ஆனி
2011 மாதப் பதிவுகள்
ஆனி
30,
2011
அரசியல் தீர்வு தொடர்பிலான ஜனாதிபதியின் கூற்றுக்கு இந்தியாவே பதிலளிக்க
வேண்டும்
தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியின்
தெளிவுபடுத்தல்கள் மற்றும் அவரது நிலைப்பாடு ஆகியவற்றுக்கு இந்தியாவே
பதிலளிக்க வேண்டுமே தவிர அதற்கான தேவை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு
கிடையாது என்று கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை
சேனாதிராஜா தெரிவித்தார். இலங்கைத் தமிழர் விவகாரம் மற்றும் அரசியல் தீர்வு
தொடர்பில் நடைமுறைப்படுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் கடைப்பிடிக்கவேண்டிய
அணுகு முறைகள் குறித்து இந்தியா இலங்கைக்கு எந்தவித அழுத்தமும்
கொடுக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியிருப்பதற்கு இந்தியாவே பதிலளிக்க
வேண்டும், கூட்டமைப்பு அல்ல. மீண்டும் மீண்டும் ஒரே விடயத்தை பேசிக்
கொண்டிருக்கவும் எமக்கு நேரமில்லை.
(மேலும்...)
ஆனி
30,
2011
போர்க்
குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா மீண்டும்
வலியுறுத்தல்
போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்துமாறு இலங்கையை
அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. உரிய விசாரணை நடாத்தாவிடின் சர்வதேச
அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஆனால் சர்வதேச
விசாரணை நடத்தப்பட வேண்டுமென அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கோரவில்லை.
பொறுப்புடைமையை உறுதிப்படுத்துவதற்கான அடிப்படை பொறுப்பு உள்ளூர்
அதிகாரிகளுக்கு உள்ளது என அத்திணைக்களம் கூறியுள்ளது.
(மேலும்...)
ஆனி
30,
2011
The robot doctor will see you now
Some doctors are known for their less-than-superb bedside manners. In
their defence, they’re only human. But it’s possible the human element
will play less of a role in the future as machines take more
responsibility for diagnosing diseases, assigning treatments and
ensuring hospitals run smoothly and efficiently. Don’t expect computers
to replace doctors. But as advancements in artificial intelligence
continue to unfold, a growing number of computer experts, health
professionals and businesses believe machines will have an increasingly
important role to play. While that could result in more accurate
diagnoses, fewer mistakes and cost savings, experts also warn that
relying too heavily on machines could backfire. For instance, computers
with inaccurate or incomplete information could give the wrong
diagnosis, putting lives at risk.
(more...)
ஆனி
30,
2011
சனல் 4 துர்ப்பிரசாரங்களை முறியடிக்கும் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கிறது
30 ஆண்டுக்கும் அதிகமான பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகர மான முறையில்
முடிவுக்கு கொண்டுவந்து நாட்டு மக்களை பயங்கரவாத பிடியிலிருந்து
மீட்டெடுத்து, அவர்களின் அடி ப்படை மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்து,
மீண்டும் நாட் டில் சமாதானத்தையும், அமைதியையும், சுபீட்சத்தையும்
மக்களிடையே இன ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும், இணக்கப்பாட்டையும் ஏற்
படுத்தி வெற்றிநடை போடும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத் தைப் பார்த்து,
பொறாமைப்படும் உள்நாட்டு, வெளிநாட்டு தேசத்து ரோக சக்திகள் இன்று அரசாங்கத்
தலைவர்கள் மீது போலியான யுத்தக் குற்றச்சாட்டுக்களை ஜோடித்து அவர்களை
குற்றவாளிகளா க்கி மின்சார கதிரையில் அமர்த்தி தண்டிப்பதற்கு எடுக்கப்படும்
முய ற்சிகளை மக்களின் பேராதரவைப் பெற்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும்,
அவரது அரசாங்கமும் முறியடித்துவிடும் என்பதில் எவ்வித சந்தேகமே இல்லை.
(மேலும்...)
ஆனி
30,
2011
2031 இல் வேற்றுக்கிரகவாசிகளை சந்திக்கலாம்:
ரஸ்ய விஞ்ஞானி
மனித குலமானது 2031 ஆம் ஆண்டளவில் வேற்றுக்
கிரக வாசிகளை சந்திக்க முடியும் என ரஸ்ய விஞ்ஞானி ஒருவர்
எதிர்வுகூறியுள்ளார். இதனை எதிர்வு கூறியுள்ளவர் 'ரஸ்யன் எக்கடமி ஒப் சயன்ஸ்
எப்ளையிட் அஸ்ட்ரோனோமி இன்ஸ்டிடூட்' இன் இயக்குனர் பின்கில்ஸ்டீன் ஆவார்.
வேற்றுக் கிரக வாசிகள் தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் சர்வதேச மன்றத்தில்
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். "உயிர்களின் தோற்றமானது
அணுக்கள் உருவாகுவதை போல தவிர்க்க முடியாதது. வேற்றுக்கிரகங்களிலும்
உயிரினங்கள் வாழ்கின்றன. அவற்றை நாம் 20 வருடங்களுக்குள் கண்டு பிடிப்போம்"
என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள
அவர் நட்சத்திர மண்டலத்தில் நாம் அறிந்த வகையில் சூரியனைச் சுற்றிவரும்
கோள்களில் 10 % பூமியை ஒத்தவை. இவற்றில் நீரைக் கண்டுபிடிக்க முடிந்தால்
ஏன் உயிர்களைக் கண்டு பிடிக்க முடியாதென கேள்வியும் எழுப்பியுள்ளார்.
வேற்றுக் கிரக வாசிகளும் உருவத்தில் மனிதர்களை ஒத்ததாக காணப்படலாம் எனவும்,
வேறு வகையான தோல் நிறத்தினை உடையவர்களாக இருக்கலாம் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
ஆனி
30,
2011
மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் ஆயுதங்கள் மீட்பு
_
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட பாவக்குடிச்சேனை பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த
ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொலிஸ்
விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்
போதே இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 கிலோ கிராம் நிறையுடைய ஒரு
கைகுண்டு, சீ 4 ரக வெடிபொருள் 1.8 கிலோ கிராம், ரீ 56 ரக மெகஸின் 5, ரீ 56
ரக ரவைகள் 107, ரீ 56 ரக டுல் கிட் 1, 20 மீற்றர் நீளமுடைய வயர் ரோல், 3
சயனட் குப்பிகள், 4 கைக்குண்டு மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத் தகடு
ஒன்று உள்ளிட்ட சில வெடிபொருட்கள், ஆயுதங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட ஆயுதங்கள் வவுணதீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதோடு, வவுணதீவு
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனி
30,
2011
Greek anti-austerity protests turn ugly
(Elena Becatoros and Menelaos Hadjicostis )
Youths hurled rocks and fire bombs at riot police in central Athens on
Tuesday as a general strike against new austerity measures brought the
country to a standstill. Lawmakers are embarking on their second day of
debate on austerity measures that must be passed in votes on Wednesday
and Thursday if Greece is to receive another batch of bailout funds to
see it beyond the middle of next month. If the votes don't pass, Greece
could become the first euro zone nation to default on its debts, and
that could send out huge shock waves through the global economy. The
new austerity drive is proving hugely unpopular in Greece and another
demonstration in central Athens soon descended into violence. For
several hours, police fired volleys of tear gas and stun grenades at
masked and hooded youths just before the second day of debating was to
resume. Police said 18 people were detained, with five of them later
arrested, while four policemen were injured and transferred to a
military hospital.
(more...)
ஆனி
30,
2011
‘யூரோ’
வை கைவிடுகிறது ஜேர்மனி
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜேர்மனி, யூரோ
நாணயத்தை கைவிட்டு, பழைய நாணயமான ‘டச்மார்க்’கிற்கு மாற இருப்பதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் அனைத்தும், ஒரே மாதிரியாக யூரோ நாணயத்தை
பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், ஜேர்மனி நாட்டின் மத்திய வங்கியான,
பண்டெஸ் வங்கி, ‘டச்மார்க்’ சின்னம் பதித்த நாணயத்தை அச்சிட,
‘உத்தரவிட்டுள்ளதாகவும், இதையடுத்து, ‘டச்மார்க்’ சின்னம் கொண்ட நாணயங்கள்
அச்சிடும் பணி நடந்து வருவதாகவும், அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி
வெளியிட்டுள்ளன. யூரோ நாணயத்தை பெற்றிருக்கும் திரீஸ்நாடு, தற்போது
பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில், யூரோ நாணயத்தின்
மதிப்பை சர்வதேச அளவில் நிலை நிறுத்த வேண்டுமானால், கிரீஸ் நாட்டை
நெருக்கடியில் இருந்து ஐரோப்பிய நாடுகள் காப்பாற்றியே ஆக வேண்டும் என்ற
நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், யூரோ நாணயத்தின் மதிப்பு எதிர்காலத்தில்
கேள்விக்குறியாகி உள்ளதால், ஜேர்மன் நாட்டின் பெரும்பான்மையான மக்கள்,
‘டச்மார்க் நாணயத்திற்கு மாற வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ஆனி
29,
2011
வடமாகாண சபைக்கு
அடுத்தாண்டு தேர்தல்
வடமாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம்
நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
தெரிவித்தார். வடக்கில் மீள்கட்டுமானப் பணிகளும் மக்களின் வாழ்வாதாரக்
கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருவதால், அடுத் தாண்டு வரை தேர்தலை
ஒத்தி வைத்தி ருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். ஊடக நிறுவனங்களின் உயர்
அதிகாரிகளை யும் பத்திரிகை ஆசிரியர்க ளையும் நேற்று (28) அலரி மாளிகையில்
சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். வடக்கில் அபிவிருத்திப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மக்கள் தமது பிரதிநிதிகளைத் தாமாகவே
தெரிவு செய்து தாம் விரும்பியவாறு தேவைகளை நிறை வேற்றுவதற்கான வாய்ப்பை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வழங்கும். அதன் பின்னர் ஒட்டுமொத்த
வடமாகா ணத்திற்கான தேர்தல் நடத் தப்படும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி,
அரசியல் கட்சிகளால் எட்டப்படும் அரசியல் தீர்வு குறித்து பாராளுமன்றத்
தெரிவுக்குழுவின் முடிவுகளை அமுல்படுத்த பின்நிற்கப் போவ தில்லையென்றும்
சுட்டிக்காட் டினார்.
ஆனி
29,
2011
இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு அனுமதி
மறுப்பு
மகிந்தவுக்கு கொடுக்கப்பட்ட முதல் எச்சரிக்கை?
இந்தியாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த
ராஜபக்ச ஆடும் ஆட்டத்தின் நேரடி விளைவாகவே இந்திய துடுப்பாட்ட அணி வீரர்களை
சிறிலங்காவுக்கு அனுப்ப இந்திய துடுப்பாட்டச்சபை மறுத்திருக்கக் கூடும்
என்று ஆங்கில ஊடகம் ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது. சிறிலங்கா
துடுப்பாட்டச்சபை நடத்தவுள்ள, சிறிலங்கா பிறீமியர் லீக் போட்டிகளில் இந்திய
துடுப்பாட்ட வீரர்கள் பங்கேற்பதற்கு இந்திய துடுப்பாட்டச்சபை
தடைவிதித்துள்ளது. இந்தியாவின் இந்த முடிவு சிறிலங்காவுக்கு பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்திய துடுப்பாட்டச் சபையுடன்
சிறிலங்கா துடுப்பாட்டச்சபை அதிகாரிகள் பேச்சுக்களை நடத்திய போதும்
இணக்கப்பாடு ஏற்படவில்லை.
(மேலும்...)
ஆனி
29,
2011
தெரிவுக்குழு எடுக்கும் தீர்மானமே இனப்பிரச்சினைக்கு
இறுதி தீர்வு
-
ஜனாதிபதி
பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த
முடிவையும் நான் ஏற்றுக் கொள்வேன்
“இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காணும் முழுப்பொறுப்பும் விரைவில்
நியமிக்கப்படும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்தக் குழு எடுக்கும் தீர்மானம் பாராளுமன்றத்தை வலுப்படுத்துவதுடன்
ஜனநாயகத்தையும் தழைத்தோங்கச் செய்யும்.” ‘அதேநேரம் பாராளுமன்ற தெரிவுக்குழு
எடுக்கும் தீர்மானமே இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வாகவும் அமையும்.
பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் எந்த முடிவையும் நான் ஏற்றுக்கொள்வேன்’
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று அலரிமாளிகையில் தனியார்
மற்றும் அரசாங்க பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின்
பொறுப்பாளர்களையும் சந்தித்த போது தெரிவித்தார்.
(மேலும்...)
ஆனி
29,
2011
Canada Post strike
Trade union-based NDP facilitates passage of striking-breaking law
By
Keith Jones
The trade union-based New Democratic Party (NDP) has facilitated passage
of a savage strikebreaking law that criminalizes all job action by the
country’s 48,000 urban postal workers and ensures sweeping contract
concessions will be imposed upon them.On Saturday, after just 58 hours
of parliamentary debate and maneuvering, the NDP bowed to pressure from
the majority Conservative government and the corporate media and
abandoned its half-hearted campaign to delay passage of Bill C-6. Soon
after, the Conservative-dominated House of Commons adopted the bill,
while the three other opposition parties joined the NDP in making a
token display of dissent by voting against it. The anti-worker
legislation is now being rushed through the Senate and will receive
royal assent, thereby becoming law, no later than this morning.
(more...)
26.06.2011 அன்று சுவிஸ் பேர்ன் மாநகரத்தில் நடைபெற்ற தியாகிகள் தினம்
அஞ்சலி நிகழ்வு
தோழர்கள் சுகு வரதன் அவர்களினது சிறப்பு உரை
ஸ்கைப் தொடர்பு வழியாக .......
சுவிஸ் பேர்ன் மாநகரத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா
கட்சியினரால் 26.06.2011 அன்று 2.00 மணியளவில் மக்களுக்காக மண்ணில் மடிந்த
தியாகிகளுக்கும் பொதுமக்களுக்கும் சகோதர அமைப்புகளின் போராளிகளுக்கும்
மிகவும் உணர்வு பூர்வமாக 21வது தியாகிகள்; தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இவ்
அஞ்சலி நிகழ்வில் பெரும் தொகையான மக்களும் சகதோழமை அமைப்புகளான புளொட்
ஈ.என.;டி.எல்.எவ் தோழர்களும் ஊடகவியளார்களும் பத்திரியாளர்களும் கலந்து
கொண்டனர் தியாகிகள் தின ஆரம்ப நிகழ்வாக சுவிஸ் கிளை பொறுப்பாளர் தோழர்
செந்தா அவர்கள் குத்து விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
(மேலும்...)
ஆனி
29,
2011
ஆனி
29,
2011
“I Want You All to Become Sports Stars” Commander SF-J Tells Jaffna
Students
Commander Security Forces -
Jaffna (SF-J) Major General Mahinda Hathurusinghe extended his heartiest
wishes to young students from three schools in Jaffna leaving for
Colombo to take part in a national level football tournament. Thirty
three students and six teachers from Jaffna College Vaddukkoddai, St.
Henry’s College Illavalai and St. Patrick’s College Jaffna met Commander
SF-J at the Civil Affairs and Public Relations Office before their
departure from Jaffna on Friday (24). “We are one nation living in one
country. We all have equal rights. Face the tournament, show your skills
and bring the Cup to Jaffna. I want you all to become stars,” Maj. Gen.
Hathurusinghe told the boys wishing them good luck. They will vie for
the Sam Chandrasinghe Challenge Trophy organized by the Old Anandians’
Football Association in collaboration with Sam Chandrasinghe Football
Academy Colombo. Matches will be held at Colombo Race Course on 26th and
27th June. Security Forces Headquarters - Jaffna arranged free transport
for them to travel to Colombo from Jaffna.
ஆனி
29,
2011
என்கிட்ட ஃபேக்ட்ஸ் இருக்கு சீமான் கிட்ட பேச்சு
இருக்கு -
நடிகை விஜயலெட்சுமி
‘‘மூணு வருஷமாக நானும் சீமானும் ரிலேஷன்ஷிப்ல தான் இருக்கோம். அவர்
ஜெயிலுக்குப் போனதிலிருந்து, அவரோட அப்ஸ் அண்ட் டவுன்ஸ் எல்லாத்திலும் நான்
கூடவே இருந்திருக்கேன். நாங்க கல்யாணம் பண்றதாகத்தான் இருந்துச்சு. எங்க ஃபேமிலியில
எங்க திருமணத்தை ஏத்துக்கிட்டதாலதான் தொடர்ந்து ரிலேஷன்ஷிப்ல இ ருந்தோம்.
பொதுவாக ஜெயிலுக்குப் போயிட்டு வந்தா யாரும் என்கரேஜ் பண்ண மாட்டாங்க. ஆனால்
அப்ப கூட அவரோடயே நான் இருந்திருக்கேன்.
(மேலும்...)
ஆனி
29,
2011
தப்பியோடி வந்த தமிழ் மக்களை புலிகள் சுட்டுக் கொன்றனர், ஆளில்லா விமானம்
தத்ரூபமாக படம் பிடித்துள்ளது
இறுதிக்கட்ட யுத்தம் முல்லைத் தீவில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த போது நாம்
ஆகாயத் திற்கு அனுப்பிய விமானியில்லாத தன்னிச்சையில் இயங்கும் விமானம்
அரசாங்கத்தரப்புக்கு தப்பியோடி வரும் மக்களை எல்.ரி.ரி.ஈயினர்
துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யும் உண்மைக் காட்சிகளை தத்ரூபமாக
படமெடுத்துள்ளது” என தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்த வீடியோ
காட்சிகளை இலங்கையில் உள்ள வெளிநாட்டு ராஜதந்திரிகளை அழைத்து, அவர்கள்
முன்னிலையில் அந்தக் காட்சிகளை பார்த்தேன் என்று கூறினார். இதிலிருந்து
வெளிநாட்டு அரசாங்கங்கள் எல்.ரி.ரி.ஈயினரின் கொடுமைகளை நன்கு புரிந்து
கொண்டு ள்ளார்கள் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
(மேலும்...)
ஆனி
29,
2011
அரசு - தமிழ்க்கூட்டமைப்பு இன்று 8வது சுற்று
பேச்சு
இனப்பிரச்சினை
தீர்வு தொடர்பான முக்கிய ஆவணம் கூட்டமைப்பிடம் இன்று கையளிப்பு
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக
அமுல்படுத்தப்பட வேண்டிய முக்கிய விளக்கங்கள் அடங்கிய எழுத்து மூல ஆவணத்தை
அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இன்று சமர்ப்பிக்கவுள்ளது.
அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
பிரதிநிதிகளுக்குமிடையிலான 8வது சுற்றுப் பேச்சு வார்த்தை இன்று பிற்பகல் 3
மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் போதே
அரசாங்கம் தனது எழுத்துமூல ஆவணத்தை கையளிக்குமென தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
(மேலும்...)
ஆனி
29,
2011
ஹசாரே, ராம்தேவுக்கு பதிலடி கொடுக்காவிடின்
ஆட்சிக்கு ஆபத்து
ராகுலை
களமிறக்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்
மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் பாபா
ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான்
சரியானவர். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் இறக்கிவிட
வேண்டும்” என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர்.
கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, அன்னா ஹசாரே, பாபா
ராம்தேவ் போன்றோர், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்துகின்றனர்.
இவர்களின் போராட்டத்தால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடத்துவதோடு மட்டு மல்லாமல்,
மத்திய அரசையும், காங்கிரஸ் தலைவர்களையும் கடுமையாக விமர்ச் சிக்கின்றனர்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க போவதாகவும், அன்னா
ஹசாரே அரசு க்கு, எச்சரிக்கை விடுத்துள்ளார். இது போன்ற தனிப்பட்ட நபர்கள்,
தங்களின் தன் னிச்சையான நடவடிக்கை களால் அரசுக்கு இணையான அதிகாரமிக்க ஒரு
அமைப்பை ஏற்படுத்தி நெருக்கடி கொடுக்க முயற்சிக்கின்றனர்.
(மேலும்...)
ஆனி
29,
2011
இனப்பிரச்சினைக்கு நிரந்தர சமாதான தீர்வைக் காண அரசாங்கம் பின் நிற்காது
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு அபகீர்த்தியை
ஏற்படுத்தக் கூடிய வகையில் தருஸ்மன் அறிக்கை, சனல் 4 போலி வீடியோ ஆவணப் படம்
போன்றவற்றை தயாரிப்பதற்கு பின் னணியில் இருந்து செயல்பட்டவர்கள்
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்களில் ஒருசிலர் மட்டுமன்றி,
அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் தேர்தல் மூலம் கவிழ்த்து விடுவதற்கு எடுத்த
முயற்சிகள் படு தோல்வியடைந்ததனால் திரைமறைவிலிருந்து எமது நாட்டின்
தென்னிலங்கை அரசியல்வாதிகளும் சதி செய்து வருவது இப்போது அரசாங்கத்திற்கு
ஆதாரபூர்வமாக தெரிய வந் திருக்கிறது.
(மேலும்...)
ஆனி
28,
2011
ஜெர்மனியில் தியாகிகள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.தோழர்கள் சுகு, வரதன்
Skype ஊடாக சிறப்புரையாற்றினார்கள்.
25.06.2011 அன்று மாலை ஜெர்மனியில் சிறப்பான முறையில் தியாகிகள் தினம்
அனுஸ்டிக்கப்பட்டது. தோழர் அலெக்ஸ் தலைமையில் நடைறெ;ர இந்நிகழ்வு மாலை
17;.30 க்கு ஆரம்பமாகி மாலை 20.30 மணிவரை நடைறெரது. இந்நிழ்வுக்கு PLOTE,
TULF மற்றும் ஜனநாயக முற்போக்கு எண்ணங்கொண்டவர்கள்இமாற் கருத்து
எண்ணங்கொண்டவர்களென பலரும் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் மரணித்த
அனைத்துபொது மக்கள் தோழர்கள் போராளிகள் அனைவரு க்கும் இரண்டு
நிமிடமௌனஅஞ்சலியும் அதைத்தொடர்ந்து தோழர் பத்மநாபாவின் நண்பர் சிவா மற்றும்
திருமதி அருந்ததி மோகன் ஆகியோரின் குத்துவிளக்கேற்ரல் வைபவத்துடன்
நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
(மேலும்...)
ஆனி
28,
2011
பிரித்தானியாவில்
தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
பிரித்தானியாவில் இருந்து தமிழ் அகதிகளை திருப்பி அனுப்புவதற்கு எதிராக
தமிழர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அகதிகளாக தஞ்சம்கோரிய தமிழ்
மக்களை நாடுகடத்த வேண்டாம் என கோரிஇ பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று
இடம்பெற்றுள்ளது. பிரித்தானியப் பிரதமரின் காரியாலயத்திற்கு முன்னால் நேற்று
மாலை 4:30 மணி முதல் 7:30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(மேலும்....)
ஆனி
28,
2011
முல்லைத்தீவு
வள்ளிபுனம்
பிரதேசத்தில் 917 பேர் நேற்று மீளக் குடியமர்வு
முல்லைத்தீவு மாவட்டம், வள்ளிபுனம்
பிரதேசத்தில் நேற்றையதினம் 311 குடும்பங்களைச் சேர்ந்த 917 பேர்
மீள்குடியமர்த்தப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தின்
உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். இறுதிக்கட்ட மோதல்களின் போது
இடம்பெயர்ந்து செட்டிக்குளம் மெனிக் பார்ம் முகாமில் தங்கியிருந்த இவர்கள்,
நேற்றையதினம் முகாமிலிருந்து அழைத்து வரப்பட்டு மீள்குடியமர்த்தப்
பட்டுள்ளனர். உடையார்கட்டு பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் உரிய
பதிவுகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சொந்த வீடுகளில் குடியமர்த்தப்
படுவதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார். அடுத்தகட்டமாக எதிர்வரும் சில
தினங்களில் முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு வடக்கு பிரதேசத்தில் 337
குடும்பங்கள் மீள் குடியமர்த்தப்பட விருப்பதாக அவ்வதிகாரி தினகரனுக்குத்
தெரிவித்தார்.
(மேலும்....)
ஆனி
28,
2011
வெனிசுலா
நனவாகும்
“அனைவருக்கும்
வீடு” திட்டம்
நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு குடியிருக்க வீடில்லாத நிலையில், ஹியூகோ
சாவேஸ் தலைமையிலான வெனிசுலா அரசு அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை
அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக மிகவும் தேவையுள்ளவர்களுக்கு
இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்தனர். அவர்கள் வீடு கோரி பதிவு
செய்யவும் வாய்ப்பு தரப்பட்டது. லட்சக்கணக்கானோர் நாடு முழுவதும் பதிவு
செய்தனர். தற்போது அவர்களின் தேவையை சரிபார்த்து, தற்போதுள்ள வாழ்நிலையை
ஆய்வு செய்யும் பணி துவங்குகிறது. ஒவ்வொரு பகுதியாக அந்தப் பணியைச்
செய்யும் திட்டத்துடன், ஐந்து மாகாணங்களில் அந்தப் பணியை முதலில்
துவக்குகிறார்கள்.(மேலும்....)
ஆனி
28,
2011
கல்முனை,
காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம்கள் மூடப்பட்டன
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை காரைதீவு ஆகிய
இடங்களில் கடந்த 21 வருடங்களாக நிலை கொண்டிருந்த விசேட அதிரடிப்படை
முகாம்கள் இன்றுடன் மூடப்படு கின்றன. நேற்று (27) திங்கட்கிழமை கட்டட உரிமை
யாளர்களை அழைத்து கட்டடங் களை ஒப்படை க்கும் பணி இடம் பெற்றது. காரைதீவு
விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பி. பந்துல தலைமையிலான குழுவினர்
இன்றுடன் முற்று முழுதாக வெளியேறுகின்றனர்.
(மேலும்....)
ஆனி
28,
2011
யாழ். குடாவில் எரிபொருள் பதுக்கல்; செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்த
முயற்சி
யாழ் குடாவில் எதுவித எரிபொருள்
தட்டுப்பாடும் கிடையாது என பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்தது.
எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என்ற வதந்தி காரணமாக எரிபொருள் நிரப்பு நிலைய
உரிமையாளர்கள் எரிபொருளை பதுக்கி செயற்கைத் தட்டுப்பாட்டை உருவாக்க முயற்சி
செய்வதாக கூட்டுத்தாபன உயர திகாரி ஒருவர் கூறினார். யாழ் குடாநாட்டில்
கடந்த சில தினங் களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவ தாகவும் எரிபொருள்
நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்படுவதாகவும் தெரியவருகிறது. சில
எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும்
தகவல்கள் தெரி வித்தன.
(மேலும்....)
ஆனி
28,
2011
கம்யூனிஸ்ட் அறிக்கையின் கூற்றை நடைமுறையில் பார்க்கிறோம்’
விஞ்ஞானிகளையும், கல்வியாளர்களையும் தனது கூலிகளாக்கிவிட்டது முதலாளித்துவம்:
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்
“இதுவரை போற்றிப் பாராட்டப்பட்டும், பணிவுக் கும் பக்திக்கும் உரியதாய் கரு
தப்பட்ட ஒவ்வொரு பணித் துறை யையும் முதலாளித் துவம் மகிமை இழக்கச் செய்
துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குரு வையும் கவிஞரையும் விஞ்ஞா
னியையும் அது தனது கூலியு ழைப்பாளர்கள் ஆக்கிவிட் டது” என கம்யூனிஸ்ட்
அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. அது தற்போது உண்மையாகி வருகி றது என வேளாண்
விஞ்ஞானி நம்மாழ்வார் பேசினார்.
(மேலும்....)
ஆனி
28,
2011
குறுந்தூர விமான சேவை
ஸ்ரீலங்கன்
விமான சேவைக்கு புதிய 3 விமானங்கள்
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சிங்கப்பூர், மலே
சியா போன்ற குறுந்தூர பயண ங்களுக்காக புதிய மூன்று விமானங்களை
இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏ-3-12 பயணிகள் விமான வகையைச்
சேர்ந்த இம்மூன்று விமானங்களும் வர்த்தக வகுப்பு, பொருளாதார வகுப்பு மற்றும்
சாதாரண வகுப்பு உள்ளிட்ட 140 ஆசனங்களைக் கொண்டுள்ளதென விமான சேவைகள்
அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன தெரிவித்தார். பிரான்ஸ்ஸில் உற்பத்தி
செய்யப்படும் இம்மூன்று விமானங்களையும் இலங்கைக் குப் பெற்றுத் தருவதுடன்
தொடர்புடைய ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளதுடன், அதன்
பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்த
விமானங்கள் இலங்கை வந்தடைய உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.
ஆனி
28,
2011
சீரழியும் கிரேக்க பொருளாதாரம்
என்.சிவகுரு
அமெரிக்காவில் ஏற்பட்ட பொரு ளாதார நெருக்கடி பல்வேறு நாடுகளை யும்
பாதித்துள்ளது என்பது நாமறிந்த விஷயம். இதே போன்ற பிரச்சனைகள் பல ஐரோப்பிய
நாடுகளையும் உலுக் கியது. தரங்கெட்ட பொருளாதார கொள் கைகளால் மக்களின்
வாழ்நிலையில் பெரும் பாதிப்புகள் உண்டானது. இப்படிப் பட்ட
பாதிப்புகளிலிருந்து மக்கள் மட்டுமல்ல, நாடே திவாலாகிப் போனது என்றால் அது
கிரீஸ் தான். பொருளாதார நிர்மூல நிலைக்கு சென்ற கிரீஸ் நாட்டில் சர்வதேச
நிதி நிறுவனமும் ஐரோப்பிய யூனியனும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை கொண்டு
வந்ததின் விளைவாக, அந்நாட் டின் வாழ்நிலை கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது.
அந்நாட்டிலுள்ள 18 வயதி லிருந்து 24 வயதிற்குட்பட்டவர்கள்
பெரும்பான்மையானவர்கள் வேலை யில்லாதவர்களாக மாறியுள்ளனர்.
(மேலும்....)
ஆனி
28,
2011
சகல இனங்களினதும்
கெளரவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரபகிர்வு
தற்போது அதிகாரப் பகிர்வு தீர்வுத் திட்ட
பணிகள் இடம் பெற்று வருகின்றன. இந்த தீர்வுத் திட்ட விடயங்கள் தனி நப ருக்கோ
அல்லது தனிப்பட்ட கட்சி சார்பாகவோ இல்லாமல் எதிர்காலத்தில் எந்தவொரு
பிரச்சினைகளுக்கும் வழிவகுக் காத வகையிலும் மற்றும் ஏனைய இனத்தவர்களின்
கெளரவத்தை உறுதிப் படுத்தும் வகையிலும் இந்த அதிகாரப் பகிர்வுக்கான
நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. எதிர்க் கட்சியினர் இன்று
நாட்டுக்கு எதிராக பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சர்வதேச தரங்கள் வெளிக்கொணரும் வகையில் இவர்களின் செயற்பாடுகள்
இருந்து வருகின்றன. அன்று வடக்கில் தமிழ் அமைப்புகளினால் முன்னெடுத்துச்
சென்ற கூட்டங்களை குழப்பி அதில் பல்வேறு பிரச்சினைகளையும் பிளவுகளை
ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
(மேலும்....)
ஆனி
28,
2011
காற்றாலை மின்
உற்பத்தியில் உலக அளவில் தமிழகத்திற்கு வரவேற்பு
காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில்
தமிழகம் முன்னணியில் உள்ளதால் உலக அரங்கில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தியாவில் மரபுசாரா எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள்
பல முயற்சிகள் எடுத்து வருகின்றன. காற்றாலைகள், சூரிய மின்சக்தி, பயோமாஸ்
மின் உற்பத்தி போன்ற திட்டங்கள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் முதன்
முதலாக, தூத்துக்குடி மாவட்டம் முல்லைக்காடு பகுதியில், 1984ல், 55 கிலோ
வோல்ட் திறனுடைய காற்றாலை மின் நிலையம் அமைக்கப்பட்டது இம்முயற்சி
வெற்றிபெறவே, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றாலை மின் உற்பத்தி
நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.(மேலும்....)
ஆனி
28,
2011
கனடாவின் டொரண்டோ நகரில்
ரஜினிகாந்த்
நடித்த ‘எந்திரன்’ படத்துக்கு 3 விருதுகள்
12வது சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த
எந்திரன் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விழா கனடாவின் டொரண்டோ
நகரில் நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது மை நேம் கான்
படத்துக்காக ஷாருக்கானுக்கு கிடைத்தது. சிறந்த நடிகைக்காக விருது அனுஷ்கா
ஷர்மாவுக்கு பந்த் பாஜா பாராத் படத்துக்காக கிடைத்தது. சிறந்த அறிமுக
நடிகருக்கான விருது பந்த் பாஜா பாராம் படத்துக்காக ரண்வீர் சிங்குக்கு
கிடைத்தது. சிறந்த அறிமுக நடிகைக்கான விருது தபாங்க் படத்துக்காக சோனாஷி
சின்ஹாவுக்கு கிடைத்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த எந்திரன்
படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. இந்த படத்தின் சிறந்த ஸ்பெஷல்
எஃபக்ட்ஸ¤க்காக வி.ஸ்ரீனிவாஸ் மோகனுக்கும், சிறந்த கலை இயக்கத்துக்காக சாபு
சிரிலுக்கும், சிறந்த மேக்கப்புக்காக பானுவுக்கும் விருதுகள் கிடைத்தன.
சர்வதேச இந்திய திரைப்பட அகாதமியின் விருது விழா இந்தி திரையுலகைச் சேர்ந்த
கலைஞர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களை கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும்
நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த விழா இலங்கையில் நடைபெற்றது
குறிப்பிடத்தக்கது.
ஆனி
28,
2011
எகிப்தில்
இருந்து பின்லேடனை பாகிஸ்தான் அழைத்து வந்தது நவாஸ் ஷெரீப்
அல்கொய்தா தலைவர் பின்லேடனை எகிப்தில்
இருந்து பாகிஸ்தானுக்கு அழைத்து வரப்பட்டதற்கு முன்னாள் பிரதமர் நவாஸ்
ஷெரீப் தான் பொறுப்பு என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக்
தெரிவித்துள்ளார். அல்கொய்தா தலைவர் பின்லேடனை எகிப்து நாட்டில் இருந்து
பாகிஸ்தானுக்கு அழைத்து வந்தது முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்தான். அப்போது
உடல்நலம் இல்லாமல் இருந்த அவரை சிகிச்சைக்காக பாகிஸ்தானுக்கு நவாஸ்
ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி தான் அழைத்து வந்தது. இதற்கு பதிலாக அவரிடம்
இருந்து கட்சி நிதியாக பெரும் தொகையை அந்த கட்சி பெற்றுக் கொண்டது.
பாகிஸ்தான் உளவுத்துறையினருக்கு எதிராகவும், இராணுவத்துக்கு எதிராகவும்
பேசுபவர்கள் (முஸ்லிம் லீக் கட்சினர்) அல்கொய்தா தலைவர் பின்லேடனில்
கூட்டளிகளாக இருந்தவர்கள் தான் என்றார். அவர் மேலும் கூறுகையில்,
பாகிஸ்தானில் பின்லேடன் தங்கி இருந்த வீட்டில் அமெரிக்க இரா ணுவம் நுழைந்த
தகவல் அது நுழைந்த 15 நிமிடங்களுக்கு பின்னர் தான் எனக்கு தெரிய வந்தது
என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனி
28,
2011
சமாதான
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்காதிருக்க கடாபி ஆபிரிக்க
யூனியனிடம் ஒப்புதல்
லிபியாவில் யுத்த நிறுத்தத்தை
ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் அந்நாட்டு ஜனாதிபதி முஅம்மர் கடாபி
பங்கேற்க மாட்டார் என ஆபிரிக்க யூனியன் உறுதியளித்தது. நான்கு மாதங்களாக
நீடித்து வரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில்
பங்கேற்காமல் இருப்பதற்கு கடாபி உடன்பட்டதாக ஆபிரிக்க யூனியன் கூறியுள்ளது.
லிபியாவில் சமாதானத்தை ஏற்படுத்துவது குறித்து ஆபிரிக்க யூனியனின் விசேட
குழு தென்னா பிரிக்காவில் கூடி பேச்சுவார்த்தை நடத்தியது. தென்னாபிரிக்க
ஜனாதிபதி ஜகப் சுமா தலைமையில் கூடிய இந்தக் குழுவில் கொங்கோ, மாலி, மொரி
டெனியா மற்றும் உகண்டா பிரதிநிதிகள் பங்கேற்றனர்.(மேலும்....)
ஆனி
28,
2011
லண்டன் தேம்ஸ்
நதியின் மீது நடந்த மெஜிக் நிபுணர்
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மெஜிக் நிபுணர்
டைனமோ (வயது 28) சமீபத்தில், இங்கிலாந்து பாராளுமன்றத்தின் முன்புறம்
அமைந்துள்ள தேம்ஸ் நதியின் மீது நடந்து சென்று பார்வையாளர்களை பரவசத்தில்
ஆழ்த்தினார். அறிவியலின்படி இல்லூசன் எனப்படும் மாய தோற்றத்தின்
அடிப்படையில் இந்த மேஜிக்கை நிகழ்த்தி காட்டியதை வெஸ்ட் மினிஸ்டர் பாலத்தில்
இருந்து திரளான மக்கள் கண்டு களித்தனர். டைனமோ, வரும் ஜுலை 7 ஆம் திகதியில்
இருந்து “டைனமோ மேஜிசியன் இம்பாசிபிள்” என்ற பெயரில் தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஒன்றை நடத்த இருக்கிறார். அதில் கையடக்க பேசியை கண்ணாடி போத்தலாக மாற்றுவது,
ஆஸ்திரியாவின் மலை பகுதியிலுள்ள பனிக்கட்டிகளை வைரங்களாக மாற்றுவது என
பல்வேறு வகைகளில் மேஜிக்கினை நிகழ்த்த உள்ளார்.
ஆனி
28,
2011
புதுக்குடியிருப்பு பகுதியில் மேலும் ஒரு தொகுதி மக்கள் மீள்குடியேற்றம்
வவுனியா மெனிக்ஃபாம் நலன்புரி நிலையத்தில்
தங்கவைக்கப்பட்டுள்ள 300 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 900 பேர்
புதுக்குடியிருப்பு பகுதியில் மீள்குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாக
மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சின் செயலாளர் உத்பல
பஸ்நாயக்க மேலும் தெரிவிக்கையில், இரண்டு இலட்சத்து 85 ஆயிரம் பேர் நலன்புரி
நிலையங்களில் தங்கியிருந்ததாகவும் அவர்களில் இரண்டு இலட்சத்து 55 ஆயிரம்
பேர் ஏற்கெனவே மீள்குடியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
_
ஆனி
28,
2011
600 முன்னாள் போராளிகள் ஜூலை முதல் வாரத்தில் விடுதலை
புனர்வாழ்வு பெற்ற 600 முன்னாள் போராளிகள் இவ்வார இறுதியில் விடுதலை
செய்யப்படவுள்ளனர். இதற்கான விசேட நிகழ்வு வவுனியாவில் இடம்பெறவுள்ளதாக
புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுனந்த ரணசிங்க தெரிவித்தார். இது
தொடர்பாக அவர் தொடர்ந்தும் கூறுகையில், யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியில்
கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு
அளிக்கப்பட்டு அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பெரும் தொகையான முன்னாள் போராளிகள்
சமூகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளனர். 3508 போராளிகள் மட்டுமே இன்னமும்
விடுவிக்கப்படாத நிலையில் எஞ்சியுள்ளனர். இவர்களையும் கூடிய விரைவில்
விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வார இறுதியில் மேலும்
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 600 போராளிகள் அவர்கள் உறவினர்களுடன் இணைக்கப்பட
உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சிறந்த முறையில் புனர்வாழ்வு
அளிக்கப்பட்டுள்ளதுடன் தொழில்சார் கல்விகளும் வழங்கப்பட்டுள்ளது. இதனால்
சாதாரண வாழ்விற்கு திரும்பியதன் பின்னர் இவர்கள் தமது வாழ்வில் பொருளாதார
பிரச்சினைகளை சீர் செய்துக் கொள்ள முடியும் எனக் கூறினார்
ஆனி
27,
2011
இந்தியாவை அன்று
ஜே.ஆர் பகைத்துக் கொண்டதால் பருப்பு மூடைகள் ஆகாயத்தில் இருந்து விழுந்தன
இந்தியா எங்களுக்கு வலுவையும்,
பாதுகாப்பையும் தரும் ஒரு நாடு என்பதில் சந்தேகமில்லை. இந்தியா
இப்பிராந்தியத்தின் ஒரு பொலிஸ்கார னைப் போன்று இருந்து வருகின்றது. இந்தியா
எங்களின் பாதுகாவலன். எங்கள் நாட்டை பாதுகாக்கும் இந்தியா தொடர்ந்தும்
எங்கள் பாதுகாவலானாக இருக்க வேண்டுமா அல்லது இந்தி யாவை நாம் பகைத்துக்
கொள்ள வேண்டுமா என்பது பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு
மற்றவர்களின் ஆலோசனை தேவை யில்லை. இவ்விதம் ஒரு காலத்தில் எங்களுக்குப்
பாதுகாப்பு அளித்த இந்தியாவை பகைத்துக் கொண்டதனால் எங்கள் நாட்டில் பருப்பு
பொதிகள் விமானம் மூலம் போடப்பட்ட சம்ப வத்தை நாம் மறந்து விடலாகாது.
ஜனாதிபதிக்கு இந்தச் சம்பவங்கள் நினைவில் இருக்கின்றன. ஆனால் இன்று, அன்று
கடைப்பிடித்த கொள்கை யில் இந்தியா இருக்கவில்லை. இந்தியா ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர் களுடன் சமாதானமாக கலந்து ரையாடி செயற்படுகின்றது.
(மேலும்...)
ஆனி
27,
2011
உண்மையான தீர்வுத் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை
-
ஜே.வி.பி
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் எழுத்து மூலமாக
அறிவிப்பதாக அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையில்
உறுதியளித்துள்ள போதிலும் அரசிடம் உண்மையான தீர்வுத் திட்டம் எதுவுமே
கிடையாது. இந்தியாவையும் அமெரிக்காவையும் ஏமாற்றியுள்ள அரசாங்கம் தமிழ்
மக்களையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கம் பல உறுதி மொழிகளை வழங்கிய போதும்
அவற்றை நிறைவேற்றவே இல்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண
குழுக்கள் தேவையற்றவையாகும் என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.
(மேலும்...)
ஆனி
27,
2011
யாழ்.
சிறையிலிருந்து தப்பியோடிய புலி சந்தேக நபர் கைது
12 கொலைகள் உட்பட மேலும் பல குற்றச் செயல்களை புரிந்ததாக குற்றம்
சாட்டப்பட்டிருக்கும் புலிகள் இயக்கத்தின் நான்கு வெவ்வேறு பெயர்களை உடைய
சந்தேக நபர் ஒருவர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து ஊர்காவற்றுறை
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பியோடியிருக்கின்றார்.
விக்னேஸ்வரன் கிருபாகரன் அல்லது செல்வத்துரை திலகேஸ்வரன் அல்லது டிக்பன்
மற்றும் கரன் ஆகிய நான்கு பெயர்களையுடைய இந்த சந்தேக நபர் கைது
செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஒரு தடவையும் இவர் சிறையில் இருந்து
தப்பிச் சென்று மீண்டும் கைது செய்யப்பட்ட கைதியாவர். முதல் தடவை தப்பிச்
சென்ற இவர், ஒரு நாள் முழுவதும் கடலில் நீந்திக் கொண்டிருந்த பின்னர் ஒரு
பாழடைந்த வீட்டில் பதுங்கி இருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப் பட்டார்.
கைது செய்யப்பட்ட இவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆனி
27,
2011
பயங்கரவாத யுத்தம் முடிந்துவிட்டதாக எண்ணிவிடக் கூடாது
பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிவு
பெற்றுவிட்டது என எண்ணிவிடக் கூடாதுஇ ஜனாதிபதிக்கும்இ பாதுகாப்பு
செயலாளருக்கும் எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு சதிகளை
மேற்கொண்டுவருகிறது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
ஒரு யுத்தம் முடிவு பெற்றா லும் சர்வதேசத்தி லிருந்து வரும் மற்றுமொரு
யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்பதை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள
வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனி
27,
2011
நலமடைகிறார் சாவேஸ்
கியூபாவில் மருத்துவ சிகிச்சை மேற்
கொண்டுள்ள வெனிசுலா நாட்டின் ஜனா திபதி ஹியூகோ சாவேசை நேரில் சந் தித்து
கியூபப்புரட்சியின் தலைவர் பிடல் காஸ்ட்ரோவும், ஜனாதிபதி ரால் காஸ்ட் ரோவும்
நலம் விசாரித்து, உரையாடினர். இச்சந்திப்பின்போது கியூபா-வெனி சுலா
இடையேயான நட்புறவு குறித்தும், பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் குறித் தும்
விவாதித்தனர். கியூபத்தலைநகர் ஹவானாவில், சாவேஸ் மருத்துவ சிகிச்சை
மேற்கொண்டுள்ளார். அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்
திருப்திகரமான முறை யில் உடல் நலமடைந்து வருகிறார் என மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர். மருத் துவமனையில் இருந்தவாறே, வெனிசுலா வின் துணை
ஜனாதிபதி மற்றும் இதர அமைச்சர்களுடன் தினமும் தொடர்பு கொண்டு பணிகள்
குறித்து சாவேஸ் விவா தித்தும் உத்தரவுகள் பிறப்பித்தும் வருகிறார்.
கியூபாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சாவேஸூக்கு திடீரென
உடல்நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாக வும், அவர் ஆபத்தான நிலையில் இருப்
பதாகவும் முதலாளித்துவ ஊடகங்கள் திடீ ரென செய்திகளை பரப்பியுள்ள நிலையில்,
அதை மறுக்கும் விதமாக, சாவேசுடன் பிடல் காஸ்ட்ரோவும், ரால் காஸ்ட்ரோவும்
சந்தித்த படங்களுடன் மேற்கண்ட செய் தியை கியூபாவின் அதிகாரப்பூர்வ செய்தி
நிறுவனமான கிராண்மா வெளியிட்டுள்ளது.
ஆனி
27,
2011
The diary of an extraordinary human being
A
Review of Ben Bavinck’s "Of Tamils and Tigers"
NOTEBOOK OF A NOBODY
by Shanie
"This is a time of reflection for the Tamil community; a time for
refashioning its politics. Even though the Tamil nationalist vision for
a separate state met with a decisive military defeat in 2009, the
politico-military decline of the LTTE had begun far earlier, with the
convergence of multifarious set of political developments, both local
and international, that began the downward spiral at a time when
seemingly the LTTE was at its strongest.....
(more....)
ஆனி
26,
2011
கனடாவில் தியாகிகள் தினம்
கனடா பொறுப்பாளர் தோழர் ஆனந்தனின்
நெறிப்படுத்தலுடன் தோழர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. மக்களின் விடுதலைப்
பயணத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள் பொதுமக்களுக்கான அஞ்சலியுடன்
நிகழ்வு ஆரம்பமானது. ஈரோஸ் ஈபிடிபி, புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ்(சுரேஷ்
பிரிவு), இலங்கையின் இடதுசாரிக்கடசிகளின் பமழ்பெரும் தோழர்கள், தொழிர்
சங்கவாதிகள், பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்கள் பொது மக்கள் என
பலரும் திரட்டிருந்து இவ் நிகழ்வு நடைபெற்றது. கடந்த வருடம் போலவே
இம்முறையும் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
(மேலும்...)
ஆனி
26,
2011
ஒரு அகதியின் கடுதாசி
எமது மண்ணில் நடந்த கொடூரப் போரினால்
உறவிழந்து, ஊனமுற்று, இடம்பெயர்ந்து, பொருளிழந்து வெற்று மனிதராய், உளம்
நொந்த அனாதைகளாய், இனி இழப்பதற்கு உயிரை மட்டுமே கொண்டவராய், ஓடு கழன்ற
ஆமைகளாய் எமது வெறுமையாக்கப்பட்ட நிலத்திலே வேலி கூடப்போட முடியாதவராய்
வானத்திலிருந்து தேவர்களை எதிர்பார்த்து அண்ணாந்து காத்திருக்கும் அகதிகள்
நாங்கள். எங்கள் மண்ணில் மீண்டும் குடியேறினாலும், வெயிலுக்கும் மழைக்கும்
ஈடு கொடுக்கப் போராடும் நாங்கள் இன்றும் அகதிகள் தானே!.......ஐ.நா.நிபுணர்குழுவின்
அறிக்கையைப் பார்த்தீர்கள் தானே. சனல்- 4 விவரணப்படத்தையும் பார்த்தீர்கள்
தானே. இதோ இப்போது குறித்துக் கொள்ளுங்கள். இலங்கை அரசும், விடுதலைப்
புலிகளும் மட்டுமல்ல போர்க்குற்றவாளிகள். எங்கள் நாறிய பிணங்களைத் தின்னும் நீங்களும்
போர்க்குற்றவாளிகள் தான் என்பதை இன்னுமொரு அறிக்கை விரைவில் சொல்லும்.
(மேலும்......)
ஆனி
26,
2011
தந்திரிகளின் மறுமுகம் - 11
ஜோய் மகேஸ்வரன், சர்வே ஆகியோரின் உதவியுடன்
கே.பியுடனும் நேரடியாக உருத்திரகுமாரனுடன் தனது உறவை ரெஜி மிகவும்
நெருக்கமாகக் கட்டமைத்துக் கொண்டார். இக்காலப் பகுதியில் போர்நிறுத்தத்தை
கொண்டு வருவதற்கான பணிகளை முன்னெடுக்குமாறு கே.பி அவர்களுக்கு
வன்னியிலிருந்து அதிகாரபற்றற்ற முறையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேகாலப்
பகுதியிலேயே தலைமைப்பீடத்தின் அனுமதியின்றிஇ தமிழீழ விடுதலைப் புலிகளின்
ஆயுதக் களைவை மையப்படுத்தி தன்னிச்சையாக வெளிநாட்டு இராசதந்திரிகளுடன்
கே.பி ஜோய் மகேஸ்வரன் உருத்திரகுமாரன் ஆகியோர் உரையாடல்களை
தொடங்கியிருந்தனர். இதேகாலப் பகுதியில் கொழும்பிலிருந்து இலண்டனை
சென்றடைந்த இரண்டு நபர்கள் ரெஜியை சந்தித்திருந்தனர். இதில் ஒருவர் ஐக்கிய
தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், மூத்த நாடாளுமன்ற உறுப்பினருமான
கலாநிதி ஜெயலத் ஜெயவர்த்தன. மற்றையவர் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர்.
(மேலும்...)
ஆனி
26,
2011
தமிழ் பேசுவதால் தமிழர்களா?; 'சாதியம்-தீண்டமை' என்ன தமிழர்களின் தனிக்
கூறுகளா?
(
ப.வி.ஸ்ரீரங்கன்)
பேரினவாதம் சாதி பார்த்தா தமிழ் பேசும்
மக்கள்மீது குண்டிறிந்தது?தமிழ் பேசுபவர்கள் என்ற ஒரு காரணத்துக்கு மட்டுமா
சிங்கள இராணுவம் தமிழ் பேசும் மக்களது சுய நிர்ணயக் கோரிக்கையைச்
சிதைத்தது?தமிழ்பேசும் மக்களது விடுதலையோடு இலங்கையின் ஏனைய சிறுபான்மை
இனங்களதும் விடுதலை பின்னிப் பிணைந்திருக்கவில்லையா?ஏன் தென்னாசியப்
பிராந்தியத்தின் விடிவெள்ளியாகக் கூட இப்போராட்டம் இருந்திருக்காதா?
இதையுணர்ந்ததாற்றாமே பாசிப் புலிகளை வளர்த்தெடுத்தனர்-புரட்சிகரக் கட்சிகளை
அழித்தனர்? ஈழத்து வடமாகாணத்தில் 1966-1970 காலக்கட்டத்தில் தாழ்த்தப்பட்ட
மக்களால் செய்யப்பட்ட ஆலயப்பிரவேசம்,தேனீர்கடை பிரவேசங்கள் போன்ற
சுயகௌரவத்துக்கான வாழ்வாதாரப்போராட்டங்கள் சாதிவெறி வேளாளர்களால் எங்ஙனம்
ஒடுக்கப்பட்டது என்பதும்,அந்தப் போராட்டத்தை முன்னெடுத்த தலித்துப்
பெரியார்கள் எப்படி வரலாற்றில் மறைக்கப்பட்டார்கள்-ஒடுக்கப்பட்டார்கள்
என்பதை ஆய்வுக்குட்படுத்தும்போது மேற்காட்டிய மனக் குமுறல் பொதுமையாக
விரியவேண்டியுள்ளது.அது ஒடுக்கப்பட்ட மக்களது பொதுமையெனப்
புரிந்துகொன்னவேண்டும்!ஒடுக்கப்பட்டவர்கள் அனைத்து சாதிகளுக்குள்ளும்
இருப்பவர்களே!
(மேலும்...)
ஆனி
26,
2011
சனல் 4 நடத்தும் ஊடக விபச்சாரம்
மானமுள்ள தமிழரே என்ன நடக்கிறது இங்கே?
சனல்4 தொலைக்காட்சி சேவை இலங்கை தொடர்பாக ஒரு ஆவணப்படத்தைத் தயாரித்து
நள்ளிரவு நேரத்தில், வயது வந்தவர்களுக்கு மட்டும் என்ற அறிவுறுத்தலுடன்
ஒளிபரப்பியது. அந்த விவரணப் படத்தைப் பார்க்கும் துர்ப்பாக்கியம் எனக்குக்
கிடைத்தது. இலங்கையில் அந்தப் போர் சூழலுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு,
அந்த விவரணப் படத்தில் காண்பிக்கப்பட்ட கொலைக் காட்சிகளோ அல்லது
பிணக்குவியல்களோ அல்லது காயப்பட்ட மக்களின் கூக்குரல்களோ பெரிய
ஆச்சரியத்தையோ அன்றி அதிர்ச்சியையோ ஏற்படுத்தவில்லை. கரத்தில் கனரக
ஆயுதங்களையும், கழுத்தில் கொடிய விஷத்தையும் தாங்கித்திரியும் உலகின்
மிகமிகக் கொடூரமான பயங்கரவாதிகள் அழிக்கப்படும் போது, அவர்களால் தடுத்து
வைக்கப்பட்டிருக்கும் அந்த எமது மக்களுக்குப் பாரிய பாதிப்புக்களும்
அவலங்களும் ஏற்படும் என்பது நாம் முன்பே அனுமானித்திருந்ததுதான்.
(மேலும்....)
ஆனி
25,
2011
ஜேர்மனியில்
தியாகிகள் தினம்
ஆனி
25,
2011
கனடாவில்
தியாகிகள் தினம்
இடம்:
1703 McCowan road
மக்கோவன்
/
செப்பேட்
(McCowan
Road / Sheppard Ave East)
ரொறன்ரோ
(Toronto)
கனடா
காலம்: ஜுன் 25, 2011 (சனிக் கிழமை) மாலை 5.00 – 9.00 வரை
விடுதலைப் போராட்டத்திற்காக தம்மை அர்பணித்த போராளிகள், பொதுமக்களை நினைவு
கூரும் நிகழ்வு. எமது போராளிகள், பொதுமக்களின் தியாகத்தால் விளைந்த ஜனநாயக
நிலமைகளை தொடர்ந்தும் நினைவு கூர்ந்து அவர்களை கௌரவப்படுத்த விளைகின்றோம்.
கிடைத்திருக்கும் ஜனநாயக சூழலை பாவித்து எமது மக்களுக்கான சமாதான, சம உரிமை
வாழ்வை உறுதிப்படுத்த தொடர்ந்தும் குரல் கொடுக்க இணைந்து செயற்படுவோம்.
பல்வேறு அமைப்புக்களின் செயற்பாடாளர்கள் கருத்துரை வழங்கவுள்ளனர். அமைதி,
சமாதானம், ஜனநாயகம், சமஉரிமை போன்றவற்றில் ஈடுபாடுள்ள அனைவரையும் அன்புடன்
அழைக்கின்றோம்.
தகவல்:
ஈழ மக்கள் செய்திச் தொடர்பு நிலையம் (கனடா)
ஆனி
25,
2011
தமிழ் மக்களே
கூட்டமைப்பினரின் இரண்டு முகங்களை இனம் காணுங்கள்
(கீழே உள்ள புகைப் படம் தாக்குதலுக்கு பின்னராக எதுக்கப்பட்டது
என்று அறிய
முடிகின்றது)
(கீழே உள்ள புகைப் படம்
தாக்குதல் நடாத்தியதாக கூறப்பட்ட இராணுவத்தினருடன் கூட்டமைப்பினர்
தாக்குதலுக்கு பின்பு நடைபெற்ற சந்திப்பில்)
ஆனி
25,
2011
மரணத்தைக் கண்டு அஞ்ச மாட்டேன்
- கடாபி
மரணத்தைக் கண்டு அஞ்ச மாட்டேன் லிபிய
ஜனாதிபதி கடாபி தெரிவித்துள்ளார். நேட்டோ படைகளின் தாக்குதலில் கடாபியின்
நண்பர் ஹெமிதியும், அவரது குடும்பத்தினரும் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு
அஞ்சலி செலுத்தும் விதமாக, தொலைக்காட்சியில் பேசிய கடாபி 'நேட்டோ படைகள்
இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தாமல் மக்கள் வசிக்கும் பகுதியில்
தாக்குதலை தொடர்கின்றன. இதை ஐ.நா. தடுக்கவேண்டும். எத்தனை ஆண்டுகளானாலும்
மேற்கத்திய படைகளை எதிர்த்து போராட தயாராக இருக்கிறோம்" என்றார்.
ஆனி
25,
2011
வடக்கிலிருந்து
இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்
- மாவை
ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக வடக்கு, தெற்கு
மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். சிவில் நிர்வாகத்துக்கு இடமளித்து
வடக்கிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.
அளவெட்டியில் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது
குற்றுயிராக இருந்த ஜனநாயகத்துக்கு இறுதியாக அடிக்கப்பட்ட சாவுமணியாகும்
என்றும் அவர் குறிப்பிட்டார்.
(மேலும்....)
ஆனி
25,
2011
ரஷ்ய
விஞ்ஞானிகளின் உயிரிழப்பினால் ஈரானின் அணு உலை நிர்மாண முயற்சிக்கு
பின்னடைவு
ஈரான் அணு உலை நிர்மாணப்பணியில் ஈடுபட்டிருந்த ரஷ்ய விஞ்ஞானிகள் விமான
விபத்தில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து
இவர்களின் உயிரிழப்பு ஈரான் அணு உற்பத்திக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்
எனத் தெரிவிக்கப்படுகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த இவர்கள் ஐவரும் நீண்டகாலமாக
ஈரான் அணு உலை நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவந்துள்ளனர். ஐவரில் மூவர் அணு உலை
வடிவமைப்பாளர்கள் என்பதுடன் மற்றைய இருவரும் அணுத் தொழிநுட்பத்தில்
நிபுணர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
(மேலும்....)
ஆனி
25,
2011
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா நகர சபை உறுப்பினர் எஸ். சுரேந்திரன்
கைது!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வவுனியா
நகர சபை உறுப்பினர் எஸ். சுரேந்திரன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நேற்று
காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு. பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
குறித்த நகர சபை உறுப்பினர் செயலாளர் வசந்தகுமாரை நேற்று முன்தினம் வியாழன்
மாலை அலுவலகத்திற்கு வெளியே வைத்து தாக்கியுள்ளார் என பொலிசாருக்கு கிடைத்த
புகாரைத் தொடர்ந்து அன்று இரவு கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டிருந்தார். வவுனியா மாவட்ட நீதிமன்றில் பதில் நீதிவான் எம்.
சிற்றம்பலம் முன்னிலையில் நகர சபை உறுப் பினர் சுரேந்திரன் நேற்று காலை
பொலிசாரினால் ஆஜர்செய்யப் பட்டு அவர் மீதான குற்றப் பத்திர மும் தாக்கல்
செய்யப்பட்டது. மேலதிக விசாரணையினை அடுத்த மாதம் 8ம் திகதிக்கு ஒத்திவைத்த
பதில் நீதவான் சபை உறுப்பினரை ஒன்றரை இலட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல
அனுமதித்தார்.
ஆனி
25,
2011
நிரந்தரத்தீர்வு தேவை
இலங்கை கடற்படையினரால் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்கள்
கொடூரமாக கொலைசெய்யப்பட்டு உடலை கடலில் வீசியெறிந்த சம்பவங்கள் தொடர்ந்து
நடந்து வந்ததால், தமிழக மீனவர்கள் கடத்தப் பட்டதாக வந்தசெய்தி அவர்களது
குடும்பத்தின ரிடம் மட்டுமின்றி தமிழக மக்களிடமும் பதற்றத் தையும்
ஆவேசத்தையும் ஏற்படுத்தியது. இப்போது மீனவர்கள் விடுதலை செய்யப் படுவார்கள்
என்று வெளிவந்துள்ள செய்தி ஓரளவு ஆறுதல் அளித்தாலும், இந்த சம்பவங் கள்
தொடர்ந்து நடைபெறாமலிருக்க நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும்.
(மேலும்....)
ஆனி
24,
2011
திருமலையில் 21 வது தியாகிகள் தின நிகழ்வும் – தோழர் நாபாவின்
உருவச்சிலைக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும்.
19 யூன் -21 வது தியாகிகள் தினத்தை திருகோணமலை மாவட்ட தலைமை காரியலத்தில்
காலை 10.30 மணிக்கு தோழர் பத்மநாபாவுக்கும் இறந்த சக தோழர்களுக்கும்
யுத்தத்தில் இறந்த பொது மக்களுக்கும் அனைவருக்கும் நினைவஞ்சலி செலுத்தபட்டது.
அதை தொடர்ந்து தோழர் பத்மநாபாவுக்கு உருவசிலை அமைப்பதற்கு பத்மநாபாவின் சிலை
ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெற்றது. இவை
அனைத்தையும் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் இ சிவகுமார் (சத்யன்)
அவர்களால் ஏற்பாடு செய்யபட்டது
ஆனி
24,
2011
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒரு வார
காலத்திற்குள் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் அரசாங்கம் கூடுதலான தகவல்களை
வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரு தரப்பினருக்கும் இடையில்
எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட
உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, பேச்சுவார்த்தைகள் குறித்து தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் கூட்டாக இணைந்து அறிக்கை
வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்
சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனி
24,
2011
இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால்
விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த நாளில் பெற்றுக் கொள்ள முடியும்!
இந்தியாவுக்கு செல்வதற்கான வீசா
கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினால் விண்ணப்பம் கையளிக்கப்பட்ட அடுத்த வேலை
நாளில் பெற்றுக் கொள்ள முடியுமென்று தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்
தெரிவித்தார். இது பற்றி மேலும் விளக்கமளித்த அவர், யுத்தம் நடந்து
கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையர் ஒருவர் குறிப்பாக ஒரு தமிழர்
இந்தியாவிற்கு செல்வதற்கான வீசா விண்ணப்ப படிவமொன்றை தூதரகத்தில்
ஒப்படைத்தால், அது இந்தியா விற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து
சம்பந்தப்பட்டவருக்கு வீசா வழங்கலாம் என்ற அங்கீகாரம் கிடைத்த பின்னரே வீசா
வழங்கப்பட்டது என்றும், இதனால், ஒருவர் இந்திய வீசாவைப் பெறுவதற்கு
காலதாமதம் ஏற்பட்டதென்றும் சுட்டிக்காட்டினார். இன்று இலங்கையில் யுத்தம்
முடி வுற்று நாட்டில் சமாதானமும் அமைதி யும் திரும்பிக் கொண்டிருப்பதனால்,
பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டு ஒருவரின் வீசா விண்ணப்பம் அன்றைய
தினமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, அடுத்த வேலைநாளில் வீசா
சம்பந்தப்பட்டவருக்கு வீசா கொடுக்கப்படும் என்று கூறினார். இப்போது
இலங்கையில் அமைதி நிலைகொண்டிருப்பதனால் வெகு விரைவில் வீசாவை இந்தியா
செல்லும் பயணிக்கு விமான நிலையத்தில் வைத்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை
நடைமுறைப்படுத்துவதற்கான திட்டத்தை தாங்கள் தீவிர பரிசீலனைக்கு
எடுத்திருப்பதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
ஆனி
24,
2011
கச்சை தீவு விடயத்தை மத்திய அரசே தீர்மானிக்கும் தமிழ்நாடு அல்ல
தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா
இலங்கையிடமிருந்து சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்றும் இலங்கை அரசாங்கத்தின்
மீது தமிழர் பிரச்சினை குறித்து அழுத்தங்களை கொண்டுவர வேண்டுமென்றும்
இந்திய மத்திய அரசாங்கத்தின் வேண்டுகோள் விடுத்திருப்பது குறித்து அந்த
அதிகாரி தகவல் தருகையில், அரசியலில் எவருக்கும் எந்தக் கருத்தையும்
தெரிவிக்கும் உரிமையை இந்திய அரசியல் சட்டம் உத்தரவாதம்
செய்திருக்கிறதென்றும் எவர் எந்தக் கருத்தை தெரிவித்தாலும் இந்திய மத்திய
அரசாங்கமே இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை வகுக்கும் அதிகாரத்தை
பெற்றிருக்கிறதென்றும் கூறினார்.
ஆனி
24,
2011
Sri Lanka partners with Russia, China
(R.K. Radhakrishnan)
Sri Lanka has invited Russia and China
to partner in a slew of new development projects, as it seeks to
transform itself into an economic powerhouse over the next decade. Sri
Lankan President Mahinda Rajapaksa has invited one of the largest energy
companies in the world, the Russia-based Gazprom, to partner in
achieving self-sufficiency in petroleum products. Gazprom was very
positive. They will be here soon for discussions, said Secretary to the
President Lalith Weeratunga. Sri Lanka wants Gazprom to prospect in the
Gulf of Mannar, sell LNG to Sri Lanka and set up a refinery so that Sri
Lanka can conserve precious foreign exchange.
(more...)
ஆனி
24,
2011
Support the Postal Workers! Stop the Conservative Attack on Working
People!
On June 3rd, members of the
Canadian Union of Postal Workers hit the streets in a series of rotating
24 hour strikes. The strikes, supported by a 94.5% mandate, came as a
result of months of negotiations eventually came to a stall. Canada Post
is demanding outrageous concessions from CUPW, including a 22% pay
decrease for new hires, the gutting of sick leave benefits, the
imposition of a two-tier pension plan, and more. The corporation reacted
to CUPW’s legal strike action with a lockout, sycophantically claiming
that “"If we allow the uncertainty created by the rotating strikes to
continue, our ability to remain financially self-sufficient and not
become a burden on Canadian taxpayers will be in jeopardy”.
(more...)
ஆனி
24,
2011
ஆனி மாதத்துக்குரிய வானவில் (இதழ் 6)
(மேலும்....)
ஆனி
24,
2011
ஆப்கனில் இருந்து 10 ஆயிரம் படையினர் வாபஸ்-
ஒபாமா
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் அமெ ரிக்கப்படையினரில் 10 ஆயிரம் பேர்
வரும் ஜூலை மாதம் வாபஸ் பெறப்படு வார்கள் என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா
திடீ ரென அறிவிப்பு வெளியிட் டுள்ளார். ஆப்கானிஸ்தான் நிலை மை முன்னேறி
வருவதால் இனி அங்கு அமெரிக்கப் படைகள் அதிக அளவில் தேவைப்படாது. எனவே,
அங்குள்ள படையின் பெரும் பகுதியை வாபஸ் பெறவிருக்கிறோம். இதில்
முதல்கட்டமாக வரும் ஜூலை மாதம் 10 ஆயிரம் வீரர்கள் வாபஸ் பெறப்படு கிறார்கள்
என்று கூறியுள்ள ஒபாமா, அடுத்த ஆண்டு இறுதிக்குள் 23 ஆயிரம் வீரர்கள் வாபஸ்
பெறப்படு வர். இது தவிர 63 ஆயிரம் வீரர்கள் தொடர்ந்து அங் கேயே இருப்பார்கள்
என் றும் தெரிவித்துள்ளார். அவர்கள் வரும் 2013-ம் ஆண்டு இறுதிக்குள் முற்
றிலுமாக வாபஸ் பெறப்படு வார்கள் என்றும், அமெரிக் கப்படைகள் வெளியேறிய பிறகு
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு படைகள் கவனித்துக் கொள்ளும் என்றும்
அவர் கூறியுள்ளார்.
(மேலும்....)
ஆனி
24,
2011
ஆனி
23,
2011
மக்களை ஏமாற்றும் நாடு கடந்த அரசு!
புலம்பெயர்ந்த மக்களையும் தமிழக உறவுகளையும்
ஏமாற்றி தமது நிகழ்ச்சி நிரலை கொண்டு செல்லும் முயற்சியில்
உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு செயற்படுவதை அண்மைக்காலங்களில் மிகவும்
வெளிப்படையாக அவதானிக்க முடிகின்றது. அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித
உரிமைகள் கூட்டத்தொடருக்கு சென்றிருந்த இதன் பிரதிநிதிகள் சிலர், அங்குள்ள
முக்கிய பிரமுகர்களுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்துகொண்டு அவர்களுடன்
பேச்சுக்கொடுப்பதுபோல் பாவனை செய்ய, அதனை வேறொருவர் தனது கமெராவில் பதிவு
செய்துகொள்ள பின்னர் அதனையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பில் நாடு
கடந்த அரசின் பிரதிநிதிகள் பங்கேற்பு என உருத்திரகுமாரனின் நாடு கடந்த அரசு
ஊடகங்களுக்கு செய்தி அனுப்பியிருந்தது.(மேலும்...)
ஆனி
23,
2011
புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 20)
பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து
முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்
நமது தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள்
செய்தி இப்படி இருந்தது. அதாவது யுத்தம் நடக்கிறது. நமது மக்களை காக்க
ஏதாவது எடுங்கள் என எமது தலைமையால் கோரப்பட்டது. இதற்கு இப்போது தமிழர்
தலைவர்கள் நாங்களே நாம்தான் ஏகபிரதிநிதிகள் என கூறும் கூட்டமைப்பின் தலைவர்
சம்பந்தன் சொன்னது மிகவும் வேதனை மிக்கது. ஆம் நம் தலைவர்களை காப்பாற்ற
சிங்கள தலைவர்களுடன் பேசும்படி நடேசனாலும், சூசையாலும் கோரப்பட்டதற்கு
இன்னும் சில நாளில் முடியப்போகும் விடையத்தை பற்றி பேசுவதனால் தங்களது
அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்கு சிங்கள தேசத்தில் எதிர்ப்பு
கூடிவிடுவதுடன் தாம் வாழ முடியாது என்றும் தமக்கு இப்பொழுது இந்த வழி
மோசமானதாக இருக்கிறதென்றும் சொல்லியதுடன் இனி தன்னுடன் தொடர்பு கொள்ள
வேண்டாம் என்றும் அவர் சொல்லி தொடர்பை துண்டித்து விட்டார். எப்படி இருக்கு
இந்த நம் ஏக பிரதிநிதியின் கூற்று?? நமது செல்வாக்கினால் பதவி ஏறிய இந்த சம்பந்தன்
சொன்ன சொல் எப்படி இருக்குது? அவரைப்போல்தான் மாவையும் எதுவும் செய்யாது
ஒதுங்கிவிட்டார்.
(மேலும்...)
ஆனி
23,
2011
தமிழர்கள் புலிகளால் பணயம் வைப்பு
இறுதிக் கட்டத்தில் தமிழர்களை புலிகள் சுட்டுக் கொன்றனர்
2009ம் ஆண்டு யுத்தம் முடிந்த பின் நான் இலங்கைக்கு நான்கு முறை
சென்றுள்ளேன். அதன்போது யுத்தத்துக்கு முகம் கொடுத்த பலருடன் கலந்துரையாட
எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இவர்களின் கருத்துக்கு முற்றும் முரணான
செய்தியே உங்களது பத்திரிகையிலிருந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. நான்
சந்தித்த மக்கள் இறுதிக்கட்ட யுத்தத்தில் தப்பி வந்தவர்களாவர். அவர்களை
இலங்கை இராணுவம் தியாகத்துடன் இன்னும் பாராமரித்து வருகின்றனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தில் தமது தியாகத்தால் 6,000 இராணுவத்தினர்
கொல்லப்பட்டனர். இதில் எல்.ரி.ரி.ஈ யினால் தமிழ் மக்கள் பணயக் கைதிகளாக
பிடித்து வைக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.
(மேலும்...)
ஆனி
23,
2011
UK Tamil answers pro-LTTE lies
This former Member of Parliament
said that ‘he has seen the horrors of the war and seen people – innocent
Tamils, who were treated as stray dogs, shot and killed mercilessly by
the LTTE gunmen‘. Despite being charged by the Sri Lanka Government for
refusing its orders to leave the LTTE controlled areas and staying in
the region during the height of the war, the MP said that the United
Nations and Western Countries were not privy to any firsthand
information about the horrors, killings, destructions and the human
tragedies that occurred during the final days of the battle. He
rubbished the UN Experts Panel’s report and said the UN document was
based on third or fourth person’s reports and on biased materials
prepared by the rump LTTE campaigners and vested interest groups. He
challenged whether those three UN Experts could authenticate any of
those allegations they have raised and included in their so called
report? He clarified that even those people who were in the Vanni in the
last days of the combat between the Government Forces and the LTTE were
not privy to any firsthand reports, as they were never allowed to stray
out of their bunkers and places where they were confined by the LTTE
gunmen.
(more....)
ஆனி
23,
2011
இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை
(பகுதி 4)
இவ்வாறு பரவலாக தமிழ் சமூகத்தவர்கள் கருத்து
வெளியிடுகின்றனர்
(அ. வரதராஜப்பெருமாள்)
(இவ் ஆய்வுக் கட்டுரை சம்மந்தமான கருத்துக்கள், விமர்சனங்கள்,
அபிப்பிராயங்களை சூத்திரம் இணையத்தளம் எதிர்பார்கின்றது. தொடர்புகளுக்கு:
sooddram@gmail.com)
இலங்கையில் நிலவும் அரசியல் அதிகாரக்
கட்டமைப்பில் தமிழர்கள் உயிரோட்டமாக ஒருங்கிணைக்கப்படவில்லை, தமிழர்களுக்கு
மத்திய ஆட்சியில் உரிய பங்கில்லை, தமிழர்களுக்கு மாகாண அளவிலும் சுயாட்சி
இல்லை, தமிழர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு அரசின் ஒத்துழைப்பு மிகக்
குறைவே, தமிழர்களின் பிரதேசங்கள் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டன,
இங்கு தமிழர்கள் இனவாரியாக பல்வேறு தளங்களில் பாரபட்சங்களுக்கு
உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதங்கள்
இல்லை, தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்கள் அரசின் திட்டமிட்ட சிங்களக்
குடியேற்றங்களால் சிங்களமயமாக்கப்பட்டன. பௌத்த மதம் மட்டுமே அரசின்
உதவிகளுக்குரிய மதமாக்கப்பட்டது. தமிழர்களுக்கு நீதியின் ஆட்சியில்
சமத்துவமில்லை. இராணுவத்தில் தமிழருக்கு இடமேயில்லை, தமிழருக்கு பொலிஸில்
தம்மாத்துண்டு பங்கு மாத்திரமே. அமைச்சர் பதவிகளில் தமிழர்களுக்கு ஓரக்
குந்துகள் மட்டுமே. சுதந்திர இலங்கையின் ஆளும் அரசியலானது இலங்கையில் வாழும்
பெரும்பான்மையான தமிழர்களின் மனங்களில் இலங்கை என்பது எமது தாய்த்திருநாடு,
இந்த நாட்டில் நாமும் சமவாய்ப்புக்கள் பெற்ற பிரஜைகள் என்ற எண்ணங்களை
வளரவிடாமல் ஆக்கிவிட்டது.
(மேலும்....)
ஆனி
23,
2011
ஊழல் விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க
வேண்டும்
-
திமுக
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன் னாள் மத்திய
அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் காங்கிரஸ்
கட்சி தங்களுக்கு உதவவில்லை என்ற கோபம் திமுகவுக்கு உள்ளது. இந்த வழக்கில்
திமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சிக்கியுள்ள நிலையில்
அவரது பதவி பறிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், லோக்பால்
மசோதா விசாரணை வரம்புக்குள் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என திமுக கோரியுள்
ளது. இது கட்சியின் தொடர்ச்சியான நிலைபாடுதான் என்றும் திடீரென்று இவ்வாறு
கோரவில்லை என்றும் திமுக தரப்பில் கூறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரை லோக்பால் வரம்பிற்குள் கொண்டு வந்தால் அது நிர் வாகத்தை பாதிக்கும்
என்றும் பாதுகாப் புக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் அரசுத்தரப்பில்
வாதிடப்பட்டு வரும் நிலையில் ஆட்சியில் இடம்பெற்றுள்ள திமுக இந்த கோரிக்கையை
முன்வைத் துள்ளது குறிப்பிடத்தக்கது.
(மேலும்...)
ஆனி
23,
2011
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தோற்றமும்
வளர்ச்சியும் _
(பேராசிரியர் தி. வேல்நம்பி, தலைவர், கணக்கியல் துறை, யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம்)
19 ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதியில் பிரித்தானியக் குடியாட்சியில்
இருந்த இலங்கையில் ஆரம்ப இடைநிலைப் பாடசாலைகள் சிறப்பான அபிவிருத்தியை
அடைந்திருந்த போதிலும் பிரித்தானியா இந்தியாவைப் போன்று பல்கலைக்கழகங்கள்
எதுவும் இருந்திருக்கவில்லை. இக்காலப்பகுதியில் இலங்கைத் தீவின் சிறந்த
இடைநிலைப் பாடசாலையானது கொழும்பை முக்கியமாக கொண்டு அமைந்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. 1859 ஆம் ஆண்டின் முன்னர் அமைக்கப்பட்டிருந்த இராணியின்
கல்லூரி ஆனது கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் இணைந்த பல்கலைக்கல்லூரியாக
இருந்தது. இது பின்னர் றோயல் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது. இது முதலில்
மற்றிக்குலேசனுக்கு பின்னைய கல்வியை வழங்கியதுடன் இலண்டன்
பல்கலைக்கழகத்துடன் தொடர்பு கொண்டு வெளிவாரிப் பரீட்சைக்கு மாணவர்களைத்
தயார் படுத்தியது.
(மேலும்...)
ஆனி
23,
2011
தமிழில் கூகுளின்
மொழிபெயர்ப்பு சேவை
இணையதள தேடுதல் எந்திரமான கூகுளின்
மொழிபெயர்ப்பு சேவையில் தமிழ் உள்ளிட்ட மேலும் 5 மொழிகள் இணைக்கப்பட்
டுள்ளன. பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய
மொழிகளில் கூகுளின் மொழி பெயர்ப்பு சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம்
இலட்சக்கணக்கான இணையதள வாசகர்கள் பலனடைவார்கள் என்று கூகுள் நிறுவனம்
அறிவித்துள்ளது. இந்தியா மற்றும் பங்களாதேஷில் 5 கோடி பேர் இந்த 5 மொழிகளைப்
பயன்படுத்துகின்றனர். 2009ல் 11 மொழிகளில் தொடங்கப்பட்ட கூகுள்
மொழிபெயர்ப்புச் சேவை தற்போது 63 மொழிகளாக உயர்ந்துள்ளது என கூகுள் அறிவியல்
ஆராய்ச்சியாளர் ஆஷிஷ் வேணுகோபால் தெரிவித்தார்
ஆனி
23,
2011
அரசு - த. தே. கூ . இன்று பேச்சு
அரசாங்கத்துடன் இன்று 23 ஆம் திகதி நடத்தப்படும் ஏழாம் கட்டப் பேச்சு
வார்த்தையில் அரசியல் தீர்வு விடயம் முக்கியத்துவம் பெறுமென்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்
தெரிவித்தார். அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தையின்
ஊடாக அரசியல் தீர்வொன்றை எட்ட முடியுமென்ற நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை
முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி. அரசாங்கத்துடன்
தீர்வு யோசனைகள் அடங்கிய அறிக்கையொன்றை ஏற்கனவே சமர்பித்துள்ளதாகவும்
அதனடிப்ப டையில் பேச்சுக்களைத் தொடர்வ தாகவும் குறிப்பிட்டார். ஆனால்
கூட்டமைப்பின் யோசனைகள் தொடர்பாக இன்ன மும் எந்தவொரு பிரதி பலிப்பும்
தென்பட வில்லை யென்றும் இன்றைய பேச்சுவார்த்தை அதற் கான களத்தை
உருவாக்குமென்றும் சுமந்திரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
ஆனி
23,
2011
அரசு - கூட்டமைப்பு பேச்சில் முஸ்லிம்களுக்கு இடம் வேண்டும்
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய
கூட்டமைப்புக்குமிடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின்
தரப்பும் உள்வாங்கப்பட்டு, அதனை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக தொடர
வேண்டியதன் அவசியத்தை தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தி
யிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப்
ஹக்கீம் இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதுவர் குனியோ தகஹாஷியிடம் தெரிவித்தார்.
அரசியல் தீர்வு விஷயத்தில் இங்கு வழும் முஸ்லிம்களின் பரிமாணமும்
இன்றியமையாதது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இனப் பிரச்சினை தீர்வை
அடிப்படை யாகக் கொண்டு அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு
மிடையே கலந்துரையாடல்கள் நடைபெற்ற வரும் சூழ்நிலையில், மற்றைய
சிறுபான்மையினமான முஸ்லிம்கள் தொடர்பில் அவ்வாறான முயற்சிகள் ஏதும்
நடைபெறும் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என ஜப்பானியத் தூதுவர் வினவியபோதே
அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
ஆனி
23,
2011
பென்டகன், செனட் இணைய தளங்களுக்குள் ஊடுருவிய 19 வயது இளைஞன் கைது
அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன், உளவுப் பிரிவான சி. ஐ. ஏ.
உட்பட சர்வதேச அளவில் முக்கிய இணையத் தளங்களுக்குள் ஊடுருவிய
குற்றச்சாட்டில் பிரிட்டனின் 19 வயது இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த மே 7ஆம் திகதி தொடக்கம் சர்வதேச அளவில் முக்கிய இணைய தளங்களுக்குள்
ஊடுருவி தகவல் சேகரித்தது மற்றும் அதனை முடக்கிய சம்பவங்கள் சர்ச்சையை
கிளப்பி வந்தது. இதில் அமெரிக்க உளவு அமைப்பான சி. ஐ. ஏ. மற்றும்
பிரித்தானிய உளவு அமைப்பான சொகா இணையத்தளங்கள் தாக்கப்பட்டன. தவிர அமெரிக்க
செனட் சபையின் இணையத் தளம், பென்டகன் தளம் ஆகியவைக்குள் ஊடுருவி தகவல்கள்
பெறப்பட்டிருந்தன. இதுதவிர, பொக்ஸ் செய்திச் சேவை, ஜப்பான் சோனி மியூசிக்
போன்ற இணைய தளங்களுக்குள்ளும் ஊடுருவல் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு இணையத்
தளங்களை குழப்புவோர் தம்மை ‘லுல்ஸ் செகியுரிட்டி’ என
அடையாளப்படுத்தியிருந்தனர்.
(மேலும்...)
ஆனி
23,
2011
சமச்சீர் கல்வி மக்கள் கல்வி
(மா.அண்ணாதுரை)
தமிழகத்தில் அதிமுக அரசு புதி தாகப்பொறுப்பேற் றவுடன் ஏழு தேர்தல்
வாக்குறுதிகளை நிறைவேற்றியதன் மூலம் மக்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை யை
ஏற்படுத்தியுள்ளது. சட்டம்-ஒழுங் கைப் பாதுகாப்பது மின்வெட்டை போக் குவது
போன்ற நடவடிக்கை எடுக்கப் படும் என அறிவித்திருப்பதும் வரவேற் கக்
கூடியதாகும். இலங்கைப் பிரச்ச னைக்கு தீர்வுகாண சட்டமன்றத்தில் தீர்மானம்
நிறைவேற்றி தில்லி சென்று பிரதமரைச் சந்தித்து வலியுறுத்தியிருப்ப தும்
பாராட்டுக்குரியதாகும்.தமிழகத்தில் இன்று அறிமுகப்படுத் தியுள்ள
சமச்சீர்கல்வி என்பது தரமானது என்று நாம் கூறவில்லை. ஆரம்பக்கல்வி என்பது
குழந்தைகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளில் தரமான இலவசக்கல்வி அனைவருக்கும்
வழங்குவதுதான். சமச் சீர் கல்வி ஏட்டளவில் இல்லாமல், தேசிய கல்வி ஆராய்ச்சி
பயிற்சி நிறுவனம் மூலம் உலகத்தரத்திற்கானதாகவும் வேலை வாய்ப்பு நடைமுறை
அறிவு சார்ந்தும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்பதுதான் நமது ஆசையும்
விருப்பமும் ஆகும்.
(மேலும்...)
ஆனி
22,
2011
பாரிஸில் 21 வது தியாகிகள் தினம்
–
தோழர்
சுகு சிறப்புரை
யூன் 19 திகதி மாலை பிரான்ஸில் 21வது
தியாகிகள் தின நிகழ்வு நடைபெற்றது. தோழர் புஸ்பராணி தோழர் பத்மநாபாவின்
உருவப்படத்திற்கு குத்துவிளக்கு ஏற்ற அனைவரும் எழுந்து நின்று மறைந்த
தோழர்களுக்கும் மக்களுக்கும் சக போராளிகளுக்கும் மெளன அஞ்சலி செலுத்தி
நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். தோழர்கள் ஆதரவரளர்கள் சமூகசெயல்பாட்டாளர்கள்
ஈழமக்கள் ஐனநாயக கட்சி ஈழபுரட்சிகரஅமைப்பு தமிழ்ஈழமக்கள்விடுதலைகழகம்
தமிழர்விடுதலைகூட்டணி என அமைப்பை சார்ந்தவர்களும் தலித்சமூகமேம்பாட்டு
அமைப்பின் செயல்பாட்டாளர்களும் மற்றும் ஊடகத்துறை சார்ந்த நண்பர்களும்
கலந்து கொண்டதுடன் கருத்துக்களையும் பரிமறிக் கொண்டனர். ஈபிஆர்எல்எவ்
பிரான்ஸ் கிளையில் ஆரம்பகாலங்களில் இணைந்து செயல்பட்டவரும் சங்கேமுழங்கு
கலைநிகள்சிகளின் தயாரிப்பாளரும் புரட்சிகவிதைகளின் ஆசிரியரும் முகம்
திரைப்பட இயக்குனருமான தோழர் அருந்ததி தலைமை உரை ஆற்றியதுடன்
நிகழ்சிகளையும் தலைமையேற்று திறம்பட வழிநடத்தினார்.
(மேலும்...)
ஆனி
22,
2011
ஆனி
22,
2011
பிரபாகரனின்
மனைவியல்ல தமிழ்ச் செல்வனின் மனைவி
- அஸ்வர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்
வேலுப்பிள்ளை பிரபாகரனின் மனைவியையும் பிள்ளைகளையும் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ பேணி வருவதாக நான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினேன். ஆனால் தமிழ்ச்
செல்வனின் மனைவியையும் பிள்ளைகளையுமே ஜனாதிபதி பேணி வருகிறார் என அஸ்வர்
எம்.பி தெரிவித்தார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே
மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள அவர், 'நான் நேற்று
நாடாளுமன்றத்தில் தவறுதலாக தமிழ்செல்வனின் மனைவி பிள்ளைகள் என்பதற்குப்
பதிலாக பிரபாகரன் மனைவி பிள்ளைகள் என்று கூறிவிட்டேன் இதற்காக சபையினரிடம்
மன்னிப்பு கோருகின்றேன்" என்றார்.
ஆனி
22,
2011
கிழக்கு மாகாண
ஆசிரியர் இடமாற்றத்தை தற்காலிமாக இடைநிறுத்தவும்
- ஜனாதிபதி
வருடத்தின் நடுப்பகுதியில் இடமாற்றம் மேற்கொள்ளப்படுவதால் மாணவர்களின் கல்வி
பாதிப்படையும் என்பதுடன் டிசம்பர் மாதம் வரையிலுமான சகல விதமான
பரீட்சைகளிலும் மாணவர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை
ஏற்படும் அத்துடன் இடமாற்றத்தின் போது ஆசிரியர்களுக்கு அநீதி
இழைக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனையடுத்தே கிழக்கு
மாகாண ஆசிரியர் இடமாற்றத்தை டிசம்பர் மாதம் வரையிலும் இடைநிறுத்துமாறும்
முறைப்படி ஆசிரியர் இடமாற்றத்தை மேற்கொள்வதற்கு டிசம்பர் மாதத்திற்கு
பின்னர் குழுவொன்றை அமைக்குமாறும் ஜனாதிபதி ஆளுநருக்கு பணித்துள்ளார்.
(மேலும்....)
ஆனி
22,
2011
இந்தியாவுடன் ராணுவ உறவு மேம்பட சீனா முயற்சி
இந்தியாவுடன் ராணுவ உறவை மேம்படுத்த சீனா தீவிர முயற்சி மேற் கொண்டுள்ளது
என செவ்வாய்க் கிழமை சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய் தித் தொடர்பாளர்
ஹாங்லி கூறினார். இந்திய ராணுவக் குழுவினர் சீன தலை நகர் பெய்ஜிங்
சென்றுள்ளனர். ஒரு வருட இடைவெளிக்கு பின்னர், இந்தியக் குழு சீனா
சென்றுள்ளது. இந்தியக் குழு வந்தது குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித்
தொடர்பாளர் ஹாங் லி செய்தியாளர் களை சந்தித்தார். இந்தியாவுடன் ராணுவ உறவை
மேம்படுத்த சீனா முயற்சி மேற் கொண்டுள்ளது. அதன் விளைவாக இந்தி யக்
குழுவினர் வந்துள்ளனர் என்றார்.
ஆனி
22,
2011
சரித்திரம்
படைத்த பறக்கும் பட்டம் - 2
ஆதிகாலத்தில் சீனத்தில் வெறும் விளையாட்டுப்
பொருட்களாக இருந்த பட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. விளையாட்டுக்குப் பின்பாக
முதன் முதலில் இராணுவப் பயன்பாடு களுக்குள் பட்டங்கள் வந்தன. சில பட்டங்கள்
எதிரிகளின் நடவடிக்கை களை நோட்டம் பார்க்கவென்று மனிதர் களை ஏற்றிச்
செல்லக்கூடிய அளவில் பெரிதாக இருந்தன என்று வரலாறு சொல்கிறது. சில வேளைகளில்
எதிரிகள் பகுதியில் துண்டுப் பிரசுரங்களை வீசியெறியவும் பட்டங்கள் பயன்பட்டி
ருக்கின்றன. ஒருமுறை லியாங் முடியாட்சி யில் வூதியின் பேரரசர் ஸியாவ் யான்
(கி.பி. 464 – 549) நான்ஜிங்கின் தாய்ச் செங்கில் ஹோவ் ஜிங்கின் கீழிருந்த
கலகக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டார். அப்போது பேரரசர் ஒரு பட்டத்தில்
தான் அவசர உதவி கேட்டு செய்தி அனுப்பியிருக்கிறார். உதவியும் வந்திருக்கிறது!
(மேலும்....)
ஆனி
22,
2011
TNA revisiting Tamil Chauvinism’s game plan of May 14, 1976?
by Malinda Seneviratne
The 30-year old conflict, like
all conflicts, was a monumental tragedy. Like all tragedies it came
with costs. People died. Property was destroyed. Hundreds of thousands
were displaced. Thousands were maimed. Some scars healed, some never
will. No community in this island was spared. No one, however,
suffered as much as the Tamils, i.e. those who lived in the primary
conflict zone (those who fled these areas to Colombo and preferred
destination in Europe, North America, Australia and New Zealand can’t
claim to be too unhappy – they are not returning in droves to the
‘traditional homelands’ now that the guns have gone silent). (more...)
ஆனி
22,
2011
ரஜனியை தொடர்ந்து
உடல் நிலை
பாதிப்பினால் நிற்பதற்கே சிரமப்படுகிறார் அமிதாப்
பொலிவுட் நடிகர் அமி தாப்பின் உடல்நிலை
பாதிக் கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரே தனது இணைய தளத்தில் தெரிவித்
துள்ளார். அமிதாப்பச்சன் உடல் ரீதியாக பெரும் பிரச்சினை களைச் சந்தித்தவர்.
1982ல் கூலி படப்பிடிப்பின்போது அவரது வயிற்றில் பெரிய அளவில் அடிபட்டது.
உயி ருக்குப் போராடிய அவரை கஷ்டப்பட்டு மருத்துவர்கள் காப்பாற்றி விட்டனர்.
பின்னர் 2005ல் மீண்டும் அவரது உடல் நிலை பெரும் பாதிப்புக் குள்ளானது. 1
ஆண்டு வரை ஆனது அவர் சாதாரண நிலைக்குத் திரும்ப. இப்போது மீண்டும்
நெஞ்செரிச்சல், வயிற்றுக் கோளாறு மற்றும் தெண்டை யில் வலி காணப் படுவதாக
தனது இணையத் தளத்தில் எழுதியுள்ளார். இந்த கோளாறுகள் காரணமாக தன்னால்
தொடர்ந்து நிற்க முடியாத நிலை உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமிதாப்
நடித்துள்ள புத்தா என்ற படம் வரும் ஜுலை 1ம் திகதி திரைக்கு வருகிறது.
இதற்கான விளம்பர பணிகளில் தீவிரமாக இருந்தார் அமிதாப். இந்த நிலையில்
உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது தனக்கு கவலை அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆனி
22,
2011
வவு. நகர சபை தலைவராக கனகையா
வெற்றிடமாகவுள்ள வவுனியா நகர சபையின் தலைவர் பதவிக்கு சபை உறுப்பினரான
ஐயாத்துரை கனகையாவை நியமிக்க இணக்கம் காணப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு
முன்னர் புனர மைக்கப்பட்ட வவுனியா வரியிறுப்பாளர் சங்கத்தினர் மேற்கொண்ட
துரித நடவடிக்கையின் பயனாக பெரும்பான்மை நகர சபையின் 9 உறுப்பினர்கள் கனகை
யாவை தலைவராக நியமிப்பதில் தங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என இணக்க
கடிதத்தில் ஒப்பமிட்டிருந்தனர். கடந்த மூன்று மாதத்திற்கு மேலாக சபை
நிர்வாகம் நடைபெறவில்லை. மக்களுடைய தேவைகள் நிறைவேற்றப்பட வில்லை. நகர
எல்லைக்குள் அபிவிருத்தி செயல் பாடுகள் முடங்கியுள்ளது. இந்த நிலையில்
உடனடியாக சபை கூட்டம் இடம்பெற வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுத்த
நிலையில் வரியிறுப்பாளர் சங்கம் இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து
தரப்பினருடனும் இணக்கத்தை ஏற்படுத்த பேச்சுக்களை நடத்தியது. நேற்று செவ்வாய்
காலை வவுனியா வந்திருந்த தமிழரசு கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா
வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் சபை
உறுப்பினரான கனகையாவை தலைவராக நியமிக்க இணக்கம் தெரிவித்தார்.
ஆனி
22,
2011
வடக்கு, கிழக்கில் அமோக விளைச்சல், அரிசி உற்பத்தியில் தன்னிறைவு
வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக ஜூன், ஜுலை மாதங்களில் அரிசி
தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வடக்கு,
கிழக்கிலும் அதிகளவு விவசாயம் செய்யப்பட்டுள்ள நிலையில் மூன்று
மாதங்களுக்குத் தேவையான அரிசி தற்பொழுது கையிருப்பில் உள்ளதாக விவசாய
அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். கடந்த டிசம்பர் மற்றும்
ஜனவரி மாதங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 40 வீதமான விவசாய உற்பத்திகள்
சேதமடடைந்தன. இதனால் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட
போதும் இது வரை நாம் அரிசி இறக்குமதி செய்யவில்லை. அரிசி விலை
குறைவடைந்துள்ளது. மரக்கறி விலைகளும் குறைவடைந்துள்ளன. மூன்று மாதத்துக்குப்
போதுமான அரிசி கையிருப்பில் உள்ளது. ஜூலையில் அடுத்த போகத்திற்கான நெல்
அறுவடை கிடைக்கும். இம்முறை சிறந்த அறுவடை எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு,
கிழக்கிலும் அதிகளவு விவசாயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் பங்களிப்பு
காரணமாக உணவை பாதுகாக்கவும் விலைக்கட்டுப்பாடு செய்யவும் உதவியாக உள்ளது.
வடக்கு, கிழக்கு விவசாயிகளுக்கு கூடுதலான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு
எதிர்காலத்திலும் அங்கு விவசாய அபிவிருத்திற்கு பல திட்டங்களை ஆரம்பிக்க
உள்ளோம். வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் விவசாய
புனரமைப்பு திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
ஆனி
21,
2011
லண்டனில் நேற்று மாலை தியாகிகள் தினம் –முக்கிய நிகழ்ச்சியாக முன்னாள் வட
கிழக்கு முதலமைச்சர் வரதராஜபெருமாளின் சிறப்புரை SKYPE ஊடாக மண்டபத்தில்
திரையிடப்பட்டது!
நேற்று மாலை வட மேற்கு லண்டனில்
தியாகிகள் தின நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தோழர் சிராப் தலைமையில்
நடைபெற்ற இந்நிகழ்வு மாலை ஆறரை மணிக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
முக்கியஸ்தர் தோழர் குகதாசனின் விளகேற்றலுடன் ஆரம்பித்தது. இதனை தொடர்ந்து
இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் அதனை தொடர்ந்து மறைந்த தோழர்களது நிழற்பட
தொகுப்பு ஒன்றும் திரையிடப்பட்டது. முக்கிய நிகழ்ச்சியாக முன்னாள் வட
கிழக்கு முதலமைச்சர் தோழர் வரதராஜபெருமாளின் சிறப்புரை SKYPE ஊடாக
மண்டபத்தில் திரையிடப்பட்டது. கல்பனா , சாதனா ஜெயசிங்கம் சகோதரிகளின் நடன
நிகழ்ச்சி மற்றும் கவிதைகள் கலை நிகழ்ச்சிகளின் அம்சமாக இடம்பெற்றன. மேலும்
PLOTE , ENDLF, EPDP, TULF கட்சிகளின் பிரதிநிதிகளும் மற்றும் லண்டனில்
நீண்ட காலமாக செயற்ற்பட்டு வரும் ஜன நாயக முற்போக்கு இயக்க
செயட்பாட்ளர்களும், மண்டபத்தை நிறைத்திருந்தனர். இறுதி நிகழ்ச்சியாக
ஆக்கபூர்வமான அரசியல்கலந்துரையாடல் மற்றும் இரவு போசனத்துடன் நிகழ்ச்சிகள்
நிறைவு பெற்றன. விபரமான செய்திகள் பினர் பதிவிடப்படும்
(பத்மநாபா ஈபிஆர்எல்எப்)
ஆனி
21,
2011
த.தே.கூ
தாக்குதல் பின்னணியில் இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான குழு
- வாசுதேவ
இராணுவத்திற்குள் உள்ள தமிழ் மக்களுக்கு எதிரான கடும் போக்குடைய இரகசிய
குழுவினரே யாழ்ப் பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாக்கப்பட்ட
சம்பவத்தின் பின்னணியிலுள்ளனர். தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் ஒரு சில
குழுக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த
முயற்சிக்கின்றன என்று தேசிய மொழிகள் மற்றும் இன நல்லுறவு அமைச்சரும்
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
பிரபாகரனின் தயார் இறந்த பின்னர் தகனக் கிரியைகள் இடம்பெற்ற இடத்தில்
நாய்களை சுட்டுக் கொன்று வீசியவர்களும் இத்தகைய குழுவினரேயாவர் என்றும் அவர்
சுட்டிக்காட்டினார்.
(மேலும்......)ஆனி
21,
2011
பேச்சுவார்த்தையை இழுத்தடித்துச் செல்வதே பிரபாகரனின் விருப்பமாக இருந்தது
நான் வன்னிக்கு வரமாட்டன். இந்த ஆவணத்தை
எடுத்துக்கொண்டு
வன்னிக்குச் சென்றால்
என்ட தலையில வச்சிடு
வானுகள். நான்
வரேல்ல” -
அன்ரன் பாலசிங்கம்
அரசுக்கும் புலிகளுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டவுடன் சமாதானப்
பேச்சுக்கள் ஆரம்பமாகின. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும்
நடந்தன. புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய தளபதிகளில் ஒருவரும்,
கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவரும் அனைவராலும் கேணல் கருணா
என அழைக்கப்பட்டவருமான விநாயகமூர்த்தி முரளிதரனும் பேச்சுவார்த்தைக்
குழுவில் கலந்துகொண்டிருந்தார். கருணா அம்மான் புலிகள் இயக்கத்திலிருந்து
ஏன் பிரிந்தார். எதற்காக பிரிந்து சென்றார். இந்தப் பிரிவுக்கு பலரும்
உரிமைகோருகிறார்கள். இதன் உண்மை நிலை என்ன என்பதை அவரிடமே கேட்டோம்.
(மேலும்......)
ஆனி
21,
2011
புலிகளின்
சொத்துக்கள், நிதி சேகரிப்பை முடக்குவதற்காக பல சட்ட திருத்தங்கள்
தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை முடக்குதல்
நிதிசேகரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கான முயற்சியாக நிதிப் பரிமாற்றச்
சட்டம் பணச் சலவைச் சட்டம், பயங்கரவாத நிதியளிப்பு தடைச்சட்டம் ஆகியவற்றில்
திருத்தங்களை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த உத்தேச சட்ட
திருத்தங்கள் சட்டமா அதிபரின் அங்கீகாரத்திற்கு காத்திருப்பதாக தன்னை
இனங்காட்ட விரும்பாத மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார். சட்டமா அதிபரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
ஆனி
21,
2011
Money bags
This year 2011, July has 5 Fridays, 5 Saturdays and 5 Sundays. This
happens
Once every 823 years. This is called money bags. So, forward this to
Your friends and money will arrive within 4 days. Based on Chinese
Feng Shui.
Here more interesting - read on!!!
This year we're going to experience four unusual dates.
1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11 and that's not all...
Take the last two digits of the year in which you were born - now add
The age you will be this year,
The results will be 111 for everyone in whole world. This is the year of
The Money!!!
The proverb goes that if you send this to eight good friends money will
appear in next four days as it is explained in Chinese FENG SHUI.
Those who don't continue the chain won't receive.......
Its a mystery, but its worth a try. Good luck.
Note: If you get any extra money share 25% with me!!!!!!!!!! - Para
ஆனி
21,
2011
குறியீடுகளின் புனிதம் முன்வைக்கும் அரசியலும் புலிக்கொடியும்
(சபா நாவலன்)
21 ம் நூற்றாண்டின் அழிவு அரசியல் என்பது இவ்வாறான 'புனிதமான' அடையாளங்களை
அடிப்படையாக முன்வைத்து உருவாகியிருக்கின்றது. அடையாளங்களை உருவாக்கும்
செயன்முறை என்பது அனேகமாக அனைத்துத் தளத்திலும் சில படிமுறைகளைக் கடந்து
செல்கின்றது. குறிப்பாக இனக் குழுக்களும்இ மக்கள் பிரிவுகளும்இ மதப்
பிரிவுகளும் அழிவுக்குரிய அடிப்படைவாதக் கருத்துக்களை முன்வைத்து இந்த
அடையாளங்களை உருவகப்படுத்திக் கொள்கின்றனர்.
முப்பது வருட பேரினவாத அரசிற்கு எதிரான போராட்டத்தின் இன்னொரு விளைவாக நாம்
எம்மைச் சுற்றிக் கட்டமைத்துக் கொள்கின்ற அடையாளம் குறித்த புனிதமும்
அவற்றின் அரசியல் அழிவும்.
தமிழ்ப் பேசும் மக்களின் உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் என்பது
ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பங்களிப்பைக் கோரிநிற்கின்றது. சந்தர்ப்பவாத
அரசியல் வியாபாரிகளின் குறுகிய அரசியல் நலன்களுக்கு எதிரான போராட்டம்
சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
(மேலும்......)
ஆனி
21,
2011
வவுனியாவில்
கடவுச்சீட்டு அலுவலகம்
யுத்தத்தினால் உள்ளூரில் இடம்பெயர்ந்துள்ள
மக்களுக்கும், வடமாகாணத்தைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் உதவும் முகமாக
அரசாங்கம் வவுனியாவில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய
காரியாலயமொன்றை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. வடபகுதியில் உள்ள மக்கள்
கடவுச்சீட்டுகளை பெறுவதற்காக கொழும்பிற்கு வந்து பலநாட்கள் தங்கியிருந்து
பணத்தையும், நேரத்தையும் வீணாக்குவதை தவிர்ப்பதற்காகவே ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ அவர்களின் விசேட பணிப்புரையின் கீழ் இத்திணைக்களத்தின் பிராந்திய
காரியாலயம் வவுனியாவில் திறக்கப்படவுள்ளது. வடபகுதி மக்கள் இங்கு சகல
தேவையான ஆவணங்களின் பிரதிகளுடன் கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை 2500ரூபா
கட்டணத்துடன் செலுத்திவிட்டால் அதனை 6 வேலை நாட்களுக்குள் பரிசீலனை செய்து
திணைக்களத்தின் அதிகாரிகள் புது கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட
விண்ணப்பதாரிகளுக்கு வழங்குவார்கள் என்று கூறினார்.
(மேலும்......)
ஆனி
21,
2011
Canadian Tamils call upon the Tamil Diaspora to act responsibly and
wisely
(By I.Yasothapillai of Toronto )
The Canadian Tamils for Peace and
Democracy call on the Tamil Diaspora to act responsibly to find out a
possible way for a reconciliation that would help the Tamil people
living in Sri Lanka to find an amicable political solution. The
immediate need of the hour in the North and East is to rehabilitate the
people affected by the war and reconstruct and develop the provinces to
create an atmosphere for the people to run their lives smoothly.
(more...)
ஆனி
21,
2011
வன்னியிலிருந்து
இரும்புகளுடன் வந்த லொறி வவுனியாவில் சிக்கியது
வன்னிப் பிரதேசத்திலிருந்து பெருமளவு இரும்பு
பொருட்களை ஏற்றி வந்த ஐந்து லொறிகளை வவுனியா பொலிஸார் நேற்று திங்கள்
அதிகாலை கண்டு பிடித்து ள்ளனர். மக்கள் மீள்குடியேறிய கிளிநொச்சி,
முல்லைத்தீவு பகுதியிலிருந்து இந்த இரும்பு பொருட்கள் தெற்கே
கொண்டுவரப்பட்டபோது பொலிஸாரின் சோதனையின்போது வவுனியாவில் சிக்கியுள்ளது.
லொறிகளில் பயணம் செய்த பத்துப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் தென்பகுதியைச் சேர்ந்தவர்களெனத்
தெரியவருகிறது. அனுமதியின்றி இரும்பு பொருட்கள் மாவட்டத்திற்கு வெளியே
கொண்டு செல்ல முடியாது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பொது மக்களினால்
முள்ளிவாய்க்கால் பகுதியில் கைவிடப்பட்டு வந்த வாகனங்களுடைய உதிரி பாகங்கள்
இவையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விசாரணைகள் நடைபெற்று
வருகின்றது. லொறியிலிருந்து இரும்புகள் இறக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறதென
பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
உள்ளூரில் நீண்ட காலமாக நடைபெற்று வந்த கள்ள வியாபாரம் தற்போது பிரதேசம்
விட்டு பிரதேசம் செல்லும் போது பிடிபட்டுள்ளது.
ஆனி
21,
2011
கனிமொழியின் பிணைமனுவை உச்சநீதிமன்றிலும் நிராகரிப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார்
சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய நாடாளு மன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைவர்
கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக
இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் பிணை மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம்
நேற்று நிராகரித்துள்ளது. அதனால் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் இப் போதைக்கு
சிறையிலிருந்து வெளிவருவது கேள்விக்குறியாகியுள்ளது. கலைஞர்
தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபா பணம் தொலைத் தொடர்பு அமைப்பொன்றினால்
வழங்கப்பட்டமை குறித்த விசாரணைக்காக சி.பி.ஐ. பொலி ஸார் கலைஞர் ரி.வி.
நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அதன் பணிப்பாளர்களில் ஒருவரான
கனிமொழியையும் கைது செய்தனர். 2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியில் கிடைத்த
இலாபத்திற்கான லஞ்சமாக மேற்படி 200 கோடி ரூபா கலைஞர் ரிவிக்கு
வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த ஊழலில் பிரதான
சந்தேக நபரான தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவும்
டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆனி
21,
2011
தி.மு.க.வில் சலசலப்பு
பொருந்தா
கூட்டணியை சரி செய்ய வேண்டும்
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளின் “பொருந்தா கூட்டணி”
தொடரக் கூடாது என்றும், இரண்டு கட்சிகளில் ஒரு கட்சி தி.மு.க.
கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதால்
‘பலிக்கடா’ ஆகப்போவது யார்? என்ற கேள்வி தி.மு.க. கூட்டணியில்
உருவாகியுள்ளது. சட்டசபை தேர்தலில் ஜனநாயக முற்போக்கு கூட்டணி படுதோல்வி
அடைந்தது. ஆட்சியின் சாதனைகள் மற்றும் இலவச அறிவிப்புகள், வட மாவட்டத்தில்
பா.ம.க. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் புதிய கூட்டணியை நம்பி தி.மு.க.
சட்டசபை தேர்தலை சந்தித்தது. ஆனால் தேர்தல் முடிவு தி.மு.க.வின் கணக்கை
தவிடுபொடியாக்கும் வகையில் தலைகீழாக அமைந்தது.
(மேலும்......)
ஆனி
21,
2011
ஈராக்கில் இலங்கையர்
உண்ணாவிரதம்
ஈராக்கில் உண்ணா விரதமிருக்கும் இலங்கையர் தொடர்பாக நேரடியாக கண்டறிய வென
லெபனானிலுள்ள இலங்கைத் தூதரக அதிகாரி அனுப்பப்பட வுள்ளார். ஈராக்கில்
இலங்கைக்கான தூதரகம் இல்லாத நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈராக்கிலுள்ள இலங்கைத் தூதரகம் அகற்றப்பட்டு இரு நாடுகளுக்குமிடை யேயான
இராஜதந்திர உறவுகள் அற்ற நிலையில் இலங்கையர் எவரும் ஈராக்குக்கு
செல்லக்கூடாது என தடைசெய்யப்பட்டிருந்த வேளை எவருக்கும் தெரியாமல் தொடர்
பாகவும் தடையை மீறிச் சென்றுள்ள இவர்கள் இவர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும்
தலையிட வெளிவிவகார அமைச்சுக்கோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கோ
உத்தியோக பூர்வமாக அதிகாரமில்லை. எனினும் இவர்கள் எமது நாட்டின் பிரஜைகள்
இவர்களை இலங்கைக்கு திரும்பி அழைத்துக்கொள்ள மட்டும் எம்மால் நடவடிக்கை
எடுக்க முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான்
பெரேரா தெரிவித்தார்.
ஆனி
21,
2011
தேர்தல்
பிரசாரத்தை ஆரம்பித்தார் ஒபாமா
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும்
போட்டியிடும் பராக் ஒபாமா பேஸ்புக், டுவிட்டர் இணையத்தளம் மூலம் பிரசாரத்தை
ஆரம்பித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த 2008 ஆம் ஆண்டு பராக் ஒபாமா
தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் மீண்டும் போட்யிட பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். இந்த
தேர்தலில் கடந்த 2008 ஆம் ஆண்டு கிடைத்த வெற்றியை போல் மீண்டும் வெற்றிபெற
தனது பிரசாரத்தை சமூக இணையதளங்கலான பேஸ்புக், டுவிட்டர் மூலம்
ஆரம்பித்துள்ளார். டுவிட்டர் இணையத்தளத்தில் அவர் இனிமேல் தொடர்ந்து
கருத்துக்களை கூறப்போவதாக கூறியுள்ளார். இதேபோல் பேஸ்புக்கிலும்
கூறியுள்ளார். இதற்கு 23000 பேர் வரவேற்றுள்ளனர். பேஸ்புக்கில் 4,000 பேர்
தங்களது கருத்தை கூறியுள்ளனர்.
ஆனி
21,
2011
சீனாவில் தொடரும் மழையால் 50 இலட்சம் பேர் பாதிப்பு
சீனாவில் தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அதன் கிழ க்கு பகுதி
முழுவதும் 50 இலட்சம் பேர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து
அங்கு உணவுப் பொருட்கள் விலை கடுமை யாக உயர்த்துள்ளதாக அங்குள்ள செய்தி
குறிப்பு தெரிவிக்கிறது. இதில் ஹூபெய் மற்றும் ஷெஜி யாங் ஆகிய பகுதிகள்
வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 7 ஆயிரம் வீடுகள் தரை
மட்டமானதால் பாதிக்கப்பட்டவர்கு இழப்பீட்டு செலவாக 930 மில்லி யன் டொலர்
தேவைப்படும் என கருதப்படுகிறது.
ஆனி
20,
2011
புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு
மூலம் (பகுதி 19)
பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில்
தப்பியவரின் வாக்குமூலம்
இது இப்படி இருக்க இராணுவம் மூன்று வழித்தாக்குதல் ஒன்றை மேற்கொண்டது.
இதனால் நம்மிடமிருந்து வலைஞர்மடம்
-
முள்ளிவாய்க்கால்-
வட்டுவாகல்
ஆகியவற்றை முற்றுகை செய்துவிட்டனர்.
இதன்
பின் நாம் எடுத்த அந்த நடவடிக்கையும் கைநழுவிப்போனது.நெடியவன்
,
காஸ்ட்ரோ ஆகியோர் திட்டமிட்டு செய்த இந்த செயலாம் நாம் நிர்க்கதி நிலையை
அடைந்துவிட்டோம்.
என்னைப்பொருத்தவரையில் நான் நினைக்கின்றேன் இது தனிப்பட்ட விரோதம் தான்
காரணம் என்று.
இதனால் நாம் கட்டி வழர்த்த
அத்தனையும் பறிபோய்விட்டது. இதன்
பின் நாம் எமது வலிமைகள் அனைத்தையும் ஒன்று திரட்டி இராணுவ முற்றுகையை
ஊடறுத்து தாக்குதல் ஒன்றை செய்தோம் அதன்படி பொட்டம்மான் தலைமையில் ஒரு
குழுவாக சேர்ந்து இரகசியமாக நந்திக்கடல் கரையூடாக வெளியேற தாக்குதல்
செய்வதெனவும் மற்றைய ஒரு தலைவரான கடாபி தலைமையில் ஒரு குழுவும் சூசை
தலைமையில் ஒரு குழுவும்
வேறு இரண்டு குழுக்கள் வேறு திசையால் ஊடறுப்பு தாக்குதல் செய்வதெனவும்
முடிவு செய்து நடவடிக்கைக்கு தயாரானோம்.
இத்திட்டத்தின் படி படையினரை ஊடறுத்து காட்டுக்குள் போவதுதான் நமது இலக்காக
இருந்தது.
எம்மை முற்றுகையிட்டிருந்த பகுதி மூன்று அடுக்குகளாக இராணுவம் நிற்பதை நமது
புலனாய்வு தகவல்கள் கூறின.
அப்போது வெளி உலகுடன் தொடர்பை சூசை மட்டுமே செய்வார் எனவும்
முடிவெடுக்கப்பட்டது.
(மேலும்...)
பாசிச புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை
முன்னணியின் தலைவர் பத்மநாவின் 21வது நினைவுதினம்!
பாசிச புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாவின் 21வது
நினைவுதினம் இன்றாகும் இதனை முன்னிட்டு யாழ் ஆஸ்பத்திரி வீதியில்
அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது.
கங்கா
தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்த அஞ்சலிக்கூட்டத்தில் தோழர்கள்,
கட்சியின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஈழவிடுதலைப் போராட்டத்தின்போது மரணித்த, கட்சித் தோழர்கள், பொதுமக்கள்
மற்றும் ஏனைய அமைப்புக்களைச்சார்ந்த அனைவருக்குமாக இரு நிமிட மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது. பின்னராக மறைந்த தோழர்களின் திருவுருப்படத்திற்கு
மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு இன்று – ஜூன் 19 – யாழ்ப்பாணத்தில் இரத்த
தானம் !:(பத்மநாபா ஈபிஆர்எல்எப்)
பாசிச புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை
முன்னணியின் தலைவர் பத்மநாவின் 21வது நினைவுதினம் இன்றாகும் இதனை முன்னிட்டு
யாழ் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில்
அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றதுடன். தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களினால் யாழ்
போதனா வைத்தியசாலையில் இரத்ததானமும் வழங்கப்பட்டது.
மத்தியகுழு
உறுப்பினரான கங்கா தலைமையில் காலை 9.30 மணியளவில் ஆரம்பமான இந்த
அஞ்சலிக்கூட்டத்தில் தோழர்கள், கட்சியின் ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் என
பலரும் கலந்துகொண்டிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்டத்தின்போது மரணித்த,
கட்சித் தோழர்கள், பொதுமக்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களைச்சார்ந்த
அனைவருக்குமாக இரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னராக மறைந்த
தோழர்களின் திருவுருப்படத்திற்கு மலர்அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத்
தொடர்ந்து கங்கா தலைமையில் யாழ் வைத்தியாலையின் இரத்தவங்கிக்கு சென்ற
தோழர்களும், ஆதரவாளர்களும் இரத்ததானம் வழங்கினர்.
ஆனி
20,
2011
சென்னையில் தியாகிகள் தினம்
இவ் வருடமும் தமிழ்நாடு சென்னையிலுள்ள புழல்
அகதி முகாமில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் பத்மநாபாவின்
நினைவு தினத்துடன் கூடிய ஈழவிடுதலைப் போராட்டத்தில் மரணித்த போராளிகள் பொது
மக்களை நினைவு கூரும் முகமாக அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் பத்மநாபாவின்
சிந்தனையின் வெளிப்பாட்டுடன் தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்விற்காக
நாம் தொடர்ந்தும் போராடப் போவதாக அச்சமயம் உறுதி மொழி எடுக்கப்பட்டது.
இன்றும் மிகவும் அடிப்படை வசதிகளின்றி தமிழநாடு அகதிகள் முகாகங்களில் வாடும்
ஈழத்தமிழ் மக்களை தற்போது அமைந்திருக்கும் புதிய தமிழ்நாடு அரசு கருணையுடன்
அணுகி ஆவன செய்யும் என்ற நம்பிக்கையுடன் தாம் காத்திருப்பதாக அகதி
முகாங்களிலுள்ள பலரும் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.
ஆனி
20,
2011
இன்னமும் தொடர்வதோ இந்தக்கொடுமை...
பெருநகரங்களில் பாதாளச் சாக்கடைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அடைப்பு
ஏற்படும் போது மனிதர்களை மலக்குழியில் இறக்கி அடைப்பை நீக்கும் கொடுமை
நடந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கென்று இயந்திரங்கள் வந்துவிட்டன. தகவல்
தொழில்நுட்பப் புரட்சி நடந்துகொண்டிருப்பதாக தம்பட்டம்அடித்துக்
கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், அதிலும் புகுந்து சுருட்டும் அமைச்சர்கள்,
இதற்கான இயந்திரங்களை கூடுதலாக உற்பத்தி செய்வதற் கும், அதை உள்ளாட்சி
அமைப்புகள் வாங்கிப் பயன் படுத்துவதற்கும் உரிய நிதி ஒதுக்க வேண்டும்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறு வனமாக விளங்கும் ரயில்வே துறையிலும்
இந்தக்கொடுமை சர்வசாதாரணமாக நடந்து கொண்டிருக்கிறது. ரயில்வே அமைச்சகத்துடன்
பேசி, ரயில் நிலையங்களில் மனித மலத்தை மனி தர்களைக் கொண்டு அகற்றுவதற்கு
முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
(மேலும்...)
ஆனி
20,
2011
குடாநாட்டில் இடம்பெற்று வந்த பொலிஸ் இராணுவ பதிவுகள்
நிறுத்தம்
யாழ். குடாநாட்டில் இடம்பெற்று வந்த பொலிஸ்,
இராணுவ பதிவு நடவடிக்கைகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துவதற்கு
அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான தீர்மானம் தேசிய பாதுகாப்பு சபையில்
நிறைவேற்றப்பட்டிருப்பதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி ஜெனரல் மகிந்த
ஹத்துருசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பு
எம்.பிக்களுக்கும் யாழ். கட்டளைத் தளபதிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பின்
நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதன்போது கட்டளைத் தளபதி மேற்கண்ட தகவலைத்
தெரிவித்தாக கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். இதன்பிரகாரம்
குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சகலவிதமான பதிவு நடவடிக்கைகளும் கடந்த
சனிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
ஆனி
20,
2011
யுத்தத்தில்
படுதோல்வியடைந்தாலும் சர்வதேச ரீதியில் எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் இலங்கைக்கு
தீங்கிழைக்கிறார்கள்
எல்.ரி.ரி.ஈ அப்பாவி மக்களை பயமுறுத்தி
மாதாந்தம் பலவந்தமாக வாங்கிய கோடான கோடி ரூபாவையும், போதைவஸ்து கடத்தல்,
ஆயுதக்கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமும் சம்பாதித்த பணம்
முழுவதும் இன்று வெளிநாடுகளிலேயே தேங்கிக் கிடக்கின்றன. அந்தப் பணத்தை
பயன்படுத்தியே இலங்கைக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் சர்வதேச ரீதியில்
இன்று எல்.ரி.ரி.ஈயின் ஆதர வாளர்கள் அரங்கேற்றி வருகின்றார்கள். தாருஸ்மன்
அறிக்கையும், எல்.ரி.ரி.ஈயின் தூண்டுதலின் பேரில் தயா ரிக்கப்பட்ட அறிக்கை
என்று குற்றம் சாட்டும் அளவுக்கு இவ்வறிக் கையில் உண்மைக்கு முரணான பல
விடயங்கள் சேர்க்கப்பட்டி ருக்கிறது.
எல்.ரி.ரி.ஈயின் ஆதரவாளர்களும், மேற்குலகிலுள்ள இலங்கைக்கு எதி ரான
ஏகாதிபத்தியவாதிகளும் எங்கள் நாட்டுக்கு எவ்வளவுதான் தீங்கிழைக்க
எத்தணித்தாலும் அம்முயற்சிகள் என்றுமே வெற்றி யடையப் போவதில்லை.
(மேலும்...)
ஆனி
20,
2011
இந்திய
மத்திய
மந்திரி சபை மாற்றம்
மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர்
மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். இது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தியுடனும் மூத்த மந்திரிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார். தொலைத்
தொடர்புத்துறை மந்திரியாக இருந்த ஆ. ராசா ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி
திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் கவனித்து வந்த இலாகாவை
மந்திரி கபில்சிபல் கூடுதலாக கவனித்து வருகிறார். மத்திய மந்திரியாக இருந்த
பிருதிவிராஜ் சவான் மராட்டிய முதல் மந்திரியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து
அவர் கவனித்து வந்த பாராளுமன்ற விவகாரத்துதுறைக்கு வேறு மந்திரி
நியமிக்கப்படவில்லை. ரயில் மந்திரியாக இருந்த மம்தா பானர்ஜி மேற்கு வங்காள
முதல் மந்திரியாகிவிட்டார். இதனால் அவர் வகித்து வந்த ரயில்வே துறைக்கு வேறு
மந்திரி நியமிக்கப்படவில்லை. ரயில்வே மந்திரி பதவியை தனது கட்சிக்கே ஒதுக்க
வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இதனால் தொலைத் தொடர்புத்துறை,
ரயில்வே, பாராளுமன்ற விவகாரத்துறை ஆகிய இலாகாக்களுக்கு புதிய மந்திரிகளை
நியமிக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். ஸ்பெக்ட்ரம்
விவகாரத்தில் மத்திய மந்திரி தயாநிதி மாறன் மீதும் தற்போது குற்றச்சாட்டு
எழுந்துள்ளது. அவர் சி. பி. ஐ. விசாரணையை எதிர்நோக்கி இருக்கிறார். மேலும்
சில மந்திரிகளின் செயற்பாடுகளில் பிரதமர் அதிருப்தி அடைந்துள்ளார்.
ஆனி
20,
2011
யாழ். வலிகாமம் வடக்கில் 20,000 குடும்பங்கள்
மீள்குடியமர்வு
யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் கடந்த ஒரு
வருடத்துக்குள் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்
பட்டிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜுலை மாதத்திலிருந்து இவ்வருடம் ஜூன் வரையான காலப்பகுதியில்
20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்ந் துள்ளன. வலிகாமம்
வடக்கு உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகள் பகுதி பகுதியாக விடுவிக்கப்பட்டு
அங்கு 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ளன என்றும்
அவர் குறிப்பிட்டார். 2010 ஆம் ஆண்டு ஜூன் வரையான காலத்தில் இப்பகுதியில்
300 குடும்பங்கள் மாத்திரமே மீள்குடியமர்த் தப்பட்டிருந்தன. ஆனால் கடந்த ஒரு
வருடத்துக்குள் 20 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள்
மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன என்று யாழ். அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இந்தப் பகுதியிலான மீள்குடியேற்றம் தொடர்பிலான அறிக்கை களை தான்
உயர்நீதிமன்றத்துக்குத் தொடர்ச்சியாக அனுப்பிவைத்து வருவதாக வும் அவர்
குறிப்பிட்டார்.
(மேலும்...)
ஆனி
20,
2011
வவுனியா
நகரசபைக்கு தலைவரை நியமிப்பதில் த.தே.கூ. திண்டாட்டம்
வவுனியா நகர சபைக்கு தகுதிவாய்ந்த ஒரு தலைவரை
நியமிக்க முடியாது கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இலங்கை தமிழரசு கட்சி
தடுமாறிவருவது குறித்து வவுனியா நகர சபைக்குட்பட்ட குடியிருப்பாளர்களும்
வர்த்தகர்களும் கடும் விசனம் அடைந்துள்ளனர். கட்சி எடுக்கும்
தீர்மானத்திற்கு நகர சபையின் தமிழரசு கட்சி உறுப்பினர்கள் முதலில் இணக்கம்
தெரிவிக்கின்றனர். ஒரு சில தினங்களின் பின்னர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து
வருகின்றனர். இதன் பின்னணியில் சிலர் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி
வருகின்றது.
(மேலும்...)
ஆனி
20,
2011
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து பிரிட்டன் மருத்துவர்கள் சாதனை
உலகிலேயே முதன் முதலாக 20 வயது இளம் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை
சிகிச்சை செய்து பிரிட்டன் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். பிரிட்டனைச்
சேர்ந்தவர் பெக்கி ஜோன்ஸ், நுரையீரல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு பல
ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், பிரிட்டன் சவுத் மான்செஸ்டர்
பல்கலைக்கழக மருத்துவமனையில், இவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை
செய்யப்பட்டது. உலகிலேயே முதன் முதலாக நடத்தப்பட்ட நுரையீரல் மாற்று அறுவை
சிகிச்சை இதுவாகும். புதிய மருத்துவ தொழில்நுட்ப முறையில், மூலக்கூறுகள்
பரிசோதனை செய்து,இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை
தெரிவித்துள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வரும் ஜோன்ஸ்
கூறுகையில், தற்போது உடல் நலம் நன்றாக இருக்கிறது. வார்த்தைகளால் என்னுடைய
உணர்வை விவரிக்க முடியவில்லை. தற்போது என்னால், நன்றாக சுவாசிக்க முடிகிறது.
பயணம் மேற்கொள்ளவும், ‘பேஷன் டிசைனிங்’ படிக்கவும் முடிவு செய்துள்ளேன்’
என்றார்.
ஆனி
20,
2011
விரைவில் உங்களை மகிழ்விக்க வருவேன்
- ரஜினிகாந்த்
நான் நலம் அடைய ரசிகர்கள் மேற்கொண்ட பிரார்த்தனை, பூஜைகள், ஹோமங்கள்,
விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு நூறு உண்மை என்று
நடிகர் ரஜினி கூறியுள்ளார். மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன்
அன்பார்ந்த ரசிகர்களுக்கு பேனா, பேப்பர் எடுத்து எழுதும் போது வார்த்தைகள்
வரவில்லை எனக்கு. தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த உதவியையும் செய்ய எனக்கு
உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வர் அவர்களுக்கும், என்றுமே என் மீது பாசத்தை
வைத்திருக்கும் மதிப்பிற்குரிய என்னுடைய அருமை நண்பர் கலைஞர் அவர்களுடன்
பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன். முதலில், உங்களிடம் பேசாமல் இருந்ததற்கு
மன்னிக்கவும். இந்த விஞ்ஞான உலகத்தில் கூட எந்த விளையாட்டை விளையாடினாலும்,
காசை மேலே தூக்கிப் போட்டு ஆட்டத்தை யார் முதலில் விளையாடுவது என்று முடிவு
செய்கிறார்கள். காசை மேலே தூக்கிப் போடுவதான் மனிதனுடைய வேலை. பூவாக விழுவதா
தலையாக விழுவதா என்பது ஆண்டவனுடைய செயல். என்னுடைய இந்த விளையாட்டில் ஒரு
பக்கம் பணம், விஞ்ஞானம், மருத்துவம், உலகத்திலேயே மிகச் சிறந்த
மருத்துவர்கள் இருக்க இன்னொரு பக்கம், நான் நலம் அடைய கடவுள் பிரார்த்தனை,
பூஜைகள் ஹோமங்கள், விரதங்கள்தான் என்னை காப்பாற்றியது என்பதுதான் நூற்றுக்கு
நூறு உண்மை என்பதை நான் நம்புகிறேன்.
ஆனி
20,
2011
மன்னாரில் பெற்றோலிய ஆய்வுக்கு 'காஸ்ப்றோம்' நிறுவனம் ஒத்துழைப்பு
மன்னாரில் பெற்றோலிய ஆய்வுப்பணிகளுக்கு
ஒத்துழைப்பினை வழங்க உலகின் மிகப்பெரிய எரிவாயு நிறுவனமான காஸ்ப்றோம்
நிறுவனத்தின் தலைவர் அலெக்சி மில்லர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நிபுணர்கள் குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்புவதாகவும் அவர்
குறிப்பிட்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் புனித பீற்றர்ஸ்பர்க்
நகரில் லெக்னெக்ஸ்போ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது
அலெக்சி மில்லர் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.இது தொடர்பாக நடவடிக்கை
எடுப்பதற்கு தனது கம்பனியின் நிபுணர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளை இலங்கைக்கு
அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அலெக்சி இதன்போது தெரிவித்தார்.
இவற்றைவிட இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை அமைப்பது தொடர்பாக
காஸ்ப்றோம் கம்பனியின் தலைவர் அலெக்சி மில்லர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்களுக்குத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார்.
ஆனி
19,
2011
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணை
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை நீதிமன்றில் ஆஜராகுமாறு கோரி அமெரிக்
காவில் உள்ள மாநில நீதிமன்றமொன்று அழைப்பாணை விடுத்துள்ளது. சித்திரவதைகளால்
பாதிக்கப்பட்டோருக் கான அமெரிக்க பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசா
ரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் ஜனாதிபதியிடம் 30 மில்லியன்
அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாகக் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்....)
ஆனி
19,
2011
இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை
(பகுதி 3)
இவ்வாறு பரவலாக தமிழ் சமூகத்தவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்
(அ. வரதராஜப்பெருமாள்)
(இவ் ஆய்வுக் கட்டுரை சம்மந்தமான கருத்துக்கள், விமர்சனங்கள்,
அபிப்பிராயங்களை சூத்திரம் இணையத்தளம் எதிர்பார்கின்றது. தொடர்புகளுக்கு:
sooddram@gmail.com)
இன்று மக்களால் தலைவர்களாக
அங்கீகரிக்கப்பட்டு இருப்பவர்களின் முந்தைய கால அரசியற் பின்னணி என்ன?
இவர்கள் கடந்த காலங்களில் மக்களுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும்
நடந்திருக்கிறார்களா? தம்மால் தெரிவு செய்யப்படுபவர்கள் பணத்துக்கோ
பதவிக்கோ ஆசைப்படாமல் மக்களுக்காகச் செயற்படுவார்களா? என்ற கேள்விகளையும்
அவற்றிற்கான பதில்களையும் மக்கள் பரிசோதனைகள் செய்தே தமது தலைவர்களைத்
தெரிவு செய்தார்கள் என்றோ அல்லது தெரிவு செய்கிறார்கள் என்றோ கூற முடியாது
என்று விவாதிப்பது சரியாக இருக்கலாம். அதற்காக மக்களால் தெரிவு செய்யப்
பட்டவர்களைத் தலைவர்களல்ல என்று சொல்வது சரியான வாதமல்ல. புலிகளின்
காலத்தில்தான் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து தமது
தலைவர்களைத் தெரிவு செய்ய முடியவில்லை. ஆனால் 2009ம் ஆண்டுக்குப் பின்னர்
நடைபெற்றவை சுதந்திரமற்ற தேர்தல்கள் எனக் கூற மடியாது. மக்கள் வாக்களிக்க
அனுமதிக்கப்படவில்லை எனக் கூறுவதுவும், மக்கள் பயத்தின் காரணமாக வாக்களிக்க
வரவில்லை என்பதுவும், வாக்களிக்கும் மனோநிலையில் மக்கள் இருக்கவில்லை
என்பதுவும் மக்கள் பணத்துக்கும் உதவிகளுக்கும் சாராயத்துக்கும்
மயங்கிவிட்டார்கள் எனவும்; காரணங்கள் கண்டுபிடிப்பதுவும் - கற்பிப்பதுவும்
இந்தக் கால ஜனநாயதகத்துக்குப் பொருத்தமானதல்ல.
(மேலும்....)
ஆனி
19,
2011
யூன் 19 தோழர் நாபா 21 வது நினைவு தினம்
தோழர் சுகு (பத்மநாபா ஈபிஆர்எல்எப்)
தோழர் நாபா தமிழ்த் தேசியப் போராட்டத்தில்
தனித்துவமான மாற்றுப்பாதை ஒன்றை வகுத்தவர். வெகுஜன இயக்கமொன்றை தமிழ்
சமூகத்தினுள் கட்டி எழுப்புவது, சக சமூகங்களுடன் ஐக்கியம், சர்வதேச
ஒடுக்கப்பட்ட தேசங்களுடன் நட்புறவு, சகல விதமான சமூக
ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை என்று செயற்பட்டவர். இயக்கத்தின்
பொருளாதார வறுமை, பசி பட்டினிக்கு மத்தியில் நம்பிக்கை ஒன்றையே அடிநாதமாகக்
கொண்டு செயற்பட்டவர். ஈழமக்களின் பிரச்சனைகளை பல்வேறு தளங்களில் எடுத்துச்
சென்றவர். முற்போக்கு ஆதரவுத் தளமொன்றை நிறுவியவர். அதற்கு தனக்கு கிடைத்த
வளங்களை எல்லாம் பாவித்தவர். ஈழப்போராட்டதில் வெ வ்வேறு கருத்துக்
கொண்டவர்களிடையே கருத்துப் போராட்டமும் நட்புறவும் எனச் செயற்பட்டவர்.
ஐக்கியமுன்னணி ஒன்றை கட்டி எழுப்புவதில் அவர் இடையறாது முயன்றவர்.
இயக்கத்தின் வர்க்க இயல்பு பாட்டாளிவர்க்க குணாம்சம் கொண்டதாக
இருக்கவேண்டும் என்று கருதிச் செயற்பட்டவர். சமூகத்தில் அடிமட்டத்தில்
இருந்து வந்தவர்களின் அங்கத்துவம் ஆதரிக்கப்படவேண்டும் என்று எப்பொழுதும்
கருதியிருந்தவர்.
(மேலும்....)
ஆனி
19,
2011
ஆனி
19,
2011
கிழக்கில் இடமாற்றங்களின் போது எந்தவித பாகுபாடோ, அரசியல் செல்வாக்கோ
இருக்கக்கூடாது
- தோழர் ரட்ணம்
கிழக்கில் சூழல் உருவாகியுள்ளபோது இன்னமும்
கல்வியில் சமநிலை ஏற்படுத்தப்படவில்லை. இடமாற்றங்கள் மூலம் அந்த நிலை
மாற்றப்பட வேண்டும், அத்துடன் இடமாற்றங்களின் போது எந்தவித பாகுபாடோ,
அரசியல் செல்வாக்கோ இருக்கக்கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா
துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.நிண்ட காலமாக ஆசியரியப் பற்றாக்குறையுள்ள
பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமிக்கக் கோரல் எனும் தலைப்பில் கிழக்கு
மாகாண ஆளுனர் மொஹான் விக்கிரமதுங்கவுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை
அனுப்பியுள்ள அவசரத் தொலை நகல் கடிதத்திலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
(மேலும்....)
ஆனி
19,
2011
டான் செய்திகள் இணையத்தில்!
இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் டான்
தமிழ்ஒளி தொலைக்காட்சியின் மாலை நேர செய்திகளை தினமும் உலகெங்குமுள்ள
தமிழர்கள் இணையத்தளம் மூலம் தற்போது பார்த்து மகிழலாம். யுரியுப், மற்றும்
முகப்புத்தகம் ஆகிய தளங்களில் இலங்கை நேரம் மாலை 7.00 மணிக்கு பின்னர்
இந்தச் செய்திகளை காணலாம்.
பின்வரும் முகவரிகளில் இந்த செய்திகளை
காணலாம்.links to watch the
news
http://www.facebook.com/dantv.tv
http://www.youtube.com/user/dantamiloli/
ஆனி
19,
2011
Canadian Tamils for
Peace and Democracy (CaTpad) call upon the Tamil Diaspora to act
responsibly and wisely.
The Canadian Tamils for Peace and
Democracy call on the Tamil Diaspora to act responsibly to find out a
possible way for a reconciliation that would help the Tamil people
living in Srilanka to find an amicable political solution. The immediate
need of the hour in the North and East is to rehabilitate the people
affected by the war and reconstruct and develop the provinces to create
an atmosphere for the people to run their lives smoothly. The Canadian
Tamils for Peace and Democracy wants the Tamil Diaspora should also take
the major responsibility for the destructions and death of Tamils by
contributing morally and monetarily aiding the separatist war, which has
lead to this disaster. Instead of blaming one side, the Tamil Diaspora
should learn the lesson from the past and play an active role by
negotiating with the Government of Srilanka to find the ways and means
to overcome the mistrust and to find every possible way to build the
lives of the affected people.
(more...)
ஆனி
19,
2011
இருநாட்டு உறவில் புதிய மட்டத்தை எட்டுவோம் ரஷ்யப் பயணத்தில் சீன ஜனாதிபதி
அறிவிப்பு
ரஷ்ய ஜனாதிபதி மற் றும் பிரதமர் ஆகியோரு டன் நடைபெறும் பேச்சு
வார்த்தைகளின்போது இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய மட்டத்தை
எட்டுவதற்கான திட்டங் கள் ஆலோசிக்கப்படும் என்று சீன ஜனாதிபதி ஹூ ஜிண்டாவோ
கூறியுள்ளார். தனது ரஷ்யப் பய ணத்தையொட்டி எழுத்து பூர்வமாக அளித்த பேட்டி
யில்தான் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த பத் தாண்டுகளில் இரு நாட்டு
உறவின் அனுபவங்கள் மற் றும் சாதனைகள் ஆகிய வற்றை இருவரோடும் பேசும்போது
பரிசீலனை செய்வோம். இந்த அனுப வங்களைக் கொண்டு அடுத்து வரும் பத்தாண்டு
களுக்கான இலக்குகளை நிர்ணயிப்போம். இதுவரை கிடைத்துள்ள அனுபவங் களின்படி
பார்த்தால், இரு நாட்டு மக்களுக்கு நிறைய பலன்கள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச
மற்றும் பிராந்திய ரீதியிலான அமைதி, பாது காப்பு மற்றும் நிலையான
தன்மைக்கும் இது பெரிய அளவில் உதவியிருக்கிறது.
(மேலும்....)
ஆனி
19,
2011
தோட்டத் தொழிலாளர்களுக்காக இன்று எவருமே இல்லை
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் கலாவதியான பெருந்தோட்டத்
தொழிலாளர்களின் சம்பள நிர்ணயக் கூட்டு ஒப்பந்தம் பல்வேறு இழுத்தடிப்புகள்,
இடையூறுகள், வில்லங்கங்களை எதிர்கொண்டு கடந்த திங்களன்று (6 ஆம் திகதி)
முடிவுக்கு வந்துள்ளது. வாழ்க்கைச் செலவு வானளவு உயர்ந்துள்ள இன்றைய
நிலையில் மிகவும் எதிர்பார்ப்போடு இந்த ஒப்பந்தத்தின் மூலமான சம்பள உயர்வை
எதிர்பார்த்திருந்த தொழிலாளர்களுக்கு வழமை போல் இம்முறையும் ஏமாற்றமே
கிடைத்துள்ளது என மலையக தொழிற்சங்கத் தலைமைகள் வரிந்து கட்டுகின்றன.
(மேலும்....)
ஆனி
19,
2011
வீரப்ப மொய்லியுடன் தயாநிதி மாறன் திடீர் சந்திப்பு
மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன்,
மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியை தில்லியில் அவ ரது
அலுவலகத்தில் திடீ ரென சந்தித்துப் பேசினார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
விவகாரத்தில் ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் சிபிஐ யிடம்
அளித்துள்ள வாக்கு மூலத்தில், 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை
தொலைத்தகவல் தொடர் புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது
நிறுவனத்திற்கு எதி ராகச் செயல்பட்டதாகவும், தன்னுடைய நிறுவனத்தை
மலேசியாவைச் சேர்ந்த தொழிலதிபருக்கு விற்கு மாறு நிர்ப்பந்தம் செய்த தாகவும்
பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும் மலேசிய நிறுவ னம் ஏர்செல்லை வாங்கிய
பிறகு, அதற்கு தொலைத் தொடர்பு உரிமங்களை தயாநிதி மாறன் வழங்கியதாகவும்
குற்றம் சாட்டினார். இந்த வகையில் தனது குடும்ப நிறுவனமான சன் குழுமத்
திற்கு ரூ.800 கோடி அள விற்கு லஞ்சம் பெற்றார் என்றும் குற்றச்சாட்டு எழுந்
துள்ளது. இதையடுத்து தயா நிதி மாறனிடமும் சிபிஐ எந்த நேரத்திலும் விசாரணை
நடத்தும் என்று கூறப்படு கிறது. இந்நிலையில் சட் டத்துறை அமைச்சர் மொய் லியை,
தயாநிதி மாறன் வெள்ளியன்று மாலை அவ ரது அலுவலகத்தில் சென்று சந்
தித்துள்ளார். இந்தச் சந் திப்பு 10 நிமிடங்கள் நடந்தது.
ஆனி
19,
2011
நன்றி சொல்ல வார்த்தையில்லை ரசிகர்களுக்கு ரஜினி கடிதம்
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கைப்பட கடிதம்
எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் எழுதியுள்ளதாவது மருத்துவமனையில் இருந்து
வெளியேறியதுடன் அன்பார்ந்த ரசிகர்களுக்கு பேனா, பேப்பர் எடுத்து எழுதும்போது
வார்த்தைகள் வரவில்லை. எனக்குத் தமிழக அரசு எந்த நேரத்திலும் எந்த
உதவிகளையும் செய்ய எனக்கு உறுதிமொழி கொடுத்த தமிழக முதல்வருக்கும் என்றுமே
என் மீது பாசத்தை வைத்திருக்கும் என்னுடைய அருமை நண்பர் கருணாநிதியுடனும்
பேசிய பிறகு உங்களுடன் பேசுகிறேன்.
(மேலும்....)
ஆனி
19,
2011
அரசுதமிழ்க் கூட்டமைப்பு பேச்சு விரைவில் முறிவடையும் அறிகுறி நல்லூர்
கூட்டத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சூசகம்
வட, கிழக்கு தமிழ் மக்களின் பெரும்பான்மைப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட
பெரிய கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும்
இடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் முறிந்துவிடும் அபாயம் காணப்படுகிறது.
அக்கட்சியின் பேச்சாளரான யாழ்.மாவட்ட எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் இது
தொடர்பான நம்பிக்கையீனத்தை நேற்று யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற
கூட்டத்தின் போது தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு காண்பதற்காக பாராளுமன்ற
தெரிவுக் குழுவை அமைக்கப்போவதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அது
காலம் கடத்தும் நாடகம் என சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்த நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு
காணப்படவில்லை.
(மேலும்....)
ஆனி
19,
2011
இந்தியத் தூதுக்குழு வருகையும் இலங்கை அரசின் நிலைப்பாடும்
தமிழர் தரப்பு அரசியல் தலைமை எடுக்கின்ற முடிவுகள் தமிழ் மக்கள் சார்பாக
இருப்பதை விட தங்களது சொத்து சுகம் அதற்கு இசைவான இந்திய ஆளும் வர்க்க
நலன்களே முக்கியமானவையாக இருந்து வந்துள்ளன.இலங்கையின் தமிழர்கள்
ஆதிக்குடிகள் அல்லர் என்றும் வந்தேறு குடியினர் என்றும் கூறியவர் ஜெனரல்
சரத் பொன்சேகா ஆவார். அது மட்டுமன்றி அவர் இறுதி யுத்தத்தினை வழிநடத்திய
இராணுவ ஜெனரலுமாவார். அத்தகைய நபர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட
போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவரை ஆதரித்து தமிழ் மக்கள் அவருக்கு
வாக்களிக்கும்படி வேண்டி நின்றதை வரலாறு என்றும் மறந்துவிடமாட்டாது.அந்த
முடிவை எடுப்பதற்கு இந்திய எசமானர்கள் எத்தகைய அழுத்தத்தைக்
கொடுத்திருந்தார்கள் என்பது அவ்வேளை கசிந்த கதைகளாகும். அத்தகைய இந்திய
ஆளும் வர்க்கத் தலைமை தனது நாட்டின் தேசிய இனங்களின் உரிமைகளைத் துப்பாக்கி
முனையில் அடக்கியொடுக்கிய வண்ணம் செயல்பட்டுக்கொண்டு எவ்வாறு இலங்கையின்
தமிழ் தேசிய இனத்திற்கு அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர முடியும்?இதனை ஒரு
தர்க்கம் நிறைந்த கேள்வியாக முன்வைத்து முடிவுகளை மேற்கொள்ள மறுப்பவர்
எவரும் தமிழ் மக்களின் சார்பானவர்கள் அல்லர்.வெறுமனே
மொழி,நடை,உடை,பாவனை,பண்பாட்டு அடையாளங்களை போலித்தனமாக அப்பிக் கொள்ளும்
தமிழ் ஆதிக்கத் தலைமைகள் இந்தியாவை வழிபட்டுக் கொண்டிருப்பது நொந்து நொந்து
வாழ்ந்து கொண்டுள்ள தமிழ் மக்களுக்கு விடுதலைக்கும் விமோசனத்திற்கும்
வழிகாட்ட முடியாது.இதனையே இந்தியத் தூதுக்குழுவின் வருகையும் தமிழ்த்
தரப்புக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றன.
(மேலும்....)
ஆனி
19,
2011
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளராக பான் கீ மூன்
மீண்டும் தெரிவு
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில்
நடைபெற்ற வாக்கெடுப்பில் பான் கீ மூன் ஏகமனதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்
செயலாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி தென் கொரிய
ராஜதந்திரியான பான் கீ மூன் எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கும் ஐக்கிய நாடுகள்
அமைப்பின் பொதுச் செயலாளராக நீடிப்பார். 192 உறுப்பு நாடுகளைக் கொண்ட
ஐக்கிய நாடுகள் அமைப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக பான்
கீ மூனை இரண்டாம் தவணைக்காக தெரிவு செய்யவுள்ளது. 67 வயதான பான் கீ மூனின்,
இரண்டாம் தவணைக்காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பமாகும் என்பது
குறிப்பிடத்தக்கது. முன்னாள் தென் கொரியாவின் வெளிவிவகார அமைச்சரான பான் கீ
மூனை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொள்ள முடியாது என லத்தீன் அமெரிக்க நாடுகள்
எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொதுச் செயலாளர் பதவிக்காக
வேறும் நாடுகள் வேட்பாளர்களை நியமிக்காத காரணத்தினால் பான் கீ மூன்,
ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
ஆனி
18,
2011
மரணத்தில் மகிழ்வு காணும் மனநோயாளிக் கூட்டமல்ல நாங்கள்...
புலிகளின் இந்த காட்டுமிராண்டி தனமான
செயலுக்கு வெளிநாட்டு புலம்பெயர் வாழ் தமிழர்களும் கண்திறந்து ஆதரவு
வழங்கினர். காரணம் தங்களின் வெளிநாட்டு சுகபோக வாழ்வு பறிபோய்விடுமென்று
புலிகளை ஏவிவிட்டு கொலைகளை நாடாத்தி அதில் குளிர்காய்ந்து ரசித்து
மகிழ்ந்தனர். ஈழத்தில் வாழும் மக்கள் மனங்களை நாங்கள் அறிவோம். புலிகள்
அழிந்த நிலமையிலும் ஈழத்தில் இன்னல் பட்டு இடர்களை அனுபவித்து வாழும்
அப்பாவி மக்களை அடகு வைத்து வாழும் புலம்பெயர் புலிப்பினாமிகள் தங்கள்
எண்ணங்களை மாற்றிகொள்ளவேண்டுமென்பதே எங்களது ஆவல்.
பழிவாங்கும் எண்ணம் நமக்கு இல்லை
பண்பான எண்ணமே நமக்கு உண்டு....
புலிகளின் பாசிச எண்ணத்திற்கு பலியான பொது
மக்கள் சகதோழர்கள் போராளிகள் அனைவருக்கும் எங்களது இதய அஞ்சலிகளுடன்
இக்கவிதை தனை அவர்களின் ஆத்மா சாந்தியடைய சமர்ப்பிக்கின்றோம்.
(மேலும்....)
ஆனி
18,
2011
திரைவிமர்சனம் ‘அவன் இவன்’
இயக்குனர் பாலாவின் இன்னொரு திரைக் காவியம்
- வித்யாசாகர்!!
ஒவ்வொரு மனிதரின் ஒவ்வொரு விதமான
வாழ்க்கையின் வெவ்வேறு காட்சிகளை ஒவ்வொன்றாய் தன் ஏட்டில்
பதிந்துக்கொண்டுதான் வருகிறது ஒவ்வொரு திரைப்படமும். அதிலும் எளிய மக்களின்
வாழ்தலை சமகாலப் பதிவாக்கும் அரிய திரைப்படங்கள் தமிழரின் கலைத் திறனை
மெய்ப்பிக்கும் சான்றாகவே தற்காலங்களில் வந்துக்கொண்டிருக்கின்றன.
அவ்வகையில், ஒரு எழில்மிகு கிராமத்தில் வசிக்குமொரு குடும்பத்தின் இரு
மகன்களையும், அவர்களின் யதார்த்த வாழ்க்கையினையும் கல்லுக்குள்
துளிர்க்கும் இலைபோல் அவர்களுக்குள்ளும் வரும் காதலையும், அதை ஏற்கும்
மனிதம் மிக்க மனிதர்களையும், மனிதம் எதிர்க்கும் மிருகப் பிறப்பொன்றின்
இறப்பையும் உணர்ச்சிப் பொங்க பொங்க காட்டி, நம் கண்முன் அவர்களை அழவைத்து
அதில் நம்மையும் ஒன்றவைத்து, அவர் செய்ய நினைத்த அத்தனையையும் செய்து,
அதற்கும் நம்மை தலையாட்டி ரசிக்கவும் வைக்கும் திரு. பாலாவின் இன்னொரு
திரைக் காவியம் இந்த “அவன் இவன்” திரைப்படம்.
(மேலும்....)
ஆனி
18,
2011
Just a fake - New Channel 4 Video Alleging Extra-Judicial Killings in
Sri Lanka
The new Channel 4 video of alleged extra-judicial killings in Sri lanka
which the new UN Rapporteur, Prof. Christof Heyns claimed as being
authentic after having same tested by three US forensic experts at the
Geneva sessions of the UNHRC in June 2011, has once again been
determined as a FAKE by Mr. Siri Hewavitharana of Australia, who is one
of the world’s leading experts on digital video systems and former head
of Cisco’s Global Broadcast and Digital Video Practice division. Mr.
Hewavitharana is presently the Executive Director of IPTV Systems in
Sydney, Australia.
(more...)
ஆனி
18,
2011
600 முன்னாள் புலி உறுப்பினர்கள் 30 இல் சமூகத்தில் இணைப்பு
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்
புலி உறுப்பினர்கள் 600 பேர் இம்மாதம் 30ம் திகதி சமூகமயப்படுத்தப்பட
உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர்
ஏ. திசாநாயக்க தெரிவித்தார். இது வரையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட புலி
உறுப்பினர்களை சமூகமயப்படுத்தும் போது அரசாங்கம் பிள்ளைகளுள்ள உறுப்
பினர்களுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், இம்முறை விவாகமான உறுப்
பினர்களுக்கு விசேட கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 30ம்
திகதி விடுவிக்கப்பட உள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது
பூர்த்தியடைந்துள்ளதாகவும், புனர்வாழ்வளிக்கப்படும் சகல புலி
உறுப்பினர்களும் இவ்வாண்டின் இறுதிக்குள் சமூகமயப்படுத்த
திட்டமிட்டுள்ளதாகவும் திசாநாயக்க மேலும் கூறினார்.
ஆனி
18,
2011
புலம்பெயர் புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணி திரளுங்கள் -
கோதாபய ராஜபக்ஷ
புலம்பெயர்ந்த புலிகளுக்கு உதவுபவர்களுக்கு எதிராக அணிதிரளுமாறு பாதுகாப்பு
அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ சகல தேசப்பற்றுள்ள மக்களையும்
கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற
சிறுசம்பவமொன்று பொலிஸாருக்கு அறிவிக்கப்படாமல் நேரடியாக அமெரிக்கத்
தூதரகத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் முதலாவதாக அமெரிக்கத்
தூதரகத்திலேயே விசாரிக்கப்பட்டும் உள்ளது என்றும் தெரிவித்தார்.
கட்டுநாயக்காவில் இடம் பெற்ற சம்பவங்கள் நேரடியாக ஜேர்மன் தூதரகத்துக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் பின்னர்
கொல்லப்பட்டுள்ளதாக சனல்-4 வீடியோ காட்சிமூலம் கூறப்படுகிறது. எனினும்,
கிழக்கில் பெளத்த மத தேரர்கள் கொல்லப்பட்டதையோ, நிராயுதபாணியான 600 பொலி
ஸாரைக் கொலை செய்ததையோ சாதாரண அப்பாவிப் பொதுமக்கள், குழந்தைகளைக் கொலை
செய்ததையோ சனல்-4 காண்பிக்கவில்லை.
ஆனி
18,
2011
ஆப்கானிஸ்தான் அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டது
-
தலிபான் தளபதி
ஆப்கானிஸ்தான் அரசை ஆதரித்து கலவரத்தை கைவிட்ட தலிபான் தளபதி மீண்டும்
தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் அரசு
தமது பிரிவைச் சார்ந்த தலிபான்களுக்கு பாதுகாப்பு, பயிற்சி, வேலை போன்ற
உத்தரவாதத்தை அளித்தது. ஆனால் அவை செயல்பாட்டிற்கு வரவில்லை. ஆப்கானிஸ்தான்
அரசு எங்களை ஏமாற்றி விட்டது. எனவே தாக்குதல் நடவடிக்கைகளில் மீண்டும்
ஈடுபட போகின்றோம் என தலிபான் மெஹலவி அசிசுல்லா அசா தெரிவித்துள்ளார். 18
மாதங்களுக்கு முன்னர் மறு ஒருங்கிணைப்பு திட்டம் ஆப்கான் மீதான லண்டன்
மாநாட்டில் கொண்டு வரப்பட்டது. இதற்கு 88 மில்லியன் பவுண்டில் டிரஸ்ட்
ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் 6 மில்லியன் பவுண்ட்
அளித்தது. இத்திட்டத்தில் ஆப்கான் கலவரப்பகுதியான தெற்கு பகுதியினர்
சேரவில்லை.
ஆனி
18,
2011
அமெரிக்கப் படைகள் நாடு திரும்ப வேண்டும்
ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கப் படைகள் உடனடியாக நாடு திரும்ப
வேண்டும் என யு.எஸ். செனட்டர்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம்
வலியுறுத்தினர். ஏறக்குறைய 25 செனட்டர்கள் இந்த கருத்தை ஒபாமாவிடம்
தெரிவித்தார்கள். இதில் பெரும்பாலானவர்கள் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்கள்
ஆவார்கள். ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க துருப்புகளில் குறிப்பிட்ட அளவு
வருகிற ஜூலை மாதத்திற்குள் திரும்ப வேண்டும் என செனட்டர்கள் கையெழுத்திட்ட
கடிதத்தை அளித்தனர். கடந்த 18 மாதங்களுக்கு முன்பாக ஒபாமா கூறுகையில்,
ஆப்கானில் அமைதி ஏற்படுத்திய பின்னர் 2011ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கப்
படைகள் பெருமளவு திரும்ப அழைக்கப்படுவார்கள்” என கூறி இருந்தார்.
(மேலும்....)
ஆனி
18,
2011
அனுமதியில்லாமல் கூட்டம் நடத்த முடியாது என இராணுவத்தினர் கூறினர்
யாழ். அளவெட்டியில் நடைபெற்ற தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் தேர்தல் கூட்டத்தில் இராணுவத்தினர் புகுந்து தாக்குதல்
நடத்தியமை தொடர்பாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் கூட்டமைப்பினர்
முறையிட்டுள் ளதுடன் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த
ஹத்துருசிங்கவிடமும் புகாரிட்டுள் ளதாக தெரிவித்துள்ளனர். இராணுவத்தினர்
வழமை போல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது கூட்ட மொன்று நடப்பதை
அவதானித் தனர். என்ன நடைபெறுகிறது என அங்கிருந்தவர்களிடம் இராணுவத்தினர்
விசாரித்தனர். தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது கூட்டம் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளதா என இராணுவத்தினர்
விசாரித்தனர். அனுமதி பெறவில்லை எனக் கூறப்பட்டது. எனவே அனுமதியில்லாமல்
கூட்டம் நடத்த முடியாது என இராணுவத்தினர் கூறினர். அப்போது எம்.பி.க்களின்
மெய்ப் பாது காவலர்களான பொலிஸார் இருவர் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின் இராணுவத்தினர் அங்கிருந்து சென்று விட்டனர் என்றார். இப்பகுதியில்
எந்தக் கட்சியும் கூட்டம் நடத்துவதில் எமக்குப் பிரச்சினை எதுவுமில்லை.
இப்பகுதியில் எல்லா இடங்களிலும் இராணுவத்தினர் உள்ளனர். எனவே இங்கு என்ன நடை
பெறுகிறது என்பதை இராணுவத்தினர் அறிந்திருக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
ஆனி
18,
2011
A
Visit Inside Colombia’s Most Notorious Prison, La Tramacúa
(By James Jordan, Alliance for Global Justice National Co-Coordinator)
I
called Raquel Mogollón just minutes after she had come from a rare visit
inside the pavilions of Colombia’s most notorious prison, the High
Security Penitentiary of Valledupar, commonly known as La Tramacúa.
Mogollón is the Chair of the Alliance for Global Justice (AFGJ) Colombia
Committee and a member of the International Network in Solidarity with
the Political Prisoners (INSPP). La Tramacúa was the first prison built
with US funding and designed and advised by the US Bureau of Prisons as
part of the Program to Improve the Colombian Prison System. After its
construction it was touted as a model of a “New Penitentiary Culture”.
However, it has become infamous for its terrible conditions including
(more....)
ஆனி
18,
2011
இன உறவை சீரழிக்கும் சதியே சனல் - 4 காட்சி:அரசாங்கம்
முற்றாக நிராகரிப்பு:புலிகளின் பணப்பலத்தால் சோடிக்கப்பட்டதே விவரணக்
காட்சிகள்!
இலங்கையில்
நடந்த இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சித்தரிக்கப்பட்டு
வெளியிடப்பட்டுள்ள சனல் - 4 இன் விவரண படம் முற்றிலும் பொய்யானதென இலங்கை
அரசாங்கம் நிராகரித்துள்ளது. வெளிவிவகார அமைச்சின் பணிப்பு க்கமைய,
லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இது தொடர்பாக அறிக்கையொன்றை நேற்று
வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சட்டவிரோத ஆயுதக்
குழுவொன்றினால் பலாத்காரமாக பணயக் கைதிகளாக்கப்பட்ட அப்பாவி பொதுமக்களை
மீட்கும் பணியில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் இதுவரைக்கும் உலகெங்கிலுமே
நடைபெற்றிராத பாரிய மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. உயிர்களைக் கையில்
பிடித்துக் கொண்டு வாழ்வது நிச்சயமற்றதென்ற நிலையில் புலிகளால் மனிதக்
கேடயங்களாகப் பாவிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்களை மீட்கும்
பணியில் இலங்கை இராணுவம் ஆற்றிய பங்கு அளப்பரியது.
(மேலும்....)
ஆனி
17,
2011
வடமாகாண முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடத் தயார் –
டக்ளஸ் தேவானந்தா!
வடமாகாண முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடத்
தயார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வட
மாகாணசபைத் தேர்தலில் முதன்மை வேட்பாளராக தாம் போட்டியிடத்
திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டின் இறுதியில் அல்லது
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் வட மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதற்கு அரசாங்கம்
திட்டமிட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னர்
இதுவரையில் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழா
அல்லது ஈ.பி.டி.பி. கட்சியிலா போட்டியிட உத்தேசித்துள்ளீர்கள் என்ற
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு நேரடியாக பதில் எதனையும் அமைச்சர் வழங்கவில்லை.
13ம் திருத்தச் சட்ட மூலத்திற்கு அப்பாலான ஓர் அரசியல் தீர்வுத் திட்டம்
அவசியப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனி
17,
2011
கூட்டமைப்பினர் இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகினர்...?
(கீழே உள்ள புகைப் படம் தாக்குதலுக்கு பின்னராக எதுக்கப்பட்டது
என்று அறிய
முடிகின்றது)
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் நேற்று அளவெட்டியில் நடத்திய உள்ளூராட்சி
தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்குள் புகுந்த இராணுவத்தினர்,அங்கிருந்தவர்களை
கொட்டன்களால் தாக்கியும் அடித்தும் விரட்டினர். கூட்டத்தில்
கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க முற்பட்டனர்.
மெய்ப்பாதுகாவலர் இடையில் புகுந்து அடியை வாங்கியதால் சிப்பாய் ஒருவரின்
பலமான தாக்குதலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நூலிழையில்
தப்பினார். எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வடக்கில் உள்ள 19 உள்ளூராட்சி
சபைகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது. அதற்கான பிரசார நடவடிக் கைகள்
யாழ்ப்பாணத்தில் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
முதலாவது பரப்புரைக் கூட்டம் நேற்று மாலை அளவெட்டி, மகாஜனசபை மண்டபத்தில்
நடைபெற்றது. மாலை 6.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது. முதலில் கூட்டமைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி உரையாற்றினார். தொடர்ந்து
நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது உள்ளே
நுழைந்தோர் கொட்டன்கள், தடிகளால் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியோர்
இராணுவச் சீருடையை அணிந்திருந்தனர் என்றும் தெரிவித்தனர்.உள்ளே நுழைந்த
இராணுவத்தினர் துப்பாக்கிகள், கொட்டன்கள், மண்வெட்டிப் பிடிகள், தடிகள்
சகிதம் கூட்டத்துக்குள் திடீரென புகுந்து, அங்கு கூடியிருந்த மக்கள் மீது
கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர் என்று யாழில் வெளிவரும் சீட்டுக் கம்பனி
சப்றா சரவணபவனின் பத்திரிகை தெரிவிக்கின்றது.
ஆனி
17,
2011
நெடியவன் நெருக்கடியில்.....?
புலம் பெயர்
புலிகளை வளைக்கிறது நெதர்லாந்து
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள
நெதர்லாந்து அதிகாரிகள் 13 முன்னாள் புலி உறுப்பினர்களிடம் விசாரணை செய்ய
உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப்
பொறுப்பாளர் குமரன் பத்மநாதனிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளதாகக்
குறிப்பிடப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் இந்த விசாரணைகள்
நடத்தப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் புலி உறுப்பினர்களிடம் சில
தினங்களுக்கு விசாரணைகள் நடத்தப்படும் என நெதர்லாந்து தூதரகம்
அறிவித்துள்ளது. யார் யாரிடம் விசாரணை நடத்தப்படும் என்பது பற்றியோ அல்லது
எவ்வாறான விசாரணைகள் நடத்தப்படும் என்பது பற்றியோ தகவல்கள் வெளியிடப்பட
மாட்டாது என நெதர்லாந்து அறிவித்துள்ளது. பொதுவாக புலிகளினால் நெதர்லாந்தில்
மேற்கொண்ட நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றி விசாரணை நடத்தப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைகளின் ஓர் கட்டமாக ஏற்கனவே 90 பேரிடம்
வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை,
தன்னார்வ அடிப்படையில் சாட்சியங்களை அளிக்க அனுமதிக்கப்படுவதாகவும்,
எவரையும் கட்டாயப்படுத்தி சாட்சியமளிக்க நிர்ப்பந்திப்பதில்லை எனவும் இலங்கை
அரசாங்கம் முன்னர் குறிப்பிட்டிருந்தது.நோர்வேயில் நெடியவன் கைது ஐ
தொடர்ந்து இந்த விசாரணைகள் முடுகிவிடபட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதன்
அடுத்த கட்டமாக கனடா, அமெரிக்கா புலிகள் சிலருடன் இரகசியமாக விசாரணைகள்
மேற்கொள்ளப்படலாம் எனவும் அறியமுடிகின்றது.
ஆனி
17,
2011
பிரித்தானியாவிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை சென்றடைந்துள்ளனர்!
பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட
புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை சென்றடைந்துள்ளனர். விசேட விமானம்
ஒன்றினம் மூலம் நாடு கடத்தப்பட்ட குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள்,
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். புகலிடக்
கோரிக்கையாளர்களைத் தாங்கிய விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில்
தரையிறங்கியதாகவும், புகலிடக் கோரிக்கையாளாகள் விமான நிலையத்தை
அடைந்துள்ளதாகவும் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 40
புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலும்,
25 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மற்றுமொரு தகவலும்
தெரிவிக்கின்றது. பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப்
புகலிடக் கோரிக்கையாளர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் வெளியிடப்படவில்லை.
திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தேசிய புலனாய்வுப்
பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். புலனாய்வுப் பிரிவினர் குறித்த
புகலிடக் கோரிக்கையாளர்களிடம் விசாரணை நடத்தியதன் பின்னர் அடுத்த கட்ட
நடவடிக்கை குறித்து தீhமானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஆனி
17,
2011
ஜனாதிபதி ரஷ்யா
சென்றடைந்தார்
ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ் பேர்க் நகரில்
நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ நேற்று அங்கு சென்றடைந்தார். சென் பீட்டர்ஸ் பேர்க் நகரின் புல்கோவோ
சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சென்
பீட்டர்ஸ்பேர்க் பிரதி ஆளுநர் செர்களாஸ் அஸெக்ஸி ஜவனோவிச் வரவேற்றார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ் விஜயத்தின் போது ரஷ்யா, சீன
ஜனாதிபதிகள் உட்பட பல நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து இரு தரப்பு
நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.
ஜனாதிபதியுடன் சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம, வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன,
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்
அஜிட் நிவார்ட் கப்ரால் ஆகியோரும் பயணமாகியுள்ளனர்.
ஆனி
17,
2011
ஆனி
17,
2011
தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ விரைவில் விசாரணை நடத்தும் சாத்தியம்
மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறையில் 2001 முதல் 2007 வரை அலைக்கற்றை
ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை தொடர்பாக அத்துறையில் முன்னாள் அமைச்சராக
இருந்த தயாநிதி மாறனிடம் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ) அடுத்து
விசாரணை நடத்தக் கூடும் என்று தெரிகிறது. இந்த விற்பனையில் நடந்த
முறைகேடுகள் தொடர்பாக ஜூலை முதல் வாரத்தில் வழக்குப் பதிவு செய்ய சி.பி.ஐ.
முடிவு செய்துள்ளது. மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி
மாறன் தன்னை நிர்ப்பந்தப்படுத்தி மலேசியாவைச் சேர்ந்த ஒருவரின்
நிறுவனத்துக்குப் பங்குகளை விற்க வைத்ததாக எயர்-செல் நிறுவனத்தின் தலைவர்
சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
(மேலும்...)
ஆனி
17,
2011
ஆனி
17,
2011
பிரிவினைவாதத்தின் எதிரொலி
தெற்கு
சூடானில் ஒரே வாரத்தில் 100 பேர் பலி
தெற்கு சூடானில் ஒரே வாரத்தில் நடந்த பல்வேறு
கலவரங்களில் 100 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க
நாடான சூடான் விரைவில் இரண்டாக பிரிக்கப்படவுள்ளது. இதில் தெற்கு சூடானில்
பல்வேறு அமைப்பினரைச் சேர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்தி
வருகின்றனர். இவர்களிடையே அடிக்கடி கலவரம் ஏற்படுவதால் உயிர் பலியும்
அதிகரிக்கிறது. கடந்த திங்களன்று பீட்டர் கேடர் பகுதியில் நடந்த வன்முறையில்
29 பேரும், மேல் ஏரியா பகுதியில் நடந்த வன்முறையில் 71 பேரும் என 100 பேர்
கொல்லப்பட் டுள்ளதாக தெற்கு சூடான் அரசு செய்தி தொடர்பாளர் பீட்டர் அகூர்
தெரிவித்தார். தெற்கு சூடானில் டப்போஸா எனும் பழங்குடியினரும், கென்யா
நாட்டைச் சேர்ந்தவர்களும் தான் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வன்முறைக்கு
அதிகம் பலியாகின்றனர்.
ஆனி
17,
2011
ஊடகங்கள் தேசத்திற்கு துரோகம் இழைக்கும் முயற்சிகளை முறியடிக்க வேண்டும்
உலகின் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமான எல்.
ரி. ரி. ஈயின் முதுகெலும்பை முறித்து அவ்வியக்கத்தை செயல் இழ க்கச் செய்த,
உலக சாதனையை புரிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நாட்டைக் கட்டியெழுப்பும்
முயற்சிகளுக்கு முட்டுக்க ட்டை போடும் எண்ணத்துடன், இன்று சர்வதேச அரங்கில்
சதித்திட் டமொன்று தீட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. யுத்தக்
குற்றச்சாட்டுக்கள், வெள்ளைக்கொடி விவகாரம் ஓரளவு அடங்கி யிருக்கும் இன்றைய
காலகட்டத்தில், எல். ரி. ரி. ஈ.யின் ஆதரவாளர் களின் பணப்பலம் காரணமாக
மீண்டும் சனல் - 4, பீ. பீ. சி., அல் ஜெiரா மற்றும் சி. என். என். போன்ற
ஏகாதிபத்தியவாதிகளின் கைம்பொம்மைகளாக இருக்கும் சர்வதேச ஊடகங்கள் இப்போது
இலங்கைக்கு எதிரான துர்பிரசாரங்களை மீண்டுமொரு தடவை முடுக்கிவிட்டுள்ளது.
(மேலும்...)
ஆனி
17,
2011
லிபியாவை தாக்க அதிகாரம் உண்டு
-
ஒபாமா
லிபியாவில் உள்நாட்டு மோதலை காரணம் காட்டி அந்நாட்டின் மீது நேட்டோ படைகளைக்
கொண்டு கொடிய தாக்குதலை நடத்தி வரும் அமெரிக்கா, இத்தாக்குலை நடத்துவதற்கு
தங்களுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உண்டு என்று ஆணவத்துடன் கூறியுள்ளது.
லிபியாவின் தலைநகர் திரிபோலி உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேட்டோ
போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்துவருகின்றன. ஜனாதிபதி கடாபியை குறிவைத்து
தொடர்ந்து குண்டுவீச்சு தாக்குதல்கள் நடக்கின்றன. இந்நிலையில் வாஷிங்டனில்
ஜனாதிபதி ஒபாமா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லிபியாவை தாக்குவதற்கு
அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்க நாடாளுமன்றத்தின்அனுமதியைக் கூட கேட்க
தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனி
17,
2011
Architectural design competition for cultural centre in Jaffna
Sri Lankan and Indian architects will
have an opportunity to showcase their talent in a design competition for
a cultural centre in Jaffna. The only catch for Indian architects,
however, is that the lead consultant will have to be Sri Lankan. “We
want to encourage partnerships between architects of both countries,” an
Indian High Commission spokesperson said, when asked why India insisted
on a joint venture for Indian architects to participate in the contest.
(more...)
ஆனி
17,
2011
அல்கொய்தாவின் புதிய தலைவராக அல் சவாஹிரி நியமனம்
அல்கொய்தா அமைப்பின் புதிய தலைவராக அயிமன் அல் சவாஹிரி தேர்வு
செய்யப்பட்டுள்ளார். அல் கொய்தாவின் பொதுக் கட்டளையகம் இந்த முடிவை
எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அல் கொய்தா
வெளியிட்டுள்ள அறிக்கை அந்த இயக்கத்தின் இணையத்தளம் ஒன்றில் வெளியாகியுள்ளது.
‘சவாஹிரி தலைமையில், அமெரிக்க, இஸ்ரேல மற்றும் அவர்களுக்கு உதவும்
நாடுகளுக்கு எதிராக புனிதப் போர் தொடரும். இஸ்லாமிய மண்ணை
ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறும் வரை எங்கள் போர் தொடரும்’ என்று
அல்கொய்தாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்...)
ஆனி
16,
2011
Channel 4 Documentry
சனல்
4 இல் ஒளிபரப்பிய
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள்
சம்மந்தமான ஒளிபரப்பு
மேற்குலகம்
இலங்கை அரசை தனது நலன்களுக்க இயவாக செயற்படுவதற்காக தயாரிக்கப்பட்ட இவ்
ஆவணம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது என்பதுதான் இதன் நோக்கம்
என்று யாராவது நம்பினால் அது பொரிமாத் தோண்டிக் கதையாக அமையும். இலங்கை
அரசின் ரஷ்யா, சீனா. இந்தியா, வியட்நாம், ஈரான், தென் அமெரிக்க நாடுகளுடனான
நல் உறவுகள் கடும் சினத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையை மிரட்டி
எப்படியாவது தனக்கு அடி பணிய வைக்க மேற்குலகம் பாவிக்கும் துரும்பு தமிழரை
அடகு வைத்து போர்க்குற்றம் என்பது. தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வெல்லாம்
இதில் இல்லை என்பதை தமிழ் பேசும் சமூகம் இன்னுமொரு தடவை பிந்தியே புரிந்து
கொண்டால் செல்வநாயகத்தின் 'தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்' என்ற
ஒவ்வாத வார்த்தைகளைத்தான் நாம் மீண்டும் துணைக்கு அழைக்க வேண்டும்.
(காணொளியை பார்க்க....)
ஆனி
16,
2011
உணர்வுகளோடு கலந்து நின்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு” 83வது பிறந்த நாள்
கொண்டாட்டங்களில் சேகுவேராவுக்கு புகழாரம்
சேகுவேராவின் 83 வது பிறந்தநாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட அனைத்து லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் மேற்கு ஆசிய
நாடுகளில் இந்தக் கொண்டாட்டங்கள் விமரிசையாக நடந்திருக்கின்றன. இந்தக்
கொண்டாட்டங்கள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் அதனதன் தன்மைக்கேற்றபடி
அமைந்தன. மேற்கு ஆசியாவில் மக்கள் எழுச்சி நடைபெற்று வரும் நாடுகளில் சே
படம் உள்ள பெரிய, பெரிய அட்டைகளோடு போராட்டக்காரர்கள் வீதிகளில் வலம்
வந்துள்ளனர். வெனிசுலா, பொலிவியா, அர்ஜெண்டினா ஆகிய நாடுகளில் விடுதலையைப்
பாதுகாப்போம் என்ற முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.
(மேலும்....)
ஆனி
16,
2011
தேர்தல் தோல்விக்கு திமுகதான் காரணம்
காங்கிரசை இனி நீங்கள்தான் வழி நடத்த
வேண்டும். தமிழக காங்கி ரஸ் தலைவராக இருந்தவர் பதவியில் இருந்து ராஜி னாமா
செய்த பிறகும், அதை மேலிடம் இன்னும் ஏற்காமல் இருப்பது ஏன் என்று
தெரியவில்லை. சிலர் காலை உணவு சாப்பிட்டு விட்டு கடற்கரை ரோட்டில்
உண்ணாவிரதம் இருந்துவிட்டு, மதிய சாப் பாடு வேளை வந்ததும் உண் ணாவிரதத்தை
முடித்துக் கொண்ட சம்பவமும் உண்டு. அது போல் இந்த உண்ணா விரதம் கிடையாது.
தமிழக சட்டமன்ற தேர் தல் தோல்விக்கு காரணம் திமுகதான். கூடா நட்பு கேடாய்
முடியும் என்று சொல்வது யாரை பார்த்து? காங்கிரசை பற்றி வீரமணி, ராமதாஸ்,
திருமாவளவன் போன்றவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் தி.மு.க. தலைவர்
கருணாநிதி என்ன சொல்ல வருகிறார் என்று தெளிவாக தெரிய வில்லை.தேர்தல் தோல்
விக்கு காங்கிரஸ் அதிக சீட் பெற்றது தான் காரணம் என்று சொல்ல முடியாது என்கி
றார். சொல்வதை தெளி வாக சொல்லவேண்டும்.இவ்வாறு இளங்கோவன் பேசினார்.
ஆனி
16,
2011
ஆனி
16,
2011
ஓசன் லேடி என்ற கப்பல் மூலம்
ஆட்கடத்தலில் ஈடுபட்ட
குற்றச்சாட்டில் நால்வர் கனடாவில் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் 76 பேரை
கப்பல் மூலம் கனடாவுக்கு கடத்தினார்கள் எ“ன்ற குற்றச்சாட்டில் கனடா, டொரன்டோ
நகரில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் நால்வர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள்
தெரிவிக்கின்றன. விஷ்ணுராஜ தேவராஜ் (வயது 33), அந்தோனிமுத்து (வயது 33),
கந்தசாமி (வயது 39) மற்றும் ஜெயசந்திரன் கனகராஜ் (வயது 32) ஆகியோரே கனடா
பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டவர்களாவர். கடந்த 2009ஆம் ஆண்டு
ஒக்டோபர் மாதக் காலப்பகுதியில் ஓசன் லேடி என்ற கப்பல் மூலம் மேற்படி
இலங்கையர்கள் 76 பேரையும் சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கடத்தினார்கள்
என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
என்று வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
ஆனி
16,
2011
யாழ்.
குடாநாட்டில் குடியிருப்பாளர் பதிவு என்பதில் உண்மையில்லை
யாழ். குடாநாட்டில் ஆட்களை பதிவு செய்வதாக
கூறப்படுவதில் எதுவித உண்மையுமில்லை என யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர்
ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க நேற்று தெரிவித்தார். குடாநாட்டில் குற்றச்
செயல்களை தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து
செயற்படுகின்றனர். இதன் ஒரு கட்டமாக குடாநாட் டிலுள்ள பொலிஸ் நிலையங்கள்
தமது பொலிஸ் நிலையத்தை அண்டியுள்ள வீடுகள் வர்த்தக நிலை யங்களின் விபரங்களை
திரட்டு கிறது. இப்பகுதிக்குள் புதிய வர்களின் வரவு, இரவு நேர ஆள் நடமாட்டம்
தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபடும் நோக்குடனேயே இவ்வாறான தரவுகள்
திரட்டப்படுகின்றன.
(மேலும்....)
ஆனி
16,
2011
கலைஞர்
ரி.வி.க்கு வழங்கிய ரூ. 200 கோடி சொத்து டி.பி.ரியலிட்டி
நிறுவனத்திடமிருந்து பறிமுதல்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்
சம்பந்தப்பட்டுள்ள டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் இந்திய ரூ. 200 கோடி
மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய அமுலாக்க பிரிவுக்கு விரைவில் கடிதம்
எழுத இருப்பதாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை
ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் பற்றி விசாரித்து வரும் சி.பி.ஐ. தாக்கல்
செய்த 2வது குற்றப் பத்திரத்தில் டி.பி. ரியலிட்டி நிறுவனத்தின் மூலம்
குசேகான் ஹெல்த்தி மற்றும் சினியுக் நிறுவனம் ஆகியவற்றின் வழியாக கலைஞர்
தொலைக்காட்சிக்கு ரூ. 200 கோடி போய் சேர்ந்ததாக கூறப்பட்டு இருந்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் சுவான் டெலிகாம் நிறுவனம் பெற்ற
ஆதாயத்துக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
(மேலும்....)
ஆனி
16,
2011
அமெரிக்க கைத்தொலைபேசியைப் பயன்படுத்தி
இந்திய
பாதுகாப்பு அதிகாரிகளை ஏமாற்றிய தந்திரம் அம்பலம்
இந்தியாவில் டேவிட் கோல்மென் ஹெட்லி வேவு
பார்த்துக் கொண்டிருந்த போது அமெரிக்க எண் கொண்ட கைத்தொலைபேசி ஒன்றில்
இருந்து தான் ஐ. எஸ். ஐ. யின் மேஜர் இக்பால், ஹெட்லியைத்
தொடர்புகொண்டிருக்கிறார். இதன் மூலம், இந்திய பாதுகாப்பு நிறுவனங்களை
ஏமாற்றி விடலாம் என்று அவர் கருதியிருக்கிறார். அமெரிக்காவின் சிகாகோ நகரில்,
சமீபத்தில் நடந்து முடிந்த தகாவுர் ராணா வழக்கில், ஹெட்லி அளித்த
வாக்குமூலத்தின் விவரங்கள், ஒன்றன் பின் ஒன்றாக தற்போது வெளிவருகின்றன.
(மேலும்....)
ஆனி
16,
2011
பெண்களுக்கு
மிகவும் ஆபத்தான நாடுகளில் ஆப்கானுக்கு முதலிடம்
பெண்களுக்கு மிக அபாயகரமான நாடாக
ஆப்கானிஸ்தான் உள்ளது என சர்வதேச பாலின விவகார ஆய்வு எச்சரித்துள்ளது.
அடுத்து பெண்களுக்கு அபாயம் உள்ள நாடாக கொங்கோ குடியரசு உள்ளது. மூன்றாவது
இடத்தில் இந்தியாவுக்கு அருகாமையில் உள்ள பாகிஸ்தான் உள்ளது. இந்தியாவில்
அதிக அளவு பெண் சிசுக் கொலை மற்றும் பாலியல் கடத்தல் நிகழ்வுகள் இருப்பதால்
பெண்களுக்கு அபாயம் உள்ள நாடு பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப்
பிடித்து உள்ளது. ஆய்வின் வறுமையில் வாடும் சோமாலியா நாடு ஐந்தாவது இடத்தைப்
பிடித்து இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை எதிர்த்து
நேட்டோ படைகள் தற்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. எப்போதும் பதட்ட நிலை
நிலவும் ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு அபாயகரமான நாடாக உள்ளது.
ஆனி
16,
2011
யாழ்ப்பாணத்தில் சாதி அரசியல் செயற்படும் முறை
யாழ்ப்பாணத்தில் சாதி வேறுபாடுகள் மக்கள்
பரம்பரையாக ஈடுபட்டு வரும் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்
பட்டுள்ளன.விவசாயத் தொழில் யாழ்ப்பாணத்தில் மிகவும் அதிகார சக்தி கொண்ட
வெள்ளாளரின் தொழிலாகக் கருதப்பட்டது.நளவர் மற்றும் பள்ளர் எனப்படும்
சாதியினர் முறையே கள் இறக்கும் தொழில் செய்பவர்களையும்,தோட்டங்களில் கூலி
வேலை செய்பவர்களையும் குறிக்கிறது.மரணவீடுகளில் பறையடிப்பவர்கள் பறையர் என
அழைக்கப்பட்டு அடிமைகளைப்போல் நடத்தப் பட்டார்கள்.துணி துவைப்பவர்கள்
வண்ணார் எனவும் சிகை திருத்தல் வேலை செய்பவர்கள் அம்பட்டர் எனவும்
அழைக்கப்பட்டார்கள்.
(மேலும்....)
ஆனி
15,
2011
இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை
(பகுதி 2)
இவ்வாறு பரவலாக தமிழ் சமூகத்தவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்
(அ. வரதராஜப்பெருமாள்)
(இவ் ஆய்வுக் கட்டுரை சம்மந்தமான கருத்துக்கள், விமர்சனங்கள்,
அபிப்பிராயங்களை சூத்திரம் இணையத்தளம் எதிர்பார்கின்றது. தொடர்புகளுக்கு:
sooddram@gmail.com)
ஒருவர் அவர் யாராயிருப்பினும் தாங்கள்
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதுவும் தம்மை நம்பும் வாக்காளர்கள்
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுவும் அவரது அடிப்படை
ஜனநாயக உரிமைகளாகும். ஆனால் அப்போது தாங்கள் செய்ததன் விளைவுகளுக்கான
பொறுப்பை இப்போது மறுப்பது அல்லது மறைக்க முற்படுவதுதான் தவறாக உள்ளது.
தமிழ் மக்களை வாக்களிக்கும்படி வலியுறுத்திக் கூறி இவர்களைத்
தலைவர்களாக்கிவிட்டு இப்போது தமிழர்கள் மத்தியில் தலைவர்களில்லையெனக்
கூறுவது அபத்தமானதாகத் தெரியவில்லையா? சாதாரண பாமர மக்கள் தாங்கள் சரியாகச்
சிந்திக்காமல் வாக்களித்து விட்டதாக வேண்டுமென்றால் கூறலாம். ஜனநாயகத்தில்
அப்படிக் கூறுவதுகூட அர்த்தமற்ற ஒன்றே. அப்படியிருக்கையில் சமூகத்தின்
பெரிய மனிதர்கள் அறிவார்ந்தவர்கள் என்று நம்பப்படுகிற சமயத் தலைவர்கள்,
பேராசிரியர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் சமூகப் பிரமுகர்கள்
அவ்வாறு கூறுவது அபத்தமானதாகும்.
(மேலும்...)
ஆனி
15,
2011
குஜராத் வன்முறை தாக்குதல் ஆத்திரத்தால் மும்பையில் தாக்கினேன்
-
ஹெட்லி
இந்தியாவுக்கு எதிராக தாக் குதல் நடத்த டேவிட் ஹோல் மன் ஹெட்லியை
தூண்டுவதற்கு லஷ்கர்- ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பு குஜராத் வன்முறை வீடியோ
காட்சியை பயன்படுத் தியது. மும்பையில் 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி
பாகிஸ் தான் லஷ்கர்-ஏ-தொய்பா தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர்
கொல்லப்பட்டார்கள். உலகை உலுக்கிய இந்த பயங்கர தாக்குதலுக்கு ஹெட்லி சதித்
திட் டம் தீட்டினார். ஹெட்லி, பாகிஸ் தானிய அமெரிக்கராவார். ஹெட்லி,
அமெரிக்காவில் வசிப் பதால் இந்திய அதிகாரிக ளின் கவனத்தை ஈர்க்க மாட்டார்.
எனவே, தாக்குதலை மிக எளிதாக மேற்கொள்ள முடியும் என லஷ்கர்-ஏ-தொய்பா
தீவிரவாத இயக்கம் முடிவு செய்தது. இத னைத் தொடர்ந்து மும்பை தாக்குதல்
திட்ட விபரங்களை ஹெட்லியிடம் லஷ்கர் அமைப்பு தெரிவித்தது. இந்தத் தாக்குத
லுக்கு ஹெட்லி முதலில் தயங் கிய போது, அவரை தயார்ப்படுத் துவதற்கு லஷ்கர்
அமைப்பு குஜ ராத்தில் 2002ம் ஆண்டு நடந்த வன்முறையில் அப்பாவி முஸ் லிம்கள்
கொல்லப்பட்ட வீடியோ காட்சியை காட்டியது.
(மேலும்...)
ஆனி
15,
2011
பின்லேடன் குறித்து சிஐஏக்கு தகவல் அளித்தவர்கள் கைது
அல் காய்தா தலைவர் பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்னரே அவரைப்பற்றி சிஐஏக்கு
தகவல் அளித்தவர்களை பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ கைது செய்தது
தெரியவந்துள்ளது. பின்லேடன் தங்கி இருந்த மாளிகையை கண்காணிப்பதற்காக
அமெரிக்க உளவுத்துறை சிஐஏ வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் உரிமையாளரும்
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவராவார். பின்லேடனை அமெரிக்கா கொல்வதற்கு
முன்பாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பாகிஸ்தானியர்கள்
சிலரும் கைது செய்யப்பட்டனர் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக "நியூயார்க்
டைம்ஸ்" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
(மேலும்...)
ஆனி
15,
2011
நட்ட ஈட்டுத்
தொகையை வழங்கியேனும் ரிஸானாவை மீட்டுவர முயற்சிக்கிறோம்
கொலைக்குற்றம் சாட்டப்பட்ட ரிஸானா நபீக்கின்
விடயத்திலும் குழந்தையின் பெற்றோர் மன்னிப்பு வழங்கும்வரை நாம்
காத்திருக்கத்தான் வேண்டும். மன்னிப்பை வழங்குவார்கள் என நாம் இன்னமும்
எதிர்பார்க்கிறோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விடுத்த
வேண்டுகோளையடுத்து மரணதண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக
இடைநிறுத்தப்பட்டுள்ளது. குழந்தையின் பெற்றோர் ரிஸானாவுக்கு மன்னிப்பு
வழங்கும்வரையில் அவர்களது மனம் இளகும்வரையிலும் நாம் காத்திருக்கவேண்டும்.
ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்துவதால் எதுவித பலனும் ஏற்படப்போவதில்லை.
(மேலும்...)
ஆனி
15,
2011
வெறும்
நேர்த்திக்காக மட்டும் மொட்டை அடிப்பதில்லை
குழந்தை பிறந்து 30 அல்லது 45 நாட்களில்
மொட்டை போடுவது வழக்கம். இது யாவரும் கண்ட உண்மை. ஆனால் ஏன் அப்படி மொட்டை
போடுவது என்பது யாருக்காவது உண்மையான விளக்கம் தெரியுமா? அது சும்மா
நேர்த்திக்கடனுக்காக என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தங்களது எண்ணத்தை
மாற்றிக் கொள்ளுங்கள். அதையும் தாண்டி ஒரு அறிவியல் ரீதியான விளக்கம்
இருக்கிறது. அதாவது நாம் அனைவரும் 10 மாதங்கள் தாயின் வயிற்றில் கருவறையில்
இருக்கிறோம். அந்த பத்து மாதமும் வயிற்றுக்குள் எம்மைச் சுற்றி என்ன தேனும்
பாலுமா இருக்கப் போகிறது? இல்லை இரத்தம், சதை, மலம், சிறுநீர் என அனைத்தும்
இருக்கும். அதற் குள்ளேதான் நாம் பத்து மாதங்கள் இருக்கிறோம். இவையெல்லாம்
எமது உடம்பில் எவ்வளவு ஊறியிருக்கும். வெறும் ஐந்து நிமிடம் கடல்நீரில்
விரலை வைத்து துடைத்து விட்டு சுவைத்துப் பாருங்கள் எமது விரல் அப்போதும்
உப்பாகத்தான் இருக்கும்.
(மேலும்...)
ஆனி
15,
2011
அமெரிக்க வலையில் சிறிய நாடுகள்- வளர்கிறது ஏகாதிபத்தியம்
தங்கள் மண்ணில் அமெரிக்க ராணுவத்தளத்தை அமைத்துக் கொள்ள என்று போலந்து நாடு
ஒப்புக்கொண் டிருக்கிறது. இது தொடர்பாக இருநாடுகளும் புரிந்துணர்வு
ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத் திட்டுள்ளன. போலந்து தலைநகர் வார்சாவில்
கையெழுத்தான இந்த ஒப்பந்தப்படி, 2013 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க
விமானப்படையின் போர் விமானங்களும், ராணுவத்தினரும் போலந்தில்
நிறுத்தப்படுவார்கள். 2018 ஆம் ஆண்டுக்குள் ஏவுகணைத் தடுப்பு
ஒப்பந்தத்தின்கீழ் போலந்து நாடும் வந்துவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று மேலும் நாடுகள் அமெரிக்கத்தலைமையின்கீழ் வரும் அபாயம்
எழுந்துள்ளது.
(மேலும்...)
ஆனி
15,
2011
இராமேஸ்வரம்
அருகே பாக்கு நீரிணை கடல் தண்ணீர் 2 நிறமாகக் காணப்படும் அதிசயம்
இராமேஸ்வரம் அருகே பாக்குநீரிணை பகுதியில்
நேற்று முன்தினம் கடல் நீர் 2 நிறமாகக் காணப்படுகிறது. சுனாமிக்கு பிறகு
தமிழக கடலுக்குள் பல விதமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக
இராமேஸ்வரம், பாம்பன் பகுதிகளில் அடிக்கடி கடல் உள்வாங்குதலும் கடல்
கொந்தளிப்பும் காணப்பட்டு வருகிறது. ஆனால் வழக்கத்திற்கு மாறாக மண்டபம்-
பாம்பன் இடைப்பட்ட பாக்குநீரிணை கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே
தண்ணீர் இரண்டு நிறமாக காட்சியளித்து வருகிறது. இதே போல் நேற்றுமுன்தினம்
மண்டபம்- பாம்பன் இடையே வடக்கு கடல் பகுதி இரண்டு நிறமாக காட்சி யளித்தது.
அதாவது கரையிலிருந்து ஒரு குறிப்பட்ட தூரம் வரையிலும் (ஆழமான கடல் பகுதி வரை)
கடல் நீர் கலங்கலாக மங்கிய நிலையிலும் அதனை அடுத்து உட்பகுதியில் கடல்
தண்ணீர் நீல நிறத்திலும் காணப்படுகிறது. இது பற்றி பாம்பன் மீனவர் ஜோசப்
கூறிய போது ‘மே மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரையிலும் கச்சான் காற்று
வீசும் பருவம் ஆகும். இந்தக் காற்று வீசும் நாட்களில் கரையிலிருந்து சில
தூரம் வரையில் கடல் கலங்கலாகவும் ஆழமான பகுதியிலிருந்து நீல நிறத்திலும்
காணப்படும்’ என்றார்.
ஆனி
15,
2011
ஏவுகணை ஏற்றிச்சென்ற வடகொரிய கப்பலை அமெரிக்க கடற்படை மறித்து சோதனை
ஏவுகணைகளை ஏற்றிச்சென்ற வடகொரிய கப்பல் ஒன்றை சீன கடல் அருகே அமெரிக்க
கடற்படை கப்பல் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டுள்ளது. மியன்மாருக்கு
செல்லும் அந்த கப்பலை அமெரிக்க கடற்படை மீண்டும் வடகொரியாவுக்கே திருப்பி
அனுப்பியுள்ளது. வடகொரியாவுக்குச் சொந்தமான ‘லைட்’ என்ற கப்பல் ஒன்று சீன
கடலில் ஷாங்காய் நகருக்கு அருகில் சென்றபோது அதை அமெரிக்க கடற்படை தடுத்து
நிறுத்தியது. இந்த கப்பல் ஏற்கனவே சட்டத்துக்கு புறம்பான கடத்தலில் ஈடுபட்டு
இருந்ததால் அதை அமெரிக்கா மடக்கியது. இதைத் தொடர்ந்து இருதரப்புக்கும் மோதல்
ஏற்பட்டது. அந்த கப்பலில் ஏறி அமெரிக்க வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அதில்
இருந்தவை அனைத்தும் ஏவுகணைகள். குறுகிய தொலைவில் உள்ள அதாவது 500 கிலோ
மீற்றர் தொலைவில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் ஆகும்.
(மேலும்...)
ஆனி
15,
2011
விண்ணை முட்டும் கட்டடங்கள்
சீனாவின்
அதிக ஆசை நல்லதா?
வரும் 2016ம் ஆண்டில், விண்ணை முட்டும்
வகையிலான 800 அதி உயர கட்டங்களை சீனா நிறுவும்' என, சமீபத்திய ஆய்வு
தெரிவிக்கிறது. இத்தகைய திட்டங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்
மற்றும் பராமரிப்பு செலவுகளை கருத்தில் கொண்டு, மாற்றுத் திட்டங்களை
அறிமுகப்படுத்த வேண்டும் என, அந்நாட்டு நிபுணர்கள் அரசை வலியுறுத்துவதாகவும்,
ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரைச் சேர்ந்த தனியார்
வார இதழ் ஒன்று, உலகின் அதி உயர கட்டடங்கள் குறித்த, ஆய்வு முடிவுகளை
வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவில் 200 அதி உயர கட்டடங்கள் தான் உள்ளன.
எனினும், உலகில் உள்ள பத்து மிகப்பெரிய கட்டங்களில் ஐந்து கட்டங்கள்
சீனாவில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
(மேலும்...)
ஆனி
14,
2011
புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 18)
பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில்
தப்பியவரின் வாக்குமூலம்
இந்த திட்டத்தை செயற்படுத்த தேவையான மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்
பணத்தை நோர்வேயில் இருந்த நெடியவன் மற்றும் காஸ்ட்ரோ,கே.பி
இடம் சிறிது நேரத்தில்
கொடுப்பதாக எமக்கு
,அதாவது
சார்ல்ஷுக்கு காஸ்ரோ சொல்லியிருந்தார்.
இங்குதான் காஸ்ரோவினதும் நெடியவனதும் சூழ்ச்சி நடந்தது.
ஆம் அந்த பணத்தை அவர்கள் கே.பி
இடம் இந்தா அனுப்புகிறோம் அந்தா அனுப்புகிறோம்
அனுப்பிவிட்டோம் இன்னும் சிறிது நேரத்தில் உலங்கு வானூர்தி வரும்
என்றெல்லாம் அந்த நெடியவும் காஸ்ரோவும் சொல்லிக்கொண்டே இருந்தனர்.
ஆனால் செய்யவே இல்லை.
(மேலும்....)
ஆனி
14,
2011
இந்திய தூதுக்குழுவினருடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் சந்திப்பு!
அண்மையில் இலங்கைக்கு விஐயம் செய்த இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்,
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவை திருவாளர்கள் வீ.ஆனந்தசங்கரி, த.சித்தார்த்தன்
மற்றும் தி.சிறீதரன் ஆகியோர் சந்தித்த போது திரு. வீ. ஆனந்தசங்கரி அவர்கள்
கையளித்த கோரிக்கைகளின் விபரம் பின்வருமறு:- கீழ் குறிப்பிடப்பட்டவை உட்பட
சிறுபான்மை மக்களின் பலவேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண, நிலமை
கட்டுப்பாட்டை மீற விடாது தீர்வு காண அரசை வற்புறுத்த வேண்டும்.
(மேலும்....)
ஆனி
14,
2011
ஆனி
14,
2011
பயங்கரவாத
தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டவர்களின் விபரங்களை அறியலாம்
பயங்கரவாத தடுப்பு பிரிவின் கீழ் தடுத்து
வைக்கப்பட்டவர்களின் விபரங்களை புலனாய்வு பிரிவின் மூன்று அலுவலகங்களில்
இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது. பயங்கரவாத தடைச்
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்கள்,
விடுதலை செய்யப்பட்டவர்கள், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களின்
விபரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனி
14,
2011
பாக்.
உளவுத்துறைக்கும், பயங்கரவாத அமைப்புக்கும் தொடர்பு
- விக்கிலீக்ஸ்
_
அமெரிக்காவில் ஹேட்லி கைது செய்யப்பட்டதன் மூலம் பாகிஸ்தானின்
உளவுத்துறைக்கும், பயங்கரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பா அமைப்பிற்கும்
தொடர்பு உள்ளதாக விக்கிலீக்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த
2005ம் ஆண்டே ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கும், லஷ்கர் அமைப்பிற்கும் தொடர்பு
இருப்பதாக அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்தாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு இந்தியா வந்த பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரிடம் பேசிய
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விஜய் நம்பியார், உலகளவில் நடைபெறும்
பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் மையமாக உள்ளது. ஐ.எஸ்.ஐ தலைவர் மற்றும்
லஷ்கர் அமைப்பை சேர்ந்தவர்களை சந்தித்து பேசுவதற்கான ஆதாரம் உள்ளதாக
கூறியுள்ளார்.
(மேலும்....)
ஆனி
14,
2011
இலங்கை அகதிகள்
13 பேர் கேரளாவில் கைது
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் லொட்ஜில் 13 இலங்கை அகதிகள்
தங்கியிருப்பதாக கேரளா பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்,
கேரளா பொலிசார் சம்பந்தப்பட்ட லொட்ஜ்ஜுக்கு திடீரென்று சென்று அறைகளில்
சோதனை செய்தனர். அப்போது அங்கு தங்கியிருந்த 13 இலங்கை அகதிகளை பொலிசார்
கைது செய்தனர். பின்னர் அந்த 13 பேரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து
சென்று விசாரணை நடத்தினர்.இவர்கள் 13 பேரும் கடந்த 3 ஆம் திகதி முகாம்களில்
இருந்து தப்பி கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு லொட்ஜில் தங்கி
உள்ளனர். பின்னர் அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு
இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்....)
ஆனி
14,
2011
வெட்கக்கேடு!
இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர் உழைப் பின் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ. 1
லட்சத்து 20 ஆயிரம் கோடி கறுப்புப் பணம் உருவாக்கப் படுகிறது என்று
குழந்தைகள் உரிமைக்கான அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்தி ருக்கிறது.
இந்தியாவில் 6 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்பதே
வெட்கக்கேடான விஷயம். இவர்களின் உழைப்பையும் உறிஞ்சி கறுப்புப்பணம் சேர்க்
கும் கூட்டத்தை என்னவென்று கூறுவது ?
(மேலும்....)
ஆனி
14,
2011
கொத்தடிமைத்தனம் அதிகரிப்பு! 200 ஆண்டு பின்னால் செல்லும் பிரிட்டன்
பெண்கள் மற்றும் குழந் தைகளைக் கடத்திக் கொண்டு வந்து பிரிட்டனில் விற்ப
தும், அவ்வாறு விலைக்கு வாங்கப்படுபவர்களை அடி மைகளாக வைத்து வேலை
வாங்குவதும் பிரிட்டனில் அதிகரித்துள்ளது என்று அந்நாட்டில் உள்ள சமூக நீதி
மையம் என்ற அரசு சாரா அமைப்பு குற்றம் சாட் டியுள்ளது. கடந்த 15 மாதங்களாக
இந்த அமைப்பு சார்பில் சிறப்பு ஆய்வு ஒன்று பிரிட் டன் முழுவதும் நடத்தப்
பட்டது. ஏப்ரல் 2009 முதல் மார்ச் 2010 வரையில் 706 பேர் இவ்வாறு அடிமை வேலை
செய்பவர்களாக அடையாளம் காணப்பட் டனர். அதேவேளையில், சுமார் 18 ஆயிரம்
பெண்கள் மற்றும் குழந்தைகள் இதே காலகட்டத்தில் கடத்தப் பட்டு
பிரிட்டனுக்குள் கொண்டு வரப்பட்டனர். இவர்களில் பெரும்பாலா னவர்கள்
விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று ஆய்வில் தெரிய வந்தது.
(மேலும்....)
ஆனி
14,
2011
தமிழ்நாடு
அரசாங்கத்தினால் கச்சதீவை இலங்கையிடமிருந்து பறித்துவிட முடியாது
பாக்கு நீரிணையில் இருக்கும் கச்சதீவு
இலங்கைக்கு சொந்த மான ஒரு தீவு. இத்தீவின் நிர்வாகம் இலங்கையின் இறை மைக்கு
உட்பட்டதாக அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கச்சதீவை மீண்டும் இந்தியா
இலங்கையிடம் இருந்து பறித்து தமிழ்நாட்டின் ஒரு பிரதேசமாக இணைத்துக் கொள்ள
வேண்டுமென்று மேற்கொள்ளும் போராட் டம் என்றுமே வெற்றியடையப் போவதில்லை.
1974ம் ஆண்டில் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்த இந்திரா காந்தி
அம்மையாருக்கும், இலங்கைப் பிரதம மந்திரி சிறிமாவோ பண்டாரநாயக்க
அம்மையாருக்கும் இடையிலிருந்த நட்புறவும், ஒத்துழைப்பு காரணமாகவே இந்திய
அரசாங்கம் கச்சதீவு இலங் கைக்கு தான் சொந்தமானது என்ற தீர்க்கமான சரியான
முடிவை எடுத்து, அதனை அவ்வாண்டில் நிறைவேற்றப்பட்ட இந்திரா – சிறிமாவோ
ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது.
(மேலும்....)
ஆனி
14,
2011
ஆனி
14,
2011
ஆனி
14,
2011
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை துவக்கம், அ.தி.மு.க.,
புறக்கணிப்பு!
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவையை, நேற்று மாலை மத்திய
அமைச்சர் வாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இலங்கை மீது பொருளாதார தடை
விதிக்க வேண்டுமென சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், இவ்விழாவை
அ.தி.மு.க., அமைச்சர், தமிழக அரசு அதிகாரிகள் புறக்கணித்தனர். தென் தமிழக
மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, இக்கப்பல் சேவைக்கு, இந்திய - இலங்கை
அரசுகள் அனுமதியளித்தன. இதற்காக, "பிளமிங்கோ லைனர்ஸ்' என்ற நிறுவனம், "ஸ்காட்டியா
பிரின்ஸ்' என்ற பிரமாண்ட, "ஏசி' கப்பலை, தூத்துக்குடி வ.உ.சி., துறைமுகம்
கொண்டு வந்தது. இக்கப்பல் வெள்ளோட்டம், மே 28ல் நடந்தது. கப்பல் சேவை
துவக்க விழாவையொட்டி, இதில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருந்த 121 பயணிகள்,
நல்லெண்ண தூதுவர்களாக துறைமுக ஊழியர்கள் 80 பேர் என, மொத்தம் 201 பேர்,
நேற்று மதியம் 1.30 மணியளவில், சுங்கச் சோதனை முடித்து, கப்பலில் ஏற
அனுமதிக்கப்பட்டனர்.
(மேலும்....)
ஆனி
13,
2011
அரசியல் தீர்வு காண அடித்தளம் அமையட்டும்
வரலாற்று ரீதியான பண்பாட்டுத் தொடர்புகள் உள்ள அண்டை நாடான இலங்கையின்
நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து இயல்பாகவே இந்தியாவுக்கு ஒரு ஆழ்ந்த அக்கறை
இருந்தாக வேண்டும். ஆகவேதான் அரசு மட்டத்திலான உறவையும் செல் வாக்கையும்
இந்திய அரசு முழுமையாகப் பயன் படுத்தி, அந்நாட்டுத் தமிழ் மக்களின்
துயரங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கு முன்முயற்சிகள்
மேற்கொள்ளவேண்டும் என்று பல்வேறு அரசியல் இயக்கங்களும் தொடர்ந்து
வலியுறுத்தி வந்திருக் கின்றன. ராஜபக்சே அரசின் போர்க்குற்றங்கள் பற்றிய
அதிர்ச்சியூட்டும் ஐ.நா. குழு அறிக்கையும், போருக் குப் பிறகும் நீண்ட
நாட்களாக பெரும் எண்ணிக் கையிலான தமிழ் மக்கள் முகாம்களிலேயே அடைக்
கப்பட்டிருந்தது பற்றிய செய்திகளும் வந்துள்ள பின்னணியில், இந்தியாவின்
இப்படிப்பட்ட முன் முயற்சிக்கான தேவைகள் அதிகரித்துள்ளன.
(தொடரும்....)
ஆனி
13,
2011
(மேலும்...)
ஆனி
13,
2011
கனடியத் தமிழர்
தேசிய அவை விடுக்கும் அறிக்கை
திரு.ஈழவேந்தன் அவர்களை மேடைப் பாதுகாப்புத் தொண்டர் தடுக்க முயற்சித்தபோது
அந்தத் தொண்டரின் வாயில் காயம் வரும்வரை திரு.ஈழவேந்தன் அவர்கள் தாக்கியது
மிகுந்த வேதனைக்குரியதாக அமைந்தது. எனினும் அவ்விளைய தொண்டர் பொறுமை
காத்துள்ளார். திரு. ஈழவேந்தன் அவர்களின் வயது நிலை காரணமாகவும், அவரது
கனடிய அகதிநிலைக் கோரிக்கை காரணமாகவும் அவ்விடத்தில் அத்தொண்டர் கனடியத்
தமிழர் தேசிய அவையின் வேண்டுகோளுக்கு இணங்க திரு. ஈழவேந்தன் அவர்களுக்கு
எதிராகச் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மே 18 போர்க்குற்றநாள்
நிகழ்வில் புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக் லெய்றன் (NDP Leader Jack
Layton) அவர்கள் பங்குபற்றாதபோதும் அவரைச் சந்தித்து வாழ்த்துக்கூற
முயற்சித்தார் என்று அறிக்கையில் குறிப்பிட்டதும் தவறான விடயமாகும்.
இருந்தும் இச்சம்பவத்தின் பின்னரும் திரு. ஈழவேந்தன் அவர்கள் பாராளுமன்ற
உறுப்பினர்களைச் சந்திக்க நாம் அனுமதித்திருந்தோம் என்பதையும் இங்கு நாம்
சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
(மேலும்...)
ஆனி
13,
2011
கொழும்பு - தூத்துக்குடி கப்பல் சேவை நாளை ஆரம்பம்
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையிலான
பயணிகள் கப்பல் சேவையின் முதலாவது கப்பல் இன்று மாலை தூத்துக்குடியிலி
ருந்து புறப்பட்டு நாளை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடையவிருப்பதாக இலங்கை
கப்பல் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 29 இந்திய
பிரமுகர்களுடன் நாளை காலை கொழும்புவரும் இக்கப்பலை துறைமுகப் பிரதி அமைச்சர்
ரோஹித அபே குணவர்த்தன தலைமையிலான பிரதிநிதிகள் குழு வரவேற்பதற்கான
ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டி ருப்பதாக அவர் குறிப்பிட்டார். நாட்டில்
தொடர்ந்துவந்த பயங்கரவாதம் தீவிரமடைந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த இரண்டு
நாட்டுக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவைகள் மீண்டும் இன்று
ஆரம்பமாகிறது. இலங்கையும், இந்தியாவும் மேற்கொண் டுள்ள உடன்படிக்கையின்
அடிப்படை யிலேயே இக்கப்பல் சேவை ஆரம்பிக் கப்படுகிறது.
(மேலும்...)
ஆனி
13,
2011
வற்றாப்பளை கண்ணகி அம்மன் பொங்கல் விழா
வரலாற்று புகழ்பெற்ற வற்றாப்பளை கண்ணகி
அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று திங்கட்கிழமை இரவு ஆரம்பமாகி
நாளை செவ்வாய் அதிகாலை பொங்கலுடன் நிறைவு பெறவுள்ளது. யுத்தம் முடிவுக்குக்
கொண்டு வரப்பட்டு நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில்
இம்முறை கண்ணகை அம்மன் வருடாந்த உற்சவத்தில் பெரும் எண்ணிக்கையான தென்பகுதி
பக்தர்களும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார்,
வவுனியா, கிழக்கு மாகாணம் உட்பட நாட் டின் பல்வேறு பகுதிக ளிலிருந்தும்
பெரும் எண்ணிக்கையான பக்தர்கள் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் கலந்து
கொண்டுள்ளனர். இதனை முன்னிட்டு வவுனியா, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம்,
காரைநகர், பருத்தித்துறை டிப்போக்கள் விசேட பஸ் சேவைகளை ஏற்பாடு
செய்திருப்பதுடன், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் ஆலயத்தில்
செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வவுனியா செல்லும் வாகனங்கள் மாங்குளம் ஊடாகவும்,
யாழ். குடாநாட்டி லிருந்து வரும் வாகனங்கள் புதுக்குடியிருப்பு -
கேப்பாபுலவு வழியாகவும் வற்றாப்பளைக்கு அனுமதிக்கப்படும் என படைத்தரப்பினர்
தெரிவித்துள்ளனர்.
ஆனி
13,
2011
தந்திரிகளின் மறுமுகம் - 10
இயக்கம் விரைவில்
அழியும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும்,
இதனை தடுப்பதற்கு
சரணடைவதைத் தவிர
இயக்கத்திற்கு
வேறு வழி
ஏதும் இல்லை'
கே.பியுடன் தற்பொழுதும் இரகசியத் தொடர்பைப்
பேணியவாறு, உருத்திரகுமாரனின் பின்புலத்தில் இருந்து அரூபகரமாக இயங்கி வரும்
மிகவும் ஆபத்தான நபர் ஒருவர் தொடர்பான உண்மைகளை இப்பத்தியில் வெளிக்கொணர்வது
பொருத்தமாக இருக்கும் என்று நம்புகின்றோம். உருத்திரகுமாரனின் உதவியாளரான
வழுதிக்கு பரிந்துரைத்துக் கடிதம் எழுதிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினருடனும் இந்த நபர் தொடர்புகளைப்பேணி வந்திருந்தார். மே
18இற்கு முன்னரே உருத்திரகுமாரனுடன், கே.பியுடனும் தொடர்புகளைப் பேணி வந்த
இவர், 2008ஆம் ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் உள்ள மருத்துவர்
ஒருவருடன் உரையாடுகையில் இயக்கம் விரைவில் அழியும் அபாயத்தை
எதிர்நோக்கியிருப்பதாகவும், இதனை தடுப்பதற்கு சரணடைவதைத் தவிர இயக்கத்திற்கு
வேறு
வழி ஏதும் இல்லை என்றும் கூறியிருந்தார்.
(மேலும்...)
ஆனி
13,
2011
கருணாநிதி குடும்பம் 5 வருடங்களில் ரூ.20
ஆயிரம் கோடி மோசடி செய்தது
இலவச கலர் டிவி வழங்குவதற்காக 7.48 இலட்சம் ‘டிவி’கள் சப்ளை செய்வதற்கான
ஆர்டர் ரத்துச் செய்யப்படுகிறது. ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்டுள்ள 1.27
இலட்சம் கலர் ‘டிவி’க்கள், அனாதை இல்லங்கள், பள்ளிக் கூடங்கள், ஊராட்சிகள்,
துணை சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றுக்கு வழங்கப்படும்’
என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். ‘ஒரு ஆண்டுக்கு 4,000 கோடி என்றால்
ஐந்து ஆண்டுகளில் கேபிள் கட்டணம் மூலம் கருணாநிதி குடும்பம் பெற்றது, 20
ஆயிரம் கோடி ரூபாய்’ என்ற திடுக்கிடும் தகவலையும் வெளியிட்டார்.
ஆனி
13,
2011
தமிழக
ஆட்சியாளரின் மனக்கதவு திறந்துள்ளது
தமிழக அரசியலில் ஆட்சி பீடம் ஏறுபவர்கள் பொதுவாகவே ஆட்சியில் அமர்ந்தவுடன்
இந்திய மத்திய அரசின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் கலந்து கரைந்து போய் விடுவர்.
இந்திய மத்திய அரசில் ஆட்சியில் அமர்ந்துள்ள கட்சி கொண்டுள்ள "தேசிய நலன்''
அரசியல் மாயைக்குள் மறைந்து மங்கி தமிழர், தமிழ் நாடு என்ற பிரக்ஞைகளுக்கு
அப்பால் நின்று தமிழக ஆட்சி நடைபெறும். முன்னாள் முதல்வர் கலைஞர் மு.
கருணாநிதியின் ஆட்சி இதற்கோர் நல்ல உதாரணம். இந்திய மத்திய அரசில் ஆட்சி
பீடமேறியுள்ள காங்கிரஸின் தேசிய நலன் அரசியலுக்குத் துணை நின்று இறுதியில்
ஆட்சியையும் பறி கொடுத்து நிற்கின்றார். இந்த ஒரு வரலாற்றில் இருந்து தன்னை
மாற்றிக் கொண்டவராக இன்றைய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உள்ளார்.
(மேலும்...)
ஆனி
13,
2011
50 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்தக்கூடிய தென்னிலங்கையில்
பேராதரவைப் பெற்ற ஒரு சிறந்த தலைவர் இன்று இலங்கையில் தோன்றியுள்ளார்
13வது சட்டத் திருத்தத்தில் பல குறைபாடுகள் இருப்பதை தற்போது அனைவரும்
புரிந்து கொண்டுள்ளார்கள். யுத்தம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலிருந்தே
பலரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம்
2000ம் ஆண்டில் அரசியல் சாசனத்திற்கு திருத்தமொன்று கொண்டு வந்ததும் இந்த
குறைபாட்டை நீக்குவதற்கேயாகும். இதற்கு உடன்பட்டவர்களில்
பெரும்பானன்மையானோர் இன்றைய அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கிறார்கள். அதனால்
சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வது அவ்வளவு சிரமமானதல்ல.
ஐக்கிய தேசிய கட்சி அன்று இந்த சட்டப் திருத்தப் பிரேரணையை எதிர்த்து, அதனை
தீயிட்டும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. இதை தான் நாம் சந்தர்ப்பவாத அரசியல்
என்று கூறுகிறோம். இத்தகைய எதிர்ப்புகள் இருந்த போதும் இந்த குறைபாடுகளை
அவர்களால் நிவர்த்தி செய்ய முடியவில்லை.
எல்.ரி.ரி.ஈ.யினர் 13வது சட்டத்திருத்தப் பிரேரணைக்கு என்றுமே இணக்கப்பாட்டை
தெரிவிக்கவில்லை.
(மேலும்...)
ஆனி
13,
2011
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வில் இந்திய தலையிட மாட்டாது
தமிழ்நாடு மாநில அரசாங்கம் இலங்கைக்கு எதிரான எத்தகைய தவறான கொள்கைகளை
கடைப்பிடித்தாலும், அதனால் இலங் கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நட்பு
பாலத்திற்கு எவ் விதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்பதை இலங்கைக்கு இரண்டு
நாள் விஜயத்தை மேற்கொண்ட இந்திய உயர்மட்ட குழுவினர், உறுதிப்
படுத்தியுள்ளார்கள். இந்த சந்தர்ப்பத்தில் இந்தியக் குழுவினர் இந்திய
அரசாங்கம் இலங் கையின் இறைமையை மதிக்கின்றது என்றும், இனப்பிரச்சினைக்கு
இவ்விதம் தான் தீர்வை ஏற்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தின் மீது,
எத்தகைய அழுத்தங்களையும் கொண்டுவரப் போவதில்லை என்றும் உறுதியளித்தனர்.
(மேலும்...)
ஆனி
13,
2011
தினமும் தேநீர்
குடித்தால் குண்டாவதைத் தடுக்கலாம்
நொறுக்குத் தீனி காரணமாக உடல் பருமனாவது
அதிகரித்து வருகிறது. இந் நிலையில், தொடர்ந்து தேநீர் குடித்தால் உடல்
பருமனாவதைத் தடுக்க முடியும் என புதிய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
மேலும் வயிற்று பகுதியில் தேவையற்ற சதை வளர்வதற்கு உதவும் கொழுப்பு
சத்தையும் இந்த தேநீர் கரைத்து விடுவது ஆய்வில் தெரிய வந்தது. அதிக
கொழுப்புச் சத்துள்ள உணவால் இரத்தத்தில் கலந்துள்ள கொழுப்பு, உயர் ரத்த
குளூக்கோஸ் உள்ளிட்ட உடல் நலனை கெடுக்கும் பொருட்களையும் பிளாக் டீ
வெளியேற்றி விடுகிறது. 2 ஆம் வகை சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ள
இன்சுலின் பாதிப்பையும் சரி செய்ய இது உதவும் என ஆராய்ச்சியாளர்கள்
தெரிவித்துள்ளனர்.
ஆனி
12,
2011
சங்கரி, சித்தார்த்தன்,
சிறிதரன்
சந்திப்பு
‘தமிழ் மக்களுடனேயே நாம்’
-
இந்திய தூதுக்குழு
யுத்தத்திற்குப் பின்னரான தற்போதைய நிலைமையில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள
பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலமாக இழுபறிபட்டுக்கொண்டிருக்கும் அரசியல்
தீர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இலங்கைக்கு வருகை தந்துள்ள
இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று
சனிக்கிழமை விரிவான பேச்சுவார்த்தையை நடத்தியதாக தெரிவித்திருக்கும்
அதேசமயம், தமிழ் மக்களுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? என்று கேட்ட
போது "நாங்கள் தமிழ் மக்களுடனேயே இருக்கின்றோம்' என்று இந்திய உயர்
அதிகாரிகள் குழு சுருக்கமான பதிலை அளித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட
கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.
(மேலும்....)
ஆனி
12,
2011
ஆனி
12,
2011
வாசகர் அபிப்பிராயம்.....
சென்னையிலிருந்து வழக்கறிஞர் கு.கதிரேசன்
தோழரே,
புலிகளை பற்றி பெருமைகள் பாடும் ஊடகங்களே
தமிழகத்தில் அதிகம்.அப்படி ஒரு புலி துதி, கேட்டு கேட்டு காதே
அடைத்துவிட்டது. இது போன்ற கற்றறிந்த அறிஞர்கள் எழுதும் கட்டுரைகள் தான்
குன்றிட்ட விளக்காக அமைந்துள்ளது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
என்றும் தோழமையுடன்
கு.கதிரேசன்
சென்னை
ஆனி
12,
2011
Channel 4 Video is Fake, Edited and Video taken by Video Camera
(Siri
Hewawitharana)
It seems new Channel 4 video at UN is worse than the previous one even
though new video suppose to show old video clip with added drama and
whole video is fake with a date indicating UTC 2009-07-15 13 :17:23 and
taken by a Video Camera and Not by a mobile phone as indicated. Worst
part is UN new Rapporteur Christof Heyns hired a new US based video
specialist Mr Grant Fredericks to analyse the video and surprised,
surprised his conclusion is video is Edited using Philips editing
software and Never Came from the mobile phone since video is using a
Optical Zoom which is not available in Any mobile Camera that is
available to date.
(more.....)
ஆனி
12,
2011
ஈழத் தமிழர்களுக்காக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள்
கொடுக்கும் குரல் தொடர்ந்து ஒங்கி ஒலிக்கவேண்டும்!
மான்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா
அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஈழத்தமிழர்களுக்கான ஆட்சி குறித்து பேசியமை
ஈழத்தமிழர்களுக்கு தமது எதிர்கால வாழ்வில் நல்ல நம்பிக்கையினை
ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கொடிய யுத்தத்திற்கு தமது உறவுகளை பலி
கொடுத்துவிட்டு, பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் முடக்கப்பட்டு
உபாதைகளுக்கு உள்ளாகி, மீள் குடியேற்றம் என்ற பெயரில் இடிபாடுகளுக்கு
இடையில் அநாதரவாக விடப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்து
எதுவித நம்பிக்கையும் இல்லாது ஏக்கத்துடன் வாழ்ந்து வந்தவேளையில், இவர்களின்
எதிர்காலம் குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் ஆற்றியிருந்த உரை
அவர்களுக்கு பாரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கின்றது.
(மேலும்....)
ஆனி
12,
2011
ஜெயலலிதாவின்"குரல்'
சிலசமயம் இலங்கைத்தமிழருக்கு புதிய நம்பிக்கையின் உதயமாக இருக்கக் கூடும்''
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எழுப்பியிருக்கும் குரலானது இலங்கைத்
தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையின் உதயமாக சில சமயம் இருக்கக்கூடும் என்று
வீக்கன்ட் லீடர்.கொம் இணையத்தளத்தில் அதன் ஆலோசக ஆசிரியர் சாம் ராஜப்பா
எழுதியுள்ளார்.நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இது தொடர்பாக அவர்
குறிப்பிட்டிருப்பதாவது; 1948 இல் பிரிட்டிஷார் இலங்கையிலிருந்து வெளியேறிய
போது வடக்கு,கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய தமிழ் மாநிலமும் நாட்டின் ஏனைய
பகுதியின் சிங்கள மாநிலமும் கொழும்பிலுள்ள மத்திய அரசாங்கத்தை தளமாகக்
கொண்டு அமைந்திருந்தன.
(மேலும்....)
ஆனி
12,
2011
There are 600 plus (murdered) police officers inside the one you see
today
(Malinda Seneviratne)
There was a farmer who had a terrible, terrible day twenty one years ago
(June 11, 1990). He was not the only farmer and not the only man either
who had to live through terrible days, of course, but this was
‘special’, if indeed that word could be used. This farmer, from a place
called Thambiluvil was forced to ‘volunteer’ (yes, words acquire strange
meanings in terrible times) to carry out a particularly gruesome task.
That task, however, was quite benign compared to the ‘gruesome’ that
came before. His was after all just a mopping up assignment. (more...)
ஆனி
12,
2011
இலங்கை செல்கிறார் மன்மோகன் சிங்
இலங்கை வருமாறு அந் நாட்டின் ஜனாதிபதி
ராஜபக்சே விடுத்த அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக்
கொண்டுள்ளார். இலங்கையில் பயணம் மேற்கொண் டுள்ள வெளியுறவுச் செயலாளர்
நிருபமா ராவ் மற்றும் பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார் மற்றும் தேசிய
பாதுகாப்பு ஆலோ சகர் சிவசங்கர்மேனன் ஆகியோர் ராஜ பக்சேவை சனிக்கிழமை
சந்தித்துப் பேசி னர். அப்போது இலங்கை வருமாறு அவர் விடுத்த அழைப்பை பிரதமர்
மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டிருப்பதை தெரிவிக் கும் கடிதம் ஒன்றை அவரிடம்
அளித்தனர் என இலங்கை ஜனாதிபதி செய்தித் தொடர் பாளர் பந்துல ஜயசேகர
தெரிவித்தார். எனினும் மன்மோகன் சிங் எப்போது இலங்கை செல்வார் என்பது
தெரிவிக்கப் படவில்லை. மன்மோகன் சிங் 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையில்
நடந்த சார்க் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக சென் றிருந்தார்.
ஆனி
12,
2011
இலங்கை அரசு 13 + நோக்கிய தீர்வுக்கு....
ஆனால் காணி, பொலிஸ் அதிகாரங்களில் பகிர்வுக்கு இடமே இல்லையாம்! தெற்குக்
கட்சிகள் எதிர்ப்பு எனச் சுட்டிக்காட்டு
பதின்மூன்று + முன்னோக்கி நகர்ந்து இனப்பிரச்
சனைக்குத் தீர்வுகாண்பதில் இலங்கை அரசு முனைப்புடன் செயற்டுவதாக இந்திய
அரசின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் சிவசங்கர்மேனன் தெரிவித்திருக்கும்
அதேவேளை தென்னிலங்கையின் எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிப்பதால் காணி,
பொலிஸ் அதிகாரங்களை மாகாண சபைகளுக்குப் பகிர்ந்து வழங்க முடியாது என்று
இலங்கைத் தரப்பு இந்தியத் தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டியுள்ளது. மாகாண
சபைகளுக்கு எந்தெந்த அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கப் போகிறீர்கள் என்று
இந்தியத் தூதுக்குழுவினர் கேட்டபோதே இலங்கைத் தரப்பு மேற்கண்டவாறு
தெரிவித்ததாக அறியவந்தது. இதேவேளைஇனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறும்
தமிழர்களுடனான பேச்சை விரைந்து நடத்துமாறும் தமது தரப்பு
வற்புறுத்தியதாகவும் இந்திய அரசின் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன்
இந்திய ஊடகவியலாளருக்குத் தெரிவித்திருக்கிறார். அரசு, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாகவும், எல்லாத்
தரப்புகளுக்கும் ஏற்புடைய தீர்வு ஒன்றைக் காண்பதற்குத்
திட்டமிட்டுள்ளதாகவும் இலங்கைத் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஆனி
12,
2011
No
police, land powers to PCs
President Mahinda Rajapaksa told a high-powered Indian delegation
yesterday his government was not able to concede land and police powers
to provincial councils in accordance with the 13th Amendment to the
Constitution. The move, the Sunday Times learns, follows strong
opposition from constituent partners of the United People’s Freedom
Alliance (UPFA). On Friday, President Rajapaksa drove to the
parliamentary complex in Sri Jayawardhanapura-Kotte for a meeting with
the leaders of political parties that constitute the UPFA. They are said
to have expressed strong objections.
(more....)
ஆனி
11,
2011
இலங்கைத் தமிழர்களுக்கு இன்று அரசியற் தலைமை இல்லை
(பகுதி 1)
இவ்வாறு பரவலாக தமிழ் சமூகத்தவர்கள் கருத்து வெளியிடுகின்றனர்
(அ. வரதராஜப்பெருமாள்)
(இவ் ஆய்வுக் கட்டுரை சம்மந்தமான கருத்துக்கள், விமர்சனங்கள்,
அபிப்பிராயங்களை சூத்திரம் இணையத்தளம் எதிர்பார்கின்றது. தொடர்புகளுக்கு:
sooddram@gmail.com)
இலங்கைத் தமிழர்களுக்கான அரசியற் தலைமைத்துவத்தில் இன்றைய காலகட்டத்தில் ஒரு
பாரிய வெற்றிடம் நிலவுகிது என்றும் தமிழ் மக்களை வழிநடத்தி தலைமை
தாங்குவதற்கு இன்று சரியான அரசியற் தலைமை இல்லை என்றும் பொத்தாம் பொதுவாக
இலங்கைத் தமிழரிடையே பரவலாக ஒரு கருத்து நிலவுகிறது. இவ்வாறு அபிப்பிராயம்
கொள்வோர் - கூறுவோர் சாதாரணமான பாமரர்;கள் மட்டுமல்ல – வேலையற்று வீதிகளில்
நிற்கும் விரக்தியுற்ற இளைஞர்களின் கருத்து மட்டுமல்ல. இலங்கைத்
தமிழ்நாளேடுகளின் ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஊடகவாளர்கள், கட்டுரை
எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மற்றும் பள்ளிக்கூட ஆசிரியர்கள், சமயத்
தலைவர்கள் சமூக சேவைத் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், தமிழ் உயர் அரசாங்க
அதிகாரிகள், சட்டத்தரணிகள், தொழிற் சங்கத் தலைவர்கள் எனப் பல சமூகப்
பிரிவினரிடையே பரவலாகவே – வலுவாகவே தமிழர்களுக்கு இன்றைய காலகட்டத்தில்
சரியான பலமான அரசியற் தலைமை இல்லை என்ற வகையானதொரு கருத்தைக் காணலாம். (மேலும்....)
ஆனி
11,
2011
ரட்ணஜீவன் கூலும்,
தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்
(பகுதி
5)
(ரகுமான் ஜான்)
முதவாது அரசியல் தவறானது கல்விக்கு கொடுத்த அதீத முக்கியத்துவத்துடன்
தொடங்குகிறது.
இரண்டாவது தவறானது
“நல்ல,
நேர்மையான,
நிர்வாக திறமைமிக்கவரை”
யாழ்
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிப்பதன் மூலமாக சில முக்கியமான
மாற்றங்களை கொண்டுவந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.
மூன்றாவது தவறானது மகிந்த ராஜபக்சவும்,
டக்லஸ் தேவானந்தாவும் ஒரு சரியான சக்தி யாழ் பல்கலைக் கழகத்திற்கு தலைமை
கொடுப்தை,
அதன்
மூலமாக தமிழ் மக்களுக்கு சரியான கல்வி வழங்கப்படுவதை விரும்புவார்கள் என்ற
நம்பிக்கையில் இருக்கிறது.
அடுத்த தவறானது,
இப்படிப்பட்ட பழம் விழுங்கி கொட்டைபோட்டவர்களுக்கு மத்தியில் எம்மில் சிலர்
காய்களை திறமையாக நகர்த்துவதன் மூலாமாக,
அவர்களையும் விஞ்சி நாம் எமது சமுதாயத்திற்கு நன்மை பயப்பவையாக கருதும்
சிலவற்றை சாதித்துவிடலாம் என்ற எமது அசட்டுத்தனத்தில் அடங்கியிருக்கிறது.
(மேலும்....)
ஆனி
11,
2011
யுத்தத்தின் பின் பெண்களின் இன்றைய நிலை?
(பைரவி)
இன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியான
வன்னியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களின் நிலையை யார் அறிவீர்கள் ?
புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் இவற்றை அறிவீர்களா? அல்லது அறிந்தும்
அறியாத மாதிரி இருக்கிறீர்களா? உதவி என்கிற பெயரில் புலம்பெயர்நாடுகளில்
உள்ள சில அமைப்புகளின் ஆண் பணியாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட பெண்களைத் தமது
இச்சைகளுக்குப் பயன்படுத்துவதையெல்லாம் நீங்கள் அறிவீர்களா ?
இத்தகையவர்களுக்குப் பல பெண்கள் பலியாகியிருக்கிற சோகக்கதைகள் தெரியுமா ?
பணத்திற்காக....வாழ்வாதரத்திற்காக.....உங்கள் வெளிநாட்டுப்பணங்கள் எங்களை
வாழ வைக்கும் என்ற நப்பாசையில் உதவிகளை நாடி கடைசியில் பலரது பாலியல்
தேவைகளுக்குப் பலியாகின்ற பெண்களைப் பற்றி அறிந்திருக்கிறீர்களா ?
(மேலும்....)
ஆனி
11,
2011
ஈழத் தமிழர்களுக்காக தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள்
கொடுக்கும் குரல் தொடர்ந்து ஒங்கி ஒலிக்கவேண்டும்!
மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா
அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், ஈழத்தமிழர்களுக்கான ஆட்சி குறித்து பேசியமை
ஈழத்தமிழர்களுக்கு தமது எதிர்கால வாழ்வில் நல்ல நம்பிக்கையினை
ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கொடிய யுத்தத்திற்கு தமது உறவுகளை பலி
கொடுத்துவிட்டு, பின்னர் இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் முடக்கப்பட்டு
உபாதைகளுக்கு உள்ளாகி, மீள் குடியேற்றம் என்ற பெயரில் இடிபாடுகளுக்கு
இடையில் அநாதரவாக விடப்பட்ட ஈழத் தமிழர்கள் தமது எதிர்காலம் குறித்து
எதுவித நம்பிக்கையும் இல்லாது ஏக்கத்துடன் வாழ்ந்து வந்தவேளையில், இவர்களின்
எதிர்காலம் குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் ஆற்றியிருந்த உரை
அவர்களுக்கு பாரிய ஆறுதலை ஏற்படுத்தி இருக்கின்றது.
(மேலும்....)
ஆனி
11,
2011
Act now to support Egyptian hospital workers
The Egyptian health-care system
only receives 3.5 per cent of GDP. Doctors work under state-controlled
unions led by corrupt officials with ties to the Mubarak regime, which
have prevented them from advocating for better health care and working
conditions. Most Egyptian doctors work in public hospitals or charity
clinics, working up to 100 hours a week for less than $3/day -- forcing
many to look for other work or leave the country. But the Egyptian
revolution has united doctors with other hospital workers in a movement
for change.
(more...)
ஆனி
11,
2011
ஆனி
11,
2011
சிரியாவுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானமா? அமெ.வை முறியடித்த இந்தியா, சீனா,
ரஷ்யா
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் சிரிய நாட்டிற்கு எதிரான
தீர்மானத்தை கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் முயற்சி
முறியடிக்கப்பட் டுள்ளது. அங்கு எதிர்க்கட்சிகளின் மீது அடக்குமுறையைக்
கட்டவிழ்த்து விட் டுள்ளதாகக் கூறி அமெ ரிக்கா ஒரு வரைவுத் தீர்மானத்தை முன்
வைத்தது. ஆனால் கூட்டத்தில் இந்தத் தீர்மானத்தை இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா
ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்தன. உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதைத்
தாங்கள் விரும்பவில்லை என்று தங்கள் தரப்பு வாதத்தை அந்த நாடுகள் வைத்தன.
(மேலும்....)ஆனி
11,
2011
புலம்பெயர்ந்து
வாழும் தமிழர்கள் அனைவரும் புலிகள் அல்லர்
புலம்பெயர்ந்து வாழ் தமிழர்கள் அனைவரும்
புலிகள் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் மக்கள், அவர்களை புலிகள் என்ற
பார்வையில் நோக்கக் கூடாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி
முரளிதரன் தெரிவித்தார். புலம்பெயர்ந்து வாழ் எமது தமிழ் மக்கள் திரும்பி
வருவதற்கு உரிமை இருக்கின்றது. அரசுடன் அவர்கள் பேசுவதற்கும் உரிமை
இருக்கிறது. அவர்களை அழைத்து தெளிவுபடுத்த வேண்டிய கடமையும் எமக்கிருக்கிறது.
அவர்கள் விடயத்தில் நாம் உணர்ச்சி வசப்படக் கூடாது. புலம்பெயர் வாழ்.
புலிகள் இருக்கிறார்கள். அவர்கள் வெளிநாட்டிலிருந்தவாறு நிதி சேகரித்து
பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக புலம்பெயர் தமிழர்கள் அனைவரை யும்
புலிகள் என நோக்கக் கூடாது. புலம் பெயர் தமிழ் மக்கள் நிறைந்த அறிவுடன்,
தொழில்நுட்பதுறை தகவல் தொழில்நுட்பம், டாக்டர்களாக, பொறியியலாளர்களாக
வாழ்கிறார்கள். அவர்களது அறிவுத் திறன் எமது நாட்டுக்கு தேவையானது அவர்கள்
இங்கு வரும்பட்சத்தில் அபிவிருத்தியின் பங்காளிகளாக மாற்ற முடியும் தமிழர்
பகுதி மட்டுமல்ல இலங்கையையே ஒரு வளர்ச்சியடைந்த நிலைக்கு இவர்களால் கொண்டு
வர முடியும். அவர்களை நாம் வரவேற்கிறோம் என்றும் பிரதியமைச்சர் மேலும் தெரி
வித்தார்.
ஆனி
11,
2011
பிரபாகரன் கொல்லப்பட்ட நந்திக் கடல் பிரதேசத்தில் நாம் 1.4 மில்லியன் இறால்
குஞ்சுகளை வளர்ப்புக்காக வழங்கியுள்ளோம்
யாழ். குடாநாட்டில் மயிலிட்டி உட்பட ஏழு மீன் பிடித்துறைமுகங்களை அமைக்கத்
தீர்மானித்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டாக்டர் ராஜித
சேனாரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். டென்மார்க் உட்பட சில
வெளிநாடுகளின் நிதியுதவியுடன் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும்
என தெரிவித்த அமைச்சர், 300 கோடி டொலர் நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான
ஒப்பந்தக் கைச்சாத்தொன்று அடுத்த மாதம் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர்
தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று மீள்பிடித்துறை மேம்பாடு தொடர்பில்
ஐ. ம. சு. முன்னணி எம். பி. விக்டர் அந்தனி முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை
பிரேரணை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் ராஜித இவ்வாறு
தெரிவித்தார்.
(மேலும்....)
ஆனி
11,
2011
இந்திய உயர்
மட்டக் குழுவினர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு
இந்திய உயர்மட்டக் குழுவினர்
இன்று
காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை
நடத்துகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிப்
பிரதிநிதிகளையும் இவர்கள் சந்திக்கவிருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகராலய
அதிகாரியொருவர் தெரிவித்தார். இலங்கை வந்துள்ள இந்திய உயர்மட்டக் குழுவினரை
இன்று சந்தித்து பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாட விருப்பதாகத்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தது. இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா,
சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், மற்றும் செல்வம் அடைக்கலநாதன்
உள்ளிட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
(மேலும்....)
ஆனி
11,
2011
பிரபல ஓவியர்
ஹுசைனின் உடல் இந்தியாவில் அடக்கம்
சர்ச்சைக்குரிய பிரபல ஓவியர் எம். எப்.
ஹுசைனின் உடலை இந்தியாவுக்குக் கொண்டுவந்து இறுதிச் சடங்குகளைச் செய்ய அவரது
குடும்பத்தினருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 95 வயதான எம். எப்.
ஹுசைன் உடலநலக்குறைவு காரணமாக லண்டனில் றோயல் பிராம்ப்டன் மருத்துவமனையில்
நேற்று முன்தினம் காலமானார். இந்து கடவுள்களின் உருவங்களை நிர்வாணமாக
வரைந்ததையடுத்து வலதுசாரி அமைப்புகளால் ஹுசைனின் உயிருக்கு அச்சுறுத்தல்
ஏற்பட்டது. இதனையடுத்து அவர் 2006ம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறினார்.
2010 ஜனவரியில் அவருக்கு கத்தார் குடியுரிமை வழங்கப்பட்டது. ஹுசைனின்
மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆனி
11,
2011
லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு நிதி உதவி செய்ய
மேற்குலக நாடுகள் தீர்மானம்
லிபிய கிளர்ச்சியாளர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவதற்கு மேற்குலக நாடுகள்
தீர்மானித்துள்ளன. தற்போதைய லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபிக்கு எதிராக
போராட்டங்களை நடத்துவதற்காக இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளது. மேற்குலக
நாடுகளும் சில அரபு நாடுகளும் இவ்வாறு கிளர்ச்சியாளர்களுக்கு கூடுதல் நிதியை
வழங்குவதற்கு தீர்மானித்துள்ளன. கடாபியின் மீது அழுத்தங்களை பிரயோகிக்கும்
நோக்கில் இந்த நாடுகள் நிதி உதவிகளை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
இத்தாலி 586 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், பிரான்ஸ் 420 மில்லியன்
அமெரிக்க டொலர்களையும், குவைட் 180 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கத்
தீர்மானித் துள்ளன. எதிர்வரும் நான்கு மாத காலப் பகுதியில் யுத்தத்தை
முன்னெடுப்பதற்கு இன்னமும் மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக
கிளர்ச்சியா ளர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் வீட்டுக் கோடிக்களில் பலர்
பட்டினியால் சாகின்றனர் அவர்களுக்காவது உணவூட்டாமல் ஏன் இந்த
கொலைவெறியாட்டம் செய்கின்றன மேற்குலக நாடுகள்....?
ஆனி
11,
2011
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பராக் ஒபாமா மன்னிப்பு கேட்டுள்ளார்
ஆப்கானிஸ்தானில் நடந்த நேட்டோ தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலியானதற்கு
மன்னிப்பு கேட்பதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியுள்ளார். இது
குறித்து அவர் ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்ஸாயை தொடர்பு கொண்டு
வருத்தம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அமெரிக்கப் படையினர் நடத்திய
தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி மக்கள் ஆப்கானிஸ்தானில் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத்
தாக்குதல்களை நடத்தி வருகிறது அமெரிக்கப்படை. இதில் பல அப்பாவிகளும் பலியாகி
வருகின்றனர். இதுகுறித்து ஹமீத் கர்ஸாய் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து
வருகிறார். குறிப்பாக ஹெல்மாண்ட் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் அப்பாவிகள்
பலியானதற்காக அவர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார் என்றார்.
ஆனி
11,
2011
அரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும்
- அமைச்சர் டக்ளஸ்
_
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற
தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
முன்வைத்துள்ளார். இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய
பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் பாரம்பரிய
கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா தொலைபேசியினூடாக கலந்துரையாடியபோதே இந்த ஆலோசனையை அவர்
முன்வைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விடுத்துள்ள
செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம்
இந்த ஆலோசனை முன்வைக்கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாராளுமன்ற
தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய
சூழ்நிலை உருவாகுமென தெரிவித்துள்ளார்.
ஆனி
10,
2011
புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 17)
பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில்
தப்பியவரின் வாக்குமூலம்
நாம் நமது தலைவரையாவது காப்பாற்ற வேண்டும் அதற்கு ஒரு வழி தேவை என்று
அதற்காவது ஒழுங்கு செய்யும்படியும் கேட்டுக்கொண்டோம். அதற்கு நெடியவனும்
கஸ்ரோவும் கே.பி யும் செய்த வேலைகள் அடுத்து சொல்லுகிறேன்? இந்த
சந்தர்ப்பத்தில் கே.பி தலைவரையும் சரணடையசொல்லி வற்புறுத்திய வண்ணமே
இருந்தார். ஆனால் இப்போதுள்ள 3000 குட்பட்டவர்கள் ஆயுதங்களைக் கீழே போடுவோம்,
கையளிக்கப் போவதில்லைஎன சொல்லப்பட்டது. இதன் போது கே.பிக்கு தலைவரால்
சொல்லப்பட்ட செய்தி உலகுக்கு சொல்லும்படி ஆயுதங்களை நாங்கள் கீழே போட
விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண
விரும்புகின்றோம்.என்று அறிவிக்கும் படி சொல்லப்பட்டது.
(மேலும்....)
ஆனி
10,
2011
எம்.பிக்களுக்கு தமிழ் மொழி பயிற்சி
பாராளுமன்ற உறுப்பினர்களின் மொழித்திறனை விருத்தி செய்வதற்காக தமிழ்மொழி
பயிற்சி பாடநெறியின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்றத்தில் இன்று காலை 10.00
மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படும். பயிற்சி
நெறியானது பாராளுமன்றம் கூடும் ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
காலை வேளையில் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெறும். தேசிய மொழி மற்றும்
நல்லிணக்க ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ஆலோசனையின் பேரில்
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு மாதங்களுக்கு தமிழ்மொழி பயிற்சிகள்
வழங்கப்படவுள்ளன. இப்பாடநெறியில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்கள் 30 பேருக்கு முதற்கட்டமாக பயிற்சிகள்
ஆரம்பிக்கப்படவுள்ளன.
ஆனி
10,
2011
ரட்ணஜீவன் கூலும்,
தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்
(பகுதி
4)
(ரகுமான் ஜான்)
ஒட்டு மொத்தத்தில் பலரும் காட்ட விரும்புவது போல கூல் ஒன்றும் எமது
சமுதாயத்தின் விடிவெள்ளி அல்ல.
மாறாக
நமது சமுதாயத்தின் ஆளும் குழுமங்களுள் ஒன்றான யாழ்,
அங்கிலிக்கன்,
வேளாள
ஆணாதிக்க பிரிவை
–
மற்றயது யாழ் சைவ வேளாள,
ஆணாதிக்க பிரிவாகும்
–
சேர்ந்தவர் என்பது தெளிவாகிறது.
இவரை
விமர்சனங்கள் இன்றி தூக்கிக் கொண்டாடும் போது,
நாம்
ஒரு ஆதிக்கப் பிரிவிற்குப் பதிலாக இன்னொரு
ஆதிக்க பிரிவை ஆதரிப்பதாகவே
அர்த்தப்படும்.
இது
எந்தவகையிலும் நமது சமுதாயத்தின் விடிவிற்கு வழிவகுக்காது என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும்.
(மேலும்....)
ஆனி
10,
2011
தயாநிதி மாறன் அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுகிறார்?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் மூன்றாவது குற்றப்பத்திரிகை இம்மாத
இறுதிக்குள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இந்த ஊழலில் வலு வாக
சிக்கியுள்ள தற்போதைய மத்திய ஜவுளித்துறை அமைச்சரும் முன் னாள்
தொலைத்தொடர்புத்துறை அமைச்சருமான தயாநிதிமாறனின் பெயர் குற்றப்பட்டியலில்
இடம் பெறக்கூடும் என்ற சூழலில், மத்திய அமைச்சரவையிலிருந்து அவர்
நீக்கப்படுவார் என்று தில்லியில் பர பரப்புச் செய்திகள் எழுந்துள்ளன.
(மேலும்....)
ஆனி
10,
2011
விமானம் தாங்கி கப்பலை உருவாக்குகிறது சீனா
60 ஆயிரம் தொன் எடை கொண்ட போர்க்கப்பலை சீனா உருவாக்கி வருவதாக ஹொங்காங்
செய்தி நிறுவனம் தகவலை வெளியிட்டுள்ளது. 300 மீற்றர் நீளம் கொண்ட இந்த
கப்பலின் கட்டுமான பணிகள் இன்னும் முழுமைபெறவில்லை என சீன மக்கள் போர்ப்
படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் தாங்கி கப்பலை
வைத்திருப்பது ஒரு நாடு கெளரவமாக கருதுகிறது. அதன் அடிப்படையில் இந்தியா,
ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகள் விமான தாங்கி கப்பல்களை வைத்துள்ளன.
அதன் வரிசையில் சீனாவும் இணைய உள்ளது என்று மக்கள் விடுதலைப்படையை சேர்ந்த
அதிகாரி குய்ஜிங்காவோ தெரிவித்தார்.
ஆனி
10,
2011
839 புலி
உறுப்பினர்கள் மாத்திரமே முகாம்களில் உள்ளனர்
- அரசாங்கம்
_
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான தற்காலத்தில் 839 புலி உறுப்பினர்கள் மூன்று
முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக நேற்று சபையில் அறிவித்த
அரசாங்கம் இவர்களில் இருவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல்
செய்திருப்பதாகவும் தெரிவித்தது. இதேவேளை, மூன்று முகாம்களை மாத்திரமே
குறிப்பிட்டு 839 புலி உறுப்பினர்களே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என
அரசாங்கம் கூறுமானால் திருகோணமலை, வெலிகந்தை ஆகிய முகாம்கள் தடுப்பு
முகாம்கள் இல்லையா? 839 பேர் தான் எஞ்சியுள்ளனர் எனில் ஏனையோர் எங்கே?
(மேலும்....)ஆனி
10,
2011
பொருளாதார வளர்ச்சிக்கான கூட்டு முயற்சி- கியூபா, வெனிசுலா உறுதி
இரு நாடுகளும் இணைந்து பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம் சங்களில்
பணியாற்றும் வகையில் புதிய திட்டங்கள் வகுக்கப்படும் என்று கியூபா மற்றும்
வெனிசுலா நாடு களின் பேச்சுவார்த்தைகள் பற்றி கியூபத்தரப்பில் கூறப்
பட்டுள்ளது. எரிபொருள், விவசாயம், உணவு மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய
துறைகளில் ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்க ளால் ஏற்பட்ட முன்னேற் றத்தையும்
ஆய்வு செய்ய வுள்ளனர். வெனிசுலாவின் வெளி யுறவுத்துறை அமைச்சர் நிகோலஸ்
மதுரோ செய்தி யாளர்களிடம் பேசினார். மக்களின் அடிப்படை மற் றும் உண்மையான
தேவை களைக் கிடைக்கச் செய்யும் வகையில் வளர்ச்சியை ஏற் படுத்துவதில் கவனம்
செலுத் துகிறோம். ஏராளமான துறைகளில் இருநாடுகளுக் கும் இடையில் உறவு
இருந்து வருகிறது. சலுகை விலை யில் ஒவ்வொரு நாளும் ஒரு லட்சம் பீப்பாய்
கச்சா எண் ணெய் கியூபாவுக்குத் தரப் படுகிறது. சுகாதாரத்துறை யில்
வெனிசுலாவுக்கு பெரிய அளவில் கியூபா உதவி வருகிறது.ஆனி
10,
2011
தமிழனே தமிழனை ஏமாற்றினார்
தமிழனே தமிழனை
மயக்க நிலையில்அநாதரவாக விட்டுச் சென்றார்
மகாலிங்கம் வெற்றிலை வாங்குவதற்காக பஸ்ஸில் இருந்து இறங்க முற்பட்ட போது
அவரை இறங்க விடாது குறித்த நபர் சென்று வெற்றிலையினை வாங்கிக்கொடுத்துள்ளார்.
பின்பு பஸ் புறப்படும் போது வெற்றிலையை உட்கொண்ட மகாலிங்கம் மயக்க
முற்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபர் அவர் அணிந்திருந்த 2 பவுண்
சங்கிலி, 1 பவுண் மோதிரம் பையில் இருந்த 24 ஆயிரம் ரூபா பணம் மற்றும்
அவருடைய பயணப் பொதி ஆகியவற்றை திருடிக்கொண்டு சென்றுவிட்டார். பஸ் மன்னார்
அரச பேருந்து தரிப்பிடத்தினை வந்தடைந்த போதும் மகாலிங்கம் எழும்பவில்லை.
இந்த நிலையில் குறித்த பஸ்ஸின் நடத்துனர் மயக்கமுற்ற நிலையில் காணப்பட்ட
மகாலிங்கத்தினை இறக்கி தரிப்பிடத்தில் அனாதரவாக விட்டு சென்று விட்டார்.
(மேலும்....)
ஆனி
10,
2011
உலகப்
புகழ்பெற்ற ஓவியர் எம்.எப்.ஹூசேன் மறைவு
உலகப்புகழ் பெற்ற இந்திய ஓவியர் மக்புல் ஃபதா ஹூசேன் புதனன்று கால மாகி
விட்டார். லண்டனில் ராயல் பிராம்ப் டன் மருத்துவமனையில் மாரடைப்பால் காலமான
அவருக்கு வயது 95.1915இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த அவர், 1937இல்
மும்பையில் சினிமா பேனர்கள் எழுதும் பணியில் சேர்ந்து தன் கலைவாழ் வைத்
துவக்கியவர். 1947 இல் அவர் ‘முற்போக்குக் கலைஞர்கள் குழு’ வோடு இணைந்து
பணியாற்றத் துவங்கியதற்குப் பிறகே அவர் கலை உலகில் ஓர் மகத்தான ஓவியராக அடை
யாளம் காணப்பட்டார். உலக அளவில் பிகாசோவோடு சமமாக வைத்துப் புகழப்பட்டவர்
இந்திய ஓவியக் கலைஞர் ‘ஹூசேன் மட்டும்தான். 1966 இல் பத்மஸ்ரீ விருதும்,
1973இல் பத்மபூஷன் விருதும், 1989இல் பத்மவிபூஷன் விருதும் பெற்றார்.
மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார்.
(மேலும்....)
ஆனி
10,
2011
புலிகளின் தடையை நீக்கக் கோரும் வழக்கு ஐரோப்பிய
நீதிமன்றத்தில் ஏற்பு
_
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் புலிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க
வேண்டும் என்று புலிகள் சார்பாக விக்ரர் கொப்பே என்ற சட்டத்தரணி தாக்கல்
செய்துள்ள வழக்கை ஐரோப்பிய நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கவுள்ளதாக அந்த
நீதிமன்றின் பதிவாளர் அறிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்குப்
பிறகு விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை என்றும் எதுவித வன்முறையும்
அற்ற விதத்தில் தமது உரிமைகளுக்காகப் போராட விரும்புகிறார்கள் என்றும்
விக்ரர் கொப்பே வாதாடுகிறார்.
(மேலும்....)ஆனி
10,
2011
உண்மை நிலவரம்
அறியாது தமிழக அரசு எடுக்கும் தீர்மானம் தமிழரையே பாதிக்கும்
கள நிலைமைகளை அறியாமல் இலங்கைக்கு எதிராக
பொருளாதாரத் தடையை விதிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை தமிழக அரசு
எழுந்தமானமாக எடுத்துள்ளமை வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களையே பாதிக்கும்.
உண்மை நிலையை அறிய தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தனது பிரதிநிதிகள்
அடங்கிய உயர் மட்டக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டும்.
கள நிலைமைகளை அறியாமல் அறிந்துகொண்ட சில தகவல்களை மட்டும் வைத்துக்கொண்டு
இவ்வாறான ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதால் தமிழ் மக்கள் இன்னமும்
பாதிக்கப்பட்டு விடுவார்கள்.
(மேலும்....)
ஆனி
10,
2011
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை
இலங்கையின்
நிலைப்பாடு அறிவிப்பு
சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பான
இலங்கையின் நிலைப்பாடு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு
உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட் டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும்,
அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார். அரசாங்க தகவல்
திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும்
செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த
இரு வருடகாலப் பகுதியில் நாட்டில் அமைதி, சமாதானத்தை ஏற்படுத்தவும், தேசிய
ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள்
குறித்தும் ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
கூறினார்.
ஆனி
10,
2011
எண்ணை விலை உயர்வுக்கு அமெரிக்காவே காரணம் -
ரஷ்ய
வட ஆபிரிக்காவில் ஏற்பட்ட கிளர்ச்சிகள், ஈராக் மீது அமெரிக்கா நடத்திய
தாக்குதல் ஆகியவைதான் எண்ணை விலை உயரக் காரணம் என்று ரஷ்ய ஜனாதிபதி
விலாடிமிர் புடின் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு ஆபிரிக்காவில் ஏற்பட்ட
கிளர்ச்சிகளுக்கு யார் காரணம் என்பது உலகத்திற்கு தெரியும். அதற்கு
அமெரிக்காதான் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். லிபியா மீது நேட்டோ
இராணுவம் நடத்தும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.
லிபியாவின் கிளர்ச்சிப்படை தனது முதல் எண்ணெய் விற்பனையை ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவின் டெசோரோ என்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு
கிளர்ச்சிப்படை எண்ணெய் விற்பனை செய்யவுள்ளது. லிபிய கிளர்ச்சிப்படை அரசு
நிர்வாகம் அமெரிக்காவுக்கு எண்ணெய் விற்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை
அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. லிபியாவின்
போராட்டக்காரர்களின் அரசு நிர்வாகத்தை பிரான்ஸ், இத்தாலி, கட்டார் மற்றும்
சிறு எண்ணிக்கை நாடுகள் ஆதரித்துள்ளன.
ஆனி
10,
2011
வாழைப்பழம் சாப்பிடலாம்
உலகில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பழங்களில் நான்காவது இடத்தில்
இருக்கிறது வாழைப் பழம். இந்த வாழைப் பழம் சரி நுட்பமான முழு நிறைவான
உணவாகும். புரதத்துடன் மாவுச் சத்து விற்ற மின்கள் தாது உப்புக்கள் முதலியன
போதுமான அளவு இப்பழத்தில் உள்ளன. நன்கு பழுத்த ஒரு வாழைப் பழத்தைச்
சாப்பிட்டவுடன் இரத்தத்தில் க்ளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள்
அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. மற்ற உணவு என்றால்
இன்னும் அதிக நேரம் ஆகும். இந்தச் சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில்
இருக்கும் காய்ச்சல் வருவது போல் உணர்ந்தால் ஒரு வாழைப் பழகத்தை உடனே
சாப்பிடுங்கள். இன்று விஞ்ஞானிகளும் சத்துணவு நிபுணர்களும் உலகின் மிக
உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள்.
(மேலும்....)
ஆனி 09,
2011
இலங்கை மீது பொருளாதார தடை தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டுமென்ற தமிழக அரசின்
தீர்மானம் செவ்வாயன்று (ஜூன் 8) சட்டப்பேரவையில் ஒருமன தாக
நிறைவேற்றப்பட்டது. “போர்க்குற்றங்களை நிகழ்த்தி யவர்களை போர்க்குற்றவாளிகள்
என்று பிரகடனப்படுத்த வேண் டும்; இலங்கை முகாம்களில் உள்ள தமிழர்கள்
அனைவரும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று, சிங்களவர் களுக்கு
இணையாக கண்ணிய மாக வாழ வகைச் செய்யும் வரை யில், அனைத்து குடியுரிமைகளை யும்
தமிழர்கள் பெறும் வரையில் மத்திய அரசு மற்ற நாடுகளுடன் இணைந்து இலங்கை
அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவை கோருகி றது” என்ற தீர்மானத்தை முதல மைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.
(மேலும்...)ஆனி 09,
2011
ரட்ணஜீவன் கூலும்,
தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்
(பகுதி 3)
(ரகுமான் ஜான்)
சமய சீர்திருத்தவாதிகளது முயற்சிகளையும் மீறி சில புராதண பழப்பவழக்கங்கள்
இன்றும் கூட எல்லா சமயத்தவரிடையேயுங்கூட தொடரவே செய்கின்றன.
இவற்றை எவ்வாறு பார்ப்பது என்பது அந்தந்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் முடிவு
செய்ய வேண்டியவர்களாவர்.
ஒவ்வொரு சமயத்திலும் உருவாகிவரும் முற்போக்கு சக்திகளும்,
ஒடுக்கப்பட்ட சமூகப்பிரிவினரும்,
தமது போராட்டங்களில் ஒரு முற்போக்கான மதப்பிரிவை அங்கிகரிக்கவோ அல்லது அந்த
மத்தை முற்றாக நிராகரத்து செயற்படவோ முன்வருவர்.
இப்படியாக ஒவ்வொரு மதத்தினுள்ளும் பல்வேறு சமூக சக்திகளும்,
தத்தமது இலக்குகளை வென்றெடுக்கும் விதத்தில்,
அந்த மத்ததின் பல்வேறு பிரிவுகளில் ஏதாவது ஒன்றை முதன்மைப்படுத்துவது
அல்லது அதனை முற்றாக நிராகரிப்பது
வரையிலான பல்வேறு நிலைப்பாடுகளை மேற்கொள்ளலாம்.
இது மதம் என்ற தளத்தில் நடைபெறும் வர்க்க,
சாதிய,
மற்றும் பல்வேறு சமூகப்பிரிவுகளது போராட்டங்களின் வெளிப்பாடும் ஆகும்.
இந்த போராட்டங்களில்
“வெளியார்கள்”
அங்குள்ள முற்போக்கான பிரிவினருக்கு தார்மீகரீதியாக ஆதரவை வழங்கலாம்.
மாறாக,
நாமே அந்த போராட்டத்தை நடத்த முன்வருகைளில் இது இரண்டு மதப்பிரிவினருக்கு
இடையிலான சகிப்புணர்வின்மையின் வெளிப்பாடாக அமைந்துவிடும் வாய்ப்புண்டு.
(மேலும்...)ஆனி 09,
2011
கனிமொழி ஜாமீன் மனு
குற்றச் சாட்டில் பூர்வாங்க ஆதா ரம் இருப்பதால்
உயர்நீதிமன்றம் நிராகரிப்பு
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப் பட்டு திகார் சிறையில்
அடைக்கப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற மாநி லங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர்
டி.வி. நிர்வாக இயக்குநர் சரத் குமார் ஆகியோரது ஜாமீன் மனுக்களை தில்லி உயர்
நீதிமன்றம் நிராகரித்துவிட் டது. இந்த வழக்கில் இரு வருக்கும் எதிரான
குற்றச் சாட்டில் பூர்வாங்க ஆதா ரம் இருப்பதால் ஜாமீன் வழங்க இயலாது என்று
உயர்நீதிமன்ற நீதிபதி அஜீத் பரிகோக் புதனன்று தீர்ப்பளித்தார்.
(மேலும்...)ஆனி 09,
2011
A bad week for Rajapaksa
(Feizal Samath)
IT has not only been a bad week but a particularly humiliating one for
the six-year-old government of Sri Lankan President Mahinda Rajapaksa,
enjoying his second term in unrivaled power. Riding high after
triumphantly ending a near 30-year-old conflict, Rajapaksa has played
his cards wisely, shrewdly and somewhat ruthlessly, wiping out any
opposition to his party and using war victory rhetoric to ensure he is
firmly in control for another six years.That is until now when cracks
have begun showing in the administration. In recent months, the
government has been under pressure from all quarters over the rising
cost of living and wage pressure from the public sector and university
academics.
(more....)
ஆனி 09,
2011
மதவெறியைக் கிளப்பும் குஜராத்தி படம்
அண்மையில் வெளியான “சர்ஹத் நி பார் மரி ராதா” என்ற குஜராத்திப்படம்
சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பைக் கக்குகிறது என்று இஸ்லாமிய
அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. மே 27 அன்று வெளியான இந்தப்படத்தை
தற்போதுள்ள காட்சிகளோடு திரையிடுவதற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பது
அந்த அமைப்புகளின் வேண்டுகோளாக உள்ளது. இத்தகைய காட்சிகள் உள்ள படத்திற்கு
எவ்வாறு சென்சார் அனுமதி அளித்தது என்பது ஆச்சரியப்படும் வகையில் உள்ளதாக
அமைப்புகளின் பொறுப்பாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தப்படத்தில் உள்ள
வசனங்கள் மதவெறியைக் கிளப்பும் வகையிலும், சிறுபான்மை சமூகங்களுக்கு
எதிராகவும் எழுதப்பட்டுள்ளன. இதில் கதாநாயகனாக நடித்துள்ள ஹிது கனோடியா,
பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான நரேஷ் கனோடியாவின் மகனாவார். தங்கள் கோரிக்கை
ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடப்போவதாக பல அமைப்புகள்
தெரிவித்துள்ளன.
ஆனி 09,
2011
தவளையின் தோலிலிருந்து புற்றுநோய்க்கு மருந்து
- விஞ்ஞானிகளின் அரிய
கண்டுபிடிப்பு
மனித குலத்தினை அச்சுறுத்தும் நோய்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றே புற்றுநோய்.
உயிர் கொல்லி நோயான இதனை குணப்படுத்த விஞ்ஞானிகள் கடுமையாக போராடி
வருகின்றனர். இந்நிலையில், தவளையின் தோலில் இருந்து பெறப்படும் இருவகை
புரதங்களின் மூலம் புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் உட்பட 70
நோய்களை குணமாக்க முடியும் என பெல்பாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தென் அமெரிக்காவில் காணப்படும் 'வெக்ஸி மங்கி
புரொக்' எனப்படும் தவளை இனத்தின் தோலில் சுரக்கும் ஒரு வகை புரதத்தின் மூலமே
இது சாத்தயப்படுமென விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.
(மேலும்....)
ஆனி 09,
2011
வைத்தியசாலையிலிருந்து ஓரிரு நாட்களில் வெளியேறுகிறார் ரஜினி
இன்னும் சில நாட்களில் வைத்தியசாலையில்
இருந்து வெளியேறவுள்ள ரஜினி ரசிகர்களிடம் நேரடியாக பேச ஆர்வமாக உள்ளார்
என்று தனுஷ் தெரிவித்தார். ‘ராணா’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட ரஜினிக்கு
திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத்
மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற, கடந்த மாதம் 27ம் திகதி சென்றார் ரஜினி.
அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை
அளித்தனர். சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த தனுஷ்,
நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரஜினி உடல் நலம் தேறிவிட்டார். அவருக்கு
மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை தேவையில்லை. 10 நாட்களில் வெளியேறி விடுவார்’
என்றார்.
(மேலும்...)
ஆனி 09,
2011
வட பகுதியை விட தென்பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும்
வகையிலேயே தீர்வு -
அரசாங்கம்
புலிகளால் கேட்கப்பட்டதற்கிணங்கவோ அல்லது வெளிநாடுகளின் தேவைகளுக்கு ஏற்ற
வகையிலோ அரசாங்கத்தினால் செயற்பட முடியாது. அத்துடன் வட பகுதி மக்கள்
மகிழ்ச்சியடையும் வகையில் அல்ல. தென் பகுதி மக்கள் மகிழ்ச்சியடையும்
வகையிலேயே அரசியல் ரீதியிலான எந்தவொரு தீர்வையும் அரசாங்கத்தினால் வழங்க
முடியும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா நேற்று
சபையில் தெரிவித்தார். தமிழக அரசாங்கம் எம்மீது எந்தவிதமான தீர்மானங்களை
நிறைவேற்றினாலும் மத்திய அரசாங்கத்துடனான உறவு சுமுகமானதாகவே இருக்கின்றது.
இந்தியா மட்டுமல்ல, அந்நாட்டு மக்களும் கூட இலங்கை அரசாங்கத்தைப் புரிந்து
வைத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(மேலும்...)ஆனி 09,
2011
இலங்கை அரசின் கொடுமைக்கு எதிராக நியாயம் கேட்போம்
இலங்கை அரசும், ராணுவ மும் மனித உரிமைகளை மீறி நடத்திய கொடுமைக்கு எதிராக
நியாயம் கேட்க வேண்டியுள் ளது. தமிழர்களுக்கு இருந்த சம உரிமையும்,
வாழ்வுரிமையும் பறிக்கப்பட்டு, வாழ வழி யில்லை என்ற நிலையில்தான் அவர்கள்
போராடத் தொடங் கினார்கள். இந்த காலம் முழு வதும் தமிழர்கள் கண்ணீரிலும்,
செந்நீரிலும் குளித்தனர்.இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்று
கூறப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கெனவே உலகின் பல பகு திகளில் பொருளாதாரத் தடை
விதிக்கும்போது குற்றம் செய்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட் டதில்லை. இராக்
மீது அமெ ரிக்கா கடந்த 20 ஆண்டுகளாக கண்மூடித்தனமாக பொருளா தாரத் தடை
விதித்த போது, 10 லட்சம் குழந்தைகள் இறந்தார் கள். தற்போது 20வயதுடைய
இளைஞர்களே அங்கு இல்லை என்கிற நிலைமை ஏற்பட் டுள்ளது. இதுபோன்ற தடையால்
குழந்தைகளும் பெண்களுமே அதிகமாக பாதிக்கப்படுகின் றனர். இலங்கை ஆட்சியாளர்
களும், ராணுவமும் போர்க்குற் றம் புரிந்திருந்தாலும், பொரு ளாதாரத்
தடைவிதிக்கும் போது நாம் யாருக்காக இந்த தீர்மானத்தை கொண்டு வருகி றோமோ
அந்த தமிழ் மக்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே, பொருளாதாரத் தடை வேண் டுமா?
என்பதை அரசு பரிசீலிக்க வேண்டும்.
(மேலும்...)ஆனி 09,
2011
பெண் உரிமைக்கு
உத்தரவாதம் அளிப்பதில் நாம் இன்றும் தயக்கம் காட்டுகிறோம்
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு, இன்று நாட்டில்
பூரண சமாதானமும் அமைதியும் நிலவி வருகின்ற போதிலும், பயங்கரவாத யுத்தம்
நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பெண்ணுரிமை எவ் விதம் மறுக்கப்பட்டு,
பெண்கள் துன்புறுத்தப்பட்டார்களோ அதே நிலை யிலேயே பெண்ணுரிமை இன்றும்
புறக்கணிக்கப்பட்ட நிலையில் இருப் பது ஒரு வேதனைக்குரிய விடயமாகும். 1931
ஆம் ஆண்டில், ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் ஒப்பிட்டுப்
பார்க்குமிடத்து, இலங்கையிலேயே முதல் தடவையாக பெண் களுக்கு வாக்குரிமை
வழங்கப்பட்டது. 1960ல் திருமதி ஸ்ரீமாவோ பண் டாரநாயக்க இலங்கையில்
மட்டுமல்ல உலகிலேயே முதலாவது பெண் பிரதம மந்திரி என்ற சாதனையை
ஏற்படுத்தினார். 1994 ஆம் ஆண்டில் அவரது மகள் சந்திரிக்கா பண்டாரநாயக்க
குமாரதுங்க இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரமுடைய
முதலா வது பெண் ஜனாதிபதி பதவிக்கு தெரிவானார்.
(மேலும்...)
ஆனி 09,
2011
மரணிக்கும் வரை
போராடுவேன்
-
கடாபி
லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தனது
நாட்டுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை எதிர்த்து மரணிக்கும் வரை போராடப்
போவதாகவும் மரணத்தை வரவேற்பதாகவும் அறிவித்துள்ளார். நாம் மரணிக்கும் வரை
இந்த மண்ணிலேயே இருப்போம். நாம் அடிபணியப் போவதில்லை. உங்களின் ஏவுகணைகளை
விடவும் நாம் பலமானவர்கள். உங்களது விமானங்களை விடவும் பலமானவர்கள். லிபிய
மக்களின் குரல் உங்கள் குண்டு சத்தத்தைவிடவும் வலுவானது என்று இதன்போது
முஅம்மர் கடாபி கூறினார்.
(மேலும்...)
ஆனி 09,
2011
திரும்பிப் பார்க்கும் சர்வதேச நிதியம்
(ஆர்.எஸ்.செண்பகம்)
வளரும் நாடுகள் தங்கள் எல்லைக் குள் வரும் அந்நிய நிதி மூலதனத்தின் மீது
கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சர்வதேச நிதியத்திற்கு (ஐஎம்எப்) கொள்கை
ரீதியான ஒரு நிலைப்பாடு உள்ளது. இந்த நிலைப் பாட்டினை, 1997ம் ஆண்டு தென்
கிழக்கு ஆசிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி உருவாகி அந்த
நெருக்கடி உலகம் முழுவதும் வெடிக்கலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்ட போது கூட
சர்வதேச நிதியம் மாற் றிக் கொள்ள விரும்பவில்லை; மாற்றவுமில் லை. ஆனால்,
2008ம் ஆண்டில் உலகப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, பல வளரும் நாடுகளின்
பொருளாதாரச் சந்தை களில் அதனுடைய தாக்கம் ஏற்பட்டுள்ள போது சர்வதேச நிதியம்
தனது நிலைப்பாடு குறித்து திரும்பிப் பார்க்க வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டுள்ளது. சர்வதேச நிதியத்தின் இந்த கொள்கை மாற்றம் குறித்த ஆய்வு
நிச்சயமாக மிகத் தாமதமான நடவடிக்கை தான் என்ற போதும், இது சம்பந்தமான
சர்வதேச நிதியத் தின் சில பரிந்துரைகள் உலகப் பொருளாதார வல்லுநர்களை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
(மேலும்...)ஆனி 09,
2011
அமெரிக்கர்கள்
மத்தியில் ஒபாமாவின் புகழ் சரிவு
பாகிஸ்தானில் அதிரடி தாக்குதல் நடத்தி ஒசாமா
பின்லேடனை கொன்றபோது அதிகரித்த அமெரிக்க ஜனாபதி ஒபாமாவின் புகழ், அடுத்த
ஓரிரு மாதங்களிலேயே சரிவைச் சந்தித்துள்ளது. சமீபத்தில் நாடு முழுவதும்
நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு இதை உறுதி செய்துள்ளது. வொஷிங்கடன் போஸ்ட் -
அமெரிக்க ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் (ஏ.பி.சி.) நடத்திய ஆய்வில் இரண்டு
அமெரிக்கர்களில் ஒருவர் நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளதாக கருத்து
தெரிவித்துள்ளனர். 10 பேரில் 9 பேர் நாட்டின் பொருளாதார நிலை இறங்கு
முகத்தில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். 2012ம் ஆண்டில் ஜனாதிபதி
தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் ஓபாமா கடுமையான போட்டியை சந்திக்க
வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது. நாட்டில் வாழ்கைச் செலவு உயர்வு,
வீடுகளின் விலை சரிவைச் சந்தித்தது. வேலை வாய்ப்பு நிலை மோசமாக உள்ளது
ஆகியவை ஒபாமாவுக்கு பாதகமான அம்சங்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொருளாதாரம் மேம்படுவதற்கான அறிகுறியே தெரியவில்லை என்றும் 10 பேரில் 6 பேர்
தெரிவித்துள்ளனர்.
ஆனி 09,
2011
புகார் சொல்லப் போகிறார் பூஜா! சீமானுக்கு மேலும் சிக்கல்!!.
டைரக்டர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்து, அந்த புகார் மீது
கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகை
பூஜாவும் சீமான் மீது புகார் சொல்லத் தயாராகி வருவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன. இதனால் சீமான் மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்ள நேரிடும்
எனத் தெரிகிறது. நாம் தமிழர் என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி நடத்திக்
கொண்டிருக்கும் டைரக்டர் சீமான் மீது கடந்த வாரம் நடிகை விஜயலட்சுமி அதிரடி
புகார் ஒன்றை குறிப்பிட்டார். போலீசில் அவர் அளித்த புகார் மனுவில்,
டைரக்டர் சீமான் மூன்று ஆண்டுகளாக காதலித்து விட்டு இப்போது திருமணத்திற்கு
மறுப்பதாக, கூறப்பட்டிருந்தது. இந்த புகாரைத் தொடர்ந்து சீமான் மீது
கற்பழிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
நடத்தி வருகிறார்கள்.
(மேலும்...)
ஆனி 09,
2011
பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தயாரிப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை அதிகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு
அதனிடம் உள்ள ஆயுதங்களின் எண்ணிக்கை 60 இல் இருந்து 80 ஆக உயர்ந்தது. இந்த
ஆண்டு அதனிடம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 110 ஆக உயரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிடம் உள்ள அணுஆயுதங்களின் எண்ணிக்கையும்
110தான். இந்தியா அளவுக்கு அயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்
என்ற குறிக்கோளில்தான் இந்த அளவுக்கு அது தயாரித்து குவித்த உள்ளது என்று
சர்வதேச அறிவார்ந்த அமைப்பான ‘சிற்பி’ தெரிவித்து உள்ளது. இந்த அமைப்பு
சுவீடன் நாட்டின் தலைநகரான ஸ்டொக்ஹோம் நகரில் உள்ளது. இது வெளியிட்டு உள்ள
அறிக்கையில் உலகத்திலேயே வேகமாக அணு ஆயுதங்களை தயாரித்துக் குவிப்பது
பாகிஸ்தான் தான் என்றும் கூறியுள்ளது. பாகிஸ்தானில் அணு ஆயுதங்களில் ஒரு
பகுதி தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் போய்விடும் அபாயம் உள்ளது என்றும்
உலகிலேயே தெற்கு ஆசியாவில் தான் அணு ஆயுதப் போட்டி நடக்கிறது என்றும் அந்த
அமைப்பின் தலைவர் டேனியல் நோர்ட் தெரிவித்து இருக்கிறார். உலகத்தில் அப்போது
5 ஆயிரம் அணு ஆயுதங்கள் உள்ளன. 8 அணு சக்தி நாடுகளும் தொடர்ந்து புதிய
ஆயுதங்களை தயாரிப்பதில் ஈடுபட்டு உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனி 08,
2011
TN Assembly passes resolution seeking imposition of economic sanctions
against Sri Lanka
Tamil Nadu Assembly today adopted a
unanimous resolution seeking imposition of economic sanctions against
Sri Lanka by India on issues concerning Tamils in the island nation,
including alleged human rights violations. The resolution moved by Chief
Minister Jayalalithaa also wanted India to press the United Nations to
declare as “war criminals” those who committed alleged crimes during the
conflict in Sri Lanka. Ms. Jayalalithaa said only economic sanctions
would “rein in” Sri Lanka, which she said, “did not heed the global
opinion when it came to the Tamils issue”. “If India and other countries
impose sanctions, Sri Lanka has to listen to what we say”, she said
replying to the debate on the resolution.
(more...)
ஆனி 08,
2011
இந்தியாவின்
உதவியோடு தருஸ்மன் அறிக்கையை நிராகரிக்கும் எண்ணம் இல்லை
எமது நாட்டுக்கு எதிரானதாக அமைந்துள்ள தருஸ்மன் அறிக்கையை இந்தியாவின்
உதவியோடு நிராகரிக்கும் நோக்கம் இலங்கை அரசுக்கு கிடையாது. அவ்வாறு
இந்தியாவைக் கோரும் எண்ணமும் இல்லை. இந்தியா ஊடாக நிராகரிக்க முற்பட்டால்
அது எமது நாட்டுக்கு பாதகமாகவே அமையும். இது விடயம் சம்பந்தமாக நாம் இந்திய
உயர்மட்டத்துடன் மட்டுமல்ல, வேறு பல நாடுகளுடனும் பேச்சுக்களை
நடத்தியுள்ளோம். இந்த அறிக்கை தொடர்பில் சர்வதேச அளவிலான தேடல்கள்
வேண்டுமென சர்வதேசத்தின் பல நாடுகள் கோரிக்கை விடுத்திருக்கின்ற போதிலும்
இந்தியாவிடமிருந்து எந்த கருத்தும் வெளிப்படவில்லை. இந்நிலையில் தருஸ்மன்
அறிக்கையை இந்தியாவூடாக நிராகரிக்க முற்படும் பட்சத்தில் அது எமது
நாட்டுக்கு பாதகமாக அமைந்துவிடும்.
(மேலும்.....)ஆனி 08,
2011
ரட்ணஜீவன் கூலும்,
தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்
(பகுதி 2)
(ரகுமான் ஜான்)
அண்மையில் ரட்ணஜீவன் கூல் அவர்கள் சைவ சமயம் தொடர்பாக வெளியிட்ட
கருத்துக்களைப் படித்தபோது,
அப்படியே கொலனித்துவ காலத்தில் மிசனரிமார்கள் செய்த பிரச்சாரத்தை படித்தது
போன்றதொரு உணர்வுதான் ஏற்பட்டது.
அதனைவிட இவர் பாலியல் தொடர்பாகவும்,
‘தற்பால்
கவர்ச்சியாளர்களை’
(Gay)
சித்தரித்தவிதமும்,
இவரை
சமூகத்தின் படுபிற்போக்குத்தனமாக கருத்துக்களை கொண்டிருப்பவர் என்பதை
அம்பலப்படுத்துகிறது.
இவர்
தமிழ் சமூகத்தின் முன்னணி புத்திஜீவியாக இனம் காணப்படுபவர் என்றவகையிலும்,
யாழ்
பல்கலைக்கழகத்தின் ஒரே மீட்பராகவும் சித்தரிக்கப்படும் நிலையில் இவரது
கருத்துக்கள் முறைப்படியான பரிசீலனைக்குள்ளாவது அவசியமானதாக ஆகிறது.
இவர்
பொறியியல் துறையில் போராசிரியராக இருக்கிறார் என்பதும்,
அந்த
துறையில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாகும்.
ஆனால்
இவர் அந்த துறையைத் தாண்டி ஏனைய சமூகவியல் துறைகளுக்குள் அடியெடுத்து
வைக்கும்போது அந்த துறைகள் தொடர்பான இவரது புலமையை கேள்விக்குள்ளாக்குவது
தவிர்க்கப்பட முடியாததாகிறது.
(மேலும்.....)
ஆனி 08,
2011
தயாநிதி மாறனை நெருங்குகிறது சிபிஐ
தயாநிதி மாறனுக்கு எதிராக ஏர்செல் நிறுவனத்தின் முன் னாள் உரிமையாளர்
சிவசங்க ரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறு கிறது. இதை
வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட் ரம் உரிமம் தரப்பட்ட விவகாரத்
தில் எப்ஐஆர் பதிவு செய்ய மத் திய குற்றப்புலனாய்வு கழகம் (சிபிஐ) தயாராகி
விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது சிபிஐ காத்துள்ளதாக தெரிகிறது.
(மேலும்.....)
ஆனி 08,
2011
CUPW Job Action at Canada Post
Rotating job action has now begun
by CUPW members at various Canada Post plants across the country – so
far in Winnipeg, Hamilton, Montreal, Victoria and Moncton. Even though
some negotiations between the union and the employer continue, the
situation remains tense, and could well develop into a generalized
strike or lock-out within days.
(more....)
ஆனி 08,
2011
இலங்கையில்
மின்னல் தாக்கி 31 பேர் உயிரிழப்பு
ஜனவரி மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான
ஐந்து மாத காலப் பகுதியில் நாட்டின் பல பாகங்களில் மின்னல்
தாக்கத்திற்குள்ளாகி 31 பேர் பலியாகியுள்ளதுடன் பலர்
பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது. மின்னல்
தாக்கத்தினால் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். அம்
மாதத்தில் மாத்திரம் 20 பேர் பலியாகியுள்ளதாக காலநிலை அவதான நிலையத்தின்
அதிகாரியொருவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
மின்னல் தாக்கத்தினால் ஜனவரி மாதம் 02, மார்ச் மாதம் 05, ஏப்ரல் மாதம் 20
பேரும், மே மாதம் 04 பேரும் என்ற அடிப்படையிலேயே 31 பேர் பலியாகியுள்ளனர்.
அநுராதபுரம், பொலன்னறுவை, அம்பாறை, இரத்தினபுரி உள்ளிட்ட கிராம பகுதியிலேயே
இந்த மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தது.
ஆனி 08,
2011
மட்டக்களப்பில் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த
ஆயுதங்கள் மீட்பு _
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில்
காட்டுப் பகுதியில் விடுதலைப் புலி இயக்கத்தினரால்
மறைத்துவைக்கப்பட்டிருந்த ஒருதொகை ஆயுதங்களை வவுணதீவு பொலிஸார்
கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி முஹமட்
உவைஸ் தெரிவித்தார். இன்று காலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தினேஸ்
குமாரசிங்கவின் உத்தரவின்பேரில் பொலிஸ் உத்தியோகத்தர் எஸ்.குலதுங்க
தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட தேடுதலின்போது இந்த ஆயுதங்கள்
மீட்கப்கப்பட்டுள்ளன. 40 மில்லிமீற்றர் ரக மோட்டார் ரவைகள் 02, கிறனைட்டுகள்
02, ரி56 ரக ரவைகள் 08 என்பனவே பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆனி 08,
2011
பெரு ஜனாதிபதியாகிறார் ஹுமாலா
தென் அமெரிக்காவில் தொடர்கிறது இடதுசாரி அலை
பெரு நாட்டின் ஜனாதி பதித் தேர்தலில் இடது சாரிக் கொள்கைகளை
நடைமுறைப்படுத்துவேன் என்ற வாக்குறுதிகளை அளித்துள்ள ஒல்லன்டா ஹுமாலா வெற்றி
பெற் றுள்ளார். 48 வயதாகும் ஹுமாலா, ஐந்து ஆண்டுகளுக்கு முன் பாக நடைபெற்ற
தேர்தலில் தோல்வியுற்றார். ஆனால் மக்கள் நலக் கொள்கை களை முன்வைத்து தற்
போது செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. முன்னாள்
ராணுவ அதிகாரி யான ஹுமாலாவுக்கு 51.5 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளதாக
அதிகாரப் பூர்வமற்ற தகவல்கள் தெரி விக்கின்றன. ஆனால் வாக்கு எண்ணிக்கை
நிறைவு பெறும் போது அவர் பெறும் வாக் குகள் விழுக்காடு அதிகமாக இருக்கும்
என்று எதிர் பார்க்கப்படுகிறது.
(மேலும்.....)ஆனி 08,
2011
தமிழர்களையும்,
அரசையும் வேறுபடுத்த முனைவோர் வடக்கிற்கு வந்து உண்மை நிலையை அறியுங்கள்
- ஜனாதிபதி
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது.
இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்து அவர்களுக்கான பொருளாதாரத்தை
மேம்படுத்துவதே அடுத்துள்ள சவால் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்
தெரிவித்தார். சில ஊடகங்கள் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தமிழ்
மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வை சீர்குலைக்க
முயற்சிக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வெளிநாடுகளில் ஈழக்
கனவு காண்போரைத் திருப்திப்படுத்தவே செயற்படுகின்றனர். அரசாங்கம்
வடக்கிற்குப் பெருமளவு நிதியைச் செலவிட்டு வருகிறது. உண்மை நிலையை
அறியாதவர்களே வெளிநாடுகளில் அரசுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்கின்றனர்
எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
(மேலும்.....)
ஆனி 08,
2011
மீண்டும் ஐ.நா.பொதுச்செயலாளர்! பான் கி மூன் முயற்சி
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர்
பதவிக்கு மீண்டும் போட்டியிடுவதற்கான முயற்சியில் தற்போதைய பொதுச்செயலாளர்
பான் கி மூன் இறங்கியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய
நாடுகள் சபை யின் உறுப்பு நாடுகள் ஆதரவளித்தால், மீண்டும் ஒருமுறை இந்தப்
பொறுப்பில் பணியாற்றும் கவுரவம் கிடைப்பதற்காக மகிழ்ச்சியடைவேன் என்றார்.
தான் போட்டியில் இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் அவர்
வெளியிட்டார். ஐக் கிய நாடுகள் சபையில் உறுப்பு நாடுகளாக இருக்கும் ஆசிய
நாடுகளின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசிய பிறகே இந்த முடிவுக்கு அவர்
வந்துள்ளார். டிசம்பர் 31 அன்று அவரது பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. இதுவரை
அவருக்கு எதிரான வேட்பாளர் என்று யாரும் தங்களை அறிவித்துக் கொள்ளவில்லை.
ஜனவரி 2007ல் கோபி அன்னானிடமிருந்து பொதுச் செயலாளர் பொறுப்பை பான் கி மூன்
ஏற்றுக்கொண்டார்.
ஆனி 08,
2011
அரசு -
தமிழ்கூட்டமைப்பு 23 இல் மீண்டும் பேச்சு
அரசுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும்
இடையிலான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும்.
எனினும் தொடர்ச்சியான இப்பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் எவ்வாறானதாக
இருக்கும் என்பதை இப்போதே கணித்துவிட முடியாது என வெளிவிவகார அமைச்சர்
பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தமிழ்த்
தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி. யுடனான பேச்சுக்கள் தொடர்ந்து
நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுக்களில் முறைப்படியான, உருப்படியான
தீர்வுகளை எட்டவே முற்படுகிறோம். அரசியல் அமைப்பில் திருத்தங்களைக்
கொண்டுவர வேண்டுமானால் அது தொடர்பில் பேசவேண்டும். பேசாமல் எதுவும் செய்ய
முடியாது. பிரச்சினைகளை கலந்துரையாடல்களின் மூலம் தீர்க்கவே முற்படுகிறோம்.
இறுதி முடிவுகள் எவ்வாறானதாக இருக்கும் என்பதை எவராலும் இப்போதே கணித்து
கூறிவிட முடியாது என்றும் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்
குறிப்பிட்டார்.
ஆனி 08,
2011
பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்
(எஸ்.கண்ணன்)
இப்போது ஊழல் அதிகரிப்பிற்கான அடிப்படைக் காரணம் பன்னாட்டு நிறுவனங் கள்
மற்றும் இந்தியப் பெரு முதலாளிகளுக்கு ஆதரவாக அமைச்சர்கள் செயல்பட்டது ஆகும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நீரா ராடியா, ரத்தன் டாடா உரையாடல்கள்
மிகமுக்கிய ஆதாரம். பன்னாட்டு நிறுவனங் களை அறிமுகம் செய்யும் ஏஜெண்டுகளின்
செயல்பாடுகளை, ஜான்பெர்க்கின்ஸ் என்ற அமெரிக்கர் “ஒரு பொருளாதார அடியாளின்
வாக்கு மூலம்” மற்றும் “அமெரிக்கப் பேரர சின் ரகசியம்” ஆகிய இரு
புத்தகங்களில் வெளிப்படுத்தியுள்ளார். கமிஷன் அல்லது அன்பளிப்பு இல்லாமல்,
எந்த ஒரு புரிந் துணர்வு ஒப்பந்தமும் அமலாவதில்லை என்பது உலகமறிந்த
உண்மையாக உறங்கிக் கொண்டிருக்கிறது. எனவே ஊழல் எதிர்ப்பு என்பது பன்னாட்டு
மற்றும் இந்நாட்டு பெரு முதலாளிக்கு எதிரான போராட்டத்துடன் இணைந்தது.
(மேலும்.....)
ஆனி 08,
2011
‘இன்ரப்போல்’ தேடப்படும் பட்டியலில் PLO மாமா
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முக்கியஸ்தராக
இருந்து வரும் பி. எல். ஓ. மாமா எனப்படும் சந்திவெளி மாமா என அனைவராலும்
அறியப்பட்ட வடிவேல் மகேந்திரனை கைது செய்ய உதவுமாறு இன்ரப்போல் பகிரங்கமாக
உதவி கோரியுள்ளது. கடந்த பல வருடங்களாக சுவிஸ் நாட்டின் தேடப்படுவோர்
பட்டிய லில் இருந்து வந்த வடிவேலு மகே ந்திரன் தற்போது இன்ரபோல் பட்டியலில்
இணைக்கப்பட்டுள் ளார்.
ஆனி 08,
2011
ஊழலை எதிர்த்துப்
போராடுவதில் அரசு உறுதி
தயாநிதிமாறன் விவகாரம் எமது கையில் இல்லை -
மன்மோகன் சிங்
தயாநிதிமாறன் விவகாரத்தை சட்ட அமுலாக்கல் பிரிவைச் சேர்ந்தோர் கவனித்து
வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயற்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை
எதிர்த்துப் போராட வேண்டுமென்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று
கருத்துத் தெரிவித்துள்ளார். இது இவ்விதமிருக்க 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ.யிடம் எயார்செல்
நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
எயார்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதிமாறன்
கொடுத்த நெருக்கடியே காரணம் என்று அவர் வாக்கு மூலம் அளித்துள்ளதாக
கூறப்படுகிறது.
(மேலும்.....)
ஆனி 08,
2011
தமிழர்
பிரச்சினைக்கு அரசியல் தீர்வை ஏற்படுத்தி பயங்கரவாத அமைப்புகள் உருவாவதை
தடுக்க வேண்டும்
தமிழர் பிரச்சினைக்கு நியாய பூர்வமான அரசியல்
தீர்வை கூடிய விரைவில் ஏற்படுத்த வேண்டும். அவ்விதம் நாம் செய்யத் தவறினால்
மீண்டும் ஒரு தடவை வடக்கு, கிழக்கில் எல்.ரி.ரி.ஈ. போன்ற ஒரு பிரிவினைவாத
ஆயுத அமைப்பு உருவாகுவதை எங்களால் தடுத்துவிட முடியாது என்று ஐக்கிய தேசியக்
கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தினகரனுக்கு அளித்த பிரத்தியேக
பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பலகால மாக
நீடித்துக்கொண்டிருந்த பெரும் பிரச்சினையாக இருந்த கட்சியை சீரமைக்கும்
செயற்பாடு பல்வேறு இழுபறிகளுக்குப் பின்னர் இப்போது நிறைவு பெற்றிருக்கிறது
என்று அறிவிக்கப்படுகின்ற போதிலும், இலங்கையின் முதன் முதலில் ஆரம்பித்த
அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி ரணில் பிரிவு, சஜித் பிரிவு என்று
இன்று இரண்டா கப் பிளவுபட்டு சின்னாபின்னமாகும் நிலைக்குத்
தள்ளப்பட்டிருக்கிறது.
(மேலும்.....)
ஆனி 07,
2011
தமிழீழ மாணவர் எழுச்சி நாளாக தியாகி பொன். சிவகுமாரனின் 37ம் வருட
நினைவுதினம்...!!!
தமீழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மாணவர்கள்
மத்தியில் உந்துதலாக அமைந்த தரப்படுத்தல் திட்டத்துக்கு எதிராக யாழ்
மாணவர்களால் தொடங்கப்பட்ட தமிழ் மாணவர் பேரவையில் தன்னையும் முழுமையாக
ஈடுபடுத்திக்கொண்டு... தமிழ் மக்களின் விடிவிற்கான ஆயுதப் போராட்டத்தின்
ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவராகவும் செயற்பட்டு... 1974ம் ஆண்டு ஜூன்மாதம்
5ம்திகதி அன்று பொலீசாரின் சுற்றிவளைப்பின்போது அவர்களிடம் அகப்படாமல்
தன்னுயிரை தியாகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரின் முன்னாள் மாணவர் பொன்.
சிவகுமாரன் அவர்களின் 37ம் வருட நினைவுதினம் இன்றாகும்.
(மேலும்....)
ஆனி 07,
2011
ரட்ணஜீவன் கூலும்,
தோல்வியில் முடிவடைந்த அவரது கனவும்
(பகுதி 1)
(ரகுமான் ஜான்)
இனப்படுகொலை நடைபெற்று ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் நாம் மகிந்த அரசை
பகைக்காமல்தான் இதனை சாதிக்க முடியம் என்ற எடுகோளுடன் காரியமாற்றத்
தொடங்குகிறோம்.
அடுத்தாக டக்லசை மகிழ்விக்கும் நோக்கில் சில வஞ்சகப் புகழ்ச்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
அவர்
ஆரம்பத்திலிருந்தே புலிகள் போலத்தான் தனது நிர்வாகத்தை நடந்திக்
கொண்டிருப்பவர்.
புலிகளுக்கு சற்றும் குறையாத போர்க்குற்றங்களைப் புரிந்திருப்பவர்.
அவரை
நல்லவர்:
தமிழ்
மக்களுக்கு சேவை செய்பவர் என்று பாராட்டுகிறோம்.
அடுத்ததாக மகிந்தாவை கூல் தம்பதியினர் சந்தித்து ஆசி வாங்கிக்கொண்டுதான்
களத்தில் குதிக்கிறார்கள்.
டக்லசுடனான சந்திப்பு தொடர்கிறது.
இந்த
இடைக்காலத்தில் டக்லஸ் பற்றிய புகழ்பாடல்,
மகிந்தாவுக்கு எதிராக ஒக்ஸ்போர்ட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கண்டனம்:
இப்படியாக ஒரு அரசியல் விபச்சாரமே கூலினால் செய்து முடிக்கப்பட்டுள்ளது.
இப்போதுதான் இவர் டக்லசினது அடாவடித்தனங்களை கண்டு கொண்டது போல பாசாங்கு
செய்யும் போது இவரிடம் இருப்பதாக கூறப்பட்ட “நேர்மை” என்பதும்
கேள்விக்குரியாகிவிட்டது.
கூல்
இப்படியாக அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தன்மானம் இன்றி பணிந்து போவது
இதுதான் முதல் தடவை என்பதும் இல்லை.
முன்பு
2006
இல்
இதே பதவிக்காக புலிகளுடனும்,
டக்லசுடனும் இதேவிதமாக பேரம் பேசியவர் இவர்.
(மேலும்....)
ஆனி 07,
2011
சீனா
தியானன்மென் சதுக்கத்தில் படுகொலை நடக்கவில்லை மேற்கத்திய பிரச்சாரத்தை
விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்துகிறது
ஜூன் 4, 1989 அன்று சீனாவின் தியானன்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான
மாணவர்களை அந்நாட்டு ராணுவம் சுட்டுக்கொன்று விட்டதாக பரப்பப்பட்டது
அண்டப்புளுகுதான் என்று விக்கிலீக்ஸ் கேபிள்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் மாணவர்கள்
கூடி போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தை அந்நிய மாணவர்கள்
தூண்டிவிட்டார்கள் என்றும், அந்த அந்நிய மாணவர்களுக்கு சீன எதிர்ப்புச்
சக்திகள் ஆதரவு இருந்தது என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்தச்
செய்திகளை மறைத்துவிட்டு, அந்தச் சதுக்கத்தில் ரத்தக்களறி ஏற்பட்டதாகவும்,
மூவாயிரத்துக்கும் குறையாத மாணவர்கள் சீன ராணுவத்தால் கொன்று
குவிக்கப்பட்டதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன. அந்தச்
செய்திகளை அப்படியே வெளியிட்டு பிரச்சாரத்தை இந்திய மண்ணிலும் தொடர இந்திய
ஊடகங்கள் உதவின.
(மேலும்....)ஆனி 07,
2011
"News & Views" High Commission Newsletter.
(more...)
ஆனி 07,
2011
ஏமனில்
மக்கள் கிளர்ச்சி உக்கிரம்
வளைகுடா பிரதேசத்தின் முக்கிய நாடுகளில் ஒன் றான ஏமனில் மக்கள் கிளர்ச்சி
உக்கிரமடைந்துள்ளது. எகிப்தில் எழுந்த மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து பல்வேறு
அரபு நாடுகளிலும் எதேச்சதிகாரிகளுக்கு எதி ராகவும், அமெரிக்க ஆதரவு
ஆட்சியாளர்களுக்கு எதிராக வும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. குறிப்பாக
ஏம னில் கடந்த 2 மாதக் காலத்திற்கும் மேலாக போராட் டம் இடைவிடாமல் தீவிரமாக
நடைபெற்று வருகிறது. அமெ ரிக்க ஆதரவு ஜனாதிபதி அலி அப்துல்லா சலே யின்
ஆட்சிக்கு எதிராக இந்தப் போராட்டத்தை சனா பல் கலைக்கழக மாணவர்கள் துவக்கினர்.
அவர்களே நாட்டுமக்களை அணிதிரட்டினர். தலைநகர் சனாவில் வரலாறு காணாத பேரணிகள்
நடந்தன.
(மேலும்....)ஆனி 07,
2011
மறுக்கப்படும் மனித உரிமைகள் பகிரங்கப்படுத்திய
உண்மைகள்
“அந்தப் பொலிஸ் நிலையத்தில் இருந்த உயர் அதிகாரி இளைஞர் ஒருவரின்
உள்ளாடையைத் தவிர ஏனைய ஆடைகளை நீக்கி பகிரங்கமாக அடித்துக்கொண்டிருந்தார்.
இவர்கள் ஏன் இப்படி வெறித்தனமான மிருகத்தைப்போல நடந்துகொள்கிறார்கள் என நான்
நினைத்தேன்” என தாரீக் என்பவர் பொது நிகழ்வொன்றில் வெளிப்படையாகக் கூறியமை
பல்வேறு வகையில், பல்வேறு தரப்பினரையும் சிந்திக்க வைக்கிறது. “வடக்கில்
இடம்பெயர்ந்த மக்கள் இப்போதுதான் கொஞ்சம் சுதந்திரமாக வாழத்
தொடங்கியிருக்கிறார்கள். எனினும் சில இராணுவ கெடுபிடிகள் சில இருக்கத்தான்
செய்கின்றன. யாராவது ஒரு நபரைக் கைது செய்யும்போது அவர் எதற்காக கைது
செய்யப்படுகிறார் என்பது குடும்பத்தாருக்கு அறிவிக்க வேண்டும்.
(மேலும்....)
ஆனி 07,
2011
தயாநிதி
மாறனும் சிக்குகின்றார்
தயாநிதி மாறன் மிரட்டினாரா? சிபிஐயிடம் ஏர்செல் நிறுவனர் வாக்குமூலம்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில், ஏர்செல் கம்பெ னியின் நிறுவனர்
ஜி.சிவசங்க ரனின் வாக்குமூலத்தை மத்திய குற்றப் புலனாய்வுக் கழகம் (சி பிஐ)
பதிவு செய்துள்ளது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன்
புகார் செய்திருந்தார். மலேசியா வைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறு வனத்துக்கு
ஏர்செல்லின் பங்கு களை விற்க தனக்கு நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக அவர் கூறி
யிருந்தார். தயாநிதிமாறன் 2004-200 காலகட்டத்தில் மத்திய தொலைத்
தொடர்புஅமைச்சராக இருந்த போது டிஷ்நெட் வயர்லெஸ் நிறுவனத்திற்கு 14
உரிமங்களை வழங்கியதாகவும் பின்னர் அது ஏர்செல் நிறுவனமானதாகவும் புகார்
கூறப்பட்டது.
(மேலும்....)ஆனி 07,
2011
பிரிவினைவாதம் பேசுவோர் தமிழ் மக்களை அடகுவைத்து வெளிநாடுகளில் சொகுசு
வாழ்க்கை
-
தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வை அரசு
வழங்கும்
-
வடபகுதி மக்களின் மனம் திருப்தி பெறும்
வரை சேவை தொடரும்
-
கொக்காவில் கோபுரம் போல் தமிழ் மக்கள்
வாழ்வை உயர்த்துவோம்
(மேலும்....)
ஆனி 07,
2011
அமெரிக்காவில் வேலையின்மை 17 விழுக்காடு
அமெரிக்க அரசின் அதி காரபூர்வ புள்ளிவிபரங் களைவிட உண்மையான வேலையின்மை
விகிதம் மிகவும் அதிகமாக இருப்ப தாக அமெரிக்க மாகாணம் ஓஹியோவில் உள்ள டென்
வெர் பல்கலைக்கழக பொரு ளாதாரப் பேராசிரியர் கபோப் கருத்து தெரிவித் துள்ளார்.
அண்மையில் வேலை யின்மைப் புள்ளிவிபரத்தை வெளியிட்ட அமெரிக்க அரசு, 9.1
விழுக்காடாக அது இருப்பதாகத் தெரிவித்தி ருந்தது. ஆனால், இது மிக வும்
குறைவாக மதிப்பிடப் பட்டது என்று கூறும் கபோப், கிட்டத்தட்ட 17 விழுக்காடாக
வேலை யின்மை இருக்கிறது என் கிறார். நீண்டகாலமாக வேலையில்லாமல் தவிப்ப
வர்களை அரசுப் புள்ளி விப ரம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும்,
தங்களுக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்ற விரக்தியில் ஏராளமானவர் கள்
இருக்கிறார்கள் என் கிறார் கபோப்.
(மேலும்....)ஆனி 07,
2011
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ரூ.515 ஆக அதிகரிப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கான கூட்டு ஒப்பந்தம் நேற்று
கொழும்பில் கைச்சாத்தானது. தொழிற்சங்க பிரதிநிதிகளும், முதலாளிமார்
சம்மேளனப் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் நேற்றுக் கைச்சாத்திட்டனர்.
தோட்டத்தொழிலாளி ஒருவருக்கு வழங்கப்பட்டுவந்த 285 ரூபா அடிப்படைச் சம்பளம்
நேற்றுக் கைச்சாத்தான புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படி 380 ரூபாவாக
அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், விற்பனைக்கான கொடுப்பனவு 30 ரூபாவும்,
வரவுக்கான கொடுப்பனவு 105 ரூபாவும் வழங்கப்படும். இதன்படி தோட்டத்
தொழிலாளியின் நாளாந்த மொத்த சம்பளம் நாளொன்றுக்கு 515 ரூபாவாக
அதிகரிக்கப்பட்டுள்ளது.
(மேலும்....)
ஆனி 07,
2011
உறவை
புதிய கட்டத்திற்கு எடுத்துச் செல்வோம் சீன, கியூபத் தலைவர்கள் உறுதி
இருதரப்புக்கும் இடை யேயான பல னுள்ள மற்றும் நட்புரீதியான ஒத்துழைப்பை
புதிய மற்றும் உயர்ந்த கட் டத்திற்கு எடுத்துச் சொல் வோம் என்று சீனாவின்
துணை ஜனாதிபதி சி ஜின் பிங் தெரிவித்துள்ளார். கியூபாவின் ஜனாதிபதி ரால்
காஸ்ட்ரோவைச் சந் தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட் டார். தனது
பேச்சில் இரு நாடுகளுக்கிடையிலான வரலாற்று ரீதியிலான உறவை அவர் நினைவு
கூர்ந்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் கியூபாதான் முதன்முதலில் சீனாவுடன்
உறவு கொண்டது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டுதான் இரு நாடுக
ளுக்கிடையிலான உறவின் ஐம்பதாவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டதையும்
சுட்டிக்காட்டினார்.
(மேலும்....)ஆனி 07,
2011
புதைக்கப்பட்டுள்ள 16 இலட்சம் கண்ணிகளில் 3 இலட்சத்து 66 ஆயிரம் மாத்திரமே
மீட்பு
யுத்தம் காரணமாக வடக்கில்
புதைக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தினால் மதிப்பிட ப்பட்டுள்ள 16 இலட்சம்
கண்ணிவெடிகளில் இதுவரை 3 இலட்சத்து 66 ஆயிரத்து 870 கண்ணிவெடிகள் மாத்திரமே
அகற்றப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத்தின் பொறியியல் பிரிவின் பிரதம கள
பொறியிய லாளர் பிரிகேடியர் கே. எம். யு. விஜேர ட்ண தெரிவித்தார். வடக்கில்
நடத்தப்பட்ட தொழில்நுட்ப அளவீடு ஒன்றின் அடிப்படையில் இன்னும் 400 சதுரகிலோ
மீற்றர் பரப்பளவி லிருந்து 12 இலட்சத்து 30 ஆயிரம் கண்ணி வெடிகள் அகற்றப்பட
வேண்டி யுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(மேலும்....)
ஆனி 07,
2011
போர்த்துக்கல்
பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு தோல்வி
போர்த்தக்கல் பொதுத் தேர்த லில் ஆளும்
சமத்துவக் கட்சி தோல்வி அடைந்தது. நேற்று முன்தினம் நடந்து முடிந்த தேர்தல்
முடிவுகளின்படி சமத்துவக் கட்சி 28 வீத வாக்கு களைப் பெற்றுள்ளது.
எதிர்த்துப் போட்டியிட்ட மக்கள் உரிமைக்கான ஜன நாயகக் கட்சி 38.6 வீத
வாக்குகளைப் பெற்றுள்ளது. இதன்படி 230 ஆசனங்களைக் கொண்ட போர்த்துக்கல்
பாராளுமன்றத்தில் மக்கள் உரிமைக்கான ஜனநாயக்கக் கட்சி 105 ஆசனங்களை
வென்றுள்ள தோடு ஆளும்கட்சி 73 ஆசனங்களையே கைப் பற்றியுள்ளது. இந்நிலையில்
தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள போர்த்துக்கல் பிரதமர் ஜொஸ்
சொப்ரட்ஸ் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்வதாகக்
கூறியுள்ளார்.
ஆனி
06, 2011
புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு
மூலம் (பகுதி 16)
பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில்
தப்பியவரின் வாக்குமூலம்
ஆனால் ஜெகத் கஸ்பாருக்கும் நமது புலம் பெயர்ந்த சில தலைவர்களுக்கும்
இந்தியா செய்யவுள்ள நடவடிக்கைகள் பற்றி தெரிந்திருந்தும் நமக்கு அப்பொழுது
அறிவிக்கவில்லை.
நமது சிலரதும் இந்தியாவினதும் சூழ்ச்சி அறியாத
கே.பி.
நம்மை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தார்.
இதற்கிடையே இலங்கை எந்தவொரு நாட்டுக்கும் பணிய மறுத்துவிட்டது என்பது உண்மை.
அது யாரையும் அப்பொழுது
கண்டுகொள்ளவில்லை.
இந்தியா கூட கடைசி நேரத்தில் சில நகர்வுகளை செய்ததாக
சொல்லப்பட்டது.
அதாவது மக்களை மட்டும் காப்பது என்பதுபற்றி.
ஆனால் சீனாவின்
ஆதரவால் இலங்கை அதை மறுத்துவிட்டது.
இலங்கை எவருக்கும் உறுதி மொழி வழங்கவில்லை என நமக்கு கடைசி நேரத்தில்
புலம்பொயர் நாட்டிலிருந்து கே.பி
சொன்னார்.
அதுவரை இந்த விடையம் அவரை சென்றடைய இந்த காஸ்ரோவும் நெடியவனும்
பாதிரியாரும் விடவில்லை.
இவர்களது நயவஞ்சகத்தால்,
நாம் நம்பி அனுப்பிய நம் போராளிகளான நடேசன்,
புலித்தேவன்,
ரமேஷ்,
இளங்கோ,
குமரேஷ்,
பிரியா,
சுதர்மன்,
தாமஸ்,
சுடர்,
பாலா,
லக்ஷ்மன்,
சிறிராம்,
இசை அருவி,
கபில் அம்மான்,
அஜந்தி,
தூயவன்,
ஜெனார்த்தன்,
ராயு,
எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த
329
போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய சென்றனர்.அவர்கள்
குடும்பம்
குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள்.
இதை நாம் என்ன
என்று சொல்ல முடியும்?
(மேலும்...)
ஆனி 06, 2011
புனர்வாழ்வு பெற்ற
900 பேர் நேற்று உறவினரிடம் ஒப்படைப்பு எஞ்சிய மூவாயிரம் பேர் இவ்வருட
இறுதியில்
இறுதிக்கட்ட மோதல்களின் போது சரணடைந்து
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 900 பேர் நேற்று
விடுவிக்கப்பட்டனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற
நிகழ்வில் இவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டனர். இவ்வருட
இறுதிக்குள் புனர்வாழ்வளிக்கப்பட்ட எஞ்சிய 3000ற்கும் அதிகமானவர்களை
விடுவிப்பதே அமைச்சின் பிரதான இலக்கு என மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு
அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்றைய நிகழ்வில் குறிப்பிட்டார்.
(மேலும்...)
ஆனி 06,
2011
புதிய புரிந்துணர்வு பேச்சுவார்த்தைக்கு இலங்கை வரும்
இந்தியக் குழு _
இலங்கை இந்திய புதிய புரிந்துணர்வு தொடர்பாக
பேச்சுவார்த்தை நடத்த இந்தியா வின் உயர்மட்டக் குழுவொன்று எதிர்வரும் 16ஆம்
திகதி இலங்கை வரவுள்ளது. இலங்கை இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் கடந்த
காலங்களில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொருளாதார மற்றும் அரசி யல்
இணக்கப்பாடுகள் தொடர்பாக இதன் போது பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ள தாக
தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய
உயர்மட்டக் குழுவில் இந்திய பிரதமரின் செயலாளர் ரி.கே. நாயகர், பாதுகாப்பு
ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவ்
ஆகியோர் அடங்குகின்றனர். கடந்த காலங்களில் இந்தியாவிற்கு விஜயம்
செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸும் இந்திய வெளிவிகார
அமைச்சரும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களை
நடைமுறைப் படுத்துவது தொடர்பாக இந்த உயர்மட்டக் குழுவினர் தீர்க்கமாக
ஆராயவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
_
ஆனி 06,
2011
மட்டக்களப்பு
வர்த்தகர்கள் பாரிய ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் கல்முனை
-மட்டக்களப்பு பிரதான பாதையோரங்களில் நடைபெறும் வியாபாரங்களைக் நிறுத்துமாறு
கோரியதை எதிர்த்து மட்டக்களப்பு பொதுச்சந்தை வர்த்தகர்கள் இன்றுகாலை
பாரியஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பொதுச்சந்தைக்கு முன்னால் ஒன்றுதிரண்ட
பெருமளவிலான தமிழ் முஸ்லிம் ஆண் மற்றும் பெண் வர்த்தகர்கள் இப்போராட்டத்தில்
ஈடுபட்டனர். இதனால் பொதுச்சந்தை வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
ஆனி 06,
2011
கிளிநொச்சியில்
விளையாட்டு மத்திய நிலையம்
வட பகுதி இளைஞர் யுவதிகளுடைய விளையாட்டு ஆற்றலை ஊக்குவிப்பதற்காக
கிளிநொச்சியில் இந்த மாத இறுதி யில் விளையாட்டு மத்திய நிலையத்தை
ஆரம்பிக்கவுள்ளோமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
தெரிவித்தார். யாழ்ப்பாண இளைஞர்களுக்கான பாரியதொரு நீச்சல் தடாகம் ஆகஸ்ட்
மாத இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் எனவும் சொன்னார்.
அடுத்த உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் போது வட
பகுதியிலிருந்தும் திறமையான வீரர்கள் எங்களுடைய தேசிய கிரிக்கெட் அணியில்
இடம்பெறவேண்டும் என்பது எனது விருப்பமாகும். நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள்
பொதுநலவாய விளையாட்டுப் போட்டியிலும் பங்கு கொள்ளும் வட பகுதி வீரர்கள்
தங்கப் பதக்கங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்பது எனது பிரார்த்தனையாகும்.
(மேலும்...)
ஆனி 06,
2011
மேலதிகாரிகளின் உத்தரவின்றியே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம்
கட்டுநாயக்க ஆர்ப்பாட்ட சம்பவத்தில் பொலிஸ்
மேலதிகாரிகளின் உத்தரவு எதுவுமின்றி பொலிஸார் தாம் நினைத்தவாறே துப்பாக்கி
பிரயோகங்களை மேற்கொண்டிருப்பதாக இரகசியப் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து
தெரியவந்துள்ளது. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை கலைத்துவிடுமாறு கூறியே
தாங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தாக இப்பொலிஸ் அதிகாரிகள்
விசாரணைகளின்போது தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட இடத்துக்கு
ஆரம்பத்திலேயே ஆயுதங்களை எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஜே.வி.பி.யினரே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்ததோடு இளைஞர், யுவதிகளையும்
இதில் இணைத்துக் கொண்டமை பொலிஸ் விசாரணைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.
ஆனி 06,
2011
தோட்ட தொழிலாளர் சம்பள உயர்வு 500 ரூபாவுக்கு மேல் சம்பளம் கிடைக்கும்?
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு
தொடர்பான இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை இன்று திங்கட்கிழமை கொழும்பில்
நடைபெறவிருக்கின்றது. பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும்,
முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் இன்று இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின்
அடிப்படையில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களில் சம்பள உயர்வு தொடர்பான
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் என்று இலங்கை தொழிலாளர்
காங்கிரஸின் தலைவரும், பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கம் நேற்று
தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பெருந்தோட்டத்
தொழிலாளர்களின் நாட் சம்பளம் ஐநூறு ரூபாவுக்கு மேல் கிடைக்கப்பெறும் எனவும்
அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒருநாள் சம்பளத்திற்காக எத்தனை கிலோ கிராம்
கொழுந்து பறிக்க வேண்டும் என்று ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் கூட்டு
ஒப்பந்த ஷரத்து எதிர்வரும் ஒப்பந்தத்தின்போது நீக்கப்பட்டுவிடும் எனவும்
அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனி 06,
2011
மிரட்டி பணம்
பறிப்பது விஜயலட்சுமியின் வாடிக்கை
- சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் டைரக்டர் சீமான்
மீது நடிகை விஜயலட்சுமி புகார் தெரிவித்துள்ளார். காதலித்து விட்டு திருமணம்
செய்து கொள்ள மறுக்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சீமான் மீது
கற்பழிப்பு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வளசரவாக்கம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் விசாரணை நடத்தி வருகிறார்.
விஜயலட்சுமி தான் கொடுத்த புகார் தொடர்பாக சில ஆதாரங்களை பொலிஸிடம்
கொடுத்துள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு சீமானுக்கு சம்மன் அனுப்ப பொலிஸார்
முடிவு செய்துள்ளனர். விஜயலட்சுமி கொடுத்துள்ள புகாரை சட்ட ரீதியாக
சந்திப்பேன் என்று கூறியிருந்த டைரக்டர் சீமான் மீண்டும் அவர் மீது
பரபரப்பான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
விஜயலட்சுமியை நான் நேரில் பார்த்து பேசியே 1 1/2 ஆண்டுகள் ஆகிறது.
வாழ்த்துக்கள் படத்தில் நடித்தபோது கூட நான் அவருடன் அதிகம் பேசிக்
கொள்ளவில்லை. பணம் கேட்டு மிரட்டி நான் பணியாததால் என் மீது புகார்
கொடுத்துள்ளார். அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள். மிரட்டி
பணம் பறிப்பது விஜயலட்சுமிக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது.
ஆனி 06,
2011
எகிப்து - பலஸ்தீன எல்லை மூடல்
பலஸ்தீனத்தின் காஸா பகுதியை ஒட்டிய எகிப்து எல்லை மூடப்பட்டுள்ளது. எகிப்து
அரசின் இத்தகைய நடவடிக்கையால் அந்நாட்டுக்குள் எல்லை வழியாக செல்ல
விரும்பும் பலஸ்தீன மக்களால் செல்ல முடியவில்லை என்று ஹமாஸ் அமைப்பு குற்றம்
சுமத்தியுள்ளது. எல்லை மூடப்பட்டது தொடர்பாக எகிப்து அரசு அதிகாரிகளை
தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஆனால் அவர்கள் உரிய பதிலை அளிக்க வில்லை
என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள
எகிப்து நிர்வாகம், காஸா பகுதியை ஒட்டிய எல்லைப் பகுதியில் கட்டுமானப் பணி
நடைபெறுகிறது. பலஸ்தீன் மக்கள் பஸ்ஸில் வந்து செல்வதற்கு ஏதுவாக கட்டுமானப்
பணி நடைபெறுகிறது. அந்த பணி நிறைவுபெற்றதும் எல்லைப் பகுதி திறக்கப்படும்
என்று கூறியுள்ளது.
ஆனி 06,
2011
கொக்காவில் தொலைத் தொடர்பு கோபுரம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு
இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர் கிளிநொச்சி கொக்காவில் தொலைத்தொடர்பு
கோபுரம் மீண்டும் மக்களின் பாவனைக்காக இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்களினால் திறந்து வைக்கப்படுகின்றது. கிளிநொச்சியில் இருந்து வவுனியா
செல்லும் பிரதான வீதியான ஏ9 வீதியில் அருகே இந்த கொக்காவில் தொலைத் தொடர்பு
கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11 ம் திகதியன்று
எல். ரி. ரி. ஈயினால் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலினால் கெப்டன் அலதெனிய
வீர மரணம் எய்தினார். 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இப்பகுதியில் 100
மீற்றர் உயரத்தில் தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இலங்கையின்
வடக்கே தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த வன்முறையின் காரணமாக கொக்காவில் தொலைத்
தொடர்பு கோபுரம் முற்றாக அழிக்கப்பட்டது.
(மேலும்...)
ஆனி 06,
2011
உள்ளக அரசியலில் சீரழியும் தமிழினம்
தமிழ் மக்களிடையே தற்போது உள்ள உள்ளக சுயநல அரசியல் ஒட்டுமொத்த தமிழ்
இனத்தையும் துவம்சம் செய்து கொண்டிருக்கின்றது. வடக்கு, கிழக்காகட்டும்
மலையகமாகட்டும் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கப்
புறப்பட்ட அரசியல் தலைமைகளின் உள்ளக சுயநல அரசியலால் இந்த நிலைமை இன்று
உருவாக்கியுள்ளது. "தடி எடுத்தவன் எல்லாம் தண்டக்காரன்'' என்ற வகையில்
அரசியல் நடத்தப் புறப்பட்டவர்களே இன்றைய இந்த நிலைக்குக் காரண
கர்த்தாக்களாக உள்ளனர். மக்களோ மனதுக்குள் அழுது கொண்டு மௌனித்துப் போய்
உள்ளனர். முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை குத்தகைக்கு
எடுத்துக் கொண்டுள்ள இவர்களின் அரசியல் குறித்து, கேள்வி எழுப்ப முடியாத
நிலையிலும் தமிழ் மக்கள் உள்ளனர்.
(மேலும்...)
ஆனி 06, 2011
வீதியிலிறங்கும்
இளைஞர்களுக்கு பொலிஸ் துப்பாக்கிகள், குண்டாந்தடிகள்
மூலம் பதில் கொடுப்பதற்கு மாறாக அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும்
- தகவல் திணைக்கள பணிப்பாளர்
தனியார் துறையைச் சேர்ந்த ஒருவர்கூட
எங்களுக்கு ஓய்வூதியத் திட்டம் ஒன்றைப் பெற்றுக்கொடுங்கள் என்று
அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கவில்லை. தனியார்துறை ஊழியர்கள் மத்தியில்
இத்தகைய நோக்கம் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. என்றாலும்,
அரசாங்கம் தன்னிச்சையாக தனியார்த்துறையினருக்கு ஓய்வூதியத்தை வழங்கும்
திட்டத்தை முன்வைத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்றும்
இந்நாட்டில் உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துடன் நெருக்கமான உறவைக்
கொண்டிருந்த காரணத்தினால் அவரது மனதில் இத்தகைய எண்ணம் தோன்றியிருக்கலாம்.
(மேலும்...)
ஆனி 05,
2011
கிழக்கு மாகாண சபையின் செயற்பாடானது தமிழ்த் தரப்பை பலவீனமடையச் செய்யும்
செயலாகும்
-
பத்மநாபா-EPRLF.இரா.துரைரெட்ணம்
தற்சமயம் யுத்தம் ஓய்ந்து சமாதானம் ஏற்பட்டு கிழக்கு மாகாணசபை
உருவாக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கழிந்த பின்பும் இக்காணிப்பிரச்சினைகள்
தீர்ந்தபாடாயில்லை. இவை தற்போது பூதாகாரமான பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளன.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபை காணிப்பிணக்கை தீர்ப்பதற்கு நடமாடும் சேவைகளை
நடத்த முன்வந்தமை வரவேற்கத்தக்கது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள்
பெரும்பான்மையாக வாழும்
கிரான்,செங்கலடி,வவுணதீவு,பட்டிப்பளை,வெல்லாவெளி,மண்முனை வடக்கு மற்றும்
ஆரையம்பதி போன்ற பிரதேச செயலாளர் பிரிவுகளை தவிர்த்து ஏனைய பிரதேச
செயலகப்பிரிவுகளில் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடமாடும் சேவைகள்
நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தமிழ்ப்பகுதிகள்
புறக்கணிக்கப்பட்டுள்ளதை நான் முதலமைச்சர், காணி அமைச்சர் இருவரையும்
சந்தித்து இது தவறான செயற்பாடு ஒரு பக்கச்சார்ப்பானது என ஆட்சேபனை
தெரிவித்தபோது தமிழ்ப் பகுதிகளிலும் விரைவாக காணிப்பிரச்சினைகளைத் தீர்க்க
நடவடிக்கை எடுக்கபடுமென எனக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டது.ஆனால், இதுவரையும்
அதனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கடந்த காலத்தில் இனவாத அரசுகள் தமிழ்
மக்களை பாரபட்சமாக நடத்தி வந்தது போல் இந்த கிழக்கு மாகாணசபையின் ஆளும்
தரப்பினரும் பார்க்கத் தொடங்கியுள்ளனரா.அல்லது முடமாக்கப்பட்டுவிட்டனரா என
சந்தேகிக்கவேண்டியுள்ளது.
(மேலும்....)
ஆனி 05, 2011
அரசாங்கத்திற்கு எதிராக அதிகரிக்கும்
விமர்சனங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும்
காற்று எப்பொழுதும் ஒரே திசையில் வீசுவதில்லை. அது பருவநிலை மாறும்போது
எதிர்த்திசையில் வீசவே செய்யும். சிலவேளைகளில் பலத்த காற்றாகி சேதங்கள்
விளைவிக்கவும் கூடும்.இன்னும் சில தருணங்களில் கடும் புயலாகி அழிவுகளையும்
ஏற்படுத்தும். அவ்வேளையில் அவற்றுக்கு முகம் கொடுப்பது மனிதர்களுக்கு
கடுமையானதாக ஆகிவிடும். இந்நிலை நாட்டின் அரசியல் அரங்கிற்கும்
பொருத்தமானதாகும். அண்மைய வாரங்களில் அரசாங்கத்தை விரல் சுட்டி
விமர்சிப்பதும் எதிர்த்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமான போக்குகள்
முனைப்படைந்து காணப்படுகிறது. சர்வதேச நிலையில் ஐ.நா.பொதுச் செயலாளரினால்
நியமிக்கப்பட்ட இலங்கையின் போர்க்குற்றச் சம்பவங்களுக்கான நிபுணர்குழுவின்
அறிக்கை அரசாங்கத்தை விரல் சுட்டி நிற்கிறது. அதற்கு அரசாங்கம் பதில் கூறப்
போவதில்லை என்று கூறியபோதிலும் பதில் கூற வேண்டிய புறச் சூழலே காணப்படுகிறது.
மேற்படி நிபுணர் குழு முன்வைத்த அறிக்கை பற்றி ஐ.நா.செயலாளர் அடுத்த கட்ட
நகர்வாக எதனைச் செய்யப் போகிறார் என்பது இன்னமும் தெரிவில்லை. அவரும்
ஐ.நா.சபையும் உலக நாடுகள் முழுவதற்கும் "நடுநிலையான' "பொதுவான' "நியாயமான'
போக்குகளைக் கடைப்பிடிப்பவர்கள் அல்லர். ஐ.நா.விற்குப் பின்னால்
அமெரிக்காவும் மேற்குலக நாடுகளும் ஆட்டிப்படைப்போராக இருந்து வருகிறார்கள்
என்பது இரகசியமல்ல. எனவே நிபுணர்குழு அறிக்கையின் கீழான அடுத்த நடவடிக்கை
வெள்ளை மாளிகையின் முடிவிலேயே தங்கி உள்ளது.
(மேலும்...)
ஆனி 05,
2011
யாழ்ப்பாணத்தில்
பொதுமக்களை பதிவு
செய்வதை நிறுத்துங்கள்
ஆயுதப்படையினர் மற்றும் பொலிஸார், பொது மக்களைப் படம் பிடித்து பதிவு
செய்யும் நடவடிக்கையானது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். இதனை உடன்
நிறுத்த வேண்டும். இராணுவத் தரப்பினரோ பொலிஸாரோ தாம் விரும்பியவாறு
பொதுமக்களை குடும்பம் குடும்பமாகப் படம் பிடிப்பதும் பதிவுகளை மேற்கொள்வதும்
சட்டவிரோதமான தவறான அச்சுறுத்தல் நிறைந்த செயலாகும்.
(மேலும்...)
ஆனி 05,
2011
அமெரிக்க இராணுவ பிரசன்னம் ஆசியாவில்
வலுப்படுத்தப்படும்
-
பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ்
ஆசியப் பிராந்தியத்தில் தனது பிரசன்னத்தை அமெரிக்க இராணுவம் தொடர்ந்தும்
வலுப்படுத்துமென்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் நேற்று
சனிக்கிழமை உறுதியளித்துள்ளார். தனது நேச அணிகளைப் பாதுகாப்பதற்காகவும் கடல்
மார்க்கங்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்காகவும் அதிநவீன தொழில்நுட்ப
ஆயுதங்களுடன் அமெரிக்க இராணுவத்தின் வலுவான பிரசன்னம் தொடர்ந்திருக்கும்
என்று அவர் கூறியுள்ளார்.
(மேலும்...)
ஆனி 05,
2011
போர்க்குற்ற விவரணப்படம் ஐ.நா. பேரவையில் ஒளிபரப்பு
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்
குற்றங்கள் குறித்து பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த புலனாய்வு
விவரணப்படம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நேற்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இலங்கைப் படையினர் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதாக
கூறப்படும் கொடுஞ்செயல்களை ஆராயும் இந்த விவரணப்படம் ஒரு மணி நேர காட்சிகளை
கொண்டதாகும்
ஆனி 05,
2011
பாகிஸ்தானில் அமெரிக்கா மீண்டும் துணிகரத் தாக்குதல் இலியாஸ் காஷ்மீரி
கொல்லப்பட்டார்?
பாகிஸ்தானில் தெற்கு வசி ரிஸ்தான் பகுதியில்
அமெரிக் கப் படைகள் சனிக்கிழமை புகுந்து நடத்திய தாக்குதலில், ஹர்கத்-உல்
ஜிஹாத்-இ-இஸ்லாமி இயக்கத் தின் தலைவர் இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டதாக
தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு வசிரிஸ்தான் பகுதி யில், வானா பஜார் என்னும்
இடத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக
கிடைத்த தகவலின் அடிப்படையில் அமெரிக்கப் படைகள் அங்கு தாக்குதல் நடத்தின.
இதில், இலியாஸ் காஷ்மீரி உட்பட 9 தீவிரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மும்பை தாக்குதல் சம் பவம் தொடர்பாக அமெரிக்கா வில், சிகாகோ நீதிமன்றத்தில்
நடைபெற்று வரும் வழக்கில் இலியாஸ் காஷ்மீரி பெயரும் உள்ளது என்பது
குறிப்பிடத் தக்கது. பின் லேடனுக்குப் பிறகு அல்-கொய்தா இயக்கத் தின்
தலைமைப் பொறுப்புக்கு இலி யாஸ் காஷ்மீரி வரக் கூடும் என்று கூறப்பட்டது.
ஆனி 05,
2011
மட்டக்களப்பில் படகு கவிழ்ந்து ஐவர் பலி. ஆறுபேர் படுகாயம்
மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறு வாவியில்
இடம்பெற்ற படகு கவிழ்ப்புச் சம்பவத்தில் மூன்று வயதுக்குழந்தை உட்பட
ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு களுவாறுஞ்சிக்குடி
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு வாவியில் 11 பேர் சிறிய படகொண்றில்
பயணம் செய்துள்ளனர். படகு பாரம் தாங்காது கவிழ்ந்து விழுந்துள்ளது.
11பேரும் காணாமல் போயுள்ளனர். இவர்களுள் ஆறுபேர் பொலிஸ் மற்றும் விசேட
அதிரடிப் படையினரால் படுகாயமடைந்ந நிலையில் மீட்கப்பட்டு மட்டக்களப்புயு
மற்றும் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைகளில் அனுமதித்துள்ளனர். ஏனைய ஐவரும்
சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர். பலியானவர்களுள் 3 வயதுக்குழந்தை
உட்பட பெண்ணொருவரும் அடங்குவர் என்பது குறிப்படத்தக்கது.
ஆனி 05,
2011
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 3 திசைகளில் இருந்து
துப்பாக்கி பிரயோகம்
_
சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள்
கட்டுநாயக்காவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸார் 3 வெவ்வேறு
திசைகளில் இருந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக குற்றப்புலனாய்வுப்
பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். தனியார் துறையினருக்கான உத்தேச
ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர
வர்த்தக வலய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்போது பொலிஸாருக்கும்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது பொலிஸார்
மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர், சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். இது
தொடர்பாக விசாரணைகளை நடத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சீதுவை பொலிஸ்
பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆகியோரை கைது செய்திருந்தனர். இவர்கள்
நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்செய்யப்பட்டனர். அப்போதே,
3 திசைகளிலிருந்து பொலிஸார் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக
புலனாய்வுப் பிரிவினர் மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
ஆனி 05,
2011
ஊழல்வாதிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும்-
ராம்தேவ்
நாட்டில் ஊழல் புரிந்தவர்கள் யாராக
இருந்தாலும் அவர்களுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்றும் யோகா குரு பாபா
ராம்தேவ் தெரிவித்துள்ளார். சமூக சேவகர் அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து
ஊழலுக்கு எதிராக யோகா குரு பாபா ராம்தேவ் சாகும் வரை உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். அதேவேளை உண்ணா விரதத்தைக் கைவிட வலியுறுத்தி,
ராம்தேவிடம் மத்திய அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
___
ஆனி 04,
2011
புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு
மூலம் (பகுதி 15)
பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில்
தப்பியவரின் வாக்குமூலம்
இந்த
இறுதி நேர முடிவுகள் அனைத்தையும் இந்தியா தான் எடுத்தது.
இந்த
முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் மூலமாக கே.பி.யை
நிர்ப்பந்தித்தார்கள்
இந்த பாதிரியும் சிதம்பரமும் சேர்ந்து. இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.மற்றும்
மேற்குலகம்
இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமது தலைமைக்கு நன்கு தெரிந்த
விடயம்தான்.
ஆனாலும் இறுதி நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி.யும்
புலம்பெயர் தேசமும்
எடுத்த முயற்சிகளினூடாக கொழும்புக்கு வந்தார் விஜய் நம்பியார்.
இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை ராணுவ ஆலோசகராக இருக்கின்றார்
என்பதும் நமது தலைமைக்கு நன்கு தெரியும்.ஆனால்
கொழும்பு சென்ற விஜய் நம்பியார் வந்து சில
மணிநேரங்களில் இந்தியாவின் வற்புறுத்தலில் திரும்பி சென்று விடுகின்றார்.
இதை
அப்பொழுது நமக்கு கொழும்பிலிருந்து தரா என்ற குறியிட்டு பெயர் கொண்ட ஒருவர்
தெரிவித்தார்.
இதில்
எமக்கு சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.
ஆனாலும்
என்ன செய்வது
??
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்காமல் அவர் சென்று விட்டார்
என்பதே உண்மை.
(மேலும்....)
ஆனி 04,
2011
மாகாண சபைகளின்
அதிகாரத்தை அதிகரிக்க அரசியல் வட்டாரங்கள் முயற்சி
அரசியல் சாசனத்தின் 13வது திருத்த சட்டத்தில்
காணி தொடர்புடைய அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற
போதிலும், இதுவரையில் அந்த அதிகாரம் மாகாண சபைக்கு சட்டபூர்வமான முறையில்
கொடுக்கப்படவில்லை. அது போன்று பொலிஸ் அதிகாரங்களும், மாகாணசபைகளுக்கு
இருக்கின்ற போதிலும் அந்த அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கொடுக்கப்படவில்லை.
இவை போன்ற பலதரப்பட்ட சிக்கல்களுக்கு தீர்வை பேச்சுவார்த்தைகளின் மூலம்
ஏற்படுத்தி, மாகாணசபைகளை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்புடைய
வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் பெரிதும் விரும்புகிறதென்று
அரசியல் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
(மேலும்....)
ஆனி 04,
2011
Arantalawa is a temple called ‘Never Again’
by Malinda Seneviratne
There are villages whose names
are not known only by residents and a few others living in the
neighbourhood. Twenty four years ago, few or none in Colombo would have
known of a village called Nuwaratenne. Twenty four years ago, to the
day, i.e. the 2nd of June, 1987, something happened which helped carry
that name to most households across the country, via television, radio
and newspapers. The name was mentioned because an abduction took place
close to this village. The name was forgotten because those who were
abducted were killed in cold blood in a different place. That place had
a name. Arantalawa.
(more...)
ஆனி 04,
2011
ரணில் - சஜித்
மோதல் மேலும் தீவிரம்
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்
விக்கிரம சிங்கவிற்கும் - பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விற்கும் இடையிலான
மோதல் மேலும் தீவிர மடைந்து வருகின்றது. இதன் மற்றுமொரு அங்கமாக “ஐ.தே.க.
வை பாதுகாப்போம்- நாட்டை வெற்றிகொள்வோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நாடு
முழுவதிலும் விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடாத்துவதற்கு சஜித் அணியினர்
திட்டமிட்டுள்ளனர். இதன் முதலாவது செயலமர்வு இன்று (04) கேகாலை
ருவன்வெல்லவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வாறான
விழிப்பூட்டல் செயலமர்வுகளை நாடு முழுவதிலும் நடாத்துவதற்கு நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ள தாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ஐ.தே.க. சஜித் அணியினர் மாற்று தொழிற்சங்க குழுவொன்றினையும், மகளிர்
அணியொன்றினையும் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.தே.க.
வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருகிறது.
ஆனி 04,
2011
கேரள சட்ட சபையில் தமிழில் தேவிகுளம் எம். எல். ஏ பதவியேற்பு
கேரள சட்ட சபையில் நடந்த எம். எல். ஏ. க்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில்,
மூன்று பேர் ஆங்கிலத்திலும், ஒருவர் தமிழிலும், மற்றொருவர் கன்னடத்திலும்
பதவி ஏற்றனர். நிகழ்ச்சியில் 77 பேர் இறைவனின் பெயராலும், 63 பேர்
மனச்சாட்சியின்படியும் பதவி ஏற்றுக்கொண்டனர். நடந்து முடிந்த சட்ட சபைத்
தேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி
கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதில், காங்கிரஸ்
கட்சியைச் சேர்ந்த உம்மன் சாண்டி முதல்வராகக் கொண்ட அமைச்சரவையில்,
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் கொண்ட
அமைச்சரவையும் பதவி ஏற்றது.
(மேலும்....)
ஆனி 04,
2011
Back in One Piece - Check
✔
I've returned to Canada.
Un-arrested, un-abducted, un-ransomed, and my supply of Immodium
un-touched. Of course, I never believed the afore-mentioned things
would happen to me - i'd just like to drive the point home to my dear
family. Turns out this trip was not so serenstupid after all. As a Sri
Lankan living outside the island, I had to go back. In Canada, I felt I
was becoming tangled in a plethora of bias and propaganda, and that I
was losing touch with why I am so impassioned by the island in the
first place. Three months of lone-traveling through Sri Lanka later, I
have some conclusions of what I've observed.
(more...)
ஆனி 04,
2011
சடலத்தை வைத்து அரசியல் செய்யாதீர்
சகோதரனின் பிரேதத்தை வைத்து அரசியல் இலாபம் தேட வேண்டாமென அரசியல்
கட்சிகளிடம் கட்டுநாயக்க அசம்பாவிதத்தில் மரணமான ரொஷேனின் அண்ணன் வேண்டுகோள்
விடுத்துள்ளார். கட்டுநாயக்க சம்பவத்தின்போது துரதிஷ்டவசமாக மரணித்த ரொஷேன்
சானக்க எந்த அரசியல் குழுக்களுடனும் தொடர்பு வைத்தவர் அல்லர் எனவும், அதனால்
அரசியல் குழுக்களின் விளம்பரம் மற்றும் ஏனைய செயற்பாடு களுக்கு அவரது
மரணத்தைப் பயன்படுத்த வேண்டாமெனவும், காலம் சென்ற ரொஷேன் சானக்கவின்
அண்ணனான மருத்துவபீட மாணவன் மதுஷான் ரத்னெதேகர அனைத்து அரசியல்
கட்சிகளிடமும், தொழிற்சங்கங்களிடமும் வலியுறுத்திக்கேட்டுள்ளார். தமது
குடும்பத்தைச் சேர்ந்த எவரும் ஒருபோதும் அரசியல் குழுக்களுடனோ, அரசியல்
கட்சியுடனோ இணைந்து செயற்பட்டது கிடையாதெனவும் அவர் மேலும் கூறினார். இந்த
மரணத்தை தனிப்பட்ட மரணமொன்றாகக் கருதி செயற்படு மாறும், தமது சகோதரனின் மரண
த்தை மையமாக வைத்து ஆர்ப் பாட்டங்களையோ எதுவித தேவையற்ற பிரச்சினைகளையோ
ஏற்படுத்த வேண்டாமென அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
ஆனி 04,
2011
பின்லேடனுக்குப் பின்...
டி.எல்.சஞ்சீவிகுமார்
ஒசாமா
பின்லேடனுக்குப் பின் 'அல்-கொய்தா’வின் அடுத்த மூவ் என்னவாக இருக்கும்?
அமெரிக்காவின் தலையாய கேள்வி இதுதான்! கராச்சியில் கடற்படை ராணுவ முகாம்
மீது நடத்தப்பட்ட தாக்குதல், பெஷாவரில் அமெரிக்கத் தூதரகத்தின் மிக அருகே
நடத்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, அல்-கொய்தா எந்த
நேரத்தில் என்ன செய்யும் என்று பதைபதைத்துக்கொண்டு இருக்கிறது அமெரிக்கப்
புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ!(மேலும்....)
ஆனி 04,
2011
தமிழகத்தில்
காப்பீட்டு திட்டம் ரத்து,மேலவை இல்லை, சூரிய ஒளி மின்சாரத்தில் கவனம்
தமிழக சட்டசபை முதல் கூட்டம் நேற்று கவர்னர் உரையுடன் துவங்கியது. இன்றைய
உரையில் தமிழகத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல்வேறு திட்டங்கள் குறித்த
அறிவிப்பு வெளியானது. செயின்ட் ஜோர்ஜ் கோட்டையில் நடந்த இந்த கூட்டத்தில்
புதிதாக பொறுப்பேற்றுள்ள அ. தி. மு. க. அரசின் தேர்தல் வாக்குறுதிகள்
நிறைவேற்றப்படும் வகையில் பல்வேறு அம்சங்கள் அடங்கி இருந்தது. அதே நேரத்தில்
தி. மு. க., கொண்டு வந்த திட்டங்கள் மாற்றம் கொண்டு வருவதும் சிலவற்றை
ரத்துச் செய்வதும், தொழில்துறை ஊக்கம் அளிப்பதும் என பல்வேறு திட்டங்கள்
இருந்தன. இலவச அரிசி வழங்கும் திட்டம், கேபிள் டி.வி., அரசுடைமையாக்குவது
தொடர்பாக உடனடி நடவடிக்கை, கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து, மாணவர்களுக்கு
இலவச லேப்டாப், மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, வரும் செப். 15 ம் திகதி
முதல் அமுல்படுத்தப்படும் சூரிய ஒளி மூலம் மின்சாரத்திற்கு முக்கியத்துவம்,
ஓமந்தூரார் தோட்டத்தில் தி. மு. க. அரசின் காலத்தில் கட்டப்பட்டுள்ள புதிய
தலைமை செயலக பணிகள் நிறுத்தி வைப்பது.
ஆனி 03,
2011
1958 இல் பண்டா
நிறைவேற்றவிருந்த ஓய்வூதியத் திட்டத்தையே அரசு அறிமுகம் செய்யவிருந்தது’
1958ல் எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க நிறைவேற்றவிருந்த தனியார்
ஓய்வூதியத்திட்டத்தையே இன்றைய அரசாங்கம் அறிமுகம் செய்யவிருந்தது. இந்த
முற்போக்கு திட்டத்தை ஜே.வி.பியும் பிற்போக்குவாதிகளும் எதிர்க்கிறார்கள்.
தனியார்த் துறையினருக்கு ஓய்வூதியத்தை வழங்கும் அரசாங்கத்தின் எண்ணத்தை
இன்று ஜே.வி.பி. மற்றும் யு.என்.பி கட்சிகள் எதிர்த்து வருகின்றன. என்றாலும்
கடந்த கால வரலாற்றை இலகுவில் மறந்துவிட்ட இக்கட்சியினர் இதனை எதிர்த்து
வருவது வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறதென்று அரசாங்கக் கட்சியைச்
சேர்ந்த ஒரு சிரேஷ்ட தலைவர் வேதனை தெரிவித்தார். 1958ம் ஆண்டில்
எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க பிரதம மந்திரியாக இருந்த மக்கள் ஐக்கிய
முன்னணி அரசாங்கத்திற்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.ஜி.
மெண்டிஸ் என்ற மதிப்பிற்குரிய இடதுசாரித் தலைவர் இந்நாட்டின் தேயிலை மற்றும்
றப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டுமென்ற யோசனையை
முன்வைத்தார்.(மேலும்....)
ஆனி 03,
2011
புலி ஏஜன்ட்டுகளின் எதிர் பார்பை பொய்யாக்கிய தமிழக ஆளுனர் உரையில் இலங்கைப்
பிரச்னை
ராஜபக்ஷேவைக் கண்டித்தோ, இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசுக்குக்
கண்டனம் தெரிவித்தோ அதிமுக அரசின் கருத்து ஆளுனர் உரையில் இடம்பெறவில்லை.
இலங்கைக் கடற்படையின் கொடூரமான தாக்குதலால் தமிழக மீனவர்கள் பலியாகி வரும்
நிலையில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கை அரசுக்குக் கண்டனம்
தெரிவிக்கவோ, இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டவோ, எதிர்காலத்தில்
தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படும் நிலைக்கு
உத்திரவாதம் தரும் வகையிலோ இல்லை என்பதை ஆளுனர் உரை காட்டுகிறது.
(மேலும்....)
ஆனி 03,
2011
அம்பானியின் ஆடம்பர வீடு!
அம்பானியின் இந்த பிரம்மாண்டமான வீடு இந்திய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக
இல்லை. மாறாக இந்திய நாட்டில், வறுமைக் கோட்டிற்கு கீழ், மக்கள் தொகையில்
சரி பாதிக்கும் மேல் உள்ள மக்களின் வறுமைக்கு காரணமாக விளங்குகிறது.
க.ராஜ்குமார்
உலகிலேயே மிகப்பெரிய வீடு எங்கிருக் கிறது தெரியுமா? நமது இந்தியாவில்தான்!
மும்பை, அல்ட்டா மவுன்ட் சாலையில் உள்ள இந்த வீட்டின் சொந்தக்காரர் முகேஷ்
அம்பானி ஆவார். 2007-ல் ரூ.4,400 கோடி மதிப்பில் கட்டுமான வேலைகள் துவக்கப்
பட்டு, 2010 இறுதியில் கட்டி முடிக்கப்பட்டுள் ளது. ஏசியன் கண்டெம்பொரரி
எனும் அமெ ரிக்க நிறுவனம் இந்த வீட்டை கட்டித் தந் துள்ளது. இந்த வீட்டின்
தற்போதைய மதிப்பு சுமார் ரூ.10,000 கோடியாகும். முகேஷ் அம் பானி 2011-ம்
ஆண்டு உலக பணக்காரர்கள் பட்டியலில் 9 வது இடத்தை பிடித்துள்ளார்.. இவரின்
இன்றைய சொத்து மதிப்பு 27 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
(மேலும்....)
ஆனி 03,
2011
அரசியல் தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் மக்கள்
ஒன்றிணைவது அவசியம்
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்
அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெற்று வந்த பேச்சுவார்த்தைகளில் ஆறு சுற்று
பேச்சுவார்த்தைகள் முடிந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் இவற்றை அதிர்ச்சி
கலந்த ஒரு எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த
பேச்சுவார்த்தையில் தங்களை இணைத்து கொள்ளாமை குறித்து முஸ்லிம் மக்களிடம்
இருந்து சில கருத்துக்கள் வந்துள்ளன. உண்மையில் அது நியாயமான கோரிக்கை.
முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படவில்லை. இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின்
போது அவர்களின் அபிலாசைகளும் பிரதிபலிக்கப்பட்டே அரசியல் தீர்வு
தயாரிக்கப்படும்.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமது ஏக பிரதிநிதிகளாக தமிழ் தேசிய
கூட்டமைப்பை தெரிவு செய்தார்களோ அதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை
முஸ்லிம் மக்கள் தெரிவு செய்துள்ளனர்.
(மேலும்....)
ஆனி 03,
2011
யாழ். பல்கலைக்கழக பொறியியல்பீடம் அமைக்க இந்தியா
250 மில்லியன் ரூபா உதவி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் ஒன்றை அமைப்பது தொடர்பான
அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆரம்பகட்ட
நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இதனை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் இரண்டு
கட்டங்களாக உதவிகளை வழங்கவுள்ளது. முதற்கட்டமாக இந்திய 250மில்லியன் ரூபாவை
வழங்கவுள்ளது. மேலும் இரண்டாம் கட்டமாகவும் இந்தியா 250 மில்லியன் ரூபாவை
பொறியியல் பீடத்தை அமைப்பதற்கான உதவியாக வழங்கவுள்ளது. அத்துடன் இலங்கை
அரசாங்கமும் 250 மில்லியன் ரூபாவை இதற்காக ஒதுக்கியுள்ளது.
(மேலும்....)
ஆனி 03, 2011
சிவிலியன்களின்
இழப்புக்கள் தொடர்பான சரியான எண்ணிக்கைகளை வெளியிட முடியாதுள்ளது -
இராணுவத் தளபதி ஜகத்
யுத்தத்தின் போது சிவிலியன்களின் இழப்புக்கள் தொடர்பான சரியான எண்ணிக்கைகளை
வெளியிட முடியாதுள்ளது. ஏனெனில் இன்னும் சரியான தகவல்களை பெற்றுக்கொள்ள
முடியவில்லை. எதிர்வரும் நாட்களில் இடம்பெயர்ந்த மக்களின் காணாமல் போன
தரவுகளின் அடிப்படையில் எண்ணிக்கையினை கணிப்பீடு செய்ய நடவடிக்கை
எடுக்கப்படும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய
தெரிவித்தார்.
(மேலும்....)
ஆனி 03, 2011
ஆனி 03,
2011
சன் டி.வி.க்காக துணிகரக் கொள்ளை சூறையாடப்பட்ட பிஎஸ்என்எல் -இந்தியன்
எக்ஸ்பிரஸ் ஏடு அம்பலப்படுத்தியது
நாட்டின் மிகப் பெரும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு
நிறுவனத்தில், நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள் ளையை
தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் நிகழ்த்தி யிருப்பது
அம்பலமாகியுள்ளது. 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு
பி.எஸ்.என். எல்.லைப் பணித்த தயாநிதிமாறன், அந்த 323 இணைப்புகளையும் தனது
பெயரில் அல்லாமல் சென்னை பி.எஸ். என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே
இணைத்துள்ளார் என்று இந்தியன் எக்ஸ் பிரஸ் ஏட்டின் குருமூர்த்தி எழுதியுள்ள
செய்தியில் அம்பலப்படுத்தியுள்ளது.
(மேலும்....)
ஆனி 03,
2011
விமானத்தில் நடுவானில் இரு பயணிகள் சண்டை
வானில் பறந்து கொண்டிருந்த விமா னத்தில் பயணிகள் இருவர் திடீரென
சண்டைபோட்டதால் நிலைமையை சமாளிக்க உடனடியாக 2 போர் விமா னங்கள்
பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டன. இவற்றின் துணையுடன் பயணிகள் விமானம் அவசரமாக
தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் டல்லஸ் பன்னாட்டு விமான நிலையத்தில்
இருந்து கானா நாட்டுக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 990 ரக விமானம்
புறப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது ஒரு பயணி தனது இருக்கையை
சற்று சாய்த்துள்ளார். இதற்குப் பின் பக்கம் அமர்ந்திருந்த சக பயணி
எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு
நடந்தது. விமானத்தின் பாதுகாப்புக்காக அண்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து
எப் 16 ரக இரண்டு போர் விமானங்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டன. மீண்டும்
டல்லஸ் விமான நிலையத்துக்கு திரும்பி வருமாறு பயணிகள் விமானத்துக்கு
உத்தரவிடப்பட்டது. அதன்படி அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. "சண்டை
செய்த இருவரால் பயணிகளுக்கு நேர்ந்த சிரமங்கள் குறித்து அறிவுரை கூறினோம்.
அவர்களை கைது செய்யவில்லை".
ஆனி 03,
2011
கொக்காவில்
தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணம் பூர்த்தி
வடபுலத்தின் கலங்கரை விளக்கு என
வர்ணிக்கப்படும் கொக்காவில் தொலைத்தொடர்பு பரிவர்த்தனை கோபுரம் எதிர்வரும்
6 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாக திறந்து
வைக்கப் படவுள்ளது. வடக்கின் சகல மாவட்ட மக்களும் நன்மையடையும் வகையில்
174 மீற்றர் உயரத்தில் பிரமாண்டமான முறையில் இக்கோபுரம்
நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் 400 மில்லியன் ரூபா நிதி இதற்கென
செலவிடப்பட்டுள்ளது. ரூபவாஹினி, சுயாதீனத் தொலைக்காட்சி உள்ளிட்ட அரச
தொலைக்காட்சி, தனியார் தொலைக்காட்சி மற்றும் அரச, தனியார் வானொலிச் சேவைகள்
ஆகியவற்றுக்கு தனித்தனிப் பிரிவுகள் இக்கோபுரத்தில் ஒதுக்கப்பட்டுள்ளன.
(மேலும்....)
ஆனி 03,
2011
Tamil and Sinhalese Canadians Continue Efforts for Unity by Planting
Trees
Toronto – On June 12, 2011, Sri
Lankans Without Borders will run its second consecutive “Roots for
Reconciliation” event, where Sinhalese and Tamil Canadians will join
together with Evergreen to plant trees and lay roots at Downsview
Park.The decades-long conflict in Sri Lanka has strained the
relationship between the Sinhalese and Tamil diaspora communities in
Canada and opportunities for productive joint initiatives remain scarce.
However, with the conclusion of the armed conflict in Sri Lanka reaching
its second year, there is renewed interest amongst Tamil and Sinhalese
Canadians to begin genuine and recuperative intercommunal initiatives
that will help bridge the gulf that exists in the diaspora community in
Canada.
(more....)
ஆனி 03,
2011
அமைச்சர் பதவியிலிருந்து தயாநிதிமாறனை நீக்குக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி வலியுறுத்தல்
ஊழல் புகார்கள் வலுத்துள்ள நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி
மாறனை உடன டியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு
மாநிலக்குழுக் கூட்டம் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் சென் னையில் மத்தியக்குழு
உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி., தலைமை யில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச்
செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்கட்டுப் பாட்டுக்குழுத் தலைவர் என்.
சங்க ரய்யா, மத்தியக்குழு உறுப்பினர்கள் என். வரதராஜன், உ. வாசுகி உள்ளிட்டு
மாநில செயற்குழு மற்றும் மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண் டனர்.
(மேலும்....)
ஆனி 03,
2011
EUROPEAN PARLIAMENTARIANS CASTIGATE BAN KI-MOON’S MOCK PANEL
By JAYANTHA GUNASEKERA-
It appears that the EU Parliament
has now become wiser and realized what frauds the LTTE Diaspora are.
Quoting the CDN, “the European parliament on 13th May 2011 defeated an
attempt to seek the immediate establishment of an international justice
mechanism on Sri Lanka during an urgent debate called by the Socialist
Green Parties at the Strasbourg Plenary Sessions, to draw attention to
the so called UN Panel report, on accountability issues in Sri
LankaHowever, the remarks made about the Sri Lankan judiciary was
baseless and unwarranted.
(more....)
ஆனி 03,
2011
'கருணாநிதியின்
கவிதை மீது எனக்கு வெறுப்பில்லை'
-
ஜெயலலிதா
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் கவிதை
புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது என்ற காரணத்துக்கு சமச்சீர் கல்வித் திட்டத்தை
ரத்துச் செய்யவில்லை என்று முதுல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தலைமைச்
செயலகத்தில் செய்தியாளர்களுக்கு புதன்கிழமை அவர் அளித்த பேட்டி : தனது பாடம்,
பாடல் தொடர்பானவை புத்தகங்களில் இடம்பெற்றிருப்பதால் சமச்சீர் கல்வித்
திட்டம் நிறுத்தப்படுகிறது என முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது
குழந்தைத்தனமாக உள்ளது. அவர் கவிதை எழுதினார் என்பதற்காக நாங்கள்
எந்தவிதமான மாற்றத்தையும் கொண்டுவரவில்லை. ஒட்டுமொத்தமாக குழந்தைகளுக்கு
அளிகப்படும் கல்வியின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே
நோக்கம் என்றார் ஜெயலலிதா. தமிழக அரசின் நிதி நிலை, தி. மு. க. ஆட்சியில்
தொடங்கப்பட்ட திட்டங்களின் நிலைகள் ஆகியன குறித்து ஆளுநர் உரையில்
முழுமையாகத் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
ஆனி 03,
2011
இலங்கை அரசின் மனிதாபிமானத்தை கவனத்தில் கொள்ள சர்வதேசம்
(நேற்றைய தொடர்)
எல். ரி. ரி. ஈ கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் நடைப் பிணங்களைப் போன்று
வேதனையில் மூழ்கியி ருந்தார்கள். எல். ரி. ரி. ஈ தன்னுடைய மக்களுக்காக
உதித்த விடுதலைப் போராளிகள் அல்ல என்பதும் இதன் மூலம் புலனாகியது. எல். ரி.
ரி. ஈயினர் தனது கொடுமையான சர்வாதிகாரத்தின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டு
பிரதேசத்தில் உள்ள மக்களை அடிமைகளைப் போல் நடத்தினார்கள். எல். ரி. ரி. ஈ
தனக்கு எதிரான எதிர்ப்புகளை கொடுமையான முறையில் அடக்கியது. எல். ரி. ரி. ஈ
வேறு ஆயுத போராளிக் குழுக்களின் தலைவர்களை படுகொலை செய்தது. அதன் மூலம் பல
தமிழ் போராளிக் குழுக்களை முற்றாக துவம்சம் செய்யவும் தவறவில்லை. எல். ரி.
ரி. ஈ மிதவாத ஜனநாயக தலைவர்களையும், தமிழ் மக்கள் மீது அதிக செல்வாக்கை
பெற்றுள்ள கல்விமான்களையும் படுகொலை செய்து மக்களை அச்சுறுத்தியது.
(மேலும்....)
ஆனி 03,
2011
S.Lanka offers to probe 'specific' war crime claims
Sri Lanka's top military commander offered on Thursday to probe
"specific allegations" of war crimes during the country's fight against
Tamil Tiger separatists that ended two years ago. Lieutenant General
Jagath Jayasuriya said no civilians were killed by his forces, but he
was open to investigating alleged rights abuses in the final stages of
fighting."I am prepared to investigate allegations, specific
allegations," Jayasuriya told reporters after a three-day seminar
entitled: "Defeating Terrorism, Sri Lankan Experience.""I don't want to
sweep anything under the rug," he said referring to Australian
counter-terrorism expert David Kilcullen's call Tuesday for Sri Lanka's
generals to address international concerns about war crimes.
(more...)
ஆனி 03,
2011
அமெரிக்காவின்
50 ஆவது மாநிலம் எப்படி வந்தது?
அலாஸ்கா தீவு ரஷ்யாவுக்கு சொந்தமாகவே
இருந்தது. ஆனால் அந்தத் தீவு ரஷ்யாவில் இருந்து தூரத்தில் அமைந்திருந்தது.
பனிப் பிரதேசம் வேறு. தனக்குச் சொந்தமான அந்தத் தீவை நிர்வகிப்பது
ரஷ்யாவுக்கு கொஞ்சம் தலைவலியாகவும் இருந்தது. இந்த நேரத்தில் அமெரிக்கா தன்
நாட்டை 50 மாநிலங்களாகப் பிரித்து அதன் தேசிய கொடியில் 50 நட்சத்திரங்களைப்
பதிக்க நினைத்தது. ஆனால் மாநிலங்களை 49 ஆகத்தான் பிரிக்க முடிந்தது. இதற்கு
என்ன செய்வது என அது யோசித்தது. ரஷ்யாவுக்கு சொந்தமான அலாஸ்கா தீவு கண்ணில்
பட்டது. பனிப் பிரதேசமாக இருந்தாலும் பரவாயில்லை என்று வாங்கி அதை ஒரு
மாநிலமாகச் சேர்த்துக் கொடியில் 50 நட்சத்திரங்களைப் பதிக்க அமெரிக்கா
முடிவுசெய்தது. ரஷ்யாவிடம் அலாஸ்காவை விலைக்குக் கேட்டது. பனிப் பிரதேசம்
என்பதனால் அதனை நிர்வகிப்பது கஷ்டம் என்பதால் அலாஸ்காவை ரஷ்யா விற்பனை
செய்ததாம். அதைவாங்கி பனியில் மீன் பிடிக்கும் சுற்றுலாத் தலமாக அதை
அமெரிக்கா மாற்ற முயற்சி பண்ணியது. அதன் போதுதான் கீழே எண்ணெய் ஆறு ஓடுவது
தெரிந்ததாம். அமெரிக்காவுக்கு அதிர்ஷ்டம் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்தது.
ஆனி 02,
2011
அரசை கவிழ்க்க ஜே.வி.பி தீட்டிய சதிகள்
அம்பலம்
வெளிநாட்டு
சக்திகளுடன் சேர்ந்து அரசைக் கவிழ்க்க முயற்சி
தேர்தல்கள் மூலம் அரசாங்கங்களை கவிழ்க்க
முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ள ஜே.வி.பியினர் அப்பாவி தொழிலாளர்
வர்க்கத்தை பயன்படுத்தி வன்முறைகளை நாட்டில் ஏற்படுத்த எத்தனிக்கிறதென்று
அரசாங்கத்திற்கு இப்போது இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன.
34 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து இன்று நாட்டில் சமாதானத்தை
நிரந்தரமாக நிலைபெறச் செய்து அபிவிருத்தி பாதை யில் அரசாங்கம் முன்னேறி
வருவதைப் பார்த்து பொறாமைப்படும் ஜே.வி.பியினர் வெளிநாட் டிலுள்ள
பிற்போக்குவாதிகளின் தூண்டு தலின் பேரில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்கும்
நாசவேலைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக இப்போது அறிவிக் கப்படுகிறது.
(மேலும்.....)
ஆனி 02,
2011
கட்டுநாயக்க சம்பவம்
பொலிஸ் உயர்மட்டத்தில் அதிரடி மாற்றம்
பொலிஸ் மா அதிபர் பதவி விலகினார்
மேல்மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் இடமாற்றம்
2 இன்ஸ்பெக்டர்கள் கைது
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று புதன்கிழமை சமர்ப்பித்துள்ளார். எனினும்
பொலிஸ் மா அதிபரின் பதவிக் காலம் எதிர்வரும் 18 ஆம் திகதியுடன் முடிவடையும்
நிலையில் அவர் ஓய்வு பெறுகிறாரே தவிர பதவி விலகவில்லை என்று பொலிஸ் ஊடக
பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் பிரிசாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். அத்துடன்,
பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தனது பதவிக் காலம் முடிவடையும் தினமாக
ஜூன் மாதம் 18 ஆம் திகதியை குறிப்பிட்டு ஓய்வுபெறுவதற்கான கடிதத்தை
ஜனாதிபதிக்கு சமர்ப்பித்து அதற்கு முன்னதாக விடுமுறை கோரியும்
விண்ணப்பித்திருப்பதாக ஜனாதிபதி ஊடக பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
(மேலும்.....)ஆனி 02,
2011
யாழ் வாக்காளர்
எண்ணிக்கை 3 இலட்சத்தால் குறைவு
புதிதாக வெளியிடப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான
வாக்காளர் இடாப்பில் 3 இலட்சத்து 31 ஆயிரத்து 214 பேரினது பெயர்கள்
நீக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர்
இடாப்பு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. இதில் யாழ். மாவட்டத்தில்
மொத்தமாக 4 இலட்சத்து 84 ஆயிரத்து 791 வாக்காளர்கள் பதிவு
செய்யப்பட்டுள்ளனர். 2008 ஆம் ஆண்டு 7 இலட்சத்து 21 ஆயிரத்து 359 ஆக
காணப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை, 2009 ஆம் ஆண்டு 8 இலட்சத்து 16 ஆயிரத்து 05
ஆக காணப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட தற்போதைய வாக்காளர் இடாப்பில் இத்தொகை 3
இலட்சத்தால் குறைவடைந்துள்ளது.
ஆனி 02,
2011
கருணாநிதியின்
மகள் கனிமொழியைத் தொடர்ந்து பேரன் தயாநிதி மாறனும் கைது செய்யப்படுகின்றார்......?
ஏர்செல் நிறுவனத்துக்கு மிக தாராளமாக தொலைபேசி அலைக் கற்றை உரிமங்கள்
வழங்கப்பட்டது குறித்தும், அந்த நிறுவனத்தின் பங்கு களை வாங்கிய மேக்ஸிஸ்
குழுமம் எனும் மலேசிய நிறுவனம், சன் டி.வி. குழுமத்தில் ரூ.700 கோடி முதலீடு
செய்தது குறித்தும் சிபிஐ விசார ணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன. மேலும் இந்த விவகாரத்தில் மத் திய ஜவுளித்துறை அமைச்சர் தயா
நிதி மாறனிடம் சிபிஐயும், நாடாளு மன்றக் கூட்டுக் குழுவும் விசாரணை
நடத்தவுள்ளதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக, மத்திய குற்றப் புலனாய்வுக் கழக
(சிபிஐ) வட்டாரங் களை மேற்கோள்காட்டி என்டி டிவி செய்தித் தொலைக்காட்சி
வெளியிட்டுள்ள செய்தியில், வெகு விரைவில் இந்தஊழல் விவகாரம் தொடர்பாக
அமைச்சர் தயாநிதி மாறனை சிபிஐ விசாரணை நடத் தும் என்று கூறப்பட்டுள்ளது.(மேலும்.....)ஆனி 02,
2011
கையடக்கத்
தொலைபேசிகளால் புற்றுநோய் ஏற்படும் அபாயம்
-
சுகாதார ஸ்தாபனம்
கையடக்கத் தொலைபேசி பாவனையானது புற்று நோய்
அபாயத்தை தோற்றுவிக்கின்றது என சர்வதேச சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும் கிளியோமா எனப்படும் ஒரு வகை மூளையில் ஏற்படும் கட்டிக்கும்
காரணமாகின்றதென அவ்வமைப்பு தெரிவிக்கின்றது. தற்போது கையடக்கத்
தொலைபேசிகளானது 'Carcinogen' எனப்படும் நேரடியாக புற்றுநோயைத் ஏற்படுத்தும்
பொருட்கள் மற்றும் கதிர்வீச்சுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஒப்பீட்டளவில் கையடக்கத் தொலைபேசிகளானது நவீன தொழிநுட்ப சாதனமென்பதினால்
இவற்றின் பாதிப்புக்கள் தொடர்பில் தெரிந்துகொள்ள நீண்ட காலம் செல்லும்
எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி முடிவானது 14 நாடுகளைச் சேர்ந்த 31
விஞ்ஞானிகளினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வையடுத்தே வெளியிடப்பட்டுள்ளது. பல
நாட்களாக கையடக்கத் தொலைபேசிகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதா என்ற
விவாதம் நீடித்து வந்த நிலையில் இம்முடிவு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளதுடன்
ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனி 02,
2011
பீரிஸ்- கிருஸ்னா சந்திப்பு இலங்கையின்
ஒருமைப்பாட்டில் பாதிப்பு
-
பிக்குகள் முன்னணி
ஜி.எல். பீரிஸ் மற்றும் எஸ்.எம்.கிருஸ்னா
ஒப்பந்தம் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாகுமென்று
தேசிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. இந்திய மற்றும் இலங்கை
வெளிவிவகார அமைச்சர்கள் அண்மையில் கைச் சாத்திட்ட ஒரு உடன்படிக்கை
இலங்கையின் யுத்த வெற்றியைக் காட்டிக் கொடுப்பதாக உள்ளது. அவசரகாலச்சட்ட
நீக்கம், 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தல் போன்றவை யுத்த வெற்றியைப் பெற்ற
சிங்கள சமூகத்திற்கு பாதகமான விளைவை ஏற்படுததலாம் என அம் முன்னணி மேலும்
தெரிவித்துள்ளது. அத்தன்கனே ரத்னபால தேரர் இது பற்றி இவ்வாறு கூறியுள்ளார்.
ஆனி 02,
2011
முதன் முறையாக
மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை அமைச்சரவைக் கூட்டம்
கிழக்கு மாகாணசபையின் அமைச்சர் வாரியக்
கூட்டம் வழமையாக திருகோணமலையில் இடம்பெறுவது வழமை. ஆனால் அண்மைக்காலமாக
பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக
ஆராயும் பொருட்டு மேற்படி விசேட அமைச்சர் வாரியக் கூட்டம் மட்டக்களப்பில்
ஏற்பாடு செய்ப்பட்டது. நேற்று (30.05.2011) மட்டக்களப்பில் முதலமைச்சரது
மட்டக்களப்பு அலுவலகத்தில் மேற்படி கூட்டம் பி.ப 6.00மணிக்கு இடம் பெற்றது.
அமைச்சர்களின் முடிவை அறிவிக்கும் இக் கூட்டத்தில் விசேடமாக அன்மையில்
பேசப்படுகின்ற ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சனைகள் விரிவாக
ஆராயப்பட்டது. கிழக்குமாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன், மாகாண
அமைச்சர்களான போக்குவரத்து அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வே, கல்வி அமைச்சர்
விமல வீர திஸாநாயக்க, விவசாய அமைச்சர் து.நவரெட்ணராஜா, பிரதம செயலாளர்
பாலசிங்கம், பிரதி பிரதம செயலாளர் நிதி மயூரகிரிநாதன், மற்றும் சேவையின்
பொருட்டு சமூகமளித்தோர்கள் வரிசையில் கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி
பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஸாம் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆனி 02,
2011
மீண்டும்
அரங்கேறும் குரங்கும் அப்பத்துண்டு கதை
மீண்டும் குரங்கும் அப்பத் துண்டு கதையாக மாறும்; மாறி விடும் நிலையிலேயே
அதிகாரப் பரவலாக்கல் உள்ளது. அரசாங்கம் அனைத்துத் தமிழ்க்கட்சிகளும்
ஒன்றிணைந்து வந்தாலே பேச முடியும் என்று தெரிவித்திருந்தது. தமிழ்க்கட்சிகள்
ஒன்றிணைந்த வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் பேச்சு
வார்த்தைக்கு அழைத்தது. தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அரசாங்க
தரப்பிற்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. இந்தப் பேச்சு வார்த்தை
குறித்து இரண்டு தரப்பினருமே மௌனம் காத்தனர். இறுதியில் இவர்கள் இருவரும்
கலந்துரையாடிய விடயங்கள் கசியத் தொடங்கின. கிராமசபை, பிரதேசசபை, நகர, மாநகர
சபை மட்டத்தில் நிர்வாக ரீதியில் கூடுதலான அதிகாரங்களைப் பகிர்ந்து
கொள்ளுதல் குறித்தே அரசாங்கத் தரப்பில் இருந்து கூறப்பட்டதாகவே அந்தச்
செய்திகள் அமைந்தன. ஆனால், இந்தச் செய்தி பற்றிப் பேச்சு வார்த்தையில்
கலந்து கொண்ட இரு பகுதியினரும் கருத்துக் கூற முன்வரவில்லை.
(மேலும்.....)
ஆனி 02,
2011
இந்திய அணுமின் நிலைய பாதுகாப்பு
சுனாமி தாக்கிய தைத் தொடர்ந்து ஜப்பான்
அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்தின் எதிரொ லியாக இந்தியாவின் அணு மின்
நிலையங்களுக்கான பாதுகாப்பை பிரதமர் மன் மோகன் சிங் ஆய்வுசெய் தார். அணுமின்
நிலைய பேரிடர் முன்னேற்பாடுகள் குறித்து தில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள
தனது இல்லத்தில் புதனன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் மன்மோ கன்
சிங் ஆலோசனை நடத் தினார். அப்போது இந்திய அணுமின் நிலையங்களில், உலகிலேயே
சிறந்த பாது காப்பு முன்னேற்பாடுகளை செய்யுமாறு அவர் அப் போது கேட்டுக்கொண்
டார். அணுசக்தி பேரழிவு களை சந்திக்கும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து
அந்த கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா
உள்ளிட்ட 35 நகரங்களில் கதிர்வீச்சு அளவை கணக்கிடும் அதி நவீன கருவிகளை
நிறுவு வது போன்ற புதிய நட வடிக்கைகளை எடுப்பது குறித்தும் இந்தக் கூட்டத்
தில் விவாதிக்கப்பட்டது.
ஆனி 02,
2011
நேட்டோ தாக்குதல்
718 சிவிலியன்கள் லிபியாவில் பலி
நேட்டோ தாக்குதலால் லிபியாவின் இதுவரை 718
பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் 4,067 பேர் காயம் அடைந்துள்ளதாகவும்
அதிலும் 433 பேர் படுகாயத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் லிபியா அரசு
அறிவித்துள்ளது. திரிபோலியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்
பேசிய லிபிய அரசின் பேச்சாளர் முஸ்ஸா இப்ராஹிம் இந்த தகவலை வெளியிட்டார்.
நேற்று தாக்குதல் ஆரம்பமான கடந்த மார்ச் 19ஆம் திகதி முதல் மே 26 ஆம் திகதி
வரையான காலப்பிரிவிலேயே நேட்டோ தாக்குதலால் மேற்படி 718 பொது மக்கள்
கொல்லப்பட்டதாக முஸ்ஸா இப்ராஹிம் குறிப்பிட்டார். இதில் இராணுவ வீரர்கள்
சேர்க்கப்படவில்லை என்றும் சிவிலியன்கள் கொல்லப்பட்ட தொகையே இதுவென்று அவர்
குறிப்பிட்டார்.
(மேலும்.....)
ஆனி 02,
2011
யுத்தத்தை
மனிதாபிமான முறையில் நடத்தி மக்களுக்கு அரசு விடுதலை பெற்றுக் கொடுத்துள்ளது
பயங்கரவாதம் ஒரு சர்வதேச ரீதியிலான
அச்சுறுத்தலாகும். இலங்கை இதனால் துன்பப்பட்டதைப் போன்று வேறு எந்தவொரு
நாடும் துன்பப்படவோ அழிந்திடவோ கூடாது என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
கூறினார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிநாடுகளில் இருந்து இங்கு
வந்துள்ள இராணுவ உயர் அதிகாரிகள் நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்களை பயன்படுத்தி
சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து, உலக மக்கள்
அனைவரும் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உலக நாடுகளில் ஏற்படுத்துவதற்கு
உதவி புரிய வேண்டுமென்றார்.
(மேலும்.....)
ஆனி
02, 2011
காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றினாரா? நடிகை விஜயலட்சுமி புகாருக்கு
சீமான் மறுப்பு
காதலித்து திருமணம் செய்வதாக ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த
புகாருக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மறுப்பு
தெரிவித்துள்ளார்.``அரசியலில் எனக்குள்ள புகழை கெடுப்பதற்காக திட்டமிட்டு
சதி செய்து இந்த பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது'' என்று அவர்
தெரிவித்துள்ளார்.`பிரண்ட்ஸ்' படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக
நடித்தவர் விஜயலட்சுமி. இவர் ``பாஸ் என்ற பாஸ்கரன்'' படத்திலும்
நடித்துள்ளார். அதோடு, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் சென்னை
சாலி கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். நேற்று மாலையில்,
விஜயலட்சுமி போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து, பரபரப்பான புகார் மனு
ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
மீது பரபரப்பான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
(மேலும்.....)
ஆனி 01,
2011
புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு
மூலம் (பகுதி 14)
பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில்
தப்பியவரின் வாக்குமூலம்
பலதரப்பட்ட விவாதங்களின் பின் நமது தலைமை மக்களைளையும் போராளிகளையும்
காயப்பட்டவர்களையும் காப்பாற்றும் பொருட்டு,
இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை நமது தலைமை எடுத்தது.
ஆனால்இது நடைபெறுவதற்கு முன்
நமது
தலைமை,எமது
சார்பாக மேற்குலக அரசுகளுடன் இறுதி நேர தூதுவராகச் செயற்பட்ட மேரி
கொல்வினின்
.
என்ற ஒருவர்மூலம்.
நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம் என்று நடேசன் மூலம்
சொல்லியதுடன் அதற்கு அமெரிக்காவிடமிருந்தும் பிரித்தாநியாவிடமிருந்தும்
பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நமக்கு பெற்றுத்தரும்படி கேட்கப்பட்டது.’.
இலங்கை ராணுவத்திடம் சரணடைவது மிகவும் அபாயகரமானது என்றும் இதற்கு காரணம்
எமது சார்பில் சொல்லப்பட்டது.
மேலும் நாம் எமது சமாதானச் செயலகத்தைச் சார்ந்த புலித்தேவன்,
நடேசன் போன்ற அரசியல் மற்றும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த300..400
வரையான போராளிகளையும் காப்பாற்றுவதே எமது நோக்கமாக அப்போது இருந்தது.
இதற்கு
தலைவர் நேரடியாகவே உத்தரவு பிறப்பித்தும் இருந்தார்
.அத்தோடு
சில
விடயங்களை ஐ.நா.விற்கு
தெரிவிக்குமாறு நடேசன் மூலம் கோரப்பட்டது.
(மேலும்....)
ஆனி 01,
2011
ஒசாமாவைக்
காட்டிக் கொடுத்தவர் அவரது நெருங்கிய நண்பர்?
ஒசாமா பின்லேடனின் மறைவிடம் குறித்த தகவலை
அமெரிக்க அதிகாரிகளுக்கு தெரிவித்தவர் அவரது நெருங்கிய நண்பரும் தலிபான்
முக்கியத் தலைவருர்களில் ஒருவருமான முல்லா அப்துல் கனி பராதர் என , லண்டனில்
இருந்து வெளிவரும் பத்திரிக்கையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவரின்
இருப்பிடத்தை காட்டிக் கொடுத்தமைக்கு பதிலாக தலிபான்களின் தாயகமான
ஆப்கானிஸ்தானை விட்டு, அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்ற பராதரின்
கோரிக்கையை நிறைவேற்றுவோம் என, அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாகவும்
லண்டனில் இருந்து வெளியாகும் 'சண்டே மிரர்' பத்திரிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது. ஒசாமாவின் பணியாளர் அபு அஹமட் அல் குவைடியின்
தொலைபேசி அழைப்பினை ஒட்டுக் கேட்டதன் மூலமே ஒசாமாவின் இருப்பிடத்தை
கண்டுபிடித்தாக அமெரிக்கா தெரிவித்து வருகின்ற போதிலும், பராதர் தான்
ஒசாமாவை காட்டிக் கொடுத்துள்ளார் எனவும் அவர் பல இரகசிய தகவல்களை அமெரிக்க
உளவுப் பிரிவினருக்கு தெரிவித்து வருவதாகவும் அப்பத்திரிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனி 01,
2011
வெளி நாட்டிலிருந்து இலங்கை சென்று
அல்பிரெட்
துரையப்பாவின் மகள் அரசிய
லில்
குதிக்கின்றார்?
படுகொலை செய்யப்பட்ட முன் னாள் முதல்வர்
அல்பிரெட் துரை யப்பாவின் 36 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொள்வதற்காக
அல்பிரெட் துரையப்பாவின் மகள் வைத்திய கலாநிதி ஈசா யாழ்ப்பாணத்திற்கு
வருகைதரவுள்ளார். இவரை சுதந்திரக்கட்சியுடன் இணைத்து எதிர்காலத்தில் அரசியல்
செயற்பாடுகளை முன்னெடுக்க வைப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருவதாக சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்
கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளருமான தேசமான்ய கலாநிதி வேல் முருகு
தங்கராசா தெரிவித் தார்.
(மேலும்....)
ஆனி 01,
2011
வெளிநாடுகளில்
இருக்கும் இலங்கையர் அச்சமின்றி நாடு திரும்பலாம்
மோதல் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய
இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான அச்சமும் கொள்ளத்
தேவையில்லையென பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜயசிங்க
தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கும் இலங்கையர்கள்
அந்தநாடுகளில் அரசியல் புகலிடம் கோர வேண்டிய தேவை இல்லலையென்பதே இலங்கையின்
நிலைப்பாடு என அவர் தெரிவித்தார். இலங்கையில் இருந்து வெளியேறிய பலர்
அவுஸ்திரே லியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோருகின்றனர்.
இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப் பட்டு அமைதி சூழல் உருவாக்கப்பட்டிருக்கும்
சூழ்நிலையில் அரசியல் புகலிடம் கோரவேண்டிய தேவை இல்லை என்றார் அவர்.
(மேலும்....)
ஆனி 01,
2011
புலிகளின் வீடியோவில் தோன்றியதால் குடியேற்றவாசியை
நாடு கடத்த உத்தரவு _
எம்.வி.சன் ஸீ கப்பலில் கனடாவுக்குச் சென்ற மற்றொரு இலங்கை தமிழ் குடியேற்ற
வாசியை நாடு கடத்துமாறு கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை திங்கட்கிழமை
உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் அவரின் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப்
புலிகளின் அமைப்பின் செயற்பாடுகளில் பங்குபற்றியமையே இதற்கான காரணமாகும்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசார வீடியோவொன்றில் தோன்றியதாகவும் அவர் மீது
குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எம்.வி.சன் ஸீ கப்பலில் சுமார் 500 பேர்
கனடாவுக்குச் சென்றனர். இவர்களில் நாடு கடத்தப்பட உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ள 4 ஆவது நபர் இவராவார்.
(மேலும்....)
ஆனி 01, 2011
நூருல் ஜன்னாஹ் பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திறப்புவிழா
2005.01.11 ம் திகதி மர நிழலில்
ஆரம்பிக்கப்பட்ட நூருல் ஜன்னாஹ் பாலர் பாடசாலை பல்வேறு தியாகங்களுக்கு
மத்தியில் தனது வெற்றிப்பயனத்தை மேற்கொண்டு இன்று (29.05.2011) ஞாயிற்றுக்
கிழமை நிரந்தர புதிய கட்டிடத்திற்குச் சென்றது. முஸ்லிம் எய்ட்
நிதியுதவியில் கிராமியப் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பு (றெக்டோ)
யினால் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி பாலர் பாடசாலை இன்று வைபவரீதியாகத்
திறந்து வைக்கப்பட்டு மக்ககளிடம் கையளிக்கப்ட்டது. இந்நிகழ்விற்கு முஸ்லிம்
எய்ட் அமைப்பின் பணிப்பாளர்- பைசர்கான், தம்பலாகமப் பிரதேச செயலாளர்-
தென்னக்கோன் தம்பலாகமப் பிரதேச சபைத் தவிசாளர் சுபியான் அவர்களோடு கிராமியப்
பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அஸார் ஆகியோரும்
கலந்து கொண்டனர்.
(மேலும்....)
ஆனி 01,
2011
வன்னியில்
கைவிடப்பபட்ட ஒரு தொகை வாகனங்கள் மன்னார் அரச அதிபரிடம் ஒப்படைப்பு
மன்னார் வெள்ளாங்குளம் இராணுவத்தினரால் ஒரு
தொகுதி வாகனங்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்தார். வன்னி யுத்த
இடப்பெயர்வின் போது வாகனங்களை தொலைத்தவர்கள், கைவிட்டவர்களின் வாகனங்களே
ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இன்றும் பல வாகனங்களை இராணுவத்தினர் தன்னிடம்
கையளிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதனடிப்படையில் கெண்டர்,
பிக்கப், பௌசர் ரக வாகனம், உழவு இயந்திரம், மோட்டார் சைக்கிள் என சுமார் 50
இற்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்வாகனங்கள்
மோட்டார் போக்குவரத்து ஆணையாளரின் ஊடாக உரிமையாளர்களிடம்
ஒப்படைக்கப்படவுள்ளன.
அதே வேளை போர் முடிந்து கடந்து வந்த 2 வருட காலப்பகுதியில் இராணுவத்தின்
கட்டுப்பாட்டிற்கள் இருந்த பல வாகனங்களிலிரந்த உதிரிப் பாகங்கள்
கழட்டப்பட்டு தமிழ் ஏஜன்ட்டுகளினூடாக களவாக விற்கப்பட்டு வந்ததாகவும் அறிய
முடிகின்றது.
இது இராணுவ நிர்வாகத்திற்கு தெரியாமலும் தெரிந்தும் தமிழ் மக்கள் மத்தியல்
உள்ள சமூக விதேராதக் கும்பல்களின் உதவியுடன் நடைபெறுவதாக அறிய முடிகின்றது.
ஆனி 01,
2011
Blessed are the resilient for they shall protect this land and our
children
by Malinda Seneviratne
The days following the
elimination of the LTTE leadership were justifiably joyous for a nation
that had been plagued and held hostage by terrorism for three decades.
Joy, however, is relative to place and person. I am thinking about the
three hundred thousand plus who were in IDP facilities at the time.
True, they were no longer being held hostage by a ruthless terrorist
outfit that did not think twice about axing limbs of 5-year olds trying
to flee or opening fire on the elderly, the pregnant and the sick as
thousand (including LTTE cadres) saw perhaps for the first time the true
face of the ‘liberator’ and crafted upon that terrible countenance
megalomania, revenge-intent and self-preservation. They had left a diet
of one glass of rice gruel a day. Their children would not be taken
from them. Even if what they arrived at did not have ‘Paradise’ written
all over it, they knew they had escaped from hell and hopelessness.
(more....)
ஆனி 01,
2011
தமிழீழத்தைத் தன் இதயத்தில் ஏந்திநிற்கும் ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப்
பிடித்து தள்ளியவர்கள் யார்? -
ராம் சிவலிங்கம்,
நாடுகடந்த தமிழீழ அரசு
ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,... கனடா
மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில்,
மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக
ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார்.
இந்த நிகழ்வு கனடா வாழ் தமிழருக்கு இழிவாக அமைந்தாலும், ஈழவேந்தன் ஐயாவுக்கு
இது ஓர் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். தன் இனத்திற்காக இலங்கையில்
சிங்களவனிடமும் கனடாவில் மக்களவையினரிடமும் (NCCT) அடிவாங்கிய ஒரே ஒரு
மறத்தமிழனும், பாராளுமன்ற உறுப்பினரும் இவரே. தள்ளாத வயதிலும் தனியொருவனாக
போரிட்டு தப்பிவந்த உங்கள் வீரத்தை, தீரத்தைக் கண்டு உலகத் தமிழினமே உன்னைச்
சிரம்தாழ்த்தி வணங்குதய்யா.
(மேலும்....)
ஆனி 01,
2011
Sri-Lanka is a paradise to visit- Western countries
Western nations issuing
advisories to warn their citizens against visiting Sri Lanka is a thing
of the past. Sri Lanka today is one of the most sought after
destinations by westerners.
And the future looks bright for Sri Lanka with Tourism Minister
Lakshman Yapa
Abeywardene revealing that the country's tourism industry has grown by
43
percent while the tourism sector in the rest of Asia saw only a five
percent
growth.
Now the news from London is sure to add kithul treacle to the
minister's cup of
buffalo curd. The news item which said Sri Lanka was named best-value
country
by the London Sunday Times Travel Magazine under the Value for Money
Award
category went unreported in the Sri Lanka media.
The magazine says Sri Lanka "has that elusive mix we all crave:
high-style
heritage hotels, paradise beaches and a low-cost price tag." Now this
should
not give any idea to local hoteliers to raise the room rates and kill
the
golden goose.
ஆனி 01,
2011
இத்தாலி பெர்லுஸ்கோனி கட்சி படுதோல்வி
எக்கச்சக்கமான வழக்கு களில் சிக்கி
நீதிமன்றப்படி களில் ஏறி இறங்கிக் கொண் டிருக்கும் இத்தாலி பிரதமர் சில்வியோ
பெர்லுஸ்கோனி யின் கட்சி உள்ளாட்சித் தேர்தல்களில் படுதோல்வி அடைந்துள்ளது.
பல இடங்களில் தேர் தல்கள் நடைபெற்றாலும் மிலன் மற்றும் நேபிள்ஸ் ஆகிய இரண்டு
பெரு நகரங் களின் தேர்தல் முடிவுகள் பெரும் அளவில் எதிர்பார்க் கப்பட்டன.
இதில் மிலன் நகரம் பிரதமர் பெர்லுஸ் கோனிக்கு சொந்த நகரமா கும். கடந்த
இருபது ஆண்டு களாக பெர்லுஸ்கோனியின் ஆளுங்கட்சியைச் சேர்ந்த வர்தான் அங்கு
மேயராக இருந்துவந்தார். தற்போது நடைபெற்ற தேர்தலில் ஜன நாயகக் கட்சியின்
வேட்பா ளரும், இடதுசாரியுமான கியுலியானோ பிசாபியா என்பவர் வெற்றி பெற்றுள்
ளார். தொடர்ந்து தேர்தல் களில் தோல்வியைத் தழுவி வரும் பெர்லுஸ்கோனியின்
கட்சி பொதுத்தேர்தலிலும் பெரும் தோல்வியைத் தழு வும் என்று எதிர்க்கட்சிகள்
கருத்து தெரிவித்துள்ளன.
ஆனி 01,
2011
தி.மு.க உறவை
முறிக்குமானால் உருவாகும் நெருக்கடியை சமாளிக்க காங்கிரஸ் தயாராகிறது
எந்த சூழ்நிலையிலும் தி.மு.க தங்களை விட்டுப்
போய் விடாது என, தீவிரமாக காங்கிரஸ் நம்பிக்கை கொண்டிருந்தாலும் கூட ஒருவேளை
உறவை முறித்து கொண்டால் அதை எப்படி சமாளிப்பது என்பதற்கான நடவடிக்கைகளில்
காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தாங்கள்
முற்றிலும் வஞ்சிக்கப்பட்டதாக தி.மு.க கருதுகிறது. குறிப்பாக தன்
குடும்பத்தினரையாவது காப்பாற்றுவர் என பெரிதும் எதிபார்த்திருந்த கருணாநிதி
தன் மகள் கனிமொழி கைது செய்யப்பட்டவுடன், காங்கரஸ் மீது பெரிதும் நம்பிக்கை
இழந்து விட்டார். இந்த ஊழல் விவகாரத்தில் ஏதாவது ஒரு விதத்தில் மறைமுக
உதவிகளையாவது, ஆட்சி பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் செய்து தங்களுக்கு
நேரும் பாதிப்பின் அளவையாவது குறைக்கும் என கடைசிவரை தி.மு.க நம்பிக்
கொண்டிருந்தது. உயர் நீதிமன்றத்தை காரணம் காட்டி, கடைசியில் தங்களை
கைவிட்டுவிட்டதால், காங்கிரஸ் மீது தி.மு.க கடும் கோபத்தில் உள்ளது.
(மேலும்....)
ஆனி 01,
2011
நேட்டோ படையை
ஆக்கிரமிப்பு
படையாக கருதவேண்டும்
நேட்டோ படை பொது மக்கள் மீது தொடர்ந்தும்
தாக்குதல் நடத்தினால் அதனை ஆக்கிரமிப்பு படையாக கருதவேண்டி இருக்கும் என
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் அல் - கர்சாயி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க படை ஆப்கானிஸ்தானில் நடத்திய வான்
தாக்குதலில் 14 சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க
படைக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் அல் -
கர்சாயி நேற்று காபுலில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்படி எச்சரிக்கையை
விடுத்தார். ஆப்கான் வீடுகள் மீது வான் தாக்குதல் நடத்த வேண்டாம் என்று
நேட்டோ படைக்கு தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். எனினும் அது தொடர்ந்தால்
தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற பார்வையிலும் மாற்றம் ஏற்படும்.
நேட்டோ படையை ஆக்கிரமிப்பு படையாக கருதவேண்டி இருக்கும். இந்த நிலையில்
ஆப்கானிஸ்தான் ஆக்கிமிப்பு படைக்கு என்ன செய்தது என்பதை வரலாற்றை
புரட்டிப்பாருங்கள் என்றார்.
ஆனி 01,
2011
ரயில்
பயணம்........ஒரு
சுகமான பயணம்
மாட்டு வண்டிகளில், ரிக்ஷோ வண்டிகளில், கார்களில், பஸ் களில், லொறிகளில்,
உழவு இயந்திரங்களின் இழுவைப் பெட்டிகளில், கப்பல்களில், விமானங்களில் மக்கள்
நாளாந்த வாழ்க்கையில் பிரயாணம் செய்கிறார்கள். சிலர் தூர இடங்களுக்கு
பிரயாணம் செய்யும்போது ரயில் வண்டிகளில் செல்கிறார்கள். மற்றும் பலர்
வெளிநாடுகளுக்குச் செல்லும்போது பெரும்பாலும் விமானங்களிலேயே பறக்கிறார்கள்.
மிகவும் குறைந்த தொகையினரே நாம் வாழும் தெற்காசியப் பிராந்தியத்தில் கப்பல்
பயணத்தில் ஈடு படுகிறார்கள். இவை ஒவ்வொன்றிலும் பிரயாணம் செய்பவர்களை நாம்
தனித் தனியாக சந்தித்து எந்த வாகனத்தில் பிரயாணம் செய்வதை நீங்கள் மிகவும்
விரும்புகிaர்கள் என்று கேட்டால், நூற்றுக்கு நூறு வீதமா னோர் நாம் ரயில்
பயணத்தையே அதிகம் விரும்புகிறோம் என்று பதில் அளிப்பார்கள்.(மேலும்....)
ஆனி 01,
2011
Sri Lankan New Year Festival 2011- Brampton /Mississauga (June 4th)
We are very pleased to announce
that our 6th New Year outdoor event will take place at Eldorado park in
Brampton on Saturday, June 4th. It is with great pleasure that we invite
you to join us. The event comprises of traditional New Year games and
lots of fun for kids and adults and more information is provided in the
flyer. Enjoy a traditional Sri Lankan breakfast with Kiribath, Kevum,
Kokis, and etc. As a fund raising event for the new temple building
fund, lunch will be provided by the West-End Buddhist Centre,
Mississauga for the cost of $5.00 per packet . Parents: Drawing
Competition :- Drawing A4 Paper ,During Sri Lankan festival we have art
competition for the children of all ages. Theme will be “Sri Lankan New
Year”. Parents are asked to encourage the children to participate in
this event. Drawings must be brought to display on the ground. Age
Groups 3-6 , 7-10,11-14.
Costume Competition :- Get your
kids ready
Bicycle Race :- Ask your kids
age 10 & below to come up with a bicycle
ஆனி 01,
2011
அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்திய
தயாநிதிமாறன் தெஹல்கா ஏடு படப்பிடிப்பு
தொலைத்தொடர்புத் துறையில் தோண்டத் தோண்ட ஊழல்கள் சன் டி.வி.க்கு வந்த
ரூ.700 கோடி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து
முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மூலம் கலைஞர் டி.வி.க்கு
முறைகேடான வழிகளில் ரூ.200 கோடி லஞ்சப் பணம் வந்ததாக எழுந்த
குற்றச்சாட்டைவிட, மிகப் பெரு மளவில் இதே போன்ற தொலைத் தொடர்பு அலைக்கற்றை
ஒதுக்கீட்டிற் காக ஏர்செல் நிறுவனத்தை நடத்தி வரும் மேக்ஸிஸ்
குழுமத்திடமிருந்து முறைகேடான வழிகளில், சன் டி.வி. குழுமத்தை நடத்தி வரும்
மாறன் சகோ தரர்கள் லஞ்சமாக பெற்றார்கள் என்பதற் கான ஆதாரங்கள் வலுத்துள்ளன.
மேக்ஸிஸ் குழுமத்திடமிருந்து முறை கேடான வழிகளில் ரூ.700 கோடி அள விற்கு சன்
டி.வி. குழுமத்திற்கு வந்து சேர்ந்துள்ளது என்று ஏராளமான விபரங் களை
மேற்கோள் காட்டி தெஹல்கா ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
(மேலும்....)