Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 2013 மாதப் பதிவுகள்

டிசம்பர் 31, 2013

அரசாங்கமும் தமிழ் தரப்பும் சந்தித்தே தான் ஆக வேண்டும்

தமிழ் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதுவும் இல்லை என்றும் அவர்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஏற்பதைத் தவிர தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வில்லை என்றும் ஜாதிக்க ஹெல உருமய, தேசிய சுதந்திர முன்னணி போன்ற அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் தான் ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார். சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச போன்ற தமது அமைச்சர்கள் எதைக் கூறினாலும் தமிழ் தேசிய கூட்டமப்புடன் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் இருப்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டிருப்பதனாலேயே அவர் பேச்சுவார்ததை நடத்த வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கிறார். தெரிவுக்குழுவை நியமித்ததன் மூலமும் பேச்சுவார்த்தைக்கான அவசியத்தை அரசாங்கம் உலகத்தார் முன்னிலையில் ஏற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ் தரப்பினரும் பிரச்சினைகளை முன்வைத்த வண்ணமே தான் இருக்கிறார்கள். அதிகாரப் பரவலாக்கல், காணிப் பிரச்சினை, பெண்களின் பாதுகாப்பு, காணாமற் போனோர்களின் பிரச்சினைகள் என்று பலவற்றை அவர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றையும் தீர்த்துக்கொள்ள பேச்சுவார்த்தையைத் தவிர வேறு வழியில்லை. (மேலும்......)

யாழ்ப்பாணத்தில் ராதிகா சிற்சபேசன்

கனடா நாட்டின் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராதிகா சிற்சபேசன் நேற்று யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயத்தை மேற்கொண்டிருந்தார். சுற்றுலா விசாவில் விடுமுறைக்காக இலங்கைக்கு வந்துள்ள அவர் நேற்றுக்காலை தெல்லிப்பழை - மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் ஆகியவற்றுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடமாகாணசபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரன் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சுகிர்தன் ஆகியோரையும் சந்தித்துள்ளார். உறவினர் நண்பர்கள் வீட்டிற்கும் சென்ற அவர் வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கும் சென்று மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த முகாமிற்கு ஏற்கனவே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழரோடு முஸ்லிம்கள் இணைந்து போராடும் தருணம் இது!

(எஸ். ஹமீத்)

இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மேற்கண்ட ஆதங்கம் அல்லது குற்றச்சாட்டு, ஊகங்களை அடிப்படையாகக் கொண்டவை என்றாலும் அதற்கான நிகழ்தகவுகளைப் புறம் தள்ளிவிட முடியாது. இலங்கையைப் பொருத்தவரை அமைச்சர், பிரதியமைச்சர் பதவிகள் என்பது சொர்க்க வாழ்வுக்கான நுழைவுச் சீட்டுகளுக்கு ஒப்பானவை. ஓட்டாண்டியாய் வாழ்ந்தவனையும் மிகக் குறுகிய காலத்தில் உச்சாணிக் கொப்பில் ஏற்றிவிடும் மந்திரக் கோல்கள் அவை. கொளுத்த சம்பளம், கொமிஷன், அலவன்ஸ்,கொந்தராத்து வருவாய், இலஞ்சப் பணமென்று மாதாந்தம் பல இலட்சங்களை ஈட்டித் தரும் அந்தப் பதவிகள், சமூகத்தில் செல்வாக்கையும் பெருமையையும் பெற்றுத் தருகின்றன. வீட்டிலும் வீதியிலும் ஆயுதம் தாங்கிய காவலர்கள், ஆடம்பர வாகனங்கள், உல்லாசப் பயணங்கள், ஓய்வு விடுதிகள் என வாழ்வே அலங்காரங்கள் போர்த்து அற்புதமாக மின்னும். போதாக்குறைக்கு ஆதரவாளர்களின் கூழைக் கும்பிடு, அதிகாரிகளின் முகஸ்துதி என இன்னும் எத்தனையோ...!
(மேலும்......)

இலங்கையில் முஸ்லிம் தீவிரவாத குழு - இந்தியா

முஸ்லிம் தீவிரவாத குழுக்களினால் புரியப்படக்கூடிய தாக்குதல்களை தடுப்பதற்காக இலங்கையிலுள்ள இந்திய ராஜதந்திர அலுவலகங்களுக்கு வழக்கப்பட்டுள்ள பாதுகாப்பை அதிகரிக்குமாறு இந்தியா கோரியுள்ளது. இது தொடர்பில் இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்திய அரசு டிசெம்பர் 26 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது. பங்களாதேச ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் அப்துல் காதிர் முல்லாவுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை அடுத்து,கொழும்பில் உள்ள இந்திய தூதுவரலாயம்,ஏனைய துணை தூதுவரயங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்திய அரசு கருதுகிறது. பங்களாதேசத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 1971 ல் நடந்த விடுதலை போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரணை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மன்றம் அப்துல் காதிர் முல்லா 344 நபர்களை அப்போது கொன்ற குற்றத்திற்காகவும், ஏனைய குற்றங்களிலும் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு, டிசெம்பர் 12 ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. முஸ்லிம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் பற்றிய கலந்துரையாடல்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ இந்திய தூதுவரலாய அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்டதை  தொடர்ந்தே இந்திய அரசினால் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு திறந்த மடல்..!

கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் நிலைப்பாட்டை அதன் தலைவர் இரா. சம்பந்தன் கவனத்திற்கொண்டு செயற்பட வேண்டியது அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்ற அதேவேளை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அங்கத்துவக் கட்சிகள் புறக்கணித்தமை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். பதவி மோகம் கூட்டப்பினரின் நோக்கத்தை கெடுத்துவிட்டதோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. வடமாகாண சபைக்குத் தெரிவான உறுப்பினர்களுக்கு பாரிய வரலாற்றுக் கடமைகள் இருக்கின்றன. குறிப்பிட்ட மாகாணமொன்றுக்கு சேவையாற்றுவதற்காக முதன்முதல் தெரிவானதால் பொறுப்புக்கள் நிறைந்திருக்கின்றன. இந்நிலையில் வடமாகாண சபையின் கன்னியமர்வு ஆரம்பமாவதற்கு முன்பாகவே பிளவுகளும் சாடல்களும் ஆரம்பித்துவிட்டன. அப்படியாயின் காத்திரமான நீண்டகாலப் பயணத்தினூடாக தமிழ் மக்கள் அடைய விரும்பும் அபிலாஷைகள் தீர்க்கப்படுமா என்ற சந்தேகம் எழுவது நியாயமானது. (மேலும்......)

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையரின் காணிகள் போலி ஆவணங்களுடன் விற்பனை

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் காணி களை போலி ஆவணங்கள் தயாரித்து வேறு நபர்களுக்கு விற்பனை செய்து வந்த கும்பலை பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும் மூன்று ஆண்களும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். காணியை விலைக்கு வாங்குபவர்கள் போன்று வேடமிட்டுச் சென்ற கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நுவன் வெதசிங்க தலைமையிலான குழுவினரே சந்தேக நபர்களை மடக்கிப் பிடித்துள்ளனர். வெளிநாடுகளில் வசிப்பவர்களின் காணிகள் போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட விசேட குழுவினர் போலி ஆவணங்களை சமர்ப்பித்து 23 இலட்சம் ரூபா பெற்று நுவரெலியா பிரதேசத்தில் காணி ஒன்றை விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களின் காணி தொடர்பில் சந்தேக நபர்கள் கச்சேரி அல்லது காணி பதிவாளர் நாயகம் திணைக்களத்திற்குச் சென்று அதன் உரிமையாளர் தொடர்பில் தகவல்களை பெற்று தான் குறித்த காணியின் உரிமையாளர் போன்று ஆவணங்களை போலியாக தயாரித்து அந்த காணி தொடர்பில் பத்திரிகைகளில் விளம்பரம் செய்து வந்துள்ளனர்.

இந்தியர்கள் ஊதிய விவகாரம்

சட்டத்தை மீறுகிறதா அமெரிக்கா? இந்தியா முக்கிய ஆலோசன

இந்தியாவில் டில்லி, கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் இருக்கின்ற அமெரிக்க தூதரகங்கள், துணை தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணி புரிகின்ற இந்திய சாரதிகள், சமையல்காரர்களுக்கு குறைந்த அளவில் ஊதியம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்த வெளியுறவு அமைச்சகம் அமைத்துள்ள குழு நேற்று கூடி முக்கிய ஆலேசானை நடத்தியது. தூதரங்களில் பணிபுரியும் இந்தியர்களின் ஊதியம் குறித்து விசாரிக்க சட்டம், நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய வெளியுறவு அமைச்சகம் குழு அமைத்துள்ளது. விசா மோசடி வழக்கில் அமெரிக்காவில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ரகடே கைதுசெய்து கடுமையாக நடந்து கொண்டது. இதனால் இந்தியாவும் அடுத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு பதிலடி தருகிறது. இந்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊதியம் குறித்த தகவல்களை மத்திய அரசு கேட்டதற்கு இதுவரை அந்த தகவல்களை வழங்காமல், அமெரிக்கா காலம் தாழ்த்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க சட்டப்படி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 586 வழங்க வேண்டும். ஆனால் இந்திய ஊழியர்களுக்கு மாதத்திற்கு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை மட்டுமே ஊதியம் வழங்கி அமெரிக்கா எல்லை மீறி சுரண்டியுள்ளது. இந்தியாவில் பல்வேறு சட்டங்களையும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீறியிருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. இன்று இந்தியா முக்கிய ஆலோசனையின் முடிவில் இப்பிரச்சினை முடிவுக்கு வருமா அல்லது தொடருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

கியூபாவில் கடன் பெறும் கட்டுப்பாடுகளில் தளர்வு

கியூப பொருளாதாரத்தை பலப்படுத்தும் முயற்சியாக அந்நாட்டு தனியார் கடனாளிகளுக்கான கடன் கட்டுப்பாடுகளில் அரசு தளர்வை கொண்டுவந்துள்ளது. தனிநபர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பல தவணைகளில் செலுத்தும் வகையில் சிறு கடன்பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. சோசலிச நாடான கியூபாவின் சீர்திருத்த நடவடிக்கையாக ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்தார். கடன் பெறும் குறைந்த பட்ச வரம்பு கியூப நாணயமான 3000 பெசோசிலிருந்து 1000 பெசோசாகக் குறைக்கப்பட்டது.  அதே போன்று மக்கள் தமது வீடுகள் அல்லது நகைகளை பிணையாக வைத்து கடன்பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மாத ஆரம்பத்தில் புதிய அல்லது பாவனை கார்களை வாங்க தனி நபர்களுக்கு கியூப அரசு அனுமதி அளித்தது. இதற்கமைய போதுமான பணமிருக்கும் கியூப நாட்டவர் அல்லது வெளிநாட்டினர் அரச நிறுவனத்தினூடே வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. கியூபாவில் சுமார் 440,000 பேர் அல்லது சுமார் 9 வீதத்தினர் சுய தொழிலாளர்களாகவே பணி புரிகின்றனர்.

இந்தியாவின் கடும் எதிர்ப்புக்கு சமரச தீர்வு காண அமெரிக்கா நடவடிக்கை

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இந்திய துணைத்தூதராக பணியாற்றி வந்த தேவயானி கோபரகடே, விசா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, கைவிலங்கிட்டு, ஆடை அவிழ்ப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட விவகாரம், இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த தகவல் கிடைத்த உடனேயே அமெரிக்க தூதர் நான்சிபவலை இந்தியா நேரில் அழைத்து கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விஷயத்தில் அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும், தேவானி மீதான வழக்கை கைவிட வேண்டும் என்றுஇந்தியா வலியுறுத்தி வருகிறது. இங்கு பணியாற்றி வருகிற அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளையும் இந்தியா பறித்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக இரு தரப்பு தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் நிர்ப்பந்தத்துக்கு அமெரிக்கா இப்போது பணியத் தொடங்கி உள்ளது. தேவயானி விவகாரத்தில் சமரச தீர்வு கண்பதற்கான நடவடிக்கையில் அமெரிக்கா இறங்கி இருக்கிறது. இந்த விவகாரத்தில் நடந் துள்ள தவறுகளை வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சில், வெளியுறவுத் துறை, நீதித்துறை ஆகியவை ஆய்வு செய்து வருகின்றன. இதை அமெரிக்க அரசு வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

நம்மாழ்வார் மறைவு விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மறைவு தமிழக விவசாயிகளுக்கு ஈடு செய்யவே முடியாத இழப்பாகும். இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம் போற்றுதலுக்குரிய நம்மாழ்வார், வேளாண்மைக்கும் விவசாய நிலங்களுக்கும் அழிவைத் தர முற்றுகையிடும் மரபணு விதைகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் அனைத்தையும் எதிர்த்து, வேளாண் நிலமும் பயிர்களும் நச்சுத்தன்மைக்கு ஆளாகி விடாமல், பாதுகாக்க உண்மையான அறவழிப் வேளாண்மை புரட்சியை தலைமையேற்று நடத்தி, காலத்தால் அழியாத புகழ் படைத்தார். வேளாண்மை அறிவியல் பட்டம் பெற்று, கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக பணிபுரியும் காலத்திலேயே, நஞ்சாகி வரும் வேளாண்மை முறையை எதிர்த்துப் போராட அரசு பணியைத் தூக்கி எறிந்துவிட்டு, இயற்கை வேளாண்மையை நிலைநாட்டும் போராளியானார். மீத்தேன் எரிவாயு திட்டத்தால் சோழ மண்டலமே பாழாகிவிடும் ஆபத்தை எதிர்த்துப் போராடினார். உடல்நலம் குன்றிய நிலையிலும் அந்த அறப்போரை மேற்கொள்ளச் சென்ற சூழலில் உயிர் நீத்தார்.அவர் உயிர் இழந்து உடலால் மறைந்தாலும் விவசாயிகளையும், சுற்றுச் சூழலையும் பாதுகாக்க அவர் தந்த அறிவுரைகளாலும், தொலைநோக்குத் திட்டங்களாலும் நம்மோடு வாழ்கிறார். என்றென்றும் வாழ்வார் நமது மனங்களை ஆளும் நம்மாழ்வார். அவர் ஏந்திய வேளாண்மை இலட்சியக் கொடியை உயர்த்தி அவரது கனவுகளை நனவாக்க  உறுதிகொள்வோம்!

டிசம்பர் 30, 2013

பெளத்த சிங்களவர்களுக்கு எந்தெந்த உரிமைகள் வழங்கப்படுகின்றதோ அவை அனைத்தும் தமிழ் முஸ்லிம் இனத்தவர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும் -  வாசுதேவ

இனங்களுக்கிடையே ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரேயொரு விடயம் தேசிய கீதம் மட்டுமே. எந்த மொழியில் தேசிய கீதத்தினை இசைத்தாலும் ஒரே அர்த்தத்தினையே வெளிப்படுத்துகின்றது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை சிங்கள, பெளத்த நாடாக இருந்தாலும் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தினை தடை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் பிரிவினைகளை தவிர்த்து அனைவரையும் ஒன்றுபடுத்தும் ஒரே வழிமுறை தேசிய கீதம் மட்டுமே. ஒரு விழாவில் ஒரே சந்தர்ப்பத்தில் இரு மொழிகளில் தேசிய கீதத்தினை இசைக்க முடியாது. ஆனால் மொழி பெயர்ப்பு செயற்றிட்டங்களை உபயோகிக்க முடியும். சிங்களத்தில் தேசிய கீதத்தினை இசைப்பதில் தமிழ் மக்களுக்கு சிக்கல்தான் இருக்கின்றது. அதனால் தான் தமிழிலில் பாடுகின்றனர். தேசிய கீதத்தினை எந்த மொழியில் பாடினாலும் அது ஒரே அர்த்தத்தினை வெளிப்படுத்துகின்றது. இதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் இலங்கை சிங்கள பெளத்த நாடென்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கு பெளத்த கலாசாரங்களுக்கும் மதவிடயங்களுக்கும் முன்னுரிமை இருக்கின்றது. ஆனால் ஏனைய மதங்களும் இனத்தவர்களும் அடக்கப்பட வேண்டுமென எவரும் குறிப்பிடமுடியாது. இங்கு பெளத்த சிங்களவர்களுக்கு எந்தெந்த உரிமைகள் வழங்கப்படுகின்றதோ அவை அனைத்தும் தமிழ் முஸ்லிம் இனத்தவர்களுக்கும் வழங்கப்படல் வேண்டும். இங்கு எப்போதும் அடக்கு முறை அரசியலுக்கு இடமில்லை. பெளத்த நாடாக இருப்பதனால் தமிழ்மொழி மூலமான தேசிய கீதம் இசைக்கக்கூடாதென்பதில்லை. தமிழ் மொழியிலான தேசிய கீதத்தினை இசைப்பதை எவராலும் தடை செய்ய முடியாது.

சம்பந்தனுக்கு சங்கரி எச்சரிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டது       

கூட்டணி ஆரம்பித்த காலத்திலிருந்து கட்சியின் நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அறியாததல்ல. வடக்கிலும் கிழக்கிலும் பல பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினோம். அச்சந்தர்ப்பங்களின் போதெல்லாம் எமக்கேற்பட்ட கஷ்டமான நிலைகள், அவமானங்கள், மன உளைச்சல்கள், தலைவர்கள் பட்ட கஷ்டங்கள் அதிலும் பல்மடங்கு மேலாக அன்றைய இளைஞர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது என்பது மட்டுமல்லாமல் எமது நினைவுகளிலுமிருந்து அகலா. எமது இளைஞர்கள் எத்தனைபேரை இழந்தோம். சிலரின் தலைகள் சிதறடிக்கப்பட்டன. இத்துர்ப்பாக்கியவான்களைப் பற்றி இன்று யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? நம்நாட்டிலும் சரி பிறநாட்டிலும் சரி கைது செய்யப்பட்டு - தப்பி வந்து நாட்டைவிட்டு ஓடிப்போன சிலர் சொற்ப அதிர்ஷ்ட சாலிகளே. உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகிறேன். இரு தலைவர்கள் மு.சிவசிதம்பரம் தா.சிவசிதம்பரம் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. ஒருவர் நீண்ட காலம் சுகவீனமாகவும், மற்றயவர் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த செல்லத்தம்பு அவர்களுடன் ஏற்பட்ட அபிப்பிராய பேதம் காரணமாகவும் ஒதுங்கியிருந்தனர். (மேலும்......)

சரத்பொன்சேகாவிற்கு ஆதரவு சந்திரசிறிக்கு மட்டும் எதிர்ப்பாம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்றே குறிப்பிட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழ் உள்ள வடமாகாண சபை மூலம் தமக்கு நல்ல பல சேவைகள் கிடைக்கும் என்று, வடமாகாண தமிழ் மக்கள் நம்பினர். ஆனால், அந்த விடயம் கைகூடவில்லை. இழவு காத்த கிளிபோல வடமாகாண தமிழ் மக்களின் நிலை மாறிவிட்டது. 2009ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் கடந்த நான்கரை வருடங்களாக வடமாகாணத்தில் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெற்றன என்பதை எவரும் மறுக்க முடியாது. மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல், பாடசாலை புனர்நிர் மாணம், வீதி புனரமைப்பு, சுகாதாரம், வேலைவாய்ப்பு, பல்கலைக்கழக பிரவேசம், கலாசார விழுமிய மேம்பாடு உட்பட பல விடயங்களில் வடமாகாணம் முன்னேற்றம் அடைந்துள்ளது. (மேலும்......)

எங்கள்முதன்மைஆசான் அமரர் வித்துவான் க. செபரத்தினம் ஐயா அவர்களுக்கு

இதயம் நெகிழ்ந்த அஞ்சலிகள்!

கணீரென்றஉங்கள்குரல்

வெறும்கண்பார்வையாலேயே

எங்களைக்கட்டிப்போடும்உங்கள்திறன்

கல்விகல்விஎன்று

அந்திவரைஉழைத்தஉங்கள்கடமைஉணர்ச்சி

கலைவிழாமேடைகளில்கர்ச்சித்தஉங்கள்பேச்சு

தமிழ்தமிழ்என்றுதுடித்தஉங்கள்மூச்சு...

யாவும்நேற்றைப்போல்நெஞ்சில்துளிர்விட

உங்கள்இழப்பென்றபெரும்பாரத்தைச்சுமந்து

ஈரலித்தவிழிகளோடுநிற்கிறோம்

ஈழத்துஇலக்கியவரலாறு

உங்கள்தமிழ்த்தொண்டைச்செதுக்கிக்கொண்டது

புலம்பெயர்தமிழ்இலக்கியச்சமுகம்

உங்கள்எழுத்துக்களைப்பொறித்துக்கொண்டது

எம்மைச்செதுக்கிச்செதுக்கிச்சிறக்கச்செய்தபேராசானே

நாமோஉங்கள்கல்வித்தொண்டைச்சிலாகித்துகொள்கிறோம்

உங்கள்இழப்பென்றவெற்றிடத்தில்எம்மையே

தொலைத்துநிற்கிறோம்

மட்டக்களப்புத்தமிழ்ச்சங்கம்

ஒருபெருந்தூணைஇழந்துசரிந்துநிற்கிறது

நீங்கள்விதைத்தநம்பிக்கையேஒருபெருந்தூணாகி

அதைத்தாங்கட்டும்

உங்கள் துணைவி, பிள்ளைகள் மற்றும்

உறவுகளின் துயர மனங்களை

எங்கள் வார்த்தைப் பூக்கள் சிறிது வருடட்டும்

இதோஉங்களின்மடியில்

ஆயிரம்ஆயிரம்மாணவர்தூவும்

அஞ்சலிப்பூக்களின்சமர்ப்பணம்

மட்/பட்டிருப்பு மகாவித்தியாலய பழைய மாணவர்கள் -  கனடா

29/12/2013

அரசாங்கத்துடன் விக்கினேஸ்வரன் இணைந்து செயற்படுவதற்கு தயார் சம்பந்தனின் பிடிவாதமே தடுக்கின்றது

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட தயாராகவே உள்ளார். ஆனால் சம்பந்தனின் பிடிவாதமே விக்னேஸ்வரனை தடுக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கத்துடன் இணைத்தால் அதுவே ஜனநாயகத்தின் பெரிய வெற்றியாகும் என்று ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கூட்டமைப்பின் கோரிக்கைகள் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டன. நிறைவேறாத வாக்குறுதிகளுக்காக போராடுவதை விடவும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக் கொள்வதே புத்திசாலித்தனமான விடயமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்......)

ஆயுதமுனையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டவர் முள்ளியவளையில் மறைந்திருந்தபோது கைது

ஆயுத முனையில் கடத் தப்பட்டதாகக் கூறப்பட்ட தமிழ் இளைஞன் முல்லைத்தீவின் முள்ளியவளை பிரதே சத்திலுள்ள தனது நண்பன் ஒருவனின் வீட் டில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளார். யாழ்ப்பாணம், பருத்தித் துறை பிரதேசத்தைச் சேர்ந்த சூரியகுமார் தமிழ் அமுதன் என்ற 22 வயது இளைஞனே பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார். பருத்தித்துறையைச் சேர்ந்த 22 வயதுடைய தனது மகன் நான்கு பேர் கொண்ட குழுவினரால் ஆயுதமுனையில் இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டதாக கடந்த 26 ஆம் திகதி பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். நான்கு பேர் கொண்ட குழு ஆயுத முனையில் தன்னை கடத்தியுள்ளனர் இவர்களில் மூவர் சிங்களத்தில் கதைக்கின்றனர். மற்றையவர் முஸ்லிம் ஒருவர். இவர்கள் இராணுவமாக இருக்கலாம் என்று தனது மகன் தனது கையடக்கத் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி (எஸ். எம். எஸ்.) ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என்றும் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளைஞனின் தந்தை பொலிஸாரிடம் தெரிவித் துள்ளார். (மேலும்......)

கெஜ்ரிவால் அரசு முழு பதவிக்காலமும் நீடிக்க ஒத்துழைப்பு அளிப்போம்  - இடதுசாரிகள்

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு அமைத்துள்ளதற்கு இடதுசாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் திரேந்திர சர்மா கூறுகையில், டெல்லி மக்களின் உணர்வுகளை பூர்த்தி செய்வதில் கெஜ்ரிவால் அரசு வெற்றிபெறும் என்று நம்புகிறோம். முழு பதவிக்காலமும் நீடிக்க இந்த அரசு அனுமதிக்கப்பட்டால், அரசுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றார்.

டிசம்பர் 29, 2013

தமது அரசியலுக்கு சவாலானோரை அழித்தொழித்த விடுதலைப் புலிகள் இன்று தாமே அழிந்து போயினர்

அன்று எந்த மாகாணசபையை ஏற்றுக்கொண்டதற்காக, பிரபாகரன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை துரோகி என்றுரைத்தாரோ, அந்த மாகாணசபைதான் தமிழரின் இன்றைய அரசியல் தளமாக இருக்கின்றது

இன்று தமிழர்கள் நீதி கேட்டு, உலகெங்கும் அலைகின்றனர். ஆனால் விடுதலைப்புலிகள் தமிழரின் அரசி யலை ஏக போகமாக தீர்மானித்துக் கொண்டிருந்த கடந்த மூன்று தசாப்தகால அரசியல் இயங்கு நிலையில், மனித உரிமைகள் குறித்து அவர்கள் கரிசனை கொண்டிருந்ததற்கான ஏதாவது சான்றுகள் உள்ளனவா? இதனைக்கருத்தில் கொண்டுதானோ, கூட்டமைப்பு, இறுதி யுத்தத்தில் இருதரப்பாலும் மீறப்பட்டதான குற்றங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றது போலும். அன்று எந்த மாகாணசபையை ஏற்றுக்கொண்டதற்காக, பிரபாகரன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை துரோகி என்றுரைத்தாரோ, அந்த மாகாண சபைதான் தமிழரின் இன்றைய அரசியல் தளமாக இருக்கின்றது.(மேலும்......)

வெளிவந்துவிட்டது வானவில் 35

திசை மாறிச் செல்லும் வட மாகாணசபையும், தமிழ் முற்போக்கு ஜனநாயக சக்திகளின் கடமையும்!

மூன்று மாதங்களுக்கு முன்னர் செப்ரெம்பரில் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடைபெற்ற பொழுது, வடக்கில் வாழும் தமிழ்ப் பெருங்குடி மக்கள் தமிழ் தேசிய தேசியக் கூட்டமைப்புக்கு அமோக (சுமார் 80 வீதம்வரை) ஆதரவளித்து அதை வெற்றிபெற வைத்தனர். அத்துடன் அதன் முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு சுமார் 1,33,000 வரையிலான விருப்பு வாக்குகளையும் அளித்து, அவரை ஒரு முடிசூடா மன்னன் ஆக்கினர். அத்துடன் அவர்களது வழமைப் பிரகாரம், தமது கடமை முடிந்தது எனக் கருதி, தமது தனிப்பட்ட அலுவல்களைப் பார்க்கச் சென்றுவிட்டனர். மக்கள் இவ்வளவு நம்பிக்கையுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பைத் தெரிவு செய்ததற்குக் காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே தமது பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அமைப்பு என்று கருதியதனால் ஆகும். அவர்கள் அவ்வாறு கருதியதற்குக் காரணம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு மோசமான இனவாத, வலதுசாரி அமைப்பாக இருந்த போதிலும், அதற்கு மாற்றாக எந்தவொரு தமிழ் அரசியல் அமைப்பும் இல்லாமல் இருந்தமையினாலாகும். (மேலும்......)

TNA என்ற சொல்லை தங்கள் தேவைக்கே பாவிக்கின்றார்கள்

ஆதங்கத்தைத் தெரிவித்த ஆனந்தசங்கரி மீது சிவசக்தி ஆனந்தன் தகாத வார்த்தைப் பிரயோகம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ரி.என்.ஏ. என்ற சொல்லை தங்கள் தேவைக்கு மட்டுமே பாவிக்கின்றார்களே தவிர, ஒரு கூட்டத்திற்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பில்தான் நானும் தேர்தலில் போட்டியிட்டேன். நானும் கூட்டமைப்பின் தலை வர்களுள் ஒருவன். மிக முக்கியமான கூட்டம் ஒன்று வவுனியாவில் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில்தான் நடந்திருக்கிறது. ஆனால் எனக்கு அழைப்பில்லை. என்ன காரணம் என்று தெரியாது. நான் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தெரிவித்தார். சிவகச்தி ஆனந்தனுடன், இதுதொடர்பாக அவரது வீட்டிற்குப் போனேன். நான் அவரின் வீட்டுக்கு தனியாகத்தான் போய், இப்படியே போனால் ரி.என்.ஏ. நிலை என்னவென்று கேட்கதான் போனேன். ஆனால் அவரோ மிகவும் அலட்டிக்கொண்டார். என் வாழ்க்கையில் அப்படியொரு கீழ்த்தரமான அனுபவத்தை நான் அனுபவிக்கவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் எந்த இடத்திலும் நட்பு முறையில் தான் போய் தேநீர் குடித்தேன், பின்பு ஏன் அதைக் குடித்தேன் என்று கவலைப்பட்டேன், மரியாதை இல்லாமல் நடந்துகொண்டார். அசிங்கப்படக் கூடிய வகையில் நடந்துகொண்டார் எனக் கவலையுடன் ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியா கலந்துரையாடலுக்கு தனக்கு அழைப்பு விடுக்காமை குறித்து, வினவியபோதே, பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தகாத வார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

ஈ.பி.டி.பி யை அழிப்பதற்காக பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

அக்கட்சியுடன் நாம் கூட்டுச் சேர்வதா?

அரசுடன் மட்டுமல்ல மாகாண சபைகளுடனும் இணக்கப்பாட்டு அரசியலுக்கு நாம் தயார் எனக் கூறியிருக்கின்றீர்கள். அதன் அர்த்தம் என்ன?

உண்மைதான். வடக்கு மாகாண சபை என்ற அமைப்பு எங்கள் கட்சியின் கனவுக் குழந்தையாகும். மாவட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளை நாம் கைவிடாமல் இணக்கப்பாட்டு அரசியலுடன் வட மாகாண சபையின் நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க விரும்புகிறோம். எமது கட்சி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவே இருந்து வந்தாலும் மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதாகவே எமது கொள்கை இருந்து வருகிறது. அதற்கமைய வடக்கைக் கைப்பற்றி ஆட்சி நடத்தும் மாகாண சபை நிர்வாகத்திற்கு தமிழ்பேசும் மக்களது நன்மை கருதி பூரண ஒத்துழைப்பை வழங்க நாம் தயாராகவே உள்ளோம். (மேலும்.....)

புலிகளை குறை கூறிய அனந்தியின் நோக்கம்?

எழிலன் திருகோணமலை மாவட்டத்தில் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த பொழுது எமக்கு விடுதலைப் புலிகள் எந்தவிதமான அடிப் படைத் தேவையான உதவிகளையும் வழங்க வில்லை என்று புலிகள் மீது முதற் தடவையாக குற்றம் சுமத்தியிருக்கிறார் வட மாகாண சபையின் உறுப்பினர் அனந்தி எழிலன். அக்காலப் பகுதியில் நாம் எமக்கு ரெலி போன் வசதிகளைச் செய்யுமாறு தயா மாஸ்டரிடம் கோரிய பொழுது அவர் தனது தனிப்பட்ட முயற்சியினால் எமக்கு பல வகையிலும் உதவினார் என வடக்கு அனந்தி தெரிவித்தார். நாங்கள் எழிலன் இயக்கத்தில் இருந்த காலத்திலிருந்து மிகவும் நெருக்கமான நண்பர்கள். தயா மாஸ்ரர் மிகவும் நல்ல மனிதர் என்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தொடர்ந்தும் அவருக்கான அடிப்படை வசதிகள் புறக்கணிப்பட்டு வரும் நிலையில் அனந்தி, தற்போது அரசாங்கக் கட்சியுடன் இணைந்து செயற்பட்டு வரும் தயா மாஸ்டர் ஊடாக ஏதேனும் அரச வசதி வாய்ப்புக்களை எதிர்பார்த்து இக்கருத்தினை முன்வைத்திருக்கலாம் எனச் சிலர் தெரிவித்தனர். வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற வைபவமொன்றில் தயா மாஸ்டருடன் நீண்ட நேரம் உரையாடியமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இரா. சம்பந்தன் ஐயாவின் முரண்பாடான அறிக்கைகள்

வன்னியில் கஷ்டப்பட்ட பிள்ளைகளுக்கு அரசாங்கம் உதவிபுரிந்தால் எள்ளிநகையாடும் சில தமிழ்க் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பி னர்கள் தமது பிள்ளைகளை அரசாங்கத்தின் புலமைப்பரிசிலில் வெளிநா டுகளில் கல்வி கற்க அனுப்பி வைத்துள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட வன்னியிலுள்ள ஏழை மக்களின் வீடுகளை அரசாங்கம் புரனமைப்பதை விமர்சிக்கும் இத்தகைய சிலர் இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் சொந்தமாகச் சொகுசு வீடுகளை அரசாங்கத்தின் பதவியினால் கிடைக்கும் சம்பளப்பணத்தில் வாங்கி வைத்துள்ளனர். இனிமேலும் தமிழ் மக்களை உங்களது அரசியல் இருப்பிற்காகவும், சொகுசு வாழ்விற்காகவும் பகடைக் காய்களாக்க வேண்டாம். பிரச்சினைக்கு ஒரு தீர்வினைக் கண்டு மக்களை நிம்மதியாக வாழவிடுங்கள். இதுவே மக்களது கோரிக்கையாக உள்ளது. இதற்காகவே மக்கள் உங்களுக்கு நம்பி வாக்களித்தார்கள். (மேலும்.....)

 

கித்துள் பிரதேச காணியை அம்பாறையுடன் இணைப்பதை தடுக்குமாறு கோரிக்கை

மட்டக்களப்பு எல்லைக்குட்பட்ட கித்துள் பிரதேச காணியை அம்பாறையுடன் சேர்பதற்கு எடுக்கும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறுகோரி தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 'மட்டக்களப்பு  மாவட்டத்தில்  செங்கலடி  பிரதேச  செயலாளர் பிரிவிக்குட்பட்ட கித்துள் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள புளியடிப்பொத்தானை பகுதியில் நெடியவட்டைக் குளம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் பாரிய நிலப்பரப்பை உடையதோடு மிக நீண்ட காலமாக கால்நடைகளின்; மேய்ச்சல்தரையாகவும் கால்நடைகளுக்குரிய குடிநீர்க் குளமாகவும் பயனபடுத்தப்;பட்டு வருகின்றது. இதனை கால்நடைகளின் மேய்ச்சல் தரைகாகவும் அவற்றின் குடிநீர்தேவைகளுக்காகவும் புனரமைப்பு செய்வதற்கு பிரதேச செயலாளரின் அனுமதியுடன் அப்பிரதேச கால்நடைச் சங்கம் ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்தும் பணம் அறவிட்டு ஆரம்ப வேலைகளைச்செய்யத் தொடங்கியுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பும், கடந்த ஒரு வார காலப்பகுதிக்குள்ளும் தம்பிட்டிய பகுதியிலுள்ள பாதுகாப்புபடையினரும் பௌத்த பிக்குகள் சிலரும் வந்து இப்பகுதிக் காணிகள் தங்களுடையது என உரிமைபாராட்டுவதோடு  இப்பகுதிக்குள் நீங்கள் வரக்கூடாது எனவும் இக்காணிகளில் கரும்புச் செய்கையைத் தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறியதோடு அப்பகுதியில் நின்ற பலரை எச்சரித்து சென்றுள்ளனர்.

டில்லி முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால்

டில்லி மாநில முதல் அமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர், அரவிந்த் கேஜ்ரிவால், இன்று பதவியேற்றார். டில்லியின் ராம்லீலா மைதானத்தில் திறந்த வெளியில் நடந்த விழா ஒன்றில் அவர் டில்லி முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். ஊழலுக்கெதிராகப் பிரச்சாரம் செய்து டில்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்த , ஆம் ஆத்மி கட்சியின் தலைவர், கேஜ்ரிவால், பதவிப் பிரமாண வைபவத்துக்கு ரெயிலில் வந்தார். அவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜுங் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவருடன் ஆறு பேர் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

 

மனோ கணேசனின் நிலைப்பாடு என்ன...?

மேல் மாகாணத்தில் இல. தமிழரசு கட்சியும் களத்தில் குதிக்கிறது?

எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி போட்டியிடவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை மேல் மாகாணத்திலுள்ள தமிழ்ப் பிரமுகர்களுடன் இரகசிய சந்திப்புக்களை நடத்தி வருவதாகவும் தெரிய வருகிறது. இது தொடர்பாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் முக்கிய பிரமுகர் ஒருவருடன் தொடர்புகொண்டு கேட்டபோது நீங்கள் கேள்விப்பட்டது உண்மையே, ஆனால் இன்னமும் தீர்க்கமான முடிவிற்கு வரவில்லை எனத் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை இந்நோக்கத்திற்காகவே ஆரம்பிக்கப்பட்ட தாகவும், தலைமையின் உத்தரவின் பிரகாரமே இறுதி முடிவுகள் எடுக்கப்படும் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்பிரமுகர் தெரிவித்தார். போட்டியிடு வதாயின் தமிழரசுக் கட்சி தனித்தா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகவா அல்லது ஜனநாயக மக்கள் முன்னணியுடனா போட்டியிடும் எனக் கேட்டபோது இன்னும் இரண்டு வாரங்கள் கழித்து உங்கள் கேள்விக்கு விடை தெரியவரும் எனவும் அவர் பதிலளித்தார்.இதனிடையே மேல் மாகாணத்தில் முன்னாள் பிரதியமைச்சர் இராதாகிருஷ்ணன் தலைமையில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனது வேட்பாளர்களைத் தனித்துக் களமிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதேவேளை மேல் மாகாணத்தில் நவோதய இளைஞர் அமைப்பும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ளது. இதனிடையே மேல் மாகாணத்தில் தாமே இராஜாக்கள் எனவும் தமக்கே தமிழ் மக்கள் வாக்களிப்பர் எனவும் நம்பிக்கையிலிருக்கும் அணியொன்று இம்முறை மண்கவ்வும் என தமிழரசுக் கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இதுவரை காலமும் அவர்கள்தான் தமிழ் மக்களுக்குச் சேவை செய்து வந்தனர் என்ற மாயை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுடன் முற்றுக்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 28, 2013

இயற்கை, உலகம், மனிதர்

ஆசியாவின் 3 லட்சம் மக்களைக் காவு கொண்ட சுனாமி 9 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த பேரனர்த்தம் நேர்ந்த கணங்களில் இலங்கை ஒன்றாக நின்றிருந்தது. மனிதர்களின் இயலாமை கையறு நிலை உணர்த்தப்பட்டது. இந்தோனேசிய, சுமாத்திரா, யாவா, தாய்லாந்து, இந்தியா, இலங்கை என மனிதப்பேரவல மண்டலம் உருவானது. கரையோரங்களின் மனிதவாழ்வும் நாகரிகங்களும் அழிந்தன.  மனிதர்கள் வேருடனும் வேரடி மண்ணுடனும் கடல்கொண்டு போன காட்சிஅது.  இப்போது எல்லாவற்றையும் மறந்து வழமையான காரியங்களில் இறங்கியிருக்கிறோம்.(மேலும்......)

யாழ். கட்டளைத் தளபதி ஹத்துருசிங்க உட்பட இராணுவ உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்

யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க உட்பட ஆறு மேஜர் ஜெனரல் தரமுடைய அதிகாரிகளுக்கு ஜனவரி 1ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவத்தில் நடந்த பாரிய, உள்ளக இடமாற்றங்களாக இவை கணிக்கப்படுகின்றன. யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க, இராணுவ தலைமையகத்தின் நிர்வாக நிறைவேற்று அதிகாரியாக இடமாற்றப்பட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக செயற்பட்டுவரும் மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், நிர்வாக நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், முல்லைத்தீவு மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாகவும், மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க், ஆயுதப் படைப்பிரிவின் பிரதம தளபதியாகவும் இடமாற்றம் பெற்றுள்ளனர்.

அமெரிக்கா, கனடாவில் மின்சார துண்டிப்பால் 500,000 வீடுகள் பாதிப்பு

வட கிழக்கு அமெரிக்கா மற்றும் தென் கிழக்கு கனடா ஆகிய பிராந்தியங்களில் கடந்த வாரம் வீசிய பனிப் புயல் காணமாக 500,000 க்கு மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கியுள் ளன. அப்பிராந்தியங்களிலான மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலை நாளை சனிக்கிழமை வரை நீடிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி புயலால் அமெரிக்காவிலும் கனடாவிலும் குறைந்தது 27 பேர் பலியாகியுள்ளனர். நத்தார் தினத்தன்று கனேடிய ரொரன்டோவில் மட்டும் 72,000 பேர் மின்சாரமின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். மேலும் கனடாவில் நியூ பிரன்ஸ்விக், கியூபெக், நொவா ஸ்கொரியா ஆகிய பிராந்தியங்களும் மின் துண்டிப்புக்கு உள்ளாகியிருந்தன. அமெரிக்காவில் மெயினே முதல் மெக்ஸிக்கோ வரையான பிராந்தியங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

நெடுந்தீவு குதிரைகளை அழிவிலிருந்து காப்பாற்ற சரணாலயம் அமைக்கப்படும்

யாழ்ப்பாணக் குடா நாட்டில் இருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடலில் இருக் கும் மிகப் பெரிய தீவான நெடுந்தீவில் இருக்கும் குதிரைகள் மற்றும் கோவேறு கழுதை களுக்கென ஒரு சரணாலயத்தை அமைப் பதென்று வனவிலங்கு பாதுகாப்பு துறை அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.  இவை இத்தீவின் வரலாற்றை பிரதிபலிக்கும் சின்னங்களாக இருப்பதனால் இந்த காட்டு மிருகங்களைப் பாதுகாப்பது அவசியம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த மிருகங்களுக்கு உண்பதற்கு இத் தீவில் உள்ள காடுகளில் போதியளவு இலை, குழைகள் இருக்கின்ற போதிலும் அவற்றுக்கு போதியளவு குடிநீர் இல்லை என்றும் இப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக இக்காடுகளில் பாரிய குடிநீர் தாங்கிகளை நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறினார். இந்த குதிரைகளும் கோவேறு கழுதைகளும் 17வது நூற்றாண்டில் இலங்கையை ஆட்சி செய்த ஒல்லாந்து ஆளுநர்கள் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியதாக வரலாறு கூறுகிறது. 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ் இந்தத் தீவில் தங்கியிருந்த போது இந்த மிருகங்களை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார். காலப்போக்கில் இத்தீவில் உள்ள கோவோறுக் கழுதைகளும், குதிரைகளும் மனித சகவாசம் இன்றி காட்டு மிருகங்களாக மாறின.

ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம். எல். ஏக்கள் சிலர் வாக்களிக்க திட்டம்

டில்லியில் ஆட்சி அமைக்க உள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம். எல். ஏக்கள் சிலர் வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகி யுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டில்லி முதல்வராக பதவி ஏற்க உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு மீது ஜனவரி 3ஆந் திகதி சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் 8 எம். எல். ஏக்களில் 4 பேர் அரசுக்கு எதிராக வாக்களிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர்களின் சிலரின் அறிவுறுத்தலின் பெயரில் அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. சில விஷயங்களில் கட்சியின் தலைமையின் மீதே அதிருப்தி அடைந்தே அவர்கள் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது. எனினும் இதனை மறுத்துள்ள டில்லி மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ஷகில் அகமது உறுதி அளித்தப்படி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் ஊழல் தடுப்பு அதிகாரியை சந்தித்து ஆலோசனை நடத்தியதை அடுத்து டில்லி மாநில அமைச்சகங்களில் பல்வேறு முக்கிய கோப்புகள் அழிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

டிசம்பர் 27, 2013

மக்கள் வெற்றியடையவைத்த வல்வெட்டித்துறை நகரசபை வரவு- செலவுத்திட்டம்

வல்வெட்டித்துறை நகர சபையின் 2014ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும் இழுபறிக்கு மத்தியில் இரண்டாவது தடவையாக சபையில் இன்று (27) சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. முன்னதாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த ஐந்து பேரையும் இன்றைய தினம் பொதுமக்கள் சபைக்குச் செல்லாமல் தடுத்து நிறுத்தி இரண்டாவது தடவையாக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினை வெற்றிபெறச் செய்தனர். இந்த நகர சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 17ஆம் திகதி சபையில் தவிசாளர் என்.அனந்தராஜாவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் சபையிலிருந்த 9 உறுப்பினர்களில் 5 உறுப்பினர்கள் எதிராகவும், 2பேர் ஆதரவாக வாக்களித்தமையினால் வரவு செலவுத் திட்டம் 3 வாக்குகளால் தோல்வியில் முடிவடைந்தது. தொடர்ந்து மீண்டும் இன்று (27) தவிசாளரினால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் எதிராக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பின் ஐந்து உறுப்பினர்களையும் சபை வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் சபைக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தனர். இதன்போது சபையிலிருந்து 4 உறுப்பினர்களும் (தவிசாளர் உட்பட) ஆதரவாக வாக்களிக்க வரவு - செலவுத் திட்டம் நிறைவேறியது. ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர் ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈ.பி.டி.பி.க்கு களங்கம் ஏற்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை - டக்ளஸ்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு (ஈ.பி.டி.பி) களங்கம் ஏற்படும் வகையில் கட்சியின் பெயரைப் பாவித்தால் அந்நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (26) நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்ட வேண்டுகோளை முன்வைத்தார். அவர் அங்கு மேலும் கூறுகையில், 'ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பெயரை அக்கட்சி சார்ந்தவர்கள் அல்லது, கட்சி சாராதவர்கள் அநாமதேயமாக பாவித்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸிடம் கோரிக்கை விடுத்தார். அத்துடன், 'அவ்வாறு எமது கட்சியின் பெயரைப் தவறாகப் பயன்படுத்தி ஏதாவது செயற்பாடுகள் செய்தால் அவ்வாறான விடயங்களில் தான் தலையிட மாட்டேன். இதுவரையில் நடைபெற்ற பல சம்பவங்களிலும் தான் தலையிடவில்லை' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

"ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் பொருளாதாரத்தடையை தவிர்க்கமுடியாதிருக்கும்'

2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் ஆராயப்படவிருக்கின்ற நிலையில் அதற்கு முன்பதாக நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் இலங்கைக்கு எதிராக மேற்குலக நாடுகளின் பொருளாதார தடையை எதிர்கொண்டேயாக வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அடுத்த வருடத்தில் இடம்பெறவிருக்கின்ற சர்வதேச மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்பதாக அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமேயானால் பேரவையின் உறுப்பு நாடுகளது ஆதரவு எமக்கு கிடைக்கும் என்பதில் ஐயப்படத்தேவையில்லை.ஏனெனில் இக்கூட்டத்தொடரில் இலங்கையின் மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளதுடன் கேள்விகளும் எழுப்பப்படவுள்ளன. இதற்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது ஆகவே இதற்கு முன்பதாக அரசாங்கம் இதனை செய்ய வேண்டும். இலங்கையின் மனித உரிமைகள் குறித்து பேசுகின்ற பிரித்தானியா 1940 காலப்பகுதிகளில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருக்கிறது. ஆகவே பிரித்தானியா தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு மேற்குலக நாடுகள் முன்வருமா என்பதே பிரதான கேள்வியாக இருக்கின்றது.

காரைதீவு பிரதேச சபையின் பட்ஜட் மீண்டும் தோற்கடிப்பு

காரைதீவு பிரதேச சபையின் வரவு, செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரதேச சபை, தமிழ்த் தேசி யக் கூட்டமைப் பின் ஆளுகைக் குட்பட்டது. இந்த சபையில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களில் நால்வர் எதிர்த்து வாக்களித்துள்ளனர். காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது தடவை யாகவும் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதாவது, சபையின் தவிசாளரைத் தவிர சகல உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர். தவிசாளரின் தன்னிச்சையான போக்குக்கு எதிராகவே தாங்கள் எதிர்த்து வாக்களித் துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான அமர்வு நேற்று தவிசாளர் செ. இராசையா தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. (மேலும்......)

டிசம்பர் 26, 2013

சுனாமி பேரழிவின் ஒன்பது வருட நிறைவு

உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து இன்று அஞ்சலி

இலங்கை உட்பட ஆசியா கண்டத்தின் பல்வேறு நாடுகளில் ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைப் பலியெடுத்ததுடன் விலைமதிக்க முடியாத உடைமைகளையும் அழித்தொழித்த கடல்பூகம்பம் பேரலை அனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் ஒன்பது வருடங்கள் நிறைவு பெறுகின்றன. ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்ற டிசம்பர் 26ம் திகதியை இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தினமாகப் பிரகடனப்படுத்தி வருடம் தோறும் இன்றைய தினத்தில் இயற்கை அனர்த்த விழிப்புணர்வு முன்னேற்பாடு களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகிறது. சுனாமி சோக நினைவு அனுஷ்டிக்க ப்படும் இன்றைய தினமானது தேசிய பாதுகாப்பு தினமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது.  ஆழிப்பேரலையில் உயிரிழந்த எமது மக்களை நினைவு கூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிட நேரம் நாடெங்கும் மக்கள் மெளனம் அனுஷ்டித்து நினைவஞ்சலி செலுத்துகின்றனர்.அதேசமயம் கடல்பூகம்பப் பேரலையினால் மோசமான அழிவுக்குள்ளான இலங்கையின் கடலோரப் பிரதேசங்களில் பரவலாக நினைவஞ்சலி வைபவங்கள் இன்று நடைபெறுகின்றன.

இவளும் மகிந்த வீட்டு விருந்தும்...!

 -எஸ்.ஹமீத்-

பாழும் போரில் பதியிழந்து பணியிழந்து

நிதியிழந்து நிம்மதியிழந்து நின்ற வேளை
சுதந்திரப்

பசியெழுந்தது பெரிதாய்...!

*****

அடிமைத் தளையறுக்கும் விடுதலைக் கனவால் 

ஆயுதங்களுடன் உறவாடி-
ஆவேசத்துடன் போராடி-
இரத்தத்தில் நீராடி-
எதிரிகளைப் பந்தாடி

ஈற்றில்...
இலட்சியக் கோட்டை இடிந்துவிழ-
தோற்றுத் துவண்டு சரணடைந்து-

 இன்றோர் மொட்டைத் திரியாய்-
 பட்ட கொடியாய்
கெட்ட குடியாய்-

ஓலைக் குடிலுள் ஒடுங்கிய வாழ்வு...!

*****

சீராட்டி வளர்த்த சின்னக்கா,
சிறு வயதிருந்தே சேர்ந்து வாழ்ந்த
சினேகிதிகள்,
அப்பாவின் அண்ணன்மார் தம்பிமார்
அவர்தம் குடும்பத்து அங்கத்தவர்கள்

இன்னும்...
உற்றார் உறவினர் ஊராரென

 அத்தனை பேரும் விட்டோட-
அவளை விட்டும் வெருண்டோட-
அபலையாய்...அனாதையாய்...!

*****

 கண்காணிப்புப் போர்வை போர்த்துக் காரிருளில்
கதவு தட்டும் கருநாகங்கள்

விசாரணைப் போதுகளில் 

விஷம் பாய்ச்சி வெளியேறும்!

*****

 ஒரு பசியும் இல்லாப் போது கூட
'உண்ணுக...பருகுக'  என்றுபசரித்த கடைக்காரரெல்லாம்
உறு பசியென வந்தின்று உதவி கேட்டால்

'ஓடிப்போ' வென விரட்டுகின்றார்...!

*****

இவள் முதுகுத் துப்பாக்கி கண்டு
எச்சில் கூட்டி விழுங்கியோரெல்லாமின்று
முகத்தின் முன்னாலேயே
துப்புகின்றார் தைரியமாய்...!

*****

நடு வகிடெடுத்த இரட்டைப் பின்னலில்
நடுநடுங்கியோரெல்லாம் இன்றிவளின்
பரட்டைத் தலை பார்த்துப்
பரிகாசம் புரிகின்றார்...!

***** 

முன்னொரு போதிலிவள்

சீருடை தந்த அச்சத்தில்

சிறுநீர் கழித்த
கள்ளுத் தவறணைக் கண்ணுச்சாமியின்று
கண்ணடித்து சைகை காட்டும்
கர்மமும் நடக்கிறது...!

 *****

புனர் வாழ்வு தருவதாய்த்தான் சொன்னார்கள்..
சில அதிகாரிகளோவதனைப்
புணர் வாழ்வெனப் புரிந்து கொண்டு
இவளையணுகும்
புதிரும்தான் நிகழ்கிறது....!

 ***** 

ஒரு கவளச் சோற்றுக்காய்
ஊர் முழுதும் இவள் அலைய...
மகிந்தர் மாளிகையின்
விருந்துக்காய் நம்மவர்கள்...!

*****

அட-காதலிலும் போரினிலும் மட்டுமல்ல-
அரசியலிலும் எல்லாமே
அழகுதானோ...? 

வெருகல் பிரதேச சபை பட்ஜட் தோற்கடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது. வெருகல் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது பிரதேசசபை தவிசாளரினால் 2014 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக மூன்று பேரும் எதிராக நான்கு பேரும் வாக்களித்தனர். இதனால், வெருகல் பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஒரு மேலதிக வாக்கினால் தோல்வியடைந்துள்ளது.

அடையாள அட்டை செல்லாது

தேவயானி விவகாரத்தில்அமெரிக்காவுக்கு இந்தியா மேலும் ஒரு பதிலடி

இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இந்தியா மேலும் ஒரு பதிலடியை கொடுத்துள்ளது. இதன்படி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் அடையாள அட்டைகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அடையாள அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதற்கான அவகாசம் திங்கட்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்வெளியாகி உள்ளது. இதைத் தொடர்ந்து அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு மட்டும் புதிய அடையாள அட்டைகளை வழங்க முடிவு செய்துள்ள மத்திய அரசு, இனி அவர்களது குடும்பத்தினருக்கு அடையாள அட்டை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. மேலும் தூதரகத்தில் பொறுப்பேற்ற 6 மாதங்களுக்கு பிறகு தங்களுக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்ய அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி வழங்க முடியாது என தெரிவித்துள்ளது.

நேபாள பாராளுமன்றத்தில் இணைய மாவோயிஸ்ட் கட்சி இணக்கம்

நேபாள பாராளுமன்றத்தில் இடம் பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக் கொண்டதையடுத்து அந்நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. நேபாள நாடாளுமன்றத்திற்கு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் நேபாள காங்கிரஸ் கட்சி 105 இடங்களில் வெற்றி பெற்றது. அதற்கடுத்து மார்க்சிஸ்ட லெனினிஸ்ட் கட்சி 91 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதனையடுத்து, அந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி, பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்தது. இதனால் புதிய அரசு அமைவதிலும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதிலும் குழப்பம் ஏற்பட்டது. இந்நிலையில் காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை நேபாள காங்கிரஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட், மாவோயிஸ்ட், மாதேசி மக்கள் உரிமை அமைப்பு ஆகிய கட்சிகளின் தலைவர்கள் கூடி, ஆலோசனை நடத்தினர். இதில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பாராளுமன்றக் குழு மூலம் விசாரணை நடத்துவது, 6 மாதங்களுக்குள் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது உள்ளிட்ட 4 முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும் இந்தக் கூட்டத்தில் பாராளுமன்றத்தில் இடம்பெற மாவோயிஸ்ட் கட்சி ஒப்புக்கொண்டது.

டிசம்பர் 25, 2013

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்

தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்)

56 வது பிறந்த தினம்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காகவும், சுபிட்சமான எதிர்காலத்திற்காகவும் போராடி, தடம் பதித்த தோழர் றொபேட் (தம்பிராசா சுபத்திரன்) அவர்களது 56 வது பிறந்த தினம் (24.12.2013) இன்றாகும். சாவகச்சேரி, நுணாவில் என்னும் இடத்தில் 24.12.1957 இல் பிறந்த தோழர் றொபேட், தனது 24 வது வயதில் ஈபிஆர்எல்எவ் இன் நடவடிக்கைகளோடு தன்னை இணைத்துக்கொண்டார். அவர் 14.06.2003 இல் உயிர்துறக்கும் வiர் அர்ப்பண உணர்வு மிக்க ஊழியனாக, வழிகாட்டும் தலைவனாக சுமார் 32 ஆண்டுகள் ஈபிஆர்எல்எவ் இன் அரசியல், இராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்றிருந்தார். நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன் 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசுடன் யுத்த நிறுத்தம் செய்துகொண்ட புலிகள் தமது அங்கத்தவர்கள், குடும்பங்களுடன் மீள இணைதல் என்ற பேரில் மீண்டும் யாழ் குடாநாட்டுக்குள் பிரவேசித்தனர். அப்போது ஆரம்பித்த கொலைகள் முள்ளிவாய்க்காலிலேயே முடிவடைந்தது. இக்காலப்பகுதியிலேயே தோழர் றொபேட் புலிகளால் சுடப்பட்டார். (மேலும்......)

தெரிவுக்குழுவில் பங்கேற்க மாட்டோம் - கூட்டமைப்பு

நாடாளுமன்ற தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்பதுடன் இதனூடாக நியாயமான அரசியல் தீர்வை அடைய முடியாது என்பதனால் அக்குழுவில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பங்கு பற்றாது என்று கூட்டமைப்பின் விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்த தெரிவுக்குழுவில் பங்குபற்றாமல் இருக்கவேண்டும் என்பதே கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற பலரது கருத்தாகும்  என்று கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்தார். இதேவேளை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அதிகாரத்திற்குள் உள்ள சில உள்ளுராட்சி மன்றங்களில் வரவு-செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டது தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அவ்வாறு வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்பதற்காக எதிர்த்து வாக்களித்தவர்களுக்களை கட்சியில் இருந்தும் உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவது உட்பட கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

வடமாகாண செயலருக்கு கொலை அச்சுறுத்தல்

வடமாகாண பிரதான செயலாளர் ரமேஷ் விஜயலட்சுமிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரிசிறி தெரிவித்துள்ளார். உள்ளூர் மற்றும் வெளிநாடுகளிலிருந்து அச்சுறுத்தல் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

டிசம்பர் 24, 2013

நமது தவறுகள் குறித்த ஆகக் குறைந்த குற்றவுணர்வாவது நம்மவர்களிடம் உண்டா? - யதீந்திரா

இன்று தமிழர்கள் நீதி கேட்டு, உலகெங்கும் அலைகின்றனர். ஆனால் விடுதலைப்புலிகள் தமிழரின் அரசியலை ஏக போகமாக தீர்மானித்துக் கொண்டிருந்த கடந்த மூன்று தசாப்தகால அரசியல் இயங்கு நிலையில், மனித உரிமைகள் குறித்து அவர்கள் கரிசனை கொண்டிருந்ததற்கான ஏதாவது சான்றுகள் உள்ளனவா? இதனைக்கருத்தில் கொண்டுதானோ, கூட்டமைப்பு, இறுதி யுத்தத்தில் இருதரப்பாலும் மீறப்பட்டதான குற்றங்கள் என்று குறிப்பிட்டு வருகின்றது போலும். அன்று எந்த மாகாணசபையை ஏற்றுக்கொண்டதற்காக, பிரபாகரன் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பை துரோகி என்றுரைத்தாரோ, அந்த மாகாணசபைதான் தமிழரின் இன்றைய அரசியல் தளமாக இருக்கின்றது. (மேலும்......)

 

"To Editor,
Thinakural, Jaffna.!

Varathar Rajan Perumal

Dear Yathindra!
I read your article! Write more what you know about North East Provincial Council. Don'bother anyone to express your any genuine criticism decently about that Council which we lead. If you need any clarification I am prepared to assist you over IT contacts. Or send your question for short answers by email. My request is that we have to give time and space to the New NPC and its Chief Minister. Try to give them constructive suggestions and positive criticism mo than exposing their wrongs and negatives. There is a need of collective responsibility of the Tamil intellectuals and scholars in making new efforts to deliver fruits to the society. The New NPC and its CM has only democratic and legal conflicts with the government of Sri Lanka, however, has no graet difficulties and grave crises which we faced during our tenure in NEPC. However, before coming to the conclusion, let them to trail the tests and correct the errors in the process, provided no support or encouragement for violence or extremism. New NPC has got mass support of the Tamils, Tamilnadu support, Indian national leaders and government support, Western countries' open support, UN support, Progressive and opposition Sinhala parties and leaders ' support, etc., where we did not have any of these supports except that of the government of India. We lead a government purely for the people, but we did not have the opportunity to get that of the people or by the people. And more than everything now there is no Pulikal / Tigers now. If the domestic socio-political forces of the Sri Lankan Tamils do not act promptly and properly based on their own social interests then the Pro-Puli-Diaspora would continue to dictate their terms conveniently in order to protect and preserve their own benefits. Northern Provincial Council should be made as that is truly of the NP people, by the NE people and for the NP people."

தோழர் றொபேட் ஒரு மகத்தான மானிடன்

தோழர் றொபேட் சம காலத்தின் முக்கியமான தலைவர். அவர் சமுதாயத்தில் மறுமலர்ச்சி என்ற எழிலார்ந்த கனவை கொண்டிருந்தார். தமிழ் மக்களின் சுயமரியாதை, கௌரவமான வாழ்வு என்பதும் தமிழ் சமுதாயத்தில் ஜனநாயகம் மனித உரிமை என்பனவும் அவரின் உயிர் மூச்சாக இருந்தன. இலங்கையின் சகல இன மக்களுடனும் ஐக்கியப்பட்ட வாழ்வு என்பதிலும் அவர் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். உண்மை, நேர்மை, கண்ணியம், துரதிருஷ்டி என்பன அவரின் அருங் குணங்களாக இருந்தன. அவர் எப்போதும் போலித்தனங்களை வெறுத்தார். உண்மையை யதார்த்தத்தை அவர் திடசித்தத்துடன் எதிர் கொண்டார். அவர் இற்றைக்கு கால் நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாணவர் அமைப்பான ஈழ மாணவர் பொது மன்றத்தினூடாக தனது சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்டார். அவர் தனது 45வது வயதில் தனது மரணத்தை எதிர் கொள்ளும் வரை தனது வாழ்வு முழுவதையும் தனது சமூகத்திற்காக அர்ப்பணித்திருந்தார். (மேலும்......)

கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் இன்று

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதன் எம்.பிக்களையும் வடக்கு,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களையும் வவுனியாவில் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துபேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அரசியல் நிலைமைகளையும், அவர்களின் செயற்பாடுகளின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்யும் வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. வடமாகாண சபை தேர்தலின் பின்னர் ஒரு பொதுவான கருத்தாடலுக்கான வாய்ப்பாக இந்த கலந்துரையாடல் அமையுமென தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அரசாங்கத்துக்கு 19 உறுப்பினர்கள் உள்ளனர். நாம் போனால் எமக்கு நான்கு இடங்கள் கிடைக்கும். இதனால் எமது கருத்து எடுபடாது போகும். இந்நிலையில் நாம் ஒரு தீர்வில் ஈடுபாடின்றி இருக்கின்றோம் என்பது இதன் பொருளாகாது என்றும் அவர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் எமக்கில்லை - டக்ளஸ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் சேரும் எண்ணம் எமக்கில்லை எனவும் ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு என்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முகம்காட்ட ஈ.பி.டி.பி விரும்புகிறது என்று தெரிவித்திருந்தார். அவ்வாறு கூட்டமைப்புடன் சேரும் எண்ணம் எமக்கில்லை. எமது கட்சியை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்டதே கூட்டமைப்பு. ஆனால் அவர்களால் எமது கட்சியினை ஒன்றும் செய்ய முடியவில்லை. நான் பார்த்த வரையில் மூன்று கூட்டமைப்பு இருக்கின்றன. ஆரம்பத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் ஒரு கூட்டமைப்பு, பின்னர் இரண்டாவது வரதராஜப்பெருமாள் - சுரேஷ் பிரேமச்சந்திரன் இணைந்த கூட்டமைப்பு, மூன்றாவது ஈ.பி.டி.பி யை அழிப்பதற்கு பிரபாகரனால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு. கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள் செய்து வரும் செயற்பாடுகள் தொடர்பில் ஓர் ஊடகம் விமர்சித்து வருகின்றது. அந்த நிறுவனத்தினூடாக நிதி நிறுவனம் நடத்திய போது அதில் நிதிகளை முதலிட்ட பலர் தற்கொலை செய்துள்ளார்கள். இப்படிப்பட்டவர்களின் விமர்சனங்கள் எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

புலம்பெயர்ந்தவர்கள் நாடு திரும்ப வேண்டும் கோத்தபாய அழைப்பு

இலங்கைத் திருநாடு கடந்த காலங்களில் எதிர்நோக்கியிருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு துரித மற்றும் சமவிகித வளர்ச்சிக்கான பாதையில் நிதானத்துடன் பயணித்துவருவதனால், வெளிநாடுகளில் வாழ்ந்துவரும் அனைத்து சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்களைத் தாய்நாட்டிற்கு திரும்பி வருமாறு அரசாங்கம் வலியுறுத்திக்கேட்டுள்ளது. இலங்கையில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்குமென அறிவார்ந்த பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபுணர்களுக்கு உதவக்கூடிய சூழலொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் மிகவும் ஆர்வம் காட்டிவருவதாகத் தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், கடந்த 1980 களில் தொடங்கி 2009 வரையிலான காலப்பகுதியில் நாட்டில் தோன்றியிருந்த நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக எமது புத்திஜீவிகளில் பலர் நிம்மதியான வாழ்க்கை வசதிகளைத் தேடி ஏனைய நாடுகளுக்குச் சென்றிருந்தனர். இத்தகைய தனிநபர்கள் யுத்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ, உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ளவோ, அதிக பணவருமானம் ஈட்டித்தரவல்ல வேலை வாய்ப்பு வசதியைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது சிறந்த வாழ்க்கைத் தரமொன்றை அனுபவிக்கவோ சென்றிருந்தாலும், அவர்களின் புறப்பாடு உண்மையிலேயே நாட்டிற்குப் பாரதூரமானதோர் இழப்பாகும்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 பேரும் பிணையில் விடுதலை

மன்னார், நானாட்டான் பிரதேச செயலகம் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 21 பேரை நேற்று மன்னார் நீதிவான் செல்வி ஆனந்தி கனகரட்ணம் பிணையில் விடுவித்துள்ளார். தலா 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் இவர்களை விடுவித்த நீதிவான் இரு சமூகங்களிடையேயும் மீளவும் குழப்பநிலை ஏற்படுமானால் பிணை இரத்துச்செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பொன்தீவுக் கண்டல் கிராம அலுவலகப் பிரிவில் மீள்குடியேற்றத்துக்கான காணி பகிர்ந்தளித்தலில் ஏற்பட்ட பிணக்குகளைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி நானாட்டான் பிரதேச செயலகத்தை சுற்றிவளைத்த மக்கள் பிரதேச செயலாளருடன் பேச முயன்றனர். அந்த முயற்சி கைகூடாததையடுத்து பிரதேச செயலகத்தின்மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.இந்தச் சம்பவத்தையடுத்து 33 பெண்களும் 32 ஆண்களுமாக 65 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜராக்கப்பட்டனர். இவர்களில் 18 பேரைத்தவிர ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். 18 பேருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனைவிட மூவர் கடந்தவாரம் நீதிமன்றில் சரணடைந்ததையடுத்து அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

காலங்கள் இனங்கள் மறக்கமுடியாத கனிவுடைய அன்னை நாகம்மா . . . . . !

இடதுசாரிகளின் புகலிடம் என்ற வகையில் தங்கள் இல்லத்தையே மாற்றிக்கொண்டார். தோழர் வைத்திலிங்கம் மாஸ்டரின் தேர்தல் பணிகளில் உதவியது. அப்போதைய இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் எனும் பிரபலங்கள் பீற்றர்கெனமன், விக்கிரமசிங்க உட்பட்ட பலரும் அன்னை நாகம்மா கைப்பக்குவ சாப்பாட்டில் கிறங்கிப்பொனவர்கள். இது தவிர சில முக்கிய விடயங்களும் அன்னை நாகம்மா அவர்களின் கண்காணிப்பில் வீட்டில் அரங்கேறியிருந்தன. வடக்கில் ரஸ்சியன் கொன்சலாட் ஆரம்பித்தது. வீ. பொன்னம்பலத்தார் தலமையில் செந்தமிழர் இயக்கத்தின் ஆரம்பம். அதன் அரசியலமைப்பின் முதல் வாசிப்பு இவைகள் அவரது இல்லத்திலேயே நிறை வேறின என்பது ஒரு வரலாற்றுத் தகவல். இந்த அளவுக்கு தோழர் வி.பி இவர்கள் குடும்பத்தோடு தோழமையுடன் இருந்தார். காரணம் இவரது மைந்தர்கள். தோழர் திரணகம யாழ் பல்கலைக் கழக விரிவுரையாளராக இருந்த வேளை அவரது முன்னெடுப்பில் கூட்டப்பட்ட பல்கலைக்கழக மாணவரமைப்புக்காக சிங்கள அமைப்புக்கு கிங்ஸிலி, தமிழமைப்புக்காக வ.ஐ.ச.ஜெயபாலன் இவர்களின் தேர்வும் இந்த அன்னையின் முன்றலிலேயே நடந்தது என்பது வரலாற்றில் ஓர் பதிவு. (மேலும்.....)

டிசம்பர் 23, 2013

பிரபாகரனின் துப்பாக்கிக்குப் பயந்து பெட்டிப்பாம்பாக இருந்த தமிழரசுக் கட்சியினர் இப்போது மீண்டும் சாதிக் கதைகளில் - மாணிக்கம் லோகசிங்கம்

முன்னொரு காலத்தில் வடக்கில் தலைவிரித்தாடிய சாதி வெறிக் கொள்கை பிரபாகரன் காலத்தில் ஆயுதத்திற்குப் பயந்து அறவே இல்லாமல் போயிருந்தது உண்மையே. இன்று அது மீண்டும் தலைவிரித்தாடுவதைக் காண முடிகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியிலிருக்கும் தலைவர்கள் இந்தப் பாகுபாட்டை வெளிப்படையாகவே காட்டி வருகின்றனர். எனக்கும் அந்தக் கொடுமை நடந்தது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியிலுள்ள பருத்தித்துறைப் பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம் அவர்கள். பொருளாதாரத்துறையில் பட்டம் பெற்ற பிரபல ஆசிரியரான திரு. லோகசிங்கம் தனது மனக்குமுறலை கொட்டித் தீர்த்தபோது பெற்றுக் கொண்ட விடயங்களை இங்கே தருகின்றோம். (மேலும்.....)

சதிக்கு துணை போன இந்திய வம்சாவளி வக்கீல்!

தேவயானி திட்டமிட்டே கைது, அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலம்?

அமெரிக்காவிற்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ராகாடே திட்டமிட்டே அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்டுள்ள திடுக்கிடும் தகவல் அம்பலமாகி உள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில், துணை தூதராக பணியாற்றியவர் தேவயானி கோப்ராகாடே (39). இவருடைய வீட்டில் வேலை பார்த்த சங்கீதா என்ற பெண்ணை, உறவுப்பெண் என்று கூறி அமெரிக்கா அழைத்து வந்ததாகவும், அவருக்கு அமெரிக்க சட்டப்படி முறையான சம்பளம் வழங்கவில்லை என்றும் அந்நாட்டு போலீசார் குற்றம் சாட்டினர். கடந்த 12ம் திகதி குழந்தைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த தேவயானியை, பொது இடத்தில் மன்ஹாட்டன் போலீசார் கைது செய்தனர். அத்துடன் அவரை கைவிலங்கிட்டு அழைத்து சென்றனர். விசாரணை அலுவலகத்தில் அவரது ஆடைகளை களைய வைத்து சோதனை நடத்தினர். (மேலும்.....)

சிங்கப்பூர் தமிழர்கள்... எதிர்காலம் என்னவாகும்?

(டி.அருள் எழிலன்)

வாரம்தோறும் ஏராளமான தொழிலாளர்கள் கூடி கேளிக்கைகளில் ஈடுபடுவதால், இந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் யாரும் குடியிருக்கவோ, வீடுகளை விலைக்கு வாங்கவோ விரும்புவது இல்லை. இது தொடர்பாக இந்தப் பகுதி மக்கள் சிங்கப்பூர் அரசுக்கு ஏற்கெனவே புகார் கொடுத்துள்ளனர். அதன் விளைவாக லிட்டில் இந்தியாவின் கேளிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசுக்கு ஒரு காரணம் தேவைப்பட்டது. அது இப்போது கிடைத்து விட்டது. ஆனால், இது கேளிக்கைகளைக் கட்டுப்படுத்துவது என்ற அளவில் மட்டும் நின்றுவிடாது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசு முயற்சிக்கும்'' (மேலும்.....)

ஜனாதிபதி அழைப்புக்கு கூட்டமைப்பு நிபந்தனை

13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் வரையறைக்குள் மட்டும் குறுகிநிற்காமல், அதனையும் தாண்டிய அரசியல் தீர்வுத் திட்டம் பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டால் அதில் பங்கெடுப்பது பற்றி நிச்சயமாக பரிசீலிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 13 ஆம் திருத்தத்துக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த எல்லா ஜனாதிபதிகள் தலைமையிலான அரசாங்கங்களும் (ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் உட்பட)இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அமைத்திருந்த தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் 13 ஆம் திருத்தத்துக்கும் அப்பால்சென்று முன்னேறிய அரசியல் தீர்வுத் திட்டத்தையே பரிந்துரை செய்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 'ஜனாதிபதியின் அழைப்பை கவனமாக பரிசீலிப்போம். உள்ளூரிலேயே இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாகவும் விசுவாசமாகவும் நாங்கள் செயற்பட்டு வந்திருக்கிறோம்' என்றார் . 13 ஆம் திருத்தத்திலிருந்து முன்னேறிய அரசியல் தீர்வுத்திட்டத்தையே கடந்த கால தெரிவுக்குழுக்களும் நிபுணர் குழுக்களும் பரிந்துரை செய்திருந்தன. ஓராண்டுக்கும் மேலதிகமாக அரசாங்கத்துக்கும் தமக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்தும் அதன்போது தாம் முன்வைத்திருந்த தீர்வு யோசனைகளுக்கு அரசாங்கத்திடமிருந்து உறுதியளிக்கப்பட்டவாறு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இரணைமடு தண்ணீர் விவகாரம்

சிறிதரனும் விக்கியும் உச்சக்கட்ட மோதலில்

இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டுவருவது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கும் வடக்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கும் இடையில் நிலவிவந்த பனிப் போர் பகிரங்கமாக மேடை ஒன்றில் வெளிப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் பல்லாயிரம் விவசாயிகள் தண்ணீருக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்ற நேரத்தில், வட மாகாண முதலமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் எனத் தெரிவித்தார் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன். (மேலும்.....)

மதஸ் தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது  - ஞானசார தேரர்

மதஸ் தலங்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே, அவ்வாறான செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். மதங்களுக்கிடையிலான ஒற்றுமையினை சீர்குலைத்து நாட்டிற்குள் மீண்டும் பிரிவினை வாதத்தினை தோற்றுவிப்பதற்கு சிலர் முயன்று வருவதாக தெரிகிறது. எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி அதனை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். நாட்டில் முப்பது வருடங்களுக்கு மேலாக நீடித்திருந்த யுத்தத்தால் இன மத வேறுபாடுகளின்றி எல்லோரும் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் அந்த நிலை தற்போது இல்லை. இருப்பினும் மதஸ் தலங்கள் மீதான தாக்குதல்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறன்றன. அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அது எந்த மதமாகயிருந்தாலும் சரி. நிச்சயமாக மதிப்பளிக்க வேண்டும். ஆனால் நாட்டில் பல பாகங்களில் மதஸ் தலங்கள் மீதான தாக்குதல்களை பார்த்தால் பல்வேறு சந்தேகங்கள் தோன்றுகின்றன.

கறுப்புக் கொடியில் தொடங்கி

வெள்ளைக் கொடியில் முடிந்த வரலாறு

மீண்டும் ஒரு முறை உருவாக்க முனையும் தமிழ் தலைவர்கள்

வட மாகாண சபை உருவானதிலிருந்து மக்களுக்கான நல்ல செய்திகள் எதுவுமே இல்லை. அரசுடனான தமிழ் தேசிய கூட்டமைப்பின் பனிப்போர் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆடு அறுக்க முதல் "எதையோ" அறுப்பதுபோல சபை கூடுவதற்கு முன்பே ஆளுநரிடம் சத்திய பிரமாணம் எடுக்க மாட்டோம் என்று தொடங்கிய கூட்டமைப்பினர் ஆளுனரை மாற்றுவோம் இராணுவத்தை வெளியேற்றுவோம் என்று ஓடி இன்று தேசியக்கொடியை ஏற்ற மாட்டோம் என வந்து நிற்கிறது. மன்னார் - வெள்ளாங்குளம் அ.த.க. பாடசாலையில் இடம்பெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பிரதமவிருந்தினராக அழைக்கப்பட்டிருந்த வட மாகாண விவசாய அமைச்சரிடம் தேசியக்கொடியை ஏற்றிவைக்குமாறு ஒலிபெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை அவர் நிராகரித்து 60 வருடத்துக்கு முந்திய காலத்துக்கு தமிழ் மக்களை அழைத்து செல்ல முற்பட்டுள்ளார். (மேலும்.....)

இரணைமடு யாழ். குடிநீர் திட்டம் கைவிடப்படலாம்? - ஆசிய அபிவிருத்தி வங்கி

இரணைமடு- யாழ். குடிநீர் விநியோகத் திட்டத்தை நடை முறைப்படுத்துவது தொடர் பாக கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் ஆக்கபூர்வமான பதிலை 14 நாட்களுக்குள் வழங்கப்படாவிடின் இத்திட் டத்தைக் கைவிடுவதெனத் தீர்மா னித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்நிலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். குறித்த திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்ற பொழுதே அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் கிளிநொச்சி மக்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படும் எனச் சுட்டிக்காட்டிய அம் மாவட்ட விவசாயிகள், இத்திட்டத்தைக் கைவிடுமாறும் கோரியிருந்தனர். இதற்கமைய இத்திட்டம் தற்பொழுது இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் முற்றாகக் கைவிடப்படக்கூடிய சாத்தியங்கள் தோன்றியுள்ளதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டிசம்பர் 22, 2013

நாம் கருவில் சுமந்த கனவுக்குழந்தை மாகாணசபை,  கூட்டமைப்பு அதை சரியாக வளர்க்கவில்லை  - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மாகாண சபை என்பது உளுத்துப்போன தீர்வு, எதுவுமற்ற தீர்வு, காலங்கடந்த தீர்வு, அரைகுறை தீர்வு, இப்படித்தான் அன்று இவர்கள் பேசினார்கள். தேர்தல் வந்த போது அதே மாகாண சபை, தமிழ் மக்களின் உரிமை என்றும், மூன்றாம் கட்டப் போர் என்றும், தமிழ்த் தேசியம் என்றும், அமையைப்போகிறது தமிழ் அரசு என்றும் கூறி வாக்குகளை அபகரித்தார்கள். ஆனாலும் இன்று என்ன நடக்கின்றது என்பதை சகலரும் அறிவார்கள். இருபது வருடங்களாக நாங்கள் பத்தியம் காத்து கருவில் சுமந்த கனவுக் குழந்தை இந்த மாகாண சபை,... எமது கனவுக் குழந்தை பிறந்து விட்டது. ஆனாலும் அதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தத்தெடுத்துக் கொண்டதால், அந்தக் குழந்தை வளரவும் முடியாமல், தவளவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், நிமிரவும் முடியாமல் தவிக்கின்றது. (மேலும்.....)

ஆம் ஆத்மி ஆட்சியமைக்க முடிவு; திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகும்

டில்லி சட்ட சபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. 2 வது இடம் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர் நஜீப் அழைப்பு விடுத்தார். அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாள் அவகாசம் கேட்டு இருக்கிறார். அவருக்கு காங்கிரசும் பாரதீய ஜனதாவும் ஆதரவு அளிக்க முன்வந்தன. அதை ஏற்க கெஜ்ரிவால் நிபந்தனைகள் விதித்துள்ளார். இதற்கிடையே ஆட்சி அமைப்பது தொடர்பாக இணையத் தளம் மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார். இதில் பல்வேறு விதமான கருத்துக்களை மக்கள் தெரிவித்து வருகிறார்கள். இணைய தள கருத்து கேட்பில் பெரும்பாலானோர் காங்கிரஸ் ஆதரவுடன் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதேபோல் எஸ். எம். எஸ். மூலமும் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம். எல். ஏ.க்களும் மறு தேர்தலை சந்திக்க விரும்பாமல் ஆட்சி அமைக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்துக்கு யோசனை தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நம்மீது நம்பிக்கை வைத்து 2 வது இடம் அளித்துள்ளனர். ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பயன்படுத்த தவறினால் மக்கள் மத்தியில் கட்சிக்கு அதிருப்தி ஏற்படும் என்றும் யோசனை தெரிவித் துள்ளனர். இதையடுத்து ஆட்சி அமைக்கும் முடிவுக்கு கட்சி தலைமை வந்துள்ளது. இது பற்றி வருகிற திங்கட்கிழமை (23 ஆம் திகதி) கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் சரத்பவாரின் அழைப்பையேற்று அமைச்சர் டாக்டர் ராஜித இந்தியா விஜயம்

இந்திய மத்திய விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சர் சரத் பவாரின் விசேட அழைப் பினை யேற்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டாக்டர், ராஜித்த சேனாரட்ன இன்னும் ஓரிரு தினங்களில் இந்தியா செல்லவுள்ளார். நீண்டகாலமாக நிலவி வரும் இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச் சர்களது இரு தரப்பு சந்திப்பு அமையவு ள்ளது. இலங்கை- இந்திய மீனவர் பிரச் சினை தொடர்பிலான கூட்டு ஆணைக்குழு விற்கு மேலதிகமாகவே இந்த விசேட சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இலங்கையைச் சேர்ந்த 213 மீனவர்கள் தற்போது இந்தியாவில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது 40 மீன்பிடி படகுகளும் இந்திய அரசாங்கம் வசமேயுள்ளன. இது தொடர்பில் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காக இலங்கை அரசாங்கம் சார்பில் நாம் பலமுறை முயற்சித்தபோதும் இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப் பின்மையால் இந்தவிடயம் காலதாமதத் திற்குள்ளானது.  இந்நிலையிலேயே இந்திய மத்தியமைச்சர் சரத் பவாரிடமிருந்து எனக்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

''தவறு செய்தது அமெரிக்கா மட்டுமல்ல... தேவயானியும்தான்!''

(அ.மார்க்ஸ்)

'உலகளாவிய பங்காளிகள்(global partners) எனக் கூறிக்கொ ண்டு அமெரிக்காவுடன் கைகோத்துத் திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்க போர்க் கப்பலான நிமிட்சின் வருகை, இந்திய அரசின் இறையாண்மையையும்கூட விட்டுக்கொடுத்து இயற்றப்பட்ட 123 ஒப்பந்தம், நேரு காலத்திய அணிசேராக் கொள்கையில் இருந்து விலகி அயலுறவுக் கொள்கையில் அமெரிக்கச் சார்பு எடுத்தது... ஆகியவற்றுக்கு எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்காவை ஆதரித்து வந்தது காங்கிரஸ் அரசு. அப்படிப்பட்ட அரசு, திடீரென அமெரிக்காவை மிரட்டுவதைப்போல எடுக்கும் நடவடிக்கைகள் எல்லோருக்கும் வியப்புத்தான். தேர்தல் நெருங்குவது ஒரு காரணமாக இருக்கலாம். பி.ஜே.பி-யும் இந்தப் பிரச்னையில் முழுமையாக அரசை ஆதரிக்கிறது. (மேலும்.....)

டிசம்பர் 21, 2013

காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டமும் தோல்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற  காரைதீவு பிரதேச சபையின் வரவு-செலவுத்திட்டம் 3 மேலதிக வாக்குகளால் இன்று புதன்கிழமை  தோற்கடிக்கப்பட்டுள்ளது. தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இவ்வரவு-செலவுத்திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெறாமல் தயாரிக்கப்பட்டதாகவும், மக்கள் பணிக்காக இவ்வரவு-செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் பிரதேச சபையை நிர்வகிப்பதற்கே கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். அத்தோடு சபையின் அனுமதியினை பெறாமல் காரைதீவு நூலகத்திற்கு தவிசாளர் தன்னிச்சையாக முடிவெடுத்து புத்தகங்களை கொள்வனவு செய்துள்ளார் எனவும் குற்றச்சாட்டுக்களை சுமத்தினர். இதனையடுத்து இவ்வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மூவரும், முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவரும் இணைந்து திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 1 வாக்கும்,எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இச்சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவருமாக மொத்தம் 5 உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வருடங்களில் இருமொழிகளிலும் கடமையாற்றலாம் - பொலிஸ் திணைக்களம்

ஐந்து வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் பொதுமக்களுடன் தமிழ், சிங்கள மொழிகளில் கருமமாற்றுவது தங்களுடைய இலக்காக உள்ளதென பொலிஸ் திணைக்களம் நேற்று புதன்கிழமை கூறியது. 2008  ஆம் ஆண்டிலிருந்து 1500 சிங்கள மொழி பொலிஸ்காரர்களும் 892 தமிழ் மொழி பொலிஸ்காரர்களுக்கும் மொழிப்பயிற்சி வழங்கபபட்டதாக பொலிஸ் திணைக்களம் கூறியுள்ளது. மக்களுக்கு சிறந்த சேவையற்றுவதற்கு மொழி தடையாக அமைவது யுத்தம் முடிவதங்கு முன்னரே இனங்கானப்பட்டது. இந்நிலையில் யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மொழி தெரிந்த பொலிஸார் கூடுதலாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் நியமிக்கப்பட்டனர். இப்போது வடக்கு கிழக்கில் மக்களின் முறைப்பாடுகள் தமிழில் பதியப்படுகின்றன இது பெரிய சாதனையாகும். இன்னும் 5 வருடங்களில் சகல பொலிஸ் நிலையங்களிலும் சிங்களத்துடன் தமிழிலும் கருமங்களை ஆற்றும் வசதிகளை ஏற்படுத்தும் இலக்கை நோக்கி செயற்படுகின்றோம் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோகண கூறினார். தமிழ் பேசும் 240 பொலிஸ்காரர்களுக்கு செவ்வாயன்று புதிதாக சேவையில் சேர்க்கப்பட்டுள்ளனர் இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றுவார்கள் என அவர் கூறினார்.

டிசம்பர் 20, 2013

மேல், தென் மாகாண சபைகள் 2 அல்லது 3 வாரங்களில் கலைப்பு

மேல் மாகாண சபை மற்றும் தென் மாகாண சபை இரண்டும் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் கலைக் கப்பட்டுவிடும். முடிந்தால் ஐ. தே. க. தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி காட்டட்டும் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த நேற்று பாரா ளுமன்றத்தில் தெரிவித்தார். எமது அரசு ஒன்றும் செய்யவில்லை என்று எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. 2009 களில் இலங்கைக்கு 4,50,000 சுற்றுலா பயணிகளே வந்தனர். ஆனால் இத்தொகை இன்று ஒரு மில்லியனாக அதிகரித்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஹோட்டல்கள் எதுவும் இருக்கவில்லை. இன்று 1000 அறைகளைக் கொண்ட ஹோட்டல்கள் கட்டப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப அறிவு 9 வீதமாக இருந்தது இன்று 25 வீதமாக அதிகரித்துள்ளது. 2016 இல் இதனை 75 வீதமாக அதிகரிப்பதே எமது இலக்கு. பல்கலைக்கழகங்களுக்கு 12,000 மாணவர்களே உள்வாங்கப்பட்டனர். இப்போது 24,000 பேர் உள்வாங்கப்படுகின்றனர். எமது அரசை தோற்கடிக்கச் செய்ய ஐ. தே. க. தலைமைத்துவ சபையை உருவாக்குகிறது. இந்த தலைமைத்துவ சபையை உருவாக்கினும் எமது அரசை தோல்வியடையச் செய்ய முடியாது. எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரத்தில் மேல் மாகாண சபையையும், தென் மாகாண சபையையும் கலைப்போம். அப்போது தேர்தலில் போட்டியிட்டு முடிந்தால் ஐ. தே. க. எம்மை தோற்கடித்துக் காட்டட்டும் என்றும் அமைச்சர் சுசில் தெரிவித்தார்.

டிசம்பர் 19, 2013

அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் - இந்தியா அறிவிப்பு

இந்திய பெண் தூதர் கைது நடவடிக்கையில் அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை அந்நாட்டுக்கு எதிரான நெருக்குதல் நடவடிக்கை தொடரும் என இந்தியா அறிவித்துள்ளது. டில்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு தடுப்புச் சுவர்களை அகற்றி தூதரகத்திற்கென அளிக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பினை அகற்றிவிட்ட இந்தியா இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என்று கூறியுள்ளது. டில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கமல்நாத் ஒவ்வொரு நாட்டுக்கும் என தனிப்பட்ட கெளரவம் இருப்பதை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அமெரிக்கா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கும் வரை அந்நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அவர் கூறினார். அமெரிக்காவின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும், தூதரக அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டியது இந்தியாவின் கடமை என்று அமெரிக்கா கூறியுள்ளது. நியூயோர்க்கில் இந்திய தூதரகத்தில் தூதராக உள்ள தேவயானி கோப்ரகடே பணிப் பெண்ணுக்கு விசா பெற்றது தவறான தகவல் அளித்ததாக கைது செய்யப்பட்டார். பொது இடத்தில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப் பட்டதோடு போதை அடிமைகளோடு சிறையில் அடைக்கப்பட்டதே இந்தியாவின் கோபத்திற்கு காரணம் என்பது குறிப்பிடத் தக்கது.

சிங்கப்பூரில் கலவரத்தில் ஈடுபட்ட 52 இந்தியர் நாடு கடத்தல்

சிங்கப்பூரில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக இந்தியர்கள் 28 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ், சிங்கப்பூர் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 52 பேரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இம் மாதம் 8 ஆம் திகதி நடந்த வீதி விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் பலியானார். இதையடுத்து அங்கு வசிக்கும் இந்தியா, சீனா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோர் லிட்டில் இந்தியா பகுதியில், கலவரத்தில் ஈடுபட்டனர். அதிகமான பொதுச் சொத்துக்கள் நாசப்படுத்தப்பட்டன. சிங்கப்பூர் பொலிசார் கலவரத்தை ஒடுக்கி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைதுசெய்தனர். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த ஏழு இந்தியர்களை பொலிசார் விடுதலை செய்துள்ளனர். 28 இந்தியர்கள் மீது, பொதுச் சொத்துகளை நாசம் செய்தல், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையான காரியங்களில் ஈடுபடுதல், போன்ற ஏராளமான குற்றப் பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த 52 பேர், பங்களாதேஷை சேர்ந்த ஒருவர் உட்பட, 53 பேரை சிங்கப்பூர் அரசு அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. கலவரத்தில் ஈடுபட்ட 200 பேருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைனுக்கு ரஷ்யா பாரிய பொருளாதார உதவி

உக்ரைனில் அரசியல் பதற்றம் தொடரும் நிலையில், ரஷ்யா தனது எரிவாயுவை மூன்றில் ஒரு பங்கு மலிவு விலையில் உக்ரைனுக்கு வழங்கவும் பல பில்லியன் டொலர் பெறுமதியான உக்ரைனின் கடன் பத்திரங்களை வாங்கவும் முன்வந்துள்ளது. உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் பக்கம் திரும்புவதை தடுக்கும் முயற்சியாகவே ரஷ்யா இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. ரஷ்யா சென்றிருக்கும் உக்ரைன் ஜனாதிபதி விக்டொர் யனுகோவிக் ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போதே உக்ரைனின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ ரஷ்யா முன்வந்தது. எனினும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடக்கோரி உக்ரைன் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தும் எதிர்க்கட்சி தலைவர்கள், ஜனாதிபதி நாடு திரும்பியதும் ரஷ்யாவுடனான உடன்படிக்கை குறித்து விளக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம் உக்ரைன் தலைநகரில் தொடர்ந்த வண்ணம் உள்ளது.ரஷ்யாவின் உதவியை பெற உக்ரைன் ஜனாதிபதி நாட்டின் தொழிற்சாலைகள், முக்கிய சொத்துகளை ரஷ்யாவுக்கு தாரைவார்த்திருப்பதாக எதிர்க் கட்சி தலைவர் விடாலி கிளிச்கோ குற்றம் சாட்டியுள்ளார். எனினும் எந்த நிபந்தனையும் இன்றியே உக்ரைனுக்கு உதவி அளிக்கப்படுவதாக புடின் குறிப்பிட்டுள்ளார்.

வெற்றி

யாழில் இருந்து வெளிவரும் பரீட்சை வழிகாட்டல் நூல்!

தரம் - 3, 4, 5 மற்றும் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பரீட்சை வழிகாட்டல்களை வழங்குகின்றமையாக நோக்கமாக கொண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் வெளிவர தொடங்கி உள்ளது  வெற்றி . வெற்றி வெளியீடாக வந்திருக்கும் இவ்வழிகாட்டல் நூலின் மகுட வாசகம் விடாமுயற்சி வெற்றி நிச்சயம் என்பதாகும். யாழ்ப்பாணத்தில் மாத்திரம் அன்றி வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், கொழும்பு, மலையகம் ஆகியவற்றுக்கும் இந்நூலை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுத்து உள்ளனர் என்கிறார் வெற்றியின் தொகுப்பாசிரியர். யாழ். மாவட்ட விலை 75.00 ரூபாய் என்று வெளி மாவட்ட விலை 92.00 ரூபாய் என்றும் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணத்தில் 0776408622 , கொழும்பில் 0772378851 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு இந்நூலை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

டிசம்பர் 18, 2013

வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வல்வெட்டித்துறை நகர சபையின் வரவு-செலவுத் திட்டம் மூன்று மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. நகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதன்போது 2014ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டம் நகர சபை தலைவர் என்.அனந்தராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. இதன்போது ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட வல்வெட்டித்துறை நகர சபையில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 2 உறுப்பினர்களும் எதிராக 5 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதேவேளை, இரண்டு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு நடுநிலை வகித்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வலி. கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டமும் ஏற்கனவே ஒரு வாக்குகளினால் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மொழிப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலே நல்லிணக்கம் சாத்தியம்

தனித் தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மொழியிலும், தனிச் சிங்கள பிரதேசங் களில் சிங்கள மொழியிலும் கடமை யாற்றக்கூடியவாறு அரச ஊழியர்களுக்கு மொழி அறிவு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று பாராளுமன்றத்தில்தெரிவித்தார். தமிழர் ஒருவருக்கு அவர் தமிழ் என்று தெரிந்தும் தனிச் சிங்களத்தில் கடிதம் அனுப்புவது அவரை கத்தியால் குத்துவ தற்கு சமனாகும் என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று தெரிவித்தார். மொழி அமுலாக்கல் மற்றும் அரச மொழிகள் அமைச்சு உட்பட தெரிவுக்குழுவுக்கு ஆற்றுப்படு த்தப்பட்ட 10 சிரேஷ்ட அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதம் நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(மேலும்....)

துண்டான கையை காலில் வளர்த்து மீண்டும் பொருத்திய மருத்துவர்கள்

விபத்தில் துண்டிக்கப்பட்ட இளைஞனின் கையை சீன மருத்துவர்கள் கணுக்காலில் ஒட்டவைத்து வளர்த்து பின்னர் அதை மீண்டும் பொருத்தி வெற்றியடைந்துள்ளனர். ஜியாவோ வெய் என்ற இளைஞனின் வலது கை கடந்த நவம்பரில் தொழிற்சாலை இயந்திரத்தில் சிக்கி துண்டானது. இவ்வாறு துண்டான கையை காப்பாற்றுவது கடினம் என்று ஷாங்டேவில் உள்ள மருத்துவமனை மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். தொடர்ந்து அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஜியாவோ வெய்யின் மணிக்கட்டை அப்போதைய சூழலில் கையில் பொருத்த முடியாது என உணர்ந்த மருத்துவர்கள் அதனை கணுக்காலில் ஒட்டி இரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி உயிரூட்டி உள்ளனர். சுமார் ஒரு மாதத்துக்குப் பின் துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர்பெற்றதைத் தொடர்ந்து காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றி வலது கையில் பொருத்தப்பட்டுள்ளது. பொருத்தப்பட்டிருக்கும் அவரது கை முழு இயக்கத்தையும் பெற மேலும் பல சிகிச்சைகள் வழங்க வேண்டியிருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த செயற்பாடு அரிதான செயல்முறை என விபரித்திருக்கும் இங்கிலாந்து சத்திரசிகிச்சை நிபுணர் கைரியன் ஹிலிதாம் இதனை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்று அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் 17, 2013

யாழ். மாணவர்களிடையே போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது -  சி.வி

'முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் குடாநாட்டு மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இது 2009 மே மாதத்திற்கு பின்னர் என்பது குறித்துக்காட்ட வேண்டும். யார் யார் வந்து இதனை அறிமுகப்படுத்தினர் என்று ஆராய்ந்து பார்க்க முடியவில்லை. ஏனெனில் சகலதும் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் உள்ளது' என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 'இலட்சியம் தான் முக்கியம் என்று யாதார்த்தத்தை கோட்டை விடுவதில் எந்த பயனுமில்லை. மாறாக யாதார்த்தத்தை உணர்ந்து இலட்சியத்தை அடையும் வழியை மறுசீரமைத்துச் செல்வதே புத்திசாலித்தனம்' எனவும் அவர் குறிப்பிட்டார். அன்று நான் இங்கிருந்து சென்ற பின் உங்கள் பழைய நீதிமன்ற கட்டிடம் (சாவகச்சேரி) தீக்கிரையானது. அதேபோல் மல்லாகம் நீதிமன்றக் கட்டிடமும் தீக்கிரையானது. ஆனால் தற்போது இரு இடங்களிலும் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத்தான் 'பழையன கழிதலும் புதிய வருதலும்' ஆகும்.  இது தான் வாழ்க்கையில் நிரந்தர குணாம்சங்களாகும். இதனால் தான் புத்தபெருமான் 'மாற்றம் ஒன்றே இந்த மாற்றமுறும் மாநிலத்தில் மாறாததொன்று' என்று கூறியிருக்கின்றார்' என்றார்.(மேலும்....)

சிலி ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி வெற்றி

சிலி ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் மிச்சல் பச்லட் அதிக பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றியீட்டி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தேர்வானார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று தேர்தலில் மைய வலது சாரி கூட்டணியின் முன்னாள் அமைச்சர் எவலின் மதாயை எதிர்த்துப் போட்டியிட்ட பச்லட் 62 வீத வாக்குகளை வென்றார். மதாயினால் 38 வீத வாக்குகளையே பெற முடிந்தது. மச்லட் இதற்கு முன்னர் 2006 10 இல் சிலி ஜனாதிபதியாக செயற்பட்டார். லத்தீன் அமெரிக்காவில் செல்வந்த நாடுகளில் ஒன்றாக சிலி இருந்த போதும் நாட்டின் செல்வத்தை பரந்த அளவில் பயன்படுத்துவது மற்றும் சிறந்த கல்வியை கோரி கடந்த ஒரு சில ஆண்டுகளாக அங்கு தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெ. ஆளில்லா விமான தாக்குதலுக்கு யெமன் தடை

அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதல்களுக்கு தடை விதிக்கும் சட்டம் யெமன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.  கடந்த வியாழக்கிழமை திருமண நிகழ்வொன்றில் இவ்வாறான தாக்குதல் நடத்தப்பட்டதில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட் டதையடுத்தே இந்த தடை விதிக்கப் பட்டுள்ளது. அல் கொய்தா அமைப்புக்கு எதிரான யெமன் அரசின் நடவடிக்கைக்கு உதவியாகவே அந்நாட்டின் மீது அமெரிக்கா ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இவ்வாறான தாக்குதல் களில் பல ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் பய்தா மாகாணத்தில் திருமண ஊர்வலம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பாலானோர் சிவிலியன்களாவர்.

சீனாவின் நிலா வாகனம் புகைப்படங்களை அனுப்பியது

நிலவுக்கு சீனா அனுப்பிய ஆளில்லா வாகனம் ஜேட் ராபிட், அங்கிருந்து புகைப் படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியிருக்கிறது. ஜேட் ராபிட் நிலவில் தரையிறங்கிய கலனிலிருந்து பிரிந்து சென்று சில மீற்றர்கள் தூரம் சென்று, பின்னர் கலனை அது படமெடுத்து அனுப்பியது. அதேபோன்று அந்த விண் கலனும் அந்த வாகனத்தைப் புகைப்பட மெடுத்தது. இந்தப் புகைப்படங்கள் பீஜிங் ஏரோஸ்பேஸ் கட்டுப்பாடு மையத்திற்கு உடனடியாக அனுப்பப்பட்டன. அவை வந்தடைவதை கட்டுப்பாட்டு அறையில் இருந்த சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்கும், பிரதமர் லி கெகியாங்கும் பார்த்தனர். இந்த வாகனம் நிலவில் மூன்று மாதங்கள் இருந்து நிலவின் புவியியல் பரப்பை ஆராய்வதுடன், இயற்கை வளங்கள் அங்கு இருக்கின்றதா என்பதையும் ஆராயும். இந்த வாகனத்தை தரையிறக்கிய விண்கலன், அங்கு ஒரு ஆண்டு தங்கியிருந்து விஞ்ஞான ஆய்வுகளை மேற்கொள்ளும். நிலவில் பத்திரமாக ஒரு கலனை தரையிறக்கிய நாடுகள் பட்டியலில் அமெரிக்கா மற்றும் முந்தைய சோவியட் ஒன்றியத்துக்குப் பின்னர் சீனா மூன்றாவது நாடாகச் சேர்கிறது.

டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை: துணை நிலை ஆளுநர் கடிதம்

டெல்லியில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது. இதையடுத்து 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது. ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ 10 நாள் அவகாசம் கேட்டது. மேலும் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 18 நிபந்தனைகளுக்கு பாஜக காங்கிரஸ் கட்சிகள் பதில் அளிக்குமாறு கூறியது. இதற்கிடையில், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றும், ஆகவே டெல்லியில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்து ஜனாதிபதிக்கு துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை 2 இடங்களையும் வென்றிருந்தனர்.

டிசம்பர் 16, 2013

ஊடக அறிக்கை!...

நேசிக்கும் மக்களுக்கு நான் கூற விரும்புவது!....

மக்களை எவ்வகையிலும் துன்புறுத்தாதே,.. மக்களின் எஜமானர்கள் போல் நடக்க விரும்பாதே,... மக்களை பலாத்காரப்படுத்தி செயல்களில் ஈடுபடுத்தாதே,... ஒரு ஊசி நூலையேனும் மக்களிடம் இருந்து அபகரிக்காதே,.. ஆற்றும் பணிகளுக்காக மக்களிடம் இருந்து பணமோ, சொத்தோ பிரதியுபகாரமாக பெற்றுவிடாதே,.. மக்களுடனோ அன்றி சக உறுப்பினர்களுடனோ உருவாகும் முரண்பாடுகளைத் தீர்க்க வன்முறைகளை கையாளாதே,.. சக கட்சிகளுடனான அரசியல் முரண்பாட்டை பகை முரண்பாடாக பார்க்காதே,.. மக்கள் என்ற சமுத்திரத்தை விட்டு விலகி விடாதே,.. அரசியல் அதிகாரங்களை மக்களுக்காகவே பயன்படுத்த தவறிவிடாதே,.. மக்களே எமது ஆசான்கள் என்பதை நொடிப்பொழுதிலும் மறந்து விடாதே,.இது போன்ற கட்சியின் கட்டாயக் கட்டளைகளையே நான் எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு பிறப்பித்திருந்தேன். நாம் வகுத்த கட்சியின் கட்டாயக் கட்டளைகள் சகலதையும், எமது மக்கள் அப்போது பட்ட அவலங்களை அனுபவங்களாக வைத்தே தீர்மானித்திருந்தோம். (மேலும்....)

இன்று விசேட அமைச்சரவைக்கூட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது. அரசாங்கம் முகம் கொடுத்துள்ள நெருக்கடியான பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதற்கே இந்த விசேட அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவிருப்பதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென்னாபிரிக்கா மற்றும் கென்யாவுக்கான விஜயங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் நடத்தப்படும் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தின் போது பிரதமர் தி.மு.ஜயரட்னவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டிலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் பலவற்றில் வரவு-செலவுத்திட்டங்கள் தொடர்ச்சியாக தோற்கடிக்கப்பட்டுவருவது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பிலும் முடிவு எட்டப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. வடமாகாண சபையின் கன்னி வரவு-செலவுத்திட்டம் எதிர்க்கட்சித்தலைவர் இன்றியே சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் போயா தினத்தன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது இதுவே முதல்முறையாகும். அத்துடன், ஆளும் கட்சியின் அதிகாரத்தின் கீழுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கான விசேட கூட்டமொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவிருக்கின்றது.

காணாமல் போனோரது உறவினர்கள் மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் - ஜனாதிபதிக்கு சம்பந்தன் கடிதம்

ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று மனித உரிமைகள் குறித்த கவனயீர்ப்புப் போராட்டமொன்றை அமைதியான முறையில் நடத்தியிருந்தோர்  மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதலைக் கண்டித்து திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். தங்களின் மனித உரிமைகள் பாரியளவில் பறிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கவனத்தை ஈக்கவும், தங்களின் தற்போதைய அவல நிலைக்குப் பரிகாரம் தேடுவதற்குமென காணாமற்போனோரின் பெற்றோர், வாழ்க்கைத்துணைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களால் அமைதிவழி ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. அதில் சிவில் சமூக மற்றும் ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். முற்றுமுழுக்க அமைதியான முறையில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தோர் நீதி வழங்குமாறு கோரும் சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் சென்று கொண்டிருந்தனர். ஸ்தலத்தில் பொலிஸார் சிலரும் பிரசன்னமாகியிருந்ததாக நான் அறிகின் றேன். (மேலும்....)

டிசம்பர் 15, 2013

மண்டேலாவுக்கு இன்று பிரியாவிடை

ஆபிரிக்க நாட்டவர்கள் அவரை அப்பா (மாடிபா) என்றே அழைத்தனர். அந்த அழைப்பிற்கு வயது பேதம் இருக்கவில்லை. தென் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்களின் தந்தையாகவே அவர் கருதப்பட்டார். உண்மையில் அவரை அப்படி அழைப்பதில் தவறில்லை. காரணம் அவர் இல்லையெனில் இன்றும் தென் ஆபிரிக்க கறுப்பு இனத்தவர்கள் உரிமைகள் அற்ற அடிமைகளாகவே வாழ வேண்டி இருந்திருக்கும். உலகில் நெடு நாள் வாழ்ந்தோரின் பெயர் பட்டியலில், தமது பெயரையும் இணைத்துவைத்த நெல்சன் மண்டேலா கடந்த வாரம் இவ்வுலகை விட்டுச் சென்றார். (மேலும்....)

என் மீது ஒழுக்காற்று நடவடிக்கையா? மாவை மீது லோகசிங்கம் சீறிப் பாய்ச்சல்

பருத்தித்துறை பிரதேச சபையின் உப தலைவர் மாணிக்கம் லோகசிங்கம் மீது ஒழுக்காற்று விசாரணை ஒன்றை மேற் கொள்ளவுள்ளதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரால் லோகசிங்கத்திற்கு கடிதம் ஒன் றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற் குப் பதிலளிக்கும் வகையில் லோகசிங்கம், மாவை சேனாதிராஜாவிற்குப் பகிரங்கக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் தமிழர்களுள் ஒரு பிரிவினரை இன்றும் சிறுபான்மைத் தமிழராக அதாவது தீண்டத் தகாதவர்கள் எனப் பிரித்துப் பார்க்கும் உங்களது கட்சியின் தலைமைகள் குறித்தே முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என லோகசிங்கம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

தமிழ் மக்களுக்கு கடந்த காலத்தில் இழைத்த துன்புறுத்தல்களை மறந்துவிட்டு பிரிட்டிஷ்பிரதமர் இன்று தமிழர்களுக்காக முதலைக்கண்ணீர் வடிக்கிறார்

இந்தியத் தமிழர்களை 1827ல் அடிமைகளாக இலங்கைக்கு கொண்டு வந்து அவர்களின் மனித உரிமைகளை மீறி, எங்கள் நாட்டின் செல்வத்தை சூறையாடிய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு இப்போது இலங்கை மனித உரிமை மீறிவிட்டது என்று குற்றம் காண்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? பிரிட்டிஷார் இலங்கையை ஆட்சி செய்த காலகட்டத்தில் இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் பலவந்தமாக தற்போது மலையகத் தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு பலவந்தமாக கொண்டுவரப்பட்டதாக சரித்திர நூலாசிரியரான பேராசிரியர் பேற்றன் பஸ்தியான்பிள்ளை கூறுகிறார். (மேலும்....)

S.R.  க்கும் இலங்கை அரசியலுக்கும் உள்ள அதிசயம்!

(எஸ். ஹமீத்)

ஆங்கில எழுத்துக்களான S,R, ஆகிய எழுத்துக்கள் இலங்கை அரசியலில் கோலோச்சும் அற்புதத்தை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது. SRI LANKA என்ற பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களுமே 'எஸ்' மற்றும் 'ஆர்' தான் என்பதும் இங்கு கவனிக்கற்பாலது. இலங்கையின் முதற் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கவின்  பெயரில் 'எஸ்' இருப்பது தொடக்கம் தற்போதுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயர் வரை இவ்விரு எழுத்துக்களுமோ அல்லது ஏதாவதொன்றோ காணப்படுகிறது. (இதில் பிரதமராகப் பதவி வகித்த Wijeyananda  Dahanaayakka  அவர்களின் பெயரில் மட்டும் எஸ்ஸோ, ஆரோ இல்லை. அவரின் பாட்டனின் பெயர் என்னவென்று தெரியவில்லை.) (மேலும்....)

இந்திய மாநில தேர்தல் பெறுபேறுகளின் பிரதிபலிப்பு காங்கிரஸ் கட்சியின் வீழ்ச்சியின் ஆரம்பமா?

தேர்தலை இலக்காகக் கொண்டும், தென்னிந்தியாவை திருப்திப்படுத்தவும் இலங்கை தொடர்பில் உள்ளனும், கள்ளனுமாக செயல்பட்டு தனது சொந்த வெளிநாட்டுக் கொள்கையையே தாரை வார்த்துவரும், மென்போக்கு வாதியுமான இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான இந்தியக் காங்கிரஸ் கட்சி இறங்கு முகத்தை நோக்கி பயணிப்பதாக கூறப்படுகிறது. மாநிலத் தேர்தல்களிலும் தேசியத் தேர்தல்களிலும், முழுக்க முழுக்க தொகுதிவாரி முறைகளைக் கொண்டியங்கும் இந்திய அரசியல் கட்டமைப்பில், இலங்கையைப் போலன்றி பின்னடைவு ஏற்பட்டுவிடின் ஈடுகட்ட முடியாத நிலை தவிர்க்க முடியாததாகும். (மேலும்....)

டிசம்பர் 14, 2013

போராட்டம் முள்ளிவாய்க்காலில் அவலமாக முடிந்ததற்கான வரலாற்று தவறுகள்

1986 டிசம்பர் 13 நினைவு நாள் குறிப்பு

(சுகு-ஸ்ரீதரன்)

இன்று பிரிக்கப்பட்ட அதிகாரம் தேய்வடைந்த மாகாணசபையையும் வரலாற்றுணர்வற்ற பிரதிநிதிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறோம். யாரையும் பழிதீர்ப்பதற்காக எழுத வரவில்லை. எம்மை சக இயக்கங்களை தடைசெய்தபோது எத்தகைய அவமானமும் நிர்க்கதியுமான உணர்வுகள் வேதனைப்படுத்தியதோ அதே உணர்வுகள் யுத்தத்தின் இறுதி நாட்களில் சாதாரண போராளிகளின் மக்களின் துன்ப நிலை நரகவேதனை உணர்வை ஏற்படுதியது. பல ஆயிரக்கணக்கான துரோகிகளாக முத்திரை குத்தப்பட்டவர்களின் மனங்கள் இவ்வாறு தான் துன்புற்றன. (மேலும்....)

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் 13ஆவது திருத்தத்திற்கு என்ன நடக்கும்?

கடந்த மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற இந்தியாவின் ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல்களின் முடிவுகள் கடந்த திங்கட்கிழமை வெளியாகின. அதன்படி பாரதீய ஜனதாக் கட்சி (பா.ஜ.க) நான்கு மாநிலங்களில் ஏனைய கட்சிகளைப் பார்க்கிலும் கூடுதலான ஆசனங்களை வென்றிருந்தது. எனவே அடுத்த ஏப்ரல் மாதமளவில் நடைபெறவிருக்கும் இந்திய பொதுத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றியீட்டி அரசமைக்கும் என்றதோர் அபிப்பிராயம் உருவாகி வருகிறது. இந்திய காங்கிரஸ் கட்சி ஆட்சியின் கீழ் இலங்கை பல்வேறு நெருக்குதல்களுக்கும் தாக்கங்களுக்கும் உள்ளாகி வரும் நிலையில் பா.ஜ.க. பதவிக்கு வந்தால் இலங்கை மீதான நெருக்குதல்கள் அதிகரிக்கலாம் என்றதோர் அபிப்பிராயமும் உருவாகி வருகிறது. குறிப்பாக 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் ஐ.நா. மனித உரிமை பேரவையிலும் இந்தியா இதுவரை செலுத்தி வந்த தாக்கம் அதிகரிக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள்.(மேலும்....)

மார்கழி 13, 1986

ஈபிஆர்எல்எவ் மீது தனது திட்டமிட்ட தாக்குதலை பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் மேற்கொண்ட நாள்

1986 ஏப்ரல் 29  ரெலோ இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து நரவேட்டையாடிய புலிகள் மே 6ம் திகதி ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினத்தையும் சுட்டுக்கொன்றனர். 1986 அக்டோபர் புளட் இயக்க அங்கத்தவர்களை அச்சுறுத்தி அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்டளையிட்டனர். அரசியல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிடச் செய்து  புளொட் இயக்கத்தின் செயற்பாடுகளையும் முடக்கியிருந்தனர். 1986 மார்கழி 13 அன்று ஈபிஆர்எல்எவ் மீது தாக்குதல் தொடுத்து ஈபிஆர்எல்எவ் இன் அரசியல் நடவடிக்கைகளுக்கு புலிகள் தடை ஏற்படுத்திய பின்னர் தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடிய, தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக ஆதரவை பெற்றிருந்த, 5 இயக்கங்களில் ஈரோஸ் மட்டுமே எஞ்சியிருந்தது. (மேலும்....)

காணாமல் போன உறவினர்களுக்கு நட்டஈடு

காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால், அவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்யவுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் காணாமல்போனவர்கள் தொடர்பாக ஆராய்ந்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளினால் காணாமல்போகச் செய்யப்பட்டதாகக் கூறப்படும் 148 பேர் தொடர்பான முறைப்பாடுகளை நேற்று வெள்ளிக்கிழமை பெற்றுக்கொண்ட நிலையில், ஊடகங்களிடம் பேசும்போது ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம இதுபற்றி கூறினார். தங்களின் உறவினர்களை விடுதலைப் புலிகள் பிடித்துச் சென்றதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களைச் சேர்ந்த பலர் இங்கு முறைப்பாடு செய்தனர். தமது உறவினர்கள் கண்டுபிடிக்கப்படாவிட்டால் தமக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டனர். உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் என்ற அமைப்பு இந்த முறைப்பாடு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தது. மூன்று ஆண்டுகளாக தென்னிலங்கையில் மட்டும் இயங்கிவந்த தங்களின் அமைப்பு, வடக்கிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளால் காணாமல்போனவர்களின் பிரச்சினை நிலவுவதால் அங்கும் சென்று பணியாற்றிவருவதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் ஆனந்த ஜயமான்ன தெரிவித்தார்.

த.தே.கவுடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி உறுதி - அகாஷி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்;டிலுள்ள வட மாகாண சபையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார் என இலங்கைக்கான ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி தெரிவித்தார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் தனக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் அகாஷி குறிப்பிட்டார். அத்துடன் சிறந்த நபரொருவர் வட மாகாண முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த மாகாண மக்களிற்காக அரும்பாடுபடுவார் என எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். வட மாகாண அரசாங்கத்திற்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையில் சிறந்து புரிந்துணர்வொன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இதன் மூலம் வட மாகாணத்தை கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்தார். எனது இந்த விஜயத்தின்போது வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ள முடியவில்லை. போதியளவு நேரமின்மையே இதற்கு காரணமாகும். எனினும் முதலமைச்சருக்கான எனது வாழ்த்துச் செய்தி ஜப்பானிய தூதுவரூடாக அனுப்பப்படும் எனவும் அகாஷி குறிப்பிட்டார். "முன்னாள் போரளிகளின் புனர்வாழ்வு, இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் மற்றும் காணிப் பிரச்சினை போன்ற செயற்பாடுகளில் முன்னேற்றத்தினை காண்கின்றேன். அத்துடன் மிகுதியாகவுள்ள செயற்பாடுகளை சர்வதேச சமூகத்துடன் இணைந்து நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கம் கடுமையாக உழைக்கின்றது.

சிறிதரன் உடனடியாக தற்கொலை செய்து கொள்ளட்டும் - பியசேன எம்.பி

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகின்றார். அடுத்தவர் சிறிதரன் எம்.பி தற்கொலை செய்யவும் தயாராக உள்ளாராம். இவர்கள் உடனடியாக இதனை செய்ய வேண்டும். அதன் பின்னராவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும். நான் இவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பேன். இவர்கள் தமிழ் மக்களின் மனங்களில் உள்ள காயங்களை குணப்படுத்த வேண்டும். ஆனால் அதனைச் செய்யாது காயங்களை பாதுகாத்து வருகின்றனர் என தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து அரசாங்கத் தரப்பிற்கு தாவிய அம்பாறை மாவட்ட எம்.பியான பியசேன இன்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில்  இடம்பெற்ற கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சின் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய பியசேன எம்.பி மேலும் கூறுகையில், தமிழ் தேசிய கூட்டமைப்பை தடை செய்து அதன் உறுப்பினர்கள் அனைவரையும் கைது செய்யவேண்டும். இராமாயணத்திற்கு ஒரு கூனி, மகாபாரதத்திற்கு ஒரு சகுணி அதே போன்று தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, உலகில் கொடிகட்டிப் பிறந்த இனம் தமிழினம். ஆனால் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் தமிழினம் பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றன. இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிற்கு சென்றும் நடிக்கிறது இங்கேயும் நடிக்கின்றது. கச்சதீவு என்பது பாம்பு கழற்றிய செட்டை போன்றது. பாம்பு தான் கழற்றிய செட்டையை ஒரு போதும் திரும்ப போட்டுக் கொள்ளாது. அதே போன்று கச்சத்தீவை ஒரு போதும் இந்தியா திரும்பபெற முடியாது.

வட மாகாணசபை ஆளுநரை உடனடியாக பதவி நீக்க வேண்டும் -  சுமந்திரன்

அரசியலமைப்பின் சரத்துக்கள் தொடர்பாகவோ சட்ட நுணுக்கங்கள் தாற்பரியங்கள் தெரியாத வட மாகாண சபை ஆளுநரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று சபையில் தெரிவித்தார். அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லையென்றும் அவர் குற்றம் சாட்டினார். அரசியலமைப்பில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் செயற்படுவதற்கே வட மாகாண சபை அனைத்து முயற்சிகளையும் முன்னகர்வுகளையும் மேற்கொள்கின்றது. சட்டங்களை மதிக்கின்றது. ஆனால் அரசாங்கமும் வட மாகாண ஆளுநரும் அவ்வாறு செயற்பட விடாது அரசியலமைப்பை மீறி நடக்கின்றனர். ஆனால் அரசியலமைப்பை மீறி வட மாகாண சபை செயற்படுவதாக ஆளுநர் குற்றம் சாட்டுகிறார். ஆளுநர் மட்டுமல்ல மத்திய அரசாங்கமும் அரசியலமைப்பை மீறியே செயற்படுகின்றது. ஒரு மாகாணத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்படும் போது அம் மாகாணத்தின் முதலமைச்சரின் இணக்கம் பெறப்பட வேண்டுமென அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதனை மீறி வட மாகாண பொலிஸ் அத்தியட்சகராக பூஜித ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார். இவரை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அரசாங்கம் இவ்விடயத்தில் அரசியலமைப்பை மீறியுள்ளது. 

பார்த்தீனியம் களைகளை அழித்தொழித்து பயன்தரும் பயிர்களைப் பாதுகாப்போம்

வடமாகாணத்தில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களின் சில பிரதேசங்களில் பார்த்தீனியம் களை பரவிப் பெருக்கமடைந்துள்ளது. யாழ் மாவட்டத்தில் 763 ஏக்கரிலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 1.75 ஏக்கரிலும், கிளிநொச்சி மாவட்டத்தில் 0.75 ஏக்கரிலும் வவுனியா மாவட்டத்தில் 107 ஏக்கரிலும் பார்த்தீனியம் களை காணப்படுகிறது. இக் களையினைக் கட்டுப்படுத்தாவிடில், பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைவு குறைவடையும். மனிதர்களின் தோலில் பட்டால் ஒவ்வாமை ஏற்படும், சுவாசம் மூலம் மகரந்தமணிகள் உட்சென்றால் ஆஸ்த்துமா ஏற்படும். கால்நடைகள் அதனை உண்பதால் நோய்கள் ஏற்படலாம். மகரந்த மணிகள் வேறு தாவரத்தில் விழும் போது அவை கருக்கட்டமாட்டா. இதனால் இனப்பெருக்கம் தடைப்படும். (மேலும்....)

டிசம்பர் 13, 2013

தப்பிப் பிழைக்குமா ஈபிடிபி?

ஆயுதக் குழுவாக இருந்து ஜனநாயக அரசியல் வெளிக்குள் நுழையும் தரப்புகளால், ஆயுதக்குழு மனோபாவத்தில் இருந்து முற்றிலுமாக விடுபட முடிவதில்லை. ஈபிடிபி யாழ்ப்பாணத்தில் ஓரளவுக்கு தம்மை நிலை நிறுத்திக் கொண்ட போதிலும், எல்லா மக்களாலும் அதனை ஓர் அரசியல் அமைப்பாக ஏற்கமுடியாது போனதற்கு அதுவும் ஒரு காரணம். எவ்வாறாயினும், அண்மைய சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈபிடிபி தம்மை மறுசீரமைக்க முடிவு செய்துள்ளதை கண்கெட்ட பிறகு செய்யும் சூரிய நமஸ்காரமாக சொல்ல முடியாது. ஏனென்றால், ஒரு நீண்ட அரசியல் வெளி வடக்கில் உள்ளது. அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக ஓர் அரசியல் சக்தி என்று வேறு எந்தக் கட்சியும் கிடையாது. கீரைக் கடைக்கும் ஒரு எதிர்க்கடை தேவைப்படும் போது, ஒரு ஜனநாயக அரசியல் பரப்பில் எதிர்க்கட்சி என்பது எந்தளவுக்கு முக்கியமானது என்று கூறவேண்டியதில்லை. அத்தகையதொரு பிரகாசமான வாய்ப்பு வடக்கு அரசியல் பரப்பில் இருக்கின்ற போதிலும், அதைத் தக்கவைத்துக் கொள்வதும் தவற விடுவதும் ஈபிடிபியின் கையில் தான் உள்ளது.(மேலும்....)

துக்ளக் கேள்வி பதில்கள்

கே : விடுதலைப் புலிகள் குறித்த உங்கள் கருத்து ஒருபுறம் இருக்கட்டும்! இலங்கையில் ராணுவத்தினரால் போர்க் குற்றம் நடந்ததா, இல்லையா - உண்மையைக் கூறுங்கள்?

ப : இலங்கையில் நடந்தது போர் அல்ல; உள்நாட்டுக் கலகங்களை ஒடுக்க அரசு முனைந்தபோது அரசின் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதல். இதில் தீவிரவாதிகள் சிவிலியன்களைக் கேடயமாகப் பயன்படுத்தியதாலும், ஆஸ்பத்திரி போன்ற இடங்களில் புகுந்து கொண்டதாலும், பலத்த சிவிலியன் உயிரிழப்பு நேர்ந்தது. இது தவிர்க்கக் கூடியது அல்ல. ஆனால் இதில் சேராமல், வேண்டுமென்றே ராணுவத்தினர் சிவிலியன்களைக் குறி வைத்துத் தாக்கியிருந்தால் - அது மனித உரிமை மீறல்; விசாரணைக்கும் நடவடிக்கைக்கும் உரியது.

கே : இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனின் கூட்டமைப்பில் தோன்றியுள்ள உட்பூசல்களால், தமிழர்களின் மறுவாழ்வு கேள்விக்குறியாகி விடும் போலிருக்கிறதே?

ப : இலங்கைத் தமிழர்கள் என்று பொதுவாகப் பேசுகிறபோது இந்திய வம்சாவழித் தமிழர்களைப் பற்றி யாரும் நினைப்பதே இல்லை; அவர்களுக்கும் வடக்கு (யாழ்ப்பாணம்) தமிழர்களுக்கும் இடையே ஒற்றுமை நிலவுவதில்லை. அதே போல, கிழக்குப் பகுதித் தமிழர் களுக்கும், யாழ்ப்பாணத் தமிழர்களுக்குமிடையே ஒற்றுமை இல்லை. இந்த வித்தியாசங்கள் போதாதது போல, நீங்கள் சுட்டிக்காட்டியுள்ள மன வேற்றுமைகள் வேறு. இந்த மாதிரி ஒற்றுமையின்மைதான் இலங்கைத் தமிழர்களின் முதல் பிரச்னை. மற்ற பிரச்னைகள் இதற்கு அடுத்தவைதான்.

கே : இலங்கைப் பிரச்னை தீர்ந்தால், சில அரசியல் கட்சிகளுக்கு வேலை இல்லாமல் போய்விடும் என்கிறாரே ஞானதேசிகன்?

ப : இந்த உண்மையைப் பேசுவதில் அவர் காட்டியுள்ள துணிவு பாராட்டத்தக்கது. ஆனால் ஒன்று அவர் குறிப் பிடுகிற கட்சிகள், இலங்கைத் தமிழர்களின் பிரச்னை தீர்ந்து விட்டால், மலேசியத் தமிழர்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாமே!

கே : தமிழக அரசியல் கட்சிகளில் இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து, உண்மையிலேயே கவலைப்படும் கட்சி என்று எந்த கட்சியைக் கூறுவீர்கள்?

ப : அதற்கு நீங்கள்தான் ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டும்.

கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டமும் தோல்வி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது. கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் தவிசாளர் எஸ்.எல்.எம்.ஜவாத்துல்லாஹ்வினால் இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை. எனினும் எதிராக ஐந்து உறுப்பினர்கள் வாக்களித்தனர்.  இதனால் கிண்ணியா பிரதேச சபையின் வரவு - செலவுத் திட்டம் ஐந்து மேலதிக வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளது.

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கான அமெ. உதவி நிறுத்தம்

வடக்கு சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு உயிராபத்தற்ற உதவிகளை வழங்குவதை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ரத்துச் செய்துள்ளது. ஆனால் மனிதாபிமான உதவிகள் தொடரும் என அறிவிக் கப்பட்டுள்ளது. வடக்கு சிரியாவில் மேற்குலகின் ஆதரவைப் பெற்ற சுயாதீன சிரிய படையினரின் தளங்களை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை அடுத்தே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்களின் புதிய கூட்டணியான இஸ்லாமிய முன்னணி படை சுயாதீன சிரியப் படையி னரை அகற்றி சிரியாவின் துருக்கிக்கான எல்லைவாயி லான பால்சல் ஹவா பகுதியை கடந்தவாரம் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து மேற்படி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு உயிராபத்து அற்ற மருத்துவ, வாகனங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்கள் போன்ற உதவிகளையே அமெரிக்கா, பிரிட்டன் நிறுத்தி கொண்டுள்ளன.

ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர்

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கினார். முதல் முறையாக, டில்லி சட்டசபை தேர்தலில் அக்கட்சி போட்டியிட்டது. 70 தொகுதிகளைக் கொண்ட டில்லியில், ஆம் ஆத்மி கட்சி, 28 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியை 3 ஆம் இடத்துக்கு தள்ளிவிட்டது ஆம் ஆத்மி கட்சி. புதுடில்லி தொகுதியில் காங்கிரஸ் முதல்வர் ஷிலா தீட்சித்தை அர்விந்த் கெஜ்ரிவால் தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. இத்தேர்தலில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் குமார் விஸ்வாஸ் போட்டியிடுவார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரான சிசோடியா அறிவித்துள்ளார்.

டிசம்பர் 12, 2013

நானாட்டான் விவகாரம்

65 பேர் கைது, 18 பேருக்கு விளக்கமறியலில்

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலகம்  மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும்  பொன் தீவு கிராமத்தைச் சேர்ந்த 65 சந்தேகத்தின் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில் 18 பேரை எதிர்வரும் 18 ஆம் திகதி புதன்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ இன்று புதன் கிழமை உத்தரவிட்டார். நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் காணி விவகாரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை நானாட்டான் பிரதேசச் செயலகம் மீது பொன் தீவு கண்டல் கிராம மக்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன் போது நானாட்டான் பிரதேசச் செயலகம் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து பொன் தீவு கண்டல் கிராமத்தைச் சேர்ந்த 65 பேரை முருங்கன் பொலிஸார் விசாரனைக்காக அழைத்தனர். விசாரணைக்கு அழைக்கப்பட்ட 65 பேரும் முருங்கன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் அனைவரும் இன்று புதன் கிழமை மன்னார் மாவட்ட பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ முன்னிலையில் அஜர் படுத்தப்பட்டனர். இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட பதில் நீதவான் குறித்த 65 பேரில் 18 பேரை எதிர் வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு ஏனைய 47 பேரையும் தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்ல அனுமதித்தார். அத்துடன் குறித்த 47 பேரையும் மீண்டும் எதிர் வரும் 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார். எனினும், நீதிமன்ற செயற்பாடுகள் தாமதமாக முடிவடைந்தமையினால் அவர்களை உறவினர்கள் பிணையில் அழைத்துச் செல்ல முடியாததினால்  அவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போது குறித்த 65 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

திருச்சியில் குண்டு போட்டவர்கள் எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கதைக்கின்றனர் - டக்ளஸ்

 வன்னியில் குண்டு போட்டால் கொழும்பில் குண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு திருச்சிபோய் குண்டு போட்டவர் இன்று எமது மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுகின்றார் என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களின் பிரச்சினைகளை பேசுபவரின் ஓட்டுக்குழுதான் எமது மக்களின் பிரச்சினைகளுக்கு காரணமாகும் எனவும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வணிக அபிவிருத்தி மற்றும் சிறுகைத்தொழில்கள் மற்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சுக்களின் மீதான குழு நிலை விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார். அமைச்சர் பதிலளித்து பேசுவதற்கு முன்பதாக பேசிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். கூட்டமைப்பு என்பது பல குழுக்கள் சேர்ந்து ஒட்டியது தான் ஓட்டுக்குழுவாகும். மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நாம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 5 மாவட்டங்களுக்கும் எமது அமைச்சின் மூலம் நாம் நிறைய செய்திருக்கின்றோம். ஆனால் நீங்கள் ஓட்டுக்குழு என்பதால் அது உங்களுக்கு புரியாமல் இருக்கின்றது. நீங்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு செயற்படுபவர்கள் அப்படியென்றால் எமது மக்களை எவ்வளவு விரைவாக முன்னேற்ற முடியுமோ அதற்கான அனைத்தையும் நாம் செய்வோம் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஒபாமா, காஸ்ட்ரோ கைகுலுக்கல்

காலஞ்சென்ற தென்னாபிரிக்க தலைவர் நெல்சன் மண்டேலாவின் நினைவஞ்சலி நிகழ்வின் போது கியூப ஜனாதிபதி ராவுல் கஸ்ட்ரோவுடன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கைகுலுக்க நேர்ந்தது முன் திட்டமிடப்பட்டதல்ல என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இருவருக்கும் இடையில் வாழ்த்து பரிமாறிக்கொள்ளப்பட்டதை தவிர வேறு ஒன்றும் இடம்பெறவில்லை என வெள்ளை மாளிகை உதவியாளர் பென் ரோட்ஸ் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார். எனினும் இந்த கைகுலுக்கல் அமெரிக்க ஆக்கிரமிப்பு முடிவின் ஆரம்பத்தை காட்டுவதாக கியூப அரசு குறிப்பிட்டுள்ளது. பனிப்போர் காலத்தில் கியூப முன்னாள் ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரே சோவியட் ஒன்றியத்துடன் கூட்டுச் சேர்ந்ததை அடுத்து 1961 ஆம் ஆண்டு அமெரிக்கா கியூபாவுடனான இராஜதந்திர உறவை முறித்துக்கொண்டது. இந்நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையிலான கை குலுக்கலுக்கு பின் வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கியூபாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒபாமா நிர்வாகம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2000 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டன் பிடெல் காஸ்ட்ரோவுடன் கைகுலுக்கிக் கொண்டார்.

டிசம்பர் 11, 2013

வடக்கில் பெரும்பான்மையினர் அதிகரித்து விடுவார்கள் - சி.வி

'வட மகாகாணத்தில் மிக விரைவான அரசியலில் தீர்வு காணப்படாதுவிட்டால் தமிழ் பேசும் மக்களுக்கு பதிலாக பெரும்பான்மையினத்தவர்களே அதிகரித்து விடுவார்கள்' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். 'வட மாகாண பிரதம செயலாளர், ஜனாதிபதியால் முதலமைச்சரின் அனுசரணையுடன் நியமிக்கப்பட வேண்டும். எனினும் அவ்வாறு இடம்பெறாமல் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட எமது உரிமைகள் மறுக்கப்பட்டு பிரதம செயலாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு இராணுவத்தின் அதிகார வேகத்தில் ஆக்கிரமித்த ஆளுநரின் ஆட்சியில் வடமாகாண சபை நடைபெற்று கொண்டிருக்கின்றது. வடமாகாண அலுவலர்கள் எங்கே நாங்கள் ஆளுநரின் கோபத்திற்கு ஆளாகி விடுவமோ என்ற பயத்திலிருக்கின்றார்கள். தமிழ் பேசும் மக்களை 1958 இலும் 1983 இலும் தென்னிலங்கையிலிருந்து விரட்டப்பட்ட பின்னர் தான் வடக்கில் இராணுவ உதவிகளுடன் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இனப்படுகொலைக்கு ஒப்பானது. வட, கிழக்கு மக்களை தமிழ் பேசும் மக்கள் என்று அடையாளம் காட்ட முடியாத அளவிற்கு இது ஊடுருவி நடைபெற்று வருகின்றன. வடகிழக்கில் இப்போதிருக்கும் தமிழ் பேசும் மக்களிடையே அவர்களின் கருத்துக்களை அறிய சர்வதேச பொறிமுறை ஒன்று விரைவாக உருவாக்கப்பட வேண்டும். சர்வதேசத்தின் நெருக்குதல் இல்லாமால் அரசாங்கம் எந்த விதமான அதிகாரப்பகிர்வையும் எமக்கு வழங்காது' என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

திருக்கோவில் உண்ணாவிரதப்போராட்டம் கைவிடப்பட்டது

திருக்கோவில், வட்டமடு மேச்சல்தரை பிரச்சினை தொடர்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவந்த கால்நடையாளர்கள் தங்களுடைய உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுசெய்துள்ளனர். வன பாலனசபை அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபரின் உறுதிமொழிகளை அடுத்து தமது உண்ணாவிரதப் போரட்டத்தை இரவு 8.00 மணியுடன் முடிவுக்கு கொண்டுவந்ததாக கால்நடையாளர் சங்கத்தலைவர் அழகையா முருகன் தெரிவித்தார். வனபரிபாலன சபையின் அமைச்சின் செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் அல்விஸ் டி சில்லா நேற்றைய தினமும் இன்று மாலையிலும் தொலைபேசி ஊடாக உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படும் என்றும் உறுதிமொழி வழங்கினர். அத்துடன் கச்சேரியில் நாளை புதன்கிழமை பகல் 2.00 மணிக்கு விவசாயிகள் மற்றும்  கால்நடையாளர்களுடன்  இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். இந்த கலந்துரையாடலின் போது கால் நடையாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டால் கால்நடையாளர்கள் தமது உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொள்வர் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களின் உறுதிமொழிகளை அடுத்தே உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்ததாக அவர் தெரிவித்தார்.  

புலிகள் இயக்க உறுப்பினருக்கு கடூழிய சிறை

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு ஒருவருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியான பிரித் பத்மன் சுரசேன என்பவரே இவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். புலிகள் இயக்கத்தலைவர் ஒருவருடன் இணைந்து கொழும்பில் பயங்கரவாத செயலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக விடுதலைப்புலிகளின் இயக்க உறுப்பினர் என்று கூறப்படும் மகேஷ் கிறிஸ்தோபர் விஜேந்திரன் என்பருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றமே மேற்கண்டவாறு தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றங்கள் வாசித்து காட்டப்பட்டன. குற்றப்பத்திரிகையிலிருந்த அந்த குற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டதையடுத்தே அவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள், இது எங்கள் இடம்"

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை பஸ் நிலையத்துக்கு முன்பாக காணாமல் போனோரது உறவினர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது இனந்தெரியாதோரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல்போனோரை தேடியறியும் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தின்போது முகத்தை மறைத்துக்கொண்டு வந்த சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். "யுத்தத்தின்போது எமக்கும் இழப்புகள் ஏற்பட்டன. ஏன் அதைப்பற்றி நீங்கள் கதைக்க மறுக்கிறீர்கள்? உங்களது ஆர்ப்பாட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்துங்கள். இது எங்களது இடம். இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த விடமாட்டோம்" என்று கூறி தாக்குதல் நடத்தியதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாகைகள் மற்றும் காணாமல்போனோரின் புகைப்படங்களையும் கிழித்து வீசியுள்ளனர். இதன்போது 30 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த போதும் சம்பந்தப்பட்டவர்களைத் தடுக்கவோ கைது செய்யவோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்தில் காயமுற்ற சிலர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டசபை தேர்தல் தோல்வியின் எதிரொலி

காங்கிரஸ் தலைமைக்கும் பிரதமருக்குமிடையில் மோதல்

நடைபெற்று முடிந்த நான்கு மாநில சட்டப் பேரவைத் தேர்தல் களிலும் காங்கிரஸ் கட்சி படு தோல்வியடைந்திருக்கும் சூழ்நிலை யில் பிரதமருக்கும் காங்கிரஸ் கட்சி யின் தலைமைக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போதே காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் வழக்கத்துக்கு மாறாக உடனடியாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அந்தச் சந்திப்பில், தோல்விக் கான காரணங்கள் ஆராயப்படக் கூடும் என்றும், ஆம் ஆத்மி கட்சி யிடமிருந்து மக்களின் செல்வாக் கைப்பெறும் உத்தியை காங்கிரஸ் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்றும் கூறியதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒருபடி மேலே போய், நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தக்க சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும், அவர் யார் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றும் கூறியிருப்பது, அரசியல் நோக்கர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. (மேலும்....)

வெளிநாடு செல்வோர் தங்க நகைகள் எடுத்துச் செல்வதில் புதிய கட்டுப்பாடுகள்

வெளிநாடு செல்பவர்கள் தங்க நகைகள் எடுத்துச் செல்வது தொடர்பில் நேற்று முதல் அமுலாகும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை பிரஜைகள் தமது பயணப் பொதிகள், ஆவணங்கள், அணிந்து செல்லும் நகைகள் தவிர வர்த்தக நோக்கத்துடன் நகைகளோ பொருட்களோ எடுத்துச் செல்வது, நேற்று முதல் அமுலாகும் வகையில் தடுக்கப்பட்டுள்ளது. திரும்பி எடுத்து வரும் அடிப்படையிலே பொருட்களை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட இருப்பதாக சுங்கப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக பெருமளவில் தங்க நகைகள் கடத்தப்படுவதால் இதனை தடுக்கம் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுங்கப் பேச்சாளர் கூறினார். இதற்கு முன்னர் 5 முதல் 15 பவுண் வரை தங்கம் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு தங்கம் கடத்தும் நடவடிக்கைகள் அண்மைக் காலமாக அதிகரித்திருந்தது.

சிவில் சமூகத்தை சார்ந்தவரையே ஆளுநராக நியமிக்க வேண்டும்

சிவில் சமூகத்தை சார்ந்தவ ரும் மனித உரிமைகள் தொட ர்பான பூரண அறிவுடையவரு மான ஒருவரே வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் போதே ஜனாதிபதிக்கு முன்வைக்கப்பட்டிரு ந்த பிரேரணை சபை உறுப்பினர்களினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. சிவில் சமூகத்தைச் சேர்ந்த வட மாகாண தமிழர் ஒருவரே ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையொன்றை மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் சபையில் முன்வைத்தார். எனினும் இந்த பிரேரணையில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன ஏ. டி. தர்மபாலா வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து குறித்த பிரேரணையிலுள்ள தமிழர் என்ற சொல்லை நீக்குமாறு முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழர் என்ற சொல் வேண்டாம் என்றால் வட மாகாணத்தை, சேர்ந்த ஒருவர் என்பதையும் நீக்க வேண்டும் என மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் தெரிவித்தார். இறுதியாக சிவில் சமூகத்தை சார்ந்தவரும் மனித உரிமைகள் தொடர்பான பூரண அறிவுடையவருமான ஒருவரே வட மாகாண அளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் முன்வைக்கப்பட்டது. இது அனைத்து உறுப்பினர்களினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து ஏகமனதாக சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அத்துடன் வடக்கில் இராணுவத்தை அகற்றி சிவில் சமூகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற பிரேரணையும் மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்தினால் முன்வைக்கப்பட்டது. இதனை மாகாண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் வழிமொழிந்தார். இப்பிரேரணையும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

டிசம்பர் 10, 2013

மண்டெலாவும் நாமும்

(ஸ்ரீதரன்-சுகு)

தென்னாபிரிக்க ஆட்சியில் முற்போக்கு ஜனநாயக சத்திகள் இன்றளவில் இருக்கின்றன. அங்கு வெறுப்புணர்வு அரிதானது. இங்கிதம் இருக்கிறது. கூட்டுணர்வு காணப்படுகிறது. மண்டெலா தவிர பெருவாரியான தென்னாபிரிக்கர்களால்  நேசிக்கப்படும் இன்னொரு  உலகத்தலைவர் இருக்கிறார் என்றால் அவர் பிடல் தான். ஈழத்தமிழர் எமது  அரசியல் வெறுப்புணர்வால் நிரம்பியது. தென்னாபிரிக்கர்களின் வாழ்க்கை பாடல், ஆடல் கலைநயத்துடனும் வெளிப்படைத்தன்மையுடன் இணைந்தது. எமக்குள் ஆதிக்கம் வகிப்பது இருண்டு இறுகியது. போலியானது. உம்மணா மூஞ்சித்தனமானது.நமக்குள்ளேயே  வௌ;வேறு பிரதேசங்கள், சக சமூகங்கள், அண்டை அயலார் நாடுகள் மீது ஈடுபாடற்றது. பலசந்தர்ப்பங்களில் வெறுப்புணர்வு கொண்டது. உள்ளார்ந்து சொந்த சமூகத்தினுள்ளேயே பண்பாட்டின் பேரில் தீண்டாமை அநீதிகளை வைத்திருப்பது. இவற்றை  புலம்பெயர் நாடுகள் வரை காவிச் சென்றிருப்பது.  சகிப்புத்தன்மை குறைவானது. (மேலும்....)

ரஷியநாடு தமிழைக் கொண்டாடுகிறது.

அந்நிய மண்ணில் அன்னைத் தமிழுக்கு கிடைத்த‍ மிகப்பெரிய கௌரவம்! தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ பாராட்டுவது நாமாகத்தான் இருப்போம். நம் மொழியை நாம் பேசவே பாராட்டுகிறோம். அந்தளவு போய்விட்ட து நம் மொழி. ஆனால், தமிழு க்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கொண் டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய் மொழியான ரஷிய மொழியிலும், இரண்டா வதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்பு மொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதி யிருக்கிறார்கள். (மேலும்....)

கிளிநொச்சியில் மலேரியா நோயாளி

மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட ஒருவர் கிளிநொச்சியில் இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக கிளி.மாவட்ட வைத்தியசாலையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரே மலேரியா காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே அவருக்கு மலேரியா காய்ச்சல் பீடித்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. தங்களின் உடல் நிலையில் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியசாலைக்கு நாடி உரிய சிகிச்சைகளை பெற்றுகொள்ளுமாறும் கிளிநொச்சி மக்களிடம் வைத்தியசாலை நிர்வாகம்  கேட்டுக்கொண்டுள்ளது.

தேசிய கொடிய ஏற்ற வடமாகாண அமைச்சர் மறுப்பு

மன்னாரில் இடம்பெற்ற பாடசாலை விழாவொன்றின்போது நாட்டின் தேசியக் கொடியை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன ஏற்ற மறுத்துள்ளார். அத்துடன், தம்மால் சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். சிங்கக் கொடி சிங்கள மக்களின் அடையாளம் என்றும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் பொதுவான கொடியை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய இனங்கள் எல்லாவற்றின் அம்சங்களையும் பிரதிபலிக்கும் விதத்தில் தேசியக் கொடி அமைய வேண்டும் என்றும், வாளேந்திய சிங்கம் சிங்களவர்களை மட்டுமே குறிப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் வெவ்வேறான தேசியச் சூழல்கள் காணப்படுவதாகவும் அப்படி இரண்டு தேசியச் சூழல்களுக்கும் பொருந்தும் விதத்தில் அமையும் கொடியையே தான் தேசியக் கொடியாக ஏற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார். சிங்கக் கொடியை தேசியக் கொடியாக ஏற்கமுடியாது என்று வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போதும் தான் கூறிவந்ததாக ஐங்கரநேசன் கூறினார் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்....)

ஆம் ஆத்மி கட்சியிடம் இருந்து காங்கிரஸ் பாடம் கற்க வேண்டும்

சாதாரண மக்களுடன் எப்படி ஈடுபாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கார் ஆகிய 4 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்தார். இந்த தேர்தல் மூலம் மக்கள் எங்களுக்கு ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார்கள். அதை நாங்கள் இதயபூர்வமாகவும், மனப்பூர்வமாகவும் ஏற்றுக் கொள்கிறோம். வழக்கமான அரசியல் அணுகுமுறையில் மாறுபட்ட அணுகுமுறை, சிந்தனையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஆம் ஆத்மி கட்சிக்கு கிடைத்த வெற்றி உணர்த்தி இருக்கிறது. பாரம்பரியமான அரசியல் கட்சிகளின் மீது ஈடுபாடு காட்டாத மக்கள் ஆம் ஆத்மி கட்சியின் மீது ஈடுபாடு கொண்டு இருப்பதாக கருதுகிறேன். இந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான பல்வேறு காரணங்களை நாங்கள் ஆய்வு செய்வோம். எங்களை நாங்களே ஆழ்ந்த சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியத்தை இந்த தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தி இருக்கின்றன.

ஹாலிஎல காளியம்மன் ஆலய அம்மன் சிலை விஷமிகளால் உடைப்பு

ஹாலிஎலைப் பகுதியின் உடுவரை பெருந்தோட்ட மேற்பிரிவு ஸ்ரீ காளியம்மன் ஆலய அம்மன் சிலை உடைத்து நொறுக்கப்பட்டு பலத்த சேதத் திற்குள்ளாகிய சம்பவம் நேற்று (09) அதிகாலை இடம்பெற்று ள்ளது. இவ் ஆலயம் 150 வருட கால பழைமைமிக்கதொன்று. ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் காளியம்மன், அப்பகுதி பெருந்தோட்ட மக்களின் குல தெய்வமாக இருந்து வந்ததென்றும், ஆலய நிருவாகத்தினர் தெரிவித்தனர். இன முறுகலை ஏற்படுத்தும் வகையிலேயே, இச்சிலை விஷமிகளினால் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதை, ஆரம்ப விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. மேற்படி சிலை உடைக்கப்பட்டமை தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றதும், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம், மாகாண ஆளுநர் சி. நந்தமெந்தியூ, மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷ ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து, தமது பலத்த அதிருப்தியை தெரிவித்தார்.

தமிழகத்தில் ஆம் அத்மி கட்சியை பலப்படுத்த முயற்சி

டில்லியில் ஆம் ஆத்மி கட்சி முதல் முறையாக போட்டியிட்டு 28 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. தனி செல்வாக்குடன் திகழ்ந்த காங்கிரஸ் முதல் மந்திரி லீலா தீட்சித்தை ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரீவால் தோற்கடித்துள்ளார். மக்களிடையே ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்டுள்ள எழுச்சி அந்த கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மற்ற மாநிலங்களிலும் அதன் செயற்பாட்டை தீவிரப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் செயற்பட்டு வரும் ஆம் ஆத்மி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் லெனின் கூறியதாவது:  பண பலத்தையும் தாண்டி சாதாரண மக்களும் தேர்தலில் நிற்க முடியும். வெற்றி பெற முடியும் என்பதை டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி நிரூபித்துள்ளது. ஊழலை ஒழிப்பது, ஊழல் செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதே எங்கள் நோக்கம். தமிழகத்திலும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் எனவே நாங்கள் கட்சியைப் பலப்படுத்தும் பணியை மேற்கொண்டுள்ளோம்.

சிங்கப்பூரில் 30 ஆண்டுகளில் முதல் கலவரம்: 27 பேர் கைது

சிங்கப்பூரில் இந்திய நாட்டவர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு நூற்றுக்கணக்கானோர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் 27 தெற்காசிய நாட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரின் லிடில் இந்தியா என்று அழைக்கப்படும் பகுதியில் இந்திய நாட்டவர் ஒருவர் பஸ் விபத்தில் கொல்லப்பட்டதையடுத்து 400 க்கு அதிகமான வெளிநாட்டு தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். விபத்திற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இடம்பெற்ற இந்த காவரத்தில் பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனங்கள் மீது கலவரக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பொலிஸார் ஆவர். பின்னர் வன்முறைகளை பொலிஸார் கட்டுப்படுத்தினர். சிங்கப்பூரில் கடந்த 30 ஆண்டுகளில் இடம்பெற்ற முதல் கலவரம் இதுவென பொலிஸ் ஆணையாளர் ந்ஜூஹு குறிப்பிட்டுள்ளார். வன்முறைகள் குறித்து தொடர்ந்து பொறுமை காக்க மாட்டோம் என்று எச்சரித்துள்ள ஜூஹு இது சிங்கப்பூரின் கலாசாரமும் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 09, 2013

இலங்கையில் கிருமிநாசினி பாவனை 8 மடங்கு அதிகம்

  • நீரிழிவு, புற்றுநோய், சிறுநீரகநோய் அதிகரிப்புக்கு கிருமிநாசினி பாவனையே காரணம் - மருத்துவ அதிகாரிகள் சங்கம்
    நாடு முழுவதும் 25,000பேர் சிறுநீரக நோயினால் பாதிப்பு
    வடக்கு கிழக்கில் 15% தாக்கம்

ஆசிய பிராந்திய நாடுகளை ஒப்பிட்டு உலக சுகாதார ஸ்தாபனம் WHO அறிக்கை

ஆசியப் பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் கிருமி நாசினிப் பாவனை எட்டு மடங்கு அதிகமாகக் காணப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக் காட்டியுள்ளது. தேவையற்ற கிருமிநாசினிப் பாவனை காரணமாகவே சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும் இக்கிருமி நாசினி பாவனையே காரணம். அதனால் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் மாத்திரமல்லாமல் முழு நாட்டிலும் சிறுநீரக நோய்க்கு உள்ளாகக் கூடிய அச்சுறுத்தலுக்கு மக்கள் முகம் கொடுத்துள்ளார்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.(மேலும்....)

வடமாகாண சபை முதலாவது பட்ஜட் நாளை சமர்ப்பிப்பு

வட மாகாண சபைக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் மாகாண முதல மைச்சர் சி. வி. விக்னேஸ்வர னினால் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.  அரசியலமைப்பில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய முதலமைச்சர் வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கான மாகாண நிதி நியதிச் சட்ட வரைவு ஆவணங்களில் வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி கையொப்பமிட்டு உத்தியோகபூர்வமாக முதலமைச்சருக்கு அனுப்பிவைத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதற்கமைய நாளை நடைபெறவுள்ள வட மாகாண சபையின் கூட்டத்தின் போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது முதலாவதும், 2014ம் ஆண்டுக்குமான வரவு- செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெறவுள்ளார். நாயைய தினம் வரவு- செலவுத் திட்டத்திற்கான விவாதத்தை தொடர்ந்து இது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரிக்கப்படவுள்ளது. இதற்கமைய வட மாகாண சபையின் 2014ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடாக சுமார் 19 ஆயிரத்து 481 மில்லியன் ரூபா நிதியை மத்திய அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டுத் தொகையானது ஏனைய மாகாணங்களுக்கு அடுத்த ஆண்டுக்காக அரசாங்கம் வழங்கிய நிதி ஒதுக்கீட்டுத் தொகையை பார்க்கிலும் கூடுதல் தொகையாகும் என வடமாகாண சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சி அலுவலகங்கள் அகற்றப்படுவது திடீர் நடவடிக்கை அல்ல; ஈ. பி. டி. பி. விளக்கம்

நெடுந்தீவிலிருந்து எமது அலுவலகம் நீக்கப்பட்டதையும், யாழ். குடாநாடு தழுவிய ரீதியில் உள்ள எமது அலுவலகங்களில் சிலவற்றை எதிர்காலத்தில் அகற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதையும் திடீர் நடவடிக்கையாகவோ அவசர நடவடி க்கையாகவோ நாம் முன்னெடுக்கவில்லை. நீண்டகாலமாகவே எமது அலுவலகங்களை ஒழுங்கமைப்பது மற்றும் கட்சியின் கட்டமைப்பை மீள் ஒழுங்கு செய்வது என்ற எமது ஆய்வுகளும், ஆதரவாளர்களின் அபிப்பிராயங்களும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தன. இடையில் தேர்தலில் வந்ததாலும் குறிப்பிட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட் டிருந்த அரசியல் செயற்பாடுகளை பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருந்ததாலும் எமது சீரமைப்புச் செயற்பாடுகள் காலதாமமடைந்திருந்தன. தற்போது மாறியிருக்கும் அரசியல் சூழலையும் நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட கட்சியின் செயற்பாடுகளின் மறுசீரமைப்புக்கான தேவையும் கவனத்தில் கொண்டு மாற்றங்களை ஒழுங்கு செய்வதையும் உள்ளக நிர்வாகக் கட்டமைப்பின் தேவையான மாற்றங்களைச் செய்வதையும் கட்சி செயற்படுத்தும் அதன் ஒரு நடவடிக்கையாகவே நெடுந்தீவு அலுவலம் மூடப்பட்டதும் தீவகத்திலுள்ள சில அலுவலகங்களை அகற்றிக் கொள்வதற்கான திட்டமுமாகும். எமது கட்சியின் திட்டங்களும் நடவடிக்கைகளும் எமது மக்களுக்கான நலன்களில் இருந்தும் எமது அரசியல் கொள்கைகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாகவுமே இருக்கும்.

ததேகூ தலைவர்கள் கிழக்கை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

வடக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களிடம் கிழக்கு மாகாணம் தொடர்பான அக்கறையும் அரசியல் செயற்பாடுகளும் குறைந்து வருவதாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பா. அரியநேத்திரன் குற்றஞ்சாட்டுகின்றார். வடக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர், வடக்கு மாகாண சபைதான் தமிழ் மக்களுக்கான தீர்வு என்ற தவறான மாயை உருவாக்கப்படுவதாகவும், தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்தப் போக்கு தூரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். 'வடக்கு மாகாண சபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களிலும் வடக்கு-கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடனான தீர்வைத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து தமிழ் மக்களின் ஆணையை பெற்றிருந்தது' என்றார் அரியநேத்திரன். 'குறிப்பாக, வடக்கு முதலமைச்சர் தன்னை சந்திக்கும் ராஜதந்திரிகள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளிடம் வட மாகாணத்தையே முதன்மை படுத்தி பேசுகின்றார். சில சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் கூட வடக்கை முதன்மை படுத்தியே இத்தகைய சந்திப்புகளில் பேசியிருப்பதையும் எம்மால் அவதானிக்க முடிந்துள்ளது' என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

அம்பாறையில் 16 ஆவது பல்கலைக்கழகம் ஆரம்பம்

அடுத்த வருட முற்பகுதியில் அம்பாறை நகரில் இருக்கும் ஹாடி தொழில் நுட்பக் கல்விக் கல்லூரி 16 ஆவது பல்கலைக்கழ கமாக செயற்படவிருக்கிறது. இந்தக் கல்லூரி வளாகத்தில் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியின் போது 173 ஏக்கர் பரப்புள்ள பிரதேசத்தில் பல மாடிக்கட்டி டங்கள் அமைக்கப்பட்டு கடந்த பல மாத ங்களாக சும்மாவே கிடக்கின்றன. ஜனா திபதியின் ஆலோசனைக்கு அமைவாக ஹாடி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றம் செய்யுமாறு விடுக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக அதற்கான வேலைகள் நடைபெற்று வரு கின்றன. அடுத்த வருட முற்பகுதியில் இது 16 ஆவது பல்கலைக்கழகமாக செயற்பட விருக்கிறது. ஹாடி தொழில் நுட்பக் கல்லூரி 1959 ஆம் ஆண்டு கல்லோயா அபிவிருத்திச் சபையி னால் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கல்லூரி வளாகத்தில் 1074 மில்லியன் ரூபா செலவில் 173 ஏக்கர் நிலப்பரப்பில் பல கட்டிடங்கள் தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சிக்கு பயன்படுத்தப்பட்டு தற் போது சும்மா இருப்பதனால் அதனை பல் கலைக்கழகமாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்களின் கற்றுக்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப் படுவதால் எதிர்காலத்தில் மூன்று சமூகங் களுக்கிடையிலும் நல்லுறவுகள் ஏற்படு மென்று சிரேஷ்ட அமைச்சர் ப.தயாரத்ன தெரிவித்தார். இங்கு மாணவர்களுக் கான விடுதிகள் பயிற்சிக் கூடங்கள் விரிவுரையாளர்களுக் கான விடுதிகள், சிற்றுண்டிச்சாலை, விளை யாட்டு மைதானம் போன்ற வசதிகள் எல் லாம் இருப்பதால் அடுத்த வருடம் பல்கலை க்கழகப் பயிற் சிக்கான மாணவர்களின் தொகையும் அதிகரிக்கப்படுமென எதிர்பார் க்கப்படுகிறது.

ஆலையடிவேம்பில் 13 வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியவர் கைது

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமி ஒருவரை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 16 வயதான சிறுவன் ஒருவனை  நேற்று சனிக்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட 16 வயதான   இந்தச்  சிறுவன்,  இந்தச் சிறுமியை நேசித்து வந்துள்ளதாகவும் இவர் கடந்த இரு தினங்களாக இந்தச் சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியததாகவும்  இந்தச் சிறுமியின் பெற்றோர், பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து  சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர். பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான  நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

தமிழ் மக்களை மீண்டுமொருமுறை ன்னலுக்குள் தள்ளிவிட பிரயத்தனம்

முப்பது வருட கால கொடூர யுத்தத்திற்குப் பின்னர் தற்போது நிம்மதியாக வாழ்ந்துவரும் தமிழ் மக்களை மீண்டுமொரு தடவை இன்னலுக்குள் தள்ளிவிடும் அதீதமான தீவிர முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், அவருடன் இருக்கும் ஒருசில புதிய அரசியல்வாதிகளும் ஈடுபட்டுவருவதாகவே தமிழ் மக்கள் கருதுகின்றனர். அண்மைக்காலமாக இவர்கள் தெரிவித்துவரும் கருத் துக்கள், விடுத்துவரும் ஊடக அறிக்கைகள். நடந்து கொள்ளும் நடத்தைகள் இதற்குச் சான்று பகர்வனவாக உள்ளன. (மேலும்....)

முன்னாள் போர் வலயத்தில் கருத்தடைக்கு அவசரம் இல்லை'

கிளிநொச்சி மாவட்டத்தில், கடந்த நவம்பர் முதலாம் திகதியன்று வேரவில், கிராஞ்சி மற்றும் வலைப்பாடு ஆகிய கிராமங்களில் முறையான சுகாதார வழிகாட்டலின் பின்னர், தாய்மார் சுயவிருப்பத்தின் பேரில் கருத்தடையை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுப்பதற்குரிய கால அவகாசம் வழங்கப்படாமையே இந்த விடயத்தில் குற்ற உணர்வு மற்றும் சமூக நெருக்கீடு ஏற்படக் காரணமாகியுள்ளது' என வடமாகாண சுகாதார அமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், 'போருக்குப் பின்னரான இந்தக் காலப்பகுதியில், போரினால் உயிரிழப்புக்களைச் சந்தித்துள்ள வடபகுதி மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதற்கான அவசியமோ அவசரமோ தற்போது இல்லை' என்று கருதுவதாக வடமாகாண சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கம் பிபிசிக்கு கூறியுள்ளார். (மேலும்....)

17 ஆண்டுகள் நடந்த பாசப் போராட்டம்

பிரிந்திருந்த மூன்றுபிள்ளைகளுடன் நிரந்தரமாக இணைகிறார் தாய்

முப்பது வருடகாலப்போர் தமிழினத்திற்கு தந்த பரிசு

1990ம் ஆண்டு இலங்கையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்த நேரம் தனது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் தமிழகத்திற்கு அகதியாகச் சென்றார் வவு னியா மாரம்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் சேவியர். தமிழகத்தில் அவர்கள் சேவலூர் அகதி முகாமில் அடைக்கப்பட்டனர். கொழும்பில் வங்கி மேலாளராக வசதியாக இருந்த பிரான்சிஸ்க்கு சேவலூர் முகாமில் குழந் தைக்கு பால்மா வாங்க கூட பண மில்லை. இதற்குள் அவர்களுக்கு மூன்றா வதாக இன்னொரு ஆண் குழந்தையும் அகதி முகாமில் பிறந்தது. 3 குழந்தை கள் ஆகிவிட்ட நிலையில், செல்வராணி-பிரான்சிஸ் தம்பதிகளால் குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை. அன்றாட வாழ் க்கையை நகர்த்துவதற்கே அவர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. (மேலும்....)

டிசம்பர் 08, 2013

ஒரு சொல்லு சொல்லியிருந்தால் நானும் இன்று, ஓர் எம். பி தான் - ஆனந்தசங்கரி

விடுதலைப் புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நானும் ஒரு எம்.பி. யாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கே. கே. எஸ். வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது. அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா. ஆனால் நான் திரும்பத்திரும்பச் சொல்லியிருக்கிறேன் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும் என்று. நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும். விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்பிடும் வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிதம்பரத்தை நன்கு அறிந்திருந்தும் பயன்படுத்தத் தெரியாத TNA

இன்றைய இந்திய மத்திய அரசாங்கத்திலுள்ள தலைவர்களுள் இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக ஆரம்ப காலம் முதல் இன்றுவரை இவ்விடயத்தை மிகவும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் ஒருவர் என்றால் அது மத்திய அமைச்சர் சிதம்பரம் அவர்களே ஆவார். இலங்கை அரசாங்க தரப்பிலுள்ள நியாயங்களையும், தமிழர் தரப்பு தேவைகளையும் அவர் நன்கு தெரிந்து வைத்துள்ளார். அவரை வைத்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை விடுத்து இன்று அவரையே விமர்சிக்கும் அளவிற்கு தமிழ்த் தேசியக் கட்டமைப்பின் சில தலைவர்கள் செயற்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர் தெரிவித்தார். திரு. சிதம்பரத்துடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தவன் எனும் வகையில் எனக்கு அவரைப் பற்றி நன்கு தெரியும். அவர் இலங்கையில் பிரச்சினை தீர வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டிச் செயற்பட்டவர் இன்றும் செயற்பட்டு வருகிறார். அவர் பக்கச் சார்பின்றி நடு நிலையாகச் செயற்படக் கூடிய ஒருவர். ஆனால் இன்று அவரை விளங்கிக் கொள்ளாத இலங்கையிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் அவரை விரோதியாகப் பார்க்கின்றனர். இது முற்றிலும் தவறானது எனவும் முன்னாள் அமைச்சர் மன்சூர் தெரிவித் துள்ளார்.

ஆலயங்களில் அத்துமீறல் சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாது - பிரதமர் ஜயரட்ண

கடந்த சில நாட்களாக இரத்தின புரி, தெனியாய, யாழ்ப்பாணம், கல்கிஸை போன்ற இடங்களில் தொடர்ச்சியாக கோவில்கள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதோடு ஆலய விக்கிரகங்களும் உடைத் தெறியப்படும் சம்பவங்கள் தொடர்ச் சியாக இடம்பெற்று வருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக இ.தொ.கா தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் தி.மு. ஜயரட்ன, கலாசார அமைச்சின் பிரதி அமைச்சர் ஆகியோருடன் பாராளுமன்றத்தில் வைத்து கலந்துரையாடியதுடன் தமது கவலையையும் தெரிவித்ததாக பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார். இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தி எல்லோரும் ஒற்றுமையாகவும் ஒரே நாட்டு மக்களாகவும் வாழ வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் பாடுபட்டுக் கொண்டு வருகின்றார். இன, மத வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக பார்க்கும் ஜனாதிபதியின் தலைமையின் கீழ் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நடைபெறுவது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதாகவும் இவ்வாறான சம்பவங்கள் தொடருமானால் அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ள உறவுக்கிடையில் இடைவெளி ஏற்படும் நிலைமை உருவாகும் எனவும் பிரதமர் தி.மு. ஜயரட்ணவிடம் எடுத்துரைத்ததாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுடனும் காவல்துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்திடம் பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

ஆச்சரியப்பட வைக்கும் ஒரே மாதிரியான இரு சம்பவங்கள்

நூறு வருடங்களுக்கு முன்னரும் சாரதியின்றி பயணித்த ரயில் எஞ்சின் 1913 டிச. 5 அதிகாலை 1.45க்கு இடம்பெற்றதாகப் பதிவு

சாரதி எவருமின்றி சில தினங்களுக்கு முன்னர் ரயில் எஞ்சினொன்று தெமட்டகொடையிலிருந்து ரத்மலானை வரை பயணித்ததைப் போலவே, இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற சம்பவமொன்று நிகழ்ந்திருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவலொன்று வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் நிகழ்ந்த அதே நாளில் அதாவது 1913ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி அதிகாலை 1.45 இற்கு இடம்பெற்றி ருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித் துள்ளனர். அன்று நடந்த சம்பவத்தை அப்போது மூன்று சதத்திற்கு விற்பனையான எமது நிறுவனத்தின் தினமின பத்திரிகை முன்பக்கச் செய்தியாக வெளியிட் டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே தினத்தில் ஒரே நேரத்தில் இடம் பெற்ற சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் இந்தத் தகவல் புகையிரத சேவையைச் சேர்ந்த மூத்த ஊழியர்களால் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கிறது. 1913 ஆம் ஆண்டு சம்பவமானது, மாளிகாவத்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் எஞ்சின் ஒன்று தானாக இயங்கி களனிவெலி ரயில் பாதையில் மாளிகாவத்தை, மருதானை, நிலையங்களைக் கடந்து கொழும்பு கோட்டை திசை நோக்கி சுமார் மூன்றரை கிலோ மீற்றர் தூரம் பயணித்து கப்பிதாவத்தை இந்து ஆலயம் வரை வந்து தரித்திருக்கின்றது. இந்தச் சம்பவத்திலும் எந்த அனர்த்தமும் ஏற்படவில்லை. முதன்முதலாக சாரதி இல்லாமல் சென்ற புகையிரதம் சுமார் 3.5 மைல் பிரயாணம் செய்திருக்கின்றது. கடந்த வாரம் சாரதி இல்லாமல் பிரயாணித்த புகைவண்டி சுமார் 15 கிலோ மீற்றர் வரை பயணித்திருக்கின்றது. ஒரே நாளில் ஒரே நேரத்தில் இந்த ஆச்சரியத்தக்க சம்பவம் நடைபெற்றி ருப்பதாவது சகலரையும் பேராச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலா விஸாவில் வந்து அரசியல் ரீதியாக கள ஆய்வுகளை செய்தாராம்!

அரசிற்கு எதிராக சர்வதேச ஆதரவுடன் ஆர்ப்பாட்டம் நடத்த TNA யைத் தூண்ட முயற்சியும் செய்தாராம்

சுற்றுலா விஸாவில் இலங்கை வந்திருந்த தான், இங்கு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமையை கைது செய்யப்பட்டு நோர்வேக்கு நாடு கடத்தப்பட்ட கவிஞரும் நடிகரு மான ஜெயபாலன் ஒப்புக் கொண்டுள் ளார். இலங்கை அரசாங்கத்தை விமர்சித்துவரும் சில புலம்பெயர் புலி சார்பு தமிழ் இணையங்கள் சிலவற்றிற்கு அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், பேட்டிகள், அறிக்கைகள் அதனை உறுதி செய்துள்ளன. சுற்றுலா விஸாவில் இலங்கை வந்திருந்த இலங்கையின் பூர்வீகப் பிரஜையும், நோர்வே நாட்டு பிரஜாவுரிமை பெற்றவருமான ஜெயபாலன் தான் இலங்கை வந்திருந்த போது இலங்கை இராணுவத்திற்கு எதிராகச் சில அறிக்கைகளைத் தயாரித்திருந்ததாகவும், எனினும் அதனை வட மாகாண முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பதற்கு முன்னதாகவே தான் கைதாகி நாடு கடத்தப்பட்டுவிட்டதாகவும் அதனால் அந்த அறிக்கையை இணையங்களில் வெளியிடுவதாகவும் தெரிவித்து அவற்றைப் பிரசுரம் செய்திருக்கிறார். (மேலும்....)

தமிழீழம் எனும் தனிநாடு கேட்டவர்கள் ஒரு மாகாண பையைகூட நடத்தமுடியாமல் திக்குமுக்காடுகின்றார்கள்

இயக்கங்கள் உருவானபோதே பல பத்தாக உருவாகியதுபோல முதன்முதலாக உருவாகிய வடமாகாண சபையின் பதவிப்பிரமாண நிகழ்வுகளும் பலபத்து திசைகளிலே நடந்தேறியது. அமைச்சுப் பதவி பகிர்வுகள் தொடர்பாக இழுபறிகளும் கோபதாபங்களும் வஞ்சம்தீர்ப்புக்களுமே இதற்கு காரணமாகும். இதனூடாக சபை உறுப்பினர்களின் கூட்டுப்பொறுப்பு என்பது முளையிலேயே கருகிவிட்டமையானது வட மாகணசபைக்கான ஒரு அபசகுனம்தான்போலும். முதலமைச்சர் சர்வாதிகாரியாக நடக்கிறார் என மாகாண சபை உறுப்பினர்கள் அனந்தி எழிலன் சுட்டுவிரல் நீட்டும் அளவிற்கு உட்கட்சி ஒற்றுமைகள் சந்திசிரிக்கின்றன. (மேலும்....)

டிசம்பர் 07, 2013

மண்டெலாவின் காலத்தில் நாமும் வாழ்ந்தோம்.

(ஸ்ரீதரன்-சுகு)

மண்டெலா நிறவெறி, இன ஒதுக்கல், காலனி ஆதிக்கம், சகல ஒடுக்குமுறைகளுக்கும்   எதிராகப் போராடிய நம் காலத்து உலக மானிடர். மனிதர்கள் தமக்கிடையேயான பிரச்சனைகளை எவ்வாறு தீர்க்கவேண்டும் என்பதற்கு அவர் முன்னுதாரணமாக திகழ்ந்தார். பழி உணர்ச்சிகளுக்கு அவர் இடமளிக்கவில்லை. சமத்துவமாக இவ்வுலகில் வாழ்வதற்கான உரிமை, இனசமூகக் குழுக்கள் வௌ;வேறு நாடுகளின் சமூகங்களுடன் உறவுடனேயே போராட்டத்தை முன்னெடுத்தார். (மேலும்....)

முகம் காணாத ஒருவரின் நியாயமாக கேள்விகள்

எவர்மீதும் தனிப்பட்ட தாக்குதல் ஒன்றை மேற்கொள்வதற்காக நான் இப்பதிவை இங்கே எழுதவில்லை. எனது மனதில் எவ்விததிலும் பதில் தேடிக்கொள்ள முடியாத நிலையில் தான் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களுள் ஒருவர் ராகவன் என்ற இயக்கப் பெயர் கொண்ட ராஜேஷ் குமார். (அவர் இப்போதும் பழைய இயக்கப் பெயரில் தான் அழைக்கப்படுவதை விரும்புவதாகவே எனக்குப் படுவதுண்டு... ) விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அஙத்தவராயிருந்த காலத்தில் அவர் பல வங்கிக் கொள்ளைகள் இராணுவத்தின் மீதான தாக்குதல்கள், தனி மனிதக் கொலைகள் என்பவற்றில் நேரடியாகப் பங்கு பற்றியவர். நிர்மலா தன் மீதான வழக்கு விசாரணை முடிவதற்கு முன்னரே (விசாரணைக் கைதியாக இருந்த போதே) சிறையுடைப்பின் மூலம் தப்பி இந்தியாவுக்குப் படகேறி, பின்னர் இங்கிலாந்தில் குடியேறியவர். இவர்கள் இருவரும் புலிகளின் மறைவுக்குப் பின்பு அடிக்கடி கொழும்புக்கும், யாழ்ப்பாணத்திற்கும் சென்றுஅரசியலும் இலக்கியமமும் பேசக் கூடியதாக இருக்கிறது..அவர்கள் ஒரு சிறு விசாரணைக்குக் கூட அழைத்துச் செல்லப் பட்டதில்லை..ஆனால். கொழும்பில் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசிப் பதிவேட்டில் மன்னாரைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவரின் கைத்தொலைபேசி இலக்கம் இருந்ததற்காக எனது நண்பரும் கைது செய்யப்பட்டு இன்றுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. அவர் கைது செய்யப்பட்ட போதும் இன்று வரையும் அவர் மீது எவ்வித குற்றச்சாட்டையும் அரசாங்கம் சுமத்தவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் அவர் இன்றும் ஒரு விசாரணைக் கைதி. எனது கேள்வியெல்லாம் எத்தகைய விதிமுறைகளின் கீழ் இந்தத் தரம் பிரித்தல்கள் நடைபெறுகின்றன? உண்மையான பயங்கரவாதிகள் இன்று இலக்கியவாதிகளாகவும். எவ்வித குற்றமும் செய்யாத அப்பாவிகள் பயங்கரவாதிகளாகச் சிறையிலும்...?

இலங்கை விவகாரம்

சர்வதேசத்துடன் பேச பிரிட்டன் தீர்மானம்

இலங்கையில் மனித உரிமைகள் விடயம் உட்பட நிலைமை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாயம் மற்றும் சர்வதேச பங்காளிகளுடன் இனிவரும் மாதங்களில் தொடர்ந்து பேசவுள்ளதாக பிரித்தானியா கூறியுள்ளது. ஐக்கிய இராச்சியம் மீண்டும் ஐ. நா மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவாகியுள்ளது. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அமர்வு மார்ச்சில் நடைபெறும். அதற்கு முன் ஐக்கிய இராச்சியம் இலங்கை விடயத்துக்கு சர்வதேச ஆதரவை திரட்டுவதில் மும்முரமாக ஈடுபடும் என பொதுநலவாயத்துக்கான இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தபோது கூறினார். பொதுநலவாய மாநாட்டின்போது நாம் மனித உரிமைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு ஆகியவற்றில் உண்மையான முன்னேற்றத்தை காண விரும்புகின்றது. மனித உரிமைகள் பேரவை மார்ச்சில் முன்னேற்றத்தை மார்ச்சில் மதிப்பீடு செய்யும் என பிரதமர் டேவிட் கமரோன் கூறியதையும் ஸ்வயர் நினைவு கூறினார். யுத்த குற்றம் தொடர்பான குற்றச்சாட்டல்கள் தொடர்பாக நம்பகமான, வெளிப்படையான, சுயாதீனமான விசாரணைகளை பிரதமர் வலியுறுத்தினார். மார்ச் அளவில் இந்த விசாரணைகள் முறையாக தொடங்காதிருப்பின் நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஒரு சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம் எனபதை தெளிவாக அவர் கூறியிருந்தார் என ஸ்வயர் கூறினார்.

இறுதிக் கட்டப் போரில் ஓர் தலைவனாக தன்னை புடம்போட்டுக் கொள்வதற்கான சத்திய சோதனையில் பிரபாகரன் தோற்றுப்போகிறார்

பிரபாகரன் வரலாற்றுத் தவறை இழைத்தார் என்பது தமிழர்களின் அடிமனதில் மறைந்திருக்கும் அப்பட்டமான பேருண்மை. வாழ்க்கை பூராவும் தவறுகளுக்கூடாகவே தலைமைக்கு வந்த ஒரு மனிதன் வரலாற்றுத் தவறிழைத்தார் என்பதில் வியப்பேதுமில்லை. பிரபாகரன் சரணாகதியடைந்தது முதல், இறுதிக்கட்டப் போரில் நிகழ்ந்த இன்னும் பல உண்மைகளை அறிந்திருப்பவர்தான் எரிக் சொல்கைம். அவ்வகையில்; இன்னும் பல விடயங்களை அவர் துல்லியப்படுத்த வேண்டும். அதற்கான கடமையும் அவருக்குண்டு. இறுதிக் கட்டப் போரில் ஓர் தலைவனாக தன்னை புடம்போட்டுக்கொள்வதற்கான சத்திய சோதனையில் பிரபாகரன் தோற்றுப்போகிறார். தற்கொலைத் தாக்குதல் வழியிலும் மற்றும் போர்முனைத் தாக்குதல்களிலுமாய், ஆயிரம் ஆயிரமாய் மாவீரர்களை உருவாக்கிய ஒரு 'தலைவன்', பொது மக்கள் சார்ந்தும், தனது போராளிகளின் உயிர்வாழ்வு குறித்தும் தன்னை ஒரு மாவீரனாகத் தியாகித்துக்கொள்ள முன்வரவில்லையே என்பதுதான் இங்கு அவலம். 30 ஆண்டுகால போராட்ட வரலாற்றில் தமிழ் தேசியத்துக்குக் கிடைத்த பேரவலமும் இதுதான். எந்தொரு மனிதன் சத்திய சோதனையில் ஜெயிக்கிறானோ அவனே சரித்திரம் முழுமையும் வாழ்வான். மீளமீளச் சிந்தித்து நமது புரிதல்களை(புலிவழித் தேசியக் கோரிக்கைகள்-போராட்டச் செல் நெறி) கேள்விக் குட்படுத்த வேண்டியவொரு தருணத்தைக் கோரி நிற்கும் வார்த்தைகள்!

கட்சியிலிருந்து கமலேந்திரன் நீக்கம் - ஈ.பி.டி.பி

வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினருமான கே.கமலேந்திரன், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ்.தவராசா தெரிவித்தார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கமலேந்திரனே இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். டானியல் றெக்ஷியனின் கொலைக் குற்றச்சாட்டுக்கள் காரணமாக தனது கட்சியை சேர்ந்த கே.கமலேந்திரன், தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று வியாழக்கிழமை (05) கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடனை செலுத்துவதற்கு

மனைவியை விற்க முயன்ற கணவன் பொலிஸாரால் கைது

வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்காக தாலி கட்டிய மனைவியையே அடுத்தவருடன் தகாத நடத்தையில் ஈடுபடும் படி வற்புறுத்திய கணவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அரியாலைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. வங்கியில் பெற்ற கடனை மீளச் செலுத்துவதற்கான பணத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிறிதொரு ஆணுடன் தகாத நடத்தையில் ஈடுபடும்படி தனது மனைவியை குறித்த நபர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் மனைவி கடந்த 28 ஆம் திகதி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த நபரின் வீட்டுக்கு வவுனியாவிலிருந்து வந்துள்ள பெண் ஒருவரும் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும், இதன் அடிப்படையிலேயே குறித்த நபரும் தனது மனைவியை தவறான நடவடிக்கைக்கு வலியுறுத்தியதாகவும் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தமயந்த விஜயசிறி ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

தென்னாபிரிக்க சுதந்திர போராட்ட மாவீரர் நெல்சன் மண்டேலா காலமானார்

எதிர்வரும் 14ஆம் திகதி சனிக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும்
95ஆவது வயதில் குடும்ப உறுப்பினர்கள் சூழ்ந்திருக்கையில் உயிர் பிரிந்தது
ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட உலகத் தலைவர்கள் அனுதாபம்

தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியை ஒழித்து கறுப்பின மக்களுக்கு அதிகாரம் பெற்றுத் தந்த நெல்சன் ரொலிஹ்லஹ்லா மண்டேலா தனது 95 வயதில் காலமானார். (மேலும்....)

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதி

ஆந்திராவில் ராயல தெலுங்கானா திட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதியின் கையெழுத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை இர ண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க காங்கிரஸ் காரிய குழுவும் அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையும் முடிவு செய்தன. இதற்கு ஆந்திராவின் இதர பகுதிகளான கடலோர ஆந்திரா, ராயலசீமா ஆகிய பகுதிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், ராயலசீமா பகுதியில் உள்ள 4 மாவட்டங்களில் கர்நூல், அனந்தப்புரம் ஆகிய 2 மாவட் டங்களை தெலுங்கானாவுடன் சேர்த்து, ராயல தெலுங்கானா என்ற தனி மாநிலமாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு தெலுங்கானா பகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தெலுங்கானாவின் 10 மாவட்டங்களிலும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிகளைச் சேர்ந்த 11 எம்.பிக்களும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இந்த மசோதாவின்படி ஆந்திர மாநிலத்தை பிரித்து 10 மாவட்டங்களுடன் புதிய தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படுகிறது. எஞ்சிய 13 மாவட்டங்களுடன் ஆந்திர மாநிலம் இருக்கும் ஹைதராபாத் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக 10 வருடங்களுக்கு மிகாமல் இருக்கும்.

டிசம்பர் 06, 2013

ஏற்றுக் கொள்ள முடியாத மரணம் ஒன்றினால் இன்று சூத்திரம் தனது பதிவுகளை செய்யவில்லை..... ஆனால் மானுட வாழ்வு தொடர்ந்து கொண்டு செல்லப்படத்தான் போகின்றது. எனவே அந்த மரணத்தை நினைவும் கூர்ந்து சூத்திரம் தனது பயணத்தை தொடர்கின்றது நாளை முதல்..... - சாகரன்

டிசம்பர் 05, 2013

காஷ்மீர் விவகாரத்தில் இந்திய, பாகிஸ்தான் போர் வெடிக்கலாம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தானிடையே எந்நேரமும் போர் வரும் வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியிருக்கிறார். இந்தியாவிலுள்ள காஷ்மீர் மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதே தனது கனவு. அது தமது வாழ்நாளிலேயே நடக்கும் என நினைப்பதாகவும் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் அணு ஆயுதங்களில் வல்லவர் களான இரு நாடுகளுக்கிடையே எந்நேரமும் போர் வரும் வாய்புள்ளதாகவும் நவாஸ் ஷெரீப் செய்தியளாரிடம் கருத்துத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இச்செய்தி இடம்பெறவில்லை. அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், காஷ்மீர் விவகாரத்தில் மக்களின் விருப்பத்திற்கேற்பவும், ஐ.நா. சபை தீர்மானத்தின் அடிப்படையிலும் அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாகவும், அணு ஆயுத போட்டியை இந்தியாவே முதலில் தொடங்கியது, அதனாலேயே பாகிஸ்தானும் ஆயுதப் போட்டியில் ஈடுபட்டது.  தங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால் ஆயுதப் போட்டிக்காக செலவழித்த தொகையை பொதுத்துறை முன்னேற்றத்திற்கும், வறுமையை ஒழிப்பதற்கும் செலவழித்திருக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலைமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதில் மனநிறைவு கொள்வதாகவும் அவர் செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தியாகி அறக்கட்டளை மண்டபம் (TCT)

யாழில்
இரு நூல்கள்
மரணம் இழப்பு மலர்தல்
&
பிரக்ஞை ஒரு அறிமுகம்
அறிமுகமும் கலந்துரையாடலும்

தலைமையுரை:
சிறி அருள் யாழ் பல்கலைக்கழக பிரதான நூலகர்

உரைகள்!
தமிழ் கவி
கருணாகரன்
நிலாந்தன்
சிவயோகன் மன நல வைத்திய நிபுணர்

முடிவுரை சிறி அருள்
கலந்துரையாடல்
நன்றியுரை மீராபாரதி

இடம் - தியாகி அறக்கட்டளை மண்டபம் (TCT)
(நாவலர் மண்டபத்திற்கு முன்பாக)
நாவலர் வீதி - யாழ்ப்பாணம்
திகதி - 08.12.2013 (மார்கழி 8ம் திகதி)
நாள் - ஞாயிற்றுக் கிழமை
நேரம் - மாலை 4.00 மணி
வழமையாக தாமதாமாக வருகின்றவர்களுக்கு மாலை 4.00 மணி
வழமையாக குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு மாலை 4.30 மணி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

முல்லைத்தீவு விகாரையின் காணி உறுதியை ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்த உரிமையாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பெளத்த பிக்கு ஒருவரின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள விகாரை அமைந்துள்ள ஆதனத்தின்  உரிமையாளர் தனது ஆதனத்திற்குரிய அறுதி உறுதியை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் சலோகா பெயானியிடம் காண்பித்து தனது ஆதனத்தை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அது அறுதியுறுதியா என வினாவிய ஐ.நா. பிரதிநிதி அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் பெற்றுச் சென்றுள்ளார். நேற்றுப் பிற்பகல் ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அறிக்கையிடலாளர் பிரதிநிதி முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற பொழுது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்பொழுது குறித்த நபர் தனது ஆதனத்தின் உறுதியையும் ஐ.நா. பிரதிநிதியிடம் காண்பித்துள்ளார். இவ்விடயத்தினை கருத்திலெடுத்த ஐ.நா. பிரதிநிதி குறித்த நபரிடம் நீங்கள் காண்பிக்கின்ற இந்த ஆவணம் உங்களுடைய காணியின் உறுதியா? எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர் அது தனது காணியின் அறுதியுறுதி எனக் காட்டியுள்ளார். அந்த உறுதியின் நகல் பிரதி ஒன்றினையும் ஐ.நா. பிரதிநிதி கோரிப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு முதல்வர் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் இனத்திற்கு எதிராக எதுவும் கூறப்பட வில்லை. மாறாக நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே கூறப்பட்டுள்ளது. எனவே, இதனை வட மாகாணத்தில் அமுல்படுத்த மாட் டேன் என்ற முதலமைச்சர் விக்னேஸ் வரனின் கூற்று தவறானதாகும் என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மக்களின் வேலைத்திட்டங்கள் தொடர் பில் ஆராயப்படும் மாவட்ட அபிவிருத் திக்குழுக் கூட்டத்தில் கூட பங்குகொள் வதை பகிஷ்கரிக்கும் முதலமைச்சருடன் எவ்வாறு பிரச்சினைகள் தொடர்பில் பேசித் தீர்வை காண முடியும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். புலிகள், புலிகள் என்று கூறுவதை விடுத்து நாட்டின் அபிவிருத்தி பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வர வேண்டும் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கூற்றை நான் வரவேற்கின்றேன். ஆனால் இதற்கு அந்த மாகாணத்தின் முதலமைச்சர் ஒத்துழைக்க வேண்டும். அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து வட மாகாண தேர்தல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடுதல் வெற்றியைப் பெறும் என்பது எமக்கு தெரியாமல் தேர்தல் நடத்தப்படவில்லை.

'மங்கள்யான் ஒரு மைல்கல் சாதனை; இஸ்ரோ பெருமிதம்

செவ்வாய்க் கிரகத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் மங்கள்யான் ஆய்வுக்கலம் பூமியில் இருந்து 9.25 இலட்சம் கி. மீ. தொலைவைக் கடந்துள்ளதாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று அதிகாலை 1.14 மணிக்கு இந்த நிகழ்வு நடந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இஸ்ரோ செய்தி தொடர்பாளர் கார்ணிக் கூறுகையில் புவி வட்டப் பாதையில் இருந்து வெளியேறி செவ்வாய் நோக்கிய பயணத்தை தொடங்கியதில் இருந்து சரியாக 72 மணி நேரத்திற்குப் பின்னர் மங்கள்யான் பூமியில் இருந்து 9.25 இலட்சம் கி. மீ. தூரத்திற்குச் சென்றுள்ளது. இதன் மூலம் கோள்களுக்கு இடையேயான சுற்றுவட்டப் பாதையை அடைந்துள்ளது. இன்னும் 300 தினங்களுக்கு மங்கள்யான் சூரியனைக் கடந்து செல்லும் என்றார். இந்திய விண்வெளி ஆய்வுக்கலம் ஒன்று பூமியில் இருந்து இவ்வளவு தொலை தூரத்திற்குச் சென்றுள்ளது இதுவே முதல் முறை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

டிசம்பர் 04, 2013

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் கைது

வட மாகாண எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பயங்கரவாத புலனாய்வு பிரிவினராலேயே இவர் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெஷிசன் சுட்டுக் கொல்லப்பட்ட  சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வட மாகாண எதிர்க்கட்சித் தலைவருக்கு விளக்கமறியல்

வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன்,  றெக்ஷியனின் மனைவி மற்றும் ஜசிந்தன் என்ற இளைஞர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.எம்.மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார். நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன்கடந்த மாதம் 26ஆம் திகதி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நெடுந்தீவினைச் சேர்ந்த நபர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று (03) நள்ளிரவு வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கொழும்பில் வைத்து பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினராலும், றெக்ஷிசனின் மனைவி ஊர்காவற்றுறை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர். மூவரும் இன்று (04) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதுடன், கமலேந்திரனிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதன்போது மூவரையும் எதிர்வரும் 17ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட பிஸ்டல் உள்ளிட்ட பொருட்களினை பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவரின் மனைவியும் கைது

சுட்டுக் கொலை செய்யப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியன் கொலை விவகாரம் தொடர்பில் அவரது மனைவி, ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நெடுந்தீவிலுள்ள அவரது வீட்டில் வைத்தே இவர் நேற்று நள்ளிரவு (03)  கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேச சபைத் தலைவர் டானியல் றெக்ஷியனின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் கந்தசாமி கமலேந்திரன் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகளுடன் அரசுக்கே நெருங்கிய தொடர்பு - சம்பந்தன்

 தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்துக்கே நெருங்கிய தொடர்புகள் இருந்தன. தற்போதும் இருந்து வருகின்றனவே தவிர புலிகளுக்கும் எனக்குமோ அல்லது புலிகளுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்குமோ எந்தவிதமான தொடர்பும் கிடையாது. 2005இல் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் உதவி புரிந்ததாலேயே வெற்றி கிடைத்தது என்பதை அரசாங்கத்தால் மறுத்துரைக்க முடியுமா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட எம்.பி.யுமான இரா. சம்பந்தன் நேற்று சபையில் ஆளும் கட்சியினரைப் பார்த்துக் கேட்டார். கே.பி. என்றொரு நபர் இருக்கின்றார். அவரை இன்று வரையில் நான் பார்த்ததும் கிடையாது. ஆனால் அவர் அரசாங்கத்துடன்தான் இருக்கின்றார். அரசாங்கத்தின் நெருங்கிய நண்பராகவும் இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார். சம்பந்தனின் மேற்படி கருத்துக்கு அந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திலிருந்து எந்தவொரு பதிலும் வெளிப்படவில்லை அமைதியே காக்கப்பட்டது. அதேபோன்று கிழக்கில் இடம்பெற்ற சில சம்பவங்களுக்கு பொறுப்புக்கூறக்கூடியவர் என்று நல்லிணக்க ஆணைக்குழுவில் குறித்துரைக்கப்பட்டுள்ள ஒருவர் அரசாங்கத்தின் அமைச்சர் பட்டியலில் இருக்கின்றார். அதேபோன்று மற்றுமொருவர் கிழக்கின் முதலமைச்சராக இருந்து தற்போதும் உறுப்பினராக இருக்கின்றார். அவ்வாறு பார்க்கும்போது விடுதலைப் புலிகளுக்கும் எமக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்தவும்

பாதுகாப்பு வலயத்திற்குள் வணக்கஸ்தலங்கள் இடிக்கப்படுவதை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி அவசர கோரிக்கையொன்றை விடுத்துள்ளது. வலிகாமம் வடக்கு அதி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அங்கிருந்த மக்களை மீண்டும் உரிய இடங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். அங்கு கோவில்களும் கல்லூரிகளும் இடித்து அழிக்கப்படுவதாக கூறப்படும் செய்திகள் உண்மையாக இருந்தால் அதை தடுத்துநிறுத்த ஜனாதிபதி உடனடி உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளது. வடமாகாண சபை தேர்தலில் தமிழ் மக்கள் எமக்கு வெற்றிவாய்ப்பை தருவார்களாக இருந்தால் பலாலி வரை எமது மக்களை மீள்குடியேற்றுவோம் என கூறி இருந்தோம். அதற்கான நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் எம்மிடம் இருக்கின்றன. ஆனால்,மாகாண சபை அதிகாரத்தை திறம்பட செயற்படுத்த தெரியாத அல்லது விரும்பாதவர்களின் பொறுத்தமற்ற வாக்குறுதிகளுக்கு எடுபட்டு ஆணைவழங்கி எமது மக்கள் நல்லதொரு வாய்ப்பை மீண்டும் இழந்து இருக்கிறார்கள். அண்மைக் காலமாக வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள கோவில்களும் கல்லூரிகளும் குடியிருந்த வீடுகளும் படையினரால் இடித்து அழிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. வீடுகளும் கல்லூரிகளும் உடைக்கப்படுவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கோவில்கள் உடைக்கப்படுவதை ஒருபோதும் சகித்துக் கொள்ளப்போவதில்லை.

மோதல்கால இழப்புகளை கணக்கிடும் இலங்கை அரசின் செயற்பாடுகள் வரவேற்கத்தக்கது

உள்நாட்டு மோதல்களால் ஏற்பட்ட உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்து க்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தும் இலங்கை அரசாங்கத் தின் தீர்மானத்தை பொது நலவாய அமைப்பின் செய லாளர் நாயகம் கமலேஷ் சர்மா வரவேற்றுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யுத்தத்துக்குப் பின்னரான நல்லிணக்க செயற்பாடுகளை மேலும் முன்நகர்த்திச் செல்வதற்கு ஏதுவாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 வருட உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த, காயமடைந்த நபர்கள் மற்றும் சொத்துக்களின் சேத விபரங்கள் குறித்து தேசிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என நாம் நம்புகின்றோம். பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் சாட்சிகளால் வழங்கப்படும் சரியான தகவல்கள் பதிவு செய்யப்படும் என நாம் நம்புகின்றோம். தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கப்படுவதை நாம் வரவேற்கின்றோம்.

டிசம்பர் 03, 2013

இராணுவம் நிலைகொண்டிருப்பதே முக்கிய பிரச்சினை -  சி.வி.

வடக்கு மக்களின் முக்கியமான பிரச்சினை இராணுவம் நிலைகொண்டிருப்பது என்பதுடன், இதனாலேயே ஏனைய பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்புப் பிரதிநிதியிடம் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

போரில் இறந்தவர்களை நினைவு கூறலும் நல்லிணக்கமும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அது தமிழீழத்திற்காக உயிர் தியாகம் செய்த முதலாவது போராளி இறந்த நாளும் அல்ல. தமிழீழத்திற்காக உயிர் தியாகம் செய்த முதலாவது போராளியான உரும்பிராய் சிவகுமாரன் 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதியே இறந்தார். எனவே நவம்பர் 27 என்பது புலிகள் இயக்க போராளிகளை நினைவு கூறுவதற்காகவே ஒதுக்கப்பட்ட நாளாகும். எனவே போரில் பிள்ளைகளை இழந்தவர்கள் அப் பிள்ளைகள் இறந்த தினங்களில் அவர்களை நினைவு கூறாது நவம்பர் 27 அம் திகதியே நினைவு கூறுவதே அரசாங்கத்திற்கு பிரச்சினையாக தெரிகிறது. ஆனால் தமிழகத்திலேயே புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் தடுக்கப்பட்டு இருக்கும் நிலையில் இலங்கை அரசாங்கத்திடம் அவ்வாறானதோர் நிலைமையை எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் இது நல்லதோர் வாதம் என்பதில் சந்தேகமே இல்லை. இது ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையாகும். எனவே தான் போரில் இறந்த சகலரையும் நினைவு கூற பொதுவானதோர் தினத்தை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என ஐ.தே.கு. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் கூறியிருக்கிறார். இது உணர்வு பூர்வமான விடயம் என்பதால் இரு சாராரும் பக்குவமாக நடந்து கொள்வது போலவே நல்லிணக்கத்தையும் மனதில் இருத்தி செயற்படுவது நாட்டுக்கு நல்லதாகும். (மேலும்.....)

டிசம்பர் 02, 2013

முன்னவர் குட்டையில் முதல்வரும்.........!

(இடக்கரடக்கர்)

தேர்தல்களில் வெல்வது,நாடாளமன்றத்தில் முழங்குவது,அப்பப்போ வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அறிக்கை அளிப்பது  இவை தான் மக்கள் சேவை என மார்தட்டிக்கொண்டு, மக்களின் அன்றாட வாழ்வியல் பற்றி எந்த சிந்தனையுமற்று உல்லாசப் பவனி வந்துகொண்டிருந்த அந்த அம்பாரியில், தனது முன்னுதாரணச் சகாக்களைப் போலவே வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஏறி அமர்ந்து கொண்டுவிட்டார் என்றே தெரிகிறது. (மேலும்.....)

தமிழர்கள் நடத்தும் போராட்டங்களும் அகதி வாழ்வும் கொத்துக் கொத்தான மரணங்களும்

சமூகத்தின் கவனத்தை ஈர்த்த பெரும் நிகழ்வுகளின் மீதான பார்வைகள் படைப்பாக மாற வாய்ப்பிருக்கிறது. அப்படி ஆன ஒரு படைப்பே இ.பா.வின் குருதிப் புனல் எனச் சொல்வதற்கான முயற்சியில் நேற்று மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தொளிப் பயிற்சி வகுப்பில் அந்தக் கேள்வியைக் கேட்டேன். வகுப்பில் இருந்தவர்கள் கல்லூரியில் தமிழ் இலக்கியம் மற்றும் மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள்.  உங்கள் வாழ்நாளில் உங்களைப் பாதித்த பெரும் நிகழ்வைச் சொல்லுங்கள் என்பதுதான் எனது கேள்வி. ஸ்காலாப் விழுந்தது, கும்பகோணம் தீ விபத்து, சுனாமி பேரழிவு, ஜோதியின் பெண் உடல் மீது செலுத்தப் பெற்ற வன்முறை, இரட்டைக் கோபுரத் தகர்ப்பு, பின்லாடன் மரணம், வீரப்பன் கொலை எனப் பொது நிகழ்வுகளோடு சிலச் சொந்தக் கதைகளும் சொல்லப்பட்டன. அந்த 36 தமிழ் ஆசிரியர்களுக்கும் ஈழத்தில் 30 ஆண்டுகளாகத் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களும் அகதி வாழ்வும் கொத்துக் கொத்தான மரணங்களும், பெருங்கொலைக்களமாக மாறிய முள்ளிவாய்க்கால் படுகொலையும், அவர்களின் வழிகாட்டியாக இருந்து மரணித்துப் போன பிரபாகரனின் இன்மையும் நினைவுக்கு வரவே இல்லை. நம் காலத்தில் தானே அந்த ஊழி நிகழ்ந்தது என நான் சொன்ன போது நிலவியது மௌனம் ; ஆம் அந்த மௌனம் ஏற்றுக் கொள்ளலின் மௌனம் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஈழமும் ஈழத்தமிழர்களின் போராட்டமும் இந்தியத் தமிழர்களின் பேச்சாக இருக்கிறது ; ஆனால் ஆழ் மனதில் உறையும் நினைவாக இல்லை. இப்படி ஆனதற்கும் ஆக்கப்பட்டதற்கும் காரணங்கள் என்னவாக இருக்க முடியும்? என்னை நானே கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

இசைப்பிரியாக்களின் மரணத்தில் யார் குற்றவாளிகள்.....?

இசைப்பிரியா கூட்டிச் செல்லப் படுவதை காணொளியாகப் பார்த்த என&#