மாசி
2015 மாதப் பதிவுகள்
மாசி
28, 2015
128 அபிவிருத்தி
திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது
- வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் தவராசா
128 அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு வடமாகாண சபை தவறியுள்ளதென
தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென 690 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆயினும், வடமாகாண சபையினால் 16 மில்லியன் ரூபாய் மட்டுமே
பயன்படுத்தப்படவில்லை என்று வடமாகாண சபைக்குரிய இணையத்தில் வெளியிட்ட
கணக்கறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர்
எஸ்.தவராசா இந்த பிரச்சினையை இம்மாதம் 24ஆம் திகதி அவையில் பிரஸ்தாபித்தார்.
690 மில்லியன் ஒதுக்கீட்டில் 128 அபிவிருத்தி திட்டங்களை இவ்வருடம் மார்ச்
முடிவுக்கு முன்னர் முடிப்பதாக 2014 டிசெம்பர் மாதம் 31ஆம் திகதியன்று
வடமாகாண சபை ஏற்றிருந்தது. இந்த பிரச்சினையை தவராசா பிரஸ்தாபித்த போது
பல்வேறு காரணங்களால் வருட முடிவுக்கு முன்னர், ஒதுக்கப்பட்ட சகல நிதியையும்
வடமாகாண சபையினால் பயன்படுத்த முடியவில்லை என முதலமைச்சர் விக்னேஸ்வரன்
கூறினார். இதனால்தான் மார்ச் முடியும் முன்னர் மீதி வேலையை பூரணப்படுத்த
தீர்மானித்ததாக அவர் கூறினார். வடமாகாண இணையத்தளத்தில் கணக்கறிக்கை
வெளியானதையிட்டு தனக்கு எதுவும் தெரியாதென்று கூறி வடமாகாண முதலமைச்சர்,
கணக்கறிக்கையில் ஏன் திரபுபடுத்திய கணக்கு வந்தது என்பதற்கு தன்னால் பதில்
கூற முடியாதென்றும் தெரிவித்துவிட்டார். பயன்படுத்தாத நிதியை திறைசேரியின்
அங்கீகாரமின்றி பயன்படுத்த முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தவராசா
தெரிவித்தார்.
இசையின் படுதோல்வி
சுப்பர் சிங்கர்
ஜுனியர் தொடர் நாலாவதின் முடிவுகள்
(சிவசண்முகமூர்த்தி சுந்தரம்)

யசிக்கா இலங்கையை
பூர்விகமாக கொண்டவரென்பதும், தமிழர்களின் அதிதீவிரவாத தேசிய உணர்ச்சியை
தட்டியெழுப்பும் பாடலொன்றை (விடை கொடு எங்கள் நாடே) பாடியவர் என்பதாலுமே
யசிக்காவிற்கு ஒரு கோடிக்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. சரியான புள்ளி
விபரங்கள் எதுவுமில்லாவிடினும் கடந்த 32 ஆண்டுகளில் ஏறத்தாள 5 இலட்சம்
இலங்கைத்தமிழர்களே (தமிழ்நாட்டிலுள்ளவர்களை தவிர்த்து) வெளிநாடுகளுக்கு இடம்
பெயர்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாக கூறலாம். (இதில் பெரும்பாலானவர்கள்
தமது சொந்த விருத்திக்காக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து, ஆடம்பரமாக
வாழ்ந்து கொண்டு, இலங்கையில் பயங்கரவாதத்தை விதைத்துக் கொண்டிருப்பவர்கள்)
இவர்களில் எல்லோரும் வருடாவருடம் சந்தாப்பணம் செலுத்தி தமிழ் ரி.வியினை
பார்ப்பபதில்லை. அப்படி தமிழ் ரி.வியினை பார்ப்பவர்களில் விஜய் ரி.வியின்
சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை கண்டு களிப்பவர்கள் ஒரு சிறு
பகுதியினரே. இதுதவிர சுப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சிகளை இணையத்தினூடாவும்
கண்டு களிப்பவர்கள் கணிசமானோர் உள்ளனர் எனபதை மறுப்பதற்கில்லை.
(மேலும்....)
என்
மனவலையிலிருந்து .........
சுமாராக முடிந்த
'சுப்பர் சிங்கர்'
(சாகரன்)

நான்
சுப்பர் சிங்கர் நிகழ்சியை அல்லது வேறு இந்த சின்னத்திரை நிகழ்ச்சிகளை
பார்பவன் இல்லை. எனது வாழ்கைத் துணையாள் சுப்பர் சிங்கரை ஓரளவு ஒழுங்காக
பார்பார். நான் சிலவேளைகளில் அவருடன் இவ் பார்வையில்
யான் இணைவதுண்டு. இசையை
பகுத்தாய்வு செய்யும் ஞானம் இல்லாவிட்டாலும் இசையை (கர்நாடக இந்துஸ்தானி
இசையுட்பட) ரசிக்கும் அளவிற்கு ஞானம் உள்ளவன்.
'இசையின் படுதோல்வி
சுப்பர் சிங்கர் ஜுனியர்
தொடர் நாலாவதின் முடிவுகள்
- சிவசண்முகமூர்த்தி சுந்தரம்'. இந்தக் கட்டுரையாளரின் மன
உணர்வுகளே என்மனதிலும் உதித்தன இந்த நாலாவது சுப்பர் சிங்கர் வெற்றியாளர்கள்
அறிவிப்பின் பின்னர். குறும் தேசியவாத்திற்கு எதிராகவும், பெரும்
தேசியவாதத்திற்கும் எதிராகவும் எப்போதும் குரல் கொடுத்து வரும் நான் இது
போன்ற ஒரு விமர்சனக் கட்டுரையை எழுதியிருந்தால் தேசியத்திற்கு எதிரானவர்கள்
என்றும் துரோகிகள் என்றும் பட்டம் சூட்டி இதுபோன்ற விமர்சனங்களை அடிபடச்
செய்து விடுவார்கள் என்பதினால் இவ்விடயம் சம்மந்தமாக எழுதுவதை தவிர்த்தேன்.
என் மனவலையிலிருந்து வரவேண்டியதை இக்கட்டுரையாளர் எழுதியிருப்பது எனக்கு
மிகவும் திருத்தியையும், சந்தோஸங்களையும் தருகின்றன.
என்பார்வையில் : இசை ஞானம் குரல்வளம் அடிப்படையில் ஹரிப்பிரியா
முதல் இடத்தையும், குரல் வளத்தின் அடிப்படையில் ஸ்ரீஷா
முதல் இடத்தையும், இசைஞானத்தின் அடிப்படையில் சுபூர்த்தி முதல் இடத்தையும்,
பாடலை வெளிப்படுத்தும் தன்மையில் பரத் முதல் இடத்தையும் பெற்றிருக்க
முடியும். இதில் எதுவும் யசிக்காவிடம் இருப்பதாக என்னால் காணமுடியவில்லை. ரியாலிற்றி ஷோ என்று
ஆரம்பிக்கப்பட்ட இது போன்ற நிகழ்ச்சிகள் வியாபாரமாக முற்றுமுழுதாக மாறிய
நிலையில் இந்நிகழ்ச்சிகளில் இருக்கும் சில நல்ல விடயங்களைக் கூட ரசிக்க
முடியாமல் எம்மை
இவற்றைப் பார்ப்பதிலிருந்து தவிர்த்து விட்டது என்பதில் விஜய்
ரீவியும் வெற்றி கண்டே விட்டது. ம்....... நாம் வெறு என்ன சொல்ல முடியும்.
சூப்பர்சிங்கர் வாக்குகள்
வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.
நடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில்
பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்க விஜய் ரீவியோ
தான் நினைத்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்குகளை
அறிவிக்க விடாது முடிவினை அறிவித்தது நீங்கள் யாவரும் அறிந்ததே..! ஆனால்
இப்போழுது சிலரால் இவர்களின் வாக்குகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
அதன் அடிப்படையில்
Total votes:
15840172, Jessica 10353440, Anushya 2103555, Spoorthi 1311630, Srisha
1102017, Haripriya 506221, Bharath 463309
இவ் முடிவுகள்
உத்தியோக பூர்வமற்றவையாக இருந்தாலும் முடிவினை அறிவிக்கும் போது விஜய் ரீவி
வாக்குகளை அறிவிக்காதமையினால் ஏதோ ஒரு கள்ளத்தனம் இருப்பது நம்ப முடிகின்றது.
இவ் வாக்கு முடிவினை நம்பகூடியதாகவும் இருக்கின்றது. எது எப்படியோ அனைத்து
மக்களையும் விஜய் ரீவி ஏமாற்றி விட்டது என்பதே உண்மை.
(நன்றி:
TamilInc)
வங்கதேசம்
அவ்ஜித் ராயைக்
கொன்ற முசுலீம் மதவெறியர்கள் !
வங்கதேசத்தைச்
சேர்ந்த எழுத்தாளரும், நாத்திகருமான அவ்ஜித் ராய், நேற்று வியாழன்
26.02.2015 அன்று இரவு சிலரால் தாக்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்து
போனார். இவரது மனைவி ரஃபிதா அகமதுவும் தாக்கப்பட்டு, டாக்கா மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். டாக்கா பல்கலைக்கழக
பேராசிரியரான டாக்டர் அஜய் ராயின் மகனான அவ்ஜித் ராய் பிரபலமான முக்தோ மோனா
எனும் வங்க மொழி இணைய தளத்தின் நிறுவனராவார். நாத்திக சிந்தனைகளையும்,
மதவெறியர், மத அடிப்படைவாதத்தை எதிர்த்தும் இந்த இணைய தளம் செயல்பட்டு
வருகிறது. கடந்த காலத்தில் தஸ்லிமா நசுரீன் நாடு கடத்தப்பட்டு அதை வங்க
நீதித்துறை அனுமதித்த போதெல்லாம் இவர் அதை கண்டித்து குரல்
கொடுத்திருக்கிறார். பிறப்பால் இந்துவாக இருந்தாலும் வங்க மொழியையும்,
கலாச்சாரத்தையும் நேசித்தவர். அதனாலேயே மதவெறியர்களை எதிர்த்து எழுதி
வந்தார். வங்க தேச மரபில் மதவெறிக்கு இடமில்லை. பெரிய கத்திகளைக் கொண்டு
இருவர் தாக்கியதாக மருத்துவமனையில் இருக்கும் இவரது மனைவி
தெரிவித்திருக்கிறார். டாக்கா புத்தகக் கண்காட்சிக்கு சென்றுவிட்டு
திரும்பிய போது இருவரையும் அக்கும்பல் கொடுரமாக தாக்கியிருக்கிறது.
(மேலும்....)
யாழ்ப்பாணம்
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்
வீரசிங்க பத்திரணலாகே விமலசேன மற்றும் எல்பிட்டிய பொலிஸ் பிரிவு பொலிஸ்
பரிசோதகர் ஆனந்த ராஜகருணா ஆகிய இருவரும் இரகசிய பொலிஸாரினால் சந்தேகத்தின்
பேரில் இன்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர். பிரபல்யமான கோடீஸ்வரர்
வர்த்தகரான பெர்னாட் ஜயத்ன என்பவர் பியகம விலேஜில் 2012ஆம் ஆண்டு
வெட்டிக்கொலைச்செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான தகவல்களை மறைத்து.
அக்கொலைக்கு உறுதுணையாக இருந்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே
இவ்விருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பிரஷாந் திவாரி
என்பவரின் குடும்பத்தினர் பிறம்ரன் மருத்துவமனை நிர்வாகத்திடம் 12.5
மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல்.
கனடா பிறம்ரன் மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட பிரஷாந் திவாரி
என்பவரின் குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் 12.5 மில்லியன் டொலர்
நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்தார்கள். மனநோய் பிரிவில்
வைக்கப்பட்டிருந்த தமது மகன், 15 நிமிடங்களுக்கு ஒரு முறை
அவதானிக்கப்படவேண்டுமெனவும். ஆனால் இரண்டரை மணி நேரம் அவர்
அவதானிக்கப்படவில்லையெனவும் வழக்கில் குற்றம் சுமத்தப்படுகின்றது.
அவர் தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது தனிப்பட்ட தகவல்கள்
மருத்துவமனையில் தவறான முறையில் பார்வையிடப்பட்டதாக பெற்றோர் குற்றம்
சுமத்தினார்கள். வழக்குக் குறித்த அறிவிப்புக் கிடைத்ததாகவும், ஏற்ற வகையில்
பதில் நடவடிக்கை எடுக்ப்படுமெனவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
3 கிழமைக்குள் 1000
ஏக்கரில் மீள்குடியேற்றம்
யாழ்ப்பாணத்தில் ஆயிரம் ஏக்கர் காணிகளில் மக்களை 3 கிழமைக்குள்
மீள்குடியமர்த்துவதற்கான செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் வலளாய் மாதிரி
கிராமத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத
விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். அதாவது 3 வாரங்களுக்குள்
ஆயிரம் ஏக்கர் காணிகள் சீர்செய்யப்பட்டு, அந்தந்த காணி உரிமையாளர்களிடம்
கையளிப்பதாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இதற்கு யாழ். மாவட்டச் செயலாளர்
சுந்தரம் அருமைநாயகம் மற்றும் இராணுவ அதிகாரிகள் ஆகியோரை உள்ளடக்கிய
செயற்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்குழு மூலம் காணி
உரிமையாளர்களின் தரவுகள் பெறப்பட்டு உரிய கால அவகாசத்துக்குள் குறித்த
காணிகள் சீர்செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும். இந்நிலையில்
ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட வளலாய் மாதிரிக் கிராம திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த 1000 ஏக்கர் எந்தெந்த பிரிவுகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்
எனவும் அவர் கூறினார்.
பௌத்தத்துடனான
தனது தொடர்புகளை வெளிப்படுத்த இந்தியா விரும்புகிறது !
இலங்கைக்கான தனது அடுத்த மாத விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இலங்கையின் புராதன தலைநகரமான அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொள்ளவும்
திட்டமிட்டுள்ளார். வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை
பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை
பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இதன் நோக்கம் எனவும் மேலும்
பௌத்தத்துடனான தனது தொடர்புகளை அது வெளிப்படுத்த விரும்புவதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 அல்லது 13 ம் திகதி கொழும்பிற்கு செல்ல
திட்டமிட்டுள்ள மோடி யாழ்ப்பாணத்திற்கு 14 ம் திகதி விஜயம் மேற்கொள்வார்,
இந்தியா அனல் மின்நிலையமொன்றை அமைத்துவரும் திருகோணமலைக்கும் செல்ல
திட்டமிட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் இந்தியா
மோடி அனுராபுரத்திற்கு விஜயம் மேற்கொள்வதையும அவரது நிகழ்ச்சிகளில் இணைக்க
முயன்றுவருகின்றது. 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை இலங்கையின் தலைநகராக
விளங்கிய இந்த புராதன நகர்,பல வருடங்களாக தேரவாத பௌத்த்தின்
மையப்பகுதியாகவும் காணப்பட்டது.
(மேலும்....)
முல்லைத்தீவில்
தேர்தல் ஒத்திவைப்பு உயர் நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு மற்றும் கரைத்துறைப்பற்று
பிரதேச சபைகளுக்கான தேர்தலை இடை நிறுத்த உயர் நீதிமன்றம் இடைக் கால
தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது.இதனையடுத்து இரு பிரதேச சபைகளுக்குமான
தேர்தல் பிற்போடப் பட்டுள்ளது. மேற்படி பிரதேச சபைகளுக்கான தேர்தல் இன்று
நடைபெறவிருந்ததுடன் தேர்தலை மார்ச் 27ம் திகதி வரை நடத்தக்கூடாதென உயர்
நீதிமன்றம் நேற்று தடை உத்தரவு பிறப்பித்ததற்கமைய இரு பிரதேச சபைகளுக்குமான
தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் தொடர்பில் இருவர் தாக்கல்
செய்திருந்த மனுவை நேற்று விசாரணைக்குட்படுத்தியிருந்த உயர் நீதிமன்றம்
மேற்படி தடையுத்தரவைப் பிறப்பித்திருந்ததாகவும் இதற்கிணங்க தேர்தல்
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். மொகமட்
தெரிவித்தார். 2012 ஆம் ஆண்டு வேட்புமனுத் தாக்கலின் அடிப்படையில் இந்த
தேர்தல் நடத்தப்படவிருந்தமையால் கடந்த மூன்று வருடங்களில் பல கட்சிகளில்
போட்டியிட இருந்த வேட்பாளர்கள் வெளிநாடு சென்றுள்ளதுடன், இன்னும் சிலர்
கட்சி மாறியிருக்கிறார்கள். இன்னும் சிலர் தாம் இந்த தேர்தலில்
போட்டியிடவில்லை என்று எழுத்து மூலம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளனர்.
எனவே தான் குறித்த தேர்தலை இடை நிறுத்திவிட்டு புதிய வேட்பு மனுத்தாக்கல்
செய்து மீளவும் தேர்தலை நடத்துமாறு கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல்
செய்யப்பட்டதாக முல் லைத்தீவு மாவட்டத்தின் புத்திஜீவிகள் ஒன்றியத்தின்
ஏற்பாட்டாளர்கள் ஏ. மபூஸ் அஹமட் தெரிவித்தார்.
ஆமிப்பிடித்து காணாமல் போனதற்கு கொடும்பாவி எரிக்கிறீங்களே!
புலிகள் பிடித்து
சென்றதற்கு யாருடைய கொடும்பாவியை எரிக்க போகிறீர்கள்?
- அன்ரனி ஜெகநாதன் தமிழ் மக்களிடம் கேள்வி கேட்கிறார்?
வடமாகாணசபையின் நேற்றைய (25.02.2015) அமர்வில் மீன்பிடி மற்றும்
போக்குவரத்துத்துறை அமைச்சர் பா.டெனீஸ்வரன் அண்மையில் யாழில் சுமந்திரனின்
கொடும்பாவி எரியூட்டப்பட்டமை தொடர்பில் விவாதமொன்றை ஆரம்பித்திருந்தார்.
சுமந்திரனுக்கு ஆதரவாகப்பேசிய இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு
உறுப்பினரும், பிரதி அவைத்தலைவருமாகிய அன்ரனி ஜெகநாதன், காணாமல் போனோர்
தொடர்பான விவகாரங்களுடன் தொடர்புடைய வடமாகாணசபை உறுப்பினரொருவரே இதன்
பின்னணியிலிருப்பதாக அனந்தியை சாடினார்.
(மேலும்....)
மாசி
27, 2015
நல்லெண்ணம் பிறக்க உண்மையை அறிவதே ஒரே வழி
-
பிரதமரின் சாடலுக்கு சி.வி பதிலடி
எங்கள்
மக்கள் உண்மையான நல்லெண்ணத்தை தெற்கில் இருக்கும் எவரிடமும்
எதிர்பார்க்க முடியாது என்று சொல்வதனை உண்மை ஆக்கப்பார்க்கிறார் பிரதமர்.
ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. சிங்கள மக்கள் நல்லவர்கள். அவர்களின்
அரசியல்வாதிகள்தான் இதுகாலமும் அவர்களை பிழையான விதத்தில் வழி நடத்தி
வந்துள்ளார்கள். உதாரணத்துக்கு சந்திரிகா அம்மையார் 2000 ஆம் ஆண்டு
நல்லதொரு அரசியல் யாப்பு நகலைக் கொண்டுவந்த போது நாட்டைப் பற்றிச்
சிந்திக்காது அதனை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அந்த நகலை யார்
எரித்தார்கள் என்பது நான் சொல்லி பிரதமர் ரணிலுக்குத்
தெரியவேண்டியதில்லை. குறுகிய கால சுய நன்மைக்கே அதை செய்தார்கள். நாட்டு
நலம் கருதி அல்ல. தயவு செய்து இனவாதம் வேண்டாம் என்று கோரி விட்டு
நீங்களே இனவாதத்தை எழுப்பாது பார்துக்கொள்ளுங்கள்.(மேலும்....)
சும்மா கிடந்த வாயை
திறந்து, பிரதமரிடம் வாங்கிக் கட்டிய சுரேஷ் !
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்றைய தினம் வியாழக்கிழமை பிரதமர் பிரதமர்
ரணில் விக்ரமசிங்காவை சந்தித்து பேசினர். சந்திப்பின் போது கூட்டமைப்பு
சார்பில் சம்மந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதுடன்
வலி வடக்கு, சம்பூர் மீள் குடியேற்றம் சம்மந்தமாக கலந்துரையாடினர். வலி
வடக்கிலுள்ள ஆயிரம் ஏக்கர் காணியை காணி சொந்தக்காரர்களுக்கு மீள
கையளிக்கப்படுமென இரண்டு கிழமைகளுக்கு முன்னர் அரசாங்கம்
அறிவித்திருந்தது. எனினும் செயலளவில் பெரியளவு முன்னேற்றம்
காணப்படவில்லை என்பது யாவரு மறிந்ததே. தமிழ் மக்களின் மத்தியில் தன்னை
ஒரு தீவிரவாதி போன்று ஒரு தோற்றத்தை உண்டு பண்ணி, வாக்குகளை
கொள்ளையடிப்பதற்காக , வாய் கிழிய கத்தி கத்தி பேசி வரும் சுரேஷ், பிரதம
மந்திரியுடனான கலந்துரையாடலின் போதும் மிகவும் உரத்த தொனியில் பேச
முனைந்தார். அப்போது ஆத்திரமடைந்த பிரதமர் ,” உங்களது பிரச்சனை என்ன
வென்று எனக்கு நன்றாக தெரியும். அதற்காக கத்தி பேச வேண்டிய அவசியமில்லை.
முதலில் எங்களுக்குள் நாகரீகமான முறையில் பேச பழகி கொள்ள வேண்டும் ”
என்று எச்சரித்தார். அத்துடன், நாங்களும் நீண்ட காலம் அரசியலில் தான்
இருக்கின்றோம். எங்களுக்கும் கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள்
பற்றி நன்றாக தெரியும் என்று இரட்டை அர்த்தப்பட தெரிவித்தார். கடந்த
காலத்தில் தான் மேற்கொண்ட கொலை சம்பவங்களை தன் மறை முகமாக பிரதமர்
குறிப்பிடுகின்றார் என்பதை உணர்ந்து பெட்டிப் பாம்பாகிய சுரேஷ், பேச்சு
வார்த்தை முடியும் வரை வாயே திறக்காமல் இருந்துவிட்டு வெளியேறினார்.
மீள் குடியேற்ற பிரச்சினையை தீர்ப்பதற்கு தனக்கு மேலும் இரு வார அவகாசம்
தேவை என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
உப்புத்
தண்ணி.
இளைக்கவும் பின்னவும் தெரியாத கைகளுக்கு மத்தியில்
காவோலைகளைத் தொங்கவிட்டபடி பனைகள்.
நடந்து போகும் மனிதனின் சுவடுகளுக்காய் ஏங்கும்
இன்னமும் அகலப்படாத
ஒற்றையடிப் பாதைகள்.
நடந்து பார்க்கவும் போதாத தூரத்தைக்கடக்க
மனிதரின் காலடியில் சுற்றும்
அதிகப்படியான சக்கரங்கள்.
எப்போதும்
என் மனதோடு அலைமோதும் மேற்குக்கடற்கரை.
(மேலும்....)
தேர்தலுக்கு தயாராகுங்கள்
பாராளுமன்றம் ஏப்.23 கலைப்பு
- பிரதமர்
ஐக்கிய தேசியக்கட்சி பொதுத் தேர்தலுக்கு முகம்கொடுக்க தயார் நிலையில்
இருப்பதாகவும் ஏப்ரல் மாதம் 23ம் திகதியுடன் ஒட்சிசன் நிறைவடைவதாகவும்
தெரிவித்த கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க
தேர்தலுக்கு சகலரையும் ஆயத்தமாகுமாறு கேட்டுக்கொண்டார். இதேவேளை மார்ச்
மாதம் முதல் வாரத்தில் தேர்தல் செயற்பாடுகளை ஐக்கிய தேசியக் கட்சி
முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் பாராளுமன்றத்தின் மக்கள்
ஆணை 23ஆம் திகதி முடிவடைகிறது. நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை
வெற்றி பெறச் செய்வதற்காக 100 நாள் வேலைத்திட்டமொன்றை முன்வைத்தோம்.
இதனடிப்படையில் ஏப்ரல் 23ஆம் திகதி 100 நாள் வேலைத்திட்டத்தின் ஒட்சிசன்
நிறைவு பெற்று 23ஆம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்படும். தேர்தல்
நடக்கும் திகதிக்கு ஏற்ப இந்த திகதியில் மாற்றம் செய்யப்படலாம். ஏப்ரல்
23ஆம் திகதிக்கு பின்னர் பாராளுமன்றம் கூடவும் முடியாது. பாராளுமன்றம்
கலைக்கப்பட வேண்டும். இந்தப் பாராளுமன்றம் ஜனவரி மாதம் 8ஆம் திகதி
கலைக்கப்பட இருந்தது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி தோற்கடிக்கப்பட்டதால்
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் நீடிக்கப்பட்டது.
வாக்குறுதியை நிறைவேற்றிய பின்னரே தேர்தல்
100
நாள் திட்டத்தை 200 நாளாக்கியாவது நிறைவேற்றுவோம் -
ராஜித
சேனாரத்ன
தேர்தல் முறை மாற்றம், அரசியலமைப்புத் திருத்தம், தகவலறியும் உரிமை
சட்டம் அடங்கலாக மக்களுக்கு வழங்கிய சகல வாக்குறுதிகளையும் நிறை
வேற்றிய பின்னரே தேர்தல் நடத்தப்படும். தேர்தல் நடத்துவதையன்றி
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதே மக்களின் எதிர்பார்ப்பாக இருப்பதாக
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 100 நாள்
திட்டத்தை 200 நாளாக்கியாவது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை
நிறைவேற்றுவதாக குறிப்பிட்ட அமைச்சர், அரசியலமைப்புத் திருத்தச்சட்டம்
அடங்கலான சட்டங்கள் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
எனவும் குறிப்பிட்டார். அடுத்த தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழே
அநேகமாக நடைபெறும். தேசிய அரசாங்கம் அமைக்க சுதந்திரக் கட்சியில்
உடன்பாடு காணப்படுகிறது. ஆனால் கட்சி மத்திய குழுவிலே இது தொடர்பில்
இறுதி முடிவு எடுக்கப்படும். 100 நாட்களின் பின் தேசிய அரசாங்கம்
உருவாக்கினால் அந்த அரசில் மாத்திரம் 45 அமைச்சர்களை நியமிக்க உடன்பாடு
காணப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாம் தேர்தலின் போது
வழங்கிய சகல உறுதிகளையும் நிறைவேற்றுவோம். தேர்தலை விட மக்களுக்கு
வழங்கிய வாக்குறுதியே முக்கியமானது.
யாழ்.
கட்டைக்காடு கடற்பரப்பில் பெற்றோல் குண்டு வீசி இந்திய மீனவர்கள்
தாக்குதல்
இந்திய ரோலர் படகு மீனவர்கள் பருத்தித்துறை கட்டைக்காடு கடற்பரப்பில்
பெற்றோல் குண்டு வீசியதுடன், மீனவர்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக
கட்டைக்காடு பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பருத்தித்துறை
கட்டைக்காடு பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை (25/02) நள்ளிரவில்,
தமிழகத்தினைச் சேர்ந்த மீனவர்கள் 50 படகுகளில் கட்டைக்காடு பகுதிக்கு
வந்து அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது கட்டைக்காடு
மீனவர்களின் 25 படகுகளை சேதமாக்கியதுடன் 300 வலைகளை வெட்டியுள்ளனர்.
இதனை அறிந்த கட்டைக்காட்டுப் பகுதி மீனவர்கள் இந்திய மீனவர்களுடன்
பேசிய போது மீனவர்களின் பெற்றோல் குண்டுகள் வீசியதுடன் தாம் பிடித்த
சங்குகளினாலும் மீனவர்களை தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 மீனவர்கள்
படுகாயமடைந்துள்ளனர். இவ்வாறு இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து
அந்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய மீனவர்களின் ரோலர் படகின் அத்துமீறலை தடுப்பதற்காக நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு எதிர்வரும் திங்கட்கிழமை (02/03) இந்திய துணைத் தூதுவர்
ஆ. நடராசாவைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன், இந்திய துணைத் தூதுவர்
அலுவலகத்திற்கு முன்பாக போராட்டமொன்றினையும் மேற்கொள்ளவுள்ளது.
பொதுபலசேனா
06 பேருக்கு பிடியாணை
வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் அமைச்சிற்குள்
அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமை தொடர்பில் பொதுபலசேனா
அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேருக்கு கோட்டை நீதவான்
நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக
அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து குந்தகம் விளைவித்தமை தொடர்பில்
பொதுபலசேனா அமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை
தாக்கல் செய்யுமாறு கோட்டை நீதவான் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி
பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்
தக்கதாகும்.
தேசிய
நிறைவேற்றுக் குழுவினால் மக்களுக்கு நிறைந்த பயன்
தகவல்
அறி யும் சட்டம், மருந் துகள் சட்டமூலம் ஊழல் மோசடிகளில் ஈடுபடு
வோருக்கு தண்டனை பெற்றுக் கொடுத்தல் போன்ற பல்வேறு விடயங்களை
முக்கியமாகக் கொண்டே தேசிய நிறைவேற்றுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே,
இக்குழுவினால் மேற்கொள்ளப்படும் விடயங்கள் உண்மையிலேயே திருப்தி அடைய
முடியும். இவ்வாறு சகோதரப் பத்திரிகையான தினமின வில் (23) மக்கள்
விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார
திசாநாயக்கவின் நேர்காணலின் தமிழாக்கம், மோசடிக்காரர்க்ள, கொலைகாரர்கள், திருடர்கள் அனைவரும் சட்டத்தின்
முன்னால் கொண்டுவரப்பட வேண்டும் என இந்நாட்டில் பெரியதொரு குரல் ஒலித்த
இரண்டு சந்தர்ப்பங்கள் இந்நாட்டில் உள்ளது. ஒன்று ஐ.தே.கட்சியின் 17
வருடகால ஆட்சிக்கு எதிராக சந்திரிக்கா பண்டாரநாயக்க பதவிக்கு வந்த போது.
இரண்டாவது 2015 ஆம் ஆண்டின் தேர்தல். 1994 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததைப் போல
மோசடிக்காரர்களால், திருடர்களால் இம்முறை தப்பித்துக்கொள்ள எப்படியுமே
சந்தர்ப்பம் கிட்டாது என்ற நம்பிக்கை இருக்கின்றது.
(மேலும்....)
புதிய
தலைமுறை, புதுயுகம் நிறுவனர் திரு.சத்தியநாராயணன் அவர்களுக்கு ஒரு
திறந்த மடல்
நான் இதுவரை
வீடு தாண்டி வருவாயா, ரிஷிமூலம், குருசிஷ்யன் மற்றும் சாமானியருடன்
ஒருநாள், ஆயுதம் செய்வோம் போன்ற நிகழ்ச்சிகளை Edit செய்துள்ளேன். புதிய
தலைமுறை, புதுயுகம் பணியாளர்களில் குறைந்த சம்பளத்தில் வேலை
செய்பவர்களில் நானும் ஒருவர். இருப்பினும் எனது வேலையில், நான் Edit
செய்த நிகழ்ச்சிகளின் தரத்தில் நான் எந்த குறையும் வைத்ததில்லை. நான்
சாமானியருடன் ஒருநாள் நிகழ்ச்சியை Edit செய்துகொண்டிருந்த சமயம், ஆயுதம்
செய்வோம் நிகழ்ச்சியை புதிய வடிவில் மாற்றியபோது அப்போதைய எடிட்டரின்
பணி திருப்தியளிக்காததால், நான் அந்நிகழ்ச்சியை எடிட் செய்ய வேண்டும்
என்றும் அன்றைய புதிய தலைமுறையின் நிகழ்ச்சிப்பிரிவு தலைமை அதிகாரி
அவர்களே Post Production Supervisorம் கேட்டு என்னை ஆயுதம் செய்வோம்
நிகழ்ச்சிக்கு மாற்றினார் என்பதே எனது திறமைக்குச் சான்று.
(மேலும்....)
தமிழ்
மக்களின் கன்னத்தில் அறைந்தது சர்வதேசம் அல்ல ரணில் தான்
–
பிரபா கணேசன்
வட
மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு சர்வதேசம் முதலமைச்சர்
விக்னேஸ்வரனின் கன்னத்தில் பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கும்
ரணில் விக்கிரமசிங்கவே தமிழ் மக்களின் கன்னத்தில் அறைந்திருக்கின்றார்
என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். பெரும்பான்மை பலமின்றி
குறுக்கு வழியில் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க
தமிழ் மக்களுக்கு நண்பன் போன்ற நாடகத்தை பலவருடமாக தொடர்ச்சியாக நடத்தி
வருகின்றார். லண்டன் மாநகரில் சம்பந்தன் சுமந்திரனது படங்கள் புலம்
பெயர்ந்தவர்களால் எரிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது இவ்விருவரும்
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செய்லபடுவது
அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த துரோகத்திற்கு தமிழ் தேசிய
கூட்டமைப்பின் தலைமை துணை போகின்றது. கடந்த காலங்களில் கருணாவை
விடுதலைப் புலிகளிடமிருந்து பிரித்து ஆயுதப் போராட்டத்தை முடித்து
வைத்த பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சேரும். அதே போல் இன்று
வடமாகாணசபைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் பிரிவினை
ஏற்படுத்தி அதனை தென்னிலங்கைக்கு தெரிவித்து அடுத்த தேர்தலில் சிங்கள
பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற முயற்சிக்கின்றார்.
பஸ்
கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்?

நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு. எச்சியைத்தொட்டு டிக்கெட்
கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது மரியாதை இல்லாமல்
திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல் ஏமாத்திக்கொண்டு என்று. ஒரு சில
நடத்துனர்களுக்கு வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும். அதில் ஒருவர்தான்
கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில்
பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை.
சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பிக்கிறது. அப்படி என்னதான் செய்கிறார்?
கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது. பயணிகளுக்கு
சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி
அறிவுறுத்துகிறார். தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி
விளக்குகிறார். அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ
இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி
யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ,
காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார். அதாவது
இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக. ஒரு
ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம்
நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம்
கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார். இவரைப்பற்றி ஒரு
கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது. இவரைபோல்
மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வாழ்த்துவோம் அவரை.
[நன்றி : தி இந்து ]
மாசி
26, 2015
தோழர் சாந்த மறைவு
தோழர்கள்,
நண்பர்களால் சாந்த என அழைக்கப்படும் தோழர் தயானந்த இம் மாதம்
20-02-2015 இயற்கை எய்தினார். ரயில்வே ஊழியராக, தொழிற்சங்கவாதியாக தனது
அரசியல் பயணத்தை தொடங்கிய தோழர் சாந்த ஆரவாரமில்லாமல் இலங்கையின் இன
சமூகங்களிடையே ஐக்கியத்திற்காக உழைத்தவர். அதிகம் பேசாத தோழர் சாந்த
சமூக ரீதியாக காரியார்த்தமாக ஓயாது செயற்பட்டவர். 1980 களின்
முற்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சகோதர அமைப்பான “விகல்ப்ப கண்டாயம”
மாற்று அணியில் செயற்பட்டவர். தென்னிலங்கையில் தமிழ் மக்களின்
சுயநிர்ணய உரிமையை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டவர்.(மேலும்....)
'தமிழ், முஸ்லிம்
சமூகங்கள் போட்ட முள்வேலியை அகற்ற வேண்டும்'
முஸ்லிம்
காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய நோக்கமும் தமிழ் மக்களின் அரசியல் பயணமும்
ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்துள்ளது. நாங்களும் கூறுகின்றோம்
இந்த வட, கிழக்கு மாகாணங்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகம். இதுவே
முஸ்லிம் காங்கிரஸின் அடிப்படை கோட்பாடாகும். இன்று புதிய அத்தியாயத்தை
நாம் தோற்றுவித்துள்ளோம். நீங்கள் எந்த தயக்கமும் இல்லாமல், தங்களின்
தேவைகளை கேட்டு பெறமுடியும். தற்போது எனது அமைச்சின் ஊடாக
தமிழ்க்கிராமங்களில் நடைபெறுகின்ற திட்டங்களை தமிழ்த் தேசியக்
கூட்டமைப்புடன் சேர்ந்து செய்வதற்கு நான் முடிவு எடுத்துள்ளேன். இதன்
மூலம் எமது இன ஐக்கியத்தை கட்டியெழுப்பமுடியும்.
(மேலும்....)
இந்துமத வெறியரால் கொல்லப்பட்ட கோவிந்த் பன்சாரே
“சிவாஜி
யார்?” என்ற பன்சாரேவின் புத்தகம் சிவாஜியை இந்துத்துவ பேராண்மையின்
சின்னமாக திரிக்கும் சிவசேனை-ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கு எதிரானது. இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோவிந்த் பன்சாரே சுட்டுக்
கொல்லப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பன்சாரே
82 வயதானவர். பிப்ரவரி 16-ம் தேதி தனது மனைவியுடன் காலை நடைப்பயிற்சி
முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது அவரது வீட்டின் அருகாமையில் வைத்து
சுடப்பட்டார் பன்சாரே. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை
பலனளிக்காமல் 20-ம் தேதி உரிரிழந்தார். அவரது மனைவி உமா பன்சாரே காயங்களுடன்
உயிர் பிழைத்துள்ளார்.(மேலும்....)
'ஆம்னஸ்டி
இன்டர்நேஷனல்' மத்திய அரசுக்கு கண்டனம்
பிரதமர் மோடி
தலைமையிலான மத்திய அரசுக்கு, 'ஆம்னஸ்டி இன்டர்நேஷனல்' எனப்படும், சர்வதேச
பொது மன்னிப்பு சபை கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின், இந்த ஆண்டிற்கான அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:
(மேலும்....)
நூல்
அறிமுகமும் வெளியீடும்
எதிர் சினிமா,
திரையும் உரையும்
காலம்: பங்குனி 29,2015
மாலை 4.30-7.30
இடம்: 1876 Ellesmere Road
(McCowan & Ellesmer)
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
மேலதிக தொடர்புகட்கு 416-450-6833
நாட்டிலை இப்ப நடக்கிற சம்பவங்களை பார்த்தால்
உடையாற்றை
திருவிழாவிலை சடையர் வெடி கொழுத்தின கதைதான்
ஞாபகத்திற்கு வருகுது
தமிழ் தேசிய கூட்டமைப்பின்ரை தலையும் வாயும் புதிய அரசாங்கத்திலை தேசிய
நிறைவேற்று குழுவென்று ஒட்டிக்கொண்டிருக்கினம். மறு புறத்திலை நறுக்கிவிட்ட
வாலுகள் போல கிடந்து துடிக்கிறவை தாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எண்டும்,
தாங்களும் இந்த பேரணிக்கு ஆதரவு எண்டும் அறிக்கை விட்டிருக்கினம்.
போதாக்குறைக்கு நாற்பதினாயிரம் சவப்பெட்டி புகழ் கூட்டத்தாரும் பேரணிக்கு
ஆதரவு எண்டு சொல்லி திரியினம். ஆனாலும் பாருங்கோ யாரும் தங்கடை
பேரணிக்குள்ளை மூக்கை நுழைக்கு கூடாது எண்டதிலை
பல்கலைக்கழக சமூகத்தினர் கவனமாத்தான் இருக்கினம். கட்சிக்கொடிகள், பொது
அமைப்புகள் எண்டு பதாதைகள் அடையாளங்கள் எதுவும் கொண்டு வரக்கூடாது.
துண்டுப்பிரசுரங்கள் ஒண்டும் வினியோகிக்க கூடாது. ஒழுங்கமைப்பாளர்கள்
தயராரித்த சுலோக அட்டைகளை தவிர வேறு எவரும் சுலோக அட்டைகள் கொண்டு
வரக்கூடாது, இப்படி கட்டுப்பாடுகள் போட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பாரையும்,
நாற்பதினாயிரம் சவப்பெட்டிக்காரர் கூட்டத்தையும் கதி கலங்க வைச்சிருக்கினம்
பல்கலைக்கழக சமூகத்தினர். வீட்டுக்கு வெளியாலை நில்லுங்கோ என்று பிடிச்சு
விட்டுருக்கு. ஆனாலும் பாருங்கோ அழையாதை வீட்டுக்குள் நுழைந்த விருந்தாளிகள்
போல பேரணிக்குள்ளை புகுந்து கூனிக்குறுகி நிற்கினம். (மேலும்....)
சு.கவை
பிளவுபடுத்தும் ஐ.தே.கவின் திட்டம் ஒருபோதும் பலிக்காது
-
ஜனாதிபதி
பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.மு.வின் வெற்றிக்காக ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன பிரசாரம் மேற்கொள்வது உறுதி. சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தி
அரசியல் ஆதாயம் பெற ஐ.தே.க. பொய்யான பிரசாரங்கள் செய்வதாக ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சி மாகாண சபை இளம் உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர்.
பிரதமர் பதவியோ அமைச்சு பதவிகளையோ விட கட்சியின் வெற்றியே பிரதானமானது
என்று குறிப்பிட்ட அவர்கள், தேர்தலில் வெற்றியீட்டிய பின்னர்
தகுதியானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்க முடியும் எனவும் அவர்கள்
குறிப்பிட்டனர். மேல், தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாண சபை
இளம் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று
கோட்டை சோலிஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த மாகாண
சபை சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த
ராஜபக்ஷ, சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் ஒரே மேடையில் பிரசாரம் செய்து
சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐ.ம.சு.மு. அரசாங்கமொன்றை உருவாக்க
இருப்பதாகவும் குறிப்பிட்டனர். சு.கவை துண்டாக்க சிலர் முயற்சி
செய்கின்றனர். நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் சு.காவை விரும்புகின்றனர்.
அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்
அதிகூடிய அதிகார பகிர்வின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு -
எம்.ஏ. சுமந்திரன்
பொதுத் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தின்
மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வை இரு வருடங்களில் காண முடியுமென தான்
நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் இந்த விடயத்தில் அரசாங்கம் விசேட கவனம்
செலுத்தி வருவதால் நிச்சயமாக இது சாத்தியப்படும் என்றும்
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்
தெரிவித்தார். அதிகூடிய அதிகாரப் பகிர்வின் மூலம் இனப்பிரச்சினைக்கு
தீர்வு காணப்பட வேண்டுமென கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க
ஆணைக்குழுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வின் மூலமே
நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென தொடர்ச்சியாக
அரசாங்கத்துக்கு அழுத்தங்களைக் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்நாட்டு விசாரணையை சர்வதேச மேற்பார்வையுடன் நடத்துவதற்கு அரசாங்கம்
இணக்கம் தெரிவித்துள்ளது. சர்வதேச விசாரணையில் தெரிவிக்கப்பட்ட
விடயங்கள் உள்நாட்டு விசாரணையிலும் இருக்கிறதா இல்லையா என்பது இதன்
மூலம் தெரியவரும். சர்வதேச மேற்பார்வையோடு உள்நாட்டு விசாரணை
மேற்கொள்ளப்படுவது அவசியமாகும். இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய
செயற்பாடு இனப்பிரச்சினை விடயத்தில் முழுமையான தீர்வை முன்வைக்கும்
என்றும் அவர் தெரிவித்தார்.
மீரியபெத்த
மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு காணி உறுதியுடன்
நிரந்தர வீடுகள்
பதுளை மாவட்டத்திலுள்ள மீரியபெத்தை மண்சரிவு அனர்த்தத்தினால்
பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான
முன்னேற்பாடுகளை பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு
மேற்கொண்டுள்ளது. 2014ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 29ம் திகதி ஏற்பட்ட
மண்சரிவு அனர்த்தத்தினால் 75 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளன. மண்சரிவு
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 75 குடும்பங்களுக்கு 100 நாள்
வேலைத்திட்டத்தின் கீழ் வசதியான தனிவீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு
அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கம் காணியோடும் காணி உரித்துரிமையுடனும்
கூடிய கெளரவமாக வாழக்கூடிய தனி வீடுகளை வழங்குவதாகும். இத்தகைய வீடுகள்
காற்றோட்டம், வெளிச்சம், மின்சாரம், குடிநீர் வசதி மற்றும் மலசலகூட
வசதிகளைக் கொண்டிருப்பதோடு அவர்கள் பிரத்தியேக வாழ்க்கையை
நடத்தக்கூடியதாகவும் இருக்கும். நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் 7
பேர்ச் காணியில் 550 சதுர அடிப்பரப்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு
தனிவீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி
அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மேலும் தெரிவித்தார்.
Love and labour. Can anyone
show love and capital?

மாசி
25, 2015
வெளிவந்துவிட்டது
வானவில் 50
நல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்கைகள் ஆரம்பம்
2015 ஜனவரி
08இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன
தெரிவாகி, அவர் அவசர அவசரமாக ஐக்கிய தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை
தனது விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக பிரதமராக நியமித்து, ரணில் தனக்கென ஒரு
மந்திரிசபையையும் நியமித்து, ஒரு அரசாங்கத்தையும் அமைத்த பின்னர், நாடு
ஜனநாயக விரோத - அழிவுப் பாதையில் வேகமாகச் செல்வதைக் காண முடிகிறது. புதிய
ஜனாதிபதியின் முதலாவது ஜனநாயக விரோதச் செயல்பாடு, ஏற்கெனவே
பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்று
பதவியில் இருக்க, அந்த அரசாங்கத்தைக் கலந்து ஆலோசிக்காமல் புதிய அரசாங்கம்
ஒன்றை அமைத்தது. அதுவும் புதிய ஜனாதிபதியின் சொந்தக் கட்சியான சிறீலங்கா
சுதந்திரக் கட்சி
தலைமையிலான அரசாங்கம் இருக்கத்தக்கதாக, பாராளுமன்றத்தில்
மிகச் சிறுபான்மையாக இருந்த ஐ.தே.கவின் ஆட்சியை அமைக்க ஏற்பாடு செய்தது,
மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனநாயக மரபை மீறியது மட்டுமின்றி, தனது
சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைத்ததும் ஆகும்.
(மேலும்....)
பொதுத்தேர்தல் தாமதமாகும்?
ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சி தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவு
தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்
கட்சி தீர்மானித்துள்ளதையடுத்து பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படும்
சாத்தியக்கூறுகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏழாவது
நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் ஏப்ரல் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான இந்த அரசாங்கத்தின் 100 நாட்கள்
வேலைத்திட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றம் ஏப்ரல் 23ஆம் திகதி வியாழக்கிழமை
கலைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேசிய
அரசாங்கத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளது.
இதனையடுத்தே பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்று தகவல்கள்
வெளியாகியுள்ளன.
(மேலும்....)
மாயமான மலேசியய
விமானம் வேண்டுமென்று அண்டார்டிக்காவை நோக்கி இயக்கப்பட்டது
மாயமான மலேசிய விமானம் வேண்டுமெ ன்றே அண்டார்டிக்கா நோக்கி
இயக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய தலைநகர் இரு ந்து சீன தலைநகர் நோக்கி கடந்த மார்ச் மாதம் 239 பேருடன்
பயணித்த எம். எச். 370 விமானத்திற்கு என்ன ஆனது என் பது குறித்து இதுவரை
எந்த துப்பும் கிடை க்கவில்லை. காணாமல் போன விமானம் பற்றிய செயற்கைகோள்
தகவல் திரட்டுகளை ஆராய்ந்த உலகின் பிரபலமான வானூர்தி பேரழிவு நிபுணர்கள்,
விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின், சில மணி
நேரம் வானில் பறந்ததை கண்டுபிடித் துள்ளனர். கிடைத்துள்ள ஆதாரங்களை மிகவும்
கவனமாக ஆராய்ந்ததில், கடைசி ரேடியோ தொடர்புக்கு பின் விமானம் மூன்று முறை
திரும்பியது தெரியவந்துள்ளது. முதல் முறை இடது பக்கமாக திரும்பிய விமானம்,
பின்னர் மீண்டும் மீண்டும் 2 முறை இடது பக்க மாகவே திரும்பி மேற்கு நோக்கி
பயணித்து, பின்னர் தெற்கு புறமாக அண்டார்டிகாவை நோக்கி சென்றது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி விமான போக்குவரத்து நிபுணர்
மால்கொம் பிரெனர், விமான த்தின், விமானிகள் அறையில் இருந்த யாரோ ஒருவரால்
விமானம் வேண்டுமென்றே அண்டார்டிக்கா நோக்கி இயக்கப்பட்டது என்று
திட்டவட்டமாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஐ.நாவிடம் நீதி கோரி
யாழில் பேரணி
இலங்கையில்
நடைபெற்ற போர்க்குற்றம் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் ஐ.நா
மனித உரிமைகள் பேரவையால் வெளியிடப்படவேண்டிய அறிக்கையை மார்ச் மாதமே
வெளியிடவேண்டும் எனக்கோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால்
செவ்வாய்க்கிழமை (24) முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு பேரணியில்
காணாமற்போனோரின் உறவுகளின் கதறல்களும் ஒலித்தன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
வளாகத்திலிருந்து ஆரம்பித்த இந்த ஊர்வலம் இராமநாதன் வீதி வழியாக பலாலி
வீதியை அடைந்து, அங்கிருந்து கந்தர்மடச் சந்தியினூடாக நல்லூர் வடக்கு வீதியை
சென்றடைந்தது. பேரணியுடன் இணைந்து வந்த காணாமற்போனோரின் உறவினர்கள், நல்லூர்
வடக்கு வீதியில் வைத்து பேரணிக்கு முன்பாக வந்து ஓலமிட்டு அழுதனர்.
கதறியவர்களில் சிலர் மயங்கி வீழ்ந்தனர். தங்கள் உறவுகள் விடுவிக்கப்பட்டு
தங்களுடன் தங்கள் உறவுகள் வந்து சேரவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக
இருந்தது.
சுமந்திரன்
உள்நாட்டு விசாரணையைக் கோரியிருப்பது தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது!
- மாவை சேனாதிராஜா
தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு இலங்கை அரசின் உள்நாட்டு விசாரணையில்
நம்பிக்கை இல்லை என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான
மாவை சேனாதிராசா தெரிவித்தார். எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிட இருந்த
இலங்கை மீதான சர்வதேச விசாரணை அறிக்கையை வெளியிடாமல் பிற்போடப்பட்டமைக்கு
எதிர்ப்புத் தெரிவித்தும் அதனை திட்டமிட்டபடி மார்ச்சிலேயே வெளியிட
வலியுறுத்தியும் யாழில் இன்று மாபெரும் பேரணியொன்று நடைபெற்றது. இந்தப்
பேரணியின் முடிவில் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள
உள்நாட்டுப் பொறிமுறை தொடர்பிலான கருத்து குறித்து ஊடகவியியலாளர்களால்
எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலையே மேற்கண்டவாறு மாவை சேனாதிராசா
தெரிவித்தார்.
(மேலும்....)
Anatra mandarina
(Foto by Nature & Découverte)

வட மாகாண விவசாய
அமைச்சு ஊழலில் முதலிடம்!
இரணைமடு
குளத்தின் அணைக்கட்டுக்களினை பலப்படுத்துதல் மற்றும் குளத்திலிருந்து
வயலுக்கு நீரை எடுத்துச்செல்லும் கால்வாய்கள் மற்றும் துருசுகளை
புனரமைப்பதில் நடந்ததாக கூறப்படும் ஊழல்களை அம்பலப்படுத்தக்கோரி கிளிநொச்சி
மாவட்ட விவசாயிகள் அரைநிர்வாணப் போராட்டமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இரணைமடு விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் றோமை சேர்ந்த அமைப்பொன்றால்
சர்வதேச விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட 3450 மில்லியன்
நிதியினில் இதுவரை 1200 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு செலவு
செய்யப்பட்ட நிதியினில் சுமார் 300 மில்லியன் வரை மோசடிகள்
இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
(மேலும்....)

வட்டி விவகாரம்
கிழக்கில் பாரியதொரு சமூகச் சிக்கல்
முப்பது வருடகால யுத்தம் ஓய்ந்து விட்ட போதிலும் அது ஏற்படுத்திச் சென்ற
வலிகளும் வடுக்களும் இன்னும் மக்கள் மனங்களை விட்டு அகலவில்லை. இந்நிலையில்
எமது சமூகத்திற்குள் புற்று நோய் போல் புரையோடிப் போய் இருக்கும்.
வட்டிக்குப் பணம் வாங்கும் செயற்பாடு காரணமாக பல குடும்பங்கள் நிர்க்கதி
நிலைமைக்கு வந்துள்ளன. கிழக்கில் வட்டிப் பிரச்சினை என்பது சமூக
சீரழிவுக்குக் காரணமாக உருவெடுத்துள்ளது. மட்டக்களப்பு அம்பாறை
மாவட்டங்களில் பல குடும்பங்கள் இதனால் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன.(மேலும்....)
சென்னையில்
இன்று நடைபெற்ற ஒரு நாள் உண்ணாநிலை போராட்டம்.
விவசாயிகள் நிலத்தையும் பொது நிலத்தையும் எளிதில் கையகப்படுத்த மோடி அரசின்
"அரச கட்டளை"
பாராளுமன்ற விவாதம் இல்லை!
விவசாயிகளின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர்கள் நிலத்தை அனுமதியின்றி
பெரும் முதலாளிகளுக்கு மாற்றுவதைத் தடுக்க வந்ததே நில கையகப்படுத்தல் சட்டம்
- 2013. இந்தச் சட்டத்தின்படி நம் அனுமதியின்றி, விளை நிலங்களை அரசு
கையகப்படுத்தி தனியார் கம்பனிகளுக்கு கொடுக்க இயலாது. முறையாக
பாராளுமன்றத்தில் அமலான இச்சட்டத்தை தற்போது மாற்றி அமைத்து
அரசகட்டளையிட்டுள்ளது மோடி அரசு. சட்டத்தின் எல்லா அம்சங்களையும் நீர்த்துப்
போகச் செய்த இந்த கட்டளையின் புது விதிகளின்படி:
(மேலும்....)
என்று மாறும்
இக்கொடூர அடிமை முறை?
பேருந்திற்காக
காத்திருக்கும் போது நகராட்சியின் இந்த வண்டி வந்து நின்றது. நகராட்சி
பணியாளர் பெரியவொரு குழாயை வண்டியிலிருந்து இழுத்து மழைநீர் வடிகால்
துளையின் மீது வைத்தார். குப்பைகள் அடைப்பினால் மழைநீர் சரிவர வடியாமல்
இருந்ததை அப்போது தான் கவனித்தேன். ஒரு பொத்தானை அவர் அழுத்தி ஒரு நிமிடம்
கூட ஆகவில்லை. அதற்குள் அடைத்திருந்த குப்பை வண்டிக்குள் உள்ளிழுக்கப்பட்டது.
மழைநீர் வடியத் துவங்கியது. வண்டி அருகேயிருந்த மற்ற துளைகளை நோக்கி
நகர்ந்தது. இது நகரத் தூய்மை மேலாண்மையின் ஒருபகுதியான முக்கியப் பணியிது.
(மேலும்....)
மாசி
24, 2015
தமிழ்
தேசியக் கூட்டமைப்புடன் முட்டி மோதி அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை
கிழக்கு
முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்பதே எமது நிலைப்பாடு
தமிழ், முஸ்லிம் உறவு குறித்து காத்திரமான கருத்துகளை
முன்வைத்து வந்த அண்ணன் சம்பந்தன் இப்பொழுது காட்டமான விமர்சன ரீதியான
கருத்துகளை கூறிவருவது ஏன்? இந்த விரிசல் வேண்டுமென்றே அரசியல்
காரணங்களுக்காக ஏற்படுத்தப்படுகின்றதா? அடுத்து வரும் தேர்தலை மையமாக வைத்து
தமிழ் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து இவ்வாறு பேசப்படுகின்றதா? இவ்வாறு
கேள்வி எழுப்பினார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி
நீர் வழங்கல் மற்றும் வடிகாமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம்.
(மேலும்....)
13 வது
திருத்தச் சட்டத்தை உள்ள இடையூறுகள் நீக்குதல் தேசிய நல்லிணக்கம் மற்றும்
அமைதி அடைய வேண்டிய அவசியம் உள்ளது
(அ. வரதராஜப்பெருமாள்)

'பிராந்திய
ஒருங்கிணைப்பு ஆயுத படைகளால் அடைய, ஆனால் சமூகங்கள், தேசிய ஒற்றுமையும்
மட்டுமே அதற்கான அரசியல் செயல்பாட்டில் மூலம் அடைய முடியும். போர் இல்லாத
இங்கு மட்டுமே துப்பாக்கிகள் அமைதி மற்றும் நிலையான அமைதியை நோக்கி எட்ட
குறிக்கிறது. டி-communalized தேசம், ஜனநாயகப்படுத்தினார் அரசியல் அமைப்பு
மற்றும் இஇராணுவமயமற்ற மாநில சரியாகவே இலங்கையில் உண்மை சுதந்திரம் மற்றும்
நிலையான வளர்ச்சி அடைய முடியும், இது ஒரு முற்போக்கான பாதையில் இலங்கை
அரசியல் பொருளாதாரம் வைத்து கட்டாயமாகும். பெரும்பான்மை திமிர் மற்றும்
குறிக்கோள்களை தொடர்ந்து நெருக்கடி, குழப்பம் மற்றும் மோதல்கள்
விசாலமாக்குகிறான் அரசியல் வட்டத்திலிருந்து சுற்றுப்பாதையில் இந்த நாட்டில்
எறிந்து விட்டேன். இலங்கையில் பொது மக்கள் செயல்கள் மூலம் ஆனால் அதிகார பசி
அரசியல்வாதிகள் மூலம் மத, பிரதேச முடியாது இன அடிப்படையில் பிரித்தது
வருகிறது ஒரு பல்தேசிய நாடு. பிரிவினை மற்றும் அழிவு அரசியல் தலைவர்கள்
ஆபத்திற்குட்பட்டுவிடும் மற்றும் சிறுபான்மை தேசிய அந்நியப்படுத்த தமிழ்
குறுங்குழுவாதத்தையே எதிராக சிங்களம் மேலாதிக்கத்தை அரசியல் முறையையே மூலம்
பெரும்பான்மை தேசிய இனம் துரோகம். இலங்கையின் ஐக்கியம் அனைத்து
சக்திவாய்ந்த மேலாதிக்க தலைமை கட்டாயங்களால் ஆனால் நேர்மையான இரக்கம், கருணை,
உண்மை சமரசம் மற்றும் பரஸ்பர ஒருமித்த அடைய முடியவில்லை.
(மேலும்....)
சுமந்திரனின் கொடும்பாவியை எரித்தது நானல்ல; அவரோடு முரண்பாடு இருப்பது
உண்மை
- சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொடும்பாவி
எரிக்கப்பட்டமைக்கும் தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ்
பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். காணாமற்போனோர் தொடர்பில் உண்மை நிலையை
வெளிப்படுத்தல், அரசியல் கைதிகளை விடுவித்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித
உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான
விசாரணை அறிக்கையை மார்ச் மாதம் சமர்ப்பிக்க கோரி கடந்த சனிக்கிழமை
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில், எம்.ஏ.சுமந்திரனின் உருவப்
பொம்மை எரிக்கப்பட்டது.(மேலும்....)
மாசி
24, 2015
Achieving National Reconciliation,
Peace & The 13A
(By
Varatharaja Perumal)
Removing the impediments in the 13th amendment is
imperative to achieve national reconciliation and peace

Territorial integration may be achieved by the armed forces, but
national unity of communities can be achieved only by the
appropriate political process. Absence of war here indicates only
the silence of guns and not the attainment of sustainable peace.
De-communalized nation, democratized political system and
demilitarized State are imperative to rightly put Sri Lankan
political economy in a progressive path through which Sri Lanka can
achieve true independence and sustainable development. Majoritarian
arrogance and ambitions have thrown this country into the orbit of
political vicious circle that persistently enlarges the crisis,
chaos and conflicts. Sri Lanka is a multi-national country which has
been divided ethnically, religiously and regionally not by the
actions of the common people but by the power hungry politicians.
Divisive and destructive political leaders endangered and alienated
the minority nationalities and deceived the majority nationality by
promoting the politics of Sinhala hegemony versus Tamil
sectarianism. Unity of Sri Lanka cannot be achieved by the
compulsions of All Powerful hegemonic leadership but by honest
compassion, true conciliation and mutual consensus.
(more....)
பிப்ரவரி 22
தில்லையாடி வள்ளியம்மை நினைவு தின நூற்றாண்டு இன்று !
தில்லையாடி
வள்ளியம்மை எனும் போராட்ட குணம் கொண்ட வீரப்பெண் மறைந்த தினம் இன்று.
தென் ஆப்ரிக்காவில் ஆட்சியை கைப்பற்றி குடியேறிய ஆங்கிலேயர்கள் அங்கே
இருந்த எண்ணற்ற வளங்களை சுரண்டி அவற்றை தங்கள் நாட்டுக்கு பயன்படுத்தி
கொண்டார்கள் . கரும்பு பண்ணைகள்,சுரங்கங்களில் வேலைப்பார்க்க
கறுப்பினத்தவரை முதலில் வேலைக்கு வைத்தாலும் அவர்கள் பல சமயங்களில்
முரண்டு பிடித்ததால் வேறு வாய்ப்புகளை நோக்கினார்கள் .அப்பொழுது தான்
இந்தியர்கள் முதலிய காலனி நாட்டு மக்கள் கண்ணில் பட்டார்கள் அவர்களை
அங்கே கொண்டு போய் கடுமையான வேலை வாங்கினார்கள் . (மேலும்....)
குளிர்காலத்தின் ஆழமான உறைபனி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்கவர் பனி
கற்பாறைகள் வடிவமாக்கியுள்ளது.
குளிர்காலத்தின்
ஆழ்ந்த உறைபனி நயாகரா நீர்வீழ்ச்சியை கண்கவர் பனி கற்பாறைகளாக
மாற்றியுள்ளதோடு சுற்றுபுறங்களில் உள்ள மரங்களை சுற்றி படிககற்கள்
தொங்குவது போன்று காட்சியளிக்கின்றன. இக்காட்சிகள் உல்லாச பயணிகளை
கவர்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா ஆறு உறைபனியினால்
மூடப்பட்டுள்ளபோதும் வீழ்ச்சி முற்றாக உறைந்து விடவில்லை. ஆனால்
வீழ்ச்சியின் விளிம்பு அருகில் உள்ள பிரமாண்டமான பனி கட்டமைப்பு
சுற்றுலா பயணிகளை காந்தமாக ஈர்க்கின்றதென கூறப்பட்டுள்ளது. இந்த உறைபனி
நிலைமை விரைவில கரைந்து விடும் என எதிர்பார்க்க முடியாதெனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. நயாகரா பகுதி வெப்பநிலை தான இதற்கு காரணம்.
‘கடவுள் ஒரு
இடதுசாரியா’?
உலகின் பல பகுதிகளிலும் அரசியலின் ஆளுமையைப் பெற்றிருப்பவர்களும்,
ஆயுதங்கள் வைத்திருப்பவர்களும், சமயத்தை ஒரு ஆயுதமாகப் பாவித்து, மத
ரீதியாகவும், இனரீதியாகவும், சாதியின் பெயர் சொல்லியும் பல கொடுமைகளை
மக்களுக்குச் செய்து கொண்டிருக்கிறார்கள்.அவர்களின் ஆணவத்துக்கு
முன்னால் மக்கள் குரலுக்கு மதிப்பில்லை.
ஆனால் இங்கிலாந்தில் மக்களின் குரலாக, சமயத்தலைவர்களின் அடிக்கடி
கேட்பதுண்டு. அரசியல் வாதிகள் பேராசையால், ஆணவத்தால், தார்மீகமற்ற
முறையில் நடந்துகொள்ளும்போது,மதத்தலைவர்கள் தர்மத்துக்காகக் குரல்
கொடுத்த பல வரலாறுகள் உள்ளன.(மேலும்....)
பிரபாகரன்
உதவியால் ஒரு முறை மஹிந்த என்னை வென்றார் இப்போ அவரை தோற்கடிக்கத்
தயார்
மஹிந்த ராஜபக்ஷ தன்னுடன் ஒருமுறையே தேர்தலில் போட்டியிட்டதாகவும், அதில்
சுமார் ஒன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே அவர் வெற்றி
பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அதுவும்
பிரபாகரனின் உதவியால் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோல் அவரை
மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர சிலர் தயாராக இருப்பதாகவும், அதை தான்
வெறுக்கவில்லை எனவும், அதன் ஆரம்பமே நுகேகொடை கூட்டம் எனவும் அவர்
கூறியுள்ளார். எதுஎவ்வாறு இருப்பினும் எதிர்வரும் பொதுத் தேர்தலில்
மஹிந்த ராஜபக்ஷ போட்டியிட்டால், அவரைத் தோற்கடிக்கத் தான் தயார் எனவும்
பிரதமர் குறிப்பிட்டுள்ளார். வென்னப்புவ பகுதியில் இடம்பெற்ற
நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார். அது சரி நீங்கள்
காமடி கீமடி ஒன்றும் விடல்லைதானே.....?
சிஹல ராவய
உள்ளிட்ட 20 பௌத்த அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படத்
தீர்மானம்!
சிஹல ராவய உள்ளிட்ட இருபது சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்கள் ஒன்றாக
இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக செயற்படத் தீர்மானித்துள்ளன. ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் நாட்டுக்கு எதிராக செயற்பட்டு
வருவதாக அந்த அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன. குறிப்பாக தேசியப்
பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு
வருவதாகத் தெரிவித்துள்ளன. நாட்டின் தேசியப் பாதுகாப்பை உறுதி செய்து
கொள்ள இவ்வாறு புதிய அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட உள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளன. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்சவை ஆதரிக்க உள்ளதாக குறித்த சிங்கள பௌத்த அமைப்புக்கள்
அறிவித்துள்ளன.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் சுதந்திரக் கட்சிக்காக வாக்களித்த
வாக்காளர்களின் நலனை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என
தெரிவித்துள்ளன.
சவூதி
அரேபியாவில் ஜனநாயகமும் சமத்துவமும்..
சவூதி அரேபியாவில் ஜனநாயகம் இல்லை, சமத்துவம் இல்லை என்பது போல 'தமிழ்
இந்து' நாளிதழில் ஒரு கட்டுரை வந்திருக்கும் போல. நான் படிக்கவில்லை.
ஆனால் அதற்குக் கடும் எதிர்வினை ஆற்றி முஸ்லிம் அமைப்பு ஒன்றும், சில
தனி நபர்களும் முகநூலில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். எனக்கென்னவோ
இந்த எதிர்வினைகள் தேவையில்லை என்றே தோன்றுகிறது.சவூதி அப்படி ஒன்றும்
விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட நாடல்ல. அங்கு நடப்பது ஒன்றும்
கலீபாக்களின் காலத்திற்கு இணையான ஆட்சியுமல்ல. நானும் அங்கு
சென்றுள்ளேன்.
(மேலும்....)
மாசி
23, 2015
கிழக்கு மாகாண சபையில் அமைச்சரவையை ஏற்படுத்துவதில் மீண்டும் இழுபறி
கிழக்கு
மாகாண சபையில் அமைச்சரவையை ஏற்படுத்துவதில் மீண்டும் இழுபறி நிலை
ஏற்பட்டுள்ளது. மாகாண சபையில் அங்கம் வகிக்கும் சர்வகட்சிகளையும் கொண்ட
தேசிய அமைச்சரவை உருவாக்கப்படுமென மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப்
ஹக்கீம் அறிவித்துள்ள நிலையில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் அமைச்சுப் பதவிகள் கட்சித் தலைவர்களினாலே
தீர்மானிக்கப்படுமே ஒழிய முதலமைச்ச ரினால் அல்ல என்று மாகாண
முதலமைச்சர் ஹாபிஸ் அஹமட் தெரிவித்தார். மாகாண முதலமைச்சராக தான்
செயற்பட்டாலும் கட்சித் தலைவர்களே இந்த விடயத்தில் முடிவெடுக்க
வேண்டுமெனவும் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொடுப்பதில் தனக்கு எவ்வித
தொடர்பும் இல்லையென்று அவர் கூறினார். மத்திய அரசின் கூட்டு அரசாங்கம்
கிழக்கு மாகாணத்திலும் பிரதிபலிக்க வேண்டுமென்பதற்காகவே சகல கட்சிகளும்
ஒன்றிணைந்து கிழக்கில் ஆட்சியமைக்க முன்வந்தன. கட்சித் தலைவர்களினாலே
கிழக்கின் முதலமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்
தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்
ஆகியோர் சேர்ந்து நடத்துகின்ற பேச்சுவார்த்தையின் இறுதியில் கிழக்கு
மாகாணத்தின் அமைச்சுப் பதவிகள் பகிர்ந்தளிக்கப்படும். இவர்களிடையே
தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி
மைத்திரிபால கடந்தவாரம் இந்தியா சென்றிருந்தார். ஆகவே, இன்று அல்லது
நாளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியை சந்திப்பார். இதன் பின்னர்
கிழக்கு மாகாணசபையின் அமைச்சரவை முடிவு செய்யப்படும்.
ஐநா அறிக்கை
ஒத்திவைப்புக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் ஆர்பாட்டம்
இலங்கை தொடர்பான ஐநா அறிக்கை செப்டெம்பர் மாத அமர்வுக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பான ஐநா அறிக்கை திட்டமிட்டபடி ஐநா
மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் காணாமல்
போயிருப்பவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும் என்றும் சிறைகளில் வாடும்
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை
முன்வைத்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இன்று
நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள்
உணர்ச்சிவசப்பட்டவர்களாகக் காணப்பட்ட அதேவேளை, தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் புகைப்படத்துடன்
உருவப் பொம்மை ஒன்றையும் இழுத்துவந்து எரியூட்டியுள்ளனர்.
ஆப்பிரிக்க
பெண் பாலியல் பலாத்காரம், விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவு!
ஓடும் காரில் ஆப்பிரிக்க பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை
மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். ஓடும் காரில்
30 வயது ஆப்ரிக்க பெண் ஒருவர் ஒரு கும்பலால் டெல்லி கிழக்கில் உள்ள
சில்லா எல்லை பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதன் பின்
அந்த பெண்ணை காரில் இருந்து தள்ளிவிட்டு மர்ம கும்பல் தப்பிச் சென்றது.
இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் டெல்லி
போலீசார் 4 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக
மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடும்படி மாநில உள்துறைக்கு
முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார். மேலும், இது தொடர்பான அறிக்கை
ஒன்றை டெல்லி போலீசிடம் இருந்து பெறவும் மாநில அரசு முடிவு செய்து
உள்ளது.
அறிக்கை
தாமதம்: என்ன பயன்?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் பாதுகாப்புப் படையினருக்கும்
இடையிலான போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித
உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக ஐ.நா. மனித உரிமை
பேரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தாமதப்படுத்துமாறு
இலங்கை அரசாங்கம் அப்பேரவையிடம் விடுத்த கோரிக்கையை பேரவை ஏற்றுக்
கொண்டுள்ளது. இது இலங்கை அரசாங்கம் பெற்ற மாபெரும் வெற்றியாகும் என
வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறியிருக்கிறார்.
ஆனால், அது எவ்வாறு நாட்டுக்கு வெற்றியாகப் போகிறது என்பது
தெளிவாகவில்லை.(மேலும்....)
விமல்
வீரவங்சவுக்கு சி.ஐ.டியினர் அழைப்பு
விசேட வாக்குமூலமளிப்பதற்கு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்சவை கொழும்பிலுள்ள
குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு குற்றப்புலனாய்வு
பிரிவினர் அழைத்துள்ளனர். இன்று திங்கட்கிழமை காலை 9.50க்கு
சமூகமளிக்குமாறே விமல் வீரவங்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக
சமூகமளிக்குமாறே அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர
முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸமில் தெரிவித்தார்.
67வது
சுதந்திரதின வைபவத்தில் தலைவர்களை கொலை செய்ய சதி
67வது சுதந்திர தின நிகழ்வின் இராணுவ அணிவகுப்பின்போது தேசிய
அரசாங்கத்தின் தலைவர்களைக் கொல்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தமை
தொடர்பில் அரசாங்கம் எச்சரிக்கப்பட்டி ருந்ததாக வாராந்தப்
பத்திரிகையொன்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக தனக்கு நெருக்கமான
வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற எச்சரிக்கையைத் தொடர்ந்தே ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன சுதந்திர தின நிகழ்வில் குண்டுதுளைக்காத அங்கியை
அணிந்திருந்ததாக குறித்த பத்திரிகையின் அரசியல் பத்தியில்
குறிப்பிடப்பட்டுள்ளது. சுதந்திரதினத்தின் போது நடைபெறும் இராணுவ
அணிவகுப்பு மரியாதையின் போது தலைவர் அல்லது தலைவர்களைக் கொல்வதற்கு
சதித்திட்டம் தீட்டப்பட்டி ருந்துள்ளது. 1981ஆம் ஆண்டு எகிப்தில்
அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த அன்வர் சதாத் கொல்லப்பட்டிருந்தது
போன்றதொரு சம்பவத்தை இலங்கையின் சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளத்
திட்டமிட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பீ.எம்.யூ.டி.பஸ்நாயக் கவுக்கு
புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியுள்ளனர். இதனை அடுத்து விரைந்து
செயற்பட்டு சதியை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும்
யார்மீது குறிவைக்கப்பட்டிருந்தது என்பது தொடர்பில் தெரிவிக்கப்பட்டிரு
க்கவில்லையென்றும் அந்தப் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்துக்கு அருகில் நடைபெற்ற 67வது சுதந்திர தின நிகழ்வின் போது
இராணுவ அணிவகுப்பு மரியாதையில் இராணுவத் தளபாடங்களோ அல்லது
விமானப்படையின் விமானங்களையோ காட்சிப்படுத்தத் தேவையில்லையென ஜனாதிபதி
அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாசி
22, 2015
விமல்
வீரவங்சவின் மனைவி கைது
முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்
வீரவங்சவின் மனைவியான ஷசி வீரவங்ச கைது செய்யப்பட்டுள்ளார் என்று
பொலிஸார் தெரிவித்தனர். முன்னாள் அமைச்சரின் மனைவி 2010ஆம் ஆண்டு,
பொய்யான தகவல்களை கொடுத்து இராஜதந்திர கடவுச்சீட்டை
பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த கடவுச்சீட்டு 2009ஆம் ஆண்டு மே மாதம்
24ஆம் திகதி காலாவதியான அவரது சாதாரண கடவுச்சீட்டுடன் ஒப்பிட்டு
பார்க்கையில் அதில் அடங்கியுள்ள தகவல்கள் வித்தியாசமானதாக காணப்பட்டமை
குறிப்பிடத்தக்கதாகும்.
(மேலும்....)
பாலச்சந்திரனின் மரணம்
தமக்கு
எதுவும் தெரியாதாம்! புலிகளே கொன்றிருக்கலாமாம்!!
– பொன்சேகா
சர்வதேச
ரீதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்திய பிரபாகரனின் இளைய மகன்
பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும்
புலிகளே அவரைக் கொன்றிருக்கலாம் என மறைமுகமாகவும் முன்னாள் இராணுவத்
தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பிரபாகரனின் இளைய மகன்
தொடர்பில், இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு எந்த அறிக்கையும்
கிடைக்கவில்லை என்றும் அவரது சடலம் கிடைத்தது என்றுகூட தனக்கு அறிக்கை
கிடைக்கவில்லை என்றும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். (மேலும்....)
முதல்
அமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கவில்லை என்பது
மட்டக்களப்பு மாவட்ட
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் அறியாமையே
கிழக்கு
மாகாண சபையில் முதல் அமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு வழங்கவில்லை
என்று அரசாங்கத்தை குற்றம் சுமத்துவது அதிலும் ஐக்கிய தேசிய கட்சி
ஏமாற்றி விட்டது என்று கூறுவது மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய
கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா. அரியநேத்திரன் சீ.
யோகேஸ்வரன் ஆகியோர்களின் அரசியல் அறியாமையே ஆகும் என்று ஐக்கிய தேசிய
கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் ஆ.ஜெகன் தெரிவித்துள்ளார். கிழக்கு
மாகாண சபை முதலமைச்சர் விடயம் தொடர்பாக விடுத்துள்ள ஊடாக அறிக்கையிலேயே
இவர் இவ்வாறு தெரிவித்து உள்ளார். (மேலும்....)
கோட்டா என்ற பெயரில் இரகசிய முகாம்
700 தமிழர்கள்
தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல்
- சுரேஷ்
ஆவேசம்
பொட்டன் துணுக்காய் வதை முகாம்
3500 மேற்பட்ட
தமிழர்கள் தடுத்து வைப்பு
- சுரேஷ்
மௌனம்

இரகசிய முகாமில்
இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா அல்லது அவர்களுக்கு என்ன நடந்தது
என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். முகாமில் இருந்தவர்கள்
தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர், தடுத்து வைக்கப்பட்டிருந்த
ஏனையோருடன் தொடர்புகளை வைத்திருந்த முகாம் அதிகாரிகள் இடமளிக்கவில்லை எனவும்
தகவல்களை வழங்கியவர்கள் கூறினர்.பொட்டனின்
இரகசிய முகாமில் இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டார்களா அல்லது
அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்த வேண்டும்.
முகாமில் இருந்தவர்கள் தனித்தனியாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர், தடுத்து
வைக்கப்பட்டிருந்த ஏனையோருடன் தொடர்புகளை வைத்திருந்க
பொட்டனின்
கொலைப் பிரிவு.
இடமளிக்கவில்லை எனவும் தகவல்களை வழங்கியவர்கள் கூறினர்.
இதில் அநேகர்
சுரேஷ் இன் முன்னாள் சகாக்கள். இவர்களைப் பற்றி சுரேஷ் எப்போதும் வாய்
திறக்கவில்ல.
(மேலும்....)
31
வருடங்களுக்கு பின்
இலங்கை ஜனாதிபதி
அமெரிக்கா விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் காலங்களில் அமெரிக்காவுக்கு
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்வார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அவ்வாறு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரி க்காவுக்கு விஜயம் செய்வாராயின் இலங்கை
ஜனாதிபதி ஒருவர் 31 வருடங்களுக்கு பின் அமெரிக்கா விஜயம் செய்வது இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்ட் ரீகன் இருந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி
ஜே.ஆர். ஜெயவர்தன 1984ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ
விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப் பிடத்தக்கது. இதேவேளை இந்திய பிரதமர்
நரேந்திரமோடி அடுத்த மாதம் 13 ஆம் திகதி மூன்று நாள் உத்தியோகபூர்வ
விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். இந்திய பிரதமர் ஒருவர் 1987 ஆம்
ஆண்டுக்கு பின்னர் இலங் கைக்கு விஜயம் மேற்கொள்வதும் குறிப் பிடத்தக்கது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன அரசுடனான
தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நெகிழ்வுப் போக்கும் உள்ளக விமர்சனங்களும்
தோல்வி கண்ட
மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்பத்தினரும் மீண்டுமொரு சந்தர்ப்பத்துக்காக
தயாராகி வருவதை அவர்களின் முனைப்புகள் உணர்த்துகின்றன. அரசியலில் இது புதிய
விடயமல்ல. அவர்களுக்கு அந்த உரிமை இருக்கிறது. எனவேதான் மைத்திரிபால
சிறிசேன மிக மிக நிதானமாக நகர்வுகளை மேற்கொள்ள வேண்டியவராக இருக்கிறார்.
ஏனெனில் மகிந்த தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அதற்கு அங்கீகாரம்
தரவேண்டிய கட்சித் தலைமையில் மைத்திரிபால இருக்கிறார். உண்மையில் வரப்
போகும் பொதுத் தேர்தல் கட்சிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும்
குழப்பமானதாகவே இருக்கப் போகிறது. அத்தோடு இனவாதமே பிரதான பிரச்சார
தொனிப்பொருளாகவும் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில் முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கூட தோல்வியடைந்தபின் மக்களிடையே பேசிய போது இன
வாதம் கலந்த வார்த்தைகளைத்தான் உதிர்த்தார்.
(மேலும்....)
ஒன்பது
மணித்தியாலங்களுக்குள் சாதாரண பிரஜையானவர் மஹிந்த ராஜபக்'
இப்போது என்ன செய்கிறார்?
இப்போது தங்காலையில் உள்ள அவரது கார்ள்டன் இல்லத்துக்கு தினசரி அவரைப்
பார்க்க வருகை தரும் மக்களுடன் அவர் பேசுகிறார். தினசரி அவரைக் காண மக்கள்
குழுக்களாக பஸ்களில் வருகை தருகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கை மீண்டும்
இணைத்த ஒரு தலைவர் அவர். நிச்சயமாக போரை வெற்றி கொண்டதுக்கான பெருமையை
கோருவதற்கான ஒரு தலைவர் அவர்தான், அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால்,
2015 ஜனாதிபதி தேர்தலில் அவர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் ஒன்பது
மணித்தியாலங்களுக்குள் மக்கள் மஹிந்தவை ஒரு சாதாரண பிரஜையின் நிலைக்கு
கொண்டு வந்து விட்டார்கள்.
(மேலும்....)
லிபியாவில்
தலைதூக்கும் ஐ.எஸ்.பிரச்சினை
கிழக்கு லிபியாவின் மத்தியதரைக் கடலோர நகரான டெர்னா சுமார் 80,000 மக்கள்
தொகை கொண்ட அழகான நகராகும். 18 நூற்றாண்டு பள்ளிவாசலில் கறுப்பு நிற கொடி
பறக்கின்றது. இங்கு ஷரியா நீதிமன்றம், இஸ்லாமிய பொலிஸார் என்று கூறிக்கொண்டு
வாகனங்கள் அங்கும் இங்கும் வட்டமிடுகின்றன. நகரத்தில் இருக்கும்
பல்கலைக்கழகத்தில் ஆண்களையும் பெண்களையும் பிரிக்க நடுவால் சுவர்
எழுப்பப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழத்தில் சட்டத்துறை, இயற்கை விஞ்ஞானம்
மற்றும் மொழிகள் ஆகிய கல்வி பீடங்கள் மூடப்பட்டு விட்டன. சிரியா,
ஈராக்கிற்கு வெளியில் இஸ்லாமிய தேசம் குழு நிறுவியிருக்கும் முதலாவது நகரின்
தோற்றம்தான் இவ்வாறு காட்சி அளிக்கிறது.
(மேலும்....)
விபூசிகாவின் கோரிக்கை வெற்றி பெறுமா...?
பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது
தாயான ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு அவரின் மகள் விபூசிகா ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் எழுதியுள்ளார். தற்போது மகாதேவா
ஆச்சிரமத்தில் பராமரிக்கப்பட்டுவரும் சிறுமி விபூசிக்கா, தனது தாய் கைது
செய்யப்பட்டமைக்கான விபரம் முழுவதையும் கடிதமுலம் ஜனாதிபதிக்கு
எழுதியனுப்பியுள்ளார். இதேவேளை, தேசிய நிறைவேற்றுக் குழு தற்போதைய
அரசாங்கத்தின் 100 நாள் செயற்திட்டம் தொடர்பாக முடிவுகளை எடுக்கும் குழுவாக
விளங்குவது குறிப்பிடத்தக்கது. அக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (T
N A) அங்கம்வகிப்பது குறிப்பிடத்தக்கது.
மாசி
21, 2015
வடபுலத்து
முதல்வரின் பொருள் பொதிந்த வார்த்தைகள்
‘இதுவரைக்
காலமும் ஈடுபட்டு வந்த முரண்பாட்டு அரசியலில் இருந்து விடுபட்டு இனியேனும்
இணக்க அரசியலில் ஈடுபட வழி ஏற்பட வேண்டும். இணக்க அரசியல் என்பதற்கு இதற்கு
முன் இருந்தவர்கள் கொடுத்த வியாக்கியானத்தை நாங்கள் இங்கே குறிப்பிடவில்லை.
இரு மக்கள் கூட்டங்கள் என்ற அடிப்படையில் எமக்கிருக்கும் உரிமைகளை உளமாற
எடுத்துரைத்து மனிதாபிமான அடிப்படையில் அவற்றை அர சாங்கத்துடன் பேசி
பெற்றுக்கொள்வதையே நான் இணக்க அரசியல் என்று பொருள் கொள்கிறேன்’ என்பதாக
வடமாகாண முதல்வர் பேசி யிருக்கிறார். ‘இதற்கு இரு சாராரிடமும் மனோபக்குவம்
இருக்க வேண்டும். தமது மக்க ளின் உதவியாலும் ஜனாதிபதி பதவிக்கு
வந்திருக்கிறார். இந்த வகையில் ஜனாதிபதியின் அரசாங்கம் எமது அரசாகும்,
அதனிடம் நாம் கோரவும் அவற்றை அரசாங்கம் வழங்கவும் இனி எந்தத் தடையும்
இருக்கப்போ வதில்லை’ என்பதாக முதல்வர் விக்னேஸ்வரனின் நம்பிக்கை மிகுந்த
வார்த்தைகள் அமைந்திருக்கின்றன.
(மேலும்....)
கோட் விவகாரத்தில் மோடிக்கு மேலும் நெருக்கடி
நடத்தை விதிமுறைகளை
மீறியதாக பரபரப்பு புகார்
சர்ச்சைக்குரிய கோட் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலும் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. நடத்தை விதிமுறைகளை மீறி இந்த கோட்டை வெளிநாடு வாழ் இந்திய
தொழிலதிபரிடம் இரு ந்து அவர் வாங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி
வருகின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமா சமீபத்தில் இந்தி யாவில் சுற்றுப்பயணம்
செய்தபோது பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் அவரை
சந்தித்து பேசினார். அப் போது மோடி அணிந்திருந்த கோட் அனைவரின் கவனத்தையும்
ஈர்த்தது. அந்த கோட்டில், 'நரேந்திர தாமோதர் மோடி" என மிகச்சிறிய
எழுத்துக்களில் எழுதப்பட் டிருந்தது. இதன் விலை 10 இலட்சம் ரூபாய் என் றும்
கூறப்பட்டது.
(மேலும்....)
மஹிந்தவை
நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு
நாட்டுக்கு எதிரான சதிச்செயலில் ஈடுபட்டார், பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை
மீற முற்பட்டமை, என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ உட்பட மேலும் 06 பேருக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 31ஆம் திகதி
நீதிமன்றத்தில் ஆஜராகும் படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதம நீதியரசர் கே.சிறிபவன், நீதியரசர்களான பிரியசாத் டெப், ஈவா வனசுந்தர
தலைமையிலான நீதியரசர்களடங்கிய குழுவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தாக்கல் செய்த
குற்றச்சாட்டுக்கள் அடங்கிய மனுவின் அடிப்படையிலேயே இந்த உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் 25
மாவட்டங்களிலும் இராணுவ படைகளை குவித்து குழப்ப நிலையை உருவாக்க முனைந்தார்
என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இம் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது
அரசியலமைப்பு சாசனத்தின் படி அடிப்படை உரிமை மீறல் செயற்பாடாகும் எனவும்
அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை பரிசீலனைக்கு உட்படுத்திய
போதே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு கடத்த
நடவடிக்கை!
முன்னிலை சோசலிச கட்சியின் மத்திய குழு உறுப்பினர், அவுஸ்திரேலிய பிரஜையான
குமார்குணரத்தினத்தை விரைந்து நாடுகடத்த நடவடிக்கை எடுப்பதாக
குடிவரவுத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் கட்டுப்பாட்டாளர் நிஹால்
ரணசிங்க இதனைக் கூறியுள்ளார். தம்மை கைது செய்யவோ, நாடுகடத்தவோ
தடைவிதிக்குமாறு கோரி, குமார் குணரத்தினம் உயர் நீதிமன்றத்தில்
சமர்ப்பித்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தது. இதனை
அடுத்து அவரது விமான சீட்டுடன் குடிவரவுத்திணைக்களத்துக்கு வருகைத் தருமாறு
உத்தரவிட்டிருப்பதாகவு, குடிவரவுத்திணைக்கள கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.
அவர் வர மறுக்கும் பட்சத்தில் அவருக்கு எதிராக காவற்துறை ஊடாக நடவடிக்கை
எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமது வீசா காலத்தை
நீடிக்குமாறு கோரி குமார் குணரத்தினத்தால் குடிவரவுத் திணைக்களம் ஒன்றுக்கு
கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, முன்னிலை சோசலிச கட்சி
தெரிவித்துள்ளது.
மாசி
20, 2015
பெருமாளும்,
தேவரும், பிள்ளையாரும் பயணித்த பாதையில் விக்கினேஸ்வரரும்
இதுவரை
காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள் எதிர்காலத்தில் இணக்க
அரசியலில் ஈடுபடப் போகின்றோம் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன்
தெரிவித்தார். வடக்கு மாகாண உள்ளுராட்சி மீளாய்வுக் கூட்டம் யாழ்.
பொதுநூலகத்தில் அமைச்சர் கருஜயசூரிய தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து
கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும்
தெரிவிக்கையில், இதுவரை காலமும் எதிர்ப்பரசியலில் ஈடுபட்டு வந்த நாங்கள்
இனிவருங்காலங்களில் இணக்க அரசியலில் ஈடுபடப் போவதாகவும், புதிய ஜனாதிபதியின்
அரசாங்கம் எமது அரசாங்கம் என்பதுடன், இந்த அரசாங்கத்திடம் நாம் கோரவுள்ள
கோரிக்கைகளை வழங்க இனி எந்தத் தடையும் இருக்காது என்றும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணசபையை வரதராஜப்பெருமாள்
பொறுப்பெடுத்தபோது புலிகள் அவரை துரோகிகள் என்றனர்.டக்லஸ் தேவானந்தா
அமைச்சராகியபோது புலிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அவரை துரோகிகள்
என்றனர்.பிள்ளையான் கிழக்கு மாகாணசபையை உருவாக்கியபோது அனைவரும் அவரை
துரோகிகள் என்றனர்.இப்போது வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் அதே
இணக்க அரசியலை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று திருவாய்
மலர்ந்தருளியுள்ளார்.இப்போது யார் யாரை துரோகிகள் என்பது?(unmaikal.com)
வடமாகாண சபையின்
பொறுப்புணர்வற்ற போட்டுடைக்கும் காரியம்
மனித உரிமைகள்
பற்றிய அக்கறைகளை இங்கு யாரும் குறைகூறி விட முடியாது. ஆனால் அது 'நெஞ்சில்
உரமுமின்றி நேர்மை திறனுமின்றி' செய்யும் வஞ்சனையாக இருக்கமுடியாது.
எனவே சிந்தித்து தூரநோக்கில் எமது மக்களுக்கு எவையெவை நன்மைபயக்கும் அவல
வாழ்விலிருந்து விடுதலையையும் விமோசனத்தையும் பெற்றுத்தரும் என்ற நன்
நோக்கிலிருந்து செயற்பட வேண்டும். அற்ப அதிகார தேர்தல் நோக்கங்களுக்காக
மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தீர்மானங்கள் தவிர்க்கப்படல் வேண்டும்.
வடக்கு மாகாணசபையின் தீர்மானம் இனப்பிரச்சனைக்குத் நிரந்தர தீர்வு காண
விரும்பும் அண்டை நாடு மற்றும் சர்வதேச சக்திகளுக்கு அசௌகரியத்தையும்
சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான அவ நம்பிக்கையை மக்களால்
தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் ஏற்படுத்துவது எமது பிரச்சனைகளை நாளடவில்
யாரும் பொருட்படுத்தாத நிலைமைக்கு கொண்டு சேர்ப்பிக்கும்.(மேலும்....)
வட மாகாண
முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பு
முதலமைச்சர்
விக்னேஸ்வரன் தீர்மானம்
நிறைவேற்ற வேண்டும்
வடமாகாண சபையில்
இனப்படுகொலைப் பிரேரணையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ள தமிழ்க் கூட்டமைப்பு
அந்த மாகாணத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்
பட்டமை இனச் சுத்திகரிப்பு என்ற தீர்மானத்தை வடமாகாண சபையில் நிறைவேற்ற
வேண்டுமென அமீன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் - முஸ்லிம் உறவை வலுவூட்டவும்
தமிழர் மீதான முஸ்லிம்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதற்கும் இந்தத்
தீர்மானம் பெரிதும் வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இனப்படுகொலைத் தீர்மானத்துக்கு வடமாகாண சபையில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்
கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியமையை அவர் நினைவு படுத்தியுள்ளார். சுமார் கால்
நூற்றாண்டு கால அகதி வாழ்வில் துன்பப்படும் வட மாகாண முஸ்லிம்களுக்கு விடிவு
கிடைக்க வடமாகாண சபை ஆக்கபூர்வமான செயற்பாடுளை நல்குவது காலத்தின்
தேவையாகவுள்ளது.
(மேலும்....)
தமிழ் தேசிய
கூட்டமைப்புக்கு தலைமை தாங்கி வழி நடத்த டக்ளஸ் தேவா தயார்! -
பசுபதி சீவரத்தினம்
எமது இணக்க
அரசியல் வழிமுறையை தமிழ் தேசிய கூட்டமைப்பு சரணாகதி அரசியல் என்று சொல்லி
கடந்த காலங்களில் கிண்டல் செய்து வந்திருக்கின்றது. எதிர்ப்பு அரசியலை
தொடர்ந்து நடத்தி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்,
வாய்ப்புக்கள், தீர்வுகள் ஆகியவற்றை தவற விட்டது.முள்ளிவாய்க்கால்
பேரழிவுக்கு தமிழினத்தையே கொண்டு போய் தள்ளியது. இப்போது முதலமைச்சருக்கு
ஏற்பட்டு இருக்கக் கூடிய திடீர் ஞானம் அப்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு
தலைவர்களுக்கு ஏற்பட்டு இருந்து இருந்தால் தமிழினம் எப்போதோ தப்பிப்
பிழைத்து இருக்கும் என்று கழிவிரக்கம் கொள்ளவே எம்மால் இப்போது
முடிகின்றது.(மேலும்....)
காவுபோன
பேச்சும் எழுத்தும்
பேச்சுக்களும்
பேனாக்களின் மூச்சுக்களும்
தலைநகர் டென்மாக்கில்
ஒரு தலையாய சந்திப்பு 15.02.2015
சுதந்திரத்தை தன்னுள் சுட்ட கூரான்கள்
சுடுகோலுடன் சுற்றித்திரிந்தன
அல்லாதவரை அழைத்தபடி
இருளுக்குள் இருள்மர்
(மேலும்....)
இலங்கையர்களை திருப்பி
அனுப்பியது அவுஸ்திரேலியா
படகு
மூலம் அவுஸ்திரேலியா சென்ற நான்கு இலங்கை பிரஜைகள் அவுஸ்திரேலிய எல்லை
பாதுகாப்பு அதிகாரிகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலிய கோகஸ்
தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த இலங்கையர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி தடுத்து
நிறுத்தப்பட்ட இவர்கள் மறுநாள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக
அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பீட்டர் டுடோன் தெரிவித்துள்ளார். இலங்கை
கடற் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல் காரர்களின் செயற்பாடுகளை தடுத்து
நிறுத்த அவுஸ்திரேலிய அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக குடிவரவு அமைச்சர்
பீட்டர் டுடோன் குறிப்பிட்டுள்ளார்.
துறைமுக நகரம்
உடன்படிக்கையை இலங்கை மதிக்க வேண்டும்
- சீனா
கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் போவதாக
தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கத்தின் முடிவுக்கு சீனா சம்மதம்
தெரிவித்துள்ளது. எனினும் கடந்த கால அரசாங்கம், வேறொரு நாட்டுடன்
செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறை அரசாங்கம் மதிக்க வேண்டுமெனவும் இது
ஜனநாயக நாடொன்றின் கடமையென்றும் சீன துதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஆதரவில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ‘போர்ட்சிட்டி’
எனப்படும் துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப் போவதாக
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில்
தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்குமுகமாகவே சீன துதரக அதிகாரி
மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
மனிதன்
கொண்டுள்ள விண்வெளி சிந்தனைகள் எதிர்காலத்தில் மாற்றமடைவதற்கான அறிகுறி
பூமியில் வாழ்வதைப் போன்ற உயிரினங்கள் ஏனைய பிரபஞ்சங்களிலும்
இருக்கலாம்
விண்வெளித்
துறையில் மனிதர்களின் ஆராய்ச்சி ஒரு எல்லைக்கு அப்பால் செல்ல இயலவில்லை.
விண்வெளி குறித்த எண்ணற்ற கொள்கைகளும் கருத்துக்களும் வானியலர்களின்
சிந்தனையில் உதித்தவையே. வேற்றுக் கிரகங்கள் இருப்பதற்கான நிரூபணமும் இல்லை.
அதே சமயம் சாத்தியம் இல்லை என்று கூறிவிடவும் முடியாது. சமீபத்தில் வேற்றுக்
கிரக மனிதர்கள் அனுப்பும் தகவல் விண்வெளியில் கலந்து விடுவதால் அது நம்மை
எட்டுவதில்லை என்ற புதிய கருத்தும் வானியலர்களிடையே நிலவுகிறது. விண்வெளித்
துறையில் நாம் பயன்படுத்தும் கொள்கைகள் அனைத்தும் பழையவையே.
எடுத்துக்காட்டாக ஐன்ஸ்டைனின் ஒளியின் வேகம் இறுதியானது என்ற கருத்தை
தற்போது விஞ்ஞானிகள் நியூட்ரினோவின் வேகத்தினைக் கொண்டு மாற்றி
எழுதியுள்ளனர். ஐன்ஸ்டைன் கொள்கை மாறுமா மாறாதா என சிறிது காலம்
காத்திருந்து பார்க்கலாம். எனவே விண்வெளியினைப் குறித்து மனிதனின்
சிந்தனைகள் எதிர்காலத்தில் மாறும் வாய்ப்புள்ளதோடு மட்டுமின்றி விரிவடையவும்
செய்யும். (மேலும்....)
மாசி
19, 2015
திருக்கோவிலில்
முன்னாள் புலி
உறுப்பினர் இனியபாரதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலங்களில் காணாமல் போன தமது உறவுகளை
மீட்டுத்தருமாறு கோரி திருக்கோவிலில் தமிழ் மக்கள் நேற்று 18ம் திகதி புதன்
கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருக்கோவில் தம்பிலுவில் மத்திய
சந்தை கட்டடத் தொகுதிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.இவ்
ஆர்ப்பாட்டத்தில் கடந்த யுத்த காலத்திலும் அதன் பின்னரும் காணாமல் போன
மற்றும் கடத்தப்பட்ட நூற்றுக்கணக்கான தமது உறவுகளை மீட்டுத்தருமாறும் நீதி,
வழங்குமாறும் கோரி காணாமல் போனோரின் உறவினர்கள் பதாகைகளை ஏந்திய வண்ணம் கதறி
அழுது ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர்
பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.கே. கேமந்த டிக்கோவிட்டவிடம் மகஜரை
கையளித்தார். இம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது, கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் கே. புஸ்பகுமார் என்னும் இனியபாரதி என்பவர் எல்.ரி.ரி.ஈ.
இயக்கத்தில் அம்பாறை மாவட்டத்தின் பொறுப்பாளராக இருந்த காலத்திலும் பின்னர்
முன்னாள் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராக இருந்த போதும் எங்களது
உறவுகளை விசாரணைக்கு என கடத்திச் சென்றார். இவர்களின் தகவல்கள் இன்னும்
இல்லை. அவரால் பலாத்காரமாக ஏழை பொது மக்களிடம் இருந்து உடமைகள் சொத்துக்கள்
அபகரிக்கப்பட்டன. அவர் இருந்த காரியாலய வளாகத்தில் உறவினர்கள் கொன்று
புதைக்கப்பட்டனர். தற்போது அவர் வசிக்கின்ற திருக்கோவில் தம்பிலுவில்
மத்திய சந்தைக்கு அருகில் உள்ள வீட்டில் பதுங்கு குழியில் ஆயுதங்கள் மறைத்து
வைக்கப்பட் டுள்ளன. மற்றும் இங்கு நகைகளும் உண்டு இவை தொடர்பில் விசாரணைகளை
நடத் துமாறு மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள்
மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதியின் வீட்டை முற்றுகையிட்டு கோசம்
எழுப்பினர்.
மீள்குடியேற்ற வசதிகள்
பூர்த்தியானதும் அகதிகள் நாடு திரும்புவதே உகந்தது
இலங்கை அகதிகளை
திருப்பி அனுப்புவது மட்டுமே இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.
இருப்பினும், இலங்கையில் குடியமர்த்துதல் பணிகள் முழுமையாக முடிந்த பிறகே
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தமிழக
அரசு பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க்
கிழமை (17/02) உரையாற்றிய ஆளுநர் ரோசய்யா, “இலங்கையில் இடம்பெயர்ந்து வாழும்
தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்ட பின்னரே, இங்கு அகதி களாக வாழும்
இலங்கைத் தமிழர்கள் தாயகம் திரும்புவது குறித்து சிந்திக்க வாய்ப்பு
ஏற்படும் என்பதே தமிழக அரசின் கருத்து” என்பதை ஆணித்தரமாக முன்வைத்துள்ளார்.
இலங்கையில் மீள்குடியமர்த்துதல் என்பது மிகவும் சிரமமான பணியாக இருந்து
வருகிறது. யாருடைய நிலம், யாருக்குச் சொந்தமானது, யார் யாருடைய வாரிசு
என்பதெல்லாம் தேடிக்கண்டடைய முடியாத விஷயங்களாக உள்ளன.(மேலும்....)
வடக்கு,
கிழக்கில் வாக்களிக்கும் சுதந்திர சூழலை ஏற்படுத்தியதால் தோல்வியடைந்தேன் -
மஹிந்த ராஜபக்ஷ
நாட்டில் முப்பது வருடங்கள் நிலவிய கொடிய யுத்தத்தை முடித்து, நாட்டை
ஐக்கியப்படுத்தி, இனங்களுக்கு இடையே ஐக்கியத்தை ஏற்படுத்தியதால் தான் எனக்கு
எதிராக வடகிழக்கு மக்கள் வாக்களித்து என்னைத் தோற்கடித்தனர். வட கிழக்கு
மக்களுக்கு வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை நானே பெற்றுக்கொடுத்தேன் இங்கு
வாக்களிக்கும் சூழல் இல்லாதிருந்தால் நானே வெற்றி பெற்றிருப்பேன் என மஹிந்த
ராஜபக்ஷ தங்காலையில் தெரிவித்தார். தங்காலை நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற
அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவி
அதிகாரிகள் சங்க மாநாட்டில் அவர் உரையாற்றி னார். ஐ. தே. கட்சி அரசாங்கம்
1980ல் சிறிமாவோ பண்டார நாயக்கவின் குடியுரிமையை பறித்தது. பலாத்காரத்தால்
மக்களின் உரிமைகளை இல்லாமற் செய்ய இயலாது. நாட்டில் 58 லட்சம் பேர் எனக்கு
வாக்களித்தனர் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மனிதம் இன்னும்
வாழுகின்றது
எங்க ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில்...
ஒரு சின்ன குழந்தை(கையில் தூக்கு வாளியுடன்) :
அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வர சொன்னாங்க...!காசு நாளைக்கு
தராங்களாம்...
ஹோட்டல் நடத்துபவர்: ஏற்கனவே கணக்கு நிறைய பாக்கி இருக்கு....
அம்மாக்கிட்டே சொல்லுமா....தூக்கு வாளியை தா சாம்பார் ஊத்தி தாரேன்....
(இட்லி பார்சலையும்,சாம்பார் நிறைத்த
தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்).
குழந்தை:சரி...அம்மாட்ட சொல்றேன்...போயிட்டு வரேன் அண்ணே....
(குழந்தை கிளம்பிவிட்டாள்)
அந்த கடையில் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம் ஆதலால் நான் கேட்டே விட்டேன்...
நான்:நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க.... ?
ஹோட்டல் நடத்துபவர்:அட
சாப்பாடுதானே சார்....நான் முதல்
போட்டுத்தான் கடை நடத்துறேன்.இருந்தாலும்
இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க
மனசு வரல சார்...அதெல்லாம்
குடுத்துடுவாங்க...என்ன கொஞ்சம் லேட்
ஆகும்....எல்லாருக்கும் பணம்
சுலபமாவா சம்பாதிக்க முடியுது....
நான்: வீட்டுலயே சமைச்சி சாப்பிடலாம்ல
ஹோட்டல் நடத்துபவர்: குழந்தை கேட்டிருக்கும்.. அதான்
சார் அனுப்பி இருக்காங்க.. நான் குடுத்துடுவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை
நான்
பொய்யாக்க விரும்பல சார்....
நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு ...
வந்துடும் சார்....
ஆனா இப்போதைக்கு அந்த குடும்பம் சாப்டுதுல அதுதான் சார் முக்கியம்
கடவுள் இல்லைன்னு யார் சார்
சொன்னது...
(dinakaran
daily newspaper)
இலங்கையர்களுக்கும் இந்தியாவின் வருகை வீசா
முன்கூட்டியே வீசா
பெற்றுக்கொள்ளாது, இந்திய விமான நிலையத்தில் வீசாவை பெற்றுக்கொள்ளும்
வகையிலான "ஒன் அரைவல் வீசா" வை (வருகை வீசா) இலங்கையர்களுக்கும் வழங்க
இந்தியா தீர்மானித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு இந்தியா
இந்த சலுகையை வழங்கியிருந்த போதிலும் அல் கொய்தா, தலீபான் போன்ற
தீவிரவாதிகள், இலங்கையைக் களமாகப் பயன்படுத்தி இந்தியாவுக்குள்
ஊடுறுவக்கூடும் என்ற அச்சம் காரணமாக இலங்கைக்கு அதற்கான வாய்ப்பு இதுவரை
காலமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இலங்கையில் ஆட்சிக்கு வந்துள்ள
புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய விஜயத்துக்கு பெருமை
சேர்க்கும் வகையில், இந்தியாவினால் 'ஒன் அரைவல் வீசா' வழங்கும் நாடுகளின்
பட்டியலில் இலங்கையும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், எதிர்வரும்
காலங்களில் இலங்கையர்கள் முன்கூட்டியே வீசா பெற்றுக்கொள்ளாது, இந்திய விமான
நிலையத்தில் வீசாவை பெற்றுக்கொள்ள முடியும். முதல் கட்டமாக இலங்கையின்
அரசாங்க அதிகாரிகளுக்கு இந்த வீசா வழங்கப்பட உள்ளது. அடுத்த கட்டமாக அனைத்து
இலங்கையர்களுக்கும் இந்த 'ஒன் அரைவல் வீசா' வழங்கப்பட உள்ளதாகத்
தெரிவிக்கப்படுகிறது.
ஆம் ஆத்மி
boys, come on....
தற்போது
நடைபெற்றுள்ள மாநிலத் தேர்தலில் பா.ஜ.கவை மக்கள் நிராகரித்துள்ளனர்.
பா.ஜ.கவின் கடந்த 10 மாத கால ஆளுகையின் மீதான தீர்ப்பாகவே நாம் இதை
எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒபாமா வருகையின்போது மோடி அரங்கேற்றிய
கோமாளித்தனங்கள், டெல்லி கிறிஸ்தவ ஆலயங்களின் மீதான தாக்குதல்களில் சட்ட
ஒழுங்கைக் கையில் வைத்துள்ள மோடி அரசு காட்டிய திமிர்த்தனம், கோட்சேயைக்
கொண்டாடுவது மற்றும் 'கர்வாபசி'க் கலாட்டாக்கள், திட்டக் கமிஷன் முதலான
ஜனநாயக நிறுவனங்களின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றை மக்கள் ஏற்கவில்லை
என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் நிறுவிவிட்டன.
(மேலும்....)
மாசி
18, 2015
கிழக்கு
மாகாண சபையில் அமைச்சு பொறுப்புகளை ஏற்றது கூட்டமைப்பு
கிழக்கு மாகாண சபையில் யார் முதலமைச்சராவது, ஆட்சியமைப்பது என்பது தொடர்பில்
மு.கா.வுக்கும் த.கூட்டமைப்புக்கும் இடையில் எழுந்த கருத்து முரண்பாடுகள்
பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கிழக்கு
மாகாண சபையில் இரண்டு அமைச்சுக்களையும் - பிரதி தவிசாளர் பதவியையும்
பெற்றுக் கொள்ள த.கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது. இரண்டு அமைச்சுப்
பதவிகள் மற்றும் பிரதித் தவிசாளர் பதவிகளுக்கு யாரை நியமிப்பது அவர்களுக்கு
எந்தெந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன போன்ற விபரங்களை எதிர்வரும்
24ம் திகதிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிடும். தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் கட்சித் தலைமை; உயர் மட்ட செயற்குழு மற்றும் கிழக்கு மாகாண
சபையில் அங்கம் வகிக்கும் பதினொரு உறுப்பினர்களும் கூடி ஆராய்ந்து இதற்கான
இறுதி முடிவினை எட்டவுள்ளதாகவும், இரு கட்சிகளுக்குமிடையில் இணக் கப்பாடு
ஏற்பட்டதையடுத்து அண்மைக் காலமாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி
வைக்கப்பட்டுள்ளது. மத்தியில் கூட்டுக் கட்சிகளின் தேசிய அரசாங்கமொன்று
ஆட்சியிலுள்ள நிலையில் அதற்கு முன்மாதிரியாக கிழக்கு மாகாண சபையிலும்
அனைத்துக் கட்சிகளும் இணைந்த கூட்டு அரசாங்கம் ஒன்று அமைய வேண்டும் என்பது
தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலியுறுத்தி வந்தது.
குமார்
குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு
முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் குணரட்ணத்தின் மனுவை உயர்
நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரை கைதுசெய்வதை அல்லது நாடுகடத்தலை
தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலனைக்கு எடுத்து கொண்ட
போதே உயர் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.
நுகேகொடையில்
போக்குவரத்து நெரிசல்
நுகேகொடை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசல்
ஏற்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத்
தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி
நுகேகொடையில் இன்று பொதுக் கூட்டமொன்று நடைபெற்று வருகின்றது. இதில்
விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, உதய கம்பன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார
ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். இங்கு உருவாக்கப்பட்டிருக்கும்
வீதித்தடைகள் காரணமாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து
பொலிஸார் தெரிவித்தனர்.

தீர்வு தந்தால் அரசில்
இணைவோம்!
-
சுரேஷ்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைத்தால் தேசிய அரசாங்கத்தில் இணைய
தயாராக இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனை சீனாவின் ஊடகம் ஒன்றுக்கு
தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பொருட்டு தீர்க்கப்பட வேண்டிய பல்வேறு
விடயங்கள் இருக்கின்றன. மனித உரிமை மீறல்கள் போன்றவையும் இதில் உள்ளடங்கும்.
அரசாங்கம் தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் இந்த விடயம் தொடர்பில் தமிழ்
தேசிய கூட்டமைப்பு அவதானம் செலுத்தும். அதேநேரம் தற்போதைய முக்கிய தேவையாக
இருக்கும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சிறிலங்காவின்
அரசாங்கம் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தினால், தேசிய அரசாங்கத்துடன்
இணைந்து கொள்ள கூட்டமைப்பு தயாராக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
ஜீசஸ் காப்பாற்றுங்கள்
ஐ.எஸ்
தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கிறிஸ்தவர்களின் கடைசி வார்த்தை
எகிப்தில்
21 கிறிஸ்தவர்களை ஐ.எஸ் தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதற்கு
போப் ஆண்டவர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.வாட்டிக்கனில் உள்ள
ஸ்கொட்லாண்ட் தேவாலயத்தில் உரையாற்றிய போப் பிரான்சிஸ், எகிப்தில் ஐ.எஸ்
தீவிரவாதிகளால், 21 காப்டிக் (Coptic) கிறிஸ்தவர்களை கொன்றது
கண்டிக்கத்தக்கது. மேலும், கத்தோலிக்க, ஆர்தோடக்ஸ், காப்டிக் அல்லது
லூதர்ன்ஸ் என எந்த பிரிவை கொண்டிருந்தாலும் அவர்களின் நம்பிக்கைகள்
கிறிஸ்துவரை சார்ந்து உள்ளதால் அவர்கள் அனைவரும் ஒரே மதம் தான்.
பலியானவர்கள் எந்த குற்றமும் செய்யாத நிலையில் அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ற
ஒரே காரணத்திற்காக தான் கொல்லப்பட்டிருப்பதாகவும், அவர்கள் இறப்பதற்கு
முன்பு ‘Jesus help me’ என்பது தான் கடைசி வார்த்தைகளாக இருந்ததாக போப்
தெரிவித்துள்ளார். 21 கிறிஸ்தவர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து எகிப்து
மற்றும் லிபியா நாட்டு ராணுவங்கள் அங்குள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள்
மீது கடுமையான தாக்குதல்களை நடத்தியது. வான்வழி தாக்குதல்களை
தீவிரப்படுத்தியதால் ஐ.எஸ் பகுதிகளில் குண்டுகளை பொழிந்து பெரும் சேதாரத்தை
ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் தொடர்பாக பல புகைப்படங்களை எகிப்து நாட்டு
பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாதிகளின்
உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும்,
தாக்குதல் குறித்து பேசிய லிபியா ராணுவ அதிகாரி Saqr al-Jaroushi, வான்வெளி
தாக்குதல் நடத்தியபோது பொதுமக்கள் சுமார் 50 பேர் இறந்துள்ளதாக தெரிவித்தார்.=
மேலும், ராணுவ தாக்குதல், சமயங்களில் பொது மக்கள் குழந்தைகளுடன்
பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
உலகில் உள்ள
பெரும்பான்மை கணனிகளில் அமெ. உளவு மென்பொருள் இருப்பது அம்பலம்
அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறு வனத்தால் (என்.எஸ்.ஏ.), வெஸ்டன் டிஜிடல்,
சீகேட், டொஷிபா மற்றும் ஏனைய முன்னணி நிறுவனங்கள் உற் பத்தி செய்யும்
கணனிகளின் ஹாட் டிரைவ்களில் உளவு மென்பொருளை மறைத்து வைத்திருக்கும் விடயம்
அம் பலமாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக் காவுக்கு உலகில் இருக்கும் மிகப்
பெரும்பான்மையான கணனிகள் ஊடே உளவு வேலையில் ஈடுபட முடியும் என்று ரஷ்யாவை
மையமாகக் கொண்டு இயங்கும் கணனி பாது காப்பு மென்பொருள் தயாரிப்பு நிறு
வனமான காஸ்பர்ஸ்கி கண்டறிந் துள்ளது. உலகில் உள்ள 30 நாடுகளின் தனி நபர்
கணனிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உளவு மென்பொருள் பாதிப்பு
கண்டறியப்பட்டிருப்பதாக காஸ்பர்ஸ்கி குறிப்பிட்டுள்ளது. இதில் ஈரான் அதிகம்
பாதிக்கப்பட்டிருப்பதோடு அடுத்த இடங்களில் ரஷ்யா, பாகிஸ்தான், ஆப்
கானிஸ்தான், சீனா, மாலி, சிரியா, யெமன் மற்றும் அல்ஜீரியா நாடுகள்
காணப்படுகின்றன. அரசு மற்றும் இராணுவ நிறுவனங்கள், தொலைத்தொடர்பு
நிறுவனங்கள், வங்கிகள், வலுசக்தி நிறுவனங்கள், அணு ஆராய்ச்சியகங்கள் மற்றும்
இஸ்லாமிய செயற் பாடுகள் இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக காஸ்பர்ஸ்கி
குறிப்பிட்டுள்ளது.
(மேலும்....)
வித்தியின்
தலைமையில் ஒஸ்லோவில் புலிகளின் அரசியல் பிரிவு உதயம்?
விடுதலைப்
புலிகளின் பொட்டம்மான் பிரிவு மற்றும் நெடியவன், விநாயகம் குழுவினர் உட்பட
அனைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் ஒஸ்லோவில் வித்தியின்
தலைமையில் சந்தித்து அரசியல் பிரிவு ஒன்றை உத்தியோகபூர்வமாக அறிவிக்க
உள்ளனர். இது தொடர்பான இறுதி வாதப்பிரதிவாதம் எதிர்வரும் முதலாம் திகதி
பிற்பகல் 4.30 மணிக்கு நோர்வேயில் வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த மிகவும்
மதிப்பு மிக்க நோர்வே அரசியல் மற்றும் இராஜதந்திர கலந்துரையாடல் நடைபெறும்
மண்டபத்தில் ஒஸ்லோவில் நடைபெற உள்ளது. தமிழ்த் தேசியக் கொள்கைகளை அரசியல்
ரீதியாக முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக முன்னாள்
‘உதயன்’ மற்றும் ‘சுடரொளி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியரும், தமிழ்
ஊடகத்துறையின் ஜாம்பவான்களில் ஒருவருமான நடேசபிள்ளை வித்தியாதரன்
வழிகாட்டலில் புதிய அரசியல் கட்சியொன்று வடக்கில் உதயமாக இருப்பதாக
நம்பகரமாகத் தெரியவருகிறது. இலங்கையில் தமிழர் சிங்களவர் இடையே ஒரு
கொதிநிலையை தொடர்ந்தும் பேணவிரும்பும் மேற்குலக நாடுகள் நோர்வேயின்
ஆசீர்வாதத்துடன் அரங்கேற்றும் நிகழ்வாக இதனை அரசியல் அவதானிகள்
பார்க்கின்றனர்
காலம் - 28.02.2015
நேரம் - பிற்பகல் 4.30 மணிக்கு
இடம் - Litteraturhuset, Wergelandsveien 29, 0167 Oslo
மாசி
17, 2015
மாலைக்கு செலவிடும் காசை மக்களுக்கு செலவிட்டால்.....? -
சாகரன்

முரண்பாடுகள்
தீர்ந்ததால் விரைவில் கிழக்குமாகாண சபை அமைச்சரவை
பல்வேறு முரண்பாடுகள் களையப்பட்டு அரசியல் கட்சிகளிடையே இணக்கப்பாடு
எட்டப்பட்டுள்ளதால் கிழக்குமாகாண சபையின் அமைச்சரவை அடுத்த வாரத்துக்குள்
உருவாக்கப்படும் என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் அஹமட் நேற்று
தெரிவித்தார். நீண்ட இடைவெளி, இழுபறிக்குப் பின்னர் கிழக்கு மாகாணசபை
முதலமைச்சர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில்
கிழக்கு முதலமைச்சராக என்னை தெரிவு செய்தமைக்கு கட்சியின் தலைவருக்கும்,
மாகாணசபை அங்கத்த வர்களுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து செயற்படும் சர்வகட்சி அரசாங்கத்தை நெறியாக
முன்னெடுத்துச் செல்வல்ல, கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு
செல்லும் பணிப் பெண்கள், சிற்றூழியர்களின் எண்ணிக்கை முற்றாக இடைநிறுத்துவது
ஆகிய இரண்டு விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்ளேன். முதலாவதாக, கிழக்கு
மாகாணசபை சகல கட்சிகளையும் கொண்ட அரசாங்கமாக செயற்படுவதால் இந்த
அமைச்சரவையில் சகல கட்சிகளும் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் எந்தவொரு கட்சியும் கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை பலத்தைப்
பெறவில்லை. ஆகவே எந்தவொரு கட்சிக்கும் தனியாக ஆட்சியமைக்கும் பெரும்பான்மை
இல்லாமையால் சகல கட்சிகளையும் ஒன்றிணைத்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை
காணப்படுகிறது. குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு இந்த அமைச்சரவையில்
அங்கத்துவம் பெற வேண்டும். யாருக்கும் யாராலும் பதவிகளும், அமைச்சுகளும்
வழங்கப்படவில்லை. மாறாக அவர் அவர்களின் உரிமைகளையே அவர்கள் பெற்றுக்
கொள்கிறார்கள்.

தமிழ்த்
தலைவர்கள் முன் இருக்கும் சவால்கள்
போரின் போது போரில் ஈடுபட்டிருந்த இரு சாராரினாலும் சாதாரண மக்கள்
கொல்லப்பட்டார்கள். சாதாரண மக்களாக இருந்தாலும் சந்தேகிக்கப்பட்ட எல்லோரும்
இரு சாராரினாலும் கொல்லப்பட்டனர். போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள்,
மக்களை கேடயமாக பாவித்தார்கள். அரச படைகள் அதனை அறிந்தும் தாக்குதல்களை
நடத்தினார்கள். இறுதியில் சரணடைந்த புலிகளின் தலைவர்களான எழிலன், யோகி
போன்றோர்களும் சாதாரண மக்களும் படையினரால் 16 பஸ்களில் ஏற்றிச்
செல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் திரும்பி வரவில்லை என்றும் காணாமற்போனோர்
தொடர்பான ஆணைக்குழு முன் கூறப்பட்டது.
இது, பிரச்சினையின் ஒரு புறமாகும். மறுபுறத்தில் போரின் போது அதன்
கோரத்தன்மையை தாங்காது ஆயிரக் கணக்கான தமிழர்கள் அரசாங்கத்தின் கோட்டையான
கொழும்பில் தான் தஞ்சமடைந்தார்கள். இன்னமும் வாழ்கிறார்கள். போர்
முடிவடையும் கட்டத்தில் போரில் சிக்குண்ட மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப்
பகுதிகளுக்கு வரவே முயற்சித்தனர். இந்த நிலையில் தான் இன ஒழிப்பு என்ற வாதம்
வெகுவாக சர்ச்சைக்குரியதாகிறது.
(மேலும்....)
புலிகளின்
பிரதித்தலைவர்
மாத்தையாவுக்கு மரண தண்டனை!
காட்டிக் கொடுத்த தேசத்துரோகி எனக் குற்றம்'
துணை புரிந்த இருநூறு புலிகளும் படுகொலை.
பெரிய புலி பிரபாகரனின் தீர்ப்பு.
இந்தப்
புலிகளை வளர்ப்பவர்களுக்கும் ஆதரவளிப்பவர்களுக்கும் இவர்களின் கதை ஒரு
பாடமாகட்டும்.
1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு தீவிர
உறுப்பினராகவும், 1987ம் ஆண்டு இந்திய அமைதிகாக்கும்படையினருக்கும்
புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த நாட்தொட்டு தமிழீழ விடுதலைப்
புலிகளின் பிரதித் தலைவராகவும் இருந்து வந்த மாத்தையா எனவும், மாத்தையா சிறி
எனவும் நெருக்கமானவர்களால் சிறி எனவும் அழைக்கப்பட்ட வல்வெட்டித் துறையைச்
சேர்ந்த மகேந்திரராஜா புலிகளாலேயே மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்.
பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக புலிகளின் இருப்பிலும், வாழ்விலும்,
வளர்ச்சியிலும்......எனைய தமிழ் அணிகளுடைய பிரதானமான தலைவர்களையும்.....
சாதாரண உறுப்பினர்களையும் படு கொலைகள் செய்து....புலிகளின் அமைப்பைக்
கட்டிக்காப்பதிலும் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்து வந்துள்ள மாத்தையா
சிறி மகேந்திரராஜாவுக்கு இறுதியாக பிரபாகரன் வழங்கியுள்ள பரிசு மரண தண்டனை.!!!!!
அளித்துள்ள பட்டம் சமூகத் துரோகி.காட்டிக் கொடுத்த தேசத் துரோகி.
இது மாத்தையாவோடு மட்டும் முடியவில்லை. மாத்தையாவோடு சேர்ந்து திரிந்து புலி
அமைப்புக்காக உழைத்து வந்த இருநூறு துணைப் புலிகளும் பிரபாகரனின்
மரணதண்டனைத் தீர்ப்புக்கு உள்ளாக்கப் பட்டு படுகொலை செய்யப்பட்டுள்னனர்.
(மேலும்....)
பாதுகாப்பு
அமைச்சில் நுளைந்தார் மைத்திரி மருமகன்
பாதுகாப்பு அமைச்சின் மக்கள் தொடா்பாடல் அதிகாரியாக ஜனாதிபதி மைத்திரியின்
மூத்த மகளின் கணவரான திலின சுரன்ஜித் நியமிக்கப்பட்டுள்ளா். மேலும்
பாதுகாப்பு அமைச்சின் ஊடக செயலாளராக நீதியமைச்சா் விஜயதாச ராஜபகஷவின் மகன்
ரக்கித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளா். முன்னாள் ஜனாதிபதி செய்த குற்றத்தை
இன்றைய ஜனாதிபதி செய்கின்றாரா என்கிற ஐயம் பலரிடமும் ஏழுந்துள்ளமை
குறிப்பிடத் தக்கது.
காதலர்தினம்
மாசி 14ஐ காதலர்தினம் என்று கண்டவர் நிண்டவர்கள் எல்லோரும் கொண்டாட
விளைகிறார்கள். காதலை முழுமையாக அனுமதிக்காத சமூகங்களிலும் காதலர்தினம்
கொண்டாடப்படுகிறது. காதல் என்றால் என்ன என்பதை பலவாறு வரையறுக்கும் சமூ
கங்கள் அண்மைக்காலங்களின் ஐரோப்பாவின் காலணித்துவம்போல் காதலர்தினமும்
கீழத்தேயநாடுகளுக்குப் படையெடுத்துவந்து வெற்றியும் கண்டுள்ளது.
இந்தவெற்றியின் பின்னால் ஒளிந்திருக்கும் உண்மைகள் என்ன என்பதைத்
தேடமுயல்கிறது பார்வை யின் பக்கங்கள்
(மேலும்....)
கொல்லப்பட்ட
துருக்கிப் பெண்ணின் சவப்பெட்டியை தூக்கிச்சென்ற பெண்கள்
தெற்கு துருக்கியில் கற்பழிக்க முயன்று கொல் லப்பட்ட 20 வயது யுவதியின்
இறுதிக் கிரியையில் உள்ளுர் இமாமின் எதிர்ப்பையும் மீறி பெண்கள்
சவப்பெட்டியை தூக்கிச் சென்றுள்ளனர். முர்சின் நகரில் கடந்த சனிக்கிழமை
இடம்பெற்ற இறுதிக் கிரியையில் பெண் ஸகளை ஒதுங்கி நிற்குமாறு இமாம் கோரிய
போதும் அதனையும் மீறி நூற்றுக்கணக்கான பெண்கள் முன்வரி சையில் இருந்துள்ளனர்.
இதன்போது பெண்கள் சவப்பெட்டியை தூக்கி நெரிசல் மிக்க வீதியின் ஊடாக
சென்றதாக துருக்கியின் ஹரியத் பத்தி ரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஒஸ்கெகன்
அஸ் லான் என்ற பெண்ணின் கொலை துருக்கியில் பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இந்த பெண் ணின் எரிக்கப்பட்ட சடலம் பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை
மீட்கப்பட்டது. கொலையு டன் தொடர்புபட்டு பஸ் ஓட்டுநர், அவரது தந்தை மற்றும்
நண்பர் ஒருவர் கைது செய் யப்பட்டுள்ளனர்.
மாசி
16, 2015
நல்லாட்சி!
கள்ளாட்சியாக மாறுகிறது!
மஹிந்த – ஜோனை
பாதுகாக்கும் ரணில்!
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தார், மற்றும்
ஊழல்வாதிகளுக்குகு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும்போது, பொலிஸ்
துறைக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர் ஜோன் அமரதுங்க விசாரணைக்கு இடையூறு
விளைவிப்பதாகவும், பக்கச் சார்பாக செயற்படுவதாகவும் குற்றம்
சுமத்தப்பட்டுள்ளது. ஊழல்கள் தொடா்பாக பல சான்றுகள் கிடைக்கப்பெற்றும்
இதுவரை விசாரணை என்ற போா்வையில் காலம் தாழ்த்தும் திட்டமிட்ட செயற்பாடே இடம்
பெற்று வருவதாகவும் இதற்கு பின்னணியில் ஜோன் அமரதுங்கவின் அதிகாரம்
இருப்பதாகவும் அறிய வருகிறது. முன்னைய ஆட்சிக் காலத்தில், எதிரணியில்
இருந்து கொண்டு ஜோன் அமரதுங்க, மஹிந்தவுக்கு நெருக்கமான சிலருடன் வர்த்தக
மற்றும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் தெரிய
வந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த தரப்புக்குத் தாவும்
எண்ணத்தில் இருந்த இவர், கடைசி நேரத்தில் அந்த நிலைப்பாட்டைக்
கைவிட்டிருந்தார். எதிர்க்கட்சி இவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை
கொண்டு வர முயற்சிக்கும் தறுவாயில்கூட, தனி ஆர்வம் காட்டி தனக்கு மிக
நெருக்கமான இவரைப் பாதுகாக்கும் முயற்சிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
விஜயகலாவிற்கும்
கொலை மிரட்டலாம்….
தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில்
மைத்திரி அரசின் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்
முறைப்பாடு பதிவு செய்துள்ளார். நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட
சிலர் தன்னை அச்சுறுத்தினர் எனத் தெரிவித்து இன்று அதிகாலை முறைப்பாட்டினைப்
பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்
மற்றும் கிளிநொச்சியிலிருந்து ஈபிடிபியை வெளியேற்றும் போராட்டத்தை
முன்னெடுக்கப்போவதாக விஜயகலா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரிமை,
அதன் எல்லை, மற்றும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஒரு அழகிய தீர்ப்பு
- அ.மார்க்ஸ்
[முகநூல் முதலான வலைத்தளங்கள் பல தரப்பினரும் சந்திக்கும் ஒரு ஜனநாயக ஊடகம்.
முன் தணிக்கைகள் சாத்தியமில்லாத இந்த உலகம் ஒரு புதிய மொழியை உருவாகியுள்ளது.
இது பல்வேறு சாத்தியங்களை மட்டுமின்றி சில ஆபத்துக்களையும் தன்னனகத்தே
கொண்டுள்ளது. இதை எவ்வாறு எதிர்கொள்வது? கருத்துரிமைத் தடைச் சட்டங்கள்
இதற்குத் தீர்வாகுமா? கருத்துரிமை குறித்துத் தொடர்ந்து நடைபெற்று வரும்
விவாதத்தில் இக்கட்டுரையில் குறிப்பிடப்படும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின்
இந்தத் தீர்ப்பு மிக்கியமான ஒன்று]
கருத்துரிமை மற்றும் கருத்துரிமையின் எல்லை ஆகியவற்றுக்கிடையேயான முரண்
குறித்த விவாதம் அத்தனை எளிதாக முடிவுக்குக்கு வரக் கூடியதல்ல.
சொல்லப்போனால் அந்த விவாதம் முடிவுக்குக் கொண்டு வரப்படக் கூடாது.
கருத்துரிமைக்கும் அதனுடைய எல்லைக்கும் இடையேயான இழு பறி தொடர்ந்து கொண்டே
இருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து. (மேலும்....)
ஜனாதிபதி
மைத்திரிக்கு டெல்லியில் மகத்தான வரவேற்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இந்தியாவுக்கான நான்கு நாள்
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று மாலை இந்திரா காந்தி சர்வதேச
விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகத்தான
வரவேற்று அளிக்கப்பட்டது. இந்திய மத்திய இணை அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா மற்றும்
உயர் அதிகாரிகள் விமான நிலையத்தில் ஜனாதிபதியையும் அவரது பாரியாரையும்
வரவேற்றனர். ஜனாதிபதியையும் பாரியாரையும் தங்கும் ஹோட்டலில் இலங்கை
சிறுவர்கள்இருவர் வரவேற்றனர். வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவிர,
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தர்சன் செனவிரத்ன ஆகியோரும் அங்கு
பிரசன்னமாகியிருந்தார்.
கொலை செய்யப்பட்ட
பூர்வீகக் குடிப் பெண்களுக்காக நீதி கேட்டு பேரணி!
கனடாவில் காணாமற்போன மற்றும் கொலை செய்யப்பட்ட பூர்வீகக் குடிப்
பெண்களுக்காக நீதி கேட்டு பேரணிகள் நடத்தப்பட்டுள்ளது. காதலர் தினத்தை
முன்னிட்டு கனடாவில் கடந்த சில வருடங்களாக இவ்வாறான பேரணிகள் நடத்தப்பட்டு
வருகின்றன. கனடாவின் வன்குவர், ரொறன்ரோ. ஒட்டாவா, மொன்றியல், வினிபெக்,
கல்கரி, எட்மன்டற் மற்றும் சஸ்கற்றூன் ஆகிய நகரங்களில் இந்தப் பேரணிகள்
ஏற்பாடு செய்யப்பட்டன. கனடா மட்டுமல்லாது, அமெரிக்காவின் சில இடங்களிலும்
இவ்வாறான பேரணிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 1991ம் ஆண்டு, டௌன்ரௌன்
வன்குவரில் பூர்வீகக் குடிப் பெண் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து
இவ்வாறான முதலாவது பேரணி நடத்தப்பட்டது. மேலும், இவ்வாறு கொலை செய்யப்பட்ட
பூர்வீகக் குடிப் பெண்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு மறுப்புத்
தெரிவிக்கும் கனடாவின் கன்சவேற்றிவ் அரசாங்கத்தின் மீது பல்வேறு
விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண்

இலங்கையின்
வரலாற்றில் நாட்டின் முதல் பெண்மணியாக தமிழ் பெண் ஒருவர் விளங்கின்றார்
என்பது இது வரை ஊடகங்களில் வெளிவந்து இராத செய்தி ஆகும். புதிய
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாரியார் யாழ்ப்பாண தமிழர் ஆவார். இவரின்
பெயர் ஜெயந்தி. மைத்திரிபால சிறிசேன சிறிய வயது முதல் மார்க்ஸியத்தில்
மிகுந்த ஈடுபாடு கொண்டவராக விளங்கினார். இவர் ஐ. சண்முகதாஸன் தலைமையிலான
இலங்கை கமியூனிஸ்ட் கட்சியிலேயே முதன்முதல் அரசியலில் ஈடுபட்டார். தலைவர்
சண்முகதாஸனுக்கு நெருக்கமான தோழர்களில் ஒருவராக காணப்பட்டார். இவரின்
பாரம்பரிய இல்லத்தில் இன்றும் கால் மார்க்ஸ், லெனின், மாவோஓ போன்ற
தலைவர்களின் புகைப்படங்களை காண முடிகின்றது. மார்க்ஸிய ஈடுபாடும், தலைவர்
சண்முகதாஸனுடனான தொடர்பும் இவருடைய காதல் திருமணத்துக்கு ஊக்கிகளாக அமைந்தன.
வடமாகாண
சபையின் தீர்மானம்
கொழும்பில்
ஒன்றும் வடக்கில் வேறும் கூறி விக்னேஸ்வரன் இரட்டை வேடம்
வடமாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் தற்போதைய அரசுக்கோ ஜனாதிபதிக்கோ எதிரானது
அல்ல வென்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசுக் கெதிரானதே
அத்தீர்மானமென வடமாகாண முதலமைச்சர் புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவிடம்
கூறியிருப்பது விக்னேஸ்வரனின் வழமையான ஏமாற்று அரசியலை காட்டுவதாக வட மாகாண
எதிர்க்கட்சி தலைவர் சி. தவராஜா குறிப் பிட்டுள்ளார். முதலமைச்சர்
விக்கினேஸ்வரன் குறித்த தீர்மானத்தை சபையில் சமர்ப்பித்த போது அதற்கு
விளக்கமளித்து உரையாற்றும் போது, தற்போதைய அரசு மீதான நம்பிக்கையீனத்தையும்,
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது அவர் தமிழ்
மக்களின் கோரிக் கைகளை தட்டிக்கழித்ததையும், பிரதமரின் மருமகனான தற்போதைய
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்து காணி,
இராணுவக் குறைப்பு தொடர்பாக வெளியிட்ட கருத்துக்களும் தமதுக்கு பலத்த
ஏமாற்றத்தையும், விசனத்தையும் ஏற்படுத்தியதாகவும், இவற்றையெல்லாம் கவனத்தில்
கொண்டே பொருத்தமான நேரத்தில் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளதாகவும்
கூறியிருந்தார். மக்களை உசுப்பேற்றி அரசியல் நடத்தும் இவர்கள் மத்திய
அரசுடன் தமது சுய தேவைகளுக்காக நெருக்கமான உறவுகளை பாதுகாத்து வருவதை நாம்
ஏற்றுக் கொள்ளவில்லை.
சுதந்திரக்கட்சியோ, ஐ.தே.கட்சியோ
அறுதிப்
பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அமைக்க தேவையில்லை
நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு
ஏற்படும் வகையில் முன்னாள் ஜனாதிபதி செயற்படமாட்டார் என நம்புவதாக
எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். கடந்த
ஜனாதிபதித் தேர்தலில் 58 இலட்சம் பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இது அவருக்குக் கிடைத்
தனிப்பட்ட வாக்குகள் அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் யார்
போட்டியிட்டிருந்தாலும் பாரிய வாக்கு வங்கி அவர்களுக்கு இருந்திருக்கும்.
இது தனிப்பட்ட வாக்குகள் அல்ல என்றும் அவர் கூறினார்.
(மேலும்....)
மாசி
15, 2015
திருமண
மண்டபங்களில் கூட இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட்தான்...
திருமணம்
நடைபெறும் மண்டபங்களில் வைக்கப்பட்டிருக்கும் தொலைகாட்சிகளில் கூட இந்தியா
- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிதான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. உலகக் கோப்பை
கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. உலகம்
முழுக்க உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் இந்த போட்டியை கண்டு
களித்து வருகின்றனர். இந்தியாவின் பெரு நகரங்களில் இந்த போட்டி காரணமாக
சாலைகள் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. திருமண மண்டபங்களில்
வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காட்சிகளில் கூட கிரிக்கெட்தான்
ஒளிபரப்பப்படுகிறது. பொதுவாக திருமண மண்டபங்களில் திருமண தொடர்பான
காரியங்களை ஒளிபரப்ப டி.வி. வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இன்று அந்த
தொலைகாட்சிகளில் கூட இந்தியா-பாக் மோதல்தான்...!
என்ன ஆகும்
ஈழப்பிரச்னை?
அதிபராகப்
பொறுப்பேற்றபிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக பிப்ரவரி 15 அன்று இந்தியா
வருகிறார் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன. கடந்த காலங்களில் இலங்கை
அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் போராட்டங்கள் நடப்பது
வழக்கமாக இருந்தது. இப்போது மைத்திரி பாலாவின் வருகையை தமிழர்களுக்கு
எதிரான இலங்கை அரசின் பிரதிநிதியாகக் கருதி எதிர்ப்பதா, அல்லது ராஜபக்சேதான்
இனப்படுகொலைக்குக் காரணம் என்பதால் அவர் வருகையை மட்டுமே எதிர்க்கவேண்டும்
என்று பொருள் கொள்ளலாமா என்று கேட்டால் தெளிவான பதில்களை நாம் கண்டடைய
முடியாது. எப்படியிருந்தபோதிலும் ராஜபக்சேவின் தோல்விக்குப் பிறகு ஈழ
ஆதரவுப் போராட்டத்தின் வீரியம் சற்று குறைந்திருக்கிறது என்றுதான்
சொல்லவேண்டும். இறுதிப்போரில் இலங்கை அரசின் இனப்படுகொலை குறித்து சர்வதேச
விசாரணை தேவை, தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் தடுத்து
நிறுத்தப்படவேண்டும், இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து
வெளியேறவேண்டும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தமிழர்களே தீர்மானிக்க
வேண்டும்- இவை ஈழ ஆதரவாளர்களின் கோரிக்கைகள். ஆனால் இவற்றை வலியுறுத்திய
போராட்டங்கள் இப்போது சற்று மங்கிப்போயிருக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும்.
ராஜபக்சேவின் தோல்வியோடு எல்லாம் முடிந்துவிட்டதா?
(மேலும்....)
ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக பசுபதி சீவரத்தினம் நியமனம்
ஈழ
மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளராக பசுபதி சீவரத்தினம் அவர்கள்
கட்சியின் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில்
அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம் (14) இடம்பெற்ற
விசேட கலந்துரையாடலையடுத்து இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருக்கும் பசுபதி சீவரத்தினம் அவர்கள்
பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவராக செயற்பட்டு வந்தவராவார்.
இந்நிலையில் கட்சியினதும், தலைமையினதும் கொள்கைத் திட்டங்களை ஊடகங்களுக்கு
அறிவிக்கும் வகையில் கட்சியினால் ஊடகப் பேச்சாளாராக நியமிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை
தீர்மானமும் சி.வி.விக்னேஸ்வரனின் உரையும்
இலங்கை இறுதி மோதல்களின் போது இடம்பெற்றது “இனப்படுகொலையே” என்று
வலியுறுத்தும் தீர்மானம் செவ்வாய்க்கிழமை (பெப் 10, 2015) வடக்கு மாகாண
சபையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தினை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி)
ஆதரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். கடந்த வருடம் முழுவதும்
பலமுறை குறித்த தீர்மானத்தை வட மாகாண சபையின் உறுப்பினர்
எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைக்க முனைந்தார். ஆனாலும், தீர்மானத்தின்
சரத்துக்கள் தீர்க்கமானதாக இல்லை, ஆதாரங்கள் போதுமானதாக இல்லை மற்றும்
பொருத்தமான அரசியல் சூழல் இல்லை என்ற காரணங்கள் முன்வைக்கப்பட்டு
தள்ளிப்போடப்பட்டு வந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு பெற்ற
மைத்திரி அரசாங்கம் பதவியேற்று ஒரு மாதம் மட்டுமே கடந்த நிலையில், வடக்கு
மாகாண சபையில், இனப்படுகொலை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை
முக்கியம் பெறுகின்றது.
(மேலும்....)
மஹிந்த ராஜபக்ஷ இன்
குற்றச்சாட்டுக்கள் நிரூபணமானால் சகல விதமான
சலுகைகளும் ரத்து?
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வெளியான இரவன்று அலரிமாளிகை யில் இடம்பெற்றதாகக்
குற்றஞ் சாட்டப்படும் அரச விரோத சூழ்ச்சி யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ சம்பந்தப்பட்டிருப்பதாக எவ்விதத்திலாவது உறுதிப்படுத்தப்பட்டால்,
முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் அவருக்குரிய வரப்பிரசாதங்கள் இழக்கப்பட
நேரிடுமென சட்டத்துறை வட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது. நடைபெற்ற ஜனாதிபதி
தேர்தலில் முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டி
லிருந்த அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புக ளின் பிரதிநிதிகள் குழு வொன்று
அண் மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டிருந் ததாகத்
தெரியவந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம், வாகனம்,
செயலகம், பாதுகாப்பு அதிகாரிகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்பது
அரசியல் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டதொன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
"அணு ஆற்றல்
தொடர்பான உடன்பாட்டில் இந்தியா அனைத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டது" -
அம்பலப்படுத்துகிறது அமெரிக்கா
- அ.மார்க்ஸ்
ஒபாமாவின்
வருகையை ஒரு மாபெரும் வெற்றியாக இந்திய அரசும் ஊடகங்களும் கொண்டாடியபோதும்
இயற்றப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் பெரும்பாலும் பூடகமாகவே
வைக்கப்பட்டுள்ளது. இதழாளர் சுஹாசினி ஹைடர் சொன்னதுபோல எல்லாம் தெளிவாக ஒரு
மூன்று மாத காலமாவது ஆகும் போல உள்ளது. ஒபாமா வருகையின் நேரடியான
விளைவுகளைச் சொல்வது என்பதைக் காட்டிலும் அந்த வருகையை ஒரு குறியீடாக்கி
அதன் மூலம் உலகத்திற்கு உணர்த்தும் செய்திதான் இரு நாடுகளுக்கும்
முக்கியமாக இருந்தது. ஆசிய -பசிஃபிக் பகுதியில் வளர்ந்து வரும் சீனச்
செல்வாக்கிற்கு எதிராக அமெரிக்காவும் இந்தியாவும் வேறெப்போதையும் விட
அதிகமாக நெருங்கியுள்ளது என்பதுதான் அந்தச் செய்தி.
(மேலும்....)
ராஜீவ் காந்தியை
விடுதலைப்புலிகள் கொலை செய்தது புனிதப் போர்
- சீமான்
இந்திய-இலங்கை
அமைதிப்படை மூலம் தமிழர்களை கொலை செய்த ராஜீவ்காந்திய விடுதலைப் புலிகள்
கொலை செய்தது புனிதப் போர் என சீமான் தெரிவித்துள்ளார். இராமநாதபுரம்
மாவட்டம் நாம்தமிழர் கட்சியின் சார்பில் அரண்மனை முன்பு மாபெரும்
பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் டோம்னிக் ரவி தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றிய
போதே இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து உரையாருகையில், இந்திய நாடு
மொழி வாரியாக மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்பு அந்தந்த மாநிலத்தை அந்த
மொழித்தவரே ஆழ்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டை மட்டும் ஒரு தமிழன் ஆளவில்லை
இதனால் தான் காவேரி, முல்லை பெரியாறு, கூடங்குளம், மீனவர் உட்பட பல்வேறு
பிரச்சனைகள் வருகின்றது. மேலும் அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை
ஒசாமாபின்லேடன் குண்டு வைத்து தகர்த்த சர்வதேச பயங்கரவாதம் என்றால்?
இலங்கைக்கு இந்திய-இலங்கை அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொலை செய்த
ராஜீவ்காந்தி செய்ததற்கு பெயர் என்ன? பாகிஸ்தானில் மறைந்திருந்த
ஒசாமாபின்லேடனை அமெரிக்க ராணுவம் சுட்டு கொலை செய்தது புனிதப் போர் என்றால்
இலங்கைக்கு இந்திய-இலங்கை அமைதிப்படையை அனுப்பி தமிழர்களை கொலை செய்த
ராஜீவ்காந்தியை விடுதலைப்புலிகள் கொலை செய்ததும் புனிதப் போர் தான் என்று
தெரிவித்தார்.
சு.கவில்
முக்கியஸ்தர்கள் மூவர் களையெடுப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நிறைவேற்றுக்குழுவில் முக்கிய பதவிகள்
வகித்தவர்களில் மூவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
நிறைவேற்றுக்குழுவில் எவ்விதமான பதவிகளையும் வழங்காது களையெடுத்துவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் மூவரே இவ்வாறு
களையெடுக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்
நிறைவேற்றுக் குழுக் கூட்டம் பத்தரமுல்லையில் நேற்று சனிக்கிழமை மாலை
நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும வகித்து வந்த பொருளாளர் பதவி
பறிக்கப்பட்டுள்ளது. தேசிய அமைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் அமைச்சர் பஷில்
ராஜபக்ஷ அந்த பதவியை இராஜினாமா செய்திருந்தார். எனினும், அவருக்கு எந்த
பதவியும் வழங்குவதற்கு நேற்றைய கூட்டத்தின் பரிந்துரைக்கப்படவில்லை. இதேவேளை,
சுதந்திரக் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதி
அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு
சுதந்திரக்கட்சியில் எவ்விதமான முக்கிய பதவியும் வழங்கப்படவில்லை.
தமிழர் மனதை வெற்றி
கொள்ள அரசு விரைந்து செயற்பட வேண்டும்
-
வடக்கு முதல்வர் சி.வி.
புதிய அரசாங்கம்
தமிழ் மக்களது மனங்களை வெற்றி கொள்ள வேண்டுமாயின் அதற்கு அம்மக்களின்
தேவையறிந்து அரசாங்கம் துரிதமாகவும், துணிந்தும் சில விடயங்களை உடனடியாகச்
செய்ய வேண்டும். காலந் தாழ்ந்து செல்வதானது புதிய அரசாங்கத்தின் மீதும் அம்
மக்கள் தமது நம்பிக் கையீனத்தை வெளிப்படுத்தவே வழி வகுக்கும் என ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவைத் தான் சந்தித்தபோது எடுத்துக் கூறியதாக வடமாகாண
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். யுத்தத்தின் போது தமிழ்
மக்கள் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து வடமாகாண சபையில்
நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் உணர்வின்
வெளிப்பாடே தவிரவும் அது இந்தப் புதிய அரசாங்கத்திற்கு எதிரானதல்ல எனவும்
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தித்
தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் அப்பாவிகளான தமிழ் மக்கள் மீது
நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் கொலைகள் தொடர்பாக ஒரு
வரலாற்றுப் பதிவு ஆவணம் இருக்க வேண்டும் என்பதைக் கருத்திற் கொண்டே இந்தப்
பிரேரணை வடமாகாண சபையில் முன் வைக்கப்பட்டு தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதாகவும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பலாலி உயர்
பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு
எவரும்
சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை
விடுவிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானமானது வடக்கில் காணிகள் விடுவிப்புப்
பணிகளின் முதற்கட்ட நடவடிக்கை எனவும் அடுத்தடுத்து மிகுதிக் காணிகளும்
படிப்படியாக விடுவிக்கப்படும். இது குறித்து எவரும் எவ்விதமான சந்தேகமும்
கொள்ளத் தேவையில்லை. அரசாங்கம் தமிழ் மக்களுக்கு உறுதியளித்தவாறு
இவ்விடயத்தில் நேர்மையாகச் செயற்படும் என மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம்
மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
முதற்கட்டமாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வளலாய்
கிராம சேவைப் பிரிவு துஃ284 கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட 220 ஏக்கர்
காணி மீள கையளிக்கப்படும். இதற்கமைய ஒரு குடும்பத்துக்கு 20 பேர்ச்சஸ் என
1,022 குடும்பங்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வீடு கட்ட நிதி வழங்கப்படும்
எனவும் பாடசாலை, ஆரம்பப் பாடசாலை, வைத்தியசாலை, சமயஸ்தலங்கள், தொடர்பாடல்
நிலையங்கள் மற்றும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் இங்கு அரசாங்கத்தினால்
நிர்மாணிக்கப்படும் எனவும் மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும்
இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
நாட்டைவிட்டுத் தப்பியோடிய
பஷிலிடம்
விசாரிக்க இன்டர்போல் உதவி
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனா திபதி
மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி
அமைச்சருமான பஷில் ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்துவதற்கு சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போல்)
உதவியை அரசாங்கம் நாடியுள்ளது. அமெரிக்க பிரஜையான பஷில் ராஜபக்ஷ, கடந்த 11
ஆம் திகதி தன் னுடைய மனைவியான புஸ்பாராஜ பக்ஷவுடன் நாட்டைவிட்டு
வெளியேறினார். அவர், அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் தற்போது வசித்து
வருகின்றார். அவருக்கு எதிராக கடும் நிதி மோசடி குற்றச்சாட்டு இருப்பதாக
அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்திருந்தார்.
பஷில் ராஜபக்ஷவுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) இலஞ்ச
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளது.ராஜபக்ஷ குடும்ப
உறுப்பினர்களுடன் இணைந்து பாரிய நிதி மோசடிகளில் அவர் ஈடுபட்டதாக அந்த
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றிக்குப்
பின்னால் மூன்று முகங்கள்!
’பாஞ்ச் சால்
கெஜ்ரிவால் பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’

சொல்லி
அடித்துவிட்டார் டெல்லி கெஜ்ரிவால். திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டமாக
ஆகிவிட்டது தலைநகரில்!
'தேக்கோ தேக்கோ
ஆம் ஆத்மி தாக்கத்து தேக்கோ...
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்... (அஞ்சு வருஷம் கெஜ்ரிவால்)
பாஞ்ச் சால் கெஜ்ரிவால்...’
- விஷால் தத்லானி அன்கோ உருவாக்கிய இந்தப் பாட்டை கடந்த இரண்டு மாதங்களாக
தேசியகீதம் போல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவரவர்களுக்கு பிடித்த மெட்டில்
பாடிக் கலக்கினார்கள். டெல்லி நகருக்கு உள்ளேயும் புறநகர் பகுதிகளிலும்
மால்கள், பஜார்கள், தெருக்கள், கிராமங்கள் என்று எங்கேயும் திடீரென தோன்றும்
டீ சர்ட், ஜீன்ஸ், ட்ரவுசர் என ஹை லுக் இளைஞர்களும் பல பாடல்களை பாடியபடியே
டான்ஸ் ஆடுவார்கள். கூட்டம் கூடியதும், தலையில் காந்தி குல்லாவை
வைத்துக்கொண்டு 'பாஞ்ச் சால் கெஜ்ரிவால்’ பாடலைத் தொடங்குவார்கள். அதன்
விளைவுதான் ஆம் ஆத்மியின் அமோக வெற்றிக்குக் காரணமாகியிருக்கிறது. ஒருபக்கம்
பி.ஜே.பி மண்ணைக்கவ்வ... இன்னொரு பக்கம் காங்கிரஸ் இருக்கும் இடமே
தெரியவில்லை. இந்திய அரசியலில் மட்டுமல்ல, உலக அரசியலிலும் கெஜ்ரிவால்
பற்றித்தான் பேச்சு. (மேலும்....)
ஈ.பி.டி.பியினரே
வெளியேறுங்கள்! இல்லையேல் வெளியேற்றுவோம்!
- விஜயகலா
மகேஸ்வரன்
யாழ். மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மக்கள் அச்சமின்றி வாழவும்,
ஜனநாயகம் நிலைபெறவும் ஈ.பி.டி.பி குறித்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும்.
இல்லையேல் நாங்களாகவே அவர்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்படும் என மகளிர்
விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சி
மற்றும் யாழ்ப்பாண மக்களின் இயல்பு வாழ்க்கையினை குழப்புபவர்கள்
ஈ.பி.டி.பியினரே. இந்தப் பகுதியில் இடம்பெற்ற பல கொலைகள், காணாமல் போன
சம்பவங்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளது என மக்கள் சந்தேகிக்கின்றனர்.
எனவே இந்தப் பகுதியில் இருக்கும் ஈ.பி.டி.பியின் அலுவலகங்கள் மூடப்பட
வேண்டும். அவர்கள் மூடாதவிடத்து நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்.
இவர்கள் இங்கிருந்து வெளியேறுவதன் மூலம் தமிழ் மக்களின் வாழ்வில்
வெளிச்சத்தை ஏற்படுத்த முடியும். எனவே ஈ.பி.டி.பி தாங்களாகவே
வெளியேறாவிட்டால் மைத்திரி அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக மூடுவதே
எமது நோக்கம். எனவே இந்த நடவடிக்கைக்கு மக்களும் அரசும் உறுதுணையாக இருக்க
வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என்றும் தமிழ்
மக்கள் விரோத கட்சியாக செயற்பட்டுவந்த ஐ.தே கட்சியின் உறுப்பினரான
மகேஷ்வரனின் வாழ்கைத்துணைவி ஈபிடிபி ஐ பற்றி இப்படிப் பேசுவதுவதையிட்டு
சிரிப்பதைவிட வேறு என்ன செய்ய முடியும் தமிழ் மக்களுக்கு எதிரான கலவரங்களை
திட்மிட்டு செயற்படுத்திய கட்சியின் மந்திரியின் பேச்சு தனது கடந்த கால
செயற்பாட்டை மூடி மறைக்க முற்படும் செயல் ஆகும் - சாகரன்
மாசி
14, 2015
ஜனாதிபதி நாளை
இந்தியா பயணம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பினை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நாளை 15 ஆம் திகதி இந்தியாவுக்கான மூன்று நாள் விஜயத்தினை
மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்று இவர் மேற்கொள்ளும் முதலாவது
வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் இலங்கை
ஜனாதிபதியையும் தூதுக் குழுவினரையும் வரவேற்பதற்கு இந்திய அரசாங்கமும்
மக்களும் பெரும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர
மோடி தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு
மகத்தான வரவேற்பளிப்ப தற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகத்
தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்திய
விஜயம் இலங்கை - இந்திய நல்லுறவில் புதிய அத்தியாயத்தைத் தோற்றுவிக்கும்
என்றும் தெரிவித்துள்ளார்.
நாவற்குழியில்
ஊழல்
நாவற்குழியில் அமைந்துள்ள சிங்கள குடியேற்ற மக்களுக்கு வழங்கப்படும்
உதவிகளில் சிறு பகுதி கூட தமக்கு வழங்கப்படுவதில்லை என அந்த பகுதியில்
குடியேறியுள்ள தமிழ் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். நாவற்குழி புதிய
குடியிருப்பு பகுதியில் 110 தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அவர்களிற்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை. அருகில்
குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு செய்யப்படுகின்ற உதவிகளில் சிறிதளவு கூட
அவர்களிற்கு செய்யப்படுவதில்லை. வாழ்வாதாரம் அற்ற நிலையில் வீட்டு
திட்டங்கள் கூட வழங்கப்படாத நிலையில் இப்பகுதியில் அக்குடும்பங்கள்
வாழ்கின்றன. தம்மை இங்கு குடியேற்றும் போது எமக்கு மாளிகைகள் கட்டி தருவது
போல கூறியே எம்மை இங்கு அழைத்து வந்து குடியேற்றினார்கள். ஆனால் இதுவரை
மலசலகூடம் கூட எமக்கு கட்டித்தரவில்லை. இப்போது தான் டக்ளஸ் போன்றவர்கள்
தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக எம்மை இங்கு கொண்டுவந்து
குடியேற்றியுள்ளார்கள் என்பது எமக்கு தெரிகின்றதெனவும் அப்பகுதி மக்கள்
கூறுகின்றனர்.
(மேலும்....)
முதலமைச்சர்
விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்டக்கூடாது
இனவாதத்தை தூண்டி அதன் ஊடாக நன்மை பெற்றுக் கொள்ள முயற்சிப்பது பிழையானது
என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு
கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடமாகாண முதலமைச்சர்
விக்னேஸ்வரன், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி, இனவாதத்தை தூண்டி
அரசியல் இலாபங்களைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தால் அதனை ஏற்றுக் கொள்ள
முடியாது. விக்னேஸ்வரன் அவ்வாறு செய்வது நியாயமற்றது. மக்களுக்கு பிழையான
தகவல்களை வழங்கி இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சித்தால் விக்னேஸ்வரன் பிழை.
நான் அதனை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன். தரைவழி போரை நானே வடிவமைத்து
திட்டமிட்டேன். படையணிகளுக்கு நானே உத்தரவு பிறப்பித்தேன். கீழ் மட்ட
உறுப்பினர்களுக்கு நானே ஆணை வழங்கினேன். இந்த போராட்டத்தை நன்றாக
கண்காணித்தேன். எனவே, மனிதப் படுகொலைகள் இடம்பெறவில்லை என்பது எனக்குத்
தெரியும். சிவில் மக்களை பாதுகாக்க நாம் முன்னின்று செயற்பட்டோம். 275,000
மக்களை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தோம். சிவில் போர்களின் போது
பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதனை தவிர்க்க முடியாது என்ற போதிலும்
எல்லா காரணிகளையும் கருத்திற் கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்
நோக்கில் போர் செய்தோம்.
விக்னேஸ்வரன் மீண்டும் இனவாதத்தை தூண்ட முயற்சித்தால் அதனையிட்டு நான்
வருந்துகிறேன். வடக்கு மக்களின் நலனில் விக்னேஸ்வரன் கரிசனை கொண்டிருந்தால்
தெற்கு மக்களின் மனதில் சந்தேகம் ஏழக்கூடிய வகையில் செயற்படக் கூடாது எனவும்
சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மூளை
சுறுசுறுப்பிற்கு வெண்டை சாப்பிடலாம்! - டாக்டர்
அனுராதா கிருஷ்ணன்
வெண்டையின் கொழகொழப்பு திரவத்தில் அதிக
அளவில் போலிக் அமிலம் இருக்கிறது. இந்த போலிக் அமிலமானது சிவப்பு இரத்த
அணுக்கள் புதுப்பிக்கப் பயன்படுகிறது. இப்படிப் புதுப்பிக்கப்பட்ட
இரத்தமானது மூளை உள்ளிட்ட அனைத்து உறுப்புகளுக்கும் பிரான வாய்வை அளித்துப்
புத்துண்ர்வை அளிக்கும். போலிக் அமிலம் நம் செல்லணுக்களைப் புதுப்பிக்க ஒரு
கிரியா ஊக்கியாக (catalyst) செயல்படுகிறது. இந்த விதத்தில் நம் மூளை
செல்லணுக்களைப் புதுப்பிக்கவும் போலிக் அமிலம் பயன்படும். போலிக் அமிலத்தை
நம் உடல் தயார் செய்துகொள்ள முடியாது. அதனை நம் உணவு வழியேதான் கொடுக்க
வேண்டும். அந்த வகையில் முற்றாத வெண்டைக்காய் அதிக அளவில் போலிக் அமிலத்தை
நமக்கு அள்ளிக்கொடுக்கும். சின்ன வயதில் என் பாட்டி சொல்லி
கேள்விப்பட்டிருக்கிறேன். வெண்டக்காய் அதிகம் சாப்பிட்டால் புத்திசாளியாக
இருப்பாய். கத்தரிக்காய் அதிகம் சாப்பிட்டால் சோம்பேறியாய் இருப்பாய் என்று.
ஆனால். என் பாட்டிக்கு வெண்டையில் போலிக் அமிலம் அதிகம் இருக்கிறது,
அதனால்தான் மூளை சுறுசுறுப்பு உண்டாகிறது என்று தெரியாது. வெறும்
அனுபவம்தான் அவரை அப்படிச் சொல்ல வைத்திருக்கிறது.
ஆனால், இன்றைய நம் விஞ்ஞான உலக மனிதர்களுக்கு வெண்டையில் போலிக் அமிலம்
அதிகமாக இருக்கிறது என்று சொன்னால்தான் ஏற்றுக்கொள்கிறார்கள். எப்படியோ
உங்களையெல்லாம் வெண்டைக்காய் சாப்பிட வைத்து மூளை சுறுசுறுப்போடு உற்பத்தி
பெருக்க வேலையை (productive work) செய்ய வைக்கவே விரும்புகிறேன்
குஜராத் கலவர
வழக்குகளை நடத்திய சமூக சேவகி டீஸ்டா வீட்டை சுற்றி வளைத்தது குஜராத் பொலிஸ்
குஜராத் கலவர வழக்குகளை முன்னின்று நடத் திய சமூக சேவகி டீஸ்டா செடல்வத்
மீது தொட ரப்பட்டிருந்த நிதி முறைகேடு வழக்கில் அவருக்கு ஆமதாபாத் உயர்
நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது. அதை அடுத்து அவரை கைது செய்ய குஜராத்
பொலிஸார் அவர் வீட்டிற்குள் நுழைந்த போது உச்ச நீதிமன்றம் முன் பிணை வழங்கி
கைதில் இருந்து காப்பாற்றியது. 'குஜராத் கலவரத்தின் போது 69 பேர் எரித்துக்
கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டியில் அருங்காட் சியம் அமைக்க வேண்டும் என
தெரிவித்து ஆமதாபாத்தை சேர்ந்த டீஸ்டா செடல்வத் என்ற சமூக சேவகியும் அவர்
கணவர் ஆனந்தும் ஒன்றரை கோடி ரூபாயை திரட்டினர். 2002 முதல் 2009 வரை
அவர்கள் நிதி திரட்டியும் இதுவரை அருங்காட்சியகம் அமைக்கவில்லை. அந்த பண
த்தை அவர்கள் முறைகேடாக சுருட்டி விட்டனர் என தெரிவித்து, கடந்த ஆண்டு ஜனவரி
மாதம் டீஸ்டா மீதும் அவர் கணவர் மீதும் ஆமதாபாத் குற்றப் பிரிவு பொலிஸில்
பலர் வழக்கு தொடர்ந் தனர். அவரை கைது செய்ய குஜராத் பொலிஸார் அவர்
வீடு முன் குவிந்தனர். இதனால் அலறிய டீஸ்டா, உச்சி நீதிமன்றத்தை நாடினார்.
காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் உச்ச நீதிமன்ற பிரபல
வழக்கறிஞருமான கபில் சிபல், டீஸ்டா வுக்கு ஆதரவாக, உச்சி நீதிமன்றத்தில்
நேற்று முன்தினம் அவசர வழக்கு தொடர்ந்தார். தலைமை நீதிபதி எச்.எல்.தத்து
தலைமையிலான அமர்விடம் கபில் சிபல், 'உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து,
டீஸ்டாவுக்கு முன் பிணை வழங்காவிட்டால், அவர் கைது செய்யப்பட்டு, சிறையில்
தள்ளப்படுவார்" என்றார்.
சின்னமணியின்
வில்லிசை ஓய்ந்தது
வில்லிசை என்றால் உடனே எம் நினைவுக்கு வருபவர் கலாவிநோதன் கணபதிப்பிள்ளைதான்.
‘சின்னமணி’ என்று அன்புடன் அழைக்கப்பட்ட இவர் கடந்த 4ஆம் திகதியன்று தனது
79வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவரது மறைவு கலையுலகுக்கு ஓர் ஈடு செய்ய
முடியாத பேரிழப்பாகும். வில்லிசை நிகழ்ச்சியை வெகு சிறப்பாகச் செய்யும்
ஆற்றல் மிகுந்திருந்ததால் ‘வில்லிசை வேந்தன்’ என்ற பெயரையும் பெற்றிருந்தார்.
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்ற ஒரேயொரு கலையான இந்த வில்லிசை தொன்மை
மிக்க பாரம்பரியமான சிறப்பைக் கொண்டது. இயல், இசை, நாடகம் என்ற மூன்றிலும்
இணைந்து விளங்குகின்ற ஊர் இனிய கலையாகவும் வில்லிசை அமைந்துள்ளது.
(மேலும்....)
மாசி
13, 2015
யனுனா ராஜேந்திரனுக்கு செழியன் எழுதிய கடிதத்தம்
முத்துலிங்கத்தின் பதினொரு பேய்கள் கதையில் (அதைவேறு நீங்கள்
முத்துலிங்கத்தின் ஒன்பது பேய்கள் சிறுதை என கடிதம் எழுதியிருக்கிறீர்கள்)
உரும்பிராயைச் சேர்ந்த சிவா என்ற யாழ்.பொறுப்பாளரான நீங்கள் சொப்னாவுடன்
17தடவைகள் கலவிகொண்டு, அதன் நீட்சியாகத்தான் பெண்கள் அணி தொடக்கினீர்களாமே...?
முத்துலிங்கம் சொல்றாப்பல. "உரும்பிராய் வேம்பன் ஒழுங்கை கல்வீட்டில் தோழர்
சிவா அளவுமீறிய உற்சாகத்தில் இருந்தார். இயக்கம் உலகச் செய்தியாகிவிட்டது.
மூன்று நாட்களில் சொப்பனா தோழருடைய இரும்பு இதயத்தைப் பிளந்து உள்ளே
நுழைந்துவிட்டாள். கடத்தல் வெற்றிகரமான முடிவை எட்டியபோது அவரைக்
கட்டிப்பிடித்துப் பெரிய முத்தம் ஒன்று கொடுத்தாள்.
(மேலும்....)
பலாலி உயர்
பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விடுவிப்பு
பலாலி உயர் பாதுகாப்பு வலயத்துக்குட்பட்ட சுமார் 1,000 ஏக்கர் காணிகளை
விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களை
மீள்குடியேற்றுவதற்காகவே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. பாதுகாப்பு
அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த அமைச்சரவை
பத்திரித்துக்கே அங்கிகாரம் கிடைத்துள்ளது என்று மீள்குடியேற்றம்,
புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
தெரிவித்தார்.பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல,
தலைமையில் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்
கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
(மேலும்....)
ஐ.நா
அறிக்கைக்கு மங்கள அடித்தார் ஆப்பு
சிறிலங்காவில்
இடம்பெற்ற மீறல்கள் குறித்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின்
விசாரணை அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடுமாறு சிறிலங்கா அரசாங்கம்
கோரியுள்ளது. இந்த தகவலை வொசிங்டனில் தெரிவித்துள்ளார் சிறிலங்கா
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. இன்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன்
கெரியை சந்திப்பதற்காக, நேற்று வொசிங்டன் வந்து சேர்ந்த அவர், அமெரிக்க
கொள்கை வகுப்பாளர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். இதன் போது
அவர், உள்நாட்டுப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஐ.நாவின்
விசாரணை அறிக்கையை வெளியிடுவதை சில மாதங்களுக்குப் பிற்போடுமாறு சிறிலங்கா
அரசாங்கம் கோரியுள்ளதாக தெரிவித்தார்.
(மேலும்....)
மூடர் கூடத்தின் முதல்வர்
உயர்
பாதுகாப்புவலயங்கள் அகற்றப்படுவதற்கும் மக்கள் சொந்த நிலங்களில்
மீளக்குடியேற்றப்படுவதற்கும் இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கும்
சமூகங்களிடயே நல்லுறவு ஏற்படுவதற்கும் வாய்ப்புக்கள் இருந்தன.
எல்லாவற்றிற்கும் ஆப்பு வைக்கும் முயற்சியில் வடமாகாண மூடர் கூடத்தின்
முதல்வர். இங்கு வாழும் மக்கள் சமாதானமாக சஞ்சலமில்லாமல் வாழக்கூடாது. கூடவே
கூடாது பாருங்கள்.
மன்னிக்கவும்! சொந்த அலுவல் பார்ப்பதில் இவர்கள் முட்டாள்கள் அல்ல. மகா
கெட்டிக்காரர்கள். (Sugu)
Press Release:
“Let us protect our right to access clean
drinking water” Open invitation for awareness campaign
Place: Near Commercial Bank, Galle Road, Wellawatte, Colombo 06
Date : 15th February 2015
Time: 9.00am - 11.00am
People living in Valigaamam area of the Jaffna Peninsula are facing
grave threat in accessing clean drinking water due to groundwater
pollution caused by an oil leakage. During the last few weeksoil wastes
have been clearly seen in wells in the area, which are the prime source
of drinking water in Chunnagam and Valigaamam.
Jaffna peninsula relies on groundwater sources to fulfill all basic
needs including drinking. Hence, it has become necessary to protect the
water sources in the area.
In addition to that, steps need to be taken to clean the groundwater
polluted by oil wastes. Environmentalists and industry experts have
warned that the groundwater pollution will become uncontrollable if
necessary actions are not taken on time.
(more...)
(To read tamil Ver.....)
முத்தர் யாருடைய
பிரதிநிதி?
யாழ் மையவாத
சைவவேளாள மேலாதிக்க அமிர், பிரபா தமிழ்த்தேசியத்தின் முன்னணி Lobby Group
பல்கலைக்கழக மாணவர்கள், கணக்கியலாளர், தகவல் தொழில்நுட்பர், பொறியிலாளர்,
மருத்துவர் முதலிய Technocrats கள். இவர்கள் பெரும்பாலானவர்கள் தலித்துக்கள்
கரையார்கள் அல்லாத வெள்ளாளரும் கோவியர் மேலோங்கிக்கரையார் போன்றவருமாவார்.
பிரபாகரனிய போர்க்காலத்தில்( 1986 -2009) புலிகளின் கொள்கை மற்றும்
நடைமுறைகளால் தழைத்தோங்கியவர்கள். கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்
தலித்துக்களும், கரையாரும், வட கிழக்கு வாழ் மலையக தமிழர், கிழக்கு மாகாண
தமிழரும், இசுலாமியர்களும். அ. முத்துலிங்கம் என்கிற சைவவேளாள யாழ் மையவாத
ரெக்னோகிராட்டின் முதன்மை வாசகர்கள் மேற்சொன்ன அமிர் பிரபா
தமிழ்த்தேசியத்தின் முன்னணி Lobby Group. இந்த பின்னணியிலேயே
முத்தரின் 11 பேய்கள், கிட்டுவின் குரங்கு மற்றும் அவரின் புலிப்பாசிச
சார்பு எழுத்துக்களை விளங்கிக் கொள்ள முடியும். (Nadchathran
Chev-Inthiyan)
ஜங்கரநேசன்,
சத்தியலிங்கத்திற்கு எதிராகப் போர்க்கொடி!
குடிநீரில் கலந்துள்ள கழிவு ஓயில் தொடர்பிலான பிரச்சினை நாள் தோறும் பூதாகர
நிலையினை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் தூயநீருக்கான விசேட செயலணி
வினைத்திறனற்று செயற்பட்டுக்கொண்டிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்களது
நலன்களிற்காக போராடும் அமைப்புக்கள் அறிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில்
அவ்வமைப்பு இன்று வியாழக்கிழமை பத்திரிகையாளர் சந்திப்பொன்றை
நடத்தியிருந்தது.சந்திப்பில் இது பற்றி கருத்து வெளியிட்ட மக்கள்
பிரதிநிதிகள் தற்போதைய பிரச்சினைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கான
தற்காலிக குடிநீர் விநியோக ஏற்பாடுகள் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளினை
முன்வைத்திருந்ததாகவும் ஆனால் அவற்றினை முன்னெடுப்பதில் தூயநீருக்கான விசேட
செயலணி போதிய பொறுப்புணர்வுடன் செயற்பட்டிருக்கவில்லை எனவும் அவர்கள்
குற்றஞ்சாட்டியுள்ளனர்.
(மேலும்....)
பாய் போட்டுப்
படுத்தால் நோய் விட்டுப் போகும்!
(ஓமந்தை
வண்ணாங்குளம் கண்ணகை அம்மன் கோவில் திருவிழாவில் ஒரு கடை)

படுக்கைகள்
பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை
"மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.
கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும்,
உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம்
தரும்.(மேலும்....)
தோழர் குமார்
குணரத்தினத்தினை நாடுகடத்த முயலும் புதிய அரசுக்கு எதிராக தொடர்ச்சியான
போராட்டங்கள்
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மறுக்கப்பட்ட மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை
உறுதி செய்வதாகவும், சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வை
தருவதாகவும் கூறி மைத்திரி தலைமையில் அமோக ஆதரவுடன் பதவிக்கு வந்தது புதிய
அரசு. கடந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக அச்சுறுத்தல்களின் காரணமாக
புலம்பெயர்ந்த அரசியல்வாதிகள், ஊடகவியளாலர்கள் நாட்டிற்க்கு திருப்பி வந்து
செயற்ப்படலாம் என பகிரங்க அழைப்பும் விடுக்கப்பட்டது.
(மேலும்....)
திருமலை கோணா
மலையின் அழகுத் தோற்றம்

இருபத்து இரண்டு
ஆண்டுகளின் பின், இலங்கை மணித் திருநாட்டின் கீழ்பால், "தென்கயிலை" எனப்
போற்றப்படும் திருக்கோணேச்சரம், இன்று தை 28ஆம் திகதி (2015 பிப்ரவரி 11)
திருக்குடமுழுக்குப் பெருவிழா காண்கிறது. மாதுமையம்மை உடனுறை கோணைநாதர்
உறையும் திருக்கோணேச்சரம், கடலோரம் அமைந்த குன்றின் மீது இயற்கை வனப்புக்
கொட்டிக் கிடக்கும் சூழலில் அமைந்து விளங்குகின்றது. "குரைகடலோத
நித்திலம் கொழிக்கும் கோணமாமலை" (கடல் ஆர்ப்பரிக்க, முத்துக்கள் விளையும்
திருக்கோணமலை) என்று ஏழாம் நூற்றாண்டிலேயே அத்தலத்தைப் புகழ்ந்து
பாடியிருக்கிறார் சம்பந்தப் பெருமான். அருணகிரி நாதரின் "விலைக்கு மேனியில்"
எனும் திருப்புகழ் இத்தலத்து முருகனாரையே போற்றுகிறது.
(மேலும்....)
பட்டதாரிகளின் வேலையில்லாப் பிரச்சினை
தீர்வுக்கு
என்ன வழி?
இலங்கையின்
மொத்த வேலைவாய்ப்புக்களில் வெறும் 12 சதவீதமே இருக்கக்கூடிய இந்தப்
பொதுச்சேவைத்துறையில் தமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதுதான்
இவர்களது ஒரே கோரிக்கையாக இருக்கிறது. 88 சதவீத வேலைவாய்ப்புக்கள்
குவிந்துள்ள தனியார்துறையில் பணியாற்ற இவர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அரசாங்க உத்தியோகம் என்று இவர்கள் குறிப்பிடும் பொதுச்சேவைத்துறையில்
பணியாற்றுபவர்களுக்கு பணி ஓய்வின் பின்னர் ஓய்வூதியம் வழங்கப்படும் என்பதே
இவர்கள் இதை அதிகம் விரும்பக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும்,
பெரும்பாலான பட்டதாரிகள் தனியார்துறையில் பணியாற்றுவதற்கு அவசியமான
தொழிற்திறன்களைக் கொண்டிருக்காததும், இவர்கள் அந்தத் துறையில்
வேலைவாய்ப்புக்களைப் பெற முடியாமைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. (மேலும்....)
கனவு காணும்
ஐதே. கட்சி
பொதுத் தேர்தலில் ஐ.தே.க. தனித்தே போட்டியிடும் இணைய
விரும்பினால் வாய்ப்பு
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தனியாக போட்டி யிடும்
அதேவேளை கட்சியில் இணைந்து போட்டியிட யாரும் விரும்பினால் அவர்களுக்கும்
கட்சியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று நெடுஞ்சாலைகள், உயர்கல்வி, முதலீட்டு
ஊக்குவிப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் செயலாளருமான கபீர் ஹாசிம்
தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் வெற்றிபெறுவது நிச்சயம்.
ஜனாதிபதித் தேர்தலில் எமக்கு சவாலாக இருந்த மஹிந்தவை வீட்டுக்கு
அனுப்பியுள்ளோம். அவ்வாறான நிலையில் இந்தத் பொதுத் தேர்தலில் ஐக்கிய
தேசியக்கட்சிக்கு அவர் ஒரு சவால் அல்ல. ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு
இலஞ்சம், சலுகைகள் வழங்கி வாக்குகளைப் பெற்றது மாத்திரமின்றி மக்களை
அச்சுறுத்தி தொடர்ந்து இந்நாட்டில் அராஜக ஆட்சி புரியலாமென்று நினைத்தனர்.
அவற்றுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளமை தற்போது வெளிச்சமாகியுள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கணிசமான அளவு வாக்குகள்
கிடைத்தன. ஒரு சில தேர்தல் தொகுதிகளில் சொற்ப வாக்கு வித்தியாசத்திலே
தோல்வியடைந்தோம். இம்முறை அந்தப் பிரதேசங்களிலும் வெற்றி பெறும் வகையில்
வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.
கெஜ் ரிவால் இசட்
பிரிவு பாதுகாப்பு நிராகரிப்பு
டில்லி முதல்வ ராக பதவியேற்க வுள்ள ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ் ரி வால்
தனக்கு அளிக்கப்பட்ட இசட் பிரிவு பாது காப்பை நிராகரித்துள்ளார். பதவியே
ற்பு விழாவுக்கு வருமாறு பிரதமர் மோடியை நேரில் சென்று அழைத் தார். அதே
நாளில் மகாராஷ்ட்டிரா வில் வேறு நிகழ்ச்சி இருப்பதால், தான் கலந்து கொள்ள
முடியாது என மோடி தெரிவித்தார். டில்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி அபார
வெற்றி பெற்றது இந்தி யாவில்; மட்டுமல்லாமல் சர்வதேச நாடுகளிலும்
ஆச்சரியத்தை ஏற்படுத் தியுள்ளது. இந்திய அரசியலில் திருப்பு முனையை
ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தல் முடிவு குறித்து நாடு முழுவ தும் பரபரப்பான
விவாதங்கள் நடந்து வருகின்றன.
மக்களை பதற்ற
நிலைக்குள்ளாக்கி ஆய்வு முன்னெடுப்பைக் குழப்ப வேண்டாம்!
(வடக்கு மாகாண சபையின் 24 ஆவது அமர்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.
ஐங்கரநேசன் வலிகாமம் நிலத்தடி நீர் எண்ணெய் மாசு தொடர்பாகச் சமர்ப்பித்த
அறிக்கை)
வலிகாமம் பிரதேசத்தில் குறிப்பாகச் சுன்னாகம், தெல்லிப்பளை பகுதிகளில் உள்ள
கிணறுகள் பலவற்றில் குடி தண்ணீருடன் எண்ணெய் மாசாகக் கலந்திருப்பது அப்பகுதி
மக்களை வெகுவாகப் பாதித்துள்ளது. அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. கூடவே, எண்ணெய்
மாசு வடமாகாண சபை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கும் விடயமாகவும்
ஆகியிருக்கிறது. சுன்னாகம் அனல் மின் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள
கிணறுகளில் இலங்கை தரநிர்ணய நிறுவகத்தால் குடிநீரில் இருக்கலாம் என
அனுமதிக்கப்பட்ட எண்ணெய் மாசின் அளவைவிட (1 மில்லி கிராம் / லீற்றர்) அதிக
அளவில் எண்ணெய் மாசாக உள்ளது என 2012 ஆம் ஆண்டே தேசிய நீர் வழங்கல் வடிகால்
சபையின் நீர்ப்பகுப்பு ஆய்வுகளில் இருந்து அறியமுடிகிறது. இதே கிணறுகளில்
கடந்த 2014 ஆம் ஆண்டில் இலங்கை மத்திய சுற்றாடல் அதிகார சபை மேற்கொண்ட
ஆய்வுகளிலும் எண்ணெய் மாசு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
(மேலும்....)
உக்ரைனில்
பெப்ரவரி 15 தொடக்கம் யுத்த நிறுத்தம்
கிழக்கு உக்ரைனில் பெப்ரவரி 15 ஆம் திகதி தொடக்கம் யுத்த நிறுத்தம்
அமுலுக்கு வரும் என்று ரஷ்ய மற்றும் உக்ரைன் தலைவர்கள் அறிவித்துள்ளனர். "பிரதான
விடயம் குறித்து நாம் இணக்கப்பா டொன்றை எட்டினோம்" என்று ரஷ்ய ஜனாதிபதி
விளாடிமிர் புடின் குறிப்பிட்டார். உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரொn'ன்கோவுடன்
இடம்பெற்ற மரதான் பேச்சுவார்த்தைக்கு பின்னரே இந்த உடன்பாடு
எட்டப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் ரஷ்ய மற்றும் பிரான்ஸ் தலைவர்களும்
பங்கேற்றிருந்தனர். இது ஒரு தீர்க்கமான உடன்பாடு என்று குறிப்பிட்ட பிரான்ஸ்
ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே அனைத்து விடயங்களிலும் இணக்கம் ஏற்படவில்லை
என்று சுட்டிக்காட்டினார். நான்கு தரப்பு சந்திப்பாக இடம்பெற்ற இந்த
பேச்சுவார்த்தையில் ஜேர்மன் அரச தலைவர் ஏன்ஜலா மேர்கல் மற்றும் பிரான்ஸ்
ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே மத்தியஸ்த முயற்சி யில் ஈடுபட்டனர். கடந்த
புதன்கிழமை பின்னேரம் ஆரம்பமான இந்த பேச்சுவார்த்தை நேற்று வியாழக்கிழமை
காலை வரையில் நீடித்தது. புதிய உடன்படிக்கையின்படி பெப்ரவரி 15 ஆம் திகதி
யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தவும் கனரக ஆயுதங்களை அகற்றவும் அனைத்து கைதி
களையும் விடுவிக்கவும் இணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த
பேச்சுவார்த்தையில் தீர்க்கப்படாத முக்கிய விடயங்களில் ஒன்றாக, டெபெல்ட்சேவ்
நகரின் நிலை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நகர் அரசின்
கட்டுப்பாட்டில் இருந்த போதும் அதனை கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.
பெலாரஸ் பேச்சுவார்த்தை குறித்து புட்டின் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு
வெளியிட்ட கருத்தில், "இது ஒரு சிறந்த இரவாக இருக்க வில்லை ஆனால் நல்லதொரு
காலையாக இருந்தது" என்றார்.
அமெரிக்காவில் மூன்று
முஸ்லிம்கள் கொலை
அமெரிக்காவில் மூன்று முஸ்லிம் மாணவர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கான காரணம்
குறித்து வடக்கு கரோலினா மாநில நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. எனினும்
இந்த மூவரையும் கொலைசெய்த சந்தேக நபர் வாகன, தரிப்பிடம் குறித்த
பிரச்சினையாலேயே கொலைகளில் ஈடுபட்டிருப்பதாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து தாம் அதிர்ச்சி அடைந்திருப்பதாக
குறிப்பிட்டிருக்கும் சந்தேக நபரின் மனைவி கெரன் ஹிக், தனது 46 வயது கணவர்
கிரேக் வாகனத் தரிப்பிடம் குறித்து அயலில் இருக்கும் அனைத்து மதத்தினருடனும்
மோதலில் ஈடுபட்டிருந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாகன தரிப்பிடம்
குறித்த பிரச்சினை அங்கு இருந்துவந்ததை ஏற்றுக் கொண்டிருக்கும் பொலிஸார்
இந்த கொலைக்கு மத வெறுப்பு காரணமாக இருந் ததா என்ற கோணத்திலும் விசாரணை
நடத்தப் படுவதாக குறிப்பிட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை கைதுசெய்யப்பட்டு
நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கொலைச் சந்தேக நபரை தொடர்ந்து
தடுத்துவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
மாசி
12, 2015
காலச்சுவடுக்கும் முத்துலிங்கத்திற்கும் கண்டனம் தெரிவிப்போம்
வரலாற்று
உண்மைகளை திரிபுபடுத்தி கதை எழுதி சம்பாதிக்கும் முத்துலிங்கம் போன்றவர்களை
அம்பலப்படுத்துவோம், இவ்வாறான அழுக்குகளை பிரசுரிக்கும் காலச்சுவட்டுக்கு
கண்டனத்தை தெரிவிப்போம். மனித சூழலை மாசுபடுத்தும் இந்த இராசாயன நச்சு
கழிவுகள் கோட்டும், சூட்டும் போட்டு கலைஇலக்கியம் என்ற போர்வையில்
ஒளிந்துகொண்ட வியாபாரிகள். மக்களுக்காக மரணித்த தோழர்களின் உழைப்பையும்
உயிரையும் சூறையாடி பிழைப்பு நடத்தும் யாழ் மேலாதிக்க ஆதிக்க சிந்தனை
வாதிகளின் செவிப்பறைகள் கிழியும்வரை பதில்கொடுப்போம். ஈபிஆர்எல்எவ்
ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல, அது கடந்துவந்த பாதைகள் பல
விமர்சனத்திற்குரியவை ஆனாலும் வரலாற்றில் குறிப்பிடும் படியான
பங்களிப்பையும் பதிவு செய்திருக்கிறது. மக்களை நேசிக்கும் மக்களுக்காக
உழைக்மும் மகத்தான பல மனிதர்களை அது உருவாக்கியிருக்கிறது. இன்றும் தமிழ்
சமூக அரசியல் சூழலில் கலை இலக்கியமானாலும், போராட்டங்களாக இருந்தாலும்
முன்னிலையில் குரல்கொடுப்பவர்களில் ஈபிஆர்எல்எவ் முகாமில்
இருந்துவந்தவர்கள் பலரை காணமுடியும். அன்று அம்புலிமாமாவையம்,
உதசூரியனையும் பிடித்த எனது கைகளில் தாயையும் உண்மை மனிதனின் கதையையும்
மட்டுமல்ல எம் மக்களின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் சேர்த்தே கற்க
காட்டிதந்து ஈபிஆர்எல்எவ். அதனால்தான் இன்று. மனிதனாய் வாழ முடிகிறது பல
விலங்குகளுக்கு மத்தியிலும். காலச்சுவட்டுக்கு கண்டனத்தை தெரிவிப்போம்.
இதழின்மின்முகவரி
publisher@kalachuvadu.com ;publisher@kalachuvadu.com தொலைபேசி:
91-4652-278525(Kiruban Pathmanathan)
பேய்களை விட
இந்த விச ஜந்துக்கள் ஆபத்தானவை
ஈபிஆர் எல் எப்
, ஈழப் பெண்கள் விடுதலைமுன்னணி இவற்றின் பிரதான வரலாற்றுப் பாத்திரத்தை
தெரிந்தும் தெரியாதது போல் பாசாங்கு செய்யும் சிறுமைசெய்யும் முனா லிங்கம்
வகையறாக்கள் எல்லாவற்றையும் விட ஆபத்தானவை. இவரைப் போன்று நிறையப் பேர்
இருக்கிறார்கள். இவர்களுக்கு தோழர், சம உடைமை, பால் சமத்துவம், சமானிய
மக்கள், புரட்சி, விடுதலை எல்லாமே வெறுப்புக் குரியவை. ஆங்கில கனவான்களுக்கு
நிகர் என கருதி வாழ்பவர்கள். ஈபிஆர்எல்எப் இல் இருந்தவர்கள் பாமரர்கள்
என்றும் தனது ஆங்கிலப் புலமைபற்றி வேறு புளகாகிதம். வானம் இந்த ஜந்து
சஞ்சரிக்கும் துவாரத்தின் வாயளவு என்று எண்ணுது போலும். அறிவுஜீவிகளை
வெறுப்பவர்கள் என்கிறார். இவர் அறிவு ஜீவி என்பது யாரை தன்னைப் போன்ற
பிரகிருதிகளையா??
(மேலும்....)
வட மாகாணசபையின்
பிரேரணைக்கு அரசாங்கம் அதிருப்தி
வடக்கு - கிழக்கு தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும்,
நடைபெற்றுக்கொண்டிருப்பதுமான இன அழிப்பலிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கும்
சர்வதேச பொறிமுறை ஒன்றைக் கோருதல் தொடர்பில் வட மாகாணசபையில்
செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பில் இலங்கை அரசாங்கம்
அதிருப்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஊடகமொன்றுக்கு கருத்து
வெளியிட்டுள்ள அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித்த
சேனாரத்ன, 'வட மாகாணத்தில் நிறைவேற்றப்படும் இவ்வாறான தீர்மானங்கள்,
ஆட்சிக்கு வந்துள்ள புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைப் பாதிக்கச் செய்யும்
என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். எது எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில்
சர்வதேசத்தினரால் ஏற்றுக்கொள்ளக்கூடிய உள்நாட்டு விசாரணை ஒன்றே
மேற்கொள்ளப்படும் என்று தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது எனவும்
அமைச்சர் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அரசு என்கிற வகையில் இனப்படுகொலை
ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இறுதிகட்டப்
போரின்போது ஏராளமான தமிழர்கள் பாதுகாப்புப் படையினரால்
காப்பாற்றப்பட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அச்சமயத்தில் சிலர்
அட்டூழியங்களைச் செய்திருந்தாலும் அவற்றை இனப்படுகொலை என்று சொல்ல முடியாது
எனவும் அவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளும், பிரபாகரனும் பொதுமக்களை
போரின்போது மனிதக் கேடையங்களாகப் பயன்படுத்தியதுதான், இறுதிகட்ட போரின்போது
ஏற்பட்ட பெருமளவு உயிரழப்புகளுக்கு காரணம் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார். போர் முடிந்த பிறகு எந்த தமிழ் அரசியல் தலைவரும்
இனப்படுகொலை என்று கூறப்படுவது குறித்து தன்னுடனோ அரசுடனோ விவாதிக்கவில்லை
எனக் கூறியுள்ள அமைச்சர்,
வடமாகாண சபை
தீர்மானத்திற்கும் புதிய அரசுடனான உறவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை
கடந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப் பட்ட இனப்படுகொலைகள் தொடர்பி லேயே
வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானம்
நிறைவேற்றப்பட்டதற்கும் புதிய அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கொண்டிருக்கும் நல்லுறவுக்கும் எதுவித தொடர்பும் இல்லையென தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேம ச்சந்திரன் எம்.பி தெரிவித்தார்.
வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டதும், புதிய அரசாங்கத்துடன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நல்லுறவுகளைப் பேணுவதும் வெவ்வேறு விடயங்கள்
என அவர் தெரிவித்தார். கடந்த அரசாங்கத் தினால் மேற்கொள்ளப்பட்டது
இனப்படுகொலையே என வலியுறுத்தி வடமாகாணசபையில் நேற்றுமுன்தினம் தீர்மானமொன்று
நிறைவேற்றப் பட்டிருந்தது. இவை தொடர்பில் புதிய அரசாங்கம் கவலைப்படுவதற்கு
எதுவும் இல்லை. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனங்களைப்
பெற்றுக்கொடுப்பதற்கு புதிய அரசாங்கம் முன்வரவேண்டும். புதிய அரசாங்கம் 100
நாள் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றது. தமிழ் மக்களின்
பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை முன்வைப்பதற்கு இதுவரை எந்த
நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மீள்குடியேற்றம், காணிகளைக் கையளிப்பது
உள்ளிட்ட விடயங்களை நாங்களே அழுத்தம் கொடுத்து அரசாங்கத்துடன்
பேசிவருகின்றோம். என்ன முரண்நகையான கருத்துக் கூறல் என்று சுரேஸ் இன்
கருத்துள்ளது என்று அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
நிலைமை
இந்தளவுக்கு பாரதூரமானதையிட்டு கவலையடைகின்றேன் -
மனோ கணேசன்
வட மாகாண சபை
கடுமையான ஒரு தீர்மானத்தை நேற்று நிறைவேற்றி யுள்ளது. பிரேரணையை
சமர்ப்பித்து வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் சபையில் ஆற்றிய உரையில் புதிய
அரசாங்கத் தையும், குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், பாதுகாப்பு
ராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த னவையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நிலைமை இந்த அளவுக்கு பாரதூரமானதையிட்டு நான் கவலையடைகிறேன். இதையிட்டு
நேற்று காலை நான் பிரதமரிடம் தொலைபேசியில் உரையாடியுள்ளேன். வடக்கு மாகாண
தமிழ் மக்களின் ஆணையை பெற்றுள்ள வட மாகாண சபை உறுப்பினர்களினதும் அதன்
முதல்வரினதும் மன உணர்வுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர்
ரணில் விக்கிரமசிங்கவும் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்களின் ஆணையையும்.
ஆதரவையும் பெற்றுள்ள கட்சிகளையும். தலைவர்களையும் புரிந்து கொள்வதன் மூலமே
தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்ட முடியும். இதற்கு வேறு எ ந்த குறுக்கு
வழிகளும் கிடையாது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன்
தெரிவித்தார். ஜே. வி. பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஹெல
உறுமயவின் இரத்தின தேரர் ஆகியோரும் இராணுவம் வடக்கில் கொல்ப் விளையாட்டு
மைதானம். சுற்றுலா விடுதிகள் போன்றவற்றை அமைக்க பொது மக்களின் காணிகளை
கையகப்படுத்தி வைத்துள்ளதை எதிர்த்து கருத்துகளை தெரிவித்தனர்.
நல்லிணக்கத்தை
எப்படி பாதிக்குமென அளவிடமுடியாது
இனப்படுகொலை
தொடர்பான சர்வதேச விசாரணைகள் புதிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்துமாயின்
அது நிலைமைகளை சிக்கலடையச் செய்துவிடும் என இந்தியா கூறியுள்ளது.
இனப்படுகொலை தொடர்பில் வடமாகாணசபை நிறைவேற்றியிருக்கும் தீர்மானமானது புதிய
அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளை எந்தளவில் பாதிக்கும் என்பதை
தற்போதைக்கு அளவிடமுடியாது என்றும் இந்திய அதிகாரிகள் கூறியிருப்பதாக
‘இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.புதுடில்லி அதிகாரிகள் வட்டாரத்தை
மேற்கோள்காட்டி ‘த ஹிந்து’ இந்த செய்தியை வெளியி ட்டுள்ளது. இந்தப் பிரேரணை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர வையின் ஜெனீவா மாநாட்டில் எந்தளவில்
தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தொடர்பில் அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாகவும்
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான அறிக்கை மார்ச்
மாதம் சமர்ப்பிக்கப் படுவது கைவிடப்பட்டால் புதிய அரசாங்கம் வடக்கிற்கு
வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப் படுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்படுவது
முக்கியம் என இந்தியா எதிர்பார்ப்பதாகவும் ஹிந்து தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான சர்வதேச விசாரணை
முயற்சிகளுக்கு இந்தியா ஆரம்பம் முதலே எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.
இறுதி நாட்களும் எனது பயணமும்
சண்டை முடிஞ்சிது தலைவர்
நேற்றிரவு வெளியேறிவிட்டார்

தப்பித்தவறி அவன்
இவ்விடத்தில் காயமடைந்துவிட்டால் என்ன செய்வது என்று அச்சமாக இருந்தது.
வெடிச்சத்தங்களோ இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருந்தன.
அவன் காப்பகழியோடு நிலத்தில் கிடந்தபடியே சொன்னான், “உண்மையாத் தானக்கா
சொல்றன். அநியாயமா குப்பிய கடிச்சுப்போடாதிங்க. சண்டை முடிஞ்சிது. தலைவர்
நேற்றிரவு போயிட்டார். எஞ்சிய போராளிகள் எல்லாம் சரணடையிறதாக கதை.”
என்றவனிடம்,
“என்ன?” என்றேன் அதிர்ந்து. “யோசிக்காதிங்க. கவலப்படாதிங்க. நீங்க இதில
நிண்டு செத்தாலும் இப்ப அது அநியாய சாவுதான். ஒருதுளிப் பிரயோசனமும் இல்லாத
சாவு. வெளிக்கிடுங்கோ” என்று எடுத்துச் சொன்னான். என்னை வெறுமை அப்பியது.
“இல்லத்தம்பி, ஆமியிட்ட போகச்சொல்றியா? நினைக்கவே கஸ்ரமாய் இருக்கடா.
குண்டுகள் இருந்தால் தந்திட்டுப்போ. ஆமி கிட்டவந்தால் நாங்கள் வெடிச்சு
சாகிறம்” என்றேன். இப்போது அவனது புன்னகையில் வெறுமை தெரிந்தது.
“சாச்சரைத்தான் தந்தாலும் நீங்க பனைமரத்தோட தானக்கா வெடிக்கணும். ஆமியில
வெடிக்க முடியாது. ஏனெண்டால் அவன் ரவுண்சாலயும் ஷெல்லாலையும்
தரைமட்டமாக்கிப்போட்டுத்தான் வந்துகொண்டு இருக்கிறான்” என்றான்.
(மேலும்....)
மாசி
11, 2015
‘Rajapaksa’s Defeat is a
Progressive Change from the Democratic Standpoint’ –
VARADARAJA PERUMAL
In
the following interview Varadaraja Perumal, the former Chief Minister of
the north and east in Sri Lanka, speaks to the Mainstream editor on the
significance of the outcome of the recently held Sri Lankan presidential
election.
How do you view the outcome of the Sri Lankan presidential election?
VP: On the whole it’s a very progressive change because under Mahinda
Rajapaksa’s government the situation was such that the government was
ruling with nepotism in a dictatorial way, curtailing freedom of the
press, freedom of political parties, conducting military intervention,
and attacking the judiciary’s independence. What is more, the
militarisation of the state was carried out in a blatant manner, And the
basic rights, human rights of the minorities, both Tamils and Muslims,
were under threat from the military-oriented regime.
(more....)
சைவ வேளாள வெறி நல்லூர் ஆறுமுகத்தின் அடுத்த வாரிசு அ.முத்துலிங்கம்!!!
(இந்தக்கட்டுரையில்
வரும் '......இந்திய இராணுவத்துடன் சேர்ந்து இலங்கைத் தமிழ் மக்களை
கொன்றார்கள்......' என்ற கூற்றில் அரசியல் உண்மையும் இல்லை, உடன்பாடும்
இல்லை. தவறுகள் நடைபெற்றது உண்மை இதற்கான வருத்தங்களும், சுய
விமர்சனங்களையும் ஈ.பி.ஆர்.எல்.எவ். பல தளங்களில் வெளிப்படுத்தியும்
இருக்கின்றது. மற்றயபடி இக்கட்டுரையில் எமக்கு உடன்பாடுகள் நிறையவே உண்டு.
முத்திலிங்கத்திடம் மன நோயாளியான ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் முன்னாள் உறுப்பினர்
ஒருவர் தனது உள்ளக் கிடக்கை மட்டும் அது இயக்கத்தின் பொதுவான செயற்பாடாக்கி
விற்ற ஈனச்செயலை எம்மால் உணர முடிகின்றது. இது அப்பட்டமான விற்பனைதான்.
காட்டிக்கொடுப்புதான். இவ்காட்டிக் கொடுப்பாளர் எழுத்தை விற்று தமது வயிறை
கழுவும் இவர் தனது சுய படைப்புக்களில் இதுபோன்ற செயற்பாடுகளை செய்து
வருகின்றார். அப்போது எல்லாம் தான் சார்ந்திருந்த இயக்கத்தின் நடை முறைத்
தவறுகளிலிருந்து தன்னை மட்டும் காப்பாற்றும் தூய்மை வாதத்திற்காகவே இதனைச்
செய்கின்றார் என்று பார்ததிருந்த நான் முத்துலிங்கத்திடம் அனைத்து
போராளிகளினதும், அர்பணிப்புகளையும், பெண் போராளிகளின் முற்போக்குத்
தன்மையையும் அடகு வைத்த போது , விற்றபோது இவரை ஒரு மனநோயாளியாகவே என்னால்
பார்க்க முடிகின்றது வீரம் மிக்க வியட்நாம் புரட்சியின்போது பலம் மிக்க
அமெரிக்க ஆயுதங்களுக்கு முன்னால் பலவீனமான அம்பு வில்லு ஆயுதங்களைக் கொண்டு
தந்திரோபாய ரீதியில் போரிட்டு வென்ற வியட்நாம் மக்களின் செயற்பாட்டையே நான்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆரம்ப கால ஆயுத நடவடிக்கைகளில்
காணப்பட்டதை என்னால் ஒப்பிட்டுப் பார்ப்பதை எப்போதும்போல் இப்போதும்
தவிர்க்க முடியவில்லை - சாகரன்)

இவை
அ.முத்துலிங்கம் என்ற அறிவாளி, தமிழ் எழுத்தாளர், இலங்கை அரசின் இன
ஒடுக்குமுறைகளிற்கு எதிராக போரிட வந்த தமிழ்ப்பெண்களைப் பற்றி
ஆணாதிக்கத்துடனும், சாதிவெறியுடனும் கேவலப்படுத்தி எழுதிய வரிகள். இங்கே
அவர் குறிப்பிடும் இயக்கம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F).
ஈழப்புரட்சி அமைப்பு (E.R.O.S), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F),
தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி (N.L.F.T), மக்கள் தேசிய விடுதலை முன்னணி (P.L.F.T),
தமிழ் மக்கள் பாதுகாப்புப் பேரவை (T.P.S.O) என்பன இலங்கைத் தமிழ்மக்களின்
விடுதலையை பொதுவுடமை தத்துவத்தின் வெளிச்சத்தில் போராட எழுந்த இயக்கங்கள்.
ஆகவே இயல்பாக இவற்றில் தமிழ் மக்களின் அடித்தட்டு மக்களும், யாழ் சைவ
வேளாளியத்தின் கொடுமைகளால் ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட தமிழ்மக்களும்
இணைந்து கொண்டனர். புலிகள் கொலைவெறி பிடித்து போராளிகளை கொன்று குவித்து,
தங்களைத் தவிர மற்ற எல்லா இயக்கங்களையும் தடை செய்யும் வரை இந்த இயக்கங்கள்
சமவுடமை கொள்கைகளை, சாதி ஒழிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்தன.
(மேலும்....)
ஈழப்பெண் போராளிகள்
தான் கிடைத்தார்களா?
- தோழர்
ஞானசக்தி
“பாதகம் செய்பவரை
கண்டால் பயம் கொள்ளல் ஆகாது…. மோதிமிதித்து விடு…..முகத்தில் உமிழ்ந்து விடு…..”
–பாரதி
எழுத்தாளர்கள் என்று பெருமிதம் கொள்ளும் ஆணாதிக்க அற்பர்களுக்கு
தேடிகண்டுபிடித்த கருப்பொருளாக ஈழப்பெண் போராளிகள் தான் கிடைத்தார்கள்
போலும். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அவமானப்படுத்தும் வக்கிரம்
உமிழப்படுகிறது.
விடுதலைப் போரராட்டத்தில் உளச்சுத்தியுடன் பங்கெடுத்த எவரையும் மலினமாக
சித்தரிப்பது அழகல்ல.
முத்துலிங்கம்
அய்யாவின் எழுத்துக்களின் பரம ரசிகன்நான். அவரைப்பார்த்து எழுதப்பழகியவன்.
கடந்தமுறையும் (ஆனந்தவிகடனில் என்று நினைக்கிறேன்) விடுதலைப்போராட்டத்தைப்
பற்றி ஒரு கதை எழுதி இருந்தார். அதுவும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
காலச்சுவடு பத்திரிகையில் "பதினொரு பேய்கள்" வாசித்தவுடனேயே இது கண்டிவீரனை
தழுவியிருக்கிறது என்ற எண்ணம் ஓடியது. ஒரு நண்பரும் அதனை உறுதிசெய்தார்.
விடுதலைப் போரராட்டத்தில் உளச்சுத்தியுடன் பங்கெடுத்த எவரையும் மலினமாக
சித்தரிப்பது அழகல்ல. தவிர ஒரு உண்மைச் சம்பவத்தை இணைத்து அதனுடன்
புனைவையும் இணைத்து எழுதக்கூடாது என்று விதியில்லை. இருப்பினும் அதை
எழுதுவதற்கு ஒரு தார்மீகமான விழுமிய வரைமுறை இருக்கிறது. முத்துலிங்கம்
அய்யா மேற்கூறியதை கவனத்தில் எடுத்திருக்கவேண்டும். காலச்சுவடும்
இவ்விடயத்தில் பிழைவிட்டிருக்கிறது என்றே கூறுவேன். அவர்களுக்கும்
தார்மீகமான விழுமிய வரைமுறையை பேணவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
முத்துலிங்கம் அய்யா எதை எழுதினாலும் வெளியிடலாம் என்று நினைக்வும் கூடாது.
எமது இலக்கிய உலகமும் விமர்சனங்களை நாகரீகமாக முன்வைக்கப்
பழகிக்கொள்ளவேண்டும். விமர்சனத்தின் நோக்கமே எனது கருத்தை மற்றையவர்
புரிந்துகொள்ளவேண்டும் என்பது. எனவே விமர்சனங்களும் மற்றயவர்கள் சிந்தனையை
தூண்டுபவையாக இருந்தால் மட்டுமே எமது கருத்துக்கள் உள்வாங்கப்படும் என்று
நானும் நினைக்கத் தொடங்கி அதிக காலமில்லை. (Sanjayan Selvamanickam)
பதினொரு பேய்கள்
-
அ.முத்துலிங்கம்
இந்தக் கதையை
ஓரளவு மாற்றி இலக்கியத்தரமாக சொல்லியும் சொல்லாமலும் இலக்கியமாக
படைத்திருக்க முடியும் அது முத்துலிங்கமவர்களால் முடிந்திருக்கும் ஆனால்
அவசரத்தில் மனத்தில் கொண்ட ஓரு நோக்கில் நிகழ்வின் பதிவாக ஆரம்ப
எழுத்தாளராக பதிவிட்டதின் தவறு என நான் நினைகிறேன் இது எஸ்போ தமிழ்
தேசியத்திறகு முண்டுகொடுக்க மாயினி எழுதிய மாதிரியான் வேலை - நடந்து
திரிந்த விடலைப் பருவத்து ஒருவன் ஏதோ விடயத்தைப்பார்பதற்காக தவழ்ந்த
கதைதான்.(Noel Nadesan )
பதினொரு பேய்கள்
-
அ.முத்துலிங்கம் (காலச்சுவடு இதழில் வெளியான சிறுகதை)
ஜெயமோகன் வழியை முத்துலிங்கமும் பின்பற்றுகின்றார் போல் தெரிகிறது.
உடனடியாகத்தன்னைப்பற்றிப் பலர் கதைக்க வேண்டுமென்றால் மிகவும் பிரச்சினையான
ஒரு கருத்தை அவர் கூறுவார். உடனே அது தீ பற்றியெரியும். விகடனில் எம்ஜிஆர்/சிவாஜி
பற்றி அவர் எழுதியதை உதாரணத்துக்குக் கூறலாம். அ.மு.வும் அந்த வழியைப்
பின்பற்றி 'பதினொரு பேய்கள்' கதையை எழுதினாரோ தெரியவில்லை. ஈழவிடுதலைப்
போராட்ட அமைப்பொன்றான 'ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அமைப்பினை
இவ்வளவு தூரம் கொச்சைப்படுத்தி எழுதியிருப்பதை அவர் தனது
கருத்துச்சுதந்திரம் என்று கூறலாம். ஆம், அது அவரது கருத்துச்சுதந்திரம். .
தகவல்களைத்திரித்து, பிழையான தகவல்களை, ஊகங்களை மையமாகக்கொண்டு,
விடுதலைக்குப் போராடிய அமைப்பொன்றினைச் சிறுமைப்படுத்தி, ( போராடிய
அமைப்புகள் யாவும் மனித உரிமை மீறல்கள் பலவற்றைப் புரிந்துள்ளன. அவற்றில்
ஏதாவதொன்றினை மையமாக வைத்து அவர் இக்கதையினை எழுதியிருந்தால் அது
வரவேற்கப்பட்டிருக்கும்)புனைவென்ற பெயரில் இவ்விதம் கீழ்த்தரமாகக்
கொச்சைப்படுத்தி எழுதியிருப்பது ஏற்கத்தக்கதல்ல என்பதென் கருத்து.
இதனைக்கூறுவது எனது கருத்துச்சுதந்திரம்.(Giritharan Navaratnam)
பதினொரு பேய்கள்
-
அ.முத்துலிங்கம்
உலக இலக்கியம்
படைத்துக் கொண்டிருக்கும் மூடுலிங்கப் பெரியாருக்கு கேட்பார் இன்றி தர்ம அடி
விழுதல் கண்டு, அவரது கோட்டுவாலில் தொங்கி பிழைப்பு நடத்தி, அவரைச் சிவிகை
காவித் திரிந்தவர்கள், அவரை பொத்தென்று போட்டு விட்டு, தலை மறைவானதால்,
காவித்திரிந்தவர்கள் பொது அறிக்கை விடும் எண்ணமிருந்தால் அந்தச் சிரமம்
இல்லாமல் வெறும் கையெழுத்து வைப்பதற்கு வசதியான அறிக்கை இது.(Thamayanthi
Simon)
பதினொரு பேய்கள்
-
அ.முத்துலிங்கம்
இந்தக் கதை
பின்னடைவையும் கடுமையான விமர்சனத்தையும் தலையிடியையும் அ.
முத்துலிங்கத்துக்குத் தந்திருக்கிறது என நம்புகிறேன். இந்த இடத்தில்
ஷோபாசக்தியின் கண்டி வீரன் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.
முத்துலிங்கத்தை விட ஷோபாசக்தி பல படிகள் மேலே நிற்கிறார்.நானும் விரும்பி
வாசிக்கும் ஒருவர் அ. முத்துலிங்கம். பல நல்ல கதைகளை எழுதியிருக்கிறார்.
ஆனால் அவர் இந்த மாதிரி போராட்டம் பற்றி எழுதிய அத்தனை கதைகளும் மிகப்
பலவீனமானவை.அவருக்கு இந்தக் கதைகள் சறுக்கல்களே. (Sivarasa Karunagaran)
பதினொரு பேய்கள்
-
அ.முத்துலிங்கம்
பங்கெடுத்தவர்கள் காட்டிக் கொடுப்பாளர்களாக களிநடனம் புரியலாம்.ஷோபா
சக்தியும்,முத்துலிங்கமும் தண்ணியில் கேட்டெழுதியவை அவை.மயிலும்
வான்கோழியும் வாந்தியெடுத்தால் தூக்கிப்பிடித்து சுவைபார்க்கிறவர்கள்
எத்தகையவர்கள்:பன்னிரண்டாவது பேய்கள். (Ko Maalikal)
அ. முத்துலிங்கத்தின்
பதினொரு பேய்கள்
இந்தக்கதைக்கு ஏன் இவ்வளவு சர்ச்சை என எனக்குப் புரியவில்லை, இதை விட
மோசமான இயக்கக் கதைகள் கூட வந்துள்ளது.இப்படிக்கதை எழுதி போராட்டத்தை
கொச்சப்படுத்துவதாக சொல்வதில் நியாயமில்லை . இந்தக்கதை பெருமளவு உண்மைத்
தன்மையுடையது. ஆனால் இலங்கையில் ஒரு துப்பாக்கி வெடிச் சத்தததைக் கூடக்
கேட்டிராத முத்துலிங்கத்தால் எப்படி துல்லியமாக இந்தக் கதையை எழுதமுடிந்தது?
அந்த பதிரொரு பேய்களில் ஒரு பேய் தான் இதை முத்துலிங்கத்துக்குச் சொல்லி
இருக்க வேணும்.. அந்தப் பேய் தான் இந்தக்கதை யை ஏன் எழுதாமல்
மறைந்திருக்குது. எல்லாம் சரி. இன்னும் பலர் சாத்திரியின் ஆயுத எழுத்தைப்
படிக்கவில்லைப்போலும். (Sellamuthu Krishnamoorthy)
டெல்லியில்
பலத்த அடி: எதிர்க்கட்சி அந்தஸ்துகூட பாஜகவுக்கு கிடைக்கவில்லை
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி
பெற்றுள்ளது. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. மக்களவைத்
தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்த நிலையில்,
அக்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒரே பஸ்ஸில் பயணம் செய்யலாம் என பாஜக
கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தது. இப்போது டெல்லி சட்டப்பேரவைத்
தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் ஒரு பைக்கிலேயே
சட்டப்பேரவைக்கு பயணம் செய்ய முடியும். ஆனாலும் 3 பேர் செல்ல அனுமதி இல்லாத
காரணத்தால், இவர்கள் ஒரே ஆட்டோவில் பயணம் செய்யலாம் என்ற நிலை உருவாகி
உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
(மேலும்....)
டெல்லி சட்டசபைத்
தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி
டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது.
இந்த வெற்றியானது பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நல்ல பாடங்களை
கற்றுக்கொடுத்துள்ளது என்று இந்திய செய்தி தெரிவிக்கின்றது.
டெல்லியில் மொத்தம் 70 தொகுதிகள். இதில் உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட
தொகுதிகள் 10 உள்ளன. அதேபோல நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் உள்ள தொகுதிகள்
28 ஆகும். ஏழைகள், நலிவடைந்த மக்கள் அதிகம உள்ள தொகுதிகளின் எண்ணிக்கை 32
ஆகும். இந்த மூன்றிலுமே முத்திரை பதித்துள்ளது ஆம் ஆத்மி. கட்சி, இது முதல்
ஆச்சரியம். அதாவது உயர் வருவாய் பிரிவினரைக் கொண்ட 10 தொகுதிகளையும்
இக்கட்சி அப்படியே அள்ளியுள்ளது. இங்கு பா.ஜ.கவுக்கு ஒரு சீட் கூட
கிடைக்கவில்லை. இது பாஜகவுக்கு அதிர்ச்சி தரும் செய்தியாகும். நடுத்தர
வர்க்கத்தினர் மிகுதி 28 தொகுதிகளில் 25 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது ஆம்
ஆத்மி.. மீதமுள்ள 3 இடங்களை பா.ஜ.க வென்றுள்ளது. இதன் மூலம் நடுத்தர
வர்க்கத்தினர் ஆணித்தரமாக ஆம் ஆத்மி பின்னால் அணிவகுத்திருப்பதை உணர
முடியும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோர், ஏழைகள் அதிகம் உள்ள
தொகுதிகளிலும் ஆம் ஆத்மி முத்திரை பதித்துள்ளது. இங்குள்ள 32 தொகுதிகளில்
29 தொகுதிகளை அக்கட்சி தட்டிப் பறித்துள்ளது. இந்த தொகுதிகள்தான் ஆம்
ஆத்மியின் முக்கியமான பலமாகவும் காணப்படுகிறது.
(மேலும்....)

கிழக்கு பட்ஜெட் 34
வாக்குகளால் நிறைவேற்றம்
இரண்டு
மாதங்களாக இழுபறியில் இருந்த கிழக்கு மாகாண சபையின் வரவு-செலவுத்திட்டம்
சகல கட்சிகளின் ஆதரவுடன் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. இந்த
வரவு-செலவுத்திட்டத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட்
சமர்ப்பித்தார். வரவு-செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக 34 வாக்குகள்
அளிக்கப்பட்டன. இரண்டு உறுப்பினர்கள் சபைக்கு சமூகமளிக்கவில்லை. கிழக்கு
மாகாண சபையில் 37 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
குமார்
குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டாம்
- நீதிமன்றம்
முன்னிலை சோஷலிச கட்சியின் அரசியல்குழு உறுப்பினரான குமார் குணரத்னத்தை நாடு
கடத்தவோ கைது செய்யவோ வேண்டாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குமார்
குணரத்னத்தை கைது செய்து நாடு கடத்த பொலிஸார் தயாராகி வருவதாக தகவல்
கிடைத்துள்ளதெனவும் அவ்வாறு செய்வது சட்டவிரோத செயல் என உத்தரவிடும்படியும்
முன்னிலை சோஷலிச கட்சி நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத்
தாக்கல் செய்துள்ளது. குறித்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், குமார்
குணரத்னத்தை எதிர்வரும் 13ஆம் திகதிவரை நாடு கடத்த வேண்டாமென குடிவரவு
மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
எதிர்க்கட்சி
தலைவர் பதவியை பெற மஹிந்த முயற்சித்தார்
எதிர்க்கட்சித் தலைவராக நிமல் சிறிபால.டி. சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன நியமித்திருக்காவிட்டால், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்
ஒருவரை இராஜினாமாச் செய்யவைத்து அதனூடாக பாராளுமன்றம் வந்து எதிர்க்கட்சித்
தலைவர் பதவியைப் பெற்றுக்கொள்ள மஹிந்த ராஜபக்ஷ முயற்சித்திருப்பார் என
அமைச்சர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டையில்
இடம்பெற்ற வன்முறைகளுக்கு நீல படையணிக்குத் தலைமைதாங்கியவரே காரணம். ஹம்
பாந்தோட்டையில் எமக்கு கூட்டமொன்றை நடத்த முடியாது.கூட்டம் நடத்தும்
இடத்துக்கு வந்து வாகனத்தைநோக்கி வெடிவைத்து அச்சுறுத்திச் சென்றனர். ஆனால்
தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதியின் ஹம்பாந்தோட்டை வீடு, நீலப்படை
யணியின் அலுவலகம், சபா நாயகரின் அலுவலகம், மஹிந்த அமர வீரவின் வீடு
உள்ளிட்ட அனைத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பை வழங்கினோம். ஆனால் தேர்தல்
காலத்தில் எனது வீட்டுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரியபோதும் முன்னாள்
ஆட்சியாளர் கள் அதனை வழங்கவில்லை. இதுவே நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்
மாற்ற மாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுடன் ஈ.பி.டி.பியின்
பிரதிநிதிகள் சந்திப்பு!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா
அவர்களை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். ஜனாதிபதி அவர்களின்
வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு இன்றைய தினம் (10) இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது எமது மக்கள் முகங்கொடுத்து வருகின்ற நாளாந்த
பிரச்சினைகள் மற்றும் சமகால, எதிர்கால அரசியல் நிலவரங்கள் என்பன குறித்து
பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனா அவர்களை தொடர்ச்சியாக சந்தித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்றைய தினமும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளமை
குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் 16 கோரிக்கைகள் முன்வைத்து ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியினர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஈழ மக்கள்
ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையிலான
இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்
தலைவருமான முருகேசு சந்திரகுமார், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்
தலைவர் சி.தவராசா, செயலாளர் நாயகத்தின் இணைப்பாளர் ராஜ்குமார் ஆகியோர்
கலந்து கொண்டனர்.

தமிழ்
கூட்டமைப்புக்கு ஆப்பு, மாற்றுத் தலைமைக்கு வாய்ப்பு!
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு போட்டியாக பலம் வாய்ந்த மாற்றுத் தலைமை ஒன்று
நாடளாவிய ரீதியில் வெகுவிரைவில் உருவாகும் என்று அரசியல் அவதானிகள் ஆரூடம்
தெரிவிக்கின்றார்கள். தமிழர் பிரச்சினையை தீராப் பிரச்சினை ஆக்கி தமிழ்
தேசிய கூட்டமைப்பு வேண்டும் என்று இழுத்தடித்துக் கொண்டு செல்கின்றது,
இதனால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று விரும்புகின்ற
உதிரிக் கட்சிகளைச் சேர்ந்த தமிழ் தலைவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில்
பாரிய அதிருப்தி அடைந்து உள்ளார்கள் என்று அரசியல் வட்டாரங்களில் பரவலாக
பேசப்படுகின்றது. (மேலும்....)
மாசி 10, 2015
டெல்லி மக்கள்
தீர்ப்பு சொல்லும் செய்தி என்ன?
டெல்லி
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து ஆம் ஆத்மி கட்சி
அதிக இடங்களில் முன்னிலை பெற்று தனிப் பெரும்பான்மையை நோக்கிச் சென்று
கொண்டிருக்கிறது. படேல் நகரில் உள்ள ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் கோலாகலமாக
காட்சியளிக்கிறது. வாக்குப்பதிவுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக்
கணிப்புகளில் பலவும் ஆம் ஆத்மி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் எனத்
தெரிவித்திருந்தன. அதற்கேற்பவே தேர்தல் முடிவுகளும் உள்ளன. கடந்த முறைபோல
தொங்கு சட்டசபை அமைவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகிவிட்டது. வெறும் 49
நாட்களில், வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு
பாதியிலேயே சென்றுவிட்டார் என கேஜ்ரிவாலை குறிவைத்து பிரச்சாரம் செய்தது
பாஜக. கேஜ்ரிவாலுக்கு சரியான சவாலாக இருக்க வேண்டும் என பாஜக முதல்வர்
வேட்பாளராக கிரண் பேடி களமிறக்கப்பட்டார். ஆனால், அமித் ஷா தேர்தல் வியூகம்,
பாஜக தீவிர பிரச்சாரம், வேட்பாளராக கிரண் பேடி களமிறக்கப்பட்டது என இவை
எவையும் டெல்லி மக்கள் மத்தியில் எடுபடவில்லை. (தி இந்து
மஹிந்தவின்
ஆட்சியை கவிழ்க்க ஜே.வி.பியே அடித்தளமிட்டது
- அநுரகுமார
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியை கவிழ்ப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி பாரிய
பங்களிப்பினை செய்தது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார
திஸாநாயக்க தெரிவித்தார். எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படுத்தப்பட வேண்டிய
மாற்றங்கள் தொடர்பாக நாடுபூராகவும் மக்களை தெளிபடு த்தி செல்கின் றோம்.
தங்காலை நகரில் மக்கள் விடுதலை முன்ன ணிக்கு பத்து வருடங்களுக்கு பின்பு
கூட்டம் ஒன்றினை நடத்துவதற் கான சந்தர்ப்பம் கிடைத்தது. இலங்கை வரலாற்றில்
முதல் தடவையாக மக்களது வயிற்றுப் பிரச்சினைக்கு பதிலாக நாட்டுப் பிரச்சினையை
முன்னணி வகித்து ஆட் சியை மாற்றியமைக்க மக்கள் முன்வந்தார்கள். ஜனாதிபதி
செயலகத்தில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை இன்று வரை எவருக்கும் தெரியாது.
இவற்றை யார் பயன்படுத்தினார்கள் இதன் விபரங்கள் யாவை? இவை யாரிடம் உள்ளன
என்பது பற்றி யாருக்கும் தெரியாது. சிலர் கூறுகிறார்கள் ஊழலில் ஈடுபடு
வோருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் எடுப்பதில்லை யென இது உண்மை.
இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு மக்கள் ஆதரவினை
திரட்டவுள்ளோம்.
பாலுடன் தேனல்ல விஷம் கலந்தூட்டப்பட்டது
எங்களுக்கு
தமிழ் பாலுடன் சிங்களவர்
கூடாது என்ற விஷத்தை பருக்கிய
வடக்கு அரசியல் வாதிகள்
அதே போல் தான் அங்கும்
சிங்களவர்கள் என்ற பாலுடன் தமிழர்கள்
கூடாது என்ற விஷத்தை பருக்கினார்கள்
தெற்கு அரசியல் வாதிகள்
ஆனால்
வறுமை,பசி,பட்டினி
நாடு பூராகவே
இனம்,மதம்,மொழி பாராது
கொலைத்தாண்டவம் போடுகிறது .........
(Yoganathan
Appaiah)
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்
ஆம் ஆத்மி முன்னிலை!
பாரதிய ஜனதா மண்ணைக் கவ்வுகின்றது!!
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8
மணிக்கு 14 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது.
முன்னணி நிலவரம்:
ஆம் ஆத்மி 38
பா.ஜ.க. 11
காங்கிரஸ் 3
மற்றவை 0
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல்
நடைபெற்றது. இதில், மொத்தம் 67.14 சதவீத ஓட்டுகள் பதிவானது. 70
தொகுதிகளிலும் மொத்தம் 673 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு பின்
எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை கெஜ்ரிவால் தலைமையிலான
ஆம் ஆத்மி கட்சிக்கே சாதகமாக அமைந்து உள்ளன. அதிக பட்சமாக அக்கட்சி 53
தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், பா.ஜ.க.
எடுத்த கருத்து கணிப்பில், அந்த கட்சிக்கு 34 முதல் 38 இடங்கள் வரை
கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி, பா.ஜ.க. இடையே நிலவும் கடும்
போட்டி காரணமாக காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் அதிகபட்சமாக 5 இடங்களை
கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன.
கொழும்பு கோட்டை
புகையிரத நிலையத்தின் முன்னால் மௌனப் போராட்டம்!
இன்று
காலை முதல் முன்னிலை சோசலிச கட்சியினர் கோடடை புகையிரத நிலையத்திற்கு
முன்பாக மௌனப் போராட்டத்தில் ஈடபட்டுள்ளனர். அனைத்து அரசியல் கைதிகளையும்
நிபந்தனை இன்றி விடுதலை செய்யுமாறும், கடந்த ஆட்சியில் இடம்பெற்ற
காணாமலாக்கல்களையும் கடத்தல்களையும் வெளிப்புடுத்துமாறும், குமார்
குணரத்தினத்தின் அரசியல் உரிமையை பறிக்காதே என வலியுறுத்தியும் இந்த மௌனப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெரும் தொகையானோர் பங்கு கொண்டதுடன்
காணாமல் போனவர்கள் கடத்தலுக்கு உள்ளானவர்கள் அரசியல் கைதிகளாக சிறைகளில்
உள்ளோரின் குடும்பங்களும் கலந்து கொண்டனர். குறிப்பாக வடக்கு கிழக்கில்
இருந்தும் புதிய அரசிடம் தமது உறவுகளை தேடித் தருமாறு கணிசமான மக்கள் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண
சபை:தமிழ்கூட்டமைப்பு தொடர்ந்தும் மு.காவுடன் பேச்சு
கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில்
அங்கம் வகிப்பது தொடர்பான விடயம் தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் நம்பிக்கையான வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
இவ்விவகாரமானது முரண்பாடுகளுக்கு உரியதல்லவென்றும், சுமுகமான திசையை
நோக்கியே ஆராயப்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய
உறுப்பினரொருவர் நேற்று தெரிவித்தார். இதேவேளை கிழக்கு மாகாண சபையில் இன்று
வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவதனால் வரவு செலவுத் திட்ட விடயத்தில்
எத்தகைய நிலைப்பாட்டை முன்னெடுப்பது என்பது குறித்து தமிழத் தேசிய
கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் நேற்று ஆராய்ந்துள்ளனர். முஸ்லிம் காங்கிரஸ்
தலைமையிலான ஆட்சியில் பங்கேற்பது குறித்து இன்று மாலை (செவ்வாய்க்கிழமை)
தமிழத் தேசியக் கூட்டமைப்பினால் முடிவொன்று எட்டப்பட்டு விடுமென கூட்டமைப்பு
வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன. இது இவ்விதமிருக்க இன்றைய புதிய
அரசாங்கத்தில் அரசாங்க சார்பு ஊடகங்கள் கடைப்பிடிக்கும் நடுநிலைமை சார்ந்த
போக்கு திருப்தியளிப்பதாக கூட்டமைப்பு முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.
இனவாத சிந்தனை
தோற்கடிக்கப்பட்டதால் சர்வகட்சி அரசியல் அவசியமாகியுள்ளது
கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசாங்க மொன்றை அமைப்பதற்கு ஸ்ரீல.முஸ்லிம்
காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானத்துக்கு மல்வத்த மற்றும் அஸ்கிரிய
பீடாதிபதிகளின் முழுமையான அசீர்வாதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக அமைச்சர் ரவூப்
ஹக்கீம் நேற்று (09) கண்டியில் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில்
ஏற்படுத்தப்படும் தேசிய அரசாங்கத்தைப் போன்று மத்திய மாகாணத்திலும்
இவ்வாறான நிலைமைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான பணிகளையும் ஆலோசனைகளையும்
முன்வைக்க எமது ஸ்ரீல.மு.க. தீர்மானித்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
ஆட்சி அதிகாரங்களை தக்கவைக்க முன்னைய அரசு உச்சக்கட்ட இனவாதத்தை பிரசாரம்
செய்தது குறிப்பாக அரச ஊடகங்களின் மூலமாக கிராமப்புற சிங்கள வாழ் மக்களுக்கு
முஸ்லிம் களைப் பற்றி மிக மோசமான காட்சியொன்றே காட்டப்பட்டும்
சித்தரிக்கப்பட்டும் வந்துள்ளதை நீங்கள் அறிவீர்கள். இதை பெரும்பாலான மக்கள்
விரும்பவில்லை. எனவே மக்கள் இந்நிலைமையை மாற்றி வேறொரு அரச தலைமையை தெரிவு
செய்துள்ளனர். எனவே இந்த ஐக்கிய நாட்டுக்குள் அனைவரும் ஒன்றாக வாழ வேண்டியது
காலத்தின் தேவை என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கண்டியில் மகாநாயக
தேரர்களிடம் தெரிவித்தார்.
கறுப்பு பணம்
பதுக்கியுள்ள 1195 இந்தியர்களின் பெயர்கள் வெளியீடு
சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியுள்ள 1195 இந்தியர்களின் பெயர்கள்
அடங்கிய புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவாவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கணக்கு வைத்துள்ள 628 பேரின்
பட்டியலை இந்திய மத்திய அரசு கடந்த சில மாதங்ளுக்கு முன்பு உச்ச
நீதிமன்றத்தில் அளித்தது. அவர்களில் கறுப்பு பணம் பதுக்கி வைத்ததாக உறுதி
செய்யப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்
அப்போது தெரிவிக்கப்பட்டது. அதன்படி கறுப்பு பணம் பதுக்கிய 60 பேர்
தொடர்பான விசாரணை முடிந்துவிட்டதாகவும் அவர்கள் மீது பல்வேறு
நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் வருமான வரி துறை அதிகாரிகள்
கூறியுள்ளனர். இந்நிலையில் ஜெனிவாவில் உள்ள குறிப்பிட்ட அந்த வங்கியில்
கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் 1,195 பேரின்
விவரங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட் டுள்ளது. முகேஸ் அம்பானி, அனில்
அம்பானி, ஆனந்த் சந்த் பர்மான், யாசோவர்தன பிர்லா உள்ளிட்ட தொழிலதிபர்கள்
மற்றும் ரவுசெல் மேத்தா, அனுப் மேத்தா உள்ளிட்ட நாட்டின் முக்கிய வைர
வியாபாரிகள் மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் பிரினீத் கவுர், மகாராஷ்ர
மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயண் ரானே போன்ற அரசியல்வாதிகள் பால்தாக்கரே
மருமகள் ஸிமித்தா தாக்கரே போன்ற அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும்
வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஆம்ஸ்ட்ரோங்
நிலவில் தரையிறங்கிய நினைவுப் பொருட்கள் கண்டுபிடிப்பு
அமெரிக்க
விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் நிலவுக்கு சென்றபோது பயன் படுத்திய
உபகரணங்கள் பை ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலை யில் அவரது விதவை
மனைவியினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது கணவர் கடந்த 2012 ஆம் ஆண்டு
மரணமடைந்ததை அடுத்தே வெள்ளை பை ஒன்றுக்குள் ஞாபகார்த்தமாக வைத்திருந்த இந்த
உபகரணங் களை அவர் கண்டுபிடித்துள்ளார். ஆம்ஸ்ட்ரோங் முதல் முறை நிலவில்
காலடி எடுத்து வைத்த 1969 விண்வெளி பயணத்தின்போது நிலவில் விட்டு விட்டு
வரவேண்டிய பொருட்களும் இதில் அடங்குகின்றன. வயர்கள், விண்வெளி வீரர்கள்
பயன்படுத்தும் விளக்கு, குரல் பதிவு கருவி. கண்ணாடி போன்ற சிறிய உபகரணங்கள்
உள்ளடங்குகின்றன. அதேபோன்று நிலவின் மேற்பரப்பை முதல் முறை படம்பிடித்த
கெமராவும் அடங்குகிறது. நீல் ஆம்ஸ்ட்ரோங் இந்த பை குறித்து எந்த குறிப்பும்
விட்டுவைக்காத நிலை யில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் அவரது ஒஹியோ வீட்டில்
இருந்தே இது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
விண் வெளிப் பயணத்தில் பயன்படுத்திய உபகரணங்கள் என்பதை ஆய்வாளர்கள் உறுதி
செய்துள்ளனர். நீல் ஆம்ஸ்ட்ரோங் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் மரண
மடைந்தார்.
நாம் சாப்பிடுவது உணவா... விஷமா?
நிறம், பாக்கேஜ்,
வாசம் போன்றவைதான் இன்று நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
எது நல்லது? எது கெட்டது? என ஆராயாமல் நாவை சுண்டி இழுக்கும் சுவையை
மட்டும்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்கிறோம். அத்தகைய வகையில் நாம்
சாப்பிடும் உணவுகளும், கெமிக்கல்களும் இவைதான். இந்த உணவுகளை சாப்பிடும்
முன், சற்று சிந்திப்பது நல்லது. (மேலும்....)
50 ஆண்டுகளுக்கு
முன்னர் மாயமான விமானம் கண்டுபிடிப்பு
சுமார்
அரை நூற்றாண்டுக்கு முன் சிலி கால்பந்தாட்ட அணி வீரர்களுடன் காணா மல் போன
விமானம், மலையேறும் வீரர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1961ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி லான் சிலி டக்ளஸ் டிசி-3 என்ற விமானம் மாயமானது.
சான்டியாகோவில் இருந்து 300 கி.மீ. தொலை வில் உள்ள மௌலே பகுதியில் மலையேறும்
வீரர்கள் கண்டுபிடித்த விமானத் தின் பாகங்கள் தான் அவை என்று தெரிய
வந்துள்ளது. அப்பகுதியில் ஏராளமான பொருட்கள் சிதறி கிடப்பதாகவும், ஏராளமான
மனித எலும்புகளும் இருப்பதாகவும் மலையேறும் வீரர்கள் கூறியுள்ளனர். இதுவரை
மாயமான விமானம் என்ற நிலையில் இருந்து, விமானத்தின் இறுதி முடிவு தற்போது
வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த விமானத்தில், சிலி நாட்டு கால்பந்தாட்ட
அணியின் வீரர்கள் உட்பட 34 பேர் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி 09, 2015
இந்த வாரம்
நாடாளுமன்றம் கலைப்பு?
பொதுப் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர்
ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
தோற்கடிக்கப்படாவிடின், நாடாளுமன்றம் இந்தவாரம் கலைக்கப்பட்டுவிடும் என்று
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று
(08) தெரிவித்தார். அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்
பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில்
உள்ள 225 உறுப்பினர்களில் 114பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு
தெரிவித்து கையெழுத்திட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சி அறிவித்துள்ளது. வத்தளை
பிரதேசசபை தலைவர் மீது அண்மையில் நடந்த தாக்குதலுடன் அமைச்சர் ஜோன்
அமரதுங்கவுக்கு தொடர்பு இருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர்
எதிர்க்கட்சியினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுப்பதற்கு புதிய
அமைச்சர் தவறிவிட்டதாகவும் கூறியே இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை
கொண்டுவந்துள்ளதாகவும் எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. எவ்வாறெனினும்,
தன்மீது எதிர்க்கட்சியினர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை
சிறுபிள்ளைத் தனமானது என்று அமைச்சர் ஜோன் அமரதுங்க கூறியுள்ளார்.
Real Executive Powers Of Provinces Rest With Chief Ministers, Not With
Governors
(by Varatharaja Perumal)

Function of democracy depends on rule of law and for ensuring proper
function of rule of law the separation of powers is essential. In the
process of progressing democratic system, the devolution of powers to
the regional units of governance has become fourth pillar of the
separation of powers, which in fact ensure the check and balance for
good governing of the country. Sri Lanka has more than 26 years
experience of Provincial Council (PC) system since it was formed in 1988
under the 13th Amendment (13A) of the Constitution of Sri Lanka. Yet,
the issues regarding the implementation of the 13A are not resolved. It
is generally acknowledged that the powers devolved to PCs are
insufficient for the PCs to be effective as to the social and economic
development of the people and the regions of their respective provinces.
To increase the powers of the PCs, the 13A should be fully revised and
replaced by another amendment to the Constitution. This is widely called
among the political circle 13 plus. (more....)
தொண்டைமானாறு கடல் நீரேரி

ஆனையிறவு வரை
நீள்கிறது என்பதை கேட்டதும் நம்பமுடியாதளவு இருக்கும். ஆனால் உண்மை.
குடாக்கடல் நீரேரி நாவற்குழி ஊடாக இடையிட்டு தொண்டைமானாறு நீரேரியில்
இணைந்து கொள்கிறது. மேலோட்டமாக பார்த்தால் இவ்விரு வழிகளுமே பிரதானமாக
யாழ்ப்பாணத்தில் விழுகிற மழையை சமுத்திரத்துக்கு சேர்க்கின்ற வடிகால்கள்.
சூழலியலாளர்களின் ஆழ்ந்த பார்வையில், இவ்விரு வழிகளுமே குடாநாட்டுக்கான
குடிநீரின் சேமிப்புத் திறனை தக்கவைத்துக் கொள்ள போதுமான வழிகள்.
தொண்டைமானாறு - நாவற்குழி இரண்டு உப்பாற்று முகங்களுமே -இயற்கை,
யாழ்ப்பாணிகள் மீது வைத்த கரிசனை!
(மேலும்....)
இன்று நோர்வேயில் தாயர்தினம். அதாவது மாசி மாதத்தில்
வரும் இரண்டாவது ஞாயிறு
தாயர்தினம்
மனதில் தாயர்தினத்தை காயாது
காத்து வைத்திருக்கிறார்கள் ஈரமாக
தாயை....?
இதயத்திலும் உதரத்திலும் சுமந்தவளை
மனதில் நினைப்பதற்கு ஒருநாள்....
ஒருநாள் மட்டும்...!
ஒருநாளாவது இருக்கிறதே!!!
மகிழ்ச்சி தான்
முதியோர் இல்லத்தில் தாயரின்
படுக்கையைச்சுற்றி
பிள்ளைகளின் அனுப்பிய பூக்கள்.
இங்கே சாவீட்டுக்கும் பூக்கள்தான்
பணத்தின் பின்னால்
பிணங்களாக பிள்ளைகள்
யாரோ பெத்ததுகள் தாய்க்கு
பாலூட்டுகிறார்கள் பணத்துக்காய்.
பணத்துக்குப் பிறந்தவர்களா பிள்ளைகளை?
நாளை வாடப்போகும் மலர்களுக்குள்
வாடாமலராய் தாய்
சுவரைச் சுறண்டியது தாய்பார்வை
ஒற்றை ஆணியில்
இன்றோ நாளையோ என
தொங்கிக்கொண்டிருந்தது
தாயின் மகிழ்ச்சி
குடும்பப்படமாக
புகைப்படத்தில் பின்னால்
ஊசலாடிக்கொண்டிருந்தது நம்பிக்கை
வழியனுப்பவாவது வரவார்கள்
என்ற நம்பிக்கையில்
கண்ணை மூடிக்கொள்கிறது தாய்மை
நோர்வே நக்கீரா 08.02.2015
எண்ணை + தண்ணீர் + தீர்வு
இன்று நான்
அச்செழுவில் ஒரு பொதுமகனுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
பொதுச்சுகாதார பரிசோதகர்களால் ஒரு வாரத்திற்கு முன்பாக எண்ணைக்கசிவினால்
பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டு எச்சரிக்கப்பட்டு பரிசோதனை செய்யும் வரை
அருந்தவோ இறைக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுச்செல்லப்பட்டு இதுவரை
எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படாமல் இருக்க சில தினங்களுக்கு முன்னர்
கிராம சேவையாளரிடம் முறையிட்ட வேளை அவர் பரிசோதனை செய்த பின்னரேயே மாற்று
நீர் மூலம் பெறப்படலாம் என கூறியதாக தெரிவித்திருந்தாக தெரிவித்திருந்தார்
நான் உடனடியாகவே வடக்கு மாகாணசபை தூய நீருக்கான விசேட செயலணியுடன் தொடர்பு
கொண்டு விடயத்தினை கவனத்திற்கு கொண்டு வந்தேன்.அவர்கள் குறித்த விடயம்
குறித்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
(மேலும்....)
50 நாட்களில்
ஒரு இந்திய சுற்றுப்பயணம்!
(ஒரு சுற்றுலாப் பயணியின் அனுபவம்)
(திருமதி லஷ்மி சுப்பு, (பெங்களுரு))
நம் தமிழர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயணத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
வணிகத்தின் பொருட்டோ, கல்வியின் பொருட்டோ, வேலை நிமித்தமாகவோ பல நாடுகளுக்கு
பயணித்தவர்கள் நம்மவர்கள். புதிய இடங்களையும், மனிதர்களையும், காணவும்
தெரிந்து கொள்ளவும் விருப்பம் உள்ளவர்கள். எந்தவொரு சுற்றுலா தலத்திற்கு
சென்றாலும் சில தமிழ் முகங்களை காண முடியும். தேவகோட்டையை சேர்ந்த நாங்கள்
(சேது சுப்பிரமணியன் - லஷ்மி சுப்பிரமணியன் தம்பதியர்) ஒரு காப்பிய பயணமாக
இந்தியாவின் 19 மாநிலங்களை 50 நாட்களில் 17450 கிலோமீட்டரை காரில் சுற்றி
வந்துள்ளோம். புகைப்பட ஆர்வமும் எழுத்தார்வமும் கொண்ட நாங்கள் வரலாற்று
தாகம் தனிய பல தென்னிந்திய சுற்றுலாக்களை மேற்கொண்டோம். நாங்கள் படித்த
கேட்டறிந்த எல்லோரா கஜுராஹோ போன்ற வட இந்திய இடங்களையும் காண வேண்டும் என்ற
ஆவலால் இந்த காப்பிய பயணத்தை தொடங்கினோம். எங்களது பயண அட்டவணையில் 27
UNESCO இடங்களும், கேதார்நாத் தவிர 11 ஜோதிர்லிங்கம் மற்றும் இந்தியாவின் 7
சப்தபுரிகளும் இடம் பெற்றன. மேலும் ஹரப்பா நாகரிகத்தின் இந்திய பகுதிகளான
தோலவீரா, லோதல், ஆதி மனிதன் வாழ்ந்த குகைகள் மற்றும் வரலாற்று முக்கியம்
வாய்ந்த பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளோம்.
(மேலும்....)
கிழக்கில் தேசிய அரசாங்கம் உருவாக்க த.தே.கூ,
ஐ.தே.க.வுக்கு மு.கா அழைப்பு
கிழக்கிழங்கை மாகாணசபையில் தேசிய அரசாங்கமொன்றை உருவாக்கி மூவின மக்களும்
ஒன்றாகச் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியக்' கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக்
கட்சியும் தம்முடன் இணைய வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நேற்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தது. கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில்
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர்வளத்துறை மற்றும்
நகர்புற அபிவிருத்தி அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணசபை
அமைச்சரவையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும்
அங்கம் வகிக்க வேண்டும் என்றும் கோரினார். இதேவேளை, மத்திய அரசாங்கத்தின்
இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அனைத்துக் கட்சிகளும்
ஒன்றிணைந்தது போல், கிழக்கு மாகாணசபையின் வரவு – செலவுத் திட்டத்தையும்
நிறைவேற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்
அமைச்சர் மேலும் கோரிக்கை விடுத்தார்.
ஆராய்கிறது தமிழ் கூட்டமைப்பு
இன்றும் முகாவுடன் சந்திப்பு, சாதகமான முடிவு
எட்டப்படும்
கிழக்கு மாகாணசபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து செயற்படுவதா?
இல்லையா? என்பது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் குழுவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெறவிருப்பதாக
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக் களப்பு மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர்
தெரிவித்தார். முதலமைச்சர் பதவிப்பிரமாணம் செய்வதற்கு முன்னர் இந்த அழைப்பை
விடுக்காமல் முஸ்லிம் காங்கிரஸ் தவறிழைத்துவிட்டது. இருந்தபோதும்
நல்லெண்ணத்தை வெளிக்காட்டும் வகையில் முஸ்லிம் காங்கிரசின் அழைப்பை
பரிசீலிக்கத் தயாராக இருக்கின்றோம். இது தொடர்பில் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள்
மற்றும் கட்சியின் தலைமைத்துவத்துடன் கலந்துரையாடி தீர்மானமொன்று
எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
வடபகுதி மக்களின்
உண்மையான பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு
- வடமாகாண
ஆளுநர்
வட மாகாணத்தில் வாழும் சாதாரண மக்களின் உண்மையான பிரச்சினைகளை இனங்கண்டு
அவற்றுக்கு நிலையான தீர்வைப் பெற்றுக் கொடுப்பது எமது பொறுப்பும்
கடமையுமாகும் என்று வட மாகாணத்தின் புதிய ஆளுநர் எச்.எம்.பி.எஸ். பளிகக்கார
தெரிவித்தார். வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஆளுநர்
பலிகக்கார யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் கடந்த 02ம் திகதி தமது
கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வட மாகாணத்தின் புதிய ஆளுநரின் பதவியேற்பு வைபவத்தில் வட மாகாண முதலமைச்சர்
சி.வி. விக்னேஸ்வரனும் பங்குபற்றினார். இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்தும்
உரையாற்றுகையில், வட மாகாணத்தில் வாழும் மக்களின் தேவைகளையும், அவர்களது
எண்ணங்களையும் சரியான முறையில் அடையாளம் காண வேண்டும். நீண்ட காலமாகப் பல
தரப்புக்களுடனும் செயற்பட்ட இவர்களது பிரச்சினைகளுக்கு அறிவு ரீதியாகவும்,
உளரீதியாகவும் தீர்வைப் பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் எப்போதும் ஒவ்வொருவரையும் அன்பாகவும், நட்பாகவும் பாசத்துடன் பார்க்க
வேண்டும். இந்நாட்டில் நாமெல்லோரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக
செயற்படல் அவசியம். சமாதானத்தின் உண்மையான பிரதிபலன்களைப் பெற்றுக் கொடுக்க
வேண்டும். அதற்குத் தடையாக அமைந்துள்ள காரணிகள் குறித்து ஆழமாக ஆராய்வது
உகர்ந |