|
||||
|
ஆடி 2014 மாதப் பதிவுகள் ஜுலை 31, 2014 இலங்கையுடனான இந்திய அரசின் புதிய அணுகு முறை சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்த பாரதிய ஜனதா கட்சியின் திட்டமிடலாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்த சிலர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள், இந்தியாவின் அணுகுமுறைகள் குறித்து மேலும் சில விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கின்றது. கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமான சுப்பிரமணிய சுவாமியே இக்குழுவினருக்கு தலைமை ஏற்றிருந்தார். சுவாமி, பாரதிய ஜனதாவின் உயர் மட்டத்தினருக்கு நெருக்கமானவர் என்பது இரகசியமல்ல. ஆனால், அவர் பாரதிய ஜனதா கட்சியின் மூலோபாய செயற்பாட்டுக் குழுவின் தலைவராக இருக்கின்றார் என்பது புதிய தகவலாகும். இது கூட்டமைப்பினருக்கு பேரதிர்ச்சியாக இருக்கலாம். சுப்பிரமணிய சுவாமி புலிகள் விடயத்தில் மிகவும் கடும்போக்கு கொண்டவராவார். அத்துடன், தமிழ் நாட்டு திராவிட கட்சிகளை தன்னுடைய பரம வைரியாகவும் கருதுபவர். (மேலும்....) குழந்தைப் போராளி பாலச்சந்திரன் பிரபாகரன்.....?
புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகச் சித்திரித்து 'புலிப்பார்வை' என்றொரு திரைப்படத்தை பிரவீண் காந்தி என்றொரு இயக்குனர் எடுத்துவருகிறார். இது கடுமையான கண்டனத்திற்குரியது என்பதில் மாற்றுக் கருத்தேயில்லை. பாலச்சந்திரன் ஆயுதம் ஏந்திப் போராடியாதாகச் சான்றுகள் ஏதுமில்லை. சரணடைந்தபோதே பாலச்சந்திரன் இராணுவத்தால் கொல்லப்பட்டார். இந்த இடத்தில் புலி விசுவாசிகள் தங்களது மனதைத் திறந்து இன்னொன்றையும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். புலிகள் குழந்தைகளை இயக்கத்தில் சேர்த்ததில்லையா? இந்த நிழற்படத்திலிருக்கும் குழந்தைகளுக்கும் சற்றொப்ப பாலச்சந்திரனின் வயதுதானேயிருக்கும்? எத்தனையோ பாலச்சந்திரன்கள் புலிகளால் கைகளில் ஆயுதம் திணிக்கப்பட்டு யுத்த முன்னரங்கிற்கு அனுப்பப்பட்டு கொல்லக் கொடுக்கப்பட்ட போதெல்லாம் மயிர் கூச்செறிய ஆராதித்த நீங்கள் இன்றொரு செலுலாயிட் பாலச்சந்திரனுக்காகக் கொதிப்பது உங்களுக்கே வேடிக்கையாயில்லையா. அடிப்படைக் குற்றம் பாலச்சந்திரனை குழந்தைப் போராளியாகச் சித்திரிக்கும் பட இயக்குனரிடமில்லை...அது ஆயிரக்கணக்கான குழந்தைப் போராளிகளை உருவாக்கிய பாலச்சந்திரனின் தந்தையாரிடமே இருக்கிறது.(ஷோபா சக்தி) பனைமரக்காட்டு நடிகர்களும், ஓவர் செண்டிமெண்டலும். (பனங்காட்டு வசந்தன்) விடை கொடு எங்கள் நாடே! கடல் வாசல் தெளிக்கும் வீடே! பனைமரக்காடே பறவைகள் கூடே! மறுமுறை ஒரு முறை பார்ப்போமா? இது Money ரத்தினம் money மேக் பண்ணுவதற்காக இலங்கைப் பிரச்சனையை வைத்து தயாரிக்கப்பட்ட “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படத்தில் இடம்பெற்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பாடல். தமிழ்நாட்டுத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பணம் சம்பாதிப்பதற்கு இலங்கைப் பிரச்சனை பெரிதும் உதவியது. முதலில் இலங்கைத் தமிழர்களைச் சம்பந்தப்படுத்தி “புன்னகை மன்னன்” படத்தைத் தயாரித்தார் இயக்குனர் பாலச்சந்தர். பிரபாகரனின் பெயரைப் பயன்படுத்தி சந்தனக்கட்டை வீரப்பனின் கதையை “காப்டன் பிரபாகரன்” என்று இலங்கைப் பிரச்சனைக்குச் சம்பந்தமேயில்லாத படத்தைத் தயாரித்தார் ஆர் .கே.செல்வமணி. பிரபாகரன் பக்தர்கள் அந்தப் படத்தைப் பார்க்கத் தவறமாட்டார்கள் என்பது இந்த மணி மேக் பண்ணும் செல்வமணிக்கு நன்றாகத் தெரியும். பின்னர் முருகதாஸ் என்ற மணிமேக்கர் “7ம் அறிவு” என்ற படத்தைத் தயாரித்தார். சிறீலங்காவிலை அடிச்சான், மலேசியாவிலை அடிச்சான், இப்ப தமிழ்நாட்டுக்கு வந்து அடிக்கிறான். என்ற வரிகள் தமிழ் ரசிகர்களை உணர்ச்சியூட்ட வைத்தது. அது மட்டுமில்லாமல் புலிக்கவிஞர் பா.விஜய் “இன்னும் என்ன தோழா” என்ற பாடலை எழுதி தமிழர்களுக்கு இன்னும் உணர்ச்சி பொங்க வைத்தார். இப்படி பல படங்கள், பாடல்கள் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் இணைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டதனால் பலத்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்தன. (மேலும்....) சாதி உங்களுக்கு என்ன செய்தது? பூமிக்கும், நிலவுக்குமான தொலைவு 3,84,400 கி.மீ. அங்கு மனிதர்கள் சென்றுவந்துவிட்டனர். ஊருக்கும், சேரிக்குமான தொலைவு அதிகப்பட்சம் 1/2 கி.மீட்டர்தான். ஆனால் இன்னமும் ஊர் கிணற்றின் தண்ணீர், சேரி வந்து சேரவில்லை. ஊரைக் காக்கும் கடவுளின் தேர் பல்லாயிரம் ஆண்டுகளாக அசைந்து நகர்ந்தாலும், சேரிக்கு வர சாமிக்கும் வழி தெரியவில்லை. ஒரு கொடிய மிருகத்தைப்போல நம்மை சுற்றி வளைத்திருகிறது சாதி. அதிலும், அண்மை காலமாக சாதியத் தாக்குதல்கள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மம் மற்ற உயர்சாதியினரிடையே திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது. (மேலும்....) காங்கிரஸிக்கு எதிர்கட்சித் தலைவர் பதவியை கோரும் தகுதி இல்லை சட்டமா அதிபர்பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கோர காங்கிரசுக்கு தகுதி இல்லை என்று சட்டமா அதிபர் முகுல் ரோஹத்கி கருத்து தெரிவித்து ள்ளார். எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்படுவது குறித்து சட்ட விதிமுறைகள் படி நடவடிக்கை எடுக் கப்படும் என்று சுமித்ரா மகாஜன் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சிக்கு இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 44 தொகு திகளில் வெற்றி பெற்றது. பாராளுமன்றத்தில் எதிர் க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு மொத்த எம்.பி.க்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் (55 எம்.பி.க்கள்) பெற்றிருக்க வேண்டும். ஆனாலும் பாராளுமன்றத்தில் 2-வது பெரிய கட்சி என்ற வகையிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி எம்.பி.க்களின் எண்ணிக்கை 60 இருப்பதாலும் காங் கிரசுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன் இந்த சிக்கலான வி'யத்தில் சட்ட நிபு ணர்கள் மற்றும் அரசியல் சட்ட நிபுணர்களின் கரு த்து கேட்டுதான் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி சட்டமா அதிபர் nஜனரல் முகுல் ரோஹத்கியின் கருத்தையும் அவர் கேட்டி ருந்தார். காசாவில் அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாடசாலை மீதும் இஸ்ரேல் தாக்குதல்பொதுமக்கள் இருப்பதாக பலமுறை எச்சரிக்கப்பட்ட நிலையிலும் காசாவில் அகதிகள் தங்கியுள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் n'ல் தாக்குதல் நடத்தியதில் சுமார் 20 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். ஒட்டுமொத்தமாக காசாவெங்கும் நேற்றைய தினத்திலும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் மேலும் 59 பலஸ் தீனர்கள் பலியாயினர். "உலகமே அவமானத்துடன் நிற்கிறது" என்று இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பேச்சாளர் கிரிஸ் கின்னஸ் கவலை தெரிவித்திருந்தார். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பால் இடம்பெயர்ந்து ஐ.நா. பாடசாலைகளில் தஞ்சம் புகுந்திருக்கும் பலஸ்தீன அகதிகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது ஒரு வாரத்திற்குள் இது இரண்டா வது முறையாகும். இந்த புதிய வன்முறைகளுடன் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,283 ஆக உயர்ந்துள்ளது. (மேலும்....) எதிர்காலத்தில் எங்கள் சந்ததியினர் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா,பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன், இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது, யாரும் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும் காரணம், (மேலும்....) தாயகத்தில் நலிந்த முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை....? போர் விதவைகள் பாலியல் தொழில் புரிகிறார்கள். இன்னொரு போராளி சந்தையில் பிச்சை எடுக்கிறார். ஒரு மாவட்டத்தின் தளபதி புனர்வாழ்வின்பின் வீதி செப்பனிடும் நிறுவனத்தில் கல்லு பரவும் தொழிலாளியாக தொழில் புரிகிறார். புனர்வாழ்வை முடித்து, தனது 6 வயது குழந்தையுடன், சரணடைந்த கணவர் வருவார் என்று எதிர்பார்க்கும் நிரந்தர வருமானம் இல்லாத ஒரு பெண். இவரை வட்டமிடும் வக்கிர எண்ணமுடைய ஒரு கூட்டம். அங்கவீனங்களுடன், காயங்கள், மன அழுத்தங்களுடன் ஒருவேளை உணவுக்கே வருமானமின்றி வறுமையில் வாடும் பலர். இப்படி பல கதைகள் ஊருக்குள் இருக்கின்றன. விடுதலைப் புலிகளின் அமைப்புக்களால் சேர்க்கப்படும் எந்தவித பணஉதவிகளும் இவர்களை வந்தடைந்ததற்கான ஆதரங்களே இல்லை. ஆனால் போரளிகளுக்காகவும், தேசியத்திற்காகவும் விடுதலைப் புலிகளின் அமைப்புக்களால் புலத்தில் இன்றும் உண்டியல் குலுக்கப்படுகிறது. பல நிகழ்வுகள் மூலம் பணம் சேகரிக்கப்படுகிறது. வாழ்க தேசியம். வாழ்க ”புலன்” பெயர்ந்த அமைப்புக்கள். ஆனால், நலிந்த நிலையில் வாழும் மக்களுக்கு, சில புலம்பெயர்ந்த மக்கள் நேரடியாகவே உதவுவதனால் சிலரின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. நலிந்த நிலையில் வாழும் மக்களுக்கு நேரடியாகவே உதவுங்கள் நண்பர்களே. உங்கள் நண்பர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். ஒரு சிறுகைத்தொழில் முயற்சியொன்றின் மூலம் பலரின் வாழ்க்கையை நாம் வளமாக்கலாம். மரு மறைய அம்மாச்சி பச்சையை
"மரு" (Skin Tag) உதிர... இன்றைய சூழ்நிலையில் ஏராளமானவர்களிடம் பரவலாக காணப்படுவது "மரு" [Skin Tag] ஆகும். இதனை சுலபமாக உடலில் இருந்து அகற்றலாம். அதற்கு அம்மான் பச்சரிசி செடி தேவை... அம்மான் பச்சரிசியின் இலையினை ஒடித்தால், பால் தோன்றும். இதனை மரு மீது பூசவும். மேலும், சில இலைகளை ஒடித்து மரு முழுதும் பூசவும். இது போல் தினமும் பூசி வர, நான்கு ஐந்து தினங்களில் மரு உதிர்ந்து விடும். பறக்கும் தட்டும் மனித நாகரீகமும் அமெரிக்க முலம் 2001 வருடத்தில் தொடங்கப்பட்ட கடல் மாசு கட்டுப்பாடு ஆராய்ச்சி ஒரு உலக வரலாற்று ஆராய்ச்சியாக மாறியது; லெமுரியா மற்றும் குமாரி கண்டமும் மனித நாகரிகம் தொடங்கிய இடம் என்று ஏற்றுக்கொண்டுள்ளனர். மேலும், இந்த கண்டத்தில், பெரிய பெரிய கோவில்கள் முப்பது ஆயிரம் வருடம் முன்பே கட்டப்பட்டுள்ளது என்று கூறிகிண்றனர். மேலும், இது தற்போதைய " கோவில் கட்டிட முறைய ஒத்துபோயுள்ளது என்பது மேலும் ஒரு ஆச்சிரியம். இவர்கள் பகவத் கீதையில் கூறபட்ட அணைத்து நிகழ்ச்சிகளும் நடந்தது என்று சொல்கின்றனர். இது அனைத்தும் கிருஷ்ணா பரமாத்மா வாழ்ந்ததற்கான அடையாளம் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். சுமார், பத்து ஆயிர வருடம் முன்பே, நமது தமிழ் இலக்கியத்தில், நாம் "பறக்கும் விமானம்" பற்றி குறிப்பு எழுதி இருந்தோம். இது லெமுரியா கண்டத்தில் நடந்தது என்று சொல்கின்றனர். ஆனால், அது வேற்றுகிரகவாசிகளால் செய்யப்பட்டது என்று அறியாமையில் சொல்வதை பார்த்தல் சிரிப்பு தான் வருகிறது.
Pythagoras இற்கு முந்தைய போதையனார் யார்?
"ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் - போதையனார்
விளக்கம்:
எமது ஐயம்: தொல்காப்பியரின் காலம் கி.மு 721 என வரையறுக்கப் பட்டுள்ளது...ஆனால் தமிழின் முதல் செய்யுள் கிடைத்த காலம் என்பது கி.மு முதல் நூற்றாண்டில் இருந்து மட்டுமே... ஆக, தொல்காப்பியம் படைக்கப்பட்டு அறுநூறு ஆண்டுகளாக எவரும் எவ்வித செய்யுளும் படைக்கவில்லை என்பதாக வருகிறது.... இந்த அறுநூறு ஆண்டுகள் போதும் ஆரியப் பார்ப்பனர்களுக்கு வரலாற்று கால செய்யுள்களை அழிப்பதற்கு... எத்தனை கணித தேற்றங்கள் இப்படியான செய்யுள்களில் சொல்லப்பட்டு அழிந்ததோ...!!??? ரஷ்யா மீது பொருளாதார தடையை விரிவுபடுத்துகிறது அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இது ரஷ்யாவின் பல வீனமான பொருளாதாரத்தை மேலும் பலவீனப்படுத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட் டுள்ளார். இதில் அமெரிக்க மக்கள் மூன்று ரஷ்ய வங்கிகளுடன் தொடர்புவைத் திருப்பது தடைவிதிக்கப்பட்டிருப்பது உட்பட புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒன்றிணைந்த செயற் பாடு காரணமாக ரஷ்ய பொருளாதாரத்திற்கு பாரிய அடி விழுந்துள்ளது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச் சியாளர்களுக்கு ரஷ்யா ஆயுதம் வழங்குவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தும் குற்றச்சாட்டை ரஷ்யா நிராகரித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவின் வலு சக்தி, ஆயுதங்கள் மற்றும் பொருளாதாரத்தை இலக்கு வைத்து புதிய தடைகள் விரிவுபடுத்தப்பட்டிருப்பதாக ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து தெரித்தார். காசாவில் 5000 வீடுகள் முற்றாக தரைமட்டம்காசாவில் இதுவரை சுமார் 5000 வீடுகள் தரைமட்ட மாக்கப்பட்டுள்ளதை பலஸ்தீன சுகாதார அமைச்சு உறுதி செய்துள்ளது. புதிய தாக்குதல்களால் இந்த எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. காசா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஷ்ரப் கித்ரா குறிப்பிடும்போது, இஸ்ரேல் வான் மற்றும் ஷெல் தாக்குதல்களில் ஒட்டுமொத்தமாக 4,987 வீடுகள் முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளன என்றார். அதில் 26,270 வீடுகள் பகுதியளவு அழிக்கப்பட்டிருப்பதோடு, 4,136 வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதா கவும் அவர் விபரித்தார். இஸ்ரேல் கடந்த திங்கட்கிழமை வடக்கு காசாவில் இருந்து சுமார் 400,000 வெளியேறும்படி உத்தரவிட்டி ருந்தது. காசாவின் அனைத்துப்பக்க எல்லை வாயில்களும் மூடப்பட்ட நிலையில் அங்குள்ள மக்கள் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலைகளிலேயே தஞ்சம் புகுந்து வருகின்றனர். தோழர்.தங்கவடிவேலு காலமானார்
இடதுசாரி அரசியல் போராளியும், இலங்கையின் இடதுசாரி இயக்கத்தின் முன்னோடியுமான தோழர்.தங்கவடிவேலு அவர்கள் நேற்றய தினம் – 29.07.14 – அன்று கொழும்பில் காலமானார். 1931 ஆம் ஆண்டு பிறந்த திரு.கே.தங்கவடிவேலு அவர்கள் நீண்டகாலமாக ஆசிரியர் தொழிலாற்றியவர். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கடமையாற்றிய அவர் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் பலவற்றில் முன்னணிப் போராளியாகச் செயற்பட்டவர். இலங்கையில் முதலாவது ஆயுதம் தாங்கிய போராட்டமான தாழ்த்தப்பட்ட மக்களின் எழுச்சியில் தோழர் சண்முகதாசனுடன் இணைந்து செயற்பட்டவர். புலிகள் அப்படிச் செய்திருக்கக் கூடாது! இப்படிச் செய்தவர்களுடன் பின்பு சுரேஷ் இணைந்திருக்க கூடாது சமாதான கால ஆரம்பத்தில் புலிகள் வவுனியாவில் முன்னாள் ஈபிஆர்எல்எவ் உறுப்பினரான நகுலன் என்பவரை சுட்டுக் கொன்றார்கள். இது நடந்தது 2003 அல்லது 04 அல்லது 05ஆகக் கூட இருக்கலாம். கொலையுண்ட நகுலன் ஒரு பழைய சயிக்கிளுடன் கீழே விழுந்த போது, ஈபிஆர்எல்எவ் அமைப்புடனோ, வேறு எந்த அரசியல் குழுக்களுடனோ தொடர்பு பட்டவரல்லர். உண்மையில் அக்காலப்பகுதியில் ஒரு தினக்கூலியாகவே தனது குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். தெரு மண்ணில் குப்பற வீழந்து கிடந்த அவனது உடலத்திலிருந்து கசிந்த இரத்தத்தில், மகள் ஆசையாகக் கேட்ட ஐஸ்கீறீமும் `முறிஞ்சு உழைச்ச அலுப்பைப் போக்க வாங்கிய காப்போத்தில் சாரயமும்` கலந்த காட்சி, சொற்களால் சொல்லமுடியாத ஒரு கோரக்காட்சி. ‘சேரியிலுள்ள ஒரு கூலிக்காரன் தன் மனைவிக்கு ஆசையோடு வாங்கித்தரும் ஒரு முழப் பூவுக்கு ஈடாகுமா சக்ரவர்த்தி ஷாஜகான் கட்டிய தாஜ்மகால்?’ எனும் ஜெயகாந்தனின் வரிகளை வாசிக்கும் போது என்னையறியாமல் நகுலனின் கொலை ஏன்தான் நினைவுக்கு வந்ததென்று தெரியவில்லை. ஜுலை 30, 2014 குழந்தைகளுக்கு வலியின் வீரியம் தெரிகிறது.. இயற்கை தன்னை இயல்பாக மாற்றிக்கொள்ளும். குழந்தைகளை போற்றுவோம்.!!
வடக்கில் இராணுவ முகாம் போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் - மாவை பிரபாகரன் நீச்சல் தடாகம் கட்டி குளிப்பதை மாவை ஞாபகப்படுத்திவிட்டாரோ....? யாழ். மாவட்டத்தில் இராணுவ முகாம்கள் அமைக்க காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் உண்மையில் இராணுவ முகாம் என்ற போர்வையில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார். 'எமது மக்கள் நீண்ட காலமாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பூமியில் வாழ முடியாது, அகதி முகாம்களிலும், உறவினர், நண்பர்கள், வாடகை வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள், பரம்பரை பரம்பரையாகச் மேற்கொண்டு வந்த விவசாயத்தையும், மீன்பிடியையும் செய்ய முடியாமல் தொழில் இழந்து வாழ்க்கையை தொலைத்துவிட்டு நாடோடிகளாக வாழ்கின்றனர். மறுபுறத்தில், எமது மக்களின் நிலங்களில் இராணுவம் உல்லாச விடுதிகளைக் கட்டி தொழில் நடத்துகின்றார்கள். நீச்சல் தடாகங்களில் நீந்துகின்றார்கள். கடந்த காலத்தில் முஸ்லிம் மக்களுடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில், மாகாண ஆட்சியை அமைக்க முயன்றோம். ஆனாலும் அது கைகூடவில்லை. கடந்த 60 வருட காலத்தில் என்றும் இல்லாத அளவுக்கு இன்று சிங்கள அரசும் பௌத்த தேரர்களும் எம் இனத்தை அழிப்பதிலும் எமது கலாசார அடையாளங்களை இல்லாது செய்வதிலும் கடுமையாக முனைப்புக்காட்டி வருகின்றார்கள். காஸா படுகொலைகளுக்கு வலுவான எதிர்ப்புக்களை தெரிவிக்க வேண்டும் காஸா இனப்படுகொலையை ஒட்டி மும்பையில் உள்ள பல வியாபாரிகள் தம் கடைகளில் அமெரிக்க பொருட்களை விற்பதில்லை என முடிவெடுத்திருக்கிறார்கள். இது இந்தியா முழுக்க தொடர வேண்டும். இங்கிலாந்து வீரர் மோயின் அலி save Gaza wrist band அணிந்து மூன்றாவது டெஸ்டில் ஆடினார். இப்பிரச்சனையில் இஸ்லாமியர் அல்லாத சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மை ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து அமெரிக்காவுக்கு ஒரு சேதி விடுக்க வேண்டும். Malaysian Airlines MH17: Who Stands to Gain? (By Chandra Muzaffar)
The Russian military has released military monitoring data which challenge allegations circulating in the media pertaining to the MH 17 crash in the Donetsk Region of Eastern Ukraine on July 17 2014. Questions have been raised about Kiev military jets tracking MH 17, Ukrainian air traffic controllers and the deployment of Buk missile systems. Kiev should also release military data on the circumstances leading to the crash. So should the Pentagon which reportedly has relevant intelligence and satellite data. Since military data is hardcore information, Kiev and Washington should be persuaded to be transparent and accountable. The UN Secretary-General can play a role in this since there is a specialized agency within the UN, the ICAO, dedicated to international civil aviation. Military data from Moscow, Kiev and Washington should be scrutinized by the independent international panel that is supposed to probe the MH 17 catastrophe. (more.....) தமிழக அகதி முகாம்களில் வாழும் தமிழருக்கு விசேட அடையாள அட்டை முகாம்களில் வாழும் தமிழ் அகதிகளுக்கு கைவிரல் அடையாளத்தைக் கொண்ட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு தமிழ்நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. காசுக் கொடுப்பனவுகளில் இடம்பெறும் ஊழல்களைத் தவிர்ப்பதற்கு இந்த முறை அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இறைவரி அதிகாரிகளே முகாம்களுக்கு சென்று காசுக் கொடுப்பனவுகளை செய்து வந்தனர். அகதிகளுக்கான கொடுப்பனவு இடம்பெறும் வேளையில், அகதியொருவர் முகாமில் இல்லாத போது பணத்தை முகாமிலுள்ள வேறு ஒருவருடம் கொடுக்க நேரிட்டது என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் அந்த பணம் உரித்தானவருக்கு போய் சேராமலும் இருக்கலாம். பிழையேதும் ஏற்படாத காசுக் கொடுப்பனவை வழங்குவதே புதிய முறையின் நோக்கமாகும். இதன்படி, செப்டம்பர் மாதத்திலிருந்து முகாம்களில் உள்ள ஒவ்வொருவரும் முக்கிய வங்கியான ஐ.ஒ.சி. வங்கியில் குறைந்த பட்ச மீதி நிபந்தனையில்லாத கணக்கு ஒன்றை திறக்க வேண்டும். இதன் பின்னர், குறித்த ஆளுக்கு கைவிரல் அடையாளத்தைக் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் காலமானார்
இலங்கை வானொலி யில் சிரேஷ்ட அறிவி ப்பாளராக இருந்து ஓய்வுபெற்ற ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் நேற்று காலமானார். சிலாபம் மருதங்குளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம் 1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலியில் பணியாற்றி வந்தார். இறுதிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த இவர் தனது 80 ஆவது வயதில் காலமானார். மருதங்குளத்தில் பிறந்த இவரது அப்பாவின் பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருக்கும் அயோத்தியிலிருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் பெற்றவர். ராஜகுரு சேனாதிபதி என்பது குடும்பத்தின் பரம்பரை பெயராக கொண்டிருந்தவர். தமிழில் மிகவும் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் தூய தமிழை இலங்கை வானொலியினூடாக வழங்கிய பெரு மைக்குரியவர். இலங்கை வானொலியில் இவர் நடத்திய பொதிகைத் தென்றல் எனும் நிகழ்ச்சி இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் பிரபலம் பெற்றிருந்தது. தமிழில் ஆர்வமிகுதியால் இவர் நடத்திய ‘நல்லதமிழ் கேட்போம்’ எனும் நிகழ்ச்சி மூலம் தமிழக நேயர்களையும் தன் வசப்படுத்திய பெருமைக்குரியவர் இராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம். நேற்றுக் காலை சிலாபம் ஆஸ்பத்திரியில் காலமான அன்னாரின் பூதவுடல் மாதம்பை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும். லாலு, நிதிஷ், காங்கிரஸ் கைகோர்ப்புபீகாரில் நடைபெறவுள்ள 10 சட்டமன்ற தொகுதி களுக்கான இடைத்தேர்தலில் லாலு பிரசாத்தின் ராஷ்டி ரிய ஜனதா தளம், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ள்ளதன் மூலம் நிதிஷ் குமார், லாலு இடையேயான 24 ஆண்டுகால மோதல் போக்கு முடிவுக்கு வந்துள்ளது. இடைத் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சி கள் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்க உள்ளன. ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை தலா 4 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட உள்ளது. இது குறித்த அதிகாரபு+ர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் எனத் தெரிகிறது. அண்மையில் சோனியா காந்தி அளித்த இப்தார் விருந்தில் லாலுவும் ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவும் கலந்துகொண்டனர். நடந்து முடிந்த உத்தரகண்ட் இடைத்தேர்தலில் 3 சட்ட மன்ற தொகு திகளையும் காங்கிரஸ் கைப்பற் றியது. இதில் 2 பாஜக வசம் இருந்தவையாகும். தற்போது பீகாரில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைந்துள்ள தாக ஐக்கிய ஜனதா தளம் கூறி உள்ளது. பீகாரின் முன்னாள் முதல்வர் களான லாலுவுக்கும் நிதிஷ் குமாருக்கும் இடையே நிலவி வந்த 24 ஆண்டு கால மோதல் போக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலின் இனப்படுகொலையால் காஸாவில் பலியானோர் எண்ணிக்கை 1,100பலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நிகழ்த்தி வரும் இனப்படுகொலையில் பலி யானோர் எண்ணிக்கை 1,100ஆக அதிகரித் துள்ளது. படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 5,100. இவர்களில் 400க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலைமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஸா பகுதிகள் மீது கடந்த 3 வார காலமாக இஸ்ரேல் உக்கிரமான போரை கட்டவிழ்த்துவிட்டுள்ளது. உலக நாடுகள் முன்னெடுத்த சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்த உக்கிரப் போரில் அப்பாவி பலஸ்தீன மக்கள் 1,100 பேர் பலியாகி உள்ளனர். 5,100 பேர் படு காயங்களுடன் மருத்துவமனைகளில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 400க்கும் மேற்பட்டோர் உயிருக்குப் போராடி வருகின் றனர். சுமார் 2 இலட்சம் பேர் அகதிகளாக சொந்த வாழ்விடங்களை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இஸ்ரேலின் கொ டூர தாக்குதலுக்கு பதில டியாக ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலில் 52 இஸ்ரேல் வீரர்கள் பலியாகி உள்ளனர். இரண்டு முறை யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியிட்டும் போர் முடிவுக்கு வர வில்லை. இரவும் பகலும் பாராமல் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனி டையே காஸா மீதான போர் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதால் பலி யானோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப் படுகிறது. இரு விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் மலேசிய ஏர்லைன்ஸின் பெயரை மாற்றத் திட்டம்மலேசிய ஏர்லைன்ஸ்சுக்கு சொந்தமான 2 விமானங்கள் தொடர்ந்து விபத்துக்குள் சிக்கியுள்ள நிலையில் நன்மதிப்பை அதிகரிக்கும் வகையில் பெயரை மாற்றும் திட்டத்திற்கு மலேசியன் ஏர்லைன்ஸ் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 298 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர் டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பு+ர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்- எம்.எச்.17, கடந்த 17 ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் அந்த விமா னத்தில் பயணித்த 298 பேரும் பலியானார்கள். 239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி நடுவானில் மாயமானது. நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மாயமான அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. இரண்டு பெரும் விபத்துக்களால் மலேசிய ஏர்லைன்ஸ் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில் மோசமாகியுள்ள நன்மதிப்பை அதி கரிக்கும் வகையில் பெயரை மாற்றும் திட்டத்திற்கு மலே சியன் ஏர்லைன்ஸ் வந்துள்ளதாக தகவல்கள் வெளி யாகியுள்ளன. மலேசியன் ஏர்லைன்ஸ் மலேசியா அரசால் நிர்வாகம் செய்யப்படுகிறது. புதிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் வண்ணம் மலேசி யன் ஏர்லைன்ஸ் பெயர் மாற்றப்படலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. கியூபா நாட்டுமக்கள் தமது தன்னம்பிக்கையினாலும் ஜனநாயக புரட்சியினாலும் வெற்றி பெற்றுள்ளனர்.இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் எழும் போது மக்கள் கியூப புரட்சியை முன்மாதிரியாக கொண்டு சர்வதேச நாடுகளின் அழுத்தங்களில் இருந்து மீள் எழுச்சி பெற அணிதிரள வேண்டும் என நீர் வழங்கல் மற்றும் வடிக்காலமைப்பு அமைச்சரும் இலங்கை, கியூப நட்புறவு சங்க தலைவருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கியூபா நாட்டில் 1953 ஆம் ஆண்டு அமெரிக்கபேரின வாதிகளினால் கட்டவீழ்த்துவிடப்பட்ட மொங்காட தாக்குதலின் 61 ஆவது ஆண்டினை நினைவுக் கூரும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை கைத்தொழில் தொழில் நுட்ப பயிற்சி நிலையத்தின் நடைபெற்ற போதே தினேஸ் குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண, அமைச்சர் சுசில் பிரம ஜெயந்த மற்றும் கியூபா நாட்டு தூதுவர்கள், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி உறுப்பினகள், மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அமெரிக்க படைகளின் தாக்குதலினால் பிஞ்சுக்குழந்தைகளும் மக்களும் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர்.இவ்வாறான தாக்குதலின் உச்சக்கட்டமே மொங்காட தாக்குதல் என அழைக்கப்படுகின்றது. இவ்வாறான பேரினவாதிகளின் வன்முறைகளுக்கும், சர்வதேச அழுத்தங்களுக்கும் பொருளாதார தடைகளுக்கும் முகம் கொடுத்த கியூபா நாட்டுமக்கள் தமது தன்னம்பிக்கையினாலும் ஜனநாயக புரட்சியினாலும் வெற்றி பெற்று மீள்எழுட்சி பெற்றதுடன் இன்று உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு கியூபா நாட்டினது வளர்ச்சி உச்சம் பெற்று சர்வதேச அளவில் காணப்படுகின்றது. ரொரன்ரோவில் லோகன் கணபதிக்கு வைத்த ஆப்பு ஞாயிறு மாலை நடைபெற்ற சோதி செல்வா அவர்களின் தேர்தல் நிதி சேகரிப்பு இராப் போசன விருந்து வைபவத்தில் உரையாற்றிய வேட்பாளரான சோதி செல்லா அவர்கள் முதலில் ஆங்கிலத்தில் உரையாற்றி பின்னர் தமிழிலும் உரையாற்றினார் . அதன் ஒருபகுதி வருமாறு.."...திரு.லோகன் கணபதி அவர்கள் ஸ்காபுறோ “நோத்” தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் எம்.பி.பதவிக்கு போட்டியிடப் போவதாக பத்தரிகையில் அறிவித்த பின்னரே நான் அந்த வட்டாரத்தில் போட்டியிட முடிவுசெய்தேன். வேட்பு மனுவை நான் ஜனவரி 2ம் திகதி தாக்கல் செய்தேன். அதற்கு பின்னர்தான் திரு.லோகன் கணபதி அவர்கள் தனது மனுவை தாக்கல் செய்தார். கவுன்சிலாரக இருக்கிறவர் அடுத்த தொகுதிக்கு போகாவிட்டால் நான் ஒரு போதும் இத்தொகுதிக்கு வந்திருக்க மாட்டேன் என்றும் ஆனால் தற்போது வழியை அமைத்து தந்தவரே இப்போது வழியையும் அடைக்க வெளிக்கிடுகின்றார்..." நச்சென்று நாலு வார்த்தை 'தமிழர்களின் கண்ணீர் ஆட்சியாளர்களைத் தூக்கி எறியும்' - ஐங்கரநேசன் 'சரிதானையா, ஆனால் நீங்கள் சனத்துக்குத் தராமல் மறுக்கும் தண்ணீர் உங்களை மூழ்கடித்து விடுமே தெரியாதா?' - தமயந்தி ஜுலை 29, 2014 நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்!
(சுகு-ஸ்ரீதரன் போராடிய பொடியள் போய்ச் சேர்ந்த பிறகு இப்போது திருடர்கள் ஆதிக்கம் பெற்றிருக்கிறார்கள். உள்ளுரில் நாளாந்தம் வன்முறைகள், பாலியல் கொடுமைகளில் ஈடுபடும் கும்பல்கள் பற்றி பேசவரவில்லை. அதனை இன்னொரு சந்தர்பத்தில் பார்ப்போம். சமூகத்தை மக்களை ஏமாற்றி உசுப்பேத்தி பிழைப்பு நடத்தும் ஒரு கூட்டம் தொடர்ந்து இருந்துகொண்டுதான் வருகிறது. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்மென்ற விருப்பமும் கிடையாது. தீர்வுக்கான சாத்தியங்கள் உருவானால் அதனை சீர்குலைத்துவிட வேண்டுமென்ற கரிசனையுடன் இவர்கள் செயற்படுகின்றார்கள். கடந்த 30 வருடங்களில் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பங்கள் தவறவிடப்பட்டதில் முதுகெலும்பு இல்லாத இந்த பிழைப்புவாதக் கூட்டமும் ஒரு காரணமாக இருந்தது. தமிழர்களுக்கு பொறுப்புள்ள தன்நலமில்லாத தலைவர்கள் இருந்திருந்தால் இன்றளவில் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பெருமளவுக்கு அவ்வாறு இருக்கவில்லை. அல்லது ஆளுமைமிக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அல்லது துரோகிகள் என்ற முத்திரையுடன் தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டார்கள். (மேலும்....) 2011க்கு பின்னர் இந்திய மீனவர்கள் கொல்லப்படவில்லை - இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை கடற்பரப்புக்குள் எந்தவொரு இந்திய மீனவர்களும் கொல்லப்படவில்லையென இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். சர்வதேச கடல் எல்லையை மீறி மீனவர்கள் மீன்பிடிக்கும் விவகாரம் தொடர்பில் இந்திய மீனவர்கள் குறித்தும் மத்திய அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும், இப்பிரச்சினையை இலங்கையுடன் சுமுகமான முறையில் தீர்த்துக்கொள்வதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மீனவர் பிரச்சினையை சுமுகமாகத் தீர்க்கும் முயற்சிக்கு அமையவே 2013ஆம் ஆண்டு இலங்கையில் கைதுசெய்யப்பட்ட 676 இந்திய மீனவர்களும் 2014ஆம் ஆண்டில் கைதுசெய்யப்பட்ட 536 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். இந்திய கரையோர பாதுகாப்புப் படையினர் இந்திய மீனவர்கள் எல்லைதாண்டுவதைத் தடுக்கும் வகையிலான ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும், எல்லை மீறல்களைத் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகள் ஆரம் பிக்கப்பட்டிருப்பதாகவும் இந்திய பாது காப்பு அமைச்சர் மேலும் தெரிவித் துள்ளார். அனுரகுமார எம்.பி வைத்தியசாலையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க விபத்தொன்றில் காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று திங்கட்கிழமை (28) இடம்பெற்றுள்ளது. இவர் பிரயாணித்த வாகனம் இரத்தினபுரி- ஹொரன வீதியில் வைத்து லொறி ஒன்றுடன் மோதியதனாயேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். ஜுலை 28, 2014 157 பேரும் இந்திய பொருளாதார குடிவரவாளர்கள் - ஆஸி அவுஸ்ரேலிய சுங்க கப்பலில் நடுக்கடலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 157 புகலிட கோரிக்கையாளர்களும் இந்திய பொருளாதார குடிவரவாளர்கள் என அவுஸ்ரேலிய திட்ட குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிஸன் திங்கட்கிழமை கூறினார். இந்த கப்பல் பாதுகாப்பான தேசமான இந்தியாவில் இருந்து எங்கும் தங்காமல் வந்துள்ளனர் என மொறிஸன், அவுஸ்ரேலிய வானொலி ஒன்றுக்கு கூறினார். இவர்கள் இலங்கையிலிருந்து வரவில்லை வேறு ஆப்கான் போன்ற நாடுகளிலிருந்து வரவில்லை என அவர் கூறிப்பிட்டார். பாதுகாப்பான இந்தியாவிலிருந்து வந்தப்படியால் இது சட்ட விரோதமாக அவுஸ்ரேலியாவுக்கு நுழையத்திட்டமிட்ட பொருளாதார குடிவரவாகும். அநேகமாக இலங்கையில் இருந்து வந்துள்ள இந்த குழு பாண்டிச்சேரியிலிருந்து கடந்த மாதம் புறப்பட்டு வந்துள்ளனர். ஆனால், இவர்கள் அவுஸ்ரேலிய அதிகாரிகளினால் வழிமறிக்கப்பட்டனர். இவர்களை அவுஸ்ரேலியாவுக்க கொண்டு செல்லப்போவதாக மொறிஸன் வெள்ளிக்கிழமை அறிவித்தார். அங்கு இவர்கள் இந்திய அதிகாரிகளால் இந்தியாவிற்கு அழைத்து செல்லப்படுவதற்காக மதிப்பீடு செய்யப்படுவர். இந்தியாவுக்கு செல்ல மறுப்போர் நவுறு மற்றும் பப்புவா நியூகினியா தீவுகளில் உள்ள தீவுகளுக்கு அனுப்பப்படுவர். அங்கு இவர்கள் விசாரிக்கப்பட்டு அவுஸ்ரேலியாவில் இறுக்கமான குடிவரவு கொள்கைகளுக்கு அமைய மீள்குடியேற்றம் செய்யப்படுவர். இவர்கள் இனரீதியான கொடூரங்களிலிருந்து தப்பியோடி வந்தவர்கள் என்பதை மொறிஸன் நிராகரித்துள்ளார். காலம் கடந்த ஞானம்காணாமற்போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக மூன்று சர்வதேச நிபுணர்களை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 15ஆம் திகதி நியமித்தார். அத்தோடு விசாரணை ஆணைக்குழுவின் செயல் வரம்புகளை விஸ்தரித்து, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புடன் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் சாதாரண மக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாகவும் ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என்று பணித்தார். இது மனித உரிமை மற்றும் பொறுப்புக் கூறல் என்ற விடயங்களில் அரசாங்கம் இதுவரை கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து முற்றாக விலகிச் சென்றதையே காட்டுகிறது. போரின் போது சாதாரண மக்கள் கொல்லப்படவில்லை என்பதும் இலங்கையில் மனித உரிமை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் வெளிநாட்டவர்கள் தலையிட முடியாது என்பதுமே இது வரை அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருந்தது. (மேலும்....)அமைச்சர் நிதின் கட்காரி வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவிகள் பிரதமர் மோடி , மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் சதிச் செயலில் அமெரிக்க உளவு அமைப்புகள்மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வீட்டில் வெளி நாட்டு உளவு அமைப்புகளால் இரகசியமாக பொருத்தப்பட்டிருந்த, அதிநவீன ஒட்டு கேட்கும் கருவிகள் அகற்றப்பட்டுள்ளன. அந்தக் கருவிகள் அமெரிக்க உளவு அமைப்புகள் பயன்படுத்துபவை என்பதால் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச் சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் சதிச் செயலில் அமெரிக்க உளவு அமைப்புகள் ஈடுபடு கின்றனவோ என்ற பீதி ஏற்பட்டுள்ளது. பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடு வதும் பிற நாடுகளை உளவு பார்ப்பதும் அமெரி க்காவுக்கு கைவந்த கலை என்பதை 2010இல் உலகுக்கு அம்பலப்படுத்தியது, 'விக்கிலீக்ஸ்' இணையதளம். (மேலும்....) சீனாவின் பட்டுப்பாதை திட்டத்தில் இலங்கை முக்கிய கேந்திர மையம் கடல் வழியான உத்தேச பட்டுப்பாதை திட்டத்தில் இலங்கை முக்கியமானதொரு கேந்திர நிலையமாக அமைந்திருப்பதாக சீனா சுட்டிக்காட்டியுள்ளது. ஆபிரிக்காவையும் மத்திய கிழக்கு நாடுகளையும் இணைக்கக்கூடிய பட்டுப்பாதையில் தெற்காசியாவின் கேந்திர நிலையமாக இலங்கை காணப்படுவதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் வூ ஜியாங்ஹாஓ தெரிவித்தார். கடல் வழியான உத்தேச பட்டுப்பாதை அமைக்கப் பட்டதும் இலங்கை அதில் முக்கிய பங்காற்றும் என்றும் இதன் பயனை இலங்கை அடை யும் என்றும் சீனத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். சீன செய்திச் சேவையொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். பட்டுப்பாதை அமைப்பது தொடர்பான வேலைத்திட்டங்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டி ருப்பதாகவும், இது தொடர்பாக ஆராய்வதற்கான சீனத் தூதுவர் குழுவொன்று விரைவில் இலங்கைவரவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பட்டுப்பாதை தொடர்பான கொள்கைகக்கு இலங்கையே முதன் முதலில் ஒத்துழைப்பு வழங்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையி லான வர்த்தக உறவுகள் படிப்படியாக வளர்ந்து வருவதாகவும் இரு நாட்டுக்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்திருப் பதாகவும் சீனத் தூதுவர் தனது செவ்வியில் தெரிவித்தார். செப்டம்பர் 15 இல் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும்! மீளப்புணரமைக்கப்பட்டு வருகின்ற வடபகுதிக்கான ரயில் சேவையின் பயனாக யாழ்தேவி புகையிரதம் தனது பயணத்தை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரை எதிர்வரும் செப்டெம்பர் 15 முதல் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற பயங்கரவாத யுத்தம் காரணமாக தடுத்து நிறுத்தப்பட்டிருந்த இவ் ரயில் சேவை கடந்த 2009 ஆண்டுக்கு பின்னர் மீள்புணரமைப்பு வேலையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. புலிகளினால்அழித்தொழிக்கப்பட்டு சேவையில் இல்லாமலிருந்த ரயில் சேவை தற்போது இந்திய ரயில்வே கட்டுமான சர்வதேச நிறுவனத்தின் (IRCON) நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியால் மீளப்புணரமைக்கப்பட்டு வருகிறது. புலிகளினால் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 19 ஆம் திகதி யாழ்தேவி புகையிரதம் கொக்காவிலில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டு சுமார் 34 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். 2009 மே மாதத்துடன் போர் நிறைவுக்கு வந்ததை தொடர்ந்து தாண்டிக்குளத்துக்கான யாழ்தேவியின் மீள்நடவடிக்கைகள் ஜூன் 06 ஆம் திகதியுடன் ஆரம்பித்தது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதி ஓமந்தை வரையிலான இதன் நடவடிக்கை, 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் கிளிநொச்சிக்கும் தற்போது பளை வரையான இதன் சேவை கடந்த மார்ச் மாதத்தோடு விஸ்தரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஜுலை 26, 2014 எழிலன் பிடித்த எங்கள் பிள்ளைகள் எங்கே? காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அனந்தியிடம் கேள்வி முல்லைத்தீவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திக்கு எதிராக பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைப்புலிகளால் பலாத்கார ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டு காணாமல் போன இளைஞர் யுவதிகளின் உறவுகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உமது கணவரை நீ தேடுகிறாய். உமது கணவனால் காணாமல் போன எங்கள் பிள்ளைகளை யார் தேடுவது என பல பதாகைகளை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (மேலும்....)
ஜுலை 25, 2014 நேபாளத்தில் பாலம் வசதியில்லாததால் தினமும் இந்தமுறையில்உயிரைப் பணயம் வைத்து படிக்கச் செல்லும் மாணவிகள்
நச்சென்று நாலு வார்த்தை (செய்தி: '13ம் திருத்தச்சட்டம் தொடர்பாகவும், தேசிய இனப்பிரச்சினை தொடர்பாகவும் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே.' - சுரேஷ் பிறேமச்சந்திரன்,)
13 வது
திருத்தசட்டம்
இலங்கை அரசியல் அமைப்பின்
ஓர் அங்கமாகும்,
இதை நடைமுறை
படுத்துவது
இலங்கைக்கு
முக்கியமாகும்,
ஆனால் இதற்க்காக
இந்தியா இலங்கைக்கு
அழுத்தம்
கொடுக்காது.
பா.ஜ.கடசியின் தேசிய செயற்குழு
உறுப்பினர்
கலாநிதி சேஷரத்திரி. - மோகன்
கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார்! - யாழ். நீதிமன்றம் தீர்ப்பு! சிங்கள் நீதிமன்றம் மட்டும் அல்ல தமிழ்நீதி மன்றமும் மக்களுக்கு எதிராகவே தீர்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் தமிழ்நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு மட்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூச்.....? யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொன்சலிற்றா இறப்பதற்கு முனனர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணை நடத்தி நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், கொன்சலிற்றா நீரில் மூழ்கியே உயிரிழந்தார் எனவும் தீர்ப்பளித்துள்ளது. மேற்படி வழங்கு இன்றைய தினம் நீதவான் நீதிமன்ற நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கை விசாரித்த நீதிபதி குறித்த யுவதி நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளதாக தீர்ப்பளித்துள்ளதுடன், அவர் இறப்பதற்கு முன்னர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்பதனை எதிர்வரும் 9ம் திகதி அறிக்கை மூலம் வெளிப்படுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேவேளை கொன்சலிற்றாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவருயை பெற்றோர் கூறியுள்ளதுன், அவருடைய இறப்பிற்கு இரு பாதிரியார்களே காரணம் எனவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர். இதேவேளை இன்றைய தீர்ப்பு தம்மை விரக்திக்கு உள்ளாக்கியிருப்பதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். சுப்பிரமணிய சுவாமி ஒரு ஜோக்கர்! அவர் தெரிவித்திருப்பவை அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே!- சுரேஸ் எம்.பி. 13ம் திருத்தச்சட்டத்திற்கு அப்பால் சென்று மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதாக இலங்கை அரசாங்கம் கூறியிருக்கும் நிலையில் அதனையும், 13ம் திருத்தச் சட்டத்தில் எவ்வாறான விடயங்கள் உள்ளன என்பதை ஆராயாமலும் பாரதிய ஜனதா கட்சியின் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்களே. அவருடைய கருத்துக்களை இந்திய மத்திய அரசாங்கத்தின் கருத்தாகவோ, பாரதீய ஜனதா கட்சியின் கருத்தாகவோ எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என தெரிவித்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன், சுப்பிரமணிய சுவாமியை ஒரு ஜோக்கராக இந்தியாவில் பார்க்கிறார்கள். நாங்களும் பார்க்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். (மேலும்....) குட்டிமணி தங்கத்துரை நயவஞ்சகத்தனமாக பிரபாகரன் காட்டிக்கொடுப்பு, சித்தார்த்தனின் தம்பி புராணம். கடந்த இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்ட தமிழ்கட்சித் தலைவர்களான ஆனந்தசங்கரி, செல்வம் அடைக்கலநாதன், ரெலோ வின் முக்கியஸ்தர் சிவாஜிலிங்கம் மற்றும் சித்தார்த்தன் ஆகியோரின் ஐரோப்பிய சுற்றுலாவில் தொண்டர்களின் தலைமை வழிபாடு, புலிகளின் தலைமை வழிபாட்டு வழிமுறைகட்கு சற்று மேலானதாக அமைந்திருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது. மேற்படி தொண்டர்கள் ஒருகாலத்தில் புலிகள் தலைமை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர் என்றும் பிரபாரனை சுகபோகமாளிகையில் அடைத்து வைத்து சகல சுகங்களையும் அளிப்பதன் ஊடாக போராட்டத்தை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றனர் என்றும் பல்வேறு மேடைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் கூக்குரலிட்டவர்கள். ஆனால் இன்று இவர்கள் தமது தலைவர்கட்டு சேவகம் செய்வதற்கு முட்டி மோதிக்கொள்கின்றனர். (மேலும்....)தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கு புதிய வங்கியை துவக்க திட்டம் தெற்காசிய நாடுகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்காக தெற்காசிய மேம்பாட்டு வங்கி என்ற பெயரில் புதிய வங்கியைத் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக சார்க் நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் விவாதிக்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. சமீபத்தில் பிரிக்ஸ் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் சார்பில் பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி துவங்கப் பட்டது. இந்த வங்கியைத் துவங்குவதற்கான நடவடிக்கை யில் இந்தியா முக்கிய பங்கு வகிப்பது சர்வதேச அள வில் பாராட்டைப் பெற்றுள்ளது. இதையடுத்து தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க்கில் அங்கம் வகிக்கும் இந்தியா, நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான நிதி உதவிக்காக தெற்காசிய மேம்பாட்டு நிதியம் என்ற பெயரில் புதிய வங்கியை துவக்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசி த்து வருகிறது. ஜுலை 24, 2014 அச்சுவேலி, மிருசுவிலில் புதிய முகாம் இல்லை யாழ்ப்பாணம், அச்சுவேலி மற்றும் மிருசுவில் பகுதியில் படைத்தரப்புக்காக முகாம்களை அமைப்பதற்கு ஓர் அங்குலம் கூட கைப்பற்றப்படவில்லை என்பதுடன் 1995 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட முகாம்களே அங்கிருக்கின்றன. அங்கு புதிய முகாம்கள் எதுவுமே இல்லை என்று இராணுவப்பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மைய பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய நேற்று புதன்கிழமை (23) தெரிவித்தார். அச்சுவேலி, மிருசுவில் பகுதியில் இராணுவத்தினருக்காக காணிகளை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவையாளர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. (மேலும்....) புதுப்பொலிவுடன் நாவற்குழி புகையிரத நிலையம் நாவற்குழி புகையிரத நிலைய புனரமைப்பு பணிகள் தற்போது துரித கதியில் இடம்பெற்று வருகிறது. இந்த புகையிரத நிலையத்துடன் இணைந்து சம்பத் வஙகியும் அமைக்கப்படுகிறது இதனால் ஏனைய புகையிரத நிலையத்துடன் ஒப்பிடுகையில் வித்தியசாமான முறையில் அழகு மிக்கதாக அமைக்கப்படுகிறது. இதேவேளை தண்டவாளங்கள் அமைக்கும் பணிகள் நாவற்குழி பாலம் புனரமைக்கப்படும் சிறிய பகுதியைத் தவிர யாழ் புகையிரத நிலையம் வரை அமைக்கப்பட்டு கற்கள் பரவுவதற்கு புகையிரதம் கொண்டுவரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்
மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் என சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இடம்பெற்ற கையெழுத்திடும் நிகழ்ச்சி ஆயிரத்திற்கு மேற்ப்பட்ட தமிழ், முஸ்லிம் , சிங்கள பொதுமக்கள் தமது கையொப்பங்களை பதிவு செய்து இனவாதத்திற்கும், மதவாதத்திற்குமான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். இதேவேளை ‘இனவாதத்திற்கும் மதவாதத்திற்கும் இடமிலலை என்போம் ‘ என்ற தொனிப்பொருளில் தமிழ், சிங்கள மொழிகளில் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்ப்டது. துண்டு பிரசுரத்தில் எமது நாடு இனவாத – மதவாத தீயில் சிக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் நாங்கள் உங்களை சந்திக்க வருகிறோம். 1983 ஜூலை மாதம் 23 ஆம் திகதி இன்றையதினம் 31 வருடங்களிற்கு முன்னர் அன்றைய ஆட்சியாளர்களால் நடந்த கறுப்பு ஜூலையின் பின்னர் உக்கிரமடைந்த யுத்தத்தினால் துன்பப்பட்டோம். பலர் அங்கவீனர்களாக்கப்பட்டனர், அனாதைகளாகினர், எல்லாவற்றையும் விட எமது சமூக மனச்சாட்சி, பகுத்தறிவு, மனிதநேயம் அனைத்தும் இழக்கப்பட்டது. அந்த பாரிய அழிவின் பின்னர் யுத்தம் முடிந்து விட்டது என ஆறுதலடையும் சமயத்தில் மீண்டும் இனவாத, மதவாத பொறியில் சிக்கவைக்க அழுத்கம, பேருவள பகுதிகளில் இடம்பெற்ற சம்பவங்களை நாம் கண்டோம். இந்த பொறியை நிர்மாணித்தவர்கள் ஆட்சியாளர்களே மீண்டும் யுத்தத்திற்கு பாதை அமைக்கப்படுகின்றது. அந்த பாதையில் செல்வது எந்தளவு அழிவைத் தரும் என்பதை அனுபவ வாயிலாக கண்டோம். நாங்கள் அந்த வழியில் மீண்டும் சென்று பொறியில் சிக்க வேண்டுமா? என குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த நூற்றாண்டிலும் இனி ஒரு கறுப்பு ஜுலை ஏற்படக்கூடாது“மீண்டும் ஒரு கறுப்பு ஜுலை வேண்டாம் தேசிய ஒற்றுமைக்காக கை கோர்ப்போம்” என்ற தேசிய நிகழ்வு நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்றது. 1983 கறுப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சர்களான டலஸ் அழகப்பெரும, டிலான் பெரேரா, பாராளுமன்ற அமைப்பின் ஸ்ரீ ரங்கா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும பேசுகை யில், நாட்டில் 1983 ஆம் ஆண்டில் நடைபெற்ற கறுப்பு ஜுலை போன்ற மிக கொடூரமான இன ரீதியான மோதல்கள் மீண்டும் ஒருபோதும் நடைபெறக்கூடாது. இச்சம்பவத்தில் நாம் கற்றுக்கொண்டது என்னவென்றால், இதைபோன்று கொடூரமான சம்பவங்கள் இன்னும் நூற்றாண்டு காலகட்டத்திற்கு நடைபெறக் கூடாது என்பதே. தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனங்களிடையே ஒற்றுமையை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அதில் ஒரு அங்கமாக நமது கல்விமுறை யுள்ளது. சிங்கள பிள்ளைகளுக்கு தமிழ் மொழியும் தமிழ் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியும் படிப்பிக்கப்படுகிறது. சிங்களம், தமிழ் என்பன தேசிய மொழிகளாக் கப்பட்டுள்ளன. தற்போதைய யுகம் ஒற்றுமையின் யுகமாகும். அதனால் இலங்கையில் வாழும் எல்லா இனங்களைச் சேர்ந்த மக்களும் ஒரே தாயின் பிள்ளையைப் போல வாழவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கை மீதான ஜ.நா. விசாரணையும் இந்தியாவும் ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசினால் நெறிப்படுத்தப்படும் இலங்கை அரசின் மீதான ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி விசாரணையை மேற்கொள்வதற்கென ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளையினால் நியமிக்கப்பட்ட 12 பேர் கொண்ட குழுவினரும், இதற்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்ட மூவரும், அடுத்து வரவுள்ள பத்து மாத காலப்பகுதியில்,மேற்படி விசாரணையை தொடர்வர். இந்த விசாரணைகளின் இறுதி விளைவாக அடுத்த வருடம் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது கூட்டத் தொடரில் ஒரு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதற்கு முன்னரே எதிர்வரும் செப்படெம்பரில் இடம்பெறவுள்ள 27ஆவது கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையொன்றும் சமர்ப்பிக்கப்படும். இதன் பின்னர் மேற்படி விசாரணையின் விளைவு என்னவாகும் என்பதெல்லாம் சர்வதேச சக்திகளின் திருவிளையாடல்களிலேயே தங்கியிருக்கிறது. (மேலும்....) பாஜக ஆட்சியை பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் 19 முறை தாக்குதல்நரேந்திர மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைப்பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் 19 முறை தாக்குதல் நடத்தியதாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட் டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு துணிவற்றது, பலவீனமானது என்று பிரதமர் பதவிக்கு வரும் முன் மோடி கூறிவந்தார். இப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கேட்டதற்கு பதில் அளித்து பேசும்போது பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜட்லி எல்லைக்கு அப்பாலிருந்து ஜம்மு காஷ்மீரில் ஊடுருவல் நிகழ் வது தொழில்நுட்பத்தின் உதவியாலும் போதிய படைகளை நிறுத்தி இருப் பதன் மூலமும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவு மேம்பட இரு நாடுகளின் வெளியுறவு செயலர்கள் நிலையில் சந்தித்துப் பேசுவது எனவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கிளர்ச்சியாளர் மலேஷிய விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாக தகவல்உக்ரைனில் விழுந்து நொறுங்கிய மலேஷிய ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட சடலங்களின் முதல் பகுதி அடையாளம் காண்பதற்காக நேற்று நெதர்லாந்துக்கு விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. அமெரிக்க தேசிய உளவுப்பிரிவு இயக்குனரகத்தின் மூலம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. "ரஷ்ய உதவியில் கிழக்கு உக்ரைனில் நிறுவப்பட்ட எஸ்.ஏ. 11 (ஏவுகணை) மூலம் தாக்கப்பட்டது திட்டவட்டமானதாகும்" என்று தமது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையில் அமெரிக்க உளவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். வேறு ஒரு விமானம் என்று நினைத்தே மலேஷிய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டிருப்பது நம்பகமான வட்டாரங்கள் மூலம் உறுதியாகி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மலேஷிய விமானம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப் பட்டிருப்பதாகவும் இந்த சம்பவத்துடன் ரஷ்யா வுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். யுத்த நிறுத்த முயற்சிக்கு மத்தியில் காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து 16 ஆவது தினமாக தாக்குதல்பலஸ்தீனர் உயிர்ப்பலி 653 ஆக அதிகரிப்பு இஸ்ரேல் மீது ஐ.நா. யுத்த குற்றச்சாட்டு காசாவின் பல்வேறு இலக்குகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக 16 ஆவது நாளாகவும் நேற்று புதன் கிழமையும் தாக்குதல்களை தொடர் ந்தது. இதில் காசாவில் இருக்கு ஒரே மின்சார உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யது. மறுபுறத்தில் மோதலை முடி வுக்கு கொண்டுவர தொடர்ந்தும் இராஜதந்திர முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. பலஸ்தீன அவசர சேவை வெளி யிட்ட அறிவிப்பில் நேற்றுக் காலை இடம்பெற்ற இஸ்ரேல் தாக்குதல் களில் 24 பேர் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் காசா மீது நிலம், வான் மற்றும் கடற் பகுதிகளால் இஸ்ரேல் குண்டு மழை பொழிந்தது. (மேலும்....) உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் இரு கறுப்புப் பெட்டிகள் கையளிப்பு விழுந்து நொறுங்கிய மலேஷிய விமானத்தின் தரவுகள் அடங்கிய இரு கறுப்பு பெட்டிகளையும் உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் மலேஷிய அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். கிளர்ச்சியாளர்களின் சிரேஷ்ட தலைவரான அலக்சான்டர் பொரொடய் டொனட்ஸ்க் நகரில் வைத்து ஊடகவியலாளர் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த கறுப்பு பெட்டிகளை கையளித்தார். இரு கறுப்பு பெட்டிகளும் நல்ல நிலையில் இருப்பதாக மலேஷிய தேசிய பாதுகாப்பு கவுன்ஸிலைச் சேர்ந்த கொலனல் மொஹம்மத் சக்ரி ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார். மலேஷிய விமானம் விழுந்த 10 கிலோ மீற்றர் பகுதிக்குள் சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி அளிக்கும் வகையில் கிளர்ச்சியாளர்கள் யுத்த நிறுத்தம் ஒன்றை அறிவித்துள்ளனர். விமானி அறையில் குரல் பதிவுகளும் இடம்பெற்றிருக்கும் இதன் மூலம் விபத்துக்கான காரணம் பற்றிய துப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன. ரஷ்யாவினால் விளர்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஏவுகணை மூலம் எம். எச். 17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக மேற்குலக நாடுகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த சம்பவம் தொடர்பில் உக்ரைன் அரச படை மீது ரஷ்ய தரப்பு குற்றம் சுமத்துகிறது. இதேவேளை மலேஷிய விமானம் விழுவதற்கு முன் அந்த விமானத்திற்கு ஒருசில கிலோ மீற்றர் அருகில் உக்ரைன் யுத்த விமானம் பறந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. “யுத்த விமானம் ஒன்று பயணிகள் விமானத்துடன் (ஒரே சிவில் விமானப் போக்குவரத்துப் பாதை) ஒரே நேரத்தில் ஒரே உயரத்தில் ஏன் பறக்க வேண்டும் என்று எமக்கு தெரிய வேண்டும்” என்று ரஷ்ய லுதினன்ட் ஜெனரல் அன்ரை கார்டோபோலோவ் கேள்வி எழுப்பியுள்ளார். காசாவெங்கும் இஸ்ரேல் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்: 600க்கும் அதிகமான பலஸ்தீனர் பலிஇஸ்ரேல் யுத்த விமானங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் காசாவில் ஐந்து பள்ளிவாசல்கள், ஒரு கால்பந்து மைதானம் மற்றும் காலஞ்சென்ற ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவர் வீடு உட்பட 70க்கும் அதிகமான இலக்குகள் மீது புதிததாக தாக்குதல் நடத்தியுள்ளது. பதினைந்தாவது நாளாக இஸ்ரேல் நேற்று செவ்வாய்க்கிழமை காசா மீது நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 604 ஆக உயர்ந்துள்ளது. 3700 பேர் காயமடைந்துள்ளனர். அதிலும் அதிக பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர். பெரும்பாலான பெண்கள், சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் காசா மீது நேற்றைய தினமும் இஸ்ரேல் துருப்புகள் தொடர்ந்து சரமாரியாக பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. குறிப்பாக காசாவின் கிழக்கு எல்லை பகுதியில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. காசா எல்லையில் இருந்து 700 முதல் 800 மீற்றர் தொலைவில் நிலை நிறுத்தப்பட்டிருக்கும் இஸ்ரேல் யுத்த டாங்கிகள் தொடர்ந்து எல்லையை நெருங்கி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. காணாமல்போன ஐங்கரநேசன் கண்டுகொள்ளப்பட்ட துரைஇரத்தினம்புலிசார்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவராக சுரேஷ் பிரேமச்சந்திரன் உப தலைவராக இரா.துரைரத்தினம் செயலாளராக சிவசக்திஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் ( ஈ.பி.ஆர்.எல்.எவ்) தேசிய மகாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மகாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராசா, ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நவசமசமாஜக்கட்சி தலைவர் விக்ரமபாகு கருணாரத்னா, வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், உட்பட ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர்களும் கலந்து கொண்டனர்.ஈ.பி.ஆல்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் இம்மகாநாடு நடைபெற்றது. புதிய மத்திய குழு மீண்டும் சுரேஷ்.க.பிறேமச்சந்திரன் அவர்களை பலத்த கரகோசத்துடன் ஏக கட்சியின் தலைவராக மனதாக தெரிவு செய்தனர். புதிய தலைவர் 9 பேர் கொண்ட அரசியற் பீடத்திற்கு 7 உறுப்பினர்களை தெரிவு செய்ததுடன் எஞ்சிய இருவரையும் அடுத்த மத்திய குழு கூட்டத்தில் தெரிவு செய்து அறிவிப்பதாக தெரிவித்தார். உப தலைவராக மட்டகளப்பு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், செயலாளராக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், துனைச் செயலாளராக வடக்கு மாகாணசபை உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் பொருளாளராக மன்னார் நகர சபை உறுப்பினர் இரத்தினசிங்கம் (குமரேஸ்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு மகாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் மாலை 5.30 மணியளவில் மகாநாடு இனிதே நிறைவு பெற்றது. நிறைவேற்று அதிகாரமிக்க ஆட்சிமுறை ஒழித்துக்கட்டப்பட வேண்டும்இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த இடதுசாரி தலைவர்களில் ஒருவரும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் அமைச்சர் டியூ குணசேகர கொழும்பில் நேற்று(21-07-2014) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் மிகுந்த அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்ற குரல் அண்மைக்காலமாக ஆளுங்கட்சி மற்றும் எதிரணி பிரமுகர்களிடமிருந்து ஒலித்து வருகின்றது. ‘இடதுசாரித் தலைவர் டாக்டர் என்.எம். பெரேரா மரணப் படுக்கையில் இருந்துகொண்டு அன்று வெளிப்படுத்திய விமர்சனக் கருத்துக்கள் எல்லாம் இன்று உண்மையில் நிரூபணமாகியுள்ளன என்றார் அமைச்சர் டியூ குணசேகர. இந்த நிறைவேற்ற அதிகார முறைமையினால் அரசாங்கத்தின் நிறைவேற்றுத்துறைக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் ஏற்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள,; அமைச்சர்கள் தரம் தாழ்ந்துபோவார்கள். அரசியல் கலாசாரம் மாறிப்போகும். இவை எல்லாவற்றையும் அவர் அன்றே எதிர்வு கூறியிருந்தார் என்றாh.; இலங்கையில் தற்போது ஜனாதிபதி ஆட்சி முறையை வைத்திருக்க வேண்டும் என்று எந்தவொரு அரசியல் கட்சியும் கோரவில்லை என்றும் அவர் தெரிவித்தார், இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறையை கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியும் இன்று நிறைவேற்று அதிகார முறைமையினை நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கின்றது. இந்த ஜனாதிபதி முறையை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் 3 இல் 2 அல்லது 6 இல் 5 பலத்தைக் கூட பெற்றுக்கொள்ள முடியும். அரசியலமைப்பில் ஒரு சிறிய திருத்தம் போதும் இதனை மாற்றுவதற்கு’ என்றும் கூறிய் டியூ குணசேகரா ‘ஆட்சி அதிகாரம் தனியொரு மனிதரின் கையில் இருக்கக்கூடாது.. நாடாளுமன்றத்திடமே இருக்க வேண்டும் என்றார். ஜுலை 22, 2014 எனது காணியில் இராணுவத்தினர் வசந்தமாளிகை கட்டியுள்ளனர்' எனது காணியில் இராணுவத்தினர் வசந்த மாளிகை கட்டி குடியேறுவார்கள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என இராணுவத்தின் 52ஆவது படைப்பிரிவு அமைந்துள்ள ஆசைப்பிள்ளையேற்றப் பகுதியிலுள்ள 50 ஏக்கர் காணியின் உரிமையாளர் தம்பிராசா மகேஸ்வரி இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார். யாழ்., மிருசுவில் ஆசைப்பிள்ளையேற்றத்திற்கு அருகில் படைமுகாம் அமைந்துள்ள 50 ஏக்கர் காணியினை சுவீகரிப்பதற்காக அதனை அளவீடு செய்யும் பணிகள் நிலஅளவையாளர் திணைக்களத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை (22) முன்னெடுக்கப்பட இருந்தது. இதனை, மகேஸ்வரியும், அவரது உறவினர்களும் இணைந்து போராட்டம் நடத்தித் தடுத்து நிறுத்தியுள்ளனர். கடந்த 2000ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாம் இடம்பெயர்ந்த பின்னர் மீண்டும் எமது ஊருக்கு திரும்பிய போது எமது காணியின் சிறு பகுதியில் சிறிய இராணுவ முகாம் அமைந்திருந்தது.இராணுவ முகாம் அமைந்திருந்தமையால் அக்காணியை நாம் பராமரிக்காமல் விட்டு விட்டோம். யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு இராணுவம் முகாம் அமைந்துள்ள காணியை விட்டு மிகுதியாக உள்ள காணிகளை துப்பரவு செய்யும் பணிகளை மேற்கொண்டோம். கடந்த 2012ஆம் ஆண்டளவில் எம்மை யாழ்.பெருமாள் கோவிலுக்கு அருகிலுள்ள இடத்திற்கு இராணுவத்தினர் அழைத்து காணி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் பின்னர் சிங்களத்தில் எழுதிய கடிதமொன்றில் கையெழுத்து ஒன்றினை வாங்கிவிட்டு எம்மைத் திருப்பி அனுப்பினார்கள். இச்சம்பவம் நடைபெற்று ஒரு சில மாதங்களின் பின்னர், எமது காணியில் பாரிய இராணுவ முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இன்று எனது காணியில் சுமார் 40 ஏக்கரில் பாரிய இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.ஈழத்திலும்....... இஸ்ரேலிலும்....? இன்று இஸ்ரேலில், நாசரேத் நகரில் வாழும் அரபு பேசும் இஸ்ரேலிய பிரஜைகள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். சுமார் 3000 பேரளவில், பாலஸ்தீன கொடிகளுடன் "இஸ்ரேலிய இராணுவம் காஸாவில் இனப்படுகொலை செய்கின்றது..." என்று கோஷம் எழுப்பியவாறு ஊர்வலாமாக சென்றனர். அங்கு வந்த இஸ்ரேலிய படையினர், ஊர்வலத்தை மேற்கொண்டு செல்ல விடாது கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசிக் கலைத்தனர். இருபது பேரைக் கைது செய்து கொண்டு சென்றனர். விவிலிய நூலில் குறிப்பிடப் படும், இயேசு கிறிஸ்து வளர்ந்த இடமான நாசரேத்தில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் கிறிஸ்தவர்கள். அந்தப் பாலஸ்தீனிய அரேபியர்கள், இஸ்ரேலியக் குடியுரிமை பெற்றவர்கள் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. பாலஸ்தீன பிரச்சினையில் நடக்கும் பல சம்பவங்கள், ஈழத்திலும் நடந்துள்ளன. சிங்கள இராணுவம் வன்னியில் தமிழ் மக்களை படுகொலை செய்த காலங்களில், யாழ்ப்பாணத்திலோ அல்லது கொழும்பிலோ வாழ்ந்த தமிழர்கள் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருக்கவில்லை. அது குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாத "போலித் தமிழ் இன உணர்வாளர்கள்", சிங்கள, முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை என்பதை மட்டும் பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்கிழக்கு இலங்கையின் சிற்றூர் ஒன்றில் 1982-ல் பிறந்த ஸர்மிளா ஸெய்யித் ‘சிறகு முளைந்த பெண்’ என்ற கவிதைத் தொகுப்பு ஊடாக நவீன தமிழ் இலக்கியப் பரப்பில் தனது தடத்தைப் பதித்தவர். தொடர்சியாக, புனைவுப் பிரதிகளை மட்டுமல்லாமல் அ-புனைவுப் பிரதிகளையும் அவர் முனைப்புடன் எழுதிக்கொண்டிருக்கிறார். முப்பதாண்டு கால ஈழப் போருக்குப் பின்னான காலத்தில், போரின் காயங்களோடும் வடுக்களோடு அலைந்துறும் மாந்தர்களையும் இலங்கையின் இனத்துவப் பிரச்சினைப்பாடுகளையும் மையமாக வைத்து ஸர்மிளா ஸெய்யித் எழுதிய நாவலான ‘உம்மத்’ இந்த வருடத்தின் தொடக்கத்தில் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. சமகால அரசியற் பிரச்சினைகளிற்குள் சிக்கிக்கொள்ளாமல் லாவகமாக நழுவப் பார்க்கும் அல்லது வலுவான காற்றடிக்கும் பக்கமாகச் சாயும் எழுத்துச் சந்தர்ப்பவாதியல்ல ஸர்மிளா ஸெய்யித். அரசியல் - மதம் - கலாசாரம் - உடல் என அனைத்தின்மீதும் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கும் ஸர்மிளா ஸெய்யித் ‘என்மீதான தடைகளையும் அடக்குமுறைகளையும் என் கேள்விகளால் நான் மீறினேன்’ என்கிறார். (மேலும்....) சீமான் புரட்சிக்காரன் என்றால் நாய்சேகரும் புரட்சிக்காரனே !
ஜுலை 21, 2014 தலைவனின் மரணம் கொடுத்த வாழ்வில் செல்வம் அடைகலநாதன் ஜேர்மனியின் டோட்முன் நகரில் யூலை 12இல் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவுக் கூட்டத்திற்கு வந்திருந்த செல்வம் அடைக்கலநாதன் வந்திருந்தார். ரெலோ இயக்கம் இனி இருந்தால்தான் என்ன இல்லாவிட்டால்தான் என்ன அடைக்கலத்தாருக்கு எந்தவித பாதிப்புமில்லை. அப்பா அம்மாவைத்தவிர ஏனைய குடும்ப அங்கத்தவர்கள் எல்லோரையும் ஐரோப்பாவில் அகதிகளாக குடியமர்த்திவிட்டார். காலாகாலமாக இந்தியாவில் ரெலோ தலைவர் சிறியண்ணாவால் சேர்த்துவைக்கப்பட்ட சொத்துக்களையெல்லாம் விற்று தனது மனைவியின் மகன் பெயரில் ஜேர்மனியில் கைஸர்ஸ்லௌட்டன் என்ற இடத்தில், “ப்ரிமாவெறா” என்ற பெயரில் ஒரு மெக்சிகன் உணவகமும் இம்மாதம் 11ம் திகதி திறந்துள்ளார். ரெலோ தனித்து இயங்கினாலென்ன கூட்டமைப்போடு சேர்ந்தாலென்ன, இவருக்குள்ள ஒரே குறை “அடைக்கலத்தாருக்கு ஐரோப்பாவில் அடைக்கலம்” எப்படி எடுப்பது என்பது மட்டுமே. இயக்கப்போராளிகளின் குடும்பங்களின் விபரங்களே தெரியாதவருக்கு வன்னி மக்களின் விபரங்களும் கஸ்டங்களும் எப்படி தெரியும். இவர் 1983ன் ஜூலைக்கலவரத்தில் உயுரிழந்த ரெலொப்போராளிகளுக்கு அஞலி செய்யவந்தாரா அல்லது ஒரு லெட்சம் யுறோவில் ஆர்ம்பித்த தமது குடும்ப ரெஸ்ரோறென்டின் திறப்பு விழாவுக்கு வந்தாரா என்பதற்கு இவர்தான் பதில் சொல்ல வேண்டும்.- “வன்னி மக்கள் வாடுகின்றார் அங்கு கண்ணீரில், வன்னி எம்.பி. ஆடுகின்றார் இங்கு தண்ணீரில்” காலம் பதில் சொல்லும்வரை கத்திருப்போம். வடமாகாண சபை எனது கனவு - டக்ளஸ்வடமாகாணசபை என்னுடைய கனவு. அது என்னுடைய கைகளுக்கு கிடைத்திருந்தால் மூன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் செல்வம் கொழிக்கும் மாவட்டங்களாக வடமாகாணத்திலுள்ள மாவட்டங்களை மாற்றியிருப்பேன். ஆனால் துரதிஷ்டவசமாக எனது கைகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது என்று பாராம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) தெரிவித்தார். 'எமது மக்களுக்காகத் தான் நான் அரசியலில் அங்கம் வகிக்கின்றேன். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் தான் நான் மக்களை பாதுகாக்கவோ மக்களுக்கு உதவவோ வழிகாட்டவோ முடிகிறது' என்றார். 'என்னுடைய தனிப்பட்ட விருப்பங்களுக்காக மக்களை அடகு வைக்க முடியாது. என்றும் மக்களுக்கு உதவ வேண்டுமென்றால் நான் அரசாங்கத்தில் இருக்க வேண்டும். அதிகாரத்தைக் கொண்டுதான் மக்களின் பிரச்சினைகளை, நியாயமான கோரிக்கைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும்' என்று சுட்டிக்காட்டினார்.பெண்களுக்கிடையில் மோதல்: ஐவர் வைத்தியசாலையில்புன்னாலைக் கட்டுவன் மாத்தளோடையைச் சேர்ந்த இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஐந்து பெண்கள் படுகாயமடைந்து தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஞாயிற்றுக்கிழமை (20) மாலை அனுமதிக்கப்பட்டள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். மகாலிங்கம் செல்வராணி (வயது 57), மகாலிங்கம் பகிந்தா (வயது 30), சசிதரன் ஆனந்தி (வயது 41), குமரேசன் ஜெனித்தா (வயது 30), மற்றும் சின்னராசா ஞானேஸ்வரி (வயது 60) ஆகியோரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் அவ்வூரைச் சேர்ந்த பெண்ணொருவரைக் காதலித்து பெண்ணைத் தூக்கிச் சென்றமை தொடர்பில் இரு பெண்கள் குழுக்களுக்கிடையில் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே இவ்வாறு கைகலப்பாக மாறியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன. கிழக்கு காசா மீது சரமாரி தாக்குதல்மீட்க முடியாத நிலையில் வீதிகளில் உடல்கள்பலஸ்தீனர்களின் உயிர்ப்பலி 400ஐ எட்டுகிறது
காசாவில் ஹமாஸ் மீதான தரைவழி இராணுவ நடவடிக்கை மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. கடந்த 13 தினங்க ளாக இடம்பெறும் மோதலில் தற்போது இஸ்ரேலின் மோசமான n'ல் தாக் குதலுக்கு முகம்கொடுத்து வருவதாக காசா குடியிருப்பாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். இஸ்ரேல் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், காசாவில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் மேலதிக படையினர் இணைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதில் இஸ்ரேல் படையெடுப்பில் கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் நேற்றைய தினம்வரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் 40க்கும் அதிக மான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் இன்னும் பல உடல்கள் மீட்கப்படாத நிலையில் பலி எண்ணிக்கை மேலும் பல மடங்காக அதிகரிக் கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடத்தும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்களின் எண் ணிக்கை 397 ஆக அதிகரித்திருப்பதோடு 3000க்கும் அதிகமானவர்கள் காய மடைந்துள்ளனர். (மேலும்....) ISIS Leader Abu Bakr Al Baghdadi Trained by Israeli Mossad, NSA Documents Reveal The former employee at US National Security Agency (NSA), Edward Snowden, has revealed that the British and American intelligence and the Mossad worked together to create the Islamic State of Iraq and Syria (ISIS). Snowden said intelligence services of three countries created a terrorist organisation that is able to attract all extremists of the world to one place, using a strategy called “the hornet’s nest”. NSA documents refer to recent implementation of the hornet’s nest to protect the Zionist entity by creating religious and Islamic slogans. According to documents released by Snowden, “The only solution for the protection of the Jewish state “is to create an enemy near its borders”. Leaks revealed that ISIS leader and cleric Abu Bakr Al Baghdadi took intensive military training for a whole year in the hands of Mossad, besides courses in theology and the art of speech.
ஜுலை 20, 2014 ஆடிக்கலவரம், ஆடி முடிந்து முப்பத்தொரு வருடங்களாகி விட்டது ஆடிக்கலவரம், அது இடம்பெற்றது நேற்றுப் போல இருப்பினும் எதிர்வரும் புதன்கிழமையுடன் முப்பத்தொரு வருடங்கள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் தாக்கம் தமிழர் மனங்களிலிருந்து இன்னமும் அகலவில்லை. இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த தினங்களாக 1983 ஜுலை இனக்கலவரம் அமைந்து விட்டது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தின் உச்ச நிலையைப் பயன்படுத்தி அன்றைய ஆட்சியாளர்களின் அனுசர ணையுடன் நடந்தேறிய ஓர் இனச் சுத்திகரிப்புச் செயற்பாடாகவே தமிழ் மக்கள் இந்த ஆடிக் கலவரத்தை பார்க்கின்றனர். தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக அமைந்துள்ள அந்த நாட்களின் வலிகளை எண்ணிப் பார்க்கவும் முடியாதுள்ளது. தமிழரின் உடைமைகளுக்கு மட்டுமல்ல உயிர்களுக்கும் தீவைத்துக் கொளுத்தி மகிழ்ந்த கலகக்காரர்களுக்கு பாதுகாப்பாக இருக்குமாறு படையினருக்குப் பணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியாளர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. என்றாலும் அன்று இக்கைங்கரியத்தைக் கண்டும் காணாதது போலிருந்த சிலர் அதே கொடூர விஷத்துடன் இன்றும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். (மேலும்....) நேரடிப் பேச்சுக்கு அரசு - TNA தயார் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அரசாங்கமும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் தெரிவித்திருப்பதை தமிழ் மக்கள் மற்றும் புத்திஜீவிகள் வரவேற்றுள்ளனர். கடந்த காலங்கள் போலல்லாது இத்தடவை இருதரப்பும் இதய சுத்தியுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு காலத்தைக் கடத்தாது அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதோர் தீர்வினை விரைவாகக் காண வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித் துள்ளனர். இருதரப்பும் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதால் பேச்சுவார்த்தைக்கான இடம், திகதி என்பன விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தீர்வு காண பாராளுமன்றத் தெரிவுக் குழுவே எமது முதற் தெரிவாக இருப்பினும் தீர்வினை விரைவாகக் காண வேண்டு மென்பதில் ஏற்பட்டுள்ள ஆர்வம் காரணமாக தமிழ்க் கூட்டமைப்புடன் நேரடியாகப் பேசவும் நாம் தயாராகவே உள்ளோம் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். தமிழ்க் கூட்டமைப்புடன் இதற்கு முன்னர் அரசாங்கம் நடத்திய சுமார் ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் போதும் நாம் விலகிக் கொள்ளவில்லை, மாறாக தமிழ்க் கூட்டமைப்பே ஏதேதோ காரணங்களைக் கூறித் தாமாகவே விலகிக் கொண்டு ஊடகங்களில் தமக்குச் சார்பாக அறிக்கைகள் விட்டன எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இதேவேளை நேரடிப் பேச்சுக்கு தாமும் தயாரென தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவித்தார். இஸ்ரேலிக் கொலைகளுக்கு கண்டனம்,பாலஸ்தீனமக்களுக்கு ஆதரவு எனது சொல்லை யார் கேட்கிறார்கள்? - ஆனந்தசங்கரிதனிநாட்டு பிரிவினைவாதக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு அரசாங்கத்துடன் பேசி பிரச்சினையை சமரசமாகத் தீர்த்து வையுங்கள். இதை நான் கடந்த 15 வருடமாகக் கூறி வருகிறேன். எனது சொல்லை யார் கேட்கிறார்கள். இதை அன்றே கெளரவமாகச் செய்திருந்தால் இன்று நீதிமன்றம் சென்று சத்தியக்கடதாசி வழங்கி ஐயோ நாங்கள் தனி நாடு கேட்க வில்லை என்று கூற வேண்டிய தேவை இருந்திருக்காதே. அனுபவப்பட்ட பின்னர் கூட எனது கருத்தைக் கேட்பதில் தமிழ்க் கூட்டமைப்பினருக்குக் கசப்பாகவே உள்ளது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தவைர் வி. ஆனந்தசங்கரி தெரி வித்தார். எது எப்படியிருப்பினும் இனியாவது உண்மையான இதயசுத்தியுடன் அரசுடன் பேசி தமிழர் பிரச்சினை தீர வழிசெய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். கறுப்பு ஜுலைகறைபடிந்த அந்த மூன்று நாட்கள்
கறுப்பு ஜுலை ஆடிகலவரம் இடம்பெற்று எதிர்வரும் புதன்கிழமையுடன் முப்பத்தொரு வருடங்களாகின்றன. இலங்கை தமிழ் மக்களின் வரலாற்றில் என்றென்றைக்கும் மறக்க முடியாத கறைபடிந்த வரலாற்று பக்கமாக 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அமைந்து விட்டது. தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கை எங்கும் தொடர்ந்து மூன்று தினங்களுக்கும் மேலாக தமிழ் மக்களது உயிர்களும், உடைமைகளும் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்டு தீப்பற்றி எரிந்தன. நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் வீதிகளில் உயிருடன் போட்டு எரிக்கப்பட்டார்கள். தமிழர்களின் சொத்துக்கள் பெருமளவில் கொள்ளையிட்டு எரிக்கப்பட்டும் ஏனையவை எரித்தும் நாசமாக்கப்பட்டன. தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் முதலாவது நிலக்கண்ணிவெடித் தாக்குதல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் 1983 ஜுலை 21ம் திகதி இடம்பெற்றது. இந்த தாக்குதலில் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட மாத்தயா, கிட்டு, அருணா, சார்ள்ஸ் அன்ரனி உட்பட பலர் பங்குபற்றிய போதும் இந்த தாக்குதலுக்கு செல்லக்கிளி தலைமை வகித்ததாகக் கூறப்படுகிறது. (மேலும்....) நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்கு கைவந்த கலை: சி.வி.விக்னேஸ்வரன் சுற்றில் இருப்போர் மனங்குளிர ஒன்றைக் கூறுவது பின்னர் அதற்கு நேர்மாறாக நடப்பது ஜனாதிபதிக்குக் கைவந்த கலையாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனக்குத் தருகிறேன் என்று ஜனவரி 2ஆம் திகதி கூறியவற்றில் ஒன்றை, அதாவது பிரதம செயலாளரை உடனே மாற்றுகின்றேன் என்பதை, தொடர்ந்து ஜனவரி 19ஆம் திகதி வரையில் அதாவது தெல்லிப்பளை புற்றுநோய்க் கட்டிடத் திறப்பு விழா மட்டும் இந்தா தருகின்றேன், அந்தா தருகின்றேன் என்று கூறியிருந்தார்.கூட்டம் முடிந்ததும் நொண்டிச் சாட்டொன்றைக் கூறி முடியாமைக்கு வருந்துகிறேன் என்றார். அதாவது எங்கள் பிரதம செயலாளரை மாற்றினால் அவரின் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும். ஆகவே உடனே அதைச் செய்ய முடியாது என்றார்.நாங்கள் மாற்றார் கையை நம்பி இராமல் எம்கையே எமக்குதவி என்றவாறு எமது காரியங்களைச் சாதித்துச் செல்வதே இன்றைய காலகட்டத்தில் உசிதமென எமக்குத் தெரிகின்றது. (மேலும்....) ஜுலை 19, 2014
தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான்
தாக்குதல்களையும் மலேசியாவில் கைதான குசாந்தனே மேற்கொண்டுள்ளார் தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் அண்மையில் மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்ட குசாந்தன் என்ற புலி உறுப்பினரே மேற்கொண்டுள்ளார் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கொழும்பு, கட்டுநாயக்க, கொலன்னாவ, கெரவலபிட்டிய மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட வான் தாக்குதல்களை குசாந்தன் வழி நடத்தியுள்ளார். பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2007ம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையின் இரண்டாம் நிலைத் தலைவராக தம்மை, பிரபாகரன் நியமித்தார் என விசாரணைகளின் போது குசாந்தன் தெரிவித்துள்ளார். புலிகளுக்காக விமானங்களைக் கொள்வனவு செய்து பங்களாதேஷ் ஊடாக இந்தோனேசியாவிற்கு எடுத்துச் சென்று அங்கிருந்து அவற்றை முல்லைத்தீவிற்கு எடுத்துச் சென்ற விபரங்களை குசாந்தன் வெளியிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் சகல வான் தாக்குதல்களையும் குசாந்தனே வழிநடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் குசாந்தன் உள்ளிட்ட மூன்று தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டதாக பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். தோழர் வரதராஜபெருமாளுடன் நேர்காணல்... Thanthi TV Exclusive Interview With Varadaraja Perumal Former Chief Minister of North Eastern Province, Sri Lanka (to watch vedio....)
வெற்றிகரமாக நிறைவேறிய சமவுரிமை மாநாடு
சமவுரிமை இயக்கம் இனவாதம், மதவாதம், சாதியம் (குலவாதம்) போன்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து மாநாடொன்றை இன்று (15-07-2014) கொழும்பில் நடாத்தியது.கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடைபெற்ற இம் மாநாட்டில், நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் இடதுசாரிக்கட்சிகளின் பிரதிநிதிகள், புத்திசீவிகள், கல்வியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் களப்பணியாற்றும் தோழர்களும் பங்குகொண்டனர். மாநாடு நடைபெற்ற கொழும்பு பொதுநூலக வளாகம் முழுவதும் இன, மத வாதத்துக்கு எதிரான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் நாட்டின் முக்கிய நகரங்களின் நடத்தப்பட்ட "மீண்டுமொரு கறுப்பு ஜூலை வேண்டாம்" என்ற பதாதையில் மக்கள் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எதிராகக் கையெழுத்திட்டிருந்தனர். அப்பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. (மேலும்....)
உணவே மருந்து முருங்கை பூ உடல்நல நன்மைகள்
சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர். முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.கண்களைப் பாதுகாக்க முருங்கை பூக்கள்பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.(மேலும்....) மக்களோடு மக்களாய் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர்
இறால் நண்டு பிடிக்கும் கும்புறுபிட்டி
சின்ன கராச்சி வெட்டை பறிபோகும் அபாயம். ஜுலை 18, 2014
மக்களோடு மக்களாய் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர்
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கருதி சாரதி அனுமதி பத்திரம் எடுப்பற்காக E.P.R.L.F பத்மநாபா கட்சியின் அமைப்பாளர் சத்தியனின் சொந்த நிதி வழங்களின் கீழ் 3ம் கட்டை சோலையடியை சேர்ந்த ரெக்றோன் என்பவருக்கும் அடம்போடை நிலாவெளியை சேர்ந்த தீபன் என்பவருக்கும் சாரதி அனுமதி பத்திரம் 17/07/2014 இன்று E.P.R.L.F பத்மநாபா காரியாலய வளாகத்தினுள் வைத்து வழங்கப்பட்டது. இசைப்பிரியாவின் கொலைக்கு அப்பால்......? இசைப்பிரியா கொல்லப்பட்ட பின் இசைப்பிரியா ஒரு ஊடகவியலாளர்..நிருபர் என்றெல்லாம் சொல்கிறார்கள். தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரை ஊடகவியலாளர் என்று அழைப்பதில்லை. Tv Anchor என்பதற்கும் Journalist ற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. இசைப்பிரியா ஒரு புலி என்பதனை மறைக்கிறார்கள். இசைப்பிரியா நிருபராகச் சித்தரிப்பதில் எந்த உண்மையும் இல்லை .இசைப்பிரியாவின் குடும்பத்தினர் தப்பிவிட்டார்கள், தமிழினி உட்பட பல பெண்புலிகள் இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துவிட்டார்கள். இராணூவத்திலும் இணைந்திருக்கிறார்கள். ஆனால் இசைப்பிரியா நந்திகடல் சேற்றிற்குள் இராணுவ உடையுடன் ஏன் சென்றார்? இசைப்பிரியா இராணூவத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போதுதான் பிடிக்கப்பட்டார் என்பதுதான் உண்மை. த.தே.கூ, வடமாகாண சபைக்கு எதிராக துண்டுப்பிரசுரம் வடமாகாண சபைக்கு எதிராக யாழ்.மாவட்டத்தில் பல இடங்களிலும் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன. 'எங்கள் இனத்தினைக் கொன்று குவித்த மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவினை ஜனாதிபதியாக வருவதற்கு ஆதரித்த கூட்டமைப்பு ஓய்வுநிலை இராணுவ அதிகாரியை மீளவும் ஆளுநராக்கியதை எதிர்க்க என்ன அருகதை இருக்கின்றது' என்ற தொனிப் பொருளில் அந்தத் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளது. இருந்தும், குறித்த துண்டுப்பிரசுரம் யாரால் ஒட்டப்பட்டமை தொடர்பில் உரிமை கோரப்பட்டிருக்கவில்லை. 'குறை காண்பதை நிறுத்து. முடியாவிட்டால் இராஜினாமா செய்!' என்ற முடிவுரையுடன் குறித்த துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர் சனத்தொகை வீழ்ச்சியால் பாரிய சவால்கள் எழுந்துள்ளன - சி.வி நாட்டில் ஏற்பட்டுள்ள தமிழ் மக்களின் சனத்தொகை வீழ்ச்சியால், தமிழ் மக்கள் அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்' என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இலங்கையில், முதன்முறையாக 1881ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அவ்வாண்டு மொத்த சனத்தொகையில், 31.8 சதவீதமான மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள், இலங்கைத் தமிழர்கள் காணப்பட்டனர். இலங்கைத் தமிழர் மட்டும் எனப் பார்த்தால் அது 24.9 சதவீதமாக காணப்பட்டது. இலங்கையின் வருடாந்த சராசரி சனத்தொகை அதிகரிப்பு வீதம் ஏறக்குறைய ஒரு சதவீதம் எனக் கூறப்படுகிறது. ஆயினும் எமது இனத்தைப் பொறுத்த வரை அதிகரிப்பிற்குப் பதிலாக வீழ்ச்சியையே புள்ளி விபரத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பின் படி 24.6 வீதமான அளவிலேயே முழுத் தமிழ்ப் பேசும் மக்களது தொகை காணப்பட்டது. அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் பேசும் மாவட்டங்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் மறைப் பெறுமானமாக கணிப்பிடப்பட்டிருப்பதை புள்ளிவிபரத் திணைக்களம் பதிவு செய்துள்ளது. அதாவது முன்னர் இருந்ததை விடவும் 2011ஆம் ஆண்டு குறைவான அளவிலேயே சனத்தொகை பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. 2011ஆம் ஆண்டு குடிசனத்தொகை மதிப்பீட்டில் ஏறக்குறைய 20 மில்லியனைக் கொண்ட இலங்கைத் தீவின் வடபுலத்தில் 10 இலட்சத்து 60 ஆயிரத்து 23பேர் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. வழமையான ஆண்டிற்குரிய வளர்ச்சி வீதத்துடன் ஒப்பிடும் பொழுது வடபுலத்தில் 1,500,000க்கு மேற்பட்ட தமிழர் இருந்திருக்க வேண்டும். தரையிறக்கப்படவில்லை தரை மட்டம் ஆக்கப்பட்டது எம்எச்17இல் பயணித்த 298பேரும் உயிரிழந்தனர் நேற்றைய தினம் விபத்துக்குள்ளான மலேசியன் எயார்லைனுக்கு சொந்தமான எம்எச்17 விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் நடத்தி வீழ்த்தப்பட்ட எம்எச்17 மலேசிய விமானத்தில் இருந்து எந்த ஓர் அபாய அழைப்புகளும் வரவில்லை என்பதை மலேசிய பிரதமர் நஜிப் உறுதிப்படுத்தினார். அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பால் நிர்ணயம் செய்யப்பட்ட பாதுகாப்பான பாதையில் தான் விமானம் பயணித்துள்ளது என்றும் நஜிப் குறிப்பிட்டார். உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் விமானம் வீழ்த்தப்பட்டிருந்தால், இதற்கு சரியான நீதி கிடைக்க வேண்டும் என்றும் இன்று அதிகாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நஜிப் தெரிவித்தார். இதனிடையே, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் எம்எச்17இல் பயணம் செய்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 154 டச்சு பயணிகள், 43 மலேசியர்கள் (15 விமானப் பணியாளர்கள் உட்பட), 27 அவுஸ்திரேலியர்கள், 12 இந்தோனேசியர்கள், 9 பிரிட்டன், 4 ஜேர்மன், 4 பெல்ஜியன், 3 பிலிப்பைன்ஸ் மற்றும் 1 கனடா நாட்டு குடிமக்கள் பயணம் செய்துள்ளனர். மேலும் 41 பேர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். மொத்தம் 298 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகின்றது. குழப்ப நிலையை தோற்றுவித்து குளிர்காய முனையும் விஷமிகளை மக்கள் நிராகரிப்பர் - கிழக்கு மாகாண முதலமைச்சர்குழப்ப நிலையைத் தோற்றுவித்து அதில் குளிர்காய நினைக்கும் சதி முயற்சி யாளர்கள் வெற்றிபெறப் போவதில்லை இதற்கு எமது ஜனாதிபதியும் அனுமதிக்கப் போவதில்லை. ஒருசில பெளத்த துறவிகள் அமைதிக்குப் பங்கம் ஏற்படும் விதத்தில் நடந்து கொள்வது பெரும் கவலையளிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் மாகாண சபையின் 30 ஆவது மாதாந்த கூட்டத்தொடரின் விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது. 1430 ஆண்டுகளுக்கு முன்பு காட்டரபிகளாக இருந்த அரேபியர்களை உலகம் போற்றும் உத்தமர்களாகவும் உலகுக்கே வழிகாட்டிகளா கவும் மாற்றி நெறிப்படுத்தியது புனித அல்குர்ஆன் ஆகும். இப்புனித நூலை நிந்திக்கின்ற விதத்தில் ஞானதேரர் பகிரங்கமாக கருத்து தெரிவிப்பது முஸ்லிம்களின் மனதை புண்படுத்துகிறது. 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்நாட்டு மன்னர்களுக்கு முஸ்லிம்கள் விசுவாசிகளாக வைத்தியர்களாக ஆலோசகர்களாக நாட்டுப் பற்றுடையவர்களாக வாழ்ந் திருக்கிறார்கள். இஸ்லாம் அமைதியையும், சாத் வீகத்தைப் போதிக்கும் மார்க்கமாகும். அளுத்கம, பேருவளை சம்பவமானது தற்காலிக அசம்பாவிதங்களே. பயங்கரவாதத்தால் எனது தந்தையை இழந்தவன் நான். இனிமேலும் இவ்வாறான கொடூர யுத்தம் வரக் கூடாது. பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்கு புதிய வங்கி: இந்தியாவிற்கு கிடைத்த வெற்றிபிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக புதிய வளர்ச்சி வங்கி என்ற பெயரில் புதிய வங்கி ஒன்று துவங்கப்படுகிறது. சீனாவை தலைமையகமாகக் கொண்டு செயல்படவுள்ள இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியர் ஒருவர் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப் பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாட்டில் உறுப்பு நாடுகளின் வளர்ச்சிக்காக சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சிக்காக புதிய வளர்ச்சி வங்கி தேவை என வலியுறுத்தப்பட்டது. அது நிறைவேறும் காலம் விரைவில் வருகிறது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டு முயற்சியால் துவங்கப்படும் இந்த வங்கியின் தலைமை அலுவலகம் சீனாவின் 'ஷங்காய் நகரில் அமையவுள்ளது. ஐந்து நாடுகளின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்காக, இந்த வங்கி நிதி உதவி செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கி துவங்குவதற்கு தேவையான நிதியை ஐந்து நாடுகளும் சமமாக பகிர்ந்து கொள்ளும். இந்தியா, பிரேசில் நாடுகளின் ஆலோசனையின்படி அனைத்து நாடுகளும் சம பங்களிப்பை அளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. அமெரிக்காவை உளவு பார்க்கும் தளத்தை மீண்டும் திறக்கிறது ரஷ்யாபனிப்போர் காலத்தில் அமெரிக்காவை உளவு பார்க்க சோவியத் ஒன்றியம் பயன்படுத்திய இலத்திரனியல் அவதானிப்பு நிலையத்தை மீண்டும் திறப்பதற்கு கியூபாவுடன் ரஷ்யா ஒப்பந்தம் செய்துகொண்டுள் ளது. கியூப தலைநகர் ஹவானாவுக்கு அருகில் இருக்கும் இந்த உளவுத்தளம் அமெரிக்க கடற்கரையில் இருந்து வெறும் 250 கிலோ மீற்றர் தொலைவிலேயே உள்ளது. கொம்மியுனிஸ ஆட்சி நடக்கும் கியூபாவுக்கு கடந்த வாரம் விஜயம் மேற் கொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த கட்டிடத்தை மீண்டும் திறக்க ஒப்பந்தம் செய்துகொண்டிருப்பதாக ரஷ்யாவின் கொம் மர்சன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. புடின் இந்த தளத்தை அதிக செலவை கருத்தில் கொண்டு கடந்த 2001 ஆம் ஆண்டு மூடினார். உக்ரைன் முரண்பாட்டை அடுத்து ரஷ்ய-அமெரிக்க உறவில் முறுகல் ஏற்பட்டுள்ளது. கியூபாவில் இருக்கும் இந்த உளவுத்தளம் 1967 ஆம் ஆண்டு தனது செயற்பாட்டை ஆரம்பித்தது. இதனைக்கொண்டு சோவியட் தேசிய பாதுகாப்பு அமைப்புக்கு உளவு இரகசியங்கள் வழங்கப்பட்டன. சோவியத் காலத்தில் இங்கு சுமார் 3,000 நிபுணர்கள் பணியாற்றியுள்ளனர். 1990களில் பணியாளர் எண்ணிக்கையை ரஷ்யா பாதியாக குறைத்தது. பனிப்போர் காலத்தில் பிரதான தளமாக இருந்த கியூபாவில் 1962 இல் சோவியத் ஏவுகணைகள் நிறுவப்பட்ட சர்ச்சை அணு ஆயுத யுத்தமாக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரஷ்யா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைஉக்ரைன் பிரிவினைவா திகளுக்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டப்படும் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தடைகளை விதித்துள்ளது. இதில் ரஷ்யாவின் பிரதான வங்கிகள், பாதுகாப்பு நிறுவ னங்கள் மற்றும் எரிசக்தி நிறுவனங்களை இலக்கு வைத்து அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த தடைகள் அமெரிக்க-ரஷ்ய உறவின் இறுதியாக இருக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். ரஷ்யா மீதான தடைகள் குறித்த விபரத்தை ஜுலை மாத முடிவில் அறிவிக்கவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட் டுள்ளது. எனினும் ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டு வங்கிகள் தொடர்ந்தும் ரஷ்ய திட்டங்களுக்கு முதலீடு செய்யாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறத்தில் கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு உக்ரைன் துருப்புகளுக்கும் இடையில் தொடர்ந்தும் தீவிர மோதல் இடம்பெற்று வருகிறது. ஜுலை 17, 2014 முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றத்தில் வெளிமாவட்டத்தவர்களுக்கு இடமில்லைமுல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணியில்லாதோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியில்லாத முஸ்லிம் மக்களுக்கு காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த மக்களுக்கு பொருத்தமான அரச காணியை பகிர்ந்தளிப் பதற்கு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரியும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிடும் சதிகளை ஒருசிலர் மேற்கொள்கின்றனர். இது விடயத்தில் எல்லோரும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த பிரதேசத்தில் காணியில்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும் அது தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதேச செயலாளரை கேட்டுக்கொள்கிறேன். அமெரிக்காவிலேயே அதிக மனித உரிமை மீறல்கள்இலங்கை நாடு இன்று சகல இனங்களும் கெளரவத்துடன் வாழக்கூடிய சுதந்திர நாடாக உலகில் திகழ்கின்றது. சில உலக நாடுகளும் அமைப்புகளும் எமது அரசாங்கத்தையும், நாட்டையும் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது ஒரு அப்பட்டமான பொய்ப் பிரசாரமே. அமெரிக்க அரசுக்கு எதிராக போராடி யவர்கள் இன்றும் சித்திரவதை முகாம்களில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனித உயிர்களை அழித்து நாட்டில் சொத்துக்களை நாசப்படுத்தி அரசுக்கு எதிராக போராடியவர்களை இன்று அரசாங்கம் புனர்வாழ்வு அளித்து சந்தோசமாக குடும்பங்களுடன் ஒப்படைத்து அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளது. இதனை மனித உரிமை பற்றி பேசும் அமைப்புக்கள் மற்றும் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு திருக்கோவில் பிரதேசத்தில் அபிவிருத்தி வேலைத்திட் டங்களை 15ம் திகதி ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். வாள்வெட்டில் உயிரிழந்த இளைஞனின் மரணம் தொடர்பில் கவனயீர்ப்பு ஊர்வலம் இன்று மாலை சாவகச்சேரியில் நடந்தது கடந்த சனிக்கிழமை சாவகச்சேரி மருத்துவமனையில் வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த உதயகுமார் அன்பழகனின் படுகொலைக்கு நீதி வேண்டி இன்று மாலை அவரது பெற்றோர், உறவினர், நண்பர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது படுகொலை இடம்பெற்ற சாவகச்சேரி மருத்துவமனை முன்பாக இன்று மாலை 5.00 மணிக்கு ஊர்வலம் ஒன்றை ஆரம்பித்து மீசாலை சந்தி வரை அவர்கள் சென்றனர். ஊர்வலத்தில் பங்குபற்றியோர் பல்வேறு சுலோகங்கள் அடங்கிய அடடைகளைத் தாங்கியவண்ணம் சென்றனர். அத்துடன் வட மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தனின் உருவப் பொம்மைக்கு அவர்கள் செருப்பு மாலை அணிவித்து ஊர்வலத்தில் கொண்டு சென்று புத்தூர் சந்தியில் அதனைத் தீயிட்டு எரித்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதை அறிந்த பொலிஸார் அசம்பாவிதங்கள் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வழங்கினர் கடந்த 05 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கச்சாய் அம்மன் கோவிலில் இடம்பெற்ற திருவிழாவில் இரு பகுதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்து சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு திரும்புகையில் மருத்துவமனை வளாகத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கூரிய ஆயுதத்தினால் தலையில் வெட்டப்பட்டு சம்பவ இடத்திலேயே அன்பழகன் உயிரிழந்தமையும் இந்தச் சம்பவம் தொடர்பாக நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் தெரிந்தவையே. ஆலயத்தில் இடம்பெற்ற மோதலை அரசியலாக்க முனைபவர்களின் தூண்டுதலே இந்த ஆர்ப்பாட்டமெனக் கூறப்படுகிறது. "புளொட்”டின் 25 ஆவது வீரமக்கள் தினம்..! வவுனியாவில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25ஆவது வீரமக்கள் தினம் கழகத்தின் தோழர்களால், கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் இல்லத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் இன்றுமாலை (16.07.2014) நடைபெற்றது. இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த தோழர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். இதேவேளை புளொட்டின் கொழும்பு தலைமையகத்திலும் வீரமக்கள்தின நிகழ்வுகள் இன்றுகாலை 9.30மணியளவில் கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கழகத் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களால் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களின் திருவுருவபடத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மலரஞ்சலியும் மௌன அஞ்சலியும் இடம்பெற்றது. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் அமெரிக்க கிளையினால், 25ஆவது வீரமக்கள் தினம் 15.07.2014 அன்றுமாலை 06.00 மணியளவில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் உள்ள 976 அல்கமிநோரியல், சந்நிவில் மண்டபத்தில் சுடரேற்றி, மலரஞ்சலிகளுடன் நினைவு கூறப்படது. இவ் நிகழ்வில் கழகத்தின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கழகத்தின் மறைந்த தோழர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். ரஷ்யாவுடனான உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் பிரேசிலில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவுடனான உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கூறினார். 'பிரிக்ஸ்' என்னும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய 5 நாடுகளின் உச்சிமாநாடு, பிரேசில் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே நல்லுறவு நீடிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். சந்திப்பின்போது, பிரதமர் மோடி நாடு விடுதலை பெற்றது முதலே இந்தியாவுடன் ரஷ்யா நட்புறவு கொண்டுள்ளது. இது இந்திய குழந்தைகளுக்குக் கூட தெரியும். அணுசக்தி, இராணுவம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா உறுதியாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் வசதியாக விசா நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். டிசம்பர் மாதம் புட்டின் இந்தியாவிற்கு வரும்போது ரஷ்ய உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை பார்வையிடுமாறு மோடி அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் இதற்கு பதில் அளித்த புட்டின், இந்திய பிரதமர் மோடியின் யோசனை சிறந்தது. இந்தியா - ரஷ்யா இடையே போதுமான அளவு நட்புறவு நீடிக்கிறது. இதற்கு அணுமின்நிலையத் திட்டம் அடையாளமாக திகழ்கிறது என்று கூறினார். பொஸ்னிய யுத்த படுகொலையில் நெதர்லாந்து அரசுக்கு குற்றச்சாட்டு90களில் பொஸ்னிய யுத்தத்தின்போது ஸ்ரெப்ரனீச் சாவில் முந்நூறுக்கும் மேற்பட்ட மக்களின் படுகொலைக்கு நெதர்லாந்து அரசாங்கம் பொறுப்பு என நெதர்லாந்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரெப்ரனீச்சாவின் தாய்மார்கள் என்ற பெயர்கொண்ட பெண்கள் அமைப்பினர், தங்களுடைய குடும்பத்து ஆண்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதென குற்றம்சாட்டி தொடுத்த வழக்கில் இந்த முடிவு வந்துள்ளது. அந்த யுத்தத்தின்போது ஸ்ரெப்ரனீச்சாவிற்கு சற்று வெளியே அமைக்கப்பட்டிருந்த ஐ.நா.வின் முகாமில் தஞ்சமடைந்திருந்த ஆயிரக்கணக்கான ஆடவர்களையும், சிறுவர்களையும் அமைதிகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டச்சுப் படையினர் பொஸ்னிய இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர். பின்னர் இந்த பொஸ்னிய முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் அதிகம் பேர் ஒட்டுமொத்தமாக செய்யப்பட்ட இனப்படுகொலை சம்பவம் இதுவென்று கருதப்படுகிறது. இலங்கை அகதிக்கு மருத்துவ கல்வியில் இடம் வழங்க பரிசீலிக்கவேண்டும்: உயர் நீதிமன்றம்இலங்கை அகதிக்கு மருத்துவ கல்வியில் இடம் வழங்க பரிசீலிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தெரிய வருவதாவது: சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சட்டத்தரணி பி. ஸ்ரீpரியா. இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்; தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது இலங்கையை சேர்ந்த டி.ராஜ கடந்த 1990ஆம் ஆண்டு தன் மனைவியுடன் அகதியாக வந்து ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார். இவரது மூத்த மகள் நந்தினி நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் 1200- க்கு 1170 மதிப்பெண் எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளார். இதன் மூலம் 197.5 கட்அவுட் மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். இவர் மருத்துவ படிப்புக்காக விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் இலங்கை அகதி என்ற ஒரே காரணத்துக்காக இவரது விண்ணப்பத்தை தமிழக மருத்துவ கல்வித்துறை நிராகரித்துள்ளது. எனவே, எம்.பி.பி.எஸ். மருத்துவ படிப்பில் ஒரு இடத்தை நிரப்பாமல் வைத்திருக்க மருத்துவ கல்வி இயக்குனருக்கு உத்தரவிடவேண்டும். மருத்துவ படிப்புக்கு நந்தினி செய்த விண்ணப்பத்தை ஏற்று, அவரை எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய கடல் பகுதியிலிருந்து எண்ணெய் தளத்தை அகற்றியது சீனாசர்ச்சைக்குரிய கடற்பகுதியில் சீனா மேற் கொண்ட எண்ணெய் கிணறு தோண்டும் பணி கள் முடிவடைந்துள்ளன. இந்த எண்ணெய் கிணறு விவகாரம் சீனாவுக்கும் வியட்னாமுக் கும் இடையில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது. சீன தேசிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டிருக்கும் அறிவிப் பில், குறித்த எண்ணெய் கிணற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆய்வுக்கு உட்படுத் தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சீனா கடந்த மே மாதத்தில் பரகில் தீவுக்கு அருகில் எண்ணெய் கிணறு தோண்ட ஆரம்பித்தது. இந்த பகுதிக்கு வியட்னாமும் உரிமை கோருகிறது. இந்த சர்ச்சையால் இரு நாட்டு கப்பல்களுக்கும் இடையில் கடற்பகுதியில் மோதல்கள் ஏற்பட்ட தோடு. வியட்னாமில் சீன எதிர்ப்பு கலவரமும் ஏற்பட்டது. குறித்த எண்ணெய் தளம் தற்போது சீனாவின் ஹைனான் தீவை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருப்பதாக வியட்னாம் கடலோர பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது. சமரச முயற்சி தோல்வி; ஹமாஸ் தலைவர்களை இலக்குவைத்து இஸ்ரேல் புதிய வான் தாக்குதல்பலஸ்தீனர்களின் உயிர்ப்பலி 208 ஆக உயர்வு: 100,000 காசா குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை எகிப்தின் சமரச முயற்சி தோல் வியடைந்ததை அடுத்து காசா மீதான இஸ்ரேலின் வான் தாக்கு தல்கள் தொடர்ந்து நீடிக்கிறது. ஹமாஸ் சிரேஷ்ட தலைவர்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் கொல்லப் பட்ட பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 208 ஆக அதிகரித்துள்ளது. காசா மீது நேற்று புதன்கிழமை அதிகாலை நடாத்தப்பட்ட புதிய தாக்குதல்களில் மேலும் பதினொரு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் களில் ஒருவரான மொஹம்மத் சஹரின் வீடு தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை இரவு தொடக்கம் நான்கு அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டி ருப்பதாக ஹமாஸ் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது குறித்து மேலதிக எந்த விபரமும் வெளியிடப்படவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமை எகிப்து பரிந்துரைத்த யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்து அதனை கடைப்பிடித்து ஒரு சில மணி நேரத்திற்குள் மீண்டும் காசா மீது தாக்குதல்களை ஆரம்பித்தது. எனி னும் யுத்த நிறுத்தம் குறித்து தம்மை அறிவுறுத்தவில்லை என்று காசாவை ஆளும் ஹமாஸ் குறிப் பிட்டுள்ளது. இஸ்ரேலால் செவ்வாய்க்கிழமை தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து கொல்லப்பட்ட பலஸ்தீனர் களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்திருப்பதாக பலஸ்தீன சுகா தார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் தவிர 1,530 பேர் காயமடைந்துள் ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலா னவர்கள் பொதுமக்களாவர். ஜுலை 16, 2014 காஸாவில் அப்பாவிகள் மீது இஸ்ரேலின் அராஜகம் பாலஸ்தீனத்தில் காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நேற்று எட்டாவது நாளாகவும் சரமாரியான குண்டுத் தாக்குதல் களை நடத்தி வருகின்றது. இதில் 180க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதோடு சுமார் 2000 பேர் காயமடைந்திருக்கிறார்கள். இஸ்ரேலிய சியோனிஸப் படைகள் சிவிலியன்களை இலக்கு வைத்து நடத்தி வரும் கட்டுப்பாடில்லாத தரை, வான் தாக்குதல்களை நிறுத்துமாறு உலகநாடுகள் விடுத்த வேண்டுகோள்களும் இஸ்ரே லிய அரசால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேலைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றது. ஹமாஸ் அமைப்பே இந்தக் கொலைகளைச் செய்திருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. ஆனால் ஹமாஸ் இதனை முற்றாக மறுத்திருக்கிறது. (மேலும்....) சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுடன், "புளொட்" தலைவரின் பொதுக் கூட்டம்..! எதிர்வரும் (20.07) ஞாயிற்றுக்கிழமை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவிருக்கின்றார். இதன்போது இலங்கையின் வடகிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், அன்றாட பிரச்சினைகள், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் தெளிவுபடுத்தப் படவுள்ளது. மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்று குறித்தும், அந்த இலக்கினை நோக்கி அரசியல் பயணம் குறித்தும் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுடன் ஆராயப்படவுள்ளது. இக்கலந்தரையாடலானது எதிர்வரும் 20.07.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 02.00 (14.00) மணியளவில் சூரிச் மாநகரின் Gemeinschaftssaal (Genossenschaftshaus Friesenberg) Schweighofstrasse 296, 8055 Zürich என்ற முகவரியில் இடம்பெற விருக்கின்றது. தமிழ் மக்களே! பேதங்கள் இன்றி இதில் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு தோழமையுடன் அழைக்கின்றோம். ஐக்கிய இலங்கையை ஏற்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உச்ச நீதிமன்றில் தெரிவிப்பு பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கையொன்றை ஏற்றுக்கொள்வதாக சத்தியக்கடதாசி ஊடாக உச்சநீதிமன்றத்துக்கு அறிவிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று இணக்கம் தெரிவித்தது. வட மாகாணத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனி இராச்சியம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தையும் தேர்தல் முடிவையும் இரத்துச் செய்யுமாறு கோரி ஐந்து அமைப்புகள் தாக்கல் செய்திருந்த ஏழு மனுக்கள் மீதான விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகஈஸ்வரன் இவ்வாறு சத்தியக்கடதாசியொன்றை வழங்க இணக்கம் தெரிவித்திருந்தார். மேற்படி மனு மீதான விசாரணை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், உச்சநீதிமன்ற நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க, பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் முன்னி லையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ஜுலை 15, 2014
யார் சுதந்திரத்துக்காக
-முன்னாள் பெண் போராளி- ஏழாவது நாளாகவும் காசா மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: 172 பலஸ்தீனர்கள் பலியுத்த நிறுத்தத்திற்கு சர்வதேச அளவில் அழுத்தங்கள் அதிகரிப்பு
காசா மீது இஸ்ரேல் ஏழாவது நாளாகவும் நேற்று திங்கட்கிழமை வான் தாக்குதல்கள் மற்றும் பீரங்கி தாக் குதல்களை தொடர்ந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர இராஜதந்திர முயற்சிகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. ஹமாஸின் ஆயுதப் பிரிவான கஸ்ஸாம் படையணியின் மூன்று பயிற்சி முகாம்கள் மீது நேற்றுக் காலை இஸ் ரேல் யுத்த விமானங்கள் குண்டு போட்டன. எனினும் இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று மருத்துவ வட்டாரங்கள் மற்றும் நேரில் பார்த்த வர்கள் குறிப்பிட்டுள்ளனர். (மேலும்....) யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு
தலைமைச் செயலருக்கு வழங்கிய உத்தரவை வாபஸ் பெற இணக்கம் இலங்கையில் வட மாகாணத்தின் தலைமைச் செயலாளர் விஜயலட்சுமி ரமேஷ்க்கு தான் வழங்கியிருந்த உத்தரவுகளை வாபஸ் பெறுவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இணக்கம் தெரிவித்துள்ளார் என முதலமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன் உச்சதீமன்றத்தில் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வழங்கிய உத்தரவுகள் காரணமாக தனது மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தி தலைமைச் செயலர் விஜயலட்சுமி ரமேஷ் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இவ்வாறு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலரும் முதலமைச்சரும் இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்த்துக்கொள்வதையே நீதிமன்றம் விரும்புகிறது என தலைமை நீதிபதி கூறியதை அடுத்து இது நடந்ததாக மனுதாரர் சார்பில் ஆஜ்ரான சட்டத்தரணி கோமி தயாசிறி கூறினார். இதேவேளை தலைமைச் செயலரை நீக்குவதென்றாலும் இடமாற்றம் செய்வதென்றாலும் அதனை சுமுகமாக மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம் கோரியுள்ளதாக முதலமைச்சர் சார்பில் ஆஜரான வழக்குரைஞ்சர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தான் வட மாகாணத்தை விட்டு வெளியே செல்ல வேண்டுமானால் முதலமைச்சரின் முன்னனுமதியைப் பெறவேண்டுமென நிபந்தனை விதித்திருந்த முதலமைச்சரின் உத்தரவு தனது அடிப்படை உரிமையை மீறும் செயலென தலைமைச் செயலர் விஜயலட்சுமி மனுவில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கொலைகாரனுக்குப் பாதுகாப்பு ! நீதி கேட்டால் பொய்வழக்கு ! ! சிறப்புப் புலனாய்வுக் குழு திரட்டியுள்ள சாட்சியங்களின்படியே மோடியின் மீது குற்றம் சாட்ட முடியும் என்று ராஜூ ராமச்சந்திரன் அறிக்கை கூறியது. குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டில் நடந்த இந்துவெறி பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்காக இந்திய நீதிமன்றங்களில் தொடர்ந்து போராடிவரும் மனித உரிமை ஆர்வலரான தீஸ்தா சேதல்வாதைப் பழிவாங்க அவர்மீது பொய்வழக்கு போட்டு, அவரைக் கைது செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது குஜராத் அரசு. குஜராத் அரசால் பொய்வழக்கு போடப்பட்டு பழிவாங்கப்படும் தீஸ்தா சேதல்வாத் (கோப்புப் படம்). (மேலும்....) C-24 Expands Tory Attack on Human Rights Anti-C24 rally in early July 2014, Vancouver Passed in June by the House of Commons, Bill C‑24, the new "Strengthening Canadian Citizenship Act (SCCA)," imposes new requirements to obtain citizenship, and makes it easier for the government to revoke it. Human rights groups are planning a legal challenge to the SCCA, which effectively creates two classes of Canadian citizens, each with very different sets of rights. The Bill allows the federal government to strip the Canadian citizenship from dual nationals convicted of some offences. The law could apply in cases where Canadians are convicted in foreign courts, and even to people born in Canada if they also have citizenship elsewhere, such as through their parents. (more.....) சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில் சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
சுவிஸ்
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முக்கிய செய்தி..!
புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து அமைப்பினரால்
புங்குடுதீவில் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வோதய அமைப்பினர்
கேட்டதற்கிணங்க, தண்ணீரத்; தாங்கி வாகனம் (பௌசர்) ஒன்று வாங்கிக்
கொடுக்கும் நிகழ்வு இம்மாதம் (30.07.2014) நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு
எமதூரில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், ஏனைய சமூகப் பணியாற்றும்
அமைப்பினர், பொதுமக்கள் அனைவரையும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு
பணிவுடன் அழைக்கின்றோம். அத்துடன் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு
ஒன்றியத்துடன் இணைந்து பணியாற்ற எமதூரில் உள்ள, சமூக சேவையில்
ஆர்வமுடையோர் எங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகின்றோம். மற்றும்
அனைத்துலகிலும் உள்ள எமது ஊரின் ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களுடனும்
நட்புடன் கூடிய தொடர்பைப் பேண புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு
ஒன்றிய சுவிற்சர்லாந்து நிர்வாகசபை உறுப்பினர்களாகிய நாங்களும் ஆவல்
கொண்டுள்ளோம்.
இவ்வண்ணம்,
த.தங்கராஜா
-செலயாளர்,
புங்குடுதீவு
மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
தொடர்புகட்கு:
தலைவவர்:
திரு.இராசமாணிக்கம் இரவீந்திரன் (சாய் ரவி) - 079.218 70 75
செயலாளர்:
திரு.தர்மலிங்கம் தங்கராஜா (பீல் மதி) - 079.398 28 219
உபதலைவர்:
திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் (சுவிஸ்ரஞ்சன்) - 077.948 52 14
யாழ்.பல்கலைக்கழகம்: பொறியியல்பீடம்,விவசாயபீடங்கள் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கான பொறியியல் மற்றும் விவசாய பீடங்களை கிளிநொச்சியில் அமைப்பது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் உயர்கல்வி அமைச்சுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இரண்டு பீடங்களுக்குமான பெளதீக வளங்களை அமைப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது. விவசாய பீடத்திற்கு விரிவுரையாளர் மண்டபம், விழா மண்டபம். கணினிக் கூடம், நூல் நிலையம், விளையாட்டுத் தொகுதி ஆகியவற்றையும் பொறியியல் பீடத்துக்கான விரிவுரை மண்டபம், விழா மண்டபம், நிர்வாக அலுவலகம் மற்றும் அதிகாரிகள் அறை என்பனவும் அமைக்கப்படவுள்ளன. 600 மில்லியன் இலங்கை ரூபா செலவில் இவை நிர்மாணிக்கப்படவுள்ளன. பெளதீக வளங்களுக்கு அப்பால் இந்திய கல்வி நிறுவனங்களின் பயிற்சிகள், பரிமாற்றல் திட்டங்களை முன்னெடுப் பதற்கும் இந்தியா முன்வந்துள்ளது. இது தொடர்பான விடயங்களுக்காக உயர்கல்வி அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோரை உள்ளடக்கிய திட்டக்குழு வொன்றும் நியமிக்கப்படும். ஸியோனிஸவாதிகளின் அடக்குமுறை மனோபாவமே காஸா மீதான தாக்குதல்மேற்குலகம் மெளனம் காப்பது ஏன்? இஸ்ரேல் பாலஸ்தீன காஸா பகுதியில் மேற்கொள்ளும் விமானத் தாக்குதல் மிலேச்சத்தனமானதென தேசிய சுதந்திர முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது. இத்தாக்குதல்களால் பலஸ்தீன அப்பாவி மக்கள் 168 பேருக்கு மேற் பட்டோர் பலியானதாக ஐ. நா.பொதுச் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டு சர்வதேச பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது. பாலஸ்தீன அப்பாவி மக்களை இஸ்ரேல் படுகொலை செய்யும்போது ஐ. நா சபையும் நவநீதம்பிள்ளையும் அமைதி காக்கின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் பாலஸ்தீன மக்கள் பலியாகுவது பற்றி கவலை மட்டும் தெரிவித்துள்ளன. இஸ்ரவேலர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிமை உண்டென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இஸ்ரவேலின் மனித உரிமை மீறல் தொடர்பாக பிரேரணை நிறைவேற்றப்பட்டும் அங்கு அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்கைப் பாவித்தது. இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றம் சுமத்தப்படுவதும், சர்வதேச விசாரணை கோருவதும் புலிகளை தோற்கடித்த பழியைத் தீர்த்துக்கொள்வதற்கேயாகும். மேற்கத்திய சக்திகளின் இந்த இரட்டை வேட செயற்பாட்டுக்கு எதிராக கைகோர்ப்பதற்கு அனைவரும் ஒன்றுபடவேண்டும் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜுலை 14, 2014 நறுக்கென்று நாலு வார்த்தை செய்தி: வடமாகாண ஆளுநர் சந்திரஸ்ரீ பதவிக்காலம் நீட்டிப்பு ஐயா மகிந்தரே இதே சந்திரசிறீயை போல ஒரு சூரியசிறீயை போட்டு கூட்டமைப்பு பக்கம் பந்தை அனுப்பிவிட்டு நீர் நினைத்ததை தொடரலாம். நல்லெண்ணத்துடன் நடக்கத்தான் முடியவில்லை, அப்படி நடிக்கக்கூட முடியமனம்வரவில்லையா? கூட்டமைப்பின் தொடர் வெற்றியை தக்கவைத்துக்கொள்ளும் உம்முடைய முயற்ச்சியில் ஏதாவது உள்நோக்கம் இருப்பதாகபடுகிறது. (மோகன்) உலகக் கோப்பையை தனதாக்கியது ஜெர்மனி வெற்றியின் விளிம்பு வரை சென்று வெற்றியை நழுவ விட்டது ஆஜன்ரீனா! உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கோப்பையை தனதாக்கிக் கொண்டுள்ளது ஜெர்மனி அணி. கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. நான்காவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஜெர்மனியும், மூன்றாவது முறையாக சாம்பியனாகும் முயற்சியில் அர்ஜென்டினாவும், மரக்கானா மைதானத்தில் களமிறங்கியன. ஆட்டத்தின் 21வது நிமிடத்தில் கோல் அடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை அர்ஜென்டினா வீரர் ஹிகுவைன் வீணடித்தார். கோல் அடித்து விட்டதாக போட்டியின் 30வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நடுவர் 'ஆஃப் சைட்' என அறிவிக்க, ஜெர்மனி வீரர்கள் நிம்மதியடைந்தனர். 37வது நிமிடத்தில் ஜெர்மனியின் கோல் முயற்சியை ருமேராவும், 40வது நிமிடத்தில் மெஸ்சியின் கோல் வாய்ப்பை ஜெர்மனி அணியினரும் தகர்த்தனர். (மேலும்....)என் இனிய தோழனே!
வருடங்கள் பல கடந்தும்
வாங்க விவசாயம் செய்யலாம்...!
உலக நாடுகளில் விளையக்கூடிய எல்லா பயிர் வகைகளும் நம் நாட்டில் விளைகிறது. இந்தியாவில் உள்ள பருவ நிலை விவசாயத்துக்கு உகந்ததாக இருக்கிறது. இங்கு எல்லா வளமும் இருக்கிறது. நம்முடைய அப்பா, அம்மா எல்லாம் இந்த விவசாயத்தை வெச்சுதான் நம்மை படிக்க வெச்சாங்க. அவர்களுக்கெல்லாம் கைக்கொடுத்த விவசாயத் தொழில், இந்த தலைமுறைக்கு மட்டும் ரொம்ப தூரம் விலகியே இருக்கிறது? பெற்றோர்களுக்கு ஒரே எண்ணம் மத்த புள்ளைங்க மாதிரி நம்ம புள்ளயும் வயல்ல வேலை செய்யணுமா? என்ற கவுரத பிரச்னைதான். இதையெல்லாம் கடந்து நீங்கள் வேலை செய்து கொண்டே மாற்றுத் தொழிலாக விவசாயத்தை தேர்ந்தெடுக்க உள்ளவரோ? அல்லது முழுநேரமாக விவசாயம் செய்ய விருப்பமுள்ளவரோ எவராக இருந்தாலும் விவசாயத்தை தொழிலாக நினைத்து செய்ய நினைப்பவர்களுக்கு சில யோசனைகள்: (மேலும்....) பல்கலை கள்ளருக்கு பல்கலைகழகத்தில் கொண்டாடம். ... சப்ரா என்கிற நிதி நிறுவனத்தை முன்பு நடத்தியவர் சரா என்று நெருக்கமானவர்களால் அழைக்கப்படுகின்ற இதே சரவணபவன். சிறுகச் சிறுக சேமித்த பணத்தை இவரின் நிதி நிறுவனத்தில் யாழ்ப்பாணத்தார் ஏராளமானோர் வைப்புச் செய்தனர். எதிர் கால நலன்கள், பெண் பிள்ளைகளின் திருமணம் போன்றவற்றை உத்தேசித்தே இப்பணத்தை வைப்பில் போட்டனர். ஆனால் சப்ராவில் வைப்புச் செய்யப்பட்ட பணத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு சரவணபவன் ஓட்டம் பிடித்தார். இதனால் மனம் உடைந்து போன பெற்றோர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டனர். ஏராளம் கன்னிப் பெண்களின் வாழ்க்கை தொலைந்து போய் இன்றும் இவர்கள் முதிர் கன்னிகளாக நடமாடுகின்றனர். (மேலும்....) மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி...........! இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.......! தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.......!(மேலும்....) படுகொலைக்குப் பின்னும் தொடரும் அமீரின் அரசியல் (ஜெயபாலன். த) Institute of Constitutional Studies இன் இயக்குனர்கலாநித ஜெயம்பதி விக்கிரமரட்ணே இந்த நினைவுப் பேருரையை வழங்க இருக்கிறார். 1975 யூலை 27இல் அல்பிரட் துரையப்பாவின் முதல் கொலையில் இருந்து 11 கொலைகளுக்கு விடுதலைப் புலிகள் முதற்தடவையாக 1978 ஏப்ரல் 25இல் உரிமைகோரி தங்களது சுருக்கமான அறிக்கையை வெளியிட்டனர். இந்த அறிக்கையானது அன்றைய பா உ அமிர்தலிங்கத்தின் பாராளுமன்ற அலுவலக அறையில் இருந்த தட்டச்சு இயந்திரத்தில் அவருக்கு தெரியாமலேயே அங்கு பணியாற்றிய ஊர்மிலாவால் தட்டச்சு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு அறுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் படுகொலை செய்த போது முதலில் அப்படுகொலைகளுக்கு உரிமை கோரவில்லை. பின்நாட்களிலேயே இப்படுகொலைக்கு விடுதலைப் புலிகள் பொறுப்பேற்றனர். (மேலும்....) The LTTE Revives Its US Network (By Camelia Nathaniel)
Former US fundraiser for LTTE Danton Thurairajah and LTTE activist David Poopalapillai in Canada engaging in lobbying The LTTE’s US network crippled by the Federal Bureau of Investigation (FBI) in 2006 is being reorganized by both remnant and emerging leaders. The most prominent among them is V. Rudrakumaran, the son of a former Mayor of Jaffna. Today, Rudrakumaran runs the Transnational Government of Tamil Eelam (TGTE), one of the four factions of the LTTE. Until recently the TGTE had limited success in the US but now with external resources, Rudrakumaran is reorganizing its activities both within and outside the US. The TGTE has also started to openly display the photograph of Prabhakaran and the Tiger flag. Using New York and New Jersey as its main platforms, the TGTE is not only reviving the LTTE in the US, but also in Canada, Europe, Australia and New Zealand. Although the TGTE is constrained from operating openly in Asia, Africa, the Middle East and Latin America, it has built and is attempting to build cells in Tamil Nadu, Mauritius, South Africa and a few other countries where it has cultivated supporters and sympathizers. (more...) ஜுலை 13, 2014 “அவர்கள் விடுகிறார்கள் இல்லை” என்று சதா ஒப்பாரி வைப்பது, ஆளுமைமிக்க தலைமையின் குணாதிசயம் அல்ல ("ஈ.பி.ஆர்.எல்.எப்" சுகு ) போராடிய பெண்களும் ஆண்களும் சமூக நிலையில் அவலமானதும் பாதுகாப்பற்றதும் இடர்பாடு மிக்கதுமான வாழ்க்கையையே வாழ்கிறார்கள். பொதுவாக போராடப் புறப்பட்டவர்கள் எமது சமுதாயத்தில் வறுமைப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளே. எமது போராட்டகாரர்கள் கௌரவப்படுத்தப்படா விட்டாலும் பரவாயில்லை. கண்ணியமாக வாழமுடியவல்லை. இன்று இலங்கையில் மாகாண சபைமுறையொன்று உருவாகியருக்கிறதென்றால் அல்லது இலங்கையில் சமூகங்களிடையே அதிகாரப்பகிர்வு நிகழ வேண்டும் என்று உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறதென்றால் அதற்கு அனைத்து இயக்கங்கள் போராளிகளதும் பொதுமக்களதும் தியாகமே காரணம். ஆனால் 30 ஆண்டு துனபங்களின் பின்னர் தமிழ் மக்களின் தலைவர்களாக உருவாகியிருப்பவர்கள் ஏகப்பெரும்பான்மையினர் துரதிஸ்டவசமாக போராட்ட பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள் அல்ல.. ஒருசிலர் விதிவிலக்கு. (மேலும்....) புலிகளை கங்கணம் கட்டி அழித்த பிரித்தானியா புதிய ஆதாரம் ! புலிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் நடந்த இறுதிப்போரில், பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்தது என்று நாம் படித்திருக்கிறோம். அந்த வகையில் பிரித்தானியா 1979ம் ஆண்டு முதலே ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும் அது 2009ம் ஆண்டு வரை தொடர்ந்து செல்வதாகவும் பில் மில்லர் என்னும் எழுத்தாளர் கூறியுள்ளார். "த டேட்டி வார்" என்ற புத்தகத்தை எழுதியுள்ள மில்லர் அவர்கள், புது ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார். (மேலும்....) வடமாகாண சபை சொன்னதில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை! சொல்லுறது ஒண்டு. செய்யிறதும் நடக்கிறதும் வேற ஒண்டு. வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றினால்…. தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேற்றப்படும்.புலம்பெயர் உறவுகளின் உதவிகளைப் பெற்று பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை கட்டியெழுப் பப்படும். வெளிநாட்டு உதவிகளின் மூலம் தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படும். சர்வதேச சமூகத்தின் ஆதரவோடும் அனுச ரணையோடும் தமிழர்களின் இனப்பிரச்சினக்குத் தீர்வு காணப்படும் வடக்கு கிழக்கு இணைந்த பிரதேசங்களாக மீண்டும் உருவாக்கப்படும். இதையெல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரியோ அறிஞ்ச மாதிரியோ இருக்கிறதா? (மேலும்....) இலங்கையில் இப்போது சமாதானம் நிலவுகிறது - அவுஸ்திரேலிய பிரதமர் டோனி இலங்கையில் சமாதானம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் டோனி, யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மனித உரிமை நிலைமைகளில் பாரியளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சட்டம் ஒழுங்கு நிலைமைகளில் சாதகத் தன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடுக்கடலில் புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை திருப்பி அனுப்பி வைக்கும் அவுஸ்திரேலியாவின் நடவடிக்கை இரக சியமானதல்ல என அவர் சுட்டிக்காட் டியுள்ளார். தேர்தல் காலத்தில் அளிக்கப் பட்ட வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பான முறையில் புகலிடக் கோரிக்கையாளர்களை கடல் வழியாக திருப்தி அனுப்பி வைப்பது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும் என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத பயணங்களை கண்காணிக்க 2 கப்பல்கள், அவுஸ்திரேலிய அரசு வழங்கியதுபுகலிடம் கோரி சட்ட விரோ தமாக படகுகளில் பயணிப் போரைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அவுஸ்திரேலிய அதிகாரி கள் மற்றும் இலங்கை கடல் பாதுகாப்புத் தரப்பினருக்கிடையிலுள்ள உறவுகளை அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரீசன் பாராட்டியுள்ளார். இது மிக நெருங்கிய ஒத்துழைப்பு நடவடிக்கை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இலங்கை கடற்படைக்கு இரண்டு கண்காணிப்புக் கப்பல்களைக் கையளிக்கும் வைபவத்தையடுத்து இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சட்டவிரோத புலம்பெயர்வைத் தடுக்கும் வகையில் இரு நாடுகளும் செயற்பட்டு வருகின்ற போதும் சில குழுக்கள் தொடர்ந்தும் அதனை ஊக்குவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவுஸ்திரேலிய அமைச்சர் தொடர்ச்சியாக ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார். இந்திய மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் போராட்டம் அறிவிப்பு! மத்திய அரசின் பட்ஜெட்டை எதிர்த்து இடதுசாரி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. மத்திய அரசின் பொது பட்ஜெட் மற்றும் ரயில்வே பட்ஜெட்டை கண்டித்து, வரும் 14ஆம் தேதி தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளன. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், பாதுகாப்புத் துறையில் கூடுதலாக அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு கழகத்தையும் அந்நிய நேரடி முதலீடு முழுமையாக கைப்பற்றி கொள்ளும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தலித் மற்றும் பழங்குடி மக்களுக்கான சிறப்பு கூறு திட்டங்களின் நிதி குறைக்கப்பட்டள்ளதாகவும் இடது சாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மேலும் ரயில் கட்டண உயர்வை, டீசல் விலை உயர்வோடு இணைத்திருப்பதால், மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்துள்ளன. இந்த இரு பட்ஜெட்களும் உழைக்கும் மக்களின் வறுமையை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஏ.ரி.எம் மெசினில் காசு மோசடி: திருச்சியை சேர்ந்த ஈழத் தமிழர்கள் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டனர் ! தன்னியக்க பண இயந்திரங்களில் போலி அட்டைகளை பயன்படுத்தி பணம் பெற்றதாக கூறப்படும் இலங்கை அகதிகள் நால்வரை பலலூரித்தி பொலிஸார் கைது செய்துள்ளனர்.தமிழ்நாடு, திருச்சியிலுள்ள அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டோரிடமிருந்து 372 போலி அட்டைகள், மடிக்கணினியொன்று, அட்டை படிப்பான், அட்டை தேய்க்கும் இயந்திரம், 14 இலட்சம் ரூபாய் பணத்தை பதுக்கி வைத்திருந்த கார் ஒன்றினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இவர்கள், 1996ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதிகளாக திருச்சிக்கு வந்ததாகவும் லண்டன் மற்றும் ஜேர்மனிலுள்ள ஹோட்டல்களில் தொழில் புரியும் ஐரோப்பியர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் நகர பொலிஸ் ஆணையாளர் கே.ஜி. ஜெம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பலலூரித்தி பொலிஸார் மேற்கொண்டு வருவாக தெரிவித்துள்ளனர்.திருமதி.ரோசலின் ஞானப்பிரகாசம் (பொன் ரோஸ்) - ஈ.என்.டி.எல்.எப். சர்வதேச கிளை இதய அஞ்சலி!
இலங்கை யாழ்ப்பாணம், நெடுந்தீவை
பிறப்பிடமாகமாகவும், இந்தியா, சென்னை, வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட
காலம் சென்ற திரு.ஞானப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும் திரு.ஞானராஜா
மற்றும் திரு.ஞானசேகரன் (E.N.D.L.F ராஜன்) அவர்களின் அன்புத் தாயாருமாகிய
அன்னை, திருமதி.ரோசலின் ஞானப்பிரகாசம் (பொன் ரோஸ்) அவர்கள் வியாழக்கிழமை
அதிகாலை
(26-06-2014) 03 :00 மணியளவில் இறைவனடி
சேர்ந்தார். 11-07-2014 வெள்ளிக்கிழமை பகல் 12:00 மணியளவில் அன்னாரின்
16வது நாள் நிகழ்வுகள் அவரது வளசரவாக்கம் இல்லத்தில் நடைபெறும் என்பதனை
உற்றார், உறவினர்கள், நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம். "புளொட்"டின் 25 ஆவது வீரமக்கள் தினம் நாளை முதல் வவுனியாவில் அனுஷ்டிப்பு!!! வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள தோழர் உமாமகேஸ்வரன் இல்லத்தில் நாளை முதல் (13/07) எதிர்வரும் நான்கு தினங்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) 25 ஆவது வீரமக்கள் தினம் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டு குழுவினர் தெரிவித்துள்ளனர். 13/07/2014 அன்று காலை 09.00 மணிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மறைந்த செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கம் அவர்களின் நினைவாக மலரஞ்சலி நிகழ்வு நடைபெற்று, 16/07/2014 புதன்கிழமை மாலை 03.30 மணிக்கு எமது கழகத்தின் மறைந்த செயலதிபர் தோழர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் நினைவு தினமான வீரமக்கள் தின அஞ்சலி நிகழ்வு நடைபெறும் என ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர். மறைந்த எமது தோழர்கள், அனைத்து போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெறும் அஞ்சலி நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து தமது அஞ்சலியினை செலுத்துமாறு கழகத்தினர் வேண்டி நிற்கின்றனர்.
ஜுலை 12, 2014 புளொட் தலைவர், சுவிஸ் கிளை முக்கியஸ்தர் ஆகியோர் சுவிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடல்..!! புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட்டின் சுவிஸ் கிளை முக்கியஸ்தர்களுள் ஒருவரான சுவிஸ்ரஞ்சன் ஆகியோர்க்கும், சுவிஸ் நாட்டின் அரசியல் விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகரும், சமாதானம், மனித உரிமைகள், மனித உரிமைகளுக்கான கொள்கைகள், குடிவரவு, குடியகல்வுகளுக்கான பிரதம ஆலோசகர் மார்ட்டின் சுக்த்ஸ்சிங்கர் மற்றும் சுவிஸ் அரசின் இலங்கை விவகாரங்களுக்கான செயற்திட்ட நிபுணர் லைலா கிளெமெண்ட் ஆகியோர்க்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (08.07.2014) பேர்னில் உள்ள சுவிஸ் வெளிநாட்டமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. (மேலும்....) 'போதைப்பொருள் பயன்பாட்டினால் தமிழ் இளைஞர் சமூகம் சீரழியுது' - 'சிங்கம்' சிறிதரன் 'போதைப்பொருள் பயன்பாட்டினால் தமிழ் இளைஞர் சமூகம் சீரழியுது' எண்டு 'சிங்கம்' சிறிதரன் 05.06.2014 அண்டைக்கு பாராளுமன்றத்தில முழங்கியிருக்கிறாரல்லோ... மன்னிக்க வேணும்... பாராளுமன்றத்தில் கவலைப்பட்டிருக்கிறாரல்லோ... இதைப் பேப்பரில படிச்சபோது எனக்குத் தலைசுத்திச்சுது. எங்கட சனங்களுக்கு என்னமாதிரி அழுகின வாழைப்பழத்தைத் தோலோட தீத்துறாங்களப்பா... சனங்களுக்கும் இந்த அழுகின வாழைப்பழம்தான் அந்த மாதிரி ருசிக்குது. அந்தோனியாரே... செபமாலை மாதாவே... மாவிட்டபுரக்கந்தா... வற்றாப்பளை அம்மாளாச்சி... இதுகளையெல்லாம் கேட்கிறதுக்கும் பாக்கிறதுக்கும் உங்களுக்கு மனசில்லையோ... 'போதைப்பொருள் மற்றும் மதுபான பயன்பாட்டைக் கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' எண்டு 'சிங்கம்' மேலும் மேலும் சொல்லிக்கொண்டு போகுது. (மேலும்....) The Bombing of Palestine (Through The Eyes of a Neo-con Loon) - SCG News
வட மாகாண ஆளுநரின் பதவிக் காலம் நீடிப்பு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. வட மாகாண ஆளுநராக மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி 2009 ஆம் ஆண்டு ஜுலை 12 ஆம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அவருடைய ஐந்து ஆண்டு பதவிக்காலம் நேற்று 2014 ஆம் ஆண்டு ஜுலை 11 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜி. ஏ. சந்திரசிறியின் பதவிக் காலத்தை நேற்று (11) நீடித் துள்ளார்.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் டெல்லிக்கு இரண்டாவது இடம்உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டோக்கியோவுக்கு அடுத்த படியாக இந்திய தலைநகர் டெல்லி இரண் டாவது இடம்பெற்றுள்ளது. 1990க்கு பிறகு டெல்லியின் மக்கள் தொகை இரு மடங்காகியுள்ளமை ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. உலகின் நகரமயமாக்கல் குறித்து ஐநா வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் மேற்கண்ட தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2030 வரையிலாவது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் வரிசையில் டெல்லி இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள் ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கியநாடுகள் அவையின் அறிக்கை யில் பட்டிலியிட்டுள்ள நகரங்களின் வரிசை யில், ஜப்பான் தலைநகர் டோக்கியோ முத லிடத்திலும் இரண்டாவது இடத்தில் டெல் லியும் உள்ளது. 6 வது இடத்தில் மும்பை உள்ளது. மும்பை எதிர்வரும்; 2030 ஆம் ஆண் டில் இந்த எண்ணிக்கையில் நான்காவது இடத்தை பிடிக்கும் என்றும் அந்த அறிக்கை கணித்துள்ளது. டோக்கியா டெல்லியை தொடர்ந்து ஷங்காய் 23 மில்லியன் மக்கள் தொகையோடு மூன்றாவது இடத் திலும் உள்ளது. கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு: வல்லுனர்கள் விரைவில் ஆய்வுகண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு அளிப்ப தற்காக, அதன் திட்ட அதி காரிகள், விரைவில் காரைக் குடியில் ஆய்வு மேற் கொள்ள உள்ளனர். காஞ் சிபுரம் கண்டாங்கி பட்டு சேலையிலிருந்து உருவா னது காரைக்குடி கொட்டன் கண்டாங்கி சேலைகள். 250 ஆண்டு பழமையான இந்த சேலைகள் முதலில் செட்டிநாட்டவர் எண்ணத் தில் உதித்த வடிவத்தில் உருவாக்கப்பட்டது. இரண்டு போர்டர் கொண்டதாகவும், நடுவில் கட்டம் போட்டதாகவும் அமைந்தது. காரைக்குடியில் மட்டுமே புகழ் வாய்ந்த இந்த சேலைகள், நகரத்தார் மூலம், பல்வேறு நாடுகளிலும் பிரபலமானது. வேறு எந்த சேலையிலும் இல்லாத 48 இஞ்ச் அகலம், 5.5 மீட்டர் நீளம் கொண்டது. நெசவு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளனர். பழம் பெருமை வாய்ந்த இவற்றை கலெக்டர் ராஜராமன் புவிசார் குறியீடு பெறுவதற்காக அனுப்பி வைத்தார். அதன் அடிப்படையில், டில்லியில் உள்ள புவிசார் குறியீட்டு அதிகாரிகள், புவிசார் குறியீடு சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க, கடந்த 26, 27ல், ஐந்து நெசவாளர்களை டில்லிக்கு அழைத்திருந்தனர். ஜுலை 11, 2014
பிரேசில் மக்களிடம் மன்னிப்பு கோரும் லூயில் ஸ்கொலரி : தோல்வியில் இருந்து மீளாத பிரேசில் ரசிகர்கள்!!
உலக கிண்ண அரையிறுதிப் போட்டியில் ஜேர்மனி அணியுடனான அடைந்த படுதோல்வி குறித்து பிரேசில் அணியின் தலைவரும் பயிற்றுவிப்பாளரும் கருத்து வெளியிட்டுள்ளனர். அரையிறுதிப் போட்டியில் தமது அணி தோல்வியடைந்தமைக்கு தாம் பொறுப்பேற்பதாக பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளர் லூயில் ஸ்கொலரி தெரிவித்துள்ளார். ஜேர்மனியுடனான போட்டியில் 7 -1 என்ற கணக்கில் பிரேசில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. இந்த நாள் என் வாழ்க்கையில் மிகவும் மோசமான நாளாக கருதுவதாக ஸ்கொலரி தெரிவித்துள்ளார். அத்துடன் பிரேசில் மக்களிடம் தாம் அடைந்த தோல்விக்காக அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இதேவேளை ஜேர்மனி அணியுடனான அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்றமைக்கு தம் நாட்டு மக்களிடம் பிரேசில் கால்பந்தாட்ட அணித்தலைவர் டேவிட் லுயிஸ் மன்னிப்பு கோரியுள்ளார். இந்த தோல்வியானது தாம் மேலும் கற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கி தந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....) வலிக்கும் உண்மை.. 1.செல்போன்ல பட்டன பாத்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 2.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 3.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 4.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 5. தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 6.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 7.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 8. நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 9. மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும். 10 .மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...! 11.ஒளியும் ஒலியும் பாத்த கடைசி தலைமுறையும் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நம்மளாதான் இருக்கும். காற்றைச் சுத்தப்படுத்தும் வீட்டுச் செடிகள்...! வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்...
மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே... உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...கற்றாழை (AloeVera): மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்! சீமை ஆல் (Rubber plant): வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மைகொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும். வெள்ளால் (Weeping Fig): காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும். மூங்கில் பனை (Bamboo Palm) : காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும். ஸ்னேக் பிளான்ட் (snake-plant): நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட சூழ்நிலை களில்கூட வாழும் தன்மைகொண்டவை. கோல்டன் போட்டோஸ் (golden pothos): நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்! வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாதபட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே! சந்திரசிறியின் பதவிக்காலம் நீடிப்பு? தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள வடமாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவிடாது வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இடைஞ்சல்களை ஏற்படுத்திவருகின்றார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் அவரது பதவிக்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக மிகவும் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. வடக்கு மாகாணசபையில் ஆளுநராகப் பதவி வகித்த முன்னாள் இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சந்திரசிறி சர்ச்சைக்குரிய ஒருவராகவே இருந்து வந்தார். வடக்கு மாகாணத்துக்கு இராணுவப் பின்னணி கொண்ட ஆளுநர் வேண்டாம் என்றும் சிவில் பின்னணி கொண்ட ஆளுநர் ஒருவரை நியமிக்குமாறும் வடக்கு மாகாணசபையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும் ஜனாதிபதி அதனைக் கண்டுகொள்ளவில்லை. இந்தநிலையில் மீண்டும் பாதுகாப்புத் தரப்புடன் தொடர்புடையவரும் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவருமான பிரதி காவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் இதுவரை அடுத்த ஆளுநர் யார் என்பது உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஜுலை 10, 2014 விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் - சசீதரன் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை. (மேலும்....) மனதை உறையவைக்கும் முள்ளிவாய்க்கால் சாட்சியங்கள்...நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது – மனைவி எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார். எனது கணவர் 18.03.2009 அன்று வலைஞர்மடம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது காலை 5.30 மணிக்கு கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் குறித்து இதுவரை தகவல் எவையும் கிடைக்கவில்லை. எனினும் பத்திரிகைகள் ஊடாக எனது கணவர் கைது செய்யப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதை அறிந்து கொண்டேன். அவருடன் மேலும் இருவர் போனவர்கள் எனினும் அவர்களை கடற்படை விடுவித்துவிட்டனர். இவர்களே என்னிடம் கணவர் கைது செய்யப்பட்டதை தெரிவித்தனர். (மேலும்....)
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உட்பட 7 பேர் விடுதலை! தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சாந்தன்,
முருகன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு
மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே,
தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த காங்கிரஸ் அரசு, உச்ச
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற
அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம்
உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன
அமர்வு முன்பு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் பிரதமர்
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட
7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு வழக்கறிஞர்
எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார். குற்றவாளிகள் தண்டனை குறைப்பு, விடுதலை
என இரு பலன்களை பெறும் நிலை கூடாது என்றும், பாதிக்கப்பட்டவர்களின் கருத்தை
கேட்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.
குற்றவாளிகளை விடுவிக்கும் உரிமை மத்திய அரசுக்கு உள்ளதாகவும் வழக்கறிஞர்
தனது வாதத்தின்போது எடுத்துரைத்தார். போட்ட டீல் என்ன ? ஜெயாவின் தலை தப்பியது எப்படி ?வருமான வரி ஏய்ப்பு செய்ததாக முதல்வர் ஜெயலலிதா, அவரது உடன்பிறவா தோழி சசிகலா ஆகியோர் மீது வருமான வரி தொடர்ந்த வழக்கு விரைவில் முடிவுக்கு வருகிறது. 17 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் மத்திய பாரதிய ஜனதாவின் அரசால் ஜெயலலிதாவுக்கு விடிவுகாலம் ஏற்படப்போகிறது.இதன் மூலம் ஜெயலலிதா – மோடியின் முதல் டீலிங் சக்சஸில் முடிந்துள்ளது. வருமான வரி ஏய்ப்பு செய்ததாக 1997ம் ஆண்டு வருமான வரித்துறை ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவர் மீது ஒரு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றப்பிரிவு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணைக்காக வரும்போதெல்லாம் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் ஆஜராவதில்லை. பல காரணங்களைக்கூறி இழுத்தடித்து வந்தனர். கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவுபோட்ட நீதிபதிகூட இடமாற்றம் செய்யப்பட்ட கதையும் நடந்தது உண்டு. ஜெயலலிதா, சசிகலா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில், அதற்குப் பதிலாக இரண்டு மனுக்கள் ஆஜராகின. அதில், “இந்த வழக்கு தொடர்பாக வருமான வரித்துறையிடம் நான் ஒரு மனு கொடுத்திருகிறேன், அது அதிகாரிகளின் பரிசீலனையில் உள்ளது. (மேலும்....) "தமிழீழம்" தான், தம்பி பிரபாகரனின் பலமும், பலவீனமும்..! - சுவிஸ் வீரமக்கள் தின நிகழ்வில் "புளொட்" தலைவர் சித்தார்த்தன் தெரிவிப்பு!! தம்பி பிரபாகரன் தமிழீழம் என்கிற அந்த கோரிக்கையிலே மிக அர்ப்பணிப்புடன் இறுதிவரையில் நின்றிருந்தார். அதுதான் அவருடைய பலம்; அதேநேரம் அவருடைய பலவீனமும் அதுவே என்று 'புளொட்' தலைவரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சர்வதேச ஒன்றியங்களின் சார்பில், கழகத்தின் சுவிஸ் கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை மாலை சுவிஸ்லாந்தின் சூரிச் மாநகரில் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். (மேலும்....) ஐ. தே. கட்சி கறுப்பு ஜுலையை நாடளாவிய ரீதியில் நடாத்தி தமிழர்களின் உரிமைகளையும் உடமைகளையும் இல்லாதொழித்தது - அனுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இரு வருட ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ரவி கருணாநாயக்க ‘சதொச’ பொது விற்பனை நிலையங்களை மூடி சாதனை படைத்தார். இதனால் சதொச ஊழியர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கினர் என ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க கூறினார். இரத்தினபுரியில் அண்மையில் (08) நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, 1983ஆம் ஆண்டு ஆட்சி செய்த ஜே. ஆர். ஜெயவர்தனவின் ஐ. தே. கட்சி பல்வேறு ஊழல்களை செய்தது. இதனை நாட்டு மக்களுக்கு மறைத்து அவர்களின் எண்ணங்களை திசை திருப்ப கறுப்பு ஜுலையை நாடளாவிய ரீதியில் நடாத்தி தமிழர்களின் உரிமைகளையும் உடமைகளையும் இல்லாதொழித்தது. ரணில் விக்கிரமசிங்கவை அக்கட்சி முற்றாக நிராகரித்துள்ளது. அவரது ஆட்சியில் மக்களுக்கு எவ்வித நிவாரணமோ, தொழில்வாய்ப்புக்களோ பெற்றுக்கொடுக்கப்படவில்லை. ரணில் விக்கிரமசிங்கவினால் ஊழல் மோசடியை இல்லாதொழிக்க முடியாது என்றார். காசா மீதான இஸ்ரேல் வான் தாக்குதல்கள் தீவிரம்: இதுவரை 28 பலஸ்தீனர்கள் பலி
பலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது மேலும் பல ரொக்கெட் தாக்குதல்களை நடத்திய தோடு பதிலுக்கு இஸ்ரேல் காசா மீது வான் தாக்குதலை அதிகரித்திருக்கும் நிலையில் அங்கு மோதல் தீவிரமடைந்துள்ளது.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தெற்கு இஸ்ரேல் மீது நான்கு ரொக்கெட்டுகள் தாக்கியதாகவும் இந்த தாக்குதல் நேற்று புதன் கிழமையும் நீடித்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவை நோக்கி வந்த இரு ரொக்கெட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. பதிலடியாக செவ்வாய்க்கிழமை இரவு காசா மீது 160 வான் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. அண்மைய தாக்குதல்களில் 28 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் 70 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து இஸ்ரேலியரும் தமது இலக்கா கும் என்று ஹமாஸின் இராணுவ பிரிவு எச்சரித்துள்ளது. (மேலும்....) ஜுலை 09, 2014 நடேசன் எழுதிய “அசோகனின் வைத்தியசாலை“ நாவலின் அறிமுக நிகழ்வு யாழ்ப்பாணம் திருமறைக்கலாமன்ற கலைத்தூது மண்டபத்தில் 06.07.2014 காலை நடந்தபோது....
A picture worth
a thousand words:
யாழ்ப்பாணத்தில் ரமபோ'வுக்கு வரவேற்பு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதியும் இலங் கைக்கான விசேட பிரதிநிதி யுமான சிறில் ரமபோஷவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகி யோர் வரவேற்றனர். யாழ்ப்பா ணம் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு நேற்று வருகை தந்த தென்னா பிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷ தலைமையி லான குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். இதன் போது ஹெலிகொப்டரில் வருகை தந்த சிறில் ரமபோஷ தலமையிலான குழுவினர் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வருகை தந்தபோது அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷவுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த அவர் தற்போதைய நிலவரம் தொடர்பில் கலந்துரையாடினார். இலங்கையில் நல்லிணக்க நடவடிக் கைகள் குறித்து தென்னாபிரிக்காவின் பதில் ஜனாதிபதி சிறில் ரமபோஷ தலைமையிலான குழுவினர் ஆராயவுள் ளனர். 13 குறித்து பேசினோம் - த.தே.கூ இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க பிரதி ஜனாதிபதியும் சமாதான தூதுவருமான சிரில் ரமபோசவுடன் சமாதான செயன் முறை, அரசியமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல் படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியதாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ரமபோஸாவுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாக்கிழமை (08) கொழும்பில், ஹோட்டல் தாஜ் சமுத்ராவில் சுமார் ஒன்றரை மணிநேரம் நடைபெற்றது. இலங்கையின் இனப் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தென்னாபிரிக்காவின் அனுவங்களை உதவியாகக் கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. சமாதான செயன் முறை, அரசியமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினோம். நல்லிணக்கம் மற்றும் இன ஒற்றுமை தொடர்பான தனது அனுபவத்தை ரமபோச, எம்முடன் பகிர்ந்து கொள்ள வந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அவர் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இங்கு வந்துள்ளார். நாம் அவருடன் ஆக்க பூர்வமான முறையில் பேசினோம் என சம்பந்தன் மேலும் கூறினார். Canada Host's Sri Lanka's Most Wanted Terrorist Human smuggling by LTTE ignored by Canada By Camelia Nathaniel
Sri Lanka’s Vavuniya High Court Judge sentenced Kanagarajah Ravishankar alias Sangilli, one of Sri Lanka’s most wanted terrorists, in absentia to 30 years imprisonment on June 24, 2014. The police are seeking international support to apprehend the convict. Together with Shanmugasundaram Kanthaskaran alias Karan alias Aruna of the LTTE Branch in London, Ravishankar of the LTTE Branch in Canada was responsible for transporting arms, ammunition and explosives from North Korea to Sri Lanka. Initially the duo worked for Kumaran Pathmanathan alias KP; and from December 2002 until May 2009 they worked for Ponniah Anandarajah alias Ayyar, a US citizen, who managed the North Korean account. They served in the procurement and shipping branch of the LTTE while engaging in clandestine and criminal activities such as drug trafficking, human smuggling and financial fraud, etc. After the Sri Lankan conflict ended, they continued with their criminal activities including human smuggling ventures to Canada, US, Europe, Australia and New Zealand. (more....) தீர்வுத்திட்டத்துக்கு ஒத்துழைக்கவும் - ரமபோசவிடம் சி.வி. 'இந்தியா எமது இனப் பிரச்சினைக்கு தீர்வுத்திட்டம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு மேற்குலக நாடுகள் மற்றும் ஜெனீவா ஆகியன ஆதரவு வழங்கிவருகின்றன. நீங்களும் அதற்கான ஒத்துழைப்பை வழங்குங்கள்' என தென்னாபிரிக்காவின் பிரதி ஜனாதிபதியும் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான சிறில் ரமபோசவிடம் கேட்டுக்கொண்டதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சிறில் ரமபோச, 'தென்னாபிரிக்காவும் பல இனங்களையும் மதங்களையும் கொண்ட நாடு. அங்கு நீண்டகாலமாக நிலவிய இனப் பிரச்சினைகளை தாம் தற்போது தீர்த்துள்ளதாகவும் தமது நாட்டில் சுமூகமான நிலையை தோற்றுவித்தது போன்று, இலங்கையிலும் தம்மால் முயற்சி செய்து பிரச்சினைகளை தீர்க்க முயல்வதாகவும் கூறினார். இது தொடர்பில் மற்றைய நாடுகளுடன் சேர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக சிறில் ரமபோச உறுதியளித்துள்ளார்' வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (மேலும்....)பாகிஸ்தான் சிம்கார்டுகளுக்கு இந்தியாவில் விரைவில் அனுமதிஇருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் பதிவு செய்ய ப்பட்ட சிம்கார்டுகளை இந்தியாவில் பயன்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சிற்கு வர்த்தகத்துறை செயலாளர் ராஜவ் கெர் கடிதம் எழுதியுள்ளார். அதில் பாகிஸ்தானில் இருந்து விசா மூலம் இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரவாதிகள் அல்ல. எனவே அவர்களுக்கு பாகிஸ்தான் சிம்களை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமே இருநாடுகளுடன் பரஸ்பர உறவு உருவாகும். பாகிஸ்தான் சிம்கார்டுகளுக்கு அனுமதி அளிப்பதால் இந்தியா டெலிகொம் டிராபிக்கை நன்றாக மொனிட்டர் செய்ய முடியும். இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து வரும் ஒருவர் ஸ்கைப் போன்ற வசதிகளையும் இங்கே பயன்படுத்த முடியும். பாகிஸ்தானில் இருந்து வரும் வர்த்தகர்;களுக்கு இந்தியாவில் 10 நகரங்களுக்கு செல்ல விசா வழங்கப்பட்டாலும் கையடக்கத்தொலைபேசியில் பேச இந்திய சிம்கார்டுகளையே சார்ந்திருக்க வேண்டி உள்ளது. அதேபோல் பாகிஸ்தானிலும் இந்திய சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். எதிர்வரும் 24ஆம் திகதி மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை மந்திரி நிர்மலா சீத்தாராமன் மற்றும் பாகிஸ்தான் வர்த்தகத்துறை மந்திரி குர்ராம் தாத்கிர் கான் ஆகியோர் சந்திக்க உள்ளனர். மத்தியில் மோடி அரசு பொறுப்பேற்ற பின் இருநாடுகளின் வர்த்தக மந்திரிகள் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
நறுக்கென்று நாலு வார்த்தை - சாகரன் செய்தி: '2003 ம் ஆண்டே UNO இற்கு தெரியும் புலிகள் அழிக்கப்படுவார்கள்' என்று ஆனால் 'எமக்கு 1986 ம் ஆண்டே இது தெரியும்......' I Know! .....You Know!!......UNO!!!..... But I Know more Than You? (அடுக்கு மொழி மூலம்: சி.என். அண்ணாத்துரை) புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக இன்று அதிகளவு முறைப்பாடுகள்! காணாமற்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் 3ம் நாள் அமர்வுகள் முல்லைத்தீவு- கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் தொடர்பாக அதிகளவு முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. மேற்படி ஆணைக்குழு கடந்த 2 தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் நிலையில் இன்றைய தினம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்ற 3ம் நாள் அமர்வின் போது 61பேர் சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 40 பேர் வரையில் கலந்து கொண்டு சாட்சியங்களை வழங்கியிருந்தனர். (மேலும்....) உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தை கலைக்கூடமாக மாற்றிய ஜனாதிபதி
எல் சல்வடோரின் புதிய ஜனாதிபதி தனது உத்தியோகபு+ர்வ வாசஸ் தலத்தை ஏழைகளை வரவேற்கும் ஒரு கலைக்கூடமாக மாற்றியமைத் துள்ளார். முன்னாள் கிளர்ச்சி தளபதியும் இடதுசாரியுமான ஜனாதிபதி சல்வடோர் சன்செஸ் தலைநகர் சான் சல்வடோரில் மத்திய வர்க்கத்தினர் வாழும் பகுதியில் இருக்கின்ற தனது குடும்பத்தினரின் வீட்டிலேயே தொடர்ந்தும் வசிப்பதற்கு தீர்மானித்துள்ளார். கலைக்கூடமாக திறக்கப்பட்டிருக்கும் ஜனா திபதி மாளிகைக்கு சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள் வந்து தமது நாட்டின் கலை பெருமைகளை பார்க்க முடியும் என்று புதிய ஜனாதிபதி அறிவித்துள்ளார். தனது புதிய உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் 1980கள் மற்றும் 90களில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களே முதல் பிரமுகர்களாக அழைக்கப்பட்டிருந்தனர். எல் சல்வடோரில் அமெரிக்க ஆதரவு அரசுக்கும் இடதுசாரி கிளர்ச்சியாளர் களுக்கும் இடையில் ஏற்பட்ட சிவில் யுத்தத்தில் சுமார் 75,000 பேரளவில் கொல்லப்பட்டனர். மத்திய அமெரிக்க நாட்டின் முதலாவது கொரில்லா தலைவராக ஜனாதிபதி பொறுப்பை ஏற்ற 69 வயதான சன்செஸ், நாட்டின் ஊழலை ஒழிப் பதாக வாக்குறுதி அளித் துள்ளார். வன்முறை கும்பல் கள் அதிகரித்துக் காணப்படும் எல் சல்வ டோர், உலகில் அதிக கொலைகள் இடம் பெறும் நாடாகும். எப்படிங்க இவ்வளவு பேர் இவரை நம்புனாங்க ? மோடி பிரதமரானால்பணவீக்கப் பிரச்சனைமுதல் மூத்திரசந்துகளில் ஒட்டப்படும் விரைவீக்க பிரச்சனை வரை சகலமும் தீர்ந்து விடும் என சத்தியம் செய்த வல்லுனர்கள் அத்தனை பேருமே, “தொடர்பு எல்லைக்கு வெளியே” இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு
முன்பு வரை ஒரு பெருங்கூட்டம் இணைய வெளியில் மோடி வழிபாட்டை நடத்திக்
கொண்டிருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்னால், எதிர்ப் படுபவர்களில் பாதிபேர்
ஏதோ ஒரு மல்டிலெவல் மார்கெட்டிங்கில் சேர்ந்து, நம்மையும் அந்தப்
படுகுழிக்கு இழுக்க முயன்றதைப்போல, இரண்டு மாதங்களுக்கு முன்பு வரைக்கும்
மோடிக்காக ஒரு பெரும் ஆள் சேர்ப்பு நடந்தது. “நீங்கள் இன்னுமா மோடியை
ஆதரிக்க மறுக்கிறீர்கள்?” என மிடில் கிளாஸ் தேசபக்தர்கள்
கேள்வியெழுப்பினார்கள். மோடியை ஆதரிக்காமல் இருப்பது தேசவிரோதம் எனுமளவுக்கு
திமிர்வாதம் புரிந்தார்கள் ஆர்.எஸ்.எஸ் ரவுடிகள். விடுதலைப் புலிகள் அழிக்கப்பட போகிறார்கள் என்பது 2003ம் ஆண்டே ஐ.நாவுக்குத் தெரியும்! இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்ற விசாரணை தொடர்பிலான குழுவை ஐக்கிய நாடுகளவையின் மனிதவுரிமை பேரவை அமைத்து விட்டது. எனவே இந்தக் குழு எந்த விடயங்களை கையாளும் என்பது பற்றிய ஒரு திறந்த ஆய்வை லங்காசிறி வானொலி நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருக்கும் ஆய்வாளர் சுதர்மா அவர்களுடன் கருத்துப் பகிர்வில் ஈடுபட்டிருந்தது. இதன் போது இதுவரை உலகின் பார்வைக்கு தெரிய வராத, 2003ம் ஆண்டே விடுதலைப்புலிகள் அழிக்கப்பட போகிறார்கள் என்பது மேற்குலகிற்குத் தெரியும் என்ற புதிய செய்தியை தகுந்த ஆதாரங்களோடு வெளிக் கொணர்ந்தார். (மேலும்....) 41 இலங்கையரை திருப்பியனுப்பியது ஆஸி. சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்றடைந்த இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 41 பேரும் இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டின் குடிவரவுத் துறை அமைச்சர் ஸ்கொட் மொரிசன் உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த ஜூன் மாதம் சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்றடைந்த இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் நேற்று முன்தினம் மட்டக்களப்பு துறைமுக கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற் படையினரிடம் கையளிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் காலியில் சீ. ஐ. டி. யினரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன. கையளிக்கப்பட்டவர்களுள் 37 பேர் சிங்களவர்களெனவும் நால்வர் தமிழர்களெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகலிடக் கோரிக்கையா ளர்கள் ‘கொகோஸ்’ கரையோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தனர். வேண்டியவர்களென கருதப்பட்டோர் பப்புவா நியூகினியா ஆகிய தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கையிலிருந்து வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பும் செயற்பாடு வெற்றியடைவதற்கு அவுஸ்திரேலிய இலங்கை அரசாங்கங் களுக்கிடையில் உறுதியான ஒத்துழைப்பு இருப்பதே காரணமாகும். இலங்கை கடற்படையினரும் இலங்கையைச் சேர்ந்த ஏனைய அதிகாரிகளும் ஆட்கடத்தல்களை முறியடிப்பதற்காக எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட் டுகின்றோம். பொதுபலசேனா செயலாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கைபொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எச்சரிக்கை விடுத்த கோட்டை பிரதான நீதவான் திலினி கமகே, மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். நிப்பொன் ஹோட்டலில் நடைபெற்ற ஜாதிக பலசேனா ஊடகவியலாளர் மாநாட்டிற்குள் புகுந்து ஆவணங்களை பறித்துச் சென்றமை, குர்ஆனை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த வழக்கு விசாரணையின் போது முறைப்பாட்டாளர் தரப்பு சட்டத்தரணிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பில் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விளக்கமளித்தனர். இதன் போது கருத்துத் தெரிவித்த நீதவான் சட்டத்தின் முன் அனைவரும் சமன் எனவும் எவருக்காகவும் ஆஜராக சட்டத்தரணிகளுக்கு உரிமை உள்ளது என்றும் குறிப்பிட்டார். சட்டத்தரணிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக் குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இதே வேளை குர்ஆனை அவமதிக்கும் வகையில் பேசிய இருவட்டை முஸ்லிம் விவகார பணிப்பாளர் நாயகத்துக்கு அனுப்புமாறும் நீதவான் பணித்தார். சிறில் ரமபோஷ இன்று யாழ். பயணம்இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் விசேட பிரதிநிதியும் அந்நாட்டின் உப ஜனாதிபதியுமான சிறில் ரமபோஷ தனது பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று இலங்கை வந்தடைந்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜ யம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இவர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆராயவுள்ள ரமபோஷ, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறி, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், யாழ். பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார். இதேவேளை நேற்றைய தினம் ரமபோஷா, அரச தரப்பு அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ரவூப் ஹக்கீம், பைசல் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்தன ஆகியோரை நேற்று மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வைத்து சந்தித்து உரையாடினார். அதனைத் தொடர்ந்து அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் ஜனாதிபதி இவருக்கு விசேட விருந்துபசாரம் வழங்கி கெளரவித்திருந்தார். ரமபோஷா நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பதற்கும் ஏற்பாடாகியிருந்தது. ஜுலை 07, 2014 அபிமன்யு பதில்கள் நூல் வெளியீடு
கண்ணோட்டம் பத்திரிகையில் பிரசுரமான கேள்வி- பதில்களின் தொகுப்பு நூல் வடிவில் வெளியிடப்பட்டது. இன்று பிற்பகல் (06-07-2014) 3.45 மணியளவில் கண்டி வீதியில் அமைந்துள்ள பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு திருநாவுக்கரசு ஸ்ரீதரன் (சுகு)- பொதுச்செயலாளர் தலைமை வகித்து உரையாற்றும்போது அபிமன்யு பதில்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நெருக்கடியான, ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட காலகட்டத்தில் கண்ணோட்டம் பத்திரிகையில் வெளிவந்த வகையில் முக்கியத்துவம் மிக்கதாகும். கேள்வி பதில்கள் சற்று விரிவாக காணப்பட்டாலும் இலங்கை தமிழர் அரசியல் நிலைமைகளை யதார்த்தமாக மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. (மேலும்....) முஸ்லிம் மாணவரின் நலன்
தமிழ்த்தின போட்டி ஒத்திவைப்பு அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டியின் இறுதிப் போட்டி ஜூலை 31ஆம் திகதிக்கு பின்போடப் பட்டுள்ளது. நோன்பு மாத நாட்களில் முஸ்லிம் மாணவர்களின் செளகரியம் கருதி இந்த திகதி மாற்றம் தேவையென சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி கல்வி அமைச்சின் செயலாளரிடம் பிரஸ்தாபித்திருந்தார். அதனைத் தொடர்ந்து புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் கவுன்சில் இவ்விடயத்தை அமைச்சுக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது. இறுதிப் போட்டிகள் ஜூலை 26ஆம் திகதி நடைபெறுமென முன்னர் அறிவிக்கப்பட்டி ருந்தது. கொழும்பு, கொட்டாஞ்சேனை, வவுனியா போன்ற இடங்களில் அகில இலங்கை தமிழ்த்தினப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திகதி மாற்றம் தொடர்பாக செயற்பட்ட அமைச்சர் பெளஸி கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோருக்கு முஸ்லிம்கள் சார்பில் முஸ்லிம் கவுன்சில் நன்றி தெரிவித்து உள்ளது. யாழ்.சாவகச்சேரியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு, அடிதடியாழ். சாவகச்சேரியில் இரு இளைஞர் குழுக்களிடையே தனிப்பட்ட ரீதியில் ஏற்பட்ட கடும் மோதலில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் ஆறுபேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். சம்பவத்தில் அல்லாரை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் அன்பழகன் (26) என்ற இளைஞனே வாள் வெட்டில் பலியாகியி ருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். கொடிகாமம் கச்சாய் அம்மன் கோவிலில் நேற்று மாலை இளைஞர் குழுக்களுக்கி டையே உருவான இந்த மோதல் கைகலப்பாக மாறியதுடன் யாழ் சாவகச் சேரி வைத்தியசாலை வளாகத்திற்குள்ளும் தொடர்ந்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அம்மன் கோவிலில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இசைக் கச்சேரியில் வைத்தே இரு தரப்பினருக்குமிடையில் மோதல் உருவாகியுள்ளது. சம்பவத்தில் இளைஞரொருவர் காயமடைந்துள்ளார். அவருக்கு சிகிச்சையளிப்பதற்காக மேலும் இரண்டு இளைஞர்கள் காயமடைந்த இளைஞனுடன் மோட்டார் சைக்கிளில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றனர். இதனையறிந்த எதிர் கோஷ்டியினர் மோட்டார் சைக்கிளில் அவர்களை பின்தொடர்ந்து சென்று, வைத்தியசாலை வளாகத்திற்குள் வைத்து காயமடைந்த நபரை ஏற்றிச்சென்ற ஏனைய இருவரையும் வாளால் வெட்டிய பின்னர் தலை மறைவாகியுள்ளனர். வாள் வெட்டுக்கு இலக்கான மூவரும் சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சையின் பொருட்டு யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களுள் ஒருவரான உதயகுமாரே சிகிச்சை பலனின்றிய நிலையில் உயிரிழந்துள்ளார் கிளர்ச்சியாளர்களின் கோட்டை உக்ரைன் படையினர் வசம் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக இருந்த வர்த்தக நகரான ஸ்லோவியன்ஸ்கை மீட்டிருக்கும் உக்ரைன் படையினர் அங்கு உக்ரைன் தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். உக்ரைன் படையினரின் தாக்குதலையடுத்து கிளர்ச்சியாளர்கள் நகரை விட்டு பின்வாங்கியுள்ளனர். "ஸ்லோவியன்ஸ்க் நகர கௌன்ஸில் கட்டிடத்தில் படையினரின்; அணிவகுப்பிற்கு மத்தியில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது" என்று உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் வெலரி ஹெலடி குறிப்பிட்டுள்ளார். பாரிய தாக்குதல் காரணமாக தமது படையினர் பின்வாங்கியதாக ஸ்லோவியன்ஸ்க் மக்கள் குடியரசு தலைவர் அலக்சான்டர் பொரோடாய் ரஷ்யாவின் இன்டர்பக்ஸ் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்தும் இரு பிராந்திய தலைநகர்கள் மற்றும் முக்கிய பகுதிகளை தமது கட்டுப்பட்டில் வைத்துள்ளனர். கடந்த நவம்பரில் ரஷ்ய அதரவு உக்ரைன் ஜனாதிபதி விக்டர் யனுகோவிச் ஐரொப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடாததை அடுத்தே உக்ரைனின் தற்போதைய பிரச்சினை ஆரம்பமானது. ஜுலை 06, 2014 ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க பா.ஜ.க எதிர்ப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுவிக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணியை போன்றே தானும் எதிர்ப்பு தெரிவிக்க பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சாந்தன், முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு கடந்த 2001ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் கருணை மனு மீது தாமதாக பதில் அளிக்கப்பட்டதால் அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து ராஜீவ் வழக்கில் கைதான சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கப் போவதாக முதல்வர் ஜெயலலிதா கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி அறிவித்தார். ஒரு நாட்டின் பிரதமரை கொலை செய்தவர்களை விடுவிக்கவே கூடாது என்று அது நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதையடுத்து ஏப்ரல் 25ஆம் திகதி இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன பெஞ்சிற்கு உச்ச நீதிமன்றம் மாற்றியது. இது குறித்து வரும் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்படுகிறது. அன்றைய தினம் பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்க உள்ளது என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பிடம் ஒன்றும் இல்லைஎன்பதை போட்டுடைத்திருக்கும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்
கூட்டமைப்பின் பேச்சாளரும் ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகமுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தீர்வுத் திட்டத்திற்கான ஆலோசனைகளை மக்க ளிடமிருந்து கோரியிருந்தார். அதற்கிணங்க பலரும் தங்களின் ஆலோசனை களை, பிரேமச்சந்திரனுக்கு அனுப்பி வைத்திருக்கின் றனர். இதனை தமிழ் ஊடகங் கள் எல்லாம் பெரிய எழு த்தில் பிரசுரித்திருந்தன. ஆளும் ஐக்கிய மக்கள் சுத ந்திரக் கூட்டமைப்பினால் புலிகள் அமைப்பு தோற்கடிக் கப்பட்டு ஐந்து வருடங்கள் ஓடி விட்டன. இந்த ஐந்து வருடங்களாக கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு பற்றி பேசாத நாளில்லை. தினங்களாக, மாதங் களாக, வருடங்களாக சதா தீர்வுத் திட்டம் பற்றியே கூட்டமைப்பு பேசி வந்திருக்கிறது. அந்தத் தீர்வு திட்டத்தை வரைவதற்காகவே, சட்ட வல்லுநர்களான எம். ஏ. சுமந்திரன், ஓய்வுபெற்ற நீதிபதி விக்னேஸ்வரன் ஆகியோரையெல்லாம் சம்பந்தன் ஐயா கூட்டமைப்புக்குள் உள்வாங்கினார். சட்ட வல்லுநரான சம்பந்தன் ஐயா, நீலன் திருச்செல்வத்துடன் இணைந்து தீர்வு விவகாரங்கள் தொடர்பில் பணியாற்றிய ஒருவர் என்பதை அனைவரும் அறிவார் கள். (மேலும்....) வடக்கு மாகாண ,அவைத்தலைவர் மற்றும் அமைச்சர்களுக்கு புதிய வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
அரசினால் வரிவிலக்கழிக்கப்பட்டு மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் வாகனங்கள் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம், அமைச்சர்களான ஐங்கரநேசன், குருகுலராசா மற்றும் டெனீஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சிற்குமாக 5வாகனங்கள் இன்று கையளிக்கப்பட்டன. மேலும் முதலமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோருக்கான வாகனங்கள் ரொயாட்டாகம்பனியிலிருந்து கொண்டு வரப்படவுள்ளதால் அவை சற்று தாமதமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சா்கள் பெற்றுக் கொண்ட இந்த வாகனங்கள் அமைச்சா்களால் தெரிவு செய்யப்பட்டு அதன் நிறம் என்ன, உள்ளே உள்ள சீற் என்ன வடிவத்தில் இருக்க வேண்டு்ம் என்பவற்றையெல்லாம் தெரிவு செய்து அரசிடம் கொடுத்தே இந்த வாகனத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனா். அப்படிப் பெற்றுக் கொண்டாலும் கூட அதை நேரே போய் வாங்க வெக்கப்பட்டு , தமிழ்த் தேசியம் பாதிக்கப்படும் என்ற நல்ல எண்ணத்தோடு இவா்கள் தங்கள் செலாளா்களைக் கொண்டு வாங்கியுள்ளனா். இந்த கேவலம் கெட்ட பிழைப்பு உங்களுக்குத் தேவையா அமைச்சா்களே!! வன்னியில், யாழில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு எத்தனையோ பேர் தற்கொலை செய்து கொண்டும், தற்கொலை நினைவோடும் இருக்கும் போது நீங்கள் இங்கு ஏசி வாகனம் வாங்கி ஓட்டிக் கொண்டு திரியப்போறீா்களா செய்தியும் சிந்தனையும் (8) (அபிமன்யு) செய்தி பத்மநாபா ஈபிஆர்எலஎவ் ஏற்பாட்டில் 21.06.2014 அன்று லண்டனில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்ப்பட்டது. இந் நிகழ்வின் ஒரு அம்சமாக 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. ஊடகவியலாளர்கள், தமிழ்க் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் ஆய்வாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் இந்தக் கருத்தரங்கில் பங்கெடுத்துக் கருத்துக்களைத் தெரிவித்தனர். சிந்தனை தமிழ்பேசும் மக்கள் தன்மானத்துடனும், சுதந்திரத்துடனும் ஒரு சமத்துவமான இனமாக இலங்கையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டு மரணத்தைத் தழுவியவர்கள், எந்த நோக்கத்திற்காகத் தம் இன்னுயிர்களை ஈந்தார்களோ அந்த நோக்கங்கள் எதுவுமே எய்தப்படாமல் மக்கள் மோசமான நிலைமைகளிலேயே வாழ்கிறார்கள். தமிழ்மக்களின் சுதந்திரமும் சமத்துவமும் அதற்கான அரசியல் தீர்வும் இன்னும் எட்டாத, தூரத்தூர விலகும், கனியாக இருந்து கொண்டிருக்கும் நிலைமையே இன்றைய துர்பாக்கிய யாதார்த்த நிலைமையாகும். (மேலும்....) வீரமக்கள் தின நிகழ்வில் பங்கேற்கும் முகமாக, சூரிச் பயணமானார் "புளொட்" தலைவர் நாளைக்காலை (06.07.2014) சூரிச் மாநகரில் புளொட்டின் சுவிஸ் கிளை சார்பில் நடாத்தப்படவுள்ள 25ஆவது வீரமக்கள் தின நிகழ்வில் கலந்து கொள்ளும் முகமாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் அவரது பாரியார் திருமதி மீனா சித்தார்த்தன் அவர்களும் இன்றுகாலை சூரிச் நோக்கிப் பயணமானார்கள். (மேலும்....) மத்தியில் நந்தி இருக்கின்றது - சி.வி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பண உதவி செய்வதற்கு எமது புலம்பெயர்ந்த மக்கள் ஆயத்தமாக இருப்பதுடன், நாங்களும் பெற ஆவலாய் உள்ளோம். ஆனால் மத்தியில் நந்தி இருந்து தடுப்பதுதான் தற்போதைய பெரிய பிரச்சினையாக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இன்று சனிக்கிழமை (05) தெரிவித்தார். அண்மைக் காலங்களில் புலிகள் சார்பான நிறுவனங்கள் வடமாகாண மக்களுக்குப் பணம் கொடுப்தை நாங்கள் அனுமதிக்க முடியாது என்றும், பணம் எங்கிருந்து வருகின்றன என்பதை வெளிநாட்டு வளங்கள் சார்பான திணைக்களம் ஆராய்ந்து அறிய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகின்றது. (மேலும்....) கூடிய கையோடு கலைந்து சென்ற கிளிநொச்சி ஆட்டம் வெள்ளியன்று கிளிநொக்கியில் இடம்பெற்ற இராணுவத்திற்கு எதிரான வழமையான ஆர்ப்பாட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடிய சனம்தானாம் கலந்து கொண்டது. இவ்வளவு தூரத்திற்கு டீசல் அடித்துச் செல்வதால் பலனில்லை. அதிலும் பார்க்க வீட்டிலிருந்து ஒரு அறிக்கையை எழுதுவோம் எனக் கூறி அவரும் கொழும்பில் நின்றுவிட்டாராம். பஸ்ஸில் சென்று பனர் பிடித்து தனது கமராவில் படம் பிடித்து அங்கிருந்தே பத்திரிகைகளுக்கு அனுப்பும் அந்த உயரமான வெண்முடிக்காரரும் பூஜைவழிபாட்டால் செல்லவில்லையாம். அதனால் அங்கு நாலு பேர், கூடிய கையோடு நாலைந்து படத்தை எடுத்துவிட்டுக் கலைந்து விட்டனராம். முஸ்லிம்களுக்கான CV யின் நீலிக் கண்ணீர் இன்று ஒலிக்கும் குரல் அன்று எங்கே போனது? வடமாகாண முதலமைச்சர் சீ. வீ. விக்னேஸ்வரன் அண்மைக் காலமாக முஸ் லிம் மக்களின் பிரச் சினைகள் தொடர்பாக பலவிதத்திலும் தனது கருத்துக்களை தெரிவித்து வரு கிறார். அத்துடன் தமிழ் முஸ்லிம் உறவுகளை மேம்படுத்த அழைப்பும் விடுத்திருந்தார். இது வரவேற்கத்தக்கது. ஆனால் இதே முதலமைச்சரின் இன்று ஓங்கியொலிக்கும் குரல் அவர் நீதிமன்ற நீதியரசராக இருந்த காலத்தில் வடமாகாணத்தில் இரவோடு இரவாக எந்தவித அவகாசமும் வழங்காது உடுத்த உடையுடன் தமது பாரம்பரிய இடங்களைவிட்டு விடுதலைப் புலிகளால் இதே முஸ்லிம் மக்கள் துரத்தியடிக்கப்பட்ட போது எங்கே போனது என சர்வதேச இந்து மத பீடத்தின் இசயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா கேள்வி எழுப்பியுள்ளார். அன்றும் முதலமைச்சர் ஒரு நடுநிலையான நீதியாளராக இருந்து முங்லிம்களுக்காக குரல் கொடுத்திருந்தால் இன்றயை அவரது குரலையும் நிச்சயம் அம்மக்களால் மட்டுமல்ல அனைவராலும் வரவேற்றிருப்பர். அது அவரது மனிதாபிமான குரலாகவும் அமைந்திருக்கும். ஆனால் அவ்வாறு நடந்து கொள்ளாமல் இன்று தனது அரசியல் அபிலாழஷகளை நிறைவேற்று வதற்கு இன்றைய இக்கட்டான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துவது முதலமைச்சர் விக்னேஸ்வரனின் சிறப்பான செயற்பாடாக அமையாது எனவும் பாபுசர்மா மேலும் தெரிவித்தார். ஐந்து வருடங்களில் TNA முன்வைத்த தீர்வு என்ன?(யதீந்திரா) தழிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ இந்தத் தீர்வுத் திட்டம்தான் சிறந்தது. இப்படியானதொரு தீர்வைத்தான் த. தே. கூ. ஏற்றுக்கொள்ளும், இல்லாவிட்டால் இந்தத் தீர்வை அடைவதற்காக சாத்வீக ரீதியாகப் போராடுவோம் என இந்தியாவுக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிக்க வேண்டும். முதலில் அவர்கள் தமது தீர்வுத் திட்டத்தை அரசாங்கத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அப்படியில்லாமல் தள்ளம்பல் போக்கோடு தீர்வுத்திட்டத்தை அணுகினால் த. தே. கூ. என்ன எதிர்பார்க்கிறது என்பதே தெளிவில்லாமல் இருக்கும். யுத்த முடிவடைவதற்கு முன்னர் நிகழ்ந்த அரசியல் செயற்பாடுகளும் அதன் இலக்கும் வேறு, யுத்த நிறைவுக்குப் பின்னரான அரசியல் செயற்பாடுகளும் அதனது இலக்கு வேறு. யுத்தம் நிறைவுக்கு முன்னர் தமிழர் களுடைய அரசியலுக்கு தலைமை தாங்கிய அமைப்பின் விழ்ச்சிக்குப் பின்னர், அந்த தலைமைப் பொறுப்பினை எடுத்துக்கொண்ட தமிழ்க் கூட்டமைப்பினரின் செயற்பாடுகள், அதன் வெற்றி. தோல்வியை அடிப்படையாகக் கொண்டுதான் கடந்த 5 வருடங்களைப் பார்க்க முடியும். அந்த வகையில் பார்க்கும் போது தமிழத் தேசியக் கூட்டமைப்பு கடந்த 5 வருடங்களாக என்ன மாதிரியான அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்திருக்கிறது என்று சொன்னால, இதுவரை ஒரு காத்திரமான, ஆக்கபூர்வமான அரசியல் தீர்வு நோக்கிய முன்னெடுப்புக்களையோ அல்லது அதற்கான அடிப்படையான அடித்தளத்தையோ இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வரையறுக்க முடியாமல் இருக்கிறது என்றுதான் சொல்லலாம். ஜுலை 05, 2014 சந்திரிகாவை கொல்ல முயன்ற புலி உறுப்பினர் மலேசியாவில் கைது
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை 1999 ஆம் ஆண்டு படுகொலை செய்ய முயன்றவர் உட்பட புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் நால்வர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார்கள். பயங்கரவாத ஒழிப்பு தேடுதல் நடவடிக்கையின்போது கோலாலம்பூர், செலாங்கூர் ஆகிய இடங்களில் வைத்து பிடிக்கப்பட்டார்கள். புலிகள் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என்று நம்பப்படுகின்ற இவர்கள் பயங்கரவாத ஒழிப்புக்கான விசேட பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளார்கள். புலிகள் இயக்கத்துக்கு புத்துயிர் கொடுப்பதோடு மலேசியாவை தளமாக கொண்டு இயக்கத்தை செயற்படுத்துவதற்கும் இவர்கள் முயற்சித்து உள்ள்னர். மற்றவர் வெடி குண்டு நிபுணர். இவரிடம் ஐ. நா. அகதிகள் ஸ்தாபனத்தால் வழங்கப்பட்டு இருந்த அடையாள அட்டை உள்ளது. இந்தியாவில் சென்னை, பங்களூர் ஆகிய இடங்களில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டமிட்டு இருந்தவர்களில் ஒருவரும் கைதாகி உள்ளார். கடந்த மே 14 ஆம் திகதி முன்னதாக கைது செய்யப்ப்ட்ட நபர் ஒருவர் வழங்கிய தகவல்களை அடுத்தே இவர் பிடிபட்டார். இவர் கள்ளக் கச்சேரியும் நடத்தி உள்ளார். இவரின் உடைமையில் இருந்து ஏராளம் கடவுச்சீட்டுக்கள், குடிவரவு மற்றும், குடியகல்வு திணைக்களங்கள், வெளிநாட்டு தூதரகங்கள் ஆகியவற்றின் இறப்பர் முத்திரைகளுடைய போலிகள் ஆகியனவும் கைப்பற்றப்பட்டு உள்ளன. நான்காவது நபர் பொட்டம்மானின் நெருங்கிய சகா ஆவார். புலிகளின் தாக்குதல் இலக்குகள் தொடர்பாக தகவல்கள் சேகரிக்கின்ற நிபுணராக செயற்பட்டவர். இவ்வருடம் இது வரை 14 புலிகள் மலேசியாவில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் 07 பேரிடம் ஐ. நா அகதிகள் ஸ்தாபனத்தின் அடையாள அட்டை இருந்தது.
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டி ஒருபுறம் கல்யாணத் தரகர்கள் மறுபுறம்........! யாழ்ப்பாணத்தில் பெண்கள் பொருளாதார சிக்கலில் அகப்பட்டுச் சின்னாபின்னமாகும் நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடிய ஒரு திடமான அரசியல் சார்ந்த விடயங்களைக் கையாள்வதற்கு இதுவரைக்கும் எவரும் முன்வரவில்லை. அவ்வாறு வந்தவர்களும் தங்களின் சுயநலம் சார்ந்தவர்களாக உள்ளார்களே தவிர தமிழ் மக்களுக்கு நன்மை தரக் கூடிய வகையில் நடந்து கொள்ளவில்லை என்பது துரதிஷ்டவசமே. இவ்வாறு அரசியல் சார்ந்த விடயங்களைக் கையாளக் கூடிய தந்திரோபாயங்கள் இல்லாத நிலையில் யாழில் பல தரப்பட்ட பிரச்சினைகள் முளைவிடத் தொடங்கியுள்ளது. (மேலும்....) வெளிவந்துவிட்டது வானவில் 39 தாயக மக்களுக்கு மீண்டும் அழிவேற்படுத்தும் பிரிவினைவாதிகளின் நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்! இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உருவாக்குவதற்கு சிலர் முயற்சிப்பதாக கடந்த சில வாரங்களாக அரசாங்கம் சொல்லி வருகிறது. இந்த முயற்சியில் கோபி என்ற பிரதான நபரும், வேறு சிலரும் ஈடுபட்டுள்ளதாகச் சொல்லி அவர்களைத் தேடியும் படையினர் வடக்கில் பாரிய சுற்றி வளைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். அவர்களைக் காட்டித் தருவோருக்கு என பல இலட்ச ரூபா சன்மானமும் அறிவிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் புலிகள் இயக்கத்துக்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதற்கு உதவுபவர்கள் என்று சொல்லி புலம்பெயர் நாடுகளில் புலிகளுக்குச் சார்பாகச் செயற்பட்டு வரும் அமைப்புகள் என்று சந்தேகிக்கப்படும் சில அமைப்புகளை அரசாங் கம் தடை செய்ததுடன், சில தனிநபர்களின் பெயர்களையும் வெளியிட்டது. இந்த நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கிளிநொச்சி - தருமபுரம் பகுதியில் புலிச் சந்தேக நபர் ஒருவர் மறைந்து இருப்பதாகச் சொல்லி பொலிசார் தேடுதல் நடாத்தச் சென்ற போது, இனம் தெரியாத அந்த நபர் பொலிசாரை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பியோடியதாகவும் தகவல்கள் வெளியாகின. பின்னர் அந்தப் புலிச் சந்தேக நபருக்கு அடைக்கலம் கொடுத்ததாக தருமபுரத்தில் வசித்து வந்த ஒரு தாயும், அவரது 14 வயது சிறுமியும் கைதுசெய்யப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.(மேலும்....) சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இராஜதந்திர உறவுகளின் மைல்கல் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்பு சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயமா னது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மைல் கல்லாக அமையுமென சீனாவின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சீன வர்த்தக அமைச்சின் அழைப்பையேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வர்த்தகத்துறை விசேட பிரதிநிதியாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ சீனாவுக்குச் சென்றுள்ளார். அது மட்டுமன்றி இலங்கை வரவிருக்கும் சீன ஜனாதிபதியை வரவேற்பதற்கு இலங்கை அரசாங்கமும், மக்களும் காத்திருப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இச்சந்திப்பில் தெரிவித்தார். இராணுவத்தில் மேலும் தமிழ் இளைஞர்களை இணைக்க நேர்முகம்இராணுவத்திற்கு மேலும் தமிழ் இளைஞர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான நேர்முகப் பரீட்சைகள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தின் தொழில்சார் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதற்காக இவர்கள் இணைக்கப்படவுள்ளனர். பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களில் பணியாற்றக்கூடிய தொழில்சார் திறன் கொண்ட சாரதிகள், பேக்கரியில் பணியாற்றக்கூடியவர்கள், சமையல் காரர்கள், விவசாயத்தில் ஈடுபடக்கூடிய இளைஞர்கள் என 500 பேரை இணைத்துக் கொள்வதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுவரை நடத்திய நேர்முகப் பரீட்சையில் தொழில்தகைமைகள் உடைய 25 இளைஞர்கள் தேர்வுசெய்யப்பட்டிரு ப்பதுடன், இவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் கிளிநொச்சியிலுள்ள இராணுவ தலைமையகத்தில் நடைபெற்றது. முதலாவது தொகுதியில் 125 பெண்கள் இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டாவது தொகுதி இளைஞர்களை இணைக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன. தொழில்சார் பணிகளில் ஈடுபடுத்தப்பட முன்னர் இவர்களுக்கு வழங்கப்படவிருக்கும் ஆரம்ப பயிற்சிக்கான சகல வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என கிளிநொச்சி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். ஆணையிறவில் உப்பு உற்பத்தியை மீள ஆரம்பிக்கும் பணியில் இராணுவத்தினர்ஆனையிரவில் உப்பு உற்பத்தியை மீள ஆரம்பிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆனையிரவில் உப்பு உற்பத்தியை மீள ஆரம்பிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பாரம்பரிய கைத்தொழில், சிறுமுயற்சிகள் அபிவிருத்தி அமைச்சின் கோரிக்கையின் பேரில் இந்த பாரிய அபிவிருத்தி திட் டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்தி டப்பட்டுள்ளது. 1980 முதல் எல்.ரீ.ரீ.ஈ. பயங்கரவாதத்தின் பின் உப்பளத்திலிருந்து தேங்கிய நீர் விடுபடாமல் கவனிப்பாரற்றுக் கிடந்தது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசிர்வாதத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சுத்தமான கடல் நீரினால் உப்பளத்தை மீண்டும் நிரப்பும் பணியை இராணுவம் பொறுப் பேற்றது. ஆனையிறவு உப்பளம் 1946 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. 60000 முதல் 80000 மெட்ரிக் தொன் உப்பு இங்கு உற்பத்தி செய்யப்பட்டது. எல்.ரீ.ரீ.ஈ. வன்முறை காரணமாக 1980 ல் இங்கு உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. வடபகுதியைச் சேர்ந்த 2000 இளைஞர்களுக்கு இங்கு வேலை வாய்ப்புகளும் உருவாகும். உயிர்ப்பல்வகைமைக்கு ஆபத்து விளைவிக்கும் பார்த்தீனியம்வடமாகாண விவசாய அமை ச்சினால் இரண்டு வாரங் களில் சுமார் 37,000 கிலோ பார்த்தீனியம் களை அழிக்கப்பட் டுள்ளதாக வடமாகாண விவசாய அமைச்சு ஊடகங்களுக்கு அனுப்பிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை களில் ஒன்றாகப் பொதுமக்களிடம் இருந்து பார்த்தீனியத்தை ஒரு கிலோவுக்குப் 10 ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்து அழிக்கும் திட்டமொன்றை யாழ். மாவட்டத்தில் வடமாகாண விவசாய அமைச்சு முன்னெடுத்து வருகிறது. திட்டம் ஆரம்பித்து இரண்டு வார ங்கள் முடிந்த நிலையில், இதுவரையில் 37,700 கிலோ பார்த்தீனியம் கொள்வ னவு செய்து அழிக்கப்பட்டிருப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. (மேலும்....) ஜுலை 04, 2014 புலி முக்கியஸ்தர் நால்வர் மலேசியாவில் கைது மலேசிய பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அந்த முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்கவை 1999 ஆம் ஆண்டு படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. மற்றொருவர் வெடி குண்டு தொடர்பான நிபுணர் எனவும், இவரிடம் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவன அடையாள அட்டை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் நிதி தரவில்லை என அழுது வடிக்கின்றார் முதலமைச்சர் ஏன் வெளிநாட்டு நிதி வரவில்லையா? புலம்பெயர்ந்தோர் மறந்துவிட்டார்களா? முதலமைச்சருக்கு 15 மில்லியனிலும் அமைச்சர்மாருக்கு தலா 7.5 மில்லியனிலும் கேட்கும் சொகுசு வாகனங்களுக்குரிய பணம் அரசினுடையதா? அல்லது புலம்பெயர்ந்தவர்களுடையதா? அவ்வளவு ஏன்? அரசாங்கம் மாகாணசபை ஊழியர்களின் சம்பளத்திற்கு மட்டுமே நிதி ஒதுக்கியுள்ளது என்றால் மேற்படி உரையை நிகழ்த்திய வட்டக்கச்சி மாயவனூர் புழுதியாற்று நீர்ப்பாசனத் திட்டத்திற்கான நிதி எவ்வாறு பெறப்பட்டது? அரசாங்கம் எமக்கு ஐயாயிரம் மில்லியன் ரூபா வழங்கியுள்ளதாக தெரிவித்துக் கொண்டு நான்காயிரம் மில்லியன் ரூபாவை தனது கையில் வைத்துக்கொண்டு பல வேலைத்திட்டங்களை செய்துவருகின்றது. இவ்வாறு பகிரங்கமாக தெரிவித்திருப்பவர் வேறு யாருமல்ல. வடமாகாண சபை முதலமைச்சர். (மேலும்....) மற்றொரு மாணவனுக்கு மரணதண்டனை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை பகிடிவதைக்கு உட்படுத்தி அவரை கடத்திசென்று கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டப்பட்ட பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரனை குற்றவாளியாக இனங்கண்ட மத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். பொறியியல் பீட முதலாம் வருட மாணவனான செல்வவிநாயகர் வரபிரகாஷை 1997 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 ஆம் திகதி கடத்திசெல்லும் போது இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன் சிரேஷ்ட மாணவனாவார். பிரதிவாதியான பாலேந்திரா பிரசாத் சதீஸ்கரன், 2004 ஆம் ஆண்டு நாட்டிலிருந்து தப்பியோடிவிட்டதால் அவர் இல்லாமலே வழக்கு விசாரணைக்கு நடைபெற்றது. (மேலும்....) கள்ள மாடு பிடித்துக் காசு சம்பாதித்த பிலாக்கையர் சாவகச்சேரிப் பிரதேசசபைத் தலைவராக இருப்பவர் சிற்றம்பலம் துரைராஜா. இவரைப் பிளாக்காய் துரைராசா என்றாலே மக்களுக்குத் தெரியும். இவர் அப்பகுதிப் பாடசாலை ஒன்றில் 1980ம் ஆண்டு அதிபராக இருக்கும் போது பலாப்பழம் திருடிப் பிடிப்பட்டபடியால் இவருக்கு அந்தப் பட்டப் பெயர் குடி கொண்டு விட்டது. தற்போது இவர் பிரதேசசபைத் தலைவராக வந்த பின்னரும் பழைய தோசத்தில் பல தில்லுமுள்ளுகளைத் திறம்படச் செய்து கொண்டு இருக்கிறார். (மேலும்....) பிரபாகரனும், மாத்தையாவும் எமது பள்ளித் தோழர்கள்!
எனக்கு அப்போது பதினைந்தோ, பதினாறோ வயதிருக்கலாம். எனக்கு அரசியலில் ஈடுபாடுகள் தொடங்கிய நேரம். எங்கடை வாசிகசாலையில் இருந்து சில பேர் கழுத்திலேயும் சில பேர் தலையிலும் சிவப்புத் துணிகளைக் கட்டிக் கொண்டு, சில தோழர்கள் சிவத்தக் கொடியையும் தூக்கிக் கொண்டு ஏற வான் புறப்படும். புறப்பட்ட வான் அயல் கிராமங்களிலிருந்தும் பல தோழர் தோழியர்களையும் ஏற்றிச் கொண்டு ஊர்வலம் நடக்கும் இடத்தைச் சென்றடையும். அப்படிப் போய் வந்தவர்களில் நெருங்கிய தோழன் சிவநாதன் அவர்கள். இன்று அவர் இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார். அந்தத் தோழனின் துணைவியைக் காணும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவதெல்லாம் அந்த மேதின ஊர்வலங்களும் அங்கு போட்ட கோசங்களும் தான். எத்தனையோ மேதின ஊர்வலங்கள் எத்தனையோ வெகுஜனப் போராட்டங்கள் எத்தனையோ தேசிய எதிர்ப்புப் போராட்டங்கள். தன்னுடைய கணவனுடன் தோழோடு தோழாய் நின்று பல பணிகளில் துணைபுரிந்த தோழி திருமதி சாந்தா சிவநாதனுடன் சில நிமிடங்கள். (மேலும்....) தனுஷ்கோடியில் கைதான நால்வரில் ஒருவர் புலிகளின் கணக்காளர் தமிழகத்தில் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறப்பட்டு கைதுசெய்யப்பட்ட நால்வரில் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கணக்காளராக செயற்பட்டவர் எனத் தெரியவந்துள்ளது. புதன்கிழமை இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் ஒருபடகில் 2 ஆண்கள், 2 பெண்கள் வந்து இறங்கினர் இவர்களில் எஸ்.சதீஸ் (வயது39) எனும் நபர் தமிbழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கணக்காளராக பணிபுரிந்தவர் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் பணிபுரிந்த ரவி எனப்படும் எஸ். ரவீந்திரன் (வயது 38) என்பவரும் ஜே.சாந்தி மற்றும் மலர் ஆகிய நால்வருமே இவ்வாறு கைதாகியுள்ளனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக டி.எஸ்.பி. விஜயகுமார் தெரிவித்துள்ளார். ஜுலை 03, 2014 திலீபனின் சடலத்தை தேடி வேட்டை இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது. பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் குழு மற்றும் இராணுவக்குழு அப்பிரதேசத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்....)'போட்டோ எடுத்தாச்சு சிவாஜி எழும்பும்'
கடந்த 26ம் திகதி வடமாகாண சபைக் கூட்டம் கைதடியில் இடம்பெற்றபோது தனது sivajilingam protest பிரேரணை ஏற்கப்படவில்லை எனக்கூறி சிவாஜிலிங்கம் சபை நடுவே அமர்ந்து தனியாக போராட்டம் நடாத்தியது நினைவிருக்கலாம். இதில் ஊடகங்களால் வெளிக்கொண்டுவரப்படாத சுவாரசியமான சங்கதி ஒன்றும் உள்ளது. சிவாஜிலிங்கத்தை சமாதானப்படுத்த புளட் தலைவர் சித்தார்த்தன் பெரும் பிரயத்தனப்பட்டார். ஆனால் சிவாஜியாரோ அசைந்து கொடுக்கவில்லை. இதனை அவதானித்த எதிர்க்கட்சித் தலைவர் தவராசா அவரருகே சென்று 'சிவாஜி, மீடியா எல்லாம் உம்மை போட்டோ எடுத்திட்டுது. இனி எழும்பும்' என்று சொன்னதுதான் தாமதம் டக்கென்று எழுந்தார் சிவாஜியார். அவரை அப்படியே பிடித்து சீற்றில் இருத்தினார் சித்தார்த்தன். இச்சமயம் சபையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது. அவர்களே இச்சபைக்கு தெரிவாக சீட்டும் கொடுத்து விட்டு பின்பு அவர்களே சரிப்பொலி எழுப்பினால்....' 'சிவாஜியை வைத்து ஒண்டும் காமடி கீமடி பண்ணல்லையே.....?' யுத்தத்தில் மலையக மக்கள் மேலும் அடிமைகளாக பாவிக்கப்பட்டனர் விடுதலை புலிகளின் காலத்தில், இலங்கை ராணுவத்திற்கு எதிரான பல தாக்குதல்களில் முன்னே அனுப்பப்படும் போராளிகளாகவும், போர் ஆயுதங்களை இடமாற்றம் செய்யும் பொது பாரம் தூக்கும் கூலிகளாகவும் இவர்களை பாவித்தார்கள். மலை நாட்டில் சிங்கள இனவாதிகளால் துன்புறுத்தபட்ட இவர்கள் பின்பு கிளிநொச்சியில் குறிப்பாக யாழ்பாண தமிழ் தேசியவாதிகளாலும் துன்பப்படுத்த பட்டார்கள். இன்று யுத்தம் முடிந்த பின்பு அரச உதவிகள் மட்டும் தான் இவர்களுக்கு சிலவேளைகளில் கிடைக்கிறது அதுக்கும் 10% மட்டும் தான். காரணம் அரச வேளைகளில் யாழ்பாண தமிழர்கள் இருப்பதால் அவர்கள் தமது உறவுகள் என்று கூறும் யாழ்ப்பாணிகளுக்கு மட்டும் அரச உதவிகளை பெறும்படி அமைத்து கொடுக்கின்றனர். இன்றும் எந்த ஒரு கல்வி வாய்ப்புகள் செய்யப்படவில்லை. இன்றும் கூலிகளாக நவீன அடிமைகளாக வாழும் இவர்களுக்கு சிங்கள ராணுவ அதிகாரிகள் பல உதவிகளை செய்கிறார்கள். (மேலும்....) எஸ்.டி. பண்டாரநாயக்காவின் நினைவுக் கூட்டம் (2014.06.29)
மக்களோடு மக்களாய் மட்டக்களப்பில் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இனர்
யாழ். மாவட்ட குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலையமைப்பு நீர்வழங்கல் சேவை இரணைமடுக் குளத்து நீருக்கான மாற்று திட்டம் யாழ் கடல் நீரேரிகளை நன்னீரேரிகளாக மாற்ற யோசனை யாழ். மாவட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் நீர்வழங்கல் வலையமைப்பு சேவையொன்று நிறுவப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களுக்கான நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக பல்வேறு கருத்துகளையும் உள்வாங்கும் வகையில் துறைசார் நிபுணர்களுடனான கலந்துரையாடல் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. (மேலும்....) ஜுலை 02, 2014 மக்களோடு மக்களாய் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இனர் திருமலையில்
திருகோணமலையில் மூடிய முன்பள்ளி மீண்டும் திறப்பு. பா.ஜ.வை உளவு பார்த்தது அமெரிக்கா அம்பலமாக்கியது வாஷிங்டன் போஸ்ட் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று, தற்போது ஆட்சி நடத்தி வரும் பா.ஜ. கட்சியை, கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்காவின் உளவு நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜன்சி உளவு பார்த்துள்ளதாக, அமெரிக்க உளவுத்துறை அதிகாரி எட்வர்ட் ஸ்னோடென் கூறியதாக வாஷிங்டன்போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பா.ஜ. பாகிஸ்தானில் பாகிஸ்தான் மக்கள் கட்சி, எகிப்தில், முஸ்லிம் சகோதரத்துவகட்சி உள்ளிட்ட சில கட்சிகளை அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. உளவு பார்த்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிகழ்வுகளை ஆய்வு செய்வதற்காக என்ற பெயரில் இந்த உளவு வேலை நடந்துள்ளதாகவும், இதற்காக, அமெரிக்க சட்டப்படி, கோர்ட்டில் அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வகையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஏஜன்சி, 193 நாடுகளில் உள்ள, குறிப்பிட்ட சில கட்சிகளை உளவு பார்த்துள்ளது. அதேவேளையில், பிரிட்டன். கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தங்களின்படி, அந்நாடுகளில் இதுபோன்ற உளவு பணி மேற்கொள்ளப்படவில்லை என்று வாஷிங்டன் போஸ்ட் தெளிவுபடுத்தி உள்ளது. உலக வங்கி, உலக நிதி நிறுவனம், சர்வதேச அணு எரிசக்தி நிறுவனம், ஐரோப்பிய யூனியன் நிறுவனம் ஆகியவற்றிலும் என்.எஸ்.ஏ., உளவு பார்த்துள்ள தகவலை வாஷிங்டன் போஸ்ட் இந்த கட்டுரை மூலம் வெளிப்படுத்தி உள்ளது.
முஸ்லிம்களு
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |