Contact us at: sooddram@gmail.com

 

வைகாசி 2015 மாதப் பதிவுகள்

வைகாசி 31, 2015

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

எம்.பி.மார் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு எதிர்ப்பு

அரசியலமைப்புச் சட்டத்தின் 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக 225 நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக அதிகரிக்க வேண்டும் என முன்வைக் கப்பட்டுள்ள யோசனைக்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய தொழிலாளர் சங்கம் ஆகிய கட்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 20வது திருத்தச் சட்டத்தில் இணங்க முடியாத விடயங்கள் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான விசேட பிரதிநிதிகள் குழு கலந்துரையாடி அடுத்த வாரம், கட்சிகளின் இணக்கத்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

புலிகளின் பாணியில் கொலைகளைச் செய்யும் ஐஎஸ் அமைப்பு

ஈராக் மற்றும் சிரியாவின் ஒருசில பகுதிகளை பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் அந்த பகுதிகளை இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளனர். சிறைபிடித்துச் சென்றுள்ள யாசிதி இன மக்கள் மற்றும் அரசு ஆதரவு படையினரை படுகொலை செய்து வருகின்றனர். கைதிகளை மிகவும் கொடூரமாக கொலை செய்யும் அவர்கள், அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் வெளியிட்டு சர்வதேச சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகின்றனர். அந்த வகையில், தற்போது சிரியா உளவாளி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருந்த ஒருவரின் தலையை துண்டித்து படுகொலை செய்துள்ளனர். அதற்கு முன்னதாக, அவரை புதைக்கும் சவக்குழியை அவரை வைத்தே தோண்டச் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ பதிவு தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பாசிச புலிகள் பின்பற்றிய சவப் பெட்டிகளைத் தயாரித்து வைத்துவிட்டு கொலை செய்யவதற்காக காத்திருந்த செயற'பாடுகளை ஐஎஸ் அமைப்பும் செயற்படுவதாக அறிய முடிகின்றது. புலிகளைத் தீவிரவாக ஆதிரித்தவரகளும் பின்பு புலகளுடன் பின்னிப் பிணைந்து ஒன்றானவரகளுமான பாலகுமாரின் ஈரோஸ் அமைப்பும் இதே போன்ற செயற்பாட்டையே ரிஆர்ஓ இன் கந்தசாமி விடயத்தில் கடைப்பிடித்தது ஈழவிடுதலைப் போராட்டத்தில் மறக்க முடியாத உண்மைகள்.

உலகில் பசியோடு இருக்கும் 194 மில்லியன் மக்களின் வீடு இந்தியா - ஐ.நா. அறிக்கை

உலகில் பசியோடு இருக்கும் மக்கள் அதிகமாக உள்ள நாடுகள் பட்டியலில் 194 மில்லியன் மக்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து உள்ளது. சீனாவை மிஞ்சி உள்ளது என்று ஐ.நா.வின் ஆண்டு பட்டினி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. உலக அளவில் பசியோடு இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது 2014-15 ஆண்டில் 795 மில்லியனாக குறைந்து உள்ளது. கடந்த 1990-92-ம் ஆண்டுகளில் பட்டினியாக இருக்கும் மக்களின் எண்ணிக்கையானது ஒரு பில்லியன் ஆகும். உலகில் உணவுப் பாதுகாப்பின்மை நிலைகுறித்து (‘தி ஸ்டேட் ஆப் புட் இன்செக்குரிட்டி இன் தி வேல்ட் 2015’ ) ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாய அமைப்பு அறிக்கை சமர்பித்து உள்ளது. இந்தியாவில் பட்டினி குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. 1990-92ம் ஆண்டுகளில் பசியோடு இருந்த மக்களின் எண்ணிக்கை 210.1 மில்லியனாக இருந்தது. தற்போது 2014-15ல் 194.6 மில்லியனாக குறைந்து உள்ளது. (மேலும்....)

சுகாதார தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி!

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அடங்கலாக நாடு பூராவும் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக கடமையாற்றி வருகின்ற நபர்களை வைத்தியசாலைச் சிற்றூழியர்களாக உள்ளீர்க்கின்ற நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. வைத்தியசாலை அத்தியட்சகர்களுக்கு இது சம்பந்தப்பட்ட அறிவுறுத்தல்கள் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சால் வழங்கப்பட்டு உள்ளன என்றும் இதில் இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி விசேட அக்கறை காட்டி வருகின்றார் என்றும் கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலை அத்தியட்சர்கள் உரிய விளக்கங்களை சுகாதார தொண்டர்களுக்கு வழங்கி உள்ள நிலையில் தொண்டர்கள் முன்னரைக் காட்டிலும் உத்வேகத்துடன், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுடனும் உற்சாகமாக பணிகளில் ஈடுபடுகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது. (மேலும்....)

யாழ்ப்பாணத்தில்

வன்முறையில் ஈடுபட்ட மேலும் நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மேலும் நால்வரை சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக யாழ்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். கைதான நால்வரும் ஓட்டுமடப்பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்களை அச்சுறுத்தியமை, வங்கிகளுக்குள் புகுந்து அதன் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவித்தமை, தனியார் கட்டடங்கள் மீது கல்வீசி தாக்கியமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைதான நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மற்றும் வங்கிகளில் பதிவான சீ.சீ.ரீ.கமராவின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ரோஹிஞ்சா முஸ்லிம்கள்

புறக்கணிக்கப்படும் சமூகம்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இப்பகுதிகளில் சடுதியாக அதிகரித்துவரும் முஸ்லிம் சனத்தொகை தொடர்பான முறுகல்கள் ஏற்பட்டதோடு, ஆங்கிலேயரின் ஆட்சியில் அந்நிலைமை மோசமடைந்தது. ஆங்கிலேயரின் காலணித்துவ ஆட்சியில் காணி உரிமைகள் தொடர்பான கொள்கைகள் மாற்றப்பட்டதோடு, ராகைன் மாநிலத்தில் விவசாயம் செய்வதற்காக இந்தியர்களைக் குடியேற்றினர். தங்களைப் பூர்வீகக் குடிகள் என்றெண்ணிய ராகைன் மக்கள், சொந்த நாட்டவர்களை 'விருந்தாளிகளான' ரோஹிஞ்சா மக்கள் மதிக்க வேண்டும் என எதிர்பார்த்தனர். மறுபுறத்தில், கடுமையான உழைப்பை வெளிப்படுத்திய ரோஹிஞ்சா மக்கள், ஏனையோர் செய்யமறுத்த வேலைகளையும் செய்து உயிர் வாழ்ந்தனர். இதன் காரணமாக முறுகல் தீவிரமடைந்தது. இதனைத் தொடர்ந்து, ரோஹிஞ்சா மக்கள் தங்களை கிழக்கு பாகிஸ்தானுடன் (இப்போதைய பங்களாதேஷ்) இணைத்துக் கொள்வதற்கான போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆனால் பாகிஸ்தானின் நிறுவுநர் மொஹமது அலி ஜின்னா மறுப்புத் தெரிவிக்க, ஆயுதப் போராட்டமாக பிரிவினைப் போராட்டம் மாறியது. (மேலும்....)

புலிகளின் காலத்தில் நள்ளிரவில்கூட பெண்கள், சிறுமிகளுக்கு பாதுகாப்பு - பிரதி அமைச்சர் விஜயகலா

புலிகளின் காலத்தில் நள்ளிரவில் கூட பெண்களும் சிறுமிகளும் பாதுகாப்பான முறையில் வீட்டை விட்டு வெளியேறிச் செல்லக்கூடிய சூழ்நிலை காணப்பட்டது. வடக்கு பெண்கள் பாதுகாப் பினை உணர்ந்ததாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பல வன்முறைகளை கடந்த அரசாங்கம் ஊடகங்களில் வெளியிடப்படுவதனை தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். எனினும் புதிய அரசாங்கம் எவ்வித ஊடகத் தணிக்கைகளையும் விதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊடக சுதந்திரம் காணப்படுவதனால் வித்தியா மீதான பாலியல் வன்கொடுமையும், படுகொலையும் அம்பலப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் வடக்கில் காவல்துறையினருக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை எனவும், படையினரே கட்டுப்பாட்டை வைத்திருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் சிவிலியன் ஆட்சி அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் இன்னமும் காவல்துறையினர் வினைத்திறனாக செயற்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். புலிகளின் வாக்குகளில் வென்றுவிட்டு தற்போது மாணவியின் கொலைகாரர் தப்பிக்க உதவியும் செய்து விட்டு ரணிலின் அமைச்சர் மண்ணெண்ணை மகேஸ்வரனின் பாரியார் தேர்தலைக் குறி வைத்து வாய்வீச்சடிப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

அல்லைப்பிட்டியிலிருந்து ஐரோப்பா வரையில் ஆளுமையுடன் இயங்கும்
எழுத்துப்போராளி ஷோபா சக்தி


ஷோபா சக்தி நடித்த தீபன் ஆவணப்படத்திற்கு சர்வதேச விருது

“ஒப்பீட்டளவில் இந்திய நாடு, இலங்கையை விட ஊடகச் சுதந்திரம் மிகுந்த நாடு. இவ்விரு நாடுகளின் திரைப்பட அடிப்படைத் தணிக்கை விதிகள் காலனியக் காலத்தில் உருவாக்கப்பட்டவை. தணிக்கையே இல்லாத சுதந்திர ஊடக வெளிதான் நமது விருப்பமென்றாலும் இப்போதுள்ள தணிக்கை விதிகளைக் கண்டு நாம் பேரச்சம் அடையத் தேவையில்லை. ஆனந்த் பட்வர்த்தனின் அநேக படங்கள் தணிக்கை விதிகளுடன் நீண்ட போராட்டத்தை நடத்தித்தான் வெளியாகியுள்ளன. தமிழில் சமீபத்திய உதாரணமாக நான் பணியாற்றிய ‘செங்கடல்’ திரைப்படமும் நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தித் தணிக்கையை வென்றிருக்கிறது” இவ்வாறு சில வருடங்களுக்கு முன்னர் எழுதியிருக்கும் ஷோபா சக்தி நடித்திருக்கும் தீபன் என்ற ஆவணப்படம் சமீபத்தில் நடந்த கேர்ன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை வென்றிருக்கிறது. (மேலும்....)

வைகாசி 30, 2015

மாணவிக்கான போராட்டம் யுத்தத்துக்கு வித்திடாது - குமாரதுங்க 

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைக்கு எதிராக போராட்டம் நடத்துவதன் மூலம் நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படும் என்று தெரிவிக்கும் கருத்தை ஏற்க முடியாது. இந்த சம்பவத்தை யுத்தத்துடனும் இனவாதத்துடனும் தொடர்புபடுத்த கூடாது என மேல் மாகாண சபை உறுப்பினர் மல்ஷா குமாரதுங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைய கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, இளைஞர் யுவதிகள் மத்தியில் போதைப் பொருட்கள் விற்கப்படுவதாலே இவ்வாறான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெறுவதாக இந்திய திரைப்பட பணிப்பாளர் ஒருவர் கூறியிருக்கிறார். நாளாந்தம் 19 பேர் இங்கு பாலியல் வல்லுறவு செய்யப்படுகின்றனர். அதில் அநேகமான சம்பவங்கள் குறித்து முறையிடப்படு வதில்லை. புதுடில்லியில் மாணவியொருவர் கூட்டு பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்ட போதும் இது போன்று போராட்டம் வெடித்தது. யுத்தம் இல்லாத சூழலிலே இந்த சம்பவம் நடந்தது. ஆனால் இங்கு யுத்தத்தை அதனுடன் தொடர்புபடுத்த முயற்சி செய்கின்றனர். இதனை ஏற்க முடியாது.

சுற்றுலா விசாவில் செல்ல முற்பட்ட 29 பேர் கைது

சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டில் தொழில் புரிவதற்காக செல்ல முயன்ற 29 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். போலி தகவல்களை சமர்ப்பித்து சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டுக்கு தொழில்புரிய செல்பவர்கள் குறித்து கிடைத்துவரும் தகவல்களையடுத்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள இது தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு பணிப்புரை வழங்கியிருந்தார். இதன்படி குறித்த 29 பேரும் கைது செய்யப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. கைதானவர்களிடையே 25 பணிப் பெண்களும் இரு ஆண்களும் இரு உப முகவர்களும் அடங்குகின்றனர். 5 வயதுக்கு குறைவான பிள்ளைகள் உள்ள தாய்மாரே இவ்வாறு சுற்றுலா வீஸாவில் வெளிநாட்டுக்கு தொழில் பெற செல்ல முயன்றுள்ளதோடு இவர்கள் வவுனியா, தம்புள்ள, ருவன்வெல்ல, திருகோணமலை, களுவாஞ்சிக்குடி, அம்பாறை, சம்மாந்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அமைச்சர் தலதா அதுகோரலவின் ஆலோசனைக்கமைய கடந்த சில தினங்களில் இவ்வாறு 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுலா வீஸாவில் தொழில் தேடி செல்பவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பாரிய பிரச்சினை காணப் படுவதாக அமைச்சு தெரிவித்தது.

சீமானின் பிதற்றல்கள்

பத்து பன்னிரெண்டு நிமிட குறுகிய கால அவகாசத்தில் உன்னோடு போட்டோ எடுத்து, துப்பாக்கி தோட்டாவிற்கு இணையாக உன்னுடைய பேச்சை பாராட்டி, உனக்கு துப்பாக்கி சுட கற்றுக்கொடுத்து, உன்னை தனது வாரிசாக பிரபாகரன் அறிவித்தார் என்று நீ சொல்லுவதை கேட்கும் போது..... கீதையை மகாபாரதத்தில் இடைச் செருகல் செய்தவன் நிச்சயமாக உனது முப்பாட்டனாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்! 'இறுதிக்கட்ட போரின் போது, தலைவர் என்னிடம் எதாவது போராட்டம் நடத்தி சிறையை நிரப்ப சொன்னார். அப்போது என்னிடம் 5 ஆயிரம் பேர் இருந்திருந்தால் செய்திருப்பேன்'- சீமான். அடடா! அப்போதே செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விட்டிருந்தாலாவது ஐயாயிரம் பேர் கீழே நின்று வேடிக்கை பார்த்திருப்பார்கள்!

சிறுபான்மை உரிமைகளை அரசு இன்னமும் மீறுகிறது - அமெரிக்க ஆய்வு

யுத்தம் முடிவடைந்து 06 ஆண்டுகள் கழிந்தும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகள் மீறப்படுவதாக கலிபோர்னி யாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஆய்வுமையம் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளது. தமிழர்களின் பிரதேசத்தில் பெரும் எண்ணிக்கையிலான இராணுவத்தினர் தொடர்ச்சியாக குவிக்கப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு ஆறு தமிழ் பொது மகனுக்கும் ஒரு படைவீரர் என்ற ரீதியில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் போது படையினரால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் காணிகளில் பாரியளவில் சுற்றுலா விடுதிகள் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை மக்கள் தொடர்ந்தும் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். தமிழர் பிரதேசங்களில் கலாசாரம் மற்றும் வரலாறு திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் குறிப்பிட ப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப் படையில் இந்த அறிக்கை தயாரிக் கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தின் மன்காட்டன் என்ற இரட்டைக் கோபுரம் அமைந்த நகரத்தில் தற்போது ஒரு நபரின் நடவடிக்கையை 10 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் கண்காணித்து வருகின்றனர் என்பது இந்த ஆய்வு நிறுவனத்திற்கு தெரியும் என்றே நம்புகின்றோம். இலங்கையின் தமிழ் பிரதேசத்தை விட இங்கு பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம் என்பது அங்கு சுற்றுலாவில் செல்லும் யாவரும் அறிய முடியும். -சாகரன்

மார்க்சிச கண்ணோட்டத்தில் இரண்டாம் உலகப்போரும் பாசிசத்தின் தோல்வியும்

கடந்த மே மாதம் ஒன்பதாம் திகதி ஹட்டனில் நடைபெற்ற கிறிஸ்தவ தொழிலாளர் சங்கத்தின் மேதின தொழிலாளர் ஆராதனையின் போது பாசிசம் தோற்கடிக்கப்பட்ட 70வது ஆண்டு விழா தொடர்பாக தோழர் மோகன் சுப்பிரமணியம் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இது. கடந்த மே மாதம் 09ம் திகதி பாசிசத்தை தோற்கடித்த 70வது ஆண்டு விழாவை உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சோசலிஸ சக்திகள் விமர்சையாக கொண்டாடின. அன்றைய தினம் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ரஷ்யாவின் செஞ்சேனையும், சீனாவின் விடுதலை இராணுவமும் கூட்டாக அணிவகுத்து இந்த தினத்தை அனுஷ்டித்தன. பாசிசத்தை தோற்கடித்தது மட்டுமல்லாது உலக போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் 70வது ஆண்டாகவும் இதை நினைவுகூர வேண்டும். (மேலும்....)

மோடி அரசை விமர்சித்த சென்னை ஐஐடி மாணவர் அமைப்புக்கு தடை; கண்டனம், போராட்டம்!

மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் மாட்டிறைச்சிக்கு தடை, அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது உள்ளிட்ட கொள்கைகளை விமர்சித்ததற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி-யில் செயல்படும் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் (Ambedkar-Periyar Study Circle (APSC) என்ற மாணவர் அமைப்பு, அம்பேத்கர், பெரியார் மற்றும் தலித் சிந்தனைகளை பரப்பி வந்த நிலையில், இந்த அமைப்பினர், அரசு அலுவலகங்களில் இந்தி மொழிப் பயன்பாடு கட்டாயப்படுத்தப்படுவது, மாட்டிறைச்சிக்கு தடை, இந்துத்துவ அமைப்புகளின் முரணான தலித் எதிர்ப்பு நடவடிக்கை என பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிட்டு வந்தனர். (மேலும்....)

மியான்மார் (பர்மா) வில் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சிறுபான்மை இனங்கள்

சில மாதங்களுக்கு முன்னர், நான் ஒரு உணவுவிடுதியில் வேலை செய்த நேரம், மியான்மார் (பர்மா) நாட்டை சேர்ந்த இளைஞன் ஒருவன் சக தொழிலாளியாக வேலை செய்தான். அவன், மியான்மர் சிறுபான்மை இனங்களில் ஒன்றான, ஷின் பழங்குடி இனத்தை சேர்ந்த அகதி. ஐரோப்பாவுக்கு வரும் பெரும்பாலான அகதிகள், ஓரளவு வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். இந்த இளைஞனும் அதற்கு விதிவிலக்கல்ல. அதனால் விசாலமான உலகப்பார்வையும் அவனிடம் இருந்தது. ஷின் மக்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். பர்மிய மொழி பேசும் பெரும்பான்மை சமூகம் பௌத்தர்களாக இருந்த படியால், காலனிய காலத்தில் கிறிஸ்தவ மிஷனரிகள் ஷின் போன்ற பழங்குடி சமூகங்களை மட்டுமே மதம் மாற்றி இருந்தனர். கிறிஸ்தவ மதத்துடன் மேலைத்தேய பண்பாடும் போதிக்கப் பட்டது என்பதை இங்கே கூறத் தேவையில்லை. (மேலும்....)

வைகாசி 29, 2015

புங்குடுதீவு மாணவியின் படுகொலையும், அதனால் ஏற்பட்ட அதிர்வலைகளும் அடக்குமுறைக்குள் வாழ்ந்த எமக்கு ஆச்சரியமே

(அ.விஜயன்)

புங்குடுவீவு மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டணை கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் சம்பவம் நடந்த பகுதியில் மட்டுமல்ல நாட்டின் சகல பகுதிகளிலும் இன மொழி பேதமின்றி நடந்துள்ளது.இப்படியொரு போராட்டத்தை மூன்று சகாப்தங்களாக பலர் பார்த்திருக்கமாட்டார்கள் ஜனநாயகப் போராட்டங்களை அடக்கியதும், அதனால் ஏற்பட்ட வன்முறைகளும் ,உயிர் இழப்புகளுமே வரலாறாக உள்ளது. நியாயங்களுக்கான பல போராட்டங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டது. நீதிமான்கள், நேர்மையாளர்கள் பலர் ஜனநாயகப்போராட்டங்கள் மறுக்கப்பட்டதால் புலம்பெயர்ந்துள்ளார்கள் பலர் அழித்தொழிக்கப்பட்டார்கள். (மேலும்....)

20 இல் 15 முக்கிய அம்சங்கள்
சிறுபான்மை நலன் கருதியே ஆசனங்கள் அதிகரிப்பு

  • பெண்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடு
  • தொகுதி, பல்தொகுதிமுறை அறிமுகம்
  • விருப்பு வாக்குமுறை ரத்து
  • தேர்தல் மறுசீரமைப்பை பூர்த்தி செய்ய ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் குழு

15 அம்சங்கள் உள்ளடங்கும் வகையில் புதிய 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டது. சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளை பாதுகாக்கும் வகையிலே இதில் எம்.பிகள் தொகை 255 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். (மேலும்....)

தேர்தலில் மஹிந்த போட்டியிடுவது உறுதி

தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவை நிறுத்துவது என்பதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுதியான நிலைப்பாடு. எனினும் அவர் எந்த நிலையில் நிறுத்தப்படுவார் என்பதில் முடிவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னர் 20வது அரசியல மைப்புத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே கட்சியின் நிலைப் பாடாகும். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளும் மாகாண சபையில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளுமாக 14 கட்சிகள் உள்ளன. இந்த 14 கட்சிகளே பொதுத் தேர்தல், உள்ளூராட்சி சபைத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபை தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றன. இந்த கட்சிகள் ஒன்றிணைந்து கலந்துரை யாடிய பின்பு ஜனாதிபதியையும் சந்தித்து தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தற்போதுள்ளன. இதற்கிணங்கவே ஜனாதிபதியுடனான சந்திப்பும் இடம்பெற்றது.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலுக்குச் செல்ல வேண்டும் என்ற ஏகமனதான நிலைப்பாட்டிலேயே உள்ளது. தேர்தலில் நின்று ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதே எமது உறுதியான நோக்கம். அதனை இலக்காகக் கொண்டே கட்சியின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தானோ?

தென் ஆப்பிரிக்காவில் பிரதமராக இருந்த ஜெனரல் ஸ்மட்ஸுக்கு நாடாளுமன்றத்தில் பேச சில புள்ளிவிவரங்கள் தேவைப்பட்டன. தனது செயலாளரை அழைத்து, 'நாளைக்குள் எனக்கு இந்தப் புள்ளிவிவரங்கள் தேவை. அதை வைத்து எதிர்க்கட்சிகளைத் திணறடிக்க வேண்டும்’ என்றார். திகைத்துப்போன செயலாளர், 'சார் இந்தப் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க, அரசாங்கத்துக்கே குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்’ என்றார். 'நீங்க என்ன செய்வீங்களோ, ஏது செய்வீங்களோ... அதெல்லாம் எனக்குத் தெரியாது. நாளை எனக்குப் புள்ளிவிவரங்கள் தேவை’ என்று சொல்லிவிட்டார் ஸ்மட்ஸ். ஆனால், குறித்த கெடுவுக்குள் செயலாளரால் புள்ளிவிவரங்களைச் சேகரிக்க முடியவில்லை. மறுநாள் பாராளுமன்றம் கூடியது. செயலாளர் உதறலுடன் அமர்ந்திருக்க, புள்ளிவிவரங்களை அள்ளி வீசி அனைவரையும் வியப்படைய வைத்தார் ஸ்மட்ஸ். பாராளுமன்றக் கூட்டம் முடிந்ததும் ஸ்மட்ஸிடம், 'எப்படி சார் இவ்வளவு புள்ளிவிவரங்களை ஒரே ராத்திரியில் சேகரிச்சீங்க?’ என்று கேட்டார் செயலாளர். ஸ்மட்ஸ் சிரித்தவாறே, 'இந்த விவரங்களைச் சேகரிக்க அரசாங்கத்துக்கே ஐந்து வருஷம் ஆகும்னு சொன்னீங்க. அப்படின்னா இதெல்லாம் உண்மையானு கண்டுபிடிக்க எதிர்க்கட்சிகளுக்கு 15 வருஷமாவது ஆகும். அவங்க கண்டுபிடிச்சு என்னை மடக்குறதுக்குள்ளே நிச்சயமா நான் இந்தப் பதவியில இருக்க மாட்டேனே...’ என்றார்.''

வித்தியா படுகொலை

கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

யாழ்ப்பாணம், புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கல்முனை மாநகர சபையில், கண்டனம் பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்று புதன்கிழமை மாலை முதல்வர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்றபோது, மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.அமிர்தலிங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த கண்டனப் பிரேரணை, அனைத்து உறுப்பினர்களினதும் முழுமையான ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இப்பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிய கல்முனை மாநகர முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமுமான சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிஸாம் காரியப்பர், 'நாட்டில் நல்லாட்சி மலர்ந்துள்ள சூழ்நிலையில் வடக்கில் சமாதானத்தை சீர்குலைப்பதற்கு சில தீயசக்திகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கூட அதன் பின்னணியாக இருக்கலாம் என்கின்ற சந்தேகம் எழுகின்றது' என்றார். அத்துடன், 'தனித்துவமான கலாசாரம் ஒன்றைக் கொண்டுள்ள தமிழ் சமூகத்துக்குள் இவ்வாறான கொடூரம் ஒன்று இடம்பெற்றுள்ளமையானது எமக்கு பெரும் அதிர்ச்சியையையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்' என்றும் அவர் கூறினார்.

சீமானின் விழி பிதுங்கும் பதில்கள்

திரும்பி வந்தால் ஈழம் எங்கேயென்று கேட்கமாட்டார். ஏனென்றால் அவர் கண்முன்னேயே அது அழித்தொழிக்கப்பட்டதை பார்த்தவர் அவர்.
வேண்டுமானால்.......,
" புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ஈழத்தின் பேரால் ஆட்டையை போட்ட பணம் எங்கே?' -என்று கேட்பார்!

(நீங்கள் சொல்லக்கூடும்..... " ஹிஹி... izuzu கார் வாங்கிவிட்டேன்" -என்று !)

Aung San Suu Kyi's inexcusable silence
Aung San Suu Kyi was a moral icon, a human rights champion - so why has she been silent about the Rohingya Muslims?

(Mehdi Hasan)


"In awarding the Nobel Peace Prize ... to Aung San Suu Kyi," the Norwegian Nobel Committee announced in 1991, it wished "to honour this woman for her unflagging efforts and to show its support for the many people throughout the world who are striving to attain democracy, human rights and ethnic conciliation by peaceful means". Suu Kyi, the Committee added, was "an important symbol in the struggle against oppression". Fast forward 24 years, and the Rohingya Muslims of Myanmar might disagree with the dewy-eyed assessment of the five-member Nobel Committee. And with Gordon Brown, too, who called Suu Kyi "the world's most renowned and courageous prisoner of conscience". Not to mention Archbishop Desmond Tutu, who has said that the people of Myanmar "desperately need the kind of moral and principled leadership that Aung San Suu Kyi would provide".
In recent years, the Rohingya Muslims - "the world's most persecuted minority", according to the United Nations - have struggled to attract attention to their plight. (more....)

தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான இடைவெளி மயிரிழைதான்.

ரோஹிங்யா முஸ்லிம்களின் இன அழிப்பு நம் கவலைக்குரிய ஒன்று. ஆனால் முஸ்லிம் நண்பர்கள் இந்த அடிப்படையில் பவுத்தத்தின் மீதும் பவுத்தர்கள் மீதும் வெறுப்பைச் சுமக்க வேண்டாம். பவுத்தம் அன்பையும் அறத்தையும் போதித்த மதம். அதில் வன்முறைக்கு இடமில்லை. இது பர்மிய தேசியவாதத்தின் வெளிப்பாடு. தேசியம் தனது வன்முறைகளை "இனம்" , "மொழி", "மதம்" முதலான அடிப்படைகளில் மேற்கொள்கிறது; நியாயப் படுத்துகிறது. இங்கே அது இந்திய இந்துத்துவவாதிகளைப்போல மதத்தைக் கையில் எடுக்கிறது. நண்பர்களே நினைவிற் கொள்ளுங்கள்..... நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் தேசியத்திற்கும் பாசிசத்திற்குமான இடைவெளி மயிரிழைதான். இதோ இன்று பவுத்தத்தின் அடையாளமாகத் திகழும் தலாய்லாமா அவர்கள் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு ஆங்சான் குயிக்கு வேண்டுகோள் விடுக்கிறார். (Marx Anthonisamy)

வைகாசி 28, 2015

வித்தியாவிற்கு நீதி கேட்ட மக்கள் எழுச்சி

வித்தியாவிற்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிரான மக்கள் எழுச்சி தொடர்பாக பல்வேறு விதமான வியாக்கியானங்கள் உலாவுகின்றன. இன்று இந்தப் புங்குடுதீவில் நிகழ்ந்த கொடுமை இலங்கை முழுவதும், புலம் பெயர்தளத்திலும், சர்வதேச மனித உரிமை வட்டாரங்களிலும் எதிரொலித்திருக்கிறது. நாம் காட்டுமிராண்டித்தனங்களைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என்ற செய்தியே அது. நாகரிகமான -கண்ணியமான, சுதந்திரமான, பாரபட்சமற்ற வாழ்க்கைக்கான உந்துதலே. அரச பயங்கரவாதிகளின் சத்துருக் கொண்டான் அகதி முகாம் படுகொலைகளுக்கும்- திருகோணமலை நகர மாணவர் படுகொலை மற்றும் மூதுர் பிரான்ஸ் அரசசார்பற்ற நிறுவன தொண்டர்கள் படுகொலைக்கும், கோணேஸ்வரி, கிருசாந்தி, சாரதாம்பாள், கமலிட்டா பாலியல் பலாத்காரப்படுகொலைகளுக்கும் வெள்ளைவான் கடத்தல்களில் அள்ளுகொள்ளையாக ஆட்கள் காணாமல் போகச் செய்யப்படடபோதும், யாழ்மையவாத தமிழ் பாசிசம் 1986 இல் 'ரெலோ' இயக்கத்தவரை சந்தி சந்தியாக எரித்த போதும், மாற்று இயக்கங்களின் போராளிகள் ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் -இயக்கங்கள் ஒவ்வொன்றாக தடைசெய்யப்படபோதும், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன ஸ்தாபனங்கள் தடைசெய்யப்பட்டபோதும் முஸ்லீம்மக்கள் ஒரேயடியாக ஊரை விட்டு அகற்றப்பட்டபோதும், காத்தான் குடி பள்ளிவாசல் படுகொலைக்கு ஒரே வீட்டில் 53 பேரை பூட்டிவைத்து கொன்ற போதும் (கந்தன் கருணைப்படுகொலை) மக்கள் தமது எதிர்ப்பை வீதியிலிறங்கி காட்டமுடியவில்லை.(மேலும்....)

தன் இனத்திற்கு உண்மையாய் இருந்த "வழிகாட்டி" ஹிட்லரின் யோக்கியதையைப் பாரீர்...

 

 

ஹிட்லரை வழிபடும் சீமான்

சீமான் ஹிட்லரை தன்னுடைய வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஹிட்லரை வழிகாட்டியாக இதற்கு முன் இந்தியாவில் ஏற்றுக்கொண்டிருந்தவர் தமிழர்களை ஓட ஓட விரட்டிய பால் தாக்கரேதான். பால் தாக்கரே இறந்தபோது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியவர் சீமான். தேசிய இன மேன்மைக்காக இன்னொரு இனத்தை பூண்டோடு அழிப்பவர்களை வணங்கலாம் என்றால் சீமான் வணங்க வேண்டிய முதல் ஆள் ஹிட்லர் அல்ல, ராஜபக்‌ஷே. சிலர் தாங்கள் செய்துகொண்டிருந்த பிசினஸ் படுத்துவிட்டால் பைத்தியமாகி தற்கொலை செய்துகொள்வார்கள். சீமான் முருக வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான். அவரது நம்பி இதுவரை சம்பளம் கொடுத்துக்கொண்டிருந்த புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பென்ஷனாவது கொடுக்க முன் வந்திருந்தால் இந்த சோகம் சீமானுக்கு நேர்ந்திருக்காது.

மக்களின் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றன.......!

 

புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, ஆமர்வீதி சந்தியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர் கள், மாணவர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டு குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை உடனடியாக வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுக்கப்பட்ட படம். (படம்: கொழும்பு கோட்டை தினகரன் நிருபர் ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)

 

மட்டக்களப்பில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமைபுரியும் அரசாங்க உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் நேற்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் மண்டூரில் படுகொலை செய்யப்பட்ட நாவிதன்வெளி பிரதேச செயலக சமூகசேவை அதிகாரியின் படுகொலையை கண்டித்தும் அதன் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறும் கோரியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவிற்கு அனுப்புவதற்கான மகஜரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. கிரிதரனிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தனர். நல்லாட்சியில் எமது பாதுகாப்பை உறுதி செய், குற்றவாளியை உடனடியாக கைது செய், எமது பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.

 

மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி

பவுத்தம் என்றால் புத்தர் சிலைகளின் தியான இருப்பு, அசோகருக்கு வழி காட்டிய ஆன்மீக நெறி, தலித் மக்களுக்கு கண்ணியமிக்க புகலிடமாக அம்பேத்கர் காட்டிய மார்க்கம், சிலப்பதிகாரத்தின் அறம், தலாய் லாமாவின் துறவி வேடம் என்ற பிம்பங்கள் மட்டும் முழுமையில்லை. ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்து எஞ்சிய மக்களை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கும் சிங்கள-பவுத்த பேரினவாதம், மியான்மாரில் ரொகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது தொடர் இனவெறி தாக்குதல்கள் நடத்தும் பவுத்த மதவாதம் போன்ற சமூக எதார்த்தங்ககள் இன்றி பவுத்த மதம் இல்லை. (மேலும்....)

 

வைகாசி 27, 2015

வெளி வந்துவிட்டது வானவில் 53

மக்கள் விரோத, தேச விரோத

ஐ.தே.கவுக்கு எதிரான சக்திகள் ஐக்கியப்பட வேண்டும்!

இவ்வருடம் ஜனவரி 08ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று புதிய அரசாங்கம் அமைந்த பின்னர், நாட்டின் ஆட்சி முறையிலும், மக்களின் நாளாந்த வாழ்விலும் பல தலைகீழ்
மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. மாற்றங்கள் என்பது இயல்பானவையும், தவிர்க்க முடியாதவையும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே ஒரு தனி மனிதனும் சரி, ஒரு நாடும் சரி, மாற்றங்களை ஒருபோதும் தவித்துவிட்டு வாழ முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் நல்ல வழியில் நடந்தால் மட்டுமே அதனால் பயன் உண்டு. அப்படி நல்ல வழியில் மாற்றங்கள் நடப்பதற்கு மனிதப் பிரயத்தனம் மிக அவசியமானது. அப்படிப் பார்த்தால் நமது நாட்டில் ஜனவரி 08ஆம் திகதி நடைபெற்ற ஆட்சி மாற்றம் நல்ல திசை வழியில் நடைபெற்றுள்ளதா என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியமானது. (மேலும்....)

சாய்ந்த மரங்கள்

புங்குடுதீவு விவகாரம்: ஜனாதிபதி பணிப்பு


புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை விசேட நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்தே அவர் இன்று செவ்வாய்க்கிழமை இவ்வாறு பணித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயமொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (26) மேற்கொண்ட ஜனாதிபதி, அண்மையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவி வித்தியாவின் பெற்றோரை சந்தித்து கலந்துரையாடியதோடு யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலொன்றிலும் கலந்துகொண்டார்.

பொதுபல சேனா ஞானசார தேரர் கைது

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வண. கலபொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். கறுவாத்தோட்ட பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர் 5 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் பத்து இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.கோத்தாபய ராஜபக்ஷ இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு விசாரணைக்கு அழைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர்கள். பிக்குமார் அடங்கலான குழுவினர் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு விதித்தும் அதை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதால் ஐ. ம. சு. மு. பாராளு மன்ற உறுப்பினர்கள். முருத்தொடுவே ஆனந்த தேரர், ஞானசார தேரர் அடங்கலான 27 பேருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது. சந்தேக நபரை நீதிமன்ற சிறை கூண்டில் நிறுத்தாது பொலிஸ் சோதனை சாவடியில் நிறுத்தியது குறித்து நீதவான் பொலிஸாருக்கு தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

பேச்சு அதிகம், உண்மை அப்படியில்லை

மோடி ஆட்சி பற்றி அமெரிக்க பத்திரிகைகள் கருத்து

நியூயார்க்: 'ஓராண்டை நிறைவு செய்துள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசு, பல சாதாரண திட்டங்களை ஊதி பெரிதாக்கி காட்டி, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்தது போல காட்டுகிறது. ஆனால், உண்மையில் நிலைமை அப்படியில்லை' என, அமெரிக்க பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. 'வால் ஸ்ட்ரீட் ஜார்னல்' என்ற பத்திரிகையின் தலைப்பு, 'எதிர்பார்ப்புகள் முடிவடைந்துவிட்டன. சவால்கள் அதிகரித்துள்ளன' என, தெரிவித்துள்ளது. அந்த செய்தியில், 'இந்தியாவில் உற்பத்தி' என்பதை உரக்க கோஷமிட்டாலும், உண்மை நிலவரம், கலவரமாகவே உள்ளது. ஏற்றுமதி அதிகரிக்கவில்லை. மாறாக, தொடர்ந்து, ஐந்து மாதங்களாக ஏற்றுமதி குறைந்தே போயிருந்தது. (மேலும்....)

'மெல்ல மெல்லக் கொல்லும்...' வீதி நாடகம்

இது என்னால் உருவாக்கப்பட்டு நெறியாள்கை செய்யப்பட்டிருக்கின்றது. இதன் முதல் அரங்கேற்றமாக கடந்த 23.05.2015 அன்று சனிக்கிழமை பாலச்சந்தையில் இடம்பெற்றிருந்தது. (பாலச் சந்தை என்பது மட்டக்களப்பு கல்லடிப்பால முன்றலில் சில வாரங்களாக ஒஸ்பாம் நிறுவனம் இயற்கை விவசாயமுறையில் உற்பத்தி செய்யப்பட்ட நஞ்சில்லாத காய்கறிகள் மற்றும் உள்ளுர் உற்பத்திகளுக்காக தொடங்கப்பட்டுள்ள சந்தை) கிழக்கு மாகாண சபையின் விவசாயத் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் கரிகரன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். பேராசிரியர்.சி.மௌனகுரு அவர்கள் சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டனர். (மேலும்....)

நல்ல நாட்களுக்காகக் காத்திருக்கும் தேசம்

தன்னுடைய ஆட்சியின் முதலாண்டை முடித்து இரண்டாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது நரேந்திர மோடியின் பாஜக தலைமையிலான தேஜகூ அரசு. பொதுவாக, ஆட்சியாளர்கள்தான் தங்களுடைய ஆட்சிப் பொறுப்பேற்பின் ஆண்டு நிறைவை மக்களுக்கு நினைவூட்டுவார்கள். இந்த ஆட்சியைப் பொறுத்த அளவில், அரசாங்கத்தை முந்திக்கொண்டு ஏனையோர் - முக்கியமாக எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் - முன்னிற்பதைப் பார்க்க முடிகிறது. இதற்கு நியாயமான காரணமும் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பு மட்டும் அல்லாமல், தேர்தல் முடிந்தும் தொடர்ந்துகொண்டிருக்கும் அரசின் பிரச்சாரம் அப்படி. ஒருவர் மேடையில் நின்று பார்வையாளர்களைப் பார்த்து, சதா தன் புஜபலத்தைத் தட்டிக்காட்டிக்கொண்டே இருக்கும்போது, பார்வையாளர்களும் அவருக்கான நியாயத்தைச் செய்யத் தருணம் பார்த்துக்கொண்டிருப்பார்கள்தானே? இதோ, ஓராண்டு முடிந்துவிட்டது, தருணம் வந்துவிட்டது. மக்கள் தம் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார்கள். (மேலும்....)

அண்ணன் பிரபாகரன் வந்து எங்கடா தம்பி ஈழம் என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன் - சீமான்
ஈழத்தாயிடம் அடகு வைத்து பேரிச்சம் பழம் வாங்கி தின்னுட்டேன்னு சொல்லு அதுதானே உண்மை

மதுபானக் கடை இல்லாத அதிசயம்: மழைநீர் சேகரிப்பில் முன்மாதிரி கிராமம் - 20 ஆண்டுகளாக சாதித்து வரும் ஊராட்சித் தலைவி

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பட்டினம் ஊராட்சியில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளித்து, டாஸ்மாக் கடைகள் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளார் அக்கிராமத்தின் ஊராட்சித் தலைவி சேசு மேரி. இவர் தனது கிராமத்தில் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பல்வேறு சமூகநலத் திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறார். 1996-ம் ஆண்டு ஊராட்சித் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட சேசுமேரி, பியுசி வரை படித்துள்ளார். கிராம வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க அன்று தொடங்கிய சேசுமேரியின் பணி இன்று வரை தொடர்கிறது. (மேலும்....)

வைகாசி 26, 2015

ஆயா என்னும் வயதான ஆத்மா......?

(ஆயா என்பது பேத்தியாரைக் குறிக்கும் சொல்)

வெளிநாடு வாழ் சிறீலங்கா தமிழர் அமைப்பு’ – Non-Resident Tamils of Sri Lanka(NRTSL)ஒரு அறிமுகம்

(தோழர் விஸ்வலிங்கம் சிவலிங்கம்)
 

எதிர்வரும் 31-05-2015ம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலண்டனில் ‘வெளிநாடு வாழ் சிறீலங்கா தமிழர் அமைப்பு’ (NRTSL) அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இவ் வைபவம் தொடர்பான முன்னோட்டம் இதுவாகும். இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியும், நல்லிணக்க முயற்சிகளும் ஒருங்கிணைவாக எடுத்துச் செல்வதற்கு சகல இன மக்களினதும் பங்களிப்பு அவசியமானது. இதில் வெளிநாடு வாழ் இலங்கையர் இணைவு பிரத்தியேகமானது. அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானது. ஏனெனில் மிகவும் கணிசமான தொகையுள்ள தமிழ் சமூகத்தினர் புலம்பெயர் நாடுகளில் காத்திரமான பொருளாதார வலுவுள்ள மக்களாக உள்ளனர். இம் மக்கள் இலங்கையின் ஒட்டுமொத்தமான பொருளாதார அபிவிருத்தியில் வலுவான விதத்தில் இணைக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் அல்லது தேசத்தின் சகல சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளை அர்த்தமுள்ள விதத்தில் தீர்க்க முடியும். பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தாமல் அரசியல் இணக்கத்தினை ஏற்ற விதத்தில் எடுத்துச் செல்ல முடியாது. (மேலும்....)

வித்தியா கொலையில்

வியாபாரம் நடத்திய சிறிதரன், தமிழ்மாறனுக்கும் கொலைச் சம்பவத்திற்கும் தொடர்பு என்ன?

(புங்குடுதீவான்)

வித்தியா என்னும் மாணவி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பல மாதிரியான கோணங்களில் திசை திரும்பி சுழன்றடித்துக் கொண்டு திரிகின்றது. உண்மையில் வித்தியாவைக் கொடூரமாகக் கற்பழித்து கொலை செய்தவர்களுக்கு மரணதண்டனை நிச்சயம் கொடுக்க வேண்டும் என்பதில் எந்தவித மாறுபட்ட கருத்துக்களும் இருக்கப் போவதில்லை. அத்துடன் தீவகத்தில் நடந்த பாரிய 4 கொலைச் சம்பவங்களுடனும் இவர்கள் தொடர்புபட்டுள்ளார்களா என்பதும் பொலிஸ்விசாரணையில் கண்டறியப்படல் வேண்டும். அத்துடன் தீவகம் உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல கற்பழிப்புக்கள் வெளியே வராது உள்ளது. இவற்றுடன் சம்மந்தப்பட்டவர்கள் யார் என்பதையும் இவர்கள் மூலம் விசாரணை செய்து அறிய வேண்டும். (மேலும்....)

தமிழ் படிக்க ஆசைப்படுகிறார் பிரதமர் ரணில்!

தமிழ் மொழியை படிக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆசைப்படுகின்றார் என்று அலரி மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும்பில் சில வாரங்களுக்கு முன்னர் கம்பன் விழா இடம்பெற்றது. இதில் சிறப்பு நிகழ்வுகளில் ஒன்றாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்ப் பாசனம், நீர் விநியோக அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கவியரங்கம் இடம்பெற்றது. இலக்கியம் என்பது காலத்தை காட்டுகின்ற கண்ணாடி என்கிற வகையில் இவரின் தலைமைக் கவிதையில் உள்நாட்டின் சம கால அரசியல் பேசப்பட்டது. ஆனால் சக கவிஞர்கள் மாத்திரம் அன்றி, பேராளர்கள், சபையோர்கள் ஆகியோரும் இவரின் கவிதையை பெரிதும் இரசித்தனர். மறுநாள் பத்திரிகைகள் இக்கவியரங்கம் குறித்து செய்திகள் வெளியிட்டும் இருந்தன. அத்துடன் எம். ஏ. சுமந்திரன் எம். பி, ஈஸ்பரபாதம் சரவணபவன் எம். பி போன்றோர் ரவூப் ஹக்கீமின் கவிதையை பிரதமரிடம் சிலாகித்து உள்ளனர். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் ஐக்கிய தேசிய கட்சியின் பங்கு, பங்களிப்பு ஆகியன குறித்தும் மிக அழகாக ஹக்கீம் கவிதை பாடி இருக்கின்றார் என்பது பிரதமரின் முகத்தை மலர வைத்தது. ஆயினும் சற்று நேரத்தில் அதில் சிறிய சோக ரேகையும் படரவே செய்தது. இக்கவிதையை படிக்கின்றமைக்கு, இரசிக்கின்றமைக்கு தமிழ் மொழி தெரியாமல் போய் விட்டதே? என்று சொல்லி பிரதமர் ஆதங்கப்பட்டு கொண்டார்.

பெரும்பான்மை பலமுள்ள ஐ.ம.சு.முவிடம் அரசை கையளிக்க வேண்டும்

பெரும்பான்மை பலமுள்ள ஐக்கிய மக்கள் சதந்திர முன்னணியிடம் அரசாங்கத்தை கையளிக்குமாறு கோரி முன்னணியின் அரசியல் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் தமது ஏகமனதான தீர்மானத்தை ஜனாதிபதிக்கு கடித மூலம் அனுப்பியுள்ளதாக முன்னாள் அமைச்சரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பெரும்பான்மை பலத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் அமைத்து பிரதமரையும் தெரிவு செய்த பின் பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வழிவகை மேற்கொள்ளுமாறும் அவர்கள் ஜனாதிபதியைக் கோரியுள்ளனர். பிரதமரை நியமிப் பதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி க்குள் எந்தவித சிக்கல்களும் கிடை யாது என்பதையும் நாம் ஜனாதிபதி க்குத் தெரிவித்துள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அரசாங்கத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தயார் என்றால் பிரதமர் யார் என்று அறிவிக்க நாம் தயார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமரே ஆட்சியிலிருந்ததாகக் குறிப்பிட்ட தினேஸ் குணவர்த்தன, அந்த பிரதமரை விலக்கி விட்டு அரசியமைப்புக்கு மாறாக பலமில்லாத பிரதமர் ஒருவரை எவ்வாறு நியமிக்க முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாத்திகர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள்.

உலகில் அதிகமானவர்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள் - 220 கோடிப்பேர். அதாவது உலக மக்கள்தொகையில் 32 சதவீதத்தினர். அடுத்த பெரிய மதம் இஸ்லாம். 160 கோடிப்பேர் அந்த மார்க்கத்தை ஏற்றவர்கள். 23 சதவீதம். இந்துக்கள் 100 கோடிப்பேர் இருக்கிறார்கள். 14 சதவீதம். புத்த மதத்தினர் 50 கோடிப்பேர் உள்ளனர். 7 சதவீதம். மற்ற மதங்களைச் சேர்ந்தோரின் எண்ணிக்கை இதற்குப் பிறகுதான் வருகிறது. உலக மக்கள்தொகையில் 16 சதவீதத்தினர், 110 கோடிப்பேர், அதாவது எண்ணிக்கை வரிசைப்படி மூன்றாவது இடத்தில் இருப்பவர்கள் யார் தெரியுமா? நாத்திகர்கள், மதநம்பிக்கை இல்லாதவர்கள். கடவுள் எனப்படுகிறவர்தான் இந்த உலகத்தைப் படைத்தார் எனக்கூறி, இங்குள்ள ஏழை-பணக்காரர் ஏற்றத்தாழ்வுகள், சாதி-மத வேறுபாடுகள், பாலின ஒடுக்குமுறைகள் அனைத்துக்கும் இல்லாத ஒருவர் மீது பழி போடாதவர்கள்.

(ஆதாரம்: 2012ல் ‘பியூ ஃபோரம் ஆன் ரிலீஜன் அன் பப்ளிக் லைஃப்’ என்ற ஆய்வுக்குழுவால் 230 நாடுகளில், 2,500 மக்கள்தொகை கணக்கெடுப்புகளை ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு)

மீட்கப்பட்ட குழைந்தையின் மீது கருணைகாட்டும் தமிழ் நாடு காவல்துறை

அம்பலம் ( தெரு மூடி மடம் )

யாழ்ப்பாணப்பண்பாட்டு பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத்தித்துறைக்கென்றும் தனித்துவமான பண்பாட்டுக் குறிகாட்டிகள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் தெருமூடி மடமாகும். யாழ்ப்பாணத்தில் பண்டார மடம், உப்பு மடம், முத்தட்டு மடம், மருதனார் மடம், ஆறுகால் மடம், கந்தர் மடம், நாவலர் மடம், செட்டியர் மடம், சுப்பர் மடம், ஒட்டு மடம், பண்டத்தரிப்பு மடம், சாரையடி மடம், சங்கத்தானை மடம், பனைமுனை மடம், நெல்லியடி மடம், திருநெல்வேலி மடம், மடத்துவாசல் ஆகிய இடங்களில் இத்தகைய தங்குமிடங்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் ஆனால் பருத்தித்துறை தெரு மூடி மடம் போல தெருவை மூடி இருமருக்கிலும் இருந்துள்ளன என்பது வெளிப்படையான உண்மையே.(மேலும்....)

வைகாசி 25, 2015

உலகத்தின் பார்வையில்நம் இலங்கை கலைஞர்கள்.....

நல் வாழ்த்துக்கள்!! இன்னும் சாதியுங்கள்....

தீபன்

ஈழத்தமிழ் அகதிகளின் கதை.
.
பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய “தீபன்” திரைப்படம் dheeebanஇன்றுடன் (24-05-2015) நிறைவடைந்த கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது. பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழ் அகதிகளின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் இந்த திரைப்படத்தில் ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழ ஆயுதப் போராளியுமான ஷோபாசக்தி கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் தமிழ்நாட்டைச்சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரியும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். (மேலும்....)

யாழ் நீதிமன்றத்தில் கலகம்.......!

15 பேர் கொண்ட சி.ஐ.டி குழு யாழ்ப்பாணம் விரைவு

நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துவதற்கென குற்றப் புலனாய்வு திணைக்களத்தை சேர்ந்த 15 பேர் கொண்ட (சிஐடி) குழுவினர் யாழ்ப்பாணம் விரைந்திருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்தார். யாழ். குடாநாட்டில் அமைதியின்மையை தோற்றுவிப்பதற்காக ஏதேனும் தேசவிரோத சக்திகள் இந்த சம்பவத்தின் பின்னணியிலிருந்து செயற்படுகிறதா என்பதனை மையப்படுத்தியதாகவே இதன் விசாரணைகள் அமையுமென்றும் பொலிஸ் பேச்சாளர் கூறினார். இந்த விசாரணைகளின் முதல் கட்டமாக, நீதிமன்ற கட்டடத் தொகுதியின் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட தனிநபர்களின் ஆள் அடையாளத்தை சிஐடியினர் உறுதிப்படுத்தவுள்ளனர். இதேவேளை, கடந்த புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து தம்வசம் புகைப்படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகள் வைத்திருப்போர் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு யாழ். மஜிஸ்ட்ரேட் பி. சிவக்குமார் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. விசாரணைகளின் இறுதியில் உண்மை கண்டறியப்படுமென்றும் இதற்கு யாழ். மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

புங்குடுதீவின் மகள்

புலிகளின் காலம் போல் உடன் தண்டனை வழங்கப்பட வேண்டும் என கேட்பவர்கள் ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டும். விடுதலை போராட்டகாலத்தில் சட்டம் ஆயுதங்களின் கையில் மாறியது. அப்போது மின்கம்ப தண்டனை சர்வசாதாரணம். செத்தவன் துரோகி அல்லது சமூக விரோதி. கொன்றதர்க்கான காரணம் நடந்த விசாரணை, நிரூபிக்கபட்ட உண்மை எதுவுமே கொன்றவருக்கு மட்டுமே தெரியும். மக்கள் அதனை விடுதலை போர் என்ற நிகழ்ச்சிக்குள் மௌனித்தார்கள். ஆரம்பத்தில் சில நியாயப்படி நடந்திருந்தாலும் நடந்தவை அனைத்தும் அவ்வாறானதல்ல. விஜிதரன்,விமலேஸ்வரன்,செல்வி,,ரஜனி, அகிலன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அந்த காலத்துள் மீள்பிரவேசிக்கும் அளவிற்கு நம்முள் மனிதம் செத்துவிடவில்லை.இன்று வாய்திறக்க, போராட மக்கள் தொடங்கிவிட்டதே அதற்க்கான நல்ல சகுனமாக கொண்டு சட்டபடி எந்த அரசியல் தலையீடும் இன்றி தீர்ப்புகள் வழங்க வழி சமைப்போம். (மேலும்....)

சாதி வெறியின் உச்சம்

அம்பேத்கர் ரிங்டோன் வைத்திருந்த தலித் இளைஞரை அடித்துக் கொன்ற ஆதிக்க சாதியினர்

மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் அம்பேத்கர் பாடலை செல்போனில் ரிங்டோனாக வைத்திருந்த தலித் வாலிபரை ஆதிக்க சாதியினர் 8 பேர் சேர்ந்து அடித்துக் கொலை செய்தனர்.மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நர்ஸிங் மாணவர் சாகர் ஷெஜ்வால் கடந்த 16 ஆம் தேதி திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஷீரடிக்கு சென்றார். பிற்பகல் 1.30 மணிக்கு அவர் தனது உறவினர்கள் 2 பேருடன் உள்ளூரில் உள்ள மதுபானக் கடைக்கு சென்று பீர் குடித்துள்ளார். அப்போது சாகரின் செல்போன் ஒலித்துள்ளது.தலித் சமூகத்தை சேர்ந்த சாகர், அம்பேத்கர் பற்றிய பாடலை (உங்கள் தேவைகளுக்காக போராடுங்கள். அம்பேத்கரின் கோட்டை வலுவானது) ரிங்டோனாக வைத்துள்ளார். இந்த பாடல் ஒலித்ததைக் கேட்டு கடுப்பான ஆதிக்க சாதியைச் சேர்ந்த 8 பேர் அவரை பீர் பாட்டிலால் அடித்து பைக்கில் ஏற்றி அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து அவர்கள் சாகரை சித்திரவதை செய்து அவர் மீது பைக்கை ஏற்றி கொலை செய்துள்ளனர். மராதா மற்றும் ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த அந்த 8 பேர் சாகரின் உடல் மீது மீண்டும் மீண்டும் பைக்கை ஏற்றி அவரது உடலை உரு தெரியாமல் சிதைத்துள்ளனர். (மேலும்....)

ரஜினி அரசியலுக்கு வந்தால்.......?

ரஜினி அரசியலுக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்று இன்னும் சில மாங்கா மடையர்கள் நம்பத்தான் செய்கிறார்கள். அவர் 1991-96 வரையிலான ஜெயலலிதா ஆட்சிக்கெதிராகத்தான் 1996ல் கடும் விமர்சனத்தை வைத்து தான் அரசியலுக்கு வரப்போவது போல மாயை காட்டித் தன் படங்களை ஓடச் செய்துகொண்டார்.அந்த ஆட்சிக்காலத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில்தான் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு இப்போது தப்புக் கணக்கால் விடுதலையாகி மறுபடி முதல்வராகிறார். ஆனால் வெட்கம் இல்லாமல் ரஜினி அந்த பதவி ஏற்பு விழாவில் போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறார். இவர் அரசியலுக்கு வந்தால் அந்த அரசியல் எப்படி இருக்கும் ?

புங்குடுதீவு மாணவி வித்தியாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்பு போராட்டம் நேற்றுமாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க, பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றபோது எடுத்த படம். (படம்: வாசித்த பட்டபந்திகே)

300 ட்ரில்லியன் சூரியன்களுக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி

சுமார் 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்கும் ஒளிக்கு சமமான அளவு ஒளிரும் புதிய கேலக்ஸி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகச்சிவப்பு எக்ஸ்ப்ளோரர் அல்லது வைஸ் என அழைக்கப்படும் இந்த புதிய கேலக்ஸியை நாசா கண்டுபிடித்துள்ளது. இது சுமார் 300 ட்ரில்லியன் சூரியன்கள் சேர்ந்தால் கிடைக்க கூடிய அளவிற்கு ஒளியை வெளியிட்டு வருகிறது. இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கேலக்ஸிகளிலேயே இந்த அளவிற்கு ஒளிரும் கேலக்ஸி எதுவும் இல்லை. இதற்கு காரணம் இதன் மையத்தில் அமைந்திருக்கும் கரும்துளை தான் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் தற்போது விஞ்ஞானிகள் காணும் ஒளியானது 12.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் பயணம் செய்துள்ளது. எனவே தற்போது நாம் காணும் கேலக்ஸியானது கடந்த காலத்தை சேர்ந்தது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மஹிந்த ஆட்சியில் மறைவில் தகவல்கள் சேகரித்த ஐ. தே. க நிபுணர் குழு!

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கு இயல்பாகவே ஐக்கிய தேசிய கட்சி என்றால் அலர்ஜி, ஆகவேதான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை ஆதரிக்கின்றனர் என்று தெரிவித்து உள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் சுதேச வைத்தியத் துறை பதில் அமைச்சருமான ஹசன் அலி. இவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில் விமல் வீரவன்ஸ, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்புக் கொள்கையையே முன்னெடுத்து வருகின்றனர், மற்றப்படி இவர்களிடம் உருப்படியான கொள்கை என்று எதுவும் கிடையாது, இவர்கள் உண்மையில் சமூக அக்கறை உடையவர்களும் அல்லர், உண்மையான கமியூனிஷ்டுகளும் அல்லர், கமியூனிஷம் என்றோ செத்து விட்டது என்றார். கடந்த நாட்களில் நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியமை மூலம் இருந்த கொஞ்ச மதிப்பையும் வாசுதேவ நாணயக்கார இழந்து விட்டார் என்றும் இவர் மேலும் கூறினார்.

வைகாசி 24, 2015

என் மனவலையிலிருந்து..........!

மக்களின் இயல்பான எழுச்சியும், தன் எதிர்காலமும்

(சாகரன்)

போருக்கு பிந்திய தமிழ் சமூகம்வாழும் பிரதேசங்களில் நிலவும் நிச்சயம் அற்ற சமூக வெளிப்பாட்டின் ஒரு குறியீடாக மாணவியர் வித்தியாவின் பலாத்கார மானபங்கப்படுத்தலும், இதனைத் தொடர்ந்த படு கொலையையும் பார்க்கலாம். மக்களிடம் உறங்கிக் கிடந்த இயல்பான அநியாயங்களுக்கு எதிரான உணர்வலைகள் இங்கு எழுந்து நிற்பதையே மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்பவர்களின் தற்போதைய போராட்டத்தைப் பார்க்க முடியும். இது போன்றதொரு போராட்டம் 1884 களில் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன் கடத்தப்பட்டு காணமல் போன போது காணப்பட்டது. இந்தப் போராட்டத்தின் முன்னிலைப் போராளியாக செயற்பட்டது இங்கு நினைவிலாடுகின்றது. யாழ் பல்கலைக் கழகத்தில் மையம் கொண்டிருந்த இந்தப் போராட்டம் இயல்பாக குடாநாடு எங்கும் பரவி தொடர்ந்த நாட்களில் குடாநாட்டிற்கு அப்பால்  தமிழ் பிரதேசங்கள் எங்கும் பரவியது. அந்தப் போராட்டத்தை எம்மவர் மத்தியில் இருந்தவர்களே அடக்கி ஒடுகினார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இதே மாதிரியான ஒரு போராட்டம் கொழும்பு பல்கலைகழக சுயாதீன மாணவர் அமைப்புத் தலைவர் தயா பத்திரனவை காணமல் செய்யப்பட்ட போதும் சிங்களப் பகுதிகளுக்கு அப்பால் யாழ் பல்கலைக் கழகத்திலும்(ஒரு சிறிய மட்டத்தில்) பரவியிருந்ததும் இதில் ஈடுபட்ட நாங்கள் துரோகிகளாக பார்க்கப்பட்டதும் நினையில் ஊஞ்சல் ஆடுகின்றது. (மேலும்....)

தண்ணீரில் தத்தளிக்கும் ரோஹிங்யோ மக்களின் கண்ணீர் கதை

மியன்மார் அரசாங்கம் கடமை யாக்கியுள்ள இரு குழந்தைச் சட்டம் அனைத்து வகை சர்வதேச சட்டங்களையும் ஒட்டுமொத்தமாக மீறும் கொடிய இனவாதமாகும். ரோஹிங்யோ மக்கள் பசியோடும் பட்டினியோடும் தெருக்களில் அலைந்தும் முகாம்களில் அடைந்தும் ஆறுகளில் அமிழ்ந்தும் தமது கணங்களை கடத்திக் கொண்டிருக்கையில், அவர்களுக்கு ஒரு இராணுவ சர்வாதிகார அரசாங்கம் தரும் நிவாரணத்தைப் பாருங்கள். இவையெல்லாம். மனித உரிமை பற்றிப் பேசப்படும். நாகரிகமடைந்த சமூகத்தில்தான் நடக்கின்றதா என்ற கேள்வி மீள மீள நமது சிந்தனையைக் கிளறுகின்றது. ரோஹிங்யோ முஸ்லிம்களின் கண்ணீர்க் கதை மீண்டும் உலகப் பார்வைக்கு வந்துள்ளது. மியன்மார் அரசாங்கத்தின் இனவாத கொலைத் தாக்குதல்களிலிருந்து தம் உயிரைக் காத்துக் கொள்ள தென்கிழக்காசிய நாடு களுக்கு அகதிகளாய் இடம்பெயரும் அவர்களின் நிலைமை அவலத்திற்கிட மாய் மாறியுள்ளது.(மேலும்....)

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை…

முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை…
 

யாழ்ப்பாணத்திலை அடிச்சா மட்டக்களப்பிலையும் வலிக்கிது… திருகோணமலையிலும் வலிக்கிது… வன்னியிலையும் வலிக்கிது… ஏன் தெற்கிலை கூட வலிக்கிது… ஆனா மாங்குளம் சரண்யாவுக்காக ஏன் வலிக்கேல்லை எங்களுக்கு? இந்தக் கேள்வி நான் கேக்கேல்லை… ஏனெண்டா சரண்யாவை மறந்துபோன யாழ்ப்பாணத்தாரிலை நானும் ஒராள்… நாங்களும் எமக்குள்ளே “பேரினவாதி” களாகி விட்டோமா? இண்டைக்கு கேள்வி கேக்கினமே… யாழ்ப்பாணத்தாருக்கு மட்டும் தான் வலிக்குமோ எண்டு? கேள்வியில் தவறில்லை… கேள்விகள் எழுமளவிற்கு விட்டிருக்கிறம்.. இப்பிடியே போனா எங்களை நாங்களே ஏலம் போட்டு வித்திடுவம். தெரிஞ்சோ தெரியாமலோ எங்களுக்குள்ளை ஊறிக்கிடக்கிற பிரதேசவாதம் தான் எங்களுடைய இனத்தின்ரை அழிவுக்குக் காரணமா இருக்கப்போகுது. நாங்கள் ஒண்டாய் நிண்டா ஒட்டுக்குழுக்களுக்களுக்கும் வேலை இல்லை. (மேலும்....)

அன்பு சகோதரியே
உன் மரணம் என்
நெஞ்சில் தொட்டு சென்ற சோகத்தை விட
விட்டு சென்ற கேள்விகள் பல
உன் நிலைக்கு மூன்று பேர் காரணம் என்கிறார்கள்
அந்த மூன்று
ஒன்று ஆயுதங்களை தொட்டு தூக்கியவர்கள் விட்டு சென்ற அராஜக குணங்கள்
இரண்டு தம்பியை விட்டு அண்ணனை கொலை செய்யவைத்த பாசிசத்தில் அழிந்து போன அன்பு, பாசம், கருணை இவைகளின் இழப்பு
மூன்று சிந்தனையை மழுங்கடிக்க வைத்த மறைமுகமான சீரழிவு கலாச்சாரம்
வாழ வேண்டிய வயதில் உன் கண்களை மூடி
பல கண்களை திறந்திருக்கிறாய்
வன்முறையால் சாதிக்கமுடியாத புரட்சியை
உன் ஒருவருரின் இழப்பில் சாதித்திருக்கிறாய்
எனி எம்மண் ஆரோக்கியமான திசைகளை நோக்கி செல்லும்
அன்பு செல்வமே உன் ஆத்மா சாந்தியடையட்டும்

(மோகன்)

நீதி கோரி...



புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று வியாழக்கிழமையும் (21) நாடெங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

வித்தியா
வடக்கில் போட்டி அரசியல் நடத்த கிடைத்த துரும்பல்ல

(எஸ்.சுரேஸ்)

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமையை வைத்துக் கொண்டு வடக்கில் அரசியல் ரீதியாகத் தமது காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தி லாபமீட்ட முனையும் சில அரசியல்வாதிகளின் செயற் பாடு களை வடக்கு புத்திஜீவிகள் கடுமையாகக் கண்டித் துள்ளனர். கொலைகாரர்கள் இவர்கள் தான் என ஏறத்தாழ இனங்காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலும் சில அரசியல்வாதிகள் தமது பழைய அரசியல் பகைகளைத் தீர்த்துக் கொள்ளவும், சிலர் அரசியல் பிரசாரம் தேடவும் அப்பாவிச் சிறுமியான வித்தியாவின் மரணத்தைப் பயன்படுத்தி வருவதை புத்திஜீவிகள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். (மேலும்....)

இது சரியா? நியாயமாகுமா?

இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த மக்களுக்காக மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் ஈகைச் சுடர் ஏற்றித் தமது அஞ்சலிகளைச் செலுத்த இந்த வருடம் மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருந்தது. முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல வடக்கில் மக்கள் தாம் வசிக்கும் பகுதிகளிலிருந்தவாறே யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்காக தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். யுத்தத்ததில் இறந்த மக்களுக்காக அவர்களது உறவுகள் மட்டுமல்ல பொது அமைப்புக்கள் கூட பிரார்த்தனை செய்து அஞ்சலியைச் செலுத்த இந்த வருடம் சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தது. (மேலும்....)

புங்குடுதீவு வித்யா

(மட்டுநகரிலிருந்து எழுகதிரோன்)

பொலிஸ் தரப்பு பதிவுகளுக்கு அப்பால் இது பற்றிய ஆய்வுக ளோ தரவுசேகரிப்புகளோ எமது சமூகமட்டத்தில் இல்ல வேயில்லை. தம்மை சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ சிவில் சமூக பிரதிநிதிகள் என்று தேர்தல் காலங்களில் மட்டும் தலை காட்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு குஞ்சம்கட்ட பாதிரிமாரோடு இணையும் அரைவேக்காட்டு புத்திஜீவிகளோ இத்தகைய முயற்சிகளில் இறங்குவதேயில்லை. அவர்க ளுக்கு அது அவசியமானதொரு பணியாக தெரிவதில்லை. அது பற்றி அக்கறை கொள் பவர்களை எமது சமூகம் வீணர்கள், பிழைக்கத் தெரியா தவர்கள் என்கின்ற பட்டம் கொடுத்தே கெளரவிக்கின்றது. ஏதோ பிறந்தோமா படித்தோமா முடிந்தவரை உழைத்தோமா என்று செக்குமாட்டுதனமாக செயல்படுபவர்களே எமது சமூகத்தின் மதிப்புக்குரிய வர்களாகின்றார்கள். இந்த இழிநிலை எப்போது நீங்குகின் றதோ அப்போதுதான் தமிழ் சமூகத்தில் ஒரு பொதுநல அக்கறைகொண்ட சிவில் கட்டமைப்பு துளிர்க்கமுடியும். (மேலும்....)

வைகாசி 23, 2015

வடக்கில் 3 அமைப்புகளுக்கு தடை

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய அமைப்புகளுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.

யாழில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

யாழ்ப்பாணம் மாவட்டத்துக்குள் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ அல்லது பேரணிகள் செல்லவோ நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்தை அடுத்து யாழ்ப்பாணம் உட்பட வடக்கின் அனைத்து பிரதேசங்களிலும் பல்வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன. இவ்வார்ப்பாட்டங்கள் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்தின் சில பிரதேசங்களுக்கும் கூட வியாபித்திருந்தன. இதனால், யாழ்ப்பாத்தின் இயல்பு நிலை கடந்த சில தினங்களாக பெருமளவில் பாதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது நிலைமை வழமைக்கு திரும்பியது என்று தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் மேற்கண்ட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார்.

குழப்பம் ஏற்படுத்தியவர்கள் முன்னாள் புலி உறுப்பினர்கள்

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி யாழ். பிர தேசத்தில் குழப்பம் ஏற்படுத்தி கைதானவர்களில் முன்னாள் விடுதலைப் புலிகள் பலர் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த பிரச்சினையை பயன்படுத்தி நாட்டில் மீண்டும் பிரிவினைவாதத்தை ஏற்படுத்த இடமளிக்கக் கூடாது என அரசாங்கத்தை கோருவதாக ஐ.ம.சு.மு. எம்.பி. அனுஷ நாணயக்கார தெரி வித்தார். அபயாராம விகாரையில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது: மாணவியின் கொலை தொடர்பான சம்பவத்தை நாம் வண்மையாக கண்டிக் கிறோம். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நடக்க இடமளிக்கக் கூடாது. பாதுகாப்பு குறித்த கவனயீனத்தினாலே இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவத்தை தொடர் ந்து படையினர் மற்றும் நீதிமன்றம் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டது. கடந்த காலத்தில் இடம்பெற இனவாத பிரச்சினைகளுக்கு இவ்வாறான சம்பவங்களே காரணமாக அமைந்தன. அரசாங்கத்தின் நெகிழ்வுப் போக்கு காரணமாக ஈழகனவுடன் செயற்படுவோர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி யிருக்கலாம். சுவிஸ் ரஞ்சனை இதனுடன் தொடர்புபடுத்த முயல்கின்றனர். அவர் சுவிசிலே இருக்கிறார். இதனை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஷ மீது சேறுபூச முயல்கின்றனர்.

இது சிங்களவர் நாடு அல்ல அனைத்து இன மக்களினதும் நாடு

இது சிங்களவர்களுடைய நாடு அல்ல.இந்த நாடு தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கியர், மலாயர் ஆகிய அனைத்து இனத்தவர்களுக்கும் சொந்தமானதென நேற்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி கொலை மற்றும் அதன் பின்னணியில் இடம்பெற்ற யாழ். கட்டிடத் தொகுதி தாக்குதல் சம்பவம் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவருக்கு பதிலளி க்குகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சிங்கள நாட்டில் எந்தவொரு சிங்களவரும் நீதிமன்றத்திற்கு எதிராக செய்யாத செயலை யாழ்ப் பாணத்தில் தமிழர்கள் செய்துள்ளார்கள். அவர்களுக்கெதிராக எவ்வாறான நடவடிக்கை எடுப்பீர்களென குறித்த செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கோபத்துடன் பதிலளித்த அமைச்சர், செய்தியாளரான உங்களது கேள்வியே இனவாத ரீதியானது என்று கூறியதன் பின்னரே மேற்படி விளக்கத்தையளித்தார். இது சிங்களவர்களுடைய நாடு என்பது தவறான அபிப்பிராயம். அவ்வாறு எங்கும் எழுதி வைக்கவில்லை. இது அனைத்து இனத்தவர்களுக்கும் சொந்தமான நாடு ஆகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாட்டு கறி சாப்பிடுபவர்கள் பாகிஸ்தானிற்கு ஓடுங்கள்” - பாஜக அமைச்சர்

மாட்டு கறி சாப்பிட முடியாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு ஓடுங்கள் என பாஜக அமைச்சர் கூறிய கருத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாஜக ஆட்சியின் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சரான முக்தர் அப்பாஸ் நக்வி, இன்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாட்டு கறிக்கு தடை செய்திருப்பது லாப நஷ்ட விவகாரம் அல்ல. இது இந்துக்களின் உணர்வுபூர்வமான நம்பிக்கை தொடர்பான விடயம். மாட்டு கறியை சாப்பிடாமல் போராடுபவர்கள் பாகிஸ்தான் மற்றும் அரேபிய நாடுகளுக்கு ஓடுங்கள். அங்கே தான் உங்களுக்கு மாட்டு கறி கிடைக்கும் என கூறியுள்ளார். தற்போது இஸ்லாமியர்களும் மாட்டு கறிக்கு எதிராக இருப்பதால், மாட்டு கறியை தடை செய்வது நியாயமானது என்றார். அமைச்சரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த AIMIM என்ற இஸ்லாமிய அமைப்பின் தலைவரான அசாதுதீன் ஓவைசி, மாட்டு கறிக்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் பாஜக அரசு, அதை நாடு முழுவதும் தடை செய்யுமா?
குறிப்பாக மாட்டு கறியை முக்கிய உணவாக கொண்டுள்ள கோவா, ஜம்மு&காஷ்மீர், கேரளா மாநிலங்களில் தடை விதிக்க பாஜக அரசால் முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
மாட்டு கறி குறித்தான அமைச்சரின் கருத்து தற்போது சர்ச்சையை கிளப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் சுயலாபம் கருதும் விசமிகளின் பொய்ப் பிரச்சாரம் - புளொட்

மலினமான அரசியல் லாபம் தேடும் பிரமுகர்களை மக்கள் அடையாளம் காண வேண்டும் என புளொட் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  புங்குடுதீவு மாணவி செல்வி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என கைதாகியிருப்பவர் சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார். ஆயினும், மாணவி வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படமாக எமது அமைப்பைச் சேர்ந்த திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் என்கின்ற சுவிஸ்ரஞ்சன் அவர்களின் புகைப்படத்தினை சில விசமிகள் பிரசுரித்திருக்கின்றார்கள் என்பதை இணையத்தளங்களிலும் சில முகநூல்களிலும் பார்க்கக் கூடியதாக உள்ளது.(மேலும்....)

வைகாசி 22, 2015

பொறுப்புக் கூற வேண்டியவர்கள் யார்?

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா குரூரமான பாலியல் பலாத்காரப் பலாத்காரப்படுகொலைக்கு யாழ் குடாநாடு மற்றும் வடக்கு கிழக்கில் மக்கள் கொந்தளிப்பும் கோபமுமான உணர்வுகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்த பாலியல் பலாத்கார படுகொலை புரிந்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்குவது, மாணவி வித்தியாவின் குடும்பத்திற்கு தமது ஆதரைவைத் தெரிவிப்பதும், இனிமேலும் இத்தகைய சம்பவங்கள் நிகழக் கூடாது என்பதும் இந்த வெகுஜன நடவடிக்கைகளினூடாக வலியுறுத்தப்படுகின்றன.
நாகரிகமான கண்ணியமான சுதந்திரமமான வாழ்வு தொடர்பான தாக்கமான பிரதிபலிப்புக்களாக அவை வெளிப்படுத்தப்படுகின்றன. (மேலும்....)

புங்குடுதீவு சம்பவம்

பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்

புங்குடுதீவு மாணவி கொலைச்சம்பவத்தையடுத்து தீவகம் மற்றும் யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பதற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தத் தவறியமை மற்றும் நீதிமன்றக் கட்டடத்தின் மீதான தாக்குதல் சம்பவம் என்பவற்றைத் தடுக்கத்தவறியமையால் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 05 பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம், பொலிஸ்மா அதிபர் கே.என்.இலங்கக்கோனால் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியம் 1க்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜே.ஏ.விஜயசேகர கிளிநொச்சிக்கும், யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியம் 2க்குப் (ஊர்காவற்றுறை) பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.கே.ஏ.சேனாரத்ன முல்லைத்தீவுக்கும், ஊர்காவற்றுறை தலைமைப்பீட பொலிஸ் பொறுப்பதிகாரி கியு.ஆர்.பெரேரா மன்னாருக்கும், யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஸ்மன் வீரசேகர சீதா எலியத்துக்கும், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ஆர்.பி.என்.பாலசூரிய வவுனியாவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸ் பிராந்தியத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக புதிதாக டப்ளியூ.கே.ஜயலத் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஏனைய இடமாற்றப்பட்டவர்களின் இடத்துக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் கடமையாற்றியவர்கள் வருகை தரவுள்ளனர்.

அன்னை இல்லத்துக்கு தனது விஜயம் குறித்து மலையாள மனோரமா பத்திரிகையில் மோகன்லால்

சிவாஜி சார் ஓவ்வொரு அறைக்கும் என் கையை பிடித்து கூட்டிக்கொண்டு போனார் . தொங்கிக் கொண்டிருந்த நட்சத்திர விளக்கு ,சுவரில் மாட்டியிருந்த பெரிய புகைப்படங்கள் ,அறையை அலங்கரித்த கலைப்பொருட்கள் மற்றும் அன்பளிப்புகள் இவற்றையெல்லாம் ஒரு சின்னக்குழந்தையின் மனோபாவத்தோடு பார்த்துக்கொண்டு நடந்து போனேன். சிவாஜி சாரின் மிகப்பெரிய பங்களா அது . அந்த நேரம் என் மனைவி சுசி (நடிகர் பாலாஜியின் மகள் சுசித்ரா) அங்கே இல்லை .எங்கோ வேறு ஒரு அறையில் இருந்தாள் என நினைக்கிறேன். நான் சொன்னவையெல்லாம் அவள் பார்க்கவில்லையென்றே தோன்றுகிறது. சிவாஜி சாரின் கைவிரல் குளிர்ச்சி மட்டுமே என் மனதில் நிறைந்திருந்தது .வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு அந்த விரல்களும் அந்த ஸ்பரிசமும். (மேலும்....)

நீதிமன்றம் மீதான தாக்குதல் இனவாதமல்ல - சுசில் பிரேமஜெயந்த

யாழ். நீதிமன்றத்தின் மீது கடந்த புதன்கிழமை (20) மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலை இனவாதமாகக் கருதவில்லை. மக்களின் உணர்ச்சிவசப்பட்டே இந்த தாக்குதலை நடத்தினர். தென்னிலங்கை மக்களும் இதனை இனவாதத் தாக்குதலாகப் பார்க்க மாட்டார்கள். இனவாத எண்ணங்கள் அவர்களிடம் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்தார். 'நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனிவருங் காலங்களில் நடைபெறக்கூடாது. சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 'எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு கூட்டமைப்பை அமைத்து போட்டியிடவுள்ளோம். பழைய தலைமைகள் இல்லாமல் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலில் போட்டியிடவுள்ளோம். யாழ். மாவட்டத்தில் அங்கஜன் இராமநாதன் போட்டியிடவுள்ளார்.பட்டதாரிகள், வேலையற்ற இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்படும்' என்றார்.

வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் - விமல் வீரவன்ச

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர், பாடசாலை மாணவி வித்தியா மீதான வல்லுறவு மற்றும் கொலையின் பின்னணியில் வடக்கின் சிவில் வாழ்க்கை மீண்டுமொருமுறை பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வடக்கில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமுண்டு என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். 'வடக்கில் இராணுவத்தினர் தங்களது தளங்களில் மாத்திரமே நிலைகொண்டுள்ளனர். இதனால், மேற்கண்டவாறான சந்தர்ப்பங்களின் போது சட்டத்தையும் ஒழுங்கையும் பேண முடியாது போகிறது' என சுட்டிக்காட்டினார். மேற்படி விவகாரத்தால் வடக்கில் கடையடைப்பு முன்னெடுக்கப்பட்டது. இந்த நிலைமை, நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு பாரிய அச்சுறுத்தலானது. இது மிக மோசமான நடவடிக்கையொன்றுக்கு வழிவகுக்கிறது. இதனால், தமிழ் ஆயுதக்குழுக்கள் மீண்டும் தலைதூக்க இடமுண்டு. அதனால், சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

புங்குடுதீவு மாணவி கொலை விசாரணை சி.ஐ.டியினரிடம்

புங்குடுதீவு மாணவியின் படுகொலை யுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோத னைக்குட்படுத்தப் படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக வும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க நேற்று தெரிவித்தார். புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அனைவரையும் டி. என். ஏ. பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாகவும், நேற்று முதல் இந்த விசாரணைகளை இரகசியப் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் வடமாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க நேற்று தெரிவித்தார். அத்துடன் மேற்படி மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய நபர்கள் இன்னமும் சுதந்திரமாக வெளியில் நடமாடுவதாகவும் விரைவில் இவர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

யாழ். நகரில் கைது செய்யப்பட்ட 129 பேருக்கும் விளக்கமறியல்

யாழ். நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப் பட்டுள்ள 129 பேருக்கும் 4 கட்டங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரையும் ஜூன் மாதம், முதலாம் 3 ஆம், 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினார் கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 43 பேருக்கு எதிராகவும் பாரிய குற்றச் செயல்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் 39 பேருக்கு எதிராகவும் பொலிஸாருக்கு கடமையை செய்யவிடாது இடையூறு செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 33 பேருக்கு எதிராகவும், நீதிமன்றத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் 14 பேருக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு பிணை வழங்க சட்டத்தரணிகள் எவரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஜூன் 1 ஆம் திகதி வரையும் விளக்க மறியலில் வைக்குமாறும் யாழ். நீதிமன்ற நீதவான் பொன்னுத்துரை சிவகுமார் உத்தரவிட்டார். 129 பேரும் சிறைச்சாலை வாகனத்தில் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டபோது அவர்களது பெற்றோர் உறவினர் நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்தனர். எனினும் அவர்களை நீதிமன்ற வளவுக்கு வர பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. மேற்படி 129 பேரும் நேற்று அநுராதபுர சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.

சீன கடற்படையால் அமெரிக்க உளவு விமானம் விரட்டியடிப்பு

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில் சீனா உருவாக்கிவரும் செயற்கை தீவுகளுக்கு மேலால் பறந்த அமெரிக்காவின் கண்காணிப்பு விமானத்தை வெளியேறும்படி சீன கடற்படை எட்டுமுறை எச்சரித்துள்ளது. இதன்போது ஒரு சந்தர்ப்பத்தில் அமெரிக்க விமானிகள் தாம் சர்வதேச வான்பரப்பிலேயே பறப்பதாக பதிலளித்ததற்கு, சீனா ரேடியோ ஓபரேட்டர் ஒருவர், "இது சீன கடற்படையினரால்… வெளியேறிவிடுக்கள்" என்று கடுதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீ8-ஏ பொசைடன் என்ற மேம்படுத்தப்பட்ட அமெரிக்க உளவு விமானம் தனது தாழ்ந்த நிலையான 15,000 அடி உயரத்தில் பறந்தபோதே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக சீ.என்.என். தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தென் சீன கடற்பகுதிக்கு மேலால் பறந்த பிலிப்பைன்ஸ் போர் விமானத்தையும்; சீனா எச்சரித்த நிலையிலேயே தற்போது அமெரிக்க விமானமும் எச்சரிக்கப்பட்டுள்ளது. குறித்த செயற்கை தீவு பகுதியை சீனா ஒரு இராணுவ வலயமாக மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சீனா உருவாக்கும் இந்த தீவு பகுதியின் போக்குவரத்து உரிமையை உறுதி செய்ய போர் விமானங்கள் மற்றும் கப்பல்களை அனுப்புவதற்கு அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் ஆலோசித்து வருகிறது.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் வன்முறை எதற்கு?

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலையும் அதனைத் தொடர்ந்ததான எதிர்ப்புக்கள் மற்றும் வன்முறைகளும் யாழ். குடா நாட்டை உறைய வைத்துள்ளன. பாட சாலைக்குச் சென்ற மாணவி காட்டுமிராண்டி கும்பலால் படுபயங்கரமான முறையில் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அதி உச்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நிச்சயமாக எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. இச்சம்பவத்தைக் கண்டிப்பதுடன் பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நிச்சயமாக மேற்கொள்ளப்பட வேண்டியதாகும். பாடசாலைகள் சமூகம், கல்விசார் அமைப்புக்கள், பொது அமைப் புக்கள் என்பன தொடர்ச்சியான தமது எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகின்றன. (மேலும்....)

வைகாசி 21, 2015

நான்கு அமைச்சர்கள் இராஜினாமா

ஜனாதிபதிக்கு விரக்தி, இராஜினாமா செய்த அமைச்சர்கள் கவலை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, சீ.பி. ரத்னாயக்க, மஹிந்த யாப்பா, பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் அவர்களது அமைச்சு பதவிகளை சற்றுமுன்னர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரக்தியடைந்துள்ளார். கொடுத்த வாக்குறுதிகளைச் செய்யாத இந்த அரசாங்கத்தில் இருந்து பயனில்லை என்பதால் தாங்கள் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்ததாக அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரும் தெரிவித்தனர். இதன் பின்னர், அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாடொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்கள், 'இன்று இந்த அரசாங்கத்தை ரணில் விக்கிரமசிங்கவே கொண்டு நடத்துகின்றார். அவர், பழிவாங்கலைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. பொலிஸ் மா அதிபருக்கு ஆணையிடுவதும் அவரே' என்று கூறினர்.

பாம்புகள், உண்ணிகள், பருந்துகளுடன் பாவப்பட்ட தமிழ் மக்கள்

(மாதவன் சஞ்சயன்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு பதியப்படாது என மாவை அறிவித்து விட்டார். 4 கட்சிகளிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே ஏற்படுத்தப்படும் என் கூறும் அவர் ஏற்கனவே கழட்டிவிடப்பட்ட தமிழர் விடுதலை கூட்டணி அதில் இடம்பெறாது என்பதி மறைமுமாக 4 கட்சிகள் என வரையறுத்து விட்டார். புலிகளின் அனுசரணையில் ஆரம்பத்தில் த. வி. கூ, ஈ பி ஆர் எல் எப் , டெலோ இணைந்து த தே கூ அமைக்கபட்டது. பின் சங்கரியாரின் தனித்துவ போக்கால் மாவை உள்குத்து வேலை செய்து மீள் உருவாக்கம் பெற்ற தமிழ் அரசு கட்சிதான் எங்கும் எதிலும் தலைமை தங்கவேண்டும் என்ற நிலைப்பட்டாலேயே த தே கூ பதியப்படுவது தவிர்க்கபடுகிறது. த தே கூ வில் புதிதாக இணைந்து வெல்பவர்களை தமிழ் அரசு கட்சி உறுப்பினராக்கும் கைங்கரியத்தை சூட்டோடு சூடாக செய்து விடுவார்கள். அவ்வாறு இணைந்தவர்களின் பின்புலத்தை ஆராய்ந்தால் அவர்கள் முன்பு வேறு அமைப்புகளில் இயங்கியவர்களாக அல்லது வால்களாக செயல்பட்டவர்களாக இருப்பார்கள்.
அனால் த தே கூ வில் இணைந்த பின் அவர்களுக்கு தமிழ் அரசு கட்சி உறுப்பினர் பதவி தந்து நண்பேண்டா என ஆக்கிவிடுவார்கள். சிறிதரன், சரவணபவன்,சுமந்திரன் முதல் ஆனந்தி,சயந்தன் வரை இது தான் நிலை. (மேலும்....)

மலையக மக்களுக்கு சட்ட ரீதியான காணி உரித்தை எவ்வாறு வழங்கலாம்?
(சட்டத்தரணி இ. தம்பையா, சு. விஜயகுமார்)

மலையக மக்களுக்கு காணி உரித்துடனான வீட்டு உரிமையை உறுதிப்படுத்தக் கோரி மக்களின் பங்குபற்றலுடன் பல்வேறு வடிவங்களில் போராட்டங்களும் பரப்புரைகளும் இடம்பெற்றன. சில மலையக பாராளுமன்ற அரசியல் தலைமைகளும் இதற்கு குரல் கொடுத்தனர். இப்பின்னணியில் மீரியபெத்த அவலம் மலையக மக்களின் ஏற்படுத்திய காணி, தனி வீட்டு உரிமைக்கான எழுச்சி கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்கள் இருவரையுமே மலையக மக்களின் வீட்டுரிமை பற்றி தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பேச வைத்தது. மஹிந்த மலையக மக்களுக்கு காணி உரிமையை வழங்கும் எண்ணம் கொண்டவரல்ல. மைத்திரிபால தனது தேர்தல் விஞ்ஞாபனத்தின் தனி வீடுகள் காணி உறுதியுடன் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். அதனடிப்படையில் தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கம் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களுடன் இணைந்து மலையகத்தில் 7 பேர்ச் காணியில் காணி உறுதியுடன் தனி வீடுகள் அமைத்து வழங்க போவதாக குறிப்பிட்டுள்ளது. (மேலும்....)

மாணவிக்கான போராட்டத்தில்

இன மத பேதமின்றிப் போராடும் மக்கள்

இன்று காலையில் 9.30 மணியளவில் புத்தளம் பிரதான தபால் நிலைய சுற்றுவட்டத்தின் முன்பாக மாணவி வித்தியாவின் படுகொலையினை கண்டித்து இன,மத பேதமின்றி புத்தளம் மாவட்ட அனைத்து பெண்கள் அமைப்புக்களும் , ,இளைஞர்களும் ஒன்று கூடி வித்தியாவின் கொலைக்குற்றவாளிகளுக்கு

அரசு மரண தண்டனையினை காலதாமதமின்றி விரைவில் அமூல்படுத்தக்கோரியும் , எந்த சட்டத்தரணிகளும் குற்றவாளிகள் சார்பில் முன்வரக்கூடாது என்பதையும் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.இந்த ஐக்கியப்பட்ட போராட்டம் சற்றே மனதிற்கு தெம்பைத்தான் அளிக்கின்றது

புங்குடுதீவு மாணவி விவகாரம்
அரசியல் இலாபம் தேட சிலர் முயற்சி - ஜே. வி. பி

புங்குடுதீவில் மாணவி படு கொலை செய்யப் பட்ட சம்பவத்தை கண்டிக்கும் அதே நேரம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகக் கூறி தேர்தல் காலத்தில் மக்களை உசுப்பிவிட்டு அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடும் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டுமென ஜே. வி. பி. தெரிவித்தது. பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குடிவரவு குடியகல்வோர் திருத்தச் சட்டம் மூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே. வி. பியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், புங்குடுதீவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். அதேநேரம் சட்டத்தை மக்கள் கையில் எடுப்பதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. கண்டனம் தெரிவிப்பதாகக் கூறி மக்களை உசுப்பிவிட்டு தேர்தல் காலத்தில் தமக்கு அரசியல் லாபம் தேடிக்கொள்ளும் முயற்சிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். சட்ட ரீதியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படுவதுடன், இச்சம்பவத்தை இனவாதமாகப் பயன்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். அதற்கும் இடமளிக்கக்கூடாது என்றார்.

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான், வவுனியா  கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்…!!

வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்: புங்குடுதீவு மாணவி வன்புனர்வு குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆயராக கூடாது! புங்குடுதீவு பகுதியில் மாணவி கூட்டு வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் ஆயராகக் கூடாது எனத் தெரிவித்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (மேலும்....)

பொலிஸாருக்கு அனுசரணையாக செயற்படுங்கள் - சி.வி.

பேரணிகளையும் கண்டன நிகழ்வுகளையும் சாட்டாக வைத்துப் பொதுமக்களின் ஆதனங்களை அடித்து நொறுக்கிச் சேதம் விளைவிப்பதும் டயர்களை எரிப்பதும் பாரிய குற்றச் செயல்கள் ஆகும். அவ்வாறு இல்லாமல் பொலிஸாருக்கு ஆதரவாகச் செயற்படுங்கள். எதிரிகள் போன்று செயற்படாதீர்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வன்புணர்வுக்கும் படுகொலைக்கும் எதிராக எமது மக்கள் தமது விசனத்தையும் கண்டனத்தையும் வெளிக்காட்டுவது எமது ஜனநாயக உரிமையாகும். பல காரணங்களின் நிமித்தம் அன்றும் இன்றும் பொலிஸாருடன் ஒத்துழைப்பது எமது மக்களுக்கு சற்றுச் சிரமமாகவே இருக்கின்றது. வித்தியாவின் வருகை தாமதம் அடைவது பற்றி பொலிஸாரிடம் தாய், தந்தையர் கூறியதும் உடன் நடவடிக்கை எடுத்திருந்தால் இன்றைய இந்த துர்ப்பாக்கிய நிலை எழுந்திராது. அதன் பின்னரும் குற்றவாளிகளை கைது செய்வது சம்பந்தமாக தாமதத்தையும் அசட்டைத் தன்மையையும் காட்டுகின்றார்களோ பொலிசார் என்பதிலும் எமது மக்கள் கோபம் அடைந்துள்ளார்கள்.
ஆனால், இத்தருணத்தில் நாங்கள் பொலிஸாருக்கு அனுசரணையாகச் செயல்ப்பட வேண்டுமே ஒளிய அவர்களை எதிரிகள் போன்று கணித்து நடந்து கொள்ளக்கூடாது.

ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 22-ந் திகதி காலை அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடை பெறுகிறது. இந்த கூட்டத்தில் சொத்து குவிப்பு வழக் கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அக்கட் சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா சட்ட சபை அ.தி.மு.க. தலைவராக ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்படுவார் என்றும் அன்றே அவர் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. அவருடன் 30க்கும் மேற்பட்ட அமைச்சர்க ளும் பதவியேற்க இருக்கின்றனர். இப்பதவி யேற்பு நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரபு+ர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ் வாசி, அவரின் சட்டத்தரணி பொது மக்களால் முற்றுகை

குற்றச்சாட்டப்பட்டவரை பிணையில் எடுத்துச் செல்ல முற்படுகையில் மக்களின் எதிர்பு நடவடிக்கை. 5 மணி நேர முற்றுகையின் பின்னர் சட்டத்தரணியின் வாகனம், குற்றம்சாட்டப்பட்ட சுவிஸ் வாசி ஆகியோர் பொதுமக்களால் அரசபடையின் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வெளியே அழைத்துச் செல்ல அனுமதிகப்பட்டனர் (காணொளியில் காண.....)

அரசியலில் ஜெயலலிதாவை வீழ்த்த திராணியற்ற தமிழக எதிர்க்கட்சிகள்

ஜெயலலிதாவின் விடுத லைத் தீர்ப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இப்படிக் கேட்பவர்களிடம் எல்லாம் இந்தக் கேள்வியைத் தான் பதிலுக்குக் கேட்கிறேன். “இன்றைக்குத் தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நடந்தால் யார் ஜெயிப்பார்கள் என்று நினைக் கிறீர்கள்?” எதிர்க் கட்சிகளின் அந்தராத்மாவிடம் கேட்டால், அதுகூட சொல்லும், ‘இன்றைய சூழலில் மீண்டும் அதிமுகதான் ஆட்சியைப் பிடிக்கும்’ என்று, ஒரு தலைவருக்குக் கூட இங்கு திராணி இல்லையே, ‘நீதிமன்றத்தில் அவர் வென்றால் என்ன மக்கள் மன்றத்தில் அவரை நாங்கள் வெல்வோம்’ என்று சொல்ல? இப்படிப்பட்ட சூழலில், இந்தத் தீர்ப்பின் நியாய தர்மங்களை முன்வைத்து விவாதிப்பதில் அரசியல் ரீதியாக அர்த்தம் ஏதேனும் உண்டா? (மேலும்....)

இன்று காலையிலிருந்து யாழ் நகர மத்தியில் இடம்பெற்றுவரும் போராட்டங்களின் சில அவதானங்கள்


இதில் யார் பின்னால் போவது என்ற பிரச்சினை எனக்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்தது .ஆகவே எனது நண்பர்கள் சிலர் ஒழுங்கு செய்திருந்த பேரணி ஒன்றை பார்வையிட சென்றிருந்தேன் , ஆனால் நகரமோ ஆச்சரியமளிப்பதாய் இருந்தது . பல தொகுதி மக்கள் தனித் தனியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் . அவர்கள் சிதறியிருந்தமை ஒரு பலவீனமே . அவர்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் யாராலும் ஒன்றிணைத்து போராட வைக்க முடியவில்லை , அதுவே வன்முறைகளுக்கும் இட்டுச் சென்றது. (மேலும்....)

யாழ். நீதிமன்ற வளாகத்தில் குழப்பம் விளைவித்தவர்களில் வாகனங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை(20) குழப்பம் விளைவித்தவர்களின் மோட்டார்கள் சைக்கிள் மற்றும் துவிச்சக்கரவண்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் சந்தேகநபர்கள் யாழ். நீதிமன்றத்துக்கு இன்று புதன்கிழமை (20) கொண்டுவரப்படுவதை அடுத்து, அங்கு பெருமளவான பொதுமக்கள் கூடினர். கூடியவர்களில் சிலர் நீதிமன்ற கட்டடத்து கண்ணாடிகளுக்கு கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்ததுடன், நீதிமன்றத்துக்குள் நின்றிருந்த வாகனங்களின் கண்ணாடிகளையும் உடைத்தனர். இதில் பொலிஸார் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் மேல் நோக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தி குழப்பம் விளைவித்தவர்களைக் கலைத்தனர்.  இதன்போது, அவர்களது வாகனங்களை நீதிமன்ற வளாகத்துக்கு அருகில் விட்டுவிட்டுத் தப்பிச்சென்றனர். அதனை மீட்ட பொலிஸார் அவற்றை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்துள்ளனர்.

தமிழ்மாறனின் கொடும்பாவி எரிப்பு

புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை தப்பிக்க வைக்க முயற்சித்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு கொழும்பு பிரபல சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறனின் கொடும்பாவி, கிளிநொச்சி பளைப் பகுதியில் புதன்கிழமை (20) எரிக்கப்பட்டது. பளை பிரதேச விளையாட்டுக் கழகங்களை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பளை பொது விளையாட்டு மைதானத்திலிருந்து மத்திய பேரூந்து நிலையம் நோக்கி ஊர்வலமாக சட்டத்தரணி வீ.டி.தமிழ்மாறனின் கொடும்பாவியை இழுத்துச் சென்று, அங்கு கொடும்பாவியை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புபட்ட 8 சந்தேகநபர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய சுவிஸ் நாட்டுப் பிரஜையை பொதுமக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அந்நபர் மீது எவரும் வழக்குப் பதிவு செய்யாத காரணத்தால் அவரை பொலிஸார் விடுவித்த நிலையில், மேற்படி சட்டத்தரணி, சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவரை கொழும்புக்கு கூட்டிச் சென்று சுவிஸுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதனை அறிந்த மக்கள் சட்டத்தரணி வி.டி.தமிழ்மாறன், செவ்வாய்க்கிழமை (19) புங்குடுதீவு வந்திருந்த வேளை அவரை தடுத்து வைத்துப் போராட்டம் செய்தனர். மக்களின் போராட்டத்தால் சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் வெள்ளவத்தையில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கொலையாளிகளுக்கு சார்பாகச் செயற்படுகின்றார் என சட்டத்தரணியின் கொடும்பாவி பளையில் எரிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் இருந்து சுவிஸ நாட்டில் இருந்து வந்தவரை மீட்கும் பணியில் விஜயகலா மகேஸ்வரனும் ஈடுபட்டதாக காணொளிகள் தெரிவிக்கின்றன.

சம்பூர் போராட்டம் கைவிடப்பட்டது

சம்பூர் மக்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய சம்பூரில் பொதுமக்களின் காணிகளை விடுவிக்க நீதிமன்றம் விதித்திருந்த இடைக்காலத் தடையுத்தரவு இன்று (20) நீக்கப்பட்டுள்ளதையடுத்தே இப்போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் நிலைமை குறித்து ஆராயச் சென்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர், இது தொடர்பில் அறிவித்ததையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குவந்துள்ளது. தமது காணிகளை விடுவிக்ககோரி கடந்த மூன்று நாட்களாக சாகும் வரையிலான உண்ணாவிரதமிருந்த தேவராசா பிரேம்குமாரின் போராட்டமும் முடிவுக்கு கொணடுவரப்பட்டுள்ளது.

நேபாளத்தின் அதிர்வும் அழிவும் உணர்த்துவதென்ன??
(சுகு-ஸ்ரீதரன்)

2013 இல் கேதாரிநாத்- பத்திரிநாத் பகுதிகளில் ஏற்பட்ட பெருவெள்ளம் மக்களின் வாழ்வையும், வரலாற்றையும் அழித்தது. 2004 இல் தெற்கு தென்கிழக்காசிய கரையோர மக்களின் வாழ்வும் பண்பாடும் சுனாமியால் அழிந்தது. இடையே சீனாவில், பிலிப்பைன்சில், யப்பான், புக்குசீமாவில் சுனாமி பூகம்ப பேரனர்த்தங்கள். காஸ்மீரில், வங்கத்தில், ஒரிசாவில், நமது பதுளை மிரியா பெத்தையில் பெருவெள்ள மண் சரிவு அழிவுகள் இன்னும் பல.....
இப்போது நேபாளத்தில் மரணம் வரலாற்றின் சிதைவு எவரெஸ்ட் அசைந்தது என உலகப் பத்திரிகைகள் தலையங்கம் தீட்டுகின்றன. (மேலும்....)

வைகாசி 20, 2015

ஒரு காலத்தின் துயரை, மரணங்களை நினைவு கூரல்

(சுகு-ஸ்ரீதரன்)
யுத்தம் முடிவடைந்து 6 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்த யுத்தம் உயிரழிவினூடாக நாம் பெற்றதென்ன? இந்த யுத்தத்தில் தமிழர் தரப்பில் இருந்த சரி பிழைகள் பற்றி நாம் சிந்தித்திருக்கிறோமோ?  இத்தனை உயிரிழப்புக்கள் நிகழ்ந்தது பற்றி மனக்கிலேசம் ஏதாவது இருக்கிறதா? எதைச் செய்யலாம் அல்லது எதைச் செய்யக் கூடாது, எவ்வாறு போராடுவது என்ற புரிதல் தன்னும் ஏற்பட்டிருக்கிறதா? தமிழ் மக்களின் அல்லது சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான வழிமுறைகள் பற்றிய திட்டங்கள் ஏதாவது எம்மிடம் இருக்கிறதா? சமூகங்கள் இணங்கி இசைந்து வாழ்வதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதா? (மேலும்....)

வியத்நாம் விடுதலைப் போராளி தோழர் ஹோ-சி-மீன்

ஆசியப் புரட்சியின் மாபெரும் தலைவர் ஹோ-சி-மின் மூன்று பெரும் ஏகாதிபத்தியங்களை எதிர்த்து ஒரு சின்னஞ்சிறு ஏழை நாட்டை பாட்டாளி வர்க்க அரசியலில் திரட்டி மகத்தான வெற்றி கண்டவர். ஆசிய நாடுகளில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி எவ்வாறு கட்டப்படவேண்டும், ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கான அரிச்சுவடி ஹோசிமின்னிடம் இருந்துதான் கற்க முடியும். ஏனெனில், ஹோ-சி-மின்னின் புரட்சி வாழ்க்கை மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டது. முரணற்றது. மார்கஸியம் ஹோசிமின்னின் எளிமையான தூய வாழ்வு மூலம் புதிய பரிணாமத்தை அடைந்தது.புரட்சிகர அரசியலில் தேசிய விழிப்பும், வர்க்கப் போராட்ட நலன்களும், ஒருங்கிணைந்தது. அது பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தோடு பின்னிப் பிணைந்தது. இந்த மார்க்சிய கோட்பாட்டை வியட்நாமிய மக்களிக் வாழ்க்கையோடும் – மரபோடும் படைப்பாக்க ரீதியில் இணைத்து வெற்றி கண்டவர் ஹோ-சி-மின். அதற்கான புரட்சிக் கட்சியை அவர் கட்டியதுதான் வீர வியட்நாமின் ஆக்கத்துக்கு அடிப்படை. அவர் ஆசியாவுக்கு மட்டுமல்ல உலக முழுமைக்குமான கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சிற்பிகளில் போற்றுதலுக்குரியவர், கற்றறிதலுக்கான மாபெரும் ஆசான். (மேலும்....)

மாணவியின் கொலைக் குற்றவாளிகள் சார்பில் தேசியத்தின் பெயரால் வழக்கறிஞர் ஆஜர்

கொழும்பு சட்டக்கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழ்த்தேசியம் பற்றி பத்தியாக எழுதியது மற்றும் அல்லாமல் அது தொடர்பாக, பல்வேறு கருத்தரங்குகளில் தனது பேச்சு வன்மையால் வசீகரித்த வி,டி தமிழ்மாறன் அவர்களின் செயல் அருவருக்கத் தக்க ஒன்றாகவே உள்ளது. இந்த தமிழ்மாறன் மனித இனத்தின் பண்புகளையும் தமிழரின் மேல் உலகம் வைத்திருந்த மரியாதையையும் தவிடுப்பொடியாக்கி தமிழரை தலை குனிய வைத்த பாலியல் வன்முறையில் ஈடுபட்ட அயோக்கியனை காப்பாற்ற முனைந்தது தமிழனை வெட்கி தலை குனிய வைத்துள்ளது. தமிழ் மக்களின் தலைவிதியை தாமே குத்தகைக்கு எடுத்ததாக செயற்பட்டுவரும் அப்புக்காத்து கூட்டங்கள் பொன்னம்பலம் தொடக்கம் இன்று சுமந்திரன்வரை இதையேதான் செய்து வருகின்றனர். பணத்திற்காக பிசாசுக்குக் கூட இவர்கள் தயாராகவே இருந்து வருகின்றனர். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையில் சம்மந்தப்பட்ட சுவிஸ் குமார் மக்களால் பிடிபட்டிருப்பதும் இரவு வந்து பிரதியமைச்சர் விஜயகலாவால் மீட்க்கப்படுவதும் இதில் பதிவாகியிருக்கிறது. விஜயகலாவால் மீட்கப்பட்டவரை

இன்னொரு சட்டத்துறையைச் சேர்ந்த காமுகன் தமிழ்மாறன் காப்பாற்றியிருக்கிறான்.

தலித் பெண்கள் ஆடைகள் களையப்பட்டு ஊர்வலம், 5 பேர் கைது

உத்தரபிரதேசம் மாநிலத்தில் தலித் பெண்கள் 5 பேர், ஆடைகள் களையப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்து உள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் ஷகாஜாகான்பூர் மாவட்டத்தில் உள்ள ஹாரிவா கிராமத்தில், தலித் சமூகத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஒ.பி.சி. சமூகத்தை சேர்ந்த பெண்ணுடன் ஊரைவிட்டு ஓடிவிட்டார். இச்சம்பவத்தை அடுத்து ஒ.பி.சி. பிரிவினர் தலித் வாலிபரின் உறவுக்கார பெண்கள் 5 பேரது ஆடைகளை களைந்து, ஊர்வலமாக இழுத்து சென்றுஉள்ளனர். சுந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் மேல் ஆகியும், இந்த அவலநிலை தொடர்வது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடபாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்பு உடைய 5 பேரை கைது செய்து உள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து கிராமத்தில் பெரும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

கல்வி கற்றோர் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் என்று தம்மை பெருமை படுத்தி கொள்ளும் யாழ்ப்பாணத்தில்....

யாழ் மாநகரசபையும் ...வடமாகாணசபையும் கண்டு கொள்ளாத ...கவலைப்படாத.... செய்யமுடியாது என்று நினைக்கும் கையாலாகாதனம் கொண்ட...... குப்பைகள்... கசூர்னா கடல் கரைக்கு போகும் பொது காணலாம். குப்பைகள் அகற்றப்படவில்லை ...மாறாக ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டு பல கோடி தொன் குப்பைகள் சேர்க்கப்படுகிறது..... 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வீதியின் இரு பக்கமும் பிளாஸ்டிக் வகைகளை காணலாம்..... ஆஸ்பத்திரி புண் கழிவுகளும் அங்குதான்......வீடுகட்டி வீட்டு கட்டும் காணிக்குள் ரோட்டு போட்டு வாழ்பவர்கள் அல்லவா நாங்கள்......வெளியில் இருக்கும் ரோட்டு எப்படி இருந்தால் எமக்கென்ன....அதை பற்றி யாரும் கவலைப்படாமல், அடுத்த கதிரைக்கு அடிபடுவோம். (Ratnasingham Annesley)

வைகாசி 19, 2015

புங்குடுதீவு மாணவி படுகொலை தாயாரைப் பழிதீர்க்க நடந்த கொடூரம்

புங்குடுதீவு மாணவி துஷ்பிர யோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சுவீட்ஸர்லாந்திலிருந்து வந்தவர் என்றும் மாணவி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுவதை இவர் வீடியோ படம் பிடித்தார் என்றும் புங்குடு தீவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவி க்கின்றன. அத்துடன் சந்தேக நபரின் புங்குடுதீவு வீடும் பொதுமக்களால் தீக்கிரை யாக்கப்பட்டுள்ளது. கைதாகியுள்ளவர்களில் சுவிஸிலிருந்து வந்தவர் என கூறப்படும் நபரின் மனைவி, பிள்ளைகள், மாமி ஆகியோரும் நேற்று பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர். பிரதேச மக்களால் இவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் காரணமாகவே இவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை சுவிஸிலிருந்து வந்தவர் எனக் கூறப்படும் நபரின் வீட்டின் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் வீட்டை தீயிட்டு எரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை புங்குடுதீவு மாணவியை படுகொலை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள எட்டுப் பேரும் மாணவியை கூட்டு வன்புணர்வுக்குட்படுத்தி படுகொலை செய்துள்ளார்கள் என பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள எட்டு சந்தேக நபர்களும் புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் உறவினர்கள் எனவும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

குடியேறிகளை காப்பாற்ற வேண்டாமென இந்தோனேஷிய மீனவர்களுக்கு எச்சரிக்கை

நடுக்கடலில் நிர்க்கதியாகி இருக்கும் தஞ்சப்படகில் இருப்போர் மூழ்கும் நிலை ஏற்பட்டாலும் அவர்களை காப்பாற்ற வேண்டாம் என்று இந்தோனேஷிய மீன வர்களை அந்நாட்டு அதிகாரிகள் அறிவு றுத்தியுள்ளனர். அசே கடலில் தத்தளித்துக் கொண்டி ருந்த சுமார் 700 பங்களாதேஷ் மற்றும் மியன்மார் ரொஹிங்கியாக்களை இந்தோ னேஷிய மீனவர்கள் கடந்த வெள்ளிக் கிழமை மீட்டு நாட்டுக்கு அழைத்து வந்தனர். இதனால் அங்கு முகாம்களில் அடைக்கலம் பெற்றிருப்போர் எண்ணிக்கை 1,500ஐ எட்டியுள்ளது. எந்தவொரு புகலிடக்கோரிக்கையா ளரும் கரையொதுங்குவது சட்டவிரோத மானது என்று இந்தோனேஷிய இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு கடலில் தத்தளித்துக் கொண் டிருக்கும் தஞ்சப் படகுகளுக்கு எதிராக பிராந்தியத்தில் இருக்கும் அனைத்து நாடுகளும் தனது எல்லைகளை மூடியுள்ளன. (மேலும்....)

சிறுபான்மையினரை ஓரங்கட்டும் மஹிந்தவின் அரசியல் பாதை

தமிழ்த் தீவிரவாதம் சுமார் கால் நூற்றாண்டு காலமாக இலங் கையின் அரசியலுக்கு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 1983 ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப் பகுதியில் ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் தத்தமது அரசியலுக்கு வாய்ப்பான கோணத்தில் வடக்கு, கிழக்கு யுத்தத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இலங்கையின் இத்தகைய பலவீனமானதொரு அரசியலை எமது அயலில் உள்ள தமிழ் நாடும் பயன்படுத்திக் கொள்ளத் தவற வில்லை. வடக்கு, கிழக்கு யுத்தத்தை சந்தர்ப்பத்துக்கு ஏற்ற படி கையாளும் இணக்க அரசியலும், எதிர்ப்பு அரசியலும் நாட்டில் நீண்ட காலமாகத் தொடர்ந்தபடியே வருகின்றன.  (மேலும்....)

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.

கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர். நேற்று வெளிவந்த தீர்ப்பு என்னை மிகவும் பாதித்தது. பெண் என்று பாவப்படும் நண்பர்களே அவர் முதல்வராக இருந்த காலத்தில் செய்த குற்றம் அது. முதல்வர் என்பவர் மக்களைக் காப்பாற்றுபவர். தவறே செய்யக்கூடாது. நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கனும். இங்கு நிதி நீதியை கொன்று புதைத்துவிட்டது. ஒரு தனிநபர் கணித கூட்டல் தெரியாமல் செய்த பிழை இந்திய \ இறையாண்மை நீதியை குழி தோண்டி புதைத்தே விட்டது. (மேலும்....)

சதைதேடும் மனித மிருகங்கள்

சாக்கடையில் புரளும் மிருங்கள் இவர்கள்
சாத்தானிடம் என்றோ ஒருநாள்
சல்லாப பாடம் கற்றவர்கள் போல
சபலபுத்தியுடன் என்றும் எங்கள்
சாலைகளில் பாதசாரிகளா?

(மேலும்....)

பிறந்த நாள் மகிழ்ச்சியை தமிழருக்காக துறந்த அமைச்சர் ஹசன் அலி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலிக்கு இன்று பிறந்த நாள். இவரின் சொந்த இடமான நிந்தவூரை சேர்ந்த ஊடக நண்பர் ரியாஸ் அஹமட் சலாம் என்பவர் கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு குடும்பத்துடன் சென்று அமைச்சருக்கு நீண்ட ஆயுள், நீடித்த ஆரோக்கியம், அரசியலில் தொடர்ச்சியான வெற்றி கிடைக்க வேண்டும் என்று விசேட பிரார்த்தனைகள் மேற்கொண்டு உள்ளார். இதே போல இவரின் அயல் கிராமமான காரைதீவை சேர்ந்த விஜயானந்தம் என்பவர் பிரசித்தி வாய்ந்த கண்ணகி அம்மன் ஆலயத்துக்கு சென்று அமைச்சருக்கு நன்மைகள் வேண்டி அர்ச்சனைகள், வழிபாடுகள் செய்து உள்ளார். பொதுவாக முஸ்லிம்கள் பிறந்த நாள் கொண்டாடுவது இல்லை. இருப்பினும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கடந்த 06 வருடங்களாக பிறந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கின்றமையை ஹசன் அலி தவிர்த்தே வருகின்றார் என்று அறிய முடிகின்றது. இது குறித்து வினவியபோது தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான உறவு பிட்டும், தேங்காய்ப் பூவும் போன்றது, இலங்கை முஸ்லிம்களுக்கும் தமிழே தாய் மொழி, சமயத்தால் வேறுபட்டாலும் மொழியால் இரு இனத்தவர்களும் ஒன்றுபட்டு நிற்கின்றனர், மே 18 ஆம் திகதியை தமிழ் சகோதரர்கள் துக்க தினமாக அனுட்டிக்கின்றபோது எப்படி பிறந்த நாள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள முடியும்? இது ஒரு விரதம் அல்லது சபதம் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று பதிலுக்கு தெரிவித்தார் அமைச்சர்.

Guatemala

March Against Corruption


 

என் மனவலையிலிருந்து........!

முள்ளிவாய்கால் மரணங்கள் விட்டுச் சென்றிருக்கும் பாடங்கள்

(சாகரன்)

உரிமை மறுக்கப்பட்ட மக்கள் என்னமோ பெரும்பான்மையாக உரிமைப் போராட்டத்திற்காக தமது உயிரையும் அர்ப்பணிக்க, இந்த யுத்தங்களை முன்னிற்று நடத்தியவர்கள்; யார் அதிகாரத்தை இந்த மக்கள் மேல் செலுத்துவது என்பதில் மட்டும் குறியாக இருந்தனர். அதுதான் 'ஆண்ட பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆள நினைப்பில் தவறு இல்லையே' என்ற தனி அரசுக் கோரிக்கையாகும். அப்பிராணி பொது மகனுக்கு தனது உரிமை சார்ந்த உச்சக்கட்டக் கோரிகையாக இது தோற்றம் அளித்ததினால் விட்டில் பூச்சிகள் போல் யுத்தத்தில் முன்னரங்கில் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் இவர்களே அதிகம். விடயம் விளங்கி வெளியே வந்தால், கேள்வி கேட்டால் இங்கும் முன்னரங்கத்திலே முதுகில் சுடப்பட்டு மாவீரர் ஆக்கப்படதே எமது முள்ளிவாய்காலின் வரலாறு. மரணங்கள் எந்த வகையிலும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் மரணித்தவர்களுக்கான வணங்கங்களும், மரியாதைகளும், நினைவு கூரல்களும் நிகழ்தப்படுவதில் மனித குலத்தின் மனித நேயங்கள் பின்நிற்கக் கூடாது. இவற்றிற்கான குறைந்த பட்ட அங்கீகாரங்கள் அனுமதிகள் வழங்கப்பட்டே ஆகவேண்டும். அன்றே இவற்றை தாமாகவே எடுத்துக்கொள்ளும் நலமைகள் ஏற்படும் என்பது வரலாறு எமக்கு கற்று தந்த பாடம். இதில் பிரபாகரனின் மரணமும் உள்ளடக்கப்படவே வேண்டும். (மேலும்....)

சிவத்தம்பியும் நாற்பது கோமாளிகளும். திரைப்பட விமர்சனம்..

- நட்சத்திரன் செவ்விந்தியன்.


தாயகம் ஜோர்ச் குருச்சேவ் ஆங்கிலத்தில் எழுதிய Nutty Professor and Forty Evil Clowns என்ற உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவல் இப்போது தமிழில் சிவத்தம்பியும் நாற்பது கோமாளிகளும் என்ற திரைப்படமாக வருகிறது.

(மே 18 இல் உலகெங்கும் வெளியிடப்படவிருந்த மேற்குறித்த படம் சில நாடுகளின் தணிக்கை குழுவினரின் சிக்கல் காரணமாக மே 19 ல் வெளிவரவுள்ளது. மே 17ல் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் என்று தாய்லாந்தின் புக்கே நகரில் காட்டப்பட்ட சிறப்புக் காட்சியைப்பார்த்து புலம்பெயர் திரைப்பட விமர்சனச் செம்மல் நட்சத்திரன் செவ்விந்தியன் விசேடமாக Facebook க்கு எழுதியது இது) (மேலும்....)

வைகாசி 17, 2015

வான் 'உயர்ந்த'.... திறமைதான்......!

அப்பனுடன் விவாகரத்து, மகனுடன் தேனிலவு!

நாமல் ராஜபக்ஸ எம். பி குறித்து மகிழ்ச்சி வெளியிட்டு உள்ளார் அமைச்சர் அர்ச்சுன ரணதுங்க. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு பலம் சேர்க்கின்ற நிகழ்ச்சிகளில் நாமல் ராஜபக்ஸ எம்.பி பங்கேற்காமல் இருக்கின்றார் என்பதே இம்மகிழ்ச்சிக்கு காரணம் என்று ஊடகங்களுக்கு தெரிவித்தும் உள்ளார். சுதந்திர கட்சி உறுப்பினர்களில் ஒரு தொகையினர் மஹிந்தவுக்கு பலம் சேர்க்கின்ற நடவடிக்கைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் மேற்கொள்கின்றனர் என்று சுட்டிக் காட்டி உள்ளார். ஆனால் மஹிந்த ராஜபக்ஸ தகப்பனான போதிலும்கூட மகன் நாமல் ராஜபக்ஸ இவ்வாறான நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது, சுதந்திர கட்சியின் கொள்கைகளை நாமல் பின்பற்றி நடக்கின்றார், ஆனால் ஏனையோர் சுதந்திர கட்சியை பிளவுபடுத்த முயற்சிக்கின்றார்கள், அடுத்த அரசாங்கத்தை சுதந்திர கட்சி அமைப்பதை தடுக்க பார்க்கின்றனர் என்று கூறினார். வெளியில் இருந்து நுழைந்தவர்களே கட்சியை பிளவுபடுத்த பார்க்கின்றார்கள், சுதந்திர கட்சியின் உண்மையான விசுவாசிகளும் இருக்கின்றனர், இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கின்றனர் என்று சொன்னார்.

தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது

பாக்கு, வெத்திலை வைத்து கொடுத்து வரவேற்பது தமிழினத்தின் பண்டைய பண்பாடும், காலாசாரப்படிமம் ஆகும். இது இலட்சுமி கடாச்சமானது என்றும், தெய்வீகமானது என்றும் கருதப்பட்டது. வாக்குச் சொல்பவர்கள் கூட பாக்கு உருட்டியும், வெத்திலை நாடி பார்த்தும் குறி சொன்னார்கள். இப்படி இருந்த பாக்கு இன்று போக்குமாறி, வாக்குமாறி இனத்தையே பலவீனப்படுத்தும் தாக்கு பொருளாக மாறியுள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் முக்கியமாக யாழ்மாவட்டத்தில் மாவா எனும் போதைப் பொருள் ஊட்டிய பாக்கு சர்வசாதாரணமாக விற்கப்படுகிறது. இதை அரசோ, குற்றத்தடுப்புப்பிரிவோ, அரசவதிகாரிகளோ இதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? சமூக ஆவலர்கள் இது குறித்து விசனப்பட்டு, புகார் செய்தாலும் இதைக் அரசு கண்டு கொள்ளாதிருப்பதும், தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட மறுப்பதும், பெற்றோர், சமூக ஆவலர்கள்,காலசாரக்காவலர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எனப்பல வேறுபட்ட வகுப்பினர்கள் விசனத்துக்குள்ளாகி உள்ளார்கள். (மேலும்....)

'தமிழகத்தில் வாழும் அகதிகளில் பலர் நாடு திரும்ப விரும்பவில்லை'

தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழ் அகதிகளில் 35 சதவீதமானோரே நாடு திரும்பியுள்ளனர். ஏனையோர் நாடு திரும்ப விரும்பவில்லை என மீள்குடியேற்ற மற்றும் இந்துமத விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். ஒரு இலட்சம் இலங்கையர்கள் தமிழ் நாட்டில் அகதிகளாக வாழ்கின்றார்கள், அவர்களில் பலர் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளதுடன் அவர்களில் பலருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். அவர்கள் அனைவரும் நாடு திரும்பவில்லை. கடந்த புதன்கிழமை கொழும்பு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த அகதிகளிடம் சுமார் ஐந்து மணித்தியாலங்கள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் விசாரணைகளுக்கு அஞ்சுகின்றார்கள், நாடு திரும்பியவர்களுக்கு இது ஒரு அடிப்படை பிரச்சினையாகவே காணப்படுகின்றது. இதனால், நாங்கள் விசாரணை காலத்தை குறைக்ககொள்ள முயற்சிக்கின்றோம். தமிழகத்தில் உள்ள அகதிகள் மூன்று முகவர் அமைப்புகள் ஊடாக தொடர்ந்து நாடு திரும்பி வருகின்றனர். நாடு திரும்பும் அனைத்து அகதிகளையும் வரவேற்க அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளது. வியாழக்கிழமை நாடு திரும்பியவர்கள் இந்திய கடவுச்சீட்டுகளை கொண்டிருந்தனர். இரட்டை குடியுரிமை முறையில் அவர்கள் அனைவரும் நாடு திரும்பியுள்ளனர், அத்துடன் இவர்கள் அனைவரும் இந்த நாட்டை சேர்ந்தவர்கள்.

தத்தளிக்கும் குடியேற்றவாசிகளை மீண்டும் கடலில் தள்ளிவிடாதீர்!

கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் குடியேறிகளை மீண்டும் கடலில் தள்ளிவிட வேண்டாமென தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுஸைன் கேட்டுள்ளார். இந்நாடுகளின் கொள்கைகள் பயங்கரமானதாக உள்ளது. படகுப் பயணம் மேற்கொண்ட குடியேறிகள் ஆறாயிரம் பேர் வரை, கடலில் தத்தளித்துக் கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், இவர்களது உயிரைக் காப்பாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். சட்டவிரோதக் குடியேறிகள் எண்ணூறு பேர் வரை, இந்தோனேசியா வந்தடைந்த சிறிது நேரத்தில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷைச் சார்ந்தவர் களும், அடக்குமுறை, அச்சம் காரணமாக மியன்மாரிலிருந்து வெளியேறும் ரொஹிங்யா முஸ்லிம்களும் உள்ளனர். முஸ்லிம்கள் எதிர்நோக்கும் கடுமையான மனித உரிமை நிலைமைகள் குறித்து மியன்மார் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயார்

நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் அடுத்த பொதுத் தேர்தலுக்குத் தம்மைத் தயார்படுத்தும் முயற்சியில் அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முனைப்புடன் செயலாற்றத் தொடங்கியுள்ளன. எதிர்வரும் பொதுத் தேர்தல் வாக்களிப்பு, எந்த முறையில் இடம்பெறப் போகின்றதென்ற குழப்பம் வாக்காளர்களுக்கு மட்டு மல்ல, தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள், உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் மூலம் கொண்டுவர உத்தேசிக்கப் பட்டுள்ள புதிய தேர்தல் முறையிலுள்ள சாதக, பாதகங்கள் தொடர்பில் சிறுபான்மைக் கட்சிகள், சிறு கட்சிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் அது தொடர்பிலான சந்திப்புக்கள் ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றன. எவ்வாறாயினும் தேர்தல் ஒன்றுக்கு முகங்கொடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை அரசியல் கட்சிகளுக்கும் தேர்தலில் போட்டியிட விருப்பம் கொண்டவர்களுக்கும் இருப்பதால், தேர்தல் ஆயத்தங்களில் இப்போதே ஈடுபடத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பர்?

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர்களால் ஓர் அரசாங்க அதிபரைக் கூட மாற்ற முடியாது என்றால் எப்படி தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் போகிறார்கள் என அதே கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினரான ஜி. ரி. லிங்கநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார். உண்மைதான். வட மாகாண சபை கடந்த காலங்களில் இயங்க முடியாமல் இருந்தமைக்குக் காரணம் முன்னைய அரசும் ஆளுநர் உட்பட பிரதம செயலாளருமாக இருந்தனர். இப்போது எல்லாமே சரியாகிவிட்டது. இனியும் மேடை சரியில்லை எனக் கூற முடியாது. ஆகவே மிகுதிக் காலங்களில் நாம் முடிந்தவரை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.

யாழ்ப்பாண கலாசாரத்திற்கு என்ன நடந்தது?

யாழ்ப்பாண கலாசாரத்திற்கு என்ன நடந்தது? எனும் இதே தலைப்பில் ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவும் அதாவது இறுதி யுத்தம் முடிவடைந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னரும். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவும் இரண்டு ஆசிரியர் தலையங்கள் எழுதப்பட்டு இன்று அதே தலைப்பில் இன்னுமொரு தலையங்கத்தை எழுதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அந்தளவிற்கு அங்கு இடம் பெற்றுவரும் சில சம்பவங்கள் அமைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும். விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட் டதன் பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட முறை யில் பலவிதமான கட்டுப்பாடுகளுக்குள் ஒரு வகையில் புலிகள் மற்றும் படைத்தரப்பினரின் ஒருவகையான அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டிருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டதும் புதியதொரு சுதந்திரமான சூழலுக்கு முகங்கொடுத்தபோது அதனைப் பயன்படுத்திச் சிலர் அங்கு கலாசார சீரழிவை ஏற்படுத்த முனைந்தனர். அது அங்கிருந்த கற்ற சமூகத்தினால் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டது. (மேலும்....)

யாழ்ப்பாண கலாசாரத்திற்கு என்ன நடந்தது?

யாழ்ப்பாண கலாசாரத்திற்கு என்ன நடந்தது? எனும் இதே தலைப்பில் ஐந்து வருடங்களுக்கு முன்னதாகவும் அதாவது இறுதி யுத்தம் முடிவடைந்து சரியாக ஒரு வருடத்தின் பின்னரும். அதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாகவும் இரண்டு ஆசிரியர் தலையங்கள் எழுதப்பட்டு இன்று அதே தலைப்பில் இன்னுமொரு தலையங்கத்தை எழுதும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அந்தளவிற்கு அங்கு இடம் பெற்றுவரும் சில சம்பவங்கள் அமைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும். விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட் டதன் பின்னர் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் திட்டமிட்ட முறை யில் பலவிதமான கட்டுப்பாடுகளுக்குள் ஒரு வகையில் புலிகள் மற்றும் படைத்தரப்பினரின் ஒருவகையான அடக்கு முறைக்குள் தள்ளப்பட்டிருந்த மக்கள் அதிலிருந்து விடுபட்டதும் புதியதொரு சுதந்திரமான சூழலுக்கு முகங்கொடுத்தபோது அதனைப் பயன்படுத்திச் சிலர் அங்கு கலாசார சீரழிவை ஏற்படுத்த முனைந்தனர். அது அங்கிருந்த கற்ற சமூகத்தினால் ஓரளவு தடுத்து நிறுத்தப்பட்டது. (மேலும்....)

அம்மா......!
 

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து பேசினாங்க... "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்

ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம் , "போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள் (மேலும்....)

“பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” - பாரதி

வடக்கில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன. பெண்களுக்கான சமூக இடைவெளியை தமிழ் கலாச்சார காவலர்களும் அனுமதிப்பதில்லை. வக்கிர சினிமாக்களும் ,தொடர்களும் ,இணையங்களும் தமிழில் காளான்கள் போல் பெருகிக் கொண்டிருக்கின்றன.
பெண்கள் அடக்க ஒடுக்கமாக இருக்கவேண்டும். நடை உடை பாவனைகள் அவ்வாறிருக்கவேண்டும். பெண்கள் குரல் உயர்த்திப் பேசுவது யாழ்மையவாத சிந்தனைக்கு கடும் சினத்தை ஏற்படுத்துவது. புங்குடுதீவு மகாவித்தியாலய மாணவி சிவயோகநாதன் வித்தியாவின் பாலியல் பலாத்காரப்படுகொலையும் இதுபோன்று கடந்தகாலச்சம்பங்களும் வக்கிர வன்முறை மயப்பட்ட வக்கிரசமூக சிந்தனை மற்றும் நிலமானிய எச்ச சொச்சம் பெண்களுக்கான சமூக இடைவெளியை நிராகரிக்கும் கூறுகளாகும். (மேலும்....)

கருணாநிதி ஒரு துரோகி? என்பதற்கு வரலாற்று ஆவணம் இது தலைவர் பிரபாகரன் தன் கைப்பட எழுதியது..


 

மற்றவர்கள் எல்லோரையும் எதிரியாக்கி மனிதன்? பிரபாகரன் . ஆனால் 97 பின்பாக தற்போது உயிரோடு இலங்கைத்தமிழர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கலைஞரால் மருந்து விடுதலைப்புலிகளுக்கு கடல் மார்க்கமாக அனுப்பப்பட்டது . வரலாறறில் இருந்து சிலவற்றை எடுப்பு எமது இயல்பு. - Noel Nadesan 

வைகாசி 16, 2015

என் மனவலையிலிருந்து........!

மாணவியின் கொலை விட்டுச் சென்றிருக்கும் செய்தி

(சாகரன்)

சமூகத்தில் நீதி, நியாயம், ஒழுக்கம், நெறிமுறை குற்றச் செயற்களை தடுக்க செயற்படுதல், ஊரைக் கண்காணித்தல் என்ற பலவகை செயற்பாடுகளை ஒரு காலத்தில் ஊர்ச்சங்கங்கள் குறிப்பாக வாசிக சாலைகள், சனசமூக நிலையங்கள் செய்து வந்தன. இவை ஒரு பலமான அமைப்பாக ஊர்கள் தோறும் இருந்தே வந்தன. விடுதலை அமைப்புக்களின் ஆயுதச்சாலாச்சாரத்தின் வளர்சியும், இதனைத் தொடர்ந்த புலிகளின் ஏகபோகம் இந்த தன்னிச்சையான சமூக இயக்கங்கள் யாவற்றையும் இல்லாது செய்து விட்டது. புலிகளின் அமைப்பைத் தவிர வேறு அமைப்புகள்கள் இருக்க முடியாது என்ற நிலையில், சனசமூக நிலையங்களின் செயற்பாடுகள் மட்டும் அல்ல, ஒரு மட்டத்தில் அற நெறியை செயற்படுத்த முணன்ற கோவிகளும் தமது சுயாதீன செயற்பாட்டை இழந்து செயற்பட முடியாமல் போயின. இது போன்ற அமைப்புக்களின் செயற்குழுகள் என்று ஏதும் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டன. இந்த இடைவெளி பாரிய கண்காணிக்கும் நிலையங்களை கிராமங்கள் தோறும் இல்லாமல் செய்து விட்டது. இந்த அமைப்புக்கள் மட்டும் பலமாக இருந்திருப்பின் புங்குடுதீவு பாடசாலை மாணவி மாவச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கும்போது தெருவிலிருந்து தூக்கிச் சென்று சின்னாபின்னமாக்கி கொலை செய்திருக்க வாய்புக்கள் அரிதாகவே இருந்திருக்க வாய்ப்புக்கள் அதிகம். (மேலும்....)

ஈழச் சமூகத்தில் நிலவும் தீண்டாமை குறித்துத் தமிழகத்தில் ஏன் இந்த மௌனம்? - அ.மார்க்ஸ்


(பாரதி புத்தாகலய வெளியீடாக தற்போது விருதுநகரில் நடை பெற்றுக் கொண்டுள்ள தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் வெளியிடப்படுகிற 'தீண்டத்தகாதவன்" சிறுகதைத் தொகுப்பிற்கு நான் எழுதிய முன்னுரை. தொகுத்தது: தோழர் சுகன். இந்நூலின் முதற்பதிப்பிற்கு நான் எழுதியுள்ள விரிவான முன்னுரையும் நூலில் உள்ளது - அ.மார்க்ஸ்)

ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் இத் தொகுதியைச் சுமார் ஏழாண்டுகளுக்கு முன் நண்பர் சுகன் தொகுத்ததோடன்றி தன் சொந்த முயற்சியில் வெளியிடவும் செய்தார். ஈழத் தமிழர்கள் மத்தியில் புரையோடிப் போயுள்ள சாதி ஆதிக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தும் இத் தொகுதி, விரிவாக விவாதிக்கப்படவில்லை ஆயினும் இது குறித்து அக்கறையுள்ள ஈழத்தவர்களால் மட்டுமின்றி இங்குள்ளவர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு மிக விரைவில் விற்றும் தீர்ந்தது. (மேலும்....)

கருணாநிதியின் வாரிசாகின்றார் சிறீதரன்!!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தானே கடிதமெழுதி அதனை பத்திரிகைகளிற்கு அனுப்பி சாதனை புரிந்துவருபவர் என்பது தெரிந்ததே. அவரது வழியினில் முன்னதாக ஆனந்த சங்கரி இதே பாணி கடிதங்களை எழுதி உரிய இடங்களிற்கு அனுப்பி வைத்தாரோ ஊடகங்களிற்கு அனுப்பி வைப்பதில் முன்னின்றார். தற்போது இப்பாணியினில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனும் புறப்பட்டுள்ளார்.முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த இலங்கை காவல்துறையிடம் அனுமதி கோரி காத்திருக்கும் அவர் தற்போது புங்குடுதீவு மாணவி படுகொலை தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அவசர கடிதம் ஒன்றினை அவர் அனுப்பி வைத்துள்ளார். (மேலும்....)

மத்தள விமான நிலையம்: கடனை மீளச் செலுத்த மாதாந்தம் 250 மில்.ரூபா

மத்தள சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிக்க முன்னைய அரசாங்கம் எடுத்த கடன்தொகை மாதாந்தம் 250 மில்லியன் ரூபாவை செலுத்த நேரிட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை நடத்திச் செல்வது சவாலாக உள்ளது. இது முறையான ஒரு பொறிமுறையின் கீழ் இலாபகரமானதாக மாற்றப்படும் என சிவில் விமானசேவை அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். விமான நிலையத்தை நிர்மாணிக்க எடுக்கப்பட்ட கடனைச் செலுத்தவும் விமான நிலைய ஊழியர்களுக்குச் சம்பளம் செலுத்தவும் விமான நிலையத்தின் வருமானத்தால் முடியாமற் போய் இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இன்று இங்கு ஒரு விமானமே வருகிறது. அது ‘பிலைடுபாய்’ நிறுவனத்துக்கு உரிய வெளிநாட்டு விமானமாகும். மத்தளை விமான நிலையத்தை பராமரிப்பு, திருத்த வேலை நிலையமாக உலகுக்கு அடையாளப்படுத்தவும் இப்பகுதியின் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்துவது தொடர் பாகவும் அவதானம் திரும்பி உள்ளதாகவும் அதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மத்தளை விமான நிலையத்தில் அதிக மான ஊழியர்கள் உள்ளனர். ஆனால் வேலை இல்லை. கட்டுநாயக்காவில் வேலை இருந்தாலும் ஊழியர்கள் இல்லை. இந்த நிலைமையைக் கண்டறிந்து இவ்விரு விமான நிலையங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தொடர்ந்து தெரி வித்தார். (எப்.எம்.)

20 ஆவது அரசியலமைப்பு திருத்தம்
சிறு கட்சிகளிடையே ஏக இணக்கப்பாடு

20 ஆவது தேர்தல் திருத்தம் தொடர்பில் சிறு கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் 20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்பட இருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் சிறு கட்சிகள் அடங்கலான பாராளு மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத கட்சிகளினால் முன்வைக்கப்பட்ட யோசனைகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாத, சகல தரப்பும் இணங்கக் கூடிய புதிய கலப்பு தேர்தல் முறையொன்றை உருவாக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் திங்கட்கிழமை நடைபெறும் முக்கிய கூட்டத்தில் இறுதி முடிவு எட்ட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். அமைச்சரவை உபகுழுவின் சிபார்சுகள் அடங்கிய இறுதி அறிக்கை புதன்கிழமை அமைச்சரவைக்கு வழங்க உள்ளதாகவும் அவர் கூறினார். எல்லை நிர்ணயத்தின் போது சிறுபான்மையினருக்கு தனித்தொகுதிகள் மற்றும் பல் அங்கத்துவ தொகுதிகள் உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டதோடு எம்.பிகள் தொகையை 255 ஆக அதிகரிப்பது தொடர்பில் பெரும்பாலான கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது. எல்லை நிர்ணய சபை மற்றும் அதற்கு கண்காணிப்பாளர்களை நியமித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

வைகாசி 15, 2015

லண்டனில் குமுதினிப் படகு கோரப்படுகொலையின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு
 

நெடுந்தீவு குமுதினிப் படகு கோரப்படுகொலை இடம்பெற்று 30 ஆண்டுகள் ஆகின்றன. ஈழத்தமிழர்களின் மனதில் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்துக்குப் பின்னர் மீண்டும் ஒரு பழிதீர்க்கும் படலமாக மிகப்பெரிய இனப்படுகொலையாக 1985 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நடுக்கடலில் நடத்தப்பட துயரச் சம்பவமே குமுதினிப் படகுப் படுகொலையாகும். அந்த அனர்த்தத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இன்றையவரையிலும் உயிரைக் கிலிகொள்ளவைக்கும் சம்பவமாகவே அது அமைந்தது. (மேலும்....)

போர் வெற்றி தின பெயர் மாற்றம் வரவேற்கத்தக்கது' - இரா சம்பந்தன்

இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த மே 18ஆம் தேதியை, யுத்த வெற்றி தினமாகக் கொண்டாடி வந்ததை நிறுத்தி, புதிய அரசு, அதை நாட்டைப் பிரிவினைவாதத்திலிருந்து காத்த தினமாக அனுசரிப்பது என்று முடிவெடுத்திருப்பதைப் பற்றி தமிழர்கள் தரப்பில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. தமிழர்களை நாடாளுமன்றத்தில் பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அரசின் இந்த அறிவிப்பை சாதகாமானதாகப் பார்க்கிறார். ஆனால் போரில் இறந்தவர்கள் காணாமல் போனவர்கள் , சிறையில் இருப்பவர்கள் என்று போர் தொடர்பான பலதரப்பட்ட பிரச்சனைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் இது போன்ற குறியீட்டளவிலான அறிவிப்புகள் போதாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் நடராஜா குருபரன்பிரதான தமிழ் கட்சியின் நிலை இவ்வாறு இருக்கும் நிலையில், தமிழ் சிவில் அமைப்புகள் இது குறித்து சற்று மாறுபடுகின்றன. இங்கே பிரிட்டனில் உள்ள ஊடகவியலாளர் நடராஜா குருபரன், இந்த அறிவிப்பு அரசியல் காரணங்களால் வந்திருக்கிறது என்கிறார். ஆனாலும் குறியீட்டளவில் இது வரவேற்கத்தக்கதுதான் என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார். (BBC Tamil)

ுங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பாடசாலைச் சமூகம் போராட்டம்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சியில் பாடசாலைச் சமூகம் போராட்டம், எம்மீது தொடரும் அடக்கு முறைகள். மாணவர்கள் ஆதங்கம்............

இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வொஷிங்டனில் உள்ள வெளியுறவு அமைச்சு தலைமைக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள இரகசிய இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இலங்கை அரசியல்வாதிகளின் வாரிசுகள் குறித்து எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலான அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஒழுக்கம் குறைந்தவர்களாக இதில் காட்டப்பட்டு உள்ளனர். குறிப்பாக பாலியல் ஒழுக்கம் அற்றவர்கள் என்று சித்திரிக்கப்பட்டு உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா ஆகியோரின் புதல்வர்கள் பாலியல் விடயங்களில் மிகவும் மோசமானவர்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அதே போல இந்நாள் அமைச்சர் ராஜித சேனாரட்ணவின் புதல்வர் பாலியல் சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதே நேரம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் புதல்வர், சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலியின் புதல்வர் போன்று விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே ஒழுக்கமானவர்களாக இதில் அடையாளப்படுத்தப்பட்டு உள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் புதல்வர் வெகுவிரைவில் நேரடியாக அரசியலில் குதிக்கக் கூடும் என்றும் இதில் உள்ளது. அமைச்சர் ஹசன் அலியின் புதல்வர் அலி சப்ரி  எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடக் கூடும் என்று எழுதி இருக்கின்றனர்.

செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை உருவாக்கும் நாசா

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் பெரிய பெரிய சிலிண்டர்களில் ஆக்சிஜனை அடைத்து எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. செவ்வாய் கிரகத்திலேயே நுண்ணுயிர்களைக் கொண்டு ஆக்சிஜன் உருவாக்கும் திட்டத்தை நாசா தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவைச் சேர்ந்த டெக்‌ஷாட் என்ற நிறுவனத்துடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் தயாரிக்கும் ஆராய்ச்சியை மேற்கொள்ள உள்ளதாக www.ign.com இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் படி, சிலிண்டர்களில் ஆக்சிஜன் எடுத்துச் செல்வதற்கு பதிலாக நுண்ணுயிர்களைக் கொண்டு செவ்வாய் கிரகத்திலேயே ஆக்சிஜன் உருவாக்கப்படும் என்று டெக்‌ஷாட் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி யூஜின் போலந்த் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் உள்ள மணலில் நுண்ணுயிர்களைக் கொண்டு சோதனை செய்து, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கான சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
2030-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புருண்டியில் இராணுவ சதிப்புரட்சி முயற்சி

புருண்டியில் ஜனாதிபதிக்கு எதிரான இராணுவ சதிப்புரட்சி வெற்றியளித்தது குறித்து உறுதி செய் யப்படாத நிலையில் தலைநகர் புஜ{ம்புராவில் போட்டி படையினர் பரஸ்பரம் சண்டையிட்டு வரு கின்றனர். அரச தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலை யங்களுக்கு அருகில் நேற்று துப்பாக்கிச்சத்தங்கள் மற்றும் வெடிப்புகள் கேட்ட வண்ணம் இருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. முன்னாள் உளவுப் பிரிவு தலைவரினால் முன் னெடுக்கப்பட்ட இராணுவ சதிப்புரட்சி தோல்வி அடைந்ததாக ஆயுதப் படைகளின் தளபதி குறிப் பிட்டுள்ளார். ஆனால் ஜனாதிபதி பிர்ரே நிகுருன் சிசாவினால் தன்சானியாவில் இருந்து நாடு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாதுள்ளது. ஜனாதிபதி நிகுருன்சிசா மூன்றாவது தவ ணைக்கு போட்டியிடப்போவதாக அறிவித்ததை அடுத்தே தென்கிழக்கு ஆபிரிக்க நாடான புருண் டியில் பதற்றம் வெடித்தது. ஜனாதிபதியின் இந்த முயற்சி சட்டத்திற்கு முரணானது என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டின. நிகுருன்சிசா கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் ஆட்சியில் இருந்து வருகிறார். ஆயுதப் படைகளுக்கு இடையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலை யில் இரு தரப்புக்கும் ஆதரவாக படைகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. அனைத்து தரப்பும் அமைதிகாக்க வேண்டும் என்று ஐ.நா. மற்;றும் அமெரிக்கா வலியுறுத்தி யுள்ளன.

புங்குடுதீவைச் சேர்ந்த இளம்பெண், கொலையின் சந்தேகநபர்கள் கைது..!

புங்குடுதீவு 9ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சிவலோகநாதன் வித்யா என்பவர், இனம்தெரியாத நபர்களினால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது. இவர் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் உயர்தரக்கல்வி கற்கும் மாணவி ஆவார். இவர் நேற்றுக்காலை வல்லனில் உள்ள தனது வீட்டில் இருந்து, பாடசாலைக்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.(மேலும்....)

லண்டனில் முழு குடும்பமே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்?


கிழக்கு லண்டன் பகுதியான , சட்வெல் ஹீத்தில் பொலிசார் 3 சடலங்களை கண்டெடுத்துள்ளார்கள். 2 மகள் மற்றும் தாயார் வீட்டில் இறந்த நிலையில் காணப்படுவதோடு, இவர்களின் அப்பா (கணவர்) பிறிதொரு இடத்தில் பற்றைக்குள் இறந்து கிடப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரதீஷ் குமார் என்று அழைக்கப்படும் 45 வயது நிரம்பிய தந்தை புதர் நிறைந்த பகுதியில் சடலமாக மீட்க்கப்பட்டார். அவரது மனைவி (37)மற்றும் இரட்டை பெண் பிள்ளைகளான நேகா(13) மற்றும் நியா(13) ஆகியோரது உடல் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடலில் எந்த ஒரு காயங்களும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். நேற்று முன் தினம் முதல் அவர்கள் வீட்டில் எதுவித நடமாட்டமும் தென்படவில்லை என்றும் பிள்ளைகள் பள்ளிக்கூடம் வரவில்லை என்றும் பொலிசாருக்கு முறைப்பாடு சென்றுள்ளது. பொலிசார் சென்று அவர்கள் வீட்டை தட்டிப்பார்த்துவிட்டுச் சென்றுள்ளார்கள். அதன் பின்னர் நேற்றைய தினம்(13) மீண்டும் சென்று தட்டிப்பார்த்த போது எவரும் கதவை திறக்கவில்லை. இன் நிலையில் தான் பொலிசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுளைந்துள்ளார்கள். மேலும் இவர்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள , புதரில் ஒரு சடலம் இருப்பதாக தகவல் கிடைக்க அங்கே விரைந்த பொலிசாருக்கு மேலதிக அதிர்சி காத்திருந்தது. அங்கே ரதீஷ் குமார் இறந்து காணப்பட்டுள்ளார். அங்கே என்ன நடந்தது என்று இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று பொலிசார் கூறியுள்ளார்கள். பிரேதப் பரிசோதனை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் கிடைக்கும் தகவலை வைத்தே என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியும்.

எந்தத்தொழிலானாலும் சம மதிப்பு, சம ஊதியம் என்ற நிலைமைகள் வருகிறபோதுதான்.....!

கொலை ஒரு குற்றச்செயல். அதைக் குடும்பமே செய்தாலும் குற்றச்செயல்தான். குழந்தையைக் கொல்வதும் குழந்தைப்பருவத்தைக் கொல்வதும் ஒன்றுதான். குழந்தைப் பருவத்தில் தன் இலக்கு எது எனபதையெல்லாம் தேர்ந்தெடுக்கிற பக்குவமோ புரிதலோ இருக்காது. அத்தகைய சூழலில் பெற்றோர் தங்கள் தொழிலைக் கற்றுக்கொள்ள வைப்பது என்பது திணிப்பு வேலைதான். 18 வயதுக்கு மேல் இளைஞர்கள் தங்கள் விருப்பம் என்ன, இலக்கு என்ன என்பதை முடிவு செய்துகொள்ளட்டும். (மேலும்....)

ஈபிஆர்எல்எவ் தீர்க்க தரிசனத்தோடு அமைத்த மாகாணசபை முறைமையும் 13 ஆவது திருத்தமுமே இன்று தமிழருக்குள்ள ஒரே தீர்வாகும்

அன்று 1987இல் ஈபிஆர்எல்எவ். தீர்க்கதரிசனத்தோடு அமைத்த மாகாணசபை முறைமையும் 13வது திருத்தமுமே இன்று தமிழருக்குள்ள எஞ்சியுள்ள ஒரேயொரு தீர்வாகும். அதனை முதலில் பூரணமாக பலப்படுத்தினாலே எமது அரைவாசிப்பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இவ்வாறு பொத்துவிலையடுத்துள்ள கோமாரியில் நடைபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஈபிஆர்எல்எவ். கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குணசேகரம் சங்கர் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தல் நகர்வுகள் பற்றிய ஈபிஆர்எல்எவ். கட்சியின் மேற்படி அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் தோழர் கேதன் தலைமையில் நடைபெற்றது. மாகாணசபை முறைமையாவது இன்று எமக்குள்ள குறைந்தபட்ச தீர்வாகவுள்ளது. அதற்கு எமது தோழர்கள் வழங்கிய தியாகத்தாலும் மதிநுட்பத்தாலுமே இது சாத்தியமானது.
(மேலும்....)

உறங்காத விழிகள்

படித்ததில் மிகவும் பிடித்தது. எழுதியவருக்கு வாழ்த்துக்கள்...

"கல்யாணம் பண்ணிப்பார்"
"புது வீடு கட்டிப்பார்"
*
"வெளிநாடு வந்துப்பார்"......
*
இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
 

(மேலும்....)

ஒராண்டில் உலகம் சுற்றி உண்டக்கட்டி வாங்கி தின்றது தான் மிச்சம்

(Narain Rajagopalan)

அணுசக்தி ஒப்பந்தத்தை மன் மோகன் சிங் ஒபாமாவோடு உரையாட முயன்றபோது ‘இந்தியாவை அமெரிக்காவிற்கு அடிமையாக்க நயவஞ்சகமாக திட்டம் போடுகிறது காங்கிரஸ்’ என்று நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் தகராறு செய்து, புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு இப்போது அதே ஒப்பந்தத்தை நிறைவேற்ற veto power னை பயன்படுத்துதலுக்கு எங்களூரில் பெயர் பச்சையான சந்தர்ப்பவாத அயோக்கியத்தனம்.உச்சநீதிமன்றத்தால் நிலக்கரி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டப்பின், அரசே ஏலம் விட்டு 2 இலட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது என்கிற PR பஜனையை மோடி ஆதரவாளர்கள் ஊரெங்கும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் முக்கியமாய் சொல்வது - கனிம வளங்கள் நிறைந்திருக்கும் மாநிலங்களுக்கு இதனால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பது. (மேலும்....)

வைகாசி 14, 2015

20ஆவது திருத்தத்தை ஆராய அமைச்சரவை உப-குழு

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சரவை உப-குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப்பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சர் சரத் அமுனுகம தலைமையிலான இந்த அமைச்சரவை உப-குழுவில் அமைச்சர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ரவூப் ஹக்கீம், பி.திகாம்பரம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ள யோசனைகள், பரிந்துரைகளை இந்த உப-குழு விரிவாக ஆராயும். அந்த உப-குழுவினால் சமர்ப்பிக்கப்படுகின்ற அறிக்கை, அடுத்த அமைச்சரவைக்கூட்டத்தின் போது சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சரவைப்பேச்சாளர் தெரிவித்தார்.

மங்களவிடம் ரூ.1 பில்லியன் நட்டஈடு கேட்டு மஹிந்த கடிதம்

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கேட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சார்பில் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் சார்பில் சட்டத்தரணி அத்துலபிரியதர்தன டி சில்வாவே இந்த கோரிக்கை கடிதத்தை நேற்று செவ்வாய்க்கிழமை (12) அனுப்பி வைத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவதூறு செய்தல் மற்றும் அவமதித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களே மங்கள சமரவீர மீது சுமத்தப்பட்டுள்ளன. மஹிந்தவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட மங்கள சமரவீரவிடமிருந்து ஒரு பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரப்பட்டுள்ளது. அந்த நட்டஈட்டு தொகையை 21 நாட்களுக்குள் வழங்காவிட்டால் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 மே 07ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது 'மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய குடும்படும் பாரியளவில் கொள்ளையடித்துள்ளனர். அந்த குடும்பத்தின் சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் இருக்கின்ற முதலாவது  ரில்லியன்னாவார்' என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக பலஸ்தீன சனத்தொகையில் பெரும்பான்மையோர் அகதிகள்

உலக பலஸ்தீனர்களின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தவர்களாக வாழ்வதாக பலஸ்தீன மத்திய புள்ளிவிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முடிவில் உலகில் பலஸ்தீனர்களின் மொத்த சனத்தொகை 12.1 மில்லியனாகும். இதில் பலஸ்தீன நிலப்பகுதிக்குள் தொடர்ந்து வாழ்பவர்கள் வெறும் 4.6 மில்லியனாகும். எஞ்சியவர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். இதில் மேற்குக் கரையில் 2.8 மில்லியன் பலஸ்தீனர்களும் காசாவில் 1.8 மில்லியன் பலஸ்தீனர்களும் வாழ்வதாக புள்ளிவிபரம் குறிப்பிடுகிறது. காசாவின் மக்கள் தொகை மேலும் அதிகரித்திருப்பதால் அங்கு ஒரு சதுர கிலோ மீற்றரில் 4.9 பேர் வீதம் வாழ்கின்றனர். இதன் மூலம் அந்த பகுதி தொடர்ந்து உலகின் அதிக மக்கள் செறிவு கொண்ட பகுதியாக நீடிக்கிறது. பலஸ்தீன நிலப்பகுதிக்குள் வாழும் 4.6 மில்லியன் மக்களில் 43.1 வீதமானவர்கள் அகதிகளாகவே தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அதேபோன்று வெளியாடுகளில் வாழும் எஞ்சிய 7.5 மில்லியன் பலஸ்தீனர்களில் பெரும்பான்மை யானவர்கள் ஜோர்தான், லெபனான் மற்றும் சிரியாவில் ஐ.நாவினால் அமைக்கப்பட்ட 31 அகதி முகாம்களிலேயே உள்ளனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யதார்த்தமான அணுகுமுறை

தமிழ் மக்கள் மத்தியில் புலிகள் பாரிய சக்தியாக இருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொண்டிருந்த நிலைப் பாடு, அதேநேரம் தொடர்ச்சியான எதிர்ப்பு அரசியல் ஆகி யன இந்த நாட்டு சிங்கள மக்கள் மத்தியில் பாரிய கசப்பு ணர்வையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஐக்கிய இலங்கைக்குள் நியாயமான அரசியல் தீர்வொன்றை வழங்கினால் போதுமென கூட்டமைப்பு அறிவித்தாலும் அதனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலைதான் இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு முன்னைய ஆட்சியாளர்களும் காரணமாக இருந்திருக் கிறார்கள். ஒரு விடயத்தை நாம் இங்கு தெளிவாகக் கூற வேண்டும். சிங்கள மக்களின் மனங்களை வெல்லாமல் எந்த வொரு அரசியல் தீர்வும் சாத்தியமாகாது. ஆகவே அவர் களின் மனங்களை வெல்லும் வேலைத்திட்டங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும். ஆனாலும், புதிய அரசாங்கத்தோடு கூட்டமைப்புக்கு ஏற்பட்டி ருக்கும் மனமாற்றமும் இணக்க அரசியல் முன்னெடுப்பும் அரசியல் தீர்வை எட்டுவதற்கான நல்லதொரு முயற்சியாகும். (மேலும்....)

நிலச் சட்டத்துக்கு எதிராக கம்யூனிஸ்ட் மறியல்

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது

நிலம் கையகப்படுத்தும் மசோதாவை உடனடியாக கைவிட வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை நடத்திய மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட மசோதாவுக்கான காலம் இன்னும் 2 வாரங்களில் முடிகிறது. இதனால் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை மீண்டும் அவசர சட்டமாக கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு இரண்டாவது முறையாக அவசர சட்டம் மூலம் நிறைவேற்ற முயற்சி செய்து வருவதைக் கண்டித்தும், இந்தச் சட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும் கம்யுனிஸ்ட் கட்சி நாடு தழுவிய அளவில் இன்று மறியல் போராட்டத்தை மேற்கொண்டது. இந்திய, அன்னிய பெருமுதலாளிகளுக்கு சாதகமான இந்த சட்டத்தை அமுலாக்க தொடர்ந்து பாஜக அரசு முயற்சிக்கிறது. இதை எதிர்த்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி பெரும் போராட்டங்களை நடத்துகின்றது

வைகாசி 13, 2015

என் மனவலையிலிருந்து....!

நீதி பாலிக்குமா.....?

தனது மாநிலத்தின் ஒரு பகுதி மக்களின் கொலைக்கு காரணமாக இருந்தவரை தமது நாட்டின் பிரதமராக தெரிவு செய்த நாட்டில் நீதி துறையில் இதற்கு மேல் எதனை எதிர்பார்க்க முடியும். இளமையில் தான் மணமுடித்த பெண்ணை (தனிப்பட்ட விடயம் என்று ஒதுக்கிவைக்க முடியவில்லை) தேர்தல் திணைக் கழகம் கேட்கும்வரை மறைப்பில் வைத்திருந்தவரின் தலைமையிலான நாட்டின் நீதித் துறையில் இதனைத் தவிர வேறு எந்தத் தீர்ப்பை எதிர்பார்க்க முடியும். சாலையோரம் படுத்துறங்கிய வறிய மக்களை போதையில் வேகமாக கார் ஓட்டிக் கொன்றுவிட்டு அவ்விடத்தை விட்டு ஓடியது மட்டும் அல்லாது தனது வாகனச் சாரதியை தானே வாகனத்தை ஓட்டியதாக பணத்தால் சாரதியை விலைக்குவாங்கியவரை நீதித்துறையில் உள்ள சில நியாயமான நீதிமான்கள் தண்டித்து இரு மணி நேரத்திற்குள் தண்டனையை நிறுத்தி வைத்த நாட்டின் நீதிபரிபாலன துறையில் வேறு எதனை எதிர்பார்க்க முடியும். (மேலும்....)

வங்கதேசத்தில் வலைப்பதிவாளர் கொலை: பயங்கரவாதிகள் வெறித்தனம்

வங்கதேசத்தில், மதச்சார்பற்ற கருத்துக்களைப் பரப்பி வந்த, வலைப்பதிவாளர் ஒருவர், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதத்திற்குப் பின், கொல்லப்பட்டுள்ள, மூன்றாவது வலைப்பதிவார் இவர்.அண்டை நாடான வங்கதேசத்தில், தங்களுக்கென, தனி இணைய தளம் துவக்கி, அதில், மதச்சார்பற்ற கருத்துக்களை பரப்பி வரும் வலைப்பதிவாளர்கள் கொல்லப்படுவது, சமீபத்திய மாதங்களாக நிகழ்ந்து வருகிறது.இந்நிலையில், ஆனந்த பிஜோய் தாஸ் என்ற மற்றொரு வலைப்பதிவாளர், சைல்கெட் நகரில் உள்ள தன் வீட்டின் அருகே, முகமூடி அணிந்து வந்த மர்மநபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். தாஸ் தன் வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும் வழியில், இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.தாஸ் தன் இணைய தளத்தில், சர்சைக்குரிய கருத்துக்களை எழுதியதற்காகவும், இந்த ஆண்டு முற்பகுதியில், இதேபோல், மர்ம நபர்களால் கொல்லப்பட்ட, நாத்திக கொள்கைகளில் ஈடுபாடு உடைய, வலைப்பதிவாளரான, அவிஜித் ராய் என்பவரின் புத்தகத்திற்கு முகவுரை எழுதியதற்காகவும் கொல்லப்பட்டிருக்கலாம் என, அவரின் நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவை சேர்ந்தவரான அவிஜித் ராய், கடந்த பிப்ரவரியில், இதேபோல், மர்மநபர்களால் கொல்லப்பட்டார். அந்த தாக்குதல் சம்பவத்தில், ராயின் மனைவி உயிர் தப்பினார். அதன்பின், மார்ச் மாதத்தில், ஒயாசிகியூர் ரகுமான் என்ற மற்றொரு வலைப்பதிவாளர், தாகா நகரில் கொல்லப்பட்டார். தற்போது, தாஸ் கொல்லப்பட்டுள்ளார். அவிஜித் ராயின் கொலைக்கு, தாங்களே காரணம் என, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பின், இந்திய துணைக்கண்ட பிரிவு சமீபத்தில் பொறுப்பேற்ற நிலையில், தாஸ் படுகொலை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓயாத அலைகளின் அவசியம் குறித்து

(சுகு-ஸ்ரீதரன்)

இலங்கையின் அரசியல் யாப்பில் 19 வது திருத்த சட்ட மூலம் கொண்டு வரப்பட்டது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதென்று சொல்லப்பட்ட நாட்களில் மலையக மக்களின் வாக்குரிமை பிரசா உரிமை பறிக்கப்பட்டதும்,
இனவாதத்தின் அடிப்படையில் அதிகாரத்தை கைப்பற்ற சிங்களம் மட்டும் சட்டத்தை கொண்டு வந்ததையும் குறிப்பிடலாம். வௌ;வேறு இன சமூகங்கள் செயற்படுவதற்கான அரசியலில் பங்குதாரர்கள் ஆனதற்கான இடைவெளியைக் குறைப்பதாக இச் செயற்பாடுகள் அமைந்தன. அது இன சமூகங்கள் சார்ந்ததாக அல்லாமல் பல்வேறு துறைகளுக்கும் வியாபித்தது. (மேலும்....)

"சல்லி' மீன்களின் கண்ணிற் படுவது மலம் மட்டுமே!
(ஜேர்மனிலிருந்து லோகநாதன்)

கடலே பாலாக மாறினாலும் பால் அருந்தாமல் மலம், புழு, பூச்சிகளையே தம் விருப்பமிக்க உணவாகத் தேடும் சில மீன் வகைகளுண்டு. அதில் தனித்துவமானது சல்லி மீன்கள். இவை வேறு நல்ல இரை கிடைத்தாலும் கண்டுகொள்வதில்லை. இந்தச் சுவை தான் அவற்றின் தேர்வுச் சுவை. மனிதர் மலம் கழிக்கின்ற கரையோரங்களில் எல்லாம் இவற்றின் கண்ணோட்டமும் ஆரவாரமான புழக்கமும் அதிகமாகக் காணப்படும். பாற் கடல் போன்ற ஊடகவியல் துறையிலும் குறிப்பாகத் தமிழ் ஊடகத்துறையில் சல்லி மீன் குணவியல்பில் ஓரிரு சில்லறைகள் உலாவருகின்றன. ஊடகவியல் மக்களை முன் நகர்த்தும் ஒரு அரிய பணி, அரிய இயந்திரம்! ஆரோக்கியமான, தேர்ந்த செய்திகள், கட்டுரைகள், முன்மாதிரிகளை மக்களிடம் கொண்டு சென்று மக்களைப் பக்குவமாகப், பண்பாக வளர்க்கவேண்டிய தார்மீகப் பொறுப்புக்குரிய துறை ஊடகத்துறை. (மேலும்....)

அனந்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு எதிராக முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று செவ்வாய்க்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு – ஓட்டுசுட்டான் வீதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம், காணாமற்போனோரின் உறவினர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது. அனந்தி சசிதரனின் கணவர் எழிலன் மூலமே தங்களின் பிள்ளைகள் காணாமற்போயுள்ளனர் எனவும், அதற்கான பதிலை அனந்தி வழங்கவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிநின்றனர். முல்லைத்தீவு கோப்பாபிளவு பகுதியை சேர்ந்த மக்கள் இதில் கலந்துகொண்டனர். அனந்தி மற்றும் காணாமற்போனோரின் உறவினர்கள் சிலர் இணைந்து முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக இருந்த நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவின் விடுதலையால் மெய்சிலிற்கும் சிறீதரன் எம்பி

தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சகல வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டதால் தமிழ் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அம்மையாரின் விடுதலை தொடர்பாக ஈழத்தமிழ் மக்கள் மகிழ்ச்சியை தெரிவித்து ள்ளதுடன் மீண்டும் பதவியேற்கவிருக்கும் ஜெயலலிதா ஜெயராமிடம் தங்கள் எதிர்பார்ப் பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பா. உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  வெளியிட்டுள்ள மடலில் குறிப்பிடப்பட் டுள்ளதாவது. அம்மா! ஈழத்தமிழர்கள் மகிழ்கின்ற நாளொன்றை பெங்களூர் நீதிமன்றால் நீங்கள் விடுதலை செய்யப்பட்ட செய்தி தந்திருக்கின்றது. தமிழ் நாட்டின் பலமும் எண்ணங்களும் ஆதரவும் எங்கள் மக்களின் வாழ்க்கையில் என்றும் இரத்த உறவாகிப் போயிருக்கின்றது. முன்னாள் தமிழக முதல்வர் பொன் மனச்செம்மல் திரு.எம்.ஜி.ஆர். அவர்களின் இரக்கமும் ஆதரவும் உதவியும் புரிதலும் ஈழத்தமிழர்களை மெய்சிலிர்க்க வைக்கின்ற ஒன்றாக இன்றுவரை உணரப்படுகின்றது. எம்.ஜி.ஆர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் இருந்திருந்தால் என்றோ எமது மக்களுக்கு சுபீட்சம், அமைதி, சுதந்திரம் கிடைத்திருக்கும். முள்ளிவாய்க்காலில் ஒரு பெரும் இனப்படுகொலைக்குள் ஈழத்தமிழர்கள் சிக்குண்டு சிதைந்து அகதியாகி நிர்க்கதியாகும் நிலை ஏற்பட்டிருக்காது.பிறகென்ன இனி கிளிநொச்சியிலும் அம்மா உணவகம்தான். என்ன 'லங்கா சிறீ 'போல இதுவும் சிவஞானத்தாரின் உபயமாகத்தான் இருக்கும். நடக்கட்டும் வியாபாரம்.

கியூபா சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி காஸ்ட்ரோ சகோதரர்களோடு சந்திப்பு

கியூபாவுக்கு வரலாற்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் ஜனாதிபதி பிரான் கொயிஸ் ஹொலன்டே 1959 ஆம் ஆண்டு கியூப புரட்சி தலைவர்களான பிடெல் மற் றும் ராவுல் காஸ்ட்ரோ சகோத ரர்களை சந்தித்தார். கியூபா மீது பல தசாப்தங் கள் நீடிக்கும் அமெரிக்கா வின் பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று ஹொலன்டே இதன்போது அழைப்பு விடுத்தார். இந்த தடைகள் கியூபாவின் அபிவிருத்துக்கு பாரிய தடையாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹொலன்டேவின் விஜயம் 1898 ஆம் ஆண்டுக்கு பின்னர் கியூபாவுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் பயணிக்கும் முதல் சந்தர்ப்பமாக இருந்தது. அதேபோன்று 1980களின் பின் மேற்கு ஐரோப்பிய தலைவர் ஒருவரின் முதல் கியூப விஜயமாகவும் இது அமைந்திருந்தது. பிடெல் காஸ்ட்ரோவை சந்தித்தபோது, "வரலாறு படைத்த ஒருவருக்கு முன்னால் நான் நிற்கிறேன்" என்று ஹொலன்டே குறிப்பிட்டுள்ளார். பின்னர் அவர் கியூபாவின் தற்போதைய ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்தார். கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி அமெரிக்க-கியூப இராஜதந்திர உறவை புதுப் பிக்கும் அறிவிப்பு வெளியானதை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் உயர்மட்ட அரசியல்வாதிகள் பலரும் கியூபாவுக்கு விஜயம் மேற்கொண்டு வருகின்றனர்.

வைகாசி 12, 2015

இந்தியா, நேபாளத்தில் பூமியதிர்ச்சி
 
12-05-2015 01:02 PM
Comments - 0       Views - 995
நேபாளத்தின் எல்லைப் பகுதியில் இன்று நண்பகல் 12.40 மணிக்கு 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பூமியதிர்ச்சி இந்தியாவின் வடக்கு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த பூமியதிர்ச்சி, டெல்லி தலைநகரம் உட்பட டெல்லி புறநகர், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.

தவிர, ஆப்கானிஸ்தான், பிஜி தீவு, ஜப்பான், சிலியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/145946#sthash.rLDbOYgr.dpuf

இந்தியா, நேபாளத்தில் பூமியதிர்ச்சி

நேபாளத்தின் எல்லைப் பகுதியில் இன்று நண்பகல் 12.40 மணிக்கு 7.4 ரிச்டர் அளவில் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த பூமியதிர்ச்சி இந்தியாவின் வடக்கு பகுதியில் உணரப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த பூமியதிர்ச்சி, டெல்லி தலைநகரம் உட்பட டெல்லி புறநகர், அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்டுள்ளது. தவிர, ஆப்கானிஸ்தான், பிஜி தீவு, ஜப்பான், சிலியிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மைத்திரி- மஹிந்த கூட்டு ஒரு போதும் நடக்காது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மஹிந்தவை மீண்டும் குறுக்கு வழியில் உள்ளே கொண்டு வர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்க கூடாது எனக் கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ உள்வாங்கப்படும் எந்தவொரு ஏற்பாட்டுக்கும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் உடன்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியிருக்கிறார்.(மேலும்....)

ஜெயலலிதாவை

தண்டிக்கும் தகுதியையோ, ஏன் மன்னிக்கும் தகுதியையோ கூட நாம் இழந்திருக்கிறோம்

இந்த மேல்முறையீட்டில் அரசு தரப்பு வக்கீலையும், குற்றம் சாற்றப்பட்டிருப்பவரின் தரப்பில் இருக்கும் அரசே நியமிக்கிறது. அது தவறென்று சொல்ல நீண்ட நாட்களும், விவாதமும் தேவைபடுகிறது உச்ச்சநீதிமன்றதுக்கு. ஆனால் சல்மானுக்கு இரண்டு மணி நேரத்தில் ஜாமீனும், ஒரே நாளில் தண்டனை நிறுத்தி வைப்பும் சாத்தியமாகிறது அதே நீதிமன்றத்தில்.
மேல்முறையீட்டு விசாரணையில் இதையெல்லாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று தெளிவான வழிகாட்டுதலை விசாரிக்கும் நீதிபதிக்கு வழங்குகிறது உச்சநீதிமன்றம். எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு தான் விடுதலை செய்து உத்தரவை வழங்கியிருக்கிறார் குமாரசாமி. நீதியின் மாண்பு குறித்த பிரசங்கங்களை நிகழ்த்தும் வல்லமை இன்னமும் உண்டா நீதிமன்றத்துக்கு?? (மேலும்....)

'விண்டோஸ்" பதிப்பை கைவிடுகிறது மைக்ரோசொப்ட்

உலகெங்கிலும் உள்ள கணனிகளில் அதிகளவில் பயன்படுத்தப்படும் இயங்குதளமான மைக்ரோசொப்டின் விண்டோஸ் தனது 10ஆவது பதிப்புக்கு பின்னர் புதிய பதிப்பை வெளியிடாது என்று அறிவித்துள்ளது. எனினும் விண்டோஸ் 10க்கு பின்னர் விண்டோஸ் முறை அகற்றப்பட்டு மாற்று இயங்குதள கட்டமைப் பொன்றை அறிமுகம் செய்ய செயற்படவிருப்பதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மைக் ரோசொப்டின் இந்த முடிவு அனுகூலமானது என்ற போதும் சிக்கலான சூழலை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக மைக்ரோசொப்ட் குறித்த ஆய்வு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. விண்டோஸ் 11 பதிப்பு வெளி வராது என்பது உறுதியாகியுள்ளது. எனினும் அதற்கு பதில் புதிய இயங்குதள முறையொன்றை அறிமுகம் செய்ய மைக்ரோசொப்ட் எதிர்பார்த்துள்ளது. எனினும் விண்டோஸ் 10க்கு பின்னர் அறிமுகப்படுத்தும் இயங்குதளத்தின் குறி த்து இன்னும் தீர்மானிக்கவில்லை என்று மைக்ரோசொப்ட் குறிப்பிட்டுள்ளது.

தீர்ப்பு நியாயமானதுதானா....?

தீர்ப்பு நியாயமானதுதானா, சட்டம் தன் கடமையை சரியாக நிறைவேற்றியிருக்கிறதா, நீதி நிலைநாட்டப்பட்டிருக்கிறதா என்பதெல்லாம் என் கவலையில்லை. பொதுமக்களைப் பிணையாக்காமல் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி வெற்றி பெறுவதிலும் எனக்கொன்றும் மாறுபாடு இல்லை. சட்டப்படி செயல்படுங்கள், மக்களைப் பதற்றத்திற்கு உள்ளாக்காதீர்கள் என்றுதான் சொல்லிவந்திருக்கிறோம். என்னுடைய கவலையெல்லாம், கோவில் கோவிலாய் யாகம் நடத்தியதும், பூசைகள் செய்ததும், காவடி தூக்கியதும், பால்குடம் சுமந்ததும், மண்சோறு சாப்பிட்டதும், அங்கப் பிரதட்சனம் உருண்டதும், அன்னதானம் வழங்கியதும், அஷ்டமி நவமி பார்த்ததும் எல்லாம் சரிதான், அதெல்லாம் மகிமையுள்ளதுதான் என்று நியாயப்படுத்தப்படுமே, அந்த நம்பிக்கைகள் இன்னும் கெட்டிப்படுமே, மேலும் பரவிடுமே என்பதுதான்.

(தீக்கதிர் ஆசிரியர் Kumaresan Asak)

சர்வதேச தாதியர் தினம்

நாட்டில் குறிப்பாக வடக்கு , கிழக்கு மாகாணங்களில் கடமையாற்றுகின்ற மருத்துவ தாதியர்கள் எதிர்கொண்டு உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார் என்று தெரிவித்து உள்ளார் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி. சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு உள்ளார். (மேலும்....)

ஜெயலலிதா விடுதலை சாத்தியம் ஆனது எப்படி?

919 பக்க தீர்ப்பில் புரிதலுக்கு உதவும் 'எண்கள்'

சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலை செய்யப்படுவதற்கு உரிமை உடையவரே, அவரது வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 10%-க்கும் குறைவாகவே உள்ளது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார். (மேலும்....)

ஜெயலலிதாவின் அரசியல் உணர்த்தும் பாடம்

ஜெயலலிதா இன்னும் சில தினங்களில் தமிழ்நாடு முதலமை ச்சராக மீண்டும் பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார். அதன் பின்னர் அவரது அரசியல் எதிர்காலம் மிகவும் செல்வாக்கு மிகுந்ததாக அமையுமென்று தமிழ்நாட்டின் அரசியல் ஆய் வாளர்கள் கூறுகின்றனர். மாநிலத்தில் மாத்திரமன்றி மத்திய அரசியலிலும் செல்வாக்கை விஸ்தரிக்கக் கூடிய வாய்ப்பு தென்படுவதாக கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. ஜெய லலிதாவின் பெரும் மக்கள் செல்வாக்கும், அவரது அரசியல் தேவையும் கருதி நீதிமன்ற விசாரணைகளின் போது மத்திய அரசிலிருந்து செல்வாக்குகள் பிரயோகிக்கப்பட்டிருக்கக் கூடும் எனவும் ஊர்ஜிதமில்லாத ஊகங்கள் வெளியாகின்றன. (மேலும்....)

வைகாசி 11, 2015

என் மனவலையிலிருந்து...........!

எனது அம்மாக்கள்.......!

(சாகரன்)
நவீன முதலாளித்துவத்தில் வியாபார நோக்கோடு செயற்கையாக உருவாக்கப்பட்ட தினங்களில் ஒரு தினமாகவே என்னால் அம்மா தினத்தையும் பார்க்க முடிகின்றது. விழாகள், கொண்டாட்டங்கள், சந்திப்புகள் இவற்றில் நல்ல ஈடுபாடும், விருப்பும், குதூகலிப்பும் உண்டு. நான் சடங்குகளையும் விருப்புடனேயே எதிர் கொள்கின்றேன். ஏனெனில் சடங்குகளில் உள்ள சந்திப்புக்கள் சந்தோஷப் பரிமாற்றங்கள் இவை ஏற்படுத்துவதினால். மாறாக சடங்குகளுக்கு பின்னால் உள் மூட நம்பிக்கைகள் சமய அனுஷ்ட்டானங்கள் போன்றவற்றில் எப்போதும் எனக்கு நம்பிக்கையும், உடன்பாடும் இருந்தது இல்லை. என்னை தன் வயிற்றில் சுமந்து பெற்ற அன்னை எனக்கு முதன்மையானவர் என்பது எல்லேiரைப் போலவும் எனக்கும் இருப்பதில் வியப்பேதும் இல்லை. இதன் பின்பு படிப்பை நோக்கமாக கொண்டு வீட்டடை விட்டு வெளியேறி இருக்க வேண்டிய சூழலில் பல அம்மாக்களை நான் சந்தித்திருக்கின்றேன். இவர்கள் யாரும் தமது வயிற்றில் என்னை சுமந்த அம்மாவிற்கு சளைத்தவர்களாக எனக்கு தோன்றவில்லை. இன்னும் ஒரு படி மேலே போய் தன் மகன் என்ற அதிக 'உரிமை' என்ற ஒரு வகை எதிர்பார்புகளுக்கு அப்பால் இவர்கள் என் மனதில் உயர்ந்தே இருக்கின்றனர்.(மேலும்....)

தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் காலம் கனிந்துவிட்டது - கூட்டமைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு திடமான நம்பிக்கை இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் சமூகத்தை ஏமாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தாம் அவற்றிற்கு இடமளிக்கவில்லை என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு நியாயமான ஓர் அரசியல் தீர்வை நாங்கள் வழங்க வேண்டும். அவர்கள் சம அந்தஸ்துடன் இந்த நாட்டில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கு சுயாட்சி இருக்க வேண்டும் என்ற உண்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கள மக்கள் மத்தியில் முன்வைப்பார் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். “நாங்கள் ஒருபோதும் நாட்டினை பிரிக்கும்படி கேட்கவில்லை. இந்த நாட்டில் சமஷ்டி ஆட்சி முறை வேண்டும் என்றுகூட நாங்கள் கேட்கவில்லை.  சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அரசியல் தீர்வு காண்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட் டன. அது கைகூட வில்லை. அப்போது, தமிழ் மக்கள் சார்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய சக்தியாக இருந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கருத்தை மீறி எதையும் செய்வது ஒரு கடினமான விடயம்.

போர் வெற்றி நாள் சம்பந்தன், சுமந்திரனுக்கு அழைப்பு….

முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் கொத்துக்கொத்தாக சிங்கள ஆயுதப்படைகளால் கொல்லப்பட்டமையை நினைவுத்தி, வெற்றியெனப் பறைசாற்றுவதற்காக கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து மே 18 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வந்த ‘போர் வெற்றி நாள்’ ஆயுதப்படைகள் நாள்’ என்று பெயர்மாற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. இப்பெயர் மாற்றத்தினை தமிழ் மக்களின் வாக்குப் பலத்துடன் ஜனாதிபதியான மைத்திரியின் புதிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த நாளில், தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்குவதற்கா கடந்த 30 வருடங்களாக மரணித்த சிங்கள இராணுவத்தினர் சகலரும் நினைவு கூறப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆயுதப்படைகள் நாளில் கலந்துகொள்ளுமாறு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருக்கு மைத்திரியின் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளதாகவும் விடயமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தெரிவித்த கூட்டமைப்பின் முக்கியஸ்தர் கடந்த சுதந்திர தினத்திற்கு பல தடைகளையும் மீறி சம்பந்தன், சுமந்திரன் அவரது பாரியார் சென்றது போல்
மே 18 சென்றால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என குறிப்பிட்ட கூட்டமைப்பின் முக்கியஸ்தர். நடைபெறும் நிலையைப் பார்த்தல் தமிழரின் அடுத்த இலக்கு என்ன என புரியாத புதிராக உள்ளதுடன் எதற்கு விளக்கம் கேட்டாலும் இராஜதந்திரம் கூறி மழுப்பும் நிலை தமிழ் சமூகத்திற்கு உகந்ததாக தென்பட வில்லை எனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் பதில் இல்லாமல் இருப்பது குறிப்பிடத் தக்கது.

4 மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தி புதுக்கூட்டு

இந்திய வம்சாவளி தமிழர்கள் செறிந்து வாழும் நான்கு மாகாணங்களில் அரசியல் கட்சிகளின் புதிய கூட்டமைப்பை உருவாக்க, வடக்கு மற்றும் கிழக்குக்கு வெளியே செயற்படும் மூன்று கட்சிகள் தீர்மானித்துள்ளன. வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மை அங்கத்துவத்தை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை போன்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கல்வி இராஜங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணனின் மலையக மக்கள் முன்னணி, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம் ஆகியவை இணைந்தே ஒரு கூட்டமைப்பை உருவாக்கவுள்ளன. இது தொடர்பில் பூர்வாங்க பேச்சுக்கள் நடந்துள்ளதாகவும் புதிய கூட்டமைப்பு பற்றி அடுத்த வாரம் அறிவிக்கப்படுமெனவும் மனோ கணேசன் தெரிவித்தார். 'தமிழர்கள் செறிந்து வாழும் மேல், ஊவா, சப்ரகமுவ மற்றும் மத்திய ஆகிய மாகாணங்களில் எமது கட்சி இயங்குகின்றது' என அவர் கூறினார். இந்த கட்சிகள் முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் கூட்டணிகளில் இருந்தவை. மேலும், இந்த மூன்று கட்சிகளும் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களுடன் கூடிய பங்காளிகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருக்க முடியாது - ஜே.வி.பி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றத்தை கலைத்து அடுத்த பொதுத்தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். கட்சி தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம், நாடாளுமன்றத்தை கலைத்தல் மற்றும் அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அந்த பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது. அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். இதேவேளை, தேசிய நிறைவேற்று பேரவையை கலைக்கவேண்டும் என்றும் நாம் வலியுறுத்தியுள்ளோம். தேசிய நிறைவேற்று பேரவையின் கட்டளைகள் 100 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. இதேவேளை, புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் நிறைவடைந்து விட்டமையால் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் பிரதமராக இருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மத்தலை விமான நிலையம் மூடப்படமாட்டாது

ஹம்பாந்தோட்டை மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது என சிவில் விமான சேவைகள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். சிவில் விமான சேவைகள் அமைச்சராக கடமையேற்றதன் பின்பு முதல் தடவையாக அமைச்சர் மத்தலை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை பரீட்சிக்க வருகை தந்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, மத்தலை சர்வதேச விமான நிலையத்தை மூடாமல் அதனை இலாமீட்டக் கூடிய விதத்தில் முன்னெடுத்துச் செல்வதற்கு உத்தேசிக்கப் பட்டுள்ளது. பாரிய முதலீடுகளை மேற் கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த சர்வதேச தரத்திலான விமான நிலையத்தினை மூடாமல் சிறந்த திட்டமிடலின் அடிப்படையில் இலாபமீட்டக் கூடிய நிறுவனமாக முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சகல நாடுகளுக்கும் மேலதிக விமான நிலையங்கள் அத்தியாவசியமாகவுள்ளது. எமது நாட்டு விமானங்களுக்கு மாத்திரமன்றி வெளிநாட்டு விமானங்களுக்கும் மேலதிக விமான நிலையங்கள் திடீர் அனர்த்தங்களின் போது சேவைகளை, உதவிகளை வழங்கக் கூடிய, பெறக்கூடிய புதிய திட்டத்தின் அடிப்படையில் விமான நிலைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தஜிகிஸ்தானில் அரபு பெயர்களை வைப்பதை தடை செய்ய பாராளுமன்றில் விரைவில் சட்டம்

முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் குழந்தைகளுக்கு அரபு மொழியில் பெயர் வைப்பதை தடை செய்யும் சட்டமூலம் ஒன்று பாராளு மன்றத்தில் கொண்டுவரப்படவுள்ளது. தஜிகிஸ்தானில் ஏற்கனவே முஸ்லிம் ஆண்கள் தனது தாடியை மழிக்க கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதோடு, சிறு வர்கள் பள்ளிவாசலுக்கு செல்ல தடை மற்றும் ஹிஜhப் அணியும் பெண் கள் விலைமாதர்களாக அரசியல் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற னர். தவிர அங்கு சுயாதீன பள்ளி வாசல்கள் மூடப்பட்டு வெளிநாடுகளில் இஸ்லாமிய கல்வி பயிலும் மாண வர்களுக்கு நாடு திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அரபு மொழியில் உச்சரிக்கப்படும் பெயர்களை தடை செய்ய சட்டமூலம் கொண்டுவரும்படி தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மொன் பாராளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். "இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின் பதிவு திணைக்களங்கள் உள் நாட்டு கலாசாரத்திற்கு அந்நியமான பெயர்களை பதிவு செய்யாது" என்று அந்நாட்டு நீதித் திணைக்கள அதிகாரி ஜலோலித்தீர் ரஹிமான் குறிப்பிட் டுள்ளார். எனினும் சட்டமூலம் நிறை வேற்றப்பட்ட பின்னர் பிறக்கும் குழந் தைகளுக்கு மாத்திரமே இது நடைமுறைப்படுத்தப்படும். 98 வீதம் முஸ்லிம் சனத்தொகை கொண்ட தஜிகிஸ்தானில் கடந்த 70 ஆண்டு சோவியட் ஆட்சியின் தாக் கத்தால் அங்கு நாத்திக அரசே ஆட்சியில் இருந்து வருகிறது.

வைகாசி 10, 2015

‘Tamil youth won’t take up guns again’-Varathraja Perumal

Annamalai Varadaraja Perumal, described as the revolutionary Lankan Tamil youth of 80’s, became the sole Chief Minister of the North-East Provincial Council in 1988 (now demerged) and is now a Lawyer and a member of the New Delhi Bar Council. Varadaraja Perumal. The former Jaffna University Lecturer in Political Economics, Perumal, in his lengthy conversation with Asiantribune in Colombo on 29 April, reveals his various entries and exits to and from Sri Lanka at various times and says his image with the Tamil diaspora needs to be ‘corrected’, that he is now primed for a political role -but away from electoral politics! “The devolution debate will come to the forefront as soon as the General Elections are over -and Lankan Tamil youth would not resort to an armed struggle again” describes Lawyer Perumal. (more.....)

ஈழவிடுதலைக்கு சாவு மணி அடித்த நாட்களை அவர்களின் வழித் தோன்றற்களும் இன்று நினைவு கூறுகின்றனரோ....?

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோவின் முன்னாள் தலைவர் அமரர் சிறீ சபாரத்தினத்தின் 29வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு 1986ம் ஆண்டு அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடமான கோண்டாவில் அன்னங்கை கோகிலா வீதியிலுள்ள தோட்ட வெளியில் 06.05.2015 அன்று மாலை நடைபெற்றது. நிகழ்வில் தலைவரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி மலரஞ்சலியும் இடம் பெற்றது. மேற்படி நிகழ்வில் கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் ரெலொவின் தேசிய அமைப்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வடக்கு மாகாணசபை உறுப்பினர் கே.என்.விந்தன் கனகரத்தினம், கட்சியின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினரும் பிரபல சட்டத்தரணியுமான என்.சிறிகாந்தா,தமிழரசுக்கட்சியின் தலைவர் திரு மாவைசேனாதிராசா வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் , கட்சி முக்கியஸ்தர்களான குகதாஸ், ஆகியோருடன் இன்னும் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி.

வினோதனைக் கொன்றது யார்?

(சடகோபன்)

மண்டையில் போட்ட மரண தேவனின் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சாத்திரி “கௌரிபால்” அவரது உண்மையான பெயர். சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தனது இடம் மானிப்பாய் என்றுதான் கூறுவார். “ஆயுத எழுத்து” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். தான் 13 பேரை மண்டையில் போட்டதாகவும் அதில் ஒருவர் தனது நெருங்கிய நண்பர் என்று பெருமையாகக் கூறுகிறார். இவர் கொலை செய்த நெருங்கிய நண்பர் யார் என்று விசாரித்துப் பார்த்ததில் இவர் மரண தண்டனை கொடுத்த அந்த மனிதர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு வினோதன் அவர்கள். (மேலும்....)

பாஜக ஆட்சியில் இந்தியாவின் கோலம்

தமிழரின் சம்பூர் விடுவிப்பு
மண் மீட்புப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி - இரா. சம்பந்தன்

முதலீட்டு வலயத்துக்காக முன்னைய அரசால் சுவீகரிக்கப்பட்ட திருகோண மலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியை தற்போதைய அரசு மக்களிடமே மீளக் கையளித்தமையை நாம் வரவேற்கின் றோம். இது தமிழ் மக்களின் மண் மீட்புப் போராட்டத்திற்குக் கிடைத்த முதலாவது மாபெரும் வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த சொந்த மண்ணில் மீள் குடியேறி தொழில் செய்து சுதந்திரமாக வாழவேண்டும் என்ற தமிழ் மக்களின் இலட்சியக் கனவு நனவாகி வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வேண்டும் என்பதில் உறுதியாக விடாப்பிடியாக இருந்து வந்த சம்பூர் பகுதி மக்களின் இந்த விடாப்பிடி தற்போது புதிய அரசில் வெற்றியளித் துள்ளது. கிழக்கில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து சம்பூரில் இருந்தும் மக்கள் பலர் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறினர். இதனையடுத்து அந்தப் பகுதியில் 818 ஏக்கர் காணி (மக்கள் குடியிருப்புகள்) முதலீட்டு வலயத்துக்காகவும், 237 ஏக்கர் காணி (மக்கள் குடியிருப்புக்கள்), கடற்படை முகாமுக்காகவும், 540 ஏக்கர் காணி (விவசாய நிலங்கள்) அனல் மின் நிலையத்துக்காகவும். 40 ஏக்கர் காணி (விவசாய நிலங்கள்) மின்சார சபைக்காக வும் கடந்த அரசால் சுவீகரிக்கப்பட்டி ருந்தது. இந்தக் காணிகளை விடுவிக்குமாறு நாம் கடந்த அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததுடன் மக்கள் போராட்டங்களையும் நடத்திவந்தனர். புதிய அரசு சம்பூரில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு முன்வந்துள்ளமைக்கு நாம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் மைத்திரி அரசின் இந்த நல்லெண்ண நடவடிக்கைக்கு எதிராக எவரும் செயற்பட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை, சம்பூரில் மீள்குடியேறவுள்ள மக்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குமாறு நாம் அரசை வேண்டிக்கொள்கின்றோம் என்றார்.

சஞ்சய் தத்துகளும் சல்மான் கான்களும் பேரறிவாளன்களும்!

முதன்முதலில் இந்திய நீதித் துறையைப் பார்த்து மிரண்டுபோனது, ஷோவா பஷார் பரம்பரையின் வழக்கு தொடர்பாக செய்தி வெளியானபோது. 175 வருஷம் பழமையான வழக்கு இது; இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று அந்தச் செய்தி சொன்னது. கொஞ்ச நாட்களில், "இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 3.56 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவை தவிர, ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1.5 கோடி வழக்குகள் பதிவாகின்றன" என்று மேலும் அசரடித்தார் அன்றைய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ். ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எஸ். சௌகான் இன்னும் ஒருபடி மேலே போய், "இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்" என்று பிரமிக்கவைத்தார். (மேலும்....)

வைகாசி 09, 2015

முக்கிய முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் கைது.

முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் ( எல்ரீரீஈ) இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான நாகமணி ஜெகதீஸ்வரன் (வயது 34) என்பவரை இன்று சனிக்கிழமை கைது செய்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர். 2003ஆம் ஆண்டு ரெலோ இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு அங்கத்தவர்களை மட்டக்களப்பு – ஆரையம்பதியில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கைக்குண்டுகளையும் வீசி ஆட்கொலை புரிந்தார், எட்டுப்பேரை காயப்படுத்தினார் என்ற முறைப்பாட்டின் பிரகாரமே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மகிழடித்தீவு கொக்கட்டிச்சோலையில் திருமணம் முடித்த நிலையில் மத்திய கிழக்கு நாட்டுக்கு சென்றுவிட்டு திரும்பிவந்து கொக்கட்டிச்சோலையிலேயே தலைமறைவாகி வசித்து வந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை, நீதிமன்றில் முன்னிறுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரி வித்தனர்.

தீவிரவாதத்திற்கு எதிராக கனடாவில் புதிய சட்டம்

கனடாவில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பாதுகாப்புப் படையினருக்கு, கூடுதலாக பரந்துபட்ட அதிகாரங்களை அளிக்கும் சட்டம் ஒன்றிற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சந்தேக நபர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வழக்கு தாக்கல் செய்யாமலும் தடுத்து வைக்கவும் காவல்துறையினருக்கு அனுமதி கிடைத்துள்ளது. எனினும் இது குறித்து சராசரி கனேடியர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்ல என அரசாங்கம் தெரிவித்தாலும், நான்கு முன்னாள் பிரதமர்களும், தனிநபர் சுதந்திரத்துக்கான ஆணையரும் இது குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் புதிய சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் மிகவும் பரந்துபட்ட அளவில் உள்ளன, பொறுப்புக்கூறும் வழிமுறைகள் முழுமையாக இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நாட்டின் நாடாளுமன்றம் உட்பட பல இடங்களில் இஸ்லாமியத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்தே இந்தப் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

முதலாளியும் தொழிலாளியும்

இலங்கையின் பிரதான விமான நிலையமாக் கப்படும்

அத்துடன் திருகோண மலைத் துறைமுகமும் திருத்தப்பட்டு இலங்கையின் சிறந்த பொருளாதார வலயமாக்கப்படும். இவ்வாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். கிளிநொச்சி அறிவியல் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 100 நாள் காலத்திலே பெருந்தொகையான மகிழ்ச்சிகரமான முக்கியத்துவத்தைக் கொண்டு வரமுடியாத நிலைமையிலும் அந்தக் கால எல்லைக்குள் எங்கள் சமுதாயத்திற்கும் எங்கள் மக்களுக்கும் ஒரு விழிப்புணர்ச்சியைக் கொண்டு வந்திருக்கின்றோம். என்னுடைய அமைச்சின் கீழ் வடக்கு மாகாணத்தில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை உரியவர்களிடம் கையளித்திருக்கின்றோம். அதிலும் சில பிரச்சினைகள் உள்ளன அதை ஏற்றுக்கொள்கின்றேன் அதையும் நாங்கள் தீர்ப்போம். சம்பூர் பகுதியில் ஆயிரம் ஏக்கரை மக்களிடம் கையளிப்பதற்கு முன்வந்திருக்கின்றோம். அதற்கான நடவடிக்கைகள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுவும் மிக விரைவாக மக்களுக்குக் கொடுக்கப்படும் என்பது உறுதி. ஓர் அமைச்சர் என்ற ரீதியில் நான் பேசவில்லை. நான் ஒரு தமிழன் என்ற ரீதியில் தான் பேசுகின்றேன். தமிழ் மக்களுக்கான முற்போக்கான அறிவை கொண்டு வருவது தான் எங்களுடைய அவா. அந்த வகையில் முக்கியமான பொருளாதார சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கான முதல் திட்டம், முதல்கண், முதல்கால் இதுவே. இதை வைத்து நாங்கள் வடமாகாணத்துக்கும் பொருளாதார ரீதியிலே பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து தமிழ் மக்கள் சுபீட்சமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுத்துள்ளோம்.’ என்று தெரிவித்தார்.

தமிழர், முஸ்லிம்களுக்கு அநீதிகள் என்னை மீறியே நடந்தன

எனது ஆட்சியில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் சில அநீதிகள் நடந்தன. என்னை மீறி இடம்பெற்ற இந்த விடயங்களுக்கு நான் பொறுப்பல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆரம்பம் முதலே தான் முஸ்லிம்களின் நண்பன் என்று கூறியுள்ள அவர் பொய் பிரசாரங்களினாலே முஸ்லிம்கள் தூரமானதாகவும் குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை நாரஹேன்பிட்ட அபயாராமவில் நடைபெற்றது. இதில் மெளலவிமார், உள்ளூராட்சி சபை தலைவர்கள், உறுப்பினர்கள், அமைப்பாளர் கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். இதன்போது கடந்த காலத்தில் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புகளினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதி குறித்து பலரும் கருத்துத் தெரிவித்தனர். தாம் விரும்பிய மதத்தை பின்பற்றி செயற்படும் சுதந்திரத்தை நானே பெற்றுக் கொடுத்தேன். கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து கவலையடைகிறேன். இது தொடர்பில் நான் மன்னிப்பும் கேட்டிருக்கிறேன். எதிர்காலத்தில் இவ்வாறு சம்பவங்கள் நடைபெற இடமளிக்க மாட்டேன். என்னை சந்திக்க நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள் மற்றும் தமிழ் மக்கள் நேரம் ஒதுக்குமாறு கூறி வருகின்றனர். அதன்படியே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பொய்யான பிரசாரங்களுக்கு முஸ்லிம்கள் ஏமாறினார்கள். உண்மைநிலை அறிந்த பின்னர் அவர்கள் என்னை சந்திக்க வரத் தொடங்கியுள்ளனர் என்றார்.

பிரித்தானிய பொதுத் தேர்தலில்
மூன்று இலங்கையரில் ஒரு சிங்களவர் வெற்றி, இரண்டு தமிழர் தோல்வி

பிரித்தானிய பொதுத் தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சியில் போட்டியிட்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ரணில் ஜயவர்த்தன வெற்றிபெற்று பிரித் தானிய பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். இதேவேளை, பிரித்தானிய பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் வேட்பாளர்கள் சிலர் தோல்வியடைந்துள்ளனர். ஹரோ ஈஸ்ட் தொகுதியில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன் தோல்வியடைந்துள்ளார். நோர்த் வூட் தொகுதியில் தேசிய லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட மற்றுமொரு இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழரான சொக்கலிங்கம் யோகலிங்கமும் தோல்வியடைந்துள்ளார். பிரிட்டனில் ஆளும் கன்சர் வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் டேவிட் கமரூன் மீண்டும் பிரதமர் ஆவார் என்று அந் நாட்டில் நடத்தப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறு கின்றன. வாக்கு எண்ணிக்கை நிலவரத்திலும் ஆளுங்கட்சி முன்னிலை வகித்து வருவதால் கமரூன் கட்சி வெற்றியடைய அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

சல்மானின் நடத்தைதான் அவருக்கு எதிராகத் திரும்பியது

கார் விபத்து வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சலமான் கானின் நடத்தையே அவருக்கு எதிராகத் திரும்பியதாக நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. சம்பவம் நடந்த பிறகு இடத்தை விட்டு தலைமறைவான சல்மான் கானின் நடத்தையே அவருக்கு எதிராகத் திரும்பியதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியது.  சம்பவம் நடந்த பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்யாமலும் சம்பவத்தை காவல்துறைக்கு தெரிவிக்கா மலும் இடத்தை விட்டு அகன்றது குற்றவாளிக்கு எதிராக அமைந்தது என்றார். அதேபோல் சல்மான் கான் செலுத்துநர் தனது வாக்குமூலத்தில் தான் காரை செலுத்தியதாக தெரிவித்ததை நீதிபதி ஏற்கவில்லை. குற்றம்சாட்டப் பட்டவர் (சல்மான் கான்) தான் காரை செலுத்தி வந்தார் என்பது சந்தேகத் துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் செலுத்திய காரின் டயர் வெடித்தது என்ற எதிர்தரப்பு வாதத்தை ஏற்பதற்கில்லை, ஏனெனில் குற்றம்சாட்டப்பட்டவர் கார் நல்ல வேகத்தில் வந்துள்ளது. உரிமம் இல்லாமல் குடிபோதையில் வாகனம் செலுத்தக்கூடாது என்பதும் நடைபாதையில் தொழிலாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர் என்பதும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு தெரிந்த வி'யமே என்று தீர்ப்பில் கூறப்பட்டுள் ளது.

நிலநடுக்கம்

இயற்கையின் அர்த்தமற்ற இயக்கங்களில் ஒன்று

அழிவு என்பது அடிப் படை யில் மனிதன் சம் பந்தப்பட்ட விஷயம். நில நடுக்கங்களின் மூலம் நகரங்களை அழிப்பவன் மனிதன் தான். இந்த பூமியில் மனிதர்கள் இல்லாமல் இருப்பார்களேயானால், நிலநடுக்கம் பெளதிக இயற்கையின் அர்த்தமற்ற இயக்கங்களில் ஒன்றாகவே இருக்கும். ஆனால் நகரங்களைக் கட்டும் மனிதனின் திட்டத்துக்கு அவை ஊறு விளைவிக்கும்போது தான் அவை பேரிடராகின்றன என்றார் பிரெஞ் சிந்தனையாளரும் சமூகப் போராளியுமான ழான்-பால் சார்த்தர். இங்கு ‘மனிதன் என்று அவர் குறிப் பிடுவது முதலாளியம், அதன் இலாப வேட்டை, அதன் சுரண்டல், இவற்றுக்குத் தேவைப்படும் இனவாதம் ஆகியவற் றைத் தான். இதோடு நாம் மதவாதத் தையும் சாதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம். (மேலும்....)

நல்ல மனிதனுக்குரிய பேட்டி

வேட்டி விளம்பரங்களில் நடிப்பதற்காய் மிரட்டுற தொனியில " ஒன்றரை கோடி தர்றோம் மறுக்காதீங்க"ன்னாங்க, விடாப்பிடியா மறுத்தேன். நீங்க கடன்ல இருக்கீங்கன்னு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் நடிக்கமாட்டேங்குறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சிக்கலாமா? னு கேட்டாங்க. "வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிபோனா அதை அவர்களால 100 ரூபா கொடுத்து வாங்கமுடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா அந்த காசையும் அவங்ககிட்ட இருந்துத்தானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன். பதில் சொல்லாம போயிட்டாங்க ! (பேட்டியை முழுமையாக பார்க்க....)

- விகடனில் ராஜ்கிரண்

எல்லாம் சரி. பிரபாகரன் பற்றிய புரிதல் மட்டும் இடிக்கின்றது.இவர் மட்டும் அல்ல சேரன் அமீர் போன்றவர்களிடமும் இதனைக் காண முடியும் புலிகள் தரப்புச் தகவல்கள் மட்டும் இவரகளைச் சென்றடைந்தததினால் ஏற்பட்ட தெளிவற்ற நிலை. இதில் புலிகளின் கபடத்தனம் ஒரு புறம் இருந்தாலும் மாற்றுக்கருத்தாளர்கள் தமது கடமையைச் செய்யவில்லை என்பது என் தாழ்மையான கருத்து ஆகும். 1986 இற்க பின்புதான் இந்நிலமை அதிகம் ஏற்பட்டது என்பது எனது அனுபவப்பார்வை

- சாகரன்

ஷங்கர் கூப்பிட்டால் அவர் படத்துல ராஜ்கிரண் போய் நடிப்பாரா மாட்டாரா. நீ ரொம்ப செலவு பண்ணுவ, அப்புறம் அதை ஏழைகள்கிட்ட தான் வசூலிப்ப அதனால வேணாம் அப்டின்னு சொல்லுவாரா - Karl Max

வைகாசி 08, 2015

நிழல் வறுமையைப் பார்பதில்லை

பிரிட்டிஷ் தேர்தல்

கன்சர்வேடிவ் கட்சிக்கு அதிக இடங்கள்?

சற்று முன்னர் வாக்குப்பதிவு நிறைவடைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு 316 இடங்களும், பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு 239 இடங்களும், எஸ்என்பி கட்சிக்கு 58 இடங்களும், லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கும் என எக்ஸிட் போல் எனப்படும் வாக்களித்தவர்களிடம் நடத்தப்படும் கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

சம்பூரில் 818 ஏக்கர் காணி விடுவிப்பு

வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ஒப்பம்

சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுக் கையொப்பமிட்டுள்ளார். சம்பூர் மீள்குடியேற்றம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில், மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ, முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தலைவர் உப்புல் ஜயசூரிய ஆகியோர் கூடி ஆராய்ந்திருந்தனர். சம்பூரில் உள்ள காணிகளை என்ன படிமுறையில் விடுவிப்பது, எவ்வாறு மீள்குடியேற்றங்களை மேற்கொள்வது என்பது தொடர்பாக இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார். இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. இதற்கமைய முதற்கட்டமாக சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு வழங்கிய 818 ஏக்கர் காணிகளை விடுவித்து அவற்றை மக்களின் மீள்குடியேற்றத்துக்கு வழங்குவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி நேற்றுமாலை கையொப்பமிட் டதாக சுமந்திரன் எம்பி கூறினார். முதற்கட்டமாக முதலீட்டுச் சபைக்கு வழங்கப்பட்ட 818 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கும் அடுத்த கட்டமாக கடற்படை முகாம் அமைந்துள்ள 237 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மைத்திரி தலைமையில் மஹிந்தவை பிரதமராக்கும் ஒருங்கிணைந்த அரசு வேண்டும் -  வாசுதேவ நாணாயக்கார

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் உள்ள ஒருங்கிணைந்த அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைக்குமாறு குருநாகலில் இடம்பெறவுள்ள மக்கள் கூட்டத்தின் போது மக்களை வலியுறுத்தவுள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஸ் குணவர்தன, 'எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களை கலைக்குமாறு அரசாங்கத்தைக் கோரவுள்ளதாக' கூறினார். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகவும் உள்ள ஒருங்கிணைந்த அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு ஒத்துழைக்குமாறும் மக்களிடம் இதன்போது கோரவுள்ளதாக அவர் கூறினார். இது இவ்வாறிருக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டங்களை நடத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பை அடுத்தே இந்த இணக்கப்பாடு காணப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது எப்படியிருக்கு....?

ஈழத்தை தவிர தமிழருக்கு எதையும் கொடுக்க தயாராக இருந்த ரணில்!

மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி ஆக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனே ஆவார் என்று தெரிவித்து உள்ளார் சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறை இராஜாங்க அமைச்சர் ஹசன் அலி. மஹிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி ஆக்கியவர் புலிகளின் தலைவர் பிரபாகரனே. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி ஆகின்ற வாய்ப்பை பிரபாகரன் இல்லாமல் பண்ணினார். அப்போதைய ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தமிழ் மக்களை புலிகள் தடுத்து விட்டனர். தேர்தலை புறக்கணிக்க கோரினர். இதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை பறித்து விட்டனர். மஹிந்த ராஜபக்ஸ சிறிய வித்தியாசத்தில் வெற்றி அடைந்தார்.  இது புலிகளின் தலைவர் மேற்கொண்ட வரலாற்றுத் தவறு ஆகும். இத்தவறு முள்ளிவாய்க்கால் வரை தமிழினத்தை கொண்டு போய் விட்டது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்திருப்பாரே ஆனால் சர்வதேச மத்தியஸ்தத்துடன் பேச்சுக்கள் நடந்து இருக்கும். ஈழத்தை தவிர எதையும் கொடுக்க ரணில் விக்கிரமசிங்க தயாராக இருந்தார். உச்ச பட்ச அதிகாரங்களுடன் கூடிய மாற்றுத் தீர்வு தமிழர்களுக்கு கிடைக்கப் பெற்று இருக்கும். புலிகளின் தலைவர் மேற்கொண்ட தவறு காரணமாக தமிழர் அரசியல் மாத்திரம் அன்றி நாட்டின் தலைவிதியே மாறி இருந்தது.
இப்பவும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை ரணில் பிரதமராகத்தான் இருக்கின்றார். ஈழத்தைத் தவிர மற்றைய எல்லாவற்றையும் கொடுக்கலாம்தானே....?

மக்கள் விரோதிகள் வெளியே........

மக்களுக்காக போராடும் மாவோயிஸ்ட்கள் உள்ளிட்ட போராளிகள் உள்ளே.......

கனிமவள கொள்ளை, உழைப்புச்சுரண்டல், ஊழல், மது, பாலியல் வல்லுறவு, போலி அரசியல் அயோக்கியர்கள் மற்றும் அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக குரல்கொடுத்து போராடிவந்த, கேரளா மற்றும் தமிழகத்தைச் சார்ந்த ரூபேஷ், சைனி, அனூப், கண்ணன், ஈஸ்வரன் ஆகியோர் ஓரிரு தினங்களுக்கு முன்பு கோவையில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு டைரி, இரண்டு பென்ட்ரைவ், அறிவார்ந்த சில புத்தகங்கள் மற்றும் துணிகள் கைபற்றப்பட்டுள்ளதாம்.....!இவர்கள் மீது, குற்றம் செய்வதற்கு கூட்டு சதி 120(b), தேச துரோகச்சட்டம் 124(a) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது......! மக்களின் அனைத்து வளங்களையும் கொள்ளையடித்து, கோடி கோடியாய் பணத்தையும் சொத்துக்களையும் சேமித்துவைத்து, நாட்டை சுரண்டி வேட்டையாடும் மக்கள் விரோத அரசியல் வியாதிகள் மற்றும் அவர்களது எஜமானர்களான பெருமுதலாளிகள், இவர்களுக்கான மக்கள் விரோத அரசு மற்றும் அதிகாரிகள் என சமூக விரோதிகளும் தேச துரோகிகளும் ஏக போக சுக வாழ்வு வாழ்ந்துகொண்டு அனைத்துவிதமான பாதுகாப்புகளுடன் சர்வ சுதந்திரமாக வெளியே சுற்றித்திரிகிறார்கள்....... கேட்டால், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாம்.......?

*அநீதிகளுக்கு எதிராக
குரல் கொடுப்போம்......!
*அநீதிகளுக்கு எதிராக போராடுவோம்......!!
*அநீதிகளை வேரறுப்போம்......!!!

‪(Poomozhi)

வைகாசி 07, 2015

ஓ போட கேட்ட மஹிந்தர், நோ போட்ட மைத்திரி!

மஹிந்த ராஜபக்ஸவின் ஆதரவாளர்களுக்கு எதிரான இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை நிறுத்த வேண்டும், மஹிந்த ராஜபக்ஸவை சுதந்திர கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்து விட்டார் என்று பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியை சந்திக்கின்றமைக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரு முக்கிய நிபந்தனைகளை விதித்தார் என்றும் ஆனால் இரு நிபந்தனைகளையும் ஜனாதிபதி மறுத்தார் என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அரச உயரதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன. நல்லாட்சியை முன்னெடுக்க வேண்டி இருப்பதால் இலஞ்ச ஊழல்களில் ஈடுபட்டவர்களை விசாரிக்க வேண்டி உள்ளது, சட்டம் சம்பந்தப்பட்ட விடயத்தில் தலையிட மாட்டார் என்று ஜனாதிபதி கண்டிப்பாக சொல்லி விட்டார் என்று இச்செய்திகள் கூறுகின்றன. இதே போல நாடாளுமன்ற தேர்தலில் அதிக விருப்பு வாக்குகள் பெறுகின்ற வேட்பாளர்தான் பிரதமராக நியமனம் பெறுவார், மக்களின் அபிலாஷைதான் முதன்மையானது என்றும் ஜனாதிபதி திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் என்றும் இச்செய்திகள் குறிப்பிடுகின்றன.

நடக்கும் என்பார் நடக்காது, நடக்காதென்பார் நடந்து விடும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு மதியம் 1.30 மணிக்கு நாடாளுமன்ற தொகுதியில் இடம்பெறுகின்றது என்று அரசாங்க செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதியுடன் சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோரும், இந்நாள் ஜனாதிபதியுடன் எதிர்க் கட்சி தலைவர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேம்ஜயந்த ஆகியோரும் கூடவே செல்கின்றனர் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இச்சந்திப்புக்கு எந்தவொரு தரப்பினராலும் நிபந்தனைகள் போடப்படவில்லை என்று இச்செய்திகள் கூறுகின்றன. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை வெற்றி பெற வைப்பதன் முக்கியத்துவம், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தை அமைக்க வேண்டியதன் அவசியம் ஆகியன குறித்தே இந்நாள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள் முக்கியமாக பேசுவார்கள் என்று கூறப்படுகின்றது. (மேலும்....)

சிறைக்கு செல்லும்; 2வது பெரிய பொலிவுட் நடிகர் சல்மான்!

சஞ்சய் தத்தைத் தொடர்ந்து சிறைக்குப் செல்லும்;; பொலி வுட் நடிகர்கள் வரிசையில் இணைந்துள்ளார் சல்மான் கான். இந்தி சினிமாவின் சு+ப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவராக வலம் வந்த சல்மான் கான் சிறைக்குப் போவது அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பொலிவுட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏற்கனவே நடிகர் சஞ்சய் தத் சிறையில் அடைக்கப்பட் டுள்ள நிலையில் இரண்டாவது பெரிய நடிகராக சல்மான் கான் இந்த வரிசையில் சேர்ந்துள்ளார். கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் பலர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் தொடர்புடையவராக நடிகர் சஞ்சய் தத் கைது செய் யப்பட்டார். (மேலும்....)

நிலநடுக்கம் மனிதர்களைக் கொல்வதில்லை,  கட்டடங்களாலேயே இத்தனை பேரவலம்

நேபாளத்தில் கடந்த 25ம் திகதியன்று ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும். (மேலும்....)

வைகாசி 06, 2015

நாடாளுமன்றிலிருந்து ஜனாதிபதி வெளியேறினார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இடம்பெற விருக்கின்ற சந்திப்புக்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்துக்கு வருகைதந்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்ற வளாகத்திலிருந்து சற்று முன்னர் வெளியேறினார்.

'மைத்திரி-மஹிந்த சந்திப்பில், ரணில் வீட்டுக்கு செல்வார்'

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காகவாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது. இந்த சந்திப்பு, நிபந்தனைகள் அற்றவகையில் இடம்பெறும். அந்த சந்திப்பை யாராலும் நிறுத்த முடியாது என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிக்கும் இந்நாள் ஜனாதிபதிக்கும் இடையிலான இந்த சந்திப்புக்கு, ஐக்கிய தேசியக்கட்சியே இடையூறு விளைவிக்கின்றது. அதற்கு துணை போகின்ற ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர். இந்த சந்திப்பை யாராலும் நிறுத்த முடியாது. இது கட்சியின் உள்விவகார பேச்சுவார்த்தையாகும். 19ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளித்தது. அப்போது சிலர், சு.க இரண்டாகிவிடும் என்று நினைத்தனர். எனினும், அவர்களின் நினைப்பு நிறைவேறவில்லை. அடுத்த பொதுத்தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் நிறுத்தும் நோக்கோடு இந்த சந்திப்பு இடம்பெறுகின்றதா என வினவுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ரணில் விக்கிரமசிங்கவை வீட்டுக்கு அனுப்பவேண்டும் என்றே கோரிநிற்கின்றனர். (பிபிசி)

சம்பந்தர் களவாணித்தனம் !

ஜோன் கெரியை சந்தித்தவேளை வாய் மூடவைக்கப்பட்ட விக்கினேஸ்வரன்

இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரியை தமிழ்தேசிய கூட்டமைப்பினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்து பேச்சு நடத்தியபோது வடக்கு முதலமைச்சரினை வாய் திறக்க கூட சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதித்திராமை சர்ச்சைகளினை தோற்றுவித்துள்ளது.
எனினும் நிலைவரத்தை முன்கூட்டியே சுதாகரித்துக்கொண்ட முதலமைச்சர் சந்திப்பின் ஆரம்பத்திலிருந்தே ஜோன் கெரியிடம் ஒரு மகஜரை சமர்ப்பித்தார். வடக்கு மாகாணசபையின் தற்போதைய தேவைகள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. சந்திப்பில் மைத்திரி அரசிற்கு சம்பந்தன் பாராட்டுப்பத்திரம் வாசிக்க இரண்டு தடவைகளாக குறுக்கிட்ட சுரேஸ் பிறேமச்சந்திரன் அதனை மறுதலித்து அரசியல் தீர்வு ஒன்று கிட்டும் வரையில் இடைக்கால நிர்வாகமொன்றை உருவாக்குவது பற்றி பேச முற்பட இரு தடவைகளும் சம்பந்தன் அதனை தடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் வாயை மூடிக்கொண்டிருக்குமாறு சுரேஸிற்கு தமிழில் சம்பந்தன் சீற அவர் அமைதியாகியுள்ளார். இதனிடையே அழைத்துவரப்பட்டிருந்த வடக்கு முதலமைச்சரோ வெறும் காட்சிப்பொம்மை போல இருக்கவே வைக்கப்பட்டிருந்தார். அவரை கருத்துக்களினை தெரிவிக்கவோ பேசவோ சம்பந்தன் மற்றும் சுமந்திரன் அனுமதித்திருக்கவில்லை. இதையெல்லாம் புரிந்து கொள்ளாத அளவிற்கு அமெரிக்க இராஜாங்க அமைச்சர் என்ன கேணையனா....?

இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் அருந்ததி ராய்
 

இன்று நமது நாட்டை தம் வசமாக்கியிருக்கும் நிறுவனங்கள் யாருக்குச் சொந்தமானவை? நிலம் மட்டுமல்லாமல் காடுகள், மலைகள், ஆறுகள், நீர், மின்சார ஆற்றல் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகியிருக்கிறது. கோடீஸ்வர தொழிலதிபர்களான – முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனம்), லக்‌ஷ்மி மிட்டல் (ஆர்சிலார் மிட்டல்) திலீப் சங்கவி (சன் பார்மசூடிக்கல் குழுமம்), ரூயா சகோதரர்கள் (ரூயா குழுமம்) கே.எம். பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), சாவித்ரி தேவி ஜிண்டால் (ஜிண்டால் குழுமம்), கௌதம் அதானி (அதானி குழுமம்), சுனில் மிட்டல் (பாரதி ஏர்டெல்) ஆகியோர்தான் துறைமுகங்களை, சுரங்கங்களை, எண்ணெய் வயல்களை, எரிவாயு வயல்களை, கப்பல் நிறுவனங்களை, மருத்துவ நிறுவனங்களை, தொலைபேசி நிறுவனங்களை, பெட்ரொகெமிக்கல் ஆலைகளை, அலுமினிய ஆலைகளை, செல்பேசி நிறுவனங்களை, தொலைக்காட்சிகளை, காய்கறிக் கடைகளை, பள்ளிக்கூடங்களை, சினிமா கம்பெனிகளை, ஸ்டெம் செல் முறைகளை, மின்சார அமைப்புகளை, சிறப்பு பொருளாதார நிறுவனங்களை சொந்தமாக வைத்து நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று பார்ப்பனர்களாகவோ அல்லது பனியாக்களாகவோ இருக்கிறார்கள். (மேலும்....)

 

வெளிநாட்டு மீட்புப் பணியாளர்களை திரும்பி செல்லுமாறு நேபாளம் அறிவிப்பு

நேபாளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு பணியாளர்களை தமது நாடுகளுக்கு திரும்பிச் செல்லுமாறு நேபாள அரசாங்கம் அறிவித்துள்ளது. மீட்பு பணிக்கு பதிலாக, நில அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணி ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலை காணப்படும் நிலையிலேயே, நேபாள அரசாங்கம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. மீட்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாகவும், இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்பதற்கு மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளதாலும் வெளிநாட்டு மீட்பு குழுக்களை வெளியேருமாறு அறிவித்துள்ளதாக நோபாள வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, நோபாள நில அதிர்வில் பலியானவர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் வரையில், 7 ஆயிரத்து 365பேராக அதிகரித்துள்ளது என அந்நாட்டு அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

தீஸ்தா நேர்காணல்

மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்

(2002 கலவரத்திற்கு பிறகு அகதி முகாமில் இருக்கும் முசுலீம் மக்களின் குழந்தைகள்!)

“முஸ்லீம்களை தாக்குவதற்கு இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்” – பால் தாக்கரே
தாக்கரே போன்றவர்கள், “முஸ்லீம்களை தாக்குவதற்கு இந்துக்கள் ஆயுதம் ஏந்த வேண்டும்” என்றும், “காஷ்மீர் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட வேண்டும்” என்றும் பேசிய வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மராத்தி நாளிதழ்களில் பேனர் தலைப்பு செய்திகளாக வெளியாகின. ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளிலிருந்து 110 பத்திரிகையாளர்களின் கையொப்பங்களை சேகரித்து, “இத்தகைய ஊடக துஷ்பிரயோகங்களை தடுக்க வேண்டும்; ஊடகங்கள் வெறுப்பு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படக் கூடாது; முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து நடவடிக்கை எடுங்கள்” என்று மாநில அரசிடம் மனு கொடுத்தோம். அதைத் தொடர்ந்து, அத்வானியின் ரத யாத்திரை, 1992-93 மும்பை வன்முறைகள் நடந்தன. அது கொடூரமானதாக இருந்தது. மொத்த நகரமும் இரண்டாக பிளவுபட்டதோடு தெருக்களில் மரணம் கோர தாண்டவமாடியது. இசுலாமிய சமூகத்தைப் பற்றி மிக நச்சுத்தனமான கருத்துக்கள் பேசப்பட்டன. (மேலும்....)

 

வைகாசி 05, 2015

 

சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழு தலைவராக மஹிந்த வரும் வாய்ப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவே எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம் தெரிவிக்கின்றார்கள். இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் எதிர்வரும் 06 ஆம் திகதி முக்கிய சந்திப்பு இடம்பெற உள்ள நிலையில் இவ்விதம் எதிர்வு கூறப்படுகின்றது.(மேலும்....)

தோழர் ஸ்ரீ சபாரட்ணம், ஒரு மைல் கல்

துரோகி என்ற பட்டம் சூட்டி கொல்லப்பட்டார்கள் பல தமிழ் தலைவர்கள்,
ஈழ விடுதலை இயக்க விடுகாளிகளால் கொல்லப்பட்ட வரலாறுகள்
உண்டு ..!!அந்த வரிசையில் புலிகள் தலைமையால், உரும்பிராய் சந்தியில்
டெலோ இயத்தத்தலைவர் தோழர் ஸ்ரீ சபாரட்ணம் உடல் சல்லடை யாக்கப்பட்டு காட்சிப் பொருளாக, மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. ஒரு மிருகத்தின் சடலம் கூட இங்கு மரியாதையுடன் பார்க்கப்படும்.  அந்த உடலை நான் கவனித்து கொண்டதற்கு அமைய உடலில் எந்த சிவப்பணு குருதியும் இல்லை. ஆனால் பலரின் கருத்துப்படி அவர் கிட்டுவுடன் பேசித்தீதிர்ப்போம் என்று சொன்னதையும் சரணடைந்த தாயும்
சொல்கின்றார்கள், இருந்தும் அவர் பொபியிடம் நீ ஓடித்தப்பு என்று சொல்லி பொபி உரும்பிராயில் அன்று புளட் முகாமில் காப்பாற்றப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து கொள்ளப்பட்டது எனக்கு நினைவிருக்கு.. ..ஆகவே ,.எனது ஊகம்தோழர் ஸ்ரீ ஏற்கனவே சைனட் உட்கொண்டு, அல்லது தன்மானத்துடன் தன்னை தானே வீர திலகம் செய்திருக்க வேண்டும். காரணம் புலிகளிடம்சரணடைவது பாதுகாப்பில்லை என்று உணர்ந்தார் என்பது எனது ஊகம் ..பாருங்கள் ஒரு போதை வஸ்த்து கடத்தி கொல்லப்படும் நபர்களுக்காக நாம் அது தவறு என்று கண்டிக்கும் அளவுக்கு ,, ஈழ போராளிகள் தமிழ் தலைவர்கள் கொல்லப்படும் போது நியாஜம் என்றெல்லாம் வாதாடுவது எந்த விதத்தில் நியாஜம்..?தோழர் ஸ்ரீ சபாரட்ணம், ஒரு மைல் கல். கல்லறை கட்டி வணங்க வேண்டியது எமது
காலத்தின் கடமை ....வீர வணக்கம் ..30 .05 .2015 சுவிசில் நினைவெளிச்சி
ஒன்று கூடல் ,.,,இடம் Eusebiushof str 1
2540 GRENCHEN, தொலை பேசி :0793399316, மற்றொண்டு0794037783
உறவுகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்

(Kulam Peter)

உரும்பிராய் இல் மே தினம்

 

 

ஜோன் கெரியை சந்திக்க மஹிந்த விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியை சந்திப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஜோன் கெரியை சந்திக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தருமாறு மஹிந்த ராஜபக்ச, இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்திடம் கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கை தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் அமைதி பேணியுள்ளது. ஜோன் கெரியை சந்திக்க அனுமதியளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பத்தையும் தூதரகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் இலங்கை விஜயம் உறுதியானது முதல் பல தடவைகள் சந்திப்பு ஒன்றுக்கு சந்தர்ப்பம் தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார். எனினும், இந்தக் கோரிக்கைக்கு அமெரிக்கத் தூதரகம் எவ்வித பதிலையும் அளிக்காது மௌனம் காத்து வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைகாசி 04, 2015

சுக்குநூறாகிய மஹிந்தவின் கனவு
 

சந்திரிகா குமாரதுங்கவினதும் மஹிந்த ராஜபக்ஷவினதும் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் மைத்திரிபாலவின் தியாகம் மிகப் பாரதூரமானது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை ரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்த பதவிக்கு வந்தும் அதற்காக ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி முன்வந்த நிலையிலும் சந்திரிகா தமது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இனப் பிரச்சினைக்கான தீர்வோடு தான் அதனை செய்வேன் என அவர் அந்த சந்தர்ப்பத்தை கைவிட்டார். அவ்வாறே வாக்குறுதியளித்து பதவிக்குவந்த மஹிந்த, மூன்றில் இரண்டு வாக்குப் பலத்தை திரட்டிக் கொண்டு அதன் மூலம் தமது அதிகாரங்களை மேலும் அதிகரித்துக் கொண்டு தாம் சதாகாலம் பதவியில் இருக்கும் வகையிலும் சட்டத்தை மாற்றிக் கொண்டார். அவர்களோடு ஒப்பிடும் போது மைத்திரிபாலவை பரராட்டாமல் இருக்க முடியாது.  (மேலும்....)

ஆசை நிறைவேறியது

அமைச்சரானார் சுமந்திரன் எம்.பி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சராக செயற்பட்டு வருகின்றார் என்று சுயம் பிரகடனப்படுத்தி உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ சுமந்திரன். கொழும்பு கம்பன் விழா - 2015 நேற்று கோலாகலமாக ஆரம்பம் ஆனது. தொழிலதிபர் ஈஸ்வரனின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலை அமர்வில் கலந்து கொண்டார். இவர் அரங்கத்தின் நடுவில் சிம்மாசனம் கொடுக்கப்பட்டு அமர்த்தப்பட்டார். தசரத சக்கரவர்த்தியாக உருக் கொடுக்கப்பட்டார். இவ்வமர்வில் தொடக்கவுரை ஆற்றினார் சுமந்திரன் எம். பி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தசரத சக்கரவர்த்தி என்று வர்ணிக்கவும் செய்தார். தசரத சக்கரவர்த்திக்கு சுமந்திரன் என்று ஒரு அமைச்சர் இருந்தார் என்று இராமாயணம் சொல்கின்றது. இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தசரத சக்கரவர்த்தி, எனவே இந்த சுமந்திரன் அமைச்சர் என்று மிகுந்த உற்சாகத்துடன், உத்வேகத்துடன் முழங்கினார் தேசியப் பட்டியல் எம்.பி. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களுக்கு நல்ல விடயங்களை செய்ய விரும்புகின்றார், எனவே இவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சுமந்திரன் கோரிக்கையும் விடுத்தார். தசரதனாக மைத்திரிபால சிறிசேனவும், அமைச்சராக சுமந்திரனும் உள்ளமையால் வசிஷ்டராக இருக்கின்றார் என்று கம்பவாரிதி பேசினார்.

திருநங்கைகளுக்காகக் கரம் சேருங்கள்!

திருநங்கைகள் வாழ்வின் மறுமலர்ச்சிக்கு மேலும் ஒரு விதை ஊன்றப்பட்டிருக்கிறது. (India)மாநிலங்களவையில் கொண்டுவரப்பட்ட ‘திருநங்கைகள் உரிமைப் பாதுகாப்பு மசோதா’ குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சந்தேகமில்லாமல் இது வரலாற்று நிகழ்வு. ஏனென்றால், சொந்தக் குடும்பத்தினர் முதல் பொதுவெளி வரை சமூகத்தின் எல்லா அடுக்குகளிலும் புறக்கணிப்பையும் வெறுப்பையும் எதிர்கொண்டு வலியைச் சுமக்கும் திருநங்கைகள், அரசியல் அரங்கிலும் எல்லோருடைய கவனிப்புக்கும் அப்பாற்பட்டவர்களாகவே ஒதுக்கப் பட்டிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அவர்கள் மேம்பாட்டுக்காக ஒலிக்கும் எந்தக் குரலும், பல நூற்றாண்டு காலமாகக் குரல்வளை நெரிக்கப்பட்டு, குரலற்றவர்களாக இருக்கும் அவர்கள் விடுதலைக்கான மகத்தான குரலே. அரிதினும் அரிதாகவே இங்கு அப்படிப்பட்ட குரல்கள் ஒலிக்கின்றன. இப்போது அந்தக் குரல் ஒலித்திருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது என்றால், அந்தக் குரல் தமிழகத்துக்குச் சொந்த மானது என்பது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குவது. (மேலும்....)

 

தயார் நிலையில் 20ஆம் திருத்தச் சட்டம்

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான 20ஆம் திருத்தச்சட்ட வரைபு, எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாதிரி சட்டத் திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து இறுதி அறிக்கைக்கான அமைச்சரவை அனுமதியைப் பெறும் நோக்கிலேயே எதிர்வரும் 13ஆம் திகதி கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் 20ஆம் திருத்தச் சட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் விருப்பு வாக்குமுறைமை மாற்றப்படுவதுடன் ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் ஒருவர் என்ற விதத்தில் 196 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேசிய பட்டியலினூடாக 59 நாடாளுமன்ற உறுப்பினருமான மொத்தம் 255 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

“TNA” பிளவு?

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் விடயத்தில், பிளவு ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் இலங்கை தமிழரசு கட்சி மாத்திரமே தடையாக இருப்பதாக சுரேஸ் பிரேமசந்திரன் கூறியுள்ளார். மேலும் பங்காளிக் கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் கடந்த வாரம் இடம்பெற்றிருந்த போது, அதற்கும் இலங்கை தமிழரசு கட்சி பங்குபற்றி இருக்கவில்லை என்று குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. ஆனாலும் TNA அடித்துக் கலைத்தாலும் சுரேஷ் பிரேமச்சத்திரன் உட்பட செல்வம் அடைகலநாதன், சித்தார்த்தன் போன்றோர் மீண்டும்TNA இன் தொங்கு தசையாகவே இருந்து விட்டுப் போவர். படு பிற்போக்குத்தனமான தமிழரசுக்கட்சியை விட்டு வெளியேறி புதிய கூட்டமைப்பை அமைத்து மக்களிடம் சென்று அரசியல் வேலைகள் செய்து நாற்காலிகளைப் பிடிக்கும் குறைந்த பட்ட சோம்பேறித்தனம் அற்ற செயற்பாடுகளைக் கூட இவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. தொங்கிக் கொண்டு மீண்டும் நாற்காலியைப் பிடித்து சொகுசு வாகனங்களில் செல்வதை மட்டும் இவர்கள் யாரும் இழக்கத் தயார் இல்லை. இதற்கான மாற்றுத் தலமையைக் கொடுக்கும் பரந்துபட்ட அமைப்பை இதற்கு வெளியே யாரும் அடையாளப்படுத்தவும் இல்லை. அடையாளப்படுத்தினால் மக்கள் சிறிதளவேனும் சிந்திக்க தயாராக உள்ளனர். யாரும் முயலுவார்களா....?

 

மணி ஆச்சு... இன்னும் எங்கவும் எழவு விழுகல.. நான் எப்பிடித்தான் அரசியல் பண்றதாம்??

 

வைகாசி 03, 2015

நான் இங்கு திரும்பி வர விரும்புகிறேன் ஆனால் ஒரு நிரந்தர குடியிருப்பாளராக அல்ல, அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடும் ஒருவராக - முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப் பெருமாள்

ஒன்றிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்தின் சர்ச்சைக்குரிய முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாள், அதிகாரப் பகிர்வின் பல்வேறு அம்சங்கள் பற்றி ஆராய்வதற்கும் மற்றும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை இலட்சிய ரீதியிலும் மற்றும் எழுத்து வடிவத்திலும் முழுமையாக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்கும் ஏதுவாக ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஆணைக்குழுவை ஏற்படுத்துவது அவசியம் என்று நம்புகிறார். தற்சமயம் இலங்கைக்கு வருகை தந்துள்ள பெருமாள், அத்தகைய ஓர் அமைப்பு சுயாதீனமாகவும் மற்றும் மாகாணங்களுக்கும் மற்றும் மத்திக்கும் இடையில் கருத்தொருமிப்பினை அணுகுவதற்கு ஏற்ற வகையில் வேலை செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார். (மேலும்....)
 

அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க புத்தீஜிவிகள் குழு உதயம்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் அழுத்தம் கொடுப்பதற்காக புத்திஜீவிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்களின் குரல் என்கிற அமைப்பு கொழும்பில் கடந்த வாரம் உதயம் ஆகி உள்ளது. நாடு பூராவும் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியியலாளர்கள் இவ்வமைப்பில் உள்வாங்கப்பட்டு வருகின்றனர். அமைப்பின் தலைவராக ருகுணு பல்கலைக்கழக பேராசிரியர் ரஞ்சித் சேனாரட்ணவும், செயலாளராக சப்ரகமுவ பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மஹிந்த பத்திரணவும், தேசிய அமைப்பாளராக பேராதனைப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் நந்தன விஜேசிங்கவும் தெரிவாகி உள்ளார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்வியியலாளர்களை அமைப்பில் உள்வாங்க விசேட நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. அரசியல்வாதிகள், கொள்கை வகுப்பாளர்கள் போன்றோர்களுக்கு தேசிய விவகாரங்களில் அழுத்தம் கொடுத்தல், பல்கலைக்கழக வளங்களை தேசிய அபிவிருத்திக்கு பயன்படுத்துதல், பல்கலைக்கழக மாணவர்களின் திறமைகளை தேசிய நலனுக்கு பயன்படுத்துதல் ஆகியன இவ்வமைப்பின் பிரதான இலட்சியங்கள் என்று தேசிய அமைப்பாளர் நந்தன விஜேசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பு அரசியல்வாதிகளையும் இவ்வமைப்பு நேரில் சந்தித்து பேச்சுக்கள் நடத்தும் என்றும் இவர் கூறினார்.

"புளொட்" அமைப்பும் கலந்து கொண்ட, சுவிஸ் சூரிச்சில் நடைபெற்ற மே தின ஊர்வலம்..!!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடாத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் கலந்துகொண்டிருந்தனர். இந்த நிகழ்வின்போது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். காணாமற் போனவர்கள் விடயத்தில் உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் உள்ளிட்ட பல கோஷங்கள் எழுப்பப்பட்டன. காலை 10 மணியளவில் சூரிச் பிரதான புகையிரத நிலையத்துக்கு அண்மையில் உள்ள சீல் போஸ்டு எனும் தபால் நிலையத்துக்கு அண்மையில் இன்றைய மேதின ஊர்வலம் ஆரம்பமாகி பிற்பகல் 1மணியளவில் பெல்வி பிளாட்ஸ் என்ற இடத்தில் நிறைவடைந்தது.

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 5 தமிழர்களுக்கு நெதர்லாந்து, ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்தது

விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்ததாக குற்றம் சாட்டப்பட்ட நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐந்து ஈழத்தமிழர்களுக்கு, ஹேக்கில் உள்ள நீதிமன்றம் நேற்று சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 43 வயதுக்கும், 60 வயதுக்கும் இடைப்பட்ட இவர்கள், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்தனர் என்றும், 2003ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தீவிரவாத அமைப்புக்கு நிதி சேகரித்தனர் என்றும், குற்றம்சாட்டியுள்ள ஹேக் மேல்முறையீட்டு நீதிமன்றம், இதற்காக சிறைத்தண்டனைகளை விதித்துள்ளது. இவர்களுக்கு 19 மாதங்கள் தொடக்கம், 75 மாதங்கள் வரையாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. நிதியுதவி வழங்க மறுத்தவர்களை அச்சுறுத்தியதாகவும், சட்டவிரோதமான சீட்டிழுப்புகளை நடத்தியதாகவும், நீதிமன்றம் இவர்கள் மீது குற்றம்சாட்டியுள்ளது.= 2011ம் ஆண்டு இவர்களை நெதர்லாந்தின் கீழ் நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்திருந்த போதிலும், தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்கள் என்ற வகையில் தண்டனை அளித்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கூட்டமைப்பு – அமெரிக்க இராஜாங்க செயலாளர் சந்திப்பு இன்று?

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை இன்று ஞாயிற்றுக்கிழமை(03) சந்தித்து பேசவுள்ளார். கூட்டமைபின் தலைவர் இரா. சம்பந்தன் உட்பட கூட்டமைப்பின் உறுப்பினரகளுடன் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின்போது என்ன விடயங்கள் பற்றி, சேப்படும் என்பது; தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

குடி தண்ணீரும் குடா நாடும்

குடி தண்ணீருக்காக மக்கள் ஒற்றைக் குடத்துடன் இடுப்படைய பல நூறு கிலோ மீற்றர்கள் பயணிக்கின்ற காலத்தில் வீட்டின் எல்லையோரம் வட்டக்கிணறு, துலா உழண்டி என பங்குக் கிணறுகளுடன் பங்குபோட்டு அள்ளிப் பருகிய இனம் எம் இனம். கால ஓட்டத்தில் பங்குக் கிணறுகள் பாழ். கிணறுகள் ஆகிப்போக வீட்டுக்குள் கிணறு ஊற்றெடுக்க ஆரம்பித்தன. சொந்தமண், சொந்த நீர் எம் உயிர், எம் தண்ணீர் என அள்ளிப்பருகி தாகம் தீர்த்துக் கொண்டது முழுக் குடாநாடும். இத்தனைக்கும் பூமி மாதாவைக் குளிர்விக்க ஓடிய நிலத்தடி நீர் ஓடையே எமக்கெல்லாம் வரப் பிரசாதமாகிக் கிடந்தது. ஆனால் குடி தண்ணீரில் கழிவு கலந்ததாகக் கூறி இன்று ஏன் ஊரெங்கும் போர்கொடி, ஊடகமெங்கும் செய்தி. உலகெங்கும் ஆர்ப்பாட்டம். ஏன் இந்த அவலம்? (மேலும்....)

வைகாசி 02, 2015

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம் பாசையூரை பிறப்பிடமாகவும் ஜெர்மனி (neuss) வசிப்பிடமாக கொண்ட திருவாளர் அலெக்ஸ் அமிர்தநாதன் (அமிர்தம் ) அவர்கள் 29.04.2015 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் அலெக்ஸ் மாரியம்மா அவர்களின் அன்புமகனும்
தனலட்சுமியின் அன்புக் கணவரும் றபேகா, ரூபின், ரஜீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்
சூசனம்மா (பிரான்சு) அன்னம்மா(பிரான்சு), தேவதாசன் (பிரான்சு), சாமிநாதன் (இலங்கை), தாசிஸ்(ஜெர்மனி), காலம்சென்ற யோகநாதன்(பிரான்சு), பிரகாசபுத்திரி (ஜெர்மனி), இலங்கநாதன் அலெக்ஸ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்
அன்னாரின் ஈமைகிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்

தொடர்புகளுக்கு ..... 004921313864392
004917682200714

சோமவன்ச அமரசிங்க உண்ணாவிரதம்

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று அதாவது ஜனவரி மாதம் 9ஆம் திகதி இடம்பெற்றதாக கூறப்படும் சூழ்ச்சிகள் குறித்து விசாரணைகளை நடத்துமாறு கோரியே அவர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜோன் கெரி வந்தடைந்தார்

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரி இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஒருவர் இலங்கைக்கு இறுதியாக 1982ஆம் ஆண்டே வருகை தந்திருந்தார். புதிதாக தெரிவாகியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா எதிர்பார்ப்பதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஏற்கெனவே கூறியிருந்தார். இந்நிலையிலேயே அவர் இன்று 2ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்துள்ளார். அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளரான ஜோன் கெரியுடன் வந்த 35 உறுப்பினர்கள் கொண்ட குழுவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வரவேற்றார்.

இந்தோனேஷிய மரண தண்டனைகள்: சில உறுத்தல்கள்
(ஜோர்ஜ் இ. குருஷ்சேவ்)

இந்தோனோஷியாவில் நடைபெற்ற மரண தண்டனைகள் பற்றி முகப்புத்தகத்தில் கருத்துச் சொல்ல இனி ஒரு தமிழரும் மிச்சமில்லைப் போலிருக்கிறது. அதைப் பற்றி நமது கருத்தையும் சொல்லி, ‘உள்ளேன் ஐயா!’ என்று சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம். நாம் கருத்துச் சொல்லியாக வேண்டும் என்று இங்கே யாரும் தவம் கிடக்கவில்லை. இருந்தாலும், இனத்துக்காக என நமக்கென கடமைகள் உண்டல்லவா… கொடி பிடித்தல், சுப்பர் சிங்கருக்கு கள்ள வோட்டுப் போடுதல் போன்ற! சொல்ல விரும்பும் எல்லா விடயங்களும் தனித்தனியாக விரிவாகச் சொல்லப்பட வேண்டியன. இருப்பினும் சூடு தணியும் முன்னால் கருத்துச் சொல்லியாக வேண்டுமே! நினைத்த மாத்திரத்தே பதிவு செய்யும் முகப்புத்தகப் பாரம்பரியம் நமக்கு இன்னமும் கைவரப் பெறாததால், வேலையில் எழுதியதை, வீடு போகும் போதும், தோட்டத்தில் வேலை செய்யும் போதும், பின்னால் மகனிடம் இரவல் வாங்கிய பிளேஸ்டேஷனில் வீடியோ கேம் விளையாடிய போதும், மனதில் உருப் போட்டு, அதன் மீது நித்திரை கொண்டு எழுந்து, திருத்தி அவசரமாய்! ஏதோ நம்மாலான வரலாற்றுக் கடமை நிறைவேற்றம். பிழை பொறுத்தருள்க! (மேலும்....)

கெரியின் வருகை இலங்கை அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம்

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரிக்க அதிகரிக்க, இலங்கை - அமெரிக்கா உறவிலும் விரிசல் அதிக ரித்துக் கொண்டே சென்றது. அமெரிக்காவின் செயற்பாட்டில் அதிருப்தி கொண்ட அப்போதைய ஜனாதி பதி ராஜபக்ஷ அரசாங்கம், அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதும் அமெரிக்கா புறக்க ணிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மீது சர்வதேச விசாரணையை நடத் தும் தனது குறியிலிருந்து அமெரிக்கா இம்மியளவும் பிசகாமல் உறுதியாக விருந்தது. இலங்கையின் இயற்கை வளங்களை அபகரிக்க அமெரிக்கா எடுக்கும் முயற் சிக்கு ராஜபக்ஷ அரசாங்கம் முட்டுக்கட்டையாக இருப்பதனாலேயே மனித உரிமை மீறல் என்னும் பெயரில் வீணான அழுத்தமும் அச்சுறுத்தலும் விடுக்கப்படுவதாக ராஜபக்ஷ சார்பான அரசியல்வாதிகள் ஆத்திரத்துடன் பிரசாரம் செய்து வந்தனர். (மேலும்....)

வைகாசி 01, 2015

மரணதண்டனை சாதித்தது....?

(நோர்வே நக்கீரா)

மன்னர் ஆட்சியில் இருந்து இன்றைய மக்கள் ஆட்சிவரை குற்றம் கண்டு பிடிப்பதும், குற்றங்களுக்குத் தண்டனை வகுப்பதும், நிறைவேற்றுவதும், வளமையாக இருந்து வருகிறது. எது குற்றம் எது குற்றம் இல்லை என்பதை வகுப்பது யார்? தண்டனை வகுப்பாளர்கள் குற்றம் செய்தாதவர்களாக இருந்தார்களா? இத்தண்டனைகளால் குற்றங்கள் குறைக்கப்பட்டனவா? தண்டனைகள் வேண்டாம் என்றால் மாற்றுவழி என்ன? நீதிமன்றங்கள் எதற்கு? குற்றங்களே சட்டமாக்கப்பட்டால் குற்றங்களே நடக்காது இருக்குமல்லவா? சமூகத்தில் தண்டனைகளின் பங்கு என்ன? இது நல்லதா கெட்டதா? ஆய்வு கொள்கிறது இப்படைப்பு (மேலும்....)

மே தினம்

உலக முதலாளிகள் ஒன்றுபட்டுவிட்டார்கள். வெறும் முதலாளியம் எனச் சொல்வதை விட்டு 'உலக முதலாளியம்' எனச் சொல்ல வேண்டிய காலம் இது. "உலகத் தொழிலாளிகளே ஒன்றுபடுங்கள்" என்கிற முழக்கத்தைத் தீர்க்க தரிசனமாக முன்மொழிந்தனர் பேராசான்கள் மார்க்சும் எங்கல்சும். ஆனால் இன்று தேசம், மொழி, இனம், மதம் ஆகியவற்றின் பெயரால் உருவாகியுள்ள பாசிஸ்டுகள் இந்த முழக்கத்திற்கு எதிராக நிற்பதை அடையாளம் காண்பீர் தோழர்களே ! பாசிசத்திற்கும் முதலாளியத்திற்கும் உள்ள நெருக்கமான உறவு வெளிப்படும் இன்னொரு புள்ளி இது தோழர்களே !!
அனைவர்க்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் !!!

The Tamils and India’s foreign policy games
(An interview with Varatharajah Perumal)

Talking of the international dimension, back in the 1980s, the reason why India started supporting the Tamil militants was because India didn’t like Sri Lanka’s foreign policy under the J.R.Jayewardene government. Had Mrs Sirima Bandaranaike been in power at that time, the Tamil militatnts would not have got any help from India. Today once again, the Indians are interfering in the internal affairs of Sri Lanka in order to impose their foreign policy on Sri Lanka. The excuse they use for this is the Northern Tamil community. For example, when Narendra Modi came to the Sri Lankan parliament and talked about going beyond the 13th Amendment, he was doing so on behalf of the Northern Tamils. There is a huge Indian Tamil population in Sri Lanka and Modi does not give a twit about them because they can’t be used in India’s foreign policy games. (more...)

மே தினம் 2015

இந்த நாடு எப்போதுமேதவறானதிலிருந்து சரியானதற்கு இடையறாது முயற்சி மேற்கொண்டு வந்திருக்கிறது. சமூக அநீதிகளுக்கெதிரான கிளர்ச்சிகள் பாரபட்சங்களுக்கெதிரான போராட்டங்கள் இலங்கையைச் செம்மைப்படுத்தி வந்திருக்கின்றன. வரலாறு முழுவதும் இப்படித்தான். 2015 ஜனவரி 8 இல் இனமேலாதிக்கத்திற்கும், இனங்களின் சமத்துவம், ஐக்கியம் என்பவற்றிற்;கும் இடையிலான போராட்டம் அல்லது ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையிலான போராட்டம் இதில் இனங்களின் சமத்துவம், ஐக்கியம், ஜனநாயகம் என்பதே பெருவரியான மக்களின் அபிலாசையாக இருந்தது. பெருவாரியான மக்கள் கண்ணியமான ஜனநாயக வாழ்வொன்றையே விரும்புகிறார்கள். (மேலும்....)

மே தினம்...

  • 8மணி நேர வேலை.
  • 8 மணி நேர மன மகிழ்வு...
  • 8 மணி நேர உறக்கம்..

இது தான் உழைப்பாளர் தினத்தின் தாரக மந்திரம். உழைப்பாளர் தினம், உலகம் முழுவதும் பரந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போடும் நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள். காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள்...பட்ட துன்பங்கள் கணக்கற்றவை. உழைத்துக் களைத்த மனிதனுக்கு சிறப்பு தந்து அவன் உழைப்பிற்கு ஓர் அங்கீகாரம் வழங்கும் நாளான உழைப்பாளர் தினத்தை ஒவ்வொரு தேசமும்கொண்டாடுகின்றன. ஐரோப்பாவில்..... மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல தெய்வங்களை வணங்கி வந்த காலத்தில் ஏற்பட்டது. முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை விழாவாகக் கொண்டாடினார்கள். ஆதிகாலத்தில் நெருப்பின் தினமாக மே 1ஆம் தேதியைக் கொண்டாடினார்கள். ஏப்ரல் 30 சாயந்திரம் விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்பட்டது. (மேலும்....)

மீன்பிடித்தலில் கட்டுப்பாடு

மத்திய அரசு மீது தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தி

எல்லை தாண்டி மீன்பிடிக்கக் கூடாது, தடை செய்யப்பட்ட படகுகள், வலைகளைப் பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட மத்திய அரசின் கட்டுப்பாட்டுகளால் தமிழக மீனவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இத்தகைய கட்டுப்பாடுகளை மீறும்பட்சத்தில், தமிழக மீனவர்களை இலங்கை அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு மத்திய அரசு பொறுப்பேற்காது என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் திட்டவட்டமாக கூறியிருப்பதும் அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. (மேலும்....)

நான்கு வருடங்களின் பின் 175 பேருக்கு நேற்று இரட்டைப் பிரஜாவுரிமை

நான்கு வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் 175 தனிநபர்களுக்கு நேற்று இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. வெளிநாடுகளில் பிரஜாவுரிமையை பெற்றதன் காரணமாக இலங்கைப் பிரஜாவுரிமையை இழந்தவர்கள் மற்றும் பிறநாட்டில் பிறந்து இலங்கைப் பிரஜாவுரிமையை பெறவிரும்பியவர்கள் என்ற இரண்டு தரப்பைச் சேர்ந்தவர்களும் நேற்று இலங்கை பிரஜையாக இந்நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதாக உறுதிமொழி வழங்கியதன் பின்னர் அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடமிருந்து இலங்கைப் பிரஜைக்கான சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான அனுபவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில், இதற்காக விண்ணப்பிப்போர் குறித்த தகவல்கள் இரு நாட்டு பொலிஸ் திணைக்களத்தின் அறிக்கை அடிப்படையி லும் நுணுக்கமாக ஆராய்ந்ததன் பின்னரே இரட்டைப் பிரஜாவுரிமைக்காக அங்கீகரிக்கப்படுவதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார். முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தின்போது 1987 ஆம் ஆண்டு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை ஆரம்பமானது. இதன்போது 34 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றனர். எனினும் கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது 2011 ஆம் ஆண்டு முதல் கடந்த 04 வருடங்களாக எந்தவொரு காரணமுமின்றி இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை கைவிடப்பட்டிருந்தது. 55 வயதுக்கு மேற்பட்டோர் இலங்கையில், 25 இலட்சத்துக்கும் அதிகமான சொத்துக்களை வைத்திருப்போர், ஆகக் குறைந்தது ஒரு வருடகால டிப்ளோமா அல்லது பட்டப்படிப்பு படித்துள்ளோர் வங்கிகளில் 25 இலட்சத்துக்கும் அதிகமான நிலையான வைப்புக்களை வைத்திருப்போர் இவர்களது மனைவி அல்லது கணவன் அல்லது மற்றும் 22 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமையளிக்கப்படுமெனத் தெரிவித்தார்.

அறியாமல் தவறிழைத்துவிட்டேன், விடுதலையான உதய ஸ்ரீ தெரிவிப்பு

இந்த தவறை தெரியாமலேயே செய்தேன். இனிமேல் எவரும் இத்தகைய தவறையும் செய்ய வேண்டாம். செய்த தவறுக்கும் மன்னிப்பும் கோருகிறேன். எனக்கு விடுதலை தந்த ஜனாதிபதிக்கும் நன்றி கூறுகிறேன். சிகிரியாவில் பளிங்குச் சுவரில் தன் பெயரை எழுதியதால் இரு வருட சிறைத் தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டு ஜனாதிபதியின் மன்னிப்பின் பேரில் விடுதலையான சின்னத்தம்பி உதயஸ்ரீ (வயது 28) இவ்வாறு தெரித்தார். தெரியாத்தனமாக இவர் சிகிரியா சுவரோவியப் பகுதியில் கீறியதால் தொல் பொருள் அகழ்வு அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர். பெப்ரவரி 14 இல் தம்புள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆஜர் செய்யப்பட்ட இவர் மார்ச் 02 வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டார். தமது தவறை இவர் ஏற்றுக்கொண்டார். இவருக்கான சிறைத்தண்டனையை இலகுபடுத்துமாறு அவரின் தயாரான சின்னத்தம்பி தவமணி (60 வயது) உட்பட குடும்பத்தவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். சிறைத்தண்டனையைக் குறைக்குமாறும் இரு சட்டத்தரணிகள் ஊடாக கண்டி மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மார்ச் 26 ஆம் திகதி இவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது. 34 தினங்கள் இவர் சிறையில் இருந்தார். கடந்த 29 ஆம் திகதி விண்ணப்பம் வாபஸ் பெறப்பட்டதால் அவரை ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவு கிடைத்து சிங்களம் பேச இவருக்கு இயலவில்லை. அடையாள கார்ட்டும் இருக்கவில்லை. இதனால் அவரை விடுவிக்க முடியாமல் போனது.

பிரபல ஓவியர் கோபுலு காலமானார்

பத்திரிகை உலகின் மகத்தான ஓவியர்களுள் ஒருவர் கோபுலு. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த இவர், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். 91 வயதான கோபுலு இன்று மாலை சென்னையில் காலமானார். தஞ்சையில் 1924-ம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் கோபாலன். விகடனில் அந்த நாளில் புகழ்பெற்ற ஓவியராகத் திகழ்ந்த மாலி, கோபாலன் என்கிற இவரது இயற்பெயரை கோபுலு என மாற்றினார். 1941-ல் ஆனந்த விகடன் மாலி விகடன் தீபாவளி மலருக்காக இவரை திருவையாறுக்கு அனுப்ப, தியாக பிரம்மம் அவர்களின் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி கோபுலு வரைந்த முதல் ஓவியம் தியாகராஜ சுவாமிகள் பூஜை செய்த ராமர் பட்டாபிஷேகம் ஆகும். அப்போது அவருக்கு 16 வயது. 1945 முதல் ஆனந்த விகடனில் முழுநேர ஓவியராகப் பணிபுரிந்த கோபுலு, அமரர் தேவனின் கதைகள், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் உள்ளிட்ட புகழ்பெற்ற படைப்புகளுக்குத் தன் தூரிகையால் உயிர் கொடுத்தவர். (மேலும்....)

1994 ம் ஆண்டு -மே மாதம் -முதலாம் திகதி.... சபாலிங்கம்

அன்று நீ எம்மோடு இருந்தாய்
அராஜகம் எதிர்த்தாய்
உன் மரணம் புலிகளால் நிகழ்ந்தது
அதுவே எமக்கு "அரசியல்" ஆனது
எமது " பிழைப்பாய் " போனது
"பிழைப்பு அரசியல் " மகிந்தாவோடு
மகிழ்வுறும் தருணம் கண்டது
நீ அதிர்ச்சி கொள்வாய்
அருவருப்பு அடைவாய்
எமக்கு கவலை இல்லை.
உம்மை இத் தினத்தில் நினைவு கொள்கின்றோம்
சந்தோசம் கொள் !

(Ashok-yogan Kannamuthu)

(தொடர்புடைய கட்டுரைகள்.....)

வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள்

இந்தப் போர் ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது


வியட்நாம் போரின்போது காட்டுமிராண்டித்தனமான குற்றங்களை அமெரிக்கா இழைத்தது என வியட்நாமின் பிரதமர் வியன் தன் ஷோங் கூறியுள்ளார். அந்தப் போர் முடிவடைந்து நாற்பது ஆண்டுகள் ஆவதை குறிக்கும் நினைவு நிகழ்வின்போது ஆற்றிய உரையிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். வியட்நாம் மக்களுக்கு அந்தப் போரின்போது அமெரிக்கா கணக்கிட முடியாத இழப்புகளும், சொல்லொணாத் துயரங்களையும் ஏற்படுத்தினர் என்று அந்த உரையில் அவர் கூறினார். (மேலும்....)

நேபாள நிலநடுக்கம் சொல்லும் சேதி

பூமியின் மிக ஆழத்தில் ஏற்படும் நிகழ்வுகளால் சில்லுகள் நகர்ந்து, நிலநடுக்கம் உண்டாகிறது! நேபாளத்தில் கடந்த 25 அன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. சுருங்கச் சொன்னால், வடக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தியத் துணைக் கண்டம் நேபாளத்தின் அடிநிலப் பாறைகள் மீது செலுத்திவரும் நெருக்குதல் காரணமாகவே நேபாளத்தில் நிலநடுக்கம் நிகழ்ந்துள்ளது. அப்படியானால், இந்தியத் துணைக் கண்டம் நகர்கிறதா? அது எப்படிச் சாத்தியம் என்று கேட்கலாம். இதுபற்றி விளக்க பூர்வ கதைக்குச் சென்றாக வேண்டும். (மேலும்....)

தமிழக மீனவர்களை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் - இலங்கை அமைச்சர்

இதனிடையே, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை இந்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்வதற்காக இலங்கை மறுசீரமைப்பு மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் சாமிநாதன் சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: "மீனவர்கள் பிரச்சினையை தீர்ப்பது இந்தியாவின் கையில்தான் உள்ளது. தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன் பிடிக்கிறார்கள். அவர்களை இந்திய அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும். எல்லை தாண்டி மீன் பிடிக்கும் மீனவர்களை எங்கள் பாதுகாப்புக்காக சர்வதேச சட்டப்படி துப்பாக்கியால் சுடும் உரிமை உள்ளது" என்றார் அவர்.

என் மகன் போதைப் பொருள் கடத்தும் ஆட்களுடன் திரிகிறான்

அப்பா கொடுத்த தகவலால் தான் மையூரன் கைது செய்யப்பட்டார்

ஒரு கொலையை இயல்பான மனிதர்கள் யாராலும் செய்ய முடியாது. அது மிக கொடூரமானது. எந்த செயலாலும் ஒரு கொலையை நியாயப்படுத்தவும் முடியாது. சட்டத்தின் பரிணாம வளர்சியில் மரணதண்டனை தற்போது இல்லாமல் போய் அருகி வருகிறது. பல நாடுகளில் இத்தண்டனையை இல்லாதொழித்துள்ளார்கள். ஆனால் இந்தோனேசியாவில், எட்டு உயிர்களை குருவி சுடுவதைப் போல சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். தனக்காக நிர்ணயிக்கப்பட்ட மரணத் திகதியை அறிந்துகொண்டு, தனக்காக தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியை பார்த்துக்கொண்டு, தனக்காக செய்யப்பட்ட சிலுவையைப் பார்த்துக்கொண்டு, தான் கொலை செய்யப்படும் முறையை அறிந்துகொண்டு பல வருடங்களாக கொடூர வாழ்வை வாழ்ந்துள்ளார் மையூரன். (மேலும்....)
 

மாமனிதர் பட்டம் கொடுத்து கௌரவிக்கப்பட்ட சிவராமின்

இரத்தக்கறை படிந்த கொடூரக் கொலைகளின் குற்ற வரலாறு அம்பலத்திற்கு வந்திருக்கிறது.

வன்னிப் புலிகள் மிகச் சரியாகவே தன்மீது சந்தேகம் வைத்திருப்பது சிவராமுக்கு மிகத்தெளிவாகவே தெரிந்திருக்கும். இதற்கிடையில் கருணாவின் படைகள் கலைந்து போன பின்னர் சிவராமின் மைத்துனரான கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வன்னிப் புலிகளால் கருணா விவகாரம் தொடர்பாக “கைது செய்யப்பட்டு” விசாரிக்கப்பட்டார். எப்படி தனது பிழைப்புக்காக 1997 ல் தமிழ் நெற் தொடங்கியபோது தன்னுடைய புலி விமர்சனத்தைக் கைவிட்டு புலிச்சார்பு நிலை எடுக்கத் தலைப்பட்டாரோ அப்படி ஒரு நிலமை இப்போதும் சிவராமுக்கு. இம்முறை வன்னிச் சார்பு எடுக்க வேண்டிய நிலமை... (மேலும்....)

தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தினாலும்

அரசியல் சித்தாந்தம் சரியாக இருக்க வேண்டும்.



சோவியத் யூனியனில், 2 ம் உலகப்போரில் இரண்டு கால்களையும் இழந்து அங்கவீனரான முன்னாள் போர்வீரருக்கு மரியாதை வணக்கம் செலுத்துகின்றனர். ஈழத்தில் பல அங்கவீனர்களான முன்னாள் போராளிகள், அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில் வாழ்கின்றனர். ஈழப்போரில் கை, கால்களை இழந்த முன்னாள் போராளிகள், இன்று வாழ முடியாமல், வறுமையில் கஷ்டப் படுகின்றார்கள். தேசிய விடுதலைப் போராட்டம் நடத்தினாலும், அரசியல் சித்தாந்தம் சரியாக இருக்க வேண்டும்.Kalaiyarasan Tha

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com