Contact us at: sooddram@gmail.com

 

ஆனி 2015 மாதப் பதிவுகள்

ஆனி 30, 2015

மாற்றுக் கருத்துக்களுக்கான களத்தையும் ஏற்படுத்திக் கொடுப்பது சூத்திரம் கடைப் பிடிக்கும் தர்மம். கட்டுரைகள் பற்றிய மாற்றுக் கருத்துக்களை செய்தித் தொடர்பு தர்மங்களுக்கு உட்பட்டு எழுதி அனுப்பினால் சூத்திரம் பிரசுரிக்க தயாராக இருக்கின்றது - ஆர்

வாசகர் கருத்து

அன்புடன் சூத்திரம் ஆசிரியருக்கு,

தங்கள் வெப்சைற்றில் சஞ்சயன் மாதவன் என்பவர் எழுதிய தம்மைத்தாமே மலினப்படுத்தும் அரசியல் சதுரங்கம் என்ற கட்டுரை வாசித்தேன். கட்டுரையில் ஆண்டாண்டு காலமாக தமிழர்களை ஏமாற்றி வரும் கூட்டமைப்பை பற்றி எதுவும் சொல்லாமல் எத்தனையோ சிரமங்கள் உயிர் அச்சுறுத்தல்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வரும் டக்ளசை தூற்றி எழுதப்பட்டுள்ளது. இது முறையல்ல. தென்னிலங்கையில் பொது எதிரியான யு.என்.பிக்கு எதிராக மைத்திரியையும் மகிந்தவையும் ஒற்றுமைப்படுத்த முயற்சி நடக்கிறது. அதுபோல வட இலங்கையில் பொது எதிரியான ரி.என.ஏக்கு எதிராக ஆனந்தசங்கரி, டக்ளஸ், சுகு ஆகியோர் ஒரு அணியாக வரும் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்துள்ளனர். இந்த நிலைமையில் இந்த ஐக்கியத்தை குலைக்கும் வகையில் அதில் ஒருவரைப் பற்றி சூத்திரத்தில் தாக்கி எழுதுவது முறையல்ல. சில உள் நோக்கம் கொண்ட சந்தர்ப்பவாதிகள் தமது காழ்ப்புணர்ச்சிகளை தீர்த்துக் கொள்ள சூத்திரம் களம் அமைத்து கொடுப்பது அதன் நெறி முறைகளுக்கு எதிரானது. தயவுசெய்து இப்படியான தவறுகளை வருங்காலத்தில் தவிர்க்கவும்.
நன்றி
அன்புடன்
சந்திரன்

26ஆவது வீரமக்கள் தினம்..!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 05.07.2015 ஞாயிறன்று மதியம் 2.30க்கு சுவிஸ் சூரிச் மாநகரின் GZ Affoltern, Bodenacker 25, Affoltern-Zürich என்னுமிடத்தில் புளொட்டின் 26ஆவது வீரமக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட உள்ளதென்பதை சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு இத்தால் அறியத் தருகின்றோம். மேற்படி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக போராட்டத்தில் தமது இன்னுயிரை ஈந்த அனைவருக்குமான அஞ்சலி நிகழ்வு, மலரஞ்சலி, மௌனஅஞ்சலி என்பன இடம்பெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளின் வினோதவுடைப்போட்டி, நடன நாட்டியங்கள், நாடகங்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.
அன்றையதினம் (05.07.2015) காலை 8.30க்கு தமிழீழ மக்கள் கல்விக் கழகத்தினால் வீரமக்கள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்டு வரும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளது. இப் பரீட்சைக்கு இதுவரையில் தங்களைப் பதிவுசெய்யாத பிள்ளைகள் குறித்த நிகழ்வு இடம்பெறும் அன்று காலை 8.30க்கு நேரடியாகவே அங்கு வருகைதந்து தம்மைப் பதிவு செய்துவிட்டு மேற்படி பரீட்சையில் கலந்து கொள்ள முடியுமென்பதையும் அறியத் தருகின்றோம். அன்று பிற்பகல் 2.30க்கு நடைபெறவிருக்கும் வீரமக்கள் தின நிகழ்வின் போது இப் பிள்ளைகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்படவுள்ளன. தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் இன்னுயிரை ஈந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வீரமக்கள் தினம் வருடாவருடம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

PLOTE சுவிஸ் கிளை

தொடர்புகளுக்கு: 077.9485214 // 076.5838410 // 077.9125203 // 078.9167111 // 078.9354692

நாட்டைக் கட்டியெழுப்ப உச்ச உதவி புரிவேன், பதவிகளுக்காக பேராசைப்படுபவள் நான் அல்ல - சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 

ஜனநாயகம் நிறைந்த நாடொன்றாக எமது நாட்டை கட்டியெழுப்ப உச்சக்கட்ட உதவிகளை புரிவேனே தவிர மற்றவர்களைப் போல் பதவியில் இருக்க வேண்டுமென்று எந்தப் பேராசையும் எனக்குக் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். தனது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று (29) கண்டிக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து அங்கு இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டனர். அதன் பின் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மஹாநாயக்க தேரர்களினது ஆசிர்வாதங் களையும் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறினார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்: எனது அரசியல் வாழ்க்கையில் நான் எவ்வளவோ பணம் பொருள் என செலவழித்துள்ளேன். நான் இருந்ததை அழித்துள்ளேனே தவிர சம்பாதிக்க வில்லை. நான் ஒருபோதும் மனிதப் படுகொலை யிலேயே வெள்ளை வான் சம்பவங் களிலோ அல்லது வேறெதும் ஊழல் மோசடிகளிலோ ஒருபோதும் ஈடுபட வில்லை. அதனால் எனக்கு பதவிக்கு வருவதற்கு எந்த ஆசையும் கிடையாது. இவ்வாறான ஊழல் மோசடிகளை மறைப்பதற்கும் அதனை மூடிவிடு வதற்காகவே சிலர் பதவி மோகம் கொண்டு மீண்டும் பதவிக்கு வர எத்தனித்தனர் எனவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினர்.

புலிகளின் மாவீரர் குடும்பத்துக்கு தண்ணீர் காட்டிய மாவை!

அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு கிராமத்தில் உள்ள ஸ்ரீசித்தானைக் குட்டி சுவாமிகள் ஆலயத்துக்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் 60 வயதுக்கு மேல் மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். பழைய காலத்து சைக்கிள் ஒன்றை மெல்ல மிதித்து ஓட்டுகின்றார். ஒரு கையில் கரிக் கட்டையை போட்டு செயற்படுத்துகின்ற அயன் பெட்டி ஒன்றை வைத்து இருக்கின்றார். கடந்து செல்வோருக்கு தலையை பதித்து பணிவுடன் வணக்கம் கூறுகின்றார். இவரை எல்லோரும்  முருகன் என்று அழைக்கின்றார்கள். முருகனின் பூர்வீகம் காரைதீவுதான். ஆனால் வன்னியில் இருந்து வந்தவர் என்றே அறியப்படுகின்றார்.(மேலும்....)

ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டி - சோமவன்ச அமரசிங்க

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே ஜனாதிபதி பதவியில் ஆசை கொண்டி ருந்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் தாம் ஆசை கொண்டிருக்கவில்லை என்று ஜே. வி.பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் புதிதாக அமைக்கப்பட்ட தமது கட்சியான ஜனதா சேவக பக்சயவின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்த மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிப்பதில் தவறு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார். ஜே. வி. பி. 5 உறுப்பினர்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. சமூக நீதிக்காக அமைக்கப்பட்ட இந்த கட்சி இன்று அரசிய லில் தமது அடையாளத்தை இழந்துள்ளதாக அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். எனவே இதனை தமது புதிய கட்சியின் மூலம் நிவர்த்தி செய்யப்போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜே. வி. பி. கட்சி தனது கொள்கை களிலிருந்து முற்று முழுதாக மாறி பணத்தை முதனிலையாகக் கொண்டு செயற்பட்டு வருவதாக சோமவன்ச அமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிட்டார்.

குடாநாட்டில் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பு

போதைக்கு அடி மையாகியுள்ள பலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவது அதிகரித்து ள்ளதாகவும் நான்கு மணித்தியாலத்திற்கு ஒருவர் சிகிச்சைக்கென யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும் டாக்டர் சிவன் சுதன் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை யாழ். வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மத்தியில் கருத்துத் தெரிவித்த வைத்தியர் சுதன். வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அரைவாசி கட்டிலுக்கு மேல் தற்கொலை முயற்சியில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை பெறுபவர்களே உள்ளனர். இதனால் இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கபெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றோம். அது மட்டுமன்றி வைத்தியசாலை விடுதிகளில் தங்கி சிகிச்சை பெறுபவர்களில் பலர் போதை பொருள் பாவனையால் ஏற்பட்ட நோய்களுக்கே சிகிச்சை பெறுகின்றனர்.மது மற்றும் போதை பொருள் பாவனையால் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள் வீதி விபத்துக்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காயங்கள் என்பவற்றுக்கே அதிகமானவர்கள் சிகிச்சை பெறுகின்றார்கள்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை ஆரம்பித்து வைப்பு

சென்னை மக்களின் நீண்டகால கனவான மெட்ரோ ரயில் போக்குவரத்து நேற்;று துவங் கியது. முதல்வர் nஜயலலிதா வீடியோ கொன் பரன்ஸ் மூலம் துவக்கி வைத்தார். மாநகரின், 376 ஆண்டுகால வரலாற்றில் மற்றொரு புதுமையாக இந்த சேவை அமைகிறது. தமிழக தலைநகரான சென்னை பல்வேறு சிறப் புக்களை கொண்டது. இந்திய ரயில் போக்கு வரத்தின் பிறப்பிடமே சென்னை நகரம் தான். டிராம் வண்டியில் துவங்கி மேம்பால ரயில் சேவை வரை காலத்திற்கேற்ப பல்வேறு வசதிகள் கொண்டு வரப்பட்டன. இந்த வகையில் நகரின் 376 ஆண்டுகால வரலாற்றில் மற்றொரு புதுமையாக மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான குளுகுளு வசதியுடன் கூடிய மெட்ரோ ரயில் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது. துவங்குகிறது. பணத்தை வழங்கினால் டிக்கெட் தரும் இயந்திரம்; ஏறி நகரும் படிக்கட்டு; அனைத்து பெட்டி களிலும், குளு குளு 'ஏசி' என, தமிழக ரயில் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை இந்த ரயில் சேவை தரப்போகிறது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலால் துவக்க திகதி தள்ளிப் போனது. இடைத்தேர்தல் முடிந்துள்ள நிலையில் மெட்ரோ ரயில் சேவையை துவக்க அனுமதி கிடைத்ததால் நேற்;று சேவை துவங்கியது. மெட்ரோ ரயில் டிக்கெட்; கட்டணம் அறிவிக்கப் பட்டுள்ளது. அதிகபட்ச கட்டணம்; ரூ. 40, குறைந்தது ரூ. 10.

கிறீஸ் வங்கிகளுக்கு பூட்டு

சர்வதேச பங்குச் சந்தைகளில் திடீர் சரிவு

கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டு, பணத்தை வங்கிகளிலிருந்து எடுப்பதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கிரேக்கத்திற்கான அவசர கால நிதியை நீட்டிக்க முடியாது என்ற ஐரோப்பிய மத்திய வங்கியின் முடிவை தொடர்ந்து கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டன. இதனையடுத்து நேற்று ஆரம்ப கட்ட வணிகத்தில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் கிட்டத்தட்ட 4 சதவித அளவுக்கு வீழ்ச்சி கண் டன. எனினும் சிறிது நேரம் கழித்து சிறு முன்னேற்றம் இருந்தது. முன் னதாக, ஆசிய பங்குச் சந்தைகளும் கணிசமாக வீழ்ச்சிகண்டன. இந்த வாரம் முழுவதும் கிரீஸ் நாட்டில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்று அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. பணம் எடுக்கும் இயந்திரங்களும் நேற்று நண்பகல் வரை மூடப்பட் டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த இயந்திரங்கள் இயங்க ஆரம்பித்த பின்னர் ஒரு நாளைக்கு 60 யுரோக்கள் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. எனினும் வெளிநாட்டு வங்கி அட்டைகள் வைத் திருப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு இருக்கவில்லை. கடன் பிணையை பெறுவதற்கு கிறீஸ் மற்றும் ஏனைய யூரோ வலய நாடுகளுக்கு இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த் தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. கடன் பிணையை பெறு வதற்கு நாட்டில் முன்னெடுக்க வேண்டிய பொருளாதார சீர்திருத் தங்கள் குறித்து சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கு கிறீஸ் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரான்சில் 25 வது தியாகிகள் தினம்

France 2015 TT2France 2015 Thiyakikal Thinam1இன்று (28 -06 -2015) மாலை: LAGNY SUR MARNE இல் உள்ள LA TANIERE உணவக மண்டபத்தில் 25வது வருட தியாகிகள் தினம் பத்மநாபா EPRLF பிரான்சு கிளையினரால் நினைவு கூரபட்டது. தோழர் கிருபன் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் தோழர்கள் நண்பர்கள் ஆதரவாளர்கள் பலர் உரை நிகழ்த்தினர். விபரங்கள் பின்னர் பதிவிடப்படும்

ஆனி 27, 2015

தம்மை தாமே மலினப்படுத்தும் அரசியல் சதுரங்கம்

(மாதவன் சஞ்சயன்)

அண்மையில் நடந்த மின்னல் நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்துரனும் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொண்டனர். ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமையும் என எதிபார்த்து ஏமாந்தேன். காரணம் அதற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் 20தாவது திருத்தம் பற்றி இவர்கள் கலந்துரையாடி தமது பாராளுமன்ற பிரதி நிதித்துவத்துக்கு பாதகம் வரக்கூடாது என ஒத்த முடிவு எடுத்தது போல எம் மக்கள் பிரச்சனையிலும் எதிர்காலத்தில் தமக்குள் ஏற்பட கூடிய இணக்க அரசியல் மூலம் ஒரு நல்ல முடிவை எப்படி பெறுவது என்பது பற்றி பேசுவர் என எதிர்பார்த்தேன். ஓர் விடயத்தை சீர்தூக்கி பார்க்க வாதம் புரியலாம் விதாண்டவாதம் பயனற்றது. அந்த நிகழ்ச்சியில் டக்ளஸ் அதைத்தான் செய்தார். தெற்குடன் இணக்க அரசியல் செய்யும் அவரால் தமிழர் தரப்புகளுடன் குறிப்பாக கூட்டமைப்புடன் எதிர்ப்பரசியல் செய்வதும் அவர்களை விமர்சிப்பதுமே நோக்கமாக காணப்பட்டது. (மேலும்....)

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க அச்சக கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.  நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளிவரவிருக்கும் அந்த விசேட வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி வெளியிடப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்படவிருப்பதனால் அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓகஸ்ட் 17ஆம் திகதி பொதுத்தேர்தல்

நாடாளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடத்தப்படும் என்று மிக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம் 52-66 நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்தி புதிய நாடாளுமன்றத்தை தெரிவு செய்யவேண்டும். ஓகஸ்ட் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 52 நாட்கள் நிறைவடைகின்றன.  அதன்பிரகாரம் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 6முதல்- ஜூலை 15 வரை வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும். பொதுத்தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு செப்டெம்பர் 1 ஆம் திகதி நடத்தப்பட்டவேண்டும்.

இரணைமடு நன்னீரை கடலுக்குள் திறந்து விடும் ஆற்றலுள்ளவர்கள், கழிவு நீரை சாக்கடையில் இணைத்துவிட மறுப்பது ஏன்?

இரணைமடு நன்னீரை கடலுக்குள் திறந்து விடும் கூட்டமைப்பினர் உணவக கழிவு நீரை சாக்கடை வாய்க்காலில் இணைத்து விடுவதற்கு கூட்டமைப்பின் வலிகாமம் தெற்கு பிரதேசசபையினர் தடுத்து வருவதாக இரணைமடு நன்னீரை கடலுக்குள் திறந்து விடும் கூட்டமைப்பினர் உணவக கழிவு நீரை சாக்கடை வாய்க்காலில் இணைத்து விடுவதற்கு கூட்டமைப்பின் வலிகாமம் தெற்கு பிரதேசசபையினர் தடுத்து வருவதாக சுன்னாகம் நகர உணவக உரிமையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வலிகாமம் தெற்கு பிரதேசசபை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள தமிழரசுக் கட்சியின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. இங்குள்ள உணவகங்களின் கைகழுவும் கழிவு நீரை சாக்கடை வாய்க்காலில் சேர்த்து விடுவதற்கு பிரதேசசபையினர் தடுத்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

இஸ்லாம் என்ன கூறுகிறது..??? இறைதூதர் முஹம்மது(ஸல்) யார்..??

இந்து, பௌத்தத்திற்குப் பிறகு தற்போது இஸ்லாமை ஆழமாகப் படித்து வருகிறேன் . முகமது நபி அடிப்படையில் ஒரு புரட்சியாளரே.மக்களுக்கிடையே நிலவி வரும் அநீதியான ,சரிசமமற்ற வேறுபாடுகளுக்கு ,சுரண்டல்களுக்கு (தனது சொந்த இனத்திற்கும் )எதிராக வெகுண்டெழுந்தவர்.  பாலைவனப் பிரதேசத்தில் பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையில் தொடர்ந்த சச்சரவுகள் ,வன்முறைகள்,தாக்குதல்கள் நிலவிவந்த சூழலில் ஒரே கடவுள் என்ற சித்தாந்தத்தின் கீழ் அனைவரையும் ஒருங்கிணைத்து , அதை ஏற்றுக்கொண்டவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கவேண்டும் ,தாக்குதலில் ஈடுபடக்கூடாது என்ற அடிப்படையில், கலவர பூமியான அரேபியப் பாலைவனத்தில் அமைதியை ஏற்படுத்தியவர் .
கிறித்தவர்கள் இந்த கூட்ட்டமைப்பில் சேர்ந்த பொழுது ,மதம் மாறாமலேயே அவர்களுக்கும் அந்தப் பாதுகாப்பை அளித்தவர் . அவர்களை இஸ்லாம் 'People of the book' (Bible )என்று அவர்களது சொந்த அடையாளங்களுடனே அங்கீகரிக்கிறது. (மேலும்....)

இலக்கியம், ஈழம்: குய்யோ,  முய்யோ

இன்று இலக்கிய விழா ,இன்று மட்டுமல்ல இன்னும் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது . யாழ்பாணம் . கலைத்தூது கலையகத்தில் , டவுனில் இருந்து கொஞ்ச தூரத்தில் தான் உள்ளது. ஆனால் 20 பேரும் 30 பேரும் கலந்து கொண்டால் என்ன செய்வது . முதியோர் இல்லத்திற்குள் போவது போல் இருந்தது , வெகு சிலரே எனது வயதினர் / மிகவும் சோகமாக இருந்தது . உண்மையில் வளர்ந்தவர்கள் சொல்வதை வளர்ந்தவர்களே கேட்பது இந்த சமூகத்தில் என்ன வித மாற்றத்தை ஏற்படுத்த முடியும் . இலக்கியத்தை மட்டும் மையப்படுத்தியதாக இல்லை விழா . இணையம் - ஊடகம் - சினிமா - கான்பியக் கலைகள் தொடர்பாகவும் பல்வேறு உரையாடல்கள் நடந்தன . சரி பிழை ,குறை நிறைகளுக்கு அப்பால் , நாம் ஒன்று சேர்ந்து சிந்திக்கவும் அறிவுப் பரிமாற்றத்தை மேற்கொள்ளவும் இந்த மாதிரியான நிகழ்வுகள் கண்டிப்பாக தேவை . நான் ஏழை , எனது நண்பர்களும் அப்படித் தான் . எங்களால் இப்படி ஒரு நிகழ்வை ஒழுங்கு படுத்த முடியாது , நான் நிகழ்ச்சி நிரலை பார்த்து விட்டு , சந்தோசத்தில் நேற்று இரவு மிதந்து கொண்டிருந்தேன் , சிறிய வயதில் கல்யாண வீடுகளுக்கு முதல் நாள் இரவு எல்லோரையும் நாளை சந்திக்கப் போகிறோமே என்ற ஒரு சந்தோசம் இருக்குமே அப்படி . ஆகவே இப்படியான நிகழ்வுகள் ஒரு இலவச அறிவு பிரயோக வெளி . நாம் இவற்றை பயன்படுத்த வேண்டும் . இவற்றை கொண்டாட வேண்டும் . எழுத்தாளர்கள் , வாசகர்கள் , சினிமா எடுப்பவர்கள் , சமூக ஆர்வலர்கள் . அறிவு தாகம் கொண்டவர்கள் .என்று எல்லோரும் வந்து ஒன்று பட்டு சிந்திக்க வேண்டும் . இதை ஒரு திருவிழாவாக மாற்ற வேண்டும் . நாளை எல்லோரையும் எதிர்பார்கிறேன் . மேலதிக விபரம் வேண்டுவோர் -0757627021 .என்னை தொடர்பு கொள்ளவும்.
(கிரிஷாந்)

ஆனி 26, 2015

விடுதலைப்புலிகளால் படுகொலை செய்யப்பட்ட

யாழ்ப்பாணம் சென்ட் ஜோன்ஸ் கல்லூரியின் முன்னாள் அதிபரை நினைவு கூரல்  - ஒரு மகனின் பிரதிபலிப்பு

1985 ஜூன் 25ல் எல்.ரீ.ரீ.ஈ யினால் எனது அன்பிற்குரிய தந்தை கொல்லப்பட்டு Rev.-Dev-Anandarajan--e1434929217411இப்போது முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அப்போதிருந்து பல விஷயங்கள் நடந்து முடிந்துவிட்டன மற்றும் எல்.ரீ.ரீ.ஈ முன்னெடுத்த வன்முறைப் பாதையை பற்றியும், மற்றும் பெரும்பான்மையான தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எதிரான அவர்களின் மனக்குறைகளுக்கு தீர்வு காண்பதற்காக எல்.ரீ.ரீ.ஈக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியதைப் பற்றியும் எங்களால் சிந்தித்துப் பார்க்க முடியும் என நான் நம்புகிறேன். ஸ்ரீலங்கா புலம் பெயர்ந்தவர்கள், இரு தரப்பினரும் கையாண்ட வன்முறை வழிகள் மற்றும் அது நம்மை எங்கு இட்டுச் சென்றது என்பதைப் பற்றிய ஒரு பாடத்தை கற்பதற்கு, ஸ்ரீலங்கா குடிமக்கள் என்ற வகையில் (தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், பறங்கியர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினர்) எங்களுக்கு ஒரு கூட்டான முதிர்ச்சி இருக்கிறதா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. (மேலும்....)

 

யாழ். மிருசுவில் 8 பேர் படுகொலை இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணம் மிருசுவில் பிரதேசத்தில் 2000ம் ஆண்டு 8 பேரை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளின் பின்னர் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி கொலை சம்பவம் தொடர்பில் 5 இராணுவ சிப்பாய்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, சுனில் ரத்நாயக்க என்ற இராணுவ சார்ஜன்ட் 8 பேரை கொலை செய்தமைக்கான போதுமான சாட்சியங்கள் இருப்பதால், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஏனைய 4 பேருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (மேலும்....)

மெல்லிசை மன்னரும், கவியரசரும்...

இந்தியா முழுவதிலும் பல இசை அமைப்பாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இந்தியாவின் எந்த மொழியிலும் தம்பி விஸ்வநாதனுக்கு இணையான ஓர் இசை அமைப்பாளரை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை.. 'ஆமாம்,.. நீ அடிக்கடி சந்திக்கும் விஸ்வநாதனைப் பற்றி இந்த வாரம் சந்தித்தேன் என்று எழுதுவதில் என்ன பொருள் ? ' என்று நண்பர்கள் கேட்கக்கூடும். காரணம் உண்டு. தம்பி விஸ்வநாதனை மூன்று வாரங்களாக நான் சந்திக்கவில்லை. இவ்வளவு பெரிய இடைவெளி எங்களுக்குள் விழுந்ததில்லை. தம்பி ஏராளமான ரீ - ரெக்கார்டிங்குகளில் மாட்டிக்கொண்டதால், இந்த வாரம்தான் சந்தித்தேன்.
உலகத்தில் எந்தப் பாகத்தில் என்ன இசை இருக்கிறது என்பது விஸ்வநாதனுக்குத் தெரியும். விஸ்வநாதனுடைய இசைக்கு நான் பாட்டெழுதத் தொடங்கி முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த முப்பது ஆண்டுகளில் தம்பியின் திறமையை நான் கண்டு வியந்திருக்கிறேன். (மேலும்....)

 

20 நிறைவேறிய பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படும் -  அரசாங்கம்

தன்னுடைய அதிகாரங்களை இழந்து அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிய ஜனாதிபதியால், 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதென்பது மிகப்பெரிய காரியமல்ல என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும்வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குர்திஷ் முன்னேற்றம்

ஐ.எஸ். கோட்டையில் பதுங்கு குழிகள் தோண்டி பாதுகாப்பு அதிகரிப்பு

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவின் கோட்டையான ரக்கா நகரை பாதுகாக்க பதுங்கு குழிகள் தோண்டி, மே லதிக படைகளை குவித்து முழு தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரி விக்கின்றன. ரக்கா நகருக்கு அருகில் இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நகர் மற்றும் வடக்காக 50 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இராணுவத் தளம் ஒன்றை குர் திஷ் போராளிகள் கைப்பற்றிய நிலையிலேயே ஐ.எஸ். இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ரக்கா நகரை சூழ பதுங்கு குழிகள் தோண்டப்படு வதை குர்திஷ் போராளிகள் உறுதி செய்துள்ளனர்.  நான்கு மாத யுத்தத்திற்கு பின்னர் ஐ.எஸ். கொபானி நகரில் இருந்து கடந்த ஜனவரியில் பின்வாங்கியது தொடக்கம் அந்தக் குழு துருக்கி எல்லைப் பகுதிகளில் குர்திஷ் போராளிகளிடம் மோசமான தோல்வியை சந்தித்து வருகிறது. சிரிய கிளர்ச்சியாளர்களின் ஆதரவுடனும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதல் உதவியுடனும் ஐ.எஸ் க்கு எதிராக போரா டும் குர்திஷ்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ரக் காவை நோக்கி மேலும் நெருங்கும் வகையில் அருகில் இருக்கும் அயின் இஸ்ஸா நகரை கைப் பற்றினர். அமெரிக்காவின் வான் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு மற்றும் உளவுத்தகவல்கள் பரிமாற்றம், வானிலிருந்து அதிக ஆயுதங்கள் போடப்பட்டதன் விளைவாகவே குர்தி ஷ்களால் ஐ.எஸ்ஸை வீழ்த்த முடிந்திருப்பதாக அமெ ரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் ஐ.எஸ். பதில் தாக்குதல் நடத்தும் திறன் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் எச்சரித் துள்ளனர்.

யாழில் புதிய புத்தக நிலையம் "படிப்பகம்" திறப்பு விழா

யூலை (2015) 4ம் திகதி ஞாயிறு பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் இலக்கம் 411 ல் (ஆரியகுளத்திற்கு அருகாமையில்) "படிப்பகம்" புத்தக நிலையம் திறப்பு விழா இடம் பெறுகின்றது. பேரினவாத அடக்குமுறைக்கெதிரான முப்பது வருட ஆயுதப் போராட்டத்தின் தோல்வி, அதனை தொடர்ந்து தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்ற நவதாராளமய பொருளாதார நுகர்வுக் கலாச்சாரம், கலாச்சார சீரழிவு என்பவை காரணமாக முன்னர் குடும்ப உறவுகள் அயலவர்களுடன் கூடி சமூகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று சமூக பற்றற்று தனக்காக மட்டுமே வாழுகின்ற- தன்னை பற்றி மட்டுமே சிந்திக்கின்ற ஒரு அபாயகரமான நிலைமைக்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர். (மேலும்....)


ஆனி 25, 2015

மதுபானத்துக்கும் புகைத்தலுக்கும் நிகராக உயிரைக் குடிக்கும் துரித உணவு பழக்கம்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜுலியஸ் மகியால் 1886ம் ஆண்டு தயாரிக் கப்பட்ட மகி இந்தியாவுக்கு வந்தது 1982இல். ஆனால் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் மகி நூடுல்ஸை விற்று நெஸ்லே நிறுவனம் சம்பாதித்தது ரூ. 1,500 கோடி என்கிறார்கள். இந்தியச் சமையலறைகளில் எந்த அளவுக்கு வேகமாக மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்கு ஓர் உதாரணம் இது. காரீயமும் மோனோ சோடியம் குளுட்ட மேட்டும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிகமாக இருப்பதாகச் சொல்லி, இப்போது மகி நூடுல்ஸுக்கு இந்தியாவில் தடை விதித்திருக்கிறார்கள். மகியினால் உண்டாகக் கூடிய ஆபத்துக் களைப் பற்றி மருத்துவர்களிடம் கேட் கிறார்கள். அவர்களும் பேசுகிறார்கள். ஆனால் இது எதுவும் புதிதல்ல. (மேலும்....)
 

தேசிய கொடியை ஏற்ற மறுத்த சங்கரி

பளைப் பொது விளையாட்டு மைதான திறப்பு விழாவின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, தேசியக் கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்தார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச சபைக்குட்பட்ட பொது விளையாட்டு மைதானம், 10 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு இன்று புதன்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இந்த மைதானத்தை திறந்து வைத்தார். மைதான திறப்பு நிகழ்வில் தேசியக் கொடியை ஏற்றும்போது, அதற்கு ஆனந்தசங்கரி மறுப்பு தெரிவித்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட சங்கரி அங்கு கருத்து தெரிவிக்கையில், 'தேசிய கொடியை இதுவரை நான் எந்தவொரு நிகழ்விலும் ஏற்றவில்லை. அதற்காக தேசிய கொடியை அவமானப்படுத்துகின்றேன் என்று கருதக்கூடாது. தேசிய கொடியை ஏற்றக்கூடிய காலம் வரும்' என்றார். 'நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சமாதானத்தை குழப்பும் வகையில் பல்வேறு கருத்துக்கள் மாணவர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அரசியல்வாதிகள் பேசி வருகின்றனர்' என அவர் மேலும் கூறினார்.

ஜனாதிபதி - கூட்டமைப்பு நேற்று திடீர் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து உரையாடினார். நேற்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் கலந்து கொண்டார். கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன் மாவை சேனாதிராஜா, எம்.ஏ. சுமந்திரன், பொன் செல்வராசா, செல்வம் அடைக் கலநாதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற இச்சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்கவேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக் கூடியதும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடை வதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது. வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது. அதிலே பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் தொடர்பாக எடுக்க வெண்டிய உடனடி நடவடிக்கைகள், பழைய போராளிகள் நாட்டிற்கு திரும்பும் போது கைது செய்யப்படுகின்றமை, பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பவற்றோடு விடுவிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாத காணி தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.

தமிழகத்திலிருந்து 47 இலங்கையர் நேற்று வருகை

திருச்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முகாம்களில் தங்கியிருந்த 47 இலங்கை தமிழர்கள் நேற்று காலை விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பியுள்ளனர். இலங்கையின் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற் றவுடன் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களை திரும்ப அழைக்கும் நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது. கடந்த மார்ச் மாதம், இலங்கை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசு உதவியுடன் கட்டப்பட்ட 27 ஆயிரம் வீடுகளை போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தி னரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த தமிழர்கள், இலங்கைக்கு செல்லத் துவங்கியுள்ளனர். தமிழகத்தில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பல்வேறு சிறப்பு முகாம்களில் தங்கியிருப்பவர்களில் 47 தமிழர்கள், இரண்டாம் கட்டமாக ஐ.நா. சபை மறுவாழ்வு மையம் சார்பில், இலங்கை திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்த 47 பேரும், காலை 9.30 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட இலங்கை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இலங்கை புறப்பட்டுச் சென்றனர்.

பாகிஸ்தானில் வெயிலுக்கு பலியானோர் 782ஆக உயர்வு

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக அனல் காற்றுடன் வெயில் கொடுமை அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாட்க ளில் மட்டும் 780 பேர் வெயில் கொடுமைக்கு பலியாகியுள்ள னர். தற்போது வரை பாகிஸ்தானில் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 780ஐ தாண்டியது. சிந்து மாகாணத்தின் பல பகுதிகளில் 110 டிகிரி முதல் 112 டிகிரி வரை வெயில் கொளுத்துகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிந்து மாகா ணத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக மாகாண தலைநகர் கராச்சியில் வெயில் வாட்டுக்கிறது. "கடும் வெயிலுக்கு வயதானோரும், தெருவோரங்களில் வசிக்கும் ஆதரவற்றோரும்தான் அதிகம் பலியாகியுள்ளனர். இவர்கள் நீர்வறட்சி, மூச்சுத் திணறல், வெப்பத் தாக்கம் காரணமாக உயிர் இழந்துள்ளனர்' என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாகாணத்தில் வெயில் கொடுமையால் பலியாவோர் எண்ணிக்கை அதிக ரித்து வருவதால் கராச்சி மற்றும் இதர நகரங்களின் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

சீன முஸ்லிம்கள் பொலிஸார் மீது தாக்குதல்: 18 பேர் பலி

சீனாவின் ஜேஜியாங் பிராந்தி யத்தில் ரமழான் நோன்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக போக்கு வரத்து சோதனைச் சாவடியில் இருக்கும் பொலிஸார் மீது முஸ் லிம்கள் கத்திகள் மற்றும் வெடி குண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தியதில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளனர். தெற்கு நகரான கஷ்கரிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இங்கு பெரும்பான்மை ஹென் சீனர் களுக்கும் உய்குர் முஸ்லிம்களுக்கும் இடையில் அண்மைய ஆண்டுகளில் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரமழான் மாதத்தில் அரச ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நோன்பு நோற்க தடை விதித்த சீன அரசு உணவகங்களை திறந்து வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கடந்த திங்களன்று சோதனைச் சாவடி மீது நடத்தப்பட்டிருக் கும் தாக்குதலில் பல பொலிஸாரும் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக ஆயுதமேந்;திய பொலிஸார் தீவிராவதிகள் என்ற குற்றச்சாட் டில் 15 பேரை கொன்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. ஜேஜியாங் பிராந்தியத்தில் இஸ்லாத்திற்கும் உய்குர் கலாசாரத்திற்கும் எதிராக அரசு மேற்கொள்ளும் கடுமையான கட்டுப்பாடுகளே அங்கு பதற்றம் தீவிரமடைய காரணம் என்று உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டுகின்றன.

ஆனி 24, 2015

நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைக்கும் சாத்தியம்?

சிலவேளையில் நாடாளுமன்றத்தை இன்று புதன்கிழமை இரவு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைக்கக்கூடும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய புதிய அரசாங்கத்தின் பதவிக்காலம் ஏப்ரலில் முடிவடைந்த நிலையில், 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பாக கட்சிகளிடையே எந்தவொரு இணக்கப்பாடும் காணப்படவில்லை. இந்நிலையிலேயே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்து, தேர்தலை அறிவிப்பார் என தெரியவருகிறது. 20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதனை கவனத்தில் எடுத்துகொண்டு புதிய நாடாளுமன்றத்தில் அந்த திருத்தத்தை நிறைவேற்றிகொள்ளும் வகையில் மக்களின் ஆணையை கோரியே நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 20ஆவது திருத்தம் தொடர்பில் கட்சிகளிடையே ஒற்றுமையில்லை என்பதை மக்களுக்கு காண்பிக்கும் வகையிலேயே இந்த திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டுவரப்பட்டதாகவும் அறியமுடிகின்றது.

புதிய உலக ஓழுங்கு

புலம்பெயர்ந்த இரகசிய பேச்சுவார்த்தை

இம்மாதம் (யூன் மாதம்) 8ந் திகதி இலங்கை வெளிவிவகார அமைச்சராலும் மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலும் உலகத்தமிழர் பேரவையாலும் வெளியிடப்பட்ட பத்திரிகை அறிக்கையொன்றின் வாயிலாக இலண்டனில் இலங்கை அரசு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, உலகத்தமிழர் பேரவைச் சார்ந்த பிரதிநிதிகளும் (உலகத்தமிழர் பேரவையென அறிக்கையில் சொல்லப்பட்டாலும், பிரித்தானியா தமிழர் பேரவைச் சார்ந்தவர்களே பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்) மற்றும் தென்னாபிரிக்கா, சுவிட்சலாந்து, நோர்வே நாட்டு பிரதிநிதிகளும் இரகசிய (ஏன் இந்த இரகசியம்?..) பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் இப்பேச்சுவார்த்தை தொடர்பாக செய்தி எந்தவொரு ஊடகத்திலும் வெளிவராததால், இப்பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் மிகவும் இரகசியமாக பேணப்பட்டுள்ளது என்பது உறுதியாகத் தெரிய வருகின்றது.
(மேலும்....) (வானவில்லை முழுமையாக வாசிக்க......)

சிங்கள மக்களின் மனங்களை வெல்ல தமிழ் தேசியத்தின் துரும்பாக டக்ளஸ், இது காலத்தின் தீர்ப்பு!

அடுத்த பொதுத் தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முக்கியஸ்தர்களில் ஒரு தொகையினர் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுடன் அணி சேர முயற்சித்து வருகின்றார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது. விடுதலைப் புலிகள் இயக்கம் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்து விட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளூர விசுவாசிக்கின்றது. இந்நிலையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் செயற்பாடுகளில் வெளிப்படையான மாற்றங்கள் வெளியில் தெரிகின்றன. குறிப்பாக புலிகள் இயக்கத் தலைமையால் வேண்டத் தகாதவர்கள், தீண்டத் தகாதவர்கள், துரோகிகள், விரோதிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்கள், தீர்ப்பளிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புப் பிரமுகர்களால் இப்போது அரவணைக்கப்பட்டு வருகின்றார்கள். (மேலும்....)

மெகி நூடில்ஸ் இறக்குமதிக்கு தடை

அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மெகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறுஇலங்கை சுங்க திணைக்களத்திடம் நுகர்வோர் அதிகார சபை நேற்று செவ்வாய்க்கிழமை(23) கோரியுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மெகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா அரசாங்க அதிபரை மாற்ற கோரி வடமாகாண சபையில் எதிர்ப்பு

வவுனியா அரச அதிபரை மாற்றக்கோரி வடமாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை அமைதியான முறையில் வெளியிட்டனர். இதில் ஆளும் கட்சியான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் இணைந்து இந்த அமைதியான எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் சபையின் வாசலை திறக்க முடியாத நிலைமை காணப்பட்டது. எனினும் சபையின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வந்த கல்வி அமைச்சர் த. குருகுலராசா மற்றும் விவசாய சுற்றுச் சூழல் அமைச்சர் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்ளாததுடன் பார்வையாளர்களாக காணப்பட்டனர். ஆனாலும் சபையை கூட்டும் முகமாக சபையின் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தான்இது சம்பந்தமாக உரியவர்களுடன் கதைத்து நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார். எதிர்க் கட்சித் தலைவர் தவராசா மற்றும் தமிழ்த் தேசிய கூட்ட¨மைப்பு உறுப்பினர் ஆனால்ட் ஆகியோர் தலைவரின் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும் என உறுப்பினர்களிடம் வேண்டியதுடன் அறைக்கு சென்று கலந்துரையாடி ஒரு முடிவை எட்டலாம் எனத் தெரிவித்தனர்.

அரசாங்கமும் எதிர்க்கட்சியும் அரசியல் தேவைக்காக 20ஐ பயன்படுத்த முயற்சி

யாழ். மாவட்ட எம்.பிக்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் 9 ஆக பேண வேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைக் கவனத்தில் கொண்டு தேர்தல் மறு சீரமைப்பின் போது யாழ். தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பி னர்களின் எண்ணிக்கையை தொடர்ந்தும் 9ஆகப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். 20ஆவது திருத்தம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். மக்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாக இடம்பெற்ற யுத்தத்தால் வடக்கில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இடம்பெயர்ந்த பலர் வாக்காளர்களாகப் பதிவுசெய்யாமல் உள்ளனர். சனத்தொகையின் அடிப்படையில் தேர்தல் மறுசீரமைப்புச் செய்தால் அங்கிருந்து தெரிவுசெய்யப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவடையும். (மேலும்....)

ஆனி 23, 2015

தோழர் பத்மநாபா

ஒரு புரட்சி அரசியற் புனிதன் தர்மத்தின் எழுச்சிக்காக வாழ்வாங்கு வாழ்ந்தவர்

(வரதராஜப்பெருமாள்)

தோழர் பத்மநாபா அவர்கள்; சரீரரீதியாக எம்மிடையேயிருந்து 25 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிக்கப்பட்டார். தாங்கள் எதைச் செய்கிறார்கள் என்று அறியாமற் செய்த ஏகாதிக்க அதிகாரவெறிபிடித்த மனோவியாதிக்காரர்களின் கொலைவெறிக்கு அவரும் அவரோடு அன்று கூடியிருந்த பன்னிரு தோழர்களும் பலியெடுக்கப்பட்டார்கள். அவர் எம்மை விட்டுப் பிரிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆனி மாதம் 19ம் நாளை அவரது அனைத்துத் தோழர்களும் அவரோடு பழகிய நண்பர்களும் அவரை அறிந்தவர்களும் மறவாது தவறாது தொடர்ந்து நினைவு கூர்ந்து கொண்டே இருக்கின்றனர். தோழர் நாபாவை நினைவு கூறுகின்ற தனித்துவமான வகையைப் பார்க்கின்ற போது ஒருவரோடு பழகியவர்கள், அறிந்தவர்கள் இந்த அளவுக்கு வேறெவரையும் தொடர்ச்சியாக மறவாது தவறாது நினைத்துப் பார்ப்பதென்பது நடப்பதில்லை. இது தோழர் நாபா அவர்கள் வாழ்ந்த வாழ்வின் பெருமைகளைக் காட்டுகிறது, அவர் பல்லாயிரக் கணக்கானவர்களின் இதயங்களில் நல் அரியாசனமிட்டு அமர்ந்திருக்கிறார் என்பதைக் கூறுகிறது.  (மேலும்....)

கொல்வார்களாம் ஆனால் கண்காணிக்கக் கூடாதாம், நேருவைக் காயும் இந்துத்துவவாதிகள் அ.மார்க்ஸ்

இன்றைய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் யதீஷ் யாதவ் என்பவரின் பெரிய கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. காந்தி கொலையை ஒட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சிறிது காலம் தடை செய்ததையும், கோல்வால்கரைச் சந்திக்க மறுத்ததையும் நேரு செய்த ஜனநாயக விரோதச் செயலாக இக்கட்டுரை குற்றஞ்சாட்டுகிறது. எக்ஸ்பிரஸ் நாளிதழ் அப்பட்டமாக பா.ஜ.க வைஆதரிக்கும் இதழ் என்பது அனைவரும் அறிந்ததே. காந்தி கொலை உள்ளிட்ட பயங்கரவாதச் செய்ல்களை நிகழ்த்துவது, பின் அவற்றில் தமக்குத் தொடர்பே இல்லை எனச் சொல்வது. பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க எந்த அளவிற்கும் இறங்கி யார் காலையும் தயங்காமல் பிடித்துக் கெஞ்சுவது என்பதெல்லாம் இந்துத்துவவாதிகளின் வழக்கம் என்பதை இந்துத்துவத்தின் வரலாற்றை அறிந்தவர்களுக்கு விளக்க வேண்டியதில்லை. (மேலும்....)

மன்னாரில் முன்னணிப் புலிப் பிரமுகர் மடக்கிப் பிடிப்பு!

மன்னாரில் மறைந்து வாழ்ந்த புலிகள் இயக்க பிரமுகர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் இருந்து அதிரடியாக சென்ற விசேட பொலிஸ் குழுவால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
மணி.. மாஸ்டர் என்பவரை கைது செய்யவே விசேட பொலிஸ் குழு ஒன்று மிக இரகசியமான முறையில் கடந்த தினங்களில் மன்னாருக்கு சென்று இருந்தது. புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களின் உதவியுடனேயே இத்தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக இப்பொலிஸாருக்கு புலிகளின் புலனாய்வுத் துறையில் கடமையாற்றிய போராளிகள் உதவி, ஒத்தாசை வழங்கினார்கள். மணி மாஸ்டர் புலிகளின் புலனாய்வுத் துறை, நிதித் துறை ஆகியவற்றுடன் மிக நெருக்கமாக சேர்ந்து செயற்பட்டவர் என்று பொலிஸாரால் நம்பப்டுகின்றது

கோவிலில் பிரபாகரன், வீரப்பன் சிலை போலீஸ் உத்தரவால் அடையாளம் அகற்றம்

கண்டமங்கலம்:கண்டமங்கலம் அருகே, அய்யனாரப்பன் கோவிலில், பிரபாகரன், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார் உத்தரவை அடுத்து, சிலைகளில், அவர்களின் அடையாள சின்னங்கள் அழிக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த சடையாண்டிக்குப்பம் கிராமத்தில், அய்யனாரப்பன் கோவில் உள்ளது. 2010ல், இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில், அய்யனாரப்பன் சுவாமி சிலைக்கு அருகில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சந்தன மரக் கடத்தல் வீரப்பன் ஆகியோருக்கு, சிமென்ட் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அமைக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. தற்போது, இதை அறிந்த போலீசார், சடையாண்டிக்குப்பம் கிராமத்திற்குச் சென்று, கோவிலை பார்வையிட்டு, பிரபாகரன், வீரப்பன் சிலைகளை அகற்ற உத்தரவிட்டனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, அங்கு, போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.போலீசார் உத்தரவையடுத்து, கோவிலில், பிரபாகரன் உருவச் சிலையில் இருந்த தொப்பி, பெல்ட், துப்பாக்கி மற்றும் சந்தன மரக் கடத்தல் வீரப்பன் சிலையில் இருந்த மீசை ஆகியவற்றை கிராம மக்கள் அகற்றினர். கோவிலில், பிரபாகரன், வீரப்பனுக்கு சிலை அமைத்துள்ள சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புலிகளின் சர்வதேச நெட்வொர்க்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்புகளும், நிதி பரிவர்த்தனைகளும் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளன என அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பான இவ்விவகாரத்தில் இலங்கை அரசு உடனடியாக செயலாற்ற வேண்டும் என முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி ஜி.எல்.பெரிஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசால் ஒழித்துக் கட்டப்பட்டு விட்டதாக கூறப்படும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச தொடர்புகளும் நிதி பரிவர்த்தனைகளும் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளன என அமெரிக்காவின் உள்நாட்டு தீவிரவாதம் தொடர்பாக சமீபத்தில் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. (மேலும்....)

ஜீவாவும். காமராஜரும்......!

பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். அப்போது தாம்பரத்தில் ஓர்
ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர். போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது. அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால் அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து, காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார். (மேலும்....)

கனடாவில் மலையக ஆய்வு நூலான "கூலித்தமிழுக்கு மண்டபம் நிறைந்த வரவேற்பு!

கனடாவில் மலையக ஆய்வு நூலான "கூலித்தமிழுக்கு மண்டபம் நிறைந்த வரவேற்புடன் நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியது. இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், பல்கலை பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் முக்கியஸ்தர்கள் என பெருந்திரளான மண்டபம் நிறைந்த மக்களால் வரவேற்கபட்டது. மு.நித்தியானந்தன் அவர்கள் பல நீண்டகால ஆய்வுகளின் பின்னர் இந்த "கூலித்தமிழ் என்ற நூல் மலையக மக்களின் வரலாற்றை, இன்றைய மலையக சமூகத்துக்கு மட்டுமன்றி, உலகத்தமிழரும் அந்த கறைபடிந்த வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு, ஐரோப்பா மற்றும் கனடா போன்ற நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவிலும் ஐரோப்பாவிலும் மலையக இந்திய வம்சாவளியினர் தொடர்பாக வெளியிடப்பட்ட முதலாவது நூல் என்ற பெருமையையும் அது கொண்டிருக்கிறது, என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்விற்கு விரிவுரையாளர் சாண் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

இணையும் யானையும் வீடும்....?

யாழ். சிவன் பண்ணை வீதியில் 282 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட யாழ். கிளிநொச்சி பிராந்திய தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் இரண்டு கட்டடத் தொகுதிகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராசா எம்.பி, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆனி 22, 2015

கனடாவில் 25 வது தியாகிகள் தின நிகழ்வு

(எமது கனடா நிருபர்)

கனடாவின் ரொரன்ரோ மாநகரில் ஜுன் 20. 2015 அன்று நடைபெற்றது. ஈழ விடுதலைக்காக தம்மை அர்பணித்த அனைத்து போராளிகளுக்கும், அனைத்து இனப் பொது மக்களுக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் தோழர் ஜேம்ஸ் இன் தலைமையில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தோழர்கள் யசீர்இ ரவி, பிரதாப், மோகன், மதி போன்ற தோழர்களின் முன்னெடுப்பால் நிகழ்தப்பட்டது. கூட்டத்தை சிறப்பாக நடாத்தி முடிக்கு ஈபிஆர்எல்எவ் இன் ஏனைய தோழர்களும், ஏனைய அமைப்பு போராளிகளும் முன்னின்று செயற்பட்டது இங்கு சிறப்பு அம்சம் ஆகும். தோழர் தமது தலைமை உரையில் தோழர் நாபா மனித நேயம், ஜனநாயகத்தின் ஒரு குறியீடாக ஈழவிடுதலைப் போராட்டத்தில் பார்க்கப்பட வேண்டியவர் என்பதை தனது கருத்துவையில் நிறுவி நன்றார். மேலும் வர்க்கவிடுதலை என்பதை முன்னிறுத்தி செயற்பட்ட தோழர் பத்மநாபா என்றும் இவரின் வழியில் தோன்றிய ஆயிரம் ஆயிரம் போராளிகள் இந்தப்பாதையில் இன்றும் பயணிப்பதாகவும் குறிப்பிட்டார். (மேலும்....)

மின்னல் நிகழ்ச்சியில் இடியாக முழங்கிய டக்ளஸ் தேவா!

சக்தி ரி. வி நடத்தும் மின்னல் நேரலை நிகழ்ச்சியில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே. என். டக்ளஸ் தேவானந்தா எம். பி மிக நீண்ட காலத்துக்கு பிற்பாடு கலந்து கொண்டார். இதே நேரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம். பி எம். ஏ. சுமந்திரன் முதல் தடவையாக மின்னல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தமிழ் ஊடக வட்டாரங்களில் அரசியல் நாரதர் என்று குசுகுசுக்கப்படுகின்ற ஜே. ஸ்ரீரங்கா ஓரளவு ஜனநாயகத்துடன் இன்றைய நிகழ்ச்சியை நடத்திச் சென்றமையை அவதானிக்க முடிந்தது. (மேலும்....)

'கூட்டமைப்பு 20ஐ ஆதரிக்காது'

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது, அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இதன்போது 20ஆவது தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்மையினருக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எந்தச் சந்தர்ப்பத்திலும் அதனை ஆதரிக்க முடியாதென்றும் அனைவரும் கருத்து கூறினர். தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜா அவர்களும், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) சார்பில் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், என். சிறீகாந்தா, ஹென்றி மகேந்திரன், கருணாகரன்-ஜனா ஆகியோரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சார்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன், கந்தையா சிவநேசன் (பவன்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை முன்னேற்றகரமானதாக அமைந்திருந்த போதிலும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கள வாக்குகளால் மட்டும் எவரும் ஆட்சியமைக்க முடியாது - ஜனாதிபதி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியாகவிருந்தாலும் வெறுமனே சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கமொன்றை அமைத்துவிட முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரி வித்தார். அதற்கமைய அரசாங்கமொன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியமென்றும் அவர் கூறினார். நுவரெலிய மாவட்டத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளை ஜனாதிபதி நுவரெலிய புதிய நகர சபை மண்டபத்தில் நேற்று சந்தித்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தனியாக முன்னணி அமைப்பதற்காக அழைக்கும் கூட்டம் இலங்கைக்கு துரோகம் இழைப்பதுடன் இடது சாரிக் கொள்கைக்கும் துரோகம் இழைப்பதாக அமையும் என ஜனாதிபதி கூறினார். கட்சிக்குள் எவரையும் வெட்டி விடுவதற்கோ, வேறுக்கவோ வேண்டிய தேவை எனக்கு இல்லை. எனது தேவை எல்லாம் நீங்கள் அனைவரும் ஒற்றுமை யாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயலாற்றி அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்பதேயாகுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

பூமியில் உயிரினங்கள் அழியும் காலம் ஆரம்பம்

உயிரினங்கள் பெரிய அளவில் அழியும் ஒரு கால கட்டம் பூமியில் உருவாகி வருவதாகவும், இந்த கால கட்டத்தில் மனித இனமும் அழியும் வாய்ப்பு உள்ளது என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். விலங்கினங்கள் அதிர்ச்சியளிக்கும் அதிக வேகத்தில் அழிந்துவருவதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. மனிதத் தலையீடு இல்லாமல் சாதாரணமாக விலங் கினங்கள் அழியும் வேகத்தோடு ஒப்பிடுகையில், தற் போது நூறு மடங்கு அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிந்துவருவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விலங்கினங்களுடைய வாழ்விடங்கள் மாறிப்போவதும், சுற்றுச்சூழல் மாசுபடுவதும், காலநிலை மாற்றமும் இந்த அழிவிற்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது. இத்தனை உயிரினங்கள் அழியக் காரணமாக இருப்ப தால், தனக்கு வாழ்வாதாரமாக விளங்கிவரும் கட்டமைப் பையும் மனித இனம் தானாகவே அழித்துக்கொள்கிறது என இந்த ஆய்வை நடத்திய விஞ்ஞானிகளில் ஒருவர் கூறுகிறார். ஆறரை கோடி வருடங்களுக்கு முன்னால், பெரும் விண்கல் பூமியில் விழுந்து டைனோசர்கள் உட்பட ஏராளமான உயிரினங்கள் அழிந்த காலகட்டத்துக்குப் பிற்பாடு, மிக அதிக வேகத்தில் உயிரினங்கள் அழிவது தற்போதுதான் என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தோழர் பத்மநாபா .....

எதிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாது செயல் நிறைவேற்றங்களையே எதிர்பார்ப்பார் தோழர் பத்மநாபா. கட்டுக்கடங்காத பாசத்தைப் பொழிவார். ஒவ்வொருவர் நலனிலும் அக்கறை செலுத்துவார். எல்லாவற்றிலும் மனிதநேயம் என்பதையே முதன்மைப்படுத்தினார். ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சார்பிலிருந்தே ஒவ்வொன்றையும் சிந்தித்தார். அடக்கமாய் ஒரு மாணவன் போன்று எல்லோர் சொல்வதையும் கேட்டக்கொள்வார். ஓரிரண்டு வார்த்தைகளில் தனது கருத்தை தெளிவுபடுத்திவிடுவார். கூர்மையான விழிகளால் நோக்கி குழந்தையாய்ச் சிரிப்பார். பிழை செய்பவர்களை ஆயுளுக்கும் நாணப்படவைக்கும் அவரது கேலியும் சிரிப்பும். அரவணைத்தே திருத்துவார். பழுகும் பண்பினால் அனைவரையும் வென்றுவிடுவார். எதிரிகளையும் வெல்லவேண்டுமே தவிர அழிப்பது நம் நோக்கமல்ல என்பார். (மேலும்....)

பல்வேறு அணிகளில் இருக்கக் கூடிய அனைவரும் ஐக்கியப்பட்டு நினைவு கூர முன்வரவேண்டும் - முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்...!

தோழர் பத்மநாபா அவர்களுடைய தலைமைத்துவப் போராட்ட காலத்தில் போராடி, பல்வேறு அணிகளில் இருக்கக் கூடிய அனைவரும் ஐக்கியப்பட்டு அவருடைய நினைவை தினத்தை நினைவு கூர முன்வரவேண்டும் என முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பசுபதி சீவரத்தினம் (கி.பி) தெரிவித்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா அவர்களுடைய 25வது நினைவுதினம் நேற்று பிற்பகல் 3.00 மணியளவில் ஈ.பி.ஆர்.எல்.எப் பழைய உறுப்பினர் தோழர் தர்சன் தலைமையில் வவுனியா, சூசைப்பிள்ளையார் வீதியிலுள்ள சுவர்க்கா ஹோட்டலில் இடம்பெற்றது. (மேலும்....)


இலண்டனில் 25 வது தியாகிகள் தினம்

உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது.
 

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் பிரித்தானியா கிளையினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த 25வது வருட தியாகிகள் தினம் மேற்கு லண்டனில் உணர்வுபூர்வமாக கொண்டாடப்பட்டது. தோழர் சிராப் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் EPRLF தோழர்கள் மற்றும்,PLOTE, EPDP, ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி, ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கு பற்றினர். சிறப்பு விருந்தினராக ஜெர்மனி இலிருந்து தோழர் அலெக்ஸ் பிரதம பேச்சாளராக கலந்து கொண்டார். தம்பி தோழர் குத்துவிளகேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். 25 வது வருட நிகழ்வு கலந்து கொண்ட தோழர்கள் தங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு தளமாக இருந்தமை கலந்து கொண்டோரின் பலத்த வரவேற்ப்பை பெற்றது. விபரமான பதிவுகள் பின்னர் பதிவிடப்படும்.

ஆனி 21, 2015

கனடாவில் தியாகிகள் தினம்

25 வது தியாகிகள் தினம் கனடாவில் சற்று முன்பு நடாத்தி முடிக்கப்பட்டது. பல கருத்து நிலையாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு சமார் 4 மணி நேரம் நீடித்தது. தோழர் ஜேம்ஸ் இன் தலமையில் நடைபெற்ற நிகழ்வை பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இனர் மிக நேர்த்தியாக ஒழுங்கு செய்து முடித்திருக்கின்றனர். இதில் ரெலோ, ஈபிடிபி, புளொட், சம உரிமை இயக்கம், ஈபிஆர்எல்எவ் (சுரேஷ்பிரிவினர்). ஈரோஸ், இடதுசாரிக்கட்சியினர, பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். வரிவான செய்திகள் தொடரும்...
 

 

 

எம் சமூக, தனிநபர் சீரழிவுகளில் இருந்து மீண்டு வருவோமா ?

(மாதவன் சஞ்சயன்)

இந்த கட்டுரையின் தலையங்கத்துக்கே கேள்விக்குறி வைக்கும் நிலைக்கு எம்சமூகம் இன்று தள்ளப்பட்டுள்ளது. தினசரிகள், வார சஞ்சிகைகள், உட்பட இணையங்களை பார்த்தால் அதீத மதுபாவனை, போதைபொருள் விநியோகம், கடத்தல், கப்பம் கேட்டல், பாலியல் வன்புணர்வு, சிறுவர் துஸ்பிரயோகம், கூட்டு பாலியல் வன்புணர்வு, வாள் வெட்டுகள், ஆசிரியர் மாணவர் காதல் என நாறிக்கிடக்கிறது எம் சமூக கட்டமைப்பு. 1950 பதுகளில் பிறந்த எம்போன்றவர், எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட, ஒரு சில சம்பவங்கள் இன்று நாளாந்தம் பல்கிபெருகி நடந்தேறுகிறது. அன்று உருத்திரபுரம் கோகிலாம்பாள் (கள்ளதொடர்பால் கணவனான ஐயரை கொலை செய்வித்தவர்) கொலை வழக்கு, ஆனைக்கோட்டை கூளாவடி தாய் மகள் (வேலைக்காரன் உலக்கையால் அடித்து கொன்றது) கொலை, கம்பர்மலை கொலை (கொலை குற்றவாளிகளை கொல்லபட்டவரின் உறவினர் நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறித்து வெட்டி சாய்த்தது.) ஆனையிறவு அழகி மாலினி தற்கொலை (கணவனின் நண்பனுடன் கள்ளத்தொடர்பால் விளைந்தது) போன்றவைதவிர க. பொ. த. சோதனை தோல்வியால் பொலிடோல் குடிப்பது, என வரும் சில செய்திகள் எம்மை திகைப்பில் ஆழ்த்தும். (மேலும்....)

அரசனா? புருஷனா? செலெக்ஸன் எது? எலெக்ஸன் நேரத்தில் தடுமாறுகின்றது தமிழ் தேசியம்!

(குளக்கோட்டன்)

இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்பு இலங்கையில் வாழ்ந்த பல்லினமக்களும் பிரித்தானிய அரசாங்கத்திடமிருந்து பெற்ற சுதந்திரக்காற்றை சுவாசித்து வந்தாலும், அவர்களுக்கிடையே காணப்பட்ட இனரீதியான, மதரீதியான, பிரதேசரீதியான, பண்பாட்டுரீதியான வேறுபாடுகள் ஒரு இடைவெளியை உருவாக்கியிருந்தன. பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்ப்பதில் இருந்த அந்த இனரீதியான ஒற்றுமை சுதந்திரத்திற்குப்பிறகு மெல்லமெல்ல அற்றுப்போனது. பிரித்தானிய அரசாங்கத்தை எதிர்த்தே பழக்கப்பட்ட இலங்கை அரசதலைவர்கள் அந்த எதிர்ப்பு தன்மையை மறக்கமுடியாமல் இடையிடையே தமக்குள்ளேயும் அந்த எதிர்ப்பினை தேவைக்கேற்றவாறு வெளிப்படுத்திக்கொண்டனர். (மேலும்....)

பிழையான பாதையில் தமிழ் தேசிய பயணம்!

மகிந்தவுடைய ஆட்சிக்காலத்தில் தமக்கு கேட்டவையெல்லாம் கிடைக்கவில்லை. பிரதம செயலாளரை மாற்றவில்லை. ஆளுநரை மாற்றவில்லை என வசை மாரி பொழிந்த தமிழ்த் தேசியக் கூட்டடைப்பினர் தற்சமயம் தமக்கு பிடித்தமான ஆளுநரையும் தமக்கு ஏற்ற பிரதம செயலாளரையும் வடமாகாணசபைக்கு நியமித்து ஆட்சி செய்து வருகின்றனர். சுமார் ஆறுமாதங்கள் மத்தியிலும் மாகாணங்களிலும் ஆட்சி செய்து வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையே யார் பெரிது என்ற போட்டி ஆரம்பமாகிவிட்டதை வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரியை சந்தித்த போது வடமாகாணசபைக்கு தெரியாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதிஅளித்தமை தொடர்பில் பிரஸ்தாபித்தது கோடிட்டு காட்டுகிறது. (மேலும்....)
 

Taking in to custody still continues at the Katunayake airport

Former LTTE carders who come from the Middle East following employment still be taken into custody from the airport TNA emphasize. According to our statistics 18 such people has been taken in to custody for the last five months. Two people has been released said Batticaloa District TNA Parliament MP P. Ariyanethram. The MP further said “There are people who joined LTTE voluntarily and involuntarily, later they voluntarily got out to get married and lived a normal life. They went to the Middle East due to hardships. There are people who has come for holidays and gone during the former president’s period among the people who were arrested” (more.....)

எல்.ரீ.ரீ.ஈ.யின் நிதி வலையமைப்பு இன்னுமும் இயங்குகிறது - அமெரிக்கா

கடந்த 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக இலங்கை அரசாங்கம் தோற்கடித்தபோதும் அவர்களுக்கான நிதியுதவிகள் தொடர்வதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு பணியகம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி, அத்திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு 2014ஆம் ஆண்டு முதல் இயங்கி வருவதாகவும் இராஜாங்கத்திணைக்களம் தெரிவித்துள்ளது. எல்.ரீ.ரீ.ஈ.யினர் தமது சர்வதேச தொடர்புகளை பயன்படுத்தியும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவிலுள்ள தமிழ் டயஸ்போராக்களின் உதவியுடனும் தமக்கு தேவையான ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் வேறு தேவைகளை பெற்றுக் கொள்வதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிய செய்தியல்ல, நாடு கடந்த தமிழிழ அரசின் உருத்திரகுமார் அமெரிக்காவில்தானே சீவிக்கின்றார் என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர் மேலும் இவற்றை அமெரிக்கா கண்டும் காணாதது போல் செயற்பட்டு வருவதும் யாவரும் அறிந்ததே.

கூட்டமைப்பை சிதைக்க சதி

உள்ளிருக்கும் சில சக்திகளும் மறைமுகமாக உடந்தையோ என சி.வி. சந்தேகம், மாவையும் பாய்ச்சல்

(எஸ். சுரேஷ்)

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் தலைமை தாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைப்பதற்கு திரை மறைவில் சதி நடப்பதாகவும், உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தி தமது இந்த எண்ணத்தை நிறைவேற்றச் சிலர் துடிப்பதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இச்சதிக்கு தமிழ்க் கூட்டமைப்பிற்குள் இருக்கும் சிலரையே அவர்கள் பாவித்து வருவதாகவும், இது புரியாது எம்மவர் சிலரும் அத்தீய எண்ணத்திற்கு தெரிந்தோ அல்லது தெரியாமலோ பலிக்கடாவாகி வருவதாகவும் முதலமைச்சர் விக்னேஸ் வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். (மேலும்....)

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்

மகாகவி பாரதியார் கண்ட கனவுகள், இப்போது நிறைவேறிக் கொண்டிருக்கின்றன. அன்று அவர், சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம், சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்று பாடினார்.அது நிறைவேறப் போகிறது என்ற வகையில், மத்திய அரசாங்கத்தின் முயற்சிகள் நம்பிக்கையை ஊட்டியி ருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரத்தில் இருந்து இலங்கையை சாலை போக்குவரத்து மற்றும் ரெயில் பாதைகள் மூலமாக இணைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசாங்கம் அதிக அக்கறை காட்டி வருகிறது. பாக்ஜல சந்தியில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடலில் பெரும்பகுதி தூரத்துக்கு பாலமும், ஒரு சிறிய பகுதியில் கடலுக்கு அடியில் சுரங்கப் பாதையும் அமைப்பதற்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடம் நிதி கேட்டு ஒரு திட்ட த்தை மத்திய அரசாங்கம் அனுப்பியுள்ளது. (மேலும்....)

மு.நித்தியானந்தனின் கூலித்தமிழுக்கு கனடாவில் விருது!

மலையக மக்களின் வரலாற்றை வெளியுலக மக்களுக்கு அறிமுகம் செய்துள்ள மு. நித்தியானந்தன் “கூலித்தமிழ்” நூலுக்கு கடனாவில் இயங்கிவரும் இலக்கியத்தோட்டம் அமைப்பினர் விருது வழங்கி கெளரவத்துள்ளனர். இந்த விருதை பெற்றுக்கொண்ட மு. நித்தியானந்தன் ஏற்புரையும் வழங்கினார். 2014ஆம் ஆண்டில் வெளியான புனை கதை சாராத நூல்களில் சிறந்த நூலாக எனது கூலித்தமிழ் நூலைத் தேர்வு செய்து, கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் இந்த விருதிற்கு என் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த விருதினை ஈழத்தின் மலையக இலக்கிய மரப்பிற்குக் கிடைத்த பெரும் அங்கீகாரமாக, மலையக இலக்கியத்திற்கு வழங்கப்பட்ட உயர் கெளரவமாக கருதுகிறேன். 1869ஆம் ஆண்டு “கோப்பிகிருஷிக்கும்மி” என்ற கும்மிப்பாடலை இயற்றிய ஆபிரஹாம் ஜோசப்பிலிருந்து, நடேசய்யர், சி.வி. வேலுப்பிள்ளை, இர. சிவலிங்கம், கே. கணேஷ், என். எஸ். எம். இராமையா என்று மறைந்துபோன இலக்கிய ஆளுமைகளிலிருந்து, இன்றும் மலையக இலக்கிய மரபை முன்னெடுத்துச் செல்லும் தெளிவத்தை ஜோசப், மு.சிவலிங்கம், மாத்தளை வடிவேலன், மலரன்பன் ஆகியோரையும் நினைவிலிருந்து இந்த விருதினைப் பெறுவதில் மனநிறைவடைகிறேன்.



 

ஆனி 20, 2015

கனடாவில்

தியாகிகள் தினம்

மனித குல விடிவிற்கான மரணித்த அனைத்து போராளிகளையும், பொது மக்களையும் நினைவு கூரும் தின நிகழ்வாக எம்மால் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வரும் தியாகிகள் தினம் இம்முறை 25 வது வருட நிகழ்வாக நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு அனைத்து ஜனநாயக, முற்போக்கு சக்திகளை அன்புடன் அழைக்கின்றோம். எமது மக்களின் விடிவிற்காக தம்மை அர்ப்பணித்த அனைத்துப் போராளிகளுக்கும், பொது மக்களுக்கும் வணக்கமும், மரியாதையும் செலுத்தவுள்ளோம். இந் நிகழ்வின் ஒரு அங்கமாக  நாம் பயணித்த போராட்டப் பாதை பற்றிய குறுக்கு வெட்டுமுகப் பார்வைகளை தமது கருத்துக்களாக பலரும் கருத்துரை வழங்கவுள்ளனர்.

நிகழ்வு நடைபெறும் இடம்:

Address:

பெரிய சிவன் கோவில் மண்டபம்,

1148 Bellamy Road North,
Scarborough, ON, M1H 2X4,
Canada.

 

காலம்: ஜுன் 20 (சனிக் கிழமை) பிற்பகல் 5 மணி தொடக்கம் 9 மணி வரை

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

                          சாகரன் ஜேம்ஸ்: (416)271-8467

19 ஜூன் 2015 – 25 வது தியாகிகள் தினம்… பற்றிய அறிவித்தல்

தோழர்களே, நண்பர்களே,

எமது நேசத்திற்குரிய தலைவர் தோழர் பத்மநாபாவை இழந்து 25 வருடங்கள் கடந்துவிட்ட போதும் அவர் தலைமைதாங்கிய இயக்கத்தின் கொள்கைகள், நோக்கங்கள், குறிக்கோள்களை இன்னும் உயர்த்திப் பிடித்துள்ளோம். 1983 இல் தோழர்கள் தேவகுமார், பாஸ்கரன் ஆகியோரை வெலிக்கடை சிறையில் இழந்தது முதல் 1986ம் ஆண்டுக்கு பின் புலிகளின் கரங்களால் பலியான தோழர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்து விட்ட போதும்,

கட்சி உடைவுகள், பொருளாதார நெருக்கடிகள் மத்தியிலும், உயிர் அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் இன்னும் பல்வேறு பழிச்சொற்கள், இழிவுபடுத்தல்களை பொறுத்துக்கொண்டும் தமது உயிரை அர்ப்பணித்த தோழர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும், அவர்களும், நாமும் நேசித்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறோம். இந் நிலையில் நாமனைவரும் 25 வது தியாகிகள் தினத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம்.;

இறந்த தோழர்களை நினைவு கூருவது அந்த தோழர்களது நம்பிக்கைகள், இலட்சியங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், அவர்கள் நேசித்த மக்களின், அவர்களை இழந்து நிர்க்கதியாயிருக்கும் அவர்களது குடும்பங்களின் துன்ப, துயரங்களில் பங்கெடுத்துக் கொள்வதன் மூலமுமே அர்த்தமுடையதாகும்.

அதிகாரத்திலிருக்கும் அரசின் விருப்பு வெறுப்புக்களை கணக்கிட்டோ, புலிகளின் விருப்பு வெறுப்புக்கள், அச்சுறுத்தல்களுக்குப் பணிந்தோ, அரசியல் உள்நோக்கங்களுக்கு ஏற்ற விதத்திலோ நாம் தியாகிகள் தினத்தை அனுஷ்டிக்கவுமில்லை. அனுஷ்டிக்காமல் விடவுமில்லை. தமிழ் பேசும் மக்களின் சுபிட்சமான எதிர்காலத்திற்காக இந்த நாட்டில் அடக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவிற்காக, உழைக்கும் மக்களை முன்னிலைப்படுத்தும் அரசியல் தலைமைத்துவத்திற்காக, பெண்களின் உரிமைகளுக்காக, ஜனநாயக மீட்சிக்காக போராடி, பங்களிப்புச் செய்து தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், சக இயக்கங்களின் போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை நினைவுகூரும் வகையில், 1993 இல் தியாகிகள் தினமாக  யூன் 19 பிரகடனம் செய்யப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக தியாகிகள் தினத்தை அனுஷ்டித்து வருகிறோம்.

தோழர்களே, நண்பர்களே,

ஏதிர்வரும் யூன் 19, 2015 அன்று 25 வது தியாகிகள் தினத்தை அனுஷ்டிப்பதற்கு உங்கள் ஆதரவையும், ஒத்துழைப்பையும், ஆலோசனைகளையும் கோருகின்றோம்.

தொடர்புகளுக்கு:

பத்மநாபா ஈபிஆர்எல்எவ். தலைமை அலுவலகம்

294, கண்டிவீதி, யாழ்ப்பாணம்

தொலைபேசி: 00 94 21 222 2022

சி.வி.யுடன் இணைந்து பயணிக்க தயார் - மாவை

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயணிப்பதற்கு தயாராகவுள்ளனர் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் தெற்கில் பணம் வாங்கினார்கள் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அது தொடர்பில் மாவை விளக்கம் கேட்டு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். அதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (18) பதில் அனுப்பியிருந்தார். இந்த பதில் கடிதம் தொடர்பில் பதில் கூறுவதற்காக மாவை சேனாதிராஜாவினால் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். (மேலும்....)


 

யாழில் தியாகிகள் தினம்

இவ்வருட 25வது தியாகிகள் தினம் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைமை காரியாலயத்தில் 19-06-2014 அன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இந் நிகழ்வுக்கு தோழர் மோகன் தலைமை வகித்தார். ஈ.பி.ஆர்.எல்.எவ் உடன் இணைந்து போராட்டத்தில் பங்கெடுத்து தம் உயிரை அர்ப்பணித்த தோழர் மிசோ, தோழர் சந்திரன் ஆகிய இருவரதும் தாயார் யாழில் தியாகிகள் தினம் யாழில் தியாகிகள் தினம் ஆ. ரஞ்சிதம் உயிர் நீத்த தோழர்கள், சக அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் படத்திற்கு தீபம் ஏற்றியதை தொடர்ந்து பெற்றோர்கள், உறவினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். இந் நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது மக்கள் கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் பங்குபற்றியிருந்தனர். குறிப்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த தியாகிகளின் பெற்றோர்கள், உறவினர்கள் சகோதரர்கள், நண்பர்கள் என பெரும்பாலானோர் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

சென்னை பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்எப் தோழர்களின் 25வது தியாகிகள் தின நினைவு கூரல் -தோழர் ஸ்டனிஸ்

Pathmanabha bookவிடுதலைப்புலிகளின் பழிவாங்கல் நிகழ்வுகளின் மூலம் எங்களின்
உயிரைக்காப்பாற்ற எங்கள் செயலாளர் நாயகம் தோழர்பத்மநாபா அவர்கள்
தன்னுடன் எங்களையும் 1990 களில் இந்தியாவிற்கு அழைத்துவந்து ஒரிசாவில்
தங்கவைத்தபோது நாங்கள் சந்தோசமடைந்தோம். எங்கள் உயிரை அப்போது பிரேமதாசவுடன் கூட்டுச்சதி செய்து அழிக்க நினைத்த புலிகளிடம் இருந்து தோழர் அவர்கள் காப்பாற்றியதை நினைத்தும் அவரதுதூரநோக்குப் பார்வை குறித்தும் பெருமையடைந்தோம்
ஒரிசாவில் தோழர்கள் தங்கியிருந்த போது தோழர் அவர்கள் தினம் வந்து எங்களைப்பார்ப்பதும் எங்களது சுக,துக்கங்களில் பங்கு பற்றி எங்களுடனே தங்கியிருப்பதும் எந்த தலைவனுக்கும் இல்லாத சிறப்பு அம்சமாகும். (மேலும்....)

25வது தியாகிகள் தினம் 19.06.2015 அன்று திருகோணமலை மாவட்டம்

தமிழ் பேசும் மக்களின் ஈழ விடுதலை போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை தியாகம் புரிந்த எங்கள் தியாகிகளின் நினைவுகூரும் தினம் தியாகிகள் தினம். இத்தினத்தை வருடாவருடம் ஆனி 19ல் எங்கள் தோழர்களின் ஆதரவுடன் உலகம் பூராகவும் அனுஸ்டிக்கபட்டுவருகின்றது. இவ் தினமானது வழமை போன்று இலங்கையில் அனைத்து தமிழ் பேசும் மாவட்டங்களிலும் அனுஷ்டிக்கப்பட்டது. இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் 19.06.2015 அன்று திருகோணமலை கடல்முக வீதியில் அமைந்துள்ள மாவட்ட கட்சி தலைமை காரியாலயத்தில் தியாகிகள் தினம் இடம்பெற்றது. விசேட நிகழ்வாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் அமரர் தோழர் க.பத்மநாபா அவர்களின் திருவுருவச்சிலை திரை நீக்கமும் செய்யப்பட்டது. நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், ஆய்வாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், ஆயிரக்கணக்கான மக்கள் மிக உணர்வுடன் கலந்து கொண்டனர். (மேலும்....)

ஆனி 19, 2015

            Email: m-siva@rogers.com

அழிக்கப்பட்ட ஆற்றல்களும்! மனித நேயங்களும்!!

ஜனநாயகம், மனித நேயத்தின் குறியீடு தோழர் பத்மநாபா

(தோழர் ஜேம்ஸ்)

தோழர் பத்மநாபா கொலை செய்யப்பட்டு இருபத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. மனிதநேயம் மிக்க ஒரு ஆளுமை மிக்க தலைமை எம்மைவிட்டுப் பிரிக்கப்பட்டு கால் நு10ற்றாண்டு ஓடிவிட்டது. ஈழவிடுதலைப் போராட்டம் ஆயுதம் தூக்கிய போராட்டமாக பரிணாமம் அடைவதற்கு முன்னேயே தமிழ் மக்கள் மத்தியிலிருந்த ஆதிக்க வர்க்கம் சாதியம் என்பதை தூக்கிப்பிடித்து தனது கொலை சன்னதங்களை பல இடங்கள் ஆடி பலியெடுத்திருந்தாலும், ஈழவிடுதலை அமைப்புகளினால் பலி எடுகப்பட்ட உயிர்களே பலராலும் அறியப்பட்டதாகவும், பேசப்பட்டதாகவும் இருந்து வருகின்றது. 1970 களின் பிற்பகுதி. 1980 களின் ஆரம்ப பகுதிகளில்; தமது 'கொள்கை' களுக்கு முரணாக செயற்பட்டார் என்று இரகசியமாக தொடங்கப்பட்ட பலி எடுப்புக்கள் 1983 களின் பிறபகுதியில் மாற்று அமைப்புக்களின் உறுப்பினர்களை பலி எடுத்தல் இதற்கு நியாயங்களை கற்பித்தில் என்ற பரிணாம வளர்ச்சியில் வந்து நின்றது. அது சுந்தரத்தின் படுகொலையாக இருக்கலாம் இன்பம், செல்வத்தின் படுகொலையாக இருக்கலாம் இவை இந்த வகை கொலைகளின் வடிவங்களே. இவை தம்மோடு ஒருகாலத்தில் ஒன்றாக இருந்து மாற்று வழியில் தமது போராட்ட பாதையை புதிய அமைப்பு ஊடாக முன்னெடுத்த வகைக்குள் அடங்கின. (மேலும்....)

கனடாவில் இரண்டாந்தரக் குடியுரிமை என்று ஒன்றில்லைகுடிவரவு அமைச்சர்

கனடாவில் தமிழர்களிற்கு குடியுரிமைப் பாதிப்பு ஏற்படும் என்ற தொணிப்பட அண்மையில் வெளிவந்த செய்தியில் கனடாவில் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது இதனைக் கனடியக் குடிவரவு அமைச்சர் அடியோடு மறுத்துள்ளார்.
இது தொடர்பாக கனடியத் தமிழ் கண்சவேட்டிவ் அமைப்பு [www.constam.ca]விடுத்த அறிக்கையில், தனது கருத்தைப் பதிவு செய்துள்ள கனடியக் குடிவரவு அமைச்சர் கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சான்டர் அவர்கள், கனேடியப் பிரஜைகள் சகலரும் ஒரே மாதியாகவே நடத்தப்படுகின்றார்கள். கனடியக் குடியுரிமையில் இரண்டாந்தரப் பிரஜாவுரிமை என்று ஒன்றில்லை. இது தொடர்பான செய்திகளை நாங்கள் அடியோடு மறுக்கின்றோம் என்று தெரிவித்துள்ளதோடு, கனடியக் குடியுரிமையை இழக்கும் சந்தர்ப்பத்தைக் கொண்டுள்ள இரட்டைப் பிரஜைகள் யாரென்றால், மேற்படி பிரஜைகள் பயங்கரவாதத்தில் தொடர்பான எந்தச் செயலிலும் ஈடுபடுதல், கனடாவிற்கு எதிராக அல்லது கனடியப் படைகளிற்கு எதிராகப் போராடுதல் அல்லது உளவு பார்த்தல் அலலது தேசவிரோதக் குற்றச்செயல்களில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களேயாகும் எனவும், கனடாக் குடியுரிமையைப் பெறுபவர்கள் தொகை என்றுமில்லாவாறு அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில் 261,000 பேர் கனடியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்கள். இதுவே இதுவரை காலத்திலும் ஒரு குறித்த ஆண்டில் அதிகம் பேர் குடியுரிமையைப் பெற்ற ஆண்டாகும் எனவும் தெரிவித்துள்ளாh.
உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டவர்களின் நோக்கம் தமிழ்க் கனேடியர்கள் பற்றிய தவறான செய்தியைப் பரப்புவதாகவும், தமிழ் மக்களைத் திசைதிருப்புவதாகவும் அமைந்துள்ளது எனக் கனடியத் தமிழ்க் கண்சவேட்டிவ் அமைப்புத் தெரிவித்துள்ளது.

ஆனி 18, 2015

தோழர் நாபாவின் நினைவுகளுடன் முன்னோக்கிய திசையில்.......

(சுகு-ஸ்ரீதரன்)

நாபா பிரதானமாக தேசிய விடுதலைப்போராட்டத்துடன் சர்வதேசிய மற்றும் பரந்து பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சமூக அக்கறைகளை வெளிப்படுத்தினார். தேசிய ஒடுக்குமுறை ஒழிந்த, சமூகங்களிடையே சுயாதீனமான சமத்துவமான ஐக்கியம், பால் சமத்துவம் தீண்டாமை ஒழிப்பு சர்வதேச சகோதரத்துவம் வர்க்க ரீதியாக ஒடுக்கப்பட்ட அனைத்துமக்களையும் உள்ளடக்கிய சமூக சக்திகளிடையே ஐக்கியம் இந்த இலட்சியங்கள் கனவுகளுக்காக வெகுஜனங்களை அணி திரட்டுவது. நத்தை ஓட்டுச் சிந்தனையைத் தகர்த்து பரந்தளவிலான முற்போக்கு சக்திகளுடன் ஐக்கியம் புரிதலை ஏற்படுத்துதல் என்பன அவருடைய நடைமுறைகளில் முன்னுரிமை பெற்றிருந்தன. (மேலும்....)

தோழர் றொபேட் புதிய அரசியல் பண்பாட்டின் முன் உதாரணம்

12 ஆவது ஆண்டு நினைவு தினம்

(தோழர் மோகன்)
 

தோழர் றொபேட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு 12 ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று (14.06.2015) அவரது நினைவு தினமாகும். நோர்வே அரசின் மத்தியஸ்தத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் ஏற்;படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் சமாதானப் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் நோர்வே தலைமையிலான போர் நிறுத்த கண்காணிப்புக் குழு செயற்பட்டுக்கொண்டிருந்த காலப்பகுதியில் தோழர் றொபேட் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஆயுதங்களை வைத்திருப்பதும், பாவிப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற நியதிகளுக்குப் புறம்பாக பாடசாலை வகுப்பறையில் மறைந்திருந்த புலிகளின் துப்பாக்கிதாரியால் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரிவீதியில் இயங்கிவந்த ஈபிஆர்எல்எவ் அலுவலகத்தில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோழர் றொபேட் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டது. (மேலும்....)

கட்சி அலுவலக திறப்பு, மற்றும் இடதுசாரியத்தை முன்னெடுத்தல்,  கருத்தரங்கு அழைப்பிதழ்

முன்னிலை சோசலிசக் கட்சி தனது அலுவலகத்தை , யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் திறக்கவுள்ளது . அத்துடன் "இடது சாரிய நடவடிக்கை" என்ற இடதுசாரிய முன்னணியின் அரசியல் ஆவண நூல் வெளியீடும், கருத்தரங்கும் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது . சகோதர, சகோதரிகள், தோழர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களை இந் நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்குமாறு தோழமையுடன் வேண்டுகிறோம் .
நிகழ்வு விபரம் :
கட்சி அலுவலக அங்குரார்பணம்
காலம் : ஆனி 30 , செய்வாய்க் கிழமை
நேரம் : காலை 10 மணி
இடம் :412, இஸ்ரான்லி வீதி , யாழ்பாணம்

"இடது சாரிய நடவடிக்கை" நூல் வெளியீடும் கருத்தரங்கும்
காலம் : ஆனி 30 , செய்வாய்க் கிழமை
நேரம் : மாலை 3 மணி
இடம் :யாழ் . நூலக உணவுக் சாலை மண்டபம் , யாழ்பாணம்

தொடர்புகளுக்கு :
ஜூட் சில்வா பிள்ளை - 0714966738

இந்தியாவையும் இலங்கையையும் பாலத்தின் மூலம் இணைக்க மத்திய அரசு விருப்பம்

சிங்களத் தீவினிக்கோர் பாலம் அமைப்போம் என பாடினார் நெருப்புக்கவி பாரதி. அவரது கனவு நனவாகும் போல் தெரிகிறது. இந்தியாவை யும் இலங்கையையும் பாலத்தின் மூலம் இணை க்க மத்திய அரசு விரும்புகிறது. பங்காளதேஷ், நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு வீதி போக்குவரத்தை துவ ங்கியது போல் இந்தியா- இலங்கை இடையேயும் வீதி அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவ தாக மத்திய வீதி போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரி வித்துள்ளார். கடல் பாலம் அல்லது கடலுக்கு அடியில் சுரங்க பாதை அமைக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.(மேலும்....)

சீனாவின் தீவுகளை மீட்கும் திட்டத்தால் சர்ச்சை

தென் சீனக்கடல் பிரதேசத்தில் தீவுகள் மற்றும் திட்டுக்களை மீட்டெடுக்கும் தனது பணிகள் விரை வில் நிறைவுறும் என்று சீனா அறிவித்துள்ளது. இந்த தீவுகள் மற்றும் திட்டுக்கள் யாருக்குச் சொந் தம் என்பது தொடர்பில் சர்ச்சை நீடிக்கும் நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஸ்பார்ட்லித் தீவுகளை முன்வைத்து சீனா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையை அமெரிக்கா வும் அந்த தீவுகளுக்கு உரிமை கோரும் மற்ற நாடுகளும் விமர்சித்து வருகின்றன. வியட்நாமும், பிலிப்பைன்ஸ{ம் இந்த தீவுகளுக்கு உரிமை கோரும் நாடுகளில் அடங்கும். இந்த பிரதேசத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக ளின் தேவைக்காகவே அங்கே தான் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாக சீனா தெரிவித் துள்ளது. மேலும் கடல் ஆராய்ச்சிக்காகவும் இந்த கட்டு மானப்பணிகள் நடப்பதாக சீனா கூறுகிறது. ஆனால் மற்றவர்களோ, சீனா அங்கே இராணுவ நிலைகளை உருவாக்கி அதன் மூலம் அந்த பிரதே சத்தின் மீதான தனது இறையாண்மை உரிமைகளை உருவாக்க விரும்புகிறது என்று அஞ்சுகிறார்கள்.

ஆனி 17, 2015

தோழர் சிறில் அழகான மனக் கோலம் கொண்ட மானிடன்

(சுகு-ஸ்ரீதரன்)

தோழர் சிறில் காலகே நேற்றைய தினம் கொழும்பில்(மாலபேயில்) விபத்தொன்றில் கொல்லப்பட்டார். அவர் மரணிக்கும் போது அவரது வயது 60களின் எல்லையைத் தொட்டிருக்கும்  கடந்து வந்த 20 வருடங்களுக்கு மேலாக எம்மோடு பணியாற்றியவர். 1980களின் இருண்டநாட்களில் தனது வேலையையும் துறந்து தமிழகத்தில் வாழ்ந்தவர். தமிழ் மொழியிலும் பரிச்சயமானவர். மொழிபெயர்ப்பு மற்றும் எழுத்தாற்றலும் அவரிடம் காணப்பட்டன. இடதுசாரி குழுக்கள், தொழிற்சங்கவாதிகள் முற்போக்கான ஊடகவியலாளர்கள் மற்றும் தனிமனிதர்களுடன் உறவைப் பேணினார். எந்த சமூப்பணியும் சிறிதோ பெரிதோ கடினமானதோ அலுப்புச் சலிப்பின்றி செய்யும் மனிதர்.
இலங்கையின் பல்லின சமூகங்கள் ஒன்றிணைந்து மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை கொண்டவர். (மேலும்....)

என் மனவலையிலிருந்து.......

மரணம் வலிக்கவே செய்கின்றது.........!

தோழர் சிறில் இன் மரணத்தின் வலியிலிருந்து……?

(சாகரன்)

அன்றைய கால கட்டத்தில் சிங்கள மக்கள் மத்தியிலும் இருந்து ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும், இதன் தொடர்சியான வர்க்க விடுதலைப் போராடத்திற்கும் ஆதரவு தெரிவித்து தென் இலங்கையில் செயற்பட்டு வந்த அமைப்புத்தான் 'விகல்ப கண்டாயம' (කල්ප පක්ෂය) அதாவது ‘Alternative Party’ என்ற புரட்சிகர அமைப்பாகும். அப்போதெல்லாம் தென் இலங்கையில் புலிகளின் பாணியில் மாற்றுக் கருத்தாளர்களை துப்பாக்கியினால் ஜே.வி.பி வேட்டையாடி வந்த காலகட்டம். இப்படியான ஒரு இக்கட்டான காலகட்டத்தில் சிறுபான்மை மக்களின் கூர்மையடைந்திருந்த தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செயற்பட்டவர்தான் தோழர் சிறில் இவர் எமது சகோதர இனத்தைச் சேர்ந்த, சகோதர மொழி பேசும் ஒரு தோழர். தபால் ஊழியராக கடைமையாற்றிய இவரை ஜே.வி.பி இவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முற்பட்ட போது அதிலிருந்து தப்பி தலைமறைவாக வாழ்ந்தவர். தொடர்ந்தும் அங்கு தலைமறைவாக வாழ முடியாத சூழலில் பாதுகாப்பு தேடி எம்மிடம் ஈழத்துக்கு இடம் பெயர்ந்து வந்த எமது சகோதர அமைப்பைச் சேர்ந்தவர். தொடர்ந்து தமது அமைப்புச் செயற்பாடுகளை விஷ்தரிக்கும் நோக்குடன் இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர். (மேலும்....)

ஒபாமா, வருட இறுதியில் வருவார்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, இவ்வருட இறுதியில் இலங்கைக்கு வருகை தருவார் என்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

போரின் போது புலிகளுக்கு உதவி வழங்கவில்லை - தமிழர் பேரவை

போரின் போது விடுதலை புலிகளுக்கு தமிழர் பேரவை உதவியதாகக் கூறப்படும் கருத்துக்களை நிராகரித்துள்ள பேரவையின் பேச்சாளர் நான்கு கட்டங்களின் அடிப்படையில் இலங்கை தமிழர்களுக்கு உதவி புரிந்ததாக தெரிவித் துள்ளார். பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்றுக்கு தெரிவித்துள்ள பேட்டியின் போதே இதை தெரிவித்தார். இலங்கை தமிழர் மற்றும் புலம்பெயர் தமிழர்களின் இணக்கத்துடன் பொது உடன்பாடு, இரண்டாவது குடியியல் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது இதில், தென்பகுதியில் உள்ள அரசியல் மற்றும் அரசியல் அற்ற குழுக்களுடன் இணைந்து செயற்பட்டு தமிழர்களின் பிரச்சினைக்கான அடிப்படையை விளக்குவது. மூன்றாவது சர்வதேச சமூகத்தின் மத்தியில் தெளிவை உண்டாக்குவது. இதன் மூலம் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணையை உறுதிப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்வது. நான்காவது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியை பெற்றுக் கொடுப்பதே அவை நான்குமென சுரேந்திரன் பட்டியலிட்டுள்ளார். போரின் போது தமது அமைப்பு, விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்தது என்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், போரின் பின்னர் 2010ம் ஆண்டே உலக தமிழர் பேரவை, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அந்த நாட்டின் வெளியுறவு செயலரினால் ஆரம்பிக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தமது அமைப்பு இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப் பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பதா கவும் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸ் முஸ்லிம் கிளர்ச்சி குழு ஆயுதங்களை கையளிப்பு

பிலிப்பைன்ஸ் அரசுடன் அமைதி உடன்பாட்டை எட்டிய மோரோ இஸ்லாமிய முன்னணி கிளர்ச்சியாளர்களின் ஒரு குழுவினர் முதல் கட்டமாக ஒருபங்கு ஆயுதத்தை கையளித்துள்ளனர். மலே'pயாவின் மத்தியஸ்தத்தில் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் நீடித்த பல ஆண்டு பேச்சுவார்த்தையில் புதிய சுயாட்சி பிராந்தியத்திற் கான உடன்பாடு கடந்த ஆண்டு எட்டப்பட்டது. கிளர்ச்சியாளர்கள் பலம்கொண் டிருக்கும் நாட்டின் தெற்கு நகரில் நேற்று இடம்பெற்ற ஆயுதங்களை கையளிக்கும் நிகழ்வில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிங்னோ அகீனோ மற்றும் கிளர்ச்சிக் குழு தலைவர் அல் ஹாஜ் முராத் இப்ராஹிம் ஆகி யோர் பங்கேற்றிருந்தனர். இதில் 75 தாக்குதல் ஆயுதங்கள் கைளிக்கப்பட்ட தோடு 145 போராளிகள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முன் வந்தனர். இவர்களுக்கான உதவிகளை வழங்க அரசு வாக்குறுதி அளித்துள்ளது. மோரோ இஸ்லாமிய முன்னணி சுமார் 11,000 போராளிகள் கொண்ட கிளர்ச்சிக் குழுவாகும். கத்தோலிக்க நாடான பிலிப்பைன்ஸில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தெற்கு பிராந்தியத்திற்கு அதிக சுயாட் சியை வழங்க அரசு இணங்கியுள்ளது.

இலங்கை அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்!

மகிந்த அரசின் சர்வாதிகார அரசியல் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வீழ்த்தி அதனிடத்தில் ஜனநாயக அரசொன்றை மாற்றீடாக நிறுவுவோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கூறியே மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசு ஆட்சிக்கு வந்தது. தேர்தல் வாக்குறுதியான ஒரு மேம்பட்ட ஜனநாயக நிர்வாகம் என்பதற்கு போக்குக் காட்டிவிட்டு அரசியலலைப்பு மற்றும் சட்டரீதியான சீர்திருத்தத் திட்டங்கள் என்பதாக மட்டும் அதனை குறுக்கி மேற்கொள்கிறது. (மேலும்....)

ஆனி 15, 2015
 

நாபா நண்பனா ? தோழனா ? தலைவனா ?( விடை தெரியாது தொடரும் என் தேடல்)

ஒருநாள் மிகுந்த பசி. காலையில் இருந்து உணவில்லை. முல்கம்பொல பெளவ்வல வீதியை அண்மித்தே பாலகிருஸ்ணன் ( மேர்ஜ் மற்றும் சரிநிகர் பத்திரிக்கை ) வீடு இருந்தது. அங்கு சென்றோம். வீட்டில் நுழையும் போதே பருப்பு வாசனை வந்தது. பாலா காங்கேசன்துறை வந்த போது நாபா வீட்டில் தாங்கியுள்ளார். மிக நெருக்கமான தோழமை. அவர் மனைவியும் நாபாவை அறிவார். வரவேற்பு நன்றாக இருந்தது. குளிருக்கு இதமாக தேநீர் தந்தார். நாபாவும் பாலாவும் நீண்ட நேரம் மலையக அரசியல் பற்றி பேசினர். நான் குசினி பக்கம் பார்த்தபடி இருந்தேன். திடீரென எழுந்த நாபா ஓ கே தோழர் நீங்கள் தூங்கவேண்டும் நாங்கள் போய்வருகிறோம் என சிரித்தபடி விடைபெற்றார். நாபாவுக்கு ஒரு கொடை அவர் சிரிப்பில் அவர்முகவாட்டம் களைப்பு எல்லாம் மறைக்கப்பட்டு விடும். விட்டு விட்டு அவர் சிரிப்பது வயிறு புடைக்க திண்டவர் போல் அவரை காட்டும். பாதி தூரம் வந்தபின் கேட்டேன் ஏன் சாப்பட்டை பற்றி பேசவில்லை என்று. நாபா சிரித்தபடி கேட்க வெட்கமாக இருந்தது அதுதான் வந்துவிட்டேன் என்றார். அன்று கொலைப்பட்டினி. என்றாலும் கதவு நிலைகளில் மற்றவர்கள் செருகிவைத்திருந்த குறை சுருட்டின் புகை எம்வயிற்றை நிரப்பியது. அன்று அவரின் செயலால் கோவம் வந்தது ஆனால் விட்டு விலகவில்லை. தொடர்ந்தும் அவருடன் விரும்பி அலையும் தோழமை தொடர்ந்தது. (மேலும்....)

பாராளுமன்ற கதிரை சண்டையை நிறுத்தி ஒன்று படுங்கள் தலைமைகளே

குரங்கின் கை புண் போலாகிவிட்டது எம்அரசியல்பிரச்சனை. ஆளாளுக்கு சொறிந்து பெரிதானதே தவிர ஆறவில்லை. எல்லோரும் ஆரம்பத்தில் பொதுநலம் பேசுவதும் பின் தம் சுயநலம் பார்ப்பதும் தலைமுறை தலைமுறையாக தொடர்கிறது. மீண்டும் மீண்டும் பழையதை எழுதி பயனில்லை ஏனெனில் அவை நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைய நிலவரம் பற்றி பார்ப்போம் சிந்திப்போம் செயல்படுவோம். அண்மையில் தெற்கில் நடந்த ஆட்சி மாற்றத்தில் எம்மவர் பங்களிப்பு இருந்தது. ஆனால்அமைந்திருப்பது நிரந்தர ஆட்சியல்ல. ஜனாதிபதி தொடர்ந்தாலும் பாராளுமன்றம் மாற்றத்துக்குள்ளாகும் என்பது நாமறிந்ததே. (மேலும்....)

ஆனி 14, 2015

என் மனவலையிலிருந்து........!

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!!

(சாகரன்)

ஜுன் 13 அன்று கனடா, ரொரன்ரோவில் நடைபெற்ற 'யாவரும் கேளிர்' என்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. சம உரிமை இயக்கம், கனடா கிளையினரால் நாடாத்தப்பட்ட இந்த நிகழ்வு இலங்கையில் வாழும் அனைத்து இனங்களின் ஐக்கியம், புரிந்துணர்வை மேம்படுத்தும் நோக்குடன் நடத்தப்பட்டதாக என்னால் உணரப்பட்டது. இலங்கை வாழ் அனைத்து இனங்களையும் ஐக்கியப்படுத்தும் நிகழ்வுகள், வேலைத் திட்டங்கள் புலத்திலும், நிலத்திலும் அதிகம் நடாத்தப்பட்டதாக சான்றுகள் குறைவு. பேரின்வாதம், குறும் தேசியவாதம் என்று இரு காட்டாற்றிற்கு மத்தியில் இது போன்ற விடயங்கள் நடத்த முடியாமல் அடிபட்டுப் போயிருந்தன. சில நிகழ்வுகள் அங்காங்கே கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட போதும் இவை இலங்கை அரசின் ஆனுசரணையுடன் நடத்தப்பட்டதாக சேறடிக்கப்பட்டு வலுவிழக்கச் செய்யப்பட்டதே வரலாறு ஆகும். இது போன்ற 'பழிச் சொல்' இற்கு ஆளாகலாம் என்பதினாலேயே இது போன்ற நிகழ்வுகளில் அதிகம் தமிழ் மக்கள் கலந்து கொள்வதில்லை. இலங்கைப் பேரினவாத அரசுக்கும், அரச இயந்திரத்திற்கும் எதிரான மனப்பாக்கை முழு பெரும்பான்மை இனத்திற்கும் எதிரானதாக திருப்பிவிடுவதில் தமிழ் குறும் தேசியவாதம் எப்போதும் கவனமாக இருந்தது. இதிலிருந்து பெரும்பாலான சிறுபான்மை மக்களை மீட்டெடுப்பது என்பது கடினமான காரியங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. ஆனாலும் இந்த நல் முன் முயற்சியை எடுத்தற்காக நாம் சம உரிமை இயக்கத்தை பாராட்டியே ஆகவேண்டும். (மேலும்....)

(Saakaran) (ஜுன் 14, 2015)

இருண்ட பாசிச யுகத்தில் ஜனநாயகத்தின் குரல்

தோழர் றொபேட் (ரஞ்சன்) சுபத்திரன் நினைவு நாள்

தோழர் றொபேட் படுகொலைசெய்யப்பட்டு 12 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. 2 தசாப்தங்கள் நிகரில்லா ஆளுமையுடன் சமூகப் பணியாற்றியவர். சிறை, சித்திரவதை, வன்முறையின் துப்பாக்கிக் குண்டுகள் எல்லாவற்றையும் எதிர் கொண்டவர். சவால் நிறைந்த இந்தக்காலத்தில் அவர் ஆசுவாசமாக சௌகரியமாக எப்போதும் அமர்ந்ததில்லை. ஆனால் அவர் பிரகாசமான முகத்துடன் ஒளிரும் கண்களுடன் பணி செய்தார். தேசிய, வர்க்க ஒடுக்குமுறைகள், தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் இவை பற்றிய புரிதலையும் தேடலையும் இடையறாது மேற்கொண்டார். சமூக மாற்றத்திற்கான இயக்கத்தின் திசைவழி பற்றிய கரிசனை கொண்டிருந்தார். நட்பு தோழமை இவற்றின் அர்த்தங்களை தோழர் றொபேட்டுடன் பழகியவர்கள் உணரமுடியும். நகைச்சுவை உணர்வும், கவித்துவ உள்ளமும், இலட்சிய வேட்கையும் கலந்த உருக்குறுதி வாய்ந்த மனிதர். சித்திரவதைக் கூடங்களிலும், சிறைகளிலும் இந்த சவால் நிறைந்த உலகிலும் அதை நிரூபித்தார். மாறுபட்ட மனிதர்களுடன் கூட்டாகப் பணிபுரியும் அளப்பரிய ஆற்றலை வெளிப்படுத்தினார். (மேலும்....)

மாற்றம் என்றே மாறாதது

இலங்கை அரசியல் வரலாற்றில் முதல்முதலாக அதிரடி மாற்றங்களுடன் கூடியதுமானதும் எதிர்பார்க்கமுடியாத தீர்ப்புக்களை வழங்கக்கூடியதுமான பாராளுமன்றத் தேர்தல் ஒன்றினை இலங்கைவாழ்மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். 2015ம் ஆண்டு ஜனவரி 8 ஆந் திகதிக்கு பின்பு இலங்கையிலே நிகழ்ந்த ஆட்சி மாற்றமானது எந்தளவிற்கு எதிர்பார்க்க முடியாத ஒரு மாற்றமாக இருந்ததோ அதேயளவிற்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலும் மாற்றங்களைக் கொண்டுவருமென அரசியல் அவதானிகள் கருதுகிறார்கள். 2005ம் ஆண்டிற்குப்பிறகு இலங்கை அரசியல் வரலாற்றில் தமக்கென ஒரு முத்திரை பதித்துக்கொண்ட ராஜபக்ஸ சகோதரர்களின் யுகம் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆந் திகதிக்கு பிறகு முடிவுக்கு வந்துவிட்டதென்ற தன்மை தற்சமயம் உள்நாட்டு அரசியல் சக்திமட்டுமல்லாது வெளிநாட்டு அரசியல் சக்திகளையும் சிந்திக்க வைத்துள்ளது.
மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை மையமாகக்கொண்டு இலங்கையிலே கோலோச்ச இருந்த ஏகாதிபத்தியத்தன்மை தற்சமயம் பாராளுமன்றக்கலைப்பில் இருக்கின்ற ஒத்திவைப்புத் தன்மை மூலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள்

பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலை

கனடாவில் வசிக்கும் 140,000 இலங்கைப் பிரஜைகள், தமது பிரஜாவுரிமையை இழந்து இலங்கை திரும்ப வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெ நேசன் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. கனேடிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய குடிவரவு சட்டத்தின்கீழ் இரண்டாம் நிலை பிரஜைகளான இவர்கள் பாதிக்கப்படலாம் என்று பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இந்த சட்டம் கடந்த வாரத்தில் நடைமுறைக்கு வந்தது. இதன்படி புதிதாக கனேடிய பிரஜாவுரிமையை பெற்றவர்கள், கனடாவில் பிறந்தவர்களை காட்டிலும் குறைந்த உரிமைகளை கொண்டிருக்கின்றனர். இந்த சட்டம் ஒரு புறக்கணிப்பு நடவடிக்கை என்று குற்றம் சுமத்தப்பட்ட போதும் அதனை மறுத்துள்ள கனேடிய அரசாங்கம், கனேடியர்களை பாதுகாப்பதற்காக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தில் இருந்து கனடாவை பாதுகாப்பதே புதிய சட்டத்தின் நோக்கம் என்று கனடாவின் குடிவரத்துறை அமைச்சர் கிரிஸ் அலெக்சாண்டர் தெரிவித்துள்ளார்.

20க்கு எதிராக நீதிமன்றம் செல்வேன் - ஹக்கீம்

சிறு கட்சிகள் மற்றும் சிறுபான்மை கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்தால் அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாறு ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தங்களுடைய கருத்துகள் தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தவிட்டால் அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்தை மூன்றிரலிண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதனை தடுப்பதற்கு ஆகக்கூடிய நடவடிக்கையை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தை கலைப்பதே நல்லது -   த.தே.கூ

வடக்கு மற்றும் கிழக்கு தமிழர் தொடர்பான பிரச்சினைகளை கையாளக் கூடிய புதிய நாடாளுமன்றம் உருவாக வழிவகுக்கும் வகையில் தற்போது நாடாளுமன்றத்தை கலைப்பது பொருத்தமாக இருக்குமென கருதுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று கூறியது. இம்முறை தேர்தலில் போட்டியிடுவதற்கும்இ அதற்கான விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்குமான நியமனங்கள் பற்றி சர்வதேச கருத்தாடல்களை நடத்திவருவதாக த.தே.கூ பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்திருந்தார். ஆயினும்இ நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படுமா? இல்லையா? என்பது பற்றி கூட்டமைப்புக்கு தெரியாது என பிரேமச்சந்திரன் கூறினார். 'விஞ்ஞாபனம் தயாரிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடவென பல குழுக்களையும் நாம் அழைத்துள்ளோம். கூட்டமைப்பில் உள்ள கட்சி ஒவ்வொன்றினதும் வேட்பாளர்களை என்ன அடிப்படையில் தெரிவு செய்வது என்பது பற்றியும் ஆராய்ந்து வருகின்றோம்'.என அவர் கூறினார். 'புதிய நாடாளுமன்றம் அமைவதை நாம் விரும்புகின்றோம் .பொது தேர்தலின் பின்னர் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக திட்டவட்டமான தீர்மானங்கள் எடுக்கப்படுமென இந்த அரசாங்கம் கூறியிருக்கிறது.எனவேஇ தேர்தல் வருவதை நாமும் விரும்புகின்றோம்' என்றார்.

 

யாவரும் கேளிர்

கனடா சம உரிமை இயக்கத்தின் முதலாவது கலாச்சார நிகழ்வான 'யாவரும் கேளிர்' கலை நிகழ்வு 13,06,2015 அன்று ஸ்காபுறோ சிவிக் மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
முதலில் வரவேற்புரை மூத்த இடதுசாரியும் சமூக சிந்தனையாளருமான திரு மார்க் சூசை அவர்களால் வழங்கப்பட்டது. இவர் இலங்கையில் இனங்களிடையே சம உரிமையின் அவசியத்தையும், இதற்காக சம உரிமை இயக்கம் இலங்கையில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுபதையும் இதன் தொடாச்;சியாக புலம்பெயர் இலங்கையரிடம் ஜரோப்பிய நாடுகளிலும் கனடாவிலும் சம உரிமை இயக்கத்தின் கிளைகளை உருவாக்கி ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை செய்வதைப்பற்றியும் குறிப்பிட்டு உரைநிகழ்த்தினார்.
முதல் நிகழ்வாக கனடிய பூர்வீகமக்களின் இசை நிழ்வு ஒரு இனிய தொடக்கமாக அமைந்திருந்தது. ஜசயா காடா வினால் நடத்தப்பட்ட நிகழத்துகையில் பல்லின மக்களின் ஒற்றுமையின் மூலம் கனடாவில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என விளக்கினார். இவரது ஓன்மம் மிக்க குரலும்  சபையை அதிரவைத்த பறையும் இவரது திறமைக்கு பறைசாற்றியது. (மேலும்....)

என் மீதான விமர்சனங்களை எழுதுவதற்கு கைகள் வலித்தால் சொல்லுங்கள்தேவானந்தா

எமது மக்களின் அரசியலுரிமைக்காகவும், அபிவிருத்திக்காகவும் நாம் மலை, தடை கடந்து, புயலிடை எழுந்து, நடைமுறைசாத்திய வழி நின்று அப்பணிப்புடன் உழைத்து வருகின்றோம். அதற்காக சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளையும், தொடர்ந்து வரும் தூற்றுதல்களையும், மரண அச்சுறுத்துல்களையும் எதிர் கொண்டு எமது புனித இலட்சியப் பயணத்தில் முன்னேறி வருகின்றோம். சோதனைகளை நாம் எதிர் கொள்ள காரணமாக இருப்பது எமது மக்களின் விடிவு நோக்கிய பயணத்தில் நாம் உறுதியாக இருப்பதாலும், அடைய வேண்டிய அரசியல் இலக்கு நோக்கிய பாதையிலும், எமது தேசத்தை அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தும் பணியிலும் நடைமுறையதார்த்த வழி முறையை நாம் கொண்டிருப்பதாலும் மட்டுமே.(மேலும்....)

விண்வெளி வீரர்கள் சந்திரனில் கண்ட வேற்றுக் கிரகவாசிகள்

பறக்கும் தட்டு தகவல்களை மூடி மறைக்க வல்லரசுகள் முற்படுவது ஏன்?

இந்தப் பேரண்டப் பெருவெளியில் அறிவு படைத்த மனிதர்களையும் ஏனைய எண்ணற்ற உயிரி னங்களையும் கொண்ட ஒரே கிரகம் இந்த பூமி மட்டும்தானா அல்லது வேறு எங்காவது சிற்றறிவு படைத்த அல்லது நம்மைவிட பேரறிவும் அதிக ஆற்றலும் கொண்ட உயிரினங்கள் உண்டா என்ற கேள்வி மிக நீண்ட காலமாகவே கேட்கப்பட்டு வருகிறது. எழுபதுகளில் ‘செரியட் ஒப் கோட்’ என்ற புத்தகம் வெளியாகி பல இலட்சம் பிரதிகள் விற்றுத் தீர்ந்ததுடன் இன்னொரு அயல்வாசி கோட்பாட் டையும் நிறுவிச் சென்றது. அதாவது, மனிதனின் அறிவு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு வெளியில் இருந்து வந்த வெளிக்கிரக வாசிகளே காரணமாக இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இந்நூல் நிறுவியது.
(மேலும்....)

ஆனி 13, 2015

புலி முகப் பெண்

முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை. விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள் குறித்த துணுக்குகளிருந்தன. பொதுமக்கள் குறித்தானவையும் இருந்தன. விடுதலைப்புலிகள் போல பாவனைகாட்டிக் கொண்டு திரியும் பொதுமக்கள் பற்றியவையும் இருக்கின்றன. இந்த வகையினர் குறித்தும் நகைச்சுவை துணுக்ககள் உருவாகியிருக்கின்றது என்பது எதனைக் குறிக்கின்றதென்றால், இந்த வகையானவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதையே. ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்க்க, கடன்காரணை வெருட்ட, கலர்ஸ்காட்ட என நிறைய இளைஞர்கள் இப்படித் திரிந்தார்கள். அதிகம் ஏன், சிலர் பெண்களை கவிழ்ப்பதற்கும் இப்படித் திரிந்தார்கள். எனக்குத் தெரிந்த நிறைய நண்பர்கள் இப்படித் திரிந்தார்கள். இயக்கங்களின் ஆரம்ப நாட்களிலேயே இது உருவாகியிருக்கலாம். ஆனால் இது ஒரு பெரும் போக்காக நான்காம் கட்ட ஈழப்போர்க்காலத்திலேயே உருவானது. (மேலும்....)

இரவீந்திர நாத் தாகூர்

இந்த நாட்களில் தான் தாகூர் யாழ்வருகை தந்தார். 1934 இல் இலங்கைக்கு வருகை தந்த தாகூர், கொழம்பு , அனுராதபுரம், காலி, கண்டி, யாழ்ப்பாணம் என அவர் பிரதேசங்களுக்கெல்லாம் சென்றார். யாழ்ப்பாணத்திற்கு 1934 யூன் 9 ந்திகதி விஜயம் செய்த தாகூர் யூன் 15ந்திகதி தனுஸ்கோடி சென்னை வழியாக கல்கத்தாவிற்கு ரயிலில் திரும்பினார். அவருடைய கவிதைகள் வாழ்க்கையின் தளர்வில்லாத இலட்சியப்பயணத்திற்கு உற்சாகம் ஊட்டுபவை. ஓயாத தேடல் வியாபித்து நிற்க சர்வதேசிய மாநிட நேயம் இழையோடும். வங்காள மறுமலர்ச்சி இந்திய சுதந்திர இயக்கத்தின் உந்து சக்தியாக இருந்தது. (மேலும்....)

15 வயதில் புதிய கிரகத்தை கண்டறிந்த பள்ளி மாணவன்

15 வயது சிறுவன் தனது அனுபவத்தால் தொழில்முறை வானியலார்களை மிஞ்சும் வகையில் புதிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்து உள்ளான். தென் ஆப்பிரிக்காவில் பால் வீதியில் உள்ள கோடிகணக்கான நட்சத்திரங்களின் படங்களை டேட்டாக்களாக கேமிராமூலம் பதிவுசெய்ய டோம் வாக் (வயது 17) என்ற மாணவன் ஸ்டாபோர்ட்சையரில் உள்ள கீலி பல்கலைகழகத்ததால் நியமிக்கபட்டு இருந்தான். சிறுவன் 15 வயதில் இருக்கும் போது 1000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகம் ஒன்றை கண்டு பிடித்தான் . 2 வருட கண்காணிப்புக்கு பிறகு விஞ்ஞானிகள் இதை உறுதி செய்து உள்ளனர். இந்த கிரகம் ஒரு நடசத்திரத்திற்கு முன்னால் சென்றபோது ஒளி மங்கி காணபட்டதை வைத்து விஞ்ஞானிகள் இதை உறுதி செய்து உள்ளனர்.இந்த கிரகம் ஜூபிடர் கிரகத்தை விட சிறியது.
தற்போது டாமுக்கு 17 வயது ஆகிறது. இந்த புதிய கிரகம் கண்டு பிடிப்பு குறித்து டாம் கூறும் போது நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறினார்.

கனிமொழியும் கருணாநிதியும்

1968 ல் கருணாநிதி வாழ்வில் நடந்த உண்மை சம்பவம், இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த காலகட்டத்தில் ஜவகரிஸ்ட் என்ற பத்திரிகை வந்து கொண்டு இருந்தது. அதன் ஆசிரியர் கருணாநிதிக்கு நெருங்கிய நண்பர், அவருடைய அந்தரங்கங்களை அறிந்தவர். அவர் பெயர் என்.கே.டி.சுப்பிரமணியம் தான். அவர் நடத்திய ஜவகரிஸ்ட் பத்திரிகையில் (ஜனவரி 5, 1968 ) சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தர்மாம்பாள் (எ) ராசாத்தி அம்மாளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. மருத்துவமனை பதிவேட்டில், பெண் குழந்தையின் தகப்பனார் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிட்டு உள்ளது, யார் இந்த கருணாநிதி என செய்தி வெளியிட்டார். (மேலும்....)

தேடல் தொடருகிறது
(வருணி கருணாரத்ன)

(பாலசுப்பிரமணியம் வரதலக்சுமி, அமல்ராஜ் அமலநாயகி, கே. புஸ்பகலா, நிசாந்தினி ஸ்டாலின் ஜோர்ஜ் மற்றும் சந்தியோகு திரேசம்மா)
ஒரு காலத்தில் காணாமற்போன அல்லது கட்டாயப் படுத்தி காணாமற் போக்கடிக்கப்பட்ட தங்களின் பிரியமானவர்களைத் தேடும் அவர்களது குடும்பங்களின் தேடல் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை. வடக்கு மற்றும் கிழக்கிலிருந்து அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பல அங்கத்தவர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள், அமைச்சர்கள், மற்றும் உயர்மட்ட நபர்கள் ஆகியோர் தங்களது பிரச்சினைகளுக்கு உதவி செய்து தங்களுக்கு சில பதில்களை வழங்கக்கூடும் என்கிற நம்பிக்கையோடு அவர்களைச் சந்திப்பதற்காக கொழும்புக்கு உள்ளேயும் வெளியேயும் அலைந்து திரிகிறார்கள். அவ்வாறு காணமற்போயுள்ளவர்கள் விடயத்தில் நீதியை தேடும் நடவடிக்கைக்கு ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை ஒரு தொகுதிப் பெண்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவை சந்திப்பதற்காக மற்றொரு பயணத்தை மேற்கொண்டிருந்தார்கள். (மேலும்....)

இருபதாவது திருத்தத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை கொண்டு வரும் வகையில் அரசியல் யாப்பின் 20வது திருத்தத்திற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவையின் விஷேட கூட்டம் இன்று ஜனாதிபதியினால் கூட்டப்பட்டது. தேர்தல் தொகுதிவாரியாகவும் மற்றும் விகிதாசார அடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அம்சங்களை உள்ளடக்கிய புதிய திருத்தத்தில், தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225இலிருந்து 237 அதிகரிக்கப்படுகின்றது. தேர்தல் தொகுதி வாரியாக 145 பேரும் மாவட்ட மட்ட விகிதாசார அடிப்படையில் 55 பேரும் தேசியப் பட்டியலின் மூலம் 37 பேரும் உறுப்பினர்களாக தெரிவு செய்யும் வகையில் இந்த திருத்தம் அமைவதாக அமைச்சரொருவர் கூறினார். கடந்த அமைச்சரவயில் எதிர்ப்புகளை வெளியிட்ட சிறுபான்மை இன கட்சிகளின் அமைச்சர்களால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படடதாக கூறப்படுகின்றது. புதிய நாடாளுமன்ற தேர்தல் முறை தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தொகுதி வாரி பிரதிநிதித்துவம் இல்லை. விகிதாசார அடிப்படையில், மாவட்ட ரீதியாக 196 பேரும் தேசியப் பட்டியல் மூலம் 29 பேரும் அங்கத்துவம் பெற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.(BBC)

ஆனி 12, 2015

தோழமையுடன் சூத்திரம் இணையத்தள ஆசிரியர் அவர்களுக்கு!

மகிந்த அரசின் சர்வாதிகார அரசியல் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை வீழ்த்தி அதனிடத்தில் ஜனநாயக அரசொன்றை மாற்றீடாக நிறுவுவோம் என்ற தேர்தல் வாக்குறுதிகளை கூறியே மைத்திரிபால சிறிசேன - ரணில் விக்கிரமசிங்க அரசு ஆட்சிக்கு வந்தது. அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்ற எந்தவொரு மிகவும் நிதர்சனமான வெளிப்படையான மனிதவுரிமை மற்றும் ஜனநாயகப் பிரச்சனைகளைப் பற்றி மைத்திரிபால - ரணில் கூட்டணி ஒருபோதும் பேசியதில்லை. விளைவாக சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அவலப்படுகின்ற அரசியல் கைதிகளை விடுவிப்பது சம்பந்தமாக இன்றைய நாள் வரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. (மேலும்....)

புலிகள் தலைவருக்கு இறுதியில் நடந்தது கருணாநிதிக்குத் தெரியுமாம்…?

“இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இலங்கை ராணுவத்துக்கு ஏற்படும் முன்னேற்றம் பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அடிக்கடி கூறப்பட்டது. இறுதி யுத்தத்தில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட போகிறார் என்பதும், இதோ, கொல்லப்பட்டு விட்டார் என்பதும், கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டது.
கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிடாமல் மெளனம் சாதித்தார்.” இவ்வாறு கூறியுள்ளார், சுப்ரமணியம் சுவாமி. ‘சுவாமி கூறியிருப்பது உண்மையாக இருக்குமோ’ என்ற சந்தேகம் ஏற்படுகிறதா? அவர் எந்த இடத்தில், எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு கூறினார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். இலங்கை ராணுவத்தின் 2013-ம் ஆண்டுக்கான 3-வது ஆண்டு பாதுகாப்பு கருத்தரங்கு (Sri Lanka Army’s third annual international conclave the ‘Defence Seminar – 2013′), இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. (மேலும்....)

இராமேஸ்வரம் மண்டபம்

ஈழஅகதிகள் முகாமின் தற்போதைய நிலை

வெளியார் அனுமதிக்கப் படுவதில்லை (இலங்கையில் போராளிகளுக்குகூட இவ்வாறு
நிலைமை இல்லை) அடிப்படை வசதிகள் மிகவும் பின்தங்கியநிலை. சிறார்கள் தரைமண்ணில் இருந்தே கல்விகற்கிறார்கள். எம்மவர்களின் தனிப்பட்ட முயற்சியால் கோயில் கட்டப்பட்டுள்ளது. கல்வியில் உயர்ந்து வைத்தியர்கள், பொறியியலாளர்கள் எல்லாம்
உருவாகியிருக்கிறார்கள். இப்போது அந்தவாய்ப்புக்களும் பறிக்கப்பட்டு விட்டது. எப்போது இந்தநிலை மாறும்? வல்லவர்களே உங்கள் சவாலுக்கு?..!மூன்று வருடங்களுக்கு முன்பு தமிழ் நாடு சென்ற வேளை மண்டபம் முகாம் அகதிகள் பாம்பன் பாலத்தில் சுற்றுலாப் பயணிகளிடம் அன்னாசிப் பழங்களை துண்டுகள் ஆக்கி விற்பனை செய்து கொண்டிருந்தனர் பாலத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் அருகில் சென்று தமது பழத்துண்டுகளை விற்பனை செய்வர். இப்படிச் சந்தித்த ஒருவரிடம் கதை கொடுத்தேன் இவர் திருமலையைச் சேர்ந்தவர். ஒரு நாள் முழக்க வெயில் தொழல் செய்தால் 70 தொடக்கம் 100 வரை கிடைக்குமாம் பாடசாலை முடிந்த பின்பு தனது குழந்தைப் பிராயத்து பிள்ளைகள் இருவரும் இந்தத் தொழிலுக்கு தனித் தனியாக வந்து விடுவார்களாம் ஏதோ வாழ்க்கை ஓடுகின்றது என்றார. நூன் என்னை இலங்கைத் தமிழன் என்ற அறிமுகப்படுத்தினேன் நாலு நட்சத்திர இரவுத் தங்கலைத் தவர்பது என முடிவு செய்து இதற்கு செலவாகும் தொகையை இவரகள் கையில் திணித்துவிட்டு மெல்ல நகர்ந்தேன். முனம் மட்டும் கனத்தது. முண்டபம் முகாமிற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தேன் அது சாத்தியம் இல்லைஇ உங்களை வரவேற்றால் தமக்கு தொல்லையாகிவிடும் என்று முகரில் குடியிருப்பவர் தெரிவித்து தற்போதும் என் மனக் கண்ணில் நிழல் ஆடுகின்றது.

இரட்டை பிரஜாவுரிமை  பெற்ற புலம்பெயர்ந்தோர்

இரட்டை பிரஜாவுரிமை பெற்றுக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள ஒவ்வொரு வரும் இன்று முதல் தாங்கள் வதியும் நாட்டின் இலங்கைக்கான தூதுவர்களாக செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இலங்கை பற்றிய உண்மைத் தகவல்களை வெளிநாடுகளுக்கு கொண்டு சேர்க்கும் அதேவேளை கடல் கடந்து வாழும் ஒன்றரை மில்லியன் இலங்கையர்களை ஒன்றிணைத்து தாய் நாட்டில் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர் முன்னெடுக்க வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார். புலம் பெயர்ந்துள்ள இலங்கையர்களுள் அநேகமானவர்கள் கல்விமான்களாகவும் தொழில்சார் நிபுணர்களாகவும் பிற நாடுகளில் திகழ்கிறார்கள். நாட்டை சிறந்த நிலைக்கு கொண்டு செல்வதாயின் இவர்களது அறிவுப் பரிமாற்றம் இன்றியமையாதது. சமூக. பொருளாதார. கலாசார ரீதியில் இவர்களின் பங்களிப்பினை எதிர்பார்த்து நிற்கிறோம். இவர்களிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கு மானால் எமது இலக்குகளை விரைவாகவும் இலகுவாகவும் அடையக்கூடியதாகவிருக்கும். நாட்டிற்குள் நாம் இன, மத, சமய, மொழி ரீதியாக இருந்தாலும் வெளி நாடுகளில் இலங்கையர் என்ற அடிப் படையிலேயே அடையாளம் காணப் படுகிறோம். அதே உணர்வுடன் நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்காக உழைப் போமெனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறும்

20 விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கவும் முடிவு

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான 20 ஆவது திருத்தச் சட்ட மூலத்திற்கு இன்று (12) நடைபெறும் விசேட அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் பெறப்பட்டு இன்றே வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட இருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 20 ஆவது திருத்தம் தொடர்பில் இறுதி முடிவு எட்டுவதற்காக இன்று மாலை ஜனாதிபதி தலைமையில் விசேட அமைச்சரவை கூட்டம் இடம்பெறுகிறது. இதன் போது உடன்பாடு எட்டப்படும் என்று குறிப்பிட்ட அவர் எம்.பிக்கள் தொகை 225 ஐ விட கூடாது எனவும் தெரிவித்தார். 225 எம்.பிகளில் 25 பேர் தேசிய பட்டியலினூடாக தெரிவு செய்யப்படுவர். ஏனைய 200 எம்.பிக்களும் தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறையின் கீழ் தெரிவாவர். 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றியது போன்று இதனையும் நிறைவேற்றுவோம். 19 ஆவது திருத்தம் மற்றவரது அதிகாரத்தை குறைப்பதாகும். 20 ஆவது திருத்தம் தமது அதிகாரத்தைக் குறைப்பது, அதனால் இதனை எதிர்க்கின்றனர். 20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைக்கப் போவதில்லை. பாராளுமன்றத்தை கலைக்கும் அவசரம் எமக்கு கிடையாது.  எம்.பிகள் தொகையை குறைப்பது தொடர்பில் சிறுபான்மை கட்சிகள் தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளன. இது குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட்டு உடன்பாடு எட்ட எதிர்பார்க்கப்படுகிறது.

கிறீஸ் திவாலாவதை தவிர்க்க பிரஸல்ஸில் தீவிர பேச்சுவார்த்தை

கிறீஸ் நாட்டு கடன் விவகாரம் குறித்த பேச்சுவார்த்தையை தீவிரப்படுத் துவதற்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் நாட்டு தலைவர்களுக்கிடையில் இணக் கம் ஏற்பட்டுள்ளது. எனினும் அந்த முயற்சியில் சிறிய முன்னேற்றமே ஏற்பட் டுள்ளது. பிரஸல்ஸ் நகரில் புதன் இரவு இடம்பெற்ற பேச்சுவார்த்தையில், வேறுபாடு களை களைய அனைத்து தரப்பும் செயற்பட வேண்டும் என்று கிறீஸ் பிரதமர் அலக்ஸி டிஸ்பரஸ் வலியுறுத்தினார். உடன்பாடொன்றை எட்டும் நிலை நெருங்கியபோதும் அது சாதகமாக இருக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப் பதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணையாளர் பீர் மொஸ்கோவிஸ் குறிப்பிட்டார். கிறீஸ் சர்வதேச நாணய நிதியத்திற்கான 1.5 பில்லியன் யூரோவை ஜுன் இறுதிக்குள் கொடுக்க தவறும் சூழல் தற்போது நிலவி வருகிறது. இந்நிலையில் கிறீஸிற்கான 7.2 பில்லியன் கடன் பிணையை விடுவிக்க வேண்டுமாயின் அந்த நாடு மேலும் பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. இந்நிலையில் கிறீஸ் திவாலாகும் சூழலை தவிர்க்கவே ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் தலைவர்கள் அதனுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

எழிலன் துவக்கால் ஒரு தாய்க்கு பொட்டு

தாய்மார்கள் நெற்ரியில் பொட்டு வைப்பார்கள், ஆனால் எழிலன் துவக்கால் ஒரு தாய்க்கு பொட்டு வைதிருக்குன்றான், வலைஞர்மடம் குருசடிச்சந்தியில் தப்பிச் செல்ல முயன்ற சனங்கள் தடுத்து நிறுத்தபட்டிருந்தார்கள். எழிலனும் தங்கனும்தான் அந்த சம்பவத்தில் பொறுப்பாக இருந்தவர்கள். கைக்குழந்தையொன்றுடன் வந்த இளம்தாயொருவர் தனது குழந்தைக்கு பால்மா இல்லையென்றும், மக்களை இப்படி மனிதத்தன்மையற்ற முறையில் தடுக்கலாமா என்றும் ஆவேசமாக நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுது எழிலன் தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை உருவி அந்தத் தாயின் நடுநெற்றியில் இரண்டு சூடு வைத்தார். இவையெல்லாம் மேலோட்டமான உதாரணங்கள். முழுமையான விசாரணைப்பட்டியல் அல்ல. ஆனால் அனந்தி பொய் கூறுகிறார் என்பதற்கான உதாரணங்களாகத்தான் சுட்டிக்காட்டினேன்

விளம்பரப்படங்களில் நடிக்கிற கலைஞர்கள்

சட்ட நுணுக்கங்களின்படி, விளம்பரப்படங்களில் நடிக்கிற கலைஞர்கள் அந்தப் பொருள்கள் தீங்கானவை என்று கண்டுபிடிக்கப்படுகிறபோது, அதன் தயாரிப்பு நிறுவனத்தைப் போல தண்டனை நடவடிக்கைக்கு உரியவர்கள் அல்லதான். அவர்கள் தங்களுக்கான சம்பளத்தொகை, விளம்பர ஒப்பந்தக் காலம் போன்றவற்றைத்தான் கவனிக்கிறார்கள், அதன் அடிப்படையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார்கள். பொருளின் தரம் என்ன என்று சோதனை நடத்திவிட்டுத் தெரிந்துகொண்டு கையெழுத்திடுவதில்லை. அது குளிர்பானமாக இருந்தாலும் சரி, நூடுல்ஸ்சாக இருந்தாலும் சரி. அதற்காக அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றால், அவற்றை விளம்பரம் செய்த நிறுவனங்கள், விளம்பரங்களை வடிவமைத்தவர்கள், ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், வெளியிட்ட பத்திரிகைகள், உள்ளூர் வியாபாரிகள் மீது கூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பார்களா? (மேலும்....)

பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் என்றும் நினைவில் கொள்வோம்!

1983ல் இடம்பெற்ற இனக்கலவரத்தின் பின்பே தமிழகத்தில் பெரும்பாலானவர்கள் இலங்கைப் பிரச்சனை குறித்து அறிந்திருந்தனர். ஆனால் அதற்கு முன்னரே இதனை அறிந்து உதவி செய்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் இருந்தனர். அவர்களுள் மிக முக்கியமானவர் பாவலர் அய்யா பெருஞ்சித்திரனார் அவர்கள். அவரும் அவருடைய குடும்பத்தவர்களும் இலங்கை தமிழர்கள் மீது கொண்டிருக்கும் அன்பும் அவர்கள் செய்த உதவிகளும் என்றும் மறக்க முடியாதவை. அவர்களை நாம் என்றும் நினைவில் கொள்வோம்.(மேலும்....)
 

ஆனி 11, 2015

வெளிநாடு வாழ் ஸ்ரீலங்கா தமிழர் அமைப்பு – NRTSL

எம்மைப் பற்றி

வெளிநாடு வாழ் ஸ்ரீலங்கா தமிழர் அமைப்பு (NRTSL), ஸ்ரீலங்காவைத் தமது பிறப்பிடமாகவும், பூர்வீகமாகவும் கொண்டவர்களும், இப்பொழுது பிரித்தானியாவில் வதிப்பவர்களுமான, வௌ;வேறு அரசியல் சார்புகளையும், பல்வேறு தொழில்களையும் கொண்டவர்களால், 2014ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் உருவாக்கப்பட்டது. ஏறத்தாழ மூன்று இலட்சம் இலங்கைத் தமிழர்கள் தற்போது பிரித்தானியாவில் வாழ்வதாகக் கணிக்கப்படுகிறது. எமது பார்வையில், அத்தனை பிரித்தானியத் தமிழர்களையும் ஒரே அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துதல் என்பது யாதார்த்தபூர்வமானதாக இருக்க முடியாது. (மேலும்....)

'ஏன் தோற்றுப் போனோம்'

கனிமொழி காரணம்
சிங்கள அரசு காரணம்
சிங்கள மக்கள் காரணம்
முஸ்லிம்கள் காரணம்
மலையகத் தமிழர் காரணம்
நமக்குள்ளேயே இருக்கும் துரோகத் தமிழர் காரணம்
இந்தியா காரணம்
நோர்வே காரணம்
ஜப்பான் காரணம்
சீனா காரணம்
பாகிஸ்தான் காரணம்
இஸ்ரேல் காரணம்
அமெரிக்கா காரணம்
ஐ.நா. காரணம்
ரஷ்யா காரணம்
கியூபா காரணம்
லிபியா காரணம்
ஈரான் காரணம்
காட்டிக் கொடுத்தோர் காரணம்
கடல் காரணம்
காற்று மாறி வீசியது காரணம்
வானம் காரணம்
வராமல்போன கப்பல்கள் காரணம்
ஊடுபார்த்து ஆமியிடம் உயிர்ப்பயத்தில் ஓடிப்போன சனம் காரணம்
வெள்ளைக்கொடி மதிப்பறியா விரோதிப்படை காரணம்
சர்வதேசக் கிளையினர் காரணம்
செல்போன்களை மூடிவைத்துவிட்டு ஓடி ஒளித்த தமிழ் எம்பிமார் காரணம்…(etc)
தலைவரும் தம்பிமார் நாங்களும் காரணமில்லை..... ?

காரணமில்லை.....?

நாங்கள் காரணமில்லை.....?

நாங்கள் காரணமில்லை.....?

நாங்கள் காரணமில்லை.....?


(Jems Ramachanthiran)

வடமாகாண - யாழ் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தல்

யாழ்ப்பாணத்தில் அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாதகாலத்திற்குள் முடிவிற்கு கொண்டுவரப்படவேண்டும். யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் திடீரென அதிகரிப்பதற்குக் காரணமென்ன என கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகின்ற அனைத்து சட்டவிரோதச் செயற்பாடுகளும் ஒரு மாத காலத்தில் சட்டத்தின் துணைகொண்டு ஒழிக்கப்பட வேண்டும் என வடமாகாணம் மற்றும் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார். (மேலும்....)

சிங்ககொடி சம்பந்தன் உட்பட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் சாதித்தது என்ன?

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற கனவுடன் ஓட்டங்கள் ஆரம்பமாகியிருக்கிறது. மக்களும் கண்ணை மூடிக்கொண்டு வெறும் உணர்ச்சி பேச்சுக்களுக்கும் அல்லது வேலைவாய்ப்பு, நிவாரணம் தருகிறோம் என்ற வெற்று வார்த்தைகளுக்கு மயங்கி வாக்களிக்க தயாராவார்கள். இந்த வேளையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிட இருக்கும் தமிழ் வேட்பாளர்களை நோக்கி சில கேள்விகளை எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வடக்கு கிழக்கில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் தமிழரசுக்கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகிய நான்கு கட்சிகளும் இணைந்து கடந்த காலங்களை போல தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிடலாம், சில வேளைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுடையே சில இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்தில் தமிழரசுக்கட்சி தனியாகவும் ஏனைய கட்சிகள் ஒன்றாகவும் போட்டியிடலாம். (மேலும்....)

ஆனி 10, 2015

மரண அறிவித்தல்

திரு சித்தர் சின்னத்தம்பி

இறப்பு : 5 யூன் 2015

 

யாழ். கரவெட்டி மேற்கு மத்தோணியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சித்தர் சின்னத்தம்பி அவர்கள் 05-06-2015 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சிவகாமி அவர்களின் அன்புக் கணவரும், தங்கராஜா(ஆசிரியர்- ஹாட்லி கல்லூரி), சிவராசன்(குமரன் வீடியோ உரிமையாளர்- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயகௌரி, ஐரின் ஆகியோரின் அன்பு மாமனாரும், ஜெயராஜ்(லண்டன்), ஜனார்த்தனன், கோபிநாத், மதுசா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். அன்னாரின் திருவுடலானது 08-06-2015 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

சிவராசா(சிவா- கனடா) - தோழர் சேகரன்

தொடர்புகளுக்கு:

செல்லிடப்பேசி:  94776157992  — இலங்கை

செல்லிடப்பேசி: (647) 273- 7340  — கனடா

NRT-SL meeting on the right track

by Our Correspondent in London

( June 8, 2015, London, Sri Lanka Guardian) The formal launch meeting of the interim committee of the Non-Resident Tamils of Sri Lanka was held on 31 May 2015 in Ealing , Middlesex. It was attended by the cross sections of the Sri Lankan communities and the diverse political views. The meeting was chaired by the interim Chairman of the association Mr V Sivalingam. The panel members of the meeting were four interim committee members NRT-SL. Mr Barry Gardiner MP made his valuable contribution in his capacity as the special guest. The committee members briefed progress made since the formation of the association in August 2014 and detailed the importance of forming a group with the Tamil identity. Based on the achievements of the association of Non Resident Indians (NRI), the founder members explained the need for an organisation to represent the Tamils. Following the welcome speech by the Chairman, the key member of the NRT-SL K Thambiah made his wide raging speech touching on the issues that precipitated the formation of the NRT-SL. In his speech he said: (more.....)

இலண்டன் பேச்சுவார்த்தையின் இரகசியம் என்ன? சம்பந்தன் தமிழர்களுக்கு விளக்க வேண்டும்

லண்டன் பேச்சுவார்த்தை தொடர்பில் சம்பந்தன் தெளிவான விளக்கமொன்றை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டுமென சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழரசு கட்சியின் வெளிநாட்டு விவகாரங்களுக்கு பொறுப்பானவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் இணைந்து இங்கிலாந்தில் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடாத்திவருவது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்....)
 

Takeover Of Lakshman Kadirgamar’s Land: Court Issues Notice On Lands Minister
 

The writ petition against the Government take-over of former Foreign Minister Lakshman Kadirgamar’s land in Jaffna which is set to become a symbolic and landmark case in the ongoing struggle for land in the north was taken up before the Court of Appeal today. The Court of Appeal issued notice on the Minister for Lands, Janaka Bandara Tennakoon, Land Acquiring Officer of the Jaffna District A. Sivaswamy and the Land Survey Officer of the Jaffna District who have been cited as respondents in the petition filed by the former Minister’s son last week. According to the petition, Minister Kadirgamar became sole owner of the prime property on the Keerimalai-Kankesanthurai Road in May 1968. With the Minister’s assassination in 2005 by the LTTE, in accordance with Tesawalamai laws the property passed to his son, Sriraghavan Kadirgamar. The Minister’s son is praying the court to prevent the respondents from taking any further steps on the acquisition until the application is heard. He also seeking a Writ Certiorari to quash the acquisition notice. In his petition Minister Kadirgamar’s son says that he is being prevented from using and enjoying his rights to his ancestral property due to barricades and barbed wire fences manned by security forces personnel and unauthorised construction taking place in the vicinity. Evoking the ancient laws of the Jaffna District, the petition says that his ancestral land is tied to the petitioner’s identity and his family’s identity, a facet recognised in the law of Tesawalamai that applies to residents of Jaffna. Analysts say the high profile victim of an ongoing land grab in the north by the state, will lend a hitherto absent dimension to the northern peoples’ land struggles.(COLOMBO_TELEGRAPH)

சட்ட அமைச்சரின் பட்டம் போலியானது

பாஜக பழிவாங்குகின்றதா டெல்லி மாநில அரசை?

முதல்வர் அரவிந்த் கெஜ் ரிவால் தலை மையிலான அமைச்சரவையில் இருக்கும் சட்ட அமைச்சர் ஒருவரை டில்லி பொலி ஸார் கைது செய்துள்ளனர். இதனால் டில்லி அரசு அதிர்ச்சியில் உறைந்திருக் கிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பொலிஸ் அதிகாரத்தினால் டில்லி அரசால் இந்த விடயத்தில் கை இழந்த பாவையாகவே நிற்க வேண்டிய தாயிற்று. டில்லி சட்ட அமைச்சர் ஜpதேந்தர் தோமர். இவர் முந்தைய காலத்தில் அரசி டம் வழங்கிய பட்டச்சான்று போலி என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்கு பதியப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் டில்லி பொலிஸார் தோமரை கைது செய்துள்ளனர். இதனை ஆம் ஆத்மி நிர்வாகி சஞ்சய்சிங் உறுதி செய்துள்ளார். (மேலும்....)

ஆனி 09, 2015

20ஆம் திருத்தச்சட்டத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக இன்று திங்கட்கிழமை மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவை, புதிய தேர்தல் முறைமைக்கு அங்கிகாரம் வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பிரேரிக்கப்பட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய தேர்தல் முறைமைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய 125 உறுப்பினர்கள் விருப்பத்தெரிவு அடிப்படையிலும், 75 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட உள்ளதோடு 25 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில்

வடக்கில் போதைப்பொருள் ஒழிப்புக்கு விசேட செயலணி

வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிப்பதற்காக போதைப் பொருள் ஒழிப்பு செயலணியொன்றை ஸ்தாபிக்க தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தீர்மானித்துள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் தலைமையில் ஸ்தாபிக்கப்படவுள்ள மேற்படி செயலணியினூடாக வட மாகாணத்தில் போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வடக்கு, கிழக்கு பகுதிகளில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு வட மாகாண முதலமைச்சர் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய மேற்படி செயலணியை ஸ்தாபிக்க பொதுமக்கள் பாதுகாப்பு கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார். 2009 மே மாதத்திற்கு முன்பு வட மாகாணத்தில் போதைப் பொருள் விற்பனை நடைபெறவில்லை. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் மிக வேகமாக போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் 17 முக்கிய புள்ளிகள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் 07 பேர் தமிழர்கள். வடமாகா ணத்திற்கு போதைப் பொருளை கொண்டு வருபவர்களும் தமிழர்கள் தான் என்றும் சமரசிங்க தெரிவித்தார். வட மாகாணத்தில் தற்போது நிலவும் போதைப்பொருள் பிரச்சினையை தீர்ப்ப தற்கு விசேட பொலிஸ் குழுவொன்றையும் ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் போதைவஸ்து ஒழிப்பு குழுக்கள் நிறுவப்படும். மாதம் ஒருமுறை இந்த குழுக்கள் முதலமைச்சரின் தலைமையில் கூடி முன்னேற்றச் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயுமென்றும் அவர் கூறினார்.

நாமல் எம்.பி.க்கும் சி.ஐ.டி நோட்டீஸ்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை, குற்றப்புலனாய்வு பிரிவில் எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த நோட்டீஸில் காரணம் குறிப்பிடப்படவில்லை என்றும் அந்த நோட்டீஸை சற்றுமுன்னர் தான் பெற்றுகொண்டதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாமல் ராஜபக்ஷ, தனது டுவிட்டர் வலைதளத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிமூக்கு அரக்கன்

கேள்வி :- கனிமொழி பேச்சைக்கேட்டு சரணடைந்தோம் என்று யாரோ ஓர் ஈழத்து அம்மணி குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்களே ? இதற்கு என்னபதில் சொல்கிறீர் அரக்கனே ?

பதில் :- பதில் சொல்வதற்கு முன்னர் ஒரு பொறுப்புத்துறப்பு எச்சரிக்கை. லெமூரியா கண்டத்தை கண்டுபிடித்தவர்கள் , ஈழம் சிட்பண்ட்ஸ் ஏஜென்சிகளில் முதலீடு செய்பவர்கள், உலக பாவங்களுக்கெல்லாம் ஒரே காரணம் கருணாநிதி என்று நம்புபவர்கள், சாத்தான் கருனாநிதியின் பாவங்களில் இருந்து மக்களை மீட்டெடுப்பவர் ஜெயலலிதா என்று நம்புபவர்கள் , தமிழ் வரலாற்று அவியல் மையங்கள், தமிழ்நாஜிக்கள் , பாரிஸ் லா சாப்பல், லண்டன் ஈஸ்ட் ஹாம் பாய்ஸ் இதைப்படிப்பதை தவிர்த்துவிடுங்கள். இந்த பதில் முழுக்க முழுக்க காமன் சென்ஸ் இருக்கும் சாமானிய தமிழ்நாட்டு மக்களுக்காக எழுதப்பட்டது.
நமது தமிழ்நாட்டு பொதுசனங்களுக்கு ஈழமென்றால் தமிழ், ஈழத்தவரென்றால் நேர்மையானவர்கள் என்ற ஓர் ஈழமாயை உண்டு. ஆனால் நமது நம்பிக்கைகளுக்கு மாறாக, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு இருக்கும் கயமைத்தனம் , துரோகம் இவற்றைவிட ஏகத்துக்கும் அதிகம் ஈழத்தவருக்குண்டு. நம் அரசியல்வாதிகள் கருத்தறுப்பவர்கள் என்றால் ஈழத்து போராளித்தலைவர்கள் கழுத்தறுப்பவர்கள். துரோகம், நயவஞ்சகம் இவை ஒப்பீட்டளவில் நம்மவர்களுக்கு அளவில் கொஞ்சம் குறைவே. ஈழப்போராட்ட வரலாற்றை எடுத்துப்பாருங்கள், இவன் துரோகி, அவன் நயவஞ்சகன், இப்படி அடுத்தவரை குறைசொல்லியே ஒருவரை ஒருவர் போட்டுத்தள்ளிக்கொண்டிருப்பார்கள். (மேலும்....)

ரோஹிங்யா முஸ்லிம்கள்

சுமார் 6 கோடி மொத்த மக்கள் தொகை உள்ள மியான்மரில் (முன்னாள் பர்மா) வெறும் 4 சத அளவே உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை ஒழித்துக் கட்டபர்மியப் பேரினவாதம் பவுத்தத்தை எவ்வாறெல்லாம் திரிக்கிறது எனப் பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. புத்தன் இருந்தால், பாவம் அந்தப் போதி மரத்தில் நாண்டு கொண்டு செத்துப்போயிருப்பான். பவுத்தத்தில் வன்முறைக்கும் போருக்கும் இடமில்லை. அது சீலங்களின் மதம். தனது பாதையை 'மஜ்ஜிம பதிபாதம்' (நடுநிலைப் பாதை) என அறிவித்தவர் அந்த போதி மாதவர். (மேலும்....)

பனையால் 200 கோடி ரூபாய் உழைக்கலாம்

குறிப்பாக பனை மரங்கள். அந்த மர வகையில் ஏகப்பட்ட பலன்கள் உள்ளன. உணவாக மட்டும் பதநீர், கருப்பட்டி, வெல்லம், பனஞ்சீனி, பனங்கற்கண்டு, பனம் மிட்டாய், பனங்கூழ் என பலவற்றைத் தமிழகத்தில் தயாரிக்கின்றனர். ஓர் ஆண்டில் ஒரு பனை மரம் 150 லிட்டர் பனைநீர், 1 கிலோ தும்பு, 1.5 கிலோ ஈர்க்கு, 8 ஓலைகள், 16 நார் முடிகள், 24 கிலோ பனை வெல்லம், 2 கூடைகள், 2 தூரிகைகள், 6 பாய்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
அதிலிருந்து கிடைக்கும் பனஞ்சாற்றில் கொழுப்பு, புரதம், கனிமங்கள், உயிர்ச் சத்துக்கள், இரும்பு, சுண்ணாம்பு எல்லாம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு எலும்புருக்கி நோயும், ஈரல் நோய்களையும் குணப்படுத்தலாம். இங்கு பனை மரங்களை வெறும் அலங்கார மரங்களாக நட்டாலும் இந்தியாவில் பனை மரத் தொழில் நல்ல லாபத்தை தருகின்றது.
வெளிநாடுகளுக்கு பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்தே ஒரு ஆண்டில் இந்தியாவிற்கு 200 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கிடைக்கிறது. அந்த தொழிலால் வேலை வாய்ப்புகளும் அமைகின்றன. நம் குடியிருப்பு பேட்டைகளில் நடப்பட்டிருக்கு பனை மரங்களுக்கு இவ்வளவு பலன் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? அதன் பலன்களை நாம்தான் அனுபவிப்பதில்லை.

சொன்னது நீதானா சொல்.. சொல் என்னுயிரே
சம்மதம் தானா ஏன்.. ஏன் ஏன் என்னுயிரே....!

இன்றைய கிழக்கு மாகாண சபையின் ஆளுநர், ஆட்சி அதிகாரங்களை தானே தக்க வைத்துக் கொண்டு தனக்கு விரும்பியதனை எல்லாம் செய்வதாகவும் கிழக்கு மாகாண கல்வியமைச்சின் தற்போதைய செயலாளர் கல்வி தொடர்பான நியமனங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துள்ளதாகவும் தன்னால் எதுவுமே செய்ய முடியாத நிலைமைக்குள் தள்ளப்பட்டுள்ளேன் என்ற அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அவர்கள் ஊடகங்களுக்கு மிகக கவலையுடன் தெரிவித்துள்ளார். இவ்வாறான அஜாரகத்தை எதிர்த்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒட்டுமொத்தமாக எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள உள்ளோம் என்றும் அவர் கூறுகிறார்.
முன்னைய கிழக்கு மாகாண நிர்வாகத்தில் மாகாண அமைச்சராக இருந்த ஹாபிஸ் நஸீர் அவர்கள் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு இவ்வாறு உரையாற்றியிருந்தார். (மேலும்....)

ஆனி 08, 2015

‘எனக்கு அனந்தி சசிதரன் யார் என்றே தெரியாது. யாரையும் சரணடையுமாறு கூறவில்லை  - அனந்தியின் கருத்தை மறுக்கும் கனிமொழி

மு.கருணாநிதியின் மகள் கனிமொழியுடன் பேசியதன் பின்னரே தனது கணவர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய தீர்மானம் எடுத்தார் என புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் எழிலலின் மனைவி அனந்தி சசிதரன் கூறிய கருத்தினை கனிமொழி மறுத்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் பிராந்திய தலைவர் எழிலனையோ வேறு எந்த விடுதலைப் புலி உறுப்பினர்களையோ இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையுமாறு நாம் உறுதிமொழி வழங்கவில்லை எனவும் கனிமொழி குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

அச்சுவேலியில் ஆசிரியரை அச்சுறுத்திய மாணவர்கள்

அச்சுவேலியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் மாணவர்களை கும்பலதாக சேர்ந்து ஆசிரியரை மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து. பாடசாலைக்கு சென்ற பொலிசார் மாணவர்களை எச்சரித்ததுடன் ஆசிரியரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவும் வைத்துள்ளனர்.
பாடசாலை வேளையில் மாணவர் கும்பலொன்று அனுமதி பெறாமல் வெளியில் சென்று திரும்பியுள்ளது. இவர்களை அவதானித்த ஆசிரியர் ஒருவர் எங்கு சென்று வருகிறீர்கள் என கேட்டுள்ளார். இந்த கேள்வியினால் ஆத்திரமடைந்த மாணவர் கும்பல் ஒன்றுதிரண்டு ஆசிரியரை மிரட்டியதுடன் தாக்கவும் முற்பட்டது. தப்பினேன் பிழைத்தேன் என ஆசிரியர் அவர்களிடமிருந்து ஓடித்தப்பிவிட்டார். உடனடியாக விடயம் பொலிசாரிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து வரைந்து சென்ற பொலிசார் மாணவர் கும்பலை பிடித்து எச்சரித்தனர். பின்னர் பகிரங்கமாக ஆசிரியர் முன்னிலையில் அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தனர். அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து செல்வது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

'எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே முன்னெடுக்கப்படுகிறது'

இலங்கையில் தற்போது இடம்பெறுகின்ற ஆட்சியானது எங்களின் ஆட்சி அல்ல. எங்களினால் ஆதரிக்கப்பட்ட ஆட்சியே. இதை தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், 'இன்று ஆட்சி செய்பவர்கள் கட்சியின் தலைவர்கள் தங்களது ஆட்சியில் மந்திரிப் பதவிகளை வைக்கவேண்டுமென கேட்டார்கள். நாம் பெற்று இருக்கலாம். அதனால் நன்மைகள் கிடைத்திருக்கலாம்.ஆனால் நாங்கள் அந்தநிலைக்கு போகவிரும்பவில்லை. பதவிக்காகவும் மந்திரிப் பதவிகளுக்காகவும் நாம் உங்களை வாக்களிக்கச் சொல்லவில்லை. எமக்கு பதவிகள் முக்கியம் அல்ல. எமது இலக்கு வேறு. இந்த அரசு முக்கியமாக தமிழ் மக்களின் வாக்குகளுடன், முஸ்லிம் மற்றும் மலையக மக்களின் வாக்குகளால் உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சி. இவர்கள் நூறு நாள்; வேலைத்திட்டத்துடன் ஆட்சிக்கு வந்தார்கள். இதில் ஆக்கிரமிக்கப்பட்ட எமது நிலங்களை உரிய மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது முக்கியமான விடயமாக இருந்தது. தற்போது இது ஓரளவு இடம்பெற்று வருகின்றது. இருப்பினும், நீங்கள் எதற்காக வாக்களித்தீர்களோ, அந்த நோக்கங்கள் நிறைவு பெறவில்லை. அந்த நோக்கங்கள் கிடைக்கும்வரை நாம் பதவிகளை விரும்பமாட்டோம்' என்றார்.

வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மன்னாரில் கையெழுத்து வேட்டை

தடைப்பட்டுள்ள வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தினை வலியுறுத்தி இரண்டு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் நடவடிக்கையொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு மன்னார், முசலி பிரதேச சபைக்குட்பட்ட மறிச்சுக்கட்டி கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் வாணிப அமைச் சருமான ரிஷாட் பதியுதீன், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், பிரதி யமைச்சர் எம். எஸ். எஸ். அமீர் அலி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வட பகுதி முஸ்லிம் அகதிகளின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி கையெழுத்து பெறும் மற்றுமொரு பாரிய நடவடிக் கையொன்று எதிர்வரும் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையினைத் தொடர்ந்து நாடு முழுவதிலுமுள்ள பள்ளிவாசல்களில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

தீவிரவாத பட்டியலிலிருந்து ஹமாஸை நீக்கியது எகிப்து

பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை தீவிரவாத குழுவாக அறிவித்த எகிப்து நீதிமன்றத்தின் தீர்ப்பை அந்நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து அந்த பட்டியலில் இருந்து அகற்றியுள்ளது. இவ்வாறானதொரு தீர்ப்பை வழங்குவ தற்கு கீழ் நீதிமன்றத்திற்கு தகுதியில்லை என்று குறிப்பிட்டே அந்த தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் ரத்துச் செய்திருப்பதாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு வரவேற்றுள்ளது. ஹமாஸ் அமைப்பு எகிப்து முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கிளையொன்றாகும். 2013 இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை எகிப்து அரசு தீவிரவாத குழுவாக பட்டியலிட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு முந்தைய தவறை சரிசெய்தது என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. "பலஸ்தீனர்களின் போராட்டத்தில் கெய்ரோவின் கடப்பாட்டை இந்த தீர்ப்பு பிரதிநிதித்துவப் படுத்துகிறது" என்று ஹமாஸ் பேச்சாளர் சமி அபூ சுஹ்ரி குறிப்பிட்டுள்ளார்.

படிப்படியாக அகலும் இந்திய - சீன விரிசல்

சீரிய வரலாற்றுச் சந்திப் பொன்று 1954 இன் இலை யுதிர் காலத்தில் நிகழ்ந்தது. இந்தியப் பிரதமர் நேருவும் சீன அதிபர் மாவோவும் பெய்ஜிங்கில் தனியாகச் சந்தித்து சுமார் நாலரை மணி நேரம் பேசியிரு க்கின்றனர். நேருவைச் சந்தித்த சில விநாடிகளுக் கெல்லாம் சகஜமாகப் பேசத் தொடங்கி யிருக்கிறார். மாவோ. “சீனத்தின் பொருளாதார வளர்ச்சி இந்திய வளர்ச்சியை விடக் குறைவாக இருக்கிறது. இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் ஆகும் தொழில்துறையில் வளர்ச்சியை எட்டுவதற்கு” என்று குறிப்பிட்ட மாவோ, “அமெரிக்கா வின் இராணுவ நீட்சி தென் கொரியா, தாய்வான், இந்தோனேசியா வரை இருப்பதால் தங்களால் நிம்மதியாகத் துங்க முடியவில்லை” என்றார். நேரு, “உலக மக்கள் தொகையில் சுமார் 100 கோடியைக் கொண்டிருக்கும் இந்தியாவும் சீனாவும் ஆசியாவில் முக்கிய பங்காற்ற வேண்டும்” என்றார்.(மேலும்....)

ஆனி 07, 2015

பிராந்திய கூட்டில் டக்ளஸின் கவனம்

எதிர்வரும் பொதுத் தேர்த லில் தேசியக் கட்சி எதிலும் இணைந்து போட்டியிடும் எண்ணம் இல்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பிராந்தியத்தில் கூட்டு வைத்துச் செயற்படு வதிலேயே தற்போது தான் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். தேர்தல் கூட்டுத் தொடர்பாக அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்தீர்களா எனக் கேட்டபோது அவர் அதற்கு விடைதர மறுத்துவிட்டார்.

இறுதி யுத்த களத்தில் சரணடைந்த விடுதலைப் புலி தளபதிகளின் பெயர் விபரங்கள் வெளியாகியுள்ளது

இலங்கை அரசு இதுவரை சரணடைந்வர்களின் பெயர் விபரங்களை உறுதி செய்யாத நிலையில் புலிகள் தரப்பிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிகப்பட்டுள்ளது. இதில் இடம் பெறாத முக்கிய புலி உறுப்பினர்கள் ஏற்கனே இறுதி சண்டையில் இறந்துவிட்டதாக அறிய முடிகின்றது. (தூயவன்) வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின், முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும். வாசகர்களுக்காக இங்கே இணைத்துள்ளோம். (மேலும்....)

மரணங்களின் அஸ்தமனம்

1971 மற்றும் 1989 ஆண்டுகளில் ஜே.வி.பியின் கிளர்ச்சிகளின் போது ஏற்படுத்தப்பட்ட அழிவுகளை கணக்கில் எடுக்காது, இலங்கையில் 2009 மே மாதத்தில் முடிவுக்கு வந்த அரசு – புலிகள் யுத்தத்தினை மாத்திரம் நோக்குவோமானால், எல்லா இனங்களையும் சேர்ந்த ஏறத்தாள ஒரு இலட்சம் வரையிலான மனித உயிர்கள் பலி கொள்ளப்பட்டதும், பல இலட்சக் கணக்கானவர்களின் இடப்பெயர்வுகளும், மதிப்பிட முடியாத சொத்துக்களின் அழிவும் இடம்பெற்றுள்ளன. இதற்கு இலங்கை அரச படைகளும், அரச படைகளை எதிர்த்துப்போராடிய ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களும், இந்திய அமைதிப்படையுமே பொறுப்பாளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அரச படைகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் என்றைக்கும் பொறுப்புக்கூற இலங்கை அரசு உள்ளது. ஆனால் தமிழ்த்தேசிய இயக்கங்களினதும் இந்திய அமைதிப்படையினதும் நடவடிக்கைகளுக்கு பொறுப்புக்கூற இன்று எவருமே இல்லை. (மேலும்....)

சிவகுமாரன் பற்றிய இன்னொரு பார்வை......!

புலிகளுக்கும் இவருக்கும் ஏன் பிரபாகரனுக்குமே தொடர்பு எந்தக்காலத்திலும் இருந்தது கிடையாது. அப்பொழுது புலிகள் அமைப்பும் கிடையாது. இவரை ஒரு மகத்தான போராளி என்பதில் புடம் போட்டு எடுத்தது உரும்பிராயிலிருந்த சாதிப்பிரச்சனைதான். அங்குதான் இவர் தமிழ் சமூகத்தையும் அதன் படிகளையும் கற்றுக்கொண்டார். சாதி தீண்டாமை யாழ்ப்பாணத்தில் அதி உச்சத்தில் இருந்த அறுபதுகள் எழுபதுகளில் உரும்பிராயிலும் அது தாண்டவமாடிய காலம். உரும்பிராய் தேநீர் கடைகளில் உயர் சாதிக்காரனுக்கு ஒரு கோப்பையும் கீழ் சாதிக்காரனுக்கு மூக்குப்பேனியும் என்று பிரித்து வைத்திருந்த காலங்களில் அதே மூக்குப்பேணியில் தனக்கும் தேநீர் தரச்சொல்லி அருந்தியவர். கீழ்சாதிக்காரன் என்று நீங்கள் பிரித்து வைத்திருக்கும் அவர்களும் எம்மைப்போல மனிதர்கள்தான் என்று தனது குடும்பத்தாரோடும் தனது சாதி சமூகத்தோடும் முரண்பட்டவர் சிவகுமார் அவர்கள்.(மேலும்....)

இன்னும் 200 வருடங்களுக்கு

இந்திய வம்சாவழித் தமிழர்களை அடைகு வைத்த புதிய கூட்டணி........!

2 லட்சம் இலங்கை தமிழர்கள் ( இந்திய தமிழர்கள் என்பதை விரும்பவில்லை ...200 வருடங்களுக்கு மேல் இரத்தம் சிந்தி இலங்கைக்காக உழைக்கும் இவர்கள் இலங்கையரே)
இன்னும் தேயிலை தோட்டங்களில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத வாழ்க்கை வாழும் மக்களுக்கு புதிய புதிய அரசியல் ஆலோசனைகள் கொடுக்கப்படுகிறது.
நல்ல காலம் வருகுது ...நல்லகாலம் வருகுது என்று கூறும் குடுகுடுப்பை காரன்கள் போல ......
பல அரசியல் குடுகுடுப்பை காரர்கள் அப்பப்போது தோன்றுகின்றார்கள் .......
இந்த அப்பாவித்தமிழர்கள் மேல் அன்புகொண்டவர்கள் போல தம்மை காட்டிக்கொள்ளும் சிவப்பு சட்டைக்கார குடுகுடுப்பை சோசலிசவாதிகளும் ????......ராஜபக்சேவை வீடுக்கு அனுப்ப ....(மேலும்....)

வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா நகரங்களில் கொழும்பு முதலிடம்!

உலகில் மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலா நகரங்களின் பட்டியலில் கொழும்பும் இடம்பிடித்திருப்பதாக மாஸ்டர் கார்ட்டின் வருடாந்த ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆறு வருடங்களாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் பிரகாரம் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நகரங்களில் முதலாவது 07 இடங்களை ஆசியாக் கண்டத்தில் அடங்கியுள்ள நாடுகள் பெற்றுக்கொண்டுள்ளன. அந்த வகையில் இலங்கையின் கொழும்பு நகர் 21.1 சதவீதத்தினைப் பெற்று முதலாவது இடத்தினையும் சீனாவின் நகரான செங்டு 20.7 சதவீதத்தினைப் பெற்று இரண்டாவது இடத்தையும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் நகரான அபுதாபி 20.4 சதவீதத்தினைப் பெற்று மூன்றாவது இடத்தினை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மியன்மார் ஹொலகோஸ்ட் இனத்தேசியமும் நெருக்கடிகளும்!

மியன்மாரில் வாழும் சிறுபான்மை ரோஹிங்யோ முஸ்லிம்கள் பற் றிய எதிரும் புதிருமான கருத்து க்கள் ஊடகங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. தேச உருவாக் கத்தில் முக்கிய கூறாக கருதப்படும் வரலாற்றுப்பூர்வீகம் குறிப்பிட்ட இந்த இனக்குழுமத்திற்கு இல்லை என்று மறுதலிக்கப்படுகின்றது. மியன்மார் அரசாங்கம் மற்றும் அங்கு செயற் படும் பாரா ஆயுதக் குழுக்கள் உள் ளிட்டு இனத்தேசியவாதிகள் இத்த கைய ஒரு கருத்தை பரப்புரை செய்கின்றனர். விளைவாக இச் சிறு பான்மை முஸ்லிம்கள் அந்நாட்டி லிருந்து சிறிது சிறிதாக வேரோடு பிடுங்கி வீசப்படும் நிலைமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். சர்வதேச சமூகத்தின் பராமுகம் நெருக்கடியை மேலும் கூர்மைப்படுத்தி வருகின்றது. (மேலும்....)

பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை

ஐ.தே.க.,மு.கா.,ரி.என்.ஏ.,ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள 112 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு சமர்ப்பித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்கச் செய்வதற்குத் தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளிலும் தாம் தீவிரமாக இறங்கிச் செயற்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் உறுதி தெரிவித்துள்ளன. பாராளுமன்றத்தில் தற்போது எமக்கே பலம் உள்ளது. எமது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மிகவும் ஒற்றுமையாக இருக்கின்றனர். அத்துடன் சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் எம்முடனேயே உள்ளன. பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கை இல்லா பிரேரணையை ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை. பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டால் அதை தோற்கடிப்போம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவது என்பது சாத்தியமற்றதாகும். அப்படியே நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தாலும் அதனை ஆதரிக்கும் எண்ணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இல்லை என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரேரணையை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பது தொடர்பில் இப்போது எந்த தீர்மானமும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

மைத்திரியின் ஆதரவு பிரதமர் ரணிலுக்கே?

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம் கொடுப்பதற்கு தயார் நிலையிலுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். செய்வதற்கு வேறு எவ்வித வேலையும் இல் லாமையினாலேயே எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பிடித்துக்கொண்டு கூச்சலிடுவதாக அவரை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சிக்கு நம்பிக்கையில்லா விட்டாலும் அரசாங்கம் மிகவும் நம்பிக்கையுடனே செயற்படுகின்றது. எதிர்க்கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தற்போதே தொல்வியடைந்துள்ளது. பாராளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களில் 112 பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளனர். அதற்கமைய பெரும்பான்மை இன்னமும் அரசாங்கத்திடமே உள்ளது. அத்துடன் ஜனாதிபதியின் ஆதரவும் பிரதமருக்கு கிடைப்பதால் எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணை பயனற்றதென அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். நியமன பிரதம் மந்திரி என்ற வகையில் தன்னால் நியமிக்கப்பட்ட ரணிலுக்கு மைதிரி ஆதரவு தெரிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்
.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்! தமிழ் முற்போக்கு கூட்டணியும்!!

தமிழ் முற்போக்கு கூட்டணி எனும் புதிய அரசியல் கட்சியொன்று கடந்த வாரம் கொழும்பில் ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது. அதன் தலைவராக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். உபதலைவர்களாக தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரான அமைச்சர் பழனி திகாம்பரமும், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரான இராஜாங்க அமைச்சர் பெ. இராதாகிருஷ்ணனும் தெரிவாகியுள்ளனர். நீண்ட நாட்களாக இவர்களது மூன்று கட்சிகளுக்கு மிடையில் இடம்பெற்ற தொடர்ச்சியான பேச்சுவார்த் தைகளுக்குப் பின்னர் ஒரு முடிவிற்கு வந்து இந்தப் புதிய அரசியல் கூட்டணி உதயமாகியுள்ளது. இந்தப் புதிய கட்சியின் உதயம் குறித்து அதன் தலைவர்களினால் மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.(மேலும்....)
 

ஆங் சான் சூ கீ எங்கே?

“நீதியான சூழலில் நடுநிலை வகிப்பதென்றால் நீங்கள் அநீதியா ளர்கள் பக்கம் இருக்கிaர்கள்”. இப்படி சொன்னவர் 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற தென்னாபிரிக் காவின் சமூக உரிமை ஆர்வலரும் ஓய்வு பெற்ற அங்கிலிக்கன் பேராயரு மான டெஸ்மன் டுடு. 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மியன் மாரின் ஆங் சான் சூ கீக்குத் தான் இந்த அறிவுரையை டெஸ்மன் டுடு சொல்லியிருந்தார். சொல்லப்பட்ட இடமும் முக்கியமானது. நோர்வேயின் ஒஸ்லோ நகரில் இருக்கும் நோர்வேஜியன் நோபல் நிறுவன மண்டபத்தில், ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த கருத்தை சொன்னார். இதே மண்டபத்தில் வைத்தே டெஸ்மன் டுடு மற்றும் ஆங் சான் சூ கிக்கு நோபல் விருது கொடுக்கப்பட்டது. (மேலும்....)

ஆனி 06, 2015

என் மனவலையிலிருந்து........

இடியம்பமும்..... நூடில்ஸும்

(சாகரன்)

கேள்வரகு கஞ்சியும், தினை மா பிடியலும். ஒடியல் புட்டு உம், குரகன் ரொட்டியும் உம். வரகு அரிசி சோறும், எள்ளுப்பாவும் தரும் நார்ச்சத்தும், உடல் ஆரோக்கியமும் பசுமதி அரிசியும், கோதுமை மாவும் MSG கலந்த உணவுப்பண்டங்களும் பேகர், பீட்சா என்பன தருமா?..... இல்லை என்பதே நாம் கண்கூடு கண்டு வரும் உண்மைகள் ஆகும். மனிதனின் மரபு அணுக்கள்(DNA) ஆயிரம் ஆயிரம் வருடங்களாக எமது சுதேச உணவுகளை எவ்வாறு கையாளுதல் என்பதற்கேற்பவே பழக்கப்பட்டுள்ளன. அதாவது Program பண்ணப்பட்டுள்ளன. தீடீரென எமது மரபு அணுக்களால்(DNA) வாசித்தறிய முடியாத உணவுகளை உண்ணும் போது இவற்றை எவ்வாறு பிரித்தெடுத்து, எவற்றை உள்வாங்குவது, எவற்றை வெளியேற்றுவது; எவ்வளவை சேமித்து வைப்பது, எவ்வளவை தவிர்ப்பது என்ற குழப்பங்கள் உடல் உறுப்புககளுக்கு ஏற்படுகின்றது. இந்த குழப்ப நிலையே எமது உடலில் சீரிய வளர்ச்சி செயற்பாடுகள் இல்லாமல் எம்மை நோய்களுக்குள் தள்ளி விடுகின்றது. இதனை நாம் சரியாக புரிந்து கொண்டால் எமது மரபணுக்கள் புரிந்து கொண்ட பாரம்பரிய உணவு முறைகள் எமது ஆரோக்கியத்தை மற்றைய எவற்றையும் விட சிறப்பாக பேணும் என நாம் ஆய்ந்து அறிய முடியும். (மேலும்....)

ஒரு மரணம் இனிக்கும்.

பஞ்சு மேகம் ஓடித்திரியும் வானம்
இழந்து
நஞ்சு மேகம் நோயைப் பொழியும்
நாட்டில்
என்னை நானே அடகுவைத்தேன்.

வீட்டுச்சுமையும், வாழ்க்கைச் செலவும்
இன்னோரன்ன இடரும், துயரும்
சுரண்டிப் பிராண்டிக் கடித்துக் குதறி என்னை எழுப்ப
தூக்கக் கயிறு முறிந்து விலகும்.
தூக்குக் கயிறு விழுந்து கவ்வும். (மேலும்....)

கறிவேப்பிலை......

திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். (மேலும்....)

தனிமரம்

அழுதுகொண்டிருக்கிறது பூ.
பூ அழுதால் தேன்.
பாலன் அழுதால் தேவை பால்.

இந்தப் பத்துவயது நோர்வேயிய பெண்குழந்தைக்கு என்ன ஆறாத சோகம்? ஆறுபோல் ஓடுகிறதே கண்ணீர். உருண்டோடும் நீலவிழிகளுக்குள் இத்தனை கண்ணீர் துளிகளா? உறைபனிகாலத்தில் கூட வெப்பத்தால் உறையாத கண்ணீர் நூல்கோத்த முத்தாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது கன்னங்களில். பாடசாலைவிட்டு பலமணி நேரங்களாகியும் அவளை அழைத்துப்போக தாய் தந்தையோ உறவோ தேடிவரவில்லை. அதை குழந்தை எதிர்பாத்திருப்பதாகவும் தெரியவில்லை. காதைக்கடிக்கும் குளிரால் கன்னங்கள் அப்பிள் போல் சிவந்து கிடக்கிறன. (மேலும்....)

25 வருடங்களின் பின் வசாவிளான் ஆலயத்தில் பொங்கல், வழிபாடு

வசாவிளான் தெற்கு இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள சந்தி வைரவர் என்று அழைக்கப்படும் புளியடி வைரவர் ஆலயத்தில் இருபத்தைந்து வருட கால இடைவெளியின் பின்னர் மக்கள் பொங்கல் வழிபாடுகளில் நேற்று வெள்ளிக்கிழமை ஈடுபட்டார்கள். காலையில் பொதுமக்கள் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள இராணுவ சோதனை நிலையத்தில் கூடிய போது அவர்களை இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்ட பின்னர் இராணுவ பஸ் வண்டியில் ஆலயத்திற்கு அழைத்து சென்றார்கள்.ஆலயத்திற்கு சுமார் இருநூற்றி ஐம்பது பேர் வரையில் வருகை தந்ததுடன் ஆலய சுற்றாடலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கி படைத்து வழிபாடுகளை மேற்கொண்டார்கள். ஆலய சுற்றாடல் இராணுவத்தினரால் ஏற்கனவே துப்பரவு செய்யப்பட்டு இருந்தது. அத்துடன் ஆலயத்திற்கு வரும் அடியார்களின் நன்மை கருதி ஆலய சுற்றாடலில் இராணுவத்தினரின் நடமாடும் மருத்துவ முகாம் தற்காலிகமாக அமைக்கப்பட்டு இருந்ததுடன் குடி நீர்த்தாங்கி வைக்கப்பட்டு நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் மக்கள் தங்கி இளைப்பாற இருப்பிட வசதிகளும் செய்யப்பட்டு இருந்தன.

உதயமாகியிருக்கும் தமிழ் முற்போக்குக் கூட்டணி

தமிழ் முற்போக்குக் கூட்டணி தேர்தல் கூட்டணி அல்ல என்று குறிப்பிட்டாலும், கூட்டணிக்கான ஒரு சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது உண்மையானாலும், தேர்தல் ஒன்று நிச்சயமாக வரவிருக்கின்ற ஒரு தருணத்தில் தேர்தல் வெற்றி வாய்ப்புகளுடன் இக்கூட்டணியை பொருத்திப் பார்ப்பது தவிர் க்க முடியாதது. ஏனெனில் இக்கூட்டணியில் இணைந்துள்ள மூன்று தலை வர்களுக்கும் இ.தொ.கா.வுக்கும் இடையே நேச உறவில்லை என்பதோடு எதிர்வரவுள்ள போதுத் தேர்தலில், அத்தேர்தல் எந்த அடிப்படையில் நடைபெற்றாலும், இ.தொ.கா.வுடன் மோதுவதன் மூலமே தமது பாராளு மன்ற ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையிலேயே இக்கட்சிகள் உள்ளன. தனித்தனியாக இ.தொ.கா.வை எதிர் கொள்வார்க ளானால் இலாபம் இ.தொ.கா.வையே சென்றடையும் என்பதால் இக்கூட் டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதே மலையக அரசியல் அவதானி களின் கருத்தாகவுள்ளது. (மேலும்....)
 

ஆனி 05, 2015

2 கோடி ரூபா மோசடி
டக்ளஸுக்கு எதிராக முறைப்பாடு

யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத் தில் 2 கோடி ரூபா மோசடி செய்திருப் பதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிராக ஊழல் ஒழிப்பு குழு செயலக த்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் இந்த முறைப்பாட்டை நேற்று பதிவுசெய்திரு ந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் இதன் போது உடன் சென்றிருந்தார். டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக இருந்த காலத்தில் யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து ஒவ்வொரு லொறிக்கும் தலா 5000 ரூபா அறவிட்டதாகவும், ஒவ்வொரு பயணத்துக்கும் சுமார் 300 ரூபா அறவிட் டதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சுமார் 2 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருப் பதாகவும், இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதாக கடந்த ஐந்து, ஆறு மாதங்களாகக் கூறிவருகின்றபோதும் பணம் எதுவும் திருப்பி வழங்கப்படவில்லையென யாழ் மாவட்ட பார ஊர்திகள் சங்கத்தின் பிரதிநிதிகள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சங்கத்தின் லொறிகளை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந் தாவும், மகேஸ்வரி நிதியமும் இணைந்து மண் அகழ்வுக்குப் பயன்படுத்தியதாகவும் குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கடந்த காலங்களில் மக்கள் அச்சம் காரணமாக மெளனமாக இருந்தனர். தற்பொழுது முறைப்பாடு செய்ய முன்வந்துள்ளனர் என்றார்.

மற்றுமொரு தமிழர் கட்டுநாயக்கவில் கைது

மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றி நாடு திரும்பிய இலங்கை தமிழர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள தமிழர், அம்பாறை காரைதீவைச் சேர்ந்த 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். 2006ம் ஆண்டு டுபாய் சென்ற குறித்த நபர் 2011ம் ஆண்டு நாடு திரும்பியிருந்தார். ஒப்பந்த காலம் முடிவடைந்ததன் பின்னர் அவர் நாடு திரும்பியிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவர் மீண்டும் டுபாய்க்கு பணி நிமித்தம் சென்றுள்ளார். கருணா அம்மான் உள்ளிட்ட தரப்புடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவித்து கடந்த காலங்களில் இந்த கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் விமான நிலையத்தில் வைத்து 16 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டுக்கோட்டையின் 'பாட்டுக்கோட்டை'

தமிழ்த் திரை உலகில் அழுத்தமான -ஆழமான முத்திரை பதித்துள்ள கவிஞர்கள் இருவர். ஒருவர் கவியரசர் கண்ணதாசன். இன்னொருவர், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். முன்னவர், ஆர்மோனியப் பெட்டிக்கு அழகுத் தமிழை அறிமுகப்படுத்தி
வைத்தவர்; பின்னவர், மக்கள் தமிழை அறிமுகம் செய்து வைத்தவர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த உலகில் வாழ்ந்த காலம் இருபத்தொன்பது ஆண்டுகளே. எனினும், இந்த குறுகத் தரித்த வாழ்வில் திரைப்படப் பாடல் துறையில் நிறையச் சாதனை படைத்த 'பாட்டுக்கோட்டை' அவர். பட்டப் படிப்புக் கூடப் பயிலாத அவர், வாழ்க்கை என்னும் அனுபவப் பள்ளியில் கற்றுத் தேர்ந்த மக்கள் கவிஞராகத் திகழ்ந்துள்ளார். பஞ்ச சீலக் கொள்கைகள் பட்டுக்கோட்டையார் திரைப்படப் பாடல்களில் பெரிதும் வலியுறுத்திப் எழுதியிருக்கும் கொள்கைகள் ஐந்து. (மேலும்....)

வெளிநாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு பிரஜாவுரிமை

இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இலங்கைப் பெற்றோருக்கு பிறந்த குழந்தைகளுக்கு இலங்கை பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடமாடும் சேவையொன்று, வெள்ளிக்கிழமை (05) தென்மராட்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைப் பிரசவித்த இலங்கைப் பெற்றோர், தற்போது மீண்டும் இங்கு வந்து வாழ்ந்து வருகையில் அவர்களின் குழந்தைகளுக்கு இந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்த நடமாடும் சேவை நடத்தப்படவுள்ளது. தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இத்தகைய பெற்றோர்கள் இந்த நடமாடும் சேவை மூலம் பயனைப் பெறமுடியும் என ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

இந்தியா, அமெரிக்கா இடையே ஒப்பந்தம்

இராணுவ தளவாடங்கள் இந்தியாவில் தயாரிப்பு

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே பாது காப்பு துறையில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெ ழுத்தாகின. டெல்லி வந்துள்ள அமெரிக்க பாது காப்புத்துறை அமைச்சர் அஸ்டோன் கார்ட்டர் மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். முன்னதாக அமெரிக்காவில் இராணுவ தளவா டங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் மேக் இன் இந்தியா திட்டத்தின் படி இந்தியாவில் உற்பத்தி தொடங்க முன்வர வேண்டும் என்று மோடி கேட்டுக் கொண்டார். இந்தியா மிக முக்கிய நாடு என்று கூறிய கார்ட்டர் ஆசியாவில் அமெரிக்கா பணிகளுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என்றார். இந்திய பெருங்கடல், ஆப்கா னிஸ்தான் பிரச்சினை, ஆசிய பசுபிக் பகுதி போன்றவை இரதரப்பு பேச்சுவார்த்தையில் இடம் பெற்றன. ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே இருந்த 10 வருட ஒப்பந்தம் மீண்டும் நீடிக்கப்பட்டது. ஒப்பந்தம் தொடர்பான கூட்டறிக்கையில் இருநாடு களும் பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பது என்ற முடிவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நீடிக்க முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் மேகி உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை

தமிழகத்தில் மேகி நூடுல்ஸ் உள்பட 4 நூடுல்ஸ்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக் குறிப்பில், ''பன்னாட்டு நிறுவனமான, ‘நெஸ்லே’ (NESTLE), இயதியாவில் பல வகை உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. ‘நெஸ்லே’ நிறுவனத் தயாரிப்பான ‘மேகி நூடுல்ஸ்’-ல் (MAGGI NOODLES) 'காரீயம்'-ன் (LEAD) அளவு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் மற்றும் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவை விட அதிகமாக உள்ளதாக ஒரு சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை மூலம் தமிழகத்தில் விற்கப்படும் நூடுல்ஸ் உணவுப் பொருட்களின் மாதிரியை எடுத்து சோதனை செய்து அவை உணவு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்கேற்ப உள்ளதா என கண்டறியுமாறு உத்தரவிட்டார்கள். (மேலும்....)

"கனிமொழியுடன் பேசிய பிறகே எழிலன் சரணடைந்தார்"

இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் வியாழன்று சாட்சியமளித்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். (மேலும்....)
 

ஆனி 04, 2015

Right to self- determination is not secession

(By Mirudhula Thambiah)

Pathmanaba Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) General Secretary, Thirunavukkarasu Sritharan said a political solution to the ethnic question should be based on equality, autonomy with right to self-determination. He further said, "Many had a wrong impression about the right to self-determination thinking that it encourages only secession. It is a misconception! Accordingly, a federal solution will be the most suitable in the current scenario. All communities should unite, but they should not dominate each other," (more.....)

ஆயுத மோதல்களின் முடிவிற்கு பின்னர் அதிகரிக்கும் சமூக நெறிப்பிறழ்வுகள் - மக்கள் கலந்துரையாடல்

தமிழ்த் தேசிய அரசியல் தமிழ் சமூகத்தின் பிரச்சனைகளிற்கு புறக்காரணிகளை மட்டும் அடையாளம் கண்டு எமது அக முரண்பாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. அதே வேளை புறக் காரணிகளின் தாக்கத்தை வேண்டுமென்றே குறைத்து மதிப்பீடு செய்து அக முரண்பாடுகளை மட்டும் பேசி தமிழ்த் தேசிய அரசியல் எனும் வரையறையை அடியோடு மறுக்கும் அணுகுமுறையும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது. எமது பிரச்சனைகளுக்கு காரணமாகவிருக்கும் அகப், புறக் காரணிகளை முழுமையான கண்ணோட்டத்தில் விளங்கி தமிழ்த் தேசிய அரசியலை எமது இன்றைய சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய உரையாடலாக, வரையறையாக மாற்றுவதே இன்றைய தேவை.
இன்று நாம் எதிர்நோக்கும் சமூகப் பிறழ்வு பிரச்சனைகளுக்கு யுத்தத்திற்கு முன் இருந்த நிலைமை பற்றி பேசுவதும், 'அவர்கள் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா' என்று பேசுவதும் பழைய சலிப்புத் (nostalgic talk) தான். அதில் பிரயோசனம் இல்லை. இன்றைய சூழலுக்குத் தேவையான தீர்வுகளை நீண்ட காலப் பார்வையில், கொள்கைப்பற்றோடு நாம் வகுத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வெளிகளை உருவாக்க வேண்டும். (மேலும்....)

புலிகளும் போதை வஸ்துவும்

போதை வஸ்துப் பாவனையால் சமூகம் சீரழிகிறது என்று கூச்சலிடுகிறார்கள். இராணுவம் புலிகளின் கஞ்சிகுடிச்சாறு முகாமைக் கைப்பற்றியபோது அங்கே புலிகளின் கஞ்சாப் பயிர்ச் செய்கையைக் கண்டுபிடித்தனர். ஆணுறைப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன. புலிகளின் தர்கொலைத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பெதடீன் என்ற போதை மருந்து ஏற்றப்பட்டே அனுப்பப்பட்டனர். தற்கொலைத் தாக்குதல் செய்ய முற்பட்ட கரும்புலி ஒருவன் கைது செய்யப்பட்டபோது அவன் சாதாரண மனநிலையில் இருக்கவில்லை. அவனுக்கு பெதடீன் என்ற போதை மருந்து ஏற்றப்பட்டிருந்தது. அது மட்டும் அல்லாது உலகம் முழுவதும் போதை வஸ்து வியாபாரத்தில் புலிகள் ஈடுபட்டு பணம் ஈட்டியதும் இவற்றில் ஆயுதங்கள் வாங்கியதும் சர்வதேச பிரசித்த செய்திகள் ஆகும்

யாழ்பாணத்திலிருந்து முஸ்லீம்கள்விரட்டப்பட்டதுபற்றி......!

அவர்கள் தம் சொந்த மண்ணில் இருந்து விரட்டப்படும் போது உங்களால் குரல் கொடுக்க முடியாமல் போனது உண்மைதான்! ஏற்றுக்கொள்கின்றோம். அன்று அப்படி ஒரு புறக்காரணி இருந்தது. ஆனால் இன்று அதே மக்கள் மீள குடியமர வருகையில் அவர்களுக்கு உங்கள் ஆதரவுக்கரத்தை நீட்டி வரவேற்காமல் தடுப்பது எது? பிரித்தாளும் தந்திரத்தால் ஒரு சமூகத்தில் பெரும் பாதியை இழந்தும், இன்னும் பிரிந்தே இருக்க உங்களை தூண்டுவது எது?

பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது - காரணம் என்ன?

பூமியின் சுழற்சி வேகம் குறைவதால் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு வினாடி நீண்டதாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். டிஸ்கவர் இதழில் வெளிவந்துள்ள செய்தியின்படி ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரமானது ஜூன் 30-ம் தேதி நள்ளிரவு 00:00:00 என்று மாறுவதற்கு பதிலாக 23:59:60 இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பூமியின் சுழற்சியானது வழக்கத்தை விட ஒரு வினாடி குறைவதால் இது ஏற்படுகிறது. இதனால் பூமியில் உள்ள கடிகாரங்களில் நேரத்தை மாற்றி அமைக்கவேண்டும். கூடுதல் வினாடி அல்லது லீப் வினாடி முறையானது முதன் முதலில் 1976-ல் தொடங்கப்பட்டது. அன்று முதல் இதுவரை 26 முறை இது போல் நிகழ்ந்துள்ளது. பூமி மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களுக்கிடையே புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் அலைகளால் பூமியின் சுழற்சி வேகமானது ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டே வருகிறது. 24 மணி நேரம் என்பது 86,400 வினாடி ஆகும். நாசாவின் கணக்குப்படி கடைசியாக 1820-ம் ஆண்டில் தான் சரியாக 24 மணி நேரம் என்பது நிகழ்ந்துள்ளது. டையனோசர்களின் காலத்தில் ஒரு நாள் என்பது 23 மணி நேரமாக இருந்துள்ளது. அது முதல் ஒவ்வொரு நாளிலும் 2.5 மில்லி வினாடிகள் அதிகரித்தபடி வந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடியை பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் - காங்கிரஸ் கட்சி

பிரதமர் நரேந்திர மோடியை எம்.பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சட்டபிரிவு செயலாளர் கே.சி.மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி ராஜேஷ்மிஸ்ரா ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர். அந்த மனுவில், பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் தேர்தல் செலவுக்கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை. வாரணாசி தொகுதியில் தேர்தல் அலுவலகத்திற்கு 2 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், அதனை தேர்தல் செலவுக் கணக்கில் மோடி தெரிவிக்கவில்லை. எனவே, முறையாக தேர்தல் செலவுக்கணக்கை காட்டாததால் மோடியை தகுதி நீக்க செய்ய வேண்டும் என்றும் பிரதமர் பதவியிலிருந்து மோடி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

கிரிமினல்கள் பட்டியலில் மோடி படம்

கூகுள் தேடு பொறியில், 'உலகின் மோசமான, 10 கிரிமினல் கள்' பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம் பெற்றுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதனால், கூகுள் தேடு பொறியை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. உலகில் உள்ள பல விஷயங்களைப் பற்றி, உடனே அறிந்து கொள்ள, உலகம் முழுவதும் உள்ளவர்கள் பயன்படுத்தும் வலைதளம் கூகுள் தேடு பொறி. இதில், நேற்று உலகின் மோசமான, 10 கிரிமினல்கள் யார் என, டைப் செய்த போது, மோடியின், மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளது, சர்ச்சையை எழுப்பி உள்ளது.மோடி படத்துடன், அமெரிக்க படையினரால், கொல்லப்பட்ட அல்-குவைதா பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், மும்பை தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல் சதிகாரன் தாவூத் இப்ராகிம், போன்றவர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளன.

பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு கோரிக்கை

பாராளுமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்துமாறு ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு எம்.பிக்கள் நேற்று பாராளுமன்றத்தில் எழுந்து நின்று கோரிக்கை விடுத்தனர். தானும் பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென கேட்டுக்கொள்வதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷவும் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் நியமனம் தொடர்பில் ஐ. ம. சு. மு. பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதிலளித்தார். பிரதமரின் பதில் தொடர்பில் திருப்தியளிக்காத தினேஷ் குணவர்தன தனது கேள்விக்கு உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் பாராளு மன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தினால் மக்களின் தீர்ப்பு தெரியும் என்றும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்றத்தை கலைத்துப் பொதுத் தேர்தல் நடத்த வேண்டுமென பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை நிறைவேற்றுவோம் என்றார். எதிர்த்தரப்பினர் அதற்கான பிரேரணையை கொண்டு வருமாறும் அவர் குறிப்பிட்டார். இதனையடுத்து தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக எதிர்தரப்பில் எம்.பிக்கள் சிலர் ஆதரவாக எழுந்து நின்றனர். அவர்களை தொடர்ந்து ஆளும் தரப்பிலும் அமைச்சர்கள் எம்.பிக்கள் போன்றோர் எழுந்து நின்றனர். அதனையடுத்து இரு தரப்பிலும் மேலும் பலர் தேர்தல் நடத்துமாறு கோரி எழுந்து நின்றார்கள். பிரதமர் உட்பட ஆளும் தரப்பில் பெரும்பாலானவர்கள் எழுந்து நின்ற போதும் எதிர்தரப்பில் முன்வரிசையிலிருந்த எதிர்க் கட்சித் தலைவர், வாசுதேவ நாணயக்கார இரா. சம்பந்தன் போன்றவர்கள் எழுந்து நிற்கவில்லை.

ரொஹிங்கியாக்களை சொந்த பிரஜைகளாக நடத்துமாறு மியன்மாருக்கு அமெ. அழுத்தம்

தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டிருக்கும் குடியேறிகளின் பிரச்சினைக்கு தீர்வுகாண மியன்மார் அரசு சிறுபான்மை ரொஹிங்கியா முஸ்லிம்களை தனது சொந்த பிரஜைகளாக நடத்த வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தம் கொடுத்துள்ளது. அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ஆன் ரிச்சர்ட், மனித உரிமை விவகாரம் குறித்து மியர்மார் தலைவர்கள் வாய்திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். ரொஹிங்கியாக்கள் பல தலைமுறைகளாக மியன்மாரில் வாழ்பவர்கள் என்றும் ஏனையவர்கள் போன்று அவர்களும் பர்மா பிரஜைகளே என்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கருத்து வெளியிட்ட நிலையிலேயே ரிச்சட் நேற்று புதன்கிழமை இந்த அழுத்தத்தை வெளியிட்டார். பர்மா என்பது மியன்மாரின் பழைய பெயராகும். எதிர்வரும் நவம்பரில் மியன்மாரில் வரலாற்று முக்கியம் வாய்ந்த பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மியன்மார் தலைவர்கள் ரொஹிங்கியா விடயம் தொடர்பில் வாய்திறப்பதில்லை என்று ரிச்சர்ட் குற்றம்சாட்டினார். மியன்மாரில் இருக்கும் ரொஹிங்கியாக்கள் உட்பட பல சிறுபான்மை இன மக்கள் தொடர்பில் அமைதிக்கான நோபல் விருது வென்ற எதிர்க்கட்சி தலைவர் ஆன்சாங் சூகி குரலெழுப்ப தவறி விட்டதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனி 03, 2015

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலிகள் கைது…?

அண்மைக்காலமாக மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண தமிழ் இளைஞர்கள், விடுதலைப் புலிகளால் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் இராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இதுவரையில் 16 இளைஞர்கள் வரையில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை அம்பாறை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்துக்கது.

வடக்கு - கிழக்குக்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடும் - சுமந்திரன்

தமது பிரதான தளமான வடக்கு- கிழக்குக்கு வெளியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடக் கூடும். இது கொழும்பு அல்லது கம்பாஹவாக இருக்கும் என்று கூறிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடக்கு - கிழக்குக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று கூட்டமைப்பு கோரினாலும், அடுத்த தேர்தலில் தமது கட்சி வேறு மாகாணங்களிலும் போட்டியிடலாம் எனவும் கூறினார். எவ்வாறாயினும், தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய சுமந்திரன், 'நாம் கரிசனை கொண்டுள்ள தேசிய பிரச்சினை என்று ஒன்றுள்ளது. அது தீர்க்கப்பட வேண்டும். அதை தேர்தலுக்கு முன்னர் முழுமையாக தீர்க்க வேண்டிய தேவையில்லை என நாம் இந்த அரசாங்கத்துடன் ஓர் உடன்பாட்டுக்கு வந்துள்ளோம்' என்றார். 'அரசாங்கம் சரியான திசையில் செல்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகிறது. ஆனால், காணி மற்றும் அரசியல் கைதிகளின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

முற்போக்கு தமிழ் கூட்டணி இன்று உதயம்

கொழும்பு மற்றும் மலையகத்தை மையப்படுத்தி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனின் தலைமையில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று இன்று உதயமாகிறது. கொழும்பு மற்றும் மலையகத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமையினை பாதுகாப்பதற்காக கூட்டணி அரசியல் ஒன்று தேவை என்பதை பலரும் வலியுறுத்தி வந்த நிலையில், இன்று மாலை 3 மணிக்கு, கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலின் கோல்டன் பொன்ட் மண்டபத்தில் 'முற்போக்கு தமிழ் கூட்டணி' என்னும் புதிய அரசியல் கூட்டணியின் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்தி தெரிவிக்கிறது. ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் இராஜாங்க கல்வி அமைச்சருமான வி.இராதாகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும் தேசிய உட்கட்டமைப்பு அமைச்சருமான பழனி திகாம்பரம் ஆகியோருக்கிடையிலேயே மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகவுள்ளது. இக்கூட்டணியின் தலைவராக மனோ கணேசனும் பிரதித் தலைவர்களாக திகாம்பரம் மற்றும் இராதாகிருஷ்ணன் ஆகியோரும் இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

மஹிந்த தேர்தல் களத்தில் குதிப்பார்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வேட்புமனு கிடைக்காவிட்டாலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவார் என அவரது பேச்சாளர் ரெஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார். பீ.பீ.சி சிங்கள சேவைக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ள வெலிவிட்ட, 'எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதாக மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துவிட்டார். வேறு ஒரு கட்சியினூடாகவோ அவர் போட்டியிடுவார்' என்றார். 'மஹிந்த ராஜபக்ஷ தயாரித்து வந்த நாடு இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. அதனால், அந்த பணியை தொடர்ந்து முன்னெடுப்பதற்காக, எதிர்வரும் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடுவார். இந்த நாட்டின் எதிர்காலப் பயணத்துக்கான அவரது பணிகள் இன்னும் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. அதனை நிறைவேற்ற முன்னரே தேர்தலில் தோல்வியடைந்துவிட்டார். சு.கா.வின் வேட்புமனுவை மஹிந்தவுக்கு வழங்குவதா இல்லையா என்ற முடிவை தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே எடுக்க வேண்டும். அதனை அவர் வழங்கினால், எந்த கட்சியில் போட்டியிடுவதென்ற தீர்மானத்தை மஹிந்த எடுப்பார்' என வெலிவிட்ட மேலும் கூறியுள்ளார்.

ஆனி 02, 2015

'பச்சை புலி'களால் ( Green Tigers)

1980 களின் இறுதி பகுதி அது, பிரேமதாச அரசும் விடுதலை புலிகளும் தேன் நிலவு கொண்டாடிய காலம் அது, JVP என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை இரும்புக்கரம் கொண்டு நசிக்கிய காலம் அது. பேராதனிய பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு தமிழ் மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு சிங்கள நண்பன் வீட்டில் இருக்கும் போது திடீர்ரென அப்பகுதி பிரேமதாச அரசின் விசேட படைப் பிரிவான 'பச்சை புலி'களால் ( Green Tigers) சுற்றி வளைக்கப்படுகிறது. பல சிங்கள இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து இராணுவ வண்டிகளில் ஏற்றப்படுகிரார்கள். இந்த தமிழ் இளைஞனிடமும் விசாரணை ஆரம்பமாகின்றது. தான் யாழ்பாணத்தை சேர்ந்த தமிழன் என தன் அடையாள அட்டையை (Identity Card) எடுத்துக் காட்டுகிறார்.  (மேலும்....)

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.

கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.  சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த தீர்ப்பு என்னை மிகவும் பாதித்தது.  பெண் என்று பாவப்படும் நண்பர்களே அவர் முதல்வராக இருந்த காலத்தில் செய்த குற்றம் அது. முதல்வர் என்பவர் மக்களைக் காப்பாற்றுபவர். தவறே செய்யக்கூடாது. நீதி என்பது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கனும்.  இங்கு நிதி நீதியை கொன்று புதைத்துவிட்டது. ஒரு தனிநபர்
கணித கூட்டல் தெரியாமல் செய்த பிழை இந்திய \ இறையாண்மை நீதியை குழி தோண்டி புதைத்தே விட்டது. அந்த காலம் இப்படியும் இருந்தது என உறக்கமின்றி தவித்தேன்..(மேலும்....)

யாழ் தீவுகள் உருவான வரலாறு (ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம்)

இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை. ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப் படுகின்றது. நானும் கடல் அழிவால் இலங்கை தனி தீவாக பிரிந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அது எப்பொழுது நடந்து இருக்கலாம் என்ற ஒரு ஆதார சிறு குறிப்பை உங்கள் முன் வைத்து இந்த கட்டுரையை தொடர்கின்றேன். (மேலும்....)

நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன்

மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.
கைலி, அழுக்கு சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே வந்தார்.
'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள் யார்?’ என்று அவரிடம் கேட்டேன்.
'அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்துவருகிறோம்.
சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன்.
வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.
நான் அதிர்ந்துபோனேன்.
'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன்.
வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டுஇருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாத யார் யாரோ பலனை அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
- சகாயம் ஐ.ஏ.எஸ்.

மலையக அரசியல் கூட்டணி

நாளை கொழும்பில் உதயம்

மலையகக் கட்சிகளை உள்ளடக்கிய அரசியல் கூட்டணி கொழும்பில் உதயமாகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளை 3 ஆம் திகதி அறிவிக்கப்படும்.இதில் மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கங்களின் அங்கத்தவர்கள் பலர் இணைந்து கொள்ளவுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களாக மலையக மக்களின் பிரச்சினைகள், தொடர்பாக இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து வந்தனர். இரண்டு வருடங்களுக்கு முன்பு பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக கொட்டகலையில் போராட்டம் ஒன்றையும் இந்த கூட்டணி ஏற்பாடு செய்திருந்தது. (மேலும்....)

இந்தியப் பிரதமர் ஒருவர் முதல் முறையாக இஸ்ரேல் விஜயம்

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் செல்லவிருப்ப தாக வெளியுறவு அமைச் சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரி வித்துள்ளார். இந்தியப் பிரத மர் ஒருவர் இஸ்ரேல் செல் வது இதுவே முதல் முறை யாகும். கடந்த இருபது ஆண்டுகளாக இந்திய அரசாங் கம் இஸ்ரேலுடன் நல்லுறவில் இருந்தாலும் எந்த ஒரு இந்தியப் பிரதமரும் அங்கு செல்லவில்லை. கடந்த 2000-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட் டணி ஆட்சியின்போது அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங் இஸ்ரேல் சென்றார். அதனைத் தொடர்ந்து 2003-ல் இஸ்ரேல் பிரதமர் ஏரியல் ஷெரோன் இந்தியா வந்தார். அவரே இந்தியா வந்த முதல் இஸ்ரேலிய பிரதமராவார். அவர் எப்போது அங்கு செல்வார் என்ற திகதி கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அது குறித்த ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன. அநேக மாக அவர் இந்த ஆண்டே இஸ்ரேல் செல்லலாம். இந்திய - இஸ்ரேல் நல்லுறவு குறித்து ஆலோ சிக்க அடுத்த மாதம் (ஜ_லை) இந்திய உயர்மட டக் குழு ஒன்று இஸ்ரேல் செல்கிறது.

குப்பையில் எறிந்த முதல் அப்பிள் கணனி 200,000 டொலருக்கு ஏலம்

பெண் ஒருவரால் குப் பையில் போடப்பட்ட மிக அரிதான முதலா வது டெஸ்க்டொப் அப் பிள் கணனி 200,000 டொலருக்கு ஏலம்போயுள் ளது. இதில் குறித்த பெண்ணுக்கான பங்குத் தொகையை கொடுக்க அதனை ஏலம் விட்ட அமெரிக்க மறுசுழற்சி நிறுவனம் ஒன்று அவரை தேடி வருகிறது. குறித்த பெண் தனது இறந்த கணவனுடைய உடைமைகளை சிறிய பெட்டிகளில் அடைத்து மின் கழிவு நிறுவனம் ஒன்றுக்கு கொடுத்துள்ளார். எனினும் அவர் தனது அடையாளங்களை கொடுக்காமல் சென்றுள்ளார். இந்த குப்பை பெட்டிக்குள் முதல்முறை உருவாக்கப்பட்ட அப்பிள் கணனி ஒன்று இருந்துள்ளது. இவ்வாறான 200 கணனிகளே உலகில் காணப் படுகின்றன. இந்த கணனி 1975 ஆம் ஆண்டு அப்பிளின் இணை நிறுவனர் களான ஸ்டீவ் nஜhப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியாக்கினால் வொஸ்னியாக் கியின் வாகன தரிப்பிடத்தில் தயாரிக்கப்பட்டதாகும். "எமது கண்ணை நம்ப முடியாதிருந்தது. இது போலி என்றே நாம் நினைத் தோம்" என அந்த கணனியை முதல்முறை பார்த்த அனுபவத்தை குறித்து மின் கழிவு நிறுவன முகாமையாளர் ஒருவர் விபரித்துள்ளார்.

ஈழத் தமிழருக்கு....!

வரலாறு வழங்கிய சந்தர்பங்கள்......!!

1980 களின் ஆரம்பத்தில் அன்னை இந்திரா காந்தி தலைமையில் ஒரு மாநாடு இந்தியாவில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் இந்திய தலைவர்கள் உட்பட பல வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கு தமிழர் விடுதலைக் கூட்டனி தலைவர் திரு அமிர்தலிங்கம் அவர்களும் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார். திரு அமிர்தலிங்கம் அவர்களுக்கு ஒரு செய்தியை இந்திரா காந்தி அவர்கள் தனது செயலாளர் ஊடாக தெரிவித்திருந்தார். அதாவது தான் அழைக்கும் வரைக்கும் மாநாட்டுக்கு திரு அமிர்தலிங்கம் அவர்களை வரவேண்டாம் என்பதே அச்செய்தி ஆகும். (மேலும்....)
 

ஆனி 01, 2015

யாழ். நூலகம் தீக்கிரை

இன்று 34வது வருட நினைவு

யாழ். பொது நூலகம் தீக்கிரையாக்க ப்பட்ட சம்பவத்தின் 34 வருட நினைவு தினம் இன்றாகும். தெற்காசியாவின் பெரும் கல்விச் சொத்தாக விளங்கிய யாழ். நூலகம் 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர்(ஜூன் முதலாம் திகதி) திட்டமிட்ட முறையில் தீக்கிரையாக்கப்பட்டது. உலகில் எங்குமே கிடைக்காத அரியநூல்கள், சுவடிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான ஏடுகள் பெரும் பொக்கிஷங்களாக யாழ். நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தன. அனைத்துமே தீயில் சாம்பலாகிப் போனது மாத்திரமன்றி, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான வன்முறையின் உச்ச சம்பவமாக யாழ். நூலக எரிப்பு சம்பவம் சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றிருந்தது.

19 ஜூன் 2015 – 25 வது தியாகிகள் தினம்… பற்றிய அறிவித்தல்

தோழர்களே, நண்பர்களே,

எமது நேசத்திற்குரிய தலைவர் தோழர் பத்மநாபாவை இழந்து 25 வருடங்கள் கடந்துவிட்ட போதும் அவர் தலைமைதாங்கிய இயக்கத்தின் கொள்கைகள், நோக்கங்கள், குறிக்கோள்களை இன்னும் உயர்த்திப் பிடித்துள்ளோம். 1983 இல் தோழர்கள் தேவகுமார், பாஸ்கரன் ஆகியோரை வெலிக்கடை சிறையில் இழந்தது முதல் 1986ம் ஆண்டுக்கு பின் புலிகளின் கரங்களால் பலியான தோழர்கள் உட்பட ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்து விட்ட போதும், கட்சி உடைவுகள், பொருளாதார நெருக்கடிகள் மத்தியிலும், உயிர் அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் இன்னும் பல்வேறு பழிச்சொற்கள், இழிவுபடுத்தல்களை பொறுத்துக்கொண்டும் தமது உயிரை அர்ப்பணித்த தோழர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும், அவர்களும், நாமும் நேசித்த தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலையை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்தும் செயற்பட்டு வருகிறோம். இந் நிலையில் நாமனைவரும் 25 வது தியாகிகள் தினத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். (மேலும்....)

3 வது முறையாக
நிலம் கையகப்படுத்தலுக்கு மத்திய அரசு அவசர சட்டம்

நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மீண்டும் அவசர சட்டமாக அமுல்படுத்தும்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம் நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம் மூன்றாவது முறையாக அமுல்படுத்தப்பட உள்ளது. அதேநேரத்தில் நிலம் கையகப்படுத்துதல் மசோதா தனக்கு வாழ்வா - சாவா பிரச்சினை இல்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். முன்னைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2013ம் ஆண்டில் நிலம் கையகப்படுத்துதல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து முன்னைய அரசின் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் திருத்தங்களை கொண்டு வர பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசு முடிவு செய்தது. இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் நிலம் கையகப்படுத்துதல் மசோதா முதல் முறையாக கடந்த ஆண்டு டிசம்பரில் அவசர சட்டமாக அமுல்படுத்தப்பட்டது. மக்களின் காணிகளை கையடக்கப்படுத்தி பல் தேசியக் கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும் சட்ட மூலம் இந்தியாவை இறுக்கமான நவ காலத்துவத்தின் பிடிக்குள் சிக்க வைக்க முயலும் மோடி அரசின் திட்டம் இது.

தெற்குடன் இணக்கமும் தமக்குள்ள முரண்படும் கொண்ட தமிழ் தலைமைகள்

(மாதவன் சஞ்சயன்)

இக்கட்டான நிலையில் தான் வரதர் 19 அம்ச கோரிக்கையை முன் நிபந்தனையாக வைத்து தீர்மானம் நிறைவேற்ற அதனை ஈழப் பிரகடனம் என விஸ்வரூபமாக்கி தெற்கை நம்பவைத்து தன் மலின அரசியலை செய்தார் பிரேமதாசா. 1 வருட காலத்துள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற 19 அம்ச கோரிக்கையில் எந்த இடத்திலும் அது அன்றே அமுலுக்கு வரவேண்டும் என்று கூறப்படவில்லை. 1990ல் வந்த தீர்மானத்தில் 19 கோரிக்கைகள் நிறைவேற்ற படாவிட்டால் 1991ம் ஆண்டு பங்குனி மாதத்தின் பின் தான் சபை சட்டவாக்க சபையாக செயல்பாடு என கூறப்பட்டுள்ளது. ஆனால் அதை ஈழ பிரகடனமாக்கி பெரும் பிரளயத்தை தெற்கில் ஏற்படுத்தி புதிய சட்டமூலம் கொண்டுவந்து சபையை கலைத்தார் பிரேமதாசா. அவர் பின் வந்தவரும் அதற்கு தேர்தலை நடத்த வில்லை.  சந்திரிகா ஆட்சியில் கூட அவருக்கு நெருக்கம் காட்டிய எவரும் எம் மண்ணில் இணைந்திருந்த சபைக்கு உயிரூட்ட முயலவில்லை. ஈ பி டி பி மட்டும் இடைக்கால சபைக்கு ஓடித்திரிந்தது. ஏனையவர் எவரும் அது ஆளுநர் அதிகாரத்தில் இருப்பது பற்றி அலட்டி கொள்ளவில்லை. தொடர்ந்து வந்த தேர்தல்களில் தென் இலங்கை பாராளுமன்ற கதிரைகளே அவர்களை கவர்ந்தது. (மேலும்....)

போராளிகளாக வாழ்ந்தவர்களுக்கு துப்பாக்கி பிடிக்க மட்டும்தான் கற்று கொடுக்கப்பட்டதாக பலர் நினைக்கிறார்கள் - புலிகளின் முன்னாள் போராளி வெற்றிச்செல்வி

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 ஆண்டுகள் போராளியாக இருந்தவர் வெற்றிச்செல்வி. களம், அரசியல், இலக்கியம், ஊடகம் என விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பன்முக ஆளுமையாகச் செயற்பட்ட வெற்றிச்செல்வி முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் இறுதி தருணம் வரை களத்தில் போராளியாக நின்றவர். யுத்தகாலத்தில் வெடிகுண்டு விபத்தொன்றில் தனது கையொன்றையும் கண்ணையும் இழந்த இவர் மிகவும் தன் நம்பிக்கை மிக்கவராக விளங்குபவர். முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்து ஆறு ஆண்டுகளைக் கடக்கும் இத் தருணத்தில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் இன்றைய நிலை உட்பட பல்வேறு விடயங்களைக் குறித்து பேசுகிறார். (மேலும்....)

வெற்றிலை அமைச்சர்கள் எழுவர் யானையில் போட்டி?

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவிவகித்த ஏழுபேர், எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுக்களை கோரியுள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த குழுவில் இருக்கும் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு வேட்பு மனுவை கொடுக்காமல் விடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளதாக தெரியவருகின்றது. வேட்பு மனுக்களை கோரியுள்ளோரில் மாத்தறை, கண்டி, திகாமடுல்ல, மாத்தளை, கேகாலை மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே அடங்குகின்றன என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் வெயிலின் கொடுமை இந்தியாவில் 2207பேர் பலி

இந்தியாவில் வெயிலின் உக்கிரத்துக்கு இதுவரை 2207 பேர் பலியாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இந்தியாவில் ஆந்திரா, தெலுங்கானா உட்பட பல வட மாநிலங்களிலும் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வெயில் கொடுமைக்கு ஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி உள்ளனர். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ஆம்திகதி தொடங்கி மே 29 ல் முடிந்தது. ஆனால் கடந்த 2ஆம் திகதியே சென்னை யில் வெயில் 100 டிகிரி கொளுத்தத் தொடங்கிவிட்டது. அக்னி நட்சத்திர காலத்தில் 5 நாட்களுக்கு 95 டிகிரியாக வெப்பம் பதிவானது. அதே நேரத்தில் கடந்த 9ஆம்திகதி மீண்டும் வெப்பம் 98 டிகிரி ஆனது 10 நாட்களுக்கு தணிந்திருந்த வெப்பம் மீண்டும் சூடு பறக்கத் தொடங்கியது. கடந்த 19ஆம் திகதி 100 டிகிரியை தாண்டியது. 20 ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை 104 டிகிரி வெப்பம் தாக்கியது. 24ஆம் திகதி உச்சகட்டமாக 108 டிகிரி வெயில் கொளுத்தியது. கத்திரி வெயிலின் கடைசி நாளான நேற்று 105 டிகிரி வெயில் தகித்தது. 2005 பேர் இதுவரை பலியாகியுள் ளனர். இதனிடையே வெயிலின் உக்கிரத்திற்கு ஆந்திரா மற்றும் தெலுங் கானா மாநிலங்களில் மட்டும் 1,979 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 17 பேர் பலியாகி உள்ளதாக அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் 7 பேரும், டெல்லியில் 2 பேரும் இறந்துள்ளனர்.

கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு

கருங்கடலில் இருக்கும் அமெரிக்க போர் கப்பல் ஒன்று ஆக்ரோ'மாக செயற்படுவதாக குறிப்பிட்டு ரஷ்யா அந்த பகுதிக்கு தனது போர் விமானங்களை அனுப்பி இருப்பதாக அந்நாட்டு அரச செய்திச் சேவையான ஆர்.ஐ.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் எந்தவொரு அசாதாரண நடத்தையும் இடம்பெறவில்லை என்று பென்டகன் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் யு.எஸ்.எஸ். ரொஸ் எனும் ஏவுகணை எதிர்ப்பு போர் கப்பல் ரஷ்யாவின் கடற்பகுதியின் விளிம்புவரை பயணித்து வருவதாக கிரிமியாவின் ரஷ்ய ஆயுதப் படைகளை மேற்கோள்காட்டி ஆர்.ஐ.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது. "இந்த கப்பல் ஆத்திரமூட்டும் வகையி லும் ஆக்ரோ'மாகவும் செயற்பட்டு வருவது குறித்து அவதானத்துடன் இருக்கிறோம்" என்று ரஷ்ய இராணுவ வட்டாரம் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் அத்துமீறலை தடுக்கவும் நாட்டு நலனை பாதுகாக்கவும் சூ-24 தாக்குதல் விமானத்திற்கு அறிவுறுத்தப் பட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு வட்டா ரம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் யு.எஸ்.எஸ். ரொஸ் போர் கப்பல் எப்போதும் சர்வதேச கடல் பகு தியிலேயே இருப்பதாகவும் அது வழமை யான ரோந்து நடவடிக்கையிலேயே ஈடுபடுவதாகவும் பென்டகன் பேச்சாளர் எய்லி லைனஸ் குறிப்பிட்டுள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com