Contact us at: sooddram@gmail.com

 

ஐப்பசி 2012 மாதப் பதிவுகள

ஐப்பசி 31, 2012

வீராவேசப் பேச்சுகளுக்கு கடைசியில் நடந்தது என்ன  தமிழா? நீ மீண்டும் மீண்டும் ஏமாளியா?

(இக்கட்டுரையை எழுதுவதன் நோக்கம் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பால் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு வேண்டுகோளாகும்.)

அதாவது இலங்கையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை சர்வதேசம் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையில் உள்ள தங்களின் உறவுகளை த.தே.கூ.க்கு வாக்களித்து தமிழ் மக்களின் பலத்தைக் கூட்டும்படி வற்புறுத்தும்படியும் கேட்டிருந்தார்கள். இதே த.தே.கூ இலங்கை சுதந்திரம் அடைந்து 64 ஆண்டுகளைக் கடந்து கொண்டிருக்கிற இன்று வரை தமிழரசு என்றும், சமஸ்டி என்றும், தமிழ் ஈழம் என்றும் வெவ்வேறு முகங்களில் தோன்றி மக்களை ஏமாற்றியுள்ளனர். இவர்களின் இப்படியான பல முகங்களை மக்கள் அறிவார்கள். எனவே மீண்டும் இவர்களின் ஏமாற்றுப் பேச்சுக்கு மக்களின் ஆதரவு இல்லை என்று தெரிந்தவுடன், புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவை நாடியுள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 31, 2012

டெசோ தீர்மான அறிக்கையுடன் தி.மு.க. இன்று நியூயோர்க் பயணம்

இலங்கைத் தமிழர்களின் நலனை வலியுறுத்தில் தி.மு.க. சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையுடன் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் இன்று நியூயோர்க் பயணமாகவுள்ளனர். மேற்படி தீர்மான அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளிப்பதற்காகவே அவர்கள் இருவரும் இன்று மாலை நியூயோர்க் பயணமாகவுள்ளனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை தமிழர் நலனை வலியுறுத்தி கடந் ஓகஸ்ட் மாதம் சென்னையில் திமுக சார்பில் டெசோ மாநாடு நடத்தப்பட்டது. இதன்போது இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வாக சில தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையினை, ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைக்க தி.மு.க தீர்மானித்தது. இந்நிலையிலேயே அந்த அறிக்கை இன்று நியூயோர்க் கொண்டுசெல்லப்படவுள்ளது என்று மேற்படி செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐப்பசி 31, 2012

Rajiv Gandhi assassination: Former CBI officer questions Karunanidhi’s role

A new book on the Rajiv Gandhi assassination case has alleged that no probe was conducted into the “abrupt cancellation” of DMK chief M Karunanidhi’s scheduled public meeting in Sriperumbudur on May 21, 1991 — the day when Rajiv was killed. In the book, Conspiracy to Kill Rajiv Gandhi: From CBI Files, the author, K Ragothaman, who was CBI’s chief investigating officer in the case, says: “It was the talk of the town that all DMK men should not stir out on the late evening of that fateful day. This aspect was not inquired into at all. If any investigation would have been done, the person who had contacted the DMK leader and advised him not to go to the Sriperumbudur meeting... would have been unearthed.” (more....)

ஐப்பசி 31, 2012

கடல் கொந்தளிப்பு

நான்காவது நாளாகவும் மீனவர்களின் தொழில் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்காவது தினமாகவும் மீனவர்கள் தொழிலின்றி தவிப்பதை அவதானிக்க முடிகின்றது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இம்மாவட்டத்தில் 26 ஆயிரம் குடும்பங்கள் முழுநேர மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளன.. கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீனவர்கள் பொருளாதார ரீதியிலான பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். கடற்கரையோரங்களிலுள்ள மீன்பிடி படகுகள் பல்வேறு இடங்களிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மீன்வாடிகள் என்பன கடந்த பல நாட்களாக இழுத்து மூடப்பட்டுள்ளன. மீன்பிடி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதால் சந்தைதகளில் கடல் மீன்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன.

ஐப்பசி 31, 2012

தெரிவுக்குழுவில் நாம் பங்கேற்போம் - ஐ.தே.க

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றங்களை ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்படவுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி இணைந்துகொள்ளுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவிற்கு எதிராக குற்றப் பிரேரணையை கொண்டு வருவது தொடர்பிலான செயன்முறைகள் பற்றி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் ஆராய்துள்ளது. குற்றப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கையொப்பமிட்டிருந்தால் குற்றப் பிரேரணையை சபாநாயகர் ஏற்றுக்கொள்வார். இதன்பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக தெரிவுக்குழு நியமிக்கப்படும். ஏழு பேர் கொண்ட அந்த தெரிவுக்குழுவில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நால்வரும் எதிரணியைச் சேர்ந்த மூவரும் அங்கம் வகிப்பர். நாம் அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம். நீதிமன்றத்தின் சுதந்திரத்துக்காக குரல் கொடுப்போம். எங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டுவதற்கே இந்த தெரிவுக்குழுவில் பங்கேற்கவுள்ளோம் என்று ஐ.தே.க வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐப்பசி 31, 2012

அநுராதபுரம் பள்ளிவாசலுக்கு பொலிஸ் பாதுகாப்பு

அநுராதபுரம் மல்வத்து லேன் பகுதியில் இனந்தெரியாதவர்களினால் தீ மூட்டி எரிக்கப்பட்ட மத்ரஸா வுடனான தக்கியா பள்ளிவாசலின் பாதுகாப்புக்கென 24 மணி நேரமும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று அதிகாலை வேளையில் தக்கியா பள்ளிவாசல் தீ மூட்டிக் கொளுத்தப்பட்டது. தக்கியா பள்ளிவாசல் மீது தீ மூட்டியதை கேள்விப்பட்ட அதிகாரிகள் நலன்விரும்பி கள், அரசியல் தலைவர்கள் போன்றோர் தக்கியா பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட சேதங்கள் பற்றி கண்டறிய இப்பகுதிக்கு தொடர்ந்தும் வந்த வண்ணமுள்ளனர். அமைச்சர் றிஸாட் பதியுத்தீன் உள்ளிட்ட வர்கள் நேற்று முன்தினம் 29ம் திகதி இப்பகுதிக்கு வந்து பாதிக்கப்பட்ட தக்கியா பள்ளிவாசலை பார்வையிட்டதுடன் மீண்டும் இதனைப் புனரமைத்து சமயக் கடமைகளை நிறைவேற்றுமாறும் இதற் காக தன்னால் முடியுமான உதவிகளைச் செய்வதாகவும் கூறிச் சென்றார்.

ஐப்பசி 31, 2012

இரு மலையக இளைஞர்கள் மர்ம மரணம்: கடையொன்றினுள் சடலங்கள் மீட்பு

அக்கரைப்பத்தனையிலுள்ள விற்பனை நிலையமொன்றில் உதவியாளர்களாக பணிபுரிந்து வந்த இரண்டு இளைஞர்கள் நேற்று மர்மமான முறையில் உயிரி ழந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். ஹோல்பேக் பிரதான வீதியிலுள்ள விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்த மேற்படி இளைஞர்களே கடையினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக நேற்றுக் காலை 8 மணியளவில் கடை உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் அக்கரைப்பத்தனை பெல்மோரோல் தோட்டத்தைச் சேர்ந்த ராஜரட்ணம் சுதர்ஷன் (19) மற்றும் லிந்துல பம்பரகெலே தோட்டத்தைச் சேர்ந்த ஆர். ராமசந்திரன் ஆகிய இரு வருமே நித்திரையிலேயே உயிரிழந்தது போல் காணப்பட்டுள்ளனர். இளைஞர்களின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய பொலிஸ் பேச்சாளர் அக்கரைப்பத்தனை பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறினார்.

ஐப்பசி 31, 2012

சூடான் துறைமுகத்தில் ஈரான் யுத்த கப்பல்

ஈரானின் யுத்த கப்பல் சூடான் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ரோந்துப் படகுகள் மற்றும் விமானங்களுடன் கூடிய இந்த யுத்த கப்பல் கடந்த மாதம் சூடானை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்திருந்ததாக ஈரானின் இர்னா செய்திச் சேவை கூறியுள்ளது. சூடான் தலைநகரில் உள்ள ஆயுத கிடங்கில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்துக்கு சூடான் அரசு இஸ்ரேல் மீது குற்றஞ்சாட்டிய நிலையிலேயே அங்கு ஈரானின் யுத்த கப்பல் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் விமானங்களே தமது ஆயுதக் கிடங்கு மீது தாக்குதல் நடத்தியதாக சூடான் ஐ. நா. வில் முறையிட்டுள்ளது. தாக்கப்பட்ட ஆயுதக் கிடங்கு ஈரானினால் செயற்படுத்தப்படுவதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் தம்மீதான குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது.

ஐப்பசி 31, 2012

அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் இந்தியா

நடப்பு 2012ம் ஆண்டில் இதுவரை, அதிக அளவில் அரிசி ஏற்றுமதி செய்துள்ளதில் தாய்லாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தை பிடித் துள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் 1.07 கோடி டன் அரிசியை ஏற்றுமதி செய்து தாய்லாந்து முதலிடத்தில் இருந்தது. அப்போது நம் நாடு 80 இலட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்து மூன்றாவது இடத்தில் இருந்தது. தற்போது இந்தியாவின் ஏற்றுமதி 17.50 இலட்சம் டன் உயர்ந்து 97.50 லட்சம் தொன்னாக அதிகரித்ததையடுத்து முதலிடத்தை பிடித்துள்ளது. தாய்லாந்தின் அரிசி ஏற்றுமதி 41.50 இலட்சம் தொன் குறைந்து 65 இலட்சம் தொன்னாக சரிவடைந்துள்ளது. இதனையடுத்து, தாய்லாந்து மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. வியட்நாம் நாடு 70 இலட்சம் தொன் அரிசியை ஏற்றுமதி செய்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 37.50 இலட்சம் தொன் அரிசியை ஏற்றுமதி செய்து பாகிஸ்தான் நான்காவது இடத்தில் உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் உலக அளவில் முத லிடத்தில் உள்ள அமெரிக்கா அரிசி ஏற்றுமதியில் ஐந்தாவது இடத்தில்தான் உள்ளது. இந்நாடு 35 இலட்சம் தொன் அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது.

ஐப்பசி 31, 2012

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

பஹ்ரைனில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடத்த அரசு தடை விதித்துள்ளது. தொடர்ச்சியாக கருத்துச் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாட்டை அனுமதிக்க முடியாது என இந்த தடை குறித்து பஹ்ரைன் உள்துறை அமைச்சர் ஷெய்க் ரஷித் அல் கலீபா குறிப்பிட்டார். இதற்கு முன்னர் கடந்த 2011 மார்ச் மாதம் மன்னர் ஹமத் நாட்டில் மூன்று மாத அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியபோது ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் தலைநகர் மனாமாவில் கூடிய அரச எதிர்ப்பாளர்கள் ஜனநாயக உரிமைகளை கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். பஹ்ரைனில் பெரும்பான்மையாக இருக்கும் ஷியா முஸ்லிம், சுன்னி பிரிவு மன்னர் குடும்பம் தமக்கு பாதகமாக செயற்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஐப்பசி 30, 2012

அமெரிக்காவை முடக்கிய 'சண்டி'; நீரில் மிதக்கும் நியூயோர்க்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் இறுதி சூறாவளிப் பிரசாரம் சூடுபிடித்திருந்த நிலையில் அதனை விஞ்சும் வகையில் 'சண்டி' சூறாவளி அமெரிக்காவை தாக்கியுள்ளதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.  கரிபியன் கடலில் தோன்றிய, 'சண்டி' சூறாவளியினால் அமெரிக்காவின் நியூயார்க், வொஷிங்டன், நியூஜெர்சி, மன்ஹட்டன் உள்ளிட்ட 13 மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்க தனது வரலாற்றின் மிகப்பெரிய சூறாவளியைச் சந்தித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 30, 2012  

13ஆவது திருத்தத்திற்கு எதிரான கோஷத்தோடு தெரிவுக்குழு அமைத்தல் சாத்தியமாகுமா?

13ஆவது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் மூலம் நாடு என்ன பயனை அடைந்து இருக்கிறது என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க கேள்வி எழுப்பியிருக்கிறார். அதேவேளை 13ஆவது அரசியலமைப்புத் திருத்திற்காக தமிழ் கட்சிகளும் இடதுசாரி கட்சிகளும் குரல் கொடுத்து வருகின்றன. 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தால் என்ன தீங்கு ஏற்பட்டது என்பது தான் அவர்களின் கேள்வியாக இருக்கிறது. நன்றாக கவனித்துப் பார்த்தால் இந்த இரண்டு சாராரும் உண்மையைத் தான் பேசுகிறார்கள், நியாயமான கேள்வியைத் தான் கேட்கிறார்கள். அமரசிங்க கேட்பதைப் போல் உண்மையிலேயே 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தால் ஏதாவது நன்மை நாட்டுக்கு கிடைத்திருக்கிறதா? அதன் நோக்கம் நிறைவேறியிருக்கிறதா? (மேலும்....)

ஐப்பசி 30, 2012

கட்சி பதிவது அல்ல தமிழ் மக்கள் முன்நிற்கும் முக்கிய பிரச்சினை! - சம்பந்தன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படவேண்டும் என்ற பங்காளிக்கட்சிகளின் வேண்டுதல் தொடர்பான உட்வீட்டுபூசல் பூதாகரமாக வெளிவரத்தொடங்கியுள்ள நிலையில், இக்கட்சிப்பதிவானது தற்போது தமிழ் மக்களின் தேவை அல்ல எனவும் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்வதே மக்களுக்கு அவசியமானது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பின்போது, இது தொடர்பில் பேசப்பட்டபோதே சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கடந்த முறை இந்தியா சென்றபோது சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரை அழைத்துச் செல்லாமைக்கான காரணம் கோரப்பட்டபோது, உரிய பதிலளிக்காமல் சம்பந்தன் மழுப்பியதாக அதிருப்தி தெரிவிக்கப்படுகின்றது.

ஐப்பசி 30, 2012

நவம்பர் 22 ஆம் திகதிக்குள் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்புக்கு முற்றுப்புள்ளி

பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதோடு, நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. அத்துடன் பிளாஸ்டிக் பைகள், கழிவு நீர் கால்வாய்களில் விழுந்து அடைப்பை ஏற்படுத்திவிடுகின்றன. இதையடுத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க டில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2009 ஆம் ஆண்டு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு டில்லி அரசு தடை விதித்தது. ஆனால் இதனால் பலன் எதுவும் ஏற்படவில்லை. பிளாஸ்டிக் கவர்கள், அட்டைகள் பயன்பாடு சிறிதும் குறையவில்லை. இந்நிலையில், சுற்றுச் சூழல் பாதுகாப்பு சட்டம் 1986இன் கீழ் பிளாஸ்டிக் பொருட்களுக்கு டில்லி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் முழுமையாக தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு 5 ஆண்டு வரை சிறை தண்டனையும், 1 இலட்சம் வரை அபராதமும் விதிக்க இந்த சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழு தடை விதிக்கும் உத்தரவு, கடந்த வாரம் வெளியானது. எனினும் இந்தத்தடை நவம்பர் 22 ஆம் திகதிக்கு பின்தான் முழுமையாக அமுல்படுத்தப்படும். பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு, விற்பனை ஆகியவற்றை டிசம்பர் 22 ஆம் திகதிக்குள் அனைவரும் நிறுத்த வேண்டும்.

ஐப்பசி 30, 2012  

13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதா? இல்லையா?

தெரிவுக் குழுவிலேயே இறுதித் தீர்வு காணவேண்டுமென்பதில் ஜனாதிபதி உறுதி

13வது திருத்தச்சட்ட மூலத்தை நீக்குவதா? அல்லது இல்லையா என்பது பற்றி பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்துக் கட்சிகளும் கலந்துகொண்டு தீர்வொன்றைக் காணவேண்டும் என்பதில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுதியுடன் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றம் சென்று 13வது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் எழுப்பிய விடயங்கள் மற்றும் இந்தியாவுக்குச் சென்று தெரிவித்த கருத்துக்கள், சம்பந்தனின் எழுந்தமானமான முடிவுகளாலேயே இந்தப் பிரச்சினை தற்பொழுது சிக்கலாகியுள்ளது. இதனாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகள் தனித் தனி மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்து வருவதோடு குழப்பநிலையொன்று உருவாகியிருப்பதாக அவர் குறிப்பிட்டார். தெரிவுக்குழு தொடர்பில் சம்பந்தன் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கூறி அக்குழுவில் கலந்துகொள்வதை இழுத் தடித்து வருகிறார். சமஷ்டி மூலம் நிர்வாகத்தை உருவாக்கும் ஒரு தந்திர முயற்சியாகவே இதனை நாம் கருத வேண்டியுள்ளது.

ஐப்பசி 30, 2012 

மாகாண சபைகள் முறையை இல்லாதொழிக்க வேண்டும்

அமைச்சர் வீரவன்சவிடம் அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகள் தெரிவிப்பு

மாகாண சபைகள் முறையை இல்லாதொழிக்க வேண்டுமென அஸ்கிரிய மற்றும் மல்வத்தை மகாநாயக்கத் தேரர்கள் தெரிவித்தனர். தேசிய ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தும் இம்முறை நாட்டினுள் அபிப்பிராய பேதங்களை ஏற்படுத்தி வருகிறது. எனவே, குறுகிய நோக்கம் கொண்ட அரசியல் இலாபத்தை கருத்திற்கொள்ளாது எல்லோரும் இணைந்து இதனை ஒழிக்க வேண்டும் என அவர்கள் இருவரும் தெரிவித்தனர். மாகாண சபை முறை நாட்டின் தேவைக்கு ஏற்படுத்தப்பட்டதல்ல. எமது நாட்டின் மீது திணிக்கப்பட்ட ஒரு முறையாகும். இந்தியா ஒரு மிகப் பெரிய நாடு. அவர்களது ஒரு பிராந்தியம் எமது நாட்டை விடப் பெரியது. அப்படி யான ஒரு நாட்டில் அதிகாரப் பங்கீடு பொருத்தமானதே. ஆனால் எமக்கு அது பொருந்தாது. அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்ததாவது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தத்தின் மூலம் எம்மீது பலவந்தமாக திணிக்கப்பட்ட இம்முறை குறித்து நாட்டு மக்கள் என்ற வகையில் நாம் விளக்கமளிக்க வேண்டி யுள்ளது. யுத்தத்தால் அடைய முடியாத ஒன்றை இவ்வாறு 13 வது அரசியல் அமை ப்பு விதியைப் பயன்படுத்தி அடைய முயற்சிக்கும் ஒன்றாக நாம் கருதுகிறோம். ஏகாதிபத்திய வாதிகளுக்காக உழைக்கும் சர்வதேச வாதிகளின் குறுகிய நோக்கங்களை நாம் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஐப்பசி 30, 2012

நாடெங்கும் கனத்த மழை, வடக்கு, கிழக்கில் கடும் காற்று

தாழமுக்கம் முல்லைத்தீவை நோக்கி நகர்வு, அவதானமாக இருக்க மக்களுக்கு எச்சரிக்கை

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் நேற்றுப் பிற்பகலில் முல்லைத்தீவிலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்த துடன் அது சிறு சூறாவளியாக மாறி முல்லைத்தீவு வழியாக இலங்கைக்குள் பிரவேசித்து இந்தியாவை நோக்கி நகரும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று தெரிவித்தது. இதன்போது நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கடும் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை திருகோணமலை வரையிலான கடற் பிரதேசம் கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்படும். மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை வரை ஊடாக மட்டக்களப்பு வரை கடற்பரப்பில் அதிக கொந்தளிப்பு காணப்படுவதுடன் அப்பகுதிகளில் கடும் மழையுடன் கூடிய காற்று வீசும். இதனால் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை அறிவுறுத்துகிறது.

ஐப்பசி 30, 2012

தென் சீன கடலில் புயல், 82 ஆயிரம் பேர் இடம் பெயர்வு

தென் சீன கடல் பகுதியை “சன்-டின்” புயல் தாக்கியதை அடுத்து அப்பகுதியில் இருந்து 82 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம் பெயர்ந்தனர். புயல் அப்பகுதியை கடந்து செல்லும் நேரத்தில் கடுமையான காற்றுடன், மழை கொட்டித் தீர்த்தது. புயல் பாதிப்பால் ஹாய்னன் மாகாணம் முற்றிலுமாக முடங்கியுள்ளது. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட் டுள்ளது. கடற் கரையோரத்தில் வசித்து வந்த மக்கள் அனைவரும் பாது காப்பான இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட் டுள்ளதாக சீன அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஹாய்னன் மாகாணத்தில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன. உயிரிழப்பு ஏற்பட்டது குறித்த விபரம் உடனடியாக வெளியிடப் படவில்லை. பிலிப்பைன் ஸையும் இப்புயல் தாக்கியது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். வடக்கு வியட்நாம் வழியாக புயல் கரையைக் கடக்கும் போது சுழன்று வீசும் காற்றால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 30, 2012

சான்டி புயல் எச்சரிக்கையால் அமெரிக்காவே ஸ்தம்பிதம்

அமெரிக்காவை மிரட்டிவரும் சான்டி புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் அது குறித்து அவதானமாக இருக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எச்சரித்துள்ளார். பல மாநிலங்களிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதோடு பாடசாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மணிக்கு சுமார் 75 மைல் வேகத்தில் புயல் கரையை கடக்கும் எனவும் அந்த மையம் அறிவித்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக சான்டி புயல் மிகவும் அகலமாக, 520 மைல் அளவுக்கு பரவி அமெரிக்காவை தாக்கும் எனவும், இதன் காரணமாக மிசிசிபி ஆற்றில் மிகப் பெரிய அலைகள் உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. சான்டி புயல் கடந்த 2 தினங்களாக ஜமைக்கா, கியூபா, தெற்கு ஹெய்டி நாடுகளை துவம்சம் செய்தபடி கடந்தது. இதில் அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 60 பேர் பலியானார்கள். பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட் டுள்ளது. என்றாலும் சான்டி புயலின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. நேற்று முன்தினம் சான்டி புயல் மேலும் வலுப்பெற்று அமெரிக் காவை நெருங்கியது. இதனால் அமெரிக் காவின் கிழக்கு கடற்கரையோர மாகாணங்களில் வசிக்கும் மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். இது இன்றைய தினம் தமிழ் மக்கள் பெரும் அளவில் வாழும் ரொறன்ரோ, மொன்றியல் பகுதிகளைக் தாக்கலாம் என வானிலை ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 29, 2012

Canadian Hurricane Centre predicting Ontario will receive worst of Sandy

The Canadian Hurricane Centre says Ontario may see the worst of Sandy when it hits early next week. Spokesman Bob Robichaud says while rainfall amounts are still hard to predict, southern and eastern Ontario could see between 50 and 100 millimetres late Monday and early Tuesday. He says those areas will also see high winds, although they will likely not hit hurricane strength. Sandy is currently moving northward over the Bahamas and is expected to continue to track north while maintaining its hurricane strength. A large, high-pressure system over the Maritimes is expected to block Sandy's advance, pushing it into the mid-Atlantic states on late Monday or early Tuesday. The storm is also being fed by a trough of low pressure in the U.S. Midwest. Forecasters predict its effects will be far-reaching on Canadian territory, with rainy and blustery conditions also expected for Quebec and the Maritime provinces. Sandy has so far killed more than 40 people in the Caribbean, wrecked homes and knocked down trees and power lines.

ஐப்பசி 29, 2012

முல்லைத்தீவில் 4000 குடும்பங்கள் இடம்பெயர்வு

முல்லைத்தீவில் பெய்த கடும் மழை காரணமாக ஒட்டுச்சுட்டானைச் சேர்ந்த 4000 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு கடற்கரையின் கிழக்கு பகுதியில் சுமார் 250 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் கடுமையான மழை பெய்து வருகிறது. முல்லைத்தீவில் பெய்த மழையினால் ஒட்டுச்சுட்டான் - முல்லைத்தீவு வீதி வெள்ள நீரினால் மூழ்கியுள்ளது. இதனால் அவ்வீதியுடனான போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுச்சுட்டானில் இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நுவரெலியாவில் 48 வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறைந்தது 11 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதனால் மக்கள் விழிப்பாக இருக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

ஐப்பசி 29, 2012

‘சாண்டி’ சூறாவளி

அமெரிக்காவில் 6 கோடி பேர் பாதிப்பு

கரீபியன் கடல் பகுதியில் நிலைகொண்டி ருந்த ‘சாண்டி’ சூறாவளி அமெரிக் காவின் புளோரிடா மற்றும் மேரிலாண்ட் மாகாணங்களைத் தாக்கியதில் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பதுடன், 60 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இம்மாகாணங்களில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டிருப்பதுடன், மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருப்பதால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சூறாவளித் தாக்கத்தைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெற விருக்கும் அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பராக் ஒபாமா மற்றும் மிட்ரோம்னி ஆகியோர் இம் மாநிலங்களில் நடத்தவிருந்த தேர்தல் பிரசாரப் பணிகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. சாண்டி சூறாவளித் தாக்கத்தால் அமெ ரிக்காவின் 12 மாநிலங்களில் கனமழை பெய்துவருகின்றது. இந்த மாகாணங்களில் தேசிய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் தயார் நிலையில் வைக் கப்பட்டிருப்பதாக அமெரிக்கச் செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சூறா வளித் தாக்குதலுக் குள்ளான பகுதிகளில் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடும்மழை தொடர்வதால் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி 29, 2012

புலம்பெயர்ந்தோர் விருப்புக்கேற்ப தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்படுவதாலேயே சிக்கல் நிலைமை

தமிழ் மக்களுக்கு நன்மை தரும் திவிநெகும சட்டமூலத்தை தமிழ் கூட்டமைப்பு எதிர்ப்பது துரோகம்

ஒருவேளை உணவை கொடுப்பதன் மூலம் வறுமையிலிருந்து மக்களை மீட்க முடியாது

திவிநெகும சட்ட மூலம், அமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட நேர்முகம்

13வது திருத்தத்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவு எதிர்ப்பும், விமர்சனமும் உள்ளது. அந்த எதிர்ப்பு உத்வேகத்துடன் வேகமாக வெளியே வர இடமளிக்காதீர்கள் நாம் வாக்கு பெறும் நோக்கில் இந்த வேலைத் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. வடக்கில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களைத் தனி மனிதர்களாகவும், குடும்பங்களாகவும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதுதான் இத் திட்டத்தின் நோக்கம். (மேலும்.....)
 

ஐப்பசி 29, 2012

13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் எதிர்பேன் - மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க

'நாட்டின் இறைமை, ஒருமைப்பாட்டின் பிரகாரம் அரசியலமைப்புக்கு அமைவாக நான் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். எனினும், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை ரத்து செய்தால் நான் எதிர்ப்பேன்' என்று மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார்.  13ஆவது திருத்தத்தின் நகல் உண்மையிலேயே மாகாணசபைகளில் அமுல்படுத்தப்படவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த திருத்தம் மாகாணசபைகளுக்கு கொண்டுவரப்பட்டது. வட, கிழக்கில் இந்த முறைமை உண்மையாக நடைமுறையில் இல்லை. தற்பொழுது கிழக்கு மாகாணசபை நிறுவப்பட்டுள்ளது. எனினும் அங்கும் 13ஆவது திருத்தம் முறையாக அமுல்படுத்துவதில்லை. இது அரசாங்கத்தினதோ அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ கருத்து அல்ல. இது எனது தனிப்பட்ட கருத்தாகும். 13ஆவது திருத்தத்தை ரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுத்தால் நான் அதை எதிர்ப்பேன் என்று அவர் மேலும் கூறினார்.

ஐப்பசி 29, 2012

இந்திய அமைச்சரவை மாற்றம், 22 புதிய அமைச்சர்கள் நியமனம்

இந்திய அமைச்சரவை இன்று ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப் புதிய அமைச்சரவையில் 22 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இதில் 7 கபினட் அமைச்சர்களும் 2 இராஜாங்க அமைச்சர்களும் 13 துணை அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். ராஜஸ்தானில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு இந்த பதவியேற்பு வைபவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, வெளிவிவகார அமைச்சராக சல்மான் குர்ஷித் நியமனம் பெற்றுள்ளார். அமைச்சர் பதவியை எற்றக தயாராக இருக்கவில்லை. இதனால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. (மேலும்.....)

ஐப்பசி 29, 2012

நவம்பர் 14 ஆம் திகதி ஐரோப்பா தழுவிய வேலை நிறுத்தப் போராட்டங்கள்

நவம்பர் பதின் நான்காம் திகதி ஐரோப்பா முழுவதும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வதற்கான அறிவிப்பை தொழிற்சங்கங்கள் விடுத்துள்ளன. ஆரம்பத்தில் கிரேக்கம், சைப்பிரஸ், ஸ்பெயின், போத்துக்கல் ஆகிய நாடுகளின் தொழிற்சங்கங்களே இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைந்து அழைப்புவிடுத்தன, பின்னதாக இந்த அழைப்பு ஐரோப்பா முழுவதுக்குமான அழைப்பாக அமைந்தது. உலகம் முழுவதிலும் இருந்து போராட்டத்திற்கான ஆதரவு பல்வேறு வடிவங்களில் கிடைத்ததாக ஏற்பாட்டாளர்கள் தேரிவித்தனர். திவாலாகும் வங்கிகளுக்கும் பல்தேசிய நிறுவனங்களுக்கும் மக்களிடமிருந்து அறவிடும் வரிப்பணத்தை வழங்வதற்கு எதிராகவும், வேலை நீக்கங்களுக்கு எதிராகவும், அரசுகளின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராகவும் இந்தப் போராட்ட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 29, 2012

Brown Rice verses White Rice……..what is your healthy choice?

(Written by Dr harold Gunatillake – health writer)

In the nineteen fifties and before, when everything and anything white was considered better and healthier, even the cooked rice on the dining table was preferred to be white; complemented well with the darker curries and the decorated table cloth, pleasing to the eyes, initiated a wholesome appetite, too. Would you serve brown rice to your guests and that would be most humiliating? Even restaurants would not serve brown rice, patronizing the Chinese restaurants would serve mostly jasmine white rice with a known GI (glycaemic index), as much as 90, or fried white rice. That was the period when our servants were given brown rice, and the masters and the other household cohorts enjoyed the white varieties. In the villages brown rice was preferred to white, may be too lazy to go through the process of hulling and polishing, or they knew their nutritional values. (more....)

ஐப்பசி 29, 2012

மியன்மாரில் தொடரும் கலவரம்

22,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு: 4000 க்கும் அதிகமான வீடுகள் தரைமட்டம்

மியன்மாரில் மீண்டும் ஏற்பட்டுள்ள இனக் கலவரத்தில் 22,000 க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதோடு 4000 க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறியுள்ளது. இந்த புதிய கலவரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ‘எமக்கு கிடைத்த புதிய தரவுகளின்படி 22,587 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதேபோன்று 4,665 வீடுகள் தரைமட்டமாகியுள்ளன. மியன்மார் அரசு ஐ.நாவுக்கு வழங்கிய தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது’ என்று யான்கோனுக்கான ஐ.நா. தூதுவர் அஷோக் நிகம் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு இந்த தகவலை அளித்துள்ளார். இதில் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்தோரில் 21,700 பேர் முஸ்லிம்களாவர் என அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஐப்பசி 28, 2012

KP’s secret diaspora Tamil contacts revealed

(by Our Special Reporter , Sri Lanka Guardian )

The Sri Lanka media quoting Media Minister Keheliya Rambukwella reported that ‘Communication links with important members of the pro-LTTE Tamil Diaspora had been established in an attempt to win their hearts and minds and convince them of the futility of continuing with the state of mistrust and tension’ the government said yesterday. (The Island, the Colombo based pro-Rajapaksa daily). This news was hilarious joke for the political leadership of the Tamil Diaspora. Few names surfaced out as claims have been made that a team of Tamil delegation will be visiting Sri Lanka soon. One Inbam from Canada, another with the same name from London together with a Labour Party Councillor from North West London Kana are to join a bandwagon to prop up the government and undermine the elected leadership of the Tamils in Sri Lanka. The Councillor had confirmed his visit to few of his colleagues and the news slowly started to sneak into the local Tamil community. (more...)

ஐப்பசி 28, 2012

இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ் செல்ல முற்பட்ட வடமராட்சி வாசி கைது

இந்தியாவில் 25 ஆண்டுகளாக சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்து மீண்டும் இலங்கை செல்ல முயன்ற முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இலங்கை வடமராட்சி மாவட்டம், துன்னாலை பகுதியைச் சேர்ந்த மோசஸ் மகேந்திரன் 68, இவர் சுற்றுலா விசாவில் 1987 இல் சென்னை வந்தார். விசா முடிந்து நாடு திரும்பாமல் 21 ஆண்டுகளாக ஐதராபாத், பெங்களூர், புவனேஸ்வர், டில்லி, ஜம்மு, மும்பை நகரங்களில் வேலை பார்த்து வந்தார். இவரை சென்னை பொலிஸார் தேடிவந்தனர். கடந்த 4 ஆண்டுகளாக புட்டபர்த்தியில் வேலை பார்த்து வந்த இவர், மீண்டும் கள்ளத்தோணி மூலம் இலங்கை செல்ல திட்டமிட்டு நேற்று முன்தினம் இராமேஸ்வரம் வந்தார். இவரிடமிருந்து ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் சுரேஷ் (24), காத்த லிங்கம் (26) மற்றும் ரயில்வே பீடர் ரோடு சீனி ஆகியோர் 13 ஆயிரம் (இலங்கை பணம் 7 ஆயிரம்) ரூபாவை பறித்துச் சென்றனர். இதுபற்றி மோசஸ் பொலிஸில் தெரிவித்தார். ஆட்டோ டிரைவர்கள் சுரேஷ், காத்தலிங்கம், மோசஸ் ஆகியோரை பொலிஸார் கைதுசெய்தனர்.

ஐப்பசி 28, 2012

கனடாவில் சுனாமி எச்சரிக்கை வாபஸ்

கனடாவின் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் 7.7 ரிச்டர் அளவுகோலில் பூமியதிர்ச்சி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஹவாயிலுள்ள சைன்  தீவைத் சுனாமி தாக்கக்கூடும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. சனிக்கிழமை நள்ளிரவு இப்பகுதியில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், கரையோரத்தை அண்டிய பகுதிகளிலுள்ள மக்களை வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து முதலாவது அலை 2.5அடி உயரத்தில் எழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சில பகுதிகளில் 3 முதல் 6 அடி உயரத்திற்கு அலை எழுமென முன்னர் கணிக்கப்பட்டதுடன், தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

ஐப்பசி 28, 2012

TNA splits 4-1 on registration

(By Chris Kamalendran )

Four constituent parties of the Tamil National Alliance (TNA) are in favour of registering their alliance as a political party, but a fifth is not in favour. Those in favour are the TELO, the PLOTE, the TULF and the EPRLF. However the ITAK (Federal Party) is opposed to the move. TNA parliamentary group leader R. Sampanthan, a member of the Ilankai Tamil Arasu Kachchi (ITAK), said this issue should not be a priority for them at the moment. When TNA members met in Colombo on Thursday, Mr. Sampanthan said registering the TNA as a political party was not a priority but finding a political solution to the problems of the Tamil people was more important. However, members of the other four parties said they would like to file an application for registration with the Elections Commissioner. A TNA source said that some of the constituent parties were worried that with ITAK being the dominant party, their parties and candidates would get ignored when elections were held in the North and East. Mr. Sampanthan said the matter could be discussed later. The matter has been under discussions since the May 2009 defeat of the LTTE. (The Sunday Times)

ஐப்பசி 28, 2012

பண அட்டை மோசடி குற்றச்சாட்டில் இலங்கையர் இருவர் நியூயோர்க்கில் கைது

சட்டவிரோதமான முறையில் நூற்றுக்கணக்கான போலி பண அட்டைகளைப் பயன்படுத்தி 55 ஆயிரம் அமெரிக்க டொலர்களை தன்னியக்க இயந்திரங்களிலிருந்து பெற்றுக்கொண்டதான குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர்கள் இருவர் நியூயோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவரூபம் ஞானபண்டிதன் (வயது 28) மற்றும் ராகவன் பத்மசேனன் (வயது 24) ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நியூயோர்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் இருவரும் கனடா, ஒன்டாரியோ நகரில் வசித்து வருபவர்களாவர். இவர்களிடம் 257 போலி பண அட்டைகள், ஹோட்டல்களின் ரகசிய அட்டைகள், வெற்று அட்டைகள் என்பன இருந்துள்ளதுடன் 55ஆயிரத்து 689 அமெரிக்க டொலர்களும் காணப்பட்டன என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். (Reuters)

ஐப்பசி 28, 2012

கனடாவில் 7.7 ரிச்டர் நிலநடுக்கம்

கனடாவின் மேற்கு கடலோரப் பகுதியிலுள்ள குயின் சார்லோட்டி தீவில் இன்று அதிகாலை 7.7 ரிச்டர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியில் ஓடியுள்ளனர். இந்நிலையில் அந்த தீவுப் பகுதியில் சில நிமிடங்கள் கழித்து 5.8 ரிச்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் குயின் சார்லோட்டி தீவில் ஏற்பட்ட பாதிப்புகளின் விபரம் உடனடியாக தெரியவரவில்லை. இதற்கிடையே 7.7 ரிச்டரில் பதிவான நிலநடுக்கம் காரணமாக கோலரடோவில் உள்ள அமெரிக்க புவியியல் துறை சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளதுடன் தெற்கு அலஸ்கா, வடக்கு கலிபோர்னியா, ஏரேகான் மற்றும் வாஷிங்டன் ஆகிய பகுதிகளிலுள்ள கடலோரங்களில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐப்பசி 28, 2012

கூட்டமைப்பின் கோரிக்கையும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட முடியாதென நிராகரித்துவிட்ட சீனாவும்

TNA பாராளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் தலைமையிலான ஐவர் கொண்ட குழு சீனத்தூதுவரை சந்தித்தபோது மேற்காணும் கோரிக்கையை முன்வைத்ததாக கூறப்படுகிறது. பிற விடயங்கள் சகிதம் சமீபத்திய இந்தியத் தலைவர்களுடனான கருத்துப்பரிமாற்றங்கள் தொடர்பிலும் கேட்டறிந்து கொள்ளும் வகையில் கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் சந்தித்தபோது பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் சீனா இலங்கைக்கு துணைபுரிவதன் பெறாக, இலங்கையின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சீனா அதன் அறிவுரைகளை வழங்கவேண்டும் என சம்பந்தன் கேட்டுக்கொண்டுள்ளார். அர்த்தமுள்ள தீர்வைக் காண்பதற்கும், அரசுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும் எமக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்துள்ளன. அந்த வகையில் இத்தகைய முன்னெடுப்பில் சீனாவும் துணைபுரிய வேண்டும் எனக் கேட்டமைக்கு பதிலளித்த சீனத்தூதுவர் பீஜிங்கின் கொள்கையானது பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லையாதலால் அதனைச் செய்ய முடியாது எனக் கூறியதாக அறியமுடிகிறது. (மேலும்...)

ஐப்பசி 28, 2012

சூடு பிடித்துள்ள 13

நாட்டில் அமைதி, சமாதானம் தோன்றிய இன்றைய காலகட்டத்தில் இச்சட்டம் அவசியமா? அவசியமற்ற ஒன்றா?

ஆளும்கட்சி, எதிரணியினர் முன்வைக்கும் காரசாரமான விவாதம்

  • அரசியலமைப்பிற்கு மதிப்பளிப்பது மிக மிக அவசியம்

  • மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு தேவையான ஒன்று

  • பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுகிறது TNA

  • தமிழர் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுமோ?
    வடக்கு கிழக்கில் மட்டுமே வெகுஜன வாக்கெடுப்பு !

(மேலும்...)

ஐப்பசி 28, 2012

22 வருடங்கள் மெளனித்திருக்கும் முஸ்லிம்களின் வெளியேற்றம்

விடுதலைப் புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்காக நடத்திய விடுத லைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முழுமையாக மழுங்கடிக் கப்படுவதற்கு அவர்கள் விட்ட மாபெரும் வரலாற்றுத்தவறுகள் பல காரணமாக இருக்கின்றன. அவற்றுள் ஒன்றாக இற்றைக்கு இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்னர் வட மாகாணத்திலிருந்து தமிழ் பேசும் மற்றுமொரு சகோதர இனமான முஸ்லிம் மக்கள் அங்கி ருந்து விரட்டியடிக்கப்பட்டமையைக் குறிப்பிடலாம். பெரும்பான்மையின அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்பு போன்ற பல விடயங்களில் அநீதியாகச் செயற்படுகிறது என்று கூறி தமிழ்த் தலைவர்களால் ஆரம்பிக்கப் பட்ட அஹிம்சை வழிப் போராட்டம் பின்னர் அதே தமிழ் தலைவர் களால் தமிழ் இளைஞர்களுக்கு உசுப்பேற்றப்பட்டு ஆயுதப் போராட்டமாக மாறி பின்னர் அது திசைமாறிச் சென்றதனால் அது இன்று முற்றாகவே அழித்தொழிக்கப்பட்டமை வரலாறாகிவிட்டது. (மேலும்....)

ஐப்பசி 28, 2012

கனடா இளையராஜா நிகழ்ச்சியும் கவுண்டமணி பாணி தமிழ்த் தேசிய விமர்சனமும்

கனடாவில் நடைபெறும் இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு ஏன் தமிழ்த் தேசியவாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?

(ஸ்ரீதர்)

தமிழ்த் தேசியவாதிகளாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிற சினமாக்காரர்கள்தான் தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இளையராஜா போன்ற உலக பிரபலங்கள், உலகத் தமிழர்களின் அழைப்பை ஏற்று சென்றால், அதன்பிறகு திரைப்படத்தில் வாய்ப்புகள் இல்லாத சினிமாக்காரர்களுக்கு வெளிநாட்டிலிருந்து அழைப்பு வராது. ‘இப்படிவெளிநாடு வாழ் தமிழர்கள் இளையராஜா போன்ற ஆளுமைகளை அழைத்தால் அதன் பிறகு நம்மை அழைக்க மாட்டார்கள்’ என்ற கவலையே இதில் பிரதான பாத்திரம் வகிக்கிறது. தனது ‘ஆதிபகவன்’ ஆடியோ வெளியீட்டை கனடா தமிழர்களிடையே நடத்திவிட்டு வந்த வாயோடு, ‘இளையராஜாவின் இசை நிகழ்ச்சி கனடாவில் நடப்பதால், ஈழத்தமிழர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா? தமிழர்களின் பிரச்சினை தீர்ந்துவிடுமா’ என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் கேட்கிறார் இயக்குநர் அமீர். (ஆதிபகவன் தயாரிப்பாளர், அதிமுக ஆதரவு தமிழ்த் தேசியவாதிகள் கடுமையாக எதிர்க்கிற திமுக சட்டமன்ற உறுப்பினர் இரா. அன்பழகன்.) (மேலும்....)

ஐப்பசி 28, 2012

வடபுல முஸ்லிம்கள் குற்றமிழைக்காது தண்டனை அனுபவிக்கும நிரபராதிகள்

முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் பல்வேறு தடைகள் உள்ளன. இந்தச் சவால்களை முறியடித்தே நாம் இந்த நடவடிக்கையில் முன்னேற வேண்டியுள்ளது. புலிகளின் காலத்தில் அவர்களின் அதிகாரத்தின் கீழ் வேலை செய்யப்பழக்கப்பட்ட அநேகமான அதிகாரிகள் இன்னுமே அதே மனோபாவத்துடன்தான் பணியாற்றுகின்றனர். இவர்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு இதய சுத்தியாக ஒத்துழைக்க மறுக்கின்றனர். மீள்குடியேற வருவோரை ‘நாட்டாண்மை’ போல் நடத்துகின்றனர். “வந்தான் வரத்தான்” களாகக் கருதி உதவிகள் மறுக்கப்படுகின்றன. அலைக்கழிக்கப்படுகின்றனர். உயரதிகாரிகளாக இருப்போர் முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டுகின்றனர். இதில் வேதனை என்னவென்றால், மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் 14 உதவி அரச அதிபர் பிரிவுகள் (பிரதேச செயலகங்கள்) உண்டு. அந்தப் பிரிவுகளில் பணியாற்றும் பிரதேச செயலர்கள், உதவிப் பிரதேச செயலர்களில் ஒருவரேனும் முஸ்லிம் இல்லை. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் நிர்வாக சேவை தரத்தில் பணியாற்றும் எந்த ஒரு முஸ்லிம் அதிகாரியும் இல்லை. இந்த சூழ்நிலையால் சமூக ரீதியில் இந்த மக்களுக்கு ஓரவஞ்சனை நடக்கின்றது. எனினும் நல்ல மனம் படைத்த தமிழ் அதிகாரிகளை நான் நன்றியுடன் நினைவு கூருகின்றேன். (மேலும்....)

ஐப்பசி 28, 2012

உருண்டோடிய 22 ஆண்டுகள் மாறாத வடுவாக மாறிவிட்ட முஸ்லிம்கள் வெளியேற்றம்

சுமுகமாக வாழ்ந்த காலத்திலே தான் இனப்பிரச்சினை தோற்றம் பெற்றது. அரசுக்கும் இயக்கங்களுக்குமிடையே ஆங்காங்கே மோதல்கள் இடம்பெற்றன. அதுபோல சகோதர இயக்கங்களுக்கிடையேயும் மோதல்களும் களையெடுப்புக்களும் நிகழ்ந்தன. இத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளிலும் கூட முஸ்லிம்கள் வெளியேற நினைக்கவில்லை. அனைத்துக்கும் தாக்குப்பிடித்து சொந்த மண்ணிலே தான் வாழ்ந்து வந்தனர். முஸ்லிம் வீடுகளில் தஞ்சமடைந்த இயக்க உறுப்பினர்களை முஸ்லிம்கள் காட்டிக்கொடுக்கவில்லை. இயன்றவரை காப்பற்றி பாதுகாப்பாக வெளியேற்ற முஸ்லிம் சமூகம் அஞ்சவில்லை, தயங்கவுமில்லை. மற்றைய இயக்கங்களை செயலிழக்கச் செய்த புலிகள் தமது தேவைகளுக்கு முஸ்லிம்களைப் பயன்படுத்தினர். சாப்பாட்டுப் பார்சல்கள், பணம், விளைவுப் பொருட்களை, புலிகளுக்கு வழங்கி உதவினர். புலிகளின் தேவைகளுக்கு வாகனங்களையும் கொடுத்துதவினர், இருந்தபோதும் தமக்கு சந்தேகமாகவுள்ள முஸ்லிம்களை புலிகள் கொன்றொழிக்க தவறவில்லை. முஸ்லிம் அதிகாரிகளைக் கூட புலிகள் விட்டுவைக்கவில்லை. பொறுமை காத்து வாழ்ந்த நிலையிலேதான் இற்றைக்கு 22 ஆண்டுகளுக்கு முன்னர் 90 ஒக்டோபர் கடைசிப் பகுதியில் உடனடியாக முஸ்லிம்கள் வெளியேறவேண்டுமெனப் பணிக்கப்பட்டனர்.  (மேலும்....)

ஐப்பசி 28, 2012

கேள்வி...? பதில்......!

கே.பி.தமிழ் மக்களின் பிரதிநிதி இல்லையென்று சம்பந்தன் ஐயா தெரிவித்திருக்கிறார். முன்னர் கே.பி.புலிகள் இயக்கத்தில் இருந்தபோது அவரை இவர் தலையில் தூக்கி வைத்து ஆடியவர்தானே? இப்போ ஏன் இப்படிக் கூறுகிறார்?

அப்போ அவர் புலி என்பதால் சம்பந்தன் ஐயாவிற்கு ஹீரோவாகத் தெரிந்தார். இப்போ புலிகள் இல்லாதபடியால் துரோகியாகக் காட்ட முற்படுகிறார். அத்துடன் கே.பி.தேர்தலில் போட்டியிட்டால் தமது பக்கம் வீக் ஆகிவிடலாம் என்பது அவர்களது கணிப்பு. அதனால்தான் இப்போதிருந்தே தமிழ் மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். அதற்குத் தமிழ் மக்கள் இன்னமும் மூடர்களா? இல்லை என்பது இவர்களுக்குத் தெரியாதுள்ளமை வருத்தம் தருகிறது.

ஐப்பசி 27, 2012

உறவுகளை திருப்பிக்கொடு...!

காணாமல் போனோரை நினைவு கூறும் 22ஆவது தேசிய நினைவூட்டும் நிகழ்வு, சீதுவை, ரத்தொலுவ சந்தியிலுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில், வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் காணாமல் போனவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் கலந்துகொண்ட மதத் தலைவர்கள், 'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான சுதந்திர முறைமையை அமுல்படுத்துமாறும் காணாமல் போனவர்களை திருப்பித் தருமாறும் அவர்களது குடும்பங்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்குமாறும்' கோரிக்கை விட்டனர். இந்நிகழ்வின் இறுதியில், காணாமல் போனோரின் உறவினர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 27, 2012

அகாலம் மனதிலிருந்து…….

எமது நாட்டில் ஒருகாலத்தில் (இன்று இன்னும் பயங்கரம்) சட்டம் ஒழுங்கு? துறையின் நிர்வாணம் அதிகார அகங்காரம் தோலுரிக்கபட்டுள்ளது தமிழ் பொலிஸ் அதிகாரிகள் சொல்லவே தேவையில்லை. வதை முகாம்களில் மனிதம் மதிப்பிழந்து போனதை மனித சுயமரியாதை கௌரவத்திற்கு விடப்படும் சவாலை இவை பதிவு செய்திருக்கின்றன. இன்று இவை நவீன வடிவங்களைப் பெற்று மெருகேறியுள்ளன. சிறப்பான மொழி நடையில் சாதாரணமாக “நச்சென்று” புரியக் கூடிய விதமாக புஸ்பராணி இதனை எழுதியுள்ளார். டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு  மாஸ்லாவா 19ஆம் நூற்றாண்டு முற்பகுதி சிறைகளில்  அனுபவித்த துயரங்களை விட புஸ்பராணி கல்யாணி போன்றவர்கள் 20 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியில் அனுபவித்தவை ஒரு கண்ணோட்டதில் மிகக் கொடுமையானவை. யுத்தமும் வன்முறையும் என்றாகிவிட்ட சமூகத்தில் பெண்கள் எதையெல்லாம் அனுபவிக்க வேண்டி வருகிறது. (மேலும்....)

ஐப்பசி 27, 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக யாழில் துண்டுப் பிரசுரம் விநியோகம்

இந்தியாவின், கூடங்குளம் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணு உலையை உடனடியாக நிறுத்துமாறு கோரி மக்கள் போராட்ட இயக்கம் இன்று வெள்ளிக்கிழமை யாழ். நகர்ப் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவின் தென் பிராந்தியத்தில் அமைக்கப்பட்டுவரும் இந்த அணு உலையில் வெடிப்புக்களோ, கசிவோ ஏற்படும் பட்சத்தில் அதன் கதிர் வீச்சினால் இலங்கைக்கும் பாரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புக்கள் இருப்பதனால் அதை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியே இந்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. (மேலும்....)

ஐப்பசி 27, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்

பிரச்சினை உண்டு; ஆனால் பாதிப்பில்லையாம்!- சுரேஷ் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருப்பதை ஏற்றுக்கொண்ட அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி இந்நாட்டின் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அதன் செயற்பாடுகளை இந்த பிரச்சினை பாதிக்காது என்றும் கூறினார். கூட்டமைப்புக்குள் பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. இதை தீர்ப்பதற்கான கருத்தாடல்கள் நடந்து கொண்டுள்ளன';. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனிக்கட்சியாக பதிவு செய்வது பற்றிய பிரச்சினையே இருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பை தனியொரு கட்சியாக பதிவு செய்ய வேண்டுமென்ற கருத்து இருந்தே வந்துள்ளது. ஆனால், இதிலுள்ள அங்கத்துவ கட்சிகள் சில தயக்கம் காட்டுகின்றன' எது எப்படியிருந்தபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எப்போதும் தமிழ் மக்களை ஒரே குரலில் பிரதிநிதித்துவம் செய்யும். இது எமது நோக்கத்திற்கு தடையாக இருக்காது. தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்கும் எமது இலக்கு மாறாது' என்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை இல்லாமல் அமைக்கப்பட்ட ஒன்று. தேர்தல் வெற்றியை மட்டும் மையமாக கொண்டு அமைக்கப்பட்டது. இதில் ஒற்றுமை அர்பணிப்பு, விட்டுக்கொடுப்பு, திறமையான் செயற்பாட்டடை எதிர்பார்த்து ஏமாந்து போவது தமிழர்களின் வழமை. இது தொடர்ந்தது. இனியும் தொடரும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 27, 2012

14 புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு திரும்பினர்

இலங்கையைச் சேர்ந்த 14 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று காலை 11.30 மணியளவில் இலங்கை விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர். தங்காலை - குடாவெல்ல பகுதியில் மீனவர்கள் சிலரை கொலை செய்துவிட்டு மீன்பிடி படகை கடத்தியதாக கூறப்படும் மேற்படி நபர்களுக்கே அவுஸ்திரேலியாவிடம் புகலிடம் மறுக்கப்பட்டு மீண்டும் நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம்; நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ள இவர்களின் பாதுகாப்பு அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பு பிரிவினர் சிலர் வருகைதந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதனையடுத்து குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவினர் குறித்த நபர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

ஐப்பசி 27, 2012

வழிபாட்டுத் தளங்களை நாசமாக்கும் நாசகாரிகள்

அநுராதபுரம் மல்வத்து ஓய சிங்க கனுவ பகுதியில் அமைந்துள்ள தக்கியா பள்ளிவாசல் முஸ்லிம்களின் பெருநாள் தினமான இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக தக்கியா பள்ளிவாசலுக்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை திருகோணமலை பாலையூற்று மாதா அம்மன் ஆலயத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த மாதாவின் திருச்சொரூபம் நேற்றிரவு இனந்தெரியாதோரால் சேதமாக்கப்பட்டுள்ளது. திருச்சொரூபத்தின் தலை மற்றும் கை ஆகியவை சேதமாக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

ஐப்பசி 27, 2012

கப்பலை கைது செய்யுமாறு பிடியாணை

கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள மலேஷிய கொடி தாங்கிய எம்.ரி.சாக் சீரியஸ் என்ற கப்பலை கைது செய்வதற்கான பிடியாணையை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. ஊழியர்களுக்கு ஊதியத்தை வழங்காமல் இருப்பதனால் குறித்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பலில் வேலை செய்த 15 பேரின் சார்பில் கனகசபை பூபாலசிங்கம் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். கப்பலின் உரிமையாளர்கள் தற்போதைய ஊழியர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை நியமிக்கவும் மனுதாரர்களின் சம்பளத்தை வழங்காமல், கப்பலை இலங்கையின் நியாயாதிக்கத்துக்கு  அப்பால் கொண்டுசெல்லவும் ஆயத்தம் செய்வதாக மனுதாரர்களின் வழக்குரைஞர் நீதிமன்றத்தில் எடுத்துரைத்ததுடன் இந்த கப்பலை கைது செய்ய ஆணை பிறப்பிக்குமாறு அவர் கேட்டுகொண்டார். மனுதாரர்களின் வழக்குரைஞரின் வாதங்களை கேட்ட மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி ஜயதிலக கப்பலை கைது செய்வதற்கான பிடியானையை பிறப்பித்தார்.

ஐப்பசி 27, 2012

சுற்றுலா மையமாக மாறிய யாழ். கோட்டை

நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்புச் செய்யப்பட்டு வரும் யாழ் கோட்டையை பார்ப்பதற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். பெரும்பாலும் தென்னிலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணம் கோட்டை ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. இதனால் யாழ்ப்பாணம் வரும் பயணிகள், வடமாகாணத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை அறிந்துகொள்வதற்கு வசதியாக தேசிய மரபுரிமை அமைச்சு மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வரலாற்று சிறப்புமிக்க இடங்களின் புகைப்படங்கள் கோட்டைக்குள் காட்சிப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் கோட்டையை பார்வையிடுவதுடன் வடமாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை அறியக்கூடிய வாய்ப்பையும் பெற்றுள்ளனர்.

ஐப்பசி 27, 2012

குழந்தைகளை தாயிடமிருந்து பிரிப்பது மனிதாபிமானமற்ற செயல் - ஒஸ்லோ ஆயர்

நோர்வே சிறுவர் காப்பகங்களின் நிலைப்பாடுகளும் அவற்றின் செயற்பாடுகளும் திருப்திகரமற்ற நிலையில் காணப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ள ஒஸ்லோ ஆயர் வண. Ole Christian M. Kvarme இவ்விடயத்தை நோர்வே ஆயர்கள் ஊடாக நோர்வே அரசுக்கு அறிவிப்பதற்கும் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உறுதியளித்திருப்பதாக தெரியவந்துள்ளது. ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இடம்பெற்ற இலங்கையைச் சேர்ந்த இரு தாய்மாரின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்றதையடுத்து டொம் தேவாலய நிர்வாகம் மேற்படிபோராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தியதுடன் தாம் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகவும் உத்தரவாதம் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் சம்பந்தபபட்ட இருதாய்மாருக்கு அழைப்புவிடுத்திருந்த டொம் தேவாலயம் மற்றும் ஒஸ்லோ ஆயர் ஆகிய தரப்புகள் வியாழக்கிழமை பாதிக்கப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தையொன்றையும் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். St. Hallvards, Place 3, Egedes Street Bishops office, Oslo என்ற இடத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது லத்விய, சோமாலியா, இந்தியா, பாகிஸ்தான், போலந்து, ரஷ்யா மற்றும் இலங்கையர் என சுமார் 15 பேர் வரையில் கலந்துகொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

ஐப்பசி 27, 2012

(நன்றி: விகடன்)

ஐப்பசி 27, 2012

பதவியில் இருக்கும் மாகாண சபைகளையே ஒவ்வொரு மாகாண சபை என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

திவி நெகும சட்டமூலம் இலங்கை யின் அரசியல் சாசனத்திற்கு ஏற்புடைய முறையில் அமைந்திருக்கின்றதா? என்பது பற்றி தீர்மானம் எடுப்பதற்காக உச்ச நீதிமன்றம் கூடிய போது சொலிசிட்ட ஜெனரல் யூ. விஜேயதிலக, கமநல சேவை திருத்த சட்ட மூலத்தை பரிசீலனை செய்த உச்ச நீதிமன்றத்தின் நீதியரசர் மார்க் பெர்னான்டோ, நீதியரசர் அமரசிங்க மற்றும் நீதியரசர் வடுகொடபிட்டிய ஆகியோர் அளித்த தீர்ப்பை மேற்கோள் காட்டினார். நீதியரசர் மார்க் பெர்னான்டோ தலைமையிலான உச்ச நீதிமன்றம் பின்வருமாறு தீர்ப்பளித்தது. “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட மாகாண சபை இப்போது கலைக்கப்பட்டு ள்ளது. இதற்கு அமைய ஜனாதிபதி ஒருவர் சகல மாகாண சபைகளுக்கும் பொருத்தமான முடிவையே எடுக்க வேண்டும். அவ்விதம் செய்யாவிட்டால் இந்த சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது. கலைக்கப்பட்ட மாகாண சபையை முதலில் மீள் செயற்படுத்த அல்லது அதற்கு உயிரூட்டாவிட்டால் சட்ட மூலத்தை நிறைவேற்ற முடியாது. ஆயினும் ஒவ்வொரு மாகாண சபை என்று குறிப்பிட்டு இருக்கும் போது பதவியில் இருக்கும் ஒவ்வொரு மாகாண சபையையுமே இந்த தீர்ப்பு குறிக்கின்றது. அதற்கமைய கலைக் கப்பட்ட மாகாண சபையைப் பற்றி சம்பந்தப்படுத்துவது அவசியம் இல்லை.”

ஐப்பசி 27, 2012

தொடரும் மியன்மார் இனக் கலவரம், பலி எண்ணிக்கை 112 ஆக அதிகரிப்பு

மேற்கு மியன்மாரில் முஸ்லிம்களுக்கும் பெளத்தர்களுக்கும் இடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. இந்த வன்முறைகளில் ஆயிரக் கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக மாநில அரசின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ரகினெ மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த புதிய கலவரத்தில் பலர் வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக கூறப்பட் டுள்ளது. கடந்த ஜூனில் ஏற்பட்ட இனக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோர் தொடர்ந்து தற்காலிக முகாம்களில் வாழ்ந்து வருகின் றனர். அதில் பங்காளி மொழி பேசும் ரொஹிங்கியா முஸ்லிம்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த கலவரங்களால் தப்பி வரும் ரொஹிங்கியா முஸ்லிம்களை தடுத்து நிறுத்த பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் இந்த செயலுக்கு ஐ.நா. ஏற்கனவே கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மியன்மாரில் சுமார் 800,000 ரொஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என மியன்மார் அரசும் அந்நாட்டு பெரும்பான்மை மக்களும் கருதிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 26, 2012

த.தே.கூட்டமைப்பில் உள்ள பங்காளி கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான கூட்டம் நேற்று மாலை ஆறு மணிக்கு கொழும்பிலுள்ள கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறான கட்டுக்கோப்புடன் எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எவ்வாறு ஆராயலாம் என்பது குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும் உயர்மட்டக் குழு, நிதிக் குழு மற்றும் ஏனையக் குழுக்களை அமைப்பது பற்றி யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இதேவேளை எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தொடர்ச்சியாக இவ்வாறு ஆராய்வோம் என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்ட து. இக் கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர். ஆனால் கட்சியை பதிவு செய்வதாக எந்த முடிவும் எடுகப்படவில்லை. இந்நிலையில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியை தனித்து பதிவு செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதாக அறிய முடிகின்றது. ஆனால் இதில் கட்சியின் பெயரை உரிமை கோருவதில் சட்டப் பிரச்சனை உள்ளதாக அறியமுடிகின்றது.

ஐப்பசி 26, 2012

வெளியாகியது மைக்ரோசொப்ட் வின்டோஸ் 8!

மைக்ரோசொப்ட் நிறுவனம் வின்டோஸ் 8 இயங்குதளத்தினை நேற்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. வின்டோஸ் 8 இயங்குதளமானது முற்றிலும் மாறுபட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது. கணனி மற்றும் டெப்லட் இரண்டுக்கும் ஏற்றவகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. வின்டோஸ் 8 இன் தோற்றமானது அதன் முன்னைய தொகுப்புகளை விட முற்றிலும் மாறுபட்டதாகவுள்ளது. குறிப்பாகத் திரையின் இடது பக்கக் கீழ் மூலையில் வழமையாகக் காணப்படும் 'ஸ்டார்ட்' பட்டன் இதில் இல்லை. இதற்குப் பதிலாக சிறிய வண்ண வண்ண நீள்சதுர வடிவிலான கட்டங்களைக் கொண்ட முகத்தோற்றத்தினைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு கட்டமும் ஒவ்வொரு அப்ளிகேஷன்களுக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. அப்ளிகேஷன்களைக் கொள்வனவு செய்வதற்கான வசதியும் இதில் தரப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்கது. இவ்வியங்குதளமானது பாவனையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தினைத் தரக்கூடியதாக உள்ளது. எனினும் முன்னைய வின்டோஸ் இயங்குதளங்களைப் பாவித்துப் பழகிப் போனோருக்கு இது சவாலானதாகும்.

ஐப்பசி 26, 2012

இந்திய வெளிவிவகார அமைச்சர் ராஜினாமா

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய மத்திய அமைச்சரவையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாற்றம் ஏற்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே எஸ்.எம்.கிருஷ்ணா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சரவை மாற்றத்தின் போது கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்திற்கொண்டு கட்சிப் பணிக்காக வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டு வந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே எஸ்.எம்.கிருஷ்ணா இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகின்றத. இதேபோன்று அறக்கட்டளை மோசடி சர்ச்சையில் சிக்கியுள்ள சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் பதவியும் பறிபோகும் நிலை காணப்படுவதாக இந்திய செய்திகள் மெலும் தெரிவிக்கின்றன. (இந்துஸ்தான் டைம்ஸ் )

ஐப்பசி 26, 2012

யாழ். கலாசார சீரழிவுகளை தடுக்க பொலிஸார் விசேட நடவடிக்கை

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் நடைபெறும் கலாசாரச் சீரழிவுகளை தடுப்பதற்கு பொலிஸார் விசேட நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பேரேரா தெரிவித்துள்ளார். யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்று வருகின்ற கலாசார சீரழிவுகள் தொடர்பில் யாழ் மாநகரசபை உறுப்பினரால் எழுத்து மூலம் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ் நகரின் முக்கிய பகுதிகளில் இடம்பெறும் கலாசார சீரழிவுகள் கண்காணிப்பதற்கு பொலிஸார் சிவில் உடையில் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர். குறிப்பாக பேருந்து நிலையத்தில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ் கோட்டை மற்றும் முனியப்பர் கோயில் ஆகிய பகுதிகளில் நடைபெறும் கலாசார சீரழிவகளை தடுப்பதற்கு விசேட கண்காணிப்பு நடவடிக்கை எற்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

ஐப்பசி 26, 2012

கூட்டமைப்பு தெரிவுக்குழுவை தவிர்த்தால் அரசாங்கம் தீர்க்கமான முடிவை எடுக்கும்

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த தெரிவுக்குழுவில் பங்கேற்க இதுவரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை முன் வரவில்லை. முற் றாக தவிர்க்கு மானால் தீர்க் கமான முடிவொ ன்றை எட்டுவதற்கு அரசாங்கம் தள் ளப்படும் என ஊட கத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரி வித்தார். தேசிய பிரச்சினைக்கான தீர்வு பற்றி கலந்துரையாடவும் அது தொடர்பில் முடிவுகள் எடுக்கவும் உகந்த இடம் பாராளுமன்றம் என்பதே அரசின் நிலைப்பாடு. மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து எடுக்கும் தீர்வு எதுவானாலும் அதனை ஏற்று அரசு செயற்படும் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்கனவே தெட்டத் தெளிவாக கூறியுள்ளார். ஒரு சமயம் வருகிறோம் என்கிறார்கள். மறு சமயம் வரமாட்டோம் பேசி நடக்கப்போவது ஒன்றும் இல்லை என்கிறார்கள். பாராளுமன்றத்துக்கு வெளியே பேசுவதில் பலனில்லை. அடிக்கடி இந்தியா செல்கிறார்கள் அங்கேயும் பேசுகிறார்கள். ஆனால் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள மட்டும் தயக்கம் காட்டுகிறார்கள். எனவே தேசிய பிரச்சினைக்கான தீர்வு இழுத்தடிக்கப்படுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்புதான் பொறுப்பு கூற வேண்டும்.

ஐப்பசி 26, 2012

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை!

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அன்டனியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனின் அழைப்பினை ஏற்று, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, இந்திய பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மாவையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாடுகளும் இடையிலான இராணுவ உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகள் பேணப்படக் கூடாது என தமிழக அரசியல்வாதிகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியிலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவப் பயிற்சிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 26, 2012

கே.பி என்ற குமரன் பத்மநாதனுடன் மற்றுமொரு புலிகளின் தலைவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது

கே.பி என்ற குமரன் பத்மநாதனுடன் மற்றுமொரு புலிகளின் தலைவரை அரசாங்கம் விடுதலை செய்துள்ளதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இரத்தினசபாபதி என்ற புலிகளின் சர்வதேச வலையமைப்பின் முன்னாள் தலைவரை அரசாங்கம் இவ்வாறு விடுதலை செய்துள்ளது. நரேன் என்று அழைக்கப்படும் நரேந்திரன் இரத்தினசபாபதி என்பவரே இவ்வாறு கே.பியுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியில் வரவில்லை. அரசாங்கம் தொடர்ந்தும் அதனை மூடி மறைத்து வந்துள்ளது. ஒரு புறம் கே.பிக்கு அரசசார்பற்ற நிறுவனத்தை ஏற்படுத்தி கொடுத்து சுகபோகங்களை வழங்கி வருவதுடன் மற்றுமொரு புலித் தலைவரை விடுதலை செய்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை காட்டில் கொண்டு சென்று விடுகிறது. இந்த அரசாங்கம் உண்மையில் பிரிவினைவாத்திற்கு துணைபுரிந்து  புலிகளின் தலைவர்களுக்கு சுகபோகங்களை வழங்கிறது. தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்கவோ, தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணவோ இந்த அரசாங்கத்திற்கு தேவையில்லை. இதன் மூலம் தமிழ் மக்களுக்கு அரசாங்கத்திற்கும் இடையில் விரசமே ஏற்படும்.

ஐப்பசி 26, 2012

படகு மூலம் சென்ற மற்றொரு இலங்கையரை நாடு கடத்த அவுஸ்திரேலியா முடிவு

படகு மூலம் சென்று புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றுமொரு இலங்கையர் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பியனுப்பப்படவுள்ளார். மெல்போனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த தமிழர் இம் மாதம் 31 ஆம் திகதியன்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். இதற்கான பயணச் செலவை அவரே ஏற்றுக்கொள்ள வேண்டுமென அந்நபருக்கு வழங்கப்பட்டுள்ள நாடு கடத்தல் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 வயதைக் கடந்துள்ள இவர் இவ் வருடம் பெப்ரவரி மாதத்தில் சட்டவிரோதமாக படகின் மூலம் அவுஸ்திரேலியா சென்றடைந்தவராவார். தன்னுடைய சகோதரன் ஒரு புலிப் போராளியெனவும் இறுதிகட்ட நடவடிக்கைகளின் போது அவர் கொல்லப்பட்டதாகவும் கூறி இந்நபர் தனக்கு எதிராக நாடு கடத்த பிறப்பிக்கப்பட்ட கட்டளையில் கையெழுத்திட மறுத்துள்ளார். கடந்த ஜுலை மாதம் தயன் அந்தோனி என்பவர் அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதைத் தொடர்ந்து இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருக்கும் இரண்டாவது நபராவார். இதேவேளை 90 பேரை ஏற்றிச்சென்று கொண்டிருந்த 3 படகுகள் கொக்கோஸ் தீவில் அண்மையில் தடுத்து வைக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 26, 2012

ஐப்பசி 26, 2012

பங்களாதேஷில் நிறுவப்படும் அணு உலை கிழக்கு மாகாணத்தை பாதிக்கும் அபாயம்

கூடங்குளம் அடங்கலான இந்தியாவில் உள்ள அணு உலைகள் குறித்து சர்வதேச அணு சக்தி அதிகார சபை முழுமையாக கண்காணித்து வருகிறது. இலங்கைக்கு இவற்றால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தடுப்பதற்காகவே அரசாங்கம் பல் வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க கூறினார். பங்களாதேஷில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அணு உலையினால் கிழக்கு பிரதேசத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். இது தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐப்பசி 26, 2012

13வது திருத்தத்தை நீக்குவது தொடர்பில் அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை

13 ஆவது திருத்தச் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஒரு பகுதியே. அரசியலமைப்பின் ஒரு பகுதி என்ற வகையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்கள் என்ற வகையில் நாமும் அதனை பாதுகாப்பதற்கு கடமைப்பட்டுள்ளோமென அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எனினும் நாட்டின் தேவைக்கேற்ப அரசியலமைப்பில் மாற்றம் காலத்துக்கு காலம் வேறுபடுகிறது. தற்போது 13 ஆவது திருத்தச் சட்டத்தை பற்றி கூறலாம். 13 ஆவது திருத்தச் சட்ட அரசியல மைப்பின் ஒரு பகுதி. அத்துடன் பாராளு மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்கள் பிரதிநிதிகளுக்கு தங்களது கருத்துக்களை வெளி யிடுவதற்கு உரிமை இருக்கிறது என்றும் கூறினார். 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக ஒவ்வொருவரிடையே கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதே தவிர இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக எவரும் பாராளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ சமர்ப்பிக்கவில்லை அரசியலமைப்புக்கு மதிப்பளிக்கிறோம். அரசியலமைப்புக்கு மதிப்பளிப்பதாகவே நாம் சத்தியப்பிரமாணமும் செய்துள்ளோம்.

ஐப்பசி 26, 2012

நிம்மதி இழந்திருக்கிறேன் - கருணாநிதி

உட்கட்சி சண்டையில் நான் நிம்மதி இழந்திருக்கிறேன் என்று தி. மு. க. தலைவர் கருணாநிதி வேதனை தெரிவித்துள்ளார். தி. மு. க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி. ஆர். பாலு மீது அக்கட்சியின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளரும் மத்திய இணை அமைச்சருமான பழனி மாணிக்கம் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தி. மு. க. தொண்டர்களுக்கு 'நீர் இடித்து நீர் விலகுவதா' என்ற தலைப்பில் திங்கட் கிழமை எழுதிய கடிதத்தில் கருணாநிதி கூறியிருப்பதாவது; எதிர்க் கட்சியாகக் கூட வர முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தாலும் துவண்டு விடாமல் 89 வயதில் நானும் 90 வயதில் பொதுச் செயலாளர் அன்பழகனும் கட்சிக்காக தினமும் உழைக்கிறோம். தி. மு. க.வினர் குழு சேர்த்துக் கொண்டு மோதிக் கொள்கின்றார்கள் என்ற செய்திதான் என்னை பெரிதும் வருந்தச் செய்கிறது. 1967ல் தி. மு. க. ஆட்சிக்கு வந்தபோது ஆட்சி வந்து விட்டது. கட்சி போச்சே என்றார் அண்ணா. அதனை இப்போது அனுபவ ரீதியாக உணர்கிறேன்.

ஐப்பசி 26, 2012

இந்தியாவைப் போன்று உதவுவதற்கு சீன அரசாங்கமும் தயாராகவே உள்ளது - சீனத்தூதுவர்

இந்தியா எவ்வாறு இலங்கைக்கு உதவி செய்கின்றதோ அதேபோன்று சீன அரசாங்கமும் உதவிகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது என யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த சீனத்தூதுவர் வூ ஜியாங்கோ தெரிவித்தார். இலங்கைக்கு மிக அண்மையாகவே இந்தியா உள்ளது. இது புவியியல் ரீதியானது என்பதுடன் வட பகுதி மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கமான உறவுகளையும் தோற்றுவிக்கின்றது. அத்தகைய உறவில் இந்தியாவின் உதவி வடபகுதி மக்களுக்குத் தேவையான ஒன்றாகவேயுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். இத்தகைய உதவிகளை நாமும் செய்வதற்கு தயாராகவே உள்ளோம். தற்பொழுது எமது நாட்டின் உதவியுடன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடுவதற்காகவே நாம் இன்று இங்கு வந்துள்ளோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எம்மைச் சந்தித்து இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்துள்ளதுடன் எமது நாட்டின் உதவியையும் கோரியுள்ளனர். இது ஒரு நட்பு ரீதியான சந்திப்பாகும் என்றார்.

ஐப்பசி 26, 2012

சட்டத்தின் பிடியிலேயே கே.பி., விசாரணையும் தொடர்கிறது - அரசாங்கம்

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன்  சட்டத்தின் பிடியிலேயே  இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  மேலும்  அவர் மீதான விசாரணைகளும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன.  பயங்கரவாத தடைச் சட்டமோ அல்லது வேறு எந்த சட்டமோ  சட்டத்துக்கு உட்பட்ட வகையிலேயே அவர்  அரசாங்கத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார் என்று  அமைச்சரவை  பேச்சாளரும் அமைச்சருமான  கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில்  சர்வதேச மட்டத்தில் இயங்கும் புலம் பெயர் மக்களின் ஒரு பகுதியினரான புலி ஆதரவாளர்களுடன் பேச்சு நடத்தவேண்டிய தேவை எங்களுக்கு இருக்கின்றது. அதற்காக  கே.பி. யை பயன்படுத்தவுள்ளோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 

ஐப்பசி 25, 2012

இந்தியா எங்கள் கூட்டாளியே எதிரியல்ல - சீனா

கடந்த 1962ம் ஆண்டு நடந்த போருக்குப்பின், உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டதாகவும், இந்தியா தங்களது பங்காளியே அன்றி, எதிராளி அல்ல என சீனா தெரிவித்துள்ளது. 1962-ல் இந்தியா சீனாவுக்கும் இடையே எல்லைப் பிரச்சினை தொடர்பாக போர் நடந்தது. இதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து இரு நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டது. பின்னர் படிப்படியாக மறைந்து, இருநாட்டு உறவு முறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இருப்பினும் எல்லைப்பிரச்சினையில் அது வரம்பு மீறி நடந்து வருகிறது. (மேலும்.....)

ஐப்பசி 25, 2012

13 வது திருத்தச் சட்டம்

கோத்தபாயவின் கருத்து தப்பானது

(ஸ்ரனிஸ்)

இந்த கருத்தானது கோத்தபாய ராஜபக்ச அவர்களின் கருத்து என்று சொல்லிவிட முடியாது. இது அரசாங்கத்தின் கருத்தாக மாறக் கூடிய சாத்தியங்கள் நிறையவே உண்டு. இதனை எதிர்ப்பதும் இதன் ஆபத்தை உணர்த்துவதும் நம் கடமையாகும். 13 வது திருத்தச் சட்டத்தையும் அதனை அமுல் படுத்துவது தொடர்பாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக் கெண்டு வடக்கு-கிழக்கு இணைந்த மாகாண அரசில் ஆட்சி செய்த வரதராஜபெருமாள் அவர்களுக்கு நன்றாக தெரியும் அந்தச் சட்டத்தின் தார்பரியம் பற்றி அவருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும். மக்களுக்கும் அவர் அவ்வப்போது தெளிவு படுத்தியிருப்பதை அவர் ஆட்சி செய்த காலத்தில்  அவர் சார்ந்திருந்த கட்சியினருக்கும் நன்கு தெரியும். (மேலும்.....)

ஐப்பசி 25, 2012

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் சர்வதேச சதித் திட்டமாக இருக்கக் கூடும் - சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண!

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் சர்வதேச சதித் திட்டமாக இருக்கக் கூடும் என சிரேஸ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியின் சில தரப்பினர் 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யுமாறு முன்னொரு போதும் இல்லாதவாறு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஜாதிக ஹெல உறுமய, ஜே.ன்.பி, மஹஜன எக்சத் பெரமுன மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினர் 13ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென கோரி வருகின்றனர். எதிர்வரும் நவம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகள் நடைபெறவுள்ளதாக திஸ்ஸ வித்தாரண சுட்டிக்காட்டியுள்ளார். இந்த அமர்வுகளில் இலங்கைக்கு நெருக்கடி நிலைமையை ஏற்படுத்த எத்தனிக்கும் சர்வதேச சக்திகள் 13ம் திருத்தச் சட்ட ரத்து தொடர்பான கருத்துக்களை போஷிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இதற்கு ஆளும் கட்சியின் சில தரப்பினரும் துணை போவதாக அமைச்சர் திஸ்ஸ வித்தாரண குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி 25, 2012

13ஆவது திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் முயற்சி - பிரபா கணேசன்

'இன்று 13ஆவது திருத்த சட்டத்தை அகற்றி அரசாங்க தரப்பினர் சாதாரண திவிநெகும சட்டத்திற்காக தமிழ் மக்களுக்கு கடைசியாக கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதமான மாகாணசபை முறைமையை ஒழிக்கப்பார்க்கிறார்கள். இன்று மாகாணசபை மூலமாக குறைந்தபட்சம் கிடைக்கப்பெற்றிருக்கும் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து  கூட இதன் மூலம் இல்லாதொழிக்கப்படும். என்னைப் பொறுத்தவரையில் மாகாணசபை முறைமையில் கல்வி முதலிடம் பெறுகிறது. நாட்டிலுள்ள பாடசாலைகளில் 99 சதவீதமான பாடசாலைகள் மாகாணசபைக்கு கீழே உள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 25, 2012

பிரிட்டன் விஸா விண்ணப்பத்துக்கு புதிய நடைமுறை

கொழும்பில் கையளிக்கப்படும் விஸா விண்ணப்பங்களை சென்னை பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள ஐக்கிய இராச்சிய எல்லை முகவரகம் எதிர்வரும் முதலாம் திகதி வியாழக்கிழமை முதல் கையாளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் விஸா விண்ணப்பங்களில் அநேகமானவை 2008 இலிருந்து சென்னையிலேயே பரிசீலனை செய்யப்பட்டன. இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் விஸா பிரிவு ஒக்டோபர் 31ஆம் திகதியுடன் மூடப்படும். விஸா விண்ணப்பங்களை முன்னர் போலவே விஸா விண்ணப்ப நிலையத்திலேயே ஒப்படைக்கலாம். 90 சதவீத விஸா விண்ணப்பங்கள் 15 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படும். கடவுச்சீட்டை இலங்கைக்கு வெளியே கொண்டு செல்வதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய கட்டணம் ஆயிரம் ரூபாவை விஸா விண்ணப்ப நிலையத்தில் செலுத்த முடியும். விஸா விண்ணப்ப நிலைய நிர்வாக செலவாக 200 ரூபா அறவிடப்படும்.

ஐப்பசி 25, 2012

ஊற்றுக்களும் ஓட்டங்களும்: மீனாட்சியம்மாள் முதல் மார்க்ஸிம் கார்க்கி வரை” என்ற நூல் பற்றி ஒரு விமர்சனக் குறிப்பு

(கலாநிதி ந. இரவீந்திரன்)

லெனின் மதிவானத்தின் பாக்கியா பதிப்பகத்தின் வெளியீடான இந்நூல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவரால் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக அமைந்துள்ளது. அவ்வவ்போது அவர் படித்துக் கொண்டிருந்த நூல்கள் குறித்து, அல்லது அவரை பாதித்த விடயம் தொடர்பாக எழுதப்பட்டன இவை.  பல்வேறு கதம்பங்களின் தொகுப்பாக அமைந்த போதிலும் நுனித்து நோக்கும் போது அவற்றுக்குள் இழையோடும் மையச்சரடு ஒரு தொடர்  ஒழுங்கமைப்பை ஏற்படுத்தியுள்ளமை தெளிவு. வௌ;வேறு இதழ்களில் இவை எழுதப்பட்டிருப்பினும், பெரும்பாலானவை ‘முச்சந்தி’ இணைய இதழில் வெளிவந்தன் குறிப்பாக மலையக சமூக உருவாக்கச் செல்நெறியோடு தொடர்பாடலை  மேற்கொள்வதாக அமைந்தது ‘முச்சந்தி’. (மேலும்.....)

ஐப்பசி 25, 2012

ஐப்பசி 25, 2012

கனேடிய புலியாதரவாளர்களின் கோ‌ரிக்கையை நிராக‌ரித்தார் இளையராஜா

கனேடிய புலியாதரவாளர்களில் ஒரு பி‌ரிவினர் முன்வைத்த கோ‌ரிக்கையை இளையராஜா நிராகரித்தார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் அவரது பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நவம்பர் மாதம் மாவீரர் தினம் வருவதால் அந்த மாதத்தில் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு முன்புவரை ஈழத்தில் மட்டுமே நவம்பர் மாதம் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடக்காமலிருந்தன. தமிழகத்தில் அதனை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் நவம்பர் மாதத்தில் எந்த நல்ல நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்று உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே திணிக்க சிலர் முயன்று வருகின்றனர். (மேலும்.....)

ஐப்பசி 25, 2012

TNA internal  crisis talks put off indefinitely

(By Franklin R. Satyapalan)

A crucial meeting Tamil National Alliance (TNA) constituent parties were scheduled to have on Tuesday evening with alliance leader and parliamentarian R. Sampanthan was postponed as he was indisposed. The TULF, EPRLF, TELO and PLOTE are constituent parties of the TNA. Sampanthan had told Tamil media on Monday that he looked forward to an amicable settlement with the alliance partners while accommodating the wishes of many seniors in the Illankai Thamil Arasu Kadchi (ITAK) the senior partner, Political sources said yesterday. (more...)

ஐப்பசி 25, 2012

பூமியதிர்ச்சி ஏற்படும் வலயத்தினுள் இலங்கை

பூமியதிர்ச்சி ஏற்படும் வலயத்துக்குள் இலங்கை உட்பட்டிருப்பதால், எதிர்காலத்தில் பாரிய பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதற்கான வாய்ப் புக்கள் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பூமியதிர்ச்சியிலிருந்து பாது காக்கும் வகையில் கட்டடங்களை வடிவமைப்பது தொடர்பான உபகுழுவின் தலைவர் கே.எல்.எஸ். சஹபந்து தெரிவித்தார். பூமியில் இந்திய – அவுஸ்திரேலியத் தகடு இலங்கையிலிருந்து தென்மேற்கு பகுதியில் 500 முதல் 700 கிலோ மீற்றர் தூரம் வரை நகர்ந்துள்ளது. இதனால் இலங்கைக்கிடையில் புதிய பூமித்தகடு உருவாகியுள்ளது என்றும், இது எதிர்காலத்தில் இலங்கையில் பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைத் தோற்றுவித்திரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஐப்பசி 25, 2012

ஆர்ப்பாட்டம், பேரணி நடத்துபவர்களுடன் பேசுவதற்கு தயாரில்லை

அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, பதவி உயர்வுகள், சம்பள நிலுவைகள், இடமாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் அரசியல் நோக்கங்களுக்காக பாதயாத்திரை, பேரணி, ஆர்ப்பாட்டம் செய்யும் குழுவினருடன் பேசுவதற்கு ஆயத்தமில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். ஆசிரியர் சங்கம் நேற்று பொரளையிலிருந்து பேரணியாக சென்று கல்வி அமைச்சுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. இது தொடர்பாக கல்வி அமைச்சரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கல்வி அமைச்சு பல முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எடுத்துள்ளது. சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டுள்ளது. சில தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக எதிர்வரும் வரவு - செலவுத் திட்ட யோசனையின் போது சமர்ப்பிக்கவும் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் குறிப்பிட்டார். கல்வி அமைச்சுக்கு முன்னால் கோஷமெழுப்பிய வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர், ஆசிரியர் சங்கத்தினர் சிறிது நேரத்தில் கலைந்து சென்றனர். கல்வி அமைச்சு நுழைவாயிலில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஐப்பசி 25, 2012

60 இலங்கையர்கள் பிரிட்டனிலிருந்து நாடு கடத்தல், 28பேர் கொழும்பு வருகை

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள 60 இலங்கையருள் 28 பேர் நாட்டை வந்தடைந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. அந்த நாட்டில் அகதி அந்தஸ்து கோரி குடியுரிமை மறுக்கப்பட்ட இலங்கைப் பிரஜைகளே அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்படுகின்றனர். நேற்று முன்தினம் விசேட விமானம் மூலம் 28 இலங்கையர்கள் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களைத் தொடர்ந்து மிகுதி 32 பேரையும் விரைவில் இலங்கைக்கு திருப்பியனுப்புவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரித்தானியாவிலுள்ள எமது இலங்கைத்தூதரகம் வாயிலாக அறிந்து கொள்ளக் கூடியதாக விருந்ததென வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னரும் பிரித்தானியாவிலிருந்து பலர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 25, 2012

செவ்வாயில் மீத்தேன் வாயு, உயிரினங்கள் இருக்க வாய்ப்பு

செவ்வாய் கிரக ஆய்வுக்கு நாஸா அனுப்பிய கியூரியாசிட்டி இயந்திரம் அங்கு மீத்தேன் வாயு இருப்பதை ஆய்வு மூலம் கண்டறித்துள்ளது. செவ்வாயில் உயிரியல் வாயுவான மீத்தேன் இருப்பது விஞ்ஞானிகளுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீத்தேன் வாயு மண், பாறை போன்ற நிலப்பரப்புகளினூடே உருவாக்கப்பட முடியும் என்றாலும் அது பெரும்பாலும் வாழும் உயிரினங்களுடன் தொடர்புடையதாக உள்ளது. இதன்மூலம் செவ்வாயில் உயிரினங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான உயிரினம் எமது பூமியில் வசிப்பது போன்று இருக்காமல் மாறுபட்ட சிறிய நுண்ணுயிர்களாகக் கூட இருக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் மீத்தேன் வாயு வெளிப்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது. கியூரியாசிட்டி இயந்திரம் செவ்வாயின் மண் மாதிரியை சோதனைக்கு உட்படுத்தியுள்ள நிலையிலேயே அங்கு மீத்தேன் வாயு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த மண் மாதிரியின் முடிவு இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி 25, 2012

THE 'Y' CHROMOSOM

People born before 1946 are called -
The Greatest Generation.
People born between 1946 and 1964 are called -
The Baby Boomers.
People born between 1965 and 1979 are called -
Generation X.
And people born between 1980 and 2010 are called - Generation Y.

Why do we call the last group - Generation Y ?

Y should I get a job?

Y should I leave home and find my own place?

Y should I get a car when I can borrow yours?

Y should I clean my room?

Y should I wash and iron my own clothes?

Y should I buy any food?

But perhaps a cartoonist explained it most eloquently below...

ஐப்பசி 24, 2012

13ஆவது திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் வெடிக்கும் - டியூ குணசேகர

'நான் எதிர்க்கட்சியில் இருந்த போதும் 13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது அதனை ஆதரித்தேன். அந்த திருத்தத்தை நீக்கினால் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்' என்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் சிரேஷ் அமைச்சர்களில் ஒருவருமான டியூ குணசேகர தெரிவித்தார். அரசாங்கத்தின் கூட்டமைப்பிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சி 13ஆவது திருத்தத்தை ஆதரித்து கருத்து வெளியிட்டுள்ளது. அது ஒழிக்கப்படுமாயின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க வழிவகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், '13ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்ட போது தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களில் அதை ஆதரித்த ஒரு சிலரில் தானும் ஒருவர் என நான் அப்போது எதிர்க்கட்சியில் இருந்த போதும் அதை ஆதரித்தேன். இந்த திருத்தத்தின் பின்னர் விடுதலைப் புலிகளைத் தவிர சகல தமிழ் தீவிர இயக்கங்களும் ஆயுதங்களை கைவிட்டன. அதை நாம் ரத்து செய்தால் அவர்கள் மீண்டும் ஆயுதப் போராட்டங்களை தொடங்கக்கூடும். அதனால் பயங்கரவாதம் மேலோங்கும். இவ்வாறான செயற்பாடுகளால் யுத்த வெற்றியாகக் கிடைத்த சமாதானத்தை பேண முடியாது. பிரச்சினைத் தீர்வுக்கான மாற்று ஏற்பாடின்றி 13ஆவது திருத்தத்தை நீக்கிவிடுவது அபத்தமானது' என்றார்.

ஐப்பசி 24, 2012

அரசாங்கத்தினால் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ரத்து செய்ய முடியுமா?

திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதையும் செய்யும் போல் தெரிகிறது. அதேவேளை அச்சட்டமூலத்தை நாட்டு நலனுக்கான ஒன்று என்பதை விட மானப் பிரச்சினையாகவும் அரசாங்கத்தின் தலைவர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள் என்றும்; தெரிகிறது. திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கத்தின் தலைவர்கள் எதிர்நோக்கியதைப் போன்ற சிக்கலான பிரச்சினையொன்றை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி இதுவரை வேறெந்த சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்வதிலும் எதிர்நோக்கியதில்லை. இது அரசாங்கத்தின் சில தலைவர்களை விரக்திக்கே இட்டுச் சென்றுள்ளது போலும். (மேலும்.....)

ஐப்பசி 24, 2012

முன்னாள் போராளிகள் 350பேர் படையில் இணைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் போராளிகளில் 350பேர் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த முன்னாள் போராளிகளில் 350பேரே இவ்வாறு படையில் இணைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு படை தெரிவித்தது. இனிவரும் நாட்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளையும் சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அப்படையின் வட பிராந்தியப் பொறுப்பதிகாரி மேஜர் அனில் பண்டார தெரிவித்தார். இந்நிலையில், மேற்படி போராளிகள் உள்ளடங்களாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த சுமார் மூவாயிரம் இளைஞர் யுவதிகள் சிவில் பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார். இவர்களில் 2200 பெண்களும் 800 ஆண்களும் அடங்குகின்றனர். இவர்களை உள்ளடக்கிய விவசாய வேலைத்திட்டமொன்று இன்று புதன்கிழமை, கிளிநொச்சி, அம்பால்நகர் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விவசாயத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேஜர் அனில் பண்டார மேலும் கூறினார்.

ஐப்பசி 24, 2012

கொழும்பு இராணுவ தலைமையக தாக்குதல்

தற்கொலைதாரிக்கு உதவியவருக்கு 35 வருடகால கடூழிய சிறை

கொழும்பு இராணுவத் தலைமையக தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த ரம்புக்கணையைச் சேர்ந்த சண்முகலிங்கம் சூரியகுமார் என்பவருக்கு 35 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கேகாலை மேல் நீதிமன்றம் நேற்று இந்தத் தீர்ப்பை வழங்கியது. விசாரணைகளை நடத்தி வந்த கேகாலை மேல் நீதிமன்ற நீதவான் செல்வி மேனகா விஜேசுந்தரவே இந்தத் தீர்ப்பை வழங்கினார். 2006 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் அப்போதைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு தற்கொலைக் குண்டுதாரியாக பயன்படுத்தப்பட்ட மஞ்சுளா என்ற பெண்ணை வவுனியாவிலிருந்து அழை த்து வந்தமை அவருக்கு தங்குவதற்காக வீடு தேடிக் கொடுத்தமை, பாதுகாப்பு வழங்கியமை, தற்கொலையாளி (மஞ்சுளா) தொடர்பான தகவல்களை வழங்கத் தவறியமை, புலிகளோடிருந்த தொடர்பை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் எதிரியான சண் முகலிங்கம் சூரியகுமார் மீது சுமத்தப்பட்டிருந்தன. (மேலும்.....)

ஐப்பசி 24, 2012

சிங்களத்தில் பேசுமாறு சபையில் அழுத்தம் கொடுக்க முடியாது

பாரா ளுமன்ற உறுப்பி னர்களுக்கு பாராளு மன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்ற உரிமையுள்ளது. தமிழில் உரையா ற்றாது சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் கொடுக்க முடியாதென ஐ. ம. சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ஐ. தே. க. எம். பி. கயந்த கருணாதிலக சுற்றாடல் அமைச்சரிடம் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு பதில் சுற்றாடல் அமைச்சர் ஏ. ஆர். எம். ஏ. காதர் தமிழில் பதிலளித்தார். ஆனால், சிங்களத்தில் பதில் வழங்குமாறு கயந்த கருணாதிலக்க எம்.பி. கூறினார். இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய ஏ. எச்.எம். அஸ்வர் எம். பி. தமிழில் பதில் வழங்குகையில் சிங்களத்தில் பேசுமாறு அழுத்தம் வழங்க முடியாது. இங்கு உரை பெயர்பாளர்கள் பணிபுரிகிறார்கள். அவற்றை செவிமடுக்க முடியும் என்றார். இங்கு மற்றொரு ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் இலங்கை மீது குற்றம் சுமத்திய நாளில் இருந்து ஆளும் தரப்பினர் சபையில் தமிழில் பேசுவதாகக் கூறினார். எதிர்த் தரப்பில் இருந்த போது சிங்களத்தில் பேசிய பிரதி அமைச்சர் காதர் ஆளும் தரப்பிற்கு சென்றதும் தமிழில் பேசுவதாக கயந்த எம். பி. கூறினார்.

ஐப்பசி 24, 2012

கே.பி. சர்வதேச குற்றவாளி

கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் இந்திய நீதிமன்றத்தினால் சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒரு குற்றவாளி. அவரை சுதந்திரமாக செயற்படுவதற்கு இடம் வழங்கியமையானது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 24, 2012

வெளிநாட்டு கொள்கை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவாதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஒபாமாவுக்கும், குடியரசு கட்சி வேட்பாளர் மிட் ரொம்னிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி விவாதம் நிறைவடைந்துள்ளது. புளோரிடாவில் நேற்று முன்தினம் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து வெளிநாட்டு கொள்கைகள் குறித்து விவாதித்தனர். இதன்போது அரபு மக்கள் எழுச்சி, ஈரான், இஸ்ரேல் மற்றும் சீனா தொடர்பில் இருவரும் காரசாரமாக விவாதித்தனர். எனினும் கொள்கை அளவில் ஒபாமா இது வரை நிறைவேற்றிக் கொண்டிருப்பதையே ரொம்னி திரும்பவும் பேசியதால் கிட்டத்தட்ட ஒபாமாவை வழி மொழிந்தது போல் அமைந்தது. முதன் முறையாக ஒசாமா பின்லாடனை ஒழித்துக்கட்டியதற்காக ஒபாமாவுக்கு ரொம்னி வாழ்த்தும் கூறினார். இந்த விவாதத்தில் ஒபாமா வெற்றி பெற்றதாகக் கருத்து கணிப்புகள் கூறின. (மேலும்....)

ஐப்பசி 24, 2012

நாடுகடத்தப்படுவதை எதிர்த்து அவசர தடையுத்தரவு மனுதாக்கல்

பிரித்தானியாவிலிருந்து தாம் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து இலங்கையைச் சேர்ந்த 60 புகலிடக்கோரிக்கையாளர்கள் அங்குள்ள நீதிமன்றம் ஒன்றில் அவசர தடையுத்தரவு கோரி மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட இறுதிநேரத்திலேயே மனுத்தாக்கல் செய்துள்ளனர். மனுவை தாக்கல் செய்தவர்கள் தம்மை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது எனக்கோரி மனுவைத்தாக்கல் செய்துள்ளனர். இவ்வாறு குறைந்தது 15 பேர்வரையில் மனுத்தாக்கல் செய்ததாகவும் இந்த மனுவின் அடிப்படையில் இன்று பிரித்தானியாவிலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்படவிருந்த அறுபது பேரில் இருவரை பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் விமானத்தில் இருந்து வெளியேற அனுமதிவழங்கியுள்ளனர்.

ஐப்பசி 24, 2012

இந்திய திரை உலகில் வரதராஜ பெருமாளின் மகள் நீலாம்பரி

ந்திய திரை உலகத்தில் இலங்கைத் தமிழ் பிரபலம் ஒருவருடைய வாரிசு இடம்பிடித்து இருக்கின்றார் என்று சொல்லப்படுகின்றது. அவர் இலங்கையின் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளின் மகள் நீலாம்பரி பெருமாள் ஆவார். மலையாள திரை உலகம் இவருடைய அழகையும், நடிப்புத் திறமையையும் அடையாளம் கண்டுகொண்டது. மலையாள திரைப்படமான பம்பாய் மிட்டாயில் கொலை ஒன்றுக்கு பின்னால் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்கின்ற ஊடகவியலாளராக நடிதது இருந்தார்.

 

ஐப்பசி 24, 2012

சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நோர்வே பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

நோர்வே சிறுவர் காப்பகத்துக்கு எதிராக நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நாளை புதன்கிழமை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் அமைந்துள்ள பாராளுமன்றக் கட்டிடத் தொகுதிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. நோர்வே நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் (இலங்கை நேரப்படி மாலை 6.30) ஆரம்பிக்கப்படவிருக்கின்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில் நோர்வேயின் சிறுவர் காப்பகங்களால் பலவந்தமாக எடுத்துச் செல்லப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் நூற்றுக்கணக்கான பெற்றோர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.

ஐப்பசி 24, 2012

கிணறுகளுக்கு வரி இல்லை இலங்கை அரசு

குடிநீர் கிணறுகள் அல்லது விவசாய தேவைக்கான கிணறுகளுக்கு வரி விதிக்கப்போவதில்லை என அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளது. அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ இவ்வாறான ஒரு முடிவை எடுக்கவில்லை என அரசாங்கததின்; பிரதான கொறடாவான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இவ்வாறான வரி விதிப்பு பற்றி அரச அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் தீர்மானம் ஆகாது என தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவாறு அரசாங்கம் கிணறுகளுக்கு வரி விதிக்கவுள்ளதா? ஏன ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஐப்பசி 24, 2012

திவிநெகும சட்டமூலம் குறித்த ஆட்சேபனைகளை இன்று சமர்ப்பிக்கவும்; உயர்நீதிமன்றம் உத்தரவு

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான எழுத்து மூலமான ஆட்சேபனைகளை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியுமென உயர்நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. திவிநெகும சட்டமூலத்திற்கு ஆதரவாகவும் ஆட்சேபித்தும் தாக்கல் செய்யப்பட்ட 14 மனுக்கள் மீதான விசாரணைகள் கடந்த இரண்டு தினங்களாக உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா தலைமையிலான மூன்று நீதியரசர்கள் கொண்ட குழு முன்னிலையில் நடைபெற்றது. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நேற்று இறுதியாக உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. (மேலும்....)

ஐப்பசி 23, 2012

பிரபாகரன் தமிழ் மக்களின் பிரதிநிதி இல்லை என்று மறைமுகமாக கூறுகின்றார்  இரா.சம்பந்தன்.

குமரன் பத்மநாதன் சர்வதேச பொலிஸார் தேடிவரும் நபர்! அவர் தமிழ் மக்களின் பிரதிநிதி இல்லை! இப்படிக் கூறுபவர் வேறு யாரும் அல்ல இரா.சம்பந்தன். இவ்வளவு காலமும் தேசியத் தலைவர் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய பிரபாகரனும் சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டுவந்த நபர் தான். பிரபாகரனும் இலங்கையிலும், இந்தியாவிலும் குற்றம் சாட்டப்பட்டிருந்தவர் தான். அப்படியென்றால் பிரபாகரனும் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இருந்ததில்லை என்று சொல்ல வருகிறாரா சம்பந்தன் ஐயா. (மேலும்....)

ஐப்பசி 23, 2012

13ஆவது திருத்தத்தை அகற்ற முற்பட்டால் தமிழர்கள் கிளர்ந்தெழுவர் - இரா.துரைரெட்ணம்

"தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை நிரந்தரமாக இணைப்பதற்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாத அரசாங்கம், செயலாளர், அமைச்சரின் ஆலோசனையை கேட்டு 13ஆவது திருத்தச்சட்டத்தை அகற்றுவதற்கு முற்பட்டால் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுவது திண்ணமாகும்" என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி பிரதம கொரடாவுமான இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 23, 2012

தமக்கு தாமே குழிதோண்டுகின்றனர் -  சம்பந்தன்

13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க ௭டுக்கப்படும் முயற்சி தமக்குத் தாமே குழிதோண்டும் செயற்பாடாகும். அவர்கள் நன்றாக குழியைத் தோண்டட்டும் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். 13வது திருத்த சட்டத்தை இல்லாதொழிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பினை நடத்த வேண்டும் ௭ன்று அமைச்சர் விமல்வீரவன்ச ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவுக்கு கடிதம் ௭ழுதியுள்ளார். இது குறித்து கேட்டபோதே சம்பந்தன் ௭ம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இந்த விடயம் தொடர்பில் அதிகம் பேச நான் விரும்பவில்லை. 13 ஆவது திருத்தத்தை ஒழிப்பதன் மூலம் தமக்கு தாமே அவர்கள் குழி தோண்டுகின்றனர் தோண்டட்டும் ௭ன்றார்.

ஐப்பசி 23, 2012

13 வது திருத்தத்தை ரத்து செய்வது அரசியல் ரீதியாக தவறாக இருக்கும்! - நேரு பல்கலை. பேராசிரியர் சகாதேவன்

இலங்கை அரசு 13வது சட்டத் திருத்தத்தை ரத்து செய்யுமானால் அது அரசியல் ரீதியாக பிழையான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என இலங்கை-இந்திய உறவுகள் குறித்து கவனம் செலுத்திவரும் டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் சகாதேவன் கூறுகிறார். இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய 13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை இலங்கை அரசு ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கைகள் இலங்கையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இறையாண்மை பெற்ற ஒரு நாடு என்ற வகையில் எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றும் உரிமை இலங்கைக்கு உண்டு, எனவே இந்த சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தின் மூலமாக அது ரத்து செய்வது என்பது சட்டப்படி சாத்தியமே என்றாலும் அது அரசியல் ரீதியில் தவறான ஒரு நடவடிக்கையாக இருக்கும் என அவர் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 23, 2012

நோர்வேயில் பழிவாங்கப்படும் வெளிநாட்டுப் பெற்றோர்

ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் இலங்கைத் தாய்மார் இருவரால் நடத்தப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரப் போராட்டத்தின் ஊடாக நோர்வே சிறுவர் காப்பகத்தின் ஏதேச்சாதிகாரப்போக்கு சர்வதேசத்தின் முன்னிலையில் படம்பிடித்துக் காட்டப்பட்டுள்ளது. நோர்வே நாட்டு அரசாங்கத்தின் நேரடி பார்வையில் கீழ் இயங்கிவருகின்றதான சிறுவர் காப்பகங்களில் இடம்பெறுகின்ற மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை நோர்வே அரசு கண்டு கொள்ளாதிருந்தமையை இதற்கு பிரதான காரணமாகும். நோர்வே சிறுவர் காப்பகம் தொடர்பில் இலங்கை, இந்தியா, ரஷ்யா, சோமாலியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் அதிருப்தி கொண்டிருக்கின்ற நிலையில் நோர்வே சிறுவர் காப்பக அதிகாரிகள் மற்றும் உயர்மட்டத்தினர் தற்போது பிள்ளைகளை வைத்து பெற்றோரை பழிவாங்கும் செயற்பாடுகளில் இறங்கியிருப்பதாக தெரியவந்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 23, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்வது அவசியம்

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தை ஒழித்துக்கட்டி மக்களை பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து விடுவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்கள் அனைவரதும் வேதனை வடுக்களை நீக்கி, அவர் களுக்கு மீண்டும் நிரந்தரமான நல்வாழ்வை பெற்றுக் கொடுக்கும் பெரு முயற்சியில் இன்று இறங்கியிருக்கிறார். யுத்தம் முடிவடைந்த பின்னர் அரச படைகள் உள்ளூரில் இடம் பெயர்ந்த மக்களை கொடுமைப்படுத்தியதாகவும், அப்பாவி இளை ஞர்களை மட்டுமன்றி வயது வந்தவர்களை கூட ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுத்தள்ளியதாகவும் சர்வதேச ரீதியில் இலங்கை அரசாங்கத்திற்கும் அரசாங்க தலைவர்களுக்கும் எதிராக போலிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. (மேலும்....)

ஐப்பசி 23, 2012

வதந்திகளுக்கு மத்தியில் மக்கள் முன் தோன்றினார் பிடெல் காஸ்ட்ரோ

கியூபாவின் புரட்சித் தலைவர் பிடெல் காஸ்ட்ரோவின் உடல்நிலை குறித்து வதந்திகள் பரவிவரும் நிலையில், அவர் ஒரு மாதத்திற்குப் பின் முதல் முறையாக மக்கள் முன் தோன்றினார். கியூப தலைநகர் ஹவானாவில் இருக்கும் முன்னணி ஹோட்டல் ஒன்றில் 86 வயதான காஸ்ட்ரோ கடந்த சனிக்கிழமை வெனிசுலாவின் சிரேஷ்ட அரசியல்வாதி ஒருவரை சந்தித்ததை அந்த ஹோட்டல் நிர்வாகம் உறுதி செய்தது. வெனிசுலாவின் முன்னாள் துணை ஜனாதிபதி எலியஸ் ஐவுன், காஸ்ட்ரோவை சந்தித்து 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறியுள்ளார். ஹவானாவில் இருக்கும் நசியோனல் ஹோட்டலில் ஊடகவியலாளர்களை அழைத்து, காஸ்ட்ரோ நல்ல உடல் நிலையுடன் இருப்பதாக எலியஸ் ஐவுன் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் காஸ்ட்ரோவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஊடகவியலாளர் களிடம் காண்பித்தார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய பிடெல் காஸ்ட்ரோ மரணத் தறுவாயில் இருப்பதாகவும், மரணமடைந்ததாகவும் அண்மைக்காலமாக வதந்திகள் செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 23, 2012

பாலத்தை திருடியவர் கைது

பொஸ்னியா நாட்டில் பாலத்தை திருடி சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஐரோப்பிய நாடான பொஸ்னியாவின் வடகிழக்கில் உள்ள பிரக்கோவில் ஆற்றை கடக்க இரும்பு பாலம் ஒன்று இருந்தது. 1980 ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட இந்த பாலம் கடந்த வாரம் காணாமல் போனது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பொலிஸாரிடம் புகார் செய்தனர். வழக்கமாக கழிவுநீர் கால்வாயின் இரும்பு மூடிகளை திருடும், ஒரு நபர் மீது பொலிஸ¤க்கு சந்தேகம் ஏற்பட்டது. 29 வயதுடைய அந்த திருடனின் வீட்டுக்கு வெளியே திருடப்பட்ட பாலம் இரண்டாக உடைக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த திருடனை பொலிஸார் கைது செய்தனர். ஐரோப்பாவில் உள்ள ஏழையான நாடு பொஸ்னியா. இங்குள்ள மக்கள் பலர் பழைய இரும்புகளை சேகரித்து சொற்ப விலைக்கு விற்று வருகின்றனர். கழிவு நீர் கால்வாய் மூடிகளை திருடி வந்த திருடன், பெரிய தொகையை சம்பாதிக்கும் போக்கில் இரும்பு பாலத்தையே பெயர்த்து எடுத்து சென்றதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஐப்பசி 23, 2012

ஸ்பெயின் பூமியதிர்ச்சிக்கு மனித செயல் காரணம்

ஸ்பெயினில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு அந்தப் பகுதியில் பல தசாப்தங்களாக நிலத்தடி நீர் இறைக்கப்பட்டதே காரணமாக இருந்தது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு ஸ்பெயின் லோர்கா நகரில் கடந்த 2011 மே 11ஆம் திகதி இடம்பெற்ற 5.1 ரிச்டர் அளவான நிலநடுக்கத்தால் 9 பேர் கொல்லப்பட்டதோடு நூற்றுக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். இந்த நிலநடுக்கம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு விவரம் ‘நேச்சர் ஜியோசயன்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. அதில் இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவரான மேற்கு ஒன்டரியோ பல்கலைக்கழகத்தின் பப்லோ கன்சலஸ் கூறும் போது, தமது குழு மேற்கொண்ட ஆய்வுக்கமைய இந்த நில நடுக்கத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் குறைந்தது கணிசமான பங்கை வகித்துள்ளது. இவ்வாறு நிலத்தடி நீர்மட்டம் குறையும் போது பூமியின் மேற்பரப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்றார். இதன்மூலம் மனித செயலினாலும் பூமி அதிர்ச்சி ஏற்படுவதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

ஐப்பசி 23, 2012

புற்றுநோயை குணப்படுத்தும் புதிய இரத்த உயிரணு

இன்றைக்கு உலக அளவில் இருதயக் கோளாறு மற்றும் புற்றுநோய் ஆகியவை மக்களை மிகவும் அச்சுறுத்தி வருகின்றன. இவற்றைக் குணப்படுத்தும் வல்லமை மிக்க இரத்த உயிரணு ஒன்று இருப்பதை பின்லாந்து நாட்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை இரத்த நாளங்களில் இருந்து கண்ணுக்கு புலப்படாத வகையில் உற்பத்தியாகி பல நன்மைகளைத் தருக்கின்றன என்றும், இது உடலில் ஏற்படும் புற்றுநோய், இருதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு வித நோய்களைப் போக்கும் நிவாரணியாகத் திகழ்கிறது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகிறார்கள்

ஐப்பசி 23, 2012

திவிநெகும': தமிழ்க் கூட்டமைப்பின் எதிர்ப்பு தமிழருக்கு செய்யும் துரோகம் - அமைச்சர் பசில் ராஜபக்ஷ

வட மாகாணத்தில் திவிநெகும நிறுத்தப்படுமாயின் அது வடபகுதி தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்கின்ற மாபெரும் துரோகமாக அமையும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். வடக்கு மக்களுக்கு அதிகம் சேவை செய்யும் நோக்கில் கொண்டு வரப்பட்ட 13வது திருத்தம் அதற்குத் தடையாக அமையுமாயின் அத்தடையை நீக்கும்படி வடபகுதி மக்களே கோருவர் எனவும் அவர் குறிப்பிட்டார். 13 வது திருத்தத்திற்கு கீழ் மட்டத்தில் ஓரளவு எதிர்ப்பு உள்ளது அந்த எதிர்ப்பு உத்வேகத்துடன் வேகமாக வெளிக்கிளம்புவதற்கு இடமளிக்க வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். திவிநெகும சட்ட மூலத்திற்கு 13வது திருத்தம் தடையாக அமையுமாயின் அது தொடர்பில் பொதுமக்களின் கருத்தும் பெறப்படும் என்றும் அவர் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 22, 2012

ஜனநாயகத்திற்கான பாதையில் முன்னரோ பின்னரோ தடைகள் தகரும்

(சுகு-ஸ்ரீதரன்)

அரசியல் அதிகாரம் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களின் கைகளில் குவிவது சமூக ஜனநாயக உணர்வுகளுக்கு எதிர்மாறானது.மனித குல இயல்புகளுக்கு விரோதமானது. “திவிநகும” சமுர்த்தி மத்திய மாகாண அபிவிருத்தி , தென் பகுதி அபிவிருத்தி போன்றன அதுவும் பில்லியன் கணக்கான பணத்துடன் ,இருவேறு சட்டவாக்க நிறுவனங்களுடன்  சம்பந்தப்பட்ட விடயங்கள். மத்தியில் மாத்திரமல்ல பிராந்திய மட்ட அரசியல் சபையின் அனுமதியைப் பெற வேண்டும். ஓன்றையொன்று அனுசரித்தல் ,கலந்து பேசுதல் என்பன இலங்கையில் புழக்கத்திற்கு வரவேணடும். ஜனநாயகம் என்பது கலந்துரையாடல் உடன்படுதல் ,வேறுபடுதல் ;நடைமுறைச் சாத்தியமாக்குதல் என்பவற்றையும் உள்ளடக்கியதே. ஆரோக்கியமான ஜனநாயக சமூகத்தில் இவை துரித கதியில் நிகழும். ஆனால் நோயுற்ற சமூகத்தில் குறைப்பிரசவமாகவே நிகழும்.  (மேலும்....)

ஐப்பசி 22, 2012

இலங்கை தமிழ் அகதியை ஏமாற்றிய தமிழ்ப்படத் தயாரிப்பாளர் கைது

இந்தியா, இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதி ஒருவரை வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கு விஸா பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றியதாக இராமநாதபுரத்திலுள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து சம்பவத்துடன் தொடர்பு பட்ட திரைப்படத் தயாரிப்பாளர் சென்னை விருகம்பாக்கத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நபரிடமிருந்து எட்டு போலி கடவுச்சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த திரைப்படத் தயாரிப்பாளர் அகோரம் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 22, 2012

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது  - டியூ.குணசேகர!

13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் டியூ.குணசேகர தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்ட அமுலாக்கமே,  புலிகளைத் தவிர்ந்த ஏனைய தமிழ் ஆயுதக் குழுக்கள், ஆயுதங்களை களைய வழிகோலியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக அதிகாரங்களை பகிர்வதற்கு ஜனாதிபதி விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், 13ம் திருத்தச் சட்ட மூலத்தை ரத்து செய்வதன் மூலம் மீண்டும் தமிழ்ப் பிரிவினைவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் நிலவுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் 13ம் திருத்தச் சட்டம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல என டியூ.குணசேகர குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்யும் அளவிற்கு அரசாங்கம் தேவையற்ற தீர்மானங்களை எடுக்காது என்றே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார். 13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட போது எதிர்க்கட்சியிலிருந்து கொண்டு தாம் அதற்கு ஆதரவாக வாக்களித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 13ம் திருத்தச் சட்டத்திற்கு காத்திரமான ஓர் மாற்றீட்டு யோசனைத் திட்டம் முன்வைக்கப்படும் வரையில் அதனை ரத்து செய்வது புத்தி சாதூரியமான தீர்வாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாகாணசபை முறைமை ரத்து செய்யப்பட வேண்டும், 13ம் திருத்தச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் போன்ற கருத்துக்களை வெளியிடுவதன் மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளில் இலங்கைக்கு பாதக நிலைமை ஏற்படக் கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐப்பசி 22, 2012

கடற்படையினால் மாதகல் மேற்கு விடுவிப்பு

கடற்படையினர் நிலைகொண்டிருந்த மாதகல் மேற்கு பிரதேசம், மக்கள் மீள்குடியேற்றத்துக்காக  விக்கப்பட்டுள்ளது என்று சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் முரளிதரன் இன்று திங்கட்கிழழை தெரிவித்தார். கடந்த 20ஆம் திகதி குறித்த பிரதேசம் கடற்படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இப்பகுதியில் மீள்குடியேறவுள்ள மக்கள் தொடர்பான பதிவுகள் மாதகல் பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதுவரை 269 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அத்துடன் விடுவிக்கப்பட்ட குறித்த பகுதியில் இன்று திங்கட்கிழமை 212 குடும்பங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று காணி துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அப்பகுதியில் மீள்குடியேறும் மக்களுக்கு அரசின் விதிமுறைகளுக்கு அமைவாக வீட்டுத்திட்டங்கள், வாழ்வாதார உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.அத்துடன் இந்தப் பிரதேசத்தின் உட்கட்டமைப்பு மற்றும் வீதி, மின்சாரம் உள்ளிட்ட தேவைகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐப்பசி 22, 2012

தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது இளையராஜா குரல் கொடுக்கவில்லை - சீமான்

தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை, என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் கடைசி நேரத்தில் நடேசன் வெள்ளைக் கொடியுடன் போன போது அவரை சுட்டு கொன்றார்கள். இதை பார்த்து சிங்களப் பெண் நடேசன் மனைவி சிங்களத்தில் அவர்களிடம் நியாயம் கேட்டார். அவரையும் கொன்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 22, 2012

Defence Secretary  repeats call for abolition of 13-A

(By Shamindra Ferdinando)

Defence Secretary Gotabhaya Rajapaksa yesterday reiterated that post-war political strategy of Tamil National Alliance (TNA) left him with no alternative but to strongly recommend the abolition of the 13th Amendment. He urged the government, the Opposition as well as the international community to examine the conduct of the one-time mouthpiece of the LTTE. It was up to Parliament to decide on the 13th Amendment, the Defence Secretary said, adding that the eradication of the LTTE conventional military capability shouldn’t be a reason for the government to be complacent. (more....)

ஐப்பசி 22, 2012

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், 2013ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவடையும்வரை வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாரம் நாடாளுமன்றத்தில் சகலரும் பிரசன்னமாகியிருக்குமாறு ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இவ்வாரம் முக்கியமான சில சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட இருப்பதனால் ஆளுங்கட்சியைச் செர்ந்த சகலரையும் பிரசன்னமாகி இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது.

ஐப்பசி 22, 2012

தமிழகத்தில் சூரியசக்தி மூலம் 3 ஆயிரம் மெகா வாட் மின் உற்பத்தி, வீடுகளில் சூரியமின்கலம்

தமிழகத்தில் சூரிய சக்தி மூலம் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் புதிய கொள்கையை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். இதன்படி வீடுகளில் சூரிய சக்தி அமைக்க ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சூரிய சக்தியானது மனித குலத்திற்கு தூய்மையானதும், சுற்றுப்புற சூழலை மாசு ஏற்படுத்தாததும், அளப்பரியதும் மற்றும் குறைவற்ற எரிசக்தி ஆதாரம் ஆகும். சூரிய சக்தியை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்து தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டு வருகிறார். எரிசக்தி பாதுகாப்பு, சூரியசக்தியை கொண்டு 3 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்தல் மற்றும் உள்நாட்டிலேயே சூரியசக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி ஆகியவை சூரிய சக்தி கொள்கையின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும். சூரிய சக்தி சாதனங்களை தயாரிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.

ஐப்பசி 22, 2012

Over 400 Academics Settle Overseas

Over 400 academics have settled overseas despite signing bonds with the local authorities, the Higher Education Ministry said. Higher Education Ministry Secretary Dr. Sunil Jayantha Navaratne said that legal action will be filed against those lecturers as well as guarantors who had signed the bond. He said that 471 lecturers had signed the bonds before going overseas saying they will return to Sri Lanka and some had even obtained air tickets at the expense of the University Grants Commission (UGC). The lecturers are on the university pay roll, but go overseas to obtain their Masters and PHD and remain in that country, Navaratne said. He said that in total the UGC faced a loss of Rs. 2 billion.

ஐப்பசி 22, 2012

லெபனான் பாதுகாப்புப் படைத் தளபதியின் கொலைக்கு சிரிய அரசு மீது குற்றச்சாட்டு

லெபனான் பாதுகாப்புப் படை தளபதி விஸ்ஸாம் அல் ஹஸ்ஸன் மீதான குண்டுத் தாக்குதலின் பின்னணியில் பஷர் அல் அஸாத் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்தக் குண்டு தாக்குதலை தொடர்ந்து லெபனானில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நீண்டகால சிவில் யுத்தத்திற்கு முகம்கொடுத்த லெபனானில் கடந்த 2005ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ரபீக் ஹரீரி பெய்ரூட்டில் கார் குண்டு தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலுக்கு சிரிய அரசு மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து லெபனானில் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அங்கு முக்கிய பிரமுகர் ஒருவரை இலக்கு வைத்து மீண்டும் ஒரு குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஐப்பசி 22, 2012

செவ்வாய் மேற்பரப்பில் மீண்டும் ஒளிரும் பொருள் அவதானிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி இயந்திரம் மீண்டும் ஒருமுறை ஒளிரும் பெருள் ஒன்றை அவதானித்திருப்பது நாஸா விஞ்ஞானிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நாசா மையத்தின் கியூரியாசிட்டி இயந்திரம் செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. அங்கிருந்து புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகின்றது. இந்நிலை யில் தற்போது முதன் முறையாக செவ்வாய்க்கிரகத்தின் மணலை தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து எடுக்கப்பட்ட புகைப் படத்தில் வெள்ளை நிறத்தில் ஒளிரும் பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. இது நாசா விஞ்ஞானிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இதற்கு முன்பும் இதுபோன்ற பொருள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கியூரியாசிட்டி, இயந்திரம் ஆய்வுக்காக செவ்வாய்க்கிரக மண்ணை முதல் முறையாக தன்னுள் உட்செலுத்தியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மண்மாதிரியை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள கியூரியாசிட்டி இந்த வார இறுதியில் அதன் முடிவை அறிவிக்கும் என நாஸா விஞ்ஞானிகள் அறிவித் துள்ளனர்.

ஐப்பசி 22, 2012

படி ஏறும் சக்கர நாற்காலி வடிவமைப்பு

படிக்கட்டுகளில் ஏறக்கூடிய ரோபோ சக்கர நாற்காலியை ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மாற்றுத் திறனாளிகள், வயதானோர், நோயாளிகள் பயன்படுத்தும் விதத்தில், ஜப்பானின், சிபா தொழில் நுட்ப மைய பொறியியலாளர்கள் ரோபோ சக்கர நாற்காலியை வடிவமைத்துள்ளனர். இந்த சக்கர நாற்காலி, சாதாரண சக்கர நாற்காலியை போல் நான்கு சக்கரங்களை கொண்டதுதான் என்றாலும் வழியில் படியோ அல்லது பள்ளமோ காணப்பட்டால் இந்த நாற்காலியின் சக்கரங்கள் கால்கள்போல் வடிவம் மாறி படி ஏறி விடும். வழியில் உள்ள தடைகளையும் தண்டி விடும். இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்கள், ஜாய்ஸ்டிக் கருவி கொண்டு இதை இயக்கலாம்.

ஐப்பசி 22, 2012

சிரேஷ்ட பிரஜைகளுக்கான காப்புறுதி திட்டம் அவர்களின் வாழ்வை வளமாக்கும்

70 வயது எல்லையைக் கடந்த சிரேஷ்ட பிரஜைகள் தங்கள் வாழ்க்கையின் இறுதி அத்தியாயத்தை நிம்மதியாகவும் பணப் பிரச்சினையின்றியும் கழிப்பதற்கு உதவக்கூடிய வகையில் அரசாங்கம் ஒரு உன்னத காப்புறுதி திட்டத்தை அமுலாக்க திட்ட மிட்டு வருகிறது. சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா அவர்கள் மாதாந்தம் 1,000 ரூபா அலவன்ஸைப் பெறுபவர்களுக்கு இந்த புதிய காப்புறுதி திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று கூறினார். இப் புதிய காப்புறுதி திட்டம் எங்கள் நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சுகாதாரத்தையும் நல்வாழ்வையும் பேணிப் பாதுகாப்பதுடன் அவர் களை சுதந்திரமாக வாழ வைப்பதற்கு வகை செய்யும். (மேலும்....)

ஐப்பசி 21, 2012

யாழில் கடந்த கிழமை 140 க்கும் மேற்பட்டோர் கைது

யாழ். மாவட்டத்தில் கடந்த கிழமை பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 140 க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ். மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார். நீதிமன்றங்களினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 42 பேர், மது போதையில் வாகனம் செலுத்திய 15 பேர், குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு விளைவித்த 12 பேர், சட்டவிரோதமாக மிருகங்களை ஏற்றிச்சென்ற 6 பேர், இடையூறு உண்டாகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த 37 பேர், சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றிச்சென்ற 3 பேர், சட்டவிரோதமான முறையில் சாரய விற்பனையில் ஈடுபட்ட 14 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்டத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 21, 2012

கூடங்குளம் அணு உலை அச்சுறுத்தல் குறித்த இலங்கையின் கோரிக்கை இந்தியாவால் நிராகரிப்பு

தமிழ் நாட்டில் உள்ள கூடங்குளத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள அணு மின் உற்பத்தி நிலையத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்த பாதுகாப்புக் கண்காணிப்புக் குழுக்களில் இலங்கையரும் அங்கம் வகிக்க வேண்டுமென்ற இலங்கையின் நீண்ட காலக் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாக அணுசக்தி அதிகார சபைத் தலைவர் கலாநிதி ரஞ்சித் விஜயவர்தன தெரிவித்துள்ளார். மேற்படி அணு உலைச் செயற்பாடுகளால் ஏற்படவுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் பற்றிய இலங்கையின் கவலைகள் குறித்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் புதுடில்லியில் இரு நாட்டு அதிகாரிகளும் நடாத்திய இரு நாள் பேச்சுவார்த்தையின் போதே இலங்கையின் கோரிக்கை இந்திய அதிகாரிகளால் இவ்வாறு புறக்கணிக்கப்பட்டது.

ஐப்பசி 21, 2012

கரையை நோக்கி தொடர்ந்தும் படையெடுக்கும் மீன்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பல இலட்சம் ரூபா பெறுமதியான மீன்கள் பிடிபடுகின்ற நிலையில் ஓந்தாச்சிமடம் கடற்கரையிலும் இந்நிலை தொடர்கின்றது. மீன்கள் கரையொதுங்குவதை நேரடியாகக் காண்பதற்கு பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். கரை ஒதுங்கும் மீன்கள் ஒருபுறம் இருக்க, கரைவலை மூலம் ஏராளமான மீன்கள் பிடிபடுகின்றன. அளவுக்கு மிஞ்சிய மீன்கள் பிடிபடுவதனால் சந்தைப்படுத்தலில் சிக்கல் நிலையை மீனவர்கள் எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர். (மேலும்....)

ஐப்பசி 21, 2012

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்கள் வழங்கிவைப்பு

இந்தியா, இராமேஸ்வரம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 50 பேருக்கு பிறப்புச்சான்றிதழ்களும் 130 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களும் 60 பேருக்கு இலங்கை கடவுச்சீட்டுக்களையும் இலங்கை அரசாங்கம் நேற்று சனிக்கிழமை வழங்கியுள்ளதாக த ஹிண்டு செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் தமிழ் உத்தியோகபூர்வமான மொழியாக காணப்படாதபோதே இந்த அகதிகள் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் அகதிகளாக தஞ்சம் கோரினர் என பிரதி உயர்ஸ்தானிகர் ஆர்.கே.எம்.ஏ.ராஜ்கருணா தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 21, 2012

அக்.3 சர்வதேச போராட்ட நாள்!

(ஏ.கே.பத்மநாபன்)

உலக அளவில் அனைத்து நாட்டு தொழிலாளி வர்க்கமும் ஒன்றி ணைந்து, உழைக்கும் வர்க்கத்தின் அடிப் படை வாழ்வாதார உரிமைகளை வலி யுறுத்தி அக்டோபர் 3ம்தேதி சர்வதேச போராட்டத் தினத்தை கடைப்பிடிக் கின்றன. இதற்கான அழைப்பை, உலக தொழிலாளி வர்க்கத்தை சர்வதேச அளவில் ஒன்றிணைத்து வரும் உலக தொழிற்சங்க சம்மேளனம் (டபிள்யூஎஃப்டியு) விடுத்துள்ளது. 67 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு நிறுவப்பட்ட அதே நாளில் உலகளாவிய இந்த மகத்தானப் போராட்டம், உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வி வீட்டுவசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உழைக்கும் மக்களுக்கு உடனே செய்து கொடு என்ற கோரிக்கையை உரத்து முழங்கும் விதத்தில் நடைபெறுகிறது.

ஐப்பசி 21, 2012

கூடங்குளத்தில் விரைவில் மின் உற்பத்தி-அணுமின் கழகம் தகவல்

இந்தியாவின் முதலா வது 1000 மெகாவாட் அணு மின் உலையான கூடங் குளம் அணுமின் நிலையத் திலிருந்து விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என இந்திய அணுமின் கழக நிறு வனம் தெரிவித்துள்ளது. “கூடங்குளத்தில் பணி கள் சுமூகமாக நடந்து கொண்டிருக்கின்றன. அணு உலையில் எரிபொருள் நிரப் பும் பணி முடிந்துவிட்டது. அணு ஒழுங்காற்று அமைப்பு இப்போது ஆய்வு மேற் கொண்டிருக்கிறது” என்று தில்லியில் வெள்ளியன்று நடைபெற்ற இந்திய எரி சக்தி மன்றத்தின் கூட்டத் தின்போது செய்தியாளர் களிடம் பேசிய அணுமின் கழக இயக்குநர் சிவ் அபிலாஷ் பர்துவாஜ் தெரிவித் தார். அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் ஆய்வுகள் முடிந்தபிறகு, அணு உலை யின் பிரஷ்ஷர் மூடிகளை மூடுவதற்கு அனுமதி அளிக் கப்படும் எனத் தெரிவித்த அவர், அணு உலையில் 163 பண்டல்கள் செறிவூட்டப் பட்ட யுரேனியம் எரிபொரு ளாக கடந்த செப்டம்பர் 19ல் துவங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நிரப்பப்பட் டுள்ளது எனத் தெரிவித்தார். மின் உற்பத்தி துவங்குவதற்கு இன்னும் இரண்டு கட்டங் களை தாண்ட வேண்டியுள் ளது என்றும், முறையான அனுமதி கிடைத்தவுடன் அந்த நிலை எட்டப்பட்டு விடும் என்றும் கூறினார். (மேலும்....)

ஐப்பசி 21, 2012

தொழில் புரட்சியினால் மனிதகுல வரலாற்றில் ஏற்பட்ட திருப்புமுனை

தொழில் புரட்சி (Indus trial Revolution) என்பது 1750 - 1850 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் உலகளவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொழில்நுட்ப, பொருளாதார, நாகரிக மாற்றங்களைக் குறிக்கும். தொழில் புரட்சி முதலில் இங்கிலாந்தில் தோன்றியது. பின் னர் 19ம் நூற்றாண்டில் ஐரோப்பா எங்கும், வட அமெரிக்காவிலும் பரவியது. ஜெர்மனியில் 1871 இல் பேரரசு நிறுவப்பட்ட பின்னரும், அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின்னரும், ரஷ்யாவில் 1917 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் தொழில் புரட்சி தொடங்கியது. இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளில் 20 ஆம் நூற்றாண்டில் தொழில் புரட்சி தொடங்கியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரே உலகெங்கும் தொழிற்சாலை முறை தோன்றியது. தொழில் புரட்சி மனித சமுதாயத் தின் பெரும் திருப்புமுனையாக அமைந்ததுடன் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் எல்லா கூறுகளிலும் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொழில் புரட்சியின் காரணமாக ஒரு நாட்டின் பொரு ளாதாரம் வேளாண்மையை மட்டுமே சார்ந்து இருந்த நிலை மாறி, தொழிலகப் படைப்புகளின் பங்களிப்பும் கூடத் தொடங்கியது. (மேலும்....)

ஐப்பசி 21, 2012

கே.பி. இடைத்தரகரானாலும் கொடுப்பதற்கு அரசிடம் ஒன்றுமில்லை

பிரதித் தலைவர் ஜ.ம.மு.நியாயமான அரசியல் அதிகாரப் பரவலாக்கலுக்கு தயாரில்லாத அரசு கே.பி.யை இடைத்தரகராக்கினால் ௭ன்ன? புலம்பெயர்ந்த தமிழரோடு பேசினால் ௭ன்ன? தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை அடையப்பெற முடியாது ௭ன்பதே உண்மை. நாளும் பொழுதும் இடம்பெறும் அடிப்படை மனித உரிமை மீறல்களால் அவதியுறும் மக்களின் பிரச்சினைகளுக்கு முதற்கண் தீர்வு காணாத அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ தன்மானமுள்ள அரசியற் சக்திகளோ ௭வ்விதம் பேச முடியும்? இவ்வாறு கேள்வி ௭ழுப்புகிறார் ஜ.ம.மு.வின் பிரதித் தலைவர் கலாநிதி குமரகுருபரன். வட– கிழக்கு மக்கள் தம் பிரதிநிதிகளை ஒதுக்கிவிட்டு அபிவிருத்தி ௭ன்கின்றது அரசு. அபிவிருத்திக்கு முன்பதாக தமிழ் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள் ௭னும் நிலையில்தான் வட– கிழக்கு தமிழ் மக்கள் இருக்கின்றார்கள். புலம்பெயர்ந்த தமிழ் மக்களுடன் பேசுவதற்கு முன் அரசு ௭தைக் கொடுக்கத் தயாராக இருக்கின்றது ௭ன்பதையே பிரகடனம் செய்ய வேண்டும்.

ஐப்பசி 21, 2012

ஜனாதிபதியினால் கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் திறந்து வைப்பு

கிழக்கின் முதலாவது 5 நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டலொன்றை பாசிக்குடாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை திறந்து வைத்தார். பாசிக்குடா பகுதியில் 150 ஏக்கர் விசாலத்தில் அமையவுள்ள 14 ஹோட்டல்களின் முதற்கட்டமாக 48 அறைகளைக்கொண்ட முதலாவது 5 நட்சத்திர ஹோட்டல் இன்று திறந்த வைக்கப்பட்டது. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இந்த ஹோட்டல்கள் நிர்வகிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்தில் 854,000 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர். இவ்வருடத்தில் இந்த எண்ணிக்கை 950,000ஐ எட்டுமென நம்பப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

ஐப்பசி 20, 2012

கூடங்குளம் அணு மின்நிலையம் எங்கள் கோடிக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்துமா...?

அணு சக்தி என்ற அரக்கன்

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

தமிழ் நாட்டின் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு ஆதரவான, எதிரான போராட்டங்கள், தீர்மானங்களில் பிராந்திய (தமிழ்நாடு) அரசியலும் பின்னிப் பிணைந்துள்ளது. மேலும் ரஷ்யாவின் தொழில் நுட்பத்தினால் நிறுவப்படுவதில் அமெரிக்காவிற்கு இருக்கும் விரும்பம் இன்மை தமிழ் நாட்டில் உள்ள என்ஜிஓ களினால் எதிர்ப்பு என்ற வடிவங்களால் வெளிபடுத்த அமெரிக்காவினால் ஊக்கிவிக்கப்படும் என்பதை மறுப்பதற்கும் இடமில்லை. இதில் அப்பாவிப் பொது மக்களை பகடக்காய்களாக பாவிக்க இத்தரப்புகள் முயலும். இதில் வைகோ களும் சீமான் களும் அதிகம் ஈடுபாடுகாட்டாவிட்டாலும் சிறிதளவு குளிர் காய முற்படுவர். இலங்கையில் உள்ள மக்களுக்கு இவ் அணு உலையில் விபத்து எற்பட்டால் எற்படும் பாதிப்புக்களை பற்றி அதிகம் சிந்திக்க வாய்ப்புக்கள் குறைவு. ஆனால் இந்தக் கூடங்;குளத்தை இலங்கை, இந்தியா இடையே நடைபெற்று வரும் பனிப் போரை நிஜப் போராக மாற்ற சிங்கள தீவிரவாத சக்திகள் முயலும், முயன்று கொண்டிருக்கின்றன. (மேலும்....)

ஐப்பசி 20, 2012

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்த 12 தமிழர்களை சிறிலங்காவுக்கு நாடு கடத்துகிறது கனடா

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கனடாவில் நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 12 தமிழர்கள் சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்த உலகத் தமிழர் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான 12 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், அவர்களை கொழும்புக்கு நாடுகடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், கனேடிய காவல்துறையின் புலனாய்வாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். கனேடிய எல்லைச் சேவைகள் முகவரமைப்புடனான ஆலோசனைகளை அடுத்து, கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை இவர்களை கொழும்புக்கு நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. (மேலும்....)

ஐப்பசி 20, 2012

60 அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்துகிறது பிரித்தானியா

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 60 இலங்கை அகதிகளை, பிரித்தானியா எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கைக்கு நாடு கடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  இதேவேளை இதற்கு எதிராக செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் ஹீத்ரோவுக்கு அருகில் உள்ள ஹார்மொன்ஸ்வோர்த், கோல்புறூக் தடுப்பு முகாம்களுக்கு முன்பாக எதிர்ப்புப் போராட்டம் ஒன்று மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் அகதிகள் இங்கு கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படக் கூடிய ஆபத்து இருப்பதால், அதனைத் தடுத்து நிறுத்த முன்வருமாறு பிரித்தானிய அமைப்பு ஒன்று அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 20, 2012

இலங்கை அரசாங்கமும் புலிகளும் இராஜதந்திர கருத்துக்களை மதிக்கவில்லை -  விக்கிலீக்ஸ் தகவல்

இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இராஜதந்திர தகவல்களை ஏற்றுக்கொள்வதில் அக்கறையின்றி இருந்ததாக எரிக்சொல் ஹெய்ம் குற்றம் சுமத்தியுள்ளார். எரிக்சொல்ஹெய்மின் இந்த கருத்தை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு தரப்பினரும் நோர்வேயின் தரப்பின் தகவல்களுக்கு உரிய மதிப்பளிக்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் 2007 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் திகதியன்று அமெரிக்கத் தூதரகத்தினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமெரிக்காவில் காங்கிரஸ்காரர்களை போல சிங்கள வாக்குகளை குறி வைத்து செயற்படுகிறார். தாம் கடைசியாக ராஜபக்ஷவை சந்தித்தபோது அவர் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க எவ்வித திட்டத்தையும் கொண்டிருக்கவில்லை என்று சொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் சிறந்த தமிழ் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம் மரணமானதன் பின்னர் அவர்களை உரிய நேரத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக சொல்ஹெய்ம் தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐப்பசி 20, 2012

ஐப்பசி 20, 2012

அமெரிக்கத் தேர்தலைவிட முக்கியமானது எது? 

“வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் ஒரு போராளி. அவரைப் பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டுமென்று எதிரிகள் நடத்திய அனைத்து வகையான தில்லுமுல்லுகளையும் எதிர்த்து முறியடித்து அவர் மீண்டும் வெற்றி வாகை சூடி யுள்ளார். அவரது வெற்றியானது, 21ஆம் நூற்றாண்டில் சோசலிசத் தின் முன்மாதிரி எப்படி இருக்க வேண்டும் என்பதை உலகுக்குப் பறைசாற்றியிருக்கிறது. நாட்டில் உள்ளஅனைத்துமக்களுக்கும்உணவு, உறைவிடம், சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் கல்வியை வெனிசுலா உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. சமூகநலத் துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டு வருவதை வெனிசுலா மக்கள் நேரடியாகப் பார்க்கின்றனர். தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஓர் அரசாங்கத்தை நாம் பெற்றிருக்கிறோம் என்பதை அவர்கள் உணர்வு பூர்வமாக உணர்ந்துள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 20, 2012

கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்க்கவும் - கிழக்கு பல்கலைகழகம்

காத்தான்குடி உட்பட கிழக்கு கரையோரத்தில் கரையொதுங்கும் மீன்களை உண்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கிழக்கு பல்கலைகழக விலங்கியல் திணைக்கள போதனாசிரியர் ஜே.எம்.ஹரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கும் மீன்களை பரிசோதனை செய்யவென குறித்த பிரதேசத்திற்கு இன்று நண்பகல் கிழக்கு பல்கலைகழக விலங்கியல் திணைக்கள ஆராய்ச்சியாளர்கள் குழுவினர் விஜயம் செய்தபோதே இதனைத் தெரிவித்தனர். நீர்மாதிரிகளின் தரம் மற்றும் கரையொதுங்கிய மீன்களின் தசை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இதன் முடிவுகள் ஆராய்ச்சிகளின் முடிவிலேயே அறிவிக்க முடியும். எனவே அதுவரை இம்மீன்களை உண்ணுவதை தவிர்க்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஐப்பசி 20, 2012

செயற்றிட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர்ந்தோர் ஒத்துழைப்பர்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள தேசிய செயற்றிட்டம், இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு உதவும் என்பதுடன், அத்திட்டத்தை செயற்படுத்தினால் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற முடியும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயற்றிட்டத்தில் பிரயோசனமான பரிந்துரைகள் இருக்கின்றன. அது அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு நல்கவும், பலப்படுத்தவம் உதவும். பொதுமக்கள் மற்றும் பொலிஸாருக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தவும் அதனை வலுப்படுத்துவதற்கும் இலங்கையின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கும் உதவும். ஆதலால், செயற்றிட்டத்தை செயற்படுத்துவதன் மூலம் புலம்பெயர் மக்களின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்' மாலைதீவுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரங்கின் என்றார்.

ஐப்பசி 20, 2012

இனப் பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் அபிலாஷைகள் உள்வாங்கப்படல் அவசியம்

தேசிய இனப் பிரச்சினை தீர்வில் முஸ்லிம்கள் உள்வாங் கப்பட பாராளுமன்ற தெரிவுக்குழு வாய்ப்பாக அமையுமெனத் தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் தமிழ் கூட்டமைப்பு பாராளு மன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பதன் அவசியத்தையும் விளக்கினார். இலங்கைக்கான நோர்வேயின் புதிய தூதுவர் லொச்சென், நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை புதன்கிழமை (17) மாலை அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது கூறியதாவது, விடுதலைப் புலிகளுடனான ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் நாம் பங்குபற்றினோம் இனப் பிரச்சினைகளு க்கான பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களும் முக்கிய தரப்பு. முஸ்லிம்கள் தனியாக உள்வாங்கப்ப டாதது ஒரு பாரிய குறைபாடாகும். இக்குறைபாடு நிவர்த்திக்கப்பட வேண்டும் நீதித்துறையின் செயல்பாடுகள் பற்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து வரும் புதிய சட்டங்கள் மற்றும் திருத்தச் சட்டங்கள் பற்றியும் அமைச்சர் தூதுவருக்கு விளக்கினார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படாதிருப்பது குறித்தும் அதுபற்றிய அமைச்சரினதும், அரசாங்கத்தி னதும் நிலைப்பாடு குறித்தும் இங்கு பேசப்பட்டது.

ஐப்பசி 20, 2012

கே.பி.மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களுடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் வெற்றி

புலிகள் இயக்கத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனின் பங்களிப்புடன் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அந்தப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கே. பி. அரச தரப்பு சாட்சியாக செயற்பட்டு வருவதாக கூறிய அவர் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப் படவில்லை என்றும் குறிப்பிட்டார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஊடக அமைச்சில் நடைபெற்றது. இங்கு கே. பி. குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்; சர்வதேச மட்டத்தில் இலங்கைப் பிரச்சினை தொடர்பில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சில சமயங்களில் நெகிழ்வுப் போக்கை கடைப்பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எமக்கு புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் செயற்படவேண்டி யுள்ளது.யுத்தத்தினூடாக பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் இந்தப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு ஏற்படவில்லை. சுமுகமாக இதற்கு தீர்வு எட்டப்பட வேண்டும். பாராளுமன்ற த்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்த வர்கள், நாட்டை தீவைத்தவர்கள் போன்றவர்களும் எம். பிகளாக உள்ளனர். கே. பி. தொடர்பிலும் அத்தகைய நிலையே உள்ளது. புலிகளுடன் தொடர்புபட்டிருந்த அவரை நாம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் பேசுவதற்கு பயன்படுத்தியுள்ளோம்.

ஐப்பசி 20, 2012

கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக போராட்டக்காரர்களுக்கு, ஆதரவு தெரிவிக்க கூடங்குளம் சென்றது தவறுதான்  - அச்சுதானந்தன்

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன், சமீப காலமாக கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி வந்தார். குறிப்பாக கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக, கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறி, தனிக்கட்சி துவங்கி கொலை செய்யப்பட்டு உயிரிழந்த டி.பி. சந்திரசேகரனின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்த நடவடிக்கைகளால் கட்சி மேலிடம் அவர் மீது கடும் அதிருப்தி அடைந்தது. சமீபத்தில் நடந்த கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் அச்சுதானந்தனுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் அச்சுதானந்தன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்தியா, ரஷ்யா இணைந்து செயல்படுத்துகிற கூடங்குளம் அணுமின் திட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரவு அளிக்கிறது. ஆனால் நான் கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக, அணு மின்நிலைய எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக கூடங்குளம் சென்றது தவறுதான். 1964ம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பிளவுக்கு காரணமான டாங்கேயுடன் மாநில கட்சி செயலாளர் பினரபி விஜயனை ஒப்பிட்டு கூறியதும் தவறுதான்.

 

ஐப்பசி 19, 2012

சென்னை நீதிமன்றில் டக்ளஸ் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு

சூளைமேடு துப்பாக்கி விவகாரம் மற்றும் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரடியாக ஆஜராகுமாறு சென்னை பருவ நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் வீடியோ மாநாட்டு முறையில் தோன்றுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டு அவர் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. தமிழ் நாட்டிலுள்ள சூளைமேட்டு கிராமத்தில் உள்ளூர்வாசிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் ஒருவரை கொலை செய்ததாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உட்பட 10பேர் கடந்த 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டனர். இவர்கள் யாவரும் கைது செய்யப்பட்ட கொலைக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இதன் பின், இவர்கள் நீதிமன்றில் ஆஜராகாமையினால் இவர்களை பிரகடனம் செய்யப்பட்ட குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. (மேலும்....)

ஐப்பசி 19, 2012

கிணறுகளுக்கு வரி

சாதாரண கிணறுகள் அல்லது குழாய் கிணறுகளை தோண்டுவோர் ஆண்டுக்கான அனுமதிக் கட்டணமாக நீர்வளசபைக்கு 7,500 ரூபாவிலிருந்து 15,000 ரூபாவரை செலுத்தவேண்டிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரம் ஒன்று விரைவில் சமர்ப்பிக்கப்படும் என நீர்வளசபையின் தலைவர் பந்துல முனசிங்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர்வளசபை சட்டத்திற்கு திருத்தங்கள் பல கொண்டுவரப்படவுள்ளன. இதன்படி 12 அடிக்கு கூடிய விட்டமுள்ள கிணறு தோண்டுவதற்கு முன் அனுமதி பெறவேண்டியிருக்கும். (மேலும்....)

ஐப்பசி 19, 2012

திவிநெகும சட்டமூலம் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

திவிநெகும சட்டமூலத்தை கொண்டுவருவதற்கான காரணம் யாது?

இலங்கை சமுர்த்தி அதிகார சபையானது 1995 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் தாபி க்கப்பட்டது. ஊழியர்களின் தொழில் பாதுகாப்புத் தன்மை அப்போது காணப்படாமையினால் ஊழியர்கள் தமது தொழிலின் பாதுகாப்புத் தன் மையினை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி உதவி பெறுவோரும் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும் நன்மைகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். (மேலும்....)

ஐப்பசி 19, 2012

வட, கிழக்கில் இராணுவமயமாக்கல்

சீனாவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு முறைப்பாடு

இலங்கைக்கு பாரியளவில் நிதியளிக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் இராணுவ மயமாக்கல் தொடர்பான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என இலங்கைக்கான சீன தூதுவரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவிற்கும் சீன தூதுவர் வூ ஜியங்கோவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 19, 2012

கேள்வி ??????    பதில்

தமிழ் மக்கள் உயிரிழப்புக்கு பிரபாகரன் பிடிவாதம் தான் முழுக்காரணம் என்று எரிக் சொல்ஹெய்ம் கூறியுள்ளாரே?

இதைச் சொல்வதற்கு எரிக்சொல்ஹெய்ம் அவர்களுக்கு மூன்று வருடம் தேவைப்பட்டிருக்கிறது. புலிகளுக்கும் அரசுக்கும் சண்டை நடந்து கொண்டிருக்கும்போதே, மக்கள் மீது அக்கறை கொண்ட சிலர், மக்களைக் கேடயமாகப் பாவிப்தைத் தவிர்த்து, மக்களை யுத்தப் பிரதேசத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கும்படி புலிகளிடம் கேட்டுக்கொண்டார்கள். கிளிநொச்சிப் பகுதியில் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, இத்தகைய வேண்டுகோளை யாழ் கத்தோலிக்க ஆயர் அவர்கள் விடுத்திருந்தார். புலிகளின் புலன்பெயர்ந்த பிரதிநிதிகளிடம் மக்களை வெளியேற அனுமதிக்கும்படி கேட்டபோது, சனத்தை விட்டுட்டுப் பொடியள் என்ன செய்யிறது, என்று பேடித்தனமாகப் பதில் சொன்னார்கள்.  நந்திக் கடலோரத்திலே தப்பித்துப்போகத் துணிந்த தமிழர்களின் மீது, புலிப் பயங்கரவாதிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பலரைச் சுட்டுக் கொன்றதற்கான சாட்சியங்கள் அமெரிக்காவிடமும் இருக்கிறது. (மேலும்....)

ஐப்பசி 19, 2012

ஜனாதிபதி மஹிந்த கூறியதை இந்தியா நம்பியது - நிரூபமா ராவ்

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம், விடுதலைப் புலிகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்பட்டது. அப்பாவி மக்கள் மீது எங்களுக்கு கோபம் இல்லை. விடுதலைப் புலிகள் மனித கேடயமாகப் பயன்படுத்திய சில நூறு அப்பாவிகள் மட்டுமே இறந்திருக்கிறார்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அமைச்சரவையே கூறியது. அதனை இந்தியாவும் நம்பியது' என்று அமெரிக்காவுக்கான இந்திய தூதுவர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 19, 2012

காத்தான்குடி கடற்கரையில் மீண்டும் அதிசயம், பல வகையான கடல்வாழ் உயிரினங்கள் கரையொதுங்கின

மட்டக்களப்பு காத்தான்குடி வங்காள விரிகுடா கடற்கரையில்  இரண்டாவது நாளாகவும் பல வகையான சிறிய , பெரிய மீன்களும் ஒரு வகையான பாம்பு இனங்களும்  பெரிய ரக ஆமையொன்றும் உயிரற்ற நிலையில் கரையொதுங்கியுள்ளன. இதனைப் பெருமளவிலான மக்கள் பார்வையிட்டனர். மேலும் இவ்வாறு கடல்வாழ் உயிரினங்கள் தொடர்ச்சியாக கரையொதுங்குவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை காலநிலை சீரற்றநிலையில் காணப்படுவதுடன்  மழையுடன் காற்றும் காணப்படுகின்றது.

ஐப்பசி 19, 2012

பஸ் பெயர்ப்பலகையில் 3 மொழிகளும் இல்லாவிடின் கடும் நடவடிக்கைக்கு தீர்மானம்

மூன்று மொழிகளிலும் பெயர்ப் பலகை இருக்க வேண்டுமென தனியார் பஸ்களுக்கு அறிவுறுத்தாத மாகாணசபை அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக தனியார் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. சகல பஸ்களிலும் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதிக்கு முன் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையை பயன்படுத்த வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழு போக்குவரத்து அமைச்சுக்கு பணித்திருந்தது. பெயர்ப் பலகைகள் மூன்ற மொழிகளிலும் இல்லாததால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பற்றி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பபாடு செய்திருந்தது. மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்புரையை செயற்படுத்தப் போவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும் இலங்கை போக்குவரத்து சபையும் கூறின. இருப்பினும், பல பஸ்கள் சிங்கள மொழி பெயர்ப்பலகையை மட்டும் கொண்டிருக்கின்றன. அதேசமயம், வடக்கு கிழக்கில் அநேகமாக தமிழில் மட்டும் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. சேவையிலுள்ள 20,000 தனியார் பஸ்கள் மாகாண போக்குவரத்து அதிகாரத்தின் கீழ் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 19, 2012

எல்.ரி.ரி.ஈ இயக்க புலனாய்வு துறையின் இரு உறுப்பினர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல்

எல்.ரி.ரி.ஈ இயக்க புலனாய்வு துறையின் இரு உறுப்பினர்களுக்கு எதிராக கொழு ம்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிக்கும் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் திணைக்களம் இந்த குற்றப்தத்திரத்தை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இவ்விரு சந்தேக நபர்களும் கொழும்பில் தற்காலிக இடமொன்றில் தங்கியிருக்கும் போதே பயங்கராவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். எல்.ரி.ரி.ஈ புலனாய்வு துறையின் உத்தரவிற்கு அமைய கொழும்பிற்கு வந்திருந்த இவர்கள், பிரபுக்களின் பிரயாணங்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதையே நோக்கமாக கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு இடங்கள் தொடர்பிலான பல தகவல்களையும் இவர்கள் பெற்றிருந்ததாக விசார ணைகள் மூலம் தெரியவந்துள்ளன. வழக்கு விசாரணை நிறைவடையும் வரை இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐப்பசி 19, 2012

துனீஷியாவில் பத்திரிகையாளர் போராட்டம்  ஊடகங்களுக்கு கட்டுப்பாடு

துனீஷியாவில் ஊடகங் களுக்கு கட்டுப்பாடு விதிக் கப்பட்டதைக் கண்டித்து ஏராளமான பத்திரிகை யாளர்கள் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். துனீஷியாவில் உள்ள ஊடகங்களை கட்டுப்படுத் தும் வகையில் அந்த அரசு பல்வேறு கட்டளைகளை விதித்துள்ளது. இதனால், பத்திரிகை சுதந்திரம் பாதிக்கப்படு வதோடு, பத்திரிகையா ளர்கள் தாக்கப்படும் சூழ் நிலையும் உருவாகியுள்ளது. இதற்கு, அந்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து, துனீ ஷியாவில் முதன்முறையாக பத்திரிகையாளர் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த போராட்டத்திற்கு பத்திரிகையாளர்கள் பெரும் ஆதரவு அளித்து, திரளாக கலந்து கொண்டனர். பத்திரிகையாளர்கள் தங்களது பணியைச் செய்வ தற்கு இடையூறு ஏற்படுத் துவது மிகப்பெரிய அவ மானமாகும் என்று மூத்த பத்திரிகையாளரும் சங்கத் தின் மூத்த உறுப்பினருமான ஜியாத் ஹானி தெரிவித் துள்ளார். இதற்கிடையே, பத்திரி கை மற்றும் தொலைக் காட்சி ஊடகங்களுக்கு சுதந் திரம் அளிக்கும் வகையில் இரண்டு புதிய உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு பத்திரிகையாளர் சங்கம் வரவேற்பளித்துள் ளது. ஆனால், இதை மிகவும் காலம் தாழ்ந்து நடை முறைப்படுத்துவதாகவும் அவர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

ஐப்பசி 19, 2012

கரையொதுங்கும் பெருமளவு மீன்கள், பாம்புகள்

கிழக்கில் பொதுமக்கள் மத்தியில் சுனாமி அச்சம்

கிழக்கு மாகாண கடற்கரைகளில் மீன்கள் வந்து சுனாமி வந்து விடுமோ என மக்கள் அச்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மட்டக்களப்பு கல்லடி, ஆரையம்பதி போன்ற பிரதேசங்களிலுள்ள பெருமளவு மீன்களும் பாம்புகளும் கரையொதுங்கியுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, பாண்டிருப்பு, ஒலுவில், அறுகம்பை ஆகிய பகுதிகளி லும் நேற்று பெரு மளவு மீன்கள் பிடிப்பட்டன. இந்த மீன்களை பெருமளவிலான பொது மக்கள் கரைக்கு சென்று எடுத்துச் சென்றதுடன் சில மீன் வியாபாரிகள் 2000 கிலோ மீன்களை கொழும்பு போன்ற பகுதிகளுக்கு அனுப்பியுள்ளனர்.(மேலும்....)

ஐப்பசி 19, 2012

நியூயோர்க்கில் தாக்குதல் முயற்சி, பங்களாதேஷ் இளைஞர் கைது

அமெரிக்காவில் நியூயோர்க் வர்த்தக மையத்தில் கட்டடங்கள் சிலவற்றை கார் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்ட இளைஞர் கைதானார். இது தொடர்பாக புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த குவாஸி முகமது ரிஸ்வானூல் ஆஷான் நபீஸ் (21) என்ற இளைஞர் அமெரிக்காவிற்கு மாணவர் விசா பெற்று கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார். நியூயோர்க் நகரில் முக்கிய கட்டடங்களை நோட்டமிட்டு கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் நியூயோர்க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களை கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாக எப்.பி.ஐ. பொலிஸார் நபீஸை நேற்று கைது செய்தனர். தற்போது புரூக்ளின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் மூலம் நியூயோர்க் நகரில் நடத்த இருந்த மிகப் பெரிய தாக்குதல் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

ஐப்பசி 19, 2012

ஐப்பசி 18, 2012

புலிகள் போராளிகளால்தான் என்னுடைய தந்தையே கொல்லப்பட்டார்

(முஸ்தீன்! )

புலிகள் போராளிகளால்தான் என்னுடைய தந்தையே கொல்லப்பட்டார். அதற்காக என்னால் அந்த விடுதலைப் போராட்டத்தை மறுக்க முடியாது. இப்போதும் விடுதலைப்புலிகளையோ ஈழ விடுதலைக்குப் போராடிய பிற இயக்கங்களையோ நான் மறுதலிக்கவில்லை. இங்குள்ள சிக்கல் என்பது, ஆதரித்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பேன், எதிர்த்தால் முழுமையாகக் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பேன் என்று செயல்படுவதுதான். நடுநிலையில் இருந்து பார்க்கும் தன்மை குறைந்து விட்டது. நடுநிலைப் பார்வை என்பதை உருவாக்கினால் மட்டும் தான் பழைய வரலாறுகளைச் சரியாகப் பதியும் ஒரு வேலையைச் செய்ய முடியும்"" என்று சொல்லும் முஸ்தீன் ‐ இலங்கை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குனர். (மேலும்....)

ஐப்பசி 18, 2012

Longtime Tamil refugee facing deportation from Canada for allegedly raising funds for terrorist Tamil Tigers

The bloody, decades-long ethnic war in Sri Lanka has been over for three years but its after-effects still ripple through the Tamil diaspora around the world, especially in Canada, a haven for thousands who fled the bitter conflict. The National Post reports the Canada Border Services Agency is asking the Immigration and Refugee Board to order the deportation of a Sri Lankan refugee who's lived in Canada for 15 years on grounds he was a bag man for the terrorist Tamil Tigers. "I can confirm that the CBSA has requested an admissibility hearing for a person they believe is inadmissible to Canada, as there are reasonable grounds to believe the individual was or is a member of the World Tamil Movement, and as a member engaged in fundraising for the Liberation Tigers of Tamil Eelam,"  Faith St. John, a CBSA spokeswoman in Vancouver, told the Post. (more....)

ஐப்பசி 18, 2012

பாலியல் தொழில் இலங்கையில் முக்கிய தொழிலாக மாறி வருகிறது

(சஞ்சயன்)

மட்டக்களப்பில் நாங்கள் ஒரு நாள் பாலியல் தொழிலிலோடு தொடர்புடைய போராளியைச் சந்தித போது சில தகவல்கள் கிடைத்தன. அந்தத் தகவல்களையும் ஏற்கனவே கிடைத்த சில தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு மட்டக்களப்பு பஸ் நிலையத்திற்குச் சென்றோம். ஒரு குறித பஸ்; ஒரு குறித்த ஊரிலிருந்து வருகின்ற அந்த பஸ் இற்காகக் காத்திருந்தோம். அந்த பஸ்சில் வருபவர்கள் இளம் பெண்கள், முன்னை நாள் போராளிகள் போன்றோர் வருவார்கள் ஆட்டோக்களில் ஏறுவார்கள். மட்டக்களப்ப்பில் குறித்த ஒரு இடத்தில் இருக்கும் விடுதிக்கு அவர்கள் சென்று மாலையானதும் தமது குடும்பத்திற்கு அன்று தேவைப்படும் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக்கொண்டு அதே பஸ்சில் வீடு திரும்புகிறார்கள். வறுமையின் கோரத்தில் சிக்கியுள்ள ஒரு புதிய சமூகம் வேறு வழியின்றி தம்மை விற்றுப் பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தீபம் தொலைக்காட்சியில் சஞ்சயனின் நேர்கணாலில் வெளித்தெரிகிறது. தாய்லாந்தின் வறுமையை பாலியல் தொழிலாக மாற்றியது வியட்னாமை அழித்துக்கொண்டிருந்த அமரிக்க இராணுவம். இலங்கையில் இது மறுபடி அரங்கேறுகிறது.
இன்னும் சில வருடங்களில் தெற்காசியாவின் பாலியல் மையமாக இலங்கை மாறிவிடுமோ என அச்சம் தோன்றுகிறது. மகிந்த ராஜபக்சவின் மாபியா அரசு இலங்கையை தெற்காசியாவின் சுற்றுலா மையமாக மாற்றுவது என்பதன் உள்ளர்த்தம் இதுதானோ?

ஐப்பசி 18, 2012

Fraud, money-laundering were all part of scheme

A lengthy, complicated and often contentious trial for the accused members of an Ajax-based fraud ring has ended with convictions for four of the five defendants.
In a finding released Friday, Ontario Court Justice Joseph De Filippis ruled that the Crown had proven allegations of fraud, money laundering and participation in a criminal organization against the ringleaders of the gang, and two of its members.
The charges relate to allegations of fraudulent activity dating back to 2001 in a number of locations, including Durham Region. The Crown alleged that losses to individuals and banks as a result of the creation of numerous fraudulent credit card accounts exceeds $1 million.
The case surrounded several members of an extended family group. Identified as ringleaders were Kuhen Neshan and Ramanan Kenegarajah of Ajax. Also charged were Rajitha Kanagarajah, Mr. Kenegarajah’s sister, and her husband, Hariharan Neserajah, and Anantha Neeranjan, Mr. Neshan’s wife. A sixth suspect, Jeya Balan, pleaded guilty to charges in the midst of the trial, which began 18 months ago and was heard sporadically over 28 days, ending in July. (more....)

ஐப்பசி 18, 2012

வாழ்வின் எழுச்சி(திவிநெகும) சட்டமூலத்துக்கு ஆதரவாகவும் இதை எதிர்க்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிர்ராகவும் யாழில் இன்று பல்லாயிரக் கணக்காண மக்கள் பேரணி

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) சட்டமூலத்தை வடமாகாணத்தில் நிறை வேற்றுவது தொடர்பிலான ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கான மனுவினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுக்கொண்டார். யாழ்.மாவட்ட செயலக முன்றலில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்விலேயே இம்மனு கையளிக்கப்பட்டது. யாழ்.மணிக்கூட்டு சந்தியிலிருந்து ஆரம்பமான பல்லாயிரக்கணக்காண  மக்கள் கலந்துகெண்ட  பேரணி பிரதான வீதிவழியாக மாவட்ட செயலக முன்றலில் நிறைவு பெற்றது. (மேலும்....)

ஐப்பசி 18, 2012

இராணுவத்தை வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை உலக நாடுகள் அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் - சங்கரி

வடக்கில் தொடர்ந்தும் படை முகாம்கள் அமைக்கப்பட்டுவரும் செயற்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் உடனடியாக இராணுவத்தை வாபஸ் பெறுவதற்கான அழுத்தங்களை உலக நாடுகள் ஒன்றிணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டும் ௭ன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி வலியுறுத்தியுள்ளார். நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து விடுத்துள்ள  அறிக்கையிலேயே அவர் இவ்வாறு கோரியுள்ளார். (மேலும்....)

ஐப்பசி 18, 2012

இது எப்படியிருக்கு...?

கே.பி. மீது வழக்கு தாக்கல் செய்வதற்கு போதியளவு சான்றுகள் இல்லை - அரசாங்கம்

கே.பி. ௭ன அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் தற்போது தடுப்புக்காவலில் இல்லை. அவர் தொண்டு நிறுவனமொன்றில் வேலை செய்துவருகின்றார். அவர் மீது வழக்குத்தாக்கல் செய்வதற்கு போதுமான சான்றுகளோ முறைப்பாடுகளோ இல்லை ௭ன்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார். இதனால் அவருக்கு ௭திராக வழக்கு தொடரமுடியாது. கே.பி.தற்போது தடுப்புக்காவலில் இல்லை. அவர் தொண்டர் நிறுவனமொன்றில் வேலை செய்துவருகின்றார் ௭ன்று தெரிவித்தார். புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் வீட்டுக்கு கே.பி. விஜயம் செய்துள்ளார். இது சரியான நடவடிக்கையா ௭ன்று ஊடகவியலாளரொருவர் ௭ழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஹுலுகல்ல அதற்கு கே.பி.க்கு உரிமையுள்ளது ௭ன்று சுட்டிக்காட்டினார். விடுதலைப் புலிகளின் பிரதான ஆயுதக்கொள்வனவாளராக செயற்பட்ட குமரன் பத்மநாதன் சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதிலும் ஈடுபட்டவர் ௭ன்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 18, 2012

காங்கேசன்துறை துறைமுகம் 2014 இல் செயற்படும்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு வரும் காங்கேசன்துறை துறைமுகம் 2014ஆம் ஆண்டு நடுப்பகுதியில் செயற்படும் என யாழ். இந்திய துணை உயர் ஸ்தானிகர் எஸ்.மகாலிங்கம் தெரிவித்தார். யாழ். வணிகர் கழகத்தில் நடைபெற்ற சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான கலந்துரையாடலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "காங்கேசன்துறை துறைமுக புனரமைப்பு பணிகள் ஆறு கட்டங்களாக  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன . இதுவரை மூன்று கட்ட வேலைகள் நிறைவு பெற்றுள்ளன. துறைமுக பகுதியில் மூழ்கியிருந்த கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை மீட்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் காங்கேசன்துறை துறைமுக பகுதியை ஆழமாக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த பணியை இந்திய நிறுவனமொன்றினால் மேற்கொள்ளப்படவுள்ளது  இதற்கான ஒப்பந்தங்கள் விரைவில் இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டங்கள் யாவும் நிறைவுபெற்றவுடன் துறைமுகம் செயற்படும்" என்றார்.

ஐப்பசி 18, 2012

எனது வகுப்பறை...!

2009 ஜனவரி 3.

“நேற்று இரவு மிகவும் பயங்கரமாகக் கழிந்தது. ராணுவ ஹெலிகாப்டர்களும் தலிபான்களும் என் கனவில் வந்துகொண்டே இருந்தனர். எனது இதயம் நிறைந்த ஸ்வாட் பள்ளத்தாக்கில் ராணுவத் தாக்குதல்கள் துவங்கிய நாள் முதலே இப்படிப்பட்ட கனவுகள் துன்புறுத்துகின்றன. பள்ளிக்குச் செல்லவே பயமாக இருக்கிறது. பெண் குழந்தைகள் யாரும் பள்ளிக்கு வரக்கூடாது என தலிபான்கள் உத்தரவு போட்டிருக்கிறார்கள். எங்கள் வகுப்பில் 27 பேரில் 11 பேர் மட்டுமே வருகிறார்கள்”. (மேலும்....)

ஐப்பசி 18, 2012

யாழ். குடாவில் அறுபது வீதமான இராணுவம் குறைப்பு  - இராணுவம் பேச்சாளர்

யாழ். குடாவில் நிலைகொண்டிருந்த இராணுவம் 60 வீதத்தினால் குறைக் கப்பட்டு தற்பொழுது சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இராணுவத்தினரே அங்குள்ளனர். இராணுவத்தினர் நல்லிணக்க செயற்பாட்டுக்கு தடையாக அன்றி அதற்கு உதவியாக உள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் முயற்சி நடைபெறும் நிலையில் வடக்கில் முக்கிய இடங்களில் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வடக்கில் படையினர் பொதுமக்களின் இடங்களில் தங்கியிருப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,30 வருட யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் மீண்டும் அந்தநிலை ஏற்பட இடமளிக்க முடியாது. அதனாலே முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வடக்கில் சுமார் 50 ஆயிரம் படையினர் முன்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தற்பொழுது 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் படையினரே அங்குள்ளனர். அவர்கள் பொதுமக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு உதவியாகவே உள்ளனர்.

ஐப்பசி 18, 2012

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் விவாதம்

ரொம்னியை பின்தள்ளி ஒபாமா திறமையான வாதம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட விவாதத்தில் ஜனாதிபதி பராக் ஒபாமா, எதிர்த்துப் போட்டியிடும் மிட் ரொம்னியை விடவும் திறமையாக தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தனது முதல் கட்ட விவாதத்தில் ரொம்னியை விடவும் பின்தங்கியிருந்த ஒபாமா நியூயோர்க்கில் நேற்று முன்தினம் நடந்த 90 நிமிட விவாதத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இதில் இரு வேட்பாளர்களும் பொருளாதாரம், வரி மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகள் குறித்து விவாதித்தனர். (மேலும்....)

ஐப்பசி 18, 2012

தப்பியோடிய படகை கண்டுபிடிக்க கரையோர நாடுகளுக்கு அறிவிப்பு

இலங்கை மீனவர்கள் மீது ஆழ்கடலில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய படகையும் அதிலுள்ளவர்களையும் பிடிக்க சர்வதேச நாடுகளின் கரையோர பாதுகாப்பு பிரிவுகளுக்கு அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜெயகொடி தெரிவித்தார். இவர்கள் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார்கள் என்று இது வரை கண்டுபிடிக்கப் படவில்லை என்று கூறிய அவர் தாக்குதலுக்கு வந்த படகில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் இருந்ததாக தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். படகு உரிமையாளருடன் கடந்த 14ஆம் திகதி இரவு 5 பேர் டோலர் படகில் மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். பெண்கள், சிறுவர்கள் அடங்கிய குழுவொன்று வந்த மற்றொரு படகு இவர்களை கடத்திச் சென்றுள்ளது. ஐவரும் தாக்கிகட்டிவைக்கப்பட்டுள்ளனர். மீன்பிடிக்கச் சென்ற படகில் இருந்த உரிமையாளருக்கும் மற்ற படகில் உள்ளவர்களுக்குமிடையில் தொடர்பு இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஐவரில் 2 பேர் கடலில் குதித்து தப்பியுள்ளனர். இந்த சம்பவம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதன்றி தற்செயலாகவே இடம்பெற்றுள்ளது. வேறு நாடொன்றுக்கு செல்லவே மீன்பிடிக்கச் சென்ற டோலர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடையவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர். விரைவில் இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளியாகும். அடுத்த மூன்று மீனவர்களுக்கும் என்ன நடந்தது என்று தெரியவில்லை.

ஐப்பசி 17, 2012

கூட்டமைப்புடன் இந்தியா பேசியது என்ன?

(கே. சஞ்சயன்)

மீண்டும் ஏமாற்ற மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வாக்குறுதி அளிப்பாரேயானால், நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குச் செல்லத் தயாராக இருப்பதாக புதுடெல்லியில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார். அவரது இந்தக் கருத்தில் இருந்து மீண்டும் ஏமாறத் தயாரில்லை என்ற கருத்து உறுதியாக வெளிப்பட்டுள்ளது. அதேவேளை, தெளிவான உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விடம் இருந்து பெற்றுக்கொள்ளாமல், தெரிவுக்குழுவுக்குச் சென்று தமிழ் மக்களைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார். (மேலும்....)

ஐப்பசி 17, 2012

ஹெட் ஏக் கொடுக்கும் ஹெட் போன்!

ஹெட்போனைக் காதில் மாட்டிக்கொண்டு, யாரிடமாவது பேசிக்கொண்டோ அல்லது பாடல்களைக் கேட்கும் பழக்கமோ உண்டா உங்களுக்கு? வாங்க, கொஞ்சம் மனசுவிட்டுப் பேசலாம். எல்லா நேரமும் காதில் ஹெட் போனை மாட்டிக்கொண்டு பேசுவதும் இசையைக் கேட்பதும் உளவியல் ரீதியாக ஒருவரைப் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இப்படி ஹெட் போனோடு திரிபவர்களுக்குக் கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படவும், தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. உச்சகட்டமாக ஹெட் போனை மாட்டிக்கொண்டு சாலைகளையும் ரயில் பாதைகளையும் கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் அபாய மணி அடிக்கின்றன. (மேலும்....)

ஐப்பசி 17, 2012

ஐப்பசி 17, 2012

நான்கு சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

நான்கு சூரியன் களுடன் இருக்கும் புதிய கிரகம் ஒன்றை சர்வதேச வானிய லாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ் வாறான அரிதான கிரகம் ஒன்று கண்டு பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என கூறப்பட்டுள்ளது. பூமியில் இருந்து 5000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் இருக்கும் இந்த கிரகத்திற்கு பி.எச் 1 என பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் யாலே பல்கலைக் கழகத்தின் புதிய கிரகங்களை தேடும் திட்டத்தின் கீழ் இந்த கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பி.எச் 1 கிரகம் இரு சூரியன்களை சுற்றி வருவதோடு அதனை ஒட்டியதாக தொலை தூரத்தில் மேலும் இரு நட் சத்திரங்கள் காணப்படுவதாக ஆய்வாளர் கள் கண்டறிந்துள்ளனர். இதன் மூலம் இந்த கிரகத்திற்கு நான்கு சூரியன்களின தும் ஒளி கிடைக்கப்பெறுவதாக கூறப் பட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட கிரகங்களில் 6 கிரகங்களே இரு சூரியன்களை சுற்றி வருகின்றன. ஆனால் அதன் தொலைவில் இருக்கு மேலும் இரு நட்சத்திரங்களை சுற்றி வரும் கிரகம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டது இதுவே முதல் முறை யாகும்.

ஐப்பசி 17, 2012

மத்தல விமான நிலையத்தில் முதலாவது விமானம் தரையிறக்கம்

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல விமான நிலையத்தில் நேற்று முதலாவது பரீட்சார்த்த விமானம் தரையிறக் கப்பட்டது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை பயணமான மேற்படி விமானம் வெற்றிகரமாக மத்தலையில் தரையி றக்கப்பட்டதாக சிவில் விமானச் சேவை தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய தெரிவித்தார். விமான நிலை யத்தில் நிர் மாணிக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டுக் கோபுர செயற்பாடுகளை பரீட்சிப்பதற்காகவே பரீட்சார்த்தமாக விமானம் தரை யிறக்கப்பட்டது. இதற்காக பாகிஸ் தானில் இருந்து பி.எச்.  கிராப்ட் 3200 ரக விமானம் தருவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். தானும் இதில் பயணித்ததாக கூறிய அவர் அடுத்த வருட முதற் பகுதியில் சர்வதேச விமானச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த வருட இறுதியில் மத்தல விமான நிலைய நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளதோடு உட்கட்டமைப்பு வசதிகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. பல சர்வதேச விமானச் சேவை நிறுவனங்கள் மத்தல விமான நிலையத்தினூடாக விமானச் சேவை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.

ஐப்பசி 17, 2012

சில்லறை வணிக அந்நிய முதலீட்டுக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம் ஆணை

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதற்கான ஆணையை பிறப்பித்தது. நாடு முழுவதும் அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எம். எல். ஷர்மா, மத்திய அரசு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து பொது நல வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், இந்த சீர்திருத்த கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஆர். எம். லோதா மற்றும் ஏ.ஆர். தேவ் ஆகியோர் கொண்ட பெஞ்சு முன்பு நடந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், இது அரசின் கொள்கை முடிவு. எனவே அந்நிய முதலீட்டு கொள்கைக்கு தடை விதிக்க முடியாது என்று அறிவித்தனர். மேலும் இந்த சீர்திருத்தங்களை சட்டப்படி நடைமுறைப்படுத்துவதில், சில திருத்தங்கள் தேவை அரசின் இந்த சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தில் மத்திய ரிசர்வ் வங்கி சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். இந்த அரசின் சீர்திருத்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வங்கிகள் ஒருங்கிணைப்பு குழு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஐப்பசி 17, 2012

லிதுவேனியா நாடாளுமன்ற தேர்தலில் இடதுசாரி முன்னணி வெற்றி

லிதுவேனியா நாட்டு நாடாளு மன்ற தேர்தலில் இடதுசாரி முன் னணி அமோக வெற்றி பெற்றது. முன்னாள் சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசுலிதுவேனியா. இந்த நாட்டின் பிரதமராக கன்சர் வேடிவ் கட்சியின் தலைவர் அன்ரி யஸ் கியூபிலஸ் இருந்து வருகிறார். லிதுவேனியா நாடாளுமன்றத்தில் மொத்தம் 141 இடங்கள் உள்ளன. இதில் 70 இடங்களுக்கு சமீபத்தில் முதல் கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பிரதமர் அன்ரி யஸ் கியூபிலஸின் கன்சர்வேடிவ் கட்சியை எதிர்த்து ரஷ்யாவில் பிறந்த விக்டோர் உஸ்பாஸ்விக்சின் தொழி லாளர் கட்சியும், முன்னாள் நிதி அமைச்சர் அல்கிராடஸ் புட்கேவிச் சின் சமூக ஜனநாயகவாதிகள் கட் சியும் கூட்டணி அமைத்து போட்டி யிட்டன. முதல் கட்ட தேர்தல் சமீபத்தில் நடந்தது. தேர்தலில் 50 சதவிகித மக்கள் வாக்களித்தனர். முடிவை தேர்தல் கமிஷன் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. இதில் தொழிலாளர் கட்சி 17 இடங்களிலும், சமூக ஜனநாயகவாதிகள்கட்சி 16 இடங்க ளிலும், பிரதமர் அன்ரியஸ் கியூபில ஸின் கன்சர்வேடிவ் கட்சி 12 இடங் களிலும் வெற்றிபெற்றது.மற்றஇடங்க ளில் சிறிய கட்சிகள் வெற்றி பெற்றன. இதனால் இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடிக்கிறது.

ஐப்பசி 17, 2012

நேட்டோ தாக்குதலால் ஆப்கனில்   4 லட்சம் பேர் பார்வையிழப்பு

அமெரிக்காவின் தாக்கு தலுக்குள்ளான ஆப்கா னிஸ்தானில் பார்வையிழந் தோரின் எண்ணிக்கை 4 லட்சமாக உள்ளதாக சமீ பத்தில் அதிர்ச்சித் தகவல் வெளி யாகியுள்ளது. அமெரிக்கா, இங்கி லாந்து, இஸ்ரேல் உள் ளிட்ட நாடுகள் கூட்டு சேர்ந்து நேட்டோ படை யை உருவாக்கியுள்ளது. இப்படை ஆப்கானிஸ்தா னில் முகாமிட்டு தலிபான்க ளையும், தீவிரவாதிகளை யும் ஒடுக்குவதற்காக வான்வழியாகவும், தரை வழியாகவும் பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வருகிறது. இதனால் அங் குள்ள அப்பாவி மக்கள் கடு மையாக பாதிக்கப்பட் டுள்ளனர். நாள்தோறும் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் உலக பார் வையிழந்தோர் தினத்தை முன்னிட்டு ஆப்கானிஸ்தா னில் பொதுசுகாதார அமைப்பு சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து கனேஷ்கா பாக் ஷத் என்ற சமூக ஆர்வலர் தெரிவிக்கையில், ஆப்கா னிஸ்தானில் போர் மற்றும் வன்முறை பாதிப்பிற்குள் ளான பகுதிகளில் மட்டும் 4 லட்சம் பேர் பார்வையற்ற வர்களாக உள்ளனர். மேலும் ஒவ்வொரு வருட மும் 25 ஆயிரம் பேர் நோய் மற்றும் பிற காரணங்களால் பார்வையை இழந்து வரு கின்றனர்.

ஐப்பசி 16, 2012

உள் முரண்பாடுகள் ௭ழுவதை தவிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் - இரா. துரைரட்ணம்

தமிழ் மக்கள் அனைத்துக்கட்சிகளையும் நிராகரிக்க தயாராக இருக்கின்றார்கள். இதில் ௭துவித வேற்றுக் கருத்தும் இருக்க முடியாது. கட்சி அரசியல் செய்ய முயன்றால் மாற்றீடான கட்சி அரசியல் வரும் ௭ன்பதற்காகவும் உள்ளுக்குள் முரண்பாடுகள் ௭ழுவதை தவிர்ப்பதற்கும் நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டும் ௭ன கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார். (மேலும்....)

ஐப்பசி 16, 2012

புதிய சுயாட்சி பிராந்தியத்தை அமைக்க இணக்கம்

பிலிப்பைன்ஸ் முஸ்லிம் கிளர்ச்சியாளர்களுடன் அரசு அமைதி உடன்படிக்கையில் கைச்சாத்து

பிலிப்பைன்ஸில் நீண்டகால மோதலை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அந்நாட்டு அரசும் மிகப்பெரிய முஸ்லிம் கிளர்ச்சி குழுவான மொரொ இஸ்லாமிய புரட்சிக் குழுவும் அமைதி திட்டவரைபில் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளில் 120,000க்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மோதலுக்கே இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இம்மாத ஆரம்பத்தில் மலேஷியாவில் வைத்து தீர்வு எட்டப்பட்டது. இதில் கிறிஸ்தவ நாடான பிலிப்பைன்ஸில் பெரும்பான்மை முஸ்லிம்கள் வசிக்கம் தென்பகுதிக்கு சுயாட்சி பிராந்தியம் ஒன்றை வழங்க அரசு வாக்குறுதி அளித்துள்ளது. (மேலும்....)

ஐப்பசி 16, 2012

‘இலங்கை கடற்பரப்பினுள் இந்திய மீனவர் தொடர்ந்தும் அத்துமீறல்’

இலங்கையின் கடற்பிராந்தியத்தில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி தொடர்ந்தும் இடம்பெறுவதால் யாழ் மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டிருப்பதாக வடபிராந்திய மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எமிலியாம் பிள்ளை தெரிவித்தார். இந்தியாவிலிருந்து இன்னமும் நாளாந்தம் 500 முதல் 1000 இழுவைப் படகுகள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன. கடற்கரையிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரம்வரை வந்து இப்படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் பலதரப்பட்ட மட்டங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட் டுள்ளபோதும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லையெனக் குறிப்பிட்டிருக்கும் அவர், சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி யாகத் தலையிட்டு இவ்விடயத்திற்குத் தீர்வொன்றைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதேநேரம், வடபிராந்தியத்தில் சில பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினர் பாஸ் வழங்கியுள்ளபோதும், பாலத்தீவு உள்ளிட்ட சில தீவுகளுக்குச் செல்ல மீனவர்களுக்குத் தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இவ்விடயம் குறித்து உரிய தரப்பினர் தீர்வொன்றைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் எமிலியாம் பிள்ளை கேட்டுக்கொண்டார்.

ஐப்பசி 16, 2012

சிறுவர் துஷ்பிரயோக குற்றங்களுக்கு பெற்றோரின் அலட்சியமும் ஒரு காரணம்

உலகில் நிலவுகின்ற சமூக சீர்கேடு களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விஷயமறிந்த பெற்றோரின் முக்கிய பிரச்சினைகளில் தமது பிள்ளையைப் பாதுகாப்பதும் ஒன்றாக உள்ளது. உலகெங்கும் சிறுவர், சிறுமியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் சம்பவங் கள் பரவலாக இடம் பெறுகின்றன. பாலியல் ரீதியாக சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள், சிறுவர்களை வேலைக்கமர்த்தல், சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்தல் என்றெல்லாம் இன்றைய உலகில் சிறுவர்களுக்கு எதிரான சம்பவங்கள் காணப்படுகின்றன. (மேலும்....)

ஐப்பசி 16, 2012

உண்ணாவிரதப் போராட்டம் கொச்சைப்படுத்தப்படுமேயானால் நோர்வேயில் விளைவுகள் அதிகரிக்கும் பெற்றோர் எச்சரிக்கை

நோர்வேயில் வதியும் வெளிநாட்டவர்களின் குழந்தைகளை நோர்வே பிரஜைகளாக்கும் திட்டத்தில் நோர்வே அரசாங்கம் குழந்தைகளையும் பெற்றோரையும் பிரித்து, இரு சாராரையும் உளவியல் தாக்கத்துக்கு ஆளாக்கிவருவதாக குற்றம் சாட்டியுள்ள பாதிக்கப்பட்ட தரப்பினர், ஒஸ்லோவில் நடைபெற்ற சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் செயற்படுமேயானால் விளைவுகள் அதிகமானதாக இருப்பதுடன், பாரிய போராட்டம் ஒன்று வெடிப்பதைத் தடுக்கமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

ஐப்பசி 16, 2012

கூடாங்குளம் போராட்டக் குழுவிற்கு வெளிநாட்டு பின்னணி இருப்பதை நிராகரிக்கவில்லை - ரஷ்ய துணைப் பிரதமர்

கூடங்குளம் போராட்டக் குழுவிற்கு வெளிநாட்டுப் பின்னணி இருப்பதை நிராகரிக்கவில்லை என்று ரஷ்ய அரசு கூறியுள்ளது. டில்லிக்கு வருகை தந்துள்ள ரஷ்ய துணைப் பிரதமர் டிமித்ரி இவ்வாறு கூறியுள்ளார். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தவறானது அல்ல என்று குறிப்பிட்டுள்ள டிமித்ரி, உணர்ச்சி கொந்தளிப்புகள் அணு சக்தி திட்டத்தை தடுத்து நிறுத்திவிடக் கூடாது என்றும் கூறியுள்ளார். கூடங்குளம் போராட்டம் குறித்து மத்திய அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன் விவாதிக்க உள்ளதாகவும், பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் டிமித்ரி கூறினார். அதிநவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளதால் கூடங்குளம் அணுஉலை உலகிலேயே மிகவும் பாதுகாப்பானது என்றும் கூறினார். கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி தர இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார். ஆனால் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்தால் கூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகளின் திட்டச் செலவு அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார். எனவே இந்தியா அதிக அளவில் பணம் தர வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

ஐப்பசி 16, 2012

சிறுபான்மை கட்சிகளின் சுதந்திரத்தை பாதிக்கும் புதிய உள்ளூராட்சி தேர்தல் சட்டம்

கடந்த வாரம் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்த சட்ட மூலமானது இதுகாலவரை தேர்தல்களின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் மற்றும் அநீதிகளை ஒழிப்பதை அல்லது குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை தேர்தல் வரலாற்றில் இரண்டு தேர்தல் முறைகள் அமுலில் இருந்துள்ளன. சுதந்திரத்தின் பின்னர் 1978ஆம் ஆண்டு வரையில் அமுலில் இருந்த தொகுதிவாரி தேர்தல் முறையும் 1978ஆம் ஆண்டு முதல் இன்று வரை அமுலில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையுமே அவைகளாகும். இந்த இரண்டு முறையினதும் கலப்பு தேர்தல் முறையொன்றையே கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

ஐப்பசி 16, 2012

முதலாளித்துவத்திற்கு  ஓர் எச்சரிக்கை!

“வெனிசுலா இனி ஒருபோதும் நவீன தாராள மயக் கொள்கைகளுக்குத் திரும்பிச் செல்லாது; மாற்றத்தை நோக்கிய நமது மகத்தான பயணம் தொடரும்; 21ம் நூற்றாண்டின் சோசலிசத்தை நோக்கிய வெனிசுலாவின் பயணம் உறுதியுடன் தொடரும்” என்று உணர்ச்சிமிகு முழக்கங் களோடு நான்காவது முறையாக ஜனாதிபதி பணியைத் தொடர்கிறார் ஹியூகோ சாவேஸ். 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் - 55.11 சதவீதம் - பெற்று, தலைநகர மாவட்டமான காரகாஸிலும், மொத்தமுள்ள 23 மாநிலங்களில் 21 மாநிலங்களிலும் மிகப்பெருவாரியான வாக்கு களைப் பெற்று வெற்றிவாகை சூடியுள்ளார் ஹியூகோ சாவேஸ். ‘சோசலிசமே எதிர்காலம்’ என்ற முழக்கத் திற்கு கிடைத்த வெற்றி இது. (மேலும்....)

ஐப்பசி 16, 2012

தேசவிரோதம் !

‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ ‘ என பாரதி அன்று வெள்ளை ஏகாதி பத்தியத்தை எதிர்த்து சீற்றங் கொண்டான். ஆனால் இன்று இந்திய நாட்டின் செல்வங்களை அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை யிட்டுச் செல்ல காங்கிரஸ், திமுக தலைமை யிலான மத்திய அமைச்சரவை சிவப்புக் கம் பளம் விரித்து வருகிறது. (மேலும்....)

ஐப்பசி 16, 2012

விண்ணிலிருந்து பூமியில் குதித்து உலக சாதனை

ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த சாகச வீரர் விண்ணி லிருந்து பூமிக்கு தனிமனித ராக குதித்து உலகை சாத னை படைத்துள்ளார். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த சாகச வீரர் பெலி க்ஸ் பௌக்மார்ட்னர். இவர் உயரமான கட்டிடம், மலை களிலிருந்து குதித்து பல சாதனைப் படைத்துள்ளார். இதனையடுத்து விண்ணி லிருந்து பூமிக்கு தனிமனித ராக குதிக்க ஆசைப்பட் டார். இதற்காக ஏழு வரு டங்கள் தொடர்ந்து கடுமை யான பயிற்சிகளை மேற் கொண்டார். இந்நிலையில், ஞாயி றன்று விமானம் மூலம் விண்ணிற்குச் சென்ற அவர், பூமியை நோக்கி குதித்தார். பூமியை நெருங்கும் தருவா யில் பாராசூட்டை விரித்து பத்திரமாக தரையிறங்கி னார். அவர் விண்ணிலிருந்து பூமிக்கு வந்து சேர 4 நிமி டங்கள் 22 வினாடிகள் ஆனது. அவர், குதித்தது முதல் அவரது அனுபவங் கள் குறித்து கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப் பிக் கொண்டே இருந்தார். இதில், தனது பார்வை மட் டும் சிறிது மங்கலானதாக அவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஐப்பசி 16, 2012

From rebellion to reintegration and usefulness

(Shanika SRIYANANDA )

Despite all accusations thrown by some segments of the international community and other forces against Sri Lanka, rehabilitation of ex-Tigers of the now defunct LTTE is undoubtedly Sri Lanka’s success story as there are no major crimes reported to show the involvement of ex-Tigers since 2009, said the chief of the Rehabilitation of ex-cadres. It is no easy task for the authorities to turn the fighters of one of the most ruthless outfits into non-violent persons. With the war against the LTTE coming to an end in May 2009, nearly 12,000 ex-Tigers surrendered to the military. (more....)

ஐப்பசி 16, 2012

திவிநெகும சட்ட மூலம்

த. கூட்டமைப்பின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானம்

திவிநெகும சட்ட மூலம் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்த இம்மனு எதிர்வரும் 22 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. 5 நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் இந்த விசாரணை நடைபெறவுள்ளது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான திரு. சுமந்திரன் அங்கு திவிநெகும சட்ட மூலம் தொடர்பிலான கருத்துக்களை முன்வைத்தார். வடக்கில் மாகாண சபை ஸ்தாபிக்கப் படாத நிலையில், மாகாண ஆளுநரின் அனுமதியை பெற்று, இச் சட்ட மூலத்தை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வரு கின்றது. எனினும் அதற்கான அங்கீகாரத்தை வழங்க மாகாண ஆளுநருக்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை. அதனால் அதற்கு தடை விதித்து உத்தரவிடுமாறு கோரி இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாழ்வின் எழுச்சி என்ற திவிநெகும சட்டத்திற்கு எதிராக மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத்சாலி, சிறிதுங்க ஜெயசூரிய, சரத் மனமேந்திர, அருணா சொய்சா ஆகிய எதிரணி கட் சித் தலைவர்கள் நேற்று உச்ச நீதிமன்றத்தில் மூன்று வெவ்வேறு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

ஐப்பசி 16, 2012

ஐ. நா. மனித உரிமை மாநாட்டில் அரசின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்படும்

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஒரு காலப்பகுதிக்கான சர்வதேச மீளாய்வு நடைபெறும் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் கேட்கும் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் யதார்த்த பூர்வமான பதில்களை கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தயாராக இருப்பார்கள் என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்தார். ஐ. நா. மனித உரிமை பேரவைக்கு இரகசியமான முறையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆதாரங்களுடனான சமர்ப்பணங்கள் முன்வைக்கப்பட்டு இதனை பலதரப்பட்ட தமிழ் அரச சார்பற்ற அமைப்புகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பரிந்துரை செய்திருப்பதாகவும் அது உண்மையா என்று கேட்கப்பட்ட தற்கு பதிலளித்த திரு. கருணாதிலக்க அமுனுகம, இவ்விதம் பரிந்துரை செய்த வற்றில் சில அரச சார்பற்ற அமைப்புகள் இலங்கைக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிப்பதாக தெரிவித்தார்.

ஐப்பசி 15, 2012

பல்கலைக்கழகங்களில் ஸ்தம்பித்த விரிவுரைகள் இன்று ஆரம்பம்

சுமார் நூறு நாட்களுக்கும் மேலாக எவ்வித விரிவுரைகளுமின்றிய நிலையில் ஸ்தம்பித்துக் கிடந்த பல்கலைக்கழகங்கள் யாவும் இன்று திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்புகின்றன. இருப்பினும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் நாளை மறுதினம் புதன்கிழமை முதலே விரிவுரைகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கெ. கோவிந்தராஜ் தெரிவித்தார். எனவே மாணவர்கள் புதன்கிழமை விரிவுரைகளுக்கு சமுகமளிக்கும் வகையில் வருகை தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார். கண்டி, பேராதனைப் பல்கலைக் கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் யாவும் இன்று காலை முதல் ஆரம்பிக்க விருப்பதாக அதன் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன தெரிவித்தார். பல் மருத்துவ பீடம் தவிர்ந்த ஏனைய அனைத்து பீடங்களுக்குமான விரிவுரைகள் இன்று ஆரம்பிக்கப்படும். ஒரு சில பீடங்களின் விரிவுரைகள் நேரம் தாமதித்தாலும் நாளை ஆரம்பமாகுமெனக் கூறிய உபவேந்தர், பல் மருத்துவ பீடம் நாளை மறுதினம் புதன்கிழமை முதல் வழமைக்குத் திரும்புமெனக் கூறினார். யாழ். பல்கலைக்கழகத்திலும் இன்று முதல் கலைப்பீடத்துக்கான விரிவுரைகள் ஆரம்பிக்கப்படுகின்றன. நாளை மறுதினம் புதன்கிழமை முதல் வணிக பீடத்தினதும் எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விஞ்ஞான பீடத்தினதும் விரிவுரைகள் ஆரம்பிக்கப்படுவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் அனைத்துப் பீடங்களுக்குமான விரிவுரைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழக உபவேந்தர் டாக்டர் இஸ்மயில் கூறினார். அனைத்து மாணவர்களையும் திங்கட்கிழமை பல்கலைக்கழகத்துக்கு சமுகமளிக்கும்படியாக அவர் ஏற்கனவே ஊடகங்கள் வாயிலாக கேட்டுக்கொண்டிருந்தார்.

இலங்கையும் இந்தியாவும் டில்லியில் முதல் சுற்று பேச்சு

சிவில் அணு ஒத்துழைப்புத் தொடர்பாக இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் முதற்சுற்றுப் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. இப்பேச்சுவார்த்தை கடந்த வெள்ளிக்கிழமை புதுடில்லியில் நடைபெற்றுள்ளது. இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஐ.அன்ஸர் தலைமையிலான குழுவினரும், இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா தலைமையிலான குழுவினரும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். இலங்கைக் குழுவில் அணு சக்தி அதிகாரசபையின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். அணு சக்தியை சிவில் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பயன்படுத்துவதற்கும், இரு நாட்டுக்கும் இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கும் இப்பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டுள்ளது. அத்துடன், அமைதியைக் குலைக்கும் எந்தவிதமான செயல்களுக்குமன்றி சிவில் தேவைகளுக்கு பாதுகாப்பான முறையில் அணுவைப் பயன்படுத்துவது பற்றியும் இப்பேச்சுவார்த்தையில் ஆராயப்பட்டுள்ளது.

ஐப்பசி 15, 2012

நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்

நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.வசந்தகுமார் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். பிரதேச சபையில் தனது கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் கொக்குவில் கிழக்கு கோவில் வீதி அம்பட்டன்பாலம் பகுதியில் கெப் ரக வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்களின் காணிகள் பறிக்கப்படுவது தொடர்பில் இவர் நேற்றுக் காலை கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்ததாகவும் தெரிய வருகிறது.

ஐப்பசி 15, 2012

சிரிய வான்வெளியில் துருக்கி சிவில் விமானங்கள் பறக்க தடை

துருக்கி சிவில் விமானங்களுக்கு சிரிய நாட்டு வானூடாக பறக்க சிரிய அரசு தடைவிதித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையில் அண்மைக் காலமாக தொடரும் பதற்ற நிலையை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த சனிக்கிழமை நல்லிரவுடன் இந்த தடை அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிரிய விமானத்தை துருக்கி வலுக்கட்டாயமாக தரையிறக்கிய ஒருசில தினங்களிலேயே சிரியா துருக்கிக்கு வான் தடையை பிறப்பித்துள்ளது. கடந்த புதன்கிழமை சிரிய சிவில் விமானத்தை இடைமறித்து தரையிறக்கி சோதனை இட்ட துருக்கி அதிலிருந்து ரஷ்ய தயாரிப்பு வெடிபொருட்களை பறிமுதல் செய்ததாக குறிப்பிட்டிருந்தது. எனினும் துருக்கி கூறுவது பொய் என குறிப்பிட்ட சிரியா, முடியுமென்றால் கைப்பற்றப் பட்ட பொருட் களை மக்கள் பார்வைக்கு வைக்குமாறு சவால் விட்டது. எனினும் தமது விமானங் களுக்கு தடை விதித்ததாலேயே தமது வான் பரப்பில் துருக்கிக்கு தடை விதித்ததாக சிரிய வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் துருக்கி சிரிய விமானங்களுக்கு தமது வான் பரப்பில் உத்தியோகபூர்வமாக தடை விதிக்கவில்லை. சந்தேகத்திற்கு இடமான சிரிய விமானங்கள் கண்காணிக்கப்படும் என அது எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 15, 2012

வைரங்களால் நிரம்பிய புதிய கோள் கண்டுபிடிப்பு

பூமியை விட இரண்டு மடங்கு பெரிய மற்றும் பெரும்பாலான பகுதிகள் வைரங்களால் நிரம்பிய புதிய கோள் ஒன்றை விண்வெளி ஆராய்ச்சி யாளர்கள் கண்டுபிடி த்துள்ளனர். 55 கொன்கரி என்று பெயர் சூட்டப்பட் டுள்ள இந்த கிரகம், பூமியில் இருந்து சுமார் 40 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந்த கிரகம் அதி வேகத்தில் சூரியனை சுற்றி வருகிறது. அதாவது, ஒரு முறை பூமி சூரியனை சுற்றி வர 365 நாட்கள் ஆகும் நிலையில், வெறும் 18 மணி நேரத்தில் இந்த கோள் தனது சூரியனை சுற்றி வந்து விடுகிறது என்று வியப்பில் ஆழ்த்துகின்றனர் விஞ்ஞானிகள். நமது பூமிப் பகுதி எவ்வாறு மண் மற்றும் தண்ணீரால் நிரம்பியுள்ளதோ, அதுபோல அந்த கோளின் அடிப்பாகம், கார்பன், கிராபைட் மற்றும் வைரத்தால் நிரம்பியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 15, 2012

கிழக்கு மாகாண சபை ஆட்சியமைப்பில் முஸ்லிம் காங்கிரசின் தீர்மானம் நியாயமானது

அண்மைக் காலமாக தமிழ் ஊடகங்கள் சிலவற்றின் செய்திகளை அவதானிக்கின்ற போது அவை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது தேர்தலுக்கு முன்பு ஒரு நிலைப்பாட்டையும் தேர்தலுக்கு பிறகு வேறு அபிப்பிராயத்தையும் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டது. தேர்தலுக்கு முன்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பாராட்டிய தமிழ் ஊடகங்கள் தேர்தலுக்குப் பிந்திய காலங்களில் அதன் மீது வசைபாடி வருகின்றன. இவற்றுக்கான காரணம் கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸ் காட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைக்கும் என்றிருந்த எதிர்பார்ப்பானது நிறைவேறாமல் போனமையாகும். தமிழ் தரப்பு ஊடகங்கள் தமது நோக்கம் கை கூடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லையென்ற ஒரே காரணத்துக்காக முஸ்லிம் காங்கிரஸ் மீது அவதூறுகளைப் பரப்புவதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.(மேலும்...)

ஐப்பசி 15, 2012

௭னது மக்களுக்கு நான் துரோகம் செய்ய மாட்டேன் - இரா. சம்பந்தன்

தமிழ் மக்களுக்குத் தான் துரோகம் செய்யமாட்டேன் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் புதுடில்லியில் தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் புதுடில்லி செய்தியாளருக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, இனப்பிரச்சினைக்கு நடைமுறைக்கு ஏற்ப அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீர்வை ௭ட்டுவதற்கு தமிழர்கள் தயாராக உள்ளனர். ஒன்றுபட்ட இலங்கைக்குள் நியாயமான சாத்திமான நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வை ௭ட்டுவதற்கான பொறுப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. ஆனால் தெளிவான மனச்சாட்சியுடன் கூடிய உறுதிப்பாட்டை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்காவிட்டால் நான் தெரிவுக்குழுவுக்கு போகமாட்டேன். ௭னது மக்களுக்குத் துரோகம் செய்யமாட்டேன் ௭ன்றார். வடக்கில் புலிக் கொடியும் பாராளுமன்றத்தில் சிங்கக் கொடியும் பிடிக்கும் சம்மந்தன் துரோகம் செய்யமாட்டார். நம்புவோம் நாம்....?

ஐப்பசி 15, 2012

13ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாது ஒழிக்க வேண்டும - கோத்தபாய

13ஆவது அரசியல் திருத்தம் யுத்தத்தின் பின்னரான அபிவிருத்திக்கு இடையூறாக இருப்பதால் அதனை இல்லாதொழிக்க வேண்டும் ௭ன பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது அதில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் ௭ன ஜனாதிபதியிடமும் அமைச்சர்களிடமும் வெளிப்படுத்தியுள்ளேன் ௭ன்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13 ஆவது திருத்தத்தில் ௭துவும் இல்­லை. மக்கள் நலன் தொடர்பான செயற்­திட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்ட­மை­ப்போ அதன் ஆதரவாளர்களோ தலையிடு­வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது. 13 ஆவது திருத்தச் சட்டமும், நோர்வே அ­ரசா­ங்கத்தின் ஏற்பாட்டில் 2002 பெப்ர­வரி­யில் கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உட­ன்­படிக்கையும் ஒரே வகை­யானவை. இவை விடுதலைப்புலிகள் உள்­ளிட்ட ஏனை­ய தரப்பினருக்கே ஆதரவ­ளி­­க்­­கி­ன்றன. இவ்வரசியல் திருத்தம் தொடர்பில் அரசா­ங்கம் உடனடியாகச் செயற்படத் தவறினால் தற்போதைய நெருக்கடிகள் நிச்சயமாக தேசிய பாதுகாப்பின் மீது தாக்கத்தை ஏற்ப­டுத்தக் கூடும். ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்­டமைப்பும் வெளிநாடுகளில் உள்ள அதன் ஆதரவாளர்களும் வடக்கில் இருந்து இரா­ணுவத்தை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இலங்கை அரசாங்கத்திற்கு ௭ழுந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்­தல்­களை முறியடிப்பதற்கு உறுதியான நட­வ­டிக்கை ௭டுக்க வேண்டியது அவசி­யம்.

ஐப்பசி 14, 2012

அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்க பிரபாகரனின் பிடிவாதமே காரணம்! - எரிக் சொல்ஹேம்

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் பொதுமக்கள் உயிரிழப்பதற்கு புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே காரணம் என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் விசேட பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். யுத்த வலயத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இணைத் தலைமை நாடுகள் முன்வைத்த யோசனைத் திட்டத்தை பிரபாகரன் ஏற்றுக்கொள்ளத் தவறியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அப்பாவி பொதுமக்களின் நிலைமைகளை கருத்திற் கொள்ளாது பிரபாகரன் இறுதித் தருணம் வரையில் யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டுமென கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு இணைத் தலைமை நாடுகள் முயற்சி எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இராணுவ முன் நகர்வுகளில் அரசாங்கம் வெற்றியீட்டும் என்பதனை இணைத் தலைமை நாடுகள் அறிந்திருந்ததாகவும், அதன் காரணமாகவே அப்பாவி பொதுமக்களை மீட்பதற்கு முனைப்பு காட்டியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐப்பசி 14, 2012

இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்திற்கு இந்திய அரசு உத்தரவாதம் -  ததேகூ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் வெற்றியளித்துள்ளதாகவும் எதிர்காலத்தில் இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்குமென்று உறுதியளித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 14, 2012

TNA intimidating Canadian authorities

Tamil Tiger proxy TNA (Tamil National Alliance) in a bid to intimidate Canadian authorities in order to stop the deportation of some of their “important people” came inside the “Sun & Sea” the LTTE smuggling ship reached Canadian shore in 2010. This came to light through a recent news article published in Pro Tamil Tiger news site named “lankasiri.com”. (more....)

ஐப்பசி 14, 2012

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே வழி - பிரதமர் மன்மோகன் சிங்

இலங்கையில், தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதையே, தான் விரும்புவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் , பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள், சம்பந்தன் தலைமையில், டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு, அரசியல் ரீதியிலான தீர்வு காணப்பட வேண்டும் தமிழர்கள் கண்ணியமாகவும், சுய மரியாதையுடனும், அமைதியாகவும் வாழ வழி செய்ய வேண்டும் என்ற நிலையில், இந்தியா உறுதியாக உள்ளது. பல ஆண்டுகளாக தொடரும், தமிழர்கள் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தியா எப்போதும் ஆதரவு தரும் எனப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

ஐப்பசி 14, 2012

TNA ஐ பதிவுசெய்ய கோர சங்கரிக்கு உரிமையில்லை! பிறர் தோள்களில் ஏறி தமிழரசுக் கட்சி சவாரியா ?

தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்தல் விடயத்தில் பேசும் உரிமை ஆனந்தசங்கரிக்கு கிடையாது எனத் தெரிவித்துள்ள தமிழரசு கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் சீ.வீ.கே. சிஞானம், யுத்தத்தையும், அப் பாவி தமிழ் மக்களின் உயிரிழப்புக்களையும் ஆதரித்த சங்கரி கூட்டமைப்பிற்குள் வந்ததே முதல் தவறு எனவும் தெரிவித் துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான வேண்டுகோளை வரைவேற்கிறார் சங்கரி என்ற தலைப்பில் வெளியான செய்தி குறித்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. (மேலும்.....)

ஐப்பசி 14, 2012

மு.கா மீது தாக்குதல் நடத்தும் தமிழ் கூட்டமைப்பும், ஊடகங்களும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்து இப்போது அதன் அமர்வுகளும் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அது சார்பான தமிழ் ஊடகங்களும் இன்னமும் முஸ்லிம் காங்கிரஸ் மீது தமது தாக்குதலைத் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கிழக்கு மாகாண சபையில் இணைந்து ஆட்சியமைக்க மு.கா வரவில்லை என்பதே இவ்விரு தரப்பினரதும் இக் காழ்ப்புணர்விற்குக் காரணம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் அதனைத் தொடர்ந்தும் செய்துவருவது அநாகரிகமாகவே தென்படுகிறது. (மேலும்.....)

ஐப்பசி 14, 2012

இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட புலிகளே காரணம்!

பிரபாகரன் மக்களை கேடயமாகப் பாவித்ததுடன் சர்வதேசத்தின் குரல்களை அலட்சியம் செய்வதில் பிடிவாதமாக இருந்தார்! - எரிக் சொல்ஹேய்ம் மனம் திறக்கிறார்

இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், 2009 ஆம் ஆண்டின் துவக்கத்தில், போரின் இறுதிக் கட்டத்தில் பெருமளவிலான பொதுமக்கள் கொல்லப்படக்கூடிய மனிதப் பேரவலம் நடக்காமல் தடுக்கும் நோக்கத்தில் சர்வதேச நாடுகள் கூட்டாக ஒரு முயற்சி எடுத்ததாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன. அந்த முயற்சியில் முக்கிய பங்காற்றிய நோர்வே நாட்டின் முன்னாள் அமைச்சரும், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று நடத்தியவர்களில் ஒருவருமான எரிக் சொல்ஹேய்ம், அந்த திட்டம் குறித்து தற்போது வெளிப்படையாக பேசியுள்ளார்.(மேலும்.....)

ஐப்பசி 13, 2012

இறுதி யுத்தத்தின்போது புலிகள் சரணடைய விருப்பம் தெரிவித்தனர் - விக்கிலீக்ஸ்

 

நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பரிமாறிக் கொண்ட தகவல்களுக்கமைய இறுதிக் கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு முயற்சி செய்ததாக விக்கிலீக்ஸ் இணையத் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுஉலக நாடுகளில் இயங்கி வந்த அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் அந்நாட்டு வெளிவிவகாரத் திணைக்களத்திற்கும் இடையிலான தொடர்பாடல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. இதற்கமைய நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், இலங்கை விவகாரம் தொடர்பில் பரிமாறிக்கொண்ட தகவல்களும் விக்கிலீக்ஸில் வெளியிடப்பட்டுள்ளன. இறுதிக்கட்டப் போரின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சரணடைய விரும்பியதாக முன்னாள் நோர்வேயின் அமைச்சர் ௭ரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். 2009 மே மாதம் 17ஆம், 18ஆம் திகதி வரையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணினோம். (மேலும்.....)

ஐப்பசி 13, 2012

இலங்கை தமிழ் மக்களை இந்தியா கைவிடமாட்டாத - சுஷ்மா சுவராஜ்

"இலங்கைத் தமிழ் மக்களை இந்தியா கைவிட மாட்டாது. இந்தியாவில் ஆட்சிகள் மாறலாம். ஆனால் நாம் ஒரே அணியாக நின்று இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு காண முயல்வோம்'' என்று இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். புதுடில்லி சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று மாலை இந்தியத் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சு வார்த்தையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். (மேலும்.....)

ஐப்பசி 13, 2012

கே.பி ஐ இலங்கை அரசிடம் ஒப்படைத்த நாடகம்

(நிவேதா நேசன்)

இலங்கையில் விடுதலைப் புலிகள் பலமாகத் திகழ்ந்த காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தயை இலகுபடுத்தும் நோக்கத்தில் ஈடுபட்டவர்களில் எரிக் சோல்கையின் முக்கியமானவர். நோர்வே அரசாங்கம் ஒவ்வொரு முறையும் சமாதான தூதராக அமரிகாவின் அடிமையாக உலக நாடுகளை நோக்கி அனுப்பப்படும் போது அந்த நாடுகளின் மக்களையும் விடுதலைப் போராட்டங்களையும் அழிப்பதற்காகவே அனுப்பப்படுகின்றது. (மேலும்.....)

ஐப்பசி 13, 2012

பொன்சேகாவின் பேரணியில் பங்கேற்றும் ஐ.தே.க எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

ஐக்கிய தேசிய பிக்கு முன்னணியினரின் ஏற்பாட்டில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின்  பங்கேற்பில் எதிர்வரும் 18ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் பங்குபற்றினால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் செயற்குழு இன்று அறிவித்தது. மேற்படி பேரணியில் பங்குபற்றவுள்ள உறுப்பினர்களைத் தடுக்கும் வகையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 18ஆம் திகதி நடைபெறவுள்ள மேற்படி மக்கள் பேரணியில் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான கரு ஜயசூரிய, தயாசிறி ஜயசேகர, பாலித்த ரங்கே பண்டார மற்றும் அசோக்க அபேசிங்க ஆகியோர் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 13, 2012

பல்கலைக்கழகங்கள் வழமைக்கு திரும்பின

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தம் முடிவடைந்ததையடுத்து திங்கள் முதல் சகல பல்கலைக்கழகங்களும் வழமைக்குத் திரும்புகின்றன. விரிவுரைகள் ஆரம்பிக்கவுள்ளதால் மாணவர்கள் அனைவரையும் தத்தமது பல்கலைக்கழகங்களுக்கு உடனடியாக சமுகமளிக்குமாறு உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண அறிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் முடிவடைந்துள்ளது என அறிவித்ததன் பின்னர் சில பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் வரத்தொடங்கியிருந்தனர். திங்கள், செவ்வாய், புதன்கிழமை களிலேயே சகல பல்கலைக்கழகங்களும் வழமைக்குத் திரும்பும் என உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நேற்றுமுன்தினம் செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். எனினும், பல்கலைக்கழகங்கள் நூறு நாட்கள் ஸ்தம்பிதமடைந்திருந்ததால் மிகத் துரிதமாக கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மாணவர்களை பல்கலைக்கழ ங்களுக்கு சமுகமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

ஐப்பசி 13, 2012

தாவரவுண்ணிகளுக்கு அசுர பலம்

உலகில் பலமுள்ள மிருகங்களையும் களைப்பின்றி நீண்ட நேரம் கடினமாக இயங்கக் கூடிய மிருகங்களையும் எடுத்து நோக்குங்கள். குதிரை தனது முதுகில் இருவரைச் சுமந்தபடி மணிக் கணக்கில் சளைக்காமல் ஓடக் கூடியது. மாடுகளை வயலில் இறக்கி விட்டால் நாள் முழுக்க உழவு வேலையில் ஈடுபடக் கூடியன; விடிய விடிய சூடு மிதிக்கக் கூடியன; பகல் முழுக்க வண்டி இழுக்கக் கூடியன. யானையும் அவ்வாறு தான்... பெரும் மரங்களைத் தூக்கிச் செல்லும் கடின வேலையை பகல் முழுக்க களைப்பின்றிச் செய்கின்றது. சிங்கமும் புலியும் கூட பல முள்ள மிருகங்களென நீங்கள் கூறலாம். உலகில் வேகமாக ஓடும் மிருகம் சிறுத்தையென்பது உண்மை தான். ஆனால் சிறிது நேரத்துக்கு மட்டுமே அது வேக மாக ஓடக் கூடியது. யானை, குதிரை, மாடு போன்று தொடர்ச்சியாக களைப்பின்றி இய ங்க புலி, சிங்கம் போன்றவற்றால் முடிவதில்லை. தாவரவுண்ணிகள் எப்போதும் பலம் வாய்ந்தவையென்பது தான் இதற்கான கார ணம். முதல் உற்பத்தியாக்கிகளான தாவரங்களிலிருந்து நேரடியாக சக்தியைப் பெறுவதால் தான் இத்தனை பலம்.

ஐப்பசி 13, 2012

சாவேஸ்

மக்களின் நண்பன்... அமெரிக்காவின் எதிரி!

கியூபாவுக்கு சிகிச்சைக்குப் போன சாவேஸ் திரும்பி வரக்கூடாது என்றே அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆசைப்பட்டன. ஆனால், சாவேஸ் திரும்பினார். வெனிசுலா அதிபராக நான்காவது முறையும் வென்று காட்டினார். ''இந்தத் தருணமே... இப்போதே! நாளை அல்ல... நாளை என்பது மிகத்தாமதம்!'' என்ற சொற்களின் மூலமாக வெனிசுலா மக்களைக் கட்டிப்போட்ட சாவேஸை மீண்டும் தேர்ந்து எடுத்ததன் மூலமாக சோஷலிசமே தங்களின் இலக்கு என்பதையும் வழிமொழிந் துள்ளார்கள்! கியூபாவின் ஃபிடெல் காஸ்ட்ரோ அமெரிக்காவுக்கு எப்படி சிம்மசொப்பனமோ... அப்படித்தான் வெனி சுலாவின் ஹியூகோ சாவேஸும். (மேலும்.....)  

ஐப்பசி 12, 2012

1998ம் ஆண்டு புலிகளினால் வீழ்த்தப்பட்ட விமானமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது!

புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு லயன் எயார் பயணிகள் விமானமொன்றை  புலிகள் சுட்டு வீழ்த்தியிருந்தனர். இந்தப் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த 48 பயணிகளும், விமானி உள்ளிட்ட ஏழு விமான சிற்பந்திகளும் உயிரிழந்தனர். கடலில் வீழ்ந்த இந்த விமானத்தை மீட்கும் பணிகளை கடற்படையினர் ஆரம்பித்துள்ளனர்.  புலி உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களுக்கு அமைய இந்த விமானத்தை கண்டு பிடிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விமானத்திப் பாகங்களை மீட்கும் பணிகளை கடற்படையினர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளனர். இரணை தீவு கடற்பகுதியில் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. சுழியோடிகள் குறித்த பிரதேசத்தில் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் விமானத்தின் பாகங்களை மீட்க முடியும் என கடற்படையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான கடாபி என்பவரே இந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கடாபி உயிரிழந்துள்ளார்.

ஐப்பசி 12, 2012

பொறுமைக்கும் எல்லையுண்டு

சம்பந்தனிடம் இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா

இலங்கைப் பிரச்சினையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, பொன்.செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது. தமிழ்க் கூட்டமைப்பின் இவ்வுறுப்பினர்கள் இன்று காலை இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சம்பந்தன், அந்தச் சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக தெரிவித்தார். (மேலும்.....)

ஐப்பசி 12, 2012

ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி காலமாகிவிட்டார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் இரசாயன ஆசிரியராக பணி புரிந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், பொறியிலாளர்கள் போன்றவர்களை உருவாக்கிய மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று தனது 86ம் வயதில் மாரடைப்பினால் கொழும்பில் காலமாகிவிட்டார்.(மேலும்.....)

ஐப்பசி 12, 2012

சுகு சிறிதரன் மனத்திலிருந்து.....

சாமானியர்களை அலட்சியம்செய்யும் அற்பர்களாக நினைக்கும் நடத்தும் அதிகாரத்தின் அகங்காரம் சமூகத்திகுள்ளேயே. தமிழர்களின் வாழ்வு கெடுபிடியாக மாறிக் கொண்டிருக்கிறது. சமூக அக்கறைகள் குறைந்துள்ளன. ஆஸ்பத்திரியாகாட்டும், பேருந்து ஆகட்டும், வீதி ஆகட்டும், கச்சேரி பொலிஸ் நிலையம் ஆகட்டும் சாதாரண மக்களுடன் மரியாதையான உறவுக ள் இல்லை. தனியார் ஆஸ்பத்தரிகள் பணம் பண்ணும் வாத்தக நிலையங்கள் மனச்சாட்சிக்கு அங்கு இடமில்லை. அங்கெல்லாம் லாச்சிகள் தான் இருக்கன்றன. இதயம் என்பது கிடையாது.
அதிகாரப்போட்டிகள் பள்ளிக் கூட மட்டத்திற்கும் சென்று விட்டது. சுய நிர்ணயம், தேசம் பற்றி எல்லாம் பேசுகிறோம் . ஆனால் இங்கு சாதாரண மனிதர்கள் அன்றாடம் காயப்படுத்தப்படுத்துகிறார்கள். விரக்கதிக்குள்ளாகிறார்கள். புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய சில பிள்ளைகளின் படங்களை பத்திரிகையில் போட்டு அதில் சித்தியடையாத பிஞ்சு உள்ளங்களை வெதும்பச் செய்கிறார்கள் . இந்த புலமைப்பரிசில் பரீட்சைக்காக பிள்ளைகள் பிழிந்தெடுக்கபடுகிறார்கள். இதனை பிரான்சலிருந்து வந்த நண்பர் ஒருவர் மனம் நொந்து கூறினார்.

ஐப்பசி 12, 2012

இனங்களை வெறுக்கும் இனங்கள்
மனிதர்களை மனிதர்கள் நேசிப்பார்களா...?
சிங்களவர்களை வெறுக்கும் தமிழர்கள். தமிழர்களை வெறுக்கும் சிங்களவர்கள். பாகிஸ்தானியர்களை வெறுக்கும் இந்தியர்கள். இந்தியர்களை வெறுக்கும் பாகிஸ்தானிகள். இவர்கள் தாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வல்லரசால் ஆட்டுவிக்கப்பட்ட பொம்மைகள் என்று உணர்வதில்லை. தங்களது கேவலமான நிலைமயை உணராமல், மற்றவர்களை பரிகசித்துக் கொண்டிருப்பார்கள். சோவியத் யூனியன் குறித்து மத்திய தர வர்க்க அறிவுஜீவிகள் முன்வைக்கும் விமர்சனங்களில் ஒன்று, ரஷ்ய மொழியின் மேலாதிக்கம் பற்றியது. இதே அறிவுஜீவிகள் தமது தாய்மொழியை விட ஆங்கிலத்தை பேசுவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அதில் என்ன தவறு? என்றும் கேட்பார்கள்.

ஐப்பசி 12, 2012

வெளிநாட்டு புலி பினாமிகளின் கோரிக்கையை நிராகரித்தார் இளையராஜா

வெளிநாட்டு புலி பினாமிகளின் ஆதரவு தமிழர்களில் ஒரு பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை இளையராஜா நிராகரித்தார். திட்டமிட்டபடி நவம்பர் மாதம் அவரது பிரமாண்ட இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. நவம்பர் மாதம் புலி பினாமிகளின் மாவீரர் தினம் வருவதால் அந்த மாதத்தில் ஆடம்பர நிகழ்ச்சிகள் எதையும் வைத்துக் கொள்வதில்லை. முள்ளிவாய்க்கால்  முன்புவரை இலங்கைல் மட்டுமே நவம்பர் மாதம் ஆடம்பர நிகழ்ச்சிகள் நடக்காமலிருந்தன. தமிழகத்தில் அதனை யாரும் கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. ஆனால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் நவம்பர் மாதத்தில் எந்த நல்ல நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது என்ற எண்ணம் உலகம் முழுவதும் வாழும் புலி பினாமிககளிடையே தோன்றியிருக்கிறது. (மேலும்....)

ஐப்பசி 12, 2012

கேள்விகேட்டவர்களை  பார்த்து நீ யார் எங்களை கேள்விகேக்க பொத்துவாய் என்று மிரட்டிய சுரேஸ் பிரேமச்சந்திரன்

இன்றைய தினம் (8) யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடந்த அபிவிருத்தி ஓருங்கிணைப்பு குழுக்கூட்டம்  பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்களின் தலைமையில் நடந்தபோது அங்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் கலந்துகொண்டனர். அப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அங்கு தங்களின் சுய ரூபங்களை  காட்ட தோடங்கினர். அதர்க்கு அங்கு வந்திருந்தவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை பார்த்து கேள்விகேக்க அதற்க்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் ஆத்திரம்  அடைந்து அவர்களை பார்த்து  கேள்விகேட்டவர்களை  நீ யார் எங்களை கேள்விகேக்க பொத்துவாய் என்று மிரட்டிய சுரேஸ் பிரேமச்சந்திரன் மிகவும் கிழ்தரமான  அநாகரிகமான வார்த்தைகளாள் திட்டியுள்ளார்கள். இதை அவதானித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள்  கூறியவை கடந்த காலங்களில் உணர்ச்சி வார்த்தைகளை தமிழ் மக்களின் மத்தியிலே விதைத்து அவர்களின் அழிவுகளிலும் அவலங்களிலும் இன்று வரை உங்கள் சுயலாப அரசியல் வாழ்கை நடத்திக்கொண்டு வந்திருக்கிறீங்கள். இனியாவது இந்த தமிழ் மக்கள் நிம்மதியாகவும்  சமதானமாகவும்  இந்த அரசாங்கத்திடம் இருந்து தங்கள் உரிமைகளை பெற்று சுதந்திரமாக வாழ்வதற்க்கு வழிவிடுங்கள் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை பார்த்து  அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அவர்கள்  கேட்டு கொண்டார். (வீடியோ இணைப்பை பார்க்க இங்கே அழுத்தவும்....)

ஐப்பசி 12, 2012

'வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்காளராக பதிவு செய்யலாம்'

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்வரும் ஒக்டோபர் 31ஆம் திகதிக்கு முன்னர் உறவினர்கள் ஊடாக வாக்காளர் இடாப்பில் பதிவினை மேற்கொள்ளலாம் என யாழ். உதவி தேர்தல் ஆணையாளர் பொ.குகநாதன் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய விரும்பவர்கள் இலங்கை குடியுரிமை பெற்றவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். '2012ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த திருத்தத்தின் போது இரட்டை பதிவு மேற்கொண்டிருந்த 6, 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். இதனாலேயே இறுதி பட்டியல் தயாரிப்பது பெரும் சிரமமாக உள்ளது' எனவும் அவர் தெரிவித்தார். '2012ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சேர்க்கப்பட வேண்டியவர்கள் சேர்க்கப்பட்டும் நீக்கப்பட வேண்டியவர்கள் நீக்கப்பட்டும் கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலகங்களில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக நேரடியாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முன்வைக்க முடியும்' என அவர் குறிப்பிட்டார்.

ஐப்பசி 12, 2012

முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் - மனோ கணேசன்

யாழ்ப்பாண துறைமுகத்தில் ஒரு கப்பலை கொண்டுவந்து நிறுத்திவிட்டு மேற்குலக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்கள் வந்து ஏறலாம் என அழைப்பு விடுத்தால், முழு யாழகமே வந்து கப்பலில் ஏறிவிடும் என்று எனக்கு சமீபத்தில் ஒரு யாழ் மாவட்ட கூட்டமைப்பு எம்பி சொன்னார். அந்தளவுக்கு வெளிநாட்டு மோகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது என்று சொல்லி வேதனை பட்டுக்கொண்டார்.  இலங்கை ஜனநாயக வரம்புகளை தொடாத ஒரு வளர்ச்சியடைந்துவரும் நாடு. பல இனங்கள் கலந்துவாழும் வளர்ச்சியடைந்துவரும் இத்தகைய நாட்டில் இனங்களின் ஜனத்தொகை என்ற விடயம்தான் இனவுரிமைகளை நடைமுறையில் தீர்மானிக்கின்றது. இதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இந்நாட்டில் சிங்களவர்கள் 51 % தமிழர்கள் 49 % வாழவில்லை. சிங்கள மக்களின் ஜனத்தொகை 75 % நெருங்கிவிட்டது. இதைத் தவிர கணிசமான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்கள். இப்போதும் தினந்தோறும் வெளியேறி கொண்டிருகின்றார்கள். இதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஐப்பசி 12, 2012

முதிர்ந்தவர்களுக்கான விழிப்புணர்வு பேரணி

முதியேர்கள் அவர்கள் வாழும் சமூகத்தில் வைத்து பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி (07.10.2012) 3 மணிக்கு கைதடி சந்தியில் இருந்து முதியோர் இல்லம் வரை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கைதடி முதியோர் இல்லத்தில் இருக்கும் முதியவர்கள், கைதடிப்பாடசாலை மாணவர்கள், பொது மக்கள், பொது அமைப்புக்கள், பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதே வேளை இவ்விழிப்புணர்வு ஊர் வலத்தில் பங்கு பற்றி ஆதரவினை வழங்குமாறு தன்னார்வ நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரியவர்கள் எனும் பொழுது அங்கே அவர்களது அனுபவம் தான் முக்கியத்துவம் பெறுகிறது,அனுபவத்தைவைத்து பதவி உயர்வு வழங்குவது, பாடசாலையிலோ அல்லது பல்களை களகத்திலோ, கிடைக்கும் பட்டத்தை விட சான்றிதளைவிட, பெரியோரின் அனுபவம் பன்மடங்கு பெருமையுடையது, அதனால் தானோ என்னமோ.

ஐப்பசி 12, 2012

ஆஸி. செல்ல முற்பட்ட 125 பேர் சிலாபம் வத்தளையில் கைது

சட்ட விரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 125 பேர் நேற்று பொலிஸாரினாலும் கடற்படையி னராலும் கைது செய்யப்பட் டுள்ளனர். சிலாபத்தில் 112 பேரும் வத்தளையில் 13 பேரும் கைது செய்யப்பட் டுள்ளனர்.  நேற்று அதி காலை சிலாபம் கடற் பரப்பில் வைத்து 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இதேவேளை, சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 13 பேர் கொழும்பு வத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வான் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே வத்தளை ஹெந்தளை பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ள்ளனர். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து குறித்த வான் இடைமறிக்கப்பட்டு 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, நீர்கொழும்பு, வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள் ளனர்.

ஐப்பசி 12, 2012

சிரிய பயணிகள் விமானத்தை யுத்த விமானம் மூலம் தரையிறக்கி துருக்கி சோதனை

சிரியாவின் பயணிகள் விமானத்தை துருக்கி யுத்த விமானத்தைக் கொண்டு வலுக்கட்டாயமாக தரையிறக்கி சோதனையிட்டுள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்ற நிலையை மேலும் அதிகரித்துள்ளது. இந்த விமானத்தில் ஆயுதங்கள் கொண்டு செல்லப்படுவதாக வெளியான தகவலை அடுத்தே துருக்கி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இருந்து சிரிய தலைநகர் டமஸ்கஸை நோக்கி நேற்று முன்தினம் பயணித்த ஏ. 320 ஏர்பஸ் பயணிகள் விமானம் துருக்கியின் இரு யுத்த விமானங்களால் இடைமறித்து துருக்கி தலைநகர் அங்காராவிலுள்ள எஸன்பொகா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின் துருக்கி நிர்வாகத்தினால் 8 மணிநேரத்திற்கு மேல் சோதனைக்குட்படுத்தப்பட்ட விமானம் மீண்டும் சிரியாவை நோக்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டது. 180 பயணிகளை கொண்டு செல்லும் இந்த விமானத்தில் 30 பயணிகளே இருந்துள்ளனர். (மேலும்...)

ஐப்பசி 12, 2012

சீன எழுத்தாளருக்கு இலக்கியத்திற்கான நோபல்

இலக்கியத்திற்கான இந்த ஆண்டுக்கான நோபல் விருதுக்கு சீன எழுத்தாளர் மொ யன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடன் அகடாமியின் தலைமையகமான ஸ்டோக்ஹோமில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. நாட்டுப்புற கதைகள், வரலாறு மற்றும் சமகாலத்தை ஒன்றிணைந்ததாக அவரது எழுத்துப் பாணி அமைந்திருப்பதாக நோபல் விருதுக் குழு அறிவித்துள்ளது. கடந்த பல தசாப்தங்களாக சீனாவின் முன்னணி எழுத்தாளராக உள்ள மொயன், 20 ஆம் நூற்றாண்டின் சீன சமூகம் இருண்ட மற்றும் அருவருக்கத்தக்கது என விமர்சித்தவராவார். இவர் சீன மொழியில் எழுதிய பல நாவல்கள் பின்பு ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 1987 ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘ரெட் சொர்கும்’ என்ற நாவல் வெளிநாடுகளில் பிரபலம் அடைந்தது. இந்த நாவலில் கிழக்கு சீன கிராமப்பகுதியில் இடம்பெற்ற கொடூரங்களை வர்ணித்துள்ளார். இதன்படி இலக்கியத்திற்கான நோபல் விருது வென்ற முதல் சீன பிரஜையாகவும் சீனாவில் பிறந்த இரண்டாமவர் ஆகவும் மொ யன் பதிவானார். இதற்கு முன்னர் சீனாவில் பிறந்த கவு எக்சிஜியான் 1987 ஆம் ஆண்டு பிரான்ஸ் பிரஜா உரிமையைப் பெற்ற நிலையில் 2000 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் விருதை வென்றார்.

ஐப்பசி 12, 2012

ஆஸ்துமா நோய்க்கு இயற்கை வைத்தியம்

ஆஸ்துமா பரம்பரை நோயாகவும் வரலாம். அல்லது நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத காரணத்தினாலும் வரலாம். மேலும் தூசி, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் இரசாயன கழிவுப் பொருட்கள் சூழ்ந்துள்ள இடங்களில் வசிப்பது, பூச்சிக்கொல்லி மருந்துகள், வாகனப் புகை, சில மாத்திரைகள் ஆகியவை மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு ஆஸ்துமா வரலாம். மேல் மூச்சு வாங்குதல், தொடர் சளி, இருமல் ஆகியவை ஆஸ்துமா நோய்க்கான அறிகுறிகள் ஆகும். வேப்பிலை, வில்வம், துளசி, அத்தி மற்றும் தும்பையிலை, ஆடு தொடா, தூதுவளை, முருங்கையிலை போன்ற மூலிகைகள் அனைத்தையும் வெயிலில் உலர்த்தி பொடி செய்து சம அளவில் ஒன்றாகக் கலந்து பின் காற்றுப்புகாத போத்தலில் நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இவற்றில் இருந்து ஒரு கரண்டி தூள் எடுத்து ஒரு குவளை தண்ணீரில் கலந்து உணவுக்கு ஒரு மணி நேரம் முன்பாக தினமும் காலை, பகல், இரவு ஆகிய மூன்று வேளைகளும் உட்கொள்ள வேண்டும். இதனை சுமார் நான்கு முதல் ஆறு மாதங்கள் வரை உட்கொண்டால் நோயிலிருந்து பூரணகுணம் பெறலாம்.


ஐப்பசி 11, 2012

சர்சையைக் கிளப்பிய வார்த்தைகள்!

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழக் கூட்டத்தில் சர்சையைக் கிளப்பியது வார்த்ததைப் பிரயோகம். இதனால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரோடு வாய்ச்சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். டக்ளஸின் இந்த வார்ததைப் பிரயோகத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வன்மையாகக் கண்டித்தனர். எமது தமிழ் தலைவர்கள் எவ்வாறு மக்கள்பிரச்சனையை கையாளுகின்றார்கள் என்பதை இந்த வீடியோ மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாவித்த வார்த்தைப் பிரயோகம் காரணம் எனக் கூறப்பட்டாலும் இதற்கு பதிலளித்த த.தே கூட்டமைப்பினர் சபையினரையும் அமைச்சரையும் பண்பாடு அற்ற முறையில் கூச்சல் இட்டு குழப்பவதை நீங்கள் காணலாம். இது பழைய பகையின் தொடர்ச்சியோ என்று எண்ணத் தோன்றுகின்றது. (காணொளியைப் பார்க்க....)

ஐப்பசி 11, 2012

யாழ். சிங்கள மகா வித்தியாலயத்தில் படை முகாம் அமைக்க இராணுவம் நடவடிக்கை

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலய காணியில் பாரிய படைமுகாமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. யாழ். கொழும்புத்துறை பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள படை முகாமை அங்கிருந்து அகற்றி அக்காணியை பொதுமக்களிடம் கையளிப்பதற்காகவே மேற்படி சிங்கள மகா வித்தியாலயம் அமைக்கப்பட்டிருந்த காணியில் படை முகாம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்தார். அத்துடன், கொழும்புத்துறை இராணுவ முகாம் அமைந்துள்ள பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 45 வீடுகள் காணப்படுவதாகவும் அவற்றை உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் கூறினார்.  (மேலும்.....)

ஐப்பசி 11, 2012

புதிய பண்பாட்டுத் தளம்

புதிய பண்பாட்டுக்கான வெகுஜன அமைப்பு

தோழமைகளே!

வேறு வேறு அரசியல் தளங்களில் சமூக மாற்றத்துக்காக இயங்கிய பலர் ஒன்றிணைந்து புதிய உத்வேகத்துடன் பயணிப்பதற்கான ஒரு தளமாக இதனைக் கட்டி எழுப்புவோம். மக்கள் முன்னென்றும் இல்லாத வகையில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாவதோடு அடிப்படை வாழ்வாதாரங்களை இழந்து வருகிறார்கள். அதேவேளை உலகமயமாதல் சூழலில் பன்னாட்டுக் கொம்பனிகளின் வேட்டைக்காடாக எமது மண் மாற ஏற்றதாக பண்பாட்டுச் சிதைவுகள் முனைப்பாக்கப்பட்டுவருகிறது. சொந்தப் பண்பாட்டை இழக்கும்போது பிறர்க்குப் பூரண அடிமையாதல் முற்றானதாகும் என்பதாலேயே பண்பாட்டுத் தளத்திலான இந்தத் தாக்குதல் என்பதறிவோம். இத்தகைய இருள் சூழ்ந்த நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்? (மேலும்.....)

ஐப்பசி 11, 2012

ஆஸி செல்ல முற்பட்டதாக இந்திய அகதி முகாம்களைச் சேர்ந்த 55 இலங்கையர் கைது

இந்திய அகதி முகாம்களின் தங்கியுள்ள நிலையில் படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா பயணிக்கவிருந்த இலங்கையர்கள் 55 பேரை இந்திய கியூ பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளர். திருச்சி, ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் உச்சிப்புளி ஆகிய முகாம்களைச் சேர்ந்த 55பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தூத்துக்குடி கடல் மார்கமாக அவுஸ்திரேலியா பயணிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக இவர்கள் அனைவரும் முகவர் ஒருவருக்கு பணம் வழங்கியுள்ளதாகவும் அம்முகவரின் ஆலோசனைக்கிணங்க நேற்று இரவு சிந்தளகரை வெட்காளியம்மன் கோவில் அருகே தங்கியிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்தவர்களை விசாரணைக்கு பின்னர் மீண்டும் சொந்த முகாம்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை இந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐப்பசி 11, 2012

விரிவுரையாளர்களின் 100 நாள் வேலைநிறுத்தம் இன்றுடன் முடிவு

பேராசிரியர்கள், விரிவுரையாளர்க ளின் வேலைநிறுத்தம் இன்று நூறாவது நாளுடன் முடிவுக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கத்துக்கும், அரசுக்குமிடையில் நடைபெற்ற நீண்ட சுற்றுப் பேச்சுவார் த்தைகள் சாதகமான முறையில் முடிவடைந்திருக்கும் நிலையில் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று கைவிடப்படவிருப்பதாக அவ்வட்டா ரங்கள் மேலும் தெரிவித்தன.பேராசிரியர்கள் மற்றும் விரிவுரை யாளர்கள் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை இன்றுடன் முடிவுக்குக் கொண்டுவந்து, கடமைக்குத் திரும்ப அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. பல் கலைக்கழக விரிவுரையாளர் சங்கமும், அரசாங்கமும் இணைந்து கூட்டறிக்கை யொன்றை வெளியிடுவதற்கும் முடிவு செய்துள்ளனர். (மேலும்.....)

ஐப்பசி 11, 2012

உட்கட்சி மோதலை தவிர்த்து விரும்பியவரை தெரிவு செய்வதற்கு நல்ல வாய்ப்பு

23 வருடங்களின் பின்னர் விருப்பு வாக்கு முறை ரத்துச் செய்யப்பட்டு புதிய தேர்தல் முறை அமுல்படுத்தப்படு வதால் இலங்கை வரலாற்றில் இது மிகவும் முக்கியமான தினமாகும். இதேபோன்று மாகாண சபைகள் மற்றும் பொதுத் தேர்தல் சட்டங்களும் திருத்தப்பட உள்ளதாக உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார். வாக்காளர்களுக்கு தாம் விரும்பிய பிரதிநிதியை தெரிவு செய்ய அவகாசம் காணப்படவில்லை. மக்களுக்கு தமது பிரதிநிதி யார் என்பது தெரியாது. இந்த விருப்பு வாக்கு முறையை மாற்றுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உறுதியளித்திருந்தார். ஜே. ஆர். ஜெயவர்தன இந்த தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியபோது அதில் விருப்பு வாக்குமுறை இருக்கவில்லை. ஆனால் பின்னரே இம்முறை சேர்க்கப்பட்டது. புதிய தேர்தல் திருத்தத்தின் மூலம் வாக்காளர்களுக்கு தமக்கு விருப்பமான வேட்பாளரை தெரிவு செய்ய முடியும். அடுத்து மாகாண மற்றும் பொதுத் தேர்தல் சட்டங்களையும் திருத்தி விருப்பு வாக்கு முறையை ரத்துச் செய்ய உள்ளோம்.

ஐப்பசி 11, 2012

பின்லாடனை கொல்ல பயிற்சியெடுத்த இடம் அம்பலமானது

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் கொல்லப்பட்ட அமெரிக்க கடற்படை தாக்குதலுக்காக பயிற்சி எடுத்துக் கொண்ட இடத்தை இணையதளம் ஒன்று அம்பலப்படு த்தியுள்ளது. இந்த இடம் ஒசாமா பின்லாடன் தங்கியிருந்த பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் இருக்கும் கட்டிடம் போன்றே அமைக்கப்பட்டுள்ளது. ஒசாமா பின்லாடன் மீதான நேவி சீல்ட் கடற்படை தாக்குதலில் ஈடுபட்ட மெட் பிஸ்ஸொனெட் என்பவர் எழுதிய “நோ ஈசி டே” என்ற புத்தகத்தின் தகவலுக்கமையவே இந்த பயிற்சி வளாகம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது வடக்கு கரோலினாவில் உள்ள அமெரிக்க உளவுப் பிரிவான சி. ஐ. ஏ. வின் பாதுகாப்பு செயற்பாட்டு தளத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதனை செய்மதி புகைப்படம் ஊடாக கிரிப்டொம். ஒர்க் என்ற இணையதளம் அம்பலப்படுத்தியுள்ளது.  எனினும் இந்த வளாகம் தற்போது தகர்க்கப்பட்டுள்ளது.

ஐப்பசி 11, 2012

ரஷ்யாவிடம் இருந்து 4.2 பில். டொலருக்கு ஆயுதம் வாங்குகிறது ஈராக்

ரஷ்யாவிடமிருந்து 4.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கு ஈராக் அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள் ளது. இரு நாட்டு தலைவர்களும் மொஸ்கோ நகரில் கடந்த செவ்வாய்க் கிழமை நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளது. இதில் தாக்குதல் ஹெலிகொப்டர்கள், மிக் 29 ரக ஜெட் விமானங்கள், கனரக ஆயுதங்கள் தாங்கிய வாகனங்களையும் ஈராக், ரஷ்யாவிடமிருந்து வாங்கவுள்ளது. சதாம் ஹுசைன் அரசில் ரஷ்யாவின் பிரதான ஆயுதக் கொள்வனவு நாடாக இருந்த ஈராக், அமெரிக்க தலையீட்டின் பின் அந்த நிலையில் மாற்றம் ஏற்பட்டது. எனினும் வெளிநாட்டு படைகள் ஈராக்கில் இருந்து முழுமையாக வெளியேறிய நிலையில் அந்நாட்டு அரசு தமது ஆயுத சக்தியை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஐப்பசி 11, 2012

இன்றைய உலகில் மனஅழுத்தம் பாரதூரமான பிரச்சினை

இன்றைய மக்களின் இயந்திரமாகிப் போன வாழ்க்கையில் 'மன அழுத்தம்' என்பது ஆபத்தான விடயமாக உருவாகி வருகிறது. ஓய்வின்மை, வேலைப்பளு, பணநெருக்கடி, வீடில்லாப் பிரச்சினை, காதல் தோல்வி, வேலைவாய்ப்பின்மை, சமூகப் புறக்கணிப்பு, மேலதிகாரியின் தொந்தரவுகள், ஆதரவற்ற வாழ்க்கை என்றெல்லாம் மன அழுத்தத்துக்கான காரணங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மன அழுத்தத்தை அலட்சியப்படுத்து வது ஆபத்தானது. மனதளவில் உருவா கும் பிரச்சினையானது, காலப்போக்கில் விஸ்வரூபமடைந்து இறுதியில் உடலில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மனத்தைரியமற்றோரைப் பொறுத்த வரை மன அழுத்தமென்பது இறுதியில் தற்கொலையிலும் முடிந்துவிடும் பரிதாபம் ஏற்படுவதுண்டு. சீனாவில் மாத்திரம் ஆண்டு தோறும் இவ்விதம் சுமார் 250 பேர் தற்கொலை செய்து கொள்வதாக அறிக்கையொன்று கூறுகிறது. மன அழுத்தப் பிரச்சினையால் அவதியுறுவோர் உளநல ஆலோசனை களையும் தகுந்த மருத்துவ சிகிச்சையை யும், பெற்றுக் கொள்வது அவசியமென வலியுறுத்தப்படுகிறது.

ஐப்பசி 10, 2012

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியா செல்கிறது!

இந்திய மத்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் இந்தியா செல்கின்றது. கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான இந்த குழுவில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கல நாதன், செல்வராஜா ஆகியோர் உள்ளடங்கின்றனர். இவர்கள் இன்று பிற்பகல் 2.30 அளவில் இந்தியா பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியா செல்லும் இவர்கள் மத்திய அரசாங்கத்தின் பல முக்கிய தலைவர்களை சந்தித்து பேசவுள்ளனர். மத்திய அரசின் தலைவர்களை சந்தித்த பின்பு தமிழ்நாடு திரும்பும் இவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சர் ஜெயலலிதாவையும் சந்திக்கவுள்ளனர். இதன் பின்பு தமிழ் நாட்டில் உள்ள தங்கள் குடும்ப உறவுகளையும் சந்திக்கவுள்ளனர்.


ஐப்பசி 10, 2012

ஒற்றுமையை உறுதிப்படுத்தி மக்களின் நிரந்தரத் தீர்வுக்கு உழைக்க தயார் - வீ. ஆனந்தசங்கரி

ஒற்றுமையை உறுதிப்படுத்தி எத்தகைய தியாகத்தையும் செய்து மக்களின் நிரந்தரத் தீர்வுக்கு உழைக்கத் தயாராக இருப்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பெயரளவில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இயங்குகிறதே தவிர கடந்த 2 வருடங்களில் எச்சந்தர்ப்பத்திலும் எம்முடன் எதுவித கலந்தாலோச னையையும் நடத்தாமல் செயற்படுகி ன்றனர். ஆனால் பல சந்தர்ப்பங்களில் முற்று முழுதாக ஏற்க முடியாத கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதெல்லாம் மக்கள் நலன்கருதி மெளனம் சாதித்து ஏனையவர்களுக்குச் சேரவேண்டிய அவப்பெயரை நாம் ஏற்றுப் பங்குகொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் சிலவற்றைக் கூறி 1972 இல் இருந்த நிலையிலும் பார்க்க பல மடங்கு மோசமாக தமிழர் நிலை மாறியுள்ள இன்றைய நிலையில் மேலும் எமது மக்களின் இன்னல்கள் அதிகரிக்கும் என்பதால் மிகச் சிரமப்பட்டு மெளனம் காக்கின்றோம். நாட்டின் நிலமையை அறியாத சிலர் சுயநல நோக்கோடு செயற்படும் வேளை நிலமைகளைத் தெளிவாக அறிந்த நாங்கள் ஒற்றுமையை உறுதிப்படுத்த எத்தகைய தியாகத்தையும் செய்து மக்களின் நிரந்தர தீர்வுக்கு உழைக்கத் தயாராக இருக்கின்றோம். (மேலும்.....)

ஐப்பசி 10, 2012

கேள்வி ??????    பதில்

புலிகளையும் பிரபாகரனையும் அழித்து விட்டபிறகும், அரசாங்கம் பாதுகாப்பு வலயங்களை அமைப்பது ஏன் என சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளாரே?

 புலிகளும் பிரபாகரனும் அழிந்தொழிந்த பின்னர் நாட்டில் சண்டை இருக்காது. அமைதி நிலவும். பாதுகாப்பு நடவடிக்கைகள் எதற்காக? ஆட்லறியும் இல்லை. ஆட்லறி அடிப்பதற்கு ஆட்களும் இல்லை. இந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதற்காக என்று வடிவேலு பாணியில் வீராவேச வசனம் பேசியுள்ளார் சுரேஸ். நாட்டில் புலிகள் அழிக்கப்பட்டு விட்டாலும், குள்ளநரிகளும், கிழட்டுப்புலிகளும் காட்டிக் கொடுப்பதில் கில்லாடிகளும் நிறையவே இருக்கிறார்கள். இதில் சுரேசுக்கு என்ன இடம் என்று எல்லோருக்குமே தெரியும். சுதந்திர இலங்கையில் தமிழனின் அழிவுக்கும், இந்த அவல நிலைக்கும் தமிழ் காங்கிரஸ், தமிழரசு கட்சிகளும் அதன் வழிவந்த இயக்கங்களும் தான் காரணம். தமிழர் மத்தியில் இருந்த மொக்கை வலதுசாரி கட்சிகளும் தங்கள் பங்குக்குத் தமிழருக்குத் தண்ணி காட்டத் தயங்கவில்லை. ஆக மொத்தத்தில் தமிழருக்கு நல்ல தலைமை கிடைக்கவேயில்லை. அரும்பி வந்த தலைமையையும், புலிகள் கொன்றொழிக்க, துணைபோன வரலாற்று வடு சுரேசைத் தொடர்ந்து கொண்டே இருக்கும். புலன் பெயர்ந்த தமிழர்களும் புத்தி கெட்டுப்போன தலைமையும் இருக்கும்வரை, பாதுகாப்பு வலயங்கள் அமைப்பதற்கு அரசுக்கு காரணம் சொல்ல வாய்ப்புக்கள் இல்லாமலா போகும். 

ஐப்பசி 10, 2012

3 இலங்கையர் உட்பட 6 கிரிக்கெட் நடுவர்கள் சிக்கினர்

6 கிரிக்கெட் நடுவர்கள் போட்டிகளில் தவறான முடிவுகளை வழங்கவோ அல்லது போட்டியின் விபரங்களைக் கையளிக்கவோ தயாராக இருந்தமையை இந்தியத் தொலைக்காட்சியின் புலனாய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது. பணத்தைப் பெற்றுக் கொண்டே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்கள் தயாராக இருந்திருந்திருந்தார்கள். இலங்கையைச் சேர்ந்த 3 நடுவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்த 2 நடுவர்கள், பங்களாதேஷைச் சேர்ந்த ஒரு நடுவர் என மொத்தமாக 6 நடுவர்கள் இவ்வாறு அகப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இந்தப் புலனாய்வு நடவடிக்கையில் இலங்கையைச் சேர்ந்தவர்களான காமினி திஸாநாயக்க, மௌரிஸ் வின்ஸ்டன், சாகர கலகே ஆகியோரும், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் கௌரி, அன்னீஸ் சித்திக்கி ஆகியோரும், பங்களாதேஷைச் சேர்ந்த நதீர் ஷா என்ற நடுவரும் அகப்பட்டுள்ளனர். (மேலும்.....)

ஐப்பசி 10, 2012

தேடப்படும் குற்றவாளி தப்புவதற்காக விசா வழங்கிய அமெரிக்கா

இலங்கையின் குண்டர்படை அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா பல குற்றச் செயல்களில் ஈடுபட்டடுள்ளதாக போலிஸ் முறைப்பாடுகள் உள்ளன. ஒரு வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இலங்கையிலிருந்து மாலக தப்பிச்செல்வதற்காக அமெரிக்கத் தூதரகம் விசா வழங்கியுள்ளது. தான் இரண்டு மாதங்கள் அமெரிக்காவிற்குக் கல்விகற்கச் செல்வதாக மாலக தெரிவித்திருந்தார். தேடப்படும் குற்றவாளி ஒருவருக்கு எந்த அடிப்படையில் அமெரிக்கா விசா வழங்க முடியும் என லங்கா மிரர் அமெரிக்கத் தூதரகத்திடம் வினவிய போது, அது குறித்து தாம் கருத்து கூற முடியாது என்றும் விசா நடைமுறைகள் இரகசியமானது என்றும் தெரிவித்க்தனர். இதுவரை இலங்கையில் கிரிமினல் வேலைகளில் மறைமுகமாக ஈடுபட்டுவந்த அமெரிக்க அரசு இப்போது வெளிப்படையாகவே அதனை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

ஐப்பசி 10, 2012

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்து வருகிறது

நீதித்துறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை குறைவடைந்து வருவதாக தெரிவித்த ஓய்வுபெற்ற நீதிபதி டபிள்யூ.ரீ.எம்.பி.பீ.வராவெவ, தங்போதைய நிலைமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இன்று நீதித்துறையின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நினைக்க கவலையாக உள்ளது. நீதித்துறையைச் சார்ந்தவர்கள் அச்சுறுத்தல் மற்றும் பயமின்றி சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். நீதித்துறை மீது அதிருப்திகொண்டு அதன் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஒவ்வொரு குடிமகனும் கண்டிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவது அரசாங்கத்தின் கடமையாகும் எனவும் அவர் மேலும் கூறினார்.

ஐப்பசி 10, 2012

சகல மாகாண சபைகளிலும் திவிநெகும சட்ட மூலம் நிறைவேற்றம்

“திவிநெகும திணைக்கள சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். மேற்படி சட்ட மூலம் சகல மாகாண சபைகளிலும் நிறைவேறியுள்ளதாக மாகாண ஆளுநர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார். திவிநெகும சட்ட மூலத்திற்கு சகல மாகாண சபைகளினதும் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் மேற்படி சட்ட மூலம் சகல மாகாண சபைகளுக்கும் சமர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இதன் பிரகாரம் ஜனாதிபதியின் அறிவித்தலை சபாநாயகர் நேற்று சபையில் அறிவித்தார். வட மாகாண சபைத் தேர்தல் நடைபெறாமல் எவ்வாறு எல்லா மாகாண சபைகளழனாலும் சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்க முடியும் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐப்பசி 10, 2012

‘கடவுளின் துகளுக்கு’ விருதில்லை’

பிரான்ஸ், அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு பெளதீகவியலுக்கான நோபல் விருது

இந்த ஆண்டில் பெளதிகவியலுக்கான நோபல் பரிசு பிரான்ஸ் விஞ்ஞானி செர்ஜ் ஹரொச் மற்றும் அமெரிக்க விஞ்ஞானி டேவிட் லின்லாட்டிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குவாண்டம் பெளதீகவியல் தொடர்பில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுக்காகவே இவர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பெளதீகவியலுக்கான விருது விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட விஞ்ஞானிகள், குவாண்டம் துகள்களை சிதைக்காமல் தனிப்பட்ட துகள்களை அளவிட முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் பெளதீகவியல் ஆராய்ச்சியில் புதிய சகாப்தத்தைப் படைத்திருப்பதாக தேர்வுக்குழு கூறியுள்ளது. எனினும் இந்த விருது கடந்த அரை நூற்றாண்டில் சிறந்த கண்டுபிடிப்பாக கருதப்படும் கடவுளின் துகள் என அழைக்கப்படும் ஹிக்ஸ் பசோன் கண்டு பிடிப்புக்கு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியிலேயே மேற்படி விஞ்ஞானி களுக்கு விருது கிடைத்துள்ளது. இதன்படி விருதுவென்ற இரு விஞ்ஞானிகளும் விருதுக்கான 1.2 மில்லியன் டொலரையும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

ஐப்பசி 10, 2012

ஒஸ்லோவில் இலங்கைத் தாய்மாரின் சாகும்வரை உண்ணாவிரதத்திற்கு வெற்றி ?

நோர்வேயின் சிறுவர் காப்பகத்தின் நடவடிக்கைகளை கண்டித்தும் அதனிடமிருந்து தமது பிள்ளைகளை விடுவித்துக்கொள்ளும் வகையிலும் இலங்கைத் தாய்மாரினால் ஒஸ்லோவில் மேற்கொள்ளப்பட்டுவந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளான இன்றுடன் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் தேவாலயத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோருக்கு டொம் தேவாலய நிர்வாகம் எழுத்து மூலமான உத்தரவாதம் அளிக்கப்பட்டதையடுத்தே இந்த உண்ணாவிரப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருப்பதாக மேற்படி இரு தாய்மாரும் தெரிவித்தனர். உண்ணாவிரதம் இருந்து வந்த தாய்மாரிடம் பேச்சுக்களை நடத்திய டொம் தேவாலய நிர்வாகம் தாம் இவ்விடயம் தொடர்பில் நோர்வே அரசினதும் சிறுவர் நல அமைச்சினதும் அதேநேரம் சிறுவர் நல காப்பகத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக உறுதியளித்ததுடன் எழுத்து மூல உத்தரவாதமும் கொடுத்துள்ளத

ஐப்பசி 10, 2012

யாழில் 9 மாதங்களில் 19 கொலை 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள்

யாழ்.குடாநாட்டில் இந்த வருடத்தில் இதுவரை 19 கொலைச் சம்பவங்களும் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டில் 21 கொலைச் சம்பவங்கள் யாழில் நடைபெற்றுள்ளது. இம்முறை அது குறைவடைந்து 19 ஆக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு யாழில் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் கடந்த வருடத்தை விட இவ்வருடம் அதிகரித்துச் சென்றுள்ளது. 2012 இந்த வருடத்தில் 32 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் காதல் விவகாரம் தொடர்பாக 21 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். உறவினர்களினால் 3 பேர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 8 பேர் யாழ் மாவட்டத்தைச் சேராத வெளி மாவட்டத்தவர்களினால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவங்களில் 27 பேர் சிறுமியர்கள் எனவும் 16 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி 09, 2012

கடைசிவரை போராடவேண்டும் ௭ன பிரபாகரன் தீர்மானித்தமை வரலாற்றுத்தவறு - ௭ரிக்சொல்ஹெய்ம்

 

போரின் இறுதி முடிவு ௭ன்னவாக இருக்கப்போகிறது ௭ன்பதை அனைவரும் உணர்ந்த நிலையிலும் போரை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் முடிக்காமல் கடைசிவரை போராடவேண்டும் ௭ன்று பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமை முடிவெடுத்தது மிகப்பெரிய வரலாற்று தவறு ௭ன்றே நான் நினைக்கிறேன். அதேசமயம் இதை காரண­மாகக் காட்டி இலங்கை அரசு நடத்திய குறிவைத்த தாக்குதல்களை நியாயப்படுத்தமுடியாது ௭ன்று நோர்வேயின் முன்னாள் அமைச்சரும் இலங்கையின் சமாதான செயற்பாடுகளின் ஏற்பாட்டாளராக செயற்பட்டவருமான ௭ரிக் சொல்ஹெய்ம் பி.பி.சி. யின் தமிழோசைக்கு தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஐப்பசி 09, 2012

அரியாலை கிணற்றிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

அரியாலை மணியம் தோட்டப்பகுதி கிணற்றில் இருந்து பழைய ஷெல் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ். உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி குணசேகர இன்று தமிழ் மிரருக்கு தெரிவித்தார். யாழ். புலனாய்வு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்றின் உத்தரவின் பேரிலேயே இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கிணற்றில் குண்டுகள் இருக்கின்ற தகவல் 512ஆவது படைப்பிரிவிற்கு தெரிவிக்கப்பட்டு, பொலிஸாரும் இராணுவத்தினரும் சேர்ந்து குண்டு அகற்றும் பிரிவினரால் உதவியுடன் இவ்வாயுதங்கள் மீட்கப்பட்டன. கிணற்றிலிருந்து மோட்டார் குண்டுகள் 240, கைக்குண்டுகள் 42, 40 மில்லி மீற்றர் மோட்டார் குண்டுகள் 8, குண்டுகளை செயலிழக்க வைக்கும் பியூஸ் வகை 3 பெட்டிகள், கிளைமோர் 2, 12.7 கிராம் ரவைகள் 1615 போன்ற வெடிபொருட்கள் மீட்கப்பட்டு, குண்டு அகற்றும் பிரிவினரால் அழிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார். (தமிழ் மிரர்)

ஐப்பசி 09, 2012

5825 கோடியே 95 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவால் பாதுகாப்பு செலவீனம் அதிகரிப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2013 ஆம் ஆண்டுக்கான மொத்த செலவீனம் 1 இலட்சத்து 33 ஆயிரத்து 500 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு செலவீனம் 28,950 கோடியே 25 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாவாகும். 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2013 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு செலவீனம் 5825 கோடியே 95 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா அதிகமாகும். 2012 ஆம் ஆண்டு பாதுகாப்பு செலவீனமாக அரசாங்கம் 23 ஆயிரத்து 124 கோடியே 30 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருந்தது. 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 5071 கோடியே 55 இலட்சத்து 29 ஆயிரம் ரூபா அதிகமாகும். கடந்த ஆண்டு மொத்த செலவீனமாக அரசாங்கம் 1 இலட்சத்து 28 ஆயிரத்து 428 கோடியே 44 இலட்சத்து 71 ஆயிரம் ரூபாவை ஒதுக்கியிருந்தது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் 2013 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்ட மூலத்தை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அவைக்கு சமர்ப்பித்தார்.

ஐப்பசி 09, 2012

தமிழகத்திற்கான பயண எச்சரிக்கை நீக்கம்

இலங்கையர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டுக்குச் செல்வதற்கான பயண எச்சரிக்கையை இலங்கை அரசாங்கம் தளர்த்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கைப் பயணிகளுக்கு எவ்விதத்திலும் தீங்கிழைக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதில் தமிழ்நாட்டு அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருப்பதை இலங்கை வெளிவிவகார அமைச்சு பாராட்டியுள்ளது. தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கையர்கள் தொடர்ச்சியாக தாக்கப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து இலங்கை அரசாங்கம் தமிழ்நாட்டுக்குச் செல்லும் இலங்கையர்களுக்கு ஆபத்திருப்பதாக அறிவித்தது. இந்திய அரசாங்கம், தொடர்புடைய மாநில அரசாங்கங்களுடன் ஆலோசித்து இலங்கையிலிருந்து செல்லும் பெரியார்கள், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதையிட்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைந்துள்ளது. பயண ஆபத்து எச்சரிக்கை இனித் தேவையில்லையென இலங்கை அரசாங்கம் நம்புகின்றது.

ஐப்பசி 09, 2012

என்ன தான் சொன்னாலும் எங்களுக்கு வெட்கப்படுகிற இயல்பு குறைவு

(ஸ்ரீதரன் –சுகு)

ஒரு காலத்தில் பிரதானமாக தமிழ்  இயக்கங்களும் செய்த நல்லது, கெட்டதை அட்டகாசங்களை சமூகத்தின் வௌ;வேறு பிரிவினர் ரசித்தார்கள். அருவருத்தார்கள் நியாயப்படுத்தினார்கள் .  பாராட்டினார்கள். தூற்றினார்கள். இன்னும் சிலர் நல்ல விடயங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்கு பிழைபிடித்துப் பிடித்தே  தமது புனித வேசத்தை துலக்குவதை இன்றும் பரவலாக காணலாம். பாட்டுப்பாடி பரிசு வேண்டும் புலவர்களும், பிழைபிடித்து பரிசு வேண்டும் புலவர்களும் இன்றளவில் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். புலிகளின் பௌதிக இருப்பு அற்றுப்போய்விட்டாலும் அந்த கருத்தியல் இன்னும் சமூகத்தில் செல்வாக்குச் செலுத்துகிறது. (மேலும்.....)

ஐப்பசி 09, 2012

'ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்குள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள்’

மாவை சோனாதிராஜாவிற்கு வேண்டுகோள் விடுத்த அமைச்சர் டக்ளஸ்

'ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்துக்குள் கருத்துக்களை வெளிப்படுத்துங்கள். தவறும் பட்சத்தில்  உங்கள் ஒலிவாங்கியை முடக்குவேன்' என்று என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எச்சரித்துள்ளார். யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மீள்குடியேற்றம் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற காணி சுவீகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் மாவை எம்.பி தொடர்ந்து கருத்து தெரிவித்துக்கொண்டிருந்த போது, குறுக்கிட்ட அமைச்சர் டக்ளஸ், 'நான் தான் இந்த குழுவின் தலைவர். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் கருத்தைக் கூறுங்கள். இல்லை என்றால் உங்களை பேசாவிடாமல் ஒலிவாங்கியை முடக்கிவிடுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மாவை எம்.பி, 'நீங்கள் ஒலிவாங்கியை முடக்கினாலும் நான் தொடர்ந்து உரையாற்றுவேன்' எனக் கூறிவிட்டு தனது உரையை முடித்துக்கொண்டார்.

ஐப்பசி 09, 2012

நோர்வேயின் மனிதாபிமானமற்ற செயற்பாடு குறித்து

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கவனம் தேவை  

ஒஸ்லோவில் இடம்பெற்றுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 10ஆவது நாளாகவும் நீடித்திருக்கின்ற நிலைமை தொடர்பில் நோர்வேயின் சிறுவர் விவகார அமைச்சின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் இது வரையில் அமைச்சோ அல்லது நோர்வே அரசோ அலட்சியப்போக்கினையே கடைப்பிடித்து வருவதாக உண்ணாவிரதப் போராளிகள் கவலை வெளியிட்டுள்ளனர். ஒஸ்லோ டொம் தேவாலயத்தில் சாகும் வரையில் உண்ணாவிரதம் இருந்து வரும் ரஜித்தா ஆனந்ததராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகியோரை நேற்று திங்கட்கிழமை பரிசோதனைக்குட்படுத்திய வைத்திய அதிகாரிகள் அவர்களது உடல்நிலை மோசமடைந்து வருவதாக அறிவித்துள்ளனர். மேற்படி சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்துவரும் இலங்கைத் தாய்மார் தொடர்பான செய்திகள் நோர்வே ஊடகங்களில் வெளிவராத வண்ணம் நோர்வே அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக பாதிக்கப்பட்டோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 09, 2012

வாதப் பிரதிவாதங்களுடன் நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றுள்ளது. பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயம், கால்நடை, நீர்பாசனம், தென்னைப் பயிர்ச்செய்கை மற்றும் பனை அபிவிருத்தி, மீள்குடியேற்றம் போன்ற பல்வேறு விடங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது. கூட்டத்தின் தொடக்கத்தில் அரச அதிபரின் வரவேற்புரையினைத் தொடர்ந்து கடந்த கூட்டத்தின் அறிக்கை மற்றும் இன்றைய நிகழ்சி நிரல் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமையால் பெரும் குழப்பமான சூழ்நிலை உருவானது. நீண்ட நேரமாக தொடர்ந்த பிரதிவாதங்களுக்கு பின்னர் தவறை ஏற்றுக்கொண்ட நிகழ்விற்கு தலைமைதாங்கிய அமைச்சர் இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் நடைபெறாது என்று உறுதியளித்து கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். (மேலும்.....)

ஐப்பசி 09, 2012

இந்தியாவில் இராணுவ பயிற்சி பெற இலங்கை வீரர்களுக்கு தடையில்லை

இலங்கை இராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதற்கு தடை விதிக்க வேண்டுமென்று செய்த ஆட்சேப மனுவை இந்திய உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. தமிழ் நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இதற்கு முன்னர் ஊட்டிக்கு அருகில் உள்ள வெலிங்டனில் இருக்கும் பாதுகாப்பு சேவை உத்தியோகத்தர்களுக்கான கல்லூரியில் இரண்டு இலங்கை பாதுகாப்பு படையினருக்கு தற்போது அளிக்கப்படும் பயிற்சியை உடனடியாக நிறுத்துமாறு பிரதம மந்திரி மன்மோகன் சிங்கிற்கு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரதம மந்திரிக்கு தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் கடுமையான சொற்பதங்களைக் கொண்டது. அதில் உடனடியாக இந்தியாவில் பயிற்சி பெறும் இரண்டு இலங்கையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புமாறு கேட்டிருந்தார். (மேலும்.....)

ஐப்பசி 09, 2012

வெனிசூலா ஜனாதிபதியாக 4ஆவது தடவையாகவும் சாவெஸ் தேர்வு

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் ஜனாதிபதியாக ஹுகோ சாவெஸ் நான்காவது தடவையாகவும் வெற்றியீட்டி யுள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் 90 சதவீத, வாக்குகள் எண்ணப்பட்டடுள்ளன. இதில் ஹுகோ சாவேஸ் 54 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி வேட்பாளரான ஹென்றிக் கபரிலஸ் 44.97 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் அலுவலகத் தலைவர் தெரிவித்தார். (மேலும்.....)

ஐப்பசி 09, 2012

வாழ்க்கையில்

வெற்றிகளை தடுக்கும் கூச்சம்

நண்பர்களிடையே மணிக் கணக்காக அரட்டையடிப்ப வர்களில் பலர் நான்கு பேர் கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம் பள்ளிக்கூடங்களில் புதிதாக நுழையும் மழலைகள் ஆசிரியர்களிடமும் பாடசாலையிலுள்ள சக மாணவர்களிடமும் பேசக் கூட பல வேளைகளில் பெரும் கூச்சப்படுவார்கள். அதுவும் மேடையில் ஏறி பேசவேண்டுமெனில் அவ்வளவு தான்! வார்த்தைகள் வராமல் வியர்த்துக் கொட்டுபவர்கள் தான் அநேகம். வேலை விஷயங்களில் இந்தக் கூச்சம் பலரை வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கவும் செய்கிறது. வேலைக்கான நேர்முகத் தேர்வுகள், கலந்துரையாடல்கள் போன்றவற்றில் இந்த கூச்சத்தின் பிள்ளைகள் தொடர் தோல்விகளையே சந்திக்கின்றனர். இந்த கூச்சம் மட்டுமில்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கையில் பல உன்னதமான இடங்களுக்குச் சென்றிருப்பேனே என புலம்பும் இத்தகைய மக்களை வியக்க வைக்க வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று, அதாவது கூச்சமடையாமல் தைரியத்துடன் செயல்பட வேண்டிய ஊக்கத்தைத் தரும் மருந்தை அறிவியலாளர் கண்டறிந்துள்ளனர். இந்த மருந்தை ஸ்பிரே போல் தயாரித்து நேர்முகத் தேர்வு போன்ற இடங்களுக்குச் செல்லும் முன் முகர்ந்து கொண்டால் மனதுக்கு ஊக்கம் கிடைக்குமாம் அல்லது மாத்திரை வடிவில் இதைத் தயாரித்து உட்கொள்ளச் செய்தால் தயக்கமெல்லாம் தயங்காமல் ஓடி விடுமாம்.

ஐப்பசி 08, 2012

நினைத்தேன் எழுதுகிறேன்

(அ.செல்வகுமார்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று தமிழரசு கட்சியின் அதாவது சம்பந்தன் ஐயா அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சம்பந்தன் ஐயா தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள மற்றய கூட்டு கட்சிகளை கலந்தாலோசிக்காமல் நடக்கிறார் வெளிநாடுகளில் இருந்து வரும் நிதிகளை கையாள்கிறார். தனியாக பலரை சந்திக்கிறார்  என பல விமர்சனங்கள் அவர்மேல் எழுந்துள்ளது. இந்த விமர்சனங்கள் நியாயமானது என்றே தோன்றுகிறது. ஒரு கூட்டு அணியின் தலைவராக இருப்பவர் தன்னிச்சையாக நடந்தால் அந்த கூட்டில் இருப்பவர்கள் அர்த்தமற்றவர்களாக போய்விடுவார்கள். சம்பந்தன் ஐயா இது விடயமாக நல்ல முடிவை எடுப்பார் என்று நாம் நம்புவோம். (மேலும்.....)

ஐப்பசி 08, 2012

த.தே. கூட்டமைப்பு 13ஆவது சட்டத்திருத்தத்தை ௭ப்போதுமே ஓர் அரசியல் தீர்வாக ஏற்றதில்லை - சம்பந்தன்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின்படிகொண்டுவரப்பட்ட 13ஆவது சட்டத்திருத்தத்தை தமிழர் இனப்பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை ௭ன்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையே தாம் நாடுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியா, 13ஆவது சட்டத் திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை இலங்கை அரசு அமுல்படுத்த வேண்டும். போரால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் மீண்டும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இலங்கை அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் ௭ன்றும் தொடர்ந்து கூறி வருகிறது. (மேலும்.....)

ஐப்பசி 08, 2012

இயக்குனர் அமீர் தனது ஆதிபகவான் படத்தின் இசை வெளியீட்டு விழாவை கனடாவில் நடத்தக் காரணம் என்ன?

எல்லாமே வியாபாரம்தான். கன்னித் தீவுப் பொண்ணா புகழ் நீத்துசந்ரா கனடா பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டிருப்பா. அதுதான் அமீர் அந்த நடிகையையும் கூட்டிக்கொண்டு கனடாத் தமிழன் பணத்தில் கனடா வந்து கூத்தடித்தார். அந்த இசை வெளியீட்டு விழாவில் சேர்த்த பணத்தை, வன்னியில் உள்ள முள்ளுக்கம்பித் தமிழருக்கோ அல்லது நடுக்காட்டில் தவிக்க விடப்பட்டுள்ள தமிழருக்கோ அமீர் கொடுப்பாரா. அல்லது இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகளுக்காவது ஏதாவது செய்வாரா. இதுபற்றி நக்கீரன் தான் அமீரிடம் கேட்டுச் சொல்லவேண்டும். இலங்கையில் பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் புலிப் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட முஸ்லீம் மக்கள்பற்றியோ, வட இலங்கையில் அதாவது தமிழர் பகுதிகளில் இருந்து புலிப் பயங்கரவாதிகளால் உடுத்த உடுப்புடன் துரத்தியடிக்கப்பட்டு சிங்களப் பகுதிகளில் அகதிகளாக வாழ்ந்து வரும் முஸ்லீம் மக்கள்பற்றியோ, இயக்குனர் சுல்தான் அமீர் அறிந்திருப்பாரோ தெரியாது. இவைபற்றி சீமானிடமோ, பாரதிராசாவிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு, அந்தப் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய சகோதரர்களுக்கு சுல்தான் அமீர் அவர்கள் சில உதவிகளைச் செய்தால் நல்லது. பிரபாகரன் கொல்லப்பட்டு, புலிப் பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்ட பின்னர்தான், அந்த முஸ்லீம் மக்களில் கணிசமான தொகையினர் வடபகுதிக்குச் சென்றிருக்கிறார்கள். சுல்தான் அமீர் அவர்கள் இலங்கைக்குச் சென்றால் அந்த முஸ்லீம் மக்களை சந்தித்தால் பயனுள்ள பல விடயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலாம்.

ஐப்பசி 08, 2012     

புலிகளின் நிலைப்பாட்டிலேயே தமிழ்க்கூட்டமைப்ப - பஷில்

தமிழ்க் கூட்டமைப்பை தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் ௭ன்று கூறமுடியாது. மேலும் தீர்வு விடயத்தில் புலிகள் அமைப்பு கொண்டிருந்த நிலைப்பாட்டையே தமிழ்க் கூட்டமைப்பும் கொண்டுள்ளது. இது தீர்வு முயற்சிக்கு ஆரோக்கியமானதல்ல ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். புலிகள் ஆயுதம் மூலமாக பெற முயற்சித்ததை தமிழ்க் கூட்டமைப்பினர் வேறு வடி­வங்கள் ஊடாக பெற முயற்சிக்கின்றனர். ஆனால் அந்த முயற்சி நிறைவேறாது. தீர்வு வேண்டுமாயின் பாராளுமன்றத் தெரிவுக்குழுவே சிறந்த இடமாகும் ௭ன்றும் அமைச்சர் கூறினார். 
(மேலும்.....)

ஐப்பசி 08, 2012

பாட்டிக்கு 29 வயது, தாய்க்கு 15 வயது, மகனுக்கு 1 வயது

கல்லடி பயணத்தின் ஓர் அரிய அனுபவம்

வெப்பக் காற்றானது எமது உடல் வெப்பத்தை தணிக்கின்றது என எனக்கு பொய் சொல்ல முடியாது. அந்த வெப்பக் காற்றை விடவும் ஒரு வித உஷ்ணத்தால் என் இதய துடிப்பு அதிகரித்துள்ளதாக எனக்குத் தோன்றுகின்றது. உங்கள் வாழ்க்கையில் எப்போதாவது 29 வயதுடைய ஒரு பாட்டியை சந்தித்திருக்கிaர்களா? 13-14 வயதுடைய ஒரு சிறிய பிள்ளை மற்றுமொரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு ஒரு தாய் என்ற ஸ்தானத்தில் இருப்பதை கண்டிருக்கிறீர்களா? (மேலும்.....)

ஐப்பசி 08, 2012

புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஊனம் உள்ள  வாமனர்களால் நிறைந்திருப்பது புரிந்தது.

- நேர்காணல்- நோயல் நடேசன்.

நோயல் நடேசன் அல்லது என். நடேசன் இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர்.  பல நெருக்கடிகளையும் கடினமான விமர்சனங்களையும் மிக மோசமான அவதூறுகளையும் சந்தித்தவர். இன்னும் நடேசனைப் பற்றிய எதிர்ப்பலைகள் முற்றாக ஓய்ந்து விடவில்லை. இந்த ஓயாத அலைகளுக்கு மத்தியிலும் தன்னுடைய படகினை வலிமையோடும் ஓர்மத்தோடும் ஓட்டிச் சென்று கொண்டிருப்பவர். நீண்டகாலமாகவே விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையும் விமர்சனத்தையும் கொண்டிருந்த நடேசன் தமிழ்ப் பெரும்பான்மை மனநிலைக்கு அப்பாலான இலக்கிய, ஊடக இயக்கத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறார்.(மேலும்.....)

ஐப்பசி 08, 2012

தென்பகுதியில் சுயாட்சி கொண்ட பிராந்தியத்தை அமைக்க

பிலிப்பைன்ஸ் அரசு - முஸ்லிம் கிளர்ச்சியாளர் அமைதி உடன்படிக்கை

பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய முஸ்லிம் கிளர்ச்சி குழுவான மொரொ இஸ்லாமிய புரட்சி முன்னணியுடன் அமைதி உடன்படிக்கைக்கு அந்நாட்டு அரசு முன்வந்துள்ளது. இந்த ஆயுதக்குழுவுக்கும் அரசுக்கும் இடையில் கடந்த 40 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் மோதல்களில் 120,000 பேரளவில் பலியாகியுள்ளனர். இதில் கிறிஸ்தவ நாடான பிலிப்பைன்ஸில் முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள தென்பகுதியில் சுயாட்சி கொண்ட பிராந்தியத்தை அமைக்க அரசு உடன்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டுக்கு இஸ்லாமிய கிளர்ச்சிக்குழு தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது. மலேசியாவில் இடம்பெற்ற இரு தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. தலைநகர் மனிலாவில் அடுத்தவாரம் இந்த உடன்படிக்கையில் இரு தரப்பினரும் கைச்சாத்திடுவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. (மேலும்.....)

ஐப்பசி 08, 2012

கிறிஸ்மஸ் தீவிலுள்ள அகதிகளை பப்புவா நியூகினி அனுப்பும் நடவடிக்கை

சட்டவிரோதமான படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்தவர்களை பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஒருவார காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலம் அவுஸ்திரே லியாவுக்குள் நுழைந்து கிறிஸ்மஸ் தீவுகளில் தடுத்து வைக்கப்பட் டிருப்பவர்களை நாவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை அவுஸ்திரேலியா ஆரம்பித் துள்ளது. நாவுறு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக பப்புவா நியூகினியின் மானூஸ் தீவுகளுக்கு அனுப்பும் பணிகள் ஒரு வார காலத்துக்குள் ஆரம்பிக்கப்படும் என அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளது. இது இவ்விதமிருக்க, அவுஸ்திரேலியா வுக்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாகச் செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தே வருகிறது. கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பதால், இடநெருக்கடி காரணமாக கலவரங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக கிறிஸ்மஸ் தீவின் நிர்வாக அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

ஐப்பசி 08, 2012

மக்கள் சேவைக்கு தடையாக இருக்கும் சகல சட்டங்களும் திருத்தப்பட வேண்டும்

மக்கள் சேவைக்குத் தடையாக இருக்கும் சகல சட்டங்களும் துரிதமாகத் திருத்தப்படவேண்டும். பயனளிக்காத சட்டவரைவுகள் நாட்டில் உள்ளன. இதனை வாய்ப்பாக்கி அப்பாவி மக்களின் நலன்களுக்கான அரச அபிவிருத்திப் பணிகளை இடைநடுவில் நிறுத்த முடியாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்தத்தால் வெற்றிகொள்ள இயலாத விடயங்களை வேறு மார்க்கங்களின் ஊடாக வெற்றி கொள்ளும் எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களின் வேலைத் திட்டம் நாட்டில் இருப்பதாகவும் கூறிய ஜனாதிபதி மக்களின் இறையாண்மையில் கைவைக்க எவருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்தார். சகல புதன்கிழமை நாட்களிலும் அமைச்சர்களும், அமைச்சர்களின் செயலாளர்களும், பிரதேச சபை தலைவர்களும் மக்களை சந்திப்பதற்காக அலுவலகங்களில் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஐப்பசி 07, 2012

தமது வேட்டிகளை தாமே உரியும் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள்

நெடுங்காலமாக பனிப்போராக இருந்து வந்த தமிழ்த் தேசியக் கூ:ட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கிடையேயான உட்கட்சிப் பூசல் தற்போது சந்தி சிரிக்கும் வகையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு காலத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்கள் பதவிகளுக்கு ஆசைப்படாதவர்கள், கொள்கைகளிலிருந்து ஒருபோதும் விலகாதவர் கள், பணத்திற்குச் சோரம் போகாதவர்கள் என்று ஏனைய கட்சித் தலைவர்களாலும், நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களாலும் உதாரணம் காட்டிப் பேசப்பட்டவர்கள். ஆனால் இன்று அந்நிலை கேள்விக்குரிய தொன்றாகிவிட்டது. (மேலும்.....)

ஐப்பசி 07, 2012

புலிகள் தமிழர்களை மனிதக் கேடையமாகப் பாவித்தார்கள் அதனால் தான் மக்கள் இழப்பு அதிகமானது - எரிக்சொல்கைம் !


லண்டனில் சற்று முன்னர் ஆரம்பமான கருத்தரங்கில், இலங்கைக்கான முன்நாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம் கலந்துகொண்டுள்ளார். இதில் சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி அலன் கீனன், BBC நிகழ்சித் தொகுப்பாளர், ஸ்டீபன் ஸக்கர், மற்றும் ஐ.நா அதிகாரி ஜஸ்மின் சுக்கா ஆகியோர் கலந்துகொண்டனர். மாலை 6.00 மணிக்கு ஆரம்பமான இக் கருத்தரங்கு 8.00 மணிவரை நடைபெறவுள்ளது. இந் நிலையில் இதில் பேசிய நோர்வே சமாதானத் தூதுவர் எரிக் சொல்கைம், விடுதலைப் புலிகளை கடுமையாகச் சாடியுள்ளார். இதனை கருத்தரங்கில் கலந்துகொண்ட தமிழர்கள் எதிர்த்துள்ளார்கள். புலிகள் தமிழர்களை மனிதக் கேடையமாகப் பாவித்தார்கள் என்றும் , புலிகள் முன்னரே சரணடைந்திருந்தால், இவ்வளவு இழப்புகளும் வந்திருக்காது என்று அவர் கருத்து தெரிவித்ததை, தமிழர்கள் பலமாக எதிர்த்துள்ளார்கள். இது தொடர்பான மேலதிக செய்திகள் விரைவில் வெளியாகும்.

ஐப்பசி 07, 2012

TNA க்குள் குழப்பம்

நிதி விவகாரங்களை பங்காளி கட்சிகளுடன் பகிர மறுக்கும் தமிழரசுக் கட்சி

சம்பந்தன் - சுரேஸ் முறுகல் தொடர்வு: தீர்வு இல்லையேல் புதிய கட்சி உருவாகும் நிலை

  • கூட்டுக் கட்சிகளுக்கு தெரியாமலே வெளிநாடுகளில் கிளையா?
    புலத்திலிருந்து வரும் பாரிய நிதியை தமிழரசுக் கட்சி கையாடல்!
    காலப் போக்கில் கூட்டுக்கட்சிகளை கழற்றி விடுவதே நோக்கம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய பங்காளிக் கட்சிகளை இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் அந்நியப்படுத்திவிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்த அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் முயற்சித்து வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. இதன் ஓர் அங்கமாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்தா லோசனை நடத்தாமல் கட்சிக் கிளை அலுவலகங்களை வெளிநாடு களில் திறப்பதற்குத் தமிழரசுக் கட்சியினர் நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளனர். இந்நடவடிக்கை கூட்டமைப்பிற்குள் புதிய குழப்பத்தைத் தோற்றுவித்துள் ளதாக நம்பகரமான கூட்டமைப்பு வட்டாரங்கள் மூலம் தெரிய வருகின்றது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இலங் கையிலேயே பதிவு செய்யாத நிலையில், வெளிநாடுகளில் கிளைகளைத் திறப்பதன் உள்நோக்கம் யாதெனப் பங்காளிக் கட்சிகள் கேள்வி எழுப்புவதால், தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்குப் புதிய நெருக்கடி தோன்றியுள்ளது. (மேலும்.....)

ஐப்பசி 07, 2012

வடக்கு முதலமைச்சர் கனவில் இருப்பவரின் காய்நகர்த்தல்?

தனிநபரின் ஆசை வேட்கைக்கு பலியாகிறதா தமிழ்க் கூட்டமைப்பு!

கூட்டமைப்பின் உட்கட்சி முரண் பாடுகளுக்கு ஒரேயொரு பிரதான காரணமே கூறப்படுகிறது. நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிற்பதற்காக தனக்குப் போட்டியாக எவரும் வந்துவிடக் கூடாது என்பதில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் முக்கியஸ்தரான முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் பக்குவமாகக் காய் நகர்த்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனக்குப் போட்டியாக வரக்கூடும் என நினைக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனை கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக உசுப்பிவிட்டு பதிவு, நிதி என கருத்து மோதலை ஏற்படுத்தினால் சுரேஷ் தனது கனவுக்கு எதிரான பட்டியலிலிருந்து விலக்கப்பட்டுவிடுவார் என்பது அவரது எண்ணமாக இருந்தது. அதில் அவர் வெற்றியும் கண்டு வருகிறார். (மேலும்.....)

ஐப்பசி 07, 2012

பெண்கள் மீதான துஷ்பிரயோகம்

வேறொன்றுமில்லை, இதுதான் காரணம்

நாட்டில் தற்போது அதிகரித்துள்ள பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களுக்கான பிரதான காரணிகளாக கையடக்கத்தொலைபேசி பாவனை மற்றும் இணையம் ஆகியன உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதர அமைச்சு, குடும்ப சுகாதார பணியகம், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிதியம் ஆகியன இணைந்து மேற்கொண்ட ஆய்விலிருந்தே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஆய்வின் மூலம் 70% ஆன பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமைக்கு கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையப் பாவனையே காரணம் என தெரி யவந்துள்ளது. கொழும்பு, அனுராதபுரம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் கையடக்கத்தொலைபேசி மற்றும் இணையப் பாவனை தொடர்பில் கவனமாக இருக்கும்படி சுகாதர அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

ஐப்பசி 07, 2012

கூட்டமைப்பை பதிவதால் தமிழரசு கட்சிக்கு அழிவு ஏற்படும் ௭ன அஞ்சத் தேவையில்லை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை உத்தியோகபூர்வ கட்சியாகப் பதிவதன் மூலம் தந்தை செல்வாவினால் ஸ்தாபிக்கப்பட்ட தமிழரசுக்கட்சிக்கோ அல்லது வேறெந்தக் கட் சிக்கோ அழிவு ஏற்படுமென்று யாரும் அஞ்சவேண்டிய அவசியமில்லை ௭ன்று யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். (மேலும்.....)

ஐப்பசி 07, 2012

எல்.ரீ.ரீ.ஈ.யில் தீவிரச் செயற்பாடுகளில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எதிராக வழக்கு

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து மிகவும் தீவிரமான முறையில் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்களை மேற்கொண்டதாக 60 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அவர்களை இன்னும் சில வாரங்களில் கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சட்ட ஆலோசனைக்குழு நேற்று அறிவித்துள்ளது. பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 80 உறுப்பினர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர்கள் தடுப்புக் காவலில் இருக்கும் சந்தரப்பத்தில் கூட பிரிவினைவாத செயற்பாடுகளில் ஈடுபட்டமை தொடர்பிலான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள், அவ்வியக்கத்தின் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் நோக்கத்துடன் செயற்பட்டு வரும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் நம்பத்தகுந்த ஆதராங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் திரட்டியுள்ளதாக கம்லத் மேலும் தெரிவித்தார்.

ஐப்பசி 07, 2012

கேள்வி ??????    பதில்

நவம்பர் மாதத்தில் இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என இயக்குனர் ஆர்.கே. செல்வமணி ஒரு அறிக்கை விட்டுள்ளார். என்ன காரணம்?

 இயக்குனர் செல்வமணியின் இந்த அறிக்கை அவர் சொந்தமாகச் சிந்தித்து வெளியிட்ட ஒன்றென்று என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை. தெலுங்கு நடிகை ரோஜாவை மனைவியாக்கி அரைத் தமிழனாக மாறிவிட்ட செல்வமணியெல்லாம் இலங்கைத் தமிழருக்கு அட்வைஸ் செய்ய வந்துவிட்டார். கடந்தகாலத்தில் கார்த்திகை மாதத்தில் கணக்கற்ற களியாட்ட விழாக்களை இந்தத் தமிழ்ச் சமூகம் கொண்டாடி முடித்துள்ளது. கார்த்திகை மாதத்தில் புலிப் பிரமுகர்கள் வீடுகளில் கூட பூப்புனித நீராட்டு விழா தொடக்கம் கலியாணச் சடங்கு வரை வெகுசிறப்பாக நடந்து முடிந்த வரலாறு செல்வமணிக்கு தெரியாமல் இருப்பது நம்பமுடியாமல் தான் இருக்கிறது. 2009ம் வருடம் வைகாசி மாதம் முள்ளிவாய்க்கால் மற்றும் அதன் அண்டிய பகுதிகளிலும் அப்பாவித் தமிழரும் பயங்கவாதப் புலிகளும் செத்துக்கொண்டிருக்கும் போது வெக்கங்கெட்ட வெளிநாட்டுத் தமிழர்கள் விழாக்கள் வைக்காமலா இருந்தார்கள்.  செல்வமணி சொல்வது போல, புறநானூறைப் புரட்டிப் போட்ட புலிகள், புறமுதுகிட்டு ஓடவும் வழியில்லாமல் கையைத் தூக்கிக்கொண்டு நின்று தான் மாவீரர்கள் ஆனார்கள். கார்த்திகை மாதத்தில் இசை நிகழ்ச்சி, களியாட்ட விழாக்கள் நடத்தக் கூடாதென்றால், கார்த்திகை மாதத்தில் திரைப்படக் காட்சிகளையும் காண்பிக்காமல் நிறுத்தி வைக்கலாமே. செல்வமணி இதுபற்றி தனது திரைப்பட சகாக்களிடம் பேசிப்பார்க்கலாமே. செல்வமணிக்கும் தமிழும் ஒரு வியாபாரம் தான். ஈழத்தமிழனும் ஒரு வியாபாரப் பண்டம்தான். செல்வமணிக்கு இளையராஜா மீது என்ன கோபம்.

ஐப்பசி 07, 2012 

முஸ்லிம் மக்களின் பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பா?

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பை முஸ்லிம் மக்கள் தங்களது பிரதிநிதிகளாக ஒருபோதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று நீதி அமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 13ஆம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என் பதே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம், தென் மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்கத் துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்கை சந்தித்த போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையில் சர்வகட்சி ஆட்சியை அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் பரிந்துரை செய்ததாகவும் இதற்கு ஏனைய எந்தத் தரப்பினரும் இணங்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களின் நிலைமை குறித்து கருத்து வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐப்பசி 07, 2012

மூவின மக்களும் இணைந்து வாழும் கிழக்கில் தமிழ் மகன் ஒருவர் அமைச்சரவையில் இடம்பெறவில்லையே?

அமைச்சரவையில் தமிழர் ஒருவர் இல்லாத குறை தமிழ் மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அத்துடன் பாரிய இடைவெளியை தோற்றுவித்துள்ளது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வுகளில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களில் அமைச்சரவையில் அங்கம் வகிப்போருக்கு நிதி ஒதுக்கீடுகளை அல்லது விசேட நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்கின்றபோது அது வெளிப்படையாக இருக்கப்போவதில்லையென்ற ஒரு கருத்தும் நிலவுகின்றது. இதில் உண்மையும் இல்லாமலில்லை. எனவே எதிர்காலத்தில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை இது உருவாக்கும் என்பதே என் கருத்து. எனினும் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) அமைச்சுப் பதவியை ஏற்றுக் கொள்ளாமல் விட்டபின்னர் வேறு ஒரு தமிழருக்கு அந்தப்பதவி ஏன் வழங்கப்படவில்லையென்ற நியாயமான கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்களின் விமர்சனத்துக்கும் நாம் ஆளாகி யுள்ளோம். பிள்ளையான், தான் இந்த நிலைப்பாட்டை எடுத்த பின்னர் உயர்மட்டங்களில் எவ்வாறான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார் என்பதை எங்களால் ஊகிக்க முடியாதுள்ளது. எனினும் அமைச்சரவையில் தமிழர் இடம்பெறாமை தூர நோக்கில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தலாம் என நான் கருதுகின்றேன். (மேலும்.....)

ஐப்பசி 07, 2012

கடாபியின் மரணம்...

பின்னணியில் சர்கோசி?

கடாபி நல்லவரா கெட்டவரா என்ற வாத பேதங்களுக்கப்பால், அவரது மிக நீண்டகால ஆட்சியில் (சுமார் 42 வருடங்கள்) அவர் தன் மக்களைச் செல்வந்தர்களாகவே வைத்திருந்தார். மின்சாரக் கட்டணம் கூட எந்த லிபியரிடமிந்தும் அறவிடப்பட்டிருக்கவில்லை. அதிக பொருளாதார சலுகைகளை வழங்கியிருந்தார். ஆனால் எதிர்ப்பரசியல், மாற்றுச் சிந்தனை என்பனவற்றுக்கு அங்கு இடமிருக்கவில்லை என்பது உண்மையே. அவரது நீண்டகால சர்வாதிகார ஆட்சியால் வெறுப்புற்றிருந்த மக்கள், தியு+னிஸியா, எகிப்து என அண்டை நாடுகளில் அதன் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கெதிரான அந்நாட்டு மக்களின் புரட்சியால் உந்தப்பட்டு, தாமும் கடாபிக் கெதிராக கிளர்ந்தனர். ஈற்றில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதி அவருக்கெதிரான கிளர்ச்சியாளர்களால், சுட்டுக் கொல்லப்பட்டார். இது மேற்குலக ஊடகங்கள் நமககுக் கூறிய சேதி. ஆனால் அண்மையில் கசிந்திருக்கும் தகவல் வேறுமாதிரியானதாக இருக்கின்றது. (மேலும்.....)

ஐப்பசி 06, 2012

கிளிநொச்சி, முகமாலை, எஞ்சிய கிராமங்களில் விரைவில் மீள் குடியேற்றம் பூர்த்தி

கிளிநொச்சி மாவட்டம் முகமாலைப் பிரதேசத்தில் எஞ்சிய ஓரிரு கிராமங்களிலும் கூடிய விரைவில் மீள்குடியேற்றம் பூர்த்திசெய்யப்படும் என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். முகமாலைப் பிரதேசத்தில் உள்ள மூன்று கிராம சேவகர் பிரிவுகளில் இன்னமும் இரண்டு மூன்று கிராமங்களில் மாத்திரமே மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ளது. இப்பகுதிகளில் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்பட்டதும் இங்கு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். மழைகாலம் ஆரம்பிப்பதற்கு முன்னர் கண்ணிவெடி அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்தி மீள்குடியேற்றத்தை விரைவில் பூர்த்திசெய்ய எதிர்பார்திருப்பதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் தெரிவித்தார். கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் முகமாலை பொந்தர் குடியிருப்பில் கடந்த முதலாம் திகதி மீள்குடியேற்றம் இடம்பெற்றது. இறுதிக்கட்ட நடவடிக்கையின்போது அதிகளவான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட பிரதேசமாக முகமாலை காணப்படும் நிலையில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

ஐப்பசி 06, 2012

நோர்வே சிறுவர் காப்பக விவகாரம்

தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம், மகஜரும் கையளிப்பு

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இலங்கையர்களைப் பாதுகாக்குமாறும் நோர்வே சிறுவர் காப்பகத்திடமிருந்து உண்ணாவிரதப் போராளிகளின் குழந்தைகளை மீண்டும் ஒப்படைக்குமாறும் வலியுறுத்திய ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்திற்கு முன்பாக இடம் பெற்றது . இதன்போது மேற்படி உண்ணாவிரதப் போராளிகளின் நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் நோர்வேயில் போராட்டத்தை மேற்கொண்டு வரும் இலங்கையர்களின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த உறவினர்களால் தூதரக உயர் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. நோர்வே அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் நலக் காப்பகமானது தமது குழந்தைகளை பலவந்தமாக எடுத்துச் சென்றதாகத் தெரிவித்தே நோர்வேயில் வதியும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரஜித்தா ஆனந்தராசா மற்றும் டிலாந்தினி எரிக் ஜோசப் ஆகிய இரு தாய்மார் ஒஸ்லோவில் உள்ள டொம் என்றழைக்கப்படுகின்ற கிறிஸ்தவ தேவாலயத்தில் கடந்த 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐப்பசி 06, 2012

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்களுக்கு அகதி விஸா வழங்கலாம் - ஆஸி நீதிமன்றம் தீர்ப்பு

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அகதி விஸா வழங்க முடியும் என்று அவுஸ்திரேலிய மேல் நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் என அவுஸ்திரேலிய புலனாய்வு பிரிவினரால் அடையாளம் காணப்பட்டு அந்நாட்டில் காலவரையறையின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 50 பேருக்கு இந்த தீர்ப்பின் விளைவுகள் முக்கியமாக அமையும். இந்த தீர்ப்புக்கு அமைய இவர்கள், பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் ஆகையால் இவர்களை, சொந்த நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ அனுப்ப முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம் 47 என அடையாளப்படுத்தப்படும் இலங்கையர் ஒருவருக்கு பாதுகாப்பு விஸா வழங்க மறுக்கும் தீர்மானம் சட்டத்துக்கு விரோதமானது என அவுஸ்திரேலிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி 06, 2012

மத்தள விமான நிலையத்தில் குடிவரவு கரும பீடங்கள்

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வருகை மற்றும் செல்லுகைகளுக்கென குடிவரவு- குடியகல்வு கரும பீடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கென அரசு 62 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருப்பதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எதிர்காலத்தில் மத்தள சர்வதேச விமான நிலையத்தினூடாக வரும், செல்லும் பயணிகளுக்கு சர்வதேச தரத்தில் குடிவரவு - குடியகல்வு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகை பகுதியிலும் செல்லுகை பகுதியிலும் 10 குடிவரவு குடியகல்வு கரும பீடங்கள் நிறுவவும் அவை அனைத்தும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களுடன் இணைய கட்டமைப்புடன் கூடியதாக நிறுவுதல். மேலும் இரவு, பகல் சுழற்சி முறையில் குடிவரவு - குடியகல்வு உத்தியோகத்தர்களை கடமைக்கு உட்படுத்தல் போன்ற விடயங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஐப்பசி 06, 2012

(நன்றி: தமிழ்மிரர்)

ஐப்பசி 06, 2012

அரசின் நல்ல விடயங்களுக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவு தர வேண்டும்

மக்களுக்கு பயனளிக்கும் நல்ல விடயங்களை அரசு முன்னெடுக்கும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதற்கு ஆதரவு தர வேண்டும். அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சிக்கக் கூடாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். திவிநெகும சட்ட மூலம் சமுர்த்தி அதிகாரசபையும் உள்வாங்கப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களம் அமைப்பதன் மூலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அரசாங்க உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள உத்தியோகத்தர்கள் பெறும் அனைத்து நன்மைகளையும் சமுர்த்தி உத்தியோகத்தர்களும் பெற்றுக் கொள்வார்கள். இதன்முலம் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் நிரந்தர ஓய்வூதிய உத்தியோகத்தர்களாகவும் மாறுகின்றனர். இந்த திவிநெகும திணைக்களத்தின் மூலம் வறிய மக்கள் நன்மை பெறக்கூடிய அனைத்து விடயங்களும் உண்டு. 2005, 2010ம் ஆண்டு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சமுர்த்தி திட்டம் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக மக்கள் சிறந்த நன்மையினை அடைகின்றனர். பாராளுமன்றத்தில் இந்த சட்டமூலத்தைக் கொண்டு சென்று செப்டம்பர் மாதத்துக்குள் திணைக்களத்தை உருவாக்குவதற்கு, எனினும் இன்று சகல மாகாண சபைகளும் இந்த திவிநெகும சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐப்பசி 06, 2012

இப்படியும் நடக்கின்றது

கொழும்பில் உள்ள ஒரு முன்னணி தனியார் நிறுவனத்தில் சிரேஷ்ட அதிகாரியின் செயலாளராக பணியாற்றி வந்த ஓர் அழகிய இளம் பெண் பஸ்ஸில் வழமையாக செல்வார். பல நாட்களாக பஸ் தரிப்பு நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவர்ச்சிகரமான ஓர் அழகிய ஆண்மகன் தன்னை நோட்டமிட்டுக் கொண்டிருப்பதை அந்த இளம் பெண் தெரிந்து கொண்டாள். முதலில் மறைமுகமாக அவளை பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஆண் மகன் பின்னர் அந்தப் பெண்ணைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தான். பார்ப்பதற்கு அழகாகவும், நல்லவனாகவும் தோற்றமளிக்கும் அந்த இளைஞனைப் பார்த்து பதிலுக்கு அவளும் சிரித்தாள். பின்னர் அவன் அவளுக்கு அருகில் வரவே சுய அறிமுகத்துடன் அவர்களின் நட்பு வளர்ந்தது. ஒரு சிகை அலங்கார சலூனை நடத்தி வந்ததாக அந்த ஆண் மகன் தன்னை அறிமுகம் செய்திருக்கிறான். தனக்கு ஓரளவு வருமானம் கிடைக்கின்ற போதிலும் தான் இதுவரையில் வாகனம் ஒன்றை வாங்கவில்லை என்று உண்மையை சொல்லியிருக்கிறான். அவர்களின் காதல் வலுவடைந்ததை அடுத்து அந்த இளம் பெண் தனது பெற்றோரின் அங்கீகாரத் துடன் காதலனை ஒரு சிறிய திருமண வைபவம் ஒன்றின் மூலம் கைப்பிடித் தாள். திருமணம் செய்து முடித்த பின்னர் அந்த இளம் பெண்ணுக்கு ஓர் உண்மை புலனாகியது. தான் காதலித்த ஆண் மகன் ஒரு பெண் என்பதை அவள் தெரிந்து கொண்டு அதிர்ச்சியடைந்தாள்.

ஐப்பசி 06, 2012

இளவயதில் மூக்குக்கண்ணாடி ஏன்?

இன்றைக்கு சிறுவர்கள் பலர் தங்கள் இத்தனை இளம் வயதிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு திரிவதைப் பார்க்க முடிகிறதல்லவா! சற்றே பின்னோக்கித் திரும்பிப் பாருங்கள். இருபது வருடங்களுக்கு முன்னர் கண்ணாடி போட்ட மனிதர்களைச் சந்திப்பதே அபூர்வம். இன்றைக்கு மட்டும் மிக இளம் வயதிலேயே கண்ணாடி ஏன் தேவைப்படுகிறது? இப்படி ஒரு சிந்தனையின் விளைவாக நிகழ்ந்தேறியது. அவுஸ்திரேலியாவில் ஒரு ஆராய்ச்சி. 4000 பேரை உள்ளடக்கி, அவர்களுடைய பார்வைக் குறைபாட்டுக்கான காரணங்களை மிக விரிவாக ஆராய்ந்ததில் கிடைத்த பதில் வியப்பூட்டுகிறது. அதாவது, குழந்தைகள் வீட்டுக்கு வெளியே போதுமான நேரத்தைச் செலவிடாததே இந்த பார்வைக் குறைபாடின் காரணம் என்கிறது இந்த ஆராய்ச்சி முடிவு. மருத்துவ மொழியில் சொல்லவேண்டுமெனில், எட்டு வயதிற்கும் பன்னிரண்டு வயதுக்கும் இடைப்பட்ட பருவத்தில் வளர்ச்சியடையும் மயோபியா சரியான அளவில் இல்லாததே இந்த குறைபாட்டுக்குக் காரணம். குழந்தைகள் சிறுவயதில் வெளியே ஓடி விளையாடுவதன் அவசியத்தை இந்த ஆராய்ச்சி அதிர்ச்சியுடன் அறிவிக்கிறது. கண்ணின் கருவிழி சரியான அளவில் இருப்பதற்கும், ஒழுங்கான வடிவில் இருப்பதற்கும் இயற்கை வெளிச்சம் மிக மிக அதிகம் என்பது அந்த ஆராய்ச்சி அடித்துச் சொல்லும் செய்தியாகம்.

ஐப்பசி 06, 2012

நீருக்காக ஓர் உலகப்போர்!

தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும் உலகில் உயிரினங்களின் அழிவுக்கும் உருவாக்கத்துக்கும் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இக் கொள்கையின் அடிப்படையிலேயே மனிதன் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறான். வலியது உயிர்பிழைக்கும் ஆனால் எத்தகைய ஆற்றல் மிக்க ஜீவராசியும் உயிரின் ஆதாரமான நீர் இன்றி உயிர் வாழ்வதென்பது சாத்தியமாகாது என்பது நிதர்சனமானது. அவ்வாறானதொரு நிலையிலேயே இன்று நாம் பூமியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் வாழப்போகின்றோம். ஆனால் இன்று நீரின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உலக மக்களிடையே பெரும் அச்சத்தைத் தோற்றுவித்துள்ளது. இன்று உலகில் தங்கம், வைரம், வைடூரியம் என மதிப்புமிக்க பல பொருட்களாகக் கருதி அவற்றையெல்லாம் சேமிக்கின்றோம். இருப்பினும் இந்த சேமிப்புக்கள் ஒரு போதும் எமது அடுத்த சந்ததியினைக் காப்பாற்றப்போவதில்லை. (மேலும்...)

ஐப்பசி 05, 2012

கூடங்குளம் அணு உலை பாதிப்பு

அறுவர் கொண்ட இலங்கைக்குழு 12ம் திகதி இந்தியா பயணம்

கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய அணு சக்தி அதிகார சபை அதிகாரிகளுக்கிடை யில் நடைபெறும் முதலாவது கூட்டம் எதிர்வரும் 12 ஆம் திகதி இந்தியாவில் நடைபெற உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இலங்கையில் இருந்து அறு வரடங்கிய குழுவொன்று அங்கு செல்ல உள்ளதோடு, கூடங்குளம் தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது குறித்தும் இங்கு ஆராயப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார். கூடங்குளம் அணு உலையினால் இலங்கைக்கு ஏதும் பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் இலங்கை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். சுற்றியுள்ள நாடுகளின் பாதுகாப்பை பலப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த அணு உலையினூடாக அணுக்கசிவு ஏற்பட்டால், அதனால் மன்னார், யாழ் குடா ஆகிய பகுதிகளுக்கு பாதிப்பு ஏற்படும்.

ஐப்பசி 05, 2012

வடமாகாணசபை

ஆளுநரின் அதிகாரம் தொடர்பில் உச்சநீதிமன்றத்தை நாடும் மேன்முறையீட்டு நீதிமன்றம்

கலைக்கப்பட்ட மாகாண சபை ஒன்றின் சார்பில் அதன் கருத்து நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அதிகாரம் அந்த மாகாண சபையின் ஆளுநருக்கு உண்டா என்பதைத் தீர்மானிக்கும் விடயத்தில் அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு வியாக்கியானம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்திருக்கிறது. அரசமைப்பின் ஏற்பாடுகளுக்கு வியாக்கி யானம் செய்யும் சட்ட அதிகாரம் நாட் டின் சிரேஷ்ட நீதிமன்றமான உச்ச நீதி மன்றத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்தின் விளக்கத்துக்கு சமர்ப்பிக்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று முடிவு செய்தது. வடக்கு மாகாண சபை தொடர்பில் வடக்கு மாகாண சபையின் ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறியை எதிர்மனுதாரராகக் குறிப்பிட்டு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தாக்கல் செய்திருந்த ரிட் (ஆணைகோர்) மனுவை நேற்று பரிசீலனைக்கு எடுத்த கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்தத் தீர்மானத்துக்கு வந்தது.(மேலும்...)

ஐப்பசி 05, 2012

பாடசாலை வன்முறைகளை தடுப்பதற்கு சம்பந்தப்பட்டோரை தண்டிக்க வேண்டும்

1987ம் ஆண்டில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத் திடப்பட்டதை அடுத்து அன்றைய இந்தியப் பிரதம மந்திரி ராஜிவ் காந்தி சுமார் 75ஆயிரம் இந்திய அமைதிகாக்கும் வீரர்களை இங்கு வந்து இறக்கியதை அடுத்து, ஜே.வி.பியினர் மீண்டும் பாரிய மரங் களை வெட்டி வீழ்த்தியும், மின் கம்பங்களை தரைமட்டமாக்கியும் வன் முறைகளை மீண்டும் ஆரம்பித்தனர். இந்த வன்முறைகளில் ஜே.வி.பியினர் கொழும்பிலும், ஏனைய நகரங்களி லும் உள்ள பாடசாலைகளின் சிரேஷ்ட மாணவர்களையும் ஒன்றி ணைத்துக் கொண்டு பாடசாலைகளை பல மாதங்களுக்கு மூடிவிடுவ திலும் வெற்றி கண்டனர். அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வின் பாதுகாப்பு அமைச்சராக விளங்கிய ரஞ்சன் விஜேரட்ன இரா ணுவ பலத்தைப் பயன்படுத்தி இந்த வன்முறைகளை அடக்கினார். இதிலும் பாடசாலை மாணவர்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்க ளும் மற்றும் சிங்கள இளைஞர்களும் ஆயிரக்கணக்கில் மரணித்த னர். (மேலும்...)

ஐப்பசி 05, 2012

நேர்மையற்ற இலங்கை அகதிகள் - அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன!

நௌரு தீவுக்கு செல்ல விரும்பாத இலங்கைய அகதிகள் அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப விருப்பம் வெளியிட்டு வருகின்றமையானது, அவர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என்பதை எடுத்துக் காட்டுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்லும் இலங்கையர்கள், அந்த நாட்டு அரசாங்கத்தின் பசுபிக் திட்டத்தின் கீழ், நௌரு மற்றும் பப்புவா நியுகினியா போன்ற தீவுகளுக்கு மாற்றப்படுகின்றனர். எனினும் அங்கு செல்ல விரும்பாத 40க்கும் அதிகமான இலங்கை அகதிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் அச்சுறுத்தல் இருப்பதாக கூறிக் கொண்டு அவுஸ்திரேலியா வந்த அவர்களால், எவ்வாறு அச்சம் இன்றி மீண்டும் இலங்கைக்கு செல்ல முடிகிறது என்று அந்த ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. இதில் இருந்து அவர்கள் நேர்மையான அகதிகள் இல்லை என்றும், பொருளாதார தேவைக்காகவே அவர்கள் அவுஸ்திரேலியா வந்துள்ளமையும் உறுதியாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன் மனித உரிமைகள் நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் தமிழ் ஒன்றியங்கள் போன்றவை முன்வைத்த அழுத்தங்கள் பொய்யானது என்றும் அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஐப்பசி 05, 2012

உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் பங்களாதேஷ் அதிருப்தி

பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் நேற்று வியாழக்கிழமை தாக்கப்பட்டமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது என கொழும்பிலுள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் தெரிவித்தார். இது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்கோனிடம் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடத்துவது இலங்கையர்களின் உரிமையாகும். எனினும் உயர்ஸ்தானிகராலயம் மீது தாக்குதல் நடத்தியமையை ஏற்றுக்கொள்ள முடியாது என பேச்சாளர் குறிப்பிட்டார். பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினரால் உயர்ஸ்தானிகராலயம் தாக்கப்பட்டமை தொடர்பில் பங்களாதேஷ் அரசாங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் முஹம்மட் சபியூர் ரஹ்மானை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து முறையிடவுள்ளதாக உயர்ஸ்தானிகராலய பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

ஐப்பசி 05, 2012

'அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை இருப்பின் பல்கலை ஆசிரியர் சங்கம் வேலை நிறுத்தத்தை கைவிடும்'

அரசாங்கம், சங்கத்துடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாயின் தற்போது நடைபெறும் வேலை நிறுத்தத்தை மூன்று நாட்களில் விலக்கிக்கொள்ள தயாராக இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்தது. நேற்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்துடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருப்பினும் அவ்வாறு நடக்கவில்லையென மேற்படி சம்மேளனத்தின் தலைவர் தேவசிறி கூறினார். இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவ பல பழைய மாணவர் சங்கங்களும் வர்த்தகப் பிரமுகர்களும் முன்வந்துள்ளனர். மகாநாயக்கர்கள் மத்தியஸ்தம் வகித்தும் சிறந்த ஆலோசனைகளை வழங்கியும் கணிசமான பங்களிப்பை செய்துள்ளனர். பிரச்சினை தீர்த்துவைக்கப்பட வேண்டும் என அக்கறை கொண்டவர்களால் வழங்கப்படும் உதவிகள் நல்ல சகுனமாகும் என தேவசிறி மேலும் குறிப்பிட்டார்.

ஐப்பசி 05, 2012

பாகிஸ்தானை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றது இலங்கை

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி தகுதிபெற்றுள்ளது. இன்று இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இலங்கை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்றது. 140 ஓட்டங்களை வெள்ளி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அ 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 16 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. போட்டியின் நாயகனாக இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜெயவர்தன தெரிவானார். இலங்கை அணி இரண்டாவது தடவையாக உலக டுவென்டி டுவென்டி தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இலங்கை அணி இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்திருந்தது.

ஐப்பசி 05, 2012

டுபாயில் தாஜ்மஹால்

டுபாய் நகரில் தாஜ்மஹால் போன்ற கட்டிடத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பில்லியன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிடத்திற்கு ‘தாஜ் அரேபிய கட்டிடத் தொகுதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. எனினும் இந்த கட்டடத் தொகுதி தாஜ் மஹாலை விடவும் பல மடங்கு பெரிதாக அமைக்கப்படவுள்ளது. இதில் 30 அறைகள் கொண்ட ஹோட்டல், கடைகள், வணிக தொகுதிகள் ஆகியன அமைக்கப்படவுள்ளதாக இந்தக் கட்டிடத் தொகுதி செயற்பாட்டாளர் அருண் மெஹ்ரா குறிப்பிட்டார். எதிர்வரும் 2014ஆம்ஆண்டு இந்த கட்டிடத் தொகுதியை முழுமை பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருக்கும் தாஜ் மஹால் 350 ஆண்டுகளுக்கு முன் மொகாலய மன்னர் ஷாஜஹானால் தனது மனைவி மும்தாஜுக்காக கட்டப்பட்டதாகும். 20 ஆண்டுகள் செலவு செய்து கட்டப்பட்ட தாஜ்மஹால் உலக பாரம்பரிய சொத்துகளில் ஒன்றாகும்.

ஐப்பசி 05, 2012

மீள்குடியமர்த்தப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வீடுகள்

முல்லைத்தீவு மாவட்டத் தில் மீள் குடியமர்த்தப்பட்டுள்ள அனைவருக்கும் இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகள் வழங்கப்படுமென முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்தார். இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் 7500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர் முதற்கட்டமாக 500 வீடுகளுக்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மீள்குடியேறியுள்ளவர்களுக்கான நிவாரணங்கள் தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருவதாகக் தெரிவித்த அவர்; மீள் குடியமர்வின் போதான 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித் தார். முல்லைத்தீவில் மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரணமும் வழங்கப்படாது அவர்கள் அநாதரவாக விடப்பட்டுள்ளனர் என சில ஊடகங்கள் வெளியிடும் தகவல்களை முற்றாக நிராகரிக்கும் அவர், அத்தகைய ஊடகவியலாளர்கள் நேரில் வருவார்களேயானால் இங்கு நடக்கும் வேலைத் திட்டங்களை நாம் அவர்களுக்குக் காட்டுவதற்குத் தயாராகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

ஐப்பசி 05, 2012

சவூதியில் மத பொலிஸாரின் அதிகாரங்கள் குறைப்பு

சவூதி அரேபியாவில் மத பொலிஸார் (முதாவா) அத்துமீறி நடப்பதால், அவர்களது அதிகாரத்தைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சவூதி மத பொலிஸாரின் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி கைது, விசாரணை மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் மத பொலிஸார் ஏனைய அரச நிர்வாகத்திடம் பொறுப்பளிக்கும் வகையில் அதிகாரங்கள் குறைக்கப்படுவதாக மத பொலிஸாரின் தலைவர் அப்துல் லதிப் அப்துல் அkஸ் அல் ஷெய்க், ‘அல் ஹயாத்’ பத்திரிகைக்கு தெரிவித்து ள்ளார். சவுதியில் மத பொலிஸார் அங்கு மத நடவடிக்கை களை நடைமுறைப்படு த்துவதற்கான உச்ச அதிகாரம் கொண்ட வர்களாவர். எனினும் இவர்களது அத்துமீறிய செயல்களால் சவூதி பொதுமக்களிடம் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 04, 2012

த.தே.கூ.வை கட்சியாகப் பதியுமாறு கோரி அங்கத்துவக் கட்சிகள் சம்பந்தனுக்கு கடிதம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வலியுறுத்தி கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு பகிரங்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ்.க.பிரேமச்சந்திரன் ஆகியோர் கைச்சாத்திட்ட கடிதமொன்று இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 04, 2012

உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் முடிவுக்கு கொண்டு வாருங்கள் - மனோ கணேசன்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள இலங்கை தமிழரசு கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி,தமிழீழ விடுதலை இயக்கம், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய ஐந்து கட்சிகளும் தமக்கு இடையிலான உள்முரண்பாடுகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டு போகாமல் அவற்றிற்கு உடன் முடிவு கண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பை பலமிக்க தமிழ் தேசிய ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டி எழுப்பும் நோக்கில் செயலாற்றவேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.  (மேலும்...)

ஐப்பசி 04, 2012

அவுஸ்திரேலியா செல்ல உதவிய, செல்ல முயன்ற 10 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றதாகக் கூறப்படும் 6 பேரும் இவர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முயன்றதாகக் கூறப்படும் 4 பேரும் நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதியில் இன்று வியாழக்கிழமை அதிகாலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர். நீர்கொழும்பு, ஏத்துக்கால பகுதி கடல் வழியாக அவுஸ்திரேலியா  செல்வதற்காக ஏத்துக்கால பிரதேசத்திலுள்ள ஓய்வுவிடுதியொன்றில் இவர்கள் தங்கியிருந்தபோது கைதுசெய்யப்பட்டதாக நீர்கொழும்பு ஏத்துக்கால சுற்றுலா பொலிஸார் தெரிவித்தனர். ஏத்துக்கால சுற்றுலா பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணம், மானிப்பாய், சாவகச்சேரி,  நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டதாகவும் இவர்களை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் நீர்கொழும்பு, ஏத்துக்கால பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஐப்பசி 04, 2012

செப்டம்பர் 8, ஒரு சோக வரலாற்றின் திறவுகோல்.

(சஹாப்தீன் நானா)

செப் 8ல் நடந்தது உகது யுத்தமுமல்ல, இந்த உலக மகா யோக்கியர்கள் செய்தது, உதைபியா உடன்படிக்கையுமல்ல.

நம்மளுக்கு ஒரு நண்பர் இருக்கின்றார். உலக மகா அறுவை. உட்கார விடமாட்டார். ஏதாவது ஒரு ராமாயண, மகாபாரத கதை சொல்லி அறுத்துக் கொண்டே இருப்பார். நம்மளுக்கும் வேறு வழி இல்ல, அவரவிட்டால் வேறு நண்பர்களுமில்ல. இப்படித்தான் பல நாட்கள் தூக்கமில்லாமலே கழிந்திருக்கின்றது. ஒரு நாளைக்கு மகா பாரதத்தில வாற சக்கர வியுகத்த எடுத்துப் போட்டு, அடுத்த ரெண்டு மாதத்துக்குள்ள, புலி ஆணையிறவுக்குள்ளால அப்படியே ஒரு வளை, வளைத்து சிறிலங்கா ராணுவத்துக்கு ஒரு அடி அடிப்பான் பாருங்க, இத நம்மடவன் ரவுண்டு கட்டி அடிக்கிறது என்பானுகள். ஆனால் இது மகாபாரதத்தில சொல்லப்பட்ட சக்கர வியுக தாக்குதல் என்பார். அவர் சொன்னமாதிரி, அல்லது ஒரு மூன்றுமாதம் பிந்தி ஆனையிறவுல சவக்கள அடிக்கும். (மேலும்...)

ஐப்பசி 04, 2012

Lankan electrician jailed for Facebook threat in UAE

A United Arab Emirates court sentenced a 33-year-old Sri Lankan electrician to three months in jail for threatening via social networking site Facebook that he would kill a Filipina co-worker if she did not marry him. The Court of First Instance also ordered the Sri Lankan deported once he has served his sentence, the UAE-based news site Khaleej Times reported. However, the report said the verdict is subject to appeal within 15 days. Jebel Ali Police arrested the defendant in April and seized his laptop after he was accused of using Facebook to threaten the Filipina waitress, 24. Investigation showed the electrician allegedly sought help from other Facebook users to help him find a way to kill the Filipina. He also allegedly sent the Filipina a text message with the same threat. This prompted the filing of charges against him for threatening to commit a crime through the Internet. During investigation, the electrician said he met the Filipina about two and a half years ago and they had been in a relationship for about one year. He claimed he lent her Dh1,000 and she did not repay him and started ignoring his calls. But he admitted posting on his Facebook page that he wanted to kill her and that he asked people how he could do it. The Filipina told prosecutors she and the electrician used to work in the same hotel in Abu Dhabi. She said he proposed to her but she turned him down. She also said the electrician harassed her into marry him. She also said she eventually learned about the man's Facebook post about wanting to kill her. A Filipina staff supervisor who worked in the same hotel as the Filipina and the electrician testified seeing the threat posted on the electrician's page last March. Courtesy: Khaleej Times

ஐப்பசி 04, 2012

ஒஸ்லோவில் நான்காவது நாளாகவும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்

நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையர்களால் ஆரம்பிக்கப்பட்ட சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டம் நான்காவது தினமாக இன்று புதன்கிழமையும் தொடர்ந்தது. ஒஸ்லோவில் அமைந்துள்ள டொம் என்றழைக்கப்படுகின்ற மிகப்பழமைவாய்ந்த கிறிஸ்தவ தேவாலயத்தில் உண்ணாவிரதம் இருந்துவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரு தாய்மாரே நோர்வேயிலுள்ள இலங்கைத் தூதுவர் சுனில் ராஜபக்ஷ நேரில் சென்று பார்வையிட்டதுடன் விபரங்களை அறிந்ததாகவும் இது தொடர்பில் சாதகமான பதிலைபெற்றுத்தருவதாக உறுதியளித்தாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும்...)

ஐப்பசி 04, 2012

ஜார்ஜியா நாடாளுமன்ற தேர்தல்  ஆட்சியை கைப்பற்றியது எதிர்க்கட்சி

ஜார்ஜியாவில் நடை பெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த ஜார்ஜியா ட்ரீம் கட்சி 50 சதவிகித இடங்களை கைப்பற்றியுள் ளது. இதன் மூலம் ஆளும் கட்சி ஆட்சியை இழக்கி றது. ஜார்ஜியா ட்ரீம் கட்சி ஆட்சியை பிடிக்கிறது. 1991ம் ஆண்டு சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று ஜார்ஜியா. 2003ம் ஆண்டில் இங்கு நடைபெற்ற தேர்தலில் ஐக் கிய தேசிய இயக்கம் வெற்றி பெற்றது. இதன் மூலம் அக்க ட்சியின் தலைவர் மைக்கேல் சாகாஷ்விலி ஜார்ஜியாவின் அதிபராக இருந்து வந்தார். சாகாஷ்விலியின் பதவிக் காலம் 2013ம் ஆண்டு அ க்டோபர் மாதத்துடன் முடி வடைகிறது. இந்நிலையில் அந்நாட்டின் நாடாளுமன் றத்தேர்தல் நடைபெற்றது. அதன் முடிவுகள் செவ்வா யன்று வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 150 இடங்களை கொண்ட ஜார் ஜியாவில் ஆளும் கூட்டணி கட்சி 44 சதவிகித இடங்க ளை கைப்பற்றியுள்ளது. 50 சதவிகித இடங்களை எதிர் க்கட்சியான ஜார்ஜியா ட்ரீம் கட்சி கைப்பற்றியுள் ளது. தேர்தல் முடிவிற்கு பின் னர் புதிய பிரதமர் பிட்சினா இவானிஷ்விலி செய்தியா ளர்களிடம் கூறுகையில், மேற்கத்திய ஆதரவு அதிபர் சாகாஷ்விலி தனது தோல் வியை ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்ய வேண் டும். மேலும் இனி வரும் காலங்களில் ரஷ்யாவுடன் நல்லுறவு தொடரும். அதற் கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் என தெரிவித் தார். ஜார்ஜியாவின் தேர்தல் முடிவை ரஷ்ய அதிபர் விளாடி மிர் புடின் வரவேற்றுள்ளார்.

ஐப்பசி 04, 2012

இரு வேறு இந்தியா!

(எஸ். கோபாலகிருஷ்ணன்)

“பிரிக்” என்கிற ஆங்கிலச் சொல்லை, உலக அரங்கில் 2001-ம் ஆண்டில் முதன் முதலாக அறிமுகம் செய்தவர் ஜிம் ஓ’ நீல். இவர் “ஸ்டேண்டர்டு அண்டு பூர்’ என்கிற சர்வதேச தர நிர்ணய நிறுவனத்தைச் சேர்ந்த பொருளாதார நிபுணர். பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் சுருக்கம்தான் “பிரிக்”. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்புவரை, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் தொழில்வளம் மிக்க, செல்வம் கொழிக்கும் நாடுகளாகத் திகழ்ந்தன. இவற்றை ‘ஜி-7' நாடுகள் என்று அழைத்தார்கள். நாளடைவில் இவற்றில் பல நாடுகள் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தன. அந்த காலகட்டத்தில், பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள் 2027 ஆம் ஆண்டுக்குள் ‘ஜி-7' நாடுகளை முந்திவிடும் என்று பொருளாதார நிபுணர் ஜிம் ஓ’ நீல் அறி வித்தார். ‘பிரிக்’ என்ற சொல் உருவானது இப் படித்தான். (மேலும்...)

ஐப்பசி 04, 2012

வல்வெட்டித்துறையில் குழப்பம்

வல்வெட்டித்துறை நகர சபைத் தவிசாளர் நட ராஜா ஆனந்தராஜாவுக்கு (தமிழ் தேசிய கூட்ட மைப்பு) எதிராக உப தவிசாளரால் (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்நகர சபையின் உப தவிசாளரினால் தவிசாளருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து சபையின் செயலாளரினால் நேற்று விசேட கூட்டத்தையும் கூட்டினார். தவிசாளர் மீது உப தவிசாளரால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பின் போது பிரேரணைக்கு ஆதரவாக உப தவிசாளர் கந்தசாமி சதீஸ்கனகலிங்கம், சிவாஜிலிங்கம், சூசைப் பிள்ளை எக்ஸ் குலநாயகம், மகாலிங்கம் மயூரன் (அனைவரும் தமிழ் தே.கூட்டமைப்பு) ஆகியோரும் பிரேரணைக்கு எதிராக, தவிசாளர் நடராஜா ஆனந்தராஜ், தில்லையம்பலம் ஜெகதீஸ் கனகசபை ஜெயராஜா மூவரும் த.தே.கூ. சேர்ந்தவர்கள்) ஆகிய மூவரும் வாக்களித்தனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி)யைச் சேர்ந்த பொன்னுத்துரை தெய்வேந்திரன், திருமதி கைலாயினி இந்திரன் ஆகிய இருவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடு நிலைமை வகித்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒரு வாக்கால் நிறைவேற்றப்பட்டு வெற்றியடைந்தது. பருத்தித்துறை நகர சபை ஒன்பது பேர் கொண்ட சபையாகும்.

ஐப்பசி 04, 2012

நாவுறு தீவில் தங்கியுள்ளோர் அவுஸ்திரேலிய நீதிமன்றினூடாக புகலிட கோரிக்கையை முன்வைக்க முடியாது - அவுஸ்திரேலியா

நாவுறு தீவில் தங்க வைக்கப்பட்டிருப் பவர்கள் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தின் ஊடாகப் புகலிடக் கோரிக்கையை முன்வைக்க முடியாது என அவுஸ் திரேலியாவின் குடிவரவு, குடியகல் வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார். நாவுறு தீவில் உள்ள வர்கள் அந்நாட்டு சட்ட விதிகளுக்கு அமையவே புகலிடக் கோரிக்கைகளை முன்வைக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், அவுஸ்திரேலிய நீதிமன்றங்களில் நாவுறு தீவுகளிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களின் மேன்முறையீடுகளைத் தாக்கல் செய்ய முடியாது என அந்நாட்டு அமைச்சர் கிறிஸ் பொவன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நாவுறு தீவிலுள்ளவர்கள் அந்நாட்டு சட்டங்களுக்கு அமையவே புகலிடக் கோரிக்கையை முன்வைக்க முடியும். அவ்வாறு மேன்முறையீடு செய்வதாகவிருந்தாலும் அவுஸ்திரேலியாவும், நாவுறு தீவு அரசாங்கமும் இணைந்து ஏற்படுத்தியிருக்கும் மீளாய்வுக் குழுவிடமே மேன்முறையீடு செய்ய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை நாவுறு மற்றும் பப்புவா நியூகினி தீவுகளுக்கு அனுப்பும் திட்டத்தை அவுஸ்திரேலியா ஆரம்பித்த பின்னர் முதற்தடவையாக அவுஸ்திரேலியாவின் குடிவரவு, குடியகல்வுத்துறை அமைச்சர் கிறிஸ் பொவன் அத்தீவுகளுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அரச தலைவர்களையும் இவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

ஐப்பசி 03, 2012

'அதிகாரப்பகிர்வு குறித்து அரசியல் கட்சிகளுடன் இலங்கை அரசு பேச்சு நடத்த வேண்டும்' - இந்திய பிரதமர்

இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் அந்நாட்டு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இலங்கையை வலியுறுத்தியதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதி, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க.தலைவர் கருணாநிதி கடிதமொன்றை எழுதியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங்கினால் எழுதப்பட்ட கடிதத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் இறுதிகட்ட போர் முடிவுற்றப் பின்னர் இலங்கை தமிழர்களின் நலனில் இந்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. தமிழர்களின் மறுவாழ்வு, குடியுரிமைக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் சமத்துவம், சுயமரியாதையுடன் வாழ வலியுறுத்தி வருகிறோம். அத்துடன், இலங்கைத் தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு குறித்து இலங்கை அரசு தனது நாட்டு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதற்கு இந்திய அரசாங்கம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது' என மன்மோகன் சிங், தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஐப்பசி 03, 2012

இலங்கையில் உடனடியாக அரசியல் தீர்வு காண்க!  ராஜபக்ஷே அரசுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தல்

இலங்கையில் உடனடியாக ஓர் அரசியல் தீர்வு காண் பதற்கு அந்நாட்டு அரசு முன்வரவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 67வது பொதுச்சபைக் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், செவ்வாயன்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ், ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனை ஐ.நா. தலைமையகத்தில் நேரில் சந்தித்துப்பேசினார். இச்சந்திப்பின்போது இலங்கை இனப்பிரச்சனைக்கு எவ்விதத்தாமதமும் இல்லாமல் உடனடியாக அரசியல் தீர்வுகாணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டு மென பான் கீ மூன் வலியுறுத்தியதாக ஐ.நா. செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. “போரைத்தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ‘கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் மறுவாழ்வுக் கான ஆணையம்’ அளித்துள்ள பரிந்துரைகளில்இலங்கை அரசால் அமலாக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் விளக்கம் அறிந்துகொண்டார்; இலங்கையின் வடக்குப்பகுதியில் மக்களின் மறுவாழ்வுக் கான நடவடிக்கைகள் உட்பட மேற்கண்ட ஆணையம் அளித்துள்ள பரிந்துரையில் எஞ்சியுள்ள அனைத்து நடவடிக்கை களையும் உறுதியாக அரசு மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஐப்பசி 03, 2012

அரசியலமைப்புக்கு அமைய மாகாண சபைகளுக்கு அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அமைவாக மாகாண சபைகளுக்கு உரியமுறையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வதன் அவசியமும், இனப்பிரச்சினைக்கான தீர்வின் முக்கியத்துவத்துவமும் நடந்து முடிந்த கிழக்கு மாகாண சபை தேர்தல் ஊடாக நன்கு வெளிப்படுத்தப்பட்டிருப்பதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கிடம் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹக்கீமுக்கும், உதவி ராஜாங்க செயலாளர் பிளேக்கிற்கும் இடையிலான கலந்துரையாடல் அதிகாரப் பகிர்வின் அவசியம், கிழக்கு மாகாணத்தில் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர் களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய அமெரிக்கத் திரைப்படம் என்பனவற்றை மையப்படுத்தி யதாக அமைந்திருந்தது. (மேலும்...)

ஐப்பசி 03, 2012

யார் உத்தரவின் பேரில் கடாபி கொல்லப்பட்டார்?

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி சார்க்கோஸியின் உத்தரவின் பேரில் அந்நாட்டு இரகசிய சேவைப் பிரிவைச் சேர்ந்த ஒருவராலேயே லிபிய முன்னாள் தலைவர் கடாபி கொல்லப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடாபி கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தனது சொந்த ஊரான கிரிட்டில் வைத்து கொல்லப்பட்டார். லிபிய புரட்சியில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த வெளிநாட்டு முகவர் ஒருவரே கடாபியை கொன்றதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி வெளிநாட்டு முகவர் பிரான்ஸ் நாட்டவராக இருக்கலாம் என இத்தாலிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்...)

ஐப்பசி 03, 2012

'திவிநெகும' சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாணசபை அங்கீகாரம்

திவிநெகும சட்டமூலத்திற்கு கிழக்கு மாகாண சபை நேற்று முழுமையான அங்கீகாரம் வழங்கியது. இந்த சட்ட மூலம் 6 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் இது தொடர்பான பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார். காலை 9.30 முதல் பிற்பகல் 4.00 மணிவரை திவிநெகும சட்ட மூலம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. ஆளும் தரப்பு உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் சட்ட மூலத்திற்கு ஆதரவாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க. உறுப்பினர்கள் எதிராகவும் கருத்துத் தெரிவித்தனர். விவாத முடிவில் சட்ட மூலம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் தண்டாயுதபாணி மற்றும் ஐ.தே.க. குழுத் தலைவர் தயா கமகே ஆகியோர் கோரினர். இதன் பிரகாரம் வாக்கெடுப்பு இடம் பெற்றதோடு ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 15 வாக்குகளும் அளிக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் 7 பேரும் ஆளும் தரப்புடன் இணைந்து சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஐ.தே.க. ஆட்சியில் தனது தந்தை புலிகளினால் கொல்லப்பட்ட அவலத்தையும் நினைவு கூர்ந்தார்.

ஐப்பசி 03, 2012

வெள்ளை மாளிகையையும் விட்டு வைக்கவில்லை!

(By Kavinthan Shanmugarajah)

அண்மைக்காலமாக அரசாங்க ஸ்தாபனங்கள், வங்கிகள், வர்த்தக நிறுவனங்கள் என பல அமைப்புகளின் கணனிக் கட்டமைப்புகள் ஹெக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறான தாக்குதல்கள் குறித்ததொரு இலக்கினை முற்றிலும் செயலிழக்கச் செய்வதனையோ அல்லது அதிலிருந்து இரகசியத் தகவல்களைத் திருடும் நோக்குடனேயே நடத்தப்படுகின்றன. தனிப்பட்ட நபராலோ அல்லது குழுவொன்றினாலோ மேற்கொள்ளப்படும் ஹெக்கிங் நடவடிக்கைகளுக்கு அப்பால் நாடொன்றினால் மற்றுமொரு நாட்டின்  மீது நடத்தப்படும் ஹெக்கிங் தாக்குதல்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதற்கு ஈரானின் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய ஹெக்கிங் தாக்குதல்களையும், மத்தியகிழக்கில் உள்ள சில நாடுகளின் வங்கிகள் மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்பட்ட தாக்குதல்களையும் குறிப்பிடமுடியும். (மேலும்...)

ஐப்பசி 03, 2012

நாவுறுதீவு தடுப்பு முகாமில் கைகலப்பு இலங்கையருக்கு பாதிப்பில்லை

நாவுறு தீவு தடுப்பு முகாமில் ஏற்பட்ட கைகலப்பால் அங்கு தங்கவைக்கப்பட்டி ருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென அவுஸ்திரேலியாவின் குடிவரவு, குடியகல்வு அமைச்சர் கிறிஸ் பொவன் தெரிவித்துள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை நாவுறு தீவு தடுப்பு முகாமில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்கு தங்கவைக்கப் பட்டிருக்கும் ஈராக் மற்றும் ஈரானைச் சேர்ந்த 15 சட்டவிரோதப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தக் கைலப்பில் ஈடுபட்டதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேநேரம், அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் சட்டவிரோதமாகச் சென்று கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப் பட்டிருந்தவர்களில் இலங்கையர்கள் உட்பட 150 பேர் நாவுறு தீவுக்கு விமானங்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனர். எதிர்வரும் வாரங்களில் மேலும் பலர் அங்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர். நாவுறு தீவில் அனைத்து வசதிகளும் பூர்த்தி செய்யப்பட்டதும் 1500ற்கும் அதிகமானவர்களை தங்க வைக்க முடியும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரி வித்துள்ளது. நாவுறு தீவுக்கு அனுப்பி வைக்கப்படுபவர்கள் ஐந்து கட்டில்களைக் கொண்ட தற்காலிக கூடாரங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பொழுதுபோக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப் பட்டுள்ளன.

ஐப்பசி 03, 2012

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக் கொலை!

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ல தோப்புவளசை என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமானது அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவது. தோப்புவளசை கிராமத்தில் ஒரு ஏக்கர் நிலத்தில் குடியிருந்து வருபவர் காளிமுத்து (30). இவரது கணவர் கள்ளழகர் சவுதியில் வேலை செய்து வருகிறார். இதன்மூலம் அவர் அனுப்பும் பணத்தைக் கொண்டு தங்களது பிள்ளைகளான மகள் காளீஸ்வரி (12), மகன் பாலா (7), மகள் சரண்யா (5), சக்தி (ஒன்றரை வயது) ஆகியரோடும், தனது தந்தை கருப்பையாவோடும் வசித்து வந்தார். கணவர் அனுப்பும் பணத்தைக்கொண்டு குடும்பத்தை நடத்தினாலும், இவர்கள் பாய் மற்றும் கிடுகு முடையும் தொழிலையும் செய்து வந்தனர். (மேலும்...)

ஐப்பசி 03, 2012

டொலருக்கு எதிராக ஈரான் நாணயம் பாரிய வீழ்ச்சி

டொலருக்கு எதிரான ஈரான் நாணயத்தின் பெறுமதி கடந்த ஒரு வாரத்திற்குள் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் மூலம் ஈரானுக்கு எதிரான மேற்கு நாடுகளின் தடை அந்நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதில் கடந்த திங்கட்கிழமை ஒரே தினத்தில் ஈரான் நாணயம் 18 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் கறுப்புச் சந்தையில் டொலரின் பெறுமதி 34,500 ஆக உயர்ந்திருந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த 2011 முடிவு தொடக்கம் ஈரான் நாணயத்தின் பெறுமதி 80 வீத வீழ்ச்சி கண்டுள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பதாக ஈரான் மீது குற்றம் சாட்டிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதில் ஈரான் மத்திய வங்கியுடன் பரிமாற்றத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அமெரிக்கா எச்சரித்திருந்தது. இதனால் ஈரான் தனது எண்ணெய் மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றுமதி செய்வதில் சிக்கலை எதிர்நோக்கி வருகிறது.

ஐப்பசி 02, 2012

தீர்க்கமான தருணம்.

(சுகு-ஸ்ரீதரன்)

தமிழ் தரப்பினால் முஸ்லிம் மக்களுடன் சேர்ந்து ஒரு மாகாண சபையை கிழக்கில் உருவாக்கமுடியவில்லை. இது மிகவும் பலவீனமான நிலையாகும். சமூக அக்கறை இருக்குமானால் இதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு பரிகாரம் காணப்படவேண்டும். நில அபகரிப்பு  இராணுவமயமாக்கல் சிவில் நிர்வாகத்தில் படையினர் தலையீடு போன்ற நிலைமைகளில் இது மிகவும் முக்கியமானது. தவிர மாகாணங்களுக்கு அதிகாரங்கள் பகிர்வதற்குப் பதில் மத்தியை நோக்கி நகர்த்துவதென்பது திட்டமிட்ட முறையில் வெளிப்படையாகவே நிகழ்கிறது. கிழக்குமாகாண ஆளுனர் எப்போதும் மக்களால் தெரிவு செய்யப்பட்;ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்கள் போவதை விரும்பாதவர். கடந்த மாகாண சபையின் மீது அவரின் செயற்பாடுகள் அதற்கு சாட்சி. அது அவரின் சித்தமல்ல . ஆண்டவனின் சித்தப்படி அவர் நடக்கிறார். மாகாண சபையின் அன்றாட செயற்பாடுகளுக்கான அதிகாரங்கள் கூட அவற்றிடம் இல்லை.  இது முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் உட்பட கடந்த மாகாண சபை உறுப்பினர்களது அனுபவம். (மேலும்...)

ஐப்பசி 02, 2012

கிழக்கில் இன, மத பேதமற்ற சேவையை முன்னெடுப்பேன் - கிழக்கு முதலமைச்சர் நஜீப்

கிழக்கு மாகாணத்தில் இன, மத பேதமற்ற சேவையை முன்னெடுப்பேன். அதற்காக அனைவரதும் ஒத்துழைப்பை ௭திர்பார்க்கின்றேன் ௭ன கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் முதலாவது அமர்வு நேற்று திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு கன்னியுரையாற்றுகையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், கிழக்கு மாகாண மக்களின் ௭திர்கால நலனை கருத்தில் கொண்டு நாம் பணியாற்ற வேண்டும். இதற்கு அனைத்து மாகாண சபை உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளை மறந்து செயற்பட வேண்டும். தவிசாளர் ஆரியவதி நீண்ட காலமாக ௭ன்­னு­டன் இணைந்து சேவையாற்றியவர். அவ்வாறே உபதவிசாளர் சுபைர் மாகாண சுகாதார அமைச்சராக பணியாற்றியிருக்கிறார். ஆகவே இம் மாகாணத்தில் சிறந்ததொரு நல்லாட்சியை ஏற்படுத்த அவர்கள் இருவரும் ௭னக்கு உதவியாக இருப்பார்கள் ௭னவும் தெரிவித்தார்.

ஐப்பசி 02, 2012

கேள்வி ??????    பதில்

1980துகளில் இருந்து 2009 மே வரையிலுமான காலப்பகுதியில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள்?

சுமார் ஒரு லட்சம் பேர் இறந்திருக்கலாம். இதில் இராணுவ தரப்பில் இறந்தவர்கள் வெறு. புலிப் பயங்கரவாதிகளில் மட்டும் முப்பதினாயிரம் பேர் மட்டில் இறந்து போனார்கள். மற்ற இயக்கக்காரர்களுக்கு, தமது தரப்பில் இறந்தவர்கள் பற்றிய எந்தவித புள்ளிவிபரங்களும் அவர்களிடம் இருந்தது இல்லை. தமிழ்ப் பொதுமக்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற சரியான கணக்கெடுப்பு யாராலும் எடுக்கப்படவில்லை. போராட்டத்தை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்த புலிகள் மக்களது மரண எண்ணிக்கை போதாது என மேடைகளில் பேசிவந்தார்களே தவிர  அவர்களிடம் கூட பொதுமக்கள் இறப்பு பற்றிய கணக்கெடுப்பு இருக்கவில்லை. மேலே குறிப்பிட்ட ஒரு லட்சம் பேரில் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ்மக்கள் சுமார் முப்பதினாயிரம் பேரும் அடக்கம். புலிகளால் கொல்லப்பட்ட சிங்களப் பொதுமக்கள், இஸ்லாமிய மக்கள் பற்றிய புள்ளிவிபரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதுவும் சுமார் இருபதினாயிரத்துக்கு மேல் இருக்கலாம். சுமார் முப்பதினாயிரம் புலிப்பயங்கரவாதிகளும் இறந்து போனார்கள்.

ஐப்பசி 02, 2012

வாடிக்கையாளர்களை விரக்திக்குள்ளாக்கியதற்காக மன்னிப்புக் கேட்டது ஆப்பிள்! 

ஸ்மார்ட்போன் உலகில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் ஆப்பிள் நிறுவனம், தனது வாடிக்கையாளர்களை விரக்திக்குள்ளாக்கியதற்காக அந்நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலரான டிம் குக் மன்னிப்பு கோரியுள்ளார். ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஏகப்பட்ட வசதிகளை வழங்கி வருகிறது. இதில் அனைவரும் உபயோகப்படுத்தும் கூகுள் மேப்பிற்குப் பதிலாக ஐஓஎஸ் எனும் மென்பொருளை வழங்கியது. இதன்மூலம், உலகத்தில் உள்ள இடங்களை நாம் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். இந்நிலையில், இந்தப் புதிய வசதி வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. ஆப்பிளின் மேப் வசதி வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பிய தகவல்களை வழங்காமல், தவறாக வழங்குவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் பல்வேறு தகவல்கள் இல்லாமலும், இருக்கின்ற தகவல் தவறாகவும் பதிவு செய்யப்பட்டிருந்ததால், வாடிக்கையாளர்கள் மிகுந்த விரக்திக்குள்ளாகினர். இதனைத்தொடர்ந்தே ஆப்பிள் நிறுவன அதிகாரிகள் மன்னிப்புக் கேட்டுள்ளார். விரைவில் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் துல்லியமான மேப்பை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஆப்பிள் மேற்கொள்ளும் எனவும் அவர் உறுதியளித்தார். அதுவரை வாடிக்கையாளர்கள் கூகுள், நோக்கியா போன்ற நிறுவனங்களின் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ஐப்பசி 02, 2012

யூரோ வலயத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை மேலும் உயர்வு

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யூரோ வலய நாடுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 18.2 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஜுலையில் 11.4 வீதமாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை ஆகஸ்ட்டில் இவ்வாறு அதிகரித்துள்ளது. இதில் அதிக பட்சமாக ஸ்பெயினில் 25.1 வீதமானோர் வேலையின்றி இருப்பதோடு மிகக் குறைவாக ஆஸ்திரியாவில் 4.5 வீதத்தினர் வேலையின்றி உள்ளனர். ஜெர்மனியில் 5.5 வீதத்தினர் வேலையின்றி உள்ளனர். எனினும் யூரோ வலயத்தில் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணி க்கை உயர்வாகவே உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு நிறுவனத்தின் தகவலின் படி கடந்த ஆகஸ்ட்டில் யூரோ வலயத்தில் 25 வயதுக்கு கீழான 22.8 வீதத்தினர் வேலை இன்றி உள்ளனர். இதில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 52.9 வீதமான இளைஞர்கள் வேலையின்றி உள்ளனர்.

ஐப்பசி 02, 2012

உலக நாடுகளில் சமகால அரசுகள்

சமகால அரச முறையில் காணப்படும் அரசுகளை சமூக, பொருளாதார, அரசியல் அடிப்படையில் ஏழு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவற்றை பின்வருமாறு ஆராயலாம்.(மேலும்...)

ஐப்பசி 01, 2012

கிழக்கு மாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினர் ஜனாவின் வீட்டிலிருந்து குண்டு மீட்பு

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரனின் (ஜனா) இல்லத்திலிருந்து இரண்டு இக்கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றையடுத்து நேற்று அதிகாலை 3.00 மணியளவில் செட்டிப்பாளையத்திலுள்ள மேற்படி உறுப்பினரின் இல்லத்திலிருந்து குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் மீட்கப்பட்டது. இக்குண்டுகள் பொலித்தீன் பையொன்றினுள் இடப்பட்ட நிலையில் மாகாண சபை உறுப்பினரின் வீட்டு வளாக மதிலோரத்தில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்விடயம் தொடர்பாக உறுப்பினரின் மைத்துனர் பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். கைக்குண்டு மீட்டெடுக்கப்படும் வேளை மாகாண சபை உறுப்பினர் வீட்டில் இருக்கவில்லை. அவர் கிழக்கு மாகாண சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக திருகோணமலை சென்றிருந்ததாக பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

ஐப்பசி 01, 2012

வடக்கு மாகாணசபைத் தேர்தல்வரை தெரிவுக்குழுவுக்கு கூட்டமைப்பு வராது

வட மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருடம் நடைபெறும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளாமல் ஒளிவு மறைவு விளையாட்டில் ஈடுபடும் ௭ன்றே ௭னக்குத் தோன்றுகின்றது. வட மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட்டால் அவர்களுக்குத் தேர்தலின்போது பேசுவதற்கு ஒன்றும் இல்லாமல் போய்விடும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். (மேலும்...)

ஐப்பசி 01, 2012

'அவர்களின் வேஷ்டியை அவர்களே உரிகின்றனர்'

இப்போது சேறடிக்கும் பிரேமச்சந்திரன் ததேகூ பதிவு செய்து விட்டால் மாத்திரம் சேறடிக்க மாட்டார்,  தூற்றமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

(நக்கீரன்)

நேற்றைய தமிழோசையில் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட நீண்ட அறிக்கைக்கு திரு.  சம்பந்தர் பதில் இறுத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும் கட்சிக்குள் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று பெருந்தன்மையோடு அவர் சொன்னார்.  அதுதான் எனது கருத்தும். சுரேஷ் பிரேமச்சந்திரன் 'கூட்டமைப்பிற்கு ஒரு சரியான யாப்போ, அன்றி அதற்கான ஒருவடிவமோ இதுவரை இல்லை. அது மட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான ஒரு பொதுச்சின்னமோ கொடியோ எதுவும் கிடையாது' என்கிறார். பின்பு எப்படி தன்னை மட்டும் ததேகூ இன் உத்தியோகப் பேச்சாளர் என்று ஓயாது சொல்லிக் கொண்டிருக்கிறார்? (மேலும்...)

ஐப்பசி 01, 2012

கணவன் மனைவியை
மலடி என்று....
திட்டுகிறான்.
வாசலில் நின்றவாறு
பிச்சைக்காரன் - அம்மா
என்கிறான்


- நெடுந்தீவு முகிலன்

ஐப்பசி 01, 2012

கேள்வி ??????    பதில்

பயங்கரவாதப் புலிகளும் பிரபாகரனும் அழிக்கப்பட்ட பின்னரும் தமிழ் பகுதிகளில் கப்பம் வாங்குதல் தொடர்ந்தும் நடைபெறுகிறதே.?

கப்பம் வாங்குதல், தண்டப் பணம் அறவிடுதல், மிரட்டிப் பணம் பிடுங்குதல், வரி வசூலித்தல், கொள்ளையடித்தல், கொலை செய்தல், ஆள் கடத்தல், தூள் கடத்தல் இப்படியான அனைத்து அடாவடித்தனங்களுக்கும் புலிகளே ஏகப் பிரதிநிதிகளாக இருந்தார்கள். கள்ளக்கடத்தலில் இருந்து கள்ளு விற்பது வரை புலிகளின் ஏகபோகத் தொழில்களாக இருந்தன. இவற்றில் சிலவற்றை,  பிரபாகரன் முடிந்த பின்  குட்டிப் பிரபாகரன்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டு விட்டார்கள். மணல் வியாபாரம், கொழும்புக்கான பஸ் போக்குவரத்து இப்படி பல பல. ஆனால் இப்போது இராணுவம் உட்பட பல அரச அனுசரணையாளர்கள் தொழிலுக்குப் போட்டியாக வந்துவிட்டதனால் சற்றுக் குறைந்த செலவில் இந்த சேவைகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது.  உரியவர்களிடம்  படமாளிகையை விட்டுக்கொடுப்பதற்கே பலகோடிகள் கேட்கப்பட்டுள்ளது(5கோடி).  என்னதான் இருந்தாலும்  பிரபாகரன் தொடக்கம் இந்தக் குட்டிப் பிரபாகரன்கள் ஈறாக தமது வியாபாரத்தைத் தமிழ் மக்களுக்கு மட்டுமே செய்தார்கள். வாழ்க இனப்பற்று. சிங்களவர்களுக்குப் போய் முப்பதினாயிரத்துக்கு மணல் விற்க முடியுமா? 

ஐப்பசி 01, 2012

அரசியலமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த பொது முன்னணியொன்று உருவாக்கம்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் மற்றும் அரசியலமைப்பிலிருந்து 18ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குதல் தொடர்பான அழுத்தங்களை பிரயோகிக்கும் வகையில் பொது முன்னணியொன்று உருவாக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் மாதுலுவாவே சோபித்த தேரர் ஆகியோர் இணைந்து இந்த முன்னணியை உருவாக்கவுள்ளனர்.  ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித ரங்கே பண்டார, பாலித தேவப்பெரும, கரு ஜயசூரிய மற்றும் அசோக அபேசிங்க ஆகியோர் எதிர்வரும் 18ஆம் திகதி இந்த முன்னணியில் இணைந்துகொள்வார்கள் என்று ஐ.தே.க எம்.பி.யும் மேற்படி முன்னணியின் ஏற்பாட்டளருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அத்துடன், ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான அர்ஜுன ரணதுங்க, ஜயந்த கெட்டகொட, ஐ.தே.க.வின் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன, மேல் மாகாணசபை உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க ஆகியோரும் இந்த முன்னணிக்கு ஆதரவு வழங்குவார்கள் என நம்புவதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை, மேலும் சில கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்த முன்னணிக்கான ஆதரவை வழங்க முன்வருவார்கள் என்றும் இந்த முன்னணி எதிர்வரும் 18ஆம் திகதி ஸ்தாபிக்கப்படும் என்றும் ஜயசேகர எம்.பி மேலும் கூறினார்.  

ஐப்பசி 01, 2012

2000 முன்னாள் புலி உறுப்பினர்கள் இன்று சிவில் பாதுகாப்புடன் இணைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2000 பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான வைபவம் இன்று கிளிநொச்சியில் இடம்பெறும். சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் (Civil Security Department) இணைந்து கொள்வதற்கு விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டமாகவே 2000 பேர் இன்று இணைக்கப்படுவதாக சிவில் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பாக இருக்கும் மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 5000 பேரை சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்து அவர்களை வடபகுதியின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தும் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்துக்கு அமைய 2000ற்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. (மேலும்...)

ஐப்பசி 01, 2012

சிறுவர் பாதுகாப்பு தினம்
(
வ. ராஜ்குமார்)

க்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது. இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு தமக்கிருக்கிறது. இவ்வாறான நிலையில் இவர்களை பாதுகாக்கும் தலையாய கடமை, நம் அனைவருக்கும் இருக்கிறது. சர்வதேச சிறுவர் தினத்தை பற்றி பல்வேறு நாடுகளில் பல்வேறு தினங்களை கணக் கிட்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஒக்டோபர் 01ம் திகதி சிறுவர் தினமாகவும், அனைத்துலக குழந்தைகள் தினமாக டிசம்பர் 14ம் திகதியும் கொண்டாடப்படு கின்றது.(மேலும்...)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com