Contact us at: sooddram@gmail.com

 

பங்குனி 2015 மாதப் பதிவுகள்

பங்குனி 31, 2015

அமரத்துவ வாழ்வின் உதிர்வு
தோழர் சின்னராசண்ணை - கமலா அக்கா மறைவு

1980களின் முற்பகுதியில் இடதுசாரி வழிவந்த மற்றும் தமிழ் தேசியப் பிரச்சனை ஊடாக முற்போக்கு அரசியல் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் இணைந்து யாழ் செம்மண் பிரதேச கிராமப்புறங்களில் இரகசிய கருத்தரங்குகள் நிகழ்த்தப்பட்டன. உரும்பிராய், இருபாலை, திருநெல்வேலி, கோப்பாய், சுன்னாகம் கோண்டாவில் என இந்த கருத்தரங்குகளில் பல்வேறு சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் பற்றி ஆராயப்பட்டது. தீவிரமான தர்க்க - அறிவுபூர்வமான விவாதங்கள் நிகழ்ந்தன. தோழர் கௌரிகாந்தன் இந்த கருத்தரங்குகளை ஏனைய தோழர்களுடன் இணைந்து நடத்துவதில் முக்கியபங்கு வகித்தார்.(மேலும்....)

பசில் வந்திறங்கியவுடன் கைதுசெய்யுமாறு உத்தரவு

கோடிக்கணக்கான ரூபாய் நிதி முறைக்கேடுகளை செய்ததாக கூறப்படும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ரோகண ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கடுவலை நீதவான் தம்மிக ஹேமபால, இன்று உத்தரவிட்டுள்ளார். அவர், இந்த நாட்டுக்குள் வந்ததன் பின்னர் கைது செய்யுமாறு, நீதிமன்றத்தினால்; முன்னர் உத்தரவிடப்பட்டிருந்த உத்தரவை இரத்து செய்து அவரை கைது செய்யாமல், தன்னுடைய சட்டதரணிகள் ஊடாக கொள்ளுபிட்டியவிலுள்ள நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு சமூகம் அளிக்குமாறு உத்தரவிட கோரிய வழக்கை, மோஷன் ஊடாக அவரது சிரேஷ்ட சட்டதரணி யு.ஆர் டீ சில்வா கோரியிருந்தார். அந்த கோரிக்கையை நீதவான் நிராகரித்ததுடன் முன்னர் விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் செயற்பட்டு சந்தேக நபரை முன்னிலைப்படுத்துமாறும் அவர் சந்தேக நபரின் சட்டதரணிக்கு அறிவுறுத்தினார். சுகயீனம் காரணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கைக்கு திரும்புவதாக எதிர்பார்த்து இருப்பதாக அவர் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட சட்டதரணி யு.ஆர் டீ சில்வா தெரிவித்தார். இதேவேளை, அவர், ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கு பின்னர் நாடு திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

'எம்மை நோக்கி உரிமைகள், அதிகாரங்கள் வருகின்றன'

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் தடைப்பட்டிருந்த உரிமைகளும் அதிகாரங்களும் சிறிது சிறிதாக எம்மை நோக்கி தற்போது வந்துகொண்டிருக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண பட்டதாரிகள் 252 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் திங்கட்கிழமை (30) நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நல்லாட்சிக்கு வித்திட வேண்டும் என்பதே எமதும் மத்திய அரசினதும் நோக்காகும். நல்லாட்சி என்பது வெறும் பெயரளவிலான கொள்கையாகாது. எமது ஒவ்வொரு நடவடிக்கையும் மற்றவர்களின் பார்வைக்கும் கணிப்பீட்டுக்கும் மதிப்பீட்டுக்கும் உள்ளாகுவதும் கூட நல்லாட்சி தான்' என்றார். அத்துடன், 'மக்களின் மனம், தேவை, சிந்தனை, செயல்திறன், சிந்தனை திசை ஆகியவற்றை அறிந்து மான்புடன் செயற்படுவதுதான் நல்லாட்சி' என்றார்.ஆனாலும் என்ன பிரயோசனம் வட மாகாண சபையின் மக்களுக்கான செயற்பாட்டை காணவில்லையே என்று மக்கள் முணுமுணுக்க தொடங்கிவிட்டார்களே.

எதிர்க்கட்சி தலைமை கூட்டமைப்புக்கே உரியது

தேசிய அரசாங்கம் என்ற பெயரில் கடந்த வாரம் மேலும் சில ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக் காரர்களுக்கு, அரசாங்கம் அமைச்சுப் பதவிகளை வழங்கியதை அடுத்து எதிர்க்கட்சித் தலைமையைப் பற்றி தற்போது சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. தற்போதைய நிலையில், எதிர்க்கட்சித் தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து விலகி பிவிதுரு ஹெல உறுமய என்ற அமைப்பை ஆரம்பித்துள்ள, அந்த உறுமயவின் பொதுச்செயலாளர் உதய கம்மன்பில கூறுகிறார். சில தமிழ் அரசியல்வாதிகளும் அக் கருத்தையே கூறி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைமையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க வேண்டிய 'அபாயம்' ஏற்பட்டு இருப்பதாக எடுத்துக் கூறுவதே கம்மன்பிலவின் நோக்கமாகும். சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே மேற்கண்டவாறு கூறும் தமிழ் அரசியல் வாதிகளின் நோக்கமாகும். (மேலும்....)

தமிழ்க் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு யார் விரும்பவில்லை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு யார் விரும்பவில்லை என்பதை தமிழரசுக் கட்சியின் தலைமையே கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சியில் உள்ள அரைவாசிப்பேர் இணங்கியுள்ள நிலையில் இன்னமும் யார் அதனை எதிர்க்கிறார்கள் என்பதை இரா.சம்பந்தனே கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு என தனியான யாப்பு, தனியான கட்டமைப்பொன்று அவசியம். இதனை இதில் அங்கம் வகிக்கும் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளன. தமிழரசுக் கட்சியில் உள்ளவர்களில் அரைவாசிப்பேரும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இவ்வாறான நிலையில் அனைவரின் இணக்கப்பாட்டுடனேயே தமிழரசுக் கட்சியைப் பதிவுசெய்ய முடியும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார். என்னைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவுசெய் யப்படுவதை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவமே விரும்ப வில்லையெனத் தோன்றுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். சுரேஷ் இன் பணம் எல்லாம் தேர்தலில் தங்களை தமிழரசுக் கட்சி கழட்டி விட்டுவடுமொ என்பதுதான் தனித்து தவில் அடித்தால் கட்டுப்பணமும் இல்லாமல் கோவணம் உருவப்படும் என்ற பணம்தான் வேறு என்ன?

பங்குனி 30, 2015

புதிய தேர்தல் முறை, 250 எம்.பிக்கள்

  • விகிதாசாரத்தில்: 140
  • தொகுதிவாரியாக: 80
  • தேசிய பட்டியலில்: 30

விருப்புவாக்குமுறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய புதிய தேர்தல் முறை தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணையாளர் விளக்கமளிக்கவுள்ளார். இன்று அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற விருக்கும் இக்கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் உத்தேச தேர்தல் முறை தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளார். தற்பொழுது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையொன்றைக் கொண்டுவருவது தொடர்பாக கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்துக்கள் காணப்படுகின்றன. இது தொடர்பாக கட்சித் தலைவர்களுக்கும், தேர்தல் ஆணையாளருக்குமிடையில் அண்மையில் பேச்சுவார்த்தையொன்றும் நடைபெற்றிருந்தது.(மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்

எமக்கு சிங்களவன் எதிரி, தமிழரில் ஒரு பகுதியினர் துரோகிகள், முஸ்லிம்களும் மலையக தமிழரும் தேவைப்படும் போது மட்டும் 'தமிழ் பேசும் மக்கள்' மற்றைய சந்தர்ப்பங்களில் முறையே @@@@, @@@@@@@@, இந்தியா பிராந்திய வல்லாதிக்கம், அமெரிக்கா சந்தர்ப்பவாத ஏகாதிபத்தியம், etc.
அப்படியானால் இவ்வுலகில் எமக்கு நண்பர்கள் யார்???

(Brin Nath)

மீண்டும் முன்னாள் புலி உறுப்பினர்களின்

வாழ்வில் வினை விதைக்கும் எழுத்துதாயுதம் வைத்திருக்கும் வித்தியாதரன்

பிரபாகரன் பரலோகம் போகும் வழி மேல் விழி வைத்து காத்திருந்த வித்தியாதரன், முள்ளிவாய்க்கால் முடிவுவரை புலி உள்ளவரவிட்டு அடிக்கும் ராணுவம் தலை தெறிக்க ஓடும் எண்டுதான் உதயனில உசுப்பேத்தினவர். கருணா அடையாளம் காட்டின பிறகு அடிச்சார் குத்துக்கரணம். அகிலம் அணித்திரண்டு வருது மாத்தி யோசியுங்கோ எண்டு தலைவருக்கு செய்தி அனுப்பினனான் அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு எண்டார். இனி வட மாகாண சபை தான் எங்களுக்கு ஒரு தீர்வு. அதுக்கு நான் முதல்வராய் வாறதுதான் நல்லதெண்டு எல்லாரும் சொல்லுகினம். எனக்கெண்டா விருப்பமில்லை ஆனா நான் முதல்வர் ஆகிற மாதிரித்தான் கனவு வருகுது எண்டு கதை அளக்க தொடங்கினார். (மேலும்....)
 

மாக்சிம் கார்க்கி வாழ்வும் இலக்கியமும்

மாக்சிம் கார்க்கி -உலகம் முழுவதும் அறியப்பட்ட பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகன். மனிதகுலத்தின் மாண்புகளையும், பெருமைகளையும் உலகறியச் செய்தவர். அன்று முதல் இன்று வரை கார்க்கியின் “தாய்” புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்திற்கு வீரியமூட்டி வருகிறாள். இளமையில் கார்க்கியைப் போன்று துன்ப துயரங்களை அனுபவித்தவர் யாரும் இருக்க முடியாது. அவரது தந்தை மாக்சிம் கார்க்கியின் குடும்பத்தில் அவர் சேற்றில் மலர்ந்த செந்தாமரை போன்று முளைத்தார். “ஒரு தோட்டத்தில் செடி கொடிகளும் மரங்களும் பூத்துக் குலுங்கின. ஆனால் அவைகள் எல்லாம் ஒருநாள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டன” என்று தனது தந்தை இறந்ததும் கார்க்கி கூறினார். தனது இறுதிக் காலம் வரை இரண்டு விஷயங்களை அவர் வெறுப் புணர்ச்சியோடு கண்டனம் முழங்குவார். ஒன்று அக்கிரம ஆட்சி நடத்திய ஜார் மன்னனும் முதலாளித்துவ சமூகமும் ஆகும். மற்றொன்று அவரது தந்தையைக் கொடுமைப்படுத்தி அடித்துக் கொன்ற அவரது பாட்டனார் வாசிலிகாசிரின் ஆவார். (மேலும்....)

சந்தேக கண்ணோடு பார்க்காதீர் - முன்னாள் புலிகள்

சமூகத்தில் இணைக்கப்பட்டு நம்பிக்கையுடன் வாழ்க்கை நடத்தும் தம்மை பாரபட்சமாக நடத்த வேண்டாம் என புனர்வாழ்வளிக்கப் பட்ட முன்னாள் போராளிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கேட்டுக்கொண்டனர். புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டு ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ள போதிலும் இன்னும் தாம் சந்தேகக் கண்ணோட் டத்திலே பார்க்கப்படுவதாகவும் இராணுவத்தினரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். தாம் தொழில்களுக்குப் புறப்பட்டு சென்ற பின்னர் தமது வீடுகளுக்கு இராணுவம், வருகை தந்து சந்தேகக் கண்ணோட்டத்தோடு கண்காணிப்பதாகவும் தெரிவித்தனர். அனைத்து விசாரணைகளும் முடிவுற்று புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைப்பட்டுள்ள நிலையில் தாம் நிம்மதியாக வாழ முடியாத நிலை உள்ளது என்றும் பொலிஸ் பிரிவுகளில் வாழும் தம்மை பொலிசாரின் காண்காணிப்பின் கீழ் வாழ வழி சமைத்துத் தருமாறும் கேட்டுக்கொண் டனர். புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளோரை தினமும் இராணுவத்தினர் கண்காணிப்புகளுக்கு உட்படுத்துவதை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

ஐ, தே. கட்சியின் காலடியில் சுரேஷ்

பிரதமரின் நடவடிக்கைக்கு தமிழ்க் கூட்டமைப்பு சுரேஷ் பிரேமச்சந்திரன வரவேற்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் வடக்கு விஜயத்தின் போது பெண்களைத் தலை மையாகக் கொண்ட குடும்ப ங்கள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர் பான விடயங்களைக் கையாள் வதற்கு வெவ்வேறு செயலகங் களை கிளிநொச்சியில் அமைப்பதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித் துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று கிளிநொச்சிக்குச் சென்றிருந்தபோது, பெண்களைத் தலைமையாகக் கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கிளிநொச்சியில் செயலகமொன்றை அமைப் பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை வரவேற்பதாகத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இது நல்ல தொரு ஆரம்பமாக அமையும் என்றும் கூறினார். அதேநேரம், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குறிப்பாக அவயவங்களை இழந்தவர்கள் மற்றும் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட வர்களுக்கு உதவுவதற்கான பணிமனை யொன்றையும் கிளிநொச்சியில் அமைப்ப தற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக உளரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க முடியும். இந்த நடவடிக்கைகளை வரவேற்பதாக சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவராக ராகுல் மே மாதம் நியமனம்

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மூத்த தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். தற்போது துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை தலைவராக நியமிக்க வேண்டும் அப்போது தான் அவரால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியும். அவர் இளைஞர்களை வழிநடத்திச் செல்வார் என்று ஒரு பிரிவினர் கூறி வருகிறார்கள். ஆனால் சோனியா இதுபற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே சோனியாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராகுல்காந்தி விடுமுறையில் சென்று ஓய்வு எடுத்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விரைவில் அவர் கட்சி பணிக்கு திரும்புவார் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். இதற்கிடையே மே மாதம் நடைபெறும் இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி தலைவராக நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சோனியா காந்தி பதவிகாலம் செப்டம்பர் மாத இறுதியில் முடிகிறது. அதற்கு முன்பே ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

கனடா விமானம் ஓடுபாதையில் விபத்து, 137 பேர் உயிர் தப்பினர்

கனடாவில் ஏர்கனடா விமானம் தரை யிறங்கும்போது மோசமான வானிலை காரணமாக ஓடுபாதையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 137 பயணிகள் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார்கள். ஜேர்மன்விங்ஸ் பயணிகள் விமானம் விபத்து நடந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்த விபத்து நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் நோவா ஸ்காட்டியாவின் ஹாலி பேக்ஸ் விமான நிலையத்தில் ஏர் கனடாவிற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320 தரையிறங்க முயன்ற போது அங்கு நிலவிய மோசமான வானிலையால் உடனே தரையிறங்க முடியாமல் வானிலேயே நீண்ட நேரம் பறந்து கொண்டிருந்தது. பின் தரையிறங்கியபோது விமானியால் ஓடுபாதையை தெளிவாக பார்க்க முடியவில்லை. இதனால் ஓடுபாதையில் மோதி விபத்து உள்ளானது. இந்த விபத்தின்போது விமானத்தில் இருந்த 137 பேர் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். ஆனால் விமானம் மோதி விமான நிலையத்தின் மின்சார இணைப்புகள் பாதிக்கப்பட்டதால் மொத்த விமான நிலையமும் இருளில் முழ்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!

ரேனா துங், ஒரு நாகா பழங்குடி. திமாபூர் அருகே உள்ள சேமா எனும் பகுதியில் வாழ்கிறார். இன்று இரவு உணவு எங்களுக்கு ரேனாதுங் இல்லத்தில் கிடைத்தது. மிக மிகக் குறைவான பாத்திரங்கள், சமையல் பொருட்கள் அடங்கிய அவரது சமையலறைக்குச் சென்றோம். பேசிக் கொண்டிருந்தபோது, பரணிலிருந்து ஒரு பொருளை எடுத்து என்னிடம் கொடுத்த ரேனா, ‘இது உங்களுக்கு என் அன்புப் பரிசு’ என்றார். மரத்தால் செய்யப்பட்ட சிறு கடைசல் கருவி அது. சமையலுக்கான பொருட்களை அரைக்காமல் இக்கருவியில் இட்டு இடிப்பது அவர்கள் வழக்கம். உணவின் நிகரற்ற சுவைக்கும், தரத்திற்கும் இதுவும் ஒரு காரணம்.
அவருக்கு நாம் என்ன பரிசு தரலாம் என எண்ணிப் பார்த்தோம். நம்மிடம் உள்ள பொருட்கள் அனைத்தும் அவர்களது வாழ்க்கைத் தரத்தைக் கெடுப்பவையாக உள்ளன. ஆனாலும், ஏதேனும் தர வேண்டும் என்றே எண்ணுகிறேன். பழங்குடிகள் நமக்குத் தருவதற்கு நிறைய வைத்திருக்கிறார்கள்.நம்மிடம் அவர்களுக்கானவை இல்லை. நீங்கள் சாப்பிடும் உணவு விடுதிகளில் நாகாலாந்து போன்ற பகுதிகளிலிருந்து வந்து மேசை துடைக்கும் இளைஞர்களைக் கண்டால், அன்போடு புன்னகைத்துப் பேசுங்கள். அவர்கள் நம்மைவிட நல்ல வாழ்வியலை அறிந்தவர்கள். பணம் எனும் பிசாசு அவர்களை நமது எச்சில் தட்டுகளை நோக்கி விரட்டிக் கொண்டிருக்கிறது.

(Senthamizhan Maniarasan)

பங்குனி 29, 2015

இந்தியாவின் வெற்றியை நினைவுப்படுத்துகிறது நியூசிலாந்தின் 183 ரன்கள் இலக்கு !

மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் சற்று முன் டாஸ் போடப்பட்டது. இதில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.நியூசிலாந்தின் தொடக்க பேட்ஸ்மேன்களாக மார்ட்டின் கப்தில், பிரன்டென் மெக்கல்லம் களமிறங்கினர்.91 ஆயிரத்து 112 ரசிகர்கள் இறுதிப் போட்டியை காண திரண்டிருந்தனர். உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இது கடந்த 1983ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கும் இவ்வளவுதான்.! ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஜான்சன், ஃபாக்னர் தலா 3 விக்கெட்டுகளையும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். தொடர்ந்து நியூசிலாந்து அணி 45வது ஓவரில் அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்களை எடுத்தது. நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை அளிக்கும்விதத்தில் விளையாடிய எலியாட் 83 ரன்களை எடுத்த நிலையில் ஃபாக்னர் பந்தில் ஹாடினிடம் கேட்ச் கொடுத்தார். இந்த ஆட்டத்தில் எலியாட் 7 பவுண்டரியும் ஒரு சிக்சரும் அடித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன்?

பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நாட்டில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளமையால் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் யார் எனும் கேள்வி ஏனைய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றாவதாக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கே அப்பொறுப்பு வழங்கப்பட வேண்டும் எனும் கருத்து நிலவி வருகிறது. பாராளுமன்றத்தில் அங்கம் வகி க்கும் சிறுபான்மை இனக் கட்சிகளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியன தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கே இப்பதவி வழங்கப்பட வேண்டும் என்பதுடன் அவரே அப்பதவிக்குப் பொருத்தமானவர் எனவும் தெரிவித்துள்ளன. ஆனால் ஈழமக்கள் ஜனநாயக கட்சி இவ்விடயம் குறித்து தாம் ஆழமாக ஆராய்ந்து வருவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தருவனவாக இல்லை எனத் தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, 1977 இல் தமிழர் ஒருவருக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்த போது நாமெல்லாம் சந்தோசம் அடைந் தோம். ஆனால் அதுவே தமிழினத்தை முள்ளிவாய்க்காலில் முடக்கி அழி வுக்குள்ளாக்கியது என்பதையும் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே இது குறித்து தாம் ஆழமாகச் சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை எதிர்க் கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வாவா? தினேஸ் குணவர்த்தனாவா? என்பதை தீர்மானிப்பதற்காக எம்.பிக்கள் மத்தியில் கையெழுத்து வேட்டை மும்முரமாக இடம்பெற்று வருகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் புலிகளை தடைசெய்துள்ளது

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் மீதான தடையை மீண்டும் நீடித்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதம் அனுப்பி இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியை கடந்த நவம்பர் மாதம் தொடர்பு கொண்ட பிரதமர், இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்ததாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சகோதரர் உயிரிழந்தார்

கோடாரியினால் தாக்குதலுக்கு உள்ளான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இளைய சகோதரரான பிரியந்த சிறிசேன, இன்று சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். இதேவேளை, கோடாரியினால் தாக்கியதாக கூறப்படும் சந்தேகநபரை எதிர்வரும் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான், நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த வாரம் மேலும் சில அமைச்சர்கள் பதவியேற்பு?

புதிய அமைச்சர் சிலர் அடுத்த வாரம் பதவியேற்க உள்ளதாக தெரியவருகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சீன விஜயத்தை முடித்து கொண்டு நாடு திரும்பியதும் இந்த புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஏற்கனவே ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பைஸர் முஸ்தபாவுக்கு இம்முறை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி வழங்கப்படும் என பேசப்படுகிறது. நான்கு அல்லது ஐந்து பேருக்கு அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அதில் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் அடங்குவதாகவும் தெரியவருகிறது.

மரணத்திற்கு காரணம் யார்?

சரண்ஜாவின் சோகம் நிறைந்த வாழ்க்கையும் மர்ம மரணமும்...

மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம். இலங்கை மட்டுமன்றி உலக நாடுகள் பலவற்றிலும் பெண்கள் உரிமை தொடர்பான விழிப்புணர்வுகளும் ஆடம்பர நிகழ்வுகளும் அன்றைய தினத்தில் நடந்தன. ஆனால் சமூகத்தில் இடம்பெற்ற பெண்கள் மற்றும் சிறுவர் மீதான வன்கொடுமைகளை தட்டிக் கேட்பதற்கும் அதனை தடுப்பதற்கும் தான் யாரும் இல்லை. ஏனெனில் சமூகத்தில் அவ்வப்போது ஏற்படுகின்ற சில சம்பவங்கள் அதனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. அந்த வகையில் வவுனியா, கனகராயன்குளம், மன்னகுளம் பகுதியைச் சேர்ந்த 16 வயாடைய செல்வராஜா சரண்ஜா என்ற சிறுமியின் மர்ம மரணமும் வவுனியா மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விதியால் விரட்டப்பட்ட சரண்ஜா யாழ்ப்பாணத்தையும் கண்டியையும் இணைக்கும் ஏ9 பிரதான வீதியில் கனகராயன்குளத்துக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட ஒரு கிராமமே மன்னகுளம்.(மேலும்....)

பறக்கும் போது விமானிகள்
தூங்கி விடுவதுதான் விமான விபத்துக்களுக்கு காரணமா?

கடந்தாண்டு மார்ச் 8ல் தனது பயணத்தில் காணாமல்போன மலேசிய விமானம் தொடர்பில் பொதுவான விமானப் பயணங்களில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து தாம் சேகரித்த தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொள்கிறார் ஒரு மேற்கத்திய ஊடகவியலாளர். கடந்தாண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியன்று இந்து மா கடலின் தென் பிராந்தியத்தில் 239 பயணிகளுடன் காணாமல் போன எம்.எச். 370 என்ற மலேசிய போயிங் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த மலேசியா, சீனா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள், தேடுதலில் பயனேதும் காணாத நிலையில் அம்முயற்சியை கைவிட்டுள்ளதாக இப்போது அறிவித்துள்ளன. அவ்விமானத்தில் பயணம் செய்தவர்களில் இருவர் போலி கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்திருப்பதாகவும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களாயிருந்து விமானத்தைத் தகர்த்திருக்கலாமென்ற யூகங்களும் எழுப்பப் படுகின்றன. அப்படியானால் தகர்க்கப்பட்ட விமானத்தின் பாகங்களோ, சிதைவுகளோ எங்கே? ஒருவேளை விமானம் கடத்தப்பட்டிருந்தால் அது எங்கேயாவது தரையிறக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்கான தடயமெதுவும் இதுவரை தென்படவில்லை. (மேலும்....)

பங்குனி 28, 2015

தேர்தலின் பின் ரணில் பிரதமராக பதவியேற்றது ஜனநாயகத்துக்கு விரோதம் - வாசுதேவ நாணயக்கார

“ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கு விரோதமானது” என்று இடதுசாரி சோசலிஷ முன்னணித் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட ஐ.ம.சு. கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார கூறினார். “ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்யும் பொருட்டே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டது. எனினும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பாராளுமன்றத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமர் பதவியேற்றுள்ளார். புதிய பிரதமராக பதவியேற்க பாராளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய பிரதமர், புதிய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவி ஏற்றது ஜனநாயகத்திற்கு எதிரானது. நீதிமன்றத்திலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ஜனநாயக விரோத செயல். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறான ஜனநாயக விரோத செயலிலீடுபட்டதில்லை. இதனால் தான் அவரை மீண்டும் பதவியில் நிறுத்த முயற்சி செய்கின்றோம் என்றார்.

இந்த விளையாட்டு மட்டும்
ஏன் பிடித்தது ?


இதற்கு
அப்படியென்ன ஆற்றல் ?

ஏன் நம்மை
ஆட்டிப்படைக்கிறது இது ?

இளமையில் நாம்
இதையே விளையாடினோம்.

விளையாட்டுக்கு ஆள்கூப்பிட
இதன் நிமித்தமே
நண்பன் வீட்டுக்குச் சென்றோம்.
(மேலும்....)

புலிகள் போராடும் காலங்களிலேயே விடுதலைப் போராட்டத்தை தவறான பாதையில் கொண்டு சென்றனர்

1980 களின் இறுதி பகுதி அது, பிரேமதாச அரசும் விடுதலை புலிகளும் தேன் நிலவு கொண்டாடிய காலம் அது, JVP என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணியை இரும்புக்கரம் கொண்டு நசிக்கிய காலம் அது.  பேராதனிய பல்கலைக்கழகத்தில் பயிலும் ஒரு தமிழ் மாணவன் அந்த பகுதியில் உள்ள ஒரு சிங்கள நண்பன் வீட்டில் இருக்கும் போது திடீர் என அப்பகுதி பிரேமதாச அரசின் விசேட படைப் பிரிவான 'பச்சை புலி'களால் ( Green Tigers) சுற்றி வளைக்கப்படுகிறது. பல சிங்கள இளைஞர்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்து இராணுவ வண்டிகளில் ஏற்றப்படுகிரார்கள். இந்த தமிழ் இளைஞனிடமும் விசாரணை ஆரம்பமாகின்றது. தான் யாழ்பாணத்தை சேர்ந்த தமிழன் என தன் அடையாள அட்டையை (Identity Card) எடுத்துக் காட்டுகிறார். (மேலும்....)

உலகக் கிண்ணத்தை வெல்லப் போவது யார்?

11ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டி நாளை அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறவுள்ளது. ஆறு வாரங்கள் 48 போட்டிகள் மற்றும் 14 அணிகள் பங்கேற்ற 11 ஆவது உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இன்னும் ஒரு ஆட்டம்தான் எஞ்சியுள்ளது. இந்தப் பரபரப்பான பலப்பரீட்சையில் வெல்லப்போவது யார்? என்பதை உலகமே எதிர்பார்த்த வண்ணம் இருக்கிறது. அவுஸ்திரேலிய அணி ஏழாவது தடவையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. இதில் ஆஸி. அணி மூன்று தடவைகள் வெற்றி பெற்று அதிக முறை உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அணியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளது. எவரும் எதிர்பார்க்காத வகையில் இம்முறை உலகக் கிண்ணத்தில் தொடர்ந்து எட்டுப் போட்டிகளிலும் வென்ற நியூஸிலாந்து முதல் முறை உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது.(மேலும்....)

கணவரால் கொலை செய்யப்பட்ட கனடா வாழ் ஈழத் தமிழ்ப் பெண்ணின் கதை இது

சமீபத்தில் கனடா நாட்டில் நடந்த கொலை ஒன்று, தமிழர்களின் சம்பிரதாய கல்யாணங்களை கேள்விக்குறியாக்கியுள்ளது. 21 வயதான அனுஜா வின் வாழ்க்கை அவரைச் சுழவுள்ள உறவினர்களால் சீரழிக்கப்பட்டுள்ளதா என்ற விவாதங்களும் நீதிமன்றில் எழுந்துள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால், பேசிக் கலியாணம் செய்வது என்று சொல்லுவார்கள். ஒருவரை ஒருவருக்குத் தெரியாமல், இடைத் தரகர் ஒருவர் ஊடாகப் பேசி, பின்னர் மாப்பிளையும் பெண்னும் ஒருவரை ஒருவர் மணந்து கொள்வார்கள். அதிலும் பெரும்பாலான பெண்கள், கல்யான வீட்டில் வைத்து தான் மாப்பிள்ளையோடு பேசவே ஆரம்பித்திருப்பார்கள் ! (மேலும்....)

சிறப்புமுகாமில் பாலியல் வல்லுறவு கொடுமைகள்

சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அகதிப் பெண்களை தமிழக அதிகாரிகள் பாலியல் வல்லுறவு செய்கின்றனர் என்பது பலருக்கு ஆச்சரியமான ஒரு செய்தியாக இருக்கும். பெண்களை தெய்வமாக வணங்கும் தமிழ்நாட்டில், தமிழ் பெண்களை அதுவும் தமிழ்நாட்டை நம்பி வந்த அகதி தமிழ்ப் பெண்களை தமிழக காவல்துறை அதிகாரிகளால் இவ்வாறு செய்ய முடியுமா என்பதே அவர்கள் ஆச்சரியப்படுவதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் தமிழக காவல்துறை மற்றும் அதிகாரிகளின் கடந்தகால வரலாறுகளை நன்கு அறிந்தவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியமூட்டும் செய்தியாக ஒருபோதும் இருக்காது. ஏனெனில் இதே தமிழக காவல்துறையினர்தான் சிதம்பரம் காவல் நிலையத்தில் பத்மினி என்ற பெண்ணை கூட்டாக பாலியல் வல்லுறவு செய்தது மட்டுமன்றி அந்த அப்பாவிப் பெண்ணை கொலையும் செய்தார்கள். (மேலும்....)

தலிபான்கள் பூமியில்

(எம்.கண்ணன்)

மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரக் கொலைக்கெதிராக ஆப்கானிஸ்தானில் பெண்கள் கிளர்ந்தெழுந்திருக்கின் றனர். ஆப்கானிஸ் தானில் பார்குந்தா என்ற இளம் பெண் புனித நூலை எரித்ததாக கூறி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதவெறியர்கள் திரண்டு, அந்த பெண்ணை கடுமையாக அடித்து துன்புறுத்தியிருக்கின்றனர். பின்னர் காபூல் ஆற்றங்கரையில் தீ வைத்து எரித்து அப்பெண்ணை கொலை செய்திருக்கின்றனர். இந்தக் கொடூரம் நிகழ்ந்த பின்னரும், பார்குந்தாவின் இறுதிச் சடங்கில் யாரும் கலந்து கொள்ளக் கூடாது என அடிப்படைவாத மதவெறியர்கள் மிரட்டியிருக்கின்றனர்.(மேலும்....)

தனது எம்.பி பதவியை தக்க வைப்பதற்காக இழிநிலை அரசியல் செய்யும் சிறீதரன்!

அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாக குறைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எம்.பிக்களாக உள்ள ஒருசிலர் தொடர்ந்தும் தமது எம்.பி பதவியை தக்கவைப்பது பெரும் சவாலானதாக மாறியுள்ளது. ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தி, சதி செய்து வேலை பார்த்தால் மாத்திரமே தாம் வெல்ல முடியும் எனும் அளவுக்கு ஒருசிலரின் நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது. யாழ்ப்பாணம் - கிளிநொச்சி இவ்விரு மாவட்டங்களும் இணைந்ததே ஒரு தேர்தல் தொகுதியாக இருந்து வருகின்றது. இந்நிலையில் சிறீதரனின் எம்.பி கனவும் பல்வேறு அரசியல் காரணிகளாலும், சமுக விழிப்புணர்ச்சியாலும் களைந்துவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 27, 2015

19ஆவது திருத்தமும் சிறுபான்மையினரும்

புதிய அரசாங்கம், வர்த்தமானி மூலம் அறிவித்துள்ள 19ஆவது அரசியலமைப்புத் திருத்த வரைவில் பல முக்கிய விடயங்களை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இந்நாட்டு தமிழ், முஸ்லிம் மக்கள் அதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இரண்டு கருத்துக்களை நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள். அவை நல்லிணக்கம் தொடர்பான கருத்துக்களாக இருப்பதே அதற்குக் காரணமாகும். அந்த அரசியலமைப்பு திருத்தத்தில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் கடமைகளை விவரிக்கும் பகுதியில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, சமய மற்றும் இன ஐக்கியத்தை உறுதிப்படுத்துவதும் அவற்றை பாதுகாப்பதற்கான வசதிகளை வழங்குவதும் ஜனாதிபதியின் கடமைகளில் ஒன்றாகும். (மேலும்....)

மக்கள் சேவையா ? மகள் சேவையா....?

(தானாமூனா)

பெண் எடுத்த இடத்துக்கான விஜயத்தை மக்கள் சேவையாக மாற்றிய மகான் என்றால் அது சுரேஷ் பிரேமசந்திரனுக்குத்தான் பொருந்தும் இதுவரை யாழ்பாணம், கொழும்பு என்று சுற்றிக் கொண்டிருந்த சுரேஷ் தேர்தல் வெற்றிக்காக வவுனியாவிற்கும் ஒருதடவை விஜயம் செய்ததை தவிர வேறு விஜயங்கள் எதனையும் செய்யவில்லை. இவரால் இழுக்கப்பட்ட துரைரத்தினம் மிகவும் வலுவான நிலையில் மட்டக்களப்பில் உள்ள நிலையில் என்றும் இல்லாதவாறு இன்று கிழக்கிற்கு அதுவும் வளத்தாப்பட்டி, தம்பிலுவில் இற்கு விஜயம் செய்தது என்னமோ மக்கள் சேவைக்காக அல்ல. தனது மகள் வழிச்சேவைக்காக என்று இவரை நன்கு அறிந்தவரகள் அறிவர். துணைக்கு ஆள் தேவை என்பதற்காக இவருடன் இலவச இணைப்பாக சென்றவர் ஆனந்தன். ஆனாலும் ஆனந்தன் கிழக்கில் இருந்தாலும் வன்னியில் தனது பினாமிகள் ஊடான வியாபாரத்தை அடிக்கடி விசாரித்தபடி இருந்தார் என்பது அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. மற்றயபடி சுரேஷ் இற்கு அப்படியொன்றும் கிழக்கு மக்கள் மீது ஒரு பாசமும் இல்லை எல்லாம் வேஷம். கிழக்கிற்கான விஜயம் அல்ல,  இங்கு ஒரு விசயம் உண்டு என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டால் சரி.

ரொரன்ரோ தமிழ் பத்திரிகையாளர்களைத் தயவுடன் கவனிக்க வேண்டிக் கொள்கிறேன்

உங்கள் பத்திரிகைகளில் இருக்கும் கறுப்பு மை கைகளில் இலகுவாகவே ஒட்டிக்கொள்கிறது. இது ஒரு பத்திரிகைக்கு மட்டுமானதாகஇல்லை. எல்லாத் தமிழ்ப் பத்திரிகைகளும் அப்படியே. ஒரே அச்சகத்தில் அனைத்தும் அச்சிடுவதால் அப்படி எல்லாவற்றிற்கும் நேர்கிறது என்றே நினைக்கிறேன். பத்திரிகையை விரிக்கும்போதே கைகளில் ஒட்டிக் கொள்கிறது என்றால் இங்குவாழ்கின்ற தமிழர்கள்(நான் உட்பட) மா அரிப்பதற்கும் மீன் பொரித்துப் போடுவதற்கும் அவற்றையே பயன்படுத்துகிறோம். இதனால் நமது மக்களது உணவுகளில் அச்சகத்து மை கலந்து விடுகிறது. இந்த விபரீதத்தை தவிர்க்க வேண்டி உங்களது பத்திரிகைகளது அச்சடிக்கும் முறையில் கவனம் செலுத்தத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன். மீனைப் பொரித்து பொடுவதற்கும் மா அரிப்பதற்கும் வீட்டில் குளிர் வராமல் கதவு நீக்கல்களை அடைப்பதற்கும் பனிக்காலத்தில் காரில் கால்களில் போடுவதற்கும் நமது மக்களுக்கு அதிகம் உதவியாய் இருப்பது உங்கள் பத்திரிகைகளே. இதற்காக நாம் என்றும் நன்றிக்கடமை பட்டவர்கள்.ஆனால் இந்த மை விடயத்தில் கவனம் கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.

(Katsura Bourassa)

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்....!!

அனைவருக்குமே எலுமிச்சை ஜூஸைவெதுவெதுப்பான நீரில் போட்டு குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் உடல் எடையைக் குறைக்க நினைப்போர் இப்படி குடித்து வந்தால் நல்ல பலனை விரைவில் காணலாம். ஆனால் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால் வேறுசில நன்மைகளையும் பெறலாம். இப்படி எலுமிச்சை ஜூஸை குடிப்பதால் கிடைக்கும் நன்மைக்கு காரணம் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான். அதிலும் அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் தான் முக்கிய காரணம். சரி, இப்போது வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடிப்பதால், அதிலும் அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
செரிமான மண்டலத்திற்கு உதவும். அதிகாலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், செரிமான பாதை சுத்தமாகி, செரிமானம் சீரா நடைபெற்று, நெஞ்செரிச்சல் ஏற்படுவது குறைந்து, நச்சுக்கள் எவ்வித தடையுமின்றி வெளியேறும். (மேலும்....)

சொந்த காலில் நில் - என்பதைதான் குயின் படத்தை பார்க்க வரும் பெண்களுக்கு சொல்லிக்கொடுக்கின்றது.

வட இந்தியாவில் ரொம்பவே கொண்டாடி தீர்த்த படம்.... பெரிய ஆளுமைகள் தயாரிப்பில் உருவான திரைப்படம்.. ஆங்கில பத்திரிக்கைகள் அருமை பெருமை என்று எழுதி தள்ளிய திரைப்படம்... திரைப்படத்தின் நாயகி கங்கனாராவத்தும் சேர்ந்து வசனம் எழுதிய திரைப்படம்... இயக்குனர் அனுராக் கஷ்யப்பே தயாரித்து, எடிட் செய்த படம் என்று குயின் படத்தை பற்றி ஏகப்பட்ட தகவல்கள்........ பொதுவாக டெல்லி பெண் கற்பழிப்பு பிரச்சனைக்கு பிறகு பெண் சுதந்திரம் கட்டுப்பெட்டிதனம் குறித்து நிறைய கேள்விகள் அந்த பிரச்சனையோடு சம்பந்த பட்ட விவாதங்கள் நிறையவே நாடு முழுவதும் எழுந்தன.
பெண் அணுக்கு அடங்கியவளா? ஆனால் அப்படித்தான் இந்திய பண்பாடு இன்று வரை சொல்லி வருகின்றது... பெண் வேலைக்கு போனலும் வீட்டு வேலை செய்ய வேண்டும்.... ஆண் பேப்பர் படித்துக்கொண்டு டீவி பார்க்க வேண்டும் என்று காலம் காலமாக சொல்லி வருகின்றது...(மேலும்....)



மூன்று பிரதான விடயங்களை நாம் மக்களுக்காக பேசப் போகிறோம்


 

1- மக்கள் தமது கிணற்று நீரை பயன்படுத்த முடியுமா ? முடியாதா ?

2- நிரந்தர தீர்வு வரும் வரை வாராந்தம் இந்த மாசடைதல் தொடர்பாக என்ன வேலைகள் நடைபெற்று வருகின்றன என்பது தெளிவு படுத்தப் பட வேண்டும் . வாராந்த அறிக்கை அனைத்துப் பத்திரிகைகளிலும் வர வேண்டும் , அது மக்களுக்கு நிம்மதியையும் நம்பிக்கையையும் தரும் என்பதால்

3- குடி நீர் விநியோக தாமதங்கள் ,முற்றாக நிறுத்தப்பட வேண்டும் .அதற்கு பொறுப்பானவர்கள் ,எந்த எந்த பிரதேசங்களுக்கு எங்கிருந்து எங்கிருந்து நீர் விநியோகிக்கப் படுகின்றன என்பது தொடர்பான தகவலை வெளியிட வேண்டும் .
- மக்களால் மக்களுக்கான விழிப்புணர்வு அணி

இடதுசாரி இயக்கத்தை வலுப்படுத்துவோம்! - சிபிஐ மாநாட்டில் பிரகாஷ் காரத்
 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் புதனன்று எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டை வாழ்த்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் உரையாற்றினார். மேடையில் சிபிஐ மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்கள்.

வலதுசாரி சக்திகளின் கை ஓங்கியுள்ள அரசியல் சூழலில் இடதுசாரி இயக்கங்களின் ஒற்றுமையும், வலுவான வளர்ச் சியும் நாட்டிற்கு கட்டாயத் தேவை யாகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு புதுச்சேரியில் புதனன்று (மார்ச் 25) தொடங்கியது. மாநாட்டுத் தொடக்கவிழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிய பிரகாஷ் காரத் இவ்வாறு கூறினார். அவரது உரையின் முக்கிய பகுதிகள் வருமாறு:தேசத்தின் சுதந்திரப் போராட்ட நெருப்பில் புடம் போட்டு வார்த்தெடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அங்கங் கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும். தொழிலாளர்கள், விவசாயிகள் நலனை முன்னிறுத்தி ஜனநாயக சோசலிச சமூகத்திற்கு வித்திட்ட இயக்கம் இது. புதுவை மண்ணில் சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமை வகித்த தோழர் வி.சுப்பையாவின் வாழ்வும் பணியும் மகத்தான கம்யூனிஸ்ட் மரபுக்கு எடுத்துக்காட்டாகும். (மேலும்....)

‘ஜெர்மன்விங்ஸ் விமானம் வேண்டுமென்றே சகவிமானியால் வீழ்த்தப்பட்டது’

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். விமானி அறையில் இருந்த ஒலிப்பதிவுக் கருவியில் இருந்து கிடைத்த தகவல்களை ஆராய்ந்த பிரெஞ்சு புலனாய்வாளர்கள், விமானத்தின் சக விமானி, விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து, வேண்டுமென்றே விமானத்தைக் கீழ் நோக்கிக் கொண்டு சென்றதாகக் கூறினர். விமானிகள் அறையில் இருந்து அப்போதுதான் வெளியே சென்ற தலைமை விமானி மீண்டும் உள்ளே வர முடியாத நிலையில் விமானி அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததாம். விமானி மற்றும் சகவிமானியின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. சகவிமானி விமானம் இறுதியாக மலையில் மோதி நொறுங்கும் வரை உயிருடன் இருந்ததாகவும் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர். ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டுசல்டார்ஃப் நகருக்கு சென்று கொண்டிருந்த இந்த ஏர்பஸ் 320 விமானம் செவ்வாய்க்கிழமை மலையில் மோதி நொறுங்கியது. இதில் பயணித்த அனைத்து 150 பயணிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 14 பள்ளிச் சிறார்களும் அடங்குவர்.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு
இலங்கைக்கு சீன அரசு தொடர்ந்தும் ஒத்துழைப்பு

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கு முகம் கொடுப்பதற்கு இலங்கைக்கு சீன அரசாங்கம் தொடர்ந்தும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென சீன ஜனாதிபதி ஜிங் பிங் பிங் உறுதியளித்துள்ளார். இதுவரை சீன அரசாங்கம் இலங்கைக்கு அளித்து வந்த உதவிகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நன்றியினை வெளியிட்டார்.சீன அரசாங்கம் வழங்கிய அரச மற்றும் தனியார் துறையின் நேரடி முதலீடுகளை கடந்த காலங்களை விட இலங்கை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தியதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான உறவு எதிர்காலத்தில் மேலும் வலுவடையும் என்று தெரிவித்த சீன ஜனாதிபதி கடந்த தேர்தலில் பெரு வெற்றியீட்டி ஜனநாயகத்தை நிலை நாட்டி மோசடியற்ற நல்லாட்சிக்கு வழியமைத்திருப்பது தொடர்பில் தனது பாராட்டை தெரிவித்தார். நீதிமன்ற சுதந்திரத்தை ஏற்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையையும் அவர் வரவேற்றார். அதிக பயனுள்ள அபிவிருத்தி உதவிகளை முன்னரைவிட அதிகமாக இலங்கைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்த சீன ஜனாதிபதி சார்க் நாடுகளுடன் ஒத்துழைப்புடன் செயற்படும் திட்டத்திற்கு தனது இணக்கப்பாட்டை வெளியிட்டார். சர்வதேச மட்டத்தில் இலங்கை முகம் கொடுத்துவரும் மனித உரிமை குற்றச்சாட்டிற்கு முகம்கொடுக்க தொடர்ந்தும் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சீன ஜனாதிபதி இதன் போது உறுதியளித்தார்.

பங்குனி 26, 2015

சேனாதிராஜா இன் பேச்சும் செயலும்

மக்களைக் கொல்ல நினைக்கும் ஐங்கரநேசன் - சுன்னாகம் நிலத்தடி நீர் தொடர்பான நிபுணர் குழுவின் மோசடி அம்பலம்!

பெட்ரோலியத்தில் காணப்படும் பிரதான சேதனப் பொருள் அல்கேன்ஸ் நிரம்பிய ஐதரோகாபன் மூலக்கூறுகள் நச்சுத்தன்மை வாய்ந்ததென அம்பலப்படுத்தியுள்ளார் மருத்துவ சங்கத் தலைவர் முரளி வல்லிபுரநாதன். உயர்தர இரசாயனவியல் படித்த மாணவர்களுக்கே இவை நச்சுத் தன்மை வாய்ந்தது எனத் தெரிந்த ஒரு விடயம் ஆகும். ஏற்கெனவே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை நூற்றுக்கணக்கான கிணறுகளில் ஆய்வு செய்தும் சுகாதார அமைச்சு 25 கிணறுகளில் எடுத்த மாதிரிகளை அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்கள ஆய்வுகூடத்தில் பரிசோதனை செய்தும் பெற்றோலியக் கழிவுகள் நீரில் கலந்து இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் தரம் வாய்ந்த ஆய்வுகூடங்கள் இருக்கத் தக்கதாக புறொக் (FROG) 4000 எனப்படும் தரம் குறைந்த, அல்கேன்ஸினைக்கூட கண்டு பிடிக்க முடியாத வெளிக்கள உபகரணத்தை கொண்டு பரிசோதனை செய்து "நிபுணர் " குழு ஆபத்தான பதார்த்தங்கள் இல்லை என்று ஊடகங்களில் விளம்பரம் செய்வதன் நோக்கம் என்ன? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். (மேலும்....)

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில்

வெல்லப்போவது இந்தியாவா? அவுஸ்திரேலியாவா?

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

முதலாவது அரையிறுதிப் போட்டியில் வழமைபோலவே தென்ஆபிரிக்கா தோற்றுவிட்டது. எல்லாவகையிலும் திறமைகள் இருந்தும், திறம்பட ஆட்டத்தை வெளிப்படுத்தியும் காலநிலையும் கடைசி ஓவரில் (சிறப்பாக கடைசிப் பந்தில்) தேவையற்ற சொதப்பலாலும் தென்ஆபிரிக்கா தோல்வியைத் தழுவிக்கொள்ள, இவர்களின் முன்னாள் அதிரடி மன்னன் லான்ஸ் குளுனர்சை ஞாபகப்படுத்தி கண்ணீருடன் இவர்களை மைதானத்தைவிட்டு வெளியேறவைத்ததை யாரும் இலகுவில் மறக்க முடியாது. சரி இன்றைய அரையிறுதி ஆட்டத்தைப் பற்றி கவனிப்போம். இந்த உலக கிண்ணப்போட்டியில் இதுவரை எந்த ஆட்டத்திலும் தோற்றுப்போகாத இந்திய அணியுடன் உலக கோப்பை கிண்ண ஆட்டத்திற்கு முன்னரான ஆட்டத்தொடரில் இந்தியாவை தோற்கடித்த அவுஸ்திரேலியா அணியும் மோதவுள்ளன. தனது சொந்த மண்ணில் அவுஸ்திலேலியாவும் தனக்கு அதிகம் பழக்கம் இல்லாத மண்ணில் இந்தியாவும் மோதவுள்ளன. தோல்விகளிலிருந்து அர்ப்பரித்தெழுந்த அணியாக இந்திய அணி தற்போது விளையாடுவதை காண முடிகின்றது. இதனை விட தன்னை எதிர்த்து ஆடிய சகல அணிகளையும் முழுமையாக ஆட்டம் இழக்கச் செய்த கலப்புப் பந்து வீச்சுத்தளத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கூடவே மிகவும் பலமான மட்டையடியாளர்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. தலைமத்துவ பதவியில் டொனி சிறந்து விளங்குவதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் டொனியிடம் இருந்த ஆக்ரோசமான, எந்நிலையிலும் தளர்ந்து போகாத மட்டை அடி வெளிப்பாடு மட்டும் இம்முறை மிஸ்ஸிங். இது மட்டும் இருந்திருந்தால் அடித்து கூறமுடியும் இம்முறையும் உலகக் கோப்பை இந்தியா வசம் என்று. டொனியிடம் காணாத இந்த ஆக்ரோஷம் இந்தப் போட்டியில் யார் வெல்வார்கள் என்பதை அறுதியிட்டு கூறமுடியாமல் ஏற்படுத்தியுள்ளது. 'காற்று' சாயும் பக்கம் வெற்றி என்பதே இந்த அரையிறுதிப் போட்டியின் முடிவாக அமையலாம். அவுஸ்த்திரேலியா நாடு வழமைபோல் மூன்றாம் தரமான மனோதத்து தாக்குதலை இந்திய அணிக்கெதிராக தொடங்கிவிட்டது. இது அவுஸ்திரேலியாவின் பொதுவான அணுகுமுறை. நம்பிக்கை தரும் துடுடப்பாடக்காரர்கள் இல்லாதது அவுஸ்திரேலிய அணியின் பலவீனமாக தோற்றம் அளிக்கின்றது. இந்திய முதலில் துடுப்பெடுத்தாடினால் வெற்றி இந்திய பந்து வீச்சாளர்கள் கையிலும் மாறாக அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடினால் இந்தியாவின் டொனி கையிலும் தங்கியுள்ளது இந்தாவின் வெற்றி தோல்வி. விடிந்தால் இந்தியாவில் திருவிழாவா? அல்லது வீரர்களின் வீட்டிற்கு கல்லெறியா? என்பது விடிந்தால் தெரிந்துவிடும்.

ஜனாதிபதி மைத்திரிக்கு சீனாவில் மகத்தான வரவேற்பு

சீன அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை தூதுக்குழுவினர் நேற்றைய தினம் பிற்பகல் 1.20 மணியளவில் யு.எல். 868 பயணிகள் விமானம் மூலம் கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்டு சென்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவில் தங்கியிருக்கும் காலத்தில் இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையிலான இருதரப்பு பேச்சு வார்த்தை இடம்பெற வுள்ளதுடன் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய ஒப்பந் தங்கள் சிலவும் கைச்சாத்திடப்படவுள்ளன. 28ம் திகதி சீனாவில் நடைபெறவுள்ள ‘போஆ’ சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறப்புரை யாற்றவுள்ளார். ஆசியாவின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் தொடர்பான மேற்படி மாநாட்டில் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தவுள்ளார். ஜனாதிபதியின் பாரியார் ஜயந்தி சிறிசேன, அமைச்சர்கள் மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக, ரவூப் ஹக்கீம், விஜேதாச ராஜபக்ஷ, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோர் இத்தூதுக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.

'தீ'யா பயிற்சி எடுத்த இந்தியாவுக்கு ஸ்லெட்ஜிங்தான் சவால்!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், அடுத்து முத்தரப்பு தொடர் என படுதோல்வியை சந்தித்த இந்திய அணிக்கு, உலகக் கோப்பை போட்டியில் மீண்டும் நந்தியாக வந்து குறுக்கே நிற்கும் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்துவது சற்று கடினமான காரியம்தான். இந்த தொடரை பொறுத்த வரை, இந்திய அணி இதுவரை தோல்வியை சந்திக்கவில்லை. ஆனால் காலிறுதியில் வங்கதேச அணியுடன் நடந்த ஆட்டம் மெச்சும்படி இருந்தது என்றும் சொல்ல முடியாது. இதுவரை தோல்வியை சந்திக்காத நமது அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால்தான் இந்திய ரசிகர்களின் மனது சற்று ஆறுதல் அடையும்.(மேலும்....)

'திவிநெகும' பாரிய நிதிமோசடி

பசில் ராஜபக்ஷவை இலங்கைக்கு அழைத்துவர பொலிஸ் ஏற்பாடு

‘திவிநெகும’ திணைக்களத்தில் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை விசாரணைக்கு உட்படுத்தவுள்ளதாகவும், அவரை இலங்கைக்கு அழைப்பது தொடர்பில் சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். திவி நெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆர். ஏ. ஏ. கே. ரணவக்க, நிதி மோசடிப் பிரிவுக்கு வழங்கியுள்ள வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ விசாரணைக்குட்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். திவிநெகும திணைக்களத்தின் பணிக்கொடை கொடுப்பனவு மோசடி மற்றும் திவிநெகும திட்டத்தின் கீழ் நிவாரண வீட்டுத் திட்ட நிதி மோசடி அத்துடன் கொழும்பில் நடத்தப்பட்ட மாநாடொன்றுக்காக சுமார் 73 மில்லியன் ரூபா செலவு செய்துள்ளமை தொடர்பாக வும் தனித்தனியே 15 பேர் விசாரணைக் குட்படுத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்துக்கு விடயங்களை ஆற்றுப்படுத்தி சட்ட மா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என்றும் அதற்கான வேலைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார். இவ் நிதி மோசடி சம்மந்தமாக வடக்கு கிழக்கு முன்னாள் தமழ் அமைச்சர் ஒருவரும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாமா என்று புலனாய்வுப்பிரிவு ஆலோசனை செய்து வருவதாக அறியக் கிடக்கின்றது.

மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான போட்டியில் நடிகர் மம்மூட்டி

மாநிலங்களவையில் கேரளத்தில் இருந்து காலியாகும் ஓரிடத்துக் கான போட்டியில் மார்க்சிஸ்ட் கம்யு+ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அவரது மனைவி பிருந்தா காரத், நடிகர் மம்மூட்டி ஆகியோர் முன்னணியில் உள்ளனர். மாநிலங்களவையில் கேரளத்தில் இருந்து 3 இடங்கள் காலியாக உள்ளன. இதில் கேரள சட்டப்பேர வையில் கட்சிகளின் பலத்தின் அடிப்படையில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி 2 இடத்தையும் எதிர் அணியான இடதுசாரிகள் ஓரிடத்தையும் பெறமுடியும். இந்நிலையில் இடதுசாரிகள் வெல் லும் வாய்ப்புள்ள ஓரிடத்தை பெறு வதற்கான போட்டியில், பிரகாஷ் காரத், பிருந்தா காரத் ஆகியோ ருடன் மார்க்சிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக இருந்துவரும் கேரள சுப்பர் ஸ்டார் மம்மூட்டியும் முன்னணியில் உள்ளனர். இவர்கள் தவிர மார்க்சிஸ்ட் பத்தி ரிகையான 'தேசாபிமானி'யின் செய்தி ஆலோசகர் என்.மாதவன் குட்டி, மார்க்சிஸ்ட் பின்புலம் கொண்ட கைரளி டி.வி.யின் முதன்மை ஆசிரியர்  பிரிட்டாஸ் ஆகிய இரு பத்திரிகை யாளர்களும் இப்பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

மூன்று மனிதர்கள் மூன்று கேள்விகள்
(ம.செந்தமிழன்)

நாகாலாந்து மலைகளின் அடர்ந்த வனங்களில் வாழும் பழங்குடி குடியிருப்புகளில் மூன்று மனிதர்களைச் சந்தித்தோம். அவர்களிடம் நிறைய உரையாடினேன். ஆயினும் மூன்று கேள்விகளை மூன்று பேர்களிடமும் கேட்டேன். அந்தக் கேள்விகளும் அவர்கள் அளித்த பதில்களும் பின்வருமாறு அமைந்தன:
1. உங்கள் ஊரில் உணவு உண்ணும் நேரம் எது? பசிக்கும்போது உண்பீர்களா அல்லது நேரக் கணக்கை வைத்து உண்பீர்களா?
2. சர்க்கரை நோயைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
3. உங்கள் கிராமத்து மனிதர்களின் ஆயுள் காலம் என்ன?

(மேலும்....)

பங்குனி 25, 2015

People To Fix One Cross – EC To Decide FPP & PR Fusion

(By Varatharaja Perumal)

A Proposal Thought for New Electoral System

Due to the dissatisfactions owing to the misrepresentation of the First Past the Post (FPP) electoral system existed before 1978 and the bad experiences and distressing consequences of Proportional Representative (PR) electoral system, which gradually eroded the foundation of the democracy in Sri Lanka, a realization is now dominantly prevailing in the country that the elections should be held based on a combination the FPP and the PR systems. However, hitherto, there is no consensus among the political leaders on this yet. (more....)

தற்போதைய இலங்கைச் சூழல் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை தாயகம் திரும்ப ஊக்குவிக்குமா?

(ஸ்ரனிஸ்)

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் இலங்கை தமிழ் மக்கள் அனைவரையும் உடனடியான சந்தோஷத்தை ஏற்படுத்தியது.இந்த சந்தோஷம் தமிழகத்தில் உள்ள இலங்கை மக்களையும் விட்டுவைக்கவில்லை.தமிழகத்தில் உள்ள இலங்கை மக்கள் நாடுதிரும்புவதற்கான சூழழ்நிலை ஏற்பட்டுவிட்டதாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
இலங்கையில் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இயல்பான வாழக்கை நடைபெறுவதை தற்போது உணரக் கூடியதாக உள்ளது.எங்கும் சென்றுவரவும்,எந்த நேரத்திலும் சென்றுவரவும் அச்சமில்லாத சூழ்நிலை எற்பட்டுள்ளது.முன்னைய ஆட்சிகாலங்களில் தொலைபேசியில் கதைப்பதற்கே அச்சப்படவேண்டி இருந்த காலம் போய்விட்டதை அவர்கள் உணரக்கூடிய நிலைமைகள் உள்ளதை அவர்களே சொல்கிறார்கள். (மேலும்....)

ஜாதிக ஹெல உறுமய சம்பிக்க குழப்ப முயலுகின்றாரா....?

19ஆவது திருத்தமும் மறுசீரமைப்பும் சதியின் விளைவு

இந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது திருத்தமும் மறுசீரமைப்புகளும் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக தேர்தல்களில் வெற்றி பெற முடியாத நபரொருவரினால் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்பு சதியின் விளைவு என ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த புதிய திருத்தங்களின் நோக்கம் நிறைவேற்று ஜனாதிபதியை அதிகாரமற்றவராக நல்லாட்சிக்கு எதிரான வகையில் பிரதமரை அதிகார மிக்கவராக்குவதேயாகும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறினார். 'நிறைவேற்று அதிகாரமுள்ளவரின் எதேச்சாதிகார அதிகாரங்களை மட்டுப்படுத்தவே ஜனாதிபதிக்கு மக்கள் தமது வாக்குகளை வழங்கியுள்ளனர். பிரதமரை நிறைவேற்று அதிகாரமுள்ளவராக்கவும் அரச தலைவராக்கி நாடாளுமன்றத்தை அடக்குவதற்காக மக்கள் வாக்களிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். 19ஆவது திருத்தத்திலுள்ள சீரமைப்புகள் திடீரென செய்யப்பட்டவை எனவும் மக்களின் விருப்பத்துக்கு எதிரானது எனவும் கூறிய அவர், ஜாதிக ஹெல உறுமய ஏனைய கட்சிகளின் ஆதரவோடு நாடாளுமன்றில் 19ஆவது திருத்தம் தோற்கடிக்கப்படுவதை நிச்சயப்படுத்தும் எனவும் கூறினார்.

தொடரும் விமான விபத்துக்கள்

148 பேருடன் பயணித்த விமானம் வீழ்ந்து நொருங்கியது

ஆறு விமான ஊழியர்கள் மற்றும் 142 பயணிகள் அடங்கலாக 148பேருடன் பயணித்த விமானம் தெற்கு பிரான்ஸில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பிரான்ஸின் ஐ டெலி செய்தி வெளியிட்டுள்ளது. பார்ஸிலோனாவிலிருந்து டுசெல்டோர்ஃப்க்கு சென்ற லுஃப்தான்ஸா விமான சேவையின் இணை நிறுவனமான ஜேர்மன்விங்க்ஸ் விமான சேவையின் ஏ 320 ரக பயணிகள் விமானமே விபத்துக்குள்ளாகியுள்ளது. தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையிலேயே இந்த விமானம் விழுந்து நொறுங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜேர்மனியின் டஸ்செல்டார்ப் நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கடந்த 2 வருடங்களில் என்றும் இல்லாவாறு விமான விபத்து மரணங்கள் அதிகரித்துள்ளன. இவற்றின் பின்னால் பங்கரவாதிகளின் தாக்குதல், சதி, விமானக் கோளாறு என பலவகைகள் உள்ளடங்கியிருந்தாலும் மனித குலத்தின் ஆகாய மார்க்கப் பயணங்கள் பாதுகாப்பானவையா என்ற கேள்வியை இவை எழுப்பி நிற்பது மறுக்கமுடியாது ஆகும். 2027 இல் (2025 இலிருந்து 2வருடம் தள்ளிப்போட்ட) செவ்வாய் கிரகத்திற்கான பயணம் அளவிற்கு தொழில் நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையிலும் இந்த வான் மரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

மஹிந்தவின் கையெழுத்துடன் காணி உறுதிகள் கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதியின் கையெழுத்து மற்றும் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட காணி உறுதிகளே, யாழ். மாவட்டச் செயலகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன. யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 190 பேருக்கான காணி உறுதிப்பத்திரங்கள் யாழ்.மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (24) வழங்கப்பட்டன. அந்த காணி உறுதிப்பத்திரங்களில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு ஜனாதிபதி என்பதன் கீழ் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்து இட்டுள்ளார். கையெழுத்திட்ட திகதி 2015 ஜனவரி 6ஆம் திகதி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காணி பதிவாளரின் கையெழுத்தில் 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி இடப்பட்டுள்ளது. காணி உறுதியின் பக்கத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் காணி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் போது, அவை 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதாக யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இச் செயற்பாடானது அண்மையில் உருவான தேசிய அரசாங்கத்தில் மகிந்தாவை தள்ளி வைத்தல் என்ற வேலைத்திட்டம் தவிர்கப்படுகின்றது என்பதை இது எடுத்துக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவின்றனர்.

19 ஆவது திருத்தம்

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாக குறைப்பு, இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது

அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை நேற்று சமர்ப்பித்தார். இதன்படி, ஜனாதிபதியாக ஒருவர் இரண்டு தடவைகளுக்கு மேல் பதவி வகிக்க முடியாது. அதேநேரம், ஆறு வருடகாலமாக இருந்த ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இலங்கை குடியரசுக்கு ஜனாதிபதி ஒருவர் இருத்தல் வேண்டும். அவரே அரசின் தலைவராகவும் ஆட்சித் துறையினதும் அரசாங்கத்தினதும் தலைவராகவும், ஆயுதந்தாங்கிய படைகளின் படைத் தலைவராகவும் இருத்தல் வேண்டும். ‘ஜனாதிபதி பதவிக்கு மக்களால் இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆள் எவரும் அதன் பின்னர் அத்தகைய பதவிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படு வதற்கு தகைமையுடையவராகார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி சுகயீனமுற்றால் சபாநாயகர் பதில் கடமையாற்ற வேண்டும் சபாநாயகருக்கும் இயலாத பட்சத்தில் பிரதி சபாநாயகர் பதில் கடமையாற்ற வேண்டும் என்றும் இதில் குறிப்பிடப் பட்டுள்ளது. இதேபோன்று அமைச்சரவை அமைச்சர் களின் எண்ணிக்கை 30 ஐ விஞ்சலாகாது என்றும் அமைச்சரவை அமைச்சர்கள் அல்லாத அமைச்சர்களினதும் பிரதி அமைச்சர்களினதும் எண்ணிக்கை மொத்தம் 40 ஐ விஞ்சலாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் ஒன்று சேர்ந்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியும்

தமிழர்களும் முஸ்லிம்களும் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ வர முடியாது. இது நீண்ட காலமாகவுள்ள நடைமுறை. ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக சிறுபான்மையினர் ஒருவர் வருவதையும் சிலர் விரும்பவில்லை. நாம் ஒன்றுபட்டு சிறுபான்மையினர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக்கும் முயற்சிக்கு ஆதரவளிப்போம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். எமது பாராளுமன்றத்தில் தமிழர்கள் அதாவது மறைந்த தலைவர் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த வரலாறும் சரித்திரமும் எமக்கு உண்டு. எனவே இன்று இந்த நிலையில் நாம் சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்தால் நிச்சயமாக எதிர்க்கட்சி தலைவராக ஒருவர் வரமுடியும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால் மலையக மக்கள் முன்னணி அதற்கு முழு ஒத்து ழைப்பையும் வழங்க தயாராகவுள்ளது. இதனை நான் அரசியலாக பார்க்காமல் சமூக ரீதியில் சிந்தித்து எமது மத்தியில் ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்பதற் காகவே இதனை கூறுகின்றேன்.

19 வது திருத்தத்தில் முரண்பாடுகள்

சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லும் நிலை ஏற்படும் - எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா

சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 வது திருத்தச் சட்டத்தில் சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்படுவதாக உள்ளது. எனவே சர்வஜன வாக்கெடுப் பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படலாம் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அத்துடன் 19 வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் முறைமை மாற்றத்திற்கான திருத்தச் சட்டத்தையும் ஒன்றாக சமர்ப்பித்தால், இரண்டுக்கும் நாம் முழுமையான ஆதரவு வழங்குவதாகவே அறிவித்திருந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் 19 வது திருத்தச் சட்டத்தை சமர்ப்பித்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பேசும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறிப்பாக 19 வது திருத்தச் சட்டத்தில் அமைச்சரவைக்கு தலைமை தாங்குபவர் யார் என்பது பற்றிய விடயம் உட்பட சில விடயங்கள் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாகவுள்ளது. சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்லாத முறையிலேயே இந்த அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த முரண்பாடுகள் காரணமாக சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு செல்ல வேண்டிய நிலை எற்படலாம்.

முள்ளிவாய்க்கால்: முன்னர் / பின்னர்

முள்ளிவாய்க்காலுக்கு முன்னர் விடுதலை புலிகளை யாராவது விமர்சனம் செய்தால் அவர்கள் ஆதரவாளர்கள் கூறும் கருத்து "நீங்கள் சொல்வது சரி ஆனால் இது விமர்சிக்கும் நேரம் அல்ல" என்பதாக இருக்கும். சரி எப்போது விமர்சிக்க சரியான நேரம்? நீங்கள் தமிழ் ஈழத்தை அமைத்த பின்னரா? உங்கள் அரசில் விமர்சனம் என்ற சொல் தடை செய்யப்பட்ட ஒன்றதாகவல்லவோ இருக்கும். முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் யாராவது புலிகளை விமர்சனம் செய்தால் "நடந்து முடிந்தவைகளை பற்றி கதைத்து என்ன பிரயோசனம் நடக்க வேண்டியதை பற்றி கதைப்போம்" என்பார்கள். ஆமாம் நடந்து முடிந்தவைகளை பற்றி அப்போது நாம் கதைக்காமல் விட்டதால்தான் இப்போது நாம் நடுத்தெருவில் நிற்கின்றோம், நாம் இப்போதும் கதைக்காமல் இருப்போமானால் நாம் எப்போதும் நடுத்தெருவில் நிற்ப்போம். இவை எல்லாவற்றையும் மீறி யாராவது இவர்களை விமர்சனம் செய்தால் இவர்கள் கையில் ஒரு புளித்துப்போன ஆயுதம் உண்டு அது "இவர்கள் இலங்கை, இந்திய அரசுகளின் கைகூலிகள் அல்லது மாற்று இயக்கங்களை சார்ந்தவர்கள் மொத்தத்தில் இவர்கள் ஒரு துரோகிகள்" என சொல்லி தாக்கு தாக்கு என தாக்கி அவர்களை தமிழ் சமூகத்தில் இருந்து ஓரம்கட்ட முயற்சி செய்வர். என்னை பொறுத்தவரை எமது கடந்த காலமும் நிகழ்காலமும் விமர்சனங்களை தாண்டி செல்ல முடியாததொன்று, அப்படி தாண்டி செல்வோமானால் இன்னும் இருபது வருடங்களில் நாம் இன்னுமொரு முள்ளிவாய்க்காலை சந்திப்போம் அது Same S**t Different A**hole போல் இருக்கும்.

(Brin Nath)

பங்குனி 24, 2015

என் மனவலையிலிருந்து.......

இலங்கையில் மத்திய தேசியம்! மாகாண தேசியம்!!

(சாகரன்)

மைதிரிபால சிறிசேனாவின் வெற்றிக்குப் பிறகான தேசிய அரசாங்கம் என்னும் கருதுகோளுக்கான வடிவம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட ரணிலைப் பிரதமராக கொண்ட பாராளுமன்ற அமைச்சரவையில் எதிர் கட்சியாக செயற்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சி தற்போது அமைச்சர் பதவிகளைப் பெற்று அமைசர் அவையில் இடம் பெற்றுள்ளது. 'நியமன' பிரதமரான ரணிலின் கனவுகள் மெய்பட்டதாக அவர் உணரும் வேளையில் இந்த புதிய அமைச்சர் அவை விரிவாக்கம் பாராளுமன்னத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கை ஓங்கியிருப்பதன் குறியீடாகப் பார்க்கலாம். அமைந்த இந்த 'தேசிய' அரசாங்கத்தை மகிந்த ராஜபக்ஷ உம் வரவேற்றிருப்பது இங்கு கவனிக்கதக்கது. ஐ.தே. கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்ற பெரும்பான்மை இனக் கட்சிகளின் இணைப்புடன் முஸ்லீம் கட்சிகளும், மலையகக் கட்சிகளும் இந்த 'தேசிய' அரசாங்கத்தில் இணைந்து செயற்படவுள்ளன. மத்தியில் அமைச்சர் அவையில் இணையாவிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் அமைச்சர் அவையில் இணைந்து செயற்படுவதன் மூலம் தமிழத் தேசியக் கூட்டமைப்பும் இந்த 'தேசிய' அரசு அமைப்பதில் பங்காளி ஆகியிருக்கின்றது. (மேலும்....)

வடக்கில் மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் - சந்திரிகா

வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தியிலுள்ள இராணுவத்துக்கு தேவையற்ற அனைத்துக் காணிகளிலும் பொதுமக்கள் குடியேற்றப்பட்டு மீள்குடியேற்றம் பூரணப்படுத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உறுதியளித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். வளலாய், வசாவிளான் ஆகிய பகுதிகளிலுள்ள 430 ஏக்கர் காணிகளை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வளலாய் பகுதியில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது.  'உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவம் வைத்துள்ள காணிகளில் விவசாயச் செய்கையில் இராணுவத்தினர் ஈடுபடுவதுடன், ஹோட்டல்களும் நடத்தி வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினேன். விவசாயம் செய்கின்றமை மற்றும் ஹோட்டல்கள் கட்டுவதை இராணுவத்தினர் மறுத்துள்ளதாக சந்திரிக்கா குறிப்பிட்டார். இது தொடர்பில் ஆராய்வதாகவும் அவர் கூறினார். மீள்குடியேற்றம் மேற்கொள்ளக்கூடிய அனைத்து பிரதேசங்களிலும் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படும் என்று கூறிய உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்று கூறினார். அத்துடன், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தோலகட்டி, வடமுனை, தென்முனை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக அவருக்கு கூறினேன். மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸுடன் சென்று அவற்றை அவருக்கு காட்டுமாறு சந்திரிக்கா கூறினார். அதற்கிணங்க அந்த காணிகளை அவருடன் சென்று காட்டியதாக' மாவை கூறினார்.

யோய்.. நீங்க.. - இந்தியப் பொது மகன்

கார்ப்பரேட்டுகளின் அடிமை என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை. விவசாய நிலத்தை எடுத்தால் 4 மடங்கு நஷ்ட ஈடு தருகிறதெல்லாம். எப்படியா விவசாயத்துக்கு நன்மை தரும். விவசாயம் நம் பொன் முட்டையிடும் கோழிய்யா.. அதை ஒரே நாளில் அறுத்து ஒருத்தனுக்கு கொடுத்துட்டு, அவன் போடுற எச்சில்களை தின்று நம் எதிர்காலம் சந்ததிகள் எப்படியா? உயிர் வாழமுடியும். என்னைய்யா சொன்னிங்க.. விவசாயிகளுக்கு எதிரான அரசு எனது அரசில்லை என்றா. பிறக்கப்போகும் ஒவ்வொரு இந்திய உயிருக்கும் நீங்க எதிரிதான்ய்யா!

 

வசாவிளான், வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான காணிஉறுதிப்பத்திரம் வழங்கப்பட்டன
அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான் மற்றும் வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான மீள்குடியமர்வுக்கான காணிஉறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் உரியவர்களிடம் கையளித்தார்.  வளலாய் வடக்குப் பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்றைய தினம் காணிஉறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இதன்பிரகாரம் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழான வசாவிளான் வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழான வளலாயிலும் மீளக்குடியேறும் ஒருதொகுதி மக்களுக்கு முதற்கட்டமாக காணிஉறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. இதன்போது முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

புலம் பெயர் தமிழர்களே . . . ஆபத்தான நோய் !!!

சிந்திக்கும் ஆற்றலில் ஏற்படும் பாதிப்பு அல்லது அற்றுப் போதல், மொழிவெளிப்பாட்டில் ஏற்படும் இடர்பாடு, சற்றுமுன்னர் செய்த வேலையை, பழகிய நபரை, சம்பவத்தை, இடத்தை மறத்தல், உடல் அசைவியக்கத்தில் ஏற்படும் தாமதம், திக்குத்திசை தெரியாது தடுமாறுதல், மனதை ஒருமுகப்படுத்த முடியாமை, சரியான தீர்மானம் எடுக்கும் ஆற்றல் அற்றுப் போதல், ஏமாற்றியவர்களையே திரும்பவும் திரும்ப நம்புதல், தனக்கு நிகழக் கூடாததையும் கூசாமல் பிறருக்கு நிகழ்த்தல், மனஉளைச்சல், சிறுவர்-பிறர் உரிமைகளுக்கு மதிப்பறியாமை, புலன் உணர்வுகளில்(கேட்டல், பார்த்தல், சுவைத்தல், உணர்ந்தறிதல்) ஏற்படும் மாற்றங்கள், நேர்மையான சிந்தனையின்மை, தனியான வெற்றிகளில் அதிக நாட்டம், தோல்வியை ஏற்ற மறுத்தல், நேர்மையற்ற கட்சிகள் - தலமைகளை இனம் காண முடியாமல் ஏற்றுக் கொள்ளலும், நிபந்தனையற்றுப் போற்றுதலும், துறை சார் திறனறியாமை(பாட்டு சிறுமி யசிக்காவுக்குப் பல கள்ள ஓட்டுப் போட்டது போன்ற செயற்பாடுகள்) இப்படியானவை இந்த நோயின் அறிகுறிகளாகும். (மேலும்....)

சுருட்டு
(உண்மைக்கவிதை)

புகையற்ற குகைவண்டி(subway)!!!
கனேடிய சோசல்நிலையம் போல்
ஒரே நெரிசல்

ஐம்புலன்களையும் அடக்கி
ஆத்மதரிசம் கொடுக்கும் ஆலயமாக
கைபேசிகள்......

தியானப்பயணங்கள்
தொடரும்.....!

அருகிருக்கை வெறுத்து
சீறியெழுந்தாள் சீனத்தி ஒருத்தி
60 தாண்டிய ஈழத்து அப்பு
என்ன செய்தார் த(வ)ப்பு?

சுருட்டுக் கொட்டிலில் சுருட்டி
கோவணத்தை எறிந்துவிட்டு
புட்டுக்குழல் மாட்டிய அப்பு
வண்டிக்குள் சிப்பைத் திறந்து
சுருட்டுத் தேடுகிறார்.

என்தொலைபே(வே)சியின் கண்ணும்
அவர் சுருட்டை
சுடச்சுடத் தேடியது.

சுருட்டை சுருட்டி மடித்து
வைத்தாலும்
நாளை அப்புவின் சுருட்டு
இன்ரநெட்டில் விற்பனைக்கு வரும்


நோர்வே நக்கீரா 22.03.2015

இலங்கையில் தேசிய அரசாங்கம் பிரகடனம்

சிரேஷ்ட உறுப்பினர்கள் புறக்கணிப்பு

ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவையில், சு.கா.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாகவும் 05 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22), ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஏ.எச்.எம்.பௌஸி, எஸ்.பீ.நாவின்ன, பியசேன கமகே, சரத் அமுனுகம, எஸ்.பீ.திஸாநாயக்க, ஜே.பீ.தென்னகோன், பீளிக்ஸ் பெரேரா, மஹிந்த யாப்பா அபேவர்தன, ரெஜினோல்ட் குரே, விஜித்த விஜயமுனி சொய்சா மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரே புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். (மேலும்....)

இலங்கையருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்குவதில் புதிய நடைமுறை

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் இரட்டைப் பிரஜா உரிமையை பெற்றுக் கொள்வதற்கான புதிய நிர்வாக முறையொன்றை இலங்கை அரசாங்கம் நேற்று அமுலாக்கியுள்ளது. இதனடிப்படையில் வெளிநாடுகளில் வாழும் சகல இலங்கையர்களும் இரட்டைப் பிரஜா உரிமைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையை பெறுவதுடன் இரட்டைப் பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கவும் முடியும். அத்துடன் இலங்கையில் தங்கள் சிவில் உரிமையை முழுமையாக பெற்றுக் கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் ஒழுங்கு, கிறிஸ்தவ அலுவல்கள், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். (மேலும்....)

த.கூ. எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்குவது நாட்டின் இறைமையை பாதிக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப் படக்கூடாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்குவதாயின் தினேஷ்குணவர்த்தனவே பொருத்தமானவர் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று தேசிய புத்தகசாலை கேட் போர்கூடத்தில் நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும்போதே உதய கம்மன்பில இவ்வாறு கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங் குவது இனவாதத்தை தோற்றுவிக்கும். கடந்த காலத்தில் அமிர்தலிங்கத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் ஏற்பட்ட விளைவுகள் பற்றி அறிவோம். அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது நல்ல விடயங்களை விட கெட்ட விடயங்களுக்கு கூடுதல் அளுத்தம் கொடுத்து பெரிதாக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி ஆகிய கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டாலும், அவர்கள் தேசிய நிறைவேற்று சபையில் அங்கத்துவம் வகிப்பதுடன், அரசாங்கத்துடன் இணைந்து தீர்மானங்களை எடுக்கின்றனர். எனவே இக்கட்சிகளுக்கு எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இவர்கள் கொடுக்கமாட்டார்.
 

பங்குனி 23, 2015

முதலாவது அரையிறுதியில்
வெல்லப்போவது தென்ஆபிரிக்காவா? நியூசிலாந்தா?

2015 உலக கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் நியூசிலாந்து, தென்ஆபிரிக்கா என்ற இரு அணிகள் மோதவுள்ளன. இதுவரை இந்த உலகக் கிண்ணம் போட்டியில் எந்த தோல்வியையும் சந்தித்திராத நியூசிலாந்துடன், இந்திய அணியிடம் மோசமாக தோற்றுப்போன தென்ஆபிரிக்கா விளையாடவுள்ளது. இது அணிகளும் சம பலம் மாத்திரம் இன்றி அசுர பலத்துடனும் விளங்குகின்றன. துடுப்பாட்டமாக இருக்கட்டும், களத்தடுப்பாக இருக்கட்டும், பந்து வீச்சாக இருக்கட்டும் சகல துறையிலும் முன்னணியில் விளங்குகின்றன இரு அணிகளும். யார் வெல்லுவார் என்று எதிர்வு கூற முடியாத அளவிற்கு சம பலத்துடன் விளங்கினாலும் தனது சொந்த மண்ணில் விளையாடும் பலம் நியூசிலாந்திற்கு பலமாக அமையலாம். இதேவேளை இதுவரை நடைபெற்ற எந்த உலககிண்ணப் போட்டியிலும் இறுதிச்சுற்றுக்கு தெரிவு செய்யப்படாத நாடு என்ற மனத்தயக்கம் உள்ள அணியாகவும் இது விளங்குகின்றது. இதேவேளை தென்ஆபிரிக்க இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் பலதடவை கோப்பையை வெல்லும் திறமை இருந்து அதிஷ்டம் என்பது சரியாக அமையாததினால் இதுவரை கோப்பையை தனதாக்கி கொள்ள முடியவில்லை என்ற பதட்டத்துடன் உள்ளது இதற்கு பலவீனமாக அமையலாம். தென்ஆபிரிக்காவின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர்களில் ஒருவரான அமலா இதுவரை தனது முழுத்திறமையை இந்த உலகக் கிண்ணப் போட்டியில் நிரூபிக்காததும் இங்கு பலவீனமாகவே இருக்கின்றது. வேற்று மண்ணில்(அவுஸ்திரேலியாவில்) துரத்த முடியாது என்ற 400 இற்கு மேற்பட்ட எண்ணிக்கையை துரத்தி வென்ற அணியாக தென் ஆபிரிக்கா திகழ்வதையும் இங்கு கவனத்தில் எடுத்தே ஆகவேண்டும். இந்த வகையில் இவ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்புகள் நிறையவே உள்ளது என்பது பலராலும் எதிர்பார்கப்படும் ஒன்றாகும். இப்படியான வரலாறு எதனையும் நியூசிலாந்து கொண்டிருக்கவில்லை. எனவே யார் வெல்லுவார்கள் என்பதை எதிர்வு கூறமுடியாமல் உள்ளது. ஆனாலும் ஏதோ என் அடிமனம் தென்ஆபிரிக்காவின் தோல்வியை உச்சரித்துக் கொண்டுதான் இருக்கின்றது.

தலித் மாணவர்கள்மீதான கூட்டுப்டுகொலை சதியை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்! - தலித் சமூக மேம்பாட்டு முன்னணி

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் மாணவர்கள் பருகும் நீரில் விஷம் கலக்கப் பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. கடந்த வியாழன்19/03/2015 அன்று விஷம் கலந்தநீரை பருக நேர்ந்த அப்பாடசாலையின் 27 மாணவர்கள் உரிய நேரத்தில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர். பச்சிளம் பாலகர்களை கொலை செய்ய முனைந்த இந்த மிருகத்தனமான செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். சாதிய ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் இப் பிரதேசத்தில் உள்ள தலித் மாணவர்களை குறிவைத்தே இந்த சதிசெயல் திட்ட மிடப் பட்டிருக்கின்றது என்பதை தலித் சமூக மேம் பாட்டு முன்னணியினராகிய நாம் பகிரங்கமாக உறுதி செய்கின்றோம்.(மேலும்....)

குடிக்கலாமா? மக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது மாகாண அரசாங்கமே!
 

யாழ் செம் மண் பிரதேச தண்ணீரில் ஆபத்தான இராசயனங்கள் எதுவும் இல்லை என்று வடமாகாண சபை நியமித்த நிபுணர் குழு கூறியுள்ளது. ஆனால் இந்த தண்ணீரில் எண்ணெய்க்கழிவு இல்லையா அதனை குடிக்கலாமா சமையலுக்கு விவசாயத்திற்கு பிற அத்தியாவசிய தேவைகளுக்கு பாவிக்கலாமா என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. மக்கள் திரிசங்கு நிலையில் விடப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த நிபுணர் குழு அறிக்கை மாகாண அரசாங்கத்திற்கு சமர்பிக்கப்பட்டு அவர்கள் தான் அறிககையிட்டிருக்கவேண்டும்.
மக்களுக்கு பதில் சொல்லவேண்டியவர்கள் அவர்களே. (Comrade Sugu)

பதவியேற்ற அமைச்சர்களின் பெயர் விவரங்கள்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர்கள் 26 பேர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களின் பெயர் விவரங்கள் வருமாறு, (மேலும்....)

சு.க.விலுள்ள ஏனையவர்கள் எதிர்க்கட்சியிலிருந்து அரசாங்கத்துக்கு ஆதரவு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுள்ள போதும், ஏனைய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் எதிர் க்கட்சியில் இருந்துகொண்டு அரசுக்கு ஆதரவு வழங்குவார்கள் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி தினகரனுக்குத் தெரிவித்தார். புதிய அமைச்சர்கள் பதவியேற் றமை தொடர்பாகக் கேட்டபோதே அமைச்சர் இவ்வாறு கூறினார். 11 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், 5 இராஜாங்க அமைச்சர்களும், 10 பிரதியமைச் சர்களும் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தாம் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தீர்மானித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் உள்ளிட்ட ஏனையவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொள் ளாவிட்டாலும், எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவார்கள் என அமைச்சர் தெரிவித்தார். எதிர்க்கட்சியில் இருக்கும் அவர்கள் அரசாங்கம் விடும் பிழைகளைச் சுட்டிக் காட்டும் அதேநேரம், முக்கியமான திட்டங்களுக்கு அரசாங்கத்துக்கு ஆத ரவளித்துச் செயற்படுவார்கள் என் றும் அமைச்சர் பெளசி மேலும் கூறி னார்.

இலங்கையில் நாளை முதல் இரட்டை குடியுரிமை .அரசாங்கம் அறிவிப்பு

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு பின்னர் நாளை முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார். இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பொதுமக்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250, 000 ரூபா அறிவிடப்படும். முன்னர் இது 5 இலட்சமாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது. இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன. இதன்போது எவராவது குற்றமுள்ளவராக இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உலகக்கிண்ணம் வெல்லும் இந்தியா..

ஆட்டநாயகனாக கோஹ்லி பரபரப்பை ஏற்படுத்திய புக்கிகளின் கணிப்பு

உலகக்கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வெல்லும் என்று புக்கிகள் கணித்துள்ளதாக பரவி வரும் பேஸ்புக் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இது போன்ற ஒரு வதந்தி வாட்ஸ் ஆப்பில் வலம் வந்தது. இதைத் தொடர்ந்து சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் புக்கிகள் கணித்துள்ளதாக, தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:- (மேலும்....)

மீண்டும் போரில் சேனாதி ! 

உயர்பாதுகாப்பு வலயக்கோரிக்கைகளினை முன்வைத்து மீண்டும் போராடப்போவதாகத் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அறிவிப்பு விடுத்துள்ளார்.
இது பற்றி அவர் கருத்து வெளியிடுகையில்:- வல்லை அராலி பிரதான வீதியைத்திறந்து விட்ட இராணுவத்தினர், வீதியின் இரு மருங் கிலும் உள்ள காணிகளுக்குள் செல்ல பொதுமக்களை அனுமதிக்கவில்லை. பிரதான வீதியின் இருபுறமும், பொது மக்களின் சில வீடுகளிலும் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்கள் அப்படியே இருக்கின்றன. அவற்றுக்கு முன்பாக புதிதாக நிரந்தர பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். (மேலும்....)

பங்குனி 22, 2015

தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம்

அதுவே தனது இலக்கு என்கிறார் ஜனாதிபதி மைத்திரி

* அரசியலமைப்பில் மாற்றத்தின் பின்னர் பாராளுமன்றத்தைக் கலைப்பது குறித்து சிந்திக்க முடியும்.

* சிறுகட்சிகள், சிறுபான்மையினக்கட்சிகள், பாதிக்கப்படாதவகையில் தேர்தல் முறையில் மாற்றங்கள்

* தலைவர் என்ற வகையில் சுதந்திரக்கட்சியின் சார்பாகவே தேர்தல் பணிகளில் ஈடுபடுவேன்.

* புதிய அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்தே மனித உரிமைப் பேரவை அறிக்கை ஒத்திவைக்கப்பட்டது. (மேலும்....)

மைத்திரி, ரணில், சந்திரிகா நாளை வடக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நாளை 23ஆம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளனர். 25 வருடங்களின் பின் னர் பொது மக்கள் பார்வையிட அனுமதிக் கப்பட்ட வளலாய் பகு தியை உத்தியோகபூர் வமாக அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இவர்கள் வருகை தரவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் புதிய அர சாங்கம் அமையப்பெற்றதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீண்டும் மக்களிடத்தில் கையளிக்கப்படும் என கூறப்பட்டது. அத்துடன் வடக்கில் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பில் 1100 ஏக்கர் பரப்பளவுடைய நிலப்பரப்பு பொதுமக்களிடத்தில் விரைவில் கையளிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் தனது யாழ். விஜயத்தின் போது உறுதியளித் திருந்தார். அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்த இப்பிரதேச மக்கள் தமது சொந்த நிலங்களை இழந்திருந்தனர். அவற்றை பார்வையிடுவதற்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம சேவகர் பிரிவிலுள்ள 232ஏக்கர் நிலப்பரப்பு பொதுமக்களின் பார்வைக்காக விடுவிக்கப்பட்டதுடன் வலி. வடக்கில் அச்சுவேலி வயாவிளான் பகுதியும் மக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை குறித்த நிலப்பரப்பினை பூர்வீகமாகக் கொண்ட மக்களிடத்தில் அவர்களின் நிலங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கத்தி முனையில் நடக்கும் துனீஷியா

துனீஷியாவின் சுய விபரக் கோவையை புரட்டிப் பார்த்தால், அரபுலகில் மிதவாத நாடு, ஒரே ஜனநாயக எதிர்பார்ப்பு நாடு, மதச் சார்பற்ற கொள்கை கொண்ட நாடு என்று ஏகப்பட்ட நற்சான்றிழ்கள் இருக்கும். என்ன நாற்சான்றிதழ் கொடுத்தாலும் பிராந்தியத்தில் நிலவும் பிரச்சினைகளில் இருந்து துனீஷியாவால் தப்பிவிட முடியாது. இதற்கு நல்ல உதாரணமாக கடந்த புதன்கிழமை தலைநகர் டியுனிஷில் பட்டப் பகலில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட கண்மூடித் தனமான தாக்குதலை குறிப்பிடலாம். இராணுவ உடையுடன் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் தலைநகரில் இருக்கும் பிரபலமான பார்தோ அருங்காட்சியத்திற்குள் நுழைந்து கண்ணில் தென்பட்டவர்களை சுட்டிருக்கிறார்கள். இரண்டு மணிநேரம் இந்த தாக்குதல் நீடித்திருக்கிறது. கடைசியில் இரண்டு துப்பாக்கிதாரிகளும் கொல்லப்பட்டனர். துனீஷியா நாட்டின் பஸ் ஓட்டுநர், பொலிஸார் உட்பட மூவர் பலியானார்கள். ஐந்து ஜப்பானியர்கள், நான்கு இத்தா லியர்கள், இரண்டு கொலம்பியர்கள், இரு ஸ்பானியர் மற்றும் பிரிட்டன், அவுஸ்திரேலியா, பிரான்ஸ், போலந்து நாட்டைச் சேர்ந்த தலா ஒருவர் என்று ஒட்டுமொத்தமா கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆகும்.(மேலும்....)

9/11 தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா... பின்னணி என்ன? தொடரும் சந்தேகங்கள்

அமெரிக்காவில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் திகதி உலக வர்த்தக மைய கட்டடமான இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டதையடுத்து பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தது. அமெரிக்காவில் சிலர், 9/11 தாக்குதல் அல்-கெய்தாவினால் மட்டும்தான் நிகழ்த்தப்பட்டதா? அல்லது வேறு யாருடைய கைவரிசையும் உண்டா? என்னும் சந்தேகத்தினை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதல் நடந்த காலகட்டத்தில் பலரும் இந்த தாக்குதல் திட்டமிட்டே நடத்தப்பட்டது என்று கூறியதோடு அதுபற்றி ஆவணப்படங்கள் எடுத்தும் பரபரப்பை ஏற்படுத்தினர். அவர்கள் எழுப்பிய சந்தேகங்களில் சிலவற்றை பார்ப்போம். (மேலும்....)

சிறுதானிய ஓட்டல் நடத்தும் எம்.இ. பட்டதாரி!
(சாவித்ரி கண்ணன்)

இன்ஜினீயரிங்கில் முதுநிலை பட்டப்படிப்பு முடித்து, ஐ.டி.நிறுவனத்தில் கைநிறைய சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த ஒரு இளைஞர், குடும்ப எதிர்ப்பை மீறி, பிடிவாதமாக ‘சமையல்காரனாக’ மாறியிருப்பது... ஆச்சர்ய செய்தி! நம்மாழ்வார் அய்யாவின் தாக்கத்தால், படித்த இளைஞர்கள் பலர் இயற்கை வேளாண்மையை நோக்கி பயணப்பட்டது நல்விதை. அந்தப் பாதை யில்தான், எம்.இ., இன்ட்ரஸ்ட்ரியல் இஞ்சினீயரிங் முடித்துவிட்டு, இயற் கை வேளாண்மைக்கு ஆதரவாக சிறுதானிய சாப்பாடுகள், பலகாரங்களை விற்பனை செய்யும் ‘திருக்குறள் உணவகத்’தை, சென்னை, பூந்தமல்லி அருகேயுள்ள கரையான்சாவடியில் வெற்றிகரமாக நடத்தி வருகிறார், சுரேஷ். (மேலும்....)

பங்குனி 21, 2015

வானவில் 51 வெளிவந்துவிட்டது

ரணில் - மைத்திரி அதிகாரப் போட்டியை விடுத்து 1978இன் மக்கள் விரோத அரசியலமைப்பை முற்றாக மாற்ற வேண்டும்!

இலங்கையில் இவ்வருடம் ஜனவரி 8ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு நின்று அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தோற்கடித்தன. தாம் ஓரணியில் திரண்டதிற்கு அவர்கள் சொன்ன காரணங்கள், மகிந்த ராஜபக்ச சர்வாதிகார ஆட்சி நடாத்துகிறார், குடும்ப ஆட்சி நடாத்துகிறார், ஊழல் மோசடித்தனமான ஆட்சி நடாத்துகிறார், இனவாத ஆட்சி (இது தமிழ் - முஸ்லீம் கட்சிகளின் குற்றச்சாட்டு) நடாத்துகிறார் என்பவை ஆகும். அவர்கள் அவரை எதிர்ப்பதற்கான ஒரு காரணத்தை மட்டும், அதுவும் மிக முக்கியமான காரணத்தை மட்டும் சொல்லவில்லை. அதாவது தம்மை ஓரணியில் திரள்வதற்கு பின்னணியில் நின்று செயற்பட்ட உலக மற்றும் பிராந்திய வல்லாதிக்க சக்திகளுக்கு மகிந்த எதிரானவர் என்றபடியால்தான் தாம் அந்த சக்திகளின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்ற விடயத்தை மட்டும் அவர்கள் சொல்லவில்லை. (மேலும்....)

யாரிந்த பச்சிளங்குழந்தைகளின் நஞ்சூட்டி கொலையாளிகள்?

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்துக்கான குடிநீரில் நஞ்சு கலக்கப்பட்ட சம்பவத்த்தின் பின்னணியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் பா. கஜதீபனே செயற்பட்டு உள்ளார் என்று இங்கிருந்து கிடைக்கின்ற செய்திகள் தெரிவிக்கின்றன. பா. கஜதீபன் ஏழாலையில் மேட்டுக்குடிக்கு உரியவர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இளைஞர் வேட்பாளராக போட்டியிடுகின்ற கனவில் இவர் மிதக்கின்றார். வலி. தெற்கு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் தவிசாளர் இ. பிரகாஷ். இவரும் மேட்டுக்குடியை சேர்ந்தவர். தமிழரசுக் கட்சி உறுப்பினர். இவரும் நாடாளுமன்ற கனவிலேயே மிதக்கின்றார். (மேலும்....)

நான்காவது கால் இறுதியில்
வெல்லப்போவது மேற்கிந்தியதீவா?  நியூசிலாந்தா?

 

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

 

மூன்றாவது கால் இறுதியாட்டத்தில் பலரும் எதிர்வு கூறியதைப்போல் அவுஸ்திரேலியா பாரிய வெற்றி ஒன்றைப் பெற்று அரையிறுதிக்குள் தன்னை இணைத்துக் கொண்டது. அவுஸ்திரேலியாவின் எகிறிப் பாயும் பந்து வீச்சுக்கு முன்னால் தாக்குப் பிடிக்க முடியாததினால் பாகிஸ்தான் போதியளவு ஆட்டங்களைப் பெறமுடியவில்லை. எந்தவொரு சிறப்பான இணைப்பாட்டத்தினையும் பாகிஸ்தான் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக இதே எகிறிப் பாயும் பந்து வீச்சினால் அவுஸ்திரேலிய அணியை அவர்களின் சொந்த மண்ணில் மண் கௌவ வைக்க முடியவில்லை பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களால். எனவே அவுஸ்திரேலியாவின் வெற்றி மிக இலகுவாக அவர்களுக்கு கிடைத்து விட்டது. புhகிஸ்தானின் இந்தியாவை பழிவாங்கும் அரையிறுதியாட்ட கனவும் கனவாகவே போய்விட்டது. என்ன இனி ஒரு நாலு வருடம் காத்திருக்க வேண்டும் இந்தியாவை பழிவாங்க? சரி போட்டியில் இறுதிக் காலிறுதிப் போட்டியிற்கு வருவோம். உலகக் கிரிகெட் போட்டியின் முதல் இரண்டு போட்டிகளின் வெற்றி நாயகர்கள் மேற்கிந்தியதீவும், எந்தப் போட்டியிலும் இதுவரை தோற்றிராத நியூசிலாந்தும் இன்று மோதவுள்ளன. எப்போதையும் விட அசுர பலத்தை காட்டிவரும் நியூசிலாந்திடம் உலகின் தலைசிறந்து சுழல் பந்து வீச்சாளர் வெற்ரொறி இருக்கின்றார். சிறந்த மட்டை அடியாளர் மக்கலம் இருக்கின்றார். வேகப்பந்தில் எதிராளியின் மட்டையை காற்றில் பறக்க செய்யும் எகிறப் பாயும் பந்து வீச்சாளர்கள் என்று மிரட்டும் அணியாக திகழ்கின்றது நியூசிலாந்து அணி. கூடவே தமது வீட்டு முற்றத்தில் விளையாடும் பலமும் உள்ளது. வெற்றி நமதே என்று கீதம் பாடியபடி களம் இறங்கும் இவர்களை வெல்வது என்பது எந்த அணிக்கும் சற்றே சவாலான விடயம்தான். ஆனாலும் ஆனைக்கும் அடிசறுக்கினால், மேற்கிந்திய தீவின் மாஜாயால ஆட்டக்காரர் ஹெயிலின் ஆட்டம் இழப்பு சாத்தியம் இல்லை எனில் மேற்கிந்தி தீவு அணி தனது நீண்ட நாட்களின் கனவுகளை மீண்டும் நனவாக்க வாய்ப்புகள் உண்டு. ஒருவகையில் இது ஒரு தனிமனித சாதனையாக மட்டுமே பார்க்கப்படும். மற்றயபடி குறிப்பிட்டு சொல்லும்படியாக நியூசிலாந்து தோற்பதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன விடிந்தால் எல்லாம் தெரிந்துவிடும் ஆனைக்கு அடி சறுக்குமா என்று....?

கூட்டமைப்புத் தலைமைகளிலொருவரான
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அதிரடி நகர்வுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின்போது திரைமறைவில் இடம்பெற்ற சில சம்பவங்கள் இப்போது மெல்லமெல்ல கசியத் தொடங்கியிருக்கின்றன. வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தமது பிடிக்குள் வைத்திருந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனும், எம்.ஏ.சுமந்திரனும் அந்தப் ‘பிடி’யை இழந்துவிட்டார்கள் என்பதும், தன்னிச்சையாகச் செயற்படுவதற்கு விக்கினேஸ்வரன் முற்பட்டிருக்கின்றார் என்பது வெளியே தெரியத் தொடங்கியிருக்கின்றது. இறுதியாக விக்னேஸ்வரனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இந்தியாவின் துணையை நாடும் நிலை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியும் எழுகின்றது. முதலமைச்சரின் ‘இனப்படுகொலை’த் தீர்மானத்தையடுத்தே இந்த விரிசல் தீவிரமடைந்திருக்கின்றது. இந்தத் தீர்மானம் இலங்கை அரசுக்குக் கொடுத்த அதிர்வைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குத்தான் அதிகளவு அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. அதனைவிட, இந்தியா மற்றும் மேற்கு நாடுகளும் இந்தத் தீர்மானத்தினால் குழப்பமடைந்தன. (மேலும்....)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடனடியாக அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என கோரியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்வதற்கான நடவடிக்கையினை உடனடியாக மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளது. இன்று மட்டக்களப்பு வாவிக்கரையில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. (மேலும்....)

தேசிய கீதத்தை தமிழில் பாடுவது தொடர்பில் மீண்டும் சர்ச்சை

'ஸ்ரீ லங்கா தாயே...! நம் ஸ்ரீ லங்கா... நமோ நமோ நமோ நமோ தாயே...!' என்று தொடங்கும் தேசிய கீதத்தை தமிழில் பாட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், பிவிதுரு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி மற்றும் மக்கள் ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.  இந்நிலையில், இலங்கையின் தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதை எதிர்ப்பதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். அத்துடன், தமிழில் தேசிய கீதம் பாடப்படுவதை எதிர்ப்பதாக மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக தினேஸ் குணவர்தனவும், தமிழ் மக்கள், தேசிய கீதத்தை சிங்களத்தில் பாடுவதால் அவமானம் ஏற்படப்போவதில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் குறிப்பிட்டுள்ளனர். எது எவ்வாறாயினும், தமிழிலும் தேசிய கீதத்தை பாடலாம் என்பதை அறிவிப்பதற்கு ஜனாதிபதியினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்படவேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை அறிவித்தது. அத்துடன், தமிழ் மொழியில் தேசிய கீதத்தைப் பாடலாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்திருப்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் வரவேற்றுள்ளது.

சரியாகத்தான் சொன்னார் டி. யூ. குணசேகர

எப்போதோ பேசப்பட்டிருக்க வேண்டிய, முக்கியத்துவம் கொடுக் கப்பட்டிருக்க வேண்டிய ஒருவிடயத்தை முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர கடந்த 18ம் திகதி பாராளுமன்றத்தில் உரையா ற்றியபோது தெரிவித்திருந்தார். நாம் தொடர்ந்து எமது இராஜதந்திர உறவை புதுடில்லியுடன் பேணிவருவதிலேயே கவனம் செலுத்தி வந் திருக்கிறோமே தவிர தமிழ் நாட்டு அரசுடன் எமது உறவை பேண வும் மேம்படுத்தவும் முயற்சி மேற்கொண்டதில்லை என்றும் சுதந்தி ரம் பெற்ற காலம் முதல் இந்த அணுகுமுறையையே பதவிக்கு வந்த இலங்கை அரசுகள் பின்பற்றி வந்துள்ளதாகவும் அவர் தன் உரை யில் சுட்டிக்காட்டியிருந்தார். எமது நாட்டை விட பல் மடங்கு விசாலமான, மொழி, மதம், கலாசாரம் என்பனவற்றில் ஒற்றுமைகளைக் கொண்ட மற்றும் ஒரே மாதிரியான பழக்க வழக்கங்களை உடைய தமிழ் நாட்டுடன் இணக்கமான உற வைப் பேணுவதில் அக்கறை கொள்ளவில்லை என்றும் இலங்கை பிரதமர் அல்லது ஜனாதிபதியொருவர் இதுவரை தமிழகத்துக்கு அரசு விஜயமொன்றை மேற்கொண்டதாக வரலாறே கிடையாது என் றும் டியூ குணசேகர தெரிவித்திருக்கிறார். (மேலும்....)

பங்குனி 20, 2015

 

பால் தேநீர் - 25/=, தேனீர் - 10/=, அப்பம் - 10/=, சோறு  - ?/=

பால் தேநீர், தேநீர் மற்றும் அப்பம் ஆகிய மூன்றிற்கும் நுகர்வோர் அதிகார சபை விலை நிர்ணயம் செய்துள்ளது. இதன்படி பால்தேனீர் 25 ரூபாவும் தேநீர் 10 ரூபாவுக்கும் அப்பம் 10 ரூபாவுக்கும் விற்கப்பட வேண்டுமென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. காலையில் ஐந்து அப்பம், ஒரு பால் தேனீர், மாலையில் ஐந்து அப்பம்,  இன்னொரு பால் தேனீர். இடையிடை இரண்டு தேனீர். மத்தியானம் ஒரு சோறு என்று ஒரு கட்டுக்கட்டினால் மொத்தம் 300/=.  அதுதான் வெறும் 2.5 டாலரில் ஒருவரின்  ஒருநாள் சாப்பாடு முடிந்துவிடும் இது நல்லாகவே இருக்கின்றது. அதுசரி ஒருவரின் சராசரி மாத வருமானம் என்ன? இதுதான் இங்குள்ள கேள்வி. கறிவேப்பிலையும், புளியும், உப்பும், நெல்லும், வீட்டுப்பயிருடன் இணைந்து வாழ்ந்தால் இங்கு சொர்க்கத்தைக் காண முடியும் மாறாக மேற்கு மோகத்தில் திரிந்தால் பட்டினிதான்.

 

தமிழனின் சாதிவெறி அடங்காதா?

யாழ். ஏழாலை ஸ்ரீ முருகன் வித்தியாலய நீர்த்தாங்கியில் நஞ்சு கலந்து, 26 மாணவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து பாடசாலை முன்றலில் வீதி மறிப்பு போராட்டம், வியாழக்கிழமை (19) முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். ‘மாணவர்களின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? சுன்னாகம் பொலிஸாரே உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யுங்கள்’ என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. (மேலும்....)

 

காலம்

2003 இல் யாழ் நூல் நிலையம் திறப்பதை எதிர்த்தவர்கள் அதற்கெதிரான புலிகளின் அராஜகத்தை ஆதரித்தவர்கள் 2015 இல் திறந்தவெளி அரங்கிற்கு அடிக்கல் நாட்டுவதில் முன்வரிசையில்

தமிழர்களின் ஜீவாதார நலன்களுடன் தொடர்பற்ற அரசியல்

(சுகு-ஸ்ரீதரன்)

அதிகாரப்பகிர்ந்தளிப்பு தேசங்களின் சுயநிர்ணயம் ஒன்றும் தீண்டத்தகாத சொற்கள் அல்ல.
இனவாதிகள் இச் சொற்களை வெறுக்கிறார்கள் அல்லது திரிபு படுத்துகிறார்கள்.
நவீன அரசியல் சமூகம் இந்த சொற்களையும் அவற்றின் அர்த்தங்களையும் நிகழ்ச்சி நிரலில் கொண்டவையே. ஆனால் மக்களின் யதார்த்த வாழ்வுடன் இசைவு படாத வெற்றுக் கோசங்களாக இவற்றை உபயோகிப்பது தான் யாழ்மையவாத தமிழ் அரசியலின் பிரச்சனை.
தரப்படுத்தல் சுயநிர்ணயம் திம்புக் கோரிக்கை தீர்வு மனித உரிமை தேசியம் இவ்வாறு பட்டியல் நீளும். இந்த வார்தைகள் இவற்றின் அர்த்தம் உள்ளடக்கம் உலக அனுபவம் என்ன என்பதில் பொதுவாக அக்கறை இருப்பதில்லை. அவை பற்றிய அறிவு வாசனை இருப்பதில்லை. (மேலும்....)

மூன்றாவது கால் இறுதியில்
வெல்லப்போவது அவுஸ்திரேலியாவா?  பாகிஸ்தானா?

 

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

 

பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மா, இவருக்கு தயவாக நின்ற சுரேஷ் ரென்னா போன்றவர்களின் ஆட்டம் இந்தியாவிற்கு ஒரு வலுவான ஓட்ட எண்ணிக்கையை எடுத்துத்தந்தது. இந்தத் தொடரில் வழமைபோல் இந்திய பந்து வீச்சாளர்களின் யாவரையும் ஆட்டம் இழக்க செய்தல் என்ற கடும் போராட்டமும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. முதல் 25 ஓவர்களிலும் இந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான ஆட்டங்களை வெளிப்படுத்தினாலும் இந்தியா பாரிய வெற்றி ஒன்றின் மூலம் உறுதி செய்து இரண்டாவதாது கால் இறுதியாட்டத்தில் வென்று தென்ஆபிக்காவுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. டொனி, கோலி ஆகியோரின் வீட்டுக் கூரைகளை காப்பாற்றிய பெருமை இவர் இருவரையும் விட இந்திய அணியிலுள்ள மற்றவர்களையே அதிகம்சாரும். இனி இன்றைய மூன்றாவது கால் இறுதிப் போட்டியைப் பற்றி பார்ப்போம். தமது அணியில திறமைகளை வெளிப்படுத்தாவர்களை எவ்வித தயவுதாட்சயமும் இன்றி நீக்கி விட்டு திறமையானவர்களுக்கு மட்டும் வாய்ப்பு அளித்தல் என்ற கோட்பாடுடன் செயற்படும் அவுஸ்திலேலியா அணியும், இதற்கு முற்றிலும் மறுவழமாக செயற்பாட்டை (சிறப்பாக அண்மைக் காலங்களில) கொண்டிருக்கும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. தனது சொந்த ஆடுகளத்தில் ஆடும் மனதிடமும், ரசிகர்களின் பக்க பலமும் அவுஸ்திலேய அணிக்கு கைகொடுகப் போகின்றது. நிறைய எகிறிப் பாயும் பந்துகளை தடுத்தாடும் திறன் என்ற வகையில் பாகிஸ்தான் அணியில் விடை பெறத்துடிக்கும் அப்ரிடியைத் தவிர்த்தது மிஷ்பா உல் ஹக் தவிர வேறு யாரும் இல்லை. வெறும் 7 அடி உயர இர்பான் வேகப்பந்து வீச்சாளரை மட்டும் நம்பி அவுஸ்திரேலியாவின் விக்கெட்டுகளை வீழ்த்தலாம் என்றால் அதுவும் முடியாது. ஏன் எனில் ஒருவர் வெறும் 10 ஓவர்கள் மட்டும் பந்து வீசும் ஆட்ட நிர்ணயத்தில் இது சாத்தியம் இல்லை. ஆனாலும் அவுஸ்திரேலியா தரப்பில் கிளார்க், வட்சன் போன்றவர்கள் பொன்டிங், வா சகோதரர்கள் போல் தற்போது ஆடுவது இல்லை. எனவே மட்டை அடியில் யாரும் நம்பிக்கை நட்சத்திரங்கள் இங்கு இல்லை. ஆனாலும் பலவீனமான, ஒற்றுமை இல்லாத பாகிஸ்தான் அணியை ஏதாது மாயம் நிகழ்ந்தால் ஒழிய வெல்ல விடுவதற்கான வாய்ப்புக்கள் அவுஸ்திரேலியாவிற்கு குறைவாக காணப்படுவது இங்கு கவனிக்கத்தக்கது. ஆனாலும் பாகிஸ்தானின் பலம் இந்த கால்இறுதியில் வென்றால்தான் உலகக் கோப்பையில் தொடர் தோல்விகளை இந்தியாவுடன் கண்டு வரும் பாகிஸ்தான் இம்முறை பழிதீர்க்க இன்னும் ஒரு சந்தர்பம் கிடைக்க வாய்புண்டு என்ற வகையில் உலக ஒலிம்பிக் போட்டியில் தங்கங்களை வெல்லும் கியூப குத்துச்சண்டை வீரர்கள் அமெரிக்காவை நினைத்து எதிராளியைத் தாக்கி வெல்லுகின்றோம் என்பது போல் இந்தியாவின் மூக்கை உடைக்க வேண்டின் முதலில் அவுஸ்திரேலியாவின் மூக்கை உடைத்து கால் இறுதியில் வென்றாக வேண்டும். இதனால் மட்டுமே மீண்டும் அரையிறுதியில் இந்தியாவை சந்தித்து வெற்றி கொள்ள முயலலாம் என்ற போதைப் பொருள் ஊட்டத்தில் இருக்கும் நலமை சிலவேளைகளில் அவுஸ்திரேலியாவை சங்காரம் செய்துவிடும் என்ற பாகிஸ்தான் நாட்டு மக்களின் எதிர்பார்பை பாகிஸ்தான் அணி உண்மையாக்கினால் இம்முறை இரு இறுதிப் போட்டியிற்கான வாய்புகள் ஏற்பட்டுவிடும். அதுதான் முதல் (அரை)இறுதிப் போட்டி இந்தியா, பாகிஸ்தான் இடையே மற்றது வழமையான இறுதிப்போட்டி நியூசிலாந்திற்கு எதிரானது. ஏல்லாம் விடிந்தால் தெரிந்துவிடும். அது வரை விடைபெறுகின்றேன்...!

 

பொதுத்தேர்தலில் போட்டியிட விரும்புகின்ற, சில கூட்டமைப்பு சார்ந்த சிலரினால் வதந்திகள் பரப்பப்படுகின்றது. - சித்தார்த்தன்!!

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் எந்த மாவட்டத்தில் போட்டியிட வேண்டும் என்பது, மக்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு புளொட் அமைப்பு தீர்மானிக்குமே தவிர, மற்றவர்கள் தீர்மானிக்க முடியாது என கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் சித்தார்த்தனை வன்னி மாவட்டத்தில் போட்டியிடுமாறு கூட்டமைப்பில் உள்ள தனிநபர்கள் தரப்புக்களால் வலியுறுத்தப்படுவதாக வெளியாகி வருகின்ற செய்திகள் தொடர்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

 

பங்குனி 19, 2015

 

விஜயங்களும் விமர்சனமும்

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியான பின்னர் குறுகியகாலத்தினும் பல அரச விஜயங்களை மேற்கொண்டுள்ளார். காரணம் என்ன? இவை எமக்குச் சொல்வது என்ன? அடுத்து சீனாவுக்கும் பயணம் செய்யவுள்ளார். ஒரு வாரத்துக்குள் இரண்டு முக்கிய விஜயங்களும் அதன் எதிர்வினைகளையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்க்க இருக்கிறோம். 1) மைத்திரியின் லண்டனுக்கான அரசவிஜயம் 2) இந்தியப் பிரதமர் மோடியினுடைய இலங்கை விஜயம். மைத்திரி ஜனாதிபதியாகிய உடன் இந்திய விஜயமொன்று மேற்கொண்டதை யாவரும் அறிந்ததே. இந்தியா தனது இராஜதந்திர நடவடிக்கைகள்,உறவுகளை தம்நலன் கருதி மகிந்தருடன் தாமரையிலைத் தண்ணீர்போல் உறவுகொணடிருந்தார்கள். மகிந்தரின் சீன உறவு இந்தியாவின் அடிவயிற்றைக் காலக்கியது என்பதில் ஐயமேயில்லை. இலங்கை க்கு இறுதிப்போரில் இந்தியா உதவியது கூட மைந்தர் வைத்த செக்கில் அரக்க முடியாமையே.இருபுறமும் அணுவாயுதம் கொண்ட பிராந்திய வல்லரசுகள் எதிராகவும், இலங்கையுடன் பலமான நண்புறவைக் கொண்டிருப்பதும் இந்தியாவின் பாதுகாப்புக்கு என்றும் அச்சுறுத்தலே. இதை முறியடிக்கவே இந்தியாவும், தமது கொள்கை கோட் பாடுகளுக்கு இணங்காத சீனாவைப்புறம்தள்ள மேற்குநாடுகளும் முயன்று மைத்திரியை முன்னிறுத்தி வெற்றிகண்டுள்ளனர். இவை அனைத்தும் சுயநலக்களின் வெளிப்பாடே அன்றி தமிழர்கள், தமிழர்களின் அரசியல், சுயநிர்ணயம், எதிர்காலம், போர்க்குற்றமும் அதன் விசாரணைகளும் என்று எண்ணுவது மிகத்தவறானது. போர்குற்றம் என்பது மகிந்தர் கொம்பனியை வெருட்டிப்பணிய வைக்கும் ஒருகருவியாக மட்டமே உள்ளது.(மேலும்....)

 

தோழர் குமார்

30 வது ஆண்டு நினைவு தினம்

குமார் என எம்மால் அழைக்கப்பட்ட யாழப்பாணம் குருநகரை சேர்ந்த போல்டன் உதயகுமார் எம்மை விட்டுப்பிரிந்து 30 வருடங்கள் கடந்திருக்கிறது. இன்று அவர் தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தன் உயிரை அர்ப்பணித்த தினமாகும். ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான தோழர் குமார் ஈபிஆர்எல்எவ் இன் இராணுவப்பிரிவான மக்கள் விடுதலைப் படையில் முக்கியத்துவம் மிக்க ஒருவராய் காத்திரமான பங்களிப்பை வழங்கியதுடன் ஈபிஆர்எல்எவ் இன் பிரச்சாரம் மற்றும் அரசியல் வேலைத்திட்டங்களிலும் மக்கள் நலன் சார்ந்த இதர பணிகளிலும் அதிகம் பங்கெடுத்துக்கொண்ட ஒருவராக விளங்கினார்.  (மேலும்....)
 

பொதுத் தேர்தலுக்குப் பின்னர் உருவாகும் தேசிய அரசில் இனப்பிரச்சினைக்கு தீர்வ- ஜனாதிபதி

தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்தில் இனப்பிரச்சினை உட்பட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படு வது உறுதி. தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இது பற்றி கூறியிருக்கிறோம். உத்தேச தேசிய அரசாங்கத்தை இரண்டு வருடங்களுக்கு கொண்டு செல்வதுதான் எங்களது திடமான இலக்கு. ஆகவே இந்த தேசிய அரசில்தான் இனப்பிரச்சினை உட்பட சகல நெருக்கடியான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்” என ஜனாதிபதி கூறினார். உத்தேச தேர்தல் மறுசீரமைப்பு, அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாகவும் விளக்கினார். அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தம் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இன்னும் இரு வாரங்களில் இது முழுமையாகப் பூர்த்தியடைந்து விடும். 19வது திருத்தம் முழுக்க முழுக்க நாட்டு நலன் சார்ந்த திருத்தமாக இருக்கும். மேலும் இரண்டு வாரங்களுக்கு நாட்டு மக்களின் பார்வைக்கு இது விடப்படுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். அரசியலமைப்பு திருத்தத்தில் பல்வேறு யோசனைகளை தான் முன்வைத்துள்ளதாக கூறிய ஜனாதிபதி, ஜனாதிபதியின் பதவிக்காலம், பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் ஆகியவற்றை 5 வருடங்க ளுக்குக் குறைக்க யோசனை தெரிவிக் கப்பட்டுள்ளது. சிறுபான்மைச் சமூகங்களினதும் சிறுபான்மைக் கட்சி களினதும் உரிமைகளும் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்ட பின்பே தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

இரண்டாவது கால் இறுதியில்
வெல்லப்போவது இந்தியாவா?  பங்களாதேஷா?

 

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

முதலாவது கால் இறுதிப் போட்டியும் முடிந்து விட்டது. இலங்கையின் நம்பிக்கைகளை சிதறடித்து தென்ஆபிரிக்கா தனது திறமை நிரூபித்திருக்கின்றது. தோல்வியும் சாதாரண தோல்வி அல்ல இது. அதுவும் இலங்கை அணியிற்கு மேகலா, சங்ககார இருவரும் தமது ஆட்டநாயக கிரிக்கெட் வாழ்வை முடித்துக்கொள்ளும் நிலையில் இந்தத் தோல்வியுடனான முடிவு ரசிகர்களையும், இவ்விரு வீரர்களையும் சலிப்படையச் செய்திருக்கும். மற்றய எந்த நாடுகளையும் விட ஆசிய நாடுகளான இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கிரிக்கெட்டை திருவிழாவாக கொண்டாடும் நிலமைகளில் இலங்கை நாடு தனது திருவிழாவை இடையில் நிறுத்தியது ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விடயம்தான். சரி வெற்றிகளையும், தோல்விகளையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை நாம் உருவாக்கி கொள்ள வேண்டும். சரி இன்று நடப்பதைப் பற்றி இனி கவனிப்போம். இன்று நடைபெறப்போகும் இரண்டாவது கால் இறுதிப் போட்டியை பார்ப்போம். இதில் இதுவரை தோல்வியை சந்தித்திராத இந்திய அணியும், துணிச்சலுடன் ஆடும் பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன. இந்தியா தனது தொடர் வெற்றியையும், கிரிக்கெட் உலகின் ஆட்ட ஜம்பவான்களைக் கொண்ட நாடு, என்பதற்கு மேலாக நடந்த உலக கிண்ண சம்பியன் பட்டத்தை தொடரந்தும் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்று முனைப்புடன் செயற்படவேண்டிய நிலையில் உள்ளது. பங்களாதேஷை பொறுத்தவரையில் மலையை தும்மை கட்டியிளுத்தால் வந்தால் மலை! போனால் தும்பு!! என்று (என்ன தும்பு என்று சொல்மாறியுள்ளது என்ற கேள்விக்கணையா...?) விளையாடும் நிலையிலும் உள்ளன. எனவே அழுந்தங்களுக்கு மத்தியில் விளையாடும் இந்தியாவும், எந்த அழுத்தங்களும் இன்றி சுயாதீனமாக ஆடும் நிலைகளே காணப்படுவதால் பங்களாதேஷும் இருக்கும் நிலையில், பங்களாதேஷ் வெற்றியை நோக்கி ஓடுவது இலகுவாக இருக்கும் என்று தோன்றக் கூடும். ஆனால் இதுவரை நடைபெற்ற சகல ஆட்டங்களிலும் தமது எதிரணிகளை முழுமையாக ஆட்டம் இழக்கச் செய்த பந்து வீச்சாக இருக்கட்டும் நிரை கட்டிநிற்கும் மட்டையடி வீரர்களாக இருக்கட்டும் வெற்றி வாய்பை இந்தியா நழுவ விடுமா என்பது கேள்விக்குறியே? ஆனாலும் மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவை வென்றதன் மூலம் முதல் சுற்றிலேயே போட்டியிலிருந்து (இம்முறை இங்கிலாந்து போல்) கழட்டி விடப்பட்ட நிலமை ஏற்பட்டதையும் நாம் குறைவாக மதிப்பிட முடியாது. எந்த அழுத்தங்கள் இன்றி விளையாடும் பலம் பங்களாதேஷ் இற்கு சாதகமாவும், அழுத்தங்களின் மத்தியில் விளையாடும் பலவீனம் இந்தியா விற்கும் சாதகமாக அமையலாம் என்ற எதிர்பார்ப்புகளை மாற்றியமைக்கும் இந்தப் போட்டியின் முடிவு அமையும் என்பது பலராலும் எதிர்வு கூறப்படும் விடயம் ஆகும். பங்காளதேஷ் இன் மகமுடுல்லா வின் மட்டை அடியை இந்திய பந்துவீச்சாளர்கள் மட்டும்படுத்துவார்களா? அல்லது இதற்கும் எதற்கும் இந்திய மட்டை அடியாளர்கள் பதில் கூறுவார்களா? என்பது இன்று விளையாட்டின்போது தெரிந்துவிடும். விடிந்தால் எல்லாம் தெரிந்துவிடும் இந்தியாவில் திருவிழாவா? அல்லது கோலி, தோனியின் வீட்டிற்கு கல்லெறியா? என்று.

 

சுரேஸ் முட்டுக்கட்டை! சுமந்திரன் குற்றச்சாட்டு!

கோத்தா முகாம் பற்றி சுரேஸ்பிறேமச்சந்திரன் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதால் இணக்க அரசியல் செய்யமுடியாதிருப்பதாக கவலை வெளியிட்டுள்ளார் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சிரேஸ்ட பத்திரிகையாளர்கள் சிலரிடம் மனம் விட்டு பேசிய சுமந்திரன் தனது கவலையினை வெளியிட்டுள்ளார்.நான் அரசுடன் பேசி பல நல்லவிடயங்களை செய்துவருகின்றேன். அந்தவகையில் அரசியல் கைதிகள் தொடர்பான பட்டியலை பெற்றுக்கொண்டுள்ளேன். அதே போன்று காணாமல் போனோர் தொடர்பிலும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளேன். (மேலும்....)

 

பா.ஜ. படுதோல்வியைத் தான் சந்திக்கும்

''மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறி விட்டது. இப்படியே இருந்தால், பீகார், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில், டில்லி தேர்தல் போல, படுதோல்வி தான் கிடைக்கும்,'' என, பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி, பிரகலாத் மோடி கூறினார்.குஜராத் மாநில நியாய விலைக்கடை சங்கத்தின் முக்கிய நிர்வாகியாக இருக்கும் பிரகலாத் மோடி, டில்லி, ஜந்தர்மந்தர் பகுதியில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், பா.ஜ., அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் எல்லாம் பாடுபட்டோம். ஆட்சிக்கு வந்த பா.ஜ., அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டது. இதனால், ஓட்டளித்த மக்களின் கோபத்திற்கு இலக்காகியுள்ளது. இவ்வாறு நான் கூறுவது, என் அண்ணன் நரேந்திர மோடிக்கு எதிராக அல்ல. அரசை தான் நான் குறை கூறுகிறேன்; அண்ணனை அல்ல. என் அண்ணன் வணங்கத்தக்கவர். அவரிடம் எந்த குறையையும் காண முடியாது. நான் அரசின் செயல்பாட்டைத் தான் குற்றஞ்சாட்டுகிறேன். நிலைமை இப்படியே போனால், வரவிருக்கும், பீகார், உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்களில், பா.ஜ., படுதோல்வியைத் தான் சந்திக்கும். டில்லி சட்டசபை தேர்தலில் எப்படி, பா.ஜ., மூன்று இடங்களை மட்டுமே பெற்றதோ, அது போன்ற நிலைமை தான் ஏற்படும். நானும், பா.ஜ.,வைச் சேர்ந்தவன் தான். அதற்காக, நான் சார்ந்துளள இயக்கத்தின் பிரச்னைகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. இவ்வாறு, மோடியின் தம்பி கூறினார்.

 

பூமிக்கடியிலிருந்த குகை வெடிப்பே நிலம் தாழிறங்க காரணம்

பண்டாரவளைப் பகுதியில் நிலம் தாழிறங்கியமைக்கு பூமிக்கடியிலிருந்த கற்குகையில் ஏற்பட்ட வெடிப்பே காரணமென ஆய்வுகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தின் நடுப் பகுதியில், பண்டாரவளைப் பகுதியின் அம்பதென்டகம - கலஹெட்டியாவ என்ற இடத்தில் பூமியின் ஒரு பகுதி தாழிறங்கியது. இப் பூமி தாழிறக்கம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் அடிப் படையில் யூகங்கள் பல எடுக்கப்பட் டுள்ளன. இறுதி ஆய்வுகளை பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் ஜகத் குணதிலக்க, தேசிய கட்டட ஆய்வாளர் பேராசிரியர் காமினி ஜயதிஸ்ஸ, புவிச் சரிதவியல் ஆய்வாளர் கே. எம். பண்டா ஆகியோர் மேற்கொண்டிருந்தனர். இவர்களின் ஆய்வறிக்கையில் “குறிப் பிட்ட இடத்தில் பூமிக்கடியிலிருந்த கற் குகையொன்றில் ஏற்பட்ட வெடிப்பின் நிமித்தமே பூமி தாழிறங்கியது. இச் சம்பவத்தில் இரு வீடுகளுக்கு மட்டுமே பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்ற தேயன்றி ஏனைய வீடுகளுக்கு எவ்வகையிலும் சேதங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை. ஆகையினால் அவர்கள் அவ் வீடுகளுக்கு சென்று குடியேறலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தமிழ் டயஸ்போராக்களில் அனேகமானவர்கள் பிரிவினையை எதிர்க்கிறார்கள் - ஜனாதிபதி

புலம் பெயர்ந்தவர்கள் எவ்வித அச்சமும் இன்றி தாராளமாக இலங்கை க்கு வரலாமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தமிழ் டயஸ்போரா அமைப்புக்கள் எல்லாம் பிரிவினைக்காகச் செயற்பட வில்லையென்பதை தான் இலண்டன் சென்றிருந்தபோது நேரடியாக அறிந்து கொண்டதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இலண்டனில் ஒருசில அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார். அங்கு ஈழம் பதாகைகளுடன் சிலர் நின்றனர். என்றாலும், சகல தமிழ் டயஸ்போரா அமைப்புக்களும் பிரிவினைக்காக நிற்கவில்லை. என்னைச் சந்தித்த சில அமைப்புக்களின் பிரதிநிதிகள், “ஏன் எங்களை ‘தமிழ் டயஸ்போராக்கள்’ என அழைக்கிர்கள் என கேட்டனர். அதேநேரம் நாங்கள் ஈழம் கேட்கவில்லை. இலங்கைக்கு வருவதற்கே விரும்புகிறோம்” என உருக்கமாகக் கேட்டுக் கொண்டனர். இன்னும் ஒரு விடயத்தையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். “நாம் பிரிவினைக்காக நிற்கவில்லை. கடந்த கால ஆட்சியாளர்களே இப்படி எங்களை சந்தேகக் கண்ணோடு பார்த்துப் பார்த்து ஓரங்கட்டினார்கள். ஆகவே, புதிய அரசாங்கம் எங்களையும் ஏற்று செயற்பட வேண்டும் என்றனர்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

சூரியனில் இரண்டு இராட்சத ஓட்டைகள் கண்டுபிடிப்பு

சூரியனின் மேற்பரப்பில் இரு இராட்சத துளை களை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அவதானித்துள்ளது. இதில் மிகப்பெரிய துளை தென் துருவத்திற்கு அருகில் சூரியனின் மொத்த மேற்பரப்பில் 6 முதல் 8 வீதத்தை கொண்டிருப்பதாகவும் அது 142 பில்லியன் மைல் அளவு கொண்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூரியனில் கடந்த பல தசாப்தங்களில் விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்ட தில் மிகப் பெரிய துளை இதுவாகும். எதிர்த் துருவத்தில் இருக்கும் சிறயி துளை குறுகிய மற்றும் நீண் டதாக 3.8 பில்லியன் சதுர மைல் கொண்டதாக உள்ளது. இது முழு சூரிய மேற்பரப்பின் 0.16 வீதம் மாத் திரமாகும். "கோரோணல் துளை என்பது சூரி யனின் மேற்பரப்பில் இருக்கும் குறை ந்த அடர்த்தி மற்றும் வெப்பநிலை நிலவும் பிராந்தியமாகும். இதனை கொரோனா என்று அழைக்கப்படுகி றது" என நாஸா விளக்கியுள்ளது. சூரியனின் கொரோனா என்ற விளிம்பு ஒளிவட்ட பாதையின் ஒரு பகு தியே 'கோரோணல் ஓட்டைகள்' ஆகும். சூரியனின் கொரோனா பகுதியில் உள்ள இருண்ட இடங்களை 'கோரோணல் ஓட்டைகள்' என்பர். இந்த கோரோணல் ஓட்டைகள் தன் வடிவிலிருந்து மாறிக்கொண்டே இருக்கும். இந்த கோரோணல் ஓட்டை பகுதி யில் இருந்து தான் காந்த புலம் விண்வெளிக்கு செல்கிறது.


இஸ்ரேல் தேர்தலில் வலதுசாரி நெதன்யாகு வெற்றி

இஸ்ரேல் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி லிகுட் கட்சி எதிர்பாராத வகையில் வெற்றிபெற்றுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், இந்தத் தேர்தலில் கடு மையான போட்டி இருக்கும் என்றே தெரிவித்தன. இந்த வெற்றியின் மூலம் நெதன்யாகு நான்காவது முறையாக பிரதமராவ தோடு, இஸ்ரேலில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெரு மையையும் பெறுவார். 120 இடங்களைக் கொண்ட பாரா ளுமன்றத்தில் லிகுட் கட்சி 30 இடங் களைப் பிடித்துள்ளது. சியோனிஸ கூட் டணி 24 இடங்களைப் பிடித்துள்ளது. இஸ்ரேலில் விகிதாசார பிரதிநிதித் துவ முறையில் தேர்தல் நடப்பதால், சிறிய கட்சிகளும் அங்கே சில இட ங்களைப் பிடிக்கும். இதனால், எப்போ தும் கூட்டணி ஆட்சியே அந்நாட்டில் அமைந்துவருகிறது. இந்த முறை வந்த பின்னர் இதுவரை எந்தக் கட் சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியமைக்கவில்லை. இதில் இஸ்ரேலின் முன்னணி அரபு கட்சிகளின் கூட்டணி 14 ஆசனங்களை வென்று மூன்றாவது இடத்தைப் பிடி த்துள்ளது. இதன்மூலம் கடந்த கால ங்களை விடவும் இம்முறை இஸ்ரேல் பாராளுமன்றத்தில் அதிக அரபு பிரதி நிதிகள் தெரிவாகியுள்ளனர். இஸ்ரேல் மக்கள் தொகையில் 20 வீதமாக இரு க்கும் அரபு பிரஜகள் அங்கு இர ண்டாம் நிலை குடிமக்களாகவே நட த்தப்படுகின்றனர். பாலஸ்தீன நாடு உருவாவதை அனு மதிக்கப்போவதில்லையென தேர்தலு க்கு முன்னர் கடைசியாக கருத்து தெரிவித்தபோது நெதன்யாகு குறிப் பிட்டிருந்தார். அதே நேரத்தில் சியோ னிஸ கூட்டணி இரு நாட்டுக் கொள் கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தது. பாலஸ்தீனத்துடனும் சர்வதேச சமூ கத்துடனும் உறவுகளை மேம்படுத்து வோம் என்றும் சியோனிஸ கூட்டணி கூறியிருந்தது.

பங்குனி 18, 2015

 

பிரபாகரன் போரில் இறக்கவில்லை – சனல் 4 இயக்குனர் அதிர்ச்சி தகவல்-!

போரில் பிரபாகரன் இறக்கவில்லை எனவும், அருகிலிருந்து பிரபாகரன் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டதாக “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார். (கடைசிக்கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு பிரபாகரன் இறந்ததாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன. இதை உறுதிப்படுத்துவதாகவே “சனல் 4 ” இயக்குனர் கலம் மக்ரே வழங்கிய செவ்வி அமைந்துள்ளது.) பிரித்தானியத் தொலைக்காட்சியான சனல் 4 இல் மூன்று பகுதிகளாக வெளியான ‘No Fire Zone’ என்ற ஆவணப்படம் மட்டுமே இலங்கையில் நடைபெற்ற இனவழிப்பின் உறுதியான ஆதரமாகத் திகழ்கிறது. நீண்ட முயற்சிகளுக்கு மத்தியில் தயாரிக்கப்பட்ட அந்த ஆவணப்படத்தின் இயக்குனர் கலம் மக்ரே. (மேலும்....)
 

முதல் கால் இறுதியில்
வெல்லப்போவது இலங்கையா? தென்ஆபிரிக்காவா?


(சிவா ஈஸ்வரமூர்த்தி)


கிரிக்கட் உலகக் கோப்பைக்கான முதலாவது கால் இறுதிப் போட்டி இன்று நடைபெறப் போகின்றது. இதில் இரு பலம்மிக்க அணிகள் மோதவுள்ளன. இலங்கை, தென்ஆபிரிக்க அணிகளே இவை இரண்டும் ஆகும். இரு அணிகளிலும் சங்ககார, டி வில்லியஸ் என்ற திறமையான துடுப்பாட்டக்காரர்கள் உள்ளனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இருவரும் தமது மட்டைத் திறமைகளை நிரூபித்து, நல்ல ஆடும் திறனில் உள்ளனர். சிறப்பாக சங்ககார 4 சதங்களுடன் அசுர பலத்துடன் உள்ளார். மேலும் மட்டை அடியில் இவர்களுக்கு பக்கபலமாக டில்ஷான், அமலா போன்ற வீரர்கள் களத்தில் உள்ளனர். பந்து வீச்சில் மலிங்காவின் மின்னல் வேகப் பந்து வீச்சும், மோகெல் இன் மிதவேக பந்து வீச்சும் எதிரணிகளின் மட்டை பிடிப்பாளர்களை திணரடித்துக்கொண்டு இருக்கின்றன. கூடவே இவர்களுக்கு பலம் சேர்க்க பந்து வீச்சில் மத்தியூ, இம்ரான் தகிர் போன்றவர்கள் உதவுவார்கள் என்ற நிலையுள்ளது. பொதுவாகப் பார்த்தால் தென்ஆபிரிக்கா, இலங்கை அணியை விட பலமான அணியாக தோற்றம் அளிக்கின்றது. ஆனாலும் இக்கட்டான சூழலிலும் நம்பிக்கையுடன் முன்னேறும் அணியாக செயற்படுவதில் இலங்கை அணி சிறந்தது. தென் ஆபிரிக்காவை தொடர்ந்து துரத்தும் அதிஷ்டம் இன்மை என்பது இந்த உலகக் கிண்ணப் போட்டியிலும் துரத்தினால் வெற்றி வாய்ப்பு இலங்கைக்கு சாதகமாக அமையலாம். அன்றேல் தென் ஆபிரிக்காவை வெல்லுவது இலங்கையிற்கு சுலபமான காரியம் அல்ல. நாளை தெரிந்து விடும் இலங்கை அணியின் தன ;நம்பிக்கையா? அல்லது தென்ஆபிக்காவின் துர் அதிஷ்டதேவைதையா? தோற்றப் போகின்றனர் என்று. எது எப்படி இருப்பினும் இறுதி வெற்றி கிரிக்கட் இரசிகர்களுக்கே!

 

ராஜீவின் விஜயமும் மோடியின் விஜயமும்

 

சுதந்திரத்தின் பின் இலங்கையில் தொடர்ந்தும் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் தாமாக முன்வந்து மாகாண சபையில் ஒரு பிரேரணை முன்மொழிந்து நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.  1948ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையினால் நிறைவேற்றப்பட்டு 1950 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்ட இன அழிப்பை தடுப்பதற்கும் அதற்காக தண்டனை வழங்குவதற்குமான சர்வதேச உடன்பாட்டின் அடிப்படையிலேயே முதலமைச்சர் இந்தப் பிரேரணையை முன்வைத்துள்ளார். அந்த உடன்பாட்டின் பிரகாரம் ஓர் இனத்தின் சிறு பிரிவினருக்காவது உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ சேதம் விளைவித்தல் இன அழிப்பாகும். அந்த அடிப்படையில் முதலமைச்சரின் பிரேரணை சரியானதே. ஆனால், அந்த அளவுகோலின் படியே சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான புலிகளின் செயற்பாடுகளை கவனித்தால் அவையும் அச் சமூகங்களின் சிறு பிரிவினருக்காவது உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ சேதம் விளைவித்ததாகவே முடிவு செய்ய வேண்டியிருக்கும். அந்த வகையில் அச் செயற்பாடுகளையும் இன அழிப்பு நடவடிக்கைகளாகவே கருத வேண்டியிருக்கும். புலிகளின் செயற்பாடுகளை ஆதாரமாக வைத்து தென் பகுதியில் மாகாண சபையொன்றும் புலிகளுக்கு எதிராக இது போன்றதோர் பிரேரணையை நிறைவேற்ற முடியும்.(மேலும்....)

 

மூன்றரை தசாப்தங்களின் பின்னர் ஜனநாயகத்துக்கான ஒளிக்கீற்று

அரசியலமைப்பில் 19வது திருத்தத்தை மேற்கொள்வதற் கான உத்தேச வரைபுக்கு அமைச்சரவை கடந்த ஞாயிற் றுக்கிழமையன்று அங்கீகாரம் அளித்திருக்கிறது. 19வது திருத்தம் தொடர்பான உத்தேச வரைபு வர்த்தமானியிலும் பிரசுரம் செய்யப்பட்டு விட்டது. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை மட்டுப்படுத் துதல், பாராளுமன்றத்தின் மேலாண்மையை முக்கியத்துவப்படுத் தும் வகையில் பிரதமருக்குரிய அதிகாரத்தை அதிகரித்தல், நீதித் துறையின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துதல், சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு சீர்திருத் தங்களைக் கொண்டதாக 19வது திருத்தச் சட்டம் அமைகிறது. (மேலும்....)

இப்படியும் நடக்கிறது நடந்திருகிறது


இந்தியன் ஆமி இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் விடுதலை புலிகள் அமைப்பிடம் 10000 ரூபா பணம் அல்லது 2 பவுண் நகை பிணை வைத்து பாஸ் அனுமதி பெற்று இளைஞர்கள் யுவதிகள் வெளியேறிய நடைமுறை இருந்தது.அந்த காலத்தில் பணம் நகை இல்லாதவர்கள் தங்கள் காணிகள் சொத்துக்களை ஈடாக வைத்து அனுமதிபெற்று வெளியேறினார்கள்.இந்த செயல்முறை அனைவரையும் ஈழ போராட்டத்தில் பங்கெடுக்க வைக்கவேண்டும் என்பதற்காகவும் போராட்டத்தில் பங்கெடுக்காமல் வெளியேறுவோர் அந்த போராட்டத்துக்கு உதவியாக நிதி உதவி செய்வதாகவும் கருதப்பட்டது. இந்த நடைமுறையை நான் தவறு சொல்லவோ விமர்சிக்கவோ விரும்பவில்லை.நான் இங்கு வெளிப்படுத்த விரும்புவது அந்த காணிகள் இயக்கத்தில் அந்த நேரத்தில் பாஸ் அனுமதிக்கு பொறுப்பாக இருந்த சில தனி நபர்களின் பெயரிலேயே அறுதியாக எழுதிகொடுக்கப்பட்டது.அவர்களில் சிலர் 1990 களின் இறுதி பகுதியிலேயே இயக்கத்தைவிட்டு வெளியேறி இந்தியாவிலும் புலம்பெயர் தேசங்களிலும் குடியேறினார்கள். பின்னர் அந்த நாடுகளில் விசா பெற்றபின்னர் இலங்கை சென்று அல்லது சில உறுதி மாற்றும் சட்ட ரீதியான செயல்கள் மூலம் அந்த காணிகளை தங்கள் சொந்த உறவினர்களின் பெயர்களில் மாற்றி விற்று வேறு பலவழிகளில் சொத்தாக்கிவிட்டார்கள். (மேலும்....)

குமார் குணரட்னத்தின் கடவுச்சீட்டு கறுப்புப் பட்டியலில் இணைப்பு

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்தின் கடவுச்சீட்டு கறுப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரஜையான குணரட்னம் வீசா காலம் நிறைவடைந்து மூன்று மாத காலத்திற்கு மேல் மறைந்து வாழ்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்திற்கு மட்டுமே குமார் குணரட்னத்திற்கு வீசா வழங்கப்பட்டது. குமார் குணரட்னம், தம்மை நாட்டில் தங்கியிருக்க அனுமதிக்குமாறு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறுமாறு பல தடவைகள் குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் கோரியிருந்தது. எனினும், இந்தக் கோரிக்கைக்கு குமார் குணரட்னம் மதிப்பளிக்காது தலைமறைவாக வாழ்ந்து வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குமார் குணரட்னத்தை புலனாய்வுப் பிரிவினர் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குமார் குணரட்னத்திற்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென முன்னிலை சோசலிச கட்சி கோரி வருகின்றது.
 

பங்குனி 17, 2015

 

19ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி: வர்த்தமானியும் வெளியானது

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை முடிவுக்கு கொண்டுவரும் புதிய அரசியல் அமைப்புக்கு திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதுடன் விசேட வர்த்தமானியும் வெளியானது. இந்த திருத்தங்கள் அடங்கிய திருத்தச்சட்டமூலம் விசேட சட்டமூலமாக அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் ஞாயிறன்று அவசரமாகக் கூடியிருந்த விசேட அமைச்சரவை கூட்டத்தின் போதே 19ஆவது சட்டத் திருத்தத்துக்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. புதிய திருத்தங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி, நேற்றிரவே வெளியிடப்பட்டதாக அரசாங்க அச்சகக்கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் சட்ட திருத்தங்கள் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும் நேற்றை அமைச்சரவைக்கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டது. முன்வைக்கப்பட்டுள்ள 19ஆவது அரசியல் சட்டத் திருத்த பிரேரணையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: (மேலும்....)

என் மனவலையிலிருந்து......!

சுரேஷ் பிரேமசந்திரன் அவர்களே! இரகசிய முகாங்களை அம்பலப்படுத்துங்கள்....?

- சாகரன்

"இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், திங்கட்கிழமை (16) தெரிவித்துள்ளார்." அதுசரி இதுவொன்றும் இரகசியமான விடயம் அல்ல. மாறாக புலிகளின் பிரசன்ன காலத்தில் வன்னியிலும், யாழ்ப்பாணம்  புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் யாழ்பாணத்திலும் புலிகளின் இ(ப)ரகசிய வதை முகாங்கள் இருந்தன. உங்கள் தானைத் தலைவன் பிரபாகரன், பொட்டு அம்மான் வைத்திருந்த இரகசிய முகாங்கள் துணுக்காய், புதுக்குடியிருப்பு, சாவகச்சேரி, ஆனைக்கோட்டை போன்ற வதைமுகாங்கள் பற்றிய விபரங்களும் உங்களுக்குத் தெரியும்தானே. அவற்றையும் அம்பலப்படுத்துவீர்களா?, இந்த முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதையின் பின்பு கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிப்பீர்களா? இதில் உங்கள் முன்னாள் சகாக்கள் பலரும் அடைக்கப்பட்டு கொல்லப்பட்டனர் இதுபற்றிய முழுத்தகவல்களையும் வெளிக்கொணர குரல் கொடுப்பீர்களா? இதற்கான கோரிக்கைகளை ஐநா சபை முன்பு கோரிக்கையாக முன்வைப்பீர்களா? உங்கள் உயிருக்கு பாதுகாப்பு தேவைப்படியின் நாம் தரத்தயாராக இருக்கின்றோம். உங்கள் தலைவன் பிரபாகரனின் இரகசிய முகாங்களை அம்பலப்படுத்த  உங்களால் முடியுமா...? தற்போதுதானே புலிகள் இல்லை. புலிகளின் வதை முகாங்கள் பற்றி உண்மைகளை (உங்களுக்கு தெரிந்தவைதான்) வெளிக் கொணர்வதினால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படப்போவதும் இல்லை. இவற்றை விடவும் சதா உங்களுக்கு இலங்கை அரசபடைகளின் பாதுகாப்புக்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்தே பிறகு என்ன பயம். இந்திய உளவுப்பிரிவுக்கு பழவந்தாங்கல் பாதுகாப்பு இடத்தைக் காட்டிக் கொடுத்த சாமர்த்தியம் உங்களுக்கு இருக்குத்தானே? புரிந்தால் சரி....? எல்லாம் தேர்தலுக்கான வாய்வீச்சுகள் என்று எல்லோருக்கும் தெரியும் !! பயப்படதீர்கள் தமிழ் மக்களும் உங்களைப் போன்றவர்களிடம் ஏமாறுவதில் எப்போதும் போல் வரும் தேர்தலிலிலும் ஏமாந்துவிட்டத்தான்  போகப்போகின்றனர். எனவே தேர்தல் வெற்றி உங்களுக்கே! சும்மா வாய் சவட்டல் விடாதீர்கள்!! கொஞ்சமாவது மனிதனாக நடக்க முயற்சி செய்யும்

- சாகரன்

போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான நீதி என்ற பெயரில் இடம்பெறும் உள்வீட்டு அதிகாரச் சண்டை

ராஜன் ஹுல் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), என். சிவபாலன் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), அகிலன் கதிர்காமர் (சுயாதீன ஆய்வாளர், யாழ்ப்பாணம்), கே. சிறீதரன்

2009ஆம் ஆண்டு, இலங்கையில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரிய உயிர் அழிவுகள் ஏற்பட்டமைக்குக் காரணமாக அமைந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமை ஆணைக்குழு விசாரிப்பது எனத் தீர்மானித்திருந்தது போரினாலே பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய முக்கியமான வெற்றி ஆகும். பாதிக்கப்பட்டவர்களுடைய கௌரவத்தினை உறுதிப்படுத்துவதற்கு உண்மைகள் பயமற்ற முறையிலும், பக்கச்சார்பற்ற வகையிலும் வெளிக்கொண்டுவரப்படல் வேண்டும். அத்துடன் நீதியும், பரிகாரங்களும், மீட்சியும் அவர்களுக்குக் கிடைப்பதற்கு வேண்டிய செயன்முறைகள் ஆரம்பிக்கப்படல் வேண்டும். போரின் போது மேற்கொள்ளப்பட்ட பிழைகள், உரிமை மீறல்களினை ஒரு தரப்பினர் மாத்திரம் செய்யவில்லை. நீதிக்கு முன்னுரிமை அளித்து, நீதிபதிகளின் தீர்ப்பிற்காக மரியாதையுடனும், தன்னடக்கத்துடனும், கட்டுப்பாட்டுடனும் பொறுமையாக இருப்பதுவும் பாதிக்கப்பட்டவர்களின் கௌரவத்திற்கு மதிப்பளித்தலின் ஒரு பகுதி என்பதனை நாம் உணர வேண்டும். (மேலும்....)

இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் என்னிடம் உள்ளன - சுரேஷ்

இரகசிய முகாம்கள் தொடர்பான சாட்சியங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சாட்சியங்களின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் அவற்றை வெளிப்படுத்த தான் தயார் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன், திங்கட்கிழமை (16) தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரகசிய முகாம்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படாமல் அவ்வாறான முகாம் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுகின்றனர். முன்னாள் ஜனாதிபதியின் ஊழல்கள் தொடர்பாகவும் அமைச்சர்களின் ஊழல்கள் தொடர்பாகவும் விசாரிக்க குழு அமைத்துள்ளார்கள். ஆனால், இரகசிய முகாம்கள் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் நடத்தாது இராணுவ தளபதியும் கடற்படை தளபதியும் அவ்வாறான முகாம் இல்லை என கூறினர், எனவே, அவ்வாறான இரகசிய முகாம்கள் இல்லை என பிரதமரும் நீதியரசரும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. திருகோணமலையில் கோட்டாபய எனும் பெயர் கொண்ட இரகசிய தடுப்பு முகாம் இருந்தது. அதில் 700 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  தற்போது அவ்வாறான முகாம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் முன்னர் இருந்தது. இதற்கான சாட்சியங்கள் என்னிடம் உண்டு. முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்களின் உயிர்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டால் சாட்சியங்களை முற்படுத்துவேன். அந்த முகாம் தொடர்பிலும் அந்த முகாமில் இருந்தவர்கள் யார்? அவர்கள் இப்பொழுது எங்கே? எதற்காக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு விடையையே நாங்கள் கோருகிறோம்.

19A – A Healthy Tonic To The Democracy

(By Varatharaja Perumal)

The Proposed 19th Amendment (19A), despite its being deemed a cyanide to wipe out Monarchic Authoritarianism and Naxist Patriotism, is a medical tonic essential for restoration of and advance further the health of democracy in and preservation of true unity of Sri Lanka. My humble submission here is to strengthen it properly. In the last Presidential election people did not elect a President to rule with the executive presidency but mandated for implementing the 100 days programme pledged and promised by the President Maithripala Srisena. Defeat of the former President Mahinda Rajapaksa was a clear rejection of the executive Presidency and assent to bring the independence of Judiciary, ensure fundamental and human rights and rule of law. People of Sri Lanka has rejected all kinds of narrow, vested interested and chronic nationalism and crude nation theories but have asserted the unity of Sri Lankan nationalism and democratic aspirations irrespective of linguistic and religious differences. The President Sirisena is obliged to the people elected him with an object that he would invariably ensure the implementation of the 100 days programmes, notwithstanding of all kinds of provokes and challenges. It is the duty of not only the President but also mainly of the PM Ranil Wickremesinghe, former President Chandrika Kumaratunga, Gen. Sarath Fonseka, Venerable religious priests who committed good governance to the people, JVP and JHU leaders, SLMC and ACMC leaders and the Tamil leaders including that of upcountry and the North-East, all who campaigned and promised during the last Presidential election. Otherwise, all the lost persons waiting for their opportunity would fly to sky as if newly born angels and raise the question of credibility and dependability of the present government and its supported forces. (more.....)

சுயபுத்தி இல்லாத விக்னேஸ்வரன், சொல்லிக் காட்டிய கம்பவாரிதி!

அகில இலங்கை கம்பன் கழக தலைவர் இ.ஜெயராஜ். கம்பவாரிதி என்று தமிழ் கூறும் நல்லுலகத்தால் அறியப்படுபவர். சொற்சுவை, பொருட்சுவை சொட்ட சொட்ட சிறப்பாக பேசவல்லவர். இவரின் பேச்சைக் கேட்க என்றே தனிக் கூட்டம் உள்ளது. இராம சாம்ராஜ்ஜியத்தை ஒத்த தர்மராஜ்ஜியம் உலகில் நிறுவப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் இவருக்கு தனிப்பட்ட அரசியல் விருப்பு, வெறுப்பு கிடையாது என்று இவரின் அபிமானிகள் கூறுகின்றனர். ஆனால் இவர் விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்று மிக நெருக்கமானவர்கள் சொல்கின்றார்கள். (மேலும்....)

கடாபியின் மறுபக்கம்…!!

கடாபியின் ஆட்சியில் லிபிய மக்கள் வாழ்ந்த காலம் அவர்களுக்கு பொற் காலம். லிபிய மக்களின் அனங்களை வென்ற தலைவராக கடாபி திகழ்ந்தார். கடாபி மேற்கு மற்றும் அமெரிக்க மேலாதிக்கத்திலிருந்து ஆபிரிக்க பிராந்தியத்தை விடுவிக்கும் முயற்சியில் முனைப்புக்காட்ட எத்தனித்தார் அதுவே குறித்த அமெரிக்க மற்றும் மேற்குலக கழுகுகளின் எரிச்சலுக்கு உள்ளாக நேர்ந்தது. அதன்விளைவே கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்டு அவர் இரக்கமின்றி கொல்லப்பட்டார் கடாபி இல்லாத லிபியா இன்றைய நிலை எப்படியிருக்கிறது என்பதை உலகம் தெரிந்து கொண்டுள்ளது; லிபியாவின் உறுதிவாய்ந்த காவல்காரன் அழிக்கப்படட பின்னால் மிக இலகுவாகவே அதன் வளங்கள் கொள்ளையிடப்படுகின்றன.- ஆளுபவன் யாராக இருக்கட்டும் ஆட்சியின் வடிவம் எதுவானாலும் இருக்கட்டும் அங்கே மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறார்களா? என்பதுதான் பார்ககப்படவேண்டும். கடாபியின் ஆட்சியில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகைகள் போல் எந்த ஒரு ஐனயாயக நாட்டிலும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. தனது நாட்டு மக்களை நேசித்து அவர்களது வாழ்கையினை மேம்படுத்தும் ஒரு தலைவன் சர்வாதிகாரி என்றழைக்கப்பட்டால் அப்படியே இருந்துவிட்டு போகட்டுமே . (மேலும்....)

யூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்?

தொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடியாது. உலக வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 70% யூதர்களின் கைவசமே உள்ளது. அழகு சாதனங்கள், நாகரிக உடைகள், உணவுப் பொருட்கள், ஆயுதங்கள், சினிமாத் துறை (ஹாலிவுட் மற்றும் பல) என்று பலவற்றிலும் யூதர்கள் சிறந்து விளங்குவது நிஜம். நான் இஸ்ரேல் நாட்டில் சுமார் 3 ஆண்டுகள் சில மருத்துவ மனைகளில் உள்ளகப் பயிற்சிக்காக கழிக்க நேர்ந்தபோதுதான் ஏன் யூதர்கள் அதி சாமர்த்தியசாலிகளாக இருக்கிறார்கள் என்பது பற்றி ஆராயும் எண்ணம் வந்தது.
ஏன் கடவுள் அவர்களுக்கு மட்டும் இந்த திறமையைக் கொடுத்தார்? இந்த திறன் தற்செயலாக வந்ததா? அல்லது ஒரு தொழிற்சாலையில் நாம் நமக்கு வேண்டிய வடிவில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறோமே, அதுபோல இந்த திறமையை மனித முயற்சியால் சிருஷ்டி பண்ணிக் கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகள் எனது 2 ஆம் ஆண்டில் அதாவது 1980 டிசம்பரில் நான் கலிபோர்னியா திரும்ப வர இருந்தபோது என் மனதில் தோன்றிக் கொண்டே இருந்தன.
எனது ஆய்வறிக்கைக்காக யூதர்கள் உட்கொள்ளும் உணவு, கலாச்சாரம், மதம், கர்ப்பிணி தன்னை தயார் செய்துகொள்ளும் விதம் என்று எல்லா விவரங்களையும் ஒன்று விடாமல் துல்லியமாக சேர்ப்பதற்கு 8 ஆண்டுகள் பிடித்தன. இந்த விவரங்களை மற்ற இனங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடிவு செய்தேன். (மேலும்....)

அஞ்சலி
கி.பி. அரவிந்தன்.

முகம்திருப்பு

சில - பலவிடயங்களுக்கு சாட்சியாக இருப்பதல்ல ,காலத்தின் வாழும் சாட்சியாக இருத்தல் மிகவும் துயரமானது ,அது தண்டனையும்கூட .நீத்தார் பெருமை ,துயர் பகிர்தல் சிறப்பான மானிடப் பண்பாகப் பேணப்படும் நம் மரபில் இறந்துபோன ஒருவரின் ஆளுமை இன்னபிற பெருமைகளைப் பேசும் நாட்களில் அவர் விட்டுச்சென்ற தவறான பக்கங்களை நினைவுகூரல் நற் பண்பாக நம்மிடையே கொள்ளப்படுவதில்லை ,ஒருசிலர் மனம் வெதும்பி அல்லலுற்று ஆற்றாமல் அழுத கண்ணீரோடு அவற்றை பேசி பதிந்துவிடுகின்றனர் , சக நண்பர்களுடன் ஆற்றாமல் முறையிடுகின்றனர் .இப்படி நண்பர் சோபா , கி .பி அரவிந்தன் குறித்த இரங்கலுரையில் குறித்தவற்றை சில பக்குவப்பட்ட அவதானிகள் அசூசையுடனும் கண்ணியம் இன்றியதாயும் கருதுகின்றனர் ,அந்தப் பதிவை எடுத்துவிடும்படியும் அவரை கேட்டுக்கொள்கின்றனர் .நானும் இவற்றிற்கு மௌன சாட்சியாயும் உரத்த சாட்சியாயும் இருப்பதன் நிமித்தமாய் இது குறித்து கருத்துக்கூறவேண்டி இருக்கிறது .இது அவர் குறித்த "போஸ்ட்மோர்ட்டம் ரிப்போர்ட்" அல்ல ,அவரை இயங்கச் செய்த பாசிச யுத்த சூழல் அதன் கருத்தமைவுகள் தொடர்பானது. (மேலும்....)

கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு இல்லை

புதிய தேர்தல் முறையை மாற்றுவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே எவ்வித இணக்கப்பாடும் ஏற்படவில்லையென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி நீர் வளம், நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப்ஹக்கீம் தெரிவித்தார். புதிய தேர்தல் முறைமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலும் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த அரசாங்கத்தின் பங்குதாரர்கள் என்ற வகையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நாம் ஏற்றுக் கொள்கிறோம். 19ஆவது அரசியலமைப்பை மாற்றுவது தொடர்பில் எமக்கும் பாரிய பொறுப்பு உண்டு. இந்த அரசியலமைப்பை மாற்ற வேண்டுமென்றே மக்களும் எதிர்பார்த்து வாக்களித்தனர். தனிக்கட்சி என்ற வகையில் மக்கள் ஆணைக்கு எதிராக நாம் செயற்பட முடியாது. நேற்று முன்தினம் அமைச்சரவை சந்திப்பில் 19ஆவது அரசியலமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க சகல கட்சிகளும் இணக்கம் தெரிவித்தன. எனினும் புதிய தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் கட்சிகளிடையே இணக்கப்பாடு ஏற்படவில்லை. சிறுபான்மை கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக காணப்படுவதால் (இன்று) நேற்று எனது வாசஸ்தலத்தில் சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களுடன் விசேடசந்திப்பொன்று நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மனோ கணேசனின் கட்சி, மலையக மக்கள் முன்னணி, மலையக கட்சிகள், வடக்கில் இருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, டக்ளஸ் தேவானந்தா உட்பட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ள உள்ளனர்.

பங்குனி 16, 2015

 

அதிகாரப் பகிர்வே தமிழரின் எதிர்பார்ப்பு, 13வது திருத்தம் இறுதித் தீர்வு இல்லை - சி.வி. விக்னேஸ்வரன்

தேசியப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு 13 வது திருத்தம் அல்ல என்றும் தேசியப் பிரச்சினை தீர்வில் இந்தியா முழுமையாக உதவ வேண்டும் என்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமரிடம் கேட்டுக் கொண்டார். யாழ். நூலகத்தில் இடம்பெற்ற யாழ். கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றும் போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 13 வது திருத்தம் இறுதித் தீர்வல்ல. அதிகாரப் பகிர்வே மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ள போதும் இதில் நாம் பெரும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. 13 வது திருத்தமானது பலமிழக்கச் செய்யப்பட்ட ஒன்றாகவே உள்ளது. சமத்துவம், சகலரும் சம உரிமையுடன் கெளரவத்துடன் வாழ்வது உறுதி செய்ய ப்பட வேண்டும். இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே கொண்டுவரப்பட்டது என்றும் அது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை. இலங்கையின் தேசியப் பிரச்சினை தீர்வுக்கு இந்தியா முழுமையான உதவி வழங்க வேண்டியது முக்கியமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 13 ற்கு அப்பால் சென்று பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாகத் தெரிவித்தார். அது நிறைவேற்றப்படவில்லை. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு முழுமையான உதவியினை இந்தியா வழங்கும் என்ற நம்பிக்கை எமக்குண்டு.

 

ஐ.ம.சு.மு புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டு ள்ளார். இதேவேளை ஐ. ம. சு. மு. வின் புதிய தேசிய அமைப்பாளராக ஜனக்க பண்டார தென்னகோன் தெரிவாகியுள்ளார். ஐ. ம. சு. மு.வின் தலைவர்கள் கட ந்த சனிக்கிழமை கொழும்பில் கூடி ஆராய்ந்த போதே இந்த புதிய நியமனங்கள் வழங்கப்பட்டன. கட்சியின் பொதுச் செயலாளராக சுசில் பிரேமஜயந்த தொடர்ந்தும் பதவி வகிப்பதாகவும் இதன் போது தீர்மா னிக்கப்பட்டது. இதற்கு மேலதிகமாக ஐ. மு. சு. மு.வின் உதவிச் செயலாளராக மஹிந்த சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளரான ஜனக்க பண்டார தென்னகோனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு அவர் பதிலளிக்குகையில் விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் ஐ. ம. சு. மு.வின் உறுப்பினர்கள் அல்லவென அவர் பதிலளித்தார்.


இலங்கை தொழிலாளர் கட்சியில் மஹிந்த போட்டி?

அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை தொழிலாளர் கட்சியில் போட்டியிடவிருக்கின்றார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.எஸ்.பி. லியனகே தலைமையிலான இலங்கை தொழிலாளர் கட்சி தொழிற்படுகின்றது. இவர், கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தன்னுடைய வேட்மனுவை ஏற்காது என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருதுவதனால், அடுத்த தேர்தலில் இலங்கை தொழிலாளர் கட்சியில் அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் நடத்தப்படும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது அறிவிக்கப்படும் என்று லியனகே தெரிவித்தார்.
 

'தோழர் ஐரோம் ஷர்மிளா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

1972-ல் பிறந்த ஐரோம் ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என அனைவராலும் அழைக்கப்படுபவர்.நவம்பர் 4, 2000 முதல் இன்று வரை இவர் உண்ணா விரதம் இருந்து வருகிறார். இவர் அப்படி இருக்கக் காரணம் என்ன? ஜனநாயக் நாடு என சொல்லப் படும் இந்தியாவில் உள்ள மணிப்பூரில் என்ன நடக்கிறது?செப்டம்பர் 11, 1958 முதல் அருணாச்சல ப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் Armed Forces (Special Powers) Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தின் முலம் இராணுவத்திற்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகள் பொது மக்களைக் கொன்று குவிக்கலாம் எனும் அளவில் இருக்கிறது.* இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.* மேலும் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.* இதற்காக அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.* இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.இதனை பயன்படுத்தி இராணுவம் அப்பாவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. (மேலும்....)

புதிய தேர்தல் முறைமையில் தினேஷின் யோசனைகள் நீக்கம்

புதிய தேர்தல் முறைமையின் போது, முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள யோசனைகள் நீக்கப்பட்டு புதிய யோசனைகளை சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளில் முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அந்த முரண்பாடுகளை தீர்ப்பதற்கு இன்னும் காலம் எடுக்கும் என்றும் தெரியவருகின்றது. இதனையடுத்தே, தினேஷ் குணவர்தன தலைமையிலான குழுவின் அறிக்கையை ஏற்காமல் விடுவதற்கு அரசியல் கட்சிகள் சில தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. (மேலும்....)

கனடாவில் ஒரு காதல் அரண்மனை!

தாஜ்மகாலைப் போன்று கனடாவில் உள்ள டொரொன்டாவிலும் ஒரு காதல் சின்னம் உள்ளது. 1851ல் அமெரிக்காவில் பிறந்தவர் ஜார்ஜ் சார்ல்ஸ் போல்ட். பல நட்சத்திர ஓட்டல்களுக்கு சொந்தக்காரரான இவர், ஆரம்பக் காலத்தில், கிளப் ஒன்றில் பணியாற்றினார். அங்கு மேனேஜராக இருந்தவரின் மகளான லூயீசை காதலித்து, 1877ல் மணந்தார். தன் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, தன் காதல் மனைவிக்கு அரண்மனை அமைக்க முடிவு செய்தவர், டொரொன்டாவில் தண்ணீர் சூழப்பட்ட இடத்தில் அரண்மனை ஒன்றை கட்டினர்.
உலகின் விலை உயர்ந்த பொருட்களால் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்த நிலையில், ஒருநாள், தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றிருந்தார் போல்ட். இந்நிலையில், அவரின் மனைவி இறந்து விட, மனைவியின் பிரிவால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த போல்ட், தன்னுடைய 65 வயதில் மரணம் அடையும் வரை, காதல் அரண்மனைக்குள் போகவில்லை.

பூமியுடன் கிரகமொன்று மோதியதால் ஏற்பட்ட சிதறல்களால் உருவானதே நிலவு

பூமி உருவான சமயத்தில் அதன் மீது வேறொரு கிரகம் மோதிய பின்னர் பூமியைச் சுற்றி உருவான கோளம்தான் நிலா என்ற அறிவியல் கோட்பாட்டுக்கு ஆதரவான ஒரு ஆதாரம் கிடைத்திருக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவுக்குச் சென்றிருந்த விண்வெளி வீரர்கள் எடுத்து வந்த நிலவுப் பாறைகளில் இரசாயன ஆய்வுகளை மேற்கொண்ட ஜேர்மனி விஞ்ஞானிகள் இதனைத் தெரிவிக்கின்றனர். 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக பூமியின் மீது வேறு ஒரு கிரகம் வந்து பயங்கரமாக மோதியது என்பதும், அப்படி மோதிச் சிதறிய சிதறல்கள்தான் பூமியைச் சுற்றி ஒன்று திரண்டு நிலவு உருவானது என்பதும்தான் 1980 கள் முதல் விஞ்ஞானிகள் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடாக இருந்து வருகிறது. அப்படி மோதியதாகக் கருதப்படும் கிரகத்துக்கு கிரேக்க புராணத்திலிருந்து எடுத்து ‘தியா’ என்ற ஒரு பெயரை விஞ்ஞானிகள் கொடுத்திருந்தார்கள். (மேலும்....)

ப்பன் என்று உறவுகளால் அன்புடன் அழைக்கப்படும் கமலநாதன் நடராசா ஆகிய தோழனாகவும் -போராளியாகவும- மனங்களில் வாழும் என் சகோதரனின் நினைவுகள்
 

1964-1987


1964 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் நாள் நடராசா இரத்தினம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அமைதி ,ஆழ்ந்த சிந்தனை, பொறுப்புணர்வு, நிதானம், துடிப்பு ,செயலாற்றல், இயல்பாக அமைந்திருந்தன. பலராலும் விரும்பப்படும் வசீகரம் இருந்தது.
உரும்பிராய் சைவத்தமிழ் ,மகாஜனா கல்லூரிகளில் பயின்றவர். தமது பள்ளிநாட்களிலேயே தோட்டம் வீடு என எல்லாவிதமான வேலைகளிலும் ஈடுபட்டார். கவிதை மற்றும் இலக்கிய ஈடுபாடு, நேர்மை சமூக அக்கறை கொண்டவர். 1983 இன்முற்பகுதியில் புலம்பெயர்ந்து சுவிற்சலாந்து சென்றவர் சில மாதங்களிலேயே இலங்கையில் நிகழந்த இனவன்முறை கலவரங்கள் - நிகழ்ந்த சம்பவங்களின் பாதிப்புக்கள் தாக்கங்களால் மீண்டும் நாடு திரும்பி ஈழப்புரட்சி அமைப்புடன் தன்னை இணைந்து சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.(மேலும்....)

திருட்டு டிவிடிக்களை ஒழிக்கவும் சிறுபடங்களை கரை சேர்க்கவும் இயக்குநர் சேரன் எடுத்திருக்கும் முயற்சி

திருட்டை எதிர்க்கும் கடமை எல்லோருக்குமானது. திருட்டு டிவிடிக்களை ஒழிக்கவும் சிறுபடங்களை கரை சேர்க்கவும் இயக்குநர் சேரன் எடுத்திருக்கும் இந்த முயற்சி ஆரோக்கியமானது. துணிச்சலானது. அத்தியாவசியமானது. இப்பெரும் முயற்சியில் என் சிறுபங்கை ஆற்றிவிட்ட திருப்தி எஞ்சுகிறது. பெரும்படங்கள் குப்பை என்று தெரிந்தபிறகும் தியேட்டருக்கு சென்று 500 ரூபாய் செலவு செய்யும் நாம் இதுபோன்ற நல்ல முயற்சிகளுக்கு 50 ரூபாய் செலவு செய்யலாமே ! இதில் பங்குபெறுவதும் இதைப் பற்றி பேசி எழுதுவதுமே சினிமாவை நேசிப்பவர்கள் இங்கு செய்யக்கூடிய பேருதவி. சுயவிளம்பரங்கள் தாண்டி நல்ல விளம்பரங்களுக்கும் முகநூலை பயன்படுத்தலாமே !! நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக இதனை செய்வீர்கள் என்று நம்புகிறேன். வேண்டுகிறேன் !!! முதலில் C2H பற்றி படிக்கையில், சினிமா அனுபவத்தை இது குறைத்துவிடுமோ என்று தோன்றியது. ஆனால் இந்த டிவிடியை கம்ப்யூட்டரில் போட்டு அமர்ந்ததும், ஏனோ, படைப்பாளிக்கும் பார்வையாளனுக்குமான, தமிழ் சினிமா வியாபாரத்திற்கான, அடுத்த கட்டம் கண்முன் ஓடுவதாய் தோன்றுகிறது.

பங்குனி 15, 2015

(Sutha Nada)

India should have intervened - Varatharaja Perumal

(by Dilrukshi Handunnetti)


The Chief Minister of the former United North-eastern Province, Varatharaja Perumal believes that India should have intervened, in the absence of political will at home, to ensure the continuity of a united North-eastern provincial Council. Perumal noted that the new government has facilitated the Tamil National Alliance (TNA) and instead of faultfinding, the TNA should have made strong attempts to seek a political solution to the ethnic question. ....It is not simply the Tamil version but a version accepted by the Sinhala leaders since 1957. S.W.R.D. Bandaranaike in 1957, Dudley Senanayake in 1965, J. R. Jayewardene when negotiating with India during 1983 to 1987, Sri Lanka Freedom Party Manifesto in 1988, Mangala Moonesinghe-led Committee under Ranasinghe Premadasa, Gamini Dissanayake in 1993, Chandrika Bandaranaike during 1995 to 2000 and the multiparty initiative led by Prof. Tissa Vitarana in 2006, had invariably accepted that the colonisations in the State lands was a serious contributor to the creation of ethnic crises in Sri Lanka. If the Sinhala leaders do not have any discreet wish to further the Sinhala colonisations in the Tamil areas, what is their genuine problem in handing over the land powers to the PCs under the 13 Amendment?..... (more....)

“இந்தியா மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது தானே?” - “ஆம்”,  -TNA

அப்படியாயின், “கால அவகாசத்தை வழங்குங்கள் புதிய அரசில் மாற்றம் தெரிகிறது” - மோடி


“இது ஒரு புதிய அரசாங்கம் ஆகவே நீங்கள் அவர்களுக்கு காலஅவகாசம் வழங்க வேண்டும். தமிழ் மக்களின் அர சியலில் மிக நீண்ட கால அரசியல் அனு பவத்தைக் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தற்போதுள்ள புதிய சூழ லில் நிறையவே பொறுமை தேவை. தமிழ்த் தேசியக் கூட்மைப்பு முன்னர் ஏனைய அரசாங்கங்களோடு அணுகியதைப் போல இந்த அரசாங்கத்தோடு அவசர அவசரமாக எவ்விடயத்தையும் சிந்திக்காது அணுகக்கூடாது. ஏனெனில் இது ஒரு புதிய அரசாங்கம். பல நம்பிக்கை தரும் மாற்றமான கருத்துக்களை இந்த அரசாங்கம் கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது மூலோபாய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். கூட்டமைப்பின் மூலோபாயக் குழு இவை தொடர்பில் விரிவாக ஆலோசித்து புதிய மூலோபாயங்கள் தந்திரோபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசவேண்டும். இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்தியா எப்பொழுதும் உதவியாக இருக்கும் என இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார். (மேலும்....)

முடிவுறும் லீக் போட்டிகள்

காலிறுதிக்கு தகுதிபெறும் அணிகள் எவை?

11வது உலகக் கிண்ணப் போட்டி லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவுக்கு வருகின்றன. இன்றைய ஆட்டத்தின் முடிவுகளின்படி ‘பி’ பிரி விலிருந்து எவ்வணிகள் காலிறுதிக்குத் தெரிவாகும் எனத் தீர்மானிக்கப்படும். ஏற்கனவே இப்பிரிவிலிருந்து 1ம், 2ம் இடங்களுக்கு இந்திய, தென்னாபிரிக்க அணிகள் தெரிவாகியுள்ளன. மற்றைய இரு இடங்களுக்குமான போட்டியில் இன்று நடைபெறும் மேற்கிந்தியதீவுகள் - ஐ. அ. இராச்சியம், அயர்லாந்து - பாகிஸ் தான் அணிகளுக்கிடையில் நடைபெறும் போட்டிகளின் முடிவுகளுக்காகக் காத்தி ருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரிவில் அயர்லாந்து - பாகிஸ்தான் போட்டியில் வெற்றி பெறும் அணி 8 புள்ளிகளுடன் நேரடியாக காலிறுதிக்குச் செல்லும். இன்று நடைபெறும் மற்றைய போட்டியில் மே. இந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றால் அவ்வணியும் 6 புள் ளிகளைப் பெறும். அயர்லாந்து - பாகி ஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி யில் தோல்வியுறும் அணியும் 6 புள் ளிகளுடன் இருப்பதால் நிகர ஓட்ட அடிப்படையில் காலிறுதிக்குச் செல்லும் அணி தெரிவாகும். (மேலும்....)

பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் - ஒரு ஆண் நிலைநோக்கு

நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.
மாலை 5.30 மணிக்கு சமூகமளிக்கவும்
சிற்றுண்டிகளுடன் ஆரம்பமாகும் நிகழ்வு
பறை, அரங்க நிகழ்வு, உரைகள், மற்றும் கலந்துரையாடல் என்பன நடைபெறும்
காலம் செல்வம் அவர்களின் வாழும் தமிழ் நூல்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்படும்.

வ.க.செ மீராபாரதி

தமிழ்மக்கள், தமிழீழக் கோரிக்கையை முழுமையாக கைவிட்டதாகச் சொல்ல மாட்டேன்; ஆனால் தனிஈழம் சாத்தியமற்றது என்ற மனநிலையில் இருக்கின்றார்கள் - "புளொட்" தலைவர் த.சித்தார்த்தன்

தர்மலிங்கம் சித்தார்த்தன்... ஈழச்சிக்கலுக்காக 1985ம் ஆண்டு இந்தியாவின் மேற்பார்வையில் நடந்த திம்பு பேச்சுவார்த்தையில் “புளொட்” இயக்கத்தின் பிரதிநிதியாக பங்கேற்றவர் இவர். இப்போது “புளொட்” இயக்கத்தின், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தலைவராக இருக்கின்றார். இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கும் அவர் சென்னை வந்திருந்தார். அவரை "குமுதம்" சஞ்சிகையினர் நேரில் சந்தித்து ஈழத்தின் இன்றைய நிலை குறித்து கேட்டபோது அவர் வழங்கிய கருத்துக்கள்!...(மேலும்....)
 

யாழில் வீடுகளை கையளித்தார் மோடி

இந்திய வீட்டுத்திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி பயனாளியிடம் கையளித்தார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீட்டுத்திட்டத்தில் இளவாலை வடமேற்கு பிரதேசத்திற்கு ஒதுக்கப்பட்ட 361 வீடுகளில் நிர்மாணிக்கப்பட்ட வீடு ஒன்றை பயனாளியிடம் கையளித்தார். அத்துடன் 10 வீட்டு பத்திரங்களையும் பயனாளிகளிடம் வழங்கி வைத்தார். இதன்போது உரையாற்றிய இந்திய பிரதமர நரேந்திர மோடி, நான் மேற்கொண்ட பயணங்களில் என்னை கண்கலங்க வைத்த பயணமாக இன்றைய பயணம் உள்ளது. இலங்கையை சுனாமி தாக்கிய போது பாதிப்படைந்த மக்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்திய வீட்டுத்திட்டம் தற்போது போரால், பிற காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் செயற்படுத்தப்பட்டு வருகிறது. 45 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 20 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிறைவடையும் நிலையிலுள்ளன. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாக எண்ணி செங்கற்களால் மட்டும் கட்டி இவ்வீட்டுத்திட்டத்தை இந்தியா வழங்கவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை கட்டியெழுப்புவதாக எண்ணியே இதனை நாங்கள் செய்கின்றோம் என மோடி மேலும் கூறினார்.

யார் வென்றாலும் பலஸ்தீனர்கள் தோற்கும் இஸ்ரேல் தேர்தல்

இஸ்ரேலில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருக்கிறது. நாட்டின பாதுகாப்பு, சலுகைகள், பொரு ளாதார வளர்ச்சி என்று வேட்பாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வழங்குகிறார்கள். ஆனால் எவரும் பலஸ்தீனர்களுடனான “அமைதி” பற்றி உறுதியாக வாக்குறுதி அளித்ததாக தெரியவில்லை. “ஒரு கறுப்பு ஓநாய், அப்படி இல்லை என்றால் ஒரு வெள்ளை ஓநாயின் கதைதான் இது. இந்த இரண்டுமே வஞ்சகத்துடன் வேட்டையாடுபவைதான்” என்று காசாவில் கழுதை வண்டி ஒன்று ஓட்டிச் சென்றுகொண்டிருந்த 85 வயது ஹுஸைன் அப்துல்லாஹ் போகிற போக்கில் இஸ்ரேல் தேர்தல் பற்றி விமர்சித்தார். அப்துல்லாஹ்வுக்கு இஸ்ரேலின் 67 வருட வரலாற்றில் நடந்த எல்லா தேர்தல் பற்றியும் அத்துப்பிடி. தேர்தலில் போட்டியிடுவபர்கள் இடதுசாரி, வலதுசாரி என்றெல்லாம் பெரிதாக சொல்வார்கள். இதுவரை எந்த மாற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. (மேலும்....)

தமிழர்களின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக மாற்றி அதை அழித்த பெருமை புலிகளையே சாரும்

நண்பர் ஒருவர் கேட்டார் எதற்காக புலிகளை அதிகமாக விமர்சிக்கின்றீர்கள் என்று, அதற்கு நான், புலிகளை நாம் விமர்சிக்காமல் என்ன வெள்ளகாரனோ வந்து விமர்சிக்க போகிறான் என்றேன். இதே கேள்வி உங்களில் பலருக்கும் எழலாம் என்பதற்காகவே இந்த பதிவை இங்கே தருகின்றேன். புலிகள் முன்னர் போராடிய காலங்களில் அவர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் இருந்தும் ஒரு நம்பிக்கை இருந்தது "தலைவர்" பிரபாகரன் காலத்திற்குள் தமிழர்களின் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என. ஆனால் நிலைமைகள் அப்படி இருக்கவில்லை. எமது பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல அரிய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அவற்றை எல்லாம் உதறித்தள்ளி அவ்முயற்சியுடன் சம்பந்தப்பட்ட அனைவரையும் கொன்றொழித்து இறுதியில் தாங்களும் அழிந்து முழுப்போராட்டத்தையும் அழித்து இன்று தமிழ் மக்களை நடுத்தெருவில் நிறுத்திச் சென்றுள்ளார்கள். (மேலும்....)
 

பங்குனி 14, 2015

13க்கும் அப்பால் தீர்வினை காண்பதற்கு துணை நிற்போம் - இந்தியப் பிரதமர்

தமிழர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் அபிலாஷைகளை நிறைவேற்ற வழிவகுக்கும்

*மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு

* திருமலையை எரிபொருள் கேந்திரமாக மாற்ற இந்தியா உதவும்

13வது திருத்தச் சட்டத்தை விரைவில் முழுமையாக அமுல்படுத்துவது அல்லது அதற்கும் அப்பால் செல்வதானது தமிழர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரின் அபிலாஷைகள் நிறைவேற்றும் நடவடிக்கைகளை வலுப்படுத்தும் என இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார். இரு நாட்டுக்கும் இடையிலான மீனவப் பிரச்சினை, மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மனிதாபிமான விடயங்களை உள்ளடக்கியது என்பதால் இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண சிறிது காலம் எடுக்கும். இரு நாடுகளும் இணைந்து நீண்டகாலத் தீர்வொன்றைக் காண்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். (மேலும்....)

 

எமக்கு

வறுமையின் நிறம் சிவப்பு அல்ல

 

 

சாப்பாடு ருசியாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்.....?

 

இலங்கை-இந்தியாவுக்கு இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 4 ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான குழுவினருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம்.
2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்.
3.இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம்.
4.ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகியனவே கைச்சாத்திடப்பட்டன.

 

திருமதி லூர்த்தம்மா இளையதம்பி
(ராணி)

அன்னை மடியில் : 19 மே 1930 — ஆண்டவன் அடியில் : 12 மார்ச் 2015

 

யாழ். டேவிற் றோட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்த்தம்மா இளையதம்பி அவர்கள் 12-03-2015 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை மாகிறேற் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகன் வள்ளி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையதம்பி(வனவிலங்கு அதிகாரி) அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மலோஜினி(ஜெர்மனி), இமாக்குலெற்(குஞ்சு- பிரான்ஸ்), குமாரகுலசிங்கம்(குமார்- ஜெர்மனி), ஜெயமலர்(பவா- பிரான்ஸ்), யோசப்பின்(ஜோஜி- இத்தாலி), தர்மகுலசிங்கம்(ஜோர்ச் தம்பி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், (மேலும்....)

 

இந்தியாவுக்கு வரும் இலங்கையர்களுக்கு உடனடி விசா

இந்தியாவுக்கு வருகின்ற இலங்கை சுற்றுலா பயணிகளுக்கு உடனடி விசா வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் புகைத்தலை தடை செய்யவும்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட முஸ்லிம்கள் செறிவாக உள்ள ஊர்களில், முஸ்லிம்கள் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் புகைத்தல் உற்பத்திப்பொருட்களையும் அதன் விற்பனையையும் நிறுத்த சட்டமூலம் நிறைவேற்றுமாறு மாற்றத்திற்கான முஸ்லிம் இளைஞர் படையணி வேண்டுகோள் விடுத்துள்ளது. காத்தான்குடி நகரசபை மேற்கொண்ட நடவடிக்கை போல ஏன் மற்றைய ஊர்களிலும் மேற்கொள்ள முடியவில்லை என்று கேள்வியெழுப்பியிருக்கும் இப்படையணி உள்ளுராட்சி சபைகளுக்கு தமது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் அதனை விற்கக்கூடாது என்ற சட்டத்தினை நிறைவேற்ற முடியும் ஆனால் பெரும்பாலான சபைகளின் தலைவர்களே இப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள தருணத்தில் அவர்கள் எவ்வாறு தடுப்பர் என்று படையணி விமர்சித்துள்ளது. (மேலும்....)

 

இந்திய பிரதமரின் உரை வேதனையளிக்கின்றது - இராதாகிருஷணன்

மலையக மக்களை மறந்து இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையானது வேதனையளிப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன். இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக நாம் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்ததுடன் அவரது உரையை கேட்பதற்காக நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தோம். ஆனால், எமது சமூகத்தைப்பற்றியோ அல்லது எமது வரலாற்றை பற்றியோ அவர் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. நான் அந்த சமூகத்தை சார்ந்தவன் என்ற வகையில் இவ்விடயம் எனக்கு மனவேதனையை தருகின்றது. இந்திய பிரதமருடன் நேரடி சந்திப்பில் ஈடுப்படும்போது இவ்விடயம் தொடர்பாக கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன்' என குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ்த் தேசியமும் தமிழ் சினிமாவும்

”துப்புக்கெட்ட தமிழர்களே, டெல்லியிடம் படியுங்கள். கடுகு அளவும் அன்போ, நேர்மையோ, பொதுநலமோ இல்லாத அய்யாக்களின், அம்மாக்களின் அலப்பறைகளின் பின்னால்போய், அவர்கள் தரும் இலவசங்களுக்காககக் கையேந்தி, 200 ரூபாய்க்கு ஓட்டை விற்று உங்களையும் கொச்சைப்படுத்தி, உங்கள் குழந்தைகளையும் காட்டிக்கொடுக்கும் கேவலமானவர்களே…. டெல்லி மக்களைப் பாருங்கள். இனியாவது மூளையும், முதுகெலும்பும் பெற முயற்சி செய்யுங்கள். உங்கள் நலனுக்கான அரசியலைத் தேடுங்கள்!” அண்மையில் இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஊழலுக்கு எதிரான பிரசாரங்கள் மூலம் புரட்சிகரமாக ஆட்சியைக் கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி பற்றி ஆனந்த விகடன் சஞ்சிகைக்கு கருத்து வெளியிட்ட அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப உதயகுமாரன், தமிழ்நாட்டு தமிழர்களை நோக்கி விடுத்திருக்கும் அறைகூவல் இது. (மேலும்....)
 

பங்குனி 13, 2015

பெண்கள் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்களும் தீர்வுகளும்

கருத்தரங்கு

யூரோவில் மண்டபம்

(நல்லூர் சங்கிலியன் தோப்பு அருகாமை)

13-03-2015 இன்று மாலை 3.00மணி

சமூக ஆர்வலர்கள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

பெண்கள் விழிப்புணர்வு அரங்கம்

ஏற்பாட்டாளர்: ஞானசக்தி

"எல்லை தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளியிருப்போம்" - ரணில் விக்ரமசிங்கே

"எல்லை தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களைச் சுட்டுத் தள்ளியிருப்போம்" என இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். "ரணில் என்கிட்டே ரகசியமா மன்னிப்புக் கேட்டுட்டார். இதை அப்டியே விட்றுங்கோ..." என சுஷ்மா சுவராஜ் புன்னகைக்கிறார். கருணாநிதி மட்டும் மெல்லியதாக உறுமி விட்டு ஒய்ந்து விட்டார். அது யார் காதிலும் விழாத அளவிற்கு வலிமையான உறுமலாக இருந்தது. நரேந்திர மோடி இலங்கை செல்கிறார். ஏகப்பட்ட முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். கால் நூற்றாண்டில் முதன் முதலாக இலங்கை செல்லும் இந்தியப் பிரதமர் எனப் பெயர் தட்டிக் கொள்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக இலங்கை நாடாளுமன்றத்தில் வீர உரை ஆற்றப் போகிறார், கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் ஒரு முக்கிய காமன்வெல்த் நாட்டின் பிரதமர் என்கிற வகையில் கலந்து கொள்ள இருந்த பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எதிராக மிகப் பெரிய எதிர்ப்புகளைக் கிளப்பி, அவரைப் போகாமல் நிறுத்தியவர்கள் எல்லாம் இப்போது எங்கே? (Marx Anthonisamy)

சிகிரியா விவகாரம்

மகளை விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தாய் வேண்டுகோள்

சிகிரியாக் குன்றிலுள்ள கண்ணாடிச் சுவரில் தனது பெயரை உதயா எனப் பொறித்மைக்காக 2 வருட சிறைத் தண்டனை அனுபவித்துவரும் சித்தாண்டியைச் சேரந்த சின்னத்தம்பி உதயசிறியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், அவரது தாயான தவமணி சின்னத்தம்பி வயது (61, ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை முன்வைத்துள்ளார்.'தமிழ் மக்களாகிய நாங்கள் எல்லோரும் சேர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்தோம். இந்த நிலையில் எந்தக் குற்றமும் புரியாத எனது மகள் மட்டக்களப்பு மாணிக்கக் கற்கள் பட்டை தீட்டும் பயிற்சிக் கல்லூரியில் கடந்த 3 வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றார். (மேலும்....)

தேர்தல் முறையை மாற்றுவதில் கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாடு

தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் கட்சிகளிடையில் அடிப்படை இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்காக நூறுநாள் வேலைத்திட்டத்தை பணயம் வைக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நூறுநாள் வேலைத்திட்டம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு விடயம். இதற்கே அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. அரசியலமைப்பு திருத்தம், தேர்தல் முறை மாற்றம் குறித்த விடயங்கள் உறுதியளித்தபடி நிறைவேற்றப்படும். தேர்தல்முறை மாற்றம் தொடர்பான அடிப்படை இணக்கப்பாட்டுக்கு கட்சிகள் யாவும் வந்துள்ளன. அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் தேர்தல்முறை மாற்றம் தொடர்பாக ஆராய்வதற்கு தெரிவுக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுக் கூட்டத்தில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக அடிப்படை இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் இக்குழுவின் ஊடாக தீர்மானமொன்றுக்கு வர முடியும்.

இந்தியப் பிரதமர் இன்று வருகை

பாராளுமன்றத்தில் இன்று உரை யாழ்ப்பாணம், தலைமன்னார், அநுராதபுரத்திற்கு நாளை விஜயம்

இலங்கைக்கான இரண்டு நான் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இன்று இலங்கை வருகிறார். இன்று காலை 5.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்த டையும் இந்தியப் பிரதமருக்கு விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்படுகின்றது. அதனையடுத்து ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் செங்கம்பள வரவேற் பளிக்கப்படவும் ஏற்பாடாகியுள்ளதுடன் இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தையும் அங்கு இடம் பெறுகின்றது. சுமார் இரு தசாப்தங்களுக்குப் பின்னர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளும் இந்தியத் தலைவர் என்ற வகையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு மகத்தான வரவேற் பளிக்கப்பட்டு கெளரவமளிக்கப்படவுள்ளது. இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்க ப்பட்டு இந்தியப் பிரதமர் கெளர விக்கப்படவுள்ளார். (மேலும்....)

எனது தோல்விக்கு 'றோ' வும் வேலை செய்தது - மஹிந்த

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனது தோல்விக்கு இந்தியாவின் 'றோ' அமைப்பு மட்டுமல்ல மேற்கத்தேய அமைப்புகளும் சேர்ந்து வேலை செய்தன என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

பங்குனி 12, 2015

தலைமன்னார்

பரீட்சார்த்த ரயில் சேவை...

மடு புகையிரத நிலையத்திலிருந்து தலைமன்னார் பியர் புகையிரத நிலையம் வரைக்கும் பரீட்சார்த்த ரயில் சேவை, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவினால், இன்று புதன்கிழமை(11) வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் 13ஆம் திகதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் மறுநாள் 14ஆம் திகதி மடுவில் இருந்து தலைமன்னாருக்கான புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கவுள்ளார். குறித்த பரீட்சார்த்த புகையிரத சேவையை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.வை.எஸ்.தேசப்பிரிய, புகையிரத திணைக்கள அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் இணைந்து ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

ஈரோஸ் சுந்தர் பற்றி புஷ்பராணியும், டக்ளஸ் உம் நினைவு கூருகின்றனர்

எம்மை விட்டு மறைந்து போன கி. பி. அரவிந்தன்[பிரான்சிஸ்] நினைவாகத் "தேனீ இணையதளத்துக்கு தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுதியிருந்த நினைவாஞ்சலியைப் படித்தேன். இதன் ஆரம்பத்தில் இவர் சொல்லியிருப்பவை தவறானவையாகும். "தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியாக அப்போது இளைஞர் பேரவையே இருந்தது." -- இதை எந்தக் காலத்தை மனதில் இருத்தி இவர் எழுதியிருக்கின்றார் 1975ம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலமா ...அல்லது 1973ம் ஆண்டுக்கும் 1975ம் ஆண்டு வரையிலான தமிழ் இளைஞர் பேரவை பற்றியதா...விபரம் சரிவரத் தெரியாமல் குழம்பி எழுதியிருக்கின்றார் என்று நினைக்கிறேன். இன்னும் அவர் கூறுவதை இங்கு தருகின்றேன்.(மேலும்....)

தெறி மாஸ்..!

'நாக் அவுட்’ ஜுரம் தொற்றிக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் உலகக் கோப்பையில்!

பாகிஸ்தானுடனான போட்டியில் வெற்றியுடன் ஆரம்பித்த இந்திய அணியின் பயணம் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்க, உற்சாகத்தில் திளைக்கிறது டீம் இந்தியா. ஆனால், எப்போதும் அல்லாத அளவுக்கு இந்த முறை நியூஸிலாந்து அசுர பலத்துடன் விளையாடுவது அனைத்து முன்னணி அணிகளுக்கும் கிலி கிளப்பியிருக்கிறது. அதுவும் இந்தியா அரை இறுதிக்கு முன்னேறினால், நியூஸிலாந்துடன் மோதும் சூழல். அந்தப் போட்டி நியூஸிலாந்திலேயே நடக்கும் என்பதால், சொந்த மண் பலன் உண்டு நியூஸிலாந்துக்கு. வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான அந்த மைதானம்தான், இந்தியாவுக்கு உண்மையிலேயே சோதனைக் களம்!  (மேலும்....)

இதுதான் வாழ்க்கை - Life Cycle
 

சொன்னதை செய்வாரா ?

'தற்போதுள்ள எதேச்சாதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக அமைச்சரவையூடாக நாடாளுமன்றத்தோடு தொடர்புடைய நிறைவேற்று முறையொன்றை அறிமுகப்படுத்தல்' உள்ளிட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் நகலை ஜனவரி மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக, மைத்திரிபால சிறிசேன, தேர்தல் காலத்தில் எந்த அடிப்படையில் மக்களுக்கு வாக்குறுதியளித்தார் என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஏனெனில், ஜனவரி மாதம் 21ஆம் திகதியிலிருந்து ஒன்றரை மாதம் சென்றுள்ள போதும் அந்த நகல் சட்டத் திருத்தம் எப்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. அந்த சட்ட வரைவு தயாராக இருப்பதாக பிரதமர் கடந்த சனிக்கிழமை கூறியிருந்த போதிலும் இந்தத் தாமதத்தை புரிந்து கொள்வது கடினமாகவே இருக்கிறது. (மேலும்....)

பலாலி மீள்குடியேற்ற பிரதேசங்களை பார்வையிட மக்களுக்கு அனுமதி

வலி. வடக்கு வளலாய் பகுதியில் 1000 ஏக்கர் காணிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ள பிரதேசங்களை நாளை வெள்ளிக்கிழமை மக்கள் சென்று பார்வையிட்டு காணிகளை உறுதிப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற செயலணி குழுவினர் உறுதியளித்துள்ளனர். வலி வடக்கு வளலாய் பகுதியில் 1000 ஏக்கர் காணியில் மக்களை மீள்குடி யேற்றுவதற்கான நடவடிக்கைகள் மீள்குடி யேற்ற அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று புதன்கிழமை மீள் குடியேற்ற செயலணியின் கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசாங்கம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வளலாய் பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் தமது காணிகளை சென்று பார்வையிட முடியும்.  நாளை வெள்ளிக்கிழமை (13.03) காங்கேசன்துறை வீதி தொண்டமானாறு சந்தி அமைவிடத்தில் பொது மக்களை ஒன்று கூடுமாறும், பிரதேச செயலக அலுவலர்களின் மூலம் சீரான முறையில் பதிவுகளை மேற்கொண்டு தேவையான தகவல்கள் பதிவு செய்யப்படும். அதன் பின்னர், காணி உரிமையாளர் களினால் தமது காணிகளை அடையாளப் படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு அப்பகுதியில் மீள்குடியேற்றம் செய்வதற்கான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெள்ளிக்கிழமை முதல் மக்கள் தமது காணிகளை காலையில் இருந்து மாலைவரை சென்று பார்வையிட முடியும்.

உலகக் கிண்ணம்

இலங்கை அணி காலிறுதிக்கு தகுதி

ஸ்கொட்லாந்துக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியில் சதம் அடித்ததன் மூலம் உலகக் கோப்பையில் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார் குமார் சங்கக்கார. இப்போட்டியில் இலங்கை அணி 148 ஓட்டங்களால் வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கான தகுதியை உறுதி செய்தது. இதேவேளை குமார் சங்கக்கார உலகக்கிண்ணப் போட்டியில் விக்கெட் காப்பாளராக 36 போட்டிகளில் பணிபுரிந்து 56 ஆட்டமிழப்புக்களைச் செய்தும் அவர் மற்றுமொரு சாத னையை நிலைநாட்டியுள்ளார். இதற்கு முன்னர் அவுஸ்திரேலிய அணியின் விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் வசம் இச்சாதனை இருந்தமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக மெல்போனில் பங்களா தேஷ¤டன் இடம்பெற்ற போட்டியில் அட்டமிழக்காது 105 ஓட்டங்களையும், வெலிங்டனில் இங்கிலாந்துடன் இடம்பெற்ற போட்டியில் ஆட்டமிழக்காது 117 ஓட்டங்களையும் சிட்னியில் அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியில் 104 ஓட்டங்களையும் சங்கக்கார விளாசியிருந்தார்.ஸ்கொட்லாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியிலும் சதம் அடித்து, உலகக் கோப்பையில் தொடர்ந்து 4 சதங்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நல்லுறவுப் பாதையை சீர்குலைக்குமா வட மாகாண சபைத் தீர்மானம்?

இலங்கை அரசாங்கமானது தமிழ் மக்கள் மீது இன ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதாகவே வட மாகாண முதலமைச்சரினால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் எடுத்துச் சொல்கிறது. ஆனால இத்தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள் புலிகளினால் மற்றைய இனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கை பற்றி மெளனம் காத்திருப்பதானது ஆச்சரி யமாகவும் வேதனையாகவும் உள்ளது. 30 ஆண்டுகளாகபுலிகளால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பு இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மூடி மறைக்க முயலும் முன்னேற்பாடாக இதனைக் கருத வேண்டியுள்ளது. இக்காலப் பகுதியில் ஆயிரக்கணக்கான சிங்கள, முஸ்லிம் மக்கள் இன ஒழிப்புக்கு ஆளாக்கப்பட்டனர் என்பது மறைக்க முடியாத உண்மை. (மேலும்....)

பெண்களின் வாழ்வில் நம்பிக்கை கீற்றுக்களை உருவாக்கும் சமூக இடைவெளி வேண்டும்
(சர்வதேச பெண்கள் தினம் 2015)

பெண்களின் உரிமைகள் தொடர்பாக உலகளாவிய அளவில் நிகழும் மாற்றங்கள் இலங்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றன? நாடாளுமன்றம் மற்றும் மாகாண உள்ள+ராட்சி சபைகளில் பெண்களுக்குரிய முக்கியத்துவம் என்ன ? சமூகத்தில் பெண்களின் விகிதாசாரம் பற்றிய பிரக்ஞை இங்கு காணப்படுகிறதா? இலங்கையில் பெண்களை இந்த அவைகளில் தேடிக்கண்டு பிடிக்க வேண்டியிருக்கிறது. நிர்வாகம் கல்வி-ஆசிரியப்பணி சுகாதாரம் வங்கி போன்ற துறைகளில் பெண்கள் கணிசமான அளவு செல்வாக்கு செலுத்துகிறார்கள். ஆனால் நிலமானிய சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் பெண்களின் விமோசனத்திற்கு வளர்ச்சிக்கும் தொடர்ந்து தடையாக இருந்து கொண்டிருக்கின்றன. ஆணாதிக்க- நிலமானிய சிந்தனை முறையே இன்றளவில் எமது சமூகத்தில் ஆதிக்கம் வகிக்கின்றது. (மேலும்....)

பங்குனி 11, 2015

ஜெயலலிதா வழக்கு தீர்ப்பு இன்று அறிவிப்பு

தமிழக முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கின் மேன்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை அறிவிக் கப்படவுள்ளதாக இந் தியச் செய்திகள் தெரி விக்கின்றன. கர்நாடக உயர்நீதி மன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி முன்னிலை யில் இந்த வழக்கு நேற்று செவ்வாய்க் கிழமை 40வது நாளாக நடந்தது. வழக்கு விசாரணைக்கு சுப்பிரமணிய சுவாமி நாளை வருகிறாரா என்று கேட்ட நீதிபதி, அவர் வந்தாலும் வரா விட்டாலும், தீர்ப்பு நாளை அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கை மார்ச் 18ஆம் திகதிக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் 8 நாட்கள் முன்னதாக நேற்றுடன் வழக்கு விசாரணை முடிவ டைந்தது. கர்நாடக உயர்நீதிமன்ற விதிகளின்படி விசாரணை முடிந்து 13 நாட்களுக்குள் தீர்ப்பளிப்பது கட்டாயம் எ ன்பதால் எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

புஸ்பராஜாவை நினைவுக்கு கொண்டுவரும் சக போராளி

புஷ்பராஜா எனது சகோதரன் மட்டுமல்லாது ,என்னை அரசியல் வெளிகளுக்கு அழைத்துவந்த தோழனுமாவார். உலகம் அறியாதவளாக என்னைப் பொத்திப் பொத்தி வளர்த்த ,என் மூத்த அண்ணன் தியாகராஜாவுடன் வாதிட்டு என்னை வெளியுலகம் பார்க்கச் செய்தவர் புஸ்பராஜாவே. ..ஏராளமான சகோதரிகள் கொண்ட பொறுப்புள்ள குடும்பப் பின்னணி இருந்தாலும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது தனது இளமைப் பருவத்தின் பெரும் பகுதியைப் போராட்டங்களிலும் , சிறைகளிலுமே அவர் கழித்திருக்கின்றார். தனது குடும்பத்தாரையே, ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ,தனது வீட்டைப் போராளிகளின் கோட்டையாகவும் மாற்றி வைத்தவர், புஷ்பராஜா. (மேலும்....)

தாராக்கி 'செதுக்கிய' தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தேசியத் தலைவரின் ஆசிர்வாதத்தோடு சிவராம்(தராக்கி) அவர்களால் ஒழுங்கமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தேசியத் தலைவரின் விருப்பத்திற்கு ஏற்ப சம்மந்தர் ஜயா அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தலைவராக நியமித்தது தான் வரலாறு. அது தான் எம் தேசியத் தலைவரின் தொலைநோக்கு சிந்தனையில் உதிர்த்த விடையம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சம்பந்தன் ஜயா மற்றும் சுமந்திரனை வெளியேற்ற வேண்டுமென்று மேற்குலக நாடுகளில் இருந்து கூறுபவர்களிற்கு எப்படியான அதிகாரம் இருக்கின்றது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.(மேலும்....)

உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு தொடர்ச்சியாக 9வது வெற்றி

இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஐந்தாவது முறையாக எதிர் அணியை ஆல்அவுட் ஆக்கி புதிய சாதனையை படைத்தது- இதற்கு முன் நியூசிலாந்து அணியும் இந்த உலகக் கோப்பையில் 5 போட்டிகளில் தொடர்ச்சியாக எதிராணிகளை ஆல்அவுட் செய்துள்ளது. முதலில் பாகிஸ்தான் அணியை 224 ரன்களில் இந்திய அணி முடித்தது.அடுத்த ஆட்டததில் தென்ஆப்ரிக்க அணி 177 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் யு.ஏ.இ அணி 102 ரன்களில் வீழ்ந்தது. அடுத்து மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களில் ஆல்அவுட் ஆனது. அந்த வகையில் இந்தியாவை எதிர்த்து 250 ரன்களுக்கு மேல் அடித்து அசத்தியுள்ளது அயர்லாந்து அணி. உண்மையை சொல்லப்போனால் பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பலவீனம் என்றார்கள். இப்போது பந்துவீச்சுதான் இந்திய அணிக்கு பெரும் பலமாக மாறியுள்ளது. (மேலும்....)

காமராஜர் என்ற பெருந்தலைவர்

தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்! மாதம் 30 நாளும் கத்திரிக்காய் சாம்பார் வைத்தாலும் மனம் கோணாமல் சாப்பிடுவார். என்றைக்காவது ஒரு முட்டை வைத்துச் சாப்பிட்டால் அது அவரைப் பொறுத்தவரை மாயா பஜார் விருந்து! சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்கள் அன்பளிப்பு கொடுத்தால், 'கஷ்டப்படுற தியாகிக்குக் கொடுங்க' என்று வாங்க மறுப்பார்! மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்! பந்தாக்களை வெறுத்தவர். முதல் தடவை சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு கார் புறப்பட்டபோது தடுத்தார். 'நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?' என்று கமென்ட் அடித்தார்! இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

தயக்கத்தை தவிர்ப்போம் ! தலைநிமிர்ந்து நிற்போம் !!

நீல் ஆம்ஸ்ட்ராங்... இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?... பல பேருக்கு தெரியாது... அவர், எட்வின் சி ஆல்ட்ரின்... இவர் தான் நிலவுக்கு சென்ற அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி... ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர். மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக நியமிக்கப்பட்டார்... நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர். மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்... அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி... இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.(மேலும்....)

வடக்கு அதிவேகப் பாதை
ஒப்பந்தத்தைவிடவும் குறைந்த நிதியில் முன்னெடுக்க சீன நிறுவனம் இணக்கம்

வடக்கு அதிவேக பாதையை நிர்மாணிப் பதற்கு கடந்த அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு மாறாக 60 மில்லியன் அமெரிக்கன் டொலர் குறைவான நிதியில் திட்டத்தை முன்னெடுக்க சீன நிறுவனம் புதிய அரசாங்கத்துடன் இணக்கம் கண்டுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
அவ்வாறு கடந்த அரசாங்க காலத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அந்த சுமையும் மக்களையே சென்றடைந்திருக்கும் என்றும் குறிப்பிட்டார். உலக வங்கியின் கூற்றுப்படி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத வகையில் எமது நாட்டில் வீதி அபிவிருத்திக்காக நிதி செலவிடப்பட்டுள்ளமை அறிய வருகிறது. பெரும் மோசடியொன்று இதில் இடம்பெற்றுள்ளமை தெட்டத்தெளிவாக விளங்குகிறது. மக்களுக்கான நிதி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சிக்கான மக்கள் ஆணையைப் பெற்றுக்கொண்டுள்ள அரசாங்கம் என்ற வகையில் இவை அத்தனை திட்டங்களின் பின்னணி தொடர்பில் ஆராய்ந்து அனைத்து முறையற்ற செயற்பாடுகளையும் களைந்து முறைப்படி அவற்றை எதிர்காலத்தில் செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பங்குனி 10, 2015

ஈழவிடுதலை மூலவர் பிரான்சிஸ் இன் இழப்புத் துயர் பகிர்வு

ஈழவிடுதலைப் போராட்ட மூலவர்களின் ஒருவர் எம்மைவிட்டு பிரிந்துவிட்டார். தத்துவார்த்த அடிப்படையில் ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க புறபட்டவர்களில் இவரும் முக்கியமாவர். வீட்டைத் தேடிவந்து அரசபடைகள் கைது செய்து கொண்டு செல்லக் கூடிய காலச் சூழலில் தொழிலாள வர்க்கப் புரட்சி மூலமே தமிழ் பேசும் மக்களுக்கான நிரந்தரமான விடுதலையைப் பெற்று விடமுடியும் என்பதை இறுதிவரையும் கைக்கொண்டு தடம் புரளாமல் பயணித்த போராளி என்றால் அது தோழர் பிரான்சிஸ் இற்கு மெத்தப் பொருந்தும். இவரின் இழப்புத் துயரத்தில் சூத்திரம் இணையத் தளமும் ஏனைய போராளிகள், நட்பு வட்டங்கள், உறவுகள், எழுத்தாளர் குழாத்துடன் இணைந்து கொள்கின்றது.

பிராசிஸ் இன் மரணம் ஏற்படுத்திய வலி - வரதராஜப்பெருமாள்

எல்லோரும் என்னவெல்லாமோ சொல்லுகிறார்கள். நான் என்ன சொல்லுவேன்! எப்படிச் செல்லுவேன்! எவற்றை மட்டும் சொல்லுவேன்! ஒரு காலம் நண்பர்கள் தோழர்கள், ஈழப் பிரச்சாரகர்கள், போராளிகள், புரட்சிக்காரர்கள் என்ற எல்லாவற்றிற்கும் மேலாக பத்மநாபா, புஸ்பராசா என ஒரு தனிக் கோலம் கொண்ட நால்வர் என்று இருந்த எங்களில் இன்று மூவர் இல்லை. கடந்த சில ஆண்டுகளில் தொலைபேசியினூடாக இடைக்கிடை என்னோடு பேசிக் கொண்டிருந்த பிரான்சிஸை இனி நான் கண்ணால் பார்க்கும் வாய்ப்பு இல்லாமலேயே போய்விட்டது என்று கேள்விப்பட்டதிலிருந்து என் மனம் இன்னமும் கல்லாகிப் போயிருக்கிறது. கலங்கிப் போயிருக்கும் என் மூளை சுமதிக்கும் அவர் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்ல மட்டும் அனுமதிக்கிறது.

கோட்டாவுக்கு 'தடா'!

பொன்சேகாவின் 'தடா, நீக்கம்!!

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கடற்படை முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க ஆகிய இருவரும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவு இன்று திங்கட்கிழமை காலை 10.33 முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். காலி துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டிருந்த அவன்காட் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுத களஞ்சிய சாலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இரகசிய பொலிஸார் விடுத்த வேண்டுகோளையடுத்தே நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.  காலி பிரதான நீதவான் நிலுபீலி லங்காபுர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமன்றி இந்த சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மஞ்சுள குமார யாப்பா மற்றும் கருணாரத்ன பண்டார ஆகியோருக்கும் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதே வேளை அனுமதியின்றி வெளிநாடு செல்வதற்கு பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவையும் நீக்குமாறு நீதிபதி குடிவரவு குடியகல்வு கட்டுப் பாட்டாளருக்கு உத்தரவிட்டார்.

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வரவேண்டாம் - சுரேஸ் பிரேமச்சந்திரன்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு திரும்பி வந்த பத்திற்கு மேற்பட்ட தமிழர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தமிழர்களில் அதிகமானோர் கடந்த கால யுத்தம் காரணமாக இலங்கையை விட்டு போனவர்கள். அத்துடன் இலங்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் அவர்களை நாட்டுக்கு திரும்பி வருமாறு அழைப்பு விடுத்தன் பேரிலேயே அவர்கள் நாட்டுக்கு திரும்பினர். (மேலும்....)

 

மீண்டும் சந்திரிக்கா யுகம்?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முற்றுமுழுதாக மறுசீரமைத்து புதிய திட்டங்களை அமுல்படுத்தும் பொறுப்பு சந்திரிக்காவிடம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் திட்டமிடல் கமிட்யின் தலைவியாக சந்திரிக்கா நியமிக்கப்பட்டுள்ளார். அதன் செயலாளராக ஹொரணை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவு செய்யப்பட்டு உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எச். ஆரிசேன தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் கட்சியின் தேவைகளை கருத்திற் கொள்ளாது. தனிப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சிக்கப்பட்டதனால் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைகளை முற்று முழுதாக நிறுத்தி, கட்சியை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கட்சியை விட்டு விலகிப் போன சிறுபான்மை கட்சி உறுப்பினர்கள் மீள இணைத்துக் கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

செல்வம் பொய்யன்! சம்பந்தன் மறுப்பு..!

அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக சம்பந்தன் எச்சரித்தாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அரசியல் தீர்வு விரைவில் வழங்கப்படாத பட்சத்தில், அரசாங்கத்தில் இருந்து விலக விருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜிடம் எச்சரிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரண்டு தரப்புக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது. இதன் போது சம்பந்தன் இந்த எச்சரிக்கையை விடுத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். ஆனால் அவ்வாறான எந்த கருத்தையும் சம்பந்தன் முன்வைக்கவில்லை என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஐக்கிய நாடு ஒன்றுக்குள் தீர்வினை பெற வேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருப்பதாகவும், அரசாங்கம் அதனை வழங்கும் என்று நம்புவதாகவுமே சம்பந்தன் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

ENGRAVE THE QUALITIES OF ADVANCED CIVILIZATION AS THE BASIC STRUCTURE OF THE CONSTITUTION

(Varatharaja Perumal) (Former Chief Minister of North –East Province of Sri Lanka)

Only the provision of voting rights to the people, existence of multi-parties and time to time conducting election to different political posts do not mean that true democracy prevails in its full meaning. In fact, the democratic civilization has, through the historical political development, accumulated wider constituents and components. The experiences and experiments through which Sri Lanka has so far undergone prove that it is essential for Sri Lankan Constitution to have the provisions of basic structures as inalienably enshrined in it. Constitutional democracy in the industrialized European and American Countries do not need to have such provisions in their Constitution because the democracy in those countries are evolved compatibly to the historical development of their political economy. But that is not the case with the countries which were under the European colonialism ruled for more than two to three centuries. (more.....)
 

பங்குனி 09, 2015

லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம்! - சனல் 4 தொலைக்காட்சி

லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். யாழ் வுட் தடுப்பு முகாம் என்றது எங்கே இது தமிழர்கள் தடுப்பு முகாமா என்று நினைக்கவேண்டாம். ஆனால் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் இங்கே தான் ஈழத் தமிழ் பெண்களையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் பிரித்தானிய இமிகிரேஷன் அதிகாரிகள். (மேலும்....)

என் மகனுக்குத் திருந்தி வாழ்வதற்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள். அவன் செய்த தவறுக்காக அவனை மன்னித்துவிடுங்கள்” - மயூரனின் அம்மா.

பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில் பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்ட கடற்கரையொன்றில் மயூரன் சுகுமாரன்,
இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டுத் தனி கம்பங்களுடன் சேர்த்துக் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் பத்து மீற்றர் தூரத்தில் வைத்துத் தமது துப்பாக்கிகளை இயக்குவதன் மூலம், மரண தண்டனையை நிறைவேற்றுவர்.(மேலும்....)

இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற வேண்டுமா...?

உடல் எடை குறைக்க என்பது இன்றைய காலக்கட்டத்தில் பல பேருக்கும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. உடல் எடை குறைப்பிற்கு பல இயற்கை தந்த பழங்கள் உள்ளது. அப்படி உடல் எடையை குறைக்க தூண்டிவிடும் ஒரு கனி தான் நெல்லிக்காய். இந்திய கூஸ்பெர்ரி என அழைக்கப்படும் நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்களும், வைட்டமின்களும் வளமையாக உள்ளது. இரண்டே வாரத்தில் தொப்பையை குறைத்து தட்டையான வயிற்றைப் பெற நெல்லிக்காய் பயன்படுகிறது. நெல்லிக்காயை அப்படியே உண்ணலாம் அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம். நெல்லிக்காய் ஜூஸில் பல பயன்கள் அடங்கியுள்ளது, அது உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. (மேலும்....)

ஈழமாம், தேசியமாம்..

ஒதுங்க ஒரு ஓலை வீடாவது வேண்டும்

காணி காணி என்று வெளிநாட்டில் இருந்து கத்துபவர்கள் எத்தனை பேருக்கு தெரியும் அல்லது கவலைபட்டார்கள் ...
வாழ்க்கையில் எந்த ஒரு காலத்திலும் காணியே இல்லாத 2 லட்சம் குடும்பங்கள் தமிழர்களிடையே உண்டு என்பது...
பல தலைமுறைகளாக இரவல் காணிகளுக்குள் இருக்கும் இவர்கள் காணிக்காரர் எழும்ப சொல்லும் பொது மாறி மாறி இடம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் பல நூறு ஆண்டுகளாக இருக்கிறார்கள்........
அதை அறிந்து கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது....
அப்படி இல்லாதவர்கள் பலர் வன்னிக்குள் போராடியே மடிந்து போனார்கள்...
அப்படியே இன்னும் இல்லாத ஏழைகளை எமக்காக போராடப்பண்ணி நாங்கள் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு போகும் போது ....
நல்ல ஜீன்சும் ,சேர்ட்டும்,சப்பாத்தும் போட்டு ....கசூர்னா பீச்சுக்கும் விசிற் அடிச்சு,குடிச்சு கும்மாளம் அடிச்சு.... வசதியாக வாழும் உறவினர்களுடன் enjoy பண்ணும் போது,
வன்னியில ஆமிக்காம்பிற்கு முன்னால ஒரு அம்மா வெய்யிலில காத்திருக்குது, வெசாக் சாப்பாட்டுக்காக...
சுற்றுலா முடிந்து வெளிநாட்டுக்கு போனாப்பிறகு அறிக்கை விடுவாங்கள் அந்த ஏழையள் தான் திரும்பவும் போராட வேண்டுமாம், ஈழமாம், தேசியமாம்..
கொன்னே புடுவன்..!
புடலங்காய் போராட்டமாம்..

(Archuthan Archu feeling angry)

19ஆவது திருத்தத்தின் கீழ் இரு புதிய ஆணைக்குழுக்கள்

எதிர்வரும் 24ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்ற 19ஆவது திருத்தத்தின் கீழ் தேசிய கணக்காய்வு ஆணைக்குழு மற்றும் தேசிய கொள்முதல் ஆணைக்குழு என இரு புதிய ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இந்த புதிய திருத்தத்தின் படி, ஜனாதிபதியின் செயற்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் அடிப்படை உரிமை மனுவின் ஊடாக கேள்வி எழுப்ப முடியும் என்று அரசியலமைப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் ஜெயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். 19ஆவது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். தற்போதுள்ள அரசியல் அமைப்பின் படி, ஜனாதிபதி ஒருவரின் செயற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் 19ஆம் திருத்தச் சட்டத்தின் கீழ், அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்வதன் மூலம் இது குறித்து கேள்வி எழுப்ப வழி செய்யபப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதியரசர்களை நியமிக்கும் போது, அரசியலமைப்புச் சபைத் தலைவர், நீதி அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஆகியோரின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என்பதும் இந்த புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

'த.தே.கூ., மு.கா. இணைந்தமை ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு' - எம்.ரி.ஹஸன் அலி

கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளமையானது, தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எடுத்துக்;காட்டாகும் என்று சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹஸன் அலி தெரிவித்தார். 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பதவியேற்ற அன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். என்ன விலை கொடுத்தாவது தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை வளர்க்கப்படவேண்டும். தமிழ் -முஸ்லிம்கள் பிரிந்து வாழ்வது ஆபத்தானதாகும். கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளமையானது, தமிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்கு மிகப்பெரிய எடுத்துக்;காட்டாகும். இதேபோன்று, தேசிய அரசியலில் எதிர்க்கட்சியொன்று இல்லாத, நல்லாட்சி மிக்க அரசாங்கத்தை அமைப்பதில் தமிழ் - முஸ்லிம் மக்கள் ஒற்றுமைப்பட்டு பாரிய பங்களிப்பை செய்துள்ளார்கள். இந்த ஒற்றுமை இந்த நாட்டின் அனைத்து இடங்களிலும் காணப்படவேண்டும். இந்த நாட்டில் எல்லோரும் சமமாக வாழவேண்டும். சமத்துவமாக சகல சமூகங்கள் நடத்தப்படவேண்டும் என்று விரும்புகின்ற ஒருவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளார். அவருடைய நடவடிக்கைகள் எமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன.

ஈராக்கின் மேலும் ஒரு பண்டைய நகரை அழிக்கும் ஐ.எஸ். குழு

ஈராக்கின் மற்றொரு பழங்கால நகரான ஹத்ராவின் இடிபாடுகளை இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) ஆயுததாரிகள் அழிக்க ஆரம்பித்திருப்பதாக வடக்கு ஈராக்கில் இருக்கும் குர்திய படையினர் தெரிவித்துள்ளனர். பாக்தாத் நகருக்கு வடமேற்கில் 290 கி.மீ. தூரத்தில் மோசுல் நகருக்கு தென்மேற்கில் 110 கி.மீ. தூரத்திலும் ஹத்ரா அமைந்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக, பார்த்திய சாம்ராஜ் யம் இருந்த காலத்தில் இந்த ஹத்ரா நகரம் உருவாக்கப்பட்டது. தற்போது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாக இந்த இடம் பட்டியலிடப்பட்டுள்ளது. ஈராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் 2014 ஜ_னிலிருந்து ஐ.எஸ். கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. ஈராக்கில் உள்ள பதிவுசெய்யப்பட்ட 12,000 புராதனத் தலங்களில் 1,800 தலங்கள் இங்கே இருக்கின்றன. பழங்கால ஈராக்கில் பார்த்திய சாம்ராஜ் யம் மிகப் பெரிய அரசியல், கலாச்சார மையமாக விளங்கியது. இரண்டாம் நூற்றாண்டில், பார்த்திய சாம்ராஜ் யம் உச்சத்தில் இருந்தபோது தற்போதைய பாகிஸ்தானிலிருந்து சிரியா வரை இதன் பரப்பு விரிந்திருந்தது. கடந்த வாரம் ஐ.எஸ். குழுவினர் பழங்கால அஸிரிய நகரமான நிம்ரூத்தை அழிக்கும் பணியைத் ஆரம்பித்தனர். ஈராக் மற்றும் சிரியாவின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்திவரும் ஐ.எஸ். கோவில்களும் சிலைகளும் போலி சின்னங்கள் என்றும் அவை அழிக்கப்பட வேண்டியவை என்றும் கூறிவருகிறது.

பங்குனி 08, 2015

ஈரோஸ் சுந்தர் காலமானார்

கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலமாகி விட்டார். சுந்தர் என்றும் பிரான்ஸிஸ் எனவும் தோழர்களால் அழைக்கப்பட்ட இவர் 1970 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமாரனோடு தீவிரமாக இயங்கிய மிகச் சிலரில் ஒருவர். பின்னர் ஈழப்புரட்சிகர அமைப்பின் மைய உறுப்பினராக இருந்து நீண்டகாலம் செயற்பட்டவர். 1977 இலும் 1981 இலும் இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தவர். பின்னொருகாலம் பாலம் இதழின் வெளியீட்டிற்காக தமிழகத்தில் இருந்து பங்களித்தவர். புலம்பெயர்ந்து பிரான்ஸில் இருந்த சுந்தர் இறுதிவரை அங்கே குடியுரிமை பெறாமல், அதற்காக விண்ணப்பிக்காமல் வாழ்ந்தவர். அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தை இயக்கியவர். அதற்கு முன் மௌனம் என்ற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார். பல கவிதை நூல்களை வெளியிட்ட கி.பி.அரவிந்தனின் அண்மைய நூல் பிரெஞ்சில் வெளியானது. ஈழப்போராட்டத்தில் தன்னுடைய பாத்திரத்தைச் சார்ந்த வரலாற்றுப் பதிவொன்றையும் எழுதியிருக்கிறார். பல நூல்களை வெளியிடுவதற்குத் துணை நின்றிருககிறார். அண்மையி்ல் வெளியான “நஞ்சுண்ட காடு“ நாவலின் வெளியீட்டிலும் கி.பி.அரவிந்தனின் பணி முக்கியமானது. புதினப்பலகை இணையத்தளத்தை நிறுவியவர்களில் ஒருவர். அண்மைய சில ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்த தோழர் சுந்தர் (கி. பி. அரவிந்தன்) பற்றி இன்று காலை தோழர் ராமுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடன் பேசி இரண்டு மணி நேரத்தில் தோழர் ராமிடம் இருந்தே இந்தச் செய்தி அதிர்ச்சியாக வந்தது. துயர் நிறை நெஞ்சோடு... (Karunaharan)

திருகோணமலையில் சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச பெண்கள் தினமான இன்று திருகோணமலை பாலையூற்று முருகன் கோவிலடி கிராம அபிவிருத்தி சங்க நிலையத்தில் நடத்த பட்ட பெண்கள் தினத்துக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட பத்மநாபா E.P.R.L.F திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் சத்தியன் கலந்து கொண்டார். இவ் கிராமத்தின் பெண்கள் அமைப்பின் தலைவி வசந்தி செயலாலர் கௌரி மற்றும் உருப்பினர்கள் தலமையில் இறைவணக்கத்துடன் மங்கள விளக்கேற்றி ஆரம்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சத்தியன் சிறப்பு உரை ஆற்றியதுடன் பெண்களை கௌரவ படுத்தி நினைவு பரிசுகளும் வழங்கினார். அவர் மேலும் உரை ஆற்றும் போது பெண்கள் சகோதரத்துவ உணர்வுடன் ஒற்றுமையாக கிராமங்களில் வாழும் போது தான் எதையும் சாதித்து காட்ட முடியும் என கூறியதுடன் , சர்வதேச பெண்கள் தினம் எவ்வாறு ஆரம்பமாகியது , ஏண் கொண்டாட படுகிறது என்பதையும் விளக்கி கூறினார்.

பொறுமையாக இருங்கள்

செப்டம்பர் இல் பழம் பழுத்தால் வெளவால் வரும் என்கின்றார் சுமந்திரன்

மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த ஐக் கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக் கான அமைப்பின் இலங்கைக்கு எதிரான ஜெனீவா அறிக்கை ஒத்திவைக்கப் பட்டமையானது பின் போடப்பட்டது என்ற ஏமாற்றத்தைத் தவிர வேறெந்த பாதகமான நிலையையும் தோற்றுவிக்கவில்லை. அத் துடன் எமக்கு நிச்சயமாக இதனால் நன்மை ஏற்படுமே தவிர ஒருசிறு பாதகமும் ஏற் படாது. அறிக்கை மேலும் பலமுள்ளதாகவும் இன்றைய மாறுபட்ட சூழலில் புதிய சாட்சிகளும் சாட்சியளிக்கக் கூடிய வாய்ப்புக் கிடைக்க இந்த இடைவெளி எமக்கு துணையாக அமையும் எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரி வித்தார். அதனால் விடய த்தை புரிந்து கொள்ளாது எதிர்ப்பு அறிக்கை விட்டுக் கொண்டி ராது, இதனை நன்கு விளங்கிக் கொண்டு செப்டம்பர் மாதம் வரை பொறுமையாக இருக்குமாறும் அவர் வேண் டுகோள் விடுத்துள்ளார். (மேலும்....)

பிரதமராக இருக்க ரணிலுக்கு தகுதியில்லை -  காங்கிரஸ்

வழிதவறி செல்லும் மீனவர்களையும், ஊடுருவல்காரர்களையும் வேறுபடுத்தி பார்க்க தெரியாத ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருப்பதற்கு தகுதி இல்லாதவர் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் இந்திய ஊடகங்களில் வெளியான செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நேற்று முன்தினம் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று மறைமுகமாக அவர் கூறினார். 'என் வீட்டுக்குள் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றால், அவரை நான் சுடலாம். அதில் அவர் கொல்லப்படலாம். ஆனாலும், அப்படி செய்ய சட்டம் எனக்கு அனுமதி அளிக்கிறது' என்று அவர் கூறினார். இதுபற்றி அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி சமூக வலைத்தளத்தில் எழுதி இருப்பதாவது, ஆமாம், மிஸ்டர் ரணில், உங்கள் வீட்டில் ஊடுருபவர்களை நீங்கள் சுடலாம். ஆனால், பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அப்பாவிகளை நீங்கள் சுட்டால், நீங்களும் சுடப்பட வேண்டியவர். கொலை குற்றத்துக்காக நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஊடுருபவர்களையும், வழிதவறி செல்லும் மீனவர்களையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரியாமல், சுடுவது ஒன்றே தீர்வு என்று கருதினால், ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருக்க தகுதி இல்லாதவர்.

 

'புலிகளுக்கு எதிரான போரில் எங்களுக்கு இந்தியா உதவியது' -  ரணில் விக்கிரமசிங்க

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது. இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப் புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது என தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, இலங்கையில் கடந்த 2009ல் விடுதலைப் புலிகளுக்கு எதிராக் நடந்த இறுதிக்கட்டப் போரை நடத்த இந்தியா உதவியது.
இந்திய உதவி இல்லாமல் ராஜபக்ஷ அரசால் விடுதலைப்புலிகளை வீழ்த்தியிருக்க முடியாது. இந்திய உதவியைப் பெறுவதற்கு இலங்கையின் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை ராஜபக்ஷ அறிவித்தார். ஆனால், அதை அவர் நிறைவேற்றவில்லை. போரில் உதவியதை இந்திய அரசியல்வாதிகள் வேண்டுமானால் மறுக்கலாம். ஒருவேளை இந்திய அரசியல்வாதிகளுக்கு அம்னீசியா (மறதி நோய்) ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியா உதவியது என்பதே உண்மை. இலங்கைப் போரில் மனித உரிமை மீறப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவும், 1970 காலகட்டத்தில் இருந்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண முதல்வர் சி.விக்னேஸ்வரன், பொறுப்பற்ற ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். அவரது தீர்மானத்தின்படி விசாரணை செய்தால் இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது அப்பாவி உயிர்கள் பறிபோனதற்கு இலங்கைக்கு அனுப்பபட்ட இந்திய அமைதிப் படையும் காரணமாகும். எனவே படுகொலைகளுக்கு இலங்கையை மட்டும் காரணம் கூறுவது சரியாகாது. விசாரணை அனைத்து தரப்பினரும் மீது நடத்தப்பட வேண்டும்' இவ்வாறு அவர் கூறியுள்ளார். (தி இந்து)

 

இன அழிப்பு தொடர்பான பிரேரணை இனவாதத்துக்கு சாதகமானது -  அனுரகுமார

வடமாகாண சபையால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு தொடர்பான பிரேரணை இனவாதத்தை தூண்ட வழிவகுக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸநாயக்க, சனிக்கிழமை (07) தெரிவித்தார். நாடு முழுவதிலும் உள்ள அனைத்து இனவாதமும் தோற்கடிக்கப்பட வேண்டும் அனைத்து இனவாதத்தின் மூலம் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் சொத்துக்களும் அழிந்துள்ளன. சிங்கள தமிழ் முஸ்லிம் மக்களிடையே தேசிய ஒற்றுமை கட்டியெழுப்பப்படவேண்டும். ஜனநாயக துறைகளை பலப்படுத்துவதற்காக விசேடமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அரசியலுக்குள் நீக்கப்பட வேண்டும். அதே போன்று நாட்டில் ஜனநாயகத்தை நிறைவேற்ற சுயாதீனமான ஆணைக்குழுக்களை அமைப்பதற்கான முக்கியமான யோசனை இந்த அரசியலமைப்புக்குள் உள்ளடக்குவதற்கு யோசித்துள்ளோம். (மேலும்....)

 

எங்கே போய் ஒளிந்து கொண்டது இந்தியாவின் மனச்சாட்சி?

India's Daughter நிர்பயாவைக் கொடூரமாகக் கொலை செய்து மரண தண்டனையை எதிர் நோக்கி உள்ளவர்களில் ஒருவனான முகேஷ் சிங் தன் குற்றம் குறித்து எள்ளளவும் சஞ்சலமின்றி அதை நியாயப் படுத்த்திப் பேசியதை இந்தியா முழுவதிலும் நாம் இன்று கண்டித்துக் கொண்டுள்ளோம். பா.ஜ.க அரசு அந்தப் படத்திற்குத் தடை விதித்துள்ளது. சில நாட்களுக்கு முன் இர்ஷத் ஜெஹான் எனும் 17 வயதுக் கல்லூரி மாணவி உட்பட நால்வரை ஒரு காரில் கட்டி வைத்துச் சுட்டுக் கொன்றவனும் இன்னும் ஷொராபுதின், பிரஜாபதி ஆகியோரின் போலி என்கவுன்டர் கொலைகளைச் செய்தவனும், குஜராத் மாநில மோடி அரசில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து இந்தக் கொலைகளைச் செய்தவனுமான டி.ஜி. வன்சாரா சுமார் எட்டு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பின் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டான். (மேலும்....)

 

உலகக் கிண்ணம் 2015
முறியடிக்கப்படும் சாதனைகள்

11வது உலகக் கிண்ணப் போட்டித் தொட ரில் அவுஸ்திரே லியா மற்றும் நியூசிலாந்து மைதானங்க ளில் பந்துகள் வேகமாகவும் பவுண்சர் பந்துகளுக்கும், சுவீங் பந்துகளுக்கும் பிரபலமான மைதானங்கள். எனவே பந்து வீச்சாளர்களுக்குத்தான் சாதகமாக அமையும் என்று விமர்சகர்களாலும், கிரிக்கெட் வல்லுநர்களாலும் பலவாராகப் பேசப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த ஆட்டங்களைப் பார்க்கும்போது இம் முறை கூடுதலான சதங்கள் பெறப்படும் தொடரகவும் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை நடைபெற்ற 28 போட்டிகளில் 22 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இந்தியாவில் நடைபெற்ற 10வது உலகக் கிண்ணப் போட்டித் தொடரின் போதுதான் 43 ஆட்டங்களிலும் 24 சதங்கள்பெறப்பட்டு தொடரொன்றில் கூடுதலான சதங்கள் பெறப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை இச்சாதனை முறியடிக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.(மேலும்....)

 

இலங்கை- இந்தியா இடையே கப்பல் சேவை மீள ஆரம்பிக்கும் சாத்தியம்

இலங்கை- இந்தியாவுக்கிடையிலான கப்பல் சேவையை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் கலந்துரையாடப்பட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஏ.எம்.ஜே சித்திக் தெரிவித்துள்ளார். இரு வெளிவிவகார அமைச்சர்களுக்குமிடையே நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கப்பல் சேவையை மீளஆரம்பிப்பது தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாகவும் இச்சேவையை விரைவில் ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் விவாதிக்கப்பட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமெனவும் அவர் தெரிவித்தார். 2011இல் ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு- தூத்துக்குடி இடையேயான கப்பல் சேவை, வரத்தக ரீதியான சாத்தியம் குறைவாக இருந்தமையால் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

நகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்

 

''எனக்கு மேலைநாட்டு நாகரிகங்களை, பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்தவன் அவன். என்னை கிளப்புக்கெல்லாம் அழைத்து செல்வான். அதற்காக என்னை டை, கோட் எல்லாம் அணியவைப்பான். என்னைப்பற்றி என் இசையறிவை பற்றி, இசையில் எனது டெஸ்ட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டவன் என் நண்பன் சந்திரபாபு தான். அவன் சந்தோஷத்துக்கும் குடிப்பான், கவலைக்கும் குடிப்பான், கோபத்திலும் குடிப்பான்'' என்று தன் நண்பனின் செய்கைகளை பற்றி கூறியுள்ளார் MS. விஸ்வநாதன். 'யார்டிலிங்' (குரலை இழுத்து இழுத்து பிசிர் அடிப்பது போல் பாடுவது) என்ற பாடும் முறை, மேலை நாட்டை சார்ந்தது. ஹிந்தியில் நடிகர் கிஷோர் குமார் அடிக்கடி யார்டிலிங் செய்வார். சந்தோஷமாக பாடப்படும் பாடல்களின் இடையே யார்டிலிங் செய்வார்கள். தமிழ் பாடல்களில் யார்டிலிங் என்ற முறையை கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். 'குங்கும பூவே...' பாடல் 'சபாஷ் மீனா' படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான். தயாரிப்பாளர் P.R. பந்தலுவை விட்டுவிலகிய சந்திரபாபு, அந்த பாடலை 'மரகதம்' படத்துக்காக பாடிவிட்டார். (மேலும்....)

வேரோடிக் கிளை பரப்பியிருக்கும் ஆண் வர்க்க வெறியின் உச்சகட்ட எச்சில் துளிகள் இவை.

https://www.youtube.com/watch?

இந்த ஆவணப் படத்தைப் பார்த்து மனம் பதைப்பதைவிட..குற்றவாளி முகேஷ் ," ,அந்தப்பெண் எதிர்க்காமல் என்னோடு ஒத்துழைத்து இருந்தால் கொலை செய்யும் அளவுக்குப் போயிருக்கமாட்டோம் ..கூடவந்த பையனைமட்டும் அடித்துவிட்டு விட்டிருப்போம் என்று சொல்லி எம்மை அதிரவைத்ததைவிட ,குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏ .பி. சிங் கூறிய ஆணாதிக்க வார்த்தைகள் எம் நெஞ்சில் நெருப்பையள்ளிக் கொட்டிக் கோபத்தின் உச்சிக்கே எம்மை இட்டுச் செல்கின்றன. (மேலும்....)

அப்பா மாறவேயில்லை...........

பனிரெண்டு வருடங்களுக்கு முன்னால்-இன்ஜினியரிங் முடித்து விட்டு-பணிக்காக சென்னைக்கு வந்தேன். எனக்கு வேலை கிடைத்த புதிதில்--நான் வாங்கிய முதல் மாதச் சம்பளம்--8000 ரூபாய்.அதுவும் அந்த மாதத்தின் 7 ஆம் தேதி தான் போடப்படும்.அப்படி முதல் மாதச் சம்பளம் பேங்கில் போடப்பட்டதும், தலைகால் புரியவில்லை வீட்டிற்கு போன் செய்தேன், அப்பா தான் எடுத்தார்.அவரிடம் நான் அதிகமாக பேசுவதில்லை. மெல்லியதாக குசலம் மட்டும் விசாரித்து விட்டு, (மேலும்....)
 

பங்குனி 07, 2015

 

ராஜபக்சே கொடுத்த பணத்தை பிரபாகரன் பெற்றார் - விக்கிரமசிங்கே!

பிரேமதாஸ கொடுத்த ஆயுதம், பணத்தை பிரபாகரன் பெற்றார்  - சாகரன்


ராஜபக்சே கொடுத்த பணத்தை விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெற்று கொண்டார் என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அதிரடியாக கூறி சூட்டை கிளப்பி உள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரணில் விக்கிரமசிங்கே அளித்துள்ள பேட்டியில், ''கச்சச்தீவு இலங்கையின் ஒரு பகுதி. இந்திய அரசும் அது இலங்கைக்குச் சொந்தம் என்றே கருதுகிறது. அதனால், கச்சத்தீவைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியா குரல் எழுப்பாது. நாங்களும் கச்சத்தீவை விட்டுத் தரப்போவதில்லை. இது, தமிழக அரசியலில் ஒரு பகுதி என்று எனக்கு தெரியும். (மேலும்....)

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது பிரித்தானியாவில் குற்றச்செயலாகும்!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்குவது பிரித்தானியாவில் குற்றமாகும் என்று இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரக பேச்சாளர் தெரிவித்துள்ளார் என இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும். எனவே அதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியாது. அது பிரித்தானிய சட்டப்படி குற்றமாகக் கருதப்படும். ஐ.நா விசாரணை தாமதமானமைக்காக அண்மையில் பிரித்தானியாவில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்னாள் மேற்கொள்ளப்பட்ட பேரணியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரின் உருவப் பொம்மைகளும் எரியூட்டப்பட்டன. இவ்வாறு உருவப்பொம்மைகள் எரிப்பது சட்டத்துக்கு மீறிய செயல் என பிரித்தானிய பொலிஸாரும் தெரிவித்துள்ளனர். இந்த பேரணி தொடர்பிலேயே உயர்ஸ்தானிகரக பேச்சாளர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

 

புனித பேட்ரிக்சும் நம் அப்பர் பெருமானும்....

சென்னையில் நான் இருக்கும் நாட்களில் ஏதாவது குடும்ப சேவை செய்வதாகக் காட்டிக் கொள்வது என் வழக்கம். இப்போது பள்ளி இறுதித் தேர்வு நடப்பதால் அடையாறு காந்தி நகரில் செயின்ட் பாட்ரிக்ஸ் பள்ளியில் எட்டாம் வகுப்புப் படிக்கும் என் பேத்தியை காலை 11 மணிக்குச் சென்று (கடந்த இரண்டு நாட்களாகத்தான்) அழைத்து வருகிறேன். என் பேத்தி வகுப்பில் முதல் மாணவி, நாட்டியம், இசை எல்லாவற்றிலும் முதல் மாணவி என்கிற வகையில் எல்லா எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸ் களிலும் தேடப்படுபவள் அவள். இப்போதும் ஏதோ ஒரு ஸ்க்ரிப்டை முணுமுணுத்தவாறு வந்தாள். அடுத்த வாரம் அவர்கள் பள்ளியின் patron saint பாட்ரிக்ஸ் அவர்களின் நாளாம். புனித பாட்ரிக்ஸ் மக்களை விஷக் கடிகளிலிருந்து காப்பாற்றி ஆறுதல் அளிப்பவராம். அவரது புனிதப் பணியில் ஒரு நிகழ்வு. ஒரு குழந்தையை ஒரு பாம்பு, விஷப் பாம்பு தீண்டி விடுகிறது. பெற்றோர் அரற்றுகின்றனர். புனித பாட்ரிக்ஸ் அங்கு செல்கிறார். நீலம் பாரித்த அந்தக் குழந்தையின் உடல் மீது அவர் கைகளை வீசுகிறார். என்ன வியப்பு.. அந்த விஷம் இறங்குகிறது... இந்தக் காட்சி நாடகமாக நடிக்கப்பட உள்ளது. வசனமில்லா அந்த நாடகத்தில் பின்னின்று கதையைச் சொல்லும் பணி என் அழகிய பேத்தியுடையது.. பெருமையோடு சொல்லிக் கொண்டிருந்தவளை இடைமறித்தேன். "பூ..! இதென்ன பெரிய அற்புதம். நம்முடைய மரபில் இதை விட அழகான ஒரு நிகழ்வுண்டு.. எனச் சொல்லி, இல்லம் வந்தடைந்தவுடன் you tube ஐத் திறந்து ஏ.பி நாகராஜனின் 'திருவருட் செல்வரில்' இருந்து இந்தக் காட்சியைக் காட்டி அசத்தினேன். விரித்த கண்களை மூடாமல் அவள் நம் சிவாஜி கணேசனைக் கண்டு, மன்னிக்கவும் அந்தத் திரைத் திருநாவுக்கரசரைக் கண்டு திகைத்த திகைப்பு. ஆகா அந்த ஒரிஜினல் 'அப்பர்' வந்தாலும் 'லோயர்' ஆகிப் போவாரே நம் காலத்து அப்பரைக் கண்டு...

 

எதிரிகளை தமக்குள்ளேயே மோதவிடும் கலையில் வல்லவர்?

'மீன்களுக்குத் தண்ணீரில்தான் வாழ்க்கை. தரையில் போட்டால் சிறிது நேரம் துள்ளிக் குதித்துவிட்டு அப்படியே உயிர் விட்டுவிடும். இந்த இயற்கையின் விதியை இலங்கையின் முன்னாள், இந்நாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹா நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறார். ஈழ விடுதலைப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதிகளில், இப்படி போராடும் தரப்போடு மோதிக் காலத்தை வீணடிக்காது, அவர்கள் கேட்பதை இலங்கை அரசாங்கம் கொடுத்துவிட்டால், சில நாட்களில் அவர்கள் தமக்குள்ளேயே அடிபட்டு அழிந்துவிடுவார்கள் என்று சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். இந்த உத்தியை 2002இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா சரியாகக் கையாண்டார். (மேலும்....)

உலக மகளிர் தினம் 2015

(நோர்வே நக்கீரா)

தினங்கள் பல, தினம் தினமாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. எவை மறைக்க மறுக் கப்பட்டனவோ அவை தினங்களாக நினைவூட்டப் படுகின்றன. எதற்காகக் கொண்டா டுகிறோம் என்று தெரியாமலே பலர் இத்தினங்களை கொண்டாடுகிறார்கள். இம் முறையாவது பெண்கள் தினம் எதற்காக, எப்போது உருவானது என்பதையும் இது தோன்றியதன் காரணத்தையும் இன்று பார்வையின் பக்கங்களில் பார்ப்போம். உலகமகளிர் தினத்தில் அதிகமாகப் பேசப்படும் சொற்பதங்கள் பெண்ணியம் பெண் விடுதலை, ஆணாதிக்கம், சமவுரிமை, அடக்குமுறை என்பனவாகும். இவை எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பதைப் பலர் புரிந்து கொண்டதில்லை. இதை ஒரு கொண்டா ட்டம் போல் எண்ணுபவர்கள் பலருண்டு. இது ஆண்களுக்கு எதிரானது, ஆண்களுக்கு எதிராகப்போராட வேண்டும், ஆண்கள் போல் எமக்கு உரிமைவேண்டும், ஆண்கள் மாதிரி நடக்கவேண்டும் என்ற உணர்வுகளுடன் கொண்டாடுபவர்களை நாம் பார்த்திரு க்கிறோம். இதுவல்ல உலகமகளிர் தினத்தின் நோக்கமும் குறியீடும். (மேலும்....)

நிலத்தடி நீர்ப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நோர்வே நடவடிக்கை

சுன்னாகம் பிரதேசத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் நிலத்தடி நீரில் எண்ணெய் கலந்த பிரச்சினையை விரைவில் தீர்ப்பதற்கு நோர்வே கூடிய கவனம் செலுத்தியுள்ளதுடன் அது தொடர்பான சகல பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் கிறீற்டா லோசன் தெரிவித்ததாக வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். நோர்வே உயர்ஸ்தானிகருக்கும் வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கும் இடையிலான சந்திப்பு, வெள்ளிக்கிழமை (06) அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்....)

நல்லை ஆலய முன்றலில் அனந்தி உண்ணாவிரதம்

காணாமல் போனோரை விடுதலை செய்யக் கோரியும், சர்வதேச போர்குற்ற விசாரணையினை உடனடியாக நடாத்த வலியுறுத்தியும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்த சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட் டத்தினை முன்னெடுத்துள்ளனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் நீதியான சர்வதேச போர்க்குற்ற விசா ரணை உடனடியாக வேண்டும். காணா மல் போனோரை கண்டுபிடித்து தர வேண்டும். இளம் விதவை பெண்களின் அவல கண்ணீருக்கு என்ன பதில், ஐ. நாவே எங்கள் கண்ணீரை அறியாயோ போன்ற வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளை தாங்கியவாறு உண்ணா விரதத்தினை முன்னெடுத்தனர். சுழற்சி முறையிலான இந்த உண்ணா விரத போராட்டமானது நாளை மகளிர் தினம் வரை முன்னெடுக்கவுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் பாதுகாப்பு தரவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் நேற்று வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை, 67 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றம்

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்துதல் அதிகார சபை சட்ட மூலம் 67 மேலதிக வாக்குகளால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்துக்கு ஆதரவாக 68 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஜே. வி. பி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். சுயாதீன எம்பியான அஜித்குமார மாத்திரம் எதிர்த்து வாக்களித்திருந்தார். நீண்டகாலமாக இழுபட்டு வந்த தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைச் சட்டமூலம் கடந்த செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவால் முன்வைக்கப் பட்டது. இச்சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. அநுரகுமார திசாநாயக்கவின் கோரிக் கைக்கு அமைய இச்சட்டமூலம் தொடர் பான மூன்றாம் வாசிப்பு நேற்று நடைபெற்றது. இதன்போது திருத்தங்கள் முன்வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் திருத்தங்களை முன்வைத்தார். கட்டுபடியான விலைகளில் மக்களுக்கு பயன்படுத்தக்கூடிய பாதுகாப்பான தரமான மருந்து வகைகளையும், மருத்துவ உபகரணங்களையும் கிடைக்கக் கூடியதை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை சட்டமூலம் அமைந்துள்ளது. மருத்துவப் பொருட்களின் இறக்குமதி, விநியோகம், களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், விளம்பரப்படுத்தல் போன்ற விடயங்கள் இச்சட்டமூலம் ஊடாக ஒழுங்குப்படுத்தப்படுகிறது.

சூரிய சக்தியில் இயங்கும் விமானங்கள் மூலம் கிராமங்களுக்கு இணைய வசதி

இந்தியாவில் சூரிய சக்தியில் இயங்கும் விமானங்கள் மூலம் கிராமப்புறங்களில் இணை யத் தொடர்பில்லாத பகுதிகளில் இலவச இணைய வசதியை வழங்க பேஸ்புக் திட்டமிட் டுள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் தனது துணை நிறுவனங்களுடன் இணைந்து இலவச இணைய சேவையை வழங்க திட்டமிட் டுள்ளது. இதில் ரிலையன்ஸ் நிறுவனம் குறிப்பிடும் இலவச வலைதளங்களின் பட்டியலில் பேஸ்புக் முன்னணியில் உள்ளது. ஆனால் இந்தியாவின் பல கிராமப்புறங்களில் இணைய சேவைக்கு போதுமான அடிப்படைத் தேவையான ஒளியிழை வசதி இல்லாத நிலை யில் விமானம் மூலம் இணைய வசதியை வழங் கும் இந்தத் திட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறி த்து பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த விமானம் சூரிய சக்தியில் இயங்குவதால் எரிபொருள் சிக்கல் இருக்காது. மேலும் இது மிக உயரத்தில் சுற்றி வருவதால் அதிக அளவிளான பகுதிகளுக்கு இணைய சேவையை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். இந்த திட்டம் இந்தியா மட்டுமின்றி வளர்ந்து வரும் நாடுகளில் செயல்படுத்தப்படவுள்ளது என் பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மீதான இம்சைகளுக்கு எதிராக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும்

மானிட வர்க்கம் ஆண், பெண் என இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்து காணப்படுகின்ற போதிலும் இவ்விரு வர்க்கங்களும் சமமானது என்பதே யதார்த்தம். உலகம் முழுவதிலும் மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1789 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் திகதி பாரிசில் பெண்கள், ஆண்களைப் போன்று சம உரிமைகளைப் பெற, கல்வித் துறையில் மேம்பட, வாக்குரிமை பெற, வேலைக்கேற்ற ஊதியம் பெற, பெண் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற, அனைத்து துறைக ளிலும் தங்களது உரிமைகளுக்காக போர்க் கொடி உயர்த்தியவாறு போராட்டம் நடத்தினர். 18ம் நூற்றாண்டுப் போராட்டத்தின் போது பெண்கள் போர்க்கொடி உயர்த்தியமைக்கான காரணம், ஆண்களுக்கு கல்வித்துறை, அரசியல் உரிமை, விளையாட்டு, வாக்குரிமை மற்றும் தொழில் ரீதியாக உயர்ந்த தலைமை இடங்கள் வழங்கப்பட்டு அனைத்திலும் பெண்கள் புறக்க ணிக்கப்பட்டதாலேயாகும். (மேலும்....)

கட்டுநாயக்கா கைதும் மறைந்திருக்கும் மர்மமும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக முதலீடுகளுக்கு பொறுப்பானவர் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் சாம்ராஜ்.சாம்ராஜ் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனினதும் அனைத்துலக பொறுப்பாளர் கஸ்ரோவினதும் நேரடி கட்டுபாட்டில் சர்வதேச நாடுகளில் சுமார் 75 நாடுகளில் சேகரிக்கப்படும் நிதியை முதலீடு செய்யும் பொறுப்பில் இருந்து வந்தார். சமாதான பேச்சு வார்த்தை காலத்தில் உலகின் முன்னணி இரும்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை சாம்ராஜ் பெல்ஜியத்தில் கொள்வனவு செய்து 20 மில்லியன் யூரோக்களை (2880 மில்லியன் ரூபாக்கள்) முதலிட்டிருந்தார். பிரான்சில் தங்கி இருந்து விடுதலைப் புலிகளின் முதலீடுகளை நிர்வகித்து வந்த சாம்ராஜ் பிரான்சின் புறநகர்ப் பகுதியில் பல கட்டிடங்களை கொள்வனவு செய்து அவற்றை மீள்வாடகைக்கும் விட்டு வந்தார். (மேலும்....)

பங்குனி 06, 2015

வந்தடைந்தார்... சுஷ்மா

இந்திய வெளிவிகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்ஜா கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சற்று முன்னர் வந்தடைந்தார்.மகிந்தாவின் ஆட்சிக்காலத்திலும் இவர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். தற்போது இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னோட்டமாக இவரின் பயணம் அமைந்திருக்கின்றது. இந்திய முதலீட்டாளர்கள் சீனாவை விட முன் தள்ளும் செயற்பாடாக இவ்விஜயம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது

 

சுஷ்மாவுக்கு ஆனந்தசங்கரி கடிதம்

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ்ஜுக்கு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'இக்கடிதம் தமிழர் விடுதலைகக் கூட்டணியின் செயலாளர் நாயகத்திடமிருந்து வருகிறது. இத்துடன் வரும் பத்திரங்கள் தாங்கள் 2013ஆம் ஆண்டு சித்திரை மாதம் 9ஆம் திகதி இந்திய நாடாளுமன்றத்தின் சர்வகட்சித் தூதுக் குழுவுக்கும் எதிர்க் கட்சிகளுக்கும் தலைவியாக தலைமை தாங்கி வந்தபோது யாழ்ப்பாணத்தில் வைத்து கையளித்த பத்திரங்கள், மகஜர்கள் ஆகியவற்றின் உண்மைப் பிரதிகளாகும். (மேலும்....)

 

வடக்கில் புதிய கட்சி அங்குரார்ப்பணம்

ஐந்து கோரிக்கைகளை முன்னிறுத்தி வடக்கில் புதிய கட்சியொன்று இன்று வியாழக்கிழமை (5) உருப்பெற்றுள்ளது. ந.தேவகிருஸ்ணனை செயலாளர் நாயகமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'தொழிலாளர், விவசாயிகள் வாழ்வுரிமைக் கட்சி' இன்று வவுனியாவில் வைத்து அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மிகவும் பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி நிறைவேறியது. அதாவது 'ஒப்பரேஷன் மஹிந்த|' வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. அதிகாரத்தின் சுவையை அனுபவித்து தனக்கு நிகர் தானே என்ற அகந்தையுடன் இருந்த மக்கள் விரோத மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டார். (மேலும்....)

 

அனைவரையும் அழைக்கிறோம்!

1970 வரையிலும் வட இலங்கையின் சாதிய ஒழுங்கமைவு, இத்தீவின் பிறபகுதிகளைவிடவும் அதிகம் கட்டுக்கோப்பானது எனப் பொதுவாகக் கருதப்பட்டது. இது யாழ்ப்பாணத்தின் ஆதிக்கப் பார்வையாகவும் பார்க்கப்பட்டது. 1980களுக்குப் பின்னர் போர், போராளிகள், வன்முறை என்கின்ற கண்ணாடிமூலம்தான் யாழ்ப்பாணம் பார்க்கப்பட்டது. சாதிய அதிகாரத் தளங்கள் போர்க் காலங்களில் இல்லாதொழிந்தனவா?  இந்த ஆய்வுக்கட்டுரை போருக்குப் பிந்தைய, யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்முறையில் எவ்வாறு இந்தச் சாதிய முரண்பாடுகள் மீளமைக்கமுடியாத் தன்மைகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்று ஆய்கிறது. போரின் கடைசி ஆண்டுகள் சாதியின் கொடுமைகளையும் விவாதங்களையும் மீண்டும் யாழ்ப்பாணத்தில் எழுப்பியிருக்கின்றன என்பதைப்பற்றி விவாதிக்கிறது.  மேலும் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறும் மக்களின் நகர்வுகள் சாதியின் அடியோட்டமான வழிமுறைகளால் தீர்மானிக்கப்பட்டன. இவை வெளிநாடுகளிலிருக்கும் 'தமிழ்த் தன்மையை' வெளிப்படுத்தும் முறைகளில் 'சாதிக் குருட்டில்' உள்ள புலம்பெயர்ந்தோரிலும்கூடத் தாக்குறவை ஏற்படுத்துகின்றன.

பின்வருவோரின் ஆதரவில் ஓர் பொது உரை:

தமிழ் உலக முனைப்புகள் வரலாறு மற்றும் பண்பாட்டுக் கற்கையியல் துறை, இனவரைவியலுக்கான மையம் ஆகியவற்றுடன் ரொரன்ரோப் பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தின்(UTSC) 'டீன்' பணிமனையும் சேர்ந்து வழங்குகின்றன.
Stanford பல்கலைக் கழகத்தின் மானிடவியல் துணைப்பேராசிரியராக Sharika Thiranagama இருக்கின்றார். 'என் தாயின் வீட்டில்: இலங்கையின் உள்நாட்டுப் போர்' என்ற நூலின் ஆசிரியர். ( பென்சில்வேனியா பல்கலைக்கழகம், 2011). இவர் இலங்கையின் போரைப்பற்றியும் இடப்பெயர்வுகளைப்பற்றியும் பெருமளவிலான ஆய்வுகள் செய்திருக்கிறார்.
அனைவரையும் அழைக்கிறோம்.
https://www.facebook.com/events/334061900125395/

 

 

நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படும் சாத்தியம்
 

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய, எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில், தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் சட்டமாஅதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார். அவர்களின் அறிக்கை இன்னும் இருவாரத்துக்குள் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இதற்கமையவே, புதிய தேர்தல் முறைமைக்கு அமைய தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேலும் சுட்டிக்காட்டினார். தற்போதைய நாடாளுமன்றத்தை ஏப்ரல் 23ஆம் திகதி கலைப்பதற்கு ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்து. எனினும், தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தினால் நாடாளுமன்ற தேர்தலை உரிய திகதியில் நடத்தமுடியாத நிலைமையொன்று ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கலப்பு மற்றும் விகிதாசார முறைமையின் கீழ் தேர்தல் நடத்துவதற்காக கடந்த அரசாங்க ஆட்சியின் போது அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் குழுவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளை மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

த.தே.கூ. பொதுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் - ஈ.பி.ஆர்.எல்.எப்.(சுரேஷ் பிரேமசந்திரன் அணி)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுவான வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்று கோரியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (சுரேஷ் அணி)), தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்வதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் வலிறுத்தியுள்ளது. மட்டக்களப்பு, வாவிக்கரையில் உள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அலுவலகத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.(மேலும்....)
 

சீனாவுக்கு எதிரான நடவடிக்கை?

துறைமுக நகர் திட்டம் உடன் இடைநிறுத்தம்

கொழும்பு, துறைமுக நகர் செயற்திட்டத்தின் பணிகளை இடை நிறுத்த அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையாக கருதப்படக்கூடாதென அதன் பேச்சாளர், அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இந்தியா எமக்கு எத்தனை முக்கியமானதோ அதேபோன்று சீனாவும் எமக்கு முக்கியமானதொரு நாடாகும். இந்த இரு நட்பு நாடுகளுக்குமிடை யிலான உறவு என்றும் தொடருமெனவும் அமைச்சர் ராஜித்த இதுகுறித்து மேலும் விளக்கமளித்தார். துறைமுக நகர் திட்டத்தினை நாம் முற்றாக நிறுத்திவிடவில்லை. தற்காலிகமாகவே இடைநிறுத்தியுள்ளோம். இந்த செயற்திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் மாசடைவு மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக அமைச்சரவையினால் துணை குழுவொன்றை நியமித்திருந்தோம். இந்த இடைக்கால அறிக்கையினைத் தொடர்ந்தே உடனடியாக இந்த செயற்திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்ததாகவும் அமைச்சர் ராஜித்த தெரிவித்தார். எந்தவொரு இடத்திலும் அபிவிருத்திப் பணிகளை நிறுத்துவதாக கூறவில்லை. மாறாக ஊழல், மோசடிகளை நிறுத்துவதாக மாத்திரமே தெரிவித்துள்ளார். மக்கள் அபிவிருத்தியை விரும்புகிறார்கள். எனவே எமது ஆட்சியின் கீழ் அபிவிருத்திகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

முன்னாள் போராளியான பகீரதியின் கைதும், வன்னியின் வர்க்க பேதமும்

பிரான்சில் வதிவிட அனுமதி பெற்ற பகீரதி என்ற பெண், தனது எட்டு வயது குழந்தையுடன் இலங்கையில் தனது ஊருக்கு சென்று திரும்பியவர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப் பட்டுள்ளார். புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள (புலி ஆதரவு) தமிழ் ஊடகங்கள், அவரை "சாதாரண பெண்" என்று குறிப்பிட்டாலும், முன்னொருகாலத்தில் புலிகளின் தளபதியாக இருந்த காரணத்தினாலேயே கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அவரது கணவரும் பிரான்சில் ஒரு முக்கியமான புலிகளின் பிரமுகர் தான். இறுதிப் போர் தொடங்குவதற்கு முன்னரே, பிரான்ஸ் சென்ற பகீரதி, இப்போது தான் நாடு திரும்பியுள்ளார். (மேலும்....)
 

பங்குனி 05, 2015

 

தேர்தலுக்கு முன் தேர்தல் முறைமையில் மாற்றம்-  ஜனாதிபதி

அடுத்த தேர்தலுக்கு முன்னர் தேர்தல் முறைமையில் மாற்றம் செய்யப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் இணங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புதிய அரசியல் அமைப்பின் ஊடாக, நிறைவேற்று அதிகாரகொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான தனது உடன்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மோடி உரையாற்றவுள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் இதுவே இந்தியப் பிரதமர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஆற்றும் முதலாவது உரையாக இருக்கும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 13ஆம் திகதி இந்தியப் பிரதமர் இலங்கை வரவுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 14 ஆம் திகதியன்று மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பிரதமரின் மன்னார் விஜயம் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அவசர வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை(4) மாலை 5.30 மணியளவில் மன்னார் ஆகாஸ் கொட்டலில் இடம் பெற்றது. வடக்கு மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், இந்திய துணைத் தூதரகத்தின் அரசியல் பிரதிநிதி எஸ்.டி.மூர்த்தி ஆகியோருக்கு இடையிலேயே இந்த கலந்துரையாடல் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மன்னாருக்கு வருகை தரும் போது அவரை வரவேற்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் இந்திய வீட்டுத்திட்டம் தொடர்பாகவும் எமது மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட மகஜரொன்றை இந்தியப்பிரதமரிடம் கையளிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நேரத்துடன் பொருந்தும் 9

 

 

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான சு.காவின் யோசனை அடுத்தவாரம்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருத்த யோசனை அடுத்த வாரம் அரசாங்கத்துக்கு கையளிக்கப்பட உள்ளது. 18ஆவது திருத்தத்தை ரத்துச் செய்தல், 17ஆவது சரத்தில் திருத்தம் செய்தல், நல்லாட்சி தொடர்பான சரத்தை இணைத்தல் என்பவற்றுக்கு உடன்படக் கூடியதாக உள்ள போதும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்திலுள்ள சில சரத்துகளை அகற்றுவது தொடர்பில் பிரச்சினை காணப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அமைப்பாளர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். ஒரு நபரையோ கட்சியை இலக்குவைத்து அரசியலமைப்பை திருத்துவதற்கு இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராவார் என்பதற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது? தனிநபர் ஒருவருக்காக அரசியலமைப்பை திருத்துவதானால் அதற்கு இடமளிக்க முடியாது. நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை குறைப்பதினால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசியலமைப்பினூடாக மாற்று ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார். நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரம் மாகாண சபைகள் தொடர்பில் ஏதும் பிரச்சினை ஏற்பட்டால் அதனை கலைக்க முடியும். வரதராஜப் பெருமாள் தனியாட்சி அறிவித்த போது ஜே. ஆர். ஜெயவர்தன வட மாகாண சபையை கலைத்தார். வட மாகாண சபையில் அண்மையில் சர்வதேச விசாரணை நடத்துமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் பேசும் மக்களுக்கான 20 அம்சக் கோரிக்கையை முன் வைத்து இவை நிறைவேற்ப்படாவிட்டால் ஈழம் பிரகடனப்படுத்தப்படும் என்று முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் கூறியதை பேரினவாத அரசியல்வாதிகள் தமது வசதிக்கு ஏற்றவாறு திரித்துக் கூறுவது சுத்த ஏமாற்று வேலையே.

 

தேர்தலுக்கு வருவீர்களா என்று அப்பாவிடமே கேளுங்கள் - நாமல்
 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படையின் லெப்டினன் பதவிநிலை வகிப்பவருமான யோஷித்த ராஜபக்ஷ, பொலிஸ் குற்றவியல் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை 8.40க்குச் சென்றார். இதன்போது, யோஷித்தவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷவும் சென்றிருந்தனர். வாக்குமூலத்தை வழங்கிவிட்டு, அவ்விருவரும் இன்று முற்பகல் 10.40க்கு பொலிஸ் குற்றவியல் பிரிவிலிருந்து வெளியே வந்தனர். இதன்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, 'யோஷித்த குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். நாம் குற்றமற்றவர்கள். அதனாலேயே, பொலிஸ் அழைப்பு கிடைத்தவுடன் வந்தோம்' என்றார். இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவாரா?' என்று ஊடகவியலாளர் ஒருவர், நாமல் எம்.பி.யிடம் கேள்வி எழுப்பிய போது, 'அதுபற்றி அப்பாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டார்.

நெதன்யாகுவின்

கொங்கிரஸ் அவை உரைக்கு ஒபாமா, ஈரான் கண்டனம்

ஈரான் விவகாரத்தில் ஒபாமா நிர்வாகத்தின் கொள்கையை விமர்சித்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஆற்றிய உரைக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அமெரிக்க பாராளுமன்றமான கொங்கிரஸ் அவையில் நேற்று முன்தினம் உரையாற்றிய நெதன்யாகு, ஈரான் அணுத் திட்டம் தொடர்பில் உடன்பாடொன்றை எட்டுவதற்கான பேச்சு வார்த்தைகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுப்பதற்கு பதில் அதனை எட்டுவதற்கே வழிசெய்யும் என்று குற்றம் சாட்டினார். எனினும் நெதன்யாகு இந்த விவகாரத்தில் சாத்தியமான மாற்றுத் திட்டம் எதனையும் முன்வைக்கவில்லை என்று ஒபாமா குறிப் பிட்டுள்ளார். அதேபோன்று அமெரிக்க ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் ஈரானும் நெதன்யாகுவின் உரைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளனர்.  (மேலும்....)

மரங்கொத்தியின் முதுகில் பயணம் செய்த மரநாய்

ஒரு மரங்கொத்தியின் முதுகில் மரநாய் ஒன்று பயணம் செய்யும் காட்சியை புகைப்படக் கலைஞர் ஒருவர் படமெடுத்துள்ளார். இணையத்தில் இந்தக் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான மார்டின் லீ -மே என்பவர் பதிவுசெய்திருக்கும் இந்தப் புகைப்படங்களில், மரங்கொத்தியைத் தாக்கும் மரநாயும் அதிலிருந்து விடுபட மரங்கொத்தி முயற்சிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன. எஸ்ஸெக்ஸில் இருக்கும் ஹார்ன்சர்ச் கன்ட்ரி பூங்காவில் திங்கட்கிழமையன்று மதியம் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது. தன்னுடைய மனைவி ஆனுடன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது இந்தக் காட்சியை தான் படமெடுத்ததாக லீ - மே தெரிவித்தார். "ஏதோ வேதனையுடன் கத்தும் சத்தம் கேட்டது. மிக மோசமாக ஏதோ நடக்கிறது என்று நினைத்தேன். பின்னர்தான் ஒரு மரங்கொத்தி, தன் முதுகில் அமர்ந்திருக்கும் ஒரு சிறிய மிருகத்துடன் போராடிக் கொண்டிருக்கும் காட்சி கண்ணில்பட்டது. மரங்கொத்தி தரையில் இறங்கியதும் மரநாயின் கவனத்தை நாங்கள் திசைதிருப்பிவிட்டோம் என நினைக்கிறேன். அது மரங்கொத்தியிலிருந்து இறங்கி புதருக்குள் ஓடிவிட்டது" என லீ-மே தெரிவித்தார்.

பிளவுபடாத இலங்கைக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகள் ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டும் - இரா. சம்பந்தன்

பிளவுபடாத, பிரிவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகள், எதிர்பார்ப்புக்கள் ஜனநாயக தீர்வின் அடிப்ப டையில் தீர்க்கப்பட வேண்டியது அவசியம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலை வரும், திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் திருமலை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதியை வரவேற்பதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றேன். அண்மையில் நடைபெற்ற தேசிய வைபவமொன்றில் பங்குபற்றிய நீங்கள் “வடக்கில் வாழும் மக்களின் உள்ளங்களையும் தெற்கு மக்களின் உள்ளங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இதனை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இதனை நாம் அடைய வேண்டும். இதற்காகக் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நானும், எனது கட்சியினரும் எம் மக்களும் எம்மால் முடிந்த உதவிகளை செய்தோம். இந்நாட்டில் வாழும் எல்லா, இன, மத மக்களையும் ஒன்றிணைத்து நீங்கள் ஆட்சி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கையே அதற்குக் காரணம்.
எனக்கு என்னமோ சம்மந்தனுக்கும் கொடும்பாவி ரெடி போலக் கிடக்குது - குசும்பன்

"காணாமற் போனவர்கள்"
மொழி எவ்வளவு அயோக்கியத்தனமானது பாருங்கள். ஒரு அயோக்கியத்தனத்தால், ஒரு வன்முறையாளர்களால் கொலை செய்யப்பட்டவர்களை- இல்லாமற் செய்யப்பட்டவர்களை - காணாமற்போகச் செய்யப்பட்டவர்களை தாங்களாக "காணாமற் போனவர்கள்" என்கிறது. எங்கும் யாரும் காணாமற் போகவில்லை. காணாமற் போகச் செய்யப்பட்டார்கள். - கற் சுறா

பங்குனி 04, 2015
 

கிழக்கு மாகாணத்தில் தேசிய அமைச்சரவை?

கிழக்கு மாகாண சபையில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் நெருக்கடி முற்றாக நீக்கப்பட்டு தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 9 உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநருக்கு கடிதம் மூலம் நேற்று முன்தினம் தெரிவித்தனர். இதனால் கிழக்கு மாகாணசபையில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோன்றியது. எனினும் முஸ்லிம் காங்கிரஸின் 10 உறுப்பினர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் 11 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் 4 உறுப்பினர்களும் இணைந்து கிழக்கு மாகாணத்தில் தேசிய அமைச்சரவையை உருவாக் கியுள்ளனர். (மேலும்....)
 

கடற்புலிகளின் மகளிர் பிரிவு அதிகாரியாகவிருந்த பகீரதி கைது

கடற்புலிகள் அமைப்பின் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்தார் என்ற குற்றச்சாட்டில் முருகேசு பகீரதி என்ற 41 வயது பெண்ணொருவரும் அவரது 8 வயதான மகளையும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், திங்கட்கிழமை (02) கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.  தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக வெளிநாட்டில் இருந்துகொண்டு நிதி சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த சுப்ரமணியம் ஜெயகணேசன் என்பவரின் மனைவியான இவர், இலங்கைக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. (மேலும்....)

ஒன்பது முறை இறந்தும் உயிருடன் எழுந்து போரடிய

வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்னும் கெரில்லா போர் முறையும் தோற்றோடிய அமெரிக்கவும் மற்றைய நாடுகளும்

சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி சரித்திரத்திலே பல முறை இறந்த நபர் ஒருவர் உண்டு என்றால் அது வியட்நாமின் புரட்சித் தலைவர் ஹோசிமின்தான். இவர் இறந்து விட்டார் என அறிவித்துவிட்டு எதிரிகள் பட்டாசு கொளுத்திக் கொண்டாடுவார்கள்.
ஆனால் பீனிக்ஸ் பறவைகள் போல சம்பந்தமே இல்லாமல் வேறு ஒரு நாட்டிலிருந்து இவர் வெளிப்படுவார். ஒன்று இரண்டு முறை அல்ல பலமுறை இப்படி அவர் உயிர்த்தெழுந்திருக்கிறார். எதிரிகளின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவின ஹோசிமின் புத்தபிட்சு, பத்திரிகையாளர்கள் என பல அவதாரங்களை எடுத்திருக்கிறார். இன்றைய கணக்குப்படி அமெரிக்கா நடாத்திய முதலும் கடைசியுமான நீண்ட போர் வியட்நாம் போர்தான். அது போல அமெரிக்கா வேறு ஒரு நாட்டிடம் போரில் தோற்றிருக்கிறது என்றால் அது வியட்நாமிடம் தான். (மேலும்....)

ஆனாலும் ஏன் இந்த வறுமை? பசி? பட்டினி?
 

கொரில்லா, சிம்பான்ஸியிடமிருந்து எய்ட்ஸ் நோய் தொற்றியது உறுதி

எய்ட்ஸ் நோயை விளைவிக்கும் எச்.ஐ.வி. வைரஸின் இரண்டு உட் பிரிவுகள் தென்மேற்கு கெமரூனில் உள்ள கொரில்லாக்களிடமிருந்து வந் திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபி டித்துள்ளனர். அந்த வைரஸின் மற்ற இரண்டு உட்பிரிவுகள் அதே நாட்டைச் சேர் ந்த சிம்பான்ஸிகளிடமிருந்து வந்தி ருப்பதாக ஏற்கனவே கண்டறியப்ப ட்டுள்ளது. எனவே தற்போதைய கண்டுபிடிப் பால், எய்ட்ஸை விளைவிக்கும் வைர ஸின் அனைத்து உட்பிரிவுகளுமே எங்கிருந்து வந்தது என்பது தெரிய வந்துள்ளது. மனிதர்களிடையே பெரிய அள வில் நோய்களை பரப்பும் திறனு ள்ள எச்.ஐ.வி. வைரஸ்களின் புக லிடமாக இந்தக் குரங்கினங்கள் இருப்பதாக இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக, ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரான்சின் ஆராய ;ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன த்தை சேர்ந்த மார்டின் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார். எய்ட்ஸ் நோய் 1980களின் ஆர ம்பகாலத்தில் தோன்றிய காலத்தி லிருந்து இன்று வரை அந்த வைரஸ் கிட்டத்தட்ட 7 கோடியே 80 லட்சம் பேரிடம் பரவியுள் ளது. அதில் பாதிப்பேர் இறந்துவிட் டனர்.

ஜனாதிபதியின் தலைமையின் கீழ் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் - வடக்கு முதல்வர்

புதிய ஜனாதிபதியாகிய உங்கள் தலைமையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமென்ற முழுமையான நம்பிக்கை எமக்குள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், 1948லிருந்து தொடரும் தேசிய பிரச்சினைக்கு உங்கள் தலைமையிலான அரசாங்கம் நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் உட்பட அமைச்சர்கள், மாகாண அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
எமது மாகாணத்திற்கு வருகை தந்துள்ள உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன். (மேலும்....)

பங்குனி 03, 2015

அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள த.தே.கூ முன்வர வேண்டும்!

தமிழரசுக் கட்சியின் ஆணவப்போக்கையும் அதன் தான் தோன்றித்தனத்தையும் இனிமேலும் பொறுத்துகொள்ளாமல் ஒரு முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தமிழ் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்நது, ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. புத்தி ஜீவிகளும், தமிழ்த் தலைவர்களும், ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களும் ஒன்று சேர்வோம் ஒரு புதிய அணியை உருவாக்குவோம் பரவலாக்கலையும், ஜனநாயகத்தையும் இலங்கை அரசிடம் கோரி நிற்கும் நாம் நமக்கு கிடைக்கும் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளவும், ஜனநாயக வழிமுறைகளை மேற்கோள்ளவும் பழகிக் கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.(மேலும்....)

ஜனாதிபதி மைத்திரி பிரதமராக களமிறக்கப்பட வேண்டும் – அமைச்சர் ராஜித சேனாரத்ன

நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்தால், ஜனாதிபதி பதவியில் எந்த பிரயோசனமும் இல்லை எனவும், ஜனாதிபதி பதவி என்பது பெயரளவிலான பதவியாக மாத்திரமே இருக்கும் எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட்டால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக எதிர்வரும் தேர்தலில் களமிறக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 8ம் திகதி அதிகாரத்திற்கு வந்தார். ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்த பின்னர், உரையாற்றிய அவர், 100 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறினார். அத்துடன் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் வரப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்த 62 லட்சம் மக்கள் அவர் எவ்வித அதிகாரமும் இன்றி இருப்பதை காண விரும்பவில்லை என ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

தேசிய அரசாங்கமா? அது என்ன? எதற்கு?

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவே பிரதமராவார். அவ்வாறான நிலைமை இல்லாவிட்டால் ஐ.தே.க. இதனை விரும்பாது. ரணில் பிரதமரானால் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி தாம் இழந்த சிறப்புரிமைகளை மீண்டும் பெற்றுக்கொள்ள கனவு காணும் சிறு கட்சிகளினதும், அதே கனவை காணும் சு.க.வில் உள்ள பிரிவினரதும் நிலைமை படு மோசமானதாகிவிடும். அந்த சிறு கட்சிகளுக்கு மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. இரு பிரதான கட்சிகளும் ஒன்று சேர்ந்தால் ஏனைய சிறு கட்சிகளுக்குப் போலவே மஹிந்தவை கரை சேர்க்க முயற்சிக்கும் அக்கட்சிகளுக்கும் தொற்றிக்கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட பிரதான கட்சியொன்றும் இல்லாமல் போய்விடும். எனவே அவ்விரு சாராரும் தேசிய அரசாங்கம் என்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். இவ்வாறு எல்லோரும் தமக்கு என்ன நடக்கப்போகிறது என்பதன் அடிப்படையிலேயே பிரச்சினையை அணுகுகிறார்கள். தேசிய அரசாங்கம் வந்தாலும் தமது நிலை மாறாது என்று நினைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகள் மட்டும் பிரச்சினைகளை தீர்க்க அது உதவுமா இல்லையா என்று பார்க்கின்றன. (மேலும்....)

து எப்படி?

வர்த்தகர் வெத்தசிங்ஹ உள்ளே! சரவணபவன் வெளியே!!!

பிரபல வர்த்தகரான ரவி வெத்தசிங்ஹவை மே மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என்.ரணவக்க உத்தரவிட்டுள்ளார். நாவலவிலுள்ள காணி மற்றும் ரூபாய் 10 மில்லியன் பெறுமதியான வீடொன்றை மோசடி செய்தார் என்ற குற்றத்துக்காகவே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த ரவி வெத்தசிங்ஹவை, குடிவரவு அதிகாரிகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கடந்த மாதம் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கைதுசெய்திருந்தனர். அவர், நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முயன்றபோதே அதிகாரிகள் அவரை கைதுசெய்தனர். வெத்தசிங்ஹ மீதான பல வழக்குகள் நிலுவையில்; இருந்தமையினால், பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு எதிராக பகிரங்க பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதுசரி வெத்தசிங்ஹாவை மடக்கிய புதிய அரசு பசில் ராஜபக்ஷவை தவறவிட்டது எப்படி விமான நிலையத்தில்? சரவணபவனை வெளியில் விட்டு வைப்பது எப்படி?

சீனாவுக்கு, இலங்கை ரூ. 650 பில்லியன் கடன்

இலங்கை, சீனாவிடம் 5 பில்லியன் டொலர்களை (650 பில்லியன் ரூபாய்) கடனாக பெற்றுள்ளதாகவும் இவை அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சீன பயணத்தின் போது, சீன அரசாங்கம் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த கடன்கள் தொடர்பிலான விவரங்களை தமக்கு தெரியபடுத்துமாறு கேட்டுகொண்டமைக்கு அமைய, இந்த விவரங்களை சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக ரொய்டர் செய்திச்சேவை இன்று திங்கட்கிழமை(02) செய்தி வெளியிட்டுள்ளது. கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் நாட்களில் சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த கடனானது இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே வழங்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா ஜயினியிங் கூறியதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் ஏழ்மையான ஜனாதிபதி விடைபெற்றார்

உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதி என வர் ணிக்கப்படும் உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிகா தனது தவணைக் காலம் முடிந்து ஜனாதிபதி பதவி யில் இருந்த விலகிக் கொண்டார். புதிய ஜனாதிபதியாக மருத்துவரான டபரே வஸ்குஸ் நேற்று முன் தினம் பதவி ஏற்றார். 3.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தென் அமெரிக்க நாடான உருகுவேயை ஆட்சி புரிந்த முன்னாள் கெரில்லா வீரரான 79 வயது முஜிகா  கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து விடைபெற்று தனது பழைய கார் வண்டியில் ஏறி தான் வாழும் சிறிய பண்ணை வீட்டுக்கு சென்றார். உருகுவே மக்களால் 'பெபே' என்று அழைக்கப் படும் முஜpகா தனது எளிமையான வாழ்க்கை காரணமாக உலகின் மிக ஏழ்மையான ஜனாதிபதி யாக வர்ணிக்கப்பட்டார். கடந்த 2010 ஆம் ஆண்டு உருகுவே ஜனாதிபதியாக பதவியேற்ற முஜிகா , ஆடம்பர ஜனாதிபதி மாளிகைக்கு செல்ல மறுத்து, தனது சிறிய பண்ணை வீட்டிலேயே தங்கி இருந்து ஆட்சி நடத்தினார். (மேலும்....)

ஐ.நா.அறிக்கை இன்னுமொரு தடவை பிற்போடப்படமாட்டாது

ஐ.நா. விசாரணை எவ்வாறேனும் செப்டெம்பரில் சமர்ப்பிக்கப்படும். எக்காரணம் கொண்டும் இன்னு மொரு தடவை பிற்போடப்பட மாட்டாது என பான்கி மூனின் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் வடமாகாண முதலமைச்சரிடம் உறுதியளித்தார். இனப்படுகொலை தீர்மானத்தை வடமாகாண சபை கொண்டு வந்ததன் அர்த்தம் என்ன என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்கீ மூனின் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் வடமாகாண முதலமைச்சரிடம் கேட்டார். இனப்படுகொலை தீர்மானம் தமிழ் மக்களின் மனநிலையை வெளிப்படுத்தும் ஆவணம், தமிழர்களால் தெரிவான அரசாங்கம் இராணுவ முகாம்களை அகற்ற மாட்டோம் என்று வெளிப்படையாக கூறுகிறது. வருங்காலத்தில் சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு சுமுகமான உறவை வளர்க்க வேண்டுமாயின், தமிழ் மக்களுக்கு இதுவரை காலமும் நடைபெற்றிருக்கின்ற அவலங்கள் சம்பந்தமாக சிங்கள மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் இனப்படுகொலை தீர்மானம் தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்காட்டும் ஆவணம் என்பதை ஏனைய சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசாங்கத்திற்கும் எமக்கும் இடையில் சுமுகமான உறவு ஏற்பட வேண்டுமென்பதே எமது எதிர்பார்ப்பு என ஆணித்தரமாக வடக்கு முதல்வர் எடுத்துரைத்தார்.

அமெரிக்கா - தென் கொரியா இராணுவப் பயிற்சி

வட கொரியா ஏவுகணை விட்டு எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு இடையில் ஆண்டுதோறும் இடம்பெறும் இராணுவ பயிற்சி ஆரம்பமா கவுள்ள நிலையில் வட கொரியா இரு குறுகிய தூர ஏவு கணைகளை கடலில் வெடிக்கச் செய்துள்ளது. மேற்கு நகரான நம்போவில் இருந்து கொரிய தீபகற்பத் தின் கிழக்கு கடலை நோக்கி 490 கிலோமீற்றர் தூரம் செல்லும் இரண்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என்று தென் கொரிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது. வட கொரியாவை ஆத்திரத்திற்கு உள்ளாக்கும் இராணுவ பயிற்சியில் ஆயிரக்கணக்கான துருப்பினர் பங்கேற்கவுள்ளனர். வட கொரியா தனது அதிருப்தியை வெளியிடும் வகையில் ஏவுகணை சோதனை அல்லது கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வருகிறது. இந்த இராணுவ பயிற்சியை அமெரிக்கா மற்றும் தென் கொரியா இயல்பான தற்பாதுகாப்பு நடவடிக்கை என்று விபரித்துள்ளன. ஆனால் இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்று வட கொரியாக குற்றம் சாட்டுகிறது. வட கொரியாவால் நேற்று திங்கட் கிழமை காலை இந்த ஏவுகணைகள் கடலில் வெடிக்கச் செய்யப்பட்டதாக தென் கொரியா குறிப்பிட்டுள்ளது. எந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைக்கு கடும் பதலடி கொடுக்கப்படும் என்று தென் கொரிய பாதுகாப்பு அமைச்சர் கிம் மின் சோக் எச்சரித்தார்.

யாழ்ப்பாணம், திருமலைக்கு ஜனாதிபதி இன்று விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (3/3/2015) யாழ்ப்பாணத்திற்கும் திருகோணமலைக்கும் விஜயம் செய்கின்றார். இன்று காலை 10.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் மாகாண ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறும். அதேநேரம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் கூட்டமும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். அத்தோடு திருகோணமலைப் பல்கலைக்கழகத்தில் மூன்று புதிய விடுதிகளையும் புதிய விளையாட்டரங்கையும் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இன்று மாலையில் திறந்துவைக்க வுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலராக பிரியங்கா காந்தி

ராகுல் காந்தி விடுப்பில் சென்ற தால் கடும் விமர்சனங்கள் எழுந் துள்ள நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தியை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியை பலப்படுத்துவதற்கு அச் சாரமாக அவருக்கு பொறுப்பு வழ ங்க திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரியங்கா பொதுசெயலாளராக நியமிக்கப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ராகுல் காந்தி எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் பொதுநல வழ க்கு தொடரப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் செயல்பாட்டை கண்டித்து  நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினரே போஸ்டரை ஒட்டினர். கட்சியின் துணைத் தலைவர் பதவி யில் இருந்து அவர் விலகுவதோடு பிரியங்கா காந்தியை முன்னிலைப் படுத்த வேண்டும் என்ற கோபமும் வலுத்து வருகிறது. இதன் காரண மாக பிரியங்காவுக்கு உடனடியாக புதிய பதவி வழங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படு கிறது.

பங்குனி 02, 2015

கிழக்கு மாகாண சபையில்

மு.கா.வுக்கு வழங்கிய ஆதரவை அறுவர் வாபஸ் பெற்றனர்

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியமைப்பதற்காக சத்தியக்கடதாசியின் மூலமாக தாங்கள் வழங்கிய ஆதரவை, ஆறு உறுப்பினர்கள் வாபஸ் பெற்றுக்கொண்டனர். மு.கா., ஆட்சியமைப்பதற்காக மாகாண சபையிலிருக்கின்ற உறுப்பினர்களில் 20 பேர் சத்தியக்கடதாசியின் ஊடாக தங்களுடைய ஆதரவை தெரிவித்திருந்தனர். இதனையடுத்தே கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நஷீர் அஹமட் தெரிவுசெய்யப்பட்டார். இந்நிலையில், ஆறு உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தன்னிச்சையாக செயற்படுவதாக கூறி, ஏனைய இரண்டு கட்சிகளைச்சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களுடைய ஆதரவை இன்று திங்கட்கிழமை வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களான விமலவீர திஸாநாயக்க, டப்ளியு.டி.எச் வீரசிங்க, ஜயந்த விஜேசேகர, டி.எம்.ஜயசேனவும் தேசிய காங்கிரஸை சேர்ந்த எம்.எஸ் உதுமாலெப்பை மற்றும் எம்.எல்.எம். ஆமீர் லெப்பை ஆகியோரே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளனர். திருகோணமலை, கிறீன் வீதியிலுள்ள சன்செடன் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட அறுவரில் நால்வரே தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர். திருகோணமலை, கிறீன் வீதியிலுள்ள சன்செடன் விடுதியில் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்குறிப்பிட்ட அறுவரில் நால்வரே தங்களுடைய தீர்மானத்தை அறிவித்தனர்.

அனந்தி – சுரேஸ் செயலால்!

தமிழரசுக்கட்சி ஆவேச தீர்மானம்…..

வவுனியாவில் ஞாயிறன்று காலை கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு அந்தக் கட்சியின் மகளிர் அணி துணைச்செயலாளரும் வடமாகாணசபை உறுப்பினருமாகிய அனந்தி சசிதரன் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவப் பொம்மை எரிக்கப்பட்ட சம்பவத்திற்குத் துணை போயிருந்தனர் என குற்றம் சுமத்தியிருக்கின்றது. இந்தச் சம்பவம் குறித்து இதுவரையிலும் இவர்கள் இருவரும் கவலை தெரிவிக்காமல் இருப்பது, இந்தச் செயல் தொடர்பான அவர்களின் மனப்பூர்வமான ஈடுபாட்டையே காட்டியிருப்பதாகவும், அவர்களின் இந்தச் செயற்பாடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு தெரிவித்துள்ளது. (மேலும்....)

பொதுத் தேர்தல்! ஏப்ரல் மாதமாம்….

நாடாளுமன்றத்தை எதிர் வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி கலைத்துவிட்டு ஜூன் மாதம் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளுக்கிடையில் இணக்கம் காணப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. எதிர்வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை பிரதான இரு கட்சிகளும் மேற்கொண்டு வருவதுடன் ஆங்காங்கே பிரசார வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. (மேலும்....)

அரசியலமைப்பு திருத்தத்துக்கு சுதந்திர கட்சி பல்வேறு யோசனைகள் முன்வைப்பு

நிறைவேற்று அதிகார ஒழிப்பு; கலப்பு தேர்தல் முறை

ஜனாதிபதி பதவிக் காலத்தை 6ல் இருந்து 5 ஆக குறைத்தல்

கட்சித் தாவலுக்குத் தடை


நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்விதத்திலும் எதிர்க்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். சில வாராந்தப் பத்திரிகைகளிலும் இணைய தளங்களிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் அதிகாரங்களை குறைக்கக் கூடாது என்றும், தேர்தல் முறைமையை மாற்றத் தேவை இல்லை எனவும் தாம் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. அச்செய்தி முற்றிலும் பொய்யானது என எதிர்க்கட்சித் தலைவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். (மேலும்....)

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.., பதினெட்டாம் ஆண்டை வரவேற்கும் முகமாக, “வேரும் விழுதும் - 2015" கலைமாலை..!!

காலம்: 06.06.2015
நாள்: சனிக்கிழமை.
நேரம்: பி.பகல் 02.30மணி.
விழாநடைபெறும் இடம்: பேர்ன்
(இவ்வருடம் பேர்ன் மாநிலத்திலும், அடுத்த வருட 2016ம் ஆண்டுக்கான நிகழ்வை சூரிச் மாநிலத்திலும் நடத்துவதெனவும் தீர்மானிக்கப் படுகிறது) (மேலும்....)

பொறுப்புக்கூறும் பிரச்சினைக்கு தென் ஆபிரிக்காவின் வழிமுறையை கையாள முயற்சி

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் பொறுப்புக் கூறும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிலிருந்து (TRC) விளக்கம் பெற்றுக்கொள்வதற்கான முன்னெடுப்புக்களை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளது. வெள்ளையர்களின் இன ஒதுக்கல் ஆட்சிக் காலத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி உண்மையை கண்டறிவதனால் நாட்டில் பகைமை மறைந்து நல்லிணக்கம் உருவாக உதவுவதற்கென தென் ஆபிரிக்கா 1995இல் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவியது. இலங்கை – தென் ஆபிரிக்கா கருத்தாடல் களத்துக்கு சமாந்தரமாக தென் ஆபிரிக்க பிரதி வெளிவிவகார மற்றும் ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் நெமெய்ன்டியா, பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி.பெரேராவுடன் வியாழனன்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த கருத்தாடலின்போது இன ஒதுக்கல் முடிவுக்கு வந்த பின்னர் தென் ஆபிரிக்காவின் அனுபவத்திலிருந்து விளக்கம் பெறும் சாத்தியம் பற்றி பேசப்பட்டது. பொறுப்புக் கூறுதல் பிரச்சினை மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டமை ஆகியவை தொடர்பான குற்றச்சாட்டுகளை கையாள்வதற்கான ஒரு பொறிமுறையை ஆக்கிக்கொள்ளும் செயல்முறை அரசாங்கத்திடம் உள்ளதென பிரதி அமைச்சர் கூறினார். இவ்வாறானதொரு பொறிமுறை சர்வதேச சமூகத்துக்கும் ஏற்புடையதாகவும் நம்பகமாகவும் அமையுமென அவர் கூறினார். முன்னைய ராஜபக்ஷ அரசாங்கமும் இது தொடர்பாக முயற்சிகளைத் தொடங்கியது. இந்த விடயம் தொடர்பாக தென் ஆபிரிக்கா அரசாங்கம் விசேட தூதுவராக பிரதி ஜனாதிபதி சிறில் ரமபோஷவை நியமித்தது.

கடல் மீன் கைது

இலங்கை மீனவர்களுடன் இணக்கம் காணாமல் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது

அண்ணன் தம்பிகளான இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே விசைப் படகுகள்தான் பிரச்சினையாக இருக்கின்றன. இதைக் கட்டுப்படுத்தினாலே போதும், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும்” என்று இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூறியிருக்கிறார். விசைப்படகுகளை உடனடியாகக் குறைத்துக் கொள்ள முடியாது என்று கூறும் தமிழக மீனவர்கள், குறைந்தபட்சம் மூன்று ஆண்டு கால அவகாசம் கோருகிறார்கள். பொது கடல் பரப்பில் மீன்பிடிப்பது எத்தனை நாள் என்பதிலும் உடன்பட மறுக்கிறார்கள். தமிழ் நாட்டில் 5,000 விசைப்படகுகள் இருப்பதாகவும். இவற்றில் 2001 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 2,500 படகுகள் இலங்கைக் கடல் பரப்பின் வளத்தை முற்றிலுமாக சுரண்டி விட்டன என்பதும் இலங்கை மீனவர்களின் குற்றச்சாட்டு. இலங்கை மற்றும் தமிழ் நாடு தரும் புள்ளி விபரங்களின் படி இந்த 10 ஆண்டு காலத்தில் இக்கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் ஆண்டுதோறும் ஒரு இலட்சம் தொன்னுக்கு அதிகமான மீன்களைப் பிடித்துள்ள நிலையில் இலங்கை மீனவர்கள் இதே காலகட்டத்தில் ஆண்டுதோறும் அதிகபட்சம் 10,000 தொன் மீன்கள்தான் பிடித்துள்ளனர். இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பிறகு, இலங்கை மீனவர்கள் மீண்டும் தீவிர மீன்பிடித்தலைத் தொடங்கியுள்ளதால் படிப்படியாக அளவு உயர்ந்து தற்போது ஆண்டுக்கு 40,000 தொன் மீன் பிடிக்கிறார்கள். தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்கும் அளவும் 1.5 இலட்சம் தொன் வரை உயர்ந்துள்ளது. அதே கடல் பரப்பு, அதே மீன்வளம். இரு தரப்பும் தங்கள் மீன்பிடிப்பை அதிகரித்துள்ளன. (மேலும்....)

ரஷ்ய எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் கொலை குறித்த குற்றச்சாட்டை புடின் நிராகரிப்பு

ரஷ்யாவில் எதிரணிச் செயற்பாட்டாளர் போரிஸ் நேம்ஸோவ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் கிரெம்ளின் ஜனாதிபதி மாளிகை சம்பந்தப்பட்டுள்ளதாக எதிரணியினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் வன்மையாக மறுத்துள்ளது. அப்படியான கருத்துக்கள் முற்றுமுழுதாக அர்த்தமற் றவை என்று ஜனாதிபதி விளாடிமிர் புடினின் பேச்சாளர் கூறியுள்ளார். கிரெம்ளின் வளாகத்துக்கு அருகே பாலம் ஒன்றைக் கடந்துசென்று கொண்டிருந்தபோது, நேம்ஸோ வின் பின்புறத்தில் நான்கு துப்பாக்கிச்சு+டுகள் நடத்தப் பட்டுள்ளன. அவரது கொலையாளிகளைக் கண்டுபிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நேம்ஸோவின் தாய்க்கு ஜனாதிபதி புடின் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார். இஸ்லாமிய ஆயுததாரிகள் அல்லது உக்ரைன் மோதல் என அவரது கொலைக்கான காரணம் பற்றி பல கோணங்களிலும் விசாரிக்கப்பட்டுவருவதாக விளாடிமிர் புடினின் கீழ் நேரடியாக இயங்கும் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே, நேம்ஸோ கொல்லப்பட்டதை கொடூரமான கொலை என்று வர்ணித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அவரை ரஷ்யாவுக்காகவும் ரஷ்ய பிரஜைகளின் உரிமைகளுக்காகவும் ஓயாத குரலாக ஒலித்தவர் என்று கூறியுள்ளார்.

ரயிலில் கிடைத்த பாடம்!

கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும், குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம், பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். (மேலும்....)

Giant, cross-border smuggling tunnel found under Arizona house
(By Caitlin Dickson)

ITN - US authorities have discovered a sophisticated tunnel, equipped with lights and ventilation, leading from southern Arizona into Mexico. At 905 feet, the tunnel discovered in Naco, Ariz., this week is almost twice the length of the previous record … When a U-Haul truck carrying 4,700 pounds of marijuana rolled into Bisbee, Ariz., this week, the local cops were ready. The local police had been tipped off and, with the help of the Border Patrol’s canine team, managed to intercept the truck and its $3 million-worth of bundled cargo. The operation was a success, but that was just the beginning. Tracing the U-Haul’s route led the cops and U.S. Border Patrol agents to a house in the border town of Naco, where, inside a small shed on the property, they found the entrance to the longest drug-smuggling tunnel ever discovered in the Tucson sector.  According to a press release from U.S. Immigration and Customs Enforcement (ICE) and Customs and Border Protection (CBP), both agencies of the Department of Homeland Security, specially trained agents from the Border Patrol’s tunnel team were immediately dispatched to begin investigating the underground passageway. Despite an initial delay, due to concerns over the tunnel’s air quality, the investigators found a hydraulic lift inside a cement shaft, leading down into the wood-bolstered tunnel. At least near the entrance, the tunnel is big enough to allow an adult to stand up straight. Tunnels have long served as a popular means of transporting drugs between Mexico and the United States, especially as recent increases in U.S. agents and fencing along the Southwest border have forced cartels to come up with alternative points of entry. The first cross-border smuggling tunnel was discovered by the Border Patrol in 1990. Since then, a total of 168 tunnels have been identified and, since 2006, 80 have been found and dismantled.

பங்குனி 01, 2015

முதலில் இனப்பிரச்சினைக்கு தீர்வு, பின்னரே தேசிய அரசில் இணைவு - மாவை

தமிழ் மக்களின் நீண்ட காலப் பிரச்சினையாகவுள்ள தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்ட பின்னரேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வது குறித்து ஆராயும். இதுவரை தேசிய அரசில் இணைந்து கொள்வது என்ற அந்தப் பேச்சுக்கே இடமில்லை என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படாத நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணையும் என்பது பகல் கனவு. இலங்கையின் புதிய ஆட்சியில் அனைத்து கட்சிகளையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பது தொடர்பிலான முன்னெடுப்புக்கள் நடைபெற்றுவரும் நிலையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இணைவது மட்டுமல்ல புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் எம்மை வந்து அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் கேட்டிருந்தார்கள். ஆனால் அதனை நாங்கள் நிராகரித்திருக்கின்றோம். குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகள் அதிலும் குறிப்பாக மீள்குடியேற்றம் மற்றும் மீள்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டால் தேசிய அரசாங்கத்தில் அங்கம் பெறுவது தொடர்பில் நாங்கள் அப்போது சிந்திக்கலாம் என்றார்.

எல்லை மீறிய மீன்பிடி

வல்லையில் எல்லை மீறிய மீன்பிடிநகைச்சுவையாக இருக்கிறது. பருவகால மாற்றங்களினால் சைபீரியப்பறவைகள் பறப்பினை மேற்கொண்டும், சரக்குகப்பலூடாகவும் இடம்பெயர்ந்து சுமாரான உஸ்ணவலைய நாடுகளுக்கு இடம்பெயர்கின்றன. அந்தப்பறவைகள்தான் இங்கே மீன்பிடியில் ஈடுபடுகின்றன......(Santhiramouleesan Laleesan's )

மாற்றத்தை ஏற்படுத்தியது அறிக்கை விடவும் பேரணி நடத்தவும் அல்ல

கடும் பிரயத்தனத்திற்குப் பின்னர் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் தலைமையிலான ஆட்சி மாற்றத்தில் தமிழ் பேசும் மக்களாகிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குப் பெரும் பங்கு உள்ளது. இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்படப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களும் வெளிப்படை யாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதனால் இந்த மாற்றமான சூழலுக்கு வழிகோலிய இச்சிறுபான்மை மக்களுக்கு இந்த ஆட்சியிலும் நிச்சயம் பங்கு உள்ளது. இப்போது இம்மக்கள் இந்தப் புதிய அரசாங்கத்தின் பங்காளிகளாகவே உள்ளனர். (மேலும்....)

புலம்பெயர் தமிழர்கள் மீது கடுப்பான நடிகர் சரத் குமார்

புலம்பெயர் தேசமெங்கும் நடிகர் சரத் குமார்இற்கு தடா...?

இலங்கைப் புலம்பெயர் தமிழர்கள் மீது பிரபல தென்னிந்திய நடிகர் சரத்குமார் குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர்கள் தென்னிந்திய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் இணையத்தில் தரவேற்றம் செய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களே அதிகளவில் தமிழகத்தில் திரையிடப்படும் புதிய திரைப்படங்களை சட்டவிரோதமான முறையில் பதிவு செய்து, அவற்றை இணையத்தின் ஊடாக தரவேற்றம் செய்வதாக தெரிவித்துள்ளார். (மேலும்....)

Iraqi Army Downs Two British Planes Carrying Weapons for ISIL Terrorists

al-Anbar province: numerous flights by US-led coalition planes airdrop weapons and supplies for ISIL in terrorist-held areas.


Iraq’s army has shot down two British planes as they were carrying weapons for the ISIL terrorists in Al-Anbar province, a senior lawmaker disclosed on Monday.
“The Iraqi Parliament’s National Security and Defense Committee has access to the photos of both planes that are British and have crashed while they were carrying weapons for the ISIL,” Head of the committee Hakem al-Zameli said, according to a Monday report of the Arabic-language information center of the Islamic Supreme Council of Iraq. (more.........)

நிறைவேற்று அதிகார முறைமை
சு.க. இணங்க மறுத்தால் முற்றாக ஒழிக்கப்படும்!

நிறைவேற்று அதிகாரம் சம்பந்தமான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடு தேசிய நிறைவேற்றுச் சபையின் பொது நிலைப்பாட்டுக்கு எதிராக இருக்குமாயின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை முற்றாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய நிறைவேற்றுச் சபை கூடிய சந்தர்ப்பத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை சம்பந்தமான விடயங்களை கலந்துரையாடிய போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பொது நிலைப்பாட்டுக்கு எதிரான யோசனையை முன்வைத்ததுடன் 19 வது திருத்தச் சட்டம் மூலம் 17 வது திருத்தச் சட்டத்தை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பான கருத்துக்களை முன்வைத்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ரத்துச் செய்ய தேசிய நிறைவேற்றுச் சபை தீர்மானித்துள்ள போதிலும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலத்தில் மாத்திரம் அந்த அதிகாரங்களில் ஓரளவு அதிகாரங்களை அவருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரது பதவிக்காலத்தின் பின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை முற்றாக ஒழித்து புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய நிறைவேற்றுச் சபை பொது நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

புலிகளின் தலைவர் பிரபாகரனை வழி நடத்தவில்லை - சப்ரா மைத்துனர்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொள்கைகளும், அவர்களது அண்மைக்காலப் போக்குகளும் பிடிக்காத காரணத்தினால் தான் அக்கட்சியிலிருந்து விலகும் தீர்மானத்தை எடுத்து கட்சியிலிருந்து முற்றாக விலகியும் விட்டதாக சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் செயலாளருமான சு. வித்தியாதரன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தனது புத்தக வெளியீட்டு நிகழ்விற் காகச் சென்றிருக்கும் அவர் அங்கு இணையத்தளமொன் றின் வானொலிச் சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன் தான் ஒருபோதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வழி நடத்தவில்லை எனவும், 2002 ம் ஆண்டில் புலிகளின் தலைவர் பிரபாகரனால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவரிடம் தான் ஒரு வினாவைக்கூடக் கேட்கவில்லை எனவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய்க்கு விரைவில் நிரந்தர மருந்து

நீரிழிவு நோயிலிருந்து விடுபட மருந்து வரப்போகிறது என்றால் இதில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ஒரு பெரும் ஆனந்தம் தானே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அதிக அளவில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு ஒரு மிகப் பெரிய திருப்புமுனை என ஆராய்ச்சியாளர்கள் பாராட்டியுள்ளனர். இதன் மூலமாக 1 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ளும் இலட்சக்கணக்கானோர் பயன் பெறுவர். இதன் மூலம் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டவுக் மெல்டன் அவர்களின் 23 ஆண்டு கால ஆராய்ச்சியானது அதன் முடிவை நெருங்கியுள்ளது. பேராசிரியர் டவுக் மெல்டன் மகன் சாம் பிறந்த போது டைப் ஒரு வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததே அவரின் இந்த ஆராய்ச்சிக்கு காரணம். (மேலும்....)

தஞ்சம் கோருவோரின் புதைகுழியான மத்தியதரைக் கடல்

"போகும் வழியில் நான் இறந் தால் இறந்துவிட்டுப் போகிறேன். இங்கு தொடர்ந்து இருந் தாலும் வறுமையில் இறக்கத்தான் போகிறேன்." வட ஆபிரிக்காவில் இருந்து உயிரைப் பணயம் வைத்துக் கொண்டு ஐரோப்பாவுக்கு கனவு உல கைத் தேடிப் போகும் ஒருவர் சொன்ன வீர வசனம் தான் இது. வட ஆபிரிக்காவின் மத்தியதரைக் கடல் பக்கம் திரும்பி எட்டிப் பார்த் தால் ஐரோப்பா தெரிந்துவிடும். மறு பக்கம் திரும்பிப் பார்த்தால் வறுமை, யுத்தம், சண்டை என்று ஏகப்பட்ட பிரச் சினை. எனவே அங்கிருந்து எதிலா வது தொத்திக்கொண்டு ஐரோப்பா செல்ல முயற்சிப்பவர்கள்தான் அதிகம். இப்படி ஓட்டைப் படகில் ஏறி ஐரோப்பா செல்ல முயற்சிப்பவர்கள் பற்றிய எந்த கணக்கு வழக்கும் தெரியாது கடலில் மூழ்கி இறந்தாலும் எத்தனை பேர் என்று சரியாக கணக் குப் பார்த்துச் சொல்ல முடியாது. இப்படி முகவரி இல்லாமலேயே பல நூறு பேர் மத்தியதரைக் கடலில் சமாதியாகி இருக்கிறார்கள். (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com