|
||||
|
ஆனி 2012 மாதப் பதிவுகள் ஆனி 30, 2012 வவுனியா சிறைச்சாலை பிரச்சினை, விசாரணைகள் ஆரம்பம்!
வவுனியா சிறைச்சாலையில் கடந்த தினங்களில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்படடுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சஜீவ மெதவத்த தெரிவித்துள்ளார். வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் பேராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளால் நேற்று முன்தினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் மூன்று உத்தியோகத்தர்களும் நேற்று மீட்கப்பட்டனர். (மேலும்.....) ஆனி 30, 2012 வவுனியா சிறையில் புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேரிடம் செய்மதித் தொலைபேசி!ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான யோசனை நிறைவேற்றப்பட்ட பின்னரே, வவுனியா சிறையில் உள்ள புலிகளின் முன்னாள் தலைவர்கள் 5 பேர் உட்பட 321புலி உறுப்பினர்கள் சிறைச்சாலையில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதாக வடபகுதியில் உள்ள சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார் என திவயின செய்தி வெளியிட்டு உள்ளது. சசி, ருவான், ருக்ஷான், கண்ணன், குருதரன் ஆகிய புலித் தலைவர்களிடம் செய்மதி தொலைபேசிகள் இருப்பதாகவும் அவற்றின் மூலம் அவர்கள் இராணுவத்தினருக்கு எதிராக வழங்கியுள்ள தகவல்கள் ஒலிப்பரப்பபடுவதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார். சிறையில் உள்ள இந்த புலி உறுப்பினர்களுக்கு, புலிகளின் ஆதரவாளர்களின் உதவிகள் கிடைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனி 30, 2012 உண்மைக்குப் புறம்பாக செய்திகள் வெளியிடுவதை ஏற்றுக்கொண்டது உதயன் ! யாழ் நீதவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரினார் உதயன் பத்திராதிபர் !
உண்மைக்குப் புறம்பாக செய்திகளை வெளியிடுவதை ஏற்றுக்கொண்டு யாழ் நீதிவான் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரியிருந்தார் உதயன் பத்திரிகை ஆசிரியர். யாழ் ஊடகவியலாளர்களுக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியிருந்த இந்தச் சம்பவம் இன்று யாழ் நீதிமன்றில் நடந்திருந்தது. யாழ் நீதிவான் திரு மா.கணேசராஜா அவர்களை அவமதிக்கும் நோக்கில், அவர் த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களிடம் மன்னிப்பு கோரியதாக உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை வெளியிட்டமைக்காக இன்று யாழ் நீதிமன்றிற்கு அழைக்கப்பட்டிருந்த உதயன் பத்திரிகை ஆசிரியரே மேற்படி தவறை ஏற்றுக்கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார். அத்துடன் உதயன் பத்திரிகை உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருவதாக தனக்கு பல சட்டத்தரணிகளிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன என குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளை பெயர் குறிப்பிட்டு நீதவான் உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் தெரிவித்திருந்தபோது அவர் பதிலேதும் கூறாமல் மௌனமாயிருந்ததன் மூலம் அக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....) ஆனி 30, 2012 வானவில் 18 வெளிவந்துவிட்டது சகல இனவாதப் போக்குகளையும் அரசாங்கம் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வேண்டும்! புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான 30 வருட இனவாத யுத்தம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்தபோது, அந்த இறுதி யுத்தத்தால் ஏற்பட்ட மரண அவஸ்தையையும் தாங்கிக்கொண்டு மக்கள் ஓரளவு நிம்மதி மூச்சுவிட்டனர். அதற்கொரு காரணம் இருந்தது. அதாவது இனி யுத்தம் இல்லை, அதுமாத்திரமின்றி இனப்பிரச்சினைக்கும் ஒரு நீதியான தீர்வு கிடைக்கும் என்றவாறாக மக்களின் எண்ணங்கள் இருந்தன. யுத்தம் முடிவுற்ற நேரத்தில் தமிழ் மக்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டு (புலிகளையும்தான்) இருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு இனி என்ன செய்யப் போகின்றது என கேள்வியும் மக்களிடம் இருந்தது. புலிகள் வழங்கிய பிராணவாயுவினால் உயிர்வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு புலிகள் போய்விட்டதனால் இனி எதிர்காலம் இல்லையென்று மக்கள் கருதியதே அதற்குக் காரணமாகும். இறுதி யுத்த நேரத்தில் தேசியக்கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் - குறிப்பாக சிவாஜிலிங்கம், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோர் வெளிநாடுகளில் தங்கியிருந்து அரசுக்கு எதிரான தீவிர பிரச்சாரங்களில் 1983 இன வன்செயலை நினைவூட்டும் காட்சி ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் சிவாஜிலிங்கம் போன்றோர் சுமார் ஒரு வருடமாக இந்தியாவில் தங்கிநின்று சில திராவிடப் பிழைப்புவாதக் கட்சிகளுடனும், இந்தத்துவ வலதுசாரிக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியுடனும் கைகோர்த்து இலங்கை அரசுக்கு எதிரான கடுமையான எதிர்ப்பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். (மேலும்.....) ஆனி 30, 2012 புதிய கட்சி அமைக்கிறார் ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார புதிய அரசியல் கட்சியொன்றை அமைப்பது தொடர்பாக அரசாங்க அங்கத்தவர்கள் பலர் தன்னுடன் கலந்துரையாடிவருவதாக ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஹேமகுமார நாணயக்கார கூறினார். அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட பலர் இதில் இணைவர். தீவிரமான ஸ்ரீல.சு.க., ஐ.தே.க. மற்றும் இடதுசாரிகள் இக்கட்சியில் இணைவர் என அவர் கூறினார். முன்னாள் அமைச்சரான ஹேமகுமார நாணயக்கார, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விவசாய ஆலோசகர் பதவியிலிருந்து கடந்தவாரம் ராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....) ஆனி 30, 2012 சுயாட்சி உரிமையுடன் வாழவே இலங்கைத் தமிழ் மக்கள் விருப்பம் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் வாழும் தமிழ் மக்களில் 95 சதவீதம் பேர் சுயாட்சி உரிமை பெற்று வேலைவாய்ப்புடன் அமைதியாக வாழவே விரும்புவதாக மண்டபம் முகாமில் தங்கியுள்ள மக்கள் கூறினர். அவர்களை சந்தித்த பிறகு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.லாசர், இரா.அண்ணாதுரை ஆகியோர் இதை தெரிவித் தனர். முகாமிற்குள் நேரடியாக குறைகளை கேட்கச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்த செயலையும் அவர்கள் கண்டித்தனர். (மேலும்.....)ஆனி 30, 2012 அதிக உடற்பயிற்சியும் ஆபத்தே! அதிக அளவு உடற்பயிற்சி செய்வதும் உடலுக்கு ஆபத்தே என கூறுகின்றனர் மருத்துவ ஆய்வாளர்கள். பொதுவாக அதிக உடல் எடை கொண்டவர்கள் தங்களது எடையைக் குறைக்க எண்ணி, உணவுக்கட்டுபாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவிதமாக எடைக்குறைப்பு முறையை மேற்கொள்கின்றனர். நாள் ஒன்றிற்கு ஒரு மணிநேரம் பயிற்சி செய்வதே இதயத்திற்கு பாதுகாப்பு ஆகும். அதற்கு மேல் உடற்பயிற்சி செய்தால், நாளடைவில் அது இதயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சாதாரணமாகஇருப்பவர்கள் அதிதீவிர பயிற்சிகளிலும் போட்டிகளிலும் ஈடுபடும்போது, இதயத்துடிப்பு 120 ஆக உயர்கிறது. இதனால் இதயம் பாதிப்புக்குள்ளாகிறது. உடற்பயிற்சி என்பது பொதுவாக சுகாதார வாழ்வுக்கு நல்லதுதான். எனினும் அதிகமாக போகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. கி.மு 490ம் ஆண்டில் ஓர் இளம் கிரேக்கச் செய்தியாளர் 2 நாட்களில் 175 மைல்கள் ஓடி வந்த பின்னர் திடீரென இறந்தார். இவரது இறப்பே நீண்ட தூர ஓட்டத்தில் பாதிக்கப்பட்ட முதல் இதயம் என மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனி 30, 2012 மணமுடித்த கையோடு விவாகரத்தில் முடிந்த கல்யாணம்! கையடக்கத் தொலை பேசி ஊடாக காதல் கொண்டு மனசால் ஒன்று பட்ட காதல் ஜோடி ஒன்று திருமண மான அதே தினம் விவா கரத்தில் முடிந்தது. கையடக்க தொலை பேசி யில் தொடர்பு கொண்ட ஜோடிகளின் உறவு காதலாக மாறியதால் தொடர்ந்தும் தொலைபேசி யுடாக பேசி காதலை வளர்த்துக் கொண்டனர். பின்னர் இக்காதல் திருமணத்தில் முடிந்தது மணவறையில் இவர்கள் சந்திக்கும் வரை ஒருவரை யொருவர் சந்திக்காது தொலைபேசியிலே உரையாடிக் காதலித்தனர் திருமணம் முடிந்து தேனிலவு செல்கையிலே கணவன் கண்களையிழந்தவர் என மணமகள் அறிந்து கொண்டார். மணவாளன் இராணுவத்தைச் சேர்ந்தவர், கடந்த காலங்களில் நாட்டில் இடம் பெற்ற யுத்த சமயத்தின் போது பயங்கர வாதிகளின் குண்டுத் தாக்குதலில் தனது கண்களை இழந்திருந்தார். ஆனி 30, 2012 தமிழ் கைதிகளை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானம்சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளை தமது விருப் பின் பேரில் புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மா னிக்கப்பட்டிருப்பதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஷ் குமார் தெரிவித்தார். மேற்படி தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் நியமிக்கப்பட்ட விசேட ஆணையார்களுள் ஒருவரான காமினி குளதுங்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிறைச்சாலைக்கு விஜயம் செய்து இந்த தீர்மானத்தை அறிவித்திருந்தார். தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தவென விசேட நீதிமன்றங்கள் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், கைதிகளின் விருப்பின் பேரில் இவர்களை புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் ஆணை யாளர் குறிப்பிட்டார். எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் ஆயுதப் பயிற்சி எடுக்காத, புலி உறுப்பினர்களல்லாதவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்கப்படும் என்பதனையும் அவ் ஆணையார் சுட்டிக்காட்டினார். அநுராதபுரம், நீர்கொழும்பு, மகசின் சிறைச்சாலைகளிலுள்ள 700 தமிழ் கைதிகள் இத்தீர்மானத்தை உடனடி யாக அமுல்படுத்தக் கோரி கடிதம் சமர்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனி 30, 2012 யாழ். தீவுப்பகுதி படகுச்சேவை நடத்துவோர் ஆர்ப்பாட்டம்யாழ். குறிகட்டுவான் இறங்கு துறையிலிருந்து நயினாதீவு, நெடுந்தீவு செல்லும் பயணிகள் படகுச் சேவை நடத்துவோர் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். நயினா தீவிலுள்ள காவி உடைதரித்தவர் ஒருவரின் பயணிகள் படகுக்கும், ஏனைய பயணிகள் படகுக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை கார ணமாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. யுத்தம் முடிவடைந்த பின்னர் 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் வடபகுதிக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிக ரித்தே காணப்பட்டது. 2010 ஆம் ஆண்டில் மட்டும் யாழ். குடாநாட்டுக்கு சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் சென்றனர். தென்பகுதியிலிருந்து வரும் மக்கள் நயினை நாக பூசனி அம் மன் கோவில் மற்றும் நாக விகாரைக்கு செல்கின்றனர். இதனால் படகுச் சேவை நடத்துபவர்கள் தமது வாழ்வாதாரத்தை இப்போது மகிழ்ச்சியுடன் நடத்துகின்றனர். இராணு வத்தினர் அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் பெற்று வருகின்றனர். பயணிகள் அதிகமாக வருவதால் படகுச் சேவையாளர்களும் தமது சேவையை சுழற்சி முறையில் செய்து வருகின்றனர். எனினும் நயினாதீவிலுள்ள காவி உடை தரித்தவர் தமக்குச் சொந்த மான படகை படகுச் சேவைகளின் சுழற்சிமுறையில் அல்லாமல் தனியே சேவையிலீடுபடுத்தியுள்ளார். ஆனி 30, 2012 நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரேக்கம்அமைதி, செழிப்பு, ஒற்றுமை ஆகியவற்றுக்காகப் பாடுபடுவோம் என்று உறுதி கூறி கைகோர்த்த ஐரோப்பிய யூனியன் நாடுகள், இப்போது மக்களின் மன அமைதியைப் பறித்து செழிப்பையும் தொலைத்துவிட்டது. ஒற்றுமை என்பது விரைவில் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் ஒன்றான கிரேக்கத்தில் நாடாளுமன் றத்துக்கு முன்பு முதியவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மீள முடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் அந்நாட்டில் வரவு செலவுத் திட்ட சீர்த்திருத்தங்களால் ஓய்வூதியத்தை இழந்து வாழ வழியில்லாமல் விரக்தி அடைந்து அவர் எடுத்த சோக முடிவு அது. இது ஓர் உதாரணம் தான். வேலையின்மை, முன்னெப் போதும் எதிர்கொண்டிராத பொரு ளாதார நெருக்கடி ஆகியவற்றால் ஐரோப்பிய நாடுகளில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலைநாடுகள் என்றாலே செல்வச் செழிப்பு மிக்கவை என்று நம்மவர்களுக்கு ஏற்படும் பிம்பம் மெதுவாக மறைந்து வருகிறது. (மேலும்.....) ஆனி 30, 2012 அகதிகளுடன் இரு படகுகள் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்தன புகலிடம் கோருவோரை ஏற்றிச் சென்ற இரு படகுகள் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவை நேற்று அதிகாலை சென்றடைந்துள்ளன. இலங்கையர்கள் ௭னக் கருதப்படும் 44 பேருடன் உள்ள ஒரு சிறிய படகு கிறிஸ்மஸ் தீவில் உள்ள சிறு துறைமுகத்துக்கு அப்பால் நங்கூரமிட்டுள்ளது. கடைசியாக வந்துள்ள இந்த வெள்ளை நீல நிற மீன் பிடிப் படகின் மேல் தட்டில் ஆட்கள் நிரம்பியுள்ளனர் போலத் தெரிகின்றது. புதன்கிழமை தொடக்கம் இங்கு வந்து சேர்ந்த 3 கப்பல்களில் இது கடைசியானது ஆகும். புதன்கிழமை வந்த கப்பலிலிருந்து இறக்கப்பட்ட 98 பேரும் இன்னமும் துறைமுகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் படகும் வந்துள்ளது. கடைசியாகவும் மூன்றாவதாகவும் வந்த இந்தப் படகை அதிகாலை கிறிஸ்மஸ்தீவுக்கு பாதுகாப்பாக அழைத்து வந்த பெரிய அவுஸ்திரேலிய கடற்படைப் படகும் அண்மையில் தரித்து நிற்கின்றது. இதற்கு முன் கடந்த வாரம் இந்தோனேஷியாவுக்கும் கிறிஸ்மஸ் தீவுக்கும் இடையல் கவிழ்ந்த கப்பலிலிருந்து 110 பேரை காப்பாற்றுவதிலும் கடலில் மூழ்கி இறந்து போனதாகக் கருதப்படும் 90 பேரின் சடலங்களைத் தேடுவதிலும் இந்தக் கப்பல் ஈடுபடுத்தப்பட்டது. ஆனி 30, 2012 பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகள் நேற்று மீட்புவவுனியா சிறைச்சாலையில் சிறைக் கைதிகளால் பணயக்கைதிகளாகத் தடுத் துவைக்கப்பட்டிருந்த மூன்று சிறைச் சாலை அதிகாரிகள் மீட்கப்பட்டுள்ள னர். பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரின் கூட்டு நடவடிக்கையின் மூலமே மூன்று சிறைச்சாலை அதிகாரிகளும் மீட் கப்பட்டதாக பொலிஸ் பதில் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சஜீவ மெதவக்க தெரிவித்தார். நேற்று நண்பகல் 12.20 மணியளவில் இவர்கள் மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த புலி சந்தேகநபர்கள் சிலர் வேறு சிறைச் சாலைகளுக்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர். இச்சிறைக் கைதிகள் நேற்றுமுன்தினம் மாலை மூன்று சிறைச்சாலை அதிகாரிகளைப் பணயக் கைதிகளாகத் தடுத்து வைத் திருந்தனர். பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட மூன்று சிறைச் சாலை அதி காரிகளை மீட் பதற்கு நேற்று முன்தினம் மாலை முதல் நேற்றுக் அதிகாலை வரை சிறைக்கைதிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் யாவும் தோல் வியிலேயே முடிவடைந்துள்ளது. ஆனி 29, 2012 பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் சிவ்சங்கர் மேனன்
இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துப் பேசினார். இன்று அதிகாலை 12.45 மணியளவில் வந்தடைந்த மேனன் ஜனாதிபதியை அவரது அலரி மாளிகையில் சந்தித்துப் பேசினார். இதன் போது வடக்குப் பகுதியில் முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை, மறுசீரமைப்பு பணிகள், வடகிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவை குறித்து இருவரும் விவாதித்துள்ளனர். மேலும் கிழக்கில் சம்பூரில் இந்தியா உதவியுடன் அமைக்க திட்டமிட்டுள்ள அனல் மின் நிலையம் பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று மாலை 4.25 மணியளவில் இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இந்தியாவிற்கு பயணித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிவ்சங்கர் மேனன், இந்திய - இலங்கை உறவுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ___ ஆனி 29, 2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூ., ஜே.வி.பி போட்டியிடத் தீர்மானம் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். ஜனநாயக அரசியலில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதனால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முயற்சி செய்யும் என்றும் மாவை சேனாதிராஜா எம்.பி. மேலும் தெரிவித்துள்ளார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்.....) ஆனி 29, 2012 போர் மூளும் அபாயம் சிரிய எல்லையில் படைகளைக் குவிக்கும் துருக்கி சிரியா எல்லையில் துருக்கி தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது. எல்லையில் பறந்த துருக்கியின் ஜெட் போர் விமானத்தை சிரியா இராணுவம் கடந்த வாரம் சுட்டு வீழ்த்தியது. இதனால் 2 நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதை தீர்க்க ரஸ்யா தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் எந்தவித பலனும் ஏற்படவில்லை. இந்நிலையிலேயே சிரிய அதிரடி முடிவை மேற்கொண்டுள்ளது. இஸ்கேன்டுரன் தளத்தில் இருந்து நேற்று முன்தினம் 30 இராணுவ வாகனங்களில் ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இஸ்கேன்டுரன் தளம் தரைக்கடல் பகுதியில் உள்ளது. அதற்கு பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். நேற்று மேலும் இராணுவ வீரர்களுடன் டாங்கிகள் மற்றும் போர் தளவாடங்கள் அனுப்பப்பட்டன. விமானம் தாக்குதலை சமாளிக்க 12 இராணுவ வாகனங்களில் வெடிகுண்டுகள், ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டன. (மேலும்.....)ஆனி 29, 2012 இலங்கை வந்தடைந்தார் சிவ்சங்கர் மேனன் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இன்று அதிகாலை 12.54 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிவ்சங்கர் மேனன், இந்திய - இலங்கை உறவுகளின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடவுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான பொருளாதார, பாதுகாப்பு விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளார். ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்த இவர் இன்றே நாடு திரும்ப உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனி 29, 2012 அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன! அகதிகளை ஏற்றிய மேலும் மூன்று படகுகள் அவுஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்துள்ளன. நேற்று இரவு கைப்பற்றப்பட்டுள்ள படகில் 44 புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்துள்ளனர். இப் படகுகள் இலங்கையில் இருந்து சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் பிரிவினரால் இப்படகுகள் கைப்பற்றப்பட்டு கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதேவேளை இன்று அதிகாலை மேலும் ஒரு படகு அவுஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவில் இருந்து 30 கடல் மைல்கள் தொலைவில் இந்த படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தப் படகில் ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 93 பேர் இருந்துள்ளனர். இவர்களும் இலங்கையர்களாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஆனி 29, 2012 ஹிட்லரின் மரணத்தில் இருந்த மர்மம்
ஒருவர் நம்மை ஏமாற்றினால் நமக்கு எவ்வளவு கோபம் வந்துவிடுகிறது. அவரே பல ஆண்டுகள் ஏமாற்றினால் எப்படி இருக்கும்? ஆம்! வரலாற்றில் ஒருவன் 66 ஆண்டு காலமாக நம்மை ஏமாற்றியிருக்கின்றான். நம்மை என்றால் ஒட்டுமொத்த உலகையே 66 ஆண்டுகளாக ஏமாற்றியிருக்கிறான். தான் 'உயிருடன் இல்லை' என்று உலகையே நம்ப வைத்து ஏமாற்றியி ருக்கிறான். அதன் பின்னர் பல ஆண்டுகள் உயிருடனும் வாழ்ந்திருக் கிறான். அவன் ஒரு சாதாரண மனிதன் என்றால், நாம் அவனைப் பற்றிக் கவலைப்படவே தேவையில்லை. ஆனால் 20 ஆம் நூற்றாண்டிலேயே மிகவும் கொடூரமானவன் எனக் கணிக்கப்பட்டவன் அவன். உலகத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரின் மரணங்கள் இந்த வரலாற்று மர்மத்தின் பக்கங்களாக நிரப்பப்பட்டு இருக்கின்றது. சிலரின் மரணங்களில் மர்மங்கள் இருந்தன. சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லர் ஆகியோர் உண்மையில் இறந்தார்களா என்பதே மர்மங்களாக இருப்பதாக வரலாறு பதிந்து கொண்டது. அந்த நபர் யாரென்று உங்களுக்குத் தெரியாத பட்சத்தில் நானே சொல்கிறேன். உலக வரலாற்றில் தன் பெயரை அழிக்க முடியாத கறையுடன், ஆழமாக 'அடால்ஃப் ஹிட்லர்' (Adolf Hitler) என்று எழுதியவன். (மேலும்.....) ஆனி 29, 2012 வவுனியா சிறைக் கைதிகளின் உண்ணா விரதம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது ![]() பூஸாவுக்குக் கொண்டு செல்வதாகக் கூறி, அநுராத புரம் நீதி மன்ற வழக்குத் தவணை எனத் தெரிவித்து அநுராத புரம் சிறையில் தனியறையில் தடுத்து வைக்கப்பட்டு கழிவு நீர் ஊற்றப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகிய சக கைதியை வவுனியாவுக்கே கொண்டு வர வேண்டும் எனக் கோரி வவுனியா சிறைக் கைதிகள் இரண்டாவது நாளாக நேற்றும் தமது உண்ணா விரதப் போராட்டத்தை மேற் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நட ராஜா சரவணபவன் என்ற அரசியல் கைதியே இவ்வாறு அநுராத புரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டவராவார். (மேலும்.....) ஆனி 29, 2012 பியர் டின்களால் யாழில் டெங்கு பெருகும் அபாயம்
யாழ். குடாநாட்டில் டெங்கு பரவுவதில் முக்கிய பொருட்களாக பியர் டின்கள் மற்றும் மதுப் போத்தல்கள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன. யாழ். குடாநாட்டில் தற்போது எந்த வகையான கட்டுப்பாடுகளும் இன்றி பியர் அதிகளவில் மதுபானக் கடைகள் முதல் ஏனைய கடைகளிலும் பல்வேறு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனை ஆட்கள் நடமாட்டமற்ற பகுதிகள், வயல்வெளிகள், தோட்டங்கள், கைவிடப்பட்ட காணிகள் மற்றும் இரவு வேளைகளில் வீதி ஓரங்களில் நின்றவாறு இளைஞர்கள் மிகவும் சாதாரணமாக அருந்திவிட்டு வெற்று டின்களை எறிந்து விட்டுச்செல்லும் நிலையும் காணப்படுகின்றது. மிகவும் ஆர்வத்துடன் இளைஞர்கள் பருகி வரும் பியர் டின்கள் மழைக் காலங்களில் நீர் நிரம்பி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்குக் காரணமாக அமைவதாகவும் பியர் அருந்துபவர்கள் வெற்று டின்களை பாதுகாப்பாக நீர் தேங்காத வண்ணம் கைவிட வேண்டும் எனவும் பொது சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவிக்கின்றார்கள். இச்செய்தி எமக்கு இரண்டு விடயங்களை விட்டுச் செல்கின்றது. ஒன்று யாழ்ப்பாணத்தில் நிலவும் கட்டுக்கு மீறிய இளைஞர் மத்தியில் பழக்கத்தில் உள்ள சோமபான பழக்க வழக்கங்கள். இரண்டாவது சோம பானத்தை பகிரங்கமாக பருகும் அளவிற்கு வளர்ந்துள்ள கலாச்சார சீரழிவு. இவ்விரண்டும் ஆரோக்கியமான விடயம் அல்ல. 30 வருட கால யுத்தம் விட்டுச் சென்ற சீரழிவுகள் இவை. புலம் பெயர் தேசத்து 'காலச்சார' உள்வாங்கலே முக்கியமான காரணமாவும் இருக்கின்றது இவற்றிற்கு. ஆனி 29, 2012___ முல்லைத்தீவில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்கள் வட மாகாணத்திலேயே நாட்டில் குறைந்த அளவிலான மக்கள் வசிப்பதாக நேற்று வெளியான அரசின் சனத்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிபரத் தகவல்கள் அடங்கிய ஆரம்பக்கட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி நடத்தப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் வட மாகாணத்தில் 5.2 சதவீதத்துக்கும் குறைவான மக்களே வசிக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவானவர்களே வசிப்பதாகவும் அரசின் இடைக்கால அறிக்கை கூறுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் தான் இலங்கையிலேயே குறைவான மக்கள் வசிக்கிறார்கள். அங்கு சனத்தொகைக் கணக்கீட்டின்படி 92,228 பேர் இருக்கிறார்கள். அது நாட்டின் மக்கள் தொகையில் 0.5 சதவீதமாகும். புலம் பெயர் தேசங்களிலிருந்து நாடு கடந்த தமிழீழம் என்று கூக்கிரலிடுவதை விட்டுவிட்டு எமது தாய்நிலங்களில் மீண்டும் குடியேறவேண்டும் புலம் பெயர் தேசங்களிலிருந்து. அன்றேல் யாழ்பாணத்தில் கூட தமிழ் மக்கள் சிறுபான்மையினாராகும் நிகழ்வுகள் தவிர்க்க முடியாது போய்விடும். ஒரு பல மிக்க சமூகத்தை கட்டியமைப்பதே தமிழ் சமூகத்தின் உடனடித் தேவையாக இருக்கின்றது. அதுவும் இலங்கையில் நிரந்தரக் குடிப்பரம்பல் உடையதாக இருக்கக் கூடியதாக அமையவேண்டும். செய்வார்களா புலம்பெயர் தேசத்து (இந்தியா உட்பட) தமிழ் பேசும் 'வீரர்கள்'...? ஆனி 29, 2012 மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது முற்றிலும் உறுதி
மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி அபு ஜிண்டாலிடம் நடத்தப்பட்ட விசார ணையில் இது தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இப்போது கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி அபு ஜிண்டாலிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நாங்கள் சந்தேகப்பட்ட பல விடயங்கள் உண்மையானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதத் தலைவர்களின் உத்தரவுப்படி நடந்துகொண்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என்றார். தொடர்ந்து பாகிஸ்தான் குறித்துப் பேசிய அவர், மும்பை தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதக் குழுவினர் தங்கள் நாட்டில்தான் உள்ளனர் என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. ஆனால் மும்பைக்குள் புகுந்த அஜ்மல் கசாப் உள்ளிட்ட 10 பயங்கரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்துதான் தொலைபேசி மூலம் உத்தரவுகள் வந்துள்ளன. இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் விரைவில் வெளிவரும். அப்போது பாகிஸ்தானின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். (மேலும்.....) ஆனி 29, 2012____ முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் நகர எழுச்சித்திட்டம் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிர தேச செயலகப் பிரி வில் 451 மில்லியன் ரூபா செலவில் நகர எழுச்சி திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். இத்திட்டங்களுக்கென 2011ம் ஆண்டில் 130 மில்லியன் ரூபாவும், 2012 ம் ஆண்டுக் கென 200 மில்லியன் ரூபாவும் 2013 ம் ஆண்டுக்கென 121 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கென ஜனாதிபதியின் முல்லை மாவட்ட இணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சதாசிவம் கனகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும், துணுக்காய் அபிவிருத்தி குழுவின் தலைவருமான சட்டத்தரணி ஹுனைஸ் பாருக், ஆளுநரின் ஆணையாளர் சாஹிப் மொஹிதீன், பிரதேச சபை உறுப்பினர்களான நந்தன், தீபன், பிருந்தாவணன், முல்லை பட்டதாரிகள் சங்கத் தலைவர் விஜிதரன், இணைப்பாளர் ஜொயிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர். ஆனி 28, 2012 வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகிறது? - எதிர்க்கட்சித் தலைவர் ரணில் நாட்டின் ஏனைய பகுதிகளில் தேர்தல் நடத்தும் அரசாங்கம் வடக்கில் தேர்தல் நடத்துவதற்கு ஏன் தயங்குகிறது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசேட கூட்டமொன்றில் சற்றுமுன் உரையாற்றியபோதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து உரைநிகழ்த்துகையில், வடக்கிலுள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமைகள் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்கள் விரும்பியவர்களை மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்வதற்கு இடமளிக்கப்படவில்லை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலும் வாய்ப்பளிக்கப்படவில்லை, இப்போதும் வாய்ப்பளிக்கப்படவில்லை. அப்படியென்றால் புலிகளுக்கும் இந்த அரசாங்கத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்பது நன்றாகப் புலப்படுகிறது" என அவர் மேலும் தெரிவித்தார். ஆனி 28, 2012 மன்னாரில் முற்றவெளி வீதியின் பெயரை மாற்றக் கோரிக்கை ![]()
மன்னார் நகரிலுள்ள எஸ்பிளேனட் என அழைக்கப்படும் முற்றவெளி வீதியை முதலியார் அபூப்
காசிம் மரைக்கார் வீதி என பெயர் மாற்றம் செய்யுமாறு மன்னார் நகர சபையிடம் பொதுமக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் முன்பு கேற் முதலியாராகவும்
உடையாராகவும் செயல்பட்டு மாவட்டத்திற்கும் மக்களுக்கும் சிறந்த சேவையாற்றிவந்த
முதலியார் நிலாம்தீன் முகம்மது இபுறாகிமின் மகனான முதலியார் அபூப் காசிம் மரைக்கார்
வசித்த எஸ்பிளேனட் வீதியையே அவரின் ஞாபகார்த்தமாக பெயர் மாற்றம் செய்யுமாறு நகர
சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
(மேலும்.....) சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தக் கனடா தீர்மானம் கனடா, சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தத் தீர்மானித்துள்ளது. சன் சீ கப்பல் ஊடாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவுக்குள் பிரவேசித்தமை தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு கனேடியர்களும், நான்கு இலங்கையர்களும் இவ்வாறு குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஆறு பேருக்கு எதிரான விசாரணைகளையும் துரிதப்படுத்த அந்நாட்டு நீதித்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் சந்தேக நபர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது ஒரு மில்லியன் கனேடிய டொலர் அபராதம் விதிக்கப்படக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் ஆர்வம் மற்றும் அரசியல் விவகாரம் ஆகியவற்றின் காரணமாக வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு எம்.வீ. சன் சீ கப்பலின் ஊடாக 492 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் கனடாவைச் சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ___ ஆனி 28, 2012 No difference between Govt. and LTTE - Ranil UNP Leader Ranil Wickremesinghe said today the government was acting no different to the LTTE, which was led by Prabhakaran. He told a joint common opposition news conference that the government should hold provincial council elections in the North as promised by the President earlier. The war is over now, and as promised president Rajapaksa must hold Provincial Council elections in the North. They held the General Elections and the Presidential Elections but why is the Government hesitating to hold the provincial council elections, he asked. Mr. Wickremesinghe said the people had the right to choose and the government which was violating the fundamental rights of the people was no different to the LTTE. People in the North should have the benefit of a vote. These are the very people who are demanding for an election and they are the ones who are deprived of it. If they are depriving these people of a democratic right, whats the difference between the government and the LTTE, he said. (Yohan Perara & Nishan Casseem) ஆனி 28, 2012 கிழக்கு மாகாண சபை கலைப்பு கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகள் நேற்று கலைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். மூன்று மாகாண சபைகளையும் கலைப்பதற்கான உத்தியோபூர்வ வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளி யிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மாகாண சபைகள் கலைக் கப்படுவது தொடர்பில் மூன்று மாகா ணங்களினதும் முதலமைச்சர்கள் அந் தந்த மாகாண ஆளுனர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதையடுத்து உரிய வர்த்தமானி அறிவித்தல்களில் சம்பந்தப்பட்ட ஆளுனர்கள் கையொப்பமிட்டுள்ளனர். வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக அந்த மாகாண சபைகளைக் கலைப்பது தொடர்பில் சந்தேகங்கள் நிலவின. எனினும் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மாகாண சபை முதலமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் இதற்கான இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும்.....) ஆனி 28, 2012 ஈழத்தமிழர் தாயகத்தின் முதல் நூலகம் திருகோணமலைப் பொதுநூலகம்
ஆனி 28, 2012 உலகப் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் புரட்சித் தலைவர் லெனின் உடல் புதைக்கப்படுமா?
எண்பத்தி ஒன்பது ஆண்டு களுக்கு முன்பாக உலகப் பொதுவுடைமை சிந்தனையாளர்களின் புரட்சித் தலைவர் என்று போற்றப்படும் ரஷ்யத் தலைவர் லெனின் காலமானார். இத்தனை ஆண்டுகளாக அவரது உடல் அடக்கம் செய்யப்படாமல் பதப்படுத்தி ரஷ்ய அரசால் மாஸ்கோவில் செஞ்சதுக்கம் எனும் இடத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவ்வுடலை இப்போது அடக்கம் செய்யவேண்டும் என்கிற குரல் ரஷ்யாவில் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. பல்வேறு தடைகளை தாண்டி, இடையறாப் போராட்டங்கள் மூலம் ஒரு யுகப்புரட்சியை முன்னெடுத்ததால் ஏற்பட்ட உச்சக்கட்ட மனக்களைப்பு ஆட்சியாளராக ஒரு நாளைக்கு பதினாறு மணி நேர கடும் உழைப்பு, புரட்சிக்கு முன்பாக உள்நாட்டுப் போர்களில் பங்கெடுத்ததால் ஏற்பட்ட உடல்நல குறைபாடுகள், பலமுறை இவர் மீது பிரயோகிக்கப்பட்ட கொலை முயற்சிகள், அதுபோன்ற ஒரு முயற்சியின் போது இவரது தொண்டையில் சிக்கிய துப்பாக்கிக் குண்டு, அதை நீக்க ஒரு அறுவை சிகிச்சை, இன்னும் ஏராளமான காரணங்கள். புரட்சி மூலமாக 1917 இல் ஆட்சிக்கு வந்த லெனினின் உடல் அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச் சியாக சீர்குலைவு அடைந்துகொண்டே போனதில் ஆச்சரியம் எதுவுமில்லை. (மேலும்.....) ஆனி 28, 2012 Tamil who fled Sri Lanka dies in UK A Tamil, who escaped alleged persecution in Sri Lanka and moved to the UK after gaining asylum in Germany in 1993, has died following a confrontation with a group of teenagers in the east Midlands town of Leicester. The local police have appealed for witnesses after launching a murder investigation into the death of Ponnuthurai Nimalaraja, 41, who died a week after he was found with serious head injuries sustained during the confrontation on June 9. Six boys, aged 15, 13 and four aged 14, and a girl aged 14 have been arrested as part of the murder investigation, and have been released on police bail, reports from Leicester said. The deceased's wife, Mathanika Nimalaraja, who is being supported by the local Tamil community, has urged local parents to come forward and help the investigation if they had any information about the incident. She told the Leicester Mercury, a leading local daily, that her husband faced persecution in Sri Lanka. She said: "He was beaten all over his body by soldiers from an army camp. He went to live in Colombo. "He left because it was not a safe place to live and was given asylum in Germany in 1993". Mathanika said her husband decided to move the family to England because he wanted the children to speak English, like most of the extended family, who had moved to Canada. Detective Constable Scott Cairns, a family liaison officer, said: "It is an appeal from the mother of two children left without their father to other parents to come forward and tell us what happened, to try and give this nice, hard-working family some resolution". (PTI) ஆனி 28, 2012 ராஜீவ்காந்தி கொலையாளிகள் ஆயுள் தண்டனையாக குறைக்கும் வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 10 முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந் தியின் கொலையா ளிகளின் மரண தண் டனையை ஆயுள் தண்டனையாக மாற்று வது தொடர்பான வழக்கின் இறுதி விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி உச்ச நீதி மன்றத்தில் நடைபெறும் என சட்டத்தரணி சந்திர சேகரன் அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள முருகன், சாந்தன், பேரறி வாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இவர்களது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முருகன், சாந்தன், பெரறிவாளன் ஆகியோரின் கருணைமனு ஜனாதிபதி மாளிகை செயலாளரிடம் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்பார்க்காமல் மூவரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி முடிவு எடுக்கலாம். இவ்வாறு சட்டத்தரணி சந்திரசேகர் கூறினார். ஆனி 28, 2012 கேரள கோயில் சொத்தில் தொடர்கிறது மர்மம்ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் இரகசிய அறைகளில் இருந்து புதையல்கள் எடுக்கப்பட்டு சுமார் ஓராண்டு ஆகியும் கோயிலில் இருந்து கைப்பற்றப்பட்ட புதையல்களின் மதிப்பில் தொடர்ந்து மர்மம் நீடித்து வருகிறது. மேலும் திறக்கப்படாத இரகசிய அறைகள் குறித்த மர்மமும் இன்னும் விடை காணப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் புதையல்களில் கண்டெடுக்கப்பட்ட ஆபரண கற்களின் மதிப்பு குறித்து ஜெர்மன் குழுவினர் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட நகைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வங்கி சேமிப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனி 28, 2012 ராகுலை மத்திய அமைச்சரவையில் இணைய கிருஷ்ணா கோரிக்கைநாடு சந்தித்து வரும் பிரச்சினைகளை தீர்க்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மத்திய அமைச்சரவையில் சேர வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியுள்ளார். மத்திய அமைச்சரவையில் விரைவில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில் கிருஷ்ணா இவ்வாறு கூறியுள்ளார். அவர் கூறுகையில், ராகுல் காந்தி அமைச்சரவையில் சேர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். அந்தக் கோரிக்கை இன்னும் அப்படியே உள்ளது. நாங்கள் அவரும் அரசில் இணைய வேண்டும் என்ற நீண்ட நாட்களாகவே கோரி வருகிறோம். ஆனால் அவருக்கு இப்போதைக்கு அதில் விருப்பமில்லை என்று தெரிகிறது என்றார் கிருஷ்ணா. ஆனி 28, 2012 205 மில்லியன் டொலர் கொள்ளை 13 நாடுகளைச் சேர்ந்த 24 கடனட்டை கொள்ளையர் கைது கடன் அட்டை தகவல்களை கொள்ளை யிட்ட 13 நாடுகளின் 24 பேரை அமெரிக்க உளவுப் பிரிவான எப். பி. ஐ. கைது செய்துள்ளது. நான்கு கண்டங்களை உள்ளடக்கி எப். பி. ஐ. கடந்த இரண்டு ஆண்டுகள் மேற் கொண்ட விசாரணை மூலமே இந்த கடனட்டை கொள்ளையர் பிடிபட்டுள்ளனர். இணையத்தளத்தில் போலியான விற்பனை தகவல்களை கொடுத்து வாடிக்கையாளர்களிடம் இருந்து அவர்களது கடனட்டை இலக்கங்களை கொள்ளையிடும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான கொள்ளையில் ஈடுபட்ட 12 பேர் அமெரிக்காவிலும் மேலும் 6 பேர் பிரிட்டனிலும் பிடிபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என எப். பி. ஐ. குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட ஒருவரது பெயர் இஸ்லாம். இவர் இணையதளத்தில் ஜோஷ் தி காட் என்ற பெயரில் சுமார் 50,000 கடனட்டை இலக்கங்களை கொள்ளையிட்டுள்ளார். இவ்வாறு சுமார் 400,000 கடனட்டை இலக்கங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இதன் மூலம் பற்று மற்றும் கடனட்டை வைத்திருப்போரிடம் இருந்து சுமார் 205 மில்லியன் டொலர்கள் அளவு கொள்ளையிடப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். ஆனி 28, 2012 நாம் யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் தேசம் - சிரிய ஜனாதிபதிநமது நாடு யுத்தத்திற்கு முகம் கொடுக்கும் தேசம் என சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அறிவித்துள்ளார். அஸாத் அரசுக்கு எதிராக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் எழுச்சி போராட்டம் தொடரும் நிலையில் அவர் முதல் முறையாக இவ்வாறான அறிவிப்பை வெளியிட் டுள்ளார். தனது புதிய அமைச்சரவை முன்னிலையில் உரையாற்றும் போதே அஸாத் இந்த அறிவிப்பை வெளியிட்டார். எனினும் இந்த யுத்தத்தில் வெற்றியை நோக்கி தாம் வழி நடத்துவதாக அவர் உறுதியளித்தார். அனைத்து பாகங்களிலிருந்து நாம் யுத்தத்தை சந்திக்கும் தேசத்தில் வாழ்கிறோம். இந்த யுத்த சூழலில் அனைவரும் யுத்தத்தை வெல்வதற்காக செயற்பட வேண்டும். நாம் அனைத்து நாடுக ளுடன் நல்லுறவைப் பேணவே விரும்புகிறோம். ஆனால் எமக்கு எதிராக பொய்யான தகவல்கள் வழங்கப்படுவதை நாம் உணர வேண்டும் என்று பஷர் அல் அஸாத் தனது உரையில் குறிப்பிட்டார். எனினும் சிரியாவில் தொடர்ந்தும் மோதல்கள் நீடிப்பதோடு, சிரியா துருக்கி விமானத்தை சுட்டுவீழ்த் தியதைத் தொடர்ந்து துருக்கி எல்லைப் பகுதிகளில் அந்நாட்டு இராணுவம் உஷார்நிலை யில் வைக்கப்பட் டுள்ளமை குறிப்பிடத் தக்கது. ஆனி 28, 2012 தெரிவுக்குழுவில் இணைவதா ? இல்லையா ? தமிழ்க் கூட்டமைப்பு விரைவில் இறுதி முடிவு இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பான விஷேட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பதா ? இல்லையா? என்பது பற்றி கூட்டமைப்பின் அடுத்த சந்திப்பில் பேசப்படும் என்று அக் கட்சியின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம். பி. யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தனிப்பட்ட பயணமாக இந்தியா சென்றிருந்த தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று புதன்கிழமை நாடு திரும்பியுள்ள நிலையில் அவரது இந்திய பயணத்தின் பின்னரான கூட்டமைப்பின் முதலாவது சந்திப்பிலேயே மேற்படி விடயம் பற்றிப் பேசப்படும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. குறிப்பிட்டார். (மேலும்.....) ஆனி 27, 2012 ஆட்கடத்தல் குற்றச்சாட்டில் நடராஜா மஹேந்திரன் கனடாவில் கைது
எம்வீ சன் சீ கப்பல் மூலம் 492 இலங்கை அகதிகளை கனடாவுக்குக் கடத்திய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ரோயல் கனேடியன் மவுன்டன்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நடராஜா மஹேந்திரன் என்ற நபர் ரொரொன்டோ - பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கனேடிய பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபர் இலங்கையில் இருந்து சென்ற விமானத்தில் இருந்து வெளியில் வந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். 2010 ஓகஸ்ட் மாதம் பிரிட்டிஸ் கொலம்பியா வழியாக கனடாவை சென்றடைந்த எம்வீ சன் சீ கப்பலில் அகதிகளை கடத்தியதாக நடராஜா மஹேந்திரன் உள்ளிட்ட அறுவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த ஆட்கடத்தல் குறித்த விசாரணைக்கு தாய்லாந்து, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், நோர்வே உள்ளிட்ட நாட்டு பொலிஸார் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்த ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் நால்வர் தமது பிடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கனடா கூறியுள்ளது. ஒருவர் மீது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிரான்ஸில் சரணடைய முயற்சித்து வருவதாகவும் கனடா தெரிவித்துள்ளது. ஆனி 27, 2012 மற்றுமொரு படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் விபத்து அகதிகளை ஏற்றிச் மற்றுமொரு படகு கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 150 க்கும் மேற்பட்ட அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளானவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதோடு சேத விபரங்கள் பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. இதேவேளை கடந்த 21 ஆம் திகதி 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ___ ஆனி 27, 2012 பொருளாதார வீழ்ச்சியும் மக்கள் எழுச்சியும்! (க.ராஜ்குமார்) முதலாளித்துவ வளர்ச்சி என்பது அதன் அழிவினை நோக்கி என்றார் காரல் மார்க்ஸ். இன்றைய நிகழ்வுகள் இது உண்மை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன. 1992-ல் சோவியத் ரஷ்யாவின் சிதைவுக்குப் பிறகு, முதலாளித்துவத்திற்கு மாற்று ஏதும் இல்லை என்று உரத்த குரலில் பலர் கொக் கரித்தனர். முதலாளித்துவமே இறுதி கட்டம்; இதுவே முடிவானது என்றனர். உலகெங்கும் சோசலிசத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்த கட்சிகள் கூட தங்களை கம்யூனிஸ்டுகள் அல்லது சோசலிஸ்டுகள் என்று சொல்ல அஞ்சின. கட்சியின் பெயரைக் கூட மாற்றிக் கொள்ள முடிவு செய்தன. இருபது ஆண்டு கள் கடந்த நிலையில் முதலாளித்துவ நாடு களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி யும், அதிலிருந்து மீள முடியாமல் அவை தடு மாறுவதும் இனி முதலாளித்துவம் நீடித் திருக்க முடியாது என்பதையே நமக்கு உணர்த் துகின்றன. 21ஆம் நூற்றாண்டு என்பது சோச லிச அமைப்பிற்கு உலகை கொண்டு செல்வ தற்கான ஆண்டு என்பதில் ஐயமில்லை. உலகம் முழுவதும் மக்கள் எழுச்சிகொண்டு நடத்தி வரும் போராட்டங்கள் இதை உறுதிப் படுத்துகின்றன. (மேலும்.....)ஆனி 27, 2012 இவர் இந்திய நிதியமைச்சரானால் ஏ.கே.கான் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் நாட்டின் அடுத்த நிதியமைச்சர் யார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. சர்வதேச பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நிலவும் நிலையில் நாட்டின் பொருளாதார நிலைமை சரிந்து வரும் நிலையில் நிதியமைச்சகத்தை வழிநடத்த மிகத் திறமையான ஒருவர் தேவைப்படுகிறார். இந்தப் பதவியைப் பிடிக்க மத்திய அமைச்சர்களில் மட்டுமல்லாமல், மூத்த அதிகாரிகளிடையே கூட பெரும் போட்டி நடந்து வருகிறது. நிதித்துறையில் பெரும்மாற்றங்கள் தேவைப்படுகின்றன. பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் முடுக்கி விடுவதோடு, அந்நிய முதலீட்டை இழுத்து வரும் திறமும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதோடு ரூபாயின் மதிப்பு சரிவதைக் கட்டுப்படுத்தும் திறமையும் கொண்ட ஒருவர் தான் இப்போதைய தேவை. அதே நேரத்தில் நிதித்துறை சீர்திருத்தங்கள் என்ற பெயரில் காங்கிரஸின் ஓட்டு வங்கியும் பாதிக்கப்படாத வகையில் நேக்கு போக்காக அரசியலையும் நிதி விவகாரங்களையும் கவனமாகக் கையாளும் திறன் கொண்ட ஒருவர் தேவைப்படுகிறார். அதில் முதல் சாய்ஸ் பிரதமர் மன்மோகன் சிங் தான். ஆனல், பிரதமர் பதவியோடு நிதியமைச்சர் பொறுப்பையும் வகிக்க முடியாத அளவுக்கு அவருக்க ஏராளமான பணி நெருக்கடி. இதனால் வேறு ஒருவரை நிதியமைச்சராக்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. (மேலும்.....)ஆனி 27, 2012 நகரங்களுக்கும் ஆன்மா உண்டு ![]() அண்மையில் அபுதாபி நகருக்குச் சென்றிருந்தேன். கட்டாரை விட மிகவும் வேறுபட்டு நிற்கிற நகரம் என்பது தெளிவாகத் தெரிகிறது. முக்கியமாக அங்கு உருவாக்கி வைத்திருக்கிற பசுமைப் பகுதிகள். சாலை நெடுகிலும் மரங்கள், பசும் புல்வெளிகள் என்று அமர்க்களமாக இருக்கிறது. பல அழகான விடயங்கள் இருக்கின்றன. வீடுகள் மிட்டாய்க் கடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் சதுர சதுரமான மிட்டாய்களைப் போலில்லாமல் நேர்த்தியான அமைப்பைக் கொண்டிருக்கின்றன. சாலைகளும் அதிக நெருக்கடி இல்லாமல் போக்குவரத்து சுணக்கங்கள் இல்லாமல் இருக்கின்றன. இந்த நகரத்தைப் பார்த்தபின் தான் டோஹா இன்னமும் வளருகின்ற கட்டத்திலிருப்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது. அங்குள்ள சாலைகளில் பிக்-அப் டிரக்குகள் இல்லை என்பது ஆச்சரியமான விடயம். கட்டுமானப் பணிகள் எல்லாம் முடிந்து விட்ட நகரம் என்பதை அது உணர்த்தியது. டோஹா சாலைகளில் எரிச்சலை மூட்டுகின்ற ஒரு வாகனம் இந்த பிக்-அப் டிரக்குகள். (மேலும்.....) ஆனி 27, 2012 கியூபாவின் பொது சுகாதார திட்டத்தில் யோகா! ![]() கியூபாவின் பொது சுகாதார திட்டத்தில் யோகவை சேர்க்கப்பட்டுள்ளது. மனிதனின் நல்வாழ்வுக்கு யோகாஇயற்கையானஉடற்பயிற்சியாக இருந்து வருகிறது. இதன் மூலம் நல்ல ஆரோக்கியத்தை பேன முடிகிறது என கியூபா கூறியுள்ளது. கியூபா என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது, நம் மனதிற்குள் ஓடுவது பிடல் காஸ்ட்ரோ மற்றும் புரட்சி. அடக்குமுறைகளுக்கு எதிராக அந்நாட்டு மக்களை ஒன்றுதிரட்டி பல புரட்சிகளை காஸ்ட்ரோ உள்ளிட்ட தலைவர்கள் மேற்கொண்டனர் என்பது தான். இதனால் அந்நாடு உலக மக்களிடையே புரட்சியாளர்கள் நாடு என்றே அடைமொழியோடு அழைக்கப்படுகிறது. தற்போது அந்நாட்டு மக்கள், ஆரோக்கியமான வாழ்விற்காக இயற்கையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். (மேலும்.....) ஆனி 27, 2012 சிரியா பிரச்சனையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் - ரஷ்யா சிரியா பிரச்சனையில் பதற்றத்தை அதிகரிக்க வேண்டாம் என்று ரஷ்யா வேண்டுகோள் விடுத் துள்ளது. சிரியா நாட்டில் அரசு ஆதரவுப் படைகளுக்கும், கலகக்காரர்களுக்கும் உள் நாட்டு போர் நடந்து வரு கிறது. இதனால் சிரியா மக் கள் உயிரை காக்க அண்டை நாடான துருக்கிக்குள் அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகிறார்கள். அகதிகள் பிரச்சனை சிரியாவுக்கும், துருக்கிக்கும் இடையிலான உறவில் பாதிப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை துருக்கி நாட்டு விமானம் ஒன்று சிரியா எல்லைக்குள் பறந்தது. அந்த விமானத்தை சிரியா ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதற்கு துருக்கி கடும் எதிர்ப்பை தெரி வித்தது. சர்வதேச வான வெளியில் பறந்த தங்கள் விமானத்தை சிரியா சுட்டு வீழ்த்தி விட்டதாக துருக்கி குற்றம் சாட்டியது. இது பற்றி விவாதிக்க நேட்டோ நாடுகள் அமைப்பு விதி 4-ன் கீழ் வட அட்லாண்டிக் ஒப் பந்தபடி சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று துருக்கி கோரியது. (மேலும்.....) ஆனி 26, 2012 வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அவர்கள்களின் தியாகிகள் தின செய்தி!
தோழர் பத்மநாபா அவர்கள் நடைமுறையில ஈழமக்களுக்கான புரட்சிகர விடுதலைப் போராட்டத்தோடு, தன்னை முழுமையாக அர்ப்பணித்தவரென்றாலும் அவர் ஈழத் தேசியவாதம் என்னும் குறுகிய வட்டத்துக்குள் தன்னை அடைத்து வைத்திருந்தவரல்ல என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். ஈழமக்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த இனவாத அரசியல் ஒடுக்குமுறைகளுக்கு உடனடியாக முடிவுகட்டவேண்டுமென்பதில் குறியாக இருந்தவர் எனினும் அவர் இலங்கை மக்கள் அனைவரையும் நேசித்தார்: இலங்கை தழுவிய ஒரு சோசலிசப் புரட்சியையே அவர் தனது நீண்டகால அபிலாஷையாகக் கொண்டிருந்தார். அவர் ஒரு சர்வதேசிய புரட்சிவாதி: உலகம் முழுவதுவும் அனைத்து மக்களும் அனைத்து சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் பொருளாதார சுரண்டல்களிருந்தும் அரசியல் அதிகார அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை அடைய வேண்டும் என்பதில் அவாக் கொண்டிருந்தார். அதனால் உலகம் முழுவதிலும் உள்ள முற்போக்கு தேசிய விடுதலை இயக்கங்களோடும் புரட்சிகர இயக்கங்களோடும் ஒருங்கிணைந்து செயற்படுவதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். (மேலும்.....) ஆனி 26, 2012 அரசியல் தேவைக்காக தமிழினி விடுதலை செய்யப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை - முரளிதரன் அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்காக தமிழினி விடுதலை செய்யப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் இலங்கை அரசு தனது வெளிப்படைத் தன்மையை சர்வதேசத்துக்கு காட்டும் நடவடிக்கையே அது என்றும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழினிக்கு அளிக்கப்படும் புனர்வாழ்வை ஏனைய அரசியல் கைதிகளுக்கும் அளிக்காமல் இருக்கும் அரசின் அணுகுமுறைக்கு அரசியல் நோக்கங்கள் தான் காரணம் என்று ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு முரளிதரன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)ஆனி 26, 2012 இலங்கையிலும் அப்பிள் உற்பத்தி செய்த விவசாயி கொத்மலைப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் வெளிநாட்டு அப்பிள் இனமொன்றை உள்நாட்டில உற்பத்தி செய்து வெற்றி கண்டுள்ளார். திஸ்பனை என்ற இடத்தைச் சேர்ந்த யூ.ஜீ.சோமதாச என்பவரே இம்முயற்சியில் வெற்றி கண்டுள்ளார். சுமார் நான்கு வருடங்களில் இவ் இலக்கை எய்தியதாக அவர் தெரிவித்துள்ளார். சுமார் ஆறு வருடங்கள் பழைமையான செடிகளும் இருப்பதாக அவர் கூறுகிறார். தனியாக நாற்று மேடைகளை அமைத்துள்ளதாகவும் இறக்கு மதி செய்யும் வெளி நாட்டு எப்பலுக்கு சரி நிகராக இவை இருப்பதகவும் அவர் தெரிவிக்கின்றார். வெளிநாட்டு அப்பிள் வித்துக்கள் மூலமே இவற்றை உற்பத்தி செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனி 26, 2012 ஆட்கடத்தல் தொடர்பில் இலங்கையர் ஒருவர் கைது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவரை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொரன்டோ விமான நிலையத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 492 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்கு சட்டவிரோதமான முறையில் கடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச் சாட்டின் பேரிலேயே குறித்த இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். நடராஜா மகேந்திரன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு சன் சீ கப்பலின் மூலம் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை கனடாவிற்கு கடத்தியதாக ஆறு இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டவர்களில் ஒருவராக மகேந்திரன் திகழ்கின்றார். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் நான்கு பேர் கனடாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்.....) ஆனி 26, 2012 வெளியேறு,வெளியேறு இராணுவமே வெளியேறு
லண்டனில் தியாகிகள் தின நிகழ்வுகள் இடம் பெற்றன
ஆனி 26, 2012 மன்னார் ஆயர் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் சந்திப்பு மன்னாரில் அண்மைக்காலமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் ஏற்பட்டுவரும் இடைவெளியை சீர்செய்யும் நோக்கில் மன்னார் ஆயர் பேரருட் திரு இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கும் முஸ்லிம் சமய, சமூகத் தலைவர்களுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தமிழ், முஸ்லிம் மக்களுக்கி டையில் நட்புறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்தும் ஆரம்ப கட்ட முயற்சியாக இந்த சந்திப்பு அமைந்ததுடன் மன்னார் ஆயரில்லத் தில் நடந்த இச் சந்திப் பினை மன்னார் சர்வ மதப் பேரவை ஏற்பாடு செய்திருந்தது. மன்னாரில் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த மக்கள் மன்னாரில் இனங்களுக் கிடையில், மதங்களுக்கிடையில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலை குறித்து மிகுந்த வேதனை கொண்டுள்ளனர். இச்சந்திப்பு முதற் கட்ட சந்திப்பாக அமைந்தது. எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து சந்திப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். அடுத்த கட்ட சந்திப்பில் அமைச்சர் றிசாட் பதியுதீனையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டது. ஆனி 26, 2012 முல்லைத்தீவு பகுதியில் புலிகளால் புதைத்து வைக்கப்பட்ட வாகனங்கள் , ஆயுதங்கள் மீட்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அம்பலவன்பொக்கணைப் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பாதுகாப்பான முறையில் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் ஒரு தொகுதி ஆயுதங்களை விசேட அதிரடிப் படையினர் மீட்டுள்ளார்கள். விசேட அதிரடிப்படையினர் கடந்த 20 ஆம் திகதி மேற்கொண்ட நடவடிக்கை போதே இத்தகைய பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீகுகநேசன் தெரிவித்துள்ளார். இதன்போது பின்வரும் இலக்கங்களைக்கொண்ட டிப்பர் வாகனங்கள் மூன்று, என்சி 2636 ,என்பி 1358, ஆர்பி 4397 ஆகிய இலக்கங்களைக்கொண்ட வாகனங்கள், உழவு இயந்திரம், தேக்கு மரங்கள் 104 மற்றும் கைக்குண்டுகள், 124 மோட்டர் குண்டுகள் ,135 82 இலக்கக் குண்டுகள், 37 வெடி மருந்து ,50 கிலோ 7.62 துப்பாக்கி ரவைகள், 431 12.7மில்லி மீற்றர் ரவைகள் 14 120 மில்லிமீற்றர் மோட்டர் குண்டுகள் 12 உட்பட மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ___ ஆனி 26, 2012 வடக்கு, கிழக்கில் புதிய சரணாலயங்கள், பூங்காக்களை அமைக்கத் திட்டம்வடக்கு, கிழக்கில் புதிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்களை அமைப்பது பற்றி அரசாங் கம் ஆராய்ந்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்து ள்ளது. யுத்தம் முடிவடைந்து நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையில் வனஜீவராசிகள் திணைக்களத்தின் வலயங்களில் வடக்கு, கிழக்குப் பகுதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் புதிதாக நான்கு வலயங்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொடர்பாடல் பிரிவு தெரிவித்தது. வனஜீவராசிகள் திணைக்களம் இலங் கையை 7 வலயங்களாகப் பிரித்திருந்தது. யுத்தம் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் வடமத்திய மாகாண வலயத்திற்குள்ளேயே உள்ளடக்கப்பட்டி ருந்தன. நாட்டில் சமாதானம் ஏற்படுத்தப் பட்டிருக்கும் சூழ்நிலையில் வடக்கு, கிழக்கில் புதிதாக நான்கு வலயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றையும் சேர்த்து நாடு முழுவதிலும் மொத்தமாக 11 வல யங்கள் உள்ளன. கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளிலேயே புதிதாக நான்கு வலயங்கள் உருவாக்கப்பட்டி ருப்பதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொடர்பாடல் அதிகாரி கூறினார். இந்த நிலையில் வடபகுதியில் புதிதாக தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் அமைப்பது பற்றி ஆராய்ந்து வருகின்றோம். சுண்டிக்குளம், மடுவீதி மற்றும் ஊர்கா வற்துறை ஆகிய இடங்களில் தேசிய பூங்காக்களை அமைப்பது பற்றி ஆராய்ந்து வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார். ஆனி 26, 2012 நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை, நடைமுறைக்கேற்றவை அமுல்அமெரிக்காவிடம் எவ்வித இரகசியங்களையும் கையளிக்கவில்லை கற்றுக் கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அமுலாக்கு வது பற்றிய எந்தவொரு ஆவணத்தையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டனிடம் சமர்ப்பிக்கவில்லை. கடந்த மே மாதத்தில் தாங்கள் வொஷிங்டனுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது தானோ வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அவர்களோ இலங்கையில் வெளி வரும் ஞாயிறு ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் குறிப்பிட்டது போன்று சமர்ப் பிக்கவில்லை என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க நேற்று நிராகரித்தார். இதேவேளை, பேராசிரியர் ஜீ.எல். பீரிசும் தொடர்ச்சியாக பல தடவைகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை நடை முறைப்படுத்துவது பற்றிய எந்தவொரு ஆவணத்தையோ இரகசித்திட்டத்தையோ சமர்ப்பிக்கவில்லையென்று திருமதி கிளின்டனை சந்தித்து நாடு திரும்பிய பின்னர் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்.....) ஆனி 26, 2012 யாழ். குடாவில் 4865 குடும்பங்கள் இரு வாரங்களில் மீள்குடியேற்ற திட்டம் யாழ். மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்டு மீள்குடியேறாதவர்களை இரண்டு வாரங்களில் மீள்குடியேற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மீள்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்டபோதும் பல இடங்களில் பலர் மீள்குடியேறாமல் உள்ளனர். இந்தப் பிரதேசங்களில் மக்கள் மீள்குடி யேறாதிருப்பதற்கான காரணங்கள் பிரதேச செயலாளர்களிடம் கேட்டறிந்து கொள்ளப் பட்டது. இப்பகுதி மீள்குடியேற்றங்களில் காணப்படும் தடைகளை நிவர்த்தி செய்வது பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. மீள்குடியேற்றத்துக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து இரண்டு வாரங்களுக்குள் இப்பகுதி களில் மீள்குடியேற்றம் பூர்த்திசெய்யப்பட வேண்டுமென சம்பந்தப்பட்ட தரப்பினருக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவிகள் வழங்கப்படும் என்றும், வீடு கள், மின்சார இணைப்புக்கள், பாடசாலை கள், பொதுக் கட்டடங்கள் உள்ளிட்ட உட்கட்டுமான புனரமைப்புப் பணிகளை துரித கதியில் மேற்கொள்ளப்பட வேண் டும் என்றும் முடிவெடுக் கப்பட்டுள்ளது. ஆனி 26, 2012 சுவிஸிலுள்ள பேர்ன்மாநகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது
ஆனி 26, 2012 உண்டியலைக் குலுக்க மீண்டும் வந்துட்டாங்கள் நிதி சேர் இரவு விருந்துநாள் யூன் 30 (சனிக்கிழமை) 2012நேரம் - மாலை 6.00 மணி இடம் - கனடா சிறீ அய்யப்பன் கோயில் 635 Middlefield Road Scarborough (Finch/Middlefield) சிறப்பு விருந்தினர்கள் திரு சிவஞானம் சிறிதரன், நா.உ. ததேகூ திரு சீ. யோகேஸ்வரன், நா.உ. ததேகூ அன்பளிப்பு : $75 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஆனி 26, 2012
திருமுறிகண்டியில் பொது மக்களை அச்சுறுத்துவதற்கு ஜே.வி.பி. கண்டனம்ஆக்கிரமிப்புக்கெதிராக இன்று திருமுருகண்டியில் நடைபெறவிருக்கும் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கடந்த சில தினங்களாக அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பதை ஜே.வி.பி. வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கையில், வடக்கு, கிழக்கு மக்கள் தமது சொந்தக் கருத்துக்களை வெளியிட முடியாத அதேவேளை சொந்த இடங்களில் குடியிருக்க முடியாதுள்ளனர். அதாவது கடந்த காலங்களில் சகோதரத்துவத்துக்கான மக்கள் அரண் அமைப்பினால் வவுனியாவில் வட கிழக்கில் இடம்பெறும் ஆர்ப்பாட்டம் நீதிமன்ற உத்தரவின் பேரில் தடுக்கப்பட்டது. அது போல் யாழ்ப்பாணத்தில் சில தினங்களுக்கு முன் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமும் இதேபோன்று தடுக்கப்பட்டது. (மேலும்.....) ஆனி 26, 2012 பொருளாதார மீட்சிக்கு வெளிநாடுகளின் உதவி சாத்தியமில்லை - இந்தியப் பிரதமர்நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு காண வெளிநாடுகளின் உதவியை எதிர்பார்க்க முடியாது. நாமே சில கடும் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். மெக்ஸிகோவில் ஜி 20 நாடுகள் மாநாட்டிலும், பிரேஸிலில் ரியோ பிளஸ் 20 மாநாட்டிலும் பங்கேற்றுவிட்டு சனிக்கிழமை இரவு நாடு திரும்பும் வழியில் விமானத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியது, இந்தியா போன்ற நாடுகளின் பிரச்சினைக்கு சர்வ தேச யோசனைகள் தீர்வாக இருக்காது. இதுபோன்ற கடினமான காலங்களில் நாம் வெளிநாடுகளின் உதவியை எதிர் பார்க்க முடியாது. நமது பொருளாதாரத் திட்டங்களை நாம் தான் வகுக்க வேண்டும். ஒட்டுமொத்த உள்நாட்டு உறுபத்தி 9 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக குறைந்தது. இந்தச் சரிவிலிருந்து மீள நமக்கு 2 ஆண்டுகளானது. ஆனால் தொடர்ந்து அதன்பின் ஐரோப் பிய மண்டலத்தில் பொருளாதாரத் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் செய் யப்பட்டிருந்த முதலீடுகளை விலக்கிக் கொண்ட முதலீட்டாளர்கள், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் முதலீடு செய்யத் தொடங்கி விட்டனர். இதனால், இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளில் பொருளாதார வளர்ச்சி வீதம் குறைந்துள்ளது என்றார் பிரதமர். ஆனி 26, 2012 ரெலோ இயக்கத்தை மீளமைக்க முயற்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய உயர் பீடம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பதென அக் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) உயர் பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1983 ஆம் ஆண்டு கலவரத்தில் வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட தங்கத்துரை மற்றம் குட்டி மணி உட்பட 53 பேரின் ஞாபகார்த்த கூட்டத்தை ஜூலை 25 ஆம் திகதி மன்னாரில் நடத்துவதெனவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டதாக அவ் இயக்கத்தின் அரசியல் தலைவர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தற்போது முல்லைத்தீவு மற்றும் வட மராட்சி கிழக்கு பகுதிகளில் தீவிரமடைந்துவரும் நில மற்றும் கடல் ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்துவதற்கான போராட்டங்களை கட்சித் தலைவர்கள் முன்னின்று நடத்துவதெனவும் இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு முன்னணியாக பதிவு செய்வதனை விரிவுபடுத்துதல் மற்றும் ரெலோவின் தேசிய மகாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ஆனி 26, 2012 பிரணாப் முகர்ஜி இன்று ராஜிநாமா 40 வருட அரசியல் பயணத்திற்கு முடிவு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது நிதியமைச்சர் பதவியை இன்று இராஜிநாமா செய்கிறார். இதன் மூலம் நீண் நெடிய அவரது அரசியல் பயணம் முடிவுக்கு வருகிறது. இராஜிநாமா செய்த பின்னர் அவர் ஜனாதிபதி வேட்பாளராக எதிர்வரும் 28 ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார் பிரணாப் முகர்ஜி. 28 ஆம் திகதி அவர் வேட்பு மனு தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளார். அதற்கு வசதியாக அவர் அரசியலை விட்டும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் இன்று விடை பெறுகிறார். (மேலும்.....) ஆனி 25, 2012 ஐயாவுக்கு அவசர கடிதம் வணக்கம் ஐயா...! ![]()
எங்க நலம் பற்றி சொல்வதற்கு ஒன்னும் இல்ல, நீங்க நலமா? உங்க நலத்திற்கு என்ன குறைவு...
நல்லா ஏசி ரும்ல குளுகுளுனு இருப்பிங்க, நாங்க ஓசி ரும்ல ஒதுங்கி கிடக்கிறம்... ஆனி 25, 2012 வேலணை சாட்டி கடற்கரை துப்புரவில்லை சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியம்
யாழ்ப்பாணம் வேலணை சாட்டி கடற்கரை துப்புரவில்லை எனவும் அங்குள்ள உடை மாற்றும் அறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். தீவுப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய கடற்கரையாக காணப்படும் சாட்டி கடற்கரை வேலணை பிரதேச சபையின் பராமரிப்பில் உள்ளது. அங்கு சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களுக்கு தரிப்பிட பணம் வசூலிக்கப்பட்டும் வருகின்றது. இப் பணம் கடற்கரை பராமரிப்புக்கென தெரிவிக்கப்பட்டபோதிலும் கடற்கரை கழிவுப் பொருட்கள் நிறைந்தும் கடற் தாவரங்களால் நிரம்பியும் காணப்படுவதுடன், பெண்கள் உடை மாற்றும் அறை துர்நாற்றம் வீசுவதாகவும் சுற்றுலாப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர். எனவே இப் பகுதியை மேலும் துப்புரவாக பேணும் சந்தர்ப்பத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரும் பிரதேசமாக மாற்ற முடியுமெனவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனி 25, 2012பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்த உதவியை இலங்கை அரசாங்கம் நிராகரிப்பு!
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியா வழங்க முன்வந்த உதவியை
அரசாங்கம் நிராகரித்துள்ளதுடன், இந்நடவடிக்கையை சிவில் விமான போக்குவரத்து அமைச்சின்
கீழ் கையாள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. யுத்தம்
முடிவடைந்ததைத் தொடர்ந்து காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி உட்பட வடக்கில் பல்வேறு
அபிவிருத்தித் திட்டங்களை இந்தியா முன்னெடுக்கத் தீர்மானித்தது. இதன் அடிப்படையில்
பலாலி விமான நிலையத்தை நவீனமயப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்துள்ளபோதிலும்,
இதற்கான ஒப்பந்தம் இன்னமும் கையெழுத்தாகவில்லை. எவ்வாறாயினும் இந்தியாவுடனான கூட்டு
முயற்சியின்றி பலாலி விமான நிலையத்தை புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத்
தெரியவருகின்றது.
(மேலும்.....) மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி அபு ஹம்சா கைது! மும்பையில் நடந்த கொடூர தாக்குதலில் சம்பந்தப்பட்ட முக்கிய சதிகாரனை இன்று சிறப்பு படை போலீசார் கைது செய்தனர். இவன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவன் என்று தெரிய வந்துள்ளது. மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் முக்கிய இடங்களில் கடந்த 2008 நவ 26 ம்தேதி பயங்கரவாதிகள் துப்பாக்கி மற்றும் குண்டுகள் மூலம் பயங்கர தாக்குதல் நடத்தினர். 164 பேர் கொல்லப்பட்டனர். 300 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் ஈடுபட்டவர்களில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். இந்நிலையில் டில்லி சர்வதேச விமான நிலையத்தில் சையீது ஜெயுபுதீன் என்ற அபு ஹம்சா என்பவன் பிடிபட்டுள்ளான். இவன் இந்தியன் முஜாகிதீன் அமைப்பில் சேர்ந்து பாகிஸ்தான் நாட்டில் வசித்து வந்தவன். மும்பை தாக்குதல் நடந்த போது பாகிஸ்தானில் இருந்தபடி தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டி கொடுத்தவன் என்று தெரிய வந்துள்ளது. ஹம்சாவுக்கு பெங்களூரூ ஸ்டேடியம் தாக்கப்பட்ட வழக்கு, குஜராத்தில் நடந்த சில வன்சம்பவங்களுக்கும் இவனுக்கு தொடர்பு உள்ளளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இவனை கைது செய்திருப்பது மூலம் இந்த வழக்கு முக்கியத்துவம் பெறுகிறது. பல முக்கிய சாட்சியங்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. குஜராத்தில் சில வழக்குகளிலும் தொடர்புடைய அபு தற்போது கோர்ட் உத்தரவுப்படி 15 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனி 25, 2012 இந்தியாவுடனான நட்புறவை வலுப்படுத்துவதாயின் 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த வேண்டும் - ஐ.தே.க 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தாது வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்த பெருமை பிரபாகரனுடன் கூட்டுச் சேர்ந்த உங்கள் தலைவர் பிரேமதாஸாவே சாரும். டாக்ரர் சற்று நினைவுபடுத்தி பாருங்கள் - அரசியல் விமர்சகர் இந்தியாவுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கருத்து உண்மையானால் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லா விட்டால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி அதனை இரத்து செய்ய வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியுள்ளது. (மேலும்.....)ஆனி 25, 2012 சுவிஸிலுள்ள பேர்ன்மாநகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது 24.06.2012 அன்று மாலை 15.00 மணியிலிருந்து மாலை 17.00 மணிவரை சுவிஸிலுள்ள பேர்ன்மாநகரில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் இராஐன் அவர்கள் நிகழ்விற்க்கு தலைமை தாங்கினார். இதுவரை காலமும் மக்களின் விடியலுக்காக மரணித்த தோழர்களுக்கும்இ பொதுமக்களுக்கும்இசக அமைப்பின் தோழர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள் மற்றும் ஏனைய அமைப்புக்களான புளொட், ஈ.என்.டி.எல்.எவ் தோழர்கள் மற்றும் சமூகஅக்கறையுள்ளவர்களும் பங்குபற்றியிருந்தனர் .(மேலும்.....) ஆனி 25, 2012 லண்டனில் இன்று தியாகிகள் தின நிகழ்வுகள் இடம் பெற்றன இன்று மாலை லண்டன் அல்பெர்டன் பகுதியில் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தியாகிகள் தின நிகழ்வுகள் தோழர் சிராப் தலைமையில் இடம்பெற்றது. திருமதி ரவி தேவி அவர்களின் விளக்கேற்றலுடனும், இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடனும் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன. நிகழ்வின் சிறப்பு பேச்சாளர் தோழர் சிவலிங்கம், இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏட்ப்படுத்தப்பட்டு, இருபத்தி ஐந்து வருடங்கள் பூர்த்தியாக வுள்ள நிலையில், இலங்கையின் சமகால நிலைமைகளையும், அன்று மேற்கொள்ளப்பட்ட அதிகார பரவலாக்கல் தொடர்பான முற்ச்சிகள் எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் மேற்கொள்ள பட்டிருக்கின்றன என்ற பொருளில் ஆய்வுரை ஒன்றை நிகழ்த்தினார். (மேலும்.....) ஆனி 25, 2012 மன்னார் முதல் வவுனியா மாவட்டம் வரை குடிநீர் விநியோகத்திட்டங்கள் மன்னார் முதற் கொண்டு வவுனியா மாவட்டம் வரையான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகத்திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக நீரியல்வள அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்றிரவு அக்குறணை தெழும்புகஹவத்தை என்ற இடத்தில் 24 கோடிரூபா செலவில் அமைக்கப்பட்ட குடிநீர் விநியோகத்திட்டத்தை அடுத்து இடம் பெற்ற பொதுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். சுமார் 50 வருடங்களுக்கு மேற்பட்ட காலம் குடிநீர் வசதி செய்து தரும்படி அக்குறணை தெழும்புகஹவத்தைப் பிரதேச மக்கள் வேண்டுகோள் வீடுத்து வந்த போதும் அக் கனவு இன்று நிறைவேறி உள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே முஸ்லிம்களை 100 சதவீதம் கொண்ட இப்பகுதிக்கு எதிர்வரும் றமழான் மாதம் முதல் போதியளவு குடி நீர் வசதி செய்து தரப்படும் என்றார். பிரதி அமைச்சப் பைசர் முஸ்தபாவும் உரையாற்றினார்.பல வருடங்களாக வீழ்த்த முடியாதிருந்து அக்குறணைப் பிரதேச சபையை ஐ.ம.கூட்டணி இம்முறை கைபற்றியதன் விளைவாக இக்குடி நீர் விநியோகம் இலகுவாகி உள்ளதாகவும் கூறினார். ஆனி 25, 2012 சிவசங்கர் மேனன் இலங்கை செல்கிறார் இலங்கை அரசு சமீப காலமாக இந்தியாவுக்கு எதி ரான நிலை எடுத்து வருவது குறித்து விவாதிக்க இந்திய பாதுகாப்புத்துறை ஆலோ சகர் சிவசங்கர் மேனன் இந்த வார இறுதியில் கொழும்பு செல்வார் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்தியாவின் கவலை யை கடுமையான முறையில் சிவசங்கர் மேனன் கூறக் கூடும் என்று சண்டே டைம்ஸ் பத்திரிகை கூறி யுள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஷே, பாதுகாப்புத்துறை அமைச் சர் கோத்தபய ராஜபக்ஷே ஆகியோரை சிவசங்கர் மேனன் சந்திக்க உள்ளார். சில இலங்கை அமைச்சர் கள் இந்தியாவுக்கு எதிரான நிலை எடுத்து பேசிவருவது குறித்தும் இலங்கைத்தமிழர் கள் மறுவாழ்வு பணிகளில் ஏற்பட்டுள்ள சுணக்கம் குறித்தும் சிவசங்கர் மேனன் விவாதிக்க உள்ளார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவை பிரதமர் மன்மோகன் சந்தித் துப் பேசினார். கடந்த ஏப் ரல் மாதம் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை யில் சுற்றுப்பயணம் மேற் கொண்டது. எனினும் இலங்கைத் தமிழ்மக்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில் லை என்று இந்தியா கருதுவ தாக சண்டே டைம்ஸ் பத் திரிகை கூறுகிறது. இது குறித்து சிவசங்கர் மேனன் இந்தியாவின் கவலையை மட்டுமின்றி அதிருப்தியை யும் தெரிவிப்பார் என்று அந்த ஏடு கூறியுள்ளது. ஆனி 25, 2012 தெல்லிப்பழை பொலிஸாரால் நடமாடும் சேவை தெல்லிப்பழை பொலிஸாரால் நடமாடும் சேவை சனிக்கிழமை மல்லாகம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்த நடமாடும் சேவையை காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் வலி. வடக்குப் பிரதேச சபை தவிசாளர் சோ.சுகிர்தன், சுகாதார வைத்தியதிகாரி நந்தகுமார், தெல்லிப்பழை பிரதேச செயலக நிர்வாகக் கிராம அலுவலர் சாந்த மோகன் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து இடம்பெற்ற நடமாடும் சேவையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, ஆயுர்வேத வைத்தியசாலை , பொலிஸ் மருத்துவப் பிரிவு ஆகியவற்றினால் பொது மக்களுக்காக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டதுடன் தேசிய அடையாள அட்டை, சாhதி அனுமதிப்பத்திரம் மற்றும் சிறு குற்றச் செயலகள் சம்பந்தமாக பொலிஸ் பதிவுகள் இடம் பெற்று முறைப்பாடுகள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றன. ஆனி 25, 2012 பிரபாகரன் வாழ்கிறார், அகதிகள் மரணிக்கின்றனர்
தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு தடுப்பு முகாமில் இருந்து தங்களை வெளியேற்றுமாறு அங்குள்ள முகாம் வாசிகள் கடந்த ஒருவார காலமாக உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட எட்டு பேர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூன்று பேர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈழம் பெற்றுக்கொடுப்போம் என்ற முழக்கத்தின் கீழ் அரசியல் இலாபம் ஈட்டும் தமிழ் நாட்டின் தமிழ் இனவாதக் கட்சிகள் முகாம்களில் வதைக்கப்படும் ஈழத் தமிழர்கள் குறித்துக் கண்டுகொள்வதில்லை. இன வெறுப்புணர்வைத் துண்டும் வகையில் நாம் தமிழர் கட்சி ஆவணம் ஒன்றை வெளியிட்டுருந்தது. ஈழத் தமிழர்களின் இரட்சகர்களாகத் தம்மைப் புனைந்துகொள்ளும் இவர்கள் தமிழகம் எங்கும் உள்ள முகாம்களில் வாழும் அகதிகளின் அவலம் குறித்து வாய்திறப்பதில்லை. (மேலும்.....) ஆனி 25, 2012 CITY PALITANA
PALITANA IS A CITY IN BHAVANGAR DISTRICT OF STATE OF GUJARAT, IN INDIA. IT IS SITUATED ABOUT FIFTY KILOMETERS SOUTHWEST OF BHAVNAGAR CITY. ஆனி 24, 2012 தமிழ் மக்களது காணிகளில் இராணுவம் அத்துமீறி முகாமா? வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களது காணிகளில் இராணுவத்தினர் அத்துமீறிக் குடியேறி முகாம்களை ஏற்கனவே அமைத்துள்ள தாகவும், தந்போதும் மினி இராணுவ முகாம்களை அமைத்து வருவதாகவும் பொதுவானதொரு குற்றச்சாட்டு பரவலாக எழுந்த வண் ணமுள்ளது. நெருப்பில்லாது புகைவருமா என்பது போல இந்தக் குற்றச் சாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பி னர்கள் தமது தனிப்பட்ட பிராசாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொய்யான இந்தக் குற்றச்சாட்டிற்கு இப்போது கை, கால், மூக்கு வைத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழ்க் கூட்டமைப் பின் கைப்பொம்மைகளாக இருந்த பாதுகாப்புப் படையினருக்கு எதிராக வும் பிரசாரம் செய்துவரும் யாழ். பத்திரிகைகள் சில இவ்விடயத்தை மக்களிடையே படையினர் தொடர்பாக நஞ்சை விதைப்பது போல செய்திகளை வெளியிட்டுவருகிறது. (மேலும்.....) ஆனி 24, 2012 வெளி மாநிலத்தவரிடம் உழைப்புக் கொள்ளை (காண்டீபன், சென்னை) வெளிமாநிலங்களிலிருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரிகின் றனர். அனல்மின்நிலையங்கள் அமையும் பொழுது அதில் கட்டுமானப் பணியை செய்கின்ற ஒப் பந்தக்காரர்கள், அனல் மின்நிலையம் கட்டும் இடத்திற்கு அருகாமையில் வசிக்கும் வாழ் வாதாரம் பறிக்கப்பட்ட மீனவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு ஊதியம் அதிகமாக வழங்க வேண்டும். தொழிற்சங்கம் வைத்து உரிமையை கேட்பார்கள். அதற்கு செலவு செய்ய வேண்டியிருக்கும். அதைவிட ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் சிறிது செலவு செய்தால் போதுமானது. தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பெரும் தொகையை முதலாளிகள் சுருட்டியும் விட்டார்கள்.(மேலும்.....) ஆனி 24, 2012 தமிழருக்கு ஆயுதம் தராத விடிவை அறிக்கை அரசியலா தரப்போகின்றது?
ஆனி 24, 2012 தப்பினார் அப்துல் கலாம் என் மீது அன்பும் மதிப்பும் வைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு பல தலைவர்களும் வேண்டிக் கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அன்பை மதிக்கிறேன். ஆனாலும் தற்போது எழுந்துள்ள சூழநிலைகள் அனைத்தையும் முழுவதுமாக ஆராய்ந்து பார்க்க வேண்டி உள்ளது. மேலும் ஜனாதிபதி பதவிக்கு இரண்டாவது முறையாக போட்டியிட வேண்டுமென்று எப்போதுமே நான் நினைத்துக் கூட பார்த்தது கிடையாது. ஆகவே தற்போதைய தேர்தல் களத்தில் இறங்க நான் விரும்பவில்லை. வருவார் ஆனால் வரமாட்டார் என்ற ரஜனி காந்த் பாஷையில் முழு இந்தியாவையும் பரபரப்புக்கு உள்ளாக்கிய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் தனது இறுதி முடிவைத் தெரிவித்துவிட்டார். தேர்தல் களத்தில் அவர் நிற்கிறார் என்ற போது சிலர் தலைமுடியை பிய்த்துக் கொண்டார்கள். இப்போது அவர் மறுத்ததும் வேறு சிலர் தலைமுடியைப் பிய்க்கிறார்கள். இதுதான் அரசியல். (மேலும்.....) ஆனி 24, 2012
தமிழ் பேச வெட்கப்படும் சில தமிழர்களுக்கான செய்தி இது !!
உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?இது வரை நம் தமிழர்களின் சாதனைகள் பற்றி நான் தெரிவித்திருந்த தகவல்களிலேயே மிக சிறந்த ஒன்று இது! இந்த அதிசயத்தைப் நம் மக்களுடன் பகிர்ந்துக்கொள்ள நான் பெருமையடைகிறேன். ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் "கம்போடியா" நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய "அங்கோர் வாட்" கோயில். இரண்டாம் "சூர்யவர்மன்" இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!! (மேலும்.....) ஆனி 24, 2012 பாரிஸ் மாநகரில் இலக்கிய மாலை ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன.! நாவலாசிரியர் கு. சின்னப்ப பாரதிக்குப் பாராட்டு.!! பாரிஸ் மாநகரில் எதிர்வரும் 15 -ம் திகதி (15 - 07 - 2012 ஞாயிற்றுக் கிழமை பாரிஸ் மார்க்ஸ் டோர்முவா தேவாலயக் கலையரங்கத்தில் (50 Place de Torcy - 75018 Paris)''இலக்கிய மாலை' நிகழ்வு சிறப்புற நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் புகழ் பெற்ற தமிழகப் படைப்பாளிகளும் கலந்துகொள்ளவுள்ளனர். பாரிஸ் முன்னோடிகள் இலக்கிய வட்டம், பாரிஸ் கலை இலக்கிய நண்பர்கள் வட்டம் ஆகியன ஒன்றிணைந்து நடாத்தவுள்ள இந்நிகழ்வில் ஐந்து நூல்கள் வெளியிடப்படவுள்ளன. டாக்டர் வி. ரி. இளங்கோவனின் 'தமிழர் மருத்துவம் அழிந்துவிடுமா', 'தினக்குரல்' பிரதம ஆசிரியர் வீ. தனபாலசிங்கத்தின் 'ஊருக்கு நல்லது சொல்வேன்', நந்தினி சேவியரின் 'நெல்லிமரப் பள்ளிக்கூடம்', இந்திய சாகித்திய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் இந்திரனின் 'தோட்டத்து மேசையில் பறவைகள்';, இந்திய பிரபல நாவலாசிரியர்களில் ஒருவரான கு. சின்னப்ப பாரதியின் 'சங்கம்' நாவல் பிரெஞ்சு மொழிபெயர்ப்பான ''Le Rιveil"ஆகிய நூல்கள் வெளியிடப்படவுள்ளன. (மேலும்.....) ஆனி 24, 2012 மொழிக்கொள்கை முறையாக நடைமுறைப்படுத்தப்படின் பிரச்சினைகள் சுமுகமாக தீரும்
நமது நாட்டை ஒருமைப்பாட்டிக்குள் கொண்டு வரும் போது முகங்கொடுக்கும் சவால்கள், அவற்றை வெற்றி கொள்ளும் அணுகுமுறைகள் என்பவற்றில் மொழி தொடர்பான முக்கியத்துவம், எதிர்கால திட்டங்கள் பற்றியும் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களுடன் நடாத்திய நேர்காணல். (மேலும்.....)
ஆனி 24, 2012 சுயரூபக் கோவை
(நன்றி: தினகரன்) ஆனி 24, 2012 பூந்தோட்டத்திற்கு செல்கிறார் தமிழினி விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட தலைவிகளில் ஒருவரான தமிழினியை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் ரஷ்மி சிங்கப்புலி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழினி புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுடன் வவுனியாவில் தங்கியிருந்த தமிழினியை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர். தமிழினி விரும்பினால் புனர் வாழ்வு முகாமில் புனர்வா ழ்வு பெற அனுமதிக்க முடி யும் என சட்ட மா அதிபர் திணை க்களம் புலனாய்வு பிரிவின ருக்கு அறிவித்திருந்தது. கடந்த தடவை நடைபெற்ற வழக்கு விசாரணைகளின் போது இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்தி ருந்தனர். தமிழினியின் விருப்பத்தை அறிந்துகொள்ள புலனாய்வுப் பிரிவினருக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டிருந்தார். அதன்படி வெள்ளியன்று தமிழினி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மையத்திற்கு மாற்றுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஆனி 24, 2012 யாழ்ப்பாண மக்களுக்காக ஒரு சத நிதியைக்கூட ஒதுக்காத எம்.பிக்கள்யாழ். மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பன்முகப் படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து யாழ்ப்பாண தேர்தல் தொகுதி அபிவிருத்திக்கு என எந்தவித நிதி ஒதுக்கீட்டினையும் மேற்கொள்ளவில்லை என யாழ். மாநகரசபை த.தே.கூ. உறுப்பினரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.ரெமிடியஸ் தெரிவித்துள்ளார். யாழ். தேர்தல் தொகுதியில் அடங்கும் 11 தொகுதிகளினுள்ளும் யாழ்ப்பாண தொகுதியிலேயே கணிசமான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் யாழ். மாநகரச பையும் இத்தொகுதியினுள்ளேயே அடங்கியுள்ளது. த.தே. கூட்டமைப்பு சார்பில் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட மாநகரசபை பிரதிநிதிகள் என்றவகையில் மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்டங்களை தயாரித்து த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களை அணுகிய போதும் அவர்கள் எதனையும் கிள்ளித்தர ஆயத்தமாக இல்லை. இந்நிலையில் மாநகரசபையினால் ஒதுக்கப்படும் சிறிய தொகையான பன்முகப்படுத்தப்பட்ட நிதியைக் கொண்டு எவ்வாறு நாம் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஆனி 24, 2012 தமது இருப்பிற்காக குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டும் தமிழக தலைவர்கள் சொந்தப் பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்கள் ஈழத் தமிழர் விடயத்தில் வீணே மூக்கை நுழைப்பு
அமைதியாக வாழ்வோரை ஆபத்திற்கு தள்ளிவிட வேண்டாமென எச்சரிக்கையுத்தம் இடம்பெற்றபோது அவலக்குரல் எழுப்பிய தமிழரைத் திரும்பியும் பார்க்காத தமிழகத் தலைவர்கள் தற்போது யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் தமிழ் மக்கள் தமது பிரதேசங்களில் அமைதியாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரும் நிலையில் வீணாக மூக்கை நுழைத்து தேவையற்ற பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முனைவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமது அரசியல் இருப்பிற்காக இலங்கைத் தமிழரை பகடைக் காய்களாகப் பயன்படுத்தி இவர்கள் விட்டுவரும் அறிக்கைகளும், கவிதைகளும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களை புண்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. யுத்தம் நடந்தபோது ஆட்சி அதிகாரத்திலிருந்த கருணாநிதி அப்போது மெளனமாக இருந்துவிட்டு இப்போது எதிர்க்கட்சியானதும் எகிறிப் பாய்வதாகவும், தனது குடும்பப் பிரச்சினையை இதுவரை தீர்த்து வைக்க முடியாதவர் இலங்கை மக்களது பிரச்சினை பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே தொல் திருமாளவன், சீமான், பழ நெடுமாறன் போன்ற தமிழகத் தலைவர்களும் காலம் கடந்த நிலையில் இலங்கைத் தமிழருக்கு உதவு வதாகக் கூறுவதை ஏற்க முடியாதுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தற்போது அமைதியாக இருந்தால் அதுவே இலங்கைத் தமிழரின் ஒளிமயமான எதிர்கால வாழ்விற்குச் செய்யும் பேருதவியாக இருக்கும் என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனி 23, 2012 உள்ளத்தில் இலட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது (கருணாகரன்)
ஈழப்போராட்டத்தின் முன்னோடிகளில் ஒருவராகிய புஸ்பராணி (அக்கா) அவர்களின் அகாலம் - ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகள் என்ற இந்த வரலாற்றுப் பதிவு, பல நிலைகளில் முக்கியம் பெறுகிறது. இது ஒரு வரலாற்றுப் பதிவாக மட்டுமல்லாமல், கடந்த நாற்பது ஆண்டுகால ஈழ அரசியற் போக்குகளின் மீதான விமர்சனமாகவும் இந்தப் போராட்ட காலத்திற் செயற்பட்ட முன்னோடிகளைப் பற்றிய சித்திரங்களாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போராட்டத்தின்போது தன்னுடன் இணைந்து சகபயணிகளாகச் செயற்பட்டவர்களின் வாழ்வையும் வரலாற்றையும் பதிவாக்கியுள்ளார் புஸ்பராணி. இவ்வாறு பதியப்பெறும்பொழுது, இந்தக் காலகட்டத்தின் அரசியல் இயக்கங்களைப் பற்றியும் அவற்றின் தலைமைப்பொறுப்புகளிலிருந்தோரைப்பற்றியும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள், அணுகுமுறைகள், அவர்களுடைய ஆளுமை, தனிப்பட்ட குணவியல்புகள் போன்ற முக்கியமான அம்சங்களைப் பற்றியும் கவனப்படுத்துகிறார். அதேவேளை அன்றைய சமூக அதிகார அடுக்குமுறை, இயக்கங்கள் மற்றும் கட்சிகளில் நிலவிய அசமத்தும், சிங்கள மேலாதிக்க மனப்பாங்கைக் கொண்ட இலங்கை அரசினதும் அதனுடைய பொலிஸ், சிறைச்சாலை போன்ற அதிகார அடுக்குகள் செயற்பட்ட விதங்களைப் பற்றியும் இந்தப்பதிவில் வெளிப்படுத்துகிறார். (மேலும்.....) ஆனி 23, 2012 ஒபமாவே இது எப்படியிருக்கு
பிரேஸிலில் நடைபெறும் ரியோ+20 மாநாட்டில் கலந்துகொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அஹ்மத் நெஜாட்டைச் சந்தித்துக் கலந்துரையாடி போது... ஆனி 23, 2012 வட பகுதியில் இராணுவ படைப்பலம் குறைக்கப்பட்டுள்ளது ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை தூதுக் குழுவினர் அதன் மூன்றாவது நாள் நிகழ்வில் எமது நாட்டின் வடபகுதியில் தற்போது இராணுவத்தின் பலம் குறைக்கப்பட்டிருக்கிறதென்றும் இன்று வடபகுதியில் 20 ஆயிரம் இராணுவ வீரர்களே இருக்கிறார்கள் என்றும் நாட்டின் தேசியப் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இப்போது குறைந்தளவில் இராணுவ வீரர்கள் அங்கு வைக்கப்பட்டிருப்பதாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபைக்கான பதில் தூதுவர் திருமதி மனிஷா குணசேகர அறிவித்திருக்கிறார். (மேலும்.....) ஆனி 23, 2012 கிறிஸ்மஸ் தீவு படகு விபத்து: இறந்தவர்களில் இலங்கையர் இல்லை அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ்தீவுக்கு அருகே கடலில் மூழ்கியவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லையெனப் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலில் மூழ்கிய மேலும் 90 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லையென இந்தோனேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் கூறியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், இறந்தவர்களில் இலங்கையர்கள் எவரும் இருக்கிறார்களா என்பது குறித்து அவுஸ்திரேலிய அதிகாரிகள் தரப்பில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் வெளி யிடப்படவில்லையென வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். அதேநேரம், அவுஸ்திரேலியாவுக்கும் இந் தோனேசியாவுக்கும் இடையில் கடலில் மூழ்கிய படகு இலங்கையிலிருந்து புறப்பட்ட படகு இல்லையென்றும், இது இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்ட படகு என்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனி 23, 2012 இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி மஹிந்த சந்தித்துப் பேச்சுபிரெஸிலில் நடைபெறும் ரியோ +20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் குக்குமிடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடை பெற்றுள்ளது. நேற்று முன்தினம் பிரெஸிலின் ஜெனய்ரோ நகரில் இடம்பெற்றுள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய கவனம் செலு த்தப்பட்டுள்ளது. இந்த இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு முன்பதாக இரு நாட்டுத் தலைவர்கள் மட்டும் கலந்து கொண்ட விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரி வித்தது. இந்திய-இலங்கை நாடுகளுக்கிடையில் நிலவும் நீண்ட கால நல்லுறவு சம்பந்தமாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் இந்த உறவுகள் தொடர்பில் இரு நாடுகளும் தொடர்ச்சியான அவதானத்தைச் செலுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட் டுள்ளன. நெருக்கடி நிலைமைகளின் போது பேச்சு வார்த்தை மூலம் அவற்றை சுமுகமாகத் தீர்க்க முடியுமென இப் பேச்சுவார்த்தையில் இரு கட்சித் தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதுடன், இரு தரப்புப் பேச்சுவார்த்தை போன்றே தனிப்பட்ட சந்திப்பும் சுமுகமாக இடம்பெற்றுள்ளது. ஆனி 23, 2012 பிரணாபை ஆதரிக்க மார்க்சிஸ்ட் முடிவுகுடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் முடிவு செய்துள்ளன. யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலையை இந்திய கம்யூனிஸ்ட், புரட்சிகர சோஷலிச கட்சி ஆகியவை எடுத்துள்ளன. குடியரசுத் தலைவர் வேட்பாளராக யாரை ஆதரிக்கலாம் என்பதைத் தீர்மானிக்க மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு டில்லியில் வியாழக்கிழமை கூடி விவாதித்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி யிடும் மக்களவை முன்னாள் தலைவர் பி.ஏ. சங்மாவுக்கு ஆதரவளிக்க பா.ஜ.க. எடுத்த முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனி 23, 2012 ரூபாய் மதிப்பு கடும் சரிவு எண்ணெய் இறக்குமதியாளர்களிடையே அமெரிக்க டாலரின் தேவை அதிகரித்து வருவதால் சர்வதேசச் சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிந்துள்ளது. தொடர்ந்து 5 நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. வெள்ளியன்று அதே நிலை தொடர்ந்துள்ளது. வியாழனன்று வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு ரூ.56.30 ஆக இருந்தது. வெள்ளியன்று வர்த்தக நேர தொடக்கம் முதலே இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்பட்டது. காலை ரூ. 56.87 ஆக இருந்த ரூபா யின் மதிப்பு வர்த்தக நேர முடிவில் ரூ. 57.30 ஆக குறைந்தது. இதனால் இந்தியாவின் 10 முன்னணி தொழில் நிறுவனங்களில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தீர்வேதும் இன்றி தொடரும் உலகப்பொருளாதார நெருக்கடி மேலும் முற்றியுள்ள நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் பலவும் திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ள சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைவது, இந்தியாவில் மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது. ஆனி 23, 2012 விக்கி லீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக்காவிடம் ஒப்படைக்க முயற்சி புகலிடம் தர ஈக்குவடார் முடிவு இங்கிலாந்து அரசு விக் கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேயை அமெரிக் காவிடம் ஒப்படைக்கும் விதமாக ஸ்வீடனுக்கு நாடு கடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்திருக்கிறது. ஆனால் அந்த சதிவலையில் சிக்காமல் தப்பிப்பதற்காக தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்குவடாரில் குடியேற ஜூலியன் அசாஞ்சே அனுமதி கோரி யுள்ளார். உலக அளவில் பல் வேறு நாடுகளின் உள் விவ காரங்களில் தலையிட்டு பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டு வந்த அமெரிக்கா வின் ரகசிய தகவல்களை ஜூலியன் அசாஞ்சே விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் அம்பலப்படுத்தினார். இது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து அமெரிக்காவின் அத்து மீறிய தலையீடுகளையும், சதிவேலைகளையும் விக்கி லீக்ஸ் இணையதளம் அம் ப லப்படுத்தி வருகிறது. (மேலும்.....)ஆனி 23, 2012 கனடாவில் 130வது நாளாக தொடரும் மாணவர்கள் போராட்டம் கனடாவில் கல்விக் கட் டணம் உயர்த்தப்பட்ட தைக் கண்டித்து மாணவர் கள் போராடி வருகின்றனர். அவர்களது போராட்டம் 130வது நாளை எட்டி யுள்ளது. கனடாவில் உள்ள கியூ பெக் அரசு, சமீபத்தில் கல் விக் கட்டணம் மற்றும் போராட்ட எதிர்ப்பு சட் டம் கொண்டு வந்தது. இச்சட்டத்தின் படி, கல்விக் கட்டணம் 80 சதவிகித அளவிற்கு உயர்த்தப்பட் டது. அதேபோல், போராட் டம் நடத்தவும் பல்வேறு விதிமுறைகளை நிர்ணயித் தது. இதில், போராட்டத் தில் 50 பேருக்கு மேல் ஈடு படக் கூடாது, பொது இடங்களில் கூட்டம் கூடக் கூடாது, போராட்டத்திற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே காவல்துறையினரிடம் அனுமதி பெறவேண்டும். போராட்டப்பாதையை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என பல விதி முறைகளை விதித்தது. இதற்கு அந்நாட்டு மக்களி டையே பெரும் கொந் தளிப்பு கிளம்பியது. இத னைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது, அவர்கள் இது தங்களது சுதந்திரத்தை பறிப்பது போல் உள்ளது எனக் கூறி அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். (மேலும்.....)ஆனி 23, 2012 சிரியாவிற்கு எதிரான நாசவேலையில் அமெரிக்க உளவுப் பிரிவு சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏ ரகசியமாக நாசவேலை செய்து வருவது தெரியவந்துள்ளதாக அமெரிக்கா மற்றும் அரே பிய புலனாய்வுத் துறை தகவல்களை சுட்டிக் காட்டி அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சிரியா அரசிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதன் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக உலக நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன. இந்நிலையில், அமெரிக்காவின் உளவுப் பிரிவான சிஐஏ, சிரியா உள்நாட்டுப் போருக்குப் பின்னால் மிகப்பெரும் நாசவேலையை ரகசியமாக செய்து வருகிறது எனும் அதிர்ச்சித் தகவலை அமெரிக்கா மற்றும் அரேபிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெளிக்கொணர்ந்துள்ளனர். அமரிக்காவின் சிஐஏ பிரி வினர் சிரியா மக்களைப் போல் உள்ளே நுழைந்து அந்நாட்டு அரசிற்கு எதிரான உள்நாட் டுப் போரை தீவிரப்படுத்தி வருகின்றனர். சிஐஏ பிரிவின் அதிகாரிகள் தெற்கு துருக்கியில் இருந்துகொண்டு, ரகசியமாக சிரியா அரசிற்கு எதிரான உள்நாட்டுப் போரில் ஈடுபடும் மக்க ளோடு இணைந்து, போருக்குத் தேவையான ஆயுதங்களைப் அமெரிக்காவிடமிருந்து பெற்று, அந்நாட்டு மக்களிடையேயான உள்நாட்டு கலவரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். (மேலும்.....)ஆனி 22, 2012 வெளிநாட்டு மோகமும் பரிதாபமான கட்டார் வாழ்க்கையும் ![]()
அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய
நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின்
தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப்
புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக்
கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல்
அவற்றிலொன்று. இவர் தமது விசாரணை அறிக்கையில் நிறுவனத்தின் பல
மனிதாபிமானமற்ற செயல்களைக் குறை கூறி எழுதியிருந்ததால் நிறுவன முதலாளிகள்
கோபமடைந்தனர். தமது அறிக்கையில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதால்
அவரை வேலையிலிருந்து நீக்கத் தீர்மானித்தனர். முதலாளிகள் அளித்த விளக்கம்
தொழிலாளர் நல அலுவலர் என்ற பதவி அரசாங்கம் வலியுறுத்துவதனால்
உருவாக்கப்பட்டது. அதாவது கண் துடைப்புக்காக. மனித உரிமை மீறல் குறித்து
எதையும் நீ பேசக் கூடாது என்றனர். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று
சொல்ல வேண்டிய தேவையில்லை.
(மேலும்.....) தென்மராட்சியில் 300 ஏக்கரையும் தெல்லிப்பழையில் 61 ஏக்கரையும் கைப்பற்ற இராணுவம் முயற்சி வடக்கில் இடம் பெற்று வரும் காணி அபகரிப்புக்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழக் கூடிய சூழலை உருவாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ. தே. க. கோரியுள்ளார். அதிகரித்து வரும் வாழ்க்கைச் சுமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற இச் சந்தர்ப்பத்தில் வடக்கில் இராணுவத்தினால் மேற் கொள்ளப்படும் காணி அபகரிப்பு மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குடா நாட்டில் தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1000 த்துக்கும் அதிகமான இடங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. இராணுவம் இவ்வாறு நிலை கொண்டுள்ள நிலையில் தென் மராட்சிப் பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலத்தையும் தெல்லிப் பழைப் பிரதேசத்தில் 61 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சி செய்து வருவதாக எழுந்துள்ள செய்தியினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். தற்போது யாழ். மாவட்டத்தில் வீட்டுடன் இணைந்த காணிகள் 57 இலும் 5 வெற்றுக் காணிகளிலும் அரச காணி 1 இலும் வியாபார நிறுவனம் 1 இலும் காவற்றுறையினர் குடி கொண்டுள்ளனர்.ஆனி 22, 2012 உலக வெப்பத்திற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளே காரணம் உலகம் வெப்பமயமாவதற்கு அபிவிருத்தி அடைந்த நாடுகளே காரணம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார். பிரேஸிலில் நடைபெறுகின்ற ' ரியோ-20 'மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உலகம் வெப்பமடைகின்றமை, தீவுகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் செயற்பாடுகளினால் சுற்றாடல் பாதிக்கப்படும் அதேவேளை அதன் விளைவுகளை அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் அனுபவிக்கின்றன என்று கூறியுள்ளார். மூன்று தசாப்த காலமாக நடைபெற்றுவந்த பயங்கரவாதச் செயற்பாடுகளை இல்லாதொழித்து, இலங்கை தற்போது பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனதுரையில் தெரிவித்துள்ளார் ___ஆனி 22, 2012 ஜே.வி.பிக்கும் எல்.ரி.ரி.ஈ இற்கும் இடையில் இரகசியத் தொடர்பு இருக்கின்றதா? அரசியலில் செல்லாக்காசாகி மக்களால் அரசியல் குப்பைத் தொட் டியில் தூக்கியெறியப்பட்டிருக்கும் ஜே.வி.பி. மீண்டும் தன்னு டைய தேசத்துரோக செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக பழைய குருடி கதவைத் திறடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக ரீதியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கத்தை துப் பாக்கி முனையில் அடிபணியவைத்து, அரசாட்சியை கைப்பற்ற வேண் டுமென்ற வன்முறை கலாசாரத்தை இலங்கையில் முதல் தடவையாக 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆயுதக் கிளர்ச்சியின் மூலம் ஜே.வி.பி. அறிமுகம் செய்து வைத்தது. இந்தக் காலகட்டத்தில் வடபகுதியிலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள தமிழ் இளைஞர்கள் ஆயுதப் போராட்டங்களைப் பற்றி நினைத்துகூட பார்க் காமல் தங்கள் உயர் கல்வியிலேயே முழுக்கவனத்தையும் ஈர்த்து, நாட் டுக்கு நல்லது செய்யக்கூடிய படித்த இளைஞர்களாக தங்களை உரு வாக்கிக் கொள்வதில் ஆர்வத்துடன் இருந்தார்கள். (மேலும்.....) ஆனி 22, 2012
நூல்வெளியீடு!
காலம்-30-06-2012 (சனி) - மாலை 5 மணி - இடம்-47, Shernhall, Walthamstow, E17 3EY வரவேற்புரை-நவரத்னராணி சிவலிங்கம் கருத்துரைகள் * சந்தூஷ் - தவராஜா - நிர்மலா -பௌசர் - கோவை நந்தன் ஏற்புரை-புஷ்பராணி
நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன்
அழைக்கிறோம்! ஆனி 22, 2012
இதுதான் தெளிந்த நிலைபாடு
ஆனி 22, 2012 யாழ்ப்பாணத்தில் தியாகிகள் தினம்
தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, சுபிட்சமான எதிர்காலத்திற்காக போராடி 19.06.1990 இல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபா அவர்களையும் மக்களின் விடிவுக்காக தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், இதர அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களையும் நினைவு கூர்ந்து வருடம் தோறும் ஜுன் 19ம் திகதி அனுஸ்டிக்கப்படும் தியாகிகள் தின வைபவம் இன்று (19.06.2012) பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு ஆரம்பமான அஞ்சலி நிகழ்வுகள் பிற்பகல் 2.00 மணிவரை இடம்பெற்றது. இதனை தொடர்ந்து உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இரத்த தானமும் வழங்கப்பட்டது. (மேலும்.....)
ஆனி 22, 2012 அமெரிக்கா தலைவிரித்தாடும் வறுமை, ஏற்றத்தாழ்வுகள்! உலக வல்லரசுகளில் முதலிடத்தில் இருக்கிறோம் என்ற நினைப்பில் உலக நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து தீர்ப்பு வழங்கும் அமெரிக்காவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். அமெரிக்காவில் வாழும் மக்களில் 99 சதவிகித மக்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு, அனைத்து வளங்களையும், வருமானங்களையும் ஒரு சதவிதமாக இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் பங்குவர்த்தக கட்டிடம் நிறைந்த வால்ட்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம் எனும் போராட்டம் வெடித்தது. இப்போராட்டம் அமெரிக்காவின் உண்மை முகத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக்காட்டி வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக லட்சக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நாங்கள் 99 சதவிகிதத்தினர் என்ற முழக்கத்துடன் அவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். (மேலும்.....)ஆனி 22, 2012 தமிழராய்ப் பிறந்ததே
குற்றமா? தப்பவே முடியாதா? வணக்கம் 54 நாடுகளில் தோராயமாக 15 இலட்சம் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர். இவர்களுள் 90% அகதிகளாகவே அந்தந்த நாடுகளில் வாழ்க்கையைத் தொடங்கினர். 1976 மார்கழியில் சிறையிலிருந்து விடுதலையான தமிழ் இளைஞர்கள் பதினான்கு பேர், கொழும்பிலிருந்து 1977 தொடக்கத்தில் அகதி வாழ்வு தேடிப் புலம்பெயர, அப்பதினான்மரும் இலங்கைக் கடவுச்சீட்டுப் பெற உதவினேன். யார் யார் என்பதுகூட நினைவில்லை. 1988இல் ஒருநாள் ஒருவர் என்னைக் கண்டதும் ஓடோடி வருகிறார். அண்ணை நீங்கள் கையெழுத்து வைத்து நான் தப்பினேன். இன்றைக்கு நான் அமைச்சராக இருக்கிறேன். முதல் அமைச்சர் வரதராசப்பெருமாள் அமைச்சரவையில் உறுப்பினராக அவர்.1979இல் யாழ்ப்பாணத்தில் திரு. ஈழவேந்தன் கைதாகிரார். யாழ்ப்பாணச் செயலக வாடிவீட்டில் தடுத்துவைத்து, உடல் வதைக்குள்ளான காலங்களில், உதைத்த காவலர்கள் அவரிடம் கேட்ட வினாக்களுள் ஒன்று, Where is the bugger Sachi? He is your friend. He has signed for 14 persons to obtain passports to escape. Wherever he is we will get him. 2010 கார்த்திகையில் நுணாவில் படைமுகாமின் குடிசார் அலுவலகத்திலிருந்த ஒருவர் என்னிடம் தொலைப்பேசியில் அரைகுறைத் தமிழில் கேட்ட வினா. நீ இந்தியாவிலை இரோந்து என்ன செய்யிறது தெரியும். உடனே வா படைமுகாமுக்கு. நாட்டு எல்லைகள், கடவுச்சீட்டுகள், நுழைவு அனுமதிகள் யாவும் கற்பிக்கப்படவை. இயற்கையானவையல்ல.
மனித வாழ்வு இயற்கையின் கொடை.
இன்று அனைத்துலக அகதிகள் நாள் ஆனி 22, 2012 "ஜூன்" மாத நிகழ்வு விபரம்! அமர்வு-1 நூல் அறிமுகம்-பிரக்ஞை உரை - சபேஸ் சுகுணா சபேசன் மீரா பாரதி (நூலாசிரியர் - கனடா) வழிப்படுத்துகை- நா.சபேசன் சமூகம் இயல் பதிப்பக திட்டம்-முன்மொழிவுகள் எம்-பௌசர் அமர்வு-11 தேசிய இனப்பிரச்சினையும் சிங்கள மக்களும் உரை Uvindu Kurukulasuriya (Editor -Colombo Telegraph) வழிப்படுத்துகை - சார்ள்ஸ் அன்ரனிதாஸ் காலம்- 23 ஜுன் 2012 மாலை 4.15மணி(சனிக்கிழமை) இடம் -Trinity Centre, East avenue, Eastham, E12 6SG ஆனி 22, 2012 கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு சீபிளேன் விமான சேவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய சிவில் விமான சேவைகள் அமைச்சின் அங்கீகாரத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வரை (சீபிளேன்) கடல் விமான சேவையை நடாத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் பொருட்டு கொழும்பு சீதுவைப் பிரதேசத்திலுள்ள தண்டன் ஓயா வாவியிலிருந்து இந்த பரீட்சார்த்த விமானம் புறப்பட்டு நேற்று மட்டக்களப்பு வாவியில் பரீட்சார்த்த விமானம் வந்து தரையிறக்கப்பட்டது. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு வாவியில் வந்திறங்கிய இவ்விமானத்தில் வந்த சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் வரவேற்றார். இந்த விமான பரீட்சார்த்த பணிகள் நிறைவுபெற்றதும் இந்த கடல் விமான சேவை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு பாசிக்குடா பகுதிகளுக்கு சேவையீ லீடுபடுத்தப்படவுள்ளதாக அபிவிருத்தி முகாமையாளர் சன்ஜீவ ஜெயதிலக தமது தகவலில் தெரிவித்தார். இந்த பரீட்சாத்த கடல் விமானம் மட்டக்களப்பு வாவியில் தரையிறங்குவதைக் கண்டு களிக்க பெருமளவிலான மக்கள் இப்பகுதியில் ஒன்று கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆனி 22, 2012 வவுனியா சிறையினுள் இரு தமிழ் கைதிகள் குழுக்கள் மோதல்வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இரு தமிழ்க் கைதிகள் குழுக்களுக் கிடையில் இடம்பெற்ற மோதலில் ஏழு கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இந்த மோதல் சம்பவம் நேற்றுக்காலை 9.00 மணிக்கும் 10.00 மணிக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் இருவருக்கு தலைப் பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் நீதிமன்ற உத்தரவுக்கமைய வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு தமிழ்க் கைதிகள் குழுக்களுக்கிடையே இந்த மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதமே மோதலாக மாறியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போது பாதுகாப்பு மேலும் பலப் படுத்தப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்தார். ஆனி 22, 2012 இலங்கையின் சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69 ஆயிரம்அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடி 8 இலட்சத்து 69,000 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் 36,807 கிராமங்கள் உள்ளதோடு ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வாழ்வதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன தெரிவித்தார். வாய்மூல விடைக்காக ரவி கருணாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது: இந்த கணிப்பீட்டின்படி 14,022 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளதோடு 313 பிரதேச செயலகங்கள் காணப்படுகின்றன. குடிசன மதிப்பீட்டு பணிகள் 2012 பெப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெற்றது. மொத்த சனத்தொகையில் ஒரு கோடி 5,12,000 பெண்களும் ஒரு கோடி 3,57,000 ஆண்களும் உள்ளனர். ஆனி 22, 2012 பிரணாப் முகர்ஜிக்கு சிபிஎம் ஆதரவு-பார்வர்டு பிளாக் கட்சியும் ஆதரிக்க முடிவு குடியரசுத் தலைவர் தேர் தலில் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் முடிவு செய்துள்ளன. பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்தது. தற்போ துள்ள சூழ்நிலைமையில், குடியரசுத்தலைவர் பதவிக்கு பரவலான முறையில் ஏற் றுக்கொள்ளத்தக்க ஒரு வேட்பாளர் அவரே. அதேநேரத்தில், நாட்டு மக்களின் நலன்களுக்கு எதிராக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றி வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து கடுமையாக எதிர்க்கும்; உறுதியுடன் போராடும். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் தேவபிரதா பிஸ்வாஸ், வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப் பது தமது கட்சிக்கு உடன் பாடு இல்லை என்றும், பிர ணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.ஆனி 22, 2012 சரிகிறது ரூபாய்-ஆபத்தின் பிடியில் மன்மோகன் பொருளாதாரம் ரூபாயின் மதிப்பு மிக மோசமான முறையில் சரிந்துள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு, ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 56.54 என்று வீழ்ந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மே 21ம் தேதி ரூபாயின் மதிப்பு 56.50 ஆக இருந்தது. கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர் களிடையே டாலருக்கு கிராக்கி அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணம். ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்து வருவதால் இந்திய ரிசர்வ் வங்கி அவசர கதியில் செயல்பட்டு ரூபாயைக் காப்பாற்ற நடவடிக்கைகளை எடுக்கலாம் என்று தெரிகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு வெளிநாட்டு நிதிகள் பெருமளவில் வந்ததால், ரூபாயின் மதிப்பு அதிகமாக சரியாமல் தப்பியது. ஆனால் ஏப்ரல், மே மாதத்தில் அந்நிய முதலீடுகள் குறைந்ததாலும், நிதி வரவு வீழ்ந்ததாலும் தற்போது ரூபாயின் மதிப்பு கிடுகிடுவென சரிந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து இந்த நிலை நீடிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். அடுத்த சில நாட்களில் இது மேலும் மோசமாகி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 57 ஆக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.ஆனி 21, 2012 யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தோழர் பத்மநாபாவின் 22வது நினைவுதினம் வெகுசிறப்பாக நடைபெற்றது!
EPRLF செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 22வது நினைவு தினம் இன்று மாலை நேற்று (19) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது.1990ம் ஆண்டு யூன் மாதம் 19ம் திகதி சென்னையில் உள்ள கோடம்பாக்கத்தில் தோழர் பத்மநாபாவும் அவரது தோழர்களும் புலிகள் இயக்கத்தவர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அத்துயரச் சம்பவத்தின் 22வது நினைவுதினம் தோழர் நக்கீரன் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தை ஈபிடிபியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் க.கமலேந்திரன் குத்துவிளக்கேற்றி ஆரம்பித்து வைத்தமையைத் தொடர்ந்து பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரட்ணம் சட்டத்தரணி தேவராஜன் ரங்கன் பிரபல ஊடகவியலாளர் நெல்சன் எதிரிசிங்க சிந்தன் டி சில்வா கே.சுப்பையா ஐ.சிறி ரங்கேஸ்வரன் ஆகிய தோழர்கள் உரைநிகழ்த்தினார்கள். இந்நிகழ்வில் தோழர்கள் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
ஆனி 21, 2012 மரணவிளையாட்டை நோக்கி தள்ளுவது யார்? ![]() தமிழகத்தில் சில செய்திகள் முக்கியத்துவம் தரப்படாமலேயே விட்டுவிடப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழகத் தில் தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் பிரச் சனைகள் போதுமானஅளவுக்கு விவாதிக்கப் படுவதில்லை. அண்மையில் தமிழகத்தில் பல்வேறு முகாம் களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 87 ஆண்கள், 17 பெண்கள், 19 குழந் தைகளை கேரள போலீசார் பிடித்தனர். மிகவும் ஆபத்தான முறையில் மீன்பிடி படகில் இவர் கள் ஆஸ்திரேலியா செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 17 அகதி முகாம் களிலிருந்து சென்றுள்ளனர். ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி இவர்களிட மிருந்து தலா 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சிலரால் வசூலிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....) ஆனி 21, 2012 டெல்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரகசிய ஆலோசனை? டெல்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ரகசிய ஆலோசனை நடத்த உள்ளாக கூறப்படுகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறச் சென்றுள்ளார். அவர் உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் அடைந்த பிறகு டெல்லியில் உள்ள இந்திய அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பில் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் இரா.சம்பந்தன் நிகழ்த்திய உரையை அடுத்து, அவரைக் கைது செய்யுமாறு சில கட்சிகள் குரல் எழுப்பி வந்தன. இந்த நிலையில் தான் அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்குச் சென்றுள்ளார். அவர் சென்னையில் இருந்து கொழும்பு திரும்புவதற்கு முன்பு டெல்லியில் இந்திய அரசியல் முக்கிய தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இலங்கையில் தமிழர்களின் நிலை, அவர்களின் வாழ்வாதாரம், தமிழர்களின் தற்போதைய தேவைகள், தற்போதைய சூழல் போன்றவற்றை அவர் விளக்கி கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவர் சந்திக்கவிருக்கும் அரசியல் தலைவர்கள் குறித்த தகவல்கள் மிக இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனி 21, 2012 இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 22) (அ.ஆனந்தன்) ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை வலியுறுத்திப் போராடிய கம்யூனிஸ்ட் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கவே செய்தனர். நாளடைவில் நாடாளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற வாதத்தில் மூழ்கியவையாக அக்கட்சிகள் ஆகிவிட்டதால் படிப்படியாக இனவாதத்தையும் தங்களது அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தும் கலிசடைகளாக அவையும் உருமாறிவிட்டன. எனவேதான் தமிழ் மக்களின் பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்ட போதும் அவை வாய்மூடி மெளனம் சாதித்தன. வர்க்கப் பார்வையை கைவிட்டுவிட்டு இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஜாதிய வாதத்தை கையிலெடுத்து குறுக்கு வழியில் தேர்தல் அரசியலில் ஆதாயம் அடைய முனைவதுபோல் இலங்கையில் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் செயல்பட்ட கட்சிகளில் சிலவும் மிதமிஞ்சிய சிங்கள வெறிவாதத்தை கையிலெடுக்கவும் செய்தன. எனவே இலங்கையின் இனப்பிரச்னைக்கு உண்மையான தீர்வு உழைக்கும் வர்க்கப் போராட்டத்தின் விளைவாக உருவாகும் வர்க்க பேதமற்ற சமுதாயம் அமைவதில்தான் உள்ளது. அத்தகைய வர்க்கப் போராட்டங்களே சிங்கள, தமிழ் உடமைவர்க்கங்களின் உண்மையான முக விலாசத்தை அம்பலப்படுத்தக் கூடியவை. (மேலும்.....)
ஆனி 21, 2012 Todays Matter A Husband frantically calls hotel management from his hotel room, "Please come fast I'm having an argument with my wife and she says she will jump out the window of your hotel".
ஆனி 21, 2012 பத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா
பத்தாவது சர்வதேச தமிழ் திரைப்பட விழா எதிர்வரும் June 23,2012 சனிக்கிழமை நண்பகல்12.00 மணிக்கு ஸ்காபுரோ சிவிக்சென்ரரில் நடைபெறவுள்ளது. வருகைதந்து ஊக்குவிக்குமாறு வேண்டுகின்றோம்! ஆனி 21, 2012 'நீர்வை பொன்னையன் நினைவலைகள்' நூல் வெளியீடு தற்பொழுது 82வது அகவையைக் கடந்து வாழும் இலங்கையின் மூத்த முற்போக்கு எழுத்தாளரும், இடதுசாரி அரசியல் - தொழிற்சங்க செயற்பாட்டாளருமான தோழர் நீர்வை பொன்னையன,; தனது ஆறு தசாப்தங்களுக்கும் மேலான மக்கள் பணியின் அனுபவங்களை ஏறத்தாழ 370 பக்கங்களில் வடித்துள்ளார். அவரது சுயசரிதை போல அமைந்துள்ள இந்நூலின் வெளியீட்டு விழாவும் ஆய்வரங்கும் தலைநகர் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு விபரம் வருமாறு (மேலும்.....) ஆனி 21, 2012 90 அரச நிறுவனங்களில் 1000 கோடி ரூபா மோசடி அம்பலம்கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் பல அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை செலுத்தாது இரகசியமாக பல்வேறு வீண் விரயங்களுக்கு செலவிடுவதுடன், அவைகளினால் சுமார் ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தொகை வங்கிகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வு விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சுமார் 90 கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு தெரியாதவாறு நிதி கொடுக்கல் வாங்கல் மோசடியில் ஈடுபட்டுள்ளன. நிறுவனத் தலைவர்கள் பொது திறைசேரிக்கு நிதி வழங்காமையினால் திறைசேரி அவர்களிடம் அடிக்கடி அறிவித்த போதிலும் அவர்கள் போலி காரணங்களைக் கூறி நிதி வழங்கு வதை தாமதப்படுத்தி வருவதாக பொது திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் நிதியினை நிலையான வைப்புக்கள், திறைசேரி உண்டியல்கள் என்பவற்றிலும் இரகசியமான முறையில் முதலீடு செய்வதாகவும் தெரியவந்துள்ளது. (மேலும்.....) ஆனி 21, 2012 திருமலை துறைமுக பகுதிக்குள் மீன் பிடி தடை முற்றாக நீக்கம் திருகோணமலை துறைமுக எல்லைக்குள் மீனவர்கள் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த சகல தடைகளும் நேற்று புதன்கிழமை (20) முதல் நீக்கப்பட்டுள்ளன. பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த போதிலும் ஒரு சிலர் மேற்கொள்ளும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்கும் வகையில் கடற்படையினரால் கிழக்கு மாகாண மீனவர்களுக்கென பல சட்ட திட்டங்கள் விதிக்கப்பட்டிருந்தன. திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா, மூதூர், சம்பூர், கடற்கரைச்சேனை, கெவுழியாமுனை, வெள்ளைமணல், சீனக்குடா மற்றும் கொட்பே ஆகிய பிரதேச மீனவர்களின் பாதுகாப்பை முன்னிட்டு பாஸ் வழங்கல், இரவில் மீன் பிடிக்கத்தடை குறிப்பிட்ட கடல் எல்லையில் மீன் பிடித்தல் போன்ற சட்ட திட்டங்கள் அமுல்பட்டிருந்தன. பேச்சுவார்த்தையையடுத்து இம்மாவட்ட மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டு சலுகைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.மீனவர்களின் நலன்கருதி இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் மீனவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தவறான வழிகளில் ஈடுபடக் கூடாதென கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் பிரசன்ன கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார். ஆனி 21, 2012 பாகிஸ்தான் புதிய பிரதமரை தேர்வு செய்ய பாராளுமன்றத்திற்கு ஜனாதிபதி உத்தரவுபாகிஸ்தானின் புதிய பிரதமரை எதிர்வரும் வெள்ளிக்கிழமை தேர்வு செய்யுமாறு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலானியை அந்நாட்டு நீதிமன்றம் தகுதி நீக்கம் செய்ததை அடுத்தே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளை) மாலை 5.30 க்கு பாராளுமன்ற கீழ் சபை கூடி புதிய பிரதமரை தேர்வுசெய்ய வேண்டும் என ஜனாதிபதி சர்தாரி உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை விசாரிக்க தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரதமர் யூசுப் ராசா கிலானியை பாக். உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் தகுதி நீக்கம் செய்தது. அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவியும் தகுதி நீக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை கருத்தில்கொண்டு ஜனாதிபதி சர்தாரி தனது ரஷ்ய சுற்றுப் பயணத்தை ரத்துச் செய்து கடந்த இரு தினங்களில் அவசர கூட்டங்களை நடத்தினார். இதில் நேற்று காலை நடந்த கூட்டத்தில் பிரதமர் பதவிக்கு மூத்த தலைவர் மக்தூம் ஷகாபுதீனை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனி 21, 2012 அலைக்கற்றை பிரச்சினையில் நான் செய்த 4 தவறுகள்அலைக்கற்றை பிரச்சினையில் நான் 4 தவறுகளைச் செய்துள்ளேன் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. 2-ஜி வழக்கில் பிணையில் விடுவிக்கப் பட்ட ஆ. ராசா தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு திங்கட்கிழமை வந்தார். செந்துறைப் பகுதியில் தொண்டர்களிடையே அவர் மேலும் பேசியதாவது; இந்தப் பகுதி சுயமரியாதை தீரர்கள் வாழ்ந்த பூமி. உலகத்தில் எதைப் பெற விரும்பினாலும், மற்றொன்றை இழந்துதான் பெறமுடியும். இந்தியாவில் தற்போது சாதாரண மனி தன் கையிலும் அலைபேசி இருக்கிறது. அதற்காக நான் 15 மாதம் சிறையில் இருந் துள்ளேன். நான் செய்தது 4 தவறுகள், முதல் தவறு ஸ்பெக்ட்ரம் பிரச்சினை இவ் வளவுதான் என வெளிப்படையாகக் கூறியது. 2வது தவறு ஒரு ரூபாய் என்றிருந்த அலைபேசி கட்டணத்தை 30 பைசாவாகக் குறைத்தது. 3வது தவறு நான் பதவியேற்ற போது 100கோடி இந்திய மக்கள் தொகையில் 30 கோடி பேரே அலை பேசியை பயன்படுத்தினர். சிலரின் ஆதி க்கத்தில் இருந்த இந்தத் துறையை மீட்டு, பதவியை விட்டு இறங்கும்போது, 90 கோடி பேர் அலைபேசியை பயன்படுத் தினர். இதை நான் சொல்லவில்லை, நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியது. 4வது தவறு இந்தியக் குடிமகன் சராசரியாக மாதம் ரூ. 310 அலைபேசி கட்டணமாகச் செலுத்தி வந்ததை ரூ. 100 ஆகக் குறைத்தது என்றார். ஆனி 21, 2012 கடிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கும் சுகம் மின்னஞ்சலில் வருமா?எனது காதலை கவிதையாகவும், காவியமாகவும் மாற்றியது இந்த (காதல்) கடிதங்கள்தான், மறக்க முடியுமா.......? உலகம், இரண்டு விஞ்ஞான கண்டுபிடிப்புகளால் மிகவேக வளர்ச்சி அடைந்தது. ஒன்று மின்சாரம். இரண்டு தகவல் தொடர்பு. இவை இரண்டும் இல்லாத இன்றைய உலகத்தை கற்பனையிலும் கணிக்கமுடியவில்லை. தகவல் தொடர்பு வளர்ச்சியால் இன்று சில நிமிடங்களில் தகவல் பரிமாற்றங்கள் நடந்து விடுகின்றன. இதனால் மனித உறவுகளுக்கு நன்மை எனினும், சில இழப்புகளும் உண்டு. அரசர்கள் காலத்தில் தகவல் தொடர்புகள், புறாக்கள் மூலமும் ஒற்றர்கள் வாயிலாகவும் நடைபெற்றது. பிற்காலத்தில் கடிதத் தொடர்பு ஏற்பட்டு தகவல் பரிமாற்றம் நடந்தது. செல்வந்தர்கள் வீட்டில் மட்டும் தொலைபேசி இருந்த போது இந்தக் கடிதத் தொடர்பே உறவுகளை உணர்வுபூர்வமாய் இணைத்து வைத்திருந்தது. கிராம மக்கள் இதனை தங்கள் பேச்சு வழக்கில் கடுதாசி என்று குறிப்பிட்டனர். (மேலும்.....) ஆனி 21, 2012 வடபகுதியில் இராணுவ, பொதுமக்கள் நல்லுறவு தழைத்தோங்கி வருகின்றது வடபகுதியில் இராணுவத்தினர் மீண்டும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று வெளியிடப்படும் பொய்யான தகவலுக்கு எவ்வித ஆதாரமும் இல்லையென் பதை சமீபத்தில் வடபகுதிக்கு சென்றிருந்த நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இராணுவத்தினர் மட்டுமன்றி பொலிஸாரும் வடபகுதி மக்களுடன் ஒன்றாக, ஒற்றுமையாக இருந்து வருகி றார்கள். ஓரிரு இடங்களில் மாத்திரம் வடக்கில் சோதனை நிலையங்கள் இருந் தாலும், அவற்றை உண்மையில் சோதனை நிலையங்கள் என்று நாம் பார்க்கக் கூடியதாக இல்லை. சாரதியை மாத்திரம் இராணுவ உத்தியோகத்தர்கள் அழைத்து உங்கள் வாகன அனுமதிப் பத்திரத் தின் இலக்கத்தை பதிவு செய்துவிட்டு செல்லுங்கள் என்று மிக வும் அன்பாக உரையாடுவதை நாம் அவதானித்தோம். (மேலும்.....) ஆனி 21, 2012 படை குவிப்பின் நோக்கம் குவைத் நாட்டில் தொடர்ந்து சுமார் 15 ஆயிரம் அமெரிக்க ராணுவப் படையினரை குவித்தே வைத்திருப்பதுஎன்று ஒபாமா நிர்வாகம் திட்ட மிட்டிருப்பதாக தி அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத் திற்கு அந்நாட்டின் ராணுவத் தலைமையகம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறது. வளைகுடா பிரதேசத்தில் சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய 6 நாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உலகின் எண் ணெய் வளத்தில் சரிபாதி இந்த நாடுகளில் குவிந்துகிடக்கிறது. உலகின் மொத்த இயற்கை எரிவாயு வளத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த நாடு களில்தான் இருக்கிறது. மேற்கண்ட 6 நாடுகளுமே நீண்ட கால மாகவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பிடியில் தான் இருக்கின்றன. அரேபிய எழுச்சியின் ஒரு பகுதியாக சமீப மாதங்களில் இந்த நாடுகளில் எழுந்த மக்கள் கிளர்ச்சியை ஒடுக்குவதற்கு அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்தது. (மேலும்.....)
ஆனி 20, 2012
'பொம்பளைங்க அரும, பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!' பெண்கள் இல்லாத வீடுகளில் நிகழும் தடுமாற்றங்களையும், தவறுகளையும் பார்த்துத்தான் 'பெண்கள், வீட்டின் கண்கள்! என்று சொல்லியிருப்பார்கள் போல! அதை முழுவதுமாக உணர்ந்து, தவித்து, இப்போது உயிர் துறந்திருக்கிறார் விவேகானந்தன்! மதுரை, கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். மகள், திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி, அவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டார் மருமகள். ஆக, பெண்கள் இல்லாத அந்த வீட்டில் கடைசியாக விவேகானந்தனும், மகன் விக்னேஸ்வரன் மட்டுமே! (மேலும்.....) ஆனி 20, 2012 சென்னை புழல் அகதிகள் முகாமில் தியாகிகள் தின அஞ்சலி கூட்டம்
19.6.12 அன்று காலை 8.00 மணிக்கு சென்னை புழல் அகதிகள் முகாமில் பத்மநாபா-ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் நடத்திய அஞ்சலி நிகழ்வும் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பெரும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய பொது உடமை கட்சி உப தலைவர் தோழர் சங்கர் தோழர்பத்மநாபா திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலிக்கு வந்திருந்த தோழர்களும்,பொதுமக்களும் கியூ வரிசையில் நின்று பூ தூவி பத்மநாபா அவர்களுக்கு மரியாதை செலுத்தினார். புழல் அகதிகள் முகாமில் உள்ள பத்மநாபா வாசிசசாலை முன்பாக நடைபெற்ற இந்நிழ்வானது பத்மநாபா-ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்ஸ்ரனிஸ் தலைமையில் நடைபெற்றது. (மேலும்.....) ஆனி 20, 2012 ஷேகுவேராவின் மனைவி, மகன், உறவினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு
கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ பணிகளை பூர்த்தி செய்த பின், நேற்று கியூபா, ஹவானாவில் உள்ள ஷேகுவேராவின் இல்லத்துக்கு சென்றார். ஜனாதிபதி, ஷேகுவேராவின் குடும்பத்தவர்களின் சுகநலன்களையும் கேட்டறிந்தார். ஷேகுவேராவின் மனைவி, மகன் உட்பட உறவினர்களின் சுகநலன்களை கேட்டறிந்த ஜனாதிபதி அவர்களுடன் உரையாடினார். ஷேகுவேராவின் புரட்சி வாழ்வின் இன்மை நினைவுகளை ஷேகுவேராவின் மனைவி ஜனாதிபதியிடம் நினை வூட்டினார். ஷேகுவேரா பற்றி எழுதப்பட்ட இரு நூல்களையும் அவர் ஜனாதிபதியிடம் கையளித்தார். ஜனாதிபதியைத் தமது கமெராவில் பதித்த ஷேகுவேராவின் மகன் அதனை நினைவுப் பரிசாக பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்தார். அமைச்சர்களான ஜீ. எல். பீரிஸ், அநுர பிரியதர்சன யாப்பா, விமல் வீரவன்ஸ, மஹிந்த அமரவீர, பிரதி அமைச்சர் நிரூபமா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் விஜயத்தில் இணைந்திருந்தனர். ஆனி 20, 2012 திருகோணமலையில் தியாகிகள் தினம்
22வது தியாகிகள் தினத்தை முன்னிட்டு பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி திருகோணமலை தோழர்களால் கட்சி அலுவலகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள ஸ்ரீ கற்பக பிள்ளையார் நூல் நிலையத்தில் தோழர் சத்தியன் தலைமையில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தோழர் பத்மநாபாவிற்கு அஞ்சலி செலுத்தியதுடன் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றம் இலவச கண்ணாடி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆனி 20, 2012 சிரியாவின் அமைதியைக் குறித்து ஒபாமா, புடின் ஆலோசனைசிரியாவில் தொடரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் அந்நாட்டின் அமைதியைக் குறித்தும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ஜி-20 மாநாட்டில் ஆலோசித்துள்ளனர். மெக்சிகோவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்ற இரு நாட்டு தலைவர்களும் சந்திப்பிற்கு பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். இதில் சிரியாவில் தலைவிரித்தாடும் வன்முறை கலவரங்கள் அடங்கி அமைதி திரும்புவதையே அனைத்து தலைவர்களும் விரும்புவதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும், சிரிய மக்கள் அவர்களாகவே சுதந்திரமாக ஜனநாயகரீதியில் தங்களது எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்திபல் தாங்கள் ஒன்றுபட்டுள்ளதாகவும் இருவரும் கூறியிருந்தனர். ஆனி 20, 2012 ஆரோக்கியம் காக்கும் கைப்பட்டை!சுமார் 80 பவுண் விலையுள்ள கைப் பட்டையை மணிக்கட்டில் அணிந்து கொண்டால், அது அவரது சாப்பாடு தூக்க முறைகள், உடற் பயிற்சி முறை போன்றவற்றைக் கண் காணிக்கும். அதனுடன் இணைக்கப் பட்டுள்ள கணினி மென்பொருள் வாயிலாக குறிப்பிட்ட நபர் எப்படி ஆரோக்கியமாக இருப்பது என்று தனிப்பட்ட ஆலோசனையை வழங்கும். இந்தக் கைப்பட்டையை உருவாக்கி யிருக்கும் நிறுவனமான ஐ‘போன் இது ஒரு நீடித்து உழைக்கக் கூடிய கவர்ச்சிகரமான தண்ணீரால் பாதிக்கப் படாத உபயோகமான பொருள் என்று பெருமையடித்துக்கொள்கிறது. இந்தப் பட்டையில் உள்ள அசைவு உணர்வி (மோசன் சென்சார்) இதை அணிந்திருப்பவர் எடுத்து வைக்கும் அடிகள், எரிக்கப்படும் கலோரிகள், நடக்கும் தூரம், சும்மாயிருந்த நேரத்து டன் ஒப்பிடுகையில் வேலை அல் லது பயிற்சிகளில் ஈடுபட்ட நேரம் ஆகியவற்றைப் பதிவு செய்துகொள் ளும். அத்துடன், ஒருவர் தூங்கும் நேரம் அது ஆழமான தூக்கமா, மேலோட்டமான உறக்கமா என்பன போன்ற விடயங்களும் பதிவாகும். ஆனி 20, 2012 சுவிஸ்சில் தோழர் நாபாவின் 22வது நினைவு தினம்!
தோழர் நாபாவின் 22வது நினைவு தினம். பாசிச புலிகளால் சென்னையில் படுகொலை செய்யப்பட்ட EPRLF செயளாலர் நாயகம் தோழர் பத்பநாபா அவர்களுக்கு அவர் படுகொலை செய்யப்பட்ட தினமாகிய இன்று ஆனி 19 அன்று சுவிஸ் நாட்டில் உள்ள தோழர் பத்பநாபாவின் உண்மையான விசுவாசிகளாலும் ஆதரவாளர்களாலும் பொது மக்களாலும் நினைவு கூறப்பட்டது. ஆனி 20, 2012 குழந்தைகள் பால்மா விலைகள் குறைப்புகுழந்தைகளுக்கான பால்மாக்களின் விலைகளை அரசாங்கம் குறைத்துள்ளது. உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவுமுதல் 19 வகையான குழந்தைகள் பால்மாக்களின் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்றுத் தெரிவித்தார். இதன்படி, குழந்தைகளுக்கான பால்மா பக்கற்றுக்கள் ஆகக் குறை ந்தது 2 ரூபாவாலும், ஆகக் கூடியது 404 ரூபாவாலும் குறைக்கப்பட்டு ள்ளன. இது தொடர்பான வர்த்த மானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ள்ளதாக கொழும்பில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கூறினார். நேற்று முதல் சந்தைப்படுத்தப் படும் குழந்தைகள் பால்மா பக்கற்று க்கள் புதிய விலைக்கே விற்பனை செய்யப்பட வேண்டும். இதுவிடயத் தில் நுகர்வோரை ஏமாற்றுவதற்கு வர்த்தகர்கள் முயற்சித்தால் அவர்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக் கப்படும். புதிய விலைகளைக் கண் காணிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடு ப்பார்கள். இது குறித்து நுகர்வோர் அதிகாரசபைக்கு நான் உரிய பணிப் புரைகளை வழங்கியுள்ளேன் என் றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர் னாண்டோ மேலும் கூறினார். ஆனி 20, 2012 வடக்கில் தகுதியுள்ள தொண்டர் ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்க முடிவுகணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு தகுதியுள்ள தொண்டர் ஆசிரியர்கள் உடனடியாகவே ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்படுவர் எனவும் ஏனையோர் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதிபடத் தெரிவித்தார். வன்னித் தொண்டர் ஆசிரியர் சங்கத்தினர் திங்களன்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து தமது நிரந்தர நியமனம் தொடர்பில் கலந்துரையாடியபோது, அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்; வன்னித் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனும் கல்வி அமைச்சருடனும் பல தடவைகள் கலந்துரையாடியுள்ளேன். அத்துடன் அமைச்சரவையின் முடிவும் கிடைக்க உள்ளது. தொண்டர் ஆசிரியர்களுக்கு முதன் முதலாக எமது முயற்சியின் பயனாகவே இந்த நியமனம் கிடைத்தது. அதன் பின்னர் இன்று நாடளாவிய ரீதியிலும் நியமனம் வழங்கப்பட்டு, தற்போது அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனி 20, 2012
ஆனி 20, 2012 ஐரோப்பிய யூனியனிற்கு பிரிக்ஸ் நாடுகள் 7 ஆயிரத்து 500 கோடி டாலர் நிதி உதவி கடுமையான பொருளா தார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் ஐரோப்பிய யூனியனைக் காப்பாற்ற பிரிக்ஸ் நாடுகள் இணைந்து 75 பில்லியன் டாலரை நிதி உதவியாக அளித்துள்ளன. ஐரோப்பிய யூனியன் தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால், அந் நாட்டில் பல்வேறு வங்கி கள் திவாலாகி வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையில் மூழ்கியுள்ளது. எனவே, அந்நாட்டைக் காப்பாற்ற வேண்டுமெனில், 430 பில்லி யன் டாலர் தேவைப்படுவ தாக சர்வதே நிதி நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலை யில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக் கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு ஐரோப்பிய யூனியனை பொருளாதார நெருக்கடியி லிருந்து மீட்டெடுப்பதற் காக 75 பில்லியன் டாலரை நிதியாக வழங்கியுள்ளது. (மேலும்.....)ஆனி 20, 2012 உண்மை கசக்கும் (தே.இலட்சுமணன்) இந்தி நடிகர் அமீர்கான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஸ்டார் தொலைக் காட் சியில் சமூகப் பிரச்சனைகளில் சிலவற்றை எடுத்து அதன்மீது தன் கருத்தை வழங்கு கிறார். அது விஜய் தொலைக்காட்சியிலும் தமிழில் மொழி பெயர்த்துக் காட்டப்படுகிறது. அதையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஒவ் வொரு திங்கட் கிழமையும் இந்து நாளிதழ் வெளியிடுகிறது. புகழ்பெற்ற நடிகர்கள், நடிகைகள், சில கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மக்களிடம் அதிகப் பிரபல்யம் ஆகிவிடுகிறார்கள். அந்த மக்களின் செல்வாக்கை வணிக நோக்கத் தோடு பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அவர்கள் மூலமாக நுகர்வுப் பொருள்களை விளம்பரம் செய்து கோடிக் கணக்கில் லாபம் குவிக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட வணிக உலகில் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற ஒரு நடிகர் - சில சீர் திருத்தக் கருத்துக்களை சமூக அக்கறை யோடு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் எடுத்துச் செல்லுகிறார் என்றால் அந்தக் கருத் துக்கள் கோடிக்கணக்கான மக்களிடம் பரவு வது போற்றும் செயலே. (மேலும்.....)ஆனி 20, 2012 புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது! புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மற்றும் நகரசபை உறுப்பினர் உட்பட நான்கு பேர் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் வவுனியா மாவட்ட புளொட் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட சூரி என்பவர் அவரது காலப்பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் மற்றும் இளைஞர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கியமை, ஆயுதங்களை வைத்திருந்தமை வாகனங்களை பலாத்காரமாக பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட பல குற்றச் செயல்கள் தொடர்பாகவே குறித்த புளொட் உறுப்பினர்கள் நால்வரையும் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் சூரி மீது கொள்ளை முதலான பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் அவரைப் பொலிஸார் தேடியவேளை, சூரி தலைமறைவாகியதாகவும் கூறப்படுகிறது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் வைத்து இவரைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது இவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், வவுனியா நகரசபை உறுப்பினர் எஸ்.பார்த்தீபன் உட்பட மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆனி 19, 2012 முள்ளிக்குளம் கிராமத்தைச் சூழ கடற்படைப் பாதுகாப்புடன் சிங்கள மக்கள் குடியேற்றம்! மன்னார் முசலிப் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் தற்போது கடற்படையினரின் குடும்பங்கள் மிகவும் இரகசியமான முறையில் பாதுகாப்புடன் குடியமர்த்தப்பட்ட நிலையில் வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் இடம்பெற்றபோது 07-09-2007 அன்று குறித்த முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 400 குடும்பங்கள் உட்பட முசலியில் உள்ள அனைத்து கிராம மக்களும் இடம்பெயர்ந்து சென்றனர். இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்த பின் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் கடந்த 2009ஆம், 2010ஆம் ஆண்டுகளில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டனர். இதன் போது கரடிக்குளி, மரிச்சுக்கட்டி,பாலைக்குளி,மொட்டை தீவு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த முஸ்ஸிம் மக்களும் பூக்குளம் கிராமத்தைச் சேர்ந்த நீர்கொழும்பு மக்களும் அடிப்படை வசதிகளுடன் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். (மேலும்.....)ஆனி 19, 2012 யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு சென்று வந்தவர்கள் மீது கல் வீச்சு வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாதவர்கள் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர். சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பின் கண்ணாடி உடைந்துள்ளது. இதனையடுத்து பஸ்ஸினுள் இருந்தவர்கள் மீது ஒயில் ஊற்றப்பட்மையால் பத்துக்கும் மேற்பட்டவர்களின் உடைகள் சேதமடைந்துள்ளது. ஆனி 19, 2012 லண்டனில் கொலைக் குற்றச் சாட்டு இரு இலங்கையருக்கு விளக்க மறியல் பிரிட்டனின் ஒக்ஸ் போர்ட் பகுதியில் விவசாயியான சமீர சந்திரசேன கடந்த பெப்ரவரி மாதம் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக இலங்கையர் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணைக்கு முன்னதாக பூர்வாங்க விசாரணைக்காக வாய் மூலம் சாட்சியமளிப்பதா என்பது குறித்து தீர்மானிப்பதற்கு இவர்களின் சட்டத்தரணிகளுக்கு ஜூலை 2 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஒக்ஸ் போர்ட்டில் டோமியின் வீதியிலுள்ள வீடொன்றுக்கு பெப்ரவரி 23 ஆம் திகதி தீ வைத்ததாகவும் சந்திர சேனவை கொலை செய்ததாகவும் மேற்படி இருவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. துவான் பிவாஸ் சவால் ( 23 ) விராஜ் அழகக் கோன் ( 33 ) ஆகியோரே இவ் விரு இலங்கையர்களாவர். 28 வயதான சந்திர சேனவின் உடல் அவரின் வாடகை வீட்டில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீயின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனி 19, 2012 ஜுன் -19 தியாகிகள் தினம் தோழர்பத்மநாபா மற்றும் அனைவரையும் நினைவு கொள்வோம். தோழர்பத்மநாபா மற்றும் பன்னிரு தோழர்கள் புலிகளால் 19.06.90 அன்று சென்னை சூளைமேட்டில் வைத்து படுகாலை செய்யப்பட்டனர். இந்நாளை அவரது கட்சியினர் தியாகிகள் தினமாக வருடாவருடம் அதே நாளில் கடைபிடித்து வருகின்றனர். இலங்கையின் தமிழர் உரிமை போராட்டமானது மிக நேர்த்தியாக சென்றுகொண்டிருந்த போது அது திசை மாறி சகோதர படுகொலை எனும் ஒரு மோசமான நிலைக்குள் சென்று ஆண்டம் கண்டது. அன்றே அதன் பின் விளைவுகளை நேர்த்தியாக தீர்க்க தரிசனத்துடன் முன்வைத்தவர் தோழர்பத்மநாபா என்றால் அது மிகையாகாது. இன்று அந்த சகோதர படுகொலைகளின் விளைவே நாம் ஒன்றும் இல்லாதவர்களாக ஆக்கப்பட்டு நிற்கிறோம் என்பதனை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். (மேலும்.....) ஆனி 19, 2012 22-வது தியாகிகள் தினம் 19.06.2012 காலை 8.00 மணிக்கு புழல் அகதிகள் முகாமில் உள்ள தோழர் பத்மநாபா வாசிகசாலை முன்பாக நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில் அனைவரையும் கலந்து கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம். பத்மநாபா - ஈ.பி.ஆர்.எல்.எப் (சென்னை) ஆனி 19, 2012
ஆனி 19, 2012 எங்களை நல்வழிப்படுத்திய எங்கள் தோழர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலைமுன்னணி செயலாளர் நாயகம் க.பத்மநாபாவுக்கும் அருமைதோழர்களுக்குமான அஞ்சலிகவிதை உங்களி வழி எங்கள் பயணம் தோழர்களே
ஆனி 19, 2012 தொற்றா நோய்களின் தாக்கம் உலகில் 44 மில்லியன் பேர் உயிரிழக்கும் அபாயம்தொற்றா நோய்கள் காரணமாக அடுத்துவரும் பத்து வருடங்களில் 44 மில்லியன் பேர் உலகில் உயிரிழப்பர் என்று உலக வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் தொற்றா நோய்கள் காரணமாக தென்னாசிய நாடுகளில் 10.4 மில்லியன் பேர் உயிரிழப்பர் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கையில் நால்வரில் ஒருவர் தொற்றா நோயான நீரிழிவு நோயின் அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது இலங்கையின் அரசாங்க ஆஸ்பத்திரிகளில் உயிரிழப்பவர்களில் பெரும் பகுதியினர் தொற்றா நோய்களுக்கு உள்ளானவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டி ருக்கின்றது. தொற்றா நோய்களைத் தவிர்ப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்குமான ஆசியக் கூட்டமைப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று ஒழுங்கு செய்திருந்த நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு உரை யாற்றும்போதே பிரதி சுகாதார அமைச்சர் லலித் திஸாநாயக்கா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஆனி 19, 2012 கிரீஸ் பொதுத்தேர்தலில் குடியரசு கட்சி வெற்றி கிரீஸ் நாடாளுமன்றத் திற்கு நடைபெற்ற தேர்த லில் குடியரசு கட்சி அதிக இடங்களை கைப்பற்றி யுள்ளது. கிரீஸ் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர் தலில் எந்த கட்சிக்கும் அருதிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் மற்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கும் முயற்சி யும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இரண்டா வது முறையாக ஞாயிறன்று பொதுத்தேர்தல் நடை பெற்றது. இதில் குடியரசு கட்சிக்கும், சிரிசா கட்சிக் கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. குடி யரசு கட்சி ஐரோப்பிய ஒன் றிய நாடுகளின் பொதுவான நாணயமான யூரோவை தொடர்ந்து பயன்படுத்து வது என கொள்கை முடி வெடுத்து ஆதரித்து வந்தது. இதற்கு எதிராக சிரிசா கட்சி ஐரோப்பிய ஒன்றியம் கொடுக்கும் கடனுதவியை வாங்கக் கூடாது என்பது டன், ஐரோப்பிய ஒன்றியத் தில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என தனது நிலை யை வலியுறுத்தி பிரச்சாரம் செய்து வந்தது. இந்நிலையில் கிரீஸ் நாட்டில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வந்தது. மேலும் கடனில் சிக்கித் தவித்து அரசு கஜானா காலியாகும் சூழல் உருவானது. இந்நிலையில் அங்கு நடைபெற்ற பொதுத் தேர்தல் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாக கருதப் பட்டது. இந்நிலையில் குடி யரசு கட்சியே அதிக இடங் களை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித் துள்ள குடியரசு கட்சி தலை வர் அந்தோனிஸ் சமராஸ், கிரீஸ் தனது பயன்பாட் டுக்கும் உபயோகிப்பதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தி லிருந்து விலகிச்செல்லாது இருப்பதற்கும் கிரீஸ் மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால்தான் இந்த தேர்த லின் முடிவாக குடியரசு கட்சி வெற்றி பெற்றிருக் கிறது என தெரிவித்தார். ஆனி 19, 2012 வடமாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் - வாசுதேவநாணயக்கார!கண்ணிவெடி, மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களைக் காரணங்காட்டி வடமாகாணசபைத் தேர்தலை நடத்தும் விடயத்தில் அரசு காலங்கடத்திவரும் இவ் வேளையில், வடமாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சரும், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளருமான வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். வடமாகாணசபைத் தேர்தலை காலம் தாழ்த்தாது நடத்தப்படவேண்டியதன் முக்கியத்துவத்தை அரசுக்கு முக்கிய பிரமுகர்கள் விவரித்துவரும் நிலையிலேயே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்ட கருத்தை முன்வைத்துள்ளார். வடமாகாணசபைத் தேர்தல் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார். கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கை, மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கையில்தான் வடக்கில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. அப்படியானால் ஏன் மாகாணசபைத் தேர்தலை நடத்தமுடியாது என்ற கேள்வி எழும்புகின்றது அல்லவா? ஆனி 19, 2012 களத்தில் இல்லை கலாம் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டி யிடப்போவது இல்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் திங்களன்று அறிவித்தார். இதுதொடர்பாக தில்லியில் திங்களன்று அப்துல் கலாம் வெளியிட்டுள்ள அறிக்கை யில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர் பான பிரச்சனையின் ஒட்டுமொத்த தன்மை யை உணர்ந்தும், தற்போது நிலவும் அரசியல் சூழலை கருத்தில் கொண்டும் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக தெரிவித் துள்ளார். மீண்டும் ஒருமுறை குடியரசுத் தலை வர் பதவியில் இருந்து செயல்படுவதற்கான விருப்பமோ அல்லது தேர்தலில் போட்டி யிட வேண்டுமென்ற ஆர்வமோ எனக்கு ஒரு போதும் இருந்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ள அப்துல்கலாம், என்ற போதிலும், தான் வேட்பாளராக இருக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜியும் இதர அரசியல் கட்சிகளும் விரும்பினர் என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோன்ற விருப்பத்தை ஏராளமான குடிமக்கள் என்னிடம் வெளிப்படுத் தினார்கள், அது என் மீதான அவர்களது அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்து கிறது. என்மீதான மக்களின் உணர்வுகளை காட்டுகிறது. இந்த ஆதரவினால் நான் உண்மையில் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ள அப்துல்கலாம், இது அவர்களது விருப்பமாக இருக்கிறது; இந்த உணர்வை நான் மதிக்கிறேன்; என்மீது நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆனி 19, 2012 வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் தொடர்பில்: இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம்!இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் இரட்டைக் குடியுரிமை தொடர்பிலான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் போது புதிய நடைமுறைகள் பின்பற்றப்படஉள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார். வேறும் ஓர் நாட்டில் குடியுரிமை உடைய நபர் ஒருவர்இலங்கையில் இரட்டைக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்தால், முதலில் ஐந்து ஆண்டுகள்வதிவிட உரிமை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஐந்து ஆண்டுகளின் பின்னரே குறித்த நபருக்கு இரட்டைக் குடியுரிமை அந்தஸ்து வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக் கொண்ட இலங்கையர்கள் எவ்வாறு குடிரிமை பெற்றுக் கொண்டார்கள் என்பது பற்றிய விபரங்களை வெளியிட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். என்ன காரணத்திற்காக இலங்கையில் குடியுரிமை கோரப்படுகின்றது என்பது பற்றியும் விளக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார். இரட்டைக் குடியுரிமை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிப்போர் கட்டணமாக இரண்டு தவணைக்குள் 200,000 ரூபாவினை செலுத்த வேண்டுமென குறிப்பிடப்படுகிறது. சட்ட திருத்தங்கள் கொண்டு வரும் நோக்கில்இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கை இந்த ஆண்டு ஆரம்பம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆனி 19, 2012 எகிப்து தேர்தலில் முகமது மோர்சி வெற்றி எகிப்தின் புதிய அதிப ராக முகமது மோர்சி தேர்ந் தெடுக்கப்பட்டதாக அறி விக்கப்பட்டுள்ளது. எகிப்தில் அதிபராக இருந்த ஹோசினி முபா ரக்குக்கு எதிராக மக்கள் புரட்சி நடத்தினர். இதற்கு அமெரிக்கா மறைமுகமாக ஆதரவு அளித்தது. முபாரக் அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் முன்னாள் அதிபர் அன்வர் கொலை வழக்கில் தண டனை விதிக்கப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டுள் ளார். மக்கள் ஆதரவுடன் ராணுவம் ஆட்சியை பிடித் தது. புதிய அதிபர் தேர்ந் தெடுக்கப்படும் வரை ராணுவ தலைமைக் குழு ஆட்சியை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ராணுவ தலைமைக்குழு தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முயன்றது. இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் மீண்டும் போராட் டத்தில் குதித்தார்கள். இதை யடுத்து ராணுவம் மக்கள் போராட்டத்துக்கு பணிந்தது. சில நாட்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் அகமது சபீக்கும், நீதிக் கட்சியின் தலைவர் முகமது மோர்சியும் போட்டியிட் டார்கள். தேர்தலில் முகமது மோர்சி வெற்றி பெற்றதாக ராணுவ தலைமைக் குழு திங் களன்று அறித்தது. மக்கள் தேர்தல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ராணுவ தலைமைக் குழு கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் அமெரிக்க ஆதர வுடன் நடத்தப்பட்ட இந்த தேர்தல் முடிவை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள் என்று ராணுவ தலை மைக் குழு அஞ்சுகிறது. இத னால் தேர்தல் முடிவை அர சியல் அமைப்புச் சட்ட அறி விப்பாக வெளியிட்டுள்ளது. இதற்கிடையே தேர்தல் முடிவுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினால் அவர்களை ஒடுக்கவும் ஆட்சியாளர்கள் திட்ட மிட்டுள்ளனர். ஆனி 18, 2012
ஆனி 18, 2012 22 பேர் சிங்களவர்கள், 03 பேர் முஸ்லிம்கள் டாக்டர்கள் சேவையாற்றுகின்றமுல்லைத்தீவு பெரியாஸ்பத்திரி தமிழ் வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை மத்தியில் திருப்திகரமான மக்கள் சேவைவைத்திய நிபுணர்களின் பற்றாக்குறைக்கு மத்தியிலும் முழுமை பெற்ற ஆஸ்பத்திரி யாக முல்லைத்தீவு பெரிய ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. ஏ 4 பாதைக்கு அருகிலுள்ள இந்த பெரியாஸ்பத்திரி விடுதலைப் புலிகளால் சேதமாக்கப்பட்டு தற்போது முழுமைபெற்ற ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டுள்ளது. ஆகப் பிந்திய மருத்துவ உபகரணங்களும், சிகிச்சை வசதிகளும் இங்கு உள்ளன. விடுதலைப் புலிகள் தம்மவருக்கு மட்டுமே இந்த ஆஸ்பத்திரியை பயன் படுத்தினர். வறிய மக்களுக்கு இங்கு செல்ல வசதியே இருக்கவில்லை. இந்த ஆஸ்பத்திரியில் 25 இளம் டாக்டர்கள் சேவையாற்றுகின்றனர். 22 பேர் சிங்களவர்கள். 03 பேர் முஸ்லிம்கள். இந்த 25 டாக்டர்மாரும் சிறப்பாக மருத்துவப் பணி செய்கின்றனர். விடுதலைப் புலிகள் இளைஞர்களையும், சிறுவர்களையும் கடத்தினர். இதனால் எல்.ரி.ரி.ஈ. யினரின் காலத்தில் மக்கள் ஒருபோதும் இந்த ஆஸ்பத்திரிக்குச் செல்லவில்லை என வசந்தராஜா கிருத் திகா என்ற 22 வயது பெண் நோயாளி தெரிவித்தார். (மேலும்.....) ஆனி 18, 2012 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.06.2012) பத்மநாபா அவர்களின் 22வது ஆண்டு நினைவுநாள் யாழில்
கொலைகார புலிபாசிஸ்டுக்கள் துப்பாக்கிச் சூட்டுப் பிரயோகத்தில் உயிரிழந்த பத்மநாபா
அவர்களின் 22வது ஆண்டு நினைவுநாள் யாழில். இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர்
வரும் 24 ம் திகதி லண்டனில்! EPRLF செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் 22வது
நினைவுதினம் யாழில் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டுக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (19.06.2012) பி.ப. 3.00 மணிக்கு யாழ். வீரசிங்கம்
மண்டபத்தில் இடம்பெறவுள்ள மக்கள் தலைவன் தோழர் பத்மநாபாவின் நினைவுதினத்தினை
அனுஷ்டிக்க அவரின் கொள்கை வழி நடந்தோர் நடப்போர் நடப்பதற்காய் விரும்புவோர்
அனைவரையும் ஒன்றுகூடுமாறு ஏற்பாட்டுக்குழுவினர் தோழமையுடன் அழைப்பு விடுத்துள்ளனர். விலைவாசிக்கு எதிராக ஜே.வி.பி. துண்டுப்பிரசுரம் விநியோகம் தற்போது நாட்டில் அதிகரித்துவரும் பொருட்களின் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) மட்டக்களப்பு நகரில் இன்று காலை துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர். (ஜே.வி.பி.) கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரே இத்துண்டுப் பிரசுரங்களை மட்டக்களப்பு பொது சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களில் கூடியிருந்த மக்களிடம் கையளித்தனர். நீதியான தேசம். நேர்மையான சமுதாயம். அடிமையில்லா மனிதன். மக்களை வதைக்கின்ற ஆட்சிக்கு எதிராக நல்லதோர் ஆட்சியை உருவாக்குவதற்காக அணிதிரள்வோம் என்ற தலைப்பில் இத்துண்டுப்பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. மட்டக்களப்பில் வீதியோரங்களில் சப்பாத்து தைக்கும் தொழிலாளிகளிடம் (ஜே.வி.பி.) கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரனின் நாளாந்த செலவு பற்றியும், வருமானம் பற்றியும் கேட்டறிந்ததாக அங்கு இருக்கும் செய்தியாளர் தெரிவித்தார். ஆனி 18, 2012
இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர் வரும் 24 ம் திகதி லண்டனில்!
இருபத்திரண்டாவது தியாகிகள் தினம் எதிர் வரும் 24 ம் திகதி லண்டனில் நடைபெறவுள்ளது.
1987 ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைய
இருக்கின்றது. கால் நூற்றாண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்று அதே
அடிப்படைகளுக்காக, அதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய இலங்கைக்குள்
அதிகாரப்பரவலாக்கம் வேண்டும், சிங்கள முஸ்லிம் மக்களின் இணக்கமின்றி தீர்வு
சாத்தியமில்லை, இந்திய சர்வதேச அனுசரணை அத்தியாவசியமானது, யதார்த்தங்களை
புரிந்துகொண்ட நுட்ப்பமான அணுகுமுறை தேவை என்ற அதே நிலைப்பாடுகளுக்கு அனைத்து தமிழர்
தரப்பினரும் வந்து நிற்கின்றார்கள். கடந்த கால் நூற்றாண்டு காலம் எமது மக்களுக்கு
ஏற்பட்ட இழப்புக்கள் சொல்லில் அடங்காது. நடைமுறை சாத்தியமற்ற கோரிக்கைகள், வீராப்பு
வசனங்கள்,உசுபேற்றும் அரசியல் எமது மக்களையும் தேசத்தையும் நாசம் செய்யும் என்கின்ற
தீர்க்கதரிசனத்துடன், ஏற்படவிருக்கும் அனர்த்தங்களை நிறுத்தலாம் என்கின்ற
கனவுகளுடனுமே ஆயிரக்கணக்கான எமது தோழர்களும் பொது மக்களும் தமது உயிர்களை அன்று
அர்ப்பணித்தனர். இலங்கை இந்திய ஒப்பந்ததத்தின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட வடக்கு
கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களின் நிர்வாகம் ஒன்று பலப்பட வேண்டும்
என்றே எமது தோழர்கள் தமது இன்னுயிர்களை தியாகம் செய்ய வேண்டி நேரிட்டது. பெருமை
மிக்க எமது உன்னதமான தோழர்களை தியாகிகள் தினமான ஜூன் 19 இல் வருடா வருடம் நினைவு
கூருவதில் EPRLF இனராகிய நாம் பெருமை கொள்ளாமல் இருக்க முடியாது. இம்முறை தியாகிகள்
தினத்தில் இலங்கை இந்திய ஒப்பந்ததத்தின் பினரான 25 வருடங்கள் பற்றிய மீள் பார்வை
பற்றிய கலந்துரையாடல் விசேட அம்சமாகும். ஆனி 18, 2012 நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து நாளை யாழ். நகரில் ஆர்ப்பாட்டம் தமிழர் தாயகப் பகுதிகளில் தொடரும் நில ஆக்கிரமிப்பை கண்டித்து நாளை திங்கட்கிழமை யாழ்.நகரினில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடத்தவிருக்கும் எதிர்ப்பு போராட்டத்திற்கு பல்வேறு தரப்புக்களும் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றன. நாளை பிற்பகல் ஒரு மணிக்கு யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் நிரந்த படைத்தளங்களை அமைப்பதற்கு முப்படைகளும் தயாராகி வருகின்றன. வன்னியில் அண்மைக் காலங்களில் சுவீகரித்த இடங்களிலும், யாழ் .குடாநாட்டில் 1996ஆம் ஆண்டு முதல் படைதரப்பு நிலைகொண்டுள்ள அரச மற்றும் தனியார் நிலங்கள் மற்றும் கட்டிடங்களிலும் நிரந்தர படைத்தளங்களை அமைக்கும் முயற்சிகள் முனைப்பு பெற்றுள்ளன. (மேலும்.....)ஆனி 18, 2012 வெனிசுலா தயாரித்த முதல் ஆளில்லா விமானம் வெனிசுலா முதன் முதலில் ஆளில்லா விமானத் தை தயாரித்து, அமெரிக் காவை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. தென் அமெரிக்கா கண் டத்தில் உள்ள கியூபா, வெனிசுலா ஆகிய நாடுகள் எதை செய்தாலும் அமெ ரிக்காவின் கண்ணை உறுத் தும். சில ஆண்டுகளுக்கு முன்பு வெனிசுலா 3 நவீனரக ஹெலிகாப்டர்களை தயா ரித்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித் தது. இப்போது ஈரான் நாட்டு நிபுணர்கள் உதவி யுடன் வெனிசுலா முதன் முதலாக ஆளில்லா விமானத்தை தயாரித்து அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. வெனிசுலா முதன் முத லாக ஆளில்லா விமானத் தை தயாரித்திருப்பதை அந் நாட்டு ஜனாதிபதி சாவேஸ் அதிகாரப்பூர்வமாக அறி வித்தார். மேலும் அவர் கூறி யதாவது:- வெனிசுலா சுதந்திர மான நாடு. வெனிசுலா பாது காப்பை பலப்படுத்த ஈரான், சீனா, ரஷ்யா நாடுகள் உதவியுடன் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வெனிசுலா பாதுகாப் பை அதிகரிக்கவும், ராணுவத்தை பலப்படுத்தவும் ஆளில்லா விமானத்தை தயாரித்துள்ளோம். இந்த ஆளில்லா விமானம் ராணுவத்துக்காகவும், சாதாரண மக்கள் நலனுக்காகவும் பயன்படுத்தப்படும் என்றார். வெனிசுலா தயாரித் துள்ள ஆளில்லா விமானம் 100 கிலோமீட்டர் வேகத்தில் 9 ஆயிரம் அடி உயரத் தில் 90 நிமிடம் பறக்கும் திறன் கொண்டது. ஆனி 18, 2012 வடக்கில் முகாம்களை மீள் அமைக்க 3 மாத காலத்துள் அரச காணிகள் தெரிவு வடக்கில் இராணுவ முகாம்களை மீள் அமைப்பதற்குத் தேவையான அரச காணிகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகள் மூன்று மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்யப்படும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இராணுவத்திற்குத் தேவையான அரச காணிகளை அடையாளம் காணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக தெரிவித்த அவர், காணிகள் வழங்கப்பட்ட பின்னர் இராணுவம் தங்கியுள்ள பொது மக்களின் எஞ்சியுள்ள வீடுகளும் விரைவில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த அடிப்படையில் எதிர்வரும் மூன்று மாத காலப் பகுதிக்குள் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்ப டும் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டி னார். அடையாளம் காணப்படும் அரச காணிகளில் முகாம்கள் மீள் அமைக்கப்பட்ட பின்னர் பொது மக்களின் வீடுகளில் தங்கியுள்ள இராணுவத்தினர் அந்த வீடுகளை உரிமையாளர்களிடம் கையளிக்கவுள்ளனர். (மேலும்.....) ஆனி 18, 2012 சிகிரியா குன்றிலிருந்து குளவிகளை அகற்றுவதில்லை சிகிரியா குன்றிலுள்ள குளவிகளை எக்காரணங் கொண்டும் அங்கிருந்து அகற்றுவதில்லை என வன விலங்குகள் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன 15 ஆம் திகதி சீகிரியாவில் இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார். சிகிரியா குன்றிலுள்ள குளவிகளை மாதுறு ஓயா பாதுகாப்பு வனப் பிரதேசத்தில் விடுவதென அண்மையில் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் மத்திய கலாசார முக்கோண நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி அதிகாரி உள்ளிட்ட குழுவினருடன் சீகிரியா பிரதேசத்திற்கு வருகை தந்த அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மேற்கொண்ட நீண்ட நேர காலத்துரையாடலின் பின்னரே குளவிகளை சீகிரியாக் குன்றிலிருந்து அகற்றுவதில்லை என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. குளவிகளை வேறிடங்களுக்கு எடுத்துச் செல்வதால் அவை காலப் போக்கில் சிறிது சிறிதாக அழிவடையும் எனவும், அவை மீண்டும் மீண்டும் சீசிரியாவை வந்தடையும் வாய்ப்புகள் அதிகம் எனவும் இதன் போதுதெரிவிக்கப்பட்டது. ஆனி 18, 2012 வளமிக்க மண்ணை மங்க வைக்கும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனை (ஆர்.ஜி. ஜெகதீஷ் ) மனிதர்களாகிய நாம் தினம் சுவாசிக்கும் காற்றை யாராவது தடைசெய்தால், நம்முடைய நிலைமை என்னவாகும்? நம் உடலின் ஒவ்வொரு முக்கிய உறுப்புகளும் செயலிழந்து கடைசியாக நம்மால் இறுதி மூச்சுக்கூட விட முடியாமல் பரிதாபமாக மாய்ந்து போவாம். மனிதன் சுவாசிப்பதற்குத் தேவை யான பிராண வாயு காடுகளில் உள்ள மரங்களில் இருந்துதான் கிடைக்கிறது. ஆனால், அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காடுகளின் இப்போதுள்ள நிலைமை வருத்தமளிக்கும் நிலையில் இருக்கின்றது. மனிதனின் நுரையீரலைப் பிளாஸ் டிக் பையால் அடைத்தால் எப்படிச் சுவாசிக்க முடியாதோ அதே மனிதனால் காடுகளில் வீசப்படும் பிளாஸ்டிக்கால் மரங்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. (மேலும்.....) ஆனி 18, 2012 பொதுமக்களின் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்கும் தேவை இராணுவத்துக்கு இல்லைவடக்கில் இராணுவத்தின் பொறுப்பிலிருந்த 50 வீதமான வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் விரைவில் கையளிக்கவுள்ளதாக யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். வடக்கிலுள்ள பொது மக்களில் காணிகளை பலாத்காரமாக வைத்திருக்க வேண்டிய எந்த ஒரு தேவைகளும் இராணுவத்திற்கு இல்லை என்று தெரிவித்த அவர், அவ்வாறு கூறப்படும் செய்திகள் தவறானது என்றும் சுட்டிக்காட்டினார். வடக்கில் முகாம்களை அமைப்பதற்கு தேவையான காணிகளை மாகாண ஆளுநரிடம் கோரியுள்ளதாக தெரிவித்த மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, உரிய இடத்தில் பொருத்தமான காணிகள் கிடைத்தவுடன் எஞ்சியுள்ள 400 வீடுகளையும் உரிமையாளர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோன்று வடக்கின் பாதுகாப்பு நிலைமை கொழும்பு உட்பட நகர்ப் புரங்களைவிட சிறந்ததாக காணப்படுவதுடன் 26 ஆயிரம் இராணுவத்தினர் கடமையாற்றி வந்த நிலையில் அது தற்போது 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு தேவைகளை கருத்திற்கொண்டு தேவைக்கேற்ப படிப் படியாக எஞ்சியுள்ளவர்களை குறைப்பதா இல்லையா என்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க சுட்டிக் காட்டினார். ஆனி 18, 2012 உலகெங்கும்... அகதிகள் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிப்பு வறுமையான மக்களின் எண்ணிக்கை, வறுமைச் சூழல் எவ்வாறு அதிகரித்துப் போகின்றதோ? அதே போல் அகதி களின் எண்ணிக்கை, அவர்களைப் பராமரிக்கும் பொதுத்தளம் என்பன வற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகின்றது. அகதிகள் யார் என்று அடையாளம் காட்டுவது இலகு. ஆனால் அகதிகள் குறித்து பொதுவான வரையறை ஒன்றைச் சொல்வது கடினம். உலக அளவில் அகதிகள் என்றால் யார்? அவர்களுக்கான பொதுவான குண வியல்புகள் என்ன? என்பது குறித்து மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ஏனெனில் அகதிகள் உருவாக்கப்பட்டி ருக்கும் சூழல், அதற்கான காரணங்கள் அவர்களின் எதிர்காலம் குறித்து உரு வாக்கப்பட்டிருக்கும் செயற் திட்டங்கள் போன்றவை மாறுபாட்டையும், வேறுபாட்டையும் கொண்டுள்ளன. (மேலும்.....) ஆனி 17, 2012 தமது பிரதிநிதிகள் யார் என்பதில் தமிழருக்கு எழுந்துள்ள சந்தேகம்? தமிழ்மக்கள் இன்று அரசியல் அநாதைகளாக உள்ளனர் என்று கூறினால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் அம்மக்களை சரியான முறையில் தலைமை வகித்து வழிநடத்த பொறுப்பான தமிழ் அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் இன்று இல்லை எனக் கூறலாம். அதனால் அரசாங்கமே தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகவும் இருந்து செயற்படுகின்றது என்று கூறினாலும் அது பொய்யாகாது. ஒரு காலத்தில் வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே எனப்புலிகள் தமக்குத் தாமே மகுடம் சூடி வந்தனர். அந்த மக்கள் விரும்பியோ, விரும்பாமலோ அதனை ஏற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுதான் அன்றைய கால கட்ட நிலையாக இருந்தது. அதனால்தான் அப்போது பதவி வகித்த அரசாங்கங்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டன. (மேலும்.....) ஆனி 17, 2012 13வது திருத்தம் தொடர்பான அச்சமும் தெளிவும் இலங்கை ஜனநாயக சோஸலிசக் குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியே 13 வது திருத்தமாகும். தேசி யப் பிரச்சினையான இனப்பிரச்சினையில் இன்றுவரையில் ஒரு சட்டபூர்வ ஆவணமாக இருப்பது 13வது திருத்தமே. பல மும்மொழிவுகள் பின்மொழிவுகள் உத்தேச நகல் வரைவுகள் பரிமாறப்பட்ட ஆவணங்கள் என பலவிதமான ஆலோசனைகள் அரங்கேறியும் எவையும் சட்டபூர்வ அந்தஸ்தையோ, அமுலாக்கத்தகு தகைமையையோ பெறவில்லை என்ற வகையில் அதிகாரம் பெற்ற ஒரு பொதுவான அடிப்படை ஆவணமாக 13வது திருத்தம் காணப்படுகிறது. (மேலும்.....) ஆனி 17, 2012 கிழக்கு முதலமைச்சராக மீண்டும் சந்திரகாந்தன் தெரிவாகுவது உறுதி கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, மீண்டும் அதற்கான தேர்தல் இடம் பெறுமாயின் இன்றைய முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீண்டும் முதலமைச்சராகுவார். இதனையிட்டு எவரும் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. காரணம் கிழக்கு மண்ணில் வாழும் மூவின மக்களையும் ஒற்றுமையுடன் கட்டிக் காக்கும் ஆளுமையும், திராணியும் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு உண்டு என்பதை எவரும் மறுதலிக்க முடியாது. இவ்வாறு கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் அ. செல்வேந்திரன் குறிப்பிட்டார். (மேலும்.....) ஆனி 17, 2012 மேடைகளில் மக்கள் முன் வீர முழக்கம், ஊடகங்களில் வேறொரு விளக்கம் தமிழரசு கட்சியின் தடுமாற்ற அரசியல் இனியும் தொடருமா? உடனடியாக தெளிவுபடுத்த வேண்டுமென புத்திஜீவிகள் வேண்டுகோள் தமிழரசுக் கட்சியின் யாப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டபோது தவறு நேர்ந்திருப் பதாக அக்கட்சியினர் கூறுவது அவர்களின் தடுமாற்ற அரசியலைப் புலப்படுத்துவதாகப் புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநாட் டின்போது கட்சியின் தலைவர் இரா. சம்பந் தன் ஆற்றிய உரையே சர்ச்சையைத் தோற்று வித்திருக்கிறது. அந்தச் செய்தியை முதன் முதலில் இந்து பத்திரிகையே வெளியிட்டிருந்தது. அப்போது அதுபற்றி தமிழரசுக் கட்சியினர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இப்போது, சம்பந்தனின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென தேசப் பற்றுள்ள சில அரசியல் கட்சிகள் கோரியுள்ளன. நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. (மேலும்.....) ஆனி 17, 2012 முதலமைச்சர் மாறி மாறி நியமிக்கப்பட்டால் தமிழ் - முஸ்லிம் உறவு காத்திரமாகும் கிழக்கு மாகாணத்துக்கு முஸ்லிம் ஒருவர் முதலமைச் சராக வரவேண்டு மென அந்த மாகாண முஸ்லிம்கள் கோரிக்கை விடுப்பதில் என்ன தவறிருக்கின்றதென்று மாகாண அமைச்சர் எம்.எஸ். சுபைர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களும் சனத்தொகையில் சுமார் அரைவாசிப் பங்கினராக இருக்கின்றனர். எனவே முதலமைச்சர் நியமனம் மாறி மாறி வருவதே தமிழ், முஸ்லிம் உறவுக்கு காத்திரமாக அமையுமெனச் சுட்டிக்காட்டிய அவர் இனப்பிரச்சினைத் தீர்வில் சிறுபான்மை மக்கள் ஒட்டு மொத்தமாக குரல் எழுப்ப இது அடித்தளமாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார். தமிழ் - முஸ்லிம் சமூகங்களின் இன ஐக்கியத்துக்காக குரலெழுப்பும் தமிழ்த் தலைமைகள் இதையுணர்ந்து செயற்படுவதன் மூலம் இனப்பிரச்சினைத் தீர்வை இலகுவாகப் பெற்றுக்கொள்ள வழிவகையேற்படுமென அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்.....) ஆனி 17, 2012 கியூபா ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ ஜனாதிபதி மஹிந்த இருதரப்பு பேச்சு கியூபாவுக்கான மூன்று நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோவை சந்தித்துப் பேச்சு நடத்துகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஹவானாவில் உள்ள ஒசே மர்டி வானூர்தி தளத்திற்கு நேற்று முன்தினம் மாலை சென்றடைந்தார். அதன்போது, அவரை கியூபாவின் வெளிவிவகார அமைச்சர் மற்றும் அங்குள்ள இலங்கை தூதுவர் ஆகியோர் வரவேற்றுள்ளனர். ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது, கியூபா ஜனாதிபதியுடன் இருதரப்பு கலந்துரை யாடல்கள் இடம்பெறவுள்ளன. அதேவேளை, சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப் படவுள்ளன. கியூபாவில் அபிவிருத்தி செயற்றிட்டங்கள் பலவற்றையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்காணிக்கவுள்ளார். ஜனாதிபதியின் இந்த கியூப விஜயத்துக்கான நோக்கம் இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்துவதும் சர்வதேச மட்டத்தில் கியூபாவின் இலங்கைக்கான ஒத்துழைப்புக்காக கியூபா அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிப்பதும் ஆகும். இலங்கையின் விவசாயத் துறையில் உயிரியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் இவ்விஜயத்தின் போது ஆராயப்படவுள்ளது. கியூபாவின் உயிரியல் தொழில்நுட்ப நிலையத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்தது. ஆனி 17, 2012 இந்திய, பாகிஸ்தான் பேச்சுவார்த்தை இழுபறிகளை முடித்து வைக்க முயற்சிஇந்திய - பாகிஸ்தான் உயர் மட்ட பேச்சுக்கள் சென்ற வாரம் சிறப்பாக ஆரம்பமானது. நெடுங்காலமாக இழுபறிக்குள்ளாகியுள்ள முரண்பாடுகளையும் பிரச்சினைகளையும் அடுத்த சந்ததியினருக்கும் விட்டு வைக்காமல் ஒட்டுமொத்தமாக முடித்துவைப்பதே இந்தப் பேச்சு வார்த்தைகளின் நோக்கம். எவ்வளவுதான் உள்முரண்டுபாடுகள், கோபதாபங்கள் இருந்தாலும் அயலவர் இருவரும் முரண்பட்டுக் கொண்டிருப்பது இரு நாட்டு பொதுமக்களுக்கும் நல்லதல்ல. உள்ளவற்றை வெளிப்படையாக எடுத்துரைத்து அரசியல் நலன்களுக்கப்பால் சென்று தேசங்களின் நன்மைக்காக இந்திய - பாகிஸ்தான் தலைவர்கள் செயற்பட வேண்டியுள்ளது. (மேலும்.....) ஆனி 16, 2012 இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்! பொன்சேகா அதிரடி (சமஸ்) ''போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா? அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?'' ''கண்டிப்பாக.
அந்த இரவு எனக்கு எப்போதுமே மறக்க முடியாதது. ஒரு சின்ன பகுதிக்குள் பிரபாகரனைச் சுற்றி வளைத்தோம். மூன்று அணிகளைக்கொண்டு மூன்று வளையங்களை புலிகள் அமைத்திருந்தார்கள். அதிகபட்சம் அவர்கள் 400 பேர் இருந்திருக்கலாம். முதல் அணியில் 100 பேர். நடேசன், பூலித்தேவன் தலைமையிலானது. அழித்தோம். அடுத்த அணியில் 200 பேர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையிலானது. அழித்தோம். கடைசிக் கட்டத் தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. 100 பேர்கொண்ட அணி அது. பிரபாகரன் தலைமையிலானது. அழித்தோம். சண்டையில் குண்டடிபட்டுத்தான் பிரபாகரன் இறந்தார்.'' (மேலும்.....) ஆனி 16, 2012
சமயம் உயரத்திலிருத்தலும்! வாழ்வு துயரத்தில்
வீழ்தலும்!!
மூதூர் ஜபல் நகர்மலையைப்பொறுத்தவரை அது மூதூரின் மையப்பகுதியில் எழில் கொஞ்சும் ஒரு இயற்கை வளமாகும். மனித நாகரிகம் தோன்றியது முதல் மக்களது கருங்கற் தேவையை நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. அம்மலையைச் சூழவுள்ள பல்லாயிக்கணக்காண வயல்நிலங்கள் அனைத்தும் முஸ்லிம்களுக்கும், தமிழருக்கும் உரித்தானவை. மலைக்குச் செல்லும் வழியில் ஜபல்நகர் மஸ்ஜிதுன்னூர் என்ற பள்ளிவாசலும், மலையடிவாரத்தில் கல்லுடைக்கும் தொழிலாளர்கள் வணங்குவதற்கென ஒரு சிறு முருகன் கோவிலும் பன்னெடுங்காலமாகக் காணப்படுகிறது. இச்சமயத்தலங்கள் எக்காலத்திலும் பன்னெடுயின் மீது ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. மாறாக, மலையைச் சூழவுள்ள தம் விளை நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் தம் வணக்கவழிபாட்டை மேற்கொள்ளவே பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. யுதார்த்தம் இவ்வாறிருக்க வரலாற்றில் என்றுமே பௌத்த சமய அடையாளம் இல்லாத பூர்வீகமாக குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில்(குடியேற்றினாலன்றி)பௌத்தர்கள் இல்லாத ஜபல்நகர் மலையின் மீது, இப்போது புத்தர் சிலை நிறுவும் பணி அதிகார பக்கபலத்துடன்12.06.2012 முதல் நடை பெறுகின்றது. அதேவேளை ஏனைய சமய அடையாளம் இருப்பது போல அங்கு பௌத்த சமள அடையாளமும் இருந்து விட்டுப் போகட்டும் என ஒர் அபிப்பிராயமும் இங்கு முன்வைக்கப்படலாம். ஆனால் இங்கு மக்களது நியாயமான அச்சம் என்னவென்றால் , வரலாற்றில் சிறுபான்மை மக்கள் செறிவாக சுமுகமாக வாழும் பிரதேசங்களில் புத்தர் சிலை நிறுவிடும் போதெல்லாம் நடைபெற்றுவருவதை அனைவரும் அறிவர். (மேலும்.....) ஆனி 16, 2012
ஆனி 16, 2012 Nik Wallenda successfully completes Niagara Falls highrope walk before spectators, television viewers
Tightrope walker Nik Wallenda walks across Niagara Falls from Buffalo, New York to Niagara Falls, Ontario, Friday evening June 15, 2012. It has been the seventh generation Wallenda family daredevils dream to make the historic walk. Emerging out of a cloud of mist, Nik Wallenda ran the last few steps to become the first man in more than a century to cross Niagara Falls on a high wire and singlehandedly bring the Wallenda name back into the public consciousness. Although the walk was mostly free of theatrics, thirty metres from the finish, he bent down on one knee. As spectators gasped, suspecting he had fallen, he raised a fist in triumph. The crowd chanted his name as he cleared the last few meters to a raised lift, moving past the lights, cranes and news vans of what had become a multi-million dollar operation. Welcome to Canada, Nik! screamed a spectator. (more...) ஆனி 16, 2012
ஆனி 16, 2012 காதலியை கரம் பிடிக்கும் முன்னாள் புலி உறுப்பினர் பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வுபெற்ற முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் திருமண பந்தத்தில் இணைந்துகொள்ளவுள்ளார். இவருடைய திருமணம் நாளை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நடைபெறவிருப்பதாக புனர்வாழ்வு ஆணையகத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் மஞ்சுள களுவாராய்ச்சி தெரிவித்தார். கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு கடந்த 2ஆம் திகதி சமூகத்தில் இணைக்கப்பட்ட ஸ்ரீகாந்த் ஸ்ரீகண்ணன் என்பவரே தனது நீண்டநாள் காதலியைக் கரம்பிடிக்கவுள்ளார். வவுனியாவிலுள்ள சிறுவர் பராமரிப்பு பாடசாலையில் சந்தித்த பெண்மீது மலர்ந்த காதல் தற்பொழுது திருமணம்வரை சென்றுள்ளது. தனது நீண்டநாள் காதலியான தங்கராசா உதயரூபியை இவர் நாளை கரம்பிடிக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டார். (மேலும்.....) ஆனி 16, 2012 ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த ஐ.நா. வுடன் இலங்கை இணைய வேண்டும் - பான் கீ மூன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு தன்னால் ஊக்கமளிக்க முடியும் என பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் பிரேரணை மூலம் வலியுறுத்தப்பட்டுள்ளதை பான் கீ மூன் வரவேற்றுள்ளார். மேலும் வடபகுதியில் பாதுகாப்புப் படைகள் குறைக்கப்பட்டதையும் வரவேற்றுள்ள அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19/2 தீர்மானத்தை வரவேற்பதாகவும் ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் அனைத்து இலங்கைப் பிரஜைகளுக்கும் நீதி, சமத்துவம், நியாயம், நல்லிணக்கம் கிடைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனி 16, 2012 ஜனாதிபதி கியூபா பயணம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு நேற்று கியூபா நோக்கிப் பயணமானார். ஹவானா சென்றடையும் ஜனாதிப திக்கு கியூபா புரட்சி இல்லத்தில் உத்தியோகபூர்வ வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. அங்கு ஜனாதிபதி கியூபா நாட்டுத் தலைவருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார். கியூபாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி அங்கிருந்து பிரேசில் செல்லவுள்ளார். பிரேசிலில் நடைபெறவுள்ள நிலையான அபிவிருத்தி தொடர்பான ரியோ 20 ஐ. நா. மாநாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ள துடன் எதிர்வரும் 20 ஆம் திகதி ரியோ மாநாட்டில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். ரியோ மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி அதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார். ஆனி 16, 2012 ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் -சோனியா காந்தி அறிவிப்பு நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆளும் ஐக்கிய முற் போக்கு கூட்டணியின் வேட்பாள ராக மத்திய நிதியமைச்சர் பிர ணாப் முகர்ஜி போட்டியிடுகிறார். இதுதொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பை, தில்லியில் வெள்ளியன்று நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சி களின் ஆலோசனைக் கூட்டத்திற் குப் பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டார். பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு அளிக்குமாறு அனைத்துக் கட்சி களுக்கும் வேண்டுகோள் விடுத் துள்ள சோனியா காந்தி, அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி பிர ணாப் முகர்ஜியை குடியரசுத் தலை வராக தேர்ந்தெடுக்க ஒத்தக்கருத் தை எட்ட வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார். (மேலும்.....)ஆனி 15, 2012 தோழர் றொபேட் மறைந்து 9 ஆண்டுகள் (சுகு ஸ்ரீதரன்)
எமது சமூகத்தின் வாழ்வைச் சீராக்குவதற்கு பலபேர் முயற்சித்திருக்கிறார்கள். சமூக அநீதிகள் ,பாரபட்சங்கள் ஒடுக்குமுறைகள், மூடநம்பிக்கைகளுக்கெதிராக பலரும் போராடி இருக்கிறார்கள் . தன்னலமற்ற பெருந்திரளானவர்கள் எமது சமூகத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்கிறார்கள். மக்களின் வாழ்வை செம்மையாக்குவதற்கு ,சீராக்குவதற்கு இன்று வாழ்பவர்கள் பங்களிக்கமுடியும். பங்களிக்க வேண்டும். ஆனால் அவநம்பிக்கைகள் அதிகரித்துள்ளன. மிகவும் நெருக்கடியான ஒரு வரலாற்றுக் காலகட்டத்தில் தோழர் சுபத்திரன் -றஞ்சன்- றொபேட்டின் பங்களிப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. சகலவிதமான சமூகத் தழைகளிலிருந்தும் விடுதலை, அறிவு, நியாயத்தின் வெளிச்சத்தில் விடயங்களை அவர் நோக்கினார். தேசிய ஒடுக்கமுறைக்கெதிரான போராட்டத்திற்கப்பால் சமூக சமத்துவத்திற்கான அக்கறைகள் அவரிடமிருந்தன. (மேலும்.....) ஆனி 15, 2012 பல்லேகலை சிறையிலிருந்து தப்பிய தமிழ்க்கைதிகள் இருவர் கைது பல்லேகலை சிறைச்சாலையிலிருந்து கடந்த புதன்கிழமை தப்பிச் சென்ற இரண்டு கைதிகளை அலவத்துகொட பொலிஸார் கைதுசெய்துள்ளனர். துதுவெவ பகுதியில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும் 30 , 34 வயதான தமிழர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒருவர் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டவர் என்பதுடன் மற்றையவர் கொள்ளைச் சம்பவம் ஒன்றுடன் சம்பந்தப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் இருவரும் மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர். ஆனி 15, 2012 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உயர்மட்டக் கூட்டம் நாளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், பணிக்குழு உயர்மட்டக் கூட்டம் நாளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் தலைவர் சி.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளதாக கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு புதிய மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஊடகங்கள் மூலமாகவும், மக்கள் மத்தியிலும் பரவலாகப் பேசப்படும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இச் சூழலில் எவ்வாறான நடைமுறைகளைக் கையாள்வது ,கட்சியின் நிலைப்பாடுகள் என்ன என்பன தொடர்பாக இங்கு கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ___ ஆனி 15, 2012 காணி, பொலிஸ் அதிகாரங்கள், 13+ குறித்தும் பேச தெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சியினரை அழைத்துவர அரசாங்கம் முழு முயற்சி தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு எதிர்க்கட்சிகளை அழைத்து வருவதற்காக தன்னாலான சகல முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொள் ளும். வெளியில்பேசப்படும் காணி, பொலிஸ் அதிகாரங்கள், 13 பிளஸ் இதற்கு முன் ஆராயப்பட்ட விடயங்கள் என சகல விடயங்கள் குறித்தும் இங்கு ஆராய முடியும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். முதலில் சகல கட்சிகளும் இணைந்து பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்து பேச்சை ஆரம்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் கூறினார். (மேலும்.....) "ஒலிக்காத இளவேனில்" (2009)
வடலி பதிப்பகத்தால் வெளியான, "ஒலிக்காத
இளவேனில்" (2009): 18 பெண் கவிஞர்களின் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி... ஆனி 15, 2012 பெனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 148 பேர் இலங்கை வந்தடைந்தனர் ஆபிரிக்க நாடான பெனினிலிருந்து நாடு கடத்தப்பட்ட 148 இலங்கையர்கள் இன்று மாலை 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். சட்டவிரோதமான முறையில் பெனின் நாட்டுக்குச் சென்று அங்கிருந்து கனடாவுக்கு செல்வதற்கு தயாரான நிலையில் இருந்த இலங்கையர்களே கைது செய்ப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவ்வாறு அனுப்பட்டவர்களில் மூன்று மதங்களையும் சேர்ந்த ஆண், பெண் இருப்பதுடன் அவர்களிடம் விமானநிலைய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தும் வருகின்றனர். ஆனி 15, 2012 ஒரு செங்கொடி நகர் உதயம் (கே.பி.பெருமாள்) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கருங் குளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள, ஊரைச்சுற்றி விவசாய நன்செய் நிலங்கள் நெல், வாழை, உளுந்து ஆகிய பிரதான விவசாயப் பயிரைக் கொண்ட அழகிய கிராமம் ஆராம்பண்ணை. இங்கு பெரும்பகுதி முஸ்லிம் மக்கள் வாழ்கி றார்கள். சிறு பகுதியினர் இதர சமூகத்தை சார்ந்தவர்கள். விவசாய நிலங்களுக்கு சொந்தக் காரர்களாக முஸ்லிம்கள் ஏராளமானோர் உள் ளனர். விவசாயத்தின் மூலம் வசதி படைத்த வர்களாகவும், சிலர் வெளிநாடுகளில் வேலை செய்து அந்த வருவாய் மூலம் நல்ல நிலை யிலும் உள்ளனர். ஒரு பகுதி முஸ்லிம்கள் விவ சாய கூலி வேலை செய்பவர்களாக, பீடி சுற் றும் தொழில் செய்பவர்களாக உள்ளனர். இவர் களில் பெரும்பாலானோர் வாடகை வீடு களில் குடியிருந்து வருகிறார்கள். (மேலும்.....)ஆனி 15, 2012 இந்திய பொருட்களின் இறக்குமதியை தடைசெய்யும் தீர்மானம் எதுவுமில்லை தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (சப்டா) வ |