|
||||
|
மார்கழி 2011 மாதப் பதிவுகள் மார்கழி 24, 2011 தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பத்திற்கு கூட்டமைப்பின் பதில் என்ன? (வி.தேவராஜ் ) தமிழர்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இருப்பதற்கு தயாராக இல்லை என்பதை தமிழ் சிவில் சமூகம் பகிரங்கப்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தமிழ் சிவில் சமூகத்தின் பகிரங்க விண்ணப்பம் இதனை உணர்த்தியிருக்கின்றது. வாக்களித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பிய மக்களின் சார்பில் தமிழ் சிவில் சமூகம் இந்த பகிரங்க விண்ணப்பத்தை விடுத்துள்ளதாகவே கொள்ள வேண்டும். கூட்டமைப்பினரை நோக்கி விளக்கம் கோரி பல விடயங்களை தமிழ் சிவில் சமூகம் முன்வைத்துள்ளது. (மேலும்....) த.தே.கூட்டமைப்பின் சுத்துமாத்து! போட்டுடைக்கின்றார் பா.உ யோகேஸ்வரன்.
அண்மையில் இலங்கையிலிருந்து இளைய
பாரளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பிரித்தானியா சென்றுவந்தது.
இக்குழுவுக்கு 40 வயதிற்குட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்பட்டிருந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 40 வயதுக்கு
உட்பட்டவராக மட்டக்களப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் பா.உ யோகேஸ்வரன்
என்பவர் உள்ளபோதும்
அவர் இக்குழுவில் இணைந்து செல்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அனுமதி
மறுக்கப்பட்டுள்ளதுடன் அவ்விடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அல்லா நபர்
ஒருவரை கூட்டமைப்பு அனுப்பியுள்ளது. அனுப்பப்பட்ட நபர் சுமந்திரனின்
நெருங்கிய உறவினர் அல்லது நெருக்கமானவர் என தெரியவருகின்றது.
(மேலும்.....) இது எப்படியிருக்கு
மார்கழி 23, 2011கேரள எல்லையில் முற்றுகை போராட்டம்எல்லைச்சாலை முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க தடையை மீறி செல்ல முயன்றதாக ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோரை பொலிசார் கைது செய்தனர். முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்த வலியுறுத்தியும் அணைக்கு மத்திய பொலிஸ் பாதுகாப்பு படை பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், ம. தி. மு. க. மற்றும் தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழ் நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்லும் எல்லைச் சாலைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார். தேனி மாவட்டத்தில் குமுளி மலைச் சாலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் ஆகியோர் தலைமையில் முற்றுகை போராட்டம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் வைகோ தங்கி இருந்த வீட்டிற்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் வந்தார். இதை அடுத்து அவர்கள் இருவரும் தேனியில் இருந்து வான் மூலம் குமுளி மலைச்சாலை முற்றுகை போராட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். (மேலும்.....) மார்கழி 23, 2011 நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச மட்டத்தில் கவனத்திற் கொள்ளப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தருஸ்மன் அறிக்கையை தூக்கிப்பிடித்தவர்கள் இன்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடுநிலையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது, நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் ஆரம்பத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இன்று அவையாவும் பொய்யாகியுள்ளன. தருஸ்மன் அறிக்கையை ஆரம்பத்தில் பாராட்டிய போதும் இன்று அந்த அறிக்கை தொடர்பில் சந்தேக நிலை உருவாகியுள்ளது. (மேலும்.....) மார்கழி 23, 2011 ஜெயலலிதாவை வீழ்த்த சசிகலா குழு விஜயகாந்துடன் அணி சேருமா?ஜெயலலிதாவால் விரட்டப்பட்டுள்ள சசிகலா குழுவினர், ஜெயலலிதாவை வீழ்த்த அவரது இன்னொரு எதிரியான விஜயகாந்துடன் கை கோர்க்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது. அதிமுகவிலிருந்தும், ஜெயலலிதாவின் மதிப்பு வட்டத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பு இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. அவர்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கின் அடுத்தடுத்த விசாரணையின் போது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசியல் வட்டாரத்தில், சசிகலா தரப்பு, ஜெயலலிதாவை வீழ்த்த விஜயகாந்த்துடன் அணி சேரலாம் என பரபரப்பாக பேசப்படுகின்றது.(மேலும்.....) மார்கழி 23, 2011 பக்தாத்தில் தொடர்ந்து குண்டு வெடிப்பு; 57 பேர் பலி; 176 பேருக்கு காயம்ஈராக் தலைநகர் பக்தாதின் பல்வேறு இடங்களிலும் இடம் பெற்ற தொடர்ச்சியான குண்டு வெடிப்பில் 57 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 176 பேர் காயமடைந்தனர். பக்தாதில் நேற்றுக் காலை 12 இடங்களில் குண்டுகள் வெடித்தன. பாதையோரங்கள் கட்டிடங்கள் என இக் குண்டுகள் வெடித்துள்ளன. இந்த குண்டு தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்புக் கூறவில்லை. எனினும் திட்டமிட்ட ஓர் அமைப்பே இத் தாக்குதலை நடத்தியிருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குறிப்பாக இவ்வாறான தாக்குதலை அல் கொய்தா அமைப்பினாலேயே நடத்த முடியும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த குண்டு தாக்குதல்கள் பக்தாதின் அலாவி, பாப் அல் முதாம், கர்ராதா மாவட்டம், அத்யாமிய, ஜுவலா, கிழக்கு ஜெத்ரியா, கஸாலியா, அல் ஆமில், தூரா பகுதிகளில் நடத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியுள்ள நிலையிலேயே இந்த குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. எனினும் அங்கு ஷியா, சுன்னி முஸ்லிம் பிரிவுகளுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. ஈராக்கின் சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த துணை ஜனாதிபதிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி பிடியாணை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மார்கழி 23, 2011 மந்தமான காலநிலை தொடரும்வடக்கு, கிழக்கு, தெற்கில் மழைஇலங்கையின் தென் பகுதி வளிமண்டலத்தின் கீழ்ப் பகுதியில் குழப்ப நிலை ஏற்பட்டிருப்பதால் தற்போதைய மப்பும் மந்தாரமுமான காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலை யாளர் சமிந்திர டி சில்வா நேற்று தெரிவித்தார். இதன் விளைவாக வடக்கு, கிழக்கு, வடமத்தி, தென் மாகாணங்களில் அடுத்துவரும் சில தினங்களுக்கு மழை பெய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, கடல் கொந்தளிப்பதாக காணப்படுவதால் கப்பல் பணியாளர்களும், மீனவர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, இம்மழை, வெள்ளம் காரணமாக 10 ஆயிரத்து 518 குடும்பங்களைச் சேர்ந்த 39 ஆயிரத்து 778 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்று கூறினார். இவர்களில் 2019 குடும்பங்களைச் சேர்ந்த 7406 பேர் 43 முகாம்களில் தற்காலிகமாகத் தங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேநேரம் நேற்று முன்தினம் மாலை முதல் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளதால், நீர் மட்டத்தைப் பேணவென திறக்கப்பட்டிருந்த பல குளங்களின் வான்கதவுகள் நேற்று மூடப்பட்டதாக நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் நேற்றுக் கூறினார். தமிழ் சிவில் சமூகத்தின் விண்ணப்பம் தொடர்பாக புளொட் அமைப்பு விளக்கம் தமிழ் சிவில் சமூகம் என்ற கோதாவில் “கூட்டமைப்பிற்கான பகிரங்க விண்ணப்பம்” என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சில அம்சங்கள் தொடர்பாக புளொட்டின் நிலைப்பாட்டை மக்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றோம். புதுடில்லியில் கடந்த ஆகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில் இந்திய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்து தமிழ் கட்சிகள் மாநாட்டில் தேசியம், சுயநிர்ணயம் என்ற வார்த்தைப் பிரயோகங்கள் உள்ளடங்கிய தீர்மானத்தை புளொட் அமைப்பு எதிர்த்ததாக தமிழ் சிவில் சமூகம் தமது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவலாகும் என்பதை நாம் தெரியப்படுத்துகின்றோம். அந்த மாநாட்டில் இந்திய பாராளுமன்றத்திற்கு பொதுவாக சமர்ப்பிக்கவென மாநாட்டில் பங்குபற்றும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக தீர்மானமொன்றை இயற்றித் தருமாறு சுதர்சன நாச்சியப்பன் அவர்களால் கோரப்பட்டது. (மேலும்.....) மார்கழி 19, 2011 தாலியை தானம் கொடுத்த தமிழ்த் தாயே! கனடியத் தமிழர்களின் அன்னை பூபதியே!
அம்மா தாயே நீ கொடுத்த இந்த தாலியால் எத்தனை தமிழ்த் தாய்மாரின் தாலிகள் அறப்போகுதோ யாருக்குத் தெரியும். நீ இங்கு தாலி கொடுத்து ஷோ காட்டு. இதை சொல்லியே சிங்கள அரசு தமிழ்ப் பெண்களின் தாலிகளை அறுக்க வழி பண்ணட்டும். அம்மா நீ கொடுத்தது தங்கத் தாலி தானா அல்லது கவரிங் தாலியா? என்ற சந்தேகம் மக்களுக்கு வந்தாலும் வரும். ஏனெனில் முன்னர் இப்படியான சம்பவங்கள் எல்லாம் எமது சமூகத்தில் தாராளமாக நடந்திருக்கிறது. அரங்கத்தில் நீ கொடுத்தது உண்மைதான், ஆனாலும் முன்பே பேசிக் கொண்டபடி உனது மகனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்களா? (முன்பு நேருக்கள் குணாக்கள் எல்லாம் அப்படித்தான் செய்தவர்கள்). (மேலும்.....) மார்கழி 19, 2011 நோர்வேயின் இரட்டைவேடமே யுத்த நிறுத்தம் சீர்குலைய காரணம் - நல்லிணக்க ஆணைக்குழு நோர்வே அரசாங்கம் மேற்கொண்ட இரட்டை வேட செயற்பாடே யுத்த நிறுத்த உடன்பாட்டை சீர் குலைப்பதற்கு ஏதுவாக அமைந்தது என்று நல்லிணக்க ஆணைக்குழு அதன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. நோர்வே அரசாங்கம் ஒரு பக்கத்தில் சமாதானத்தை ஏற்படுத்தும் பணிக்கு அனுசரணையாளர்களாக இருந்துகொண்டு மறுபக்கத்தில் சமாதானம் மற்றும் யுத்தநிறுத்தம் சரியாக நடைமுறைப்படுத் தப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியையும் இரண்டுக்கு ஒன்று நேர்மாறான செயற்பாடுகளை மேற்கொண்டதனால் நோர்வே அரசாங்கத்தினால் எதனையும் சரிவர செய்துமுடிக்காமல் பெரும் குளறுபடி ஏற்படுவதற்கு உதவியிருக்கின்றது என்றும் இவ்வறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....) மார்கழி 19, 2011 அரசு - கூட்டமைப்பு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மீண்டும் அரசாங்கப் பிரதிநிதிகளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அரியநேந்திரன் எம்.பி. தெரிவித்தார். இச்சந்திப்பில் அரசாங்கத் தரப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பேராசிரியர் ரஜீவ விஜயசிங்ஹ, சஜின் டி வாஸ் குணவர்தன எம்.பி. ஆகியோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், எம். சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்துக்கொள்ளவுள்ளனர். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த வாரமளவில் அதுகுறித்த கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றிய அறிக்கை பொதுமக்கள் மற்றும் ஊடகங்களுக்காக வெளியிட்டு வைக்கப்படுமெனவும் அரியநேந்திரன் எம்.பி. கூறினார். ஐக்கிய தே. க. தலைவர் ரணிலா? கருவா? ஸ்ரீகொத்தாவில் இன்று தேர்தல்ஐக்கிய தேசியக் கட்சியின் 2012 ஆம் ஆண்டிற்கான தலை வர், பிரதித் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. மிகவும் பரபரப்பானதொரு சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. ஐ.தே.க.வின் அரசியல் யாப்பின்படி 2012 ஆம் ஆண்டுக்கான கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கென கரு ஜயசூரிய எம்.பியும் ரணில் விக்கிரம சிங்கவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். பிரதித் தலைவர் பதவிக்காக சஜித் பிரேமதாஸ எம்.பி.யும் ரவி கருணாநாயக்க எம்.பியும் தேசிய அமைப்பாளர் பதவிக்காக தயாசிறி ஜயசேகர எம்.பியும் தயா டி கமகே எம்.பியும் நேற்று மாலை மூன்று மணிக்குள்ளாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்ததாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றுக் காலை ஸ்ரீகொத்தாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கூடியது. இதன் போது 2012 ஆம் ஆண்டுக்கான கட்சியின் உபதலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தவிசாளராக காமினி ஜயவிக்கிரம பெரேராவும் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். மார்கழி 19, 2011 அரசியல் பிரச்சினைக்கு தீர்வுகாணும் முயற்சியை அரசு ஒருபோதும் கைவிடாதுதமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு தமிழ்க் கூட்டமைப்பின் பிரச்சினை வேறு தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கு எதிர்க் கட்சியினர் ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை அரசாங்கம் ஒருபோதும் கைவிடாது என உறுதியாக நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....) மார்கழி 19, 2011 நாடு கடந்த தமிழீழத்துக்கு ஆள்தேடும் அவலம். (மா.ஜெயக்குமார்.)
இத்தால் சகல புலம்(ன்) பெயர் தமிழ் பேசும் மக்களுக்கும் நாம் தரும் செய்தி யாதெனில், முன்னாள் ஈபிடிபி கட்சி ஆயுட்கால உறுப்பினரும், பின்னாளில், ஈபிடிபி கட்சியில் இருந்து பிரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான இராமேஸ்வரன் சகோதரர்களின் அணியுடன் தன்னை செயலாளராக இணைத்து கொண்டும், யாழ் வேம்படி அலுவலகத்தில் இருந்து கொண்டு புலியெதிர்ப்பு, ஈபிடிபி எதிர்ப்பு நடவடிக்கைகளில் பூரணமாக இறங்கியவருமான குணசீலன் வன்னியசிங்கம் என்கின்ற சிவா நாடுகடந்த தமிழீழம், வெளிப்பிராந்தியம் ( லண்டன் – பேர்மிங்ஹாம் ) எம்பியாக, பிரதமர் உருத்திர குமாரனால் நேற்று பிற்பகல் நிகழ்ந்த சுப வேளையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை புலம்(ன்) பெயர் அதிமேதாவிகளுக்கு இத்தால் அறியத்தருகின்றோம். (மேலும்....) மார்கழி 19, 2011 முல்லைப் பெரியாறு தமிழகத்துக்கு சாதகமாக அமையும்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் நிபுணர் குழு அறிக்கையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் தமிழகத்துக்கு சாதகமாக அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் விவகாரம் தொடர்பான விளக்கக் கூட்டம் தமிழக காங்கிரஸ் சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ப. சிதம்பரம் பேசியது: அணை உடைந்துவிடும் என கேரளத்தில் ஏற்பட்டுள்ள அச்சம் இடைத்தேர்தல் அச்சம், தேர்தல் ஆணையம் விரைவில் தேர்தல் நடத்தினால் அந்த அச்சம் முடிந்து போய்விடும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் 3 நீதிபதிகள் கொண்ட நிபுணர் குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு விரைவில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் தமிழகத்துக்கு சாதகமாக அமையும் என்று உறுதியாகக் கூறுகிறேன். தமிழகத்திலும், கேரளத்திலும் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்க வேண்டியதும் மத்திய அரசின் கடமை. மார்கழி 19, 2011 கேரளம் செல்லும் சாலைகளை மறித்து முற்றுகைப் போராட்டம்முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரளத்துக்கு பொருளாதார முற்றுகை செய்வதற்காக தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் 13 சாலைகளையும் மறித்து ம. தி. மு. க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், வரும் 21 ம் திகதி போராட்டத்தில் ஈடுபடுகின்றன. இது குறித்து, ம. தி. மு. க. பொதுச் செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை, ம. தி. மு. க. முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழு ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம், காஞ்சி மக்கள் மன்றம், பெரியார் திராவிடர் கழகம், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, இந்து மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழ்நாடு கள் இயக்கம் ஆகிய கட்சிகள் இணைந்து கேரளத்துக்கு பொருளாதார முற்றுகை செய்ய போராட்டம் நடத்துகின்றன. முல்லைப் பெரியாறு அணையை உடைக்கும் கேரளாவின் திட்டத்தை கைவிடச் செய்வதற்கும், அணையில் தமிழகத்துக்கு இருக்கும் உரிமையை மீட்பதற்கும், இப் போராட்டம் நடத்தப்படுகிறது. விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெருமளவு போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார். இலங்கையில் ஏ 9 பாதை முடப்பட்ட போது யாழ்பாணத்து தமிழ் மக்களை பட்டினிச்சாவு செய்கின்றனர் என்று கூக்குரல் இட்ட வைகோ இன்று தமது நாட்டின் ஒரு பகுதி மக்களை பட்டினிச்சாவால் கொல்ல 'போராட்டம்' நடத்துகின்றார்.....? மார்கழி 19, 2011 நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச சமூகத்திற்கு உண்மையை எடுத்துரைக்கும்இலங்கை மீது சர்வதேச ரீதியில் சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக் கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அனைத்திற்கும் ஆதாரபூர்வமாக பதிலளிக்கக்கூடிய வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்திருப்பதாக அர சியல் அவதானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்கள். தருஸ்மன் அறிக்கையும், நவனீதம்பிள்ளையின் அறிக்கையும் இலங்கை மீது ஆதாரமற்ற யுத்தம் மற்றும் மனித உரிமை மீறல் பற்றிய குற் றச்சாட்டுக்களை சுமத்தி, அவற்றின் ஊடாக எங்கள் நாட்டிற்கு சர்வ தேச ரீதியில் அழுத்தங்களையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்த அடித் தளமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்....) மார்கழி 19, 2011 ஈராக்கிலிருந்து கடைசி அமெரிக்க வீரர்களும் வெளியேற்றம் ஈராக்கில் இருந்த கடைசி அமெரிக்க இராணுவ வீரர்களும் நேற்று வெளியேறினர். இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளன. ஆயுதம் தரித்த 110 அமெரிக்க வாகனங்களை 500 வீரர்களுடன் ஈராக் நேரடிப்படி நேற்று காலை 7.38 மணிக்கு எல்லையை கடந்து குவைத்தை அடைந்தது. ஈராக்கின் தென்பகுதி பாலைவனத்தை கடந்த இந்த வீரர்கள் குவைத்தை எட்டினர். இந்நிலையில் தற்போது ஈராக்கில் வெறும் 157 அமெரிக்க வீரர்களே உள்ளனர். இவர்கள் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை பாதுகாக்கும் பணியிலும், ஈராக் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2000 ஆம் ஆண்டு சதாம் ஹுஸைனின் அரசுக்கு எதிராக ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க படையை விலக்கிக்கொள்ளும் ஒப்பந்தம் கடந்த 2008 ஆம் ஆண்டு கைச்சாத்தனது. இதன் மூலம் ஈராக்கில் இருந்த 170,000 அமெரிக்க வீரர்கள் மற்றும் 500 முகாம்கள் படிப்படியாக அகற்றப்பட்டன. இதுவரை ஈராக்கில் 4500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு ஈராக் யுத்தத்திற்காக அமெரிக்கா ஒரு டிரில்லியன் டொலர்களை செலவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சி. ஐ. ஏ. உளவாளி ஈரானில் கைதுஅமெரிக்காவின் சி. ஐ. ஏ. உளவாளி ஒருவரை கைது செய்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. எனினும் கைது செய்யப்பட்டவர் ஈரான் நாட்டைச் சேர்ந்த அமெரிக்க உளவாளி என அது குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவில் பயிற்சி பெற்ற ஈரான் நாட்டவரே கைது செய்யப்பட்டதாகவும் இவர் தம்மை ஈரான் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என அடையாளப்படுத்திக் கொண்டு செயற்பட்டுள்ளதாகவும் ஈரானின் உளவுத்துறை அமைச்சு அந்நாட்டு அரச தொலைக் காட்சியில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த தகவலை மறுத்த அமெரிக்கா, ஈரான் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சுமத்தி வருவதாக கூறியுள்ளது. ஈரான் பல தடவைகள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவாளிகளை கைது செய்ததாக செய்தி வெளியிட்டு வருகிறது. கடந்த மே மாதம் சி. ஐ. ஏ. உளவுப் பிரிவுடன் தொடர்புபட்ட 30 பேரை கைது செய்ததாக ஈரான் கூறியது. அதேபோன்று அமெரிக்க, இஸ்ரேலின் 15 உளவாளிகள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதாக கடந்த வாரம் ஈரான் அறிவித்தது. எகிப்தில் 3வது நாளாக கலவரம் நீடிப்புஎகிப்தில் இரண்டாம் சுற்று பாராளுமன்ற தேர்தல் வாக்கெடுப்புக்கு பின்னர் கடந்த 2 நாட்களாக திடீர் போராட்டம் வெடித்தது. நேற்று 3வது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் தாஹ்ரிர் சதுக்கத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இராணுவத்துக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல்கள் நீடித்தது. பல இடங்களில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டபடியே இருந்தது. மேலும் நகரில் உள்ள முக்கிய வீதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது போராட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு மற்றும் கற்களை வீசி தாக்கினர். கஸகஸ்தானில் வன்முறை : 10 பேர் பலிகஸகஸ்தான் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கசாக் நகரில் ஏராளமான எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மத்திய ஆசியாவில் இங்குதான் அதிக அளவில் எண்ணெய் உற்பத்தியாகிறது. இங்குள்ள எண்ணெய் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து ஏற்பட்ட மோதல், வன்முறை சம்பவங்களில் 10 பேர் பலியானார்கள். எண்ணெய் நிறுவன அலுவலகம், கார்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறைகளால் எண்ணெய் நிறுவன ங்களுக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இருப்பினும் ஊழியர்கள் பணிக்கு வர அஞ்சுகிறார்கள். இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. மார்கழி 18, 2011 நெருக்கடிக்குள் தமிழ்க் கூட்டமைப்பு! முதற் தடவையாக TNA மீது புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூகத் தலைவர்கள் சீற்றம் (எஸ். சுரேஷ்) அரசாங்கத்திடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பாக எதிர்பார்ப்பது என்ன என்பது அரசிற்கு அவர்களால் இதுவரை தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக காலம் இழுத்தடிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைக்க வேண்டிய சலுகைகள், அபி விருத்தித் திட்டங்கள் யாவும் கேள்விக் குறியுமாகியுள்ளது எனப் புத்திஜீவிகள் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். பேச்சுவார்த்தை எனக் கூறிக் காலம் தான் கடந்து செல்கிறதே தவிர எந்தவித மானதொரு முன்னேற்றமோ விமோசனமோ இதுவரை எட்டப்படவில்லை. தமிழ்க் கூட்டமைப்பின் செயற்பாடு, ஊடக அறிக்கைகள் காரணமாகத் தமிழ் மக்களை மீண்டும் சிங்கள மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்க முற்படுகின்றனர் என் றும் புத்தி ஜீவிகள் குற்றம் சாட்டுகின்றனர். (மேலும்.....) மார்கழி 18, 2011 தமிழீழ அரசாங்கத்திற்கு தாலியைக் கொடுத்த தமிழ்த் தாய்
மார்கழி 18, 2011 உச்சிதனை முகந்ததால் - திரைப்பட விமர்சனம் (மீன்விழி கண்ணன்)
வீட்டை விட்டு வெளியேறும் அன்று தீபாவளி தினம் வெளியில் பட்டாசு கொளுத்துகிறார்கள். ஊரே ஆரவாரப்படுகிறது. அனதையாய் திரியும் ஈழத் தமிழர்கள் வாழ்வும் இப்படித்தான் என்பதை அது உணர்த்துகிறது. அந்த 13வயது குழந்தைக்கு, குழந்தை பிறக்கிறது அந்த 13 வயது அம்மா இறப்பதாக படம் முடிவடைகிறது. இந்த படத்தில் இலங்கையில் இராணுவம் கொடுமை செய்வதை காட்டுகிறார்கள், புலிகளின் உடையில் சிலர் வருகிறார்கள். சனல்-4 வில் வெளியானவையும் வருகிறது. புனிதாவுக்கு ஏன் எயிஸ்ட் நோய் இருப்பதாக சொன்னார்கள், இது தவறாகவே தெரிகிறது. புனிதாவாக வரும் அந்த புள்ள கண்களில் நீரை வரவைக்கிறார். அந்த புனிதாவுக்காக படம் பார்க்லாம். மட்டக்களப்பு புள்ளயாக புனிதா நடித்துள்ளார். ஆனால் மட்டக்களப்பு சொல்நடை இதில் மிஸ்சிங். பல வசனங்கள் சென்சாரின் கத்தரிக்கு இரையாகியுள்ளது தெரிகிறது. இமாம் இசை படத்துக்கு தூக்கலாக உள்ளது. மற்றப்படி இது தமிழகத்தில் ஒருவாரம் வரை தாக்குப் பிடிக்கும் என்பது சந்தேகமே….?(மேலும்.....) மார்கழி 18, 2011 திரு குகதாசன் கனகரத்தினம் (குகன்)
அன்னை மடியில் : 3 மே 1965 ஆண்டவன் அடியில் : 14 டிசெம்பர் 2011 சென்ற இடமெல்லம்-உன்முகம் காணவிட்டு கணப்பொழுதில்--நீங்கள்மட்டும் மண்ணுலகை விட்டு மறைந்ததேனோ இன்புற்று வாழ்ந்த நாட்களை--நாங்கள் மட்டும் நினைத்து வாழ விட்டு தனிமையுடன் சென்றதேனோ துடிக்குது எங்கள் நெஞ்சம் நண்பனே துயரம் எங்களை வாட்டுது நண்பனே இவ்வுலகில் நல்லதொரு உறவினராக.உற்ற நல்ல நண்பனாக. வாழ்ந்த எங்கள் நண்பனுக்கு எங்கள் கண்ணீர் அஞ்சலி தனை தெரிவித்துக்கொள்கின்றோம்இறுதிக்கிரிகை நாளை ஞாயிற்றுக்கிழமை 18.12.2011 கனடா நேரம் மாலை 17.00 தொடக்கம் 21.00 நேரடி ஒலிபரப்பும் சில இணையதளத்தினூடாக இடம்பெறும் என்பதினையும் அறியத்தருகின்றோம் இவ்அறிவித்தல் தனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் திருதிருமதி ராஐன்குடும்பத்தினர்.சுவிஸ் நண்பர்கள். தொடர்புகட்கு வின்சரன் (ராஐன்)(சுவிஸ்) 0041319910312 .0041797541317 மார்கழி 18, 2011 இராணுவமும், யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமையும்! (கெரபொத்தா)
வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவுக்கு வரவில்லையெனக் கூறியபடி வேலைவாய்ப்புகளோடு காத்திருக்கின்றன. இது யுத்த காலத்துக்குப் பிறகு, வவுனியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் உலகத்தின் இன்றைய நிலைமையாகும். (மேலும்.....) மார்கழி 18, 2011 கருணா, இனியபாரதி, ஈ.பி.டி.பி சீலன் ஆகியோர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் - நல்லிணக்க ஆணைக்குழு!
ஆயுதக்குழுக்களாக செயற்படும் கருணா, இனியபாரதி, ஈ.பி.டி.பியின் சீலன் ஆகியோர் மீது
சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என
நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டுக்களுக்கு சாட்சிகள் உள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள்
மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று
சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்கழி 18, 2011 TNA - SLMC மாதமொரு தடவை சந்தித்துப் பேச தீர்மானம் தமிழ் பேசும் மக்களாக செயற்பட இருதரப்பும் விருப்பம் தெரிவிப்பு இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் முஸ்லிம்களின் கருத்தொருமைப்பாடின்றி எந்தவொரு இறுதித் தீர்மானத்தையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளாது என்று கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் முஸ்லிம் காங்கிரஸிடம் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤க்கும் இடையிலான சந்திப்பொன்று நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்கும் அரசுக்கும் இடையில் நடை பெற்ற பேச்சுகளின் விவரங்களைப் பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தன் விளக்கிக் கூறினார். (மேலும்.....) மார்கழி 18, 2011 யாழ்ப்பாணத்தின் நிலவரம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் அண்மைக்காலங்களில் நடைபெற்று வரும் சம்பவங்களை பார்க்கின்ற போது ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற ரீதியில் துன்பமும் வேதனையும் எதிர்காலம் பற்றிய ஐயுறவும் தோன்றுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. இப் பகுதியில் மக்களின் பிரதிநிதிகள் யார்? யாரிடம் எவ்வகையான அதிகாரங்கள் உள்ளன? மக்களுக்குத்தான் இவர்கள் சேவையாற்றுகின்றார்களா? என்பவை சிக்கலான விடைகாண முடியாத வினாக்களாக எம்முள் எழுகின்றன. இப்பிரதேசம் வாழ் மக்களை அலட்சியப்படுத்தி சிக்கலுக்குள்ளாக்கி பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் சிலவற்றை இங்கு வரிசைப்படுத்தலாம் என எண்ணுகின்றேன். (மேலும்.....) மார்கழி 18, 2011 ‘லயன்' வாழ்விற்கு விரைவில் முற்றுப்புள்ளி! மலையகப் பெருந்தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொன்று தொட்டு அனுபவித்து வரும் இருப்பிடப் பிரச்சினைக்கு காத்திரமான தீர் வினைக் காண்பதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. மலைய கப் பெருந்தோட்ட வரலாற்றைப் பொறுத்தவரை உத்தேச வீடமைப்புத் திட்டமானது சரித்திரத்தில் முதற்தடவையாக இடம்பெறப் போகின்றதென்பதை எவராலும் மறுக்க முடியாது. பரம்பரை பரம்பரையாக ‘லயன்’ என்றழைக்கப்படுகின்ற சிறு குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் அம்மக்கள் எதிர்காலத்தில் தங்களுக் கென்ற தனித்தனி வீடுகளில் வசிக்கும் வாய்ப்பைப் பெறப் போகிறார்கள். தோட்டத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை இதனை விட மகிழ்ச்சியான செய்தி அவர்களுக்கு இருக்கவே முடியாது. ஏனெனில் ‘லயன்’ குடியிருப்புகளில் வாழ் கின்ற கஷ்டமான வாழ்க்கை அவர்களுக்கு மட்டுமே புரியும். (மேலும்.....) மார்கழி 17, 2011
யுத்தம்!!! சத்தம் இல்லாமல்....... 'இனியிங்கே சிறுபான்மை பெரும்பான்மை கிடையாது. எல்லோரும் இந்நாட்டின் மக்கள்' என்ற கோசம் நாளாந்தம் காற்றில் கலந்து, கரைந்து கொண்டிருக்கும் போதே...அநுராத புரத்தில் அடக்கத்தலம் சுவடு தெரியாமல் அழித்தொழிக்கப் படுகிறது. இன்னுமின்னும் இவை போல் எத்தனையோ தொடரலாம். ஆக மொத்தத்தில் இந்த அபாயச்சங்கொலிகள் சொல்லவருவதென்ன? இந்தச் சோகங்கள் சொல்லும் சேதிகள் சோனகர் எம் காதில் கேட்கிறதா? இது எப்போது ஆரம்பித்து வைக்கப்பட்டது? எதில் கொண்டு போய் முடித்து வைக்கப்படப்போகிறது? இரு பேரினவாதங்களுக்கிடையில் இருந்து தப்பிக்க வழியென்ன? மறுபுறத்தில் இரு பேரினவாதங்களுக்கிடையில் பங்காளிச் சண்டை தனியாக நடந்து கொண்டிருக்கிறது. அதாவது 'வடக்கில் பௌத்தர் இல்லாத இடங்களிலெல்லாம் விகாரைகள் அமைக்கப்படுகின்றன. இது தமிழினத்தை சுவடுதெரியாமல் அழித்தவிடும் முயற்சி. இதனைத்தடுக்க எம்மக்கள் தந்த பாராளுமண்ற வாய்ப்பை சரியாகப் பயன்படுத்துவோம். புத்தர் ஆரம்பத்தில் ஓர் இந்து. அவர் யாழ்ப்பாணத்தில் நாகர்களது பிரச்சினையை தீர்க்க வந்த போது இந்துவாகவே இருந்தார்' என யோகேஸ்வரன் எம்.பி. பாராளுமன்றில் கூற '1990 களுக்கு முன் வடக்கில் இருந்த 21000 சிங்களமக்களையும் அங்கு குடியேற்றியே தீர்வோம்' என சம்பிக்க ரணவக்க கூறுகிறார்' (வீரகேசரி 3.12.2011) போதாததற்கு 'முஸ்லிம்களை சவுதிக்கும், தமிழர்களை இந்தியாவுக்கும் அள்ளி அனுப்புவோம். முதலில் தமிழரை முடித்தவிட்டு வந்து முஸ்லிமை ஒரு கை பார்க்கிறோம்' என்ற சிங்கள தேசியவாதத்தின் கொக்கரிப்பு வேறு. (மேலும்....) மார்கழி 17, 2011 பயங்கரவாதத்துக்கு எதிரான இறுதி யுத்தம் பொதுமக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்தே நடவடிக்கை - இலங்கை அரசு பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கான இறுதி யுத்தத்தின்போது பொது மக்களின் உயிர்களுக்குப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான ஒரு கொள்கைத்திட்டமொன்றும் வகுக்கப்பட்டிருந்தது. எந்நேரத்திலும் பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்படவில்லை என்றும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்த நடவடிக்கைகள் மிகவும் நிபுணத்துவம் மிக்கதாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்தும், புலிகளின் கட்டுப்பாட் டுக்குள்ளிருந்த மக்களை விடுவிப்பதற்கு படையினர் உத்திகளை மிகவும் நுணுக்கமாகக் கையாண்டுள்ள னர் என்றும் இந்த ஆணைக்குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (மேலும்....) மார்கழி 17, 2011 லண்டனில் நாடு கடத்தப்பட்ட 55 பேர் நேற்று தாயகம் வருகை லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 55 பேர் விசேட விமானம் மூலம் நேற்றையதினம் நாடுவந்து சேர்ந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த 55 பேரில் 48 பேர் ஆண்களும், 7 பெண்களும் காணப்படுகின்றனர். பிரித்தானிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவின் விசேட விமானத்தின் மூலம் முற்பகல் 11.25 மணியளவில் இவர்கள் நாடு வந்து சேர்ந்தனர். விமானநிலையத்தை வந்தடைந்த இவர்களிடம் சி. ஐ. டி. யினர் விசாரணைகளை மேற்கொண்டனர். யாழ்ப்பாணம், வத்தளை, திருகோணமலை, கண்டி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். மாணவர் வீசாவில் சென்று விசாக் காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியிருந்தவர்கள், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காதவர்கள் எனப் பல்வேறு காரணங்களால் விசா நிராகரிக்கப்பட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். மார்கழி 17, 2011 முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக அரசுக்கு தி. மு. க. துணை நிற்கும்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் எடுக்கும் முடிவுக்கு தி. மு. க. முழு ஆதரவு அளிக்கும் என்று தி. மு. க. பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு. க. ஸ்டாலின் சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக சட்டப் பேரவையில் சிறப்பு தீர்மானத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரை, தமிழகத்தின் நலன்களை குறிப்பாக தென் மாவட்டங்களிலே உள்ள இலட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் குடிநீர் ஆதாரத்திற் காகச் சார்ந்து இருக்கும் நிலையினையும் பாதுகாத் திடும் நோக்கில் அரிசினால் கொண்டு வரும் எத்தகைய தீர்மானத் தையும், மனப்பூர்வமாக ஆதரித்து வலுசேர்த்திட தி. மு. க.வும் தலைவர் கலைஞரும் என்றைக்குமே தயார் என்பதை எடுத்த எடுப்பிலேயே அறிவித்திட விரும்புகிறேன். மார்கழி 17, 2011 ரஜினி குடும்பத்தை வன்மையாக கண்டித்தார் நடிகர் கருணாஸ்நடிகர் ரஜினிகாந்துக்காக நடத்தப்பட்ட பிறந்த நாள் விழா கூட்டத்தில் ரஜினி குடும் பத்தினர் கலந்து கொள்ளாததை நான் நடிகர் கருணாஸ் பேசியுள்ளது திரையுலகில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினிகாந்தின் 62வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான ரஜினி ரசிகர்கள் கலந்துகொண்டனர். நகைச்சுவை நடிகர் கருணாஸ் இவ்விழாவில் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, இந்த விழாவுக்கு ரஜினி வராததில் தவறில்லை, காரணம், அவர் வந்தால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது ஆனால், அவர் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் வந்திருக்க வேண்டுமல்லவா? இவ்வளவு பேரும் அதைத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள். எத்தனையோ நிகழ்ச்சிக்கு போகும் ரஜினி குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு வராததை நான் வெளிப்படையாகவே கண்டிக்கிறேன். ரஜினியை தலைவராக ஏற்றவன் என்ற உரிமையுடன் இதை நான் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். கருணாசின் இந்த பேச்சு, நியாயமானதுதான் என்று தலைவா, தலைவர் என்று தங்கத்தேர் இழுத்து மண் சோறு சாப்பிட்டு, பால்குடம் எடுக்கும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். சில ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மார்கழி 17, 2011 இருமொழிக் கொள்கை சிறுபான்மை மக்களின் உரிமைகளை பேணிப் பாதுகாக்கின்றது அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அரசாங்க கூட்டுத்தாபனங்கள் அனைத்திலும் சிங்களமும், தமிழும் சம அந்தஸ்துடன் அரச கரும மொழிகளாக அவற்றின் நாளாந்த பணிகளில் நூற்றுக்கு நூறு சதவீதம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நம்நாட்டு பிரஜைகள் அனைவருக்கும் தங்கள் தாய்மொழி மூலம் அரச பணி களை செய்துகொள்ளும் பூரண உரிமையை அரசியல் சாசனம் வழங்கு கின்றது என்றும், அதற்கு உத்தரவாதம் அளிப்பது அரச ஊழியர்களின் கடமை என்றும் ஜனாதிபதி அவர்களின் இந்த உத்தரவில் குறிப்பிடப்பட் டுள்ளது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் மொழிப் பிரச்சினை என்று ஒன்று இருக்கவில்லை. அப்போது அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரசாங்க அனுசரணையுடன் செயற்படும் நிறுவனங்களில் ஆங் கில மொழி மூலம் நிருவாகம் நடைபெற்றாலும், சுதேச மொழிகளில் எவ ரும் சென்று தங்கள் பிரச்சினைகளை முன்வைத்து அவர்களின் குறை பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கு வசதியிருந்தது. (மேலும்....) மார்கழி 17, 2011 "முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு தமிழரின் ஓர் அங்குலக் காணியேனும் எடுக்கப்படமாட்டாது" முஸ்லிம்களை மீள்குடியேற்றும்போது தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் ஓர் அங்குலத்தையேனும் எடுப்பதற்கு துணைபோகமாட்டேன் என்று தெரிவித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் குரோதத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது என்றும் கூறினார். மன்னார் சன்னார் பகுதி மற்றும் வவுனியா சௌபால புளியங்குளம் போன்ற கிராமங்களில் ஏற்கெனவே வாழ்ந்த முஸ்லிம்கள் அங்கு மீள்குடியேற்றப்படுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று தான் நாம் கேட்கின்றோம். எனினும் அங்கிருந்த தமிழ் மக்களை வெளியேற்றுமாறு நான் ஒரு போதும் கூறியதில்லை. தமிழ் முஸ்லிம் மக்களை மோதவிட்டு அரசியல் இலாபம் தேடுவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இதில் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாது. முஸ்லிம்களுடன் போட்டி போட்டுக் கொண்டு செயற்படுவதால் எந்தத் தீர்வையும் எட்டி விட முடியாது. மேலும் முஸ்லிம்கள் மீள் குடியேற்றப்படுகின்ற சந்தர்ப்பங்களில் அங்கு தமிழருக்குச் சொந்தமான ஓர் அங்குல நிலத்தையேனும் எடுப்பதற்கு நான் துணை போகமாட்டேன். பிரச்சினைகள் இருப்பின் அது பேசித் தீர்க்கப்பட வேண்டும்.மார்கழி 17, 2011 யாழ். புகையிரத நிலைய சட்டவிரோத குடியிருப்பாளர்களை விரட்ட நடவடிக்கை யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் சட்டவிரோதமான முறையில் குடியிருக்கும் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். வட பகுதியை நோக்கி விரைவில் புகையிரதம் வரவுள்ளதாகவும அப்பகுதியில் இருக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கு புகையிரதத் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பகுதியில் 30க்கு மேற்பட்ட மக்கள் குடியிருப்பதாகவும் பிரதேச ரீதியில் அவர்களை எழுப்புவதற்கு புகையிரதத் திணைக்களம் இன்று (16) வெள்ளிக்கிழமை அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் இமெல்டா மேலும் தெரிவித்துள்ளார். மார்கழி 16, 2011 தமிழகத்தில் உள்ள இலங்கை மக்களின் வலியும், தவிப்பும். (அருள் - விஜயன்) அகதிகள் முகாமில் இருந்த ஒருவர் நன்றாக கூலி வேலை செய்து சம்பாதித்தார், தாய்நாட்டின் ஏக்கம் அவரை வாட்டிய போது இலங்கை சென்றார். ரொம்பநாட்களுக்கு பின்னர் ஊர் சென்றவருக்கு உபசரிப்பு என்றால் சொல்லி வேலை இல்லை. இவை சில நாட்கள்தானே, நிலமையை உணர்ந்த அவர் தொழில் தேட முயன்றுள்ளார். கூலித் தொழிலுக்கு சென்றுள்ளார். ஆனால் அவருக்கு நிரந்தர வேலை இல்லை அதனால் மீண்டும் அகதியாக வந்து விட்டார். பல வருடங்கள் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு, இலங்கையில் உள்ள சிலரின் வாழக்கை முறை வெறுப்படைய வைத்துள்ளது. பலர் வசதியாக உள்ளனர் என்றம் தங்கள் சொந்தத்திலே பலர் வசதியாக இருப்பதாகவும் தான் இனி அவர்கள் அளவுக்கு வரமுடியாது அதனால் கண்காணமல் வாழ்வதே நன்று எனவும் கூறினார். இந்த எண்ணம் பல அகதி மக்களிடம் உள்ளது. இதனால் அந்த பத்துக்கு பத்து அறையில் தங்கள் எதிர்காலத்தை நினைத்து ஏக்கத்துடன் முகாம்களில் வாழ்கின்றனர். (மேலும்.....) மார்கழி 16, 2011 அரசியல் முள்ளிவாய்க்காலுக்குள் தள்ளிவிடக் கூடாது – கூட்டமைப்புக்கு தமிழ் சிவில் சமூகம் எச்சரிக்கை வடக்கு மாகாணசபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றுவது எமது நீண்ட அரசியல் பயணத்தின் அவல முடிவாகவும், முற்றுமுழுதான அரசியல் முள்ளிவாய்க்காலாகவும் அமைந்து விடும். இது நடைபெறாமல் தடுக்கும் வரலாற்றுக் கடமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே உள்ளது என்று தமிழ் சிவில் சமூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கையளித்துள்ள மனு ஒன்றில் கூறியுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் கையளிக்கப்பட்ட இந்த மனுவில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகப் பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப், மருத்துவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மதகுருமார் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் இநத மனுவில் கையெழுத்திட்டுள்ளனர். (மேலும்.....) மார்கழி 16, 2011 யாழ் .கொக்குவில் வளாகவீதியைப் பிறப்பிடமாகவும் 16 வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் நாட்டில் வசித்து அதன் பின்னர் கனடா 40 Falstaff Ave ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குகதாசன் கனகரத்தினம்
அன்னை மடியில் : 3 மே 1965 ஆண்டவன் அடியில் : 14 டிசெம்பர் 2011 அவர்கள் 14-12-2011 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார் கனகரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும் அருளானந்தம் வள்ளித்தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும் உசாநந்தினி (உசா) அவர்களின் அன்புக் கணவரும்; றொசானா, திவானா ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்; கமலதாசன்(கமல்), ஜேந்திமாலா(மாலா), ஜேமலதா(லதா), ஜெநந்தினி(நந்தினி), பிறேமதாசன்(ரமேஸ்), ஞானதாசன்(ரூபன்), ஆகியோரின் பாசமிகு சகோதரனும்; கலைமலர் செல்வராஜா கணேசலிங்கம் செல்வனேஸ்வரன் ரஜீவா சுமதி பவாநிதி வின்சரன் (ராஐன்)zollikofen Bern(சுவிஸ்) சுகந்தி சுரேஸ்(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ரம்மியா கிஷானி கரனி லக்ஷா அகிலாஷ் கஸ்வின டிவிக்கா சபிநயா சேலின் நித்திகா வரஸ்மன் லிசாரபன் லொசாரியன் ரம்ஜி ப்ரீத்தி ஆகியோரின் செல்லமான பெரியப்பாவும் கார்த்திகா அசோக் கீர்த்தி அமரோஸ் துஷா மைஷா கரிஸ் ஆகியோரின் தாய்மாமனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் பார்வைக்கு திகதி: சனிக்கிழமை 17/12/2011, 05:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Bernardo Funeral Home தகனம்/நல்லடக்கம் திகதி: ஞாயிற்றுக்கிழமை 18/12/2011, 09:00 மு.ப — 11:00 மு.ப முகவரி: 1567, Royal York Road, (TP - 146 241 0861)தொடர்புகளுக்கு கமல் — கனடா தொலைபேசி: +14168382027 ரமேஸ் — கனடா தொலைபேசி: +14168394069வின்சரன் (ராஐன்)zollikofen Bern(சுவிஸ்) 0041319910312 .0041797541317 ரூபன் — கனடா தொலைபேசி: +14165194515 மார்கழி 16, 2011 Tamil Heritage Days in the City of Markham
Meet our Immigration Consultants who have come to help you to apply to get over. " And I will do one more thing to help you Counsilor Kanapathi to get your people out of Sri Lanka and to reach the City of Eelam-Markhan. If the Boeing 747s are over loaded and jet-puffing and hacking to get off the tarmac, I will be there to help push the plane to take off. Let’s make it a deal, Councilor! And just one more request. Please copy my prediction and have it in a Time Capsule embedded in the City of Markham’s Hall entrance wall to be opened only on Christmas Day of 2025. Councilor Kanapathi, something tells me that this project will get support from the Minister of Citizenship Jason Kenney, and the MPs Paul Calandra, Patrick Brown, Jim Karygiannis, the right wing evangelist MP John McKay, Rathika Sitsabaisen, and many more. They thrive on the Tamil votes and you know it. (more....) மார்கழி 16, 2011 கைப்பற்றுவோம் போராட்டங்கள் இதுவரையில் 5 ஆயிரம் பேர் கைது முதலாளித்துவத்திற்கு எதிராக அமெரிக்காவில் நடைபெறும் போராட்டங் களை ஒடுக்கும் வகையில் இதுவரை கைது செய்யப் பட்டவர்களின் எண்ணிக் கை 5 ஆயிரத்தைத் தாண்டி விட்டது என்று தெரிய வந்துள்ளது. செப்டம்பர் 17 ஆம் தேதி யன்று முதலாளித்துவக் கொள்கைகள் மற்றும் அத னால் ஏற்பட்டுள்ள நெருக் கடி ஆகியவற்றிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த 150 பேர் முடிவு செய்துள்ளனர். ஆனால் அந்த ஆர்ப்பாட் டம் ஏற்படுத்திய தாக்கத் தால் அமெரிக்கா முழுவ தும் லட்சக்கணக்கானோர் இந்த கைப்பற்றுவோம் போராட்டங்களில் ஈடுபட் டனர். ஓரிரு நாட்களில் போராட்டம் நிறைவு பெற்று விடும் என்று நினைத்த நிர்வாகம் போராட்டங் களை அனுமதித்தது. ஆனால் போராட்டம் தொடர்ந்த தோடு, அமெரிக்காவில் மட்டும் 100 நகரங்களுக்குப் பரவியது. (மேலும்.....)மார்கழி 16, 2011 முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தவிர்க்க முடியாதது! சர்வதேச கம்யூனிஸ்ட் / தொழிலாளர் கட்சிகள் மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி முழக்கம் முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் மாற்றை உருவாக்கிட நாம் அனைவரும் களத்தில் இறங்குவோம் என்று சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழி லாளர் கட்சிகளின் 13ஆவது மாநாட்டில் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு, கீரிஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பங்கேற்ற கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரான சீத்தாராம் யெச்சூரி மாநாட்டின் விவாதத்தில் பங் கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: உலகில், முதலாளித்துவ முறைக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் அல்லாத மக்களும் கூட கிளர்ந்தெழுந்து உலகம் முழுவதும் போரா டிக் கொண்டிருக்கக்கூடிய தருணத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட்/தொழிலாளர் கட்சிகளின் 13ஆவது மாநாடு நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. கிரீஸ் நாட்டிலும் அத்தகைய போராட்டத்தை மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு போராடும் கிரீஸ் நாட்டின் தோழர்களுக்கும் மக்களுக்கும் நம் ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம். (மேலும்.....)மார்கழி 16, 2011 What happened in the 18th session of the UN HRC in Geneva? There are many versions of a story spread by grassroots activists who attended the UN Human Rights Council sessions. But they attended only sessions following Mullivaighzal. The story refers especially to the 18th session, which took place last September. Therefore it is my duty to tell my side of the story. Here, I do not have to mention how long we have attended these UN Human rights forums. Anyway, our longstanding work in the UN is a troublesome fact for a few grassroots activists, especially two who started attending the UN HRC after Mullivaghzal. These two appear to have the sole intention of sabotaging the work in the UN. These two individuals are Nimalan, who belongs to an organisation in London, UK, and Gary from Canada. I never met them before 2009. The first time I met them was in March 2009 in Geneva. Let me be frank with you. (more....) மார்கழி 16, 2011 ராஜிவ் கொலை வழக்கு மூவரின் மரண தண்டனையை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை குறைக்கக்கோரி ஜனாதிபதியிடம் 3 பேரும் கருணை மனு கொடுத்தனர். கருணை மனுவை ஜனாதிபதி சமீபத்தில் நிராகரித்து மரண தண்டனையை உறுதி செய்தார். இதை எதிர்த்து சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் 3 பேருக்கும் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி, மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கையெழுத்து இக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதை சென்னை மேல் நீதிமன்றம் அருகே உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தொடங்கி வைத்தார். மனித உரிமை ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் பொதுமக்கள் பலர் அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டனர். மார்கழி 16, 2011 அணை பிரச்சினை தீர வேண்டுமெனில் போராட்டத்தை நிறுத்துங்கள் ! - கேரள முதல்வரிடம் பிரதமர்முல்லைபெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, கேரள மாநில அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் டில்லியில் பிரதமர் மன்மோகனை சந்தித்துப் பேசினர். அப்போது, "அணைப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காண வேண்மெனில், போராட்டங்களை நிறுத்திவிட்டு, சாதகமான சூழ்நிலையை உருவாக்குங்கள்" என கேரள முதல்வர் உம்மன் சாண்டியிடம் பிரதமர் மன்மோகன் சிங் கண்டிப்புடன் கூறினார். முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக, பிரதமரைச் சந்திப்பதற்காக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன், மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பினராயி விஜயன் உட்பட 23 பேர் அடங்கிய அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் டில்லி சென்றனர். (மேலும்.....) மார்கழி 16, 2011 கடாபி கொலையில் அமெரிக்காவுக்கு தொடர்பு - புடின் லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி கொலையில் அமெரிக்காவின் விசேட படைக்கு தொடர்பு இருப்பதாக ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடின் குற்றம் சாட்டியுள்ளார். ரஷ்ய தொலைக்காட்சியில் தொலைபேசி மூலம் உரையாற்றிய புடின் கூறியதாவது, இதனை யார் செய்தார்கள். அமெரிக்க விசேடப் படை விமானங்கள் கடாபி மீது தாக்குதல் நடத்தின. பின்னர் தொலைபேசி மூலம் எதிர்ப்பாளர்கள், கிளர்ச்சியாளர்கள் என்று அழைக்கப்படுபவர்களை விசேடப் படை வீரர்கள் அங்கு வரவழைத்தனர். பின்னர் எந்த நீதிமன்ற விசாரணையும் இல்லாமல் கடாபி கொல்லப்பட்டார் என புடின் குறிப்பிட்டார். முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த சம்பவம் குறித்து ரஷ்ய தரப்பில் வெளியான முதலாவது அறிவிப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. எனினும் புடினின் கருத்துக்கு அமெரிக்கா கடும் அதிருப்பதியை வெளியிட்டுள்ளது. புடினின் கருத்து நகைப்புக்குரியதாக இருக்கிறது என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பென்னட்டா குறிப்பிட்டுள்ளார். கடாபி கொல்லப்பட்டது தொடர்பான ஆவணங்கள் உலகுக்கே தெரிந்தது. அமெரிக்க படைகளின் காலடி கூட இந்த யுத்தத்தில் லிபிய மண்ணில் பதியவில்லை என அவர் தெரிவித்தார். மார்கழி 16, 2011 ஈராக்கில் அமெரிக்க தேசிய கொடி இறக்கம், யுத்தம் முடிந்ததாக அறிவிப்புஈராக்கில் 9 ஆண்டு இராணுவ தலையீட்டுக்கு பின் அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறு வதையொட்டி சம்பிரதாயபூர்வமாக தேசிய கொடி இறக்கி வைக்கப்பட்டது. ஈராக்கில் உள்ள அமெரிக்க இராணுவப் படை தலைமையகத்தில், அமெரிக்கப் படை ஈராக்கில் இருந்து விடை பெறும் வைபவம் நேற்று இடம்பெற்றது. இதில் ஈராக்கில் அமெரிக்கப் படையின் சேவை முடிந்ததைக் கணிக்கும் வகையில் அமெரிக்க கொடி இறக்கப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டு சதாம் ஹ¤ஸைனின் அரசுக்கு எதிராக ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம் கடந்த 9 ஆண்டுகளாக அங்கு யுத்தம் புரிந்தது. இதன்போது சுமார் 170,000 அமெரிக்க வீரர்கள் ஈராக்கில் தனது இராணுவச் செயற்பாட்டை முன்னெடுத்தது. ஈராக்கில் சுமார் 500 வெளிநாட்டு இராணுவத் தளங்கள் செயற்பட்டன. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் சுமார் 4,500 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதோடு ஒரு இலட்சம் ஈராக்கியர் பலியாயினர். மேலும் 1.75 மில்லியன் பேர் இடம்பெயர்ந்தனர். ஈராக் யுத்தத்தில் அமெரிக்கப் படை சுமார் ஒரு டிரில்லியன் டொலரளவு செலவு செய்துள்ளது. இந்நிலையில் இம்மாத இறுதிக்குள் அமெரிக்கப் படை முழுமையாக ஈராக்கைவிட்டு வெளியேறவுள்ளது. ஈராக்கில் மேலும் 5,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இவர்கள் தனது கடைசி பாதுகாப்பு நடவடிக்கைகளை ஈராக் படையிடம் கையளித்துவிட்டு வெளியேறவுள்ளனர். மார்கழி 15, 2011 வடக்கு-கிழக்கு இணைய வேண்டும் (தோழர் ஸ்ரனிஸ்) வடக்கு-கிழக்கை பிரித்ததே ஏற்ககொள்ள முடியாமல் இருக்கும் போது, பிரிந்தபடியே இருக்கட்டும் என்ற சத்தம் அதிகமாக வரதத்; தொடங்கியுள்ளது. ஈழம் என்றால் வடக்கு-கிழக்கு இணைந்த பகுதிதான், இதற்காகத்தான் இன்று பலவற்றை இழந்து ஒன்றும் இல்லாமல் ஆக்கப்பட்டு நிற்கிறோம். ஈழம் எனும் சொல் பதம் 1983களிலே பிரபல்யமானது, இந்த சொல் பதத்திற்கு அர்த்தத்தை கொடுத்து, அதன் பால் இளைஞர்களை ஈர்த்து, பலரை அதற்காக, தியாகம் செய்ய வைத்து,நமக்குள் நாமே முட்டி மோதி எல்லாவற்றையும் பாழாக்கிவிட்டோம். ஈழம் கிடைக்கவில்லை வடக்கு-கிழக்கு இணைப்பாவது கிடைக்க வேண்டாமா? இந்த இணைப்பை நாம் எல்லோரும் சேர்ந்து பெறுவதன் மூலமே இறந்தவர்களின் தியாகங்களை நாம் கௌரவப்படுத்த முடியும். ஈழம் என்ற கோசத்துடன் தான் அனைத்து இயக்கங்களும் ஆரம்பத்தில் போராடியது, ஆனால் அது கனவாகிப்போனது, விடுதலைப்புலிகளால் என்பதை பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. (மேலும்.....) மார்கழி 15, 2011 கனேடிய தமிழர் நிதி நிறுவனம் "திவால்" வங்குரோத்து
கனேடிய தமிழர்களிடம் அரங்கேறிய தமிழர் நிதி நிறுவனம் திவால் ஆகிவிட்டது. ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை எம்மருபவர்கள் இருப்பார்கள் என்பது உண்மை. கடந்த காலங்களில் டொரோண்டோ தமிழர்கள் மத்தியில் தமிழர் நிர்வாகத்தில் கீழ் ஓர் நிதி நிறுவனம் உருவாகியது அதன் பெயர் "மாகோச" என்று, இதில் செயற்குழுவில் உள்ளவர்கள் மக்கள் மத்தியில் தங்களை தங்கள் பெரிதாக அரங்கேற்றிக்கொண்டு தமிழர் ஊடகங்களாகிய தமிழ் வானொலிகள், பத்திரிகைகள் போன்றவற்றில் இவ் நிதி நிருவனத்தை ஓர் வங்கிக்கு இணையானது இன்று விளம்பரம் செய்து பலரை வரவழைத்து சிலரை தங்களின் நிதி நிறுவனத்தில் பணத்தை முதலிடு செய்யுங்கள் என்று கூறி ஏமாற்றி விட்டார்கள். ஆனால் இன்று இந்த நிதி நிறுவனமோ மக்களை ஏமாற்றி வைப்பில் இடப்பெற்ற பணத்தை விழுங்கி விட்டது என்று இதில் முதலீடு செய்தவர்கள் புலம்புகின்றனர். இந்த நிதி நிறுவனம் வங்குரோத்தை சந்தித்துள்ளது. இவ் நிறுவனத்தின் திமிகிலங்கள் அதே இடத்தில் இன்னும் பல நிறுவனங்களை நடத்திவருகின்றனர். யாரை ஏமாற்றலாம், யாரிட்ட பிடுங்கலாம் என்பது தான் அவர்களின் செய்யல்பாடு என்று பாதிக்கப்பட்டவர் புலம்புகின்றார். இப்படியான நிதி மோசடியில் முன்னர் காலங்களில் யாழ்ப்பாணத்திலும், தென் இந்தியாவில் பல நிறுவனகள் மோசடி செய்துள்ளன என்பது கூறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இதுவும் ஒன்று.....கனடிய தமிழர்கள் இனியாவது விழிப்புனர்வுடன் இருப்பார்களா? கனேடிய தமிழ் மகன் மார்கழி 15, 2011 சிவாஜியின் கொலைவெறி
(Why ‘s this kolaivery kolaiverdy….) மார்கழி 15, 2011 தமிழினத்தை வழிப்படுத்தத் தவறிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஒரு பெரியவர் எம் தமிழினத்தின் பெருமைகள் பலவற்றை கூறினார். அவர் கூறியபோது. இறுமாப்பாக இருந்தது. எனி னும் எங்கள் நிதர்சனத்தை நினைத்த போது, அட! தமிழன் நொந்துகெட்டு நூலாகிப் போனமைக்கு பழம் பெருமை பேசி க்காலம் கடத்தியதும், பஞ்சாங்கத்தில் பல்லி சொற்பலன் பார்த்ததும்தான் காரணம் என்று நினைத்துக் கொண்டேன். ஐயா! இதுவரை தமிழனின் பெருமைகளை தாங்கள் பேசக்கேட்டோம். ஒரு சந்தேகம் என்றேன். சந்தேகம் யாதோ! என் றார் அந்தப் பெரியவர்.தமிழ் மக்களின் தலைவன் யார்? என்றேன். சிறிது நேரம் அங்கும் இங்கும் பார்த்தார். நம்மையும் முழித்துப் பார்த்தார். இது குறுக்கால போறபுத்தி, இதற்கெல்லாம் என்னால் பதில் கூறமுடியாது என்றார். சரி! தலை வன் என்று யாரையும் பெயர் குறித்துக் குறிப்பிட முடியாது என்றால், அரசியல் தலைமை உண்டா? என்றேன். (மேலும்.....) மார்கழி 15, 2011 புலம் பெயர் நாடுகளை நோக்கிப் பொன்முட்டைகள் (சுதர்சன்) எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் ஆயுதங்களை மட்டுமே நம்பியிருக்கும் வன் முறை செயற்பாடாக மாற்றமடைந்த போது கூட ஒடுக்கு முறை உருவாக்கிய சமூகத்தின் சிந்தனை தனது எல்லையை வரையறுத்திருந்தது. துரோகிகள் என்று ஒரு பகுதியாகவும் தியாகிகள் என்று இன்னொரு பகுதியாகவும் சமூகம் பிளவுற்றது. அரசியல் அடிப்படை, தத்துவார்த்தப் பின்புலம், கருத்து என்பன எல்லாவற்றிற்கும் அப்பால் பலம் மிக்கவர்களாக இனம்காணப்பட்டவர்கள் பொதுவாகத் தியாகிகளாகக் கருதப்பட்டனர். வலிமை குன்றிய ஆனால் மாற்று அரசியலை முன்வைத்தவர்கள் துரோகிகள் வரை தரம் தாழ்த்தப்பட்டனர். (மேலும்.....) மார்கழி 15, 2011 The West, Mr. Wickremesinghe and the coat-hanger By Dr. Dayan Jayatilleka The Minister of External Affairs Prof GL Peiris usually gives no reason to be described as ‘irate’. That however, was the newspaper description of his uncharacteristically sharp remonstration, urging Opposition and UNP leader Ranil Wickremesinghe not to ‘outsource’ the role of the Opposition to the international/diplomatic community. The MEA website carries the story: "Prof. Peiris lambasted Wickremesinghe for taking all domestic issues before the international community instead of having local mechanisms to tackle problems faced by the Sri Lankans. An irate External Affairs Minister stressed that the responsibilities of the Opposition shouldn’t be handed over to Colombo-based foreign envoys..." (Source: ‘Don’t outsource Opp. responsibilities to foreign missions, GL tells Ranil’ The Island, 2 December 2011). Was there perhaps an unstated flipside to that coin? It may be argued that sections of the international community have also shown a propensity to outsource their Sri Lankan policy at least in part, to Mr Wickremesinghe or to rely upon him as an instrument of policy. (more....) மார்கழி 15, 2011 தமிழ் கட்சிகள் ஓரணியில் பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அமைக்கப்படவிருக்கும் உத்தேச பாராளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட அனைத்து தமிழ் கட்சிகளும் முன்வர வேண்டும் என்று ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத் தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பகிரங்க அழைப்பு விடுத்துள்ளமை உண்மை யிலேயே பாராட்டப்பட வேண்டிய ஒரு சிறந்த நடவடிக்கையாகும். நம்பிக்கையுடனும், அக்கறையுடனும் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றை முன் வைப்பதற்கு தமிழ் கட்சிகளிடையில் பொதுவான இணக்கப்பாடு ஒன்று ஏற்படவேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், இதனை உணர்ந்து தெரிவுக்குழுவின் ஊடாக தங்களுக்கு கிடைத்திருக் கும் அரிய வாய்ப்பை அனைத்து தமிழ் கட்சிகளும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் யோசனை தெரிவித்திருக்கிறார். (மேலும்.....) மார்கழி 15, 2011 யுனெஸ்கோ தலைமையகத்தில் பலஸ்தீன கொடி ஏற்றம் பிரான்ஸ் தலைநகர் பரிஸில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் நிரந்தரமான இடமொன்றில் பலஸ்தீன தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஐ.நா.வின் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்கா இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் பலஸ்தீனுக்கு நிரந்தர அங்கத்துவம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோ நிரந்தர அங்கத்துவத்திற்கான பலஸ்தீன தேசிய கொடி ஏற்றும் வைபவம் நேற்று முன்தினம் கடும் மழைக்கு மத்தியில் நடைபெற்றது. இதில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாசும் பங்கேற்றார். இதன்போது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என குறிப்பிட்ட மஹ்மூத் அப்பாஸ் பலஸ்தீனம் ஏனைய அமைப்புகளிலும் அங்கத்துவம் பெறுவதற்கு இது சிறந்த ஆரம்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பலஸ்தீன் ஐ.நா. அங்கத்துவத்திற்காக விண்ணப்பித்துள்ளது. இது தொடர்பான வாக்கெடுப்பு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இடம்பெற வுள்ளமை குறிப்பிடத்தக்கது. மார்கழி 15, 2011 ‘கடவுளின் துகள்’ கண்டுபிடிப்பு
அணுவுக்கு நிறையைத் தரக்கூடியவை என்று கருதப்படும் ஹக்ஸ் போஸான் எனும் நுண்துகள்கள் உண்மையிலேயே இருக்கின்றன என்பதற்கான அறிகுறிகளை தாம் கண்டறிந்துள்ளதாக ஜெனிவாவில் உள்ள செர்ன் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இவற்றை கடவுளின் துகள் என்கின்றனர் விஞ்ஞானிகள். எனினும் இது குறித்து இறுதியான ஆதாரத்தை வழங்குவதற்கு தாம் இன்னமும் சில கூடுதல் ஆய்வுகளை செய்ய வேண்டியுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது, பிரபஞ்சத்துக்கு நிறை எங்கிருந்து வந்தது, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன என்பதை அறிய ஜெனீவாவில் ஒரு மாபெரும் ஆராய்ச்சி நடந்து வருகிறது. பிரான்ஸ் – சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் அமைந்துள்ள உயர் ஆற்றல் புரோத்திரன் மோதல் கருவியில் கடந்த மாதம் ஜனவரியில் இந்த சோதனை ஆரம்பமானது. (மேலும்.....) மார்கழி 15, 2011 பாகிஸ்தானுக்கான இராணுவ உதவியை முடக்கி வைக்க அமெரிக்கா முடிவு பயங்கரவாதிகள் பயன்படுத்தும் வெடிமருந்து பொருட்களை பாகிஸ்தான் தடை செய்யாதவரை, அந்நாட்டுக்கு அளிக்கப்படும் இராணுவ உதவியை நிறுத்த, அமெரிக்க செனட்சபை ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் அமைதி பணியில். அமெரிக்க படைகள் ஈடுபட்டுள்ளன. இந்த படைகள் மீது தலிபான்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட வெடிமருந்து பொருட்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் முகாமிட்டுள்ள பயங்கரவாதிகள், இந்த வெடிமருந்து பொருளை தயாரித்து வருகின்றனர். இதை தடை செய்யும்படி, அமெரிக்கா பலமுறை பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த வெடிமருந்து பொருள் தயாரிப்பை, பாகிஸ்தான் தடுப்பதாக தெரியவில்லை. எனவே, பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும், 700 மில்லியன் டொலர் இராணுவ உதவியை நிறுத்தி விடும்படி, அமெரிக்க பிரதிநிதிகள் சபையும், செனட்டும் ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளன. எனினும், இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், ஜனாதிபதி ஒபாமா கையில் தான் உள்ளது. மார்கழி 15, 2011 மார்பக புற்றுநோய்க்கு புதிய மருந்துமார்பக புற்றுநோய்க்கு இன்னும் 3 ஆண்டுகளில் புதிய மருந்து கண்டு பிடிக்கப்படும் என விஞ் ஞானிகள் தெரிவித்தனர். உலகில் லட்சக்கணக்கான பெண்கள் மார் பக புற்று நோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நோயை குணப்படுத்த விஞ்ஞானிகள் மரு ந்து தயாரிக்கும் பணியில் மும் முரமாக உள்ளனர். அமெரிக்காவின் ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சர்வதேச நிபுணர்கள் குழுவினர் இந்த மருந்து தயாரிப்பில் ஈடு பட்டுள்ளனர். தற்போது அந்த பணி முடிந்து விட்டது. அதை எலிகளின் உடலில் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதன் மூலம் அந்த ஊசி மருந்து மார்பக புற்று நோயை மட்டுமின்றி, ஏனைய புற்று நோயையும் குணப்படுத்தக் கூடியது என கண்ட றியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அந்த மருந்தை மார்பக புற்று நோயால் பாதித்த பெண்ணின் உடலில் செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இது சோதனைக்கூட அளவில் உள்ளது இதன் மூலம் 90 சதவீத மார்பக புற்று நோய் குணமாகுகிறது. எனவே, முற்றிலும் நோய் குணமாகும் வகையில் மருந்து தயாரிக்கப்படுகிறது. அவை வருகிற 2013ம் ஆண்டு இறுதியில் அதாவது 3 அண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்கழி 15, 2011 கேரள மனு நிராகரிப்பு: நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க தேவையில்லை"முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் அணை நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும்" என்ற கேரள அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, அம்மனுவை நிராகரித்தது. முல்லைப்பெரியாறு அணை விடயத்தில் முரண்டு பிடிக்கும் கேரள அரசுக்கு, இது முதலாவது அடியாகும். தமிழக - கேரள எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் 116 ஆண்டுகள் பழைமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை செயல்பட்டு வருகிறது. அணை பகுதியில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டு, அணை பலமிழந்துவிட்டது. தற்போதுள்ள அணையை அகற்றி விட்டு புதிய அணை கட்ட வேண்டும். அணை நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும் என்று கேரள அரசும், அங்குள்ள எதிர்க்கட்சிகளும் கோரி வருகின்றன. தற்போதுள்ள நிலையில் அணைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. எனவே, அது குறித்து உச்ச நீதிமன்றத்தின் எந்த வித தலையீடும் தேவை யில்லை. அணைக்கு மத்திய தொழில் பாது காப்புப் படை பாதுகாப்பு வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை குறித்து, அடுத்த இரு நாளில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும். மார்கழி 15, 2011 லண்டன் அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு விரைவில் மெழுகுச் சிலைஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மேடம் துசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்கட்சியகம் உலகப் புகழ் பெற்றது ஆகும். மெழுகுச் சிலைகள் உருவாக்குவதில் தலைசிறந்து விளங்கிய சிற்பி மேரிதுசாட்ஸ் என்பவர்தான் இதனை நிறுவினார். இதனால் அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு வந்தது. இந்தியாவை பொறுத்தவரை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்தி திரையுலக பிரபலங்கள் அமிதாப் பச்சன், அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், நடிகர் ஷாருக்கான், நடிகை கரீனா கபூர் உள்ளிட்ட பலரது மெழுச் சிலைகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் மெழுகுச்சிலையும் இந்த அருங்காட்சியத்தில் விரைவில் இடம்பெறப் போகிறது என்பதுதான் தற்போதைய புதிய செய்தி ஆகும். இந்த தகவலை இரகசியமாக வைத்துள்ள அருங்காட்சியக நிர்வாகம் சிலை தயாராகி முடிந்ததும் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. மெழுகுச்சிலை அமைப்பது தொடர்பாக லண்டன் துசாட்ஸ் அருங்காட்சியக நிர்வாகம் சார்பில் ரஜினியிடம் அனுமதி கேட்கப்பட்டது என்றும், அதற்கு அவரும் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்தார் என்பதையும் அவரது மூத்த மருமகன் நடிகர் தனுஷ் ஒருமுறை கூறியுள்ளார். மார்கழி 15, 2011
தமிழ்க் கூட்டமைப்பின் எண்ணம் நிறைவேறாது
|