கார்த்திகை 2012 மாதப் பதிவுகள்
கார்த்திகை
30, 2012
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக ருகுண, பேரா, சிங்கள மாணவர்கள்
ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கலைக்ககை மாணவர்கள் மீது இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து
நடாத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்
மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். பெரும்பாலும் சிங்கள மாணவர்களே
கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் பேரதனைப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால்
நடத்தப்பட்டது. பல்கலைக் கழகத்திற்கு அருகாமையிலுள்ள கலகா சந்தியில் இந்த
ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. சுலோக அட்டைகளுடன் பெரும்பாலான மாணவர்கள்
கலந்துகொண்ட இந்த ஆர்பாட்டம் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக நடந்த
முதலாவது ஆர்ப்பாட்டமாகும். இதே வேளை மாத்தறையில் அமைந்துள்ள ருகுண பல்கலைக்
கழகத்திலும் சிங்கள் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யாழ் பல்கலைக்
கழக மாணவர் மீது கைவையாதே!, மாணவர்கள் மீதான தாக்குதலை உடன் நிறுத்து!
போன்ற சுலோகங்களுடன் போராட்டம் நடைபெற்றது. புலம் பெயர் நாடுகளில் இது வரை
நடத்தப்பட்ட போராட்டங்களைப் போன்று இந்த மாணவர் எழுச்சியையும் இனவாதப்
போராட்டமாக மாற்றுவதற்கு முயற்சிக்காமல் மாணவர்களின் நலன் சார்ந்த
முற்போக்கு ஜனநாயக சக்திகளின் போராட்டமாக ஆதரவுப் போராட்டங்கள் நடத்தப்படும்
என எதிர்பார்போம்.
தலைவர் மேலேயா கீழேயா என்ற ஆராச்சியில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். சரி, சிங்கள மாணவர்கள் போராடினார்கள்
என்று கேள்விப்பட்டாலே சிறீலங்கா அரசாங்கத்தை விட அதிகம் ஆத்திரமடையப்
போவது புலம் பெயர் கனவான்கள் தானே!
யாழ்.மாநகர
சபைய கள்ளுக்கடையாக மாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர்.
யாழ் மாநகர சபையின் மாதாந்த பொதுக்கூட்டம்
மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா அவர்கள் தலைமையில் 29.11.2012
வியாழக்கிழமை மதியம் 02.00,மணிக்கு முதல்வரின் மாநாட்டு மண்டபத்தில்
இடம்பெற்றது இக்கூட்டத்திற்கு மாநகர சபை உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும்
சமூகமளித்தனர். இக்கூட்டத்தில் கடந்த மாதத்திற்கான சுகாதாரக்குழுக் கூட்ட
அறிக்கை மாராமர்த்து குழுக் கூட்ட அறிக்கை நிதிக்குழு குழுக் கூட்ட
அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்போது அங்கிருந்த தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் யாழ் மநாகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழப்பம்
விழைவித்து கொண்டுடிருந்தார்கள்.இது இப்படி இருக்க தமிழ் கூத்தமைப்புக்கு
கூலிக்கு மாரடிக்கும் தமிழ் ஊடகங்களில் உண்மைக்கு புறம்பாக யாழ் மாநகர
முதல்வர் தமிழ் கூட்டமைப்பினரை பார்த்து தண்னீர் போத்தலால் தாக்குவேன் என்று
மிரட்டியாதாக பொய்யான செய்திகள் போட்டுள்ளார்கள் இணையத்தளங்களில்.அவர்கள்
வெளியிட்டுள்ள கானொளிகளை கூட பாருங்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் யாழ்
மாநகர சபையில் கத்துவதை யாழ் மாநகர முதல்வர் எதுவும் பேசாமல் பார்த்து
கொண்டு இருப்பதை பார்க்க கூடியதாக உள்ளது. (வீடியோ
இணைப்பு....)
வெளிநாட்டில் உழைத்த பணத்தை முதலீடு செய்வோருக்கு வரிச்சலுகை
வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கை யர்களுக்கு
இங்கு தாம் உழைத்த பணத்தை இங்கு முதலீடு செய்வதற்காக 5 வருட கால வரிச்சலுகை
வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு தொழில் ஊக்குவிப்பு
மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா சமர்பித்த அமைச்சரவை
பத்திரத்திற்கு அமைய இந்த வரிச்சலுகையை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.
இதன்படி வெளிநாட்டில் தொழில்புரிந்து உழைத்த பணத்தை முதலீடு செய்வதினூடாக
கிடைக்கும் இலாபத்திற்கு வருமான வரி, தேசத்தை கட்டியெழுப் பும் வரி, பெறுமதி
சேர்வரி என்பன அறவிடாது சலுகை வழங்கப்படும். இலங்கையின் பொருளாதார
மேம்பாட்டுக்கு கூடுதல் பங்களிக்கும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்
மூலம் 2011ல் 5.2 பில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர்களை
விடுவித்து குடும்ப கஷ்டங்களை நிவர்த்தி செய்யவும்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அரசியல் கைதிகளாகத் தடுத்து
வைக்கப்பட்டுள்ள மலையக இளைஞர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளைத்
துரிதப்படுத்த வேண்டுமென வீ. ராதாகிருஷ்ணன் எம். பி. நேற்று முன்தினம்
நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமைக் கேட்டுக் கொண்டார். நீண்ட காலம் அவர்கள்
தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதமாக
மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்ட
அவர், அவர்களின் குடும்பங்கள் படும் கஷ்டங்களையும் சுட்டிக்காட்டினார்.
தமிழ்க் கைதிகளை விடுதலை செய்வதற்கான வேண்டுகோள் ஒன்றை ஈ. பி. டி. பி. எம்.
பி. முருகேசு சந்ரகுமார் பாராளுமன்றத்தில் முன்வைத்தார். உண்மையில் இது
முக்கியமாகக் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய தொன்று. அதேபோன்று மலையக
இளைஞர்கள் பலர் நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் நான் பல தடவைகள் நீதியமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு
வந்துள்ளேன். அமைச்சர் அவர்கள் இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த
வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் யாரென்பதை கண்டுபிடிப்பதில் இன்னுமே
தெளிவற்ற நிலைமை
சிந்துவெளி நாகரிகம் எகிப்து, மொசப்பெத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழை
த்தோங்கியிருந்த உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன் மையான ஒரு
நாகரிகமாகும். இன் றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித்
தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத் தில்
செல்வாக்குச் செலுத்தி வந்தது. கி. மு. 3000 க்கும் கி. மு. 2500 க்கும்
இடைப்பட்ட காலப் பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம் இன்னும்
தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்துபோய்விட்டது.
இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ அவர் கள் பேசிய மொழிகள் பற்றியோ
ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில்
கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக் கையிலான முத்திரைகள் காணப்படு கின்றன.
அவர்களுடைய மொழியை எழுதப் பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும்
வாசித்தறிய முடிய வில்லை.
(மேலும்.....)
யூதர்களை பொறுத்தவரை அமெரிக்காவின் அரசியலை
தீர்மானிப்பவர்களாக உள்ளனர் - குணசேகர
யூதர்களை பொறுத்தவரை அமெரிக்காவின் அரசியலை
தீர்மானிப்பவர்களாக உள்ளனர். அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகளான கென்னடி,
ரீகன் முதல் ஒபாமா வரை அனைவரும் இஸ்ரேலுடன் நெருக்கமாகவே செயற்பட்டு
வருகின்றனர். நீண்ட கால நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே அமெரிக்கா
இஸ்ரேலுக்கு உதவி வருகின்றது. இதனால் இஸ்ரேல் மேற்கொள்ளும் யுத்தக்
குற்றங்களை அமெரிக்கா சரி காண்கின்றது என சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர
தெரிவித்தார். அதற்கெதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தடையாக உள்ளது.
மத்திய கிழக்கு வலயத்தில் குழப்பத்தினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா
இஸ்ரேலினை துரும்பாக பயன்படுத்துகின்றது. மத்திய கிழக்கிலேயே அமெரிக்காவின்
ஆயுதம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்தும் இஸ்ரேலை சார்ந்ததாக
குவிக்கப்பட்டுள்ளன. பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் அழிவுகள்
நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே தவிர குறைக்கவில்லை. மனித உரிமைகள் மற்றும்
மனிதாபிமான செயற்பாடுகள் மீறப்படுகின்றன. இது தொடர்பில் ஐக்கிய நாடுகளினால்
பல நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கு அமெரிக்காவின் செயற்பாடே காரணமாக உள்ளது.
ஒபாமா உட்பட எவரும் பலஸ்தீனில் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித குலத்துக்கு
எதிரான குற்றங்களை கண்டுகொள்ளவில்லை. அதனை தடுக்கவும் முன்வரவில்லை.
பலஸ்தீனப் பிரச்சினை உலகின் மிகப்பெரிய பிரச்சினை. அதனை தீர்ப்பதற்கான
அனைத்து முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும் என்றார்.
கார்த்திகை
29, 2012
13வது திருத்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை
இரத்துச் செய்வதற்கு முன்னர் தமிழர்
பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்
தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும்
வகையிலும் அவர்களது தேவைகள் நிறைவு செய்யப்படும் வகையிலும் அரசாங்கம் தீர்வு
ஒன்றை வழங்கிய பின்னரே 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து
தீர்மானிக்கப்பட வேண்டுமென பிரதி பொருளாதார அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா
அபேவர்தன தெரிவித்தார். 13 வது திருத்தத்தினூடாக எதிர்பார்த்த தீர்வு
கிடைக்காத போதும் அதனை ஒரேயடியாக ரத்துச் செய்ய முடியாது. முதலில் அதற்கு
மாற்றுத் தீர்வொன்று காணப்படவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். 13 ஆவது
திருத்தச் சட்டத்தின் மூலம் எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறவில்லை. அரசியல்
பிரச்சினைக்கு தீர்வுகாண கொண்டுவரப்பட்ட13 ஆவது திருத்தத்தை ஒரேயடியாக
மாற்ற முடியாது. முதலில் அதற்கு மாற்aடாக வேறு தீர்வு எட்டப்பட வேண்டும்.
தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் அவர்களது தேவைகள்
நிறைவேற்றப்படும் வகையில் அரசாங்கம் தீர்வொன்றை வழங்கிய பின்னரே அடுத்த
கட்டத்திற்கு செல்லவேண்டும்.
சிறைச்சாலைகளில்
இன்னும் 358 தமிழ்க் கைதிகள் தடுத்து வைப்பு
சிறைச்சாலைகளில் 358 தமிழ் கைதிகள் மட்டுமே இன்னமும் தடுத்துவைக்கப்பட்
டிருப்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர்
சந்திரசிறி கஜதீர நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சிறைச்சாலைகளில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த 1600 தமிழ் கைதிகள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு
அனுப்பிவைக் கப்பட்டுள்ளனர். எஞ்சியிருக்கும் 358 பேரும் விரைவில்
புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர் என் றும் கூறினார்.
சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் கைதிகளுக்கு எந்தவிதமான பாதுகாப்பு
அச்சுறுத்தலும் இல்லை. உரிய பாது காப்புக்களும், வசதிகளும் வழங்கப்பட்
டுள்ளன. அத்துடன் சிறைச்சாலைகளில் காணப்படும் இடப்பற்றாக்குறையை சமாளிக்கும்
வகையில் புதிய சிறைச் சாலைகள் அமைக்கப்படவிருப்பதுடன், மீண்டும் மீண்டும்
சிறைக்கு வரும் கைதிகளின் மனோநிலையை மாற்றும் வகையில் புனர்வாழ்வு
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண சிறைச்சாலையை புதியதொரு
இடத்தில் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டில் இதன்
கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்ய எதிர்பார்த்துள்ளோம்.
செவ்வாயில்
விரைவில் குடியேற்றம்
செவ்வாய் கிரகத்தில் விரைவில் குடியேற்றம் நிகழும் என்றும் அடுத்த 20
ஆண்டுகளில் 80 ஆயிரம் பேர் அங்கு குடியேறத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து
வருவதாகவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி எலான் மஸ்க்
அறிவித்துள்ளார். பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு
முதன் முறையாக பொருட்களை விண்கலத்தில் ஏற்றிச் சென்று சாதனை படைத்தது இந்த
ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம். முதல் கட்டமாக 10 பேரை மட்டும் செவ்வாய்க்
கிரகத்துக்கு அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மீண்டும் பயணத்துக்கு
பயன்படுத்தும் வசதிகளுடன் ‘பால்கன்-9’ விண்கலத்தை தயாரிக்கும் முயற்சியில்
ஸ்பேஸ் எக்ஸ் ஈடுபட்டுள்ளது. சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை
ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல்,
உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடி கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த
முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட
வேண்டியிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக்
கூறுகளும் ஆராயப்படும். அங்கு குடியேறுவோர், சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை
உருவாக்குவார்கள். அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் 80 ஆயிரம் பேரை
குடியேற்றத் திட்டமிட்டுள்ளோம் என்று எலான் மஸ்க் குறிப்பிட்டார்.
சிரியாவில்
கொல்லப்பட்ட வெளிநாட்டு போராளிகள் விபரம் வெளியீடு
சிரிய அரச படையால் கொல்லப்பட்ட 18 நாடுகளின் 142 வெளிநாட்டு வீரர்களின்
விபரத்தை அந்நாட்டின் அரச சார்பு பத்திரிகையான அல் வதான் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு கிளர்ச்சியாளர்களுடன் இணைந்து போராடும் வெளிநாட்டு வீரர்களின்
விபரத்தை சிரிய அரசு கடந்த மாதம் ஐ. நா. பாதுகாப்பு சபைக்கும்
அனுப்பிவைத்துள்ளது. இவர்கள் அரபு, வடக்கு ஆபிரிக்கா, மத்திய மற்றும்
தெற்காசிய நாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என அந்தப் பத்திரிகை
குறிப்பிட்டுள்ளது. வெளிநாட்டு போராளிகளில் பெரும்பாலானோர் அல்கொய்தா
அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் எனவும் இவர்கள் துருக்கி, லெபனான் எல்லை ஊடாக
சிரியாவுக்குள் ஊடுருவுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த 142 வெளிநாட்டு
படையினரில் 47 சவுதிஅரேபியர்கள், 24 லிபிய நாட்டவர், 10 துனீஷிய நாட்டவர்,
9 எகிப்தியர், 6 கட்டார் நாட்டவர், 5 லெபனானியர் உள்ளடங்குகின்றனர். தவிர
ஆப்கானின் 11 பேர், துருக்கியின் 5 பேர், செச்னியாவின் மூவர், சாட்டின்
ஒருவர் மற்றும் அசர்பைஜானின் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
அமெரிக்கா,
இஸ்ரேலின் எதிர்ப்புக்கு மத்தியில் பலஸ்தீனின் விண்ணப்பம் ஐ.நா.வில் இன்று
சமர்ப்பிப்பு
பலஸ்தீனம் ஐ. நா. வின் உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதற்கான
விண்ணப்பத்தை ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இன்று சமர்ப்பிக்கவுள்ளார். இதனைத்
தொடர்ந்து இன்று மாலை ஐ. நா. பொதுச் சபையில் இந்த விண்ணப்பத்தின் மீது
வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக பலஸ்தீன நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஐ. நா.
உறுப்பினர் அல்லாத பார்வையாளர் அந்தஸ்தை பெறுவதன் மூலம் இஸ்ரேலுடன் இரு
நாட்டு தீர்வுத்திட்டத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க
முக்கிய படியாக அமையும் என பலஸ்தீன நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேல், அமெரிக்காவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலேயே பலஸ்தீன
நிர்வாகத்தின் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் நியூயோர்க்கில் இந்த விண்ணப்பத்தை
சமர்ப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மேலும்.....)
மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமது உரிமையைக் கேட்டுப் போராடிய பல்கலைக்கழக மாணவர்களை மிருகத்தனமாகத்
தாக்கி,அவர்களில் 5 பேரை கைது செய்தனர். இராணுவத்தினரும் பொலிஸாரும்
பாத்திருக்கவே எனது வாகனம் மீது புலனாய்வாளர் தாக்குதல் நடத்தினர்.
அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்ககைக் கைதுசெய்யமுடிந்த இவர்களால் ஏன்
வாகனத்தை தாக்கிய விஷமிகளைக் கைதுசெய்யமுடியாது போனது? இதிலிருந்து
தெரிகிறது இராணுவத்தினரே திட்டமிட்டு வாகனத்தை தாக்கினர் என்று. இவ்வாறு
தெரிவித்தார் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன். யாழ்.
பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் மற்றும் பல்வேறு தாக்குதல்
சம்பவங்களைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கண்டன
ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 3
ஆம் திகதியன்று மு.ப 10 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலருகில் இந்த கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
ஸ்ரீரெலோ
அமைப்பின் காரியாலயம் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்
யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஸ்ரீரெலோ காரியாலயத்தின் மீது
இன்று அதிகாலை 3.35 மணியளவில் இனம் தெரியாதவர்களினால் பெற்றோல் குண்டு
வீசப்பட்டுள்ளது. ஸ்ரீரேலோ உறுப்பினாகள் அலுவலகத்தில் படுத்துறங்கிய
வேளையில் இந்த பெற்றோல் கைக்குண்டு வீசப்பட்ட போதிலும் எவரும் காயங்களுக்கு
உள்ளாகாத போதிலும் காரியாலயத்தின் ஒருபகுதி எரிந்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல்
வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் தற்போது
குறித்த அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.
மாவட்ட அமைப்பாளர் செந்தூரன் தெரிவித்தார். குறிப்பிட்ட அலுவலகம் கடந்த
கிழமை திறந்து வைக்கப்பட்டமை குறிப்பி;டத்தக்கதாகும்.
நான் ஓய்வுபெற விரும்புகிறேன்
-
டெண்டுல்கர்
என்னால் ஓட்டங்களைப் பெறமுடியவில்லை எனவே நான் ஓய்வுபெற விரும்புகிறேன்
இதனைத் தெரிவுக் குழுவினர் தான் முடிவு செய்ய வேண்டுமென டெண்டுல்கர்
தெரிவித்துள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் டெண்டுல்கர்
தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகிவருகின்றார். 39 வயதான டெண்டுல்கர் 23
ஆண்டு கால கிரிக்கெட் பயணத்தில் பல சாதனைகளை படைத்துள்ளார். இந்நிலையில்
தனது ஆட்ட நிலைமை பற்றி தெரிவுக் குழுவினரிடம் வெளிப்படையாக பேச வேண்டுமென
முன்னாள் இந்தியத் தலைவர்களான கபில்தேவ் மற்றும் கவாஸ்கர் ஆகியோர்
வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையிலேயே டெண்டுல்கர் தெரிவுக் குழுத் தலைவர்
சந்தீப்பட்டீலை சந்தித்துப் பேசியுள்ளார். இது குறித்து டெண்டுல்கர்
தெரிவிக்கையில், என்னால் ஓட்டங்களைப் பெற முடியாதுள்ளதுடன் நான் ஓய்வுபெறத்
தயாராகவுள்ளேன். எனவே இதனை தெரிவுக் குழுவினர் தான் முடிவுசெய்ய வேண்டுமென
குழுத் தலைவரிடம் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை
28, 2012
காணவில்லை.....?
சிங்கத்
தமிழன் சீமான், தமிழ் தேசியத்தின் தலைவன் சுரேஸ்
பிரோமசந்திரன்.கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டதால் முதலாமவரும், புதுக்கட்சியை
பதிவு செய்து கைப்பற்ற முயன்று தோற்றதால் இரண்டாமவரும் காணாமல் போயுள்ளதாக
செய்திகள் கசிகின்றன. உண்மையா என்று தமிழ் மக்கள் கேட்கின்றனர்...?
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவத்தினர், மாணவர் முறுகல், சரவணபவன்
எம்.பி., உதயன் ஆசிரியர் மீதும் மாணவர்கள் தாக்குதல்
யாழ். பல்கலைக்கழகத்துக்குள் புகுந்த
இராணுவத்தினரும் பொலிஸாரும் நேற்று மாலை மாணவர்களை தாக்க முயற்சித்ததுடன்
முரண்பட்டமையால் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பதற்றம் நிலவியது. மாவீரர்
தினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் சுடர்களை
ஏற்றலாம் என்ற சந்தேகத்தின்பேரில் இராணுவத்தினரும் பொலிஸாரும்
பல்கலைக்கழகத்துக்குள் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர். இந்த
கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பல்கலைக்கழகத்தில் உள்ள நினைவுத் தூபியிலும்
ஆனந்தகுமாரசுவாமி விடுதியிலும் மாணவர்கள் சுடர்களை ஏற்றியிருந்தனர்.
பல்கலைக்கழகத்துக்குள் இராணுவத்தினர் பிரவேசித்ததை அறிந்த தமிழ்த் தேசிய
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் பல்கலைக்கழக வளாகத்துக்குள்
சென்று நிலைமைகளை ஆராய்ந்தபோது அவர் மீது கல்வீச்சுத் தூக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இராணுவத்தினருக்கும் மாணவர்களுக்கும் இடையில்
ஏற்பட்ட முரண்பாட்டினை படம் பிடித்த உதயன் பத்திரிகையின் ஆசிரியர்
டி.பிரேமானந் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்
சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், உதயன் ஆசிரியர்
பிரேமானந் ஆகியோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளனர்.
24
South Asian men arrested in massive fraud bust
(By Amit Gossai,
Toronto )
A large amount of South Asian men are among 26 people facing
fraud-related charges in connection with a debit card forgery ring that
garnered "tens of thousands" of dollars. The Durham Regional Police
investigation, dubbed Project Off-Guard, concluded last week with tens
of thousands of dollars confiscated and debt card forging equipment
dismantled and seized, police said.
Last November, Major Crime Fraud Unit investigators received a tip from
the OPP indicating a group of people was involved in fraud-related
activities concerning debit cards at a local gas station in Whitby.
Surveillance was conducted and initially, 12 people were arrested.
Police said they received more information in January that the group was
about to engage in further illegal activity.
(more......)
1950 களில் நிலவை அணுகுண்டு வைத்து தகர்க்க அமெரிக்கா திட்டம்
1950 களில் நிலவை அணு குண்டு வைத்து தகர்க்க “புராஜெக்ட் ஏ 119” என்ற
திட்டத்தை அமெரிக்கா தீட்டி யது. ஆனால் அத் திட்டத்தை அது செயல்படுத்தவில்லை.
இது குறித்து “தி டெய்லி மெயில்” வெளியிட்டு ள்ள செய்தியில்
கூறியிருப்பதாவது:- சோவியட் ஒன்றியம் விண்வெளிக்கு ஸ்புட்னிக் விண்கலத்தை
அனுப்பிய பின்னர் பூமியில் இருந்து நிலவு வெடிப்பதைப் பார்த்தால் அது
சோவியத் ஒன்றியத்துக்கு ஒரு பேரதிர்ச்சியாகவும், அமெரிக்காவின் நம்பிக்கையை
அதிகரிப்பதாகவும் இருக்கும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இருந்து சிறிய
அணு குண்டை நிலவுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஹைட்ரஜன் குண்டை
விண்கலத்தில் அனுப்பினால் அது மிகவும் கனமாக இருக்கும் என்பதால் அணு குண்டை
பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டம் தோல்வி அடைந்தால்
பூமியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் விபரீதங்களை கருத்தில் கொண்டு இராணுவ
அதிகாரிகள் இம்முயற்சியைக் கைவிட்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக்கை அனுப்பியதால் ஆத்திரமடைந்தே இந்தத்
திட்டத்தைத் தீட்டியது அமெரிக்கா. மேலும், சோவியத் ஒன்றியத்தை விட தானே
வலிமை யானவன் என்பதை நிரூபிக்கவும் இந்த திட்டத்தை தீட்டியது அமெரிக்கா.
வைகோவுடன் கருத்து முரண்பாடு: நாஞ்சில் சம்பத் தி. மு. க.வில் இணைவு?
ம. தி. மு. க.வில் கொள்கை பரப்புச் செயலராக இருந்து மேடைப்பேச்சுக் களில்
தீப்பொறி பறக்க கடும் விமர்சனங்களை முன்வைத்தவர் நாஞ்சில் சம்பத். அவருடைய
வலுவான பேச்சுக்காகவே ஒரு தரப்பு ம. தி. மு. க. பொதுக் கூட்டங்களுக்கு
வருவதுண்டு. அண்மைக் காலமாக ம. தி. மு. க. பொதுச் செயலர் வைகோவுடன் கருத்து
வேறுபாடு ஏற்பட்டதால், கட்சியில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார் நாஞ்சில்
சம்பத். அவரை எந்தப் பொதுக்கூட்டங்க ளிலும் பேச அழைக்க வேண்டாம் என்று தன்
கட்சிகாரர்களுக்கு வாய்மொழி உத்தரவு போட்டியிருந்தார் வைகோ என்று
கூறப்பட்டது. இந்நிலையில் நாஞ்சில் சம்பத் தி. மு. கவில் இணையக் கூடும்
என்று செய்திகள் உலா வந்தன. அவரை தி. மு. க. வில் இணையவைக்க முயற்சி நடந்த
வேளையில், அவர் தனது சொந்த ஊரில் நடந்து சென்றபோது கீழே விழுந்து கால்
எலும்பு முறிவு ஏற்பட்டதால் அடுத்த வாரம் தி. மு. க. வில் இணையக்கூடும்
என்று கூறப்பட்டது.
கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்குவதாக
லஷ்கார் இ தொய்பா எச்சரிக்கை
கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்க ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலை
தகர்க்கப்போவதாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு இ மெயில் மூலம் மிரட்டல்
விடுத்துள்ளது. மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கில் போடப்பட்ட பாகிஸ்தான்
தீவிரவாதி அஜ்மல் கசாபின் மரணத்திற்கு பழிவாங்க லஷ்கர் இ தொய்பா அமைப்பு
முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் கடந்த 24ம் திகதி ஜம்மு காஷ்மீர்
மாநிலம் கட்ராவில் உள்ள தேவி கிராண்ட் ஹோட்டலில் அதிபர் ஏ. ஹெச் பட்டிற்கு
லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் இ மெயில் அனுப்பியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய தீவுகள் உள்ளடக்கம்
சீனாவின் புதிய கடவுச்சீட்டை அயல் நாடுகள் நிராகரிப்பு
தெற்கு சீன கடற் பகுதியில் இருக்கும் சர்ச்சைக்குரிய தீவுகளை உள்ளடக்கிய
சீனாவின் புதிய கடவுச்சீட்டை பிராந்திய நாடுகள் ஏற்க மறுத்துள்ளன. அதே
போன்று இந்தியாவும் இந்த கடவுச்சீட்டை நிராகரித்துள்ளது. சீனாவின் கடவுச்
சீட்டில் உள்ள அந்நாட்டு வரைபடத்திலேயே சர்ச்சைக்குரிய தீவுகள்
இணைக்கப்பட்டுள்ளன. இந்த கடவுச்சீட்டில் விசா முத்திரையை குத்த மறுத்துள்ள
வியட்நாம் அதிகாரிகள் பிறிதொரு ஆவணத்தில் விசா அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
இது தவிர பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்வானும் சீனாவின் கடவுச்சீட்டை ஏற்க
மறுத்துள்ளது. சீனாவின் உத்தியோகபூர்வ தேசிய வரை படத்தில் தாய்வானும்,
சர்ச்சைக்குரிய தீவுகளும் தமது எல்லைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன. இதற்கு சீனா
தமது எல்லையை ஆக்கிரமித்திருப்பதாக அயல் நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆனால் வியட்நாம் மற்றும் ஏனைய அயல் நாடுகள் அமெ ரிக்காவுக்கு உதவி செய்து
சீனாவை அடக்கப் பார்க்கிறது என சீனாவின் ஆளும் கொம்மியுனிஸ் கட்சியின்
பத்திரிகையான “பீபல்ஸ் டெய்லி” குற்றம் சாட்டியுள்ளது. சீன கடவுச்சீட்டில்
இருக்கும் அந்நாட்டு வரை படத்தில் இந்தியா உரிமை கொண்டாடும் ஹிமாலாயா
பிராந்தியத்தின் பகுதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவும்
சீனாவின் புதிய கடவுச் சீட்டை நிராகரித்துள்ளது.
செவ்வாய்க்கிரகத்தில் புழுதி புயல்
படம் அனுப்பியது கியூரியாசிட்டி
செவ்வாய்க்
கிரகத்தில்புழுதிபுயல்ஏற்பட்டதைகியூரியா சிட்டி விண்கலம் படம் பிடித்து
அனுப்பியுள்ளது. சூரியக் குடும்பத்தை சேர்ந்த செவ்வாய்க்கிரகம் நாம் வாழும்
பூமியிலிருந்து 57 கோடி கிலோ மீட்டர் தொலை வில் உள்ளது. இந்த கிரகத்தில்
மனிதர்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து அமெரிக் காவின் நாசா
விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஆய்வு நடத்திவரு கின்றனர். இதுதொடர்பாக மேலும்
ஆராய்ச்சி செய்வதற்காக கடந்தாண்டு நவம்பர் மாதம் ரோவர் விண்கலம் செலுத்தப்
பட்டது. இந்த விண்கலத்துடன் இணைக்கப் பட்டிருந்த கியூரியாசிட்டி என்ற ரோபோ
வாகனம் செவ்வாய்க்கிரகத் தின் சுற்றுச்சூழல், மண் அமைப்பு உள்ளிட்டவை
குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்த நிலையில் செவ்வாய்க்கிரகத்தில் கடந்த
10-ம் தேதி ஏற்பட்ட புழுதி புயலை கியூரியா சிட்டி பதிவு செய்து படம்
பிடித்து அனுப்பியுள்ளது. இப்படத்தை நாசா விஞ்ஞானிகள் தற்போது
வெளியிட்டுள்ளனர்.
கார்த்திகை
27, 2012
இன்று கார்த்திகை தீபம்
இன்று கார்த்திகை தீபத்திருநாள் ஆகும்.
சிவபெருமானின் முடியையும் அடியையும் தேடிக் காண முடியாமல் செருக்கு தீர்ந்து
திகைத்து நிற்க, தாமே பரம் பொருள் என்று காட்ட ஜோதிப் பிழம்பாகக் காட்சி
கொடுத்த தலம் திருவண்ணாமலை திருத்தலமாகும். இதனை உணர்த்தும் வகையில் தான்
கார்த்திகை மாதம் திருத்திகை நட்சத்திரத்தில் சிறப்பு மிக்க தீப தரிசன விழா
நடைபெறுகிறது. இன்று இல்லங்கள் தோறும் இந்துக்கள் விளக்குகளை வரிசையாக ஏற்றி
வைத்து வழிபடுவார்கள். அது போல் ஆலயங்களில் சொர்க்கப்பனை கொளுத்துவர்.
ஈழத் தேசிய மாவீரர் தினத்தை பக்தியுடனும் பயனுடனும் அனுட்டிப்போம்
(பணியாளன் எஸ். ஜே. இம்மானுவேல் ஜேர்மனி )
தமிழ் தேசிய நினைவு தினங்களை புதிய
வடிவத்திலே நடாத்த தேவையிருப்பின் அவைகளைப் பற்றி பண்புடன் உரையாடித்
தீர்த்துக் கொள்ளுவோம். ஒரு பரந்த நாட்டில் எப்போதும் ஒரே இடத்தில் தான்
நினைவு நாட்கள் வைக்க வேண்டிய கடமை இல்லை. மக்கள் தொகையாக வாழும் இடத்தையும்
தூரங்களையும் கணக்கிலெடுத்து புரிந்துணர்வுடனும் தாராள மனப்பான்மையுடனும்
தீர்மானிப்போம். மக்கள் சக்தியையும் சர்வ தேச கவன ஈர்ப்பையும்
திரட்டுவதெப்படி? மக்களே எமது இலட்சிய தாகத்தின் ஊற்று மக்கள் சக்தியே
போராட்டத்தின் அடித்தளம். இவ்வடித்தளம் தொகையிலும் வகையிலும்
பெருகவேண்டுமாயின் ஒருவரை ஒருவர் பகைக்காதீர் 'துரோகி' போன்ற பட்டங்களை
அள்ளி வீசாதீர். எல்லோரையும் அரவணைக்க தயாராகுங்கள். இயலாவிட்டால் மௌனம்.
ஆ.......சாமி ஒழிச்சு மறைச்சு, மெண்டுவிழுங்கி என்ன சொல்ல விளைகிறார் என்பது
புரிகிறதா? அட புலிப் பொடியளே!, உங்களுக்குள்ள சண்டை வேணாம். ஒருத்தனை
ஒருத்தன் காட்டிக்கொடுக்க வேணாம். சம்பாதிக்கிறவன் சம்பாதித்திட்டுப்
போகட்டும். காசு அடிக்கிறவன் அடித்துக்கொண்டு போகட்டும். போறாமைப்பட
வேண்டாம். வசதி வாய்த்தால் நீங்களும் அடியுங்கோ. நினைவு தினங்கள் மீண்டும்
மீண்டும் வரும். அப்போது மற்றவர்களுக்கும் பணம் பண்ணுவதற்கு சந்தர்ப்பம்
வரும். இப்போதைக்கு எம்மத்தியில் இருக்கும் நெடியவன் குழு, விநாயகம் குழு,
எல்லாளன் குழு, பாம்புக் குழு ஆகிய எல்லாக் குழுத் தலைவர்களையும்
ஊக்குவிக்க உங்கள் பணங்களைக் கொடுத்து உதவுங்கள். எல்லாத்துக்கும் மேல,
செத்த புலிப் பொடியளைப் போல, நீங்களும் கொலைகள், தற்கொலை செய்ய
வாழ்த்துகிறேன்.
(மேலும்.....)
மீண்டு(ம்)
வருவீரோ.......?
(பாகம் 2)
'காணாமல் போனோருக்கான காத்திருப்புக்கள்'
(சாகரன்)
இருக்கின்றாரோ என்பதுவும் தெரியாது? இல்லையோ
என்பதுவும் தெரியாது? இதனால் இறந்தவருக்கான கிரியைகளை செய்து மன ஆறுதலும்
பெற முடியாது . இருக்கின்றார் என்றும் கொண்டாட முடியாத அவலங்கள். இதனை விட
துன்பமான நிலைமைகள் ஏதும் மானிட வாழ்வில் இல்லை. இது பிரபாகரனுக்கும்
பொருந்தும், பாலகுமாருக்கும் பொருந்தும், பொட்னுக்கும் பொருந்தும்,
அப்புகாமிக்கும் பொருந்தும், முகமட்டுவிற்கும் பொருந்தும்
பொன்னம்பலத்திற்கும் பொருந்தும். ஏன் ஆயிரம் ஆயிரம் அப்பாவி மக்களுக்கும்
பொருந்தும். வேண்டவே வேண்டாம் இவ்வகைத் துன்பம். மீண்டும் மீண்டும் உறுதி
பூண்போம், உறுதியெடுப்போம் இந்த மாவீரர் நாளில் இதற்கு முற்றுப் புள்ளி
வைக்க நாங்கள் தயார். போரை விரும்பும் போர் நோயாளிகளே! நீங்கள் தயாரா....?
சொல்லுங்கள் பதிலை.
(மேலும்.....)
மாவீரர்
தினத்திற்காக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தவர்கள் கைது
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பகுதியில் மாவீரர் தினத்திற்காக துண்டுப்
பிரசுரங்களை விநியோகித்த ஐவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
முச்சக்கரவண்டி ஒன்றில் மாவீரர் துண்டுப்
பிரசுரங்களை எடுத்துச் செல்வதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து,
குறித்த நபர்கள் இராமகிருஷ்ண பாடசாலை வீதியில் வைத்து நேற்றிரவு கைது
செய்யப்பட்டுள்ளனர்.
ஆலையடிவேம்பு பகுதியைச் சேர்ந்த குறித்த
நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை கிழக்குப் பல்கலைக்கழகம் வந்தாறுமூலை வர்த்தக பீடத்தை சுற்றியுள்ள
சுவர்களில் இன்று திங்கட்கிழமை ஒட்டப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின்
மாவீரர் தின சுவரொட்டிகள் படையினரால் அகற்றப்பட்டன.
இங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளில் 'நவம்பர்
27 ஆம் திகதி மாவீரர் நாள்" மற்றும் 'முள்ளிவாய்க்கால் படுகொலைகள்" போன்ற
வாசகங்கள் இதில் காணப்பட்டன.
இதேவேளை, சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த
தகவலை அறிந்த படையினரும் பொலிசாரும் அப்பகுதிக்குச் சென்று அவற்றை
அகற்றியுள்ளனர்.
சிறிதரன்
எம்.பி.யை விசாரணைக்கு வருமாறு அழைப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற
உறுப்பினர் எஸ்.சிறிதரனை விசாரணக்கு வருமாறு குற்றத் தடுப்பு புலனாய்வுப்
பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் தமிழ்ப் பெண்களை இராணுவத்தில்
இணைத்தமை தொடர்பாக சிறிதரன் எம்.பி பி.பி.சி. க்கு அளித்த செவ்வி தொடர்பில்
விசாரணை நடத்துவதற்கு வருகைதருமாறு குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினர்
தெரிவித்துள்ளனர்.
நாளை காலை 10:00 மணிக்கு கொழும்பு குற்றத்
தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் சமுகமளிக்குமாறும் அறிவுறுத்தல்
விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் தீ விபத்து
புறக்கோட்டை பகுதியில் உள்ள கொழும்பு மாவட்ட
செயலக கட்டிடத்தில் சற்று முன்னர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ
விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தீயை கட்டுபாட்டுக்குள்
கொண்டுவர தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக எமது அலுவலக
செய்தியாளர் தெரிவிக்கின்றார். சுமார் ஒரு மணித்தியாலமாக தீ பற்றி
எரிவதாகவும் அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் முற்றாக எரிந்துள்ளதாகவும்
தெரிவித்தார்.
வால்மார்ட்
வாய் பிளந்து வரும் ஓநாய்
(கே. வரதராசன்)
ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் எப்படி யாவது சில்லரை வர்த்தகத்துறையில் அந்நிய
நேரடி முதலீட்டை அனுமதித்திடத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் உல கில் எந்த ஜனநாயக நாட்டிலும் இத்தகைய கொள்கை அந்த நாட்டு
மக்களுக்கு நலம் பயத்ததாகச் சொல்ல முடியாது. எனவேதான், நாடாளுமன்றத்தில்
எதிர்க்கட்சிகள் மட்டு மல்ல, ஐ.மு.கூட்டணி-2 அரசின் அங்கமாக வுள்ள
கட்சிகளில் சிலவும் கூட அவற்றை எதிர்க்க முன்வந்துள்ளன. வால்மார்ட்
நாட்டிற்குள் நுழைவதால் விவ சாயிகளின் வருமானம் பெருகும் என்றெல் லாம்
ஆட்சியாளர்கள் அளந்துகொண்டிருக் கிறார்கள். அவை உண்மை அல்ல என்பதை
வால்மார்ட் புகுந்துள்ள நாடுகளின் அனுபவங் களைச் சற்றே உன்னிப்பாகப்
பார்த்தால் தெரிந்துகொள்ள முடியும். மெக்சிகோவில் சமீ பத்தில் நடத்தப்பட்ட
ஆய்வு ஒன்றின் மூலம், விவசாயத்தொழிலாளர்களின் கூலியை வால்மார்ட்
குறைத்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியும். சில்லரை வர்த்தகத்துறை யில்
எங்கெங்கெல்லாம் கார்ப்பரேட்டுகள் புகுந்துள்ளார்களோ, அங்கெல்லாம் வேலை
களும் குறைந்திருக்கிறது, கூலியும் குறைந் திருக்கிறது. இவற்றின் விளைவு,
மக்கள் வறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். வால்மார்ட்டுகள் புகுந்த
இடங்களில் எல்லாம் குடும்ப வறுமை அதிகரித்திருக்கிறது என்று அமெரிக்காவில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
(மேலும்.....)
கே.கே.எஸ்.ரயில்
சேவைஅடுத்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பம்
காங்கேசன்துறை ரயில் சேவை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மீண்டும்
ஆரம்பிக்க ப்படும் என்று போக்குவரத்து பிரதியமைச்சர் ரோஹண குமார திஸா
நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவி த்தார். யுத்தம் காரணமாக மிக நீண்ட காலமாக
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வட பகுதிக்கான ரயில் சேவையை வெகு விரைவில்
ஆரம்பிக்க முடிந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அதேபோன்று ரயில்வே கடவை
அற்ற குறுக்கு வீதிகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு 15 பேர் அடங்கிய அமைச்சரவை
உபகுழுவொன்று நிய மிக்கப்பட்டுள்ளது. நிலையானதும், சுதந்திரமானதுமான சேவையை
வழங்குவதே எமது நோக்கமாகும். அதேபோன்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம்
சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டு நாடுமுழுவதும் அதன் சேவைகள்
விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி
சந்தைத் தொகுதியில் கடைகள் ஒதுக்குவதில் பாரபட்சம்
புதிதாக நிர்மாணிக்கப்பட்டு, அண்மையில் ஜனாதிபதியால் திறந்துவைக்கப்பட்ட
கிளிநொச்சி புதிய சந்தைத் தொகுதியில் வர்த்தகர்களுக்குக் கடை ஒதுக்குவதில்
பாரபட்சம் காட்டப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சி நகரில்
நேற்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. கரைச்சிப் பிரதேச சபைக்கு எதிராகத்
தமது கண்டனத்தை வெளியிட்டு பாதிக்கப்பட்ட 320 வர்த்தகர்கள் இந்த
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதிய சந்தைத் தொகுதியில் கடைகளை
வர்த்தகர்களுக்குப் பகிர்ந்தளிப்பதில் கரைச்சி பிரதேச சபை தமக்கு
சார்பானவர்களுக்கு வழங்க முற்படுவதாகக் கூறி, 10 வர்த்தகர்கள் இணைந்து
நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தனர். இதற்கமைய எதிர்வரும்
டிசம்பர் 7ஆம் திகதி வரை கடைகள் பகிர்ந்தளிப்பதற்கு இடைக்காலத்தடை விதித்தது.
இந்த நிலையில் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டு, ஜனாதிபதி அவர்களால்
திறந்துவைக்கப்பட்ட சந்தைத் தொகுதி நியாயமான முறையில் வர்த்தகர்களுக்கு
வழங்கப்பட வேண்டும். இவ்விடயத்தில் கரைச்சி பிரதேச சபை பாரபட்சமின்றி
நியாயமான முறையில் செயற்பட வேண்டும் என வலியுறுத்தியும் 320 வர்த்தகர்கள்
கிளிநொச்சி நகரில் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
கார்த்திகை
26, 2012
மீண்டு(ம்) வருவீரோ.......?(பாகம்
1)
'காணாமல்
போனோருக்கான காத்திருப்புக்கள்'
(சாகரன்)
ஆரம்ப காலங்களில் புலம் பெயர் தேசங்களில்
சரியோ பிழையோ ஈழத் தமிழர்களின் ஒரு பிரிவினர் மாவீரர் தினத்தை மாவீரர்
நினைவு நாட்களாக கொண்டாடினர் என்பதே உண்மை நிலை. கூடவே பணமும் சேகரித்தனர்,
பிரச்சாரமும் பண்ணிணர். தற்போது மாவீரர் நிகழ்வு ஈழத் தமிழர் வசம் இருந்து
தமிழ் நாட்டுத் தமிழன் சீமான் வசம் கை மாறிவிட்டது. இவர்தான் இந்த மாவீரர்
மாதம் என்றும், மே மாதம் என்றும் பிரகடப்படுத்தி இவ்விரு மாதங்களிலும்
பண்டிகைகளை நடத்த விடாமல் தடுத்து வருகின்றார். இந்த பண்டிகைத் தடையெல்லாம்
புலம் பெயர் தேசங்களில் மட்டுமே அமுல்படுத்த கட்டாயப்படுதப்படுகின்றது.
இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் இந்த பாட்சா எல்லாம் பலிக்கவில்லை,
பலிக்காது. இவ்வருடம் நவம்பர் மாதம் 'துப்பாக்கி' வெளி வந்து வெற்றிகரமாக
ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது.
யாரும் கொண்டாட்டங்களை காரணம் காட்டி இதை ஓட விடாமல் தடுக்கவில்லை. இலங்கையில் கேட்கவே வேண்டாம். கூடவே விநாகயம்
என்றும் நெடியவன் என்றும் நாடு கடந்த தமிழ் ஈழம் என்றும் தேசியப் பேரவை
என்றும் பல பிரிவுகள் தலைவர் மாவீரர் உரை இல்லாத மாவீரர் தினக்
கொண்டாட்டங்களை போட்டிபோட்டு நடாத்த முண்டியடிக்கின்றன. கூடவே கொலைகளையும்
செய்கின்றன தங்களுக்குள்ளேயே. ஏன் எனில் 'தலைவர் வருவார் ஆனால் வரமாட்டார்'
என்ற நிலை நிலவுவதே காரணம். தலைவர் வரமாட்டார் என்பதை பகிரங்கப் படுத்த
தலைவரை தேசியத் தலைவராக அங்கீகரித்த யாருக்கும் துணிச்சல் இதுவரை வரவில்லை.
(மேலும்.....)
தீர்வின்றேல் சாகும் வரை போராட்டம்
- செல்வம் எம்.பி.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல்
தீர்வு விரைவில் உறுதிப்படுத்தப்படாவிட்டால் ஜனவரியில் சாகும் வரையிலான
உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வரவு-செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு
உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யார் ? சாகும்வரை
உண்ணா விரதப் போராட்டம் என்று குறிப்பிடவில்லையே? செல்வமே!
மாவீரர் தினம்
இன்றும்
அனாதைப் பிணமாய் பிரபாகரன்
(கோசலன்)
ஒரு மனிதனை அதிலும் போராளியை நேசித்தோமானால், நாம் செய்ய வேண்டிய முதலாவது
கடமை அந்தப் போராளியிடமிருந்து கற்றுக்கொள்வதும் அதனை எதிர்கால சந்ததிக்கு
கற்பிப்பதும் தான். ஒரு மனிதன் விமர்சிக்கப்படுவதனூடாகவே தூய்மையடைகிறான்.
நாம் எம்மைச் சார்ந்தவர்களை விமர்சிக்க மறுத்தால் அதனை எதிரிகள்
குற்றச்சாட்டாக முன்வைப்பார்கள். ஒரு போராளியை விமர்சிக்க மறுத்து அவனைக்
கடவுகளாக மாற்றுதல் என்பது அப் போராளிக்குச் இழைக்கும் துரோகமாகும்.
பிரபாகரனை நேசிப்பதாகக் கூறும் ஏற்பாட்டாளர்கள், பிரபாகரன் கடவுளுக்குச்
சமானம் எனக் கூறும் ஒழுங்கமைப்பாளர்கள், பிரபாகரன் இன்னும் உயிருடன்
வாழ்கிறார் என்ற இந்த நூற்றாண்டின் கேலிக்கூத்தான பொய்யை
கட்டவிழ்த்துவிடுகிறார்கள். மக்களின் பணத்தில் சுகபோக வாழ்க்கை நடத்தும்
சிலர் பிரபாகரன் வந்ததாலே பணத்திற்குக் கணக்குக்காட்டுவோம் என்கிறார்கள்.
இதற்காகவே இறந்துபோன பிரபாகரனை இன்னும் உயிர்பிழைக்க வைத்திருக்கிறார்கள்.
(மேலும்.....)
'தாமும் குழம்பி மற்றவர்களையும் குழுப்பும் செயலோ... இது?'
விடுதலைப்புலிகள்
பிரபாகரன்
உயிருடன் உள்ளார்! மாவீரர் தினத்தில் வருகிறது அவரது சமிக்கை!
பாண்டி பஜார் துப்பாக்கி சூடு வழக்கில் இருந்து, விடுதலைப்புலிகள் தலைவர்
பிரபாகரனின் பெயரை நீக்க கோர்ட் உத்தரவிட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது,
ஐரோப்பாவில் இருந்து இயங்கும் விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கம். “எமது தலைவர்
பிரபாகரன் உயிருடன் உள்ளார்” எனவும் கூறியுள்ளது அந்த அமைப்பு. அனைத்துலக
தமிழ் மனிதநேய செயற்பாட்டாளர் ஒருங்கிணைப்பு குழு (Le Comité Humanitaire
Tamil International d’activistes) அமைப்பே, இதை தெரிவித்துள்ளது. “எமது
தலைவர் பிரபாகரன் மறைவிடம் ஒன்றில் உயிருடன் உள்ளார். ஆயுதங்கள்
மௌனிக்கப்பட்டபின் நடப்பவற்றை கூர்ந்து அவதானித்தபடி இருக்கும் அவர்,
விரைவில் வெளிப்படுவார். போரில் காயமடைந்த நிலையில் இருந்த தலைவர் தற்போது
பூரண குணமடைந்து, போராட்டத்துக்கு தயார் நிலையில் உள்ளார்.(மேலும்.....)
"மணியம் தோழர்"
என்கிற தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் நிறைவுகளும் ,நினைவுகளும் . . . .
(கே.சுப்பையா)
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சியின் வடபிரதேசத் தலைவர்களில் ஒருவராக விளங்கிய
தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 23வது நினைவு தினம் இன்றாகும்
(27.11.'12). இளம் வயதிலேயே காங்கேசந்துறை சீமேந்து தொழிற்சாலையில்
பொறியியல் பிரிவில் கடமையாற்றி, தொழிற்சங்க நடவடிக்கைகளில் மிகத் தீவிரமாக
ஈடுபட்ட சமயம், கொம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர்களோடு ஏற்பட்ட
தொடர்பின் காரணமாக, கொம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, முழு நேர ஊழியராக
இறுதிவரை அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றியவர்.
(மேலும்.....)
ருத்திரா மாவத்தைக்கு தமிழ்ச் சங்கத்தின் பெயர் சூட்டும் வைபவம் ஒத்திவைப்பு
கொழும்பு வெள்ளவத்தை 57 ஆவது ஒழுங்கையின்
பெயரை “கொழும்பு தமிழ்ச் சங்க ஒழுங்கை” என புதிய பெயர் சூட்டும் வைபவம்
நேற்று திடீரென ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றப் பேரவை உறுப்பினர்
ஏ. எச். எம். அஸ்வர் எம். பீ. மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா, மேல்
மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரிடம் பிரஸ்தாபித்துள்ளதோடு, தமது
கடும் ஆட்சேபத்தையும் தெரிவித்துள்ளார். சுமார் 70 வருடங்களாகப்
பயன்பாட்டில் இருந்து வந்த வெள்ளவத்தை ருத்ரா மாவத்தைக்கு கொழும்பு தமிழ்ச்
சங்க ஒழுங்கை “எனும் புதிய பெயரை சூட்டுவதற்கான வைபவம்” நேற்று (25/11)
நடைபெற ஏற்பாடாகி இருந்தது. இறுதி நேரத்தில் இந்தப் புதிய பெயர் சூட்டும்
நிகழ்வுக்கு ஆட்சேபம் தெரிவிக் கப்பட்டு வைபவமும் ஒத்தி வைக்கப்பட் டமை
தொடர்பாகவும் அஸ்வர் எம்.பி. கவலை தெரிவித்துள்ளார்.இப்படியான நடவடிக்கை
குரோதங்களை ஏற்படுத்தும். இதற்கு இடமளிக்கக் கூடாதெனவும் அஸ்வர் எம்.பி.
கேட்டுள்ளார். தமிழ்ச் சங்கம் தமிழை வளர்க்கிறது. தமிழர்களும்,
முஸ்லிம்களும் இந்தச் சங்கத்தினூடாக ஐக்கியமாக தமிழை வளர்க்கின்றனர் எனவும்
அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கூட்டமைப்புக்கு தமிழ் மக்களில் அக்கறை
இருந்தால் தெரிவுக் குழுவுக்கு வரவேண்டும்
-
பிரதி அமைச்சர் முரளிதரன்
தமிழ் தேசிய கூட்ட மைப்பு உண்மையிலே தமிழ் மக்களை நேசிப்பதாக இருந்தால்
அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவுக்கு
வரவேண்டுமென மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று
பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புலம்பெயர் தமிழ் அமைப்புகளை தவறாக வழி
நடத்த வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். சுமந்திரனுக்கு வடக்கு,
கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தெரியாது. அவர் கொழும்பிலே இருக்கிறார்.
டயஸ்போராவுக்காகவே அவர் குரல்கொடுக்கிறார். நாம் இலங்கையர் என்ற
அடிப்படையில் செயற்பட வேண்டும். பிரிவினையை ஏற்படுத்தவோ டயஸ்போராக்களை
தவறாக வழி நடத்தவோ வேண்டாம். அவர்களும் இலங்கையர்களே, நீங்கள் தமிழ் மக்களை
நேசிப்பதானால் பாராளுமன்ற தெரிவுக்குழு விற்கு வாருங்கள்.சுமந்திரன் எம்.பி.
யை விட அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கூடுதல் தடவைகள் வட பகுதிக்கு சென்று
வந்துள்ளார்.
Wedding bells for
ex-Tigers
A
disabled former LTTE cadre named Sunderalingam Sudharshan married
his sweetheart and former LTTE woman cadre Chittampalam
Priyadharshani of Mullaitivu at a ceremony at the Punthotam
Rehabilitation Camp Vavuniya yesterday witnessed by Rehabilitation and
Prison Reforms Minister Chandrasiri Gajadeera and ministry officials.
The couple arrested by the Terrorist Investigation Department (TID)
earlier, had fallen in love while being held at the Boossa Camp.
Sudharshan who had been earlier released from the rehabilitation camp
and reintegrated with society, visited the Punthotam Rehabilitation Camp
where Priyadharshani was undergoing rehabilitation and informed officers
about his desire to marry her. The officers had later spoken to the two
of them and arranged their wedding with the help of philanthropists.
Sudharshan's parents too attended the wedding. Since Priyadharshani's
parents were no more, two male and female military officers officiated
as her parents. Vavuniya rehabilitation coordinating officer Lt Col
Ranjith Abeysinghe attested the marriage on behalf of the bride
Priyadharshani. Priyadharshani is expected to return to the
rehabilitation camp after the couple's honeymoon since she has to
complete the period of rehabilitation.
ஆடைத் தொழிற்சாலையில் திடீர் தீ
பங்களாதேஷில் கோரம்; உயிர் காக்க மாடியிலிருந்து குதித்த பலர் உயிரிழப்பு
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ
விபத்தில் சுமார் 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மாடியின் கீழ்த்தளத்தில்
ஏற்பட்ட தீ மளமளவென்று ஏனைய தளங்களுக்கு பரவியுள்ளது. இதனால்
தொழிற்சாலைக்குள் சிக்கிக்கொண்ட பலர் உடல் கருகி பலியாகியுள்ளனர். எனினும்
தீ விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தீயணைப்புப் படையினர்
நேற்று காலையில் தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். கீழ் தளத்தில் ஏற் பட்ட
மின்சார ஒழுக்கே விபத்துக்குக் காரணம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மிகப்பெரிய ஆடைத் தொழிற்சாலைகள் இருக்கும் பங்களாதேஷில் இவ்வாறான தீ
விபத்துக்கள் ஏற்படுவது வழமையாகியுள்ளது. தொழிலாளர்கள் வெளியே செல்வதற்கு
குறைந்தது ஒரு அவசர வாயில் இருந்திருந்தால் கூட பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை
மிகக் குறைவாக இருந்திருக்கும். குறைவான பாதுகாப்பு ஏற்பாடுகள்,
தரக்குறைவான மின்சார விநியோக செயற்பாடு மற்றும் அதிக தொழிலாளர்களை பணிக்கு
அமர்த்துவது ஆகிய காரணங்களால் பங்களாதேஷில் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி
நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2010ம் ஆண்டு இதே பகுதியில் ஆடைத் தொழிற்சாலை
ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியாகினர்.
தொலைபேசி ஊடாக பெரும் பணமோசடி
வாகனங்களை பரிசாக வென்று ள்ளதாக கூறி மக்களை தொலைபேசி மற்றும் குறுஞ்
செய்திகள் (SMS) மூலம் ஏமாற்றி பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இரு
சந்தேக நபர்களை சிலாபம் பொலிஸார் மடக்கிப்பிடித்து ள்ளனர். இலங்கை பிரஜை
ஒருவரும், நைஜீரிய பிரஜை ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பல
தரப்பட்ட கடவுச்சீட்டுகள், 2450 அமெரிக்க டொலர்கள், 70 ஆயிரம் ரூபா இலங்கை
பணம், நான்கு கையடக்க தொலைபேசிகள், இரண்டு வங்கிப் புத்தகங்கள் மற்றும்
வங்கி அட்டைகளை சந்தேக நபர்களிடமிருந்து பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற் கொண்ட விசாரணைகளின் போது நாட்டின் பல
பாகங்களிலுள்ள மக்களுக்கு தாங்கள் வாகனம் ஒன்றை வென்றுள்Zர்கள் என்று
தொலைபேசி மற்றும் எஸ்.எம்.எஸ். கள் மூலம் தொடர்பு கொண்டு பண மோசடிகளில்
ஈடுபட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளன.
சவூதி பெண்கள் 'எஸ்.எம்.எஸ்.' மூலம் கண்காணிப்பு
சவூதி அரேபிய பெண்கள் நாட்டைவிட்டு வெளியேறும்போது அவர்களது ஆண்
பாதுகாவலர்களின் கையடக்க தொலைபேசிக்கு தானாக அறிவுறுத்தும் குறுஞ்செய்தி
அனுப்பும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கு கட்டுப்பாடு
நிலவிவரும் சவூதியில் இவ்வாறான புதிய முறைகளுக்கு கண்டனங்கள்
வெளியாகியுள்ளன. கடந்த வாரம் தொடக்கம் சவூதி ஆண் பாதுகாவலர்களுக்கு
இவ்வாறான குறுந்தகவல் வெளியாகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள்
தெரிவிக்கின்றன. சவூதியில் ஆண் பாதுகாவலர் இன்றி வெளியே செல்வதற்கும்
பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும் தடை காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு
அறிமுகமான மின் கடவுச் சீட்டு முறை மூலமே சவூதி அரசு பெண்கள் வெளிநாடு
செல்வதை கண்காணித்து வருகிறது. எனினும் தமது ஆண் பாதுகாவலரின் அனுமதி இன்றி
பெண்களுக்கு சவூதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள்
வெளிநாடு செல்ல மஞ்சள் அட்டை என அழைக்கப்படும் ஆவணத்தில் ஆண் துணையின்
அனுமதி கையொப்பம் பெறப்பட வேண்டும்.
அரபாத்தின் உடல்
நாளை தோண்டி எடுத்து சோதனை
பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத்தின் உடல் நாளை (செவ்வாய்க் கிழமை)
தோண்டி எடுக்கப்படவுள்ளதாக பலஸ்தீன நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த 2004ம்
ஆண்டு பாரிஸில் மரணமடைந்த யாசிர் அரபாத்தின் உடல் மீது நிபுணர்களால் சோதனை
மேற்கொள்ளப்படவுள்ளது. அரபாத்திற்கு நஞ்சூட்டப்பட்டதாக எழுந்த சந்தேகத்தைத்
தொடர்ந்தே அவரது உடல் தோண்டி எடுக்கப்படவுள்ளது. அரபாத்தின் மருத்துவ
அறிக்கையில் அவர் இரத்த கோளாரால் பாதிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் அரபாத்தின் உடைமைகளில் பொலொனியம் - 210 எனும் ஆட்கொல்லி கதிரியக்கம்
இருப்பதை சுவிட்சர்லாந்து நிபுணர்கள் அண்மையில் கண்டு பிடித்தனர். இது
தொடர்பில் கடந்த ஓகஸ்ட் தொடக்கம் பிரான்ஸ¤ம் மரண விசாரணையை ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அரபாத்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அடக்கஸ்தலத்தின்
மேற்பரப்பிலிருக்கும் கல் இன்று அகற்றப்பட்டு அவரது உடல் மேலே
எடுக்கப்படவுள்ளது.
எகிப்து ஜனாதிபதி
முர்சியின் அரசியல் சாசன அறிவிப்பை தொடர்ந்து உள்நாட்டில் பதற்றம்
எகிப்து ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரத்தை
வழங்கும் அரசியல் சாசன அறிவிப்பை ஜனாதிபதி மொஹமட் முர்சி வெளியிட்டதைத்
தொடர்ந்து அங்கு பதற்றம் நீடித்து வருகிறது. இந்த அறிவிப்புக்கு எதிராக
அந்நாட்டு நீதிபதிகள் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு
விடுத்துள்ளதோடு, முர்சிக்கு ஆதரவாக சக்திவாய்ந்த முஸ்லிம் சகோதரத்துவ
அமைப்பு நேற்று பிரமாண்ட ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. எகிப்தில் ஜனநாயக
முறையில் முதல் முறையாக தேர்வான ஜனாதிபதி முர்சி தமது முடிவே இறுதியானது
என்றும் நீதித்துறை உட்பட அதற்கு எதிராக யாரும் செயற்பட முடியாது எனவும்
கடந்த வியாழக்கிழமை அரசியல் சாசன அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து
மொஹமட் முர்சிக்கு எதிராக மிதவாதிகள் மற்றும் மதச் சார்பற்றோர் தலைநகர்
கெய்ரோவில் இருக்கும் தஹ்ரியார் சதுக்கம் மற்றும் ஏனைய நகரங்களிலும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
(மேலும்.....)
சில்லரை வர்த்தகத்தில் அந்நியரை எதிர்த்து நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு
சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரஸ்
கூட்டணி அரசின் முடிவை எதிர்த்து, இடதுசாரிக் கட்சி கள் உள்ளிட்ட அனைத்து
எதிர்க்கட்சிகளும் நாடாளு மன்றத்தில் போர்க்கோலம் பூண்டுள்ள நிலையில், அரசு
இதுதொடர்பாக ஆலோசனை நடத்தும் பொருட்டு, திங்க ளன்று அனைத்துக் கட்சிக்
கூட்டத்தை கூட்டியுள்ளது. கடந்த ஆண்டு நாடாளு மன்றத்தின் இரு அவைகளி லும்
அளித்த வாக்குறுதிக்கு மாறாக, நாடாளுமன்றத்தை கலந்தாலோசிக்காமல், மாநில
அரசுகளை கலந்தாலோசிக்கா மல், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல்
தன்னிச்சையாக நாட்டின் நலனை அந்நிய சில்லரை வர்த்தக பகாசுர கம்பெனி களிடம்
அடகுவைக்கும் வேலையில் மன்மோகன்சிங் அரசு ஈடுபட்டுள்ளது.
(மேலும்.....)
Canada’s anti-Terror laws silent on Pro-LTTE
Canadian puppet parliamentarians
The
Canadian Security Intelligence Service claims that there are more
terrorist groups active in Canada today than in any other country
in the world. That is an alarming scenario for Canada. Terrorists are
called terrorists because they strike terror. They do not respect or
honor human life and instead take potshots to nullify the right of a
person to live. Why does it become difficult for even media to project
terrorists for what they are instead of romanticizing their killing
campaigns in order to justify their killing? Why would parliamentarians
and members of society put the right to life of a terrorist above the
right to life of a civilian and do these civilians not have the right to
live in peace and is a Government not bound to provide that peace?
(more....)
கார்த்திகை
25, 2012
பரிதி கொலையை பாம்புக்குழு செய்ததா?
பிரான்ஸில் பிரேம், ரமேஸ் கைது
கடந்த 8ஆம் திகதி பரிஸ் நகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பிரான்ஸ் தமிழர்
ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாள ரும் விடுதலைப்புலிகளின் சிரேஷ்ட
உறுப்பினருமான பரிதி என்று அழைக்கப் படும் நடராசா மதீந்திரனின் படுகொலை யில்
சம்பந்தப்பட்டதாக கைது செய்யப் பட்டவர்கள் பிரான்ஸில் இயங்கும்
பாம்புக்குழுவை சேர்ந்த பிரேம், மற்றும் ரமேஸ் என பரிஸ் காவல்துறை
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பரிஸ் பொலிஸாருக்கு தகவல் கொடுத் ததை அடுத்து
முதலில் பிறேம் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் ரமேஸ் என்பவர்
கைது செய்யப்பட்டார். பரிஸில் இயங்கும் குழுக்களில் பாம்புக் குழுவும் ஒன்று.
இக்குழு பரிதியுடன் மிக நெருக்கமாக இருந்ததாகவும், தெரிவிக்கப்படுகிறது.
பாம்புக்குழுவுக்கும் பரிதிக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக
இக்கொலை நடந்ததா அல்லது பாம்புக்குழுவிற்கு பணத்தை கொடுத்து இக்கொலை
நடத்தப்பட்டதா என்பது பற்றி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
(மேலும்.....)
மாவீரர் தினத்திற்கு வசூல் செய்யும் போட்டிக்
குழுக்களால் உயிர்ப்பலி
புலம்பெயர்
நாடுகளில் நிதி சேகரிப்போர் கடும் மோதலில்! உலகத் தமிழரை உணர்ச்சிப்
பாதையில் சுருட்டி எடுக்க சிலர் தீவிரம்
புலம்பெயர் நாடுகளில் போராட் டத்துக்கென நிதி
சேகரித்து ருசிகண்ட வர்கள், அந்த வருமானத்துக்கும் வசதி களுக்காகவும்
மட்டுமே இப்போது அங்கே அடிபிடியை நடத்திக் கொண் டிருக்கிறார்கள். இந்த மாதம்
வரும் மாவீரர் நாளையொட்டி, யார் வசூலுக்கு உரித்துடையவர்கள் என்ற போட்டியில்
உயிர்ப் பலியெடுப்புகளும் கூட அங்கு நடக்கின்றன.
மாவீரர் நாளுக்கு உரிமை கோரும் குழுச்சண்டையைப் பட்டவர்த்தனமாகக் காட்டி,
அந்த இறந்துபோன வீரர்களை இழிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு
மாவீரர் நாள் வசூலுக்காக அடிபடுகிறவர்கள் ஒருபுறமிருக்க, அந்த இழப்புகளை
உணர்ச்சிகர ஆவேச வசனங்களாக்கி ஊடக வியாபாரம் மற்றும் கதிரை லாபங்களுக்குப்
பயன்படுத்தித்கொள்ளும் முனைப்பில் உலகத் தமிழர்களை உணர்ச்சிப் பாயில்
சுருட்டி எடுப்பவர்களும் மறுபுறும் அதே பழைய பாணியில் பழிவாங்கும் உண
ர்ச்சிகளையும், பகைவெறுப்பு ஆவேசத்தையும் மீண்டும் தூண்டிவிடும் விதமாக ஒரு
சில இணையத்தளங்கள் எழுதுகின்றன.
(மேலும்.....)
தமிழ் பத்திரிகைகளில் செய்தி பிரசுரமாகவே பாராளுமன்றத்தில் காரசார உரை
அன்று அப்பாவி தமிழ் மக்களின் சேமிப்பை சூறையாடி பலரது தற்கொலைக்கு
காரணமானவர் இன்று மனித உரிமைக்காக குரல்
TNA வெளிநாடு செல்வது உறவுகளை சந்திக்கவும்,
பணம் வசூலிக்கவுமே!
தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளு மன்ற
உறுப்பினர்கள் உலகம் பூராகவும் பொய் உரைப்பது போல் இச்சபையிலும் பொய்
பேசுகின்றனர். அதே பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் பல தசாப்தங்களுக்கு முன்னர்
அப்பாவி மக்களின் பணத்தை மோசடி செய்தவர். அவ் உறுப்பினர், தெற்கில்
“சக்விதி” (sakvithi) என்ற நிதி நிறுவனத்தைப் போல் “சப்ரா பினான்ஸ்” (Sabra
Finace) எனும் பெயரில் மக்களை ஏமாற்றிய நிதி நிறுவனமொன்றுடன் தொடர்புடையவர்.
அந்நிறுவனத்தின் மோசடி செயற்பாட்டால் தமது வாழ்நாள் சேமிப்புகளை
வைப்பிலிட்ட அனேகமான மக்கள் இறுதியாக தற் கொலை செய்துகொண்டனர். பெருமளவு
அப்பாவி மக்களின் தற்கொலைகளுக்கு காரணமாகயிருந்த இவர் ஓர் கொலை யாளியாக
கணிக்கப்பட வேண்டியவர்.
(மேலும்.....)
புலிகளின் பிரிவினைவாதமே தமிழ் இளைஞர்களுக்கு தடை!
தமிழ் இளை ஞர்களை இரா ணுவத்தில்
சேர்த்துக்கொள்ள அரசாங்கம் கடந்த காலங்களில் தடையாக இருக்க வில்லை எனவும்
விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதமே தடையாக இருந்தது எனவும் யாழ்ப்பாண
பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க கூறினார்.
ஆகையால், யாழ்ப்பாண இளைஞர்கள் இராணுவத்தில் சேரவேண்டும் என அவர் அழைப்பு
விடுத்தார். தமது பிரிவினைவாத கொள்கை காரணமாக விடு தலைப் புலிகள் இயக்கம்,
தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேரவிடாது தடுத்து வந்தது. இதனால், தமிழ்
இளைஞர்களுக்கு இராணுவத்தில் சேர முடியவில்லை. கிளிநொச்சியைச் சேர்ந்த 100
தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்ந்துள்ளனர். இன்னும் பலர் சேர்வதை நாம்
வரவேற்போம் என்றார்.
சூளைமேட்டில்
நடந்தது என்ன?
இப்போது ஊடகங்களை இடையிடையே ஆக்கிரமிக்கும்
செய்திகளில் சூளை மேட்டுச் சம்பமும் ஒன்று. சூளை மேட்டுச் சம்பவம் என்றால்,
என்னவென்றே தெரியாதவர்கள்கூட இந்த செய்திகள் வரும் போது பரபரப்போடு
படிக்கிறார்கள். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர்
நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சூளை மேட்டு படுகொலை சம்பவத்தோடு
சம்பந்தப்பட்டவராகவும், அதை விட மேலாக அவரே இந்தப் படுகொலையை
நடத்தியவராகவும், இதனால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, தொடர்ந்து
நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காத காரணத்தால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தேடப்படும் குற்றவாளியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளார் என்றும் சில
ஊடகங்கள் சொல்லி வருகின்றன. இந்நிலையில், சூளை மேட்டில் என்ன நடந்தது என்பதை
அன்றைய களத்தில் நின்று பார்த்தவர்களில் ஒருவனாக அதன் உண்மை விளக்கத்தை
சகலருக்கும் உணர்த்த விரும்புகிறேன். 1986 ஆம் ஆண்டு, அப்போது ஈ.பி.டி.பி
என்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தோன்றியிருக்கவில்லை. டக்ளஸ் தேவானந்தா,
ஈ.பி.ஆர்.எல்.எப் என்று அழைக்கப்படும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகவும், அதன் மத்திய குழுவின் உயர்
அரசியல் பீட உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் பிரதான படைத்தளபதியாகவும்
இருந்தார்.
(மேலும்.....)
நண்பனையே கொல்லத் தூண்டிய கடன் சுமை
பிறரின் கடனுக்காக தன் உயிரையிழந்த
சின்னத்துரை இந்தீஸ்வரன் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். கொழும்பு கொட்டாஞ்
சேனையில் வசிக்குமிவர். பிறர் வங்கியில் அடகு வைத்த தங்கநகைகள் குறித்த
தினம் கலாவதியாகி ஏலத்திற்கு செல்லும் முன் அதனை மீட்டு கொழும்பு செட்டியார்
தெருவிலுள்ள கடைகளுக்கு விற்கும் தொழிலை பல வருடகாலமாக செய்து வந்தார்.
நகைக்கடை உரிமையாளர்கள் இவர் மீது நம்பிக்கை வைத்ததற்கு காரணம் இவரது
நேர்மையான சுபாவமாகும். இவரதுபெயரை சொன்னால் செட்டியார் தெருவில் எவரும்
அறிந்து கொள்ளுமளவுக்கு தன் பெயரையும் நம்பிக்கைகையும் பதிவு செய்திருந்தார்.
(மேலும்.....)
கசாப் அவசரப்பட்டுவிட்டதா இந்தியா?
(விசு கருணாநிதி)
மும்பையில் பயங்கரவாதத் தாக்குதல்
நடத்தியபோது உயிருடன் பிடிக்கப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதியான அஜ்மல் கசாப்
தூக்கிலிடப்பட்டமை குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. இந்தத்
தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தியாவை நேசிப்பவர்கள் எனப் பலரும்
கசாப்புக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதைப்பற்றிப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து மக்கள் தம் மகிழ்ச்சியை
வெளிப்படுத்தியிருக்கிறார்கள். அதேநேரம் எஞ்சிய மரண தண்டனைக் கைதிகளையும்
தூக்கிலிட வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருக்கிறார்கள். ஆனால், சில மனித
உரிமை ஆர்வலர்களும், இன உணர்வாளர்களும் மரண தண்டனை வழங்கியது தவறு என்று
தெரிவிக்கிறார்கள்.(மேலும்.....)
கார்த்திகை
24, 2012
அடுத்த
மாவீரர் சடங்கு இலங்கையிலும் ?
மாவீரர்தினம் போன்ற நிகழ்வுகளைத் தமிழ்
மக்கள் கடைப்பிடிக்க இலங்கை அரசு இடமளிக்க வேண்டும் என்று நெருக்கடிகள்
தொடர்பிலான சர்வதேசக் குழு (International Crisis Group) வலியுறுத்தியுள்ளது.
போரில் பலியான தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களுடன்
தொடர்புடையவர்களின் நினைவாக அவர்களின் குடும்பங்களால் மேற்கொள்ளப்படும்
நினைவுதின நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று
நெருக்கடிகள் தொடர்பிலான சர்வதேசக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச
நெருக்கடிக் குழு என்ற தன்னார்வ நிறுவனம் 49 வீதமன பணக் கொடுப்பனவை மேற்கு
நாடுகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறது. இனப்படுகொலையின் பின்னணியில்
செயற்பட்ட தன்னார்வ நிறுவனங்கள் அனைத்தும் மேற்கு நாடுகளின்
நிதிக்கொடுப்பனவிலேயே தங்கியிருந்தன.
பெரும் பணச் செலவில் நடத்தப்படும் மாவீரர் தின சடங்கு, மக்களின் இலங்கை
அரசுக்கு எதிராகப் போராட்டத்தை வெற்றுச் சடங்காக மாற்றும் நிகழ்வாகும்.
இலங்கையில் இனச் சுத்திகரிப்பு தீவிரமடையும் நிலையில், வன்னிப் படுகொலைக்
காலத்தில் செயற்பட்ட புலம் பெயர் புலி தலைமைகள் வெவ்வேறு பிரிவுகளா மாவீரர்
பணச் சடங்கை நடத்துகின்றன. இலங்கை அரசின் நேரடி ஆதரவாளர்கள் யாழ்ப்பணத்தில்
டக்ளஸ் மற்றும் இராணுவக் கோட்டைக்குள் இலக்கியச் சந்திப்பு ஒன்றை
நடத்துகின்றனர். இந்த நிலையில் அடுத்த மாவீரர் தின நிகழ்வு இலங்கை அரசின்
மறைமுக ஆதரவாளர்களன அதன் ஏற்பாட்டாளர்களால் யாழ்ப்பாணத்தில்
நட்த்தப்பட்டாலும் ஆச்சரியம் அடைவதற்கு இல்லை. அங்கு, உயிருடன் வாழும்
பிரபாகரன் திரும்பிவந்து கேட்டாலே தமிழ் மக்களுக்கு உரிமை வழங்கப்படும் என
மகிந்த ராஜபக்ச சொன்னாலும் வியப்படைவதற்கில்லை.
அஜ்மல் கசாப்பின் கடைசி நிமிடங்கள்!
டெல்லி,
மும்பை அரசு மேல்மட்ட அதிகாரிகள் கடந்த வாரம் ரொம்பவே பிஸி. 'சி- 7096'
என்று குறிப்பிட்ட ஃபைல் அதிரகசியமாக பல இடங்களுக்கும் சென்றுவந்தது. அது,
அஜ்மல் கசாப் ஃபைல் என்பது, அவர் தூக்கில் போடப்பட்ட பிறகுதான்
மற்றவர்களுக்குத் தெரியவந்தது. மும்பைத் தாக்குதல் தீவிரவாதி கசாப்புக்கு
தூக்குத் தண்டனை விதித்து 2010-ம் ஆண்டு உத்தரவிட்டது நீதிமன்றம். அதன்
பிறகு, பல்வேறு கட்டங்களைக் கடந்து, தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யும்
கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இந்தத் தகவலை கசாப்பிடம் சிறைச்சாலை
அதிகாரி பக்குவமாக எடுத்துச்சொல்லி, மரண அறிவிப்பு அறிக்கையில் கையெழுத்து
வாங்கினார். 'குப்'பென்று வியர்த்துக்கொட்ட, கைகள் நடுங்க அந்த வாரன்ட்டில்
கையெழுத்துப் போட்டாராம் கசாப். அந்த நிமிடம் முதல் மரண பீதி அவர் முகத்தில்
தொற்றிக்கொண்டது. அதையடுத்து, அவ்வப்போது பிதற்ற ஆரம்பித்தாராம்.(மேலும்.....)
பா. ம. க.வினர் தூண்டுதலால் தருமபுரி கலவரம்
- தி. மு. க.
தருமபுரி கலவரத்தில் பா. ம. க.வில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும்
பங்கும் இருக்கிறது என்று தி. மு. க.வின் ஆய்வுக் குழு அறிக்கை
வெளியிட்டுள்ளது. தருமபுரியில் தலித் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக
தி. மு. க. அமைப்புச் செயலர் பெ. வீ. கல்யாணசுந்தரம் தலைமையில் 5 பேர்
கொண்ட குழு புதன்கிழமையும், வியாழக்கிழமையும் அங்கு ஆய்வு மேற்கொண்டது. இது
தொடர்பாக வியாழக்கிழமை அந்தக் குழு வெளியிட்ட அறிக்கை, தருமபுரி கலவரம்
திட்டமிடப்பட்டுள்ளது. காதல் திருமணம் மட்டுமே இதற்குக் காரணமில்லை. பா. ம.
க.வில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும் பங்கும் உள்ளது. காதல் திருமணம்
தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை கிருஷ்ணாபுரம் காவல் துறையினர்
முறையாகக் கையாளவில்லை. காவல் துறையில் பணியாற்றும் இரண்டு சமூகத்தைச்
சார்ந்த இரு காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையால் இந்தப்
பிரச்சினை இன்னும் பெரிதாகி உள்ளது. இருவரும் தத்தம் ஜாதிப் பற்றுடன்
பிரச்சினையைக் கையாண்டுள்ளனர். காவல் துறையினரின் அலட்சியத்தால் பெரிய
அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசின் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
முழுமையாகச் சென்றடைய வில்லை. ஒரு சிலருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை.
இழப்பீட்டுத் தொகையான ரூ. 50 ஆயிரம் போதுமானதாக இல்லை. இரு தரப்பு
மக்களிடமும் இன்னும் பதற்றமும் அகலவில்லை. அமைதிப் பேச்சுவார்த்தைக்கு
மாவட்ட நிர்வாகம் இதுவரை அமைதிக் குழுவைக்கூட அமைக்கவில்லை என்று அந்த
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பூந்தமல்லி சிறையிலுள்ள இலங்கை தமிழர் விடுதலை கோரி உண்ணாவிரதம்
எந்தவித வழக்கும் இல்லாமல் சட்ட விரோதமாக பூந்தமல்லி முகாமிலுள்ள தன்னை
விடுதலை செய்யக்கோரி இலங்கைத் தமிழரான பரமேஸ்வரன் காலவரையற்ற உண்ணாவிரதம்
தொடங்கியுள்ளார். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பொருள் கடத்த முயன்றார்
என்ற குற்றச்சாட்டில் சென்னையில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி
கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட பரமேஸ்வரன் பின்னர் பிணையில்
விடுதலையானார். ஆனால் சிறையிலிருந்து விடுதலையான அவரை சிறை வாசலிலேயே வைத்து
கியூ பிரிவு பொலிஸார் கைது செய்து செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தனர்.
இதே வழக்கில் இவருடன் 10 பேர் கைது செய்யப்பட்டு சிறப்பு முகாமில்
அடைக்கப்பட்டனர். ஆனால் பரமேஸ்வரனைத் தவிர ஏனையோர் விடுவிக்கப்பட்டுவிட்டனர்.
அதனால் இவர் உட்பட மேலும் பலர் தங்களை விடுதலை செய்யக்கோரி செங்கல்பட்டு
முகாமில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2010 ஆம்
ஆண்டு உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் உட்பட 15 பேர் பொலிஸாரைத் தாக்க
முயன்றதாக வழக்குப் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட 43 நாளில் இந்த வழக்கிலிருந்தும் பிணை கிடைத்து வெளியில்
வந்தார் பரமேஸ்வரன். ஆனால் மறுபடியும் இவர் கைது செய்யப்பட்டு பூந்தமல்லி
சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார்.
உள்ளங்கையில் ரேகைகள் எதற்கு?
எமது உடலின் தோலில் உள்ளங் கால்களிலும் உள்ளங் கைகளிலுமே ரேகைகள் நிறைந்து
காணப்படுகின்றன. உடலின் ஏனைய பாகங்களிலுள்ள தோலில் ரேகைகள் இருப்பதில்லை.
அவை மிருதுவாகவே காணப்படுகின் றன. உள்ளங்கைக்கும் உள்ளங்காலுக்கும்
இப்படியொரு விசேடம் ஏன்? கூர்ப்பினால் வந்துள்ள இசைவாக்கமே இதுவென
உயிரியலாளர்கள் கூறுகின்றனர். தரையில் நடப்பதற்கு உராய்வு இல்லாமலிருக்க
வேண்டும். அதற்கான தவாளிப்புதான் உள்ளங்கால் ரேகைகள். அதுபோன்றுதான்
உள்ளங்கை ரேகைகள் பற்றிப் பிடிப்பதற்கு உதவு கின்றன. உள்ளங்கையில் ரேகைகள்
இல்லாது போனால் பற்றிப் பிடிக்கும் போது வழுக்கி விடுவதற்கு இடமுண்டு.
இதனைத் தடுப்பதற்கே ரேகைகள்.
இந்திய அரசுக்கெதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தள்ளுபடி
முக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை
சபாநாயகர் தள்ளுபடி செய்தார். பல்வேறு அமளிகளுக்கு இடையே ஆளும் ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரிணாமுல்
காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுதீப் பந்தோ
பாத்தியா, இந்த நம்பிக்கையில்லாத தீர்மானத்தை தாக்கல் செய்தார். இந்த
தீர்மானத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் 19 பேரும் ஆதரவு
தெரிவித்தனர். மேலும் பிஜுஜனதளம் கட்சி எம்.பிக்கள் 3 பேர் மட்டுமே
தீர்மானத்தை ஆதரித்தனர். ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர 50
எம்.பிக்களின் ஆதரவு வேண்டும். தீர்மானத்தை முன்மொழிய போதிய ஆதரவு
இல்லாததால் சபாநாயகர் மீராகுமார் தள்ளுபடி செய்தார். திரிணாமுல் காங்கிரஸ்
கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா. ஜ. க., இடதுசாரி
கட்சிகள் ஆதரவு அளிக்காததால் தோல்வி அடைந்தது.
தருஸ்மன் அறிக்கை
போன்றே பெட்றி அறிக்கையும் ஆதாரமற்றது
பயங்கரவாத யுத்தத்தின் கடைசி நாட்களில் கொல்லப்பட்ட பொதுமக்களின்
எண்ணிக்கையை தருஷ்மன் அறிக்கை ஆதாரமின்றி கற்பனையில் தயாரித்துள்ளதென்றும்
கடைசி நாட்களில் எல்.ரி.ரி.ஈ யினர் பொதுமக்களை சுட்டுக் கொன்றது குறித்தும்
இவ்வறிக்கையில் எவ்வித கண்டனத்தையும் வெளியிடவில்லை. இதிலிருந்து இவ்வறிக்கை
ஒருதலைப்பட்சமான அறிக்கை என்று கருதுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு
வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின்
செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்ட உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கை
அல்லது பெட்றி அறிக்கை என்று அழைக்கப்படும் அறிக்கை சம்பிரதாய பூர்வமாக
நொவம்பர் 14ம் திகதி அன்று செயலாளர் நாயகத்திற்கு ஒப்படைப்பதற்கு ஒரு நாள்
முன்னதாக வெளியாகியது தொடர்பாக எமது வெளிவிவகார அமைச்சு ஒரு அறிக்கையை
வெளியிட்டுள்ளது. இவ்வறிக்கையில் எல்.ரி.ரி.ஈ பொது மக்களை யுத்தக்
கேடயங்களாக வைத்து அவர்களை உயிரிழக்கச் செய்தது குறித்தும் தப்பியோடியவர்களை
எல்.ரி.ரி.ஈ. சுட்டுக்கொன்றது குறித்தும் எவ்வித தகவலும்
குறிப்பிடப்படவில்லை. எனவே இவ்வறிக்கை ஒருதலை ப்பட்டசமாக இலங்கைக்கு எதிராக
தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதை குறிப்பிடுகிறோம்.
தனியார் துறையை
பாதிக்காத வகையில் அரச போக்குவரத்தை பலப்படுத்த திட்டம்
அரச போக்குவரத்து சேவையை பலப்படுத்தும் வகையில் அடுத்த வருடத்தில் மேலும்
2000 புதிய பஸ்களை கொள்வனவு செய்து சேவையிலீடுபடுத் தவுள்ளதாக போக்குவரத்து
அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார். அத்துடன் கொழும்பு நகர் புற
சேவையிலீடுபடுத்தும் வகையில் தற்போது சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ள சொகுசு
பஸ்களுக்கு மேலதிக மாக மேலும் 25 சொகுசு பஸ்களை அடுத்த வருடத்தில்
ஈடுபடுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அரச பஸ் போக்குவரத்துத்
துறையில் மேற்கொள்ளப்படும் எத்தகைய முன்னேற்ற நடவடிக்கைகளும் தனியார்
போக்குவரத்துத் துறைக்கு எவ்விதத்திலும் தடையாகக அமையாது. ஏனெனில் அரச,
தனியார் துறைகள் இணைந்தே மக்களுக்கான முழுமையான போக்குவரத்துச் சேவையை
வழங்க முடியும். தற்போது அரச போக்குவரத்துச் சேவையில் பழைய பஸ்கள் 7775
திருத்தப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு ள்ளன. பத்து வருடங்களுக்கு
மேற்பட்ட 2676 பஸ்களும் 15 வருட சேவைக்குட்பட்ட 2903 பஸ்களும்
எம்மிடமுள்ளதுடன் அவற்றை சேவையிலிருந்து நீக்குவதற்கு அமைச்சு
தீர்மானித்துள்ளது. இதற்கு மாற்aடாகவே 2000 புதிய பஸ்களைக் கொள்வனவு செய்ய
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாவுறுவிலுள்ள
அவுஸ்திரேலிய தடுப்பு முகாமின் நிலைமைகள் மிகவும் கொடூரமானவையாகும்
அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வரும் அகதிகளுக்காக பசுபிக் பிராந்திய
நாடான நாவுறுவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முகாமிலான நிலைமைகள் கொடூரமானவையாகும்
மோசமானவையாகவும் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெள்ளிக்கிழமை
தெரிவித்துள்ளது.
மேற்பட்டி தீவிலுள்ள கூடாரங்கள் அளவுக்கதிகமான
புகலிடக்கோரிக்கையாளர்களால் நிரம்பி வழிவதாகவும் அவை வெப்பமாகவும் ஈரமாகவும்
உள்ளதாகவும் மேற்படி முகாமுக்கு இந்த வாரம் விஜயம் செய்த சர்வதேச
மன்னிப்புச் சபையின் பிரதிநிதிகள் அறிக்கையிட்டுள்ளனர்.
386 ஆண்கள் தங்கியுள்ள மேற்படி முகாமுக்கு
சர்வதேச மன்னிச் சபையின் பிரதிநிதிகள் 3 நாள் விஜயத்தை மேற்கொண்டு
சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்முகாம்களில்
எவ்வளவு காலத்துக்கு தடுத்துவைக்கப்படவுள்ளார்கள் என்பது தொடர்பில்
நிச்சயமற்ற நிலைமையானது அங்குள்ளவர்களது மன ஆரோக்கியம் பாதிக்கப்படுவதற்கு
வழிவகுப்பதாக உள்ளது என சர்வதேச மன்னிப்புச் சபை பிரதிநிதிகள்
குறிப்பிட்டுள்ளனர்.
கார்த்திகை
23, 2012
வழக்கிலிருந்து புலித் தலைவர் பிரபாகரன் பெயரை நீக்கக் கோரி க்கை
சென்னை பாண்டி பஜாரில் கடந்த 1982 ஆம் ஆண்டு
விடுதலைப்புலிகளுக்கும், பிளாட் இயக்கத்தினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை
தொடர்பான வழக்கில் பிரபாகரன் உள்ளிட்ட 4 பேரின் பெயரை நீக்க வேண்டும் என்று
சிபிசிஐடி போலீசார், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சென்னை
பாண்டி பஜாரில் கடந்த 1982 மே மாதம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை
சேர்ந்தவர்களுக்கும், பிளாட் இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் துப்பாக்கிச்
சண்டை நடந்தது. விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், ராகவன் (எ)
சிவகுமார் ஆகியோர் சுட்டதில் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன்,
முகுந்தன் (எ) உமா மகேஸ்வரன் ஆகியோர் காயமடைந்தனர்.
(மேலும்....)
கசாப்பை போல ராஜீவ் கொலையாளிகளையும் தூக்கிலிட
வேண்டும் -
இளங்கோவன்
கசாப்பை தூக்கிலிட்டதைப் போல ராஜீவ்காந்தியை
கொன்ற கொலையாளிகளையும் உடனே தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்களையும் நாடு கடத்த
வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வைகோ
மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வைகோ தூக்கு
தண்டனையை 'ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது அபத்தமானது என அவர்
தெரிவித்துள்ளார். மேலும் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை
தூக்கில் போட்டதை நாடு முழுவதும் உள்ள மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி
வருகின்றனர். எனவே ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளையும், பாராளுமன்றத்தை
தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அமெரிக்கா விஜயம்
சுகயீனம் காரணமாக அமெரிக்க
வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் பிரதமர் டி.எம். ஜயரட்னவை
பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்காவுக்கான தனிப்பட்ட
விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
கஸகஸ்தான்
நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்ட ஜனாதிபதி, இவ்வாறு
அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார். வழமைபோல் இம்முறை யாரும்
ஜனாதிபதிக்கு எதிராக கறுப்பு கொடி பிடிகப்போவதாக அறிய முடிய வில்ல.ை
கடல் கொந்தளிப்பு
உயிரை பணயம் வைத்து ஆஸி செல்ல வேண்டாம்
தொழில்வாய்ப்பு இருப்பதாக நம்பி எவரும் அவுஸ்திரேலியா வரவேண்டாம். அதேவேளை
எதிர்வரும் நான்கு மாதங்களுக்கு கிறிஸ்மஸ் மற்றும் கஸகஸ் தீவுகளின் கடல்
கொந்தளிப்பு உக்கிரமடைந்து காணப்படு மென்பதால் இக்காலப்பகுதியில் படகுகள்
மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு
அவுஸ்திரேலிய அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டவிரோதமான முறையில்
படகுகள் மூலம் அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு அங்கு வேலை செய்வதற்கு எவ்வித
உரிமையும் இல்லை. எமக்கு வேலைவாய்ப்புக்கு ஆட்கள் தேவைப்படு கின்ற போதிலும்
திறமையானவர்களுக்கு மட்டுமே எம்மால் இடமளிக்க முடியும். குடும்பத்தோடும்
சிறு பிள்ளைகளோடும் உயிரை பணயம் வைத்து வருபவர்கள் நிச்சயமாக
திருப்பியனுப்படுவர் என குடிவரவு மற்றும் பிராஜவுரிமைகள் திணைக்களத்தின்
பிரதிச் செயலாளர் பீட்டர் வார்டோஸ் தெரிவித்தார். இலங்கை காலநிலை
முன்னேற்றமடைந்து வருகின்ற போதிலும் அவுஸ்திரேலியாவை சூழவுள்ள கடற்பரப்பில்
கொந்தளிப்பு உக்கிரமடைந்துக் காணப்படும் காலம் இதுவாகையால் நிச்சயமாக
உயிராபத்துக்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வருமென்பதை கருத்திற்கொண்டு படகு
மூலமான பயணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் ரியர் அட்மிரல் டேவிட் ஜொன்ஸ்டன்
கேட்டுக் கொண்டார்.
My
recent visit to Sri Lanka
(Written By Sri Lanka Guardian on November 22, 2012 | 9:56 AM, by
Dr.Sripali Vaiamon)
After a lapse of ten years I paid a visit to my mother country, Sri
Lanka and got amazed with the infrastructure activities commenced on the
development of the country which were almost neglected by the leaders of
the past. I made a journey from Colombo to Passikuda via Kandy, but the
Kandy road was congested with heavy traffic where I felt it needs
expansion without delay or another express way in future has to be
constructed with overhead bridges. The road from Habarana to Passikuda
with tarmac was excellent, perhaps in ten years time it may have to be
expanded in view of the clusters of tourist hotels coming up in the
region. A byroad avoiding old urban areas to hotel complex is more
expedient. A 9 starting from Kandy is also need expansion within a
couple of years. Road net work in the country is coming up
unprecedented. Road network is the prime factor in any country to
prosper towards its economic targets. I am delighted to note that Asia
Development Bank has decided to donate US $. 98 million to develop the
roads in the war torn northern region. I am also happy that Mr.John
M.Seneviratna who represents Rathnapura District , the Minister
in-charge of State Administration, has proposed to have a cable car
service to Sri Pada. This I proposed in my Publication, Pre-historic
Lanka to end of Terrorism, Dedicated to The President, in full
elaborations with the experienced that I had gained after making two
trips by cable cars to Alps when I was undergoing Media training in West
Germany.
(more....)
பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் மறைவின் 30ஆவது ஆண்டு நினைவுப் பேருரை
கலாநிதி ந.இரவீந்திரன் 'முற்போக்கு இலக்கியத்திற்கு பேராசிரியர் க.கைலாசபதி
அவர்களின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.
காலம்: 24 – 11 – 2012 சனிக்கிழமை மாலை 4-30 மணி
இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்
58 தர்மராம வீதி, கொழும்பு – 06
தலைமை: கலாநிதி செல்வி திருச்சந்திரன்
நிகழ்வில் கலாநிதி ந.இரவீந்திரன் எழுதிய 'முற்போக்கு இலக்கியத்தில்
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு' என்ற நூலும் வெளியிட்டு
வைக்கப்படும்.
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன்
அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
E-Mail: kailashpath@yahoo.com
“I
remain a friend of the Sinhala people and of Buddhism”
Sri Lanka has enough place and resources and ways of coexisting for its
multiethnic, multi religious population. Do not allow the politicians to
use the Mahavamsa chronicles to politicize or overtake the noble
teachings of Buddha. There are many good courageous political and
religious leaders as well as human rights activists and media people
among you. But they are threatened to become a fearful minority.
Identify and support them before they are forced to leave the country
for their survival. If we have the courage and wisdom, to cling on only
to Truth of history and Justice as due to all human beings irrespective
of our ethnic and religious differences, then we can build a peaceful
unity in diversity on that paradise isle. Mr.D.S.Senanayake, the first
Prime Minister, who knew the birth pangs and fears of the non-Sinhalese
on the eve of Independence, loudly proclaimed to the world: United we
stand, divided we fall!
(more....)
மனித குலத்துக்கு அதிர்ச்சியூட்டும் கியூரியாசிற்றியின் கண்டுபிடிப்பு
செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள
கியூரியா சிட்டி இயந்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்றை
கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். எனினும் அது குறித்து
அவர்கள் மெளனம் காத்து வருகின்றனர். ஒருசில வாரங்களிலேயே சிகப்பு கிரகத்தில்
என்ன கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட
வுள்ளது. கியூரியா சிட்டியின் மிக முக்கியமான ஆய்வு இயந்திரமான ‘சாம்’
ஊடாகவே இந்த புதிய கண்டுபிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள்
தெரிவிக்கின்றன. கியூரியா சிட்டியின் இரசாயன ஆய்வுகூடமாக செயற்படும் ‘சாம்’
மூலம் செவ்வாய்க் கிரகத்தின் மண், வாயு மற்றும் பாறைகளில் ஆய்வுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ‘சாம்’ இயந்திரத்திற்கு உயிரினங்கள்
இருப்பதற்கான அடிப்படை கட்டமைப்பை கண்டறியும் திறன் இருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது. எனினும், அதனது சமீபத்திய கண்டுபிடிப்பு குறித்த தகவலை
வெளியிட விஞ்ஞானிகள் மறுத்து வருகின்றனர். ஆனால், அது பூமியை
அதிரவைக்கக்கூடியது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். “இந்த தரவு வரலாற்று
புத்தகத்தில் பதியக்கூடியது. அது சிறப்பான ஒரு விடயம்” என கியூரியா சிட்டி
இயந்திரத்தின் ஆய்வுக் குழுவின் தலைவர் ஜோன் கிரேட் சிங்கர் அளித்த
பேட்டியில் கூறியுள்ளார்.
பின்லாடன் உடல்
அடக்கம் குறித்த தகவல்கள் அம்பலம்
அமெரிக்காவின் கடற்படை தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா
பின்லாடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டது தொடர்பான தகவல்கள் அமெரிக்க
பாதுகாப்பு திணைக்களத்தினூடே முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான்
அபோதாபாத் நகரில் 2011 மே முதலாம் திகதி கொல்லப்பட்ட ஒசாமா பின்லாடன்
தொடர்பாக மே 2 ஆம் திகதி அமெரிக்க கப்பற் படை சிரேஷ்ட அதிகாரிக்கு அனுப்பிய
மின்னஞ்சலில் பின்லாடனின் உடல் கழுவப்பட்டது, வெள்ளை ஆடையால் மூடப்பட்டது,
பின்னர் கனத்த பையொன் றில் வைக்கப்பட்டது தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று மற்றுமொரு மின்னஞ்சலில் பின்லாடனின் உடலை அடக்கம் செய்ய ஒரு சிறு
குழு கப்பலில் சென்றது பற்றி கூறப்பட்டுள்ளது. 2011 மே 22 ஆம் திகதி ரியர்
அட்மிரல் சால்ஸ் குவட்டே அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில் இஸ்லாமிய
சம்பிரதாயத்திற்கு அமைய உடல் புதைக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது. ‘இறந்த
சடலம் கழுவப்பட்டு வெள்ளை ஆடையில் வைக்கப்பட்டது. இராணுவ அதிகாரி தாம்
தயாராகி இருந்த சமய வாசகங்களை வாசித்தார். அதனை மற்றையவர் அரபு மொழியில்
மொழிபெயர்த்தார். அதன்பின் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருந்த தட்டையான பலகையில்
உடல் வைக்கப் பட்டு கடலுக்கு சருக்கி விடப்பட்டது’ என அந்த மின்னஞ்சலில்
மேலும் கூறப்பட் டுள்ளது. எனினும் இந்த மின்னஞ்சல் பரிமாற்றத்தில்
பின்லாடனின் உடல் கொண்டு செல்லப்படும் பகுதி குறித்து ரகசியம்
பேணப்பட்டுள்ளது. பின் லாடன் உடல் கொண்டு செல்லப்படுவது குறித்து ஒருசில
குறியீட்டு வாசகங்க ளையே பயன்படுத்தியுள்ளனர்.
எறும்புகளின்
தந்திரோபாயம்!
சின்னஞ்சிறு பிராணிகள் கொண்டுள்ள நுட்பமான செயல்களை அறிந்தால் உண்மையிலேயே
நாம் வியந்து போவோம். எறும்புகளில் கூட நாம் அறிந்துகொள்ள வேண்டிய பலவிதமான
செயற்பாடுகள் இருக்கின்றன. ஏபிட்டுகள் என்று சொல்லப்படும் சின்னஞ்சிறு
பிராணியொன்று இருக்கிறது. இது சிலவகை இலைகளின் சாற்றை மட்டுமே
உட்கொள்ளக்கூடியது. ஆனால் அந்த வகை இலையை நோக்கி ஏபிட்டுகளை சுமந்து
செல்வதற்கு எவராவது உதவி புரிய வேண்டும். அந்த உதவியை எறும்புகள்
செய்கின்றன. எறும்பு அங்குமிங்கும் தேடி ஏபிட் ஒன் றைக் கண்டுபிடித்ததும்
அதனைச் சுமந்தபடி குறித்த இலைக்குச் செல்கிறது. அதன் பின்னர் இலையின் சாறு
ஏபிட்டுக்குக் கிடைக்கிறது. அதுசரி... ஏபிட்டுகள் மீது எறும்புகளுக்கு ஏன்
இத்தனை அக்கறை? அதுதான் சுயநலம்... ஏபிட்டுகள் இலையின் சாற்றை உட்கொள்ளும்
போது வெல்லத்தை (இனிப்பு) வெளியேற்றுகின்றன. இந்த வெல்லத்தை எறும்புகள்
உண்ணுகின்றன. வெல்ல உணவுக்காக எறும்புகள் கொண்டுள்ள தந்திரோபாயம் அது!
கார்த்திகை
22, 2012
அதிகாரங்கள் ஏன்
பகிரப்படவேண்டும்?
( சுகு-ஸ்ரீதரன்)
நவீன அரசியலில் மக்கள் பங்கு பற்றுதல் என்பது முன் எப்;போதையும் விட
முக்கியமான விடயமாகும் டூவிட்டர் ,பேஸ்புக் ,கூகிள் சக என வெகுஜனங்கள்
பங்கு பற்றக் கூடிய வலைத்தளங்கள் வந்து விட்டன. ஓவ்வொரு விடயத்திலும்
வெகுஜனங்களின்; கருத்து கணிப்பு என்பது இன்று சாதாரண விடயமாகி வருகிறது.
தகவல்களை அறிவதற்கான சாதாரண மனிதனின் சுதந்திரம் வலுவடைந்துள்ளது இந்த
காலத்தில் இன அடிப்படையிலான அதிகாரப்பரவலாக்கல் தேவையில்லை என்பது
யதார்த்தத்திற்கு புறம்பானதும் சமகால வாழ்வியலுக்கு எதிரானதுமாகும் .வறுமையை
ஒழித்தல,; சகலவிதமான சமத்துமின்மைகளையும் காலாவதியாக்குதல் குறிப்பாக எமது
சூழலில் சாதி பெண்ணடிமைத்தனம் ஆகியவற்றின் வக்கிரமான இருப்பை உணருதலும்
செயற்படுதலும் மனிதர்கள் பரஸ்பரம் கண்ணியமாக நடந்து கொள்ளுதல் என்பன
முக்கியமான விடயங்களாகும்.
(மேலும்.....)
முதலாவது விண்கலத்தை இன்று விண்ணுக்கு
ஏவுகிறது இலங்கை சுப்ரீம்
இசட் - 1
இலங்கைக்குச் சொந்தமான முதலாவது விண்கலம் சீனாவிலிருந்து இன்று விண்ணுக்கு
ஏவப்படவுள்ளது. ‘சுப்ரீம் இசட் 1’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கலம்
இலங்கை நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு சீனாவின் லோஸ் மார்ச் ஏவு
தளத்திலிருந்து ஏவப்படவுள்ளது. பிரான்ஸ் தயாரிப்பான இந்த விண்கலம்
விண்ணுக்குச் செலுத்தப்ப டுவதன் மூலம் சார்க் பிராந்தியத்தில் விண்கலம்
ஏவிய மூன்றாவது நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. விண்வெளி
ஆய்வு தொடர்பான பயிற்சிகளை சீனா, ரஷ்யா மற்றும் ஸ்பெய்ன் போன்ற நாடுகளின்
நிபுணர்களிடமிருந்து பெற்றிருப்பதாகவும், இலங்கையின் சார்பில் ஏவப்படும்
விண்கலம் தொடர்பில் சுப்ரீம் குழுமம் மற்றும் சுப்ரீம் இசட் நிறுவனத்துடன்
இணைந்து தொழில்நுட்ப ஆலோசகர் மற்றும் பொறியியலாளராகச் செயற்படவிருப்பதாக
ஜனாதிபதியின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விண்கலமானது
தனியார் நிறுவனமொன்றால் விண்ணுக்கு ஏவப்படுகிறது. செய்மதி தொழில்நுட்பத்தைக்
கட்டியெழுப்பும் நடவடிக்கையாக இது இருந்தாலும் இரண்டாவது விண்கலம் 2013
இலும் மூன்றாவது விண்கலம் 2015 டிசம்பரிலும் விண்ணுக்கு ஏவுவதற்குத்
திட்டமிடப்பட்டுள்ளது.
ஆயுதம் ஏந்திய
பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப 13வது திருத்தமே வழிவகுத்தது
நாட்டின் மோசமான காலகட்டமொன்றில் ஆயுதமேந்திய பல இயக்கங்களை ஜனநாயக
நீரோட்டத்திற்குக் கொண்டுவர வழிவகுத்தது 13 வது திருத்தச் சட்டமே என
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன
தெரிவித்தார். நாட்டில் இன ஐக்கியத்துக்கு வழிவகுத்த இந்த 13வது திருத்தச்
சட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர அதனை நீக்க முற்பட்டால்
தேசிய ரீதியில் மோசமான நிலையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அமைச்சர்
தெரிவித்தார். ஏனைய கட்சிகளைப் போன்றே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்
13வது திருத்தச் சட்டம் திருத்தப்பட வேண்டுமென்பதிலேயே உறுதியாகவுள்ளதாகத்
தெரிவித்த அமைச்சர் அடுத்த வருடத்தில் இந்த மாற்றம் ஏற்படுத்தப்படலாம்
எனவும் தெரிவித்தார். 13வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது
தொடர்பில் தற்போது பல கட்சிகள் மட்டத்திலும் பேசப்பட்டு வருகின்றன. பிரதான
எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி உட்பட பெரும்பாலான கட்சிகளின்
கருத்துக்கள் இத னையே வெளிப்படுத்துகின்றன. எமது ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியும் கடந்த சில தினங்களுக்கு முன் 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகக்
கலந்துரையாடலொன்றை மேற்கொண்டது. இதன்போது மேற்படி திருத்தத்தில் சில சில
குறைபாடுகள் உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், அரசியலமைப்பின் 13 வது
திருத்தத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. 13வது திருத்தத்தில்
மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதையே நான்
உண்மையில் அங்கு குறிப்பிட்டிருந்தேன். அதனை நீக்க வேண்டுமெனக் கூறவில்லை.
கொடிகாமம் மக்கள்
காணிகளிலிருந்து வெளியேற இராணுவம் முடிவு
கொடிகாமம் அல்லாரை மக்களின் குடியிருப்பு காணிகளில் இராணுவ முகாம்களை
அமைத்திருந்த இராணுவத்தினர் எதிர்வரும் 30 ஆம் திகதியிலிருந்து அப்பகுதிகளை
விட்டு வெளியேறவுள்ளர் என யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம்
அறிவித்துள்ளதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய
இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
மக்களின்
முறைப்பாடு தொடர்பாக இராணுவத்தரப்பினரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு விளக்கம்
கோரியிருந்தது. இதனை அடுத்து அல்லாரைப் பகுதியிலுள்ள மக்களின்
காணிகளிலிருந்து இராணுவம் வெளியேறுவதற்கு முடிவு செய்துள்ளதாவும் இம்மாதம்
30 ஆம் திகதி இராணுவம் வெளியேறி மக்களின் காணிகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்கு
முன் வந்துள்ளதாகவும் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக யாழ்.மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் மேலும் தெரிவித்தார்.
கசாப்பை தூக்கிலிட்டது மனிதநேயத்துக்கு எதிரானது
- நெடுமாறன்
அவசர அவசரமாக கசாபை தூக்கிலிட்டதை தமிழர்
தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வன்மையாகக் கண்டித்துள்ளார். தனது உறுப்பு
நாடுகளுக்கு மரண தண்டனையே கூடாது என்று ஐ.நா. தீர்மானம் கொண்டு
வரவிருக்கையில் கசாபுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர
அவசரமாக கசாபை தூக்கிலிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது மனித
நேயத்திற்கு எதிரானது. காந்தி பிறந்த நாட்டில் இன்னும் மரண தண்டனையை
வைத்திருப்பது அவமானச் செயலாகும். மும்பை தாக்குதல்கள் மிகக் கொடூரமானது.
அந்த செயலைக் கண்டிக்கிறேன். ஆனால் அதில் தொடர்புடைய குற்றவாளியை சிறையில்
வைத்து சீர்திருத்த வேண்டுமே தவிர தூக்கிலிடக் கூடாது. மரண தண்டனை உலகம்
முழுவதும் ஒழிக்கப்படவிருக்கிறது. பிற நாடுகளுக்கு வழிகாட்டும் வகையில்
இந்தியா நடந்துகொள்ள வேண்டும். மரண தண்டனையை மனித நேயம் உள்ள யாரும்
ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.
மத்தியில் காங்கிரஸ் ஆண்டால் என்ன பாஜக ஆண்டால் என்ற வேறு யாராவது 3 வது
கூட்டணி ஆண்டால் என்ன இந்திய அரசை எதிர்பதே நெடுமாறனின் கொள்கை. இவரை ஏன்
இந்தியன் என்றுசொல்ல வேண்டும். இந்தியாவில் வைத்திருக்க வேண்டும்.
PRESS RELEASE
Deepavali
Celebrated in Canada for a Third Time
The
Deepavali Festival was celebrated once again for the third time
organized by the Sri Lanka High Commission in Ottawa and, the Consulate
General on 18th November 2012 at the Don Bosco Auditorium in
Toronto. The celebration commenced with the playing of the Nadaswaram
and the National Anthems of Sri Lanka and Canada. Following the Hindu
religious ceremony conducted by Kurukkal of Brampton Hindu Temple the
Hindu cultural items included Baratha Natyam and other dance items
performed by the School of Miss Namo Ponnambalam. Popular Hindi and
Tamil songs were sung by artistes living in Toronto including Sinhala
artistes who sang in Tamil and Hindi.The welcome address at the event
was made by the Consul General Mr. Karunarathna Paranawithana who spoke
of the significance of Deepavali and, the need for the communities in
Canada to work together for the common benefit of all Sri Lankans. The
High Commissioner in her address referred to the importance of
celebrating diversity and, the importance of unity in diversity. As it
was observed that there were subtle moves to discourage and disrupt the
event she spoke of the futility of confrontational politics and said
that her message to the participants and the Sri Lankan community in
general, is the need to extend a hand of friendship to each other and,
help our brothers and sisters in Sri Lanka. Mr. Sam Rajendra, the
President of the Association of Democratic Tamils speaking on behalf of
the Tamil community spoke of the spiritual message of Deepavali and the
inner light and understanding which should be practiced in the day to
day life. He spoke in all three languages and emphasized the need to
live in peace with each other. Following the religious and cultural
items refreshments were served for all the participants which gave an
opportunity to the guests to mingle and for fellowship
Sri Lanka High Commission
Ottawa
21st November 2012
தேசபக்தன் கோ.
நடேசய்யர் ஞாபகார்த்த உரை
மலையகத்தின் தீபஒளி கோ. நடேசய்யர் ஞாபகார்த்த நிகழ்வொன்றினை மலையக சமூக
ஆய்வு மன்றம் அட்டனில் ஒழுங்கு செய்துள்ளது. எதிர்வரும் வரும் 27 ஆம் திகதி
காலை 9 மணிக்கு அட்டன் கிறித்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில்- (ஹைலண்ஸ்
கல்லூரிக்கு அருகில்) நடைப்பெறும் இந்நிகழ்வில் “மலையக மக்கள் தேசிய இனமாக
பரிணமித்தமை ஒரு வரலாற்றுப் பார்வை” என்ற தலைப்பில் ஸ்ரீபாத கல்வியற்
கல்லூரியின் துணைப் பீடாதிபதி திரு. வ. செல்வராஐ; அவர்களும் “இருபெரும்
ஆளுமைகள்- கோ. நடேசய்யர் மீனாட்சியம்மாள் ஆகியோரை முன்னிறுத்தி…!” என்ற
தலைப்பில் பிரதி ஆணையாளர் திரு. லெனின் மதிவானம் அவர்களும் உரையாற்ற
உள்ளனர். மேலும் இந்நிகழ்வை முன்னிட்டு ஏற்பாடு செய்ய கட்டுரை, கவிதை,
சிறுகதை போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கான சான்றிதழ்களும் பரிசில்களும்
வழங்கப்படும்.
தற்காலிக
முடிவுக்கு வந்தது காஸா மோதல்!
இஸ்ரேல் - பலஸ்தீனத்தின் ஹமாஸிற்கிடையே இடம்பெற்று வந்த மோதல் நேற்று இரவு
முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 8 நாட்களாக இடம்பெற்று வந்த இம் மோதலானது
தற்காலிகப் போர் நிறுத்த உடன்பாடொன்று எட்டப்பட்டதையடுத்து முடிவுக்கு
கொண்டுவரப்பட்டுள்ளது. மோதல் நிறுத்தம் தொடர்பான அறிவிப்பை அமெரிக்க
இராஜாங்க செயலாளரான ஹிலரி கிளிண்டன் மற்றும் எகிப்தின் வெளிநாட்டு அமைச்சர்
மொஹமட் காமெல் ஆகியோர் கெய்ரோவில் வைத்து அறிவித்தனர். இதனையடுத்து காஸா
வாசிகள் பலர் வீதிகளில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை
ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னர் டெல் அவிவ்வில் பஸ்ஸில் இடம்பெற்ற
குண்டுவெடிப்பில் 21 பேர் காயமடைந்தனர். இத்தாக்குதலுக்கு ஹமாஸ் உரிமை
கோரியிருந்தது. எகிப்தின் மத்தியஸ்தில் கொண்டுவரப்பட்டுள்ள இம் மோதல்
நிறுத்த உடன்படிக்கையானது எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும் என்பது
சந்தேகத்திற்குரியது என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல்
மற்றும் ஹமாஸ் இடையே இடம்பெற்ற இம்மோதலில் 162 பலஸ்தீனியர்களும், 5
இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏவப்படும்
செய்மதி நாட்டின் இறையாண்மைக்கும் வலய நாடுகளின் பாதுகாப்புக்கும்
அச்சுறுத்தல்
இலங்கை வான் பரப்பில் உள்நாட்டு தேசியக் கொடியுடன் காணப்படும் சீன செய்மதி
இலங்கையின் அனைத்து உள்ளக இரகசியங்களையும் பெற்று வருகின்றது. இது நாட்டின்
இறையாண்மைக்கும் வலய நாடுகளின் பாதுகாப்புகளுக்கும் அச்சுறுத்தல் என்று
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ
அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கையிள் அனைத்து வளங்களையும் இன்று
வெளிநாட்டவர்களுக்கே அரசு விற்றுள்ளது. குறிப்பாக சீனாவிற்கு நிலத்தை
விற்றும் போதாது என்று வானத்தையும் சேர்த்து அரசாங்கம் விற்பனை செய்துள்ளது.
சர்வதேச சட்டத்தின் படி ஒரு நாட்டில் வான் பரப்பில் செய்மதி அந்நாட்டு
அரசாங்கத்தினால் அனுப்ப முடியும் ஆனால் அரசாங்கம் தனக்குள்ள உரிமையை
சீனாவிற்கு விட்டுக் கொடுத்து சீனாவின் செய்மதியை இலங்கை வான் பரப்பில்
இலங்கை தேசியக் கொடியுடன் அனுப்பி வைத்துள்ளது. இதனால் உள்நாட்டு அனைத்து
இரகசியங்களையும் சீனா பெற்றுக் கொண்டு வருகின்றது. நாட்டில் பொது மக்கள்
இன்னோரன்ன பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர். ஆனால் ஏனைய நாட்டு
பிரச்சினைகளை தீர்த்து வைக்க ஜனாதிபதி வெளிநாடுகளுக்கு செல்கின்றார் என்றார்.
அமெரிக்காவிற்கு விற்று இருந்தால் ஐதே கட்சி மௌனமாக இருந்திருக்குமோ...?
12,000 முன்னாள் புலிகள் சமூக
மயப்படுத்தப்பட்டது பெருவெற்றியாகும்
- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
12 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூக மயப்படுத்தப்பட்டது பெரு
வெற்றியாகும் என பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பாரம்பரியக் கைத்தொழில் மற்றும் சிறுகைத்
தொழில் அமைச்சு தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் மேலும்
கூறியதாவது, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் வாழ்வின்
எழுச்சித் திட்டத்தினூடாக பாரிய முன்னேற்றமடைந்து வருகிறது. யுத்தத்தினால்
இடம்பெயர்ந்த மக்கள் குறுகிய காலத்தினுள் மீள்குடியேற்றப் பட்டனர். அத்தோடு
அந்த மக்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்பட்டது. வட மாகாணத்தில் விசேட
திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தெங்கு, பனை சார் கைத்தொழில்களை
ஊக்குவிக்க நிவாரணம், உதவிகள் வழங்கி வருகிறோம். சிறு மத்திய தர
கைத்தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், மூலப் பொருட்கள் வழங்கவும், சந்தை
வாய்ப்பை அதிகரிக்கவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் பனைக்
கைத்தொழிலை முன்னேற்றுவதற்காக பனங்கன்றுகளை வழங்கி வருகிறோம். இந்திய
உதவியுடன் பனை அபிவிருத்தி நிறுவனத்தை மீள் ஆரம்பித்தது தொடர்பில்
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். வடக்கில் போன்றே சப்ரகமுவ மாகாணத்திலும்
பனைக் கைத்தொழிலை முன்னேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. புதிய படைப்புகளை
ஊக்குவிக்கவும் புதிய தொழில் நுட்ப வசதிகளை வழங்கவும் 200 மில்லியன் ரூபா
ஒதுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இதுவரை 426 பேர் திருப்பி அனுப்பிவைப்பு
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக் குச் சென்ற மேலும் 100 இலங்கையர்கள் விமானம்
மூலம் நாடு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்றையதினம்
அவுஸ்திரேலியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த
மூன்று மாதங்களில் அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட
இலங்கையர்களின் எண்ணிக்கை 426 ஆக உயர்ந்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு
சட்டவிரோதமான படகுகளில் நுழைபவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு
அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வருட ஆரம்பம் முதல் இதுவரை 15,500
பேர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்திருப்பதாக அந்நாட்டு
குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சட்டவிரோதமாக
நாட்டுக்குள் நுழைபவர்கள் அனைவரையும் தொடர்ந்து நாவுறு மற்றும் பப்புவா
நியூகினி தீவுக்கு அனுப்புவது சாத்தியமற்றது. எனவே, சிலருக்கு அகதி அந்தஸ்து
வழங்கி அவுஸ்திரேலியாவுக்குள் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருந்தாலும், அவர்கள் அகதிகளாகக் கருதப்பட்டு, இணைப்பு விசாவே வழங்கப்படும்
என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கார்த்திகை
21, 2012
முல்லைத்தீவு பிரதேசத்தில் விமானப் படை பயிற்சி
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு
பிரதேசங்களில் விமானப் படையினர் வழக்கமான பயிற்சி நடவடிக்கையிலேயே ஈடுபட்டு
வருகின்றனர். இதனால், எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று விமானப் படைப்
பேச்சாளர், விங் கொமாண்டர் சிராஸ் ஜெல்தீன் தினகரனுக்குத் தெரிவித்தார்.
ஜெட் ரக விமானங்கள் சாதாரண மாக தாழப்பறந்து செல்லும் போது பாரிய சத்தங்கள்
வெளியாவது வழக்கமான ஒன்றாகும் என்று தெரிவித்த அவர் இதனால் அந்தப்
பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும்
சுட்டிக்காட்டினார். விமானப் படை முகாம்களில் விமானப் பயிற்சிகள் இடம்
பெறுவது வழக்கமான ஒன்றாகும். அவ்வாறான பயிற்சிகளே அந்தப் பிரதேசத்தில் இடம்
பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல் கடற்
பகுதிக்கு அமெ. போர் கப்பல்கள் விரைவு
அமெரிக்காவின் மூன்று கப்பற்படை கப்பல்கள் மத்திய தரைக் கடலின் கிழக்குப்
பகுதிக்கு இஸ்ரேலை நோக்கி விரைந்து திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீன ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதல்
உக்கிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து
வெளியேற விரும்பினால் அவர்களை பாதுகாக்கும் நோக்கில் அந்த கப்பல்கள்
அனுப்பப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது. யுத்த நோக்கத்திற்காக
அனுப்பப்படவில்லை என்றும் அது கூறியுள்ளது. 2500 கப்பற் படையினருடன்
விர்ஜினியா, நார்போல்க் செல்லவிருந்த அந்த கப்பல்கள் இங்கு திரும்பிள்ளன.
ஈரானில் பாலிஸ்டிக் வகை ஏவுகணை தாக்குதலை முடியடிப்பதற்காக இஸ்ரேல்
கடற்கரையில் ஏற்கனவே அமெரிக்காவின் 4 போர் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு சபை
மீது ரஷ்யா அதிருப்தி
காசாவில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் ஐ. நா. பாதுகாப்புச் சபை
தொடர்ந்து மெளனம் காத்துவருவதற்கு ரஷ்யாவுக்கான ஐ. நா. தூதுவர் தமது கவலையை
வெளியிட்டார். பாதுகாப்புச்சபையின் திர்மானத்திற்கு அமெரிக்கா தடங்கலாக
செயற்படுவதாகவும் அவர் கண்டனம் வெளியிட்டார். இஸ்ரேல்- காசா மோதல் தொடர்பில்
ஐ நா. பாதுகாப்புச் சபையில் நேற்று முன்தினமும் மூடிய அறையில்
விவாதிக்கப்பட்டது. எனினும் அது குறித்து எந்தத் தீர்மானமும்
நிறைவேற்றப்படவில்லை. 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்புச் சபையில்
இருக்கும் ஒரே அரபு நாடான மொரொக்கோ இஸ்ரேல்- காசா பதற்றம் குறித்த தீர்மானம்
ஒன்றை பாதுகாப்புச் சபையில் கடந்த வியாழக்கிழமை முன்வைத்தது. எனினும் அதற்கு
பாதுகாப்புச் சபையில் இருக்கும் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள்
எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த தீர்மானத்தில் காசாவிலிருந்து
நடத்தப்படும் இஸ்ரேல் மீதான ரொக்கெட் தாக்குதல்கள் குறித்து எந்த விபரமும்
இல்லை என ஐ. நா. வுக்கான அமெரிக்க தூதுவர் சுசான் ரைஸ் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ள ரஷ்யா அதனை வாக்கெடுப்புக்கு
விடவும் திட்டமிட்டுள்ளது. எனினும் அதற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோவைப்
பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக நம்பப்படுகிறது. ஐ. நா. வுக்கான ரஷ்ய தூதுவர்
விடாலி சர்கின் கூறும்போது, மொரோக்கோ முன்வைத்த பரிந்துரைக்கு ஒரு
அங்கத்துவ நாடு தடங்கலாக இருப்பதால் அதனை நிறைவேற்ற இன்னும்
முடியாமல்போயுள்ளது.
மும்பை தாக்குதல் குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார்!
மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு
தூக்கிலிடப்பட்டார். இதனை மகாராஷ்டிர அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2008 ம் ஆண்டு கடல் வழியாக மும்பைக்குள் ஊட்ருவிய அஜ்மல் கசாப்
உள்ளிட்ட 10 தீவிரவாதிகள் தாஜ் ஹோட்டல், மும்பை சத்ரபதி ரயில் நிலையம்
உள்ளிட்ட பல இடங்களில் திடீரென புகுந்து சரமாரி துப்பாக்கிச் சூடு மற்றும்
குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர்
கொல்லப்பட்டனர். அதே சமயம் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடத்திய
பதில் தாக்குதலில் 9 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கசாப் மட்டும்
உயிருடன் பிடிபட்டார். கசாப் மீதான வழக்கு மும்பை தீவிரவாத தடுப்பு
நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம்
கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கருணை மனுவை
நிராகரித்ததை தொடர்ந்து, கசாப்பின் தூக்குத் தண்டனை உறுதியானது.
கார்த்திகை
20, 2012
தாக்கரேக்களின் இந்தியா!
(சமஸ்)
பால்
தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர்
கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான
மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில்
புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில்
இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது.
தாக்கரேவின் ஆரம்ப கால நண்பர்கள் இளவயதில் இருந்தே அவர் நவீன அடையாளத்துடன்
இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், மெட்ரோபாலிடன் கலாசாரத்துக்கு
முன்மாதிரியாகச் சொல்லப்படும் மும்பை, வேற்று மாநிலத்தவர்களை ஓட ஓடத்
துரத்தும் கலாசாரத்துக்கும் முன்மாதிரியானது தாக்கரேவால்தான்.
(மேலும்...)
இந்திய அகதி முகாமில் 15 இலங்கை அகதிகள் மாயம்
இந்தியாவிலுள்ள போகநல்லுர் அகதி முகாமிலிருந்து 15 இலங்கை அகதிகள் கடந்த
வெள்ளிக்கிழமை காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடையநல்லுர்
மாவட்டத்திற்கு அருகிலுள்ள போகநல்லுர் அகதி முகாமில் இரண்டு வாரங்களுக்கு
ஒருமுறை மேற்கொள்ளப்படும் சோதனை நடவடிக்கை கடந்த சனிக்கிழமை
மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இந்த முகாமிலிருந்து 139 இலங்கை அகதிகள்
குடும்பங்களில் 15 பேர் காணாமல் போயுள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள்
கண்டறிந்தனர். இவர்கள் காணாமல் போனவை தொடர்பில் சொக்கம்பட்டி பொலிஸில்
செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணையை
மேற்கொண்டுள்ளனர். அவுஸ்திரேலியக் குடியுரிமை மற்றும் சிறந்த
வாழ்க்கைத்தரத்திற்காக இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு
கடல் வழியாக பயணிக்கின்றனர். இந்த நிலையில் போகநல்லூர் அகதி முகாமிலிருந்து
காணாமல் போன இந்த 15 அகதிகளும் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருக்கலாம் என
பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
வடக்கில் இளைஞர்கள் குண்டு, செல்களினது துகள்களை சுமந்துக்கொண்டு
வாழ்கின்றனர்
-
சிவசக்தி ஆனந்தன் எம்.பி.
வடக்கில் இளைஞர்கள் புத்தக பைகளை சுமப்பதாக
அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் 737 மாணவர்கள் இன்னும் தமது உடல்களில்
குண்டுகளினதும், செல்களினதும் துகள்களை சுமந்துக்கொண்டு பரிதாப வாழ்க்கை
வாழ்கின்றனர். இதிலிருந்து அவர்களை மீட்க இன்றுவரை எவ்விதமான நடடிக்கைகளும்
எடுக்கப்படவில்லை என கூட்டமைப்பின் எம்.பி. சிவசக்தி ஆனந்தன்
பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
வன்னியில் இயங்கும் சமூக உளநல மையத்தை மூடி
விடுவதற்கு ஆளுனர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கல்வி அமைச்சு
மீதான குழுநிலை விவாதத்தின் போதே சிவசக்தி ஆனந்தன் எம்.பி. இதனைத்
தெரிவித்தார்.
வடக்கில் மட்டும் அல்ல கிழக்கிலும் இளைஞர்கள் இதேபோலவே வாழ்கின்றனர்.
அடுத்த ஆண்டு
முதற்பகுதியில் எண்ணெய் அகழ்வு பணிகள்
இலங்கையை சூழ உள்ள கடற்பிரதேசத்தில் எரிபொருள் காணப்படு வதாக அடையாளங்
காணப்பட்டுள்ள இடங்களை அடுத்த வருட முதற் பகுதியில் கேள்வி மனுக்கோரி
அகழ்வதற்காக வழங்க உள்ளதாக பெற் றோலிய வள அமை ச்சர் சுசில் பிரேம ஜெயந்த
தெரிவித்தார். மன்னார் தவிர யாழ் படுகைகள் தென்பகுதிக்கும் கிழக்கு
பிரதேசத்திற்கும் இடைப்பட்ட பகுதிகளிலும் இருப்பதாக அடையாளங்
காணப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அடுத்த வருடம் மற்றைய எண்ணெய் கிணறு
தோண்டவுள்ளதாகவும் குறிப்பிட்டார். கேர்ன் நிறுவனம் மன்னார் கடற்பரப்பில் 3
ஆய்வு கிணறுகள் தோண்டியது. இரண்டில் இயற்கை வாயு இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டது. நான்காவது கிணறு தோண்டும் பணிகள் 2013 பெப்ரவரியில்
ஆரம்பிக்கப்படுகிறது. கண்டு பிடிக்கப்பட்ட இடங்களில் உள்ள இயற்கை வாயுவின்
பெறுமதியை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச
தரத்திற்கு அமைய எண்ணெய் அகழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள்
முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்தின் போதும் ஒப்பந்தங்கள்
கைச்சாத்திடப்படுகிறது. எண்ணெய் அகழ்வு தொடர்பில் இது வரை
முன்னெடுக்கப்பட்ட ஆய்வு நடவடிக்கைகளுக்காக கேர்ன் நிறுவனம் இது வரை 138
மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. எரிபொருள் இருப்பது கண்டு
பிடிக்கப்பட்டாலும் அதனை வெளியில் எடுக்க 3 முதல் 5 வருடங்கள் வரை
பிடிக்கும்.
சர்ச்சைக்குள்ளாகியுள்ள ஒபாமாவின் ஆசை முத்தம்!
மியன்மாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா
அந்நாட்டின் ஜனநாயக ஆர்வலரான ஆங் சான் சூ கிக்கு வழங்கிய முத்தமானது பரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சர்வாதிகார ஆட்சியிலிருந்து தற்போது சிறிது
சிறிதாக ஜனநாயக நீரோட்டத்தினுள் நுழைந்து வரும் மியன்மாருக்கு ஒபாமா
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன் ஓர்
அங்கமாக ஆங் சான் சூ கி 15 வருடங்களாக காவலில் வைக்கப்பட்டிருந்த அவரின்
வீட்டுக்கு ஒபாமா விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இங்கு உரையாற்றிய ஒபாமா அந்நாட்டுக்கு தனது ஆதரவை
தெரிவித்தார். மேலும் அவரது விஜயத்தின்
முக்கியமாக அமைந்தது ஆங் சான் சூ கிக்கு ஒபாமா வழங்கிய முத்தமாகும்.
தனது நட்பின் அடையாளமாக ஒபாமா வழங்கியதாக கருதப்படும் இம்முத்தமானது
சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முத்தமானது ஊடகங்கள்
முன்னிலையில் வழங்கப்பட்டமையானது சற்று சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக ஆசிய நாடுகளில் அதுவும் மியன்மார் போன்றதொரு
நாட்டில், ஆங் சான் சூ கி போன்ற திருமணமாகாதவொரு பெண்ணுக்கு முத்தமிடப்பட்ட
சம்பவமானது கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.
பொது இடத்தில் தனது மனைவிக்கு முத்தம் வழங்கி
ஊடகங்களை தன்பக்கம் ஈர்த்திருந்தவர் ஒபாமா என்பது குறிப்பிடத்தக்கது.
World pressure for Gaza truce intensifies
The U.N. chief called for an immediate ceasefire in the
Gaza Strip on Tuesday and U.S. Secretary of State Hillary Clinton headed
to the region with a message that escalation of the week-long conflict
was in nobody's interest. Nevertheless, Israeli air strikes and
Palestinian rocket fire continued for a seventh day. Egypt was trying to
broker a truce between Israel and Gaza's ruling Hamas movement. An
Egyptian intelligence source said "there is still no breakthrough and
Egypt is working to find middle ground". Israel's military on Tuesday
targeted about 100 sites in Gaza, including ammunition stores and the
Gaza headquarters of the National Islamic Bank. Gaza's Hamas-run Health
Ministry said six Palestinians were killed.
(more...)
காஸா மீது
இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல், உயிரிழப்பு 92 ஆக உயர்வு
இஸ்ரேல் தொடர்ச்சியாக 6வது நாளாகவும் காசா மீது நேற்று நடத்திய வான்
தாக்குதல்களில் மேலும் பல அப்பாவி பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதனால்
உயிரிழந்த பலஸ்தீனர்களின் எண்ணிக்கை நேற்றை தினத்தில் 92 ஆக உயர்ந்தது.
மறுபுறத்தில் உடனடி யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என ஐ. நா.
செயலாளர் நாயகம் பான் கீ மூன் அழுத்தம் கொடுத்துள்ளார். கடைசியாக நேற்று
காசாவின் சைத்தூன் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் இரு
சிறுவர்கள் உட்பட மூவர் பலியானதோடு மேலும் 30க்கும் மேற்பட்டோர்
காயமடைந்ததாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமெத்தமாக நேற்றைய
தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலை காக்கும் ‘அயன் டோம்’
காசாவிலிருந்து நூற்றுக்கணக்கான ராக்கெட்
தாக்குதல்கள் இஸ்ரேல் மீது நடத்தப்பட்டாலும் இஸ்ரேலின் ஏவுகணை பாதுகாப்பு
முறையான ‘அயன் டோம்’ அவை இஸ்ரேலுக்குள் ஊடுருவுவதை இடைமறித்துவருகிறது.
கடந்த புதன்கிழமை ஆரம்பமான இரு தரப்புக்கும் இடையிலான உக்கிர மோதல்களில் இது
வரை இஸ்ரேல் மீது 500க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுகள் காசாவிலிருந்து
எறியப்பட்டுள்ளன. அதில் பாதியளவான ரொக்கெட்டுக்களை அயன் டோம் இடைமறித்து
அழித்துள்ளது. இதனால் இஸ்ரேல் கடந்த காலங்களில் ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ்
அமைப்புகளுடனான மோதலின் போது சந்தித்ததை விடவும் இம்முறை குறைவான
சேதத்தையும், உயிர்பலியையுமே எதிர்கொண்டுள்ளது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பு
மிகத் தொலைவில் இருக்கும் இஸ்ரேலின் வர்த்தக தலைநகரான டெல் அவிவ் மற்றும்
ஜெரூசலம் வரை ரொக்கெட் தாக்குதல் நடத்தினாலும் அந்த ரொக்கெட்டுகளை ‘அயன்
டோம்’ இடைமறித்து அழிந்து வருகிறது. ரொக்கெட் தாக்குதல் ஏவப்படும் போதே அதை
அவதானித்து கணனியூடே அதனது பாதையை தீர்மானித்துவிடும். ரொக்கெட்
முக்கியத்துவம் வாய்ந்த அல்லது மக்கள் வாழும் பகுதியை தாக்கும் என
தெரிந்தால் ஒரு சில வினாடிகளில் ரொக்கெட்டை இடைமறித்து அழித்துவிடும்.
திறந்த பகுதியில் விழும் என அவதானித்தால் அதனை விட்டுவிடும்.
(மேலும்...)
ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை கடும் ஆட்சேபம்
ஐக்கிய நாடுகள் சபையின் குறைநிறைகளை
கண்டறிவதற் காக பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட குழுவின் உள்ளக அறிக்கை
உத்தியோகபூர்வ மாக வெளியிடப்படுவதற்கு முன்னமே அதிலுள்ள விடயங்கள்
ஊடகங்களுக்கு கசியவிடப்பட்டுள்ளமை முற்றிலும் தவறாகும். இலங்கையில்
முன்னெடுக்கப்பட்ட இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைக ளின் போது ஐக்கிய
நாடுகள் சபையின் உள்விவகாரச் செயற்பாடுகளில் நிலவியதாக அவ்வறிக்கையில்
கருதப்படும் குறைபாடுகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஊடகங் களுக்கு
கசியவிடப்பட்டு ள்ளமையானது இலங் கையின் இறைமைக்கு மாத்திரமன்றி ஐ. நாவின்
நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயலென்பது இதன்போது சுட்டிக்காட்ட
ப்பட்டி ருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடு இலங்கைக்கு
மட்டுமன்றி எந்தவொரு நாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
A Pillar Built on Sand
(John Mearsheimer
)
In response to a recent upsurge in tit for tat strikes between Israel
and the Palestinians in Gaza, Israel decided to ratchet up the violence
even further by assassinating Hamas’s military chief, Ahmad Jabari.
Hamas, which had been playing a minor role in these exchanges and even
appears to have been interested in working out a long-term ceasefire,
predictably responded by launching hundreds of rockets into Israel, a
few even landing near Tel Aviv. Not surprisingly, the Israelis have
threatened a wider conflict, to include a possible invasion of Gaza to
topple Hamas and eliminate the rocket threat.
(more....)
கார்த்திகை
19, 2012
அன்னை இந்திராகாந்தி, தோழர்பத்மநாபா பிறந்த தினம்
சீக்கியர்களில் இருந்து முளைத்த
தீவிரவாதத்தால் அன்னை இந்திரா கொல்லப்பட்டார். தமிழர்களில் இருந்து
கிளம்பிய பயங்கரவாதத்தினால் தோழர்பத்மநாபா கொல்லப்பட்டார். சீக்கிய
தீவிரவாதமும் கண்காணமல் போய்விட்டது தமிழர்களில் இருந்து கிளம்பியதும்
அப்படியே ஆகிவிட்டது. அன்னைஇந்திரா, தோழர்பத்மநாபா பயங்கரவாத சக்திகளுக்கு
சிம்மசொப்பனமாக இருந்தார்கள். இவர்களின் பிறந்த தினம் ஒரே நாளில் அமைந்தது
என்பது ஆச்சிரியம்தான். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக அன்னை இந்திரா
எடுத்த முன்முயற்சிகளும் தோழர்பத்மநாபா எடுத்த முயற்சிகளையும் நாம் என்றும்
மனதில் நிலைநிறுத்திக் கொள்வதுடன், அவர்கள் எடுத்த முன்முயற்சிகளே இன்று
நம் எல்லோரது மனக்கண் முன் வந்து நிற்கிறது.
(மேலும்...)
என்ன கொலைவெறிப் பேச்சு
காஸாவை அடித்து நொறுக்கி அதை மீளக் கைப்பற்ற வேண்டும்
- கிலாட் செரோன்
காஸா மீதான தாக்குதலை அதிகரித்து அப்பகுதியை நொறுக்கவேண்டுமென இஸ்ரேலிய
முன்னாள் பிரதமர் ஏரிய செரோனின் மகனான கிலாட் செரோன் தெரிவித்துள்ளார்.
இப் பிரச்சினைக்கு தீர்மானமிக்க முடிவொன்று
அவசியமெனவும் காஸா வாசிகள் அப்பாவிகள் அல்லவெனவும் அவர்களே ஹமாஸை
தேர்தடுத்ததாகவும் கிலாட் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் ஊடகமொன்றிற்கு
வழங்கியுள்ள செய்தியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
காஸா வாசிகள் பணயக் கைதிகள் இல்லை, அவர்களே இதை
சுதந்திரமாக தேர்தெடுத்துள்ளனர். எனவே இம்முடிவுடன் அவர்கள் வாழ வேண்டும்.
(மேலும்...)
ராஜீவ் காந்தி கொலையின் முடிச்சுக்களை
அவிழ்கின்றார் கே.பி
பிரபாகரனும், பொட்டு அம்மானும் சேர்ந்தே
திட்டமிட்டிருக்க வேண்டும்
ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக தம்மை
இந்தியாவின் சிபிஐ அமைப்பினர் 2010 ம் ஆண்டே விசாரித்ததாகவும் தணுவின்
பெல்ட் வெடிகுண்டு, சிவராசனின் கைத்துப்பாக்கி ஆகியவற்றுக்கும் எனக்குமான
தொடர்பு என்ன என்று கேள்வி கேட்டதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளின்
சர்வதேச பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் என்ற கே. பி. கூறியுள்ளார்.
ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் எனக்கு எந்த ஒரு தொடர்புமே இல்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை பல்வேறு பிரிவுகள் இருந்தன. அடுத்த
பிரிவில் வேறு எவரும் தலையிட முடியாது. தமிழகத்தில் இருந்து செயற்பட்டவர்கள்
வேறு ஒருவரது தலைமையின் கீழ் செயல்பட்டனர்.
(மேலும்...)
பால் தாக்கரே
தண்டிக்கப்படாத பயங்கரவாதியின் மரணம்
இந்திய சிவசேனா கட்சியின் தலைவர் பால்
தாக்கரே தனது 86ஆவது வயதில் இன்று மும்பையில் காலமானார். அரவது மரணத்தை
அடுத்து மும்பையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து
தாக்கரே வீடு உள்ள கிழக்கு பந்த்ரா பகுதி முழுக்க ஏராளமான பொலிஸார்
குவிக்கப்பட்டுள்ளனர். மும்பை பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து
அதிரடிப்படை வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். பால் தாக்கரே மரணம் அடைந்த
செய்தி கேட்டதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலக பிரபலங்களும்
அவரது வீட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அவரது வீட்டின் முன்னே
பத்திரிகையாளர்கள் ஏராளமாக திரண்டிருக்கிறார்கள். இதனால் பொலிஸ் பாதுகாப்பு
மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்து மதவெறிப் பயங்கரவாதியான பால் தாக்கரே
இந்தியா எங்கும் பல கொலைகளுக்குக் காரணமானவர். இந்து மதத்தின் பெயரால்
முஸ்லீம்களையும், தாழ்த்தப்பட்ட சாதியினரையும் கொன்று குவித்த குழுக்களின்
தத்துவார்த்தத் தலைவர். தண்டிக்கப்படாமமேயே மரணித்துப் போனார்.
வேறு என்ன சொல்ல. இவரும் ஈழத்து தமிழ் மக்களுக்கு மீட்சி பெற்றுத் தருவார்
என்று பூஜித்தது புலிகள் இயக்கம். இந்தியாவை பாரதிய ஜனதா ஆண்டபோது இவைகள்
நடைபெற்றன. வரலாற்றை தமிழ் மக்களே சற்று திருப்பிப்பாருங்கள். இவரைப் போலவே
இன்னொருவர் குஜராத்தில் ஆட்சியில் இருக்கின்றார். அவர் யாரும் அல்ல
நரேந்திர மோடி. அண்மைய காலத்தில் பிரித்தானியா, அமெரிக்காவினால்
பட்டாபிஷேகம் செய்யப்பட்டவர்....?
படுகொலை
செய்யப்பட்ட தமிழருக்காக துளியேனும் இரங்காத சிங்களவர்களுடன் எவ்வாறு
ஐக்கியப்பட்டு வாழ முடியும்?
-
தமிழ்த் தேசிக் கூட்டமைப்பு சிறிதரன்
வன்னியில் கோயில்கள் கட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 67ஆவது
பிறந்த தினத்தை கெண்டாடும் T.N.A.பா.உ.சி. ஸ்ரீதரன் MP.!!
அவர் தற்போது பாராளுமன்றத்தில் இப்படிக்
கூறுகின்றார்.
'படுகொலை செய்யப்பட்ட தமிழருக்காக துளியேனும் இரங்காத சிங்களவர்களுடன்
எவ்வாறு ஐக்கியப்பட்டு வாழ முடியும்?
'
கே.பி
யுடன் 'நல்ல' உறவில் இருக்கும் இவர் LankaSri.Com இல் செத்த வீட்டு
விளம்பரத்தால் மட்டும் தினம் பல இலட்சங்கள் உழைக்கின்றார். மரணத்திலும்
பிழைப்பை நடத்தும் வாய் வீச்சுக்காரன் இவர்.
(மேலும்...)
எப்போதுதான் உணரப்போகிறீர்கள்
ஈழத்தமிழ்ர்களே...?
தமிழகத்திலிருந்து தோழர் சன்னா அவர்கள் பொதுவெளியில் புலம்பெயர் தமிழர்களை
நோக்கி எழுப்பும் கேள்விகளும், போட்டுடைக்கும் உண்மைகளும்.
உலகில் நீங்கள் மட்டும்தான் ஒடுக்கப்பட்டவர்களா.. உங்களை ஆதரித்த
பாவத்திற்காக உங்களை ஆதரிக்கும் சாதி இந்துக்கள் தருமபுரியில் செய்த
வெறியாட்டத்தை பாருங்கள். கொள்ளை, தீ வைப்பு ஈழமண்ணில் மட்டும் நடக்கவில்லை,
தமிழகத்திலும் நடப்பதைப் பாருங்கள். இதை நடத்துபவர்கள் சிங்களவர்கள் இல்லை.
ராசபட்சேக்கள் இல்லை.. உங்கள் மீதான ஒடுக்குமுறையை எதிர்க்கும் சாதித்
தமிழர்கள். இவர்களைத் தான் இத்தனைக் காலம் நீங்கள் நம்பி
ஏமார்ந்திருக்கிறீர்கள். நம்பிக்கை துரோகிகள். கபட வேடதாரிகள். ஈழ
விடுதலையைப் பேசி தலித்துகளை அடிமைப் படுத்துபவர்கள். சமுக நீதிபேசி சேரிகளை
கொளுத்துபவர்கள். உலகத்தின் முன் தமிழ் முகத்தைக் காட்டி தலித்துகளிடம் கோர
முகத்தை காட்டுபர்கள். இவர்களை இன்னும் நம்பிக் கொண்டிருப்பீர்களா?
(மேலும்...)
பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் மறைவின் 30ஆவது ஆண்டு நினைவுப் பேருரை
கலாநிதி ந.இரவீந்திரன் 'முற்போக்கு இலக்கியத்திற்கு பேராசிரியர் க.கைலாசபதி
அவர்களின் பங்களிப்பு' என்னும் தலைப்பில் நினைவுப் பேருரை நிகழ்த்துவார்.
காலம்: 24 – 11 – 2012 சனிக்கிழமை மாலை 4-30 மணி
இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்
58 தர்மராம வீதி, கொழும்பு – 06
தலைமை: கலாநிதி செல்வி திருச்சந்திரன்
நிகழ்வில் கலாநிதி ந.இரவீந்திரன் எழுதிய 'முற்போக்கு இலக்கியத்தில்
பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் பங்களிப்பு' என்ற நூலும் வெளியிட்டு
வைக்கப்படும்.
இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கும்படி அன்புடன்
அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாடு:
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
E-Mail: kailashpath@yahoo.com
Gaza War
Could Pave the Way for Israeli Attack on Iran
'Show of Strength' Against Tiny Strip Aimed
at Proving Military Readiness
by Jason Ditz, November 16, 2012
Air strikes
are escalating and Israel seems to be on the verge of sending a ground
invasion force into Gaza Strip. All eyes are on Gaza, but perhaps not
Benjamin Netanyahu’s eyes, which remain squarely on Iran. And indeed,
even the escalations against Gaza are looking more and more like part of
a broader strategy to sell the public on a future attack on Iran, with
officials touting the rag-tag militias in the tiny, besieged strip as
Iran’s “front line.” The war’s ability to shift the Israeli voters
dramatically rightward has already been discussed, and right before the
election this could impact the next Israeli cabinet meaningfully,
piecing together an even more hawkish force. At the same time, officials
are looking to convince the public that the “show of strength”
demonstrates military readiness for attacking Iran, suggesting that
their ability to bomb a tiny enclave on their border is not materially
any different from bombing a massive nation much farther away. How well
they can sell the myth of the invincible Israeli military by bombing
refugee camps remains to be seen, but could play a major role in
shifting voter sentiment back toward a unilateral attack.
ஆஸி.யிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை
வந்தடைந்துள்ளனர்
அவுஸ்திரேலியாவிலிருந்து 50 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.40 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை
வந்தடைந்துள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் விசேட விமானமொன்றின் மூலம்
அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில் பெரும்பான்மை
இனத்தவர்கள் 49 பேரும் தமிழர் ஒருவரும் அடங்கியுள்ளனர். கம்பஹா 9, களுத்துறை
1, ஹம்பாந்தோட்டை6, மாத்தறை19, புத்தளம்13, திருகோணமலை 2 ஆகிய பகுதிகளைச்
சேர்ந்தவர்களே இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.
இவர்களை,
விமானநிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்து விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.
13வது திருத்தம்
தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்
13 சட்டத்திருத்தம் அர்த்தமற்றது என்பதனால் நாம் அதனை நிராகரிப்பதாக தமிழ்த்
தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியமை,
அவர்களின் இரட்டை தன்மை நிலைப்பாட்டை காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர்
சஜின் த வாஸ் குணவர்தன கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ. சுமந்திரன் அரசியல் சாசனத்தின்
13ஆவது திருத்தம் அர்த்தமற்றது என்றும் அதனால் ஆரம்பம் முதலே தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு அதனை நிராகரித்தது என்ற கருத்தை பாராளுமன்றத்தில்
வெளியிட்டிருந்தார். சுமந்திரனின் இந்தக் கருத்து ஊடகங்களில் முக்கியத்துவம்
அளிக்கப்படவில்லை.
(மேலும்....)
இஸ்ரேலுக்கு தலையிடியாகியுள்ள ஹமாஸின் ஆயுத பலம்
இஸ்ரேலின் மிகப் பெரிய மற்றும் வர்த்தக
நகரான டெல் அவிவ், ஜெரூசலம் வரை காசாவிலிருந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு
ஹமாஸ் தனது ஆயுத சக்தியை பலப்படுத்தியுள்ளது அங்கு பெரும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ளது. டெல் அவிவில் நான்காவது நாளாகவும் சைரன் ஒலி
எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அல்லோலகல்லோலப்பட்டனர். எனினும் டெல்
அவிவின் கடலோர ஹோட்டல்கள், பூங்காக்கள் மற்றும் வீதிகள் நேற்றைய தினத்தில்
வெறிச்சோடி கிடந்ததாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
டெல் அவிவ் மக்கள் தற்போது தாக்குதலுக்கு பழகிக் கொள்ள வேண்டிய நிலை
ஏற்பட்டிருப்பதாக குடியிருப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். “டெல் அவிவ்
மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வடக்கு, தெற்கு
இஸ்ரேலை எப்போதும் ரொக்கெட்டுக்கள் தாக்கி வருகிறது. ஆனால் டெல் அவிவில்
இவ்வாறு இதற்கு முன்னர் நிகழ்ந்ததில்லை” என்று ஜொக்கர் என்பவர்
குறிப்பிட்டார். ஈரானில் தயாரிக்கப்பட்ட பஜ்ர்-5 என்ற தொலை தூரம் தாக்கும்
ரொக்கெட் மூலமே ஹமாஸ் டெல் அவிவ் வரை தாக்கியுள்ளது. இந்த ரொக்கெட் 75 கிலோ
மீற்றர் வரை சென்று தாக்கக் கூடிய வலு கொண்டது.
கார்த்திகை
18, 2012
பரிதி கொலை வழக்கு
வி.பு. இயக்கத்தின் பிரான்ஸ் பிரிவு தலைவர் விநாயகம் கைது?
பிரான்ஸ் நாட்டில் செயற்பட்டு வருவதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கப்
பிரிவொன்றின் தலைவராக கூறப்படும் விநாயகம் என்பவர் அந்நாட்டு பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 8 ஆம் திகதி பரிசில் சுட்டுக்கொல்லப்பட்ட
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான நடராஜா மதீந்திரனின் கொலை
தொடர்பிலேயே விநாயகம் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
பரிதி அல்லது ரீகன் என அழைக்கப்படும் மதீந்திரன்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கட்டளைத் தளபதிகளில் ஒருவர் என்பதுடன்
பிரான்ஸிலுள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளருமாவார்.
ஐரோப்பாவில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும்
விடுதலைப் புலிகள் வலையமைப்பின் வெவ்வேறு பிரிவுகளுக்கிடையில் இடம்பெறும்
மோதல்களே இக் கொலைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும்
இக்கொலைக்கு இலங்கை அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென அவரது மகள்
குற்றஞ்சாட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
பரிதி கொலையின் பின்னணியில் எல்லாளன் படை என
சந்தேகம்
போட்டி அணிகளுக்கிடையே மோதல்கள் தீவிரம்
எச்சரிக்கைக் கடிதத்தால் வெளிநாட்டுப் புலிகள் நடுக்கத்தில்!
விடுதலைப் புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி
பிரான்சில் கொல்லப்பட்ட பின், வெளிநாட்டுப் புலி பிரமுகர்களை மிரள வைக்கும்
விதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது எல்லாளன் படை. இந்த ஆண்டு இறுதிக்குள்
வெளிநாட்டுப் புலிகளின் போட்டி அணிகளுக்கு இடையிலான மோதல்களை
நிறுத்திக்கொள்ளா விட்டால், நிர்வாக ரீதியானக் கடும் நடவடிக்கைகள்
எடுக்கப்படும் என்று கூறுகிறது எச்சரிக்கை.
(மேலும்...)
வடபுல முஸ்லிம்கள் விரைவில் தமது சொந்த இடங்களில் வாழ்வர்
இடம்பெயர்ந்த மக்களை மீள்குடி யேற்றுவதில்
நாம் பல்வேறு தடைகள், சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றபோதும் அவற்றை
யெல்லாம் முறியடித்து வடபுல முஸ்லிம்களை விரைவில் மீள்குடியேற்றுவதற்கு
அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவோம் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
பசில் ராஜபக்ஷ உறுதிபடத் தெரிவித்தார். வடக்கு மாகாண முஸ்லிம்களின் ஆழமான
பிரச் சினைகள் எனக்கு நன்கு தெரியும். ஜனாதிபதி வடக்கு முஸ்லிம் களை மீளக்
குடியேற்றுவதில் அக்கறையுடன் இருக்கின்றார். மூதூரில் முஸ்லிம்கள் வெளி
யேற்றப்பட்டபோது அந்த முஸ்லிம்களை மீண்டும் குடி யேற்றுமாறு ஜனாதிபதி பணித்
தார். அமைச்சர் குழு அங்கு விரைந்து செயல்பட்டதன் விளைவாக 42 நாட்களுக்கு
அவர்களை குடியேற்ற முடிந்தது. மூதூர் மக்களின் மீள்குடி யேற்றத்தை
முன்னெடுத்தபோது சர்வதேசத்தின் தடை எமக்கிருந்தது. எனினும் நாம் அதனைப்
பொருட்படுத்தாமல் சம்பூரை மீட்டெடுத்து பின்னர் அந்த மக்களுக்கு பாதுகாப்பு
வழங்கி மூதூரில் மீள்குடியேற்றினோம்.
உலகின் 'ஏழ்மை'யான அதிபர்!
ஆடம்பர மாளிகை, அணிவகுக்கும் கார்கள், எந்நேரமும் சூழ்ந்திருக்கும்
பாதுகாப்பு படை, எல்லாவற்றுக்கும் வேலையாட்கள்... ஒரு நாட்டின் அதிபர்
என்றவுடன் அவர்பற்றி நம் மனதில் விரியும் ‘இமேஜ்’ இப்படித்தானே இருக்கும்.
ஆனால், பழைய பண்ணை வீட்டில் சாதாரண விவசாயி போல வலம்வருகிறார் உருகுவே
நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிக்கா. அவரை ‘ஏழை அதிபர்’ என்றே சர்வதேச ஊடகங்கள்
வருணிக்கின்றன. உருகுவே அரசால் வழங்கப்படும் மாளிகையை வேண்டாம் என்று
ஒதுக்கிவிட்டு, சரியான சாலை வசதிகூட இல்லாத பண்ணை வீட்டில் வசித்துக்கொண்டே
நாட்டை நிர்வகிக்கிறார், அதிபர் முஜிக்கா. தன் மனைவியுடன் இணைந்து
பூந்தோட்டங்களை வளர்ப்பது தினசரிக் கடமைகளுள் ஒன்று. கூடவே, ஒற்றைக்காலை
இழந்த நாயைப் பராமரிக்கிறார். அவருக்கு இரண்டு காவல்துறை அதிகாரிகள் மட்டுமே
காவல். தனது மாதச் சம்பளமான 12,000 டாலர்களில் 90 சதவீதத்தை தனது அறக்கட்டளை
மூலம் ஏழைகளுக்குச் செலவிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
(மேலும்...)
சிராணி விவகாரம்
பொதுநலவாய அரச
தலைவர்களின் மாநாட்டை புறக்கணிக்க பல நாடுகள் தீர்மானம்?
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள
அரசியல் குற்றப் பிரேரணையை அடுத்து அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டால்,
இலங்கையில் நடைபெறவுள்ள 2013 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய நாடுகளின் அரச
தலைவர்களின் மாநாட்டை நாடுகள் பலவற்றின் தலைவர்கள் புறக்கணிக்கலாம் எனத்
தெரியவருகின்றது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாடு
அடுத்த ஆண்டு ஹம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ளது.
குறித்த மாநாடு தொடர்பில் உலகளாவிய ரீதியில் பல
சர்ச்சைகள் எழுந்துள்ளன. இலங்கையில் மனித
உரிமைகள் தொடர்பில் முன்னேற்றம் காணப்படாவிடின் தான் இம் மாநாட்டை
புறக்கணிக்கப் போவதாக கனேடியப் பிரதமர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.மேலும்
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கெமரூனை இம்மாநாட்டில் கலந்துகொள்ளக்கூடாது என
அந்நாட்டு அமைச்சர்கள் சிலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இலங்கையில் மோசமான
மனித உரிமைகள் இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் எனவே இம்மாநாட்டை
இலங்கையில் நடத்துவது தவறான முடிவு எனவும் பிரித்தானிய அமைச்சர்கள்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
A
Victory of Sorts
(By Philip Giraldi)
The defeat of Mitt Romney is a victory for those of us who seek sane
foreign and defense policies based on the traditional conservative
principles that government policies should always serve clearly defined
U.S. national interests while avoiding unnecessary interventionism
overseas. Romney was truly an empty suit on foreign policy and it should
be assumed that he would have continued the worst parts of the Obama
program while adding some particular wrinkles of his own. His victory
would have meant a return of the neocons to the front stage coupled with
a more generally aggressive military-based posture overseas which could
easily have led to a war with Iran and heightened tension with Russia
and China. It would also have resulted in major donors like Sheldon
Adelson having a voice in policy formulation relating to the Middle
East.
(more....)
சிவப்பு மழைக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளது
நாட்டில் அண்மையில் சில இடங்களில் பெய்த சிவப்பு மழைக்கு 'ட்ரெஸலோமனஸ்"
எனப்படும் பாசிகளிலுள்ள அல்காக்களே காரணமென கண்டறியப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
மழை நீருடன் காணப்பட்ட ஒரு வகை நுண் உயிரே
இதற்குக் காரணம் என்றும் அது மனித உடம்பிற்கு தீங்கு பயக்காது என்றும்
கூறப்படுகிறது.
சில நீர்தேக்கங்களில் காணப்படும் பச்சை
அல்காக்கள் காரணமாக அந்த நீர் பச்சையாகத் தெரிவது போல் இதுவும் ஒருவகை
சிவப்பு நிற நுண்ணுயிர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை
17, 2012
ஈழத் தமிழர்கள்
கொலையை வேடிக்கை பார்த்ததா ஐ.நா.?
கேள்வி எழுப்பும் உள் பரிசீலனைக் குழு!
'இலங்கையில்
நடந்த இறுதிக் கட்டப் போரில் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பு
தவறி விட்டது. மிக அபாயகரமான போர் சூழலில் வெகுதிறமையான முடிவை
எடுத்திருக்க வேண்டும். மக்களைக் காப் பாற்றும் நடவடிக்கைகளை
முன்னெடுக்காமல் போனது இந்த அமைப்பின் செயல்பாடு மற்றும் அணுகுமுறைக்கான
மிகப்பெரும் தோல்வி’ - ஐ.நா. மீது இப்படி பகீர் குற்றச் சாட்டை வைத்துள்ளது,
அந்த அமைப்பின் உள்பரிசீலனைக் குழு. ஈழப்போர்
சமயத்தில் ஐ.நா. எடுத்த நிலைப்பாடுகள் குறித்து ஐ.நா. அமைப்பின்
உள்பரிசீலனைக் குழு ஆய்வு செய்தது. ஆய்வின் முடிவில், அந்தக் குழு தயாரித்த
முக்கிய அறிக்கையின் (இறுதி வடிவத்துக்கு முந்தைய நிலை அறிக்கை) நகல் ஒன்று
பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு லீக் ஆனது. அந்த அறிக்கையை அடிப்படையாக
வைத்து, மீண்டும் இலங்கைப் புயல் வீசுகிறது. (மேலும்...)
மறைக்கப்பட்ட ஐ.நா இன் அறிக்கையும் ஊடகப் பொய்களும்
வன்னிப் படுகொலைகள் நடைபெற்ற வேளையில் அமரிக்கத் செய்மதிகள் அனைத்துக்
கொலைகளையும் படம்பிடித்துச் சேமித்து வைத்துக்கொண்டன. பிரித்தானிய அரசு
ஆயுதம் வழங்கிவிட்டு மனித் உரிமைகள் குறித்து அவ்வப்போது அறிக்கை விடுத்தது.
உலகில் மனித உரிமையின் காவலன் என்று மார்தட்டிக்கொள்ளும் அமரிக்க சார்பு
அடிமை நிறுவனமான ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலை குறித்த உண்மைகள்
அனைத்தையும் திரட்டி வைத்துக்கொண்டு இலங்கை அரசுக்கு ஆதரவளித்தது.
இலங்கையில் 2009ம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக ஐக்கிய
நாடுகள் சபையின் இரகசிய அறிக்கையில் பல பகுதிகள் கறுப்பு மையினால்
அழிக்கப்பட்டது.
(மேலும்...)
மறைக்கப்பட்ட ஐ.நா அறிக்கையின்
முழுமை கீழே தரப்படுகிறது. இங்கு
பல பகுதிகள்
கறுப்பு மையினால் மறைக்கப்பட்டுள்ளன. Hiden_report
கட்சித்
தலைவர்கள் கூட்ட தீர்மானங்களை பகிரங்கப்படுத்துவது பாராளுமன்ற ஒழுங்கிற்கு
முரண்
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்கள் வெளியில்
பகிரங்கப்படுத்தப்படக் கூடாது என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில்
அறிவித்தார். இதனை மீறி செயற்படு வோரை இனிமேல் கட்சித் தலைவர்கள்
கூட்டத்திற்கு அழைப்பதா, இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்க நேரிடும்
எனவும் சபாநாயகர் தெரிவித்தார். அனுரகுமார திஸாநாயக்க எம். பி.
பத்திரிகைக்கு வழங்கியிருந்த தகவலில் பிரதம நீதியரசர் சிறியானி பண்டார
நாயக்கவிற்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பிலும் அரசாங்கம் அது தொடர்பில்
மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில்
மேலும் தெரிவித்த சபாநாயகர் மேற்படி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்
தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இது
தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விமர்சனங்களை வெளிப்படுத்துவது
ஆரோக்கியமானதல்ல. அதனை விட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்டதை
பகிரங்கப்படுத்துவது என்பது பாராளுமன்ற நிலையியற் கட்டளைக்கு முரணானது.
இதனைக் கருத்திக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவது அவசியம்
என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.
இலங்கைக்கு
எதிராக கை உயர்த்திய நாடுகளுடன் கைகோர்க்க தேவையில்லை
ஜெனீவாவில் எமக்கெதிராகக் கை உயர்த்திய நாடுகளுடன் கைகோர்த்துச் செல்ல
வேண்டிய அவசியம் இலங்கைக்கு கிடையாது என அமைச்சர் விமல் வீரவன்ச பாராளு
மன்றத்தில் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாத நாடு களுடன்
உறவுகளைப் பலப்படுத்திக் கொண்டு முன் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்
எனவும் அமைச்சர் தெரிவித்தார். வங்குரோத்து நிலையிலுள்ள ஐக்கிய தேசியக்
கட்சி வெளிநாட்டுத் தலையீடுகளை நாட்டுக்குள் ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேட
முனைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, வெள்ளையர்களை வைத்துக்
கொண்டு இலங்கையின் பொருளாதாரத்திற்கான திட்டங்களை வகுத்த ஐ. தே. க. போன்று
செயற்பட வேண்டிய தேவை எமது அரசாங்கத்துக்குக் கிடையாது எனவும் தெரிவித்தார்.
ஜனாதிபதி அவர்கள் அண்மையில் சீனா சென்றிருந்தபோது இலங்கையின் உற்பத்திகளை
தமது சந்தைக்குக் கொண்டுவர வேண்டுமென கூறப்பட்டது. சீனா ஒருபோதும்
இலங்கையின் விடயத்தில் தலையிடுவதில்லை. இதனை அந்நாடு பல தடவைகள்
வலியுறுத்தியுள்ளது. சீனா இலங்கையை விழுங்கிவிட்டதாக முன்வைக்கப்படும்
கூற்றுக்களில் உண்மை இல்லை. உள்நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடாத
நாடுகளுடனேயே கூடுதலான தொடர்புகளைப் பேணி வருகின்றோம்.
தரைவழி தாக்குதலுக்கு
எல்லையில் படைகளை குவிக்கும் இஸ்ரேல்
இஸ்ரேல் இரவு, பகல் பாராமல் காசா பகுதியில்
வான் தாக்குதல்களை நடத்தியதோடு, இஸ்ரேல் துருப்புகள் தரைவழி தாக்குதலுக்காக
எல்லையோரத்தில் குவிக்கப்பட்டுள்ளன. கடந்த புதன்கிழமை ஹமாஸ் அமைப்பின்
இராணுவ தளபதி அஹமட் ஜபரி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து
தீவிரமடைந்த மோதலில் நேற்று முன்தினம் காசாவில் இருந்து இஸ்ரேலின் வர்த்தக
நகரான டெல் அவிவுக்கு தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேல் இராணுவம்
உஷார் படுத்தப்பட்டுள்ளது. காசாவிலிருந்து நேற்று முன்தினம் நடத்தப்பட்ட
தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் கொல்லப்பட்டனர்.
(மேலும்...)
ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்டோர் பிணையில் விடுதலை: இருவர் விளக்கமறியலில்
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா சென்ற போது
அங்கிருந்து விசேட விமானம்மூலமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில்
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 87 பேரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.
எம். என். பி. அமரசிங்க தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை
செய்ய உத்தரவிட்டார். அத்துடன், இவர்களுடன் ஆஜர் செய்யப்பட்ட இருவரை
தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். சட்ட
விரோதமாக ஆட்கடத்தலுக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் இருவரையே தொடர்ந்து
விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்த 87 பேரும் ஐந்து
படகுகளில் புகலிடம் கோரி சென்று அங்கிருந்து வியாழக்கிழமை திருப்பி
அனுப்பப்பட்டவர் களாவர். இந்த வழக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 21 ஆம்
திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவுள்ளது.
விண்வெளி
வீரர்களை வாட்டிவதைக்கும் மன அழுத்தம்
விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபடும்
வீரர்களுக்கு அச்சம் என்பது மட்டுமே பிரதான பிரச்சினையென்று நாம் கருதுவது
தவறு. மன உளைச்சலைச் சமாளிப்பதுதான் இவர்களுக்கு உள்ள பெரும்
பிரச்சினையென்று கூறப்படுகிறது. விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து
தொடர்ச்சியான ஆய்வுப் பணிகளில் ஈடுபட வேண்டும். விண்கலத்துக்கு வெளியே வந்து
ஆய்வில் ஈடுபட வேண்டுமானால் கலத்துடன் உடலை இணைத்தபடி நீண்ட வடம் ஒன்றைக்
கட்டிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விண்கலத்திலிருந்து சிறிய உந்துதலே
அவ்வீரரை நீண்ட தூரத்துக்குத் தள்ளி விடும். காரணம் புவியீர்ப்பு விசை அங்கு
கிடையாது. விண்ணில் அழகிய நீலப்பந்தாகத்தென்படும் பூமியைப் பார்க்கின்றபோது
குடும்பத்தினரின் ஏக்கம் வரும். ஒரே விதமான சூழலினால் மன அழுத்தம் ஏற்படும்.
சலிப்பைச் சமாளிப்பது சிரமம். மன அழுத்தமே அவ்வீரர்களை வாட்டி வதைக்கிறது.
கார்த்திகை
16, 2012
தமிழீழ விடுதலை புலிகளின் பிரான்சிய தலைவரான பரிதி என்றழைக்கப்படும்
மதீந்திரன்; புலிகளுக்கு இடையேயான அதிகாரப் போராட்டத்தில் பலியானார்
(டி.பி.எஸ்.ஜெயராஜ்)
தமிழீழ விடுதலை புலிகளின்(எல்.ரீ;ரீ.ஈ) பிரான்சிய தலைவரான நடராஜா மதீந்திரன்;
கடந்த நவம்பர் 8 ந்திகதி வியாழக்கிழமை இரவு உந்துருளியில் வந்த
இனந்தெரியாத கொலைகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 49 வயதான பரிதி
என்கிற பெயராலும் அழைக்கப்பட்ட மதீந்திரன்; எல்.ரீ;ரீ.ஈ யின் முன்னணி
அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்புக் குழவிற்கு(ரி.சீ.சீ) தலைவராக இருந்தார்.
ஸ்ரீலங்காவில் புலிகளின் அங்கத்தவராக பணியாற்றியபோது ரீகன் என்கிற இயக்கப்
பெயரால் அழைக்கப்பட்ட மதீந்திரன்;,பரீசிலுள்ள 341, பைரனீஸ் வீதியிலுள்ள,
ரி.சீ.சீ அலுவலகத்துக்கு முன்னால் வைத்து இரவு சுமார் 9.20 மணியளவில்
கொல்லப்பட்டார். பிரான்சிலுள்ள ஊடகங்கள் வெளிப்படுத்தும் தகவல்களின்படி
பரிதி என்கிற மதீந்திரன் அல்லது ரீகன் என்றழைக்கப் படுபவர், தனது
வீட்டுக்குச் செல்வதற்காக ரி.சீ.சீ அலுவலகத்திலிருந்து வெளியே வந்தபோது,
உந்துருளியில் வந்த இரண்டு மனிதர்கள் வெகு சமீபத்தில் வைத்து அவரைச்
சுட்டுள்ளார்கள்.ஒரு துப்பாக்கி குண்டினால் காயமடைந்த மதீந்திரன்
அங்கிருந்து ஓடுவதற்கு முயற்சி செய்திருக்கிறார், ஆனால் அருகிலிருந்த
பேரூந்து நிறுத்துமிடத்தில் அவர் கீழே விழுந்து விட்டார்.
(மேலும்...)
புலிகளின் பரிதி
கொலைசெய்யப்பட்ட பிரான்ஸ் பாரிசில் இரு தமிழர்களைக் கடத்தியதாக
பாகிஸ்தானியர் நால்வர் கைது…!!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், பிரான்ஸ் தமிழர்
ஒருங்கிணைப்புக் குழு பொறுப்பாளருமான நடராசா மதீந்திரன் என்ற இயற்பெயரைக்
கொண்ட பரிதி படுகொலை செய்யப்பட்டதன் பின், இரு தமிழர்கள் நால்வரைக் கொண்ட
பாகிஸ்தானிய குழுவினரால் கடத்தப்பட்டு அடித்து உதைக்கப்பட்டுள்ளர்கள்.
மேற்படி சம்பவம் பாரிஸ் நகரத்தில் இருந்து தெற்கு நோக்கி செல்லும்
நெடுஞ்ச்சாலையில் கடந்த வார இறுதி நாளில் நடந்துள்ளது. தற்போது கைது
செய்யப்பட்ட பாகிஸ்தானியர் நால்வரும் செவ்வாய்க்கிழமையன்று Paris suburb of
Bobigny நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் பிணை மறுக்கப்பட்டு
தொடந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ளர்கள்.
(மேலும்...)
தமிழ் யுவதிகள் 100 பேர் இலங்கை இராணுவத்தில் சேர்ப்பு
தமிழ்
யுவதிகள் 100 பேர் நாளை இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் அனைவரும் வவுனியாவிலுள்ள இலங்கை
இராணுவத்தின் 6ஆவது தொண்டர் அணியில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இதேவேளை,
மேற்படி இராணுவத்தில் இணையும் யுவதிகள் யாழ்ப்பாண பிரதேசத்தில் வேவையில்
அமர்த்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய இலங்கைக்குள் நிரந்தர தீர்வுகாண அரசுக்கு
ஆதரவு வழங்க தயார் -
ஆர். சம்பந்தன் எம். பி.
ஐக்கிய இலங்கைக்குள் நியாயமானதும்
ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான தீர்வொன்றைக் காண்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கும்
பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்குப் பூரண ஆதரவை வழங்கத்
தயாரென ஆர். சம்பந்தன் எம். பி. நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்குத் தீர்வு தொடர்பான அரசாங்கத்தின் செயற்பாடுகள் தமிழ்
மக்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சம்பந்தன்
எம்.பி; தமிழர்கள் எந்த இனத்துக்கோ சமூகத்துக்கோ எவ்விதத்திலும் பங்கம்
விளைவிப்பவர்களல்ல என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.
(மேலும்...)
மேலும் 32 இலங்கையர்களை நேற்று திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா
சட்டவிரோதமாக வள்ளங்கள் மூலம் அவுஸ்திரேலியா
சென்றவர்களுள் 32 பேர் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக
அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம் அறிவித்துள்ளது. மிக அண்மையில் வள்ளங்கள்
மூலம் சென்றவர்களில் 32 பேரே கிறிஸ்மஸ் தீவிலிருந்து அனுப்பப்பட்டுள்ளதாக
அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நுழைவு வீசா இன்றி சட்டவிரோதமாக
வருபவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட ஓகஸ்ட் 13 ஆம்
திகதி முதல் இன்று வரை 232 பேர் நாவுறு மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளிலிருந்து
திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம்
தெரிவிக்கிறது. நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த மற்றும்
தெரிவிக்காதவர்கள் என்ற பாகுபாடு இன்றி 32 பேர் உடனடியாக திருப்பி
அனுப்பப்பட்டு ள்ளதுடன் அடுத்தடுத்து திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு திணைக்களம் அறிவிக்கிறது. ஆட்
கடத்தல்காரர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி உயிரைப் பணயம் வைத்து
அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் எண்ணத்தை கைவிடுமாறும் அவுஸ்திரேலிய தூதரகம்
கேட்டுக் கொண்டுள்ளது.
இஸ்ரேல் - காசா உக்கிர மோதல்
ஹமாஸ் இராணுவ
தளபதி உட்பட 13 பலஸ்தீனர் பலி
இஸ்ரேல் - காசாவுக்கு இடையிலான மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில்
பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் வான் தாக்குதலில்
காசாவில் 13 பேர் கொல்லப்பட்டதோடு காசாவிலிருந்து நடத்தப்பட்ட ரொக்கெட்
தாக்குதல்களில் மூன்று இஸ்ரேலியர் பலியாகினர். காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின்
இராணுவப் பிரிவான இஸ்ஸதின் அல் கஸ்ஸாம் படையின் தளபதி அஹமட் ஜபரி இஸ்ரேலின்
தாக்குதலில் கொல்ல ப்பட்டதைத் தொடர்ந்தே இரு தரப்பு மோதல் உக்கிரம
டைந்துள்ளது. காசா நகரில் நேற்று முன்தினம் காரில் சென்று கொண்டிருந்த அஹமட்
ஜபரி மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. இதில் 46 வயதான ஜபரியும்,
அவருடன் காரில் பயணித்த மற்றும் ஒருவரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்
குறித்து இஸ்ரேல் இராணுவம் ‘டுவிட்டர்’ மூலம் நேரடியாக விபரித்ததோடு
தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவையும் வெளியிட்டது.
(மேலும்...)
ஐரோப்பாவை மிரட்டும் கிரேக்கப் புரட்சி !!
ஏதென்ஸ் மாநகரில் மூன்று லட்சம் மக்கள்
அணிதிரண்ட ஊர்வலம் சாதாரண நிகழ்வல்ல. அனைத்தையும் இழந்தவர்களின் கலகம்,
வங்கிகளை கலக்கமடைய வைத்தது. அமெரிக்காவில் மையம் கொண்ட பொருளாதார சுனாமி
ஐரோப்பிய கரைகளை வந்தடைந்துள்ளது. அட்லாண்டிக் சமுத்திரக் கரையை அண்டிய
அயர்லாந்து, மத்திய தரைக் கடல் நாடுகளான போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி,
கிறீஸ் ஆகிய நாடுகளும் சுனாமியின் அகோரமான தாக்குதலுக்கு
இலக்காகியுள்ளன. இவற்றில் கிரீசில் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டும் வெளித்
தெரிய ஆரம்பித்துள்ளது. முதன் முதலாக செல்வந்த மேற்கு ஐரோப்பிய வட்டத்தை
சேர்ந்த ஒரு தேசம் திவாலாகின்றது. மக்கள் வங்கிகளையும், வங்கிகள்
அரசாங்கத்தையும், அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்தையும் குற்றம் சாட்டிக்
கொண்டிருக்கின்றனர். யார் குற்றவாளி?
(மேலும்...)
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு
இந்தியா முழுவதும் தமிழே பரவியிருந்தது. அசோக மாமன்னன் தமிழ் மொழியிடம் கடன்
பெற்றுத்தான் அவனது கல் வெட்டுக்களைப் பொறித்திருக்கிறான். தமிழனின்
தொன்மையான வரலாற்றை மறைக்க சதி நடக்கிறது என்று கூறி அதிர்ச்சியை அள்ளித்
தெளித்திருக்கிறார், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை அதிகாரி ஒருவர்.
இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே! நெல்லை
பாளையங்கோட்டையில், மத்திய செம்மொழி தமிழாய்வு மையமும், சென்னையிலுள்ள
பெரியார் ஈ.வெ.ராமசாமி நாகம்மை கல்வி ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து
நடத்திய ‘தமிழ்நாட்டுத் தொல்லியல் ஆய்வுகள் மற்றும் ஆதிச்சநல்லூர் சிறப்பும்,
எதிர்காலத்திட்டங்களும் என்கிற தலைப்பிலான தேசிய கருத்தரங்கில்தான் இப்படிப்
பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அவர். நடன காசிநாதனை நாம் சந்தித்துப்
பேசினோம்.
(மேலும்...)
வானவில்
22
பதின்மூன்று சக என்றவர்கள் பதின்மூன்றையே இல்லாதொழிக்க முயல்வதா?
இலங்கை அரசியல் அமைப்பின் 13வது சரத்தை
(1987இல் செய்து கொள்ளப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கையின் விளைவாக
மாகாணசபைகளை அமைக்கும் நோக்கில் அரசியல் யாப்பில் செய்யப்பட்ட திருத்தம்)
நீக்க வேண்டும் என்ற கருத்தை அரசாங்கத் தரப்பைச் சேர்ந்த சிலர் முன்
வைத்திருக்கின்றனர். குறிப்பாக ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு
அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச, ஜாதிக ஹெல உருமயவின் தலைவரும்,
அமைச்சருமான சம்பிக்க ரணவக்க, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்
அமைச்சருமான விமல் வீரவன்ச ஆகியோர் இந்தக் கருத்தை முன்வைத்ததுமல்லாமல், அது
பற்றி தீவிரமான பிரச்சாரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
(மேலும்...)
கார்த்திகை
15, 2012
சீனாவின் புதிய அதிபராக ஷி ஜின்பிங் தேர்வு!
சீனாவின் புதிய அதிபராக ஷி ஜின்பிங் இன்று அதிகாரப்பூர்வமாக தேர்வு
செய்யப்பட்டார். சீன அதிபராக ஹூ ஜிண்டாவோ பதவி வகித்து வருகிறார்.இவர்
கடந்த 2003-ம் ஆண்டு மார்ச் 15- ம் தேதி இந்த பொறுப்பை ஏற்று 10 ஆண்டுகளாக
நீடிக்கிறார். அத்துடன் கம்யூனிஸ்டு கட்சி தலைவர், ராணுவ கமிஷன் சேர்மன்
என முக்கிய பதவிகளையும் வகிக்கிறார். இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தில்
மாற்றம் செய்ய ஆளும் கம்யூனிஸ்டு கட்சி தீர்மானித்தது. இதற்கான கட்சியின்
உயர்மட்ட குழு கூட்டம் பீஜிங்கில் சில நாட்களுக்கு முன்பு தொடங்கி
விவாதித்து வருகிறது. அதிபராக இருக்கும் ஹூ ஜிண்டாவோ ஜனாதிபதி பதவி, கட்சி
தலைவர் பொறுப்பு ஆகியவற்றில் இருந்து விலகுவார் என்றும் ராணுவ தலைமை
பதவியில் அவரே நீடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
(மேலும்...)
யாழ்.-
கொழும்புக்கான புகையிரதப் பாதை புனரமைப்பு வேலைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் - கொழும்புக்கான புகையிரதப்பாதை
புனரமைக்கும் வேலைகள் யாழ். குடாநாட்டில் ஆரம்பமாகியுள்ளன. இந்த திட்டம்
சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு சுமார் பத்துமாத இடைவெளியின் பின்னர்
தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
தற்போது
கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு முன்னாள் தண்டவாளங்கள் கொண்டுவரப்பட்டு
பொருத்தும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகளவான நவீன தொழில்நுட்ப
சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு பாதை அமைக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள் விமான நிலையத்தில் கைது
புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்டு
அவுஸ்திரேயாவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட 32 புகலிடக்கோரிக்கையாளர்கள்
இன்று இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்மஸ் தீவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு
சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலம் பகல் 12.10 மணியளவில் வந்த குறித்த
புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கை குற்றத் தடுப்பு பிரிவினர் கைது செய்து
விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இவர்கள்
அனைவரும் பெருபான்மை இனத்தைச் சேர்ந்த ஆண்களாவர். இவர்கள் மாத்தறை 5, கம்பஹா
1, களுத்துறை 3, புத்தளம் 14 மற்றும் அம்பாறை 9 ஆகிய பகுதிகளைச்
சேர்ந்தவர்களாவர்.
அதிகாரம் பகிரப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு
- திஸ்ஸ விதாரண
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்பதும் அதிகாரம்
பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதுவே லங்கா சமசமாஜக் கட்சியின் நிலைப்படாகும்
என்று அதன் தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண
தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு
திட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத்
தெரிவித்தார். மேலும் கற்றுக்கொண்ட
பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முன் வைத்துள்ளத்.
இந்த பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுதல் வேண்டும்.
அத்துடன்
முன்வைக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தியுடன் தேசிய நல்லிணக்கமும்
இணைத்துக்கொள்ளப்படுத்தல் அவசியமாகும். அதன் மூலமே நாடு உண்மையான
அபிவிருத்தியை காணக்கூடியதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
சிக்கன
நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: ஐரோப்பா ஸ்தம்பிதம்
நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளெங்கும் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும்
அரசுகளின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டது. இதனால் தெற்கு ஐரோப்பாவே ஸ்தம்பிதம் அடைந்தது. இந்த
ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தோர் சிக்கன நடவடிக்கைகளை அரசுகள் நிறுத்த
வேண்டும் என்றும், அதிகரித்து வரும் சமூக அவலத்திற்கு தீர்வுகாண வேண்டும்
என்றும் கோரிக்கை விடுத்தனர். நேற்றைய ஆர்ப்பாட்டம் ஸ்பெயின், கிaஸ்,
போர்த்துக்கல் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இடம்பெற்றது. தவிர பெல்ஜியம்,
ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஒரு சில கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும்
ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டம் காரணமாக ஐரோப்பா எங்கும்
விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டதோடு பல சேவைகளும் மீள்
அட்டவணைப்படுத்தப்பட்டன. குறிப்பாக ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய
நாடுகள் ஆர்ப்பாட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டன. ஐரோப்பிய தொழிலாளர்
ஒன்றிய கூட்டமைப்பும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தமை
குறிப்பிடத்தக்கது. ஐரோப்பாவின் 23 நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 அமைப்புகள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றன.
மதுபானசாலை திறப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு, மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள
புதுக்குடியிருப்பு (வேடர்குடியிருப்பு) பிரதேசத்தில்; முடக்கொடி எனும்
இடத்தில் புதிய மதுபானசாலை திறப்பதை கண்டித்து இன்று காலை மட்டக்களப்பு
மாவட்ட செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி சிலை முன்பாக ஆரம்பித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான
வீதி ஊடாக, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்குச் சென்றனர். 'மண்முனைப்பற்றில்
இன்னுமொரு மதுபானசாலை திறக்க அனுமதி வழங்க வேண்டாம்", 'வேண்டாம் வேண்டாம்
மதுபானசாலை வேண்டாம்" '7வது மதுபானசாலை வேண்டாம்", 'நிறுத்து நிறுத்து
அனுமதியை நிறுத்து", "மண்முனைப்பற்று மதுபானசாலைகளின் மாநகரமா?", 'மண்முனை
மண்ணிலே 7 மதுபானசாலைகள் வேண்டுமா?' போன்ற வாசகங்களுடன் சுலோகங்களை ஏந்தி
கோசம் எழுப்பினர்.
தமிழ் மக்களுக்கு அதிகளவில் அர்த்தமுள்ள அதிகாரப்
பரவலாக்கல் வழங்கப்படவேண்டும்
-
டிலான்
பதின்மூன்றாவது திருத்தங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் போது தமிழ் மொழி
தேசிய மொழி, ஆங்கிலம் இணை மொழி என்ற திருத்தங்களில் எதுவிதமான மாற்றத்தையும்
ஏற்படுத்தாது அதனை மேலும் மேலும் உறுதிப்படுத்த வேண்டும் என டிலான் பெரேரா
இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்தோடு தமிழ் மக்களுக்கு அதிகளவில் அர்த்தமுள்ள
அதிகாரப் பரவலாக்கல் வழங்கப்படவேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வரவு செலவு திட்டம் மீதான விவாதத்தில்
கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கனடாவில் தீபாவளி கொண்டாட்டம்
வழமைபோல இவ்வருடமும் கனடாவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அங்கு வாழும்
இலங்கையர்களின் ஆதரவுடன் இந்துக்களின் தீபத் திருநாளான தீபாவளியை வெகு
சிறப்பாகக் கொண்டாடத் தீர்மானித்துள்ளது.
நிகழ்ச்சி விபரம் வருமாறு:
இடம்:
Don Bosco Auditorium
No.2,Saint Andrews Boulevard, Etobicoke, Ontario, M9R 1V8
காலம்: ஞாயிறு 18, 2012
பிற்பகல் 4 – 9 மணி வரை
கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இரவு சிற்றுண்டி வழங்கலுடன் நிகழ்ச்சி
நிறைவுறும்.
கனடாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் குடும்ப சமேதரராய் இந்நிகழ்வில்
பங்குபற்றி சிறப்பிக்கும்படி அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
தொடர்புகளுக்கு: 613-233-8449 - 416-323-9133
தாதிமார் சங்கம் நாளை வேலை நிறுத்தம்
அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் 24 மணிநேர
அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
நாளை காலை 7 மணியிலிருந்து நாளை மறுதினம் 7 மணி
வரை இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக் கப்பட்டவுள்ளது.
சீருடைக்
கொடுப்பனவு, விஷேட பிரிவுகளுக்கான கொடுப்பனவு, பதவி உயர்வுகளை
முன்பிருந்தவாறு அமுல்படுத்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு, புதிய தாதியர்களை
பணியில் இணைத்துக்கொள்ளல் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள
வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின்
தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.
சீனத்தலைமைகள்
மாறும் கம்யூனிஸ்ட் மாநாடு நிறைவு
சீனத் தலை மைகள் மாறும் ஆளும் கம்யூனி ஸ்ட் கட்சியின் (பொதுவுடைமை கட்சியின்)
மாநாடு உயர்மட்ட தலைமைகளின் விபரம் வெளியிடப்படாமலேயே நேற்று நிறைவடைந்தது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் கடந்த ஒரு வாரம் நீடித்த இந்த மாநாட்டில்
கட்சியில் 2,200க்கும் மேற்பட்ட உயர் மட்ட உறுப்பினர்கள் பங்கேற்று புதிய
மத்திய குழுவை தேர்வு செய்த னர். இந்நிலையில், தேர்வு செய்யப் பட்டுள்ள
மத்திய குழு இன்று கூடி கட்சியின் தீர்மானங்களை நிறைவேற் றும் உயர்மட்ட
சபையான, பொலிட்பீரோ நிலைக்குழுவை தேர்வு செய்யவுள்ளது.
(மேலும்...)
கார்த்திகை
14, 2012
விடுதலை புலிகளை வெளிநாடுகளில் பின்தொடரும் மர்ம நபர்கள்! அடுத்த குறி யார்?
விடுதலைப் புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்ட
சம்பவத்தையடுத்து, காரியங்கள் வேகமான நடக்க தொடங்கியுள்ளன. நெடியவன் அணியைச்
சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரை ‘அடையாளம் தெரியாத’ நபர்கள் பின்தொடர்வதாக
கூறப்படுகிறது. இதையடுத்து, நெடியவன் அணியைச் சேர்ந்த வேறு சில தளபதிகளும்,
செயல்பாட்டாளர்களும் இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த அணியைச்
சேர்ந்தவர்களே கூறத் தொடங்கியுள்ளனர். முக்கியமாக இந்த மாதம் விடுதலை
புலிகளின் மாவீரர் தினம் வருவதால், செயல்பாட்டாளர்கள் வெளியே நடமாட வேண்டிய
தேவைகள் உள்ளன. இந்த சந்தர்ப்பத்தை வைத்து, நெடியவன் அணியைச் சேர்ந்த வேறு
சிலரும் குறிவைக்கப்பட சாத்தியம் மிக அதிகம் என்றே சொல்லலாம். இந்தக் கொலையை
செய்தவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், பரிதியையே கொல்ல கூடிய அளவுக்கு
திட்டமிடக் கூடியவர்களாக உள்ளார்கள். கொலை செய்துவிட்டு, இயல்பாக அந்த
இடத்தை விட்டு அகன்று செல்லக்கூடிய அனுபவசாலிகளாகவும் உள்ளார்கள்.
(மேலும்...)
கார்த்திகை
14, 2012
தனிநாடு கோரும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவிலிருந்து பிரிந்து செல்ல பல மாநிலங்களும் வெள்ளை மாளிகைக்கு மனு
ஐக்கிய அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்ல பல்வேறு
மாநிலங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்டோர் வெள்ளை மாளிகைக்கு
மனுச்செய்துள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவானதைத்
தொடர்ந்தே பலர் இவ்வாறு மனுச்செய்துள்ளனர். வெள்ளை மாளிகை இணையதளத்தின் மக்கள்
முறைப்பாட்டைத் தெரிவிக்கும் பக்கத்திலேயே அமெரிக்காவில் இருந்து பிரிந்து செல்லும்
மனுக்கள் குவிந்துள்ளன. இதில் அமெரிக்காவின் 20 மாநிலங்களில் இருந்து இவ்வாறான
மனுக்கள் குவிந்துள்ளன. அமெரிக்க அரசியல் அமைப்பில் எந்த மாநிலமும் ஒன்றியத்தில்
இருந்து பிரிந்து செல்வதை அங்கீகரிக்கும் வாக்கியங்கள் உள்ளடக்கப்படவில்லை. இந்த
மனுக்கள் குறித்து வெள்ளை மாளிகை இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும்
வெளியிடவில்லை. இந்த மனுவில் ஒரு மாநிலத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்
கைச்சாத்திட்டால் அது குறித்து ஜனாதிபதி ஒபாமா விளக்கம் அளிப்பார் என வாக்குறுதி
அளிக்கப்பட்டிருந்தது. இதில் டெக்ஸாஸ் மாநிலத்தில் மூன்று தினங்களுக்குள்
அமெரிக்காவில் இருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரம் பெற 25 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் கைச்சாத்திட்டிருந்தனர். அமெரிக்க சிவில் யுத்தம் இடம்பெற்ற போதே
கடைசியாக பல மாநிலங்களும் சுதந்திர பிரகடனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை
14, 2012
விடுதலைப் புலிகள் தளபதி பரிதி வீர மரணத்துக்கு கருணாநிதி இரங்கல்!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் தளபதியான பரிதி என்ற ரீகன் பிரான்சில்
சுட்டுக் கொலை செய்யப்பட்டு வீர மரணம் அடைந்ததற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி
இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான ரீகன் என அழைக்கப்படுகிற நடராஜா
மாதேந்திரன் என்கிற பரிதி, பாரீஸ் நகரில் இலங்கை அரசு அனுப்பிய கூலிப் படையால்
சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று செய்தி வந்துள்ளது. ஈழத்திலும், பிரான்ஸ்
நாட்டிலும் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்
பரிதி. அவருடைய இந்த அகால மரணத்திற்காக பெரிதும் வருந்துகிறேன். அவரை இழந்து வாடும்
அவருடைய துணைவியாருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ் செல்வனின் மரணத்திற்கு வெண்பா பாடினார். சில மாதங்களில் தலைவருடன் இயக்கமே
கூண்டோடு அழிந்தது. தற்போது பரிதியிற்கு இரங்கற்பா எழுதியுள்ளார் நாடு கடந்த
தமிழீழத் தலைவர்கள் கூண்டோடு அனுப்பும் சங்கொலி இதுவோ........ ? தமிழனத் தலைவரின்
ராசி அப்படி. உசாரு ஐயா உசாரு.....?
கார்த்திகை
14, 2012
வெலிக்கடை
சிறையில் இந்திய அதிகாரிகள் விசாரணை
கடந்த
வெள்ளிக்கிழமை வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து விசாரணைகளை
மேற்கொள்வதற்காக இந்திய அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்ததோடு 40க்கும்
அதிகமானோர் காயம் அடைந்தனர்.அத்துடன் இச் சிறைச்சாலையில் இந்தியாவைச் சேர்ந்த 33
கைதிகள் உள்ளனர். மேலும் 5 கைதிகளின் வழக்குகள் வெலிக்கடைச் சிறைச்சாலையில்
நிலுவையில் உள்ளது.
இந்நிலையிலேயே இந்திய அதிகாரிகள் அங்கு சென்று
சம்பவம் தொடர்பிலும் இந்தியக் கைதிகளின் நலன் குறித்தும் விசாரித்து அறிந்து
கொண்டதுடன் கைதிகளின் நிலை குறித்து விசாரணைனளை மேற்கொண்டுள்ளனர்.
கார்த்திகை
14, 2012
எமது
பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியிருந்தால் வெலிக்கடை சிறைச்சம்பவத்தை
தடுத்திருக்கலாம்
- ஆனந்தராஜா
நாம் ஏற்கனவே முன்வைத்திருந்த பரிந்துரைகளை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தியிருந்தால்
வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தை தவிர்த்திருக்கலாம் என்று இலங்கை மனித உரிமைகள்
ஆணைக்குழுவின் ஆணையாளரும் முன்னாள் பொலிஸ் மா அதிபருமான டீ.ஈ.ஆனந்தராஜா
தெரிவித்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று
அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த தமது குழுவினர் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் உரிய
அதிகாரிகளிடமிருந்து பதில் நடவடிக்கைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இந்த
கலவரம் நடந்தது துரதிஷ்டவசமானது என்றும் அவர் கூறினார். வெலிக்கடை சிறைச்சாலையில்
கைதிகளின் மனித உரிமைகள் தொடர்பில் எழுந்த கவலைகளை அடுத்து அங்கு சென்ற தமது
குழுவினர் பல பரிந்துரைகளை சிறைத்துறை அதிகாரிகளுக்கு முன்வைத்திருந்ததாக ஆனந்தராஜா
சுட்டிக்காட்டினார்.
(மேலும்...)
கார்த்திகை
14, 2012
சிரிய பீரங்கி படை மீது
இஸ்ரேல் நேரடித் தாக்குதல்
சிரியாவின் எறிகணைகள் இஸ்ரேல் இராணுவ முகாமிற்கு அருகில் விழுந்ததை அடுத்து சிரிய
பீரங்கி படை மீது இஸ்ரேல் இராணுவம் நேற்று முன்தினம் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியா மீது இஸ்ரேல் எச்சரிக்கை ஏவுகணை தாக்குதல் நடத்திய அடுத்த தினமே இஸ்ரேல்
சிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த
தாக்குதலில் சிரிய தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து விபரங்கள் வெளியாகவில்லை. ஆனால்
தாக்குதலை நிறுத்தும்படி அசாத் இராணுவம் இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டதாக இஸ்ரேலிய
இராணுவ வானொலி குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்தத் தாக்குதல் மூலம் சிரியாவில்
தொடரும் சிவில் யுத்தத்தில் இஸ்ரேல் தலையிடுவதாகக் கூற முடியாது என அவதானிகள்
தெரிவித்துள்ளனர். ஆனால் சிரியாவில் இடம்பெறும் மோதலின் போது இஸ்ரேல் எல்லைக்குள்
துப்பாக்கி குண்டுகள், மோட்டார் குண்டுகள் விழுவதை பொறுத்திருக்க முடியாது என
இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் கடந்த 1967 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்தின்
போது சிரியாவுக்கு சொந்தமான கொடன் ஹைட்ஸ் பகுதியை ஆக்கிரமித்தது. இந்த பகுதியில்தான்
தற்போது சிரிய குண்டுகள் தவறுதலாக விழுகின்றன.
கார்த்திகை
14, 2012
பாராளுமன்ற தெரிவுக்குழு
சபாநாயகரினால் இன்று நியமனம்
பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணையை விசாரணை
செய்வதற்காக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று (14) பாராளுமன்றத் தெரிவுக்குழுவை
நியமிப்பார் என்று பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி நேற்று தெரிவித்தார்.
இத்தெரிவுக் குழுவுக்கான தலை வரும் இன்று சபாநாயகரினால் நியமிக்கப்படுவார் என்றும்
அவர் குறிப்பிட்டார். பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக 117 ஆளும்
தரப்பு எம்.பி.க்களின் கையொப்பத்துடன் கூடிய குற்றப் பிரேரணை சபாநாயகரிடம் கையளி
க்கப்பட்டது. இதனை விசாரிப்பதற்காக 11 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட உள்ளதோடு,
இதற்காக ஆளும் தரப்பு சார்பாக 7 பேரின் பெயரும், எதிர் தரப்பு சார்பாக 4 பேரின்
பெயரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேற்படி தெரிவுக்குழுவுக்கு ஆளும் தரப்பு
சார்பாக அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரி யதர்சன யாப்பா, சுசில்
பிரேம் ஜெயந்த், டொக்டர் ராஜித சேனாரத்ன, விமல் வீரவங்ச, டிலான் பெரேரா மற்றும்
பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். எதிர்த்தரப்பு
சார்பாக எம்.பி.க்களான ஜோன் அமரதுங்க, லக்ஷ்மன் கிரியெல்ல, விஜித ஹேரத், ஆர்.
சம்பந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கார்த்திகை
14, 2012
வெலிக்கடை சிறையிலிருந்து
தப்பியோடியோரை தேடும் பணிகள்
வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவத்தை பயன்படு த்தி சிறையில் இருந்து தப் பியோடி
தலைமறை வாகியிருந்த 5 கைதிகளில் ஒருவர் ருவன் வெல்ல பகுதியில் வைத்து நேற்று கைது
செய்யப்பட்டதாக கொழும்பு பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர
சேனாநாயக்க தெரிவித்தார். ருவன் வெல்ல கனங்கம பகுதியில் மறைந்திருந்த நிலையில் இவர்
கைதானதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் இரு சிறை
அதிகாரிகள் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர்,
டி.டபிள்யு. கொடிப்பிலி தெரிவித்தார். கடந்த வெள்ளியன்று வெலிக்கடை சிறைச்சாலையில்
ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். 5 பேர் 3 ஆயுதங்கள் மற்றும்
கண்ணீர் புகை துப்பாக்கியுடன் தலைமறைவாகியிருந்தனர். தலைமறைவாகியிருந்த 5 பேரினதும்
விபரங்கள் சிறைச்சாலை திணைக்களத்தினூடாக பொலிஸ் திணைக்களத்திற்கு
வழங்கப்பட்டிருந்தது. நாகொட பகுதியைச் சேர்ந்த குருகேவில குணதிலக, நுகேகொடையைச்
சேர்ந்த கே. கயான் சிந்தக, பஞ்சிகாவத்தையைச் சேர்ந்த மாசிலாமணி பெஸ்லி,
குருணாகலையைச் சேர்ந்த விதானகே ராஜ்குமார் ஆகியோரே தலைமறைவாகியுள்ளதாக சிறைச்சாலை
ஆணையாளர் டி.டபிள்யு. கொடிப்பிலி தெரிவித்தார். இவர்கள் ஹெரோயின் மற்றும் கொள்ளைச்
சம்பவங்கள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கார்த்திகை
13, 2012
கார்த்திகை
13, 2012
புலம் பெயர் தமிழர்களும் இனி தொல்லைகளுக்கு ஆளாகும் காலம் தொடங்கிவிட்டது.
(ஸ்ரனிஸ்)
இலங்கையில் ஆட்களைச்சுடும் கலாச்சாரம் ஓய்ந்து அது
தற்போது தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் இடங்களிலும் வியாபித்து நிற்கிறது. புலம்
பெயர்ந்த நாடுகளில் இந்த கலாச்சாரத்தை தொடங்கி வைத்தவர்கள் விடுதலைப்புலிகள் தான்
என்பதை சிலர் தெரிந்திருந்தும் இப்படிப்பட்ட கொலைகள் மீண்டும் மீண்டும் நடப்பதற்கு
ஏதுவாக அவர்களது அறிக்கைகள் இருப்பது ஆபத்தாக உள்ளது. 1981. இல் சென்னை
பாண்டிபஜாரில் உமா - பிரபா துப்பாக்கி சூடு நடந்து இதுதான் வெளிச்சத்துக்கு வந்த
முதல் புலம்பெயர் துப்பாக்கி சண்டை. புலிகள்தான் 1990 இல் ஈ.பி.ஆர்.எல்எப் செயலாளர்
நாயகம் பத்மநாபா அவர்களையும் அவரது தோழர்கள் பன்னிருவரையும் சென்னை
கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுகொன்றார்கள் என்பது இந்த உலகத்திற்கு
தெரிந்திருந்தும் அதற்கும் வியாக்கியானங்களும் அறிக்கைகளும் வெளியிட்டு புலிகளின்
இச் செயலை பலர் ஊக்கப்படுத்தினார்கள்.
(மேலும்...)
கார்த்திகை
13, 2012
பரிதி படுகொலை
பாரிசில் இருவர் கைது
பரிதி படுகொலை தொடர்பாக பாரிஸ் நகரின் 20 ஆவது
மாவட்டத்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் கடந்த ஞாயிறன்று இரவு 12.30 மணியளவில் கைது
செய்யப்பட்டுள்ளார். 33 வயதான இலங்கையரான இவர் பிரான்ஸ் குற்றத்தடுப்புப் பிரிவின்
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தவிர, தகவல்களை அடுத்து இரண்டாவது சந்தேக நபர்
ஒருவரும் கைது செய்யப்பட்டிருக்கலாம் என ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
கார்த்திகை
13, 2012
கிரீஸ் மக்கள் போராட்டம் தொடர்கிறது!
மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், டாக்ஸி, மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள்
என்று அனைத்து தரப்பினரும் பங்கு பெரும் 24 மணி நேர வேலை நிறுத்தம்
ஆரம்பித்திருக்கிறது. கிரேக்கப்
பாராளுமன்றத்தின் அருகே 48 மணிநேர பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும்
சுவரொட்டி!
திவலாகிப்
போன முதலாளித்துவத்தின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக கிரீஸ்
மக்கள் நடத்தி வரும் போராட்டங்கள் நவம்பர் 7-ம் தேதி மேலும் தீவிரமடைந்தன.
மருத்துவர்கள், செவிலியர்கள், பத்திரிகையாளர்கள், டாக்ஸி, மெட்ரோ ரயில் ஓட்டுனர்கள்
என்று அனைத்து தரப்பினரும் பங்கு பெரும் 24 மணி நேர வேலை நிறுத்தம் திங்கள் கிழமை
ஆரம்பித்திருக்கிறது.(மேலும்....)
கார்த்திகை
13, 2012
வெலிக்கடைச் சிறைச் சம்பவத்தின் விரிவான விளக்கங்கள் சபையில்
வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம்
தொடர்பில் விரிவான விளக்கமொன்று நாளையதினம் சபையில் வழங்கப்படுமென சபை முதல்வர்
அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம் குறித்து அரசாங்கம் பாராளுமன்றத்தில் வேண்டுமென
அனுரகுமார திஸாநாயக்க எம்.பி. நேற்று கவனயீர்ப்பு உரையொன்றை தெளிவுபடுத்த சபையில்
முன்வைத்த போது, இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
வெலிக்கடைச் சிறைச்சாலை சம்பவம் குறித்து சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும்
புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நாளை விளக்கம் அளிபார் எனவும் எனினும்
அமைச்சர் ஏற்கனவே இச்சம்பவம் குறித்த விபரங்களை சபையில் தெரிவித்திருந்ததாகவும் சபை
முதல்வர் குறிப்பிட்டார். அனுரகுமார திசாநாயக்கவின் கேள்விகள் உரியநேரத்தில்
கிடைக்கமையால் அதற்கான பதில்களை வழங்க முடியாது எனக் குறிப்பிட்ட சபை முதல்வர்; நாளை
இவற்றுக்கான பதில்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கார்த்திகை
13, 2012
13ஆவது திருத்தச் சட்ட
விவகாரம் வழக்குத் தாக்கல் பிற்போடப்பட்டது
13வது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்யுமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணி நேற்று
உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய இருந்த போதும் அதனை பிற்போட முடிவு
செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி அறிவித் துள்ளது. நீதிமன்றத்திற்கும்
பாராளுமன்றத்திற்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. பிரதம நீதியரசுக்கு எதிரான
குற்றப் பிரேரணையை விசாரிக்கும் பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினராக தேசிய சுதந்
திர முன்னணி தலைவர் அமைச்சர் விமல் வீரவங்சவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த
நிலையில் சட்டத்தரணிகளின் ஆலோசனைக்கமைய 13 ஆவது திருத்தத்திற்கு எதிராக வழக்கு
தாக்கல் செய்யும் நடவடிக்கையை ஒத்திவைக்க தே.சு.மு. தீர்மானித்துள்ளது.
கார்த்திகை
13, 2012
சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா
வருவோர் அடுத்த விமானத்திலேயே திருப்பப்படுவர்
புகலிடம் கோரி சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் இலங்கையர் எவரும்
அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அவர்கள் அனைவரும் அடுத்த
விமானத்திலேயே உடனடியாக திருப்பி அனுப்பப்படுவார்கள் என அவுஸ்திரேலிய குடிவரவு
மற்றும் குடியுரிமை தொடர்பான திணைக்களம் நேற்று அறி வித்துள்ளது. ஆட்கடத்தலில்
ஈடுபடுவோரின் தவறான வழி நடத்தலை நம்பி வள்ளங்களில் சட்ட விரோதமாக வந்து உயிராபத்தில்
சிக்க வேண்டாம் என்று கோரியுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களம், விஸா இன்றி சட்ட
விரோதமாக வருப வர்கள் குறித்து விசேட கவனம் எதுவும் செலுத்தப்படாது எனவும்
அறிவித்துள்ளது. அவுஸ் திரேலியா கடல் எல்லைக்கு வள்ளங்கள் மூலம் வருபவர்கள் நவ்ரு
(NAURU) அல்லது மானுஸ் (MANUS) தீவுகளுக்கு அனுப்பப்படுவர். இங்கு நீண்ட காலம்
இருக்க நேரிடும். புகலிடம் வழங்குவதற்கான உண்மையான காரணம் இல்லாதவர்களை
அவுஸ்திரேலியா ஏற்றுக்கொள்ளாது. இதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியாக உள்ளது.
இதன்படி 257 இலங்கையர்கள் தமது நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில்
87 பேர் சுயமாக விரும்பி நாடு திரும்பினார்கள். இவர்களுக்கு விசேட கொடுப்பனவொன்று
வழங்கப்பட் டது. ஏனையவர்களை அவுஸ்திரேலிய அரசு திருப்பி அனுப்பியது.
கார்த்திகை
13, 2012
40 ஆண்டுகளுக்கு பின்
சிரியாமீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
கொலன் ஹைட்ஸ் பகுதியிலுள்ள இஸ்ரேல் இராணுவ முகாமிற்கு சிரியாவில் இருந்து மோட்டார்
குண்டுகள் விழுந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல், சிரியா மீது எச்சரிக்கை ஏவுகணை தாக்குதலை
நடத்தியுள்ளது. கடந்த 1973 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு யுத்தத்திற்கு பின்னர் இஸ்ரேல்,
சிரியா மீது தாக்குதல் நடத்துவது இது முதல் முறையாகும். ஏற்கனவே சிரியாவில் தொடரும்
அரச எதிர்ப்பு போராட்டம் அயல் நாடுகளான துருக்கி, லெபனான் எல்லைகளிலும் பதற்றத்தை
ஏற்படுத்தியுள்ள நிலையில் இஸ்ரேலும் இதில் தலையிட்டுள்ளது.
(மேலும்....)
கார்த்திகை
13, 2012
சீனாவின் புதிய தலைமைகளின் விபரம் வியாழனன்று அறிவிப்பு
சீனாவின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான புதிய தலைவர்களின்
விபரம் எதிர்வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்படும் என அந்நாட்டின் ஆளும் பொதுவுடைமை
கட்சி நேற்று தெரிவித்தது. சீன ஜனாதிபதி உட்பட தலைவர்கள் மாறும் முக்கியமான சீன
பொதுவு டைமை கட்சியின் உயர்மட்ட மாநாடு தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாறவுள்ள புதிய தலைமைகளின் விபரம் எதிர்வரும் வியாழக்கிழமை
அறிவிக்கப்படும் என மேற்படி மாநாட்டின் ஊடக இணைப்பாளர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு
தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக சீன ஜனாதிபதியாக இருக்கும் ஹு ஜின்தாவே ஓய்வு
பெற்று தற்போதைய துணை ஜனாதிபதி எக்சி ஜின்பிங் புதிய ஜனாதிபதியாக தெரிவாவார் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொதுவுடைமை கட்சியின் உயர் சபையான 9 பொலிட்
பிரோ நிலைக்குழு உறுப்பினர்களும் எதிர்வரும் வியாழக் கிழமை ஊடகங்களை சந்தித்து
புதிய தலைமை விபரத்தை வெளியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன்போது பொதுவுடைமை
கட்சியின் தலைவராக தெரிவாகுபவரே அந்நாட்டின் ஜனாதிபதியாகவும் பதவி ஏற்பார். அத்துடன்
சீன பிரதமர் வென்ஜியாபோவும் இந்த மாநாட்டுடன் ஓய்வு பெறுகிறார். அவருக்கு பதில்
துணைப் பிரதமராக இருக்கும் லி கெக்கியாங் புதிய பிரதமராக நியமிக்கப்படுவார் என
எதிர்பார்க்கப் படுகிறது.
கார்த்திகை
13, 2012
அதர்மம் நீங்கி தர்மத்தை உணர்த்தும் தீபாவளி திருநாள்
சிவனை முழுமுதல் கடவுளாகக் கொண்டவர்கள் சைவர்கள். இவர்களின் வாழ்வில் விரதங்களும்,
பண்டிகைகளும் வந்துபோகின்றன. இதனால் இவர்களின் வாழ்வில் ஓர் மன நிறைவையும்
மகிழ்ச்சியையும் அனுபவபூர்வமாக அடைகின்றார்கள். இந்துக்களைப் பொறுத்தவரையில்
இயற்கையை தெய்வமாகக் கண்டனர். அதன் பிரதிபலிப்பாக வாழ்வை வளப்படுத்தி நெறிப்படுத்த
வேண்டிய பல விரதங்களோடு, கொண்டாட்டங்களையும், உற்சவங்களையும் வாழ்வோடு
பிணைக்கப்பட்டவர்களாக இந்துக்கள் மிளிர்கின்றார்கள். இவ்வாறு வந்த விரதங்களில்
நவராத்திரி, சிவராத்திரி, கந்தசஷ்டி விரதங்கள் முன்னிலையில் காணப்பட்டு வருகின்றன.
(மேலும்....)
கார்த்திகை
12, 2012
மீண்டும் எல்லாளன் படை....?
வெளிநாட்டு வீதிகளில் மேலும் சில வீர மரணங்கள்!!
விடுதலைப் புலிகள் நெடியவன் அணி தளபதி பரிதி பிரான்சில் கொல்லப்பட்ட பின்,
வெளிநாட்டு புலி பிரமுகர்களை மிரள வைக்கும் விதத்தில எச்சரிக்கை விடுத்துள்ளது
எல்லாளன் படை. இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிநாட்டு புலிகளின் போட்டி அணிகளுக்கு
இடையிலான மோதல்களை நிறுத்திக் கொள்ளாவிட்டால், ‘நிர்வாக ரீதியான கடும் நடவடிக்கைகள்’
எடுக்கப்படும் என்று கூறுகிறது எச்சரிக்கை. எல்லாளன் படையின் ‘கடும் நடவடிக்கைகள்’
என்பதன் அர்த்தம், வெளிநாட்டு வீதிகளில் மேலும் சில வீர மரணங்கள் விழலாம் என்பதே!
விடுதலைப்புலிகள் இயக்கம் இலங்கையில் இருந்த காலத்தில், அவர்களால் இயக்கப்பட்ட ஒரு
பிரிவுதான் எல்லாளன் படை. விடுதலைப் புலிகள் தமது பெயரில் செய்ய விரும்பாத
தாக்குதல்களை ‘எல்லாளன் படை’ என்ற பெயரில் எச்சரிக்கை விடுத்து நடத்துவது வழக்கம்.
எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்தால், சம்மந்தப்பட்டவர்கள் தலை தப்பாது என்பதும்
நடைமுறையாக இருந்து வந்தது.
(மேலும்....)
கார்த்திகை
12, 2012
நாடகம் எல்லாம் கண்டோம்
ஈழத் தமிழரின் இன்னல்களை ஐ.நா.விடம் சிறப்பாக விளக்கியுள்ளோம்!
- மு.க. ஸ்டாலின்
இலங்கைத்
தமிழரின் தற்போதைய இன்னல்களுக்குத் தமிழ்நாட்டுத் தறிகெட்ட தலைவர்களும் தான் காரணம்
என்பதை முதலில் தமிழகம் புரிந்து கொள்ளட்டும்.
ஈழத் தமிழரின் இன்னல்கள் மற்றும் வாழ்க்கைத் தரம் குறித்து ஐ.நா.விடமும், ஐ.நா.
மனித உரிமை ஆணையத்திடமும் சிறப்பாக விளக்கியுளள்ளோம் என்று திமுக பொருளாளர்
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஐ.நா. சபையிடமும், ஐ.நா. மனிதஉரிமை ஆணையத்திடமும் டெசோ
மாநாட்டுத் தீர்மானங்களை அளித்து விட்டு இன்று சென்னை திரும்பினார் ஸ்டாலின்.
விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னையில் நடந்த டெசோ
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஐ.நா.சபையில் உள்ள மனித உரிமைகள் கழகத்தில்
வழங்குவதற்காக நானும், டி.ஆர்.பாலுவும் சென்றோம். ஐ.நா.சபை மனித உரிமை கழகத்தில்
டெசோ மாநாட்டு தீர்மானங்களை வழங்கி இலங்கை தமிழர்களின் இன்னல்கள் பற்றி எடுத்து
கூறினோம். பின்னர் லண்டனில் நடைபெற்ற உலகத் தமிழர்கள் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து
கொண்டு இலங்கைத் தமிழர்களின் நிலைமைகள் பற்றி எடுத்துக் கூறினோம். இந்த பயணத்தை
முடித்துக் கொண்டு திரும்பிய எங்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்த தி.மு.க. தலைவர்,
பொதுச் செயலாளர் மற்றும் கழக அமைப்பு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள்,
தொண்டர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.
கார்த்திகை
12, 2012
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை ஒரு மணி நேரத்துக்குள் வழங்கும் திட்டம்
வடக்கு கிழக்கு உள்ளிட்ட 330 பிரதேச செயலகங்களில்
பிறப்பு, இறப்பு மற்றும் விவாக சான்றிதழ்களை ஒரு மணித்தியாலத்திற்குள் வழங்கும்
நாடளாவிய வேலைத் திட்டம் 2013 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட உள்ளதென பொது நிருவாக
மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டப்ளியு. டீ. ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருக்கோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பிரதேச
செயலகங்களின் தரவுகளை கணனிமயப்படுத்தும் வலையமைப்பு வேலைத்திட்டம் ஏற்கனவே
ஆரம்பிக்கப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். வட மாகாணத்தில் கணனி
வலையமைப் புக்கு உட்படுத்தும் பணி பூர்த்தியடைந்துள்ள தாகவும், அதன்படி தற்போது
நாடளாவிய ரீதியில் 250 இற்கும் மேற்பட்ட பிரதேச செயலகங்களில் இப்பணி பூர்த்தியடைந்
துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 14022 கிராம சேவை உத்தி யோகத்தர் பிரிவுகளுடன்
தொடர்புடைய 330 பிரதேச செயலகங்களில் இப்பணி பூர்த்தியடைந்துள்ளமை அரசாங்கத்திற்குக்
கிடைத்த பாரிய வெற்றியாகும் எனவும் அமைச்சர் டப். ஜே. செனவிரத்ன மேலும் கூறினார்.
கார்த்திகை
12, 2012
காந்தியின் எள்ளுப் பேரன்
அமெரிக்க தேர்தலில் வெற்றி
மகாத்மா காந்தியின் எள்ளுப் பேரன் சாந்தி காந்தி அமெரிக்காவின் கான்சாஸ் மாநில
சட்டசபை உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். காந்தியின் பேரனான மறைந்த காந்திலால்
சரஸ்வதி காந்தியின் மகன் சாந்தி காந்தி. அமெரிக்காவின் கான்ஸாஸ் மாநிலத்தின் 52வது
சட்டசபை தொகுதியில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் தியோடரை விட 9% வாக்குகள்
கூடுதலாக பெற்றிருக்கிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 6 ஆம் திகதி நடைபெற்றது.
அப்போது மாநில சட்டசபைக்குமான தேர்தல்களும் நடைபெற்றன. 72 வயதான சாந்தி காந்தி,
மகாத்மா காந்தியின் பேரன் காந்திலால் மற்றும் சரஸ்வதி காந்தி தம்பதிக்கு மகனாக
பிறந்தவர். ஓய்வு பெற்ற இருதய சிகிச்சை நிபுணரான இவர் 6,413 வாக்குகள் பெற்றார்.
எதிர்த்து போட்டியிட்ட என்ஸ்லே 5,357 வாக்குகள் பெற்றார். 1967 ஆம் ஆண்டு மும்பை
பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்த அவர் பின்னர் அமெரிக்காவில் குடியேறினார்.
கார்த்திகை
12, 2012
கிரகங்களுக்கு இடையிலான இணைய சோதனை வெற்றி
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமியில் இருக்கும் இயந்திரத்திற்கு
கிரகங்களுக்கு இடையிலான இணையதள தொழிநுட்பம் மூலம் வெற்றிகரமாக கட்டளை
பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா மற்றும் ஐரோப்பிய
விண்வெளி மையம் இந்த புதிய தொழிநுட்பத்தை சோதித்துள்ளது. இதன்மூலம் எதிர்கால
விண்வெளி ஆய்வுகளுக்கான புதிய தொடர்பாடல் முறையை கையாள முடியும் என விஞ்ஞானிகள்
நம்பிக்கை தெரிவித்துள்ளனர். தற்போது பயன்படுத்தப்படும் தகவல் அனுப்பும் முறையில்
சிக்கல்கள் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக செவ்வாய்க் கிரகத்தில் உள்ள
கியூரியாசிட்டி இயந்திரத்தின் செய்திகள் சிலவேளை தடங்கலுக்குள்ளாவதாக விஞ்ஞானிகள்
குறிப்பிட்டுள்ளனர். ஆனால் டி. டீ. என். முறை எல்லைகள் தாண்டி தடங்கல் இன்றி
செயற்படக்கூடியது என நம்பப்படுகிறது. இது இணையதளங்கள் போன்று கிரகங்களுக்கு இடையில்
செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை
11, 2012
நெருப்பில்லாமல் புகை வராது
பிரபாகரனை இல்லாதொழிக்க அன்ரன் பாலசிங்கம்….
பிரபாகரனை இல்லாதொழிக்க அன்ரன் பாலசிங்கம் மூலமாக
முன்னாள் பத்திரிகை ஆசிரியரும், இந்நாள் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின்
முக்கியஸ்தருமான ஒருவர் கங்கணம் கட்டிச் செயற்பட் டதை சில இணையங்கள் விலாவாரியாக
ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. நெருப்பில்லாமல் புகைவராது. ஆதார மில்லாது அப்பாவி
ஒருவர் மீது பொய்க்குற்றச் சாட்டை முன்வைப்பதும் அபத்தம். உதுகளை மறைக்கத்தான் தான்
தலைவருடன் நெருக்கமானவர் என்பதைக் காட்ட அவரு டன் உண்டு உறங்கும் படங்களுடன் தமிழக
சஞ்சிகையில் அதன் ஆசிரியரிடம் காலில் விழுந்து கெஞ்சி கட்டு ரையை வெளியிட்டு அந்த
மாதப் பிரதிகளை மட்டும் தானே இலங்கையில் விற்பனையும் செய்தாரோ என்பதில் இப் போது
சந்தேகமாக உள்ளது. தமிழருக்குப் பொருத்தமான முதலமைச்சர் வேட்பாளர் என்றால் அது
இவர்தான்!
கார்த்திகை
11, 2012
கருணாநிதி, வைகோ
இருவரும் விசாரிக்கப்பட வேண்டும்
பிரபாகரனுடன் ராஜீவ்
காந்தியை தரக் குறைவாக பேசிய வைகோ!
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக்
குழுவின் தலைவர் கார்த்திகேயன் கட்டளைப்படி தி.மு.க தலைவர் கருணாநிதி மற்றும்
வைகோவிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை என இந்த வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரி
கே. ரகோத்தமன் குற்றம்சாட்டி உள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த முதன்மை
விசாரணை அதிகாரி ரகோத்தமன், ராஜீவ் காந்தி கொலைக்கான கூட்டுச் சதி - சி.பி.ஐ
கோப்புகளிலிருந்து என்ற பெயரில் ஒரு நூல் எழுதி உள்ளார். விசாரணையின்போது விடுதலைப்
புலிகள் அமைப்பின் புகலிடமான யாழ்ப் பாணத்திற்கு வைகோ சென்று வந்தது தொடர்பான இன்
டைகர்ஸ கேவ் உள்ளி ட்ட 500 வீடியோ கேசட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரகோத்தமன் தனது
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
(மேலும்...)
கார்த்திகை
11, 2012
முஸ்லிம்கள் வெளியேற்றம்; 22 வருடங்கள் நிறைவு
வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவு
பெறுவதனையிட்டு முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஏப் ஸ்ரீ
லங்கா வடக்கு முஸலிம்களை மீளக் குடி யேற்றுவதனைத் தொனிப்பொருளாகக் கொண்டு ஏற்பாடு
செய்துள்ள கருத் தரங்கொன்று எதிர்வரும் 16ம் திகதி வெள் ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் என்.எம். அமீன் தலைமையில்
இடம்பெறவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதம அதிதியாக
கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரகோன் கெளரவ
அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார். வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான விசேட உரையினை ராவய
பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஜவன் ஆற்றவுள்ளார். கட்சிகளின் தலைர்கள்,
அமைச்சர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட பல்துறை சார்ந்தவர்களும் இந்த நிகழ்வில்
கலந்துகொள்ளவுள்ளனர்.
கார்த்திகை
11, 2012
பலியானோரில் 11 பேர்
அதிதீவிர குற்றவாளிகள்
களேபரத்தில் பலியானவர்களில் தீவிர குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 11 பேர்
அடங்குகின்றனர். இறந்தவர்களில் மகரகம களுதுஷார, தொட்டலங்க கபில ஆகியோரும்
உள்ளடங்குகின்றனர். வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்த கைதிகளின் சடலங்களை அடையாளம்
காண்பதற்காக தேசிய வைத்திய சாலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக
கைதிகளின், உறவினர்கள் வைத்தியசாலை வளாகத்தில் படையெடுத்து வந்ததை நேற்று அவதானிக்க
முடிந்தது. இதேவேளை சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகள் நடாத்தப்பட்ட பின்னர்
பிரேத பரிசோதனைகளை இடம் பெற்றன.
கார்த்திகை
11, 2012
சரணடைந்த முன்னாள் புலிகள் போன்றே K.P. க்கும் புனர்வாழ்வு
-
பிரதியமைச்சர் முரளி
குமரன் பத்மநாதனுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டமையை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என மீள்குடியேற்ற பிரதி
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகளின்
12000 போராளிகள் சரணடைந்தார்கள். இவர்களுக்கு புனர் வாழ்வு அளிக்கப்பட்டதுடன்,
பலருக்கு பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. இதன் அடிப்படையிலேயே குமரன்
பத்மநாதனுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி புலிகளுடன்
இரகசிய ஒப்பந்தம் செய்து ஆயுதங் களை வழங்கியது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
நேரத்திற்கு நேரம் தமது நிலைப்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது என
முரளிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கார்த்திகை
11, 2012
சர்வதேசம் தீர்வைப் பெற்றுத்தராது
புலிகள் இயக்கம் தம்மைப்பற்றி அதீத எண்ணம்
(overestimation) கொண்டிருந்தது. ஆயுதத்தில் மட்டுமே அவர்கள் அபரிமித நம்பிக்கை
கொண்டிருந்தனர். தமிழ்ப்பத்திரிகைகளும் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களுமே
புலிகளின் இந்தப் போக்குக்கு காரணம். புலிகளைப்பற்றி அவர்கள் ஒரு மாயையை வளர்த்தனர்.
புலிகள் ஏனைய இயக்கங்களை கருவறுத்தமைக்கு இதுவும் காரணம். இந்த விடயத்தை நாம் அன்று
சுட்டிக்காட்டியபோது போராட்டத்துக்கு நாம் எதிரானவர்கள் என்ற அபிப்பிராயத்தை
விதைத்தனர். எனினும் எமது இயக்கம் மிகத் தெளிவான பாதையில் மக்களின் அன்றாட
வாழ்வையும் கருத்திற்கொண்டு பயணித்தது. ஆனால் மக்களும் இதனை அன்று உணர்ந்து கொள்ளத்
தவறிவிட்டனர். புலிகள் விரும்பியிருந்தால் தமிழ் மக்களுக்கான சிறந்த ஒரு தீர்வை
எட்டியிருக்க முடியும். இது மட்டுமன்றி அன்று போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள்
தங்கள் தங்கள் இயக்கத்துக்கு முன்னுரிமை வழங்கத் தொடங்கின. ஏனைய இயக்கங்களை எவ்வாறு
பின்னிலைப்படுத்தலாமென்ற உணர்வே அவர்களிடம் மேலோங்கியது. தற்போது கூட தமிழினம்
இத்தனை அழிவுகளைச் சந்தித்த பின்னரும் தத்தமது கட்சிகளை முன்னிலைப்படுத்தும்
செயற்பாடுகளையே தமிழ்த் தலைமைகளிடம் நாம் பார்க்கின்றோம். இந்த நிலைமை மிகவும்
கவலைக்குரியது. ஆபத்தானது.
(மேலும்....)
கார்த்திகை
10, 2012
இந்தியாவால் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியுமா....?
(சிவா
ஈஸ்வரமூர்த்தி)
இலங்கை ஒரு காலத்தில் எதற்கும் (தமிழர் பிர்சனைக்கு
மட்டும் அல்ல)இந்தியாவின் அனுசரணையை நம்பியிருக்கும் நிலையில் தனது வெளிநாட்டு
உறவுகளை வைத்திருந்தது. ஏனைய நாடுகளும் இந்தியா ஊடாகவே அல்லது இந்தியாவை மீறி
இலங்கைகுள் தமது செயற்பாடுகளை செயன்படுத்து முயலவில்லை, விரும்பவில்லை. ஆனால்
போருக்கு பிந்தைய இலங்கையில், சீனாவின் இலங்கை மீதான உறவு நெருக்கம் இலங்கையை
இந்தியா சீனா என்ற இரு இயந்திரத்தில் பறக்கும் விமான நிலைக்கு தள்ளியிருக்கின்றது.
தள்ளியிருக்கின்றது என்பதைவிட இலங்கையின் இராஜதந்திர நகர்வு இதனை நிறுவி
இருக்கின்றது என்பதே உண்மை. இந்த விமானத்தின் ஒரு இயந்திரத்தில் கோளாறு என்றாலும்
மற்றய இயந்திரத்தின் உதவியுடன் பறந்து செல்லும் உறுதிப்பாட்டை இலங்கை தற்போது
கொண்டுள்ளது. சீனா, இந்தியா என்ற இரு நாடுகளும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும்,
ஏன் உலகிலும் அடுத்த பொருளாதார வல்லரசுகளாக துடிக்கும் இரு முகாங்களாக வளர்ந்து
வரும் நிலையில் இவ்விருநாடுகளையும் ஒருவருக்கு ஒருவரைக் காட்டி தன்னை தற்காத்து
கொள்ளும் பொறி முறையை இலங்கை கற்றுக் கொண்டுள்ளது. இதன் வெளிப்பாடுகள் இலங்கை அரசின்
இந்தியா மீதான பாராமுகமும், இனி தனக்கு யாரின் அனுசரணையும் தேவையில்லை என்பது போன்ற
இலங்கை அரசின் அறிக்கைகள், செயற்பாடுகள் ஆகும். இதில் யார் என்பதில் பெரும்பாலும்
இந்தியாவே தொக்கு நிற்கின்றது.(மேலும்....)
கார்த்திகை
10, 2012
வெலிக்கடை
சிறைச்சாலையில் பதற்றம்
12 பேர் பலி, 35 பேர் காயம், கைதிகள் சிலர்
தப்பியோட்டம்
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும்
விசேட அதிரடிப் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட பரஸ்பர மோதலில் 12 பேர்
பலியாகியுள்ளதோடு 35 க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்
பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். மேலும் சிறைச்சாலையின் பின்னாள் உள்ள மதில்களை
உடைத்து கைதிகள் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். இச் சம்பவத்தில் 10 படையினரும்,
சிறைச்சாலை காவலாளி ஒருவரும் தைதிகள் இருவரும் காயமடைந்துள்ளதோடு, இவர்கள் கொழும்பு
தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று பகல்
இரண்டு மணியளவில் விசேட அதிரடிப் படையினர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள்
சென்று தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கோபமுற்ற கைதிகள் குறித்த
படையினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் முறுகல் நிலை ஏற்பட்டு அது பின்னர்
கலவரமாக மாறியுள்ளது. இதனையடுத்து ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார்
மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு கண்ணீர்ப்புகை பிரயோகம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியசாலையை
உடைத்து ஆயுதங்களை எடுத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இப்பகுதியில் தற்போது பெரும்
பதற்றம் நிலவிவருவதுடன் பேஸ்லைன் வீதியூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை
10, 2012
வெளிநாட்டவர்கள் உட்பட தமிழ், முஸ்லிம் கைதிகள் எவரும் பலியாகவில்லை
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளுக்கும் படை வீரர்களுக்கும் இடையில் நேற்று
இடம்பெற்ற சம்பவத்தில் பலியான 27 பேரில் வெளிநாட்டவர்கள் எவரும் பலியாகவில்லையென
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஸ்ட ஆலோசகர்
எம்.எஸ்.சதீஸ்குமார் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். இதேவேளை தமிழ்,
முஸ்லிம் கைதிகள் எவரும் பலியாகவில்லை எனவும் தெரிவித்தார். முன்னதாக இச்சம்பவத்தில்
பலியானவர்களில் இரு வெளிநாட்டவர்களும் 3 தமிழ் கைதிகளும் உயிரிழந்ததாக
அறிவித்திருந்தார். இந்நிலையில் பலியான 27 பேரில் மிகுதி 16 பேரும் அடையாளம்
காணப்பட்டுள்ளனர். முன்னதாக சிங்கப்பூர் நாட்டைச்சேர்ந்த ஒருவர் பலியானதாக
கூறப்பட்ட போதிலும் அவருடைய முகச் சாயலை ஒத்த வேறு நபர் ஒருவரே பலியானதாகவும்
பின்னர் இனம்காணப்பட்டதாகவும் தெரிவித்தார்.
கார்த்திகை
10, 2012
புலிகளின் தளபதி பரிதி
பாரிஸில் சுடப்பட்ட பின்னணி: எதையும் தாங்கும் இதயம் உள்ளதா?
பிரான்ஸ் தலைநகர் பாரிசில், விடுதலைப் புலிகளின் தளபதி என அறியப்பட்ட பரிதி நேற்று
சுட்டுக் கொல்லப்பட்டார். இலங்கை உளவுத்துறையால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று
சில மீடியாக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிதியை சுட்டவர்கள் அந்த மீடியா
செய்திகளை பார்த்து வியந்திருப்பார்கள். நேற்று (வியாழக்கிழமை) இரவு பாரிசில்
நடைபெற்ற சம்பவம் இது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அலுவலகத்தைவிட்டு பரிதி
வெளிவந்தபோது, இரவு ஆகியிருந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து அந்தப் பகுதியில்
ஸ்கூட்டர் ஒன்றில் இருவர் காத்திருந்தார்கள். பரிதி வெளியே வந்ததும், ஸ்கூட்டரில்
இருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டார்கள். அவர்களது முகங்களை மூடும் வகையிலான
ஹெல்மெட் அது. ஸ்கூட்டரை ஸ்டாட் செய்து பரிதி இருந்த இடத்தை நோக்கி சென்றார்கள்.
துப்பாக்கியால் ஒரு தடவை சுட்டார்கள். அது பரிதியில் படவில்லை.
(மேலும்....)
கார்த்திகை
10, 2012
ஆனால் அதிர்வு இணையத் தளம் என்ன கூறுகின்றது என்று
பாருங்கள்
பிரான்சில்
சுடப்பட்ட றேகன், புலனாய்வுத் தகவல் சில கசிந்துள்ளது !
ஆங்கிலமோ இல்லை சிங்களமோ தெரியாத 17 தமிழ் இளைஞர்களுக்கு கோத்தபாயவின் சிறப்பு
பணிப்பின் பெயரில் ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி, முதன் முதலாக
சிங்கள ஊடகம் ஒன்றில் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியது. தமிழ் ஊடகங்கள் சில இச்
செய்தியைப் பிரசுரித்தாலும், அதற்காக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இது
ஒருபுறம் இருக்க, தமிழ் இளைஞர்கள் 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு
இலகுரக ஆயுதங்கள் பாவிப்பதற்கு பயிற்ச்சி கொடுப்பக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 9MM
அன்று அழைக்கப்படும் கைத்துப்பாக்கிப் பயிற்ச்சி மற்றும் இலகுரக ஆயுதங்களைப்
பாவிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக அச் சிங்கள ஊடகம் மேலும் தகவல்களை
வெளியிட்டுள்ளது. இவ்வாறு பயிற்றுவிக்கப்பட்ட இளைஞர்கள் தற்போது எங்கே
இருக்கிறார்கள் என்ற கேள்வி ஒரு புறம் இருக்க, நேற்றைய தினம் இரவு பிரான்சில்
புலிகளின் முன் நாள் தளபதி நடு வீதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார் என்ற
செதியும் தமிழர்களை உலுக்கியுள்ளது.
(மேலும்....)
கார்த்திகை
10, 2012
ஏழைப் பங்காளனான ஜனாதிபதி
ஜூலை வேலைநிறுத்தக்காரர்களின் துயரைத் துடைத்தார்
1980ம்
ஆண்டில் இந்நாட்டு அரசாங்க ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி நடத்திய சாத்வீக போராட்டத்தை
அன்று அதிகாரபீடத்தில் வீற் றிருந்த முதலாளித்துவ கொள்கையை நிறைவேற்றி தொழிலாளர்
வர்க் கத்தை அடக்கி, ஒடுக்கும் தீவிர கொள்கையை கடைப்பிடித்து வந்த ஜனாதிபதி ஜே. ஆர்.
ஜயவர்தனவின் அரசாங்கம் கொடுங்கோண்மை ஆட்சியாளர்களைப் போன்று வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்ட சகல அரசாங்க ஊழியர்களையும் எவ்வித தயவுதாட்சண்யம் இன்றி வேலை நீக்கம்
செய்தது.
(மேலும்....)
கார்த்திகை
10, 2012
சோசலிசத்திற்கான போராட்டம்
ஏ.கே. பத்மநாபன்
நவம்பர் 7, இருபதாம் நூற்றாண்டில் மனிதகுல முன்னேற்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க
அளவில் மாபெரும் மாற்றங்களை உருவாக்கிய - மகத்தான புரட்சியின் விளை வாக ‘உலகையே
குலுக்கிய’- மாபெரும் நவம் பர் புரட்சியின் 95ஆவது ஆண்டு தினமாகும். சோவியத்
ரஷ்யாவில் உழைக்கும் மக்கள் ஜார் மன்னனுக்கு எதிராக நடத்திய புரட்சிகர மான
போராட்டங்கள் வெற்றிபெற்றதை அடுத்து உழைக்கும் மக்களின் தலைமையில் புதியதோர்
சமுதாயத்தை அமைத்தனர்.
(மேலும்....)
கார்த்திகை
10, 2012
எதிர்மறையான முடிவுகளுக்கு வருவது தவறு
மாகாண சபை முறையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும்
என்று ஜனாதிபதி அவர்கள் தனது வரவு - செலவு திட்ட உரையில் குறிப் பிட்டது
முன்னேற்றகரமான ஒரு மாற் றமாகவும் இருக்கலாம். என்றாலும் அதற்கு முன்னர் அதுபற்றி
எதிர்மறை யான முடிவுகளுக்கு வருவது தவறு என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹ லிய
ரம்புக்வெல்ல தெரிவித்தார். 13 ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கும் நோக்கம் அரசுக்கு
இல்லை என அமைச்சர் கெஹலிய ஊடகங்களுக்கு தெரிவித்ததாக சுமந்திரன் எம்.பி. தனது
உரையின் போது குறிப்பிட்டார். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் கெஹலிய நான் அப்படிக்
கூறவில்லை. ‘13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்கும் அவசியம் இதுவரை எழவில்லை’
என்றே கூறினேன் என்றார். அத்துடன் இந்தியா உட்பட நாடுகளில் கூட அரசியலமைப்பு பல
தடவைகள் திருத்தம் செய்யப்பட்டிரு ப்பதாகவும் அமைச்சர் கெஹலிய சுட்டிக்காட்டினார்.
கார்த்திகை
10, 2012
கொலை செய்யும் தாவரம்
மற்றைய தாவரங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின்
சத்துக்களை உறிஞ்சி வாழ்கின்ற தாவரங்களை ஒட்டுண்ணித் தாவரங்கள் என்பர். ஒட்டுண்ணித்
தாவரங்களை இரு வகைகளாகப் பிரிக்கலாம். குறையொட்டுண்ணித் தாவரம், நிறையொட்டுண்ணித்
தாவரம் என்பனவே அவையாகும். குறையொட்டுண்ணித் தாவரத்துக்கு நமது நாட்டிலுள்ள
குருவிச்சை உதாரணமாகும். நிறையொட்டுண்ணித் தாவரத்துக்கு உதாரணம் தூத்துமக்கொத்தான்.
இது ஆபத்தானது. இத்தாவரம் தனது நூறு வீத உணவையும் தான் ஒட்டிக் கொண்டுள்ள
தாவரத்திலிருந்து (விருந்து வழங்கி) உறிஞ்சிக் கொள்ளும். காலப் போக்கில் அத்தாவரம்
இறந்து போக தூத்துமக்கொத்தானும் உணவின்றி மாண்டு போகும். கொலையையும் செய்து
தற்கொலையும் செய்து கொள்கிறது தூத்துமக்கொத்தான்.
கார்த்திகை 09, 2012
நாங்கள் வடக்கில்
'புலி' தெற்கில்
'சிங்கம்'
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமிழ்
தேசிய கூட்டமைப்பு எம். பி. க்களான இரா. சம்பந்தன், பொன் செல்வராஜா,
சுமந்திரன் ஆகியோருடன் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் உரையாடுவதை படத்தில்
காணலாம்.
கார்த்திகை 08, 2012
Head of LTTE’s
Nediyavan unit in France was allegedly murdered by LTTE’s Vinayakam unit
yesterday
Nadarajah Matheenthiran (Parithy / Reagan) - Head of LTTE’s Nediyavan
unit in France was allegedly murdered by LTTE’s Vinayakam unit yesterday
near 341 rue des Pyrénées. The killing of Nadarajah Matheenthiran is
considered to be of serious significance because he was a high ranking
LTTE leader who headed the LTTE in France for many years. Nadarajah
Matheenthiran had been compelled to "quit" the leadership overtly
because he had been arrested by French authorities and sentenced to a
term of imprisonment. Nadarajah Matheenthiran who had appealed against
his sentence was currently out on bail. Since his case was pending
before courts, he had nominally ceased to be de-jure LTTE chief in
France. Nevertheless Nadarajah Matheenthiran continued to be politically
active and was the de-facto LTTE leader in France. Against that backdrop
the killing of Nadarajah Matheenthiran was a serious development as he
was the most senior LTTE leader to be attacked due to overseas intra-LTTE
rivalry.There have been several such attacks elsewhere but the killing
of Nadarajah Matheenthiran assumes greater importance because of the
victim's seniority in the movement. Nadarajah Matheenthiran was born and
raised in Naranthanai - a village close to Kayts. He studied his GCE
advanced level at Jaffna Central College before joining LTTE. He formed
part of the second batch of LTTE cadres including Bhanu and Idea Vasu to
receive military training in the North Indian state of Himachal Pradesh
by Indain Army. The killing of Nadarajah Matheenthiran also
effectively illustrated the nature and scope of the power struggle going
on within the international LTTE network. There are two broad factions
swearing allegiance to two senior tiger operatives. One is
Perinbananaygam Sivaparan also known as "Nediyavan" based in Norway. The
other is Segarampillai Vinayagamoorthy also known as "Vinayagam" who
operates from France and Germany. A brief re-run of events after the
fall of the LTTE in Sri Lanka is necessary to understand the current
intra-LTTE power struggle going on within the Tamil Diaspora.
The military debacle in May 2009 at Mullivaykal saw LTTE supremo
Velupillai Prabhakaran and a very large number of senior commanders
being killed. Thousands of other LTTE cadres and supporters surrendered
to the Armed Forces. This resulted in the virtual decimation of the LTTE
in Sri Lanka.
கார்த்திகை 09, 2012
முத்துக்குமார் மன்னித்துவிடு..
சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !!
(வெண்மணி)
(வெண்மணி
உட்பட இவர்கள்
எலலோரிடமும் உள்ள
தவறு பிரபாகரனை
விடுதலைப் போராளியாகவும்
தமிழீழ விடுதலைப்
புலிகளை விடுதலை
அமைப்பாகவும்
கருத்தில் கொள்வதுதான்.
மற்றையது ஒரு பலமான சரியான தலைமத்துவத்தை தன்னகத்தே இவர்கள் எப்பொதும்
கொண்டிருக்கவில்லை.– சாகரன்)
2009 ஜனவரி 29 அன்று காலை 10.45 – லிருந்து 11 மணிக்குள் இருக்கும். சென்னை
சாஸ்திரி பவனுக்கு ஒரு வேலையின் நிமித்தம் சென்றிருந்த என் நண்பர்.
படபடப்போடு தொலைபேசி மூலம் அந்தத் தகவலைச் சொன்னார். ”இங்கே ஒருவர் ஈழப்
பிரச்சினைக்காக தீக்குளித்து விட்டார். அவர் எரிந்தபடியே கீழே விழுகிறார்…
எரிந்து கொண்டிருக்கிறார்” என்றார். ஒரு விதமான பரபரப்பு என்னிடம் தொற்றிக்
கொண்டது. உணர்வலைகளால் உந்தப்பட்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு மனிதன்
தமிழக அரசியல் வரலாற்றில் ஆழமான பாதிப்பு ஒன்றை ஏற்படுத்தப் போகிறான்
என்றும் நான் நினைத்தேன்.
(மேலும்....)
கார்த்திகை 09, 2012
அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்க மாகாணசபை முறைமையை
மாற்ற வேண்டியது அவசியம் -
ஜனாதிபதி
அதிகாரப் பகிர்வினை அர்த்தமுள்ளதாக
மாற்றுவதற்காக தற்பொழுது காணப்படும் மாகாண சபை முறைமையை மாற்ற வேண்டியது
அவசியமானது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தேசிய தராதரங்களை
பயன்படுத்தி மாகாண முரண்பாடுகளை இல்லா தொழிப்பதே தேசிய நல்லிணக்கத்தினை
ஊக்குவிப்பதற்கான பிரதான ஆயுதம் என்று கூறிய அவர் நாட்டு மக்கள்
எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமாக ஒத்துழைக்குமாறு
எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் தேசிய கூட்டணி தலைவர் மற்றும் ஜே. வி. பி.
தலைவர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார்.
(மேலும்....)
கார்த்திகை 09, 2012
பிரான்ஸ் பரிதி இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை
பிரான்ஸ் தமிழர்
ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரிதி றீகன் என்று பல்வேறுபட்ட
பெயர்களால் அழைக்கப்படும் நடராசா மதீந்திரன் வியாழன் இரவு இனந்தெரியாத
நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பாரிஸ் 20, 341 றூ டே பிறனீஸ் இல்
அமைந்துள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திலிருந்து வெளியேறி
வீதிக்கு வந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு முகமூடி தரித்த
நபர்கள் பரிதியை நோக்கி மூன்று தடவைகள் சுட்டதாக ஆரம்ப கட்டத் தகவல்கள்
தெரிவிக்கின்றன. தமிழர்களிடையே நடைபெற்ற மோதல் இதுவென சந்தேகிப்பதாக
பிரெஞ்சு பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை 08, 2012
எந்தவொரு மாகாண
சபையும் தமது விருப்புக்களை நிறைவேற்ற தனித்துப் பயணிக்க முடியாது
இலங்கை அரசியலமைப்பின் பிரகாரம் எந்தவொரு
மாகாண சபையும், தமது விருப்புக்களை நிறைவேற்றிக் கொள்ள தனித்துப் பயணிக்க
முடியாது. அதற்கு எப்போதும் மத்திய அரசின் அனுசரணையையும் ஒத்துழைப்பினையும்
பெற்றுக் கொள்ள வேண்டும்." என்று நேற்று முன்தினம் செவ்வாயன்று கிழக்கு
மாகாண சபையின் இரண்டாவது பேரவைக் கூட்ட அமர்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து
வைத்து உரை யாற்றுகையில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிறல் மொஹான்
விஜயவிக்கிரம குறிப்பிட்டார்.
(மேலும்....)
கார்த்திகை 08, 2012
ஒரே பார்வையில்
வரவு -செலவுத் திட்டம்
-
2013 ஆம் ஆண்டு வடக்கில் மாகாண சபைத் தேர்தல்.
-
பாதுகாப்பு பிரிவினருக்காக 3 வருடங்கள் செல்லுபடியாகும் வகையில் நிவாரண
வீட்டுக் கடன் வசதி. அதற்கென 2013 வரவு - செலவு திட்டத்தில் 1000
மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
-
வறிய பிரதேச மாணவர்களுக்காக சத்துணவும் சப்பாத்தும் வழங்கப்படும். நாடளாவிய
ரீதியில் மாணவர்களுக்கு அரையாண்டுக்கு ஒரு தடவை சீருடை.
-
சுற்றுலாத்துறை வருமானமாக 2.5 பில்லியன் டொலர் எதிர்பார்க்கப்படுகிறது.
-
வறட்சியினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள விவசாயிகள் வங்கிகளில்
பெற்றுக்கொண்ட கடன்கள் பெரும்போகம் வரை நீக்கம். வட்டி முற்றாக நீக்கம்.
-
நீர்ப்பாசன அபிவிருத்திக்காக 102 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
-
லக் சத்தொச விற்பனை நிலையங்களை ஆயிரமாக அதிகரிப்பதற்கு 500 மில்லியன்
ரூபா ஒதுக்கீடு.
-
மீன்பிடித் துறைமுகங்களின் அபிவிருத்திக்கு 2000 மில்லியன் ரூபா.
-
சிறு தேயிலை உற்பத்தியாளர்களுக்கு ஹெக்ரெயர் ஒன்றுக்கான உதவித் தொகை 3
இலட்சத்திலிருந்து 3 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரிப்பு
-
தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திய, உற்பத்திகளின் தரத்தை
முறையாகப் பேணிய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு உதவி
-
ஆடைத் துறையிலிருந்து 5000 மில்லியன் டொலர் வருவாய்
எதிர்பார்க்கப்படுகிறது.
-
2013 ஆம் ஆண்டில் பொலனறுவை, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில்
நடத்தத்திட்டமிட்டுள்ள தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்கு 60 மில்லியன்
ரூபா ஒதுக்கீடு
-
வெளிநாட்டவர்களுக்கு காணிகளை விற்கத் தடை.
-
சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக 125 பில்லியன் ரூபா ஒதுக்கீடு
-
கல்வித் துறைக்கு 306 பில்லியன் ரூபா (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
4.1 வீதம்) ஒதுக்கீடு.
-
ஊடகவியலாளர், கலைஞர்களுக்கு வட்டியில்லா கடனைப் பெற்றுக்கொடுப்பதற்காக
200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
-
வெளிநாட்டு மதுபான வகைகளுக்கு 25 வீத வரி
-
அரச ஊழியர்களுக்கான மேலதிக கொடுப்பனவு 1500 ரூபாவாக அதிகரிப்பு
-
நிரந்தர வருமானமில்லாத 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5000 ரூபா
கார்த்திகை 08, 2012
மேலும் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள் நாடு திரும்பினர்
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற
மேலும் 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பிற்பகல் 1.40 மணியளவில்
கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாகச்
சென்ற 30 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு
நாடுகடத்தப்பட்டுள்ளதாக விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
விசேட விமானம் ஒன்றின் மூலம் வந்த இவர்களுக்கு
பாதுகாப்பிற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர்
வந்ததாகவும் தெரிவித்தார். கொழும்பு-3,
கம்பஹா-14, களுத்துறை-2, புத்தளம்-11 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
குறித்த
நபர்களை குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கார்த்திகை 08, 2012
சுவிற்சர்லாந்தில் புகழ் பூத்த தமிழர்
சுவிற்சர்லாந்து, இலவுசான் மாநகரசபையில்
தமிழர் ஒருவர் உறுப்பினர். அவர் திரு. த. நமசிவாயம். யேர்மன் மொழிப்
புலமையாளர். இலவுசான் மக்களிடையே செல்வாக்கு உடையவர். மதுரைத் திட்டம்
ஒருங்கிணைப்பாளர் விஞ்ஞானி கல்யாணசுந்தரம் Dr. K. Kalyanasundaram,
Lausanne, Switzerland (Leader, Madurai Project) வாழும் நகரம். அங்கே
வாழ்பவர் திரு. த. நமசிவாயம். சுவிற்சர்லாந்து அரசியல்வாதிகளிடையே
செல்வாக்குடையவர். தமிழ்த் திரை உலகில் திரு. நமசிவாயம் ஒரு. சகாப்தம்.
செயகாந்தர் என்ற பெயரில் சிங்களப் படங்களில் நடித்து வந்த அவர், தமிழில்
தயாரான குத்துவிளக்கு திரைப்படக் கதாநயகன். தன் தாய் மீது உள்ள பற்று,
செல்வச் சந்நிதிக் கோயிலில் உள்ள ஈடுபாடு, இதனால் அவர் முயற்சியால்
வெளிவந்த நூல் நல்ல அம்மா, சிவசிந்தனை, திருமுறைத் தொகுப்பு இந்த நூலின்
அறிமுக நிகழ்வு, 18 நவம்பர் 2012, ஞாயிறு பி.ப. 4:00 மணிக்கு,
சுவிற்சர்லாந்து சென் மாகிறத்தன் அருள்மிகு கதிர்வேலாயுதசுவாமி கோயிலில்
நடைபெறும். சுவிற்சர்லாந்து சென்றும் தமிழராய், செல்வாக்குள்ள தமிழராய்,
பல்லின மக்களின் வாக்குப் பெற்றுத் தேர்வான தலைவராய், தமிழ் நூல்கள் எழுதும்
தமிழராய் வாழ்பவரை வணங்குவோம், வாழ்த்துவோம்.
அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி வணங்குவோம், வாழ்த்துவோம்.Namasivayam
Thambipillai <nthambipillai@yahoo.com>
கார்த்திகை 08, 2012
வடக்கு கிழக்கில் பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம் ஒரு காலத்தில்
தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே!
நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன்வடக்கு
கிழக்கில் பவுத்த சின்னங்கள் காணப்படுவதின் காரணம் ஒரு கால கட்டத்தில்
தமிழ் மக்கள் பவுத்தர்களாக இருந்தமையே என ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்
நூல் வெளியீட்டு விழாவில் தலைமையுரை ஆற்றிய நீதியரசர் சி.வி.
விக்னேஸ்வரன்திரு தம்பு கந்தையா எழுதிய ஈழத்தமிழரின் வரலாறும் வாழ்வியலும்
நூல் வெளியீட்டு விழா கடந்த ஒக்தோபர் 09, 2012 அன்று மாலை கொழும்புத்
தமிழ்ச்சங்க மண்டபத்தில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி.வி.
விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.விழாவுக்கு முன்ணனி எழுத்தாளர்கள்,
அறிஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு
சிறப்பித்தார்கள்.கொழும்புத் தமிழ்ச் சஙகத்தின் செயலாளர் ஏ. இரகுபதி
பாலசிறீதரன் விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.(மேலும்....)
கார்த்திகை 08, 2012
World’s longest-married couple stress communication, laughter and lots
of veggies
These days if you make it to a decade of marriage it
seems like a rare accomplishment. Don't tell that to the Indian couple
Karam and Katari Chand, though. The Daily Mail reports that the
couple -- Karam, 107, and Katari, 100, -- have been joined in wedded
bliss for 87 years, surpassing the previous Guinness Book of World
Record holders by five years. So what's their secret? Well, they have a
few. "My trick is to make Katari laugh. I like to tell jokes and make
her smile. Being funny is my way of being romantic," the husband Karam
tells the paper.
(more....)
கார்த்திகை 08, 2012
கொரிய மொழி பேசும் யானை
தென்கொரியாவின் மிருகக் காட்சிசாலையிலுள்ள
யானை மனிதர்களைப் போன்று பேசுவதற்கு முயற்சி செய்து வருகின்றமை விஞ்ஞானிகளை
ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
எவர்லான்ட் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த 22
வயதான ஆசிய யானையான கொஷிக், கொரிய மொழியில் 5 சொற்களை மனிதர்கள் கூறுவதைப்
பின்பற்றி கூறுகின்றமையை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த யானையின் உச்சரிப்பானது 67 வதவீதம்
மனிதர்களை ஒத்ததாக அமைந்துள்ளது. இதற்கு
முன் 1983 ஆம் ஆண்டில் கஸகஸ்தானிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றில்
யானையொன்று ரஷ்ய மொழியில் 20 வசனங்களை சரியாக மீள உச்சரித்திருந்ததாக
கூறப்பட்டிருந்தது.
எனினும் அச்சமயம் அந்தப் பேச்சு மொழி
விஞ்ஞான ரீதியாக உறுதிபடுத்தப்படவில்லை. கொரிய மொழியின் மூலம் தமிழ்
என நம்பப்படும் சூழ்நிலையில் தமிழ் பேசும் யானை என்றும் இதனைக் கூறலாமா...?
கார்த்திகை 08, 2012
நவம்பர் புரட்சி நீடூழி வாழ்க!
மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த எத் தனை எத்தனையோ நிகழ்வுகள் உண்டு. ஆனால்,
மனிதகுல வரலாற்றின் திசைவழி யையே திருத்தியமைத்த பெருமை 1917ம் ஆண்டு ரஷ்ய
மண்ணில் நடந்த நவம்பர் புரட் சிக்கு உண்டு. மனிதனை மனிதன் சுரண்டாத சமூக
அமைப்பு சாத்தியமே என்பதை முதன் முதலில் நிரூபித்த மகத்துவமான நாள்தான்
நவம்பர் புரட்சி நன்னாளாகும். சோசலிசம் என்பது கனவோ, கற்பனையோ அல்ல. அது
சத்தியமான சாத்தியமே என்பதை மாமேதை லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம்
சோவியத் மண்ணில் நடத்திய புரட்சி யின் மூலம் புலனாகியது.
(மேலும்....)
கார்த்திகை 07, 2012
உலக மக்களுக்கு மட்டும் அல்ல, அமெரிக்க மக்களுக்கும் எந்த நன்மையும்
கிடைக்கப் போகாத அமெரிக்க அதிபர் தேர்தல்
கார்த்திகை 07, 2012
வெள்ளை மாளிகை இருப்பை தக்கவைத்துக்கொண்ட ஒபாமா!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிட்ரொம்னியை
தோற்கடித்து பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தனக்கு எதிராக அமைந்த இறுதி நேர கருத்துக்
கணிப்பு முடிவுகளையும் மீறி மீண்டும் வெற்றிபெற்று அடுத்த நான்கு
வருடங்களுக்கு தனது வெள்ளை மாளிகை இருப்பை மீண்டும்
உறுதிப்படுத்திக்கொண்டார். மிகவும்
நெருங்கியதாக அதாவது குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அமையுமென
எதிர்பார்க்கப்பட்ட இத்தேர்தலில் ஒபாமா பெரும்பான்மை வாக்குகளுடன்
வெற்றிபெற்றுள்ளார். குறிப்பாக ' Swing
States' எனப்படும் இரு கட்சிகளுக்கும் சம அளவு வாக்களர்களைக் கொண்டதும்
தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி கொண்டதாகக் கருதப்படும் 9
மாநிலங்களில் 7 ஐக் கைப்பற்றிக்கொண்டுள்ளார் ஒபாமா.
ஒஹியோ, ஐயோவா, விஸ்கொன்ஸின், வேர்ஜினியா, நெவடா,
கொலோராடோ, நியூ ஹம்ஸ்ஷையர் என 7 மாநிலங்களும் ஒபாமாவின் வெற்றியை உறுதி
செய்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட
ரொம்னியால் சுவிங் மாநிலங்களில் ஒன்றான வடக்கு கரோலினாவை மட்டுமே கைப்பற்ற
முடிந்தது. (ப்ளோரிடா மாநிலத்தின் முடிவு
இதுவரை வெளியாகவில்லை). இதுமட்டுமன்றி
ரொம்னியின் சொந்த மாகாணமும் அவர் 2003 முதல் 2007 வரை கவர்னராகவும் இருந்த
மசாசூசெட்டை ஒபாமா வெற்றிகொண்டமை சிறப்பம்சமாகும்.
இதுதவிர
டெமொக்கிரடிக் கட்சியின் கோட்டைகளான கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும்
மிச்சிகன், பென்சில்வேனியாவிலும் ஒபாமா எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று
வெற்றிபெற்றார்.
கார்த்திகை 07, 2012
வடமாகாண சபை தேர்தலை அனுமதியோம் -
சம்பிக்க, விமல்
13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாது வடமாகாண சபைத் தேர்தலை நடத்த
அனுமதிக்கப்போவதில்லை என அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல்
வீரவன்ச ஆகியோர் எச்சரித்துள்ளனர்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஒன்றிணைந்த
ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.
13ஆவது
திருத்தச் சட்டமானது நாட்டின் அரசியல் அமைப்புக்கு முற்றிலும் முரணானது.
எனவே இதனைத் தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லை. அரசாங்கத்தின் 2/3
பெரும்பான்மையைப் பயன்படுத்தி காலதாமதம் இன்றி 13ஆவது திருத்தச் சட்டத்தை
இரத்துச் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கார்த்திகை 07, 2012
நாட்டை வந்தடைந்தனர் 30 புகலிடக்கோரிக்கையாளர்கள்
அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற 30
புகலிடக் கோரிக்கையாளர்கள் இன்று பகல் 12 மணியளவில் கட்டுநாயக்க
விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாகச்
சென்ற 30 பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு
நாடுகடத்தப்பட்டுள்ளதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
விசேட விமானம் ஒன்றின் மூலம் வந்த இவர்களுக்கு
பாதுகாப்பிற்காக அவுஸ்திரேலியாவிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர்
வந்ததாகவும் தெரிவித்தார்.
இவர்கள் மாத்தறை, தங்காலை மற்றும்
தெய்வேந்திரமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கார்த்திகை 07, 2012
பிரதம
நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணை சபையில்
-
அவுஸ்திரேலியாவிலுள்ள இருவர் சொகுசு வீடுகளை வாங்க எங்கிருந்து பணம்
வந்தது?
-
பிரதம நீதியரசர் சொத்துக்கள் பற்றிய விபரங்களை அறிவிக்கவில்லை.
-
20க்கும் மேற்பட்ட வங்கி வைப்புகள்.
-
கணவன் மீதான இலஞ்ச, ஊழல் வழக்கின் ஆவணங்களை பார்க்க அதிகார துஷ்பிரயோகம்.
-
தகுதியுள்ளோரை புறக்கணித்து மஞ்சுள
திலகரட்ணவுக்கு நியமனம்.
-
அரசியல் சாசனத்தை உதாசீனம் செய்து
சபாநாயகருக்கு அனுப்பும் தீர்ப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு
அனுப்பினார்.
-
பெண் நீதவான் திருமதி கமகே பொலிஸ் அதிபரிடம் பாதுகாப்பு கோரியதற்காக
அவரை தண்டிக்க எத்தணித்தார்.
-
நீதித்துறையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம்.
-
பிரதம நீதியரசருக்கு ஒவ்வாத செயற்பாடுகளில் ஈடுபட்டார்.
-
நீதித்துறை மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சீர்குலைத்தார்.
-
துர்நடத்தை அல்லது பிரதம நீதியரசருக்கு தகாத விதத்தில் செயற்பட்டதனால்
இந்தப் பதவியை வகிப்பதற்கு தகுதியை இழந்துள்ளார்.
கார்த்திகை 07, 2012
ஆஸி செல்ல முனைந்த 47 பேர் மடக்கி பிடிப்பு
மூன்று படகு களில் சட்ட விரோதமாக
அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 47 பேரையும் நேற்று காலை மடக்கிப்
பிடித்திருப்பதாக கடற்படைப் பேச்சாளர் கொமா ண்டர் கோசல வர்ணகுலசூரிய
தெரிவித்தார். நீர்கொழும்பு கடலிலிருந்து மேற்கே 50 கடல் மைல் தொலைவில்
வைத்தே மேற்படி மூன்று படகுகளையும் கடற்படையினர் முற்றுகையிட்டதாகவும் அவர்
கூறினார். டோரா மற்றும் இரண்டு படகுகளிலேயே 47 இலங்கையர்களும் அவுஸ்திரேலியா
நோக்கிப் பயணித்துள் ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் நான்கு பெண்களும்
43 ஆண்களும் அடங்குவதாக கடற்படைப் பேச்சாளர் கூறினார். இவர்களுள் நான்கு
சிறுவர்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கடற் படையினர் கைது
செய்தவர்களை மேலதிக விசாரணையின் பொருட்டு சி. ஐ. டி. யினரிடம் ஒப்படைத்தி
ருப்பதாகவும் கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.
கார்த்திகை 07, 2012
யுத்தம், இயற்கை அனர்த்தங்களால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெரும் இழப்பு
யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகளால் கூடிய
பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய பல திட்டங்கள்
முன்னெடுக்கப்படுவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,
கைத்தொழில், வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் அமைச்சர் தலைமையில்
திங்கட் கிழமை (2012.11.05) முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனையில்
இடம்பெற்றது. நீர்ப்பாசனம், கால்நடை, வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு, வீடமைப்பு,
சுகாதாரம், கல்வி உட்பட பல்துறைகளின் தற்போதைய முன்னேற்றம் குறித்து
இக்கூட்டத்தின் போது ஆராயப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில்
மீள்குடியேற்ற கிராமங்களில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து
அமைச்சர் றிசாத் பதியுதீன் கவனம் செலுத்தினார். மீள்குடியேறிய மக்களுக்கு
மருத்துவ சேவைகளை வழங்குவதில் காணப்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து வடமாகாண
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் எடுத்துரைத்தார்.
கார்த்திகை 07, 2012
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதியில்லை
தமிழகத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய
நேரடி முதலீட்டுக்கு அனுமதியில்லை என்று முதல்வர் ஜெயலலிதா மீண்டும்
உறுதிபடத் தெரிவித்துள்ளார். இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்
சிறு வணிகத்தை அன்னிய நேரடி முதலீடு அழித்து விடும் என்றும் அவர் கருத்துத்
தெரிவித் துள்ளார். தமிழகத்தில் ரூ. 20 ஆயிரத்து 925 கோடி முதலீட்டில் 1.36
இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 12 நிறு வனங்களுடனான புரிந்துணர்வு
ஒப் பந்தங்கள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் திங்கட்கிழமை செய்து
கொள்ளப்பட்டன. அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் வேளையில் குறிப்பாக
அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் போது மிகவும் பொறுப்புடனும் அதன்
தாக்கங்களை உணர்ந்தும் செயல்படுகிறது. அன்னிய நேரடி முதலீடு என்பது இருமுனை
கத்தி போன்றது அதை மிகவும் திறம்பட கையாள வேண்டும்.
கார்த்திகை 07, 2012
சிரியாவில் மோதல்கள் உக்கிரம்
தற்கொலை
தாக்குதலில் இராணுவத்தின் 50 பேரும் வான் தாக்குதலில் கிளர்ச்சியாளர்களின்
20 பேரும் பலி
சிரியாவின் மத்திய மாகாண ஹமாவில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில்
குறைந்தது 50 அரச படைகள் கொல்லப்பட்டதோடு, வடமேற்கு மாகாணமான இத்லிப் மீது
நடத்தப்பட்ட வான் தாக்குதலில் குறைந்தது 20 கிளர்ச்சியாளர்கள்
பலியாகியுள்ளனர். ஹமா மாகாணத்தின் சியாரா என்ற கிராமத்தின் மீது
நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலுக்கு கிளர்ச்சிக் குழுவான ஜபாத் அல் நுஸ்ரா
பொறுப்பேற்றிருப்பதாக பிரிட்டனை மையமாகக் கொண்டு செயற்படும் சிரியா
தொடர்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
இந்த குண்டுத் தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக
கூறப்பட்டுள்ளது. எனினும் இதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என
சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன. மறுபுறத்தில் சிரிய விமானப் படை வடக்கு
மாகாணமான இத்லிப்பின் ஹரம் நகர் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில்
குறைந்தது 20 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கார்த்திகை 07, 2012
தேன் என்பது எதிர்காலத்தில் இல்லாமல் போய்விடுமா?
இன்னும் சுமார் ஐம்பது வருடங்கள் சென்று
விட்டால் தேன் என்பதைக் காண்பதே அரிதாகி விடுமென உயிரியலாளர்கள்
கவலைப்படுகின்றனர். மரங்கள் நிலைத்திருக்கும்; மரங்களில் மலர்கள் பூக்கும்.
ஆனால் மலர்களில் தேனைச் சேகரிப்பதற்கு தேனீக்களைக் காண்பது அரிதாகி விடுமென
உயிரியலாளர்கள் எச்சரிக்கின்றனர். உலகில் உயிரினங்களில் சில வகைகள் வேகமாக
அருகிக் கொண்டு வருகின்றன. டைனோசர்கள் போல எதிர்காலத்தில் தேனிக்களும்
உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றுவிடலாமென்பதே விஞ்ஞானிகளின் கருத்தாகும்.
அதன் பிறகு தேன் என்பதை புத்தகத்தில்தான் எதிர்கால சந்ததியினர் படிக்க
வேண்டியிருக்கும். தேனீக்களின் அழிவுக்கான காரணங்கள் பல உள்ளன. களை
நாசினிகள், கிருமி நாசினிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் பூக்களின்
தேன் சேகரிக்க வருகின்ற தேனீக்கள் மாண்டு போகின்றன. எங்கும் தொலைத் தொடர்பு
கோபுரங்கள் முளைக்கின்றன. ஒலி அலைகள் கூட தேனீக்களின் ஆயுளைக் குறைக்கின்றன.
கார்த்திகை 07, 2012
அமெரிக்காவை அச்சுறுத்தும் புதிய புயல்
சமீபத்தில் வீசிய சாண்டி புயல்,
அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியையே புரட்டி போட்டுவிட்ட நிலையில்
புதிய புயல் சின்னம் அமெரிக்காவை மிரட்டி வருகிறது. கடந்த வாரம் வீசிய
சாண்டி புயல், அமெரிக்காவை நிலைகுலையச் செய்துவிட்டது. இந்நிலையில், வரும்
வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில்
மற்றொரு புயல் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அட்லாண்டிக்,
மத்திய கடல் மற்றும் புதிய இங்கிலாந்து கடல் பகுதியில் மணிக்கு 50 மைல்
வேகத்தில் பலத்த காற்று வீசும் மரங்கள், மின் கம்பங்கள் சாயலாம். பல அடி
உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் எழும்பும். கடும் மழை, வெள்ளம் ஏற்படும்.
கடும் பனிப்பொழிவும் இருக்கும். மொத்தத்தில் சான்டிக்கு நிகரான பாதிப்பை
விளைவிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை 06, 2012
(நன்றி: அன்பழகன்)
கார்த்திகை 06, 2012
வரவு-செலவுத்
திட்டத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை - உயர்
நீதிமன்றம் தீர்ப்பு
2013 ஆம் ஆண்டுக்கென சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு-செலவுத்திட்ட
நிதியொதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டு சரத்துக்கள் அரசியலமைப்புக்கு
முரணாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்திருக்கின்றது என
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று செவ்வாய்க்கிழமை சபையில் அறிவித்தார்.
முரண்பட்டுள்ள சரத்துக்கள் திருத்தம் செய்யப்படவேண்டியவை
எனக்குறிப்பிட்டுள்ள உயரநீதிமன்றம்,திருத்தங்களின்போது எழுகின்ற
முரண்பாடுகளை சரிசெய்து கொள்ளமுடியும் என்றும் அறிவித்துள்ளதாகவும்
சபாநாயகர் குறிப்பிட்டார்.
கார்த்திகை 06, 2012
திவிநெகுமவின் சில விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு
திவிநெகும சட்டமூலத்தின் சில விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு
நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திவிநெகும
சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகர் சமல்
ராஜபக்ஷவினால் சற்றுமுன் பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டது. இச்சட்டமூலம்
11 பிரிவுகளாக பாராளுமன்றத்தில் வாசிக்கப்பட்டதாக எமது செய்தியாளர்
தெரிவிக்கிறார். உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் சில விடயங்கள்
பாராளுமன்றில் 2/3 பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என்றும் மேலும் சில
விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும்
அறிவிக்கப்பட்டுள்ளது. திவி நெகும சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள 47
சரத்துக்களில் 16 சரத்துக்கள் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல்
அமைப்புச்சட்டத்திற்கு முரணாக அமைந்திருப்பதாக உயர்நீதிமன்றம்
பாரளுமன்றத்துக்கு அறிவித்துள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் (
வடக்கு மாகாண சபை) மாகாணசபையொன்று நிறுவப்படாதிருப்பதன் காரணத்தால் அதன்
அபிப்பிராயத்தைப் பெறமுடியாதிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள உயர்நீதிமன்றம்,
சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையைப் பெறவேண்டியது கட்டாயமானது என்றும் உயர்நீதிமன்றம் தனது
தீர்மானத்தில் கூறியுள்ளது.
(வீரகேசரி)
கார்த்திகை 06, 2012
பாராளுமன்றம் இன்று கூடுகிறது
திவிநெகும,
குற்றப்பிரேரணை தொடர்பில் முக்கிய அறிவிப்புகள்
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கூடுகிறது.
சபாநாயகர் முக்கியத்துவம் வாய்ந்த பல அறிவித்தல்களை இன்று வெளியிட உள்ளதாக
பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன. ‘திவிநெகும’ திணைக்கள சட்ட மூலத்திற்கு
எதிரான வழக்கு தீர்ப்பு கடந்த வாரம் ஜனாதிபதிக்கும் சபாநாயகருக்கும் உச்ச
நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சபாநாயகர் சமல்
ராஜபக்ஷ இன்று விசேட அறிவித்தல் விடுக்க உள்ளார். பிரதம நீதியரசர் சிராணி
பண்டார நாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை சபாநாயகரிடம் தாக்கல்
செய்யப்பட்டுள்ளதோடு இது குறித்து நேற்று பாராளுமன்றத்தில் விசேட கட்சித்
தலைவர் கூட்டமொன்று நடைபெற்றது. இதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு
நியமிப்பது குறித்தும் அதனுடன் தொடர்புள்ள விடயங்கள் குறித்தும்
ஆராயப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரங்கள் கூறின. இந்த கூட்டம் நீண்ட நேரம்
இடம்பெற்றதாக அறியவருகிறது.
கார்த்திகை 06, 2012
சிரியா படைவீரர்கள் கொலைக்கு கடும் எதிர்ப்பு
சிரிய கலகக்காரர்கள் கடுமையான போர்க்குற்றங்களைச் செய்துள்ளனர் என்று
ஐக்கிய நாடுகள் சபையும், மனித உரிமை ஆர்வலர்களும் சிரிய அரசுக்கு எதிராக
கலகம் செய்து வரும் கலகப்படையினர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர். உள்நாட்டுப்
போரில் கலகப்படையினரிடம் சிக்கிய அரசு படைவீரர்களை தயவு தாட்சண்யமின்றி கொலை
செய்யும் காட்சிகளின் வீடியோ பதிவுகள் வெளியானதையடுத்து கலகக்காரர்கள்
உலகளாவிய கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் படைவீரர்கள். ஆனால்
தற்போது போர் செய்யவில்லை. எனவே தற்சமயம் இது ஒரு போர்க்குற்றம் போல்
தோன்றுகிறது. மற்றுமொன்று இது என்று அவர் கூறினார். கலகமும், வன்முறையும்
கடந்த ஜூலை முதல் தலைவிரித் தாடும் வடக்கு சிரிய நகரான அலெப்போவில் அரசு
விசுவாசி களும், படை வீரர்களும், சிரிய பாதுகாப்பு படைகளும், காவல்
துறையினரும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கொல்லப்படு வது தொடர்ந்து
நடைபெற்று வருகிறது என்று மனித உரிமைக் குழுக்கள் கூறி வருகின்றன. அதற்கான
வீடியோ பதிவுகளும், கலகக்காரர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களும்
கிடைத்துள்ளன.
கார்த்திகை 06, 2012
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று
ஒபாமா, ரொம்னிக்கிடையே கடும் போட்டி
சர்வதேச அளவில் தாக்கம் செலுத்தக்கூடிய
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. கடந்த 18 மாதங்களாக தேர்தல்
பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னணி வேட்பாளர்களான ஜனநாயக கட்சியின் பராக் ஒபாமா
மற்றும் குடியரசு கட்சியின் மிட் ரொம்னிக்கு இடையில் கடும் போட்டி நிலவி
வருகிறது. அண்மைய கருத்துக் கணிப்புகளில் இருவரும் சரிசமமான அளவில் ஆதரவை
பெற்றுள்ளதால் தேர்தல் முடிவுகளில் இழுபறியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
(மேலும்....)
கார்த்திகை 06, 2012
மரபணு மாற்றப்பட்ட உணவுகளால் உலகில் உயிரின வாழ்வுக்கு ஏற்படும் பாரிய
ஆபத்து
மரபணு பொறியியல் என்பது மரபணுவை நேரடியாக
கையாண்டு உருவாக்கப்படும் விளைவுகளைக் குறிக்கும். கூடிய உற்பத்தி தரும்
விதைகள் பழுதடையா மரக்கறிகள், புதிய வகை உயிரினங்கள் (Genetically modifie
organism), செயற்கை உடல் உறுப்புகள் (Artificial Organ), செயற்கை இன்சுலின்
என பல தரப்பட்ட பயன் பாடுகள் மரபணு பொறியியலுக்கு உண்டு. இது இன்னும்
வளர்ச்சி பெற்றுவரும் ஒரு தொழில்நுட்பம். பல வழிகளில் இது நல்லமுறையில்
பயன்பட்டாலும் சில பக்க விளைவுகளும் உண்டு. எடுத்துக்காடாக புதிய வகை
உயிரினங் களை உருவாகும் பொழுது அவை சில வேளைகளில் சூழ்நிலை மண்ட லங்களுக்கு
ஏற்பு இல்லாமல் போகலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டு. இவ்வாறு மாற்றப்பட்ட
சில மரக்கறிகள் நீண்ட நாட்கள் நல்ல நிலையில் இருந்தாலும் அவற்றின் சுவை
சற்று குறைந்துள்ள தாக கூறப்படுகிறது.
(மேலும்....)
கார்த்திகை 06, 2012
தேங்காயின் படைப்பில் இப்படியொரு விந்தை!
தேங்காயை எடுத்துக் கொண்டால் உள்ளே இருக்கும்
வித்து பகுதியை (சிரட்டையினால் சூழப்பட்ட பகுதி) சூழ தும்பு
நிறைந்திருப்பதைக் காண லாம். சிரட்டையைச் சூழ இத்தனை தடிப்பாக தும்பு
சூழ்ந்திருப்பது ஏன்? தாவரங்களின் இசைவாக்கத்தின்படி பார்ப்போமானால் இரண்டு
விதமான காரணங்கள் உள்ளன. தென்னை மரம் மிகவும் உயரமானது. பழுத்த தேங்காய்கள்
தரையில் வீழ்கின்ற போது உடைந்து விடுமானால் சிரட்டை வெடிப்புற்று தண்ணீர்
வெளியே சிந்தி விடுவதால் உள்ளேயிருக்கும் வித்து பழுதடைந்து போகும். இதனால்
புதிய தாவரம் உருவாக வழியில்லை. தென்னையில் இனப்பரம்பல் பாதிக்கப்படும்.
எனவே வித்து உடையாமல் பாதுகாக்கவே சிரட்டையைச் சூழ தும்பு உள்ளது. மற்றொரு
காரணம்... தென்னை ஆரம்ப காலத்தில் நீர்நிலையோரத் தாவரமாகவே இருந்துள்ளது.
தண்ணீரில் விழுகின்ற தேங்காய் மிதந்து சென்றாலேயே இனப்பரம்பல் நடைபெற
முடியும். மிதப்பதற்கு வசதியாகவே தும்புகள்!
கார்த்திகை 06, 2012
கல்முனை பகுதியில் மாடுகள் திடீர் மரணம், இனந்தெரியாத நோய்
கல்முனை மாநகர சபைக்கு ட்பட்ட நற்பிட்டி முனைக் கிராம த்தின் அஷ்ரப் பொது
விளை யாட்டு மைதானத்திற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்த பலமாடுகள் (05)
காலை திடீரென மயங்கி வீழ்ந்து இறந்துள்ளன. நற்பிட்டிமுனைக் கிராமத்தைச்
சேர்ந்த மாட்டு பண்ணை வைத்திருக்கும் உரிமையாளர்கள் வழமை போன்று தமது
மாடுகளை மேய்ச்சலுக்கென விட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் காலை 10
மணியளவில் மேய்ந்து கொண்டிருந்த 06ற்கும் மேற்பட்ட பசுமாடுகள் திடீர் திடீர்
என அவ்விடத்திலே வாயால் நுரைகக்கிய வண்ணம் துடிதுடித்து இறந்துள்ளன.
இதனையறிந்த மாட்டு உரிமையாளர் களும், பொது மக்களும் அவ்விடத்தில் ஒன்று
கூடினர். இவ்விடயம் தொடர்பாக கல்முனை கால் நடை வைத்திய அதிகாரிக்கும்
தகவல்கள் அனுப்பப்பட்டன. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கால்நடை வைத்திய
அதிகாரிகளும் மாடுகளை சோதித்து எஞ்சி இருக்கும் மாடுகளுக்கும்
சிகிச்சையளித்தனர். இருந்த போதிலும் மைதானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக
ஆறு (06) மாடுகள் இறந்து கிடப்பதை அவதானிக்க முடிந்தது. இறந்த மாடுகளின்
பெறுமதி 5 இலட்சம் ரூபாய்க்கு மேல் என மாட்டுரிமையாளர்கள் கவலை
தெரிவிக்கின்றனர்.
கார்த்திகை 05, 2012
பிரபாகரனை அழித்து ஒழிக்கின்றமையில் கிங் மேக்கராக செயல்பட்ட வித்தியாதரன்!
(யவ்னா சி.என்என் (Jaffnacnn))
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தையும், அதன் தலைவர் வேலுப்பிள்ளை
பிரபாகரனையும் அழித்து ஒழிக்கின்றமையில் ஊடகவியலாளர் நடேசபிள்ளை
வித்தியாதரன் கிங் மேக்கராக செயல்பட்டு உள்ளார் என்று இந்தியாவின் மத்திய
புலனாய்வுத் துறையினரை மேற்கோள் காட்டி பரபரப்புச் செய்திகள் வெளியாகி
உள்ளன. இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியை தமிழீழ விடுதலைப் புலிகள்
இயக்கத்தினர்தான் படுகொலை செய்தனர் என்பதில் ரோவுக்கு சில சந்தேகங்கள்
இருந்து வந்து உள்ளன. எனவே இப்படுகொலையை புலிகள்தான் செய்தனர் என்பதை நூறு
சதவீதமும் உறுதிப்படுத்திக் கொள்ள இப்புலனாய்வாளர்கள் பகீரத முயற்சிகளை
மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.
(மேலும்....)
கார்த்திகை 05, 2012
ஒபாமா,
ரொம்னியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரம் தீவிரம்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இரு முன்னணி
வேட்பாளர்களான பராக் ஒமாபா மற்றும் மிட் ரொம்னி ஆகியோர் தமது இறுதிக்கட்ட
தீவிர பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். ஜனாதிபதித் தேர்தல் வெற்றி
வாய்ப்புகள் தொடர்ந்து இழுபறி நிலையிலேயே காணப்படுகிறது. ஏ. பி. சி.
தொலைக்காட்சி மற்றும் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகைகளின் கருத்துக்கணிப்பின்
நேற்றைய தின முடிவுகளின்படி இருவரும் தலா 48 வீதமானோரின் ஆதரவை
பெற்றிருந்தனர். இந்நிலையில் தற்போது தீர்மானிக்கப்படாத நிலையில் இருக்கும்
வாக்குகளை வெல்வதற்க ஒபாமா, ரொம்னி தமது பிரசாரங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இருவருக்கும் இடையே கடுமையான இழுபறி நீடிப்பதாகக் கருதப்படுகிறது.இதனால்
ஒபாமா, மிட்ரொம்னி ஆகியோர் இந்த மாநிலங்களில் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரம்
காட்டி வருகிறார்கள். புயல் தாக்கிய மாநிலங்களில் நிவாரணப் பணிகள் சரியாக
நடைபெறவில்லை என்று அப்பகுதி மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. இதுவும்
தேர்தல் முடிவைப் பாதிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும்
வெள்ளையினர், முதியோர் மற்றும் கிறிஸ்தவ மதப் பிரிவினரிடையில் ரொம்னிக்கு
தொடர்ந்து அதிக ஆதரவு காணப்படுவதாகவும், பெண்கள், வெள்ளையரல்லாதோர்,
இளைஞர்களி டையில் ஒபாமாவுக்கு அதிக ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.
கார்த்திகை 05, 2012
நாவுறு
தீவிலிருந்து நாடு திரும்புவதற்கு மேலும் பல இலங்கையர் விருப்பம்
நாவுறு தீவில் தங்கவைக்கப் பட்டுள்ளவர்களில்
மேலும் பல இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக
அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 11 இலங்கையர்கள் தமது
புகலிடக்கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதில்லையெனத்
தீர்மானித்திருப்பதுடன், சொந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அவர்கள்
விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் அச்செய்திகள் குறிப்பிடுகின்றன.
சட்டவிரோத படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றவர்களில் 377 பேர்
நாவுறு தீவுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்
டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 26 இலங்கையர் நாவுறு தீவிலிருந்து
இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருக்கும் நிலையில், மேலும் பலர் நாடு
திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேநேரம், நாவுறு தீவில்
தங்கவைக்கப்பட்டுள்ளவர்களில் 300 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டிருப்பதுடன், இவர்களில் 25 பேர் மயக்கமுற்று மருத்துவ சிகிச்சைக்கு
உட்படுத்தப்பட்டிருப்பதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கார்த்திகை 05, 2012
அமீருக்கு கல்யாணம்
தன் இளமையின் பெரும் பகுதியை சிறையில்
கழித்து இறுதியில் குற்றமற்ற அப்பாவி என்று விடுதலை செய்யப்பட்ட முஹம்மத்
ஆமிர் கானுக்கு கடந்த அக்டோபர் 15ம் தேதி வெகு சிறப்பாக திருமணம் நடைபெற்றது.
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி வீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த
முஹம்மது அமீர் என்ற 18 வயது இளைஞரை,டெல்லி போலீஸ் வேன் ஒன்று வழிமறித்துக்
கைது செய்தது. அவர் மீது கொலை செய்தல், பயங்கரவாதம், நாட்டிற்கு எதிராகப்
போர் தொடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. (மேலும்....)
கார்த்திகை 05, 2012
ரூ.3000 மில் புனரமைப்பு
யாழ்
ஆஸ்பத்திரி டிசம்பரில் திறப்பு
3000 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தும் யாழ்ப்பாணம் போதனா
ஆஸ்பத்திரியை டிசம்பர்மாத முற்பகுதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்
சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும். 5 மாடிகளைக் கொண்ட இந்த போதனா
ஆஸ்பத்திரியில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவு, சிரி ஸ்கான், அதிதீவிர
சிகிச்சைக்கூடம் மற்றும் நோயாளிகள் தங்கியிருக்கும் வாட்டுக்கள், சத்திர
சிகிச்சை நிலையங்களுடன் டொக்டர்கள் மற்றும் தாதிமாருக்கான வசிப்பிட
வசதிகளும் செய்துகொடுக்கப்படும். இந்த ஆஸ்பத்திரியில் புற்றுநோய்க்கான
சிகிச்சைப் பிரிவு ஒன்றும் ஏற்படுத்தப்பட்டு சகல வசதிகளையும் கொண்ட ஒரு
ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்படும். இந்த ஆஸ்பத்திரியில் பிராணவாயுவைத்
தயாரிக்கும் ஒரு நிலையமும் ஏற்படுத்தப்படுவதுடன் இந்த ஆஸ்பத்திரிக்கான
மின்சார வசதியை சூரிய சக்தி மூலம்பெறவும் வசதிகள் செய்யப்படும். இந்த
ஆஸ்பத்திரியின் புனரமைப்புப் பணிகளை ஜப்பானிய அரசாங்கம் இலவசமாக
செய்துகொடுக்கும். இங்கு புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்படுவதனால்
மகரகமை புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு வரும் தூர இடத்து நோயாளிகள் இனிமேல்
யாழ்ப்பாண போதனா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவதற்கான வசதிகளைப்
பெறக்கூடியதாக இருக்கும்.
கார்த்திகை 05, 2012
இலங்கை உள்விவகாரங்களில் நாம் தலையிடமாட்டோம்
-
இந்திய வெளிவிவகார அமைச்சு
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா
தலையிடுவதைத் தவிர்த்துக்கொள்ளும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான்
குர்சீத் இலங்கை உச்ச நீதிமன்ற பிரதம நீதியரசுக்கு எதிரான குற்றப்பிரேரணை
கொண்டு வந்ததைப் பற்றி கருத்துக் கேட்டபோது பதிலளித்தார். ஏற்கனவே அமெரிக்க
அரசாங்கம் இது குறித்து கவலை வெளியிட்டிருக்கின்றது என்று அந்த நிருபர்
இந்தக் கேள்வியை முன்வைத்தார். நாம் இலங்கை அரசாங்கத்துடன் புரிந்துணர்வுடன்
செயற்படுகின்றோம். எனவே, நாம் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில்
தலையிடுவதைத் தவிர்த்துக்கொள்கின்றோம் என்று புதிய வெளிவிவகார அமைச்சர்
மேலும் தெரி வித்தார். நாம் ஜனநாயகத்தை ஆதரிக்கின் றோம். ஜனநாயகம் பேணிப்
பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார். இலங்கையின் உச்ச
நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் டொக்டர் சிராணி பண்டார நாயக்கவுக்கு எதிராக
குற்றப்பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் நிறைவேற்று வதற்கு இலங்கை அரசாங்கம்
திட்டமிட்டு வருகின்றமை பற்றி இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று ஒரு
நிருபர் கேட் டதற்கு பதிலளிக்கும் முகமாக இந்திய வெளிவிவகார அமைச்சர்
சல்மான் குர்சீத் மேற்கண்ட தகவலை தெரிவித்தார்.
கார்த்திகை 05, 2012
வன்னியில் கோயில்கள் கட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 67ஆவது
பிறந்த தினத்தை கெண்டாடும் T.N.A. பா.உ.சி. ஸ்ரீதரன் MP
முல்லைத்தீவு மல்லாவி நான்காம் யூனிற்
முருகன் ஆலயம் மற்றும் யோகபுரம் சிவன் ஆலயத்தில் இறைவிக்கி ரகங்களை
பிரதிஷ்டை செய்வதற் கான அடிக்கல் நாட்டு வைபவங்கள் ஆலய பரிபாலன சபையினர்
மற்றும் அப்பகுதி வர்த்தகர்கள், அடியார்களின் துணையுடன் நல்லை ஆதினகுரு
முதல்வர் முன்னிலையில் இடம்பெற்றுள்ளது. இதையிட்டு இங்கு யாழ். மாவட்ட தமிழத்
தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன் மற்றும் பாண்டியன்
குளம் பிரதேசசபையின் தலைவர் தனிநாயகம், உப தவிசாளர் செந்தூரன் மற்றும்
துணுக்காய் பிரதேசசபையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் 67ஆவது பிறந்த தினத்தை முன்டு அவருக்கு ஆசிவேண்டி
சமய வழிபாடுகளில் இடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைபவத்தில்
நல்லை ஆதின முதல்வர் அருளுரை யாற்றி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.(மேலும்....)
கார்த்திகை 05, 2012
இந்தியாவும் சீனாவும் இணைந்து
செயலாற்றினால் அமைதியும் வளமும் மேம்படும்
அணு சக்தி மூலம் 20 ஆயிரம் மெகாவோட் மின்சாரம் தயாரிக்க இந்தியா
திடடமிட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சீன பயணம் மேற்கொண்டுள்ளார். பீஜீங்கில்
அவர், ‘அமைதியின் பரிணாமும் பூமியின் வளமும்’ என்ற தலைப்பில் உரை யாற்றினார்.
இந்தியாவும், சீனாவும் பழம்பெரும் நாகரீகத்தை கொண்ட நாடுகள். உலக நாடுகளின்
சனத் தொகையில் சீனா மற்றும் இந்தியாவின் சனத்தொகை மட்டும் 37 சதவீதமாகும்.
இந்தியாவில் 50 சதவீத இளைஞர்களும், சீனாவில் 40 சதவீத இளைஞர்களும் உள்ளனர்.
இரு நாடுகளுக்கிடையே அளப்பரிய ஆற்றல் உள்ளது. எனவே இரு நாடுகளும்
ஒன்றிணைந்து செயலாற்றி, மக்களை மேம்படுத்த வேண்டும். முதலில் இரு நாடுகளுக்
கிடையே நல்லிணக்கம் தேவை. எனவே, இரு நாடுகளும் தொழில்நுட்பம், சமூக மேம்பாடு,
இன்னும் பல துறைகளில் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இதற்காக ஒவ்வொரு
ஆண்டும் கூடி பேச வேண்டும். இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயலாற்ற பல வழிகள்
உள்ளன. இதன் மூலம் அமைதியும், வளமும் மேம்படும். இந்தியா கணனி
தொழில்நுடபத்தில் வலுவாக உள்ளது. பல்வேறு பொருட்களை உருவாக்குவதில் சீனா
ஸ்திரமாக உள்ளது. இரு நாடுகளின் தொழில்துட்பத் திறனும், மனித திறனும்
ஒன்றிணையும் போது இந்த உலகத்துக்கு தேவையானவற்றை நாமே தயாரித்து அளிக்க
முடியும். இவ்வாறு கலாம் கூறினார்.
கார்த்திகை 04, 2012
வடக்கில் இராணுவத்தை நீக்கிகொள்ள வேண்டும்
- அமெரிக்க தூதுவர்
வடக்கும் மற்றும் கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் நடவடிக்கைகளிலிருந்து
இராணுவத்தை நீக்கிகொள்ள வேண்டும் என அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர்
மிச்செல் சிசன் தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், வடக்கு
மற்றும் கிழக்கு பகுதிகளில் பொதுமக்களின் செயற்பாடுகளில் இராணுவத்தின்
தலையீடு இன்னமும் காணப்படுகின்றது. எனவே இதனை விலக்கிகொள்ள வேண்டும்.
இலங்கையில் இன்னமும் இனப்பிரச்சினைக்கான தீர்வு
வழங்கப்படவில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்படுவதற்கு
அமெரிக்காவும் அதன் நட்பு நாடுளும் தயாராகவே உள்ளன.
இந்தநிலையில்
இலங்கை தமது இணக்கப்பாடு தொடர்பிலான தமது சொந்த நல்லிணக்க அறிக்கையின்
பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்றார்.
கார்த்திகை 04, 2012
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்
கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த
இராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல்
மேற்கொண்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடலில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக தொழிலுக்குச்
செல்லாத இராமேஸ்வர மீனவர்கள், நேற்று இராமேஸ்வரத்தில் இருந்து 646 படகுகளில்
3 ஆயிரம் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர்கள்
சிலர் மாலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டு இருந்தவேளை, ஏழு ரோலர்
படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கார்த்திகை 04, 2012
உலகையே உலுக்கிய படுகொலை வழக்கில் மீண்டும் பரபரப்பு!
ராஜிவ் படுகொலை தொடர்பான, முக்கிய
வீடியோவை,ஐ.பி.உளவு படையின் முன்னாள் தலைவரும், மேற்கு வங்க கவர்னருமான,
எம்.கே.நாராயணன் வேண்டுமென்றே மறைத்தார் என்று வெளியான தகவலால், ராஜிவ்
இறந்து, 21 ஆண்டுகள் ஆன பிறகு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(மேலும்....)
கார்த்திகை 04, 2012
ஏ-9 பயணிகளின்
உயிர் சாரதிகளின் கைகளில்
கொழும்பு- கண்டி வீதியான ஏ-9 வீதியில்
வவுனியா முதல் யாழ்ப்பாணம் வரையிலான பாதையில் பயணிப்போர் பெரும்
அச்சத்துடனேயே தமது பயணத்தைத் தொடரும் மன நிலையிலுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது. இதன் உண்மைத்தன்மைப் பற்றி ஆராய்ந்தால் அதில் நிச்சயம்
உண்மை இல்லாமலில்லை என்பதுவும் தெரிகிறது. இவ்வீதியால் பயணத்தை மேற்கொள்ளும்
பயணிகள் தெரிவிக்கும் மயிர்க்கூச்செறிய வைக்கும் கதைகளைக் கேட்டால்
வடபகுதிக்கு ஏ-9 வீதியால் புதிதாக செல்ல முனையும் மக்கள் நிச்சயம் தயக்கம்
காட்டவே செய்வர். அந்தளவிற்கு எமது சாரதிகளின் சாகங்கள் நிறைந்த வாகனச்
செலுத்தல்கள் இடம்பெறுகின்றன. முப்பது வருட கால யுத்தம் முடிவடைந்த நிலையில்
யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் பிரதான வீதியான ஏ-9 வீதி கடந்த
இரண்டரை வருடங்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டு இப்போது அப்பாதையால்
இருபத்துநான்கு மணிநேரமும் பயணம் செய்ய மக்களுக்குச் சுதந்திரம்
வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்தை இணைக்கும் இந்தப்
பிரதான வீதி வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கும்,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கும் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள்
பயணிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். (மேலும்....)
கார்த்திகை 04, 2012
13 தான் தீர்வுக்கான அடிப்படை
தமிழர் பிரச்சினைக்கு தமிழ்க் கூட்டமைப்பு
ஒருபோதும் தீர்வை நாடி நிற்கவில்லை. அவர்கள் ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டு.
அவர்கள் ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு கதை சொல்பவர்கள். தொட்டிலையும் ஆட்டுவர்.
பிள்ளையையும் கச்சிதமாகக் கிள்ளிவிடுவர். அவர்களுக்கு நிரந்தரமான தீர்வில்
அக்கறையுமில்லை. தேவையுமில்லை. தேசியப் பிரச்சினை இழுத்தடிக்கப்படுவதே
அவர்களுக்குத் தேவையான ஒன்று. கடந்த காலங்களில் பல்வேறு அரிய சந்தர்ப்பங்கள்
கிடைத்தும் அவர்கள் அதனைப் பயன்படுத்தவில்லை. பிரச்சினையைத் தீர்க்க
உதவவில்லை. அந்த நேரத்தில் 13ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது
“அதனை மிகச் சிறியது - மிகத் தாமதமானது” என கூட்டமைப்பு விமர்சித்தது.
இப்போது 13ஆவது திருத்தத்துக்காக கூக்குரலிடுகின்றனர். கடந்த காலத்தில்
பயங்கரவாதப் பிரச்சினை இருந்தது. நாங்கள் அதற்கு முடிவு கட்டினோம்.
அதைப்போன்று தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு விரைவில் வழியேற்படுத்துவோம்.
பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் மூலம் இது மேற்கொள்ளப்படும். (மேலும்....)
கார்த்திகை 03, 2012
ராஜீவ் காந்தி
கொலையுடன் வைகோ, கருணாநிதிக்கு தொடர்பு?
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக சிறப்புப்
புலனாய்வுக் குழுவின் தலைவர் கார்த்திகேயன் கட்டளைப்படி தி.மு.க தலைவர்
கருணாநிதி மற்றும் வைகோவிடம் முறையாக விசாரணை நடத்தவில்லை என இந்த வழக்கின்
முதன்மை விசாரணை அதிகாரி கே. ரகோத்தமன் குற்றம்சாட்டி உள்ளார். ராஜீவ்
காந்தி கொலை வழக்கை விசாரித்த முதன்மை விசாரணை அதிகாரி ரகோத்தமன், “ராஜீவ்
காந்தி கொலைக்கான கூட்டுச் சதி- சி.பி.ஐ கோப்புகளிலிருந்து” என்ற பெயரில்
ஒரு நூல் எழுதி உள்ளார். விசாரணையின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின்
புகலிடமான யாழ்ப்பாணத்திற்கு வைகோ சென்று வந்தது தொடர்பான ‘இன் டைகர்ஸ் கேவ்’
உள்ளிட்ட 500 வீடியோ கேசட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக ரகோத்தமன் தனது
நூலில் குறிப்பிட்டுள்ளார்.
(மேலும்....)
கார்த்திகை 03, 2012
13 ஆவது திருத்தத்தை நீக்கக் கூடாது,
அதனடிப்படையில் தீர்வு வேண்டும் -
இந்தியா
அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டே
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். 13ஆவது
திருத்தச்சட்டத்தை ஒழிப்பதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை என்று இந்திய
வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். அரசியல் அமைப்பின்
13ஆவது திருத்தச்சட்டத்தை ஒழிக்க வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்றும் அது தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு
என்னவென்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். “இலங்கையின் தேசிய
இனப்பிரச்சினைக்கு 13ஆவது திருத்தத்தின் அடிப்படையிலேயே தீர்வு காணப்பட
வேண்டும் என ஒருதரப்பு கூறி வருகிறது. இருந்தபோதிலும் 13ஆவது திருத்தத்தின்
அடிப்படையிலேயே பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் நாங்கள்
உறுதியாக இருக்கிறோம். இதன்மூலம் அதிகார பகிர்வுக்கு நாம் செல்ல முடியும்.
இதேவேளை வடமாகாண சபைத் தேர்தலை 2013ஆம் ஆண்டு நடத்துவதாக அரசாங்கம்
அறிவித்துள்ளது. இதனை நாங்கள் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம்” என அவர்
பதிலளித்தார்.
கார்த்திகை 03, 2012
ஆனந்த விகடன் கிண்டிய முன்னாள் போராளி இன்னாள் பாலியல் தொழிலாழி அல்வா!
(விசுவாசன்)
'முன்நாள் போராளி இன்று ஒரு பாலியல் தொழிலாளி' என்ற தலைப்பில் பேட்டி ஒன்று
இன்று லேட்டஸ்ரா வலு லேட்டாக முன்னாள் போராளிகள் பற்றி வந்துள்ளது. ஒரு
முன்னாள் போராளியின் பேட்டி என்று கூறி விட்டு பெண்புலிகளின் உருவாக்கம்,
புலிகளின் தலைவர் திரு பிரபாகரனை துதி பாடும் வரிகள், இலங்கை இராணுவம்
கூட்டாக பாலியல் கொடுமை செய்தது என்பதுடன் மட்டுமல்லாது புதிதாக அமைச்சர்
ஒருவரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த பெண் மிக தெளிவாக
பேட்டியளித்தள்ளார். பேட்டி வந்துள்ள இந்த நவம்பர் மாதம் கூட விடுதலைப்
புலிகளால் மிகவும் உணர்வு பூர்வமாக கொண்டாடப்படும் ஒரு மாதம் என்பதையும்
நாம் கவனத்தில் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த பேட்டியை
யாழ்ப்பாணத்தில் வைத்து எடுத்தவர் அருள் இனியன் என்றும் விகடன் கூறுகிறது.
(மேலும்....)
கார்த்திகை 03, 2012
இலங்கையின் வாக்குறுதிகளை நம்ப முடியாது
- சர்வதேச மன்னிப்புச் சபை
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின்
வாக்குறுதிகளை நம்ப முடியாது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
மனித உரிமை நிலைமைகள் குறித்து இலங்கை அரசாங்கம் வழங்கும் வாக்குறுதிகளை
சர்வதேச சமூகம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும் மன்னிப்புச் சபை
குறிப்பிட்டுள்ளது. நாட்டில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்
அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளது. மனித உரிமை மீறல்கள்
மற்றும் போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிதாக விசாரணை நடத்தப்பட
வேண்டும். 2008 ஆம் ஆண்டு கால மீளாய்வு அமர்வுகளின் போது இலங்கை அரசாங்கம்
சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளில் பல இன்னமும் நிறைவேற்றப்படவில்லை
என அச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கார்த்திகை 03, 2012
நினைத்தேன் எழுதுகிறேன்.
(அ.செல்வகுமார்)
வித்தியாராணி, புலிகளின் சோதியா படையணியின்
முன்னணி தளபதிகளில் ஒருவராக இருந்தவராம். அந்நதப் பெண் இணையதளத்தில் அளித்த
பேட்டி தொடர்பான அவர்கருத்துகளில் எல்லாவற்றிலும் உடன்பட்டு போக என்னால்
முடியாது போனாலும், அவர் பிரபாகரன் தொடர்பாகவும் அவரது போராட்ட முறை
தொடர்பாகவும் கூறிய கருத்துக்கள் இன்னும் பலரை வித்தியா ராணி போல் ஆக்க
காத்துக்கிடக்கிறது என்பதை அந்த அப்பாவி போராளி வித்தியா ராணி
அறியவாய்ப்புகள் இல்லை. தமிழக அரசியல் வாதிகள் தொடர்பாகவும்,மீண்டும்
பிரபாகரகரன் வருவார் என கூறுபவர்கள் தொடர்பாகவும் கூறிய கருத்துக்களில்
யதார்த்தம் காணப்பட்டது.
(மேலும்....)
கார்த்திகை 03, 2012
ஐ.நா வின் மனித உரிமை பேரவை அமர்வில் இன்று உலக மனித உரிமை ஆய்வாழர்கள்
இலங்கைக்கு பெரும் பாராட்டு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 14ம் அகில கால
பேரமர்வுகளின் போது இன்று ஐரோப்பிய நேரம் 14.30 மணிக்கு இலங்கை தனது தரப்பு
நியாயங்களை யுத்தத்தின் பின்னர் இனநல்லிணக்கம், முன்னாள் புலிகளை
புனரமைத்தல், யுத்தத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் மீளமர்த்தல்,
அரசியல் தீர்வொன்றுக்கான முன்னெடுப்பு உட்பட்ட பல காரணிகளை தொகுத்து
முன்வைத்தது. அமர்வுகளில் இலங்கை சார்பாக
கலந்து கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு தலைமை தாங்கிய மனித உரிமைகளுக்கான
ஜனாதிபதியின் விசேட தூதுவர் மஹிந்த சமரசிங்க சுமார் ஒரு மணி நேரம்
உரையாற்றினார்.(மேலும்....)
கார்த்திகை 03, 2012
சிரிய உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவதில்
சீனா முக்கிய பங்கு வகிக்கும் -
ஐ.நா. தூதர்
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரை முடிவுக்குக் கொண்டுவருவ தில்
சீனா முக்கிய பங்கு வகிக்கும் என சிரியாவிற் கான ஐக்கிய நாடுகள் சபை யின்
அரபு லீக் சிறப்பு பிரதி நிதி லக்தர் ப்ரஹிமி நம்பிக் கை தெரிவித்துள்ளார்.
சிரியாவில் அதிபர் பஷார் அல்-அசாத்திற்கு எதிராக கடந்த ஒன்றரை வருடங்
களுக்கும்மேலாக ஆயுதம் தாங்கிய அரசு எதிர்ப்பாளர் கள் கலவரம் நடத்தி வருகின்
றனர். சிறியதாக தொடங்கிய இது உள்நாட்டு கலவரமாக வெடித்தது. இதனால், ஆயி
ரக்கணக் கான அப்பாவி மக்கள் மற்றும் ராணுவத்தி னர் என ஏராளமானோர்
கொல்லப்பட்டனர். லட்சக் கணக்கானோர் அருகி லுள்ள துருக்கி போன்ற நாடுகளுக்கு
இடம்பெயர்ந் தனர். அரசுக்கு எதிராக கலவரம் நடத்தி வருப வர்களுக்கு அமெரிக்கா,
இஸ்ரேல் போன்ற மேற்கத் திய நாடுகள் ஆயுதம் மற் றும் பயிற்சிகளை அளித்து
வருவதாக சிரியா குற்றம் சாட்டியது. இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை யொட்டி
ஒருவார காலத் திற்கு எந்தவித ராணுவ நட வடிக்கையும் எடுக்கப்ப டாது என்று
அரசு அறி வித்தது.(மேலும்....)
கார்த்திகை 03, 2012
தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல்
பள்ளிவாசல் உடைப்பு, 10க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில்
குருநாகலை, தொடங்கஸ்லந்த தேர்தல் தொகுதிக்குட்பட்ட தெலும்புகல்ல
பிரதேசத்தில் பள்ளிவாசல் ஒன்றில் தொழுகை நடத்தியோர் மீது சுமார் 60 பேர்
கொண்ட குழுவினர் தாக்குதல் நடத்தியதுடன் பள்ளியினையும் உடைத்து
சேதப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த
10க்கும் மேற்பட்டோர் ரிதிகம மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொகரல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பழைமைவாய்ந்த ஜும்ஆப் பள்ளிவாசலுடன் முரண்பட்டுக்
கொண்டு பிரிந்த சென்ற அணியினர் புதிய
ஜும்ஆப் பள்ளிவாசலை ஆரம்பித்ததுள்ளனர். பின்னர் நீதி மன்றத்தில் இரு
சாராருக்கிடையே இது குறித்த வழக்குத்
தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றம் புதிய பள்ளிவாசலைச் சார்ந்த
குழுவினருக்கு தொழுகையை மேற்கொள்ளுமாறு தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து
புதிய பள்ளியில் இந்த அணியினர் தொழுகையை மேற்கொண்டிருந்த போது அங்கு வந்த
மற்றுமொரு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
கார்த்திகை 03, 2012
முள்ளிவாய்க்காலில் பாரிய ஆயுதக் கிடங்கிலிருந்து ஆயுதங்கள் மீட்பு
முல்லைத் தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதக்
கிடங்கொன்றிலிருந்து ஆயுதங்கள் இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தினரால் தோண்டி
எடுக்கப்பட்டன.
இதிலிருந்து 130 மி.மீற்றர் ஆட்லறி 1, 152
மி.மீற்றர் ஆட்லறி 4, மணிக்கு 120 கிலோ மீற்றர் குதிரை வேகம் கொண்ட அதிவேக
தாக்குதல் படகு உட்பட பல ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கார்த்திகை 03, 2012
தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்க
வேண்டும் -
மல்வத்தை மகாநாயக்க தேரர்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை
ஒழிக்கப்படுவதுடன் தமிழ் மக்களுக்கும் நியாயமான உரிமைகளைப் பெற்றுக்
கொடுக்க வேண்டுமென்று மல்வத்தை மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள
தேரர் தெரிவித்துள்ளார். அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று கண்டிக்கு விஜயம்
செய்து மல்வத்தை மகாநாயக்க தேரரிடம் நல்லாசி பெறச் சென்றபேதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டுமக்கள் விரும்பாத நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் மாற்றம்
கொண்டு வரவேண்டும். அத்துடன் தற்போதைய தேர்தல்முறை, மாகாண சபை முறைமைகள்
மற்றும் விருப்பு வாக்கு முறைமை போன்றவை நாட்டிற்குப் பொருத்தமற்றவை. மக்கள்
வேண்டாம் என்பதை தொடர்ந்து வைத்துக்கொண்டு இருப்பதால் நாட்டிற்கு அது மேலுமொரு
பிரச்சினையாக அமைந்து விடும் என்பதுடன் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கும் நியாயமான
ஒரு தீர்வு வழங்கப்படவேண்டும். அதேநேரம் அபிவிருத்தி என்ற போர்வையில்
தேவையற்றவைகளை தவிர்த்துக் கொள்வது நல்லதெனத் தெரிவித்தார்.
கார்த்திகை 03, 2012
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 26 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்
சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியா
சென்றுள்ள இலங்கை யர்களுள் 26 பேரை ஆஸி. அரசு திருப்பி அனுப்பியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ், மற்றும் கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கடந்த வாரம்
வந்து சேர்ந்த 26 பேர் கிறிஸ்மஸ் தீவிலிருந்து விசேட விமானம் மூலம்
இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு ள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு- குடியகல்வு
அமைச்சர் கிறிஸ்போவன் தெரிவித்துள்ளார். இவர்களுக்கு அவுஸ்திரேலியாவில்
இருப்பதற்கு சட்ட உரிமை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு
திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்களில் இலங்கையிலிருந்து கடத்தப்பட்டதாகக்
கூறப்படும் சேஜன் என்னும் ஆழ்கடல் வள்ளத்தில் அவுஸ்திரேலியா சென்ற 15 பேரும்
அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதியிலிருந்து
116 இலங்கையர்கள் தாமாக விரும்பி அல்லது கட்டாயத்தின் பேரில்
அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளனர். ஈரான், ஈரான்,
ஆப்கானிஸ்தான் உட்பட பல நாடுகளிலிருந்து வருவோரின் எண்ணிக்கை
குறைவடைந்துவிட்டது. ஆனால் இலங்கையிலிருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து
வருவதாகவும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆட்களை
கடத்துவோர் பொய்களை கூறி வருகின்றனர். அவர்கள் பொய் கூறுகின்றனர் என்பதை
நாம் நிரூபிப்போம் எனவும் அவர் கூறினார்.
கார்த்திகை
02, 2012
சீமான் மட்டும் கார்த்திகையில் கனடாவில் கொண்டாடலாமா?
(லியோ,
ஸ்காபுறோ,
கனடா)
கார்த்திகைமாதம் 26 ம்திகதி 2007ம் ஆண்டு பிரபாகரனின்
பிறந்தநாள் நம்தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தலைமையில் இலக்கம் 231 மில்னர் அவெனியு
ஸ்காபுறோவில் உள்ள பீற்றர் போல் மண்டபத்தில் பலர் முன்னிலையில் சபையோர் சாட்சியாக
வெகுவிமர்சையாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அதாவது மாவீரர்தினத்திற்கு முதல்நாள்
கொண்டாடியிருக்கின்றார் என்றால் மாவீரர்களை மதிக்காமல் அவர்களின் இறந்த உடல்களில்
மிதித்தே நம்தமிழர் இயக்கத்தலைவர் சீமான் கொண்டாடியிருக்கின்றார் என்று
எடுத்துக்கொள்ளலாம் அல்லவா? இதைப்பற்றி சீமான் சரியான விளக்கம் தருவாரா?(மேலும்....)
கார்த்திகை
02, 2012
இலங்கை தமிழர் பிரச்னையில் விரைவான அரசியல் தீர்வு தேவை
- இந்தியா
இலங்கை தமிழர் பிரச்னையில் விரைவான அரசியல் தீர்வு
தேவை என ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கை
வடக்கு மாகாணத்தில் விரைந்து தேர்தல் நடத்தவும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித
உரிமை மீறல்கள் பற்றி நம்ப தகுந்த விசாரணை தேவை என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
தமிழர் பிரச்னைக்கு விரைவான அரசியல் தீர்வு காண்பதே நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும்
என்றும் கூறியுள்ள இந்தியா,போரின்போது அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றி உரிய
விசாரணைதேவை என்றும், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு காலவரையறை
தேவையென்றும் தெரிவித்துள்ளது. மேலும் தமிழர் பகுதிகளில் தனியார் நிலத்தை ராணுவம்
திரும்ப ஒப்படைக்கவும்,அதே போல் ராணுவ உயர் பாதுகாப்பு வலையங்களின் எண்ணிக்கையை
குறைக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
கார்த்திகை
02, 2012
"நேற்று... நான் விடுதலைப் போராளி! இன்று... பாலியல் தொழிலாளி."
ஒரு பெண் புலியின் வாக்குமூலம்
இது ஒர்
உண்மைக் கதை
ம.அருளினியன்
வித்யா
ராணி... 2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான
தாக்குதல் தொடங்கி 'ஜெயசிக்குறு எதிர் சமர்’ என ஈழத்தின் பெரும் சமர்களிலும்
பங்கெடுத்தவர். ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி.
ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன 'சோதியா படையணி’யின் முன்னணித்
தளபதிகளில் ஒருவர். ஜான்சி ராணி, வேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத்
தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு
பாலியல் தொழிலாளி.
(மேலும்....)
கார்த்திகை
02, 2012
அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தல்
(கி.இலக்குவன்)
நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல் நவம்பர்
6 ந்தேதி நடை பெறவுள்ளது. இத்தேர்தலில் தற்போதைய குடியரசுத்தலைவரான பாரக் ஒபாமா
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக
குடியரசுக்கட்சியைச்சேர்ந்த மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இவர்களைத் தவிர
லிபர்ட்டேரியன் கட்சியைச் சேர்ந்த காரி ஜான்சனும், கிரீன் கட்சியைச் சேர்ந்த ஜில்
ஸ்டெயினும் களத்தில் இருக்கின் றனர்.பெயரளவில் இவை இரண்டு கட்சிகளாக செயல்பட் டாலும்
ஒரே கட்சியின் இரண்டு வலது சாரிப் பிரிவுகளாகத்தான் இவற்றைக் கருதவேண்டியுள்ளது.
தங்கள் நாடு தான் மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று அமெ ரிக்கா பீற்றிக்கொண்டாலும்
தேர்தல் முறைகேடுகள் பலவும் கடந்த காலங் களில் அரங்கேறியுள்ளதை உலகம் கண் டது.
தங்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள் என்று கருதப்பட்ட லட்சக்கணக்கான வாக்காளர்கள்
பட்டியலிலிருந்தே நீக்கப் பட்ட வரலாறும் உண்டு. பலநூறு லட்சம் கோடி டாலர் பணவசதி
இல்லாத எவரும் அமெரிக்கத்தேர்தலில் போட்டியிட முடியாது.
(மேலும்....)
கார்த்திகை
02, 2012
மகுடியை இசைத்ததும் பாம்பு ஆடுவது ஏன்?
பாம்புகளுக்குச் செவிகள் கிடையாது. காற்றில் கலந்து
வருகின்ற ஓசையை உணரும் திறன் பாம்புகளுக்குக் கிடையாது. ஆனாலும் தமிழில் ‘கட்செவி’
என்று பாம்பைக் குறிப்பிடுவதுண்டு. அதாவது, பாம்புகள் தமது கண்ணால் தான் ஒலியை
உணருவதாக அக்கால மக்கள் நம்பியிருக்கக் கூடும். பாம்புகளுக்குச் செவிகள்
இல்லையென்றால் அவை எவ்வாறு ஓசையை உணர்கின்றன? தரையின் ஊடான அதிர்வுகளை
கிரகித்துக்கொள்ளும் திறன் பாம்புக்கு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எதிரிகள் தாக்குவதற்கு வரும் போது தரை யின் ஊடான அதிர்வை உள்வாங்கிக்கொண்டே பாம்பு
தப்பியோடுகிறது. அல்லது திருப்பித் தாக்குவதற்கு வருகிறது. அப்படியானால்
பாம்பாட்டியின் மகுடி இசைக்கு பாம்பு எவ்வாறு ஆடுகிறது என்ற கேள்வி எழலாம். அதுவும்
பழங்கால நம்பிக்கை தான். மகுடி இசை கேட்டு பாம்பு ஆடுவதில்லை. மகுடியை அப்படியும்
இப்படியும் பாம்பாட்டி அசைப்பதனால் பழக்க தோஷத்திலேயே பாம்பும் ஆடுகிறது. இது தான்
உண்மை. இரவில் இருட்டில் நடக்கும் போது காலடியை தரையில் நன்கு ஊன்றி வைத்து
நடக்குமாறு கிராமங்களில் கூறுவதுண்டு. வழியில் பாம்பு கிடந்தால் அதிர்வை உணர்ந்து
விலகி விடுமென்ற நம்பிக்கை தான் அது.
கார்த்திகை
01, 2012
ஆனந்தபுரத்தில் புலிகள் விதைத்துச் சென்ற குண்டொன்று வெடித்ததில் ஆனந்தமாக
ஓடித்திரிந்த சிறுமி பலி... தொடரும் தொடர் துயரங்கள் வேண்டுமா...??? மனித உள்ளங்களே
சிந்தியுங்கள்...!!!
முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஆனந்தபுரம்
என்னுமிடத்தில் கடந்த சனிக்கிழமை குண்டொன்று வெடித்ததில் பத்து வயது சிறுமி
ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி உயிரிழந்துள்ளார் என முன்னர் செய்தியில் அறியப்பட்டது.
ஆனந்தபுரம் 5 ஆம் வட்டாரத்தில் உள்ள பச்சை புல்மோட்டை என்னுமிடத்தில் கடந்த போரில்
பெற்றோரை இழந்து மீள்குடியேறியுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சகோதரன் தனது
காணியில் மண்டிக்கிடந்த புல்லை வெட்டிச் சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது,
பாடசாலை விடுமுறை நாளான அன்று அவருக்குத் தண்ணீர் கொண்டு வருவதற்காகச் சென்ற நன்றாக
கல்வியை தொடர்ந்து வந்த அவரது சகோதரியாகிய ஜோசப் நிக்கலஸ் நிஷாந்தினி என்ற சிறுமியே
இந்த வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
(மேலும்....)
கார்த்திகை
01, 2012
உங்கள் அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து
திணிக்கவேண்டாம் - CTC
அன்பான தமிழ் மக்களே!
கடந்த இரு தசாப்தகாலமாக நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாளும் அதையொட்டி வரும் வாரமும்
பல்வேறு உணர்வு பூர்வமான நிகழ்வுகளால் உலகமெங்கும் உள்ள தமிழர்களால்
கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்த வருடம் நவம்பர் மாதம் முழுவதும் மாவீரர்
மாதமாக கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கனடாவிலும் தமிழகத்திலும் சிலரால்
முன்வைக்கப்பட்டு இருக்கிறது. கனடிய தமிழர் பேரவையைப் பொறுத்தமட்டில் நவம்பர் மாதம்
முழுவதும் நினைவு மாதமாக கடைப்பிடிக்க விரும்புபவர்கள் அதை அப்படியே நினைவு
கூரும்பட்சத்தில் தங்களது இந்த அபிப்பிராயத்தை மற்றவர்கள்மேல் வலிந்து திணிக்கக்
கூடாதென கேட்டுக் கொள்கின்றது.
(மேலும்....)
கார்த்திகை
01, 2012
பள்ளிவாசல் தீ வைக்கப்பட்டமை முஸ்லிம்களை
வேதனைக்குள்ளாக்கியுள்ளது
அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும்
வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை
அரசாங்கம் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். (மேலும்....)
கார்த்திகை
01, 2012
நிலம்
புயலில் சிக்கி இலங்கை கடற்பரப்பில் மூழ்கியது வியட்னாம் கப்பல்
நிலம் புயலில் சிக்கிய வியட்னாமுக்குச் சொந்தமான
சரக்குக் கப்பலொன்று இலங்கை கடற்பரப்பில் நேற்று மூழ்கி விபத்துக்குள்ளாகியது. இதில்
22 பேர் பயணித்த நிலையில் கப்பலின் கப்டன் உள்ளிட்ட 4 மாலுமிகள் காணாமற் போயுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தியாவுக்கு 6500 தொன் மரம் ஏற்றிச்
சென்ற சாய்கோன் குயின் என்ற சரக்குக் கப்பலே இலங்கை கடற்பரப்பில் மூழ்கியுள்ளது.
அதிகாலை 12.15 மணியளவில் இலங்கை கடற்பரப்பில் பயணம் செய்து கொண்டிருந்தபோது ஆபத்தில்
சிக்கியுள்ளதாக இந்தக் கப்பலில் இருந்து உதவி கோரி அழைப்பு விடுக்கப்பட்டது.
நிலம் புயலில்
சிக்கியதால் இந்தக் கப்பலுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து இலங்கை அமெரிக்க கடலோரக் காவல் படை மற்றும் கப்பல்களின் உதவியுடன்
தேடுதல் நடத்தப்பட்டது.
கார்த்திகை
01, 2012
சீரற்ற காலநிலை
நாடு
முழுவதும் இதுவரை 49,788 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள
அனர்த்தம் காரணமாக இதுவரை 13,074 குடும்பங்களைச் சேர்ந்த 49,788 பேர்
பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதில் முலட்டியான மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு
உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதென அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில்
5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 503 குடும்பங்களைச்
சேர்ந்த 1721 பேர் 9 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை வடக்கில்
மாத்திரம் 35 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மூன்று சிறு குளங்கள்
உடைப்பெடுத்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.
கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக அதிகரித்த மழை
வெள்ளம் ஏற்பட்டதனால் இக்குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.
மூதூர் பிரதேச செயலாளர்
பிரிவில் உள்ள கலக்கேணிகுளம் மற்றும் பாலக்கட்டு குளம் என்பனவும் திருகோணமலை
வடக்கில் உள்ள வெகட்வெற்றிவேவ என்னும் குளமுமே உடைப்பெடுத்துள்ளன என
அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இக்குளங்கள் மிகவும் அண்மையில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை
01, 2012
நீதித்துறை செயற்பாடுகள் தமிழில் -
வாசுதேவ
தமிழ் கைதிகள் தமது நீதித்துறை செயற்பாடுகளின்போது முகங்கொடுக்கும் மொழிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடி நடவடிக்கை எடுக்கப்போவதாக தேசிய மொழிகள் மற்றும்
சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நீதிமன்ற
மொழிப்பெயர்ப்பாளர்களை நியமிக்கப்போவதாகவும் விசாரணைகளை தமிழில் நடத்தப்போவதாகவும்
குற்றப்பத்திரிகைகளை தமிழில் தயாரிக்கப்போவதாகவும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில்
தமிழ்க் கைதிகளை நேற்று புதன்கிழமை பார்வையிட்ட போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
தமது வழக்குகள் தொடர்பாக நீதித்துறை செயன்முறைகள் தனி சிங்களத்தில் காணப்படுவதால்,
தாம் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாக தமிழ்க் கைதிகள் சுட்டிக்காட்டினர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்த தமிழ்
சந்தேகநபர்களின் நீதிமன்ற செயன்முறையில் ஒரு புதிய ஒழுங்குகளைக் கொண்டுவர விசேட
நீதிமன்றங்களை அமைக்கவுள்ளதாக அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்தார்.
கார்த்திகை
01, 2012
அமெரிக்கா உட்பட பல
நாடுகளில் சூறாவளி ஏற்பட புவி வெப்பமடைவே காரணம்
புவி வெப்பமடைதல் காரணமாகவே அமெரிக்கா உட்பட பல நாடுகளில் சூறாவளி மற்றும் வெள்ள
அனர்த்தங்கள் ஏற் பட்டுள்ளன. நியூயோர்க் நகரத்திற்கு ஏற்பட்ட அனர்த்தம் எதிர்
காலத்தில் இலங்கைக்கும் ஏற்படலாமென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க
தெரிவித்தார். உலக சனத்தொகை 7 பில்லியனாக உள்ள போதும் எரிசக்தி பயன்பாடு உலக
சனத்தொகையை விட 120 மடங்காக அதிகரித்துள்ளதாக கூறிய அவர் எரிசக்தி பயன்பாடு
அதிகரிப்போடு புவி வெப்பமடைவது அதிகரித்து இத்தகைய அனர்த்தங்களும்
அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
(மேலும்....)
கார்த்திகை
01, 2012
செவ்வாய் கிரகத்தில் பூமியையொத்த மண்வகை
செவ்வாய் கிரகத்தில் பூமியை ஒத்த மண் வகை இருப்பதை
அங்கு ஆய்வு மேற்கொள்ளும் நாசாவின் ‘கியூரியா சிட்டி’! இயந்திரம் கண்டறிந்துள்ளது.
செவ்வாய்க் கிரகத்தின் மண்மாதிரியைஆய்வுக்கு உட்படுத்தியிருக்கும் கியூரியாசிட்டி
அந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகளை பூமிக்கு அனுப்பியுள்ளது.
(மேலும்....)
கார்த்திகை
01, 2012
சக்தி வாய்ந்த படகு, 5 ஆட்லெறிகள் வெள்ளமுள்ளிவாய்க்காலில் மீட்பு
புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி
வாய்ந்த படகு மற்றும் 05 ஆட்லெறிகளை இராணு வத்தினர் வெள்ளமுள்ளிவாய்க்கால்
பகுதியிலிருந்து நேற்று மீட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில், இறுதிக் கட்ட
மனிதாபிமான நடவடிக்கைகள் இடம்பெற்ற வெள்ளமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மறைத்து
வைக்கப்பட்டிருந்த நிலையிலிருந்தே மேற்படி படகும் ஆட்லெறிகளும் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்டுள்ள படகு அதிசக்தி வாய்ந்த இரண்டு இயந்திரங்களுடன் இயங்க கூடியதெனவும்
அதற்குள் அதிசக்தி வாய்ந்த ஐந்து பீரங்கி துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்ப
தாகவும் இராணுவ தலைமையகத்திலுள்ள ஊடகப் பிரிவு தெரிவித்தது. இன்று வியாழக்கிழமை படகு,
பீரங்கிகள் யாவும் ஊடகங்களுக்காக காட்சிக்கு வைக்கப்படுமெனவும் அதன் அதிகாரியொருவர்
கூறினார்.
கார்த்திகை
01, 2012
சான்டி புயலுக்கு பின்
வழமைக்கு திரும்பியது நிய+யோர்க்: 2000 கோடி டொலர் சேதம்
அமெரிக்காவில் சான்டி புயல் கடும் சேதங்களை எற்படுத்தியுள்ள நிலையில் நேற்று மக்கள்
இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். வடகிழக்கு அமெரிக்காவை பாதித்த சான்டி புயல்
காரணமாக 2,000 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக
கணிக்கப்பட்டுள்ளது. எனினும் வியாபார தளங்கள் மற்றும் நிறுவன ங்கள் நேற்றைய தினம்
திறக்கப்பட்டதோடு விமான சேவைகள், அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளும்
திறக்கப்பட்டன. இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்த நியூயோர்க் பங்குச்
சந்தை நேற்று தனது வழமையான நடவடிக்கையை ஆரம்பித்தது.
(மேலும்....)
கார்த்திகை
01, 2012
காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு இரண்டாம் இடம்
-
சோனியா
மத்திய மந்திரி சபையில் அண்மையில் மாற்றம்
செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியான போதே காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரான ராகுல்
காந்திக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று நம்பப்பட்டது. ஏற்கனவே இரண்டுக்கு
மேற்பட்ட தடவை மந்திரி பதவி தன்னை தேடி வந்த போதும், அதை ராகுல் காந்தி நிராகரித்து
விட்டார். தற்போது காங்கிரஸ் பல்வேறு நெருக் கடிகளில் சிக்கி தவித்து வரும் நிலையில்
ராகுல் காந்தி முக்கிய மந்திரியானால், கட் சியை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி
விடலாம் என்று மூத்த தலைவர்கள் எண்ணி னார்கள். ஆனால் இந்த முறையும் மந்திரி பதவியை
ஏற்க ராகுல் காந்தி மறுத்து விட்டார்.
(மேலும்....)
கார்த்திகை
01, 2012
உக்ரைன் நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை நோக்கி ஆளும் கட்சி
உக்ரைன் நாடாளுமன் றத்திற்கான தேர்தல் ஞாயி றன்று
நடைபெற்றது. மொத்தம் 450 இடங்களை கொண்ட நாடாளுமன்றத் தில் பாதிக்கு மேற்பட்ட இடங்கள்
அந்நாட்டின் தேசிய அரசியல் கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் இடம்பெறுவர். மீதமுள்ள
இடங்களை தனிப்பட்ட முறையில் சுயேச்சையாக நின்று வெற்றி பெறுபவர்கள் பூர்த்தி செய்வர்.
அதன்படி ஞாயிறன்று நடைபெற்ற தேர்தலில் ஆளும் பிரதமர் விக்டர் யுனுகோவ்ச் தலைமை
யிலான ரஷ்ய சார்பு கட்சி அதிக இடங்களை கைப் பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் நிலை
ஏற்பட் டிருக்கிறது. அதன் படி பிரத மர் விக்டர் யுனுகோவ்ச் சினு டைய கட்சி 36. 6
சதவீத வாக்குகளை பெற்றிருக் கிறது. அதற்கு அடுத்தபடி யாக ஊழல் குற்றச்சாட்டில்
சிறையில் இருக்கும் முன் னாள் பிரதமர் யுலியா ட்ய மோஷின்கோவின் பாதர் லேண்ட கட்சி
21 சதவிகித வாக்குகளை பெற்றிருக் கிறது. 15.3 சதவிகித வாக்கு களை பெற்று கம்யூனிஸ்ட்
கட்சி மூன்றாவது இடத்தை பெற்றிருக்கிறது. பாக்ஸிங் சாம்பியன் விடலி க்லிஸ்ஸோ கோ
வின் புதிய உதார் ( பஞ்ச்) கட்சி 12. 6 சதவிகித வாக்கு களை பெற்றிருக்கிறது. முழு
மையான தேர்தல் முடிவு கள் அறிவித்தவுடன் ஆளும் கட்சியான விக்டர் யுனு கோவ்ச் கட்சி
மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படு கிறது. இத்தேர்தலில் மாகாண
கட்சிகளே அதிக அளவிலான இடங்களை பெறக்கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.