Contact us at: sooddram@gmail.com

 

சித்திரை 2011 மாதப் பதிவுகள்

சித்திரை 30, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 2)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் 

அது ஒருபுறம் இருக்க, பெருமளவு ஆயுதங்களும் தளபாடங்களும், போராளிகளும் கையில் இருந்தும், ஏன் புலிகள் பின்வாங்குதலை செய்து கொண்டிருந்தனர் என்பது கூட நீங்கள் விளங்காதிருப்பது தான் வேதனை!!! ஒரு காடு சார்ந்த பிரதேசத்தை கூட தக்க வைத்துக் கொண்டு போராடாது தம்மையும் தலைமையையும் பாதுகாக்க முடியாதவரகளாகவா அவர்கள் இருந்தனர்? இல்லை அந்த நிலைக்கு நம்மை இந்த கழுத்தறுத்தவர்கள் இட்டுச்சென்றனர் என்பதே உண்மை. இதனால் நம் போராட்ம் உறை நிலைக்கு சென்றுவிட்டது. நான் யார்மீதும் குற்றம் சொல்ல முயலவில்லை. ஆனால் கொஞ்சமாவது நம் மக்கள் அந்த நாட்களில் என்ன நடந்தது என்னதான் என்பதை தெரிந்துகொள்ளட்டுமே. பல கேள்விகளுக்கு விடை தெரிந்தும் தெரியாததாக்க முயலுகின்றனரே. மக்களை பாதுகாக்க என்று, பூநகரியில் இருந்து சிறீலங்கா இராணுவம் பரந்தன் நோக்கி புறப்பட்டதும் உடனடியாக படையணிகளை பின்வாங்கிக் கொண்ட புலிகள். அதுவும் வட போர்முனையில் அந்த நாள் வரைக்கும் படையினரை நகரவிடாது தடுத்த உறுதியோடு பலமான படையணிகளை நகர்த்திய புலிகள் ஏன் அந்தப் படையணிகளைக் கொண்டு இன்னும் இன்னும் இராணுவ நகர்வுகளை தடுக்கவோ தாமதப்படுத்தி இருக்கவோ இல்லை தமக்கான சாத்தியமான பிரதேசத்துக்குள் ஏன் நுழைய முயலவில்லை.? இங்குதான் மர்மம் இருக்கிறது!! இங்குதான் அந்த குழிபறிக்கும் நாடகம் நடைபெற்று முடிந்தது. (மேலும்....)

சித்திரை 30, 2011

4092 முன்னாள் புலி உறுப்பினர்கள் இவ்வாண்டு இறுதிக்குள் விடுதலை

எஞ்சியுள்ள 4092 முன்னாள் புலி உறுப்பினர்களும் இந்த வருட முடிவுக்குள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் ஏ. திசானாயக்க கூறினார். இவர்களில் சுமார் 500 பேர் எதிர்வரும் வெசாக் பண்டிகையின் போது விடுவிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11,898 முன்னாள் புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 6528 பேர் இதுவரையில் புனர் வாழ்வளிக்கப்பட்டு சமூக வாழ்வில் இணைக்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களுக்கு 9 புனர்வாழ்வு நிலையங்களில் புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. (மேலும்....)

சித்திரை 30, 2011

பாலஸ்தீனத்தில் ஒன்றுபட்ட அரசு : இஸ்ரேல் எரிச்சல்

பாலஸ்தீனத்தில் ஃபடா மற்றும் ஹமாஸ் ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து ஒன்றுபட்ட தேசிய அரசு ஒன்றை அமைக்கவிருப்ப தால் இஸ்ரேல் எரிச்ச லடைந்துள்ளது. நாடாளுமன்றத் தேர்த லில் ஹமாஸ் அமைப்பு வெற்றி பெற்றாலும், ஜனா திபதி அப்பாஸ் தலைமை யிலான ஃபடா அமைப்பு அந்த வெற்றியை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பாலஸ்தீனப்பகுதிகளை இரு பிரிவுகளாகப் பிரித்து தங்கள் நிர்வாகத்திற்குக்கீழ் இந்த அமைப்புகள் வைத் துக் கொண்டன. காசா திட்டுப்பகுதி ஹமாஸ் கட் டுப்பாட்டிலும், மேற்குக் கரைப் பகுதி ஃபடா அமைப் பின் கட்டுப்பாட்டிலும் இருந்தன. (மேலும்....)

சித்திரை 30, 2011

The Language Festival of the Sri Lanaka – Canadian Community

May 1 st, 2011 Sunday 4.00 pm at Rick Hanson Secondary School Auditorium in Mississauga

இந்த விழாவில் பிரதம விருந்தினராக பங்கு கொள்ள பேராசிரியர் ஜே. பி. திசநாயக்கா அவர்கள் மே 28 2011 அன்று கனடா வந்த சேர்ந்தார். இவரை விமான நிலையத்தில் விழாக்குழு சார்பில் வரவேற்றக சிவம் விநாயகமூர்த்தி, இலங்கைத் துணைத் தூதுவர் கருணாரத்தின பரணவிதாரண, பத்திரகையாளர்கள் ஆகியோர் சென்றிருந்தனர். பேராசிரியர் ஜே. பி. திசநாயக்கா பல தமிழ் பாட நூல்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

சித்திரை 30, 2011

தோள் கொடுத்த தோழன் கியூபா!

ஆயிரக்கணக்கான ஹைட்டி மக்கள் உயிர் பாதுகாப்பு

கி யூப நாட்டின்  மருத்துவர்களுக்கு தங்கள் நாடு தலைவணங்கி மரியாதை செலுத்துகிறது என ஹைட்டி நாட்டின் அதிபர் ரெனே பிரேவல் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்டில் ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்திற்குப் பின் உண்டான தொற்றுநோய் கொடுமைகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி மிகச்சிறந்த பணியினை மேற்கொண்டதற்காக கியூப நாட்டின் மருத்துவர்கள் குழுவிற்கு நன்றியினையும் அந்நாட்டின் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் கியூப மருத்துவர்களின் பணிகளை பாராட்டி ஹைட்டி நாட்டில் வழங்கப்படும் மிக உயரிய விருது கியூப மருத்துவக் குழுவிற்கு அளிக்கப்பட்டது.  (மேலும்....)

சித்திரை 30, 2011

நாகை கடலில் அதிகம் சிக்கும் அரிய வகை மீன்கள்

நாகை கடல் பகுதியில், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் காணப்படும் அரிய வகை மயில் மீன்கள் அடிக்கடி சிக்குவது, மீனவர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில், 75 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் வசிப்பவை, மயில் மீன்கள், மயிலுக்கு தோகைகள் இருப்பது போல், இவ்வகை மீன்களுக்கும் தோகைள் இருப்பதால், மயில் மீன்கள் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இதன் அலகுகள், பறவை களுக்கு உள்ளது போல் நீண்டும் காணப் படும். கடலில் வாழும் சிறிய வகை மீன் களை உணவாக உட்கொண்டு, பல லட்சம் கி.மீ, தூரம் கடலில் பயணம் செய்து, கடல் விட்டு கடல் மாறி செல்லக்கூடியவை. 16 ஆண்டுகள் வரை உயிர் வாழும் இந்த மீன்கள், 100 கி.மீ., வேகத்தில் நீந்திச் செல்லும் திறன் படைத்தவை.(மேலும்....)

சித்திரை 30, 2011

உலக தொழிலாளர் உரிமைகளை வென்றெடுத்த மேதினம் நாளை

(அருணா தருமலிங்கம் )

பாரிய தொழிற்சாலைகள் எங்கு ஆரம்பிக்கப்படுகின்றதோ அங்கு வேலை நிறுத்தங்கள் உருவாகுவது சகஜம். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர்கள் மூன்று நாள். பொது வேலை நிறுத்தம் மேற்கொண்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து பிற்பகலில் பேரணி ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பேரணி நடைபெறுவதை அறிந்த காவல் துறையினர் அங்குள்ளோரை அமைதியாகக் கலைந்து செல்லுமாறு பலமுறை பணித்தும் தொழிலாளர் கலைய மறுத்தனர். இதனையடுத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக நான்கு தொழிலாளர் பலியா கினார்கள். ஆகவே ஆங்காங்கே வன்செயலும் கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஏக காலத்தில் கூட்டத்தை நோக்கி இனந்தெரியாத நபரொருவரினால் குண்டொன்று வீசப்பட்டது இதனால் ஒரு பொலிஸ் உட்பட பன்னிரெண்டு தொழிலாளர் இறக்க நேரிட்டது. பின்னர் தொழிற்சங்கப் பேராட்டங்கள் நடைபெற்றன. இதனால் தொழி லாளர்களுக்கு நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலங்கள் வேலை நேரம் ஆக்கப்பட்டது. அன்றைய தினத் திலிருந்து மே தினத்திற்கு உகந்த கெளரவம் தொழிற்சாலை நிர்வாகத் தினால் வழங்கப்பட்டு மே தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும் பிரகடனப்படுத்தினார்கள். (மேலும்....)

சித்திரை 30, 2011

பீஜிங்கில்

அருங்காட்சியகத்தின் முன் இருந்த கன்பியூசியஸ் சிலை அகற்றப்பட்டது

சீனத் தலைநகர் பீஜிங்கில், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அருங்காட்சியகத்தின் முன்வைக்கப்பட்டிருந்த சீன ஞானி கன்பியூசியஸ் சிலை திடீரென அகற்றப்பட்டுவிட்டது. 17 தொன் எடையும், 30 அடி உயரமும் கொண்ட கன்பூசியஸின் சிலை, அருங்காட்சியகத்தின் முன் நிறுவப்பட்டதன் மூலம், 1960 – 70 ம் ஆண்டுகளில் சீனாவில் மாவோ ஆட்சியில் நடந்த கலாசாரப் புரட்சியில், அவருக்கு இழைக்கப்பட்ட அவமரியாதை துடைத்து எறியப்பட்டது என்று சிலர் கூறினர். ஆனால், கன்பியூசியசையோ, அவரது கருத்துக்களையோ கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறினர். இந்நிலையில், அருங்காட்சியகத்தின் முன் நின்றிருந்த கன்பியூசியஸ் சிலை திடீரென அகற்றப்பட்டு விட்டது. இந்த விவகாரமும் இப்போது சர்ச்சைக்குரியதாகிவிட்டது. சில பத்திரிகைகள், அவர் பொருளாதாரக் குற்றத்தில் ஈடுபட்டதால் பொலிஸார் அவரை தூக்கிச் சென்று விட்டனரோ? என்றும், அவர் கம்யூனிஸ்ட் இல்லை என்பதால் அவரை அகற்றி விட்டனரோ? என்றும் கிண்டலடித்துள்ளன. கம்பியூனிஸ்ட் ஆதரவு பத்திரிகைகள், இந்த சிலை அகற்றத்தை வரவேற்றுள்ளன.

சித்திரை 30, 2011

Abusing Sri Lanka to hide own problems

(By Hasaka Ratnamalala)

Almost all Tamilnadu politicians use Sri Lankan issue very often in their day to day political life. But, except few LTTE funded hit men, all these politicians neither want a separate Tamil state in Sri Lanka nor a pro LTTE wings established in Tamilnadu. Reason is that they are more “Indian” than “Tamil” and Indians do not want another Kashmir in its southern tip. At least these Tamilnadu politicians respect the vision of Indian Central government. Therefore they only use it to the extent of getting votes and humiliate other political parties depend on the side they take at the time. (more....)

சித்திரை 30, 2011

சித்திரை 30, 2011

மட்.புனித மிக்கேல் கல்லூரி Batticaloa - பழைய மாணவர் கனேடிய‌ சங்கக்கிளையுடன் இலங்கை உயர்ஸ்தானிகர் கலந்துரையாடல்

கடந்த ஏப்ரல் 23ம் திகதி மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் வட அமேரிக்க கனடிய‌ பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை உயர்ஸ்தானிகர் கௌரவ சித்ராங்கனி வாஹீஸ்வரா, துணை தூதுவர் கருணாரத்ன பரணவிதான, கன்சுலர் அன்சுல் ஜான் மற்றும் தூதரக உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். புனித மிக்கேல் கல்லூரியின் பழைய‌ மாணவர் ஸ்ரான்லி செல்லப்பிள்ளை தலைமையிலும், சுக்கு வெஸ்லி டானியல் அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனை கூட்டம் ஆரம்பமானது. (மேலும்....)

சித்திரை 30, 2011

அரபு லீக் சமரசத்தை ஏற்க முடியாது  - ஏமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சலே

சமரசத்திட்டத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி யில் கத்தார் நாட்டின் பிரதி நிதிகள் கலந்து கொண்டால் அதில் கையெழுத்திட மாட் டோம் என்று ஏமன் நாட்டு ஜனாதிபதி அலி அப் துல்லா சலே கூறியுள்ளார். அரபு லீக் மற்றும் வளை குடா ஒத்துழைப்பு கவுன் சில் ஆகிய அமைப்புகள் ஏமன் நாட்டு நெருக்கடிக்கு ஒரு தீர்வை முன்வைத் துள்ளன. அதன்படி, ஜனா திபதி அலி அப்துல்லா சலே பதவியிலிருந்து வெளியேற வேண்டும். எதிர்க்கட்சிகள் இணைந்து தற்காலிக ஆட் சியை அமைத்து, அந்த ஆட்சியின் கீழ் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அலி அப்துல்லா சலே மீது வேறு எந்த விசாரணையும் நடக்காது. தண்டனையும் எதுவும் அளிக்கப்படாது என்று அந்த சமரசத் திட் டம் கூறுகிறது. (மேலும்....)

சித்திரை 29, 2011

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் சாட்சியம் (பகுதி 1)

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

அன்பார்ந்த எங்கள் தமிழீழ மக்களே !!
நான் உங்களிடம் சில துரோகிகளால் மறைக்கப்பட்டுவரும் சில முக்கியமான விடயங்களை பற்றி சொல்லுவதற்காக இந்த இரத்தம் தோய்ந்த வரலாற்றின் சிதறிய மனதை உங்களுக்கு தருகின்றேன். இதனை நான் உங்களுக்கு சொல்லுவதால் எனக்கு எந்தவித தனிப்பட்ட இலாபங்களும் இல்லை. நீங்கள் இன்னும் ஏமாளிகளாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்திற்காகவே உங்களுக்கு சகோதரன் கவிஞர் இராஜேந்திரகுமார் மூலமாக உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன் .
இராஜேந்திரகுமார் கருத்தாடு களம் தொடர்ந்து பார்த்துவருகின்றேன். நிச்சயம் எந்த ஒளிவு மறைவின்றி நான் அனுப்பியதை உங்கள் முன் பிரசுரிப்பார் என்ற நன்பிக்கையில் அனுப்பி வைக்கின்றேன். (மேலும்....)

சித்திரை 29, 2011

ஏகப் பிரநிதித்துவம் கோரும் பிரேமசந்திரன்

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல்களிலும் வடக்கு கிழக்கு மக்களின் நிலைப்பாடு வெளியிட்பட்டிருந்தது. எனவே, தமிழ் மககளின் ஏகப்பிரதிநிதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே திகழ்கின்றது. இதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமிருக்க முடியாது. இந்நிலையில் ஏகப்பிரதிநிதி என்ற விடயத்தை கேள்விக்கு உட்படுத்திக்கொண்டிருப்பதில் அர்த்தம் கிடையாது. தமிழ் மக்களின் அடிப்படை மற்றும் அன்றாட பிரச்சினைகள், அரசியல் கலாசார விடயங்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தொடர்ந்தும் குரல் எழுப்பிவருகின்றது. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் எவருக்கும் சந்தேகம் எழுத்தேவையில்லை,. (மேலும்....)

சித்திரை 29, 2011

 

சித்திரை 29, 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடந்தவற்றை கே. பி யினூடாக பகிரங்கப்படுத்த திட்டம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கிறது. இலங்கை தொடர்பில் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்க ஐ.நா. செயலாளருக்கு உரிமை கிடையாது. இந்த அறிக்கை குறித்து தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற விடயங்களை கே.பியினூடாக பகிரங்கப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....)

சித்திரை 29, 2011

தருஸ்மன் அறிக்கைக்கு எதிர்ப்பு

மட்டு. மேயர் தலைமையில் நேற்று உண்ணாவிரதம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கையை கண்டித்து மட்டக்களப்பு மாநகர சபைக்கு முன்னால் அடையாள உண்ணாவிரதமொன்று (28.04.2011) வியாழக்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் வரை நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன் தலை மையில் நடைபெற்ற இவ் அடையாள உண்ணாவிரதத்தில் மாநகர சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநகர சபை வளாகத்திற்குள் இருந்து சுலோகங்களைத் தாங்கியவாறு வெளியே வந்த இவர்கள் மாநகர சபையின் நுழைவாயிலுக்கு முன்பாக அமர்ந்திருந்து இவ் அடையாள உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரே புலிசார் நடவடிக்கைக்கு ஆதரவா? பான்கீ மூனின் அறிக்கை அமைதிப்பூங்காவை மீண்டும் சுடுகாடாக்கி விடும். ஜனாதிபதி மீதான அவதூறை நிறுத்து போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை இவர்கள் தாங்கியிருந்தனர்.

சித்திரை 29, 2011

ஆட்சி மாறினால் தமிழ்த் திரையுலக காட்சியும் மாறும்

தமிழ் சினிமா தயாரிப்பு துறையில் பரபரப்பாக திரையுலகில் இருந்த கேயார் தற்போது சினிமாவைவிட்டு விலகி நின்று, வேடிக்கை பார்த்து வருகிறார். சினிமா துறையில் பெருகிய அடாவடிகள், நேர்மையற்ற போக்கு போன்ற அதிருப்தி தான் இதற்கு காரணம். தமிழ் திரையுலகில் என்ன நடக்கிறது என கேட்டால், வேதனையும், கோபமும் கலந்த கலவையாய் கொந்தளிக்கிறார். அவருடனான பேட்டியில் யார் ஆட்சிக்கு வருகிறார்களோ, அவர்களுக்கு ஒத்துழைப்பதை சினிமா சங்கங்கள் தொடர்கிறதே என்ற போது சினிமா சங்கங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பதில் தவறில்லை. ஆனால், ஆளும் கட்சியின் கை கூலிகளாக செயல்படக் கூடாது என்றார். (மேலும்....)

சித்திரை 29, 2011

மலையகப் பெண்களின் வாழ்வாதாரப் பிரச்சினை உணர்த்தும் உண்மைகள் _

இலங்கையின் பொருளாதாரத்தில் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும்; பெருந்தோட்டத் துறை உற்பத்தியான தேயிலையினை பெற்றுத் தரும் தொழிளாளர்களுள் 65 சதவீதமானவர்கள் மலையகப் பெண்களே. 1960ன் பிறகு 1990 வரை இலங்கையின் வருமானத்தில் 63 சதவீதமான வருமானத்தை ஈற்றித் தந்தவர்கள் இந்தப் மலையகப் பெண்கள எனக் கூறலாம். அந்த வகையில் மாறிவரும் உலகில் இந்த வருமானத்துறை வீழ்ச்சியடைந்தாலும் பெருந்தோட்டத் துறைப் பொருளாதாரம் இன்று வரை நிலைத்திருப்பதன் காரண கர்த்தாக்களாக மலையகப் பெண்கள் உள்ளனர் என்றால் அது மிகையில்லை. ஆனால் இவர்களது வாழ்க்கையோ முற்கள் நிறைந்த காடுகளாய் காணப்படுகின்றது. (மேலும்....)

சித்திரை 29, 2011

அல் - குவைதா ஆள் சேர்க்கும் பள்ளிவாசல் பட்டியல் - விக்கிலீக்ஸ் அம்பலம்

அல்-குவைதா அமைப்பினர் தங்களுக்குத் தேவையான அங்கத்தவர்களைத் தெரிவு செய்யும் பள்ளிவாசல்கள் பட்டியலை அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பெண்டகன் கண்டறிந்துள்ளது. இத்தகவலை ‘விக்கி லிக்ஸ்’ இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் வலுவான தளத்தைக் கொண்டுள்ள அல்- குவைதா அமைப்பினர் உலகையே அச்சுறுத்தும் வகையில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கனடாவின் மான்ட்ரீல் நகரிலிருந்து கராச்சி வரையில் பள்ளிவாசல்கள் இஸ்லாமிய மையங்களில் அல்- குவைதா அமைப்புக்கு ஆள் சேர்க்கும் இடங்களின் படடியலை பென்டகன் தயாரித்துள்ளது. (மேலும்....)

சித்திரை 29, 2011

அண்டங்கள் எவ்வாறு உருவாகின?

அமாவாசை இரவில் நாம் விண்ணைத் துருவிப் பார்த்தோமானால், நம் கண்களுக்குச் சில இடங்களில் வெண்மையான பால் போன்ற வெளிச்சத்திட்டுக்கள் தென்படும். இவற்றுக்கு அண்டங்கள் என்று பெயர். விண்ணில் உள்ள இது போன்ற ஓர் இடத்தைத் தனது தொலை நோக்கியால் துருவிப் பார்த்துத்தான் முதன் முதலில் இத்தாலிய வானவியலாளர் கலீலியோ(Galileo, 15641642) அண்டத்தைக் கண்டறிந்தார். இது பல இலட்சக் கணக்கான விண் மீன்கள் அடங்கிய ஒரு பெரும் கூட்டமாகும். அண்டத்தில் உள்ள இப் பெரும் விண் மீன் கூட்டம். அவற்றுக்கு இடையே ஒன்றுடன் மற்றொன்று கொண்டிருக்கும் ஈர்ப்பு விசை காரணமாகக் கூட்டமாக உள்ளன. சக்தி வாய்ந்த தொலை நோக்கிகளின் உதவியால் இது போன்ற பல இலட்சக் கணக்கான அண்டங்களை நாம் காண முடியும். (மேலும்....)

சித்திரை 28, 2011

நம்பியார் தொடர்பான கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்ட பான் கீ மூன்

ஐ.நா. இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடு தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு அமைதியான முறையில் சமர்ப்பித்துள்ள நிலையில் அந்த அறிக்கை தொடர்பாக பான் கீ மூனிடம் நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் இரு கேள்விகளைக் கேட்டது. மோதலின் போது இழப்புகளின் எண்ணிக்கையை ஐ.நா. வெளியிடாமல் வைத்திருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை பான் கீ மூன் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார் என்று இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்யூ ரஸல் லீ நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருக்கிறார். (மேலும்....)

சித்திரை 28, 2011

ீனா,ரஷ்யாவை எதிர்த்து நிற்பதற்கு போதிய பலமற்றவர் பான் கீ மூன்

 

இலங்கையின் போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணையை மேற்கொள்வதில் தோல்வி கண்டுள்ளதாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கடுமையான விமர்சனங்களுக்கு இலக்காகியிருக்கும் நிலையில்,இந்த விடயத்தில் ரஷ்யா மற்றும் சீனாவை எதிர்த்து நிற்பதற்கான வலுவில்லாதவராக பான் கீ மூன் இருக்கின்றாரென்று ஐ.நா. வின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் ஒருவர் "சனல்4 நியூஸ்' தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ளார். இலங்கை யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது பொதுமக்கள் இழப்புகள் அதிகளவு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு தனிப்பட்ட முறையில் உத்தரவிடுவதற்கு தனக்கு அதிகாரம் போதாமலிருப்பதாக பான் கீ மூன் கூறியிருந்தார். ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஆதரவு இல்லாமல் சர்வதேச விசாரணைக்கு பான் கீ மூன் ஏற்பாடு செய்ய முடியுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகின்றது. ஆனால், சீனாவையும் ரஷ்யாவையும் எதிர்த்து நிற்பதற்கு பான் கீ மூன் தயங்குவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். இலங்கை மோதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் வீட்டோ அதிகாரமுடைய நிரந்தர உறுப்பினர்களாக சீனாவும் ரஷ்யாவும் உள்ளன. (மேலும்....)
சித்திரை 28, 2011

புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள புலிகளின் சொத்துக்கள் தாயக  தமிழ்மக்களிற்காகப் பாவிக்கப்பட வேண்டும் - ஐ.நா.வின் அறிக்கை

புலம்பெயர்ந்த தமிழர்கள் தொடர்பான தனது பரிந்துரையை தனது அறிக்கையில் மிகத்தெளிவாக வழங்கியுள்ள ஐக்கிய நாடுகள் சபை சில பரிந்துரைகளையும் செய்துள்ளது. இது தொடர்பான விடயம் யுத்தக் குற்ற அறிக்கையின் பக்கம் 132ல் இடம்பெற்றுள்ள பரிந்துரை இல.417ல் இருந்து பரிந்துரை 420 வரையே இடம்பெற்றுள்ளது. புலம்பெயர்ந்த தமிழர் சமூகமே விடுதலைப் புலிகளிற்கு மனவலிமையும்  நிதி  ஆயுத வலிமையையும் பல தசாபத்தங்களாக வழங்கி வந்தது என்றும் இதனால் புலம்பெயர்ந்த சமூகத்திடையே இந்த இறுதிப் போரைப் பற்றிய ஒரு மனவலி இருக்கிறது. (மேலும்....)

சித்திரை 28, 2011

ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கையுடன் விரைவில் பேச்ச - இந்தியா

ஐ.நா. அறிக்கை விரைவில் அறிக்கையை கவனமாக ஆராய்ந்து வருவதாகவும் விரைவில் பேசவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை கவனமாகப் ஆராய வேண்டிய தேவையுள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் விரைவில் இந்தியா தொடர்பு கொண்டு பேசும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் கூறியுள்ளார்.

சித்திரை 28, 2011

மேற்கு ஆசியாவில் பதற்றம்  அமெரிக்கா அடிக்குது கொள்ளை லாபம்!

மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியால் ஆட்சியாளர்கள் தலைகள் உருண்டு கொண்டிருக்கின்றன. எழுச்சியை அடக்கும் முயற்சியில் சில ஆட்சியாளர்கள் கடுமையான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மக்களின் எழுச்சி ஏற்படாத நாடுகள் கூட அத்தகைய எழுச்சி ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொள்வதற்கான வேலைகளில் இறங்கியுள்ளன. இந்தப்பகுதிதான் அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதி அதிகமாக நடக்கும் இடமாகும். இத்தகைய நெருக்கடிகளால் அமெரிக்காவின் ஆயுத விற்பனை பாதிக்கப்படவில்லை. மாறாக, வழக்கத்தைவிட பெருமளவில் அதிக ஆயுதங்களை ஆட்சியாளர்கள் வாங்கிக் குவித்து வருகிறார்கள். (மேலும்....)

சித்திரை 28, 2011

அரசு - தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐந்தாம் சுற்று பேச்சு நாளை

அரசியல் தீர்வு காணும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான 5 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. பயங்கரவாதம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் தீர்வு காணும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து அரசாங்க தரப்பினருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையே நான்கு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இறுதியாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டதன்படி நாளை அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

சித்திரை 28, 2011

தருஸ்மன் அறிக்கை ஆதாரமின்றி அரசாங்கத்தை கண்டிக்கிறது - மக்கள் கண்டனம்

“தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாக ஆரம்பமாகிய எல்.ரீ.ரீ.ஈ காலப் போக் கில் மிகவும் ஒழுக்கமான உன்னதமான தேசியவாத தமிழ்ப் போராளிக் குழுவாக வலுப்பெற்று 1980ம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரிவினைவாதத்தை மேற்கொள் ளும் ஒரு அமைப்பாக உருவெடுத்தது” என்று தருஸ்மன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகின் முன்மாதிரியான ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறப்படும் எல்.ரீ.ரீ.ஈ யின் கொடுமைகளை இப்படங்கள் காட்டுகின்றன."

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை உலகின் அதிக கொடுமை களை புரிந்த படுமோசமான பயங்கரவாத எல். ரி. ரி. ஈ. இயக் கத்திற்கு வெள்ளை சாயம் பூசி, அதன் குற்றங்களை மூடி மறைக் கக் கூடியவகையில் ஒருதலைப்பட்சமாக தயாரிக்கப்பட்டுள்ளது என்று இந்நாட்டு மக்கள் வேதனையும் ஆத்திரமும் அடைந்துள்ளார்கள். உலகில் மிகவும் அதி உன்னத நிலைக்கு ஒழுக்கத்தை கடைப்பிடிக்கும் பொறுப்பு வாய்ந்த தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்ப தற்கான போராளிக்குழு என்று சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை உண்மைக்கு மாறாக எல். ரி. ரி. யை பாராட்ட தவறவில்லை என் பதை இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை அவதானமாக பரிசீலனை செய்பவர்களுக்கு தெளிவாக புரிந்துகொள்ள முடியும். (மேலும்....)

சித்திரை 28, 2011

மேற்கத்திய நாடுகளுக்கு 

கடாபியைக் கொல்ல யார் அதிகாரம் தந்தது?  - ரஷ்ய பிரதமர் புடின்

லிபியாவின் ஜனாதிபதி கடாபியைக் கொல்ல மேற்கத் திய நாடுகளின் ராணுவம் மேற் கொண்ட முயற்சிக்கு ரஷ்ய பிர தமர் விளாதிமீர் புடின் கண் டனம் தெரிவித்துள்ளார். டென்மார்க் பிரதமர் லார்ஸ் லோக்கே ரஸ்முசேன் ரஷ்யா வுக்கு வந்துள்ளார். அவரோடு ஆலோசனை நடத்தியபிறகு செய்தியாளர்களிடம் பேசுகை யிலேயே புடின் இவ்வாறு கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் பேசிய அவர், லிபியா மீதான நடவடிக்கைக்கு ஐக் கிய நாடுகள் அளித்த ஒப்பு தலை மீறி அதன் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கடாபி யைக் கொல்ல முயற்சிக்கும் அளவுக்கு சென்றிருக்கி றார்கள். (மேலும்....)

சித்திரை 28, 2011

கடல் நீர் குடிநீராக மாறும் அதிசயம்!!!

நமது அன்றாட வாழ்வில் நாம் தினந்தோறும் பயன்படுத்தும் தண்ணீரையே நம்மால் சுத்தமாக பார்த்துக்கொள்வதற்கு பல போராட்டங்களை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் ஒரு இயற்கையான நிகழ்வு கடல் நீரையே சுத்தம் செய்கிறது என்றால் சற்று வியப்பாகத்தான் உள்ளது நம் அனைவருக்கும். இதுநாள்வரை கடல் நீர் என்றாலே உப்பு நீர்தான் என்று மட்டும்தான் அறிந்து இருக்கிறோம். ஆனால் அந்த கடலிலும் நாம் தினந்தோறும் அருந்துவதுபோல் நீர் உள்ளது என்றால் நம்புவீர்களா? கடல் நீரில் பொதுவாக உப்பின் அளவு மாறுபடலாம் ஆனால் மொத்த நீரும் இயற்கையாக நல்ல நீராக மாறுவது என்பது ஒரு அதிசய நிகழ்வுதான். இந்த அதிசய நிகழ்விற்கு முக்கிய காரணம் ஒரு நதி. (மேலும்....)

சித்திரை 28, 2011

தருஸ்மன் அறிக்கை

மட்டு மாநகரசபையில் கண்டனத் தீர்மானம்

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கைக் கெதிராக மட்டக்களப்பு மாநகர சபை கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. நேற்றுக் காலை மாநகர மேயர் திருமதி சிவகீதா பிரபாகரன் தலைமையில் கூடிய மாநகர சபை உறுப்பினர்கள் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்றினர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, புளொட், ஈ. பி. ஆர். எல். எப். உறுப்பினர்கள் கண்டனப் பிரேரணை அங்கீகாரத்தின் போது அமர்வில் கலந்து கொண்டனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈரோஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிகளின் உறுப்பினர்கள் சபையில் சமுகமளித்திருக்கவில்லை. இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினரும் பிரதி மேயருமான ஜோர்ஜ் பிள்ளையும் இத்தீர்மான நிறை வேற்றத்தை பகிஷ்கரித்து சபையில் சமுகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சபையில் உள்ள ஒரேயொரு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரான என். கே. றம்ழானும் பகிஷ்கரிப்பிலே ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. சபையில் உள்ள 19 உறுப்பினர்களில் 10 உறுப்பினர்களின் ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநகர மேயர் தெரிவித்தார்.

சித்திரை 28, 2011

விபரம் வெளியிடுவோம்

சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப் பணம் பற்றி -  'விக்கிலீக்ஸ்'

சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை வெளியிடுவோம் என்று ‘விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனர் அறிவித்துள்ளார். சுவிஸ் வங்கிகளில் இரகசிய கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை ஒரு வங்கியின் முன்னாள் அதிகாரியான ருடால்ப் எல்மரிடம் இருந்து ‘விக்கிலீக்ஸ்’ பெற்றது. இதனால் எப்போது அந்த பெயர் பட்டியல் வெளியாகும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அந்த பட்டியலை வெளியிடப்போவதாகவும், அதில் இந்தியர்களின் பெயரும் இருப்பதாகவும் விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாங்கே தெரிவித்துள்ளார். (மேலும்....)

சித்திரை 28, 2011

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை புலிகளின் பயங்கரவாதத்தை மூடிமறைக்கிறது

சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை புலி பயங்கரவாதிகள் இழைத்த கொடுமைகளை மறைத்து பூசிமெழுகுவதாக அமைந்துள்ளது. முழு உலகமே எல்.ரீ.ரீ. ஈ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்ட மிலேச்சத்தனமான கொடுமைகளைப் பார்த்து அதிர்ச்சியுடன் பீதி அடைந்திருந்தபோதிலும், சர்ச்சைக்குரிய தருஸ்மன் அறிக்கை புலிகளின் குற்றச் செயல்களை வெளிப்படுத்துவதற்குப் பதில் புலிகளு க்கு மிகவும் தந்திரமான முறையில் கெளரவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு எத்தனிப்பதாக அமைந்துள்ளது. (மேலும்....)

சித்திரை 28, 2011

மும்பையில் இயங்கிய உலகின் கடைசி தட்டச்சு தொழிற்சாலை மூடப்பட்டது

உலகின் கடைசி தட்டச்சு தொழிற்சாலையான கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ், மும்பையில் உள்ள தனது தயாரிப்பு மையத்தை மூடியது. உலகம் முழுவதும் ஒரு காலத்தில் அலுவலகம் மற்றும் வீடுகளில் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட தட்டச்சு, கணனி வருகையால் குறைந்தது. மேற்கத்திய நாடுகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே தட்டச்சு காணாமல் போனது. இந்தியாவில் தற்போதும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அண்மை காலமாக இந்தியாவிலும் தட்டச்சு பயன்படுத்துவோர் எஎண்ணிக்கை வெகுவாக குறைந்தது. கடந்த 10 ஆண்டுகளில் தட்டச்சு பயன்பாடு படிப்படியாக குறைந்து இன்று கணனி ஆதிக்கம் மேலோங்கிவிட்டது. இதையடுத்து தட்டச்சு தயாரிப்பு தொழிற்சாலைகள் பல மூடப்பட்டன. ஆனாலும், கோத்ரெஜ் அண்ட் பாய்ஸ் தொடர்ந்து தட்டச்சுகளை தயாரித்து வந்தது. உற்பத்தி பொருட்களுக்கான கேள்வி குறைந்து விட்டது. வேறு வழி இல்லாததால் தயாரிப்பு மையத்தை மூடிவிட்டது.

சித்திரை 28, 2011

Army’s inhuman Ranjith group head identifiedUploaded by  admin Breakingnews

SriLanka Guardian exposed the gruesome account of the rape and murder of  Mrs Anita Annalingam in Jaffna by the clandestine army intelligence unit  called Ranjith group coming under the purview of the Army’s  Intelligence Head, Major General H. K. G. Hendawitharane.The Sri Lanka Guardian contact  in Vavuniya was able to tracked down the unit currently operating in the  Vanni. Our source said, the head of the unit is one Mohammed, a fair  skinned medium height stocky man and he is named by Major General  Hendawithrane as Ranjith to mislead his identity. Under Mohamed’s command, ruthless men are functioning, carrying out worst forms of human  rights abuses on the victims. Mrs Anita Annalingam’s gang rape and  murder is the telling story that speaks volume of the violent nature of  the Rajith group headed by Mohammed. (more...)

சித்திரை 27, 2011

இலங்கையில் போர்க்குற்றங்கள்

ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கை(பாகம் 1)

ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றசாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் விபரம் வருமாறு: கருத்து வேறுபாடுகளுக்கிடையே துன்பம் மிகுந்த விதத்தில் இலங்கையில் யுத்தம் முடிவடைந்தது. அதன் இரக்கமற்ற தன்மைக்கு பெயர்பெற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டு 27 வருடங்களுக்குப் பின்னர் ஆயுதமேந்திய மோதல் முடிவுக்கு வந்ததையிட்டு இலங்கையர் பலரும் உலகம் முழுவதில் உள்ள ஏனையவர்களும் மன ஆறுதல் அடைந்தனர். ஆயினும், நாட்டின் ஆயுதப்படையினர் வெற்றியை அடைவதற்காகக் கையாண்ட வழிமுறைகள் பற்றி இலங்கை மற்றும் ஏனைய இடங்களில் உள்ளவர்கள் அதிக மனத்தாக்கம் அடைந்தனர். நாட்டின் வடகிழக்குக் கரையோரப்பகுதியான வன்னியின் ஒரு சிறிய இடத்தில் தப்பியோட முடியாமல் மும்முரமாக யுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினருக்கிடையே பல இலட்சக்கணக்கான தமிழ் பிரஜைகள் சிக்குண்டிருப்பதை அதிகரித்து வரும் அச்சத்துடன் பல மாதங்களாக அவர்கள் நோக்கியவண்ணம் இருந்தனர். உயிரிழந்த மற்றும் காயமடைந்த பிரஜைகளின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்தது. அரசாங்க தரப்பிலிருந்து எறியப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் பொதுமக்கள் சிக்கினர்அப்பகுதியில் இருந்து தப்பியோட முயற்சித்த போது பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பலரை எல்ரிரிஈ இனர் சுட்டனர். மனிதாபிமான உதவிக்கான தேவை அதிகரித்த போதிலும், அரசாங்கத்தினால் அது தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டது. அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக யுத்தத்தைப் போதியளவு தளர்த்துவதற்கான முயற்சிகள் தடுமாற்றமடைந்தன. (மேலும்....)

சித்திரை 27, 2011

உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீன சர்வதேச விசாரணை - பான் கீ மூன்

2009 மே மாதம் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம் பெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. உறுப்பு நாடுகள் இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு தன்னால் உத்தரவிட முடியும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்கலாம். இதுவே யுத்தக் குற்றத்துக்கும் காரணமாகியிருக்கலாம். எனவே இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் போர் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என ஐ.நா. நிபுணர்கள் குழு தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. (மேலும்....)

சித்திரை 27, 2011

ஐ.நா அறிக்கைக்கு கனேடிய லிபரல் கட்சி ஆதரவு

ஐ.நா. அறிக்கைக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கையில் உண்மையான சமாதானத்தையும் நீதியையும் காண வேண்டுமாயின் ஐ.நா. நிபுணர்குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றார். _

சித்திரை 27, 2011

புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் !

'இரு சாராரும் ஒரே கூண்டில் இணைந்ததனால் நாம் கண்ட ஒரே விளைவு அப்பாவி மக்களின் இன்னுயிர்கள் புலியால் சிறை பிடிக்கப்பட்டு சிங்கத்தால் கடித்துக் குதறப்பட்டதுதான்.'

(அறிவுடன்)

மனித நேயத்திற்கும் ஆயுதத்திற்கும் இடையிலான தூரத்தை மீண்டும் ஒரு தடவை உலக வரலாறு அலசி ஆராய்வதற்கு ஏதுவாக ஏகாதிபத்தியத்தின் கைப்பாவை ஐ.நா வாய் திறந்திருக்கிறது. நல்லதோ கெட்டதோ, இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இன்று புனிதப் போர்வைகள் களையப்பட்டு புலியும் சிங்கமும் ஒரே கூண்டில் நிறுத்தப்பட்டிருப்பதை மனித நேய அபிமானிகள் எவ்வாறு நோக்கப்போகிறார்கள்? இனி வரும் காலத்தில் புலிப் பிரச்சாரத்திற்கும் சிங்க மழுப்பல்களுக்கும் இடையில் அப்பாவி உயிர்கள் எவ்வாறு உதை படப் போகின்றன என்கிற புதிய அத்தியாயத்தை ஐ.நா உபயத்தில் நாம் காணப்போகிறோம். அவன் பிடித்து வைத்தான், அதை மீட்பதற்காக நாங்கள் எதிரியை வலுவிழக்கச் செய்யப் போராடினோம், அப்போது இவ்வாறான “துன்பியல்” சம்பவங்கள் நிகழ்ந்தன என புலிப்பாணியிலேயே இனி வரும் காலத்தில் சிங்கக் குகைக்குள் இருந்து அறிக்கைகள் வெளி வந்தாலும் ஆச்சரியமில்லை. பிரபாகரன் தன் உயிர் அடங்கும் வரை மக்களைப் பலி கொடுத்ததும் மிகப் பெரும் உண்மை, அதை நாம் அப்போதே சுட்டிக்காட்டினோம், இன்று ஐ.நாவும் சுட்டிக்காட்டியிருக்கிறது. இருந்தாலும் உறங்கிக்கிடந்த புலிப்பினாமிகளும் விசைப்பலகை வீரர்களும் மீண்டும் துயிலெழுந்து தம் ஆக்ரோஷம் அடங்கும் வரை இணையமெங்கும் முழங்கித் தள்ளப்போகிறார்கள். (மேலும்....)

சித்திரை 27, 2011

லிபியா மீதான நேட்டோ தாக்குதலில் இத்தாலி விமானப்படையும் இணைந்தத

லிபியா மீதான விமானத் தாக்குதலுக்கு இத்தாலி விமானப் படையை பயன்படுத்த இத்தாலி பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி அனுமதி அளித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்தே இத்தாலி பிரதமர் இந்த அனுமதியை வழங்கினார். இதேவேளை மிஸ்ரட்டா பகுதியில் இருந்து தமது படை வெளியேறுவதாக முஅம்மர் கடாபி அரசு கூறியிருந்தாலும் அங்கு தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்றுவருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடாபி ஆதரவுப் படை அங்கு நேற்று நடத்திய ஷெல் தாக்குதலில் 6 சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக அல் ஜீரா செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேட்டோ படை திரிபோலியிலுள்ள முஅம்மர் கடாபியின் இருப்பிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் லிபிய ஜனாதிபதி கடாபிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அரச ஊடக பேச்சாளர் மூஸா இப்ராஹிம் தெரிவித்துள்ளார். முஅம்மர் கடாபி பாதுகாப்பாக உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக அவர் கூறினார்.

சித்திரை 27, 2011

நிம்மதி, கிலோ நாலு ரூபாய் - வாழ்வியல் கட்டுரை

- வித்யாசாகர்​!!

வாழும் ஐம்பது சதவிகித மக்கள், நிம்மதியை உறவிகளிடத்திலும் , வீட்டினுள்ளும் ஏன் தன் கையிலேயே வைத்துக் கொண்டு தான் ஊரெல்லாம் தேடி அலைகிறது. எனவே, அங்ஙனம் தன் நிம்மதியை பிறரிடம் தேடுவதை விட்டுவிட்டு, தன்னிடமே இருப்பதில் இன்பம் கண்டு, போதும் எனும் நிறைவோடு, வேண்டியதைப் பெற்றுக் கொள்ளும் திறத்தோடு, தன்னாலியன்றதை தனக்கு கீழுள்ளோரோடும் பகிர்ந்து, எல்லோருமே நல்மனதோடு வாழ முயற்சித்தால்; நமக்கும் நம்மோடிருப்பவர்களுக்கும் நிம்மதி நம்புமளவு நிச்சயம் கிடைக்கும். கிலோ நாலுக்கல்ல இனாமாகவே பெறலாம்!! கடைசியாய் விடைபெறும் முன் ஒன்றே ஒன்றினை சொல்லிக் கொள்கிறேன் "எல்லோரும் நலம் வாழ நாமும் வாழ்வதே; நிம்மதியும், மேன்மையுமன்றி வேறில்லை!! (மேலும்....)
 

சித்திரை 27, 2011

Mass deaths in Sri Lanka may be 'war crimes'- UN

UNITED NATIONS (AFP) – The Sri Lankan army killed most of the tens of thousands of civilian victims of a final offensive against Tamil separatists in 2009 but both sides may be guilty of war crimes, a UN panel said Monday. UN Secretary General Ban Ki-moon said he could not order an international investigation into the deaths. But the UN will hold an inquiry into its actions in the final months of the war following criticism by the panel that more could have been done to save lives. The panel's report -- angrily opposed by the Sri Lankan government -- painted a barbarous picture of the final offensive on the Tamil enclave in the north of the island that ended a three-decade war with the Liberation Tigers of Tamil Eelam (LTTE). (more....)

சித்திரை 27, 2011

சி. பி. ஐ. குற்றப்பத்திரத்தில் கனிமொழி பெயர்,  கலைஞர் குடும்பத்தினர் மீது வழக்கு

சிபிஐ குற்றப் பத்திரத்தில் கனிமொழி பெயர் இடம்பெற்றுள்ள பரபரப்பான சூழ்நிலையில் திமுக உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் முதல்வர் கருணாநிதி தலைமையில் இன்று புதன்கிழமை சென்னையில் கூடுகிறது. பொதுச் செயலாளர் க. அன்பழகன் துணை முதல்வர் மு. க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் மு. க. அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். 2 ஜி அலைக்கற்றை வழக்கில் முதல்வர் மகள் கனிமொழி கலைஞர் தொலைகடகாட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு. க இடம் பெற்றுள்ள நிலையில் முதல்வர் கருணாநிதி குடும்பத்தினர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது திமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (மேலும்....)

சித்திரை 27, 2011

 

ஆன்மிகத்தின் ஊடாக அன்பு, மனிதநேயம், ஜீவகாருண்யம் வளர்த்தவர் பகவான் சாயிபாபா

உலகமெங்கிலும் 178 நாடுகளில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் ஆன்மீகத் தலைவராக விளங்கி அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுத் திகழ்ந்தவர் ஸ்ரீசத்யசாயிபாபா. ஆன்மீகம், கல்வி, சமூக சேவைகள், உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகளை செய்து அதன் மூலம் ஆன்மீகத்தை மக்களிடையே பரப்பியவர் ஸ்ரீசத்யசாயிபாபா. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தி கிராமத்தில் பெத்த வெங்கம்ம ராஜூ- ஈசுவரம்மா தம்பதியினருக்கு 4வது குழந்தையாக 1926ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி சாயிபாபா பிறந்தார். இவருக்கு சத்யநாராயணன் ராஜூ என பெற்றோர் பெயர் சூட்டினர். (மேலும்....)

சித்திரை 27, 2011

பார்வையிழப்பை தடுக்க ஒரே ஒரு ஊசி போதும்

பார்வையிழப்பை தடுக்க ஒரே ஒரு ஊசி போதும் பார்வை இழப்பை தடுக்க இனி ஒரே ஒரு ஊசி போதும் என்று இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது பற்றி இலண்டனில் கண் சிகிச்சை நிபுணரும், விஞ்ஞானிகள் குழுவில் இடம் பெற்றவருமான ஆலிவர் பேக்ஹவுஸ் கூறியதாவது:- ஒரே ஒரு ஊசி மூலம் பார்வையிழப்பை தடுக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளோம். அந்த ஊசி மூலம் ஸ்டீராய்டை கண்களுக்கு பின்னால் இடம் பெறச் செய்யலாம். பார்வையிழப்பை ஏற்படுத்தக் கூடிய கண் நரம்புகள் அடைப்பை அது தடுக்கும். அதனால், திடீர் பார்வையிழப்பு ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், விழித்திரை அருகே எரிச்சலுக்கு எதிரான மருந்தை அந்த ஊசி வெளியிடும். எனவே, கண் எரிச்சலால் ஏற்படும் பார்வைக் குறைவு தடுக்கப்படும். இந்த ஊசியை எதிர்கால பார்வையிழப்பைத் தடுக்கவும் பயன்படுத்தலாம்.  (மேலும்....)

சித்திரை 27, 2011

நிறைவேற்றப்படாத விருப்பத்துடன் மரணமடைந்த பாபாவின் விமர்சகர்கள் கோவூர்,நரசிம்மையா,பிரேமானந்த் முக்கியமானவர்கள்

பகவான் சத்திய சாயி பாபா உயிருக்கான தனது போராட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோல்வியடைந்திருக்கக்கூடும். ஆனால், அவரின் வாழ்வுக் காலத்தில் பல போராட்டங்களிலிருந்தும் அவர் தப்பிப் பிழைத்திருந்தார். அவரின் அற்புதங்களுக்கு பகுத்தறிவாளர்கள் பலர் சவால் விடுத்திருந்தனர். ஏபிரகாம் கோவூர், பி.பிரேமானந்த் போன்ற பகுத்தறிவாளர்கள் பாபா நிகழ்த்திய அற்புதங்கள் தொடர்பாக பல வருடங்களாக சவால் விடுத்து வந்தனர். அறிவியல் தன்மையின் அடிப்படையில் இவரின் அற்புதங்களை அவர்கள் சவாலுக்குட்படுத்தினர். ஆனால், ஒவ்வொரு தடவையும் பாபா அவற்றை சமாளித்து அவர்களை தோல்விகாணச் செய்திருந்தார். பாபாவை வெளிப்படுத்தும் முயற்சியாக பல சவால்களை பகுத்தறிவாளர்கள் மேற்கொண்டிருந்ததை கடந்த சில தசாப்தங்களாக காணக்கூடியதாக இருந்தது. (மேலும்....)

சித்திரை 26, 2011

ஐ.நா.சபையினால் முழுமையாக வெளியிடப்பட்ட ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை ஐக்கியநாடுகள் சபையினால் முழுமையாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது என இலங்கை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிபுணர்குழுவின் அறிக்கையை இங்கே பார்வையிடலாம்.
 Click Here

சித்திரை 26, 2011

 

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் பிரதியை முதலில் பெற்ற "வோய்ஸ் ஒப் அமெரிக்கா'

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழுவால் இலங்கை அரச தலைவர்கள் மற்றும் படைத் தலைவர்களுக்கு எதிராகப்போர்க்குற்றஞ்சாட்டித் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரதியை ஐ.நா. அதிகாரிகள் அமெரிக்காவிலுள்ள இலங்கையின் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கையளிக்கும் முன்னரே அதன் பிரதிகளை "வோய்ஸ் ஒப் அமெரிக்கா' ஊடக நிறுவனமும் ஐக்கிய இராச்சியத்தில் லண்டன் சனல்4 தொலைக்காட்சி நிறுவனமும் பெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (மேலும்....)

சித்திரை 26, 2011

CP tells SL Tamils

Don’t be deceived by Western powers

Urges govt to meet legitimate grievances, rights and aspirations of Tamils

The Communist Party of Sri Lanka says UNSG Ban Ki-moon’s move, at the behest of a section of the international community, is motivated and dictated by their global strategies and geo-political interests and not by humanitarian considerations or through compassion or love for the Tamil speaking people.The CPSL urged the government to consider legitimate rights of the Tamil speaking people, while urging them not to be deceived by Western Powers. (more....)

சித்திரை 26, 2011

நிபுணர்குழுவின் நியாயமற்ற அறிக்கையை உலக நாடுகள் ஆதரிக்கப் போவதில்லை

ஈராக்கிலும், ஏனைய மத்திய கிழக்கு அரபு நாடுகளிலும் போலி கார ணங்களை முன்வைத்து யுத்தத்தை ஆரம்பித்து பல்லாயிரக் கணக்கான அப்பாவி பொது மக்களின் உயிர்களை பலிகொண்ட அமெரிக்க மற்றும் மேற்கத்தைய நாடுகளின் அரசாங்கத் தலை வர்கள் அன்று யுத்த குற்றங்களை இழைக்கவில்லையா என்று நாம் கேள்வி எழுப்புகிறோம். அவை பலம் வாய்ந்த நாடுகள் என் பதால், மெளனம் சாதித்து அமைதியாக இருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் ஏன்? இலங்கை மீது இவ்விதம் ஓரவஞ்சகக் கொள்கையை கடைப்பிடிக்கிறார் என்று நாம் கேட்க விரும்புகிறோம். யுத்தம் நடைபெற்ற இறுதி இரண்டு வாரங்களின் போது ஏற்பட்ட உயிரிழப்புக்களை பற்றி மாத்திரம் விசாரணை நடத்துவதற்கு முன்வந்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத வாதமாகும். இந்த இரண்டு வாரங்களின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும், காயமடைந்தமைக்கும் அடித்தளத்தை அமைத்தவர்கள் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தை சார்ந்தவர்களே ஆவர். (மேலும்....)

சித்திரை 26, 2011

Canadian Srilankan community rejoices together in their cultural gathering showing Solidarity behind Government of Srilanka at a critical time of UN Panel report.                                           

By Lenin Benedict-Toronto 

The Tamil and Sinhala New year celebration was celebrated by the Canadian Democratic Tamil Cultural Association in Toronto at Agincourt Collegiate in a grand manner at a critical time when the UN Panel report has been published. The overwhelming Canadian Srilankans came to this function to show the world, that the Srilankan community is united in Canada and a show of Solidarity to the Government and the people of Srilanka. (more...)

சித்திரை 26, 2011

"கோ" திரைப்படம் பற்றிய ஒரு பார்வை

(வித்யாசாகர்​)

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின் ‘– திருவள்ளுவர்!

இந்த ஏழு சீர், இரண்டு அடியில் ஐயா திருவள்ளுவர் இரண்டாயிரம் வருடத்திற்கு முன் சொன்ன செய்திதான் "கோ" எனும் இப்படம் இறுதியாய் சொல்ல வரும் நீதியும். அந்த நீதியினை வழங்குவதற்குமுன் மக்களை மக்களோடுப் பின்னி, மக்களை சார்ந்த தொண்டர்களை காட்டி, தொண்டனின் தலைவன் செய்யும் அரசியலை ஒவ்வொரு இளைஞனும் கையிலெடுத்து இத்தேசத்தை திருத்தி ஆளும் தலைவனாக வாழ்ந்தாலென்ன?' என்று மறைமுகமாய் கேட்கும் ‘ஒரு நல்ல தலைவனை தேடும் படம் இந்த "கோ". தலைவனை தலைவராக்கி, தலைவரை தலைவா என்று மெச்சிக்கொண்ட நமக்கு; வெளி உலகிற்கு தெரியாத ஒரு போலித் தலைவனை, மெய்யிலா தியாகியை, கதாபாத்திரங்களுக்குக் காட்டாமல் மக்கள் முன் தோலுரித்து காட்டிய படம் "கோ". (கோ' எனில் தலைவன் என்று அர்த்தம்) (மேலும்....)

சித்திரை 26, 2011

Is it wrong to defeat a deadly terrorist outfit?

UN report casts doubt on conventional wisdom

(By Tharindu Prematillake in Singapore )

In May 2009 when the Sri Lankan military defeated the LTTE, Sri Lanka became the first country in the 21st century to have successfully defeated a terrorist outfit. Yet, almost two years into that historical day, various allegations have forced Sri Lankans to wonder whether defeating a terrorist outfit is an ‘acceptable’ phenomenon to the international community. Even Americans can’t boast of a successful counter-terrorism campaign that has eliminated a terrorist outfit, despite fighting a ‘global war on terror’ on many theatres around the world. Is it wrong to eliminate a group regarded by the FBI as the deadliest terrorist outfit in the world? The latest allegations levelled against Sri Lanka by a UN report have left many Sri Lankans baffled. The UN Secretary General appointed a panel to advise him on allegations of human rights violations during the latter stages of the war in Sri Lanka. A summary of the report compiled by the panel argues that there are credible allegations of war crimes and crimes against humanity by the LTTE and the Sri Lanka Army, and that those responsible should bear criminal liability for these crimes. The Nation turned to one of the world’s leading and most sought-after international terrorism experts, Professor Rohan Gunaratna, to get a better understanding of the latest developments regarding the UN Panel and its report on Sri Lanka. Professor Gunaratna is the Head of the International Centre for Political Violence and Terrorism Research (ICPVTR) in Singapore, and has in-depth experience and knowledge regarding the Sri Lankan conflict. (more....)

சித்திரை 26, 2011

தந்தை செல்வ அவர்களின் 34ஆவது ஆண்டு நினைவு உரை கொழும்பிலிருந்து நேரடி ஒலிபரப்பு

தந்தை செல்வநாயகம் அவர்களின் 34ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு 26.04.2011 செவ்வாய்க்கிழமை மாலை  5.30 மணிக்கு கொழும்பில் உள்ள புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன்  அவர்கள் தலைமையில் இடம்பெறவுள்ள இந் நிகழ்வின் தலைவரின் தலைமையுரையைத் தொடர்ந்து  நினைவுப் பேருரையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரனியுமான சுமந்திரன் ஆற்றவுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயளாலர் மாவைசேனாதிராஜா நன்றியுரை நிகழ்த்த உள்ளார். இந் நிகழ்விற்கு சர்வமத தலைவர்கள் இராஜதந்திரிகள் மற்றும் தூதுவர்கள் ஏனைய கட்சித் தலைவர்கள் பொதுமக்களும் அனைவரும் அழைக்கபட்டுள்ளனர்.

V.Ramaraj

Thamil Broadcasting Centre UK Ltd     (TBC)

00 44 7817063682

சித்திரை 26, 2011

Sinhala Language Advocacy Canada

We are a cultural group of Canadians promoting the vernacular languages of Sri Lanka particularly, the Sinhala Language, the common language of Sri Lanka among Canadians of Sri Lankan origin in Ontario; particularly in Mississauga where Sri Lankan expatriates form a sizable segment. Language being an integral part of culture, we believe that preservation of languages of ethnic communities in addition to promoting Canada’s official languages, English and French among them help create wholesome and stronger Canadian ethnic communities that proudly take their place in our multicultural Canadian Nation. Over the past few decades we have noted with great interest and appreciation your unflinching commitment to Multiculturalism and efforts to reach out to diverse cultural communities. Canadian Sri Lankans consider it a great honor to have you grace the occasion as you by your gracious presence had always supported their cultural festivals in in the past. (more....)

சித்திரை 26, 2011

புலிகளே புலிகளைப் பற்றி இவ்வாறு கூறுகின்றனர்

நேரு குணரத்தினம் கலந்து கொள்ளும் நிகழ்வுகளிற்கு நான் செல்வதை விரும்பவில்லை கனடிய பாராளுமன்ற உறுப்பினர்

நேரு குணரத்தினம் கலந்து கொள்ளும் எந்த ஒரு நிகழ்விலும் தான் பிரசன்னமாக விரும்பவில்லை என மார்க்கம் தொகுதிக்கான கனடாவின் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான போல் கலான்ட்ரா பத்திரிகைப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் அதிகம் வாழும் மார்க்கம் பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போல் கலான்ட்ரா அவர்களே கனடா தேசிய மக்களவையின் காரியாலயத்தைத் திறந்து வைத்தவர் ஆவார். மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு கனடா மக்களவையின் உருவாக்கத்தில் நேரு குணரத்தினத்தின் பங்களிப்பு இருந்தது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்படவில்லையென்றும், ஆனால் தான் அலுவலகத் திறப்புவிழாவில் இருந்த சமயம் பார்வையாளர்களில் ஒருவராக நேரு குணரத்தினம் அங்கு பிரவேசித்த சமயம் தான் தனது எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அந்த விழாவில் இருந்து வெளிநடப்புச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். (மேலும்....)

சித்திரை 26, 2011

Blue heaven

They're the largest animals our planet has…

(To watch video....)

சித்திரை 26, 2011

வைகோ வின் அஸ்தனமனம்

இனி எந்த அணிக்கும் ஆதரவு கிடையாது-  ம.தி.மு.க.

“எந்த கட்சிக்கும் இனி பல்லக்கு தூக்கி யாக இருக்க மாட்டோம். இனி தனித்தே செயல்பட்டு எங்கள் பலத்தை நிரூபிப்போம்’ என, ம.தி.மு.க. முடிவு செய்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்ட ணியில் ம.தி.மு.க.,வுக்கு சொற்ப இடங் களே ஒதுக்கப்பட்டதால், அ.தி.மு.க., கூட் டணிக்கு ம.தி.மு.க., முழுக்கு போட்டது. வேறு எந்த அணியிலும் சேராமல், தேர் தலையும் புறக்கணித்தது. ம.தி.மு.க.வின் இந்த முடிவு தி.மு.கவுக்கு சாதகமானது என முதலில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடியும் வரை தி.மு.க.வை, ஆதரித்து ம.தி.மு.க.,வினரோ, அதன் பொதுச் செயலர் வைகோவோ எந்த அறிக்கையும் வெளி யிடவில்லை “வைகோ என் நல்ல நண்பர், எப்போதும் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு’ என, அ.தி.மு.க, பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியிருந்தார். (மேலும்.....)

சித்திரை 26, 2011

தனியார்துறை, அரச கூட்டுத்தாபனங்கள்

ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த மூன்று நிதியங்கள் உருவாக்கம்

ஜனாதிபதியுடன் தொழிற்சங்கத் தலைவர்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது, புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில் மஹிந்த சிந்தனையின் எண்ணக்கருவில் தெரிவிக்கப்பட்டிருந்த அனைவருக்கும் ஓய்வூதியத்தைப் பெற்றுக்கொடுப்போம் என்ற வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்றவுள்ளது. தனியார்துறை மற்றும் அரசாங்ககூட்டுத் தாபன ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்படும் இந்த ஓய்வூதியத் திட்டத்திற்காக மூன்று நிதியங்கள் அமைக்கப்படவுள்ளன. (மேலும்.....)

சித்திரை 26, 2011

பான் கீ மூனின் அறிக்கையையும் தோல்வியடையச் செய்வோம் - இலங்கை அரசு

புலிப் பயங்கரவா தத்தை ஒழித்ததைப் போன்றே ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் அறிக்கையையும் தோல்வியடையச் செய்வதற்காக அரசாங்கம் பலமிக்க முறையில் முகம் கொடுப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இல்லாதொழித்த பயங்கரவாதத்திற்கு உயிர் கொடுக்க ஒரு சிலர் முயச்சித்து வருவதாகவும், பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டை அமைதியான சூழலிற்கு இட்டுச் சென்ற தைப் போன்றே அனைத்துச் சவால்களுக்கும் முகம்கொடுத்து அவற்றினை வெற்றிகொள் வதற்கான ஆற்றல் அரசாங்கத்திற்கு இருப்பதாக அமைச்சர் மேலும் வலி யுறுத்தினார்.(மேலும்.....)

சித்திரை 26, 2011

கந்தஹார் சிறையிலிருந்து 540 தலிபான்கள் தப்பியோட்டம்

ஆப்கானிஸ்தானின் கந்தஹார் சிறைச்சாலையில் இருந்து 540 தலிபான் உறுப்பினர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனை அந்நாட்டு அரசும் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தலிபான் அமைப்பின் முக்கிய அதிகாரிகள், இராணுவ வீரர்கள் என 540 பேர் அளவில் 350 மீற்றர் நீளமான சுரங்கப்பாதை ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக ஆப்கான் அரசு அல் ஜீராவுக்கு தெரிவித்துள்ளது. இதேவேளை, தமது அங்கத்தவர்கள் தப்பி வந்ததை தலிபான் அமைப்பு உறுதி செய்துள்ளது. 5 மாத காலம் சிறப்பாக திட்டமிட்டு தமது அங்கத்தவர்கள் 541 பேர் கந்தஹார் சிறையில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் தப்பி வந்ததாக தலிபான் பேச்சாளர் யூசுப் அஹமதி தெரிவித்துள்ளார். இதில் தப்பி வந்தோருள் 106 பேர் தலிபான் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் என்று அவர் கூறினார். கந்தஹார் சிறையில் இருந்து இவ்வாறு தப்பிச் சென்றோருள் பலர் நேடோ படையினரால் கைதுசெய்யப்பட் டோர் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை 26, 2011

பெரு ஜனாதிபதித் தேர்தல்  முந்துகிறார் இடதுசாரி வேட்பாளர் ஹுமாலா

ராணுவத்தில் பணியாற் றிய ஹுமாலா 2006 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட் டார். சாமானிய மக்கள் மத்தியில் மிகவும் பிரபல மாக இருக்கும் இவர் ஜனா திபதியாகும் பட்சத்தில் வெனிசுலா உள்ளிட்ட நாடு களுடன் நல்ல உறவை மேற் கொள்வார் என்றும், தென் அமெரிக்க நாடுகளில் இடது சாரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் நாடு என்ற பட்டியலில் பெருவும் இடம் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கனிம வளங்கள்தான் பெரு நாட்டின் முக்கிய மான ஆதாரமாகும். அந் நாட்டிலிருந்து ஏற்றுமதி யாகும் பொருட்களில் 60 விழுக்காடு கனிம வளத் துறையிலிருந்துதான் செய் யப்படுகிறது. மூன்றில் ஒரு வர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கிறார். தண்ணீர் கிடைக்காத குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இடதுசாரிக் கொள்கைகளே வறுமை யை எதிர்கொள்ளும் என்ற மக்களின் நம்பிக்கையே ஹுமாலாவை வெற்றி பெறச் செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். (மேலும்.....)

சித்திரை 25, 2011

இலங்கையின் கோரிக்கைகளுக்கு அப்பால் ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கை இன்று வெளியாகும் சாத்தியம்

இரண்டு காரணங்களின் அடிப்படையிலேயே அமைச்சர் பீரிஸ் இந்த கோரிக்கையை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இந்த அறிக்கையானது கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவுக்கு ஒரு தகவல் மூலமாக பயன்படுத்தப்படலாம் அல்லது தமிழ் மக்களுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் நல்லிணக்கப்பாடுகளுக்கு பகிரங்கமாக இதனை வெளியிடுவது பாதகமாக அமையலாம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். எவ்வாறெனினும் ஐ.நா. பிரதி பேச்சாளர் பர்ஹான் ஹக் இந்த கோரிக்கையை நிராகரித்ததுடன் எந்தவிதமான திருத்தங்களும் செய்யப்படாமல் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மொஸ்கோவுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ. மூன் நியூயோர்க்குக்கு திரும்பியவுடன் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிடப்படலாம் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. 196 பக்கங்கள் அடங்கிய ஐ.நா. குழுவின் அறிக்கை ஏப்ரல் 12 ஆம் திகதி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ. மூனிடம் கையளிக்கப்பட்டது. (மேலும்....)

சித்திரை 25, 2011

துனிஷியா, எகிப்து ஜனாதிபதிகளைத் தொடர்ந்து

யெமன் ஜனாதிபதி சலாஹ் பதவி விலகுவதாக அறிவிப்பு

யெமன் நாட்டின் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக ஜனாதிபதி அலி அப்துல்லா சலாஹ் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின் ஆலோசனையின்படி இம்முடிவை எடுத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தான் வகித்து வந்த பொறுப்புக்கள் அனைத்தையும் துணை ஜனாதிபதியிடம் ஒப்படைப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பதவி விலக கோரி கடந்த 30 நாட்களுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன. போராட்டத்தில் சுமார் 120 பேர் வரை கொல்லப் பட்டனர். பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள யெமன் எதிர்க் கட்சி தலைவர் யாசின் நோமன் உடனடியாக தேசிய ஐக்கிய அரசு பதவி ஏற்க இயலாது என்று தெரிவித்துள்ளார். பதவி இழந்த துனிஷியா ஜனாதிபதி ஜினி அல் அபிதினி பென் அலி, எகிப்து ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், வரிசையில் தற்போது யெமன் ஜனாதிபதியும் இணைந்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் யெமன் ஜனாதிபதி பதவி விலக ஒப்பந்தங்கள் செய்திருந்தன. அதன்படி துணை ஜனாதிபதியிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது, இடைக்கால அரசு மூலம் ஜனாதிபதி தேர்தல் நடத்துவது, ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது போன்ற ஒப்பந்தங்கள் செய்திருந்தன.

சித்திரை 25, 2011

ஐக்கிய நாடுகளுக்கு எதிராக கண்டியில் ஆர்ப்பாட்டம்

ஐ.நா.சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட ஆலோசனை குழுவின் இலங்கைக்கு எதிரான அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டியில் இன்று பிற்பகல் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். சிஹல உறுமய கட்சி இதனை ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் மக்கள் வரை கலந்துகொண்டுள்ளனர். “பான் கீ மூனே நன்றாகக் கேள்.இலங்கை மீது கை வையாதே” என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசம் எழுப்பியுள்ளனர்.

சித்திரை 25, 2011

சாயிபாபாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அலை அலையாய் திரளும் மக்கள் கூட்டம்

இறைபதமடைந்த சத்தியசாயி பாபாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் புட்டபர்த்தியை நோக்கிப் படையெடுத்து வருவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. பாபாவின் மறைவையொட்டி ஆந்திரமாநிலத்தில் நான்குநாட்கள் துக்கம் அனுஷ்டிப்பதற்காக மாநில அரசு அறிவித்துள்ளது.

சித்திரை 25, 2011

இந்தியாவின் தலையீடு உள்ளதாக சந்தேகம் ஐ.நா. அறிக்கை வெளியாவதில் தாமதம்

இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்த ஐ.நா.சபையின் அறிக்கையை வெளியிட விடாமல் தடுக்க இந்தியா துணைபோவதாக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் பேராசிரியர் தொ. பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது, இலங்கையில் நடந்த படுகொலையில் இந்தியாவுக்கும் பங்கு உண்டு. எனவே மத் திய அரசு தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இலங்கை தமிழர் படுகொலை குறித்து ஐ.நா. தயார் செய்துள்ள அறிக்கையை வெளியிடகால தாமதம் ஏற்பட்டுள்ளது. அது இன்னும் வெளியிடப்படாத நிலையில் அந்த அறிக்கையை வெளியிடா மல் தடுக்க இந்தியாவும் துணை போகின்றதோ என்ற சந்தேகம் பலரது மனதில் எழுந்துள்ளது.  இலங்கை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும். ஐ.நா. அறி க்கையை உடனடியாக வெளியிடவேண்டும். இது தான் தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு என்றார்.

சித்திரை 25, 2011

பதவியை இழக்கத் தயார் - சஜித் பிரேமதாச

தமக்கு ஆதரவு வழங்கும் கட்சி உறுப்பினர்கள் மீது ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் நெருக்கடிகளை வழங்கினால் பதவியை இழக்கதத் தயாரென சஜித் பிரேமதாசா தெரிவித்துள்ளார். கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியின் நியமனம் இன்னும் இடம்பெறவில்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தமக்கு ஆதரவு வழங்கும் கட்சி எம்.பிக்களுக்கு தொடர்ந்தும் நெருக்கடி கொடுப்பாராயின் தனது பதவியை இராஜினாமா செய்யவும் தான் தயாரென தெரிவித்துள்ளார்.

சித்திரை 25, 2011

இலங்கையில் ஒரு நாளைக்கு ஒருவர் எயிட்ஸ் நோயினால் மரணிக்கிறார்

இலங்கையின் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ஒருவர் HIV/  எயிட்ஸ் நோயினால் மரணிக்கிறார்கள். இந்த நோய் பெரும்பாலும் கணவன்மார்கள் மூலமாகவே பெண்களுக்கும் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பரவுகின்றன என்று எயிட்ஸ் நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. உலகில் எயிட்ஸ் நோய், சயரோகம், மலேரியா போன்ற நோய்களை எதிர்த்து போராடுவதற்கான ஐக்கிய நாடுகள் செயற்றிட்டத்தின் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, எங்கள் நாட்டில் தற்போது மூவாயிரத் திற்கும் அதிகமானோர் எயிட்ஸ் நோயி னால் பாதிக்கப்பட்டிருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார். (மேலும்....)

சித்திரை 25, 2011

காணி, பிறப்பு, இறப்பு பதிவுகள் முல்லை மாவட்டத்தில் முற்றாக அழிவு

கொடூர யுத்தத்தின் இறுதிக் கட்டம் இங்குதான் நடந்து முடிந்தது. சுனாமிப் பேரலை அனர்த்தமும் இங்கு நடந்திருக்கின்றது. அவற்றின் விளைவாக இங்கு வாழ்ந்த மக்கள் தமது பூர்வீக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அதனால் அவர்கள் தமது காணி உறுதிகளையும், பிறப்பு, இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களையும், திருமணப் பதிவுச் சான்றிதழ்களையும் ஏனைய முக்கிய ஆவணங்களையும் இழந்துவிட்டார்கள். அதன் காரணமாக அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். (மேலும்....)

சித்திரை 25, 2011

காலநிலையில் திடீர் மாற்றம், நாடெங்கிலும் மழை

துருவங்களுக்கிடையில் வீசும் காற்று சந்திக்கும் மையமாக இலங்கை வான் பரப்பு அமைந் திருப்பதன் விளைவாகவே கால நிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலை யாளர் தமயந்தி இந்தி ஹெட்டி ஹேவகே நேற்றுத் தெரிவித்தார். தற்போது கால நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக் கும் என்றும் அவர் கூறினார். கால நிலையில் ஏற்பட்டிருக்கும் இம்மாற்றம் காரணமாக தற்போது நாடெங்கிலும் மழை பொழிவ தாகக் குறிப்பிட்ட அவர், நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை 107.8 மில்லி மீற்றர்களாக கொழும்பு கோட்டையில் பெய்துள்ளது என்றும் கூறினார். (மேலும்....)

சித்திரை 25, 2011

நீயா....?நானா.......?

அமைச்சர் பட்டியல் தயாரிப்பதில் தி.மு.க., அ.தி.மு.க. தீவிரம்

தமிழக தேர்தல் களத்தில், மிக பரபரப்பான நாட்களாக மே 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்கள் அமையப் போகின்றன. இதில் மே 13ம் திகதி நடக்கும் வாக்கு எண்ணிக்கையின் முடிவு அடுத்த ஆட்சியை அமைக்க போவது யார் என்பதை வெளிப்படுத்தும். அதற்கு அடுத்த நாளில், எம். எல். ஏ. க்கள் கூட்டம், யாருக்கு யார் ஆதரவு அளிக்கப்போகின்றனர். தனி பெரும்பான்மை ஆட்சியா, கூட்டணி ஆட்சியா, வெளியிலிருந்து ஆதரவா என்றெல்லாம் பல்வேறு பரபரப்பான காட்சிகள் அரங்கேற்றப்போகின்றன. இந்த மூன்று நாள் பரபரப்பு குழப்பத்தை தவிர்க்க இப்போதே முன்னேற்பாடுகளில், இரு திராவிடக் கட்சிகளும் இறங்கியுள்ளன. (மேலும்....)

சித்திரை 25, 2011

கோவில் பிரச்சனையால்

தாய்லாந்து - கம்போடியா எல்லையில் மோதல்

தாய்லாந்து இராணுவத்துக்கும் கம்போடிய இராணுவத்துக்கும் இடையில் இரு நாடுகளின் எல்லையில் மீண்டும் மோதல் ஆரம்பித்துள்ளது. எல்லையை ஒட்டி கம்போடிய பகுதியில் உள்ள ஆலயத்தை தனதாக்கிக் கொள்ள தாய்லாந்து இராணுவம் தொடர்ந்து போராடி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெறுகிறது. பல ஆண்டுகளாக நீடித்துவரும் இந்தப் பிரச்சினை காரணமாக இரு நாட்டு இராணுவத்தினரிடையே 2008ம் ஆண்டிலிருந்து மோதல் அதிகரித்துள்ளது. கம்போடியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்று 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை உலக புராதன சின்னமாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்தது. இதனால் இதைக் கைப்பற்ற தாய்லாந்து முயற்சிக்கிறது. இதனால் அடிக்கடி எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட்டு வருகிறது. (மேலும்....)

சித்திரை 25, 2011

அமெரிக்க ஜனாதிபதி பங்கேற்ற கூட்டத்தில் ஆர்ப்பாட்டம், சலசலப்பு

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில், “விக்கிலீக்ஸ்” வழக்கில் கைதாகியுள்ள இராணுவ வீரர் பிரேட்லி மேனிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்று சிலர் ஆர்ப்பாட்டம் செய்ததால் அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஒபாமா பதில் கூறுவதற்குள், அந்தப் பெண்ணும் அவரைச் சுற்றியிருந்த 10 பேரும் சேர்ந்து அவர்கள் எழுதிய பாடலைப் பாடினர். அப்பாடல் இராணுவ வீரர் பிரேட்லி மேனிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்ற பொருளில் எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து, “மேனிங்கை விடுதலை செய்” என்று எழுதப்பட்ட சிறிய பதாகைகளையும், அவரது புகைப்படங்களையும் காண்பித்தனர். (மேலும்....)

சித்திரை 25, 2011

2900 ஆண்டு முன்பே மூளை அறுவை சிகிச்சை

வீனமயமாகி விட்ட மருத்துவ உலகில் மூளை, இதயம் மற்றும் முதுகு தண்டுவடம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஒரு சில சிக்கலான அறுவை சிகிச்சைகள் இன்றளவும் சவாலாகவே உள்ளன. ஆனால், திபெத் மருத்துவர்கள் இந்திய மருத்துவர் கண்காணிப்பில் சுமார் 2900 ஆண்டுகளுக்கு முன்பே மூளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர் என்பது ஆச்சரியமான விடயம்தான். அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து மிகப்பழமையான த்ரிபித்தகா என்ற என்சைக்ளோபீடியாவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளதன் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது. பண்டைய திபெத்திய நூல்கள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டு வருபவர் திபெத் பல்கலைக்கழக மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமேலி, இவர் மேற்கொண்ட ஆய்வில்தான் இந்த தகவல் வெளியாகி உள்ளது. (மேலும்....)

சித்திரை 24, 2011

வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு ஆராயப்படும்

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் பேச்சுவார்த்தை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. அரசுடன் தமிழ்க் கூட்டமைப்பு நடத்திய முன்னைய பேச்சுவார்த்தைகளின் போது தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள உடனடிப் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் அரசியல் தீர்வு பற்றிய கலந்துரையாடல் 29 ஆம் திகதி இடம்பெறுமெனவும் கூட்டமைப்பு எம்.பி. எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இருசாராருக்குமிடையிலான பேச்சுவார்த்தை ஜனவரியில் 10 இல் ஆரம்பானது. அரசியல் தீர்வு சம்மந்தமான வரைபு ஏதும் இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதனை வைத்துக் கொண்டு அரசியல் தீர்வு பற்றிப் பேசப் போகின்றார்கள். இவர்களைப் போலவே ஜேவிபி யும் இதுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை தன்னகத்தே கொண்டிருக்கவில்லை என்பதுவும் இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை.

சித்திரை 24, 2011

GL to phone Ban to reiterate SL’s position

Strong support for SL from Russia and China

Both China and the Russian Federation are extending strong support to Sri Lanka on her demand that UN Secretary General Ban Ki-moon desists from publishing the damaging report of his advisory panel on accountability issues relating to the final phase of Sri Lanka’s 30-year war against terrorism, External Affairs Minister G.L. Pieris said yesterday. Ambassador Vladimir. P. Mikhaylov Friday met Pieris and conveyed his government’s position to the minister while Chinese Ambassador Mme. Yang Xiu Ping has also consistently assured the minister that Beijing considers the matters raised by the Ban Panel as local issues adequately handled by the Lessons Learned and Reconciliation Commission. (more...)

சித்திரை 24, 2011

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை பான் கீ முன் தீவிர நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியமில்லை

ஐ.நா. இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையானது "இந்த வாரம்' வெளியிடப்படும் என்று ஐ.நா.செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் அலுவலகம் திரும்பத் திரும்ப உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியபோதிலும் அதனை கைவிட்ட பான் கீ மூன் அதன் பின்னரான குறுகிய காலத்திலேயே "செயலாளர் நாயகமாக எனது பணியை தொடர்வதற்கு தங்களின் வலுவான ஆதரவையும் தலைமைத்துவத்தையும் வழிகாட்டலையும் பெறுமதியானதாகக் கருதுகிறேன்' என்று ரஷ்யத் தலைவர் திமித்ரி மெத்வதேவிடம்  பான் கீ மூன் கூறியதாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட இன்னர் சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்னர் சிற்றி பிரஸின் நிருபர் மத்தியூ ரஸல் லீ தெரிவித்திருப்பதாவது; இதற்கு முதல்நாள் கொழும்பில் ரஷ்யத் தூதுவர் வால்டிமிர் பி.மிக்கேலோவ் செய்தியாளர் மாநாடொன்றில் தோன்றியிருந்தார்.(மேலும்.....)

சித்திரை 24, 2011

ஐ.நா. அறிக்கை தொடர்பாக டில்லி பொருத்தமான நடவடிக்கை எடுக்கும் - கருணாநிதி

இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் ஐ.நா.வின் அறிக்கையானது உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பின்னர் இந்திய மத்திய அரசாங்கம் தாமதமின்றி அந்த அறிக்கை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமென தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நம்பிக்கை தெரிவித்துள்ளார். (மேலும்.....)

சித்திரை 24, 2011

Question mark over role of US dollar

The announcement by credit rating agency Standard and Poor’s that it had downgraded its outlook on US debt to “negative” has sent a shudder through global financial markets. The decision means there is now a one in three chance that US debt itself will be downgraded over the next two years—an event without precedent. More than the state of the US economy and government finances, however, is being called into question by the S&P decision. With US debt considered the safest in the world, any downgrading means that the role of the US dollar as the world’s reserve currency will be severely undermined, if not ended altogether. (more.....)

சித்திரை 24, 2011

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் விதத்தில் முன்னாள் போராளிகள் தொழிற்பயிற்சி பெற்றுள்ளனர்

12,000 பேர் வரை எமது புனர்வாழ்வு நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டவர்கள் மிகக்குறுகிய காலத்திற்குள் அவர்களுக்கு தேவையான எல்லாவிதமான பயிற்சிகளும் வழங்கப்பட்டதுடன் அவர்களது, வாழ்வை மீண்டும் கட்டியெழுப்பக்கூடிய விதத்தில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. மிகக்குறுகிய காலத்தில் இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக இவர்களில் பலர் சமூகத்திடம் அல்லது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். இந்த 12 ஆயிரம் பேரில் 4700 பேர் மட்டுமே மிஞ்சியுள்ளனர். அவர்களில் 483 பேரை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கின்றோம். இவர்களில் விவாகமானவர்கள் அதிகமாகவுள்ளதுடன் இவர்களிலும் 3 குழந்தைகளுக்கு மேலுள்ள பெற்றோரும் உள்ளனர்.  இன்று விடுதலையானவர்கள் அவர்களது குடும்பத்தை சந்தித்தபோது குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தபோது அவர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்ததைப் பார்த்து எனது நெஞ்சம் நெகிழ்ந்து போனது. (மேலும்.....)

சித்திரை 24, 2011

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அதிகாலை முதல் பரவலாக கடும் மழை

நாட்டில் பரவலாக நேற்று சனிக்கிழமை அதிகாலை 2 மணி முதல் பெய்த கடும் மழையினால் பல பகுதிகளிலும் இயல்பு நிலை பெரிதும் பாதிப்படைந்தது. வட கீழ் பருவப் பெயர்ச்சி மாற்றமடைந்து தென்மேல் பருவப் பெயர்ச்சி ஆரம்பமாவதற்கான இடைநிலை பருவப்பெயர்ச்சியினால் நாட்டில் பரவலாக மழை பெய்துவந்தது. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை அதிகாலை முதல்பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவுகளும் வெள்ளத்தினால் போக்குவரத்து தடைப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. (மேலும்.....)

சித்திரை 24, 2011

சுரேஷ் பிரேமசந்திரனிடம் கருணா அம்மான் குறும்பு விடுகின்றாராம்

சிங்கப்பூரில் நாடுகடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்தனர் எனக் கூறப்படும் தகவல் பொய்யானது. நாம் அவர்களைச் சந்திக்கவில்லை.இப்படிக் கூறினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கப்பூரில் இடம் பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்குபற்றச் சென்றிருந்தனர். இந்தக் கருத்தரங்கில் நாடு கடந்த தமிழீழ அரசுப் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடினர் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்தார்.முரளிதரனின் கருத்தை முற்றாக மறுத்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இராணுவத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் அவர் குறும்புத்தனமாகக் கருத்துவெளியிட்டுள்ளார். நாடு கடந்த தமீழீழ அரசின் பிரதிநிதிகள் எவரையும் நாம் சந்திக்க வில்லை.அரசுக்கும் எமக்கும் இடையில் இடம்பெறும் பேச்சுக்கள் தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கிலேயே பங்கு பற்றினோம்என்றார். ஆனால் புலம் பெயர் தேசங்களில் உருத்திரகுமாரன் சகாக்களை சுரேஷ்  சகாக்கள் சந்தித்தார்கள் என்பதை மறைக்க முடியவில்லை.

சித்திரை 24, 2011

ஐ.நா. செயலாளர் ரஷ்யாவின் ஆதரவை கோரியுள்ளார்!

இலங்கை தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர் குழுவின் அறிக்கையை இலங்கையின் எதிர்ப்பை பாராது வெளியிடுவதாக தமது பேச்சாளர் மூலம் அறிவித்திருந்த ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பேன் கீமூன் ரஷ்யாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். தமது ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தின் ஒரு கட்டமாக மொஸ்கவ் நகருக்கு சென்ற அவர், ரஷ்ய ஜனாதிபதி திமிட்ரி மெத்வதேவையும் சந்தித்துள்ளார். தமது பொறுப்புக்களை செயற்படுத்துவதற்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கும் ஆதரவு வழங்குமாறு ரஷ்யாவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் செயலாளரின் பதவிகாலம் நிறைவடையும் தருவாயில் உள்ள நிலையில், அவருக்கு மீண்டும் இரண்டாம் தவணை பதவியில் நியமனம் பெறுவதற்கு ரஷ்யாவின் ஆதரவு அத்தியாவசியமாகின்றது. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா, பான் கீமூனின் இரண்டாம் தவணை பதவி நியமனத்தை “வீட்டோ” அதிகாரத்திற்கு உட்படுத்த முடியும் என்பதே இதற்கு காரணமாகும்.

சித்திரை 23, 2011

ஐ.நா அறிக்கை – எதுவரை?

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் பின்பலத்தில் செயற்படும் ராஜபக்ச குடும்ப ஆட்சி தண்டிக்க்கப்பட போவதில்லை. ஐக்கிய நாடுகளதும் அமரிக்க அய்ரோப்பிய அரசுகளதும் நோக்கமும் தண்டிப்பதல்ல. இவ்வரசுகள் தமது நலனை தெற்காசியாவில் உறுதிப்படுத்திக்கொள்வதே இறுதி நோக்கம். அதற்கான அழுத்தம் அறிக்கையின் ஊடாக வழங்கப்படுகின்றது. அழிக்கப்படுவதற்கான அரசியலை – தமது வியாபார அரசியல் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட – எந்த அரசு முன்வைத்தாலும் அதற்கு எதிராக மனிதாபிமானிகளும், ஜனநாயகவாதிகளும் முற்போக்கு சக்திகளும் போராடுவார்கள் என்பதை உணர்த்துவது எமது கடமை. நீண்ட அழிவுகள் நிறைந்த போராட்டத்திலிருந்து குறைந்தபட்சம் இதையாவது கற்றுக்கொண்டால் இன்னொரு மூலையில் மக்கள் முடக்கப்பட்டு அழிக்கப்படுவதை தடுப்பதற்கான முன் முயற்சியாக அமையும். (மேலும்.....)

சித்திரை 23, 2011

Celebrating Sri Lankan People's Solidarity

 

SINHALA TAMIL NEW YEAR 2011

 

GRAND MULTICULTURAL SHOW

 

BHARATHA NATYAM, KANDYAN DANCE

CHINESE LION DANCE

AFRICAN DRUMMING, BHANGRA

SINHALA & TAMIL MUSIC

 

 

SATURDAY 23 APRIL 2011

5:30 pm

AGINCOURT COLLEGIATE AUDITORIUM

2621 MIDLAND AVENUE (MIDLAND & SHEPPARD)

SCARBOROUGH

(more....)

சித்திரை 23, 2011

நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்க வெளிநாட்டு தீய சக்திகள் சதி - அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

யுத்த கருமேகங்கள் எங்கள் நாட்டிலிருந்து நிரந்தரமாக விடுபட்டு இன்று அமைதியும், சமாதானமும் நிலைகொண்டிருப்பதுடன் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து பொறாமைப்படும் சில ஐரோப்பிய நாடுகளும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் சில அதிகாரிகளும் இலங்கைக்கு எதிரான போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி பிரச்சினைகளை உண்டுபண்ண எத்தணிக்கிறார்கள். நாம் அனைவரும் இலங்கையர் என்ற முறையில் ஒன்று பட்டு இத்தகைய வெளிநாட்டு சக்திகளுக்கு எமது ஏகோபித்த எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டுமென்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கண்டனம் தெரிவித்துள்ளார். (மேலும்....)

சித்திரை 23, 2011

Jaffna Technical College upgraded

The Jaffna Technical College has been upgraded to the status of a Technology College by the Vocational and Technical Training Institute. The government of the Republic of Korea and the Korean International Cooperation Academy (KOICA) provided the technical and financial assistance to improve the facilities available at the college. Prior to this, eight technology colleges were set up at Galle, Maradana, Kurunegala, Kandy (Aruppola), Ratnapura, Anuradhapura, Badulla and Ampara (Hardy Institute). Jaffna Technology College is the ninth one. These colleges will conduct NAQ5 and Diploma and Higher Diploma courses of degree level. Economic Development Minister Basil Rajapaksa inaugurated the upgraded Technology College.

சித்திரை 23, 2011

சாலை - சுண்டிக்குளம் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாலைக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட அதிஉயர் பாதுகாப்பு வலய கடற் பிரதேசத்தில் மீன் பிடிக்க இராணுவம் அனுமதி வழங்கியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் தெரிவித்தது. சாலைக்கும் சுண்டிக்குளத்திற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் எல். ரி. ரி. ஈ யினரின் பிரதான கடற்புலி அணியின் தளம் அமைந்திருந்தது. இப்பகுதியில் மீன் பிடிக்க இதனால் புலிகள் தடை விதித்திருந்தனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் இப்பகுதி அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. முல்லைத்தீவு மற்றும் கல்லாறு ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்த மீனவக் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் இப்பகுதியில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இதற்காக இப்பகுதியில் மிதிவெடி அகற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கில் உள்ள அதி உயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம் கட்டமாக அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

சித்திரை 23, 2011

Minister revokes support for Tory candidate who praised terrorists

In a rare act of dissent in the midst of an election campaign, Conservative cabinet minister Peter Kent has criticized his own party for allowing a man who hosted a tribute to the Tamil Tigers to run as a candidate.“It is certainly a reflection on the party’s lack of due diligence,” Mr. Kent told The Globe and Mail on Thursday, referring to the candidacy of Gavan Paranchothy, a Tamil broadcaster running in Toronto’s Scarborough-Southwest riding. “Someone’s obviously dropped the ball.” (more.....)

சித்திரை 23, 2011

இது எப்படி இருக்கு.....?

இலங்கை சனத்தொகையை விட தொலைபேசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

இலங்கை சனத்தொகை 2010ம் ஆண்டில் 20.65 மில்லியனாக இருந்தது. ஆயினும் தொலைத்தொடர்பு துறையில் குறிப்பாக தொலைபேசித் துறையின் வளர்ச்சி அதைவிட கூடுதலாக இருக்கின்றது. இலங்கையின் சனத்தொகை 20.65மில்லியனாக இருந்தாலும் எங்கள் நாட்டிலுள்ள கையடக்க தொலைபேசிகள், வீடுகளில் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் மற்றும் சி.டி.எம்.ஏ தொலைபேசிகள் என்பன 20.8 மில்லியனாக இருக்கின்றது. இந்த புள்ளி விபரங்களின் படி எங்கள் நாட்டின் ஒவ்வொரு பிரஜையிடமும் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அளவில் தொலைபேசிகள் இருப்பது ஆதாரபூர்வமாக இப்போது ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. பின்தங்கிய கிராமங்களில் வறுமைக் கோட்டின் கீழுள்ளவர்களும் ஒரு கையடக்கத் தொலைபேசியை வைத்திருக்கிறார்கள் என்றார். வயலுக்கு சென்று விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் கையிலும், தொழிற்சாலைகளில் பணிபுரிவோரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இன்று இருக்கின்றன. சில பிச்சைக்காரர்கள் கூட இரகசியமாக கைத்தொலைபேசிகளை மறைத்து வைத்திருக்கிறார்கள் . (மேலும்.....)

சித்திரை 23, 2011

இந்தியாவில் கரையான் அரித்து ஒரு கோடி ரூபாய் நோட்டு நாசம்

கரையான் அரித்து ஒரு கோடி ரூபாய் நோட்டுகள் நாதசமாகி உள்ளன. அதுவும் ஸ்டேட் பேங்க் கிளையில் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசம் பாராபங்கியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி கிளை உள்ளது. இங்குதான், கரையான் அரித்து நோட்டுகள் நாசமாகின. இது பற்றி ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் கீதா திரிபாதி நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “பணம் வைக்கப்பட்டிருந்த வங்கி பெட்டியில் கரையான்கள் உருவாகி உள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் போது, 1 கோடி ரூபாய் நோட்டுகள் நாசமானது தெரிய வந்தது. தகவல் அறிந்ததும் 4 பேர் அடங்கிய ரிசர்வ் வங்கி குழுவினர் நேற்று பிற்பகல் வங்கி கிளைக்கு வந்து விசாரணையை தொடங்கினர்.

சித்திரை 23, 2011

புலம் பெயர்ந்தவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா

உலகில் புலம் பெயர்ந்து வாழ்பவர்களுக்கு மிகவும் நட்பான நாடு கனடா என்றும் அதே சமயம் நெதர்லாந்து, இந்தியா ஆகிய நாடுகள் மிகக் குறைந்த அளவு நட்புடைய நாடுகள் என்றும் போபஸ் என்ற பிரபல அமெரிக்க சஞ்சிகையின் சமீபத்திய இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவானது கனடா, பேர்முடா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்ததாக நான்காவது இடத்தில் இருப்பதாக எச்.எஸ்.பி.சி. வங்கியின் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பற்றிய ஆய்வு தெரிவித்திருப்பதாக இந்த சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. உள்நாட்டு மக்களுடன் நட்பாகி, மொழியைக் கற்று புதிய கலாசாரத்திற்கு தம்மை பழக்கப்படுத்திக் கொள்வதற்கு இந்த நான்கு நாடுகள் மிகவும் இலகுவாகவுள்ளன என்று குறிப்பிட்டள்ள இந்த அறிக்கையில் இந்தியா எந்த இடத்திலிருக்கின்றது என்று குறிப்பிடப்படவில்லை. ___

சித்திரை 23, 2011

லிபியாவில், அமெரிக்காவின்  ஆள் இல்லாத ஆயுத விமானங்கள்

மெதுவாக ஓசை எழுப் பும் ஆயுதம் தாங்கிய அமெ ரிக்க விமானங்கள் லிபியா வில் பணியைத் துவங்கின. அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா ஒப்புதல் அளித்த சில மணிநேரத்தில் அவை, செயல்பாட்டுக்கு வந்தன. இந்த நிலையில் போராட் டக்காரர்கள் மிஸ்ரட்டா பகுதியில் ஆதிக்கம் செலுத் தத் துவங்கியுள்ளனர். போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்காக லிபியா ராணுவம் வான்வழித் தாக் குதலை நடத்திவருகிறது. கூட்டுப்படைகள் நேரிடை யாக தரைப்போரில் ஈடு படாதபோதும், லிபிய ராணு வத்தினரை ஒடுக்குவதில் தீவிரம் காட்டுகிறது. இந்த லிபிய ராணுவத்தின் தாக்கு தலைத் தீவிரப்படுத்த அமெ ரிக்கா ஆள் இல்லாத ஆயுத விமானங்களை பறக்கவிட் டுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் ஆள் இல்லாத விமானங்கள் தீவிர தாக்குதல் நடத்தி வெற்றிவாகை சூடியுள்ளது. அதே நுணுக்கத்தை லிபியாவிலும் கடைப் பிடிக்க ஆள் இல்லாத விமா னத் தாக்குதலுக்கு ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். ஆள் இல்லாத விமானம் மேல் நோக்கி 12 மணிநேரம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நிற்கும் திறன் பெற்றது. இதில் வெடிகுண்டு களைவிட சக்திவாய்ந்த சிறிய ஏவுகணைகள் இருக்கும்.

சித்திரை 23, 2011

ஆபத்தை விளைவிக்கும் அணு மின்சாரம் வேண்டாம் - விஞ்ஞானிகள்

அணு மின்சாரம் மலிவானதோ, அணு மின்சாரம் தயாரிப்பு முறைகள் பாதுகாப்பானதோ, அணு மின் நிலையத்தை நிறுவுவது எளிதானதோ இல்லை என்பதால் உலகில் இனி புதிதாக அணு மின்சார உற்பத்தி நிலையங்களே வேண்டாம் என்று சமாதானத்துக்கான நோபல் விருது வாங்கிய 9 உலக அறிஞர்ள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, சீனா உட்பட அணு மின்சார நிலையங்களில் அதிகம் முதலீடு செய்துள்ள 31 நாடுகளின் தலைவர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் அவர்கள் இதைக் குறிப்பிட்டுள் ளனர். அணுகுண்டு எத்தகைய ஆபத்தானது என்பதற்கும் அணு மின்சார நிலையங்கள் எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கும் ஜப்பானை விட வேறு சிறந்த உதாரணம் உலகுக்குத் தேவை இல்லை. அனல், புனல் தவிர மின்சாரம் தயாரிக்க இயற்கையில் எத்தனையோ வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றுக்குச் செலவு அதிகமானாலும் மனித குலத்துக்கு ஆபத்து இல்லாத அந்த வழிகளையே இனி கைக்கொள்ள வேண்டும்.

சித்திரை 23, 2011

அம்மா! தேர்தலுக்கு பிறகுமா....?

ஜனாதிபதி ராஜபக்க்ஷவை சர்தேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் - ஜெயலலிதா

ஐ.நா. அறிக்கையில் இனப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறுவதால் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபட்க்ஷவை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்த உடனடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அண்மையில் நான்கு இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்ட கோரச் சம்பவம் நினைவூட்டுகிறது. அண்மையில் தமிழக வாக்காளர்கள் முன்பு இலங்கை குறித்து சோனியா காந்தி தெரிவித்த கருத்துகள் வாய்மையற்றவை என்றும் ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். ___

சித்திரை 23, 2011

உலகின் பழமையான டெபிட் கார்ட் கண்டுபிடிப்பு

453 ஆண்டுகளுக்கு முந்தைய டெபிட் கார்டை ஜெர்மனி தொல்பொருள் ஆராய்ச்சி துறை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுபற்றி ஹல்லே நகரில் உள்ள அரசு அருங்காட்சியக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் ஆண்ட்ரஸ் ஹீலி கூறியதாவது: விட்டன்பெர்க் நகரில் அகழ்வாராய்ச்சி செய்தோம். அப்போது ஒரு அட்டை கிடைத்தது. 30 செ.மீ. நீளம் இருந்தது. அதில் பெயர், திகதி பொறிக்கப்பட்டிருந்தது. 23 கோடுகள் இருந்தன. திகதி அடிப்படையில் 453 ஆண்டு பழமையானது. அது நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டிருந்த அந்த அட்டை, மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் கடனுக்கான கார்டாக அது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலோர் எழுத, படிக்க தெரியாத காலத்தில் அட்டையை வைத்திருப்பவர்கள் கடன் பெற்றிருக்கலாம். தொகைக்கு ஏற்ப கடன் பெறும்போதெல்லாம் அட்டையில் கோடு பொறிக்கப்பட்டிருக்கலாம். 60 செ.மீ. நீளத்துக்கு இருந்திருக்கக்கூடிய அட்டையில் மீதியை கடன் அளித்தவர் வைத்திருக்க கூடும். கடனை திருப்பிச் செலுத்தும்போது இரண்டு பாதிகளையும் கொண்டு வந்து ஒப்பிட்டு பார்த்து முடிவு வந்திருக்கலாம். எனவே, டெபிட் கார்டு உபயோகம் 450 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது. இவ்வாறு ஹீலி தெரிவித்தார்.

சித்திரை 22, 2011

பான் கீ மூனின் அறிக்கையால்

மேற்குலகின் வலைக்குள் இலங்கை சிக்குமா....?

(சாகரன்)

பான் கி மூனின் அறிக்கைக்கு இந்திய அரசு மௌனம் காக்கின்றது. அதே வேளையில் மேற்குலகத்தின் இலங்கைக்கு எதிரான இச் செயற்பாட்டிற்; இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடும் இங்கு கவனிக்கப்பட வேண்டியவை. இலங்கையின் முள்ளிவாய்கால் படுகொலைக்கு தூபம் இட்டதே பிரித்தானியாவின் பிரித்தாளும் கொள்ளைகளே. புலிகளுக்கு வளம் சேர்க்கும் நோர்வே ஊடான செயற்பாடுகளை மேற்குலகம் செய்து வந்ததை யாரும் மறக்க மாட்டார்கள். போர்க் குற்றங்கள் தொடர்பான மேற்குலகின் கரிசனை 'ஆடு நனையுது என்று ஓநாய் அழுதது' என்ற கதை என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  (மேலும்....)

சித்திரை 22, 2011

திருகோணமலை குடிநீர் விநியோக திட்டத்துக்கு அடிக்கல் நாட்டு

இலங்கை அரசாங்கம் மற்றும் பிரான்ஸ் அரசின் 4ஆயிரத்து 587 மில்லியன் நிதியுதவியின் கீழ் திருகோணமலை குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கந்தளாய் குடி நீர் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமையமாக்கல் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தலைமையில் இன்று திருகோணமலையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்டின் ரொபிசன், நீர் வளங்கள் மற்றும் வடிக்கால் அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ‘வாய்ச் சொல் வீரர்’ ஆர். சம்பந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சித்திரை 22, 2011

நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடக் கூடாது

ஐக்கிய நாடுகள் சபையிடம் இலங்கை வேண்டுகோள்

இது ஏற்றுக்கொள்ள முடியாத தவறான அறிக்கை என்று இலங்கை திட்டவட்டமாக அறிவிப்பு

  • குழுவுக்கு விசாரணை நடத்தும் அதிகாரம் இல்லை

  • அதிகார எல்லையை மீறி ஐ.நா செயற்படுகிறது

(மேலும்....)

சித்திரை 22, 2011

ரணில்-சஜித் முறுகல் உச்சம்

பிளவுபடும் நிலையில் ஐ.தே.க……..?

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் ஓரிரு தினங்களில் இரண்டாகப் பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரணில் அணி, சஜித் அணி என ஐ. தே. க. இரண்டாக பிரியும் நிலை தோன்றியுள்ளதாகவும் கட்சி வட் டாரங்களிலிருந்து மேலும் தெரியவருகிறது. கட்சித் தலைமை சஜித் பிரேமதாச சார்ந்தவர்களைத் தொடர்ந்தும் ஓரங்கட்டி வருவதனால் இந்நிலை உருவாகியுள்ளதாகத் தெரியவருகிறது. இந்நிலை, உருவாவதற்கான பிரதான காரணம் 20 பேரடங்கிய ஐ. தே. க. செயற்குழுவிற்கு ரணில் விக்கிரமசிங்க சார்பான 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளமையும், தேசிய அமைப்பாளர் பதவிக்கு பிரேரிக்கப் பட்ட சஜித் ஆதரவாளரான ரஞ்சித் மத்துமபண்டாரவை ஓரங்கட்டி விட்டு ரணில் விக்கிரமசிங்கவிற்கு நெருங்கிய ஒருவரை நியமிப்பதற்கு அவர் முயற்சிசெய்து வருகின்றமை எனவும் மேலும் கூறப்படுகின்றது. (மேலும்....)

சித்திரை 22, 2011

Kent decries candidate's Tamil Tiger support

Conservative candidate Peter Kent on Thursday questioned why his party has as a candidate in the May 2 election a man who last fall paid tribute to the Tamil Tigers. Kent said he came to the decision after watching a YouTube video of a "Heroes Day" special that was hosted on a Tamil station in late November by Ragavan Paranchothy, now running for the Conservatives in the Toronto riding of Scarborough Southwest. In the video, Paranchothy talks about "Tamil freedom fighters who sacrificed their lives for the freedom of the rest of the Tamils in Sri Lanka, either guidedly or misguidedly." Elsewhere in the video, Paranchothy speaks of how the Tamil Tigers' "deaths symbolize the idealism that Tamil aspirations should be won at any cost." (more....)

சித்திரை 22, 2011

வடபகுதி மக்களின் வாழ்வை அரசாங்கம் வளமாக்கி வருகின்றது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் முழுக் கவனமும் இப்போது வடமாகாணத்தின் மீது திரும்பியிருக்கிறது. வட மாகாணத்தின் உட்கட்டமைப்பு பணிகளை கூடிய விரைவில் பூர்த்தி செய்யும் பணி விரைவில் முடிவடையவுள்ளது. யுத்தத் தினால் இடம்பெயர்ந்த தமிழ் முஸ்லிம் மக்களை மீண்டும் வடபகுதி யிலுள்ள அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தும் பணி யும் முற்றாக முடிவடையும் கட்டத்தை இன்று அடைந்துள்ளது. இன் னும் 2,000 பேர் மாத்திரமே அங்கு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். (மேலும்....)

சித்திரை 22, 2011

பின்லாந்து பாராளுமன்றத்தில் பெண்கள் ஆதிக்கம்

பின்லாந்து நாட்டின் பாராளுனமற்த்தில் பெண்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என சீன இணையத்தளம் சின்குவா தெரிவித்துள்ளது. பின்லாந்து நாட்டில் பெண்களுக்கான வாக்குரிமை கடந்த 1906 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு 1907 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 19 பெண்கள் முதன் முறையாக பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் மூலம் அதிகபட்சமாக 75 பெண்கள் எம்.பிக்களாக தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து 2007 இல் இதன் எண்ணிக்கை 84 ஆக அதிகரித்து காணப்பட்டது. இது 42 சதவீத வளர்ச்சியாகும். மொத்தமுள்ள 200 இடங்களில் தற்போதைய பெண்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. உலகிலேயே பாராளுமன்றத்திற்கு பெண் எம்.பிக்களை முதன் முதலில் தேர்வு செய்தது பின்லாந்து நாடு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சித்திரை 22, 2011

உலகில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களுள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முதலிடம்

சர்வதேச ‘டைம் சஞ்சிகை’ நடாத்திய உலகின் செல்வாக்குமிக்கவரை தெரிவு செய்வதற்கான கருத்துக் கணிப்பின் இறுதிப் பெறுபேறுகளின் பிரகாரம் உலகின் செல்வாக்குமிக்க அரசியல் தலைவராக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காக இணையத்தின் ஊடாக வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து தொண்ணூற்றி நான்காயிரத்து நானூற்றி எழுபத்திஎட்டு (194, 478) பேராவர். உலகில் செல்வாக்குமிக்க 10 பேரின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரேயொரு அரசியல் தலைவராகவும், தெற்காசியராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே விளங்குகின்றார். இக்கருத்துக் கணிப்பில் அரசியல் தலைவர்களான ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புட்டின் 42 ஆவது இடத்திலும், அமெரிக்க ஜனாதிபதி பராக்ஒபாமா 46 ஆவது இடத்திலும், இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி 102 ஆவது இடத்திலும் காணப்படுகின்றனர்.

சித்திரை 22, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி கூறுகின்றார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் என்னை புறக்கணிக்கிறார்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழு சிங்கப்பூர் சென்ற விடயம் எனக்குத் தெரியாது. எனக்கு அறிவிக்கவும் இல்லை. மேற் கண்டவாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சிங்கப்பூர் விடயம் தொடர்பாக மட்டக்கள ப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார். மட்டக்களப்பு எம். பிக்கள் கூட எனக்குக் கூறவில்லை. என்னைத் திட்ட மிட்டுப் புறக்கணிக்கின்றார்கள். என் செல்வாக்கு அதிகரிப்பை சகிக்க முடியாத எம். பி. ஒருவரே அனைத்துக்கும் காரணம். பொது மக்களுக்கும் இவ்விடயம் நன்கு தெரியும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம். பிக்கள் மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என பொதுமக்கள் கேட்கின்றனர். அவர்கள் கேட்பது சரி. ஆனால், நான் அன்றும் சேவை செய்தவன் இன்றும் சேவை செய்கின்றேன். நாளையும் சேவை செய்வேன். (மேலும்....)

சித்திரை 22, 2011

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு

றிக்கையினை நிராகரித்தால் புலிகள் போர்க்குற்றம் புரியவில்லை என போலாகிவிடும்  - ஐ.தே.க _

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு அறிக்கையினை அரசாங்கம் முழுமையாக நிராகரிக்குமானால் விடுதலைப்புலிகள் போர் குற்றம் புரியவில்லை என கூறுவதாக அமைந்து விடும் எனவே ஐ.நா வின் அறிக்கையினை நாம் நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பி. யான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார். விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதனை நாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் அதேவேளை இலங்கை இராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளார்கள் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். நேற்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனை தெரிவித்தார். (மேலும்....)

சித்திரை 21, 2011

புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளுக்கு தடை - இலங்கை கோரிக்கை

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அனைத்து அமைப்புகளையும் தடை செய்யுமாறு இலங்கை அரசு ஐரோப்பிய நாடுகளிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அந்நாட்டின் தமிழ் இணையதளங்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்த போதிலும், புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்யவில்லை என்பதை இலங்கை அரசு சுட்டிக்காட்டியுள்ளது. சமீபத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு  ஒடுக்கப்பட்ட போதிலும், ஐரோப்பிய நாடுகளில் அதன் ஆதரவு அமைப்புகள் சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இயங்கி வரும் விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளை தடை செய்வது குறித்து அந்நாடுகளுடன் இலங்கை அமைச்சர்கள் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அடுத்தடுத்த வாரங்களில் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமான முறையில் இலங்கை அரசு கோரிக்கை விடுக்க உள்ளதாக அந்த இணையதளச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகளின் பெயர்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

சித்திரை 21, 2011

ஐ. நா. ஒத்துழைப்பு வழங்க வேண்டுமே தவிர  நல்லிணக்க செயற்பாட்டை குழப்பக் கூடாது

நீண்ட கால மோதலினால் ஏற்பட்ட காயங்களை இலங்கை தேற்றி வரும் இச்சந்தர்ப்பத்தில் ஐக்கிய நாடுகள் சபையானது தேவையேற்படின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டு மேயொழிய இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்கச் செயற்பாடுகளை குழப்பாமலிருப்பதே சிறந்ததென தாங்கள் நம்புவதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் விலடிமிர் பி. மிக்கைலொவ் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த வாரம் ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்டு ள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக ரஷ்ய அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

சித்திரை 21, 2011

மோசமடைந்தது சாய்பாபா உடல்நிலை

சத்ய சாய்பாபாவின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் புட்டபர்த்தியில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாய்பாபா சிகிச்சை பெற்றுவரும் சத்ய சாய் மருத்துவ அறிவியல் நிறுவனம் உள்பட புட்டபர்த்தியின் பல்வேறு இடங்களில் 2000-த்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹைதராபாதில் டிஜிபி அரவிந்த ராவ் முதல்வர் கிரண் ரெட்டியை சந்தித்து புட்டபர்த்தியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இதனிடையே சாய்பாபாவின் உடல்நிலை மோசமடைந்ததன் எதிரொலியாக சத்யசாய் அறக்கட்டளை உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஆலோசனை நடத்தினர். நிதித்துறை முதன்மைச் செயலர் எல்.வி.சுப்ரமணியமும் அந்த கூட்டத்தில் பங்கேற்றார். பாபாவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை இயக்குநர் சஃபாயா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை 21, 2011

21.04.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ் நாடளுமன்ற உறுப்பினர் அப்பாதுரை வினாயாகமூர்த்தி
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – பத்மநாபா அணியின் தலைவர்களில் ஒருவரும் கிழக்கு மகாணசபையின் உறுப்பினருமான இரா துரைரெட்ணம்

ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம்
ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு செ ஜெகநாதன்
ரிபிசியின் பணிப்பாளர் திரு வீ. இராமராஜ்

ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்

மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 866 1001 or 078107063682

சித்திரை 21, 2011

சித்திரை 21, 2011

தமிழகத்தில்

வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகளிடம் குழப்பம்

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றியை நம்பி காத்திருக்கும் கட்சிகள், கடும் குழப்பம் அடைந்துள்ளதுடன், நிம்மதியில்லாமல் தவித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கைக்குப் பின், புதிய அரசு பதவியேற்பதற்கு வெறும் நான்கு நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதால், இதற்குள் ஆட்சி அமைப்பதற்கு தேவையான வேலைகளை செய்து முடிக்க முடியுமா என்று கவலை அடைந்துள்ளன. அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும், மே மாதம் 13ம் திகதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது தமிழகத்தில் இதுவரை இல்லாத புது அனுபவம். தேர்தலுக்கு போதிய கால அவகாசம் தராததற்கும் வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்ததற்கும், ஆளும் தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் ஆணையத்தை கடுமையாக அர்ச்சித்து வருகின்றன. (மேலும்....)

சித்திரை 21, 2011

பிஎஸ்எல்வி ராக்கெட்   வெற்றிகரமாக பறந்தது

இஸ்ரோவின் நம்பிக்கைக்குரிய பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 3 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக வான்வெளி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிக் கோட்டா சதீஷ் தவான் விண்வெளி நிலையத் தில் இருந்து பிஎஸ்எல்வி -சி16 ராக்கெட் புதன் கிழமை காலை 10.42 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் இந்தியாவின் ரிசோர்ஸ் சாட் 2 மற்றும் யூத் சாட், எக்ஸ் சாட் ஆகிய செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. ராக்கெட்டின் ஒவ்வொரு நிலைப்பாட் டையும் கண்டு விண்வெளி விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பிஎஸ்எல்வி -சி 16 ராக்கெட் ஏவப்பட்ட 18வது நிமிடத்தில் 822 கி.மீ. தூரத்தில் 3 செயற்கைக்கோள்களையும் வான்பாதையில் நிலை நிறுத்தியது.  (மேலும்....)

சித்திரை 21, 2011

இலட்சக்கணக்கான மக்களை  திரட்டி கொழும்பில் மே தினம்

மே தினத்தில் இலட்சக்கணக்கான மக்களை ஒன்று திரட்டி இலங்கைக்கு எதிரான ஐ.நா.வின் குற்றச்சாட்டுக்கு எதிராகக் குரல் கொடுக்கப்போவதாக மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். இல்லாததொன்றை இருப்பதாகக் காட்டும் ஏகாதிபத்தியத்திற்குத் துணை போகும் ஐ.நா. செயலாளர் பான்கீ மூனுக்கு இலங்கையின் பலத்தைக் காட்டுவதாக எதிர்வரும் மே தினம் அமையும் எனவும் அவர் தெரிவித்தார். (மேலும்....)

சித்திரை 21, 2011

சூடானின் நிலைமைகள் மோசமடைந்தால்  டர்புரையும் பிரிக்கும் அபாயம் ஏற்படும்

சூடானின் டர்புர் நிலைமைகள் அந்நாடு மேலும் பிளவுபடும் ஆபத்தை உருவாக்கலாம் என அமெரிக்க உப ஜனாதிபதி ஜோன் பைடன் எச்சரித்துளளார். சூடானிலிருந்து தென்பகுதி பிரிந்து சுதந்திர நாடாகச் செயற்படவுள்ளது. இதற்கான மக்கள் ஆணை அண்மையில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் கிடைக்கப்பெற்றது. இந்த ஆண்டின் ஜுலையிலிருந்து தென்சூடான் சுதந்திர நாடாகச் செயற்படும். ஆனால் 2003 ஆம் ஆண்டிலிருந்து பிரிவினை கோரும் டர்புர் பிரதேச முரண்பாடுகள் இன்னும் களையப்படவில்லை. இந்த யுத்தத்தில் இதுவரை மூன்று இலட்சம் பேர் கொல்லப்பட்டும் 18 இலட்சம் பேர் வெளியேற்றப்பட்டும் உள்ளனர். இவ்வாறு வெளியேறியோர் ஐ.நா.வால் அமைக்கப்பட் டுள்ள அகதி முகாம்களிலே தங்கியுள்ளனர். டர்புர் பேராளிகளுக்கும் சூடான் ஜனாதி பதி ஒமர் அல்பiருக்கும் இடையில் பல பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. அண்மையில் அரச படைக்கும். டர்புர் போராளிகளுக்குமிடையே கடுமையான மோதல் ஏற்பட்டதால் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்துள்ளன. (மேலும்....)

சித்திரை 21, 2011

600 சிவிலியன்களை புலிகள் கொன்றனர்! - செல்லக்கிளியின் சகோதரர்

2008 ஒக்டோபர் முதலாம் திகதிக்கும் 2009 மே 18ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்னிப் பகுதியில் வைத்து 600 அப்பாவி தமிழ் மக்கள் கட்டாக்காலி நாய்கள் போன்று சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இருந்த போதும் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கைப் படையினரால் ஒரு சிவிலியன் கூட கொலைசெய்யப்படவில்லை என முன்னாள் வன்னி மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. எஸ். கனகரத்தினம் தெரிவித்துள்ளார். (மேலும்....)

சித்திரை 21, 2011

கிளர்ச்சிப் படைக்கு பிரிட்டன் ஆயுத பயிற்சி - லிபிய வெளியுறவு அமைச்சர்

பிரிட்டனின் செயற்பாடு லிபியாவில் சமாதான முயற்சியை நிலைகுலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக லிபிய வெளியுறவு அமைச்சர் அப்துல் அதி அல் ஒபைதி குற்றம்சாட்டியுள்ளார். லிபிய கிளர்ச்சிப் படைக்கு பயிற்சி அளிப்பதற்காக பிரிட்டன் இராணுவ அதிகாரிகள் 10 பேர் பெங்காசிக்கு சென்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதே அளவான பிரான்ஸ் இராணுவ வீரர்களும் அங்கு சென்று கிளர்ச்சிப் படைக்கு பயிற்சி அளித்து வருவதாக தெரிய வருகிறது. இந்த செய்தியை சுட்டிக்காட்டியே லிபிய வெளியுற அமைச்சர் மேற்படி குற்றச் சாட்டை வெளியிட்டார். அத்துடன் பிரிட்டனின் செயற்பாடு லிபியாவில் பயங்கர யுத்தத்துக்கு வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது இடம்பெறும் யுத்தம் முடியும் தறுவாயை எட்டும். அதனைத் தொடர்ந்து யுத்த நிறுத்தம் கொண்டுவரப்பட்டு லிபிய மக்களுக்கு தேவையான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைக்கலாம். ஆனால் தற்போதைய செயற்பாடுகள் இந்த திட்டத்தை சீர்குலைக்கிறது என்று லிபிய வெளியுறவு அமைச்சர் மேலும் கூறினார்.

சித்திரை 21, 2011

வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் நுழைவோருக்கு இரத்த சோதனை

இலங்கையில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்துக் கட்டும் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்குள் வருகை தருபவர்களை இரத்தப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு சுகாதார அமைச்சின் மலேரியா ஒழிப்பு இயக்கம் தீர்மானித்துள்ளது.  இப்பரிசோதனை மூலம் மலேரியா நோய்க்குள்ளாகி இருப்பவர்களுக்கு இலவசமாக உரிய சிகிச்சை அளிப்பதற்கும் முடிவு செய்திருப்பதாக மலேரியா ஒழிப்பு இயக்கத்தின் பணிப்பாளர் டாக்டர் எஸ். எல். தெனியகே நேற்று தெரிவித்தார். 2010ம் ஆண்டில் 684 பேர் மலேரியா நோய்க்கு உள்ளாகினர். இவர்களில் 52 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்த உள்நாட்டவர்களும், வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளனர். இதனால் மலேரியா நோயுடன் நாட்டுக்குள் வருபவர்களை விமான நிலையத்திலேயே இனங்கண்டு சிகிச்சை அளிப்பதற்குத் திட்டமிட்டி ருப்பதாகவும் அவர் கூறினார்.

சித்திரை 21, 2011

 

இனப்பிரச்சினையில் வெளியார் தலையீடு

 

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தில் வெளிநாடுகள் தலையிடக்கூடாது என்று பிரதம மந்திரி தி.மு.ஜயரட்ண கூறியதொன்றும் புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் பலர் இப்படிக் கூறியிருக்கின்றார்கள். பேரினவாதிகளும் கூறியிருக்கின்றார்கள். ஆட்சியாளர்களும் கூறியிருக்கின்றார்கள். ஆனால், தலையீடு இருக்கவே செய்கின்றது. கறுப்பு ஜூலை இன சங்காரத்துக்குப் பின் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி இந்தியா பேசத் தொடங்கிய ஆரம்ப நாட்களில் வைத்தியர் தனது நோயை முதலில் குணப்படுத்தட்டும் என்று கூறிய ஜே.ஆர்.ஜயவர்த்தன இறுதியில் பிரச்சினையின் தீர்வுக்காக இந்தியப் பிரதமருடன் ஒப்பந்தம் செய்ய நேர்ந்தது. இதுதான் இன்றைய வரலாற்றுப் போக்கு. (மேலும்....)

சித்திரை 20, 2011

ஐ.நா. அறிக்கை தொடர்பாக கருணாநிதி, ஜெயலலிதா மௌனம் டில்லியைச் சாடுகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இலங்கை அரசாங்கம் போர்க் குற்றங்களை இழைத்திருப்பதாக ஐ.நா. நிபுணர்குழு குற்றச்சாட்டுத் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்து இந்திய அரசாங்கத்தை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி போன்ற பிரதான கட்சிகளும் தமிழர் சார்புக் கட்சிகளும் கடுமையாக விமர்சித்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் இரு பிரதான கட்சிகளான ஆளும் தி.மு.க. வும் எதிரணியான அ.தி.மு.க.வும் மௌனம் காத்து வருகின்றன. 2009 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது தமிழர்கள் கொல்லப்படுவதாக இந்த இரு கட்சிகளும் உரத்துக் குரல் கொடுத்திருந்ததாக டெக்கான் குரோனிக்கிள் பத்திரிகை நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நம்பகரமானவையெனவும் அவை தொடர்பாக சுயாதீனமான விசாரணையை மேற்கொள்ளுமாறும் ஐ.நா. நிபுணர்குழு அழைப்பு விடுத்திருந்தது. (மேலும்....)

சித்திரை 20, 2011

சிரிய எதிரணியினருக்கு அமெரிக்கா இரகசியமாக நிதியுதவி - விக்கிலீக்ஸ்

சிரிய ஜனாதிபதி பஸார் அசாட்டுக்கு எதிரானவர்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இரகசியமாக நிதியுதவியளித்து வருவதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இப்பத்திரிகைக்கு விக்கிலீக்ஸ் இணையத்தளத்தினால் வழங்கப்பட்ட இரகசிய ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டே இச்செய்தி வெளியாகியுள்ளது. லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் செய்மதித் தொலைக்காட்சிச் சேவையான பரடாவுக்கு அமெரிக்கா நிதியுதவியளித்து வருவதாகவும் இத்தொலைக்காட்சியானது சிரியாவுக்குள் அரசுக்கெதிரான செய்திகளை ஒளிபரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரடா தொலைக்காட்சிக்கும் சிரியாவிலுள்ள ஏனைய எதிரணிக் குழுக்களுக்கும் அமெரிக்கா குறைந்தது 6 மில்லியன் டொலர்களை வழங்கியிருப்பதாக இவ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

சித்திரை 20, 2011

இராஜதந்திரப் பயங்கரவாதத்தின் ஒரு பகுதி ஐ.நா அறிக்கை

அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் இலங்கை மீதான இராஜதந்திரப் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியே ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை என்று குற்றம்சாட்டியுள்ளார் சக்தி மற்றும் மின்சக்தி அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளருமான சம்பிக்க ரணவக்க. இந்த அறிக்கை ஐ.நாவின் நெறிமுறைகளுக்கு முரணானது என்றும் ஐ.நா பொதுச்செயலர் தனிப்பட்ட ரீதியாக நியமித்த குழுவே இது என்பதை உறுதி செய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். முழு நாட்டுக்கும் எதிரான இவ்வறிக்கை தொடர்பாக ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் மற்றும் பொதுநலவாய நாடுகளுடன் ஆலோசனை நடத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ___

சித்திரை 20, 2011

தமிழக மீனவர்கள் நால்வரின் மரணம் துரதிர்ஷ்டமானது - இந்தியா

தமிழக மீனவர்கள் நான்கு பேர் காணாமற்போன பின்னர் சடலங்களாக மீட்கப்பட்டமையை துரதிர்ஷ்டமான சம்பவம் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். சென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த போது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். மேலும் இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தன என்பதை சரியாக அறிய முடியாதுள்ளதுடன் மாநில அரசின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம் என்றார். .

சித்திரை 20, 2011

ரஷ்யா வீட்டோ பவரை பாவிக்குமா...?

ஐ.நா பாதுகாப்புப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படக் கூடாது ரஷ்யா!

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதிக்கப்படக் கூடாது என ரஸ்யா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட உள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தகவல் வெளியிட்டிருந்தது. எனினும், இவ்வாறு விவாதிக்கப்படுவதற்கு பாதுகாப்புப் பேரவையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ரஷ்யா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டில் பாதுகாப்புப் பேரவையில் இலங்கை விவகாரம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்திலும் ரஸ்யா எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 20, 2011

புக்குஷிமா அணுமின் நிலையத்தில் கடுமையான கதிர்வீச்சு

ஜப்பானின் புக்குஷிமா அணுமின் நிலையத்தில் சேதம் அடைந்த அணுஉலை கட்டடங்களுக்குள் இரண்டு ரோபோக்கள் அனுப்பப்பட்டன. அதில், இரண்டு அணு உலைகளிலும், மனிதர்கள் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கடுமையான கதிர்வீச்சு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்கிடையில், புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக, பிரதமர் நவோட்டோ கான் அறிவித்துள்ளார். புக்குஷிமா டாய் இச்சி அணுமின் நிலையத்தின் ஒன்று மற்றும் 3ம் உலைகளில், அதிகளவு கதிர்வீச்சு வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதனால், மனிதர்களை உள்ளே அனுப்ப முடியவில்லை. அதற்குப் பதிலாக இரண்டு ரோபோக்கள் அனுப்பட்டன. அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட பதிவுகளில் இருந்து, உள்ளே கதிர்வீச்சு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் “நான்கு உலைகளையும் மீண்டும் செயல்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்திற்கு இந்த அதிகளவு கதிர்வீச்சு தடையாக இருக்காது. நாளடைவில் கதிர்வீச்சின் அளவு குறைந்து விடும்’ என, “டெப்கோ” அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சித்திரை 20, 2011

சித்திரை 20, 2011

புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பிரதேசம்

எஞ்சிய 16,000 பேரை விரைவில் மீள் குடியேற்ற நடவடிக்கை - அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் பகுதிகளில் மக்களை மீளக் குடியமர்த்து வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்காக முல்லைத்தீவுக்கு செல்லவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். எஞ்சியுள்ள 16,000 பேரும் விரைவில் புதுக்குடியிருப்பு, புதுமாத்தளன் பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படுவார்கள். இறுதி யுத்தத்தின் போது புதுக்குடி யிருப்பு, புதுமாத்தளன் பகுதியில் இலட்சக்கணக்கான மிதிவெடிகள், நிலக்கண்ணி வெடிகள் விதைக்கப்பட்டு ள்ளன. இவற்றை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் தாமதமாகியுள்ளன. (மேலும்....)

சித்திரை 20, 2011

Canadian Tamils for Peace and Democracy (CaTpad) opposes UN Panel Report as interfering in Srilankas internal affairs.

We Canadian Tamils for Peace and Democracy strongly believes the responsibility of the International community and the UN to help and assist Srilanka to rebuild the relations between both the communities by giving its expertise on reconciliation in the political process and support to rehabilitate the refugees who are mere victims of  Terrorism. As the wounds of enmity artificially created by Terrorist LTTE are healing, the Tamil community which was kept under iron curtain by the Vanni regime is extending their hands to their majority Sinhala community for political reconciliation will be damaged by the UN panel report. The intension of the report at this crucial time of reconciliation process takes place gives a suspicion of the motivation of UN panel and the countries supporting it to destroy not just the countries image but to destroy the initiative taken by the Government of Srilanka. (more...)

சித்திரை 20, 2011

பழமைவாதக் கட்சி தமிழ் ஏதிலிகளை "ஆட்கடத்தல்காரர்கள்" "புலிகள்" "பயங்கரவாதிகள்" "கிறிமினல்ஸ்" என்று அர்ச்சிக்கிறது!

எங்கே பார்த்தாலும் தேர்தல் மயம். இலங்கையில் மார்ச் 17 இல் உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தமிழ் நாட்டில் சட்டசபைக்கான தேர்தல் ஏப்ரில் 13 நடந்து முடிந்து விட்டது. கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மே 2 இல் நடைபெற இருக்கிறது.......

ஆளும் கட்சியில் தமிழர் கேட்கிறாரா? அந்தக் கட்சிதானே வி.புலிகள் இயக்கத்தை ஆட்சிக்கு வந்த நான்கு மாதங்களில் தடை செய்தது? பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து உலகத் தமிழர் இயக்கத்தைத் தடை செய்தது? இப்போது சன் சீ கப்பலில் வந்த 492 தமிழ் ஏதிலிகளை "பயங்கரவாதிகள்" "ஆட்கடத்தல்காரர்கள்" "கிறிமினல்ஸ்" என்று வசை பாடுகிறது. அதற்காகவே மிகவும் கொடூரமான சட்டமுன்வரைவு சி - 49  நாடாளுமன்றத்தில்  கொண்டுவந்தது. அந்தக் கட்சியில் எப்படி ஒரு தமிழர் போட்டி போடலாம்?  கார்ப்பரின் பழமைவாதக் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சி. முன்னர் பிறாயன் மல்றோனி தலைமையில் ஆட்சி செய்த முற்போக்கு பழமைவாதக் கட்சி வேறு இந்தப் பழமைவாதக் கட்சி வேறு. பிறாயன் மல்றோனி 1986 இல் கப்பலில் வந்த 155 தமிழர்களை இரு கை நீட்டி வரவேற்றவர் ஆயிற்றே? (மேலும்....)

சித்திரை 20, 2011

ஹம்பாந்தோட்டை, கிரிந்தயில்

நில அதிர்வு, நிலத்தில் பிளவு, வீடுகளில் வெடிப்புகள்

ஹம்பாந்தோட்டை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு நில அதிர்வு உணரப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். கிரிந்த, யால சந்திக்கு அருகில் சமகி மாவத்தையில் வசிக்கும் சிலர் இரவு 10.10 மணி முதல் இரவு 10.15 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இரண்டொரு வினாடிகள் இந்த அதிர்வை உணர்ந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்ட இணைப்பாளர் எம்.ஜி.ஏ. நந்தன கூறினார். இதன் விளைவாக இப்பிரதேசத்திலுள்ள 8 வீடுகளில் வெடிப்புக்களும் சிறு பிளவுகளும் ஏற்பட்டுள்ளன. என்றாலும் ஒரு வீட்டின் கொங்கிறிட்டும் உடைந்து விழுந்துள்ளது எனவும் அவர் கூறினார். (மேலும்....)

சித்திரை 20, 2011

கோதுமை மா விலை அதிகரிப்பு

இரு கம்பனிகளின் மீது சட்ட நடவடிக்கை

தன்னிச்சையாகக் கோதுமை மாவின் விலையை உயர்த்திய இரு கம்பனிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ரூமி மர்ஸ¤க் நேற்றுத் தெரிவித்தார். நுகர்வோர் விவகார அதிகார சபையின் அனுமதியைப் பெறாமல் கோதுமை மாவுக்கு விலையை அதிகரிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். நுகர்வோர் விவகார அதிகார சபையின் 18 வது ஷரத்தின் கீழ் கோதுமை மா அத்தியாவசிய பொருளாக அறிவிக்கப்பட் டுள்ளது. இப்படியான பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு அதிகார சபையின் அனுமதியை முன்கூட்டியே பெறுவது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை பிறிமா கம்பனி ரூ. 4.10 சதப்படியும், செரண்டீப் கம்பனி ரூ. 3.00 படியும் அதிகரித்துள்ளது. இவ்விலை உயர்வு குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பழைய விலைக்குக் கோதுமை மாவை இறக்குமதி செய்துவிட்டு அதிக விலைக்கு அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டிருப்ப தாகவும் அவர் கூறினார்.

சித்திரை 20, 2011

தமிழகத்தில் காங். தலைவருக்கு வலுக்கிறது எதிர்ப்பு

தமிழகத்தில், காங். தலைவர் தங்க பாலுவுக்கு நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுப்பதால், அவரை நீக்கிவிட்டு வேறு தலைவரை நியமிக்கலாமா என, கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே மத்திய அமைச்சர் சிதம்பரம், இதே கோரிக்கையை வலியுறுத்திய நிலையில் மத்திய அமைச்சர் வாசனும், சோனியாவை நேற்று முன் தினம் சந்தித்து, தங்கபாலுவை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதையடுத்து தமிழக காங்கிரசில் தேர் தல் முடிவுக்குப் பின் பெரிய மாற் றம் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)

சித்திரை 20, 2011

வறுமை ஒழிப்பில் இந்தியா முன்னேற்றம்

வறுமையை ஒழிப்பதில் இந்தியாவும் சீனாவும் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பதாக உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும் தெரிவித்திருக்கின்றன. மூன்றில் இருபங்கு வளரும் நாடுகள் வறுமை ஒழிப்பின் முக்கிய இலக்குகளை எட்டும் நிலையில் ஈருப்பதாகவும் அவை கூறியுள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து வெளியிட்ட “உலக கண்காணிப்பு அறிக்கை 2011” என்கிற அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட கொள்கைகள், வேகமான வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் இந்த இலக்குகளை வரும் 2015ம் ஆண்டுக்குள் எட்டிவிட முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.(மேலும்....)

சித்திரை 20, 2011

சிறிலங்கா அரசபடைகளால் தமிழ் மக்கள் கொல்லப்படவில்ல - முரளிதரன்

இறுதிபோரில்  சிறிலங்கா அரசபடைகளால் தமிழ் மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்று சிறிலங்காவின் பிரதியமைச்சர் முரளிதரன் விநாயகமூர்த்தி  தெரிவித்துள்ளார். 'போரின் இறுதிக்கட்டத்தில் தப்பிச் சென்ற  பொதுமக்களை விடுதலைப் புலிகளே கொலை செய்தனர் எனவும் புலிகளிடம் இருந்த  பாதுகாப்பாக பொதுமக்களை மீட்டது சிறிலங்கா இராணுவம் எனவும் சிறிலங்கா  அரசபடைகளால் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவில்லை எனவும் முரளிதரன் மேலும்  தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் போரை நடத்தும்  கொள்கை அரசாங்கத்தினால் முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் அது  விடுதலைப்புலிகளால் கடைப்பிடிக்கப்படவில்லை. ஆதலால் தான் இறுதிப்போரின்  போது ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தும் காயப்பட்டும் உள்ளனர். மேலும்,  அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் சிறிலங்காவின் உள்விவகாரங்களில் அதிகமாகத் தலையிடுகிறார் அவருக்கு எந்த உரிமையும் கிடையாது. சிறிலங்கா ஒரு இறையாண்மையுள்ள நாடு என்பதை நினைவில் வைத்துக் கொள்ள  வேண்டும்' முரளிதரன் கூறியுள்ளார்.

சித்திரை 20, 2011

A Communist Manifesto for Canada

In the din of an election campaign, it's hard for so-called "fringe parties" to make their voices heard. This week, the National Post gives smaller parties the chance to tell you what they're all about -and why you might consider giving them your vote. This federal election is a crucial campaign to block the objective of monopoly capital in Canada. From the oil barons in Alberta, to the bankers on Bay Street, to the transnationals in their tax havens, big business desperately wants to see the consolidation of Conservative political power in the form of a "stable" majority in Parliament. Five years of misrule by Stephen Harper prove that a Tory majority would bring deeper involvement in U.S. wars, inaction on the economic crisis and the global environment, and new attacks on Canadian sovereignty, democracy, equality and living standards. (more...)

சித்திரை 20, 2011

சோனியாவுக்கு அன்னா ஹசாரே கடிதம்

ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவை உருவாக்கும் பணியில் 5 மத்திய மந்திரிகளும், காந்தியவாதி அன்னா ஹசாரே உள்ளிட்ட 5 சமூக பிரதிநிதிகளும் அடங்கிய கூட்டுக் குழு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அன்னா ஹசாரே ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஹசாரே கூறி இருப்பதாவது, கடந்த சில நாட்களாக நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிப்பதாக உள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஒருவர் கூட்டுக் குழுவில் இடம்பெற்றுள்ள சமூக பிரதிநிதிகளை விமர்சித்து அறிக் கைகளை வெளியிட்டு வருகிறார். அவரது குற்றச்சாட்டு முற்றிலும் பொய் யானது. அவருக்கு கட்சியின் ஆதரவு இருப்பதாக கருதுகிறேன். அவரது கருத்துகளை நீங்கள் (சோனியா) ஏற்றுக்கொள்கின்றீர்களா? (மேலும்....)

சித்திரை 20, 2011

மக்களுக்கு பயன்படாத நகரசபையிலி​ருந்து ராஜினாமா செய்வதாக முன்னாள் வவுனியா நகரபிதா ஜி.ரி.லிங்​கநாதன் அறிவிப்பு

கடந்த ஒன்றரை வருடங்களாக மக்களுக்கு எந்த விதத்திலும் பயன்படாதுள்ள வவுனியா நகரசபையில் ஓர் உறுப்பினராக தொடர்ந்தும் இருப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை என்பதனை கருத்திற் கொண்டு நகரசபை உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து கொள்கிறேன் என ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) மத்தியகுழு உறுப்பினரும், முன்னாள் வவுனியா நகரசபைத் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

சித்திரை 20, 2011

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் நேற்று கலைக்கப் பட்டது. அந்நா ட்டு பிரதமர் லீ ஹசின் லூங்கின் ஆலோசனைக் கமைய பாராளு மன்றம் கலைக்கப் பட்டதாக ஜனாதிபதி எஸ்.ஆர். நாதன் அறிவித்தார். இதன்படி மேலும் மூன்று மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர்களை 5 நாட்களுக்குள் அறிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 1959 ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் கட்சியே ஆட்சியில் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 20, 2011

Money lenders behind CPI(M) cadre's murder - NGO

A powerful syndicate of money lenders, supported by powerloom owners, is actively behind the brutal murder of Velusamy, CPI (M) branch secretary of Pallipalayam unit in Namakkal district, on March 10, according to an eight-member team from Centre for Protection of Civil Liberties-Tamil Nadu (CPCL), which went into the factors behind the murder. They found out that nearly 1.50 lakh workers in more than 50,000 units were working as bonded labourers in Pallipalayam, Komarapalayam, Vediarasampalayam,Veppadai, Avarankadu, Kokkarayanpettai and Agraharam areas. Exploiting the poverty, the money lenders became powerful. While joining looms, the workers, many of them children, would be given advances for which 15 to 30 per cent of interest would be levied. The rest would be deducted from their wages. “Hence, the workers have no other option but to depend on the money lenders who thoroughly exploit them,” said P. Damayanthi, a lawyer and a member in the team. (more....)

சித்திரை 19, 2011

ஐ.நா குற்றச்சாட்டுக்கு, அணிசேரா நாடுகள் எதிர்ப்பு!

இலங்கையினால் போர்க்குற்றம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ள நிலையில் அதனை, அணிசேரா நாடுகள் சில அதிருப்தி வெளியிட்டுள்ளன. இந்தியா, பாக்கிஸ்தான், தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அணிசேரா நாடுகள் ஐக்கிய நாடுகள் செயலாளரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், பிற நாடோன்றின் உள்விவகாரங்கள் குறித்து தலையிடுவதற்கு மேலைத்தேய சக்திகளுக்கு உரிமை இல்லை என அண்மையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங், வலியுறுத்தியிருந்தார். இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும்; நடவடிக்கைகள் குறித்து தாம் அதிருப்தி கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து தாம் அவதானித்து வருவதாகவும் இந்திய பிரதமர் தெரிவித்துள்ளார்.

சித்திரை 19, 2011

அபிவிருத்திப் பணிகளில் தம்மை இணைத்துக் கொள்வதில்லை - தமிழ்த்தேசிய கூட்டமைப்பு!

ஈ.பி.டி.பி. மீது ஊடகங்கள் உதவியுடன் தமிழ்க் கட்சிகள் சேறு பூசுகின்றன - அமைச்சர் டக்ளஸ்

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறுகின்ற அபிவிருத்திக்குழு தொடர்பான கூட்டங்களுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்று மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளான தாங்கள் அவமதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டம் இன்றைய தினம் வடக்கு மாகாண அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இன்றைய கூட்டத்தில் ஈபிடிபி அமைப்பின் உறுப்பினரான ஸ்ரீதர் சிறிதரன் அனஸ்ரின் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் , அப்பாத்துரை விநாயகமூர்த்தி மற்றும் சரவணபவன் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். அவர்களுடன் வடக்கு மாகாண சபையின் அதிகாரிகள் அரச அதிபர் , மற்றும் கடற்படை அதிகாரிகள், காவற்துறை அதிகாரிகள் மற்றும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். (மேலும்....)

சித்திரை 19, 2011

கனடாவில் சிறப்பாக நடைபெற்ற ‘வாழும் மனிதம்’ மக்கள் கலாச்சார நிகழ்வு

2011 ஏப்ரல் 16ம் திகதி சனிக்கிழமை, கனடாவின் ஸ்காபரோ நகரில் உள்ள சிவிக் சென்ரர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘வாழும் மனிதம்’ மக்கள் கலாச்சார நிகழ்வு, சிறப்பான முறையில் நடைபெற்றது. கடும் மழையும் காற்றும் என சீரற்ற காலநிலை நிலவிய போதிலும், கணிசமான அளவு மக்கள் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். நிகழ்வுக் கருத்தரங்கில் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றிய செ.ராஜேந்திரன், த.மகேஸ்வரராஜா, சண்முகம் சுப்பிரமணியம், நமு பொன்னம்பலம் ஆகியோர் சிந்தனையைத் தூண்டும் பயனுள்ள பல கருத்துக்களை முன் வைத்தனர். இந்த நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளை வழங்கிய, கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனக் கலைஞர் வாணி அக்கா குழுவினரின் மாணவர்கள் வழங்கிய, பாட்டு நிகழ்ச்சியும், சிறுமிகளின் நடனமும் அனைவரினதும் ஆர்வத்தையும் அக்கறையையும் தூண்டுவனவாக அமைந்திருந்தன. நிகழ்வில் முதலில் ஆரம்பமான பல நூற்றுக்கணக்கான நூல்களைக் கொண்ட புத்தகக் கண்காட்சி, பார்வையாளர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. நிகழ்ச்சிகள் அனைத்துக்கும் இலக்கிய ஆர்வலரும், சமூக நீதிச் செயற்பாட்டாளருமான தேவன் தலைமை வகித்தார். மூத்த ஆசிரிய தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான க.தவபாலன் இறுதியில் நன்றியுரை கூறினார்.

சித்திரை 19, 2011

இலங்கைக்கான உதவியை இரட்டிப்பாக்க உலகவங்கி முடிவு

இலங்கைக்கு வழங்கி வரும் உதவித் தொகையை அடுத்த வருடம் இரட்டிப்பாக்குவதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. சர்வதேச நிதி ஒத்துழைப்பு சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம, உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி ஒக்கொன்ஜோ இவெலாவை வொஷிங்டனில் சந்தித்தபோதே இது தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு உலக வங்கி தொடர்ச்சியாக வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், உலக வங்கியின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். (மேலும்....)

சித்திரை 19, 2011

NFF urges Russia, China to defend SL

The National Freedom Front (NFF) yesterday urged Russia and China to defend Sri Lanka against the report issued by the United Nations Experts Panel. “We call on Russia and China to stop the United States, France and Britain from monopolizing the UN. The UN has failed as an organization for world peace and as such Russia and China must set up a new world order,” NFF MP Piyasiri Wijenayake told the media. He described UN Secretary General Ban Ki-moon as a US puppet and claimed Mr. Ban was being used as a pawn in a conspiracy to take President Mahinda Rajapaksa and Defense Secretary Gotabaya Rajapaksa to the International Criminal Court (ICC). “We will not allow them to do this, we will protest any move to take our war heroes to the ICC. It will only be done over our dead bodies,” Mr. Wijenayake said. He accused Mr. Ban of presenting the report as one issued by the UN. “The panel was set up to advice him but Mr \ban is presenting the report as a UN report. The UN consists of more than 190 countries and no panel can be set up without a resolution passed in the General Assembly and no country can be investigated for war crimes without the approval of the Security Council,” Mr. Wijenayake said.

(By Dianne Silva)

சித்திரை 19, 2011

கியூப கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ்  சோசலிசத்தையே கியூபா மக்கள் விரும்புகிறார்கள் - கியூப   ஜனாதிபதி  ரால் காஸ்ட்ரோ

சோசலிசத் தன்மையுட னான புரட்சியை தலைவர் பிடல் காஸ்ட்ரோ அறி வித்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள வேளையில் இந்த மாநாடு நடைபெறு கிறது. நமது சக்தியை நிரூ பிக்கும் வகையில் புரட்சிச் சதுக்கத்தில் ராணுவம் மற் றும் மக்கள் பங்கேற்ற அணி வகுப்பு நடந்திருக்கிறது. இத்தகைய அணி வகுப்பை உழைக்கும் வர்க்கத்தின் தின மான மே 1 ஆம் தேதியன்று நாடு முழுவதும் நடத்த விருக்கிறோம். இந்த அணி வகுப்பு நாட்டு மக்களின் ஒற்றுமை மற்றும் தேசிய இறையாண்மை ஆகிய வற்றை வெளிச்சம் போட் டுக் காட்டும். மேலும், சோச லிசத்தின் மூலமே இவற்றை அடைய முடியும் என்று வரலாறு நிரூபித்துள்ளதை யும் மே 1 ஆம் தேதியன்று நடக்கும் அணிவகுப்பு எடுத் துக்காட்டும். (மேலும்....)

சித்திரை 19, 2011

Good Luck Everyone !!!!   I hope it pours.

This year we experienced and are going to experience four unusual dates: 1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11; that's not all ... take the last two digits of the year in which you were born; now add the age you will be this year, and the result will be 111 for everyone!  
For example - Harry was born in 1957, and 57 + 54 = 111
 
This is the year of Money!!!
 
This year October will have 5 Sundays, 5 Mondays and 5 Saturdays.
This happens only every 823 years.
 
These particular years are known as 'Moneybags' - the proverb goes that if you send this to eight
good friends, money will appear in the next four days as is explained in Chinese feng-shui.
 
Those who don't continue the chain won't receive, it’s a
mystery, but worth a try, so good luck.

சித்திரை 19, 2011

தொடரும் துயரம்

இராமேஸ்வரத்திலிருந்து ஏப்ரல் 2ம் தேதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற 4 தமிழக மீனவர் கள் காணாமல் போனார்கள். இவர்களில் மூவ ரது உடல் மீட்கப்பட்டது. மாரிமுத்து என்ற மீன வரின் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவரது உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த உடல் மாரிமுத்துவின் உடல்தான் என் பதை அவரது குடும்பத்தினரும் உறுதிப்படுத்தி உள்ளனர். இந்த நான்கு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டதாக மீன வர்கள் கூறுகின்றனர். இலங்கை கடற்படையின ரும் இதை உறுதியாக மறுக்கவில்லை. இலங்கை கடற்படையினரின் கொலை வெறிக்கு தமிழக மீனவர்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது. இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்து வந்த நிலையில் விடுதலைப்புலி களுக்கு உதவுவதாகக் கூறி தமிழக மீனவர் களை இலங்கை கடற்படையினர் வேட்டை யாடினர். (மேலும்....)

சித்திரை 19, 2011

ஆந்திர பிரதேச கடற்பரப்பில் 10 இலங்கை மீனவர் கைது

இந்தியாவின் ஆந்திர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் இலங்கை மீனவர்கள் 10 பேரையும் விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சு தெரிவித்துள் ளது. இந்து சமுத்திர கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த இலங்கை மீனவர்கள் 10 பேர் எல்லை மீறி இந்திய கடல் எல்லைக்குள் பிரவேசித்ததாகக் கூறி ஆந்திர பிரதேச கரையோரப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் பயணித்த இரண்டு இயந்திரப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. (மேலும்....)

சித்திரை 19, 2011

இலங்கை தூதரகம் நோக்கி பேரணி

தமிழக மீனவர் கள் இலங்கை கடற்படையின ரால் கொல்லப்ப டுவ தாகக் கூறி சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை நோக்கி பேரணி யாக சென்ற தமி ழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே. வி. தங்கபாலு உட்பட நூற் றுக் கணக்கான காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் இருந்து தொடங் கிய பேரணிக்கு மாநிலத் தலைவர் தங்கபாலு தலைமை தாங்கினார். பேரணி ஆழ்வார்பேட்டை டி. டி. கே. வீதியில் உள்ள இலங்கை தூதரகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. பின்னர் தூதரகம் அருகே ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்ட தங்கபாலு, திடீரென இலங்கை தூதரகத்தை நோக்கி பேரணியாக செல்ல முயன்றார். அப்போது அவர்களை தடுத்து நிறுத் திய பொலிஸார் அவர்களை கைது செய்தனர். அப்போது செய்தியாளர் களிடம் பேசிய தங்கபாலு, மத்திய அரசுக்கு கொடுத்த வாக்குறுதியை இலங்கை மீறி விட்டதாக குற்றம் சாட்டினார். இனிமேலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் தொடர்ந்தால் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று தங்கபாலு கூறினார்.

சித்திரை 19, 2011

மன்னார்குடி அருகே மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை

மன்னார்குடி அருகே மீனவர் வீசிய வலையில் ஐம்பொன் சாமி சிலை சிக்கியது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நெய்வாசலை சேர்ந்தவர் செல்வராஜ் (40). மீனவர் இவர் நேற்று முன்தினம் வடுவூர் ஏரியின் மேற்கு பகுதியில் கண்ணனாற்று பாலத்தில் மீன் பிடிக்க வலை வீசியிருந்தார். அப்போது 2 அடி உயரத்தில் ஐம்பொன்னால் ஆன சாமி சிலை சிக்கியது. அதை வெளியில் எடுத்து பார்த்தபோது பழைமை வாய்ந்த கிருஷ்ணன் சிலை என்பது தெரிந்தது. இது குறித்து செல்வராஜ் வடுவூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். பொலிஸார் சிலையை கைப்பற்றி காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். பின்னர் மன்னார்குடி தாசில்தார் முருகேசனிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. தொல்பொருள் துறை ஆய்வுக்கு பிறகே சிலையின் மதிப்பு எவ்வளவு என தெரியவரும் என்றார் தாசில்தார்..

சித்திரை 19, 2011

நைஜீரிய ஜனாதிபதியாக மீண்டும் குட்லக் தேர்வு

நைஜீரிய ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி குட்லக் ஜொனாதன் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 60.02 சதவீத வாக்குகள் கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் முற்போக்கு முன்னணி கட்சியைச் சேர்ந்த முகமது பகூரியா (58) தோல்வியடைந்தார். எண்ணெய் வளம் மிக்க நைஜீரியா நாட்டில் மொத்தம் 30 மாகாணங்கள் உள்ளன. இதில் தெற்கு பகுதி மாகாணங்களில் தான் ஜனாதிபதி ஜொனாதனுக்கு அதிக வாக்குகள் கிடைத்ததாக கூறப்படுகிறது. 15 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கடந்த 1999ம் ஆண்டு இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. முன்னதாக 2003ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடந்தது. நான்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் இம்முறையும் குட்லக் ஜொனாதனே மீண்டும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர் அடுத்த மாதம் (மே) 29ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்க உள்ளார்.

சித்திரை 19, 2011

கடாபி ஆதரவுப் படை தொடர்ந்தும் குண்டு வீச்சு

லிபியாவில் கிளர்ச்சியாளர் நகரம் மீது கடாபி ஆதரவுப் படை தொட ர்ந்து குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. ஏற்கனவே கிளர்ச்சியாளர்கள் வச மிருந்த அஜ்தபியா, பிரகா நகரங் களை இராணுவம் மீண்டும் தங்கள் வசப்படுத்தி கொண்டுள்ளது. எனவே போராட்டத்தில் ஈடுபடும் கிளர்ச்சி யாளர்கள் அந்நகரங்களுக்கு வெளியே புறநகர் பகுதியில் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் அஜ்தபியா நகரின் புறநகரில் இராணுவம் மீண்டும் சரமாரியாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. கிளர்ச்சியாளர்களை அஜ்தபியா நகருக்குள் நுழைய விடாமல் நுழைவு வாயில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட ரொக்கெட் குண்டுகளை வீசி இராணுவத்தினர் தாக்கினர். கிளர்ச்சியாளர்கள் இராணுவம் வசமுள்ள பிரகாநகரை மீண்டும் கைப்பற்ற திட்டமிட்டிருந்தனர். அதை தடுக்கும் விதமாக அவர்கள் மீது மீண்டும் குண்டு வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு கடும் பதட்டம் நிலவுகிறது. (மேலும்....)

சித்திரை 19, 2011

காற்றில் ஓடும் கார் கண்டுபிடிப்பு

சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் காற்றில் இயங்கும் காரை, கோவை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். பெட்ரோல் விலை உயர்வு, காரின் விலை அதிகம், சுற்றுச் சூழல் மாசுபடுதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு கோவை கருமத்தம்பட்டி தமிழ்நாடு பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் 4 மாணவர்கள் தீர்வு கண்டுள்ளனர். 3 மாதம் இடைவிடாத முயற்சியின் காரணமாக ரூபா 35,000 செலவில் ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லும் விதத்தில் ஒரு காரை வடிவமைத்தோம். இந்த காரில் 300 பவுண்ட் காற்று கொள்ளளவு கொண்ட பெரிய தாங்கி ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். அதில் இருந்து அழுத்தத்துடன் வெளியேறும் காற்று என்ஜினை இயக்குவதன் மூலம் கார் செல்லும். (மேலும்....)

சித்திரை 19, 2011

 

புதுப்பொலிவு பெறுகிறது ஊட்டி தாவரவியல் பூங்கா

ஊட்டி தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் வகையில் புதிதாக நீரூற்றுகள் அமைத்து, சிற்பங்கள் நிறுவும் பணி, துரிதமாக நடந்து வருகிறது. ஊட்டியில் உள்ள சுற்றுலா மையங்களில் முக்கிய இடம் வகிப்பது தாவரவியல் பூங்கா. இந்த பூங்காவை ரசிக்க ஆண்டு தோறும், பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 3 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. பூங்கா 52 ஏக்கர் பரப்பில் புல்வெளி, “பேண்ட்ஸ்டாண்ட்” கண்ணாடி மாளிகை, நீரூற்று, மற்றும் நாற்றங்கால்கள் என ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இப்பூங்காவில், 117 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் வகை தாவரங்கள் உள்ளன. இது மட்டுமல்லா மல், 144வகை பரணிகள், 350 வகை ரோஜாக்கள், 60வகை டேலியா, 30ரக கிளாடியோலை, 150 வகை கள்ளிகள், டைனோசர் காலத் தில் இருந்த “ஜிங்கோ பைலபா” என்ற மரம் உட்பட ஏராளமான மரவகைகள் தற்போதும் பாதுகாக்கப்பட்டடு வருகின்றன. கோடை காலத்தின் போது சுற்றுலாப் பயணிகள் முற்றுகையிடும் இந்த பூங்காவை மைசூரில் உள்ள பிருந்தாவன் பூங்காவைப் போல பாரம்பரிய தோற்றத்துடன் மாற்ற தோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது.

சித்திரை 18, 2011

புலம்பெயர் நாட்டில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படுபவர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை!

புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு எரித்துக் கொலை: புலம்பெயர் நாடொன்றில் இருந்து தாயகம் சென்றவர் எனக் கருதப்படும் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டு உள்ளதாக குளோபல் தமிழச் செய்தியாளர்; தெரிவித்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு உயர் பாதுகாப்பு வலைய எல்லைப் பகுதியில் புகையிலைத் தோட்டம் ஒன்றில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் (17.04.11) அரைகுறையாக எரிந்த நிலையில் காணப்பட்ட சடலத்தின் அருகில் காணப்பட்ட கடவுச் சீட்டின்மூலம் கொல்லப்பட்டவர் உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய வைத்திலிங்கம் செல்வகணேசன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய குளோபல் தமிழச் செய்தியாளர் இரவு நேரம் என்பதனால் இது குறித்த மேலதிக தகவலைப் பெறமுடியாது போயுள்ளதாகவும் குறிப்பட்டு உள்ளார். இவர் யாரால் கடத்தப்பட்டார்? ஏன் கடத்தப்பட்டார்? கொலைக்கான காரணம் என்ன? அவரது தடயங்களை எரித்து அழிக்க முற்பட்டமைக்கான காரணம் என்ன என்பது பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை. மேலதிக விசாரனைகளை காவற்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் அணி திரள வேண்டும் -சஜித் பிரேமதாச!

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க அனைவரும் அணி திரள வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவப் படையினர் சர்வதேச நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவதனை தடுத்து நிறுத்த அனைவரும் இணைந்து குரல் கொடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கை இலங்கைப் படைவீரர்களுக்கு எதிரான வகையில் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்....)

சித்திரை 18, 2011

போலி ஆவணங்களைத் தயாரித்த மூவர் யாழ்ப்பாணத்தில் கைது

வெளிநாடுகளில் புகலிடம் கோரியிருக்கும் இலங்கையர்களின் விசாவை நீடிப்பதற்காக இலங்கையில் மோசமான சூழ்நிலை காணப்படுவதாகப் போலி ஆவணங்களைத் தயாரித்த மூவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவல தெரிவித்தார். இவர்கள் தற்பொழுது யாழ்ப்பாணப் பொலிஸாரின் கண்காணிப்பில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். (மேலும்....)

சித்திரை 18, 2011

சொந்த அடையாளத்தை மறைக்க முனையும் தமிழர் ?

கனடாவில் ஒன்ராரொயோ பிராந்திய தேர்தலில் கன்சவேர்ட்டிவ் கட்சியில் போட்டியிடுகின்ற இலங்கைத் தமிழ் வேட்பாளர் ராகவன் பரஞ்சோதி அவரது இன அடையாளத்தை மறைக்க முற்படுகின்றார் என்று பலத்த குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இவர் இலங்கைத் தமிழர் சார்பாகவே வேட்பாளராகவே நிறுத்தப்பட்டு உள்ளார், ஆனால் வேட்பாளராக நிறுத்தப்பட்டமையை தொடர்ந்து உடனடியாக ராகவன் என்கிற முதல் பெயரை கவன் என்று மாற்றி விட்டார். ஆயினும் தமிழன் என்கிற அடையாளத்தை மறைக்க முற்படவே இல்லை என்றும் கவன் என்கிற பெயரே வாக்காளர்களுக்கு இலகுவாக இருக்கும் என்றும் நண்பர்கள், உறவினர்கள் கவன் என்றே அழைத்து வருகின்றார்கள் என்று விளக்கம் கொடுத்து உள்ளார் இவ்வேட்பாளர்.  (மேலும்....)

சித்திரை 18, 2011

மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது

அடுத்த இரண்டு, மூன்று வாரங்களில் மழையுடன் சேர்ந்து மீன் மழையும் பூமியில் பொழியவிருக்கிறது. ஆகாயத்திலிருந்து மழையுடன் மீன்கள் வந்து விழுவதைப் பார்த்து இதுவொரு இயற்கை அழிவு அல்லது துர்தேவதைகளின் வெறியாட்டம் என்று எவரும் அஞ்சிவிடலாகாது. பொதுவாக, ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு மேலாக சூரியன் சஞ்சரிப்பதனால் இலங்கை போன்ற நாடுகளில் காலநிலைக்குப் பாதகமான தாக்கங்கள் ஏற்படுகின்றன. இதனால், ஏப்ரல் மாதத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வார காலத்திலும் திடீரென்று மின்னல் வெட்டுடன் மாலை வேளையில் பெருமழை பெய்வதுண்டு. (மேலும்....)

சித்திரை 18, 2011

இடதுசாரிகள் ஏன் வெல்லவேண்டும்? ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம்

(பிரபாத் பட்நாயக்)

இருபதாம் நூற்றாண்டில் இந்திய நாடு ஒரு உண்மையான சமுதாய மாற்றத்தை அடைந்துள்ளது. பல்லாயிரமாண்டுகளாக “தொடுவதும் சமமாக வாழ்வதும் தவறு. ஏன், கண்ணால் பார்ப்பதே கூட தவறு” என்று கடைப்பிடிக்கப்பட்டு வரும் தீண்டாமைக் கொடுமைகளின் பல்வேறு வடிவங்களுடன் கட்டமைக்கப்பட்ட சமத்துவமற்ற சமுதாயம் தான் நமது இந்திய சமுதாயம். இந்த இரு பதாம் நூற்றாண்டிலே நீதியின் முன்பு சமத் துவம் நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த நாட் டின் குடிமக்களுக்கான உரிமைகள் அனைத் தும் அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டுள் ளது. அதேபோன்று வாக்களிப்பதற்கு உரிய வயதை அடைந்த அனைவருக்கும் வாக்குரி மையும், குடியுரிமையும் வழங்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயகம் அனைவருக்கும் வழங்கப்பட்டு, தமது அரசாங்கத்தை தாங்களே தேர்ந்தெடுக் கும் உரிமையையும் இந்த சமுதாய மாற்றம் அளித்துள்ளது. உண்மையான சமத்துவம் என்பது வெகு தூரத்தில் இருக்கிறது என்றா லும், இந்த சமுதாய மாற்றத்திற்கென்று ஒரு முக்கியத்துவம் உள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. இந்த சமுதாய மாற்றமானது நமது நீண்ட கால ஜனநாயகப் புரட்சியை உருவாக்குவதில் ஒரு கணிசமான பங்கினை ஆற்றியுள்ளது. (மேலும்....)

சித்திரை 18, 2011

சுனாமி வரப் போகிறது என்று பொதுமக்களை அச்சுறுத்திய ஜோதிட நிபுணர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

சுனாமி வரப் போகிறது என்று பொதுமக்களை அச்சுறுத்திய ஜோதிட நிபுணர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பேராதனை பல்கலைக்கழகத்தின் பூகற்பவியல் திணைக்களத்தைச் சேர்ந்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன, ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப் பகுதியில் இந்தோனேசிய பிராந்தியத்தில் பல பூமி அதிர்வுகள் ஏற்படுமென்று தெரிவித்திருந்தார். இவர்களைப் போன்றவர்கள் இவ்விதம் பொதுமக்களை ஆதாரபூர்வமற்ற முறையில் சுனாமி வரப்போகிறது என்ற போலி வதந்திகளைப் பரப்பி அச்சுறுத்தல் செய்வதை தடுத்து நிறுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும். (மேலும்....)

சித்திரை 18, 2011

தேர்தல் திருவிழா ஓய்ந்தது, சூடுபிடிக்கிறது சூதாட்டம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் எந்த கூட்டணி வெற்றிபெறும் என்ற சூதாட்டம் தொடங்கி உள்ளது. இதில் 100 ரூபாய் முதல் அதிகபட்சமாக பல இலட்ச ரூபாய் வரை பந்தயம் கட்டப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு முடிவடைந்ததால், சில மாதமாக தமிழகத்தில் களைகட்டிய தேர்தல் திருவிழா ஓய்ந்துள்ளது. தமிழகத்தில் அ. தி. மு. க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனவும் தி. மு. க. 90 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பணம் கட்டப்படுகிறது. அது மட்டுமன்றி, தமிழகத்தின் அடுத்த முதல்வர் கருணாநிதி என்றும், ஜெயலலிதா எனவும் பணம் கட்டுகின்றனர். (மேலும்....)

சித்திரை 18, 2011

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு அறிக்கை போலியான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது - அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண

ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு வெளியிட்டிருக்கும் இலங்கை தொடர்பான அறிக்கை போலியான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது என விஞ்ஞான விவகாரத்துறை சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். புலி ஆதரவாளர்கள் வழங்கிய போலியான தகவல்களைக் கொண்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்தும் நோக்குடனேயே இது தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

சித்திரை 18, 2011

தேர்தலில் இதுவரை இல்லாத அளவு வாக்குப் பதிவு ஏன்?

இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குகள் பதிவானது ஏன்? என்பதற்கு முன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது கடந்த 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட 5 சதவீதம் அதிகம். 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் வக்குப் பதிவைவிட 7 சதவீதம் கூடுதல் ஆகும். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததால் அதிகளவு வாக்குகள் பதிவாகின. அதைப்போல இல்லாமல், இந்த தேர்தலில் வாக்காளர்களின் ஆர்வம் மற்றும் உயர் நடுத்தர மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்ததே அதிக வாக்குப் பதிவிற்கு காரணம் என்று தெரிகிறது. (மேலும்....)

சித்திரை 18, 2011

சிரியாவில் 48 ஆண்டு அவசரகால சட்டம் ரத்து

சிரியாவில் கடந்த 48 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள அவசரகால சட்டம் அடுத்த வாரம் ரத்துச் செய்யப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி பiர் அல் ஆசாத் அறிவித்துள்ளார். சிரியாவில் பஷார் அல் ஆசாத் கடந்த 11 ஆண்டுகளாக ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க இராணுவமும் பொலி ஸும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. (மேலும்....)

சித்திரை 18, 2011

ஜப்பானில் சுனாமியை அறிவுறுத்தும் கல்வெட்டுகள்

முன்னோர்களின் அறிவுரைப்படி நடக்காததன் காரணமாகவே ஜப்பானில் ஜனாமி அனர்த்தத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து எதிர்கால மக்களை எச்சரிக்கும் நோக்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, அங்குள்ள அனேயாசி கடற்கரையில் கல்வெட்டுகள் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி நடக்காதது எவ்வளவு பெரிய தவறு என அப்பகுதி மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்துள்ளனர். பல்வேறு உயரங்களில், வடிவங்களில் இருக்கும் இந்த கல்வெட்டுகளில் ‘இங்கு சுனாமி பாதிப்பு உண்டு நிலநடுக்கம் வந்தால், சுனாமியும் வரும். எச்சரிக்கையாக இரு’ என்றும், ‘உயர்ந்த பகுதியில் வசிப்பதே, அமைதியான வாழ்வுக்கு உகந்தது, கல்வெட்டு அமைந்துள்ள இடத்தை தாண்டி குடியிருப்பை ஏற்படுத்தினால் பேராபத்து நேரிடும்’ என்றும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. அதுபோல் எந்தெந்த பகுதியில் சுனாமி தாக்கக் கூடும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எந்த பகுதியில் வசித்தால், பாதுகாப்பாக இருக்கலாம் என்பது பற்றி குறிப்பிடவில்லை. (மேலும்....)

சித்திரை 18, 2011

வடகொரிய தளத்துக்கு அருகில் அமெரிக்காவுடன்  இணைந்து தென் கொரியா கூட்டு இராணுவ பயிற்சி

அன்னிய ஊடுருவலைத் தடுப்பது தொடர்பாக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. இத்தகைய பயிற்சியை இரு நாட்டு இராணுவ வீரர்களும் மே மாதம் தென் கொரியாவில் உள்ள பேயங்கியோங் தீவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். மஞ்சள் கடல் பகுதியில் இந்தத் தீவு அமைந்துள்ளது. இது மிகவும் சர்ச்சைக்குரிய பகுதியாகக் கருதப்படுகிறது. வடகொரியா உருவாக்கி வரும் ஹோவர்கிராப்ட் தளத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவுடன் சேர்ந்து கூட்டு இராணுவ பயிற்சியை தென் கொரியா மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. (மேலும்....)

சித்திரை 18, 2011

தமிழ் நாட்டுத் தேர்தலில்

மூன்றரை இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்காதது ஏன்?

தமிழக சட்டசபை தேர்தலில் வாக்காளர்களிடம் ஏற்பட்ட எழுச்சி வாக்கு சதவீதத்தை ஏகமாக உயர்த்தியது. அதே நேரத்தில் சில மாவட்டங்களில் வாக்கு சதவீதம் குறைந்தும், கூடியும் இருப்பதற்கான காரணம் தெரியாமல் குழம்பிப் போயுள்ளனர் அரசியல்வாதிகள், அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. அரசியல்வாதிகளை அதிக குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மூன்று இலட்சத்து 53 ஆயிரத்து 892 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. மாவட்டத்தின் தலையாய பிரச்சினையாக இருப்பது சாயத்தொழில் பிரச்சினை, கடந்த இரண்டரை மாதங்களாக சாய சலவை ஆலைகள் மூடப்பட்டுள்ளன. சாயக் கழிவு நீர் பிரச்சினையால் நேரடியாக விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். இன்று சாயத் தொழிலாளர்களின் வாழ்வும் கேள்விக்குறியாகி உள்ளது. பனியன் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், திருப்பூரை நம்பி வந்த தொழிலாளர்கள் படிப்படியாக சொந்த ஊர்களுக்கே திரும்பிச் செல்கின்றனர். இச் சட்டசபை தேர்தலில் எதிரொலித்துள்ளது. (மேலும்....)

சித்திரை 17, 2011

கசிந்தது ஐ.நா. அறிக்கை

இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அனைத்துலக மனிதார்ந்த சட்டங்களையும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களையும் மீறியிருக்கின்றன

"பொதுமகன் ஒருவருக்குக் கூட பாதிப்பு'' ஏற்படாத விதத்தில் "மனிதாபிமான மீட்பு நடவடிக்கை''யை மேற்கொண்டதாக அரசு கூறுகின்றது. ஆனால், அதற்கு மாறாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்று நம்பத்தகுந்த அளவில் நிபுணர் குழு அவற்றைக் கண்டறிந்துள்ளது. அவை நிரூபிக்கப்பட்டால், இலங்கை அரசும் விடுதலைப் புலிகள் இயக்கமும் அனைத்துலக மனிதார்ந்த சட்டங்களையும் அனைத்துலக மனித உரிமைச் சட்டங்களையும் மீறியிருக்கின்றன என்பது வெளிச்சத்துக்கு வரும். அவற்றில் சில மனித குலத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாரதூரமான போர்க்குற்றங்களாகக் கொள்ளத்தக்கவை. உண்மையில், போரின் போதும் சரி, அமைதியின் போதும் சரி, அனைத்துலகச் சட்டங்களால் தனிநபர் மதிப்பைப் பாதுகாப்பதற்கென வழங்கப்பட்ட அதிகாரங்கள் அனைத்தையும் மீறுவதற்கு இந்தப் போர் வழிகாட்டி உள்ளது. குறிப்பாகப் போரின் இறுதிக் கட்டத்துடன் தொடர்புடையதான, உண்மையென நம்பத்தகுந்த குற்றச்சாட்டுக்களை நிபுணர் குழு கண்டறிந்துள்ளது. (மேலும்....)

சித்திரை 17, 2011

தமிழக முகாம்களிலிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள் நாடு திரும்ப மறுப்பு

தமிழகத்தில் அகதிகள் முகாமில் இருப்பவர்கள் இலங்கை செல்வதை விட இங்கேயே இருக்க விரும்புவதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர். பல்வேறு மாவட்டங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் போர் முடிவுக்கு வந்ததையடுத்து அங்கு செல்வதற்கு அகதிகளின் விருப்பம் குறித்து ஆய்வு எடுக்கப்பட்டது. இதில் அவர்கள் தமிழகத்தில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இலங்கை செல்லவும் அங்கு உறவினர்களுடன் வசிக்கவும் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறியதாவது முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு முன்பிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் வெளியில் சென்று வேலை செய்கின்றனர். அவர்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கிடைக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சர்வேயில் இலங்கை செல்வதற்கு அவர்கள் விரும்பவில்லை. தமிழகத்தில் வசிப்பதையே விரும்புகின்றனர். முகாம்களில் சாக்கடை வசதி, தெருவிளக்கு, குடிநீர் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

சித்திரை 17, 2011

கேரள, தமிழக தேர்தல் - ஒரு பார்வை

தமிழ்நாட்டில் லஞ்ச ஊழல் மற்றும் விலைவாசி உயர்வு ஆகிய இரண்டும் இரு முக்கிய பிரச்சனை களைாக முன்னுக்கு வந்தன. ஆயினும் இங்கே லஞ்ச ஊழல் என்னும் பிரச் சனை என்பது பிரம்மாண்டமான அள வில் இருந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டில் நடைபெற்ற ஊழல் களிலேயே மிகப்பெரிய ஊழலை மாநிலத்தை ஆளும் திமுகவினர் புரிந்துள்ளனர் என்பதும், அது தொடர்பாக மேற்கொள் ளப் பட்டுள்ள கிரிமினல் வழக்கில் அக்கட்சியின் சார்பில் மத்தியில் ஆட்சி யில் இருந்த அமைச்சரே பிரதானமாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருக்கிறார் என்ப தும் மக்கள் மத்தியில் கொண்டு செல் லப்பட்டது. நாட்டில் உயர் மட்ட அள வில் நடைபெற்றுள்ள ஊழல்களுடன் முதல்வர் கருணாநிதியின் குடும்பம் பின்னிப் பிணைந்திருப்பதை தமிழக மக்கள் தெரிந்து கொண்டார்கள். முதல் வர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் - திரைப்படத் துறை, தொலைக் காட்சி அலைவரிசைகள், பத்திரிகை கள், கேபிள் டி.வி. விநியோகம், ரியல் எஸ்டேட், விமானக் கம்பெனிகள், ஓட் டல்கள் என அனைத்துத் துறைகளி லும் - ஆதிக்கம் செலுத்துவது ஜன நாயக அமைப்பின் மீதான கொடூரமான தாக்குதலாக மக்களால் பார்க்கப்பட்டன. அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா, இப்பிரச்சனையைத் தன்னு டைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் அனைத்திலும் கொண்டு சென்றார். மக்கள் மத்தியில் இது பெரும் வரவேற் பைப் பெற்றது.  (மேலும்....)

சித்திரை 17, 2011

முன்னாள் புலி

ஊத்தை சேதுவின் புது முகம்

ஜனநாயக ரீதியாக அரசின் நடவடிக்கைகளையும், விமர்சித்தும், கண்டித்தும் வரும் ஒரே ஊடகமாக லண்டனில் இருந்து செயற்படும் ரிபிசி ஊடகத்தை தடை செய்வதற்கு இலங்கை அரசும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு பக்கதுணையாக இருந்து செயற்படுபவர் ஊத்தை சேது என்று தெரியவந்துள்ளதாகவும், புலிகளின் முன்னைநாள் உறுப்பினராக தன்னை தானே கூறிக்கொள்ளும் ஊத்தை சேது தற்போது ,லங்கை அரசின் புலனாய்வுதுறையுடன் இணைந்து புலம்பெயர் தமிழ் மக்களின் இலங்கை அரசிற்கு எதிரான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக ஊத்தை சேது களமிறக்கப்பட்டுள்ளதாக லங்கா கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்....)

சித்திரை 17, 2011

விலையைக் குறைக்கத் தயார்

அரபு நாடுகளில் நடைபெற்று வரும் எழுச்சியான போராட்டங்கள் மற்றும் ஜப்பானில் ஏற்பட்டுள்ள கதிரியக்க பாதிப்பு ஆகியவை இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை குறைவதையே தாங்கள் விரும்புவதாக குவைத் அரசு கூறியுள்ளது. இப்போதைய நிலையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு பீப்பாய்க்கு 90 முதல் 100 டாலர் வரைதான் இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் பரூக் அல் சான்கி கூறியுள்ளார். எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்குமாறு எப்போது கூறினாலும் உடனடியாக அதைச் செய்யும் திறன் இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு நாளும் 22 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி குவைத்தில் நடைபெறுகிறது.

சித்திரை 17, 2011

வவுனியா தடுப்பு முகாமிலுள்ள புலி உறுப்பினர்களை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் இன்று பார்வையிடார் ஏற்பாடுகள் இறுதிநேரத்தில் ரத்து

படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வவுனியா சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை இறுதி நேரத்தில் இரத்துச் செய்துள்ளது. படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வவுனியா தடுப்பு முகாமுக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று சனிக்கிழமை 16 ஆம் திகதி பார்வையிடுவதென கடந்த 7 ஆம் திகதி இலங்கை அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பின்போது இணக்கம் காணப்பட்டிருந்தது. (மேலும்....)

சித்திரை 17, 2011

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வையே நாம் நாடி நிற்கின்றோம். - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

" ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வையே நாம் நாடி நிற்கின்றோம். ஐக்கிய இலங்கைக்குள் ஒரு தீர்வைத்தர அரசாங்கம் தயாரா என்பது குறித்து அவர்கள் வெளிப்படையாகப் பேசுகின்றார்கள் இல்லை. பேச்சுவார்த்தையின் போக்கினையும் அரசாங்கத்தரப்பினரின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது இழுத்தடிப்பை மேற்கொள்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. தொடர்ந்தும் இழுத்தடிப்பதில் பிரயோசனம் இல்லை. அரசாங்கம் ஒரு தீர்க்கமான முடிவினை முன்வைக்க வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை"  (மேலும்....)

சித்திரை 17, 2011

ஹொஸ்னி முபாரக்கிற்கு மரண தண்டனை

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என தெரியவருகின்றது. முபாரக் சுமார் 40 ஆண்டுகளாக எகிப்தின் ஜனாதிபதியாக ஆட்சியில் இருந்து வந்தார். எனினும் கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த பெப்ரவரி மாதம் அவர் பதவி விலகினார். எனினும் அவர் மீது தனது எதிர்ப்பாளர்களை படு கொலைசெய்தமை, ஊழலில் ஈடுபட்டமை உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இக்குற்றச்சாட்டுக்களை அந்நாட்டின் தற்போதைய இராணுவ அரசு விசாரித்து வருகின்றது. இதன்போது விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவரது மகன்கள் இருவரும் 15 நாட்கள் விசாரணைக்காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படுமானால் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் என எகிப்தின் அரச சார்பு நாளேடான அல்- அஹராம் செய்திவெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 17, 2011

யாழில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். குடாநாட்டில் தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ். போதன வைத்தியசாலையின் உளநல சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையிலேயே இந்த தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் உளநல சிகிச்சைப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இளம்வயதினரே அதிகளவில் தற்கொலை செய்து கொள்வதாகவும் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டில் இருந்து உளநல மருத்துவ சிகிச்சையாளர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கான உளநல ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை 17, 2011

தமிழக முகாம்களிலுள்ள ஈழத் தமிழருக்கு விடிவுகாலம் கிட்டுமா...?

 அரசியல் தலைவர்களுக்கும் முதல்வர் கருணாநிதிக்கும் கடிதங்கள் எழுதியதுதான் மிச்சமாகியுள்ளது. எமக்கு விடிவுகாலம் கிடைக்க எந்தவிதமானநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று குமுறுகின்றனர் ஈழத்தமிழ் அகதிகள். இலங்கையில் போர் நடைபெற்ற காலப் பகுதியில் கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள் இன்று போர் முடிவடைந்த நிலையிலும் தமது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அன்றாட வாழ்வில் பல துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானக் குண்டு மழை, ஆட்லறி ஷெல்லின் சிதறல்களுக்குள் இருந்து தமது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சொந்த ஊரையேவிட்டு ஓடியவர்கள். இன்னும் அவர்களுக்கான நிலையான இருப்பிடம் கிடைக்கவில்லை.  இன்னும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்....)

 

சித்திரை 16, 2011

சித்திரை 16, 2011

20 வருடங்களின் பின்னர் எனது ஊரில் நான்........ பகுதி  3

மறுக்கப்பட்ட உரிமைகளுடன்  இந்தியாவில்  வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப்  பிரஜை !!!

அதிகாலையில் இருந்து அண்ணா சும்மா இருப்பதில்லை. அதிகம் அடியும் அவன்தான் வாங்குவான். அண்ணா ஒவ்வொரு  நாள் காலையிலும் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க வேண்டும் . பின்னர் தம்பியுடன் சேர்ந்து பாத்தி அமைக்க வேண்டும். ஆனால் எப்போதும் தான் தான் முதல்வன் என்ற அதிகாரத்தை என் மீதும் தம்பி மீதும் காட்டதவறுவதில்லை. அதே நேரம் நாம் அழுதால் உடனே இரங்கும் பண்பும், கட்டியணைக்கும்  குணமும் தாரளமாக இருந்தது. என்று அண்ணா எங்ககூட இல்லை. 1984 Dec இல் அண்ணா கைது செய்யப் பட்டார். வானொலி மூலமாக கேட்டு  அறிந்துகொண்டோம். 48 மணிநீர ஊரடங்கு உத்தரவும், வட்டுகோட்டை தொகுதியை இராணுவம் சுற்றி வளைத்ததும் சீக்கிரத்தில் மறக்க முடியாத நிகழ்வு . அன்று இரவும், அதைதொடர்ந்து நாங்கள் வாழ்ந்த வாழ்வு கண்ணீரின் உச்சம். குருநகர் முகாம், யாழ்ப்பாண கோட்டை, பலாலி இராணுவ முகாம், என்று நாங்கள் அலைந்தது கொஞ்ச நஞ்சமில்லை. பின்னர் பூசா , வெலிகட என்று இருந்து அமரர் ராஜீவ் காந்தி அவர்களின் இந்திய இலங்கை அமைதி ஒப்பந்த்ததுடன் விடுதலையாகி ,சிங்கபூர் சென்று, பின்னர் நோர்வே நாட்டுக்கு சென்றார். சிலகாலத்தின் பின் இந்தியா வந்தார். அங்கு ஏற்பட்ட ஒரு விபத்தில் அகாலமரணம் ஆனார்.  (மேலும்....)

சித்திரை 16, 2011

SACP Statement, 14 April 2011

Police Brutality

The SACP is disgusted by the actions of the SAPS where an innocent protester was beaten and shot to death in Ficksburg.  In our democracy it is actually shocking that police still use live ammunition against protesters. This intolerance of the police signals a growing crisis in the attitude of our policing service. A punitive doctrine instead of a preventative doctrine is extremely worrying and must be dealt with. Effective policing does not amount to the use of apartheid era tactics. (more....)

 

சித்திரை 16, 2011

விவசாயத்தை முன்னேற்றி, உணவுத் தேவையை ஈடுசெய்வோமாக...

புத்தாண்டு பிறந்துவிட்டது. மக்கள் வாழ்க்கையில் புதுத்தென் பும், புதிய நம்பிக்கைகளும் தோன்றி, அவை தங்களின் முன் னேற்றத்திற்கு ஒரு சிறந்த அடித்தளமாக அமைய வேண்டும் என்று நாம் அனைவருக்கும் எமது நல்லாசிகளை தெரிவிக்கின் றோம். உணவுப் பஞ்சத்தினால் ஏற்படக்கூடிய இத்தகைய ஆபத்துக்கள் எங் கள் நாட்டிலும் ஏற்படுவதை தடுக்க வேண்டுமாயின், இந்த புத் தாண்டிலிருந்து நாம் அனைவரும் விவசாயத்துறையில் எங்கள் முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும். எங்களுக்கு உணவூட் டும் விவசாய பெரு மக்களை கெளரவித்து, அவர்களுக்கு உரிய அந்தஸ்தை எங்கள் சமூகத்தில் கொடுக்க வேண்டும். எங்கள் அனைவருக்கும் மண்வெட்டியையும், கலப்பையையும் பிடித் துக்கொண்டு வயல் வெளியில் இறங்க முடியாமல் இருந்தாலும், சிறிய அடிப்படையிலாவது எங்கள் வீட்டு வளவில் வீட்டுத் தோட் டங்களை ஏற்படுத்தி, எங்கள் நாளாந்த தேவையை ஈடுசெய்யக் கூடியளவில் காய்கறிகளை பெறக்கூடியதாக அவற்றை பயன் படுத்த வேண்டும். (மேலும்....)

சித்திரை 16, 2011

450 முன்னாள் புலி உறுப்பினர்கள் அடுத்தவாரம் குடும்பத்தாரிடம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 450 முன்னாள் புலி உறுப்பினர்கள் அடுத்த வாரம் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரத்நாயக்க நேற்று தெரிவித்தார். புனர்வாழ்வு நிலையங்களில் ஏற்கனவே திருமணம் முடித்த 450 ஆண்களே இவ்வாறு தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட விருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்நிகழ்வு வவுனியா கலாசார நிலையத்தில் நடைபெறும். புத்தாண்டை முன்னிட்டு வவுனியா பூந்தோட்டத்தில் தொடர்ச்சியாக கலை, கலாசார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் விசேட சங்கீத நிகழ்வுகள் ஒழுங்குபடு த்தப்பட்டதாகவும் பிரிகேடியர் கூறினார். புதுவருடப் பிறப்பை முன்னிட்டு புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள ஆண்களுக்கு சாரம், டீ-சேர்ட் ஆகியனவும் பெண்களுக்கு சல்வார் கமீசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சித்திரை 16, 2011

Qaddafi Unplugged and Uncensored

Recollections Of My Life - Mu'ummar Qaddafi
(By Col. Mu'ummar Qaddafi; Translated by Professor Sam Hamod, Ph.D.)

I am under attack by the biggest force in military history, my little African son, Obama wants to kill me, to take away the freedom of our country, to take away our free housing, our free medicine, our free education, our free food, and replace it with American style thievery, called “capitalism,” but all of us in the Third World know what that means, it means corporations run the countries, run the world, and the people suffer, so, there is no alternative for me, I must make my stand, and if Allah wishes, I shall die by following his path, the path that has made our country rich with farmland, with food and health, and even allowed us to help our African and Arab brothers and sisters to work here with us, in the Libyan Jammohouriyah, (more....)

சித்திரை 16, 2011

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழ் மற்றும் சிங்களத்திலும் வெளியிடுங்கள்

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிடவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு இலங்கை அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்; நிபுணர் குழுவின் அறிக்கையை ஊடகங்கள் மூலம் வெளியிட இலங்கை அரசு முன்வர வேண்டும். இவ் அறிக்கையை தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்ப்பது அவசியம் என்றும் அது குறித்து விவாதிக்க மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஐ.நா. செயலாளர் நாயகம் இந்த அறிக்கையை சர்வதேசத்துக்கு பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. ___

சித்திரை 16, 2011

சிவப்பு பேருந்தில் சிவப்பு வகுப்புகள் - “ஹலோ... அமெரிக்க  கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது..”

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் முற்போக்கு சிந்தனைகளை அறிவதில் புதிய ஆர்வம் கிளம்பியுள்ளது. பரபரப்பாக விற்பனையாகும் நூல்களில் தாஸ் கேபிடலும் ஒன்றாகும். அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகளோடு உலகையே தன் கைக்குள் கொண்டு வரத் துடித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்குள்ளேயே, அமைதி, நல்லுறவு, சமாதானம் ஆகியவை பற்றிய விவாதம் சூடு பிடித்திருக்கிறது. போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில்தான் அமெரிக்கக் கம்யூனிஸ்ட் கட்சியும் மக்கள் சந்திப்புகளை அதிகப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இளம் வயதினரிடம் விவாதம் நடத்த புதிய உத்திகளோடு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
(மேலும்....)

சித்திரை 16, 2011

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக பொறுப்புடன் செயற்படுமாறு இலங்கைக்கு அமெரிக்கா ஆலோசனை

ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக பொறுப்புடன் செயற்படுமாறு இலங்கைக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. இவ் ஆலோசனையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கையின் போது இவ் அறிக்கையினை இலங்கை பயன்படுத்திக்கொள்ள முடியும் என குறிப்பிடப்;பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியது எனவும் குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணை மற்றும் தண்டனை வழங்கும் நடவடிக்கைகளுக்கு இலங்கை கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பதில் பேச்சாளர் மார்ச் சீ டோனர் தெரிவித்துள்ளார். இதேவேளை நிபுணர் குழுவின் அறிக்கை பக்கச்சார்பானது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. _

சித்திரை 16, 2011

நாங்க மாறிட்டோம்.. நீங்க?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகளவு வாக்குப்பதிவுக்குக் காரணம் இரண்டு மட்டுமே. இந்த இரண்டு காரணங்களுக்கும் வாழ்த்தப்பட வேண்டியவை ஊடகமும், தேர்தல் ஆணையமும்தான். தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் (4.7 கோடி பேர்) 18 வயது முதல் 29 வயதுக்குள் உள்ளவர்களின் எண்ணிக்கை 22 விழுக்காடு. இன்றைய இளைஞர்கள் அரசியலில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பது எந்த அளவுக்கு உண்மையோ அந்த அளவுக்கு உண்மை, இவர்கள் பத்திரிகை படிக்கிறவர்களாகவோ, அல்லது தொலைக்காட்சிகளைப் பார்க்கிறவர்களாகவோ இருக்கிறார்கள் என்பதும். இணையதளத்தில் தங்கள் வலைதளங்களுக்குள் புகும் முன்பாக, கூகுள் அல்லது யாகு தரும் செய்திகளையும் போகிறபோக்கில் பார்க்கிறவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை என்றாலும், இவர்களுக்கு நாட்டில் நடக்கும் ஊழல்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் போய்ச் சேர்ந்திருக்கிறது. தேர்தல் குறித்த செய்திகளும் போய்ச் சேர்ந்திருக்கிறது. இவர்கள் தங்கள் எதிர்ப்பை அல்லது ஆதரவைப் பதிவு செய்தே ஆக வேண்டும் என்ற விழிப்புணர்வுக்கு ஆளானார்கள். இதற்கான முக்கிய காரணம் தகவல் தொழில்நுட்பம்தான். (மேலும்....)

சித்திரை 15, 2011

தமிழகத் தேர்தலில்

ஆதரவு அலையா... ஆட்சி மாற்றமா?

யாரும் எதிர்பாராத அளவு வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்திருப்பது அரசியல் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பொதுத் தேர்தலில் 60 முதல் 65 சதவீதம் வரை வாக்குப்பதிவு நடப்பது வழக்கம். வாக்குப் பதிவு சதவீதம் அதிகமாக இருந்தால் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகம் என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது. இப்போது முடிந்துள்ள வாக்குப் பதிவில் 80 சதவீதத்துக்கும் மேலானோர் வாக்களித்துள்ளனர். வாக்களிக்க தாமதம் ஆனபோதிலும்கூட யாரும் கோபம் கொள்ளவோ, தகராறு செய்யவோ, திரும்பிச் செல்லவோ இல்லை. பொறுமையாகக் காத்திருந்து வாக்களித்திருக்கிறார்கள். அந்த உறுதி, மனமாற்றம் வாக்களர்களிடம் ஏற்படக் காரணம் என்ன என்பது அரசியல் கட்சிகள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெண் வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தார்கள். இது அரசியல் கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே பெண்கள் இரட்டை இலையின் ஆதரவாளர்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விஷயம். (மேலும்....)

 

சித்திரை 15, 2011

Conservative candidate takes pains to obscure his Tamil background

Ragavan Paranchothy appears in a TV show marking Maveerar Naal

A month ago, a Tamil television personality named Ragavan Paranchothy won the federal Conservative nomination in Scarborough Southwest. Almost immediately, he changed his name to Gavan Paranchothy, with a new Twitter tag (@gavanp), Facebook page and fresh websites that no longer mention his Tamil background. It’s not the first time Mr. Paranchothy has adopted a different first name. When he travelled with Prime Minister Stephen Harper to Asia in 2009, he was T. Raghavan Paranchothy, the T standing for Thayan, the legal name by which he is also known. But it was as Ragavan Paranchothy that he hosted broadcasts on Tamil Vision International television and Canadian Multicultural Radio in Toronto. And it was as Ragavan that, just last November, Mr. Paranchothy hosted a televised tribute to the Tamil Tigers. (more....)

சித்திரை 15, 2011

லிபியா மீது போர் நடத்தும் அமெரிக்கா  ‘பிரிக்ஸ்’ மாநாடு எதிர்ப்பு

லிபியா மீது அமெரிக்கா தலை மையிலான நேட்டோ படைகள் தன்னிச்சையாக போர் நடத்தி நாசம் விளைவித்து வருவதை இந் தியா - சீனா - ரஷ்யா - பிரேசில் - தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்டமைப்பான ‘பிரிக்ஸ்’ கடுமையாக எதிர்த்துள்ளது. இந்த தாக்குதல் உடனடியாக நிறுத்தப்பட்டு, அங்கு ஏற்பட் டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபையும், பிராந்திய அமைப்புகளும் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. (மேலும்....)

சித்திரை 15, 2011

சரிகிறது ஒபாமாவின் செல்வாக்கு

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 2012-ல் தான் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக 19 மாதங்களுக்கு முன்பே அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்காவிட்டாலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாகவே நாளும் பொழுதும் தனது செல்வாக்குச் சரிந்து கொண்டிருப்பது தெரிந்தும், அதிபர் ஒபாமா இப்போதே தான் மீண்டும் போட்டியிடுவது பற்றி அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் உலகளாவிய அரசியல் பார்வையாளர்களை வியப்படைய வைத்திருக்கிறது. அதிபர் பராக் ஒபாமா தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என்று பெருவாரியான அமெரிக்க வாக்காளர்கள் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறார்கள். உள்நாட்டுப் பிரச்னைகள் ஆனாலும் சரி, வெளிநாட்டு விவகாரங்கள் ஆனாலும் சரி, அதிபர் பராக் ஒபாமாவின் அணுகுமுறையும், செயல்பாடுகளும் அவரது ஆதரவாளர்களுக்கேகூடத் திருப்தி அளிப்பதாக இல்லை. (மேலும்....)

சித்திரை 15, 2011

சுற்றுலா   மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது சீனா  இந்தியாவுக்கு 41வது இடம்  

சுற்றுலாத்துறையில் ஏராளமான பயணிகளை ஈர்த்து வந்த ஐரோப்பிய நாடான ஸ்பெயின் அத்துறையில் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டதே இதற்குக் காரணமாக உள்ளது. சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அமெ ரிக்கா முதலிடத்திலும், பிரான்ஸ் இரண்டாவது இடத்திலும், ஸ்பெயின் மூன்றாவது இடத்திலும், சீனா நான்காவது இடத்திலும் இருந்தன. அமெரிக்காவில் துவங்கி, உலக நாடுகளைப் பாதித்த பொருளாதார நெருக்கடி ஸ்பெயினையும் தாக்கியது. (மேலும்....)

சித்திரை 15, 2011

எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி யாருக்கொல்லாம் ஆப்பு?

 

கொள்கைக் கோட்பாடுகளை அடுக்கி, நல்லாட்சிக்கு உத்தரவாதம் தந்து, மக்கள் மனதில் நம்பிக்கை வைட்டமின் ஏற்றி, ஆட்சி அமைக்க முயற்சித்த காலம் மலையேறிவிட்டது. இலவச இனிமா, கவர்ச்சி சினிமா, கவருக்குள் 'மணி’மா என்ற ஒற்றைக் கொள்கையைச் சகல கட்சிகளும் கடைப்பிடிக்கும் காலம் இது. அதிலும் எந்தப் பொது நல நோக்கும் இல்லாமல், தனிப்பட்ட விரோதம் தீர்க்கும் தனி மனித விமர்சனங்கள் இந்தத் தேர்தலில் அதன் உச்சத்தை எட்டியது. இதில், தேர்தல் சமயம் மட்டும் அரசியல் கால்ஷீட் கொடுத்து, ஆவேசம் காட்டுவது கோடம்பாக்க நட்சத்திரங்களின் பழக்கம். இந்தத் தேர்தலில் அப்படி சபைக்கு வந்து வெளுத்துக் கட்டியவர்களுள் முக்கியமானவர்கள் விஜய், வடிவேலு, சரத்குமார் மற்றும் குஷ்பு. பிரசார அனல் அடங்கியதும் மீண்டும் இவர்கள் கோடம்பாக்கத்தில்தான் நிலை கொள்ள வேண்டும். ஒருவேளை இவர்கள் சார்ந்த கட்சி, ஆட்சிக் கட்டிலை எட்ட முடியாவிட்டால், இவர்களின் எதிர்காலம் என்ன? 'எலெக்ஷன் ஓவர் மாப்பு... இனி, யாருக்கெல்லாம் ஆப்பு?’ (மேலும்....)

சித்திரை 15, 2011

Conservative candidate for the Scarborough Southwest Riding

Well…well…well…well… Stephen, Jason, Paul and Patrick, I warned you Conservatives about these Tamils who had links to the Tamil Tigers when you all started flirting with them and trying to learn the ‘Tamil Tiger Waltz’  holding on to the Tamil Tigers tails with their yellow stripes painted a Conservative blue..  I knew that they would be crafty and cunning teaching you all the wrong steps of the Waltz, saying… “1-2-3 Rise, 1-2-3 Rise…” hoping that you all would not clue into their crafty ‘Tamil Tiger Waltz’ which was really counted as … "1-2-3 Fall, 1-2-3 Fall.” Reinhart reports that Ragavan Paranchothy, your prodigy, who is your Conservative candidate for the Scarborough Southwest riding no longer was mentioning his Tamil background, and that he has adopted a different name from what it was when he travelled with you dear Prime Minister to Asia in 2009, when he called himself with his legal name T. Ragavan Paranchothy.  “T” stood for Thayan, his legal name. (more....)

சித்திரை 15, 2011

பின்னணி பாடகி சித்ரா மகள் மரணம்

பிரபல பின்னணி பாடகி சித்ராவின் மகள் துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்தாள்.தமிழ், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் பின்னணி பாடகியாக இருப்பவர் சித்ரா. இவருக்கும், விஜயசங்கர் என்பவருக்கும் திருமணமாகி, 15 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவள் நந்தனா (8).ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில், நேற்று மாலை நடக்க இருந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சித்ரா தனது குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்குள்ள ஓய்வு விடுதியில் தங்கியிருந்த போது நந்தனா நீச்சல் குளத்தில் மூழ்கினாள். உடனடியாக அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாள். சிறுமி நந்தனா செயல்திறன் குறைபாட்டுடன் (ஆட்டிசம்) இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் நந்தனாவை சோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

சித்திரை 15, 2011

அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவாக ரஜினி!

அன்னா ஹஸாரே என்ற 73 வயது சமூக ஆர்வலர்  ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வேண்டும் என சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து  வெற்றியும் பெற்றார். லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு பணிந்தது. இந்தி திரையுலகினர் ஆதரவு குரல் கொடுத்தார்கள் ஆனால் தமிழ் திரையுலகில் இருந்து யாரும் ஆதரவு குரல் கொடுக்கவில்லை.  நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.பின்னர், அவர் வெளியே வந்தபோது, அவரிடம் நிருபர்கள் சூழ்ந்துகொண்டு கருத்து கேட்க முயன்றனர். ரசிகர்களும் முண்டியடித்து அவரை நெருங்கினர். ஆனால், அவசர அவசரமாக காரில் ஏறிச் சென்றுவிட்டார். அதன் பிறகு அவரது வீட்டின் வாசல் முன்பு 'ஹெட்லைன்ஸ் டுடே' செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். ஊழல் பிரச்னை குறித்த கேள்விக்கு " ஊழல் பிரச்னை பற்றி கேட்கிறீர்கள். டெல்லியில் அன்னா ஹசாரே மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், எனது உடல் நிலை காரணமாக அங்கு செல்ல முடியவில்லை" என்று தெரிவித்தார்.

சித்திரை 14, 2011

 

சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்

எமது இனிய உள்ளங்களுக்கு தமிழ் சிங்கள் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

சித்திரை 14, 2011

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

இருக்கும் சகல நிலமைகளையும் சீர்தூக்கி பார்க்கையில் திமுக, அதிமுக இரு கட்சிகளும் இத் தமிழகத்துச் சட்டசபைத் தேர்தலில்  அறுதிப் பெரும்பான்மை பெறப் போவது இல்லை. ஆனால் அதிமுக கூட்டணிக்கு. திமுக கூட்டணியை விட கூடுதலான ஆசனங்கள் கிடைக்கும். ஆனால் இது ஆட்சியமைக்க போதுமான வலுவானதாக அமையப் போவதில்லை. இதன் தொடர்சியாக தேர்தல் முடிவுகளுக்கு பின்னான கட்சிகளின் மறு கூட்டமைப்பு ஒன்று ஆட்சியமைக்க முயலும். இதில் பணப்பலம், அதிகார பலம் மிக்க திமுக ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்புக்களே அதிகம் காணப்படுகின்றன. 2011 தமிழகத்தத் தேர்தலில் வெல்லப் போவது திமுக, அதிமுக இரண்டுமே அல்ல கூடவே தமிழகத்து மக்களும் வெல்லப் போவது இல்லை என்பதுதான் பரிதாகரமான விடயம். காணாமல் போய் கொண்டிருந்த ராமதாஸின் பாமக வும், இல்லாமல் போய்கொண்டிருந்த விஜயகாந்தின் தேதிமுக வும் இந்தத் தமிழகத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகளாக அமையப் போகின்றன. (மேலும்....)

சித்திரை 14, 2011

14.04.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் திரு வீ ஆனந்தசங்கரி, ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம், ரிபிசியின் பணிப்பாளர் திரு வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

 தொடர்புகளுக்கு: 00 44 208 866 1001 or 078107063682

சித்திரை 14, 2011

திருமதி யோசேப் பரராஜசிங்கத்திற்கு கனடாவில் நாடுகடத்தல்  உத்தரவு

மறைந்த முன்னாள் தமிழ்  தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர், மாமனிதர் யோசேப் பரராஜசிங்கத்தின்  மனைவியான திருமதி சுகுணம் பரராஜசிங்கத்தின் அகதி மனுவை நிராகரித்த கனடிய  கன்சவேட்டிவ்  அரசாங்கம் அவரை நாடு கடத்த உத்தரவிட்டிருக்கிறது. திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அவர்கள் உண்மையான அகதி என்பதும் சிறீலங்காவில் உயிராபத்து உள்ளவர் என்பதும் அனைவரும் அறிந்ததே. 2005ம் ஆண்டு நத்தார் தின அதிகாலைப் பிரார்த்தனையின் போது மட்டக்களப்பு புனிதமரியாள் தேவாலயத்தினுள் வைத்துச் சுட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராஜசிங்கம் அவர்கள் கொல்லப்பட்டபோது அவருடன் கூடவிருந்த திருமதி சுகுணம் பரராஜசிங்கம் அவர்கள் பலத்த காயத்திற்கு உள்ளாகியிருந்தார். (மேலும்....)

சித்திரை 14, 2011

ChiDAES-Ca​nada Tree Planting Event - Sat - Apr 16, 2011 at 8:30 A

சித்திரை 14, 2011

நடேசன் புலித்தேவன் படுகொலைகளிலா மனித உரிமை பற்றிய ஞானம் வந்தது

புலி விசர் பிடித்துத் திரிந்த ஜென்மங்களே!  இப்பதானா உங்களுக்கு வலிக்குது. இப்பதானா மனித உரிமை எண்டால் என்னவெண்டு விளங்குதா! 26 வருடத்திற்கு முன் யாழப்பாணத்தில் டயர் போட்டு உயிரோடு டெலோப்போராளிகளைக் கொல்லும்போது இப்ப கூப்பாடு போடுகிற மனித உரிமை எங்க போனது? மாற்று இயக்கப்போராளிகள் சரணடைந்தபோது தெரு நாயை சுடுகிறமாதிரி கொன்ற போது இப்படித்தான அந்தப்போராளிகளின் சொந்தங்களுக்கு இருந்திருக்கும். நடேசனையும் புலித்தேவனையும் ஆமி சுட்டதிற்கு இப்படி மனித உரிமை எண்டு கத்திறதுக்கு உங்களுக்கு என்ன அருகதை இருக்குது பிணந்தின்னி பிசாசுகளே!  துரோகி துரோகி எண்டு எல்லாரையும் போட்டுத்தள்ளியபோது இதே கதி உங்களுக்கு நடக்கும் என்று தெரியவில்லையா!  வரலாறுகளைப் படிச்சிருந்தாத்தானே தெரிந்திருக்கும். எதைப் படிச்சனீங்கள். தேசியத்தலைவரை தலையில் வைத்து கொண்டாடி மாற்று அமைப்புக்காரரையெல்லாம் போட்டுத்தள்ளியபோது கூத்தாடின உங்களுக்கு இவ்வளவு காலம் சென்றதா மனித உரிமை பற்றி தெரிந்து கொள்ள.  (மேலும்....)

சித்திரை 14, 2011

ரூ. 1 கோடி 19 இலட்சம் கடன் அட்டை மோசடி

போலி கடன் அட்டைகளை பயன்படுத்தி சுமார் ஒரு கோடி 19 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட மோசடி கும்பலை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் கைது செய்துள்ளனர். பாரிய அளவில் திட்டமிட்ட அடிப்படையில் மோசடியில் ஈடுபட்டு வந்த திருகோணமலை, இரத்மலானை, களுவாஞ்சிக்குடி மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நால்வரே சி.ஐ.டி. யினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். போலியாக தயாரிக்கப்பட்ட 15 கடன் அட்டைகள், அவற்றை தயாரிக்க பயன்படுத்திய இலத்திரனியல் இயந்திரங்கள், உண்மையான கடன் அட்டைகளின் தரவுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கணனி மற்றும் பல்வேறு வகையான உபகரணங்களையும் சீ.ஐ.டி.யினர் கைப்பற்றியுள்ளனர். (மேலும்....)

சித்திரை 14, 2011

இலங்கை- இந்திய உறவுகளை தவறாக அர்த்தப்படுத்த கூடாது

இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையில் மனிதாபிமான ரீதியிலான சில உறவுகளை சில ஊடகங்கள் தவறாக அர்த்தப்படுத்த முயற்சிப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட இந்திய மீனவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக இந்திய மீனவர்கள் சிலர் இலங்கைக்குள் அனுமதிக்கப்பட்டமையானது சர்வதேச சட்டத்தை மீறும் செயலென சில உள்ளூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கடற்படையினர் கூறுகின்றனர். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வேண்டுகோளுக்கு அமைய ஏப்ரல் 2 ஆம் திகதி காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்களின் படகைத் தேடும் நடவடிக்கையைத் தாம் மேற்கொண்டதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர். (மேலும்....)

சித்திரை 14, 2011

சவூதி மன்னருக்கு ஒபாமா ரகசியக் கடிதம்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபா மாவின் தனிப்பட்ட கடிதத்தை வெள்ளை மாளிகை அதிகாரி சவூதி மன் னர் அப்துல்லாவிடம் வழங்கினார். ஈரான் மற்றும் அரபு உலக நடவடிக்கை தொடர்பாக இருநாடுகள் இடையே உள்ள பதட்டத்தை தணிக்கும் வகை யில் ஒபாமா கடிதம் அனுப்பியுள்ளார். உலக நாடுகளில் அதிக எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு சவூதி அரேபியா ஆகும். முஸ்லிம் உலகின் புனிதத் தலங் களை உள்ளடக்கியது ஆகும். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா வின் பிராந்திய கூட்டாளியாக சவூதி அரேபியா உள்ளது. கடந்த 10 ஆண்டு களில் இருநாடுகள் இடையே உளவுத் தகவல்கள் பரிமாற்ற சட்ட அம லாக்க கட்டமைப்பு பெருமளவு உள்ளது. அமெரிக்காவிடம் 6 ஆயிரம் கோடி டாலர் ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ள சவூதி திட்டமிட்டு, அது நிலுவையில் உள்ளது. அமெரிக்க வரலாற்றில் மிக பிரம்மாண்டமான ஆயுதப் பேரம் இது வாகும். சவூதியின் நான்கு திசைகளிலும் தீங்கான நிலைபாடுகள் நிலவுவது அந்த நாட்டிற்கு கவலை அளித்துள்ளது. சவூ திக்கு கிழக்கே உள்ள பஹ்ரைன், தெற்கே உள்ள ஏமன், மேற்கே உள்ள எகிப்து, வடக்கே உள்ள இராக் நாடுகள் போராட் டத்தில் சீர்குலைந்துள்ளன. சவூதி நாட் டிலேயே கிழக்குப் பகுதியில் சிறுபான்மை ஷியா பிரிவினர் சமீப வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரபு உலகில் மீட்சி ஏற்பட வேண்டும் என்பதில் சவூதி ஆர்வம் கொண்டுள்ளது.

சித்திரை 14, 2011

தமிழகத்தில் 76% வாக்குப் பதிவு

தமிழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 76 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாகத் தெரிகிறது. அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் நடந்த வாக்குப் பதிவில் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. இளைஞர்களும், பெண்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசைகளில் காத்திருந்து வாக்களித்தனர். தமிழகத்தில் 234 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அனைத்தும் மே 13-ம் தேதி எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 94 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடையே சரியாக ஒரு மாத கால இடைவெளி இருப்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

சித்திரை 14, 2011

கூட்டணி ஆட்சியும் அமையலாம் - கருணாநிதி

தமிழகத்தில் தி.மு.க. தனியாகவும் ஆட்சி அமைக்கலாம்; கூட்டணி ஆட்சியையும் அமைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். எங்களைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்து கொண்டதே தவிர, பாரபட்சமாக நடந்து கொண்டதாகச் சொல்ல மாட்டேன். ஒன்றிரண்டு இடங்களில் தேர்தல் ஆணையத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அதைப் பற்றிச் சொன்னால் அதில் தவறில்லை என்பது எனது கருத்து. (மேலும்....)

சித்திரை 14, 2011

தனிப் பெரும்பான்மை கிடைக்கும் - ஜெயலலிதா

சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு தெளிவான தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறினார். இந்த முறை அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு அமோக வெற்றியை வாக்காளர்கள் தரவுள்ளனர். தெளிவான தனிப் பெரும்பான்மை அ.தி.மு.க.வுக்கு கிடைக்கும். கூட்டணிக் கட்சிகளும் அதிக இடங்களில் வெற்றி பெறும். (மேலும்....)

சித்திரை 13, 2011

4,59,50,620 வாக்காளர்கள்  2,773 வேட்பாளர்கள்  54,314 வாக்குச்சாவடிகள்  10,000 வெப் கேமராக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடு களும் தயாராகி விட்டன. தேர்தல் பாதுகாப்பு மற்றும் பணிகளில் 2 லட்சத்து 88 ஆயிரம் அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மாநில சட்ட மன்றங்களுக்கு ஏப்ரல் 13 புதன்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.  தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறு கிறது. இதில் மொத்தம் 2773 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். (மேலும்...)

சித்திரை 13, 2011

ஆபிரிக்க கூட்டமைப்பின் அமைதி திட்டத்திற்கு கிளர்ச்சிப் படை மறுப்பு

ஆபிரிக்க கூட்டமைப்பின் அமைதித் திட்டத்திற்கு லிபிய கிளர்ச்சிப் படை மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் கடாபி இராணுவம் போர் நிறுத்தம் செய்வது ஒன்றையே குறிக்கோளாக கொண்டுள்ளது என அது கூறியுள்ளது. ஆபிரிக்க கூட்டமைப்பின் அமைதித் திட்டத்திற்கு லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து அந்த குழு உறுப்பினர்கள் பெங்காசி சென்று மேற்படி திட்டம் குறித்து கிளர்ச்சிப் படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து ஆபிரிக்க கூட்டமைப்பின் சமரச திட்டத்தை ஏற்க முடியாது என கிளர்ச்சியாளர்கள் குழு மறுத்து விட்டது. கடாபியும் அவரது மகன்களும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான் மக்களின் தலையாய கோரிக்கை. இது குறித்து சமரச திட்டத்தில் எதுவும் இல்லை. (மேலும்.....)

சித்திரை 13, 2011

லிபியா புதிய சோமாலியாவாக உருவெடுக்கும் நிலையுள்ளது

போராட்டம் வெடித்துள்ள லிபியா புதிய சோமாலிய நாடாக உருவெடுக்கும் என ஜனாதிபதி கடாபியை விட்டு விலகிய முன்னாள் வெளியுறவு அமைச்சர் முசா குசா எச்சரித்துள்ளார். லண்டனுக்கு தப்பி வந்துள்ள முசா குசா லிபியாவில் உள்நாட்டுப் போல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் புதிய சோமாலிய நாடாக லிபியா உருவெடுக்கும் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். லிபியாவை உடைக்கக் கூடாது ஒன்றுபட்ட லிபியாவையே விரும்புகிறோம். ஒற்றுமை காணப்பட்டால்தான் லிபியாவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 1988ம் ஆண்டு லொக்கர்பி பகுதியில் விமானத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலின் போது லிபிய புலனாய்வுத் துறை அதிகாரியாக முசா குசா இருந்தார். அவர் லிபிய அரசை விட்டு தற்போது விலகி உள்ளதால் கடாபி ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. ஜனநாயக ரீதியில் பேச்சுவார்த்தை மூலம் லிபிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சித்திரை 13, 2011

KUMAR SANGAKKARA SURPRISES EVERYONE WITH A VISIT TO JAFFNA

THE HUMBLE CAPTAIN SPEAKS OF UNITY AS A COUNTRY

EXPRESSES DESIRE TO SEE MORE TAMILS AND SINHALESE PLAY TOGETHER FOR THE SRI LANKAN SIDE

The Sri Lankan Captain, Kumar Sangakkara was very much moved by the rousing welcome given to him by the students of the North and in his speech appreciated the upcoming talented cricketers from the North. " It is high time that we shed our differences and live together as a family belonging to Mother Lanka.I would be most happy to see soon cricketers from the North and East playing in the National Team and this will be a great symbol of unity in the country that could be fostered through the game of cricket. (more....)

சித்திரை 13, 2011