Contact us at: sooddram@gmail.com

 

சித்திரை 2015 மாதப் பதிவுகள்

சித்திரை 30, 2015

அறிவுக்கெதிரான கலகம்

பேராசிரியர் ராஜன் கூலின் 'விழுந்த பனை' புத்தகவெளியீடும் விமர்சனமும் நிகழ்ச்சி யாழ் பல்கலையில் பிரம்ம பிரயத்தனமாக-சிரம சாத்தியமானதாக இருந்தது. இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு இடமளிக்கமுடியாது என யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் ஒற்றை வரியில் பல்கலை விஞ்ஞான ஆசிரியர் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்ததை ஆங்கில ஊடக மொன்றில் அவதானிக்க முடிந்தது. இந்த வரி ஜனநாயக உணர்வற்ற அதிகார மனநிலையையும் -வரட்சியையும்-   பல்கலைக்கழகத்தின் அவல நிலையையும் பறை சாற்றுகின்றது. இந்த வரியின் அர்த்தம் பற்றி பல பத்திகள் எழுதலாம். (மேலும்....)

ஐ.நா.வின் அறிக்கை ஆச்சரியங்களை உள்ளடக்கியிருக்கும்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்திய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணை அறிக்கை ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று ஆணையாளர் தன்னிடம் உறுதியளித்ததாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான மேற்படி அறிக்கை, எதிர்வரும் செப்டெம்பரில் வெளியாவது உறுதி என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் - ஹ§சைன் தன்னிடம் உறுதியளித்ததாக எரிக் சொல்ஹெய்ம், தனது ட்விட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த அறிக்கை பல ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் குறிப்பிட்டார் என்றும் அந்த டுவிட்டர் பதிவில் எரிக் சொல்ஹெய்ம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடேன் - மஹிந்த

ஜனாதிபதி தேர்தலில் நான் மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிகம ரஜமஹா விஹாரையில் 28ஆம் திகதி நடைபெற்ற ஆசீர்வாத போதி பூஜையில் கலந்துகொண்டதன் பின்னர் அங்கு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சகல அபிவிருத்தி நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதுதான் நல்லாட்சியா, நல்லாட்சி தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி பேசுகின்றது. அதுவும் நல்லாட்சியில் இருக்கின்றது. நான், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று இவர்கள் சட்டத்தை தயாரிக்கின்றனர். நான், மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டேன். சமுர்த்தி உதவியாளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைதுசெய்துள்ளனர். காவியுடைக்கான துணிகளை விநியோகிப்பது தவறா? எதிர்க்காலத்தில் அரச ஊழியர்கள் கடமையாற்றுவதற்கு அஞ்சுவர். இலஞ்சம் என்று கூறி யாரையும் கைது செய்யமுடியும். தயவு செய்து அவற்றை நிறுத்துங்கள் என்றும் அவர் கூறினார்.

மைத்திரி – மஹிந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்து, அவர்களுக்கிடையிலான கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க புதிய முயற்சியொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். இதற்காக எதிர்வரும்; மே மாத வெசாக் உற்சவத்தின் பின்னர், அவ்விருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே வெல்கம எம்.பி குறிப்பிட்டார்.  மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெறாமைக்கு காரணம் குறித்த தினத்தில், மஹிந்த ராஜபக்ஷவால் கலந்துகொள்ள முடியாமல் போனமையே எனவும் அவர் கூறினார்.

சித்திரை 29, 2015

அன்று முன்பு பின் கதவால் செய்ததை இன்று பகிரங்கமாக செய்ய முற்படுகின்றனர். மக்களுக்கு பலன் கிடைக்குமா ?

(மாதவன் சஞ்சயன்)

போராளிகளாக இருந்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின் இணக்க அரசியல் செய்தவர்கள் கூட பேரம் பேசும் பலம் அற்றவர்களாகவே இருந்தனர். மக்களின் அவலங்களை தீர்க்கும் முழுமையான செயலை பிரபாகரன் முடிவிற்கு பின்பும் அவர்களால் செய்ய முடியவில்லை.
ஆட்சியில் இருக்கும் போது அதிகாரத்தில் இருந்தவருடன் குசு குசுக்க முடிந்ததே தவிர குரல் எழுப்ப முடியவில்லை. மத்தியில் பதவி கிடைத்தது ஆனால் மாகாணத்தில் முழுமையாக செயல்பட முடியவில்லை. இன்று ஆட்சியில், பதவியில் இல்லாத போது அவர்களின் பேச்சுக்களும், விடும் அறிக்கைகளும் அதற்கு சாட்சி. மக்கள் காணி மக்களுக்கே ! அப்பாவிகளை விடுதலை செய் ! இரகசிய முகாம்கள் இருக்கிறதா ? என பலவாறாக குரல் இப்போது தான் பகிரங்கமாக ஒலிக்கிறது. அரசியல் போரட்டத்திலோ ஆயுத போராட்டத்திலோ சம்மந்தபடாத இரண்டும் கெட்டான்கள் செய்த இணக்க அரசியல் அவர்களையும் அவர்களின் வியாபாரங்களையும் தான் பலனடைய செய்தது. (மேலும்....)

19 ஆவது திருத்தம் நிறைவேற்றம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் அறுதிப்பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 215 பேர் வாக்களித்தனர். எதிராக சரத் வீரசேக எம்.பி வாக்களித்தார். ஜனநாயக தேசிய முன்னணியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார எம்.பி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.  இந்த சட்டமூலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தில் 27ஆம் திகதி சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். நேற்று செவ்வாய்க்கிழமையும் விவாதம் நடத்தப்பட்டது.  இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர், வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவையமர்வு ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டது.  அதன்பின்னர் பெயர் கூப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் சமூகமளிக்கவில்லை.

ஐங்கரநேசன், சத்தியலிங்கம் ஆகியோருக்கு மருத்துவ சங்கத்தால் வைக்கப்பட்ட முதல் ஆப்பு

சுன்னாகத்திலும் அதனை அண்டிய பகுதிகளிலும் நிலத்தடி நீரில் எண்ணெய் (கழிவோயில்) கலந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்று நீர் விவகாரம் சம்பந்தமாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் யாழ்ப்பாணம் மாவட்ட மருத்துவர்கள் சமுகத்துக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு 25.04.2015 அன்று முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்றது. முதலமைச்சருக்கும் மருத்துவர்கள் சமுகத்துக்கும் இடையிலான குறித்த சந்திப்பின் ஏற்பாட்டாளராக (தூதராக) இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் செயல்பட்டார்.(மேலும்....)

இந்திய மீனவர்களே இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறல்

தங்கம், போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபாடு; இந்திய கடலோர காவற் படையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவது மட்டுமல்ல இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் இந்திய மீனவர்கள் சேதப்படுத்துகின்றனர். இந்திய மீனவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாலேயே அவர்களை இலங்கை கைது செய்கின்றதென இந்திய கடலோர காவல்படையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்திய மீனவர்கள் தங்கம், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்கள், இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி செல்வதால் இலங்கை கடலோர காவல் படைக்கும் நமது மீனவர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. இதற்கு இந்திய கடலோர காவல்படை பொறுப்பேற்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் இந்திய கடலோர காவல்படை பிரதிப் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர் களுக்கு கடலில் முப்படை பாதுகாப்பு வழங்கக் கோரி, வழக்கறிஞர் எஸ். எம். ஆனந்தமுருகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.(மேலும்....)

நேபாளத்தை போன்றே சமனான அளவில் வட இந்தியாவில் பூகம்பம் ஏற்படும் சாத்தியம்

நேபாளில் ஏற்பட்ட பூகம்பம் போல் அதே அளவுக்கு சமமான அளவில் வடஇந்தியாவில் பூகம்பம் ஏற்படலாம் என புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நேபாள நில நடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.9 புள் ளிகளாக பதிவாகியது. இது குறித்து அகமதாபாத்தில் உள்ள பூகம்பவியல் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரஸ்தோகி கூறியதாவது: நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பம் அளவுக்கு சமமான அளவில் இமயமலையை ஒட்டியுள்ள காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பூகம்பம் ஏற்படலாம். அது இன்றி லிருந்து அடுத்த 50 ஆண்டுக்குள் வரை எப்போதும் வேண்டுமானாலும் ஏற்படலாம். (மேலும்....)

ஈழத் தமிழர் மயூரன் உட்பட 8 பேரின் மரண தண்டனை நிறைவேற்றம்!

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்ளிட்ட 8 பேரின் மரண தண்டனை நள்ளிரவு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்தோனேசியாவில் போதைப்பொருட்கள் கடத்தல் என்பது கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்றவற்றைவிட கொடிய குற்றமாக கருதப்படுகிறது. அங்கு போதைப்பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி 8.3 கிலோ ஹெராயின் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ சான் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். (மேலும்....)

நேபாள பூகம்பம்

உயிர்ப் பலி 10,000 ஐ எட்டும் அச்சம்

நேபாளத்தை தாக்கிய பயங்கர பூகம்பத்திற்கு பின்னர் அங்கு யுத்த கால அடிப்படையில் மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுவதாக குறிப்பிட்டிருக்கும் அந்நாட்டு பிரதமர் சு'pல் கொய்ராலா உயிர்ப் பலி 10,000ஐ எட்டும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார். "அரசு யுத்த கால அடிப்படையில் தன்னால் முடியுமானவரை மீட்பு, நிவாரணங்களை முன்னெடுக் கிறது" என்று ராய்ட்டருக்கு குறிப்பிட்ட கொய்ராலா, "இது நேபாளத்தின் சிக்கலான மற்றும் சவாலான காலம்" என்று தெரிவித்தார். 28 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இமய மலை நாடான நேபாளத்திற்கு சர்வதேச உதவி கள் வர ஆரம்பித்துள்ளன. கடந்த சனிக்கிழமை ரிச்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாக பதிவான பூகம்பம் தாக்கி நான்கு தினங்களை கடந்த போதும் நிவாரணப்பணிகள் மந்தமாகவே இடம்பெற்று வரு கிறது. பூகம்பத்தால் 8 மில்லியன் பேர் பாதிக்கப் பட்டிருப்பதாக ஐ.நா. கணித்துள்ளது. (மேலும்....)

சித்திரை 28, 2015

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 8)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். (மேலும்....)

சித்திரை 28, 2015

19 சரித்திர முக்கியத்துவ வாக்கெடுப்பு இன்று

3/2பெரும்பான்மையுடன் நிறைவேறும் சாத்தியம்?

முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறுகிறது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மத்திய குழு தீர்மானித்துள்ள நிலையில் எதிர்த்தரப்பின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இது நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)

20 நிறைவேற்றும் உறுதிக்கமையவே 19 ஆதரிக்கின்றோம்

பாராளுமன்றம் கலைக்கப்பட முன்னர் 20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப் படும் என்ற ஜனாதிபதியின் உறுதி மொழிக்கு அமையவே 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித் திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால.டி.சில்வா தெரிவித்தார். அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், பாராளுமன்ற வரலாற்றில் முக்கிய நாள் இது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் யாப்பில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 19வது திருத்தம் சமர்ப்பிக்கப்பட்டது முதல் அதில் பலதடவைகள் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனைக் குழப்புவது எமது நோக்கம் அல்ல. அரசியலமைப்புத் திருத்தத்திற்கு முன்னர் அது குறித்து பாராளுமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கருத்து பெறப்பட வேண்டும். 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு நாம் எதிரானவர்கள் அல்ல.

காணாமல் போன சம்பவங்கள்
60% புலிகளும் 30% படையினருமே பொறுப்பு

இலங்கையில் போர் நடைபெற்ற காலத்தில் நூற்றுக் கணக்கானோர் காணாமல் போன சம்பவங்களுக்கு இலங்கை படையினர் விடுதலைப் புலிகள் உட்பட குறைந்தது 4 வித்தியாசமான குழுக்கள் பொறுப்புக்கூற வேண்டும் என விசாரணை ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் 1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை வழங்க நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது. காணாமல் போனமை தொடர்பான மீதமுள்ள 10 வீதத்திற்கு ஆயுதக் குழுக்களும் ஏனைய அடையாளம் தெரியாத குழுக் களுமே பொறுப்பு எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 16 ஆயிரத்து 153 முறைப்பாடுகள் கிடைத் திருக்கின்றன. இவற்றில் 5 ஆயிரத்து 200 முறைப்பாடுகள் பாதுகாப்பு படைகளை சேர்ந்தவர்களின் குடும்பத்தி னரிடம் இருந்து கிடைத்திருந்தன. அத்துடன் வாய்மொழி மூலமாக ஆணைக்குழு சுமார் ஆயிரத்து 440 முறைப்பாடுகளை பெற்றிருந்தது. அதேவேளை பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட காணாமல் போக செய்தல் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங் களுடன் தொடர்புடையவர்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு சட்ட மா அதிபருக்கு அறிக்கையிட்டுள்ளது. இந்நிலையிலேயே 60 வீதமான காணாமல் போகச் செய்யப்பட்டதற்கு புலிகள் பொறுப்புக் கூற வேண்டும் என ஜனாதிபதியிடம் கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இந்திய கரையோர காவல்துறையினர் குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் காரணமாகவே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கின்றனர் என்று இந்திய கரையோர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சென்னை மேல் நீதிமன்றத்தில் இது தொடர்பில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டது. இலங்கை கடற்பரப்புக்குள் சென்றதன் பின்னர் இலங்கை கடற்படையினருக்கும் இந்திய மீனவர்களுக்கும் இடையில் இடம்பெறும் மோதல்களுக்கு தாம் பொறுப்புக்கூற முடியாது என்றும் கரையோர காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்திய மீனவர்களுக்கு இந்திய கரையோரப்படையினர் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றுக்கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை இன்று இடம்பெற்றது. இதன்போதே கரையோர காவல்துறையின் உதவி பணிப்பாளர் நாயகம் கே.ஆர். நியூட்டியல் இதனை தெரிவித்தார். இதேவேளை இந்திய மீனவர்கள் ஒருபோதும் இந்திய கடற்பரப்பில் வைத்து தாக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வழக்கை குழி தோண்டி புதைக்க முயன்ற தமிழக அரசு

அதை ஆணையிட்டு நடத்தும் ‘மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா அவரது அடிமைகள் ஓ.பி.எஸ் முதலான அற்பங்கள்

ஐ.எஸ்.ஐ.எஸ்., தலைவன் மரணம்

ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபுபக்கர் அல் - பக்தாதி, இறந்து விட்டதாக, ஈரான் வானொலி அறிவித்துள்ளது. ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு ஆக்கிரமித்து, இஸ்லாமிய நாடு என்ற பெயரில் ஆட்சி செய்து வருகிறது. அல் - குவைதாவில் இருந்து பிரிந்த இந்த அமைப்பின் தலைவனாக, 2010ல் அல் - பக்தாதி பொறுப்பேற்றான். அது முதல், பிணைக்கைதிகளை கழுத்தறுத்து கொல்வது உள்ளிட்ட படு பயங்கர வாத நடவடிக்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ்.,ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பின் தலைவன் அல் - பக்தாதியின் தலைக்கு, 60 கோடி ரூபாய் பரிசு தருவதாக, அமெரிக்கா அறிவித்துள்ளது. (மேலும்....)

தொங்கும் உறவு

தன்னை அறியாமலே
தந்தையில்-பின்
அன்னையில்
தொங்கித் தூங்கினாள்.

ஈன்று புறமெறிந்த பின்
தாயிலும் –பின்
தந்தையில்…
தம்பியில்…
தமையனில்…
தொங்கித் தொங்கியே
சுமையானவளை
ஊர் உறவுகள் கூடி
குடும்பத்தில் காய்ந்து கருவாடாக
மஞ்சள் கையிற்றில் தூக்கிலிட்டனர்

சாகும் வரையும்
தூங்கும் அக்கயிற்றில்
தூங்கத் தொடங்கிவிட்டாள்
அவள் மகளும்.


(நோர்வே நக்கீரா, 27.04.2015)


அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியே - இரா.சம்பந்தன்

மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியதன் பின்னர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரும் மேற்படி திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கருத்துரை வழங்கினர்.  இதனையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கருத்துரைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா.சம்பந்தன், 'நாடாளுமன்றத்தின் மீது எந்த நேரத்திலும் பாரிய தீங்கை விளைவிக்கக்கூடிய ஒன்றாக அரசியலமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டம் இருந்தது. அது, ஜனாதிபதியின் தயவில் நாடாளுமன்றம் தங்கியிருக்கும் நிலையை ஏற்படுத்தியிருந்தது' என்றார்.

 

நேபாளத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்ட கிராமங்கள் முற்றாக தரைமட்டம்

நேபாளத்தில் நில நடுக்கத்தால் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கும் தலைநகர் கத்மண்டு வுக்கு அருகிலுள்ள கிராமங்கள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டிருப்பது வான்வழியாக எடுக்கப்பட்ட படங்கள் மூலம் உறுதியாகி யுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற நில நடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதிக்கு அருகில் இருக்கும் லபரக் மற்றும் பார்பக் ஆகிய கிராமங்களின் சுமார் 1000 வீடுகளில் 90 வீதமான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. பார்பக் கிராமத்தில் உயிர்தப்பியவர்களை மீட்க இரவில் தென்படக்கூடிய வசதி கொண்ட ஹெலிகொப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக நேபாள அமைச்சரான ராமம் 'ரன் மஹத் டுவிட்டர் ஊடாக குறிப்பிட்டிருந்தார். தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்கு அனைத்து வளங்களையும் பயன்படுத்தி இருப்பதாக நேபாள பொலிஸ் பேச்சாளர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். நிலநடுக்கத்தை அடுத்து பல கிராமங்கள் மற்றும் நகர்புறங்களில் பாரிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதால் வீதிகள் தடைப்பட்டுள்ளன. இதில் மோசமாக பாதிக் கப்பட்டிருக்கும் குர்கா பிராந்தியம் மக்கள் செறிந்துவாழும் பகுதியாகும்.

 

நேபாளத்தின் சிதைந்து போன எழில் முகம்

நேபாளத்தில் பலியானோரின் எண்ணிக்கை நேற்றைய தக வல்களின்படி 3700 ஐத் தாண்டிவிட்டது. நாட்டின் சிறிய பரப்பளவுடனும் மக்கள் தொகையுடனும் ஒப்பிடும்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை மிக அதிகமென்றே கூறவேண்டியுள்ளது. காயமடைந்தோரின் எண்ணிக்கை நேற்று 6500 ஐத் தாண்டியிருந்தது. பூகம்பத்தில் கொல்லப்பட்டோரின் உடல்களையும், இடிபாடுகளுக்குள் உயிருடன் அகப்பட்டுக் கொண்டோரையும் மீட்கும் பணி அரைவாசி கூட பூர்த்தியடையாதிருக்கும் இந்நிலையில் பலியானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென்றே அஞ்சப்படுகிறது.(மேலும்....)

விழுந்த பனை

ராஜினியிலிருந்து போரின் முடிவு வரை.....

நமது நாட்டில் போர் குறித்து பிரபல மனித உரிமை ஆர்வலர் பேராசிரியர் ராஜன் ஹூல் தற்போது எழுதியிருக்கும் “ விழுந்த பனை- ராஜினியிலிருந்து போரின் முடிவு வரை “ என்ற புத்தகம் மீதான ஒரு விவாதம் இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுவதாக இருந்தது.ஏற்கனவே பேராசிரியர் ராஜன் ஹூல், மறைந்த ராஜினி திராணகமவுடன் மற்றும் பேராசிரியர் தயா சோமசுந்தரம் மற்றும் பேராசிரியர் ஸ்ரீதரன் ஆகியோருடன் இணைந்து எழுதிய “முறிந்த பனை” என்ற புத்தகம் இலங்கைப் போரின் ஆரம்ப கட்டங்களைப் பற்றிய ஒரு ஆய்வாக பல விமர்சகர்களால் கருதப்பட்ட்து.இதற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருக்கிறது.இந்தப் புத்தகம் ஒரு சர்ச்சைக்குரிய புத்தகம், இது குறித்த விவாதங்களை பல்கலைக் கழக வளாகத்தில் நடத்த அனுமதிக்க்க்கூடாது என்று யாழ் பல்கலைக் கழக மாணவர் சங்கமும், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் தனக்கு மனு தந்த்தாகவும், அதனையடுத்தே, பீடாதிபதிகளைக் கலந்தாலோசித்த பின், தான் இந்த முடிவை எடுத்த்தாகவும் பிபிசி தமிழோசையிடம் கூறினார் பல்கலைக் கழக துணைவேந்தர் வசந்தி அரசரத்னம். ஆனால் இந்தப் புத்தகத்தை தான் படிக்கவில்லை என்றும் அவர் கூறினார். பல்கலைக் கழகத்தின் இந்த முடிவு குறித்து கருத்து தெரிவித்த இந்தப் புத்தகத்தை எழுதிய ராஜன் ஹூல், பல்கலைக்கழகத்தின் இந்த தடையை மீறி, இந்த விவாதம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி நூலக அரங்கில் நடந்ததாகக் கூறினார்.இந்தப் புத்தகம் ஜனநாயகத்துக்கு எதிரானதல்ல, அதே போல இது தமிழ் தேசியத்துக்கு எதிரானது என்று சிலர் பட்டம் கட்டியிருப்பதிலும் ஒரு வித அர்த்தமும் இல்லை, மேலும் பல்கலைக் கழகத்தில் இது போன்ற புத்தக விவாதங்கள் பல நடத்தப்பட்டிருக்கின்றன, எனவே இந்த விவாதத்தைத் தடை செய்வதற்கு எந்தவித காரணமும் இல்லை என்று கூறினார் ராஜன் ஹூல்.இன்று நடந்த விவாதத்தில் கொழும்பிலிருந்தும் தேசிய பல்கலைக்கழக ஆசிரியர்கள் சம்மேளனத்திலிருந்தும் பலர் கலந்துகொண்டிருந்ததாகவும் அவர்களில் எவரும் இந்த புத்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார் ராஜன் ஹூல்.

செல்லப்பாவுக்கு படியளக்கும் தமிழர்கள் இங்கே! 3000 புலிகளுக்கு படியளக்கும் சிங்களவர்கள் அங்கே!!

புலம்பெயர் நாடுகளில் உள்ள சில தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் ஈழத்தில் உள்ள முன் நாள் போராளிகளை முற்றுமுழுதாக கைவிட்டுவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. இங்கே லண்டனில் தேனிசை செல்லப்பாவை அழைத்து பாடவைத்து சில அமைப்புகள் பூச்சாண்டி காட்டிவருகிறார்கள். மே 18 என்றவுடன் இ சில அமைப்புகள் நினைவு தினத்தை வைத்துவிட்டு மட்டும் சென்றுவிடுகிறார்கள். ஆனால் தமிழர்களின் உரிமைக்காக எமது விடுதலக்காக உயிரை துச்சமாக மதித்துப் போராடிய பல போராளிகள் தற்போது அங்கங்களை இழந்து இருக்கிறார்கள். அவர்களை கூட பராமரிக்க புலம்பெயர் தமிழர்கள் மறந்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். ஆனால் மைத்திரி அரசானது ஒரு புது திட்டம் ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது. (மேலும்....)

பாரடா!  சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன

உலகின் நம்பர் 1 பயங்கரவாத அமைப்பின் பிரதிநிதிகளும், ஆதரவாளர்களும் மனித உரிமை பற்றி பேசுகிறார்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான வருடாந்தக் கருத்தரங்கு.
மனித உரிமைகளுக்கான வருடாந்தக் கருத்தரங்கினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கனடாவில் ஒழுங்கு செய்துள்ளது. இக்கருத்தரங்கு எதிர்வரும் சனிக்கிழமை ஏப்ரல் 25 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிமுதல் 6.00 மணிவரை இடம்பெறும். மறுநாள் ஏப்ரல் 26 ஆம் திகதி அரசாங்க பிரதிநிதிகள் மதியுரைஞர்கள், ஆதரவாளர்கள் இணையும் வருடாந்த கூட்டாய்வு விளக்கவுரைச் சந்திப்பு இரவு விருந்துபசார நிகழ்ச்சியுடன் 20 Torham Place,Toronto என்ற முகவரியிலிருக்கும் ஸ்காபரோ கன்வென்சன் சென்ரரில் நடைபெறும். கருத்தரங்கில் தமிழர் தாயகத்தில் குறிப்பாக மே 2009க்குப்பின் இன்றுவரை வியாபித்திருக்கும் சிங்கள இரணுவத்தின் பிரசன்னமும்இ ஆக்கிரமிப்பு பற்றியும், ஈழத்தமிழர்களின் இருத்தலையும் எதிர்காலத்தையும் கேள்விக்குள்ளாக்கும் நிலையில் அடுத்தடுத்து வந்த ஸ்ரீலங்கா அரசாங்கங்களின் தமிழ் மக்களுக்கெதிராக இனஅழிப்பு குறித்து முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான விக்கினேஸ்வரனால் வடக்குமாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் பேசப்படும்.

19ஆவது திருத்தம்

சம்பந்தனுக்கு 3 எம்.பி.க்கள் கோரிக்கை

புதிய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு வழங்கிய சிறு வாக்குறுதிகளைக்கூட நிறைவேற்றவில்லை. இந்நிலையில் 19ஆவது திருத்தச்சட்டமூலம் இவ்வாரம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது. அச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் வினோநோகராதலிங்கம் ஆகியோர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர். (மேலும்....)

19 ஆவது திருத்தம் மீது இன்றும் நாளையும் விவாதம்

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலான விவாதம் இன்று 27ஆம் திகதி திங்கட்கிழமையும் நாளை 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் விவாதத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவிருக்கின்றது. ஜனாதிபதியிடம் இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களை குறைக்கும் வகையில் அமையும் இந்த சட்டமூலம் தொடர்பிலான நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் ஜனவரி மாதம் 21ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றன. 2015ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஆரம்பமான அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் 100 ஆவது நாள், கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், சட்டமூலம் மீதான விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவிருக்கின்றன. (மேலும்....)

கடந்த ஆட்சியில் நானும் பாதிக்கப்பட்டேன், பழையதை மறந்து சு.கவை பலப்படுத்துவோம் - சமல் ராஜபக்ஷ

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமைதாங்க வேண்டுமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் பங்களிப்புடன் கட்சியின் செயற்பாடுகளை மேலும் பலம்பொருந்தியதாக முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷவை இணைந்துக்கொண்டு ஜனாதிபதி, கட்சியை தலைமைத்துவம் தாங்கி முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். அது அவ்வளவு சிரமமான காரியமல்ல. ஒரு சில பிரச்சினைகளே அங்கு காணப்படுகின்றன. நாங்கள் நாட்டை ஆட்சி செய்த காலத்தில் நான் பலதடவைகள் மனம் நோகடிக்கப்பட்டுள்ளேன். ஆனாலும் நாம் அதனை மறக்க வேண்டும். கடந்த காலங்களில் விட்ட தவறுகள் மீண்டும் இடம்பெறாதவகையில் நாம் பரஸ்பர புரிந்துணர்வுக்கு வரவேண்டும். எமது இந்த அரசியல் பயணத்தை நாம் உறுதியுடன் முன்னோக்கி கொண்டுச் செல்ல வேண்டும். எம்மிடையே பிரிவு ஏற்பட்டிருந்த போது 1977 மற்றும் 2001ஆம் ஆண்டுகளில் எமக்கு என்ன நடந்தது என்பதனை நாம் நினைவுகூர வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.

நேபாள நிலநடுக்க பலி எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்தது!

நேபாளத்தை தாக்கிய மிக மோசமான நிலநடுக்கத்தின் பேரழிவில் பலியானோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. நேபாளத்தை கடந்த 80 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான நிலநடுக்கம் நேற்று முன் தினம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 7.9 ஆக பதிவாகி இருந்தது. அதன்பின் மீண்டும் மீண்டும் நில அதிர்வுகள் ஏற்பட்டது. நேற்று மட்டும் தொடர்ந்து 16 முறை நிலநடுக்கம் உலுக்கியது. (மேலும்....)

 

கியூபாவின் குழந்தைகள்.

கியூபாவின் குழந்தைகள். பாடசாலையில் மதிய இடைவேளையின் போது, சிறிது நேரம் தூங்கி ஓய்வெடுக்கிறார்கள். கியூபா ஒரு மூன்றாமுலக வறிய நாடாக இருந்த போதிலும், அங்குள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப் படவில்லை. எந்தக் குழந்தையும் தெருவில் பிச்சை எடுக்கவில்லை அல்லது கிரிமினல் கும்பல்களுடன் சேரவில்லை. நில அபகரிப்பால், அல்லது வாடகை கட்ட முடியாததால், எந்தக் குழந்தையும் அது வசித்து வந்த வீட்டில் இருந்து வெளியேற்றப் படவில்லை. தரமான மருத்துவமும், அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு சோஷலிச கட்டமைப்பின் கீழ் உறுதிப் படுத்தப் பட்டுள்ளன.

சித்திரை 26, 2015

I want to come back - Perumal

(by Dilrukshi Handunnetti)

The controversial former Chief Minister of the United Northeastern Provincial Council, Varatharaja Perumal believes that Sri Lanka needs a Devolution Commission to look into the various aspects of power sharing and ensure the full implementation of the 13 Amendment to the Constitution in spirit and letter. Perumal who is visiting Sri Lanka at present, said such a body should be autonomous and should work towards achieving consensus between the Centre and the PCs. Excerpts of the interview: (more.....)

என் மனவலையிலிருந்து.......

19, 20 நிஜமா? நாடகமா? 13 காணமல் போய்விட்டதா?

(சாகரன்)

பாராளுமன்றத்தில் 19, 20 திருத்தச் சட்ட மூலங்கள் சகலரதும் ஆதரவுடனனேயே அங்கீகரிகக்படலாம், நிறைவேற்றப்படலாம் என்ற சூழ்நிலையில் பசில் ராஜபக்ஷவின் இலங்கை திரும்பிய நிகழ்வும் அதனைத் தொடர்ந்த கைதும் இடம் பெற்றுள்ளது. இதன் இன்னொரு முனையாக கோட்டா மீதான் விசாரணை என்று மறு முனையும் திறக்கப்பட்டுள்ளது. இவற்றிறகு எதிர்ப்பு தெரிவித்து சுதந்திரக்கட்சி ஆதரவாளர்கள், கட்சி அபிமானிகள் அரசியல்வாதிகள் ஆர்ப்பாட்ட ஊர்வலம் என்றும் புறப்பட்டுள்ளனர். கூடவே மகிந்த ராஜபக்ஷ உம் லஞ்ச ஆணைக்குழுவின் முன் தோன்றி வாக்கு மூலம் கொடுக்க வேண்டும் என்ற செயற்பாடும் இதனைத் தொடரந்து பாராளுமன்றத்தினுள் போராட்டம் என்ற பல முனைத் செயற்பாடுகளும் இதற்கு எதிரான சுதரக்கட்சியினரின் எதிர்பலையும் உருவாகி வருகின்றது. இந்நிலையில் 20 திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்து சட்டமூலங்களின் விவாதத் தேதிகள் பின்போடப்பட்டுள்ளன.(மேலும்....)

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவு

நேபாளத்தில் இன்றைய தினம் மீண்டும் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் கோதாரியில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இன்றைய தினம் மீண்டும் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கமானது வட இந்தியாவின் பல பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. பீஹார், ஜார்கண்ட், அசாம், மேற்கு வங்கம் மற்றும் புது டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தின் அயல் மாநிலமான மேற்கு வங்க மாநிலத்தில் நிலநடுக்கத்தின் பாதிப்பு அதிகமாக உணரப்பட்டுள்ளதாக இந்தியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, எவரெஸ்ட் மலைத்தொடரில் மேலும் பல பனிச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இன்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 

பூகம்பத்தின் போது 388 கனடியர்கள் நேபாலில்?. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,800 ஆக உயர்வு.

வெளியுறவுத்துறையினரின் கணிப்பின் பிரகாரம் ஒரு மதிப்பீட்டளவில் 388 கனடியர்கள் நேபாலில் இருந்துள்ளனர் என பதிவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவர்களுள் முன்னாள் நியு பிறவுன்ஸ்விக் என்டிபி தலைவர் எலிசபெத் வெயிரும் ஒருவராவார். வேல்ட் விசன் கனடா குழந்தை பாதுகாப்பு ரோறொன்ரோ நிவாரண பணியாளர் றீனா வொஹ்ரா நிலநடுக்கம் தாக்கிய சமயத்தில் காட்மண்டுவிலிருந்து 20-கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பழமை வாய்ந்த நகரமான பாக்ரபுர் சென்றிருந்தார்.இவர்கள் இருவரும் பூகம்பத்தின் அதிர்வுகளை உணரந்து ஆட்டம் கண்டதாக தெரிவித்துள்ளனர். காட்மண்டு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இவர்கள் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளனர். நேபால் மக்கள் நெருக்கமாக வாழும் காட்மண்டு பள்ளதாக்கில் கிட்டத்தட்ட 1,800 மக்கள் இந்த பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி Stephen Harper வெளியிட்ட அறிக்கை ஒன்றில் உறவுகளை இழந்தவர்களிற்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.கனடியர்கள் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள உள்ளாட்சி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் பேரழிவிற்கு உதவுவதற்கான சரியான வழி வகைகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள கனடியர்களிற்கு உதவுவதற்காக ஒட்டாவாவிலுள்ள அவசர கண்காணிப்பகம் மற்றும் பதில் மையம், மற்றும் வெளிநாட்டு கனடிய அதிகாரிகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார துறை பேச்சாளர் தெரிவித்தார்.

29 இல் பாராளுமன்றம் கலைப்பு?

எதிர்வரும் 29 ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 19வது திருத்தச் சட்டம் நாளை 27 ஆம் திகதி வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. நாளை மறுதினம் 28ம் திகதி சட்டமூலம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்போது அது தோற்கடிக்கப்பட்டால் அன்றைய தினமே பாராளுமன்றத்தை கலைத்துவிடும் நிலைப்பாட்டில் அரசாங்கம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான சிலர் பாராளுமன்றத்தில் இருந்து வருவதனால் தேர்தலை நடத்தி மக்கள் மூலமாக அவர்களை விரட்ட வேண்டும் எனும் கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் நிலையிலேயே அரசாங்கம் இந்தத் தீர்மானத்திற்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை எதிர்வரும் மே மாதம் முதலாம் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தேசிய நிறைவேற்றுச் சபையின் உறுப்பினரான ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். ஆனாலும் 19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாமல் பாராளுமன்றம் கலைக்கப்பட மாட்டாதென ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளுக்கு எதிராகவே 60 சதவீத முறைப்பாடுகள்

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை

வடக்கில் இடம்பெற்ற காணாமற்போதல் சம்பவங்களில் 60 சதவீதமான முறைப்பாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், 30 சதவீதமான முறைப்பாடுகள் அரச படைகளுக்கு எதிராகவும், 5 சதவீமான முறைப்பாடுகள் ஆயுதக் குழுக்களுக்கு எதிராகவும்முன் வைக்கப்பட்டுள்ளன என்று காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காணாமற் போனோர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு, இடைக்கால அறிக்கையை ஜனாதிபதிக்கு சமர்பித்திருந்தது. அந்த அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஆணைக்குழு விடுத்துள்ள ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 7)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். (மேலும்....)

நேபாள பூமியதிர்வில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 ஆக அதிகரிப்பு

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான பூமியதிர்ச்சியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,800 இற்கும் அதிகமாக உயர்வடைந்துள்ளது. இந்த பூமியதிர்ச்சியை தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் சுமார் 80 வருடங்களின் பின்னர் மிக மோசமான பூமியதிர்ச்சி நேற்று சனிக்கிழமை காலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 7.8 ரிச்டர் அளவிலான பூமியதிர்ச்சி தலைநகர் காத்மண்டுவுக்கும் போக்ஹாரா நகருக்கும் இடையிலான மத்திய நேபாளப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளது.  இந்த பூமியதிர்ச்சியின்போது 1,805 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4,718 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு உட்துறை அமைச்சின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து பல நாடுகளும் சர்வதேச தொண்டு நிறுவனங்களும் உதவிப் பொருட்களை வழங்கியுள்ளன. இந்த பூமியதிர்ச்சியின்போது, எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் ஏற்பட்டுள்ள பனிச்சரிவு காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவே எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் இதுவரையில் ஏற்பட்டுள்ள மிக மோசமான அனர்த்தமாகும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். 1934ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்டிருந்த மிக மோசமான பூமியதிர்ச்சியில 8,500 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மலேசியப் பேச்சுத் தமிழ்

மலேசியாவில் சுமார் (2.5 மெய்யிரம்) 25 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். மலேசிய தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் அழகான இனிமையான தமிழைக் கேட்கலாம். அறிவிப்பாளர்கள் வேறுமொழி கலவா தூயதமிழில் பேசுவதைக் கேட்கும் போது மிகவும் இனிமையாக இருக்கும். குறிப்பாக, THR Raaga எனப்படும் வானொலி அறிவிப்பாளர்கள் அழகாக தமிழில் பேசுவார்கள். சுழியம், இணையம், வலப்பக்கம், கைப்பேசி.. இப்படி ஏராளமான தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தியே பேசுவார்கள். மேலும், ஆஸ்ட்ரோ வானவில் அலைவரிசையின் விழுதுகள் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களும் அழகிய தமிழிலே பேசுவார்கள். (மேலும்....)

வெளிநாட்டிலுள்ள 400 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கத் தீர்மானம்

வெளிநாட்டிலுள்ள 400 இலங்கைப் பிரஜைகளுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கு பொது அமைதிக்கான அமைச்சு தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 30ம் திகதி அவர்களுக்கான இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.
இரட்டை பிரஜாவுரிமையைப் பெற்றுக் கொள்வதற்கு மேலும் ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். விசேட குழுவொன்றின் மூலம் குறித்த விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்படுவதாகவும் பொது அமைதிக்கான அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

உன்னை யாரக்கா நம்பச் சொன்னது?

மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை - அனந்தி சசிதரன்.

தாம் இன்னமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நம்பத் தயாரில்லை என்று வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழ் மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு இன்னும் புதிய அரசாங்கம் சிறந்த தீர்வுகளை முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அபகரிக்கப்பட்ட காணிகளை இராணுவம் பொதுமக்களிடம் மீள வழங்கி எனினும் ஒட்டகப்புலத்தில் மக்கள் வீதியோரங்களில் இருந்து கொண்டு தமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்று ஏங்கிக் கொண்டிருப்பதாக அனந்தி குறிப்பிட்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்துள்ள அவர்இ சிறையில் பல வருடங்களாக அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர் யுவதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பதையும் அனந்தி சுட்டிக்காட்டியுள்ளார். (1990 ம் வருடம் புலிகள் கைது செய்த 4000க்கு மேற்பட்ட தமிழர்கள் பற்றி அக்காவுக்கு ஏதாவது தெரியுமா? 800 க்கு மேற்பட்ட தமிழ் பெண்களும் புலிகளால் கைது செய்யப்பட்டார்களே. அதில் எத்தனை பெண்கள் கொல்லப்பட்டார்கள்? எத்தனை பெண்கள் புலிகளால் மானபங்கப் படுத்தப்பட்டார்கள்.) இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ தமது யாழ்ப்பாண பயணத்தின் போது அவரை சந்தித்திருக்க வேண்டும் என்றும் அனந்தி கருத்துக் கூறியுள்ளார். இதற்கிடையில் மக்கள் விரும்பினால் மாத்திரமே தமது அரசியல் பயணத்தை நிறுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (அம்மாடி நீயே ஒரு அரசியல் விபத்து. ஏதோ பெரிய அரசியல் செய்வதாக நினைத்துக் கொண்டு நடக்கட்டும் நடக்கட்டும்.

சித்திரை 25, 2015

19 வதற்கு இற்கு எதிரான அதிகார போதை தோற்கடிக்கப்பட வேண்டும்

(சுகு-ஸ்ரீதரன்)

சாமானி இலங்கை மக்களின் எதிர்பார்ப்பு என்ன? இந்த திருத்தச்சட்டம் தொடர்பில் மக்களின் எதிர்பார்ப்பு உச்சபட்ச ஜனநாயகமே. தட்டிக் கேட்பதற்கான உரிமையும் அரச இயந்திர கட்டமைப்பின் பாரபட்சமின்மையும், சுயாதீனமும், ஊழலற்ற தன்மையும் சமூகத்தின் வௌ;வேறு அடுக்குகள் சமூகப் பிரிவினருக்கு சமநீதி வழங்குவதுமாகும். தத்தமது கட்சி, குழுக்கள் தனிப்பட்ட அதிகாரங்களை மனதில் கொண்டு செயற்பட்டால் இந்த முயற்சி பூரணமடையவோ மக்களை ஜனநாயக அபிலாசைகள் என்ற இலக்கை நோக்கிச் செல்லவோ முடியாது. (மேலும்....)

மோடிக்கு முதல்வர் சி.வி செய்த வேலை. இது தேவையா….?

கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க கோரினாரா முதலமைச்சர்??

25வருடங்களாக இந்திய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரது விடுதலைபற்றி கூட்டமைப்பு மௌனம் காத்தே வருகின்றது.
இந்நிலையில் சர்ச்சைக்குரிய பாலியல் வழக்குக் குற்றவாளியான சுவாமி பிரேமானந்தாவின் சகாக்கள் மூவரை புழல் சிறையிலிருந்து விடுதலை செய்யுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைக் கடிதம் மூலம் கோரியிருக்கின்றார் என்று செய்தி வெளியிட்டுள்ள இந்திய ஊடகங்கள், வடக்கு முதல்வரின் கோரிக்கை குறித்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் வெளியிட்டிருக்கின்றன. (மேலும்....)

தமிழர் தலையில் மட்டுமல்ல தம் தலையிலும் மண் போடும் சிங்களம்

(மாதவன் சஞ்சயன்)

காலமாற்றத்தால் இன்று முழு நாட்டிற்கும் நன்மை தரக்கூடிய அரசியல் அமைப்பு மாற்றத்தை அவர்களே கொண்டுவரும் போது அவர்களின் சொந்த இன மக்களே அதனை குழப்புகின்றனர். அன்று இனவாத நோக்கில் இன நலன் சார்ந்த தீர்வை தரவிடாமல் தமிழர் தலையில் மண் அள்ளிப்போட்ட சிங்களம் இன்று தன் நலன் சார்ந்த செயலை செய்ய விடாமல் தன்தலையில் தானே மண்ணை அள்ளிப் போடுகிறது. இதை அறிந்து தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என அன்றே எழுதிவைத்தார் வள்ளுவர். (மேலும்....)

வேரில் விழுந்த விசம்

பிரிவினைவாதம், துவேசம், இனமுரண்பாடுகள், கலவரங்கள், போர் போன்றன இன்று நேற்று இலங்கையில் உருவானதல்ல. இவை ஆதியில் இருந்தே ஆணிவேரில் ஊற்ற ப்பட்ட நஞ்சுகள். இவற்றைச் சரியாக இனங்கண்டு செயற்பப்படாவிட்டால் இருவினமும் அழியும் என்பது திண்ணம். அன்று நடந்தவைதான் மீண்டும் மீண்டும் இன்றுவரை நடக்கிறது என்பதே இதற்கு ஆதாரம். பொதுவெதிரியான வெள்ளையர்களை வெளிறே ற்றுவதற்காக தமிழ் சிங்களம் இணைந்ததே தவிர உதிரத்தில் ஊறிய நஞ்சு இருந்து கொண்டேதான் இருந்தது. வடக்கு தெற்குப்பகுதிகளை இருசாராரும் மாறிமாறி ஆண்டு வந்தாலும் மதரீதியாக நம்பிக்கைகளும் முரண்பாடுகளும் ஆரம்பித்தில் இருந்தே வளர்ந்து வந்திருக்கிறது. இந்தியாவின் ஏற்பட்ட மதஇ அரசியல் மாற்றங்கள் இலங்கை யில் அன்றில் இருந்து இன்றுவரை பிரதிபலிப்பதை அவதானித்திருப்பீர்கள். தேவநம்பி தீசனின் மதமாற்றத்துக்குப்பின்னரே வடக்குத் தெற்கு என்ற பிரவும்இ பெருமுரண்பாடு களும் மிகவேகமாகவும் ஆளமாகவும் வேரூன்றியதை அவதானிக்க முடிகிறது. (மேலும்....)

நாட்டைப்பற்றி எண்ணி 19க்கு கை உயர்த்துங்கள் - ஜனாதிபதி

ஜனநாயகத்தையும் மக்களுக்கான சுதந்திரத்தையும் எதிர்காலத்திலும் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்தார். அரசாங்கம் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் எதனைச் சாதித்துள்ளது என்றும் என்னை ஆளுமையற்ற ஒருவன், செயற்பட முடியாத ஒருவன் என்றும் கூட இக்காலங்களில் விமர்சனங்கள் எழுகின்றன. அவ்வாறு கூறுபவர்களுக்கு நான் கூறவிரும்புவதெல்லாம், கடந்த 8ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற போது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளேன். மீதமானவை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதையே. இலங்கையின் வரலாற்றில் அனைத்து கட்சிகளையும் ஒரே நோக்கத்தின் கீழ் கொண்டுவர எம்மால் முடிந்துள்ளது. இலங்கையிலிருந்து பிரிந்து கிடந்த வெளிநாடுகளை மீள நாட்டோடு ஒன்றிணைக்க முடிந்துள்ளது. நாம் முன்னெடுக்கும் அத்தனை செயற்பாடுகளுக்கும் சர்வதேசத்தின் முழுமையான ஆதரவு தற்பொழுது கிடைத்து வருகிறது. (மேலும்....)

19ஐ நாம் எதிர்க்கவில்லை

குழுநிலையில் திருத்தங்களை முன்வைப்போம்

19 வது திருத்தத்திற்கு குழு நிலை விவாதத்தின் போது ஐ.ம.சு.மு. பல திருத்தங்களை முன்வைக்க இருக்கிறது. 19 வது திருத்தத்தை நாம் எதிர்க்கவில்லை என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி. தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஐ.ம.சு.மு. ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதா வது, 19 வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரங்கள் ரத்தாகாது இதில் குறைந்தளவு விடயங்களே உள்ளன. இதிலுள்ள சில பகுதிகளை ஏற்க முடி யாது 19 வது திருத்தம் குறித்து அரசாங்கம் கூறியதற்கும் முன்வைத்துள்ளதற்குமிடையில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது. (மேலும்....)

தோழர் கபூர்

தோழர் கபூரை கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் பாலசுப்ரமணியனாக 1976ல் அவரது அண்ணனும் எனது சகமாணவனுமான பரமநாதன் மூலம் அறிந்தேன். கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் அவரது வீடு அடிக்கடி எங்கள் சந்திப்பிடமானது. இனிய சுபாவம் கொண்ட அவரது தந்தை மற்றும் தாயார் எம்மை ஒருபோதும் தொந்தரவாகக் கருதியதில்லை. முத்தமிழ் கலாமன்றம் என்ற மறைபெயரில் பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி, ரோயல் கல்லூரி, கொழும்பு இந்துக்கல்லூரி, சென்ட் பீட்ரஸ் கல்லூரி களிலிருந்து சுமார் 50 மாணவர்கள் வரை இணைத்துக்கொண்டு இயங்கினோம். அக் காலத்தில் ஏற்பட்ட மட்டக்களப்பு சூறாவளிக்கு நிதிசேகரித்து உதவ கபூர் புயல்போல் வேலைசெய்தது மனக்கண்ணில் இருக்கிறது. தொடர்ந்து 1977 கலவரம் எம் பலரை பிரித்தது. இதையடுத்து அனேகமானோர் அப்போதைய ஈரோஸ் அமைப்பில் இணைந்து, பின்னர் அதிலிருந்து கெஸ் எனும் மாணவரமைப்பு பிரிந்தபோது அதில் இணைந்துகொண்டனர். கெஸ் இலிருந்து பின்னர் 1981ல் ஈபிஆர்எல்எப் உருவானது. கபூரின் இறுதிக் காலம் மனதை நோகடிக்கிறது. ஈபிஆர்எல்எப் இன் வடமாகாண இராணுவத் தளபதியாக பத்மநாபாவால் கபூர் நியமிக்கப்பட்டாலும், இராணுவத் தளபதியாயிருந்த டக்ளஸ் தேவானந்தா அந் நியமனத்தை வழங்க மறுத்து, அதுகுறித்துப் பேசி முடிவெடுப்பதாகக்கூறி இந்தியா சென்றிருந்த காலம். அதனால் கபூர் இராணுவத்தை வழிநடத்த முடியாதவராக முடக்கப்பட்டிருந்த நிலையில் ஈபிஆர்எல்எப் புலிகளால் தாக்கப்பட்டு, அவர் அவர்களால் கைதுசெய்யப்பட்டார். இது நிகழலாமென உணர்ந்திருந்த அவர் தனது சகாக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது இது. ''நீங்கள் யாராவது பிடிபட்டு விசாரிக்கப்பட்டால் எல்லாப் பொறுப்பையும் என்மீது சுமத்திவிடுங்கள். அவர்கள் என்னைக் கொல்வார்கள். நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். ஒரு கெரில்லாத் தலைவனுக்குரிய துணிவோடு அதைச் சொன்னார். கடைசிக் காலத்தில் புலிகளின் கைதியாக அவருடன் இருந்த தோழர் இழங்கோ இப்போது இல்லை. அவர் சொல்வார், கபூர் அப்போதும் சலனமின்றி யன்னல் வழியே வெளியே தெரியும் தென்னை மரங்களைப் பார்த்து 'இவற்றையெல்லாம் பார்க்க எவ்வளவு அழகாயிருக்குது' என்பாராம். ஒருநாள் கபூரை அறையை விட்டு வெளியே கொண்டு சென்றார்கள். அதன்பின் கபூர் இல்லை!

(Baskey T' Raj)

சித்திரை 24, 2015

மைத்திரி-மஹிந்த சந்திப்பு இரத்து

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடையில் நடைபெறுவதற்கு திட்டமிட்டிருந்த பேச்சுவார்த்தை இரத்துசெய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாகவே இந்த சந்திப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விருவருக்கும் இடையிலான சந்திப்புக்கு நானே ஏற்பாட்டாளராக இருந்தேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறினே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாளை 25ஆம் திகதி இரவு 7 மணிக்கு சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார். எனினும், ராஜபக்ஷவின் வேலைப்பளு காரணமாக அவரால் சந்திக்க முடியாது என்றும் குமார் வெல்கம எம்.பி தெரிவித்தார்.

தோழர் கபூர்


என் அண்ணனின் பிறந்தநாள் இன்று. 1986இல் கொலைகாரப்புலிகள் இவரை கோழைத்தனமாக கொன்று பசிதீர்த்துவிட்டனர். இறந்தநாள் தெரியாததினால் இதுவே அவருக்காய் எம்மிடம் இருப்பது. ஒருபட்டாம் பூச்சியின் அசைவு ஒரு பூகம்பத்தையே உண்டாக்கவல்லது என்கின்ற உண்மையை 2009 உணர்த்திச்சென்றது. (Pathmapraba Pramjothi)

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 6)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். (மேலும்....)

பூமியை நோக்கி வரும் ஆபத்து

சுமார் 1,000 மீட்டர் அகலம் கொண்ட இராட்சத விண்கல் ஒன்று, நாளை வெள்ளிக்கிழமை(27) பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லவுள்ளது. '2014 வை.பி.35' என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லானது பூமியின் 28 இலட்சம் மைல்களை கடந்து பயணிக்கும். இந்த இராட்சத விண்கல் முதல் முறையாக கடந்த ஆண்டு இறுதியில் அடையாளம் காணப்பட்டது. இந்த அளவு பெரிய விண்கல் பூமியை கடப்பது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயமாகும். மணித்தியாலத்துக்கு 37 ஆயிரம் கிலோமீற்றர் வேகத்தில் வரும் இந்த விண்கல் மோதினால் ஒரு பெரிய நாடே அழித்து விடும். மேலும் இதனால் பருவநிலை மாற்றம், நிலநடுக்கம், சுனாமி போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.1908ஆம் ஆண்டு சைபீரியாவில் டுங்குஸ்கா பகுதியில் விழுந்த விண்கல்லால் ஏற்பட்ட பாதிப்புகளை விட, இந்த புதிய விண்கல்லின் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

தீஸ்தா சேதல்வாத் நேர்காணல்

குஜராத் இனப்படுகொலையும் நீதித்துறையும்

தலித் படுகொலைகளாக இருந்தாலும் சரி, சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சனைகளாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சிகள் அவை குறித்து தமது குரலை விடாப்பிடியாக எழுப்புவதில்லை. ஆர்.எஸ்.எஸ் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் 2002 குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் தீஸ்தா சேதல்வாத் சென்னை வந்திருந்த போது வினவு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் முதல் பாகம். (மேலும்....)

வரவேண்டாம் என்று சொல்லியும் வந்தான் - மஹிந்த ராஜபக்ஷ

'எனது சகோதரன் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம், அவ்வாறு வந்தால் கைது செய்வார்கள் என்று நான் அறிவுறை கூறினேன்' என்று முன்னாள் ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இருப்பினும், 'நான் களவு செய்யவில்லை. நான் வராமளிருப்பது மஹிந்த அண்ணான உங்களுக்கு அவமானம். அதனால் நான் இலங்கைக்கு வருவேன்' என்று அவர் எனக்கு பதிலளித்தான். ஆனால், நான் அவனிடம் சொன்னது போலவே நடந்தேறிவிட்டது' என்று மஹிந்த கூறினார். 'இருப்பினும் பரவாயில்லை. நானும் 3 மாதங்கள் சிறையில் இருந்தவன் தான். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஓரிரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தால் தவறில்லை' என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் தொடர்பில், மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டார்.

255 எம்.பிக்களை தெரிவு செய்யும் கலப்பு தேர்தல் முறைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் முறை மறுசீரமைப்பிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் 19 ஆவது திருத்தத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தத்தையும் நிறைவேற்ற சகல நடவடிக்கைகளும் எடுக்க இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 255 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் கலப்பு முறை யொன்றிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள அதேவேளை, ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு எம்.பி தெரிவாகும். 238 எம்.பிக்கள் கொண்ட தேர்தல் முறையொன்று குறித்த யோசனை யொன்றுக்கும் தேசிய நிறைவேற்றுக் குழுவிற்கு முன்வைக்கப்பட்டிரு ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த இரு யோசனைகளில் சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளின் பிரதிநிதி த்துவத்தைப் பேணும் சகலருக்கும் ஏற்கக்கூடிய யோசனையை மக்கள் கருத்துக்களையும் பெற்று முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

பிரமிடு என்பதும் தமிழ்ச் சொல்லே !

ஒரு வியப்பான செய்தியை கூறினால் நீங்கள்வியப்பால் விழி விலகி நிற்பீர்கள் ! எகிப்தில் உள்ள " பிரமிடு " தமிழர் கட்டியதுஎன்பது மட்டுமல்ல , அச்சொல்லே தமிழ்ச்சொல்லாகும் .
கி.மு - 3113 : அமெரிக்க- தமிழினத்தவராகியமாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக்கணக்கு ஆரம்பம். கி.மு - 2600 : எகிப்திய தமிழினத்தவராகியமாயர்களால் பிரமிடுகள் வேலை ஆரம்பம். "இடுதல்" என்றால் புதைத்தல் என்று பொருள்.இறந்தவர்களை புதைப்பதால் ' இடுகாடு 'என்று அழைக்கப் பட்டது. சாதாரண மக்கள் இறந்தால் சிறு குழியில்புதைத்து மேலே மேடு அமைப்பர் . அது "சிறுஇடு ".

Islamic democracy Vs Islamic democracy...
Western democracy Vs Western allies democracy...

மேலே உள்ள படத்தில்: "சுதந்திரம், ஜனநாயகம்(?)" பற்றி வாய் கிழியப் பேசும், மேற்குலக நாடுகள் எதிர்க்கும் சிரியாவில் அரபுப் பெண்களின் நிலைமை.
கீழே உள்ள படத்தில்: அதே மேற்குலக நாடுகள் ஆதரிக்கும் சவூதி அரேபியாவில் அரபுப் பெண்களின் நிலைமை.
பல சிரியாப் பெண்கள் விமானிகளாக இருக்கும் இன்றைய காலத்திலும், சவூதிப் பெண்கள் சைக்கிள் ஓடக் கூட முடியாது. (Kalaiyarasan Tha's)

 சித்திரை 23, 2015

பசில் உட்பட மூவர் கைது,  மே.5 வரை விளக்கமறியல்

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, உள்ளிட்ட மூவர் நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 மணிநேர விசாரணைக்கு விசாரணைக்கு பின்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தார். அவருடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ரக் ரணவக்க ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர். பசில் ராஜபக்ஷவை மே மாதம் 5 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் சற்று முன்னர் உத்தரவிட்டுள்ளார்.

கோவையில் லெனின் பிறந்த நாள் – கம்யூனிஸ்டின் தகுதி எது ?

நாள் தோறும் 16 மணி நேரம் கடும் உழைப்பில் கம்பெனிகளில் வேலை செய்த தொழிலாளர்கள் லெனின் கட்சியில் கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராகி ரசியாவை மாற்றிக் காட்டினார்கள். உலக முதலாளிகளை நடுநடுங்க வைத்தார்கள்.
மத வெறியர்களை எதிர்க்க முடியாது, பன்னாட்டு முதலாளிகளை எதிர்க்க முடியாது, தொழிலாளிகளை புரட்சிக்கு அணி திரட்ட முடியாது என்று இன்றும் நமது நாட்டில் பல பேர் ஒப்பாரி வைக்கிறார்கள். இவர்களை பார்த்து தோழர் லெனின் கூறுகிறார்.
“முடியாது என்று சொல்லாதே  செய்ய மாட்டேன் என்று சொல்” என இடித்துரைத்தார்.
தேர்தலில் தொழிலாளர்கள் ஒவ்வொரு முறை ஓட்டுப் போடும் போதும் ஒவ்வொரு உரிமையாக பறி போய்க் கொண்டிருக்கிறது. ஓட்டுப் போடுவதன் மூலம் ஓட்டே போடாத முதலாளிகளுக்கு திமிர் அதிகம் ஏறுகிறது. (மேலும்....)

மகேஸ்வரி நிதியம் எங்களிடம் கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடுங்கள்! யாழ். பாரவூர்தி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

மகேஸ்வரி நிதியம் கொள்ளையடித்து வைத்திருக்கும் எங்களுடைய பணத்தை திரும்பவும் எங்களிடமே கொடுங்கள் எனக்கோரி யாழ்.மாவட்டப் பாரவூர்தி உரிமையாளர்கள் இன்றைய தினம் முதலமைச்சர் அலுவலகம் மற்றும் ஆளுநர், மாவட்டச் செயலகம் ஆகியவற்றுக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றனர். யாழ்.பாரவூர்தி உரிமையாளர்களுக்குச் சொந்தமான சுமார் ஒரு கோடியே 97 லட்சம் ரூபா நிதியை ஈ.பி.டி.பி அமைப்பின் மகேஸ்வரி நிதியம் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றது. இந்தப் பணத்தை மகேஸ்வரி நிதியம் கொள்ளையடித்து வைத்திருப்பதாக குற்றம்சாட்டியே இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

பாட்டுக்கார செல்லப்பா இப்போது இலண்டனில் உலா - காசி ஆனந்தன்

ஆதித்தனார் ஐயா காலத்தில் ஒரு குடிசை கூட இல்லாது வாழ்ந்த பாட்டுக்கார செல்லப்பா விடுதலைப்புலிகளுக்காக நடத்திய உலகச்சுற்றுலாவில் இதுவரை சேர்த்த பணத்தில் சென்னையில் பலகோடி பெறுமதியான மூன்று வீடுகளுக்குச் சொந்தக்காரராக இருக்கிறார். அவருடைய குடும்பத்தில் இன்று இரண்டு கார்கள். ஒரு தமிழ்ப் பாடகர் பொருளாதார நிலையில் முயற்சி பெற்று வளர்ச்சி பெற்றிருப்பது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் மட்டக்களப்பில் என் சொந்த வீட்டில் வாழ முடியாதவனாக வாழ்ந்த வீட்டையும் இழந்து, நாட்டையும் இழந்து சென்னை வந்து கடவுச்சீட்டு (Passport) பறிக்கப்பட்டவனாய் காவல் சிறையில் வாழ்பவன் போல் நொந்து கிடக்கும் என்னைக் களங்கப்படுத்தாதீர்கள்.
எங்கோ ஓர் இடத்தில் இந்தப் பாட்டுக்கூட்டம் “பாட்டு எழுதுவதில் என்ன இருக்கிறது பாடுகிறவன் தான் பாட்டுக்கு உயிர் கொடுக்கிறான்” என்று கூறியிருப்பதாகக் கூட அறிந்தேன். (மேலும்....)

சகலரையும் ஒன்றிணைக்க மைத்திரி- மஹிந்த விரைவில் சந்திப்பு

கட்சியிலுள்ள சகல ரையும் ஒன்றிணைத்து அடுத்த தேர்தலில் வெற்றியீட்டுவதற்கான நடவடிக்கையாகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் நேரில் சந்தித்து இணக்கப்பாட்டை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். எமக்கிடையில் பிரிவு கிடையாது. கருத்து முரண்பாடே காணப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர், அதற்கு முடிவுகாண நடவடிக்கை எடுத்து வருவதாவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை யகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், இரு தலைவர்களுக்குமிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சி குறித்து குமார வெல்கம எம்.பி முதலில் எனக்கு அறிவித்தார். இருவரும் நேரில் சந்தித்துப் பேச இணங்கியுள்ளனர். இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடன் உரையாடினேன். இதன்படி விரைவில் இந்த சந்திப்பு இடம்பெற இருக்கிறது. அரசியலில் எதுவும் நடக்கலாம். கட்சியிலுள்ள சகலரையும் ஒன்றுபடுத்தி ஒரே கூட்டணியாக அடுத்த தேர்தலில் வெற்றியீட்டுவதே எமது இலக்காகும் என்றார்.

ரஷ்யாவுடன் பதற்றம்

அமெரிக்காவிடம் ஏவுகணை வாங்குகிறது போலந்து

ரஷ்யாவுடன் பதற்றம் நீடிக்கும் சூழலில் போலந்து அமெரிக்காவிடம் நிலத்தில் இருந்து வானைத் தாக்கும் பெட்ரொயிட் ஏவுகணைகளை வாங்க உடன்படிக்கை செய்துள்ளது. பல பில்லியன் டொலர் கொண்ட உடன்படிக்கையை செய்துகொள்ள அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக போலந்து ஜனாதிபதி பிரோனிஸ்லோ கொமொரோவிஸ்க் குறிப்பிட்டுள்ளது. போலந்து எல்லைக்கு அருகில் ரஷ்யா ஏவுகணைகளை தயார்நிலையில் வைத்திருப்பதால் ஏற்கனவே அங்கு பதற்றம் நிலவுகிறது. உக்ரைனின் நிலப்பகுதியாக இருந்த கிரிமியாவை கடந்த ஆண்டு தனது ஆட்புலத்திற்குள் உள்வாங்கிய ரஷ்யா, கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாத கிளர்ச்சியா ளர்களுக்கும் ஆதரவளித்து வருகிறது. இது நேட்டோ நாடுகளை கவலையடையச் செய்துள்ளது. குறிப்பாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. போலந்து தனது இராணுவத்தை புதுப்பிக்க அடுத்த எட்டு ஆண்டுகளில் 35 பில்லியன் டொலர்களை செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழே பெட்ரொயிட் ஏவுகணைகள் கொள்வனவுசெய்யப்படவுள்ளன.

போதைப் பொருளுடன் பிடிபட்ட படகு குறித்து திடுக்கிடும் தகவல்கள்

இந்திய கடல் எல்லைக்குள் 8 பேருடன் வந்த பாகிஸ்தான் நாட் டைச் சேர்ந்த படகை இந்திய கட லோரக் காவல்படையினர் பிடித்தனர். அந்த படகு குறித்து தற்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி யுள்ளன. இந்திய கடல் எல்லைக்குள் நுழை யும் வரை அந்த படகுக்கு பாகிஸ் தான் கடலோரக் காவல் படையினர் பாதுகாப்பாக அழைத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அதில்லாமல் இந்திய கடலோரக் காவல்படையினர் படகைப் பிடித் ததும் அதில் இருந்தவர்கள் உடனடி யாக பாகிஸ்தான் கடலோரக் காவல் படைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து உதவி கோரியுள் ளனர். இந்திய எல்லைக்குள் இரண்டு பாகிஸ்தான் படகுகள் நுழைந்த தாகவும் ஒன்று மட்டுமே தற்போது பிடிபட்டிருப்பதாகவும் மேலும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக் கின்றன. படகில் இருந்த 232 கிலோ கிராம் போதைப் பொருளை இந்தியாவில் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு இந்தியாவில் பயங்கரவாத செயலில் ஈடுபட இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந் தேகிக் கப்படுகிறது.

சித்திரை 22, 2015

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 5)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். (மேலும்....)

பசில் கைது செய்யப்படும் சாத்தியம்

பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ, நிதி மோசடி பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் - மைத்திரி

நாடாளுமன்றத்தை கலைக்கவும், மூவர் கூட்டாக கோரிக்கை

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டம் நாளை 23ஆம் திகதியுடன் நிறைவடைந்தாலும் நாடாளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தம் சட்டமாவதை தடுக்கும் இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதன் மூலம் புதிய நாடாளுமன்றத்தை உருவாக்கி, ஜனாதிபதி தேர்தலில் நாம் பெற்றுள்ள மக்கள் ஆணையை நிறைவேற்றுமாறு மூவர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்கள் மனோ கணேசன், அசாத் சாலி மற்றும் விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மேற்கண்டவாறு இன்று கோரியுள்ளனர். நாட்டை பணயக்கைதியாக பிடித்து வைத்திருக்கும், இந்த பழைய நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலுக்கு சென்று புதிய நாடாளுமன்றத்தை அமைப்போம் என நாம் ஜனாதிபதி அவர்களிடம் கோரியுள்ளோம் என்றார்.

'மஹிந்தவின் வாய்க்கு பிறேக் இல்லை'

தன்னுடைய நிர்வாக காலத்தில் தவறிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கவில்லை என்றும் தவறிழைத்தவர்களை, திருத்த முயற்சித்தல் மற்றும் தவறுகளை மூடி மறைப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அவ்வாறு தவறிழைத்தவர்கள் மற்றும் தவறுகளை மஹிந்த ராஜபக்ஷவின் வாயிலிருந்தே பெற்று கொள்வதற்கு அவரிடம் விசாரணை நடத்தவேண்டும் என்று வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷவினால் பாதுகாக்கப்பட்ட தவறிழைத்தவர்கள் யார்? அவர்களை பாதுகாத்தமை ஏன்? என்று அவரிடம் கேள்விகளை கேட்பதற்கு அவருக்கு வாக்களித்த 58 இலட்ச மக்களுக்கு உரிமை இருக்கின்றது என்றும் அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வாய்க்கு பிறேக் இல்லை என்பதனால் அவரை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் என்ன சொல்லுவார் என்று பயந்த உறுப்பினர்கள், அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு செல்வதை தடுத்தனர் என்றும் அவர் கூறினார்.

மைத்திரி - மஹிந்த சந்திக்க இணக்கம்

தற்பொழுது ஏற்பட்டுள்ள முக்கிய நிலைமைகள் குறித்து நேரில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணக்கம் தெரிவித்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ரி.பி.ஏக்கநாயக்க எம்.பி தெரிவித்தார். இருவரும் பொதுவான இடமொன்றில் சந்தித்து பேசவிருப் பதாகவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பாக நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசியபோது, பொது இடமொன்றில் சந்திக்க உடன்பாடு தெரிவித்தார். குமார வெல்கம எம்.பி அடங்கலான ஏழு பேர் அடங்கிய ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இந்த சந்திப்பிற்கான ஒழுங்குகளை செய்து வருகிறது. இருவரும் ஆராயவேண்டிய விடயங்கள் குறித்த யோசனையொன்றை தயாரித்து வருகிறது. எதிர்காலத் தேர்தல், தற்பொழுதுள்ள அரசியல் நிலைமைகள் உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் தினம் அனுஷ்டிக்க அழைப்பு - சிவாஜிலிங்கம்

மே 18 முள்ளிவாய் க்கால் படுகொலை தினத்தினை ஒரு வார காலம் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு புலம்பெயர் தமிழர்களையும், தாய்த் தமிழர்களையும் முன்வருமாறு வட மாகாண சபை உறுப்பினர் கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் மே 18 ஆம் திகதி 6 வது வருடம் நிறைவுபெற இருக்கின்றது. இதையொட்டி புலம்பெயர் தமிழர்களுக்கும். தாய்த் தமிழர்களுக்கும். மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்கு முன்வர வேண்டும். கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் தினத்தினை பெரிய அளவில் அனுஷ்டிக்காமல் விட்டது மிகப்பெரிய தவறு. எனவே இந்த தவறினை நிவர்த்தி செய்வதற்காக இந்த ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 18 ஆம் திகதி வரைக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலிகளை செலுத்த முன்வருமாறு அழைப்பு விடுத்தார். இவ்வாறு மிகப்பெரிய அளவில் முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை அனுஷ்டிப்பதன் ஊடாக தான் சர்வதேச சமூகத்திற்கு எமது அழிவிற்கு நீதி தேவை என்பதனை உணர்த்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மணிக்கு 603 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்து ஜப்பான் ரயில் சாதனை

ஜப்பானின் காந்த ரயில் ஒன்று பூஜp மலைப்பகுதிக்கு அருகில் நடத்தப்ப ட்ட சோதனையோட்டத்தில் மணிக்கு 603 கிலோமீற்றர் வேகத்தில் பயணி த்து தனது சொந்த சாதனையை முறி யடித்தது. கடந்த வாரம் நடத்தப்பட்ட மற் றொரு சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் மணிக்கு 590 கிலோமீற்றர் வேக த்தில் பயணித்து படைத்த உலக சாத னையையே தற்போது முறியடித்துள் ளது. மின்னேற்றப்பட்ட காந்தம் மூலம் இயங்கும் இந்த மக்லேவ் ரயில்கள் நிலத்தில் படாமல் ரயில் தண்டவாள த்திற்கு மேலால் பயணிக்கக் கூடிய தாகும். எனினும் தற்போது இந்த ரயில் பயணித்திருக்கும் சாதனை வேகத்தை பயணிகளால் அனுபவிக்க முடியாதி ருக்கும். இந்த ரயில்கள் அதிகபட்சம் மணிக்கு 505 கிலோமீற்றர் வேகத்தி லேயே செயற்படுத்தப்படும் என்று ரயில் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மக்லேவ் ரயில் தொழில்நுட்பத்தை வெளிநாடுகளுக்கு விற்கவும் ஜப் பான் அரசு திட்டமிட்டுள்ளது.

சித்திரை 21, 2015

19ஆவது திருத்தம் குறித்து 27, 28 களில் விவாதம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் தொடர்பிலான விவாதத்தை எதிர்வரும் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்த சட்டமூலத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு காலஅவகாசம் தேவைப்படுவதாக எதிர்க்கட்சி கோரியதையடுத்தே, விவாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது. ஏப்ரல் 20, 21ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த அரசாங்கம் ஆரம்பத்தில் எதிர்பாத்திருந்திருந்தது. எனினும், விவாதம் இன்று வரையிலும் நேற்று பிற் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இரண்டு நாட்கள் விவாதத்தின் பின்னர் திருத்தச்சட்டமூலம், 28ஆம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்படும். 19ஆவது சட்டமூலத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் அடங்கிய பிரதிகளை அரசாங்கம் ஏற்கெனவே விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நான் ஏன் வந்தேன் பசில்

சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்றவகையில் எனக்கு எதிரான விசாரணைகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே நான், இலங்கைக்கு வந்தேன் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கட்டுநாயக்கவில் குழுமியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிரமுகர்கள் வெளியேறும் வாயிலின் ஊடாக வெளியேறிய அவர், அதன் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் (வி.ஐ.பி), வாயிலின் அடியில் நுழைந்து வெளியேவந்தார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் காரணமாக பிரமுகர்கள் வெளியேறும் மூலையில் இருந்த அதிவிசேட பிரமுகர்கள் வெளியேறும் வாயில் மூடப்பட்டிருந்தது. விமான நிலைய வளாகத்தில் இருந்த மஞ்சள் பூக்கள் பூக்கும் மரத்தின் கிளையில் ஏறியிருந்த போது அவருக்கு பிரித் நூல் கட்டப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தைச்சேர்ந்த பிரபல்யமானவர் என்றபோதிலும் அவரை வரவேற்பதற்கு கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த எவரும் சமூகமளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதிகார அரசியலில் மீள்பிரவேசம் செய்யும் சந்திரிகா, மகிந்த?

உடனிருந்தே கொல்லும் வியாதிபோல் சந்திரிகாவுக்கு ஒரு மாமன் அனுருத்த ரத்வத்த மகிந்தருக்கு கோத்த, பசில் சகோதரர் அமைந்ததும் அவர்கள் இருவரினதும் அரசியல் பயணத்தில் காணப்பட்ட ஒரு ஒற்றுமை தான். இருவருமே இதயசுத்தியுடன் செயல்பட முடியாமைக்கு அவர்களின் உறவுகளின் மேலாதிக்கமும் முக்கிய காரணியாக அமைந்ததை காணலாம். அவர்கள் இருவரின் வெற்றிக்கு வித்திட்ட உறவுகளே வீழ்ச்சிக்கும் காரணம் ஆனார்கள். சந்திரிகா காலத்தில் முன்பே இராணு சேவையை விட்டு விலத்திய ரத்வத்தையும் மகிந்தர் காலத்தில் அதே போல் கொண்டுவரப்பட்ட கோத்தவும் மீண்டும் இராணுவ துறையில் முக்கியத்துவம் பெற்றதும், பொருளாதாரம் பற்றி செயல்பட அதுவரை அமெரிக்காவில் வாழ்ந்த பசில் அழைத்து வரப்பட்டதும் தான் அவர்கள் இருவரினதும் ஆரம்ப வெற்றிக்கும் இறுதி தோல்விக்கும் வழி வகுத்தது. (மேலும்....)

புலிகளுடன் தொடர்பு இல்லை. புலிகள் பயங்கரவாதிகள் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதாக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்தை ஒரு போதும் ஆதரிக்கவில்லை எனவும், அதற்கு சார்பாக செயற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைந்து இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சாத்தியங்கள் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
சில தரப்பினர் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தவே இவ்வாறு செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். புலிகள் மீள ஒருங்கிணைய வாய்ப்பு கிடையாது எனவும் அவ்வாறு மீள ஒருங்கிணைந்தாலும் அதனை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டனா என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் சித்திரவதைக்கூடங்கள்! அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கை இராணுவம் கைவிட்டு வெளியேறி வரும் படைத்தளங்கள் பலவற்றினில் சித்திரவதைக்கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுவருகின்றது.
யாழ்.குடாநாட்டினில் மட்டும் அது படையினரால் கைப்பற்றப்பட்ட 1996 ம் ஆண்டு காலப்பகுதி முதல் தற்போது வரை காணாமல் போயிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் பற்றி இன்று வரை தகவலற்றேயிருக்கின்றது. மஹிந்த ஆட்சிக்காலத்திலும் முன்னதாக சந்திரிகா ஆட்சிகாலத்திலுமென மூவாயிரத்து ஜநூறிற்கும் அதிகமான இளைஞர்,யுவதிகள் இவ்வாறு காணாமல் போயிருந்தபோதிலும் இன்று வரை அவர்கள் பற்றி தகவல்களும் இல்லாதேயுள்ளது. (மேலும்....)

அகதிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்றுங்கள் - ஜேர்மனி அரசு

ஜேர்மனியில் தகுதியற்ற அகதிகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. Bremen நகரில், கடந்த வெள்ளியன்று Christian Democrat (CDU) கட்சியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் Christian Democrat (CDU) கட்சியினர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த உள்துறை பாதுகாப்பு அமைச்சரான Thomas de Maiziθre, தகுதியற்ற விண்ணப்பங்களை நிராகரிப்பதுடன் அவர்களை நாட்டை விட்டு வெளியேற்றப்படுவது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார்.(மேலும்....)

கோட்டா புதனன்றும் மஹிந்த வெள்ளியும் ஆஜர்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் புதனன்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 24ஆம் திகதியும் ஆஜராகவுள்ளனர். கோட்டாபய ராபக்ஷவை புதனன்று ஆஜராகுமாறு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தானாகவே ஆஜராகவிருக்கின்றார். ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் செயலாளர் நாயகமுமான திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி சுகாதார அமைச்சர் பதவியை வழங்கியமை இலஞ்சம் கொடுத்ததாகும் என்று சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக்கப்பல், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சட்டவிரோதமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் அவன்காட் மெரின்டைம் நிறுவனத்தின் தலைவருக்கு இருக்கின்ற தொடர்பு ஆகிய குறித்து கோட்டபாய ராஜபக்ஷவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டவிருக்கின்றன.

எதிரணி எம்.பி.க்கள் விடியவிடிய ஆர்ப்பாட்டம் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இலஞ்ச ஊழல் மோசடி ஆணைக்குழுவுக்கு அழைப்பதற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபைநடுவில் விடியவிடிய எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சிலர், சபைக்குள்ளே தூங்கினர். அவர்களுக்கு உணவு விநியோகிப்பதற்காக நாடாளுமன்ற சிற்றுண்டிசாலை திறந்திருந்தது. நாடாளுமன்ற வைத்தியசேவையும் தயாராக இருந்தது. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30க்கு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

"மாட்டிறைச்சி" அரசியல்.

மாட்டு இறைச்சி கடையில் வேலை செய்தார்கள் என்பதற்க்காக இரண்டு இளைஞர்களை அடித்து கொல்லும் "கோ" பக்தர்கள். மாட்டிறைச்சி இந்தியாவில் ஏழை எளிய தாழ்த்தபட்ட மக்களின் உணவு, உலகளவில், புரதம் மிக்க அணைவருக்குமான உணவு, இதை இன்று அரசியலாக்கி, பெரும்பாண்மை மக்களின் மதத்தை, தனக்கான முகமுடியாக அணிந்து கொண்டு, சில இந்து அமைப்புகள் துணையுடன், தனது கோர முகத்தை வெளிப்படுத்தி கொண்டு இருக்கிறது பிஜேபி. இது மதத்தின் பெயரை சொல்லி நடக்கும் மோசமானா ஜாதி வெறியின் வெளிப்பாடு.(மேலும்....)

சித்திரை 20, 2015

மாகாண சபைகளை பயனற்றதாக்கினால் பாதிக்கப்படுவது மாகாண மக்களே -வரதராஜப் பெருமாள்

  • வடக்கில் இராணுவத்தை குறைப்பதற்கு சிங்கள தலைவர்களுக்கும் எண்ணம் வரவேண்டும்
  • மாகாண யாப்பின்படி முதலமைச்சரே ஆட்சித் தலைவர், ஆளுநர் அல்ல
     

மாகாண சபைகளை பயனற்றதாக்கி வைப்பதன் மூலம் பாதிக்கப்படுபவர்கள் மாகாண மக்கள்தான். எனவே இந்த மாகாண சபைகளைப் பயனுடையதாக மாற்ற வேண்டுமென முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வட மாகாண சபையின் அதிகாரங்கள் பற்றி இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், மேற்கண்டவாறு கூறினார். வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தினை குறைப்பார்கள் என நினைப்பது தவறு. இராணுவத்தை குறைக்க வேண்டுமென்றால் சிங்களத் தலைவர்களுக்கும் அந்த நோக்கம் இருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். “அரசியல் யாப்பு, முதலமைச்சருக்குத்தான் அதிகாரத்தினைக் கொடுத்திருக்கிறது. முதலமைச்சர்தான் யாப்பின்படி ஆட்சித் தலைவராகும். ஆளுநர் அல்ல. ஆனால், இங்கு ஆளுநர் தலையிடக்கூடாதென்று ஒரு தீர்மானம் போடப்படவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.  (மேலும்....)

வடகிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் யாழ்ப்பாணத்தில்

மாகாணசபை அனுபவங்கள் - என்பது பற்றி வடகிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் இன்று யாழ்ப்பாணத்தில் “ஆறுதல்“ நிறுவனத்தில் உரையாற்றினார். பொதுவாழ்வில் ஈடுபடும்போதும் நெருக்கடியான களத்தில் அரசியற் பணியாற்றும்போதும் புகழும் பாராட்டும் பட்டுக்கம்பளங்களும் சிம்மாசனங்களும் மட்டும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சவால்களும் நெருக்கடிகளும் வசையும் அவமானங்களும் எதிர்ப்புகளும்தான் எதிர்கொள்ள வேண்டியவையாக இருக்கும். அப்படியான ஒரு காலத்தில், களத்தில்தான் வடகிழக்கு மாகாணசபையை ஆரம்பித்து நடத்தினோம் என்று கூறினார் பெருமாள். ஒரு கட்டத்தில் இந்திய அரசு, தமிழ்நாட்டு அரசு (கருணாநிதி ஆட்சி), இலங்கை அரசு, புலிகள், தமிழ்ச்சமூகம் என அனைத்துத் தரப்பும் அந்த மாகாணசபையை இயங்க முடியாத நிலைக்குக் கொண்டு சென்றது. ஆனால், இப்பொழுது அதே தரப்புகள் (புலிகள் களத்தில் இல்லை) பிரிக்கப்பட்ட மாகாணசபையை ஏற்றுப் பங்கேற்கின்றன. எனினும் இன்னும் மாகாணசபையைத் திருப்தியற்ற ஒரு நிலையில்தான் தமிழ்த்தரப்பும் பார்க்கிறது. சிங்களத்தரப்பிலும் அப்படியான உணர்நிலை உண்டு. குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை வேண்டாம் என்று சொல்லும் ஆட்கள் இரண்டு தரப்பிலும் உள்ளனர். இந்த நிலையில் மாகாணசபையில் பங்கேற்போரும் இருக்கிறார்கள். (மேலும்....)

இலங்கை மாற்றங்கள் நம்பிக்கை தருகின்றன'

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் முன்னேற்றகரமான நிலை அங்கு ஏற்படும் என்ற நம்பிக்கையை தந்திருப்பதாக வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட ஒன்றிணைந்த வடகிழக்கின் முதல்வராக இருந்து, பிறகு இந்தியாவில் நாடுகடந்து வாழும் வரதராஜபெருமாள் தற்போது இலங்கையின் வடபகுதிக்கு சென்றிருக்கிறார். வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரனை சந்தித்து பேசியிருக்கிறார். இந்தப் பயணம் குறித்து அவர் பிபிசிக்கு வழங்கிய செவ்வியை இங்கே கேட்கலாம். (ஒலிவடிவில் கேட்க.....)

விட்டுக் கொடுக்க முடியாத தேர்தல் உரிமைகள்

அரசியல் ரீதியாக பார்க்கும் போது இந்த வாரம், இலங்கை வரலாற்றில் மிக முக்கியமானதோர் வாரமாக அமையலாம். ஏனெனில், நாட்டில் அரசியல் கள நிலைமையை வெகுவாக மாற்றி அமைக்கக் கூடிய இரண்டு அரசியலமைப்புத் திருத்தங்கள் இந்த வாரம் நாடாளுமன்றத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில், நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்துவதற்கான அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை சிறுபான்மை கட்சிகள் உட்பட ஏறத்தாழ சகல அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால் , அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தமாக இவ்வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கூறப்படும் தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பாக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வெளியே இயங்கும் சிறுபான்மை கட்சிகள் சற்று அச்சத்துடனேயே இருக்கின்றன. விகிதாசார முறையோடு தொகுதி வாரி தேர்தல் முறையும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.(மேலும்....)

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 4)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். (மேலும்....)

விவசாயிகளை புறக்கணிக்கும் அரசு,  மோடி மீது ராகுல் கடும் தாக்கு

டில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த விவசாயிகள் ஆதரவு பேரணி பொதுக்கூட்டத்தில் காங்., துணை தலைவர் ராகுல் பேசுகையில்; தற்போதைய அரசால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். விவசாயிகள் அச்சத்தில் வாழுகின்றனர். என குறிப்பிட்டார். விவசாயிகள் எதிரானது மோடி அரசு. மோடி அரசை குறை கூறுவதாக நீங்கள் நினைக்க வேண்டாம். உண்மை நிலையை தான் சொல்கிறேன். விவசாயிகள் இந்த நாட்டின் கண்ணை போன்ற வலிமை கொண்டவர்கள் . ஆனால் அது மோடி அரசுக்கு தெரியவில்லை. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு ஆதரவாக உள்ளது. நாங்கள் 2013 ல் கொண்டு வந்த மசோதா அம்சங்கள் கொண்டு வர மோடி அரசு தயங்குவது ஏன் ? கம்பெனிகள் அமைப்பது, உற்பத்தி பெருக்குவதில் அக்கறை காட்டும் மோடி அரசு விவசாயிகள் நலன் அவரது குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவதில்லை.(மேலும்....) 

இது ஒரு இருண்ட காலம், அன்பே.

நிலமெங்கும் பழுப்புநிற குளவிகள் ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன.
ஒளிரும் சூரியன் வானத்தில் ஒளிந்துக் கொண்டிருக்கிறது.
கடுந்துயரத்தில் தலை குனிகின்றன
செந்நிற பூக்கள்.
இது ஒரு இருண்ட காலம், அன்பே.
அடக்குமுறை, இருண்ட உலோகம், மற்றும் கண்ணீருக்கான
காலம் இது.
இது துப்பாக்கிகளின் திருவிழாக்காலம்.
துன்பத்தின் கேளிக்கைக் காலம்.
எல்லா இடங்களிலும் மனிதர்களின் முகங்களில் வருத்தம் தோய்ந்திருக்கிறது.
இந்த இருண்ட இரவில் யார் நடந்து வருகிறார்கள்?
யாருடைய இரும்பு காலணிகள்
மென்மையான புற்களை மிதித்துச் செல்கிறது?
அவன் சாவின் மனிதன், அன்பே.
இந்த முகமறியாத ஆக்கிரமிப்பாளன்
நீ உறங்குவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
உனது கனவுகளை குறி வைக்கிறான்.
மார்ட்டின் கார்ட்டர்.
(Courtesy: Transliterator Kavitha Muralidharan)

உல்லாச தளமாக மாறும் வளலாய் அக்கரை

யாழ். வலி, கிழக்குப் பிரதேச சபைக்குட்பட்ட வளலாய் அக்கரைப் கடற்கரையை உல்லாச கடற்கரையாக மாற்றுவதுக்கான முதற்கட்ட பணிகள் 1 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதேச சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த வளலாய் அக்கரைப் கடற்கரை பகுதி கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், அப்பகுதியில் மக்கள் மீளக்குடியேறினர். கடற்கரையை அண்டிய பகுதிகளில் சவுக்குமரம் வளர்த்தல், ஓய்வுக் குடில்கள் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல், மின்சார வசதிகள் ஏற்படுத்தல், இருக்கைகள் அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்காக முதற்கட்டமாக 1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து கட்டம் கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. யுத்தத்திற்கு முன்பே வளலாய் பாம் பீச் என அன்றைய காலகட்டத்தில் யாழ்பாணத்தில் இருந்த உல்லாச இடமாக இவ்விடம் இருந்தது இங்கு குறிப்பிடத் தக்கது.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனம் எவ்வாறு கிடைத்தது என்பதை நன்கு உணரவேண்டும்.

'கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக நடைபெற்ற பல உண்மைச் சம்பவங்களை எமது மக்களுக்கு தெரிவிப்பதற்காக தற்போது நான் புதிய முயற்சி எடுத்துள்ளேன். இவ்வாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆதரவாளர்கள் கூட்டம், மட்டக்களப்பு, தேற்றாத்தீவு கிராமத்தில் சனிக்கிழமை (18) இரவு நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை வழங்கி, அவர்களை குழப்பும் நடவடிக்கைகளை பலர் செய்துவருகின்றனர். இதனால், மக்கள் திக்கித்திணறுகின்றனர். இந்த நிலையில், மக்களை தெளிவுபடுத்தவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. (மேலும்....)

வெளிநாட்டினர்களுக்கு எதிரான வன்முறையால் தென்னாபிரிக்க ஜனாதிபதி சுமாவுக்கு அழுத்தம்

தென்னாபிரிக்காவில் வெளிநாட்டினருக்கு எதிரான தாக்குதல்களால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் அகதி முகாமிற்கு சென்ற அந்நாட்டு ஜனாதிபதி ஜகொப் சுமா, அங்கிருப்போர்களின் சுகதுக்கங்களை விசாரித்ததோடு வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதாகவும் உறுதி அளித்தார். தென்னாபிரிக்காவின் கரையோர நகரான டெர்பனில் ஏற்பட்ட வெளிநாட்டினருக்கு எதிரான வன்முறைகளில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த வன்முறை ஏனைய நகரங்களுக்கும் பரவி வருகிறது. இந்த வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் தென்னாபிரிக்காவின் மதிப்பிற்கு எதிரானவர்கள் என்றும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் சுமா உறுதி அளித்தார். அகதி முகாமில் இருந்து ஒருசிலர், சுமாவின் கருத்திற்கு அதிருப்தி வெளியிட்டதோடு அரசு மந்தமாகவே செயற்படுவதாக குற்றம்சாட்டினர். தென்னாபிரிக்காவில் வெள்ளையின சிறுபான்மையினரின் ஆட்சி முடிவுக்கு வந்த 1994 ஆம் ஆண்டுக்குப் பின் ஏனைய ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஆசியாவை பெரும்பான்மையினராக கொண்ட வெளிநாட்டினர்களின் குடியேற்றம் அதிகரித்தது. தென்னாபிரிக்காவின் வேலையில்லாதோர் எண்ணிக்கை 24 வீதமாக இருக்கும் நிலையில் வெளிநாட்டினரே அதிக தொழில்வாய்ப்புகளை பெறுவதாக தென்னாபிரிக்கர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சித்திரை 19 2015

யாழில் முன்னாள் முதல்வர் வரதர்!

வடக்கு, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் மீண்டும் யாழ்.திரும்பியுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் யாழ்ப்பாணத்தில் வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை சுமார் ஒரு மணி நேரம் அவர் சந்தித்து உரையாடியிருந்தார். இச்சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இலங்கை வந்துள்ள வரதராஜப்பெருமாள் தாம் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட உத்தேசித்துள்ளார் எனத் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை நல்லூரில் பொது நிகழ்வு ஒன்றில் அவர் உரையாற்றினார். இன்று மாலை ஈ.பி.ஆர்.எல்.எவ். நடத்தும் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகிறார். நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நல்லூர் வைமன் வீதியில் உள்ள ‘ஆறுதல்’ அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் ‘முதலமைச்சராக எனது அனுபவம்’ என்ற தலைப்பில் அவர் கருத்துரை வழங்குகிறார். பின்னர் ஆனந்த சங்கரியையும் அவர் சந்திக்கின்றார். இந்திய அரசின் ஏற்பாட்டினில் வருகை தந்திருக்கும் அவர் யாழிலுள்ள துணை தூதுவராலயத்தினில் இரகசிய சந்திப்புக்களையும் நடத்தியுள்ளார். கூட்டமைப்பிற்கு மாற்றீடாக புதிய கூட்டு ஒன்றை தோற்றுவிப்பதில் அவர் ஆர்வம் காட்டிவருவதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது
19ஆவது திருத்தம் மீதான விவாதம் பிற்போடப்பட்டது

அரசியலமைப்பின் 19ஆவது திருத்த சட்டமூலம் மீதான விவாதம் பிற்போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திருத்த சட்டமூலம் மீதான விவாதம் நாளை 20ஆம் திகதியும் மறுதினம் 21ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில், அந்த விவாதத்தை எதிர்வரும் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய தேர்தல் முறைமை சேர்க்கும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
 

கட்சி சாரா அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வடக்கின் முன்னாள் முதல்வர் உத்தேசம்

தான் கட்சி சாராத அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாக வட,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அ.வரதராஜப்பெருமாள் 1988ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் வட, கிழக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக செயற்பட்டு வந்தார். அவர் 1990ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினர் நாட்டை விட்டு வெளியேறும் போது மாகாண சபை கூட்டத்தில் இலங்கை அரசிடம் 20 அம்சக் கோரிக்கை முன்வைத்து வெளியேறினார். இவ் 20 அம்சக் கோரிக்கை இலங்கை அரசால் நிறைவேற்ற முடியாத பட்சத்தில் ஈழம் என்ற தனிநாட்டு பிரகடனத்திற்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறியிருந்தார். பாதுகாப்புக் காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியா, ராஜஸ்தானில் இந்திய அரசாங்கத்தின் பாதுகாப்பில் வாழ்ந்து வரும் அ.வரதராஜப்பெருமாள் தற்போது இலங்கை வந்துள்ள நிலையிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை நாளை நல்லூர் வைமன் வீதியிலுள்ள ஆறுதல் அலுவலகத்தில் நடைபெறும் கலந்துரையாடலில் முதலமைச்சராக எனது அனுபவம் எனும் தொனிப்பொருளில் சிறப்புரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

19ஆவது திருத்தத்துக்கு நாம் ஆதரவு - ஜே.வி.பி

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு நாம் ஆதரவளிப்போம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் சில நல்லவிடயங்களுக்கு ஆதரவளிக்கும் நடைமுறையின் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் குறைபாடுகள் இருந்தாலும் அதனை ஆதரவளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவளிக்குமாறும் அவர், ஏனைய கட்சிகளிடமும் கோரிக்கைவிடுத்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான 20ஆவது திருத்ததுடன் 19 ஆவது திருத்தத்தை போட்டு முரண்பட்டுகொள்ளவேண்டாம் என்றும் அவர் கோரியுள்ளார்.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யோசனைகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தம் அவர்களின் விருப்பத்துக்கு மாறாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் அதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சிகளின் யோசனைகளுக்கு அமைவாக தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தீர்மானிக்கவேண்டும் என்றும் அவர் கூறினார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் என்றமைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் யோசனைகளுக்கு அனுமதியளிக்க முடியாது. அவர், சுதந்திரகட்சிக்கு பொறுப்பளிப்பதற்கு அப்பால், அவருக்கு வாக்களித்த 62 இலட்சம் மக்களுக்காக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

டான் யாழ். ஓளியில் மக்கள் மன்றம்

முன்னாள் முதல்வர் திரு.அ.வரதராஜப்பெருமாள் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.

தோழர் வரதராஜபெருமாள், நேர்காணல்.
டான் யாழ். ஓளியில் மக்கள் மன்றம்
டான் யாழ்.ஒளியில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் மக்கள் மன்ற நிகழ்ச்சியில் இவ்வார (18.04.2015) அரசியல் பிரமுகராக வடக்கு கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வர் திரு.அ.வரதராஜப்பெருமாள் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். நிகழ்ச்சியில் உங்கள் கேள்விகளுக்கு ஐரோப்பிய நேரம் மாலை 6.30 (இலங்கை நேரம் இரவு 10 மணிக்கு) அழையுங்கள். 0094212221944

கனடா ரொறன்றோவின் Jane and Finch Avenue பகுதியில் பாரிய துப்பாக்கி மோதல்! ஐவர் காயமடைந்தனர்

கனடா ரொறன்றோவின் Jane Street and Finch Avenue பகுதியின் அருகில் நேற்று மாலை 6.00 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐந்து பேர் சுடப்பட்டார்கள்.
அந்தச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவருக்கு உயிராபத்தான காயம் ஏற்பட்டது. மேலும் இரண்டு பேருக்கு மோசமான காயங்களும், மேலும் இரண்டு பேருக்கு சிறிய காயங்களும் ஏற்பட்டன. அந்தப் பகுதியில் காவல்துறையினர் நான்கு சந்தேக நபர்களைக் கைது செய்துள்ளனர்எனவும். தமது நடவடிக்கையின்போது, ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டாரெனவும், ஆனால் அவருக்கு உயிராபத்து இல்லையெனவும் காவல்துறையினர் கூறினார்கள். நான்கு துப்பாக்கிகளும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
அந்தச் சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்பு விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக கூறப்படுகின்றது.

இரண்டு வாரங்களுள் இரட்டை குடியுரிமை

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள சிறிலங்காவின் பிரஜைகளுக்கான இரட்டை குடியுரிமை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் குடிவரவு மற்றும் குடிப்பெயர்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதுவரையில் இரட்டைக் குடியுரிமை கோரி கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பங்களில்இ 300க்கும் அதிகமான விண்ணப்பதாரிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது. அவர்களின் விண்ணப்பங்களை இறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய விண்ணப்பங்களும் ஆய்வு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரட்டை குடியுரிமையை வழங்குவதற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான குடியுரிமைஇ குடிவரவுத்துறை அமைச்சின் காரிலாயத்தில் விசேட நிகழ்வொன்று ஒழுங்கு செய்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

19, 20 சமர்ப்பிப்பு, பாராளுமன்றம் கலைப்பு, தேர்தல் கூட்டால் பிளவு, 100 நாள் நிறைவு.  

ஆட்சியை கைப்பற்ற முஸ்தீபு, இவ்வாரம் அரசியலில் அதிரடி மாற்றங்கள்

இலங்கை அரசியல் வரலாற்றில் பலவிதமான அதிரடியான மாற்றங்கள் நிகழக்கூடிய வாரமாக இவ்வாரம் அமையவுள்ளதாக அரசியல் அவதானிகள் எதிர்வு கூறியுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் அடங்கிய நூறு நாள் வேலைத்திட்டத்தின் முடிவு நாளும் இவ் வாரத்திற்குள் வருகிறது. அத்துடன் பாராளுமன்றத்தில் 19 ஆவது மற்றும் 20 ஆவது திருத்தச் சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படுமா? அல்லது பிற்போடப்படுமா? அல்லது சமர்ப்பிக்கப்பட்டு அதனை அங்கீ கரிப்பதில் இழுத்தடிப்புகள் மேற்கொள்ளப்படுமா? எனும் கேள்விகளுக்கும் இவ்வாரம் தீர்வு கிடைக்கவுள்ள அதேவேளை பாராளுமன்றம் இவ்வாரம் அதாவது 23 ஆம் திகதி நள்ளிரவு கலைக்கப்படலாம் எனும் தகவல்களும் அரசியல் உயர் மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. (மேலும்....) 

பசில் ராஜபக்ஷ  நாளை வருகிறார்?

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பொரு ளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ நாளை 20ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அவர் எதிர்வரும் 20ம் திகதியளவில் இலங்கைக்கு வருகை தருவார் என்று அவரின் சட்டத்தரணி அண்மையில் கடுவலை நீதிமன்றத்துக்கு அறிவித்திருந்தார். இந்நிலையில் நாளை 20ம் திகதி பசில் ராஜபக்ஷ இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் பசில் ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதங்கள் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 19 ஆம் திருத்தத்திற்கு ஆதரவு

அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக அரசு இதுவரையில் தகவல்களை வெளியிடவில்லை. எனவே அது தொடர்பில் விவரங்கள் வெளியான பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளியிட முடியும் என்றும் அவர் கூறினார். இதேவேளை, இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், பாதுகாப்பு சபைக்கு முன்வைத்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். உள்நாட்டு விசாரணையில் கூட்டமைப்புக்கு நம்பிக்கை இல்லை என்றும், சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் சுரேஷ் எம்.பி. மேலும் கூறினார்.

கூட்டமைப்பை பதிவு செய்ய புலிகளின் பாணியில் மிரட்டல் - மாவை எம்.பி

சுவிற்சர்லாந்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிற்கிடையில் இணக்கத்தை ஏற்படுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. இப்போதைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்யும் எண்ணமில்லை என மாவை சேனாதிராஜா அங்கு வைத்துத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பை பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை மென்மையாக வைத்தவர்கள் படிப்படியாக தொனியை அதிகரித்து புலிகளின் பாணியில் மிரட்டல் விடுத்த போதும், மாவை எம்.பி. அசைந்து கொடுக்கவில்லை. கூட்டமைப்பை பதிவு செய்தால் அதிலுள்ள கட்சிகளுடன் இணக்கமாக வேலைகளை நகர்த்தி செல்ல முடியாதென அவர் கூறியுள்ளார். (மேலும்....)

19 ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறும் வாய்ப்பு உள்ளதா?

பத்தொன்பதாவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் மிகவும் உறுதியாகவுள்ளனர். எனினும் பத்தொன்பதாவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் குழப்பங்களை உண்டு பண்ணுவதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பது மஹிந்த தரப்பின் நிலைப்பாடு. இந்த இழுபறியில் தேசிய அரசு என்பது கலைபட்டுப் போகும் வாய்ப்புள்ளது. பாராளுமன்றத்தில் பத்தொன்பதாவது திருத்தச் சட்டமூலம் நிறைவேறினால் என்ன? நிறைவேற்றப்படாமல் போனால் என்ன? பாராளுமன்றம் கலைக்கப்படுவது உறுதி.(மேலும்....)

யெமன்பிரச்சினையை சிக்கலாக்கும் பனிப்போர் சூழல்

யெமன் உள்நாட்டு யுத்தம் விரைவில் முடிவது போல் தெரியவில்லை. இந்த யுத்தம் பிராந்தியத்தில் ஷியா-சுன்னி பிரச்சினையை கிளரிவிட்டதுபோல் ஏற்கனவே உக்ரைன் விவகாரத்தில் தீப்பற்றியிருக்கும் ரஷ்ய-அமெரிக்க பனிப் போர் சூழலுக்கும் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்திருக்கிறது. ஈரான் ஆதரவு ஷியா ஹவ்தி கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் அதரவை கொண்ட ஜனாதிபதி அப்த்-ரப்பு மன்சூர் ஹதியின் சுன்னி அரசை கவிழ் த்து தலைநகர் சனாவில் அதிகாரத்தை கைப்பற்றி யதை அடுத்தே கடந்த மாதம் பிரச்சினை ஆரம்பமா னது. ஹவ்திக்களின் இந்த வேலையால் யெமன் அல் கொய்தா அமைப்பினரை வேட்டையாடும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கையும் குழம்பிப் போயிருக்கிறது. (மேலும்....)

சித்திரை 18, 2015

19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

அரசியலமைப்பில் மேற்கொள்ளவுள்ள 19ஆவது திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள், இன்று வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் அதிகாரங்கள் சிலவற்றை குறைக்கும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19ஆவது திருத்தத்துக்காக சட்டமா அதிபரினால் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூல திருத்தத்துக்கே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தில் சில உறுப்புரைகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்து, அதுதொடர்பில் சபாநாயகருக்கும் அறிவித்துள்ளது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன. நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போதே எதிர்க்கட்சிகள் தங்களுடைய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு கட்சித்தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 20ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளனர்.

குறைவாய் புலம்பெயர்தோம் என்பதில் நம் பெருமை இருக்கின்றது ..!

(கிழக்கு மாகாணத்தை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர் கூட்டமைப்பு ஒன்றின் புத்தக வெளியீடு ஒன்றில் இடம்பெறுவதர்க்காக எழுதப்பட்ட கட்டுரை)

இந்த உலகத்தில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் ஒரே விதிதான் "யாதும் ஊரே யாவரும் கேளீர் " நாம் எப்படி வாழவேண்டு , எங்கு வாழவேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நம் தனி ஒருவரிடம் மட்டும் இருந்துவிடுவதில்லை . அவற்றை தீர்மானிக்கும் சக்தி பலதரப்பட்டவையாக இருக்கின்றன யுத்தம் , உலகமயமாக்கல் என்கின்ற இராட்ஷத காரணிகளால் சொந்த நாடுகளை பிரிந்தவர்களே உலகத்தில் அதிகமானவர்கள் . யுத்தத்தில் சிதறிப்போய் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் புலம்பெயர் தமிழர்களாகிய நாம் இன்றுவரை தாய் நாட்டின் பசுமை நினைவுகளுடனும், என்றோ ஓர் நாள் சொந்த ஊரில் குடியேறி விடவேண்டும் என்கின்ற ஏக்கங்களுடனும் வாழ்த்து வருகின்றோம். (மேலும்....)
 

தமிழனின் அழிந்து விட்ட இசை கருவிகள்

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 3)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். (மேலும்....)

கியூபா மீது படையெடுப்பு

அமெரிக்கவிற்கு மிக அருகே உள்ள தீவு நாடான கியூபாவில் 1959இல்,  fidel காஸ்ட்ரோ தலைமையில் கம்யூனிச அரசு உருவானது. கம்யுனிச பரவலை தடுக்க பெரும் முயற்சி செய்த அமெரிக்க தனக்கு மிக மிக அருகே  இப்படி ஒரு அரசு உருவானதை பெரும் அச்சுருத்தலாக கருதி அதை கவிழ்க்க தொடர்ந்து முயற்சித்தது. அமெரிக்காவிற்க்கு புலம் பெயர்ந்த கியூபா நாட்டினரை கொண்டு ஒரு சிறிய படையை  உருவாக்கிய ஜான் கென்னடி தலைமையிலான
அமெரிக்க அரசு, கூபா மீது ஒரு தாக்குதலை  1961இல் நடத்தியது. சுமார் 1400 கியூபாவினருக்கு பயிற்சி மற்றும் ஆயுதங்களை வழங்கிய அமெரிக்க உளவு துறை, படகுகள் மூலம் அவர்களை கியூபாவிற்க்கு அனுப்பியது. பன்றி வளைகுடா என்ற பகுதியில் தரையிறங்கியவர்கள் நான்கே நாட்களில்  தோற்கடிக்கப்பட்டு, கியூபா ராணுவத்தால்  சிறை பிடிக்கபட்டனர். அமெரிக்க ஆக்கிரமப்பு முய்ற்சியை வெற்றிகரமாக  எதிர் கொண்ட கூபாவின் தலைவர் கேஸ்ட்ரோ  பெரும் புகழ் பெற்றார். கியூபா மீது எதிர் புரட்சியாளர்கள் படை எடுத்த தினம் 1961, ஏப்ரல் 17.

போதையின் உச்சத்தில் …..

குளிர்நிறைந்த மார்ச் மாதத்தின் நள்ளிரவுப் பொழுதில் போதை தலைக்கேறிய நிலையில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்படுவதும், அதனை தடுக்க முனைந்த தமிழ் யுவதி ஒருவரை காவல்துறை அதிகாரிகள் தரையில் வீழ்த்துவதுமான ஒளிப்பதிவு ஒன்றை பார்க்கவேண்டிய சந்தர்ப்பம் அண்மையில் கிட்டியது. ஸ்காபுரோவில் மார்ச் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1:45 மணியளவில் அரங்கேறிய இந்தக் கைது மற்றும் அதனுடன் தொடர்புடைய காட்சிகளின் ஒளிப்பதிவு அன்று காலை 9 மணியளவில் எனது பார்வைக்கு வந்தது. காவல்துறையினரின் இந்தக் கைதுகளை எதிர்க்கும் வகையில் அங்கு கூடியிருந்த ஏனைய இளைஞர் மற்றும் யுவதிகள் காவல்துறையினருக்கு எதிராக குரல் எழுப்புவதையும் இந்த ஒளிநாடா பதிவு செய்திருந்தது. சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான ரொறன்ரோ காவல்துறையினரின் கண்மூடித்தனமான நடவடிக்கையா என்ற கேள்வியுடன் இந்த ஒளிப்பதிவு குறித்த விபரங்களை திரட்ட முனைந்தேன். இந்தத் தேடலின் நடுவில் காத்திருந்தது எனக்கான அதிர்ச்சியின் ஆரம்பம். (மேலும்....)

உயர்த்தி பிடித்த வெளிச்சம் !

(எஸ்.ராமகிருஷ்ணன்)

ஜெயகாந்தன் மறைந்துவிட்டார் என அறிந்த மறுகணம் அவர் வீட்டில் இருந்தேன். கம்பீரமான குரலில் வரவேற்கும் ஜெயகாந்தன் அங்கு இல்லை. அவரது உடலே கிடத்தப்பட்டிருந்தது. அந்த மௌனம், பெரும் துக்கத்தை உருவாக்கியது. தாங்க முடியாத மனவலியோடு அவரது வீட்டு வாசலில் இரவெல்லாம் அமர்ந்திருந்தேன். சலனமற்ற நீண்ட இரவு. நினைவுகள் கொப்பளிக்கின்றன. ஜே.கே. வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். மனம் அதில் ஒன்றமுடியாமல் தத்தளித்தது. இந்த இழப்பு எளிதானது அல்ல. எத்தனையோ வாசகர்களைப்போல நானும் அவரது வாசகன். அவர் எனது ஞானத்தந்தை. கண்ணீர் சிந்துவதற்கு மேலாக ஒன்றைச் செய்ய வேண்டும் எனத் தோன்றுகிறது. என்ன செய்வது எனத்தான் தெரியவில்லை.(மேலும்....)

மனிதம் இங்கும் வாழ்கின்றது

ஈரோடு, பவர்ஹவுஸ் ரோடு, அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள ஏவிஎம் உணவு விடுதி அருகில், காலில் செருப்பு கூட இல்லாதவர்கள், உடம்பில் சட்டை போடாமல் துண்டு மட்டும் கொண்டு இருப்பவர்கள், ஒரு காலத்தில் வெள்ளையாக இருந்த வேட்டியை அணிந்தவர்கள், நைந்து போன புடவையுடன் காணப்பட்டவர்கள் என சுமார் இருபது பேர் அந்த உணவு விடுதி அருகே, கண்களில் கவலையையும், கையில் ஒரு பையையும் வைத்துக்கொண்டு நின்றார்கள்.
சிறிது நேரத்தில் உணவு விடுதியில் இருந்து அழைப்பு வந்ததும் கையில் இருந்த ஒரு டோக்கனையும், ஒரு ரூபாயையும் கொடுத்துவிட்டு ஒரு பார்சல் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரும்பினர். (மேலும்....)

துக்ளக் இரமேஷ்

துக்ளக் இரமேஷ் நன்கு அறிமுகமானவர், நெருக்கம் எனக் கூறமுடியாவிடினும். அக்காலத்திலேயே அவரைப் பற்றி நிறைய கதைகள் உலவும். அதிகாரிகளுடனும் அரசியல்வாதிகளுடனும் அடிக்கடி காணப்படுவார். ஜெ அரசில் கூடுதல் பந்தா இருக்கும். துக்ளக் ஆசிரியர் சோ சொல்லி அப்படிச் செய்கிறாரா அல்லது தனது சொந்த முறையிலா என்பதெல்லாம் எனக்குப் புரிந்ததில்லை. ஆனால் ரொம்பவும் படம் காட்டுகிறார் என்றே எனக்குப் படும். சட்டமன்றத் தொடரின்போது ஜெவின் கண்களில் படுமாறு பார்த்துக்கொள்வார். திமுக வட்டாரங்களில் நக்கீரன் காமராஜுக்கு என்ன செல்வாக்கோ, அவர் மீது பிரமிப்போ, அதே அளவு அ இஅதிமுக வட்டாரங்களில் ரமேஷ். (மேலும்....)

 

இந்தியாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை

தங்களது கடல்சார் பட்டுப்பாதை திட்டத்திற்கு இந்தியா தடை ஏற்படுத்த முயன்றால் அது மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும் என சீனா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்காக, கடல் சார் பட்டுப்பாதை என்ற பெயரில், சீனா மெகா திட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது.
இதன்படி, பழங்காலத்தில் சீனாவை ஐரோப்பிய நாடுகளுடன் கடல்வழியாக இணைத்த பாதைகளை மையப்படுத்தி, அங்கு தனது ராணுவ செல்வாக்கை நிலைநிறுத்துவதே சீனாவின் முக்கிய குறிக்கோள். இதற்காக இந்திய பெருங்கடல் நாடுகளான மியான்மர், இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு மெகா திட்டங்களை சீனா செயல்படுத்தி வருகிறது. ஆசியாவில் போட்டியாக உள்ள இந்தியாவை சுற்றிவளைத்து கண்காணிக்கவும், மேற்காசியாவிலிருந்து கச்சா எண்ணெய்யை சீனாவுக்கு தங்குதடையின்றி கொண்டு செல்லவும் இந்த திட்டம் உதவி செய்யும். (மேலும்....)

பத்மஸ்ரீ விருது விவசாயி

புதுச்சேரி மாநிலம், கூடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த, வெங்கடபதி என்ற விவசாயிக்கு நேற்று பத்மஸ்ரீ விருது டெல்லியில் வழங்கப்பட்டது.
தனது 19- வது வயது முதலே விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினார். தனது முதல் ஆராய்ச்சியில் உருவான கனகாம்பரம் செடியை 1970-ல் அறிமுகம் செய்தார். 100 ரகங்களை அறிமுகம் செய்துள்ளார். சவுக்கு மரத்தில் 100 புதிய ரகங்களைக் கண்டறிந்துள்ளார்.
மூன்று தலைமுறையாகவே விவசாயத்தில் ஈடுபடும் குடும்பத்தில் பிறந்த வெங்கடபதி, 4- வது வரை மட்டுமே படித்தவர் என்பது குறிப்பிட தக்கது. இப்படிபட்டவர் பத்மஸ்ரீ விருது வாங்கியதை பெருமையாக வெளியில் சொல்ல வேண்டிய அரசங்கமே அவரது தனி புகைப்படத்தை வெளியிடவில்லை. (மேலும்....)

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

உலகையே மிரள வைத்த திருநள்ளாறு கோவில்!

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது.  3 வினாடிக ளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழு தும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.(மேலும்....)

“முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும்
மிகவும் ஆபத்தான எதிரிகள்.
மூன்றாவது எதிரி, தனிநபர்வாதம் ஆகும்.
இத்தகைய மூன்று எதிரிகளுக்கும்
எதிராக உறுதியுடன் போராடுவதிலேயே
புரட்சிகர நல்லொழுக்கம் அடங்கியிருக்கிறது!”
 

- தோழர் ஹோ சி மின்

யேமன் போர்க் களம்

ஒன்பது சுன்னி-முஸ்லீம் நாடுகளைச் சேர்த்து யேமனின் ஹூத்தி போராளிகள் மீது வான் வழித்தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் வஹாபிகளின் பிளாஸ்டிக் போருக்கும் ஐ.எஸ் மீது அதே விதமான தாக்குதல்கள் நடத்திக்கொண்டிருக்கும் அமெரிக்காவும் நண்பர்களும் கோஷ்டி போருக்கும் இருக்கும் ஒற்றுமைகளில் ஒன்றாக இருப்பதாகக் கணிக்கப்படும் விடயங்களில் ஒன்று, இவர்களில் எவருமே நிலப்போர் நடத்தாமல் எதிரியை வெற்றிபெறுவது நடக்காத காரியம் என்று பெரும்பாலான இராணுவக் கணிப்பீட்டாளர்கள் கணிப்பிட்டிருப்பதாகும். நவீன போர்க்கருவிகளுடன் இருக்கும் வஹாபிச் சவூதிகளின் இராணுவத்தினர் ஓரளவு "போர்ப்பயிற்சி" பெற்றவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் கடைசியாக உண்மையான போரில் ஈடுபட்டது 1991 இல் தான் [ஈராக்குக்கு எதிரான போரில் நேச நாடுகளுக்கு ஆதரவாக] என்பதை அவர்களுக்கு நவீன போர்ப்பயிற்சியைக் கொடுத்த அமெரிக்க இராணுவப் பிரத்தியேகப் பயிற்சியாளர்களே வெளிப்படையாகச் சொல்கிறார்கள். (மேலும்....)

சித்திரை 17, 2015

மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு தயான்

இலங்கையின் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா பொருத்தமில்லாத நாடு என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார். ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் செல்வாக்கு செலுத்துவதாலும் இந்தியாவுக்கு இந்த தகுதி இல்லையென அவர் கூறியுள்ளார். இலங்கை போரில் இந்திய அமைதிப்படை கொடூரமாக செத்துக்கொண்டிருந்த போதுகூட சென்னையின் அழுத்தம் காரணமாக புலிகளை முழுமையாக அழிக்க இந்திய அரசாங்கம் முயலவில்லை என ஜயதிலக்க மேலும் கூறியுள்ளார். இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை கண்டித்துள்ள ஜயதிலக்க, இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும் இலங்கையை காப்பாற்ற முடியாதென கூறினார். இந்த வகையில், தேர்தல் முக்கியத்துவம் உள்ள தமிழ் குடிவரவாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டியுள்ள சில மேற்கத்தேய நாடுகளும் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தகுதியில்லாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

(த நிவ் இந்தியன் எக்ஸ்பிரஸ்)

டில்லிக்கு அடுத்த படியாக ஆபத்தான நகரம் சென்னை

உலகில் சுற்றாடல் பாதிப்புள்ள இருபது நகரங்களில் 13 இடங்கள் இந்தியாவில் உள்ளதாக அறிவிப்பு

சுதந்திரமடைந்த பிறகு, உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பொருளாதார முன்னேற்றமும் மிகப் பெரிய கல்வி வளர்ச்சியும் எல்லா நாடுகளாலும் பாராட்டப்பட்டன. 1947 ஆம் ஆண்டு தொடங்கி 1960 வரை யிலும் மற்ற நாடுகளின் உயர் கல்வி நிலையங்களில் பேராசிரியர்களாகவும் ஆராய்ச்சி நிலையங்களில் விஞ்ஞானிகளா கவும் இந்தியர்கள் பலர் பணியிலிருந்தனர். அமெரிக்கா, பிரிட்டன் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியர்கள் குடியுரிமை பெற்று பல பெரிய பதவிகளில் அமர்ந்தனர். அதுபோன்ற நிலைமை படிப்படியாக குறைந்து தற்போது இந்திய நாட்டின் நிர்வாகம் சோம்பேறித்தனத்தில் சிக்கித் தவிக்கிறது. அதில் எல்லோரையும் பாதிக்கும் ஒரு விஷயம் இந்திய பெரு நகரங்களில் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு அங்கு வசிக்கும் மக்களின் சுகாதாரத்தை சீரழித்து வருகிறது என்பதாகும். (மேலும்....)

பச்சன் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தன் பாட்டி, இந்திராவின் புடவையில், பிரியங்கா கலந்து கொண்டார்

பச்சன் குடும்பத்தாருக்கும், நேரு குடும்பத்திற்கும் இடையில், 70 ஆண்டுகளுக்கும் மேலான நட்பு உள்ளது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக, இரு குடும்பத்தினருக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ராஜிவ் காந்தியின் மரணத்திற்குப் பின், அவரது குடும்பத்தினரிடம் இருந்து அமிதாப் பச்சன் விலகியிருந்தார். அமிதாப்பின் மகன் மற்றும் மகள் திருமணத்தில், காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் கலந்துகொள்ளவில்லை. ஆனால், அமிதாப்பின் சகோதரர் அஜிதாப் பச்சன் காங்கிரஸ் கட்சி மற்றும் காந்தி குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அஜிதாப் பச்சனின் மகள் நய்னாவுக்கும், இந்தி நடிகர் குணாலுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை, டில்லியில் உள்ள பண்ணை வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், அமிதாப் பச்சன் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு, தன் கணவர் ராபர்ட் வாத்ராவுடன், 50 ஆண்டுகளுக்கு முன், தன் பாட்டி இந்திரா அணிந்த புடவையில் வந்த பிரியங்கா அனைவரையும் கவர்ந்தார். கடந்த 1966ம் ஆண்டு, அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் லிண்டன் பி ஜான்சன் அளித்த விருந்திற்கு வந்த இந்திரா, ஊதா நிற (பர்ப்பிள்) புடவையுடன், முத்து காதணியை அணிந்திருந்தார். தன் பாட்டியின் புடவைகளை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரியங்கா அணிந்து வந்திருந்தாலும், இந்த புடவை மற்றும் காதணியை அணிந்து வந்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. வரவேற்பு நிகழ்ச்சியில், அமிதாப் குடும்பமும், பிரியங்காவும் நேருக்கு நேர் சந்தித்தபோது புன்னகைத்து கொண்டனர்.

யர்மூக் முகாமில் ஐ.எஸ்ஸுக்கு எதிராக பலஸ்தீன போராட்ட குழுக்கள் முன்னேற்றம்

சிரியாவின் டமஸ்கஸ் நகரில் இருக்கும் யர்மூக் அகதி முகாமில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுடன் சண்டையிட்டு வரும் பலஸ்தீன போராளிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். முகாமின் ஒருசில நிலைகளில் இருந்து ஐ.எஸ். குழுவை பின்வாங்கச் செய்ததாக பலஸ்தீன போராளிகளின் ஒரு தரப்பு குறிப்பிட்டுள்ளது. ஹஜர் அல் அஸ்வத்தை சூழவுள்ள பகுதிகளில் இருந்து ஐ.எஸ். பெரும்பாலும் வாபஸ் பெற்றிருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் ராய்ட்டருக்கு உறுதி செய்துள்ளனர். 18,000 பலஸ்தீன அகதிகள் வாழும் யர்மூக் முகாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக சிரிய இராணுவத்தின் முற்றுகையில் இருக்கும் நிலையில் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி ஐ.எஸ். குழு முகாமின் பெரும் பகுதியை கைப்பற்றியது. இந்த முகாமில் சிக்கிக் கொண்டிருக்கும் பலஸ்தீன மற்றும் சிரிய மக்களின் பாதுகாப்பு குறித்து ஐ.நா. கவலை வெளியிட்டிருந்தது. இவர்கள் நகரத்தின் வட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாக ஐ.நா. வர்ணித்தது. யர்மூக் முகாமில் ஐ.எஸ். கோட்டையாக இருக்கும் ஹஜர் அல் அஸ்வத் பகுதிக்கு நூற்றுக்கணக்கான ஐ.எஸ். ஆயுததாரிகள் திருமிவிட்டதாக ஒருசில யர்மூக் குடியிருப்பாளர்கள் கடந்த புதன்கிழமை ராய்ட்டருக்கு உறுதி செய்திருந்தனர். ஆனால் யர்மூக் முகாமில் சிரிய அரசுக்கு ஆதரவாக செயற்படும் பலஸ்தீன மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பு ஐ.எஸ். பின்வாங்கியதாக வெளியான செய்தியை நிராகரித்துள்ளது. எனினும் இந்த அகதி முகாமின் ஒருசில பகுதிகளில் பலஸ்தீன போராட்டக் குழுக்கள் முன்னேற்றம் கண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. மோதல் தொடர்ந்தும் நீடித்து வருகிறது.

ஜேவிபி மீண்டும் உடைகின்றது

புதிய கட்சி தொடங்குகிறார் சோமவங்ச அமரசிங்க

ஜே.வி.பியின் சர்வ தேச விவகாரங்களுக்கான செயலாளரும் முன்னாள் தலைவ ருமான சோமவங்ச அமரசிங்க கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.ஜே.வி.பியின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ள அதன் ஆதரவாளர்களுக்கு தலைமைத்துவம் வழங்கும் வகையில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவிருப் பதாகவும் அவர் கூறினார். பெலவத்தையில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய போதே அவர் மேற்கண்டவாறு தனது தீர்மானத்தை அறிவித்தார். தனது இராஜினாமா கடிதத்தை விரைவில் கட்சிக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நக்சலைட்டுகளுக்கு கடல் வழியாக இலங்கையிலிருந்து ஆயுத விநியோகம்?

நக்சலைட்டுகளுக்கு இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக புதியரக ஆயுதங்களை பெற்றுக்கொள்வதாக கிடைத்துள்ள துப்பினைத் தொடர்ந்து இந்திய மத்திய உளவுத் துறை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. எல். ரீ. ரீ. ஈ. யினர்க்கு ஆயுதங்கள் விநியோகிக்கப் பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கடல் மார்க்கமாகவே நக்ஸல்களும் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை பெற்று வருவதாக புலனாய்வு துறையின் உயர் மட்டத்தினர்க்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டு ஏசியன் ஏஜ் பத்திரிகை செய்தி வெளியிட் டுள்ளது. கிடைக்கப்பெற்றுள்ள தகவல் களுக்கமைய இந்த ஆயுதங்கள் இலங்கையிலிருந்தே கடல் மார்க்கமாக நக்ஸல்களிடம் சென்றடைவதாக சந்தேகம் எழுந்திருப் பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

ஐ.ம.சு.மு 62 எம்.பிக்கள் மஹிந்த ராஜபக்~வுடன் தங்காலையில் சந்திப்பு

ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் 62 பேர் உட்பட சுமார் 100 ஐ.ம.சு.மு. மக்கள் பிரதிநிதிகள் நேற்று தங்காலை கால்டன் இல்லத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன, டளஸ் அலஹப்பெரும, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே, கெஹெலிய ரம்புக்வெல்ல, ரோஹித அபேகுணவர்தன, விமல் வீரவன்ச, சாலிந்த திசாநாயக்க, ரஞ்சித் த சொய்சா ரீ.பீ. ஏக்கநாயக்க, வீரகுமார திசாநாயக்க, ஜானக வக்கும்புர, மொஹான் பீ சில்வா, அருந்திக பெர்னாண்டோ, ஸ்ரீயானி விஜேவிக்ரம, ஜகத் பாலசூரிய, லொஹான் ரத்வத்தை உட்பட 62 எம்.பி.கள் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தனர். இவர்களுடன் பாராளுமன்ற விவகார அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் இதில் கலந்து கொண்டார். (மேலும்....)

நவுருதீவிலுள்ள அகதிகளை கம்போடியா மாற்ற தீர்மானம்

நவுருதீவுகளில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உட்பட புகலிடக் கோரிக்கையாளர்களை கம்போடியாவுக்கு அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதற்கட்டமாக இவர்களில் ஒரு குழுவினர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டு புகலிடம் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாவுருதீவில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்களும் இவ்வாறு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கம்போடியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் கடந்த செப்டம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதற்கட்டமாக இவர்களில் ஒரு குழுவினரை அனுப்பி வைக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நவுருதீவுகளில் சட்டவிரோதமாக ஆஸி.க்குள் நுழைய முற்பட்ட இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 1200 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

சித்திரை 16, 2015

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 2)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார். (மேலும்....)

சமுதாயப் பொதுவெளியில் திருநங்கையருக்கு அளிக்கப்படும் மதிப்பு

ஒரு நகைச்சுவைத் திரைப்படத்தில் போலிசாமியாராய் வந்திருக்கும் தேங்காய் சீனிவாசன் தன்னிடம் அருள்வாக்கு கேட்கும் சுருளிராஜனிடம், “பத்துக்குள்ள ஒரு நம்பர் சொல்லு,” என்பார். சுருளிராஜன் சட்டென்று, “ஒம்போது” எனக் கூறுவார். எல்லோரும் சிரிக்க, நானும் அந்த எண்ணால் அடையாளப்படுத்தபபடுகிறவர்கள் பரிகாசத்துக்கு உரியவர்களே என்ற எண்ணத்தோடு சிரித்தேன். பின்னர் சு. சமுத்திரம் எழுதிய ‘வாடாமல்லி’ நாவல் உள்ளிட்ட எழுத்துகளைப் படித்தபோது, திருநங்கையர் மீது பரிவு ஏற்பட்டது. அதன் பின் அப்படி பரிவு அடிப்படையில் இவர்களை அணுகுவது எனது ஆணவத்தின் அடையாளம் என்று உணர்ந்தேன். இப்போது இவர்களை சக தோழர்களாக, என்னை இவர்களது தோழனாக, “இவர்கள் நம்மாளுக” என்ற உணர்வோடு பழகுகிறேன். (மேலும்....)

பெரியார் மீது காழ்ப்புணர்ச்சியா....?

பெரியார் படத்தின் மீது சிறுநீர் கழிக்கும் விவகாரத்தில், எங்கோ ஒரு இடத்தில் நீங்கள் ஆழமாகக் காயமடைகிறீர்கள் என்றால், நீங்கள் முழு பெரியாரியராகக் கனியவில்லை என்றே பொருள். பிள்ளையார் சிலைகளை தெருவில் போட்டு உடைத்தவரல்லவா அவர்? அவருக்குத் தெரியாதா தாம் எவ்வளவு ஆழமாக மக்கள் திரளின் பெரும்பிரிவினரை காயப்படுத்துகிறோம் என்று. திருவுரு பிம்பத்திற்கு எதிரான கலகம் தானே அவரது வாழ்வு. உற்றுப்பார்க்கும் திராணி இருந்தால், அவரிடமிருந்து வெகுதூரம் விலகிப்போயிருக்கிற திராவிட இயக்கங்கள், அந்த ஈர புகைப்படத்தில் தங்களது செல்லரித்துப்போன அரசியலை உணரவேண்டும். பெரியாரின் கீர்த்தி என்று அவரது பிம்பத்துக்குப் பின்னால் இப்போதும் ஒளிந்து கொள்ளக்கூடாது. இதைவிட பெரிய அவமானங்களை சகித்துக்கொள்ளக் கூடியவர்தான் பெரியார். (Karl Max)

எழுத்துலக நாயகன் -ஜே.கே நினைவு விழா.

எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு சகாப்தம் , தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழ் இலக்கியத்தை வளப்படுத்திய மகத்தான கலைஞர் ஜெயகாந்தன். அவரது மறைவை முன்னிட்டு அவரது படைப்புகளையும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்ளும் சிறப்புக்கூட்டம்

ஏப்ரல்18 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில்

ஆர்.கே வீ ஸ்டுடியோஸ், இல. 317-G, டாக்டர் NSK சாலை , வடபழனி, சென்னை -26

அழைப்பாளர் - வேடியப்பன், டிஸ்கவரி புக் பேலஸ் ·

நிகழ்வில் உரையாற்றுபவர்கள் !

தோழர் சி. மகேந்திரன் (தாமரை ஆசிரியர் )
எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்
டாக்டர் கே. எஸ். சுப்ரமணியன்
எழுத்தாளர் சா. கந்தசாமி
கவிஞர் ரவி சுப்ரமணியன்
கவிதா சொக்கலிங்கம்

நிகழ்ச்சித் தொகுப்பு: Surekaa Sundar
ஒருங்கிணைப்பு : வேடியப்பன் ( டிஸ்கவரி புக் பேலஸ்)
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கிறேன்
வேடியப்பன் - டிஸ்கவரி புக் பேலஸ்

எழுச்சியும், வீழ்ச்சியும்ஆரம்பம்

வீட்டு வேலைக்காரிக்கு (கத்தாமா) பாமிலி ஸ்டேட்டஸ். இங்கு ஒரு அரபிக்கு திருமணம் முடிந்து 20 வருடங்கள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பல கம்பனிகளுக்கு சொந்தக்காரர். அனைத்து சொத்துக்கும் வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த அந்த குடும்பத்திற்கு பொக்கிசமாக வந்த குழந்தை.

இந்த வீட்டில் ஒரு ஸ்ரீலங்கா வை சேர்ந்த ஒரு பெண்மணி வேலைக்காரியாக பணிபுரிந்து வருகிறார். இந்த அம்மணிக்கு 3 குழந்தைகள். சிறு வியாபாரம் செய்து குழந்தைகளையும் கவனித்து வருகிறார் அவரின் கணவர்.

இந்த வேலைக்காரி அம்மணி தான் இந்த குழந்தைக்கு எல்லாேம. தாய்பாலை தவிர அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வது இவள் தான். தூங்கக் கூட இந்த குழந்தை பெற்றோரிடம் செல்லாது. தூங்கிய பின்பு, தூக்கிக்கொண்டு அவர்களின் ரூமுக்கு கொண்டு செல்லுவார்களாம் பெற்றோர்கள். (மேலும்....)

பாசிஸ்டுகளின் குணம் மட்டும் மாறாதுமேலே உள்ள படத்திற்கும், கீழே உள்ள படத்திற்கும் இடையில் குறைந்தது ஒரு வித்தியாசத்தையாவது கண்டுபிடிக்கவும். முன்னையது, உக்ரைனில் நவ- நாஸிகள் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் நடந்தது. பின்னையது, இந்தியாவின் ஆட்சியை இந்துத்துவா பாசிஸ்டுகள் கைப்பற்றிய பின்னர் நடந்தது. உக்ரைனாக இருந்தாலும், தமிழ் நாடாக இருந்தாலும்,
(Kalaiyarasan Tha)

மனித சமூகமானது கடவுள் ஜாதி மதம் தேசம் என்னும் பேர்களால் பிரிவுபட்டு.....

தோழர்களே! எனது அபிப்பிரயாத்திற்கும், முயற்சிக்கும் குறிப்பிடத் தகுந்த அளவு எதிர்ப்பு இருக்கின்றது என்பதை நான் அறியாமலோ அல்லது அறிந்தும் அவற்றை மறைக்க முயலவோ இல்லை. யார் எவ்வளவு எதிர்த்தபோதிலும் யார் எவ்வளவு தூஷித்து விஷமப் பிரசாரம் செய்தபோதிலும், யார் எவ்வளவு எனது அபிப்பிராயம் வெளியில் பரவாமல் இருக்கும் படியும், சூழ்ச்சிகள் செய்து மக்களின் கவனத்தை வேறு பக்கம் திருப்பிய போதிலும் உலகத்தில் எல்லாப் பக்கங்களிலும் வேத புராண சரித்திர காலம் முதல் இன்றைய வரையிலும் மனித சமூகமானது கடவுள் ஜாதி மதம் தேசம் என்னும் பேர்களால் பிரிவுபட்டு, உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஏழை-பணக்காரன், முதலாளி-தொழிலாளி, அரசன்-பிரஜைகள், அதிகாரி-குடிஜனங்கள், குரு-சிஷ்யன் முதலியனவாகிய பல தன்மையில் வகுப்பு வித்தியாசங்களுக்குள்ளாகி மேல்- கீழ்த்தரத்தோடு கட்டுப்பாடான சமுதாயக் கொடுமைகளாலும் அரசாங்கச் சட்டங்களாலும் கொடுமைக்குள்ளாகி வந்திருக்கின்றது- வருகின்றது என்பதை மாத்திரம் யாராலும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது என்று உறுதியாய் சொல்லுவேன்.
(பிறத்தியாள்: இலங்கைப் பேருரை - தந்தை பெரியார்)

சூட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் பாகங்களுடன் எரிந்த நிலையில் தமிழ் பெண் பாஸ்போர்ட்

கடந்த ஆண்டு ஜூலை மாதம் உக்ரைனில் பக் ஏவுகணை வீசித் தாக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தவர்களில் மலேசியா வாழ் தமிழ் குடும்பமும் அடக்கம். அதில் அந்த பெண்ணின் பாஸ்போர்ட் பாதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் அந்நாட்டு அரசுக்கும், ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. கடந்த ஜூலை மாதம் 17–ந் தேதி ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூருக்கு சென்று கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்சின் எம்.எச்.17 விமானம் 298 பேருடன் உக்ரைன் மீது பறந்தபோது ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேரும் பலியானார்கள்.(மேலும்....)

தோழர் மு.குமாரசாமி மறைவுக்கு அஞ்சலி!

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிணைந்து செயல்பட்டவரும், குறிப்பாக வடமராட்சி பிரதேசத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியெழுப்புவதில் முக்கியமான பாத்திரம் வகித்தவரும், இலங்கை தேசிய ஆசிரிய சங்கத்தின் (லங்கா ஜாதிக குரு சங்கமய) தலைமை நிர்வாகிகளில் ஒருவராக இருந்து, வடபகுதி ஆசிரியர்களின் பல பிரச்சினைகளுக்காகப் போராடித் தீர்வினைப் பெற்றுக் கொடுத்தவரும், தீண்டாமைக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் முன்னணிப் பாத்திரம் வகித்தவரும், அண்மையில் காலஞ்சென்ற நேசமணியின் அன்புக் கணவரும், மகிந்தனின் தந்தையுமான, பருத்தித்துறை நெல்லண்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வுபெற்ற ஆசிரியர் தோழர் மு.குமாரசாமி அவர்கள், நீண்டகால சுகவீனத்திற்குப் பின்னர் 2015 ஏப்ரல் 12ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் காலமாகிவிட்டார் என்பதை, சகல தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் மிகவும் துயரத்துடன் அறியத் தருகின்றேன். அவரது மரணத்தையிட்டு அனைத்துத் தோழர்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சண்முகம் சுப்பிரமணியம்
முன்னாள் வட பிரதேச செயலாளர்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்)

சித்திரை 15, 2015

மாவைக்கு 51 வீதம்..! சுரேஸ், செல்வம், சித்தருக்கு 49 வீதம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில், இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 51 சதவீதமும் ஏனைய மூன்று கட்சிகளுக்கு 49 சதவீதமும் வழங்கும் வகையிலேயே புரிந்துணர்வு உடன்படிக்கை மாற்றப்பட வேண்டும். அவ்வாறு மாற்றப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கையிலேயே, இலங்கைத் தமிழரசுக் கட்சி கையயாப்பமிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், கட்சியின் முக்கிய மற்றும் சிரேஷ்ட தலைவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றது. இதிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

ஊழல் குற்றங்களில் கூட ராஜபக்ச குடும்பம் தப்பித்துகொள்வதன் பின்புலம்…

மகிந்க ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச, சிராந்தி ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோரைக் கைது செய்வதற்குரிய ஆதாரங்கள் காணப்படாலும் சட்ட மா அதிபர் திணைக்களம் அதனைத் தடுப்பதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. இவர்களின் ஊழல் குற்றங்களில் சுனாமி நிதிய ஊழலும் அடங்கும். ராஜபக்சவின் ஊழலுக்கும் மேற்கு ஏகாதிபத்திய அரசுகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. குறிப்பாக 2004 ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆம் ஆண்டு வன்னிப் படுகொலை நடத்தப்பட்ட காலம் வரை ராஜபக்சவின் ஊழல்கள் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்திய அரசுகளின் துணையோடே நடத்தப்பட்டன. 2009 இற்குப் பின்னர் ராஜபக்ச அரசு தேவையற்ற நிலையில் மேற்கு ஏகாதிபத்திய அரசுகள் தெரிந்தெடுத்த மனிதரே மைத்திரிபால சிரிசேன. (மேலும்....)

நாகூர் ஹனீபா

எல்லோரும் கொண்டாடுவோம்!

எந்தச் சமூகத்துக்காக, எந்தக் கட்சிக்காக ஓய்வில்லாமல் உழைத்தாரோ அவையே புறக்கணித்தன. இந்தப் பாடல் ஒருமுறை ஒலித்தால் போதும்!

‘‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா

அருமைமிகும் திராவிடத்தின் துயர்துடைக்க என்றே...’’

ஒரு யுகப் புரட்சியை நடத்தி முடிக்கக் கோரும் அறைகூவலாக ஒருவரின் உள்ளத்தில் எழுச்சிப் பேரலையை எழுப்பக் கூடும்; சங்கநாதமாக அது எட்டுத் திக்கும் பரவுவதுபோலவும் இருக்கும். கண்முன்னே ஒரு மாபெரும் போர்க்களம் விரிந்து கிடக்கிற காட்சியை மனம் உருவாக்கிக்கொள்ளச் செய்தது இந்தப் பாடல். (மேலும்....)

சித்திரை 14, 2015

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்”(பகுதி - 1)

(எம். ஏ. நுஃமான்)

எம். ஏ. நுஃமான்(1944) ஈழத்திலிருந்து தமிழ்சார்ந்து செயற்படும் ஆளுமைகளுள் முக்கியமானவர். கவிஞராகவும் சிறுகதையாசிரியராகவும் வெளிப்பட்ட இவர் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி ஆகியோரின் திறனாய்வு மரபில்வைத்து எண்ணப்பட வேண்டிய விமர்சகர்களுள் ஒருவர். மார்க்சியக் கோட்பாட்டின்மீது நம்பிக்கை கொண்டவராக இருந்தபோதிலும் அவற்றின் பெயரால் இலக்கியத்தை எளிமைப்படுத்துவதற்கு அப்பால் நிற்கும் வெகுசிலரில் ஒருவர். தமிழில் இன்று எழுதும் விமர்சகர்களில் ஆகவிவேகமான பார்வை இவருடையதுதான் என்று சுந்தர ராமசாமியால் குறிக்கப்பட்டவர் நுஃமான். உடனடிக் கவன ஈர்ப்பு நோக்கத்தில் இல்லாமல் நிதானத்தோடு செயற்படும் பொறுப்புமிக்க விமர்சகர். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பிந்தைய ஈழத்தின் இன்றைய அரசியல் கலாச்சாரச் செயற்பாடுகள் பற்றித் தன்னுடைய கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.(மேலும்....)

சனி நீராடு

நோர்வேயில்
கோடி கொட்டி
கடலைக் குத்தி
பிளாட்போம் நுளம்புகள்
எண்ணை எடுக்கும்

ஒட்டகம் கட்டி
நிலத்தை வெட்டி
எண்ணையால்
பணப்பெட்டகம் நிரம்பும்
அல்லாப்பிள்ளைகள்

அல்லாப்பிள்ளைகளை
பொல்லாப்பிள்ளைகளென
சொல்லாது கலைத்தனர் அன்று
செல்லாப்பிள்ளையானர்கள் இன்று

எண்ணை வைத்து
சனிநீராடு என்றாளே ஒளவை
வலிகாமமே எண்ணைவைத்து
சனிநீராடுகிறது.

எண்ணை வைத்து- காசை
எண்ண வைத்து
எண்ணமே இன்றி
சனி நீராடுகிறது
சுண்ணாகச்சுற்றவுள்ள சனம்.

அல்லா கண்திறந்தால்
கிண்டினால் எண்ணை
புத்தா கண்திறந்தால்
குடிநீர் கிணறெங்கும் எண்ணை.

தனிநீராடுகிறார்
புத்தர்

(நோர்வே நக்கீரா)

சித்திரை 13, 2015

மஹிந்த மீண்டும் வருவாரா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அரசியலமைப்பில் 19ஆவது திருத்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேவைக்காக முன்வைக்கப்படுகிறதா அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேவைக்காக முன்வைக்கப்படுகிறதா என்று கேட்குமளவுக்கு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது என்பது ஜனாதிபதியின் தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானதாகும். அந்த வாக்குறுதியை முன்வைத்து அவர் தேர்தலில் போட்டியிட்ட போது அவரை ஆதரித்த கட்சிகளில் பிரதான கட்சி விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சியே. அந்த வகையில் பார்க்கும் போது இந்த திருத்தம் இருவரது தேவைக்காகவும் முன்வைக்கப்படுகிறது என்று கூறலாம். (மேலும்....)

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான
ஐ.ம.சு.முவில் போட்டியிட பங்காளிக் கட்சிகள் முடிவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமைலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்தும் போட்டியிடுவதற்கு பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐ.ம.சு.மு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு என்ற பெயரில் தேர்தலில் களமிறங்குவதற்கு கட்சித் தலைவர்கள் இணக்கம் கண்டுள்ளனர். அதேநேரம், ஐ.ம.சு.முவில் முன்னாள் ஜனாதிபதி போட்டியிட விரும்பினால் போட்டியிட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.ம.சு.மு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் 19வது திருத்தச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. 19வது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்காதவர்களுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு. பட்டியலில் போட்டியிட இடம் வழங்குவதில்லையென்ற நிலைப்பாட்டுக்கு ஐ.ம.சு.மு தலைமைத்துவம் சென்றிருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தினேஷ் குணவர்த்தனவை நியமிக்க வேண்டுமெனக் கோரி சத்தியக்கடதாசியில் கையெழுத்திட்டிருந்தனர். பந்துல குணவர்த்தன இது தொடர்பில் முன்னின்று செயற்பட்டதுடன், ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

பராக் ஒபாமா - காஸ்ட்ரோ சந்திப்பு வரலாற்று திருப்புமுனையாக வர்ணிப்பு

கியூபத் தலைவர் ராவூல் காஸ்ட்ரோவுடனான தனது சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் மிக்க ஒன்று என்று விபரித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இது கியூபாவுடன் மாத்திரமன்றி அனைத்து லத்தீன் அமெரிக் காவுடனான அமெரிக்க உறவில் ஒரு பெரும் திருப்பம் என்று கூறியுள்ளார். கியூபாவில் ஆட்சி மாற்றத்தில் அமெரிக்கா ஆர்வம் காட்டாது என்றும், ஆனால், அங்கு தொடர்ந்தும், ஜன நாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக தாம் அழுத்தம் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். அனைத்தையும் விவாதிக்க தாம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி ராவூல் காஸ்ட்ரோ கூறியுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலப்பகுதியில் அமெரிக்காவின் ஜனாதிபதிக்கும், கியூபாவின் ஜனாதி பதிக்கும் இடையில் முதல் தடவையாக இடம்பெற்ற இந்தச் சந்திப்பை பனாமா மாநாட்டில் கலந்து கொண்ட ஏனைய நாடுகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். பனிப்போர் காலத்தின் கடைசி அடையாளமான இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகலை முடிவுக்கு கொண்டுவரும் இந்த முயற்சி துணிச்சல் மிக்க ஒரு நடவடிக்கை என்று பிரேசில் நாட்டு ஜனாதிபதி டில்மா ரோஸெப் பாராட்டியுள்ளார். பனாமாவில் நடந்த அமெரிக்க கண்ட நாடுகளின் மாநாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து கைகுலுக்கி அளவளாவியிருந்தனர். லத்தீன அமெரிக்காவில் அமெரிக்கா கேள்வி கணக்கின்றி தலையிட்ட காலமெல்லாம் முடிந்துவிட்டது என்றும் முன்னதாக ஒபாமா கூறியுள்ளார்.

சித்திரை 12, 2015

இந்திய இலக்கிய உலக மானிட மனச்சாட்சியின் குரல்.

ஜெயகாந்தன் காலத்தில் நாமும் வாழ்ந்தோம், அவருடன் பழகினோம் என்று எண்ணும்போது மனதில் ஒரு எழுச்சி குடி கொள்கிறது. நாங்கள் முற்போக்கு உலகின் படைப்பாளிகளைத் தேடி அலைந்த காலத்தில் அவர் எமது நெஞ்சங்களில் விளக்கேற்றினார். யாழ் நூலகம், பூபாலசிங்கம், வசந்தம், மக்கள் பிரசுராலயம், தோழர் மணியத்தின் புத்தககக்கடை, என்சிபிஎச் சென்னை புத்தககண்காட்சி, கும்பகோணம் நூல்நிலையங்கள் கன்னிமாரா என எல்லா இடங்களிலும் ஜெயகாந்தனைத் தரிசித்தோம். அவருடைய கலந்துரையாடல் மண்டபங்களுக்கும் பல தடவை சென்று வந்திருக்கிறோம். (மேலும்....)


மஹிந்த போட்டியிடுவதற்கு தடையில்லை - மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்திலேயே அவர், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சு.க மத்தியக்குழுவிலிருந்து 5 எம்.பி.க்கள் நீக்கம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக்குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐவர் நீக்கப்பட்டுள்ளனர்.  நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன உள்ளிட்ட எஸ்.எம். சந்திரசேன, டி.பீ. ஏக்கநாயக்க, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சாலிந்த திஸாநாயக்க ஆகிய ஐவருமே நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலுக்குள் சிக்கியுள்ள சுன்னாகத்து நீர்? பருகலாமா? இல்லையா? என்பதில் ஒரே குழப்பம்

பருகலாம் என்கிறது வட மாகாண அரசு, இல்லை பருகினால் ஆபத்து என்கிறது மத்திய அரசு

கடந்த ஒரு வருடமாக நிலவி வரும் சுன்னாகம் நீர்ப்பிரச்சினை தற்போது அரசியலுக்குள்ளும் சிக்குண்டு இருப்பதால் அப்பகுதி மக்கள் நீரைப் பருகுவதா இல்லையா எனும் இரண்டும் கெட்டான் நிலைக்குத் தள்ளப்பட்டு சிக்கித் தவிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இவ்விடயம் உள்ளூர் பிரதேச மட்டத்திலான அரசியல்வாதிகள் சிலருக்கும் வைத்திய அதிகாரிகள் சிலருக்குமிடையேயான போட்டித் தன்மை கொண்டதாகக் காணப்பட்டது. பின்னர் தனியார் மின்சாரம் வழங்கும் நிறுவனத்திற் கும் வட மாகாண சபைக்கும் இடையேயான பிரச்சினையாகக் காணப்பட்டது. இப்போது இப் பிரச்சினை மத்திய அரசிற்கும், மாகாண அரசிற்கும் இடையே யானதொரு பிரச்சினையாக உருவெடுத் துள்ளது. (மேலும்....)

இறுக்கமடைந்து வரும் சிரிய நெருக்கடி
 

(ரவூப் ஸெய்ன்)

சிரியாவின் உள்நாட்டுப் போர் ஐந்தாவது ஆண்டின் காலெடுத்து வைக்கிறது. கடந்த நான்கு ஆண்டு காலப் போரில் 220,000 மக் கள் கொல்லப்பட்டுள்ளனர். நாட்டின் சனத்தொகையில் அரைவாசிப் பேர் தமது இருப்பிடங்களிலிருந்து அகதிகளாய் வெளியேறி, உள்நாட்டிலும் வெளிநாடு களிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களுள் 4.3 மில்லியன் மக்கள் அயல் நாடுகளில் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். போரினால் இடம்பெயர்ந் தவர்களுள் 5 இலட்சம் சிறுவர்களும் உள்ளடங்குவர். சிரியாவிலிருந்து அயல் நாடுகளுக்குத் தப்பியோடியுள்ள மக்களின் தொகை குரோஷியா நாட்டின் சனத் தொகைக்குச் சமமானது. அவர்கள் வெளிநாட்டின் நிவாரண உதவிகளிலேயே தங்கியுள்ளனர். (மேலும்....)
 

உலகை உலுக்கிய சிறுமியின் புகைப்படம்

 

சித்திரை 11, 2015

எதிர்க்கட்சி தலைவர் பதவியை எனக்கு தாருங்கள் - சம்பந்தன்

எதிர்க்கட்சி தலைவர் பதவியை தனது தருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் கோரியுள்ளார். இது தொடர்பில், சம்பந்தன் எம்.பி, சபாநாயகர் சமல் ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளார். தள்ளாத வயதிலும் துள்ளுற ஆசை. இது சம்மந்தருக்கும் பொருந்தும்.

சகோதரப் படுகொலையும் காமவேட்டையும் அரங்கேறி 11 வருடங்களாகப் போகின்றன

அன்றொருகாலம் தமிழீழ விடுதலை புலிகள் “அசைக்கமுடியாத” சக்திகளாய் இருந்தனர்.1976ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன் யாராலும் “வெல்லப்பட “முடியாதவர் “அனுமானுஷ” சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார். இந்த புலிகள் அமைப்பானது தனது 27வருடகால வரலாற்றில் கடந்துவந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.ஆனால் அவையனைத்தையும் தாண்டி வென்று நின்றவர்கள்தான் புலிகள். ஆனால் 2004ம் ஆண்டு புலிகள் எதிர்கொள்ள நேர்ந்த “கிழக்கு பிளவு”அவர்களுக்கு மாபெரும் சவாலொன்றை விடுத்தது. (மேலும்....)

கவிஞர் கலீல் ஜிப்ரான் நினைவு தினம் இன்று...

20ம் நூற்றாண்டின் ‘தாந்தே’ என்று போற்றிப் புகழப்படும் கலீல் கிப்ரான் லெபனான் நாட்டில் உள்ள பெஸ்ரி என்ற கிராமத்தில் 1883ல் ஜனவரி 6ம் தேதி பிறந்தார். வீட்டிலேயே ஆங்கிலம், அரபி, பிரெஞ்சு மொழிகளைக் கற்றார். உள்மன அனுபவங்களை தன் இளமைக்கால வாழ்க்கையிலேயே தெரிந்து உணர்ந்து வளர்ந்தார் கலீல் கிப்ரான். 1894 ல் அமெரிக்காவில் குடியேறி அங்கு ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார். பின் 1896ல் மீண்டும் லெபனான் திரும்பி அரபி இலக்கியத்தை கற்றறிந்தார். 15ம் வயதில் ‘தீர்க்கதரிசி’ நூலின் கையேட்டுப் பிரதியை எழுதினார். 16வது வயதில் ‘அல் அகிகாட்’ (உண்மை) இதழ் ஆசிரியரானார். 17 வது வயதில் அரபி மொழியில் சிறந்து விளங்கிய கவிஞர்களின் ஓவியங்களை வரைந்தார். 1901ல் ‘அல்கிக் காமெட்’ கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். (மேலும்....)

இன்கிலாப்

அந்தக் காலத்தில் சஞ்சிகை களுக்கு என்று ஒரு பெரிய இடமிருந்தது. யாழ்ப்பா ணத்தில் ‘மல்லிகை’, கல்முனையில் இருந்தன. இன்றும் அதிகம் சஞ்சிகைகள் வெளிவருகின்றன. ஆனால் அவற்றில் சிலவே பதிவு பெறுகின்றன. பல்கலைக் கழக சஞ்சிகைகள் பெரும்பாலும் அக் காலத்தில் ஒரு பெரிய வரலாற்றையே சுமந்திருந்தன. குறிப்பாகப் பல்கலைக் கழகத் தமிழ்ச் சங்கம், முஸ்லிம் மஜ்லிஸ் ஆகியன இதில் பெரும் பங்கெடுத்தன. இவ்வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக் கழக முஸ்லிம் மஜ்லிஸின் வெளியீடாக அமைந்ததுவே ‘இன்கிலாப்’.(மேலும்....)

லீ குவான் யூ

நாட்டை முன்னேற்றினார், ஆனால் அதை நம்பவில்லை!
 

லீ செய்ன் லூங் அரசு சென்ற 29ம் தேதி அன்று அமோஸைக் கைது செய்தது. யூ ட்யூப் பதிவும் முடக்கப்பட்டது.. கருத்துச் சுதந்திரத்தில் சிங்கப்பூர் அரசின் அணுகல் முறையைப் புரிந்து கொள்ள இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு என லீயை விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர். பொருளாதார வளர்ச்சியில் லீ குவான் யூவைப் பாராட்டுகிறவர்கள் கூட கடைசியில் இப்படிச் சொல்லி முடிப்பது வழக்கம்: “அரசை எதிர்த்த ஆர்பாட்டங்கள், பத்திரிகைச் சுதந்திரம் முதலான சிவில் உரிமைகளை முடக்கும் அரசு எனவும், அரசியல் எதிரிகள் மீது வழக்குகளைத் (libel suits) தொடரும் அரசு எனவும் லீயின் ஆளுகை விமர்சிக்கப்பட்டது. ஆனால், அரசியல் ஸ்திரத் தன்மைக்கு இத்தகைய எதேச்சதிகார நடவடிக்கைகள் அவசியம் எனவும், இத்தகைய நடவடிக்கைகளுடன் ‘சட்டத்தின் ஆட்சியும்’ சேரும்போதுதான் பொருளாதார வளர்ச்சி சாத்தியப்படும் என்றும் அவர் வாதிட்டார்” – இப்படி முடிகிறது லீ குறித்த விக்கிபீடியா கட்டுரை. (மேலும்....)

சித்திரை 10, 2015

19 வது  திருத்தம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிப்பு, நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைப்பு

அரசியலமைப்பின் 19 வது திருத்தம் எதிர்வரும் 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 19 வது திருத்தம் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்டதும் பாராளுமன்றம் கலைக்கப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இக்காலங்களில் அரசியலில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை சம்பந்தமாகவே பேசப்படுகின்றன. இதற்கிணங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையிலுள்ள மேலதிக அதிகாரங்களை நீக்கும் வகையில் 19 வது அரசியலமைப்புத் திருத்தம் இம்மாதம் 20ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது. இதன்மூலம் நாட்டில் அரசியல் ரீதியாக எழுந்துள்ள நெருக்கடிகளை நிவர்த்தி செய்ய முடியும் என எண்ணுகின்றேன். நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் குறைக்கப்படுவதால் பாராளுமன்றத்துக்கு உரித்தாகும் அதிகாரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Jeyakanthan at Commomeration Meeting for EPRLF Leader K Pathmanabha

தோழர் நாபா அவர்களின்
இறுதி மரியாதை நிகழ்வில்
ஈழ மக்களுக்காக குரல் எழுப்பிய
ஜெயகாந்தன்.
JK predicted the LTTE's end.

யாழ் குடா மக்களும், வலிகாமம்பகுதியின் நிலவடி நீர் கழிவு எண்ணெய்களால் மாசடைந்த பிரச்சினையும், மக்களது போராட்டமும்!

யாழ் குடாவின் வலிகாமப் பகுதியில் உள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய்கள் கலந்துள்ளன. இதை எந்தவித பரிசோதனைகள் இன்றியும் ஒருவர் கண்களாலே காண முடிகிறது. இதை Water Resources and Drainage Board இனால் 2012ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்டு வந்த பரிசோதனைகள் அசைக்கமுடியாதபடி உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால், வடக்கு மாகாண சபையினால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவானது அனைத்துக் கிணறுகளின் நீரைச் சகல மாசுப் பொருட்களுக்கும் பரிசோதிக்காது, Frog 4000 என்ற Field Testing கைக்கருவி கொண்டு குறைந்த வெப்பத்தில் ஆவியாவிடும் பென்சீன், மற்றும் சில குறிப்பிட்ட ஐதரோ கார்பன் நச்சுப் பதார்த்தங்களை நிரில் பரிசோதித்துவிட்டு, ”சுண்ணாகச் சூழலில் உள்ள கிணறுகளில் நச்சுப் பதார்த்தங்கள் இல்லை” என அவசர அவசரமாக அறிவித்தலை ஊடக மாநாட்டில் அண்மையில் வெளியிட்டிருந்தனர். (மேலும்....)

செம்மரம்

குருதியில் கரைந்த பேராசை

ஆந்திரக் காடுகளில் 'கடும் தடையை' மீறி செம்மரம் வெட்டச் சென்ற பலர் வனத்துறையால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். அதில் பெரும்பாலானோர் தமிழர். அதிலும் குறிப்பாக, பலர் எனது பகுதியைச் சேர்ந்தவர்கள்.  திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்தவன் என்ற முறையில், இந்த செம்மரங்கள் வெட்டப்படுவதைக் குறித்து, நான் அறிந்த சில விவரங்களை தர விழைகிறேன். செம்மரங்களின் மதிப்பும், காடுகளில் அதன் இருப்பின் அவசியம் குறித்தும் இப்போதெல்லாம் நீங்கள் அறிவீர்கள் என்பதால் நேரடியாக விஷயத்துக்குள் செல்கிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்னர், நான் பள்ளி மாணவனாக இருந்த போதும், இதே போன்றதொரு சூழல்! செம்மரத்துக்குப் பதிலாக சந்தன மரங்கள். எங்கள் ஜவ்வாது மலைத் தொடர் முழுக்க நிறைந்து கிடந்த சந்த்ன மரங்களை இப்படித்தான் வெட்டிக் கடத்தினார்கள்.(மேலும்....)

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !


இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது. (மேலும்....)

இசை முரசு அல்ஹாஜ் நாகூர் ஈ.எம். ஹனீஃபா வஃபாத்

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை!

இசை முரசு நாகூர் ஈ.எம். ஹனீஃபா அவர்கள் இன்று (08.04.2015 புதன்கிழமை) இரவு 8:00 மணியளவில் சென்னை, கோட்டூர் சேரியில் உள்ள அவரது இல்லத்தில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்தார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாருக்கு வயது 96. இன்ஷா அல்லாஹ் நாளை (09.04.2015 வியாழக்கிழமை) நாகை மாவட்டம், நாகூர் தர்காவில் நல்லடக்கம் செய்யப்படும். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் அபிமானிகள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) பிரார்த்தனை செய்கிறது. ஆமீன்! உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். குவைத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் வெள்ளிக்கிழமை (10.04.2015) K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு அன்னார் அவர்களின் சேவைகள் நினைவு கூறப்பட்டு, மறுமை வாழ்வின் வெற்றிக்காக சிறப்பு துஆ செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்.

நன்றி! வஸ்ஸலாம்.
அன்புடன்....
மவ்லவீ அல்ஹாஜ் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ - தலைவர்
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., - பொதுச் செயலாளர்
மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

சித்திரை 09, 2015

கூட்டமைப்புக்கு தடை விதிக்கக் கோரும் சங்கரி

நான்கு கட்சிகளாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தழிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவை ஒன்றிணைந்து கடந்த 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி, ஒரு பொதுத் திட்டத்துக்குள் இயங்க தீர்மானித்தன. இந்நிலையில், இரா.சம்பந்தன், நா.குமரகுருபரன், சு.பிரசன்னா, க.பிரேமச்சந்திரன் ஆகிய செயலாளர்கள் ஒப்பமிட்டு, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமாகிய உதயசூரியன் சின்னத்தில் இந்த அமைப்பு போட்டியிட இருப்பதாக அறிக்கை ஒன்றை ஊடகங்களுக்கு விடுத்தன. அந்த புரிந்துணர்வுக்கு அமைய நான்கு கட்சிகளும் அத்தேர்தலில் போட்டியிட்டு தேர்தலில் த.வி.கூ - 6, அ.இ.த.கா - 3, த.வி.இ - 4, ஈ.ம.பு.வி.மு - 1 என்ற அடிப்படையில் தேசிய பட்டியலில் 1 ஆசனங்களைப் பெற்றன. மாவை சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் இடத்தைப் பெற்றார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் மு.சிவசிதம்பரத்தின் இடத்துக்கு புதிய தலைவரை தெரிவு செய்யும் வரை எல்லாம் நல்லபடியே நடந்தது. புதிய தலைவரின் தெரிவுக்கான கூட்டத்தினம் நிர்ணயிக்கப்பட்டு, நானே அப்பதவிக்கு புதிய தலைவராக தெரிவானேன். அக்கூட்டத்துக்கு சமூகம் கொடுக்காத முக்கிய பேர்வழி மாவை சேனாதிராசா தான். (மேலும்....)

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 90. 'இறைவனிடம் கையேந்துங்கள்....'  உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற பாடல்களை பாடியவர் நாகூர் ஹனிபா என்பது குறிப்பிடத்தக்கது. பாடகர் நாகூர் ஹனிபா நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் பிறந்தவர். இவரது அம்மா ராமநாதபுரத்தை சேர்த்தவர். தாத்தா முத்து ராவுத்தர் ராமநாதபுரம் அரண்மனையில் ஆயுத கிடங்கு பாதுகாப்பாளராக இருந்தவர். சிறுவயது முதலே பள்ளி, திருமண விழாக்களில் பாடத்துவங்கினார். 15 வயதில் திருமண வீடுகளில் பாடத்துவங்கியவர் 5 ஆயிரத்துக்கும் அதிகமான திருமண வீடுகளில் பாடியுள்ளார். திராவிட இயக்கத்தின் மீது பற்றுக்கொண்டு அதன் உறுப்பினர் ஆனார். தி.மு.க.,வுக்காக இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலம். தி.மு.க., சார்பாக சட்டசபை தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார். போராட்டங்களில் ஈடுபட்டு சிறையும் சென்றுள்ளார். தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும், வக்பு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சமீப காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர், இன்று மாலை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.

பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் காலமானார்

முதுபெரும் எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ஜெயகாந்தன்(80) 1934ல் பிறந்த இவர், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். பின், 14 வயதில் வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலேயே தங்கிய ஜெயகாந்தனுக்கு, மறைந்த தலைவர் ஜீவாவின் நட்பு கிடைக்க, முறைப்படி தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். எழுத்தாளர், பத்திரிகையாளர், இலக்கிய விமர்சகர், நாவலாசிரியர், வசனகர்த்தா, திரைப்பட இயக்குனர் என, பன்முக திறமையை வெளிப்படுத்தினார். அவர் எழுதிய, 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்ற நூல் மிகவும் பிரபலமானது. (மேலும்....)

மனிதாபிமானமற்ற வெறிச்செயல்

நாயை ஏவி விட்டு நபரை கொலை செய்த பொலிஸ்

அமெரிக்காவில் நபர் ஒருவரை பொலிசார் தாக்கியதோடு மட்டுமல்லாமல் நாயை ஏவி அவரை கடிக்க விட்டு வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி(New Jersey) மாநிலத்தில் உள்ள வைன்லேண்ட் பகுதியின் நடைபாதையில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருப்பதாக அப்பகுதி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் அங்கு நின்றிருந்த பிலிப் வைட்(Phillip White Age - 32) என்ற அந்நபரை நெருங்கி சென்றனர். அவர்களிடம் பிடிபடாமல் தப்பிக்க அவர் முயன்றபோது இரண்டு பொலிசார் அவரை சுற்றிவளைத்து கார் சக்கரத்தின் அருகே கவிழ்த்துப் போட்டு கடுமையாக தாக்கியுள்ளனர். அது மட்டுமின்றி, பொலிஸ் நாயை ஏவி அவரை கடிக்க விட்டும் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகின்றது. (மேலும்....)

பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம்

இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிப்பு

பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப் பகுதியில் இரண்டாவது கட்டமாக மேலும் 570 ஏக்கர் காணி மீள் குடியேற்றத்துக்காக விடுவிக்கப்படவுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்ட 570 ஏக்கர் காணிகளை பார்வையிட மீள்குடியேற்ற செயலணி மற்றும் அரச அதிபர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் செல்லவுள்ளனர். பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1000 ஏக்கர் காணியை மீள்குடியேற்றத்துக்காக விடுவிப்பது என்ற அரசின் திட்டத்துக்கமைய இரண்டாவது கட்டமாக 570 ஏக்கர் காணி விடுவிக்கப்படவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று யாழ். அரச அதிபர் என். வேதநாயகம் தலைமையில் அரச அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. (மேலும்....)

தாய்வானில் தண்ணீர் உபயோகத்திற்கு கட்டுப்பாடு

தாய்வானில் கடும் வறட்சி காரணமாக தண்ணீர் உபயோகத்தை அரசு கட்டுப்படுத்தும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்தியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் அங்கு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாட்டின் வடபகுதி நகர்களில் வாரம் இருமுறை நீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாய்வானில் கடந்த 60 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவு மழையே இப்போது பெய்துள்ள நிலையில், பல நீர்த் தேக்கங்களில் பாதிக்கும் குறைவான கொள்ளளவிலேயே நீர் உள்ளது. இதேவேளை அரசும், அரசுக்கு சொந்தமான நீர் விநியோக நிறுவனமும் மிகவும் பழைமையான, ஒழுகும் குழாய்களை மாற்றுவதற்கு நடவடிக்கை களை எடுக்கத் தவறிவிட்டன, நீர் நிலைகளில் சேர்ந்திருக்கும் வண்டல்களை நீக்க நடவடிக்கைகள் எடுக்கவில்லை எனும் கடும் விமர்சனத்துக்கு உள்ளா கியுள்ளன. எனினும் தலைநகர் தாய்பேயில் நீர் விநியோகத்துக்கு எந்தத் தடங்கலும் இல்லை. நாட்டின் வடபகுதியில் உள்ள மக்கள் தமது தேவை களுக்கான நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யெமன்  யுத்த முனைக்கு

ஆயுதங்களை அள்ளிக் கொட்டும் அமெரிக்கா

யெமனில் ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக குண்டு போட்டு வரும் சவூதி  அரேபியா தலைமையிலான கூட்டணிக்கு ஆயு தங்கள் வழங்குவதை அமெரிக்கா துரிதப் படுத்தியுள்ளது. இந்த கூட்டணியுடன் அமெரிக்கா உளவுத் தகவல்களையும் பரிமாறிக் கொள்வதாக அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார். யெமனின் துறைமுக நகரான அதெனின் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து வருவ தாக உதவி அமைப்புகள் எச்சரிக்கை விடுத் துள்ளன. இந்த நகரில் ஷியா ஹவ்தி கிளர்ச்சியாளர்களுக்கும் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதியின் ஆதரவு படையினருக்கும் இடையில் வீதிகளில் மோதல் இடம்பெற்று வருகிறது. (மேலும்....)

அமெரிக்காவிற்கு உதவ வேண்டாம் என்ற கோரிகையுடன்

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் விஜயம்

யெமனில் பதற்றம் தீவிரமடைந்துள்ள சூழலில் ஈரான் வெளியுற அமைச்சர் முஹ மது ஜhவத் சாரிப் நேற்று புதன்கிழமை பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண் டுள்ளார். யெமன் ஷியா ஹவ்தி கிளர்ச்சியாளர் களுக்கு எதிராக தாக்குதல் நடத்தும் சவூதி அரேபியா தலைமையிலான கூட் டணி நாடுகளில் இணையுமாறு பாகிஸ் தானுக்கு சவூதி அழைப்பு விடுத்துள்ளது. எனினும் சாரிப்பின் விஜயத்தில் இந்த அழைப்பை பாகிஸ்தான் மறுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. (மேலும்....)

சித்திரை 08, 2015

யாழில் தூய நீருக்கான போராட்டம்

அரசியல் கலப்பற்ற பேரணியாக அமைவதோடு எந்தவொரு அரசியல் கட்சியோ, அல்லது அரசியல் பிரமுகரோ இதில் பங்குபற்ற முடியாது எனத் தெரிவித்துள்ளது! நீருக்கான ஆர்ப்பாட்ட பேரணி நாளை காலை 8.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமையம், விதை குழுமம் ஆகிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. நல்லூர் முன்றலில் ஆரம்பமாகும் இந்த ஆர்ப்பாட்ட பேரணி கோயில் வீதியூடாக சென்று வட மாகாண முதலமைச்சர், ஆளுநர், யாழ் மாவட்ட அரச அதிபர், உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியோருக்கு மகஜர்களை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. (மேலும்....)

புலிகள் உட்பட தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்கள் குறித்து டக்ளஸ் கரிசனை

முன்னாள் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் உட்பட ஏனைய தமிழ் இயக்கங்களின் உறுப்பினர்கள் தங்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில், உரிய பொறிமுறையின் ஊடான திட்டமொன்று வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் புலிகள் இயக்கம் உட்பட ஏனைய தமிழ் இயக்கங்களுடன் இணைந்து செயற்பட்ட இளைஞர், யுவதிகள் பலர் உரிய கல்வி மற்றும் ஏனைய தகுதிகள் இன்மை காரணமாக அரச வேலைவாய்ப்பற்றும் வேறு தொழில் வாய்ப்புகள் இன்றியும் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்து வருகின்றனர். அவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள் தங்களது வாழ்வாதாரங்களை கட்டியெழுப்பும் வகையில் உதவிகளை செய்யுமாறு என்னிடம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். கடந்த அரச காலத்தின்போது இவர்களில் ஒரு சாராருக்கு சுய தொழில் ஏற்பாடுகளின் மூலம் என்னால் உதவ முடிந்துள்ள போதிலும் ஓர் உரிய பொறிமுறையின் கீழ் இவர்களுக்கான வாழ்வாதாரத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, செயற்படுத்தப்படல் அவசியமாகும். எனவே, இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சு.க. வில் பிளவில்லை - சந்திரிகா

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவுபட்டு விட்டது என்று சிலர் கூறுகின்றனர். எம்முடைய கட்சி இரண்டாக பிளவுபடவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கம்பஹாவில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்து விட்டார். அவர் கௌரவமான முறையில் வெளியேறவேண்டும். நான் அவ்வாறே சென்றேன். எனினும் இவர்கள் இன்று மீண்டும் களத்தில் குதிக்க முயற்சிக்கின்றனர். ஐயோ, எனக்கு கொஞ்சம் தாருங்கள் என்று கேட்கின்றார். இது என்ன வேலை, வேலைச்செய்வேண்டுமாயின் வந்து தலையை போட்டு வேலைச்செய்யவும் என்றும் அவர் கூறினார்.

கமலினி செல்வராஜன் நேற்று காலமானார்

இலங்கையின் புகழ்பெற்ற ஒலி/ஒளிபரப் பாளரும் நடிகையுமான கமலினி செல்வராஜன் நேற்று கொழும்பில் காலமானார். இறக்கும்போது அவருக்கு வயது 62. கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த கமலினி செல்வராஜன் நேற்றுக் காலை காலமானார். இவரது பூதவுடல் கொழும்பு பொரளை ஜயரத்ன மலர்ச்சாலையில் வைக்கப் பட்டுள்ளதுடன் இன்று காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை பொது மக்கள் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்த முடியும். இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இறுதிக் கிரியைகள் இடம்பெறுவதுடன் அதனைத் தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். இலக்கியவாதியும் எழுத்தாளரும் வயலின் கலைஞருமான தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை, கலைஞர் தனபாக்கியம் தம்பதியினரின் மூத்த புதல்வியே கமலினியாவார். தமிழ் நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்துள்ள கமலினி இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘கோமாளிகள்’ திரைப்படத்தில் தன் கணவர் ‘வரகவி’ சில்லையூர் செல்வராசனுடன் இணைந்து கதாநாயகியாக நடித்தவர். அதனை யடுத்து ‘ஆதர கத்தாவ’ என்ற சிங்கள திரைப்படத்திலும் நடித்து புகழ்பெற்ற வர். சில்லையூர் செல்வராசன் இலங்கை யின் புகழ்பெற்ற கவிஞரும் கலைஞரு மாவார். முப்பது வருடங்கள் ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகக் கடமையாற்றிய கமலினி செல்வராஜன், சிறந்த வானொலி, தொலைக்காட்சி ஒலி - ஒளிபரப்பாளராவார்.

எதிர்கட்சி தலைவர் தொடர்பில் இன்னும் தீர்மானம் இல்லை

எதிர்க்கட்சித் தலைவர் சர்ச்சை தொடர்பான சபாநாயகரின் தீர்ப்பு நேற்று பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் தனது தீர்ப்பை பிரிதொரு தினத்தில் அறிவிப்பதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக தான் ஆழமாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர் எப்பொழுது தீர்ப்பு வழங்க முடியும் என்று கூற முடியாது எனவும் தெரிவித்தார். பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியது. இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் குறித்து குமார வெல்கம (ஐ.ம.சு.மு) வினவினார். இதனைத் தொடர்ந்து வேறு எம்.பிக்களும் கேள்வி எழுப்பினார்கள். விமல் வீரவன்ச எம்.பி. பாராளுமன்றத்தை கலைக்கும் வரை இது குறித்து ஆராய்வீர்களா? சபாநாயகர் காலம் குறித்து உறுதியாக கூற முடியாது. அநுர திசாநாயக்க எம்.பி. உங்களது ஆய்வு முடிவடையும் வரை நிமல் சிறிபால டி சில்வா தான் எதிர்க் கட்சித் தலைவராக இருப்பாரா? சபாநாயகர், அதுவரை உங்களுடைய விருப்பத்துக்குட்பட்டு அவர் இருப்பார். நீங்கள் இணைந்து எதிர்க் கட்சித் தலைவரை தெரிவு செய்யுங்கள் என்றார்.

திருப்பதியில் செம்மரம் கடத்த முயன்ற கும்பல் மீது பொலிஸ் துப்பாக்கி சூடு

ஆந்திர மாநில காடுகளில் விலை மதிப்பு மிக்க செம் மரங்கள் அதிகம் உள்ளன. இந்த மரங்களுக்கு வெளி நாடுகளில் அதிக மவுசு உள்ளது. வேலூர், திருவண்ணா மலை மாவட்டம் வழியாக ஆந்திர மாநில காடுகளில் இருந்து செம்மரங்கள் வெட்டி கடத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது சம்பந்தமாக வேலூர் - திருவண்ணாமலை சேலம், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மரம் வெட்டும் தொழி லாளர்கள் ஆந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருப்பதி சேஷாத்திரி மலையில் ஸ்ரீவாரிமெட்டு ஈசகுண்டா பகுதி யில் மரம் வெட்டும் கும்பல் செம்மரங்களை வெட்டி கடத் தும் முயற்சியில் ஈடுபட்டனர். அங்கு ரோந்து சென்ற ஆந்திர வனதுறையினர் மரம் வெட்டிய கும்பலை பிடிக்க முயன்றனர். மேலும் வன துறை மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும் தெரிகிறது. இதனையடுத்து ஆந்திர மாநில சிறப்பு பிரிவு பொலிஸார் அங்கு வரவழைக்கப்பட்டனர். மரம் வெட்டிய கும்பல் மீது ஆந்திர பொலிஸார் துப் பாக்கி சூடு நடத்தினர். தொழிலாளர்களை சுற்றி வளை த்து சுட்டு தள்ளினர். இதில் 20 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக பலியானார்கள். பலியானவர்களில் 12 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் இதில் 9 பேர் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் டி.ஐ.ஜி. கங்காராவ் தெரிவித்தார். பலியான 20 பேரில் ஒருவர் செம்மரக் கடத்தலில் முக்கிய குற்றவாளி எனக் கூறப் படுகிறது. மேலும் 7 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. சம்பவ இடத்துக்கு ஆந்திர மாநில போலீஸ் உயர் அதிகாரிகள், வனதுறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிரிய யர்முக் முகாமில் மனிதாபிமான உதவிக்கு பாதுகாப்புச் சபை அழுத்தம்

மோதல் உக்கிரமடைந்திருக்கும் சிரிய தலைநகர் டமஸ்கஸின் யர் முக் அகதி முகாமில் மனிதாபிமான உதவிகளுக்கு அனுமதிக்க ஐ.நா. பாது காப்புச் சபை அழுத்தம் கொடுத்துள் ளது. யர்முக் அகதிமுகாமில் இருக் கும் சுமார் 18,000 பலஸ்தீன அகதிகள் மனி தாபிமானமற்ற முறையில் நடத் தப்படுவதாக ஐ.நா. அதிகாரி ஒருவர் விபரித்தார். யர்முக் அகதி முகாம் மீது ஐ.எஸ். கடந்த ஏப்ரல் முதலாம் திகதி தாக்கு தலை ஆரம்பித்தது தொடக்கம் அங்கு நிலை மோசமடைந்துள்ளது. சிரிய அரசை நிராகரிக்கும் பலஸ்தீன போராட்டக் குழுக்கள் மற்றும் சிரிய கிளர்ச்சியாளர்கள் ஐ.எஸ் க்கு எதி ராக அங்கு கடுமையாக சண்டையி ட்டு வருகின்றனர். அகதி முகாமிற்குள் ஞாயிற்றுக்கிழமை உக்கிர மோதல் இடம்பெற்றதை அடு த்து திங்களன்று அங்கு மிங்கும் என்று மோதல்கள் நீடித்தது என கண் காணிப்பாளர்கள் விபரித்தனர். சிரியாவின் ஏனைய பகுதிகளில் பரஸ் பரம் மோதிக்கொள்ளும் ஐ.எஸ். மற் றும் அல் கொய்தா கிளையான அல் நுஸ்ரா யர்முக்கில் இணைந்து போரா டுவதாக கண்காணிப்பாளர்கள் குறிப் பிட்டுள்ளனர். கடந்த வார இறுதியில் ஒருசில நூறுபேரால் இந்த முகாமில் இருந்து தப்பிவர முடிந்துள்ளது. சிரிய உள்நாட்டு யுத்தம் ஐந்தா வது ஆண்டை எட்டியிருக்கும் நிலை யில் அங்கு 200,000க்கும் அதிகமா னோர் கொல்லப்பட்டுள்ளனர்.

நடந்து முடிந்து விட்டது!
எண்ணப் பெருவெளியில்...

நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு வந்தவுடன் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாக இருந்தது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிரணியின் பொதுவேட்பாளராக வருவார் என்ற செய்தியை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. எல்லா வகையிலும் சக்திபடைத்திருந்த அரசாங்கத்தாலும் அதனது புலனாய்வுப் பிரிவினாலும் இந்தத் தகவலைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்தச் செய்தியைமெல்லக் கசியவிட்ட ஊடகங்கள் சக்திவாய்ந்தனவே. (மேலும்....)

ஆந்திரா வனப்பகுதியில் 20 தமிழ் கூலித்தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சியின் ‘விவாத மேடை’

திருப்பதி வனப்பகுதியில் ஆந்திர மாநில காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பேரும் தமிழர்கள் - கூலித் தொழிலாளர்கள் - பழங்குடியினர். அவர்களில் யாரும் செம்மரக் கடத்தல்காரர்கள் அல்ல, அனைவரும் கூலிக்காக மரம் வெட்ட வந்தவர்கள்தான் என்று அந்த மாநில காவல்துறை அதிகாரியே கூறியிருக்கிறார். அவர்களுக்கு செம்மரங்களை வெட்டக்கூடாது என்பதும், அதன் முக்கியத்துவமும் தெரியாது. சட்டத்தின் ஆட்சி பற்றி கூறும்போது “இக்னரன்ஸ் ஆஃப் லா இஸ் நாட் அன் எக்ஸ்கியூஸ்” - அதாவது சட்டம் தெரியாது என்று கூறி தப்ப முடியாது - என்ற ஒரு கொடூரமான மேற்கோள் அடிக்கடி குறிப்பிடப்படும். சட்டம் என்னவென்றே தெரியாதவர்கள் அதை மீறுகிறார்கள் என்று கூறி தண்டனை அளிப்பதில் என்ன நாகரிகம் இருக்கிறது? (மேலும்....)

சித்திரை 07, 2015

சுனாமியிலேயே பிரபாகரன் மரணித்தார்

தன்னை மஹா பராக்கிரமபாகு மன்னன் என்று கூறிகொள்ளும் நபரொருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அனுமதி பெற்றுதருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே அவர், ஆர்ப்பாட்டத்தில் இன்று திங்கட்கிழமை ஈடுபட்டுள்ளார். தான் மீண்டும் பிறந்து, நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்பதற்காக செயற்பட்டதாக கூறுகின்றார். பிங்கிரிய தளுபனயை வசிப்பிடமாக கொண்ட நீல் தம்மிக்க குணசிங்க என்பவரே இவ்வாறு தன்னை அடையாளப்படுத்தி கொண்டுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, முன்னாள் இராணுவத்தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சோவுக்கோ அழித்தொழிக்க முடியாது. வேலுப்பிள்ளை பிரபாகரன், 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் இடம்பெற்ற சுனாமி பேரழிவிலேயே மரணித்து விட்டதாகவும் அவர், எழுதி வைத்துள்ள சுலோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனக்கு தெரிந்த சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக ஜனாதிபதியை சந்திப்பதற்கு சந்தர்ப்பமொன்றை பெற்றுகொடுக்குமாறு கோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

'தீப்பொறி' தீபிகா வீடியோ பதிவு

தமிழகத்தில் இருந்து சில பெண்ணிய குரல்கள்
(க.சே.ரமணி பிரபா தேவி)

பிரபல பாலிவுட் நடிகை தீபிகோ படுகோனை முன்வைத்து முற்போக்கான பெண்ணிய சிந்தனை எனக் கருதப்படும் வாசகங்களைத் தாங்கிய வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது 'எனது விருப்பம் / தெரிவு' (My choice) குறும்படம்.  ஹொமி அதாஜானியா இயக்கத்தில், பெண்கள் ஃபேஷன் இதழான 'தி வோக்' வெளியிட்டுள்ள இந்தக் குறும்படத்தில் உள்ள முக்கிய அம்சங்களை மேற்கோள்காட்டி, ட்விட்டரில் மணிக்கு நூற்றுக்கணக்கான குறும்பதிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்தக் குறும்படம் பேசும் எண்ணிய வாசகங்களில் உடல் சார்ந்த விருப்பங்களை மட்டுமே சுட்டிக்காட்டி, இணையத்தில் எதிர்க் கருத்துகள் பரவலாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.  அதேவேளையில், "என் விருப்பம்... என் கைரேகையைப் போன்றது. அதை ஒருபோதும் மாற்ற முடியாது" என்று அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் தீபிகா படுகோன்.  அந்த வீடியோ பதிவு குறித்து தமிழகத்தில் பல்வேறு துறைகளில் இயங்கி வரும் பெண்களின் பார்வை இது: (மேலும்....)

Russia Just Proposed a Superhighway that Would Connect New York and London
(By Natasha Noman)

International travel may have just gotten easier, thanks to one man's bold vision to let eager travelers get from New York to London by car.  Vladimir Yakunin, who is president of Russian Railways, has a vision, which he released last week, of a highway that would cost "trillions of dollars" and span an estimated 12,910 miles, according to CNN. In other words, get ready for the longest road trip of your life. Digital Trends reports the Trans-Eurasian Belt Development would include a bridge that spans "over 55 miles of Bering Sea." It would connect Alaska with Russia, and run, in parts, parallel to the Trans-Siberian Railway.  Below is a concept for such a bridge, as imagined by an architect in 2013. (more.....)

19 சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை

மக்களின் இறைமை, ஜனநாயகத்தை உறுதிப்படுத்துகிறது உச்ச நீதிமன்றம்

முன்மொழியப்பட்டிருக்கும் 19வது திருத்தச்சட்டமூலம் நாட்டு மக்களின் இறை மையை உறுதிப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருப்பதால் இது தொடர்பில் சர்வஜன வாக் கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லையென சட்டமா அதிபர் யுவாஞ்சன் வசுந்தரா விஜேதிலக நேற்று உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்து வதற்கு சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய தேவை இல்லை யென்றும் சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ள தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்க்கையில் உத்தேச திருத்தச்ச ட்டமூலம் தயாரிக்கப்பட்டிருப் பதற்கான நோக்கம் தெளிவாகத் தெரிகிறது. அரசியலமைப்பின் ஆரம்பத்தில் உள்ள கட்டமைப்பை மாற்றும் வகையில் இது அமைந்திருக்கவில்லை என்றும் சட்டமா அதிபர் குறிப்பிட் டுள்ளார். திருத்தங்கள் மூலம் அரசியலமைப்பின் அடிப்படையில் மாற்றம்செய்யும்போது அரசியலமைப்பின் 83வது சரத்து மீறப்படுமாயின் அதனை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு அப்பால் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்குச் செல்லவேண்டிய அவசியம் ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சித்திரை 06, 2015

நிறைவேற்று ஜனாதிபதி முறையில் மாறும் நிலைப்பாடுகள்

நேரடியாகக கூறாவிட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனைத் தான் கூறுகிறது. எனவே தான் ஹெல உறுமய போன்ற அமைப்புக்கள் 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்களை பறித்துள்ளது என்று கூறி, நீதிமன்றம் சென்ற போது அத் திருத்தத்தை பாதுகாக்க கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன், நீதிமன்றத்தில் வாதாட முன்வந்துள்ளார். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நிறைவேற்று ஜனாதிபதி முறை விடயத்தில் உதாசீனமாகவே இருந்துள்ளது. இவ்வாட்சி முறை இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன என்பதைப் போல் தான் அக் கட்சி நடந்து கொண்டது. ஆனால், ஓர் இனவாதி, நிறைவேற்று ஜனாதிபதியானால் அது சிறுபான்மை மக்களை பாதிக்கும் என்பதை கடந்த காலத்தில் உணர்ந்ததாலோ என்னவோ இப்போது கூட்டமைப்பும் அவ்வாட்சி முறைக்கு எதிரான போராட்டத்தில் நேரடியாகவே குதித்துள்ளது போலும். (மேலும்....)

குமரன் பத்மநாதன் 24 மணித்தியால கண்காணிப்புக்கு உள்ளாகியுள்ளார்!

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளரான கே பி என்ற குமரன் பத்மநாதன், 24 மணித்தியாலங்களும் பாதுகாப்பு கவனிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த தகவலை கொழும்பின் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியின் இரணைமடு, செஞ்சோலை சிறுவர் காப்பகத்தை கே பி பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த காப்பகம், கிளிநொச்சியின் திருவையாறு 57வது இராணுவ தலைமையகத்தின் கட்டிடம் ஒன்றில் அமைந்துள்ளது. இந்த இராணுவ முகாமின் வாயிலை கடந்து செல்லும் போது 2 கிலோமீற்றர் தூரத்தில் செஞ்சோலை அமைந்திருக்கிறது. இந்த இல்லத்தின் வெளிப்புறத்தில் எந்தநேரமும் நான்கு பாதுகாப்பு வீரர்கள் நடமாடிக்கொண்டிருந்தனர். இதனைத்தவிர சுமார் 30 படையினர் 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

உள்ளங்களைப் புண்படுத்தும் கருத்துகள் வேண்டாம்!

தேசிய கீதத்தைத் தமிழில் பாடுவதில் எந்தத்தடையும் இல்லையென ஜனாதிபதி அறிவித்துள்ளார். எனினும் தேசிய கீதத்தை தமிழில்பாடுவது தவறாகுமென ஒரு தரப்பினர் குரலெழுப்பி வருகின்றனர். இவ்வாறு எதிர்ப்புக் காட்டுவது தமிழ், முஸ்லிம் மக்களின் உள்ளங்களை உண்மையிலேயே புண்படுத்துகிறது. நாட்டின் தேசிய கீதத்தை தமது தாய்மொழியில் பாடுவதற்கும் உரிமை கிடையாதாவென சிறுபான்மை மக்கள் ஆதங்கப்படுகின்றனர். அக்காலம் தொடக்கம் தமிழ், முஸ்லிம் மக்கள் தேசிய கீதத்தைத் தமிழிலேயே பாடி வருகின்றனர். இவ்விடயத்தில் புதிதாக ஒரு சர்ச்சையை உருவாக்குவதில் உள்நோக்கமொன்று இருப்பதாகவே தோன்றுகிறது. இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் கருத்துகள் வெளியிடுவதை இவர்கள் தவிர்க்க வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும். இனவாத அரசியலுக்காக எதையெல்லாமோ நாடுகின்ற சில அரசியல்வாதிகள் தற்போது தேசிய கீதத்தைப் பற்றிப் பிடித்துள்ளனர். தேசிய கீதம் தொடர்பான இனவாத கருத்துகளால் சிறுபான்மையினர் விரக்தியடைவது ஒருபுறமிருக்க, தமிழ், முஸ்லிம் மாணவர்களின் உள்ளங்களில் சந்தேகங்களும் வெறுப்பும் அவநம்பிக்கையும் ஏற்படக் கூடும். எனவே மனதைப் புண்படுத்தும் கருத்துகள் வேண்டாம். அனைத்து இன மக்களுக்கும் பொதுவான தேசிய கீதத்தை தயவு செய்துவிட்டுவிடுங்கள். (எஸ். வரதன்)

ஐ.எஸ். வசமான சிரியாவின் பலஸ்தீன அகதி முகாமில் பலரும் சிக்கித் தவிப்பு

சிரிய தலைநகர் டமஸ்கஸில் இருக் கும் பலஸ்தீனர்களின் யார்மூக் அகதி முகாமில் பலஸ்தீன போராளிகள் மற்றும் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு இடையில் தொடர்ச்சியான மோதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்று வரும் நிலையில் அங்கிருக்கும் பலஸ் தீன அகதிகள் வெளியேற ஆரம்பித் துள்ளனர். இந்த அகதி முகாமின் பெரும் பகுதியை ஐ.எஸ். போராளிகள் கைப் பற்றி இருப்பதாக செயற்பாட்டளர்கள் குறிப்பிட்டுள்ளனர். டமஸ்கஸின் தெற்கு பகுதியில் இருக் கும் யார்முக் முகாம் பகுதிக்கு ஐ.எஸ். குழு கடந்த புதன்கிழமை நுழைந்தது. இது ஐ.எஸ். குழு சிரிய தலைநகரில் ஆழமாக ஊடுருவி இருக்கும் முதல் சந்தர்ப்பமாகும். இதில் ஐ.எஸ். குழுவுடன் அல் கொய்தாவின் சிரிய கிளையான அல் நுஸ்ரா முன்னணி யார்முக் முகாமில் இணைந்து போராடுவதாக சிரிய அதிகாரிகள் மற்றும் செயற்பாட்டாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த இரு போட்டிக் குழுக்களும் சிரியாவின் ஏனைய நகரங்களில் பிரிந்து நின்று தமக்குள் சண்டையிட்டுக் கொள்கின்றன. இரு தரப்புக்கும் இடையில் எந்த இணக்கப்பாடும் எட்டப்படாத நிலையில் யார்முக் முகாமில் இணைந்து போராடுவது ஏனைய தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.எஸ். தம்மை நடுநிலையானவர்கள் என்று குறிப்பிட்டபோதும் யார்முக்கில் நுஸ்ரா அமைப்பும் பல சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளது. இந்த இரு தரப்பும் இணைந்து செயற்பட்டதாலேயே யார்முக் முகாமை ஐ.எஸ்ஸினால் இலகுவாக கைப்பற்ற முடிந்திருப்பதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர். (மேலும்....)

எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சைக்கு சபாநாயகர் நாளை தீர்க்கமான முடிவு

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான தீர்க்கமான முடிவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நாளை அறிவிக்க உள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த சிலர் தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொண்டமையால் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பில் கட்சிகளிடையே குழப்பம் ஏற்பட்டது. தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்துவதால் அவரை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள முடியாதென்று தேசிய சுதந்திர முன்னணித்தலைவர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார். எனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த தினேஷ் குணவர்தனவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டுமென்ற கோரிக்கையையும் விமல் வீரவன்ச முன்வைத்துள்ளார். (மேலும்....)

எனது நாட்டில் ஒரு துளி நேரம் – எனது வாசிப்பு

நியூசிலாந்தில் வசிக்கும் ந.மாலதி அவர்கள் எழுதிய நூல் இது. ஒரு ஆவணம் என சொல்லலாம். “விடுதலைப் புலிகளின் நடைமுறை அரசின் இறுதி நான்கு வருடங்கள்“ என அவர் குறிப்பிடுகிறார் இந்த நூலின் உள்ளடக்கத்தை. புலிகளை அரசியல் ரீதியில் விமர்சிக்கும் ஒரு தொகை எழுத்துக்களை தொடர்ந்து பார்த்து வருகிறோம். இது மிக அவசியமானதும்கூட. அதேநேரம் அவர்கள் வன்னியில் நிகழ்த்திய நிழல் அரசொன்றின் உள் அமைப்புகள் எப்படி இயங்கின என்ற புரிதலை தனது பார்வையில் இந்த நூல் தருகிறது. இதை ஒரு முழுமையான ஆவணமாக கொள்ளத் தேவையில்லை என்றபோதும் நாம் உள்நுழைந்து பார்க்க வேண்டிய இடங்களை சுட்டிநிற்கிறது. இந்தவகையில் குறிப்பிடத்தக்க ஓர் அவணமாக இதை கொள்ள முடியும். (மேலும்....)

 

முதுகில் குத்தினாலும் இந்த மூட்டைகளை சுமக்க சுரேஷ் பிரேமசந்திரன் தயார்

ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக எம்.பி ஆகிய சிறீதரன் போல், அக்கட்சியின் ஆசன ஒதுக்கீடு ஊடாக வடமாகாணசபை உறுப்பினர்களாகிய சிவமோகனும், ரவிகரனும் சுரேஸ் பிறேமச்சந்திரனின் முதுகில் குத்துவார்களா? அவரின் காலை வாருவார்களா? ஏற்கனவே அமைச்சு பதவிக்காக பொ.ஐங்கரநேசனும் காலை வாரியிருந்தார் என்பது கவனத்தில் கொள்ளத்தக்கது! முதுகில் குத்தினாலும், முஞ்சையில் குத்தினாலும் இந்த மூட்டைகளை சுமக்க சுரேஷ் பிரேமசந்திரன் தயார். இதில் அவரின் உள் வீட்டு அரசியல் உள்ளது என்பதை அவருடன் நெருங்கிச் செயற்பட்ட முன்னாள் உறுப்பினர்களுக்கு நன்கு தெரியும். சிவசக்தி ஆனந்தனை விட்டால் அவருடன் செல்ல அவரின் முன்னாள் சகாக்கள் யாரும் இல்லாத இடத்து இப்படி பிள்ளை பிடிப்பதை தவிர அவர் என்னதான் செய்ய முடியும்?

சித்திரை 05, 2015

கூட்டமைப்பிற்கு எதிராக யாழில் நேற்று பெண்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக மகளிர் அமைப்பினர் நேற்றுச் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டமைப்பினரால் பெண்கள் மீது துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளிவருவதாகக் கூறியே இவ்வார்ப் பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இவ்வார்ப்பாட்டத்தில் த. தே. கூ. தலைவர் இரா சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரது உருவ பொம்மைகளை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தந்தை செல்வா நினைவு சதுக்கத்தின் அருகாமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப் பாட்டம், மார்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகம் வரை சென்றது. அலுவலகத்திற்கு முன்னால் இரு தலைவர் களின் உருவபொம்மைகளும் ஆர்ப் பாட்டகாரர்களால் வீதியில் இழுத்துச் செல் லப்பட்டு அலுவலக முன்றலில் எரியூட்டப் பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மாவை சேனாதிராசாவே தமிழ் இளைஞர்கள், விதவைப் பெண்களை மறுமணம் செய்ய வேண்டும் என்றீரே! உமக்கு பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ இவ்வாறு செய்து முன்னுதாரணமாக நடந்து கொள்வீரா? பெண்க ளாய் பிறந்தது எமது சகோதரிகளின் குற்றமா? உரிமைகளோடு உங்களை நம்பி உதவி கேட்டு வருபவர்களுக்கு வன்புணர்வு தான் உதவியா? போன்ற பதாகைகளை ஏந்தியவாறு கோஷமிட்டனர்.

மலையக தோட்டத் தொழிலாளர்கள் உரிமைக்காக போராட முன்வர வேண்டும்!

ராசையா ஒரு தோட்டத் தொழிலாளி. ஹல்வத்துர தோட்டத்தில் வேலை செய்கிறார். 28 வயது. 3 குழந்தைகள். வழமைபோல் வேலைக்குச் செல்கிறார். அவர் வேலை செய்யும் இடத்தில் காய்ந்து இற்றுப்போன மரமொன்று இருக்கின்றது. அந்த மரத்திற்கு பட்டும் படாமலும் 33000 வாட்ஸ் மின்சார கடத்திக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. வேலை பார்க்கும் சுபவைசர் வந்து அந்த மரத்தை வெட்டும்படி ராசையாவிடம் கூறுகிறார். மின்சாரக் கம்பி இருப்பதால் அதனை வெட்டுவது ஆபத்தை வலிய அழைத்துக் கொள்வதாக இருக்கும் எனவே அதை வெட்ட ராசையா மறுத்துவிடுகிறார். தொழிலாளி தனது ஆணைக்கு கட்டுப்பட்டுத்தான ஆக வேண்டுமென்ற இறுமாப்போடு மரத்தை வெட்டாவிட்டால் வேலை தராமல் வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என்று சுபவைசர் பயமுறுத்தவும் ராசையா ஒருகணம் யோசிக்கிறார், வேலையை விட்டு தூக்கிவிட்டால் தனது குடும்பம் பட்டினியால் துன்பப்படும். பிள்ளைகளின் படிப்பு நின்றுவிடும். யோசிக்கிறார். ' என்ன நடந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ மரத்தை வெட்டு" என்று சுபவைசர் தையிரமூட்டுகிறார். என்ன நடந்தாலும் நடக்கட்டும். மரம் என்ன தலையிலா விழப்போகிறது என்று கோடரியால் மரத்துக்கு இரண்டு வெட்டுதான் கொடுத்தார். மரம் சாய்ந்து மின்சாரக் கம்பியில் பட்டுவிட்டது. மரத்தில் கைவைத்த ராசையா ஐம்பதடி தூரத்திற்கு தூக்கி வீசப்படுகிறார். மரம் மாத்திரமல்ல அதோடு அவரது வாழ்க்கையும் சாய்ந்து விட்டது. (மேலும்....)

வினை தீர்க்க வந்தவரே வினையாகி போகலாமா ?

இணக்க அரசியல் என்றால் அடுத்தவர்களுடன் தாமும் ஒத்துழைத்தல். தாம் தலைமை தாங்கும் இனத்துக்கு அவர்கள் செய்யும் பாதகமற்ற செயலுக்கு அங்கீகாரம் வழங்கல். தம் நியாயமான கோரிக்கைகளை ஏற்பவர்களை பதவியில் நிலைக்க செய்தல். இவை அனைத்தையும் இடமறிந்து காலமறிந்து செய்தல். அடிப்படையில் விட்டுக்கொடுத்தல் பின் கொடுத்து வாங்கல் (Give &Take ) என பல பரிமாணம் கொண்டது இணக்க அரசியல். சாயம் போகும் சேலையாக போகிறதா வடமாகானசபை என எண்ணும் நிலை தான் இன்று காணப்படுகிறது. அன்று ஆளுநர் தலைமையின் கீழ் இருந்த காலங்களில் நடந்தவை கூட இன்று கடந்த ஒரு வருடத்துக்கு மேலான அரசியல் தலைமையின் கீழ் நடைபெறவில்லை. அன்று இணக்க அரசியல் செய்தவர்கள் மீது வசை பாடி வட மாகாண சபையில் பதவிக்கு வந்தபின் தாமும் இணக்க அரசியல் செய்யப்போவதாக கூறி அதற்கு புது விளக்கமும் கூறிய முதல்வர் இன்று வரை செயும் அரசியல் என்ன என பட்டிமன்றம் வைத்தே விவாதிக்க வேண்டும். (மேலும்....)

வேரில் விழுந்த விசம்

இலங்கை முழுவதும் பரவியிருந்த எல்லாளன் நல்லாட்சியில் பௌத்தமதம் மற்றைய மதங்களைப்போல் பாதுகாக்கப்பட்டதால் இந்நல்லாட்சியை மறுக்க மகாவம்சத்தை எழுதிய பல்லவ மகாநாமதேரரால் முடியவில்லை. எல்லாளன் மனுநீதிச் சோழனுக்கு நிகராக ஒப்பிடப்பட்டான். எல்லாளனை சோழ அரசன் என்பது முற்றிலும் தவறா னது இந்திய வரலாறுகளிலோ, கல்வெட்டு, அகழ்வாய்வுகளிலே எல்லாளனைப் பற்றிக் எதுவும், எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவன் தமிழீழத்தைச் சேர்ந்த தனித்தமிழ் உத்தரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட அரசன் என்பதற்கான பல ஆராரங்கள் உள்ளன. பாளிமொழியில் எலாரா என்பதே எல்லாளன் ஆனது இதன் அர்த்தும் ஈழராஜன் என்பது என பேராசிரியர் வேலுப்பிள்ளை அவர்கள்  கருதுகிறார். (மேலும்....)

புலன்பெயர் அமைப்புகள் தடையை நீக்கமுடியாது! - அமைச்சர் ராஜித

மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்படவேண்டும் என்றும் புதிய அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, “புலம்பெயர் அமைப்புகள் மீதும், தனிநபர்களுக்கு எதிராகவும் விதிக்கப்பட்ட தடையை நீக்குவது தொடர்பில் பரீசிலிக்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்படி, அத்தடை எப்போது நீக்கப்படும்” என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேற்படி தடையை உடன் நீக்கிவிட முடியாது. அதுபற்றி ஆராயவேண்டும். தற்போது ஐரோப்பாவில் புலித்தடை நீடிக்கப்பட்டுள்ளது. இது பற்றி எவரும் பெரிதாகப் பேசுவதில்லை என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் ஆண்டிஸ் மலைத் தொடரில் “பாபு” மரணம்.

7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகளில் மலையேறி சாதனை படைத்தவரான இந்தியாவின் மல்லி மஸ்தான் பாபு என்ற மலையேற்ற வீரர் தென் அமெரிக்காவில் உள்ள ஆண்டிஸ் மலைத் தொடரில் உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த மல்லி மஸ்தான் பாபு உலகப் புகழ் பெற்ற மலையேற்ற வீரர்களில் ஒருவர். இவரது வேலையே மலையேற்றம்தான். ஏதாவது ஒரு மலையில் ஏறியபடி இருப்பது இவரது பொழுதுபோக்காகும். உலகின் 7 கண்டங்களிலும் உள்ள முக்கிய மலைகள் அனைத்திலும் ஏறி சாதனை படைத்தவர்.
இதற்காக அவரை 7 சம்மிட்டீர் என்று செல்லமாக அழைப்பார்கள். அதையும் குறுகிய காலத்தில் 7 கண்ட முக்கிய மலைகளில் ஏறிய சாதனையும் இவருக்கே உள்ளது. இந்த நிலையில் தென் அமெரிக்காவின் முக்கியமான மலைத் தொடரான ஆண்டிஸ் மலைத் தொடரில் ஏறுவதற்காக சென்றிருந்தார் பாபு. (மேலும்....)

மார்டின் லூதர் கிங் நினைவுதினம் இன்று

அமெரிக்காவில் அடிமை முறையையும், நிற வேறுபாட்டையும் ஒழிக்க முதன் முதலாகக் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அதனால் ஒரு பைத்தியக்காரனால் லிங்கன் சுட்டுக்கொல்லப்பட்டார். அதே போன்று அமெரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட நிறவெறியை எதிர்த்து மீண்டும் ஒருவர் குரல் கொடுத்தார். அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர்தான் மார்டின் லூதர் கிங். இவர் 1929-ல் பிறந்தார். 1954-ல் ‘அலபாமா’ என்ற ஊரில் மதபோதகரானார். இங்குதான் எளிய மக்களோடும் கருப்பர் இன மக்களோடும் பழகுகின்ற வாய்ப்பை மாட்டின் லூதர் கிங் பெற்றார். அப்போது அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கருப்பு இன மக்கள் பொது இடங்களில் நடமாடக்கூடாதென்று தடை விதிக்கப்பட்டிருந்தது.
பேருந்துகளிலும், ரயில்களிலும் நீக்ரோ மக்களுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
வெள்ளையர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் நீக்ரோக்களின் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. (மேலும்....)

பிரதமர் ரணில் - முதலமைச்சர் விக்கி முறுகல், என்ன செய்ய வேண்டும் என எனக்கு தெரியும் - இரா. சம்பந்தன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்குமிடையில் பிரச்சினை இருப்பதாகவும், முறுகல் நிலை காணப்படுவதாகவும் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றனவே தவிர அவ்வாறு அவர்கள் இருவரிடையேயும் பெரிய பிரச்சினை எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்படியே பிரச்சினை இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எĪ