Contact us at: sooddram@gmail.com

 

புரட்டாசி 2011 மாதப் பதிவுகள்

புரட்டாசி 30, 2011

தோழர் உமாகாந்தனின் கனவுகள் 

(தி. ஸ்ரீதரன் - பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் )

ஈழத் தமிழர்களின் இன்றைய வாழ்நிலை பின்புலத்தில் தோழர் உமாகாந்தன் மறைந்து  ஆண்டுகள் 7  உருண்டோடிவிட்டன. தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் தோழர் உமாகாந்தன் புலம்பெயர் தளத்தில் காத்திரமான பங்கை வழங்கியிருந்தார். அவர் உலகின் ஒடுக்கப்பட்ட தேசங்கள், மக்கள் தொடர்பாக அக்கறை கொண்டிருந்தார். கவிதை, இலக்கியம் பத்திரிகை என அவரின் ஈடுபாடு விசாலமானது. சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்பதில் புலம் பெயர் தளத்தில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர், பிரான்சில் அவரது அரசியல் சமூக செயற்பாடுகள் தனித்தன்மை வாய்ந்தனவாக அமைந்திருந்தன. (மேலும்....)

புரட்டாசி 30, 2011

தொம்பேயில் பெரும் பதற்றம் தொடர்கிறது

பொலிஸாரின் பாதுகாப்பின் கீழ் இருந்த சந்தேக நபரொருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து கம்பஹா, தொம்பே பிரதேசத்தில் தற்போது பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜே.சி.புரொக்டர் தெரிவித்தார். சந்தேகநபர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்ததையடுத்து இப்பகுதி மக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலிஸ் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக பிந்திக் கிடைத்த தகவல்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது.  (மேலும்....)

புரட்டாசி 30, 2011

இருபது வருடங்களின் பின்

இன்றுமுதல் திரைக்கு வரும் இலங்கைத் திரைப்படம் 'ஒரே நாளில்'

பிரிலியன்ட் கிரியேஷன் நிறுவனத்தினால் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தயாரிக்கப்பட்டு வந்த "ஒரேநாளில்' என்ற திரைப்படம் இன்று முதல் நாட்டின் பல்வேறு திரையரங்குகளிலும் வெளியிடப்படுகின்றது. இலங்கையின் கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களுக்கும் மிகவும் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகவே இது எல்லோராலும் பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் இலங்கையின் தமிழ் சினிமா என்பது நம்நாட்டில் எட்டாக்கனியாகவே இருந்து வந்தபோது. நம்நாட்டிலும் தமிழ் சினிமா தயாரிக்கும் காலம் வராதா? என்ற ஏக்கம் இலங்கையின் ரசிகர்கள், கலைஞர்கள் மத்தியில் கேள்விக்குறியாகவே இருந்து வந்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 30, 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 25)

(நேசன்)

"சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனையை நாம் ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின், அதுவும் நிலப்பிரபுத்துவ தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளாத, சமூக ஏற்றத்தாழ்வுகளினால் விளைந்ததொன்றாக நாம் பார்க்கத் தவறியிருந்தோம். அது மட்டுமல்லாது மிகவும் மோசமான சாதிய அமைப்பு முறையை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக அமைப்பின் குறைபாடாக, ஒரு சமூகப் பிரச்சனையாக பார்ப்பதற்கு தவறியிருந்தோம். "சமூகவிரோதிகள்" பற்றிய பிரச்சனை ஒரு வர்க்கபார்வையற்ற, சமுதாயத்தைப்பற்றிய சரியான புரிந்துணர்வற்றதொன்றாகவே காணப்பட்டது. சமூகத்தைப் பற்றிய தவறான புரிதலிலிருந்து, சமூகத்தைப் பற்றிய தவறான பார்வையிலிருந்து பிரச்சனைகள் அணுகப்பட்டன. சமூகத்தின் கீழ்மட்டத்தைச் சேர்ந்த வறியமக்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதிரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களாகவே இருந்தனர்.(மேலும்....)

புரட்டாசி 30, 2011

ராஜீவ் கொலையாளிகளின் குற்றப் பின்னணி!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட மூவருக்கு கருணை காட்ட வேண்டும் என்ற பிரசாரம், தொலைக்காட்சிகள் உதவியுடன் நடைபெறுகிறது. சாதாரணமாக ‘தமிழ் உணர்வாளர்கள்’ என்று அறியப்படுபவர்கள், தற்போது ‘மனித நேயக் காவலர்களாக’ அவதாரம் எடுத்துள்ளனர். இந்நிலையில், அந்த படுகொலையைப் பற்றிய சில விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாழ்ப்பாண மேயர் கொலை வழக்கில் பிரபாகரன் சார்பாக வாதாடிய வக்கீல் எஸ்.நடராஜன், டெஸோ தலைவர் சிறி.சபாரத்தினம், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணித் தலைவர் அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் எம்.பி., E.P.R.L.F. ஜார்ஜ், P.L.O.T.E. வாசுதேவன், E.P.R.L.F. பத்மனாபா, கிருபன், யோக சங்கரி மற்றும் நால்வர் தவிர, ரஞ்சன் விஜயரத்னே, பிரேமதாசா, லக்ஷ்மண் கதிர்காமர், காமினி திசநாயகே, நீலம் திருச்செல்வன், அருணாசலம் தங்கதுரை, சாம் தம்பிமுத்து, சரோஜினி யோகேஸ்வரன், யாழ்ப்பாண மேயர்.... என்று பலர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்கள். தவிர விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மாத்தையா, கிட்டு உட்பட பலரும் கொல்லப்பட்டனர். இவர்களெல்லாம் யார்? இவர்களுக்கு எது பொதுவானது? (மேலும்....)

புரட்டாசி 30, 2011

‘Reject violence,’ jailed Tiger arms broker urges

(Stewart Bell)

A former Canadian Tamil activist who was caught brokering a $1-million arms deal for a Sri Lankan rebel group five years ago has written an open letter urging youths not to repeat his mistakes. Writing from prison in New York, Sathajhan Sarachandran acknowledged for the first time the Tamil youth organization he once ran in Toronto was “part of the LTTE,” the separatist rebels also known as the Tamil Tigers. But the 31-year-old software engineer blamed “so-called” leaders of the Tamil community whom he said misled him, fuelled his anger and hatred, promoted violence and silenced advocates of non-violence. “I only ask that you be vigilant of these people. I ask that none of you choose a path where violence is encouraged. Please don’t be a catalyst for promoting any form of violence or hate,” he wrote in the two-page letter. (more....)

புரட்டாசி 30, 2011

புலிகளின் பொறுப்பற்ற செயலால் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தோம்

"புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஷெல் தாக்குதலில் காயமடைந்து ஊனமடைந்திருந்தாலும் உறுதியுடன் இருக்கிறேன். புலிகளின் பொறுப்பற்ற கண்மூடித்தனமான நடவடிக்கைகளினால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குணசிங்கம் விசாகன் (28 வயது). புலிகளில் இருந்த போது பல்வேறு துண்புறுத்தல்களுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பியவர். (மேலும்....)

புரட்டாசி 30, 2011

புரட்டாசி 30, 2011

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 50 பேர் மீது சி.ஐ.டி விசாரணை

பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் நேற்று சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர் தினகரனுக்குத் தெரிவித்தார். புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 50 இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது. இதன்படி அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 42 ஆண்களும் 8 பெண்களும் நேற்று காலை 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார். இவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான விஸா இல்லாததால் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

புரட்டாசி 30, 2011

Ex-Tiger tax collector called war criminal

(Adrian Humphreys  )

A man who worked as a tax collector in the Tamil Tigers’ finance department while the terrorist group engaged in crimes against humanity has been branded a war criminal and ordered out of Canada in a court ruling that holds office clerks just as culpable as the armed insurgents they enable. Puvanesan Thurairajah, 36, is a citizen of Sri Lanka and of Tamil ethnicity who, before coming to Canada, worked for the Liberation Tigers of Tamil Eelam (LTTE), a group on Canada’s official list of designated terrorist organizations, the Federal Court of Canada heard.After finishing school, he worked for his brother in a factory in Jaffna. The factory was charged a tax by the LTTE and when Tigers came to collect they tried to recruit him but he refused, Mr. Thurairajah told Canadian officials. (more....)

புரட்டாசி 30, 2011

சார்ஜாவில் கொள்ளை 6 இலங்கையர் கைது

சார்ஜாவில் உள்ள 14 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 6 இலங்கையர்கள் உள்ளடங்கலான கொள்ளையர் குழுவினரை சார்ஜா பொலிஸார் கைது செய்துள்ளனர். பலகடைகளிலும் மற்றும் சந்தை தொகுதிகளிலும் பணமும் பொருட்களும் கொள்ளை போவதாக சார்ஜா பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட துரித நடவடிக்கையிலே குறித்த கொள்ளை குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரே வகையான உத்தியை பயன்படுத்தி கொள்ளை மேற்கொள்வதை கண்டுபிடித்த பொலிஸார் இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு அறிவித்ததை அடுத்து விசேட பாதுகாப்பு குழு ஒன்று நியமிக்கப்பட்டு அவர்கள் நடத்திய துரித விசாரணை மூலம் கொள்ளை குழுவினர் மாட்டிக் கொண்டுள்ளனர். முதலில் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொண்டதன் பின்னர், அவரின் வீட்டில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது கொள்ளையிடப்பட்ட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்பு சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் ஏனைய நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 30, 2011

பிரதமரின் கடிதமொன்றை துரும்பாக வைத்து மோசடியில் ஈடுபட்டார் ராசா

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு குறித்த அனைத்தும் பிரதமருக்கும், ப. சிதம்பரத்திற்கும் தெரியும் என நீதிமன்றத்தில் ஒவ்வொரு முறையும் கூறி வரும் முன்னாள் மத்மதிய அமைச்சர் ராசா பிரதமர் தனக்கு அனுப்பிய ஒரு ஒப்புகைக் கடிதத்தை வைத்து அனைவரையும் திசை திருப்பியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதினார் ராசா. அதில் பிரணாப் முகர்ஜியை தான் சந்தித்து மொபைல் உரிமம் குறித்த கொள்கை வகுப்பு குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார். பதிலுக்கு 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி பிரதமர் மன்மோகன் சிங் பதில் கடிதம் அனுப்பினார். அதில் உங்களது கடிதம் பெற்றேன் என்று கூறியுள்ளார் சிங். (மேலும்....)

புரட்டாசி 30, 2011

புதிய ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது சீனா

சீனா, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்துள்ளது. சீனாவின் ஷென்யாங் இராணுவ மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு பிரிவில் இருந்து “ஹோங்கி 16” அல்லது “ரெட் ப்ளாக் 16” என்ற ஏவுகணை, விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும். அதோடு, விண்ணில் மிக அதிக உயரத் தில் உள்ள மற்றும் மிகக் குறைவான உயரத்தில் உள்ள இலக்கு களையும் தாக்கும் திறன் படைத்தது. சமீபத்தில் தான், இதே ரக ஏவுகணைகள் இரண்டை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 30, 2011

பிரான்ஸ் பட்ஜெட்டில் சலுகைகள் குறைப்பு

பிரான்ஸ் பட்ஜெட்டில் சலு கைகள் குறைத்து தாக்கல் செய்யப்ப டவுள்ளது. பிரான் ஸில் அடுத்த ஆண் டுக்கான பட்ஜெட் வரும் புதன்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்ஜெட்டில் 2 வது உலகப் போருக்கு பின் முதன் முறையாக சலுகைகளை குறைத்து தாக்கல் செய்யப்படவுள்ளது. ஆனால் பொருளாதார நிபுணர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கை யில் 2012 பொது பட்ஜெட்டில், சலுகைகளை குறைப்பதால் மட்டுமே கடன் சுமை பற்றாக்குறையை சமாளிப்பது போதுமானதாக இருக்காது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

புரட்டாசி 29, 2011

வெளுக்கும் சாய முகங்கள்  (பகுதி 3)

கழிப்பிடமும், கட்டாந்தரையும் ஒன்றே! : கடந்த 2010ம் ஆண்டு, 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், கழிப்பிடம், தெரு விளக்குகள், கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. கழிப்பிட வசதிகள் அமைத்தும், அவை, பராமரிப்பு இல்லாத காரணத்தால், மக்களின் சுகாதாரத்தை சீர்குலைத்து வருகிறது. புதிதாகவருபவர்கள்முகாமில் எப்படி சேர்க்கப்படுகின்றனர்? : சென்னையில் உள்ள தூதரகத்தில், பாஸ்போர்ட் மற்றும் அடையாள அட்டை காண்பித்து, பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு, ராமேஸ்வரம் மண்டபம் முகாமிற்கு சென்று, அங்கு பதிவு செய்து கொண்டு, தமிழகத்தில் உள்ள 113 முகாம்களில், எங்கு வேண்டுமானாலும் வசித்துக் கொள்ளலாம். 1990ம் ஆண்டுக்குப் பிறகு வருபவர்கள், ஏற்கனவே தங்களது உறவினர்கள் தங்கியுள்ள முகாம்களுக்கே செல்கின்றனர். இலங்கை போர் முடிவுக்கு வந்த பிறகு, கும்மிடிப்பூண்டி முகாமிற்கு புதியதாக யாரும் வரவில்லை. போருக்கு பிறகு, சிலர் தாயகம் திரும்பியுள்ளனர். (மேலும்....)

புரட்டாசி 29, 2011

கண்ணோட்டம் வெளிவந்துவிட்டது

எங்கள் நேசமிகு தோழர்களே! பொது மக்களே!! பத்மநாபாஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் மாதாந்தம் வெளிவரும் கண்ணோட்டம் சஞ்சிகை வெளிவந்து விட்டது நீங்கள் வசிக்கும் நாடுகளில் உங்கள் தொடர்புகளில் எங்கள் கட்சி தோழர்களிடம் பெற்றுக்கொள்ளுங்கள் கண்ணோட்டம் சஞ்சிகை இது உங்கள் சஞ்சிகை

 

புரட்டாசி 29, 2011

34 இலங்கையர்களை ஆஸி.க்கு அழைத்து செல்ல முயன்றோருக்கு புலிகளுடன் தொடர்பு

34 இலங்கைத் தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச்செல்ல முற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் (5 இலங்கையர்கள், 4 கேரள பிரதேசத்தவர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தமிழ்நாடு "கியூ' பிரிவு பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 9 பேரும் கலமசேரி பொலிஸ் முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளதாக ஏர்ணாகுள மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஹர்சித் அட்லூரி தெரிவித்துள்ளார். அத்தோடு கியூ பிரிவு பொலிஸார் அவர்களை விசாரணை செய்யும் வரை எதுவித உறுதியான தகவல்களையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, அகதிகள் முகாமில் நிலவி வரும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு தாம் வெளியேறி செல்ல முயன்றதாக மக்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என குற்றப் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புரட்டாசி 29, 2011

இலங்கை அரிசி ஆபிரிக்காவிற்கு எற்றுமதி

இலங்கையில் தேவைக்கு மேலதிகமாகவுள்ள அரிசியை ஆபிரிக்க நாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். ஆபிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் தாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் போது இலங்கையிலிருந்து அரிசியைக் கொள்வனவு செய்வதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார். (மேலும்....)

புரட்டாசி 29, 2011

உண்டியல் உதயன்போன்ற விஷக்கிருமிகள் சமுதாயத்திலிருந்து மக்களால் துரத்தியடிக்கப்படவேண்டும் (பாகம் 1)

உண்டியல் உதயன்  இவனது நாமம் இவனின் பிறப்பிடம் யாழ் வல்வெட்டி கம்பர் மலை என்று மக்கள் கூறுகின்றனர் இவன் நல்ல குடும்பத்தைசேர்ந்தவன் அல்ல இவனின் தந்தை அன்றயகாலங்களில் பெருவட்டிக்கு பணம் பெறும் அப்பாவிகளை ஏமாற்றி வட்டி பெறும் தந்திரக்காரன் ஏன் ஒரு சூத்திரதாரியும்  என்றேகூறலாம்  உண்டியல் உதயன் இலங்கை திரு நாட்டிற்கு பெரும் துரோகம் இழைத்து விட்டு  தப்பிந்தவன் இலங்கை அரசாங்காத்தல் தேடப்படும் ஓர் குற்றவாளி. இவன் 1991  காலப்பகுதியில் சுவிஸ் நாட்டிற்க்கு அரசில் தஞ்சம் அடைக்கலமான உதயன் இலங்கையில் தனது பக்கத்து கிராமத்தவன் சுவிஸ்  நாட்டில் வாழும் தனது சொந்தக்காரனாகிய  உண்டியல்(கிரிவலம்) என்பவரிடம் தனது  நட்பை தொடர்ந்து கொண்டான் அவனிடமே உண்டியல் தொழிலையும் பல வருடங்களாக கற்றுக்கொண்டான். (மேலும்....)

புரட்டாசி 29, 2011

லண்டனிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று வருகை

லண்டனில் புகலிடக் கோரிக்கை மறுக்கப் பட்ட 50 இலங்கை யர்கள் இன்று இல ங்கை வந்தடைவரென வெளிவிவகார அமைச்சின் அதிகாரி யொருவர் தெரிவித்தார். வீசாவின் குறிப்பிட ப்பட்ட காலம் முடிவ டைதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக் கள் காரணமாகவே இவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திருப்பிய னுப்பப்படுவதாக லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிக ராலயம் உத்தியோக பூர்வமாக அறிவித்தி ருப்பதாகவும் அவ்வதிகாரி சுட்டிக்காட்டினார். இலங்கையின் அனை த்து இனம் மற்றும் வயதுகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளடங்குவதாக குறிப்பிட்ட அவர் லண்டனில் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட பலர் குழுக்கள் குழுக்களாக கடந்த சில காலங்களாக நாட்டிற்கு திருப்பியனுப்பப்படுவதாகவும் கூறினார்.

புரட்டாசி 29, 2011

சித்திரவதைக்கு உடந்தையாக பிரிட்டன் இருந்ததாக குற்றச்சாட்டு எழலாம்

அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்ப உள்ளதன் மூலம் பிரித்தானியாவும் சித்திரவதைகளுக்கு உடந்தையாக இருந்தது என்ற குற்றச்சாட்டுக்கு உட்படக்கூடும் என பிரித்தானிய தொண்டர் அமைப்பு எச்சரித்துள்ளது. அகதி அந்தஸ்து மறுக்கப்பட்ட இலங்கையர்கள் சிலர் இன்று பிரித்தானிய எல்லை முகவர் அமைப்பால் கட்டாயத்தின் பேரில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக சித்திரவதைகளில் இருந்து விடுதலை எனும் தொண்டர் அமைப்பு தெரிவித்துள்ளது. யுத்தத்தின் பின்னரும் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்கள் பல்வேறு விதமாக துன்புறுத்தப்பட்டு வருவதற்கு ஆதாரங்கள் உள்ளதாக குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரித்தானிய அரசின் இலங்கைத் தமிழர்களை திருப்பி அனுப்பும் நிலைப்பாடு அடிப்படையற்ற ஒன்று என குறித்த தொண்டர் அமைப்பின் தலைமை நிர்வாகி கீத் பெஸ்ட் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 29, 2011

Batti political family scion beckons Tamils away from politics of hate

(by Rohan Abewardena)

Mr. Sampanthan is a product of a particular time. He is no longer relevant. But unfortunately you have to understand history does play a part, which is Tamil people were radicalised. They were led to believe there were several atrocities committed against them and the Tamil mindset was you go and vote for the Tamil nationalist party. He is a product of that time. Someone like Sampanthan or fellow TNA leaders they can only survive as political leaders in this vacuum where you need an enemy. The enemy becomes a government of the time. May be they are now highly critical of the SLFP and the current government, but they will always be critical of any government of Sri Lanka because in their mindset they have no room for anything other than hatred. I would say communalist mindset is prevalent among them. People like that will always exist until the people realise what is best for their future. Now when several things are harped on by the TNA on current circumstances in Sri Lanka, it must be said that these are the leaders who were for ever fearful of criticising the LTTE. They towed the LTTE line when the LTTE had the weapons and today they are making no apology for their part in the LTTE inhumanely holding thousands and thousands of civilians as a human shield. (more...)

புரட்டாசி 29, 2011

கிளிநொச்சி, வவுனியாவில் இன்று நீதிமன்றங்கள் திறப்பு

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றம், நீதவான் நீதிமன்றம் மற்றும் வவுனியா சிவில் மேன்முறையிட்டு மேல் நீதிமன்றம் என்பன இன்று வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களை நிர்மாணிப்பதற்கு 15 மில்லியன் ரூபாவும், வவுனியா புதிய சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்தை நிர்மாணிப்பதற்கு 26 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகால யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து சில மாதங்களில் கிளிநொச்சி நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமான போதிலும், தற்காலிக கட்டடமொன்றிலேயே அவை இயங்கி வந்தன. வவுனியா மேன்முறையிட்டு மேல் நிதிமன்றம் செயல்படத் தொடங்கியதும் முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இலகுவாக தங்களது சட்ட சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கு வாய்ப்பு ஏற்படுமென நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். அத்துடன், பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், வேலணை, மாங்குளம் உட்பட நீதிமன்ற நடவடிக்கைகளை மறுசீரமைக்கும் மற்றும் நீதிமன்றக் கட்டடங்களை புனரமைக்கும் செயல்திட்டங்களும் ஆரம்பமாகியுள்ளன. அவற்றிற்கான மொத்தச் செலவு 890 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

புரட்டாசி 29, 2011

ஏகாதிபத்தியமும் அதன் முட்டாள்தனங்களும்!

(பேரா.பிரபாத் பட்நாயக்)

சரியாக பத்து வருடங்களுக்கு முன்பு மன்ஹாட்டனில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரங்கள் தகர்க் கப்பட்ட உடனே நடைபெற்ற அமெரிக்க உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கண்டோலிசா ரைஸ் அதிரடியாக ஒரு கேள்வியை எழுப்பி னார்: “இந்த பயங்கரமான துயரத்தை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப்போகிறோம்?” அவருடைய கவலை என்பது இந்த பயங்கர தாக்குதலைப் பற்றியதாக வோ அல்லது குற்றம் செய்தவர்களை நீதிக் குட்படுத்துவது தொடர்பாகவோ இல்லை. மேலும் அந்தக்கூட்டத்திலேயே, இந்த சந் தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு இராக் மீது ஒரு போரினைத் தொடுத்து அதன் மூலம் நல்ல பலனை அடையலாம் என்ற விவாத மும் எழுப்பப்பட்டது. அல்கொய்தாவுடன் சதாம் உசேனுக்கு உள்ள பகைமை குறித்து நன்றாக அறிந்திருந்த போதும் இந்தப்போருக்கான விவாதம் எழுப்பப்பட்டது என்பது இங்கு கவனிக்கத்தக்கது. (மேலும்....)

புரட்டாசி 29, 2011

ஆரம்பிச்சுட்டாங்க மீண்டும் ஆரம்பிச்சுட்டாங்க

ஈராக்கிற்கு அமெரிக்கா யுத்த விமானங்கள் விற்பனை

ஈராக் அரசு யுத்த விமானங்களை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யவுள்ளது. ‘எப்-16’ ரக ஜெட் விமானங்கள் 18 ஐ 3 பில்லியன் டொலர் பெறுமதிக்கு ஈராக் அரசு கொள்வனவு செய்யவுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. மேற்படி விமானங்கள் ஈராக்கின் வான் எல்லையை பாதுகாக்க உதவும் என அமெரிக்க அரசு பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் தெரிவித்தார். அத்துடன் ஈராக் அரசுடனான உறவுக்கு இது முக்கிய ஆரம்பமாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே இந்த விமான கொள்வனவுக்கான முற்பணமாக 1.4 பில்லியன் டொலர்களை ஈராக் அரசு அமெரிக்காவுக்கு வழங்கியுள்ளதாக ஈராக் அரச பேச்சாளர் அலி அல் டப்பாக் தெரிவித்தார்.

புரட்டாசி 29, 2011

Silence of HR watchdogs

More than 200,000 Libyan civilians are believed to be trapped in Bani Walid and Sirte. NATO has admitted that their lives are in great danger due to heavy fighting between the pro-Gaddafi forces and their enemies. All pockets of resistance are in the throes of a huge humanitarian crisis with men, women and children starving, unable to escape. But, the so-called rebels are stepping up attacks with NATO carrying out air strikes, in a bid to wrest control of the besieged cities and demonstrate to the Libyans and the world that the writ of their interim government runs in all parts of that country. (more.....)

புரட்டாசி 29, 2011

சென்னையில் இருந்து புறப்படும் கிங்பிஷர் விமானங்கள் ரத்து

கிங்பிஷர் விமான நிறுவனம் எரிபொருளுக்கு ரூ. 2,500 கோடி பாக்கி வைத்துள்ளதால், எரிபொருள் வழங்குவதை அந்த நிறுவனம் நிறுத்திவிட்டது. இதனால் சென்னையில் இருந்து புறப்படும் 13 கிங்பிஷர் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் கிங்பிஷர் விமான நிறுவனம், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்திடம் எரிபொருளை வாங்கி சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், புனே, மதுரை, திருச்சி ஆகிய இடங்களுக்குச் செல்லும் விமானங்களை இயக்க முடிவு செய்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து கொழும்பு செல்லும் விமானங்களும் வழக்கம் போல் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளத.ு

புரட்டாசி 29, 2011

பாக்.-அமெரிக்கா மோதல் முற்றுகிறது

வரும் காலங்களில் பாகிஸ்தானுடனான அமெ ரிக்காவின் உறவு சுமூகமாக இருக்க வாய்ப்பில்லை. கடி னமானதாகவே இருக்கும். இனிமேல், பாகிஸ்தானில் தளம் அமைத்துச் செயல் படும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்தும் விவகாரங் களில் கடுமை காட்டப்ப டும் என்று அமெரிக்க முப் படைகளின் தலைமைத் தள பதி அட்மிரல் மைக் முல் லன் மிரட்டல் விடுத்துள் ளார். இம்மாத இறுதியில் ஓய்வு பெற உள்ள முல்லன், அமெரிக்க பத்திரிகையான வால் ஸ்டீரிட் ஜெர்னலுக்கு அளித்த பேட்டியில் இவ் வாறு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடை யேயான உறவு எப்படி இருந்த போதிலும், பாகிஸ் தான் படைத் தளபதிகளு டன் அதிகம் நெருக்கம் காட்டிய முல்லன் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத் தக்கது.  கடந்த வாரம் அமெ ரிக்க நாடாளுமன்றத்தில் பேசிய முல்லன், பாகிஸ் தான் உளவுத்துறையும் பயங்கரவாதிகளும் கை கோர்த்து செயல்படுவதாகக் கூறினார். இது இரு நாடு களுக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத் தியுள்ளது. முல்லனின் இந் தக் கருத்து பாகிஸ்தான் உயரதிகாரிகளை கொந் தளிக்க வைத்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 29, 2011

அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாத அமைப்பு  பாகிஸ்தான் அம்பலப்படுத்துகிறது

பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஹக்கானி அமைப்பின் வளர்ச்சிக்கு அதை உருவாக்கி, பயிற்சி தந்த சிஐஏதான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரகுமான் மாலிக் அம்பலப்படுத்தியுள்ளார். ஹக்கானி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பிற்கு பாகிஸ்தான் உதவி வருவதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டி வந்தது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., ஹக்கானி அமைப்புக்கு உதவி வருவதாக அமெரிக்கா கூறுகிறது. (மேலும்....)

புரட்டாசி 28, 2011

காட்டிக் கொடுத்தது புலிகளின் மேற்குலக நண்பன் அமெரிக்கா

கனடாவுக்கு கப்பல் மூலம் சென்றவர்களில் மேலும் இருவர் புலிகள்

கனடாவிற்கு கப்பல் மூலம் சென்றவர்களுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் காணப்படுவதாக கனடா அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அமெரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களின் முன்பு ஓஷியன் லேடி கப்பல் மூலம் கனடாவுக்குச் சென்ற 76 இலங்கையர்களின் கைவிரல் அடையாளங்கள் அமெரிக்க பாதுகாப்பு துறையினரால் பரிசோதிக்கப்பட்ட போதே இந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர். தகவல் கோர்ப்பின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்த போது இந்த இருவரும் அடையாளம் காணப்பட்டதாக அமெரிக்க தீவிரவாத தடுப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் கோஹன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

புரட்டாசி 28, 2011

சாப்பாடு ரெடி நெஞ்சை நெகிழவைத்த குறும்படம்!

உலகில் இன்று எத்தனையோ குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்ந்து கொண்டு ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வசதியில்லாம் திண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த உலகம் எவ்வளவுதான் தொழில்நுட்பத்தை யும் விஞ்ஞானத்தையும் நோக்கி பயணித்தாலும் வறுமை என்பதை ஒழிக்க முடியாத ஒன்றாகி விட்டது. இதையொட்டிய ஒரு குறும்படம் ஒன்றை அண்மையில் பார்வையுற்ற போது நெஞ்சம் நெகிழ்வடைந்துவிட்டது. உண்மையில் இதன் தாயரிப்பாளர்களை பாராட்டியே ஆகவேண்டும் வார்த்தைகள் இல்லாத சம்பவங்களாக எடுக்கப்பட்ட இந்த படம் மூலம் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய விசயங்கள் நிறையவே இருக்கின்றன.  (குறும் படத்தை பார்க்க.....)

புரட்டாசி 28, 2011

யாழ். குடாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

யாழ். குடாநாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் சேஷ்டைகள் மற்றும் வன்முறைகள் அதிக ரித்திருப்பதாகக் கூறும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், இவ்வாறு சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவல்களை பகிரங்கப்படுத்துவதற்குத் தயாராக விருப்பதாகக் கூறியுள்ளார். யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலைகள், பல்கலைக்கழகம் மற்றும் அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சேஷ்டைகள் அதிகரித்துள்ளன. அங்கு இடம்பெறும் சேஷ்டைகள் பற்றித் தனக்கு இரகசியமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் பற்றிய விபரங்களை விரைவில் பகிரங்கப்படுத்த விருப்பதாகவும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

புரட்டாசி 28, 2011

லிபியாவும் சிதைந்தது

“லிபியாவின் பெங்காஸி நகரில் ‘ஜனநாயகத் திற்காக’ப் போராடும் மக்கள் மீது கடாபியின் படைகள் அடக்குமுறையை ஏவியுள்ளன; அதைத் தடுத்துநிறுத்தாவிட்டால் 1 லட்சம் பேர் கொல்லப்படும் அபாயம் இருக்கிறது” என்று கூறி, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் தீர்மானத் தைக் கேடயமாகக் கொண்டு நேட்டோ படை களின் தாக்குதலைத் துவக்கிய அமெரிக்கா, இன்றுவரையிலும் சுமார் 50 ஆயிரம் பேரைக் கொன்று குவித்துள்ளது. நேட்டோவின் ஆயுத உதவியோடு அங்குள்ள பயங்கரவாதக் குழுக்கள் நடத்திவரும் தாக்குதல்களை கிளர்ச்சி என்றும் எழுச்சி என்றும் புகழும் மேற்கத்திய ஊடகங் கள், நேட்டோவின் குண்டுவீச்சுகளால் கொல் லப்பட்ட மக்களைப்பற்றி வெளிஉலகிற்குச் சொல்லவில்லை. (மேலும்....)

புரட்டாசி 28, 2011

78 நாடுகளுக்கு online  வீசா, 30ம் திகதி முதல் நடைமுறை

2016 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை இலக்காகக் கொண்டு 78 நாடுகளுக்கு இணையத்தளமூடாக  online மூலம் வீசா வழங்கும் நடைமுறையை குடிவரவு- குடியகல்வு திணைக்களம் நாளை மறுதினம் 30 ஆம் திகதி முதல் அறிமுகம் செய்கிறது என திணைக்களத்தின் பிரதான கட்டுப் பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார். www.eta.gov.lk என்ற இணையத்தளத் தினூடாக வீசாவுக்கு விண்ணப்பிக்க முடியும். ஒன்பது மொழிகளில் இணயத்தளத்தைப் பார்வையிட முடியும். எனினும் விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழியில் மட்டுமே விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். கப்பல் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ வரும் சிங்கப்பூர் மற்றும் மலைதீவு பயணிகள் வழமை போன்று Entry arrival வீசா பெற்றுக் கொள்ள முடியும். www.eta.gov.lk ஒன்பது மொழிகளில் இணையத்தளம்.

புரட்டாசி 28, 2011

இழப்பை நாங்கள் சுமப்பதா? அமெரிக்க மக்களின் ஆவேசப் போராட்டம்

முதலாளித்துவப் பாதையை அமெரிக்க அரசு கைவிட வேண்டும் என்று கோரி அமெரிக்காவில் நடைபெற்று வரும் போராட்டம் பதினோராவது நாளாகத் தொடர்கிறது. அமெரிக்காவின் பங்குச் சந்தை அமைந்திருக்கும் வால் ஸ்ட்ரீட் அருகில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அமைதியாக நடக்கும் இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க காவல்துறையினர் அடக்குமுறையைக் கையாண்டு வருகிறார்கள். இந்த அடக்குமுறையை நேரில் பார்த்த எழுத்தாளர் கிறிஸ் ஹெட்ஜஸ், போராட்டக்காரர்களை நியூயார்க் காவல்துறையினர் அடிக்கிறார்கள். மேலும் அவர்கள் மீது மிளகுத்தூளைத் தூவிக் கலைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். வால் ஸ்ட்ரீட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள். அதாவது, ஒட்டுமொத்த வால் ஸ்ட்ரீட் பகுதியை தடை செய்யப்பட்ட மண்டலமாக மாற்றிவிட்டனர். நடந்து சென்றால்கூட காவல்துறையினரின் தடுப்புகளைத் தாண்டிதான் செல்ல வேண்டும் என்று குறிப்பிடுகிறார். (மேலும்....)

புரட்டாசி 28, 2011

புனர்வாழ்வு பெற்ற 1600 பேர் 30 ஆம் திகதி விடுதலை

புனர்வாழ்வு பெற்ற 1600 பேர் எதிர்வரும் 30ம் திகதி சமூகத்தில் இணைக்கப்படவுள்ளனர். அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் இவர்கள் அனைவரும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ்குமார் தெரிவித்தார். இது தொடர்பான நிகழ்வு 30ம் திகதி முற்பகல் 11 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறும். வவுனியாவில் இருந்து பஸ்களில் அழைத்து வரப்படும் இவர்கள் அலரிமாளிகையில் ஜனாதிபதியைச் சந்திப்பர். கொழும்பின் பல பகுதிகளுக்கும் இவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள்.

புரட்டாசி 28, 2011

பிலிபைன்ஸில் சூறாவளி; சிறு குழந்தை பலி, ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு

சக்திவாய்ந்த நெசாட் சூறாவளி வட பிலிபைன்ஸை நேற்று தாக்கியது. அத்துடன் இந்த சூறாவளியால் தலைநகர் மனிலாவில் கடும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. மணிக்கு 170 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிவரும் சூறாவளியால் பிலிபைன்ஸில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூறாவளி அபாயத்துக்கு உள்ளாகியுள்ள மத்திய அபே மாகாணத்தில் ஒரு லட்சத்திற் கும் மேற்பட்டோருக்கு இடம்பெயருமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோன்று தலைநகர் மனிலாவில் நிலைமை மோசமடைந்துள்ளது. தொடர்ந் தும் காற்றுடன் மழை பெய்து வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதோடு பாதைகள் எங்கும் நீர் நிரம் பிக் காணப்படுகிறது. இத னால் விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதோடு பாடசாலை கள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து ஓரிரு தினங்கள் பிலிபைன்ஸை தாக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த சூறாவளி நாளை அளவில் தென் சீன கடற்கரையை எட்டும் என ஹொங்கொங் காலநிலை ஆய்வுமையம் குறிப்பிட்டுள்ளது.

புரட்டாசி 28, 2011

காங்கிரஸின் தர்மசங்கடத்தை தவிர்க்க பதவி விலகத் தயாராகிறார் சிதம்பரம்

2ஜி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்திற்கு நிதி அமைச்சகம் எழுதிய கடிதம், பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கடந்த ஞாயிறு சந்தித்துப் பேசினார். அவரைத் தொடர்ந்து நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியும் சோனியாவைச் சந்தித்தார். ‘2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏல முறையில் விற்கும்படி, அப்போதைய நிதி அமைச்சர் சிதம்பரம் வலியுறுத்தி இருந்தால், ஸ்பெக்ட்ரம் ஊழலே நடந்திருக்காது’ என பிரதமர் அலுவலகத்துக்கு நிதி அமைச்சகம், கடந்த மார்ச் மாதம் எழுதிய கடிதம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடியில் சிதம்பரத்திற்கும் தொடர்பு உண்டு என குற்றம் சாட்டி அவர் பதவி விலக வேண்டும் என பா. ஜ. உட்பட எதிர்க் கட்சிகள் பலவும் கோரி வருகின்றன. (மேலும்....)

புரட்டாசி 28, 2011

புதைந்தும் புதையலைக் கொடுத்த கப்பல்

70 ஆண்டுகளுக்கு முன் மூழ்கிய கப்பலில் 240 தொன் வெள்ளி

கடந்த 1940ம் ஆண்டு டிசம்பரில் எஸ்.எஸ். கெயர்சப்பர் என்ற இங்கிலாந்து கப்பல் இந்தியாவிலிருந்து புறப்பட்டு இங்கிலாந்தின் லிவர்பூல் நகருக்கு சென்றது. கப்பலில் 240 தொன் வெள்ளி, இரும்பு மற்றும் தேயிலை ஆகியவை ஏற்றப்பட்டிருந்தன. கப்பல் 1941, பெப்ரவரி 17ல் அயர்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதிக்கு 300 மைல் தொலைவில் வந்த பொழுது பருவநிலை மற்றும் எரிபொருள் இல்லாமை ஆகியவற்றால் தத்தளித்து கொண்டிருந்தது. அது 2ம் உலக போர் நடைபெற்று கொண்டிருந்த சமயம் அதனை நடுக்கடலில் வைத்து ஜெர்மனி நாட்டின் நீருமூழ்கி கப்பலான யு101 தாக்கி மூழ்கடித்தது. இதில் ஒருவரை தவிர கப்பலில் இருந்த 85 பேர் கொல்லப்பட்டனர். தற்போது இந்த கப்பல் அட்லாண்டிக் கடற்படுகரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 155 மில்லியன் பவுண்கள் மதிப்பிலான வெள்ளி இருப்பது தெரிய வந்துள்ளது.

புரட்டாசி 27, 2011

வெளுக்கும் சாய முகங்கள்  (பகுதி 2)

'வறுமை தொழிலில் மாத்திரமல்ல உடலிலும் தெரிகின்றது'

நாடோடி வாழ்க்கை கொடுத்த வலியும், வேதனையும், அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் வெளிப்பட்டது. நம்முடைய சொர்க்கமான சொந்த பூமி வாழ்க்கை, ஒரு நிமிடம் மனக்கண்ணில் நிழலாடிச் சென்றது. "நீங்க இங்க மகிழ்ச்சியாக இல்லையா?' என்றதற்கு, ""முள்வேலி முகாமிற்குள் அவர்கள் இருக்க, நாங்கள் இங்கே இருப்பது வேலி இல்லாத முள்ளிற்குள்... என்ன வசதி இருந்தாலும், இங்கே நாங்கள் அகதிகள் தானே! எம் தாய்நாடு திரும்பும் நன்னாளுக்காக காத்திருக்கிறேன்... எம் மண்ணில் உயிர்விடவே விரும்புகிறேன்,''என்று, அழகான தமிழில் அந்த முதியவர் கூறிக் கொண்டிருந்த போதே, அவர் கண்களில் பெருகிய கண்ணீர், மனதில் கனத்தைத் தந்தது. (மேலும்....)

புரட்டாசி 27, 2011

37 இலங்கை தமிழர்கள் கேரளாவில் நேற்று கைது

சந்தேகத்துக்குரிய நடமாட்டம் காரணமாக எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலத்தில் இருந்து 37 இலங்கைத் தமிழர்களை பிடித்து கேரள பொலிசார் விசாரித்து வருகின்றனர். உளவுத் துறை அளித்த தகவலின் அடிப்படையில் 26 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் அடங்கிய குழுவினர் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அந்தக் குழுவினர் அப்பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் தங்கியிருந்த அவர்கள் கொத்தமங்கலத்துக்கு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பிடிபட்டவர்கள் வைத்திருந்த ஆவணங் களை ஆய்வுசெய்து வருகிறோம். இவர் களிடம் விசாரணை நடத்த உளவுத்துறை அதிகாரிகள் வந்துள்ளனரென பொலிசார் தெரிவித்தனர். அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதற்கு கேளராவை இலங்கைத் தமிழர்கள் ஒரு மையமாக பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர் என்று தொடர்ந்து கூறப்பட்டு வரும் நிலையில் இப்போது 37 பேர் பிடிபட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

புரட்டாசி 27, 2011

ஆப்கான் சி.ஐ.ஏ. அலுவலகத்தில் ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் அரியனா ஹோட்டல் வளாகத்தை அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவில் ஆயுததாரிகள் அந்த அலுவலகத்துக்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர். பதிலுக்கு அமெரிக்க படை களும் சுட்டன. இந்த சண்டை சில மணி நேரம் நடந்தது. இந்த தகவலை ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சித்திக் சித்திடு உறுதி செய்துள்ளார். சமீபகாலமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க தூதரகத்தில் புகுந்து 19 மணி நேர தாக்குதல் நடத்தினர். இச்சம்பவங்களுக்கு அல்கொய்தா ஆதரவு பெற்ற பாகிஸ்தானின் ஹக்கானி தீவிரவாதிகள் தான் காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவுத்துறை அவர்களுக்கு உதவியதாக குற்றம் சாட்டியிருந்தது.

புரட்டாசி 27, 2011

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில்

எடுக்கப்பட்ட சகல முடிவுகளும் சிதம்பரத்துக்கு தெரியும்

2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும் இப்போதைய உள்துறை அமைச்சருமான ப. சிதம்பரத்துக்கும் தெரியும் என்று சிபிஐ நீதிமன்றத்தில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் வழக்கறிஞர் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயவில்லை என்றும், அவருக்கும் எல்லாமும் தெரியும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார். நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது பேசிய ராசாவின் வழக்கறிஞர் சுஷில் குமார், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. (மேலும்....)

புரட்டாசி 27, 2011

சவூதி அரேபிய பெண்களுக்கு வாக்குரிமை,  வேட்பாளராக போட்டியிடவும் வாய்ப்பு

சவூதி அரேபிய பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. வரும் நகர சபை தேர்தல் முதல் பெண்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கப்படும் என சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா அறிவித்துள்ளார். அத்துடன் மன்னருக்கு ஆலோசனை வழங்கும் சூரா கவுன்ஸிலில் பெண் உறுப்பினர்களை இணைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தவிர, நகர சபை தேர்தலில் போட்டியிடவும் சவூதி அரேபிய பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் மக்கள் வாக்களிக்கும் ஒரே ஒரு தேர்தல் நகர சபை தேர்தலாகும். இந்த தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதில் 5000 ஆண் வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இதன் மூலம் நகர சபைகளுக்கு பாதி உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். மற்றைய பாதி உறுப்பினர்களை அந்நாட்டு அரசு தேர்வு செய்கின்றது. ஏற்கனவே சவூதி அரேபி யாவில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு, தனியாக வெளியே செல்லத் தடை இருப்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 27, 2011

யாழ். சட்டத்தரணிகளின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

யாழ். மாவட்ட சட்டத்தரணிகளால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிப்புறக்க ணிப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடக்கிற்கான உதவித் தலைவரும், யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருமான சாந்தா அபிமன்யுசிங்கம் தெரிவித்தார். கடந்த 19ஆம் திகதி சட்டத்தரணியுடன் சரணடையவந்த சந்தேநபர் ஒருவரைப் பொலிஸார் அடித்து, இழுத்துச் சென்ற சம்பவத்தைக் கண்டித்தும், இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட பொலிஸாரை சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் யாழ் சட் டத்தரணிகள் கடந்த 20ஆம் திகதி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பில் 7 பொலிஸார் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருப் பதாகப் பொலிஸ் திணைக்களம் அறிவித்தி ருந்தது. எனினும், இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப் பட்டாலே தமது பணிப்புறக்கணிப்பு கைவிடப்படும் என சட்டத்தரணி சாந்தா தெரிவித்தார். இதுதொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட பொலிஸாரை சேவையிலிருந்து இடை நிறுத்தியிருப்பதானது திணைக்கள ரீதி யிலான நிர்வாக நடவடிக்கையே. நாம் கோரியது அவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு.

புரட்டாசி 27, 2011

அமெரிக்கப் புகார்

பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் சந்திப்பு

பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் அஷ்ஃபாக் பர்வேஸ் கயானி, ஞாயிற்றுக்கிழமை இராணுவத் தளபதிகளுடனான சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார். பாகிஸ்தான் இராணுவத்தின் உயர்நிலை அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், பயங்கரவாத அமைப்புகளுடன் பாகிஸ்தான் தொடர்பு கொண்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்த கருத்து குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் இத்தகைய பின்னடைவான சூழலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற இந்தச் சிறப்புக் கூட்டத்தில் அனைத்து உயர்நிலை அதிகாரிகளும் கலந்து கொண்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்திக் குறிப்பு தெரிவித்தது. ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மீது செப்டம்பர் 13 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ. எஸ். ஐ. அமைப்புக்குத் தொடர்பு உள்ளதாக அமெரிக்க இராணுவத் தலைமைத் தளபதி மைக் முல்லன் குற்றம் சாட்டியதை அடுத்தே இந்த உயர்நிலைக் கூட்டம் கூட்டப்பட்டது.

புரட்டாசி 27, 2011

காட்டுத்தீ போல   பரவும் வேலையின்மை  இந்தியாவுக்கு உலக வங்கியின் ஆய்வு எச்சரிக்கை

கடும் பொருளாதாரப் பின்னடைவிற் குப் பின்னர் தொடர்ந்து அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டத் தோடு மேற்கத்திய நாடுகளின் பொருளா தாரம் நாகரிகமற்ற முறையில் போராடிக் கொண்டிருக்கிறது என உலக வங்கி கருத்து தெரிவித்துள்ளது. மேலும், தெற்காசியாவில் நிலவி வரும் வறுமையை ஒழிக்கவும், வளர்ச்சி யைத் தக்க வைத்துக் கொள்ளவும் மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும் என்று வெளி வரவிருக்கிற உலக வங்கியின் புத்தகமான ‘மோர் அண்ட் பெட்டர் ஜாப்ஸ் இன் சௌத் ஆசியா’ இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்குக் கடுமை யான எச்சரிக்கையை அளித்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 27, 2011

சித்தங்கேணியில்

கொள்ளையரின் வாள்வெட்டில் தாயும் மகனும் படுகாயம்

சித்தங்கேணி நாககன்னிகை அம்மன் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள வீட்டிற்குள் நள்ளிரவு வேளை உட்புகுந்த திருடர்கள் அங்கு உறங்கிக்கொண்டிருந்த மகனையும் தாயையும் வாளால் வெட்டிவிட்டு சுமார் இருபது பவுண் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த தாயும் மகனும் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இராசலிங்கம் இராஜாராம் (வயது 28) என்பவரும்அவரது தாயாரான இராசலிங்கம் வள்ளியம்மை (வயது 55) என்பவர்களே வாள்வெட்டிற்கு இலக்கானவர்களாவர்.

புரட்டாசி 27, 2011

நதிநீர் ஒத்துழைப்பை அதிகரியுங்கள்  சீனாவை வலியுறுத்துகிறது இந்தியா

சீனாவின் திபெத் பகுதி யில் உற்பத்தியாகி, பாசனத்திற் குப் பெரும் அளவில் உதவி யாக இருக்கும் பிரம்மபுத்திரா மற்றும் சட்லெஜ் ஆகிய இரு நதிகள் பற்றிய விபரங்களை அதிகமாகத் தரும் வகையில் நதிநீர் ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று இந்தியா சீனாவை வலியுறுத்தியுள்ளது. முதல் கேந்திர பொருளா தார விவாதம் என்ற நிகழ்ச்சி சீனாவின் தலைநகர் பெய்ஜிங் கில் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இந்தியா மற்றும் சீனப்பிரதிநிதிகள் இதில் பங் கேற்றுள்ளனர். இந்தியப் பிரதி நிதிகளில் ஒருவராக மத்திய திட்டக்குழுவின் துணைத் தலைவர் மாண்டேக்சிங் அலு வாலியா பங்கேற்றுள்ளார். சீனா வின் பொருளாதார வளர்ச்சி யைப் பாராட்டிய அவர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சீன அரசிடம் இந்தக் கோரிக்கை யை வைக்க விரும்புகிறேன். திபெத் பகுதியில் உருவாகி ஓடும் நதிகள் பற்றி கூடுத லாக அறிய இந்தியா ஆர்வமாக உள்ளது என்று குறிப்பிட்டார். (மேலும்....)

புரட்டாசி 27, 2011

கொழும்பில்

யாழ். பஸ்கள் தரித்து நிற்பதற்கு பொருத்தமான இடம் பெற்றுத்தரப்படும்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் வண்டிக ளுக்கு வெள்ளவத்தை யிலிருந்து புறப்பட்டுச் செல்வதற்கான தகுதி யான இடமொன்றை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யப்படும் என தனியார் போக்கு வரத்துத்துறை அமைச்சர் சீ. பி. ரட்ணாயக்கா தெரிவித்தார். இரவு 7.30 முதல் 9.30 மணி வரை வெள்ளவத்தை ஐ. பி. சி. கடற்கரை வீதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்படுவதற்காக தரித்து நிற்பதற்கான அனுமதி பெற்றுக் கொடுத்தால் போது மானது என யாழ். - கொழும்பு தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவரும், யாழ். மாவட்ட தனியார் போக்குவரத்து சங்கத்தின் தலைவருமான பொன்னுத்துரை கங்காதரன் தெரிவித்தார். எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் வெள்ள வத்தையிலிருந்து யாழ் - நோக்கி செல் லும் பஸ் வண்டிகள் தரித்து நிற்பது தடை செய்யப்படும் என வெள்ளவத்தை பொலிஸார் அறிவித்துள்ளனர். பகல் வேளைகளில் பஸ் வண்டிகளை வேறு பகுதிகளில் நிறுத்தி வைத்த பின்னர் புறப்படுவதற்கு சற்று முன்னதாக சுமார் 7.30 மணிக்கு வெள்ளவத்தையில் ஐ. பி. சி. வீதியில் தரித்து நிற்க அனுமதி தர வேண்டும் என பஸ் உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புரட்டாசி 27, 2011

மஹ்மூத் அப்பாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு

தனிநாட்டு கோரிக்கையை ஐ.நா. சபையில் முன்வைத்து விட்டு நாடு திரும்பிய பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. நியூயோர்க்கில் இருந்து நேற்று முன்தினம் மேற்குக் கரையை வந்தடைந்த அப்பாஸை ஆயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு வரவேற்றனர். மஹ்மூத் அப்பாஸின் புகைப்படத்தையும், பலஸ்தீன தேசிய கொடியை ஏந்தி மக்கள் தமது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த மக்களுக்கு மத்தியில் உரையாற்றிய அப்பாஸ், பல அழுத்தங்களுக்கு மத்தியில் எமது உரிமையை சமாதான வழியில் பெற முயற்சிப்போம் என்று குறிப்பிட்டார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு நேற்றும் மீண்டும் ஒருமுறை மஹ்மூத் அப்பாஸுக்கு சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். எனினும் மஹ்மூத் அப்பாஸ் இந்த அழைப்பை மீண்டும் ஒருமுறை நிராகரித்தார். இந்நிலையில் பலஸ்தீன அங்கத்துவம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நேற்று விவாதம் ஆரம்பமானது.

புரட்டாசி 27, 2011

சமச்சீரற்ற வளர்ச்சி

இந்தியாவில் கிராமப்புற மக்கள் தொகை விகிதத்தைவிட நகர்ப்புற மக்கள் தொகை விகிதம் வெகுவேகமாக அதிகரித்து வருகிறது என்று 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தெரியவந்துள்ளது.  இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 833.1 மில்லியனாக (1மில்லியன் = 10 லட்சம்) உள்ளது. இதில் கிராமப்புற மக்கள் தொகை 90.6 மில்லி யனாகவும், நகர்ப்புற மக்கள் தொகை 91 மில்லி யனாகவும் உள்ளதாக கணக் கிடப்பட்டுள்ளது.  நகர்ப்புற மக்கள்தொகை அதிகரிப்பதற்கு மூன்று முக்கியமான காரணிகள் காரணமாக இருக்கக்கூடும் என்று அவதானிக்கப்படுகிறது. இடப்பெயர்வு, இயல்பான வளர்ச்சி, கிராமப்புற பகுதிகள் நகர்ப்புற பகுதிகளுடன் இணைக்கப் படுவன ஆகியவற்றின் காரணமாக நகர்ப்புற மக்கள்தொகை அதிகரித்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டாலும் இவை புதிதல்ல. இது கடந்த காலத்திலும் இருந்தன என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். (மேலும்....)

புரட்டாசி 27, 2011

நாடுகளின் இணையவேகம்

பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும்.

ஆய்வின் முடிவுகளுடன் கூடிய வரைபடம்.

  

(மேலும்....)

புரட்டாசி 26, 2011

இது எப்படி இருக்கு உருத்திரா?

புரட்டாசி 26, 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 24)

(நேசன்)

ஈழவிடுதலைப் போராட்ட அமைப்புக்கள் அவர்களின் ஆரம்பகாலங்களிலேயே "சமூக விரோதிகள்" என்ற சொல்லை உபயோகிக்கத் தொடங்கியிருந்தனர். சமூகத்தில் சிறுகளவுகளில் ஈடுபடுவோர், கொள்ளைகளில் ஈடுபடுவோர், தெருச்சண்டியர்கள், விபச்சாரத் தொழிலில் ஈடுபடுவோர் போன்றோரை "சமூகவிரோதிகள்" என அழைக்கத் தொடங்கினர். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு எச்சரிக்கை செய்யப்பட்டனர் அல்லது மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இத்தகைய செயலை மிகச் சிறிய அமைப்பாக இருந்த தமிழீழ விடுதலை இராணுவம்(TELA) உட்பட புளொட், தமிழீழ விடுதலைப் புலிகள் வரை மேற்கொண்டனர். (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்திர மகாநாடு தீர்மானங்கள்!

தமிழரசுக் கட்சியின் வீட்டுச்சின்னத்தில் அண்மையில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி நிபந்தனை அற்ற ஆதரவினை கொடுத்தது. எமது ஒற்றுமையினை நிலைநாட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பல்வேறு உளளுராட்சி மன்றங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் சில வேட்பாளர்களை, தமிழ்மக்களின் விருப்பத்திற்கு அமைய கொடுத்து உதவினோம். உதயசூரியன் சின்னத்தில் இரு உளளுராட்சி மன்றங்களில் போட்டியிட்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு வெற்றிகளையும் ஈட்டிக்கொடுத்தோம். தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழர் தேசிய கூட்டமைப்போடு உள்ள உறவினை மீண்டும் வலியறுத்தி பொது மக்களின் நன்மைக்காக ஒன்றுசேர்ந்து செயற்படுவதோடு ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படாதவகையில் செயற்படும். (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

உலக நிதிநெருக்கடியின் மையம் ஐரோப்பா - ஐ.எம்.எப்.

உலகப் பொருளாதாரத்தை ஆட்டிப் படைக்கும் உலக நிதி நெருக்கடி ஐரோப்பிய மண்ட லத்தில் மையம் கொண்டுள் ளது என்று சர்வதேச நிதியம் அடையாளம் கண்டுள்ளது. தேசங்களின் கடன்களும், வங்கி நெருக்கடியும் சங்கம மாகும் புதிய ஆபத்தை நிதியம் எதிர்நோக்கியுள்ளது. இந்த அபாயம் ஐரோப்பிய மண்ட லத்திலிருந்து பீறிட்டுக் கிளம்பும் என்று சிங்கப்பூர் நிதியமைச்சர் தர்மன் சண்முகரத் னம் கூறினார். சர்வதேச நாணய முறை மற்றும் நிதிக் குழுவின் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

கிளிநொச்சி தொழிநுட்பக் கல்லூரிக் கட்டடங்கள் இரவோடிரவாக உடைப்பு

கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரிக் காணியில் அமைந்திருந்த கட்டடங்கள் இரவோடிரவாக இடித்தகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய பயிலுனர் தொழிற்பயிற்சி அதிகாரசபைக்கான கட்டடமொன்றை அமைக்கவே ஏற்கெனவே இருந்த கட்டடங்கள் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அத்துடன் கிளிநொச்சி அரச அதிபரே அக்காணியை கையளித்திருந்ததாக அதிகார சபையின் நிர்வாகப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.  ஏ9 வீதியோரமாக கிளிநொச்சியில் அமைந்திருந்ததே கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் வன்னியிருந்த காலப்பகுதியில் புலம் பெயர் தமிழர் உறவுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டதே கிளிநொச்சி தொழில்நுட்பக் கல்லூரியாகும். (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

தாயகம் திரும்பும் முஸ்லீம் சமூக சேவையாளர் ஜனாப் நஜா மொகமட் அவர்களுக்கான பிரியாவிடை ரி பி சி கலையகத்தில் இடம்பெற்றது

பிரித்தானியாவில் அதிக அளவில் இலங்கை முஸ்லீம் மக்கள் வாழ்ந்த போதும் அவர்களுடன் மிக அதிகளவில் வாழும் தமிழர்களின் உறவு மிகவும் சுருங்கியதாக தனி நபர் சார்ந்ததாக இருந்ததே தவிர நிறுவனமயப்படுத்தப்பட்டதாக இருந்ததில்லை. அந்த இடைவெளியை நிரப்ப உதவியவர் நஜா அவர்களே. இஸ்லாமிய அற இயலிலும், அரசியல் விஞ்ஞானத் துறையிலும் ஆழ்ந்த புலமையுள்ள அவர் தனது பொதுச் சேவையில் மதத்தையும், அரசியலையும் தனித்தனியாகவே கையாண்டார். இலங்கையில் வாழும் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லீம் மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை மீட்டெடுக்க வேண்டுமாயின் இரு இனங்களிடையே நெருக்கமான உறவு அவசியம் என்பதை நன்கு உணர்ந்து அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் தீட்டி செயற்பட்டார். (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

உள்நாட்டு விவகாரங்களில் அன்னியத் தலையீடு ஆபத்தானது - ஐ.நா. சபையில் இந்திய பிரதமர்

‘சட்டப்படியான ஆட்சி என்பது நாடுகளுக்கு உள்ளே மட்டும் அல்ல, சர்வதேச அரங்கிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். தங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், தங்களுக்கு எப்படிப்பட்ட அரசு வேண்டும் என்பதை அந்தந்த நாடுகளின் மக்களே தீர்மானிக்குமாறு விட்டுவிட வேண்டும். வெளியிலிருந்து ராணுவத் தாக்குதல் மூலம் ஒரு நாட்டைக் கைப்பற்றி அங்கே புதிய ஆட்சியை நிறுவும் போக்கு கூடவே கூடாது’ என்று ஐக்கிய நாடுகள் சபையின் 66 வது ஆண்டு பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார். ‘ஒரு நாட்டில் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தால் அங்கு சுமுகமான ஆட்சி மாற்றம் ஏற்படவும் ஜனநாயக அமைப்புகள் வலுப்படவும் உதவ வேண்டிய கடமை சர்வதேச சமூகத்துக்கு இருக்கிறது. ஆனால் ஒரு நாட்டின் பிரச்சினைக்கு தீர்வு என்ன என்று வெளியிலிருந்து பரிந்துரைப்பதும் அதை அமுல்படுத்த ராணுவ ரீதியாகத் தலையிடுவதும் மிகவும் ஆபத்தானது. (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

Shavendra takes on ‘Wathsala’

The Deputy Permanent Representative of Sri Lanka at the United Nations, Major General Shavendra Silva today said that ‘Wathsala’ should pay compensation to the Tamils who suffered and lost their loved ones on behalf of her husband and her brother Soosai, who was the leader of the LTTE’s black sea tiger wing. “The court case filed in the United States by ‘Wathsalsa’ the wife of the former LTTE Eastern leader Ramesh is a good opportunity for the rest of the people living the US on how these terrorists whitewash themselves,” he said. (more....)

புரட்டாசி 26, 2011

யாழ். கோப்பாயில் ஏழு பொலிஸ் அதிகாரிகள் இடைநிறுத்தம்

யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்துக்குள் கைதியொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஏழு பொலிஸ் அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்சி புரொக்டர் தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோனின் பணிப்புரையின் பேரிலேயே இவர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப் பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 2 பொலிஸ் சார்ஜன்களும், 5 பொலிஸ் கான்ஸ்டபிள்களுமே இவ்வாறு சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்பட்ட சந்தேக நபர் ஒருவர் சட்டத்தரணிகள் முன்னிலையில் பொலிஸாரால் தாக்கப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்.

புரட்டாசி 26, 2011

புற்றுநோய்க்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு

புற்றுநோயை குணப்படுத்துவதற்கு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 ஆண்டு காலமாக ரேடியம் கதிர்வீச்சு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது புற்றுநோய்களை உருவாக்கும் ‘செல்’களை அழிக்கிறது. இதனால் உடலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த நிலையில் ஆல்பா கதிர்வீச்சு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை லண்டனின் உள்ள ரோயல் மார்ஸ்டன் ஆஸ்பத்திரி மருத்துவர்கள் புற்றுநோய் பாதித்த நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை செய்தனர். இந்த மருந்து 922 பேருக்கு வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தியவர்கள் நோயின் தாக்கம் குறைந்து நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர். மேலும், இந்த மருந்தினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்பட வில்லை. எனவே, இந்த மருந்து புற்று நோய்க்கு சிறந்தது என இங்கிலாந்தின் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தெரிவித்து ள்ளது.

புரட்டாசி 26, 2011

ஐக்கிய நாடுகள் சபைக்கு பலஸ்தீனம் காலக்கெடு

ஐ. நா. தனிநாட்டு கோரிக்கைக்கு இன்னும் இருவாரங்களுக்குள் முடிவு கிடைக்க வேண்டும் என பலஸ்தீன நிர்வாகம் கெடு விதித்துள்ளது. ஐ. நா. வின் 194 ஆவது அங்கத்துவ நாடாக உறுப்புரிமை பெறும் விண்ணப் பத்தை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் கடந்த வெள்ளிக்கிழமை சமர்ப்பித்தார். ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த விண்ணப்பம் பாதுகாப்புச் சபையின் வாக்கெடுப்பிற்காக விடப்பட்டுள்ளது. இந் நிலையில் இந்த விவகாரம் குறித்து ஆய்வு நடத்தும் பாதுகாப்புச் சபை அதன் மீது வாக்கெடுப்பு நடத்தவுள்ளது. எனினும் இன்னும் இரு வாரங்களுக்குள் பலஸ்தீன அங்கத்துவம் குறித்து முடிவு கிடைக்க வேண்டும் என ஐ. நா. விடம் பலஸ்தீன் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

மோடியின் நயவஞ்சக நாடகம்

ஒரு காரியம் கைகூட வேண்டும் என்பதற்காக உண் ணாவிரதம் மேற்கொள்வது என்பதை அனைத்து மதங்களும் அனைத்துக் கலாச்சாரங்களும் அங்கீகரித்து வந்துள் ளன. யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம் கள் என அனைத்து மதத்தினருமே உண் ணாவிரதம் அனுசரிக்கின்றனர். முஸ்லிம் கள் இதனை ரமலான் மாதத்தில் மேற் கொள்கிறார்கள். “உண்ணாவிரதம் இருத் தல் என்பது உங்களுக்கு நல்லது, ஆனால் இதனை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்” என்று குர்ஆன் சொல்கிறது. அதேபோன்று உள்ளத்தையும் உடi லயும் பரிசுத்தமாக்குவதற்கும் செய்த குற்றத்திற்கு வருத்தம் தெரிவிப்பதற்கும் இந்துமதமும், சமண மதமும் உண்ணா விரதத்தை ஒரு வழியாக அங்கீகரிக்கின் றன. காந்திஜி, சில சமயங்களில் மக் களின் கோபாவேசம் பிரிட்டிஷ் ஆட்சி யாளர்களுக்கு எதிராக சௌரிசௌரா நிகழ்வு போன்று கொளுந்துவிட்டு எரிந்த சமயத்தில் அதனை அணைப்பதற்காக உண்ணாவிரதத்தை துரதிர்ஷ்டவசமாக மேற்கொண்ட போதிலும், உண்ணாவிரத வழியை சுதந்திரப் போராட்டக் காலத்தில் அவர் ஓர் உயரிய நிலைக்குக் கொண்டு சென்றார்.  (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

2ஜ ஸ்பெக்ட்ரம் விவகாரம்

சிக்கினார் சிதம்பரம்

2ஜி விவகாரம் தொடர்பாக, மத்திய நிதி அமைச்சகம், பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி, சிதம்பரத்தின் பதவிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கியுள்ள நிலையில் ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் தொடர்பாக, பிரதமருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி எழுதிய கடிதம், புதிய பூதத்தை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக, மன்மோகன் சிங், நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ. வலியுறுத்தியுள்ளது. 2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கான விலை நிர்ணயம் தொடர்பாக, 2006ல், அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி, பிரதமருக்கு எழுதியதாக வெளியாகியுள்ள கடிதம், புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

Osama’s sweetheart needs a Lawyer to prosecute Obama for murdering her husband!!!

Imagine a situation - an Al-Qaeda lawyer representing slain terror leader Osama bin Laden’s wife allowed to file a case at a New York district court against Nobel Peace Prize Winner Barak Obama for murdering her husband!!! Even the most hardcore Amnesty cadre in the U.S. would say it is inappropriate. However, a longstanding lawyer of the terrorist group that taught late Osama boy the horrendous art of terrorism has been able to do something similar. This lawyer has found a “wife” of a senior terrorist leader in the LTTE, and “on behalf of her”, filed a case at a New York district court against Sri Lanka President Mahinda Rajapaksa for murdering her husband. Interestingly, the news came as a surprise when President Rajapaksa was addressing the UNGA. Visuvanathan Rudrakumaran, an Attorney at Law and a one of the most senior international wing member of an internationally banned  terrorist outfit , Tamil Tigers has done this marvel  for  Vathsala Devi, wife of -self-styled Colonel Ramesh , leader of the military wing of Tamil Tigers. (more...)

புரட்டாசி 26, 2011

ஜப்பானின் அரசியல்

புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து, இந்தியா உள்பட உலகம் முழுவதிலும் அணு உலைகள் அமைப்பது குறித்த வாதப் பிரதிவாதங்களை கிளப்பிவிட்டுள்ளது. விபத்து நடந்த ஜப்பானில் ஆட்சி மாற்றத்திற்கே வழி வகுத்துவிட்டது. கடந்த 5 ஆண்டுகளில் ஆறாவது பிரதமராக யொஷிஹிகோ நோடா கடந்த ஆகஸ்ட் 30ம்தேதி பதவியேற்றார். ஜப்பான் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர், தனக்கு முன்பு வெறும் 14 மாதங்களே ஆட்சி நடத்திய அதே கட்சி யைச் சேர்ந்த பிரதமர் நவோட்டா கானை வீழ்த்தி விட்டு நாற்காலியைப் பிடித்துள்ளார். ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்குள் நடந்து வரும் மிகக் கடுமையான கோஷ்டி மோதல் களின் உச்சமாக, 2009ல் நடந்த தேர்தலில் இக் கட்சி ஆட்சியைப் பிடித்ததற்குப் பிறகு அடுத்த டுத்து 3 பிரதமர்கள் மாறிவிட்டார்கள். இக்கட்சிக் குள் உள்நாட்டின் முக்கியப் பிரச்சனைகளிலும், வெளியுறவுக் கொள்கைகளிலும் பல்வேறு கோஷ்டிகளிடையே மோதலும், முரண்பாடும் நீடிப்பதன் விளைவே இது. (மேலும்.....)

புரட்டாசி 26, 2011

நளினி - முருகன் வேலூர் சிறையில் சந்திப்பு

வேலூர் சிறையில், நளினி, முருகன் சந்திப்பு நடந்தது. இவர்கள் இருவரும், 15 நாட்களுக்கு ஒரு முறை சிறையில் சந்தித்துப் பேச, சிறைத் துறையினர் அளித்த அனுமதி யின்படி பொலிஸ் பாதுகாப்புடன் முருகன், பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிறை அதிகாரிகள் முன்னிலையில், இவர்கள் சந்திப்பு, நேற்று முன்தினம் நடந்தது. உயர் நீதிமன்றம் தூக்குத் தண்ட னையை ஒத்தி வைத்த எட்டு வார காலம் முடிய, குறைந்த நாட்களே உள்ளதாக, கண்ணீர் வடித்த முருகனை, நளினி சமாதானம் செய்ததாக, சிறைக் காவலர்கள் தெரிவித்தனர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினி வேலூரில் ஆண்கள், பெண்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 26, 2011

The girl who silenced the world for 5 minutes

அன்புடன் அனைவருக்கும்
 
இது 19 வருடங்களுக்கு முன் நடந்தது எனினும் காலத்தால் அழியாதது.
 
குருபரன்

புரட்டாசி 26, 2011

பயங்கரவாதத்தை அழித்ததை விட சமாதானத்தை நிலைநாட்டுவது கடினமாகும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் நியூயோர்க் விஜயம் மகத்தான வெற்றி அளித்திருக்கிறது. உலகின் மிகப் பெரிய கொடுமை வாய்ந்த பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈ. யை துவம்சம் செய்தமை குறித்து, உலக நாடுகளின் தலைவர்கள் ஜனாதி பதி அவர்களுக்கு பாராட்டும் தெரிவித்திருக்கிறார்கள். ஜனாதிபதி அவர்கள் அதை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபை யில் உரையாற்றும்போது, பயங்கரவாதத்தை முறியடிக்கும்போது, ஒரு நாடு எதிர்நோக்கும் கஷ்டங்களை அச்சுறுத்தல்களை விட அந்நாடு சமாதானத்தை நிலைபெறச் செய்வதற்கான அமைதியான யுத்தத்தை நடத்தும்போது அதை விட பாரதூரமான விளைவுகளை யும் அச்சுறுத்தல்களையும் எதிர்நோக்க வேண்டி இருக்கும் என்று சுட்டிக் காட்டினார். (மேலும்.....)

புரட்டாசி 25, 2011

வெளுக்கும் சாய முகங்கள் (பகுதி 1)

"பொங்கு தமிழர்க் கின்னல் விளைந்தால் சங்காரம் நிசம் என்று சங்கே முழங்கு' என்ற ரீதியில், தமிழகத்தில், சில வருடங்களாக, "நான் தமிழன்; தமிழினத்திற்கு எதிரான துரோகம் இது; என் இனம் அழிகிறது; இதை எதிர்ப்பவன் தமிழனேயல்ல...' என, "தமிழன்' என்ற வார்த்தை, பரவலாக முன் நிறுத்தப்படுகிறது. இந்த வார்த்தைகள் எல்லாம், "தமிழ் இனத் தலைவர்'களாக, தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலரது வாயிலிருந்து உதிரும் முத்துகள். நரம்புகள் புடைக்க, உணர்ச்சிப் பீறிட, இவர்கள் வாயிலிருந்து வார்த்தைகள் கொந்தளிப்பதைப் பார்த்தால், இவர்களைத் தவிர, மற்றவர்கள் யாருமே தமிழர்கள் இல்லையா என்று சந்தேகம் வருவதில் வியப்பில்லை; கையைக் கிள்ளிப் பார்த்து, சந்தேகம் தீர்ந்து, தமிழன் தான் என்பதை உறுதி செய்த பின், எப்படித் தான் இருக்கின்றனர் நம் தொப்புள்கொடி உறவுகள் என்று கண்டறிய, நாம் சென்ற இடம், கும்மிடிப்பூண்டி இலங்கைத் தமிழர்கள் முகாம்... (மேலும்....)

புரட்டாசி 25, 2011

மனிதர்களுக்கு ஆபத்து நீங்கியது பசிபிக் கடலில் விழுந்தது செயலிழந்த செயற்கைக்கோள்!

கடந்த 20 ஆண்டுகளாக பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த செயற்கைக் கோள் ஒன்று செயலிழந்து பூமியை நோக்கி வந்தது. அது நேற்று காலை பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி ஆராய்ச்சி மையம் கடந்த 1991ம் ஆண்டு Ōஅப்பர் அட்மாஸ்பியர் ரிசர்ச் சேட்டிலைட் (யுஏஆர்எஸ்) என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. ரூ.3,525 கோடி செலவில் அனுப்பப்பட்ட அந்த செயற்கைக் கோள் ஓசோன் படலம் மற்றும் பூமியின் வளி மண்டலத்தைப் பற்றி ஆராய்ந்து வந்தது. இது நாசா விஞ்ஞானிகளால் கடந்த 2005ம் ஆண்டு செயலிழக்க வைக்கப்பட்டது. அதன் பிறகு அது பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக சமீபத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 6,000 கிலோ எடை கொண்ட, பஸ் அளவிலான அந்த செயற்கைக்கோள் நேற்று முன்தினம் பூமியை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். ஒரு நாள் முன்னதாகவோ அல்லது பின்போ வரவும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். (மேலும்....)

புரட்டாசி 25, 2011

JVP does it again: joins Govt

The government has begun discussions with several members of the JVP Somawansa Amarasinghe faction who are willing to crossover to the ruling alliance. A top government minister claimed that during the on-going talks, both sides will try to agree on terms to facilitate the JVPers to join the United Peoples’ Freedom Alliance (UPFA.) “Following these talks, we plan to get them into the UPFA as a group or make the JVP join as a constituent political party. The groundwork for the talks between the two parties had been laid by a powerful government minister and a former JVP MP,” he said. He added that some JVP cadres, including former members of parliament had expressed their intention to begin talks with the government since the beginning of the conflict between the factions led by JVP leader Somawansa Amarasingha, and its rebel group led by Kumar Gunarathnam. It is highly likely that a National List JVP MP and two other former MPs will join the UPFA in the near future. “However JVP members have rejected the offer to join the National Freedom Front (NFF),” he said. On the other hand, the rebel faction is gaining momentum and strength as the student wing of the JVP, the Socialist Student Union, and its past leaders have decided to support the rebel faction lead by Premkumar Gunarathnam.  These leaders include Chameera Koswatte and Duminda Nagamuwa who are Central Committee members of the JVP and the former convener of the Inter University Students’ Federation (IUSF), Udul Premarathne. “We have always looked at matters progressively and with a clear, long term vision. We have opposed political alliances for a long time and we stand with those who adhere to this principle,” Premarathne said.

புரட்டாசி 25, 2011

தமிழர் விடுதலை கூட்டணியின் வருடாந்த மாநாடு குறித்த தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தா​பனத்தின் வாழ்த்துச் செய்தி

தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பாரிய மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு பல்வேறு நெருக்கடிக்குள்ளாக சென்று வருகிறது. தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய அரசியல் சக்திகள் காலத்திற்குக் காலம் எடுத்த முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதற்குப் பிரதான காரணம் பாராளுமன்ற அரசியல் என பலரும் கருதுகின்றனர். சிங்கள தேசியவாத எழுச்சி சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திரும்பியது. குறுக்கு வழிகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதம் பெரும் துணையாக அமைந்தது.  இவ் இனவாதம் சிறுபான்மை இனங்கள் மத்தியிலே அச்சத்தை ஏற்படுத்த இந்த அச்சத்தைப் பயன்படுத்தி தமிழ் குறும் தேசியவாதம் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் துணையாக அமைந்தது. சிங்கள மக்களைப் பாதுகாப்பதாக கூறிய தேசியவாதம் சிங்கள தேசிய வாழ்வை எவ்வாறு சீரழித்ததோ? அதேபோன்று தமிழ் தேசியவாதம் தனது மக்கள் வாழ்வை சீர்குலைத்தது. மொத்தத்தில் நாடே ஜனநாயக வாழ்வை இழந்து சீர்குலைந்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 25, 2011

Maj. Gen. Silva ready to face US court battle

War crimes charges: Defence Sec. says opportunity to expose terrorists

Sri Lanka’s Deputy Permanent Representative at the United Nations in New York, Ambassador Major General Shavendra Silva, has been asked to appear before a New York District Court to answer charges related to alleged war crimes and the war veteran said he was willing to challenge any charges made against him or troops under his command in any court anywhere in the world. The summons was served at Ambassador Major General Silva’s private apartment when he was away. It was reportedly accepted by an inmate at the apartment. According to the summons, the war veteran turned diplomat is expected to respond to the District Court within 21 days. (more.....)

புரட்டாசி 25, 2011

திருமலை குடியிருப்பு பகுதிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம்

 

பாரம்பரிய கைத் தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா திருகோணமலையில் மக்கள் குடியிருப்பு பகுதிகள் சிலவற்றுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார். இதன் பிராகாரம் 680 குடும்பங்கள் வசிக்கும் ஆனந்தபுரி, 260 குடும்பங்கள் வசிக்கும் நித்தியபுரி, 275 குடும்பங்கள் வசிக்கும் தேவாநகர், 140 குடும்பங்கள் வசிக்கும் விரோதயநகர், புதுக்குடியிருப்பு போன்ற மக்கள் குடியிருப்புக்களுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களின் தேவைகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார். மக்களுடைய காணி உறுதிகள் அடிப்படை பிரச்சினைகளான குடிநீர் வசதி, வாய்க்கால் புனரமைப்பு, பாதைகள் புனரமைப்பு சுகாதார வசதிகள் போன்ற பல்வேறு தேவைகள் குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டன. அனைத்து கோரிக்கைகளையும் கேட்டறிந்து கொண்ட அமைச்சர் இன்னும் சில மாதங்களுக்குள் இக் கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். தேவாநகருக்கு ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 48 இலட்சம் ரூபா ஒதுக்கி அம் மக்களுக்கான சுயதொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 25, 2011

சென்னை விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை விமான நிலையத்தில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால், 236 பயணிகள் தப்பினர். சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை 8.40 மணியளவில், 148 பயணிகளுடன் ஜெட் ஏர்வேஸ் விமானம் டெல்லிக்கு புறப்பட்டது. ஓடு பாதையில் சென்ற இந்த விமானம், ஏதோ காரணத்தால் ஓர் இடத்தில் நின்றது. அதே சமயம், டெல்லியிலிருந்து 118 பயணிகளுடன் சென்னைக்கு வந்த ஏர்இந்தியா விமானம் தரை இறங்க முற்பட்டது. இதனை அறிந்ததும், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி, உடனடியாக ஏர்இந்தியா விமானத்தை வானத்தில் பறந்து செல்லுமாறு, விமானிக்கு உத்தரவிட்டார். உரிய நேரத்தில், புறப்பட்டுச் செல்லவேண்டிய ஜெட் ஏர்வேஸ் விமானம் 2 நிமிடம் தாமதம் செய்ததால், பெரும் விபத்து ஏற்படவிருந்தது. ஆனால், அதிகாரியின் சமயோசிதம் காரணமாக, விபத்து தவிர்க்கப்பட்டது.  தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் என்ன?

புரட்டாசி 25, 2011

JVP on brink of internal war

Kumara faction gaining ground at grassroots despite denials by the old guard

Last week's exclusive disclosures in the Sunday Times about the worsening internecine battles in the Janatha Vimukthi Peramuna (JVP) were to have their immediate sequel. JVP leader Somawansa Amerasinghe summoned a meeting of the party's 24 member Central Committee (CC) to examine, among other matters, the revelations made in the political commentary. "It is they (the extremist group) who are seen in bad light from this report," observed Amerasinghe, easily among the less than handful whose Sunday chores begin with reading English language newspapers. In an interview with the Sunday Times on Friday, Amerasinghe, who has continued to insist that there, is no crisis, admitted, "there is a small organisational problem in our party." He parried most of the questions posed to him. Yet he was to sound a note of caution. He said, "I request all our members, sympathisers, well-wishers and the people of Sri Lanka to be vigilant. Assess the JVP and its leaders and the members by their actions, not by their words," he appealed. See box story on the opposite page. (more....)

புரட்டாசி 24, 2011

ஒளியை விட வேகமாக பயணிக்கமுடியும்

ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகியதா?

ஒளியை விட வேகமாக எதனாலும் பயணிக்க முடியாதெனும் அல்பர்ட் ஐன்ஸ்டினின் கோட்பாடான 'Theory of Relativity' யை விஞ்ஞானிகள் தவறென நிரூபித்துள்ளனர். சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் அமைந்துள்ள ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் (CERN) பரிசோதனைக்கூடத்திலேயே இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி நியூட்ரினோ எனப்படும் அணுவியல் துகள்கள் ஒளியை விட வேகமாக பயணிப்பதாக விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சியில் உறுதி செய்துள்ளனர். ஒளி (light) ஒரு செக்கனில் 1,86,282 மைல்கள் பயணிக்கும். அதாவது 2,99,792 கிலோ மீட்டர். எனினும் அவர்கள் செலுத்திய அணுவியல் துகள்கள் ஒளியின் வேகத்தினை விட 60 நெனோசெக்கன்கள் வேகமாக பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவ் ஆராய்ச்சியானது உண்மையாக நிரூபிக்கப்பட்டால் பௌதிகவியலின் தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் ஐன்ஸ்டினின் கோட்பாடு தவறாகிவிடும்.

புரட்டாசி 24, 2011

பிரித்தானியாவிலிருந்து 150 இலங்கையர்கள் நாடு கடத்தப்படுவர் _

அரசியல் அந்தஸ்துக்கோரி தமது நாட்டில் தஞ்சமடைந்த மேலும் சில இலங்கையர்களை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட சுமார் 150 இலங்கையர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 28ஆம் திகதி தனியான விமானமொன்றில் இவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளத.ு

புரட்டாசி 24, 2011

எம்மைப்பற்றிய தவறான எண்ணங்களைத் தவிர்த்து நட்புக்கரம் நீட்டுங்கள் - நியூயோர்க்கில் ஜனாதிபதி

கடந்த கால துன்பியல் அனுபவங்களை மறந்து நாங்கள் மேலும் பலமான வகையில் முன்னேறிச் சென்று எமது வரலாற்றில் புதிய யுகம் ஒன்றின் சவாலை தைரியமாக ஏற்றுக் கொள்வதற்கு நட்புடன் உங்கள் கரங்களை எங்களுக்கு நீட்டுமாறு கோரிக்கை விடுக்கிறோம். எம்மைப் பற்றி தவறாகக் கொண்டுள்ள எண்ணங்களிலிருந்து மீண்டு வருமாறு தூர இருக்கின்ற நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். வட மாகாணத்தில் பயங்கரவாதிகள் கடந்த 30 வருட காலமாக அழித்த உட்கட்டமைப்பு வசதிகளைப் பாதுகாப்புப் படையினர் நிகழ்காலத்தில் மேம்படுத்தி வருகின்றனர். துரோகத்தனமான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்ற வகையில் ஆயுதம் தாங்கிய இராணுவம் வடக்கில் அதிகளவில் ஈடுபடுத்தப்படவில்லை. அங்கு குறைந்தளவிலான பாதுகாப்புப் படையினரே இருக்கின்றனர் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நியூயோர்க்கில் நடைபெற்றுவருகின்ற ஐக்கிய நாடுகள் சபையின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் நேற்றைய அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

புரட்டாசி 24, 2011

அமெரிக்க வர்த்தக மைய கோபுரங்களானது விமானமொன்றால் மோதப்பட்டு தரைமட்டமாக்கப்படவில்லை - ஈரானிய ஜனாதிபதி _

அமெரிக்க நியூயோர்க் நகரில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுக் கூட்டத்தில் ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மடி நிஜாத் உரையாற்றிக் கொண்டிருந்த வேளை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அநேக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். நாடுகளை மென்மேலும் அடிபணிய வைப்பதன் மூலம் அவற்றின் வளங்களைச் சுரண்டும் முகமõக மேற்குலக நாடுகள் அந்நாடுகளில் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு அவற்றின் உட்கட்டமைப்புகளை அழித்தும் அந்நாடுகளை பலவீனப்படுத்தி யும் வருவதற்கõக அஹ்மடி தனது உரையின் போது குற்றஞ்சாட்டினார். அமெரிக்காவும் ஏனைய சில நாடுகளும் யூதர்களுக்கு கப்பப்பணம் செலுத்தவதற்கு ஒரு காரணம் காட்டுவதற்காக படுகொலைகளைப் புரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

புரட்டாசி 24, 2011

மாளிகைக்குள் இது

மாளிகைக்கு வெளியே பொங்கு தமிழ் எங்கே....?

புரட்டாசி 24, 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 23)

(நேசன்)

மேயர் அல்பிரட் துரையப்பாவும், கொலை செய்யப்பட்ட ஏனைய பாராளுமன்ற அரசியல்வாதிகளும் துரோகிகளா?

இந்தக் கேள்வி, இன்றைய காலகட்டத்தில் - தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் தோல்வியைத் தழுவிய பின்னான காலகட்டத்தில் - தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்பட வேண்டியதொன்றாகும், விவாதிக்கப்பட வேண்டியதொன்றாகும், விடைகாணப்பட வேண்டியதொன்றாகும். இத்தகையதொரு கேள்வி தமிழ் மக்களிடத்தில் எழுப்பப்படாவிடில், விவாதத்துக்கு உள்ளாக்கப்படாவிடில், இதற்கான விடை காணப்படாவிடில், தமிழ்மக்கள் தமது அரசியலில் கானல் நீரை நோக்கி ஓடுபவர்களாகவே இருப்பர் என்பதில் சிறிதும் ஜயமில்லை. (மேலும்.....)

புரட்டாசி 24, 2011

Lightspeed particles 'may break laws of physics'

Physicists reported Thursday that sub-atomic particles called neutrinos can travel faster than light, a finding that -- if verified -- would blast a hole in Einstein's theory of relativity. In experiments conducted between the European Centre for Nuclear Research (CERN) in Switzerland and a laboratory in Italy, the tiny particles were clocked at 300,006 kilometres per second, about six km/sec faster that the speed of light, the researchers said. "This result comes as a complete surprise," said physicist Antonio Ereditato, spokesman for the experiment, known as OPERA. "We wanted to measure the speed of neutrinos, but we didn't expect to find anything special." Scientists spent nearly six months "checking, testing, controlling and rechecking everything" before making an announcement, he said. (more.....)

புரட்டாசி 24, 2011

பாலஸ்தீனத்திற்கு இந்தியா முழு ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் தங்களுக்கு சுதந்திர நாடு என்ற அங்கீகாரம் அளிக்க வேண்டு மென பாலஸ்தீனம் தீர்மானம் கொண்டு வந்தால் அதை முழுமையாக ஆதரிப் போம் என இந்தியா அறிவித்துள்ளது. நியூயார்க் நகரில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை யின் தலைமையகத்தில் ஐ.நா. பொதுச்சபையின் 66வது அமர்வு துவங்கி யுள்ளது. இதில் பங்கேற் பதற்காக பிரதமர் மன் மோகன் சிங் வந்துள் ளார். இந்தக் கூட்டத் தில் உரையாற்ற உள்ள பாலஸ்தீன ஜனாதிபதி முகமது அப்பாஸ், தனது உரைக்குப்பின் னர், பாலஸ்தீனத்திற்கு சுதந்திர நாடு என்ற அங்கீகாரம் அளித்து ஐ.நா.சபையின் 194வது நாடாக இணைத்துக் கொள்ள வேண்டும் எனக்கோருகிற தீர்மா னத்தை முன்மொழிய திட்டமிட்டுள்ளார். ஆனால் அதை தடுத்து நிறுத்துவதற்கு அமெ ரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் இதரக்கூட் டாளிகளும் தீவிர முயற்சி மேற்கொண் டுள்ளன. எனினும், பாலஸ்தீன ஜனாதிபதி மேற்கண்ட தீர்மானத்தை முன்மொழிந்தால் அதை ஆதரிப்பதற்கு இந்தியா உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் தயாராக உள்ளன. (மேலும்.....)

புரட்டாசி 24, 2011

கூடங்குளமும் புகுஷிமாவும்

(என்.ராமதுரை)

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஜப்பானில் விபத்துக்குள் ளாகிய புகுஷிமா அணுமின் நிலையத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கூடங்குளம் தமி ழகத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. புகுஷிமாவும் அப்படித்தான். அது ஜப்பானின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. தமிழகத்தை 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. புகுஷிமாவை இதேபோல கடந்த மார்ச் மாதம் சுனாமி தாக்கியது. ஆனால், ஒற்றுமைகள் இதோடு சரி, புகுஷிமாவில் உள்ள நிலைமைகள் வேறு. கூடங்குளத்தில் உள்ள நிலைமைகள் வேறு. ஆகவே, புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி கூடங்குளத்துக்கு ஏற்பட வாய்ப்பே கிடையாது. முக்கிய காரணம் பூகோள நிலைமைகள்.  (மேலும்.....)

புரட்டாசி 24, 2011

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால்  நாடுகளிடையே மோதல் வெடிக்கும்  ‘பிரிக்ஸ்’ எச்சரிக்கை

அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள பொருளா தார நெருக்கடி மேலும் தீவிரமடையுமானால், உலக நாடுகளிடையே, அவரவர் பயன்படுத்தும் பணம் (கரன்சி) குறித்து பெரும் மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது என ‘பிரிக்ஸ்’ நாடு களின் சார்பில் இந்திய நிதி யமைச்சர் பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்தார். உலகப்பொருளாதார நிலைமைகள் மாறி வரும் சூழலில், இந்தியா, சீனா உள்ளிட்ட வளர்முக நாடு களின் பணத்திற்கு உலகளா விய அங்கீகாரம் அளிப்பதற்கு சர்வதேச நிதி நிறுவனம் உள்ளிட்ட உலக நிதி அமைப் புகள் முன்வரவேண்டும் என்றும் அவர் கூறினார்.
(மேலும்.....)

புரட்டாசி 24, 2011

அப்புத்தளை இரட்டைக் கொலை

27 சந்தேக நபர்களுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

அப்புத்தளைப் பகுதியின் தொட்டலாகலை பெருந்தோட்ட இரட்டைக் கொலை வழக்கு பண்டாரவளை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (22/09) நேற்று முன்தினம் எடுத்துக் கொள் ளப்பட்ட போது, நீதிபதி அருண விக்கிரமசிங்க சந்தேக நபர்கள் 27 பேரையும் அக்டோபர் மாதம் 6ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கும்படி உத்தர விட்டார். தரைவிரிப்புக்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த மருதை மகேந்திரன், டக்ளஸ் ஜோன் என்ற இருவரும் மர்ம மனிதர்களென்ற சந்தேகத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவ் இரட்டைக் கொலைகள் கடந்த மாதம் 11ம் திகதி, தொட்டலாகலை பெருந்தோட்டத் தில் இடம்பெற்றுள்ளது. இக் கொலைகள் குறித்து பொலிஸாரால் 5 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன், பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த மேலும் 22 பேர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்திகள், பொல்லுகள் ஆகியவற்றுடன் பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி யொருவர் ஊடாக சரணடைந்தனர்.

புரட்டாசி 24, 2011

உள்ளாட்சி தேர்தல்

காங்கிரசுடன் விஜயகாந்த் ரகசிய பேச்சுவார்த்தை

உள்ளாட்சித் தேர்தல் குறித்து தே. மு. தி. கவுக்கும், காங்கிரஸ¤க்கும் இடையே கூட்டணி வைத்துப் போட்டியிடுவது குறித்த ரகசியப் பேச்சுக்கள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தனித்துதான் போட்டி என்ற கொள்கையுடன் செயல்பட்டு வந்த தே. மு. தி. க. கடந்த சட்ட சபைத் தேர்தல் மூலம் முதல் முறையாக கூட்டணி அரசியலில் புகுந்தது. யாருடைய வாக்குகளைப் பிரித்து வந்தது அதே அ. தி. மு. க.வுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டது. கூட்டணி முடிவான பின்னர் தொகுதிப் பங்கீட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதனால் அ. தி. மு. க. தன்னிச்சையாக தான் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து தே. மு. தி. க.வுக்கு ஷாக் கொடுத்தது. பின்னர் சமரசப்பேச்சுக்கள் நடந்து இணைந்து போட்டியிட்டனர். அ. தி. மு. க. ஆட்சியைப் பிடித்தது. தே. மு. தி. கவுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைத்து இன்று எதிர்க் கட்சியாகியுள்ளது. (மேலும்.....)

புரட்டாசி 24, 2011

சகல சபைகளையும் ஐ.ம.சு.மு கைப்பற்றும்

சிறுபான்மை மக்களின் முழுமையான ஆதரவு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே உள்ளதால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சகல சபைகளையும் அரசாங்கம் கைப்பற்றும் என அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார். கொழும்பு, கண்டி, காலி, இரத்தினபுரி என நாட்டின் முக்கிய கேந்திர நகரங்களில் இம்முறை தேர்தல் நடக்கிறது. இந்த நகரங்கள் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக வெற்றி பெற்ற நகரங்களாகும். எனினும் இன்று நிலைமை முற்றாக மாறி அரசாங்கத்திற்கே அமோக வெற்றிவாய்ப்பு உள்ளதெனவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு விளக்க மளித்தபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இரத்தினபுரி நகர சபையைப் பொறுத்த வரை கடந்த காலங்களில் ஐ.தே.க.வின் வசமே அது இருந்தது. எனினும் கடந்த தேர்தலில் மாற்றம் ஏற்பட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அச்சபையை தம் வசமாக்கியது. அரசாங்கத்துக்கு 09 ஆச னங்கள் உள்ள அந்த மாநகர சபையில் இம்முறை 11 ஆசனங்களை வசப்படுத்திக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புரட்டாசி 23, 2011

புலிகளின் மேற்குலக மீட்போனுடன் மகிந்த

புரட்டாசி 23, 2011

அழிவுப் பாதையில் ஜே.வி.பி, சென்று கொண்டிருக்கிறது

இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய நாட்டின் பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பலம்வாய்ந்த இயக்கமாக உருவாகிக் கொண்டிருந்த ஜே.வி.பி, இன்று அரசியல் குப்பைத்தொட்டியில் எறியக்கூடிய அளவிற்கு வலுவிழந்து பிளவுபட்டிருக்கிறது என்று பாராளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளவர்கள் கவலை கொண்டுள்ளார்கள். 1971ம் ஆண்டின் இளைஞர்களின் ஆயுதப் புரட்சியின் மூலம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக ரோஹண விஜேவீர தலைமையில் உருவாகிய ஜே.வி.பி, அந்த ஆயுதப் போராட்டத்தில் முறியடிக்கப்பட்டு அதன் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர். அதற்கு சில வருடங்களுக்குப் பிறகு ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல்களிலும் தங்கள் பங்களிப்பை அளித்த போதிலும், 1987ம் ஆண்டில் இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட தினத்தில் மீண்டும் ஜே.வி.பியினர் தங்கள் அராஜகங்களையும் வன்முறைகளையும் ஆயுதக் கலாசாரத்தையும் மேடையேற்றினர். (மேலும்...)

புரட்டாசி 23, 2011

11664 புலிகள் உறுப்பினர்களில் இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 8500 பேர் சமூகத்துடன் இணைக்கப் பட்டுள்ளனர்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 1500 முன்னால் போராளிகள் புலிகள் சந்தேக நபர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி வவுனியா கலாசார மண்டபத்தில் வைத்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயக அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதன் பின்னர் புனர்வாழ்வு அளிக்கப்படும் எஞ்சிய முன்னாள் புலிச்சந்தேக நபர்களின் தொகை 1200 ஆகக் குறைவடையும் எனவும் அந்த அலுவலக உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். புனர்வாழ்வுப் பயிற்சி வழங்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டவர்கள் மற்றும் புனர்வாழ்வுப் பயிற்சியைப் பூர்த்தி செய்யாதவர்கள் ஆகிய தரப்பினர் மேற்குறிப்பிட்ட தொகையில் அடங்கும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். புனர்வாழ்வுப்பயிற்சியை மேற்கொண்ட வரும் அனைவரும் இந்த ஆண்டு முடிவுக்குள் சமூகத்தில் இணைந்து கொள்ளப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை புனரமைப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போது வடக்கு கிழக்கு மாகாணங்களில் இயங்கி வரும் 7 புனர்வாழ்வுமையங்களில் புனர்வாழ்வு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருவதுடன் இந்த மையங்கள் விரைவில் ஐந்தாகக் குறைக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. வன்னி இறுதிப் போரின் போது பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த 11664 புலிகள் உறுப்பினர்களில் இதுவரை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 8500 பேர் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப் பட்டுள்ளனர்.

புரட்டாசி 23, 2011

பிளவடைந்தது ஜே. வி. பி.

சதிகளை தோற்கடித்து கட்சிக்கு உயிரூட்டுவோம்

ஜே. வி. பிக்குள் பூதாகரமான பிரச்சினைகள் எழுந்துள்ளன என்பது உண்மைதான். எனினும் இவற்றை முற்றாக தோல்வியடையச் செய்து கட்சியை பலமானதாக உருவாக்குவதற்குரிய அனைத்து முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டு ள்ளதாக ஜே. வி. பி.யின் பிரசாரச் செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. நேற்று தெரிவித்தார். ஜே. வி. பி. இரண்டாக பிளவுபடுகிறது. புதிய கட்சி உருவாகிறது என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இதன் உண்மை நிலை தொடர்பாக ஜே. வி. பி. எம்.பி. விஜித ஹேரத்திடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜே.வி.பி. என்பது பலமான ஒரு கட்சி அதனை பிளவுபடுத்த, உடைத்தெறிவது என்பது இயலாத காரியம். எனினும் கட்சியிலிருந்து பிரிந்து சென்று சில குழுக்களாக இயங்குவதும். தனியான கட்சியை ஆரம்பிப்பதும் நடந்துவந்துள்ளது. (மேலும்...)

புரட்டாசி 23, 2011

 

பலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் பிரேரணை ஐ.நா. சபையில் இன்று முன்வைப்பு

வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதில் அமெ. உறுதி. பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பெற முயற்சி

பலஸ்தீனை ஐக்கிய நாடுகள் சபையின் 194ஆவது நிரந்தர அங்கத்துவ நாடாக அங்கீகரிக்க கோரும் பிரேரணையை பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று ஐ.நா. பொதுச் சபையில் முன்வைக்கவுள்ளார்.  எனினும் பலஸ்தீனின் ஐ.நா. தனிநாட்டு கோரிக்கைக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மஹ்மூத் அப்பாஸிடம் நேரடியாக குறிப்பிட்டுள்ளார். பராக் ஒபாமா நியூயோர்க்கில் நேற்று முன்தினம் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹ ஆகியோரை தனித்தனியே சந்தித்து மத்திய கிழக்கு விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிடம் தனிநாட்டுக் கோரிக்கையை கை விடுமாறு கேட்டுக் கொண்டார். மறுபுறத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக் குறித்து பென்ஜமின் நெதன்யாஹவிடம் உறுதியளித்தார். (மேலும்...)

புரட்டாசி 23, 2011

இணைத்துக்கொள்ள தயார்

இரண்டாக பிளவுபட்டுள்ள ஜே.வி.பி யின் ஒரு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைய விரும்பினால் அவர்களை ஏற்றுக் கொள்ளத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கொழும்பு மகாவலி கேந்திர நிலையத் தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு சுயாதீனமான ஜனநாயகக் கட்சி, தம்மிடம் வருவோரை கட்சி ஒருபோதும் அலட்சியப்படுத்தாது எனவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை யினை ஏற்று அதற்கிணங்க செயற்பட முன்வரும் எந்தத் தரப்பினரையும் நாம் ஏற்கத் தயார் எனவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரி விக்கையில், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பலத்த உட்பூசல் உள்ளது. ஜே.வி.பியும் இரண்டாகப் பிளவுபடப் போகிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே எவ்வித சிக்கலுமின்றி சுதந்திரமாகச் செயற்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புரட்டாசி 23, 2011

ஐ.நா.பொதுச்சபை 66வது கூட்டம்

பொருளாதார நெருக்கடி முதல் அரபு நாடுகள் வரை...!

புதனன்று துவங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுக்கூட்டத்தில் பேசிய தலைவர்கள், உலகப் பொருளாதார நெருக்கடி, அரபு நாடுகள் எழுச்சி போன்றவற்றைக் குறிப்பிட் டுப் பேசினர். ஆனால் பெரும்பாலானவர்களின் சிந்தனைகள் சுதந்திரப் பாலஸ்தீனத்திற்காக கொண்டு வரப்படவிருக் கும் தீர்மானம் பற்றியே இருந்தது. முதலில் பேசிய பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப், நாம் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அதை நாம் சரியான வகை யில் கையாளாவிட்டால் அரசியல் மற்றும் சமூக ரீதியாகப் பெரும் பிளவை ஏற்படுத்திவிடும். நிதித் துறையை ஒழுங்குபடுத்து வதற்கான கட்டுப்பாடு களை முழுமையாக நடை முறைப்படுத்தும் திறன் தான் இந்தப் பிரச்சனையில் முக்கியமானது என்று குறிப் பிட்டார். (மேலும்...)

புரட்டாசி 23, 2011

இலங்கை விவகாரத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு தோல்வி

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தோல்வியைச் சந்தித்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கடந்த ஓர் ஆண்டு செயற்பாடுகள் தொடர்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று 69 பக்க அறிக்கை ஒன்றை ஜெனீவாவில் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் 2010 ஜூலை தொடக்கம் 2011 ஜூன் வரையிலான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. (மேலும்...)

புரட்டாசி 23, 2011

கொழும்பு யாழ்ப்பாணம் தனியார் பஸ்கள் பொலிஸாரினால் முடக்கம்

வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு புறப்படுவதற்கு பயணிகளுடன் தயார் நிலையில் நின்றிருந்த 8 தனியார் பஸ்களை சுற்றிவளைத்த வெள்ளவத்தை பொலிஸார் குறித்த பஸ்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு தடை விதித்துள்ளனர். இதனால் பல்வேறு தேவைகளின் நிமித்தம் யாழ். குடாநாட்டில் பல பகுதிகளுக்கு செல்லவிருந்த சுமார் 400 பயணிகள் நிர்க்கதிக்குள்ளாகிய நிலைமை நேற்று இரவு ஏற்பட்டுள்ளது. மேற்படி 8 தனியார் பஸ்களுக்குமான வீதி அனுமதிப்பத்திரம் இல்லாமை காரணத்தினாலேயே இந்த பஸ்களின் யாழ்ப்பாணத்துக்கான பயணம் முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பயணம் முடக்கப்பட்ட 8 பஸ்களும் தற்போது வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. (மேலும்...)

புரட்டாசி 22, 2011

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆஸி எதிர்ப்பு

இலங்கையைப் பொதுநலவாய நாடுகளின் கூட்டத் தொடரிலிருந்து நீக்க வேண்டுமென அவுஸ்திரேலிய செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆஸி அரசும் எதிர்க்கட்சியும் எதிராக வாக்களித்துள்ளன என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய கிறீன் கட்சியின் செனட்டர் லீ ரெஹ்னொன் (Lee Rhiannon) இந்த பிரேரணையை சமர்ப்பித்திருந்ததாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இலங்கை வகித்து வரும் அங்கத்துவத்தை இடைநிறுத்த வேண்டுமென அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படும் வரையில் உறுப்புரிமை இடைநிறுத்தி வைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் உறுப்புரிமையை இடைநிறுத்துவது தொடர்பிலான பிரச்சார நடவடிக்கைகளை கிறீன் கட்சி ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை எதிர்வரும் மாதம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 22, 2011

Toronto Lightning Storm August 2011

(Photograph by: Dave Han)

புரட்டாசி 22, 2011

இலங்கையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமான

தோழர் மு.கார்த்திகேசன் அவர்களின்34ஆவது வருட நினைவுப் பேருரை

  • தலைமை: நீர்வை பொன்னையன்

  • உரை நிகழ்த்துபவர்: கலாநிதி குமுது குசும் குமார (சமூகவியல்துறை                           விரிவுரையாளர் - கொழும்பு பல்கலைக்கழகம்)

  • விடயம்: 'உலகமயம் - இலங்கை சமூகமும் கலாச்சாரமும்'

  • இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம், 58 தர்மராம வீதி, கொழும்பு – 6

  • காலம்: செப்ரெம்பர் 25, 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

E-Mail: kailashpath@yahoo.com

புரட்டாசி 22, 2011

இருதரப்புப் பேச்சும் மூடுமந்திரமாக இருக்கக் கூடாது - தி. ஸ்ரீதரன் (பொதுச் செயலாளர் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்.)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கம் நடத்தும் பேச்சுவார்த்தையானது வெளிப்படையாக இருக்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பு எதை முன்வைக்கிறது. அரசு என்ன சொல்கிறது என்பது மக்களுக்குத் தெரியப்படுத்துவதனூடாகவே இது பற்றிய விவாதங்கள்> கருத்துகள் மக்கள் மத்தியிலிருந்து வர முடியும். தமது தலைவிதியை மூடு மந்திரமாக யாரும் தீர்மானிப்பதை அவர்கள் தெரிவுசெய்யப்பட்ட தலைவர்களாக இருந்தாலும் ஜனநாயக சமூகங்களில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு தெரிவிக்கிறார் ஈ.பி.ஆர். எல். எப். பத்மநாபா அணியின் பொதுச் செயலாளரான தி. ஸ்ரீதரன். (மேலும்....)

புரட்டாசி 22, 2011

இப்படி ஓர் அரசியல் தேவைதானா?

கொழும்பு மாநகர சபைத் தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடித்துக் கொண்டிருக்கிறது. புதிய பல உத்திகளைக் கையாண்டு ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களும் பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் தங்களுக்குரிய மக்கள் ஆதரவை வெளியில் காட்டுவதற்காகவும் சிலர் முயற்சிக்கிறார்கள். இவர்களின் நடவடிக்கை சில சந்தர்ப்பங்களில் வெறுப்பினை ஏற்படுத்துகிறது. மக்களின் நலனே முதல் நோக்கம். தம்பட்டம் அடித்துக்கொண்டு பிரசாரம் செய்யும் வேட்பாளர்களில் ஒருவரின் தேர்தல் பிரசார ஆதரவாளர்களை படங்களில் காண்கிறீர்கள். கிராண்ட்பாஸில் தேர்தல் பிரசாரம் செய்யப்பட்ட விதம் இது. (மேலும்....)

 

புரட்டாசி 22, 2011

உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி இரு தரப்பு பேச்சு

ஐக்கிய நாடுகள் சபையின் 66வது பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சர்வதேச நாடுகள் சிலவற்றின் அரச தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு நேற்று முன்தினம் பிற்பகலில் இடம்பெற்றுள்ளது. நைஜீரியா, ஸ்லோவேனியா, ஆகிய நாடுகளின் அரச தலைவர்களையே ஜனாதிபதி சந்தித்துள்ளதுடன் இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் சிலரும் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது. (மேலும்....)

புரட்டாசி 22, 2011

தமிழக சட்டமன்றத் தீர்மானம்  யாரையும் கட்டுப்படுத்தாது - மத்திய அரசு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்ட மூன்று பேருக்கு பொது மன்னிப்பு கேட்டு தமிழக சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என மத்திய சட்ட அமைச் சர் சல்மான் குர்ஷித் தெரி வித்தார். இவ்வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண் டனையாக மாற்ற வேண் டும் என்று தமிழக சட்டப் பேரவையில் செவ்வாயன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகிய 3 பேருக்கும் செப்டம்பர் 9-ம் தேதி தூக் குத் தண்டனை நிறைவேற் றப்படுவதாக இருந்தது. எனினும் தூக்குத் தண்ட னையை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரம் தடை விதித்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 22, 2011

தமிழ்க் கூட்டமைப்பின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை

அரசின் திட்டமிட்ட இன ஒழிப்பு, நில அபகரிப்பு பற்றி சர்வதேச சமூகத்திடம் முறையிடுவோம். தேவைப்படின் நீதிமன்றமும் செல்வோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று அரசாங்கம் மறுத்துள்ளது. சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்தி அநாவசியமான அழுத்தங்களை கொண்டுவந்து நாட்டில் நல்லாட்சி நடைபெற வில்லை என்ற பொய்யான தகவல்களை வெளிநாடுகளுக்கு எடுத்துக்காட்டுவதற்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எடுத்துவரும் முயற்சிகள் தேசத்திற்கு ஏற்படுத்தும் பாதகமான செயல்கள் என்றும் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 22, 2011

சைவப் பூனையின் விரதம்

(சீத்தாராம் யெச்சூரி எம்.பி.)

நூற்றுக்கணக்கான எலிகளை விழுங் கிவிட்ட ஒரு பூனை தனது பாவங்களைக் கழுவும் பிராயச்சித்தமாக புனிதப்பயணம் புறப்பட்டதாம். அந்த சைவப் பூனையின் கதைதான் மோடியின் கதையும். பிராயச்சித்தம் என்பது எல்லா மதங்களி லும் கலாச்சாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப் படுகின்ற ஒன்றேயாகும். யூத மதத்தினர் (தங் களது ஆண்டு முதல் மாதம் பத்தாவது நாளான) ‘யோம் கிப்புர்’ தினத்தன்று பாவங் களுக்கு பிராயச்சித்தமாக உண்ணாவிரதம் இருப்பார்கள். கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும், முஸ்லிம்கள் ரம்ஜான் மாதம் என்றும் இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வது வழக்கம். “உனக்கு நன்மை செய்யும் என்று உணர்ந்து நீ நோன்பு இருந்தால்தான், அது உனக்கு நன்மை செய்யும்” என திருக்குரான் கூறுகிறது. நமது நாட்டின் கலாச்சாரத்திலும் இதே போன்று பிராயச்சித்தமாகவும், புனிதப் படுத்திக் கொள்வதற்காகவும் நோன்புகள் பல வற்றை இந்து மதமும் ஜைன மதமும் கூறு கின்றன. மகாத்மா காந்தி, விடுதலைப் இயக்கத்தில், உண்ணா நோன்பினை ஒரு ஆன்மீக போராட்டக் கருவி என்ற நிலைக்கு உயர்த்தினார். (மேலும்....)

புரட்டாசி 22, 2011

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்

பயங்கரவாதத்துக்கு உதவுவோரின் சொத்துக்களை முடக்க சட்டம்

இலங்கைப் பிரஜை ஒருவர் இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ பயங்கரவாதத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினால் அவர்களின் சொத்துக்களை முடக்கும் வகையில் பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய திருத்தச்சட்டத்தின் படி பயங்கரவாதத்துக்கு நிதியளிக்க உதவும் இலங்கைப் பிரஜை ஒருவர் உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எங்கிருந்தாலும் குற்றவாளியாகக் கருதப்படுவார். இந்த சட்டத்திற்குள் இலங்கையிலுள்ள வெளிநாட்டுப் பிரஜைகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு நிதி திரட்ட உதவுபவர்களின் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள சொத்துக்களை முடக்க முடியும். தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகம் பாதிக்கபடப் போவது புலம் பெயர் தேசத்து புலிகளின் வாலுகள் ஆகும். ஏன் எனில் இலங்கையில் அதிலும் தென்னிலங்கையில் அதிகம் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளவர்கள் இவர்கடீள.

புரட்டாசி 22, 2011

நவீன கருவிகளுக்கு அடிமையாவது ஆபத்து

(பேராசிரியர் கே. ராஜு)

சென்ற ஆண்டு கொல்கத்தாவில் 10-வது படிக்கும் ஒரு மாணவி தண்டவா ளத்தைக் கடக்கும்போது ரயில் மோதிய தில் அவளது உடல் கூழாகிவிட்டது. அலைபேசியைக் காதில் வைத்தபடி மூடப் பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடந்து சென்ற அச்சிறுமி, 100 மீட்டர் தூரத்தில் வேகமாக ஒரு ரயில் வந்து கொண்டிருந் ததைக் கவனிக்கவில்லை. மற்றவர்கள் போட்ட சத்தமும் அவள் காதில் விழவில் லை. இந்த ஆண்டு ஹெளராவில் 10-வது படித்துக் கொண்டிருந்த நெருங்கிய நண் பர்களான இரு சிறுமிகளும் செல்போ னைக் காதில் வைத்தபடி தண்டவாளத் தைக் கடந்தபோது வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த ரயிலையோ, அருகிலிருந்த வர்கள் எச்சரிக்கை செய்து போட்ட கூச்ச லையோ கவனிக்கும் நிலையில் இல்லை. இவர்களெல்லாம் தங்கள் அலட்சியத்திற்கு விலையாக தங்கள் உயிரையே தர வேண்டியிருந்தது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. (மேலும்....)

புரட்டாசி 22, 2011

நாட்டில் பொலிஸ் பதிவு நடைமுறையில் இல்லை

நாட்டின் எப்பிரதேசங்களிலும் புதிதாக மீண்டும் பொலிஸ் பதிவு நடவடிக்கைகள் இடம்பெறவில்லையென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மெக்ஸி புரொக்டர் தெரிவித்தார். நாட்டின் சில பிரதேசங்களில் மீண்டும் பொலிஸ் பதிவுகள் இடம்பெற்று வருவதாக வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை என தெரிவித்த அவர், மக்கள் இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவினைப் பலப்படுத்தும் வகையில் கடந்த காலங்களில் நாட்டின் சில பிரதேசங்களில் பொலிஸ் பதிவுகள் இடம்பெற்றன. தற்போது புதிதாக எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லை. கடந்த காலங்களில் சிவில் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தகைய குழுக்கள் தமது பிரதேசத்தில் தங்கியிருப்பவர்கள் பற்றி அறிவதற்காக விபரங்களைச் சேகரித்திருக்கலாம். இது முன்னைய நடவடிக்கையாகும். தற்போது புதிதாக எவ்வித பதிவுகளும் இடம்பெறவில்லையெனவும் அவர் மேலும்தெரிவித்தார்.

புரட்டாசி 22, 2011

லிபியாவில் ஓர் ஆட்சியை தூக்கி மற்றொரு ஆட்சியை திணிப்பதை நம்பாதீர்கள்

“லிபியாவில் இருப்பது மக்கள் ஆட்சி. அதை யாராலும் அகற்ற முடியாது. நேட்டோவின் ஆதரவு நீண்ட நாள் நீடிக்காது” என தலைமறைவாக உள்ள லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் இருந்து இயங்கும் அல் ராய் தொலைக்காட்சிக்கு புதிதாக வெளியிட்டுள்ள ஒலிநாடா செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதில் லிபியாவில் இருப்பது மக்கள் ஆட்சி. வான் மற்றும் கடல் வழி தாக்குதல் மூலம்ஒரு நாட்டின் ஆட்சியை தூக்கி எறிந்து விட்டு இன்னொரு ஆட்சி திணிக்கப்படுவதை யாரும் நம்பிவிடாதீர்கள். லிபியாவில் மக்கள் ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது. நேட்டோவின் ஆதரவு நீண்ட நாள் நீடிக்காது என்று குறிப்பிட்டார். லிபிய தலை நகர் திரிபோலியை கிளர்ச்சியாளர்கள் கைபற்றியதன் பின்னர் முஅம்மர் கடாபி தலைமறைவாகியுள்ளார். இந்த நிலையில் அவர் அல் ராய் தொலைக்காட்சியினூடாக உரையாற்றும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கு முன்னர் கடந்த 8 ஆம் திகதி இந்த தொலைக்காட்சியினூடாக தான் இன்னும் லிபியாவிலேயே இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

புரட்டாசி 22, 2011

'என்னை அழித்தாலும் பரவாயில்லை எனது கணக்குகளை மட்டும் அழித்துவிடாதீர்கள்

ஒரு நெம்புகோல் மட்டும் இருந்தால் எவ்வளவு கனமான பொருளையும் அசைத்து நகர்த்திவிட முடியும். இந்த உண்மையை உலகறிய கூறியவர், ஆக்கிமிடீஸ் என்ற பேரறிஞர். தம்முடைய தத்துவத்தின் மகத்தான பேருண்மையை உணர்த்துவதற்காக ஆக்கிமிடீஸ் கீழ்க்கண்டவாறு கூறி னார். 'நான் நிற்பதற்கும் என் நெம்புகோலை நிறுத்துவதற்கும் ஓர் இடத்தைத் தாருங்கள். நான் இந்த உலகத்தை நகர்த்திக் காட்டுகிறேன். கி.மு. 287ம் ஆண்டு காலப்பகுதியில் சிசிலி தீவில் உள்ள சிரகாஸ் என்ற நகரில் பிறந்தவர், ஆக்கிமிடீஸ். தன் வாழ்நாளில் அறிவியல் வளர்ச்சிக்குப் பல ஆக்க பூர்வமான பணிகளைச் செய்தார் இவர். 'ஆக்கிமிடீஸ் தத்துவம்' இன்றும் அறிவியலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்கிமிடீஸ் ஒரு கணித மேதை. அது மட்டுமல்ல சிறந்த இயந்திரவியல் அறிஞராகவும் திகழ்ந்தார். பல புதிய கருவிகளை அவர் கண்டு பிடித்தார். சிரகாஸ் நகரம் உரோமானியர்களால் முற்றுகையிடப்பட்ட போது ஆக்கிமிடீஸ் ஒரு புதிய போர்க்கருவியைக் கண்டுபிடித்தார். அந்தக் கருவியைத் தொலைவில் இருந்தே பயன்படுத்தி எதிரிகளின் கப்பலைத் தீப்பிடிக்கச் செய்ய முடியும். அந்தக் கருவியால் ஏற்பட்ட சேதத்தைத் தாங்க முடியாமல் உரோமானியர்கள் பின்வாங்கி ஓடினர். பின்னர் பெரும் படைபலத்துடன் மூன்றாண்டுகள் போராடி சிரகாஸ் நகரத்தைக் கைப்பற்றிய உரோமானியர்கள் ஆக்கிமிடீஸை பிடித்துக் கொன்றனர். இறப்பதற்கு முன் ஆக்கிமிடீஸ் விடுத்த வேண்டுகோள் 'என்னை அழித்தாலும் பரவாயில்லை எனது கணக்குகளை மட்டும் அழித்துவிடாதீர்கள் என்பதுதான்.

புரட்டாசி 22, 2011

யூரோ மண்டலத்தின் பலிக்கடாவாக முடியாது

கிரீஸ் தனது மூன்றாவது தவணை பெறுவது குறித்து நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட மூன்று அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. தேவையான சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் தயாராக உள்ளோம். ஆனால், ‘யூரோ’ மண்டலத்தின் பலிகடாவாக நாங்கள் ஆக முடியாது என கிரீஸ் நிதியமைச்சர் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 15ம் திகதி வரைதான் தனது கையில் பணம் இருப்பதாகவும், மூன்றாவது தவணை உடனடியாக அளிக்கப்படாவிட்டால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் போன்றவை வழங்க முடியாது எனவும் கிரீஸ் தெரிவித்தது. இதையடுத்து, கிரீஸ் திவாலாகப் போவதாக செய்திகள் பரவின. கடந்த வார நடுவில் ஆரம்பித்து நேற்று வரை ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் இதன் காரணமாக சரிவு காணப்பட்டது. கிரீஸ் நிர்ணயித்திருந்த பொருளாதார சீர்திருத்தங்களை தேவையான வேகத்தில் மேற்கொள்ளாததால் அதன் மூன்றாவது தவணை கடன் அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

புரட்டாசி 21, 2011

இலங்கையில் இஸ்லாமிய அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன !

இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் அடையாளங்கள் திட்டமிட்டு அழிக்கப்படுவதாக இலங்கை அரசின் உள்நாட்டுக் கூட்டுறவுத்துறை பிரதியமைச்சரும், இலங்கை முஸ்லிம் காங்கிரசின் தவிசாளருமான திரு. பஷீர் சேகுதாவுத் , சோனகர்.காம் உடனான பிரத்யேக தொலைபேசி நேர்காணலில் கருத்து வெளியிட்டுள்ளார். ஒருங்கமைப்பும் சரியான தலைமைத்துவ வழிகாட்டலும் இன்றித் தத்தளிக்கும் இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகம் 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் வங்குரோத்தை அனுபவித்து வருவதையும் ஏற்றுக்கொண்ட பிரதியமைச்சர், குறிப்பிட்ட விடயங்கள் தமக்கு ஆழ்ந்த கவலையையும் அதே நேரம் சமூகத்தில் காணப்படும் வெற்றிடத்தை வெளிக்காட்டுவதையும் ஏற்றுக்கொள்வதோடு, இன்றைய நிலையில் அரசியல் ராஜதந்திரமற்ற நடவடிக்கைகள் மூலம் முஸ்லிம் சமூகம் தம் அரசியல் வங்குரோத்தினை மேலும் வளர்த்துக்கொள்கிறது எனும் உண்மையையும் வெளிப்படையாகக் குறிப்பிடத் தவறவில்லை. (மேலும்....)

புரட்டாசி 21, 2011

LTTE Diaspora as a criminal outfit

Velupillai Prabhakaran the architect and dreamer of Tamil Eelam, had as his role model the self appointed Fuehrer of Germany, Adolf Hitler. Both of them did not possess any education, but were extremely intelligent. Prabhakaran whilst living in a dream world was initially determined to crush the so called educated, and the so-called high caste people. He, like Hitler was of humble birth. He was not of a recognized high caste such as the Vellalas. He prevented the Tamil youth from higher education, forcibly conscripting them to his rag-tag army. (more....)

புரட்டாசி 21, 2011

அநுராதபுரம் ஸியாரம் உடைப்புக்கு நியாயம் கேட்டு நீதிமன்றம் செல்வேன் - அமைச்சர் ஹக்கீம்

'அநுராதபுரம் ஸியாரம் உடைப்பு தொடர்பில் நியாயம் கிடைக்கவில்லை என்றால், இந்த அரசாங்கத்திலுள்ள நீதியமைச்சர் என்பதைக் கூடப் பார்க்காமல் நிச்சயமாக நானும் நீதிமன்றம் செல்வேன். ஸியாரம் உடைக்கப்பட்டபோது கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்த காக்கியுடைக்காரர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன். யார் தடுக்க முயன்றாலும் இதை நான் செய்தே தீருவேன்' என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 'அநுராதபுரத்தில் ஸியாரமொன்று உடைக்கப்பட்டது. காவியுடை தரித்தவர்கள் சிலர் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். காக்கியுடை தரித்தவர்கள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படியானதொரு லட்சணத்தில் இந்த அரசாங்கத்தில் நான் ஓர் அமைச்சராக இருக்கின்றேன். இதைப் பார்த்துக் கொண்டு என்னால் கோபப்படாமல் இருக்க முடியாது. மு.காங்கிரசின் தலைவருக்கு இவற்றினைப் பார்த்தால் கோபம் வரத்தான் செய்யும். (மேலும்....)

புரட்டாசி 21, 2011

ஐ.நா. பொதுச்சபை இன்று கூடுகிறது

ஐக்கிய நாடுகள் சபை யின் பொதுச்சபைக்கூட் டம் செப்டம்பர் 21 புத னன்று கூடுகிறது. இதில் பங் கேற்பதற்காக பிரதமர் மன் மோகன் சிங் செவ்வாயன்று நியூயார்க் புறப்பட்டுச் சென்றார். 193 உறுப்புநாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில் 194வது நாடாக எங்களையும் சுதந்திர தேச மாக அங்கீகரிக்க வேண்டு மென பாலஸ்தீனம், உலக நாடுகளின் ஆதரவோடு உரத்துக்குரல் எழுப்பியுள்ள சூழலில், நியூயார்க்கில் கூட வுள்ள இந்தப்பொதுச் சபைக் கூட்டம்மிகுந்த முக் கியத்துவம் பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந் தியா உள்ளிட்ட வளர்முக நாடுகளுக்கும் உரிய அந்தஸ் தும் அங்கீகாரமும் அளிக் கும் விதத்தில், பாதுகாப்புக் கவுன்சில் முழுமையாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற குரலும் வலுத்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 21, 2011

Sri Lankan visa on arrival for 84 countries scrapped

Sri Lanka had withdrawn the on-arrival visa facility for 84 countries. So tourists from those countries will need a visa prior to arriving in Sri Lanka. The new system will be implemented from 30th September. Foreigners visiting and traveling via Sri Lanka will be able to obtain visas through the website of the Department of Immigration and Emigration of Sri Lanka by personally applying for them. This system will be made compulsory for the tourists from those 84 countries from 2012 onward. Sri Lanka has granted foreign tourists a 30-day visa on arrival since the 1970s as part of a move to promote tourism, but it was badly affected thereafter with the issues occurred in the country with the civil war. Last May, Sri Lanka scrapped the on-arrival visa facility given form Indian tourists. However, only tourists from Singapore and Maldives, countries which gives on-arrival visas to Lankans, will continue to get the reciprocal facility.

புரட்டாசி 21, 2011

ஒருநாள் போட்டியில் 2 இன்னிங்ஸ் - சச்சின்

ஐம்பது ஓவர்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி வடிவத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஐசிசிக்கு இந்தியாவின் மூத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐசிசியின் தலைமைச் செயல் அதிகாரி ஹரூன் லோகார்ட்டுக்கு சச்சின் கடிதம் எழுதியுள்ளார். இரு அணிகளுக்கும் தலா 50 ஓவர்களை விளையாடும் வகையில் தற்போது இருக்கும் வடிவத்தை மாற்றி, அணிக்கு 25 ஓவர்களைக் கொண்ட இரு இன்னிங்ஸாக ஒரு நாள் போட்டிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதே அவரது யோசனை. அதாவது, ஒவ்வோர் அணியும் 25 ஓவர்களைக் கொண்ட இரண்டு இன்னிங்ஸ் ஆடும் வகையில் இந்தப் போட்டிகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட், ஒருநாள் கிரிக்கெட், 20 ஓவர் கிரிக்கெட் இம்மூன்றையும் உள்ளடக்கிய வடிவமாக இது இருக்கும் என்பது சச்சினின் கருத்து. தனக்குள் உதித்த சிந்தனைகளையே இந்தக் கடிதம் மூலம் தான் முன்வைத்திருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

புரட்டாசி 21, 2011

சவூதி அரேபியா  சிறைகளில் 30 ஆயிரம் அரசியல் கைதிகள்

சவூதி அரேபியாவில் உள்ள சிறைகளில் 30 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட அரசி யல் கைதிகள் இருக்கிறார் கள் என்று அரசு எதிர்ப் பாளர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். இந்த அரசியல் கைதி களில் பெரும்பாலானவர் கள் ஜனநாயக சீர்திருத்தங் கள் கோரி அரசுக்கு எதிராக நடைபெறும் இயக்கங் களில் பங்கேற்றவர்களாவர். எந்தவிதமான நீதி விசார ணையோ அல்லது நியாய மான குற்றச்சாட்டோ இல் லாமல் சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளனர். இவர்க ளில் பலர் தொடர்ந்து 16 ஆண்டுகளாக எந்தவித விசாரணைக்கும் உட்படுத் தப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். (மேலும்....)

புரட்டாசி 21, 2011

தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கையை கொச்சைப்படுத்துகிறார் அமைச்சர் டக்ளஸ் - சரவணபவன் எம்.பி

சீட்டுக் கம்பனி நடத்தி ஏழை தமிழ் மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட சரவணனுக்கு எந்த தகுதியும் இல்லை  தேவாந்தாவை நோக்கி சுட்டி விரலை நீட்டுவதற்கு. - தானாமூனா

உண்மைக்குப்புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதுடன் மமதையின் உச்சியில் ஏறிநின்று தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகளை அமைச்சர் டக்ளஸ் கொச்சைப்படுத்தி வருகிறார்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். "ஓர் அமைச்சருக்குரிய அதிகாரத்தைச் சொந்த ஏதேச்சாதிகாரத்தை நடைமுறைப் படுத்தப் பயன்படுத்துவதும் அதே வேளை யில் சொந்த ஏதேச்சாதிகார நடை முறையை அமைச்சரின் அதிகாரத்துக்குள் பிரயோகிப் பதும் ஜனநாயகக் கோட்பாடுகளை முற்றாகவே நிராகரிக்கும் ஒரு முறைமீறலாகும்.ஏதேச்சாதிகாரம் என்பது நேர்மை, நியாயம், மனித உரிமைகள், மனித உணர்வுகள், சமூக ஒழுக்கம் போன்ற எவற்றையுமே பொருட்படுத்தாத ஒரு தன்னாதிக்கப் போக் காகும். அதேவேளையில் அமைச்சு அதி காரம் என்பது வரையறுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுக் கடமைகளை யும் சேவைகளையும் செய்வதற்கு வழங்கப்பட்ட ஓர் அதிகாரமாகும். (மேலும்....)

புரட்டாசி 21, 2011

அரசு - தமிழ்க் கூட்டமைப்பு பேச்சுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்

உரிய சந்தர்ப்பத்தில் முஸ்லிம் தரப்பும் இணைக்கப்பட வேண்டும்

அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக முஸ்லிம் கட்சிகள் தெரிவித்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தாம் மனப்பூர்வமாக வரவேற்பதாகவும் அவை தெரிவித்துள்ளன. இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப் படவேண்டியது முக்கியமானது. தீர்வு காண்பதென்பது தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களுக்கும் அவசியமானது எனத் தெரிவித்த அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன், அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் கூறினார். (மேலும்....)

புரட்டாசி 21, 2011

டிசம்பர் 31 இற்கு முன்னர் மீள்குடியேற்றம் முற்றாக பூர்த்தி

இடம்பெயர்ந்துள்ள அனைவரையும் இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக மீளக்குடியமர்த்தும் அரசின் திட்டத்திற்கமைய அடுத்த மாதம் முதல் வாரம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி. பஸ்நாயக்கா தெரிவித்தார். அத்துடன் கிழக்கில் சம்பூர் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள 1000 பேருக்கும் சகல வசதிகளுடன் காணிகளும் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலுள்ள முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு, அம்பலவன் பொக்கனை, கோப்பா பிளவு கிராம சேவகர் பிரிவுகளிலும், புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, மல்லிகைத்தீவு, சிவநகர், ஆனந்த புரம், கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. (மேலும்....)

புரட்டாசி 21, 2011

இத்தாலியின் கடன் விகிதாசாரம் குறைப்பு

சர்வதேச கடன் தரத்தை நிர்ணயிக்கும் எஸ் அன்ட் டி நிறுவனம் இத்தாலியின் கடன் தரத்தை குறைத்துள்ளது. இத்தாலியில் தொடரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவை காரணம் அதன் கடன் தரம் குறைக்கப்பட்டதாக எஸ் அன்ட் டி அறிவித்துள்ளது. இதன்படி இத்தாலியின் கடன் தரம் ‘ஏ’ நிலையில் இருந்து ‘ஏ பிளஸ்’ தரத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தும் நீடித்தால் இத்தாலியில் கடன் தரநிலை மேலும் குறைக்கப்படும் என எஸ் அன்ட் டி எச்சரிக்கை விடுத்துள்ளது.

புரட்டாசி 21, 2011

இந்தியாவின் பல பாகங்களிலும் நிலநடுக்கத்தினால் பலியானோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

நாட்டின் வடகிழக்கு மற்றும் வடக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் பலியானோர் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிம், நேபாள நாட்டு எல்லைப் பகுதியை மையமாகக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 புள்ளியாக பதிவாகி இருந்தது. இதன் தாக்கத்தால் சிக்கிம், மேற்கு வங்காளம், பீகாரில் அதிகமாக இருந்தது. அதே நேரத்தில் அசாம், மேகாலயா, திரிபுரா, மேற்கு வங்கம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டில்லியில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. நேபாளம், திபெத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது. பூகம்பத்தின் மையம் அருகே இருந்த சிக்கிமின் வடக்கு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. (மேலும்....)

புரட்டாசி 20, 2011

இலங்கைத் தமிழர் பகுதிகளிலிருந்து  ராணுவத்தை திரும்பப்பெறுக!

உலக வரைபடத்தில் கண்ணீர்த் துளிப்போல காட்சியளிக்கும் இலங்கை யில் தமிழ் மக்களின் துன்ப துயரம் இன் னும் நீடிப்பது ஆழ்ந்த வேதனை அளிக் கிறது. முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்ட உள்நாட்டுப் போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் படு கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா.சபை நியமித்த ஆய்வுக்குழு கூறியுள்ளது. இலங்கை ராணுவத்தால் நடத்தப்பட்ட இந்தப்படுகொலைகளை மனித உரிமை மீறல்களை தமுஎகச மாநாடு வன்மை யாகக் கண்டிக்கிறது. இந்தப்படுகொலை கள், மனித உரிமை மீறல்கள் குறித்து சுயேட்சையான, சர்வதேச தரத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும். தவறி ழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண் டிக்க வேண்டும். முகாம்களில் அடைக் கப்பட்டுள்ள தமிழ்மக்கள் அவர்களது சொந்த வாழ்விடங்களில் உடனடியாக மீள்குடியமர்த்தப்பட வேண்டும். தமிழர் கள் பகுதியிலிருந்து ராணுவம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைத்து, அதற்கு அதிகபட்ச சுயாட்சி அளிக்க அந்த நாட்டு அரசு முன்வரவேண்டும். அண்டை நாடு என்ற முறையிலும். சார்க் கூட்டமைப்பில் முக்கியமான நாடு என்ற வகையிலும் இலங்கை அரசை ராஜீயரீதியாக இந்தியா நிர்ப்பந்திக்க வேண்டும். (மேலும்.....)

புரட்டாசி 20, 2011

தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன!

நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ரஸ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த அறிக்கை திடீரென மனித உரிமை கவுன்ஸிலில் முன்வைக்கப்பட்டமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மாலைதீவு, பங்களாதேஸ், அல்ஜீரியா, கியூபா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் தாரூஸ்மான் அறிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. எனினும், இந்த நடவடிக்கையில் இந்தியா இணைந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி நிரலுக்குப் புறம்பாக தாரூஸ்மான் அறிக்கையை மனித உரிமைகள் கவுன்ஸிலில் சமர்ப்பிக்கக் கூடாது என ஒன்பது நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.ரஸ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புரட்டாசி 20, 2011

மோடி நாடகம் தொடங்கியது

“அமைதி, ஒற்றுமை மற் றும் மதநல்லிணக்கம்” ஆகி யவற்றின் மீது திடீரென பாசம் பொங்கியவராய், குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, உண்ணா விரத நாடகத்தை சனிக் கிழமை துவக்கினார்.தனது 62வது பிறந்த நாளை யொட்டி “சத்பவன மிஷன்” என்ற பெயரில் 72 மணி நேர உண்ணாவிர தத்தை குஜராத் பல்கலைக் கழக வளாகத்தில், பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத் வானி, அருண் ஜெட்லி, முக்தா அப்பாஸ் நக்வி, ஷா நவாஸ் உசேன், ஸ்மிருதி இரானி மற்றும் இமாச்சல பிரதேச முதலமைச்சர் பிரேம்குமார் துமால், பஞ்சாப் முதலமைச் சர் பிரகாஷ் சிங் பாதல் உள்ளிட்டோரு டன் முற்றிலும் குளிரூட்டப்பட்ட அரங் கில், பெரும் பொருட்செலவில் நரேந்திர மோடி துவக்கியுள்ளார். தனது மதவெறி முகத்தை மறைக்கும் முயற்சியாக முஸ்லிம்களில் சிலர், கிறிஸ்த வர்களில் சிலர், சீக்கியர்களில் சிலர், புத்த பிட்சுகள் சிலர் என பல மதங்களைச் சேர்ந்தவர்களையும் தனது மேடையில் அமர்த்திக்கொண்டார் நரேந்திரமோடி. (மேலும்.....)

புரட்டாசி 20, 2011

Star investigation

Slacking off gets high marks at this ‘high school’

(Jennifer Yang Staff Reporter )

 We were a classroom full of underachievers.The bright but aloof teenager who failed chemistry because he skipped nearly an entire semester. The bespectacled girl who consistently came to class an hour late and rarely wrote anything down because she took notes “with my mind.” And then there was me, a Toronto Star reporter posing as a summer school student upgrading her Grade 12 chemistry mark so she could apply for nursing college. I was a mediocre pupil at best: I barely studied, never handed in homework and failed most of my tests.But after completing a four-week, watered-down chemistry course at a private high school called Toronto Collegiate Institute, or TCI, the three of us walked away with marks we wanted — but did not deserve. For the month of July, I spent four hours a day in a Scarborough classroom as part of a Star investigation into alleged high school “credit mills,” a growing problem in Ontario where private schools are essentially handing out credits and grades for a fee. (more...)

புரட்டாசி 20, 2011

மோடி மஸ்தான்  வேலை எடுபடாது

சென்னை போன்ற இடங்களில் ஏமாற்று வித்தை காட்டி பிழைப்பவர்களை மோடி மஸ் தான் என்று கூறுவதுண்டு. தற்போது குஜராத் முதலமைச்சரான நரேந்திர மோடிக்கு இந்த பெயர் பொருத்தமாக உள்ளது. காரணம் மத நல் லிணக்கம் காக்க அவர் புதிய அவதாரம் எடுத் திருப்பது தான். குஜராத்தில் தனது ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மக்களை இரு கூறு களாக பிரித்து அரசியல் நடத்தி வரும் மோடி, தனது அதிகாரப் பசிக்காக ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்களின் உயிரைக் குடித்தவர். இதற் காக சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை எதிர் நோக்கியுள்ளார். குஜராத் கலவரத்தில் மோடி உள்பட 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து அகமதாபாத் விசா ரணை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண் டுமே தவிர, நேரடியாக உச்சநீதிமன்றம் அல்ல என்று தான் சமீபத்தில் தீர்ப்பு வந்ததே தவிர குஜ ராத் கலவரத்தில் மோடி குற்றமற்றவர் அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று அல்ல. (மேலும்.....)

புரட்டாசி 20, 2011

துபாயிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கேரளாவில் கைது

இந்தியக் கடவுச் சீட்டுடன் துபாயில் இருந்து இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட்ட இலங்கையர் கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதான வசந்தன் என்பவராவார். இவர் கடந்த ஞாயிறு துபாய்க்கு சென்றிருந்த வேளையில் துபாய் விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் இவர் போலிக் கடவுச்சீட்டின் மூலம் பயணத்தை மேற்கொண்டது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குறித்த நபர் இந்தியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பாரீஸ் செல்வதற்காக துபாய்க்கு சென்றதாகவும் தமிழ் நாடு முகவர் ஒருவர் மூலமாக போலிக் கடவுச்சீட்டினை பெற்றுக்கொண்டதாகவும் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து இரண்டு வருடங்கள் முன் இந்தியாவுக்கு சென்ற வசந்தன் அவரது உறவினர்களுடன் அகதி முகாமில் தங்கி யிருந்துள்ளார். இவ்வேளையில் வசந்தனுக்கு கடவுச் சீட்டினை பெறுவதற்கு உதவியர்களையும் வசந்தன் கொச்சின் விமான நிலையத்தை தெரிவு செய்வதற்கான காரணத்தையும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

புரட்டாசி 20, 2011

கிரீஸ் நிதி நெருக்கடி

பிரதமர் அவசரமாக நாடு திரும்பினார்

ஐ.நா. பொதுச் சபை மற்றும் சர்வதேச நிதியமைப்பின் (ஐ.எம்.எப்) கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்ற கிரீஸ் பிரதமர் ஜோர்ஜ் பப்பண்டரீ திடீரென நாடு திரும்பினார். கிரீஸ் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் முக்கிய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மீண்டும் நாடு திரும்பியுள்ளார். யூரோ நாணயம் பயன்படுத்தும் நாடுகளில் கிரீஸ் தற்போது கடன் சுமையில் மூழ்கியுள்ளது. இதுவரை ஐரோப்பிய நிலைத்த நிதியமைப்பில் இருந்து இருமுறை தவணைகள் பெற்ற போதும் அதனால் பொருளாதார சீர்திருத்தங்களை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் கடந்த வார இறுதியில் நடந்த யூரோ நாடுகளில் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கிரீசுக்கு மூன்றாவது தவணை அளிப்பது குறித்து ஒக்டோபர் முதல் வாரத்தில் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது. ஒக்டோபர் 15ம் திகதி வரை தான் தன்னிடம் பணம் இருப்பதாகவும், அதற்கடுத்து அன்றாடச் செலவுகளுக்கே பணம் இல்லாமல் போய்விடும் எனவும் சமீபத்தில் கிரீஸ் தெரிவித்தது. (மேலும்.....)

புரட்டாசி 20, 2011

கேத்திர கணிதத்தின் தந்தை

கேத்திர கணிதம் (ஜியோமெட்ரி) என்ற கணித முறை வந்த பிறகுதான் கணிதத் துறையில் பல குழப்பங்களும், சிக்கல்களும் தீர்ந்தன. முக்கியமாக பலவித கோணங்களில் அளந்து கணக் கிடுவதற்கு கேத்திர கணித முறை மிகவும் பேருதவியாக இருக்கிறது. கிரேக்க மொழியில் ‘ஜியோமெட்ரி’ என்பதற்கு நிலத்தை அளத்தல் என்று பொருள். எகிப்து நாட்டில் பல்வேறு கோணங்களில் பரவிக் கிடந்த விளை நிலங்களை அளந்து ஒழுங்குபடுத்து வது பெரிய பிரச்சினையாக இருந்தது. ‘ஜியோமெட்ரி’ முறை தோன்றிய பிறகு அந்தப் பிரச்சினை தொடர்பான சிக்கல்கள் அகன்றுவிட்டன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஜியோமெட்ரி முறையைக் கண்டறிந்து உலகத்துக்கு அறிமுகப்படுத்திய அறிஞர் பெயர் ‘யூக்லிட்’ ஆகும். ஆனால் அந்தக் கிரேக்க அறிஞரின் வாழ்க்கையைப் பற்றிய சரியான வரலாறு கிடைக்கவில்லை. அவர் எப்போது பிறந்தார். எப்போது மறைந்தார் என்ற தகவல்கள் கூடத் தெரியவில்லை. கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் அவர் வாழ்ந்தார் என்ற தகவல் மட்டுமே கிடைத்திருக்கிறது. (மேலும்.....)

புரட்டாசி 20, 2011

Australian Greens takes sides with the Terrorists

An environment movement later turned to a small political party in Australia has now taken up its new role as a pro terrorist lobby. One Sri Lanka Peace Watch sources in Australia reveal that the Tamil Tiger residuals in Australia have bribed the senior members of the party to initiate campaign against Sri Lanka, challenging the country’s membership in the Commonwealth.   According to the sources, this campaign has taken a different twist with the end of the Tamil Tigers; now it demands investigations into alleged war crimes committed by both Sri Lanka government and the LTTE. This new twist is aimed at erasing the criminal past of the Tamil Tiger activists who fund the party. These campaigners were very supportive of the Terrorist group when it was committing all sorts of macabre crimes against humanity in Sri Lankan. One Sri Lanka Peace Watch alerts all Sri Lankans and Friends of Sri Lanka around the world to join hands against this absurd campaign. It is clear that the Tamil Tigers striving to save their illegal business empire will continue to hijack bankrupt political parties such as “Greens” , in other Western countries to achieve their cause.  One Sri Lanka Peace Watch.

புரட்டாசி 20, 2011

லிபிய இடைக்கால அரசின் அமைச்சரவையை தேர்வு செய்யும் முயற்சி தோல்வி

லிபிய இடைக்கால அரசின் புதிய அமைச்சரவையை நியமிக்கும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. எனினும் இடைக்கால அரசின் பிரதமராக மஹ்மூத் ஜிப்ரீல் தொடர்ந்தும் நீடிப்பதற்கு ஆதரவு கிடைத்துள்ளது. கிளர்ச்சியாளர்களின் தேசிய மாற்ற கவுன்ஸில் அமைத்துள்ள இடைக்கால அரசின் புதிய அமைச்சரவையை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தேசிய மாற்ற கவுன்ஸில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். எனினும் புதிய அமைச்சரவையை தேர்வு செய்வதில் உறுப்பினர்களுக்கு இடையில் முரண்பாடு நிலவியது. குறிப்பாக அமைச்சரவை குறித்து பிரதமர் மஹ்மூத் ஜிப்ரீல் முன்வைத்த திட்டங்கள் குறித்து மாற்ற கவுன்ஸிலில் அங்கத்துவம் பெற்றுள்ள அமைப்புகளுக்கு அறிவுறுத்தாமை குழப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. (மேலும்.....)

புரட்டாசி 20, 2011

அமெரிக்க விமான சாகசத்தில் மீண்டும் விபத்து

அமெரிக்காவில் இடம்பெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு விமானம் விபத்துக்குள்ளானதில் அதனை ஓட்டிய விமானி பலியானார். அமெரிக்காவில் நவேடா மாகாணத்தில் உள்ள ரெனோ நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விமான கண்காட்சி நடந்தது. அதையொட்டி நடந்த சாகச நிகழ்ச்சியில் இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்திய விமானம் திடீரென்று தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் விமானி மற்றும் சாகச நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்த 8 பேர் பலியானார்கள். மேலும் 70 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் மீண்டும் அமெரிக்காவில் விமான சாகச நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கு வர்ஜீனியாவில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. அப்போது சாகசத்தில் ஈடுபட்ட டி-28 என்ற விமானம் ஓடுபாதையில் விழுந்து நொறுங்கியது. அதனால் விமானம் பந்து போல் குபீர் என தீப்பிடித்து எரிந்தது. இந்த சாகச நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அதிர்ச்சியில் உறைந்து கூச்சலிட்டனர். அங்குமிங்கும் சிதறி ஓடினர். விபத்தில், அந்த விமானத்தை ஓட்டிய விமானி மட்டும் பலியானார். பார்வையாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

புரட்டாசி 19, 2011

மீண்டும் பேசுவதற்கு புறப்பட்ட இருதரப்பாலும்

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டம் கிடைக்குமா...?

(சாகரன்)

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தன்னகத்தே கொண்டுள்ள பொது சன ஐக்கிய முன்னணி யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் அரசியல் தீர்வுத் திட்டத்திற்காக அடிக்கல்லைக் கூட நாட்டவில்லை. மாறாக சர்வ கட்சி மகாநாடு, நல்லிணக்க ஆணைக்குழு, தமிழ் தேசிக் கூட்டமைப்புடன் மட்டும் பேசுதல், பாராளுமன்றக் குழு அமைத்து செயற்படுத்தல் என்ற 'புலுடா' க்களை மட்டும் விட்டு வருகின்றது என்றே தமிழ் பேசும் மக்கள் நம்பவேண்டியுள்ளது. தம்மிடம் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சகல கட்சிகளையும் அழைத்து பேசுதலில் ஆரம்பித்து கால வரையறைக்குள் பேசி முடிதல் என்ற செயற்பாட்டை இலங்கை அரசு மேற் கொள்ள வேண்டும். இதற்கு இந்தியா போன்ற 'நட்பு' நாடுகளின் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (மேலும்...)

புரட்டாசி 19, 2011

அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?

இந்தக் கட்டுரை இலங்கையிற்கும் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களுக்கு பொருந்தும் செம்மண் பிரதேசங்களில் பல விவசாய பூமிகள் 'கல்' வீடுகளாக மாறி வரும் துர் அதிஷ்ட நிலமை கடந்த 35 வருடங்களாக நடைபெற்று வருகின்றன. விவசாயப் பெரும் குடி மக்களே! படித்த இளைஞர்களே!! விழிப்படைவீர். விவசாய மண்ணில் நீங்கள் இறங்கி உழைத்தால் புலம் பெயர் தேசத்து டாலர் வாழ்வை விட சுந்தரமான, மகிழ்சியான வாழ்வை நீங்கள் சமைத்துக் கொள்வீர். – (ஆர்)

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளே விவசாய நிலங்களை காலி செய்து கொண்டிருக்கிறனர். காந்தியின் கனவு கிராமத்தை பற்றியே இருந்தது. தற்போதைய அரசியல்வாதிகளும் கிராமங்கள் பற்றி பேசுகின்றனர். ஆனால் கிராமங்களின் முதுகெலும்பான விவசாயத்தை அழித்துக்கொண்டிருக்கின்றனர்.பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டும் முதல்வர், தமிழ்நாட்டில் வயல்வெளிகளில் வீடு கட்ட தடை விதிக்கவும், வயல் வெளிகளில் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்ய தடைவிதிக்கவும் சட்டம் கொண்டுவரவேண்டும் என்று விவசாயிகளும், பொதுமக்களும், இயற்கை ஆர்வலர்களும் விரும்புகின்றனர். (மேலும்...)

புரட்டாசி 19, 2011

வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் - விக்கிலீக்ஸ்

தேவாயலத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த 400 சிறுவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமான முறையில் படையில் இணைத்துக் கொண்ட து. _

விடுதலைப்புலிகளுக்கு எதிரான வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தின் போது நாளொன்றுக்கு சராசரியாக 63 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. யுத்த வலயத்திலும் அதற்கு வெளியேயும் உயிரிழப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்தத் தகவலை அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2009 ஜனவரி 20ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரையில் 4ஆயிரத்து 164 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபர்ட் ஓ பிளக் ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.இந்தக் காலப்பகுதியில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். எவ்வாறெனினும், நம்பகமான தரவு மூலங்களின் ஊடாக கிடைக்கப் பெற்ற பொதுமக்கள் இழப்புக் குறித்த தகவல்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு பகிர்ந்துகொள்ளவில்லை என விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது. (மேலும்...)

புரட்டாசி 19, 2011

கூட்டமைப்பும் புலம்பெயர் மேலாதிக்கத் தலைவர்களும் அடையமுடியாத தமிழீழத்தைப் பற்றி பேசுகிறார்கள் - கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் _

“ஆயுத போராட்டத்தின் நேரடி பங்காளிகள் ஜனநாயகம், அபிவிருத்தி பற்றி சிந்திக்கின்ற இவ்வேளையில்,; போராட்டத்திற்கோ தமிழ் மக்களின் அபிவிருத்திக்கோ எந்த பங்களிப்புமே செய்யாத ஒரு சில அடிவருடிகள் தற்போது தாங்கள்தான் தமிழீழம் பெறப்போவதாகவும், தமிழ் மக்களின் அபிவிருத்திகள் பற்றி சிந்திப்பதாகவும் அவர்களின் நலன்பற்றிப் பேசுவதாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இதனை நினைக்கும் போது வேதனையளிக்கின்றது. கிழக்கின் இயல்பு நிலையை குழப்ப முயற்சிக்கும் எவருக்கும் இடமளிக்க முடியாது. கையிலே ஆயுதங்களையும், கழுத்திலே நஞ்சையும் சுமந்து களத்திலே போராடி தியாகம் செய்த அனைவருமே தற்போது தமிழ் மக்களின் எதிர்காலம், அவர்களின் அபிவிருத்திப் பாதை மற்றும் ஏனைய தேவைகள் குறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். (மேலும்...)

புரட்டாசி 19, 2011

இந்தியாவிலிருந்து 42 இலங்கையர் நாடு திரும்பினர்

இலங்கை அகதிகளுக்கு இந்தியாவில் வீடுகள்

யுத்தத்தினால் இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவுக்குச் சென்ற இலங்கையர்களில் 42 பேர் இன்று காலை 10.30 மணியளவில் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். திருகோணமலையைச்சேர்ந்த 7 குடும்பங்கள் ,வவுனியாவைச்சேர்ந்த 5 குடும்பங்கள், அம்பாறையைச்சேர்ந்த ஒரு குடும்பம், மன்னாரைச் சேர்ந்த ஒரு குடும்பம் என 14 குடும்பங்கள் இவ்வாறு வந்துள்ளதாகவும், இவர்களில் 30 பேர் 18 வயதுக்கும் அதிகமானோர் ஆவர். குறித்த அகதிகளில் 18 வயதுக்கு அதிகமானோருக்கு 10 ஆயிரம் ரூபாவும், 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு 7500 ரூபாவும் வங்கிக் கணக்குகளில் போடப்பட்டுள்ளதாகவும் இவர்களின் பயணத்திற்கு ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபா வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நெல்லை மாவட்ட நாரம்மால்புரத்தில் உள்ள முகாம் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டதன் காரணமாக இவ்வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ஆம் ஆண்டு 96 வீடுகளும் 2010 ஆம் ஆண்டு 69 வீடுகளும் இவ்வருடம் 55 வீடுகளும் இவ்வாறு நிர்மாணித்து கையளிக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ____

புரட்டாசி 19, 2011

வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு 7 பில்லியன் ரூபா கடன் உதவி...

யுத்தத்தின் பின்னர் வடக்கு, கிழக்கில் சமாதானமும் சகஜ நிலையும் வலுப்பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் விவசாயத் துறைக் கும் மீன்பிடித் தொழிலுக்கும் சுய வேலை வாய்ப்பு முயற்சிகளில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கும் வகையில் இவ்விரு மாகாணங் களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தி அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணை புரிய முடியுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த கடனை இவ்விரு மாகாணங்களில் குறிப்பாக அங்குள்ள பின் தங்கிய கிராமங்களுக்கு வங்கி உத்தியோகத்தர்கள் நேரடியாக சென்று படிப்பறிவு குறைவான இந்த கிராமத்து மக்களுக்கு வங் கிக் கணக்குகளை திறந்து சரியான முறையில் தங்கள் தொழிலை விருத்தி செய்வதற்கு பயனளிக்கக்கூடிய ஆலோசனைகளையும் வழங்க வேண்டுமென்றும் இலங்கை மத்திய வங்கி சகல அரசாங்க, தனியார் வங்கிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. (மேலும்...)

புரட்டாசி 19, 2011

ஜனாதிபதி நியூயோர்க் விஜயம், செவ்வாயன்று ஐ.நாவில் உரை

ஐக்கிய நாடுகள் சபையின் 66 பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று அமெரிக்காவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இவர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்தவுள்ளார். நியூயோர்க் செல்லும், ஜனாதிபதி அங்கு, பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வெளிவுறவு அமைச்சர்கள் உட்பட்ட பலரை சந்திக்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 19, 2011

பேரறிவாளான், முருகன், சாந்தன் மன்னிப்பு வழங்கக் கோரும் தீர்மானத்தை தொடர்ந்து

அப்சல் குருவுக்கு பொது மன்னிப்பு கோருகிறது காஷ்மீர் சட்டமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட மூன்று பேருக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரும் தீர்மானத்தை நிறைவேற் றியதன் பின்னணியில், நாடாளுமன்றத்தை தாக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குரு வுக்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரும் தீர்மா னத்தை ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றம் விவாதிக்க இருக்கிறது. 2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய நாடாளு மன் றத்தின் மீது பயங்கரவா திகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் தொடர் புடையவர் என குற்றம் சாட் டப்பட்டுள்ள அப்சல் குரு வுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவ ரது கருணை மனு மீது அரசு இன்னும் முடிவெடுக்க வில்லை. இந்நிலையில் தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தை கருத் தில் கொண்டு, அப்சல் குரு வுக்கும், பொது மன்னிப்பு வழங்கக் கோரும் தீர்மா னத்தை காஷ்மீர் சட்டமன் றத்தின் சுயேட்சை உறுப்பி னர் ஷேக் அப்துல் ரஷீத் கொண்டு வந்துள்ளார். இவர் மட்டுமின்றி 39 எம்எல்ஏக்களிடமிருந்து தீர்மானங்கள் வரப்பெற் றுள்ளன. எனினும் சட்ட மன்ற விதிப்படி ஒரு அமர் வுக்கு 7 தீர்மானங்களை விவாதிக்கலாம். அதன்படி செப்டம்பர் 28ம்தேதி காஷ் மீர் சட்டமன்றம் இந்த தீர் மானங்களை விவாதிக் கிறது.

புரட்டாசி 19, 2011

உள்ளாடையுடன் உலாவும் மர்மனிதன், அச்சத்தில் கிராம மக்கள்

மன்னார் பெரிய கடை வீதி பெட்டா கிராமத்தில் நேற்றிரவு சுமார் 8.30 மணியளவில் மர்ம மனிதனொருவன் உள்ளாடை மாத்திரம் அணிந்து வீட்டின் மேல் நடமாடித்திரிந்த மையினால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்துடன் கூடிய பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெரிய கடை வீதி- பெட்டா பகுதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் கிராமத்திற்குள் சென்ற மர்ம மனிதனொருவன் அங்குள்ள வீடு ஒன்றின் முன் மதிலில் ஏறி அருகில் நின்ற முருங்கை மரத்தினூடாக வீட்டின் மீது ஏறி நின்றுள்ளான். இதன் போது, வீட்டில் உள்ளவர்கள் திடீரென வெளியில் வந்த போது வீட்டின் மேல் உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்த மனிதனைக் கண்டு அயல் வீடுகளில் உள்ளவர்கள் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு முன் வந்தனர். குறித்த நபர் மரங்களின் மேல் தாவி தப்பிச் செல்வதைப் பலர் பார்த்துள்ளனர். சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தபோதும் சந்தேக நபரை பிடிக்கமுடியவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் மாவட்டத்தில் சுமார் நான்கு வாரங்களுக்கு மேலாக மர்ம மனிதர்களினால் ஏற்பட்ட அச்ச நிலை குறைவடைந்துள்ள நிலையில் மேற்படி சம்பவம் குறித்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

புரட்டாசி 19, 2011

திருமலை கடற்பரப்பில் இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சி

திருகோணமலை கடற்பரப்பில் இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி இன்று (19) ஆரம்பிக்கப்படுவதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் வர்ணகுலசூரிய தெரிவித்தார். ‘ஸ்லிநெக்ஸ் 2’ எனப் பெயரிடப்பட்டுள்ள இலங்கை - இந்திய கடற்படையினரின் கூட்டுப்பயிற்சி எதிர்வரும் 24 ஆம் திகதி வரை திருமலை கடற்பரப்பில் நடைபெறும். இதன் போது இரு நாட்டு கடற்படையினரும் பயிற்சிகளை பரிமாறிக் கொள்வதுடன் தமது அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இது சிறந்ததொரு சந்தர்ப்பமெனவும் கடற்படை பேச்சாளர் கூறினார். இதன்போது இலங்கை கடற்படை சார்பில் 11 போர் கப்பல்களும் இந்தியக் கடற்படை சார்பில் 07 போர் கப்பல்களும் பயிற்சியில் ஈடுபடும்.

புரட்டாசி 19, 2011

உலகைச் சுற்றி

பயங்கரவாதிகளிடம் ஆட்சி...!

லிபியாவில் ஜனாதிபதி மும்மர் கடாபியை துரத்திவிட்டு, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவப் படைகளின் முழு ஆதர வோடு, கடாபி எதிர்ப்புக் குழுவினர் தலைநகர் திரிபோலியை கைப்பற்றியுள்ளனர். இன்னும் பல நகரங்களில் கடாபி ஆதரவு படையினருக் கும், எதிர்ப்புப் படையினருக்கும் இடையே மோதல் உக்கிரமாக நடந்து வருகிறது. நேட்டோவின் தாக்குதலும் தொடர்ந்து நீடிக்கிறது. ஒருபுறம் தாக்குதலை நடத்திக் கொண்டே, மறுபுறம் தனது கைப்பாவைக் குழுவிற்கு ஆட்சி அதிகார அந்தஸ்தை அளிக்க வேண்டு மென ஐக்கிய நாடுகள் சபையை அமெரிக்கா நிர்ப்பந்திக்க துவங்கியுள்ளது. திரிபோலியை கைப்பற்றியுள்ள கடாபி எதிர்ப்புக் குழுவிற்கு தேசிய மறுசீரமைப்புக் கவுன்சில் என்று பெய ரிட்டு, ஐ.நா. சபையில் இந்தக் குழுவே லிபி யாவை பிரதிநிதித்துவப்படுத்தும் என நேட்டோ தலைமையிடம் அறிவிக்கிறது. இதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்காவின் முன் முயற்சியோடு தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது. (மேலும்...)

புரட்டாசி 19, 2011

அரசு - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை

இருதரப்பு இணக்கப்பாட்டை தெரிவுக்குழுவுக்கு சமர்ப்பிக்க திட்டம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் காணப்படும் இணக்கப்பாட்டைப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு அரசாங்கத்தின் யோசனையாக முன்வைக்க அரசாங்கத்துக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. அரசாங்கத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இதற்கான இணக்கம் காணப்பட்டதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரி வித்தார். கூட்டமைப்புடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் எட்டப்படும் இணக் கப்பாட்டை தமது யோசனையாக பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் முன் வைக்கப் போவதாக அரசாங்கத் தரப்பினர் தெரிவித்தனர் என்றும் அவர் கூறினார். (மேலும்...)

புரட்டாசி 19, 2011

சுதந்திர பாலஸ்தீனத்தை வலியுறுத்தியே தீருவோம் - ஜனாதிபதி அப்பாஸ்

1967 ஆம் ஆண்டு இருந்த எல்லைகளோடுடனான சுதந்திர பாலஸ் தீனத்தை அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை வலியுறுத்தப் போவதாக பாலஸ்தீன ஜனாதிபதியும், மேற்குக்கரைப் பகுதியில் நிர்வாகம் செய்து வரும் பதா அமைப்பின் தலைவருமான முகமது அப்பாஸ் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அப்பாஸ், 1967 ஆம் ஆண்டில் இருந்த பகுதிகளைக் கொண்ட நாடு என்ற அந்தஸ்தோடு ஐக்கிய நாடுகள் சபை உறுப்பினராக வேண்டும். இது குறித்து ஏற்கெனவே அறிவித்து விட்டோம். அதை திரும்பப் பெறும் உத்தேசமில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் நான் பேசி முடித்தவுடன், முழு உரிமை கோரும் தீர்மானத்தை பொதுச் செயலாளர் பான் கி மூனிடம் சேர்த்து விடுவேன். அவர் அதை ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் தலைவரிடம் சேர்த்துவிடுவார் என்று குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபை யில் தீர்மானம் கொண்டு வருவதே எங்கள் முதல் விருப்பமாகும். அந்தத் தீர்மானம் எத்தகைய முடிவைச் சந்தித்தாலும் சரி, நாங்கள் தொடர்ந்து அதை வலியுறுத்துவோம் என்றார்.

புரட்டாசி 19, 2011

சிர்த், பானி வலீத் நகரங்களில்

கடாபி படை - கிளர்ச்சியாளர் உக்கிர மோதல்

லிபியாவில் முஅம்மர் கடாபி கட்டுப்பாட்டில் உள்ள சிர்த் மற்றும் பானி வலீத் நகரங்களில் கிளர்ச்சியாளர்களுக்கும் கடாபி ஆதரவுப் படையினருக்கும் இடையில் நேற்று உக்கிர மோதல் ஏற்பட்டது. இதில் சிர்த் நகரில் கிளர்ச்சியாளர்கள் முன்னேறி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. லிபியாவின் பெரும் பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் கடாபி ஆதரவாளர்கள் வசம் ஒரு சில நகரங்களே எஞ்சியுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் லிபிய தலைநகர் திரிபோலியை கைப்பற்றியதைத் தொடர்ந்து முஅம்மர் கடாபி தலைமறைவாகியுள்ளார். எனினும் அவரது பிறந்தகமான சிர்த் மற்றும் பானி வலீத் பகுதிகள் கடாபி ஆதரவாளர்கள் வசமே உள்ளது. இந்த நிலையில் இந்த பகுதிகளை கைப்பற்ற கிளர்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். எனினும் அவர்களின் தாக்குதலை முறியடித்துவரும் கடாபி ஆதரவுப் படையினர் மேற்படி நகரங்களை தொடர்ந்து தமது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளனர். (மேலும்...)

புரட்டாசி 19, 2011

சீனா-வெனிசுலா ஒப்பந்தம், 137 திட்டங்கள் செயலாகின்றன

சீன வளர்ச்சி வங்கியின் உதவியுடன் 137 திட்டங்களைச் செயல்படுத்தும் ஒப்பந்தத்தில் சீனா மற்றும் வெனிசுலா நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.  வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் 2030 ஆம் ஆண்டு வரையில் 137 திட்டங்களைச் செயல்படுத்த உள்ளார்கள். இந்த ஒப்பந்தத்தின்படி, தற்போது சீனாவிற்கு வழங்கி வரும் கச்சா எண்ணெயின் அளவும் அதிகரிக்கிறது. ஒருநாளைக்கு 4 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சீனாவிற்கு வெனிசுலாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.  2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பத்து லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சீனாவுக்கு ஏற்றுமதியாகத் துவங்கிவிடும். ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாவேஸ், மிகப்பெரிய நாடு என்பதை சீனா நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இதை நிரூபிக்க பெரிய பேரரசாக இருக்க வேண்டியதில்லை.  அனைவரோடு நல்லிணக்கத்தோடு இருக்க வேண்டும். மக்கள் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும். சீனா ஒன்றும் சர்வதேச நிதியம் அல்ல என்று குறிப்பிட்டார்.

புரட்டாசி 19, 2011

சிறுபான்மை மக்களின் கொடூரப்  படுகொலைக்கு தலைமையேற்ற மோடி  மதநல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம்-வெட்கக்கேடு!

குஜராத்தில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிராக மிகக் கொடூரமான மதவெறிப் படுகொலையை தலைமையேற்று நடத்திய முதலமைச் சர் நரேந்திர மோடி, இன்றைக்கு மத நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருப்பது இந்தியாவின் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வெட்கக்கரமான அத்தியாயம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி சாடி னார். இந்தியாவின் சமீபத்திய அரசியல் வரலாற்றில் இப்படிப்பட்டதொரு விந்தையான நிகழ்வை, வேடிக்கையை நாம் கண்டதில்லை என்றும் அவர் கூறினார். (மேலும்...)

 

புரட்டாசி 18, 2011

பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காதிருக்க முழுமையான அரசியல் தீர்வை முன்வைக்குக - மக்கள் கோரிக்கை

தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர். கடந்த 60வருடத்திற்கு மேலாக தமிழ் தலைமைகள் சிங்களத் தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எவ்வித தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இதுவரை 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தி பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியிருந்தது. எனினும் இந்தியாவின் தலையீட்டை தொடர்ந்தும், ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பை அடுத்தும், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை பேச்சு வார்த்தைகள் மீண்டும் ஆரம்ப மாகியுள்ளன. அரச தரப்பு தீர்வு யோசனை ஒன்றை முன் வைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து ஜனாதிபதி, கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனான சந்திப்பின்போது விளக்கிக் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்...)

புரட்டாசி 18, 2011

ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டும _

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மனோ கணேசனின் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் ஆதரிக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் புளொட் தலைவர் த. சித்தார்த்தன் கோரியுள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்மக்களின் நியாயமான உரிமைகள், அபிலாசைகள் மறுதலிக்கப்பட்டு வரும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குறிப்பாக கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் தமிழ்க் கட்சியாக போட்டியிடும் ஜனநாயக மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் முழுமையாக ஆதரிப்பது அவசியமானதும் தவிர்க்கப்படக்கூடாததும் என நாம் கூறுகின்றோம். (மேலும்...)

புரட்டாசி 18, 2011

Neelambari Perumal a fan of Madhuri and Kajol!

Madhuri Dixit and Kajol have a new fan amongst their growing list of admirers. Neelambari Perumal, who will make her Bollywood debut with the film Jeet Lengey Jahan, says that both she and her mother are huge fans of the actresses, "My mother is a Bharatnatyam dancer, and I have also been inclined towards dance since as long as I can remember. Whenever I used to dance, my mother would ask me whether I have seen how graceful Madhuri Dixit looks while dancing and that I must follow in her footsteps, literally. She is an amazing actress and both of us are huge fans of her." She is also a die-hard Kajol fan and says, "I have seen all of Kajol's films. She is just so unbelievably good! These are truly inspiring actresses." Talking of her debut film, she says, "My character is called Saloni and it's a film about three friends who are inseparable in college but lose regular touch after student life. It's a meaty role and the film also talks about anti-corruption, which makes it even more relevant. I am really excited and the entire shooting experience was fun, as we were great buddies off the sets. I am not too nervous as I have worked in Bombay Mittayi , a big Malayalam film, earlier. I just hope everything goes well and next, I might do a Tamil movie. As long as I get good roles, language doesn't matter."

புரட்டாசி 18, 2011

'யாழ்ப்பாண வாழ்வியல்' பொருட்காட்சி

யாழ். பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறை கலைக்கேசரியின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்துள்ள 'யாழ்ப்பாண வாழ்வியல்" எனும் தலைப்பிலான பொருட்காட்சி எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை யாழ். பல்கலைக்கழக கலைப்பீட வளாகத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4.30 மணிவரை இடம்பெறவுள்ளது.  குடாநாட்டின் புராதன குடிகள், புராதன குடியிருப்புகள், வாழ்வியல் முறைமைகள், குடிப்பரம்பல் இவற்றிற்கான இன்றளவில் உள்ள தொல்லியல் சான்றுகள் மற்றும் தடயங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பொருட்காட்சி அமையவுள்ளது. குடாநாட்டின் தொன்மை, பாரம்பரியம், பண்பாட்டை வெளிப்படுத்தும் சின்னங்கள் பொருட்களாகவும், மாதிரிகளாகவும், புகைப்படங்களாகவும் கால வரிசைக் கிரமத்தின் அடிப்படையில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. கண்காட்சியில், பல்கலைக்கழக அரும்பொருட்காட்சிச்சாலையில் உள்ள அரிய தொல்லியல் பொருட்களும், குடாநாட்டின் பல பாகங்களுக்கும் சென்று பல்கலைக்கழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களும் பொதுமக்களால் மனமுவந்து அன்பளிப்பு செய்யப்பட்ட மற்றும் இரவலாக வழங்கப்பட்ட பொருட்களும் இன்னும் அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் உள்ளடங்கும்.

புரட்டாசி 18, 2011

'இலங்கையின் கொலைக்களம்' அமெரிக்காவில் காண்பிக்கப்பட்டத

சனல் 4 தொலைக்காட்சியின் "இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப் படம் அமெரிக்காவின் மெஸ்சாஸ்குசிட்டிஸ் மாநில ஆட்சிப்பீடத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மன்னிப்புச் சபையின் ஏற்பாட்டில் இந்த ஆவணப்படம் காண்பிக்கப்பட்டுள்ளது. மாநில ஆட்சி உறுப்பினர்கள், கல்வி சமூகத்தினர் மற்றும் ஊடகவியலாளர்கள் என பல்துறையினருக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கிணங்க பெருமளவானோர் ஆவணப்படத்தினை பார்வையிட வந்திருந்தனர். மாநில ஆட்சிப்பீட உறுப்பினரான ஜேசன் லக்ஷவிஸ் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்கள்மீது நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை கோரியும் ஐ.நா. நிபுணர்குழுவின் பரிந்துரையை வலியுறுத்தியும் மாநில ஆட்சிபீடத்தில் தீர்மானமொன்று விரைவில் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 18, 2011

சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரித்திருப்பதால் அரசியல் தீர்வை அரசு துரிதப்படுத்த வேண்டும் - ஐக்கிய தேசியக்கட்சி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் வலியுறுத்தல்களுக்கமைய தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வினை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி சர்வ தேசத்தையும் தமிழ் மக்களையும் இனியும் ஏமாற்றி விடலாம் என்று எண்ணிவிட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறுதி மொழியின் பிரகாரம் கௌரவமான சமாதானத்துடனான நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமெனில் நிலையானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வே இறுதியானதாகும். இதனை சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும் வரையில் தட்டிக்கழித்து வந்தமை கவலைக்குரிய விடயமாக இருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியது. (மேலும்...)

புரட்டாசி 18, 2011

அரக்கோணம்... அகோரம்!

''என்னோடு பேசிவந்தவர் செத்துக் கிடந்தார்!''

சென்னை அருகே நடந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியானதைத் தொடர்ந்து, 'விபத்துக்குக் காரணம் தொழில்நுட்பக் கோளாறா? டிரைவரின் அலட்சியமா?’ என்பதில் சர்ச்சை! மத்திய ரயில்வே துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள், 'ரயில் டிரைவர்தான் விபத்துக்குக் காரணம்’ என்று கூறி இருக்கிறார்கள். ஆனால், படுகாயங்களுடன் மருத்துவமனையில் இருக்கும் சென்னை பீச் ரயிலின் டிரைவர், 'பச்சை சிக்னல் இருந்ததால்தான் ரயிலை வேகமாக இயக்கினேன்’ என்கிறார். காரணம் எதுவாக இருந்தாலும், பலியாகி விட்டனர் 10 அப்பாவிகள்! கடந்த 13-ம் தேதி இரவு 9.25 மணிக்கு அரக் கோணம் அருகே இருக்கும் சித்தேரி ரயில் நிலையத்தில் அரக்கோணம் - காட்பாடி பாசஞ்சர் ரயில் நின்றுகொண்டு இருந்தது. அப்போது, சென்னை பீச் ரயில் நிலையத்தில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் செல்லும் மின்சார ரயில், அதிவேகத்தில் வந்து பாசஞ்சர் ரயில் மீது மோதி யது. ரயில் மோதப்போவதை அறிந்த பீச் ரயிலின் டிரைவர் ராஜ்குமார், 30 அடி தொலைவில் ரயிலில் இருந்து குதித்துவிட்டார். (மேலும்...)

புரட்டாசி 17, 2011

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 22)

(நேசன்)

ஈழ விடுதலைப் போராட்டம்: "துரோகிகளும் இனவிரோதிகளும்"

இலங்கைத் தமிழ் மக்களின் அரசியலில் முதன்முதலில் "துரோகி" என்ற சொல்லை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள், முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த "அகிம்சை" தமிழ் பாராளுமன்றத் தலைமைகளே ஆவர். "சமூகவிரோதி" என்ற சொல்லை தமிழ் மக்களின் அரசியலில் அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் ஈழவிடுதலைப் போராட்ட ஆயுதக் குழுக்களைச் சேர்ந்தவர்களாவர். இலங்கை அரசியலில் முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த சிங்கள பாராளுமன்ற தலைமைகள் தமது குறுகிய பாராளுமன்ற நலன்களுக்காக சிங்கள பேரினவாதத்தை வளர்த்து மக்களின் வாக்குகளை பெறுவதில் வெற்றி கண்டிருந்தனர். ஆனால் பாராளுமன்ற ஆசனங்களைக் குறிவைத்து அரசியலை மேற்கொண்ட முதலாளித்துவ நலன்களைப் பிரதிபலித்த தமிழ்த் தலைமைகளோ அவர்களின் ஆரம்பகாலங்களில் தமிழ் குறுந்தேசியவாதத்தை வளர்ப்பதில் வெற்றி பெற்றிருந்தபோதும் கூட, பெரும்பான்மையான தமிழ்மக்களின் ஆதரவையோ பெரும்பான்மை தமிழ் மக்களின் வாக்குகளையோ அவ்வளவு இலகுவாகப் பெற்று பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்ற முடிந்திருக்கவில்லை. (மேலும்...)

புரட்டாசி 17, 2011

இடம்பெயர்ந்தோர் அனைவரும் இவ்வாண்டுக்குள் மீள்குடியேற்றப்படுவர்

ஏ9 பாதையை விரிவுபடுத்தல், குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல் போன்ற வற்றை மேற்கொண்டு வரும் அரசாங்கம் இவ்வாண்டு இறுதிக்குள் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் அனைவரை யும் மீள் குடியேற்றிவிடும் என்றும் கூறினார். அரசசார்பற்ற அமைப்புகளின் அனுசரணை யுடன் வீட்டுச் சொந்தக்காரர்களைக் கொண்டே அவர்களின் வீடுகளை புனர் நிர்மாணம் செய்தல் மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கப்பல் மூலம் திரும்பிக் கொண்டிருக்கும் இலங்கை அகதிகளுக்கும் அரசாங்கம் வசதிகளை செய்து கொடுத்து வருகிறதென்றும் அமைச்சர் கூறினார். இவ்விதம் நாட்டில் மீள்குடியேற்ற, புனர்நிர்மாண நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசாங்கம் அரசியல் ரீதியில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கில் உள்ள மக்களை அரசியல் ரீதியில் வலுவூட்டும் செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. (மேலும்...)

புரட்டாசி 17, 2011

ஈபிடிபி மக்களின் அங்கீகாரம்  பெற்ற ஒரு அரசியல் கட்சி - டக்ளஸ் தேவானந்தா

அண்மையில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் உதவி செயலர் றொபேர்ட் ஓ பிளேக் வழமை போல் திட்டமிட்ட உள்நோக்கத்தோடு எம்மீதான ஆதாரமற்ற சில குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். நாம் துணை இராணுவக்குழு என்றும், ஆயுதங்களோடு நடமாடுவதாகவும் தெரிவித்திருந்த அவர் நாம் வைத்திருப்பதாக அவர் கூறும் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். இது தவிர யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எமக்கும் இடையில் முரண்பாடுகளை திட்டமிட்டு தோற்றுவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்களை தான் சந்திக்கவிருந்ததாக பொய்யுரைத்து, தமது சந்திப்பை நாமே தடுத்து நிறுத்தியிருந்ததாகவும் கருத்து வெளியிட்டுள்ளார். இவைகள் உண்மைக்கு புறம்பானதும் ஆதாரமற்றதும் எம்மீது அவதூறு பரப்புவதுமான ஓர் திட்டமிட்ட உள்நோக்கம் கொண்ட செயலாகும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றோம். (மேலும்...)

புரட்டாசி 17, 2011

400க்கும் மேற்பட்ட குழுவினரால் அநுராதபுரத்தில் தர்கா தரைமட்டம் _

அநுராதபுரம் பழைய நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒட்டுப்பள்ளம் செய்கு சிக்கந்தர் ஒலியுல்லாஹ் அப்பா அவர்கள் அடக்கியுள்ளதாக கூறப்படும் தர்கா சுமார் 400க்கு மேற்பட்ட சாதாரண உடை மற்றும் காவியுடை தரித்த குழுவினரால் உடைத்துத் தரை மட்டமாக்கப்பட்டிருக்கும் சம்பவம் இனங்களின் ஐக்கியத்துக்கும் சிறுபான்மையினங்களின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதி அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் இச்சம்பவம் குறித்து தானும் ஸ்ரீல.மு.கா.வும் மிகுந்த கவலையையும் விசனத்தையும் அடைந்துள்ள நிலையில் இதனை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். (மேலும்...)

புரட்டாசி 17, 2011

The Dutch prosecution of five Sri Lankan Tamils continues in The Hague today in a trial which now promises to drag Dutch criminal law into conflict with the Sri Lankan government.

(By Richard Walker and Maike Winters in The Hague)

On a day bogged down by the virtually lone voice of Judge Van Rossum reading out witness testimonies gathered from Sri Lanka and neighbouring countries, defence counsel Victor Koppe sparked the potential for controversy by requesting the screening of British Channel 4’s “Sri Lanka’s Killing Fields” documentary. It will be viewed by the court today. The film contains evidence that the government of Sri Lanka committed war crimes in the last phase of the country’s 30 year civil war, including the shelling of civilian hospitals and the execution of prisoners of war. Victor Koppe described the film as being an “important source of information on the conflict.” (more....)

புரட்டாசி 17, 2011

டென்மார்க்  பத்தாண்டுகளுக்குப் பிறகு இடதுசாரிகள் வெற்றி

டென்மார்க் நாடா ளுமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சித் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணிக்கு பெரும்பான்மையான இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் பதிவான வாக்குகளில் 99.7 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் சமூக ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டணிக்கு 92 இடங்கள் கிடைத்துள்ளன. டென் மார்க் நாடாளுமன்றத்தில் 179 இடங்கள் உள்ளன. பெரும்பான்மைக்கு குறைந் தது 90 இடங்கள் தேவைப் படும் நிலையில், கூடுதலா கவே இரண்டு இடங்களை இந்தக்கூட்டணி பெற்றுள்ளது.(மேலும்...)

புரட்டாசி 17, 2011

குண்டு வெடிப்புகளால் அரசுக்கு அவப்பெயர் - அமைச்சர் சிதம்பரம்

ஜுலை 13ல் மும்பையில் நிகழ்ந்த குண்டு வெடிப்பும், செப்டம்பர் 7ல் டில்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பும் நமது அரசுக்கு அவப்பெயரையும், களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவங்களுக்காக மத்திய அரசும், பாதுகாப்புப் படையும் கடுமையாக குற்றம்சாட்டப்பட்டன. இதனை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் நாட்டில் பயங்கரவாதச் சம்பவங்கள் நிகழாமல் தடுப்பதுதான் நமது கடமை. பயங்கரவாத மையம் பாகிஸ்தான். பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும்தான் பயங்கரவாத மையமாக உள்ளன. இந்தியாவை தொடர்ந்து குறிவைத்துத் தாக்கும் லக்ஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெயஷி-இ-முகமது ஆகிய பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இருந்துதான் செயல்படுகின்றன. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவது சாதாரணமான விஷயம் அல்ல தீவிர கண்காணிப்பு உள்ளதால் எளிதில் ஊடுருவ முடியாது ஆனால் நேபாளம், பங்களாதேஷ் வழியாக இப்போது பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிக்கின்றனர். இலங்கை வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவதும் பயங்கரவாதிகளுக்கு எளிதான வழியாக உள்ளது. (மேலும்...)

புரட்டாசி 17, 2011

அமெரிக்காவே வெளியேறு! ஜோர்டான் மக்கள் முழக்கம்

சுதந்திரப் பாலஸ்தீனம் என்ற தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமெரிக்கா மற்றும் இஸ் ரேல் தூதரகங்கள் மூடப் பட்டு, ஜோர்டானை விட்டு அதில் உள்ளவர்கள் வெளி யேற்றப்பட வேண்டும் என்று கோரி ஆயிரக்கணக் கான மக்கள் ஜோர்டான் தலைநகர் அம்மானில் பேர ணியாக வந்துள்ளனர். போராட்டத்தில் ஈடு பட்ட மக்கள், “நச்சுப்பாம் பின் தலை அமெரிக்கா தான்!”, “ஜோர்டானில் அமெரிக்கத் தூதரகம் வேண்டாம்!”, “இஸ்ரேல் தூதரகத்தை இழுத்து மூடு!” போன்ற முழக்கங்களோடு வலம் வந்தனர். (மேலும்...)

புரட்டாசி 17, 2011

இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கான நேரடி விமான சேவை இன்று ஆரம்பம்

சரித்திரத்தில் முதல்முறையாக மொஸ்கோவுக்கான விமானப் பயணத்தை ஸ்ரீ லங்கன் எயார்வேஸ் விமான சேவை இன்று (17) ஆரம்பிக்கிறது. இதன்படி கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கும் மொஸ்கோவின் டோம்டெடோவோ விமான நிலையத்துக்கும் இடையே வாராந்தம் இரு சேவைகள் இடம்பெறும். ஸ்ரீலங்கன் விமான சேவையின் யூஎல் 531 விமானம் இன்று காலை 7.20 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சரித்திரபூர்வமான முதலாவது மொஸ்கோ பயணத்தை ஆரம்பிக்கிறது. இந்த விமானம் துபாய் வழியாக சென்று அதே தினம் பிற்பகல் 4.40 மணிக்கு மொஸ்கோவோ சென்றடையும். (மேலும்...)

புரட்டாசி 17, 2011

வெளிநாட்டு தாதிகளின் ஒப்பந்தம் முடிந்ததும் உள்நாட்டவர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை

சவூதி அரேபியாவில் தாதி வேலைக்கு உள்நாட்டினரை மட்டுமே சேர்ப்பது என்றும், வெளிநாட்டு தாதிகள் ஒப்பந்தம் முடிந்ததும் திருப்பி அனுப்பவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதனால் அங்கு பணியாற்றி வரும் இந்திய தாதிகள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி தாதி பணிக்கு நாடு முழுவதும் இனி முற்றிலும் உள்நாட்டில் செவிலியர் பயிற்சி முடித்தவர்களையே தேர்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சவூதி அரேபியாவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் வெளிநாடுகளை சேர்ந்த தாதிகளில் பத்து ஆண்டுகள் முடித்தவர்களின் பணிக்காலத்தை முடித்துக்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஹெமோடயாலிசிஸ், எமர்ஜென்சி, ஐசியு மெடிசின் ஆகிய நிபுணத்துவம் வாய்ந்த பிரிவுகளில் பணியாற்றும் அனுபவமிக்க வெளிநாட்டு தாதிகளை உடனடியாக விடுவிக்க தேவையில்லை. ஏனெனில் சவூதி அரேபியாவை சேர்ந்த தாதிகள் அந்த நிபுணத்துவங்களுடன் இப்போது கிடைப்பது அரிது. எனவே, அவசர சிகிச்சைகள் முக்கிய சிகிச்சை பிரிவுகளில் பணியாற்றும் வெளிநாட்டு தாதிகள் தொடரலாம் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் பின்தங்கிய பகுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களின் தாதிகள் பணியிடங்களில் உள்நாட்டை சேர்ந்தவர்கள் போதுமான எண்ணிக்கையில் கிடைக்கும் வரை வெளிநாட்டினர் நீடிக்கலாம்.

புரட்டாசி 17, 2011

உலக பொருளாதாரத்தில் நெருக்கடி

உலக பொருளாதாரம் அபாயகரமான நிலையில் இருப்பதாக உலக வங்கி தலைவர் ராபர்ட் ஜோயலிக் தெரி வித்துள்ளார். இந்த நிலையிலிருந்து விடுபட, அமெரிக்கா, ஜப்பான் மற் றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள் ளார். அமெரிக்காவின் கடன் அதிகரித்துள்ளதால் அந்நாட்டு பொருளாதாரம் கவலைக்கிடமாகி உள்ளது. இதுபோல் ஐரோப்பிய நாடுகளில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நிலைமையை சமாளிப்பது குறித்து உலக வங்கி மற்றும் பன்னாட்டு நிதியமைப்பின் பொருளாதார நிபுணர்கள் அடுத்த வாரம் கூடி விவாதிக்க உள்ளனர். அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள நிதிநெருக்கடியிலிருந்து மீள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இல்லாவிட்டால், வளர்ந்த நாடுகளின் பாதிப்பு வளரும் நாடுகள் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளுக்கும் நிதி நெருக்கடி மீண்டும் பரவி உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என உலக வங்கி தலைவர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 16, 2011

அரசு - தமிழ்க் கூட்டமைப்பு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் இன்று ஆரம்பமாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரனும் உறுதி செய்தார். தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து அரசாங்க பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதி களுக்குமிடையில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. ஆனால் இதுவரை காணப்பட்ட இணக்கப்பாடுகளின் அடிப்படையில் த.தே. கூட்டமைப்பு எழுத்து மூலமான உறுதியை அரசாங்கத்திடம் கோரியதையடுத்து பேச்சுவார்த்தை முறிவடைந்தது. அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான 10 ஆவதும் இறுதியுமான பேச்சுவார்த்தை ஓகஸ்ட் நடுப்பகுதியில் நடைபெற்றது.  இரு தரப்பினருக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் சார்பாக அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி. சில்வா, பாராளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, சஜின் வாஸ் குணவர்தன ஆகியோரும் தமிழரசுக் கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், மாவை சேனாதிராஜா சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் கே. கணேஷ்வரன் ஆகியோர் கலந்து கொள்வர்.

புரட்டாசி 16, 2011

இரு மொழி அறிவு இனங்களை ஒற்றுமைப்படுத்தும் ஒரு நல்வழியாகும்

இனப்பிரச்சினைக்கு இப்போது நிரந்தரத் தீர்வை ஏற்படுத்துவதற் கான சாதகமான சூழ்நிலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சிறந்த ஆளுமையின் கீழ் அரசாங்கம் ஏற்படுத்தி யிருக்கிறது. இதனால் மக்கள் இன்று இனப்பிரச்சினையைப் பற்றி அநாவசியமாக சிந்திப்பதற்கு பதில், நாட்டின் அபிவிருத்தி நடவடிக் கைகளுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தங்கள் முழுமையான பங் களிப்பை வழங்க வேண்டுமென்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பிற்கான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித் துள்ளார். இனங்களுக்கிடையிலான நல்லெண்ணம், சமூக உறவுகளை பலப்படுத் தும் ஒரு சாதகமான நிலை விளங்கி வருகின்றது. எங்கள் நாட்டில் பேசப்படும் மொழிகளில் இருந்து இந்த உண்மை வெளிப்படுகிறது. எனவே, மொழிக்கும் இனங்களுக்கும் இடையில் நெருக்கமான பிரி க்க முடியாத பந்தம் இருந்து வருகின்றது என்பதற்கு இது சான்று பகர்வதாக அமைந்துள்ளது. (மேலும்...)

புரட்டாசி 16, 2011

9/11 ஐ விட அதிகமாக மிரட்டும் 1/6...!!

பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்ததன் நினைவ(9/11)  அண்மையில் அனுசரித்தனர். பயங்கரவாதத்தின் கோரக்கரங்களிலிருந்து அமெரிக்கா இன்னும் விடுபடவில்லை என்று அந்நாட்டின் அதிபர்களும், அமைச்சர்களும், அரசு வட்டாரமும் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், சமூக ரீதியான நோக்கில் பார்த்தால் இந்த பயங்கரவாத ஆபத்தைவிட, வறுமையில் வாடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதுதான் பெரிய ஆபத்தாக உள்ளது என்கிறார்கள் அமெரிக்க மனிதவளத்துறை வல்லுநர்கள். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள் ஏழைகளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அரசு சார்பாக மேற்கொண்ட ஆய்வு தரும் அதிர்ச்சிகரமான தகவலாகும். ஆறில் ஒருவர(1/6) வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அமெரிக்காவின் கணக்கெடுப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது. தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் கணிசமான எண்ணிக்கையில் வறுமைக் கோட்டில் வாழ்பவர்கள் அதிகரித்து வருகிறார்கள். (மேலும்...)

புரட்டாசி 16, 2011

அனுராதபுரத்தில் சாதனை புரிந்த தமிழ்......? அது விசுவமடுவிலும் தொடர்ந்துள்ளது!

தெற்கில் களுத்துறை மகளிர் வித்தியாலய மாணவி சசிபிரபா பொன்சேகா, களுத்துறை மிரிஸ்வத்தை மகா வித்தியாலய மாணவி நெத்மி ரணவீர, கெக்கிராவை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் ஸக்கீ அகமட் ஆகியோரே 195 அதிகூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர். அதில் ஸகி அஹமட் தமிழ் மொழிமூலம் தோற்றியமை குறிப்பிடத்தக்கது. மற்றைய இருவரும் சிங்கள மொழி மூலம் தோற்றியவர்களாகும். விசுவமடு நெத்தலியாறு தமிழ் வித்தியாலயம், பிபிலை மெதகம மகா வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளும் 194 புள்ளிகளைப் பெற்று இரண்டா மிடத்தையும் ஹக்குறுவெல உதயால மகா வித்தியாலயம், பொல்காவலை அல் அக்ஷா முஸ்லிம் வித்தியாலயம், மஹியங்கனை தெஹிகொல்லை வித்தியாலயம், வவுனியா இறம்பைக்குளம் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகள் 193 புள்ளிகளைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர். மேலும் பத்துப் பாடசாலைகள் 192 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்திலுள்ளன. அவற்றில் நுகேகொட சென். ஜோசப் மகளிர் மகா வித்தியாலயம், நீர்கொழும்பு ஹரிச்சந்ர மகா வித்தியாலயம், இரத்தினபுரி தர்மபால மகாவித்தியாலயம், பலாங்கொடை சென். எக்னஸ் மகளிர் மகா வித்தியாலயம், நிக்கவரெட்டிய குணபால மலலசேகர வித்தியாலயம், அநுராதபுரம் டி.எஸ். சேனநாயக்க வித்தியாலயம், மாத்தளை நுககொல்ல மகா வித்தியாலயம், தனமல்வில கித்துல் கோட்டை கனிஷ்ட வித்தியாலயம், நிந்தவூர் அல் அஷ்ரக் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம் சென். ஜோன் பொஸ்கோ வித்தியாலயம் ஆகியன உள்ளடங்குகின்றனனெவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, யாழ். மாவட்டத்தில் யாழ். புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி ரமேஷ் நிநுர்ஷிகா 192 புள்ளிகளைப் பெற்று யாழ். மாவட்டத்திலேயே முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். அத்துடன் யாழ். மாவட்டத்தில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவர்களான லோ. டிலோஜன் 191 புள்ளிகளையும், வ. பவதாரகன் 190 புள்ளிகளையும், ர. மாதங்கி 188 புள்ளிகளையும், சி. தனலக்ஷன் 181 புள்ளிகளையும் பெற்றுள்ளனர்.

புரட்டாசி 16, 2011

அம்மா கொடுத்த நெத்தியடி

பரமக்குடி செல்ல சீமானுக்கு அனுமதி மறுப்பு

இந்தியாவின் பரமக்குடியில் கடந்த 11.09.2011 அன்று கலவரம் ஏற்பட்டது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற பரமக்குடி செல்வதற்கு பொலிசாரிடம் நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. கலவரப் பகுதியில் 144 தடை இருப்பதால் யாருக்கும் அனுமதி கிடையாது என பொலிஸ் தரப்பு கூறிவிட்டது. இதையடுத்து இந்தக் கலவரத்தில் படுகாயமடைந்தவர்கள், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார்.  அம்மாவை 'புகழ்ந்து?' வால்பிடிக்க முயலும் சீமானுக்கு அம்மா கொடுத்த நெத்தியடி இது என்று தமிழ் நாட்டு அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

புரட்டாசி 16, 2011

சிரியா மக்களுக்கே எங்கள் ஆதரவு வெனிசுலா அறிவிப்பு

சிரியா அரசுக்கும், அந் நாட்டு மக்களுக்கும் வெனி சுலாவின் ஆதரவு எப்போ தும் இருக்கும் என்று சிரி யாவுக்கு பயணம் மேற் கொண்டுள்ள வெனிசுலா பிரதிநிதிகள் குழுவின் தலை வரும், வெனிசுலாவின் துணை வெளியுறவுத்துறை அமைச்சருமான டெமிர் போர்ராஸ் அறிவித்துள் ளார். இதுகுறித்து செய்தியா ளர்களி டம் பேசிய அவர், எங்கள் ஆதரவை சிரியா வுக்குத் தெரிவிக்கவே நாங் கள் இங்கு வந்துள்ளோம். சிரியா மக்களோடு நாங்கள் உறுதியாக நிற்போம். சிரி யாவுக்கு எதிராக மேற்கத் திய ஊடகங்கள் தொடுத் திருக்கும் பொய்ப்பிரச்சா ரத்தை நாங்கள் கண்டிக்கி றோம் என்று குறிப்பிட் டார். வெனிசுலா ஜனாதிபதி சாவேசின் முழு ஆதரவை வெனிசுலா குழுவினர் சிரி யாவிடம் தெரிவித்துள்ள னர் என்று சிரியாவின் அதி காரப்பூர்வமான செய்தி நிறுவனமான சனா கூறியுள்ளது. (மேலும்...)

புரட்டாசி 16, 2011

இறுதித் தீர்வு எட்டும் வரை தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு

இனப்பிரச்சினைக்கான இறுதித் தீர்வு பெறும் வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளுடன் அரசு தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளை நடத்தும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனா தெரிவித்தார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று திடுதிப்பென சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நிரந்தர தீர்வை வழங்கிவிட முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அமைச்சரவை முடிவுகள் அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இச் செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் அதேவேளை இனப்பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பிரதிநிதிகளை நியமிப்பதற்காக தமிழ்க் கட்சிகளிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்க் கட்சிகளுடன் பேச்சு நடத்தும் அதேவேளை இறுதித் தீர்வை எட்டும் விதத்தில் பாராளுமன்ற தெரிவுக் குழுவும் அதன் பங்களிப்பை வழங்கும். (மேலும்...)

புரட்டாசி 16, 2011

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டி - கருணாநிதி

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தி. மு. க. தனித்து போட்டியிடும் என தி. மு. க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். தி. மு. க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை; தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்காமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பொதுப்பணி குறிக்கோளாகக் கொண்டு தி. மு. க. செயல்பட உள்ளது. இதுவே, எல்லோராலும் விரும்பப்படும், ஏற்கப்படும் நிலை என்பதையும் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்றும் தி. மு. க. முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு அணியையும் அமைக்காமல், தனித்து போட்டியிட தி. மு. க. முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி 16, 2011

இத்தாலி  போராட்டக்காரர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்

மக்கள் விரோத நடவ டிக்கைகளுக்கு நாடாளு மன்றத்தில் ஒப்புதல் அளித் துள்ளதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய இத்தாலி மக்கள் மீது காவல் துறையினர் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள் ளனர். சில்வியோ பெர்லுஸ் கோனி தலைமையிலான அரசு, சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஏராளமான திட்டங்களுக்கு மூடுவிழா நடத்தவுள்ளது. பொருளா தார நெருக்கடியை சமாளிக் கிறோம் என்ற பெயரில் சாமானிய மக்கள் மீது சுமை யை ஏற்றும் நடவடிக்கை களுக்கு அந்நாட்டின் நாடா ளுமன்றமும் ஒப்புதல் தந் துள்ளது. நாடாளுமன்றத் தில் பெர்லுஸ்கோனியின் ஆதரவாளர்கள் பெரும் பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்...)

புரட்டாசி 16, 2011

இந்திய எல்லைக்குள் சீனப் படையினர் அத்துமீறி நுழைந்து குண்டுத் தாக்குதல்

ஜம்மு- காஷ்மீரில் எல்லையை ஒட்டி இந்தியாவுக்குள் சீன இராணுவ வீரர்கள் அத்து மீறி நுழைந்து இராணுவப் பதுங்கு குழிகள், கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. லேயில் இருந்து 300 மீற்றர் தூரத்தில் உள்ள சுமர் பகுதியில் சீன இராணுவ வீரர்கள் ஹெலிகொப்டரில் நுழைந்து பதுங்கு குழிகள் மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்திய வான் பகுதிக்குள் 1.5 கிலோ மீற்றர் தொலைவு அவர்கள் ஊடுருவித் தாக்குதலை நிகழ்த்தினார்கள் என்று ஒரு தகல்வல் தெரிவிக்கிறது. ஆனால் மற்றொரு தகவலோ, ஹெலிகொப்டரில் வந்த சீன இராணுவ வீரர்கள் அவர்களது எல்லைப் பகுதியில் இறங்கினர். அங்கிருந்து இந்திய எல்லைக்குள் நடந்தே வந்து பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தினர் என்கின்றது. சுமர் பகுதியில் சீன இராணுவம் நுழைந்தது என்ற தகவலை இந்தி இராணுவம் மறுத்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்ததாகத் தகவலே இல்லை என்று இராணுத்தின் வடக்கு மண்டலச் செய்தித் தொடர்பாளர் கர்னல் ரஜேஷ் கலியா கூறியுள்ளார்.

புரட்டாசி 16, 2011

குளிருக்கு எதிராக உடம்பின் தற்காப்பு

குளிர் என்பது இயற்கையாகத் தோன்றக்கூடிய ஒரு விளைவு. குளிர் காலத்தில் குளிர் உணர்ச்சி தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இந்தக் குளிர் தன்மை தேசத்துக்குத் தேசம் வேறுபட்டிருக்கும். ஆண்டு முழுவதும் குளிராக உள்ள பல நாடுகள் உண்டு. அந்த நாடுகளில் குளிர் காலங்களில் குளிர் மிகக் கடுமையாக இருக்கும். என்றாலும் அந்த நாட்டு மக்கள் குளிரைத் தாங்கும் உடைகளை அணிந்து சூழ்நிலையை எளிதாகச் சமாளித்துவிடுகிறார்கள். ஆனால் நமது நாட்டைச் சேர்ந்தவர்கள் அங்கு சென்றால் அங்குள்ள கடும் குளிரைச் சமாளிப்பதற்கு அதிகக் கஷ்டப்படவேண்டியிருக்கும். (மேலும்...)

புரட்டாசி 16, 2011

What is called Discipline..(Really Cute)

புரட்டாசி 15, 2011

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர் - டக்ளஸ் தேவானந்தா!

அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் ஒரு மோசடிக்காரர் என குற்றஞ்சாட்டியுள்ளார் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் சிறிலங்கா அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா.யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக் குழு இயங்கி வருவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என பிளேக் தெரிவித்த கருத்து தொடர்பாகவே அமைச்சர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார். பிளேக் குறிப்பிட்ட சில நாட்களாக உள்நோக்கத்துடனேயே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் எனவும் ஈ.பி.டி.பி பற்றி அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களும் அவ்வகையில் உள்நோக்கம் கொண்டதுடன் உண்மைக்குப் புறம்பபானது எனத் தெரிவித்த அமைச்சர், பிளேக் உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஒரு மோசடிக்காரர் எனக் குற்றமும் சாட்டியுள்ளார்.அத்துடன் பிளேக், உள்நோக்கம் கொண்ட ஒரு சில தன்னுடைய கொடுக்கல் வாங்கல்களை உள்வாங்கக் கூடியவர்கள் ஊடாகவே செய்தியை பரப்பி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்திருக்கின்றார். யாழில் ஈ.பி.டி.பி ஆயுதக்குழு இயங்கி வருவதாகவும் அவர்கள் இன்னமும் மக்களிடம் கப்பம் பெற்று வருவதாகவும் யாழ்ப்பாண மக்கள் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவ்வாறு ஈ.பி.டி.பியினர் செயற்படுவது நாட்டின் சமாதானத்தை சீர்குலைக்கும் என கொழும்பில் பிளேக் தெரிவித்திருந்தார்.

புரட்டாசி 15, 2011

ராகுல் காந்தியைக் காட்டிலும் மோடி பிரதமராகவே அமெரிக்கா விரும்புகிறது!

வரும் 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பிரதமர் தேர்தலில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி- குஜராத் முதல்வர் நரேந்திர மோடி போட்டியிடுவது கிட்டத் தட்ட உறுதியாகிவிட்டது. இதில் மோடி பிரதமராக வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆய்வுக் குழு இந்தியா தொடர்பான பல்வேறு அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் 2014-ம் ஆண்டு பிரதமர் தேர்தல் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. (மேலும்...)

புரட்டாசி 15, 2011

முன்னாள் புலிகளுக்கு புனர்வாழ்வு! இடம்பெயர்ந்தோர் மீள்குடியமர்வு

இலங்கையில் சாதகமான முன்னேற்றம், வடக்கில் தமிழ் பேசும் பொலிஸாரை பணியில் ஈடுபடுத்துவது அவசியம்
 

நீண்டகால யுத்தப் பாதிப்பிலிருந்து இலங்கை மீண்டு வருவதைக் காணக்கூடியதாகவிருப்பதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்தார். 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் தான் இலங்கையை விட்டு சென்றபோது காணப்பட்ட நிலைமையைவிட தற்போது நாட்டின் நிலைமை மிகவும் முன்னேற்ற கரமாக மாறியுள்ளது. இடம்பெயர்ந்த வர்களில் பெரும்பாலானவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர் வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள் ளனர். இதுபோன்ற பல்வேறு முன்னேற்றங்கள் நாட்டில் ஏற்பட்டுள்ளன என்று நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பிளேக் கூறினார். (மேலும்...)

புரட்டாசி 15, 2011

இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்து

ஆங்கில ஆசிரிய பயிற்சித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையே கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். ஜனாதிபதி ஆலோசகரும் ஆங்கில மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான செயலணியின் ஒருங்கிணைப்பாளருமான சுனிமல் பெர்ணான்டோ மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எச்.எம். குணசேகர, இலங்கை வெளியுறவு மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் ஆசிரியர்களும் இலங்கையின் ஒன்பது மாகாணங்களின் உத்தியோகத்தர்களும் ஹைதராபாத்திலுள்ள ஆங்கில மற்றும் பிற நாட்டு மொழிகள் பல்கலைக்கழகத்தின் அங்கத்தவர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர். (மேலும்...)

புரட்டாசி 15, 2011

செங்கல்பட்டில் இலங்கையர் உண்ணாவிரதம்

செங்கல்பட்டு விஷேட முகாமில் விடுதலை கோரி கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டு வரும் இலங்கை அகதிகள் 13 பேரையும் அவர்களது உறவினர்களையும் உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு பொலிஸார் அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும் போராட்டத்தினை கைவிடாத பட்சத்தில் அவர் களை புழல் சிறைச்சாலைக்கு மாற்றி விடுவதாக கியுப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் அச்சுறுத்தி யதாகவே தெரிவிக்கப் பட்டுள்ளது.நாங்கள் இரு வருடங்கள் எவ்வித குற்றப் பத்திரிகைகளும் தாக்கல் செய்யாதும், எவ்வித வழக்கும், தொடரப்படாமலும், விஷேட முகாமில் உள்ளோம். அதிகாரிகள் எம்மை அச் சுறுத்தும் போது நாங்கள் தற் கொலை செய்து கொள் வதாக தெரி வித்தோம். அப்பொது அவர்கள் எமது உறவினர்களை அழைத்து எம்மை போராட்டத்தினை கைவிடப் பணிக்கு மாறு அச்சுறுத்தியுள்ளனர் என விஷேட முகாமில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை போராட்டத்தில் இணைந்து கொள்ளவிருந்த ஒரு சிலரையும் பொலிஸார் அச்சுறுத்தி தடுத்துவிட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

புரட்டாசி 15, 2011

இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நாளை விவாதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 18ஆவது கூட்டத் தொடர் இடம்பெறும் காலகட்டத்தில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கையின் மனித உரிமைகள் பற்றிய விவாதத்திற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விவாதத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ள இருக்கின்ற போதிலும், பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் தமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்புகொண்டு இந்த விவாதத்தில் தவறாது கலந்துகொண்டு கருத்துரைக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவாதம் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி 15, 2011

முதல் வகுப்பு சிறை வசதியை எதிர்பார்க்கும் ராஜீவ் கொலைக் குற்றவாளி நளினி

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று முன்தினம் நளினியை சந்தித்துப் பேசிய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது; வேலூர் பெண்கள் சிறையில் சிறைத் துறையினர் ஒதுக்கியுள்ள இடத்தில் நளினி தங்கியுள்ளார். அங்கு போதிய வசதிகள் இல்லை என நளினி கூறினார். எம். சி. ஏ. பட்டதாரியான நளினிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என 2009 டிசம்பரில் சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி முன்பு வேலூர் பெண்கள் சிறையில் நளினிக்கு முதல் வகுப்பு வசதி செய்து கொடுக்கப்பட்டது. சென்னை புழல் சிறைக்கு நளினி மாற்றப்பட்டதால், அவருக்கு வழங்கப்பட்ட முதல் வகுப்பு வசதி ரத்துச் செய்யப்பட்டது. வேலூர் சிறைக்கு நளினி மீண்டும் மாற்றப்பட்டதால் முதல் வகுப்பு வசதி அவருக்கு தேவைப்படுகிறது. நளினியின் சார்பில் சிறைத்துறை தலைவருக்கு மனு கொடுத்திருக்கிறேன். இவ்வாறு வழக்கறிஞர் புகழேந்தி கூறினார். பெண்கள் சிறையில் கேட்ட போது, நளினிக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுத்திருப்பதாகக் கூறினர்.

புரட்டாசி 15, 2011

வேலைவாய்ப்பை அதிகரிக்க அமெரிக்காவில் புதிய வரிகள்

அமெரிக்காவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்காக வரிகளில் சீர்திருத்தம் கொண்டு வரும் புதிய சட்டத்தை இயற்றத் திட்டமிட்டுள்ளார் ஜனாதிபதி ஒபாமா. இதற்கான சட்டமூலம் திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஒபாமா கூறியதாவது: வேலைவாய்ப்பின்மை 9 சதவீதமாக இருக்கும் நிலையில் இந்தப் புதிய சட்ட மூலம் அதைப் போக்க முடியும். குடியரசுக் கட்சி, ஜனநாயக்க கட்சி ஆகிய இரு தரப்பினரையும் கலந்து ஆலோசித்தே இந்த சட்ட மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை கீழ்ச்சபையான காங்கிரஸ் நிறைவேற்றுவதுதான் முறையாக இருக்கும். இதில் தாமதம் ஏற்படக்கூடாது என்று கூறியுள்ளார். தனி நபர் மற்றும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் புதிய வரிகளினால் அடுத்த பத்து வருடங்களில் ரூ. 20 இலட்சம் கோடியைத் திரட்ட முடியும் என்று அமெரிக்க அரசு எதிர்பார்க்கிறது.

புரட்டாசி 15, 2011

பொலிஸாரை இன ரீதியில் வேறுபடுத்திப் பார்ப்பது தவறு

றொபேர்ட் ஓ பிளேக்கிற்கு பிரதியமைச்சர் முரளி பதில்

இலங்கையில் தமிழ் பொலிஸார், சிங்கள பொலிஸார், முஸ்லிம் பொலிஸார் என வேறுபடுத்தி கடமைகளில் ஈடுபடுத்துவது அவசியமில்லை. இங்கு ஸ்ரீலங்கா பொலிஸ் என்றே வழங்கப்படுகிறது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக் வடக்கில் தமிழ் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத் திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  இலங்கையில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்காக சகல பகுதிகளிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் தமிழ் பொலிஸார் என்றோ, சிங்கள பொலிஸார் என்றோ, முஸ்லிம் பொலிஸார் என்றோ வேறுபடுத்திப் பார்ப்பதும் கடமைகளில் ஈடுபடுத்துவதும் கிடையாது என பிரதி அமைச்சர் கருணா அம்மான் தெரிவித்தார்.

புரட்டாசி 15, 2011

‘பேங்க் ஒப் அமெரிக்கா’வில் 30 ஆயிரம் ஊழியர் நீக்கம்

அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கியான, ‘பேங்க் ஒப் அமெரிக்கா’, 30 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரிய புகழ்பெற்ற, “பேங்க் ஒப் அமெரிக்கா” (பி.ஏ.சி), வங்கியில், தற்போது இரண்டு இலட்சத்து 88 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அமெரிக்காவில் 2008ல் ஏற்பட்ட “சப் பிரைம்” கடன் விவகாரத்தை அடுத்து ஏற்பட்ட அடமானக் கடன் சிக்கலில் இருந்து, இந்த வங்கி இன்னும் மீளவில்லை. இந்நிலையில், 2014ம் ஆண்டுக்குள், வங்கியின் செலவுகள், ஆண்டுக்கு 5 பில்லியன் டொலர் அளவிற்குக் குறைக்கப்பட வேண்டும் என்ற புதிய திட்டத்தை, வங்கி கொண்டு வந்துள்ளது.

புரட்டாசி 15, 2011

வவுனியாவில் மர்ம மனிதர்களின் தாக்குதலில் மதபோதகர், கர்ப்பிணிப் பெண் உட்பட ஐவர் காயம்

வவுனியாவில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு மர்ம மனிதர்களின் தாக்குதலுக்குள்ளான நிலையில் மத போதகர் உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வவுனியாவின் புறநகர்ப்பகுதிகளான அரபா நகர், செக்கடிப்புளவு, மற்றும் சாம்பல் தோட்டம் ஆகிய கிராமங்களிலேயே ஒரே நாளில் மர்மனிதர்களின் தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளன. செக்கடிப்புளவில் இரவு வேளையில் வீட்டு வளவுக்குள் சென்றவர்கள் பொலிஸார் போன்று நடித்து கதவைத் திறக்குமாறு கோரியுள்ளனர்.  இந்த நிலையில் வீட்டின் மறுபகுதியில் கணவனும் குழந்தைகளும் தூங்கிக் கொண்டிருந்தமையினால் இரண்டு மாத கர்ப்பிணிப்பெண் வீட்டுக் கதவைத் திறந்துள்ளார். இவ்வேளையில் திடீரென அவரது தலையில் தடிகள், மற்றும் இரும்புக் கம்பியினால் மர்ம மனிதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளளனர். இதன் காரணமாக அச்சமடைந்த அப்பெண் வீட்டை விட்டு வெளியே ஓடி மதபோதகரின் வீட்டுப்பக்கமாக சென்றுள்ளார். (மேலும்...)

புரட்டாசி 15, 2011

சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம்  ரஷ்யா அறிவிப்பு

தற்போது துவங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தில் சுதந்திர பாலஸ் தீனத்தை அங்கீகரிக்கும் தீர் மானம் கொண்டு வரப்பட் டால் ரஷ்யா அதை ஆத ரித்து வாக்களிக்கும் என்று ஐ.நா.வுக்கான ரஷ்யத்தூதர் விடாலி சுர்கின் அறிவித் துள்ளார். சர்வதேச அளவில் சுதந் திர பாலஸ்தீனத்திற்கு ஆதர வாகக் கருத்து திரட்டும் பணி துவங்கியுள்ளது. எதிர் பார்த்ததைவிட அதிகமான அளவில் அரசாங்கங்களும், பன்னாட்டு மக்களும் இதற்கு ஆதரவு தெரிவித் துள்ளனர். அமெரிக்காவும், இஸ்ரேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, ஆதரிப்பவர்களை மிரட்டி யும் வருகின்றன. இதைமீறி யே 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவுக்கரம் நீட் டியுள்ளன. (மேலும்...)

புரட்டாசி 15, 2011

அமெரிக்காவில் 6 இல் ஒருவர்