Contact us at: sooddram@gmail.com

 

புரட்டாசி 2012 மாதப் பதிவுகள்

புரட்டாசி 30, 2012

தமிழகமும் ஈழமும் இணைந்தான விரிந்த தமிழகத்தை அமைக்கும் முயற்சியில் எல்.ரீ.ரீ.ஈ ஈடுபடுகிறது

தமிழகத்தையும் ஈழத்தையும் இணைத்து விரிந்த தமிழகம் அமைக்கும் திட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இருப்பதாகவும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக கியூ பிரிவு பொலிஸ் உயரதிகாரியான எஸ்.பி.சம்பத் தெரிவித்துள்ளார். இந்தியாவில், விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புக்கு சரியான காரணங்கள் உள்ளனவா? இல்லையா? என்பது தொடர்பில் புதுடில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வி.கே.ஜெய் தலைமையில் நடைபெற்றுவரும் தீர்ப்பாயம் விசாரணையில் ஆஜராகி தகவல் வழங்குகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்புக்கு ஆதரவளிக்கும் வகையிலான ஆவணங்களும் அவரால் இதன்போது நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் இரு பெரிய தொகுப்புகளாக சீல் வைக்கப்பட்ட உறைகளில் அடைக்கப்பட்ட நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அதில் தமிழீழ விடுதலைப் புலிகளும், அதன் ஆதரவு அமைப்புகளும் மேற்கொண்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் ஆவணங்கள் அடங்குவதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

புரட்டாசி 30, 2012

சபாஷ் டக்ளஸ் தேவானந்தா

யாழில் 1980 களில் நூறு மில்லியன் ரூபாவை ஏப்பம் விட்ட நிதி நிறுவனம் மீது 30 வருடங்களின் பின் சட்ட நடவடிக்கை?

'சப்றா' நிதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தாக்கல்?

பாதிக்கப்பட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து சென்ற மக்கள் நாடு திரும்பி அதிரடி நடவடிக்கை!

  • பலநூறு உழைப்பாளிகள் வர்க்க மக்களின் சேமிப்பு

  • பெண் பிள்ளைகளின் பெயரிலிட்ட வைப்புத் தொகை

  • ஓய்வூதியக்காரர்கள் நம்பிக்கையுடன் முதலிட்ட பணம்

(மேலும்...)

புரட்டாசி 30, 2012

சம்பந்தனுடன் சுரேஸ் மோதல் கூட்டமைப்பிற்குள் பாரிய பிளவு

இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்தபோது கூட்டமைப்பின் கூட்டுக் கட்சியான ஈ.பி.ஆ.எல்.எப்.சுரேஸ் அணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை வன்மையாகச் சாடி ஒரு நீண்ட அறிக்கையை விட்டுள்ளார். விட்டது மட்டுமல்லாது பத்திரிகை ஆசிரியர்களைத் தொடர்புகொண்டு அதனை வெட்டாது அப்படியே பிரசுரிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். அந்த அறிக்கையில் கூட்டமைப்பின் தலைமைக்கு எதிராக அவர் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்துள்ளார். ஒரு காலத்தில் உண்மையாகவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு பின்னர் அதனைத் தமது சுய தேவைகளுக்காகப் பயன்படுத்தி பலவிதமான வெளியே சொல்ல முடியாத செயல்களில் ஈடுபட்டு, அதன் பின்னர் புலிகளுக்கு எதிராகப் போரிட்ட வரலாறு அவரது இயக்கத்திற்கு உள்ளது. அதன் பின்னர் தமிழ் உணர்வு தலைப்பட்டு புலிகளிடம் பாவமன்னிப்புக் கேட்டு மன்னிக்கப்பட்டு இப்போது வெள்ளைச் சொக்காய் அணிந்த அரசியல்வாதியாக இருக்கும் அவர் கூட்டுக் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தனது பழைய இயக்கப் பாணியில் தலைப்பட்டுள்ளார். (மேலும்...)

புரட்டாசி 30, 2012

குழந்தைகள் உரிமையில்  கனடா பின்தங்கியே உள்ளது - ஐ.நா. சபை

கனடாவில் குழந்தைகளுக்கான உரிமைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கனடாவில் குழந்தைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் மோசமாக உள்ளது. மேலும், கனடாவை தாய்நாடாகக் கொண்டுள்ள குழந்தைகளுக்கும், புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கும், பழங்குடியின மற்றும் ஊனமுற்றோரின் குழந்தைகளுக்கும் இடையில் உரிமைகளை பின்பற்றப்படுவதிலான வேற்றுமை அதிகமாக உள்ளதாகவும், இதுகுறித்து அறிக்கை சமர்பிக்கவும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளுக்கான உரிமைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல், மரணதண்டனை மற்றும் வருமான ஏற்றத்தாழ்வு ஆகியவற்றிற்கும் ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. (மேலும்...)

புரட்டாசி 30, 2012

கேரளாவிலிருந்து சட்டவிரோதமாக ஆஸி செல்லமுயன்ற 14 இலங்கையர் நாடு திரும்பினர்

இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கையர்கள் 14 இன்று சனிக்கிழமை நாடு திரும்பினர். இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த மேற்படி 14பேரும் அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் இன்று இலங்கை திரும்பினர் என்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், கேரளாவுக்கு சென்றிருந்த நிலையிலேயே அந்நாட்டு பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். படகு மூலம் அவுஸ்திரேலியா செல்வதற்காக கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு இவர்கள் தலா ஒன்றரை இலட்சம் ரூபா வீதம் வழங்கியுள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  இவர்களிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டுள்ள இந்திய முகவர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் இந்திய பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் மேலும் கூறினர்.

புரட்டாசி 30, 2012

‘கும்கி’ பிரபு சாலமன் 

பாலா, அமீர், ஜனநாதன், சீனு ராமசாமி, பிரபுசாலமன், வெற்றிபாலன், சமுத்திரக்கனி, சசிகுமார் என தமிழ்ச் சினிமாவில் மாறுபட்ட இயக்குநர்களின் வருகை அதிகரித்திருப்பது தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் புதிய படைப்பாளிகள் இவர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு பாதையில் பயணித்தாலும் யதார்த்தமான கதை சொல்லிகளாக இருப்பதுதான் வரவேற்பிற்குரிய விஷயம். (மேலும்...)

புரட்டாசி 30, 2012

அரசியலில் நுழைவாரா விமுக்தி குமாரதுங்க?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மறைந்த நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்கவின் புதல்வருமான விமுக்தி குமாரதுங்க அரசியலில் நுழையலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இதன் முதல்படியாகவே அவர் கடந்த 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்ட தனது பாட்டனாரான எஸ்.டயிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 53 ஆவது சிரார்த்த தினத்தின் போது ஹொரகொல்லயில் அமைந்துள்ள அவரின் சமாதிக்கு மலர் அஞ்சலி செலுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மிருக வைத்தியரான விமுக்தி இங்கிலாந்தில் வசித்து வருகின்றார். தற்போது விடுமுறையைக் கழிக்கும் பொருட்டு இங்கு வந்துள்ளார். அவரை அரசியலில் இறக்கும் நடவடிக்கைகள் தற்போது மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூடிய விரையில் இது தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் வரலாம் என ஊடகங்கள் சில செய்திகள் வெளியிட்டுள்ளன. (மேலும்...)

புரட்டாசி 30, 2012

கிழக்கிலங்கையின் புதிய முதல்வர் முன்பாகவுள்ள பாரிய பொறுப்புகள்

கிழக்கிலங்கையின் புதிய முதல்வராக நஜீப் அப்துல் மஜீத் நியமிக்கப்பட் டுள்ளார். அந்த மாகாணத்தின் தேர்தல் அறிவிப்பு வெளியாகிய காலப்பகுதியிலிருந்தே அடுத்த முதலமைச்சர் யார் என்ற கேள்வியே மக்களது மனதில் இருந்து வந்தது. அதற்கு இப்போது விடை காணப்பட்டுள்ளது. தேர்தல் காலத்தில் மக்களது வாக்குகளைப் பெறுவதற்காக அரசியல் கட்சிகள் நடத்திய கபட நாடகங்களுக்கு முகங்கொடுத்த மக்கள் சில அரசியல் கட்சிக ளால் தாம் ஏமாற்றப் பட்டதைக் கூட இப்போது நன்கு உணர்ந்திருப்பார்கள். தேர்தல் மேடைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிச்சயம் ஆட் சியமைக்கும் எனவும் அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரே முதல்வராவார் எனவும் பலரால் ஆரூடம் கூறப்பட்டது. அதே போன்று சுதந்திரக் கூட்ட மைப்பின் பங்காளிக் கட்சியாக இருந்துவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் இன்று அங்கே ஆட்சிபீடமேறியிருக்கின்றது. கிழக்கிலங்கை வாழ் மூவின மக்களும் இதனை முழு மனதுடன் வரவேற்றுள்ளனர்.

புரட்டாசி 30, 2012

புலிகளும் முதலில் இழந்தது கிழக்கைத்தான், தமிழ்க் கூட்டமைப்புக்கும் அந்நிலை வருமா?

சொந்த வாழ்வு செழிக்க அரசிடம் தஞ்சம்; பொது மக்கள் தேவைக்கு மட்டும் கபட எதிர்ப்பு அரசியல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின் பிரகாரம் தமிழ் மக்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதளவும் கருத்திற்கொள்ளாது தமது பிடிவாதமான ஒன்றுக்குமே உதவாத தமிழ்த் தேசியக் கொள்கையைக் காரணம் காட்டி மீண்டுமொரு தடவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளதாக அவர்களுக்கு வாக்களித்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் காலத்தில் வடக்கிலிருந்து படையெடுத்து வந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கிலங்கை மக்களுக்கு மாகாண ஆட்சியை ஏற்படுத்தித் தருவதாகக் கூறி வாக்கு வேட்டையாடினர். ஆனால் கிழக்கில் இன்று தமக்குச் செல்வாக்கு முன்னொரு காலம் போலில்லை என்பதை நன்கறிந்திருந்தும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களைப் பகடைக்காய்களாக்கி இன்று தமிழ்க் கூட்டமைப்பு அம்மக்களை ஏமாற்றியுள்ளது. (மேலும்...)

புரட்டாசி 30, 2012

ஆரோக்கிய வாழ்வுக்கு மூலிகை உணவுகள்

அகத்தி

தாவரவியற் பெயர் - Sesbania grandiflora

(செஸ்பானியா கிராண்டிஃபுளோரா)

குடும்பம்: Papilionaceae

சிங்களப் பெயர்: கத்துருமுருங்க

சமஸ்கிருதப் பெயர் : அகஸ்திய

அகத்தியில் சாதாரண அகத்தி, சிற்றகத்தி, செவ்வகத்தி என்ற பேதங்களுண்டு. பெரும்பாலும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது. வீடுகளில் வளர்ப்பது அரிது. “அகத்தி ஆயிரம் காய்த்தாலும் புறத்தி புறத்திதான்” என்று ஒரு பழமொழியுள்ளது. வீடுகளில் அகத்தியை வளர்க்கக் கூடாது என்பது பற்றியே இப்பழமொழி ஏற்பட்டுள்ளது. அகத்திக்காய், விதை என்பவற்றில் சபோனினி (Saponini) என்னும் நச்சுப் பொருள் உள்ளது. எனவே, வீட்டில் வளர்த்தால் குழந்தைகள் இதன் விதைகளைத் தெரியாமல் சாப்பிட்டு விடக்கூடுமல்லவா? அதனால்தான் அகத்தியை வீட்டில் வளர்ப்பதில்லை என்று ஏற்படுத்தியிருக்கிறார்கள் போலும். (மேலும்...)

புரட்டாசி 29, 2012

டெசோ மகாநாட்டு அறிக்கை ஐ.நா. விற்கு செல்கின்றது

இலங்கை விவகாரம் தொடர்பில் டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதற்காக தி.மு.க.வின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று எதிர்வரும் 6ஆம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளது. தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான டெசோ மாநாடு கடந்த ஓகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் இந்திய மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாறு அந்த முயற்சி தாமதமாகியிருந்தது. (மேலும்...)

புரட்டாசி 29, 2012

மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் -  வாசுதேவ நாணயக்கார!

மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும், பெரும்பான்மை சிங்கள மக்கள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பாளர்களா என்பதில் அரசாங்கத்திற்கு சந்தேகம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும், மாகாணசபைகளுக்கு சுயாட்சி அதிகாரங்களை வழங்குவது தொடர்பிலான வாக்கெடுப்பை மக்கள் ஆதரிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். சுயாட்சி அதிகாரங்கள் என்பதன் மூலம் மத்திய அரசாங்கம் செய்யும் கடமைகளை செய்வதனையே தாம் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் ஆணைக்குழுக்களை நியமிக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 29, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும்  

(அபிமன்யு)

கிழக்கு மாகாணம் பல்லின மக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், ஒரு காலகட்டத்தில் அது தமிழ் மக்களையே பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. அங்கு வாழும் முஸ்லிம் மக்களும், முஸ்லிம் மக்களிடையே செல்வாக்கு படைத்த அனேக முஸ்லிம் தலைவர்களும் தமிழ்மக்களுடன் பேதமற்று அரசியல் விவகாரங்களில் கைகோர்த்து இணைந்து செயலாற்றினர். அதனால் சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிரான பலமான அரசியல் சக்தியாக இரு இனங்களும் செயற்பட்டன. சிங்களப் பேரினவாதிகளின் ஏதேச்சாதிகாரச் சூழ்ச்சிகளை முறியடிக்க முடிந்தது. அந்த மாகாணத்தின் அரசியல் போக்கை நிர்ணயிக்கும் பலமான அரசியல் சக்தியாக விளங்கினர். கால ஓட்டத்தில், அரசியல் சதுரங்கத்தில் பற்பல தூரநோக்கற்ற செயற்பாடுகளால், அந் நிலைமை மாறி, “தமிழ்பேசும் மக்கள் என்று இணைந்த மக்கள் பிரிந்து தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற இரு பிரிவாக இப்பொழுது செயற்படுகின்றனர். அதனால்  தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இணைந்த பலமான சமூக சக்தி என்ற நிலைமை மாறி-  சிங்கள மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய அரசாங்கத்தின் இனவாதப் போக்குகளை எதிர்க்கும்  பலம் குன்றிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. (மேலும்...)

புரட்டாசி 29, 2012

இந்தியாவிற்கு LTTE தொடர்ந்தும் அச்சுறுத்தல் - இந்தியா

தமிழீழ விடுதலை புலிகள்  இயக்கமானது தொடர்ந்தும் இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக விளங்கிவருவதாக இந்தியா கூறியுள்ளது. இதேவேளை, இந்தியாவின் மாவோஹிஸ்ட் இயக்கங்களின் உதவியுடன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கான வாய்ப்புகள்  உள்ளதாக அறிக்கைகள் தெரிவிப்பதாக இந்தியா மேலும் கூறியுள்ளது.

புரட்டாசி 29, 2012

கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நினைவுச் சொற்பொழிவு

இலங்கை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஸ்தாபக முன்னோடிகளில் ஒருவரும்

சிறந்த கல்விச் சிந்தனையாளருமான

தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் மறைவின்

35வது ஆண்டு நினைவுச் சொற்பொழிவு

தலைமை: திரு. எஸ்.சிவகுருநாதன்

            (முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர், மனித

            உரிமைகளைப் பாதுகாப்பதற்கான இயக்கம்)     

திருமதி வசந்தி தயாபரன்

'சமுதாய மாற்றத்திற்கான பெண்களின் பங்களிப்பு'

எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்

     58 தர்மராம வீதி, கொழும்பு – 6

காலம்: செப்ரெம்பர் 30, 2012 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.30 மணி

அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்

நீர்வை பொன்னையன்

இணைப்பாளர்

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

E-Mail: kailashpath@yahoo.com

புரட்டாசி 29, 2012

Stop Stoking the Flames of War

Issued by the Central Executive Committee,

Communist Party of Canada

September 13, 2012

The September 6 decision of the Harper government to cut all diplomatic relations between Canada and Iran is a dangerous and irresponsible act. The reasons given by Foreign Affairs Minister John Baird for this brazen move do not stand up to scrutiny. There is no evidence that Iran’s nuclear program includes plans to produce nuclear weapons, nor is there any evidence that Canadian diplomatic personnel face any imminent danger. And while Tehran no doubt supports political movements and formations in other countries in the region, the same can be said of most other states, including Saudi Arabia, Qatar and Israel itself. (more....)

புரட்டாசி 29, 2012

(மேலும்...)

புரட்டாசி 29, 2012

NASA predicts total blackout on 23-25 Dec 2012 during alignment of Universe.

US scientists predict Universe change, total blackout  of planet for 3 days from Dec 23 2012. It is not the end of the world, it is an alignment of the Universe, where the Sun and the earth will align for the first time. The earth will shift from the current third dimension to zero dimension, then shift to the forth dimension. During this transition, the entire Universe will face a big change, and we will see a entire brand new world.  The 3 days blackout is predicted to happen on Dec 23, 24, 25....during this time, staying calm is most important, hug each other, pray, pray, pray, sleep for 3 nights...and those who survive will face a brand new world....for those not prepared, many will die because of fear. Be happy, enjoy every moment now.  Don't worry, pray to God everyday. There is a lot of talk about what will happen in 2012, but many people don't believe it, and don't want to talk about it for fear of creating fear and panic.  We don't know what will happen, but it is worth listening to  USA 's NASA talk about preparation.
http://www.youtube.com/watch?v=6aj1lyEHbZE&feature=related
Whether it's true or not, better be prepared. No panic, stay calm, just pray.
Remember to smile more, love more, forgive more...every day. Better avoid traveling during December.    

புரட்டாசி 29, 2012

ஈழத் தமிழரின் வீழ்ச்சிக்கு

சகோதர யுத்தமே காரணம்!

உலகில் எந்த ஒரு விடுதலை இயக்கமும் இது போன்று எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை; எதிரியிடமிருந்து ஆயுதங்களைப் பெற்று சக போராளி இயக்கத் தலைவர்களையும், அவர்களது இயக்க அங்கத்தினரைப் படுகொலை செய்தவர்கள் புலிகள் மட்டுமே. பிரேமதாசா சிங்கள இராணுவத்தைத் தாக்குவதற்காவா ஆயுதங்களைப் புலிகளுக்கு வழங்கினார்? எந்த ஒரு தமிழ் இயக்கமும் எமது எதிரியிடம் மண்டியிட்டுக் கையேந்தவில்லை. இப்படியான செயலை ஆரம்பித்து வைத்தவர்களே புலிகள்தான். உலகத்திலேயே மிகவும் வெக்கக்கேடான போராட்டம் ஈழத்தில்தான் நடந்தது என்றால் அது மிகையல்ல. துரோக வழியில் பெற்ற ஆயுதங்களைக் கொண்டுதான் புலிகள் இயக்கம் இருபதினாயிரத்துக்கும் அதிகமான தமிழ் இளைஞர்களைக் கொன்றனர் என்பதை மிகவும் சுலபமாக மறைத்துவிட்டார் நெடுமாறன். (மேலும்...)

புரட்டாசி 29, 2012

இனச்சுத்திகரிப்பு

பௌத்த பூமிக்காக முஸ்லீம்களை வெளியேற்றும் இலங்கை அரசு

தம்புள்ள பள்ளிவாசலைச் சுற்றியுள்ள சகல வீடுகளினதும் கடைகளினதும் உரிமையாளர்கள் அடுத்த மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியேற வேண்டுமென நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டுள்ளது. அப்பிரதேசத்தில் அமைந்துள்ள 52 வீடுகள், 12 கடைத் தொகுதிகள் என்பவற்றை நீக்குமாறு அதன் உரிமைகாளர்களிடம் நகர அபிவிருத்தி அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறிப்பிட்ட காணித்துண்டுகள் புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் 300/14 மற்றும் 1984.06.08 திகதி வர்த்தமானி அறிவித்தலின் படி அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை புனிதபூமி அபிவிருத்தித் திட்டத்தை துரிதமாக ஆரம்பிப்பதற்காக நீங்கள் வசிக்கும் இடம் அல்லது வீடு, புனிதபூமி அபிவிருத்தி திட்டத்துக்கு தேவைப்படுகிறது. அதற்குப் பதிலாக தம்புள்ளை கண்டலம் வீதி, கொள்வத்தை என்ற இடத்தில் காணித்துண்டு ஒன்றை அடுத்த இருவாரத்துக்குள் வழங்குவதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கு தயராராகுமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவுறுத்தலை பெற்றுக் கொண்டோரில் சுமார் 65க்கும் மேற்பட்டோர் தம்புள்ளைவிலுள்ள நகர அபிவிருத்தி அதிகார சபைக்குச் சென்று விபரங்களைக் கேட்டறிந்துள்ளனர். இதேநேரம், தம்புள்ள பள்ளிவாசல் நிர்வாகிகள் இந்தச் செயற்றிட்டம் அமுல்படுத்தப்படும் போது பள்ளிவாசலுக்கு என்ன நடக்கும் என்பது பற்றி நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவினர். இந்தத் திட்டத்துக்குள் பள்ளிவாசலின் ஒரு பகுதி உள்ளடக்கப்படுவதாகவும் பள்ளிவாசலின் மறுபுறத்திலிருந்து 60 அடி பாதை ஒன்று அமைக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

புரட்டாசி 29, 2012

Students Courage: Reconciliation for Sustainable Peace

(By Nipunika O. Lecamwasam )

It’s been three years since the Liberation Tigers of Tamil Elam (LTTE) has been militarily defeated and the three decade old armed conflict has officially come to an end. Since then ‘reconciliation’ has become the key operative word in socio-political discourses in post war Sri Lanka. It is today the main apprehension of both state and non state actors operating in the island. While there is no ideal strategy that could be employed in bridging deep ethnic divides, it is important to understand that every action taken in the name of reconciliation today will bear significance in the future and therefore gearing reconciliation has become a tricky subject. Most actors involved in reconciliation attempts focus on a societal transformation that concerns the political aspect of change. Much neglected is individual transformation which is crucial in sustaining peace in its truest sense. (more...)

புரட்டாசி 29, 2012

ஆஸியில் தஞ்சமடைந்த இலங்கையரில் மீண்டும் நாடு திரும்ப விரும்புவோர் தொகை அதிகரிப்பு

புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களில், மீண்டும் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளோர் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் திஸர சமரசிங்க அந்நாட்டு பத்திரிகையான நெஷனல் ரைம்ஸுக்கு தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 18 இலங்கையர்கள் கடந்த வாரம் நவுறுவுக்கு அனுப்பப்படுவதை விட இலங்கை திரும்புவதையே விரும்பினர். பசுபிக் தீவான நவுறுவுக்கு அனுப்பி விசாரிக்கும் முறையை அரசாங்கம் கொண்டுவந்த பின்னும், புகலிடக் கோரிக்கையாளர்களுடன் படகுகள் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகாமையில் வருவதாக சிட்டி மோர்னிங் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தவகையில், அண்மைக்காலங்களில் வந்த படகுகளில் ஆகவும் கூடுதலான 195 பயணிகளை ஏற்றிய படகொன்றுக்கு உதவி வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 13இன் பின், 3200க்கு மேற்பட்ட புகலிடம் கோருவோர் வந்துள்ளதாகவும் இவர்கள், நவுறு மற்றும் பப்புவா நியூகினி மனெஸ் தீவுகளில் உள்ள முகாம்களின் கொள்ளளவிலும் கூடுதலாக இருந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு முற்பகுதியில் 24 மணித்தியாலங்களுக்குள் மூன்று படகுகள் கொக்கொஸ் தீவு ஆள்புலத்தினுள் வழிமறிக்கப்பட்டுள்ளன. மனிதக் கடத்தலில் ஈடுபடுவோரின் தொழில் விரைவில் முடிவுக்கு வந்துவிடுமென அவுஸ்திரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.

புரட்டாசி 29, 2012

செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்த தடம், கண்டுபிடித்தது கியூரியாசிட்டி

செவ்வாய்க் கிரகத்தில் நீரோடை இருந்ததற்கான அடையாளமாக சரளைக் கற்கள் பாறை இருப்பதை நாசாவின் கியூரியாசிட்டி விண்கலம் கண்டுபிடித்துள் ளது. செவ்வாய்க் கிரகத்தில் 2 ஆண்டுகள் ஆய்வு மேற் கொள்ள கியூரியாசிட்டி என்னும் விண்கலத்தை நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பியது. அது கடந்த ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி செவ்வாய்க் கிரகத்தில் இறங்கி தனது ஆய்வைத் துவங்கியது. முன்னதாக செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந் ததற்கான அடை யாளங்கள் பதிந்த இடங்களை புகைப் படம் எடுத்து அனுப்பியது. இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தில் ஒரு காலத்தில் நீரோடை இருந்தது என் பது கண்டுபிடிக்கப்பட் டுள்ளது. அதாவது நீரோ டையால் அடித்துக் கொண்டு வரப்பட்ட சரளைக் கற் களின் பாறைகளை கியூரி யாசிட்டி புகைப்படம் எடுத்து அனுப்பி வைத் துள்ளது. அந்த பாறைகளின் அளவு மற்றும் வடி வத்தை வைத்து பார்க்கையில் அவற்றை காற்று கொண்டு வந்து போட் டிருக்க முடி யாது. நிச்சயமாக நீரோடை தான் அந்த கற்களை அடித் துக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்று கியூரியா சிட்டி விஞ்ஞானி ரெபக்கா வில்லியம்ஸ் தெரிவித்துள் ளார். சில பாறைகள் உருண்டை வடிவத்தில் உள்ளன. அப் படி என்றால் அவை நீண்ட தூரம் அடித்து வரப்பட் டிருக்க வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. மேலும் அங்கு ஒரு நீரோ டையல்ல மாறாக பல்வேறு காலகட்டத்தில் பல நீரோ டைகள் இருந்திருக்கின்றன என்று கூறப்படுகிறது.

புரட்டாசி 28, 2012

கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவராக த.தே.கூ.வின் சீ.தண்டாயுதபாணி தெரிவு

கிழக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சீ.தண்டாயுதபாணி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சும்பந்தன் தலைமையில் சற்றுமுன்னர் திருகோணமலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சுரேஸ் பிரேமசந்தின், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்தன், ஆனந்தசங்கரி ஆகியோரைத் தவிர தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. சீ.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாணசபை கல்வி அமைச்சின் முன்னாள் மாகாண கல்விப் பணிப்பாளராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பலரும் எதிர்பார்தததைப் போல் தமிழருக்கட்சியின் தண்டாயுதபாணி எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று பெயரிட்டாலும் அதில் உள்ள ஏனைய கட்சிகள் ‘டம்மி’ யாக இருக்க தமிழரசுக்கட்சியே தொடர்ந்தும் ஏகபோகம் வகிக்கும் நிலையே அங்கு உள்ளது. இந்நிலையில் ஏனைய கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி போன்றவை தொடர்ந்தும் கூட்டமைப்புடன் ஒட்டிக்கொண்டிருப்பதன் மர்மம் என்ன என்ற அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ( நன்றி: புகைப்படம் தமிழ்மிரர்)

புரட்டாசி 28, 2012

இந்தியாவின் ஏவுகணைகள் இலங்கையை குறி வைக்கவில்லை - இந்திய அரசு

இந்தியாவின் ஏவுகணைகள் இலங் கையை இலக்குவைத்து நிறுத்தப்பட் டிருப்பதாக ஒருசில இணையதளங்கள் மற்றும் அச்சு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி எவ்வித அடிப்படையுமற்ற இட்டுக்கட்டப்பட்டவை என இந்தியா அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடு என குறிப் பிட்டுள்ளது. இந்தியா நீண்டகால திட்டத்தின் பேரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவு கணை சோதனைகளை முன்னெடுத்து வருகிறது. இந்த திட்டம் அடிப்படையான தற்பாதுகாப்பு திட்டமேயன்றி எந்த நாட்டையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்படுபவையல்ல. இவ்வா றான உணர்வுபூர்வமான விடயங்களை தூண்டிவிட்டு இலங்கை, இந்தியாவுக்கு இடையிலான நெருங்கிய நட்பை சீர்குலைக்க முடியாது. அதில் பாதுகாப்பு மற்றும் இராணுவ உறவும் உள்ளடங்கும்.

புரட்டாசி 28, 2012

விவசாயம் செய்வோம் விளைச்சலைப் பெறுவோம்

புரட்டாசி 28, 2012

கேள்வி …..?    பதில்!

இறந்து போன எமது உறவுகளுக்காக அழுவதற்குக் கூட இங்கு எமக்கு உரிமையில்லை என மாவை சேனாதிராசா இரங்கற்கூட்டத்தில் உரையாற்றியுள்ளாரே?

 பிரபாகரனால் கொல்லப்பட்ட தனது தலைவர் அமிர்தலிங்கத்துக்கு இரங்கற் கூட்டம் வைப்பதற்குப் பயந்து, உரிமையற்று இருந்த மாவை, பிரபாகரனுக்கு இரங்கற்கூட்டம் வைப்பதற்கு உரிமையற்று இருப்பதாகப் புலம்புவது விந்தையிலும் விந்தை. இன்று எவ்வித புலி அச்சுறுத்தலுமின்றி  அமிர்தலிங்கத்துக்கு இரங்கற் கூட்டம் வைக்கலாம். அமிர்தலிங்கத்துக்கு இரங்கற்கூட்டம் வைப்பதற்கான உரிமையை உங்களுக்குப் பெற்றுத்தந்தது யார்? பிரபாகரனால் மறுக்கப்பட்டிருந்த அந்த உரிமை மகிந்தாவால் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.

புரட்டாசி 28, 2012

மன்மோகன் சிங்கின் கொலைவெறித் திட்டம்!

செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழியாக, மரணத்தை யோசியுங்கள். - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. இந்திய அரசோ அதை மறைமுகமாகச் சொல்கிறது. பிரதமர் மன்மோகன் சிங், டீசல் விலையை உயர்த்தி, மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைத்து, இரண்டாம் பொருளாதாரச் சீர்திருத்த அறிவிப்பை வெளியிட்ட முதல் 24 மணி நேரத்துக்குள் அந்த முதல் தற்கொலை பதிவானது. காசியாபாத்தைச் சேர்ந்த தொழிலாளி டோமர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அறிவிப்பை மறுநாள் அரசு வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது தற்கொலை பதிவானது. மொரதாபாத்தைச் சேர்ந்த ரேஷ ஷர்மா. ஒரு மணி நேரத்துக்கு 15 தற்கொலைகள் பதிவாகும் ஒரு நாட்டில், இந்த மரணங்கள் அரசுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவில், 'விலைவாசி உயர்வைச் சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்ற எழுத்துபூர்வமான பதிவுகளோடு நடந்த தற்கொலைகள் இவை. கொலைக் குற்றவாளியாகத்தான் நிற்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால், துளியும் குற்ற உணர்வு இல்லை; மேலும் பலரைக் கொல்லும் திட்டத்தோடும் வெறியோடும் நிற்கிறது. (மேலும்...)

புரட்டாசி 28, 2012

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 19 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று கொண்டிருந்த 19 பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவேந்திரமுனை கடலில் இருந்து 27 மைல் கடல் தூரத்தில் இவர்கள் வழிமறிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 9 முஸ்லிம்கள், 7 சிங்களவர்கள் மற்றும் மூன்று தமிழர்கள் அடங்குவர்.  இவர்கள் கொழும்பு, வவுனியா, திருகோணமலை, புல்மோட்டை மற்றும் திக்குவெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். குறித்த நபர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கென குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 28, 2012

காணாமல்போன பிள்ளைகள் கிடைக்கும்வரை உண்ணாவிரத போராட்டம்: பெற்றோர் முடிவு

காணாமல் போன எமது பிள்ளைகள் கிடைக்கும் வரை சாகும் வரை உண்ணாவிரதப் போரட்டம் மேற்கொள்ளவுள்ளதாக காணமல் போனவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். 'யுத்தம் நிறைவடைந்த நேரம் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் தொடர்பாக தகவல்கள் தெரியாமல் நீண்டகாலமாக பெரும் மன உழைச்சலுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம். மாதத்திற்கு ஒரு தடவை புலனாய்வாளர்களும் பொலிஸாரும் காணாமல் போயுள்ள எமது பிள்ளைகள் தொடர்பான விபரங்களை திரட்டி வருகின்றனர். அப்படி என்றால் எங்கள் பிள்ளைகள் அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அவ்வாறென்றால் அரசாங்கம் அவர்களை தடுத்து வைத்திருக்கும் இடத்தை எமக்கு சொல்ல வேண்டும். எமது பிள்ளைகள் கண் இல்லாமல் கால், கையில்லாமல் இருந்தாலும் பறவாயில்லை. எமது பிள்ளைகள் எமக்கு வேண்டும்' என்று அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். நான்கு வருடங்களுக்கு மேலாக எமது பிள்ளைகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகளை செய்து வந்தபோதும் எவ்விதமான பலனும் எமக்கு கிடைக்கவில்லை. இதற்காக பல போராட்டங்களும் நடத்திவிட்டோம்.

புரட்டாசி 28, 2012

சிரிய நாட்டு பிரச்சினையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் எதிர் எதிர்தரப்புகளில்

கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் சிரிய பிரச்சினைக்கு ஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டத்தில் தொடர்ந்து இணக்கப்பாடொன்றை எட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நியூயோர்க்கில் நேற்று முன்தினம் 15 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட பாதுகாப்பு சபையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா சிரியா தொடர்பில் முரண்பட்ட நிலைப்பாட்டை வெளியிட்டன. இதில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தனது சொந்த மக்களையே கொன்று வருவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹலாரி கிளின்டன் கூறும் போது, அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் தீவிரவாதத்தை ஊக்குவித்துவருவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் கூறினார். சிரிய முரண்பாடு தொடர்பில் முடிவொன்றை எட்ட முடியாமல் பாதுகாப்புச் சபை செயலிழந்துவிட்டதாக ஹிலாரி கிளின்டன் குற்றம்சாட்டினர். “அக்கிரமங்கள் அதிகரித்துவரும் நிலையிலும் பாதுகாப்புச் சபை செயலிழந்த நிலையிலேயே காணப்படுகிறது. ஆனால் அது தொடர்பில் மீண்டும் ஒருமுறை தீர்வை காண முயற்சிக்க வேண்டும்” என்று அவர் அழுத்தம் கொடுத்தார். எனினும் சிரியா தொடர்பான தமது நிலைப்பாட்டில் ரஷ்யா எந்த மாற்றத்தையும் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் வெளிப்படுத்தவில்லை. ஆனால் சிரியாவில் வன்முறைகள் தொடர்பில் அரசுக்கும் எதிர்த்தரப்பினருக்கும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் லவ்ரொவ் கண்டனம் வெளியிட்டார்.

புரட்டாசி 28, 2012

வடக்கின் சமூக நற்பணிகளுக்கு டயஸ்போரா விஷம் விதைப்பு

ஜனாதிபதி முன்னிலையில் நடைபெற்ற பத்திரிகை ஆசிரியர்களின் மகாநாட்டில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வடபகுதியில் உள்ள மக்களுக்காக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வரும் ஒரு மூத்த தமிழ் பிரஜை தமக்கு அனுப்பி வைத்திருந்த ஒரு மின்னஞ்சலை எல்லோருக்கும் கேட்கக் கூடியதாக வாசித்தார்.‘இன்று வடபகுதியில் 30 ஆண்டு கால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருப்பதை அடுத்து முன்னேற்றப் பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற டயஸ் போரா அமைப்புகள் விஷத்தைக் கலந்து தீங்கிழைக்கின்றன.இவ்வமைப்புகள் மீண்டும் எல்.ரி.ரி.ஈ. இயக்கம் உயிர்த்தெழப் போகின்றது என்றெல்லாம் பொய்ப் பிரசாரங்களை செய்கின்றன. இவை வடபகுதியில் இடம்பெறும் வீதி அபிவிருத்திப் பணிகளை திரும்பிக் கூட பார்ப்பதில்லை. இங்கு தமிழ் மக்கள் நிர்மாணப் பணிகளில் ஈடுபட விருப்பம் காட்டாமல் இருப்பதனால் தென்னிலங்கையில் இருந்து வரும் சிங்கள தொழிலாளர்களே இப்பணியை செய்கிறார்கள்.

புரட்டாசி 27, 2012

இந்தியாவுக்கல்ல எந்த நாட்டுக்கு சொன்றாலும் தீர்வுக்கு கூட்டமைப்பு எம்மிடமே வரவேண்டும் - அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுக்குச் சென்று அந்நாட்டின் தலைவர்களுடன் ௭ன்னதான் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ௭மது நாட்டின் பாராளுமன்றத்திடமே வரவேண்டும். யதார்த்தபூர்வமான தீர்வைக் காணவேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் பங்கேற்க வேண்டியது அவசியமாகும் ௭ன்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது இந்தியாவுக்கு சென்று பேச்சுக்களில் ஈடுபடுவது புதிய விடயமல்ல. காலா காலமாக அவர்கள் இதனையே செய்துவருகின்றனர். ஆனால் ௭ஸ்.ஜே.வி. செல்வநாயகம் இதுபோன்று டில்­லிக்கு அடிக்கடி சென்று அவர்களை அசெளகரியப்படுத்தவில்லை ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்...)

புரட்டாசி 27, 2012

அடேல் பாலசிங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கம் கோரிக்கை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. அடேல் பாலசிங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அடேல் பாலசிங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரிட்டனிடம், அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.  6000த்திற்கும் மேற்பட்ட பெண்களை பயங்கரவாத செயற்பாடுகளுக்காக பலவந்தமாக இணைத்துக் கொண்டதாக அடெல் பாலசிங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அடெல் பாலசிங்கம் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். தற்கொலைத் தாக்குதலுக்கு ஆதரவாக அடெல் ஆற்றிய உரை தொடர்பான காணொளியையும் இலங்கை அரசாங்கம் மீட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புரட்டாசி 27, 2012

கேள்வி …..?    பதில்!

தமிழீழத் தேசிய துக்கநாள் என்றால் என்ன? கடைகளை மட்டும் பூட்டி விட்டால் அந்தநாள் துக்கநாளாக ஆகிவிடுமா?

இதுவுமா புரிவில்லை. பிரபாகரன் கொல்லப்பட்ட நாள்தான் தமிழீழத் தேசியத் துக்கநாள். துக்கநாள் அறிவிப்பதிலும் புலிகளுக்குள் ஒற்றுமையில்லை. எல்லாமே பணத்துக்குத்தான். நாடுகடந்த தமிழீழ புலிகளுக்கு ஒருநாள். உலகத் தமிழர் புலிகளுக்கு ஒருநாள். இரண்டு பிரிவுப் புலிகளுக்கும் பயந்து இரண்டு நாளும் கடைகளைப் பூட்டிய இழிச்சவாய்த் தமிழர்களும் இருக்கிறார்கள். நேற்றுப் பூட்டினனான், இன்று பூட்டினனான் என்று சொல்லி இரண்டு நாட்களுமே கடைகளைப் பூட்டாமல், புலிகளுக்குச் சுத்திய பொயிலை வித்த கடைக்காரர்களும் இருக்கிறார்கள். இந்த சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சாமல் தமது வியாபார நிறுவனங்களைத் திறந்து வைத்திருந்த கடை உரிமையாளர்களும் இருக்கிறார்கள்.

புரட்டாசி 27, 2012

மகிந்த அரசைக் அழுத்தங்களில் இருந்து சம்பந்தன் காப்பாற்றுகிறார் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

கூட்டமைப்பை யாரோ சிதைக்கப்போவதாக திரு.சம்பந்தன் அவர்கள் கூறுகின்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரைத் தவிர கூட்டமைப்பிற்கு என்ன வடிவம் இருக்கின்றது? அதற்கென்று ஒரு செயலாளர், பொருளாளர் என யாராவது இருக்கின்றார்களா? முடிவுகளை எடுப்பதற்கு வல்லமை கொண்ட கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளை உள்ளடக்கிய உயர்மட்டக்குழு ஏதாவது இருக்கின்றதா? கீழிருந்து மேல்வரை தலைமையுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளக்கூடிய வகையில் கிராமிய நகர மட்டக்கிளைகள் ஏதாவது இருக்கின்றதா? 2001ஆம் ஆண்டிலிருந்து இயங்கிவரும் இவ்வமைப்பிற்கு குறைந்த பட்சம் நிதிக்குழுவென்று ஏதாவது இருக்கின்றதா? இவை எதுவுமே இல்லையென்பதுதான் நிதர்சனமான உண்மை. இவையனைத்தையும் உருவாக்கத் தடையாக இருப்பது தமிழரசுக் கட்சியும் அதன் தலைமையுமே என்பது அக்கட்சியின் தலைவர் திரு.சம்பந்தன் அவர்களுக்குத் தெரியும். நிலைமை இவ்வாறிருக்க கூட்டமைப்பை வேறுயாரோ சிதைக்க முற்படுவதாக அறிக்கை வெளியிடுவதானது மக்கள் மத்தியில் பிழையான ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சி என்றே எண்ணத் தோன்றுகின்றது. (மேலும்...)

புரட்டாசி 27, 2012

ஐ.நா.வின் நல்லெண்ண தூதராக   ஐஸ்வர்யாராய் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராக முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராய் நியமிக்கப்பட்டுள் ளார். ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா ராய் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து அந்த தொற்று கிருமிகள் குழந்தைகளுக்கு பர வாமல் தடுக்கும் திட்டத்தின் கீழ் செயல்படு வார். மேலும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட தாய் களையும் பாதுகாக்கவும், புதியவர்களுக்கு எய்ட்ஸ் பரவாமல் இருப்பதற்கான விழிப்புணர்வு பிரச் சார திட்டத்திலும் இணைந்து செயல்படு வார் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் இந்தியா உள்ளிட்டு மொத் தம் 22 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இந்தியாவை தவிர அனைத்து நாடுகளும் ஆப் பிரிக்க நாடுகளாகும். காரணம், இந்த நாடுகளில் தான் 90 சதவிகிதம் தாய்களிடம் இருந்து குழந் தைகளுக்கு எய்ட்ஸ் நோய் பரவுகிறது. 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை இப்படி குழந்தைகளுக்கு பரவும் எய்ட்ஸ் கிருமிகள் 25 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஐஸ்வர்யாராய் உதவியாக இருப்பார் என ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

புரட்டாசி 27, 2012

ஆறு மாதகாலத்தில் தீர்வுத்திட்ட அறிக்கை ௭ன்று குறிப்பிட்டிருந்தும் கூட்டமைப்பு கலந்துகொள்ளாததேன்

பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாக தேசிய பிரச்சினைக்கான தீர்வுத்திட்ட அறிக்கை ஆறு மாதங்களில் வெளியிடப்படவேண்டும் ௭ன்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதில் இடம்பெற தயக்கம் காட்டுவது ஏன் ௭ன்று புரியவில்லை ௭ன மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனராட்ன தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஆறு மாதங்களில் தீர்வுத்திட்ட அறிக்கை வெளியிடப்படாவிடின் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது ௭திர்ப்பை வெளியிட முடியும். தமது பக்க நியாயத்தை வெளிப்படுத்தவும் முடியும் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புரட்டாசி 27, 2012

உள்நாட்டு விவகாரங்களில்  அங்கீகாரமற்ற குறுக்கீடு கூடாது -  இந்தியா

உள்நாட்டு விவகாரங் களில் அங்கீகாரமற்ற குறுக் கீடு கூடாது என ஐ.நா.வின் உயர்மட்டக்கூட்டத்தில் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்தது. தேசிய மற்றும் சர்வதேச அளவிலான சட்டவிதிகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் 67வது அமர்வு உயர் மட்டக்கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் ஐ.நா. வுக்கான இந்தியாவின் நிரந் தர பிரதிநிதியான ஹர்தீப் சிங் பூரி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகை யில், நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அங்கீகார மற்ற குறுக்கீடுகளை தவிர்க்க வேண்டும். மோதல் சூழல் உள்ள இடங்களில் உரிய சட்ட கொள்கைகளு டன் அமைதியான அணுகு முறையை கடைப்பிடிப்ப தையே இந்தியா விரும்பு கிறது என்றார்.சர்வதேச அமைதி மற் றும் பாதுகாப்பு பிரச்சனை களுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண்பதே சிறந்தது. சட்டத்தின்விதி அத்தியாவசியமானது என் பதை நாங்கள் நம்புகிறோம். அனைத்துத் தரப்பினருக் கும் அது மையமாக இருக்க வேண்டும். தேசிய அளவி லான சட்டம் உருவாக்க செயல்பாடு தேசிய சட்ட மன்றத்திற்கு பிரத்யேகமான தளமாகும். தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வு, பொரு ளாதாரம், சமூக, கலாச்சார நிலைமைகளில் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு நாடுகளுக்கு உள்ளது.

புரட்டாசி 27, 2012

அரச செயற்பாடுகளை தாமதப்படுத்தும் சட்டங்களுக்கும் 13 வது திருத்தத்துக்கும் தொடர்பு

இலங்கையில் இன்று அமுலில் இருக்கும் அரசாங்கத்தின் முற்போக்கு செயற்பாடுகளை காலதாமதப்படுத்தும் சில சட்டங்களுக்கும் அரசியல் சாசனத்தின் 13வது திருத்த சட்டத்திற்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக அரசியல் சித்தாந்திகளும், சட்ட வல்லுநர்களும் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர். தற்போது அமுலில் உள்ள சட்டத்தின்படி எங்காவது ஒரு இடத்தில் உல்லாச பயணிகளுக்கான ஒரு பாரிய ஹோட்டலை நிர்மாணிப்பதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முன்வந்தாலும், அந்த ஹோட்டலை நிர்மாணிப்பதற்கான அனுமதியை 20இற்கும் மேற்பட்ட அரசாங்க அமைப்புகளிடம் இருந்து அனுமதியை பெற வேண்டுமென்ற சில சட்டங்கள் தற்போது அமுலில் இருந்து வருகின்றது.13வது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியலில் ஒரு முக்கியத்துவம் பெற்ற சட்டமாகும். என்றாலும் இதனூடாக அதிகாரம் பெற்றிருக்கும் சில சட்டங்கள் யதார்த்தபூர்வமற்றவையாக இருக்கின்றன என்றும் அவற்றை மாற்றியமைப்பது அவசியம் என்றும் இவர்கள் அரசாங்கத்திற்கு யோசனை தெரிவித்துள் ளார்கள்.

புரட்டாசி 27, 2012

லிபிய முன்னாள் தலைவர் கடாபியை பிடித்த கிளர்ச்சி வீரர் மரணம்

லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியை பிடித்த முன்னாள் கிளர்ச்சிப் படை வீரரின் இறுதிக் கிரியையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒம்ரான் பின் ஷாபான் என்ற கிளர்ச்சிப் படை வீரர் கடாபி ஆதரவாளர்களால் கடத்தி துன்புறுத்தப்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மரணமடை ந்துள்ளர். 22 வயதான இவரது உடல் மேற்கு நகரான மிஸ்ரட்டாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஷாபான் கடந்த ஜுலையில் ஆயுதக் குழு ஒன்றால் கடத்தப்பட்டு 50 தினங்கள் பானி வலித் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இது முன்னாள் தலைவர் கடாபியின் ஆதரவுபெற்ற பகுதியாகும். லிபிய இடைக்கால அரசு நடத்திய பேச்சுவார்த்தை மூலம் இவர் கடந்தவாரம் விடுவிக்கப்பட்டார். எனினும் அவர் கடுமையாக சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததோடு துப்பாக்கிச்சூட்டுக்கும் இலக்காகி இருந்தார். இவர் பாரிஸ் நகருக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட போதும் அது பலனின்று நேற்று முன்தினம் மரணமடைந்தார். கடந்த ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி சிர்த் நகரில் ஒரு கால்வாய்க்குள் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்தவர் ஷபான் ஆவார்.

புரட்டாசி 26, 2012

தமிழ் மொழியில் யாழ். இந்து மாணவன் அபிராம் 193 புள்ளிகளுடன் முதலாமிடம்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுக ளின் அடிப்படையில் தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை 1 மாணவனும், 2ம் இடத்தை மூன்று மாணவர்களும், 3ம் இடத்தை ஐந்து மாணவர்களும் பெற்றுக்கொண்டுள்ளனர். இதனடிப்படையில், யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் பாலேந்திரன் அபிராம் 193 அதிகூடிய புள்ளிகளைப் பெற்று தமிழ் மொழி மூலம் முதலாம் இடத்தை பெற்றுள்ளார். புள்ளிகளின் அடிப்படையில் அகில இலங்கை ரீதியில் 10ம் இடத்தை இவர் பெற்றுக்கொண்டுள் ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற மட்டு. புனித மிக்கேல் கல்லூரி மாணவன் தமிழ் வண்ணன் துவாரகேஷ், வவுனியா மாவட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற ரம்பைக்குளம் அரசினர் மகா வித்தியாலய மாணவி குகனேசன் தர்ஷிகா ஆகிய இருவரும் தமிழ் மொழி மூலம் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

புரட்டாசி 26, 2012

கேள்வி …..?    பதில்!

இன்று தமிழர்கள், கிழக்கு மாகாணத்தை சி;ங்களவரிடமும் முஸ்லீம்களிடமும் பறி  கொடுத்துவிட்டு ஏமாளிகளாக நிற்பதற்கு என்ன காரணம்?

 முழுக்கு முழுக்க சம்பந்தனும் ரீ.என்.ஏ களவாணிகளும்தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழர் கட்சிகள் எல்லாம் ஒரு சின்னத்தில் தேர்தலில் நின்றிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. சம்பந்தன் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து தமிழர் தலையில் மிளகாய் அரைக்கப் பார்க்கிறார். ஆனால் அவருடன் இருக்கும் சுரேஸ்பிரேமசந்திரா, சிறிதரன், சரவணபவன்  போன்றவர்களோ அரச உளவாளிகளாகச் செயல்படுகிறார்கள். வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதராஜபெருமாள் அவர்களின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற ஏற்பாட்டையும் சிங்களஅரசின் ஆசியுடன் சிதைத்தொழித்த பெருமை ரீ என் ஏ களவாணிகளுக்குத்தான் போய் சேரும். தேர்தல் முடிந்த பின்னரான காலத்தில் ஏற்பட்ட பேரம்பேசும் வாய்ப்பை சம்பந்தன் எமதாக்கிக் கொள்ளாமல் அந்த வாய்ப்பை முஸ்லீம் காங்கிரசுக்குக் கொடுத்துவிட்டு ஏமாளியாக நிற்கிறார். பிரபாகரனுக்கு முன் கைகட்டி நின்ற கிழட்டுப் புலியிடம் ராஜதந்திர அணுகுமுறையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம். (மேலும்...)

புரட்டாசி 26, 2012

மெனிக்பாம் நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டமைக்கு ஐ. நா. வரவேற்பு

மெனிக் பாம் நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டமைக்கு ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு தெரிவித்துள்ளது. வீடுகளுக்குத் திரும்ப இயலாத மக்களின் பிரச்சினைக்கு அவசர தீர்வு காணப்பட வேண்டுமென்றும் ஐ. நா. தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெயர்ந்த வர லாற்றில் இந்த நலன்புரி நிலையங்கள் மூடப்பட்டதானது ஒரு மைல்கல்லாகும். எஞ்சியுள்ளவர்கள் வீடு திரும்பவும் தீர்வு பெறப்பட வேண்டுமென்று இல ங்கையிலுள்ள ஐக்கிய நாடுகள் மனி தாபிமான இணைப்பாளர் சுபிநே நண்டி தெரிவித்துள்ளார். மோதல் நிலையில் இருந்து நிலையான சமாதானத்துக்கு மாறுவதானது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். ஆயிரக்கணக்கான மக்களை மீள் குடியமர்த்தும் அரசின் கடப்பாடும் குறிப்பிடத்தக்கது. அநேகர் இன்னும் நண்பர்களுடனும் உறவினர்களுடனும் யாழ்ப்பாணத்திலும், வவுனியாவிலும் வாழ்கின்றனர். இன்றேல் நலன்புரி நிலையங்களில் வாழ்கின்றனர். இவர்களில் சிலர் பல வருடங்களாக இடம் பெயர்ந்துள்ளனர். அவர்களுக்கு நிலையான தீர்வு அவசியம் என்றும் சுபினே நண்டி தெரிவித்துள்ளார். கற்ற பாடங்கள் நல் இணக்க ஆணை க்குழுவின் பரிந்துரைகளை முழுமை யாக நடைமுறைப்படுத்துவதில் இல ங்கை அதிகாரிகள் ஈடுபட வேண்டு மென்றும் அவர் கூறியுள்ளார்.

புரட்டாசி 26, 2012

அபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.மு கிழக்கில் கூட்டாட்சி

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, இன ஐக்கியம் மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண சபையில் கூட்டாட்சியை ஏற்படுத்தியிருப்பதாக மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்றுத் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் எந்தவொரு இனத்தவரும் தனித்து, பிரிந்து நின்று ஆட்சியமைக்கமுடியாது என்ற உண்மையை நடைபெற்று முடிந்த தேர்தல் உணர்த்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.இங்கு தொடர்ந்தும் கருத்துக்கூறிய அவர், கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகத்தை ஊடகங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.எனினும், தமிழ் மக்கள் இங்கு புறக்கணிக்கப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்கள், பங்காளிக் கட்சிகள் ஆகியவற்றின் இணக்கப்பாட்டுடனேயே கிழக்கு மாகாணசபையில் கூட்டாட்சி அமைந்துள்ளது. முதலமைச்சர் பதவியை இலக்குவைத்தே நான் இம்முறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டேன். எனினும், கூட்டாட்சி அமைக்கவேண்டிய சூழ்நிலையில் அமைச்சுப் பதவிகூட எனக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் கிழக்கு மாகாண அமைச்சர்களுக்குப் பின்னாலிருந்து மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் தொடர்ந்தும் செய்வேன்.

புரட்டாசி 26, 2012

600 இலங்கையரை திருப்பி அனுப்ப பிரிட்டன் தீர்மானம்

பிரிட்டனில் தஞ்சமடைந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 600 இலங்கையரை திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்தவர்களே இவ்வாறு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பிஅனுப்பப்படவுள்ளனர் என தெரிய வந்துள்ளது. தற்போது இலங்கையில் சமாதான சூழ்நிலை காணப்படுவதையடுத்தே இவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் இவர்கள் அனைவரையும் கட்டம் கட்டமாக இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கõன ஏற்பாடுகளை பிரித்தானிய அரசு செய்து வருவதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

புரட்டாசி 26, 2012

இலங்கை பிரச்சினை, இந்தியாவின் தேசிய பிரச்சினையா?

(என். சத்தியமூர்த்தி)

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா விஜயம் செய்தபோது, அவரது வருகைக்கு எதிரான போராட்டங்களும் கூறப்பட்ட கருத்துக்களும், 'இனப் பிரச்சினைக்கு' புதியதொரு வடிவம் கொடுத்துள்ளதோ என்று எண்ணத் தோன்றுகிறது. இடைப்பட்ட காலத்தில் இதனை இமாலய வெற்றியாக கருதும் இலங்கை தமிழர் தலைமைகள் எதிர்காலத்தில் இதனால் குழப்பமே மிஞ்சும் என்பதனையும் உணர்ந்திருத்தல் அவசியம். ஜனாதிபதி ராஜபக்ஷ விஜயத்தின் போது, அவரது வருகையை எதிர்த்தும் அவரது அரசை எதிர்த்தும் தமிழ் நாட்டில் அரசியல் போராட்டங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. இதுவே பல்வேறு காலகட்டங்களில், தேசிய தலைநகரான புது டெல்லிக்கு இடம் பெயர்ந்துள்ளது. அண்மை காலத்தில், இனப் பிரச்சினையின் மற்றொரு அலகாக உருவகப்படுத்தப்படும் தமிழ் நாட்டு அகதிகள் முகாம்களில் உள்ளோர் அவுஸ்திரேலியாவிற்கு சட்டத்திற்கு புறம்பாக பயணப்பட்டு கைது ஆவதும், கேரளா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களை விட்டுவைக்கவில்லை.  (மேலும்...)

புரட்டாசி 25, 2012

கடந்த ஆட்சியாளர்கள் செய்த துரோகத்தை நீங்களும் செய்ய வேண்டாம் - இரா.துரைரெட்ணம்

கிழக்கு மாகாணத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்யாமல் எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் புதிய முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எமது மாகாணத்தில் சிறுபான்மை இன முதலமைச்சராக தாங்கள் தெரிவு செய்யப்பட்டதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, நானும் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்ற வகையில் தங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டதல்களையும் தெரிவிக்கின்றேன். (மேலும்...)

புரட்டாசி 25, 2012

புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இந்தியா அழைப்பு

ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் செய்து சில நாட்கள் கழிந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடானான பேச்சுவார்த்தை உட்பட சில சுற்று பேச்சுக்களில் பங்குபற்றுவதற்காக ஒக்டோபர் 10 ஆம் திகதி புதுடில்லிக்கு வருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பை இந்திய அரசாங்கம் அழைத்துள்ளது. சில நாட்களுக்கு முன் ஜனாதிபதி ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தபோது இலங்கையில் தேசிய பிரச்சினையில் தமிழ்நாடு மட்டுமன்றி முழு இந்தியாவுமே அக்கறையாக இருப்பதை இந்திய பிரதமர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்திருந்தன. பல தசாப்தங்களாக தொடரும் இனப்பிரச்சினை மற்றும் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு என்பவை தொடர்பாக ஏற்புடைய தீர்வொன்றை விரைந்து காணுமாறு இந்தியா வலியுறுத்தியதாக 'டைம்ஸ் ஒப் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது.

புரட்டாசி 25, 2012

தோழர் ஹெக்டர் அபேவாத்தனாவுக்கு எம் இதய அஞ்சலிகள்

தோழர் ஹெக்கடர் அபேவர்த்தனா இலங்கையின் சமூக பொருளாதார மறுமலர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.இலகையின் சமூபொருளாதார நிலைமைகள் பற்றி ஆழ்ந்த புரிதல் கொண்டிருந்தார். இலங்கை சமசமாஜகட்சியின் முதுபெரும் தலைவாக்ளில் ஒருவர் . இலங்கையின் இடதுசாரி இயக்க பாரம்பரியத்தில் வந்த தலைசிறந்த கல்வியாhளர் . சர்வதேசியவாதி. தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் பற்றி அதீத கரிசனை கொண்டவர். அவர் இலங்கை தொழிலாளர்கள் மத்தியில் மாத்திரமல்ல மும்பாய், குஜராத் ,கல்கத்தா போன்ற இடங்களில் தொழிலாளவர்க்க இயக்க செயற்பாடுக்ளில் ஈடுபட்டவர். இந்திய சுதந்திர இயக்த்தில் பெரிதும் ஈர்க்கப்பட்டவர். இலங்கையின் முன்னணி சுதந்திர போராட்டக்காரர்.  ஆதிர்ந்து பேசாத தன்னடக்கமான தளம்பாத இந்த மாதிரியான மனிதர்கள் தான் இலங்கை அரசியல் கல்வியாளர் மட்டத்தில் அற நிலையை உருவாக்கினார்கள். இறக்கும் போது  அவருக்கு வயது 93 இவரது மனைவியார் குசலா அபேவாத்தனா பொரளை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அன்னாரின் மறைவிற்கு பத்மநாபா ஈபிஆர்எல்எப் தனது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறது.
தி.ஸ்ரீதரன்
பொதுச்செயலாளர்
பத்மநாபா ஈபிஆர்எல்எப்

புரட்டாசி 25, 2012

அதிகூடிய விருப்பு வாக்குகளை பெறுவோருக்கு இனி முதலமைச்சர் பதவி இல்லை -  ஜனாதிபதி

மாகாணசபை அமைச்சர்களாக பதிவியேற்பவர்கள், பொய் வாக்குறுதிகளை வழங்காமல் மக்களின் எதிர்ப்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக பாடுபட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, விருப்பு வாக்குகளை அதிகமாகப் பெறுவோருக்கு முதலமைச்சுப் பதவி வழங்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். அனைத்து அமைச்சர்களும் தங்களது மாகாணம், மற்றும் கிராமங்களுக்காக சேவையாற்ற வேண்டும். மாகாணசபை என்பது ஒரு வெள்ளை யானை போன்றது எனும் மனப்போக்கை மாற்றியமைக்கும் வகையில் செயற்படும் பொறுப்பு அமைச்சர்களுக்கு உள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்களாக பதவியேறோர் முன்னிலையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

புரட்டாசி 25, 2012

All not yet quiet in East
Now, Pilleyan, Ali aspire to be MPs

(by Shamindra Ferdinando)

Speculation is rife in political circles that former Chief Minister of the Eastern Provincial Council (EPC) Sivanesathurai Chandrakanthan aka Pilleyan (leader of the breakaway LTTE faction, TMVP) and Amir Ali (All Ceylon Muslim Congress- ACMC), both elected to the EPC on the UPFA ticket, are seeking to enter parliament via the UPFA National List. In a bid to strengthen the UPFA’s administration in the East, UPFA National List MP Ms Malini Fonseka tendered her resignation, but she subsequently withdrew it. Political sources told The Island last night that it was being discussed by the SLFP leadership and constituent parties of the UPFA in keeping with several political pacts among them to facilitate UPFA takeover of the EPC. The UPFA reached an agreement with the SLMC to run the EPC vis-à-vis an all-out attempt by the Tamil National Alliance (TNA) to wrest control of the council with the help of SLMC leader and Justice Minister Rauff Hakeem. (more...)

புரட்டாசி 25, 2012

மெனிக் பாமிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை சொந்த இடங்களில் மீளக் குடியேற்ற வேண்டும் - சிறி ரெலோ

மெனிக்பாம் முகாமிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்துச்செல்லப்பட்ட மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்ற நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும். இதனை விடுத்து, அவர்களை மெனிக்பாம் முகாமிலிருந்து அழைத்துச்சென்று வேறொரு இடத்தில் குடியேற்றுவது கவலைக்குரிய விடயமாகும் ௭ன்று சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மெனிக்பாம் முகாம் நேற்றுடன் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த மக்கள் மந்துவில், கேப்பாப்பிலவு பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார். இந்த மக்கள் முகாமிலிருந்து அதிகாரிகளினால் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் கேப்பாப்பிலவு மக்களை வேறு இடத்தில் குடியேற்ற நடவடிக்கை ௭டுக்கப்பட்டு வருகின்றது. இந்த மக்களை சொந்த இடத்தில் குடியேற்றுவதே சிறந்ததாகும். வன்னியில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு இன்னமும் தேவைகள் அதிகமாகவுள்ளன. இந்தத் தேவைகளை நிறைவுசெய்வதற்கும் அரசாங்கம் முன்வர வேண்டும். இன்று வன்னிப் பகுதிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம் செய்யவுள்ளார். அவர் இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகளை அறிந்து தீர்வுகாண்பதற்கு முன்வர வேண்டும். மீள்குடியேறியுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பதற்கு உரிய நடவடிக்கை ௭டுக்கப்பட வேண்டும்.

புரட்டாசி 25, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று முல்லைத்தீவு, கிளிநொச்சி விஜயம்

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் அபிவிருத்திக் கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு விஜயம் செய்கின்றார். இந்த நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கலந்துகொள்ளவேண்டும் ௭ன அழைப்பு விடுக்கின்றோம் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் விசேட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.  இதேவேளை ௭திர்க்கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ௭ன்பன அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் அவற்றுக்கு ஆதரவு வழங்கவேண்டும் ௭ன்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். (மேலும்...)

புரட்டாசி 25, 2012

சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற்று பதவியேற்பு

சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் சுபநேரமான முற்பகல் 11.55ற்கு சப்ரகமுவ மாகாண முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் வட மத்திய மாகாண முதலமைச்சராக சமரக்கோன் முதியன்சலாகே ரஞ்சித்தும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டனர். இதேவேளை, கிழக்கு மாகாண முதலமைச்சராக ஏற்கனவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்ட நஜீப் ஏ மஜீத் நேற்றைய தினம் முதலமைச்சர் பதவிக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புக்களுக்கான சத்தியப் பிரமாணத்தை ஜனாதிபதி முன்னிலையில் செய்துகொண்டார்.(மேலும்...)

புரட்டாசி 25, 2012

SLMC இரு மாகாணசபை உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண வைபவத்தை பகிஷ்கரிப்பு!

கிழக்கு மாகாண சபையின் புதிய அமைச்சர்கள் சத்தியப்பிரமானம் செய்யும் வைபவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவான இரண்டு உறுப்பினர்கள் பகிஷ்கரித்ததாக தெரிய வருகின்றது. இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில் புதிய அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபையின் சபாநாயகர், பிரதி சபாநாயகர் சத்தியப்பிரமானம் செய்யும் வைபவம் நடைபெற்றது. இதில் கட்சி தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபையின் புதிய உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து தெரிவான அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஜமீல் மற்றும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த அன்வர் ஆகிய இருவரும் இந்த வைபவத்தை புறக்கணித்ததாக தெரிய வருகின்றது.

புரட்டாசி 25, 2012

வவுனியா நலன்புரி நிலையங்கள் நேற்றுடன் முற்றாக மூடப்பட்டன

வவுனியா செட்டிக்குளம் மெனிக் பாம் நலன்புரி நிலையம் நேற்றுமுதல் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது. இந் நிலையத்திலிருந்த அனைவரும் மீள்குடியேற்றப்பட்டதைத் தொடர்ந்து இவை நேற்று முதல் மூடப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.எச்.ஜே.பி. சுகததாஸ தெரிவித்தார்.மெனிக் பாம் நலன்புரி நிலையத்தில் எஞ்சியிருந்த 361 குடும்பங்களைச் சேர்ந்த 1187 பேரும் நேற்றையதினம் முல்லை த்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மந்துவில் பிரதேசத்தில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேரும், கேப்பாப்பிலவில் 110 குடுபங்களைச் சேர்ந்த 360 பேரும் நேற்றையதினம் முல்லைத்தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2009ஆம் ஆண்டு மே மாதம் பூர்த்திய டைந்த பாதுகாப்புத் தரப்பினரின் மனித நேய நடவடிக்கையின் போது இடம் பெயர்ந்த 300,000 பேர் செட்டிக்குளம் மெனிக்பாமில் தங்க வைக்கப்பட்டனர். (மேலும்...)

புரட்டாசி 25, 2012

மலையாள நடிகர் திலகன் மரணம்

மலையாள திரைப்பட நடிகரான திலகன் நேற்று அதிகாலை காலமானார். 77 வயதாகும் திலகன் மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்தவர். கடந்த மாதம் 23ம் திகதி மாரடைப்பால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அதிகாலை 3.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 1979ம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் திரை உலகுக்கு அறிமுகமானார். தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தவர் திலகன், மொத்தம் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தேசிய மற்றும் மாநில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். 2009ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது திலகனுக்கு வழங்கப்பட்டது. திலகனுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.

புரட்டாசி 25, 2012

பல கோடி ஆண்டுகளுக்கான நாள்காட்டி தயாரித்து பெங்களூர் தமிழர்சாதனை

பல கோடி ஆண்டுகளுக்கான நாள்காட்டியைத் தயாரித்து பெங்களூர் வாழ் தமிழரான சுப்பிரமணி சாதனை படைத்துள்ளார். இதுவரை நாள்காட்டிகள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளன. கூகுள் போன்ற இணையளதளங்களில் 10 ஆயிரம் ஆண்டுகள் வரை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்ட பெங்களூர் கதிரேனஹள்ளியைச் சேர்ந்த சுப்பிரமணி முதலில் ஒரு இலட்சம் ஆண்டிற்கான நாள்காட்யை உருவாக்கினார். அதன் பிறகு பல்வேறு முயற்சிகளை செய்து பல கோடி ஆண்டுகளுக்கான நாள்காட்டியை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறியது; பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்கள் வரலா றுகள் போர்கள் பிறந்த நாள்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், நான் உருவாக்கியுள்ள சூத்திரத்தைப் பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம், மிகவும் எளிமையாக ஒரே பக்கத்தில் 14 ஆண்டுகளின் படத்தைப் பார்த்து நாள், கிழமை, ஆண்டுகளைத் தெரிந்து கொள்ளும் வகையில் நாள்காட்டியை உருவாக்கியுள்ளேன் என்றார்.

புரட்டாசி 24, 2012

செட்டிகுளம் முகாம் மூடப்பட்டது

எஞ்சியிருந்த 360 குடும்பங்கள் முல்லையில் மீள்குடியேற்றம்

இறுதி யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த மக்களை கடந்த 3 வருடங்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டிருந்த வவுனியா, செட்டிக்குளம் நலன்புரி முகாம் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக மூடப்பட்டது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து வந்த நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்த இந்நலன்பரி நிலையமானது மக்களின் படிப்படியான மீள்குடியேற்றத்தின் பின்னர் இறுதியாக கேப்பாபிளவு மற்றும் மந்துவில் கிராமங்களைச் சேர்ந்த 360 குடும்பங்களையும் முல்லைத்தீவில் மீள்குடியேற்றுவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்படி முகாம் பொறுப்பதிகாரியான மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா கூறினார். (மேலும்...)

புரட்டாசி 24, 2012

கிழக்கு மாகாணசபைக்கு தெரிவான த.தே.கூ. 11 உறுப்பினர்கள் வெள்ளியன்று பதவியேற்பு

கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்களும், எதிர்வருகின்ற வெள்ளிக்கிழமை காலை, சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்பார்கள்' என அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ள நிகழ்வொன்றின் போதே இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக 11 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் திருகோணமலை ஸ்ரீபத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்திலிருந்து ஊர்வலமாக கடற்படைத்தள வீதி வழியாக திருகோணமலை நகர மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்படுவர். சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமை வகிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. 

புரட்டாசி 24, 2012

சிகரெட் வழங்க மறுத்த கடை உரிமையாளர் கொலை, ஒருவர் கைது

வவுனியா, ஓயார் சின்னக்குளம் பகுதியில் உள்ள தங்கராசா என்பவரின் கடைக்கு மதுபோதையில் சென்ற அந்தப் பகுதியை சேர்ந்த ஒருவர் தனக்கு சிகரெட் தருமாறு வற்புறுத்தியுள்ளார். எனினும் கடை உரிமையாளர்,  21 வயதுக்கு குறைந்த எவருக்கும் தன்னால் சிகரெட் வழங்கமுடியாது என தெரிவித்துள்ளார். பின்னர் இவர் அந்தப் பகுதியில் உள்ள மதுபானசாலையில் மது அருந்திவிட்டு வந்து கடை உரிமையாளரை கல்லால் தாக்கியுள்ளதாகவும் இதன்போது கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட வவுனியாப் பொலிஸார், 17 வயதுடைய சிறுவன் ஒருவனை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர். வவுனியா, ஓயார் சின்னக்குளம் பகுதியைச் சேர்ந்த தங்கராசா (வயது 70) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.

புரட்டாசி 24, 2012

படகுமூலம் அவுஸ்திரேலியா செல்வோருடன் குடும்பத்தினர் இணைவதற்கான சலுகை நீக்கம்

படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் தமது குடும்பத்தினருடன் இணைந்து கொள்வதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நீக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பான நிபுணர் குழுவொன்றின் சிபாரிசுகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு அமைச்சர் கிறிஸ் போவென் தெரிவித்துள்ளார். 13.08.2012 ஆம் திகதிக்கு பின்னர் படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுக்கு, குடும்ப அங்கத்தவர்களுடன் மனிதாபிமானத் திட்டத்தின் கீழ்இணைந்துகொள்வதற்கு வாய்ப்பளிப்பதை தடுப்பதும் இச்சிபாரிசுகளில் அடங்கும். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி ஆபத்தான படகுபயணம் மூலம் மக்கள் வருவதை அதைரியப்படுத்துவதே இதன் நோக்கமாகும். (மேலும்....)

புரட்டாசி 24, 2012

'இரண்டரை வருடங்களில் மு.காவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டுமென எழுத்துமூல ஒப்பந்தம் உள்ளது'


கிழக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்றுள்ள நஜீப் அப்துல் மஜீத்,  இரண்டரை வருடங்களின்பின் ராஜினாமா செய்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அப்பதவியை பெறுவதற்கு வழிவிட வேண்டும் என அரசாங்கத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எழுத்துமூல ஒப்பந்தம் செய்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளரான ஹசன் அலி கூறியுள்ளார்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் எனவும் தமிழர் ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என தமது கட்சி யோசனை தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.இணக்கம் காணப்பட்ட காலப்பகுதிக்குள் முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கத் தவறினால் கிழக்கு மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பது குறித்து நாம் புதிய தீர்மானமொன்றை மேற்கொள்வோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி கூறினார்.வேறு பல முக்கிய நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன ஒற்;றுமையின்மை ஏற்படலாம் என்பதால் தற்போது அவற்றை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 

புரட்டாசி 24, 2012

ஐ.ம.சு.கூ.வுடன் சேர்வதை தவிர மு.காவுக்கு இருந்த தெரிவு என்ன?

                                                                             
கிழக்கு மாகாண சபை நிர்வாகம் தொடர்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்ட முறை, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மு.கா. கொள்கையற்ற முறையில் செயற்பட்டதாக ஐக்கிய தேசிய கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் குற்றஞ்சாட்டி வருகின்றன. உண்மைதான், கொள்கை எப்படிப் போனாலும் மு.காவின. நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே பலருக்கு விளங்கிக் கொள்ள முடியாதவையாகவே அமைந்தன. அவை தர்க்க ரீதியாக அமையவில்லை என்றே கூற வேண்டும். மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சராக இருக்கும்போதே அவரது கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக ஐ.ம.சு.கூட்டணியோடல்லாமல் தனித்து போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தது. இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றிருந்த போதிலும் இது தர்க்க ரீதியாக கிரகித்துக் கொள்ள பலரால் முடியாது போய்விட்டது.
(மேலும்....)

புரட்டாசி 24, 2012

கேள்வி ?    பதில்!

களம் கண்டு வெற்றியுடன் திரும்பும் வைகோ அவர்களுக்கு சென்னையில் வரவேற்பு விழா என்றொரு செய்தியை படித்தேன். என்ன களம்? என்ன வெற்றி?

அக்கடச்சூடு……….! 

தெலுங்கைத் தாய்மொழியாக் கொண்ட வையாபுரி கோபால்சாமி அவர்களுக்கு இலங்கைத் தமிழர்களின் பணத்தின் மேல் இருக்கும் பற்று வியக்கத்தக்கது. இலங்கை அதிபரை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என போராட்டங்கள் நடத்திய தமிழக சில்லறைக் கட்சிகள் அதில் தோற்றுப் போயின. மத்தியப்பிரதேசம் சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு வந்த இலங்கை அதிபருக்குக் கறுப்புக் கொடி காட்ட சாஞ்சிக்குப் போன வைகோ மத்தியப்பிரதேச மாநில எல்லையிலேயே சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். வைகோவால்  மகிந்தாவுக்குக் கறுக்குக்கொடியும் காட்ட முடியவில்லை. புலிகளின் பணத்தில் கூலிக்குப் பிடிக்கப்பட்ட சிறு கூட்டத்துடன் பஸ்சில் வடமாநிலத்துக்கு சுற்றுப்பயணம் போய்வந்த வைகோவுக்கு, அவரின் ஏற்பாட்டின் படியே  வரவேற்புவிழா நடப்பது என்பது தமிழக அரசியல்வாதிகளின் வாடிக்கையான கேலிக்கூத்துத் தான். இதுபற்றி யாருமே கண்டுகொள்ளத் தேவையில்லை.

புரட்டாசி 24, 2012

மம்முட்டியின் மனசு 

சமீபத்தில் சிவகாசியில் நடந்த வெடி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்காக 35 லட்சத்திற்கு மருந்து வாங்க சென்ற போது கொஞ்சம் குறையுங்கள் என்று கேட்டபோது, மருத்துவ நிறுவன நிர்வாகி முதலாளிக்கு தொலைபேசியில் சொல்ல ,எதற்காக மருந்து வாங்கப்படுகிறது என்று விசாரித்து இருக்கிறார். சிவகாசியில் காயம் அடைந்தவர்களுக்கு என்று சொன்னதும், “அவர்களிடம் பணம் எதுவும் வாங்க வேண்டாம். மருந்து கொடுத்துவிடுங்கள் அதை என் கணக்கில் வைத்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் மருந்து கம்பெனி முதலாளி. அந்த மருத்துவ நிறுவன அதிபர் நடிகர் மம்முட்டி. இதுவே தமிழ்த்திரைப்பட நடிகர்களாக இருந்தால் பிரஸ்மீட் வைத்து தங்கள் கருணை உள்ளத்தை வெளிச்சம் போட்டிருப்பார்கள். ஆனால் மம்முட்டி இதை வெளியிடவில்லை. மம் முட்டியின் பெரிய மனதை பாராட்டலாம்.

புரட்டாசி 24, 2012

இந்தியாவைச் சூறையாட தயாராகிறது வால்மார்ட்

இந்தியாவில் அடுத்த 12 முதல் 18 மாதங்களில் சில்ல ரை விற்பனைக் கடை களைத் திறக்கப் போவதாக அமெரிக்காவின் வால் மார்ட் நிறுவனம் அறிவித் துள்ளது. இது தொடர்பாக வால் மார்ட் நிறுவனத்தின் ஆசி யப்பிரிவு தலைவரும், தலை மை நிர்வாக அதிகாரியு மான ஸ்காட் பிரைஸ் கூறி யுள்ளதாவது, இந்தியாவில் 12 முதல் 18 மாதங்களுக்குள் எமது நிறு வனத்தின் கிளைகளைத் தொடங்கி விடுவோம். இந் தியாவில் எங்கெங்கு, எத் தனை கடைகள் திறப்பது என்பது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில் லை. இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தில் பார்தி நிறு வனத்துடன் தற்போது இணைந்து நடத்தப்பட்டு வரும் கடைகள் தொடர்ந்து நீடிக்கும். சில்லரை வர்த்த கத்தில் இந்தியாவில் மேற் கொள்ளப்பட்டுள்ள சீர் திருத்த நடவடிக்கைகள் நிரந்தரமானவை என நம்பு கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.(மேலும்....)

புரட்டாசி 24, 2012

அவுஸ்திரேலியா செல்ல முயற்சி

பருத்தித்துறை, நீர்கொழும்பு கடற்பரப்பில் 81 பேர் கைது. இதுவரை 2,254 பேர் கடற்படையினரால் கைது

அவுஸ்திரேலியாவு க்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட் டோரின் எண்ணிக்கை 2254 ஆக உயர்வடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான் டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித் துள்ளார். நேற்று அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாகச் செல்ல முயற்சித்த 81 பேர் பருத்தித்துறை மற்றும் நீர்கொழும்பு கடற்பரப்புகளில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பருத்தித்துறை கடல் வழியாக 46 பேரை ஏற்றிச் சென்ற படகு நேற்று அதிகாலை மடக்கிப் பிடிக்கப்பட்டு ள்ளது. அப்படகில் 41 தமிழர்களும் 4 முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், நீர்கொழும்பு மேற்கு கடலில் நேற்று 35 பேருடன் சென்ற படகொன்று வழிமறிக்கப்பட்டுள்ளதாகவும் இப்படகில் பயணித்தவர்கள் தற்போது மோதர துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவதாகவும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

புரட்டாசி 24, 2012

இஸ்ரேல் தாக்குவது நிச்சயம் - ஈரான் புரட்சி படை

இஸ்ரேல் எச்சரிக்கைக்கு அப்பால் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என ஈரான் புரட்சிப் படை தளபதி மொஹமட் அல் ஜபாரி குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு நிகழ்ந்தால் யூத நாடு தரை மட்டமாகும் என அவர் எச்சரித்தார். எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன் ஈரான் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தும் என சந்தேகங்கள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் இராணுவம் இவ்வாறு கூறியுள்ளது. “அவர்களது எச்சரிக்கை இஸ்லாம் மற்றும் ஈரான் மீது எவ்வளவு பகையு ணர்வுடன் இருக்கி றார்கள் என்பதை காண்பிக்கிறது. இந்த பகை ஒரு மோதலாக மாறும்” என்று அல் ஜபாரி நேற்று முன்தினம் நடந்த ஊடக மாநாட்டில் கூறியதாக ஈரானின் இஸ்னா செய்திச் சேவை கூறியுள்ளது. “யுத்தம் ஒன்று ஏற்படுவது தெளிவானது. ஆனால் அது எப்போது எங்கே நிகழப் போகிறது. தெரியாது அதற்காக நாம் எமது பாதுகாப்பை பலப்படுத்தி யுள்ளோம்’’ என்றார்.

புரட்டாசி 23, 2012

உண்மையில் பேரம் பேசும் சக்தி யாருக்கு?

தனதாக்கிக்கொண்ட மு.காவுக்கா? ஏற்படுத்திக் கொடுத்த TNA வுக்கா?

முஸ்லிம் காங்கிரஸிற்கு பேரம் பேசும் சக்தியை தாமே ஏற்படுத்திக் கொடுத்தோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அண்மையில் தெரிவித் திருந்தார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ் ஆர்வலர்கள் பல ரும் ஏன் அந்தப் பேரம் பேசும் சக்தி யாக தாங்கள் இருந்திருக்க முடியாமற் போனது எனும் கேள்வியை எழுப்பியுள்ளனர். முப்பது வருடகால ஆயுதப் போராட்ட அரசியல் நடத்தி ஒரு சிறு காரியத்தைக் கூடச் சாதிக்க முடியாமல் இருக்கும் தமிழ்க் கூட்டமைப்பு தற்போது அறிக்கைப் போராட்டம் நடத்திய தீர்வைப் பெறப்போ கின்றது எனவும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பினர். இன்னும் எத்தனை காலத்திற்கு இந்த வாய் வீச்சு அரசியல் நடத்தி எஞ்சியிருக்கும் தமிழ்ச் சமூகத்தையும் அழிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனரோ தெரியாது எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். முஸ்லிம் அரசியல் சாணக்கியத் தலைமைகள் விமர்ச்சிக்கும் தமிழ் அரசியல் தலைமைகள் தமது சமூகத்தின் நலனில் அக்கறையில்லாது செயற்பட்டு வருவது துரதிஷ்டவசமானதே எனவும் அவர்கள் தெரிவித்தனர். முன்னொரு காலத்தை விடுத்து இனியாவது தமிழ் அரசியல் தலைமைகள் தாமும் பேரம் பேசும் சக்திகளாக மாறி அரசாங்கத்தின் சலுகைகளை தமிழ்ச் சமூகமும் அனுபவிக்க வழிவகை செய்ய வேண்டும். இல்லையேல் முப்பது வருட கால அவலவாழ்வு இன்னும் முப்பது அல்ல முண்ணூறு வருடங்கள் தொடர்ந்துவரும் என்பதே யதார்த்தம் என்றும் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

புரட்டாசி 23, 2012

கிழக்கு முதலமைச்சருக்கு கிண்ணியாவில் வரவேற்பு...

கிழக்கு மாகாண முதல் முஸ்லிம் முதலமைச்சரான நஜீப் அப்துல் மஜீத்துக்கு இன்று கிண்ணியாவில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது. கொழும்பில் இருந்து விஷேட விமானம் மூலம்  சீனக்குடா விமான நிலையத்தை வந்தடைந்த முதலமைச்சருக்கு அங்கு இஸ்லாமிய கலாசார முறைப்படி வரவேற்பளிக்கப்பட்டதோடு சர்வ மதத்தலைவர்களின் ஆசி வேண்டிய பிராத்தனைகளும் இடம்பெற்றன. இதனைத் தொடாந்து சீனக்குடா வெள்ளை மணல் ஊடாக தனது சொந்த ஊரான கிண்ணியாவுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட முதலமைச்சரை வீதியின் இரு மருங்கிலும் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மலர் தூவி வரவேற்றனர். ஊர்வலத்தின் இறுதியில் கிண்ணியா கிராமக்கோட்டு மைதானத்தில் மாபெரும் வெற்றி பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.

புரட்டாசி 23, 2012

அமெரிக்க வாழ் பணக்காரர்கள் வரிசையில்  முதல் 5 இடங்களை பிடித்த இந்தியர்கள்

அமெரிக்க பணக்காரர் கள் வரிசையில் முதல் 5 இடங்களை பிடித்த இந்தி யர்கள் பெயர் வெளியிடப் பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்பஸ் பத்திரிகை ஒவ்வொரு ஆண் டும் அமெரிக்க பணக்காரர் கள் பெயர் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற் படுத்தி வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் 400 அமெரிக்க கோடீஸ்வரர் களின் பெயர் பட்டியலை போர்ப்பஸ் வெளியிட் டுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 23, 2012

ஆபத்தான ஆழ்கடலூடாக முடிவின்றி தொடரும் சட்டவிரோத புலம்பெயர்வு

அண்மைக் காலமாக பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளைப் பார்த்தால் அதில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக வெளிநாடுக ளுக்குச் செல்லும் இலங்கையர் பற்றியதாகவே உள்ளன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் சட்டவிரோதமாக சிறு படகுகள் மூலமாக இவர்கள் பயணிப்பதையும் நடுக்கடல் பகுதியில் வைத்து கடற்படை யினரிடம் சிக்குவதையும் அறியமுடிகிறது. இன்னும் சில சம்பவங்க ளாக பயண ஆரம்பத்தின்போதே கரையோரங்களில் வைத்து இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுகிறார்கள். ஆட்கடத்தல் காரர்கள் தமக்கிடையேயான தொழில் போட்டி காரணமாக காட்டிக் கொடுப்பு செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன், இன்னும் சில கடத்தல்காரர் பயணிப்போரிடம் முன்கூட்டியே முழுப்பணத்தையும் பெற்றபின் தாமே பொலிஸாருக்குத் தகவலை வழங்கி இவர்களைப் பிடித்துக் கொடுத்து இலாபமீட்டியும் வருகின்றனர். ஆபத்தான ஆழ்கடல் பயணம் என நன்கு தெரிந்திருந்தும் இலட்சக்கணக்கான பணத்தை ஆட்கடத்தல்காரரிடம் கொடுத்து இவர்கள் பொருள்தேடும் எண்ணத்தில் இவ்வாறு உயிரைத் துச்சமெனக் கருதி துணிந்து செல்கின்றனர். (மேலும்....)

புரட்டாசி 23, 2012

Srinivasa Ramanujan

Srinivasa Ramanujan FRS was an Indian mathematician and autodidact who, with almost no formal training in pure mathematics, made extraordinary contributions to mathematical analysis, number theory, infinite series, and continued fractions. (more....)

 

 

புரட்டாசி 23, 2012

கேள்வி ?    பதில்!

கருணாநிதியின் திடீர் தமிழீழக் கோஷத்துக்கு விசேட காரணம் ஏதாவது உள்ளதா?

இடைத் தேர்தலில் படுதோல்வி. பிள்ளைகள் ஸ்ராலின் அழகிரி பதவிச் சண்டை. கனிமொழியின் கள்ளத்தனம். முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள். இவற்றையெல்லாம் பார்த்து விரக்தியடைந்துள்ள தொண்டர்களை திசைதிருப்ப கலைஞர் போடும் அரசியல் கோஷம்தான் இந்த தமிழீழ வாக்கெடுப்பு. ரெசோ புனரமைப்பு எல்லாம். மற்றப்படிக்கு இதை யாருமே பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது.  அடுத்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கு முன் மீண்டும் மாநில சுயாட்சி கேட்டாலும் கேட்பார். 

புரட்டாசி 23, 2012

Innocence of Muslim

பின்னணி என்ன?

(எம்.எஸ். சாஜஹான்)

அது செப்டம்பர் 8 சனிக்கிழமை. எகிப்தின் ஷேக் காலித் அப்துல்லாஹ்வின் தொலைக்காட்சியான அல்-நாஸ்-அரபிய மொழியாக்கம் செய்யப்பட்ட அந்த 13.51 நிமிடங்கள் மட்டும் ஓடும் வீடியோவை முதன்முதலாக வெளியிட்டது. ஒரு சில மணித்தியாலயங்களில் அது கணனி மூலம் அரபுலகில் வலம் வந்தது. பல்லாயிரணக்கானோர் அல்லது சில லட்சம் பேர் ஓரிரு நாட்களில் அதனைப் பார்த்தனர். ஆத்திரம் அடைந்தனர். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் YOU TUBE அது வந்ததைப் பார்த்தனர். அவ்வளவுதான்! அரபுலகம் வெடித்தது. (மேலும்....)

புரட்டாசி 23, 2012

பொதுநலவாய நாட்டுப் பிரதிநிதிகளை கவர்ந்த யாழின் புதுமை

பார்ப்போம்...... நம்புவோம்..........

Seeing is believing.....

“இதுவல்லவா நாம் பாடசாலையில் படித்த tresure (தனக் களஞ்சியம்) தீவு” என்று தனது ஆச்சரியத்தைத் தெரிவித்தார். இலங்கையர்களாகிய நாம் கேட்டும்பார்த்தும் பழக்கம் இல்லாதது கனடாவின் கல்காரி calcary பிராந்திய மாகும். இந்தப் பிராந்தியத்தின் பாராளு மன்ற உறுப்பினர் devinder Shorn, “இங்கு நாம் வருவதற்கு முன்பு இது யுத்தம் நடைபெற்ற காட்டுமிராண்டி நாடாகும். ஒவ்வொரு மரத்தின் கீழும் இராணுவம் நிறுத்தப்பட்டிருக்கும்; எங்கு போனாலும் இலங்கைக்குப் போகாதீர்கள்; இலங்கைக்குப் போனாலும் யாழ்ப்பாணப் பக்கமே தலையைக் காட்டக் கூடாது” என்று எம்மைப் பயமுறுத்தியிருந்தனர். “ஆனால், நாம் வந்தோம்; பார்த்தோம். உண்மையை விளங்கினோம். மன நிறை வோடு போகிறோம்; திரும்பவும் வருவோம்” என்றார் நியூசிலாந்து பிரதிநிதி. (மேலும்....)

புரட்டாசி 23, 2012

அக்கரை சென்றால் மகிழ்ச்சி கைதுசெய்யப்பட்டால் கூச்சல்

போர் முடிந்த காலம் தொட்டு இன்று வரை மேலை நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கேட்கும் நோக்கத்தோடு சட்டவிரோதமாகப் படகுகளில் செல்லும் இலங்கையர் தொகை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. கடந்த சில வாரங்களில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளால் நடுக்கடலில் பிடிபட்ட படகுகளின் எண்ணிக்கையே திகைக்க வைக்கின்றன. இது குறித்து சம்பந்தப்பட்ட நாடுகள் வெகுவாக கவலைப்பட தொடங்கியுள்ளன. அது போன்றே இந்தியாவில், தமிழ் நாட்டில் அரசு முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் திருட்டுத்தனமாக மேலை நாடுகள் செல்ல முயலும் போது பிற மாநிலங்களில் கைது செய்யப்பட் டுள்ளனர். (மேலும்....)

புரட்டாசி 23, 2012

கட்சி நலனை விடவும் சமூக நலனுக்கு முன்னுரிமை

அழுத்தங்கள், விமர்சனங்களுக்கு அடிபணியாது மு. கா தலைவர் எடுத்த முடிவிற்கு வரவேற்பு

கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கியமை அந்த இயக்கம் தமது கட்சி நலன் சார்ந்த விடயங்களை விட சமூக நலனுக்கே முன்னுரிமை வழங்கியுள்ளதை எடுத்துக்காட்டி யுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எத்தனையோ அழுத்தங் கள், விமர்சனங்கள் மற்றும் உட்கட்சிப் போராட்டங்க ளுக்கு மத்தியில் மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட இந்த முடிவு காலோசிதமானது என அவர்கள் கூறுகின்றனர். முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைத்து தமக்கு முதலமைச்சர் பதவியையும் ஏனைய அமைச்சுப்பதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தபோதும் கிழக்கு மக்க ளையோ, அல்லது தனது கட்சி அங்கத்த வர்களையோ மட்டும் கவனத்திற் கொள்ளாது வடக்கு - கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த நலனையும் கருத்திற்கெடுத்து மேற்கொண்ட இந்த தீர்க்கமான முடிவு சமூக நலனில் அக்கறை கொண்டவர்களால் பெரிதும் சிலாகிக்கப்படுகின்றது.  “எமது தீர்மானத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மு.கா சிநேகபூர்வமாக செயற்படும்” என்ற ஹக்கீமின் கூற்றானது தமிழ் மக்களுடனான புரிந்துணர்வு தொடர வேண்டியதன் அவசியத்தை கோடிட்டு காட்டுவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

புரட்டாசி 23, 2012

“எங்களுக்கும் காலம் வரும்” என TNA தெரிவிப்பு

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்ததை அறிவித்த முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தமிழ் தேசியக் கூட்ட மைப்பின் சினேகபூர்வமான அழைப்பினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதையிட்டு நான் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் என்று கூறியது சம்பந்தமாக கேட்டபோதே இவ்வாறு பதிலளித்தார். முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்த விடயம்தான் ஏனெனில் தமிழர்களின் உரிமைப்போராட்ட வரலாற்றில் அஸ்ரப் அவர்களுக்கு பின்னர் எந்த முஸ்லிம் தலைமைகளும் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்ட வரலாறு கிடையாது. இது முஸ்லிம் கட்சிகளுக்கேயான தனித்துவம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவம் என்பது வேறு. முஸ்லிம் கட்சிகளின் தனித்துவம் என்பது வேறு.

புரட்டாசி 22, 2012

நந்திக்கடல், வெள்ளமுள்ளி வாய்க்கால் ஊடாக

பிரபாகரன் கடைசியாக இருந்த விஷ்வமடு, புதுக் குடியிருப்பு பிரதேசங்களுக்கு மட்டுமன்றி பிரபாகரனின் வீட்டிற்கும் கூட மின்சாரம்

அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்திற்குள் வடக்கிற்கு தேசிய மின் கட்டமைப்பினூடாக முழுமையான மின்சார வசதி அளிக்கப்படும். இதனூடாக யாழ். குடா அடங்கலாக வடக்கு பிரதேசத்தில் காணப்படும் மின்சார சிக்கல்கள் அனைத்திற்கும் தீர்வு ஏற்படும் என மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி வரை அதி சக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை தொகுதியும் மின் உபநிலையமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு இதனை எதிர்வரும் 25 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்க உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்....)

புரட்டாசி 22, 2012

தலைமன்னார் - இராமநாதபுரம் சட்டவிரோத படகுச்சேவை நடத்திய நபர் கைது

தலைமன்னாருக்கும் தமிழ்நாட்டின் இராமநாதபுரத்துக்கும் இடையே சட்டவிரோதமாகப் படகுச் சேவையை நடத்தி வந்த சுரேஷ் என்ற இலங்கையரொருவரை இந்திய கரையோர பாதுகாப்புப் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் இலங்கையிலிருந்து, அகதிகளை தமிழ்நாட்டுக்கு ஏற்றிச்சென்றமையை ஒத்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்றிச்செல்வதற்கு 30 ஆயிரம் முதல் 50,000 ரூபாவரை கட்டணமாக வசூலித்துள்ளார். தற்போது சுரேஷ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புரட்டாசி 22, 2012

நபிகளாரை அவமதிக்கும் திரைப்படத்திற்கு எதிராக இலங்கை பூராக ஆர்ப்பாட்டம்

 

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட அமெரிக்க திரைப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை கல்குடா, ஹட்டன், மருதமுனை,  மடவளை, கொழும்பு கொள்ளுப்பிட்டி, தெமட்டகொடை பகுதியிலும், காத்தான்குடி போன்ற இலங்கையின் பல்வேறு பாகங்களில் நடைபெற்றன.  பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டன. கொழும்பில் ஆர்பாட்டம் நடைபெற்றபோது  எனினும் நூற்றுக்கணக்கான பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் வரவழைக்கப்பட்டு தூதரகத்துக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்லவிடாமல் தடுக்கப்பட்டது. இவ்வார்ப்பாட்டத்தில் பராக் ஒபாமாவின் நூற்றுக்கணக்கான கொடும்பாவிகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் எரிக்கப்பட்டன.  உலகம் பூராகவும் நடைபெற்றுவரும் ஆர்பாட்டங்களின் ஒரு அங்கமாக முஸ்லீம் சகோதரர்கள் தமது நியாயமான எதிர்பை தெரிவித்து போராடி வருகின்றனர்.

புரட்டாசி 22, 2012

கேள்வி ?    பதில்!

தமிழர்களின் அடுத்த தேசியத் தலைவன் டக்ளஸ் தேவானந்தாவா, சுரேஸ் பிரேமசந்திரனா?

தேயத் தலைவனாக வரும் போட்டியில் கே பி, ருத்திரகுமார், போன்று பலர் இருந்தாலும், தென்னிந்திய சினிமாக்காரன் சீமான் தான் போட்டியில் முன்னணியில் இருக்கிறார். ஏனெனில் அவர்தான் இந்தியாவில் தம்பிமாரை திரட்டிக்கொண்டு வந்து வன்னியை மீட்கப்போவதாக சொல்லிக்கொண்டு திரிகிறாராம். 

புரட்டாசி 22, 2012

யாழ்.நகரப் பகுதியில் இடம் பெற்ற திருட்டுகள் தொடர்பாக மூவர் கைது

யாழ்.நகரப் பகுதியில் இடம்பெற்ற வழிப்பறி, சங்கிலித் திருட்டுகள் தொடர்பாக மூன்று பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். மோட்டார் சைக்கிள்களில் ஆளரவமற்ற இடத்தில் தனிமையில் செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை அறுத்துச்செல்வதில் இந்தக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளார்கள் . கடந்த புதன் கிழமை தனிமையில் சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியை அறுக்க முற்பட்டவேளையில் குறிப்பிட்ட ஒருவர் பிடிபட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டார்கள். இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவத்துடன்மேலும் இருவர் தொடர்புடையவர்கள் என்ற தகவல் வெளி வந்த நிலையில் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் யாழ்ப்பாணம் நகர உள்ளுராட்சி மன்றத்தில் கடமையாற்றுபவர்கள் என்ற தகவலும் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

புரட்டாசி 22, 2012

செம்மொழித் தமிழின் சிறப்புணர்த்தும் நூல்

உலகின் மிக மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் அண்மைக் காலத்தில்தான் செம்மொழி என மத்திய அரசால் அங்கீகரிக்கப் பட்டது. அதற்கான போராட்டம் நெடியது. எனினும் உலகில் உள்ள மற்ற செம்மொழிகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? அவற்றின் இலக்கிய, இலக்கண வளம் எத்தகையது? அவற்றின் தற்போ தைய இருப்பு எப்படி உள்ளது? அவற்றின் இயங்கு தன்மையின் நிலை என்ன? என்பது பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்களுக்கு ‘வரலாற்றில் மொழிகள்’ எனும் நூல் பயனுடையதாக இருக்கும். இந்த நூலை படைத்துள்ள ஆயிஷா இரா.நடராசன் மிகவும் மெனக்கிட்டு ஆய்ந்து ஒப்பிட்டு எழுதியுள்ளார்.
(மேலும்....)

புரட்டாசி 22, 2012

சிரியாவில் போராட்டக்காரர்களுடனான பேச்சு வார்த்தைக்குத் தயார்: பஷார் அல்-அஷாத்

சிரியாவில் கடந்த இரண்டு வருடங்களாக நிலவி வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர போராட்டக்காரர்களுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என சிரிய அதிபர் பஷார் அல்-அஷாத் அறிவித்துள் ளார். சிரியாவில் அதிபர் பஷார் அல்-அஷாத்தின் ஆட்சிக் கெதிராக ஆயுதம் தாங்கிய போராட்டக்காரர்கள் வன் முறையில் ஈடுபட்டு வருகின் றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் ராணுவம் ஈடுபட் டிருந்தது. இருவருக்கும் இடையேயான மோதலில் போராட்டக்காரர்கள் உள் பட ஆயிரக்கணக்கான அப் பாவி மக்கள் கொல்லப்பட் டனர். மேலும், இந்த போராட்டக்காரர்களுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி களை துருக்கியின் உதவியு டன் மேற்கத்திய நாடுகள் செய்து வருவதாக சிரியா குற்றம் சாட்டி வருகின்றது. இந்நிலையில், சிரியாவில் போராட்டக்காரர்கள் கைப் பற்றியிருந்த பெரும்பாலான மாவட்டங்களை ராணுவம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது. இத னால், அங்கு அமைதி திரும் பிக் கொண்டிருக்கிறது. (மேலும்....)

புரட்டாசி 22, 2012

ரஷ்யாவில்

தொன் கணக்கில் வைரக்கல் கண்டுபிடிப்பு!

தங்கத்திற்கு அடுத்தபடியாக மக்கள் அதிகம் விரும்பி வாங்குவது வைர நகைகள். இதற்குக் காரணம் தங்கத்தை விட வைரத்திற்கான விலை அதிகமாக இருப்பதுதான். ஆனால், ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்குப் போதுமான அளவிற்கு டிரில்லியன் கேரட் கணக்கான வைரங்கள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விண்கல் மோதியது. இதனால், 62 மைல் விட்டத்திற்கு பள்ளத்தாக்கு ஒன்று உருவாகியது. இது கடந்த 1970ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு போபிகாய் ஆர்ஸ்ப்லெம் எனப் பெயரிடப்பட்டது. இங்கு நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. அப்பகுதியில் கோடிக்கணக்கான டன் அளவிற்கு வைரங்கள் இருந்தது. இவை, சாதாரண வைரங்களைவிட இரண்டு மடங்கு கடினமுடையதாகஉள்ளன. இவற்றை வெட்டியெடுக்க அதிக தொழில்நுட்ப விஞ்ஞான உபகரணங்களைக் கொண்டு தான் செதுக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டாலும், தற்போது இத்தகவல்கள் வெளியுலகிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 22, 2012

இலங்கை யாத்திரிகர்கள் மீதான தாக்குதல்

புலம் பெயர் தமிழர்களின்  தூண்டுதலே காரணம்

தமிழகத்தில் அண்மையில் இலங்கை பக்தர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் புலி ஆதரவாளர்களான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் தூண்டுதலாலேயே இடம்பெற்றன. இவற்றில் ஜெயலலிதாவோ அல்லது கருணாநிதியோ சம்பந்தமில்லையென பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். இச்சம்பவம் காரணமாக இரு நாடுகளு க்குமிடையிலான நல்லுறவுகளில் எவ்வித பாதிப்புமில்லையென தெரிவித்த பிரதியமைச்சர் மேற்படி சம்பவம் நடைபெற்ற இருவார காலங்களில் இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அங்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டார். (மேலும்....)

புரட்டாசி 22, 2012

சிலாபம் குமாரகட்டுவவில்

ஆயுதமுனையில் 13 லட்சம் கொள்ளை

சிலாபம், பங்கதெனிய குமாரகட்டுவ என்ற இடத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த ஆயுததாரிகள் சாரதியை கட்டி வைத்துவிட்டு வீட்டு உரிமையாளரை ஆயுதமுனையில் அச்சுறுத்தி 13 இலட்சத்து 50,000 ரூபா பணம், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோஜ் ரணகல தலைமையிலான குழுவினர் கொள்ளைக் கும்பலைத் தேடி வலை விரித்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளையர்கள் ஆயுதங்களுடன் வீட்டினுள் புகுந்தபோது குறித்த சார தியும் வர்த்தகரும் மட்டுமே இருந்துள் ளனர்.ரி.56 ரக துப்பாக்கியொன்றுடனும் கைத் துப்பாக்கியொன்றுடனும் திடீரென வீட்டுக்குள் புகுந்துள்ளனர். 4 லட்ச ரூபா ரொக்கப் பணமும் சுமார் 9 1/2 லட்ச ரூபா பெறுமதியான நகைகளையும் இவர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

புரட்டாசி 22, 2012

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவன்

நியூட்டனின் புதிருக்கு தீர்வு கண்ட இந்திய மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன. கடந்த 350 ஆண்டுகளாக தீர்வு காணமுடியாமல் இருந்த எண் கணிதத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த மாணவன் தீர்வு கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் டிரெஸ்டென் பகுதியில் வசிக்கும் செளர்யா ரேய் என்ற அந்த மாணவன், விஞ்ஞானி சேர் ஐசக் நியூட்டன் வகுத்த எண் கணிதத்திற்கு தீர்வு கண்டு பிடித்துள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த காலங்களில் விஞ்ஞானிகள் சக்தி வாய்ந்த கணிப் பொறி மூலம் தீர்வுக்கு முயற்சித்த அடிப்படை துகள் இயக்கவியல் கொள்கை தொடர்பானவற்றுக்கும் ரேய் தீர்வு கண்டுபிடித்ததாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பந்தை சுவரில் எறியும் போது பந்தின் திசை, சுவரில் பந்து எவ்வாறு பட்டு திரும்பும் என்பது உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் ஆராய முடியும் எனவும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

புரட்டாசி 21, 2012

கேள்வி ?    பதில்!

பிரபாகரன் உயிருடன் இருப்பதாக காலச்சக்கரம் என்னும் சாத்திரம் பார்த்துக் கண்டு பிடித்துள்ளதாக புலி இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதே?

புலிகள் சாத்திரம் சகுனம் போன்றவற்றை நம்புவதை பார்க்கும் போது, ஏன் வீணாக துப்பாக்கிகளை தூக்கிக் கொண்டு சண்டைக்கெல்லாம் போனார்கள். ஒரு மலையாள மாந்திரிகனை வைத்து மகிந்தாவையும் அவரின் படையினரையும் பில்லி சூனியம் வைத்து  மந்திரத்தாலேயே கொன்றிருக்கலாமே என எண்ணத் தோன்றுகிறது. புலித் தலைவன் பிரபாகரனும் ஒரு மலையாள வம்சாவழியினன்    என்றபடியால் இந்த வழி மிகவும் சுலபமாக இருந்திருக்கும். இன்னும் காலம் கடந்துவிடவில்லை. பிரபாகரனின் அப்பன்வழி அத்தையை பிடித்து ஒரு வழி பண்ணிவிடலாம்.

புரட்டாசி 21, 2012

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம்

இலங்கைப் பிரச்னை

இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்துவிட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஷ....” பேச்சுக்கள் அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஷ கொடும்பாவி எரிப்பு, சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள் திடீர் உண்ணாவிரதங்கள், இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம் அதைத் தொடர்ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம் மத்திய அரசுக்கு மிரட்டல்கள் என்று - இலங்கை அரசின் பிடிவாதம் தளர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. (மேலும்....)

புரட்டாசி 21, 2012

மானிட நேயத்தை முன்னிறுத்தி மூன்றாவது ஆண்டாக

வாழும் மனிதம் - 3

காலம்: செப்ரெம்பர் 22, 2012 சனிக்கிழமை

      காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபம் (மக்கோவன் - எல்ஸ்மெயர்)

சிறப்புப் பேச்சாளர்:

பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் சட்டத்தரணியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான

எஸ்.எம்.எம்.பசீர் அவர்கள்

'போருக்குப் பின்னான இலங்கைத் தேசமும் இனவாதமும்'

எனும் தலைப்பில் உரையாற்றுவார்.

கனடிய தமிழ்ச்; சமூகத்தில் ஜனநாயக விழுமியங்களுக்காகத் தொடர்ந்து குரல் குரல் கொடுத்து வருபவரும், சமூகச் செயற்பாட்டளருமான

எஸ்.இராஜேந்திரன் அவர்கள்

'தமிழ் சமூகமும் அடிப்படைவாதமும்'

எனும் பொருளில் உரையாற்றுவார்.

ஒருங்கிணைப்பாளர்: தேவன்

இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

•           நிகழ்வு குறித்த நேரத்தில் ஆரம்பமாகும்.

அன்புடன்,

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்

புரட்டாசி 21, 2012

வடக்கு, கிழக்கு பிரதேசங்களில்இராணுவ பிரசன்னம் குறையவில்லை - இந்து பத்திரிகை

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இராணுவப் பிரசன்னம் குறையவில்லை ௭ன்று இந்து பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினரின் ௭ண்ணி­க்கை படிப்படியாக குறைக்கப்படுவதாக கூறப்படுகின்ற போதும், இதுவரை ௭ந்­தவித மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கையில் மொத்தமாக உள்ள 19 இரா­ணுவ பிரிவுகளில், 16 பிரிவுகள் வட­க்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே நிலை கொள்ள செய்யப்பட்டுள்ளன. யாழ்­ப்­பாணத்தில் மூன்று படைப்பிரிவுகள் காணப்படுகின்றன. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மூன்று பிரிவு­கள் உள்ளன. அத்துடன் வவுனியாவில் ஐந்­து படை பிரிவுகளும், கிழக்கில் இர­ண்டு படைப்பிரிவுகளும் நிலைகொண்டுள்­ளன. ஏனைய 3 படைப் பிரிவுகளே தென்னில­ங்­கையில் உள்ளன. இந்த நிலையில் தமிழ் பிரதேசங்களில் இராணுவ பிரசன்னம் குறைந்துள்ளதாக கூறப்படுவதில் உண்மை இல்லை.

புரட்டாசி 21, 2012

13 தமிழர்கள், 8 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள்

பிரிட்டன் நாடு கடத்திய 25 பேர் நேற்று விசேட விமானம் மூலம் வருகை

பிரிட்டினில் புகலிடம் கோரி நிராகரிக் கப்பட்ட மற்றும் வீசா காலம் முடிவடைந்த நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வர்களுள் 25 பேர் நேற்று இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். 25 இலங்கையருடன் விஷேட விமானத்தில் 50 பிரிட்டன் அதி காரிகளும் வந்திருந்தனர். ஒரு இலங்கையருக்கு இரண்டு அதிகாரிகள் வீதம் இலங்கை வந்த அவர்கள் விமான நிலையத்தில் குடிவரவு- குடியகல்வு அதிகாரிகளிடம் 25 பேரையும் ஒப்படைத்தனர். மூன்று தமிழ் பெண்களும், ஒரு முஸ்லிம் பெண்ணும் உட்பட 13 தமிழர்கள் 8 முஸ்லிம்களும், 4 சிங்களவர்களும் இதில் அடங்குவதாகவும் இவர்கள் 2006 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து லண்டனுக்குச் சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, குருணாகல், யாழ்ப்பாணம், கண்டி, முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி கொழும்பு பகுதிகளைச் சேர்ந்தவர்களே நேற்று இலங்கை வந்ததாகவும் அவர்கள் விமான நிலையத்தில் விசாரணைகளுக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

புரட்டாசி 21, 2012

இந்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் போராட்டங்களால் 26,000 பேர் கைது

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீடு, டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்து இந்திய எதிர்க்கட்சிகள் நேற்று வியாழக்கிழமை முழுவதும் நாட்டின் பல பாகங்களிலும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களில் ஈடுபட்டு, இரு எம்.பி.க்கள், 13 எம்.எல்.ஏக்கள், மூவாயிரம் பெண்கள் உட்பட 26 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர் என்று இந்திய பொலிஸார் அறிவித்துள்ளனர்.  பாரதிய ஜனதாக் கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆகியனவே இந்த போராட்டத்தில் ஈடுபட்டன. பொதுவேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன. மற்றும் தனியார் வாகனங்கள் இயங்காததால் பாதிப்பு ஏற்பட்டதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

புரட்டாசி 21, 2012

ஜனாதிபதி மஹிந்த - இந்திய பிரதமர் மன்மோகன் சந்திப்பு

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன்  கலந்துரையாடினார். இந்த இரு தரப்பு சந்திப்பின் போது இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மறுவாழ்வு, நீண்ட காலமாக நிலவும் இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கான இயல்பு வாழ்க்கை மிகவும் மந்தகதியில் இடம்பெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கவலை வெளியிட்ட இந்திய பிரதமர் மன்மோகன் சிங், அதனை துரிதப்படுத்துமாறு அழுத்தம் கொடுத்ததுடன், இனப்பிரச்சினைக்கு நீடித்த தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனப்பிரச்சினையைக் கையாள்வதிலும் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காகவும் அரசாங்கம் முன்னெடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளித்தார். இந்த கலந்துரையாடலை அடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய பிரதமர் இரவு விருந்துபசாரமொன்றையும் அளிக்கவுள்ளதாக  செய்திகள் தெரிவிக்கின்றன.

புரட்டாசி 21, 2012

யாழில் கடற்கரை பகுதிகளை ஆழமாக்குவதற்கு நடவடிக்கை

தொண்டமனாறு தொடக்கம் கற்கோவளம் வரையான கடற்கரை பகுதிகளை ஆழமாக்குகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட திட்டப்பணிப்பாளர் சுதர்சன், வடமராட்சி கடற்றொழிலாளர் சங்க சமாசங்களின் தலைவர் அருளானந்தம் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை ஆகியோர் இப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். கடற்கரை பகுதிகளை செப்பனிடுவதற்காக கடற்கரை பகுதியின் ஆளம், அகலம் என்பவற்றை கணிப்பிட்டதுடன், செப்பனிடுவதற்கு பல மில்லியன் ரூபா நிதி தேவைப்படுவதனால் அதிகாரிகளிடம் தீர்மானித்து அறிக்கை சமர்ப்பிப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் யாழ். மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 21, 2012

கிழக்கு மாகாண மக்கள் ௭ம்முடன் வடமாகாண தேர்தல் அடுத்த வருடம்  - ஜனாதிபதி மஹிந்த

கிழக்கு மாகாண மக்கள் இன, மத, மொழி பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் இணைந்து நிற்கின்றனர். அடுத்த வருடம் வடமாகாண சபைத் தேர்தலும் நடத்தப்படும் ௭ன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்தியாவிற் இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்திய ஜனாதிபதி பிராணப் முகர்ஜியுடனான உத்தியோகபூர்வ சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 20, 2012

மீண்டும் முதலமைச்சராக வரமுடியாது என்பதை ஏற்கனவே விளங்கிக்கொண்டேன் - சந்திரகாந்தன்

'கிழக்கு மாகாணத்தில் கூடுதலான விருப்பு வாக்குகளை நான் பெற்றிருக்க வேண்டும். அல்லது குறைந்தது மூன்று ஆசனங்களையாவது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியான நாங்கள் பெற்றிருக்க வேண்டும். இந்நிலையில் இம்முறை கிழக்கு மாகாண முதலமைச்சராக நான் வரமுடியாது என்பது எனக்கு தெரிந்திருந்தது. மாகாண முதலமைச்சராக இருந்து பல பணிகளை நான் செய்திருந்தேன். பின்னர் கிழக்கு மாகாண அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்து பணி புரிவதென்பது சாத்தியமற்ற விடயமாகும். அத்தோடு அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்குவது ஆசனங்களை பிரிப்பது போன்ற சங்கடங்களை அரசாங்கம் எதிர்நோக்கியிருந்தது. (மேலும்....)

புரட்டாசி 20, 2012

கிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவருக்கு துரைரெட்ணம் பொருத்தமானவர்.

(தோழர்ஸ்ரனிஸ்)

கிழக்கு மகாண தேர்தல் முடிவடைந்து யார் ஆட்சி அமைப்பது என்ற இழுபறி நிலை முடிவுக்கு வந்து முதலமைச்சரான மஜீத் அவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார். யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பது ஒரு மர்மமாக இருந்தது என்பது இல்லை ஐக்கிய மக்கள் சுதந்திர முனன்ணியும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரசும் சேர்ந்துதான் ஆட்சி அமைக்க போகிறது என்பது வெள்ளிடைமலையாக தெரிந்திருந்தும் அதை ஒரு மர்மாகவும் கிழக்கு மக்களின் ஆவலை வீணடித்து நாட்களை கடத்தி அந்த மக்களின் ஆசையை நிராசையாக்கியது முஸ்லீம் காங்கிரசே. (மேலும்....)

புரட்டாசி 20, 2012

கேள்வி ?    பதில்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில், அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றி?

அமெரிக்காவுக்கு இஸ்ரேல் சம்பந்தமான சங்கடங்களில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு. இந்தியாவுக்கு சர்வதேச தர்மசங்கடம். புலன் பெயர்ந்த தமிழர்கள் சிலருக்கு ஊரார் பணத்தில் ஜெனிவா செல்ல ஒரு வாய்ப்பு. தமிழ் ஊடகங்களுக்கு சில நாட்களுக்கான செய்தித் தீனி. தமிழ்நாட்டு மட்டரக அரசியல்வாதிகளுக்கு சிலநாள் பொழுதுபோக்கு. சிங்களத் தலைவர்களுக்கு இரத்தக் கொதிப்பு. சம்பந்தர் கூட்டத்துக்கு சம்பாதிக்க, பேரம் பேச ஒரு சந்தர்ப்பம். இலங்கைத் தமிழர்களுக்கு எருமை மாட்டின் மேல் மீண்டும் ஒரு மழை. 

புரட்டாசி 20, 2012

சகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவேன் - கிழக்கு மாகாண முதலமைச்சர்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஐ. தே. க. அடங்கலான கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளினதும் ஒத்துழைப்புடன் கிழக்கு பிரதேசத்தை முன்னேற்றுவதே எனது இலக்காகும். கிழக்கில் சகல இன மக்களும் சமமாகவும் ஒற்றுமையுடனும் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்தவும் சகல இன மக்களுக்கும் சமமாக சேவையாற்றவும் முழுமையாக தன்னை அர்ப்பணிக்கப் போவதாக புதிய கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார். (மேலும்....)

புரட்டாசி 20, 2012

தமிழக முகாம்களிலிருந்து 73 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

தமிழகத்தின் முகாம்களில் தங்கியிருந்த 73 பேர் நேற்றுமுன்தினம் விமானம் மூலம் நாடு திரும்பினர். வடபகுதியைச் சேர்ந்த 23 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேருமே இவ்வாறு நாடு திரும்பியிருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பு தெரிவித்தது. நாடு திரும்பிய இவர்களுக்கு யூ.என்.எச்.சி.ஆர். அமைப்பினால் 10,000 ரூபாவும், போக்குவரத்துக் கான கொடுப்பனவாக 4 ஆயிரம் ரூபாவும் வழங்கப்பட்டதாக அந்த அமைப்பின் அதிகாரியொரு வர் குறிப்பிட்டார். தமிழகத்திலுள்ள முகாம்களிலிருந்து நாடு திரும்ப விரும்புவோருக்கான விமானச் சீட்டுக்கள் அங்குள்ள யூ.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் சொந்த இடங்களுக்குச் சென்ற பின்னர் அங்குள்ள யூ.என்.எச்.சி.ஆர் அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொண்டால் அவர்களுக்கு உலருணவு நிவாரணப் பொதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையிலான 8 மாத காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 873 இலங் கையர்கள் நாடு திரும்பியிருப்பதாக யூ.என்.எச்.சி.ஆர் அமைப்பு தெரிவித்துள் ளது.

புரட்டாசி 20, 2012

இலண்டனில் விஸா மறுக்கப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று வருகை

இலண்டனில் விஸா மறுக்கப்பட்ட நிலையில் 50 பேர் இன்று இலங்கை திரும்புவதாக குடிவரவு மற்றும் குடிய கல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் சூலா நந்த பெரேரா தெரிவித்தார். இவர்கள் விசேட விமானம் மூலம் இன்று கட்டு நாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைவர். திருப்பியனுப்பப்படுபவர்களுள் பெரும்பாலானோர் அந்நாட்டில் அகதி அந்தஸ்து கோரி நிராகரிக்கப்பட்டவர்களா வர். மேலும் பலர் தமது விஸா காலம் முடிவடைந்ததும் அதனை புதுப்பிக்க அந் நாட்டு அரசாங்கம் மறுத்தமை காரண மாகவே நாட்டிற்கு திருப்பியனுப்பப் படுவதாகவும் அவ்வதிகாரி கூறினார்.

புரட்டாசி 20, 2012

அமெ.வுடன் சேர்ந்து அல்-கொய்தாவை உருவாக்கியது நாங்கள்தான் : பிரிட்டன் எம்.பி.-லிபியாவில் அமெ.தூதரை கொன்றது அமெரிக்காதான்

எதிரிகளை அழிப்பதற்காக அமெரிக் காவுடன் சேர்ந்து அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகளை உருவாக்கியது நாங்கள் தான் என பிரிட்டன் நாடாளு மன்ற உறுப்பினர் ஜார்ஜ் கேல்லொவே தெரிவித்துள்ளார். இன்று உலகிற்கே அச்சுறுத்தலாக விளங்கி வருவது அல்-கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள். கடந்த 2000ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானங்கள் மூலம் தாக்கி உலகையே அச்சுறுத்தியது அல்-கொய்தா. இந்த இரண்டு தீவிரவாத அமைப்புகளை யும், மேற்கத்திய நாடுகள் தங்களது மிகப் பெரிய எதிரிகளாக கருதும் சோவியத் யூனி யனுக்கு எதிராக தங்களது ஆயுதமாகப் போராட கடந்த 1980ம் ஆண்டு அமெ ரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் தான் உருவாக்கியது என்ற அதிர்ச்சித் தக வலை பிரிட்டனின் பிராட்ஃபோர்ட் வெஸ்ட் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜூயார்ஜ் கேல்லவோ, யூ டியூப் நிறுவனத் தின் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
(மேலும்....)

புரட்டாசி 20, 2012

இந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியேற்றம், மீனவர் குறித்து பேசப்படும்

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை இந்தியாவுக்கு பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று மாலை இந்திய குடியரசுத் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் இரவு 7 மணிக்குச் சந்தித்துப் பேசவுள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. அங்கு அவருக்கு இந்திய பிரதமர் இரவு விருந்து அளிக்கவுள்ளார்.  இலங்கையில் இந்தியாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் தமிழர் மீள்குடியேற்றப் பணிகள் குறித்தும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் விவகாரம் குறித்தும் இலங்கை - இந்திய தலைவர்கள் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து நாளை வெள்ளிக்கிழமை காலை, புதுடில்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டு மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி செல்லும் ஜனாதிபதி குழுவினர், அங்கு நிர்மாணிக்கப்படவுள்ள பௌத்தமத மற்றும் அறிவுசார் பல்கலைக்கழகத்துக்கான அடிக்கல் நாட்டவுள்ளனர். ஜனாதிபதியின் இந்திய விஜயத்துக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், சாஞ்சியில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளன. இதனால் அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புரட்டாசி 20, 2012

தோற்றுப்போன பிரதேச வாதமும் தோற்று நிற்கும் கிழக்கு தமிழனும் ..!

(இரா.வி.விஸ்ணு )

என்ன இது தலைப்பு பிரதேச வாதம் பெசப்போகிறதா என யோசிக்க வேண்டாம் . இன்று என்ன மனோநிலையில் கிழக்கு வாழ் முஸ்லீம் மக்கள் இருப்பார்களோ அதற்க்கு எதிர்மறை மனோநிலையிலேயே கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இருக்கின்றனர். இதில் பெரும்பாலான தமிழ் மக்கள் எந்த ஆட்சி அதிகாரத்தை தாம் கைப்பற்றவேண்டும் என்று நினைத்த வாக்களித்தார்களோ அந்த கனவு அவர்களை எதிர்க்கட்சியில்தான் அமர்த்தியிருக்கிறது . மறுபுறம் எந்த அதிகாரத்தை தாம் கைப்பற்ற வேண்டுமென்று முஸ்லீம் மக்கள் வாக்களித்தார்களோ அந்தக்கனவு அவர்களுக்கு முழுமையாக நிறைவேறியதுடன் ஒருபடி மேல் சொல்லப்போனால் அவர்களுக்கு நிறைவேறியது வெறும் கனவல்ல போனஸ் கனவு என்றே சொல்லவேண்டும் . கடந்த கிழக்கு தேர்தலில் முதலமைச்சு நோக்கி சரமாறியாக தமிழ் , முஸ்லீம் தரப்பில் இனவாதம் பிரதேசவாதம் , அரச எதிர்ப்பு என்பன மும்முனை பிரச்சார  கருத்துக்களாக  . த.தே.கூட்டமைப்பு , ஐ .ம .சு .மு  (தமிழ் ,முஸ்லீம் கூட்டணி கட்சிகள் ) , முஸ்லீம் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையில் இருந்த மும்முனை போட்டி போல மோதின .இக்கருத்துக்கள் ஒருதரப்புக்கு வெற்றியை தேடித்தந்து மறுதரப்புக்கு ஏமாற்றத்தை அள்ளித்தந்ததையும் தேர்தல் முடிவுகள் காட்டி நிட்கின்றன . இன்றைய சூழலில் தேர்தல் முடிவுகளையும் தாண்டி ஏமாற்றம் என்பது கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு உரியதாகி இருக்கின்றதென்பது கிழக்கில் உள்ள சிலருடன் உரையாடியதில் இருந்து உணர முடிந்தது .(மேலும்....)

புரட்டாசி 19, 2012

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து தீர்மானிக்கவில்லை

கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பலமான எதிர்க்கட்சியை கிழக்கு மாகாண சபையில் ஏற்படுத்தவுள்ளதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டார். "எனினும் யாரை எதிர்க்கட்சி தலைவராக நியமிப்பது என்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் கூடி தீர்மானமொன்றை எடுக்கவுள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற முன்னாள் மாகாண கல்வி பணிப்பாளர் தண்டாயுதபானி ஆகிய இருவரில் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் கூடியவாய்ப்பு தண்டாயுதபாணிக்கே உள்ளதாக அறியமுடிகின்றது.

புரட்டாசி 19, 2012

ஜனாதிபதி மஹிந்த இந்தியாவுக்குப் பயணமானார்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன் இந்தியாவுக்குப் பயணமானதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார். ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் மூலம் இலங்கை நேரம் பிற்பகல் 3.25 மணிக்கு அவர் இந்தியா நோக்கிப் பயணமாகியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள புலி ஆதரவு கட்சிகள், திமுக, அதிமுக கட்சிகளின் எதிர்ப்புக்களின் மத்தியிலும் இவர் இந்தியா பயணமாகியுள்ளார்.

புரட்டாசி 19, 2012

சப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நியமனம்

சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்ட டாக்டர் துசிதா விஜேமான்ன மற்றும் கிங்ஸ் நெல்சன் ஆகியோர் இன்று புதன்கிழமை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். இதேவேளை, சப்ரகமுவவுக்கான ஐ.தே.க அமைப்பாளராக ஹசித முகாந்திரம் நியமிக்கப்பட்டதோடு வடமத்திய மாகாணத்துக்காக அமைப்பாளராக சந்திம கமகேவும் நியமிக்கப்பட்டார்.

புரட்டாசி 19, 2012

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக எஸ்.எம்.சந்திரசேன அறிவிப்பு

தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக கமநல மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இன்று புதன்கிழமை அறிவித்துள்ளார். தனது சகோதரரான மாகாண சபை உறுப்பினர் எஸ்.எம்.ரஞ்சிதிற்கு வட மத்திய மாகாண முதலமைச்சர் பதவியினை வழங்குவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தமையினாலேயே அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தெரிவித்தார். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் அமைச்சுப் பதவிகளை ஏக காலத்தில் வகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிறைவேற்றுக்குழு தெரிவித்ததாக டெய்லி மிரருக்கு எஸ்.எம். சந்திரசேன  தெரிவித்தார். இந்நிலையில், தனது சகோதரருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதற்காக தனது அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அமைச்சு முஸ்லீம் காங்கிரசிற்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புரட்டாசி 19, 2012

மத்திய அரசில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்ல - ஹக்கீம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசில் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அமைச்சு பதவிகள் கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டார். "முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக அரசாங்கத்திலிருந்து கொண்டு குரல் கொடுப்போம். தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் மிக விரைவில் அமுல்படுத்தப்படும்' என அவர் தெரிவித்தார். (மேலும்....)

புரட்டாசி 19, 2012

கேள்வி ?    பதில்!

ராஜபக்ஸ, பிரபாகரன் இவர்களில் அதிகமான பொதுமக்களை கொன்றவர் யார்?

 ராஜபக்ஸ, (பிரபாகரன் தயவில்) பதவிக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட முப்பதினாயிரம் முதல் நாற்பதினாயிரம் வரையில் தமிழ் பொதுமக்கள் இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்டிருக்கலாம். பிரபாகரனாலும் அவரின் புலிப்படையாலும் அதேயளவு தமிழ் பொதுமக்களும் அதைவிட சுமார் இருபதினாயிரத்துக்கு மேற்பட்ட சிங்கள முஸ்லீம் பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள். ஜெயவர்த்தனா, பிரேமதாஸா காலப்பகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள் இங்கு சேர்த்துக் கொள்ளப்பட வில்லை.

புரட்டாசி 19, 2012

இரண்டரை வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி - ஹக்கீம்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அமைச்சு பதவி கிடைக்காமல் விடுபடும் மூன்றாவது மாவட்டத்திற்கு தேவையான அரசியல் அந்தஸ்து கட்சியினால் பலப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். (மேலும்....)

புரட்டாசி 19, 2012

புதிய கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் நஜீப் - மு.கா தலைவர் சந்திப்பு

கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை இன்று (18.09.2012) கொழும்பில் அமைச்சரின் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, தன்னை முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைச்சருக்கும் ஏனைய கிழக்கு மாகாண சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் நன்றி தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி உட்பட முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

புரட்டாசி 19, 2012

கிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்

கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நஜீப் ஏ.மஜீத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

புரட்டாசி 19, 2012

ஆதரவு வாபஸ்

மம்தா பானர்ஜி அறிவிப்பு

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக் கிக் கொள்வதாக மம்தா பானர்ஜி தலைமை யிலான திரிணாமுல் காங்கிரஸ் அறிவித் துள்ளது. மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தியது. ஆண்டுக்கு 6 சமையல் எரி வாயு சிலிண்டர்களுக்கு மேல் வாங்கினால் மானியம் ரத்து, சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதிக்க வும், நால்கோ உள்ளிட்ட பொதுத்துறை நிறு வனங்களின் பங்குகளை விற்கவும், சிவில் விமான போக்குவரத்து துi றயில் நேரடி அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பை அதிக ரித்தும் பிரதமர் மன்மோகன்சிங் தலைமை யிலான பொரு ளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கடந்த வாரம் கூடி முடிவு செய்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப் புத் தெரிவித் தன. இந்த முடிவுகளை மத்திய அரசு விலக்கிக்கொள்ள மம்தா 72 மணிநேர கெடு விதித்திருந்தார். அந்த கெடு திங்க ளன்று மாலையுடன் முடிவடைந்த நிலையில் செவ் வாயன்று மாலை கொல்கத்தாவில் கூடிய திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில், மன்மோகன்சிங் தலைமை யிலான அரசுக்கு அளித்து வந்து ஆதரவை விலக்கிக் கொள்வது எனவும் தமது அமைச் சர்களை திரும்ப அழைத்துக் கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்ட தாக மம்தா கூறினார்.

புரட்டாசி 19, 2012

புதினுக்கு எதிராக மாபெரும் போராட்டம் -ஒரு லட்சம் பேர் மாஸ்கோவில் திரண்டனர்

ரஷ்யாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் அதிபருக்கான தேர்தலில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு புதின் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. அதன் மூலம் புதின் ரஷ்ய அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு எதிராக ரஷ்யா முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றன. இப்படி போராட்டத்தில் ஈடுபட்டால் சிறையில் தள்ளி போராட்டத்தை ஒடுக்குவதற்கு புதின் புதிய சட்டங்களையும் கொண்டு வந்திருக்கிறார். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சிறையில் தள்ளுவதோடு, பெரும் அபராதமும் விதிக்கும் படியான உத்தரவை அதிபர் புதின் பிறப்பித்துள்ளார். இதனால் அந்நாட்டில் அதிபர் மீதான கோபம் மேலும் அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே புதினின் இந்த அடக்குமுறை கொள்கைகளை எதிர்த்து கிறிஸ்தவ தேவாலயத்தில் பாடல்களை பாடி பிரச்சாரம் செய்த பெண் பாடகர்குழுவினரை புதின் அரசு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்நிலையில் ஞாயிறன்று ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் புதினுக்கு எதிராக கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

புரட்டாசி 19, 2012

An Urgent Appeal for Peace in the Middle East - Mobilize for October 6th!

We are writing you with regard to the ever-growing danger of aggression and war in the Middle East – especially foreign aggression against Syria and Iran – and the need for all peace-loving individuals, groups and organizations across Canada to speak out against any such aggression, and to condemn the role of the Harper government in imposing crippling sanctions, breaking off diplomatic relations and helping to whip up an atmosphere of war hysteria with its bellicose and dangerously irresponsible statements. (more....)

புரட்டாசி 18, 2012

வரலாறு தோழர் ரட்ணத்தை விடுதலை செய்துள்ளது.

(சுகு - ஸ்ரீதரன்)

கிழக்கல் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய விருப்பு வாக்குகறைப் பெற்ற தோழர் துரைரட்ணத்தின் வரலாறு துன்பமும் சவால்களும் நிறைந்தது. அது சமூகத்தின் சராசரி சவால் அல்ல. மரணங்களும், இடம்பெயர்வும், புலம்பெயர்வும்  மோதல்களும் முரண்பாடுகளும் அவலங்களும், நிறைந்தது. விடிந்தால் என்ன நடக்குமோ! மாலையில் என்ன நிகழுமோ! இப்போதுதான் யாது நிகழுமோ!!! என ஊகிக்க முடியாதது. அறிவு தெரிந்த நாள்முதல் அவரது வாழ்வு  மரணங்கள் மலிந்த பூமியிலானது.1980 களின முற்பகுதியில் ஈபிஆர்எல்எப் இன் மாணவர் அமைப்பான ஈழமாணவர் பொதுமன்றத்தினூடாக சமூக அரசியல் பிரவேசத்தை மேற்கொண்ட ஆரம்பத்தில் அம்பாறை மாவட்ட கிரமங்களில் தனது பணிகளை ஆரம்பித்தார். அது ஆயிரக்கணக்கான விடுதலைப்போராளிகளின் பிரவேசம் போன்றதே. பணத்திற்காகவும் பதவிக்காகவும் அற்ப சலுகைகளுக்காகவும் அரசியல் பிரவேசம் செய்யும் அற்ப பதர்களினதைப்போன்றதல்ல. சமூகத்தில் அடிமட்டத்தில் உழல்பவர்களை அணிதிரட்டும் விழிப்படையச் செய்யும் பாரிய பணி அது. மக்களின் இன்ப துன்பங்களில் கலந்து கொண்டு ,அவர்களின் அன்றாட வாழ்வுடன் தொடர்பு பட்டு அவர்களை அரசியல் மயப்படுத்தும் முயற்சி அது. (மேலும்....)

புரட்டாசி 18, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு?

கிழக்கு மாகாண முதலமைச்சராக முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளருமான நஜீப் ஏ. மஜீட்டை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு  சார்பாக திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான நஜீப் ஏ. மஜீட் முதலமைச்சராக பதவியேற்றால், முதல் முஸ்லிம் முதலமைச்சராக விளங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அமைப்பதனால் அக்கட்சிக்கு இரண்டு மாகாண அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது எனவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மேலதிகமாகவுள்ள இரண்டு மாகாண அமைச்சு பதவிகளில் ஒன்று கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாயக்கவிற்கு வழங்கப்படும் எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்....)

புரட்டாசி 18, 2012

‘தேசிய அரசு'

எங்கே, எதற்கு, எப்போது?

(என். சத்தியமூர்த்தி)

கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கு பின்னர் தோன்றியுள்ள 'தொங்கு சபை' பிரச்சினைக்கு முடிவு காண, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அங்கு 'தேசிய அரசு' ஒன்று அமையும் சூழ்நிலை அமைந்தால் அதில் பங்கு பெறுவது குறித்து ஆலோசனை செய்யும் என்று கட்சி தலைவர் சம்பந்தன் அறிவித்திருப்பது கொள்கை ரீதியாக வரவேற்கப்பட வேண்டிய விடயம். அதே சமயம், இது குறித்து கூட்டமைப்போ, பிற கட்சிகளோ தீவிரமாக சிந்தித்துள்ளார்களா? அல்லது இதனை தங்களது அடுத்தகட்ட அரசியல் விளையாட்டில் ஒரு பகடைக்காயாக மட்டுமே பயன்படுத்த விரும்புகிறார்களா என்பது குறித்து தற்போதைக்காகிலும் தெளிவு இல்லை. (மேலும்....)

புரட்டாசி 18, 2012

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் என்பது உறுதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் முஸ்லிம் ஒருவர் என்பது உறுதியாகிவிட்டது. நாங்கள் அரசுடனும் -தமிழ் தேசிய கூட்டமைப்போடும் பேச்சுவார்தையில் ஈடுபட்டோம்.
இன்று காலை தமிழ் தேசிய கூட்டமைப்போடு பேச்சுவார்தையில் ஈடுபட்ட வேளை நாங்கள் மூவின மக்களுக்கும் பொருத்தமான ஆட்சி கிழக்கில் அமைவதை வலியுறுத்திக் கூறினோம் தமிழ் தேசிய கூட்டமைப்பு அவர்களுடன் இணைந்து ஆட்சியை அமைக்க உதவுமாறு எங்களை கேட்டுக்கொண்டனர். ஆனால் நாங்கள் அரசுக்கு அதரவு அளிப்பதா ? இல்லையா ? என்பதை திட்டவட்டமாகக் கூறவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். (மேலும்....)

புரட்டாசி 18, 2012

த.தே.கூ. - காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் கலந்துரையாடல் வேறு தினத்திற்கு மாற்றம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் காத்தான்குடி முஸ்லிம் சமூக பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் பிறிதொரு தினத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். சமகால அரசியல் விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்தான்குடியிலுள்ள முஸ்லிம் சமூக பிரதிநிதிகளை இன்று மாலை 5மணிக்கு காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள தாஜ் பிளாஸா ஹோட்டலில் சந்திக்க இருந்தது. குறித்த நேரத்துக்கு காத்தான்குடியிலுள்ள சமூக மதிப்புக்கான மக்கள் ஒன்றியம், காத்தான்குடி தவ்ஹீத் கூட்டமைப்பு, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் என பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் வருகைதந்திருந்தனர். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குறித்த நேரத்துக்கு வருகைத் தராத காரணத்தால் சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அங்கிருந்து சென்று விட்டனர்.(மேலும்....)

புரட்டாசி 18, 2012

"கேட்டதையெல்லாம் கொடுப்போமென ௭திர்பார்க்கக் கூடாது"

அரசாங்கத்தின் கதவுகள் ௭ப்போதும் திறந்தே உள்ளன. இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம். ஆனால் கேட்பதையெல்லாம் கொடுப்போம் ௭ன்று யாரும் ௭திர்பார்க்கக் கூடாது ௭ன அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் சர்வ கட்சி ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மாத்திரம­ல்­ல, ஏனைய கட்சிகளுக்குமான பொதுவா­ன அழைப்பையே அரசு விடுத்துள்ளது. ௭ன­வே அரசின் கொள்கைகள் மற்றும் தேசிய நல்லிணக்கம் போன்றவை தொடர்பி­ல் இணக்கப்பாடுடனான ஒன்றிணைந்த சர்வ கட்சி ஆட்சியினையே கிழக்கில் அரசு வி­ரும்புகின்றது ௭ன்றும் அவர் குறிப்பிட்டார். ௭னவே கூட்டமைப்போ ஏனைய கட்சிகளோ ஒன்றிணைந்து செயற்படலாம். ஆனால் நிபந்தனைகள் மற்றும் அழுத்தங்களுக்கு அடி பணிந்து கேட்பதையெல்லாம் அரசு கொடுத்து விடும் ௭ன்றும் யாரும் நினைத்து விடக்கூடாது. இது சாத்தியப்படவும் போவதில்லை. அரசு நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஏனைய கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படவே விரும்புகின்றது ௭ன்றார்.

புரட்டாசி 18, 2012

இலங்கை - சீனா 10 க்கும் மேற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீன மக்கள் காங்கிரஸின் தலைவர் வூ பங்குவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பயனுள்ள 10ற்கும் மேற்பட்ட முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.  இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரம் மற்றும் நிபுணத்துவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் இரண்டாம் கட்டத் திட்டங்களுக்கு கடன்பெற்றுக் கொள்வதற்கான சில ஒப்பந்தங்கள், இலங்கைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கான் இயந்திரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம், ஐந்து வருடங்களுக்கு நிதி ஒத்துழைப்புத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம், கொழும்பு தாமரை கோபுரத்திட்டத்துக்கான ஒப்பந்தம், இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவுக்கான நிதியினை வழங்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் உட்பட பல ஒப்பந்தங்கள் இங்கு கைச்சாத்திடப்பட்டன. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து நாட்டுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுப்பதில் சீன அரசாங்கம் வழங்கிய பூரண ஒத்துழைப்புக்கு இதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

புரட்டாசி 17, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு முஸ்லிம் கட்சிகளுக்கிடையிலான போட்டி தீவிரம்

கிழக்கு மாகாண  முதலமைச்சர் பதவியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலுள்ள முஸ்லிம் கட்சிகள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு இடையிலான போட்டி தீவிரமடைந்துள்ளது. கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான இலங்கை மக்கள் காங்கிரஸும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும், அமீர் அலியை முதலமைச்சராக்க வேண்டுமென கோருகின்றன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினரான அமீர் அலி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்விடயம் தொடர்பாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புரட்டாசி 17, 2012

ஈரானை இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்கலாம்?: அமெரிக்க, பிரித்தானிய படைகளும் வளைகுடா நோக்கிப் படையெடுப்பு!

ஈரானின் அணு உலைகளை இலக்குவைத்து இஸ்ரேல் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற நிலை வளைகுடாவில் தோன்றியுள்ளதுடன் அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள் வளைகுடாப் பகுதியை நோக்கிப் படையெடுத்துள்ளன.இருபத்தைந்து நாடுகளின் போர்க்கப்பல்கள், விமானந் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிகள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணைப்  (Strait of Hormuz) பகுதியில் இதுவரை இல்லாத அளவில் அவை  மிகப்பெரிய போர் ஒத்திகையை அங்கு நடத்தவுள்ளன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்மூஸ் நீரிணையின் ஊடாக தினசரி 18 மில்லியன் மசகெண்ணெய் பெரல்களைக் கப்பல்கள் கொண்டுசெல்கின்றன. இந்த வழியைத் தடைசெய்யப்போவதாக  ஈரான் பல மாதங்களாக எச்சரித்து வருகின்றது. இதன்மூலம் உலக நாடுகள் பலவற்றினை ஸ்தம்பிக்க வைக்கமுடியுமென ஈரான் கருதுகின்றது. இந்நீரிணையூடான வழியை மூடுமானால் ஈரான் மீது தாக்குதல் நடத்த உலகநாடுகள் பல தயாராகவுள்ளன. ஈரானிடம் அதிநவீன தொழில்நுட்பங்கள் இல்லாதபோதிலும் சிறிய ரக நீர்மூழ்கிக் கப்பல்கள், அதிவேக தாக்குதல் படகுகள் போன்றவற்றின் மூலம் அமெரிக்க மற்றும் பிரித்தானிய கப்பல்களை அது தாக்கலாம் என நம்பப்படுகின்றது. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படுமானால் இஸ்ரேலில் ஒன்றுமே எஞ்சாது என அந்நாட்டின் புரட்சிகரப் படையின் கட்டளைத் தளபதி  ஜெனரல் மொஹமட் அல் ஜபாரி எச்சரித்துள்ளார்.

புரட்டாசி 17, 2012

மாலக்க சில்வா உள்ளிட்டோர் பொலிஸில் சரண்

இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, றெஹான் விஜயரட்ன மற்றும் வேறு சிலரும்  கொம்பனித்தெரு பொலிஸில் சற்றுமுன்னர் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 'நைட் கிளப்பில் ஏற்பட்ட குழப்பத்தின்போது யாரோ சிலர் இராணுவ மேஜரை தாக்கினர். அத்தருணத்தில் அவரது கைத்துப்பாக்கி கீழே விழுந்துள்ளது. எனது வாகன சாரதி இக்கைத்துப்பாக்கியை எடுத்து பொலிஸில் ஒப்படைத்தார்' என அவர் கூறினார். இராணுவ அதிகாரி ஒருவரை தாக்கியதாகக் கூறப்படும் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, றெஹான் விஜயரட்ன மற்றும் 5 பேரை எதிர்வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். தனது மகனுக்கான தான் வருந்துகின்றபோதிலும் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் விடுத்த உத்தரவை  தான் மதிப்பதாக ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.

புரட்டாசி 17, 2012

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை அமீர் அலிக்கு வழங்காவிடின் அரசு பாரிய விளைவை எதிர்நோக்கும்

முன்னாள் அமைச்சர் அமீர் அலிக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படாவிடின் அதன் விளைவை அரசாங்கம் எதிர்நோக்கும் என கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார். "கிழக்கு மாகாண முதலமைச்சரை தெரிவு செய்யும் நடவடிக்கை தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் எமது அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்க கட்சியின் பிரதான பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்திற்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவளித்து வருகின்றது. அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையிலான எமது கட்சியானது அரசாங்கத்தின் கூட்டு கட்சியாக இருந்து வருகின்றது. இவற்றையெல்லாம் அரசாங்கம் கருத்திற் கொண்டு முதலமைச்சர் விடயத்தில் அரசாங்கம் தெளிவான ஒரு முடிவை எடுக்கும் என நான் நினைக்கின்றேன். எமது கட்சியை சேர்ந்த அமீர் அலிக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி வழங்கப்படல் வேண்டும். இல்லையேல் அதன் விளைவை அரசாங்கம் சந்திக்க நேரிடும் என்பதை தெளிவாக சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

புரட்டாசி 17, 2012

கேள்வி ?    பதில் !

நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் சொல்லிநிற்கும் சேதி என்ன?

தமிழரிடமிருந்து கிழக்குமாகாணம் பறி போய்விட்டது. புலிகளின் தமிழீழ வரைபடத்திலிருந்து கிழக்கு அழிக்கப்பட்டுவிட்டது. வடக்க ு- கிழக்கு இணைந்த மாகாண அரசுக் கெதிராகப் புலிகள் செயல்படத் தொடங்கிய காலத்திலிருந்தே இதற்கான விதை விதைக்கப்பட்டு விட்டது. வடக்கும் கிழக்கும் இணைந்திருக்க வேண்டுமென்று புலிகள் என்றுமே விரும்பியதில்லை. விரும்பியிருந்தால் வடக்கு - கிழக்கு மாகாண அரசுக்கு எதிராகப் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்திருக்கமாட்டார்கள். தமிழ் மக்களுக்கான மாகாண அரசுக்கு எதிராக சிங்கள அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்திருக்க மாட்டார்கள். பிரேமதாஸாவும், பிரபாகரனும் அண்ணன், தம்பி கதை பேசியிருக்கமாட்டார்கள். வடக்கு - கிழக்கு இணைந்த மாகாண அரசை இரண்டாகப் பிரித்த பின்பாக ஜெனீவாவில் நடந்த புலிகளுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையில் வடக்கு, கிழக்கு பிரிப்புபற்றி புலிகள் வாயே திறக்கவில்லை. புலிகளுக்குத் தேவையாக இருந்ததெல்லாம் தமிழிழம் என்னும் பெயர்மட்டும் தான். தமிழீழத்தின் கை வெட்டப்பட்டாலென்ன. கால் வெட்டப்பட்டாலென்ன. தமிழீழம் என்னும் முண்டம் கிடைத்தால் போதும் என்று இருந்தார்கள். அதன் பிரதிபலன் தான் இப்போது கிடைக்கிறது.

புரட்டாசி 17, 2012

சர்ச்சைக்குரிய திரைப்பட தயாரிப்பாளரின் புகைப்படத்தை அம்பலப்படுத்திய நடிகை

முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படத்தை தயாரித்த சாம் பசில் என்று கூறப்படும் நகவ்லா பஸ்ஸலி நகவ்லாவின் புகைப்படத்தை அந்த திரைப்படத்தில் நடித்த அன்னா குர்ஜி என்ற பெண் அம்பலப்படு த்தியுள்ளார். திரைப்படத் தயாரிப்பின் போது தன்னுடன் அமர்ந்திருக்கும் நகவ்லாவின் படத்தை அந்த பெண் ஊடகங்களுக்கு வழங்கியுள்ளார். இந்த படத்தில் நடித்ததால் தான் தற்போது பயத்தில் வாழ்வதாக குர்ஜி என்ற 21 வயது நடிகை குறிப்பிட்டுள்ளார். இந்த திரைப்படத்தில் குர்ஜி, முஹம்மத் என்ற கதாபாத்திரத்தின் பருவமடையாத மணப் பெண்ணாக நடித்துள்ளார். இவர் ஊடகங்களுக்கு நேற்று முன்தினம் பேட்டி அளித்துள்ளார். (மேலும்....)

புரட்டாசி 17, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் திடீர் சந்திப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இன்று (16.9.2012) காலை கொழும்பு பாக் வீதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பில் அதன் தலைவர் றஊப் ஹக்கீம் மற்றும் தவிசாளர் பசீர் சேகுதாவூத் செயலாளர் எம்.ரி.ஹசன் அலி உள்ளிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அதே போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டதாக தெரியவருகின்றது. இந்த சந்திப்பின் போது கிழக்கு மாகாண சபையின் ஆட்சியமைப்பது தொடர்பாக விரிவாக ஆராய்ந்ததாக தெரிய வருகின்றது.

புரட்டாசி 17, 2012

அரசுடன் இணையுமாறு சம்பந்தனுக்கு உயர்மட்டத்திலிருந்து அழைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கில் தெரிவான பதினொரு உறுப்பினர்களில் ஐவரை விலைக்கு வாங்கும் முயற்சியில் அரசாங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரை நேரடியாக ஈடுபடுத்தியிருப்பதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று
குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். இதேவேளை, அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு தனக்கும் உயர்மட்டத்திலிந்து இரகசிய அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவித்த சம்பந்தன் அழைப்பு விடுத்தவரின் பெயரைக் கூறத் தயாரில்லை ௭ன்றும் கூறினார். ஜானகி ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தகவல்களை வெளியிட்டார். (மேலும்....)

புரட்டாசி 17, 2012

சம்பந்தனின் ‘தேசிய அரசு’ கருத்தில் எந்த முரண்பாடுமில்லை - மனோ கணேசன்

கிழக்கு மாகாண தேர்தலையடுத்து ஏற்பட்டுள்ள முறுகல் நிலை தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் எம்பி தெரிவித்த ‘தேசிய அரசு’ என்ற கருத்தை அரசியல்ரீதீயாக புரிந்துகொள்ளவேண்டும் என நான் நினைக்கின்றேன். சம்பந்தன் சிங்கள மொழியில் தெரிவித்த கருத்தை நான் தொலைகாட்சியில் பார்த்து, கேட்டேன். அதில் எந்த முரண்பாட்டையும் நான் காணவில்லை. உண்மையில் இந்த அரசாங்கத்துடன் இணைந்து ஒரு கூட்டாட்சியை, மாகாணத்திலோ அல்லது மத்தியிலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கும் என்று, கூட்டமைப்பின் அரசியல் எதிரிகளும்கூட நம்ப மாட்டார்கள். (மேலும்....)

புரட்டாசி 17, 2012

அவுஸ்திரேலியா புறப்பட்டோர் 20 நாட்களாக ஆழ்கடலில் தத்தளிப்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்று கொண்டிருந்த 52 பேர் ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்டெடுக்கப் பட்டுள்ளனர். இலங்கையிலிருந்து சுமார் 235 கடல் மைல் தொலைவில் மீட்டெடுக்கப்பட்ட 52 பேரும் கடற்படை கப்பல் மூலம் காலி துறைமுகத்திற்கு நேற்று அழைத்துவரப்பட்டனர். 52 பேரும் சட்டவிரோதமாக பயணம் செய்த படகு ஆழ்கடலில் பழுதடைந்ததால் இந்த பாரிய அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்குடன் கடந்த மாதம் 26ம் திகதி சிலாபத்திலிருந்து 52 பேர் புறப்பட்டுச் சென்றுள்ளனர். இவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 20 நாட்களாக ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இது தொடர்பில் கடற்படையினருக்கு கடந்த 13ம் திகதி தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இதனை அடுத்து இலங்கைக் கடற்படைக்குச் சொந்தமான சமுதுர கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்படி கப்பல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 52 பேரையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துக் கொண்டு நேற்றுக் காலை காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. மீட்டெடுக்கப்பட்ட 52 பேர்களில் 38 தமிழர்கள், 9 சிங்களவர்கள் மற்றும் 5 முஸ்லிம்களும் அடங்குவர்.

புரட்டாசி 17, 2012

கச்சதீவை மீளப்பெறும் தமிழக முதல்வரின் முயற்சியை ஏற்க முடியாது

இலங்கை இந்திய அரசாங்கங்களின் பரஸ்பர இணக்கப்பாட்டுடன் இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கும் கச்சதீவை மீளப்பெறவேண்டிய தேவை தமிழக அரசாங்கத்துக்கு இல்லையென சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். இரு நாட்டு அரசாங்கங்களும் பரஸ்பரமான இணக்கப் பாட்டுடனேயே கச்சதீவு இலங்கைக்கு சொந்தமான தீவாக்கப்பட்டது. தற்பொழுது இதனை மீளப்பெறுவதற்கான முயற்சிகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈடுபட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாதது என அமைச்சர் குறிப்பிட்டார். கச்சதீவை இந்திய மீனவர்கள் பயன்படுத்துவதற்காக அத்தீவை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடப்போவதாகக் கூறியிருப்பதை நியாயப்படுத்த முடியாது. அவ்வாறு ஏதாவது நடவடிக்கை மேற்கொள்வதாயிருந்தாலும் இரு நாட்டு அரசாங்கங்களும் பேச்சுவார்த்தை நடத்தியே தீர்வுகாண வேண்டும் என்றும் அமைச்சர் திஸ்ஸவிதாரண மேலும் தெரிவித்தார். கச்சதீவை மீளப்பெறுவதற்கு தமிழக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கையானது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

புரட்டாசி 17, 2012

சீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியுடன் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் சீன தேசிய மக்கள் காங்கிரஸ் நிலையியல் குழுவின் தலைவர் வூ பங்குவோ, இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்திக்கவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது. ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருக்கும் இச்சந்திப்பின்போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப் படவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகத் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரத்திஸா நாயக்க தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சீனத் தலைவர், சபாநாயகர் சமல் ராஜபக்ஷவைச் சந்தித்து இருதரப்புப் பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதுடன், சீனத் தலைவருக்கு சபாநாயகர் இராப் போசனவிருந்தினை வழங்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.கடந்த சனிக்கிழமை கட்டுநாயக்க விமானநிலையத்தின் மூலம் இலங்கை வந்தடைந்த சீனத் தலைவர் நேற்று சீனாவின் உதவியுடன் காலியில் அமைக்கப்பட்டிருக்கும் துறைமுகப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம், சுதந்திர சதுக்கம் ஆகிய இடங்களையும் இவர் பார்வையிட்டார்.

புரட்டாசி 17, 2012

10 ரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்

அதிக வருமானம் ஈட்டும் பத்து ரயில் நிலையங்களை நவீன மயப்படுத்தி பிரயாணிகளுக்கு சகல வசதிகளையும் வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்படும். ரயில்வே திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க இதனைத் தெரிவித்தார். கொழும்பு கோட்டை, மருதானை, ராகமை, கம்பஹா, வெயாங்கொடை, அநுராதபுரம், வவுனியா, மட்டக்களப்பு, கண்டி, காலி ஆகிய ரயில் நிலையங்களே நவீன மயப்படுத்தப்படும். இதன் மூலம் சர்வதேச தரத்துக்கு ரயில் சேவைகளை வழங்கவும் ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

புரட்டாசி 17, 2012

சூடான், துனீஷியாவிலிருந்து தமது பிரஜைகளை வெளியேறும்படி அமெரிக்கா உத்தரவு

இராஜதந்திர அதிகாரிகள் தவிர்த்து சூடான், துனீஷியாவில் இருக்கும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அங்கிருந்து வெளியேறும்படி அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இவ்வாறு கோரப்பட் டுள்ளது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சூடான், துனீஷியாவில் அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு விடப்பட்டுள்ளது. முன்னதாக தமது தூதகரத்தை பாதுகாக்க சூடானுக்கு அனுப்பப்பட்ட யுத்த கப்பல்களுக்கு சூடான் அரசு அனுமதி மறுத்தது. கடந்த வெள்ளிக்கிழமை சூடான் தலைநகர் கார்டூமில் இருக்கும் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்ட சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர். இதன் போது ஜெர்மனி, பிரிட்டன் தூதரகங்களும் தாக்கப்பட்டன. (மேலும்....)

புரட்டாசி 16, 2012

கிழக்கு கற்றுத் தந்த பாடம்

(சாகரன்)

நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணத் தேர்தலில் கூடுதலான ஆசனங்களைப் பெற்ற அரசும் வெற்றி பெறவில்லை, இரண்டாம் இடத்தில் ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பும் வெற்றி பெறவில்லை, மாறாக மூன்றாம் இடத்தில் ஆசனங்களைப் பெற்ற முஸ்லீம் காங்கிரசே வெற்றி பெற்றுள்ளது என்றால் மிகையானது அல்ல. (எண்ணிக்கையில் குறைவான வெற்றியைப் பெற்ற ஐதே கட்சி தோல்வி அடைந்துள்ளது.) கிழ்க்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கு மகாணத்திலும், மத்திய அரசிலும் பதவிகளைக் கொடுத்து அழைக்கும் அரசு ஒருபுறம் மறுபரறத்திலும், துரோகத்தை சுட்டிக் காட்டி வெருட்டி அழைப்புவிடுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மறு முனையிலும் 'கிங் மேக்கர்' ஆக முஸ்லீம் காங்கிரஸ் இருக்கின்றது. (மேலும்....)

புரட்டாசி 16, 2012

மீண்டும் நழுவிப்போகும் வரலாற்றுச் சந்தர்ப்பம்? - தோழர் சுகு- ஸ்ரீதரன் பத்மநாபா ஈபிஆர்எல்எஃப்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,முஸ்லீம் காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைக்க முடியுமனால் அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமையலாம். இலங்கையை பல்லின நாடாக மாற்றும் ஜனநாயக கோரிக்கைக்கு வலுச் சேர்ப்பதாக அமையலாம். இன்று இலங்கையை ஜனநாயக மயப்படுத்துதல் இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையான தேசிய சமூகங்களான தமிழர்கள், முஸ்லீம்கள், மலையகமக்கள், பறங்கி, மலாய் இன மக்கள் பெரும்பான்மைச் சமூகத்தின் ஜனநாயக உணர்வு கொண்ட பெருவாரியான மக்கள் இணந்து செயற்படவேண்டிய தேவை இருக்கிறது. அந்த வகையில் தமிழ் முஸ்லீம் கட்சிகள் கிழக்கில் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு வாராது வந்துற்ற சந்தர்ப்பம் இதுவாகும். (மேலும்....)

புரட்டாசி 16, 2012

கிழக்கில் ‘தேசிய அரசு’ அமைப்பு

ஜனாதிபதி நேரடியாக பேசினால் பரிசீலனை

பதவிகளுக்கு அடிபணியோம் என்றார் சம்பந்தன்

தேர்தலுக்கு முன்பு தனித்த தமிழ் முதல் அமைச்சருடன் ஆட்சி அமைப்பதாக கனவும், வீராப்பும் கொண்டிருந்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தேர்தல் முடிவுகள் அதற்கு வாய்ப்பு அளிக்கவில்லை. பின்பு ஐ.தே. கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதாக கனவு கண்டது. இதற்கும் கணக்கு பிழைத்தது. பின்பு முஸ்லீம் காங்கிரஸ் தம்முடன் இணைந்து ஆட்சி அமைக்க கோரியது. சாத்தியப்படவில்லை. பின்பு முஸ்லீம் காங்கிஸ் உடன் இணைந்து அவர்கள் ஆட்சி அமைக்க தாம் தயார் என்றது. நல்ல பலன் கிடைக்கிவில்லை. இன்னும் கீழேபோய் எல்லாம் உங்களுக்கதான் நீங்களே முதல் அமைச்சரை எடுத்துக் கொள்ளுங்கள் என்றது. யாரும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் துரோகம் என்று முஸ்லீம் காங்கிரஸ் ஐ வெருட்டிப் பார்த்தது.  இதுவும் எடுபடவில்லை. இன்று தேசிய அரசு அழைக்க அரசு கூப்பிடும் போது மகிந்த அழைக்க வேண்டும் என்று செங்கம்பள வரவேற்பை எதிர்பார்க்கின்றது. யாரும் அப்படி அழைக்கப் போவது இல்லை. இன்னும் சில தினங்களில் நாங்கள் எதற்கும் தயார் என்று த.தே.கூட்டமைப்பு கூறினாலும் ஆச்சரியப்படப் போவதில்லை. ஆனால் யாரும் இதனைக் கண்டு கொள்ளப் போவதில்லை என்பததான் அந்தோ பரிதாபம்.

புரட்டாசி 16, 2012

கிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவின் உத்தியோகபூர்வ அறிவிப்பால் தாமதம்

முதலமைச்சர் யார்?

  • மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

  • முன்னாள் முதல்வரை மீண்டும் முதல்வராக்க பலமான முயற்சி

  • நஜீப் ஏ மஜீதை முதல்வராக்க சு. க. முக்கியஸ்தர்கள் அதீத ஆர்வம்

  • அமீர் அலியை முதலமைச்சராக்குவதில் ரிஷாத், அதாவுல்லா குறி

  • முஸ்லிம் முதலமைச்சர் விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் விடாப்பிடி

கிழக்கு மாகாணசபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே ஆட்சியை அமைக்குமென்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கிழக்கின் முதலமைச்சராக போகின்றவர் யாரென்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவுமுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 16, 2012

வடக்கில் இடம்பெறும் கலாசார சீரழிவிற்கு சில இளம் மதத்தலைவர்களும் காரணமென மக்கள் குற்றச்சாட்டு

வடக்கில் இடம்பெற்றுவரும் பாலியல் வன்புணர்வு மற்றும் கலாசார சீரழிப்புச் சம்பவங்கள் பலவற்றுக்கும் சில இளம் மதப் போதகர்களும், குருமார்களும் ஒருவகையில் காரணமாக இருந்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்நகர்ப்பகுதியில் ஆசிர்வாதம் பெறச் சென்ற யுவதிகள் இருவர் மதப் போதகர் ஒருவரினால் கிளிநொச்சி வட்டக்கச்சிக்கு கடத்திச் செல்லப்பட்டு அங்கு வைத்து அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஊர் மக்கள் அச்சம்பவத்திற்குப் பொறுப்பான இரு மதப் போதகர்கள் மீது தாக்குதல் நடத்தியும் உள்ளனர். இவ்வாறு வெளியே தெரியாத சம்பவங்கள் பல யாழ்ப்பாணத்தில் மத வணக்கஸ்தலங்களை மையமாக வைத்து அரங்கேறி வருவதாகவும் பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களுக்குப் பாதுகாப் பாகவும், ஆறுதலாகவும் இருக்க வேண் டிய மதப் பெரியார்கள் இவ்வாறு நட ந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக அண்மை யில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் சுமந்திரன் கூட வெளிப்படையாகவே குற்றம் சாட்டியிருந்தார்.

புரட்டாசி 16, 2012

அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிப்பு

புலம்பெயர் தமிழரில் சிலரை திருப்பி அனுப்புகிறது பிரிட்டன்

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வசித்து வருகின்ற இலங்கைத் தமிழர்களில் பெருந்தொகையானோர் எதிர்வரும் புதன்கிழமை திருப்பியனுப்பப்படவுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு அல்லது மூன்று சிறப்பு விமானங்களில் இந்தப் புலம்பெயர் தமிழர்களை எதிர்வரும் புதன்கிழமை இங்கிலாந்திலிருந்து திருப்பியனுப்பவுள்ளதாக அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. தங்களை இலங்கைக்கு திருப்பியனுப் பினால் அங்கு சித்திரவதைக்கு உள்ளாகு வோம் என அகதி அந்தஸ்து கோரிய தமிழர்களில் பலர் கோரியபோதிலும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் திருப்பியனுப்பப்படவுள்ளனர். சுமார் 500 இற்கும் மேற்பட்டவர்கள் எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இங்கிலாந்துக்கான இலங்கை தூதரக அதிகாரிகள் இவ்விடயம் தொடர் பில் கருத்துக்கூற மறுத்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 16, 2012

யாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த UNP யுடன் கூட்டா?

தமிழர்களைப் பொறுத்தவரையில் ஐ.தே.கட்சியும், ஆளும் ஐ.ம.சு.முன்னணியும் ஒன்றுதான் என்றால் யாழ். நூலகத்தை எரித்து 1983 ஜுலைக் கலவரத்திற்குக் காரணமான ஐ.தே.கட்சியுடன் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கூட்டுச்சேர்ந்து ஆட்சியமைக்க முடியுமாயின் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவகை செய்து அபிவிருத்தி என்றால் என்ன என்று தமிழருக்கு யதார்த்தமாகக் கூறிய ஐ.ம.சு.முன்னணியுடன் ஏன் கூட்டுச் சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைக்க முடியாது? இவ்வாறு தமிழரசுக் கட்சியின் முன் னாள் நாவிதன் வெளி பிரதேச சபைத் தவிசாளரும், ஐ.ம.சு.முன்னணியின் முன் னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பின ருமான சோமசுந்தரம் புஸ்பராசா கேள்வி யெழுப்பியுள்ளார். நான் இனவாதம் பேசவில்லை. கிழக்கில் பெரும்பான்மையினமாக உள்ள தமிழ் மக்கள் கிழக்கை ஆள்வதில் என்ன தவறு இருக்கிறது? அதற்காகத்தான் தமிழ் மக்கள் முன்னரைவிட கூடுதலானளவு வாக்களித்துள்ளனர். மு.காவுடன் சேர்ந்து தமிழ் ஆட்சியைத் தாரை வார்ப்பதற்காக அல்ல. இனப்பிரச்சினைத் தீர்வுக்கு தெரிவுக்குழு வில் பேச வருமாறு அழைத்தால் செல்வதில்லை. சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்று பசப்புவார்த்தைகளைக் கூறிக்கூறி எதிர்க்கட்சி அரசியல் செய்து தமது இருப்புக்களைப் பாதுகாத்துக் கொள்வதே அவர்களின் நோக்கமாகும். பிரபாகரனையே காப்பாற்றாத சர்வதேசமா சாதாரண தமிழ் மக்களுக்கு தீர்வு தருவது? நடக்கக்கூடிய ஒன்றா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

புரட்டாசி 16, 2012

ஒற்றுமையை வெளியுலகுக்கு உணர்த்திய சப்ரகமுவ மாகாண தமிழ் மக்கள்

சப்ரகமுவ மாகாண தமிழ் வாக்காளர்கள் தமது வாக்குகளை பிரதான கட்சிகளுக்கே தொடர்ந்து வழங்கிவந்தனர். இதனால் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரு மாவட்டங்களிலிருந்தும் பல வருடங்களாக மாகாணசபைக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ தமிழ் உறுப்பினர்கள் தெரிவாகவில்லை. அதற்கு முன்னர் சப்ரகமுவ மாகாணசபைக்கு போனஸ் ஆசனத்தின் மூலம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஏ.எம்.டி.இராஜன் அதன் பின் தேர்தல்களின் மூலம் திரு கணபதி இராமச்சந்திரன், பின்னர் அமரர் ஏ.எம்.டி.இராஜன் ஆகியோர் பிரதிநிதித்துவம் செய்து வந்தனர். இவர்களுடைய காலத்தில் இரத்தினபுரி மாவட்ட மக்களுக்காக பாரிய அளவு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. (மேலும்....)

புரட்டாசி 15, 2012

யாழில் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கான தகவல் இது

யாழ்.மாவட்டத்தில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விசாரணையை கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளார்கள். முதல் கட்டமாக 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான அழைப்பாணைகள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளன. காணாமல்போனவர்களின் பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களையும் தம்மிடம் உள்ள காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் சம்பந்தமான விபரங்களையும் கொண்டு வரும்படி பணிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி 15, 2012

முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமையை மு.கா காப்பாற்ற வேண்டும் - சம்பந்தன்

முஸ்லிம் காங்கிரஸின் வாக்குறுதியை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை முஸ்லிம் காங்கிரஸ் காப்பாற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார். 'முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தனது தேர்தல் பிரசாரங்களில் பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுவது வெக்கக்கேடானது என்றும் கூறியிருந்தார். மொத்தத்தில் அரசுக்கு எதிராக பிரசாரத்தினை மேற்கொண்டுதான் 7 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டது முஸ்லிம் காங்கிரஸ். முஸ்லிம் காங்கிரஸின் அரசுக்கெதிரான பிரசாரங்களை நம்பி ஜனநாயக ரீதியில் வாக்களித்த முஸ்லிம் மக்களை முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் கைவிடக்கூடாது. (மேலும்....)

புரட்டாசி 15, 2012

முஸ்லிம் காங்கிரஸ் அநாகரிகமாக நடந்துகொண்டது - சுரேஷ்

நேற்றிரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சந்திப்பதாக கூறி, இறுதி நேரத்தில் அநாகரிகமான முறையில் சந்திப்பை தவிர்த்துக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டினார். 'நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் முக்கிய சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் இரு கட்சியினருக்கும் ஏற்கனவே அறிவித்து அனுமதியும் பெற்றிருந்தோம். இந்நிலையில் நேற்றிரவு எமது கட்சி தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களுக்காக நீண்டநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தரவில்லை. எமது கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் - ரவூப் ஹக்கீமுக்கு பலமுறை தொடர்பை ஏற்படுத்தியபோதும் பதிலில்லை. ஒருகட்டத்தில் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி தொடர்புக்கு பதிலளித்தார். எமது விடயம் தொடர்பாக அவருக்கு கூறியதும், தொலைபேசியை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செயலாளர் ஹஸன் அலியிடம் கொடுத்தார்.(மேலும்....)

புரட்டாசி 15, 2012

ரத்மலானை விமானநிலையம் 'கொழும்பு சிட்டி" என பெயர் மாற்றம்

ரத்மலானையில் அமைந்துள்ள விமானநிலையத்தின் பெயர் 'கொழும்பு சிட்டி" விமானநிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. குறித்த விமானநிலையமானது இன்று முதல் கொழும்பு சிட்டி விமான நிலையம் என அழைக்கப்படும் என விமானநிலைய முகாமையாளர் சரத் டி சில்வா தெரிவித்தார்.

புரட்டாசி 15, 2012

முஸ்லிம் காங்கிரஸின் காலதாமதத்தால் கூட்டமைப்புடனான பேச்சு கைவிடப்பட்டது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையில் நேற்று இடம்பெறவிருந்த முக்கியத்துவம் வாய்­ந்த பேச்சுவார்த்தை ஒன்றரை மணி நேர காலதாமதம் மற்றும் காத்திருப்புக்கு மத்தியில் கைவிடப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அலரி மாளிகையில் இடம்பெற்ற பிறிதொரு பேச்சுவார்த்தையில் கலந்­து கொண்டிருந்ததாகவும் அதனால் ஏற்பட்ட தாமதத்தின் பேரிலுமே இந்தப் பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதிலும் குறித்த பேச்சுவார்த்தை மீண்டும் இன்று இடம்பெறலாம் ௭ன்ற யூகம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறிவிக்கப்பட்டதாகவும் அறிய வந்துள்ளது. கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பது தொடர்பிலும் முதலமைச்சர் பதவி உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் குறித்தும் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் கூட்டமைப்பும் மு.கா. வும் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

புரட்டாசி 15, 2012

போனஸ் ஆசனங்களுக்குரிய பெயர்கள் தேர்தல் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பு

கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ மாகாணச பைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்ற வாக்குகளின் படி ஆறு போனஸ் ஆசனங்களுக்கான பெயர் பட்டியல் தேர்தல் திணைக்களத்துக்கு நேற்று அனுப்பப்பட்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தெரிவித்தது. இதன்படி வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்காக ஐக்கிய மக் கள் சுதந்திர முன்னணியில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவ ட்டத்திலிருந்து போனஸ் ஆசனம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதேபோன்று கிழக்கு மாகாணத் தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தியவர்களுக்கு போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் ஒருவரையும், அம்பாறை மாவட்டத்தில் ஐ.ம.சு.மு.வில் அடுத்த படியான விருப்பு வாக்குகளைப் பெற்றவருக்கும் போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளது. இதேவேளை, மூன்று மாகாண சபைகளுக்கும் உரிய முதலமைச்சர் யார் என்பது பற்றியும், அமைச்சரவை தொடர்பாகவும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புரட்டாசி 15, 2012

உன்னி கிருஷ்ணனின் மன்னிப்பு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எரிச்சலையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளது

அண்மையில் டக்ளஸ் தேவானந்தா தனக்கு மாலை அணிவித்ததற்காக பிரபல பாடகர் உன்னிகிருஷ்ணன் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அந்த மன்னிப்பு கேட்ட விடயம் பாடகர் உன்னி கிருஸ்ணன் தனது பிழைப்பிற்காகவே கேட்டுள்ளார் என டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். இன்று காலை யாழ்ப்பாணம் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளுக்கான விருந்தில் கலந்துகொண்ட சமயம் ஊடகவியலாளர்கள் மத்தியில் குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். (மேலும்....)

புரட்டாசி 15, 2012

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்  - ரொபட் பிளேக்

வடக்கில் இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுமெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்துவது துரிதப்படுத்தப்படவேண்டுமெனவும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளேக் கூறியுள்ளார். யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், முக்கியமான மனித உரிமை பிரச்சினைகள் தொடர்பான நேர்மையான தேடுதல்கள், விசாரணைகள், வழக்குகள் நடந்திருக்க முடியும். காணாமல் போனவர்கள் தொடர்பிலும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமென கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறினார். வடமாகாணத்தில் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் அவர் கூறினார். 2013 செப்டெம்பரில் இத்தேர்தல் நடைபெறுமென தனக்கு கூறப்பட்டதாகவும் ஆனால் அதற்குமுன் விரைவாக அத்தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாகவும், இத்தேர்தலை விரைவாக நடத்த தான் வலியுறுத்தியதாகவும் பிளேக் கூறினார். வடக்கில் இராணுவத்தின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டுனெ அவர் கூறினார்.

புரட்டாசி 15, 2012

நான்கு தமிழ் அரசியல்கட்சிகள் தொடர்பான மனுவை விசாரணைக்கு ஏற்பதா?

நான்கு தமிழ் அரசியல்கட்சிகளின் நோக்கங்களில் ஒன்று தனிநாடு ஒன்றை அமைப்பதாகும் என்று பிரகடனப்படுத்தும் தீர்ப்பை வழங்கக்கோரும் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதா என்பதற்கான வாதங்களை முன்வைப்பதற்கு உயர்நீதிமன்றம் டிசெம்பர் 5ஆம் திகதியை நேற்று நிர்ணயித்தது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை அமைப்பு (டெலோ) மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்) ஆகிய தமிழ்; அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முறையே மாவை சேனாதிராஜா, வீ.ஆனந்தசங்கரி, என்.இந்திரகுமார் மற்றும் கே.பிரேமச்சந்திரன் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர். பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் இந்திரக்குமார் தவிர்ந்த ஏனையோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்ளூ அவர்களின் சார்பில் வழக்குரைஞர்களும் ஆஜராகியிருந்தனர்.

புரட்டாசி 15, 2012

கூடங்குளம்

தொடரும் பரபரப்பு

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும் நிலையில், அப் பகுதி முழுவதும் பரபரப்பான நிகழ்வுகள் தொடர்கின்றன. அணு உலை எதிர்ப்பாளர்கள் குழுவின் தலைவரான உதயகுமார், திங்களன்று கூடங்குளத்தில் நடந்த காவல்துறை தாக்கு தல் உள்ளிட்ட நிகழ்வுகளின் போது அங்கிருந்து தப்பியோடினார். இந்நிலை யில் அவர் செவ்வாயன்று கூடங்குளத்தில் இக்குழுவினர் நடத்திவரும் உண்ணாவிர தப்போராட்டத்தில் திடீரென்று பங்கேற் றார். அப்போது, இரவு 9 மணியளவில் காவல்துறையிடம் சரணடைவதாக தெரி வித்தார். எனினும் திடீரென்று தனது முடி வை மாற்றிக்கொண்டஅவர் ஒரு படகு மூலமாக மீண்டும் தப்பினார். இதனிடையே கூடங்குளத்திற்கு, அன்னா ஹசாரே குழுவில் முக்கிய நபராக இருந்தவரும் ஊழல் எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் நாட்டின் கவனத்தை தனது பக்கம் திருப்ப முயல்பவருமான அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென கூடங்குளத்திற்கு செவ்வாயன்று இரவு வந்தார். அவர் உதய குமாரை சந்தித்துப்பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல்துறையிடம் சரணடைய வேண்டாம் என உதய குமாருக்கு அறிவுரை கூறியதாக தெரிவித்தார். இதனிடையே, தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் வேலைநிறுத் தப்போராட் டம் மூன்றாவது நாளாக தொடர்ந்தது. திருச்செந்தூர், வேம்பார், புன்னக்காயல், மணப்பாடு, தூத்துக்குடி உள் ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

புரட்டாசி 15, 2012

ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது - ஜெர்மனி

ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஜெர் மனியின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தாமஸ் டி மைஜீரி எச்சரித்துள்ளார். ஈரான் அரசு ஆபத்தை விளைவிக்கும் அணு ஆயுதங்களைத் தயாரித்து வருவதாக மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டு நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், ஈரான் அரசு சர்வதேச அணுசக்தி மையத்தில் உறுப்பினராக உள்ளதால், அமைதியான முறையில் நாட்டின் மேம்பாட்டிற்கு அணு சக்தித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த ஈரானிற்கு உரி மை இருக்கிறது என்று கூறி வருகின்றன. இக்கருத்தை அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் ஏற்க மறுத்து வருகிறது. மேலும், ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் பகிரங்கமாக அறி வித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனது ராணுவத்தை ஈரான் எல்லைப்பகுதியில் முடுக்கிவிட்டுள்ளது. இதற்கு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரி வித்துள்ளன. ஈரான் மீது இஸ்ரேல் தாக்கு தல் நடத்தினால், பல்வேறு விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா ஏற்கனவே எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஜெர்மனியும் இஸ் ரேலை எச்சரித்துள்ளது.

புரட்டாசி 15, 2012

புலிகள் சார்புக் குழுக்களின் இலங்கை பற்றிய குற்றச்சாட்டுக்கள் பொய்யானது

புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சில குழுக்கள் இலங்கை தொடர்பாக பரப்பி வந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பது பொதுநலவாய பாராளுமன்ற குழுவின் வடக்கு விஜயத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள உண்மை நிலவரத்தைக் கண்டு அவர்கள் பிரமித்துள்ளனர். இதனூடாக இலங்கை பற்றி திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதில் கிடைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தவறான பிரசாரங்களில் இலங்கை குறித்து வெளிநாடுகளில் தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இங்கு வந்த வெளிநாட்டு பிரதிநிதிகள் உண்மை நிலையை நேரில் கண்டறிந்தனர். தாம் எதிர்பார்த்ததை விட பாரிய மாற்றங்கள் வடக்கில் தேற்கொள்ளப்பட்டிருப்பது கண்டு பிரமிப்படைத்ததாக அவர்கள் என்னிடம் கூறினர். இங்கு முன்னெடுக்கப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் திருப்தி வெளியிட்டனர். இதன்மூலம் த. தே. கூட்டமைப்பின் பொய் பிரசாரங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி 15, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற

65 இலங்கையர் தமிழக மீனவர்களால் மீட்பு

சட்ட விரோதமாக ஆழ்கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டு நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 65 இலங்கையர்களை தமிழக மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்துள்ளனர். ஆழ்கடல் வள்ளத்தின் இயந்திரக் கோளாறு காரணமாக இவர்கள் தத்தளித்துக் கொண்டிருந்ததுடன் காற்றின் வேகத்தினால் வள்ளம் தமிழ்நாடு மகாபலிபுரம் அருகே நடுக்கடலுக்கு தள்ளப்பட்டது. இலங்கையில் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 61 பேரும் 4 சிங்களவர்களும் வள்ளத்தில் இருந்ததாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகபட்டினத்தைச் சேர்ந்த தம்பிராஜன் உள்ளிட்ட குழுவினர் மகாபலிபுரம் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை படகை கண்டதுடன் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். 65 இலங்கையர்களையும் தங்கள் படகுகளில் ஏற்றி நாகை துறைமுகத்திற்கு நேற்று (14) காலை அழைத்து வந்தனர். இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாகை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நீதி மோகன் மற்றும் பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் 65 பேரையும் பத்திரமாக அழைத்து சென்றனர். விசாரணை மேற்கொண்ட பின்னர் அவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகிறது. கடலில் தத்தளித்தவர்களை மனிதாபிமான முறையில் மீட்டு வந்த நாகை மீனவர்களை பொது மக்கள் பாராட்டினர்.

புரட்டாசி 14, 2012

கிழக்கில் பலிக்காத கணக்குகள்!

(மப்றூக்)

திறந்து சொன்னால், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது தனது லாபத்தினை முன்னிறுத்தியே கிழக்கு மாகாணசபையில் தம்முடன் இணைந்து ஆட்சியமைக்க வருமாறு மு.காங்கிரஸைக் கோரிக்கை விடுக்கின்றது. ஐ.ம.சு.முன்னணியுடன் இணைவதைத் தவிர்த்து த.தே.கூட்டமைப்புடன் மு.கா. இணைவதென்பது மு.கா.வுக்கு நஷ்டமாகும்! அரசியல் என்று வரும்போது, இந்த லாப - நஷ்டக் கணக்கினை மு.கா. நிச்சயம் பார்க்கும். 'சரி, நமக்கு லாபமில்லாது விட்டாலும் பரவாயில்லை, த.தே.கூட்டமைப்பின் நலனுக்காக ஆதரவு வழங்குவோம்' என்று மு.கா. யோசிப்பதற்குரிய கள நிலைவரமும் இங்கு இல்லை! காரணம், அப்படி விட்டுக் கொடுக்குமளவு தமிழ் - முஸ்லிம் அரசியல் உறவு இங்கு ஆரோக்கியமானதாக இல்லை என்பது கசப்பான உண்மையாகும்! முஸ்லிம்களின் தனி இன அடையாளத்தையும், அவர்களுக்கான தேசியத்தினையும் த.தே.கூட்டமைப்பினர் திறந்த மனதுடன் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும், முஸ்லிம் சமூகத்தை 'தமிழ் பேசும் மக்கள்' என்கிற பொதுமைக்குள் வைத்துத்தான் த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவம் இற்றைவரை பேசிவருவதையும் முஸ்லிம் சமூகம் கடுமையான வெஞ்சத்துடனேயே பார்க்கிறது. கடந்த தேர்தல் மேடையொன்றில் மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றும்போது 'முஸ்லிம்களின் தேசியத்தினை ஒளித்து மறைத்துப் பேசும் கபடத்தனத்தினை தமிழ் தேசியம் கைவிட வேண்டும்' என்று கூறியதை மேற்சொன்ன வெஞ்சத்துக்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். (மேலும்....)

புரட்டாசி 14, 2012

தமிழகம் வரும் யாத்திரிகர் மீது தாக்குதல் நடத்தக் கூடாது -  ஜெயலலிதா

அன்புச் சகோதரியின் வேண்டுகோளை செவிசாய்ப்பார்களா? வைகோ, சீமான், திருமா, நெடுமாறன்

சுற்றுலாவுக்காகவும், யாத்திரைக் காகவும் தமிழகம் வரும் சிங்கள வர்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நேற்று தெரிவித்துள்ளார். திருச்சியில் ஸ்ரீரங்கத்துக்கு நேற்று விஜயம் செய்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்திற்கு தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் பயிற்சி அளிப்பதை மத்திய அரசு கைவிடவேண்டும் என்றும் வலியுறுத்தினேன். இலங்கை தமிழர்களுக்கு இன்னமும் சரியான ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்பதாலேயே இவ்வாறு வலியுறுத்தினேன் என்றும் செல்வி ஜெயலலிதா கூறினார். எனினும் சுற்றுலா யாத்திரிகைகளுக்கு வரும் சிங்களவர்களுக்கு இடையூறு அளிக்கக் கூடாது என்றும் தெரிவித்தார். அத்துடன் தமிழகத்திலுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு கிடைக்க வேண்டும் என அன்றே உத்தரவிட்டுள்ளேன். அதன்படியே வழங்கப்பட்டு வருகிறது. என்றும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 14, 2012

‘தமிழ் நாட்டுக்கான பயண எச்சரிக்கை விரைவில் நீக்கம்’

இலங்கை யாத்திரிகர்கள் தமிழ் நாட்டுக்கு செல்வது தொடர்பாக தற்போது விதிக்கப்பட்டுள்ள பயண எச்சரிக்கை வெகு விரைவில் நீக்கப்பட்டுவிடும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக இந்திய பாதுகாப்பு பிரிவினருடன் தற்போது பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று ஊடகத்துறை அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையிலிருந்து தமிழ் நாட்டுக்குச் சென்ற யாத்திரிகர்கள் அங்கு தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தையடுத்து பாதுகாப்பு கருதி இலங்கை அரசு பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இந்த பயண எச்சரிக்கை எப்போது தளர்த்தப்படும் என செய்தியாளர் ஒருவர் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புரட்டாசி 14, 2012

அமெரிக்க தூதுவர் கொலை

லிபியாவுக்கு அமெரிக்க போர் கப்பல்கள் விரைவு, முஸ்லிம் நாடுகளெங்கும் ஆர்ப்பாட்டம்

லிபியாவில் அமெரிக்க தூதுவர் ஆயுததாரிகளின் தாக்குதலில் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து அமெரிக்கா லிபியாவுக்கு இரு போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நீதி நிலை நாட்டப்படும் என அறிவித்துள்ளார். அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோரே லிபியாவின் பெங்காசி நகரில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன் போது அங்கிருந்த அமெரிக்க தூதுவர் கிறிஸ்டோபர் ஸ்டிபன் மற்றும் மேலும் மூன்று அமெரிக்கர் கொல்லப்பட்டனர். எனினும் இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என கூறியுள்ள அமெரிக்கா அது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா தனது இரு போர் கப்பல்களை லிபியா கடற்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளது. (மேலும்....)

புரட்டாசி 14, 2012

இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தில் என்ன இருக்கிறது?

எகிப்து, லிபியா மற்றும் முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்டுள்ள அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு காரணமான முஹம்மத் நபியை இழிவுபடுத்தும் இஸ்லாமிய எதிர்ப்பு திரைப்படத்தை தயாரித்த நபர் மாயமாகியுள்ளதோடு அவர் குறித்த தகவல்களும் போலியானவை என சந்தேகம் எழுந்துள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் தயாரிப்பாளர் தம்மை தவறாக வழி நடத்தியதாக குறிப்பிட்டுள்ளனர். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘குற்றமற்ற முஸ்லிம்’ என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்கியவரின் பெயர் சாம் பசில் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அவரது உண்மையான பெயர் அதுவல்ல என தற்போது தெரியவந்துள்ளது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டில் 59 நடிகர்கள், திரைக்கு பின்னால் 45 தொழிநுட்பவியலாளர்கள் ஊழியர்களுடன் 2 மணி நேரம் ஓடக்கூடியதாக தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 14, 2012

ஏ.எம்.கோபு அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சிறந்த தொழில்சங்கவாதியுமான தோழர் ஏ.எம்.கோபு அவர்கள் 01.07.1930 பிறந்தார். 12.9.12 அன்று முதுமை காரணமாக காலாமானார். தோழர்கோபு அவர்கள் தோழர்கல்யானசுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்தி சென்ற போது தோழர்பத்மநாபாவுக்கு நன்கு அறிமுகமானார். இலங்கை பிரச்சினை தொடர்பாக தோழர்பத்மநாபாவுடன் சேர்ந்து அம் மக்களுக்கான அரசியல் தீhர்வு தொடர்பான பல நல்ல கருத்துக்களை முன்வைத்தவர்.இலங்கை இனப்பிரச்சினை தொடர்பான தெளிவான பார்வை அவரிடம் காணப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழில் சங்க பிரிவான ஏ.ஐ.ரி.யு.சி யின் தமிழ் மாநில பொறுப்பாளராக அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. முதலாளித்துவத்துக்கும், பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கும் எதிராக போராடினார். தொழிலாளிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து அதனை தீர்த்து வைத்தார். சிறந்த தொழில்சங்க வாதி என்ற பெயரைப் பெற்று தொழிலாளிகளுக்காக உழைத்தார். தனது உடல் உறுப்புகளை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனைக்கு தானம் செய்ததுடன் அவரது உடலும் தானம் செய்யப்பட்டது. அந்த வகையில் அவர் மீண்டும் தனது பொதுநலத்தை காண்பித்துள்ளார். தோழர்கோபு அவர்களின் ஆத்மா சாந்தியடையவும்,அவர் குடும்பந்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

(பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப், சென்னை)

புரட்டாசி 14, 2012

கராச்சி தீ விபத்தில் 258 பேர் பலி  தொழிற்சாலை உரிமையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு

கராச்சியில் செவ்வா யன்று மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 258 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இத னைத்தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையின் உரிமை யாளர்கள் அப்துல் அஜீஸ், முகம்மது அர்ஷாத் மற்றும் ஷாகித் பாலியா மீது கொலை வழக்குபதிவு செய்யப்பட் டுள்ளது. மேலும், அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லா வண்ணம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கராச்சியின் பால்டியா நகரில் உள்ளது அலி எண் டர்பிரைசஸ் ஜவுளித் தொழிற்சாலை. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், செவ்வா யன்று மாலை இத்தொழிற் சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இத னால் மக்கள் அலறியடித் துக் கொண்டு வெளியே வந்தனர். ஆனால், உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்ததால் அவர் களால் விரைவில் வெளியில் வர முடியவில்லை. இத்தீவிபத்தில் சிக்கி இதுவரை 258 பேர் உயிரிழந் தனர். அவர்களில் பெரும்பா லானோரின் உடல்கள் கரிக் கட்டையாகக் கிடந்தன.

புரட்டாசி 14, 2012

வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் மேலும் சிக்கலாகும் -  ஐ.நா. எச்சரிக்கை

 உலக அளவில் பொருளாதார வளர்ச்சி விகிதம் மேலும் குறையும், குறிப்பாக வளர்ந்த நாடுகளின் பொரு ளாதாரம் மேலும் சிக்கலாகும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாட்டின் அறிக் கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 2012ம் ஆண்டு உலகப் பொருளா தார வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண் டை காட்டிலும் குறையும். அதாவது கடந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.7 சதவிகிதம் அதிகரித்திருந்தது. இந்த வளர்ச்சி விகிதம் 2.3 சதவிகிதம் குறையும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு வளர்ந்த நாடுகளின் சிக்கன நிதிக் கொள்கை, வருமானக் குறைப் புக் கொள்கை முதலியவையே காரண மாக இருக்கிறது. இதனடிப்படையில் 2012ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.9 விழுக்காடாக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப் பது, வேலைவாய்ப்புகளை உருவாக்கு வது, நிதிச் சந்தை மீதான நம்பிக்கை யை மீட்பது முதலிய இலக்குகளை சிக்கன நிதிக் கொள்கை நனவாக்க வில்லை.

புரட்டாசி 14, 2012

யாழ்பாணத்தில் ஈபிடிபி தேய்காய் உடைப்பு

வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேங்காய் உடைப்பு

பொதுநலவாய பாராளுமன்ற பிரதிநிதிகள் நேற்று வடபகுதிக்கு விஜயம் செய்தனர். இதன்போது யாழ்ப்பாணம் சென்றடைந்த பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வரவேற்கப்படுவதையும் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சென்ற பிரதிநிதிகள் சிதறுதேங்காய் உடைப்பதையும் படங்களில் காணலாம். குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரும் படத்தில் காணப்படுகிறார். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமையில் 1008 தேங்காய் உடைத்து சிறப்புப்பிரார்த்தனையொன்று வவுனியா குறுமண்காடு காளி கோயிலில் இடம் பெற்றது. அவர்களின் விடுதலை தொடர்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு மேற்கொண்டு வந்த முயற்சிகள் பலனற்றுப்போயுள்ளன. இந்த நிலையில் காணமால் போனவர்களையும்,அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு குறித்த சிறப்புப்பிரார்த்தனையில் ஈடுபட்டதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. (நன்றி: தினகரன், வீரகேசரி)

புரட்டாசி 13, 2012

கிழக்கில் ஆட்சியமைக்க மூன்று கட்சிகள் கடிதம் - மொஹான் விஜேவிக்ரம!

கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் மூன்று கட்சிகள் ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரமவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் இது குறித்து தமக்கு அறிவித்துள்ளதாக ஆளுநர் நியூஸ்பெஸ்டுக்கு தெரிவித்துள்ளார். எனினும் மாகாண சபைத் தேர்தல் மூலம் தெரிவான பிரதிநிதிகளின் பெயர்கள் இதுவரை வர்த்தமானியில் பிரசுரமாகவில்லை என்று ஆளுனர் மொஹான் விஜேவிக்ரம கூறினார். போனஸ் ஆசனங்களுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் இன்னும் பிரசுரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இத்தகைய பின்னணியின் கீழ் அரசியல் ரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 13, 2012

மு.கா - தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும - மருதமுனை அரசியல் திறனாய்வாளர்கள் அமைப்பு வேண்டுகோள்

1994ஆம் ஆண்டு பெரும் தலைவரினால் செய்யப்பட்ட உடன்பாடும் மாற்றமும் இணைவும் ஒரு வரலாற்று வழி காட்டியல்ல. அது ஒரு தற்செயல் நிகழ்வு. சரியா பிழையா என்ற விமர்சனங்கள் இங்கு தேவையில்லை. அதுதான் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என்றால் மேடையும் பிரசாமும் தேவையில்லை. கிழக்கின் அபிவிருத்தியின் படத்தை சர்வதேச உலகுக்குக் காட்ட அரசு துடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான முகவர்கள் தேவையில்லை. புதிய அமைச்சர்களும், அபிவிருத்தியென்ற மாயையும் தேவை தேவையென்று முஸ்லிம மக்கள் வாக்களிக்கவில்லை. தனித்துவத்தைப் பாதுகாத்து, முஸ்லிம்களின் இருப்பை உறுதிப்படுத்த குரல் கொடுக்கும் என்ற செய்திதான் இந்த 80 ஆயிரம் வாக்குகள். (மேலும்....)

புரட்டாசி 13, 2012

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசை ஆதரிக்க வேண்டும்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு அடிப்படையற்ற தமிழீழ தேசத்துக்கான பிரசாரங்களைக் கைவிட்டு தேசிய நல்லிணக்கத்துக்காக அரசாங்கத்தை ஆதரித்து செயற்பட முன்வர வேண்டும். இது சர்வதேசத்துக்கு நற் செய்தியாக அமையும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2008 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளின் நேரடி அரசியல் செயற்பாட்டாளர்களாகவே கூட்டமைப்பினர் செயற்பட்டனர். ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாது வன்முறைகள் ஊடாக தமது நோக்கங்களை அடைய புலிகள் முயற்சித்த போதிலும் அது தோல்வி கண்டுள்ளது. கூட்டமைப்பினரின் இத்தகைய முயற்சிகளை கிழக்கு தமிழர்களும் நிராகரித்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனை இனவாதம் பேசும் கட்சிகள் புரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக தமிழீழ தேசத்துக்கான 4 ஆம் கட்டப் போராக அறிவித்து கிழக்கு மகாண சபைத் தேர்தலில் களமிறங்கிய கூட்டமைப்பு தனது கொள்கைகளை தமிழ் சமூகத்தின் விடிவுக்காக மாற்றிக் கொள்ள வேண்டும்.

புரட்டாசி 13, 2012

'நல்லிணக்கம் குறித்த வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்றத் தவறினால் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை சவாலுக்குள்ளாகும்'

நல்லிணக்கம் தொடர்பாக, சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறினால் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை சவாலுக்குள்ளாகும் என பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது."தனது உள்நாட்டு பிரச்சினையை சமாதானமாகவும், கூட்டாகவும் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் மனவுறுதி மற்றும் ஆற்றலில் சர்வதேச சமூகம் நம்பிக்கையை இழந்தால் அது துரதிஷ்டவசமானதாகும்.  பொதுநலவாயமானது அரசுகளுக்கிடையிலான பாரிய சக்தியொன்றாக தன்னை வரையறுத்துக்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்துபவர்களுக்கு தானே ஆயுதம் வழங்கிய நிலைக்கு பொதுநலவாயம் தள்ளப்படும் நிலையை இது ஏற்படுத்தும்" என பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் தலைவர் சேர் அலன் ஹசெல்ஹர்ட் எம்.பி. கூறினார். (மேலும்....)

புரட்டாசி 13, 2012


லிபியாவில் ரொக்கெட் வீசி தாக்குதல், அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலி

லிபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தபட்டதில் ஒருவர் பலியானார். இதனை தொடர்ந்து லிபியாவுக்கான அமெரிக்க தூதர் பாதுகாப்பான் இடத்துக்கு செல்ல முயன்றபோது அவரது காரைக் குறி வைத்து ரொக்கெட் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க தூதர் உட்பட 4 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

புரட்டாசி 13, 2012

Arrest this thug!

This is not the first time that the son of Mervin Silva, Minister of Public Relations and Public Affairs, has thrown his weight around. It is not the first time that Malaka Silva has violated the law.  It is not the first time he’s played cops-n-robbers with real weapons.  It is not the first time he has earned the wrath of all law-abiding citizens in this country.  This is not the first time the son of a politician took the law into his hands.  Not the first time that common thugs operated as though political connections have them special powers to browbeat those who crossed their path.  It is no wonder that cartoonists regularly lampoon the generic political figure with pistol, club, knife or other weapon tucked into belt even as the brute is clothed in spotless white. Malaks is not out of order.  He is way out of order.  And if he moved from out-of-order to way-out-of-order it is not he but those who treated him with kids’ gloves the first time he erred that are to blame.  First and foremost his father.(more.....)

புரட்டாசி 13, 2012

தனியார்மயம்

அமெரிக்கா சொல்லும் பாடம்

(கே.வரதராசன்)

அனைத்திற்கும் அருமருந்து தனி யார்மயம்: இந்தியா வல்லரசு ஆக தனியார் மயம், தாராளமயம், உலகமயமே வாய்ப்பு வாசல் என இந்தியாவில் இருக்கும் முத லாளித்துவ கட்சிகளும், ஊடகங்களும் வாய் ஓயாது அலறி வருகின்றன. அதற்கு சாட்சியாக அமெரிக்காவை சுட்டிக்காட்டு கின்றனர். ஆனால் உலகமயம், தாராள மயம், தனியார் மயம் மூலம் நேரடியாக பாதிப்பிற்காளான இந்திய விவசாயிகள், சாதாரண மக்கள் ஆகியோருக்கு அமெ ரிக்கா என்றால் மான்சாண்டோ, வால் மார்ட் நிறுவனங்கள் கண்முன் தோன்றும், பயமுறுத்தும். தனியார் மயம் முழுவீச்சில் செயல்பட்ட பின்னணியில் இன்றைக்கு அமெரிக்க அனுபவம் வெளிச்சம் போட்டுக்காட்டியிருப்பது எது தெரியுமா? (மேலும்....)

புரட்டாசி 13, 2012

பொதுநலவாய பிரதிநிதிகள் குழு இன்று வட பகுதிக்கு விஜயம்

பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்ள வந்துள்ள 60 வெளிநாட்டு பிரதிநிதிகள் இன்று (13 ஆம் திகதி) வட பகுதிக்கு விஜயம் செய்கின்றனர். இவர்கள் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று யுத்தத்திற்கு பின்னரான உண்மையான நிலைமைகளை நேரில் கண்டறிய உள்ளதாக பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். பிரிட்டன் மற்றும் கனடா பாராளு மன்றத்தைச் சேர்ந்த சில எம்.பிக்கள் இறுதி யுத்தம் நடைபெற்ற இடங்களை மாத்திரம் காண்பதற்காக தனியாக அங்கு செல்ல உள்ளதாகவும் இதற்கு எதுவித தடையும் விதிக்கவில்லை எனவும் தெரிவித்த அவர், ஏற்கனவே தீர்மானம் எடுத்துவிட்டு வடக்கிற்கு செல்வதில் பிரயோசனமில்லை. திறந்த மனதுடனே அங்கு செல்ல வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்தத்தின் பின்னரான கடந்த 3 வருட காலத்தில் வடக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வீதி, வீட்டு வசதி, பாடசாலை அபிவிருத்தி உட்கட்டமைப்பு வசதி அடங்கலான சகலவற்றையும் நேரில் காண அவகாசம் வழங்கப்படும். ஆனால் ஓரிரு பிரதிநிதிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பாராது யுத்தம் நடந்த பகுதிகளை மாத்திரம் பார்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்கள் அங்கு செல்ல தடை கிடையாது. நாம் எதனையும் மறைக்க முயலவில்லை யுத்தம் நடந்த பகுதி மட்டுமன்றி அபிவிருத்தி குறித்தும் பார்வையிடுமாறே அழைப்பு விடுத்துள்ளோம் என்றார்.

புரட்டாசி 13, 2012

மனிதர் வாழ தகுதியுள்ள பல கிரகங்கள் இருக்க வாய்ப்பு

மனிதர்கள் வாழ தகுதியுள்ள பல கிரகங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவை மிக வெப்பமாகவும், மிக குளிராகவும் உள்ளன. அவற்றின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதும் தெரியவந்து ள்ளது. அவை உறைந்த நிலையிலும், திரவ நிலையிலும் உள்ளன. கிரகங்களின் மேற்பரப்பில் உறைந்து கிடக்கும் தண்ணீர் அங்குள்ள நட்சத்திரங்களின் நேரடி வெப்பத்தின் மூலம் உறைந்து அங்கு நிலத்தடி நீராக வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், இது குறித்து இங்கிலாந்தில் உள்ள அபர்தீன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோன்பர்னீல் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அங்குள்ள, நிலத்தடி நீரில், பூமியில் இருப்பதை போன்று நுண்ணுயிர் உயிரினங்கள் வாழும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். உயிரினங்கள் தண்ணீர் மூலம் தோன்றி பரிணாம வளர்ச்சி பெற்று மனிதனாக மாறியதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்படி பார்த்தால் தண்ணீர் இருக்கும் பல புதிய கிரகங்களில் அயல் கிரகவாசிகள் இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

புரட்டாசி 13, 2012

எலும்புகளை பாதுகாக்காவிடின் நாற்பது வயதுக்குப் பின்னர் துன்பம்

ஓடியே பழகிவிட்ட நமக்கு உடம்பில் உள்ள எலும்புகள் எதற்காக உள்ளன, அதை ஏன் பாதுகாக்க வேண்டும் என்ற காரணங்களை சிலர் காது கொடுத்து கேட்பதற்கு கூட நேரம் இருக்காது. உடம்பில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. மனிதன் தன் தேவைகளுக்கு ஏற்ற வகையில் அதனை உபயோகப்படுத்தி கொள்ளும் வகையில் கடவுள் நமக்கு அதனை உருவாக்கியுள்ளார். இந்த அனைத்து எலும்புகளும் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு தனது பங்கை செவ்வனே செய்து வருகின்றன. நாம் இந்த மொத்த எலும்புகளையும் பாதுகாக்க எடுத்து கொள்ளும் உணவு முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மிக முக்கியமாகும். இந்த மொத்த எலும்புகளும் உடம்பில் உள்ள பகுதிகளுக்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக் கொண்டு மனிதனுக்கு உடல் கட்டமைப்பை கொடுக்கின்றன. (மேலும்....)

புரட்டாசி 12, 2012

முஸ்லிம் காங்கிரஸின் ஏகமனதான ஆதரவுடன் ஐ.ம.சு.மு. கிழக்கில் ஆட்சியமைக்கும் - அரசாங்கம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏகமனதான ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வார இறுதியில் தீர்மானித்து அறிவிப்பார். அடிப்படையற்ற  வதந்திகள் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மூன்று மாகாண சபைகளிலும் அரசாங்கம் அடைந்துள்ள வெற்றியானது  இலங்கைக்கு எதிரான தேசிய மற்றும் சர்வதேச எதிரிகளுக்கு வழங்கப்பட்ட  பதிலடியாகும். இனி ஆளும் கட்சியை அசைக்க எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மாத்திரமல்ல, அவரது கட்சியின் பிரதித் தலைவர சஜித் பிரேமதாஸாவுக்கும் முடியாது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 12, 2012

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனித்து விடப்பட்டுள்ளது

கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து இலங்கை அரசு ஆட்சி அமைக்கிறது

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில், தனித்துப் போட்டியிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்ளுடன் மேற்கொள்ளப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மாகாண சபைகளுக்குமான வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விபரங்கள் நாளை வர்த்தமானியில் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் முழுமையான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என அவர் தெரிவித்தார்.

புரட்டாசி 12, 2012

'மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க தவறினால் அதிகாரப்பகிர்வு, ஜனநாயகத்தில் தமிழர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்'

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 'முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார். (மேலும்....)

புரட்டாசி 12, 2012

அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட மேலும் 53 பேர் திருகோணமலையில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 53 பேர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலையிலிருந்து 16 மைல் தொலைவில் படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கைது செய்யப்பட்டோர் வவுனியா,யாழ்ப்பாணம்,திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிட்ட கடற்படைப் பேச்சாளர் அவர்களில்  8 சிறுவர்களும் 3 பெண்களும் அடங்குவதாகத் தெரிவித்தார்.

புரட்டாசி 12, 2012

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

அமெரிக்க பாராளுமன்றில் இலங்கை விவகாரம் தொடர்பிலான பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் பிரேரணை இந்த வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ளக ரீதியான புனர்வாழ்வு, புனரமைப்பு, நல்லிணக்கம் என்பவற்றின் மூலமே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கைத் தொடர்பான இந்தப் பிரேரணை சில நேரங்களில் நிறைவேற்றப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. புனர்வாழ்வு, புனரமைப்பு, இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றல், வடக்கு உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்தல் போன்ற விவகாரங்களில் இலங்கை அரசாங்கம் முன்னேற்றமடைந்துள்ளது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இலங்கையில் ஆணைக்குழுக்கள் நிறுவப்படுதலும் அதன் மூலம் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படாமையும் மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 12, 2012

சட்டவிரோத கடல் பயணம் வேண்டாம்

இலங்கை அகதிகளுக்கு தமிழக பொலிஸ் எச்சரிக்கை

இலங்கை அகதிகள் முகாமில் இருப்பவர்கள், சட்டவிரோதமாக கடல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென, தமிழக நுண்ணறிவுப் பிரிவு பொலிஸார் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில், இலங்கை அகதிகளுக்காக, 128 முகாம்கள் உள்ளன. அங்குள்ள இலங்கைத் தமிழர்களை, வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முறையான ஆவணங்கள் இன்றியும், சட்ட விரோதமாகவும், கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல, சிலர் முயற்சிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன.(மேலும்....)

புரட்டாசி 12, 2012

அரசின் அழைப்பை ஏற்று ஐ.நா. ம. உ . ஆ. குழு 14இல் வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளையின் பிரதிநிதிகள் அடங்கிய குழு இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் கூறினார். அதனைத் தவிர, தருஸ்மன் அறிக்கையை ஆராயும் பொருட்டு விசேட குழுவொன்று அனுப்பி வைக்கப்படுமென கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இக்குழு இலங்கை வரவில்லை என்பதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் பீரிஸ் வலியுறுத்திக் கூறினார்.  நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் குழு இலங்கை வருகிறது என்றதும், மனித உரிமைகள் ஆணைக் குழுவில் கடந்த மார்ச் மாதம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இக்குழு இலங்கை வருவதாக பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள். உண்மையில் அது அப்படியல்ல.14 ஆம் திகதி இலங்கை வரும் குழுவும் மற்றைய குழுவிற்குமிடையில் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புரட்டாசி 12, 2012

இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ். வந்த மூவர் கைது

இந்தியாவிலிருந்து கடல் வழியாக யாழ்ப்பாணத்திற்கு வந்த மூன்று பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். இந்தியாவில் தங்கியிருந்த போது விசா முடிவடைந்துள்ள நிலையில் இராமேஸ்வரத்திலிருந்து யாழ்ப் பாணத்திற்கு கடல் வழியாக பயணித்துக் கொண்டிருக்கும் போது கடற் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். படகொன்றை 70 ஆயிரம் ரூபா வாடகைக்கு அமர்த்தி இவர்கள் இலங்கை நோக்கி பயணித்துள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் இந்தியாவுக்கு விமானம் மூலம் சென்றவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் வசவிளான், கொடிகாமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட வர்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக எரிக் பெரேரா மேலும் தெரிவித்தார்.

புரட்டாசி 12, 2012

சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம், 98 பேர் ஆழ்கடலில் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா வுக்குச் செல்ல முற்பட்ட 98 பேர் கடந்த இரண்டு தினங்களில் கடற் படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். நீண்டநாள் பயணிக்கக் கூடிய ஆழ் கடல் ரோலர் படகுகள் மூலம் அவுஸ் திரேலியாவுக்குச் செல்லமுற்பட்ட இரண்டு தொகுதியினர் நேற்றும், நேற்றுமுன்தினமும் கடற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர்.  நீர்கொழும்பு கடற்பரப்பில் ஒரு படகும், திருகோணமலை கடற்பரப்பில் மற்றுமொரு படகும் கடற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் கைதுசெய்யப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். நேற்றுமுன்தினம் நீர்கொழும்பு கரையோரத்திலிருந்து 20 கடல்மைல் தூரத்தில் பயணித்துக்கொண்டிருந்த ‘ஷய்னி பபா’ படகிலிருந்து 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படகு கடற்படையினரின் ரோந்துப் படகுகளால் இடைமறிக்கப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளது. இந்தப் படகில் 35 தமிழர்களும், 9 சிங்களவர்களும் ஒரு முஸ்லிமும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், நேற்றையதினம் ‘சிங்களே 4’ எனும் படகில் பயணித்த 53 பேர் திருகோணமலை கடற்பரப்பில் நேற்றுத் தடுக்கப்பட்டனர். இப்படகில் பயணித்த 49 தமிழர்களும், 3 முஸ்லிம்களும் ஒரு சிங்களவரும் கைதுசெய்யப்பட்டு ள்ளனர்.

புரட்டாசி 12, 2012

கடந்த ஏழு ஆண்டுகளில் இந்திய அரசியல் கட்சிகளின் வருமானம் 4,662 கோடி ரூபா

கடந்த 7 ஆண்டில் இந்திய அரசியல் கட்சிகளின் வருமானம் மொத்தம் ரூ. 4,662 கோடி என்று தெரியவந்துள்ளது. இதில் காங்கிரஸின் வருமானம் ரூ. 2,008 கோடி, பா. ஜ.வின் வருமானம் 994 கோடி ஆகும். ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் மற்றும் தேசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பு ஆகியவை அரசியல் கட்சிகளின் வருமான விவரத்தை நேற்று வெளியிட்டன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் 23 பெரிய கட்சிகளின் வருமான விவரம் இடம்பெற்றுள்ளது. வருமானத் துறையிடம் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த கணக்கு மற்றும் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியல் அடிப்படையில் இந்த விவரம் தொகுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2004 முதல் 2001 வரை 7 ஆண்டுகளில் 23 அரசியல் கட்சிகளின் வருமானம் ரூ. 4,662 கோடி ஆகும். இதில் காங்கிரஸ் கட்சியின் வருமானம் ரூ. 2,008 கோடி பா. ஜ.வின் வருமானம் ரூ. 994 கோடி, கடந்த 2004 ல் காங்கிரஸின் வருமானம் ரூ. 222 கோடியாக இருந்தது. அது படிப்படியாக அதிகரித்து 2011இல் ரூ. 307 கோடி ஆனது. இதில், 14.4 சதவீதம் மட்டுமே நன்கொடை மூலம் கிடைத்தது.

புரட்டாசி 12, 2012

அபோதாபாத்தில் இருந்தவர் பின்லாடன் என தெரியாது - காட்டிக்கொடுத்த மருத்துவர் அப்ரிடி

“அமெரிக்கா எமது மோசமான எதிரி என்று அவர்கள் சொன்னார்கள். இந்தியாவை விடவும் மோசமான எதிரி என்றனர்”

ஒசாமா பின்லாடன் தாக்குதலில் தமக்கு தொடர்பிருப்பதாக தெரிந்திருக்கவில்லை என்று ஒசாமா பின்லாடனை கண்டுபிடிக்க அமெரிக்காவுக்கு உதவிய பாகிஸ்தான் மருத்துவர் ஷகில் அப்ரிடி குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் அப்ரிடி அமெரிக்காவின் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். பெஷாவர் மத்திய சிறையில் இருக்கும் அப்ரிடி எவ்வாறு பேட்டி வழங்கினார் என்பது குறித்து விளக்கப்படவில்லை. எனினும் ஒசாமா கொல்லப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்ட அப்ரிடி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். (மேலும்....)

புரட்டாசி 12, 2012

சீன துணை ஜனாதிபதி எங்கே? இணையத்தில் வதந்திகள்

சீன துணை ஜனாதிபதி எங்கே என்பது குறித்து பல தரப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன. அவரை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக காணவில்லை என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீன துணை ஜனாதிபதியான எக்சி ஜின்பின் அடுத்த மாதம் நடைபெறவுள்ள கொமியுனிச கட்சியின் மாநாட்டில் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவர் கடந்த திங்கட்கிழமை டென்மார்க் பிரதமருடனான சந்திப்பை ரத்துச் செய்தார். அதேபோல் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த கொமியுனிஸ கட்சியின் முக்கிய கூட்டமொன்றிலும் அவர் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் கடந்த வாரத்தில் நான்கு முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் எக்சிஜின்பின் குறித்து சீனாவில் பல வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளன. அவர் வாகன விபத்தில் காயமடைந்ததாகவும், மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இணையத் தளங்களில் வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

புரட்டாசி 11, 2012

முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி அந்த கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் ஆட்சேபம் இல்லை முன்னாள் முதலமைச்சர் - சிவநேசதுரை!

கிழக்கு மாகாணத்தில் பெரும்பான்மை பலத்தை கைப்பற்ற அரசாங்கம் தவறியுள்ளதால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி அந்த கட்சியின் ஆதரவை பெற்றுக்கொள்வதில் தனக்கு ஆட்சேபம் இல்லை முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை நடு தெருவில் விட்டுச் சென்றுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர்களின் 8 பேரும் தோல்வியடைந்துள்ளனர். பிள்ளையான் உள்ளிட்ட நால்வர் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளனர். பிரதியமைச்சர் கருணாவின் சகோதரி ஞானபிரகாஷம் ருத்ரமலரும் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

புரட்டாசி 11, 2012

யாருக்கு ஆதரவென்பதை தீர்மானிக்கும் மு.கா.வின் விசேட கூட்டம் இன்று

கிழக்கு மாகாணசபை எவ்வாறு அமையும் என்பதை தீர்மானிக்கும் சக்தியைப் பெற்றிருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பையா அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பையா ஆதரிக்கும் என்பதை தீர்மானிப்பதற்கான விசேட கூட்டத்துக்கு வருமாறு மாகாணசபை உறுப்பினர்களாக தெரிவான தனது ஏழு அங்கத்தவர்களையும் அழைத்துள்ளது. ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதால் தொங்குநிலை காணப்படும் நிலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கூட்டமைப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் ஆதரவைக் கோரியுள்ளன. ஆதரவு கோரும் இரு தரப்பினருடனும் எமது சமூகத்தின் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறினார்.(மேலும்....)

புரட்டாசி 11, 2012

பதவிக்கும், சலுகைக்கும் அப்பாற்பட்ட உரிமைமிக்க, அதிகாரமிக்க மாகாணசபையை கிழக்கில் உருவாக்க வேண்டும் - இரா.துரைரெட்ணம்

பதவிக்கும், சலுகைக்கும் அப்பாற்பட்ட வகையில் உரிமைமிக்க, அதிகாரமிக்க மாகாணசபையை உருவாக்குவதற்கான வரலாற்றுக் கடமையொன்றை தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தந்த சந்தர்ப்பமாக இதனைப் பார்க்க வேண்டும். இதுவொரு சரித்திர முக்கியத்துவம் நிறைந்தகாலம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட இரா.துரைரெட்ணம் தெரிவித்தார். (மேலும்....)

புரட்டாசி 11, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடந்த அதிசயங்கள

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாந்தீவில் இரண்டு வாக்காளர்களுக்கான ஒரு வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு இரண்டே இரண்டு வாக்காளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மட்டக்களப்பு வாவியின் நடுவே அமைந்துள்ள மாந்தீவில் இவ்விருவருக்காக தனி வாக்களிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்களிப்பு நிலையத்திற்கு அதிகாரிகள் வாக்குப்பெட்டியை படகு மூலம் ௭டுத்துச்சென்றனர். மாந்தீவில் மக்கள் குடியிருப்புகள் ௭துவும் இல்லை. ஆனால் தொழுநோயாளர்களுக்கான மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்....)

புரட்டாசி 11, 2012

புரட்டாசி 11, 2012

அமெரிக்காவின் தலையீட்டிற்கு   பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு

பாகிஸ்தானின் உள் நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து தலையிட்டு வருவதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வடமேற்கு பாகிஸ்தானின் உப்பிர்ட்ர் பகுதியில் சுமார் 10 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங் கேற்ற கண்டன பேரணி ஞாயிறன்று நடைபெற்றது. பாகிஸ்தானில் அமெ ரிக்க ஆதரவு கொள்கை களை பின்பற்றி வருவதால் நாட்டில் ஊழல் மலிந்திருக் கிறது. மேலும் பாகிஸ்தானி யர்களை அடிமைகளாக நடத்தும் போக்கையே அமெரிக்கா தொடர்ந்து பின் பற்றி வருகிறது. ஒரு நாட் டின் உள்விவகாரங்களில் அத்துமீறி தலையிடுவது என்பது அமெரிக்காவிற்கு வாடிக்கையான ஒன்று தான். அதற்கு ஏதுவாக பாகிஸ்தானில் ஆளும் கட் சியினர் வழிவகுத்து கொடுத்து வருகின்றனர். இதனை நாங் கள் கடுமையாக எதிர்க்கி றோம். மேலும் அமெரிக்கா வின் மோசடி வேலைகளுக்கு எதிராக மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்தவும், அமெரிக்காவிற்கெதிராக போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லவும் தீர்மானித்திருக்கிறோம் என்று பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்த ஜமாத் இ இஸ் லாமி அமைப்பு நிர்வாகிக ளில் ஒருவரான சபீர்அக மதுகான் தெரிவித்தார்.

புரட்டாசி 11, 2012

நேர்காணல்

“மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டுப் புலிகள் நந்திக்கடலில் விழுந்துவிட்டனர்” - எம். ஏ. நுஃமான்

அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்பட்டது, போராளிகளைக் காட்டிக்கொடுத்தது, ராணுவத்துடன் இணைந்து முஸ்லிம் ஊர்க்காவல் படை தமிழர்களைக் கொன்றது என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டன. அப்படியாயின் குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டித்திருக்க வேண்டும். வடக்கிலிருந்து முஸ்லிம்களை முற்றாக வெளியேற்றியதையும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலை செய்ததையும் எப்படி நியாயப்படுத்துவது? இலங்கை ராணுவம் தமிழர்களைக் கொன்றதை இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு எனக் கூறலாம் என்றால் புலிகளின் செயல்பாட்டையும் அவ்வாறு சொல்வதில் தவறு இல்லை. இன மேலாண்மையும் இன முரண்பாடும்தான் இப்படுகொலைகளுக்குக் காரணங்கள். முஸ்லிம்களைப் பொறுத்தவரை பொன்னம்பலம் இராமநாதனின் நிலைப்பாட்டைத்தான் புலிகளும் கொண்டிருந்தனர். அதாவது அவர்கள் மதத்தால் முஸ்லிம்களாய் இருந்தாலும் இனத்தால் தமிழர்கள்தான். ஆனால் இதை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்த் தேசிய மேலாண்மைக்கு எதிராக இக்காலப்பகுதியில் முஸ்லிம் தேசியம் தீவிரத்துடன் எழுச்சியடைந்தது. இதன் விளைவாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கென்று தனி அரசியல் இயக்கமாக உருவாகியது. தமக்கு எதிராக எந்தச் சக்தியும் வளர்வதை விரும்பாத புலிகள் முஸ்லிம்களின் இருப்பை வன்முறைமூலம் துடைத்தெறிய முயன்றதன் வெளிப்பாடாகவே இந்த வெளியேற்றத்தையும் படுகொலைகளையும் கருத வேண்டும். (மேலும்....)

 
புரட்டாசி 11, 2012

Former LTTE weapons expert among agents

Thirteen agents - 12 of them Sri Lankan Tamilian refugees - who lured 84 gullible of their ilk for a boat ride to Australia for a better life, are now cooling their heels behind bars. The agents include Thavarassa, 46, of Okkaveelbeed, Tulkai in Sri Lanka. A former LTTE soldier, who by very admission of city police officials here, has more knowledge about fire arms and rocket launchers than most policemen put together. The other accused are: C Dinesh Kumar, 27, CR Camp in Paramathiveloor taluk in Nammakal district; Rajeev Gandhi alias Kandan, 28, CR Camp in Alamkundi taluk in Pudukkottai district; Maria Jamsan, 22, Valayapet in Vellore district; Shivakumar, 28, SLR Camp in Thirumangalam taluk in Madurai district; S Ravichandran, 30, SLR camp Thirumangalam district; Mahendran, 41, Kumbdipundi post in Thiruvalluvar district; S Suresh, 26, Thoppukkollai camp in Pudukkottai; Mariya Siran, 33, Alangudi taluk in Pudukkottai; Siraj, 37, SICO Housing unit, Coimbatore post; Yakoob, 40, of Kuniyamuthur of Coimbatore; and Saleem, Gramini Street, Valajapet in Vellore district in TN.  Shahjahan, 33, Koyyamarkad of Kanjikod post, Palakkad district is the lone Indian among the 13 arrested agents.Pratap Reddy, in-charge city police chief, said a case has been booked against the accused under Sections 120 B read with Section 420 of Indian Penal Code, along with Section 14 of Foreigners Act and paragraph 5 of Foreigners Order in Mangalore North (Bunder) police station. Police are mapping the activities of each of these 13 agents and their exact role in facilitating the trafficking of these Sri Lankan Tamilian refugees to Australia.

புரட்டாசி 11, 2012

மீண்டும் பயங்கரவாதிகளுக்கு முண்டு கொடுத்துவிட்ட கிழக்கு மாகாணத் தமிழர்கள்.

கடந்த முப்பது ஆண்டுகால பயங்கரவாதத்திலிருந்து தமிழ் மக்களை விடுவித்தவர்கள் யார்?
கடந்த (3) மூன்று ஆண்டுகளாகவே (18.05.2009)ற்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல வடக்கு. தெற்கு. கிழக்கு. மேற்கு என்னும் வேறுபாடுகளின்றி இன.மத. மொழி போன்ற எல்லைகள் அனைத்தினையும் கடந்து சகல மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான நிலையினை இலங்கையில் உருவாக்கியவர்கள் யார்? இன்று பாடசாலைக்கு கல்விபயில்வதற்குச் செல்லும் மாணவர்கள் அச்சமின்றி வீடு திரும்புவார்கள் என்னும் நிலையினைத் தோற்றுவித்தவர்கள் யார்? தொழிலுக்குச் செல்லும் கணவர் நிட்சயமாக வீடு திரும்புவார் என்னும் நிலை கடந்த மூன்று வருடங்களாகவே இடம்பெறுவது யாரால்? அத்துடன் உலகில் அச்சமின்றி மக்கள் நடமாடுவதற்கான நாடு என்னும் அந்தஸ்தினை உருவாக்கியவர்கள் யார்? .இவை அத்தனையையும் மறந்து நன்றிகெட்ட தமிழன் மீண்டு்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்னும் பயங்கரவாதிகளுக்கு வாக்களித்ததன் மர்மமென்ன? இதற்கான விலையினை தமிழர்கள் கொடுக்கவேண்டிய நாட்களை விரைவில் எதிர்பார்க்க வேண்டிய நிலை நிட்சயம் உருவாகுமென்பதே எமது கருத்தாகும். (நன்றி: மகாவலி)

புரட்டாசி 11, 2012

ஆளுநருடனான சந்திப்பு இடம்பெறவில்லை - சம்பந்தன்

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி  அமைக்க உரிமை கோரும் கடிதத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவிடம் நேரில் சமர்ப்பிக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஆட்சி அமைப்பு உரிமை கோருகின்ற கடிதம் ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநருக்கு தொலைநகல் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பிட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவை கிடைத்தவுடன் ஆளுநரை நேரில் சந்தித்து பேச விருப்பதாக சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

புரட்டாசி 11, 2012

முடிவு செய்யும் முக்கிய இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ்

எதிர்பார்த்தபடியே கிழக்கு பிராந்திய மாகாணசபை தேர்தல் எந்த அணிக்கும் அறுதி பெரும்பான்மை இல்லாமல் 'தொங்கு சபை' எந்தவிதத்தில் முடிந்துள்ளது. என்றாலும், மேலும் எதிர்பார்த்தபடியே அந்த பிராந்தியத்தில் அடுத்து யார் அரசு அமைக்க வேண்டும், யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற முடிவுகளை எடுக்கும் முக்கிய பொறுப்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று உள்ளது. நடந்து முடிந்துள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில், இரண்டில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி தனி பெரும்பான்மையை பெற்றுள்ளது. இதுவும் கூட எதிர்பார்த்த ஒன்றே. அதே சமயம் கிழக்கு மாகாணத்தில், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகளும் அதன் காரணமாக அதிக இடங்களையும் பெறும் என்ற எதிர்பார்க்க முடியாத எதிர்பார்ப்புகளும் இருக்கத் தான் செய்தன. தேர்தல் முடிவுகள் அந்த எதிர்பார்ப்புகளை முறியடித்துள்ளன. (மேலும்....)

புரட்டாசி 11, 2012

மாகாணசபைத் தேர்தல்

மட். மாவட்டத்தில் மு.பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் தோல்வி

மட். மாவட்டத்தில் மாகாணசபைக்குத் தெரிவான 8 உறுப்பினர்கள் மற்றும் இரண்டு முன்னாள் பா. உறுப்பினர்கள் உட்பட 10 பேர் இம்முறை தோல்வியடைந்துள்ளனர். நடந்துமுடிந்த கிழக்கு மாகாணசபை தேர்தலில் கடந்த முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து மாகாணசபைக்குத் தெரிவான நான்கு உறுப்பினர்கள் இம்முறை தோல்வியைத்தழுவியதுடன் இரண்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். கடந்தமுறை மாகாணசபை உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்ட பூ.பிரசாந்தன்,எட்வின் கிருஸ்ணானந்தராசா,திரவியம் மற்றும் முபின், இஸ்மாயில், ஜவாகீர்சாலி, அ.சசிதரன்,மாசிலாமணி ஆகியோரே இவ்வாறு தோல்வியைத் தழுவியுள்ளனர். அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தங்கேஸ்வரி மற்றும் அலிஸாகிர் மௌலானா போன்றவர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர். அத்துடன் கிழக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்ட 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாகாணசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட இரா.துரைரெட்ணம் 2008ஆம் ஆண்டு மாகாணசபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்ட இவர் மீண்டும் இம்முறையும் மாகாணசபை உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

புரட்டாசி 11, 2012

கிழக்கு மாகாண சபை

15 முஸ்லிம்கள், 12 தமிழர்கள், 08 சிங்களவர்கள் தெரிவு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் 15 முஸ்லிம் உறுப்பினர்களும், 12 தமிழ் உறுப்பினர்களும், 08 சிங்கள உறுப்பினர்களும் என மொத்தமாக 35 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து தலா 04 உறுப்பினர்களும் என 15 முஸ்லிம் உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 02 உறுப்பினர்களும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 07 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 03 உறுப்பினர்களும் என 12 தமிழ் உறுப்பினர்களும், அம்பாறை மாவட்டத்தில் 05 உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து 03 உறுப்பினர்களும் என 08 சிங்கள உறுப்பினர்களும் இத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து 07 முஸ்லிம் உறுப்பினர்களும், 04 சிங்கள உறுப்பினர்களும், ஒரு தமிழ் உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒரு முஸ்லிம் உறுப்பினரும், 03 சிங்கள உறுப்பினர்களும், தமிழரசுக் கட்சியலிருந்து 11 தமிழ் உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து 07 முஸ்லிம் உறுப்பினர்களும், தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து ஒரு சிங்கள உறுப்பினரும் தேர்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 10, 2012

முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயார் - சம்பந்தன்

ஊழலற்ற, நேர்மையாக செயற்படக்கூடிய முதலமைச்சர் ஒருவர்தான் எமக்குத்தேவை. அவர் முஸ்லிமா, தமிழரா என்பது முக்கியமல்ல. அத்துடன் தேவைப்பட்டால் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளவும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்' என்று நேற்று நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் குறித்தும் மாகாண சபை நிர்வாகத்தை அமைப்பது குறித்தும் பத்திரிகையாளர்களுக்கு இன்று மாலை கருத்துதெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.  (மேலும்....)

புரட்டாசி 10, 2012

அடுத்த பிரதமர் சமல், சபாநாயகர் நிமல்?

எதிர்வரும் குறுகியகாலத்திற்குள் அமைச்சரவையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாற்றங்களையடுத்து பிரதமராக தற்போதைய சபாநாயகர் சமல் ராஜபக்க்ஷ நியமிக்கப்படலாம் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு அவர் பிரதமராகும் பட்சத்தில் சபாநாயகராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்படலாமெனவும் குறித்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதனைவிட பிரதமர் பதவிக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் உள்ளிட்ட 7 பேருக்கிடையில் போட்டி காணப்படுவதாக பிரதான சிங்கள நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் சமல் ராஜபக்க்ஷ, நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரோடு மைத்திரிபால சிறிசேன, டி.யூ. குணசேகர, தினேஷ் குணவர்தன, கலாநிதி ஜீ.எல். பீரிஸ் மற்றும் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க ஆகியோருக்கிடையிலேயே போட்டி நிலவுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 10, 2012

வேர் அறுதலின் வலி கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

யாழ் முஸ்லிம் வலைத்தளத்தின் வெளியீடாக வேர் அறுதலின் வலி என்ற கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. 21 வருடங்களுக்கு முன்பு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நிகழ்வினையொட்டி யாழ் வலைதளம் நிகழ்த்திய போட்டிக்காக வந்து சேர்ந்த கவிதைகளை இத்தொகுப்பு ஏந்தி நிற்கிறது. வரலாற்றுப் பதிவாகவும், ஆழ் மனசில் வேரூன்றிய வலிகளின் வெளிப்பாடாகவும் இங்கு 127 பக்கங்களில் 55 கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. வடக்கிலிருந்து பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கே இந்த நூல் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 10, 2012

சப்ரகமுவ மாகாண சபையில்

இ.தொ.காவுக்கு இரு இடங்கள் ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி

சப்ரகமுவ மாகாணத்தில் கிடைத்துள்ள தேர்தல் வெற்றி ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபையில் ஏற்கனவே தமிழ் பிரதி நிதித்துவம் இருக்கவில்லை. இம்முறை இரண்டு பிரநிதிகளைக் கொண்டுவர முடிந்துள்ளமை பெரும் வெற்றியாகும். இது ஒற்றுமைப் பட்டுச் செயற்பட்டமைக்கான பரிசு எனவும் அமைச்சர் தெரிவித்தார். தேர்தலுக்கான பட்டியல் தயாரிப்பில் எவ்வாறு ஒற்றுமையாகச் செயற்பட முடிந்ததோ அதே ஒற்றுமையுடன் தொடர்ந்தும் செயற்பட முடிந்தது. இதனால்தான் இதுவரை ஒரு பிரதிநிதிகூட இல்லாத நிலையில் இம்முறை இரண்டு தமிழ் பிரதிநிதிகளை சப்ரகமுவ மாகாண சபைக்குப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இந்த இரண்டு பிரதிநிதிகள் மூலம் அனைத்து இன, மத மக்களுக்கும் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் ஏனைய மாகாண மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை சப்ரகமுவ மாகாண மக்களும் அனுபவிக்கும் வகையில் வெற்றிபெற்ற பிரதிநிதிகளுக்கூடாக எமது செயற்பாடுகள் அமையும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புரட்டாசி 10, 2012

3 வது அரசியல் சக்தி அந்தஸ்தை இழந்தது ஜே.வி.பி

நடந்து முடிந்த மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி.பி) படுதோல்வி அடைந்துள்ளது. மூன்று மாகாணங்களிலுமுள்ள ஏழு மாவட்டங்களிலும் தனித்துப் போட்டியிட்ட ஜே. வி.பி. 32 ஆயிரத்து 384 வாக்குகளை மாத்திரம் பெற்று ஒரே ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றிருக்கின்றது. இந்நாட்டின் மூன்றாவது பிரதான அரசியல் சக்தியாகக் கருதப்பட்ட ஜே. வி. பியை நாட்டு மக்கள் நிராகரித்து விட்டதையே இத்தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகின்றது. மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் திகாமடுல்ல, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம், கேகாலை, இரத்தினபுரி ஆகிய ஏழு மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் அநுராதபுர மாவட்டத்தில் மாத்திரம் 16 ஆயிரத்து 66 வாக்குகளைப் பெற்றே ஜே.வி.பி. ஒரு ஆசனத்தைப் பெற் றுள்ளது. ஜே. வி.பி.யின் கொள்கைகளை நாட்டு மக்கள் ஒதுக்கித் தள்ளிவிட்டதையே இத்தேர்தல் முடிவு காட்டுவதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

புரட்டாசி 10, 2012

மூன்று மாகாண சபைகளிலும் சுமார் 12 இலட்சம் பேர் வாக்களிக்கவில்லை

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்காக நடைபெற்று முடிந்த தேர்தலில் சுமார் 12 இலட்சம் வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்யவில்லை. கடந்த 2008ஆம் ஆண்டு இந்த மூன்று மாகாணங்க ளுக்கும் நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையைவிட இவ்வருடம் வாக்களிக்காதவர் களின் எண்ணிக்கை அதிகரி த்துள்ளது. 2008ஆம் ஆண்டு தேர்தலில் 10 இலட்சத்து 26ஆயிரம் பேர் வாக்களித்திருக்காத நிலையில், இம்முறை தேர்தலில் சுமார் 12 இலட்ச ம்பேர் வாக்களிக்கவில்லை.

புரட்டாசி 10, 2012

ஈரான் தூதரகத்தை மூடியது கனடா,  அதிகாரிகளுக்கு வெளியேற உத்தரவு

கனடா அரசு, தனது நாட்டிலிருந்து ஈரான் தூதரகத்தை மூடிவிட்டு அதிகாரிகளை ஐந்து நாட்களுக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. ஈரான் சிரியாவின் அப்பாவி பொதுமக் களைக் கொன்று குவிக்க அதன் இராணுவத்துக்கு உதவுவதாலும் ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பாளர்களுக்குப் போதிய ஒத்துழைப்புக் கொடுக்க மறுப்பதாலும் ஈரானுக்கென்று ஒரு தூதரகம் தனது நாட்டில் தேவையில்லை என்று கூறிவிட்டது. தனது நாட்டு மக்கள் ஈரானுக்கு போவது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்நாடு ஆபத்தானது. மற்றும் நட்புணர்வில்லாதது என்று கனடா கருதுகிறது. இதனிடையே பிரிட்டன், பிரான்ஸ். ஜேர்மனி போன்ற நாடுகள் மற்ற ஐரோப்பிய நாடுகளையும் ஈரான் மீது கடுமையான கட்டுப்பாடு விதிக்குமாறு அவசரப்படுத்தியுள்ளன. ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் குய்டோ வெஸ்ட்டெர்வெல் ஈரான் எந்த நல்ல முடிவையும் தெரிவிக்கா ததால் உடனடி நடவடிக்கை தேவை என்றார். இவரது கருத்திற்கு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லோரண்ட் பேபியசும் பிரிட்டனின் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேகும் ஆதரவு தெரிவித்துள்ளனர். சைப்ரஸில் நடந்த கூட்டத்திற்குப் பின்பு இந்த மூவரும் ஈரான் மீதான கட்டுப்பாடுகளைக் கடுமையான முறையில் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றனர்.

புரட்டாசி 10, 2012

நாவல் பழத்தின் மருத்துவ குணம்

நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயனப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும். சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். நன்கு பழுத்த நாவற்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவது வாய்ப்புண், வயிற்றுப் புண், குடற்புண் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும். அஜீரணக் கோளாறுகளைப் போக்கி குடல் தசைகளை வலுவடை யச் செய்யும். தூக்கமின்றி அவதிப் படுபவர்கள் நாவல் பழத்தை மதிய உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை நீங்கும். நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். எனவே, நாவல் பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

புரட்டாசி 10, 2012

என்னை வீழ்த்த நினைத்த த.தே.கூட்டமைப்புக்கு மட்டு. மக்கள் தக்கபாடம் புகட்டியுள்ளனர் - சந்திரகாந்தன்

என்னை வீழ்த்த நினைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் என முன்னாள் முதலமைச்சரும்; தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபையின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். அப்படியிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அதிகளவான வாக்குகளைப் பெற்று நான் வெற்றி பெற்றுள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்த மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிக்கின்றேன். (மேலும்....)

புரட்டாசி 09, 2012

கிழக்கில் ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதம் நாளை ஆளுநருக்கு கையளிக்கப்படும் - மாவை

புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து நேரில் கையளிக்கவிருக்கின்றது. இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார். (மேலும்....)

 

புரட்டாசி 09, 2012

யாழில் வாள் வெட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் இன்று மாலை இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின்போது வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருநெல்வேலியில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இக்கைகலப்பில் வாள் வெட்டும் இடம்பெற்றதால் ஒரு இளைஞன் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார். மற்றுமொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புரட்டாசி 09, 2012

கிழக்கு மாகாணத்தில்

அடுத்தவரின் கரம் பற்றி இன்னொருவரின் குடையின் கீழ் வாழும் அவலமோ இது

 கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடன் பேசுவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு நடத்தியுள்ளதாகவும் அவர் எமக்கு ஆதரவு வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.  இந்த நிலையில் அடுத்தகட்ட  நகர்வு குறித்து  பரிசீலித்து வருகின்றோம் எனவும் அவர் கூறினார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் உட்பட 14 ஆசனங்களும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் கிடைத்துள்ளன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 07 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் அடுத்தகட்ட  அணுகுமுறை எவ்வாறாக இருக்கும் என்று வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். திருகோணமலை மாவட்டத்தில் இன்னொரு ஆசனத்தை கூடுதலாக பெற்றிருக்கலாம். பொதுவாக தமிழ் வாக்காளர்கள் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நன்றாக வாக்களித்துள்ளார்கள் எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

புரட்டாசி 09, 2012

'சிரேஷ்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலின் பின் யாருக்கு ஆதரவென்பது தீர்மானிக்கப்படும்'

கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை எந்தவொரு கட்சியும் பெறாத நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சிரேஷ்ட உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கும் என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது என அவர் குறிப்பிட்டார். இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வருமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்ததாகவும் ஹக்கீம் தெரிவித்தார். "கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்க நான் முதலில் கடமைப்பட்டுள்ளேன். முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட அனைத்து தொகுதிகளிளும் நாம் வெற்றியடைந்துள்ளோம்". "மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு முன்னர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும். எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம்" என அவர் தெரிவித்தார்.

புரட்டாசி 09, 2012

அம்பாறை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்

கிழக்கு மாகாண சபை தேர்தலின் அம்பாறை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கினங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக முன்னாள் மாகாண அமைச்சர் விமலவீர திசாநாயக்க 31815 வாக்குகளையும் முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033 வாக்குகளையும் டி.வீரசிங்க 20,922 வாக்குகளையும் ஆரிப் சம்சுதீன் 19,680 வாக்குகளையும் ஏ.எம்.அமீர் 19,671 வாக்குகளையும் பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். இதேவேளை,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஆதம்பாவா தவம், 32,330, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் 22,357 வாக்குகளையும் , சம்மாந்துறை ஐ.எம்.எம். மன்சூர் 21759 வாக்குகளையும் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் 18,327 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கிழக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் தயா கமகே 41,064 வாக்குகளையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரதாஸ கலபதி 20,459 வாக்குகளையும் மஞ்சுளா பெர்னான்டோ 14,897 வாக்குககளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கு மேலதிகமாக இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் தவராஜா கலையரசன் 12,122 வாக்குகளையும் ஐ. முருகேசு 10,812 வாக்குகளையும் பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 09, 2012

திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்

கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கினங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் ஆரியவதி கலபதி 14,224 வாக்குகளையும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரியந்த பத்திரன 12,393 வாக்குகளையும் முன்னாள் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் 11,726 வாக்குகளையும் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளரான எஸ். தண்டாயுதபாணி 20,850 வாக்குகளையும் குமார்சுவாமி நாகேஸ்வரன் 10,910 வாக்குகளையும் யாழ். பல்கலைக்கழக மாணவரான ஜெஹதீஸன் ஜனார்த்தனன் 8,560 வாக்குகளையும் பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ரம்ழான் அன்வர் 10,904 வாக்குகளையும் ஹசன் மௌலவி 10,123 தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி சார்பாக கிண்ணியாவை சேர்ந்த இம்ரான் மஹ்ரூப் 10, 048 வாக்குகளையும்  அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகர 7,303ஆகியோரும் மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 09, 2012

மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகளின் விபரம்

கிழக்கு மாகாண சபை தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட விருப்பு வாக்குகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கினங்க, இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் 29,148 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. துரைராஜசிங்கம் 27,719 வாக்குகளையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெள்ளிமலை என்று அழைக்கப்படும் ஞா.கிருஷ்ணபிள்ளை 20,200 வாக்குகளையும் வர்த்தகர் இந்திரகுமார் பிரசன்னா 17,304 வாக்குகளையும் முன்னாள் மக்கள் வங்கி முகாமையாளர் மா.நடராசா 16,681 வாக்குகளையும் ஜனா என்று அழைக்கப்படும் கோ.கருணாகரன் 16,536 வாக்குகளையும் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் 22,338 வாக்குகளையும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.அமீரலி 21,271 வாக்குகளையும் பொறியியலாளர் சிப்லி பாரூக் 20,407 வாக்குகளையும், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபையிர் 19,303 வாக்குகளையும்  பெற்று மாகாண சபை உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அக்கட்சியின் பிரதி தலைவர் ஹாபீஸ் நஷீட் அஹமட் 11,401 வாக்குகளை பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் கொழும்பு மாநகர முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி 6,436 வாக்குகளை பெற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  பட்டியலில் இரண்டாமிடத்தினை பெற்றுள்ளார்.

புரட்டாசி 09, 2012

அவுஸ்திரேலியா செல்ல முயன்று 23 நாட்களின் பின் திரும்பிவந்த புகலிடக் கோரிக்கையாளர்கள்

அவுஸ்திரேலியா நோக்கி  ரோலர் படகொன்றில் பயணித்ததாகக் கூறப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள், படகில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 23 நாட்களின் பின்னர் மீண்டும் திரும்பிய நிலையில் அவர்கள் யால சரணாலயத்திற்கு அருகிலுள்ள அமதுவ பகுதியில் நேற்று பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.  கடந்த ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி அவுஸ்திரேலியா நோக்கி ரோலர் படகில் பயணித்த 32 பேர் தாயகம் திரும்பியதாகவும் இதன்போது 10 சிங்களவர்களும் 8 தமிழர்களும் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன  அறிக்கையொன்றில் கூறியுள்ளார். இவர்களை அழைத்துவந்ததாகக் கூறப்படும் மேலும் 7 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

புரட்டாசி 09, 2012

மாக்ஸிசம் பேசியவர் தேய்காய் உடைத்தலை நம்பும் விநோதம்

1008 சிதறு தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தும் TNA

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டியும் காணாமல் போனவர்களை பாதுகாப்பாக மீட்டுத்தர வேண்டியும் 1008 தேங் காய் உடைத்து காளியிடம் சிறப்புப் பிரார்த்தனை செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. சர்வதேச கைதிகள் தினமான செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் காணாமல் போனவர்கள் வீடு திரும்புவதற்கும் வவுனியா, குருமன்காட்டில் உள்ள காளிகோவிலில் காலை 10 மணிக்கு 1008 சிதறு தேங்காய் உடைத்துச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் உயிரையும் உரிமைகளையும் காப்பாற்ற வேண்டியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள், மனித உரிமைகளில் ஆர்வம் உள்ளோர், சமூக சேவகர்கள், சமுதாய நலனில் அக்கறை உள்ளோர் ஆகிய அனைவரதும் கடமையாகும். சிறைகளிலும் வதைமுகாம்களிலும் மற்றும் பிற இடங்களிலும் வாடுகின்ற அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இந்த நிகழ்வில் தமிழ் மக்களின் நலன்களில் அக்கறைகொண்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி உள்ளிட்ட தென்னிலங்கை ஜனநாயக முற்போக்குச் சக்திகளும் கலந்துகொள்ள உள்ளன. தனது முன்னாள் தலைவர் பத்மநாபா, சுபத்திரன் போன்றவர்களின் உயிரைப் பறிப்பதுவும் இவர்களின் கடமையல்லவா...?

புரட்டாசி 09, 2012

சிதறு தேங்காய் உடைக்காது பேச்சுவார்த்தைக்கு செல்லுங்கள்

தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கைகளை விட்டு கைதிகளை விடுவிக்க முடியாது

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப் பதற்காக 1008 தேங்காய்களை உடைப்பதை தவிர்த்து பாராளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாக பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் என தமிழ் கூட்டமைப்பினருக்கு வேண்டு கோள் விடுக்கின்றேன் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். சிறைக்காவலர்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்த சில கைதிகளின் நடவடிக்கை காரணமாக ஏனைய கைதிகளும் இன்று பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக நடவடிக்கை எடுக் கப்படவிருந்த சமயத்தில் இந்நடவடிக்கை காரணமாக இருவர் உயிரிழக்க நேர்ந்துள்ளது. இது சம்பந்தமாக அரசாங்கம் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தமிழ் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதன் மூலம் எவராலும் இவர்களுக்கு விடுதலை பெற்று தர முடியாது. என்னைப் போன்று அரசாங்கத்திற்கு ஆதரவளித்துக்கொண்டிருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்குக் கூட அரசியல் கைதிகளுக்கு விடுதலை வாங்கிக் கொடுக்கக்கூடிய நிலைமை இல்லை என்பது கசக்கும் உண்மையாகும். இந்நிலையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக கூட்டமைப்பினர் 1008 தேங்காய் உடைப்பதை பார்க்கும் பொழுது தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்ற தந்தை செல்வாவின் வசனங்கள் தான் ஞாபகம் வருகின்றது.

புரட்டாசி 09, 2012

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெள்ளைவேன் வாக்கு மோசடி தொடர்பில் புலன்விசாரணை.

நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெள்ளைவேன் கோஷ்டியினர் வாக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த வெளிநாட்டில் வசிப்போர் மற்றும் ஏழைகளின் வாக்குகளை விலைக்கும் இலவசமாகவும் பெற்றுக்கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கல்முனைப்பிரதேசத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் மற்றும் சில இளைஞர்களை வெள்ளை வேன்களில் ஏற்றிக்கொண்டு பல வாக்குச்சாவடிகளிலும் கள்ள வாக்கு போடும் மோசடியில் ஈடுபட்டதாக அறியக்கிடைக்கின்றது. இவ்வாறு பெரியநீலாவணை சரஸ்வதி வித்தியாலயத்தில் அமைந்திருந்த வாக்குச்சாவடிக்கு கள்ளவாக்கு போடச்சென்ற வான் ஒன்றை பிரதேச இளைஞர்கள் மறித்துள்ளனர். இது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியபோது வானில் வந்தவர்கள் ஒடித்தப்பிவிட்டுதாகவும் இதன் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பில் புலன்விசாரணைகள் இடம்பெறலாம் எனவும் தெரியவருகின்றது.

புரட்டாசி 09, 2012

முரளி வெற்றிக் கேடயம்

கிளிநொச்சியில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி

முரளி வெற்றிக்கேடய நினைவு கிண்ணப்போட்டி ரி-20 சுற்றுப்போட்டியொன்று இலங்கை பாடசாலை அணிகளுக்கும், விளையாட்டுக் கழகங்களுக்குமிடையே நேற்று 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதிவரை நடைபெற்றுவருகிறது. இதற்கான ஒழுங்குகளை கிளிநொச்சி 57 ஆவது படைப்பிரிவின் தளபதி சுராஜ் பன்யஜய தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்களுக்கிடையிலான ரி-20 சுற்றுப் போட்டியில் பாடசாலை அணிகளும், விளையாட்டுக் கழகங்களும் ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்து நான்கு அணி பிரிவுகளாக பங்குபற்றலாம். பெண்களுக்கான ரி-20 சுற்றுப் போட்டிக்கு பாடசாலை மற்றும் விளையாட்டுக் கழக அணிகள் நான்கு பிரிவுகளாக திறமைக்கேற்ப பங்குபற்றலாம். இப்போட்டிகளின் மூலம் தெரிவாகும் வட கிழக்குப் பகுதியிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை சர்வதேச மட்ட ரி-20 விளையாட்டிற்கு அறிமுகம் செய்வதற்கான வாய்ப்பாக அமையும்.

புரட்டாசி 09, 2012

நீர் கொழும்பு பெரிய முல்லையில் அனைத்து இன மக்களின் ஒன்று கூடல்

நீர்கொழும்பில் சகல இனமக்களும் நெருக்கமாகவும் ஐக்கியமாகவும் ஒற்றுமையுடனும் வாழ்ந்துவருகின்றனர். இந்த ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் மேலும் வளர்த்துக் கொள்ளும் நோக்கில் நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல் இம்முறை நோன்புப் பெருநாள் விருந்துபசார வைபவம் ஒன்றை பள்ளிவாசலில் ஏற்பாடு செய்தது. இவ் வைபவத்திற்கு சகல இனமக்களும்,அழைக்கப்பட்டிருந்தனர். மேலும் நீர்கொழும்பு பெரிய முல்லை கிராமத்தில் முஸ்லிம் சகோதரர்களுடன் ஒன்றாக வாழும், தமிழ், சிங்கள சகோதரர்களும் இவ் விருந்துபசாரத்திற்கு அழைக்கப்பட்டிருந்தமை இவ் வைபவத்தை மெருகூட்டியதாக அமைந்தது. நீண்டகாலமாக நீர்கொழும்பு மக்கள் இனரீதியான பிரச்சினைகள் எதுவுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்துவருகின்றனர். இந்த ஒற்றுமை தொடர்ந்தும் பேணப்பட வேண்டும். சகல இனமக்களும் கையின் ஐந்து விரல்களை போன்று இருக்க வேண்டும். ஐந்து விரல்களையும் சேர்த்து ஒரு கையினால் வேலை செய்யும் போது அது பலமானதாக அமைகின்றது. அவ்வாறு இல்லாது தனி விரலாக பெளத்த, கத்தோலிக்க இந்து முஸ்லிம், பறங்கியர் என பிரிந்து ஒரு கருமத்தை செய்யும் போது அது பலம்குன்றியதாகவே காணப்படும் என்பதே யதார்த்தம்.

புரட்டாசி 09, 2012

சப்ரகமுவவில் இரு தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள்

சப்ரகமுவ மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் இருவர் தெரிவாகியுள்ளனர். இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சப்ரகமுவ மாகாண சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 488714 வாக்குகள் (28 ஆசனங்கள்).
ஐக்கிய தேசிய கட்சி 286857 வாக்குகள் (14 ஆசனங்கள்). இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 25985 வாக்குகள் ( 2 ஆசனங்கள்).

புரட்டாசி 09, 2012

Results of polls will shape Govt. policy on vital issues

The UPFA government’s popularity, both in Sri Lanka and abroad, will be measured today by an unusual yardstick — the outcome of yesterday’s polls for Sabaragamuwa, North Central and Eastern Provincial Councils. The main thrust of the government has been to demonstrate, both here and to the outside world, that despite criticism on a multitude of issues, the UPFA continues to enjoy the confidence of the people. Towards this end, the alliance’s seven-week campaign, where an entire cabinet of ministers had been deployed, was to ensure that it win a larger volume of votes, perhaps higher than previous polls. (more....)

புரட்டாசி 09, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதலிடம்

கிழக்கு மாகாண சபை தேர்தலில் இரண்டு போனஸ் ஆசனங்கள் உட்பட அதிகூடிய 14 ஆசங்களை பெற்று ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  முதலிடத்தில் உள்ளது. அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய இம்மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 11 ஆசனங்களை கைப்பற்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றி முறையே 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் இடங்களை பெற்றுள்ளன. எவ்வாறாயினும் கிழக்கு மாகாண சபையின் ஆட்சியினை ந்தவொரு கட்சியினாலும் தனித்து அமைக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாகாண சபை தேர்தலில் மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  200,044 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 193,827 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132,917 வாக்குகளையும் 74,901 வாக்குகளையும் தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளையும் பெற்றுள்ளது.

புரட்டாசி 09, 2012

அம்பாறை மாவட்டத்தை ஐ.ம.சு.கூ கைப்பற்றியது

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அம்பாறை   மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 92,530 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 83,658 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக்  கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 48,028 ஆசனங்களைக் கைப்பற்றி 3 ஆசனங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 44,749  வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

புரட்டாசி 09, 2012

வட மத்திய மாகாண சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கைப்பற்றியது

வட மத்திய  மாகாண சபையின் ஆட்சியை  ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  கைப்பற்றியுள்ளது. அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்கள் அடங்கிய இம்மாகாண சபைக்கான தேர்தலில்  ஐக்கிய மக்கள் சுதந்திரக்  கூட்டமைப்பு  21 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 11 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

புரட்டாசி 09, 2012

திருமலை மாவட்டத்தில் இ.த.க., ஐ.ம.சு.கூ. சமநிலையில்

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் திருகோணமலை  மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 44,396 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 43,324 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும் கைப்பற்றி சமநிலையில் காணப்படுகின்றன.  இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 26,176 வாக்குகளைப் பெற்று இரு ஆசனங்களைக்  கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 24,439 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் தேசிய சுதந்திர முன்னணி 9,522 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

புரட்டாசி 09, 2012

அநுராதரபுரம் மாவட்டத்திலும் ஐ.ம.சு.கூ. வெற்றி

வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் அநுராதரபுரம் மாவட்டத்திலும்  ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி 234,387 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 126,184 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 11684 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

புரட்டாசி 09, 2012

மட்டக்களப்பு மாவட்டத்தை இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி 104,682 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 64,190 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 23,083 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.  ஐக்கிய தேசியக் கட்சி 2,434 வாக்குகளைப் பெற்றபோதிலும் ஆசனம் எதனையும் கைப்பற்றவில்லை.

மரண அறிவித்தல்

திருமதி கந்தப்பன் அமிர்தேஸ்வரி அவர்கள்

திருப்பழுகாமத்தை பிறப்பிடமாகவும் செட்டிபாளயத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தப்பன் அமிர்தேஸ்வரி அவர்கள் 2012/09/06 ந் திகதி வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார் சின்னத்தம்பி கந்தப்பன் (ஓய்வு பெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும் காலஞ் சென்ற கந்தப்பன் பெரியபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி சந்தனப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், கணேஸ்வரன், சசிகலா (ஆசிரியை மட்/களுதாவளை இ.கி.மி வித்தியாலயம் ), சற்குணேஸ்வரன் (SWO, UK), நித்தியகலா (முகாமைத்துவ உதவியாளர் நீர்பாசத்திணைக்களம் மட்டக்களப்பு), உதயேஸ்வரன் சாரதா கொம்னிகேஷன் செட்டிபாளயம், பிரதீஸ்வரன் (கணனி விரிவுரையாளர் VCT), யமுனகலா (கிழக்குப் பல்கலைக்கழகம்), ஆகியோரின் தாயாரும், (மேலும்....)

புரட்டாசி 08, 2012

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்

இதுவரை வெளியான வட மத்திய மாகாண தேர்தல் முடிவுகளின்படி ஆளும் பொது ஜன ஐக்கிய விடுதலை முன்னணி அமோக வெற்றி ஈட்டியுள்ளது. ஜே.வி.பி. படு தோல்வியை தழுவியுள்ளது. எதிர் கட்சியாக ஐ.தே. கட்சி வரும் வாய்ப்புக்கள் உள்ளன. இதேபோல் சப்பிரஊவா மகாணத்தில் வெற்றி வாய.ப்பை தனதாக்கி கொள்ளும் நிலையில் உள்ளது. கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் தபால் மூலம் வாக்களித்த முடிவுகளின் படி மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அதிக வாக்குகள் பெற்றுள்ளது. அம்பாறையில் முஸ்லீம் காங்கிரஸ் அதிகளவு வாக்குகளைப் பெறவில்லை.

புரட்டாசி 08, 2012

மாகாண சபைத் தேர்தலில் மந்தமாக வாக்களிப்பு

நடைபெற்று முடிந்த மூன்று மாகாண சபைத் தேர்தலிலும் மிகக் குறைந்தளவு வாக்குப் பதிவுகளே நடைபெற்றுள்ளது. 50 வுதத்திற்கும் குறைவாக 48 வீதம் அளவில் வாக்குப் பதிவுகள் நடைபெற்றதாக இலங்கையில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்pன்றன. திருகோண மலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நல்ல கால நிலமை இருந்த போதும் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாமல் இருந்தது தெரிய வந்துள்ளது. பிரச்சாரத்தின் போது மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட 'பிரமாண்டமான' கூட்டங்கள் தவிர ஏனைய கூட்டங்கள் கருத்தரங்கு அளவில் மிக சிறிய அளவு மக்களே திரண்டு இருந்தனர் என்பதுவும் கவனிக்கதக்கது. விலைவாசி உயர்வு, கட்டுப்படுத்த முடியாத வாழ்க்கைச் செலவினங்கள், அரசியல் கட்சிகளின் தலைமை, வேட்பாளர்கள் மீதான் நம்பிக்கையீனங்கள் இவற்றிற்கு முக்கிய காரணிகளாக இருந்தன என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். தேர்தல் முடிவுகள் இன்று மாலை வெளிவரத் தொடங்கும் என அறிய முடிகின்றது.

புரட்டாசி 08, 2012

கிழக்கு தேர்தலில் எமது நிலைப்பாடு - பத்மநாபா ஈபிஆர்எல்எப்.

யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளின்  பின்னர் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.. 2008 மாகாண சபைத்தேர்தலில் பல தரப்பபினரும் பங்கு பற்றுவதற்கான சூழ்நிலை இருக்கவில்லை என்பது உண்மையே. தமிழ் மக்களைப் பொறுத்தவரை இன சமூக ரீதியான அதிகாரப்பரவலாக்கலே முதன்மையான விடயம். மாகாண சபை ஏதோ ஒரு அளவில் அதிகாரப்பரவலாக்கலுக்கான கட்டமைப்பு . அதன் மீதான சட்ட பூர்வமான அதிகாரம் மக்களிடம் இருக்கவேண்டும். இனப்பிரச்சனை தீர்வு இழுபட்டுக் கொண்டே செல்கையில் இது மேலதிக முக்கியத்துவம் பெறுகிறது. இத்தேர்தலில் தமிழ் மக்கள் அதிகாரப்பகிர்விற்கெதிரான மமதை கொண்ட அரசியலுக்கெதிராக தெளிவாக வாக்களிக்கவேண்டும். (மேலும்....)

புரட்டாசி 08, 2012

இலங்கை தமிழர்களை ஆபத்துக்குள்ளாக்கி தமிழகத்தில் அரசியல் நடத்துதல்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

சினேகபூர்வமான போட்டிகளுக்காக இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்குச் சென்றிருந்த இரண்டு கால்பந்து அணிகளுக்கு உடனடியாக மாநிலத்திலிருந்து வெளியேறுமாறு மாநில முதலமைச்சர ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்டளையிட்டு இருந்தார். இதனை விமர்சித்து இந்தியாவில் வெளிவரும் 'த ஹிந்து' பத்திரிகை வெளியிட்டு இருந்த ஆசிரியத் தலையங்கத்தில் 'இன்று நாம் பாடசாலை கால்பந்து விளையாட்டு வீரர்களை வெளியேற்றுகிறோம், கிரிக்கெட் ஆட்டக்காரர்கள், உல்லாசப் பிரயாணிகள் மற்றும் யாத்திரிகள் ஆகியோரையும் வெளியேற்ற வேண்டும் என்று நாளை கூச்சல் எழும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த ஆசிரியத் தலையங்கம் அச்சில் இருந்து வெளிவருவதற்கு முன்னரே அதில் கூறப்பட்ட எதிர்வு உண்மையாகிவிட்டது. (மேலும்....)

புரட்டாசி 08, 2012

ரொபர்ட் பிளெக் இலங்கை வருகிறார்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் ஜூனியர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். செப்டெம்பர் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ள அவர் செப்டெம்பர் 14 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து  அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்களை சந்தித்து பேசவுள்ளார். இலங்கை மற்றும் மாலைதீவுக்கான முன்னாள் தூதுவரான ரொபர்ட் ஓ பிளெக், இறுதியாக 2011 ஆம்  ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்தார்.

புரட்டாசி 08, 2012

தீவிரமடைந்துள்ள தமிழக - இலங்கை பனிப்போர்

(கே.சஞ்சயன்)

புதுடெல்லிக்கும் கொழும்புக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் சுமுகமான நிலையில் இல்லாத கட்டத்தில், தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் வெளிப்படையானதொரு பனிப்போர் வெடித்துள்ளது. இந்தப் பனிப்போர் ஒரு மோதல் போலவே உருவெடுத்து விட்டது. இதன் விளைவாக, தமிழ்நாட்டுக்குச் சென்ற கால்பந்தாட்ட அணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. கலைச் சுற்றுலா சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தல யாத்திரை சென்றவர்களையும் சிறப்பு விமானத்தில் திருப்பி அழைக்க நேர்ந்தது. அதேவேளை, கொழும்பும் இதற்குப் பதிலடியாக, தமிழ்நாட்டுக்குச் செல்வது கறித்து பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 08, 2012

இந்தோனேஷியாவில் தத்தளித்த இலங்கையர்கள் படகிலிருந்து இறங்க மறுப்பு

அவுஸ்திரேலியா நோக்கிச் சென்றபோது இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுக்கு அருகில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட இலங்கையர்கள் 53 பேர் தமது படகிலிருந்து இறங்க, மறுப்பதுடன் உணவு மருந்துகளையும் பெறுவதற்கு மறுப்பதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 4 பெண்கள் மற்றும் 3 சிறார்கள் உட்பட 53 பேர் சுமத்ரா தீவுக்கு அருகிலுள்ள மேந்தாவை எனும் சிறிய  தீவில் தத்தளித்த நிலையில் செப்டெம்பர் முதலாம் திகதி மீட்கப்பட்டதாக சிகாகப் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சூர்ய நெகாரா இன்று தெரிவித்துள்ளார். (மேலும்....)

புரட்டாசி 08, 2012

இனப் பிரச்சினை: தமிழ் நாட்டின் 'கரிசனை'?

(என். சத்தியமூர்த்தி)

இலங்கை அரசு முக்கியஸ்தர்கள் முன்னறிவிப்பின்றி வரக்கூடாது என்பதில் தொடங்கி, இன்று வட இந்தியாவிற்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்த மதத்தவர்கள் மீது தாக்குதலில் இறங்கி, பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோரைக் கூட தமிழ் நாடு வேண்டப்படாதவர்களாக ஆக்கி வருகிறது. இதற்கிடையில், தமிழ் நாட்டில் அமைந்துள்ள இந்திய இராணுவ பள்ளிகளில் இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்த்து, முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புகளும், மத்திய அரசிற்கான அறிவுரைகளும், மற்றும் சிறு கட்சிகள் மற்றும் குழுக்களின் போராட்டங்கள் வேறு. இவை அனைத்தும், இலங்கை அரசிற்கு எதிரான நிலைமையை இந்தியாவில் ஏற்படுகிறதோ இல்லையோ, இந்தியாவிற்கும் எதிரான நிலைப்பாடுகளை இலங்கையில் பலவாறாக தோற்றுவித்து வருகிறது. (மேலும்....)

புரட்டாசி 08, 2012

விண்வெளி ஆய்வின் முன்னோடி ரஷ்யா

நாம் இன்று வாழ்ந்து வருவது தகவல் தொழில்நுட்ப யுகம். இதற்கு வழி கோலியது கடந்த 20 ஆம் நூற்றாண்டின் பிற் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட இணையம் (Internet) எனலாம். இது மனிதர்களுக்கிடையே தொடர்பாடலை இலகு வாக்கியதுடன் மட்டுமல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மிக எளிய வழியில் தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும், பல்துறை சார் அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் உதவி வருவது வெளிப்படையாகும். இவ்விணையத்தளம் மூலம் இன்றைய உலகில் வானியல் மற்றும நாம் வாழும் இப் பிரபஞ்சம் குறித்த மனிதன் இனத்தின் முதல் நிலை அறிவை பல கட்டமைப்புக்கள் மூலம் பரப்பி வருவதில் முன்னிலை வகிப்பது அமெரிக்காவிலுள்ள தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாஸா ஆகும். (மேலும்....)

புரட்டாசி 08, 2012

2030ல் சவூதி அரேபியா எண்ணெய் இறக்குமதி நாடாகும்

உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாக திகழும் சவூதி அரேபியா 2030ம் ஆண்டில் எண்ணெய் இறக்குமதி நாடாக மாறும் என்று சிட்டி குரூப் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; சவூதி அரேபியா தற்போது மொத்த எண்ணெய் உற்பத்தியில் 25 சதவிகிதத்தை தானே பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 50 சதவிகிதம் எண்ணெய் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் பொருட்களை கொண்டு உற்பத்தியாகின்றன. சவூதி அரேபியாவில் மின் தேவை ஆண்டுக்கு 8 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. 2030ம் ஆண்டில் அந்நாடு எண்ணெய் ஏற்றுமதியாளர் என்ற அந்தஸ்தை இழந்து இறக்குமதியாளராக மாறக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புரட்டாசி 08, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 58 பேர் திருமலையில் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 58 பேர் திருகோணமலைக் கடலில் நேற்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். திருகோணமலை கடலில் சுமார் 19 கடல் மைல் தொலைவில் ‘தெவ்மினி’ என்ற ஆழ்கடல் வள்ளத்தை சுற்றி வளைத்த கடற்படையினர் 58 பேரையும் கைது செய்தனர். 35 தமிழர்களும், மூன்று சிங்களவர்களும், 20 முஸ்லிம்களுமாக இவ்வள்ளத்தில் இருந்ததாக கடற்படை தெரிவிக்கிறது. இவர்களுடன் 6 பெண்களும் 8 பிள்ளைகளும் பயணித்துள்ளனர். யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, மூதூர், கற்பிட்டி, நீர்கொழும்பு, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையின் பேச்சாளர் தெரிவித்தார். திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு கொண்டுவரப்பட்ட இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 08, 2012

இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திர நிலையில்

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. ரூபாவின் பெறுமதியை மிதக்கவிடுவதற்கு மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக கடந்த சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்திரமடைந்து வருவதாக அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரூபாவின் ஸ்திரத்தன்மையைத் தொடர்ந்தும் பேணுவதற்கு நிதிக் கொள்கையைக் கடுமையாகக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் நிதிக் கட்டுப்பாட்டு காரணமாக டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த சில வாரங்களாக 130 ரூபா அல்லது 131 ரூபாவில் ஸ்திரமாக உள்ளது என நிதித் திட்டமிடல் அமைச்சின் நிதிக் கொள்கைப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.எம்.சிறிவர்த்தன தெரிவித்தார்.

புரட்டாசி 08, 2012

இலங்கையரை நட்பு ரீதியாக அணுக வேண்டும்

இலங்கையில் இருந்து வருப வர்களை நட்பு ரீதியிலேயே அணுக வேண் டும் என்று பிரகாஷ் காரத் கூறி யுள்ளார். மது ரையில் செய்தி யாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், இலங்கையில் இருந்து கோயிலுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது துரதிஷ்டவசமானது. தமிழகம் மற்றும் இலங்கையில் வசிக்கும் மக்கள் நட்புடனும், நல்லிணக்கத்துடனும் இருக்க வேண்டும். இலங்கையில் இருந்து வருபவர்களை நட்பு ரீதியிலேயே அணுகவேண்டும். இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் அரசுகளுக்கு இடையேதான் பேச்சு நடைபெற வேண்டும். இரு நாட்டு மக்களும் மோதிக் கொள்வது ஏற்புடையதல்ல என்றார்.

புரட்டாசி 07, 2012

மூன்று மாகாண சபைகளுக்கு நாளை தேர்தல்

108 பேரை தெரிவு செய்ய 3073 பேர் போட்டி

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து. 108 உறுப் பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளை 08 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறு கிறது. தேர்தலுக்கான பூர்வாங்க ஏற்பாடுகள் யாவும் பூர்த்தியடைந்துள்ளதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் (நிர்வாகம்) எம். மொஹமட் கூறினார். மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை மூவாயிரத்து 73 (3073) வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 2011 ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் நாளை நடைபெறவுள்ள தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் (33,36,417) வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 (3,247) வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. நாளை காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகிறது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து இன்று (07) வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்துவரப்படும்.

புரட்டாசி 07, 2012

பிறநாடுகளில் அகதி அந்தஸ்து கோருமளவுக்கு நாட்டில் பிரச்சினை இல்லை - பிரபா எம்.பி.

யுத்தம் முடிவடைந்து இனப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அகதி அந்தஸ்து கோரும் அளவுக்கு நமது நாட்டில் தற்போது பிரச்சினைகள் இல்லை. சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் தமிழர்களின் தொகை அதிகரித்துள்ளது. இவ்வாறான சட்ட விரோதமான செயல்பாடுகளினால் உயிரிழக்கும் அபாயமும் பெருகி வருகிறது. ஆகையால் இப்படியான சட்டவிரோத பயணத்தை தவிர்க்குமாறு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மேலும்....)

புரட்டாசி 07, 2012

இலங்கைப் பிரஜைகளை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை

இலங்கைப் பிரஜைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபை, தமிழக அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்திற்கு விஜயம் செய்யும் மற்றும் தங்கியிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும் என தெரிவித்துள்ளது. இலங்கையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தமிழக அரசியல்வாதிகளும் அரசியல் கட்சிகளும் கவனம் செலுத்தி வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்தியாவிற்கான நிறைவேற்றுப் பணிப்பாளா ஆனந்தபத்மநாதன் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், இலங்கைத் தமிழர்கள் மீதான அனுதாபம் வன்முறையாக மாறிவிடக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புரட்டாசி 07, 2012

சட்ட விரோத ஆஸி பயணம்; மிரிஸ்ஸ கடற் பரப்பில் 54 பேர் கடற்படையால் கைது

சட்ட விரோத மாக கடல் வழி யாக அவுஸ் திரேலியா செல்ல முற் பட்ட 54 பேர் நேற்று அதிகாலை மிரிஸ்ஸ கடற் பரப்பில் வைத்து கைதுசெய்யப்பட்ட தாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றையடுத்து அதிகாலை 2.30 மணியளவில் இவர்கள் 54 பேரும் காலி, மிரிஸ்ஸ கடற்கரையை அண்டிய பகுதியில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு முஸ்லிம்கள், 5 சிங்களவர்கள் உட்பட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாலை இவர்கள் அனைவரும் காலி கடற்படை தளத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சிலாபம், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படை தெரிவிக்கிறது. இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு கடற் பரப்பிலும் ஆழ்கடல் வள்ளத்துடன் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புரட்டாசி 07, 2012

பிரிட்டனில் தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையரை நாடு கடத்த ஏற்பாடு

பிரிட்டனிலிருந்து அகதி அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் ஒரு தொகுதி இலங்கை யர்கள் எதிர்வரும் செப் டெம்பர் 19ம் திகதி ஜிvt030 என்ற விசேட விமானத்தில் கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளனர். இந்த விமானம் பிரிட்டனிலிருந்து 19ம் திகதி பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படுகின்றது. இவ்விதம் அகதி தஞ்சம் நிராகரிக் கப்பட்டவர்கள் கையொப்பமிடச் செல் லும் வேளை அவர்கள் தடுத்து வைக்கப் பட்டு அவர்களுக்கான விமானச் சீட் டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்விதம் எதிர்வரும் பதினெட்டாம் திகதி வரை இந்த சீட்டுக்களை குடிவரவு குடியகல்வு அமைச்சினால் வழங் கப்படுமென தெரிவிக்கப்படுகின்றது. இதில் ஒரேயொரு நபருக்கான டிக் கெட் சட்டத்தரணி வாசுகிக்கு அனுப் பியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார். தனி விமானம் என்கின்ற போது அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அனுப்பப்பட வாய்ப்புள் ளதாக நம்பப்படுகின்றது. இவ்விதம் அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்கள் உங்கள் சட்டத்தரணிகளை தொடர்பு கொண்டு அதற்கான ஆக்கபூர்வமான விடயங்களை மேற்கொள்ளும்படி சமூக நலன்விரும்பிகள் வேண்டியுள்ளனர் எனவும் தெரிய வந்துள்ளது.

புரட்டாசி 07, 2012

வெளிவந்துவிட்டது வானவில் 20

கிழக்கு மக்கள் சகல இனவாத சக்திகளிடிடமிருந்தும் தமது மாகாண சபையைக் காப்பாற்ற வேண்டும்!

கிழக்குமாகாணசபைத் தேர்தல் 2012 செப்ரெம்பர் 08ம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தல் நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சைக் களமாக இருப்பதால், தேர்தல் நெருங்க நெருங்க பிரச்சாரச் சூடும் அதிகரித்துச் செல்கிறது. அதேவேளை தேர்தல் முடிவை அறியும் ஆவலும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழும் மக்கள் மத்தியிலும் அதிகரித்துச் செல்கிறது. நாட்டிலுள்ள மற்றைய மாகாணங்களைவிட கிழக்கின் விசேட அம்சம் என்னவெனில், அங்கு தமிழ் - முஸ்லீம் - சிங்கள என மூவின மக்களும் ஓரளவு சமமான அளவில் சேர்ந்து வாழ்வதுதான். முன்னைய காலங்களில் வடக்கைப் போல கிழக்கும் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் அவர்களது பாரம்பரியப் பிரதேசம் என்று சொல்லிக்கொண்டாலும், இன்று அந்த நிலைமை இல்லை. இன்று தமிழர்கள் அங்குள்ள சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினராக மட்டுமே உள்ளனர். முஸ்லீம் மக்களும் சிங்கள மக்களும் இணைந்தால் சனத்தொகையின் மூன்றிலிரண்டாக அவர்கள் இருப்பார்கள். கிழக்கின் இன விகிதாசாரம் மாற்றமடைந்ததிற்கு, நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து (1948 பெர்ரவரி 04), முதலாவது ஆட்சியை அமைத்த ஐக்கிய தேசியக் கட்சி தொடக்கி வைத்த திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் தொடர்ந்ததால்தான், இந்த நிலைமை ஏற்பட்டது என தமிழ்த் தலைமைகள் குற்றம்சாட்டி வந்துள்ளன. (மேலும்....)

புரட்டாசி 07, 2012

நாம் புலம்பெயர் சமூகத்திடம் பிச்சை கேட்கவில்லை. எமது வாழ்விற்கு நம்பிக்கை தாருங்கள்

கணவனை இழந்த முன்னாள் போராளியின் மனைவி தன் குடும்பத்தை காப்பாற்ற விபச்சாரம் செய்வதை செய்தியாக போடும் தமிழ் ஊடகங்கள் இன்றுவரை அந்த பெண்ணின் அவலத்தை நீக்க முன்வரவில்லை என்பதே உண்மை. ஒருவேளே இந்த அவலம் நீங்கினால் இவர்களிற்கு கிடைக்கும் இந்த செய்தி இல்லாமல் போய்விடும் என்று இவர்கள் நினைக்கிறார்களோ தெரியாது. ஆனால் இதுதான் உண்மைபோல் எமக்கு தெரிகிறது. பூனைக்கு விளையாட்டு சுண்டெலிக்கு சீவன் போகுது என்ற நிலையே இன்றைய எமது நிலை. புலம் பெயர் நாட்டில் புலிக்கொடி பறந்த செய்தியை வீரத்துடன் இந்த ஊடகங்கள் செய்தியாக போட்ட அடுத்த நிமிடம் எங்கள் வீட்டுக் கதவுகள் புலனாய்வுதுறையினரால் தட்டப்படுவது இவர்களிற்கு ஒரு ஆனந்தமான செய்தி. ஆனால் எங்களிக்கு அது ஒரு சீவன் போய்வரும் நிகழ்வு என்பது இவர்களிற்கு தெரியாதா? அல்லது தெரியதது போல் நடிக்கிறார்களா? புலம்பெயர் மக்கள் தம் பொழுது போக சனி ஞாயிறு கிழமைகளில் புலிக்கொடியுடன் போராட்டம் செய்ய, நாங்கள் இங்கு வாரம் முழுவதுமே கண்காணிக்கப்படுவதன் அவலம் இவர்களிற்குபுரியாது. (மேலும்....)

புரட்டாசி 07, 2012

புரட்டாசி 07, 2012

Doing what politics cannot

Making use of the unifying power of sports

By Salma Yusuf
A growing number of sports persons and organisations have sought to intervene in conflict zones to encourage reconciliation between estranged communities. The international community unanimously declared the year 2005 as the International Year of Sport and Physical Education, serving as formal recognition of the added value of sport as a peace-building factor. Contemporaneously, in several regions of the world, the fundamental values of sport and play have been acknowledged as important contributors in the building of a stronger civil society where tolerance and lasting relationships are developed. (more...)

புரட்டாசி 07, 2012

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் ஆர்பாட்டம்

யாழ். பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்பாட்டம் பேரணியை யாழ். பல்கலைக்கழக வாயிலில் நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் தங்களது பிரச்சனைகளை தீர்த்து நிலையான கல்வியை மாணவர்கள் கற்பதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளுமாறு கோரினர். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் எஸ்.தங்கராஜா கருத்து தெரிவிக்கையில், "கல்வி சார ஊழியர்களின் பிரச்சனைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும். எங்களின் சம்பள முரன்பாடு முதற்கொண்டு ஏனைய பிரச்சனைகளை பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு, உயர் கல்வி அமைச்சு மற்றும் அரசு ஆகியன உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

புரட்டாசி 07, 2012

TORONTO FILM FESTIVAL

Watch movie all about SRI LANKAN CIVIL WAR  

Three years since its end, Him, Here After is the first film to deal seriously with the social aftermath of the 26-year-long Sri Lankan Civil War, and one of very few made in the Tamil language by a Sinhalese writer/director (Asoka Handagama). Following rehabilitation, a Tamil rebel soldier (Dharshan Dharmaraj) returns home to be greeted with suspicion, animosity and accusations. With no money and shunned by his remote community, he soon becomes embroiled in burgeoning smuggling ring. For those unfamiliar with the conflict, some parts of the plot will be a hard to follow, yet others are overdone with some scenes becoming amateurishly cheesy, detracting from some beautifully artistic and quietly telling shots. The inescapable poverty and universal acceptance that life means nothing more than not dying is heart-breaking, which Handagama handles with sensitivity and undeniable sympathy. The pity of war is a tragedy that transcends country and culture, which is recognised here with subtlety and sadness, regardless of sides. There can be no doubt that this film marks an important point in reconciliation and social understanding for Sri Lanka

Schedule:

Friday September 7  
Cineplex Yonge & Dundas 6  
9:00 PM  
Monday September 10  
TIFF Bell Lightbox 2  
3:15 PM  
Saturday September 15  
TIFF Bell Lightbox 3  
9:30 PM

புரட்டாசி 07, 2012

இலங்கை இராணுவ வீரர்கள் 450 பேருக்கு இந்தியாவில் பயிற்சி

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு இந்தியாவில், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது’ என ராஜ்யசபாவில், மத்திய இராணுவ அமைச்சர் அந்தோணி தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜ்யசபாவில், திமுக, எம்.பி., கனிமொழி எழுத்து மூலமாக கேட்ட கேள்விக்கு மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி பதில் அளித்தார். “இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த இருவீரர்களுக்கு, தமிழ்நாட்டில் வெலிங்டன் இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மை தான். இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த, 450 க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு, நாட்டில் பல மாநிலங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், “தமிழ்நாட்டில் வெலிங்டன், கர்நாடகாவில் பெங்களூர் மற்றும் பெல்காம், கேரளாவில் கண்ணூர் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது’ என்றார்.

புரட்டாசி 07, 2012

இலங்கையிலிருந்து செல்வோரை தாக்குவதால் தமிழகத்துக்கு பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பு

தமிழக தினசரி தினமலர் கண்டனம்

இலங்கையில் இருந்து தமிழகம் வருபவர்கள் மீது, தமிழ் அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருவதால், இலங்கையிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இலங்கையில் இருந்து சிங்கள மக்கள் மட்டுமல்லாமல், தமிழர்களும் ஏராளமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலால் தமிழர்களும் பாதிக்கப்படுகின்றனர். தமிழகத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. இலங்கையிலிருந்து அரசாங்க முக்கியஸ்தர்கள் தமிழகம் வருவதற்கு சில அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சுற்றுலா வருபவர்களையும், விளையாட்டு வீரர்களையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை. (மேலும்....)

புரட்டாசி 07, 2012

முஸ்லிம் முதலமைச்சரை பெறுவதற்காகவே தேர்தலில் தனித்து போட்டியிடுகிறோம - ஹக்கீம்

முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை பெற்றுக் கொள்வதற்காகவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு தேர்தலில் தனித்துப் போட்டியிட முன் வந்தது ௭ன ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்துரையாற்றுகையில்;– கிழக்கு மாகாண சபை தேர்தல் ௭ங்களுக்குரிய அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை நாங்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (மேலும்....)

புரட்டாசி 06, 2012

கிழக்கின் தேர்தல்

உதயத்தை தருமா....? தாயக கனவை மீட்குமா....?

(சாகரன்)

கிழக்கு மாகாணம் 35 வீதம் தமிழர்களும், 35 வீதம் முஸ்லீங்களும், 29 வீதம் சிங்களவர் என்ற இனப் பரம்பலை தற்போது கொண்டுள்ளது. இதில் எந்த சிங்கள மகனும் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு போடப் போவது இல்லை. இதே போல் எந்த முஸ்லீம் மகனும் தமிழ் கட்சிகளுக்கு வாக்கு போடப் போவது இல்லை. தமிழ் கட்சி என்றால் அது இன்று கிழக்கில் தேர்தலில் நிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புதான். ஆனால் தமிழ் மக்கள் மத்தியிலும் முஸ்லீம் மக்கள் மத்தியிலிருந்தும் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு நிச்சயம் வாக்குகள் விழும். சிங்கள மக்களின் பெரும் பகுதி வாக்குகள் இதே கட்சிக்கு விழும். எனவே இனப்பரம்பல் அடிப்படையில் பார்க்கையில் கிழக்கின் தேர்தலில் பொது ஜன ஐக்கிய முன்னணிக்கே வெற்றி வாய்ப்புக்கள் அதிகம். இதற்கு அடுத்த படியாக சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்கு இருக்கின்றது. தேர்தல் முடிவுகள் ஆட்சி அமைக்க சிறிய குறை நிரப்பு தேர்தல் வெற்றியாளர்கள் தேவைப்படின் அதனை பொது ஜன ஐக்கிய முன்னணிக்கு வழங்க முஸ்லீம் காங்கிரஸ் தேர்தலுக்கு பின்பு நிச்சயம் தயாராக இருக்கும். இந்த வகையில் பொது ஜன முன்னணி ஆட்சி அமைக்கவே அதிகம் வாய்ப்புக்கள் இருக்கின்றன.  (மேலும்....)

புரட்டாசி 06, 2012

நியூட்டனின் (தலை)விதி!!   Newton's law!!! 

புரட்டாசி 06, 2012

மன்மோகன் சிங் ஒரு 'துயரமான மனிதர்’ - அமெரிக்க பத்திரிகை கடும் தாக்கு!

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஊழல் மலிந்த அரசை வழிநடத்தி  செல்வதாகவும், மவுனமாக இருக்கும் அவர் ஒரு துயரமான மனிதர் என்றும்  அமெரிக்காவின் 'தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை கடுமையாக விமர்சித்துள்ளது. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'டைம்’ பத்திரிகை பிரதமர் மன்மோகன்சிங்கை  அண்மையில் திறமை இல்லாதவர் என விமர்சனம் செய்து கட்டுரை வெளியிட்டிருந்தது.  இந்த நிலையில் அந்நாட்டின் மற்றொரு பிரபல பத்திரிகையான `தி வாஷிங்டன் போஸ்ட்'  அவரை ஊழல் மலிந்த அரசை வழி நடத்துபவர் என கடுமையாக தாக்கியுள்ளது. (மேலும்....)

புரட்டாசி 06, 2012

கிழக்கு தமிழர்களின் இருப்பை இல்லாதாக்குவதா த. தே.கூவின் கொள்க - த.ம.வி.பு.

விடுதலைப் புலிகள் இருக்கும் வரை வட, கிழக்கு இணைந்த தாயகம், விடுதலைப் புலிகள் போரில் தோல்வியடைந்ததும் வடக்கு, கிழக்கு என்ற பிரிப்பை ஏற்றுக் கொண்டு கிழக்குத் தேர்தலில் குதித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு ,கிழக்கு பிரிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்பதும் இத் தேர்தல் மூலம் வெளிப்படை என த.ம.வி.பு. கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். (மேலும்....)

புரட்டாசி 06, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது?

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் நேற்று செவ்வாய்கிழமை (04.08.2012)கொக்குவில், சின்னஊறணி, நாவற்கேணி ஆகிய பிரதேசங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதிச் செயலாளர் ஜெ.ஜெயராஜ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பிரச்சார நடவடிக்கையின் போது வாக்களிக்கும் விதம் பற்றி பரீட்சாத்தமாக விளக்கப்பட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் உரிய விதத்தில் அளிக்கப்படாமல் பெருமளவான வாக்குகள் நிராகரிக்கப்படுகின்றன. எனவே இவ்வாறான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுப்பதன் மூலம் அந் நிலைமையினை வெகுவாகக் குறைக்க முடியும் என ஜெயராஜ் அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.

புரட்டாசி 06, 2012

அமெ.வின் தேசியக் கடன்   16 லட்சம் கோடியைத் தாண்டியது 

அமெரிக்காவின் தேசி யக் கடன் 16 லட்சம் கோடி யைத் தாண்டியுள்ளது. கடந்த அதிபர் தேர்தலின் போது தான் அளித்த வாக் குறுதிகளையெல்லாம் காற் றில் பறக்கவிட்ட ஒபாமா, ஒவ்வொரு அமெரிக்க குடி மகனின் மீதும் 50 ஆயிரம் டாலர் கடன் சுமை ஏற்றி யுள்ளார் என்று தேசிய ஜன நாயக மாநாட்டில் பேசிய குடியரசுக் கட்சியினர் குற் றம் சாட்டியுள்ளனர். கடந்த 2009ம் ஆம் ஆண்டு அமெரிக்காவின் அதிபராக பாரக் ஒபாமா பதவியேற்றார். அப்போது, அமெரிக்காவின் கடன் சுமை 10 லட்சத்து 60 ஆயி ரம் கோடி டாலராக இருந் தது. ஆனால், அவர் பதவி யேற்றபிறகு, அமெரிக்கா வின் கடன் சுமை 6 லட்சம் கோடி டாலரை தாண்டி யது. மாற்றம் வேண்டும் என்ற அடைமொழியை மையமாகக் கொண்டு மக்களின் ஆதரவைப் பெற்ற அவர், அமெரிக்காவின் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என ஒவ்வொரு வரையும் மேலும் கடனாளி யாக மாற்றியுள்ளார். இக்க டன் தொடர்ந்து அதிகரித்து வந்தால், ஒரு கட்டத்தில் அமெரிக்க பொருளாதாரத் தின் மீது மக்களுக்கிருக்கும் நம்பிக்கை கேள்விக்குறி யாகிவிடும்.

புரட்டாசி 06, 2012

விபத்தல்ல... கொலை...

தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது வண்ண வண்ண மத்தாப்புகள் பூத்துச் சிரிக் கின்றன. வாண வெடிகள் மக்களிடம் மகிழ்ச்சி யை உருவாக்குகின்றன. ஆனால் அதை உற் பத்தி செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து அந்த பட்டாசுகளை தயாரிக் கின்றனர். தமிழகத்தின்முக்கியமானபட்டாசுத்தயாரிப்பு மையமான சிவகாசியிலிருந்து வரும் தகவல்கள் இதயத்தைப் பிளப்பதாக உள்ளன. புதனன்று சிவகாசி முதலிப்பட்டி என்ற இடத்தில் அமைந்துள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் பலியானவர்கள் விபரம்முழுமையாகத் தெரியவரவில்லை என்றாலும், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் இன்னமும் முழுமையாக மீட்கப்படவில்லை. படுகாயமடைந்தவர்களில் எத்தனை பேர் உயிர் பிழைக்க வாய்ப்பு உண்டு என்று தெரியவில்லை. (மேலும்....)

புரட்டாசி 06, 2012

மொத்தம் 37 தொகுதிகளில் 33 இல் ஐ.ம.சு.மு. பெருவெற்றியீட்டும் - அமைச்சர் டளஸ்

மூன்று மாகாணங்களி லும் தேர்வு நடை பெறும் 37 தொகுதிகளில் 33 ல் ஐ.ம.சு.மு. பெருவெற்றியீட்டும். கிழக்கில் உள்ள 4 தொகுதிகளிலே ஐ.ம.சு. முவுக்கு போட்டியிருக்கும் எனவும் ஐ.தே.க. 3 தொகுதிகளில் மட்டும் 30 வீத வாக்குகளை பெறும் எனவும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கிழக்கிற்கு விஜயம் செய்து மக்கள் சந்திப்புகளை நடத்தியதையடுத்து அங்கு ஐ.ம.சு.முவுக்கான ஆதரவு 33 வீதத்தில் இருந்து 40-41 வீதமாக உயர்ந்துள்ளதாக கூறிய அவர் கிழக்கில் 4 வது இடத்தை பிடிக்கவே ஐ.தே.கவுக்கு போட்டியுள்ளதாகவும் கூறினார். சுயாதீனமான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழுவொன்று நடத்திய கருத்துக் கணிப்பின்படியே இந்த தேர்தல் முடிவுகள் கிடைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் ஐ.ம.சு.மு. வெற்றயீட்டும். இதில் 2 தொகுதிகளில் மட்டும் ஐ.தே.க. 30 வீதம் வாக்குகளை பெறும். வடமத்திய மாகாணத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் இதே போன்றே ஐ.ம.சு.மு. வெல்லும். இங்கு ஒரு தொகுதியில் மட்டும் ஐ.தே.க. 30 வீதம் வாக்குகளை தாண்டும்.

புரட்டாசி 05, 2012

தமிழ் நாட்டில்

யாத்திரிகள் மீது மெற்கொண்ட வன்முறைகளை கண்டிக்கின்றோம்

(சாகரன்)

யேசு பிரானை வழிபடும் இலங்கை யாத்திரிகர்கள் தமிழ் நாட்டில் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலிருந்து திருச்சி விமான நிலையம் வரை துரத்தி, துரத்தி தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்களைத் தாக்கியவர்கள் சீமான் ஐ தலைவராக உள்ள நாம் தமிழர் கட்சியினரும், வை.கோ ஐ தலைவராக கொண்ட ம.தி.மு.க கட்சியினரும் ஆவர். தமிழ நாடு பொலிஸார் விரைந்து பாதுகாப்பு கொடுத்த சூழலிலும் இது தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இறுதியில் யாத்திரிகர்கள் தமது சுற்றுலாப் பயணத்தை இடையில் நிறுத்திவிட்டு விஷேட விமானம் மூலம் தாயகம் திருமபியுள்ளனர். யாத்திரிகர்களின் வாகனங்கள் கல் வீசித் தாக்கப்பட்டுள்ளன. இவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் இன்னும் கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். (மேலும்....)

புரட்டாசி 05, 2012

"நாங்கள் என்ன தான் பாவம் செய்தோம்?'’ இலங்கை நாட்டினர் கதறல்

எங்கள் நாட்டில் நடந்த சம்பவத்துக்கு, எங்களை ஏன் துன்புறுத்தவேண்டும். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?,'' என்று இலங்கை நாட்டிலிருந்து வந்த பெண்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இலங்கை, புத்தளம் மாவட்ட,ம் சிலாவம் பகுதியைச் சேர்ந்த 184 பேர் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவுக்காக, கடந்த இரண்டாம் தேதி விமானம் மூலம் தமிழகம் வந்தனர். அவர்கள், நேற்று முன்தினம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா கோவிலுக்கு பிரார்த்தனை செய்ய சென்றனர். இதையறிந்த பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், இலங்கை நாட்டினருக்கு எதிர்ப்பு தெரிவித்து, பூண்டிமாதா கோவிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நேற்று காலை அவர்கள் வேளாங்கண்ணி கோவிலில் பிரார்த்தனை செய்ய சென்ற போதும், தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தோர் போராட்டம் நடத்தினர்.  (மேலும்....)

புரட்டாசி 05, 2012

இம்மாதம் 14ஆம் திகதி நவநீதம்பிள்ளை தலைமையிலான உயர்மட்ட குழு இலங்கை வருகிறது

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்ஸிலின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளையின் தலைமையிலான உயர்மட்டக் குழு இம்மாதம் 14ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இந்த உயர்மட்டக் குழுவின் விஜயம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக ஐநா மனித உரிமைக் கவுன்ஸில் அறிவித்துள்ளது. இலங்கைக்க வருகைதரவுள்ள இவ்வுயர்மட்டக் குழு வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு விஜயம் செய்து மீள் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆராயவுள்ளதுடன், அரசினால் முன்வைக்கப்பட்ட செயற்றிட்டங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 05, 2012

இலங்கை பயணிகள் மீது தாக்குதல்

திருச்சி, செப். 4: தமிழகத்தில் வேளாங்கண்ணி, பூண்டி மாதா கோயிலுக்கு வந்த சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவர்கள் பயணம் செய்த இரு வேன்களின் கண்ணாடிகள் உடைந்தன. இதையடுத்து, அவர்கள் திருச்சி விமான நிலையத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு, சிறப்பு விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இலங்கையில் உள்ள மேற்கு கடற்கரை மாவட்டமான புத்தளத்திலிருந்து வெவ்வேறு குழுக்களாக ஆண்கள் 65 பேர், பெண்கள் 83 பேர், குழந்தைகள் 36 பேர் என மொத்தம் 184 பேர் தமிழகத்துக்கு செப்டம்பர் 2-ம் தேதி வந்தனர். இவர்கள் பூண்டி மாதா கோயில், வேளாங்கண்ணி மாதா கோயில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வழிபட திட்டமிட்டிருந்தனர். (மேலும்....)

புரட்டாசி 05, 2012

திருச்சியில் பரபரப்பு இலங்கை பக்தர்கள் சென்ற வாகனங்கள் மீது கல்வீச்சு

அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் வேளாங்கண்ணியிலிருந்து மீண்டும் இலங்கை செல்வதற்காக 7 வேனில் திரும்பிய இலங்கை பக்தர்கள் மீது திருச்சி அருகே தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 வேன்கள் சேதமடைந்தன. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலுள்ள புனித ஆரோக்கியமாதா பேராலய திருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக இலங்கை புத்தாளம் பகுதியை சேர்ந்த 62 ஆண்கள், 86 பெண்கள், 36 குழந்தைகள் என 184 பேர் கடந்த 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு விமானத்தில் திருச்சி வந்தனர். அங்கிருந்து தஞ்சை அருகே உள்ள பூண்டி மாதா கோயிலுக்கு சென்றனர். மறுநாள் மாதாவை பிரார்த்தனை செய்தனர். இலங்கை பக்தர்கள் வருகை குறித்து அறிந்த மதிமுக, நாம்தமிழர் கட்சியினர் அங்கு திரண்டனர். அவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். (மேலும்....)

புரட்டாசி 05, 2012

இலங்கை யாத்ரீகர்கள் வாகனம் மீது தாக்கு

மறு அறிவிப்பு வரை இலங்கை மக்கள் தமிழகம் செல்ல வேண்டாம் என அந்நாட்டு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்நிலையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை யாத்தீகர்கள் வாகனம் மீது மர்மக்கும்பல் கல்வீசி கண்ணாடியை உடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேளாங்கண்ணிக்கு வந்த இலங்கை யாத்ரீகர்கள் சென்ற வேன்மீது கல்வீசி தாக்கப்பட்டது. திருச்சி காட்டூர் அருகே வந்தபோது ஒரு வன்முறைக்கும்பல் இந்த வாகனத்தை மறித்து கண்ணடியை உடைத்தது. சம்பவம் அறிந்த போலீசார் விரைந்து வந்து இலங்கைவாசிகளை மீட்டனர். பின்னர் திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களை இலங்கைக்கு பத்திரமாக அனுப்பும் ஏற்பாடு நடந்து வருகிறது.(மேலும்....)

புரட்டாசி 05, 2012

இலங்கையில் மறு குடியமர்த்தல் பணி, பார்வையிட வருகிறது ஐ.நா., குழு

இலங்கையில் நடைபெற்று வரும், மறு குடியமர்த்தல் பணிகளை பார்வையிட, ஐ.நா., நிபுணர் குழு, வரும், 14ம் தேதி, அங்கு செல்கிறது. இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிப் போரின் போது, அப்பாவிப் பொதுமக்கள், வேண்டுமென்றே, குறிவைத்து தாக்கிக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, மார்ச் மாதம், ஜெனிவாவில் நடந்த, ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தின் போது, இலங்கை அரசுக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது.அதில், "இறுதிப் போருக்குப் பின், இலங்கை அரசு அமைத்த கமிஷனின் பரிந்துரைகளை, விரைவாக நிறைவேற்ற வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டது.மேலும், போரில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்காக, செயல் திட்டம் ஒன்றை, இலங்கை அரசு உருவாக்க வேண்டும். ஐ.நா., தீர்மானத்தில் கூறப்பட்ட பரிந்துரைகளை, நிறைவேற்ற தேவையான ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, இலங்கை அரசுடன் கலந்து ஆலோசித்த பின், ஐ.நா., மனித உரிமை கமிஷன் அலுவலகம் வழங்கும் என்றும், தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டது. (மேலும்....)

புரட்டாசி 05, 2012

இலங்கை கால்பந்து வீரர்களை அனுப்பியது சரியல்ல - கருணாநிதி

இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களைத் திருப்பி அனுப்பியது சரி அல்ல என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியாவில் இருந்து விளையாட்டு வீரர்கள் இலங்கைக்குச் செல்வதும், அங்கிருந்து வீரர்கள் இங்கு வருவதும் வாடிக்கையாக நடைபெறும் விஷயங்கள். எனவே, விளையாட்டு விவகாரங்களில் இலங்கை வீரர்களை மீண்டும் திருப்பி அனுப்புதல் போன்ற முறைகளைக் கடைப்பிடிக்கத் தேவையில்லை. தமிழகத்துக்கு வரும் பக்தர்களைத் தடுத்து நிறுத்துதல் என்பதைவிட, இலங்கை ராணுவத்தினருக்கு இங்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்றுதான் திமுக வலியுறுத்திச் சொல்லும். ஏனெனில், இலங்கை ராணுவம் மூலமாகத்தான் தமிழர்களை இழந்தோம். தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபட்ச, இந்தியாவுக்கு வரும்போது சிறப்பாக வரவேற்கப்படுகிறார் என்றால் அதனை மனம் ஒப்பி ஏற்க முடியாது.

புரட்டாசி 05, 2012

தமிழகம் வரும் இலங்கை யாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு இந்தியா உத்தரவாதம்

இந்தியாவுக்கு வரும் இலங்கையின் யாத்திரிகர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை யாத்திரிகர்கள், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு உறுதிப் படுத்தப்படும் விதத்தில் தமிழ்நாடு மாநில அரசுடனும் பேச்சு நடத்தப்படும் எனவும் இந்திய வெளிவிவகார அமை ச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தமிழ் நாடு திருச்சியில் மாதா கோயி லுக்குச் சென்ற யாத்திரிகர்கள், சில குழுவினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து இலங்கை அரசு அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்ததுடன் மறு அறிவித்தல்வரை தமிழகம் செல்ல வேண்டாம் என அறிவித்தல் விடுத்துள்ளது. இலங்கை அரசு விடுத்துள்ள பயண எச்சரிக்கையை யடுத்தே இந்திய வெளிவி வகார அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கலை, கலாசார பாரம்பரிய உறவுகள் தொடர்ந்தும் இருந்து வருகிறது. கடந்தாண்டு இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் சுமார் இரண்டு இலட்சம் பேருக்கு இந்தியாவுக்கு செல்வதற்காக விஸா வழங்கியுள்ளன. இதேபோல் 2011 இல் இந்தியாவிலிருந்து சுமார் 1,75,000 பேர் இலங்கைக்கும் வந்து சென்றுள்ளனர் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

புரட்டாசி 05, 2012

4000 மில்லியன் ரூபா செலவில் சுன்னாகத்தில் அனல் மின் நிலையம்

யாழ். மாவட்டத்திற்கு நூறு வீதம் மின்சார வசதி அளிக்கும் வகையில் யாழ். சுன்னாகம் பிரதேசத்தில் 24 மெகா வோர்ட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமொன்றை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. இதற்காக, மின்சார சபை 4000 மில்லியன் ரூபா முதலீடு செய்ய உள்ளது. கிளிநொச்சி, சுன்னாகம் அதி சக்தி வாய்ந்த மின் பரிவர்த்தனை தொகுதி பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் கிளிநொச்சி அடங்கலான ஏனைய பிரதேசங்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை வழங்கும் வகையில் இந்த அனல் மின் நிலையம் அமைக்கப்படுகிறது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்கவின் ஆலோசனை பிரகாரம் அமைக்கப்படும் இந்த அனல் மின் நிலையத்தில் 3 இயந்திரங்கள் நிர்மாணிக்கப்படும். இலங்கையுடன் இணைந்த உள்நாட்டு கம்பனியான லக்தனவ்வ நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. 4 மாத காலத்தினுள் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு யாழ் தீபகற் பத்திற்கான மின்சார தொகுதியுடன் இணைக்கப்படும் எனவும் அமைச்சு கூறியது. அனல் மின் நிலையத்திற்கான 3 பிரதான உற்பத்தி இயந்திரங்களும் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தன. இங்கிருந்து காங்கேசன் துறை வரை எடுத்து வரப்பட்ட இந்த இயந்திரங்கள் நேற்று சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தை வந்தடை ந்தன. இந்த திட்டத்தினூடாக யாழ்ப்பாண இளைஞர் யுவதிகள் 150ற்கும் அதிகமானவர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைக்க உள்ளது. ஜனவரி மாதம் முதல் 24 மெகாவோர்ட் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 72 வீதமான வடபகுதி மக்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.

புரட்டாசி 05, 2012

இலங்கையர்கள் தாக்கப்பட்டமைக்கு அஸ்வர் எம்.பி. கண்டனம்

இலங்கையிலி ருந்து தமிழ் நாட் டுக்கு யாத்திரை சென்றிருந்த யாதிரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவ த்தை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். கிண்ணியாவில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இலங்கைத் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலிருந்து கதிர்காமக் கந்தன் ஆலயத்துக்கு பாதயாத்திரை செல்லும் தமிழ் யாத்திரிகர்களை பெரும்பான்மையின சிங்கள மக்கள் மிகுந்த இன்முகத்துடனும், சந்தோசத்துடனும் மலர்மாலைகளை அணிவித்து அவ்வப்பிரதேசங்களில் வரவேற்கின்றார்கள். (மேலும்....)

புரட்டாசி 04, 2012

தமிழகம் செல்லவேண்டாம் -  இலங்கை அரசு அறிவுறுத்தல்!

இலங்கையர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தமிழ் நாட்டுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு தமது நாட்டு மக்களை அறிவுறுத்தி உள்ளது. தமிழகம் வந்த இலங்கையைச் சேர்ந்த கால்பந்தாட்ட அணியினர்  முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்நிலையில், நேற்று தஞ்சையை அடுத்த பூண்டி மாதா கோவிலுக்கு வந்த இலங்கை பயணிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதையடுத்து அவர்கள் சொந்த நாடு திரும்ப முடிவெடுத்துள்ளனர். இந்த சூழ்நிலையிலேயே இலங்கையின் வெளியுறவு அமைச்சகம், மேற்கூறிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் சென்றுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கம் இந்திய மத்திய அரசாங்கத்திடம் கோரியுள்ளது.அதேவேளை, தமிழ்நாட்டை தவிர்த்த ஏனைய இந்திய மாநிலங்களில் இலங்கையர்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

புரட்டாசி 04, 2012

ரொஹிங்கியா முஸ்லிம்களை வெளியேற்றுவதற்கு ஆதரவாக மியன்மாரில் ஊர்வலம்

ரொஹிங்கியா முஸ்லிம்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் மியன்மார் ஜனாதிபதி தைன் செயினின் திட்டத்திற்கு ஆதரவளித்து நூற்றுக்கணக்கான பெளத்த துறவிகள் ஊர்வலம் நடத்தியுள்ளனர். மியன்மாரின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மன்டலெயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பிரமாண்ட ஊர்வலம் இடம்பெற்றது. இதன் மூலம் மியன்மாரில் ரொஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் அந்நாட்டு பெளத்தர்களுக்கு இடையிலான இன முறுகல் மேலும் தீவிரம் அடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுனில் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் 83 பேரளவில் கொல்லப்பட்டதோடு ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இந்நிலையில் ஊர்வலத்தில் பங் கேற்ற பெளத்த துறவிகள், ‘ஜனாதி பதிக்கு ஆதரவளித்து எமது தாய் நாட்டை பாதுகாருங்கள்’ என எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்த ஊர்வலத்திற்கு தலைமை தாங்கிய விரது என்ற பெளத்த துறவி ஏ.எப்.பி. செய்தி சேவைக்கு கூறும் போது, ‘இந்த ஊர்வலத்தின் மூலம் ரொஹிங் கிக்கள் மியன்மார் இனக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை உலகுக்குத் தெரியப்படுத்தியுள் ளோம்’ என்றார். மேற்படி பெளத்த துறவி இஸ்லாமிய எதிர்ப்பு பிரசுரங்களை விநியோகித்ததற்காக கடந்த 2003 ஆம் ஆண்டு 25 ஆண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளானார்.

புரட்டாசி 04, 2012

மூன்று மாகாண சபை தேர்தல்

பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் முடிவு; கட்சிகள் இறுதிநேர பரபரப்பு

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நாளை (5) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் இறுதிச் சுற்று தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள் ளன. தேர்தல் நடை பெறவுள்ள அம் பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை, இரத்தினபுரி, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய ஏழு மாவட்ட ங்களிலும் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதனையும் காணமுடிகிறது.  (மேலும்....)

புரட்டாசி 04, 2012

கிழக்குத் தேர்தல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவரின் பித்தலாட்டப் பேச்சுகள்!

(வி.சந்திரகுமார் - திரிகோணமலை)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற ஆருடங்கள் ஒருபுறமிருக்க, இத்தேர்தல் பலரின் முகத்திரையையும் பித்தலாட்டங்களையும் கிழித்து வைத்திருக்கிறது. முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் உள்ளக் கிடக்கைகளையும், முன்னுக்குப் பின் முரணனான போக்குகளையும் தாராளமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. அதிலும் அதன் தலைவர் இரா.சம்பந்தனின் நிதானமிழந்த பேச்சுகள், அவரது கபடத்தனத்தை மட்டுமின்றி சிறுபிள்ளைத்தனத்தையும் புட்டு வைக்கின்றன. (மேலும்....)

புரட்டாசி 04, 2012

மட்டு-கல்முனை காத்தான்குடி

4 ஆவது சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் ஜனாதிபதி

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் 4 ஆவது சுரங்கப்பாதையை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததோடு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்திலும் கலந்து கொண்டு உரையாற்றியதாக அங்கிருக்கும் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமாண எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,சிரேஷ்ட அமைச்சர் பௌசி மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் ,கிழக்கு மாகாண சபை மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்கள், பெரும் திரளான பொது மக்கள்,பாடசாலை மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இலங்கையில் குறிப்பாக கொழும்பு ,பொரளை ,கண்டி ,குருநாகல்,காத்தான்குடி ஆகிய பிரதேசங்களில் மாத்திரம் சுரங்கப்பாதை நிறுவப்பட்டுள்ளது. இங்கு அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட சுரங்கப்பாதை கிழக்கு மாகாணத்தின் முதலாவது சுரங்கப்பாதை என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்டாசி 04, 2012

ஆஸி. நோக்கிச் சென்ற பலரது நிலை இதுவரை தெரியாத நிலையில் குடும்பத்தார் பரிதவிப்பு

மன்னார் மாவட்டத்தில் இருந்து கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா சென்ற பலரது நிலைமை இதுவரை என்னவென்று தெரியாத நிலையில் அவர்களுடைய குடும்பங்களும்,உறவினர்களும் பெரும் துயரத்தில் வாழ்ந்து வருவதாகத் தெரிய வருகின்றது. தற்போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல இலட்சம் ரூபா பணத்தைக் கொடுத்து படகுகள் மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றனர். இந்த நிலையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அவுஸ்திரேலியா செல்வதாக சென்றுள்ளனர். இவர்களில் பலர் ஆஸி.யை சென்றடைந்த நிலையில் தமது குடும்பத்தாருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளனர். ஆனால் அதிகளவானவர்கள் இதுவரை எவ்வித தொடர்புகளும் இன்றி இருப்பதாக உறவினர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

புரட்டாசி 04, 2012

இலங்கையரை நாடு கடத்தும் கோரிக்கை கபடத்தனமானது - அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர்

புகலிடம் கோரும் சகல இலங்கையர்க ளையும் நாடு கடத்த வேண்டுமென்ற எதிர்க் கட்சியின் கோரிக்கை அசாதாரணமானதும், கபடத்தனமானதெனவும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு வருவோரை இடை மறித்து உடனடியாக இலங்கையுடன் ஒப்பந்தம் செய்து அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டுமென் றும் எதிர்க்கட்சி கேட்டு ள்ளது. அவுஸ்திரேலிய மண்ணில் காலடி எடுத்து வைக்கவிடாமல் அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவேண்டுமென எதிர்க் கட்சி வெளிவிவகார பேச்சாளரான ஜுலி பிஷப்பும், குடிவரவு பேச்சாளரான ஸ்கொட் மொரிசனும் தெரிவித்துள்ளனர். 81 இலங்கையர்களுடன் கொக்கோஸ் தீவுக்கு வந்த ஒரு படகை அவுஸ்திரேலிய அதிகாரிகள் இடை நிறுத்தி வைத்தனர். அகதிகள் பிரகடனத்தை யும், சர்வதேச சட்டத்தையும் மீறுவதே இந்த யோசனையின் முதலாவதாகுமென ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்தார்.

புரட்டாசி 04, 2012

க.பொ.த. உயர்தரத்தில் இலக்கை அடைய ஆசிரியரும் பெற்றோருமே வழிகாட்டிகள்

யாழ். குடாவில் பரீட்சைப் பெறுபேறு வீழ்ச்சிக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டியவை

க.பொ.த உயர்தரப் பெறுபேறு வீழ்ச்சிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் மாணவர்கள் சரியான பாடத் தெரிவினை மேற்கொள்ளாமையேயாகும். பாடத் தெரிவினை மேற்கொள்ப வர்கள் மாணவர்களும் அவர்களது பெற்றோருமேயாவர். மாணவர்கள் தங்களது விருப்பத் திற்கேற்ப பாடத் தெரிவினை மேற்கொள்ள பெற்றோர் அனுமதிக்க வேண்டும். ஊரில் உள்ள மற்றைய பிள்ளைகளுடன் ஒப்பிட்டு உங்கள் பிள்ளையை கட்டாயப்படுத்தக் கூடாது. அதே வேளை மாணவர்களும் தங்களுக் குப் பிடித்த தங்களால் படித்து முடிக்கக் கூடிய பாடத் தெரிவினை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது கண்டிப்பாக இருப்பதில்லை. ஏனெனில் பல பெற்றோர் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் ஊக்கமும் கண்டிப்பும் க. பொ. த உயர்தரத்தில் பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை. இதனால் சில மாணவர்கள் வீட்டுக்கு அடங்காத பிரச்சினைக்குரியவர்களாக மாறுகின்றார்கள். (மேலும்....)

புரட்டாசி 04, 2012

கொய்யா மரத்தின் பயன்கள் ஏராளம்

கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு, பேதி போன்ற உபாதை களுக்கு இவை பெரிதும் குணமளிக் கின்றன. கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் குடற்புண் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு நீரிழிவைக் குறைக் கும் தன்மையுண்டு. கொய்யாக் காய் களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சீனியின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றது. கொய்யாக் காய்களை உணவுப் பொருளாக சமைத்து சாப்பிடுகிறார்கள். கொய்யாக் காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி வெஜிடபிள் சாலட்டில் சேர்க்கிறார்கள். கொய்யாப் பழத்தின் கூழ், ஜெல்லி என பல்வேறு உணவுப் பொருட்களாக மாறி மார்க்கட்டில் உலா வருகின்றன.

புரட்டாசி 03, 2012

கிழக்குத் தேர்தலின் அரசியல் பின்னணியும் கட்சிகளின் கயமையும்

(தவகுமாரன்)

கிழக்குத் தமிழர்கள் மீதான யாழ்ப்பாண மேலாதிக்க வாத ஒடுக்கு முறைக்கும், இஸ்லாமியத் தமிழர்களைப் பிளவுபடுத்துவதிலும் தமிழரசு, தமிழர் விடுதலைக் கூட்டணி, இப்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் நீண்டகால ‘சாணக்கியம்’ பெரும் பங்கு வகிக்கிறது. பிள்ளையான் கருணா போன்ற அடிதடி அரச கும்பல்களை விட்டால், முஸ்லீம் காங்கிரஸ் என்ற அரச அடிமை அடுத்த சாபக் கேடு. ஒரு புறத்தில் தமிழர்கள் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான முரண்பாடு தூண்டப்பட அதன் விளைவுகளை இலங்கை அரச பாசிசத்திற்கு சார்பாக மாற்ற முஸ்லீம் காங்கிரசே பயன்பட்டது. இலங்கையில் தொடரப்போகும் முஸ்லீம்களுக்கு எதிரான அரச வன்முறைகளுக்கும், இனச் சுத்திகரிப்பிற்கும் எதிராக இவர்கள் குரல்கொடுக்கப்போவதில்லை. அது அவர்களின் வரலாறும் இல்லை. வேண்டுமானால் தமிழர்களுக்கு எதிரான முரண்பாட்டை அரச பக்கத்திலிருந்து தூண்டி விடுவார்கள். ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் இரண்டு தேசிய இனங்களையும் அழிக்கும் அரசின் கயமைத் தனத்திற்கு ஏஜண்டாகத் செயற்படுவார்கள். (மேலும்....)

புரட்டாசி 03, 2012

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்!

வடக்கு நோக்கி சுற்றுலாப்பயணிகள் படையெடுத்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.இரண்டாம் தவணை விடுமுறை தினத்தை கொண்டாட பெரும்பாலான சிங்கள மக்;கள் இம்முறை வடக்கையே தெரிவு செய்திருந்தனர்.குறிப்பாக வன்னி மற்றும் யாழ்ப்பாணமே அவர்களது தெரிவாக இருந்தது.முள்ளிவாய்க்காலில் உள்ள போர் காட்சியகம் மற்றும் பிரபாகரனது வதிவிடமென கூறிக்கொள்ளும் முகாம் என்பவை அவற்றினுள் முக்கியமானவை. அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் நயினாதீவும் குறிப்பிடத்தக்கது. ஓரு நாளில் மட்டும் 80 ஆயிரம் பேர் நயினாதீவிற்கு பயணித்து சாதனை புரிந்துள்ளனர்.அதே போன்று பத்து மில்லியனிற்கு மேற்பட்டோர் வடக்கிற்கு பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.மிகவும் ரகசிய விஜயமாக அவரது விஜயம் வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பயண விபரங்கள் மறைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் அவரால் அரியாலைப்பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களுககெ வழங்கப்பட்ட சூரிய மின்கலங்கள் பற்றி கண்டறியவே அவரது விஜயம் அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது. நல்லூரிற்கும் அவர் பயணித்திருந்தார்.

புரட்டாசி 03, 2012

கே.பி உடன் உல்லாசப் பயணம் சென்ற மேலும் இரண்டு பிரித்தானியத் தமிழர்கள்

சிறுபான்மைத் தேசிய இனங்கள் சூறையாடப்படும் இலங்கையில் அந்த நாட்டின் அரச பயங்கரவாதிகளில் ஒருவராக இணைந்துகொண்ட கே.பி என்ற முன்னை நாள் விடுதலைப் புலிகள் பிரதானியைச் சந்தித்து ‘ஆசிபெற’ புலம்பெயர் நாடுகளிலிருந்து பணம்படைத்த தமிழர் மேட்டுகுடி கும்பல் ஒன்று படையெடுக்கின்றது. தீவிர புலி ஆதரவாளர்களாகவும், புலி எதிர்ப்பாளர்களாகவும் தம்மை வெளிக்காட்டிக்கொண்ட இவர்களில் பிரண்ட் நகரசபை கவுன்சிலர் நகீரதன் என்ற முன்னை நாள் புலி ஆதரவாளர் இலங்கைக்குச் சென்று கே.பி மற்றும் இனக் கொலையாளி கோதாபய ஆகியோரைச் சந்தித்தமை குறித்து இனியொரு வெளிப்படித்தியிருந்தது. இது இந்த நபர்களின் தனி நபர்சார்ந்த வாழ்க்கைப் பிரச்சனை அல்ல. மக்கள் சார்ந்த அரசியல் பிரச்சனை. (மேலும்....)

புரட்டாசி 03, 2012

சம்பந்தன் பற்றி பிள்ளையான்  சொன்னவை

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=SXce8q682-o#!

புரட்டாசி 03, 2012

Pillaiyan Predicts an Easy win for UPFA in the East

(By K.T.Rajasingham)

Sivanesathurai Chanthirakanthan alias Pillaiyan said that the ruling United Peoples Freedom Alliance would easily win in the Eastern Provincial Council election, despite the Jaffna leadership of the Tamil National Alliance were bent on misleading the Tamils of the Eastern Province. The former Chief Minister said that they are facing a stern electoral battle, but their victory is assured. He alleged that though the TNA Leader R. Sampanthan is a matured politician, he is bent on releasing information contrary to his political maturity. Sivanesathurai Chanthirakanthan said that Mr. Sampanthan has recently uttered that the TNA would win 8 seats in the Batticaloa district, 5 in Trincomalee and in Amparai 4 and would obtain the 2 bonus seats and thus would win 19 seats in a 37-member Provincial Council. (more....)

புரட்டாசி 03, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை அகதிகளை நாடுகடத்த வேண்டும்

அகதி அந்தஸ்துக்கோரி அவுஸ்திரேலியா வந்துள்ள இலங்கையர்களை நாடு கடத்துமாறு அவுஸ்திரேலிய பிரதி எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆளும் கட்சியில் கூட்டணியாகவுள்ள பிரதி எதிர்க் கட்சித் தலைவர் ஜூலி விசப் என்பவரே சமஷ்டி அரசாங்கத்தைக் கேட்டுள்ளார். இலங்கையில் சிவில் யுத்தம் முடிந்து விட்டது. எனவே, இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்தை சமஷ்டி அரசு வழங்கக் கூடாது. அநேக இலங்கையர்கள் புகலிடம் கோருபவர்கள் அல்லர். பதிலாக பொருளாதார நோக்கிலேயே அவர்கள் நாடு கடந்து வருவதாக பிரதி எதிர்க்கட்சித் தலைவர் ஜூலி பிஷப் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய சட்ட முறைமைகளுக்குள் அவர்கள் பிரவேசிக்க முயலும் முன்னர் அவர்கள் நாடு கடத்தப்பட வேண்டுமென்றும் அவர் கூறியுள்ளார். இலங்கைக் கரைகளில் இருந்து அநேகமான படகுகள் புறப்படுவதை தடுப்பதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டு வருகிறது. ஆனாலும் எப்படியோ இங்கு வருவோரை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப உடனடி ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் ஜூலி பிஷப் தெரிவித்தார்.

புரட்டாசி 03, 2012

மட்டக்களப்பு விமான நிலைய பணிகள் ஜனாதிபதியால் இன்று ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று ஆரம்பித்து வைக்கவுள் ளார். இலங்கையிலுள்ள உள்ளூர் விமான நிலையங் ளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக மட்டக்களப்பு விமான நிலையம் தெரிவு செய்யப்பட்டதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்தின் பயணிகளையும் இறங்கு துறை கட்டட நிர்மாண பணிகளையும், விமான நிலையத்தின் 1700 மீற்றர் நீளம் கொண்ட விமான ஓடு தளத்தின் மீள் தளமிடல் பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார். கட்டட நிர்மாணப் பணிகளை விமானப் படையினர் மேற்கொள்வதுடன் விமான ஓடுபாதை மீள் தளமிடல் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறுப்பேற்றுள்ளது. அமைச்சர் பிரியங்கர ஜயரட்ணவின் அழைப்பில் ஜனாதிபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைப்பதுடன் பிரதி அமைச்சர்கள் முரளிதரன், ஹிஸ்புல் லாஹ் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

புரட்டாசி 03, 2012

ஒசாமாவின் சடலத்தை அடையாளப்படுத்தியது ஒரு சிறுமி

ஒசாமா பின் லாடன் சடலத்தை ஒரு சிறுமியே அடையாளம் காட்டியதாக அந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை வீரர் தகவல் அளித்துள்ளார். அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லாடன் மீதான அமெரிக்காவின் நேவி சீல் கடற்படை வீரர்களின் தாக்குதலில் பங்கேற்ற வீரர் ஒருவர் அதுகுறித்த விபரங்களை உள்ளடக்கி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘நோ ஈசி டே’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகம் எதிர்வரும் 4 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. இந்த புத்தகத்தில் உள்ளடங்கியுள்ள விபரங்கள் ஊடகங்களில் கசிந்து வருகின்றன. ஏற்கனவே நேவி சீல்ட் வீரர்கள் ஒசாமாவை நெருங்கும் போது அவர் இறந்து கிடந்ததாக அந்த புத்தகத்தில் இருந்து விபரம் வெளியானது. இந்நிலையில் அவரது சடலத்தின் அருகில் இருந்த இரு மனைவிகளும் ஒசாமா பின்லாடனை அடையாளப்படுத்த மறுத்துள்ளனர்.  மாடியின் கீழ் பகுதியில் இருந்த சிறுமி ஒருவரை அழைத்து கேட்டபோது ஒசாமா பின்லாடன் என அந்த சிறுமி கூறியதாகவும் மேற்படி புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை குறித்த நேவி சீல்ட் வீரர் மார்க் ஓவன் என்ற புனைப் பெயரில் எழுதியுள்ளார். ஆனால் இவரது உண்மையான பெயர் மெட் பிஸ்சொனெட் (36) ஆகும்.

புரட்டாசி 03, 2012

சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! - பழ.நெடுமாறன்

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மை​யானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், 'விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது’ என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார். இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்று சொல்லாமல், புளி இருக்கு என்று சொல்லும் வியாபாரத் தந்திரமே அவரிடம் இருக்கிறது. தமிழினப் பற்று கொஞ்சமும் இல்லை!  (மேலும்....)

புரட்டாசி 03, 2012

போராளிகளிடையே சகோதர சண்டை - நெடுமாறனுக்கு கருணாநிதி கேள்வி

இலங்கை போராளிகளிடையே சகோதர சண்டையை தொடங்கிவைத்தவன் நான் என்றால் 1985-ம் ஆண்டு உருவான டெசோ அமைப்பில் நெடுமாறன் ஏன் ஒரு முக்கிய உறுப்பினராக சேர்ந்தார் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது," கடந்த 23-8-2012 அன்று நெடுமாறன் எழுதிய ஒரு நீண்ட கட்டுரையில் இலங்கையில் விடுதலைப்போராளிகளுக்கும், சிங்கள ராணுவத்திற்கும் இடையே போர் நடைபெற்றபோது, அதைத்தடுக்க கருணாநிதி எதுவுமே செய்யவில்லை என்று எழுதியிருந்தார். அதற்கு நான் மிகுந்த பொறுப்புணர்வுடன் ஆதாரப்பூர்வமாக சில விவரங்களை குறிப்பிட்டு; இலங்கையில் போர் நடைபெற்றபோது அதனை தடுக்க நான் எதுவுமே செய்யவில்லையா? என்னென்ன செய்தேன்? என்பதையெல்லாம் தொகுத்து தேதிவாரியாக விளக்கியிருந்தேன். (மேலும்....)

புரட்டாசி 03, 2012

சகோதரப் படுகொலையை ஆரம்பித்தவர்கள் புலிகள்தான், கருணாநிதி அல்ல

(சாகரன்)

சகோதரப் படுகொலையை ஆரம்பித்தவர்கள் புலிகள்தான் வேறு யாரும் அல்ல. அதுவும் மற்றய ஈழ விடுதலை அமைப்புக்கள் சகோதரப் படுகொலையை தாம் செய்வதில்லை என்ற விரதத்தை பூண்டிருக்கும் நிலையில். அன்று எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் புலிகள் மாற்று இயகத்தினரை கொலை செய்து, அவர்களின் போராடும் உரிமையை மறுத்ததை தற்காலிகமாக நிறுத்தியிருக்கலாம். அவர் அப்படி செய்யவில்லை. கருணாநிதி தனது அரசியலுக்காகவேனும் செய்ய முயன்றார் முடியவில்லை. பின்பு அவரும் தமிழ் செல்வனுக்கு இரகல் கவிதை வரை எழுதி தனது சந்தர்பவாத அரசியலைக் காட்டி விட்டார். புலிகளின் ஏனைய விடுதலை அமைப்பினர் மீதான ஆயுத நடவடிக்கை கொலை, போராடும் உரிமையை எம்.ஜி,ஆர் தற்காலிகமாகவேனும் தடுத்து நிறுத்தியிருந்தால்,  கிடைத்திருக்கும் கால அவகாசத்தை பாவித்து ஏனைய விடுதலை அமைப்புக்கள் தம்மை தாமே பாதுகாத்து இருக்கும். இதனால் விடுதலைப் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும். முள்ளிவாய்கால் நிலமை தவிர்கப்பட்டிருக்கும். ஏன் பிரபாகரனும் பல வேளைகளில் உயிர் தப்பியிருக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்க சந்தர்பங்கள் உண்டு. நெடுமாறன் எப்போதும் ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றை திரித்துக் கூறும் ஒரு நபர். அவருக்கு இதனை விட்டால் வேறு வழியும் இல்லை. இன்று வரை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று கூறுவது வரை.

புரட்டாசி 02, 2012

இலங்கை அதிபர் ராஜபக்சே 21ந்தேதி இந்தியா வருகிறார்!

சாஞ்சியில் புத்த மத கல்வி மைய அடிக்கல் நாட்டு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வர சம்மதம் தெரிவித்திருப்பதாக சுஷ்மா சுவாராஜ் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சாஞ்சி நகரில், புத்தமத கல்வி மையம் அமைக்கப்படுகிறது. வருகிற 21-ந்தேதி அன்று நடைபெறும் இந்த விழாவில், பூட்டான் பிரதமர் லியோன்போ ஜிக்மே முன்னிலையில் புத்த மத கல்வி மையத்திற்கான அடிக்கல்லை ராஜபக்சே நாட்டுகிறார். பா.ஜனதா மூத்த தலைவரும், பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மாசுவராஜ், இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்கும் வரும் இலங்கை அதிபர் ராஜபக்சே, டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச இருப்பதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜபக்சேவின் இந்தியா வருகைக்கான சுற்றுப்பயண திட்டம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.

புரட்டாசி 02, 2012

புஷ், பிளேயர் மீது சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட வேண்டும் - டெஸ்மன்ட் டுட்டு

ஈராக் யுத்தம் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் மற்றும் பிரித்தானிய முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாபிரிக்காவின் நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மன்ட் டுட்டு கூறியுள்ளார். பிரிட்டனின் ஒப்சேர்வர் பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேரழிவு ஆயுதங்கள் தொடர்பாக மேற்படி இரு தலைவர்ளும் பொய் கூறியுள்ளதாக பேராயர் டெஸ்மன்ட் டுட்டு குற்றம் சுமத்தியுள்ளார். ஈராக் யுத்தமானது வரலாற்றின் எந்தவொரு யுத்தத்தையும்விட உலகத்தை ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார். (மேலும்....)

புரட்டாசி 02, 2012

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கைத் தூதர் அழைப்பு!

இலங்கைத் தமிழர் பகுதியைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா நேரில் பார்வையிட வேண்டும் என்று டெல்லியில் உள்ள இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாஸம் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 'இந்தியாவுடனான இலங்கையின் நட்பு வரலாறு, கலாசாரரீதியாக நெருக்கமானது. அந்த வகையில் இலங்கையில் தமிழர் பகுதியில் மீள் குடியேற்றப் பணிக்காகவும் வாழ்வாதாரத் திட்டங்களை நிறைவேற்றவும் இந்தியா மிகப்பெரிய உதவிகளைச் செய்து வருகிறது.  அங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்களைத் தமிழக அரசியல் கட்சிகளும் முதல்வர் ஜெயலலிதாவும் நேரில் பார்வையிட வேண்டும். இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான பகுதி. அதனால், அப்பகுதிக்கு வரும் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை நடவடிக்கை எடுக்கிறது' என்று கூறியுள்ளார்.

புரட்டாசி 02, 2012

இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை வரும் 'நீல நிலவை' இன்று காணலாம்

இன்று பௌர்ணமி தினமாகும். இன்றைய தினம் வானில் தோன்றும் முழுமதியில் ஒரு அதிசயத்தைப் பார்க்க முடியும் என்று வானியல் நிபுணர்கள் அறிவித்துள்ளனர். வழமையாக ஒரு வருடத்தில் 12 பௌர்ணமிகள் வருவது வழமை. ஆனால் சிலவேளை வருடத்தில் 13 பௌர்ணமிகலும் வருவதுண்டு. அவ்வாறு வரும் 13ஆவது பௌணமிக்கு 'நீல நிலவு' (ப்ளூ மூன்) என்ற பெயரை வைத்துள்ளனர்.  இப்படி 'நீல நிலவாக' நமது சந்திரன் காட்சி தருவது என்பது அரிதான ஒரு விஷயம். இந்த 13ஆவது அதிசய பௌர்ணமியை பொதுவாக இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை தான் காண முடியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். (மேலும்....)

புரட்டாசி 02, 2012

ராஜபக்சேவை இந்தியா எச்சரிக்க வேண்டும்

தமிழ்ப்பெண்களுக்கு எதிரான சிங்களப் படையினரின் பாலியில் அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தும்படி ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் எச்சரிக்க வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் சுயமரியாதையுடனும், அரசியல் அதிகாரத்துடனும் வாழ்வதற்கு தனித் தமிழீழம் அமைப்பது தான் ஒர் தீர்வு என்ற முழக்கம் உலகம் முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், தமிழர்கள் வாழும் பகுதிகளிலிருந்து சிங்களப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட இலங்கை அரசு,  அண்மைக் காலமாக போரில் பாதிக்கப்பட்ட தமிழ்ப்பெண்களையும், போருக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட பெண் போராளிகளையும் விசாரணை என்ற பெயரில் முகாம்களுக்கு அழைத்துச் செல்லும் சிங்களப் படையினர் அவர்களை பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்குவதாகவும்,  இதையெல்லாம் எதிர்த்து கேட்க முடியாத தமிழ்ப்பெண்கள் நடைபிணங்களாக வாழ்ந்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான பெண்கள் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புரட்டாசி 02, 2012

இனக்கொலையாளி கோதாவையும் உளவாளி கே.பி ஐயும் சந்தித்த புலம்பெயர் முகவர்கள்

முன்னை நாள் விடுதலைப் புலிகளின் தலைமைக் உறுப்பினரும் சர்வதேச ஆயுதக்கடத்தல் கிரிமினல்களில் ஒருவராகக் கருதப்படுபவரும், நாடுகடந்த தமிழீழத்தின் அமைப்பாளரும், இனக்கொலையாளி கோதாபய ராஜபக்சவின் நண்பரும், விடுதலைப்புலிகள் அழிக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றியவராகக் கருதப்படுபவரும், இலங்கை அரச உளவாளி எனக் கருதப்படுபவருமான குமரன் பத்மனாதன் அல்லது கே.பி என்பவரை புலம்பெயர் நாடுகளில் அண்மையில் ஒரு குழு சென்று சந்தித்திருந்தது. (மேலும்....)

புரட்டாசி 02, 2012

இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வன்னி மக்களுக்கென புலம்பெயர் சமூகம் வழங்கிய பெருந்தொகை பணம் அபேஸ்!

தமிழருக்கு அனுப்பிய நிதியில் பாரிய மோசடி

தமிழரசு, தமிழ்க் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஏப்பம் விட்டதாக பகிரங்கக் குற்றச்சாட்டு

இலங்கை வந்து வன்னி சென்ற புலம் பெயர் தூதுக்குழு கண்டுப்பிடிப்பு

* மூன்று வருடங்களாக மாறி மாறி ஏமாற்றிப் பணம் கறந்தமை அம்பலம்

* கணக்கு வழக்கு விபரம் கேட்டபோது கையைப் பிசைந்து தட்டிக்கழிப்பு

* அரச உதவியைத் தவிர எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வாக்குமூலம்

* தமிழ் கூட்டமைப்பை கட்சியாக பதிவு செய்து கணக்குவழக்கை பேண வலியுறுத்து

(மேலும்....)

புரட்டாசி 02, 2012

தமிழினத்தின் அழிவிற்கு மீண்டும் வித்திடும் தமிழ்த் தலைவர்கள்?

தமிழ் இளைஞர்கள் கைகளில் ஆயுதம் ஏந்தத் தூண்டும் வீரவசனங்களைப் பேசுவதைத் தவிர்த்து ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும். முள்ளிவாய்க்காலில் முனகியது அப்பாவிமக்களே அல்லாது தலைவர்கள் அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்காலச் செயற்பாடுகள் குறித்துத் தமிழ் மக்களிடையே ஒருவிதமான அதிருப்தி நிலையும் வெறுப்புத் தன்மையும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாகக் கூட்டமைப்பின் தலைவர். இரா சம்பந்தன் மற்றும் அக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. ஆர். சுமந்திரன், அரியநேந்திரன் ஆகியோர் தேர்தல் மேடைகளில் ஆற்றிவரும் உரைகள் அனைத்தும் தமிழ் மக்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது. தமிழ் இளைஞர்களை மீண்டும் ஆயுதம் ஏந்தத் தூண்டும் வகையில் இவர்களது உரைகள் அமைந்து வருகின்றன. (மேலும்....)

புரட்டாசி 02, 2012

சகலரதும் கவனத்தையும் ஈர்த்துள்ள கிழக்குத் தேர்தல்

இன்று சகலரது பார்வை யும் நீந்திச் செல்லும் வகையில் கிழக்கின் மாகாண சபையின் தேர்தல் நிலவரம் மாறியுள்ளது. நாட்டில் சமாதானச் சூழல் ஏற்பட்டதன் பிற்பாடு இடம்பெறும் முக்கியமான தேர்தல் இந்த தேர்தலாகும். கிழக்கு மாகாண சபைக்கு திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல கட்சிகளை சார்ந்தவர்கள் போட்டியிடுகின்றனர். இருந்த போதும் சில கட்சிகளின் வேட்பாளர்களும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து மேடையில் பேசும் சில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் வெளியிடும் வார்த்தைப் பிரயோகங்களும் நவீன அரசியல் கலாசாரங்களின் வெளிப்பாடாகவே இருக்கின்றன. கட்சிகள் என்பது மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களது இலக்கை தேசிய ரீதியில் அடைந்துகொள்வதற்கான ஒரு வழியாகவே மக்கள் பார்த்து வந்தனர். ஆனால் துரதிஷ்டம் இன்று அந்த நிலை தலைகீழாக மாறி வெறும் இனப் பிளவுகளுக்கான சண்டைகளாகவே மாறியுள்ளன. (மேலும்....)

புரட்டாசி 02, 2012

பேரினவாதக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாமென கூறும் கூட்டமைப்பு ஐ.தே.கவுக்கு முண்டு கொடுப்பது ஏன்

கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாமல், இம்முறை இத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறித்து உங்களின் கருத்து என்ன? கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலில் தமிழ்க் தேசியக் கூட்டமைப்பினர் மறைமுகமாக போட்டியிட்டனர். இந்த விடயம் எமது தமிழ் மக்களுக்கு பெரிதாக தெரியாமல் மறைந்து விட்டது. இன்று இவர்கள் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது என்கின்றனர். அன்று 2008 பேரினவாத கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு கொடுத்தது மட்டுமன்றி அக்கட்சியில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்ந்த வேட்பாளர்களை நிறுத்தியது. ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தெரிவான அ. பரசுராமன் ஐயாவை ஞாபகப்படுத்துகின்றேன். இவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பானவர்.(மேலும்....)

புரட்டாசி 01, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 10)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

ராஜினி புலிகளில் ஒரு தீவிர செயற்பாட்டாளராகவும் ஒரு அடையாளம் காட்டும் அங்கரிக்கும் சர்வதேச புத்திஜீவியாகவும் இருந்தவர். புலிகளை விட்டு முரண்பாடுகள் காரணமாக வெளியேறியவர். அதுவும் புலிகளின் மனித உரிமை மீறல் செயற்பாடுகள் பற்றிய முரண்பாடுகளினால் வெளியேறியவர். இதனை வெளிப்படையாக பேச்சு, அறிக்கை, செயற்பாடுகள் மூலம் விமரசித்துவந்தவர். கூடவே முறிந்த பனை(இந்த புத்தகத்துடன் சம்மந்தப்பட்ட மற்றயவர்கள் புலிகளில் உறுப்பினராக எப்போதும் இல்லாது இருந்தவர்கள்) என்ற புத்தகத்தின் வெளியீடும் புலிகளின் தலைவர்களின் ஒருவரான திலீபனின் இறந்த உடலை புலிகள் தங்கள் விருப்பிற்கு ஏற்ப கையாள முற்படுகையில் ஒரு மருத்துவராக விரிவுரையாளராக பொறுப்பு மிக்க பல்கலைக்கழக நிர்வாகியாக ராஜினி செயற்பட்டது புலிகளுக்கு கடும் சினத்தை ஏற்படுத்தியிருந்தது. இவைகளே புலிகள் ராஜினியைக் கொல்வதற்கு அவசரப்பட்டதற்கான காரணங்கள் ஆகும். (மேலும்....)

புரட்டாசி 01, 2012

மறைந்த முற்போக்கு எழுத்தாளர்கள் நினைவாக

உரையரங்கு

'ஈழத்து தமிழ் இலக்கியத்தின் செழுமைக்கு

முற்போக்கு இலக்கியப் படைப்புகளின் பங்களிப்பு'

காலம்: செப்ரெம்பர் 02, 2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.300 மணி

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்

     58 தர்மராம வீதி, கொழும்பு – 6

தலைவர்: பேராசிரியர் சபா.ஜெயராசா

உரை நிகழ்த்துவோர்: கலாநிதி ந.இரவீந்திரன்

                                   லெனின் மதிவானம்

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

E-Mail: kailashpath@yahoo.com

புரட்டாசி 01, 2012

RCMP uncover a massive marriage fraud scheme in Montreal

(By Andy Radia)

REUTERS/Chris Wattie Some people would do just about anything to get into Canada.

According to a RCMP statement released Tuesday, Montreal police have charged 39 people in relation to an investigation into a massive fake marriage scheme which could involve hundreds of "suspicious marriages." "The investigation revealed that Mr. [Amadou] Niang, a bogus immigration consultant who is believed to be the mastermind behind this scheme, provided advice on how to submit misrepresented facts to Citizenship and Immigration Canada to individuals whose visas were due to expire," the statement reads. "Specifically, he organized fake marriages with the assistance of accomplices to allow these individuals originating from North Africa to remain in Canada. The network recruited young Canadian women in the Montréal area and arranged for them to participate in marriages of convenience in exchange for money." (more....

புரட்டாசி 01, 2012

இரண்டு தீர்ப்புகள்;  படிப்பினை ஒன்றுதான்!

ஆகஸ்ட் 30ம் தேதி செய்தித்தாள் களில் இரண்டு விதத் தீர்ப்புகள் இருவேறு நீதிமன்றங்களால் வழங்கப்பட்டது செய்தி களாக வெளிவந்துள்ளன. இந்த இரண்டு வித வழக்குகளும் சாராம்சத்தில் மதவெறி சேர்ந்த இனவெறி சம்பந்தமானதுதான். ஆனால் தீர்ப்புகள் இரண்டுமே இந்திய மக்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய, நம் பிக்கையளிக்கக்கூடிய தீர்ப்புகள்தான். ஒரு வழக்கு, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின்-மதவெறியர்கள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல். மற்றொன்று நம் சொந்த நாட்டி லேயே குஜராத் மாநிலத்திலேயே கோத்ரா வில் ரயில் எரிப்பையொட்டி நடந்த கொலை வெறித் தாக்குதல்கள். ஒன்று, பாகிஸ்தான் மதவெறியர்களான முஸ்லிம்கள் - பயங்கர வாதிகள் நடத்திய கொலைவெறி. மற் றொன்று முஸ்லிம் மக்கள் மீது இந்து மத வெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்கு தல். இரண்டு நிகழ்ச்சிகளும் இந்தியாவை அதிர வைத்துவிட்டன. (மேலும்....)

புரட்டாசி 01, 2012

இன்னும் இரு வாரங்களில் மண்டைதீவுக்கு மின்சாரம்

வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் மண்டைதீவிற்கு மின்சாரம் வழங்கு வதற்கான துரித பணி வேகமாக நடைபெறுகின்றது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இதன் பணிகளை துரிதப்படுத்துமாறு வடக்கின் வசந்தம் திட்ட முகாமையாளர் எந்திரி ஐ. குணசீலனை பணித்துள்ளார். 50வீதமான பணிகள் இது வரை முடிவுற்றுள்ளன. தற்போது ஊர்காவற்றுறை வேலணை - அல்லைப்பிட்டி ஊடாக மண்டைதீவுக்கு மின்கம்பங்கள் பொருத்தும் பணியினை இலங்கை மின்சார சபை மேற்கொண்டுள்ளது. இன்னும் இரு வாரங்களில் மண்டைதீவு பிரதேசம் முழுவதும் ஒளிபெறக் கூடியதாக இணைப்புகள் முடிவுறுத்தப்பட்டு ஒளியேற்றப்படும் என இலங்கை மின்சார சபையின் உயரதிகாரி தெரிவித்தார்.

புரட்டாசி 01, 2012

படகு கவிழ்ந்தபின் தத்தளித்த 54 பேர் மீட்பு ; சுமார் நூறுபேரை காணவில்லை

அவுஸ்திரேலியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோது படகு கவிழ்ந்த நிலையில் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 55 பேர் காப்பற்றப்பட்டு, இந்தோனேஷியாவின் மேற்கு ஜாவா தீவிலுள்ள மேராக் நகருக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஹஸாரா இனத்தவர்கள் என நம்பப்படுகிறது. இப்படகு கடந்த புதன்கிழமை காலையில் கவிழந்தது. இதில் பயணம் செய்த மேலும் சுமார் 100 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இப்படகில் கசிவு ஏற்படத் தொடங்கியபோது அது. இந்தோனேஷியாவின் ஜாவா தீவிலிருந்து 8 கடல்மைல்கள் தொலைவிலும் அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலிருந்து 220 கடல்மைல்கள் தொலைவிலும் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிர்தப்பியவர்களில் ஒருவரான முஹமட் அலி (53) கூறுகையில், "படகுஉடைந்த பின்னரும் நாம் அனைவரும் உயிருடன் இருந்தோம். இந்தோனேஷிய படகுகள் நான்கு ஐந்து மணித்தியாலங்கள் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தன. நாம் உதவி உதவி எனக் கத்தினோம். ஆனால் அவர்கள் எம்மை பார்க்கவில்லை"  என தெரிவித்துள்ளார்.

புரட்டாசி 01, 2012

தமிழ்நாட்டின் கிரானைட் ஊழல்

(கே.விஜயன்)

கிரானைட் கற்கள் வெட்டியெடுத்து வியாபாரம் செய்வதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஒரு தனிநபரே கொள்ளை யடித்துள்ளது என்பது சாதாரண ஒன்றல்ல. அதுவும் இயற்கையை நாசப்படுத்தி இக்கொள் ளையை நிகழ்த்தியுள்ளார் என்பது தேச விரோத நடவடிக்கையாகும். மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவைச் சுற்றியுள்ள இடங்களில் கிரானைட் என்ற இயற்கை வளத்தை கொள்ளையடிப்பதில் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. (மேலும்....)

புரட்டாசி 01, 2012

இலங்கைக்கு சகல ஒத்துழைப்பும் வழங்கப்படும்; ஜனாதிபதியிடம் சீன பாதுகாப்பு அமைச்சர் உறுதி

இலங்கையுடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் சகல ஒத்துழைப்புகளையும் சீனா வழங்குமென சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியான் கு வாங்லி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித் துள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியான் கு வாங்லி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை கடந்த புதன்கிழமை அலரிமாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடினார். இரு நாடுகளுக்குமிடையிலான சிறந்த நட்புறவானது சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் மூலம் மேலும் பலப்படும் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, குறிப்பாக சீன அரசாங்கம் பெருளாதார மற்றும் கலாசார ரீதியாக இலங்கைக்கு வழங்கும் ஒத்துழைப்புகளுக்கு இலங்கை மக்களின் சார்பில் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சர்வதேச ரீதியில் இலங்கை எதிர்நோக்கும் சவால்களின் போது சீனா வழங்கும் ஒத்துழைப்புகளுக்காகவும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

புரட்டாசி 01, 2012

மோடி பெயரை கேட்டாலே பயத்தில் அலறும் காங்கிரஸ்

குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்; குஜராத் மாநிலத்தில் நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். இங்குள்ள பெண்கள் உடல் ஆரோக்கியத்தை காட்டிலும் உடல் அழகாய் இருப்பதிலே அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு பெண் தனது மகளிடம் பால் வாங்கி வரச் சொன்னால், அவர்களிடையே சண்டை வருகிறது. அப்போது மகள் தனது தாயிடம் பால் குடித்தால் உடம்பு குண்டாகிவிடும் அதனால் குடிக்கமாட்டேன் என்கிறாள் என்று கூறியிருந்தார். மோடியின் இந்த கருத்துக்கு மத்திய செய்தித் துறை மந்திரி அம்பிகா சோனி உட்பட மற்ற அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மோடிக்கு ஆதரவாக பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது, காங்கிரஸ் கட்சிக்காரர்கள் எங்கு செல்கிறார்களோ அங்கெல்லாம் மோடியைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவர்களை நினைத்து நான் பரிதாபப்படுகிறேன். அரசியல் அல்லாத விசயங்களிலும் கூட மோடி மீது குறை கூறுவதற்கு அவர்களின் பயம் தான் காரணம். காங்கிரஸ் அலறுதோ தெரியாது ஆனால் குஜராத் முஸ்லீம்கள் அலறுகின்றனர்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com