Contact us at: sooddram@gmail.com

 

ஆவணி  2015 மாதப் பதிவுகள்

 
நெஞ்சு பொறுக்குதில்லையே- பாரதி
சாதாரண வறிய இளைஞர்களை ஐரோப்பாவிற்கும்- வட அமெரிக்காவிற்கும் அனுப்புவதாக அல்லது மத்திய கிழக்கில் சிறந்த  வேலை வாய்ப்பை உருவாக்கித்தருவதாக வறிய பெண்களை ஏமாற்றும் முகவர்களைப் போலத்தான “தவித்த முயல் அடித்த” கணக்காக பணம் கறப்பதற்காக இவர்கள் இதனைச் செய்கிறார்கள். ஒருவிதத்தில் இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் மோசடி அரசியலும் இந்த வகைப்பட்டதே.  இது ஒன்றும் மிகையல்ல. “பிரிவினையை ஆதரிக்க மாட்டோம்”;  என்று வழமையாக சத்தியப்பிரமாணம் செய்யும் இவர்கள், 13 வதை குப்பைக் கூடையில் போடவேண்டும் , அதனால் எந்தப் பிரயோசனமும்  இல்லை  என்று கூறும் இவர்கள் மாகாணசபைத்தேர்தல்களை உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களையோ கைவிடவில்லை.(மேலும்.....)
கால நிலை மாற்ற தமிழர் அரசியல்!

(மாதவன் சஞ்சயன்)

விவசாய பாடம் நடத்திய ஆசிரியர் நடத்திய குளிர்கால நாடுகளின் மரங்களின் நிலை எனக்கு அதிசயமாக இருந்தது. குளிர்காலம் (Winter) அங்குள்ள மரங்கள் மொட்டை போட்டு உறங்கு நிலை, இளவேனிற்காலம் (Spring)  துளிர்ப்பு நிலை, கோடைகாலம் (Summer) பூத்து குலுங்கி இலைகளால் பசுமை போர்த்தி உயிர்ப்பு நிலை, இலையுதிர்காலம் (Autumn) சிறகிழந்த பறவைகள் போல் உதிர்வு நிலை, என மாற்றதுத்துள் செல்லும் என்றார். அலாவுதீன் கதையில் வரும் அற்புத தீவுகள் கதை கேட்பது போல வாய்பிளந்து கேட்ட எனக்கு அது யதார்த்தமாக விளங்கியது எனது 1 ஆண்டு ஐரோப்பிய வாழ்க்கை காலத்தில். ஐரோப்பாவில் என்னை வரவேற்றது மொட்டை மரங்கள். நினைவில் வந்தவை தீயில் இலை இழந்த வன்னிக் காட்டு மரங்கள். நண்பனிடம் தீவைக்கும் தீயவர் இங்குமா என கேட்டேன் இல்லை இயற்கை நியதியில் அவை உறங்கு காலம் (winter) என்றான். 
சிலமாதங்களின் பின் அவை துளிர்விட்டன இளவேனிற்காலம் என்றான். பூத்து குலுங்கி பச்சை இலை போர்த்தி புது மண பெண் போலானதும் கோடைகாலம் என்றவன் அவை துகிலுரித்த போது இலையுதிர்காலம் என்றான். இயற்கையின் வினோதத்தை அனுபவத்தில் அறிந்த எனக்கு அனுராதபுரம் கூட தாண்டாத என் ஆசிரியரின் கற்றல் அறிவு அப்போது தான் புரிந்தது. அவரின் தேடல் அவரை என் மன தேரில் ஏற்றியது.
(மேலும்.....)

கனடாவின் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியது!

கனடாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் வெளியிட்டுள்ளார்.கனடாவின் கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்சனைச் சந்தித்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி முறைப்படி கோரிய பின்னரே தேர்தலுக்கான இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை தொடங்குவதற்கு கால அவகாசம் வழங்கும் முகமாகவே இந்த அறிவிப்பை இப்பொழுதே வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதேவேளை, தேர்தல் பரப்புரைகளுக்கான செலவினங்களை அந்தந்த கட்சிகளே செய்ய வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனினும் தேர்தல் திகதி முன்னரே அறிவிக்கப்பட்டிருப்பது பிரதமர் ஹார்பரின் ஆளுங்கட்சிக்கு உதவும் நடவடிக்கையாக உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புலிகளை அழிக்கப் போவதாக கோத்தா சூளுரை.

அரசியல் புலிகளை அழிக்காமல் விட்டு விட்டதாகவும், வடக்கை மீண்டும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து புலிகளின் தலையீட்டை முழுமையாக அழிக்க வேண்டும் என்றும் சூளுரைத்திருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. “வெள்ளை வான் கடத்தல், பாதாள உலக கொள்ளைக்கூட்டம் அனைத்தும் எம்மிடம் தான் உள்ளதென விமர்சித்தவர்கள் இன்று ஆட்சியை அமைத்துள்ளனர். ஆனால் இவர்களின் ஆட்சியில் என்ன நடக்கின்றது? இன்று பட்டப்பகலில் துப்பாக்கிச் சூடும், கடத்தல்களும் தாக்குதல் நடவடிக்கைகளும் நடைபெறுகின்றன. நல்லாட்சி என்ற இந்த ஆட்சியில் ஒரு தெளிவான கொள்கைத்திட்டம் இல்லாது போயுள்ளது. தமது வேலைத் திட்டத்தை தெளிவாக இவர்களால் குறிப்பிட முடியாது. நல்லாட்சியில் இவர்களின் வேலைத்திட்டங்கள் நாட்டில் முழுமையாக சென்றடையவில்லை.
எமது ஆட்சியில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வடக்கில் உண்மையான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு தமிழ் மக்களின் உண்மையான ஜனநாயகத்தை நாம் பெற்றுக் கொடுத்தோம். அதேபோல் அநாவசிய காணிகளை நாம் தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தோம். ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் நாம் நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தவில்லை. இன்று நாட்டின் தேசிய பாதுகாப்பு மிகவும் அச்சுறுத்தலான நிலையில் உள்ளது. அரசியல் சுயநல வேலைத்திட்டங்களை கருத்தில் கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தி விட்டனர். நாம் புலிகள் இயக்கத்தை அழித்த போதிலும் புலிகளினால் போசனை வழங்கப்பட்ட அரசியல் புலிகளை நாம் அழிக்கவில்லை. அதன் விளைவு இன்று ஆட்சிமாற்றத்தின் பின்னர் நாடு மீண்டும் பிரிவினையின் பக்கம் நகர ஆரம்பித்துள்ளது. எமது கட்டுப்பாட்டின் கீழ் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இருந்தபோது நாடு அமைதியாக இருந்தது. ஆனால் இன்று நாம் இல்லாத நிலையில் மீண்டும் நாட்டில் கிளர்ச்சிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. மக்கள் உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க வேண்டுமென்றால் நாட்டின் சிங்கள மக்கள் அனைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பணிகள் நேற்று அங்குரார்ப்பணம்

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 540 பில்லியன் ரூபா நிதி செலவில் நிர்மாணிக் கப்படவுள்ள மத்திய அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நடப்பட்டது. நேற்று முற்பகல் சுபவேளையில் கடவத்தைக்கு விஜயம் செய்த பிரதமர் மேற்படி அதிவேக நெடுஞ்சாலைக்கான நிர்மாணப் பணிகளை பெயர்ப்பலகையை திரை நீக்கம் செய்து ஆரம்பித்து வைத்தார். இப்பாதை கடவத்தையிலிருந்து தம்புள்ளை வரை நிர்மாணிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், இந்து சமுத்திரத்தின் பிரதான வர்த்தக கேந்திர நிலையமாக இலங்கையைக் கட்டியெழுப்பப் போவதாக தெரிவித்தார். கண்டிக்கு அதிவேக பாதை அவசியம் என்ற தீர்மானம் 2001 இல் மேற்கொள்ளப் பட்டது. நாம் அதற்காக இரண்டு மாற்றுத்திட்டங்களை வைத்திருந்தோம் எனினும் அதற்கிடையில் அரசாங்கம் மாற்றமடைந்து விட்டது. அதன் பின் வடக்கிற்கான அதிவேக பாதை சம்பந்தமாக தீர்மானிக்கப்பட்டது. இதன் போது வடக்கு மக்கள் தமக்கு அதிவேக நெடுஞ்சாலையை விட முக்கிய மான வேறு அபிவிருத்திகளின் தேவை உள்ளதாகத் தெரிவித்தனர். தமக்கு சிறந்த பஸ் போக்குவரத்து சேவை, ரயில் சேவையைப் பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அத்துடன் விமான சேவை வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதன் பின்னரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் கலந்துரையாடி இந்த மத்திய அதிவேக பாதையை நிர்மாணிப்பதற்கு முடிவு செய்தோம். மத்திய அதிவேக பாதை கண்டிக்குச் செல்கிறது. கண்டியிலிருந்து தம்புள்ளைக்குச் சென்று பின்னர் அநுராதபுரம், திருகோண மலைக்கும் மன்னாருக்கும், யாழ்ப்பாணத் திற்கும் இந்தப் பாதை நீளும். அதனை அடிப்படையாகக் கொண்டே இன்று இந்தப் பாதை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப் படுகின்றன. இப்பாதை நிர்மாணம் தொடர்பில் ஏற்கனவே சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.  சீன அரசாங்கமே மேற்படி மத்திய அதிவேக பாதைக்கு நிதியுதவி வழங்கு கின்றது. அம்பாந்தோட்டையிலும் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் புதிய நாட்டைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு சீனா எமக்கு உதவுவதையிட்டு நாம் இலங்கையின் சார்பில் சீனாவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

 வெனிசுவேலாவின் "பயங்கரமான சர்வாதிகாரியை" ஆதரிப்போம்!

வாருங்கள் மக்களே! வெனிசுவேலாவின் "பயங்கரமான சர்வாதிகாரியை" ஆதரிப்போம்! ஏனெனில் அவர் கீழ்க் கண்ட குற்றங்கள் எதையும் செய்யவில்லை.

ஆனால்...

சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க "ஜனநாயகவாதி" செய்த குற்றங்கள்:

படுகொலைகள் : 500.000

அணு ஆயுதங்கள் : 5000

அரசியல் கைதிகள் : 9000

படையெடுத்த நாடுகள் : ஏராளம்

(Kalaiyarasan)

மாவோயிஸ்ட் தலைவர் ஒருவரின் மகளிடமிருந்து உள்துறை அமைச்சருக்கு வலுவானதொரு பதில் கடிதம்

ஜூலை மாதம் முதல் வாரத்தில் கேரள உள்துறை அமைச்சரான திரு. ரமேஷ் சென்னிதாலா அவர்கள் இந்த வருடம் மே மாதத்தில் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதிகளான ரூபேஷ் ஷைனா அவர்களின் மகள்களுக்கு ஒரு கடிதம் எழுதினார். அத்தம்பதிகள் 10 வருடங்களுக்கும் மேலாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்றும் அவர்களுக்கு 19 வயதில் ஏமி என்ற மகளும், 10 வயதை நெருங்கும் சவேரா என்றொரு மகளும் உள்ளனர் என்றும் காவல்துறையின் அறிக்கை தெரிவிக்கிறது. தன்னுடைய கடிதத்தில், அமைச்சர் அவர்கள், பெற்றோரின் போதிய அரவணைப்பும், கவனிப்பும் கிடைக்காதவர்கள் என அக்குழந்தைகள் பற்றிய தன்னுடைய கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் அதில் அவர், “அர்த்தமற்ற பிரச்சாரங்களுக்கும், வெற்று சித்தாந்தங்களுக்கும்” பலியாகிவிட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தங்களுடைய படிப்பில் கவனம் செலுத்தி, “தேசத்தின் பொறுப்புமிக்க குடிமகர்களாக” உருவாகும்படி அறிவுரையும் வழங்கியுள்ளார். (மேலும்.....)

ஆவணி 03, 2015

சி.வி தொடர்பில் தேர்தலின் பின்னர் சம்பந்தர் தீர்மானம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில் தான் பங்கேற்கப்போவதில்லை என்ற, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் அறிவிப்பு தொடர்பில், பொதுத் தேர்தலின் பின்னரே அவருக்கு எதிரான நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப்படும் என்று கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள இரா.சம்பந்தன், 'கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற தீர்மானம் குறித்து விக்னேஸ்வரன், தனக்கு அறிவிக்கவில்லை எனவும் இது தொடர்பில் தேர்தலின் பின்னர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடப்போவதாகவும்' குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்காக மேடையேறி பிரசாரம் செய்யமாட்டேன் என்றும் நடுநிலைமையாக செயற்படுவேன் எனவும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த வாரம் அறிவித்தார். வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் பதவிக்காக 2013ஆம் ஆண்டில் பொது வேட்பாளராக தான் நிறுத்தப்பட்டதாகவும் பதவிக்கு வந்ததும், கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் பல, தான் நடுநிலை வகிக்கவில்லையே என்று குறைபட்டுக்கொண்டதாகவும் முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்ற முறையில் பக்கச்சார்பற்று நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டியிருந்த விக்னேஸ்வரன், அவ்வாறானதொரு பிரச்சினை மீண்டும் எழாமல் இருப்பதற்காகவே நடுநிலை வகிக்கப்போவதாக விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனவாதத்தை தூண்டி வாக்குகளைப் பெற கூட்டமைப்பு சதி: ஜே.வி.பி


தங்களது குறைகளை மறைத்துக்கொள்வதற்காக மீண்டுமொருமுறை இனவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், அதன்மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்குகளைக் குவித்துக்கொள்ளும் சதித்திட்டத்தை தீட்டியுள்ளனர் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) குற்றஞ்சாட்டியது. அத்துடன், கூட்டமைப்பினரின் சமஷ்டிக் கோரிக்கையை கடுமையாகச் சாடிய ஜே.வி.பி, ஒவ்வொரு தேர்தலின் போதும் இந்த சமஷ்டிக் கோரிக்கையை முன்வைப்பதன் மூலம், சிங்கள கடும் போக்காளர்களை உசுப்பேற்றி தேவையில்லாத பதற்றத்தை அக்கட்சியினர் தோற்றுவிக்கின்றனர் என்றும் கூறியது. 'வட மாகாண சபையினூடாக மக்களுக்கு எதையுமே கூட்டமைப்பினர், மக்களிடம் கூற எதுவும் இல்லாத நிலையில் சமஷ்டி பற்றி பேசுவதாகவும் நாட்டை பிரிக்கும் முயற்சியை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கும்' என்றும் சுட்டிக்காட்டினார். அத்துடன், 'நாட்டின் இப்போதைய தேவை இன, மத, ஜாதி வேறுபாடு இல்லாது சகலரும் சமத்துவத்துடன், சமூக நீதி கிடைப்பதை உறுதி செய்வதே ஆகும்' எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அரசாங்க ஊழியர்களை ஐ.தே.க.வும் ஐ.ம.சு.கூ.மும் ஏமாற்ற முயல்வதாக அவர் கூறினார்.'இதேவேளை, இருமுறை ஆட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்க ஊழியர்களுக்கு அப்போது செய்யாததை, இனி செய்துகொடுப்பதாக வாக்குறுதி அளிக்கிறார். 2002இல் சுயவிருப்பு இளைப்பாறும் முறையை கொண்டுவந்து அரச சேவையை கீழ்மைப்படுத்திய ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் பொய் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது' என்றும் டில்வின் சில்வா கூறினார்.

“13 KM” மலையைக் குடைந்து சாலை அமைத்தவர் யார் தெரியுமா…?

பீகார் மாநிலத்தில் ஒற்றை மனிதராக மலையை குடைந்து 80 கி.மீ. தூரத்தை 13 கிலோ மீட்டராக சுருக்கிய அசுர உழைப்பாளி தசரத் மான்ஜியின் வாழ்க்கையை விவரிக்கும் திரைப்படத்துக்கு அம்மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தசரத் மான்ஜி. இந்தியாவின் மலை மனிதர் என்று பீகார் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் தனியொரு ஆளாக 22 வருடங்கள் கடுமையாக உழைத்து மலையின் நடுவே 25 அடி உயரம், 30 அடி அகலம் 360 அடி நீளத்தில் பாதை அமைத்தவர். அவசர மருத்துவ உதவிக்குக் கூட 80 கி. மீ சுற்றிச் செல்லவேண்டிய சூழலில் அத்தூரத்தை 13 கி. மீ ஆக சுருக்கியவர். (மேலும்.....)

சூப்பர் சிங்கர் பாடகர்களை வைத்து யாழ்ப்பாணத்தில் வாக்கு வேட்டையாடும் ஐக்கிய தேசியக் கட்சி!


யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஈழத்தமிழர்கள் மத்தியில் பிரபலமான பாடகர்கள் சிலரும் பங்கேற்றிருந்ததுஇ புலம் பெயர் தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குக்  கேட்ட சுப்பர் சிங்கர் பாடகர்கள்; மீது கடும் சினத்தில் இருக்கும் புலன் பெயர்ந்த தமிழர்களிடமும், ஈழத்தமிழர் பணத்தின் மீதான ஆர்வலர்களிடமும் ஒரு கேள்வி. வாக்குக் கேட்டு வந்தவர்கள் மீதே கடும் சினத்தில் இருக்கும் நீங்கள் சிங்களக் கட்சிக்கே வாக்குப் போட்ட தமிழ் தேசியங்களைத் துரோகிகள் என்று சொல்லாதது ஏன்?
2010 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8.5 வாக்குகள் போடப்பட்டன. இனவாத ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழத் தேசியக் குஞ்சுகள் அளித்த வாக்குகள் மொத்தம் 12624
அதே இனவாத கட்சிக்கு வட்டுக்கோட்டை தொகுதி காரைதீவு மேட்டுக்குடியினர் அள்ளிக் கொடுத்த வாக்குகள் 3438.

பெர்லின் மதிலுக்காக ஏங்கும் ஜெர்மனியர்கள்!


சோஷலிச கிழக்கு ஜெர்மனி பற்றி நீங்கள் அறிந்திராத உண்மைகள். ஒரு மேற்கு ஜெர்மன் பிரஜையின் வாக்குமூலம்:
- எந்தக் காலத்திலும் உணவுத்தட்டுப்பாடு இருக்கவில்லை. யாரும் பட்டினியால் சாகவில்லை. வாழைப்பழம், விஸ்கி, கொக்கோ கோலா போன்ற வெளிநாட்டு இறக்குமதிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
- பாண் (Bread), உருளைக் கிழங்கு, பொதுப் போக்குவரத்து கிட்டத்தட்ட "இலவசமாக" கிடைத்தது. (விலை மிக மிகக் குறைவு). வீட்டு வாடகையும் மிக மிகக் குறைவு.
- தொட்டில் முதல் சுடுகாடு வரை, தனி மனிதனின் அனைத்து தேவைகளையும் அரசே நிறைவேற்றியது. விளையாட்டு, விடுமுறை, ஓய்வுநேர கேளிக்கைகளை அரசே ஒழுங்கு படுத்தியது.
- தெருவில் ஊதாரியாக திரியும் இளைஞர்களை காண முடியாது. கிரிமினல் குற்றங்கள் பற்றி யாருமே கேள்விப்படுவதில்லை.
- உங்களுக்கு உதவி செய்வதற்கு எந்நேரமும் யாராவது ஒருவர் இருந்தார். மக்களுக்கிடையில் ஒற்றுமையும், பரஸ்பர உதவி செய்யும் மனப்பான்மையும் இருந்தது. அதற்கு மாறாக, மேற்கு ஜெர்மனியில் எல்லோருமே சுயநலவாதிகளாக இருந்தார்கள். (Kalaiyarsan)

சுயநல அரசியலுக்காக மாணவர்களின் கல்வியை சீரழிக்கும் சிறீதரன்

தனிநபர்களின் அரசியல் நலன்களுக்காக மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை பறிக்கப்படுகிறதா?பளைப்பிரதேசத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி பாடசாலை மாணவர்களை தனக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்தி வருகிறார் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன். கடந்த 30.07.2015 வியாழக்கிழமை அன்று, பளை மத்திய கல்லூரி மாணவர்கள் பாடசாலை நேரத்தில் காலை 11.00 மணியளவில் பகிரங்கமாகவே பாடசாலை சீருடையுடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபடுத்தப்பட்டனர். இதைக்கண்ட பொதுமக்கள் மாணவர்களைக் கண்டித்தனர். மாணவர்களின் பெற்றோர்களும் ‘பள்ளிக்கூடம் போறன் எண்டு சொல்லிப்போட்டு நோட்டீஸ் குடுத்துக்கொண்டு திரியுறுறீயோ. பொறு அதிபரிட்ட வந்து கதைக்கிறன்.’ என்று மனம் நொந்து கடிந்துள்ளனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கு ஒரு பகிரங்க மடல் ........

மதிப்புக்குரிய ஐயா அவர்களுக்கு முதற்கண் என் பணிவான வணக்கம் .
நீங்கள் நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழ எல்லாம்வல்ல இயற்கையை வேண்டிக்கொள்கிறேன்.
இந்த கடிதத்தை யாராவது உங்களிடம் தருவார்கள் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
உண்மையிலேயே நான் அறிந்தவரை நீங்கள்……..
மனிதப்பண்புகள் நிறைந்த ஒரு நல்ல மனிதர்,
அப்பழுக்கற்ற ஒழுக்கசீலர்,
சிறந்த ஆன்மீகவாதி.
தமிழ் மொழிமீதும் தமிழ் இலக்கியத்தின் மீதும் தீராத பற்றுக்கொண்டவர்.
தொழில்சார் வாழ்வில் அப்பழுக்கில்லாது கடைமையை செய்தவர்.
சட்ட நுணுக்கங்கள் மீது புலைமை கொண்டவர்.
இலங்கை அரசியலில் அடிமுதல் நுனி வரை ஆழமாக தெரிந்தவர் .
மேற்சொன்ன உயர் தகைமைகளை கருத்தில் கொண்டு எத்தனையோ விமர்சனகளுக்கு மத்தியிலும் வடக்கு மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உங்களை முதலமைச்சர் ஆக்கினார்கள்..(மேலும்......)

தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் அறிக்கை


தமிழகத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு என்னென்ன அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றனவோ, அத்தகைய அதிகாரங்களை இந்தியா இலங்கைத் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணி கோரியிருக்கின்றது.''இத்தகைய அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் எவரும் குறை கூற முடியாது. அதேநேரம் இவ்வாறு அதிகாரங்கள் பகிரந்தளிக்கப்படுவதை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்'' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டார்.தமிழர் விடுதலைக் கூட்டணி தனது தேர்தல்  அறிக்கையை வெளியிட்டபோதே, அதிகாரப் பகிர்வு தொடர்பில் தமது நிலைப்பாடு என்ன என்பது குறித்து அவர் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்கில் யாழ்ப்பாணம், வன்னி, ஆகிய இரு தேர்தல் மாவட்டங்களிலும், கிழக்கில் அம்பாறை தவிர்ந்த திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், கொழும்பிலும் இம்முறை தனது வேட்பாளர்களை நிறுத்தியிருக்கின்றது. கூட்டணியினால் ஒன்றிரண்டு ஆசனங்களைக் கொழும்பில் பெற முடியும் என்று அங்குள்ளவர்கள் அழைத்ததன் பேரிலேயே அங்கு இம்முறை போட்டியிடுவதற்கு முடிவெடுத்திருப்பதாக தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டியது அவசியம் எனக் கூறிய ஆனந்த சங்கரி, இந்த இரண்டு மாகாணங்களையும் மூன்றாகப் பிரித்து, அவற்றில் ஒன்றை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன் மிஞ்சிய பகுதியை ஒன்றாக இணைக்க வேண்டும் என குறிப்பிட்டார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழர்கள் இணைந்து, ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றும் ஆனந்த சங்கரி தெரிவித்தார். அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க முன்வைத்திருந்த அரசியல் தீர்வுக்கான ஆலோசனைகளின் அடிப்படையில் இனப்பிரச்சினைக்குத் தீரவு காண்பதே நல்லது என்றும் ஆனந்த சங்கரி கூறுகின்றார்.

இப்படியுமா நடக்குமா?... ஆனாலும் உண்மை


தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் தம் தேர்தல் பிரச்சாரத்தை யாழ் இந்துமகளிர் கல்லுாரிக்குள் குறித்த கல்லுாரியின் அதிபரின் ஒத்துழைப்புடன் நேற்று முன்னெடுத்தனர். கல்லுாரிக்குள் நுழைந்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்தவர்கள் அங்கு நின்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கட்டாயமான முறையில் பிரச்சாரங்களில் ஈடுபட முயன்றதால் பாடசாலை வட்டாரங்கள் பெரும் அதிருப்தியுடன் விசனமடைந்ததாகத் தெரியவருகின்றது. தேர்தல் பிரச்சாரங்களைப் பாடசாலைக்குள் நடாத்துவதற்கு அதிபர் எவ்வாறு இடமளிக்கலாம் என ஆசிரியர்கள் தரப்பில் வினா எழுப்பப்படுகிறது.இதே வேளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களும் வடக்கு மாகாணக் கல்விஅமைச்சரின் அனுசரனையுடன் கிளிநொச்சியில் அமைந்துள்ள பாடசாலைகளுக்குள் சென்று தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கும் அதிபர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் தெரியவருகின்றது. இது தொடர்பாக யாழ் மாவட்ட தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் செய்யப்படவுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆவணி 02, 2015

பெரும்பான்மைத் தமிழ்பேசும் தலித் மக்களின் வாக்குகள் யாருக்கு?

(சமரன்)

வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் தலித் மக்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக யாழ் தேர்தல் மாவட்டத்தில் அறுபது வீதம் தமிழ் பேசும் தலித் மக்கள் இருப்பதாக சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் பிபிசி யில் இடம் பெற்ற நிகழ்ச்சியில் கூட இதுபற்றி பேசப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் 1960களில் 35 வீதமாக இருந்த தலித் மக்கள் தொகை, 1980களில் 45 வீதமாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது உள்ள நிலவரப்படி 60 வீதமாக உயர்ந்துள்ளது.  ஆதிக்க இதர மேட்டுக்குடி சாதியினரும் யுத்தத்தில் இருந்து தப்பித்து புலம் பெயர்ந்து ஓடியதே, தலித் மக்களின் விகிதாசாரம் அதிகரிக்கக் காரணமாக இருந்தது. (மேலும்....)

பழையவை படிப்பினையா ? அல்லது அல்லது தொடர்கதையா ?

(மாதவன் சஞ்சயன்)

வன்னிப்புலி தாக்கியதில் மீனகத்தைவிட்டு மௌலான வாகனத்தில் தப்பிவந்த ஜனநாயகவாதி தான் கருணா. பொலன்னறுவை காட்டில் ராணுவ பாதுகாப்பில் இயங்கி மகிந்தரின் தேவைக்காக முதல்வரான ஜனநாயகவாதி பிள்ளையான். ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதால் ஜனநாயகத்துக்கு வரமுயல்பவர் துளசி. இவர்கள் யாருமே விரும்பி வரவில்லை. அவர்களின் இயலாமை, சூழ்நிலையே அன்றி விருப்புத் தெரிவல்ல.
வாலி அரவணைத்திருந்தால் சகோதர படுகொலை நடந்திராது. ராவணன் செவிமடுத்திருந்தால் துரோகம் நிகழ்ந்திராது. இன்று அது கலியுகத்திலும் தொடர்ந்திராது. அதே வேளை பல கர்ணன்கள் எதிரியிடம் இருந்திருந்தால் கந்தன் கருணை படுகொலை உட்பட நடந்த அத்தனை சம்பவங்களும் நடைபெற்றிராது. நம்மவர் பலர் சொந்த மண்ணில் இல்லாவிட்டலும் புலம்பெயர் மண்ணிலாவது உயிரோடு இருந்திருப்பர். (மேலும்....)

நாங்கள் மனித மனங்களில் தூங்க மாட்டோம் மரங்களில்தான் தூங்குவோம்

முன்னுரையில் பல உண்மைகளைக் கூறிய கட்டுரையாளர் முடிவுரையில் சம்பந்தமில்லாத முடிவை சொல்கிறாரே

(சில தினங்களுக்கு முன்பு நவாதரன் என்பவரின கட்டுரையை வெளியிட்டு இருந்தோம் இதற்கான பதிலுரைக கட்டுரையை சூரியன் என்பவர் அனுப்பியிருந்தார் இதனை இங்கு பிரசுரிக்கின்றோம் – ஆசிரியர்)

1) தமிழீழம் என்பது தமிழர்களை பொறுத்தவரை
காலாவதியாகிப்போன ஒரு கனவு.
2)
சர்வதேசம் தமிழர்களுக்கான எந்த ஒரு தீர்வையும் பெற்று
தரப்போவதில்லை.
3)
சமஸ்டி தீர்வு, வடக்குகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய
உரிமை,ஒருநாடு இருதேசம் என்ற எந்த ஒரு தீர்வுக்கும்
எந்த ஒரு தென்னிலங்கை அரசாங்கமும், ஒருபோதும்
ஒத்துகொள்ள போவதில்லை. தமிழர்களை
பொறுத்தவரை அவர்கள் இவற்றை ஒருபோதும்
அடையப்போவதுமில்லை.
4)
மாகாண சபைக்கு ஒருசில அதிகாரங்களை பெறுவதைவிட
தமிழர்கள் எதையும் சர்வதேசத்திடம் இருந்தும்
இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் பெறப்போவதில்லை.
5)
போர்க்குற்ற விசாரணைகள் மூலம் தமிழர் பிரச்சினைக்கு எந்த
ஒரு தீர்வும் கிடைக்கப்போவதில்லை.
6)
சர்வதேசம் ஒருபோதும் இலங்கை அரசாங்கத்தை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றப்போவதில்லை .
7)
காணாமல்போனவர்கள் பிரச்சினைக்கு எந்த முடிவும்
கிடைக்கப்போவதில்லை.

(மேலும்....)

பொது பல சேனாவிற்கு நோர்வே நிதி வழங்கிய சதி உறுதியாகிறது

பொது பல சேனா என்ற பௌத்த பயங்கரவாத அமைப்பு ராஜபக்ச ஆட்சியில் கோத்தாபயவின் ஆதரவுடன் பல் வேறு வன்முறைகளில் ஈடுபட்டுவந்தது, இந்த அமைப்பிற்கு ராஜபக்ச அரசு பச்சைக்கொடி காட்டியது, பௌத்த சிங்களப் பேரினாவாதத்தை முடுக்கிவிட்டது. இஸ்லாமியத் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் நாடு முழுவதும் இந்த அமைப்பினால் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஏற்கனவே பௌத்த சிங்கள தீவிரவாதத்தால் நச்சூட்டப்பட்டிருந்த பலர் பொது பல சேனாவில் இணைந்துகொண்டார்கள். ஞானசார தேரர் என்ற பௌத்த பிக்கு மற்றும் நோர்வே அரசிற்கும் இடையிலான தொடர்புகளும், நோர்வே அரசு பொது பல சேனாவிற்கு வழங்கிய நிதி உதவியும் இனியொருவில் கட்டுரை ஆதாரங்களாக வெளியாகின. (மேலும்....)

1992-93 மும்பை படுகொலைகள் ஆகியவற்றை “எய்தவர்கள்” அமைச்சர் நாற்காலிகளை அலங்கரிக்கிறார்கள்! குஜராத் இனப்படுகொலையை “எய்தவர்” பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்!!

பாபர் மசூதி இடிப்பை ஒட்டிய 1992 -93 மும்பைக் கலவரங்களில் 900 பேர்கள் கொல்லப்பட்டார்கள். ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் இதற்குப் பின்னணியில் சிவசேனா, இருந்ததையும் குறிப்பாக பால் தாக்கரேயின் பங்கையும் ஏராளமான போலீஸ் அதிகாரிகளின் பங்கையும் நிறுவியிருந்தது. ஆனால் யாரும் தண்டிக்கப்படவில்லை. போலிஸ் அதிகாரிகள் பதவி உயர்வு அடைந்து, ஓய்வு பெற்று பென்ஷன் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். மேலே கை வைத்துப் பாருங்கள் என சவால் விட்ட பால் தாக்கரேயை அரசுகள் கடைசி வரை அணுக இயலவில்லை. அரசு மரியாதைகளுடன் அவருக்கு இறுதிச் சடங்குகள் நடை பெற்றன.(மேலும்....)

அரியணை ஏற ஆலாய் பறக்கும் அதிபர் அருந்தவபாலன்

இந்திய அமைதி காக்கும் படை இருந்த காலத்தில் அதனை வெளியேற்ற பிரபாகரன் கையாண்ட இராஜதந்திரம், யாருக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தார்களோ, அவர்களுடன் கைகுலுக்கிக் கொண்டார்கள். அதாவது 1989 களில் பிரேமதாசா அரசுடன் கைகுலுக்கிக் கொண்ட விடயம். ஒரு எதிரியை அழிப்பதற்காக இன்னொரு எதிரியுடன் கையோர்ப்பது என்பது விவேகமான செயல் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார். புலிகள் கைகுலுக்கினால் ராஜதந்திரம், விவேகம், சாணக்கியம், அதே கைகுலுக்களை மற்ற அமைப்புகள் செய்தால் துரோகம், காட்டி கொடுப்பு, இந்தியாவின் கைகூலிகள் என கொக்கரித்து, கொலை செய்து, பயத்தை உருவாக்கி, அவை உண்மை என்ற ஒரு தோற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, மக்கள் மனங்களில் இருந்து அவர்களை அன்னியப்படுத்துவது. தமிழ் மக்களும் ஈழ விடுதலை போராட்டமும் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற மனநிலையில் இருந்து அன்று புலிகள் விடுபட்டு இருந்திருப்பார்களானால், இன்று முள்ளிவாய்க்காலில் புலிகள் அழிக்கப்பட்ட பின்பும், ஈழ விடுதலை போராட்டம் இலங்கையின் ஒரு மூலையில் ஏதோ ஒரு வடிவில் உயிர்ப்புடன் நடந்து கொண்டிருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். (Brin Nath)

ஆவணி 01, 2015

மைத்திரி முடிவு சரி ! விக்னேஸ்வரன் செயல் தவறு!

(மாதவன் சஞ்சயன்)

அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பிரபலங்களான தனி நபர்கள் முன்னிலைப் படுத்தப்படுவது டட்லியில் தொடங்கிய வரலாறு. டி எஸ் சேனநாயக்க தன்னை ஒதுக்குவதாக உணர்ந்த பண்டாரநாயக்க தனிவழி போனார். அதன் பின்பு நிகழ்ந்த டி எஸ் திடீர் மரணத்தால் தானே நிரந்தர பிரதமர் என்ற கொத்தலாவலையின் கனவு டட்லியை பிரதமராக நியமித்ததன் மூலம் கலைக்கப்பட்டது. டட்லியிடம் அப்போது இருந்தது டி எஸ் மகன் என்ற பிரபலம் மட்டுமே.
பண்டாரநாயக்க சுடப்பட்ட பின்பு இடைக்காலத்தில் தகாநாயக்க பிரதமராக இருந்தாலும் பின் கூட்டி வரப்பட்டவர் சிறிமா. பண்டாவின் மனைவி என்பதே அவரின் அடையாளம். தொடர்ந்த வரலாற்றில் காமினி திசநாயக்கா, அத்துலத்முதலி, அஸ்ரப், ஜெயராஜ் பெனாண்டோ பிள்ளை ஆகியோரின் மனைவிமாரும் அரசியலில் புது பிரவேசங்கள். சந்திரிகா விதி விலக்கு. அவர் விஜயுடன் இணைந்து அரசியல் இயங்கியவர். (மேலும்....)

என் மனவலையிலிருந்து....

நிஜ வரலாற்றைப் பதிவு செய்வோம்

(சாகரன்)

ஈழ விடுதலைப் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. மிதவாதத் தலமைகள் தமிழ் காங்கிரசில் இருந்து ஆரம்பித்து இவர்கள் வழி சரி இல்லை என்று புறப்பட்ட தமிழரசுக் கட்சியும் பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றி சுகபோக வாழ்வை தமதாக்கி கொள்ளும் வழியில் தம்மை சுருக்கிக் கொண்டனர். இளைஞர் அணியினரைத் திருப்திப்படுத்தும் கோஷங்களையும்இ சிறிய சாத்வீக போராட்டங்களையும் நடத்தினர். மறுபுறத்தில் கொழும்பு வாழ்க்கைஇ தமது பிள்ளைகளின் எதிர்கால நலன்களின் அடிப்படையில் பிள்ளைகளை இலங்கை அரசின் ஆதரவுடன் வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களின் வாழ்கையை வழப்படுத்தியது என்று மட்டும் காலத்தை ஓட்டினர். தமிழ் மக்கள் மத்தியில் இலங்கை அரசுக்கு எதிராக எமது உரிமைகளை வென்றெடுப்போம் என்று மட்டும் பேசிக்கொண்டு மாறி மாறி இலங்கையில் ஆட்சிப்பீடத்திலிருந்த அரசுகளுடன் கொழும்பில் 'நல்ல' கள்ள உறவில் இருந்ததையே எமது மிதவாதத் தலமைகள் கொண்டிருந்தனர். இன்றும் அப்படியே. (மேலும்....)

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் விசேட அறிவிப்பு இன்று

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க வாக்காளர்களுக்கு இன்று (31) விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக அவரது உத்தியோகபுர்வ செய்தி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பெற்ற மக்கள் ஆணையை பாதுகாப்பதன் அவசியம் குறித்து இந்த அறிவிப்பு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, கட்சிகளின் பிரச்சார மேடைகள் தவிர்ந்த சிவில் அமைப்புக்களின் கூட்டங்களில் அவர் கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தேர்தலில் கூட்டமைப்புக்கு ஆதரவில்லை - முதலமைச்சர் விக்கினேஸ்வரன்  

நல்லாட்சியைஏற்படுத்தக் கூடியசக்திகளை இனங்கண்டு ஜனநாயகரீதியில் நாம் யாவருஞ்சேர்ந்துஅச்சக்திகளுக்குத் துணையாகநிற்பதற்குவருந்தேர்தலானதுகளம் அமைத்துக் கொடுக்கும் என்றுநம்புகின்றேன். எமதுதேர்தல் வாக்குறுதிகளும் விஞ்ஞாபனங்களும் இந்நாட்டின் கூடியமக்களின் நலனைப் பேணும் விதமாகஅமையவேண்டும். அப்படிநடந்துகொண்டால்த்தான் வருங்காலச் சந்ததியினர் எம்மைநன்றிக் கண்களுடன் பார்ப்பார்கள். எதுஎவ்வாறுநடப்பினும் ஜனநாயகஅத்திவாரத்தை இட்டுஅதன் மீதுஎமதுவருங்காலத்தைநம் நாட்டில் ஏற்படுத்தசர்வதேசசமூகமானதுதுணையாகநிற்கும் என்றுஎதிர்பார்க்கின்றோம். எமதுமக்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் பூர்த்திசெய்யும் விதத்தில் சர்வதேசசமூகம் எம்முடன் கைகோர்த்துச் செல்லும் என்றும் எதிர்பார்க்கின்றோம். எனவேஎனது சதோதரசகோதரிகளே! நான் உங்களிடம் இச் செய்தியின் ஊடாகக் கேட்டுக் கொள்வதுயாதெனில் திறமானவேட்பாளர்களைப் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யுங்கள். வள்ளுவன் வழிநின்றுஉங்களைவாழவைக்கக் கூடியவர்களைத் தேர்ந்தெடுங்கள். நாம் யாவரும் எமது ஜனநாயகஉரித்துக்களைமுழுமையாகப் பாவித்துஎமதுஅரசியல் பயணத்தைபலம் மிக்கதாகச் செய்வோமாக! எம்முடையநடவடிக்கைகளைக் கூர்ந்துகவனித்துநாம் யாவரும் உங்கள் சேவையில் வெளிப்படைத்தன்மையுடனும் பதிலளிக்கும் கடப்பாட்டுடனும் நடந்துகொள்ளஉதவுவீர்களாக!தேர்தல் காலங்களில் நாம் சுற்றுலாக்காலப் பயணிகள் போன்றுநடந்துகொள்ளாதிருப்போமாக! (மேலும்....)

சாமி தரிசனங்கள்

சிவப்பு புத்தகங்களை தூக்கியெறிந்த தேர்தல்கள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கட்சியின் முதன்மை வேட்பாளருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் கட்சியின் வேட்பாளரும் வடமராட்சி இணைப்பாளருமான ஐயாத்துரை ஸ்ரீ ரங்கேஸ்வரன் அவர்களும் இன்று (31) காலை வதிரி பூவற்கரை பிள்ளையார் கோவிலுக்கு சென்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பிரதேசத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 12பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவில் ஆதரவாளர்கள் மீதே இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. கொட்டாஞ்சேனை பெனடிக் கல்லூரி மைதானத்துக்கு முன்னால் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்த சுமார் 250 - 300பேர் மீதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த மைதானத்துக்கு முன்னால் உள்ள வீதியில் இலக்கத் தகடு அற்ற கறுப்பு நிற ஹைப்ரிட் ரக வாகனமொன்றில் வந்திறங்கிய நால்வரே, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக் கொண்டிருந்தவர்களை குறுக்கிட்டு ரீ - 56 ரக துப்பாக்கியினால் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தில் ரவி கருணாநாயக்கவும் கலந்துகொண்டிருந்த போதிலும் அவர் மற்றொரு தரப்பினருடன் கொட்டாஞ்சேனை பகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருந்துள்ளார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com