜனாதிபதி தேர்தலில் ரொபட் முகாபே மீண்டும் வெற்றியீட்டியுள்ளார். அவர் 61 வீத வாக்குகளுடன் வெற்றியீட்டியதாகவும் எதிர்த்து போட்டியிட்ட பிரதமர் மோர்கன் ஸ்வன்கிரி 34 வீத வாக்குகளையே வென்றதாகவும் சிம்பாப்வே தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி முகாபேயின் ஷானு பி. எப். கட்சி அமோக வெற்றிபெற்றுள்ளது. சிம்பாப்வே தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரொபர்ட் முகாபேக்கு எதிராக ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கம் (எம். டி. சி.) கட்சி சார்பில் பிரதமர் மோர்கன் டிஸ்வான்கரை உள்ளிட்ட 5 பேர் போட்டியிட்டனர். வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அதை தொடர்ந்து முடிவு கள் அறிவிக்கப்பட்டன. 210 தொகுதிகளுக் கான வாக்குகளும் எண்ணப்பட்ட நிலையில் ஜனாதிபதி முகாபேயின் ஷானு பி. எப். கட்சி 137 இடங்களில் வெற்றி பெற்றது. இத்தகவலை சிம்பாப்வே தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இம் முடிவை எதிர்க் கட்சியான ஜனநாயக மாற்றத்துக்கான இயக்கத்தின் கட்சி வேட்பாளரும், பிரதமருமான மோர்கன் ஸ்வான்கிரி ஏற்றுக் கொள்ள வில்லை. தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கவில்லை என்று அவர் புகார் கூறியுள்ளார். இதனால் சிம்பாப்வேயில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை நிலவுகிறது. எனவே ஐ. நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் தலையிட்டு இரு தரப்பின ரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தாக்குதல் அச்சுறுத்தல்

முஸ்லிம் நாட்டு அமெரிக்க தூதரகங்களுக்கு பூட்டு

ஆயுததாரிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உலகெங்கிலுமுள்ள 21 அமெரிக்க தூதரகங்கள், துணைத் தூதரகங்கள் நேற்று மூடப்பட்டன. இதில் பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளின் அமெரிக்க தூதரகங்கள் மூடப்பட்டன. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை தனது நாட்டு பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. அல்கொய்தா ஆயுததாரிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்த இராஜாங்க திணைக்களம், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளில் இவ்வாறான தாக்குதல் அபாயம் இருப்பதாக எச்சரித்தது. இந்த தாக்குதல் அச்சுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதி ஒபாமாவை நேற்று முன்தினம் இரவு சந்தித்த சிரேஷ்ட பாதுகாப்பு குழு, அபாயம் குறித்து அறிவுறுத்தியது. இதன்படி மத்திய கிழக்கு, வட ஆபிரிக்க மற்றும் ஒரு சில ஆசிய நாடுகளின் அமெரிக்க தூதரகங்கள் நேற்று மூடப்பட்டன. நேற்று முஸ்லிம் நாடுகளில் வேலை தினம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அம்மான், கெய்ரோ, ரியாத், காபுல் மற்றும் டாக்கா நகரங்களில் இருக்கும் அமெரிக்க தூதரகங்களும் மூடப்பட்டன. கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஏனைய தினங்களிலும் தூதரகங்கள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அல் கொய்தா அமைப்பின் தகவல் பரிமாற்றங்களை புலன்விசாரணை செய்ததன் மூலமே அமெரிக்க அரசு தனது தூதரகங்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அல்கொய்தா, சிரேஷ்ட தலைவர்கள் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல் நடத்துவது குறித்து தகவல் பறிமாறிக்கொண்டது தெரியவந்துள்ளது.

ஈரான் ஜனாதிபதியாக ரவ்ஹானி பதவியேற்பு

ஈரான் நாட்டு ஜனாதிபதியாக மதப்போதகர் ஹஸன் ரவ்ஹானி, மஹ்மூத் அஹமதி நஜாத்திற்கு பதில் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார். தலைநகர் டெஹ்ரானில் சனிக்கிழமை இடம் பெற்ற நிகழ்வில் உயர் மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனி, புதிய ஜனாதிபதியாக ரவ்ஹானிக்கு பதவி வழங்கினார். இதனைத் தொடர்ந்து அவரது பதவியேற்பு வைபவம் நேற்று இடம் பெற்றது. கடந்த ஜூன் மாதம் இடம் பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சீர்திருத்த முகாமில் போட்டியில் ரவ்ஹானி வெற்றி பெற்றார். பதவியேற்கும் நிகழ்வில் உரையாற்றிய புதிய ஜனாதிபதி ரவ்ஹானி, “மாற்றத்தை விரும்புபவர்கள், சிறந்த வாழ்வை எதிர்பார்ப்பவர்கள், ஊழல், வறுமை மற்றும் துஷ்பிரயோகங்களை களைய நினைப்பவர்கள், பாதுகாப்பான எதிர்காலம், கெளரவத்தை எதிர்பார்ப்ப வர்களின் ஆதரவுடன் நான் இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறேன்” என்றார். ஈரானின் அரசியல் கைதிகளை விடுவிக்க மற்றும் சர்வதேச தடைகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிக்கும் சீர்திருத்தவாதிகளுக்கு 64 வயதான ரவ்ஹானி தமது ஆதரவை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும் ஈரானின் தீர்மான சக்தியாக உயர்மட்ட தலைவரே இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது மூத்த மகளிடமும் 'ஐ லவ் யூ' சொன்ன சந்துரு - இயக்குனர் சேரன் கண்ணீர்!

எனது இளைய மகன் தாமினியின் மனதை சந்துரு மாற்றி மூளைச் சலவை செய்து எனக்கு எதிராக திருப்பி விட்டுள்ளான் என்று தெரிவித்த இயக்குனர் சேரன், என் மூத்த மகளிடமும் "ஐ லவ் யூ" என்று பேஸ்புக்கில் சந்துரு கூறியுள்ளான் என்றார். சென்னையில் இன்று (4ஆம் தேதி) செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் சேரன், என் மனைவி செல்வராணியை இதுவரை வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியதில்லை. இப்போது தான் அறிமுகம் செய்கிறேன். எனக்கு 2 மகள்கள். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த நான், பணக்காரன் அல்ல. அப்பா தியேட்டர் ஊழியர். அம்மா ஆசிரியை. என் மகள்களுக்கு சினிமா பின்னணி, பணக்கார வாசனையும் வரக்கூடாது என்பதற்காக அவர்களை கவனமாக வளர்த்தேன். (மேலும்.....)

ஆகஸ்ட் 04, 2013

முதலாவது மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலும் முதலாவது வட மாகாண சபைத் தேர்தலும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வட மாகாண சபைத் தேர்தலுக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ள வேட்பாளர் பட்டியலைப் பார்க்கும் போது 1994ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையலான பொதுஜன ஐக்கிய முன்னணி மேல் மாகாண சபைத் தேர்தலுக்காக சமர்ப்பித்த வேட்பாளர் பட்டியல் நினைவுக்கு வருகிறது. அன்றைய பொதுஜன ஐக்கிய முன்னணியின் பட்டியல் மிகப் பலமான வேட்பாளர்களைக் கொண்டிருந்தது. சந்திரிகா குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் சம்லி குணவர்தன, ஏ.எச்.எம். பௌசி, பேர்னார்ட் சொய்ஸா, வஜிர பெல்பிட்ட போன்ற ஜாம்பவான்கள் அந்தப் பட்டியலில் இருந்தனர். இன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி, புளோட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
(மேலும்.....)

மூன்று மாகாண சபைகளையும் ஆளுங் கூட்டணியே கைப்பற்றும்

13 ஐ வெற்றுக் காகிதமென எள்ளி நகையாடிய ரி. என். ஏ. தற்போது மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட முண்டியடிப்பு

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஆளுங் கூட்டணி மிகப் பெரும்பான்மை பலத்துடன் மூன்று மாகாண சபைகளையும் நிச்சயம் கைப் பற்றும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். நாட்டை அபிவிருத்தி செய்யும் அரசாங்கத்தின் துரிதமான திட்டங்கள், ஜனாதிபதியின் ஆளுமையான செயற்பாடுகள் என்பவற்றால் மக்கள் அரசாங்கத்தின் பக்கமே உள்ளனர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 13 ஆவது திருத்தச் சட்டத்தை வெறும் வெற்றுக் காகிதமேயன்றி எவ்வித அரசியல் தீர்வும் அல்லவென்று எள்ளி நகையாடியவர்கள் தற்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடு வதற்கு முண்டியடித்துக் கொண்டு நிற்பது கேலிக்குரிய விடயமாகுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐ. ம. சு. கூட்டணியில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கே தருகிறோம். (மேலும்.....)

வேட்பாளர் வாய்ப்பு கிடைக்காமை குறித்து எவ்விதமான வருத்தமுமில்லை - தயா மாஸ்டர்

ஐக்கிய மக்கள் சுதந் திரக் கூட்டமைப்பில் வேட் பாளராக போட்டியிடும் சந் தர்ப்பம் கிட்டாமை எனக்கு எந்தவிதமான வருத்தத்தையும் தர வில்லை என தயா மாஸ்டர் தெரிவித் துள்ளார். சுதந்திரக் கட்சி எடுக்கும் சகல தீர்மானங்களுக்கும் தான் கட்டுப்பட்டு இணங்குவதாகவும் அவர் தெரிவித்தார். தகுதியானவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் எவ்வித எதிர்ப்போ மனவருத்தமோ துளியளவும் எனக்குக் கிடையாது. கட்சியை நெருக்கடியில் ஆழ்த்தும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் தான் எச் சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப் போவதில்லை எனவும் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார்.

வைகோ, சீமான், திரு மா

தமது அரசியல் இருப்பிற்காகவே இலங்கைத் தமிழர் மீது இரக்கம்

இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து வருவதில் தமிழகத்தி லுள்ள அரசியல் தலைவர்கள் எனக் கூறும் வைகோவும், சினிமா பட இயக்குனர் சீமானும் மீண்டும் போட்டி போட்டுச் செயற்பட ஆரம்பித்துள்ளனர். மூத்தவர் பழ. நெடுமாறன் இப்போது தனது குரலைச் சற்றுத் தளர்த்தியுள்ளார். வயது போய் விட்டது. அதுவும் ஒருவகை யில் இலங்கைத் தமிழருக்கு நிம்மதி தரும் விடயம்தான். தொல். திருமாளவன் சில புதிய பாணியில் தனது பிரசாரங்களை மேற்கொ ண்டு இலங்கைத் தமிழரை மட்டுமல்லாது உலகத் தமிழ் மக்களையே ஏமாற்றி வருகிறார். இன்னும் சிலர் அவ்வப்போது குரல் கொடு ப்பதும் பின்னர் ஓய்வெடுப் பதுமாக காலத்தைக் கட த்தி வருகின்றனர். இவர்கள் அனைவருமே இலங்கைத் தமிழரை வைத்து தமிழகத்தில் தமது அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்ளவும், தம்மை சினி மாத் துறையில் பிரபல்யப்படு த்தவும், ஏதோ ஒரு வகையில் வருமான த்தை ஈட்டிக் கொள்ளவுமே இவ்வாறு இல ங்கைத் தமிழருக்காக குரல் கொடுப்பது போல நடந்து கொள்கின்றனர்.(மேலும்.....)

காணி, பொலிஸ் அதிகாரங்களை ன்னிடமிருந்து எவரும் பறிக்க முடியாது- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

வடபகுதி ஜனநாயக ரீதியில் ஆளப்பட வேண்டும் என்பதில் அரசு அக்கறை

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் சொல்ல விரும்புவது என்ன?

முப்பது வருட கால ஏகாதிபத்திய பயங்கரவாத செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த எமது அரசாங்கம் வடக்கில் மக்கள் ஜனநாயக ரீதியில் ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. புலிகளின் மறைவிற்குப் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஜனநாயக ரீதியில் அம்மக்கள் செயற்பட சந்தர்ப்பத்தை வழங்கினோம். இப்போது மீதமாகவுள்ள மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படுகிறது. மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய மீண்டுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் எமது அரசாங்கம் வடக்கில் பாரிய அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. (மேலும்.....)

அடுத்து என்ன நடக்கும்?

60 ஆண்டுகளுக்கு முன்பு, சரியாக இதே ஜூலை மாதத்தில் வரலாறு காணாத புரட்சியை எகிப்து தேசம் கண்டது. எகிப்தின் முகத் தோற்றத்தையே அந்தப் புரட்சி மாற்றியது. மன்னராட்சி வீழ்ந்து, ஒரு குடியரசாக மலர்ந்தது. நிலச்சீர்திருத்தங்கள் துவக்கப்பட்டன. வரலாற்றுப் புகழ்மிக்க சூயஸ் கால்வாய் தேசியமயமாக்கப்பட்டது. அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அணிசேரா கொள்கையே நாட்டின் வெளியுறவுத்துறை கொள்கையாக அறிவிக்கப்பட்டது. (மேலும்.......)

ஆகஸ்ட் 03, 2013

என் மனவலையிலிருந்து......

மீண்டும் ஆணையைக் கோரி தமிழ் மக்களை உசுப்பேத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

(சாகரன்)

1977 இல் தமிழ் மக்களிடம் தனி நாட்டிற்கான ஆணையைக் கோரி தமது பாராளுமன்றக் கதிரைகளை நிரப்பிக் கொண்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி இன்றுவரை ஒவ்வொரு பெரிய தேர்தலிலும் சிறிய தேர்தலிலும் மீண்டும் மீண்டும் மக்களினடம் ஆணையைக் கேட்டுக் கேட்டு தேர்தலைச்சந்தித்து வருகின்றது. என்ன காலத்துக்க காலம் தமிழ் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர்களை மட்டும் மாத்தினாலும் இவை ஒரே கழததில் ஊறிய மட்டடைகள்தான். எமது அரசியல் சகபாடியான ஒருவர் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கூறியது போல் மக்களிடம் 'ஆணையை கோரி ஆனையிடம்' செல்வதே இவர்கள் வழக்கம் ஆகிவிட்டது. அது நூற்றுக்கு நூறு சதவிகதம் உண்மை. அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலும் தமிழ் மக்களிடம் ஆணையைக் கோரியே தமது நாற்காலிகளை நிரப்பிக் கொண்டனர். இதற்கு முன்பு வட மாகாணத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலிலும் அவ்வாறே கோரியிருந்தனர். மீண்டும் தற்போது வடமாகாணசபைத் தேர்தலிலும் ஆணையைக் கோரி நிற்கின்றர். இவர்கள் இப்படியே எத்தனை தடவை ஆணை கோரி நின்றாலும் தமிழ் மக்களில் பெரும்பான்மையினர் இவர்களை நாற்காலியில் அமர்த்தி அழகு பார்பதில் சலித்துப் போகவில்லை என்பதுவே துர் அதிஷ்டம் ஆகும். இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரிச் சக்திகளில் சந்தர்பவாத செயற்பாடுகளும் ஐக்கியப்பட்ட பலமான செயற்பாடும் இராஜதந்திரம் அற்ற அணுகுமுறைகளும் காரணமாக அமைகின்றன. ஓன்றில் குறும் தேசியவாதம் பேசுபவர்களுடன் தம்மை இணைத்துக்கொள்வதில் தமது வெற்றியை உறுதிப்படுத்திக் கொள்ள முனைதல் அல்லது இலங்கை அரசுடன் பிரச்சனைகளைப் பேசித்தீர்க்கும் ஆற்றல் அற்ற ஒருவகை சரணாகதியை அடைதல் என்ற இரண்டு தரப்பிற்கு அப்பால் தம்மை ஸ்தானப்படுத்தி சரியான கொள்கை, செயற்திட்டம், செயற்பாட்டு அடிப்படையில் நிலை நிறுத்தி மாற்றுத் தலைமையை கட்டுவதில் இவர்கள் எப்போதும் சலித்துப்போவது அல்லது தோற்றுப்போவது வருந்தத்தக்கது. இதனை கடந்த 1965 இற்கு பிற்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலான அரசியல் களத்தில் காணமுடியும். இடையில் 1975 இற்கும் 1990 இற்கும் இடையில் இவர்கள் மாற்றுத் தலைமையை உருவாக்க உழைத்த அளவிற்கு இன்றுவரை தொடர்ந்து உழைத்திருந்தால் இவர்களால் தமிழ் மக்கள் மத்தில் ஓர் பாரிய தலைமை மாற்றத்தை ஏற்படுதியிருக்க முடியும். மேற்கூறிய இரண்டு அணிக்குள் ஒன்றிற்குள் தம்மை வீழ்த்திக் கொண்ட வரலாற்று பின்னணியை கடந்த 25 வருடகால அரசியல் சதுரங்க ஆட்டத்தை அவதானித்து வந்தவன் என்ற அடிப்படையிலேவே என் மனவலையிலிருந்து இவை உதித்துள்ளன. கடந்து வந்த பாதைகளை எமக்கு பாடமாகக் கொண்டு இனியாவது நாம் சரியான பலமான பாதையை சிறுக சிறு கட்டியமைப்போமா....? (ஆகஸ்ட் 03, 2013)

ஆஸிக்கு சட்டவிரோதமாக ஆட்களை அனுப்பும் முகவர் கைது

மட்டக்களப்பிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களை படகில் அனுப்பி வந்ததாக கூறப்படும் முகவர் ஒருவரை குற்றப்புலனாய்வு பொலிசார் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பிலிருந்து  ஆட்களை படகில் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வந்தார் எனும் சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு கல்லடி முகத்தவாரத்தை சேர்ந்த நிரஞ்சன் டட்லி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். குற்றப்புலனாய்வு பொலிசார் இவரை நேற்றிரவு கைது செய்து விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. மட்டக்களப்பிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்றுக் கொண்டிருந்த 116 பேர் மட்டக்களப்பு வாழைச்சேனை கடற்பரப்பில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தனியார் காணிகள், வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் வெளியேறுவர் - மஹிந்த

தனியார் காணிகள் மற்றும் வீடுகளிலிருந்தும் இராணுவத்தினர் விரைவில் வெளியேறுவார்கள் என்று யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். இராணுவத்தினப் பயன்பாட்டில் இருந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார். இந்த வைபவம் யாழ். அரியாலையில் நடைபெற்றது. பல வருடங்களிற்கப் பின்னர் இந்த வீடுகளை பொது மக்களிடம் கையளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகின்றோம். இது அரசியல் நோக்கத்திற்காக நாங்கள் மேற்கொள்ளவில்லை. யுத்தத்திற்குப் பிந்திய காலத்தில் யாழ். நகரில் முக்கிய இடங்களில் இருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி அந்த இடங்களை பொது மக்களிடம் வழங்கியிருக்கின்றோம். மிகவிரைவில் தனியார் காணியில் உள்ள 52 படையணி, மற்றும் 513, 515 ஆகிய படைப்பிரிவுகள் உள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயப்பகுதிக்கும் அரச காணிகளுக்கும் மாற்றம் செய்யப்படவுள்ளது. அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனியார் காணிகளில் இருந்து வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றார். இதனால் அவரின் வேண்டுகோளுக்கிணங்க காணிகளை விடுவித்து வருகின்றோம். இருந்தாலும்  பலாலியை விடச் சொல்லிக் கோரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். 2008ஆம் ஆண்டுக்கு முன்னர் யாழில் 43 ஆயிரம் படையினர் இங்கிருந்தனர். முப்பதாயிரம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு தற்போது 13 ஆயிரம் படையினர் நிலைகொண்டுள்ளனர் என்றார். அத்துடன் சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பேதங்களை விடுத்து நாம் அனைவரும் இலங்கையர் என்ற எண்ணத்தில் செயற்படவேண்டும் என்றும் அவர் கோரினார்.

தனி மாநிலம் கோரி அசாமில் வன்முறை 2 பேர் மரணம்

அசாம் மாநிலத்தின் இரண்டு மாவட்டங்களை இணைத்து தனி மாநிலம் அமைக்க வேண் டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி நிகழ்ந்த வன்முறையில் இருவர் உயிரிழந்தனர். பெருமளவில் தீவைப்பு, வன் முறை சம்பவங்கள் நடை பெற்ற கர்பி ஆங்லாங் மாவட் டத்தில் அகில இந்திய வானொ லியின் ஒலிபரப்பு கோபுரம் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தபோதும் வன்முறையா ளர்கள் அதை அலட்சியப்படு த்தினர்.  வன்முறையாளர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந் தனர்.

பொலிவியாவிடம்   மன்னிப்பு கோரியது ஸ்பெயின்

அமெரிக்காவின் ரகசி யங்களை அம்பலப்படுத் திய இளைஞரான ஸ்னோ டெனை சிறை பிடிக்கும் பொருட்டு பொலிவியா நாட்டின் ஜனாதிபதியை விமான நிலையத்தில் ‘சிறை வைத்தமைக்காக’ பொலி வியாவிடம் ஸ்பெயின் அரசு மன்னிப்பு கோரியுள்ளது. அமெரிக்காவில் இருந்து தப்பிச் சென்ற உளவு அமைப்பின் முன்னாள் ஊழியரான எட்வர்டு ஸ்னோடென், மாஸ்கோ வில் இருந்து கடந்த 3-ம் தேதி பொலிவியாவுக்கு செல்வதாக மேற்கத்திய ஊடகங்களில் தகவல் பரப் பப்பட்டது. அந்த விமானத் தில் பொலிவியா நாட்டின் ஜனாதிபதி ஈவோ மொ ரேல்ஸ் பயணம் செய்தார். ஸ்னோடென் இருக்க லாம் என்ற சந்தேகத்தின் பேரில், ஜனாதிபதியின் விமானம் வியன்னாவில் அவசரமாக தரையிறக்கப் பட்டு கடுமையாக சோத னை செய்யப்பட்டது. அதில் ஸ்னோடென் இல்லை என் பதை அதிகாரிகள் உறுதி செய்தனர். அதன்பிறகு விமானம் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த சோதனையால் பொலிவியா ஜனாதிபதியின் பயணம் சுமார் 13 மணி நேரம் தாம தம் ஆனது. ஜனாதிபதி சென்ற விமானம் பறக்கும் வான்பகுதியை மூடியதாக ஸ்பெயின், பிரான்ஸ், போர்ச் சுக்கல் மற்றும் இத்தாலி அரசுகள் மீது பொலிவியா குற்றம் சாட்டியது. இந்நிலையில் ஜனாதி பதி ஈவோ மொரேல்சுக்கு ஏற்பட்ட அசவுகரியத்திற் காக பொலிவியா அரசிடம் ஸ்பெயின் மன்னிப்பு கோரி யுள்ளது. இதுதொடர்பாக பொலிவியா வெளியுறவு அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொலிவியாவிடம் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக ஸ்பெயின் வெளியுறவு அமைச் சர் ஏற்கனவே கூறியிருந்தார்.

ஆகஸ்ட் 02, 2013

சகடமுனியின் விகடசங்கடம் – 3

 காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழு பற்றி..

(முனிதாசபூதன்)

செய்தி: கடந்த யுத்தகாலத்தின் போது வடக்கு கிழக்கில் காணாமற் போனோர் தொடர்பான ஒரு விசாரணை ஆணைக்குழுவை அமைக்கும்படி ஜனாதிபதி அவரது செயலாளர் லலித் வீரதுங்காவுக்கு உத்தரவிட்டுள்ளார். திரு லலித் வீரதுங்கா அவர்கள் கடந்தகால அநுபவங்களிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளல் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கமிட்டிியின் பிரதான உறுப்பினருமாவார். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் பிரதம பேச்சாளரான திரு சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் கருத்துக் கேட்டபோது அவர் இந்த ஆணைக்குழுவை தமிழர்களோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அங்கீகரிக்க மாட்டாது என அறிவித்திருப்பதாக இலங்கையின் பிரதான ஆங்கில வாரப் பத்திரிகைகளில் ஒன்றான சண்டே லீடர் செய்தி வெளியிட்டுள்ளது. திரு.சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் இந்த ஆணைக்குழுவில் யார் யார் நியமிக்கப்படப் போகிறார்கள் என தமக்குத் தெரியும் என்றும் அது இராணுவ அதிகாரிகளையோ அல்லது அரசியற் கையாட்;களையோ கொண்டதாகத்தான் இருக்கும் என்றும் ஆரூடம் கூறியுள்ளார். (மேலும்.....)

என் மனவலையிலிருந்து.......

பிரிப்போம்! பிரிப்போம்!! துண்டு துண்டாக பிரிப்போம்.....?

(சாகரன்)

இந்தியாவின் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டாகி விட்டது.. கடந்த சில வருடங்களாக ஆந்திராவில் உள்ள அரசியல்வாதிகள் தங்கள் நலன்களின் அடிப்படையில் மாநிலத்தை இரண்டாக உடைக்க எடுத்து போராட்டங்கள், பேரம் பேசல்கள் இதற்காக மக்களை பலிக்கடா ஆக்கியது எல்லாம் நாம் எல்லோரும் செய்திகளில்; படித்ததுதான். இதில் பெரிய மாநிலங்களை நிர்வாக பாய்சலுக்காக பிரித்து நிர்வகிப்பதும் இதற்காக புதிய மாநிலங்களை அமைப்பதும் நல்லதுதான். ஆனால் இங்கு சிறப்பாக இந்தியாவில் மொழிவாரி மாநில அமைப்பே பெரிதும் உருவான நிலையில் தற்போது ஒரு மொழி பேசும் ஒரு மாநிலத்தை அரசியல்வாதிகளின் மிரட்டல்களுக்கும் பேரம் பேசலுக்கும் பயந்து இரண்டாக உடைத்தது ஆரொக்கியமான நிகழ்வு அல்ல. அதுவும் பல மொழி, இன, மத மக்கள் ஒப்பீட்டளவில் ஒற்றுமையாக வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இப்படி பிரிக்கப்படுவதின் பின்னணியில் இந்திய நாட்டைத் துண்டாட கனவு காணும் தீய சகதிகளின் கரங்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் நியாயமானதே. ஏன் எனில் அடுத்துவரும் தசாப்பங்களில் சீனா, இந்தியா, பிரேசில் ஜேர்மனி போன்ற நாடுகளே பொருளாதார வல்லரசுகளாக பரிணமிக்கக் கூடிய வாய்புக்கள் இருக்கும் நிலையில் இவ் நாடுகளை பிரித்து உடைப்பதில் முதலாளித்துவ வல்லரசுகள் கண்ணும் கருத்துமாய் செயற்படும். இதற்கு மற்றைய எந்த நாடுகளையும்விட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ள நாடு இந்தியாதான். இந்த பிரிப்பை தொடர்ந்து வேறு சில மாநிலங்களின் அரசியலவாதிகளும் தமது மாநிலங்களை பிரிக்கும் முயற்சிகளுக்கான போராட்டங்கள்? ஏன்றபோர்வையில் மக்களை பலியிட முயலுவர். இதில் தமிழ் நாடு மாநிலமும் அடங்கும். இவற்றிற்கு எண்ணை ஊத்தி வளர்க்க ராமதாஸ் போன்றவர்கள் மட்டும் அல்ல சீமான் போன்றவர்களும் தீயைப்பற்ற வைக்க முடியலுவர். ஏன் எனில் இலங்கையை பிரிப்பதில் இன்பம் காணும் இவர்கள் தமது எசமானர்களில் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். இதனை சீமானின் புலம் பெயர் தேசத்து தம்பிகளும், மற்றும் தம்பியன் தம்பிகளும் சந்தோஷத்துடன் முன்னெடுத்துச் செல்ல முயலுவர். இதனையே இலங்கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எதிர்பார்த்து இருக்கின்றது. அப்போதுதான் மக்களை உசுப்பேத்தி தமது நாற்காலிக் கனவுகளை தொடர்ந்தும் நிறைவேற்றிக்கொள்ள முடியும். இவ்விடயத்தில் பாவம் மக்கள்.... இலங்கை வாழ் தமிழ் மக்கள் மட்டும் அல்ல இந்திய மக்களும்தான்.

(ஆகஸ்ட் 02, 2013)

பிரபாகரன் பெயரைச் சொல்லி பணம் சம்பாதிக்கிறார்கள்!- இடி இடிக்கிறார் இமானுவேல்

நீங்கள் பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்ததாக தகவல்கள் உண்டு. பிரபாகரன் இறந்ததாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது எந்த அளவுக்கு உண்மை?

பதில்: 1986-ல் நான் யாழ்ப்பாண குருமடத்தில் பேராசிரியராக இருந்தபோது ஒருமுறை பிரபாகரனைச் சந்தித்தேன். அதன் பிறகு 1991-ம் ஆண்டு என்னை அவர் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தார். அப்போதும் சந்தித்தேன். அந்த இரண்டு சந்திப்புகளுமே எமது தாயகம் குறித்தும், மக்களின் எதிர்காலம் குறித்து விவாதிப்பதிலேயே மையம் கொண்டது. அதன் பிறகு, நான் இலங்கையில் இருந்து வெளியேறி விட்டேன். பிரபாகரன் இருக்கிறாரா? என்ற கேள்வி எமக்கு இப்போது முக்கியமானதாகத் தெரியவில்லை. அவர் பெயரைச் சொல்லி சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள். பிரபாகரனைக் காட்டிலும், அவரின் இலட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே இப்போது முக்கியம்!  (மேலும்.....)

மன அழுத்தத்தை அதிகரிக்கும் வேலைத்தளங்கள்

'மன அழுத்தம்' என்பது இன்று பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. மன அழுத்தங்கள் பல வழிகளில் ஏற்படுகின்ற போதிலும் தொழில்தளங்களில் நாம் எதிர்கொள்ளும் கசப்பான அனுபவங்கள் இத்தகைய மனஅழுத்தங்களை மேலும் அதிகரிக்கும் செயற்பாடுகளாக அமைந்துள்ளன. இக்கருத்துக்களை நியப்படுத்தும் வகையில் ஆய்வுத்தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன. வேலைத்தளங்களில் ஏற்படும் கசப்பான அனுபவங்களானது மன அழுத்தத்தை அதிகரிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் மன அழுத்தம் என்பது இன்று உலகளவில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தமது ஆய்வுத் தகவல்களில் தெரிவித்துள்ளனர். (மேலும்.....)

லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் மனுத்தாக்கல்

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். ஆணை கோரும் மனுவொன்றையே அவர் தாக்கல் செய்துள்ளார். யாழ். மாவட்டத்திலுள்ள தமது பரம்பரைச்சொத்தை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவே அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். நகர அபிவிருத்தி அதிகாரசபையில் சுற்றுச்சூழல் வடிவமைப்பு ஆலோசகராக 1995 ஆம் ஆண்டு கடமையாற்றிய முறைப்பாட்டாளரான முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் எஸ்.ஜே. கிறிஸ்ரியன் கதிர்காமரே மனுவை தாக்கல் செய்துள்ளார். கடற்படையைச்சேர்ந்த அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர், இலங்கை இராணுவத்தின் மேஜர் செல்வநாதன் கதிர்காமநாதர், பிரபல இராணி சட்டத்தரணி சாம் கதிர்காமர் ஆகியோர் தனது நெருங்கிய உறவினர்கள் என்றும் கூறியுள்ளார்.(மேலும்.....)

ஆகஸ்ட் 01, 2013

ஊடக அறிக்கை...

எமது வெற்றியே 13 திருத்தச்சட்டத்தை பாதுகாத்து மேலும் வளர்த்தெடுக்க உதவும்!

வட மாகாணசபை தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி, அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே 13 வது திருத்தச்சட்டத்தை பாதுகாத்து, அதை மேலும் வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்லும்  இலட்சியக்கனவுகள் சாத்தியமாகும் என்று ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

வடக்கு மாகாணத்திற்கான செப்டெம்பர் 21 ஆம் திகதி

வடக்கு வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கான தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று தெரிவித்தார்.வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் வடமேல் மாகாணத்தின் புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.வடக்கு வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் நோக்கில் 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 பேர் வாக்களிப்பதற்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. நேற்றுடன் வேட்பு மனுக்கல் தாக்கல முடிவுற்ற நிலையில் இவ் அறிவித்தல் இன்று வெளியாகியுள்ளது. மற்றைய இரு மாகாணங்களையும் விட் வடமாகாண தேர்தல் பலராலும் உன்னிப்பாக கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.

என் மனவலையிலிருந்து........

வட மாகாணத் தேர்தல்  இலங்கை அரசுக்கே வெற்றி

(சாகரன்)

வடமாகாணத்திற்கான வேட்பு மனுத் தாக்கல் முடிந்துவிட்டன. இதில் இலங்கை அரசுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலேயே யாருக்க வெற்றி என்ற பாய்சல் இருந்தது. ஜே.வி.பி, ஐ.தே.க என கட்சிகளும் சுயேச்சைக்குழுக்கும் களத்தில் இருந்தாலும் இவர்களைத் தவிர்த்து மேற்கூறிய இருவரிடையேயும்தான் தந்திரப் போட்டிகள் இருந்தன. இலங்கை அரசு சர்வதேசத்திற்கும், தமது அரசில் இருக்கும் கடுப்போக்காளர்களுக்கும் பதில் சொல்லும் வகையில் தேர்தல் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. ஒன்று தேர்தலை நடத்திக்காட்டுவது. மற்றது 13 வது திருத்தசசட்டத்தை 'இரத்து' செய்யாமல் உள்ளது உள்ளபடியே தேர்தலை நடத்துதல் என்ற வகையில் இந்தியாவையும் ஏனைய சர்வதேச நாடுகளையும் திருத்திப்படுத்தியுள்ளது. இதே வேளை தமது தரப்பு 13 வது திருத்தச் சட்ட இராஜினமாக்களை வாய் மூட வைத்தும் சாதனை புரிந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர் தரப்பில் மேலும் பலரை தமக்கு எதிரான அணியில் இணைத்துள்ளது. இதிலும் இவர்களின் அணுகுமுறை புலிகளைப் போலவே அரம்பித்திருக்கின்றது. இவ்வாறு சென்றுதான் புலிகள் இறுதியில் தனிமைப்பட்டு முள்ளிவாய்காலில் இல்லாமல் போனார்கள். மேலும் அரசுக்கு மிகவும் விருப்பமான முதல்அமைசர் வேட்பாளராக விக்னேஸ்வரனை இலங்கை அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூலம் பெற்றுக்கொண்டதுதான் இலங்கை அரசின் உச்ச வெற்றியாகும். அடுத்த வெற்றி தமக்கு உளவு கூறும் முன்னாள் புலி பிரமுகர்களை தனது தேர்தல் பட்டியலில் இறக்குவதாக பாசாங்கு காட்டி இறுதில் யாரையும் இணைக்காமல் விட்டது, தம்மைத் தவிர்த்து தேர்தலில் பங்குபற்ற முடியாமல் செய்தது இதன் அடுத்த வெற்றி. மூன்றாவது வெற்றி தமது கட்சிக்குள் இருக்கும் சக கட்சிகளின் வாயை அடைக்க தனது முதன்மை வேட்பாளரை அறிவிக்காமல் எல்லோரையும் முதன்மை வேட்பாளர் என்று எண்ண வைத்து தாமே முதல் அமைச்சர் ஆகவேண்டும் என்ற கோதாவில் முழுமூச்சாக தேர்தல் பணியில் ஈடுபட வைக்கும் வலைக்குள் வீழ்த்தியது. இப்படியே பார்த்துக்கொண்டு போனால் வேட்புமனுதாக்கல் வரை இலங்கை அரசே தந்திரோபாய ரீதியில் வெற்றி பெற்றுள்ளது எனலாம். கிழக்கு மாகாண சபையில் ஒரு தமிழ் அமைச்சர் கூட இல்லாமல் மாகாண சபையை அமைத்த இலங்கை அரசு இதைக் கூட சாதிக்க மாட்டாது என்று யாரும் நம்பினால் இவர்களின் அரசியல் ஞானம் கேள்விக்கு உட்பட்டதே. இறுதியில் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை அரசு, இதன் கூட்டாளிக்கட்சிகள் யாவரிடையேயும் ஒரு விடயத்தில் ஒரு ஒற்றுமை இருக்கினறது. அது யார் முதல் அமைச்சர் வேட்பாளராக எக்கட்சியிலும் இருக்கலாம் ஆனால் அது முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் இவ்விடத்திற்கு வரக்கூடாது என்பதுதான் இதிலும் இலங்கை அரசுக்கு வெற்றியே. இதில் வரதராஜப்பெருமாளும் ஆர்வம் இல்லாது இருந்தார் என்பது அவருடன் நெருங்கிப்பழகும் பலருக்கும் இது தெரியும். ஆனால் மற்றைய எல்லோரையும் விட இன்றைய நிலையில் வட மாகாணத்திற்கான சிறந்த முதல் அமைச்சர் வேட்பாளர் அ. வரதராஜப்பெருமாள்தான். இதனை ஒரு நாள் வரலாறு நிச்சயம் நிறுவி நிற்கும்.

(ஆகஸ்ட் 01, 2013)

வடக்கில் பிரதான கட்சிகள் வேட்பு மனுத் தாக்கல்

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அனைத்து பிரதான கட்சிகளும் இன்று தமது வேட்பு மனுக்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் தாக்கல் செய்துள்ளன.

வடமாகாண சபைத் தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்புமனுத் தாக்கல்

வடமாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக்கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினதும் ஏனைய பங்காளிக் கட்சிகளினதும் வேட்புமனு இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களது வேட்புமனு ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலையில் ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டது.

முன்பதாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள வைரவர் கோவிலில் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் ஐ.ம.சு.முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த மற்றும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பிரமுகர்கள் சிறப்புப் பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டதன் பின்னர், பழைய பூங்கா முன்றலைச் சென்றடைந்தனர்.

அங்கிருந்து மங்கள வாத்தியம் சகிதம் மாவட்ட செயலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வேட்பு மனு ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா அவர்களினால் தாக்கல் செய்யப்பட்டது.

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் 10 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களின் விபரங்கள் வருமாறு.

�    கந்தசாமி கமலேந்திரன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர்

�    ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளர்

�    சூசைமுத்து அலெக்ஸாண்டர் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி இணைப்பாளர்

�    சிவகுரு பாலகிருஸ்ணன் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் இணைப்பாளர்

�    நாகன் கணேசன் - வடமாகாண பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர்

�    சுந்தரம் டிவகலால  - முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர்

�    கோடீஸ்வரன்  ருசாங்கன் - சிகரம் ஊடக இல்லத்தின் பணிப்பாளர், ஊடகவியலாளர்

�    அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் - வடகடல் நிறுவன மேற்பார்வையாளர், முன்னாள் ஒய்வு பெற்ற ஆசிரியர்

�    திருமதி ஞானசக்தி சிறிதரன் - சமூக சேவையாளர்

(நன்றி: ஈபிடிபி இணையம்)

மாறுதலைத் தேடிடும் யாழ் தேர்தல்

(நல்லையா குலத்துங்கன், ஈழத்திலிருந்து)

"வடமாகாணசபைத் தேர்தல்" கேட்கவே தித்திக்கும் ஒரு இனிய பதம். எப்போதும் கனவாகவே இருந்து விடப் போகிறதோ என ஏங்கிக் கொண்டிருந்த நியாயமான உணர்வுகளைக் கொண்ட ஒவ்வொரு ஈழத் தமிழனின் மனமும் இப்போ ஓரளவு சமாதனமடைந்திருக்கும். ஆனாலும் செப்டெம்பர் மாதம் நடக்கவிருக்கும் இம்மகாணசபைத் தேர்தலைப் பற்றிய விமர்சனங்கள் சாராமாரியாக சகல பக்கங்களிலும் இருந்து கிளம்பிக் கொண்டேயிருக்கின்றன. ஈழத்தமிழினத்தின் தனிப்பெரிந்தலைவர் "மேதகு வே.பிரபாகரன்" அவர்கள் ஆயுதமுனையில் அதிகரம் செய்து கொண்டிருந்த காலத்தில் மூச்சு விடத் தயங்கிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் இன்னொரு அரசியல் ஞானியராகி அரும்பெரும் கருத்துக்களை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்.....)

தான் ஏன் போட்டியிடவில்லை, டக்ளஸ் விளக்கம்

'ஜனாதிபதி கேட்டுக்கொண்டதற்கு இணங்க நான் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை' என்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்.கிறீன்கிராஸ் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், 'வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடமால் ஒதுங்கிக்கொண்டது ஏன்?' என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், 'ஜனாதிபதி என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும் இந்த தேர்தலை வெற்றிகரமாக நடத்தி  முடிப்பதற்காகவும் நான் வெளியில் நின்று முழுமுயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஜனாதிபதியுடன் கதைத்து யார் முதலமைச்சர் வேட்பாளர் என்பதை தீர்மானித்துக்கொள்வோம்' என்று அவர் தெரிவித்தார்.

குட்டி ஜப்பானாக வடக்கு மாறும் - டக்ளஸ்

வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெற்றால் வடக்கை குட்டி ஜப்பானாக மாற்றுவோம். அதுவே எமது நோக்கமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக  கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் வாழ்கின்ற மக்கள் இன்று சுதந்திரமாக செயற்படுகின்றனர். அந்த சுதந்திரத்திற்கு இன்னும் பல மடங்கு அர்த்தம் கற்பிக்கவேண்டுமாயின் இந்த தேர்தலில் அரசாங்கம் வெற்றியீட்டவேண்டும்;. அதேநேரத்தில் அரசியல் உரிமை தொடர்பான பிரச்சினை ஒன்று இருக்கின்றது. அது தொடர்பாக அமைச்சரவையில் பல தடவைகள் கலந்துரையாடி இருக்கின்றோம் என்றும் அவர் சொன்னார். எமது அரசியல் உரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக, ஏற்கெனவே கூறப்பட்டு வந்த 13 ஆவது திருத்த சட்டத்தினை ஆரம்பமாக கொண்டும் அதனை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவும், அதை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் எமது நடவடிக்கைகள் அமைந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சிகள் பங்கு பற்றவில்லை. எதிர்க்கட்சிகள் பங்குபற்றாத காரணத்தினாவும்;, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சில தமிழ் கட்சிகளுக்கு இந்த பிரச்சினைகளை தீர்க்க விரும்பம் இல்லாத காரணத்தினாலும், அவர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்கள் கலந்து கொள்வார்களாயிருந்தால், விரைவாக இந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று நம்புகின்றேன் என்றார்.

வடக்கு முதலமைச்சர் பதவி; கருகிப்போன கனவுகள்

(கே.சஞ்சயன்)

வடக்கு மாகாணசபைத் தேர்தல் களம் வேட்பாளர் பட்டியல்கள் சமர்ப்பிப்புடன் இந்தவாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியல்கள் பலரது எதிர்பார்ப்புகளையும் கனவுகளையும் தகர்த்து விட்டுள்ளதாகவே தெரிகிறது. வடக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சர் என்ற கனவுடன் இருந்த பலரையும், முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பலரையும் இந்தத் தேர்தல் வெகு தொலைவுக்குத் தள்ளிவிட்டது தான் முக்கியமானது. தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே, எவரும் வேட்பாளர்கள் குறித்து அலசவோ ஆராயவோ இல்லை. முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளர் யாராக இருக்கக் கூடும் என்று தான் பேசப்பட்டது. (மேலும்.....)

இந்திய மத்திய அரசுக்கு புதிய தலைவலி

மேலும் பல மாநிலங்களை பிரித்து தனி மாநிலம் உருவாக்க கோரிக்கை

தனி தெலுங்கானா அறிவிப்பைத் தொடர்ந்து நான்கு தனி மாநிலங்களுக்கான பிரிவினை கோரிக்கை வலுவடைந்து வருகிறது. மராட்டிய மாநிலத்தை இரண்டாக பிரித்து விதர்பாவை தலைமையிடமாக கொண்டு தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்று பிரிவினை இயக்கம் நடத்தி வரும் முன்னாள் பாரதிய ஜனதா எம்.பி. புரோகித் வலியுறுத்தியுள்ளார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சியில் ஒரு தரப்பினர் ஆதரவு அளித்துள்ளனர். மேற்கு வங்கத்தை இரண்டாக பிரித்து கூர்க்காலாந்து தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது. இதனை வலியுறுத்தி அங்கு காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தை இரண்டாக பிரித்து புடோலாண்ட் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என்றும், உத்தர பிரதேசத்தை இரண்டாக பிரித்து ஹரித் பிரதேசத்தை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. இந்த கோரிக்கையால் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com