Contact us at: sooddram@gmail.com

 

வைகாசி 2011 மாதப் பதிவுகள்

வைகாசி 31, 2011

பிளஸ்- மைனஸீக்குள் திணறிக்கொண்டிருக்கும் தீர்வு

அன்று 'சமாதானப் பொறி" - இன்று 'பேச்சுவார்த்தை பொறியா?"

ஆயுதப் போராட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாத விடயங்களை வேறு மார்க்க வாயிலாகப் பெற்றுக் கொள்வதற்குச் சர்வதேச நாடுகளில் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் முயற்சிக்கின்றனர். அதேவேளை தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக எந்தவொரு தரப்பினரையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து சகல கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்துவோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்லாது அனைவருடனும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன. அரசாங்கத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கூறியுள்ளார். (மேலும்....)

வைகாசி 31, 2011

மோதல் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய நாளை மூடப்பட்டிருக்கும்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இன்று மேற்கொண்ட ஆர்பாட்டத்தில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கும் இடையே இடம்பெற்றது. இதன் காரணமாக கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் நாளை மூடப்பட்டிருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இம் மோதலில் பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவர் மற்றும் மேலதிக பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 9 பொலிஸார் காயமடைந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். தனியார் ஓய்வூதிய சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் இன்றுகாலை பாரிய ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன்போது ஆர்பாட்டக் காரர்களை விரட்டியடிக்க பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் செய்ததை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பபட்டுள்ளது. மோதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

வைகாசி 31, 2011

உணவு உற்பத்தியில் பாதிப்பைத் தவிர்க்க

சிட்டுக் குருவிகளுக்கு கூடுகளை செய்து கொடுங்கள்       

60 கோடி கையடக்க தொலைபேசிகள் உள்ளன. இதற்காக 5 இலட்சம் கோபு ரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏற்படும் மைக்ரோ வொயிஸ் அதிர் வால் 30 சதவீத சிட்டுக்குருவிகள் அழிந்து விட்டன. சிட்டுக்குருவி, தேனீ உள்ளிட்டவை அழிந்து கொண்டே வருவதால், அயல் மகரந்த சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் உணவு உற்பத்தி குறைந்து வருகிறது. வேளாண்மைக்கு பயன்படுத்தப்படும் இரசாயன பூச்சிக்கொல்லி மருந்து களும், சிட்டுக்குருவிகளுக்கு விஷமாக மாறி, அவைகள் உயிரிழக்க நேரிடுகிறது. தொடர்ந்து கட்டப்படும் கொங்கிரீட் வீடுகளால் சிட்டுக்குருவி களுக்கு கூடு கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லாததாலும் அவற்றின் இருப்பிடத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை பெருக்க மரத்தாலோ, மூங்கிலாலோ அல்லது மண் கலசங்கள் மூலமாகவே சிட்டுக் குருவிகளின் கூடுகளை செய்து ஜன்னல் அல்லது நிழல் தட்டி போன்ற இடங்களில் தொங்கவிட வேண்டும்.

வைகாசி 31, 2011

கனிமொழி ஜாமீன் மனு,  தீர்ப்பு நிறுத்தி வைப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள திமுக எம்.பி., கனிமொழி யின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக தில்லி உயர்நீதிமன்றம் திங்களன்று தெரிவித்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட கனி மொழி, இவ்வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதி மன்றம் ஜாமீன் அளிக்க மறுத்ததைத் தொடர்ந்து மத்திய குற்றப் புலனாய்வுக் கழக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், ஜாமீன் மறுக்கப்பட்டதை எதிர்த்தும், தனக்கு ஜாமீன் அளிக்க உத்தரவிடக்கோரியும் கனிமொழி, தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையை மே 30ம் தேதிக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது. (மேலும்....)

வைகாசி 31, 2011

லெபனானின் எல்லைக்குள் புகுந்து ஐ.நா.வின் தீர் மான விதிகளை இஸ்ரேல் மீறியுள்ளது

இஸ்ரேல் ராணு வத்திற்குச் சொந்தமான ஆளில்லா விமானம், லெபனா னின் அல் நாகுரா என்ற கிராமத்தின்மீது பறந்தவாறு லெபனானின் எல்லைக்குள் புகுந்தது. சுமார் 35 நிமி டங்கள் லெபனானின் வானில் அது பறந்து கொண் டிருந்தது. உளவுவேலை பார்ப்பதே அந்த விமானத் தின் நோக்கம் என்று லெபனான் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இருநாடு களின் தடைகள் மற்றும் பொய்ப்பிரச்சாரங்களை மீறி ஒன்றுபட்ட அரசை உருவாக்குவதில் பாலஸ்தீனத் தைச் சேர்ந்த பதா மற்றும் ஹமாஸ் அமைப்புகள் முன் னேறியுள்ளன. ஜூன் ஆறாம் தேதிக்குள் எத்தகைய அரசை அமைப்பது என்பது முடிவாகிவிடும் என்று இரு தரப்பையும் சேர்ந்த தலைவர்கள் தெரிவித்துள் ளனர். யார், யார் அமைச்சர்கள் என்பதை ஒரு கூட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது.

வைகாசி 31, 2011

வடக்கில் தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியை கற்பதைப் போல தென் இலங்கையில் சிங்கள பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்பார்கள்

 

வடக்கில் தமிழ் பிள்ளைகள் சிங்கள மொழியை கற்பதைப் போல தென் இலங்கையில் சிங்கள பிள்ளைகள் தமிழ் மொழியைக் கற்பார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். வடக்கு பாடசாலைகளில் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்ட தமிழ் மாணவிகளும் தமிழ் ஆசிரியர்களும் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சிங்கள பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும் தமிழ் பிள்ளைகளுக்கு சிங்கள மொழியையும் கற்பிக்க வேண்டும் என 1970ல் நாம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை அன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருக்குமானால் எம்மிடையே பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வளர்வதற்கு வாய்ப்பு கிட்டியிருக்கும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

வைகாசி 31, 2011

சர்வதேச அளவில் அணுசக்தித்துறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவை ஜெர்மனி அரசு எடுத்திருக்கிறது

சர்வதேச அளவில் அணுசக்தித்துறை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவை ஜெர்மனி அரசு எடுத்திருக்கிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் அனைத்து அணுஉலைகளையும் இழுத்து மூடுவதாக அந்நாட் டின் சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோட்ஜென் அறிவித்துள்ளார். அணுசக்தியைக் கைவிடும் முதல் தொழில்மய நாடுகளில் ஒன்றாக ஜெர்மனிதான் இருக்கப்போகிறது.

வைகாசி 31, 2011

உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த ஸ்ரீ.ல.சுதந்திர கட்சி தீர்மானம்

இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளுடனும், தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி மிகவும் பயன்மிக்க முறையில் சமர்ப்பிக்கும் வரையில், உத்தேச ஓய்வூதியச் சட்டமூலத்தை இடைநிறுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நேற்று (30) மாலை அலரி மாளிகையில் ஒன்றுகூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. இதன் பிரகாரம் உத்தேச சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் செயற்பாடானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சி பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது இதுபற்றி கலந்துரையாடுவதற்கும், சுதந்திர வர்த்தக வலயத்தின் நடவடிக்கைகளை செயலிழக்கச் செய்வதற்காக சில தீய சக்திகளை நிபந்தனையற்ற முறையில் தோல்வியடையச் செய்து அனைத்து தொழிற்சாலைகளையும் மற்றும் அதன் ஊழியர்களின் உரிமைக ளையும் பாதுகாப்பதற்கான முக்கியத்துவம் பற்றியும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

வைகாசி 31, 2011

ஸ்பெயின் அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள்

ஸ்பெயின் அரசின் பொருளாதாரக் கொள்கை களை எதிர்த்து தலைநகர் மாட்ரிட்டின் மையச்சதுக்கத் தில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் கடந்த 15 நாட்களாகத் தொடர்கின்றன. அப்பகுதியில் முகா மிட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைத் தொடர முடிவெடுத்துள் ளார்கள். பார்சிலோனாவிற்கு இந்தப் போராட்டம் பரவி யுள்ளதால், அரசின் மீது நிர்ப்பந்தம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வைகாசி 31, 2011

பாதிக்கப்பட்டோருக்கு நல்லிணக்க ஆணைக்குழு மூலம் நியாயமான தீர்வு கிடைக்கும்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரை

  • ஒரு நாட்டின் செயற்பாட்டை அரசுடன் இணைந்தே ஐ.நா சபை ஆராய்வது அவசியம்

  • புலம் பெயர்ந்த தமிழர்களை வடக்கு, கிழக்கு அபிவிருத்தியில் முதலீடு செய்ய அரசு அழைப்பு

  • உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதில் அரசாங்கம் முன்னுரிம

யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் சுமார் இரண்டு இலட்சத்து 90 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கி துரிதமாக செயற்பட்டது. (மேலும்....)

வைகாசி 31, 2011

தி. மு. க. ஆட்சியில் சகல துறைகளிலும் ஊழல்; விசாரணை நடத்தும்படி ஜெயலலிதா உத்தரவு

பொதுப்பணித்துறை மூலம் மணல் நேரடியாக விற்பனை செய்ய உள்ளதால், ஒரு வாரத்தில் மணல் விலை குறையும் என பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் தெரிவித்தார். ஈரோடு வந்த அவர், எம். ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவித்ததன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- கடந்த தி. மு. க. ஆட்சியில் அனைத்த துறைகளிலும் ஊழுல் நடந்துள்ளது. அதன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிள்ளார். என் துறையில் ஆண்டு ஒன்றுக்கு 12 இலட்சம் டொன் மணல் மட்டுமே எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்துள்ளது. (மேலும்....)

வைகாசி 31, 2011

14 சிவிலியன்கள் கொலை

அமெரிக்க படைக்கு ஆப்கான் ஜனாதிபதி இறுதி எச்சரிக்கை

அமெரிக்க படைக்கு கடைசி எச்சரிக்கை விடுப்பதாக ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாயி அறிவித்துள்ளார். அமெரிக்கப் படையின் வான்தாக்குதலில் இரண்டு பெண்கள், 14 ஆப்கான் சிறுவர்கள் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து ஆப்கான் ஜனாதிபதி வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “அமெரிக்க, நேட்டோ படைகளுக்கு மீண்டும் மீண்டும் கூறுகிறேன், உங்கள் தேவையற்ற தாக்குதலால் ஆப்கான் பொது மக்களே கொல்லப்படுகிறார்கள். இது மிகப்பெரிய தவறாகும். இந்தத் தாக்குதல்களால் மனித விழுமியங்களே மீறப்படுகிறது” என்று ஆப்கான் ஜனாதிபதியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 31, 2011

 

யுத்த தோல்வியினால் நொந்துள்ள சில தமிழ் மக்களை அன்பின் மூலம் சிங்களவர் வென்றெடுக்க வேண்டும்
 

இது, மக்கள் அனைவருக்கும் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்ற உணர்வுடன் நாம் பெருமைப்பட வேண்டும் ஒரு நாடு யுத்தத்தில் வெற்றியடைவதற்கு, நாட்டு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பே பிரதான காரணமாகும். இதனால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த வெற்றி என்னுடையதல்ல என்று எந்நேரமும் கூறுவதுண்டு. ஆயினும், சிலர் நாங்கள்தான் இந்த யுத்தத்தில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்தோம் என்று ஆடம்பரமாகப் பேசுவதில் தன்னிச்சையான இன்பம் காண்கின்றனர். இந்த வெற்றிக்கு நானே பொறுப்பு, நான்தான் திட்டமிட்டு இந்த வெற்றியை ஏற்படுத்தினேன் என்று பிரபாகரனின் தோளைக் கட்டி அந்த மனிதனுடைய வலுவை புரிந்துகொண்டவர்கள் போன்று சிலர் தம்பட்டமடிப்பார்கள்.(மேலும்....)

 

வைகாசி 31, 2011

12 ஆண்டுகளாக நடந்த சர்வதேச விண்வெளி மைய கட்டுமான பணி முடிந்தது!

கடந்த 12 ஆண்டுகளாக நடந்து வந்த சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியது. விண்வெளி ஆய்வுக்காக பூமிக்கும் மேலே 355 கி.மீ. தொலைவில் சர்வதேச விண்வெளி மையம் கட்டும் முயற்சியில் 16 நாடுகள் ஈடுபட்டன. அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்கலகங்களில் மாறி மாறி, பொருட்கள் மற்றும் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு சர்வதேச விண்வெளி மையம் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் கடந்த 12 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வந்தது. இதுவரை 4 இலட்சத்து 55 ஆயிரம் கிலோ எடையுள்ள வன் பொருட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இறுதி கட்டமாக 15 மீற்றர் நீளமுள்ள ரோபோ கிரேன் பொருத்தும் பணியை எண்டவர் விண்கலத்தில் சென்ற விண்வெளி வீரர்கள் பின்கி மற்றும் சேமிடோப் ஆகியோர் முடித்தனர். (மேலும்....)

வைகாசி 30, 2011

பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் போராட ஆரம்பித்துவிட்டார்கள்??

சாம்பர் எங்களது இடம்! எங்களுக்கு எங்களது இடம் வேண்டும்!!’

ஐந்து வருடங்களாகக் கேட்கும் அவர்களது வேண்டுகோளானது செவிட்டு யானைகளிடத்தில் வீணை வாசிப்பது போல ஆகியமையால் அவர்கள் தமது உரிமைகளுக்காக வீதியிலிறங்கத் தீர்மானித்திருக்கிறார்கள். சேருநுவர – திருகோணமலை வீதியில் முகாமுக்கு முன்னே வந்து நின்று கிளிவெட்டி இடம்பெயர் முகாம் மக்கள் தங்களது போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வளவு காலமும் அடங்கிப் போயிருந்த மக்கள் போராட்ட அட்டைகளை உயர்த்தியபடி கோஷமெழுப்புகிறார்கள். ‘சாம்பூர் எங்களது இடம்! எங்களுக்கு எங்களது இடம் வேண்டும்!!’ அந்தப் பாடசாலையில் நாங்கள் சந்தித்த சிறு குழந்தையின் கையிலும் ஒரு போராட்ட அட்டை இருந்தது. கிளிவெட்டி முகாமானது நாளை பற்றியெரியக் கூடிய மக்கள் போராட்டத்தின் முதல் வித்தோடு திரும்பவும் இரவின் இருளில் மூழ்கியது.(மேலும்...)

வைகாசி 30, 2011

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் நாளிதழினது அலுவலகச் செய்தியாளரான கவிதரன் என்பவரே அவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயைச் சேர்ந்த குடும்பஸ்தரான கவிதரன் காலை வழமை போன்று அலுவலகம் செல்லும் நோக்கில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகில்  ஐந்து நபர்களைக் கொண்ட குழுவொன்று அவரைத் தாக்கியுள்ளது. (மேலும்...)

வைகாசி 30, 2011

‘பாலஸ்தீனமே பெரிது’

இஸ்ரேலையும் அமெரிக்காவையும் எரிச்சலடையச் செய்யும் நிகழ்வுகள் பாலஸ் தீனத்தில் நடந்துவருகின்றன. காசா பகுதியை தனது பிரதேசமாகவும், மேற்கு கரைப்பகுதியை தனது பிரதேசமாகவும் கருதி ஹமாஸ் இயக்க மும், பதா இயக்கமும் தனித்தனியாக ஆளுமை செலுத்திவந்த பாலஸ்தீனத்தில் தற்போது இவை இரண்டும் கைகோர்த்துள்ளன ; ஒற்றுமைகீதம் இசைக்கத் துவங்கியுள்ளன. பாலஸ்தீன மக்களின் இரண்டுபெரும் அமைப்புகளுக்கிடையே முரண்பாடும், மோத லும் ஏற்பட்டதை பயன்படுத்திக்கொண்ட இஸ் ரேல், காசாவை கொடிய குண்டுகளால் துளைத் தெடுத்தது. அப்பாவி பாலஸ்தீனர்களைக் கொன்றுகுவித்தது. கடந்த சுமார் 4 ஆண்டுகாலமாக நிலைமை மோசமாகவே சென்றுகொண்டிருந்த பாலஸ் தீனத்தில், எகிப்து உள்பட அரபு நாடுகளில் ஏற் பட்ட பிரம்மாண்டமான மக்கள் எழுச்சி, ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தியுள்ளது. (மேலும்...)

வைகாசி 30, 2011

இன ஒற்றுமை முயற்சிகளை மேற்குலகம் குழப்பிவருகிறது

எமது அரசாங்கத்தால் இனங்களிடையே கட்டியெழுப்பப்பட்டுவரும் சமாதான மான ஒற்றுமை முயற்சிகளை மேற்குலகம் குழப்பிவருகின்றது. இதன் மூலம், எமது பொருளாதார வளத்தை சுரண்டுவதற்கு மேற்குலக சக்திகள் முயற்சிக்கின்றன என புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். வடக்கு தெற்கு என்ற பேதமின்றி நாங்கள் அனைவரும் சகோதர ஒற்றுமையுடன் வாழ்கின்ற போதும் அதனைக் குழப்புவதற்கும் மேற்குலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் முயற்சிக்கின்றார்கள். அவ்வாறான முயற்சிகளை நாம் முறியடிப்பதற்கு விழிப்படைய வேண்டும். அதற்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்பதை இந்த இடத்தில் ஆணித்தரமாகக் கூறிக்கொள்கின்றேன் என்றார். (மேலும்...)

வைகாசி 30, 2011

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் 17வது அமர்வு இன்று ஆரம்பம்

ஜெனீவாவில் இன்று ஆரம்பமா கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் 17வது அமர்வில் பெருந்தோட்டத்துறை மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று உரையாற்றுகிறார். இதன் பின்னர் ஐ. நா.வின் மனித உரி மைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை யும் அமைச்சர் தலைமையிலான குழுவும் சந்திக்கவுள்ளது. அத்துடன், ஐ. நா.வின் ஆசிய பிராந்தியப் பிரதிநிதிகள், ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்த உண்மைத் தன்மையை விளக்கமளிக்கவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்...)

வைகாசி 30, 2011

ஆப்கனில் அமெரிக்கா கொடூர தாக்குதல்  12 குழந்தைகள் உள்பட 52 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையி லான நேட்டோ படையி னர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 52 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் 14 பேர் பச்சி ளம் குழந்தைகளும் பெண் களும் ஆவர். பின்லேடன் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற பகுதியிலும் ஆப்கானிஸ்தானின் மலைப்பகுதிகளிலும் அமெரிக்கப்படையினர் தாக்குதல்களை தீவிரப்படுத் தியுள்ளனர்.  பின்லேடனை தேடுவ தாகக் கூறி ஏற்கெனவே ஆப்கனின் மலைப்பகுதிக ளில் நாள்தோறும் குண்டு வீச்சுக்கள் நடத்தி ஆயிரக் கணக்கானோரை கொன்று குவித்த அமெரிக்கா, தற் போது மலைப்பகுதிகளில் பதுங்கியுள்ள பயங்கரவாதி களை அழிக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து தனது குண்டுவீச்சு தாக்குதலை நடத்தி வருகிறது. (மேலும்...)

வைகாசி 30, 2011

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் - வைகோ _

இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் அதுதொடர்பில் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்த அந்நாட்டின் அரசை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். போர்க் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கவேண்டும் என்ற குரல் உலகெங்கும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விரைவில் கூடவுள்ள தமிழக சட்டப்பேரவையில் இலங்கை அரசினை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார். ஆயிரக்கணக்கான தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்களை கொலை செய்த புலிகளையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்று வைகோ கோரிக்கை முன்வைப்பாரா என்று அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

வைகாசி 30, 2011

 

உலகின் மிகப்பெரிய உர்மியா ஏரி முற்றிலுமாக உறைந்து விடும் அபாயம்

உலகின் மூன்றாவது மிகப் பெரிய ஏரியான ஈரானின் ‘உர் மியா’ உப்பு ஏரி முதன் முறையாக முழுவதுமாக உறைந்துள்ளது. இதனால் ஏரி உள்ள பகுதியில் மிகப் பெரிய அளவில் சுற்றுச் சூழல் மாற்றம் உருவாகக் கூடும் என நிபுணர்கள் அச்சம் தெரிவி த்துள்ளனர். ஈரானின் மேற்கு அசர்பைஜான் மற்றும் கிழக்கு அசர்பைஜான் மாகாணங்களுக்கிடையில் 140 கி. மீ. நீளமும், 55 கி. மீ. அகலமும், 52 அடி ஆழமும் கொண்ட ஏரி உர்மியா ஏரி. மத்திய கிழக்கு பகுதியில் இது தான் மிகப்பெரிய ஏரி. உலகளவில் இது மூன்றாவது மிகப்பெரிய ஏரி. இதில் உள்ள தண்ணீரில் அதிகள வில் உப்பு இருப்பதால் உப்பு ஏரி என்று அழைக்கப்படுகிறது. சமீபத் தில் இந்த ஏரி முதன் முறையாக முழுவதுமாக உறைந்து விட்டது. இந்த ஏரியை சுற்றி நடக்கும் ஆக்கி ரமிப்புகள், ஏரிக்குள் விடப்படும் நச்சு கழிவுநீர் மற்றும் தவறான பாசனக் கொள்கைகள் அருகில் உள்ள ஆறுகளில் கட்டப்படும் பிர மாண்ட அணைகள், அப்பகுதியில் நிலவும் பஞ்சம் போன்றவற்றால் ஏரி தற்போது முன்பிருந்ததைவிட 60 சதவீதமாக சுருங்கி விட்டது.

வைகாசி 30, 2011

 

பாகிஸ்தானையும் அதன் அணு ஆயுதங்களையும் கைப்பற்றுவதே இலக்கு

பாகிஸ்தானையும், அதன் வசம் உள்ள அணு ஆயுதங்களையும் கைப்பற்றுவதே எங்களது நோக்கம் என்று தலிபான் அமைப்பு கூறியுள்ளது. பாகிஸ்தானைத் தாக்குவது எங்களது திட்டமல்ல. மாறாக அதை அப்படியே கைப்பற்றவே விரும்புகிறோம். அதன் வசம் உள்ள அணு ஆயுதங்களை அப்படியே எங்கள் வசம் கொண்டு வர திட்டமிட்டு வருகிறோம். பாகிஸ்தான் மட்டுமே அணு ஆயுதங்களை வைத்துள்ள ஒரே முஸ்லிம் நாடு. அந்த நாட்டை நாங்கள் அழிய விட மாட்டோம். மாறாக அந்த நாட்டையும், அதன் அணு ஆயுதங்களையும் சேதம் இல்லாமல் கைப்பற்றி எங்கள் வசம் கொண்டு வருவோம். பாகிஸ்தானை நாங்கள் அழிக்கப் போவதாக கூறி பாகிஸ்தானை மிரட்டிப் பணிய வைத்து எங்களுக்கு எதிராக செயல்பட வைக்க அமெரிக்கா முயலுகிறது. ஆனால் நாங்கள்தான் பாகிஸ்தானை உண்மையில் காப்பாற்றத் துடிப்பவர்கள். அணு குண்டுகளை கையில் வைத்திருந்தும், அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணிவது மிகப் பெரிய கேவலம். அதை பாகிஸ்தான் அரசு செய்து கொண்டிருக்கிறது என்றார் அவர்.

வைகாசி 30, 2011

 

பலஸ்தீன் தனி நாடு அங்கீகாரம்  ஐ.நா விடம் கோர அரபுலீக் தீர்மானம்

பலஸ்தீனை தனி அரசாக அங்கீகாரம் வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கோர அரபு லீக் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கட்டாரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரபு லீக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 1967 எல்லையுடன் பலஸ்தீனை இறையாண்மையுள்ள தனி நாடாக அங்கீகரிக்கும் படி ஐ.நா.விடம் அரபு லீக் கோரவுள்ளதாக மேற்படி தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அத்துடன் இஸ்ரேல் தயாராகும்வரை மத்தியகிழக்கு சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பதில்லை என இந்த கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டுள்ளது. இதில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி கூறிய, ‘1967 எல்லையின்படி மத்திய கிழக்கு சமாதான பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட வேண்டும்” என்ற கூற்றுக் குறித்தும் ஆராயப்பட்டது. ஒபாமாவின் இந்த கருத்தை இஸ்ரேல் பிரதமர் நெடன் யாஹு மறுத்தார். இதற்கு அரபு லீக் கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நெடன்யாஹுவின் பேச்சு இஸ் ரேல் உண்மையான சாமாதான த்தை விரும்பவில்லை என்பது வெளிப்படுகிறது என அரபு லீக் கூட்டத்தில் பங்கேற்ற கட்டார் பிரதமர் ஷேக் ஹமாத் பின் ஜெஸ் ஸம் அல்தானி தெரிவித்தார்.

வைகாசி 30, 2011

சாகும்வரை உண்ணாவிரதத்துக்கு காந்தியவாதி ஹஸாரே மீண்டும் ஆயத்தம்

 ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல செயல்பட்டு வரும் சோனியாகாந்தி தான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார் என்று காந்தியவாதியான அண்ணா ஹஸாரே குற்றம்சாட்டினார். ஊழலுக்கு எதிரான இந்தியா அமைப்பு சார்பில் பெங்களூரில் சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது அவர் கூறியது: பிரதமர் மன்மோகன்சிங் நல்ல மனிதர் ஆனால் ‘ரிமோட் கன்ட்ரோல்’ போல் இருந்து கொண்டு அவரை இயக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திதான் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார். ஆக. 16ம் திகதிக்குள் லோக்பால் சட்டமூலம் நிறைவேற்றப்படாவிட்டால், புதுடில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் மீண்டும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்குவேன். இதற்காக கர்நாடக மக்கள் சிறைநிரப்பும் போராட்டத்தை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். ஊழலுக்கு எதிராக நான் பிரசாரம் செய்துவருவதால், இதுவரை 6 அமைச்சர்கள் ராஜிநாமா செய்துள்ளனர். இந்த 6 பேரும் என்னை பழிவாங்க துடிக்கிறார்கள் ஆனால், கறைப்படியாதவன் என்பதால் என்னை அவர்களால் நெருங்க முடியவில்லை என்று தெரிவித்தார்.

வைகாசி 29, 2011

நிபுணர் குழுவின் அடுத்த கட்ட நடவடிக்கை செயலாளர் நாயகம் பான் கீ மூன் வசமே

இலங்கை விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கை சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனே தீர்மானிக்க வேண்டுமென ஐ.நா. பொதுச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். மேற்குறித்த அறிக்கை பற்றி "இன்னர் சிற்றி பிரஸ்' ஊடகவியலாளர் ஒருவர், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தலைவரான ஜோசப் டெய்ஸிடம் வினவிய போதே "இது செயலாளர் நாயகத்தினால் கையாளப்பட வேண்டிய விடயம்' என அவர் பதிலளித்துள்ளார். ___

வைகாசி 29, 2011

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குடாநாட்டில் அதிகரிப்பதாக விசனம்

யாழ். குடாநாட்டினில் என்றுமில்லாத அளவில் பெண்களுக்கெதிராக அதிகரிக்கும், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பினில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக குடாநாட்டிற்கு வெளியிலிருந்து வரும். முன்பின் அறிமுகமற்ற நபர்கள் தொடர்பினில் மிக எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கோரப்பட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் தனக்கும் முறைப்பாடுகள் தொடர்ந்தும் கிடைத்துக் கொண்டிருப்பதாக யாழ் அரச அதிபரும் சுட்டிக்காட்டியுள்ளார். கோவைகள் முறைப்பாடுகளால் நிரம்பி வழிகின்றன. (மேலும்....)

வைகாசி 29, 2011

நிபந்தனை அடிப்படையில் நெடியவனுக்குப் பிணை

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் எனப்படும் சிவரூபனுக்கு நோர்வே நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையிலான பிணை வழங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய நிதி திரட்டல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நெதர்லாந்து விசாரணையாளர்கள் அண்மையில் அதன் ஒரு கட்டமாக நோர்வேயிலும் தங்கள் விசாரணைகளை விரிவுபடுத்தியிருந்தனர். அதன் போது நெதர்லாந்து விசாரணையாளர்களின் வேண்டுகோளின் பிரகாரம் நோர்வேயில் வசித்து வந்த விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் சிவரூபன் என்பவர் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் நோர்வே பொலிஸாரின் கண்காணிப்புக்கு உட்பட்டு வாழும் நிபந்தனையின் அடிப்படையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி மீண்டும் நீதிமன்ற விசாரணைக்குச் சமுகமளிக்குமாறும் அவருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

வைகாசி 29, 2011

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு பெரியளவில் ஆற்றல் எதும் இல்லை

புலம்பெயர் விடுதலைப் புலிகளுக்கு சொல்லிக் கொள்ளும்படியான ஆற்றல் எதுவும் இல்லையென்றும் அவர்களை எளிதாக அடக்கிவிட முடியும் என்றும் அமைச்சர் விமல் வீரவன்ஸ குறிப்பிட்டுள்ளார். சிங்கள இணையத்தளம் ஒன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியொன்றிலேயே அமைச்சர் விமல் வீரவன்ஸ புலம்பெயர் விடுதலைப் புலிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் சார்பு நிலை அமைப்புகள் குறித்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  புலம்பெயர் நாடுகளில் செயற்படும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் மிகமிகக் குறைந்த அதிகாரம் மற்றும் ஆற்றல்களையே கொண்டிருப்பதாகவும், அதனையும் படிப்படியாக இல்லாதொழித்து விட முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் அமெரிக்காவின் ஐ.நா. முன்றலில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்கள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மிகக்குறைவானவர்களே கலந்து கொண்டனர். அவர்களும் கனடாவில் இருந்தே கொண்டுவரப்பட்டவர்கள்.  இதை பார்க்கும் போது புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் சக்தி குறைந்து கொண்டு போவதையே எடுத்துக் காட்டுகின்றது. அதன் காரணமாக அவர்களை இலகுவாக அடக்கி விடலாம் என்பதை உறுதியாகக் கூற முடியும் என்றார். ___

வைகாசி 29, 2011

அல் ஜவாஹிரி, முல்லா ஒமரை ஒழித்துக் கட்ட அமெரிக்கா தீவிரம்  பாகிஸ்தானுக்கு ‘உத்தரவு’

பாகிஸ்தானில் பதுங் கியுள்ள 5 பயங்கர தீவிர வாதிகளின் பட்டியலை அந்த நாட்டிடம் வழங்கி யுள்ள அமெரிக்கா, அவர் கள் இருக்குமிடம் குறித்து தகவல் தருமாறும், அவர் களை ஒழித்துக் கட்ட உட னடியாக நடவடிக்கை எடுக்குமாறும் ‘உத்தரவிட் டுள்ளது.’ பின்லேடனின் கூட் டாளியான அய்மான் அல் ஜவாஹிரி, ஆப்கானிஸ் தான் தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா ஒமர், கமாண்டர் சிராஜ் ஹக் கானி, லிபியாவின் அல்-கொய்தா தலைவர் அப்தெல் ரஹ்மான், மும்பை தாக்கு தலில் முக்கிய பங்கு வகித்த இலியாஸ் காஷ்மீரி ஆகிய 5 பேரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற் றுள்ளன. பின்லேடன் கொல்லப் பட்ட பின்னணியில் அமெ ரிக்கா மற்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் கடந்த 2 வாரங்களாக நடத்தி வந்த ஆலோசனைகளின் போது இந்தப் பட்டியலை அமெ ரிக்கா தந்தது. இந்நிலையில், வெள்ளி யன்று பாகிஸ்தான் வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ‘ஹிலாரி கிளிண்டனும் இந்தப் பட்டியலில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் ஜனாதிபதி ஜர்தாரியிடம் வலியுறுத் தினார். இவர்கள் மீது பாகிஸ் தான் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ் தானுக்குள் நுழைந்து பின் லேடனை சுட்டுக் கொன் றது போல தன்னிச்சையான முடிவை எடுக்க வேண்டி வரும் என்றும் பாகிஸ் தானை அமெரிக்கா பகி ரங்கமாக மிரட்டியுள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

வைகாசி 29, 2011

They call it ‘the voyage of the damned’. But thousands still want to try it

Sri Lankan refugees in India are ready to do anything to escape their camps. Sai Manish finds out why

IN THE 1980s, Sri Lankan Tamils escaped to India from the ravages of a bitter war in the island nation. Now they are fleeing India for a better life in the West, undertaking a mindnumbing 3,000 nautical mile journey into a watery void so perilous that many call it the “voyage of the damned”.“I was hoping to get on the last ship but the agent says the seas are rough and I can go only after the rains are over,” says Manikandan, 28, who stays with his father in one of the largest refugee camps at Mandapam in the coastal district of Ramanthapuram. “I have already paid Rs 20,000 and will pay another Rs 80,000 when I reach Australia. My brother and his wife are there on Christmas Island at the special camp and he will soon be given asylum. I came from Trincomalee four years ago but I can’t spend the rest of my life living on doles and doing odd jobs. I’m a graduate and I deserve better.” (more....)

வைகாசி 29, 2011

டெல்லி கோர்ட்டில் கோபாலபுரம்!

எமோஷனல் கெட்-டு-கெதர்

ழகிரிக்கும் மாறன் சகோதரர்களுக்கும் இடையே நிலவிய மனக் கசப்பு முடிவுக்கு வந்தபோது, 'கண்கள் பனித்தன... இதயம் இனித்தது!’ என மனம் உருகிச் சொன்னார் கருணாநிதி. மீண்டும் மொத்தக் குடும்ப உறவுகளும் ஒன்று கூடும் வைபோகம் பாட்டியாலா நீதிமன்றத்திலும் திகார் சிறைச்சாலையிலும் கடந்த சில நாட்களாக நடந்தது. அதாவது கோபாலபுரமே டெல்லிக்கு இடம் பெயர்ந் தது மாதிரி இருந்தது. அழுகை, ஆதங்கம், கோபம், கூச்சல் என மீடியாக்களின் பார்வைக்கு அப்பால் நடந்த அத்தனை நிகழ்வுகளும் அப்படியே இங்கே...(மேலும்....)

வைகாசி 29, 2011

Devananda is running Jaffna exactly the way the LTTE ran Jaffna says Prof Ratnajeevan Hoole

Although we may or may not agree with everything Hoole says here, it is food for thought, especially with regard to Douglas Devananda and his minions. Hoole blames neither the President nor the Sinhalas. He is not telling Tamils who want to return to Sri Lanka not to do so. Nevertheless he is unhappy with the prevailing situation in the North.  If this situation is allowed to further deteriorate it will undermine the efforts the government is making to build national unity and boost Sri Lanka's global image. By Namini WijedasaOn a personal assurance from President Mahinda Rajapaksa, Prof. Ratnajeevan Hoole, a former vice chancellor of the University of Jaffna, returned to Sri Lanka with his family to serve the country he so loved. His experience since coming back has been “horrible” and has left him sorely disappointed. (more...)

வைகாசி 29, 2011

 

அணு ஆட்டம்!

'வேலை செய்துவிட்டது’ என்று மட்டும் அவர் முணுமுணுத்ததாக அருகே இருந்த, அவர் சகோதரர் ஃபிராங் ஓபன் ஹெய்மர் சொன்னார். பரிசோதனை வெடிப்பு வெற்றி அடைந்ததும் பகவத் கீதையின் சுலோகம்தான் தன் மனத்தில் தோன்றியதாக ஓபன் ஹெய்மர் பின்னர் தெரிவித்தார். 'ஓராயிரம் சூரியன்கள் ஒன்றாய் விரவி விண்ணில் தோன்றினால், அதுதான் பரம்பொருளின் பிரகாசமாக இருக்கும்!’ இந்த மாபெரும் சக்தியைப் பார்த்தபோது இன்னொரு கீதையின் சாரமும் தனக்குள் நினைவு வந்ததாக ஓபன் ஹெய்மர் சொன்னார். அது, 'நான் மரணமாக மாறிவிட்டு இருக்கிறேன்; உலகங்களை உருக்குலையச் செய்பவனாகிவிட்டேன்!(மேலும்....)

வைகாசி 29, 2011

LTTE denies KP’s allegation on Jaya’s life

A statement purportedly originating from the defunct Liberation Tigers of Tamil Eelam (LTTE) has rubbished jailed ex-LTTE leader K Padmanathan's recent claim that the Tamil Tigers had once planned to assassinate Tamil Nadu Chief Minister J Jayalalithaa. "KP's claim in a television interview that LTTE had once planned to assassinate Jayalalithaa was far from the truth and we perceive the act as a ploy to create fissures among Tamils," the statement said on Friday. According to the fourpage statement signed by A Anbarasan, said to be from the LTTE's media wing, and published in their official online mouthpiece www.viduthalaipulikal.net, Sri Lankan Sinhalese government, which has been under tremendous international pressure after the release of the UN panel report on war crimes, has used KP to plant wild allegations on the movement to create fissures among Tamils. (more...)

வைகாசி 29, 2011

Sri Lanka New visa rules

Sri Lanka has decided to suspend the on arrival visa facility for all  countries except Singapore and Maldives with effect from 30th of  September 2010, the Controller General of Immigration and Emigration W.  A. C. Pereratold to media.Mr. Perera said that under the move tourists arriving to Sri Lanka from  nearly 70 countries will be required to obtain visas from the  department of immigration and emigration in Colombo or from the Sri  Lankan missions abroad before their arrival in Sri Lanka. Sri Lanka however is willing to offer visas on arrival to citizens of  any country if those countries also reciprocate in the same manner, Mr.  Perera explained. So far only Singapore and the Maldives offers visas on  arrival for Sri Lankan citizens. Tourism industry officials meanwhile said that the move could affect  the tourism industry in Sri Lanka as there maybe a drop in tourist  arrivals to Sri Lanka.

வைகாசி 28, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 13)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

சரி இனி எப்படி நம்மை சரணடைய வைத்து மோசம் செய்தனர் என சொல்லுகிறேன்
இறுதி போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், நமது தலைமைக்கும் நடந்த பேச்சுக்களில் கலந்து கொண்ட பாதிரியார் காஷ்பார் . போரை நிறுத்த புலிகளிடம் சில நிபந்தனைகளை முன்வைத்தார். எமக்கு 48 மணி நேரத்துக்குள் யுத்தநிறுத்தம் செய்யப்படும் என்று சொல்லப்பட்டது. அதுமட்டுமல்லாது தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்பொழுது ஆயுதங்களை ஒப்படையுங்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்த நிபந்தனை விதிபோடு ,
தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும் பொட்டு அம்மான் சரணடைய வேண்டும் இன்னும் முக்கிய புலிகள் உறுப்பினர்கள் தம்மிடம் சரணடைய வேண்டும் என்று எந்த நிபந்தனையும் அப்போது விதிக்கப்பட்டது.
(மேலும்....)

வைகாசி 28, 2011

வடக்கில் புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை அமைத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதிதிரட்டும் நோக்குடனான ஒரு நடைப்பயணம்

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சை வசதிகளை தரமுயர்த்தும் நோக்குடன் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான The Colours of Courage Trust எனும் நிதியம் அதே எண்ணங்களைக் கொண்டுள்ள பங்காளர்களுடன் இணைந்து யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புற்றுநோய் சிகிச்சை நிலையம் ஒன்றை கட்டியெழுப்புவதற்காக 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொகையைத் திரட்டும் நம்பிக்கையுடன் இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளது தொடர்பில் அறிவித்துள்ளது. (மேலும்....)

வைகாசி 28, 2011

சாத்தான்கள் ஓதும் வேதத்தால் தமிழ் மக்களுக்கு விமோசனம் இல்லை _

சிங்களத் தலைமைகள் தமிழ்த் தலைமைகளின் விரல்களால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கண்களையே குத்திக் குருடாக்கிய பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பயங்கரவாதச் தடைச் சட்டத்தைத் தயாரித்த ஜே.ஆர். ஜயவர்தன தமிழ் புத்திஜீவிகளை கொண்டு அங்கீகரிக்க வைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி வெற்றி கண்டார். மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டது போன்று பாவனை காட்டி தமது அரசியல் நலன்களுக்காக பேசாமடந்தயாய் இருந்த தமிழ்த் தலைமைத்துவங்களால் தமிழினம் பட்ட இன்னல்கள் பல. தமிழ்த் தேசிய போராட்டத்தையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அடக்கி ஒடுக்க தமிழ்த் தலைமைத்துவங்களே காரணமாக இருந்துள்ளன. (மேலும்....)

வைகாசி 28, 2011

லெனின் உடல் தொடர்பில் சர்ச்சை நீடிக்கின்றது

கம்யூனிச தலைவர் விளாடிமிர் லெனின் 1924-ஆம் ஆண்டு ஜனவரி 21-ஆம் நாள் மரணம் அடைந்தார். இதன் பின்னர் இவரது உடல் ரஷ்யாவின் கிரெம்ளின் நகரில் அமைந்துள்ள செஞ்சதுக்கத்தில் பதப்படுத்தப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ரஷ்யாவில் லெனின் உடலைப் புதைப்பது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படுவதற்கு முன்னர் பல்வேறு சமூகக் குழுக்களினதும் கருத்துக்கள் பெறப்படவேண்டுமெனவும் இல்லாவிடின் அது கிளர்ச்சிக்கு வழிவகுக்குமெனவும் அந்நாட்டு பழமைவாத கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. (மேலும்....)

வைகாசி 28, 2011

மும்பையில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்      

மும்பை- ஹைதராபாத் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென தீவிபத்து அலாரம் ஒலித்ததால் 140 பயணிகளுடன் மும்பையில் அந்த விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. தீ அலாரம் ஒலித்ததால் 6.05 மணியளவில் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. தீ அலாரம் ஒலித்ததையடுத்து 5.58 மணியளவில் முழு அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டதாக மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் தீவிர சோதனைக்குப் பின் தீ எதுவும் ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டதால் 7.08 மணியளவில் அவசரநிலை வாபஸ் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து அனைத்து செயல்பாடுகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

வைகாசி 28, 2011

சிகிச்சைக்காக ரஜினிகாந்த் சிங்கப்பூர் பயணம்

சுவாச தொற்று கார ணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் இயல்பு நிலையில் இருப்பதாகவும் சிறந்த உடல் ஆரோக்கியத் தை கருத்தில் கொண்டு சிங் கப்பூருக்கு வெள்ளிக்கிழமை சிகிச்சைக்கு செல்வதாகவும் அவரது குடும்பத்தினர் தெரி வித்தனர். கடந்த 4 வாரமாக சென் னை தனியார் மருத்துவம னைகளில் சுவாச தொற்றுக் காக சிகிச்சை பெற்று வந்த ரஜினி காந்த் மேலும் நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற, சிங்கப்பூர் செல்கிறார். இந்த தகவலை அவரது மனைவி லதா, வெள்ளிக்கிழ மை தெரிவித்தார். ரஜினி காந்த் மேலும் பொலிவுடன் திகழ்வதற்காக சிங்கப்பூர் செல்கிறார். அவரது உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்குகிறது. அவர், இயல்பான நிலையிலேயே உள்ளார். அவரது உடல் நிலை குறித்து பரபரப்பு ஏற் படுத்த வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  ரஜினிகாந்த் மகள் ஐஸ் வர்யா கூறுகையில், ரஜினி காந்த் இதர பயணிகளைப் போலவே விமானத்தில் சிங் கப்பூர் செல்கிறார். அவரது உடல்நிலை நன்றாகவே உள்ளது என்றார்.

வைகாசி 28, 2011

கிளிநொச்சியில் ஜே.வி.பி உறுப்பினர்கள் ஏழு பேர் கைது

ஜே.வி.பி உறுப்பினர் ஏழு பேர் நேற்று இரவு 8 மணியளவில் கிளிநொச்சியில் வைத்து இராணுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்தும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்!, சரத்பொன்சேக்காவை உடனடியாக விடுதலைச் செய்!, அவசரகாலச் சட்டத்தை உடனடியாக இரத்து செய!;, மற்றும் ஊடக சுதந்திரத்தைப் நிலைநாட்டு' போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டும் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்....)

வைகாசி 28, 2011

வட, தென் சூடான் எல்லையில் பதற்றம்

சில பகுதிகளை உரிமை கோருவதில் சர்ச்சை

சூடான் இரண்டாக பிளவுபட்ட பின்னரும் எல்லையிலுள்ள பிரதேசங்களை உரிமை கொண்டாடுவதில் மோதல்கள் தலைதூக்கியுள்ளன. கார்டூமை தலைமையாகக் கொண்டுள்ள வட சூடான் தென் சூடானின் அபெய் பிரதேசத்தை ஆக்கிரமிக்கும் வகையில் நடந்துள்ளது. வட சூடான் இராணுவம் அபெய், மிசெரியா போன்ற பிரதேசங்களில் நிலை கொண்டுள்ளதால் மீண்டும் பதற்றம், சந்தேகம் எழுந்துள்ளன. தென் சூடான் ஜனாதிபதி சல் வார் கிர், வட சூடான் ஜனாதிபதி ஒமரல் பசீர் ஆகியோரின் கவனத் துக்கு இவ்விடயத்தைக் கொண்டு வர ஆபிரிக்க யூனியன் ஆலோசித் துள்ளது. அபெய், மிசெரியா பிரதேசங்கள் எப்பகுதிக்குச் செல்ல வேண்டும் என்பதற்கான சர்வஜன வாக்கெடுப் புக்கள் அடுத்த வருடம் ஜனவரியில் நடைபெற ஏற்பாடான போதும் சில காரணங்களால் இது பின்போ டப்பட்டுள்ளது. வட சூடானிலுள்ள அரபு பழங் குடியினர் தங்களது கால்நடைகளுக் குத் தேவையான மேய்ச்சல் புற்கள், தண்ணீரைப் பெறுவதற்கு தென் சூடான் வசமுள்ள அபெய் ஆற்றங் கரைக்கே வருகின்றனர். இதை தென் சூடானியர் தடுக்கின்றனர். இதனாலேயே இம் முரண்பாடுகள் வெடித்துள்ளன. இதையடுத்து வட சூடான் இப் பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

வைகாசி 28, 2011

வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த பின்னிற்கப் போவதில்லை - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

  • நாட்டு மக்களின் அனுமதியின்றி வெளிநாட்டு சக்திகளின் தலையீடுகளுக்கு இடமில்லை.

  • பிரிவினைவாதிகள், இனவாதிகள் கேட்கின்றவற்றை பெற்றுக்கொடுக்க நாம் தயாராக இல்லை.

வடக்கு, கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைகளையும், மனித உரிமைகளையும் உறுதிப்படுத்த ஒரு நிமிடம் கூட தயங்கமாட்டோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நேற்றையதினம் காலிமுகத் திடலில் நடைபெற்ற படைவீரர்களின் வெற்றிவிழா வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சிரேஷ்ட அமைச்சர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர். (மேலும்....)

வைகாசி 28, 2011

 

ஜப்பான் பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

ஜப்பான் பிரதமர் நஓட்டோ கானுக்கெதிராக எதிர்க் கட்சிகள் நம்பிக் கையில்ல தீர்மானம் கொண்டுவரவுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட புகம்பம், சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளின் பின்னர் நாட்டை கட்டி எழுப்பும் பணியில் பிரதமர் போதியளவு கரிசனை செலுத்தவில்லையென்ற பேரில் இந்த நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளது. புக்ஷிமா அணு உலைக ளில் வெளிவரும் கதிர் வீச்சுக்களால் ஏற்படவுள்ள மிக மோசமான விளைவு களை சமாளிக்க பிரதமர் நஓட்டோ கான் தவறி விட்டார். எனவே அவரது அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமென வியாழக்கிழமை கூடிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பிரதமருக்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால் ஏனைய கட்சிகளின் ஆதரவும் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. பிரதமர் நஓட்டோ கானின் ஜனநாயக கட்சிக்குள்ளும் எதிர்ப் புள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் ஆளும் கட்சியிலிருந்து 75 பேர் ஆதரவளிக்கலாம் என எதிர்க்கட்சிகள் நம்பு கின்றன. ஆளும் கட்சியிலிருந்து 75 எம்.பிக்கள் ஆதரவளித்தால் நம்பிக்கையில்ல தீர்மானம் வெற்றியடைய வாய்ப்புள்ளது.

வைகாசி 28, 2011

Sri Lanka Northern Province GDP Grew by 14.2%

A fast recovery of economic activities is taking place in the Northern Province of Sri Lanka since the end of the conflict in May 2009. In 2009, the Northern Province recorded a provincial nominal GDPgrowth rate of 14.2 per cent, the second highest in Sri Lanka. Sri Lanka's northern and eastern provinces were badly affected by the three decades war that ended in May 2009. The LTTE during its intensified fight made obstacles to government's development initiatives. Tamil civilians and public officers who were supportive of the government's move to develop the northern areas were threatened and the defying officers, politicians and the civilians were assasinated. (more.....)

வைகாசி 28, 2011

சர்வதேச பயங்கரவாதம் பாகிஸ்தானில் மையம் கொண்டுள்ளது - ப.சிதம்பரம்

இந்தியாவின் மிக அரு கிலுள்ள அண்டை நாடான பாகிஸ்தானில் சர்வதேச பயங்கரவாதம் மையம் கொண்டிருக்கிறது என் றும், பாகிஸ்தானில் மிகப் பரந்து விரிந்த அளவில் பயங்கரவாதக்கட்டமைப்பு நீண்ட காலமாகவே அர சின் ஒரு கொள்கையாகவே வளர்ந்து வந்திருக்கிறது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். இத்தகைய சூழலில், இந்திய மக்களின் பாதுகாப் புக்காக, “ஒரு நிலையான, அமைதியான அண்டை நாடு” இந்தியாவுக்கு தேவைப்படுகிறது என்றும், அதற்கு இந்தியா - அமெ ரிக்கா இடையிலான உறவு மேலும் மேலும் வலுப்படு வது அவசியமென்றும் சிதம்பரம் கூறினார். மேலும், உலகிலேயே மிகக்கடின மான அண்டை நாட்டை பெற்றிருக்கிற மக்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது என்றும் அவர் கூறினார். (மேலும்....)

வைகாசி 28, 2011

அமைதிப் போராளி அமெரிக்காவில் கைது

இஸ்ரேலுக்கு எதிராக முழங்கியதால் தாக்குதல்

இஸ்ரேலிய ஆதரவா ளர்களால் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அமைதிப் போராளி ரே அபிலே என்ற பெண், மருத் துவமனைப் படுக்கையி லேயே கைது செய்யப்பட் டார். அமெரிக்க நாடாளுமன் றத்தில் உரையாற்றுவதற் காக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேடன்யாஹூ அழைக்கப்பட்டிருந்தார். அவரது பேச்சை கோட் பின்க் என்ற அமைதி அமைப் பின் உறுப்பினர் ரே அபிலே இடைமறித்தார். ஆக்கிரமிப்பை நியாயப் படுத்த முடியாது என்றும் போர் கொடூரங்களை நிறுத் துங்கள் என்றும் அட்டை யில் எழுதி உயர்த்திப் பிடித் தவாறு முழக்கங்களை எழுப்பினார். இதனால் ஆத் திரமடைந்த இஸ்ரேலிய ஆதரவாளர்கள் அவர் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். (மேலும்....)

வைகாசி 27, 2011

யுத்தத்தின் பின்

வடமாகாணத்தில் சகஜநிலை திரும்பிக் கொண்டிருப்பதனால் மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் (பகுதி 2)

பயங்கரவாத யுத்தத்தின் பின் இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான சேவைகளை ஏற்படுத்தி அரசாங்கம் அவர்களின் வாழ்வை வளமாக்கியது. அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற் பாடுகள் குறிப்பாக வட மாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாடு குறித்து நாம் நேற்று பிரசுரித்த கட்டுரையின் தொடர்ச்சியை இன்று தருகிறோம்.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கும் அதிகமானோருக்கு நீரை வழங்குவதற்கு தடைசெய்யக்கூடிய வகையில் எல். ரி. ரி. ஈயினர் மாவிலாறு வான்கதவை மூடியதைய டுத்து, இலங்கை ஆயுதப்படைகளின் மனிதாபிமான செயற்பாடுகள் வெற்றிகரமான முறையில் ஆரம்பமானது. அத்துடன் ஆரம்பமாகிய இராணுவ நடவடிக்கைகளினால் கிழக்கு மாகாணத்தை எமது படைகள் எல். ரி. ரி. ஈ பயங்கரவாதத்திலிருந்து விடுவித்தனர். அதையடுத்து முல்லைத் தீவில் எல். ரி. ரி. ஈயினர் பணயக் கைதிகளாக வைத்திருந்த 2 இலட்சத்து 75 ஆயிரத்துக்கு கூடுதலான அப்பாவி மக்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்காக பயங்கரவாதிகளை போர்முனையில் முறியடிக்கும் மனிதாபிமான நடவடிக்கை தொடர்ந்தது. இவ்விதம் விடுவிக்கப்பட்ட மக்களை எமது ஆயுதப்படை வீரர்களும், வீராங்கனைகளும், பொலிஸாரும் அன்புடன் அரவணைத்து அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கினர். அவர்களை பாதுகாப்பான முறையில் நல்வாழ்வு கிராமங்களுக்கு பாதுகாப்பு படையினர் அனுப்பி வைத்தார்கள். (மேலும்....)

வைகாசி 27, 2011

Dr.K.D. Selvarasagopal commemorative event - Saturday, May 28th

Just a reminder that the Ealathupooradanar Dr.K.D. Selvarasagopal commemorative event happening on Saturday, May 28th at Scarborough Village Community centre at 5:30 PM. (# 3600 Kingston Rd - Markham & Kingston)

Please attend the above event.

Thank you

On behalf of the Group

Ajantha Gnanamuttu

905 460 1667

வைகாசி 27, 2011

ஓமந்தைவரை யாழ்தேவி

21 ஆண்டுகளுக்கு பின்னர் வடபகுதிக்கான ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை செல்லவுள்ளது. மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஓமந்தை ரயில் நிலையம் வைபவரீதியாக பயணிகளுடைய பாவனைக்கு இன்று திறந்துவைக்கப்படும். போரின் காரணமாக பாதிக்கப்பட்ட வட பகுதிக்கான ரயில் பாதை புனரமைப்பு பணிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. ஓமந்தை முதல் பளை வரையிலான பாதை புனரமைப்பினை இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது. ஆனால் தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதை இராணுவத்தினராலும் ரயில்வே திணைக்களத்தினாலும் புனரமைக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் வவுனியாவிற்கு அப்பால் ரயில் சேவை நடைபெறவில்லை. இன்று காலை கோட்டையிலிருந்து வரும் யாழ்தேவி நேரடியாக ஓமந்தை சென்றடையும். வழமைபோல் அனைத்து ரயில்களும் ஓமந்தையிலிருந்தே ஆரம்பிக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைகாசி 27, 2011

கனடிய தமிழ் மன்றத்தில் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தன் வழங்கிய உரையிலிருந்து ஒரு பகுதி

(புலிகளின் இருப்பு காலத்தில் இதே சந்திரகாந்தன் புலிகளை வளர்த்து விடுவதிலும் புலிகளின் பாசிச செயற்பாடுகளுக்கும் கொலைகளுக்கும் ஒத்து ஊதியவர் என்பது இங்கு கவனிக்கத் தக்கது.)

பல நூற்றாண்டுகளாக மிகவும் பழமை வாய்ந்த சமூகங்களாக இலங்கைத் தீவை நாம் பகிர்ந்திருந்தோம். சிங்களவர்கள் இல்லாமல் எமக்கு எதிர்காலம் இல்லை என்ற  உண்மையை நாம் மீழ் ஆய்வு செய்துகொள்ளவேண்டும். இதே வேளை தமிழர்களையும்  இஸ்லாமியர்களையும் கீழ்ப்படுத்திக்கொண்டு வாழ்வது நிரந்தரமான நம்பிக்கை  இன்மை என்பதை சிங்களவர்களும் புரிந்துகொள்ள வேண்டும். எம்மைப் பிரிக்கின்ற  காரணிகளை வைத்துக்கொண்டு போரிடாமல் மனித சமூகமாக எவ்வாறு ஒன்றாக வாழலாம்  என்கிற விடயத்தில் நாம் கவனம் செலுத்தல் வேண்டும்.  தமிழர்களும்  சிங்களவர்களும் இந்தக் கொடுரமான போரில் இறந்து போயிருக்கலாம். ஆனால்  மொத்தத்தில் மானிடம் தான் அங்கே கொல்லப்பட்டது. இந்த இருபத்தொராம்  நூற்றாண்டில் எமது தலைமுறையின் எதிர்காலத்துக்கென ஊனத்தையும், சிதைவுகளையும் சொத்தாக விட்டுவிட்டு செல்லமுடியாது. (மேலும்....)

வைகாசி 27, 2011

சர்ச்சைக்குள்ளாகிய சன் பிக்சர்ஸ் ‘ஆடுகளம்’ படம்!

தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன், பிராந்திய மொழிப்படங்களுக்குத்தான், அதிலும் தமிழ் மொழிப்படங்களுக்கு ஏராளமான விருதுகள் என்றவுடன் தமிழ் திரைப்பட ரசிகர்கள் அ தை இன்ப அதிர்ச்சியாகவே எடுத்துக் கொண்டனர். அந்தப் பெருமையைப் பெற்றது ‘ஆடுகளம்’ என்பது பெரும்பாலான திரைப்பட ரசிகர்களுக்கு எதிர்பாராத ஒன்றாகவே இருந்தது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த எடிட்டிங், சிறந்த நடனம் என்று 58வது தேசிய திரைப்பட விழாவுக்கான குழுவினர் அள்ளித்தந்து விட்டார்கள். இப்படத்தின் குழுவினர் இவ்வளவு விருதுகளை எதிர்பார்க்கவில்லை என்பது ஒருபுறம். மறுபுறத்தில்விருது வழங்குவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலகட்டத்தில் வெளியான அங்காடித்தெரு, மைனா, மதராசப்பட்டிணம் உள்ளிட்ட பல படங்களுக்கு எதுவுமே இல்லை என்பது பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. (மேலும்....)

வைகாசி 27, 2011

 

இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ஒன்லைன் விசா வழங்க ஏற்பாடு

இலங்கைக்குள் வரும் வெளிநாட்டவர் களுக்கு Online  வீசா வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கென அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். குடிவரவு - குடியகல்வு திணைக் களத்தின் இணையத்தளமான www.lmmigration.gov.lk என்ற இணையத்தளமூடாக விசாவுக்காக விண்ணப்பிக் முடியும். வீசா பெறுவதற்கான நடைமுறை கட்டணத்தை செலுத்தவும் முடியும். இப்புதிய நடைமுறையை விரைவில் குடியகல்வு குடிவரவு திணைக்களம் தயாரித்து வருகிறது. விசா கிடைத்து இலங்கை வரும் நபர் விமான நிலையத்தில் தனது கடவுச் சீட்டை வழங்கியவுடன் அவருக்குரிய விசா முத்திரை இடப்பட்டு விசாவுக்கான பணமும் அறவிடப்படும். இப்புதிய நடைமுறையை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் விரைவில் நடைமுறைப்படுத்தும்.

வைகாசி 27, 2011

அரசின் நற்காரியங்களுக்கு தி.மு.கவினர் ஒத்துழைக்க வேண்டும் - கருணாநிதி  

அரசு செய்கின்ற நல்ல காரியங்களுக்கு தி.மு.க. தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறினார். அமைச்சர் ஜெயலலிதா தி.மு.க. ஆட்சி காலத்தில் பறிக்கப்பட்ட சொத்துக்கள் உரிய முறைப்படி மீட்கப்படும் என்று சொல்லியிருக்கிறாரே எனக் கேட்ட போது அப்படி ஏதாவது இருந்தால் அதை திரும்ப பெற்று உரியவர்களிடமோ அல்லது உரிய அமைப்புகளிடமோ ஒப்படைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றார். டில்லி பயணத்தின் போது சோனியா காந்தியை வாய்ப்பிருந்தும் நீங்கள் சந்திக்கவில்லையே என்றதற்கு வாய்ப்பு இருந்தது. சோனியா காந்தியை சந்திக்க நேரம் இருந்தும், நான் என்மகள் கனிமொழி சிறையில் இருந்ததால் இந்த நேரத்தில் சோனியாவை சந்திப்பது முறையாக இருக்காது என்பதற்காகவே நான் சந்திக்கவில்லை. நான் அப்படி சந்திப்பதை தவிர்த்துக்கொண்டேன் என்றார். (மேலும்....)

வைகாசி 27, 2011

The Dutch judiciary says that Tamil Tiger leaders in the Netherlands have played a prominent role in financing the civil war in Sri Lanka. The 10,000 Tamils in the Netherlands, police say, were under the iron grip of the guerilla group. (Part 2)

Marcel Haenen (NRC Handelsblad

‘Operation Koninck’ has been described by the judiciary as very complex and elaborate. Some 90 witnesses have been heard, dozens of house searches have been conducted, and numerous documents, photos, computers, CDs and DVDs have been obtained. Detectives from the Crime Investigation Department have gathered 120 files on the case with a wren branded on them (wren in Dutch is winterkoning, the basis for the name of the operation). The judiciary now has large quantities of propaganda material such as films, books and calendars honouring Tamils who have gone on suicide missions. The digital material is particularly plentiful with the Dutch authorities possessing around 6,000 gigabytes worth of information. More material is expected to be obtained in the coming weeks. At the request of the Netherlands, Norway will be carrying out house searches at the home of a Tamil with the code name Nediyavan. According to officials, he is one of the LTTE’s new leaders. On Wednesday a Dutch investigative team, along with lawyers of the suspects in the Netherlands, will travel to Oslo to interrogate Nediyavan. (more...)

வைகாசி 27, 2011

இந்தியா, சீனா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை

இந்திய சீன பாதுகாப்பு செயலாளர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ஓராண்டுக்குப் பிறகு அடுத்த மாதம் மீண்டும் நடக்கிறது. இந்திய சீன பாதுகாப்பு செயலாளர்கள் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை 4ம் கட்டத்தை எட்டிய நிலையில், காஷ்மீரை சேர்ந்த இராணுவ தளபதி ஒருவர் சீனாவுக்கு பயணம் செல்ல இருந்தார். ஆனால், சீனா அவருக்கு விசா வழங்க மறுத்ததை தொடர்ந்து, இந்த பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்த பேச்சுவார்த்தை மீண்டும் நடக்க இருக்கிறது. டில்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கடற்படை தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ. கே. அந்தோணி கலந்துகொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி வருமாறு; இந்திய சீன பாதுகாப்புத் துறை செயலாளர்கள் இடையே நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை, சில காரணங்களால் தடைப்பட்டது. (மேலும்....)

வைகாசி 27, 2011

 

3 ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களால் 1 கோடி மக்களுக்கு புற்றுநோய் ஆபத்து

3ஜி தொலைத்தொடர்பு கோபுரங்களால் 1 கோடி பேருக்கு புற்றுநோய் ஆபத்து ஏற்படும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது கையடக்க தொலைபேசிகளின் பயன்பாடு சர்வ சாதாரணமாகி விட்டது. அதே நேரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயன்படத்தக்கதாக உள்ளது. கையடக்க தொலைபேசிகளின் தேவை அதிகரித்து வரும் வேளையில் அவற்றின் தொழில் நுட்பத்தின் தரம் உயர்ந்து வருகிறது. தொலைபேசி துறையில் 2 ஜி (இரண்டாம் தலைமுறை) ஆக இருந்த கையடக்க தொலைபேசி தற்போது 3 ஜி (மூன்றாம் தலைமுறை)க்கு வளர்ந்து விட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வளர்ச்சியின் தரமும் அதிகரிக்கப்பட் டுள்ளது. (மேலும்....)

வைகாசி 27, 2011

தென்னாபிரிக்க ஜனாதிபதி அடுத்த வாரம் லிபியா பயணம்

லிபிய பிரச்சினையில் சுமுகமான முடிவை ஏற்படுத்தவும், லிபியத் தலைவர் கடாபியை பத்திரமாக வெளியேற்றி, நிலையான அரசியல் சூழலை ஏற்படுத்தவும், தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சுமா அடுத்த வாரம் லிபியாவுக்குச் செல்ல இருப்பதாக, “டாக் ரேடியா 702” செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் நடந்த ஆபிரிக்க யூனியன் கூட்டத்தில், லிபிய விவகாரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், சில மணி நேரங்களிலேயே தோல்வியில் முடிவடைந்தன இதையடுத்து, இப்போது தென்னாபிரிக்க ஜனாதிபதி அடுத்த முயற்சியில் இறங்கியுள்ளார். தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேகப் சுமா லிபிய ஜனாதிபதி முகம்மது கடாபி பதவி விலகுவது தொடர்பான சமரசத்திட்டம் பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார். துருக்கி அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் அவர் இந்த முயற்சியில் ஈடுபடவுள்ளார்.

வைகாசி 27, 2011

அமெரிக்காவை எதிர்த்து இராக்கில் பெரும் பேரணி

இராக்கிலிருந்து அமெ ரிக்கப்படைகள் வெளியேற வேண்டும் என்று வலியு றுத்தி 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடை பெற்றது. இந்த ஆண்டுக்குள் அமெரிக்கப்படைகள் வெளியேறாவிட்டால் கடு மையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஷைதி அமைப்பு எச்சரித்துள்ளது. பேரணியில் பங்கேற்ற வர்கள் அமெரிக்க, இஸ் ரேல், பிரிட்டிஷ் கொடி களை தீ வைத்துகொளுத் தினர். இந்த பேரணி மூலம் இராக் பிரதமர் நூரி அல் மாலிக்கிற்கு நெருக்கடி உரு வாகியுள்ளது. பேரணியை நடத்திய ஷைதி அமைப்பு கடந்த ஆண்டு பிரதமருக்கு ஆதரவு அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

வைகாசி 27, 2011

அமெரிக்காவில் அடுத்தடுத்து சூறாவளி பலியானோர் எண்ணிக்கை 200

அமெரிக்காவின் மத்திய பகுதியில் உள்ள ஒக்லஹாமா, கன்சாஸ் மற்றும் அர்கன்சாஸ் மாகாணங்கள் நேற்று முன்தினம் வீசிய பயங்கர சூறாவளியால் பெரும் பாதிப்படைந்தன. இச் சூறாவளிக்கு மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 200ஐ தாண்டி விட்டது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் கடந்த 22ம் திகதி மணிக்கு 320 கி.மீ. வேகத்தில், ‘டொர்னடோ’ என்றழைக்கப்படும் பயங்கர சூறாவளி வீசியது. இதில், 122 பேர் பலியாயினர். இதைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் நேற்று முன்தினம் அதிகாலையில் ஒக்லஹாமா மாகாணத்தில் உள்ள ஒக்லஹாமா நகரின் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள கிராமப் புறங்களைத் தாக்கியது. (மேலும்....)

வைகாசி 26, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 12)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

இப்படி மருத்துவ உதவி செய்ய சென்ற அந்த போராளியை சூசகமாக கைதுசெய்து கொடுத்தான் இந்த பாப்பா. ஆம். இறுதி யுத்தம் நடந்து கொண்டிருந்த பொழுது வீதிகளிலும் காணிகளிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயப்பட்டிருந்தபொழுது அவர்களை மீட்கும் பணியில் இவளும் இன்னும் பலரும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர் . இந்த பாப்பாவின் பிடிக்குள் மக்கள் அதிகமானோர் அதுவும் இராணுவ எல்லைகளில் இருந்ததால் அங்கு காயப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி செய்ய சென்றிருந்த வேளையில் சில முன்னரங்க பாப்பாவின் நபர்களுடன் இவள் வாய்த்தர்க்கம் செய்து அந்த மக்களை காப்பாற்ற சென்றுள்ளாள், இவளை பழிவாங்க நினைத்த பாப்பா கும்பல் திட்டமிட்டு ஒரு நாடகம் ஆடினார்கள். (மேலும்....)

வைகாசி 26, 2011

புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி விடுதலை!

புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மனைவி இசைச்செல்வி என்றழைக்கப்படும் சசிரேகாவும் அவரது இரண்டு குழந்தைகளும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஒரு வருடமாக இசைச்செல்வி குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டார். வன்னியில் இறுதி யுத்த களத்திலிருந்து மீண்டு தடுப்பு முகாமில் சென்று தனது பிள்ளைகளுடன் தஞ்சமடைந்த இசைச்செல்வியை இராணுவத்தினர் கைது செய்து தடுப்பு முகாமதிற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குழந்தைகளுடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த இசைச்செல்வியை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  இவரின் விடுதலைக்காக செல்வாக்கு பிரயோகத்தில் முன்னாள் புலி முக்கியஸ்தர்களும் இன்னாள் அரச தரப்பு செயற்பாட்டாளர்களும் முக்கிய செல்வாக்கு செயற்பாடுகள் இருந்ததாக அறிய முடிகின்றத.ு

வைகாசி 26, 2011

வறுமையின் உச்சிக்குச் சென்று தற்கொலைக்கு துணியும் நிலையிலுள்​ள குடும்பங்க​ளின் வாழ்க்கையை மேம்படுத்த புலம்பெயர் நிதிசேகரிப்​பு உதவுமா?

யுத்த சூழ்நிலையில் இருந்து மீண்டு இரு வருடங்கள் கடந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதனையும் எடுக்காத நிலையில், சொந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்து நிற்கும் இம்மக்களும் முன்னாள் புலி உறுப்பினர்களும் வறுமையாலும் மனவிரக்தியாலும் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பெயரால் ஐரோப்பிய நாடுகளில் சேர்க்கப்பட்ட, சேர்க்கப்பட்டுவரும் நிதியினில் கொஞ்சத்தையேனும் இவ்வாறான மக்களுக்கு கொடுத்து உதவாமல் புலிகளுக்காகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் சேகரிக்கப்பட்ட நிதியினை அதற்குப் பொறுப்பாக செயற்பட்ட பலர் சொகுசாக செலவுசெய்து வாழ்ந்து வருகின்றனர். (மேலும்....)

வைகாசி 26, 2011

The Dutch judiciary says that Tamil Tiger leaders in the Netherlands have played a prominent role in financing the civil war in Sri Lanka. The 10,000 Tamils in the Netherlands, police say, were under the iron grip of the guerilla group. (part 1)

Marcel Haenen (NRC Handelsblad)

The Liberation Tigers of Tamil Eelam (LTTE) waged a bloody war for a quarter of a century in Sri Lanka, but on May 17th, 2009, it admitted defeat to the country’s majority Sinhalese regime. Tamil Tiger founder and chairman Velupillai Prabhakaran died the following day, killed while he attempted a desperate escape from the battlefield in an ambulance. Meanwhile, some 8,300 km north of that battleground, Tamil Tiger representatives in places like Schagen, The Hague, Breda, Zeist, Raalte and Ammerzoden had yet to capitulate. Their struggle for a Tamil homeland continued. The Dutch police said that until their arrest in 2010, the Dutch Tamils had remained active in raising funds and organising meetings to gather support for their struggle and liberation organisation. (more....)

வைகாசி 26, 2011

லிபியா நெருக்கடிக்கு தீர்வு  ஆப்பிரிக்க யூனியன் முயற்சிக்கு மன்மோகன் ஆதரவு

லிபியாவில் நீடிக்கும் அரசியல் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண ஆப்பிரிக்க யூனியன் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆதரவு தெரிவித்தார்.  எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் நடைபெற்ற இந்தியா-ஆப்பிரிக்கா உச்சிமாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், லிபியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டுப்போரை அமைதி யான முறையில்முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று இந்தியா விரும்புவதாக தெரிவித்தார். அந்நாட்டில் நீடித்து வரும் அனைத்து பகைமை நடவடிக்கைகளும் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

வைகாசி 26, 2011

எல்டிடிஈ முக்கிய தளபதி   ராமச்சந்திரன் கைது  நெதர்லாந்து போலீசார் நடவடிக்கை

நெதர்லாந்து நாட்டில் எல்டிடிஇ முக்கியத் தலை வர்களில் ஒருவரான ராமச் சந்திரன் கைது செய்யப்பட் டுள்ளார். அவரது அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஞானம் என்பவரும் நெதர்லாந்து உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் எல்டிடிஇ முக்கியத் தலைவரான நெடி யவன், நார்வே நாட்டு தலை நகர் ஓஸ்லோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலை யில், ராமச்சந்திரன் நெதர் லாந்தில் கைது செய்யப்பட் டுள்ளார். ராமச்சந்திரனிடம் இருந்து நெதர்லாந்து உள வுப் பிரிவினர் கைப்பற்றிய கம்ப்யூட்டர், பென் டிரைவ் மற்றும் ஆவணங்கள் மூலம் எல்டிடிஇ-க்காக நிதி திரட் டப்பட்டு, சேமித்தது தெரிய வந்துள்ளதாகவும் கூறப் படுகிறது. (மேலும்....)

வைகாசி 26, 2011

சிறுநீரகங்கள் பாதிப்பு

நடிகர் ரஜினிக்கு லண்டனில் சிகிச்சை

சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் மேலதிக சிகிச்சைக்காக நடிகர் ரஜினி அடுத்த சில நாட்களில் லண்டன் கொண்டு செல்லப்படவுள்ளார். முன்னதாக அவரை அமெரிக்கா அழைத்துச் செல்ல திட்டமிட்டனர். பின்னர் அமெரிக்க டாக்டர் குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. இந்நிலையில் அவரை லண்டனுக்கு கொண்டு செல்ல முடிவு செய்ய ப்பட்டுள்ளது. கடந்த மாதம் 29ம் திகதி ராணா படப்பிடிப்பில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு என்ன பிரச்சனை என்பதைச் சொல்லாமல் மூடி மறைத்தனர் அவரது குடும்பத்தினர். இதையடுத்து முதலில் இசபெல்லா மருத்துவமனையிலும் இப்போது ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையிலும் ரஜினி சிகிச்சை பெற்று வருகிறார். கிட்டத்தட்ட 1 மாத காலமாகவே ரஜினி உடல் நலக்குறைவுடன் உள்ளார். (மேலும்....)

வைகாசி 26, 2011

Emilda says she’s relieved over arrest

Jaffna District Secretary Emilda Sukumar said she was happy and relieved over the arrest of Oslo-based LTTE leader Nediyawan who had threatened her with death until very recently. She said Nediyawan had been threatening her from Norway by e mail to resign from her post and not to support the government. Mrs. Sukumar said he even threatened to kill her and her family. “I lived under severe stress due to these threatening messages,” she said. She had served eight years as the Government Agent of Mullaitivu during the LTTE controlled period.  Even then she had been forced to resign by Nediyawan on the orders of the LTTE leader. She also said the appreciation of her duties by the people and the government during the past 13 years in the district was a great strength for her future.

வைகாசி 26, 2011

இலங்கை - இந்திய நட்புறவை சீர்குலைக்க ஜே.வி.பி முயற்சி

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையி லான நெருங்கிய நட்புறவைப் பலப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ள வேளையில் இந்த நட்புறவைச் சீர்குலைக்கும் செயற்பாடுக ளையே ஜே. வி.பி. மேற்கொள்வதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா தினேஷ் குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று ஜே. வி.பி. எம்.பி. அநுர குமார திசாநாயக்க இலங்கை- இந்திய வெளிநாட்டமைச்சர் களின் அண்மைய கூட்டறிக்கை தொடர்பான விசேட அறிக்கையொன்றை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் உரையாற்று கையில், இவ்வறிக்கையானது இலங்கையின் இறைமை, பாதுகாப்பு, பொருளாதார நடவடிக்கைகளில் இந்தியா தலையீடு செய்வதையே காட்டுகிறது எனவும் இதற்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாது எனவும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன; வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தற்போது வெளிநாட்டு விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளதால் அவர் நாடு திரும்பி யதும் அநுர குமார திசாநாயக்கவின் கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளிப்பார் எனவும் தெரிவித்தார்.

வைகாசி 26, 2011

யுத்தத்தின் பின்னர்

இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான சேவைகளை ஏற்படுத்தி அரசாங்கம் அவர்களின் வாழ்வை வளமாக்கியுள்ளது (பகுதி 1)

அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற்பாடுகள் குறிப்பாக வடமாகாணத்தின் மீள்குடியேற்றம், அபிவிருத்தி, பாதுகாப்பு தொடர்பான நிலைப்பாட்டை இங்கு நாம் பிரசுரிக்கிறோம். மூன்று தசாப்த காலத்திற்கும் கூடுதலான காலம் இலங்கையில் இடம்பெற்று வந்த பயங்கரவாத வன்முறை 2009ம் ஆண்டு மே மாதத்தில் இலங்கையின் பாதுகாப்பு படையினரால் தமிbழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை படுதோல்வியடையச் செய்ததன் மூலம் நிறைவுபெற்றது. 1980ம் ஆண்டு தசாப்த ஆரம்பத்தில் இலங்கையில் உருவாகிய தமிழ் போராளிக் குழுக்களின் வன்முறை காரணமாக ஏற்பட்ட தாக்கத்தினால் மக்கள் உள்ளூரில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர ஆரம்பித்தனர். (மேலும்....)

வைகாசி 25, 2011

இன்னும் 3 கிலோமீற்றர் படையினர் பின்வாங்கியிருந்தால் வெற்றியை இழந்திருப்போம் -  சரத்பொன்சேகா

எனது கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில் 2009 ஜனவரி 31 ஆம் திகதி முதல் பெப்ரவரி இரண்டாம் திகதி வரை போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தமையினால் ஒரே தடவையில் தாக்குதல்களை மேற்கொள்ள முடியாமல் போனது. அதன் பெறுபேறாக 4 கிலோமீற்றர் படையினர் பின்வாங்கினர். அங்கு இன்னும் 3 கிலோமீற்றர் பின்வாங்கியிருந்தால் 1999 ஆம் ஆண்டு மாங்குளத்தில் வீழ்ச்சி கண்டது போல, 25 மாதத்தில் நாம் பெற்ற சகல வெற்றிகளையும் தனி நபரின் தீர்மானத்தினால் இழந்திருப்போம் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

இனியொரு கிளர்ச்சியை ஏற்படுத்த புலம்பெயர் தமிழருக்கு இடமளியேன் - கே.பி.

இறுதி யுத்தத்தின்போது புலிகளின் உயர் தலைமையை காப்பாற்ற ஐ.நா, ஐரோ. நாடுகள் முயன்றன

இலங்கையில் மீண்டும் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் முயற்சிக ளுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர்களுள் ஒருவ ரான குமரன் பத்மநா தன் தெரிவித்துள்ளார்.(மேலும்.....)

 

வைகாசி 25, 2011

கனிமொழிக்கு ஜாமீன் இப்போதைக்கு இல்லை

கனிமொழி ஒரு பெண் என்ற வாதத்தை முன் வைத்து, பள்ளி செல்லும் மகனைக் கவனிக்க வேண் டும், தந்தை அரவிந்தன் வெளிநாட்டில் பணிபுரிகி றார். எனவே தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். கனிமொழி மற்றும் சரத்குமார் ஆகியோர் இருவரும் ரூ. 200 கோடி லஞ்சம் பெற்றதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது. இருவரி டமும் கலைஞர் தொலைக் காட்சியின் பங்கு தலா 20 சதவீதம் உள்ளது. கலைஞர் கருணாநிதியின் மனைவி யான தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன. (மேலும்.....)

வைகாசி 25, 2011

முல்லை மக்கள் விருப்பத்துக்கு மாறாக மீள்குடியேற்றப்படமாட்டார்கள்

  • கண்ணிவெடி அகற்றும்வரை தற்காலிக ஏற்பாடு

  • விவசாயம் செய்ய அரை ஏக்கர் காணி

இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மாவட்ட மக்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்றாது வேறிடங்களில் மீள்குடியமர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை முல்லைத்தீவு அரச அதிபர் பத்திநாதன் முற்றாக நிராகரித்தார். மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஒருபோதும் அவர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

ராஜீவ் கொலை பின்னணியில் மறைமுகமாக திமுக - ஜெயலலிதா

கே.பி.  அளித்த பேட்டியில், ராஜிவ் காந்தியை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனும், அதன் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மனும்தான் திட்டமிட்டு கொன்றதாக ஒப்புக்கொண்டார். அத்துடன், ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் கொலை செய்ய விடுதலைப்புலிகள் முயன்றதாக அந்தப் பேட்டியில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இன்று நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதாவிடம் கே.பி.யின் பேட்டி குறித்து கருத்து கேட்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணியில் திமுக மறைமுகமாக இருந்தது என்பது தங்கள் குற்றச்சாட்டு என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

மும்பை தாக்குதலுக்குஉதவிய பாகிஸ்தான் உளவு அமைப்பு

மும்பையில் லஷ்கர் - ஏ -தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உள வுத் துறை உதவியது என தீவிரவாதி டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் தெரிவித்தார். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம்தேதி பாகிஸ் தான் லஷ்கர் - ஏ - தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து 16 மணி நேரத்திற்கு மேல் அவர் கள் நடத்திய தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட் டனர். மும்பைத் தாக்குதலில் முக்கிய குற்றவாளிகளாக அமெரிக்காவின் டேவிட் ஹெட்லியும், பாகிஸ்தான் வம்சாவளி கனடா நாட்ட வருமான தகாவுர் ரானாவும் கருதப்படுகின்றனர். (மேலும்.....)

வைகாசி 25, 2011

இலங்கையிலிருந்து ஐரோப்பிய விமான சேவைகளில் பாதிப்பில்லை

ஐஸ்லண்ட் எரிமலை குமுறலின் எதிரொலியாக ஐரோப்பாவுக்கான ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் இல்லை என ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவிக்கிறது. எரிமலை குமுறலையடுத்து கிளம்பிய பாரிய புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் சில உள்ளூர் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலைமையை ஸ்ரீலங்கன் விமான சேவையும் அவதானித்து வருவதாக விமான சேவையின் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று அதிகாலை முதல் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு குறிப்பிட்ட நேரத்தில் விமானங்கள் வந்து சேர்ந்தன. அதேபோன்று விமானங்களும் புறப்பட்டுச் சென்றுள்ளன என விமான நிலையம் தெரிவித்தது. எவ்வாறாயினும், ஐஸ்லண்ட் எரிமலை வெடிப்பு விவகாரம், தொடர்பாக ஸ்ரீலங்கன் விமான சேவை கண்காணித்தே வருகிறது. ஏதாவதேனும் மாற்றங்கள் செய்யப்படுமாயின் உடனடியாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.

வைகாசி 25, 2011

ரசிகர்களை சமாதானப்படுத்த ரஜினிகாந்தின் வீடியோ படம் வருகிறது

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ரசிகர்களை சமாதானப்படுத்தவும் ரஜினிகாந்த் பேசுவது போன்ற வீடியோ படம், இன்னும் 3 நாட்களில் வர இரு க்கிறது. தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரசிகர்கள், கோவில்களில் விசேட பூஜைக ளும், பிரார்த்தனைகளும் நடத்தி னார்கள். இந்த நிலையில் ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிப்பதற்காக, அமெரிக்காவில் இருந்து 4 டாக்டர்கள் அடங்கிய குழு நேற்று முன்தினம் சென்னை வந்தது. விமான நிலையத்தில் இருந்து அவர்கள் நேராக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார்கள். அமெரிக்க டாக்டர்கள் சென்னையில் 3 நாட்கள் தங்கியிருந்து ரஜினிகாந்துக்கு சிகிச்சை அளிக்கிறார்கள், அதில் ஏற்படும் முன்னேற்றத்தை பார்த்த பிறகே அவர்கள் அமெரிக்கா திரும்ப இருக்கிறார்கள். (மேலும்.....)

வைகாசி 25, 2011

முதலாளிகளிடம் கையேந்தும் அமெரிக்க அரசு! 

அமெரிக்காவின் மத்திய அரசு தனது கடன் வரம்பைத் தாண்டிவிட்டது. அதை உயர்த்த வேண்டும் என்று கோரி ஜனாதிபதி மாளிகை மற்றும் நாடாளுமன்ற கதவுகளைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஓய்வு பெறுபவர்களுக்கான பலன்கள் மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றைத் தற்காலிகமாக அமெரிக்க அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையைத்தான் அடுத்த கட்டத்திற்கு நகர, முதலாளிகளிடம் கடன் வாங்குவது பற்றி அமெரிக்க அரசு ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அமெரிக்க அரசு பத்திரங்களில் இந்த முதலாளிகள் ஏராளமாக முதலீடு செய்துள்ளனர். இது குறித்து முன்னாள் அதிபர் கிளிண்டன் அரசின் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தவரும், தற்போது பெர்க்லி கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக உள்ளவருமான ராபர்ட் ரீச் விரிவாக எழுதியுள்ளார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

தி.மு.கவுடன் உறவில் பாதிப்பு இல்லை - காங்கிரஸ்

‘தி. மு. க.வுடன் தற்போது இருக்கும் உறவில் எந்தவித பாதிப்பும் இல்லை’ என்று காங்கிரஸ் கூறி இருக்கிறது. 2 ஜி அலைவரிசை ஒதுக்கீட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் மகள் கனிமொழியை பார்க்க தி. மு. க. தலைவர் கருணாநிதி டெல்லி சென்று இருக்கிறார். இந்த பயணம் பற்றி கருணாநிதியிடம் நிருபர்கள் கருத்து கேட்ட போது தனிப்பட்ட முறையில் டெல்லி செல்கிறேன். டெல்லியில் சோனியாவை சந்திக்கும் வாய்ப்பு இருக்காது என்று கருதுகிறேன்’ என்று கூறி இருந்தார். (மேலும்.....)

வைகாசி 25, 2011

கடாபி குடியிருப்பு மீது நேட்டோ மீண்டும் தாக்குதல்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் குடியிருப்பு பகுதியான திரிபோலியின் பாப் அல்-அசிசியாவுக்கு நேட்டோ படையினர் நேற்றைய தினத்திலும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதோடு 150 பேரளவில் காயத்துக்குள்ளானதாக லிபிய அரசு குறிப்பிட்டுள்ளது. திரிபோலியின் பாப் அல்-அசிசியா பகுதியில் நேற்று 12 முதல் 20 வெடிப்புச் சப்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் பி.பி.சி செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பகுதி புகை மண்டலமாக காட்சியளித்ததாகவும் அவர் செய்தி வெளியிட்டுள்ளார். இந்நிலையில் லிபியா மீது தாக்குதல் நடத்த பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தாக்குதல் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளன. இதன் மூலம் குறித்த இலக்கிற்கு தெளிவாக தாக்குதல் நடத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வைகாசி 24, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 11)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

ஆம்! பாப்பா நமது மூத்த தளபதிகளில் ஒருவர்தான். அவர் சமாதானக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டு நல்ல சுகபோகமாக வாழ்வை அனுபவித்து வந்ததை யாரும் மறக்க மாட்டார்கள். இந்த சுகபோக அனுபவிப்பால் பல பெண்களுடன் இவர் தொடர்பு கொண்டமையால் மறுபடியும் வன்னிக்கு அழைக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தார். இவர் நமது விளையாட்டு துறைப்பொருப்பை கவனித்து வந்தவர்.
இப்படி அந்த சமாதான காலகட்டத்தில் இவர் யாழ்மாவட்ட புலனாய்வுத்துறையினருடன் நன்கு தொடர்பை கொண்டுள்ளார் என அப்போது யாழப்பானத்திலிருந்த மற்றைய பொறுப்பாளர்கள் மற்றும் இரகசிய புலனாய்வுத்துறையினர் தகவல் கொடுத்தமையால் இவர்மீது எம் தலைமைக்கு ஒரு கண் இருந்தது. ஆனாலும் அவர்மீது நடவடிக்கை எடுக்க அப்போது நமக்கு போதுமான உறுதிமிக்க தடையங்கள் கிடைக்கவில்லை. மேலும் மூத்த தலைவர்கள் மீது உறுதியான சாட்சியம் இல்லாமையால் நடவடிக்கை எடுக்க எம் தலைமை பீடம் சற்று தயங்கியது, காரணம் மறுபடியும் எமக்குள் ஒரு பிரிவு ஏற்படுவதை தலைமை விரும்பவில்லை.
(மேலும்....)

வைகாசி 24, 2011

இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் சர்வதேச சமூகம் செயல் முனைப்பற்றிருந்தமைக்கு காரணம் என்ன?

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பில் அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென நோர்வே தமிழ் கற்கை மையத்தின் கருத்தரங்கில் நோர்வேயின் வெளியுறவு அரசியல் ஆய்வு மையத்தின் தலைவரும் முன்னாள் நோர்வே பிரதி வெளியுறவுத் துறை அமைச்சரும் ஐ.நா. பிரதிநிதியுமான ஜான் இஜ்லண்ட் தெரிவித்துள்ளார். ஆசியாவின் பலம் பொருந்திய நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளையும் உதவிகளையும் வழங்கியமை மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அனைத்துலக போரின் விளைவாக விடுதலைப் புலிகளை வேறொரு அணுகு முறையில் அனைத்துலக சமூகம் எதிர்கொள்ளும் நிலைக்குள் தள்ளப்பட்டமை என இரண்டு மூல காரணிகளாலேயே அனைத்துலக சமூகம் செயல் முனைப்பு அற்ற நிலையில் இருந்ததென அவர் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 24, 2011

மக்களே முக்கியம் மூலதனமல்ல!  ஐரோப்பாவில் எழும் முழக்கம்

சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வரும் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள்கை கள் அமலாக்கத்திற்கு மக் கள் கடுமையான எதிர்ப் பைத் தெரிவித்து வருகிறார் கள். லி ஹாவ்ரேயில் நடை பெற்ற ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரணியில், “மக்களே முக் கியம்; மூலதனமல்ல”, “ஜி-8 வெளியேறு” என்ற முழக் கங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணிக்கு இடது சாரிக்கட்சிகள், தொழிற் சங்கங்கள் ஆகியவை ஏற் பாடு செய்திருந்தன. ஜி-8 கூட்டம் நடைபெறுவதற்கு பல நாட்கள் முன்னதாகவே துவங்கியுள்ள எதிர்ப்பு, நாட் கள் நகர, நகர வலுவடையும் என்று தலைவர்கள் பேசு கையில் தெரிவித்தனர். (மேலும்....)

வைகாசி 24, 2011

“ஊழலின் காரணமாக திமுக வீழ்ச்சி”  அமெரிக்க துணைத்தூதரிடம் தயாநிதி மாறன் கூறியது அம்பலம்

ஊழலின் காரணமாக திமுக வீழ்ச் சியடைந்து கொண்டிருக்கிறது’ என்றும் ‘ஆட்சி அதிகாரத்திலிருக்கும்போது, ஆட் சியாளர்கள் பணம் பண்ணத் தொடங்கி விடுகிறார்கள்’ என்றும் 2008ல் தயாநிதி மாறன், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரியிடம் தெரிவித்ததாக, விக்கி லீக்ஸ் அம்பலப் படுத்திய ரகசியத்தை ‘தி இந்து’ நாளிதழ் (23.5.2011) முதல் பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது. 2008 பிப்ரவரியில் அமெரிக்கத் தூதர கத்தின் கன்சல் ஜெனரலிடம் அப்போது திமுக நாடாளுமன்ற உறுப்பின ராக இருந்த தயாநிதி மாறன் மனந்திறந்து உரையாடியிருக்கிறார். அப்போது அவர், தன் கட்சியில் நிலவும் ஊழல் குறித்தும், மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிராக அதி கரித்து வரும் மனோபாவம் குறித்தும் குறிப்பிட்டிருக்கிறார். (மேலும்....)

வைகாசி 24, 2011

புத்தளம் வீதியொன்றுக்கு தந்தை செல்வா பெயர்

புத்தளம் நகரிலுள்ள பெயர்களற்ற அனைத்து குறுக்கு வீதிகளுக்கும் புதிய பெயர்களைச் சூட்டி அதற்கான பெயர்ப்பலகைகளை நாட்டிவைக்க புத்தளம், நகர பிதா கே. ஏ. பாயிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நகர சபைப் பேச்சாளரும், நகர பிதாவின் செயலாள ருமான எஸ். எச். எம். நியாஸ் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தின்போது, 1976 புத்தளம் பெரிய பள்ளிவாசலில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பல முஸ்லிம்கள் கொல்லப்பட்ட போது இது குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பி நியாயம் கேட்ட அமரர் தந்தை செல்வநாயகம், முஸ்லிம் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியைத் தோற்றுவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் மர் ஹும் எம். எச். எம். அஷ்ரப் மற்றும் புத்தளத்தில் முஸ்லிம் நகர சபைத் தலைவர்களாக கடமையாற்றியோர் மக்களின் நலனுக்காக உழைத்தவர்கள் போன்ரோரின் நாமங்கள் சூட்டப்படும்.

வைகாசி 24, 2011

கனிமொழியுடன் கருணாநிதி சந்திப்பு

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள கனிமொழியை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி திங்களன்று நேரில் சந்தித்தார். திங்களன்று தில்லி வந்த கருணாநிதி, மாலையில் திகார் சிறைக்குச் சென்று கனிமொழி, முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கலை ஞர் டி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரை சந்தித்து பேசினார். அவரு டன் குடும்பத்தினரும் இருந்தனர். முன்னதாக கனிமொழியை மத்திய அமைச்சர் அழகிரி யின் மனைவி காந்தி திங்க ளன்று தில்லி நீதிமன்றத்தில் சந்தித்தார். தனது மகன் துரை தயாநிதி உள்ளிட்ட சிலருடன் பாட்டியாலா வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்த காந்தி, கனிமொழியை சந்தித்துப் பேசினார்.

வைகாசி 24, 2011

அமெரிக்க ஜொப்லின் நகரில் சூறாவளி: 110 பேர் பலி

அமெரிக்க மிஸோரி மாநிலத்திலுள்ள ஜொப்லின் நகரைத் தாக்கிய சூறாவளியில் சுமார் 110 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பலர் காயமடைந்துள்ளதோடு இன்னும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது. சூறாவளியின் பின்னர் மிஸோர, ஆளுனர் ஜே.நிக்ஸன் அம்மாநிலத்தில் அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

வைகாசி 24, 2011

பயங்கரவாததடைச் சட்டத்தை திருத்த அரசாங்கம் முடிவு

பயங்கரவாததடைச் சட்டம் மற்றும் ஏனைய அவசரகாலச் சட்டங்களை திருத்தி அமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் இது தொடர்பான நடவடிக்கை குறித்து அரசாங்கம் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை எனவும் அவசரகாலச் சட்டத்தின் சில சரத்துக்களை அகற்றும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

வைகாசி 24, 2011

யாழ். சிறையில் 8 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

யாழ். சிறையில் உள்ள 8 அரசியல் கைதிகள் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இக் கைதிகளின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை விசாரணை செய்த மேல் நீதிமன்றம் தகுந்த ஆதாரங்கள் இல்லையென வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. ஆனால் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து கைதிகளின் விடுதலை தொடர்பான தேவையான ஆவணம் வராமையால் தொடர்ந்தும் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் தங்களை உடன் விடுவிக்குமாறு கோரியுமே இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை குறித்த கைதிகள் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. _

வைகாசி 24, 2011

கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி கிண்ணியாவில் திறந்து வைப்பு

கிழக்கின் மாபெரும் அறிவியல் கண்காட்சி நேற்று கிண்ணியா அப்துல் மஜீது வித்தியாலயத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் எச். எம். எம். பாயிஸ் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன் ஆகியோர் முதன்மை அதிதிகளாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர். நேற்று திங்கள் 23 ஆம் திகதி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஐந்து நாட்கள் நான்கு பாடசாலைகளில் நடைபெறவுள்ளன.  இக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மூவினங்களைச் சேர்ந்த சமயப் பெரியார்கள் கலந்துகொண்டதோடு கிழக்கின் பாரம்பரிய கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. இதேவேளை கிழக்கு மாகாணத்திலுள்ள 16 கல்வி வலயங்களுக்குட்பட்ட 1012 பாடசாலைகளைச் சேர்ந்த மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் 23 ஆசிரியர்களும் இக் கண்காட்சியை பார்வையிடவுள்ளதாக கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளரும் கண்காட்சி ஒழுங்கமைப்பாளருமான யு. எல். எம். ஹாசீம் தெரிவித்தார்.

வைகாசி 24, 2011

முல்லா ஒமர் படுகொலை, தலிபான் மறுப்பு

ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் பாகிஸ்தானில் கொல் லப்பட்டுவிட்டதாக தனியார் தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது. குவெட்டாவில் இருந்து வடக்கு வாஜிரிஸ்தானுக்கு செல்லும் வழியில் அவர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தானின் டோலோ தொலைக் காட்சி தெரிவித்தது. எனினும் அவர் எப்படி யாரால் கொல்லப்பட்டார் என்ற விவரத்தை அந்த தொலைக்காட்சி வெளியிடவில்லை. இதனிடையே முல்லா ஒமர் கொல் லப்பட்டதை பாதுகாப்பு அதிகாரி ஒரு வரும் உறுதிப்படுத்தினார். முல்லா ஒமர் கொல்லப்பட்ட தகவல் சரியானதுதான் என்றார் அவர். எனினும் முல்லா ஒமர் கொல்லப்பட்ட தகவலை தெஹ்ரீக்-இ- தலிபான் அமைப்பு மறுத்துள்ளது. அத்துடன் ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பும் இந்த தகவலை மறுத்துள்ளது. இதேவேளை முல்லா ஒமர் கொல்லப் பட்டதை ஆப்கான் அரசு உறுதி செய்ததாக வெளியான செய்தியை ஆப்கான் உளவுப் பிரிவு மறுத்துள்ளது. எனினும் முல்லா ஒமர் தங்கியிருந்த பாகிஸ்தானின் குவா ட்டாவில் அவரை கடந்த 5 நாட்களாகக் காணவில்லை என்று ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புக்கான இயக்குனரகத்தின் பேச்சாளர் நுத்புல்லா மஷல் தெரிவித்தார்.

வைகாசி 24, 2011

தனியார் துறைக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் சிறந்தது

தனியார் துறைக்கும் ஓய்வூதியம் வழங்கும் அரசாங்கத்தின் திட்டம் ஓர் சிறந்த திட்டமெனத் தெரிவித்திருக்கும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சிறந்த திட்டத்தைக்கூட எதிர்க்கட்சிகள் காரணமின்றி எதிர்ப்பதாகத் தெரிவித்தார். ஓய்வூதியத் திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் தனியார்துறையில் வேலைசெய்பவர்கள் மற்றும் சுயதொழிலாளர்கள் தமது சம்பளத்தில் 2 வீதத்தை செலுத்துவார்கள். அதேபோல தொழில் தருனர்கள் தலா ஒவ்வொரு தொழிலாளருக்கும் 2 வீதத்தை செலுத்தவேண்டும். அவ்வாறு பார்க்கும் பட்சத்தில் தொழில் தருனர்கள் பெரும் எண்ணிக்கையிலான தொகையொன்றை செலுத்தவேண்டியிருக்கும். (மேலும்....)

வைகாசி 24, 2011

 

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு, கிழக்கு பங்களிப்பு அதிகரிப்பு

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்களவு அதிகரித்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மோதல்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் சூழ்நிலையில் இரு மாகாணங்களின் விவசாயத்துறை உற்பத்தி குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்திருப்பதுடன் இவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துணர்வு அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

வைகாசி 24, 2011

 

ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: ஐரோப்பிய விமான சேவைகள் பாதிப்பு

ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள பகுதியிலிருந்து 220 கி. மீ. தொலைவு (120 மைல்) வரை விமானங்கள் பறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐரோப்பிய விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்பால் வான் பகுதியில் கரும் சாம்பல்கள் பரவி வருகின்றன. பல கிலோ மீற்றர் தூரம் பரவியுள்ள சாம்பலால் வான் வழியே செல்லும் விமானங்களுக்கு பாதை தெரியவில்லை. இதனால் பிரிட்டன் விமானச் சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள துடன் டன் கணக்கில் எரிமலை சாம்பல்கள் வான் பகுதியில் உள்ளன. இந்த சாம்பல்கள் விமான என்ஜின் களுக்கு பெரும் அபாயத்தை விளை விக்கக்கூடும் என்பதால் மேற்கு ஐரோப்பா விமானங்கள் தரை இறக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

வைகாசி 24, 2011

ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் அணுசக்தி தொடர்பான உலக உச்சி மாநாட்டை நடத்த ஏற்பாடு

ஐக்கிய நாடுகள், மே 15 (ஐபிஎஸ்) ஜப்பானின் ஃபுக்குஷிமா டெய்ஷி அணுசக்தி ஆலையில் அண்மையில் நடைபெற்ற விபத்தின் பாரதூரமான தாக்கம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அரசியல் உணர்வுபூர்வ மான விடயமான அணுசக்தி பாதுகாப்பு குறித்து உலக தலைவர்களின் உயர் மட்ட மகாநாடு ஒன்றை நடத்த தூண்டியுள்ளது. ஜப்பானில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக அணுசக்தி விபத்துக்களை யும் அணுசக்தி பாதுகாப்பையும் மீள்மதிப்பீடு செய்யவேண்டி உள்ளது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 24, 2011

யுத்தத்திற்கு விரயமான கோடிக்கணக்கான டொலர் இன்று அபிவிருத்திக்கு பயன்படுகிறது

வட மாகாணத்தின் அபிவிருத்திற்காக அரசாங்கம் 2011 முதல் 2013 வரையில் 250 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்தி ருக்கிறது. வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னேற்றத் திற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிதி முதலீட்டு திட்டங்கள் பற்றி கொள்கை விளக்கம் ஒன்றை அளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாற் கப்ரால் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். வடக்கில் ஓமந்தையிலிருந்து காங்கேசன்துறை வரை ரெயில் பாதை களை அமைத்து, ரெயில் சேவையை மீண்டும் தென்னிலங்கை யின் மாத்தறையிலிருந்து காங்கேசன்துறை வரை நீடிக்கும் திட்டத்தின் கீழ் அரசாங்கம் 8.9 பில்லியன் ரூபாவை முதலீடு செய்யவுள்ளது. இதில் 5.3 பில்லியன் ரூபா இவ்வாண்டில் செல விடப்படும். (மேலும்....)

வைகாசி 23, 2011

 

ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக செயற்படமாட்டார் அதற்கான அதிகாரமும் அவரிடமில்லை

“1990 ஆண்டு தசாப்தம் முதல் எல்.ரி.ரி.ஈ. இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கமென்றும் அதனுடன் இலங்கை அரசாங்கத்திற்கு யுத்தம் செய்வது அவ்வளவு இலகுவான செயலல்ல என்ற வெளிநாட்டு கொள்கையை இந்தியா கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு நியாய பூர்வமான தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இந்திய அரசு இருந்து வருகிறது. தமிழ் மக்களுக்கு அதிகாரத்தை பரவலாக்குவதற்கு ஏற்புடைய வகையில் அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நியாயபூர்வமான யதார்த்தமான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று இந்தியா விரும்புகிறது” “இதே வேளையில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை தடை செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான தீர்மானத்தை எடுத்தமைக்கு ரஜிவ் காந்தியை படுகொலை செய்தமை மட்டுமன்றி எல்.ரி.ரி.ஈ ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற காரணத்தினால்தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக இந்திய அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.(மேலும்...)

வைகாசி 23, 2011

முல்லைத்தீ​வு மாவட்ட தமிழ்மக்களை வெளியேற்ற நடவடிக்கை

சொந்த மண்ணிலிருந்து வாழ்விடங்கள் பறிக்கப்பட்டு, தொழில்துறைகள் பறிக்கப்பட்டு ஏதிலிகளாக முல்லைத்தீவு மாவட்ட தமிழ் மக்கள் விரைவில் துரத்தப்படுவார்கள் என சுட்டிக்காட்டியுள்ள மாவட்ட மக்கள், ஆக்கிரமிப்பிற்கு எதிரா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல்கொடுக்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தாமல் வேறிடங்களில் குடியமர்த்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை மேலும் கடந்த 35 வருடங்களுக்கும் மேலாக கரைவலைப் பாடுகளை வைத்து தொழில் செய்துவந்த மக்களிடமிருந்து அதிகார வர்க்கத்தினரால் அந்தப்பாடுகள் பிடுங்கப்பட்டு தென்னிலங்கை சிங்கள வியாபாரிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 23, 2011

Nediyavan’s arrest a major step forward

(Professor Rohan Gunaratna, Nanyang Technological University, Singapore)

(By Arthur Wamanan)

Sri Lanka should ensure the establishment of a mainstream Tamil political leadership in order to move towards permanent peace, said terrorism expert, head of the International Centre for Political Violence and Terrorism Research (IC PVTR), Professor Rohan Gunaratna. In an interview with The Nation, he said the arrest of the head of the LTTE’s international network Perinpanayagam Sivaparan alias Nediyavan was a major step in helping Sri Lanka to recover from violent 30 years. He also briefed on the activities of the LTTE during the past two years. (more...)

வைகாசி 23, 2011

பிளவடைகிறது ஐக்கிய தேசிய கட்சி

100 பேர் கொண்ட மாற்று செயற்குழு  சஜித் தலைமையில் உருவாக்கம்

நூறு அங்கத்தவர்களைக் கொண்ட மாற்று செயற்குழு வொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நியமித்துள்ளதுடன் அதன் தலைமைப் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த மாற்று செயற்குழுவின் முதலாவது அமர்வு அடுத்த வாரம் இடம்பெறுமென்றும் தெரிய வருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த மாற்று செயற் குழுவில் மாகாண சபை உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் புத்திமான்கள் ஆகியோர் இடம்பெறு வதாக மேற்படி செயற் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த மாற்று செயற்குழு ஐக்கிய தேசிய கட்சியின் நிறைவேற்று குழு, மகளிர் அணி ஆகியவை தொடர்பாக கூடி ஆராய்வதுடன் கட்சிக்கு புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது தொடர்பாகவும் தீர்மானிக்கும் என்று ஆவர் மேலும் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சியின் செயற் குழுவை நியமிக்கும்போது தனக்கு விருப்பமானவர்களுக்கு முன்னுரிமை வழங்கியதையடுத்தே இந்த பிரச்சினை ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர் இதனைக் கட்சி பிளவுபடும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.

வைகாசி 23, 2011

நெடியவன் கைது

 

உன்னிப்பாக கவனிக்கிறது இலங்கை

புலிகளின் முக்கியஸ்தர் நெடியவன் நோர்வேயில் கைது செய்யப்பட்டதன் பின்னரான நிலைமைகளை உன்னிப் பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நெடியவனின் கைது மற்றும் அவர் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் பற்றி அவதானித்து வருவதுடன், நெடியவனின் பயங்கரவாத நடவடிக்கைகள் இலங்கையைப் பாதிக்குமா என்பது பற்றி ஆராயப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, நோர்வேயில் புலிகள் அமைப்பைத் தடை செய்யவேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சியான கொன்ச வேர்டிவ் கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. புலி பயங்கரவாதிகள் நோர்வேயில் செயற்படுவதை அனுமதிக்க முடியாது என நோர்வே எதிர்க்கட்சி குறிப்பிட்டு ள்ளது. புலிகள் அமைப்புக்காக ஐரோ ப்பா உட்பட பல்வேறு நாடுகளில் நிதி சேகரிப்பில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நோர்வேயில் வசித்து வந்த நெடியவன் ஹொலன்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

வைகாசி 23, 2011

ஆளுமைப் பயிற்சிக்கு வடக்கிலிருந்து மாணவர்கள் பயணம்

பல்கலைக்கழகங்களில் கல்வி யைத் தொடர்வதற்கு தகுதி பெற்ற மாணவர்களு க்கு இராணுவ முகாம்களில் நடை பெறவுள்ள தலைமைத்துவ பயிற்சி நெறிக்கு வடமாகாணத்திலிருந்து தெரிவானவர்கள் புறப்பட்டுள்ளனர். உயர்கல்வி அமைச்சினால் தனிப்பட்ட ரீதியாக மாணவர்களுக்கு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இன்று திங்கள் முதல் மூன்று வாரங்களுக்கு முதல் கட்டமாக மாணவர்களுக்கு இந்த பயிற்சிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து தெரிவான மாணவர்களுக்கு தென்னிலங்கை இராணுவ முகாம்களில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

வைகாசி 23, 2011

கருணாநிதி

மக்களுக்காக அல்ல மகளுக்காக இன்று டில்லி பயணம்

ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. எம்.பி.யும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி 20ம் திகதி கைது செய்யப்பட்டு, டில்லி திகார் ஜெயிலில் அடைக்கப் பட்டு உள்ளார். கனிமொழி மீதான கைது நடவடிக்கையின் காரணமாக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை ஏற் பட்டு உள்ளது. இந்த நிலையில் தற் போதைய அரசியல் சூழ்நிலை குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கருணாநிதி தனது கோபாலபுரம் வீட்டில் நேற்று முன்தினம் இரவு அவசர ஆலோசனை நடத்தினார். (மேலும்....)

வைகாசி 23, 2011

இயல்பு நிலைக்கு திரும்புகிறார் ரஜினி

சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நடிகர் ரஜினி காந்த் இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திட உணவை அவரே எடுத்துச் சாப்பிடுவதாகவும் மருத்துவமனை தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாசப் பாதை நோய்த் தொற்று, நிமோனியா காய்ச்சல் காரணமாக நடிகர் ரஜினி காந்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. மே 13ம் திகதி இரவு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் உள்ள சிறப்பு அறை யில் மருத்துவப் பரிசோதனைகளுக்காக சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினிக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சுவாசத்தை சீராக்க தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். (மேலும்....)

வைகாசி 23, 2011

ஒபாமா இன் திமிர் பேச்சு

தேவைப்பட்டால் பாகிஸ்தானில்  மீண்டும் தாக்குதல் நடத்துவோம்
 

அந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டி வரும் -பாகிஸ்தான்

 

பாகிஸ்தானில் பயங்கரவாதத் தலைவர்கள் இருப்பது தெரியவந்தால் பின்லேடனை தாக்குதல் நடத்திக் கொன்றது போல் மற்றொரு தாக்குதல் நடத்த அனுமதி அளிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். பிரிட்டனுக்கு புறப்படுவதற்கு முன்பு பி.பி.சி.க்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அல் கொய்தா உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரோ அல்லது தலிபான் தலைவர் முல்லா ஒமரோ பாகிஸ்தானிலோ அல்லது வேறொரு நாட்டிலோஇருப்பது தெரியவந்தால் என்னனசெய்வீர்கள் என அவரிடம் கேட்ட போது, தேவைப்பட்டால் அமெரிக்கா தன்னிச்சையாகவே நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.(மேலும்....)

வைகாசி 23, 2011

ராஜீவ் காந்தி நினைவு நாள்

ஸ்ரீபெரும்புதூரில் தலைவர்கள் அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 20 வது நினைவு நாளை முன்னிட்டு சனிக்கிழமை பல தலைவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினை விடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராஜீவ் காந்தி 1991ம் ஆண்டு மே 21ம் திகதி, ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிர சாரத்துக்கு வந்த போது புலிகளின் மனித வெடிகுண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரது 20வது நினைவு தினம் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி நூற்றுக்கணக்கான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் அவரது நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

வைகாசி 23, 2011

நேட்டோ எண்ணெய் லொறிகள் குண்டு வைத்து தகர்ப்பு

நேட்டோ எண்ணெய் லொறிகளை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்ததில் 16 பேர் இறந்தனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் இருந்து ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள லேனடி கோட்டல் நகருக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லொறிகள் அணிவகுத்து சென்றன. இந்த லொறிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைகளுக்கு எண்ணெய்யை எடுத்து சென்றன. சனிக்கிழமை காலை தெர்காம் என்ற இடத்தில் சென்றபோது தீவிரவாதிகள் சாலையில் வைத்திருந்த குண்டு வெடித்து சிதறியதில் எண்ணெய் லொறிகள் தீப்பிடித்து எரிந்தன. 10 லொறிகள் எரிந்து நாசமாயின. இதில் 16 பேர் உடல் கருகி இறந்தனர். பலர் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

வைகாசி 22, 2011

இலங்கை வெளிநாட்டமைச்சரின்

சீனவிஜயத்தின் நோக்கம் இந்திய நிலைப்பாட்டை தளர்த்துவதே

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக இந்தியா தொடர்ந்தும் இலங்கை எதிர்பார்க்கின்ற நிலைப்பாட்டுக்கு ஒத்துவராமல் இருப்பது இலங்கைக்கு மனக் கசப்பை உண்டு பண்ணியுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.  அதேவேளையில், இந்திய அரசாங்கம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை; அது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு ஏற்படுத்தியுள்ள அழுத்தங்கள், நெருக்குவாரங்களை வைத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம், "பிளக்மெயில்' பண்ணுவதாக இலங்கைத் தரப்பு மிக ஆழமாக உணர்வதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். இதன் விளைவாகவே இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சீனாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். (மேலும்...)

வைகாசி 22, 2011

தொடரும் ஆபிரிக்கா மீதான ஆக்கிரமிப்பும் பலியாகிப் போன லிபியாவும்

(நல்லையா தயாபரன் )

'மறைமுகமாக எங்களுடைய செலவில் கொல்லப்படும் ஒவ்வொரு லிபியனின் உயிருக்கும் பதில் சொல்ல வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது.'

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்ட அட்டூழியமான குற்றங்களில் மிகவும் மோசமான ஒன்றாக 2003 ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பு இருந்தது.  ஓர் ஆக்கிரமிப்பு யுத்தம் தொடங்குவதும், திட்டமிடுவதும் யுத்தக்குற்றங்களிலேயே முதன்மையானதும், முக்கியமானதுமாகும் என்றும், அத்தகைய நடவடிக்கைகளில் இருந்துதான் மனிதயினத்திற்கு எதிரான ஏனைய குற்றங்கள் இரக்கமின்றி உருவாகின்றன என்றும் நூரெம்பேர்க் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் குறிப்பிட்டது.  அதன்படி, ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரதம மந்திரி டேவிட் கேமரோன், ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆகியோர் கடாபி செய்துள்ள எவ்வித குற்றங்களையும் விட அதிகமான குற்றங்களைச் செய்துள்ள குற்றவாளிகளாக உள்ளனர்.   இலட்சக்கணக்கான ஈராக்கியர்களை பலியெடுத்த பின் தற்போது ஜனநாயகத்தின் பெயரால் ஒபாமா இன்று லிபியாவைக் குறிவைத்துக் கிளம்பியிருக்கிறார்.  (மேலும்...)

வைகாசி 22, 2011

பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாதம் - சீனா

பாகிஸ்தான் மண்ணில் இன்னமும் பயங்கரவாதிகள் வளர்வது தங்களுக்கு கவலையளிப்பதாக சீனாவிற்கு பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானியிடம் சீன அரசுத் தலைமை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வெளிவரும் நியூஸ் டெய்லி எனும் நாளிதழ் இத்தகவலை வெளியிட்டுள்ளது. சீனாவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் கிலானி நேற்று நாடு திரும்பினார். சீன பயணத்தின்போது அவர் அந்நாட்டின் பல தலைவர்களை சந்தித்துப் பேசினார். இந்தியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் பாகிஸ்தான் நல்லுறவை பேண வேண்டும் என்றும் ஆலோசனை கூறியதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது. பாகிஸ்தான் மண்ணில் இன்னமும் பயங்கரவாதம் செழிக்கிறது என்றும், அதற்கு பாகிஸ்தான் அரசு முடிவுகட்ட வேண்டும் என்றும், இந்தியாவுடனும், அமெரிக்காவுடனும் உள்ள உறவில் உருவாகியுள்ள தடைகளை அகற்ற முயற்சிக்க வேண்டும் என்றும் சீனத் தலைமை வலியுறுத்தியுள்ளது.

வைகாசி 22, 2011

குடாநாட்டில் மீண்டும் குடும்பப் பதிவு ஆரம்பம்

யாழ். குடாநாட்டில் குடும்பப் பதிவுகள் மற்றும் குடும்பப் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகளைப் படைத்தரப்பு சத்தமின்றி மீண்டும் ஆரம்பித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக வரணி மற்றும் சங்கானை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேரடியாக இப்பதிவு மற்றும் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.  முன்னதாகப் பெருமெடுப்பில் இராணுவப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தரப்பு அதற்கெதிராக நீதிமன்றம் சென்றிருந்தது. இதையடுத்து பதிவு நடவடிக்கைகளை தாம் கைவிடுவதாக படைத்தரப்பு அப்போது அறிவித்திருந்தது. (மேலும்...)

வைகாசி 22, 2011

Hope you didn't miss someone in the photo

Movie of the YEAR  - Among FRIENDS...

Planning another convenient 911

 

வைகாசி 22, 2011

வெனிசுலாவில் புதுமை

“சோசலிச செல்போன் நிறுவனம்”

சோசலிச நிறுவனங்களில்தான் உழைப்பு மேல் காதலை ஏற்படுத்துவது சாத்தியம். தனியார் நிறுவனங்களால் அதைச் செய்ய முடியாது. இதுதான் இரண்டு நிறுவனங்களுக்குமிடையிலான வேறுபாடாகும். வெனிசுலாவின் இந்த புதுமையான முயற்சிகள் பொலிவியா, ஈக்குவடார் போன்ற நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கும் இதுபோன்ற நிறுவனங்களைத் துவக்க திட்டமிட்டு வருகிறார்கள். வெனிசுலாவிலும் செல்போன் தயாரிப்பைத் தாண்டி வேறு பல துறைகளிலும் சோசலிச நிறுவனங்கள் உருவானால், நாட்டின் நலனையும், மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று ஹியூகோ சாவேஸ் தலைமையிலான அரசு கருதுகிறது. (மேலும்...)

வைகாசி 22, 2011

விடுதலைப்புலி உறுப்பினர்கள் 900 பேரை விடுவிக்க ஏற்பாடு

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 900 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவர்கள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திஸாநாயக்க தெரிவித்தார். புனர்வாழ்வு முகாம்களில் 4 ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தற்போது எஞ்சியுள்ளதாகவும், அவர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த வருட இறுதிக்குள் புனர்வாழ்வளிக்கப்படும் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வைகாசி 22, 2011

கலைஞர் செய்திகள்

ஏன் இவ்வளவு கொண்டாட்டம்?

“கடந்த 20ந் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் மம்தா பானர்ஜி மேற்குவங்க முதல்வராக பதவியேற்றார். ஆளுநரிடம் துள்ளிக்குதித்து ஓடுகிறார். பதவியேற்பு உறுதிமொழியை படிக்கிறார். ஓடிச் சென்று கையெழுத்து போடுகிறார். ஒரு குழந்தையைப் போல் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார். தலைமைச் செயலகத்திற்கு நடந்தே செல்கிறார்.” இந்த நிகழ்ச்சிகள் முழுவதையும், கொல் கத்தாவிற்கு தனது சிறப்பு நிருபரை அனுப்பி விசேஷ ஒளிபரப்பு செய்தது ‘கலைஞர் செய் திகள்’ தொலைக்காட்சி. போகட்டும் அது அவர்கள் உரிமை. ஆனால் போகிற போக் கில் சிறப்பு செய்தியாளர் உதிர்த்த முத்துக் கள் ஜனநாயக சக்திகளையும் நடுநிலையா ளர்களையும் முகம் சுளிக்க வைத்தது. (மேலும்...)

வைகாசி 22, 2011

மட்டக்களப்பில் படையினர் தேடுதல் நடவடிக்கை

மட்டக்களப்பின் நகர் பகுதியின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று சனிக்கிழமை காலை முதல் படையினரும் பொலிஸாரும் இணைந்து கூட்டாக தேடுதல் நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை முதல் நகரையும் நகரைச் சூழவுள்ள பகுதிகளிலும் படையினர் வீடுவீடாகச்சென்று தேடுதலில் ஈடுபட்டதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அலுவலகம் உள்ள சுற்றுவட்டப்பகுதிகளிலும் தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் அலுவலகத்துக்குள் தேடுதல் நடத்தப்பட்டதான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இந்தச் சோதனை நடவடிக்கையின்போது மக்களின் கடமைகளுக்கு எதுவித பங்கமும் ஏற்படாமல் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாகப் படையினர் தெரிவித்தனர். அத்துடன் மட்டக்களப்பு நகரில் குற்றச்செயல்கள் இடம்பெறாமல் தடுப்பதற்காகவே இவ்வாறான தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் படையினர் தெரிவித்தனர்.

வைகாசி 21, 2011

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும்

தமிழகத்தின் ஆட்சி மாற்றம் எதிர்காலத்தில் இலங்கைக்கு சவாலாகவே அமையும். இலங்கை தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தலையீடுகளை மேற்கொள்ள தவறியமையினாலேயே சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி தோல்வியடைந்தார். அதே பிரச்சினையை தீவிரமாகக் கொண்டு பிரசாரம் செய்தமையால் பெரும்பான்மை ஆதரவுடன் ஜெயலலிதா ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார் என்று ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. அரசாங்கம் போலி இனப்பற்றையும் உணர்வுபூர்வ செய ற்பாட்டையும் தவிர்த்து இராஜதந்திர முறையில் செயற்பட்டு புதிய தமிழக ஆட்சியின் ஆதரவை வெற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எதிர்வரும் நாட்களில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்றும் அக்கட்சி எச்சரித்துள்ளது. (மேலும்....)

வைகாசி 21, 2011

விடுதலைப்புலிகளை தடை செய்யுமாறு நோர்வே எதிர்கட்சியினர் கோரிகை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது நோர்வேயில் கட்டாயம் தடை கொண்டு வரப்பட வேண்டும் என்று அந்நாட்டு எதிர்க் கட்சியான கொன்சர்வேர்ட்டிவ் கட்சி வலியுறுத்தி உள்ளது. இலங்கையில் யுத்தத்தில் ஈடுபட்ட பிரதான தரப்பைச் சேர்ந்தவர்களில் புலிகளுடம் அடங்குகின்றனர். இலங்கை அரசு, புலிகள் ஆகியோரின் செயல்பாடுகள் ஐ.நா நிபுணர்கள் குழு அறிக்கையில் வன்மையாக கண்டிக்கப்பட்டு உள்ளன. நோர்வேயில் புலிகள் சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்து உள்ளன. (மேலும்....)

வைகாசி 21, 2011

சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு

இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி

போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக உள்ளக நடவடிக்கைகளை மேற்கொள்வதே ஒரே வழி என்று இலங்கைக்கு இந்தியா ஆலோசனை கூறியுள்ளது. புதுடெல்லி அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி "இந்து'' நாளேடு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று புதுடில்லியில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர உயர் மட்டங்களுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஜி.எல்.பீரிஸ் நடத்திய பேச்சுக்களின் போதே இந்தியாவின் இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 21, 2011

இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்கள் அரசாங்க நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக உள்ளன

இலங்கை விவகாரம் தொடர்பில் இந்தியா வலியுறுத்தியுள்ள விடயங்களானது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் அடங்கிய நிகழ்ச்சி நிரலில் முதன்மையாக அமைந்துள்ள அம்சங்களாகும். முக்கியமாக அரசியல் தீர்வுகாணும் செயற்பாட்டில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்தும் பேச்சுக்களில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவசரகால சட்டத்தை நீக்குவதுடன் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் விசாரணை செய்யவேண்டும் என்று இந்தியா வலியுறுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் டலஸ் அழகப்பெரும மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (மேலும்....)

வைகாசி 21, 2011

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லை - ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கம் இல்லலை என இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி பேர்னாட் சவாஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைகளுக்கு அமைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்திய போதிலும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும் இலங்கையுடன் நீண்ட காலமாக மனிதாபிமான மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணி வருவதாகவும் தொடர்ந்தும் உறவுகளைப் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

வைகாசி 21, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில்

ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுப்பு   கனிமொழி கைது திகார் சிறையில் அடைக்கப்பட்டார்  

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக எம்.பி., கனி மொழிக்கு ஜாமீன் வழங்க வெள்ளியன்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், அவரை உடனடியாக கைது செய்யவும் நீதிமன்றம் உத் தரவிட்டது. அதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். கலைஞர் டிவியின் நிர்வாகியான சரத் குமாரும் கைது செய்யப் பட்டார். மதியம் 2.30 மணியள வில் பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் கனிமொழிக்கு கைது உத்த ரவு பிறப்பிக்கப்பட்டவு டன், அங்கிருந்து 3.30 மணி யளவில் திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட் டார். பெண் என்பதால் தனி வேனிலும், சரத் குமார் ஒரு வேனிலும் அழைத்துச் செல்லப்பட்டனர். சிறை யில் கனிமொழிக்கு பெண் களுக்கான தனி அறை ஒதுக்க அறிவுறுத்தப்பட் டது. கனிமொழிக்கு வீட் டில் இருந்து மருந்து பொருட்கள் உள்ளிட்ட வற்றை வழங்கவும் அனு மதிக்கப்பட்டுள்ளது. கனி மொழி திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பாக, தன் மகன் ஆதித்யா மற்றும் கணவர் அரவிந்தனுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந் தார். (மேலும்....)

வைகாசி 21, 2011

Dr.K.D. Selvarasagopal commemorative event - Saturday, May 28th

On behalf of  Ealathupooradanar Dr.K.D. Selvarasagopal commemorative event group, I am kindly inviting you, your family and friends for this event. The event will be held on Saturday, May 28th at Scarborough Village Community centre at 5:30 PM. (# 3600 Kingston Rd - Markham & Kingston)

Please convey this message to your friends so they can also attend the above event.

Thank you

On behalf of the Group

Ajantha Gnanamuttu

905 460 1667

வைகாசி 21, 2011

தேர்தல் முடிவுகள்

சவால் மிகுந்த, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்துவோம்!

(பிரகாஷ் காரத்)

மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் இடது முன்னணிக் குப் பெரும் தோல்வியைத் தந்துள்ளது. இது மேற்கு வங்கத்தை இடதுசாரி களின் கோட்டை எனக் கருதிய நாட்டில் உள்ள இடது, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்குப் பெருமளவில் ஏமாற்றத் தைத் தந்துள்ளது. 1977ல் இருந்து ஏழு முறை அனைத்துத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று, 34 ஆண்டு காலம் குறிப்பிடத்தக்க வரலாறு படைத்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடது முன் னணி அரசாங்கம் பதவி விலகியுள்ளது. தேர்தல் முடிவில் சில பொதுவான அம் சங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மக்கள் மாற்றத்திற்காகத் தீர்மானகரமான முறையில் தங்கள் விருப்பத்தைத் தெரி வித்திருக்கிறார்கள். அதற்காக, திரிணா முல் காங்கிரஸ் கூட் டணிக்குப் பெரிய அளவில் வெற்றியைக் கொடுத்திருக் கிறார்கள். இதற்காக இடதுசாரிகளுக்கு எதிரான அனைத்து சக்திகளும் - வலது சாரிகளிலிருந்து இடது அதிதீவிர மாவோ யிஸ்ட்டுகள் வரை - ஒன்று சேர்ந்திருக் கிறார்கள். மேலும் இடது முன்னணி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இழந்த தளத்தை எதிர்பார்த்த அளவிற்கு மீட்க முடியவில்லை என்பதும் தெளிவாகிறது. (மேலும்....)

வைகாசி 21, 2011

காணாமல் போகின்றனவா “நீர்க்கோபுரங்கள்”?

கோடைக்காலமாகி விட்டால் இமயமலையின் பனிப்பகுதிகளில் 75 விழுக்காடு உருகிவிடுகின்றன என்று ஆய்வின் மூலம் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக 3.75 கி.மீ. பரப்பளவிலான பனிப்பகுதிகள் காணாமல் போயுள்ளன என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது. (சிந்து, கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் ஓடும்பகுதிகளிலும், சீனா, நேபாளம், பூடான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பல பகுதிகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. முதன்முறையாக இவ்வளவு விரிவான ஆய்வு நடத்தப்பட்டுள்ளதால், சர்வதேச விஞ்ஞான சமூகம் ஆய்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கிறது. இதற்கு முன்பாக, ஆல்ப்ஸ் மலைத்தொடரில்தான் இத்தகைய ஆய்வு நடந்தது என்கிறார் ஆய்வாளர் அஜய். இது இஸ்ரோவின் படங்களைக் கொண்டு வெளியான இரண்டாவது ஆய்வறிக்கையாகும். மேலும்....)

வைகாசி 21, 2011

பின்லேடன் தியாகி அல்ல - ஒபாமா

பயங்கரப் படுகொலை களை செய்த அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லே டன் தியாகி அல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறினார். அல்கொய்தா தீவிரவா தத் தலைவர் ஒசாமா பின் லேடன் இந்த மே மாதம் 2ம்தேதி பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் அமெரிக்க கமாண்டோக் களால் கொல்லப்பட்டார். பின்லேடன் கொலையைத் தொடர்ந்து பாகிஸ்தானில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. (மேலும்....)

வைகாசி 21, 2011

Geethani's Story

Worker No. 689 tells her story

My name is Geethani Peries from Sri Lanka and I am 28 years old. I come from a Catholic family from a fishing village called “Negombo”. I’m the oldest in the family with 2 younger sisters. My father works as a tinker (repairing vehicles) in the informal sector. My mother is a housewife. My father suffered from health problems when I was 8 years old, which caused my mother a real shock and some psychological problems. We had to struggle a lot to face the situation. I managed to pass my Advanced Level exam and planned to find work to support my family. In Sri Lanka, it is very easy for girls to find a job in the garment sector because there is no need for qualifications. But most girls do not want to work there because society sees those factory workers as unqualified girls who are not good to marry. Those who work in the factory are not willing to say where they are working. Despite my studies, I was unable to find a job, and my family and financial situation forced me to work in the garment factory. (more...)

வைகாசி 21, 2011

ஒபாமா கருத்தை ஏற்க முடியாது  - இஸ்ரேல்

1967 ஆம் ஆண்டுக்கு முன்பாக இருந்த எல்லை களின் அடிப்படையில் இஸ் ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் கருத்தை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் துவங்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன்பு குறிப் பிட்டிருந்த பாரக் ஒபாமா, அந்தப் பேச்சுவார்த்தை 1967 ஆம் ஆண்டுக்கு முன்பாக இருந்த எல்லைகளின் அடிப் படையில் இருக்க வேண் டும் என்று கருத்து தெரிவித் திருந்தார். அந்தக்கருத்திற்கு உடனடியாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன் யாஹு மறுப்பு தெரிவித் துள்ளார். (மேலும்....)

வைகாசி 21, 2011

கோரியாவுக்கு அமோக வெற்றி  பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளியானது

ஈக்குவடார் நாட்டின் அரசியல் சட்டத்தில் பத்து திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான பொது வாக்கெடுப்பில் தற்போதைய ஜனா திபதி ரபேல் கோரியாவுக்கு அமோக வெற்றி கிடைத்திருக்கிறது. முதலாளித்துவ ஆட்சியா ளர்கள் மக்களிடம் கருத்தைக் கேட்காமல் தங்கள் இஷ்டத்திற்கு, விரோதமான கொள்கைகளை அறிமுகப்படுத்தி வந்த லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாவேஸ் வெனிசுலாவில் ஆட்சிக்கு வந்த பிறகு, ஒவ்வொரு முக்கியமான முடிவிலும் மக்களின் கருத்தைக் கேட்கும் வகையில் பொது வாக் கெடுப்பு நடத்தினார். பத்து வாக் கெடுப்புகளில் ஒன்பது முறை அவ ருக்கே மக்கள் ஆதரவு தந்தனர். (மேலும்....)

 

 

வைகாசி 21, 2011

எதிர்க்கட்சித் தலைவர் ரணிலுக்கு தமிழக முதல்வர் ஜெயா அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தமிழ் நாட்டுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் ஜெயலலிதா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் நாடு மாநிலத் தேர்தலில் அமோக வெற்றியீட்டி முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்திக்கு தொலைபேசி ஊடாக நன்றி தெரிவித்த போதே பிரஸ்தாப அழைப்பையும் ஜெயலலிதா விடுத்துள்ளார். கடந்த 17ம் திகதி இரவு இருவருக்குமிடையிலான தொலைபேசி உரையாடல் நடை பெற்றுள்ளது.

வைகாசி 20, 2011

தமிழகத்தில் பரபரப்பு

கனிமொழி, சரத்குமார் ரெட்டி கைது

கருணாநிதியின் மனைவி தயாளு அம்மா கைதாவாரா...?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வரின் மகள் கனிமொழி நீதிமன்ற உத்தரவின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது சென்னை அலுவலக செய்தியாளர் சற்றுமுன் உறுதிப்படுத்தினார். மேலும் கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியும் பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்து தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தாமதப்படுத்தப்பட்ட கைது தற்போது நிறைவேறி இருக்கின்றது. திமுக உடனான காங்கிரஸின் உறவு நிலைகளை இது எடுத்தக்காட்டுவதாக அமைவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.கனிமொழி புலிகளின் தீவிர ஆதரவாளர் என்பவும் குறிப்பிடத் தக்கது. இவர் பாதிரியார் கஸ்பருடன் இணைந்தே புலிகளின் தொடர்புகளைப் பேணி வந்தார். இதேவேளை இக் கைது திமுக இற்கு போராட்டம் என்று பறப்பட்டு தமது இருப்பை தமிழகத்தில் காட்டுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக அறிற முடிகின்றது.

வைகாசி 20, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம் (பகுதி 10)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

அந்த நாடுகள் கைவிரித்துவிட்டனர் எனவும்.இம்முறை போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா விரும்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகளை [புலிகள் தலைமைப்பீடத்தை] செய்யச்சொல்லியும் கூறப்பட்டது. இந்த செய்தியால் நம் தலைமை ஆடிப்போனது ஏன் இப்படி நடந்தது? எதனால் இப்படி சொல்லப்பட்டது ? என்ற கேள்விகளுடன்.உங்கள் இராஜதந்திர நகர்வுகளை நம்பித்தானே நாம் எமது படைகளை பின்வாங்கி சென்றோம் என கூறி புலம்பெயர் தலைமைகளுடன் சீறிப்பாய்ந்தனர் நமது தலைவர்கள். எனவே இந்த கட்டத்தில் நம் ஒட்டு மொத்தமாக நம்பியவர்கள் எல்லோரும் சூழ்ச்சி செய்து கவிழ்த்து விட்டனர் நம் தலைமை பீடத்தை. (மேலும்...)

வைகாசி 20, 2011

நோர்வேயில் நெடியவன் கைது

நோர்வேயில் புதிய தலைவராக செயற்பட்டு வந்த நெடியவன் கைது செய்யபட்டு பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் நீதிமன்றில் நிறுத்தபட்டுள்ளார். கொலன் நாட்டில் இருந்து வந்த சர்வதேச பொலிசாரால் நெடியவனின் வீடு சுற்றி வளைக்கபட்டு தேடுதலுக்கு உள்ளாக்கபட்டு நெடியவன் கைது செய்பட்டதுடன் அவர் உடனடியாக நோர்வே தலைநகரம் ஒஸ்லோவுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டுவரபட்டு நீதிமன்றில் நிறுத்தபட்டார். நெடியவன் கைது செய்யப்பட்டு கடந்த இரண்டு தினங்களாக ஜரோப்பிய பயங்கரவாத சட்டபடியான வழக்கை எதிர் நோக்கி வருகின்றார். இது தொடர்பாக இன்று நோர்வே தொலைக்காட்சியான ரிவி2 செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 20, 2011

ஐ நா விலிருந்து ஆபிரிக்க நாடுகள் அவசரம் வெளியேறுவது அவசியம் !

(நல்லையா தயாபரன் )

ஆபிரிக்க மக்களின் ஐக்கியத்தை குலைக்க, வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல. வட ஆபிரிக்க அரபிய மக்களுக்கும் ஏனைய ஆபிரிக்க நாட்டு கறுப்பு மக்களுக்கும் அதிகளவில் வித்தியாசங்கள் உண்டு. வட ஆபிரிக்கா ஆபிரிக்காவின் ஏனைய நாடுகளைவிடப் பரிணாம வளர்ச்சி, பண்பாட்டு வளர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சி கண்ட இடமாகும் போன்ற பல இனவாத கருத்துக்களை கடந்த இருநூறு வருடங்களுக்கு மேலாக ஐரோப்பியர் பரப்பி வருகின்றனர்.  அத்துடன் டுனீசியா, எகிப்து, லிபியா மற்றும் அல்ஜீரியா ஆபிரிக்காவின் ஒரு பகுதியல்ல என்பது போலப் பாசாங்கு செய்கின்றனர். ஒற்றுமையே பலம் என்பதை ஆபிரிக்க நாடுகள் உணர்ந்து கொண்டு செயற்படவேண்டிய கால கட்டம் வந்து விட்டது. தவறினால் மேற்குலக நாடுகளின் கைப்பொம்மைகளினால் ஆபிரிக்க கண்டம் தொடர்ந்தும் சூறையாடப்படுவது தடுக்க முடியாததாகிவிடும். (மேலும்....)

வைகாசி 20, 2011

கனடாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரின் திருமலை வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

கனடாவில் இருக்கும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரின் திருகோணமலை நிலாவெளிப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. நிலாவெளி பிரதேசத்தின் பதினெட்டாம் பிரிவில் இருக்கும் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காணப்பட்ட ஒரு தொகை ஆயுதங்களை திருகோணமலை தலைமையக விசேட பொலிஸ் பிரிவு  மற்றும் கந்தளாய்ப் பொலிசார் ஆகியோர் இணைந்து மீட்டுள்ளனர். பிரஸ்தாப வீடு தற்போதைக்கு கனடாவில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் முத்து என்பவரது வீடு என்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டைவிட்டுத் தப்பியோட முன் அவர் தன் வசம் இருந்த ஆயுதங்களைப் புதைத்துச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அங்கிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தகவல் பரிமாற்றக் கருவிகள், கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிகளைச் சுத்தம் செய்யும் உபகரணங்கள் என்பனவும் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவி்க்கின்றனர்.

வைகாசி 20, 2011

ஏ 9 வீதியை காப்பட் மாற்றும் பணிகள் துரிதம்

யாழ்ப்பாணம் முதல் வவுனியா வரையிலான 200 கிலோமீற்றர் நீளமான ஏ 9 பாதையை காப்பற் வீதியாக மாற்றுவதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. மூன்று பிரிவுகளாக நடைபெற்று வரும் வேலைகள் இரண்டு மாதத் தில் பூர்த்தியடையுமென வீதி அபி விருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பாதைகளில் சேதமடைந்த பாலங்கள், புனரமைக்கப்பட்டு வருவதால் இவ்வேலைகள் முடியும் வரை வீதி அபிவிருத்திப் பணிகள் தாமதமடைந்துள்ளன. பாலங்கள், மதகுகள் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியானதும் ஒரு மாதத்தில் காப்பற் வீதியாக மாற்றும் பணி விரைவாக நடைபெறும் என தெரி வித்துள்ளனர்.

வைகாசி 20, 2011

 

தீவிர சிகிச்சை பிரிவில் ரஜினிகாந்த்

சுவாசத்தை மேம்படுத்துவதற்காக நடிகர் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் குழு தெரிவித்துள்ளது. சுவாச கோளாறு மற்றும் குடல்நோய் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். (மேலும்....)

வைகாசி 20, 2011

ஸ்பெயின்  மக்கள் கிளர்ச்சி தொடர்கிறது

அரசின் கொள்கைக ளுக்கு எதிராகப் போராட் டக்களத்தில் இறங்கிய ஸ்பெயின் மக்கள் தங்கள் போராட்டத்தை ஐந்தாவது நாளாகத் தொடர்ந்தனர். தலைநகர் மாட்ரிட் உள் ளிட்ட 50 நகரங்களில் பெருந் திரள் பேரணிகள், ஆர்ப் பாட்டங்கள் போன்றவை நடைபெற்று வருகின்றன. மே 15 ஆம் தேதி துவங்கிய இந்த எழுச்சிமிகு போராட் டம் ஒவ்வொரு நாளும் அதிகமான மக்கள் பங் கேற்போடு தொடர்கிறது. போராட்டக்களத்தில் வந் துள்ள மக்கள் முகாமடித்து போராட்டங்களைத் தொடர்ந்துள்ளனர். (மேலும்....)

வைகாசி 20, 2011

அண்டவெளியில் மனிதர்கள் வாழக்கூடிய இன்னுமொரு கோள்

அண்ட வெளியில் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய இன்னுமொரு செந்நிற விண்கோள் கண்டுபிடிப்பு அண்ட வெளியில் கோள் மண்டலத்திலிருந்து 20 ஒளி வருடங்களுக்கு அப்பால் இருக்கும் ஒரு விண்கோளில் மக்கள் வாழக்கூடியதாக உயிர்வாய்வும், நீர்வளமும் இருப்பதை விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். இந்த விண்கோளில் உலகில் இருப்பது போன்று உயிரினங்கள் நிலைத்திருப்பதற்கான சுற்றாடல் இருக்கிறதென்று கலிலி 581 னீ என்ற அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிலையம் அனுப்பி வைத்த செய்மதியில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. (மேலும்....)

வைகாசி 20, 2011

ரி. எம். வி. பி உறுப்பினர்கள் நேற்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிழக்கில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்த பூரண அறிக்கையொன்றை தயாரித்து ஒரு வாரத்தினுள் தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கியதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பேச்சாளர் அஸாத் மெளலானா தெரிவித் தார். முதலமைச்சர் சந்திரகாந்த னின் அலுவலகம், வாசஸ்த லம் என்பன திடீர் சோதனைக் குள்ளாகிய விடயம் மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் கள் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் இப்பேச்சு வார்த்தையின் போது ஆராயப்பட்டதாகவும் அஸாத் மெளலானா தெரிவித்தார்.

வைகாசி 20, 2011

தமிழக தலைவர்களுடன் சோனியா தீவிர ஆலோசனை

தமிழக சட்ட சபை தேர்தலில், காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து, ஒவ்வொருவராக சோனியா அழைத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அதன்படி சோனியாவை தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உறுப்பினர் கார்வேந்தன் சந்தித்து பேசினார். தமிழக சட்ட சபை தேர்தலில், காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. தலைமை தாங்கிய தங்கபாலுவில் தொடங்கி ராகுலின் நேரடி தேர்வாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் வரை படுதோல்வி அடைந்தது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை அளித்தது. இந்நிலையில் சட்ட சபை தேர்தல் தோல்வி குறித்தும், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகள் குறித்தும், தமிழகத்தை சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்களை அழைத்து சோனியா ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. இதன்படி சோனியாவை கடந்த செவ்வாய்க்கிழமை மத்திய அமைச்சர் வாசன் சந்தித்து பேசினார்.

வைகாசி 19, 2011

தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கான பணிகளை துரிதப்படுத்துக!  இலங்கையிடம் இந்தியா வற்புறுத்தல்

இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் மறுவாழ்வை உத்தரவாதப்படுத் தவும், பாதிக்கப்பட்ட பகுதி களில் இயல்பு வாழ்க்கையை மீண்டும் ஏற்படுத்தவும், பாதிக் கப்பட்ட குடும்பங்களின் துய ரங்களை மனித நேய அடிப் படையில் போக்கவும் துரித மான நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு இலங்கை அரசை இந்தியா செவ்வாயன்று வற்புறுத்தியது. (மேலும்....)

வைகாசி 19, 2011

தூக்கணாங்குருவிக்கூடு.

வீட்டுக்குள்ளேயே தொலைந்துபோகும்

மனிதர்

வெளியில்

எதைத் தேடுகின்றனர்?

 

அமிழ்வது  புரியாமல்

அகழ்வது ஏன்?

 

வானவில்லைத் தூர எறிந்துவிட்டு

மின்னலை வலிந்து ஏந்திக்

கண்கள்

குருடாகின்றன.

 

தேடுவது

இனியேனும்

பார்வையாகட்டும்.

(மேலும்....)

வைகாசி 19, 2011

தோழர் கேதீஸ்வரனைக் கொலை செய்தவர் எற்கனவே இராணுவத்தினால் கொல்லப்பட்டுவிட்டார்

அரசாங்க சமாதான செயலகத்தின் பிரதித் தலைவர் கேதீஸ்வரன் லோகநாதனின் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் மூதூரில் யுத்தத்தின்போது கொல்லப்பட்டதாக கல்கிஸை நீதவான் நீதிமன்றில் பயங்கரவாத புலனாய்வுப் பணியகத்தினால் (ரி.ஐ.டி.) இன்று தெரிவிக்கப்பட்டது. கேதீஸ்வரன் லோகநாதன் 12.08.2006 ஆம் திகதி தெஹிவளையிலுள்ள அவரின் வீட்டில் வைத்து சுடப்பட்டார். எல்.ரி.ரி.ஈ. பிஸ்டல் குழுவைச் சேர்ந்த மோகனதாஸ் திவாகரன்  எனும்மேற்படி சந்தேக நபர் மூதூரில் ஆயுதப் படைகளால் கொல்லப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் கல்கிஸை பிரதான நீதவான் திருமதி நிரோஷா பெர்னாண்டோ முன்னிலையில் சமர்ப்பித்த மனுவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேக நபரை கைதுசெய்வதற்கு மேற்கொண்ட விசாரணையின்போதே இது தெரிய வந்ததாக பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வைகாசி 19, 2011

Rejoice O’ Srilanka, for the Paradise regained on 18 May 2009.

By Lenin Benedict-Toronto

It was this day, May the 18th of 2009 which marked the end of Terrorism and Separatism in Srilanka. This was the historic day that brought Peace to all Srilankans and Democracy to Tamils in the North and East. It was May 18th that made the guns silenced. This May 18th is the day that unified the entire country as ONE Srilanka. This is the day we regained the lost portion of our paradise from the Vanni Regime. It is the day our beloved Motherland, the Paradise of the East crushed and thrashed out the evil forces. So Rejoice O’ Srilanka, It’s your Day. (more....)

வைகாசி 19, 2011

அறிவியல் கதிர்

அணுசக்திக்கு மாற்றாக எரிவாயு

(பேராசிரியர் கே. ராஜு)

ஜப்பான் புகுஷிமா அணு உலையில் அண் மையில் ஏற்பட்ட விபத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அணு உலைகள் விரிவாக்கத்திற்கு ஒரு வேகத்தடையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நாடுகள் அணுசக்தித் துறையில் முன்னேற நினைத்தாலும் மக்களின் நியாயமான கேள்வி களுக்கும் அச்சங்களுக்கும் விடையளித்த பிறகே முன்னோக்கிச் செல்ல முடியும் என்ற நிலையும், மக்களின் உணர்வுகளைப் புறக்கணித்துவிட்டு அணுசக்தித் துறையில் இலக்குகளை நோக்கிச் சென்றுவிட முடியாது என்ற நிலையும் ஏற்பட்டி ருக்கிறது.  (மேலும்....)

வைகாசி 19, 2011

அல் - கொய்தா தலைவராக எகிப்தின் அல் - ஆதல் நியமனம்

அல் கொய்தா அமைப்பின் இடைக்காலத் தலைவராக எகிப்து நாட்டின் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பின்லேடன் கொல்லப்பட்டதையடுத்து புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை எகிப்து முன்னாள் இராணுவ அதிகாரியான சைப் அல்- ஆதல் இடைக்காலத் தலைவராக செயல்பட உள்ளதாக அல் கொய்தா வட்டாரங்களை மேற்கோள்காட்டி சி. என். என். தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. 1981ல் எகிப்து முன்னாள் ஜனாதிபதி அன்வர் சதாத் படுகொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்ற எகிப்து இஸ்லாமிய ஜிகாத் அமைப்பில் அல் ஆதல் உறுப்பினராக இருந்துள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் ஆப்கானிஸ் தானில் சோவியத் படைகளை எதிர்த்துப் போராடியவர் என்றும் கூறப்படுகிறது. அல் கொய்தா அமைப்பில் நீண்டகாலமாக முக்கிய பங்கு வகித்த சைஃப் அல் ஆதல், இடைக்காலத் தலைவராக செயல்படுவார் என பின்லேடனின் முன்னாள் சகாவான நோமன் பெனோட்மன் கூறியதாக சி. என். என். தொலைக்காட்சி செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகாசி 19, 2011

கேரளாவின் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தல் போலி கடவூச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ செல்ல முயற்சித்த இலங்கையர் கைது!

போலி பாஸ்போர்ட்டில், வெளிநாடு செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த நபரை, போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இலங்கையைச் சேர்ந்த ஜீவதாஸ்(34) என்பவர், கேரள மாநிலம் கொச்சி (நெடும்பாசேரி) சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, ஓமன் விமான நிறுவனத்தின் விமானம் மூலம், பாரீசுக்கு செல்ல முயன்றார். விமான நிலைய அதிகாரிகள், அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, அது போலி என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்தனர். அவரிடமிருந்த பாஸ்போர்ட், 2007ல், திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தில், முத்து பீட்டர் என்ற பெயருக்கு வழங்கப்பட்டிருந்தது. 2003ல், ஜீவதாஸ் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவருக்கு புலிகளுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. தற்போது இவர் புலிகளின் முக்கிய உறுப்பினர் என்று இனம் காணப்பட்டுள்ளார்.

வைகாசி 19, 2011

சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்

சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் கிலானி வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவின் பழமையான செழிப்புகளை இன்றைய உலகம் தற்போது தான் சந்திக்கிறது. சீனாவின் தத்துவங்கள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பலன் தரக்கூடியது. சீனா-பாகிஸ்தான் உறவை மேலும் பலப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் கன்பூசியஸ் மையங்கள் தொடங்கப்படும். அதுபோல் சீனப் பல்கலைக்கழகங்களில் பாகிஸ்தான் கல்வி மையங்களும் திறக்கப்படும். 21ம் நூற்றாண்டில் சீனா உலகை வடிவமைப்பதை காண்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் சர்வதேச விவகாரங்களில் சீனா தனது பங்களிப்பை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். அமெரிக்காவின் நெருக்குவாரத்திற்கு உள்ளாகி அவமானப்பட்டுக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் இதிலிருந்த விடுபட சீனாவை மேலும் நெருங்குவதாக அறிய முடிகின்றது.

வைகாசி 19, 2011

ஜனாதிபதிக்கும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவரான பிரதீப் மாஸ்டர் உள்ளிட்ட மூவர் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர். மேலும், பிள்ளையானின் இல்லம் இராணுவத்தினரால் அண்மையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை பெரும் அதிருப்தி அடையச் செய்திருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பேச்சுவார்த்தைகளுக்காக தம்மை அழைத்திருப்பதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார். நாளைதினம் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னரே இந்தப் பிரச்சினை குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவம் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட சில நபர்கள் முகத்தை மூடிக் கொண்டு தேடுதலில் ஈடுபட்டதாக பிள்ளையான் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

வைகாசி 19, 2011

ஓய்வூதியம் தர பணமில்லை!  கைவிரிக்கிறது “குபேரபுரி” அமெரிக்கா

கடன் வரம்பை அதிக ரிக்க அமெரிக்க நாடாளு மன்றம் அனுமதிக்கும் வரை ஓய்வு பெறுவோருக்கான பணம் மற்றும் ஏற்கெனவே ஓய்வு பெற்றுள்ளவர்களுக் கான ஓய்வூதியம் ஆகிய வற்றைத் தருவதற்கான பணம் அரசின் கையில் இல்லை என்று அமெரிக்க அரசு கைவிரித்துள்ளது. 14.3 லட்சம் கோடி டாலர் என்பதுதான் அமெ ரிக்க அரசு அதிகபட்சமாக வைத்துக் கொள்ளக்கூடிய கடனின் அளவாகும். அந்த அளவை தற்போது எட்டி விட்டதால், வரம்பை அதி கரிக்குமாறு நாடாளுமன் றத்திடம் அரசு கோரிக்கை வைத்திருக்கிறது. இதுவரை அதற்கான அனுமதி கிடைக்காததால் ஓய்வூதியம் மற்றும் ஓய்வு பெறுபவர் களுக்கான பலன்கள் ஆகி யவை தருவதை தற்காலிக மாக அமெரிக்க நிர்வாகம் நிறுத்தி வைத்திருக்கிறது. (மேலும்....)

வைகாசி 19, 2011

தாலிபானுடன் அமெரிக்கா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது? வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் அம்பலம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளோடு மோதி வரும் தாலிபான்களு டன் பல சுற்று ரகசியப் பேச்சுவார்த்தைகளை அமெ ரிக்கா நடத்தியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி கூறுகிறது. இரு தரப்பும் ஒரு ஒப்பந் தத்திற்கு வரலாம் என்று சில மாதங்களுக்கு முன்பாக ஒரு முயற்சி துவங்கியிருக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் வெளி யிட்ட இந்தச் செய்திக்கு அமெரிக்க அரசுத்தரப்பில் மறுப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அமெரிக்காவுக்கும், தாலி பானுக்கும் இடையில் எத் தகைய பேச்சுவார்த்தை நடந்தது என்பதை ஆப்கா னிஸ்தான் அரசுக்கு தெரி வித்து விட்டதாக அமெ ரிக்க அரசு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

வைகாசி 18, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 9)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

இது இப்படி இருக்க! ஒருபக்கம் சமாதானத்துக்கும் பாதுகாப்புக்குமான பேச்சு வார்த்தை நடந்தவண்ணம் தான் இருந்தது மறுபக்கம் தற்காப்பு யுத்தம் நடை பெற்றுக்கொண்டு இருந்தது. இந்த நேரத்தில் நமக்குள்ளேயே வன்னியிலிருந்து எம்மை குழிபறித்து நம் தளபதிகள் கோரமாக படுகொலை செய்யப்பட்டதை பார்த்தால் எம்மினத்தின் விடியலுக்காக போராடி மாற்றானுடன் சேர்ந்து எமக்கு குழிபறித்தவர்கள் வரிசையில் இப்போது மீண்டும் சிலர் இணைந்து கொண்டு அந்த கொடிய போரில் நாளும் ஆயிரமாயிரம் பேர் செத்து வீழ்ந்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது எமது போராட்டத்தையும் தலைமையையும் பயங்கரவாதிகள் எனவும் அதை பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாக சிங்களவனுடன் சேர்ந்து திசை திருப்பவும் இந்த கூட்டம் பாப்பா என்னும் ஒரு தளபதியூடாக மறுபடியும் அரங்கேறியது. (மேலும்....)

 

வைகாசி 18, 2011

 

ரஜினி?

 

கிளினிக்கல் ரிப்போர்ட்

'ரஜினிக்கு சாதாரண வைரஸ் காய்ச்சல், வயிற்றில் கோளாறு’ என்று லதா ரஜினிகாந்த் திரும்பத் திரும்பச் சொன்னாலும்... உண்மை அது அல்ல. ''ரஜினிக்கு முதலில் நுரை​யீரல் தொல்லையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதன் பிறகு, ராமச்சந்தி​ராவில் ரஜினியின் உடல் முழுவதையும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தார்கள். வயிற்று வலியால் அவதிப்பட்ட ரஜினியின் கல்லீரல் சோதிக்கப்பட்டது. ஒருவேளை, இது கொடூரமான வியாதிக்கான அறிகுறி​யாக  இருக்குமோ என்ற சந்தேகத்தில் பயாப்ஸி எடுத்து, கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சாம்பிள் அனுப்பி இருக்கிறார்கள். சிறுநீரகத்திலும் கோளாறு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் கை, கால்கள் அடிக்கடி வீங்கிக்கொள்கிறது. இதனால்  அவஸ்தையில் தவிக்கிறார்.  நடக்க முடியாமல், வீல் சேர் மூலம்தான் செல்கிறார். (மேலும்...)

 

 

வைகாசி 18, 2011

இந்தியாவிடம் இலங்கை உறுதி

13 வது திருத்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும்

இலங்கையின் அரசியலமைப் பின் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பரவலாக்கலை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவ தற்கான சாதகமான சூழலை உருவாக்க முடியுமென இலங்கை இந்தியாவிற்கு தெரிவித்துள்ளது. இதேவேளை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்து, இந்தியாவிற்கு நிரந்தர அங்கத்துவத்தைப் பெற்றுக் கொடுக்க இலங்கை பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும், இலங்கை இந்தியாவிற்கு உறுதியளித்துள்ளது. (மேலும்....)

வைகாசி 18, 2011

யாழ்ப்பாணத்தில் நாளை 7 அரச கட்டடங்கள் திறப்பு

குவைட் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழப்பாணத்தில் சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள ஏழு அரச கட்டிடங்களை அமைச்சர் ஜோன் செனவிரத்ன நாளை திறந்து வைக்கவுள்ளார். நாளை 19 ஆம் திகதி யாழ்ப்பாணத் திற்கான மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொள்ளும் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, 20 ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம சேவர்களுக்கான விசேட மாநாடொன்றையும் நடத்தவுள்ளார். புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அரச கட்டிடங்களில் உடுவில் பிரதேச செயலகம், பருத்தித்துறை பிரதேச செயலக விடுதி, யாழ்ப்பாணம் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் விடுமுறை விடுதியும் உள்ளடங்குவதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

வைகாசி 18, 2011

Israel’s border massacre and human rights hypocrisy

The Obama administration’s reaction to Israel’s massacre Sunday of unarmed Palestinian protesters on its borders underscores the hypocrisy of those ascribing “humanitarian” motives to Washington’s predatory policy in the region. Israeli troops opened fire with live ammunition and, in one case, tank fire on Palestinians who demonstrated on Israel’s borders with Syria, Lebanon, the West Bank and Gaza. Tens of thousands joined in the protests, which were called to commemorate the 63rd anniversary of the Nakba (Arabic for catastrophe), the term used by the Palestinians for Israel’s declaration of independence and the wholesale ethnic cleansing that drove three-quarters of a million Palestinians from their homes in 1948. (more....)

வைகாசி 18, 2011

கானல் நீராகும் கனவுகள்

அ.அன்வர்உசேன்

“மார்க்சிஸ்ட் கட்சிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது.”

“இடதுசாரி அணி இனி தலைதூக்க முடியாது”

“மேற்கு வங்கத் தோல்வியால் மூன்றாவது அணி இனி கானல் நீர்தான்”.

மேற்குவங்கத்தில் இடதுசாரி அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை. எனினும் சில ஊடகங்கள் தமது ஆசைகளை வெளியிடு வது போல மார்க்சிஸ்ட் கட்சியோ அல்லது இடதுசாரி அணியோ தலை தூக்க முடியாத அளவிற்கு தோல்வி அடைந்துள்ளதா? மிகப் பெரும்பாலான மக்கள் இடதுசாரி அணியிட மிருந்து விலகிவிட்டனரா? இக்கேள்விகளுக்கு, இல்லை என்பதே பதிலாகும்.
(மேலும்...)

வைகாசி 18, 2011

 

எங்கள் நாட்டில் விருந்தோம்பல் பண்பு தழைத்தோங்கியுள்ளது

இந்த விருந்தோம்பல் பண்பு இன்று இலங்கையிலும், வேரூன்றி யுள்ளது. ஒரு தமிழர் அல்லது ஒரு முஸ்லிம் அல்லது ஒரு சிங்கள சகோதரரின் வீட்டுக்கு வருபவர் எந்த இனத்தைச் சார்ந்த வராக இருந்தாலும் கொஞ்சம் சாப்பிடுங்கள், என்று அவர்கள் வருந்தி அழைத்து அன்புத் தொல்லை கொடுப்பதை நாங்கள் எங்கள் நாளாந்த வாழ்க்கையில் பார்க்கின்றோம். இவை அனைத்துமே பண்டைய விருந்தோம்பல் மரபு வழியில் தோன்றிய நற்பழக்கங்களாகும். பொதுவாக நம் நாட்டவர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் சளைத்தவர்கள் அல்ல. அவ்விதம் உதவி செய்யும் போது, அவரது இனம், மதம், குலம் மற்றும் பிரதேச வேறுபாடுகளை அவர்கள் பொருட்படுத்து வதில்லை. வாகன விபத்தொன்றில் காயமடைந்தவர்களை, தங்கள் சொந்த இரத்த உறவுகளைப் போன்று நம் நாட்டு மக்கள் கஷ்டப்பட்டு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று அவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நற்பண்பை உடையவர்கள். மேற்கத்திய நாடுகளில் இவ்விதம் ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக் கின்றது. அவர்கள் ஒரு விபத்தில் காயமடைந்தவர் உயிரோடு போரா டிக் கொண்டிருப்பதை கண்டாலும், அவர்கள் அம்புலன்ஸுக்கு அறிவிப்பார்களே ஒழிய, தங்கள் கைகளால் காயமடைந்தவர்களை தனது வாகனத்தில் ஏற்றி, ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்வதில்லை. (மேலும்....)

வைகாசி 18, 2011

பிலிப்பைன்ஸ் செல்லும் இலங்கையருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் விசா

பிலிப்பைன்சுக்கு செல்லும் இலங்கையர் களுக்கு விமான நிலையத்திலேயே நுழைவு விசா (On Arrival Visa)  வழங்க பிலிப்பைன்ஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிலிப்பைன்சுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டி ருந்த பிரதமர் டி. எம். ஜயரட்னவிற்கும் அந்நாட்டின் ஜனாதிபதி பெனிங்னோ அகினோவிற்குமி டையில் இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே இதற்கான இணக்கப்பாடு காணப்பட்டு ள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற மேற்படி பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள், இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான நேரடி விமான சேவையை மீள ஆரம்பிப்பது, ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தல், பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னணி முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளில் ஈடுபடுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

வைகாசி 18, 2011

வன்னியில் வாழும் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

வன்னிப் பிரதேசத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைமைகளின் ஒத்துழைப்புடன் வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது காலத்தின் அவசியமாகும் என மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நேற்று முன்தினம் திங்கள் மாலை வவுனியா முத்தையா மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் கலந்துரையாடலில் பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறினார். நாங்கள் எந்த இலாபமும் தேடி இங்கு வரவில்லை. மக்களுக்கு உதவி செய்யும் நோக்குட னேயே வந்துள்ளோம். இந்த பிரசேத்தின் அரசியல் தலைமைத் துவத்தினை நாங்கள் பகைத்துக்கொள்ளப் போவதில்லை. இணைந்துசெல்லவே விரும்புகின்றோம். (மேலும்....)

வைகாசி 18, 2011

கடன் உச்சநிலை எட்டியதால்  அமெரிக்கா அவசர நிலை நடவடிக்கை

கடன் உச்சநிலையான 14.29 லட்சம் கோடி டாலர் அளவை எட்டியதைத் தொடர்ந்து குறைபாட்டு நிலையை தவிர்க்க அமெரிக்கா அவசர நிலை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை அமைச்சர் திமோதி கெய்த்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடன் உச்சநிலை உயர்த்தப்படா விட்டால் திடீர் பொருளாதார மாற்ற விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து உள்ளார். அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோபிடேன் நாடாளுமன்ற தலைவர்களுடன் கடன் உச்சநிலையை உயர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். (மேலும்...)

வைகாசி 18, 2011

 

சவூதி இராஜதந்திரியின் கொலைக்கு தலிபான் பொறுப்பேற்பு

பாகிஸ்தானுக்கான சவூதி அரேபிய தூதுவ அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. சவூதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் தனது காரில் நேற்று முன்தினம் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அலுவலகத்திற்குள் நுழைய இன்னும் 200 அடிகளே இருந்த நிலையில், மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர், அவரது காரை நோக்கிச் சுட்டனர். அதில் ஒரு குண்டு அதிகாரியின் தலையில் பாய்ந்ததில் அவர் கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எனினும் வரவேற்கிறோம்” என்று முதலில் அறிக்கை விட்ட தலிபான்கள், பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  இது குறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘பாக் மற்றும் சவூதி இரண்டும் அமெரிக்காவின் அடிமைகள் இத்தாக்குதல் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளனர்.

வைகாசி 18, 2011

MP Rathika Sitsabaiesan: UN (Darusman) Report on Sri Lanka

Tamil Tiger war-chest to buy sophisticated weapons and explosive materials to make bombs to support their blood thirsty Tamil Tiger terrorists to extend their killing fields from the north to the south, and from the east to the west of Sri Lanka. I am surprised and disappointed that this rookie MP has not considered asking the Canadian parliament to officially apologize to the Sinhalese and Muslim Sri Lankan-Canadian communities for supporting directly and indirectly this Tamil Tiger terrorist war, as we Canadians under your Government have started to cleanse our souls by officially apologizing to the Chinese-Canadian community for the use of the head tax and the exclusion of Chinese immigrants to Canada.   Like the former Liberal MP Ruby Dhalla making a pitch and overseeing the Government apologize to the Canadian-Sikh community for the Komogata Maru incident.  Like your government officially apologizing to the Inuit community for enacting policies to relocate Inuit families from their homes in Inukjuak located in Northern Quebec. (more....)

வைகாசி 18, 2011

பூமி ஈர்ப்பு சக்தி குறைவான தென் பகுதியில் பூமி அதிர்ச்சி அழிவுகள் குறைந்திருக்கும்

சமீபத்தில் உலகில உள்ள புவி ஈர்ப்பு சக்தி குறித்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இலங்கையின் தென் மாகாணத்தில் குறிப்பாக கரையோரப் பிரதேசத்தில் மற்றைய இடங்களைவிட புவி ஈர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பை அடிப்படையாக வைத்து நம் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பூமிக்கு அடியிலுள்ள தகடுகளின் வலுகை அடிப்படையாக வைத்தே புவி ஈர்ப்பு சக்தி குறைந்தும் கூடியும் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டுள்ளார்கள். தென் மாகாணத்திற்கு கீழுள்ள தகடுகளின் சக்தி குறைவாக இருப்பதே அங்கு புவி ஈர்ப்பு சக்தி குறைந்திருக்க ஒரு காரணம் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.  இந்த புவி ஈர்ப்பு சக்தி குறையும் போது பூமி நடுக்கங்களினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தகடுகள் ஏற்றுக்கொண்டு அழிவுகளை குறைப்பதற்கு உதவுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். (மேலும்....)

வைகாசி 18, 2011

இந்திய மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக வெளியேறுகின்றது.....?

அ.தி.மு.கவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தயாராகி விட்டது......?

முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறி தேநீர் விருந்துக்கு வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்ததால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள தி.மு.க மத்திய அரசாங்க அமைச்சரவையிலிருந்து விலகி வெளியிலிருந்து ஆதரவு தருவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. தி.மு.கவின் தோல்விக்கு காங்கிரஸும் ஒரு காரணம் என்பதை மறந்து விட்ட அந்தக் கட்சி அவசரம் அவசரமாக ஜெயலலிதாவுக்கு வாழ்த்து கூறியது. மேலும் சோனியா காந்தியோ ஜெயலலிதாவுடன் 2 முறை தொலைபேசியில் பேசி வாழ்த்து கூறினார். தேநீர் விருந்துக்கும் வருமாறு அழைப்பும் விடுத்தார். (மேலும்....)

வைகாசி 18, 2011

Dutch Tamils arrested for illegal Tigers fundraising

Tamils in the Netherlands have been forced to donate money to the LTTE, the Tamil separatist army, to pay for its war against Sri Lanka’s government army. Dutch court authorities say the Tigers held these people in ‘a stranglehold’, forcing them to pay a ‘war tax’. The investigation has been going on for two years. Several people have been arrested, including the alleged leader of the Dutch branch of the Tigers. (more....)

வைகாசி 18, 2011

சென்னை அருகே நடிகர் வடிவேல் பண்ணை வீடு மீது தாக்குதல்

சென்னையை அடுத்த படப்பை அருகே நடிகர் வடிவேலுவின் பண்ணை வீட்டின் கண்ணாடி ஜன்னல்கள் மர்ம நபர்களால் திங்கட்கிழமை அடித்து நொருக்கப்பட்டது. திங்கட்கிழமை மாலை வடிவேலுவின் பண்ணைக்கு வந்த சுமார் 30க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் காவலாளி வேலுவிடம் வடிவேலுவின் தொலைபேசி எண்ணைக் கொடுக்குமாறு மிரட்டினராம். அதற்கு அவர் தொலைபேசி எண் தெரியாது என்று கூறினாராம். மர்ம நபர்கள் வீட்டின் 6 கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொருங்கியதாகக் கூறப்படுகிறது. மேலும் வரும் சனிக்கிழமைக்குள் இந்த இடத்தை காலி செய்துவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் நாங்களே ஜேசிபி இயந்திரம் கொண்டு வந்து வீட்டை இடிப்போம் என்றும் மிரட்டிச் சென்றனராம்.

வைகாசி 17, 2011

மீண்டும் சாவேஸ் வெற்றி பெறுவார்! கருத்துக்கணிப்புகள் தகவல்

இடதுசாரிக்கொள் கைகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வரும் வெனிசுலாவின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ், அடுத்த ஆண்டு நடைபெறவிருக் கும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்தக்கருத்துக்கணிப்பு களின் முக்கிய அம்சங்கள் பல செய்தித்தாள்களில் பிர சுரமாகியுள்ளன. கிட்டத் தட்ட பாதிக்கும் மேற்பட்ட வெனிசுலா மக்கள், சாவே சின் அரசு நல்ல முறையில் செயலாற்றி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். இவ் வாறு கருத்து தெரிவித்தவர் களில் பெரும்பாலானவர் கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள்தான் என்று தெரி கிறது. சாவேசுக்கு ஆதரவு தொடர்வதற்கு அரசியல் மற்றும் சமூக ரீதியான கார ணங்களே சுட்டிக்காட்டப் படுகின்றன. (மேலும்...)

வைகாசி 17, 2011

TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 25 ஆண்டுகளின் பின் - சபா நாவலன்

(இக் கட்டுரையின் சாராம்சத்தில் பிழைகள் பெரிய அளவில் இல்லை. ஆனால் சம்பவங்கள் பற்றி சில தகவல் பிழைகள் உள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம் -ஆர்)

இவையெல்லாம் வெறுமனே சம்பவங்களோ மறுபடி இரைமீட்பதற்கான வரலாற்றுப் பதிவுகளோ அல்ல. நமது தவறுகள் ஒரு சுழற்சி போல ஒரு எல்லைக்குள்ளேயே மீண்டு வருகின்ற போது மீண்டும் மீண்டும் கற்றுக்கொள்ள வேண்டியவை. அதிலும், தமிழ்ப் பேசும் மக்கள் மீதான் ஒடுக்குமுறை திட்டமிட்டு இலங்கை அரசிற்கும் புலிகளுக்கும் இடையேயான போர் என்ற விம்பம் உருவமைக்கப்பட்ட நாளிலிருந்து மிகவும் அவதானமாகக் கையாளப்பட வேண்டிய கற்கைகள். இந்த விம்பத்தின் ஒருபகுதியான புலிகளுக்கு எதிரன அரசியலெல்லாம் இலங்கை அரச சார்பானதாக மாற்றமடைந்து விடுமோ என்ற அச்சம் எழுவது இயல்பானது. இவற்றிலிருந்து வெளியேறி, தவறுகளை சுயவிமர்சம் செய்துகொள்ளவும், அதன் வெளிச்சத்தில் ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் சரியான திசைவழியை நோக்கிச் செல்லவேண்டும் என்பதுவும் சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு மனிதனதும் அவா. (மேலும்....) (இதே விடயமான மேலதிக வாசிப்பிற்கு....)

வைகாசி 17, 2011

இலங்கை விடயங்களில் வியட்நாம் கரிசனை

இலங்கையில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு உலக நாடுகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மாறாக நாட்டில் குழப்ப நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் முனைப்பு காட்டக் கூடாது என இலங்கைக்கான வியட்நாமின் புதிய தூதுவர் டொன் சின் தன்ஹா தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் நம்பகரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து இலங்கை அரசாங்கமும் நிதானமாக செயற்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

வைகாசி 17, 2011

கொள்கலன் ஒன்றில் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்த புலிகளின் பிரச்சாரப் பொருட்கள் மீட்பு!

புலிகளின் பாரியளவிலான பிரச்சாரப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவரொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சாரப் பொருட்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. கொள்கலன் ஒன்றில் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்த பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து கப்பல் மூலமாக இந்தப் பொருட்கள் கனடாவிற்கு அனுப்பி வைக்கப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் குறித்த கொள்கலன்களை கொழும்பு சுங்கப் பிரிவினர் சோதனையிட்ட போது, பாரிய அளவிலான புலிகளின் சுவரொட்டிகள் மற்றும் ஏனைய பிரச்சாரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எங்கிருந்து, யாரால் இந்தப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது புலிகளின் தற்போதைய தமிழ் நாட்டு ‘செந்தமிழன்’ இன் வேலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

வைகாசி 17, 2011

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேசிய அமைப்பாளர் பிரதீப் கைது

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் கிருஷ்ணானந்தராஜா நேற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழு நேற்று மாலை இவரை கைது செய்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு நகர அமைப்பாளர் மதியழகன் கொலைச் சம்பவம் தொடர்பிலேயே விசாரணை நடத்துவதற்காக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக் காலை இவரது உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அதனை தொடர்ந்தே இவரும் கைதானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வைகாசி 17, 2011

ஈராக் தாக்குதலின் போது அமெரிக்காவுடன் ரகசியமாக பங்கேற்ற கனேடிய படைகள்

ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா 2003ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய படை யெடுப்பு தாக்குதலை நடத்தியது. இந்த படையெடுப்பை ஆதரிக்க மாட் டோம் என 2003ம் ஆண்டு மார்ச் 17 ஆம் திகதி கனடாவின் அப்போதைய பிரதமர் ஜீன் செரிடன் பொதுச் சபையில் அறி வித்தார். கனடாவின் நிலைப்பாட்டுக்கு அவரது லிபரல் காகஸ் கட்சி உறுப்பினர் பலத்த ஆரவாரத்துடன் ¨கையொலி எழுப்பின. ஆனால் அதே நாளில் கனடா வின் உயர் மட்ட அதிகாரி அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரகசிய இராணுவ உதவி அளிப்பதாக உறுதியளித்தார். (மேலும்....)

வைகாசி 17, 2011

விஜேவீர, பிரபாகரன், மற்றும் பின் லாடன் ஆகியோரது மூன்று கொலைகள்

-  விக்டர் ஐவன்

அமெரிக்காவின் முதல்தர எதிரியும், முழு அமெரிக்காவையும் கிடுகிடுக்க வைத்த பயங்கரவாதியுமான பின் லாடனை இறுதியில் அமெரிக்காவால் ஒருவழியாகக் கொல்ல முடிந்தது. சில காலங்களுக்கு முன்பு அமெரிக்காவின் புலனாய்வுப் பிரிவுகளால் பின் லாடன் பாகிஸ்தானிலுள்ள அபோட்டாபாத் எனுமிடத்திலுள்ள ஒரு மாளிகையில் மறைந்து வாழுவதைக் கண்டுபிடிக்க இயலுமாகவிருந்தது. கண்டுபிடிப்புகள் உறுதியாக்கப் பட்டதும், அமெரிக்காவின் ஜனாதிபதியும் மற்றும் அவரது சிரேஷ்ட உதவியாளர்களும் உலகின் மறுபக்கத்திலிருந்து வீடியோ ஒளித்திரைகளில் நடைபெறும் நடவடிக்கைகளை பார்வையிட்டுக் கொண்டிருக்கையில் பின் லாடனை கொலை செய்யும் திட்டம் மேற்கொள்ளப் பட்டது. கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் சீல் என அழைக்கப்படும் விசேட படைப் பிரிவைச் சேர்ந்த ஆறு கடற்படை உத்தியோகத்தர்களின் விசேடமான குழுவானது மூன்று உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி இந்தத் திட்டத்தை நிறைவேற்றின. (மேலும்....)

வைகாசி 17, 2011

ஐ.நா. அமைதிகாக்கும் படையிலுள்ள பொலிஸ் பிரிவில் இலங்கை அதிகாரிகள்

ஐ.நா. அமைதிகாக்கும் படையிலுள்ள பொலிஸ் பிரிவில் இலங்கையைச் சேர்ந்த நூறு அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நடைபெற்ற தேர்வில் சுமார் 700 பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டதாகவும் அதில் 100 அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார். _

வைகாசி 17, 2011

யாழ்ப்பாணம் கிளிநொச்சியில்இரண்டு சடலங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் கச்சேரியடியிலுள்ள விடுதியிலிருந்து இளைஞன் ஒருவரது சடலமும் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளன. கச்சேரியடி சோமசுந்தரம் வீதியிலுள்ள விடுதியிலிருந்து மர்மமான முறையில் இறந்த இளைஞனின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டது. சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்புத்துறையைச் சேர்ந்த துரைராசா சுரேஷ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது வாயில் இரத்தக்கசிவுடன் நுரையும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையினால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.  இதேபோல் கிளிநொச்சி நாச்சிக்குடாப்பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண்ணொருவரின் சடலம் நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலத்தில் அடிகாயங்கள் காணப்படுவதாகவும் உடற் பகுதிகளில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விமலதாசன் பவிதா (வயது 19) என்ற இளம்பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ___

வைகாசி 17, 2011

இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் கலவரம்

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு 17 பேர் பலி

இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 63 ஆண்டு நிறைவையொட்டி அந்நாட்டு எல்லைப் பகுதிகளில் நடந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 17 பேரளவில் கொல்லப்பட்டுள்ளதோடு நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டு 63 ஆவது ஆண்டு நிறைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இஸ்ரேல் உருவாக்கத்தின்போது 700,000 பலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை ‘நிக்பா’ தினம் என்று வர்ணிக்கும் பலஸ்தீன் மற்றும் எல்லைப்புற அரபு நாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இஸ்ரேல் எல்லையில் கூடி எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பலஸ்தீனின் காசா பகுதி மக்கள் மற்றும் சிரியா, லெபனான் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும்....)

வைகாசி 17, 2011

சகல சமூகங்களையும் திருப்திப்படுத்தும் தீர்வுகளே வெற்றிபெற முடியும்

நாட்டின் சகல சமூகங்களையும் திருப்திப்படுத்தக் கூடிய தீர்வுகளே வெற்றிபெற முடியும். எந்த வொரு தரப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு தீர்வுகாண முற்பட்டால் அதில் வெற்றியடைய முடியாது. சுனாமி கட்டமைப்பு என்று திணிக்கப்பட்ட தீர்வு முயற்சி தோல்வியில் முடிந்தது அதற்குச் சான்றாகும். இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 17, 2011

அணு ஆலைகளை இழுத்து மூட முடிவு

ஜப்பான் பிரதமருக்கு மக்கள் பெரும் ஆதரவு

ஜப்பானின் ஹம வோக்க அணுமின் நிலை யத்தை இழுத்து மூட உத்தரவிட்ட அந் நாட்டு பிரதமர் நவோட்டோ கானுக்கு மக்கள் பெரு மளவில் ஆதரவு அளித் துள்ளனர். ஜப்பானில் கடந்த மார்ச் 11ம் திகதி ஏற்பட்ட சுனாமி நிலநடுக்கத்தை அடுத்து புகுஷிமா டாய் இச்சி அணுமின் நிலையம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களை அந் நாட்டு அரசு கைவிட்டது. தலைநகர் டோக்கி யோவில் இருந்து 200 கி.மீ தென்மேற்கில் அமைந்துள்ள ஹம்வோக்கா அணுமின் நிலையத்தை பாதுகாப்பு கருதி இழுத்த மூடும்படி பிரதமர் நவோட்டோ கான் உத்தரவிட்டார். பிரதமரின் இந்த உத்தரவு குறித்து நாட் டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 66.2 சதவீதம் பேர் பிரதமருக்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். 47 சதவீதம் பேர் நாடு முழு வதும் உள்ள அணுமின் உலைகளின் எண் ணிக்கையைக் குறைக்கும் ஆலோசனையை வரவேற்றுள்ளனர். 29.7 சதவீதம் பேர் மட்டுமே பிரத மரின் உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

வைகாசி 17, 2011

சம்புத்த ஜயந்தி

 

2600 கைதிகள் இன்று விடுதலை

2600 ஆவது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு 800 சிறைக்கைதிகளை களனி விகாரையில் நடைபெறும் சமய அனுஷ்டானத்தைத் தொடர்ந்து விடுதலை செய்யும் தேசிய நிகழ்வொன்று இன்று பிரதமர் தி. மு. ஜயரத்ன தலைமையில் நடைபெறும். 2600 வது சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு 2600 கைதிகளை விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏனைய சிறைகைதிகள் சிறைச்சாலைக்கு அருகிலுள்ள விகாரைகளில் வைத்து விடுதலை செய்யப்படுவார்களென்று புனரமைப்பு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. தஸநாயக்க தெரிவித்தார். பொது மன்னிப்புக்காக 75 வயதிற்கு மேற்பட்டவர்களும் சிறு குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டவர்களும் தெரிவு வெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 17, 2011

டுபாயின் கட்டுப்பாட்டிலுள்ள தளத்திலிருந்தே அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்

பாகிஸ்தானில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் கட்டுப்பாட்டிலுள்ள விமானத் தளத்திலிருந்தே அமெரிக்கப்படை ஏவுகனை தாக்குதல்களை நடத்துவதாக பாக். விமானப்படை தளபதி ஏர். மார்ஷல் முகம்மது ஹுஸைன் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க இராணுவம் பாகிஸ்தானில் உள்ள தலிபான்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலை அமெரிக்கா நடத்துவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து உள்ளது. பாகிஸ்தானில் பலுசிஸ்தானில் உள்ள ஷாம்சி விமான தளத்தில் இருந்து தான் இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த விமானத்தளம் பாகிஸ்தானில் இருந்தாலும் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டுபாய்நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த விமானதளத்தை அந்த நாடு தான் கட்டியது. அதனால் அது அந்த நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த நாடுதான் இந்த விமான தளத்தை அமெரிக்காவிடம் ஒப்படைத்துள்ளது.

வைகாசி 17, 2011

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை

இலங்கை - இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டில்லியில் பேச்சு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடில்லி சென்றிருக்கும் இல ங்கை வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் இந்திய வெளி விவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பு நேற்று நண்பகல் புதுடில்லியிலுள்ள ஒப்ரோய் ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது அமைச்சர் பீரிஸ், சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பான இலங்கை யின் நிலைப்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடன் கலந்துரையாடியதாக வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இந்திய விஜயம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடனான சந்திப்பு ஆகியன தொடர்பாகவும் இரு அமைச்சர்களும் இப் பேச்சுவார்த்தையின் போது கலந்துரையாடியு ள்ளதாகவும் அவ்வதிகாரி கூறினார். (மேலும்....)

வைகாசி 16, 2011

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்!

தமிழக முதல்வராக ஜெயலலிதா இன்று பதவியேற்றார். அவருக்கு, ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவைத் தொடர்ந்து, ஓ.பன்னீர் செல்வம் உள்பட 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய கட்சியான தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த், அவரது கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் சுதீஷும் பங்கேற்றனர்.  தா.பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். திரையுலக பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.(மேலும்...)

வைகாசி 16, 2011

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்! தாக்குதல் நடாத்திய முன்னாள் புலி வாசுதேவன்!

K. Padmanabha, Sri Sabaratnam, V. Balakumar and V. Prabakaran in 1986.

சரியாக 22ஆண்டுகள் கழித்து 2009மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று! அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடி, சரணடைவு, நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லை, அவமானப்படவில்லை, ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை! 25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை.கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள். (மேலும்...)

வைகாசி 16, 2011

தமிழக முதலமைச்சராக இன்று   ஜெயலலிதா பதவியேற்கிறார்

தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா திங்களன்று பதவியேற்கிறார். அதிமுக அரசு பதவி யேற்பதையொட்டி அமைச்சர்கள் பட்டியலை யும் அவர் வெளியிட்டுள் ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் 146 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்ற அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஞாயிறன்று ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதைத் தொடர்ந்து அவரை ஆட்சி யமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதை யடுத்து திங்களன்று பகல் 12.15 மணிக்கு ஜெயலலிதா முதல்வராகப் பதவி ஏற்பார் என்று தலைமைச் செயலா ளர் மாலதி அறிவித்தார். முன்னதாக, புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதி முக எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிறன்று காலை அக் கட்சியின் தலைமை அலுவ லகத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் ஜெயலலிதாவை சட்ட மன்ற கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்ந்தெ டுத்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. (மேலும்...)

வைகாசி 16, 2011

Canadian Supreme Court has ordered the expulsion of a leading LTTE sea tiger

Canadian Supreme Court has ordered to expel former leading figure of LTTE sea force, Vigu Vignashvaran alias Vigu from Canada. The sea tiger leader has requested political asylum in Canada and Canadian Supreme Court has rejected his appeal. Canadian CID(RCMP) and emigration and immigration department have  presented video tapes that show the suspect conducting military operations for  the LTTE to the Supreme Court. Vigu is the second LTTE carder who has been  evicted by the Canadian Supreme Court.

வைகாசி 16, 2011

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் வாழ்த்துகின்றது

 People's Liberation Organization of Tamil Eelam

தமிழகத்தின் கௌரவ முதல்வர் ஜெயராம் ஜெயலலிதா அவர்கட்கு, 

ஈழத்தமிழ் மக்களிற்கு கௌரவத்துடன் கூடிய அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதுடன், சர்வதேச பிரச்சினையான இந்த விடயத்தில் மாநில அரசு தலையிட முடியாது. ஆகவே மத்திய அரசு இதில் தலையிட்டு உரிய தீர்வை பெற்று கொடுப்பதற்கு   அழுத்தத்தை கொடுப்பேன் என்று தாங்கள் தெரிவித்துள்ளதை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் நம்பிக்கையுடன் வரவேற்கின்றது. (மேலும்...)

வைகாசி 16, 2011

பரிதாபத்திற்குரிய தேசமாய் பாகிஸ்தான்

முதல்முறையாக பாகிஸ்தான், அமெரிக் காவுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித் துள்ளது. பாகிஸ்தானில் உள்ள அபோட்டாபாத் நக ரில் பாகிஸ்தானுக்கே தெரியாமல் விமானத் தாக் குதல் நடத்தி, பின்லேடனை அமெரிக்க ராணு வப் படைகள் கொலை செய்தன. கொல்லப்பட் டவர் சர்வதேச பயங்கரவாதியாகவே இருந்தா லும், மற்றொரு நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி, அவரைக் கொல்கிற உரிமை அமெரிக் காவுக்கு மட்டுமே உரித்தானது என்ற ரீதியில், உலகெங்கிலும் ஊடகங்கள் செய்தி பரப்பின. அமெரிக்காவின் செயலை நியாயப்படுத்தின. ஆனால், தான் ஒரு இறையாண்மைமிக்க நாடு என்பதை உலகிற்குச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் பாகிஸ்தானுக்கு எழுந்துள்ளது. அந் நாட்டின் பிரதமரோ, ஜனாதிபதியோ இன்று வரையிலும் பகிரங்கமாக அமெரிக்காவை கண்டிக்கவில்லை. ஆனால், அனைத்துப் பிர தேசங்களின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் சும்மா இருக்க முடியவில்லை. (மேலும்...)

வைகாசி 16, 2011

தி.மு.க வை மக்கள் முற்றாக புறக்கணிக்கவில்லை - வடிவேலு

தேர்தலில் மக்கள் அளித்துள்ள மகத்தான தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறேன். மாற்றம் வேண்டும் என்பதற்காக பலரும் மாற்றி வாக்களித்துள்ளனர். மக்களுக்கு நல்லது செய்வார் என எதிர்பார்த்து ஜெயலலிதாவுக்கு வாக்களித்திருக்கலாம். தி.மு.கவை விட அதிக ஓட்டுகள் பெற்றதால் அ.தி.மு.க ஆட்சியை பிடித்துள்ளது. அதே நேரத்தில் தி.மு.க வை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்துவிடவில்லை. ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்று தான் மக்கள் அ.தி.மு வுக்கு வாக்களித்துள்ளனர். அ.தி.மு.க வுடன் சேர்ந்ததால் தே.மு.தி.கவும் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றால் நல்லது செய்ய வேண்டும். அதைவிட்டு கட்சி தொண்டர்களை ஏவி, எனது வீட்டை கல்வீசி தாக்க செய்துள்ளார். இது விஜயகாந்திற்கு நல்லது அல்ல. நான் எங்கேயோ ஓடி ஒளிந்து விட்டதாக கூறுகின்றனர். மதுரையில் என் தாயாருக்கு பாதுகாப்பாக என் வீட்டிலேயே தங்கியிருக் கிறேன். சென்னையில் 75 பொலிஸார் எனது வீட்டிற்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மதுரையிலும் என் வீட்டின் மீது நேற்று முன்தினம் இரவு கல்வீசி தாக்கியவர்களை பொலிசார் விரட்டியடித் துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

வைகாசி 16, 2011

Refugee board says government evidence on alleged terrorist is speculation

An immigration board adjudicator chose the word of a Tamil migrant over accusations from the federal government that the man was part of a terrorist group. Leeann King ruled the man can make a refugee claim in Canada and she systematically dismantled the federal government's evidence against him, calling the information trivial, unreliable and riddled with mistakes and speculation."In this case, what (the man) has told officers and what he testified to before me about what happened to him in Sri Lanka is the only credible and trustworthy evidence before me," she concluded in her ruling Thursday. (more....)

வைகாசி 16, 2011

திரிபோலியில் ஓர் அட்டூழியம்

(பிரகாஷ் காரத்)

மே 1ஆம் நாளன்று நேட்டோ படை யினர் திரிபோலியில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கட்டிடத்தின்மீது ஏவு கணைத் தாக்குதலை நடத்தியிருக்கின் றனர். அத்தாக்குதல் கடாபியைப் படு கொலை செய்யும் நோக்கத்துடன் நடத்தப் பட்டது. அவருக்குப் பதிலாக, அத்தாக்கு தலானது 29 வயதுடைய அவரது இளைய மகன் சைஃப் அல்-அராப் என்பவ ரையும் மற்றும் கடாபியின் மூன்று பேரக் குழந்தைகளையும் கொன்று விட்டது. 1986இல் இதேபோன்றதொரு ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தில் கடாபி தங்கியிருந்த வீட்டின் வெளிச்சுவரில் விழுந்து, அவர் தத்து எடுத்திருந்த பெண் குழந்தையைக் கொன்று விட்டது. (மேலும்...)

வைகாசி 16, 2011

அமெரிக்க விமானம் அத்துமீறி பறந்தால் தகுந்த பதிலடி - பாக். பாராளுமன்றம்

தங்கள் நாட்டின் வான் எல்லை மீது அத்துமீறி பறந்து தாக்குதல் நடத்தினாலோ டுரோன் ரக ஆள் இல்லாத விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்கினாலோ தகுந்த பதில் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று அமெரிக்காவையும் நேட்டோ படைகளையும் பாகிஸ்தான் பாராளுமன்றம் எச்சரித்துள்ளது. 11 மணி நேர நீண்ட விவாதத்துக்குப் பின்னர் பாகிஸ்தான் பாராளுமன்றம் நேற்று முன்தினம் நிறைவேற்றிய ஒரு மனதான தீர்மானத்தில் இந்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை மீது ஒருதலைப்பட்சமாக டுரோன் ரக விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டால் நேடோ படைகள் பாகிஸ்தான் எல்லையில் தங்கி இளைப்பாறவும் எரிபொருள் நிரப்பவும் தரப்படும் வசதிகள் நிறுத்தப்படும் என்று தீர்மானம் எச்சரிக்கிறது. (மேலும்...)

வைகாசி 16, 2011

அமைச்சர் பீரிஸ், சஜின் இன்று இந்தியா பயணம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை தொடர்பில் இந்தியாவு க்கு விளக்கமளிப்ப தற்கென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று இந்தியா புறப்படுகிறார். வெளிவிவகார அமைச்சருடன், வெளிவிவகார அமைச்சின் நடவடிக் கைகளைக் கண்காணிப்பதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்.டி.வாஸ் குணவர்த்தனவும் செல்கிறார். சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையின் உண்மைத் தன்மைகள் தொடர்பில் வெளிநாடு களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்தியாவுக்கு விளக்கமளிக்க வெளிவிவகார அமைச்சர் செல்கிறார். இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட முக்கியஸ்தர்களை அமைச்சர் பீரிஸ் அடங்கிய குழு சந்திக்கவுள்ளது. (மேலும்...)

வைகாசி 16, 2011

 

நேட்டோவால் என்னை கொல்ல முடியாது - முஅம்மர் கடாபி

“நேட்டோ படைகளால் என்னைக் கொல்ல முடியாது, அவற்றால் தாக்க முடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்று லிபிய நாட்டின் ஜனாதிபதி முஅம்மர் கடாபி நாட்டு மக்களுக்கு ஒலிநாடா மூலம் அறிவித்துள்ளார். நேட்டோ படைகள் நடத்திய குண்டுவீச்சில் அவருடைய மாளிகை “பாப் - அல் - அஜீசியா” கடுமையாகச் சேதம் அடைந்தது. கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு நடந்த இத்தாக்குதலில் பத்திரிகையாளர்கள், அப்பாவி சிவிலி யன்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். அந்த 3 பேர் லிபியாவுக்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்துள்ளனர் என்று கடாபி தன்னுடைய ஒலிநாடா உரையில் புகழ் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதே இடத்தின் மீது கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவும் சனிக்கிழமை அதிகாலையும் மீண்டும் தாக்குதல்கள் தொடர்ந்தன. லிபிய ஜனாதிபதி கடாபி வான் தாக்குதலில் கடுமையாகக் காயம் அடைந்திருக்கிறார். நடமாட முடியாத அவரை மருத்துவ சிகிச்சைக்காக லிபியாவைவிட்டு வேறு எங்கோ எடுத்துச் சென்று விட்டனர் என்று நாட்டில் வதந்திகள் பரவி வருகின்றன. இன்னும் ஒரு சிலர் அவர் உயிரோடு இருக்கிறாரா என்று சந்தேகம் கிளப்ப ஆரம்பித்து விட்டனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவும் இராணுவம் தன்னைவிட்டு விலகாமல் இருக்கவும் இந்த ஒலிநாடாவை வெளியிட்டிருக்கிறார் கடாபி.

வைகாசி 16, 2011

நான் அனுபவப்பட்ட யாழ்ப்பாணம்

-  கலாநிதி: ராஜசிங்கம் நரேந்திரன்

நடந்த எல்.ரீ.ரீ.ஈயின் ஆட்சியின் போது அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து உயிர் பிழைத்து மற்றும் மோதலின் பல கட்டங்களிலும் அதேபோல இராணுவத்தினரின் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்படிந்து பழகிப்போன யாழ்ப்பாண அரசாங்க சேவை, போரினால் தாக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்குத் தேவையான முனைப்பையும் உணர்ச்சியையும் இழந்து விட்டது.

2011 ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் மொத்தமாக சுமார் இரண்டரை மாதங்கள் வரை நான் யாழ்ப்பாணத்தில் வசித்திருந்தேன். நான் அங்கிருந்த வேளையில் தொலைக்காட்சியைப் பார்க்கவோ, வானொலியைக் கேட்கவோ, பத்திரிகைகளை வாசிக்கவோ அல்லது இணையத்தைப் பயன்படுத்தவோ இல்லை. மக்களின் நாளுக்கு நாள் வாழ்க்கை முறைகளில் ஏற்படும் உட்தாக்கங்களால் என்னைச்; சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கண்ணோட்டம் செலுத்த முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான் இங்கே தரப்போகின்றவை நிச்சயமாக விஞ்ஞான ஆய்வுகளின்படியோ அல்லது கட்டமைப்பு கற்கை நெறிகளின்படியோ பெறப்பட்ட விளைவுகள் அல்ல, ஆனால் எனது தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் எண்ணங்களின் சுருக்கம். (மேலும்...)

வைகாசி 16, 2011

சி.ஐ.ஏவுடன் உளவுத் தகவல்கள் பகிர்வதை நிறுத்தியது ஐ.எஸ்.ஐ

அமெரிக்கா தன்னிச்சையாக நடவடிக்கை எடுத்து அல்கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை கொன்றதைத் தொடர்ந்து அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வுடன் உளவுத் தகவல்களை பகிர்ந்துகொள்வதை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிறுத்தியுள்ளது. பயங்கரவாதிகளின் இருப் பிடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்த தாங்கள் உதவியதாகவும் சி.ஐ.ஏ வுக்கு தகவல்கள் அளித்ததாகவும் முன்பு கூறிவந்த ஐ.எஸ்.ஐ. முகவர்கள் இப்போது பயங்கரவாதிகள் குறித்து சி.ஐ.ஏ. வுக்கு தகவல்கள் அளிக்க மறுத்து வருவதாக சண்டே டெலிகிராப் தெரிவித்துள்ளது.

வைகாசி 15, 2011

India wants police and land powers for PCs

Delegation postpones visit as New Delhi tells Lanka to respond positively to UN panel report

India is to ask Sri Lanka to implement the 13th Amendment to the Constitution giving full land and police powers to provincial councils as part of measures to address Tamil grievances. The move comes as the government gave the Tamil National Alliance (TNA) a blueprint this week on what it believes is one of the key issues it would address. It is the setting up of a second chamber or a senate within the provisions of the existing constitution. (more....)

வைகாசி 15, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 8)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத் தில் தப்பியவரின் வாக்குமூலம்

உண்மையில் அப்போது எம்மிடம் போதிய எறிகணைப்பலம் இல்லை. இத்தகைய ஒரு சூழலில் தலைவரையும், இயக்கத்தையும் மக்களையும் பாதுகாப்பதற்கு ஒரு யுத்த நிறுத்தம் அவசியம் எனவும் அதற்கு வரும்படியும் எமது தலைமை பிடத்தை வலியுறுத்தினார்.
ஆனால் நமது தலைமை ஒரு நிபந்தனையற்ற யுத்தநிறுத்தத்துக்குத் தயாராக நாம் இருப்பதாக அறிவுறித்தியது. ஆனால் நிபந்தனை அற்ற யுத்தநிறுத்தத்தை எமது தலைமை தெரிவி செய்ததற்கும் இந்த நெடியவனும் காஸ்ரோவும் தான் காரணம். அவர்கள் இருவரும் எமது தலைமை பீடத்துக்கு சொன்ன அந்த நம்பிக்கைதரும் செய்தியான ஐரோப்பிய நாடுகள் காப்பாற்ற ஒத்துவருவதாக கூறியுள்ளார்கள் என்ற செய்தியை நம் தலைமை நம்பியது. இதை நம் தலைமை நம்முவதற்கு காரணம் இவர்கள் இருவர் மீதும் இருந்த நம்பிக்கையும் புலம்பெயர் தேசத்தில் நடந்ததாக எமக்கு அனுப்பப்பட்ட ஆதாரங்களும் தான் காரணம்.
(மேலும்....)

வைகாசி 15, 2011

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்......​.. (பகுதி 4...)

முதன் முதல் கோட்டையில் அண்ணாவை பார்க்க சென்ற போது நான் கருப்பு, சிவப்பு சட்டை போட்டிருந்தேன். ஓர் அதிகாரி நீயும் போராளியா என்று கேட்டான்.  அப்போதுதான் தெரியும் அந்த அமைப்புக்கு ஒரு வர்ணம் இருக்கு என்று. பின்னர் அந்த அதிகாரி கடுமையாக அண்ணாவை திட்டிக்கொண்டு இருந்தான். Russian Model 84 Pistol வைத்திருந்தான் என்றும், அது தங்களிடம் கூட இல்லை என்றும் சொல்லிக்கொண்டு இருந்தான். அண்ணா மிகவும் மெலிந்து போய் இருந்தார். அவரை நாங்கள் பார்த்த இடம் வெளிகோட்டையில். இன்று அது முற்றாக அழிக்கபட்டு இருந்தது. அண்ணாவை சிறை வைத்த உள்கோட்டைகுள் சென்றோம். அது மிகவும் கொடுமையாக இருந்தது. மதில் சுவருக்குள் குகை போல. அதுக்குள் இன்னொரு குகை இருந்தது . அதில் பல பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆனால் அண்ணாவின் பெயர் இருக்கவில்லை. சாதாரண கைதிகளை பார்வையிட்ட அந்த இடமும் அழிக்கபட்டு இருந்தது.(மேலும்....)

வைகாசி 15, 2011

Even without Internet at compound, bin Laden had system to send emails and avoid US tracking

(By Adam Goldman,Matt Apuzzo,)

Using intermediaries and inexpensive computer disks, Osama bin Laden managed to send emails while in hiding, without leaving a digital fingerprint for U.S. eavesdroppers to find. His system was painstaking and slow, but it worked, and it allowed him to become a prolific email writer despite not having Internet or phone lines running to his compound. His methods, described in new detail to The Associated Press by a counterterrorism official and a second person briefed on the U.S. investigation, frustrated Western efforts to trace him through cyberspace. The people spoke to the AP on condition of anonymity to discuss the sensitive intelligence analysis. (more....)

வைகாசி 15, 2011

வெளிநாடுகளிலுள்ள தமிழர்களின் அசையாச் சொத்துக்கள் சுவீகரிக்கப்படும் என்ற செய்தியானது தவறானது

வெளிநாட்டில் வாழும் தமிழர்களின் இலங்கையில் உள்ள அசையா சொத்துக்கள் இலங்கை அரசினால் விரைவில் பொறுப்பேற்கப்படும் என்று சாரப்பட சில வெளிநாட்டு தமிழ் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகள் முற்றிலும் தவறானவை. ஆதாரம் எதுவும் அற்றவை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட பிரதான அமைப்பாளர் இ.அங்கஜன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

வைகாசி 15, 2011

இந்தியா செல்கிறார் பீரிஸ்

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரீஸ் இந்தியா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை 16 ஆம் திகதி இந்தியா செல்லும் பீரிஸுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சின் நடவடிக்கைகளை கண்காணித்துவரும் சஜின் வாஸ் குணவர்த்தனாவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மூன்று நாள் பயணமாக இந்தியா செல்லும் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஸ்ணா உட்பட பலரை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

வைகாசி 15, 2011

கருணாநிதியை வீழ்த்திய 'குடும்பம்'!

 

எகிப்து புரட்சி இங்கேயும் நிகழ்ந்தது..

'ஈழத்து சோகம்தான் காவு வாங்கி​விட்டது!’, 'ஸ்பெக்ட்ரம் ஊழல்தான் தலை குப்புறக் கவிழ்த்துவிட்டது!’, 'கூட்டணிக் குளறுபடிதான் ஏமாற்றி​விட்டது!’ - தி.மு.க-வின் தோல்விக்கு இப்படி எத்தனையோ காரணங்கள் அடுக்கடுக்காகச் சொல்லப்பட்டாலும், அதில் மிக முக்கியமானது குடும்பப் பூசல்! தேர்தல் களத்தில் ஜாம்பவானாக நின்று சாதித்து இருக்கவேண்டிய கருணாநிதி, கோபால​​புரத்துக்கும் சி.ஐ.டி. காலனிக்குமாக அலைந்து அலைந்தே அல்லாடிப்போனார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும் கூட்டணிப் பூசல்களைச் சரிசெய்ய முடியாமல் கருணாநிதி போராடியதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால், கூட்டணிக் குடைச்சலைக் காட்டிலும், அவர் அப்போது அதிகமாக குமைந்துபோனது குடும்பக் குடைச்சலால்தான். 'கனிமொழி என்னைக்கு கட்சிக்கு வந்த ஆள்? குலாம் நபி ஆசாத்துடன் பேச்சுவார்த்தை நடத்த கனிமொழி எல்லாம் ஒரு ஆளா?’ என அழகிரி ஆவேசப்பட... தயாநிதி மாறன் தகிக்க... இதிலேயே நிலை குலைந்து போனார் கருணாநிதி. 'காங்கிரஸைக் கை கழுவிவிடலாம்!’ என சீனியர் மந்திரிகள் அட்வைஸ் பண்ண, 'அப்படிப் பண்ணினால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், எப்படியும் கனிமொழியை உள்ளே தள்ளிடுவாங்களேப்பா’ எனத் தழுதழுத்தார் கருணாநிதி. குடும்பக் கவலையிலேயே காங்கிரஸுக்கு 63 தொகுதிகளை ஒதுக்கிக் கொடுத்து ஆசுவாசமானார். 'ஜெயிப்போமா... தோற்போமா?’ எனத் திணறிய ஜெயலலிதாவுக்கு முதல் நம்பிக்கையே காங்கிரஸுக்கு இத்தனைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதுதான்! (மேலும்....)

வைகாசி 15, 2011

குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து தப்பும் நிலை இலங்கையில் தொடர்கிறது  - சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கையில் போர் நிறைவுற்ற பின்பும் குற்றங்களுக்குத் தண்டனை வழங்கப்படாத போக்குத் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது. யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் விவகாரங்கள் தொடர்பில் இன்னமும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதுடன் இலங்கையில் குற்றச் செயல்களுக்குத் தண்டனை வழங்கப்படாத நிலைமை தொடர்வதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது. சித்திரவதை, கடத்தப்பட்டுக் காணாமல் போதல் சம்பவங்கள் நாட்டில் இன்னும் பரவலாகத் தொடர்வதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இவ்வருடத்துக்கான ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 15, 2011

கே.பி.எஸ். சில நினைவுகள்

ப.சோழநாடன், சமஸ்

தன்னுடைய தவக் குரலால் ஒரு காலத்தையே கட்டிப்போட்ட சுந்தராம்பாள் 1980-ல் இறந்தபோது, கிட்டத்தட்ட அவர் நினைத்த எல்லாவற்றையுமே சாதித்து இருந்தார். ஒரே ஒரு மனக்குறைதான். குழந்தை இல்லை. கிட்டப்பா - சுந்தராம் பாள் தம்பதிக்குப் பிறந்த ஒரே ஆண் குழந்தை, பிறந்த சில மாதங்களிலேயே இறந்துவிட்டது. ஆனால், அவர் வாழ்ந்த காலம் வரை ஒரு கலைஞர் என்பதைத் தாண்டி, எல்லோராலும் அம்மாவாகவும் பாட்டியாகவும்தான் கொண்டாடப்பட்டார்! (மேலும்....)

வைகாசி 15, 2011

'புலிகள் இயக்க அங்கத்தவர்களுக்கு நோர்வே இரகசியமாக உதவியது'

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்தாகவும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளித்ததாகவும் நோர்வேயிலிருந்து வெளியாகும் அவ்டன்போஸ்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. நோர்வே தூதரக அதிகாரிகள், இவ்வாறு சுமார் 12 பேருக்கு குறுகிய காலத்தில் விஸா வழங்கியதுடன் விமான டிக்கெட்டுகளை வழங்கி, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இது வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள நோர்வே எதிர்க்கட்சி, இந்நடவடிக்கையினால் இருநாடுகளுக்கும் இ&