Contact us at: sooddram@gmail.com

 

பங்குனி 2013 மாதப் பதிவுகள்

பங்குனி 31, 2013

வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்கள் இரட்டை குடியுரிமை பெற்றுகொள்ள முடியும்

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இரட்டை குடியுரிமையை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, செயற்படுத்தப்பட வேண்டிய புதிய சட்டத்திருத்தங்களை உருவாக்கப்பட்டுள்ளன என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். இரட்டை குடியுரிமை வழங்கப்படும் போது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இரட்டை குடியுரிமை என்ற போர்வையில் வடக்கில் காணி உரிமைகளை பெற்றுக்கொள்ள வர முயற்சிக்கும் வடபகுதிகளை சேர்ந்த இலங்கையர்களும் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. மேற்குலக நாடகளில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான இலங்கையில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக இரட்டை குடியுரிமையை பெறுவதற்காக காத்திருப்பதாக தெரியவருகிறது.

தெற்கிலிருந்து வடக்கிற்கான சமாதான பேரணி யாழ்ப்பாணத்தில் நிறைவு

தெற்கிலிருந்து வடக்கிற்கான திபெத் ஆன்மீகத் தலைவர் சாகல்ய கியல்வங்கின் தலைமையிலான சமாதானப் பேரணி இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்து நிறைவடைந்துள்ளது. கடந்த 6ஆம் திகதி இந்த சமாதானப் பேரணியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பங்கேற்றலுடன் வெற்றி கொண்ட சமாதானத்தை உறுத்திப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இந்த பேரணி கதிர்காமத்தில் ஆரம்பமானது. இந்தியா, நேபாளம், இந்தோனேஷியா, மலேசியா, மற்றும் வியட்நாம் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 300 மேற்பட்டவர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். கடந்த 25 நாட்கள் நடை பயணத்தின் பின்னர் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த இந்த சமாதானப் பேரணி இன்று காலை யாழ் தொழில் நுட்பக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி அங்கிருந்து யாழ் நாகவிகாரையை வந்தடைந்தது.

த.தே.கூட்டமைப்புடன் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளோம் - றிசாத் பதியுதீன்

தமிழ்- முஸ்லிம் உறவுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுக்க நாங்கள் திடசங்கற்பமாக இருக்கின்றோம். அத்துடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம் என அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்கின்றார்கள் என்பதைக் கேட்டு என்னுள்ளம் பூரிப்படைகின்றது. 30 வருடகாலம் ஒரே மொழியைப் பேசுகின்ற நாம் பிரிந்து பிளவுபட்டுச் சின்னா பின்னமாகி இழக்க வேண்டியவை அனைத்தையும் இழந்து இன்று மீண்டும் குடிசைகளையும் கடைகளையும் பாடசாலைகளையும் கட்டுகின்ற சமூகமாக மாறிப்போயிருக்கின்றோம். விரும்பியோ விரும்பாமலோ கடந்தகால கசப்புணர்வுகளை நாங்கள் மறந்து புதிய பாதையிலே பயணிக்க வேண்டும். தமிழ் பேசும் சமூகம் கிழக்கிலே ஒன்றுபட்டு வாழ்வதைப்போல வடக்கிலும் சகவாழ்வு வாழ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கு நாங்கள் எந்நேரமும் தயாராக இருக்கின்றோம்.

வணிக நிறுவனம் மீதான தாக்குதல்: பொதுபல சேனா மறைமுக தூண்டுதல் - ஹக்கீம்

கண்டியில் நடந்த கூட்டமொன்றில் பொதுபல சேனா அமைப்பின் பௌத்த பிக்கு ஒருவரே முஸ்லிம்களுக்கு சொந்தமான வணிக நிறுவனம் ஒன்றின் மீதான தாக்குதலுக்கு மறைமுகமாக தூண்டியதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றஞ்சாட்டியுள்ளார். ஒரு சிங்களப் பெண்ணை அந்த நிறுவனத்தில் பலவந்தப்படுத்தியதாக பொய்க்குற்றஞ்சாட்டியே அவ்வாறு அவர் தூண்டியதாக ஹக்கீம் கூறியுள்ளார். இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சிறுபான்மை மக்கள் மீது ஒரு உதிரிக் கும்பல் இலக்கு வைத்து தாக்குவதற்கு அரசாங்கமே இடமளித்துள்ளதாக அமைந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். பொதுபல சேனாவின் கட்டடம் ஒன்றை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ திறந்து வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ள அமைச்சர் ஹக்கீம் அந்தக் கூட்டத்தில் அவரைக் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம் என தான் முன்னதாகவே ஜனாதிபதியை கேட்டிருந்ததாகவும் கூறியுள்ளார். அதன்படி பாதுகாப்புச் செயலாளர் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதே, பொதுபல சேனா அமைப்பு இன்று அசுர தாண்டவம் ஆடுவதற்கு தூண்டுகோலாக அமைந்து விட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

த,தே.கூ.பினரின் வாகனங்கள், அறிவகம் அலுவலகம் மீது தாக்குதல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எம்.பி.யின் கிளிநொச்சி அறிவகம் அலுவலகம் மீது கறுப்பு நிற முகமூடி அணிந்து சென்றுள்ள ஆயுததாரிகள் சிலர் இன்று முற்பகல் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், குறித்த அலுவலகம் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் மற்றும் எஸ்.சிறிதரன் ஆகியோரின் வாகனங்கள் மீதும் மேற்படி ஆயுததாரிகள் கற்களை வீசி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இன்று முற்பகல் 11.30 மணியளவில் அறிவகம் அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் கலந்துரையாடலின் போண்து அங்கு அத்துமீறி நுழைந்துள்ள ஆயுததாரிகள் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். தேசிய கொடிகளுடன் வந்த கறுப்பு முகமூடி அணிந்த ஆயுததாரிகளே இவ்வாறு தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவ்வாறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்களில் இருவர் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட போதும் அவ்விருவரையும் பொலிஸார் விடுவித்ததாகவும் த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.பொது மக்களால் பிடிகப்பட்ட இருவரைப்பற்றி விபரங்களையும் பகிரங்கப்படுத்தினால் அவர்களை பொது மக்கள் மேலும் இனம்காண வாய்பாக இருக்கும்.

விடுதலைப் புலிகளுக்கு உதவியோரின் தகவல்களை வெளியிடவுள்ளேன் -  விநாயகமூர்த்தி முரளிதரன்

விடுதலைப் புலிகளுக்கு உதவிய நாடுகள் மற்றும் அரசியல்வாதிகள் குறித்த தகவல்களை தான் முதலில் வெளியிட போவதாக பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். போர் குற்றம் தொடர்பில் கருணாவிடமும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட்லி ஹெடம்ஸ் தெரிவித்திருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கருணா இதனை குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு உதவிய தரப்பினர் குறித்த அறிந்த ஒரே நபர் நான்.  நோர்வே, சுவிஸர்லாந்து, தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு நான் பயணம் செய்துள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வாள்வெட்டில் யாழ். மாநகரசபை ஊழியர்கள் ஐவர் காயம்

யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவத்தை அடுத்து இடம்பெற்ற வாள் வெட்டில், ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் யாழ். மாநகரசபை ஊழியர்கள் ஐவரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாவாந்துறை மீன்சந்தை குத்தகைக் குழுவினருக்கும் யாழ். மாநகரசபை ஊழியர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் இடம்பெற்றதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புகையிரத கட்டணம் அதிகரிப்பு

நகரங்களுக்கு இடையிலான கடுகதி மற்றும் தபால் ரயில் சேவைக் கட்டணங்கள் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது நாளை முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நான்கு பிரிவுகளின் அடிப்படையில் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று புகையிரதச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்பிரகாரம், மூன்றாம்தர வகுப்புக்கான கட்டணங்கள் 150 ரூபாவிலிருந்து 180 ரூபாவாகவும், 220 ரூபாவிலிருந்து 280 ரூபாவாகவும், 270 ரூபாவிலிருந்து 320 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரண்டாந்தர வகுப்புக்கான ஒதுக்கப்பட்ட ஆசனக் கட்டணங்கள் 220 ரூபாவிலிருந்து 280 ரூபாவாகவும் 380 ரூபாவிலிருந்து 450 ரூபாவாகவும் 450 ரூபாவிலிருந்து 500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் முதற்தர வகுப்புக்கான கட்டணம் 750 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் பிரிவுக்கான கட்டணம் 880 ரூபாவிலிருந்து 1,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ள அதேவேளை, உறங்கும் பிரிவுக்கான 1,250 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக புகையிரத சேவைகள் திணைக்களம் மேலும் கூறியது.

பங்குனி 30, 2013

பிரபாகரன் பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளார்

'கடந்த 2005ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பொதுமக்களை வாக்களிக்க விடாமல் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தடுத்தார். இதனால் அவர், பொதுமக்களுக்கு பாரிய சிக்கலை தோற்றுவித்துள்ளார்' என்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மட்டக்களப்புக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று சனிக்கிழமை பகல் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் மாதாந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

மொழி...! மொழி...! மொழி...!  (ஒரு குட்டிக் கதை)
(எஸ். ஹமீத் )மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பின் இரு ஊர்கள் காத்தான்குடியும் ஆரையம்பதியும். காத்தான்குடியில் ஆதம் லெப்பையும், ஆரையம்பதியில் அரியரத்தினமும் வாழ்ந்து வந்தனர். முன்னாளில் மட்டக்களப்பில் ஒரு பாடசாலையில் இருவரும் சேர்ந்து கல்வி கற்கும் காலத்தில் 'நீ இஸ்லாம் -நான் இந்து' என்று, பழுத்த சுயநல அரசியல் வேடர்கள் விரித்த கபட வலைக்குள் இருவரும் வீழ்ந்து, தத்தம் சுயத்தை இழந்து விட்டிருந்தனர். (மேலும்....)

A story of Perseverance, & Honest Hard Work.

She chose dignity over shame, literally back breaking hard work, over the easy way out by begging. She stands out at the local railway station - the lone female coolie  among all the men. Maya (40), who lost her husband 1year ago  and has a 12-year-old son, has chosen this tough profession to make out a living. Rather than beg, borrow or steal, she carries the luggage of passengers on her head, with dignity. According to the station superintendent, Ludhiana, Ravinder Sharma, Maya is among the handful of woman coolies in north India, the others being in Jhansi (Uttar Pradesh), Divisional railway manager, Ferozepur division, NC Goyal confirmsthat she is the only female porter north of Delhi. Maya, who hails from Haryana's Sonepat district, is also carrying a debt burden of lakhs of rupees. Her husband, Ram Kumar, did this back-breaking job for more than a decade before he was declared medically unfit. He was also not considered fit to join as a gangman 6 years ago when then railway minister Lalu Prasad Yadav ordered the promotion of coolies. After Kumar's death, the railway authorities offered Maya a job in his place. She promptly accepted it."I don't want to beg to make ends meet or pay off the debt taken for my husband's backbone treatment. It's not an easy profession for a woman as one has to run after passengers and bear with sarcastic remarks by people. But I took this decision for my son," says Maya, who sports batch number 56 on her left arm.It's a gruelling 12-hour job (5am to 5pm). She's all praise for her male colleagues. "They are very supportive. "It's better to work than to BEG.!!"

We salute the strength that is a WOMAN.!!!

முஸ்லிம்களின் மீது நேரடித் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - றிசாத்

பெஷன் பக் வர்த்தக நிலையத்தின் களஞ்சியசாலை தாக்கப்பட்டமையின் பின்னணியில் உள்ளவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும் என  ஜனாதிபதி,பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரிடம் தான் வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு குறித்த களஞ்சியசாலை தாக்கப்பட்ட தகவல் கிட்டியதும், ஸ்தலத்திற்கு விரைந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் சேதத்துக்குள்ளான பொருட்களை பார்வையிட்டுள்ளதுடன் உரிமையாளருடனும் கலந்துரையாடியுள்ளார். அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்  இவ்வளவு காலமாக முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலையேற்படுத்தி வந்த அமைப்பு இன்று நேரடியாக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்

பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த மன்மோகன், சோனியா திட்டம்

இந்த ஆண்டு இறுதியில் பாராளு மன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. மத்திய ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் திரிணாமுல் காங்கிரஸ், தி. மு. க, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி போன்ற பல்வேறு கட்சிகள் இடம்பெற்று இருந்தன. ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் கோரிக்கைகளுக்காக மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ்பெறப் போவதாக மிரட்டல் விடுத்து வந்தன.முதலில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார். மாநில அரசியலில் கவனம் செலுத்துவதற்காக அவர் மத்திய அரசு மீது ரயில் கட்டண உயர்வு, நேரடி அந்நிய முதலீடு ஆகியவற்றை காரணம் காட்டி விலகினார்.(மேலும்....)

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க. அழகிரி பண்ணை வீட்டில்  சி. பி. ஐ. அதிகாரிகள் விசாரணை

சென்னையில் நேற்று முன்தினம் சி. பி. ஐ. அதிகாரிகள் மு.க. ஸ்டாலின் வீடு உட்பட 19 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். வெளிநாடுகளில் இருந்து விலை உயர்ந்த சொகுசு கார்கள் இறக்குமதி செய்ததில் ரூ. 50 கோடி வரை வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக காரர் முகவர் அலெக்ஸ், வருவாய் புலனாய்வு அதிகாரி முருகானந்தம் ஆகியோர் மீது வழங்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், சி. பி. ஐ. தரப்பில் கூறப்பட்டது. அந்த கார்களை வாங்கியவர்கள் வீடுகளில் தான் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ. 1 கோடி மதிப்புள்ள இந்த வகை சொகுசு காரில் ஒரு காரை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருந்தார். இது தொடர்பாக மு.க. ஸ்டாலின் வீட்டில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவித்தனர். இதேபோல் ஒரு விலை உயர்ந்த கார் மு.க. அழகிரி வீட்டிலும் இருப்பதாக சி.பி. ஐ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள மு.க. அழகிரிக்கு சொந்தமான பண்ணை வீட்டிலும் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின்போது அங்கு கார்கள் எதுவும் இல்லாததால் அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

தமிழக அரசு தீர்மானத்தை ஏற்க வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு இல்ல - குர்ஷித்

இலங்கைக்கு எதிராக சட்டப்பேரவையில் தமிழக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்தின் ஓர் அம்சத்தைக்கூட கருத்தில்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதற்காக, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். (மேலும்....)

ஈழ நலனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

(டி.அருள் எழிலன்)

பேரினவாத இலங்கையைப் பாதுகாக்கும் அமெரிக்கத் தீர்மானத்தை ஒரு சடங்காக நிறைவேற்றிவிட்டது ஐ.நா. ஆனாலும், உலகத் தமிழர்களுக்கு இப்போது உற்சாகம் அளிக்கும் ஒரே விஷயம்... தமிழகம். இப்போது ஈழ மக்களும் நம்பியிருப்பது தமிழர்களின் அழுத்தங்களைத்தான். உலகத்தின் மனசாட்சியை உலுக்கியெடுக்க, வீதி வீதியாகக் களம் இறங்கி இருக்கிறார்கள் தமிழக மாணவர்கள். இந்த நிலையில் தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான ஆளுமைகள் சிலரிடம் ஈழத் தமிழர்களின் நலனுக்காக இனி என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்தோம். (மேலும்....)

பங்குனி 29, 2013

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி 8)

(வரதர் பெருமாள்)

வடக்கு மாகாண சபைத் தேர்தலை இதுவரை அரசாங்கம் நடத்தவில்லை என அவ்வப்போது அரசு மீது குற்றம்சாட்டினாலும் அந்தத் தேர்தலை உடனடியாக நடத்தும்படி அரசை நோக்கி த.தே.கூக்காரர்கள் பெரிதாகத் தமது  குரல்களை எழுப்பவில்லை அதற்கான கோரிக்கை எதையும் வலுவாக முன்வைக்கவில்லை என்கிற உண்மையையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நெருங்கினால் அதற்கான முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதிலேயே தமக்குள் பெரும் குடும்பிப்பிடி சண்டை நடக்கத் தொடங்கிவிடும் என்பதை த.தே.கூத் தலைவர்கள் தெரிந்து கொண்டுதான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்துக்கு நெருக்கடி கொடுப்பதில் பெரிதும் அக்கறை காட்டாமல் இருக்கிறார்கள் என்றே பொதுவாக நம்பப்படுகிறது. அதனிலும் மேலாக உள்ளுராட்சி நிர்வாகத்தை நடத்துவதிலேயே இவ்வளவு கோணங்கித்தனங்களைக் கண்டுகொண்டிருக்கும் த.தே.கூத் தலைவர்கள் வடக்கு மாகாண ஆட்சியை நடத்துவதில் தம்மவர்கள் நிச்சயம் சொதப்பி விடுவார்கள் என்பதையும் புரிந்து கொண்டுதான் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் விடயம் காலம் தள்ளிப் போனாலும் பரவாயில்லை என  கமுக்கமாக இருக்கிறார்கள் என்றே கருத வேண்டியுள்ளது. (மேலும்...)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் மகன் விமுக்தி விஜயகுமாரதுங்க அரசியலில் குதிக்க திட்டமிட்டுள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா மற்றும் பிரபல நடிகர் காலம்சென்ற விஜய குமாரதுங்க ஆகியோரின் ஒரே ஒரு புதல்வர் விமுக்தி விஜய குமாரதுங்க (மிருக வைத்தியர்) புதிய அரசிலிலொன்றில் குதிக்க உள்ளார். விமுக்தி விஜய குமாரதுங்க தனது அம்மாவின் அரசியலுக்கு உதவிபுரியும் பொருட்டு லண்டன் இருந்து நாடு திரும்பியுள்ளார். மேற்படி புதிய அரசில் யுகமொன்றை உருவாக்குவதற்காக நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாபண்டாரநாய்கக பல்வேறு கூட்டங்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இதற்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவும் விஜய குமாரதுங்கவின் மகஜன கட்சி, ஜ.தே.கட்சி, கட்சிகளில் இருந்து சிலர் அரசியல் வாதிகள் சந்திரகாகவுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார முறையில் தேர்தல்

மட்டக்களப்பு மாநகரசபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள், வட்டார முறையின் அடிப்படையிலேயே இடம்பெறவுள்ளன என்று தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாநகரசபை, ஏறாவூர்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று பிரதேச சபை, கோரளைப்பற்று வடக்கு பிரதேச சபை, மண்முனை தெற்கு மற்றும் எருவில்பற்று பிரதேச சபை, மண்முனைப்பற்று பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை மற்றும் போரதீவுபற்று பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சிமன்றங்களின்  பதவிக்காலம்  நிறைவடைந்துள்ளன. இந்த ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலமும் கடந்த 17.3.2012ஆம் திகதியுடன் முடிவடைந்தன. எனினும் மேலும் ஒரு வருடத்திற்கு இதன் பதவிக் காலம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டன. இதற்கமைய இந்த ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் கடந்த மார்ச் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளன.

உலகில் ஏராளமானோரை பீடிக்கும் இரண்டாவது பெரும் நோயாக உருவெடுக்கும் மனச்சோர்வு

(ஏ. எல். நாமர்கனி)

ரோக்கியம் என்பது மனிதனின் உடல் சார்ந்த ஆரோக்கியத்தை மாத்திரம் குறித்து நிற்காது, அது அவனது உள ரீதியான ஆரோக்கியத்தையும் பெரிதும் வேண்டி நிற்கிறது. உலக சுகாதார நிறுவனம் ஆரோக்கியத்திற்கான வரைவிலக்கனத்தைப் பின்வருமாறு தருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, மனச்சோர்வு 2020ம் ஆண்டளவில் சர்வதேச மட்டத்தில் மிகப் பிரதானமான இரண்டாவது நோயாக விளங்கும் என எதிர்வு கூறியுள்ளது. இந்நோய் வாழ்நாளில் நீண்ட ஆயுட் காலத்தைக் கொண்டு சஞ்சரிக்க கூடிய, உலக சனத்தொகையில் 16 வீதத்தினரை வியாபித்துள்ள தற்கொலைக்கு தள்ளிச் செல்கின்ற மிகவும் பயங்கரமும் ஆபத்தும் மிக்க ஒன்றாகும். (மேலும்...).

இரத்தான கட்சிகளின் பெயர், சின்னங்களை 2 வருடத்துக்குள் எவருக்கும் வழங்க முடியாது

இரத்துச் செய்யப்பட்ட நான்கு அரசியல் கட்சிகளின் பெயர் மற்றும் சின்னம் என்பன 2 வருடங்கள் வரை வேறு கட்சிகளுக்கு வழங்கப்பட மாட்டாது என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஈழதேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ENDLF), தேசிய ஐக்கிய முன்னணி (NVA), விடுதலைப்புலிகள் மக்கள் முன்னணி (PELT) மற்றும் ஐக்கிய தேசிய மாற்று முன்னணி (UNAF) என்பன ஏற்கனவே இரத்துச் செய்யப்பட்டுள்ள கட்சிகளாகும். சில கட்சிகள் மேற்படி கட்சிகளின் பெயர்களை தங்களுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கோரியுள்ளன. இரத்துச் செய்ப்பட்ட அரசியல் கட்சி அல்லது கூட்டணியின் பெயரையோ கட்சி சின்னத்தையோ வேறு கட்சிக்கு வழங்குவது தொடர்பில் தேர்தல் ஆணையாளர் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அரசியல் கட்சியொன்றின் பெயர் மாற்றத்தை மேற்கொள்ளும் போதோ அல்லது புதிய அரசியல் கட்சியொன்றை அங்கீகரிக்க கோரும் போதோ குறித்த பெயர் ஏற்கனவே இரத்துச் செய்யப் பட்டதாயின் குறித்த கோரிக்கை குறித்து அந்தக் கட்சி இரத்துச் செய்யப்பட்ட திகதியில் இருந்து 2 வருடங்களின் பின்னரே கவனத்திற் கொள்ளப்படும்.

பாரிய இணைய தாக்குதலால் உலகெங்கும் இணையதள வேகத்தில் மந்தம்

நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு வெப் ஹோங்ட் நிறுவனத்தின் செயலால் உலகம் முழுவதும் பல பகுதிகளில் இணைய தளத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் மந்த கதியில் இணையதளங்கள் இயங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இணையதளங்களில் இந்த மந்த நிலை தொடர்ந்து பல பகுதிகளில் நீடித்து வருகிறது. இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பேம் ஊடுருவலே இந்த மந்த நிலைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கானோர் உலகம் முழுவதும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் சுத்தமாக இணையதள இணைப்பே கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டுள்ளனர். ஸ்பேம்களுக்கு எதிராக போராடி வரும் ஜெனீவாவைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனமான ஸ்பேம்ஹவுஸ் என்ற அமைப்புதான் இந்த ஸ்பேம் ஊடுருவலைக் கண்டுபிடித்து அது குறித்த எச்சரிக்கைத் தகவலை வெளியிட்டது. இணையதள வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பெரிய ஸ்பேம் தாக்குதலில் இதுவும் ஒன்று என நியூயோர்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.

யாழில் விபச்சார விடுதி முற்றுகை

பல்கலைக்கழக மாணவர் உட்பட 7 பேர் கைது

யாழ். கோவில் வீதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ். பிரதேச செயலக அதிகாரிகளால் இன்று (28) இடம்பெற்ற இம்முற்றுகையின் போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஏழு பேரில் பெண்கள் மூவரும் ஆண்கள் நால்வரும் அடங்குவதாக யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார். கைதானவர்களில் பல்கலைக்கழக மாணவன் ஒருவரும் மாணவி ஒருவரும் அடங்குவர்தாக அவர் குறிப்பிட்டார். இவர்களது பல்கலைக்கழக அடையாள அட்டை யாழ். பிரதேச செயலகத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏனையவர்களில் யாழ்-கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்ணும் அடங்குவதாக அவர் கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக யாழ். பிரதேச செயலர் திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் தெரிவித்தார்.

ரீ.எம்.வி.பி.யின் தேசிய அமைப்பாளராக தவவேந்திரராஜா நியமனம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளராக பஞ்சலிங்கம் தவவேந்திரராஜா நியமிக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். 'ஒழுக்காற்று நடவடிக்கையின் பேரில் நீக்கப்பட்ட கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்ட்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜாவுக்குப் பதிலாகவே ப.தவவேந்திரராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்' என அவர் குறிப்பிட்டார். 20013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளுக்கான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் புதிய நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான கூட்டத்தின் போதே புதிய அமைப்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது, கட்சியின் பிரதி செயலாளராக மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை தெரிவு செய்யப்பட்டார் என பிரசாந்தன் மேலும் தெரிவித்தார். இந்த நிருவாக கூட்டத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கலைக்கப்பட்ட மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 9 உள்ளுராட்சிமன்றங்களுக்கும் புதிய முகங்களை தேர்தலில் இறக்குவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 28, 2013

கருணாநிதி பேரன்

கலாநிதி கொழும்புவில் கட்டும் பிரமாண்ட.....

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன், இலங்கை கொழும்புவில் மிகப் பிரமாண்டமான அளவில் விமான அலுவலக காம்ப்ளெக்ஸ் ஒன்றை கட்டிவருவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. கலாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் உபயோகத்துக்காகவே இந்த காம்ப்ளெக்ஸ் கொழும்புவில் கட்டப்படுகிறது. இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிகட்டப் போரின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக கடந்த வாரம் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனின் பேச்சுக்கு அனைத்து தி.மு.க. உறுப்பினர்களும் கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
(மேலும்...)
 

கட்சி பேதங்களை மறந்து தமிழ் பேசும் மக்கள் ஓரணியில் நிற்க வேண்டும் - சம்பந்தன்


தமிழ் பேசும் மக்கள் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் நிற்க வேண்டிய காலம் இதுவாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, திரியாய் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், "தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்னைக்கு தீர்வு ஒன்றைக் காணும்படி இலங்கை அரசாங்கத்தை சர்வதேச சமூகம் வற்புறுத்தி வருவதே இதற்கான காரணமாகும்.
(மேலும்...)
 

இனங்களிடையே காழ்ப்புணர்வை பரப்ப விளையாட்டை பயன்படுத்த வேண்டாம் - வாசுதேவ

நாட்டிலுள்ள இனங்களிடையே இன காழ்ப்புணர்வை பரப்புவதற்கு விளையாட்டை பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையினை தமிழ் நாட்டு அரசாங்கத்திடம் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார விடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தமிழ் நாட்டில் விளையாட அனுமதிக்கப்படமாட்டார்கள் என தமிழ் நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதையடுத்தே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டை மக்கள் இன கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. எனவே இனங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட விளையாடு குறிப்பாக கிரிக்கெட் நல்ல வாய்ப்பை வழங்குகின்றனது என அவர் தெரிவித்தார். இதை நாம் தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு விளக்குவோம் என கூறிய அமைச்சர் இலங்கைக்குள்ளும் அதற்கு வெளியில் உள்ள இனக்குழுக்களிடையே நல்லிணக்கத்தை எற்படுத்துவது தனது கடமையாகும் என்றார்.

யாழில் இரு குழுக்களுக்கிடையில் மோதல், வர்த்தகரின் கை துண்டாடப்பட்டது

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் சந்தியில் இரண்டு முஸ்லிம் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளார். இச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, இரு குழுக்களுக்குமிடையில் நீண்ட காலமாக நிலவிவந்த கருத்து முரண்பாடுகளே இவ்வாறு வாள் வெட்டு சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் இன்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 55 வயதுடைய முஸ்லிம் வர்த்தகரே கை துண்டிக்கப்பட்ட நிலையில் அசிட் வீச்சிற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விரைவில் மும்மொழி அடையாள அட்டை - வாசுதேவ

மும்மொழி தேசிய அடையாள அட்டையை விரைவில் அறிமுகம் செய்வது பற்றி அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். "அடையாள அட்டை வழங்கல் எனது அமைச்சின் கீழ் இல்லை. எனினும் எனது அமைச்சு இதில் பங்களிக்கவுள்ளது" என அவர் குறிப்பிட்டார். முன்னர் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளில் அடையாள அட்டைகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தபோதும் தற்போது மும்மொழி அடையாள அட்டை பற்றி ஆலோசிக்கப்படுகின்றது என அமைச்சர் தெரிவித்தார். தேசிய அடையாள அட்டையின் முன் பக்கத்தில் சிங்களமே காணப்படுகின்றது. இதை மாற்றி மும்மொழி அடையாள அட்டையை வழங்குவதே எமது விருப்பமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் இந்த மாற்றத்தை கொண்டுவர ஒரு வருடமாவது எடுக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' கண்டியில் துண்டுபிரசுரங்கள்

கண்டி, மடவளை மற்றும் வத்துகாமம் பகுதிகளில் 'சிங்களவர்களே விழிப்பாக இருப்போம்' என்ற தலைப்பில் துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 'சிங்கள தேசத்தின் உண்மையான உரிமையாளர்கள்' என்ற அமைப்பு (சிங்களயே செபே உரிமக்காரயோ) இந்த துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளது. அதன் விபரம் வருமாறு, நவீன உலகில் எதுவித குளிர்கால யுத்தமுமின்றி முஸ்லிம் இராஜ்யம் பற்றி முஸ்லிம்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு முஸ்லிம்கள் அரசியல், பொருளாதார, சமய, அதிகாரங்களை தம்வசப் படுத்திக் கொண்டு போனால் கூடிய கெதியில்; முஸ்லிம்களின் கையின் கீழ் சிங்களவர்கள் வாழவேண்டிய நிலை ஏற்படும். அப்பொழுது சிங்களவர்களுக்கு வெளியேறுவதற்கு ஒரு நாடோ பின்பற்றுவதற்கு சமயமோ இல்லாது கவலைப்பட வேண்டிய நிலை ஏற்படும். அப்படி நடக்காது முளையிலே கிள்ளி எரிய வேண்டிய காலம் சிங்களவர்களுக்கு உதயமாகியுள்ளது. இலங்கை இன்னும் 20- 30 வருடங்களில் இஸ்லாமிய மயதாவதற்கு முஸல்மான்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தற்கால சனத்தொகை விபரத்தை (குடிசன மதிப்பீடு) அரசு இன்னும் வெளியிடாது இருப்பதற்குக் காரணம் முஸ்லிம்களின் சனத் தொகை வளர்ச்சி வீதம் 100 சதவீதமாக இருப்பதே!

இனவாதம், மதவாதம் தூண்டும் குறுஞ்செய்தி அனுப்பினால் சிறை

மக்கள் மத்தியில் இனவாதம், மதவாதத்தை எழுப்பக்கூடிய குறுஞ்செய்திகளை அனுப்பினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார். மேற்கண்டவாறான குறுஞ்செய்திகளை அனுப்புவோர் தொடர்பில் கண்டறிவதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய வேலைத்திட்டமொன்றை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக அவர் கூறினார். இவ்வாறு பொதுமக்களைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயல்பவர்கள் தொடர்பில் தகவல் வழங்க வேண்டுமாயின் 011 - 2320145 மற்றும் 011 - 2320141 போன்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

தமிழன் என்ற வகையில் இலங்கை அணியில் எனக்குப் பிரச்சினைகள் இருக்கவில்லை - முத்தையா முரளிதரன்

தமிழர் என்ற வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் தனக்கு எவ்வித பிரச்சினையும் இருக்க வில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சினைகளுக்குத் தான் முகங் கொடுத்திருந்த காலகட்டத்திலும் இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை ஆகியன பல விதத்திலும் தனக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்ததாக அவர் கூறியுள்ளார். ஐ.பி.எல் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கை வீரர்களு க்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை, இது கிரிக்கெட்டுக்கு ஒரு கவலைக்குரிய நாள். இந்தி யாவின் சில பகுதிகளில் விளையாடுவதற்கு எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது அரசாங்கத் தீர்மானம். அவர்கள் எமக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லையென்றால் நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்றும் முரளிதரன் குறிப்பிட்டார். எங்களை விளையாட அனுமதித்தால் நாம் நிச்சயம் சென்னையில் விளை யாடுவோம். சென்னை எனக்கு இரண்டா வது தாய்நாடு. காரணம் எனது மனைவி மதிமலர் இங்குதான் உள்ளார். இது எனக்கொரு உணர்வுபூர்வமான நிலை.

விஜயகுமாரதுங்கவின் 25வது நினைவு தினம்

இலங்கை மஹஜன கட்சி யின் மறைந்த தலைவரும் பிர பல திரைப்பட நடிகருமான விஜயகுமார துங்கவின் 25வது நினைவு தினத்தையொட்டிய 'விஜய உபஹார கீ பிரசங்கய' பாடல் நிகழ்ச்சி இன்று 28ம் திகதி மாலை 6 மணிக்கு தாமரைத் தடாக மஹிந்த ராஜபக்ஷ அரங்கில் நடைபெறும். விஜய மன்றத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் கடற்றொழில், நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவின் அழைப்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் வைபவம் நடைபெறும். இந்த நிகழ்வில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்கள் பங்கு கொள்வர். விஜயகுமாரதுங்க பாடிய பாடல்களும் இங்கு இசைக்கப்படும்.

ஜெயலலிதாவின் ஆட்சியை மத்திய அரசு கலைக்க வேண்டும்

தமிழகத்தில் நடைபெறும் ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் அனுமதிக்கப்படக்கூடாது என தமிழக முதல்வர் அறிவித்துள்ளதால் முதல்வர் ஜெயலலிதாவின் அரசை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த கோரிக்கை இந்திய அரசியல் சாசனத்துக்கு முரணானது, அதனால் மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு அரசியல் சாசனத்தின் 256 இன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டும். சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து ஐ. பி. எல். போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து முதல்வர் ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். (மேலும்...)

ராகுல்தான் அடுத்த பிரதமர்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் தான் அடுத்த பிரதமர் என்றும், அவர் இந்த நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார் என்றும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, டில்லியில் நிருபர்களிடம் பேசி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரiத் ஆல்வி கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் அனைத்து தொண்டர்களும், தலைவர்களும் ராகுலே அடுத்த பிரதமராக வரவேண்டுமென விரும்புகின்றனர். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ராகுலே நாட்டின் அடுத்த பிரதமராக வருவார். பிரதமருக்கான தகுதி ராகுலுக்கு நிச்சயம் உண்டு. ராகுலுக்கென தனியாக எண்ணங்கள் உள்ளன. அவருக்கு தொலை நோக்கு பார்வை உள்ளது. நிச்சயம் ராகுல் பிரமராக வருவார். அவர் இந்த நாட்டை சிறப்பாக வழிநடத்துவார் என்று தெரிவித்தார்.

பங்குனி 27, 2013

தமிழகத்தில் புலிகள் இயக்கத்தை தொடங்குவோம் - மாணவ போராட்டக் குழு

தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள் என்று மாணவர் போராட்டக் குழு தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திலிருந்து அனைத்துக் கல்லூரி மாணவர்கள் இன்று மாலை பைக் பேரணி தொடங்கினார்கள். இப்பேரணியை வைத்து தொடங்கி வைத்துப் பேசிய மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பகவான் தாஸ், இந்திய அரசு இலங்கை விவகாரத்தில் தலையிட்டு தனி ஈழ அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தமிழகத்தில் மாணவர்களே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தொடங்கி, தனி ஈழம் அமைவதற்கான போராட்டத்தை முன்னெடுப்பார்கள்" என்றார். இதனிடையே இப்பேரணி தெப்பக்குளத்தில் முடிவடையும் என தெரிவிக்கப்பட்ட நிலையில்,  அந்த பகுதியில் காங்கிரஸ் அலுவலகம் இருப்பதால், மாணவர்கள் தாக்குத நடத்தக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் படை குவிக்கப்பட்டது. இதனிடையே மாணவர்கள் பேரணியாக வருவதை பார்த்து காங்கிரஸ் நிர்வாகிகள், வழியில் வைக்கப்பட்டிருந்த தங்களது கட்சி பேனர்களை கழற்றி, அலுவலகத்திற்குள் எடுத்துச் சென்று வைத்துவிட்டனர்.

தனி ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு - தமிழக சட்டசபையில் தீர்மானம்!

தனி ஈழத்துக்காக இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழக சட்ட சபையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா ஈழப்பிரச்னை தொடர்பாக தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதில், தனி ஈழம் அமைப்பது தொடர்பாக  பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (மேலும்...)

மீண்டும் கொம்பு சீவாதீர்கள் 

(நடேசன்)

தற்போது இலங்கைத் தமிழ் அரசியலை எழுதுவது மிகவும் சலிப்பான விடயமாகிறது. உமலில் இருந்து வெளியேறிய நண்டு மாதிரி பக்கவாட்டிலே சென்று மீண்டும் அதே புள்ளியை சென்று அடைகிறது. எத்தனை வருடங்கள் கழிந்தாலும் தொடக்கப் புள்ளியை விட்டு முன்னேறாது. இதில் ஒரு வசதி தமிழ் நாட்டு மெகா சீரியல்போல் ஒருமாதம் விடுமுறை போகையில் பார்க்காது இருந்தாலும் மீண்டு வந்து கலந்து கொள்ளமுடியும். இரசித்துக் கொள்ள முடியும். சீரியலாக இருந்துவிடுவதால். ஆனால் பல இலட்சம் மக்களது வாழ்க்கை பிரச்சனையாக இருப்பதால் மனம் கசந்து விடுகிறது. இப்படியான நிலையில் நாம் எழுதி என்ன சாதிக்கப்போகிறோம் என்ற விரக்தி தான் மிஞ்சும். அதேபோல் சொல்லி என்ன பிரயோசனம் என எழுதாமல் விடவும் மனம் கேட்கவில்லை. (மேலும்...)

ரணில், சந்திரிகா, மங்கள ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தை

காலியில் உள்ள பிரபல விடுதியொன்றில், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஆகியோர் வெளிநாட்டவர்களுடன் இணைந்து ரகசியமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 23 ஆம் திகதி குறித்த விடுதிக்கு சென்ற இவர்கள் நீண்ட கலந்துரையாடலை நடத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன. இந்த பேச்சுவார்த்தையில் 25 வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.

ரெலோவின் மாநாட்டை ஏப்ரலில் நடத்த உத்தேசம்

ரொலோ என்று அழைக்கப்படும் தமிழர் விடுதலை இயக்கத்தின் 8ஆவது மாநாட்டை ஏப்ரல் 6ஆம் திகதி வவுனியாவில் நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மகாநாடு கடந்த பெப்ரவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தமிழர் விடுதலை இயக்கத்தினால் அறிவிப்பட்டிருந்தது. எனினும் தவிர்க்க முடியாத காரணத்தினால் மார்ச் மாதத்திற்கு அந்த மகாநாடு பிற்போடப்பட்டது. எனினும் ஜெனிவா கூட்டத் தொடர் மற்றும் ஜேர்மனில் நடைபெறும் மாநாடொன்று ஆகியவற்றில் தமிழர் விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கலந்துகொள்வதற்காக சென்றுள்ளார். இதனால் மார்ச் மாதத்திலும் ரொலோ மாநாடு இடம்பெறவில்லை. இந்நிலையிலேயே எதிர்வரும் ஏப்ரல் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் வவுனியா மாவட்டத்தில் நடைபெறும் என்றும் மகாநாட்டிற்கான நேரம் மற்றும் இடம் என்பன கட்சியின் தலைவருடன் கலந்துரையாடிய பின்னர் அறிவிக்கப்படும் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவின் அச்சுறுத்தலை அலட்டிக்கொள்ள தேவையில்லை - டி. யு. குணசேகர

அமெரிக்காவின் அச்சுறுத்தல் குறித்து இலங்கை அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அமெரிக்கா கூறுவது போல இலங்கை தொடர்பில் சர்வதேச பொறி முறையொன்றை கொண்டுவருவதாக கூறுவதெல்லாம் வெறும் பூச்சாண்டி மட்டுமே என சிரேஷ்ட அமைச்சர் டி. யு. குணசேகர தெரிவித்தார். இலங்கை தொடர்பில் விசாரிக்க சர் வதேச பொறிமுறை அமைத்தால் ஜனாதிபதி மேலும் பலம் அடைவார். எனவே அத்தகைய காரியத்தில் அமெரிக்கா இறங்காது என்று தெரிவித்த அவர், நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சு களை முழுமையாகச் செயற்படுத்த வேண்டும் எனவும் இது தொடர்பில் அரசாங்கத்திற்கு தங்களுடைய யோச னையை முன்வைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்...)

ஆஸி. செல்ல முயற்சித்த 97 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்றுகொண்டிருந்ததாகக் கூறப்படும் 97 பேர் அம்பாறை கடற்பரப்பில் இன்று புதன்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் புத்தளம், வாழைச்சேனை, திருக்கோவில் ஆகிய  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்   கைதுசெய்யப்பட்டவர்கள் ஒலுவில் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர். 

இ.ஒ.கூ. வழியான பி.பி.சி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்

பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது. இத்தகவலை பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீற்றர் ஹோரக்ஸ் வெளியிட்டார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து நடந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. "இலங்கையில் எமது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுவரும் நேயர்களுக்கு இந்த சேவை தரப்படுவதில் ஏற்பட்டிருக்கும் இத்தடை குறித்து நாங்கள் வருந்துகிறோம். ஆனால் எங்களது நிகழ்ச்சிகளை குறிவைத்து இதுபோன்ற இடைஞ்சல்கள் நடப்பது, அந்த நேயர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாரிய அளவில் மீறுவதான ஒரு செயல். இதை பிபிசி அனுமதிக்கமுடியாது" என பீற்றர் ஹோரக்ஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். சென்னை போட்டிகளில் இலங்கை வீரர்கள் இல்லை

இந்தியன் பிரீமியர்லீக் (ஐ.பி.எல்) போட்டித் தொடரின் சென்னையில் நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை வீரர்கள் மற்றும் நடுவர்களை அனுமதிப்பதில்லை என்று ஐ.பி.எல் நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள், சென்னையில் நடைபெறவுள்ள  ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்ககூடாது என தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ள நிலையிலேயே மேற்படி நிர்வாகக் குழு இத்தீர்மானத்தை எடுத்துள்ளது. இது குறித்து அணி நிர்வாகிகளிடம் உறுதிமொழி பெறப்பட்டுள்ளதாகவும், இலங்கை வீரர்களுக்கு ஏற்படும் இழப்பு சரி செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல்.நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.

எலிசபெத் மகாராணி பங்கேற்கமாட்டார், பொதுநலவாய மாநாடு மொரீஸியசுக்கு மாற்றம்?

கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அம்மையார் பங்கேற்க மாட்டார் என லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்பு செயலகத்தின் பெயர் வெளியிடாத மூத்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என இந்திய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில், இங்கிலாந்து மகாராணியார் பங்கேற்கமாட்டார் என்பது பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக அவ்வதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார் எனவும் அப்பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல நாடுகளின் தலைவர்களும் கொழும்பு மாநாட்டில் இருந்து ஒதுங்கிகொள்ள வாய்ப்புள்ளதாகவு கூறப்படுகிறது. கனடா பிரதமர் இந்த மாநாட்டை புறக்கணிக்க உள்ள நிலையில், பிரிட்டன், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளும் இந்த மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போருக்குத் தயார்!

அமெரிக்கா மீது வடகொரியா எந்நேரமும் தாக்கலாம்?

வடகொரியா தனது ஆட்டிலறி மற்றும் நீண்ட, குறுந்தூர ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும் எனவே எந்நேரத்திலும் அமெரிக்க இலக்குகளை தாக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத்தை உஷார் நிலைக்கு கொண்டுவரும் படி அந்நாட்டின் இராணுவ உயர் பீடத்திலிருந்து கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆசியாவில் உள்ள அமெரிக்க இலக்குகள், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் அதன் இராணுவத்தளங்களான குஹாம், ஹவாய் மீது தாக்குதல் நடத்தும் பொருட்டு  வடகொரியா தனது ஏவுகணைகளை தயாராக வைத்துள்ளதாக  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நாடு போர்க்கான தயார் நிலையில் உள்ளதாக வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. (மேலும்...)

இந்தியாவைக் கூறுபோடும் நோக்கில் இலங்கை மீது மேற்கத்தேயம் அழுத்தம்

இந்தியாவை கூறு போடுவதற்காகவே மேற்கத்தேய நாடுகள் இலங்கை மீது பழி சுமத்துவதாக பிரதமர் தி.மு. ஜயரட்ன தெரிவித்தார். வெளிநாட்டு ஆதிக்கங்களை இலங்கை மீது திணித்து இனங்களுக்கிடையில் மோதல்களை ஏற்படுத்தி யுத்தத்தின் மூலம் மனித படுகொலைகளை ஏற்படுத்த சில சக்திகள் முயற்சி செய்துள்ளன. நாம் வெளி நாட்டவர்களுடன் எந்த பிரச்சினைக்கும் செல்வதில்லை. எமக்கு யாருடனும் பொறாமையோ, குரோதமோ இல்லை. எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நாட்டை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செய்கின்றார். இந்த நாட்டில் பிரதானமான நான்கு இனங்கள் வாழ்கின்றனர். இம்மக்களின் மதம் கலாசாரம் போன்றவைகளில் பிரிவினைகளை ஏற்படுத்தக் கூடாது. இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். அனைவரும் இலங்கை யர் என்ற வகையில் ஒருமித்து வாழவேண்டும். மதங்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டால் எந்த ஒரு இனத்துக்கும் சுதந்திரமாக வாழ முடியாது. இது எதிர்கால சந்ததிகளை கடுமையாக பாதித்துவிடும்.

ரஷ்யாவிடமிருந்து யுத்த விமானம், நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குகிறது சீனா

ரஷ்யாவிடமிருந்து 24 யுத்த விமானங்கள் மற்றும் நான்கு நீர்மூழ்கிக் கப்பல்களை சீனா கொள்வனவு செய்யவுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது கடந்த ஒரு தசாப்தத்தில் சீனா, ரஷ்யாவிடமிருந்து பாரிய அளவான இராணுவ தளவாடங்களை கொள்வனவு செய்யும் முதல் தடவை என கூறப்பட்டுள்ளது. இதில் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் ரஷ்யாவில் தயாரிக்கப்படவுள்ளதோடு மேலும் இரு நீர்மூழ்கிக் கப்பல்கள் சீனாவில் தயாரிக்கப்படவுள்ளன. அமெரிக்காவின் இராணுவ ஆதிக்கத்திற்கு சரிசமமாக பதில் கொடுக்க ரஷ்யா மற்றும் சீனா தயாராகி வருவதாக அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பங்குனி 26, 2013

முடிச்சுக்களை அவிழ்க்க முயல்கின்றார் சரத் பொன்சேகா...?

பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா எங்கே?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலச்சந்திரன் ஆகியோரின் உடல்கள் நந்திக்கடல் பகுதியில் 2009 மே 20ம் நாள் மீட்கப்பட்டதாக இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். போரின் முடிவில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், மூத்த மகன் சாள்ஸ் அன்ரனி ஆகியோரின் உடல்களை மீட்டதாக இராணுவம் கூறியிருந்தது. ஆனால், பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் என்னவாயினர் என்று தமக்குத் தெரியாது அவர்கள் பற்றிய தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று அரசாங்கமும் இராணுவமும் கூறிவந்தன. (மேலும்...)

பலசேனா  பாசிசம் தோற்கடிக்கப்படவேண்டும்! இலங்கையின் பல்லினப் பாங்கு நிலைநாட்டப்படவேண்டும்!!

(ஸ்ரீதரன்-சுகு)

19977, 80, 81, 83 என இன கலவரங்கள் வடக்கு கிழக்கு மலையக தமிழ் மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்டு அது பாரிய யுத்தமாக மாறி பேரழிவுகளை ஏற்படுத்தி 30 ஆண்டுகள் கடந்த பின்னர் இன்று மீண்டும் முஸ்லீம் மக்களுக்கு எதிராகவும் அவர்களுடைய பொருளாதாரம், மதம், கலாச்சாரத்துக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் பரவலாக வாழும் முஸ்லீம் மக்கள் பீதியுடன் வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஹலால் முத்திரைக்கு எதிரான போராட்டம் இப்போது முஸ்லீம் பெண்கள் மீதான தாக்குதலாக மாறியுள்ளது. பல்வேறு தளங்களில் அச்சுறுத்தல்கள் நிகழ்கின்றன. தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மேற்கொள்வது மத, கலாச்சார ஆக்கிரமிப்புக்களை நிகழ்த்துவது நிரந்தர இராணுவ பிரசன்னம் இவை தொடர்ந்து கொண்டிருக்கும் அதேவேளையில் பொதுப்பல சேனா என்ற பெயரில் பெருமெடுப்பில் முஸ்லீம் மக்களுக்கெதிரான இனவாத விசம் கக்கப்படுகிறது.  (மேலும்...)

ராஜராஜ சோழனின் கோயில் பெருமிதத்திற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஜாதி

(தமிழேந்தி)

மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு, தமிழக அரசு கோவையில் நடத்திய "உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு' ஆரவாரங்கள் இன்னும் அடங்கவில்லை. ஆனால், விழா நடத்திக் களிப்பதில் வித்தகரான இன்றைய முதல்வர், தற்பொழுது தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாண்டு நிறைவு விழாவை (செப்டம்பர் 22 அன்று தொடங்கி 26 வரை) அமர்க்களமாய்க் கொண்டாடி இருக்கிறார். தாங்க முடியாத பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், சாதி சண்டைகள், சமயப் பூசல்கள் போன்ற பல்வேறு சுமைகளின் பாரம் தாங்காமல் தமிழனின் முதுகெலும்பே முறிந்து போகும் நிலையில் இவையெல்லாம் எதற்காக? வீழ்ந்து கிடக்கும் தமிழினம், மாமன்னன் ராசராசனின் வெற்றிப் பெருமிதங்களின் நினைவூட்டலால் தலைநிமிரும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இவ்விழா நடத்தப்பட்டதா? (மேலும்...)

அரை நூற்றாண்டு கடந்தும் இன்னும் உயிர்வாழும் பட்டுக்கோட்டையாரின் கவிதைகள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13,1930 - அக்டோபர் 8,1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தமிழ் நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1939 இல் எளிய விவசாய குடும்பத்தில் இவர் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதி சுந்தரம் எனும் சகோதரரும் வேதாம்பாள் என்னும் சகோதரியும் உள்ளனர். (மேலும்...)

த.தே.கூ.வினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல - ஆனந்த சங்கரி

'கூட்டமைப்பாக பதிவு செய்வதில் தமிழரசுக் கட்சிக்கு எண்ணமில்லை. அவர்கள் எம்மீது சவாரி செய்யவே பார்க்கின்றனர். கூட்டமைப்பு உடையாதிருப்பதற்கு எந்த விட்டுக்கொடுப்புக்கும் தயார் என சம்பந்தர் கூறியிருந்த போதிலும், அவர் இரண்டு வருடங்களாக இதனையே தெரிவித்து வருகின்றார். ஆனால் நாம் சப்பரத்தில் வைத்து அவரை காவவேண்டி உள்ளது. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகள் என்ன நடந்தாலும் ஒற்றுமையை சீர்குலைக்கக் கூடாது என்பதற்காக அர்ப்பணிப்போடு செயற்படுகின்றன'  (மேலும்...)

வன்னியில் எம்.பி.க்கள் தொகை குறைப்பு நுவரெலியாவில் அதிகரிப்பு

கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் பதிவுகளின்படி, வன்னி தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகை ஆறிலிருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டிருப்பதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் கே.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டு இருந்த வாக்காளர்களைவிட 2012ஆம் ஆண்டு இந்தத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் தொகை 2,213 பேரினால் குறைவடைந்ததை அடுத்தே மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறில் இருந்து ஐந்தாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் 2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, முந்திய வருடத்திலும் பார்க்க வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதனால் அந்தத் தேர்தல் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையில் ஒன்று அதிகமாகியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்திய மத்திய அரசுக்கு மீண்டும் நெருக்கடி

ஆதரவை விலக்கப் போவதாக சமாஜ்வாதி கட்சி மிரட்டல்

உத்தரபிரதேச முதல் மந்திரியும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகனுமான அகிலேஷ் யாதவ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை தாம் விரைவில் வாபஸ் பெறப்போவதாகக் கூறினார். இதனால் இந்திய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்:- காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எங்களது சமாஜ்வாதி கட்சி வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறது. பெரும்பாலான ஊழல்களுக்கு காங்கிரஸ் கட்சியே காரணமாக இருப்பதால் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே நாங்கள் மத்திய அரசுக்கு வெளியில் இருந்து கொடுத்து வரும் ஆதரவை வாபஸ்பெற திட்டமிட்டுள்ளோம். அதற்காக எங்கள் கட்சி தயாராகி வருகிறது. ஆதரவு வாபஸ் அறிவிப்பை எப்போது வெளியிடுவது என்பது பற்றி எங்கள் கட்சி தலைமை முடிவு செய்யும்.

மத்திய ஆபிரிக்க குடியரசு ஜனாதிபதி தப்பி ஓட்டம்

மத்திய ஆபிரிக்கக் குடியரசு தலைநகர் பங்குய்யை கிளர்ச்சியா ளர்கள் கைப்பற்றியதை அடுத்து அந்நாட்டின் ஜனாதிபதி, பிரான்கோயிஸ் போஸிஸ் தப்பி ஓடிவிட்டார். இராணுவப் புரட்சி மூலம் கடந்த 2003ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய பிரான்கோயிஸ் போஸிஸ் மத்திய ஆபிரிக்கக் குடியரசின் ஜனாதிபதியாக பதவி வகித்து வந்தார். அவ்வப்போது கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஓராண்டாக ஆயுதப் போராட்டம் வலுத்தது. இதற்கிடையே கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தரப்புக்கும், கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 ஆண்டுகளில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. எனினும் தொடர்ந்து மோதல் ஏற்பட்ட நிலையில் கிளர்ச்சியாளர்கள் நேற்று முன்தினம் தலைநகர் பங்குய் மீது அதிரடி தாக்குதல் நடத்தி, அதனைத் தங்க ளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றினர். இதற்கிடையே ஜனாதிபதி பிரான்கோயிஸ் நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டார். அவர் எங்கே தப்பிச் சென்றார் எனத் தெரியவில்லை

பங்குனி 25, 2013

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 4

(எல்லாளன்)

இந்தியா சென்று எப்போது வேறு நாட்டிற்குப் பயிற்சிக்குச் செல்வது என்று கேட்டேன். அவர் சொன்னார் இந்தியாவை விட வேறு நாடு இல்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பலர் எம்மைக் கேட்ட கேள்வி நீங்கள் இந்தியாவை நம்புகிறீர்களா என்பதே. இந்தியா ஒரு போதும் எமது பிரச்சினைக்குத் தீர்வாக அமையப் போவதில்லை. பிரச்சினையாகத் தான் இருக்கும் என்றும் சொன்னார்கள். அதற்கு நமது பொறுப்பாளர் சொன்னார். நாங்கள் சோசலிசத்தை அணுகிக் கொண்டிருக்கின்ற ஒரு நாட்டில் தான் பயிற்சி எடுக்கின்றோம். இந்தியாவைத் தளமாகத் தான் பயன்படுத்துகின்றோம் என்று. நான் எனக்குள் நினைத்தேன். சோசலிசத்தை அணுகுகின்ற நாடு என்றால் ரஷ்யாவாகத்தான் இருக்கும் என்று. எனக்குத் தெரியும் இந்தியா சோசலிசத்தை அணுகவில்லை என்று. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நாம் சொன்னது என்னவோ, ஆனால் செய்கிறதோ வேறொன்றாக இருந்தது. எனினும் எனது பாதுகாப்பற்ற நிலைமை என்னை இந்தியா போக வைத்தது. அந்த நேரத்தில் வெளிநாட்டிற்குப் புலம்பெயரும் எனது பயணம் தயாரான நிலையில் இருந்தது. எனினும் நான் என்னை முழுமையாக இயக்கத்திற்கு அர்ப்பணித்து இந்தியா போக முடிவு செய்தேன். (மேலும்...)

வட, கிழக்கின் பல பகுதிகளில் ஹர்த்தால்

யாழ்ப்பாணம், மன்னார், அம்பாறை மற்றும்; மட்டக்களப்பு மாவட்டங்களில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.  யாழ்ப்பாணத்தில் நாவாந்துறை மற்றும் யாழ். நகரப் பகுதிகளிலும்  மன்னார் மாவட்டத்தில் மன்னார் பஸார் பகுதியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஆகிய பகுதிகளிலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, நிந்தவூர், சாய்ந்தமருது, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் அநீதிகளை கண்டித்தே இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஹர்த்தால் காரணமாக மேற்படி பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வட மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது

வட மாகாண சபை தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வட மாகாண சபை இதுவரை அமைக்கப்படாமையினாலேயே தேர்தல் நடத்த முடியாதுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அரசாங்கம் வட மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது என தீர்மானித்துள்ள போதும் தம்மால் தேர்தல் வேலைகளை தொடங்க முடியாதுள்ளது என அவர் குறிப்பிட்டார். "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் கடந்த 2006ஆம் ஆண்டு பிரிக்கப்பட்ட பின், கிழக்கு மாகாண சபை வர்த்தமானி அறிவித்தல் மூலம் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தும்படி ஜனாதிபதி பணித்தார். இந்த நடைமுறையே வட மாகாணத்திலும் பின்னப்பற்றப்பட வேண்டும். ஆனால் எமக்கு இன்னும் கட்டளைகள் கிடைக்கவில்லை" என அவர் தெரிவித்தார். தேர்தல் செயன்முறைகளை பூர்த்தி செய்ய மூன்று மாதங்கள் தேவைப்படும். தேர்தலை செப்டம்பரில் நடத்துவதாயின் எமக்கு ஜனாதிபதியின் கட்டளை மே மாதத்தில் கிடைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில்

இலங்கை சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பஸ் எரிந்து சாம்பர்

பதினாறு இலங்கை சுற்றுலா பயணிகள் பயணம் செய்த பஸ் எரிந்து சாம்பராகியபோதும் அவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டனர். ஒரேயொரு சுற்றுல்லா பயணிக்கு மட்டும் தலையில் எரி காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சுற்றுல்லா பயணிகள் மதியவேளை உலகின் அதி உயரமான கெஸாரிய புத்த ஸ்தூபியில் ஏறிக்கொண்டிருந்தபோது வெளியில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் திடீரென தீப்பிடித்துக் கொண்டுள்ளது. சுற்றுல்லா பயணிகளின் சூட்கேசுகள், கடவுச்சீட்டு உட்பட சகல தனிப்பட்ட உடமைகளும் கருகி போயியுள்ளன. தீப்பிடித்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. எனினும் அண்ணளவாக 1 மில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த தூபி அமைந்துள்ள இடம் பாட்னாவிற்கு வட கிழக்கே சுமார் 110 கிலோ மீற்றர் தூரத்திலுள்ளது. உள்ளூர் சுற்றுல்லா விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள இவர்களை அடுத்த சுற்றுல்லா தளமான வாரணாசிக்கு அழைத்து செல்லப்படும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இலங்கை விவகாரம்; தமிழக சட்டப் பேரவையில் அமளி, தி.மு.க வெளிநடப்பு

இலங்கை தமிழர் பிரச்சினையில் திராவிட முன்னேற்றக் கழகம் தூரோகம் இழைத்துவிட்டது என்ற அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்  குற்றச்சாட்டை கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் இன்று சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று 2013 - 2014ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தொடர்பில் உரையாற்றிய அ.தி.மு.க பெண் எம்.எல்.ஏ.வும் துரையூர் சட்டமன்ற உறுப்பினருமான இந்திரா காந்தி, இலங்கை தமிழர்களுக்கு தி.மு.க தலைவர் முகருணாநிதி தூரோகம் இழைத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார். அ.தி.மு.க.வின் இந்த குற்றச்சாட்டிற்கு தி.மு.க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க சார்பில் பேசிய உறுப்பினர் சக்கரபாணி, '1956ஆம் முதல் இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் தி.மு.க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக' கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன் மற்றும் வளர்மதி ஆகியோர், 'இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கும், அந்த இனமே அழிவதற்கும் தி.மு.க தான் காரணம்' என்று கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

தமிழக மாணவர் எழுச்சியும் ஐ.நா தூக்குத் தண்டனை நாடகமும்  

(சபா நாவலன்)

வன்னிப் படுகொலை விட்டுச் சென்றிருக்கும் வருடாந்த வைபவங்களுள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஊடாக ராஜபக்சவைத் தூக்கில் போடுவோம் என்ற பெயரில் நடத்தப்படும் சந்தர்ப்பவாதிகளின் ஒன்றுகூடல் பிரதானமானதாகும். அவலங்களின் அழுகுரல்கள் நான்கு வருடங்களின் பின்னர் இன்னும் ஒலித்துக்கொண்டிருக்க மக்கள் ராஜபக்சவை யாராவது தண்டித்து விடுவார்கள் என நாட்களை நம்பிக்கையோடு ஓட்டுகிறார்கள். ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் கூடுவதற்கு சற்று முன்னதும் பின்னதுமாக புலம் பெயர் நாடுகள் தூக்குததண்டனை நாடகம் ஆரம்பித்துவிடும். நாடகத்தில் நடிப்பதற்காக புலம்பெயர் தமிழ் அரசியல் தலைவர்கள், இலங்கை அரசு, அமரிக்க அரசு, இந்தியா, தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் என்று ஒரு நட்சத்திரக் கூட்டம் தயாராகிவிடும். மிரட்டல்கள், வெற்றி முழக்கங்கள், சொல் வீச்சுகள் ஆகியவற்றோடு இறுதிவரை நகர்ந்து செல்லும் நாடகத்தின் முடிவு முன்னமே எதிர்பார்தவாறு இலங்கை அரசைக் காப்பாற்றிவிடும். (மேலும்...)

கிறிஸ்தவ சபை மீது பிக்குகளின் குழு தாக்குதல்

கொழும்புக்கு புறநகரான கொட்டாவை ஹைலெவல் வீதியில் உள்ள கிறிஸ்தவ பெந்தகோஸ் சபையின் பிரார்த்தனை மண்டபம் ஒன்றினுள் நுழைந்த பௌத்த பிக்குகளின் குழு ஒன்று அங்கு தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தது. பிரதேச மக்களின் உதவியுடன் குறித்த பிக்குகள் குழு அந்த சபையினை சுற்றி வளைத்தனர். சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது, இந்த நிலைமை தற்போது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெ'வ்'வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை பலவந்தமாக மதமாற்றத்துக்கு உட்படுத்துவதாக, குறித்த பிரதேசத்தில் உள்ள பெந்தகோஸ் சபையின் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த குழப்ப நிலை ஏற்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

நாழி, குருணி, பதக்கு...

தமிழர்களின் அளவீடுகளும் அதிநுட்ப அறிவாற்றலும்!

(கு. ராமகிருஷ்ணன் )

தமிழர் அளவீட்டு முறைகள்... ஆழமான அறிவை அடிப்படையாகக் கொண்டவை

ஆதிகாலத்திலிருந்தே தங்களுக்கென அளவீட்டு முறையைக் கண்டுபிடித்து, அதைப் பயன்படுத்தி வந்தவர்கள் தமிழர்கள். ஆங்கிலேயர்களின்  ஆக்கிரமிப்பு ஆரம்பமான பிறகு, அவர்களுடைய அளவீட்டு முறைகள் மெள்ள இங்கே புகுத்தப்பட்டதால்... பாரம்பரிய அளவீட்டு முறைகள் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிய ஆரம்பித்தன. ஒரு கட்டத்தில் இந்திய அரசாங்கமே, ஆங்கில அளவீட்டு முறைக்கு ஒட்டுமொத்தமாக சலாம் போட்டு சரண்டராகிவிட்ட நிலையில்... பாரம்பரிய அளவீட்டு முறைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தை இழந்துவிட்டன. ஆனாலும், கிராமப்புறங்கள் பலவற்றிலும், இன்னமும்கூட அவை புழக்கத்தில் இருக்கின்றன என்பது ஆச்சர்யமே! (மேலும்...)

சென்னையிலுள்ள துணைத் தூதரகம் இடமாற்றப்படாது

சென்னையில் இயங்கும் இலங்கை துணைத் தூதரகத்தை கேரளாவுக்கு இடம்மாற்றவிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்தியினை இலங்கை வெளிவிவகார அமைச்சு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்தச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அனைத்தும் வதந்திகளே யென்றும் அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் ரொட்டனி பெரேரா தெரிவித்தார். சென்னையில் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இலங்கை துணைத் தூதரகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள துணை தூதரகத்தை கேரளா தலைநகர் திருவனந்தபுரத்துக்கு மாற்ற முடிவு செய்திருப்பதாகவே ஊடகங்களில் செய்தி கள் வெளியாகியுள்ளன. இச் செய்தி முற்றிலும் பொய்யெனக் கூறி மறுத்த ரொட்னி பெரேரா, அவ்வாறு எந்த தீர்மானமும் முன்னெடுக்கப்படவில்லை யெனவும் இலங்கைத் துணை தூதரகத்தை இடமாற்ற வேண்டிய அவசியம் இல்லை யென்றும் சுட்டிக்காட்டினார்.

மத்திய ஆபிரிக்க குடியரசின் தலைநகரில் கிளர்ச்சியாளர்கள் நுழைவு

மத்திய ஆபிரிக்க குடியர சின் தலைநகருக்குள் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவி யுள்ளனர். தலைநகர் பென்குவிக்கு நூற்றுக் கணக்கான கிளர்ச்சி யாளர்கள் ஊடுருவியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக் கின்றன. கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் நெல்சன் ஜட்டர், எங்கள் படை தலைநகருக்குள் நுழைந்துவிட்டது. அது நகரத்தின் மத்திய பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை நோக்கி முன்னேறி வருகிறது என்று கூறியுள்ளார். ஜனாதிபதி மாளிகையை பாதுகாக்க அந்நாட்டு படைகள் விரைந்துள்ளன. இதனால் அந்நாட்டின் விமான நிலையத்தை பாதுகாக்க பிரான்ஸ் இராணுவப் படை அனுப்பப்பட்டுள்ளது. இப்போது விமான நிலையம் பாதுகாப்பாக உள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் மேலும் கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு குழு அவசரக் கூட்டத்தை கூட்டுமாறும் பிரான்ஸ் அரசு கேட்டுள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர், இந்த நடவடிக்கைகளுக்கு ஆபிரிக்க ஒன்றிய நாடுகள் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பங்குனி 23, 2013

பறிபோகும் சோமவங்சவின் தலைமை பதவி..!

நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்து வரும் சோமவங்சவை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு புதிய ஒருவரை அப்பதவியில் அமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி மேற்கொண்டு வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்களும் விவாதங்களும் தற்பொழுது கட்சியின் உயர்பீடத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.சோமவங்ச அமரதுங்க நீண்ட காலமாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக செயற்பட்டு வந்துள்ளார். அவர் தற்போது வயதாகியுள்ளதாகவும் அடுத்த தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காகவுமே புதிய தலைமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்படும் வீழ்ச்சியே இந்த திடீர் தீர்மானத்துக்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது. மக்கள் விடுதலை முன்னணியின் புதிய தலைவர் பதவிக்காக ரில்வின் சில்வா, அனுர சேனாநாயக்க மற்றும் விமல் ரத்நாயக்க ஆகியோரின் பெயர்கள் பரீசிலனையில் இருப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சந்திரபாபுவும், எம்.ஜி.ஆர். உம் சில உண்மைகள்

எம்.ஜி.ஆரை சின்னவர், வாத்தியார் என சினிமாத்துறை அழைத்துக் கொண்டிருக்க, 'மிஸ்டர் எம்.ஜி.ஆர்' என அழைத்த ஒரே ஆள் சந்திரபாபு. அப்போதைய சினிமா பத்திரிக்கைகளில் தான் அளித்த பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் அப்படியே குறிப்பிட்டிருக்கிறார். "எம்.ஜி.ஆர் அனைவரும் தன்னை மட்டுமே புகழ வேண்டும். எல்லாவற்றிலும் தான் மட்டுமே தெரிய வேண்டும் என நினைப்பவர் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் சந்திரபாபு. சிவாஜி நல்ல நடிகர் ஆனால் அவரைச் சுற்றி இருக்கும் ஜால்ரா கூட்டத்தை அவர் விளக்க வேண்டும், ஜெமினி கணேசனின் பணம் சம்பாதிக்கும் தந்திர குணம் தனக்கு எப்படி உதவியது என்பது குறித்து கூட வெளிப்படையாக எழுதி அவர்களின் கோபத்தை சம்பாதித்திருக்கிறார். ஆனால் வெளிப்படையாக கோபத்தை காட்டாத மனிதர் எம்.ஜி.ஆர். சந்திரபாபு மீது தனக்கு உள்ளுக்குள் கணன்று கொண்டிருந்த கோபத்தை, பழியை தீர்த்துக்கொள்ள எம்.ஜி.ஆருக்கு ஒரு அருமையான சந்தர்ப்பம் ஏற்பட்டது. கர்வம் நிறைந்த வெள்ளந்தியான சந்திரபாபுவே அதற்கும் வழி அமைத்துக் கொடுத்தார்! (மேலும்...)

விளாம்பழத்து ஓடு அல்ல கச்சத்தீவு
விட்டதடி உறவு என்று சொல்லி விடுவதற்கு !

அண்மையில் நண்பர் ஜோதிஜி கச்சத்தீவு பற்றி எழுதிய ஒரு கட்டுரை தான் என்னை இதை  எழுதத்தூண்டியது. அதில்  நண்பரின் கண்ணோட்டத்தில்  ஒரு வாசகம் - கச்சத்தீவு என்பதை இந்தியாவால் கைகழுவப்பட்ட துண்டு நிலம் என்பதே எதார்த்தம். அதில் இனி எந்த காலத்திலும் சொந்தம் கொண்டாடுவது என்பது கற்பனையில் வேண்டுமானால் நினைத்துக் கொண்டு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். காரணம் இந்த ஒரு பிரச்சனையில் இந்தியா தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்க என்று கைவைத்தால் வைத்த கை சுட்டுவிடும் என்பதை விட கையே இல்லாமல் போய்விடக் கூடிய அபாயமும் உண்டு (மேலும்...)

தமிழர் பிரச்னைக்கு இலங்கை தீர்வு காண வேண்டும் - சிவசங்கர் மேனன்

இந்தியாவின் நலன் கருதி தமிழர் பிரச்னைக்கு இலங்கை தீர்வு காண வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் கூறியுள்ளார். மேலும் அவர், இலங்கை நமது நட்பு நாடாக இருக்க வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம். இலங்கையில் தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை, சுதந்திரமாக செயல்படும் உரிமை, நம்பிக்கையுடன் ஒருங்கிணைந்த இலங்கையில் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என கூறினார்.

கருணா அரசுடன் இணைந்து தகவல் தந்திராவிடில் யுத்தத்தில் வெற்றியிருக்க முடியாது

ஆனையிறவு சமரில் விடுதலைப்புலிகளின் வெற்றியை கருணாவே ஈட்டிக் கொடுத்தார். இதுபோன்று புலிகளின் பல வெற்றிகளுக்கு அவர் காரணமாக அமைந்தார்.இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்ட போது கருணா ஹெலிகொப்டரில் அங்கு சென்று பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காட்டினார்.1994ம் ஆண்டிலும் கிழக்கை படையினரால் மீட்கப்பட்டிருந்த போதிலும், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தொப்பிகல பிரதேசம் படையினரால் மீட்கப்படவில்லை. அங்கு படையினரால் நுழைய முடியவில்லை. ஆனால் கருணா அந்த அமைப்பில் இருந்து விலகிய பின்னர் அவர் வழங்கிய தகவலின் மூலமே தொப்பிகலவை படையினரால் மீட்க முடிந்தது.யுத்தத்தில் அரசாங்கத்துக்கு எதிராக போரிட்ட கருணா நாடாளுமன்றத்தில் இருக்கிறார். ஆனால் யுத்தத்தை வெற்றிகொண்ட சரத் பொன்சேகா சிறையில் இருக்கிறார்.  (மேலும்...)

போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்படும் வரை சர்வதேசத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை - பிரித்தானியா

இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படும் வரை இலங்கைக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பில்லை என்று பிரித்தானியா அறிவித்துள்ளது. இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்படவேண்டியது அவசிமானதாகும். இலங்கையில் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையின்போது நீதி பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் நீதியான விசாரணை அவசியமானதாகும். அத்துடன் இறுதிப்போரின் போது இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகள் அவசியம். இல்லையேல் இலங்கை மக்களுக்கு சர்வதேசத்துடன் முன்னோக்கி செல்வதில் கஸ்ட நிலையை தவிர்க்கமுடியாது என்று அலிஸ்டர் பேர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை இந்திய அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்துவிட்டது

இது குள்ளத்தனமான இராஜதந்திரத்தின் பக்கவிளைவாகும். இலங்கையை சர்வதேச அரங்கொன்றில் தண்டிக்க வேண்டுமென்ற அமெரிக்காவின் ஆசை இலங்கையை விட அதற்கு வால்பிடிக்கும் இந்தியாவையே பெருமளவில் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது. ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் 2009 மே மாதத்தில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் ஆயுதப் படையினரால் துவம்சம் செய்த இறுதி நாட்களில் ஆயுதப் படையினர் பொதுமக்களின் மனித உரிமைகளை மீறக்கூடிய வகையில் நடந்து கொண்டதுடன் யுத்தக் குற்றங்களையும் புரிந்தார்கள் என்று அமெரிக்கா முன்மொழிந்த பிரேரணை நிறைவேறியது. (மேலும்...)

அம்பாறை விமான நிலையம் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் ஒரு அம்சமாக புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள அம்பாறை உகன விமானப் படைமுகாம் சூழலில் அமைக்கப்பட்டுள்ள உள்ளூர் விமான நிலையம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கிழக்கிலங்கையில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன் குறிப்பிடத்தக்க அம்சமாக மேற்படி விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கின் அபிவிருத்தியில் முக்கிய அம்சமாக விளங்கும் மேற்படி விமான நிலையம் 1600 மீற்றர் நீளமான பாதையையும் பிரயாணிகள் கூடம் உள்ளிட்ட ஏனைய பல பிரிவுகளையும் உள்ளடக்கியுள்ளது. JPDP32, TP12 போன்ற விமானங்களை செயற்படுத்தும் வகையில் இவ் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

அரசியலில் நாணயம் இல்லாதவர்களுக்கு எல்லா விடயங்களிலும் தோல்வி கிட்டும்

அரசியலிலும் இராஜதந்திரத்திலும் நாணயம் இருக்க வேண்டும். நாம் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளை அந்நாடுகளின் கொள்கைளைப் பார்த்து கண்டனம் தெரிவிப்பது உண்மைதான். ஜனநாயக நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் அரசியலை கண்ணியமாக நடத்துவார் கள். தமது அரசியல் எதிராளியைக் கூட அநாகரிக மான முறையில் காலைவாரி அரசியல் குப்பைக் கூடைக்குள் தொப்பென்று போட்டுவிட மாட்டார் கள். தங்கள் அரசியல் எதிராளியைக்கூட அந்நாடுக ளில் மதித்து, கெளரவப்படுத்தும் நற்பண்பை அந்நாட்டுத் தலைவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். (மேலும்...)

பங்குனி 22, 2013

தம்பிக்களுக்கு அல்லது தம்பிலாக்களுக்கு.

(யஹியா வாஸித்)

விட்டுக் கொடுப்பவன் கெட்டுப் போவதில்லை.

கெட்டுப் போபவன் விட்டுக் கொடுப்பதில்லை.

1948 இலிருந்து 1983 வரை சிங்கங்களின் காலம். இந்த சிங்கங்கள் ஆங்காங்கே பதுங்கி பாய்ந்து, பிடிச்சி, கடிச்சி ஒரு ஜகஜால ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தன. வலி பொறுக்காத நரிகள், சீச்சீ இந்தப்பழம் புளிக்கும் என கூறிவிட்டு, புலியாக மாறி, இனி பசித்தாலும் புல்ல தின்ன மாட்டோம் என வெகுண்டெழுந்து, ஆட்டக்குடித்து, மாட்டக்கடித்து, ஆளைக்கடித்து, எதை எதையெல்லாமோ கடித்து, பக்கத்து காட்டிலிருந்து சமாதானத்துக்கு வந்த காண்டாமிருகங்களை கடித்து, அதுவும் போதாதென்று தாய் காண்டா மிருகத்தையே சிறிபெரும்புதூர் காட்டுக்குள்ள சென்று கொன்று, ஒரு காட்டுதர்பார் நடாத்தின. (மேலும்...)

தீர்மானத்தின் தீவிரத்தன்மை குறைக்கப்படவில்லை - அமெரிக்கா

இலங்கை தொடர்பான தீர்மானத்தை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தொடர்பில் திருப்தியடைவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆரம்பம் முதல் தீர்மானம் நிறைவேற்றப்படும் வரை இந்தியாவோடு மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டதாகவும் அமெரிக்காவின் மத்திய ஆசிய மற்றும் தெற்காசியப் பிராந்தியத்துக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட ஓ பிளேக் தெரிவித்தார். இலங்கை விவகாரத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கை செலுத்தக்கூடிய இந்தியாவின் ஒத்துழைப்போடே சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்பட முடியும் என்றும் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்தார். மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இலங்கைக்கு நெருக்கடி அளிக்கக்கூடிய தீவிரப் போக்கை குறைப்பதில் இந்தியா பங்காற்றியதாக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டையும் அமெரிக்க இராஜதந்திரி ரொபர்ட் ஓ பிளேக் நிராகரித்தார். அமெரிக்கத் தீர்மானத்தின் தீவிரத்தன்மை குறைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை - அமெரிக்கா

இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை இலங்கையானது நிராகரித்த போதிலும் இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்கும் எண்ணம் இல்லை என அமெரிக்க தூதுவர் மைக்கல் ஜே. சிசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் சமாதானத்தை வலியுறுத்தியும் மனித உரிமைகளை பாதுகாக்கும் நோக்கிலுமே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன  என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜீ.எல்.பீரிஸ்-கனேடிய செனட்டருக்கு இடையில் முறுகல்

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றின்போது கனேடிய  செனட்டரான ஹுக் செகால் மற்றும் வெளிவிகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகிய இருவரும் காரசாரமான கருத்துக்களை பரிமாறிகொண்டுள்ளனர். லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் நேற்ற வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேற்படி கலந்துரையடாலின்போது விசேட விருந்தினராக வந்துள்ள கனேடியன் செனட்டரான ஹுக் செகால் சொற்பொழிவு ஆற்றினார். செனட்டரின் சொற்பொழிவு நிறைவடைந்ததை  தொடர்ந்து கேள்வி பதிலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இதன்போதே காரசாரமான கருத்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன. இதன்போது கனேடிய செனட்டரின் கருத்துக்கு பதலளித்த வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்  காரசாரமாக கருத்துக்களை பறிமாறியிருந்தார்.

பங்குனி 21, 2013

இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள்!

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸில் 22வது அமர்வில் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு (மேலும்...)

'சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டது' - தயான் ஜயத்திலக்க

சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் தனக்கான ஆதரவை பெருமளவில் இழந்துள்ளதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. ஆனால் அந்த ஆதரவு இப்போது 13 நாடுகளாகக் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டில் தனக்கு இருந்த சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை அரசு அது நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச ஆதரவை தக்கவைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்...)
 

இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது!

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது, இந்தியா திருத்தங்கள் எதுவும் கொண்டு வராத நிலையில், இந்திய பிரதிதி வாதம் மூலமாகவே இந்தியாவின் கருத்தை முன்வைத்தார். விவாதத்தை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியா ஆதரவுடன்  தீர்மானம் வெற்றி பெற்றது. தீர்மானத்திற்கு ஆதரவாக 25 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவானது. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன. இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வலுவானதாக இல்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிவருவதுடன், தீர்மானத்தை திருத்துமாறு கோரி போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக தி.மு.க.வும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியது. ஆனால் இந்தியா 2 முக்கிய திருத்தங்கள் செய்து வலுவான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார்.ஆனால் திருத்தங்கள் கொண்டு வரவில்லை. இலங்கை நிகழ்வுகள் பற்றி சுயேச்சையான நம்பகத்தனமான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. மேலும் தமிழருக்கு அரசியல் உரிமை தர ஆக்கபூர்வ நடவடிக்கை இலங்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அத்துடன்  இலங்கை சம்பவங்கள் குறித்து இந்தியா பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்றும்  கூறபட்டுள்ளது.

மட்டக்களப்பில் 9 மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிகளும் செயலிழப்பு

மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஒன்பது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிகளும் செயலிழந்துள்ளன என உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, எறாவூர் நகர சபைகள்  மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றை தவிர ஏனைய ஒன்பது  உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 17ஆம் திகதி ஞாயிற்றக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சிக்காலம் கடந்த 17.3.2012ஆம் திகதியுடன் முடிவடைந்தது. எனினும் மேலும் ஒருவருடத்திற்கு பதவிக்காலம் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சினால் நீடிக்கப்பட்டது. எனினும், இந்த ஒன்பது உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மியன்மாரில் மீண்டும் கலவரம் 10க்கும் அதிகமானோர் பலி; கட்டடங்கள்

மத்திய மியன்மாரில் ஏற்பட்டுள்ள இனக்கலவரத்தில் 10க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் நேற்றைய தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே ரகினெ மாநிலத்தில் கடந்த ஆண்டு பெளத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரத்தின் பதற்றம் இன்னும் தணியாத நிலையிலேயே அங்கு மீண்டும் மோதல் வெடித்துள்ளது. மக்டிலா நகரில் இடம்பெற்றுள்ள இந்த கலவரத்தில் கொல்லப்பட்டோரது உடல்களை காணக்கூடியதாக உள்ளது என மியன்மார் எதிர்க்கட்சி உறுப்பினரான வின் ஹிடைன் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். 10க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அவர் குறித்த நகரில் இருந்து தொலைபேசி ஊடே தெரிவித்துள்ளார். முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான தங்கக் கடையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வாய்த் தர்க்கமே கலவரமாக வெடித்துள்ளது. மியன்மார் பொலிஸ் படையின் பேஸ்புக் பக்கத்தில், 200க்கும் அதிகமானோர் வீதிகளில் மோதிக் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான கபட நாடகம் இந்தியாவின் உதவியுடன் ஜெனீவாவில் மேடையேறியது

ஜெனீவாவில் தொடர்ந்தும் இலங்கைக்கு எதிரான கபட நாடகம் இவ்வாண்டிலும் நிறைவேறியது. அமெரிக்காவின் இந்தத் தீர் மானத்தை ஆதரித்து 25 நாடுகளும் அதனை எதிர்த்து இலங் கைக்கு ஆதரவாக 13 நாடுகளும் அது போன்று இலங்கைக்கு மறைமுக ஆதரவை தெரிவிக்கும் முகமாக 8 நாடுகள் வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்தமை இலங்கைக்கு கிடைத்த ஒரு வெற்றி என்றே நாம் கருதுகிறோம். இலங்கையின் கழுத்தை நெரித்து எங்களை பாதாள கிடங்கிற்குள் தள்ள வேண்டுமென்ற எண்ணத்துடன் அமெரிக்கா செயற்பட்ட போதிலும் இலங்கைக்கு நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதை அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு ஞாபகப்படுத்துவதாக இந்த வாக்கெடுப்பு அமைந்திருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். (மேலும்...)

பங்குனி 21, 2013

கல்லடி பாலத்தை ஜனாதிபதி திறந்துவைப்பார்

இலங்கையின் இரண்டாவது மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் 197 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி பாலம் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பவுள்ளது. சுமார் 300 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த பாலம் மட்டக்களப்பு மாவட்டத்தையும் அம்பாறை மாவட்டத்ததையும் இணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையின் மிக நீளமான இரும்பு பாலம் என்று அழைக்ப்படும் கல்லடி பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்மாணிக்கப்பட்டது. 50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட இந்த பாலம் 75 ஆண்டுகளுக்கு மேல் பாவனையிலுள்ளது. இது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்கள் விபரீத விளைவை தரக்கூடியவை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

தமிழ்நாட்டிற்குச் செல்லும் இலங்கையர்கள் மீதான தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றின் வரிசையில் மிக அண்மைக் கால சம்பவங்களாக தொடர்ச்சியான இரண்டு நாட்களில் இரண்டு பௌத்த பிக்குகள் தாக்கப்பட்டு இருக்கிறார்கள். இவை இலங்கையில் தமிழர்களுக்கு சாதகமான முடிவைக் கொண்டு வருமா அல்லது பாதகமான முடிவைக் கொண்டு வருமா என்பதே இப்போதுள்ள மிக முக்கியமான கேள்வியாக உள்ளது. குறிப்பாக இலங்கையில் பெரும்பான்மை மக்கள் இன ரீதியாக கொதிப்படைந்துள்ள ஒரு சந்தர்ப்பத்தில் இச்சம்பவங்கள் எந்த திசைக்கு நிலைமையை இட்டுச் செல்லுமோ என்ற அச்சம் பலர் மனதில் எழுந்துள்ளது. எனவே தான் ஏற்கனவே இரண்டு தமிழ் தேசிய பத்திரிகைகள் இச்சம்பவங்களை கண்டித்து அல்லது நிராகரித்து ஆசிரியத் தலையங்கங்களை வெளியிட்டுள்ளன. அதில் ஒன்று நேரடியாக இந்த அச்சத்தையும் வெளியிட்டு இருந்தது. (மேலும்...)

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட தமிழ் பெண்கள் இன்று முதல் கடமையில்

அண்மையில் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட வடக்கு தமிழ் பெண்கள் இன்று முதல் இராணுவச் சிப்பாய்களாக கடமையாற்றவுள்ளனர். 95 தமிழ் யுவதிகள் இவ்வாறு இராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நான்கு மாதங்கள் இராணுவப் பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த வடக்கு தமிழ் யுவதிகள் கிளிநொச்சியில் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பயிற்சியை பூர்த்தி செய்த குறித்த பெண் வீராங்கணைகளின் கலைந்து செல்லும் நிகழ்வு இன்று கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பிரிகேடியர் ரத்னசிங்கம் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது

மாணவர் போராட்டம்

உடைந்தது அறுபது ஆண்டு மெளனம்!

ஈழ மண்ணுக்காக இந்த மாணவர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள் என்பது மட்டுமல்ல, இலங்கை நட்டுவைத்த உலகக் கொடுமையின் உயரமான விருட்சம் வேறெங்கும் துளிர்விடக் கூடாது என்ற மானுடநேயப் பார்வைகொண்டவர்களாய் மாணவர்கள் வெளிப்படுகிறார்கள்.  'ஈழத் தமிழர்க்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது எனத் தமிழகம் முழுவதும் பற்றிப் பரவிய தீ 1965-ஐ நினைவூட்டுகிறது. 60 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் துருப்பிடித்துப் போகாத உணர்வுகளைக் காலம் தனது கைகளில் ஏந்தி மாணவர்களிடம் வழங்கியிருக்கிறது. 'போர்க் குற்றம் பற்றிப்பேச அமெரிக்காவுக்கு என்ன அருகதை இருக்கிறது? என்று கேட்டதுதான் இன்றைய மாணவர்களின் தீர்க்கதரிசனத்துக்கு உதாரணம். (மேலும்...)

ஓயாது மாணவர் அலை!

'ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்வதே பெரிய துரோகம். அமெரிக்கா ஒரு கசாப்பு வியாபாரி. அவர்களின் உண்மையான நோக்கம் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது அல்ல. சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், இலங்கையில் நிறைந்திருக்கும் வளங்களுக்கு ஆசைப்பட்டும்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது."

ழத்துச் சொந்தங்களுக்கு தமிழகக் கல்லூரி மாணவர்களின் கண்ணீர் பொங்கிப் பிரவாகம் எடுத்து​வருகிறது. கல்லூரிகளுக்குத் காலவரையற்ற விடுமுறை அறிவித்தாலும், தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தகிக்கிறது. பல்வேறு ஊர்களில் பொதுமக்களும் தன்னெழுச்சியுடன் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஈழ விவகாரத்துக்காகத் தொடர் உண்ணா​விரதம் இருக்கும் மாணவர்​களின் கொதிப்புகள், குமுறல்கள் இங்கே...(மேலும்...)

ஆதரவு மிரட்டல்?

''கருணாநிதியின் திடீர் கர்ஜனை காரணமாக ஈழப் பிரச்னையில் இந்திய நிலைப்பாடு மாறுமா எனத் தெரியவில்லை. குழப்பமே நீடிக்கிறது'' என்று சொல்லியபடியே உள்ளே வந்தார் கழுகார். ''ஈழத் தமிழர் பிரச்னையைக் கையில் எடுத்து, தன்னுடைய அரசியல் ஆட்டத்தை அரங்கேற்றுவார் என்பதை முன்னரே காங்கிரஸ் மேலிடம் உணர்ந்துவிட்டது. 'டெசோ அமைப்பு நடத்துவது தமிழ்நாட்டு பாலிடிக்ஸுக்கு அவசியமானது என்பதை முன்பே டெல்லி மேலிடப் பிரதிநிதிகளிடம் கருணாநிதி சொல்லி இருந்தார். ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், வயலார் ரவி போன்றவர்கள் சில மாதங்களுக்கு முன், தனித்தனியாகச் சந்தித்தபோதே கருணாநிதி இதைச் சொல்லி இருந்தார். தமிழக அளவில் மாநாடு, கூட்டம் நடத்திக்கொண்டால் சிக்கல் இல்லை என்றுதான் டெல்லியும் நினைத்தது. டெல்லியில் வந்து தேசிய அளவிலான அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து, கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்துவதை காங்கிரஸ் முதலில் விரும்பவில்லை. தமிழக காங்கிரஸிலேயே கே.எஸ்.அழகிரி போன்றவர்கள், 'டெசோ கூட்டங்களில் காங்கிரஸும் கலந்துகொள்ளலாம் என்று சொன்னபோது, அதற்கு ராகுல் பச்சைக்கொடி காட்டிய சமாசாரங்களை எல்லாம் நான் ஏற்கெனவே உமக்குச் சொல்லி இருக்கிறேன்.'' (மேலும்...)

இந்தியாவில் அரசியல் பதற்றம்

அரசைக் காப்பாற்றிக்கொள்ள காங்கிரஸ் பகீரதப் பிரயத்தனம்

காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கத்துக்கு வழங்கிய ஒத்துழைப்பை திராவிட முன்னேற்றக் கழகம் விலக்கிக் கொண்டதையடுத்து இந்திய மத்திய அரசில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுக்கான ஆதரவை விலக்கியதாக தி.மு.க. அறிவித்ததைத் தொடர்ந்து, தி.மு.க.வின் மத்திய அமைச்சர்கள் ஐந்து பேர் நேற்றையதினம் தமது இராஜினாமாக் கடிதங்களை இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்தனர். தி.மு.க மத்திய அரசிலிருந்து விலகிக் கொண்டாலும் அரசாங்கம் ஸ்திரமான நிலையிலேயே இருப்பதாகவும், யாராலும் அதனை அசைக்க முடியாது என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்றும் கூறியுள்ளார். இருந்தபோதும், மத்தியில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவுகளைத் திரட்டுவதற்கு காங்கிரஸ் கட்சி பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளது.  (மேலும்...)

அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிப்பு

அரசாங்க உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக அதி கரிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரி வித்தது. இவ்வறிவித்தலை உள்ளடக்கிய சுற்றறிக்கையொன்று வெளியிடப் பட்டுள்ளதாகவும் இதற்கிணங்க இதுவரை 57 வயதாக நிர்ணயிக்கப்பட்டிருந்த ஓய்வுபெறும் வயதெல்லை 60 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.இதற்கிணங்க அரசாங்க உத்தியோகத்தர் ஒருவர் 55 வயதுக்குப் பின் 60 வயது வரை இனி ஒவ்வொரு வருடமும் காலத்தை நீடிப்பதற்காக விண்ணப்பிக்க வேண்டியதில்லை. அவர் 60 வயது வரை சேவையைத் தொடர முடியும் எனவும் அவர் தெரிவித்தார். அரசாங்க உத்தியோகத்தர்கள் ஒருவர் 55 வயதில் ஓய்வு பெற முடியும். அவர் விரும்பும் பட்சத்தில் மூன்று மாத கால முன்னறிவித்தலை வழங்கி அவர் 60 வயது வரை சேவையில் நீடிக்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தாக்குதல்கள் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வெல்ல முடியாது - செல்வம் அடைக்கல நாதன்

தமிழகத்திற்கு வரும் யாத் திரிகர்கள் மீதும் பெளத்த பிக்குகள் மீதும் தாக்குதல்கள் நடத்துவதன் மூலம் சிங்கள மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று தமிழ் தேசிய கூட்ட மைப்பு எம். பி. செல்வம் அடைக்கல நாதன் நேற்று பாராளு மன்றத்தில் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் மேலும் வன்முறையை அதி கரிக்கச் செய்யுமே தவிர பிரச் சினைக்கு தீர்வாக அமையாது என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இடம் பெற்ற சுங்க திருத்த சட்ட மூலம் மீதான விவாதத்தில் பங்கு கொண்டு உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில்:- னப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம்.  இதற்காக, இலங்கை தமிழர்களுக்காக எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழக மக்கள் நடத்தும் போராட்டத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றார். எனவே இலங்கையர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கையிலேந்தும் ஸ்கூட்டர் வண்டி சந்தையில்

கையில் ஏந்திச் செல்லக் கூடியவாறான மின்சார ஸ்கூட்டர் வண்டி சந்தைக்கு விடப் படவுள்ளது. அன்ட்ரோ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த ஸ்கூட்டர் வண்டி மணிக்கு 28 மைல் வேகத்தில் பயணிக்கக் கூடியது. இந்த வண்டியை சுருட்டி கையில் ஏந்திச் செல்லவும் பஸ் மற்றும் ரயில் வண்டிகளில் கொண்டு செல்லவும் முடியும். மின்சாரம் சக்தி மூலம் செயற்படும் இந்த வண்டியின் பட்டரி ஆயுள் காலம் 22 மைல்களாகும். இந்த வண்டி வெறுமனே 25 கிலோ கிராம் பாரம் கொண்டதாகும். இது எதிர்காலத்திற்கான வண்டி என்றும் பொது போக்குவரத்திற்கு சிறந்த தீர்வு என்றும் அன்ட்ரோ நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி டமஸ் ஸ்லசக் குறிப்பிட்டுள்ளார். மெவியோ என பெயரி டப்பட்டிருக்கும் இந்த ஸ்கூட்டர் வண்டியை 2014 ஆம் ஆண்டு ஜனவரியில் சந்தைக்கு விட திட்டமிடப் பட்டுள்ளது. இலங்கை நாணயப்படி சுமார் நான்கு லட்சம் ரூபாவுக்கு இந்த வண்டி சந்தைக்கு விடப்படவுள்ளது.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் இலங்கை தமிழர்களை வைத்து அரசியல் நடத்துவது தவறு

ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்மொழிந்துள்ள மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான பிரேரணை இப்போது இந்தியாவில் ஒரு பெரும் அரசியல் நெருக்கடியை தோற்றுவித்திருப் பதுடன், அசோக சக்கரவர்த்திக் காலம் முதல் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இருந்து வந்த மத ரீதியான மற்றும் கலாசார ரீதியிலான நல்லுறவுக்கு தீங்கிழைக்கக் கூடிய வகையில் வேதனைக்குரிய நிகழ்வுகள் தமிழ்நாட்டில் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.(மேலும்...)

பங்குனி 20, 2013

யாத்திரிகர்கள் மீதான தாக்குதல் சகித்துக் கொள்ளமுடியாதது

(ஸ்ரீதரன்- சுகு)

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான நிலைப்பாடுகள் பிரதானமாக இரண்டு வகைப்பட்டவை. ஒன்று உணர்வு அறிவு பூர்வமானது. மற்றது பைத்தியகாரத்தனமானதும் பாமர, உணர்ச்சி வசப்பட்டதும், சுயநலமும், குரோதமும், விரோதமும் ,வெறுப்பும் நிறைந்தது. சில மாதங்களுக்கு முன்னர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திற்குச் சென்ற யாத்திரீகர்கள் தாக்கபட்டார்கள். இது போல வேறு சல சம்பவங்களும் நிகழ்ந்தன. இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் எவ்வளவு தூரம் தமிழ் மக்களின் வாழ்வையும் சிதைத்ததோ அதே அளவிற்கு புலிப்பாசிசமும் தமிழர்களை பேரழிவைநோக்கி இட்டுச்சென்றது. இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று கருதும் சத்திகள் எதையும் விளங்கிக் கொள்ள விரும்பாது. (மேலும்...)

தமிழ்நாட்டில் வன்முறைக்கு தூபமிட்ட கலைஞரும் ஜெயலலிதாவும் மூக்குடைபட்டுள்ளார்கள்

இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் போன்ற சாத்வீக போராட் டங்களை மேற்கொண்டு சர்வதேச ரீதியில் அழுத்தங்களை கொண்டு வருவோம் என்று கூறிய தமிழ்நாட்டின் இரு அரசி யல் தலைவர்களான கலைஞர் ஐயாவும், ஜெயலலிதா அம்மாவும் தங்களுடைய இந்த சாத்வீக போராட்டம் கைநழுவிப் போய் ஒரு பயங்கரவாத செயற்பாடாக மாறியிருப்பதைப் பார்த்து செய்வதறி யாது இன்று நிலைதடுமாறிப் போயிருப்பதாக தமிழ்நாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் நம்பகரமான தகவல்கள் ஊர்ஜிதம் செய்கின்றன. இலங்கையில் மனித உரிமை மீறல்கள், யுத்தக்குற்றச்சாட்டுகள் இடம்பெ ற்றன என்று இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களை கொண் டுவர முயற்சி செய்யும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இப்போது மூக் குடைபட்டு அவமானச் சின்னங்களாக மாறியுள்ளார்கள். (மேலும்...)

இலங்கை விவகாரம்

இந்திய அழுத்தத்தால் சர்வதேச விசாரணை கைவிடப்பட்டது - மன்னிப்புச்சபை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக கைவிடப்பட்டது' என்று சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.  ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரை முன்னிட்டு மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையினால் இலங்கை தொடர்பில் ஒரு அறிக்கையை தாக்கல் செய்திருந்தார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு தனது அறிக்கை மூலம் அவர் பரிந்துரைத்திருந்தார். இதைத் தொடர்ந்து ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்தது.  (மேலும்...)

அமெரிக்க தீர்மானத்தில் மூன்றாம் தடவையாகவும் சில திருத்தங்கள்

இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானத்தில் மூன்றாம் தடவையாகவும் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு தடவைகள் இந்தத் தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இறுதியாக மூன்றாம் தடவையாகவும் இந்தத் தீர்மானத்தில் சில முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. முதலாவதாக முன்வைக்கப்பட்ட உத்தேச தீர்மானம் மிகவும் கடுமையாக காணப்பட்டதாகவும், மூன்றாம் உத்தேச தீர்மானத்தில் கடுமை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல நாடுகளின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இவ்வாற தீர்மானத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலும் மூன்றாவது தடவையாக திருத்தம் செய்யப்பட்ட உத்தேச தீர்மானமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச விசாரணைகள் என முதலில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் தற்போது நம்பகமான சுயாதீன விசாரணை என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி அரசுக்கு ஆதரவளிப்போம் - மாயாவதி

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தாம் ஆதரவளிக்கபோவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், முன்னாள் உத்தரபிரதேச முதல் மந்திரியுமான மாயாவதி அறிவித்துள்ளார். இலங்கை விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை கண்டித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து திராவிட முன்னேற்ற கழகம் வெளியேறியுள்ள நிலையிலேயே மாயாவதி மேற்கண்டவாறு அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணியிலிருந்து விலகியுள்ளமையினால் மக்களவையில் காங்கிரசுக்கு ஆதரவுவான உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. இந்நிலையிலேயே கூட்டணி அரசாங்கத்திற்கு தாங்கள் ஆதரவளிக்க போவதாகவும்; வெளியில் இருந்து ஆதரவு தருவோம என்றும் பகுஜன் சமாஜ்வாதி எப்போதும் ஆதரவை வாபஸ் பெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு மதசார்பற்ற அரசு பெரும்பான்மையை இழக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு மக்களவையில் 21 உறுப்பினர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டணியிலிருந்து விடுதலை சிறுத்தைகளும் விலகியது

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து நாங்களும் வெளியேறுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் அறிவித்துள்ளது.மத்திய அரசின் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் கூட்டணியிலிருந்து விலகியுள்ள நிலையிலேயே விடுதலை சிறுத்தைகளின் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் மேற்கண்டவாறு அறிவித்தல்  கூறியுள்ளார். மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க கோரி நாங்கள் வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்று ஐ.மு கூட்டணியில் இருந்து திமுக விலகியுள்ளது. இதே காரணத்திற்காக தற்போது நாங்களும் கூட்டணியில் இருந்து விலகுகிறோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார். மத்திய அரசின் ஆதரவை வாபஸ் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒரு உறுப்பினர் மட்டுமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முல்லைத்தீவில் இடம்பெயர்ந்த 1444 குடும்பங்களை மீள் குடியேற்ற நடவடிக்கை

முல்லைத்தீவிலிருந்து இடம்பெயர்ந்த 1444 குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தெரிவித்தார். வனவளத் திணைக்களத்துக்குச் சொந்தமான நிலப்பரப்பில் அவர்களை மீள்குடியமர்த்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றிருப்பதாகவும், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்ற ரீதியில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் இதற்கான அனுமதியை, வனவளத் திணைக்களத்திடமிருந்து பெற்றுத் தந்திருப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு முள்ளியவளை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட மூன்று இடங்களில் இவர்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். (மேலும்...)

அமெரிக்காவின் கைப்பொம்மை

சிரிய கிளர்ச்சியாளர் வசமிருக்கும் பகுதிகளுக்கு பிரதமர் நியமனம்

சிரியாவில் கிளர்ச்சியாளர் கைப்பற்றிய பகுதிகளுக்கான பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிரிய எதிர்க்கட்சிகளின் தேசியக் கூட்டணியே புதிய பிரதமரைத் தேர்வு செய்துள்ளது. டமஸ்கஸில் பிறந்த தகவல் தொழில்நுட்ப நிபுணரான கஸ்ஸான் ஹிட்டோவே கிளர்ச்சியாளர் பகுதிகளுக் கான பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பல தசாப்தங்களாக அமெரிக்கா விலேயே வாழ்ந்துவருகிறார். துருக்கி நகர் ஸ்தன்பூலில் இடம்பெற்ற எதிர்க்கட்சி கூட்டணி மாநாட்டில் ஹிட்டோ பிரதமராக தேர்வானார். இதன்படி ஹிட்டோ, அரச படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிளர்ச்சியாளர் வசமுள்ள பகுதிகளை நிர்வகிக்க நாட்டுக்கு வெளியில் இருந்து அரசொன்றை அமைக்கவுள்ளார். இதனிடையே சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவியை வழங்கும் ஏனைய நாடுகளின் திட்டத்திற்கு நாம் ஆதரவளிக்கப் போவதில்லை என அமெரிக்கா திங்கட்கிழமை அறிவித்துள்ளது. சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவி வழங்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரியா மீதான ஆயுத தடையை நீக்க ஆதரவளிக்கப் போவதாக பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள் கடந்த வாரம் அறிவித்தன. தவறான இடத்திற்கு ஆயுதம் செல்வதை தடுப்பதற்கே தாம் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக இரு நாடுகளும் கூறி இருந்தன.

ஸ்கொட்லாந்து தேவாலயத்தில் முஸ்லிம்கள் தொழ இட வசதி

ஸ்கொட்லாந்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் முஸ்லிம்களுக்கு தொழுகை நடத்த இட வசதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசலில் அனைவருக்கும் தொழுவதற்கு இட வசதி இல்லாததால் சென் ஜோன்ஸ் தேவாலயத்தின் போதகர் ஐசாக் பூபாலன் அங்கு தொழுவதற்கு இட வசதி அளித்துள்ளார். தொழுவது தவறானது அல்ல. இறைவனை தொழுவதை ஊக்குவிப்பதே எனது வேலையாகும் என போதகர் பூபாலன் கூறியுள்ளார். ஸ்கொட்லாந்தின் கிரவுன் வீதியில் சென் ஜோன்ஸ் தேவாலயம் 1980 களில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு அருகில் 2006ம் ஆண்டு தொழுகை அறையாக ஆரம்பிக்கப்பட்டு பின்னர் அங்கு பள்ளிவாசல் உருவாகியுள்ளது. பள்ளிவாசலில் 70 பேரளவிலேயே தொழ முடியும். ஆனால் 200 க்கும் அதிகமான முஸ்லிம்கள் உள்ளனர். பெரும்பாலானோர் பள்ளிவாசலுக்கு வெளியில் வீதிகளிலேயே தொழுது வருகின்றனர். இது குறித்து போதகர் பூபாலன் கூறும்போது, ஒருநாள் நான் பள்ளிவாசலுக்கு அருகால் போகும் போது 20 அல்லது 30 பேர் வீதியில் தொழுது கொண்டிருந்தார்கள் பனிப்பொழிவில் அவர்கள் வீதியில் அமர்ந்திருந்தார்கள். அந்த குளிரில் அவர்கள் மூச்சுவிடும் சத்தம் கூட கேட்டது. அது எனக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தேவாலயம் அடுத்த பக்கம் இருக்கும் போது இது தவறானது என உணர்ந்தேன்.

பங்குனி 19, 2013

கருணாநிதியின் ஆதரவு வாபஸும் தமிழக அரசியல் களமும்

மத்திய அரசுக்கு ஆதரவு வாபஸ் என அறிவித்திருக்கும் தி.மு.க, தங்களுடைய‌ அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்வார்கள் என அறிவித்திருக்கிறது. ஆனால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் விவகாரத்தில் மு.க.அழகிரி மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பதாக மதுரையில் இருந்து வரும் செய்திகள் சிறகடிக்கின்றன. கிரானைட் வழக்குகள், பொட்டு சுரேஷ் கொலை என அழகிரிக்கு நெருக்கடிகளை கொடுத்து தி.மு.க.வை கலகலக்க வைக்க அ.தி.மு.க. தரப்பில் அத்தனை சூழ்ச்சிகளும் நடக்கின்றன. ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் பகையை வளர்த்துவிட்டு அதன் மூலம் கழகத்தை உடைக்க முடியுமா என்று கூட தந்திர வேலைகளை செய்து பார்த்தது. இன்னமும் செய்து கொண்டே இருக்கிறது. இருந்த போதும் அழகிரியை அ.தி.மு.க. அரசு இன்னமும் முழுமையாக நெருக்க முடியாமல் இருப்பதற்கு காரணமே அவர் வகிக்கும் மத்திய கேபினட் அமைச்சர் பதவி தான். (மேலும்...)

இலங்கைக்கு எதிராக தீர்மானம் - அமெரிக்கா

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது உறுதி என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலாண்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவருவது உறுதி. எங்களது இந்த முடிவு இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்காது. ஏனெனில், இதுபற்றி வெளிப்படையாக ஏற்கெனவே அவர்களுக்கு தெரிவித்து விட்டோம். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனை இலங்கை வெளியுறவு அமைச்சர் கடந்த ஆண்டு சந்தித்துப் பேசினார். அப்போது, போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் மறுவாழ்வுப் பணிகளை விரைந்து மேற்கொள்ளாவிட்டால், ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படும் என கூறியிருந்தோம். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனறும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா.வில் இறுதி வரைவு தீர்மானத்தை தாக்கல் செய்தது அமெரிக்கா! சர்வதேச விசாரணை கோரிக்கை நீக்கம்

இலங்கைக்கு எதிராக திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ளது. இதில், சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இத்தீர்மானம் தற்போது நான்காவது முறையாக திருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரின் போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனிவாவில் கடந்த மாதம் 22ஆம் தேதி முதல் நடந்து வரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. (மேலும்...)

மத்திய கூட்டணியிலிருந்து தி.மு.க. விலகியது

இந்திய மத்திய கூட்டணியிலிருந்து தி.மு.க விலகியுள்ளது என அறவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கத்தில் அமைச்சர்களாக உள்ள திராவிட முன்னேற்ற கழகம் உறுப்பினர்கள் அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச சுயாதீன விசாரணை கோரும் திருத்தத்தை இந்தியா கோராவிட்டால் மத்திய கூட்டணியில் தி.மு.க தொடராது என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சாத்தான் வேதம் ஓதினால் சந்தேகம் வர வேண்டாமா?

(உ. வாசுகி)

இலங்கை ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட ஆயுத மோதலில், மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இப் பின்னணியில் இலங்கை அரசு, சர்வதேச அழுத்தத்துக்கு அடி பணிந்து, சுயேச்சை யான, உயர்மட்ட, நம்பகத்தன்மையுள்ள விசா ரணையை நடத்த முன் வர வேண்டும். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். மறு பக்கம், இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு, மீள் குடியமர்த்தப்பட்ட தமிழ் மக்களுக்கு மறு வாழ்வு போன்ற சம கால, எதிர்காலத் தேவை கள் உறுதி செய்யப்பட வேண்டும். இந்தியா தனது ராஜீய உறவைப் பயன்படுத்தி இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். சர்வதேச மன்றங் களில் குரல் எழுப்ப வேண்டும். அதை விடுத்து, இலங்கை அரசின் பாகுபடுத்தும் கொள்கைகள் ஒரு புறம், இலங்கை ராணு வம், இலங்கையின் பூர்வகுடி தமிழ் மக்கள் மீது நடத்திய கொடுமையான மனித உரிமை மீறல்கள் மறு புறம் உருவாக்கும் நியாயமான கோபத்திலும், வேதனையிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைத் துணைக்கு அழைப்பது அடுப்புக்குத் தப்பி கொதிக்கும் எண்ணெயில் விழுந்த கதையாக மாறி விடும். (மேலும்...)

இலங்கை போர்க்குற்றங்கள் மீது விசாரணை வேண்டும் தமிழ் மக்கள் நலன் காக்க அரசியல் தீர்வு வேண்டும்  சென்னையில் நாளை சிபிஎம் ஆர்ப்பாட்டம்

இலங்கைத் தமிழர்கள் மீது அந் நாட்டு ராணுவத்தால் ஏவப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை யை வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வை வலியுறுத்தியும் மார்ச் 20 புதனன்று சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாபெரும் ஆர்ப்பாட் டத்தை நடத்துகிறது. இலங்கைத்தமிழர்கள் பிரச்ச னைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இலங்கை ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடைபெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை ராணு வத்தால் பெருமளவு மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. ஏதுமறியாத அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக போதிய ஆதாரங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. இலங் கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாண வர்களும் மற்றும் அனைத்துப் பகுதி மக்களும் குரல் கொடுத்து வருகின் றனர். (மேலும்...)

இலங்கைக்கு எதிரான அமெரிக்க பிரேரணை

ஆதரிப்பதா? எதிர்ப்பதா? இந்தியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை இல்லை

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட உள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா, எதிராக வாக்களிப்பதா என இதுவரை இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு கூறியது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் இறுதிப் பிரேரணை இன்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பிரேரணை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு இது வரை வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் இந்தியாவின் முடிவு குறித்து வேறுபட்ட கருத்துகள் கூறப்படுவ தாகவும் குறிப்பிட்டார். அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிராக உறுப்புநாடுகளின் ஆதரவைப் பெற இலங்கைக்குழு பேச்சு நடத்தி வருவதாகவும் இது தொடர்பான விவாதம் 21ஆம் திகதி இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். 22 ஆம் திகதி இது தொடர்பான வாக்கெடுப்பு இடம்பெறும் எனவும் அறியவருகிறது.

மத்தலவில் மதங்கள் புறக்கணிப்பு

மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கும் வைபவத்தில் சிறுபான்மையினங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத வழிபாடுகள் இடம்பெறவில்லை. மதவழிபாடுகளில் பௌத்த வழிபாடுகள் மட்டுமே இடம்பெற்றன. அத்துடன் அந்த நிகழ்ச்சி நிரலிலும்; அவைத்தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருக்கவும் இல்லை. இதேவேளை,  ஹிந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களின் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் நியமிக்கப்பட்ட நான்கு பேரும்  இந்த விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள், சாதாரண பிரமுகர்கள் ஆசனத்தில் ஒதுக்குப்புறமாக அமர்த்தப்பட்;டிருந்தனர்.  பௌத்த மத தேரர்கள் அமரும் வரிசையில் ஏனைய மதத்தலைவர்கள்  அமரவைக்கப்படவில்லை. வீதி அதி வேக பாதை திறக்கும் வைபவத்தில் சகல மத நிகழ்வுகளும் நடைபெற்று பௌத்த மதத் தலைவர்கள் அமரும் வரிசையில் ஏனைய ஆசனங்களும் ஒதுக்கப்பட்டதோடு ஐனாதிபதியை ஏனைய மதத்தலைவர்களும் ஆசீர்வதித்து பொண்ணாடை போற்றி கௌரவித்திருந்தமையும்  குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாட்டில் நடக்கும் தேசிய வைபவங்களில் பௌத்த மத நிகழ்வுகள் மட்டுமே இடம்பெற வேண்டும் என   பொது பல சேனவின் செயலாளர் ஞானதேரர்  ஊடக மாநாட்டில் ஒன்றில் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட பாதுகாப்பு

இந்தியாவிலுள்ள பௌத்த மத வணக்கஸ்தலங்களுக்கு  செல்கின்ற இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு தமிழ்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கையிலுள்ள மகாபோதி நிலையம் அறிவித்துள்ளது. இலங்கை யாத்திரிகர்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதற்கும் தமிழ்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வண.கலவான மஹாநாம தேரர் தெரிவித்தார். புத்தகயா உள்ளிட்ட பௌத்த வணக்கஸ்தலங்களுக்கு செல்கின்ற இலங்கை யாத்திரிகர்களுக்கே விசேட பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடலில் 15 இலங்கை மீனவர்கள் கைது

இந்திய கடற்பரப்பில் சட்ட விரோதமாக மீன் பிடிக்கச் சென்ற 15 இலங்கை மீனவர்கள் இந்திய கரையோரப் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு கூறியது. திருகோணமலை மற்றும், புத்தளம் பகுதியில் இருந்து 3 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றவர்களே இவ்வாறு பிடிபட்டுள்ளனர். இவர்கள் ஆந்திரா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. நேற்று முன்தினம் இவர்கள் கைதாகியுள்ளதாகவும் அறிவிக் கப்படுகிறது. 15 மீனவர்களையும் விடுதலை செய்வது குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினூடாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சு உயரதிகாரி ஒருவர் கூறினார். கடந்த காலங்களில் இந்திய கடல் எல்லையில் கைதான அநேக இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டது தெரிந்ததே.

பங்குனி 18, 2013

வெளிவந்துவிட்டது

வானவில் 26

இனப் பிரச்சினையைத் தீர்க்கவும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும்!

இலங்கை அரசுக்கு முன்னால் உள்ள இரண்டு வழிகள்!!

இலங்கை என்ற குட்டித் தீவு,  நாட்டுக்கு எதிராக இன்று உலக அரங்கில் பலவேறு சக்திகள் தீவிரமாகச்  செயற்பட்டு கொண்டிருக்கின்றன. இலங்கையின் பூகோள அமைவிடமும், அந்த நாட்டில் உள்ள அரசாங்கமும் பின் பற்றி வரும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கொள்கைகளும் தான் அதற்கான பிரதான காரணிகள்  என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் அந்த நாடடி; ன ; அரசாங்கம் அங்குள்ள சிறுபான்மை இனங்கள் சம்மந்தமாக கடந்த காலங்களில் பின்பற்றிய தவறான கொள்கைகளே, இந்த சர்வதேச நாசகார சக்திகளுக்கு ஆயுதமாகப பயன்பட்டு வருகின்றது என்பதை, அந்த நாட்டு அரசாங்கம் இன்னமும் உணராமல்  இருப்பதுதான் பிரச்சனையின் இன்னொருபக்க பாதக அம்சமாக இருக்கின்றது. அமெரிக்காவும் அதன் மேற்கத்தைய கூட்டாளி நாடுகள் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, மனித உரிமைப் காப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசிய மனித உரிமை அமைப்பு, சர்வதேச நெருக்கடிக் குழு என்பவை ஏறத்தாழ ஒர் அணியாக இலங்கைக்கு எதிராகச் செயல்படுகின்றன. (மேலும்.....)

தமிழகத் தமிழர்களின் வீரம்......?

(காணொளியில் காண.....)

இலங்கை தேரர், பயணிகள் மீது சென்னையில் தாக்குதல்

பௌத்த தேரர் ஒருவர் உட்பட இலங்கை பிரயாணிகள் சிலர், சென்னை புகையிரத நிலையத்தில் வைத்து இன்று காலை இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இன்று காலை டெல்லியில் இருந்து தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னைக்கு வந்த இலங்கையை சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில் இருந்த பௌத்த துறவி மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. நேற்று முன்தினம் சனிக்கிழமையன்றும் தஞ்சாவூர் பிரதேசத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தியா செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு,  இரு நாடுகளும் அவசர பேச்சு

இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பில் புதுடில்லி மற்றும் சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர்களுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் அவசர பேச்சுவார்த்தையொன்று ஆரம்பித்துள்ளது. இரண்டாவது நாளாகவும் தமிழ்நாட்டில் வைத்து இலங்கை பௌத்த பிக்குமார்கள் இருவர் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே இந்த அவசர பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது. இந்தியாவுக்குச் செல்லும் இலங்கையர்களின் பாதுகாப்புக்கு இந்திய அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று இலங்கை உயர்ஸ்தானிகர்களால் மேற்படி பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல்களை நிறுத்துங்கள்

இலங்கை யாத்திரீகர்கள் மீதான தாக்குதல்களை உடன் தடுத்து நிறுத்துங்கள்  என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மனோ கணேசன் அனுப்பியுள்ள அவசர மின்னஞ்சலியோ மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரினால் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் கடிதத்தின் பிரதி ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "இலங்கையிலிருந்து இந்தியா சென்ற சிங்கள யாத்திரீகர்கள் மற்றும் பெளத்த தேரர்கள் மீது தமிழகத்தின் தஞ்சை, திருச்சி மற்றும்  சென்னை நகரங்களில் வன்முறை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய வன்முறை சம்பவங்கள் தொடரா வண்ணம் இரும்பு கரங்கொண்டு உடன் தடுத்து நிறுத்துங்கள்.  இதன் மூலமே இலங்கை தமிழ் மக்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளை பெற்றிட உங்கள் அரசாங்கம் கொடுத்திடும் குரலுக்கு மென்மேலும் வலு ஏற்படும் என நான் நம்புகிறேன்.

பலாலி, நுவரெலியா, அனுராதபுரம், இரணைமடு ஆகிய இடங்களுக்கு இடையில் உள்ளக விமான சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் - ஜனாதிபதி

மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டதன் ஊடாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு விடும் என பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால், எதனையும் மூடிவிட்டு புதியதை நான் திறக்கமாட்டேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கையின்  இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. எமது நாட்டில் 1912  ஆம் ஆண்டு கொழும்பு குதிரை பந்தையத்திலேயே முதன்முறையாக விமானம் தரையிறங்கியது. அதற்கு பின்னர் இரத்மலானையில் தரையிறங்கியது. இரண்டாவது உலக யுத்தக்காலத்தில் அதாவது, 1940 களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட்டது. உலக யுத்தக்காலத்தில் கொழும்பிலும் திருகோணமலையிலும் குண்டுகள் வீசப்பட்டன. விடுதலைப்புலிகளும் குண்டுகளை வீசி தாக்குதலை நடத்தினர்.1986 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது புலிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதேபோல 1987 ஆம் ஆண்டு வானிலிருந்து இலங்கைக்கு பருப்பும் போடப்பட்டது. நாட்டை எங்களுடைய வருமானத்தில் அபிவிருத்திச்செய்யமுடியாது. சர்வதேச கடன்களை பெற்றுக்கொள்ளவேண்டும். ஹம்பாந்;தோட்டை துறைமுகத்தை சீனா கட்டிக்கொடுத்தது போல இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தையும் கட்டிக்கொடுத்துள்ளது.

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!! (பகுதி 7)

(வரதர் பெருமாள்)

'ஓநாய்! ஓநாய்! என அடிக்கடி பொய்க்குரலெழுப்பிய இடையனுக்கு உண்மையிலேயே ஓநாய்கள் வந்தபோது உதவ யாருமே வரவில்லை. இது ஒரு நீதிக்கதை. ஆனால் இங்கு அது ஒரு யதார்த்தம்.'

கொழும்பிலுள்ள பிரதானமான வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு ஒவ்வொரு நாளும் பொழுதும் வடக்கு கிழக்கில் நடப்பவை பற்றிய விபரங்களையும்,  அவ்வப்போது நிலவிக் கொண்டிருக்கும் நடைமுறை நிலைமைகளையும் அறிவிக்கவென அரசு-சாரா சமூக நிறுவனங்கள் பல வடக்கு கிழக்கில் செயற்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை நடாத்தும் பிரமுகர்களிற் பெரும்பாலானோர் தேர்தற் காலத்தில தமிழர்கள் அனைவரும் த.தே.கூவுக்கே வாக்குகளை அளிக்க வேண்டுமென ரகசியமாக அதேவேளை காத்திரமாக பிரச்சாரம் செய்கின்றனர். அந்தவகையில் இந்த நிறுவனங்கள் தேர்தல் விடயத்தில் த.தே.கூவுக்கே பெரும்பாலும் ஆதரவாக உள்ளன. ஆனால், இந்த நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் தமிழர்கள் மத்தியில் உள்ள எந்த அரசியற் தலைமை மீதும் விசுவாசம் கொண்டவர்களல்ல. அத்துடன் த.தே.கூவினரால் அரசியல்ரீதியாக ஏதும் சாதிக்கப்படும் என நம்பிக்கை உடையவர்களுமல்ல. (மேலும்....)

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய உச்சிமாநாட்டை கனடா பகிஷ்கரிக்காது - கனடிய தூதுவர்

பொதுநல அமைப்புக்கான கனடாவின் விசேட தூதுவரான செனட்டர் இயு சேகல் தமது நாடு எக்காரணம் கொண்டும் இலங்கையில் நடைபெற உள்ள பொதுநல வாய நாடுகளின் உச்சிமாநாட்டை பகிஷ்கரிக்காது என்று தெரிவித்தார். செனட்டர் இயு சேகல் இன்று காலை இலங்கை வரவுள்ளார். கனடா இலங்கை உச்சி மாநாட்டில் கலந்துகொண்டாலும் தங்கள் நாட்டின் பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாபர் தவிர்க்க முடியாத காரணங்களினால் கலந்துகொள்ள மாட்டார் என்று அவர் தெரிவித்துள்ளார். தான் தமிழர், சிங்களவர், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என்று சகல இலங்கை மக்களையும் நண்பர்களாக கருதியே இந்த இலங்கை விஜயத்தை மேற்கொண்டி ருப்பதாக சேகல் தெரிவித்தார்.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு

  • சுதந்திர இலங்கையின் 2வது சர்வதேச விமான நிலையம்

  • 23 சர்வதேச விமான நிறுவனங்கள் சேவை நடத்த விருப்பம்

  • 220 மில்.டொலரில் முதற்கட்ட பணிகள் பூர்த்தி

  • மத்தளயிலிருந்து புறக்கோட்டைக்கு அதிசொகுசு பஸ்சேவைகள்

  • உலகில் மிகப்பெரிய 380 எயார் பஸ் தரை இறங்கும் வசதி

(மேலும்....)

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சசிபாரதி சபாரத்தினம் காலமானார்..!

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ''சசிபாரதி" சபாரத்தினம் திருச்சியில் காலமானார். 1951 -ம் ஆண்டு ''வீரகேசரி" பத்திரிகையில் ஒப்புநோக்காளராக பணியில் சேர்ந்த இவர் 1961 - ம் ஆண்டு ''ஈழநாடு" பத்திரிகை யாழ்ப்பாணத்தில் தினசரியாக ஆரம்பிக்கப்பட்டதும் அதில் இணைந்துகொண்டார். செய்தி ஆசிரியராகவும் பின்னர் வாரமலர் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். பத்திரிகையில் எழுத்துப்பிழைகள் - வசனங்களில் இலக்கணப் பிழைகள் ஏற்படாது மிகச் சிறப்பாகத் திருத்தங்கள் இவர் செய்வதை எல்லோரும் பாராட்டுவர். பல பத்திரிகையாளர்களுக்கு வழிகாட்டியாகவிருந்து வளர்த்துவிட்டவர். இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி எழுதவைத்தவர். (மேலும்....)

இலங்கையில் மீண்டும் இன விரிசலை ஏற்படுத்த ஜெயலலிதா, கருணாநிதி முயற்சி

இலங்கையில் மீண்டும் இனப் பகையை ஏற்படுத்தி, தமிழ் மக்களை இருண்ட யுகத்திற்கு தள்ள தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதாவும், கருணாநிதியும் முயற்சிப்பதாக நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். எமது நாட்டில் வாழும் சகல இன மக்களும் எவ்வித வேறு பாடுகளின்றி ஐக்கியத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலை யில் இலங்கையில் பிரச்சினை உள்ளது என கூறி தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் குளிர்காய முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார். இந்த உலகில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு தமிழ் ஈழ நாடு தேவையென்றால், அது இந்தியாவில் உள்ள கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற பிரதேசத்தை கொண்ட தனியானதொரு தமிழ்ஈழ நாடு உருவாக வேண்டும். அங்குதான் உலகில் உள்ள தமிழ் மக்களது பாரம்பரியம், இந்து மத வரலாறு, கலை, கலாசாரம், மொழிகள் கொண்டதொரு தமிழ் மாநிலங்களாகும். இதற்காகவே தமிழ் நாட்டின் அரசியல்வாதிகள் முதலில் தமக்கென ஒரு தமிழ்ஈழத்தை உருவாக்க போராட வேண்டும். இதற்குத் தான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவிலும் ஐக்கிய நாட்டுச் சபையிலும் போராட வேண்டும். இந்தியாவில் இதனைச் செய்ய முடியாமல் இலங்கையில் ஒரு தமிழ்ஈழம் உருவாவதற்கு அவர்கள் குரல்கொடுப்பது ஒரு கோழைத்தனமானதொரு செயலாகும்.

சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று திறப்ப

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் திறந்துவைக்கப் படவுள்ளது. ஹம்பாந்தோட்டை பருதகந்த சூரிய சக்தி பூங்காவில் நிர்மாணிக்கப் பட்டுள்ள சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையமே இவ்வாறு திறந்து வைக்கப்படவுள்ளது. இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நட்புறவின் அடிப்படையில் ஜப்பான் அரசாங்கத்தின் பத்து மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் திட்டத்தின் கீழ் இந்த சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் அமைக்க ப்பட்டுள்ளது. இதன் ஊடாக தேசிய மின் உற்பத்தி வலையமைப்பிற்கு 737 கிலோ வாட் சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படவுள்ளது. இவ்விழாவில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பிரதியமைச்சர் அப்துல் காதர் மற்றும் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் நொபுஹிட்டோ ஹொபோ உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பின்தங்கிய விவசாயக் கிராமமான மத்தள இன்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கிறது

(எம். இர்பான் ஸகரியா)

2005 ஆம் ஆண்டு இலங்கையின் வரலாற்றில் மிகவும் முக்கிய இடத்தினை பெற்ற ஆண்டாக கருத முடியும். இதற்கான காரணம் யாதெனில் இதற்கு முன்னர் எமது நாட்டில் மக்கள் நிம்மதியிழந்து, சொத்துக்களை இழந்து அச்சத்தில் வாழ்ந்து வந்தனர். வடக்கு, கிழக்கு உட்பட நாடுபூராவும் இந்த நிலையே காணப்பட்டது. பயங்கரவாதப் பிரச்சினை முழு நாட்டையும் சிறியோர், பெரியோர், வடக்கு, தெற்கு, இன வேறுபாடின்றி சகலரையும் ஆட்கொண்டிருந்தது. நாடும் பொருளாதார ரீதியாக பாரிய பின்னடைவினை எதிர்நோக்கியிருந்தது. (மேலும்....)

பங்குனி 17, 2013

அமெரிக்காவிற்கு எதிராக யாழில் சுவரொட்டிகள்

யாழ்ப்பாணத்தில் அமெரிக்காவிற்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் நேற்று சனிக்கிழமை இரவு முதல் ஒட்டப்பட்டுள்ளது. இந்த சுவரொட்டிகளுக்கு மக்கள் முண்னணி என உரிமை கோரப்பட்டுள்ளது. யாழ். நகரின் பிரதான வீதிகளான பருத்தித்துறை வீதி, யாழ். வேம்படி வீதி மற்றும் ஆஸ்பத்திரி வீதி போன்ற பல இடங்களில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "எங்கள் வீட்டுப் பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்வோம்", "அமெரிக்காவே வாயை மூடு"மற்றும் "எங்கள் தானைத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே" ஆகிய வாசகங்கள் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொது பலசேனா இன்னும் இரண்டு போயாவுக்குள் மரணித்துவிடும்  - தம்பர அமில தேரர்

பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார். தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலியின் ஏற்பாட்டில் ஜெய்க் ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற வேற்றுமையில் ஒற்றுமை காணு வோம் எனும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றுகை யிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

7ஆவது நாளாக தொடர்கிறது தமிழக மாணவர்களின் போராட்டம்

தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக நடந்துவரும் போராட்டம் இன்று ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது. தமிழீழம் கோரி தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக மாணவர்கள் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் விடுமுறை அறிவிக்கப்பட்டதற்கு பின்னரே போராட்டம் தீவிரமானது. கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களுடன் பொறியியல் மற்றும் மருத்துவ மாணவர்களும் பள்ளிக்கூட மாணவர்களும் இணைந்து கொண்டனர். சர்வதேச விசாரணகளுக்கு இணங்குமாறு இலங்கையை இந்தியா வலியுறுத்த வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. தமிழ் பேசும் மக்களுக்கு நியாயமான அதிகாரப் பகிர்வினை வழங்கி காத்திரமான அரசியல் தீர்வுத் திட்டமொன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென கட்சி கோரியுள்ளது. அப்பாவி பொதுமக்கள் மீது யுத்தக்குற்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான போதியளவு சாட்சியங்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.

யாழில். உயிர்கொல்லி தேள்கள்

உயிரி ஆயுதமாக புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம்


யாழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பகுதியில் உயிர் கொல்லி தேள்கள் காணப்படுவதாக சிங்கள தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் எப்போது கண்டிராத வெள்ளை நிறத்திலான மிகவும் கொடி விஷத்தைக் கொண்ட தேள் வகையொன்று யாழ்ப்பாணத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த தேள் கொட்டினால் மரணம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இந்தத் தேள் கொட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் துரித அதிகரிப்பு பதிவாகியுள்ளது. இந்த தேள் வகை இந்தியாவின் மஹாராஸ்டிரா மாநிலத்தில் அதிகமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இந்த தேள் வகைகளை உயிரி ஆயுதமாக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த தேள் வகைகளை இந்திய அமைதி காக்கும் படையினர் கொண்டு வந்திருக்கலாம் என பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.எம். குலரட்ன சந்தேகம் வெளியிட்டுள்ளார். 1991ஆம் ஆண்டில் முதல் தடவையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். வெள்ளைத் தேள் கொட்டியதனால் சிலர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மே மாதம் இலங்கை வருகிறார் நவீபிள்ளை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மே மாதத்தில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று ஜெனீவா தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் இரு தடவைகள் பிற்போடப்பட்ட நவநீதம்பிள்ளையின் இலங்கை விஜயம், இம்முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்தின் நடைமுறைகள் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடும் வகையிலேயே அமையப்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கைக்கு எதிராக பல்வேறு நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், இலங்கையின் நிலைமை குறித்து நேரில் வந்து பார்வையிடுமாறு நவநீதம்பிள்ளையிடம் இலங்கை அரசாங்கம் கடந்த வருடம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஐக்கிய நாடுகள் விசேட நிபுணர் விடுத்த கோரிக்கை இலங்கையால் நிராகரிப்பு

இலங்கைக்கு விஜயம் செய்தற்காக ஐக்கிய நாடுகளின் கருத்துக்கள் மற்றும் வெளிப்படுத்துகையை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் விசேட நிபுணர் விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது. குறித்த துறையின் விசேட நிபுணரான பிராங்க் லாரு விடுத்த கோரிக்கையை இலங்கை அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை தொடர்பான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே பிராங்க்கின் இலங்கை பயணத்துக்கான கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொடர்பான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமையால் பிராங்கின் பயணக்கோரிக்கை வலுவற்றதாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவாவுக்கான வதிவிடப்பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தெரிவித்துள்ளார். எனவே குறித்த விசேட நிபுணரின் இலங்கை பயணம் தொடர்பில் புதிய அனுமதி பெறப்பட வேண்டும் என்று ஆரியசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிக்கு மீது திருச்சியில் வைத்தும் தாக்குதல்: 23 பேர் கைது

ஆராய்ச்சி பணிக்காக இலங்கையில் இருந்து தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்ற புத்த பிக்குவை தாக்கிய 15 பேரை பொலிசார் கைது செய்தனர். இதனையடுத்து குறித்த பிக்கு மீது திருச்சியில் வைத்தும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடைய 8 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். டெல்லியில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி மையத்தில் பயின்று வரும் சீனா, தாய்லாந்து, பர்மா, இலங்கை மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த 19 மாணவர்கள், தொல்லியல் துறை ஆய்வு பணிக்காக தஞ்சை பெரிய கோயிலுக்கு நேற்று வந்தனர். இவர்களில் இலங்கையை சேர்ந்த புத்த பிக்கு கனலேகாவும் ஒருவர். இவர்கள் நேற்று காலை பெரிய கோயிலில் சிற்ப கலைகள் குறித்து ஆய்வு பணி மேற்கொண்டிருந்தனர். (மேலும்....)

நாம் கூடிப் பேசி எமது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேர வைக் கூட்டத் தொடரில் மேற்கத்திய நாடுகளின் அரசாங்கங்கள் அமெரிக்காவின் தலைமைத்து வத்தின் கீழ் கொண்டுவந்துள்ள இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை ஆதரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பினரும் இங்கிருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் தேசப் பற்றற்ற சில குழுக்களும் ஆதரவு அளித்துக்கொண்டி ருக்கும் இவ்வேளையில் வடக்கில் உள்ள வவுனியா, கிளி நொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சமீபத்தில் கிளிநொச்சி டிப்போ சந்தியில் இலங்கை அரசாங்கத்தை ஆதரித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நம் நாட்டில் உள்ள தேசத்துரோக சக்திகளுக்கு எதிராக வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள். (மேலும்....)

பழைய குப்பையை கிளறும் பங்களாதேஷ்

(எஸ். பிர்தௌஸ்)

பங்களாதேஷில் இப்போது என்ன நடக்காவிட்டாலும் நாளாந்தம் மறக்காமல் ஓர் ஆர்ப்பாட்டத்திற்கு பஞ்சமில்லை. எல்லாம் பழைய குப்பையை கிளறப்போய் ஏற்பட்ட வினைதான். பங்களாதேஷ் என்ற நாடு சும்மா உருவாகவில்லை. 1971ஆம் ஆண்டு ஒரு பாரிய யுத்ததை எதிர்நோக்கி பல்வேறு அரசியல் விளையாட்டுகளுக்கு பின்னர் உருவான நாடே பங்களாதேஷ். இந்த சம்பவமெல்லாம் இடம்பெற்று இப்போது 40 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதுதான் பங்களாதேஷ் அரசு இந்த பழைய குப்பையை கிண்டி நீதிதேட புறப்பட்டிருக்கிறது. விளைவு கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக பங்களாதேஷ் எங்கும் ஆர்ப்பட்டம்... கலவரம்... 60க்கு மேலானவர்கள் பலி. (மேலும்....)

பங்குனி 16, 2013

ஹலால் - முஸ்லிம் மக்கள் - தமிழ் மக்கள் - ஜெனீவா

(ஸ்ரீதரன் - சுகு)

வரலாறு கண்டிராத அளவில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதுவொன்றும் தற்செயலாக நிகழவில்லை. இலங்கையின் நூற்றாண்டுக்கு மேற்பட்ட  வரலாற்றை அவதானித்தால் இவை திட்டமிட்டே நிகழ்த்தப்பட்டு வந்திருக்கின்றன. முதலில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகவும், பின்னர்  1915 இல் முஸ்லீம்களுக்கு எதிராகவும், பின்னர்  இலங்கை துறைமுக ரயில்வே வேலைகளுக்காக குடியேற்றப்பட்ட மலையாளிகளுக்கு எதிராகவும் 1940களிலிருந்து மலையக, வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிராகவும், பேரினவாத செயற்பாடுகள் வன்முறைகள் நீதி விரோத தாக்குதல்கள் பாரபட்சங்கள் தீவிரம் பெற்று  வந்திருக்கின்றன. (மேலும்....)

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 3

(எல்லாளன்)

1983 இல் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட இடத்திற்கு எனது நண்பர்களுடன் சென்றேன். அப்போது இராணுவத்தினர் 13 பேர் இறந்ததிற்குப் பதிலாக இராணுவம் பழிவாங்கிய பல இடங்களையும் அவர்கள் ஏற்படுத்திய பல அழிவுகளையும் நாம் பார்த்தோம். வெறும் வேடிக்கை பார்க்கச் சென்ற எமக்குள் பலருக்கு இவ்வகையான தாக்குதலினால் ஏற்பட்ட அழிவுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 1983 இனப்படுகொலைகளின் பின் இயக்கத்தில் சேரவேண்டும் என்ற முடிவில் இருந்த எனக்கு புலிகளுடன் சேரவேண்டும் என்ற துளி ஆசையும் இல்லாததிற்கு இந்தத்தாக்கம் ஒரு பெருங்காரணமாகும். அத்துடன் வேறு காரணங்களும் இருந்தன. GUES போன்றவற்றில் வேலை செய்ததால் மக்கள் போராட்டம் சம்பந்தமான குறைந்தபட்ச அரசியல் அறிவும் இருந்தது. அரசியல் கொள்கைகள், தத்துவங்கள் என்பவை பற்றிய குறைந்த பட்ச அறிவு இருந்தது. போராட்டத் தலைமைத்துவம் என்பது தனிநபரின் விருப்பு வெறுப்பில் இருப்பதல்ல என்ற தெளிவும் எனக்கேற்பட்டிருந்தது. (மேலும்....)

கதம்பமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை! கலக்கமான இலங்கைத் தமிழரின் அரசியல் எதிர்காலம்!!  (பகுதி 6)

(வரதர் பெருமாள்)

வடக்கு கிழக்கு இணைந்த அநத மாகாண சபை ஆட்சியை அததோடு அதனை திருகோணமலையைத் தலைநகரமாகக் கொண்ட ஒனறாக யதார்த்தமாக்குவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்காரர்கள் சிந்திய இரத்தங்கள் செய்த தியாகங்களை தமிழ் பிரமுக சமூகம் இன்றைக்கும் திரும்பிப் பார்க்க, சிந்தித்துப் பார்க்கத் தயாராக இல்லை.   பெரும்பான்மையான தமிழர் சமூக சமயப் பிரமுகர்களும் புத்திஜீவிகளும்; அன்று தமிழர்களின் நலன்களுக்கு எதிராக புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அத்தனை அழிப்புகளையும் அந்த மாகாண சபை இல்லாமற் போக வேண்டும் என்பதையும் மனமார மகிழ்ச்சியோடு வேண்டிக் கொண்டுதான் இருந்தார்கள். (மேலும்....)

இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும் -  சீனா

'இலங்கையின் இறைமைக்கு மதிப்பளிக்க வேண்டும்' என சீனா சர்வதேச சமூகத்தை கோரியுள்ளது. 'ஒரு நாட்டில் உள்விவகாரங்களில் தலையிடுவதை சர்வதேச சமூகம் நிறுத்திகொள்ள வேண்டுமென்றும் பிரச்சினைகளை பாரபட்சமின்றி அனுகவேண்டும்' என்றும் சீனா சர்வதேச சமூகத்தை கோரியுள்ளது. ஜெனிவாவில் இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நேற்று இலங்கை தொடர்பான மீளாய்வின்போது பல நாடுகள் தமது பாராட்டுதல்களை இலங்கைக்கு வழங்கியிருந்தன. இதன்போது பல நாடுகள் தமது கருத்துக்களை இலங்கை தொடர்பாக வழங்கியிருந்தது. 'யுத்தம் முடிவடைந்ததிற்கு பின்பு இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகளை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ள வேண்டும். இலங்கை சர்வதேச சமூகத்திடம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு இந்த அபிவிருத்தி திட்டங்கள் சாதகமாக அமைந்துள்ளன' என இதன்போது, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இலங்கை விவகாரம்: சர்வதேச விசாரணை இன்றேல் மத்திய அரசில் தொடரோம் - கலைஞர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையை இணைக்க இந்தியா உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய மத்திய அரசில் தொடராது என்று அதன் தலைவரான கலைஞர் மு.கருணாநிதி எச்சரித்துள்ளார். (மேலும்....)

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை

தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும்  உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் இந்த செயலால் எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் எங்களது போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

அர்ஜுன் சம்பத் உன்னையே நீ அறிவாய் !!

தனிமனித விரோதத்தை இந்துக்களுடன் முடிவதும், ஈழத்தில் சிந்துவது இந்து ரத்தமே என்பதும், இந்தியாவில் இருக்கும் உமது கட்சிக்காரர்களை உசுப்பேத்தப் பயன்படலாம். ஆனால், இலங்கைத் தமிழர் நாம் சமயத்தின் பெயரால் பிளவுபடத் தயாராக இல்லை. இலங்கைத் தமிழருக்கு ஆதரவுதருவதாயின், தமிழர்(முஸ்லீம், கிறீஸ்தவம், இந்து) என்ற பிணைப்பைக் கருத்தில்கொண்டு, உங்கள் வீர வசனங்களை அள்ளி எறியுங்கள்.

நன்றி.

Para

அன்புடன் ,
அர்ஜுன் சம்பத்
(இந்து மக்கள் கட்சி).

ஆதாரங்கள் சிக்கின்

தாக்குதல் நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள்?

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெரிவித்தார். காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் பெமினா பகுதியில் அமைந்துள்ள மத்திய ஆயுதப் படை (சி. ஆர். பி. எப்) முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக வீரர் பெருமாள் உட்பட 5 பேர் பலியாயினர். பொலிஸ் முகாம் அருகேயுள்ள மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் போல மாறுவேடத்தில் வந்த 2 தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த தீவிரவாதிகள் என கூறப்பட்டாலும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களா என்பதை அரசு உறுதியாக கூறவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் மிகப் பெரிய அளவிலான தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளதற்கு எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பங்குனி 15, 2013

மத்தலவை பயன்படுத்தும் விமானசேவை நிறுவனங்களுக்கு 50% கட்டணக்கழிவு

மத்தல விமான நிலையத்தைப் பயன்படுத்தவுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு சுமார் ஒரு வருட காலத்துக்கு 50 சதவீத கட்டணக் கழிவும் ஏனைய மூன்று வருடங்களுக்கு 25 சதவீத கட்டணக் கழிவும் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. அம்பாந்தோட்டை, மத்தல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம், இன்னும் மூன்று தினங்களில் அதாவது எதிர்வரும் 18ஆம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது. இந்நிலையில், விமான நிலையத்தின் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. டுபாய், சார்ஜா, அமெரிக்கா மற்றும் கட்டுநாயக்காவிலிருந்து புறப்படும் 4 விமானங்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி, மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்படவுள்ளன. (மேலும்....)

தொடரும் வலி நிறைந்த சோகம்...

(எம்.டி. லூசியஸ்)

அரசே எங்கள் மகள் காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறு அரசே.... பதில் கூறு.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்திச் செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகளை மீண்டும் எங்களிடம் தா... தடுத்து வைத்திருப்போரின் பட்டியலை வெளியிடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தா.., அனுமதி தா..., எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தந்துவிடு... இருக்கும் இடத்தைச் சொல்லிவிடு...,எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில் தானா!!! இனியாவது எங்களை நிம்மதியாக வாழவிடு .. இந்தப் புலம்பல்கள் எல்லாம் எதற்காகவென்று நினைக்கின்றீர்களா.... வோறொன்றும் இல்லை. காணாமல் போன உறவுகளின் உள்ளக் குமுறல்களே இவை. (மேலும்....)

உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே!!!


உலகில் கப்பல் கண்டுபிடித்தவன் தமிழன்.உலகின் கப்பல் கட்டுமானத்தில் சிறந்துவிளங்கியவன் தமிழன். இத்துறை வல்லுனர்கள் கம்மியர்கள் எனப்பட்டனர். கடலில் பயணம்செய்வது எப்படிகாற்று எந்த நாட்களில் எப்படி வீசும்? காற்றின்திசைகளை கொண்டு பயணம் செய்வது எப்படி என்று கடல் சார்ந்த அத்தனை அறிவுகளிலும் மேம்பட்டு விளங்கியவன் தமிழன்.உலகில் முதல் கப்பலும் கப்பல் படையும் தமிழருடையதே.உலகின் முதல் கப்பலையும் கப்பல் படையும் வைத்திருந்தவன் இராஜஇராஜசோழனும் அவன்ம கன்ராசேந்திர சோழனும் ஆவான். கலிங்கபாலு எனும் கடல் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்ட செய்தியில், கடல்வாழ் உயிரினமான ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதற்காக வருடா வருடம் தமிழகம் மற்றும் ஒரிசா வரும்.
(மேலும்....)

விடாப்பிடியான ஐக்கியப்பட்ட போராட்டம் இறுதி வெற்றி எங்களுக்க  -அப்பாவி காட்டு ஜீவனங்கள்

எந்த உயிரினங்களும் உயிர்வாழ்வதற்காக கடைசிவரை போராடும். அதுவும் பலமிக்க எதிரிக்கு எதிராக ஐக்கியப்பட்டு திட்டமிட்டு போராடினால் வெற்றி நிச்சயம். இதில் இழப்பதற்கு ஏதும் இல்லை என்று தைரியத்துடன் போராட வேண்டும் இறுதி வெற்றி நியாயத்திற்கே தர்மத்திற்கே நல்லவர்களுக்கே. இதனை இந்த காட்டு வாழ் ஜீவன்கள் நிரூபித்துள்ளன. இனிமே நீங்கள் யாரையும் 'எருமை' என்று ஏசாதிரு;கள். அவர்கள் எருமை அல்ல 'அருமை' என்பதை தமது சகாவை மீண்கும் போரில் வென்றதை நீங்கள் இங் காணொளியில் அவதானிக்கலாம். ஒன்றல்ல இரண்டு எதிரிகளிடம் இருந்து இறுதிவரை போராடிய அந்த தைரியத்தையும் இணைந்து ஐக்கியப்பட்டு போராடியதையும் யாரும் கண்டு மெய்சிலிப்பீர்கள். இது மனத குலத்திற்கு கிடைத்துவிட்டால் யாரும் அடிமையில்லை என்று சமத்துவத்துடன் வாழலாம். (காணொளியைப் பார்க்க....)

மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சசிபாரதி சபாரத்தினம் காலமானார்..!மட்டக்களப்​பு துண்டுப்பி​ரசுரம்! தமிழ் தேசியக் கூட்ட​மைப்பு கண்டனம்

மட்டக்களப்பில் அண்மையில் திராவிடன்சேனை என்ற பெயரில் எச்சரிக்கின்றோம் என்ற தலைப்பில் வெளியான் துண்டுப்பிரசுரம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. இக்கண்டனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். அத்துண்டுப்பிரசுரத்துக்கும்  தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் அதன் ஆதரவாளர்களுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை. ஜெனிவாவை அடிப்படையாகக்கொண்டே இத்துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்துமுஸ்லிம் சகோதரர்கள் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தில் 2 1/2 இலட்சம் லீற்றர் எரிபொருள் களஞ்சியம்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படும் எத்தகைய விமானங்களுக்கும் எரிபொருள் விநியோகிக்கும் வகையில் 2 1/2 இலட்சம் லீற்றர் எரிபொருள் களஞ்சியப்படுத்தக்கூடிய எண்ணெய்த் தாங்கியொன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு தெரிவித்தது. எதிர்வரும் 18 ஆம் திகதி மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட உள்ளது. இங்கு வரும் விமானங்களுக்கு எரிபொருள் வழங்க ஏற்றவாறு எரிபொருள் களஞ்சியம் அமைக்கப்பட்டுள்ளதோடு இதனை விஸ்தரிக்கவும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. உலகிலுள்ள எந்த விமான நிலையத்துடனும் போட்டியிடக்கூடியவாறு சிறந்த விலையில் எரிபொருள் விநியோகிக்க உள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது. மத்தள விமான நிலையம் இயங்க ஆரம்பித்ததும் ஹம்பாந்தோட்டை துறைமுக களஞ்சியத் தொகுதியின் அளவை 23 மில்லியன் லீற்றராக அதிகரிக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதனூடக தாமதமின்றி எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பெற்றோலிய கைத்தொழில் அமைச்சு கூறியது. உலகில் தலைசிறந்த தொழில்நுட்ப உபகரணங்களை பயன்படுத்தி மத்தள விமான நிலைய களஞ்சியத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சீன ஜனாதிபதியாக ஷிஜின்பிங்  உத்தியோகபூர்வமாக நியமனம்

சீனாவின் புதிய ஜனாதிபதியாக ஷி ஜின்பிங் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். 10 ஆண்டுகளுக்கு பின் முன்னெடுக்கப்படும் ஆட்சி மாற்ற நடவடிக்கை யாகவே ஜின்பிங் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். சீனாவின் ஆளும் கொம்மியூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஹு ஜின்தா வோவுக்கு பதில் ஜின்பிங் கடந்த நவம்பரில் தேர்வானார். இந்நிலையில் சுமார் 3000 பிரதிநிதிகளுடன் சீன பாராளுமன்றத்தின் ஆண்டுக் கூட்டம் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஹு ஜின்தாவோவுக்கு பதில் ஜின்பிங் ஜனாதிபதியாக அங்கீகரிக்கப்பட்டார். இதில் சீனாவின் புதிய பிரதமராக லி ககியாங் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இன்றைய தினத்தில் வென் ஜியாபோவுக்கு பதில் சீன பிரதமராக முறைப்படி நியமிக்கப்படுவார். எனவே, நேற்றைய தினத்தில் ஜின்பிங்கை ஜனாதிபதியாக பாராளுமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட போது அதற்கு கூடியிருந்த 2,952 பேரும் ஆதரவாக வாக்களித்தனர். ஏற்கனவே ஜின்பிங் ஆளும் கொம்மியூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த நவம்பர் 8 ஆம் திகதி நியமிக்கப் பட்டதோடு உயர் இராணுவ சபையின் தலைவர் மற்றும் மத்திய இராணுவ ஆணைக் குழுவின் தலைவராகவும் தேர்வானார். (மேலும்....)

பங்குனி 14, 2013

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 2

(எல்லாளன்)

1980 ஆம் ஆண்டு சாதாரணதர பத்திரப் பரீட்சை முடிவுகளின் பின் எமது கிராமத்துப் பாடசாலையில் நாம் விரும்பிய மேற்படிப்பு இல்லாததால் யாழ்ப்பாண நகரப்பாடசாலை ஒன்றில் அனுமதி பெற்று அங்கு சென்றோம். நான் மத்தியகல்லூரிக்கும் அற்புதன் வைத்தீஸ்வரா கல்லூரிக்கும் சென்றோம். 1981 ஆம் ஆண்டு யாழ்நூலகம், நகரத்திலிருந்த கடைகள், ஈழநாடு பத்திரிகைக் காரியாலயம் போன்றவை எரிக்கப்பட்டன. யாழில் தங்கியிருந்த சிங்கள அரசியல்வாதிகளினால் தூண்டப்பெற்று பொலிஸ்காரர்களால் எரிக்கப்பட்டன. அன்று காலை பரமேஸ்வரனும் மற்றும் இரு நண்பர்களும் நானும் மிகவும் பதட்டமான சூழ்நிலையில் சைக்கிளில் யாழ்ப்பாணம் சென்றோம். மாவட்ட சபைத் தேர்தல் அடுத்த நாட்களில் நடைபெற இருந்ததால் எமது கிராமத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் மேலதிகபொலிசாரும் இராணுவமும் இருந்தன. யாழ்நூல் நிலையத்தைப் பார்த்துவிட்டு ஈழநாடு பத்திரிகை நிலையத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இராணுவம் ஒரு ஜீப்பில் வந்து கொண்டிருந்தது. பலரும் அந்த இடத்தைவிட்டு நகர ஆரம்பித்தார்கள். (மேலும்....)

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டும் - சம்பந்தன்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும். அரசாங்கம் அளித்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாத நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடம் ஜெனீவாவில் அமெரிக்காவின் பிரேரணை நிறைவேற்றப்பட்ட போதிலும், அதன் அடிப்படையில் உரிய கடமைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகள் விடயம், பல வந்தமாக கடத்தப்பட்டோர் தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இராணுவமயமாக்கல், தொடர்ந்து வருகின்றது. காணி அபகரிப்பு இடம்பெற்று வருகின்றது. அதிபாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் பொதுமக்களின் காணிகள் தொடர்ந்தும் படையினர் வசம் உள்ளன. யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கு, திருகோணமலையில் சம்பூர் பகுதி உட்பட பெரும் பகுதிகள் படையினர் வசமே உள்ளன என்றார்.

சந்திரிக்காவுடன் எதிரணியினர் ஒரே மேடையில்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உட்பட எதிரணி கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர். தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிரணி கட்சிகளின் தயாராக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க அண்மையில் கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க உட்பட ஆளும் எதிர் கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திக்கவுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமாரதுங்க, எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் எஸ்.பி.திசாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்கள் "வேற்றுமையில் ஒற்றுமை" எனும் தொனிப்பொருளிலான கருத்துக்களம் நிகழ்விலேயே கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தேசிய ஐக்கிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெய்க் ஹில்டனில் பிற்பகல் 1.30 மணியிலிருந்து இடம்பெறவுள்ளது.

அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரக வாசிகளுடையவை

இலங்கையில் கடந்த வருடத்தில் பல்வேறு வர்ணங்களில் பெய்த மழையுடன் கிடைத்த அடையாளம் தெரியாத பொருட்கள் வேற்று கிரக வாசிகளுடையவை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் தொடர்பில் அமெரிக்காவின் ஆராய்ச்சியாளரான ஜெமி வில்லிஸ் இலங்கையில் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது இந்த பொருட்கள் உலகத்துக்கு வெளியில் வெளிக்கிரகங்களை சேர்ந்தவர்களின் வாகனங்கள் சுற்றித் திரிவதை உறுதிப்படுத்தும் வகையில் அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகிலான புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தே இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று இந்திய செய்திகள் மேலும் தெரிவித்தன.

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா எதிர்க்கும்?

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா இறுதிநேரத்தில் எதிர்க்குமென்று  வெளிவிவகாரச் செயலாளர் கருணாதிலக அமுனுகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டு செய்திச் சேவைக்கே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தின் இறுதி நகல் வரைபு சமர்ப்பிக்கப்படும் போது இந்தியா தீர்மானம் எடுக்கும். இந்தியாவின் பதில் குறித்து  ஆவலுடன் காத்திருந்தாலும் கூட இந்தியா எமக்கு ஆதரவளிக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எம்மிடம் இருக்கின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் 5 ஆயிரம் சிங்கள குடும்பங்களுடன் நாமல் கிராமம்

வவுனியாவில் நாமல் கிராமம் உருவாக்கப்பட்டு சிங்களக் குடியேற்றம் இடம்பெறுவதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். அசாத் சாலி மன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்னிலங்கையில் வசிக்கின்ற சிங்கள மக்கள் துறைமுகத்தில் வேலை பெற்றுத் தருவதாக கூறி வவுனியாவில் குடியேற்றப்படுகின்றனர். அங்கு குடியேற்றம் இடம்பெற்ற இடத்திற்கு புதிதாக நாமல் கிராமம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவ்வாறு வடக்கில் சிங்களக் குடியேற்றம் நடைபெறுகின்ற அதேநேரம் தெற்கில் காணிகள் சீனாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதேவேளை, இவ்வாறு குடியேற்றப்படும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 3 ஏக்கர் காணியும் துவிச் சக்கர வண்டியும் வழங்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஈழத்து விதவைகளுக்கு மறுவாழ்வு

ஈழத்து விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்க முன்வரும் தமிழக இளைஞர்களுக்காகத்  தமிழகத்தில் ஒரு விழா வைக்குமாறு அருள் எழிலன் மற்றும் அன்பர்கள் வழி =உங்களை நான் கேட்டுப் பல மாதங்களாகின்றன. செய்யலாம் எனச் சொல்லியிருந்ததுடன் பின் எவ்வித தொடர்பும் இல்லையே! முன்வரும் இளைஞர் பட்டியல் இருந்தால் அப்பட்டியலை ஈழத்தில் வெளியிட்டு, ஆர்வமுள்ள விதவைகளுக்கு உதவலாம். 90,000 விதவகைளுள் பாதிக்கு மேல் இளவயதினர், மிக இள வயதினர். தமிழகம் உதவுமா?

நன்றி

2013/3/13 வி.சி.வில்வம் <vilvamvc@gmail.com>

புதிய போப்பாக அர்ஜென்டினா ஆர்ச் பிஷப் தேர்வு

புதிய போப்பாக அர்ஜென்டினாவின் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தேர்வு செய்யப்பட்டார். புதிய போப் இனி போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார். உடல் நிலையை காரணம் காட்டி, 16வது பெனடிக்ட், கடந்த மாதம் பதவி விலகியதால், புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் சூழ்நிலை உருவானது. புதிய போப் தேர்வு செய்யப்பட்டதற்கு அடையாளமாக வெண்புகை வெளியே வரும், என்ற எதிர்ப்பார்ப்பில், ஏராளமான கிறிஸ்துவர்கள், சிஸ்டைன் தேவாலயத்திற்கு அருகே காத்திருக்கின்றனர். இந்நிலையில், இன்றிரவு புகைக்கூண்டிலிருந்து புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டதன் அடையாளமாக வெண்புகை வெளியேறியது. இதனால் அங்கு கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் குறித்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. இதன்படி, அர்‌ஜென்டினாவின் பியூனர்ஸ் அயர்ஸ் நகர ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது வயது 76. லத்தீன் அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக போப் ஆண்டவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய போப் இனி, போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுவார்.

வெளிநாட்டு வான் தபால் சேவையை அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்றது

தனியார் நிறுவன த்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த விமானம் மூலமான வெளி நாட்டுத் தபால் மற்றும் பொதிகள் சேவையை தபால் திணைக்களம் நேற்றுக்காலை முதல் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டது. தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் சேவைகள் அமைச்சு தெரிவிக்கிறது. விமானம் மூலமான வெளிநாட்டுத் தபால் சேவைகளை தனியார் நிறுவனத்திடம் கையளிப்பதற்கு தபால் சேவைகள் அமைச்சு முன்னர் முடிவெடுத்திருந்தது. ஒரு தனியார் நிறுவனத்திடம் கடந்த முதலாம் திகதி முதல் ஒப்படைக்கப்பட்டது. அந்த நிறுவனம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டுப் பொதிகள் சேவையை ஆரம்பித்தது. எனினும், தபால் சேவைகள் ஆரம்பித்த நாள் முதல் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படவில்லை.  இதனால் வெளிநாட்டு தபால் மற்றும் பொதிகள் சேவையை தபால் திணைக்களமே நேற்றுக்காலை முதல் ஆரம்பித்துள்ளது.

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் மாரவிலயில் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை மாரவில பொலிஸார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்துள்ளனர். 2 குழந்தைகள் உட்பட 45 பேரும் படகில் ஏறுவதற்காக மாரவில கடற்கரை பகுதியில் காத்திருந்த போதே கைது செய்யப்பட்டதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, தலைமன்னார், அக்கரைப்பற்று, கல்முனை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்காக ஏற்பாடுகளைச் செய்த நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாரவில பொலிஸார் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் மாரவில மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தவும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஒவ்வொருவரிடமிருந்தும் மூன்று இலட்சம் முதல் 4 இலட்சம் வரையில் அறவிடுவதாகவும் கைதானவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் ஆட்கடத்தல்கள், படுகொலைகளை கவனத்தில் கொள்ளாத ஒருதலைப்பட்ச அறிக்கை

ஜெனீவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் பிரேரணை பக்கசார்பான தகவல்களை மாத்திரம் கொண்டு தயாரிக்கப்பட்டது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது காணாமல்போன இராணுவத்தினர், புலிகளால் காணாமல் போன சாதாரண பொதுமக்கள் குறித்த விடயங்களைக் கவனத்தில் கொள் ளப்படவில்லையென இறந்த மற்றும் காணாமல்போனோரு டைய பெற்றோர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இறுதிக்கட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் இழப்புக்கள் பற்றியே சர்வதேச சமூகமும், புலி ஆதரவு புலம்பெயர்ந்த சக்திகளும் பேசுகின்றன. யுத்தம் காரணமாக உயிரிழந்த, காணா மல்போன படையினர் பற்றியோ, புலிகளால் உயிரிழந்த மற்றும் காணாமல் போன பொதுமக்கள் பற்றியோ எவரும் பேசுவதில்லையென இறந்த மற்றும் காணாமல்போனோருடைய பெற்றோர்களின் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர் ஆனந்த பெரேரா கூறினார். தமக்கு ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் சொத்து இழப்புக்கள் அடங்கிய அறிக்கையொன்றைத் தயாரித்து, ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கும், அமெரிக்காவுக்கும் அனுப்பிவைத் திருப்பதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

சாவெஸின் மரணம் தொடர்பில் வெனிசுவெலா விசேட விசாரணை

வெனிசுவெலா ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் சர்வதேச உளவு பிரிவுகள் மீது சந்தேகம் நிலவுவதால் அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சாவெஸின் மரணத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பதாக வெனிசுவெலா எண்ணெய்த் துறை அமைச்சர் ரபயெ ரமிரஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பில் விசேட ஆணைக்குழு ஆதாரங்களை திரட்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். சாவெஸின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அவரது புற்று நோய் ஏகாதிபத்தியவாதிகளால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் வெனிசுவெலா இடைக்கால ஜனாதிபதி நிகொலஸ் மடுரோ அந்நாட்டு தேசிய தொலைக் காட்சியில் அறிவித்திருந்தார். என்றைக்காவது ஒருநாள் இந்த உண்மை உலகுக்கு தெரிய வரும் எனவும் அதன் போது அவர் தெரிவித்தார். சாவெஸின் மரணத்தை தொடர்ந்து அமெரிக்க - வெனிசுவெலா உறவில் மேலும் இழுபறி ஏற்பட்டுள்ளது. வெனிசுவெலா அமெரிக்க இராஜதந்திரிகள் இருவரை வெளியேற்றியதையடுத்து அமெரிக்கா அதற்கு பதிலாக இரு வெனிசுவெலா இராஜதந்திரிகளை வெளியேற்றி யுள்ளது.

செவ்வாயில் உயிர்வாழ தகுதியான சூழல்

செவ்வாய் பாறையில் கியூரியாசிட்டி இயந்திரம் மேற்கொண்ட ஆய்வு மூலம் அங்கு முன்னர் உயிர் வாழ தகுதியான சூழல் நிலவியது உறுதியாவதாக நாஸா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் வொஷிங்டனில் இருக்கும் அமெரிக்க வின்வெளி ஆய்வு மையமான நாஸாவின் தலைமையகத்தில் இருந்து கடந்த செவ்வாய்க்கிழமை விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். இதில் கியூரியாசிட்டி இயந்திரம் செவ்வாய் பாறையின் மாதிரியைக் கொண்டு மேற்கொண்ட பகுப்பாய்வில் ஹைட்ரஜன், கார்பன் மற்றும் ஒட்சிசன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை உயிர் வாழ்வதற்கான அடிப்படை கட்டமைப்பு என நாஸா குறிப்பிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் எமது ஆய்வின் அடிப்படைக் கேள்வி அங்கு உயிர்வாழ தகுதியான சூழல் இருக்கிறதா என்பதாகும் என தெரிவித்த செவ்வாய் ஆய்வு தொடர்பிலான நாஸாவின் பிரதான விஞ்ஞானி மைக்கல் மேயர், தற்போது இந்த கேள்விக்கு எமக்கு ஆம் என விடை கிடைத்திருக்கிறது என்றார்.

பங்குனி 13, 2013

அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயார் - ரணில்

அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தயார் என அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். விசேட அறிவிப்பொன்றை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இன்று புதன்கிழமை விடுத்தபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படவுள்ள பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதற்காகவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயார் என அவர் தெரிவித்தார். "நாட்டுக்கு எதிராக பிரேரணை நிறைவேற்றப்படுவது நிச்சயம். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் 13ஆவது திருத்தம் ஆகியவற்றை அரசாங்கம் அமுல்படுத்தல் மற்றும் தேசிய பிரச்சினை தீர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் ஆதரவு வழங்கும்" என ரணில் விக்ரமசிங் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கைத் தமிழர்களாகிய நாம் இஸ்லாமிய, கிறிஸ்தவ, இந்து மதத்தைச் சார்ந்தவர்கள். எம்மைப் பிளவுபடுத்தி அரசியல் இலாபம்காண முயலாதீர்!! நம்மவர்களே விழிப்புடன் இருங்கள்!!!

இந்து மக்கள் கட்சியின் சார்பில் வருடந்தோறும் மாநிலம் முழுவதும் நடைபெறும் இந்து விழிப்புணர்வு மஹா சிவராத்திரி விழா இந்த ஆண்டு வரும் 10-ம் தேதி தனித் தமிழ் ஈழம் அமைந்திட வேண்டுதல் நிகழ்ச்சியாக நடைபெறுகின்றது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள சுவரொட்டி இது.

தமிழ் அதிகாரியிடம் சிங்களத்தில் வாக்குமூலம், விசாரணை ஆரம்பம்

சிங்களத்தில் தேர்ச்சியில்லாத ஒரு சுங்க அதிகாரியை ஊழல் தொடர்பான பிரச்சினையின் போது சிங்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்கு கட்டாயப்படுத்தியமை தொடர்பில் விசாரணைகளை தேசிய மொழிகள் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது. தமிழரான இந்த சுங்க உத்தியோகத்தர் ஊழல் குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் போது சிங்களத்தில் வாக்குமூலம் அளிக்குமாறு அவர் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் பற்றி தன்து உத்தியோகஸ்தரிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன் மொழித்தொடர்பான பிரச்சினைகளை அவரச அழைப்பு இலக்கமான 1956 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முறையிடலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் செயற்பட்டவர்கள் திரும்ப முடியாத - தேசிய சுதந்திர முன்னணி

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட யாரும் மீண்டும் நாட்டிற்குள் வர முடியாது. இந்தியாவில் தேவையென்றால் தமிழீழம் ஒன்றை அமைத்துக் கொள்ளலாம். இலங்கையில் அந்த பேச்சுக்கே இடமில்லை என்று தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகச் செயாலாளர் பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார். அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கூட்டு முயற்சியே ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களாகும். எனவே இதனை அடியோடு நிராகரித்து 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக ஒழித்து, வடமாகாண சபை தேர்தலை அரசு நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மறவன்புலவு என்ற கிராமத்தின் எழுச்சி

இரண்டரைச் சகிமீ. பரப்பளவு.

425 இல்லங்கள்.

160 இல்லங்கள் வதிவில்.

ஏனையோர்? வந்து போவர்.

1999 தைப்பூசம் தொடக்கம் 2009 நவராத்திரி வரை மறவன்புலவு முழுவதும் உயர்பாதுகாப்பு வலையம்.  2010 பங்குனி தொடக்கம் 2011 பங்குனி வரை ஓராண்டு காலத்தில் சுவிசு அரசு மறவன்புலவில் அமைத்தவை, 300 கல் வீடுகள், 300 கிணறுகள், 300 கழிப்பிடங்கள், 200 மாணவர் பயிலும் பள்ளி, சமூகக் கூடம், யாவும் 1,500 மக்கள் வாழும் இவ்வூரில் 82 மாணவர் உள்ளூர்ப் பள்ளியில். பள்ளியில் 5 கணிணிகள். அவற்றுள் 4 திருட்டுப் போய், கண்டுபிடித்து நீதிமன்றத்தில். ஒரே ஒரு கணிணிக்கும் ஆசிரியர் இல்லை. கடந்த 2012 கார்த்திகையில் மலேசியா அன்பர் திருமதி சித்திரா வாசு அவர்களின் நன்கொடையால் இணைய இணைப்பும் பெற்றனர். எனினும் பள்ளிக் கணிணியோ பயன்பாட்டுக்கு வரவில்லை. அரசின் மீளெளுச்சித் திட்டத்தில் பெற்ற கணிணி, அச்சான், துணைப் பொருள்கள் யாவும் சமூகக் கூடத்துள். பயன்பாடு மிகக் குறைவு. நான் பார்த்தபொழுது தூசி படிந்த நிலையில் இருந்தன. அச்சானில் அவ்வப்பொழுது நகல் எடுப்பர். மாசி மக நிகழ்ச்சிக்கு அடியவர்களை அழைக்க ஊர் முழுவதும் சுற்றினேன். வீடுகளுக்குச் சென்றேன். 11ஆம் வகுப்புத் தேர்வு எழுதி மதிப்பெண்களுக்குக் காத்திருக்கும் இளைஞர் இருவரைச் சந்தித்தேன். சகலகலாவல்லி வித்தியாசாலையில் கடந்த ஆண்டு என் காட்சி உரையைக் கேட்ட இருவரும் என்மீது பரிவுகொண்டனர். வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்த என்னைத் தம் ஈருருளியில் ஏற்றிவந்து விட்டனர். என் வீட்டில் கணிணியைக் கண்ட அவர்களுக்குக் கணிணி கற்பதில் ஆர்வம் இருந்தது. வாருங்கள் எனக்குத் தெரிந்ததைப் பகிர்கிறேன் என்றேன். ஒருவர், இருவர் எனத் தொடங்கிய வகுப்பு 25 மாணவராக விரிந்தது. 7 நாள்கள் பயிற்சி. கணிணி, திரை, இயக்கி, சொடுக்கி, விசைப்பலகை என அறிமுகமாகி, வந்த ஒவ்வொருவரும் செய்முறைப் பயிற்சி பெறுமாறு விரிந்தது. எழுதியில் தமிழ்99 விசைகளைச் சொல்லிக் கொடுக்குமளவு நீண்டது. ஒருநாள் திரு. சிவரூபன் எனதில்லம் வந்தார். பயிற்சிக் காட்சிகளைப் படமாக்கினார். அடுத்த பயிற்சிக் காலம் ஏப்பிரல் 5க்குப் பின் வரும் பள்ளி விடுமுறைக் காலம். எழுதி, விரிதாள் எனப் பயிற்சி கொடுக்க உள்ளேன்.  (மறவன்புலவு க. சச்சிதானந்தன்)

இராணுவம் பயன்படுத்தும் 21,243 ஏக்கர் காணிகளை ஒப்படைக்கத் தீர்மானம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள மக்களின் காணிப் பிரச்சினைகள் விரைவில் தீர்த்துவைக்கப்படும் என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோன் கிளிநொச்சியில் தெரிவித்தார். இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் உரியவர்களிடமே மீள ஒப்படைக்கப்படும் என்றும் அமைச்சர் நேற்று உறுதிமொழி வழங்கினார். கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 2,50,000 காணிப் பிரச்சினைகள் தீர்க்கப்படவுள்ளன. 21,243 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் காணப்படும் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில், விசேட அலுவலகமொன்றை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், எந்தவொரு மக்களும் பாதிக்கப்படாத வகையில் காணிப் பிரச்சினைக்குத் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும். குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களுக்கு அவர்களின் காணிகள் ஒப்படைக்கப்படும்.

காணாமல் போன தமிழ் இளைஞன் முந்தல் பொலிஸில் நேற்று சரண்

புத்தளம் ஆனமடு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நபர் ஒருவர், சட்டத்தரணியுடன் முந்தல் பொலிஸில் நேற்று சரணடைந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பிலிருந்து முந்தலிலுள்ள தனது வீட்டுக்கு காரில் சென்றுகொண்டிருந்த இளைஞரான சிவபாலசிங்கம் கஜந்தன் என்பவர் சிலாபம் சென்மேரிஸ் கல்லூரிக்கு அருகில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டி ருந்தார்.சிலாபம் சென்மேரிஸ் கல்லூரிக்கு அருகில் ரீஷேர்ட் அணிந்த சிலர் துப்பாக்கிகளுடன் எனது காரை மறித்து அதில் ஏறிக்கொண்டனர். இவர்கள் என்னை அச்சுறுத்தி காரை செலுத்துமாறு கூறினார்கள். முந்தல் பிரதேசத்தில் என்னைக் காரிலிருந்து இறக்கி வெள்ளைநிற வாகனத்தில் ஏற்றினார்கள். அதன் பின்னர் கண்களைக் கட்டி தலையில் துப்பாக்கியைப் பிடித்தவாறு பல கேள்விகளைக் கேட்டனர். சகோதரர்கள் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ளனரா, அவர்களிடமிருந்து உனக்குப் பணம் வருகிறதா போன்ற கேள்விகளைக் கேட்டனர். அண்மையில் எனது வங்கிக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபா அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டமை குறித்தும் கடத்தல் காரர்கள் கேட்டனர். அவுஸ்திரேலியாவுக்கு என்னை அழைப்பதற்கான ஏற்பாடுகளுக்கு அப்பணத்தை அனுப்பியதாகப் பதிலளித்தேன்.

இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை கண்டித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் மற்றும் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து கிளிநொச்சி நகரில் கண்டனப் பேரணியொன்று நடைபெற்றது. கிளிநொச்சி மகாவித்தியாலயத்துக்கு முன்னால் கூடிய 5,000ற்கும் அதிகமான வர்கள் கிளிநொச்சி டிப்போ சந்திவரை பேரணியாகச் சென்றனர். இப்பேரணியில் வடமாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தனர். அரசியல் சந்தையில் தமிழர்களை விற்காதே போன்ற பதாகைகளைத் தாங்கியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டக் காரர்கள் இதில் கலந்துகொண்டிருந்தனர். அரசியல் சந்தையில் தமிழர்களை விற்பதற்கு சர்வதேச ஏகாதிபத்திய சமூகம் முயற்சிக்கக் கூடாதென பேரணியின் இறுதியில் டிப்போ சந்தியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார்.

பங்குனி 12, 2013

சென்னையில் பிசுபிசுத்தது பந்த்

பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கியது!

டெசோ சார்பில் நடந்து வரும் பொது வேலை நிறுத்தத்திற்கு சென்னையில் ஆதரவு இல்லாததால் பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொது மக்கள்கள், மாணவ, மாணவிகள் எந்த இடையூறும் ஏற்படவில்லை. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தில் டெசோ சார்பில் தமிழகம் முழுவதும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்த வேலை நிறுத்தத்திற்கு விடுதலை சிறுத்தைகள் தவிர தே.மு.தி.க., பா.ஜ.க., இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ் உள்பட எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்கவில்லை. திருப்பூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் பந்துக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள், பின்னலாடை நிறுவனங்கள், சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் சென்னையில் வேலை நிறுத்தம் தோல்வி அடைந்துள்ளது. வழக்கம் போல் பேருந்துகள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் போக்குவரத்துக்கும் எந்த தடையும் இல்லாமல் இயக்கப்பட்டு வருகின்றன.

ஹலால் விட்டுக் கொடுப்பும் இனி நாம் இழக்கப் போகின்றவயும்...!
(எஸ்.ஹமீத்)

ஹலால் உரிமையை விட்டுக் கொடுத்திருப்பதானது இஸ்லாத்தை விலை கூறி அந்நியர்களுக்கு விற்றிருப்பதைப் போல் இருக்கிறது. பாலைவனத்தின் நெருப்பு நிலத்தில், நெஞ்சில் பாறாங்கல்லை வைத்துக் கொடுமைப்படுத்தப்பட்ட போதும் ''அல்லாஹு அக்பர்'' என்று முழங்கிய ஹஸ்ரத் பிலால் (ரலி) அவர்களின் ஈமானிய உறுதி இந்த நேரத்தில் நினைவு கூரப்பட வேண்டும். சிறுபான்மையினராக இருந்த போதும் இஸ்லாத்திற்காக, பெரும்பான்மை காபிர்களுடன் யுத்தம் புரிந்து ஷஹீதான உத்தம சஹாபாக்களின் தியாகங்கள் இந்த நேரத்தில் இரை மீட்டப்பட்டிருக்க வேண்டும். காபிர்கள் பெரும்பான்மையினர் என்று அடங்கிப் போயிருந்தால் இன்று உலகில் இஸ்லாமும் இல்லை, முஸ்லிம்களும் இல்லை என்பது எண்ணிப் பார்க்கப்பட்டிருக்க வேண்டும். (மேலும்.....)

இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரிப்பு

அமெரிக்காவுடன் பேச்சுநடத்த வேண்டும் என்ற இந்தியாவின் ஆலோசனையை இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா., மனித உரிமை தீர்மானம் தொடர்பாக இலங்கை, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனை வரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் தீர்மானம்கொண்டு வர வேண்டும் என இலங்கைக்கு கடந்த வாரம் இந்தியா ஆலோசனை வழங்கியிருந்தது.  இதனையே இலங்கை நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக ஐ.நா.வின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடபிரநிதி  ரவிநாத் ஆரியசிங்ஹ, அமெரிக்கா தீர்மானத்தின் சாராம்சத்தை நாங்கள் நிராகரிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் உத்தேசிக்கவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தையும் இலங்கை அங்கீகரிக்கவில்லை என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'என் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார்'

விடுதலைப் புலிகளை அழிக்க வேண்டும் எனக் கூறியவர்கள்  இன்று அவர்களின் ஏக பிரதிநிதிகளாக செயற்படுகின்றனர்.  எனது அரசியல் அனுபவத்தை கேட்டிருந்தால் பிரபாகரன் உயிருடன் இருந்திருப்பார் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். வவுனியா, ஓமந்தையில் வைத்து ஊடகவியலார்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதிவு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து நுழைந்துள்ளதாகவும் தகுதியில்லாதவன் எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர். எனக்கு அவ்வாறான நிலைமை தேவையில்லை எனவும் அவர் கூறினார். (மேலும்.....)

எனது பிள்ளைகள் அரசியலில் ஈடுபடமாட்டார்கள் - சந்திரிகா

இலங்கையில் குடும்ப அரசியல் இடம்பெறுவதில் தமக்கு உடன்பாடு இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இதனால் தமது இரண்டு பிள்ளைகளையும் அரசியலை தெரிவு செய்ய வேண்டாம் என்று தாம் அறிவுரை வழங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தாம் ஆட்சியில் இருக்கும் போதே தமது சகோதர்கள், பிள்ளைகள் எல்லோரும் அரசியலில் இருப்பதை தாம் விரும்பவில்லை. தமது பிள்ளைகளும் இலங்கை மீது பற்றுவைத்துள்ளனர். எனினும் இலங்கைக்கு சேவை செய்ய அரசியல் தவிர வேறு வழிகளும் உள்ள என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூக வாழ்வில் இணைத்து ஒளியேற்றும் நடவடிக்கை

புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களை சமூக வாழ்வுடன் இணைத்து அவர்களின் வாழ்வில் ஒளி யேற்றும் நடவடிக்கைகளை சிவில் பாதுகாப்பு திணைக்களத் தின் பணிப்பாளர் ரியல் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மேற்கொண்டு வருகின்றார். ஆயுதம் தாங்கி அரசாங்கப் படைகளை எதிர்த்துப் போராடிய இந்த முன்னாள் எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் அங்கத்தவர்கள் இன்று துப்பாக்கிகளைத் தூக்கி எறிந்துவிட்டு மண்வெட்டியும் கையுமாக இப்படையணிக்குப் பொறுப்பாக இருக்கும் 12 பண்ணைகளில் நெற்சாகுபடியுடன் சோளம், நிலக்கடலை, மரவள்ளி, கஜு போன்றவற்றை செய்கை பண்ணி நல்ல வருமானத்தை அரசாங்கத்துக்குப் பெற்றுக் கொடுக்கின்றார்கள். இந்த சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் படையணியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வேலையற்ற 3,500 இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவரும் 23 ஆயிரம் ரூபாவை சம்பளமாக பெறுகின்றனர். ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி உட்பட மற்றக் கழிவுகளுக்குப் பின்னர் ஒவ்வொருவருக்கும் 19500 ரூபா ரொக்கப் பணமாக மாதாந்தம் கிடைக்கின்றது. இவர்களை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான அமைச்சரவைத் தீர்மானத்திற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தவுடன் சிவில் பாதுகாப்பு திணைக்களப் படையணியில் இணைக்கப்பட்டுள்ள புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் ஓய்வூதியம் பெற்றும் வாய்ப்பையும் பெறுவர்.

அவுஸ்திரேலியாவில் வேலைக்கு செல்ல புதிய கட்டுப்பாடு

குறைந்த ஊதியம் கொண்ட பணிகளுக்காக வெளிநாட்டினர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. ஆண்டுக்கு 180,000 டொலர் முதல் 250,000 டொலர் வரை ஊதியம் வழங்கப்பட்டால் மட்டுமே வெளிநாட்டி னரை வேலைக்குச் சேர்க்கலாம் என்று அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கு அந்நாடு புதிய விதியை அமுல்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெளிநாட்டினரை மிகக் குறைந்த ஊதியத்தில் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அவுஸ்திரேலியா பெரும் தடையை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக விசா விதிமுறைகளில் பல்வேறு புதிய விதிகளை அவுஸ்திரேலியா சேர்த்துள்ளது. இதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது வெளிநாட்டுத் தொழிலாளர்களே. மேலும் வெளிநாட்டி னரை வேலைக்குச் சேர்க்கும் போது அவர்களுக்கு ஆங்கிலம் போதிக்க வேண்டும். அவுஸ்திரேலியர்கள் கிடைக்காத பட்சத்தில் தான் இவர்களை பணியில் சேர்க்க வேண்டும் என்றும் இந்த புதிய விசா விதிகள் கூறுகின்றன.

வட கொரியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் தென்கொரிய - அமெ. இராணுவ பயிற்சி ஆரம்பம்

வட கொரியாவுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க, தென் கொரியாவுக்கு இடையிலான வருடாந்த இராணுவ பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ பயிற்சிக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள வட கொரியா இரு நாடுகளுக்கும் எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்துவதாக எச்சரித்துள்ளது. எனினும் கீ ஈகல் என அழைக்கப்படும் கூட்டு இராணுவ பயிற்சியை அமெரிக்கா, தென் கொரியா ஆரம்பித்துள்ளது. இரு வாரங்கள் கொண்ட இந்த இராணுவ பயிற்சியில் 13,000 க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்கின்றனர். ஏற்கனவே போல் ஈகல் என அழைக்கப் படும் இராணுவ பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா ஈடுபட்டுள்ளன. இந்த இராணுவ பயிற்சி கடந்த மார்ச் தொடக்கம் இடம்பெற்று வருகிறது. இந்த இரு இராணுவப் பயிற்சிகளும் வருடாந்தம் நடைபெற்று வருகிறது. இதற்கு வட கொரியா கடுமையான வார்த்தைகளால் எச்சரித்து வருகிறது. இந்நிலையில் மூன்றாவது அணு ஆயுத சோதனை மேற்கொண்டதற்கு எதிராக ஐ. நா. பாதுகாப்புச் சபையில் வட கொரியாவுக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து பதற்றம் உக்கிரம் அடைந்துள்ள நிலையிலேயே இந்த இராணுவ பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 11, 2013

வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ்

(தி.ஸ்ரீதரன்)

வரலாறு அவ்வப்போது புரட்சியாளர்களை, சுதந்திர போராட்ட வீரர்களை, அற உணர்வு வாய்ந்த உன்னதமான மனிதர்களை உருவாக்கிக் கொண்டுதான் இருக்கிறது. தனது 58வது வயதில் புற்று நோயுடன் போராடி மரணித்த தோழர் சாவேஸ் லத்தின் அமெரிக்காவின் ஒரு புதிய இளம் விடிவெள்ளியாக உருவாகியிருந்தார்.  சாவேஸ் வெனிசுலாவினதும், லத்தின் அமெரிக்காவினதும் ஏழை மக்களின் விடிவுக்காக தன்னை அர்ப்பணித்தார். கேட்பதற்கு நாதியின்றி எண்ணெய் வளம் ஏகாதிபத்தியவாதிக சூறையாடப்பட்டுக் கொண்டிருந்தது. எண்ணெய் வயல்களையும் ,தொழில் துறைகளையும்  தேசிய மயமாக்கி லத்தின் அமெரிக்காவின் சகோதர நாடுகளுடன்  அதனை பகிர்ந்து கொண்டு சாதாரண வெனிசூலா மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு தனை பயன்படுத்தினார். (மேலும்.....)

கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடுமாறு அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கோரிக்கை!

புலிகளுக்காக நிதி சேகரித்தல், ஆயுதம் கொள்வனவு செய்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள கனேடியத் தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையை கைவிடுமாறு அமெரிக்காவிடம் இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தத் தகவலை கனடாவின் நெசனல் போஸ்ட் நாளேடு தெரிவித்துள்ளது. சுரேஸ் சிறிஸ்கந்தராஜா என்ற கனேடியத் தமிழர் மீது தீவிரவாத குற்றச்சாட்டின் மீது மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்து, இலங்கை அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அசாதாரணமான இந்த வேண்டுகோள் கடிதத்தை அனுப்பியுள்ளது. கடந்த வாரம் சுரேஸ் சிறீஸ்கந்தராஜாவை பிணையில் விடுவிக்கக் கோரும் மனு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோதே, அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கைவிடக் கோரி அமெரிக்காவுக்கு இலங்கை எழுதிய கடிதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனினும் இதனை அடிப்படையாக வைத்து சுரேஸ் சிறீஸ்கந்தராஜா சார்பில் கோரப்பட்ட பிணைக்கு நீதிபதி அனுமதி மறுத்து விட்டார். வோட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற சுரேஸ், விடுதலைப் புலிகளுக்காக அமெரிக்க வங்கிகள் ஊடாக 13 ஆயிரம் டொலர் நிதி சேகரித்ததாகவும், ரமணன் மயில்வாகனத்துடன் இணைந்து இரவுப்பார்வை கருவிகள், இலத்திரனியல் கருவிகள், நீர்மூழ்கி வடிவமைப்பு மென்பொருள்களை வாங்க முயன்றதாகவும் அமெரிக்க சட்டவாளர்களால் குற்றம்சாட்டப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது!

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நடந்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க கோரியும், உண்ணாவிரதம் இருந்து வந்த சென்னை லயோலா கல்லூரி மாணவர்களின் கைதை கண்டித்தும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். (மேலும்.....)

லயோலா கல்லூரி மாணவர்கள்

உண்ணாவிரதம் இருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக அகற்றம்!

இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தக் கோரி உண்ணாவிரதம் இருந்து வந்த லயோலா கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் நள்ளிரவில் வலுக்கட்டாயமாக அகற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 8ஆம் தேதி முதல் சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். இந்த காலவரையற்ற உண்ணாவிரதம் நேற்று 3வது நாளாக நீடித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில், அதிகாலை 2 மணி அளவில் உண்ணாவிரத பந்தலுக்கு வந்த காவல்துறையினர் 8 மாணவர்களையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றியதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், மாணவர்களை ராயப்பேட்டை மருத்துவமனையில் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும், உண்ணாவிரத பந்தலுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். மாணவர்களுக்கு ஆதரவாக இருந்தவர்களை அருகில் உள்ள சமுதாய கூடத்தில் காவல்துறையினர் அடைத்துள்ளனர். இதனிடையே, உண்ணாவிரதப் பந்தலில் இருந்த நாற்காலிகளை காவல்துறையினர் அடித்து நொறுக்கியதாக மாணவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள்

(எல்லாளன்)

தமிழீழப் போராட்ட இயக்கங்கள் என பல் வேறு பெயர்களில் தோன்றியிருந்த பெரிதும் சிறிதுமான இயக்கங்களுக்குள் தமிழீழவிடுதலைப்புலிகள் (LTTE - வே.பிரபாகரன்), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE - க. உமாமகேஸ்வரன்), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF- கே.பத்மநாபா,) ஈழப் புரட்சிகர அமைப்பு ( EROS - வே.பாலகுமாரன்) தமிழீழ விடுதலை இயக்கம் ( TELO- க. சிறீசபாரத்தினம்) என்பவை ஜந்து பாரிய இயக்கங்களாக கருதப்படுபவை.அவ்வியக்கங்களில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கத்தில் (TELO- ரெலோ) முன்னாள் போராளியாக இருந்த எல்லாளன் தனது வரலாற்றை சரிநிகர் பத்திரிகையில் தொடராக முன்னர் வெளிக் கொணர்ந்திருந்தார். தற்போது அவ்வரலாறானது எல்லாளன் என்ற போராளியாலே யேமீண்டும் மீள்பார்வைக்கும் திருத்தத்துக்கும் உட்படுத்தப்பட்டு சூத்திரம் இணையத் தளத்தில் இன்று தொடக்கம் வாராந்த வரலாற்றுக் கட்டுரையாக பிரசுரம் செய்யப்படுகின்றது.

சூத்திரம் இணையத் தளம்

ஒரு "தமிழீழப்" போராளியின்நினைவுக்குறிப்புக்கள் - பகுதி 1

போராளியின்ரிஷிமூலம்

1978 ஆம் ஆண்டில் மானிப்பாய் வங்கிக் க&#