Contact us at: sooddram@gmail.com

 

ஆவணி  2014 மாதபபதிவுகள

ஆகஸ்ட் 31, 2014

புலிகளின் பிரதிநிதிகள் தாமே எனக் கூறி தேர்தல் 2004இல் விஞ்ஞாபனம்

புலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட்டமைப்பினரே பதில் கூற வேண்டும்

2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தை இந்நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஒரு தடவை வாசித்துப் பார்க்க வேண்டும். அதில் இக்கூட்ட மைப்பினர் புலிகளே தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்றும், தமிழ் மக்களை ஆளும் தகுதி அவர்களுக்கே உள்ளது எனவும், அவர்களது அங்கீகாரத்துடன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத் தியே தாம் தேர்தலில் போட்டியிடு வதாகவும் தெரிவித்துள்ளனர். அப்படியாயின் புலிகள் தொடர்பாக இன்று முன்வைக் கப்படும் அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் குற்றச் சாட்டுக்களுக்கும் பதில் கூற வேண்டியவர்கள் தமிழ்க் கூட்ட மைப்பினரே என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். (மேலும்....)

இந்தியா (மோடி) சொன்னதும் தமிழ் ஊடகங்கள் சொல்லாததும்

சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் உயர்மட்ட குழுவினர் முதல்முதலாக இந்தியாவின் பிரதமர் உள்ளடக்கிய குழுவினரை சந்தித்து திரும்பியிருக்கின்றனர். இந்தியாவில் பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து சம்பந்தன் இவ்வாறானதொரு சந்திப்பிற்கான வேண்டுகோளை விடுத்திருந்தார்.  இதற்கான ஒழுங்குகளை கொழும்பிலுள்ள இந்திய தூதுவர் மேற்கொண்டிருந்தார். ஆனால் இந்த சந்திப்பின் பின்னர் அதிசயங்கள் நடைபெறப்போவதாக சொல்லி வந்த தமிழ் ஆய்வாளர்கள், ஊடகக்காரர்கள் என்போரின் கதைதான் அதோகதியாகிவிட்டது. பெரும் ஆவலுடன் ஒரு திரைப்படத்திற்காக ஏங்கிக்கொண்டிருந்த ரசிகர் ஒருவர் படத்தை பார்த்தபின் இவ்வளவுதானா என்று அலுத்துக் கொள்ளுவதற்கு ஒப்பானதுதான், இந்த ஆய்வாளர்கள், ஊடகக்காரர்களின் நிலைமையும். (மேலும்....)

சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வலியுறுத்தி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழுத்தம்.

நாங்கள் நரேந்திர மோடியோடு பேசியதில் இருந்துஇ மகிந்தருக்கு குலப்பன் காச்சல் பிடித்துவிட்டது என்றும்இ அதுதான் அவர் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒப்பில்லா தலைவர் சம்பந்தர் ஐயா தெரிவித்துள்ளார். அது மட்டுமா ? தமிழர்களுக்கு நீதி கிடைக்க நரேந்திர மோடி செயலில் இறங்க ஆரம்பித்துவிட்டார். அவர் ஏற்கனவே அதில் இறங்கிவிட்டார்(ஏதோ கடலில் இறங்கியதுபோல) என்கிறார் சம்பந்தர். இவ்வாறு சம்பந்தர் கூறிக்கொண்டு இருக்க மறு முனையில்இ இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே சிங்ஹா தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இணைந்து செயல்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
(மேலும்....)

ஊடக அறிக்கை

தமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி!

அரசியலும் தெரியாமல், வரலாறும் தெரியாமல் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி பேசுவதாக நினைத்துக் கொண்டு அரசியல் வியாபாரம் செய்யும் தம்பி யோகேஸ்வரன் போன்றவர்களால்தான் தமிழ்; மக்களின் பிரச்சினை நீண்டு கொண்டே போகின்றது. அனைத்துக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து செயற்பட்டு, அதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விட்டால் யோகேஸ்வரன் போன்றோருக்கு எதைச் சொல்லி மக்களிடம் பிரச்சாரம் செய்து அரசியல் வியாபாரம் செய்து பிழைப்பது என்ற பயத்தில் அனைத்து சக்திகளும் ஒன்று சேர்வதை தடுப்பதிலேயே குறியாக இருக்கின்றார். (மேலும்....)

ஆஸியில் மீண்டும் அணிதிரள புலிகள் முயற்சி

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட பின்னர் வலுவிழந்து போன தமிழீழ விடுதலை புலிகள், அவுஸ்திரேலியாவில் மீண்டும் அணிதிரள முயற்சிக்கின்றார்களா? ஆறு இலங்கையரை, ஆந்திராவிலுள்ள பிரகாசம் கடற்கரை வழியாக அவுஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்ற நால்வர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து 5 வருடங்களாக பதுங்கியிருந்த தமிழீழ விடுதலை புலிகள் புத்துயிர் பெற முயற்சிக்கின்றனர் என்ற சந்தேகம் புலனாய்வாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மனித கடத்தல் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து புலனாய்வாளர்கள் வந்தனர். இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வரும் சட்டவிரோத குடிவரவாளர்கள் அநேகமாக முன்னர் தமிழீழ விடுதலை புலிகளின் அதிகாரம் மிகுதியாகக் காணப்பட்ட முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களை சேர்ந்த 24-28 வயதானவர்களாக காணப்பட்டனர். (மேலும்....)

தனிக்கட்சி தொடங்குகிறார் ரஜினி; பா.ஜ.க.வுடன் கூட்டணி?

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் தனிக்கட்சி தொடங்க இருக்கிறார். அத்துடன், தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும் ரஜினி ரசிகர்களும் அவருக்கு நெருக்கடி கொடுப்பதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தி.மு.க தலைவர் கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டியதில்லை என்பதில் ரஜினிகாந்த் உறுதியாக இருந்ததுதான் இதுவரை அவர் அரசியலுக்கு வராமல் இருந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இதை சுட்டிக்காட்டும் ரஜினி குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள், அடுத்த சட்டசபை தேர்தலில் கருணாநிதி அக்டிவ் பொலிட்டிக்ஸில் இருக்கமாட்டார். அதனால் உங்களது தயக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு களத்துக்கு வாருங்கள் என்று சொல்கின்றனராம்.

தமிழகத்தில் தவமிருக்கும் கூட்டமைப்பின் தலைவர்

இந்திய விஜயத்தை மேற்கொண்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழ் தேசியக் கூட்ட மைப்பினர் தற்போது தொடர்ந்தும் தமிழகத்தில் தங்கியுள்ளனர். அவர்கள், இன்னமும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த குழுவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் மற்றும் செல்வராஜா ஆகியோர் இலங்கை திரும்பி விட்டனர். எனினும் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரமேச்சந்திரன் ஆகியோர் தமிழகத்தில் இன்னும் தங்கியுள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பதற்கான கோரிக்கை ஏற்கனவே விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அது பரிசீலனையில் இருக்கும் நிலையிலேயே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழகத்தில் தங்கியுள்ளனர். எனினும் ஜெயலலிதாவை சந்திக்கும் முன்னர் அவர்கள் வேறு எந்த முக்கியஸ்தர்களையும் சந்திக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நாளை வரை கூட்டமைப்பினர் தமிழகத்தில் தங்கியிருப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகஸ்ட் 30, 2014


அதிகாரப் போராட்டத்தில் – வட-கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் வரதர்

வட மாகாணசபைக்கான அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக இன்று முதல்வர் எவ்வாறெல்லா போராடுகின்றாரோ அவ்வாறே அன்றைய முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாளும் அதிகாரங்களை பெற்றுக்கொள்ள போராடினார் என்பது எழுதி வைக்கப்பட்ட வரலாறு என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சிரேஷ்ட பிரதித் தலைவரும் கல்முனை மாநகர சபையின் உறுப்பினருமான ஏ.எல்..ஏ.அப்துல் மஜீத் கல்முனை மாநகரசபை அமர்வில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் வடக்கு கிழக்கை பொறுத்தவரை தமிழ், முஸ்லீம் உறவு என்பது காலத்தால் வரலாறு எடுத்துக் கொள்கின்ற அளவுக்கு கட்டிவளர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுபான்மையினர் எதிர்நோக்கியுள்ள சவாலை முறியடிப்பதற்கு கருத்து வேறுபாடுகளுக்கப்பால் தமிழ்-முஸ்லீம் சமூகம் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவை உருவாகியுள்ளது. (மேலும்....)

பொலிஸாரின் பெயரில் யாழில் நிதி மோசடி

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் பெயரைப் பயன்படுத்தி நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.ஏ.நிஹால் பெரேரா வெள்ளிக்கிழமை (29) தெரிவித்தார். 'யாழ்ப்பாணம், கந்தர்மடப் பகுதியிலுள்ள வீடுகளில் வான் ஒன்றில் வந்த சிலர், தாம் யாழ்ப்பாணப் பொலிஸார் என தெரிவித்து, கொழும்பில் நடத்தப்பட்டு வரும் சிறுவர் இல்லத்திற்கு நிதி சேகரிப்பதாகக் கூறி பணம் வசூலித்து வருகின்றனர். இருப்பினும், இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியாது' என அவர் குறிப்பிட்டார். யாழ்ப்பாண பொலிஸார் அவ்வாறு எந்தச் சிறுவர் இல்லங்களையும் நடத்தவும் இல்லை அத்துடன், அவ்வாறு பணம் வசூலிக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடுபடவும் இல்லையென அவர் குறிப்பிட்டார். அவ்வாறு செயற்படுபவர்களை பொதுமக்கள் அடையாளம் காட்டினால் அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

சாட்சியமளிப்போரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கைக்கு எதிரான ஐ.நா. விசாரணையில் சாட்சியம் அளிப்போரின்  பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் கூட்டமைப்பு கேட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்திடமும் ஐ.நா. மனித உரிமைகளின் உறுப்பு நாடுகளிடமும் இவ்வாறு கேட்டுள்ளனர். ஐ.நா. மனித உரிமை பேரவையால் அதிகாரமளிக்கப்பட்ட விசாரணைகளில் தகவல் கொடுக்கக்கூடியவர்களுக்கு எதிரான மிரட்டல்கள், பயமுறுத்தல்கள், பழிவாங்கல்கள் பற்றி அறியாது நாம் அச்சம் கொண்டுள்ளோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பான கடிதத்தை,  ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தலைவர் 'பவுடெலெயர் என்டொங் எல்லா'வுக்கும் ஜெனீவாவிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையில் தூதுவர் ரவிநாத ஆரியசிங்கவுக்கும் அனுப்பிவைத்துள்ளது. ஐ.நாவுடன் ஒத்துழைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல் நடவடிக்கைளிலிருந்து மனித உரிமை பாதுகாவலர்களையும் வேறு தனிப்பட்டவர்களையும பாதுகாக்க தேவையான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா. மனித உரிமையிடமும் கேட்டுள்ளன.

யாழ். மாவட்டத்தில் 327 பேர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வார காலத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் முந்நூற்று இருபத்தி ஏழு பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் பெரேராவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடித்துக் காயப்படுத்தியது 58, கொள்ளை சம்பந்தமாக 01, பாலியல் துஷ்பிரயோகம் 01, குடிபோதையில் கலகம் விளைவித்தது 06, சந்தேகத்தின் பேரில் 08, பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 33, வாகன விபத்து சம்பந்தமாக 12, களவு சம்பந்தமாக 05 பேர், குடிபோதையில் வாகனம் செலுத்தியது 04, அத்து மீறி வீட்டில் நுழைந்தது 01, போலி நகையை அடகு வைத்தது 02, சுற்றுச் சூழல் பாதிப்படையும் வகையில் 02, பாதுகாப்புக் காரணங்களுக்காக 04, சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றவர்கள் 02, மோசடி சம்பந்தமாக 01, ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 66 பேரும், காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் 20 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் எட்டு பொலிஸ் நிலையங்களினாலும் 121 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள். பாரிய குற்றங்கள் சம்பந்தமாக 03 பேரும், சட்டவிரோதமான மது விற்பனை 09, பிடியாணை 12, சந்தேகத்தின் பேரில் 11, குடிபோதையில் கலகம் விளைவித்தமை 14, ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 72 பேரும் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ஆகஸ்ட் 29, 2014

வந்த காசு திரும்பிப் போகுது - முதலமைச்சருக்கு தெரியாத சங்கதி

வடக்கு மாகாண சபைக்கு வந்த நிதி போதாது எண்டு முதலமைச்சர் தம்பட்டம் அடிச்சுக்கொண்டு திரியிறார். ஆனால் வந்த நிதி திரும்பிப்போகப் போகுது எண்டது முதலமைச்சருக்குத் தெரியுமோ? தெரியாதோ? கடந்த பட்ஜெட்டில் வடக்கு மாகாண சபைக்கு இலங்கையில் இரண்டாவது கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அப்பிடி ஒதுக்கப்பட்ட நிதியை ஒழுங்காகப் பயன்படுத்தாமல் மூண்டில் ரண்டு பங்கு காசு இப்ப திரும்பிப் போற நிலையில இருக்கு.  இதுக்கு யார் பொறுப்பு? முதலமைச்சர் இதைப்பற்றி வாய் திறப்பாரா? அல்லது மனந்திறப்பாரா? அல்லது கண் திறப்பாரா? (மேலும்....)

TNA போட்ட திட்டமும் மோடி சம்பந்தருக்கு காதில் சொன்ன விடையமும் என்ன ?

இந்தியாவில் சுமார் 1 லட்சம் ஈழத் தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பினாலே போதும். அவர்கள் விட்டுச் சென்ற காணிகளில் தான் இலங்கை இராணுவம் தற்போது தங்கியிருந்து அட்டகாசம் செய்து வருகிறது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கூறியுள்ளார்கள். தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 115 அகதி முகாம்கள் மட்டும் உள்ளது. இதில் உள்ள ஈழத் தமிழர்கள் நாடு திரும்பினால், அவர்களது காணிகளை இலங்கை இராணுவம் திருப்பிகொடுக்க வேண்டும். அதுவே தற்போது நடக்கவேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் இதேவேளை நீங்கள் அங்குள்ள சிறுபாண்மை இனத்தவர்களோடு இணைந்து செயல்படுங்கள் என்று நரேந்திர மோடி சம்பந்தருக்கு தெரிவித்துள்ளார். சிறுபாண்மை இனத்தவர்களா ? முஸ்லீம்களைச் சொல்கிறார் என்று உடனே சம்பந்தர் புரிந்துகொண்டார். நாம் தற்போது முஸ்லீம்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்று அவர் கூற, நான் சொன்னது முஸ்லீம்களை மட்டும் அல்ல மலையக தமிழர்களையும் தான் என்று ஒரு போடு போட்டுள்ளார் நரேந்திர மோடி. இலங்கை தீவில் உள்ள அனைத்து சிறுபாண்மை இனத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், இதனூடாகவே உங்கள் உரிமைகளை நீங்கள் பெற முடியும் என்று, நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனை அறிவுரை என்று எடுப்பதா ? இல்லை இதுவரை இணைந்து செயல்படவில்லை என்று குத்திக்காட்டுவதாக எடுப்பதா என்று தெரியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளனர் என்று உள்ளகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை யாழ் மக்களுக்கு வரப்பிரசாதம்

யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள அச்சுவேலியில் பாரியதொரு கைத்தொழில் பேட்டை நேற்று முன் தினம் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய உயர்ஸ்தானிகர் வை. கே. சின்ஹா ஆகியோர் இணைந்து கைத்தொழில் பேட்டையைத் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவான ந்தா, பிரதியமைச்சர் வீரக்குமார திசாநாயக்க. வட மாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி. வி. விக்னேஸ் வரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். (மேலும்....)

மண்ணை அள்ளி விற்ற டக்ளஸ் வாயிலேயே மண்ணை போட்ட கோட்டபாய ராஜபக்ஷ !

யாழ். மணற்காடு குடத்தனைப் பகுதியில் மணல் அள்ளும் வடிக்கையில் கோத்தபாயவும் களமிறங்கியுள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளிற்கென விசேட அதிரடிப்படை அங்கு குவிக்கப்பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. இது வரை காலமும் டக்ளஸிற்கு சொந்தமான "மகேஸ்வரி பவுண்டேசன்" மட்டுமே மணல் அகழ்ந்து விற்பதில் ஈடுபட்டிருந்தது. இதன் மூலம் நாள் தோறும் பல மில்லியன் ரூபா பணம் கைமாறி வந்திருந்தது. அதை தொடர்ந்து கோத்தபாயவின் பினாமியான விண்ணன் என்பவர் களமிறங்கியிருந்த நிலையில் தற்போது இலண்டனில் இருந்து சென்று கோத்தாபயவிற்கு நெருக்கமான புள்ளி ஒருவரும் நெய்தல் எனும் பேரில் டக்ளஸிற்கு போட்டியாக மணல் அகழ்ந்து விற்பனை செய்துவருகிறார் என, அதிர்வின் யாழ் புலனாய்வு செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார். (மேலும்....)

போராளி ஷர்மிளா மீதான போலிக் குற்றச்சாட்டு நீக்கப்பட்டது

இந்தியாவில் மணிப்பூர் மானிலத்தின் பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டம் 1964 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பின் தோற்றத்துடன் அமைப்பு மயப்பட்டது. அந்த அமைப்பின் செயலாளர் எம்.கே.மேகன் இந்திய இராணுவத்திற்கு எதிரான போரை நடத்திவருவதாக ஆயுதப்படைகளால் தேடப்படுகிறார். அண்மையில் மேகன் விடுத்துள்ள அறிக்கையில் நாங்கள் பிரிவினை வாதிகள் அல்ல பிரிந்து செல்லும் உரிமைக்காகவே போராடுகிறோம் என்றார். இந்தியாவோ அதன் இராணுவமோ எமது எதிரிகள் அல்ல, ஆனால்  இந்திய இராணுவத்தை எமது பிரதேசங்களிலிருந்து வெளியேறுமாறு போராடுகிறோம் என்று தெரிவித்திருந்தார். (மேலும்....)

கச்சதீவை மீளப்பெறுவதென்பது எவ்வகையிலும் சாத்தியமில்லை

இலங்கைக்கு வழங்கிய கச்சதீவை மீளப்பெறுவதென்பது எவ்வகையிலும் சாத்தியமில்லையென இந்திய சட்டமா அதிபர் முகுல் ரொஹாட்கி இந்திய உச்சநீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். 1974ம் ஆண்டு இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு அமையவே கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும், இதனை தற்பொழுது மீளப்பெறுவதாயின் யுத்தமொன்றை பிரகடனம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியிருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. சட்டமா அதிபரின் இந்த அறிவிப்பு தொடர்பாகக் கருத்து வெளியிட்டிருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு 'நாம் சமாதானத்தைப் பற்றியே பேசுகின்றோம். யுத்தத்தைப் பற்றி அல்ல' எனக் கூறியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டுசென்றிருப்பதாகவும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நிலப்பகுதி குறித்து நீதிமன்றத்துக்கு தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மீனவர்களின் பிரச்சினையை அறிந்துகொள்ளக்கூடியதாக உள்ளபோதும், மற்றுமொரு நாட்டின் எல்லை குறித்த விடயத்தில் நீதிமன்றத்தால் தலையீடு செய்ய முடியாது.

இந்தியாவில்

குற்றப்பின்னணி அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட 13 ஆண்டுகள் தடை

குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் வரை தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது. குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான போக்கை கையாள பிரதமர் மோடி தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட குறைந்த பட்சம் 13 ஆண்டுகள் வரை தடை விதிப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஏதாவதொரு குற்றத்திற்காக 7 ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்ற நபர் 13 ஆண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட தகுதி அற்றவராகிறார். அதாவது அவர் சிறை தண்டனை முடிந்த வந்த பிறகும் 6 ஆண்டுகள் வரை அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார். அதுமட்டுமின்றி குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தாலும் அவர் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார் என்னும் வகையில் சட்டம் திருத்தம் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது

ஆகஸ்ட் 28, 2014

மக்கள் யார் பக்கம்.....?

டக்ளஸ் ஒரு பக்கம், சிவி மறுபக்கம், சந்திரசிறி இன்னொரு பக்கம் சும்மா போங்கள் நல்ல வேடிக்கைதான்......!

அச்சுவேலி கைத்தொழில் பேட்டை நேற்று சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட படம். அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்ஹா ஆகியோர் காணப்படுகின்றனர். இவர்களில் யார் மக்கள் பக்கம்.....?

சாட்சியமளிக்குமா கூட்டமைப்பு?

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த அரசின் மீதான விசாரணை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் அளப்பரிய நம்பிக்கை நிலவுகிறது. இதற்கு தமிழ் மக்களின் தற்போதைய தலைமையான தமிழ் தேசியக் கூட்டமைப்ப, மேற்படி விசாரணை தொடர்பில் வெளிப்படுத்தி வரும் அதீத நம்பிக்கையே பிரதான காரணமாகும். அரசன் எவ்வழியோ, அவ்வழியே குடிகள் என்றொரு கருத்துண்டு. அதே போன்று ஒரு மக்கள் கூட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அரசியல் அமைப்பானது, எதனை மக்கள் முன்வைக்கிறதோ, அதுவே மக்களது நம்பிக்கையாகவும் பரிணமிக்கிறது. அந்த வகையில், தமிழ் மக்கள் ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் விசாரணை மீது பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கின்றனர். ஆனால், ஒரு விசாரணையென்று வரும்போது அதற்கு சாட்சிகள் அவசியமாகின்றது. ஆனால், ஜ.நா. விசாரணைக் குழுவினர் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கான அனுமதியை கொழும்பு வழங்கவில்லை. (மேலும்....)

பாலஸ்தீனத்தின் மீதான காந்தியடிகளின் கரிசனம்.

"எனது எல்லா அனுதாபங்களும் யூதர்கள் மேல் உண்டு.அவர்களின் வலிகளையும், வேதனைகளையும் நான் நெருக்கமாக அறிவேன்.ஆனால் அந்த அனுதாபம் நீதியின் தேவையைக் காண முடியாமல் என் கண்களைக் குருடாக்கி விடாது.யூதர்களுக்கு தேசிய இருப்பிடம் வேண்டும் என்ற பெருங்குரல் சரியானதாக எனக்குப் படவில்லை யூதர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த நாடுகளை ஏன் தங்களின் சொந்த நாடாகக் கருதக் கூடாது? இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கும் ,பிரான்ஸ் எப்படி பிரஞ்சுக்காரர்களுக்கும் சொந்தமோ ...அப்படியே பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தம் அரேபியர்கள் மீது யூதத் திணிப்பு தவறானது.மனிதாபிமானத்துக்குப் புறம்பானது.” பாலஸ்தீனத்தை அபகரித்த யூதர்களின் செயலைக் கண்டித்து 1938 ம ஆண்டு ஹரிஜன் பத்திரிகையில் காந்தியடிகள் எழுதிய வரிகள் இவை. இது எழுதப் பட்டு 75 ஆண்டுகள் கடந்து விட்ட போதும் இன்று யூதர்களுக்கு இசுரேலும் அரேபியர்களுக்கு பாலஸ்தீனமும் என்று உருவாகியும் எல்லாவற்றுக்கும் மேலாக 130 நாடுகளும்,ஐ நா வும் அங்கீகரித்தும் விட்ட பின்னரும் இரு தரப்புகளிடையே இன்னும் யுத்தம் முடிந்தபாடில்லை. இன்று ஒரு பாலஸ்தீனப் பிரஜை அந்த மண்ணிலேயே பிறந்து ,அந்த மண்ணிலேயே மடிந்து போகும் நிலைதான் நிலவுகிறது.ஏனென்றால் அதைச் சுற்றியுள்ள எல்லைகள் யாவும் இஸ்ரேலிடமும் எகிப்திடமும் உள்ளன.

ஆகஸ்ட் 27, 2014

தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

புலுடாஅரசியலுக்குமாற்றான அறஅரசியலுக்கானவரலாற்றுஅவசியம்

(சுகு-ஸ்ரீதரன்)

டெல்லிக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் இந்திய நடுவண் அரசினால் தெளிவான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. 13 வதுதிருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, மற்றும் தமிழ் மக்களின் சமத்துவம்-நீதி-கண்ணியம்-சுயமரியாதை பேணப்படுவது, இதற்காக இலங்கையின் அரசியல் சகல அரசியல் தரப்பினரும் இணைந்து செயற்படவேண்டும் என்று. இந்த அல்லது இதையொத்த செய்தியை இந்தியா பல தடவை சொல்லியிருக்கிறது.ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருமுகமாக ஒருபோதும் திட்டவட்டமாக சொல்லியதில்லை. (மேலும்....)

சிங்கத் தமிழன் அன்றும்.....! இன்றும்.......!!

இலங்கை - இந்திய மீனவர் பிரச்சினை

இருநாட்டு அதிகாரிகள் மட்ட பேச்சு 29 இல் புதுடில்லியில் ஆரம்பம்

இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினையைத் தீர்க்கும் நோக்குடன் இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் 29 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி தமிழக மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை எந்தவித முடிவும் எட்டப்படாமல் முடிவடைந்தது. அதன் பின்னர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை நடத்துவதே சிறந்தது என்ற முடிவுக்கு இருதரப்பும் வந்திருந்தனர். கடந்த மே 12ம் திகதி கொழும்பில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழக விசைப்படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டைமடி மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாக கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். ஆனால் இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள 3 ஆண்டு கால அவகாசம் வேண்டும் எனவும் இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு மீன் பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்கிறோம் எனவும் தமிழக மீனவர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதை ஏற்க இலங்கை பிரதிநிதிகள் மறுத்து விட்டனர். மேலும் தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அழித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்

மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது. சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதோடு, அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சாலிய பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். விபத்தில் தனது மனைவி படுகாயமடைந்ததாக சிறுநீரகத்தை அன்பளித்த விக்னேஷ்வரியின் கணவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மனைவியின் மூளை இறந்துள்ளதால் அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியதால்  அவரின் சிறு நீரகத்தை இரு நோயாளர் களுக்கு வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார். இதன் மூலம், தனது மனைவிக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், மண்ணோடு மண் ணாகும் உடலை இவ்வாறு நற்காரியத்திற்கு பயன்படுத்த முடிந்தது குறித்து மகிழ்வதாக குறிப்பிட்டார். மனைவியின் சிறுநீரகங்கள் சிங்கள இனத்தவர் இருவருக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எமக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என பேதம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

சட்டவிரோத ஆஸி பயணம்; ஆறு இலங்கையர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்ட விரோதமாக செல்ல முயன்ற நான்கு பேர் உட்பட 6 இலங்கையரை இந்தி யப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஆந்திராவின் ஒன்கோல் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சண்முகலிங்கம் (வயது 47), பர்னபாஸ் (வயது 51), இவரின் மனைவியான அஞ்சலி (வயது 46), பாஸ்கர் (வயது 45) ஆகியோரே இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற வேளை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு படகு மூலம் அழைத்துச் சென்ற மீனவரையும், அத்துடன் இவர்களிடம் 5 இலட்சம் இந்திய ரூபாவை (இலங்கை மதிப்பில் சுமார் 12 இலட்சம் ரூபா) பெற்று சரக்கு கப்பல் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப முயன்ற தரகரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இவர்கள் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு சென்றுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட அனைவரும் நேற்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2000 இல் சுவிஸில் கொலை

இலங்கையர் 2014 இல் நியூசிலாந்தில் கைது!

13 வருடங்களுக்கு முன்னர் சுவிஸில் தனது முன்னாள் காதலியான 23 வயது நிரம்பிய கவிதா கந்தையா என்ற இளம் பெண்ணைக் கொலை செய்துவிட்டு, போலி ஆவணங்களுடனும் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, அங்கு பிரஜாவுரிமை பெற்று வசித்து வந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சிறு வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒருவரே ஒக்லண்ட் பொலிஸார் இவ்வாறு கைது செய்யப்பட்டு இன்று ஒக்லண்ட் மாவட்ட நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுவிஸில் வசித்து வந்தவ இவர் 2000 டிசம்பரில் தனது காதலியான 23 வயது இளம் பெண்ணைக் கொலை செய்து விட்டு 2001 பெப்ரவரியில் போலியான அடையாளப்படுத்தல் மற்றும் பயண ஆவணங்களுடன் நியூஸிலாந்துக்குள் நுழைந்து, 2004 ஆம் ஆண்டு அந்த நாட்டின் பிரஜாவுரிமையைப் பெற்றிருக்கின்றார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 26, 2014

ஞாயிறு கதைகள் - 22

விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்குமிடையில் மிக மூர்க்கமான போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. இலங்கைப் படையினர் ஒவ்வொரு ராணுவ நடவடிக்கைக்கும் ஒவ்வொரு பெயர் சூட்டிப் படை நடத்தினர். புலிகளும் பயங்கர எதிர்த்தாக்குதல் நடத்திக் கொண்டிருந்தனர். பிரதான தெருக்களில் கூட எந்நேரம் என்ன நடக்கும் என்பது தெரியாது. வெடிச் சத்தம் கேட்டால் பொது ஜனம் ஒடுங்கி விடும். இவ்வாறான ஒரு காலப் பகுதியில் முன்னரவு நேரத்தில் அக்கரைப் பற்றிலிருந்து பொத்துவிலுக்கு முச்சக்கர வண்டியொன்றில் சென்றேயாக வேண்டிய இக்கட்டில் இருந்தார்கள் அவர்கள். (மேலும்....)

உழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசியம் போலியானது

"பணக்கார மேட்டுக்குடி வர்க்கத்தினர், எம்முடன் இணங்கிப் போக முடியாத பகைவர்கள். அவர்களது செல்வமானது எமது வறுமையின் மேல் கட்டப் பட்டது. அவர்களது மகிழ்ச்சி எமது துயரங்களை அடித்தளமாகக் கொண்டது." - ஸ்டாலின்

ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுவதாக காட்டிக் கொள்ளும், "மாற்றுக்" கருத்தாளர்களும், போலித் தமிழ் இன உணர்வாளர்களும், அதே ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதை, பல தடவைகள் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஒரு வளர்ச்சி அடைந்த நாட்டில் வாழும் பிரஜைகள் அனுபவிக்கும் ஈழத் தமிழர்களும், மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களைப் போன்று அடிப்படை வசதி, வாய்ப்புகளை அனுபவிக்கும் உரிமை கொண்டவர்கள் இல்லையா? கல்வி, தொழில், வீடு, சுகாதார வசதிகள் ஒரு மனிதனின் அடிப்படை மனித உரிமைகள் இல்லையா? இந்த வசதிகள் அனைத்தையும் அனுபவிக்கும் நடுத்தர வர்க்க தமிழர்கள், அதனை உழைக்கும் வர்க்க தமிழர்கள் அடைய விடாமல் தடுப்பது என்ன நியாயம்? (மேலும்....)

பிணையில் விடுதலையாகி வெளியே வந்த சந்தேக நபரின் குடும்பத்திற்கு கத்திக்குத்து

வழக்கொன்றில் பிணை பெற்று நீதிமன்றத்தில் இருந்து வெளியில் வந்து கொண்டிருந்த சந்தேக நபர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் வைத்து கூரிய ஆயுதத்தினால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் சந்தேக நபரின் தந்தை கொல்லப்பட்டுள்ளதோடு இருவர் படுகாயமடைந்துள்ளனர். பிணையில் விடுதலையாகி அவர் வெளியில் வருகையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையே கூரிய ஆயுதத்தினால் சந்தேக நபரையும் அவரது தந்தையையும் சகோதரியையும் தாக்கியுள்ளார். மூவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயசீலன் (61 வயது) என்பவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டு ஹோட்டல் அறையொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்தார். இது குறித்து கொட்டாஞ்சேனை பொலிஸில் கடந்த 19 ஆம் திகதி முறையிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் 25 வயதான நபர் கைது செய்யப்பட்டு 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இதன் போது சந்தேக நபருக்கு பிணை வழங்கப்பட்டது. விடுதலையானவரை கொலை செய்த கொலையாளியான மாணவியின் தந்தை வாழைத்தோட்ட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் சமூக வலைத்தளத்தினூடாகவே இந்த இளைஞனும், யுவதியும் அறிமுகமாகியுள்ளதோடு யுவதியை கடத்திச் சென்று அவரின் நிர்வாணப் படங்களை படம் பிடித்து பேஸ்புக்கில் வெளியிடுவதாக சந்தேக நபர் தொலைபேசியில் அச்சுறுத்தியிருந்ததாகவும் பொலிஸில் முறையிடப்பட்டிருந்தது.

சிறுநீரகக் கல்...
இஞ்சி - நெல்லிக்காய் ஜூஸ்!

இரண்டு பெரிய நெல்லிக்காய்களை நறுக்கிக் கொள்ளவும். ஒரு சிறு துண்டு இஞ்சியின் தோல் சீவித் துருவவும். நெல்லிக்காய், இஞ்சியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பிறகு, இதில் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு சிட்டிகை உப்பு, கால் டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்து மேலும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். இதை வடிகட்டி, தேவைப்பட்டால் குளிரவைத்துப் பரிமாறவும்.இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வந்தால், சிறுநீரகக் கல் கரையும்.

ஆறுகள் இல்லாத நாட்டிலும் விவசாயம் செய்கிறார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) ஆறுகள் எதுவுமே கிடையாது. ஏரிகளும் கிடையாது.ஆனால் இங்கும் தற்போது விவசாயம் செய்யப்படுகிறது. கடல் நீரிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரைதான் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள் பயன்படுத்திய பிறகு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மறு சுழற்சி செய்யப்பட்டு சாலையோர மரங்களுக்கும்,பூங்காக்களுக்கும் பாய்ச்சப்படுகிறது. அந்த நீர் விவசாயம் செய்ய விரும்புகிறவர்களுக்கு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. விலைக்கு வாங்கப்பட்ட நீரைக்கொண்டு பாலைவனத்தில் பசுமை குடில்கள் அமைத்து காய்கறிகளை பயிரிடுகிறார்கள். (மேலும்....)

பிரேசிலில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தல்

பிரேசிலில் நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அடுத்த ஜனாதிபதியாக வருவார் என எதிர்பார்க்கப் படும் மரினா சில்வா (56 வயது), உலகம் முழுவதும் உள்ள ஏழை உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பல கஷ்டங்களுக்கு மத்தியில் படித்து, இன்று ஜனாதிபதியாகும் நிலையில் உள்ளார்.  அப்படி நடந்தால், பிரேசிலின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாவார். கடந்த 2010 தேர்தலில், பிரேசிலின் முதலாவது பெண் ஜனாதிதியாக வரும் வாய்ப்பை, இன்றைய ஜனாதிபதி டில்மா ரூசெப் தட்டிப் பறித்து விட்டிருந்தார். அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் தேர்தலில், மீண்டும் இரண்டு பெண்களும் எதிரெதிர் அணிகளில் போட்டி இடுகின்றனர். (மேலும்....)

ஆகஸ்ட் 25, 2014

உன் சகாக்களாலும், உன்னாலும் கொல்லப்பட்ட தாய்தந்தையiரின் பிள்ளைகளும் இதில் உண்டோ.....? பத்மநாதனே!

இயற்கை சீற்றங்களும், முன் மாதிரியானகியூபாவும்

கியூபா ஒரு தீவு நாடு. பரப்பளவு தமிழத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை ஒன்னே கால் கோடிக்கு சற்று அதிகம். மக்கள் வளம் தான் நாட்டின் செல்வம். மக்களை காப்பதில்  முன்னோடித் திட்டங்கள் செயல்பாடுகள். புயல்கள் தாக்கிய போது உலக வல்லரசான அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் பலி. ஆனால் கியூபாவில் பத்துக்கும் குறைவானவர்களே பலி. காரணம் இயற்கை சீற்றம் பற்றிய அறிவிப்பு  வெளியானவுடன் ஒவ்வோரு ஊரிலும்  இயற்கை பேரிடர்  மீட்பு குழுக்கள் தானே இயங்கத் தொடங்குகின்றன. பள்ளி. கல்லூரி பல  அரசு வாகனங்கள் நிகழ்விடத்திற்கு வந்து மக்களை அப்புற படுத்தி பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்கின்றன.உணவு சுகாதாரப்பணிகளை கவனிக்க பல குழுக்கள்.இதனால் மக்கள் பலி தடுக்கப்படுகிறது. (மேலும்....)

ஆகஸ்ட் 25, 2014

சிம்மாசனங்களில் குற்றவாளிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரமுகர்கள்!

வட மாகாண மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீராப் பிரச்சினைகள் ஆக்கி விட்டு, வட மாகாண சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்கள் சுய நல அரசியல் நடத்தி வருகின்றமை தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டல், விழிப்பூட்டல் கொடுக்கின்ற தெருவெளி நாடகம் யாழ். மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் தோறும் மக்கள் கலை இலக்கிய அரங்கத்தால் காண்பிக்கப்பட்டு வருகின்றது. சிம்மாசனங்களில் குற்றவாளிகள் என்கிற இந்நாடகத்தை துறை சார்ந்த நிபுணர் எஸ். பாலசிங்கம் எழுதி, இயக்கி உள்ளார். நடிகர்கள் அனைவரும் இளையோர்கள் ஆவர். தமிழ் மக்களின் இன்றைய அவலங்களுக்கு குறிப்பாக இளையோரின் அவஸ்தைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்காரர்களே பொறுப்பு என்கிற கருத்து நிலைப்பாடு இந்நாடகத்தின் உயிர் நாடியாக உள்ளது. வட மாகாண கல்வி அபிவிருத்திக் குழு தலைவர் சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல், பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம் ஆகியோருக்கு இந்நாடகம் விசேடமாக போட்டுக் காட்டப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களையே இங்கு காண்கின்றீர்கள்.

8 மணிநேரம் பறிபோகும் நிலையில் 6 மணிநேரம் சாத்தியப்படுமா....?

சுவீடனில் Gothenburg நகரில், 6 மணிநேர வேலைத் திட்டம் ஒன்று அமுலுக்கு வருகின்றது. இடதுசாரி கட்சி முன்மொழிந்த இந்தத் திட்டம், பல இழுபறிகளுக்குப் பின்னர் பரீட்சித்துப் பார்க்கப் படவுள்ளது. அதாவது, சட்டப் படி ஒரு ஊழியரின் வழமையான வேலை நேரம் ஒரு நாளைக்கு 6 மணிநேரம், வாரத்திற்கு 30 மணித்தியாலங்களாக இருக்கும். அதே நேரம், வழமையான முழுநேரச் சம்பளம் கிடைக்கும். முதல் தடவையாக, Gothenburg நகரில் உள்ள வயோதிபர் மேடம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர்கள் நாளொன்றுக்கு ஆறு மணிநேரம் வேலை செய்வார்கள். அதன் அருகில் உள்ள இன்னொரு வயோதிபர் மடத்தில் பணியில் உள்ள ஊழியர்கள், வழமை போன்று 8 மணித்தியாலங்கள் வேலை செய்வார்கள். இரண்டு இடங்களிலும் சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்காது. இதனால், இரண்டு வயோதிபர் மடங்களிலும் வேலை செய்யும் ஊழியர்களில், யார் நன்றாக வேலை செய்கிறார்கள் என்று ஒப்பிட்டுப் பார்க்க முடியும். இந்தப் பரிசோதனை முயற்சி வெற்றி அளித்தால், அடுத்த வருடத்தில் இருந்து Gothenburg நகரம் முழுவதும் அமுலுக்கு கொண்டு வரப் படும். ஆறு மணி நேர வேலைத் திட்டத்தினால், இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று சுவீடிஷ் இடதுசாரிக் கட்சி எதிர்பார்க்கின்றது. முதலாவதாக, சுகயீனம் காரணமாக விடுப்பு எடுப்பது குறையும். அதனால், ஊழியர் நலத்திற்கு அரசு ஒதுக்கும் செலவும் குறையும்.
இரண்டாவதாக, சட்டப் படி ஆறு மணிநேரம் தான் வேலை என்றால், எஞ்சிய நேரத்திற்கு இன்னொருவரை பணியில் அமர்த்த வேண்டி இருக்கும். இதனால் தொழில் வாய்ப்புகள் அதிகரித்து, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் மறையும்.

மனித உரிமை மீறல்கள், தற்போதுள்ள சவால்கள் என்ன? ஹரி ஆனந்தசங்கரி விளக்கம்.
புலிகள் தரப்பினரின்,  மனித உரிமை மீறல்களை மறந்து விடுவோம்!!!

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச விசாரணைக்கான விபரங்கள், தடயங்கள், தகவல்கள் மற்றும் சாட்சியங்கள் வழங்குவதே தற்போதுள்ள சவால் என கனேடிய லிபரல் கட்சியின் வேட்பாளராக தெரிவுவாகியுள்ள ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கனடாவின் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதி லிபரல் கட்சியின் வேட்பாளர் தெரிவுக்கான போட்டியில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஹரி ஆனந்தசங்கரி வெற்றிபெற்றுள்ளார். இந்தநிலையில், அவர் லங்காசிறி வானொலிக்கு விசேட செவ்வியொன்றை வழங்கியுள்ளார். கடந்த 5 வருடங்களாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி மேற்கொண்ட முனைப்பின் பயனாக இந்த சர்வதேச விசாரணைக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கனடாவில் உள்ள தமிழ் சட்டத்தரணிகள் உட்பட பலர் ஒன்று கூட்டி போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்கள்இ தடயங்கள் மற்றும் தகவல்களை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஓரிரு வாரங்களுக்குள் அவற்றை வெளிக்கொண்டு வர முடியும் என தாம் நம்புவதாகவும் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
(மேலும்....)

குர்து மக்களை காப்பாற்றிய PKK,

வட ஈராக்கில் சின்ஜார் மலைப் பகுதியில் வாழும் யேசிடி குர்து மக்களை காப்பாற்றிய PKK, தற்போது அந்த மக்கள் தம்மைத் தாமே பாதுகாக்கும் வகையில் ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்தப் படத்தில் 14 வயது மதிக்கத் தக்க யேசிடி சிறுமி, தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஆயுதம் ஏந்தியுள்ளார். ISIS இனச் சுத்திகரிப்பு செய்து வெளியேற்றிய யேசிடி குர்து மக்களை இனப்படுகொலையில் இருந்து காப்பாற்றப் போவதாக சுய தம்பட்டம் அடித்த அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், ஊடகங்களில் விளம்பரம் தேடிக் கொண்டன. அமெரிக்க வான் படை நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னரே, PKK போராளிகள் யேசிடி மக்களை, சிரியாவில் உள்ள தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு கொண்டு சென்று விட்டனர். (மேலும்....)

ஆகஸ்ட் 24, 2014

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு கை கொடுக்கின்றது பனை சபை!

வலிகாமம் கொத்தணிக்கு கீழ் தென்னை பனை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்களுடைய வாழ்வாதார மேம்பாட்டுக்கு உதவ பனை அபிவிருத்தி சபை முன்வந்து உள்ளது. பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்தின் வழிகாட்டலில் கூட்டுறவு முறையிலான பாற்பண்ணைத் திட்டம், கூட்டுறவு முறையிலான பனைக் கைத்தொழில் திட்டம் ஆகியவற்றின் ஊடாக இவர்களின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சங்கானை, மானிப்பாய், சண்டிலிப்பாய், தெல்லிப்பளை, பண்டத்தரிப்பு, கோண்டாவில், காரைநகர் ஆகிய 07 தென்னை பனை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களாலும் நடத்தப்படுகின்ற முன்பள்ளிகளின் ஆசிரியர்கள் இன்று காலை வலிகாமம் கொத்தணி காரியாலயத்துக்கு வரவழைக்கப்பட்டு இத்திட்டங்கள் குறித்து அறிவுறுத்தப்பட்டார்கள்.(மேலும்....)

மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களே!

“தற்போது இந்தியா டிஜிட்டல் இந்தியாவாக உருவெடுத்துள்ளது” என்று பெருமைப்படும் நீங்கள் அதற்கு உங்கள் கட்சியின் அர்ப்பணிப்பு என்ன என்று ஏன் கூறவில்லை? அப்படியானால் இந்த பெருமைக்கு யார் பொறுப்பு? உங்கள் கட்சி பொறுப்பில்லை என்றால் யாரோ ஒருவன் அதற்கு பொறுப்பாக இருப்பான்தானே. அவனைத்தான் கடந்த சில ஆண்டுகளாக நாட்டை சீரழித்து விட்டான் என்று அகராதியில் இல்லாத வார்த்தைகளை எல்லாம் கொண்டு அர்ச்சனை செய்தீர்கள்.  சீரழித்து, சீரழித்து என்றால் என்ன அர்த்தம்? சீரும் சிறப்புமாக அன்று இருந்தது, இன்று அழிந்து விட்டது என்று பொருள். 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கணனி துறை இருந்ததா? 60 ஆண்டிற்கு முன்பு அப்படி உங்கள் ஊரில் சீரும் சிறப்புமாக இருந்த எது இன்று இல்லாமல் போய்விட்டது? அன்று இல்லாத எதுவும் இன்று உங்கள் ஊரில் புதிதாக இல்லையா? பல ஊர்களில் நிறைய நிறைய உண்டு. பட்டியல் போட்டு மாளாது. இருப்பினும் சிலவற்றை சொல்கிறேன். (மேலும்....)

ஐ.நா.விசாரணையிலும் கூட்டமைப்பிற்குள் பிளவு

தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு குழுக்களாக செயற்படுவதாக முன்னரும் சில தகவல்கள் கசிந்திருந்தன. தற்போது அது உண்மைதான் என்பது போல ஒரு விடயம் நடைபெற்றிருக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் தற்போது ஐ.நா இலங்கையின் மீதான விசாரணைக்காக வரையறுத்திருக்கும் காலத்தை 1974 வரை நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இலங்கையில் இடம்பெற்றதை இனப்படுகொலை என்று அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடயம் தொடர்பில் கூட்டமைப்பின் தலைமையுடன் எந்தவிதமான கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை. (மேலும்....)

பாகிஸ்தான் தாக்கினால் பதிலடி கொடுங்கள்: பாதுகாப்பு படைக்கு உத்தரவு

பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்கள் என்று எல்லைப் பாதுகாப்பு படைக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியா-பாகிஸ்தானிடையே எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. அதை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நமது ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் கிராமங்களை நோக்கியும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஜம்முவில் கிராமங்கள் மீது பாகிஸ்தான் துப்பாக்கி சூடு போன்ற பிரச்னைகள் பற்றி ராஜ்நாத் சிங்கிடம் பாதுகாப்புப் படை இயக்குநர் டி.கே.பாட்நாயக் விளக்கி இருக்கிறார். மேலும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க, இந்திய வீரர்கள் உயர் எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்துமாறு எல்லை பாதுகாப்புப் படை இயக்குநர் டி.கே.பாட்நாயக்கிற்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்" என்று அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

இரு தரப்பும் நம்பிக்கை, பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேசுவதன் மூலமே பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு தூதுக்குழுவிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பு

எந்தத் தீர்வானாலும் இலங்கை அரசுடன் பேசியே எட்டப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தலைவர்கள் உறுதி. இந்தியா புதுடில்லி சென்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சனிக்கிழமை முற்பகல் சந்தித்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பின் போது பிரதமர் மோடி தமிழ்க் கூட்டமைப்பினரிடம் சில விடயங்களை உறுதிபடத் தெரிவித்திருப்பதாக இந்தியத் துறை நம்பிக்கை வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்துள்ளதாக தமிழ் இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக இலங்கை அரசாங்கத் துடன் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவ்வாறு ஒத்துழைத்தால் மட்டுமே மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான நீடித்த சமாதானமான தீர்வைக் காண முடியும் என பிரதமர் மோடி அழுத்தமாகக் கூறியதாகவும் அந்த இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை முழுமையாகச் செவிமடுத்த போதிலும், இறுதியில் 13ஆவது திருத்தச் சட்டம் என்றாலும் சரி, அதனை விடவும் கூடிய அதிகாரமானாலும் சரி இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பேச்சு நடத்தியே ஒரு தீர்வினை எட்ட வேண்டும் எனத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழருக்கு பிரதியமைச்சர் பதவி

இந்திய ஊடகங்கள் வரவேற்று செய்தி

இரண்டு தமிழர்களுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு இந்திய ஊடகங்கள் பல வரவேற்பை தெரிவித்திருக்கின்றன. நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகணேசன் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக பதவி பிரமாணம் செய்து கொண்டனர். இந்த தகவல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஊடகங்களில் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டிருந்தன. நாட்டில் காணப்படும் தற்போதைய சூழ்நிலையில் இரண்டு சிறுபான்மை உறுப்பினர்களுக்கு பிரதி அமைச்சர் பதவி வழங்கியுள்ளமைக்கு அந்த ஊடகங்கள் வரவேற்பளித்துள்ளன.

குரு செய்தால் குற்றமில்லையோ இணையங்கள் மீது குற்றச்சாட்டு

“நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆலய சுற்றுவட்ட வீதியில் வாகனங்கள் பிரவேசிக்கக் கூடாது என்பது பொதுவான விதிமுறை. சிலர் மட்டுமே அத்துமீறி நடப்பது வழமையான விடயம். ஆனால் ஒரு ஆன்மீகவாதி, ஒரு முன்னாள் நீதியரசர். இந்நாள் முதலமைச்சர் அவர்களே இப்படிச் செய்வார் என எவரும் எதிர்பார்க்கவில்லையாம். வாகனத்தில் இருந்தபடியே வீதியுலா வந்து மக்களை நோக்கிக் கையசைத்து மகிழ்ந்தாராம். அமைச்சர் மேர்வின் சில்வா ஆலய வீதியில் பாதணியுடன் சென்றமைக்கு பத்துப் பக்கத்தில் செய்திகளைப் பிரசுரித்த தமிழ் இணையங்கள் இவரது விடயத்தில் மட்டும் மெளனம் சாதிப்பது ஏன்? இவ்வாறு பலரும் கேள்வி எழுப்பியுள்ளனராம்.

ஆகஸ்ட் 23, 2014

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தப்படும்  - மோடி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி இலங்கையிடம் வலியுறுத்தப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். மேலும், சம உரிமை, நீதி மற்றும் சுய நிர்ணய உரிமை கிடைக்க தனது அரசு பாடுபடும் என்று மோடி தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் ஆக்கப்பூர்வமாக இணைந்து ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு கொள்ளவேண்டும் என்று தான் விரும்பவதாகவும் மோடி கூறினார். மேலும் போரால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் மோடி  உறுதியளித்தார். இந்தியா சென்றுள்ள இரா.சம்மந்தன் தலைமையிலான தமிழ்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்திய பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசிய போதே அவர் இதனை கூறினார்.

ஜப்பான் நாட்டு அனுபவத்துடன் உயர வளரும் பனைச் சபை!

பனை அபிவிருத்தி சபையின் உற்பத்திப் பொருட்களை மிகவும் வெற்றிகரமாக சந்தைப்படுத்துகின்ற நுட்பங்களை கற்பித்துக் கொடுக்கின்றமைக்கு ஜப்பான் நாட்டில் இருந்து துறை சார்ந்த நிபுணர் ஒருவர் வருகை தந்து உள்ளார். ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிறுவனத்தின்  பெண் அதிகாரிகளில் ஒருவரான யோகோ கவாஸ் என்பவரே இரு வருடங்களுக்கு நாட்டில் தங்கி இருந்து சந்தைப்படுத்தல் உத்திகளின் நுட்பங்களை கற்பித்துக் கொடுக்க உள்ளார். இவர் சந்தைப்படுத்தல் துறையில் 14 வருட கால அனுபவம் உடையவர். அத்துடன் சரளமாக தமிழ் பேசக் கூடியவர். பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினத்துக்கும் ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு முகவர் நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பலனாகவே இம்முகவர் நிறுவனத்தின் தொண்டர் சேவைத் திட்டத்தின் கீழ் இவரின் சேவை கிடைக்கப் பெற்று உள்ளது. இவரை பனை அபிவிருத்தி சபை ஊழியர்களுக்கு தலைவர் பசுபதி சீவரத்தினம் நேற்று சம்பிரதாயபூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்து உரையாற்றினார். தலைவரின் உரையின் முக்கிய பகுதி வருமாறு:- “ யுத்தத்தால் அழிவுற்ற ஜப்பான் தேசத்தை ஜப்பானிய மக்கள் கடின உழைப்பாலும், கடமை உணர்வாலும், தேசப் பற்றாலும் கட்டி வளர்த்தனர். ஜப்பான் அரசாங்கம் அழித்தவர்களை பழி வாங்குகின்ற எண்ணத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக இணக்க அரசியல் வழிமுறைகள் மூலமே ஜப்பானை உலகின் தலை சிறந்த நாடுகளில் ஒன்றாக கட்டி எழுப்பியது. எனவே ஜப்பானியர்களிடம் இருந்து சுறுசுறுப்பு, கடமை உணர்வு, தேசப் பற்று ஆகியவற்றை கற்று நாமும் எமது பனை அபிவிருத்தி சபையை வளர்ச்சி பாதைக்கு இட்டு செல்வோம். ”

ஆகஸ்ட் 23, 2014

தண்ணீர்!.....தண்ணீர்......!!

ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47..எங்கே மறைந்து போனது ? மறைந்து போகவில்லை மறைக்கப்பட்டுவிட்டது .. விடக்கூடாது மீண்டும் எடுக்க வேண்டும் நம் வருங்கால சந்ததிகளுக்காக. இன்றே அதற்கான முனைப்பில் ஈடுபடுவோம் .முடிந்தவரை இதை பகிர்வு செய்யுங்கள் அதுவே நாம் செய்யும் முதல் முயற்சி.

இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்களால் இலங்கைக்கு ஆபத்து - கோட்டாபய

சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் இலங்கையின் முஸ்லிம் குழுக்கள் சில, தொடர்புகளைப் பேணி வருகின்றன. இது தொடர்பில் எமக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் கண்காணித்து வருகின்றோம் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சிக்கல்களுக்கான நடவடிக்கை மையத்துக்கு, கோட்டாபய ராஜபக்ஷவஜனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கை எதிர்நோக்கியுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில் இந்த மையம், கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார். (மேலும்....)

சுற்றுலா அல்லது கல்வி வீஸாவில் வேலைவாய்ப்புக்காக செல்ல வேண்டாம்

சுற்றுலா அல்லது கல்வி வீஸாவில் டுபாய், மலேசியா போன்ற நாடுகளுக்கு தொழிலுக்காக ஆட்களை அனுப்பும் மோசடி வியாபாரம் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. சுற்றுலா மற்றும் கல்வி கற்பதற்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து அவர்களை அந்த நாடுகளில் தவிக்க விட்டுவிடுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறியது. இத்தகைய குழுக்கள் குறித்து பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பணியக தலைவர் அமல் சேனாதிலங்கார தெரிவித்தார். கடந்த காலங்களில் இவ்வாறான பல சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பணியக விசேட விசாரணை பிரிவு தகவல் திரட்டியிருந்தது. இவ்வாறு சட்டவிரோதமாக சுற்றுலா மற்றும் கல்வி வீஸாவில் சென்று தொழில் செய்து நட்டாற்றில் விடப்படுபவர்கள் தொடர்பில் பணியகம் எதுவித பொறுப்பும் ஏற்காது எனவும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறான ஏமாற்று நபர்களிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் எனவும் அத்தகையோர் குறித்து பணியகத்துக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

சீனாவின் அச்சுறுத்தலுக்கு பதிலடியாக வடகிழக்கு எல்லையில் இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணைகள்

சீன- இந்திய எல்லை வட கிழக்கு பகுதியில் சீன nஜட் விமானங்கள், ஹெலிகொப்டர்கள் ஆளில்லா விமானங்களுக்கு எதிராக இந்தியா 6 ஆகாஷ் ஏவு கணைகளை அங்கு நிறுவத் தொடங்கி உள்ளது. புனேவில் உள்ள குவாலியர் சுகோய் மிரஜ் -2000 தளத்தில் 2 ஆகாஷ் ஏவுகணைகளை இந்திய விமானப்படை நிறுவி உள்ளது. வடக்கு எல்லை களில் அச்சுறுத்தல்களுக்கு எதிராக பாதுகாப்புக்கு 6 ஏவுகணைகளுக்கு மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கி உள்ளது என் தகவல்கள் தெரி விக்கின்றன.  நீண்ட தாம தமாக இருந்தாலும் இறுதியில் ஆகாஷ் ஏவுக ணை நிறுவுவதில் வெற்றிகிடைத்து உள்ளது. இதை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்,பாரத் டைனமிக்ஸ் பாதுகாப்பு உற் பத்தி பொதுத்துறை நிறுவனம் ஆகியவை நிறுவி உள்ளன. வடகிழக்கில் ஆகாஷ் நிறுவப்பட்டதன் காரண மாக எல்லை கட்டுப்பாடு கோட்டில் இருந்து 4057 கிலோமீட்டர் சீனாவின் அச்சுறுத் தலுக்கு எதிராக அர்த்தமுள்ள மற்றும் நம்பக மான தடுப்பு அமைந்து உள்ளது.

பிரதமர் மோடியுடன் இலங்கை தமிழ் எம்.பி.க்கள் சந்திப்பு!

இந்தியா வந்துள்ள இலங்கை தமிழ் எம்.பி.க்கள் குழு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது. தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் எம்.பி.க்கள் பிரதமரை சந்தித்தனர். இலங்கையில் 13வது அரசியல் சட்டத் திருத்தம் அமல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இலங்கை தமிழ் எம்.பி.க்கள் 6 பேர் நேற்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினர்.

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு எச்.ஐ.வி: அதிர்ச்சியூட்டும் தகவல்கள்…!!

அண்மையில் மருத்துவ பரிசோதனை ஒன்றிற்காக தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக கலைப்பீட விரிவுரையாளர் ஒருவரினது இரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டபோது சிபிலிஸ் என்ற பாலியல் நோய் உள்ளமை கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து எச்.ஐ.வி தொற்றுக்குரிய விசேட பரிசோதனை கொழும்பில் நடாத்தபட்டது. மேற்படி பரிசோதனையின் மூலம் விரிவுரையாளர் எயிட்ஸ் நோய் தொற்றுக்கு உள்ளகியுள்ளமை தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவருடன் நாம் தகவல் பெறும் நோக்கில் கலந்துரையாடியதில் இருந்து பல அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை பெற்று கொண்டோம். (மேலும்....)

ஆகஸ்ட் 22, 2014

மேட்டுக்குடிகள் வெளிநாடு வந்தும் தங்கள் கல்லாவை நிரப்பும் முயற்சியில் வெற்றி பெறுகின்றன.

நான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது. (மேலும்....)

சபைக்கு சைக்கிளில் சென்றார் அனந்தி

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சபை அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக சைக்கிளில் பயணித்தார்.  வடமாகாண சபையின் மாதாந்தக் கூட்டத்தொடர் (14 ஆவது) கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை (21)  இடம்பெறுகின்றது. இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காகவே அனந்தி, சுழிபுரத்திலுள்ள தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வடமாகாண சபைக்கு பயணித்தார்.  தமது வேலைத்திட்டங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளுக்கான நிதி போதாது என்றும் இதனை சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு உணர்த்தும் வகையிலேயே சைக்கிளில் பயணித்ததாக அனந்தி கூறினார். புலிகள் காலத்தில் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கிடையில் வாகனங்களில் பயணித்த நினைவுகள் வந்து போகுமோ....?

காஸாவில் 469 குழந்தைகள் பலி; 370,000 சிறார்களுக்கு 'உளவியல் உதவி' தேவை

இஸ்ரேலுக்கும் போராளிகளுக்கும் இடையில் காஸாவில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக 469 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 3,000 அதிகமான சிறுவர்கள் காயமடைந்துள்ளதாக ஐ.நா. குழந்தைகள் நிதியத்தின் (யுனிசெப்) மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், 370,000 பலஸ்தினிய சிறார்களுக்கு உடனடியான உளவியல் ரீதியான முதலுதவி தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். காஸாவில் புதன்கிழமை (20) இடம்பெற்ற வன்முறைகளில் மாத்திரம் 9 சிறார்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா பிராந்தியத்துக்கான யுனிசெப் நிறுவனத்தின் தலைவர் பெர்னிலா ஐரோன்சைட் கூறியுள்ளார். நியூயோர் நகரில் நேற்று வியாழக்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனை கூறியுள்ளார். 'தனிப்பட்ட முறையில் தங்கள் வீட்டில் இழப்பு, மரணம், காயம், சேதம், இடமாற்ற அனுபவம் என்பவையின்றி காஸாவில் ஒரு குடும்பம் கூட இல்லை' என ஐரோன்சைட் மேலும் குறிப்பிட்டார்.

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி  நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம். உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய பெற்றோர்களிடமோ கேட்டால் வண்டிவண்டியாக சொல்வார்கள். ஆனால் கூச்சமே இல்லாமல் ஒரு கல்விக் கொள்ளையனை போற்றி புகழ்கிறார் சீமான்.
(மேலும்....)

சிவாஜிலிங்கத்தின் பிரேரணைகள் நிராகரிப்பு

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தால் வடமாகாண சபையில் முன்வைக்கப்படவிருந்த பிரேரணைகள், வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தினால் நிராகரிக்கப்பட்டன. இதன்போது, சிவாஜிலிங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழுவை இலங்கைக்குள் வர அனுமதிக்க வேண்டும், மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக் காலத்தை நீடித்தல் மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் பிற தவறுகள் தொடர்பில் மனித உரிமைப் பேரவை விசாரணை செய்து சர்வதேச பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் போன்ற பிரேரணைகள் கொண்டு வரப்படவிருந்தன. இந்தப் பிரேரணைகள் நடைமுறைக்குச் சாத்தியமற்ற பிரேரணைகள் என்பதால் இவற்றை ஏற்க முடியாது எனவும் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை ஏற்க முடியாது எனவும் கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பிரேரணைகள் எவ்விதத்தில் அதற்கு உதவியாகவிருக்கும் என்பது தெரியவில்லையென முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார். இதனை, அவைத்தலைவர் ஏற்றுக்கொண்டு மூன்று பிரேரணைகளையும் நிராகரித்தார். கின்னஸ் புத்தகத்தில் சிவாஜிங்கத்தின் நிராகரிகப்படும் பிரேரணைகள் இடம் பெறும் போல இருக்குது போற போக்கைப் பார்த்தால்

புலிப்பார்வையை ஏன் எதிர்கிறோம் 65 நாயன்மார்களின் கூட்டறிக்கை

செய்தி: 'கத்தி', 'புலிப்பார்வை' ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என 65 அமைப்புகள் இன்று சென்னையில் அறிவித்தது.

பாலச்சநதிரன் என்ற சிறுவன் கொல்லப்பட்டதும், கொல்லப்பட்ட விதமும் வேதனைக்குரியது, கண்டனத்துக்குரியது. தண்டிக்கபடவேண்டியதும் தான் அதில் எந்த மாற்று கருத்தும் இருக்கமுடியாது. புலியின் பார்வை எப்படி? என்று இன்னும் நானறியேன். ஆனால் பாலச்சந்திரன் என்ற பாலகன் குழந்தை போராளியாக சித்தரிக்கபட்டிருக்கின்றான் என்பது இந்த 65 நாயன்மார்களின் கருத்தாக நானறிகிறேன். சரி புலிப்பார்வை இருக்கட்டும் புலிகள் பற்றிய இந்த நாயன்மார்களின் பார்வை என்ன? என்பதை எனது கீழ்வரும் கேள்விகளுக்கு விடைகளாக கண் திறக்கட்டும். பாலச்சந்திரன் என்ற பாலகன் குழந்தை போராளியாக சித்தரிக்கபட்டது தானே உங்கள் குற்றச்சாட்டு அல்லது புலிகள் எந்தக்காலத்திலும் குழந்தைகளை போராளிகளாக வைத்திருக்கவில்லை என்பது உங்கள் பார்வையென்றால் இது சரிசெய்யப்படமுடியாத பார்வை கோளாறு என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். அப்படி இல்லையென்றால் விடைதாருங்கள் உங்கள் அபிமான புலித்தலைவரை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்? தமிழ் ஈழத்துக்காக தன்னுடைய இளம் பாலகனையும் ஆயுதம் கொடு;து போராட வைத்த தியாகத்தலைவனாகவா? அல்லது அப்பாவி ஏழைச்சிறார்களை பலி கொடுத்துவிட்டு தன் மகனை சுகபோகங்களுடன் வாழவைத்த சுயநலவாதியாகவா?

(மோகன்)

ஆகஸ்ட் 21, 2014

புலிகளுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கிய இந்தியாவின் தீர்மானம் வரலாற்றுத் தவற

இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார். இந்தியாவை பொறுத்த மட்டில் தேசிய மட்டத்திலான நலனை கருத்திற் கொண்டே தனது வெளிநாட்டு மற்றும் தேசிய கொள்கையை வகுக்குமே தவிர பிராந்திய அல்லது ஒரு தரப்பினரின் தேவையை கருத்திற் கொண்டல்ல என்று தெரிவித்த அவர், இலங்கையும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்று மேலும் தெரிவித்தார். (மேலும்....)

கம்பெனிகளுக்கு சாமரம்... விவசாயிகளுக்கு சாவுமணி!

(தூரன் நம்பி)

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு இடையே நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி அரசு மத்தியில் பதவி ஏற்றபோது... 'பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல, விவசாயிகள் வாழ்க்கையிலும் புதிய ஏற்றமும், மாற்றமும் ஏற்படும்' என்கிற நம்பிக்கை ஒளிகள், நன்றாகவே பரவின. ஆனால், தற்போது அரசாங்கத்திடம் இருந்து வந்துகொண்டிருக்கும் அல்லது கசியவிடப்படும் அறிவிப்புகள் எல்லாம், அந்த நம்பிக்கைகளைத் தகர்த்துக் கொண்டிருக்கின்றன. தேவலோகத்தில் ஒரு நாள் இந்திர சபை கூடியிருந்தது. வழக்கம்போல, கலகமூட்டும் வேலையைச் செய்துகொண்டிருந்தார் நாரதர். கோபம்கொண்ட இந்திரன், 'நாரதரே... நீ இப்படியே அடங்காமல் திரிந்தால், உன்னை இந்தியாவில் விவசாயியாகப் பிறக்கும்படி சபித்துவிடுவேன்' என்று மிரட்ட... 'நமோ நாராயணா' என்றபடியே, வாலைச் சுருட்டிக் கொண்டார் நாரதர். இப்படி ஒரு கதை விவசாயிகளிடம் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தளவுக்கு இந்திய விவசாயிகள் சபிக்கப்பட்டவர்களாகவே வாழ்க்கையை நகர்த்திக் கொண்டுள்ளனர். (மேலும்....)

நவாஸ் ஷெரீப் அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது: பேச்சுவார்த்தைக்கு இம்ரான் கட்சி மறுப்பு!

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலகக் கோரி, இம்ரான் கான் கட்சியினர் நடத்தி வரும் நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு நவாஸ் விடுத்த அழைப்பை ஏற்க இம்ரான் கட்சி மறுத்துள்ளது. பிரதமர் நாவஸ் ஷெரீப் கடந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகளை செய்து ஆட்சியைப் பிடித்துள்ளார். எனவே, நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவரான இம்ரான்கான் மற்றும் பழமைவாத தலைவர் தாஹிர் உல் காத்ரி ஆகியோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். (மேலும்....)

ஆகஸ்ட் 20, 2014

செந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்

வெற்றுக்கூச்சல்கள், வெறித்தனமான பேச்சுக்கள், நஞ்சைக் கக்கும் இனவெறி இவைகளிற்கு எவ்வளவு முகமூடிகள் போட்டாலும் அவை கழன்று விழ கனநாட்கள் எடுப்பதில்லை. செந்தமிழன், பெரியாரின் பேரன் என்று சிவப்பும், கறுப்பும் கலந்த கலவை நான் என்று எவ்வளவு அரிதாரம் பூசினாலும் சாயம் வெளுக்க வெகுநாட்கள் தேவைப்படவில்லை. பச்சையான இனவாதம் பேசி தமிழனை, தமிழன் ஆண்டால் எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பசப்பு வார்த்தைகள் பேசி திரிந்த செந்தமிழன் தமிழ்மண்ணை, தமிழ்மனிதர்களை கொள்ளையடிக்கும் கொள்ளைத்தமிழர்களின் காலில் விழுந்து எழுந்து அந்த தமிழ்தலைமை இது தான் என்று அடையாளம் காட்டுகிறார். (மேலும்....)

பத்தாம் நாள் காரியம் பற்றி ஒரு பார்வை......?

“ஏன்னா, பிரிவின் துயரத்திலிருந்தும் இழப்பின் சோகத்திலிருந்தும் விடுபடுறதுக்கு அத்தனை நாள் ஆகும். இறுதி நிகழ்ச்சி முடிஞ்சதும் அவங்கவுங்க வீடுகளுக்கும் ஊர்களுக்கும் திருமபிப்போனவங்க, பத்துநாள். பதினைஞ்சு நாள்னு அவகாசம் கொடுத்தாத்தான் வேற சிக்கல்கள் இல்லாம வர முடியும்... இதையெல்லாம் யோசிச்ச முன்னோர்கள் நிச்சயமா பெரிய ஆளுங்கதான். ஆனா, இந்த உண்மைகளைச் சொல்லாம, ஆத்மா, சாந்தி அது இதுன்னு சொல்லி பயப்பட வைச்சவுங்க நிச்சயமா பெரிய ஆளுங்க இல்லை...” (மேலும்....)

இதுதான் இந்தியா......!

இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு திருப்புமுனை'

'மோடி தலைமையிலான இந்தியா: இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு திருப்புமுனை' எனும் தலைப்பில், பேராசிரியர் ரொஹான் குணரட்ன, இலங்கை நாடாளுமன்றில் விசேட விரிவுரையொன்றை நடத்தவுள்ளார். இலங்கை நாடாளுமன்ற ஊடகவியலாளர் சங்கம், அரசாங்க தகவல் திணைக்களத்துடன் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளது. இந்த விரிவுரை, எதிர்வரும் புதன்கிழமை 20 ஆம் திகதி,  முற்பகல் 10:30 மணியிலிருந்து 11:30 மணி வரை நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியின் குழு அறை 2இல் இடம்பெறவுள்ளது. (மேலும்....)

ஒபாமாவின் அமைதி கோரிக்கையையும் மீறி பெர்கியுசனில் தொடர்ந்து பதற்றம்

அமெரிக்காவின் மிசுரி மாநிலத்தின் பெர்கியுசன் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் மீண்டும் ஒருமுறை கண் ணீர்ப்புகைப்பிரயோகம் மேற்கொண் டிருப்பதோடு பலரும் கைதுசெய்யப் பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி கறுப்பின இளைஞன் ஒருவனை வெள்ளையின பொலிஸார் சுட்டுக்கொன்றதை அடுத்து நீடிக்கும் பதற்றநிலையில், மக்கள் அமைதி காக்கும்படி ஜனாதிபதி பராக் ஒபாமா கோரிக்கை விடுத்த நிலையிலேயே கடந்த திங்கள் இரவு மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தலைமை அரச வழக்கறிஞர் இன்று புதன்கிழமை பெர்கியுசன் பகுதிக்கு செல்லவுள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவியாக ஏற்கனவே அங்கு தேசிய பாதுகாப்பு படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். கறுப்பின இளைஞன் கொல்லப்பட்ட சம்பவமே கறுப்பினர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பெர்கியுசனில் நிறவாத பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த கறுப்பின இளைஞன் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது பொலிஸாரால் நிறுத்தப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்டுள்ளான். இளைஞனின் தலை உட்பட ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  இந்நிலையில் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்களை பாதுகாக்கும்படி ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், அமெரிக்க நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 19, 2014

உலகிலிருந்து தூர விலகிச் செல்லும் கொள்கை இலங்கைக்கு இல்லை

உலகிலிருந்து அன்னியப்படுவது இலங்கை அரசின் கொள்கையல்ல. மாறாக நல்லிணக்க செயற்பாடுகளுக்காக உலகுடன் சாதகமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத்தயார் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். எவ்வாறாயினும்.தலையீடுகளையோ, அழுத்தங்களையோ நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்த அவர். உலகிலிருந்து தூர விலகிச் செல்வதே இலங்கை அரசின் கொள்கை என சில தரப்பினர் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தி வருகின்றனர் என்றும் சுட்டிக்காட்டினார். சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்கள் எமக்குள்ள சாவல்களில் ஒன்றாகும். பாதகமான அழுத்தங்கள் நாட்டில் தற்பொழுது முன்னெடுத்து செல்லப்படும் செயற்பாடுகளுக்கு ஒரு உதவியாக அமையாது. மாறாக அது பாதகமானதாகவே அமையும் என்றார். 13 வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று சிலர் கூறியவருகின்றனர். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டிலுள்ள சகல மாகாணங்களுக்கும் பொலிஸ் அதிகாரத்தை தவிர சகல அதிகாரங்களும் வழங்கப்பட் டுள்ளன. ஆனால், வடக்கு, கிழக்கிற்கு மாத்திரம் இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது என்று சிலர் தவறான கருத்துக்களை கூறிவருகின்றனர். ஏனெனில், மாகாண சபை ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டிய காணி உட்பட சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்காவில் பதற்றத்தை தணிக்க தேசிய பாதுகாப்பு படை விரைவு

கறுப்பின இளைஞன் ஒருவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து பதற்றம் அதிகரித்திருக்கும் அமெரிக்காவின் மிசுரி மாநிலத்திற்கு தேசிய பாதுகாப்பு படையினர் அனுப்பப்பட்டுள்ளனர். மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுவரும் பெர்கியுசன் நகர மக்களை பாதுகாக்கவும் அமைதியை நிலைநாட்டவும் தேசிய பாதுகாப்பு படையி னரை அனுப்பும்படி மிசுரி மாநில ஆளுநர் Nஜய் நிக்ஸன் கோரிக்கை விடுத்திருந்தார். பெர்கியுசன் நகரில் கடந்த இரு தினங்களாக ஊரடங்குச் சட்டத்தையும் மீறி பொலிஸார் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்றன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டுகள் மற்றும் போத் தல்களைக் கொண்டு பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்கள் நடத் தினர். ஆயுதமற்று இருந்த கறுப்பின இளைஞனான மைக்கல் பிரவுன் என்பவரை வெள்ளையின பொலிஸ் அதிகாரி ஒருவர் கடந்த ஓகஸ்ட் 9 ஆம் திகதி சுட்டுக்கொன்றதை அடுத்தே அமெரிக்காவில் நிறவாத பதற் றம் ஏற்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இளைஞனின் ஆரம்பக் கட்ட பிரேத பரிசோ தனை முடிவுகளின் படி குறித்த இளைஞன் ஆறு முறை துப் பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருப்பது தெரியவந்துள்ளது.

Dear friends,
 
With great regret I would like to inform you that Mr. T. Nagarajah (Nasa) passed away after a long battle with cancer in Mississauga, Canada yesterday (August 15, 2014) around 3:00PM.  
 
To inaugurate the Swami Vipulananda Arts Society and the commemorative event in Canada, Mr. T. Nagarajah (Nasa) was one of seven individuals who attended the inauguration meeting.
 
In 2002, when we tried to organize the Swami Vipulananda Arts Society, Mr. Nagarajah encouraged us and became one of the founding members. Without his encouragement, support, participation, help and dedicated photography the 2003 event would not have been a success.
 
For the last thirty years in Canada, Mr. Nagarajah (Nasa) has been supporting all of the community activities hosted by members of the eastern province and has given his unconditional support (whether it is through volunteering or financially) to all of societies hosted by eastern province peoples in Canada.
 
The Swami Vipulananda Arts Society of Canada is deeply saddened by the news of Mr. Nagarajah’s passing and gives their deepest condolences to Mr. Nagarajah’s family, relatives and friends and we pray that our Nasa’s soul rests in peace.

Thank you all.
On behalf of the Swami Vipulananda Arts Society - Canada
Ajantha Gnanamuttu
President

(The Service of: NAGARAJAH THAMBINATHAPILLAI
Date(s): SUNDAY, AUGUST 17, 2014 & WEDNESDAY AUGUST 20, 2014
Time: SUNDAY 6:00 pm - 9:00 pm & WEDNESDAY 9 am – 12 noon
Type of Service: SUNDAY VISITATION & WEDNESDAY: SERVICE, CREMATION & WITNESS
Location: ST. JOHN’S DIXIE CEMETERY – MAGNOLIA ROOM
Funeral Services Provided By: CHAPEL RIDGE FUNERA)

ஈராக்கின் மிகப்பெரிய அணையை கைப்பற்ற தொடர்ந்தும் மோதல்

ஈராக்கின் மிகப்பெரிய அணையான மொசூல் அணையை கைப்பற்ற அதனை சூழவுள்ள பகுதியில் குர்திஷ் துருப்புகள் மற்றும் ஈராக் படையினர் இணைந்து இஸ்லாமிய தேசம் போராளிகளுக்கு எதிராக தொடர்ந்து தாக்கு தலை நடத்தி வருகின்றனர். அமெரிக்க வான் தாக்குதலின் உதவியுடன் மொசூல் அணையை திங்கட்கிழமை (நேற்று) ஈராக் இராணுவம் கைப்பற்றியதாக இராணுவ பேச்சாளர் தொலைக்காட்சி ஊடே தெரிவித ;தார். ஆனால் குறித்த பகுதியில் தொடர்ந்தும் மோதல் இடம்பெறுவதாகவும் இந்த அறிவிப்பு முன் கூட்டிய அறிவிப்பொன்று என குர்திஷ் தரப்பு குறிப்பிட்டுள்ளது. மொசூல் அணையின் பிரதான வாயில் தொடர்ந்தும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப் பாட்டிலேயே இருப்பதாக அங்கிருக்கும் செய்தி யாளர்கள் உறுதிசெய்துள்ளனர். இந்த மோத லில் குர்திஷ் தரப்பில் பாரிய இழப்பு ஏற்பட் டிருப்பதாக கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள் ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இந்த அணையை இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஓகஸ்ட் 7 ஆம் திகதி கைப்பற்றினர்.  மொசூல் நகரில் இருந்து 50 கிலோமீற்றரில் டைக்ரிஸ் நதிக்கு குறுக்காக கட்டப்பட்டிருக் கும் இந்த அணை மூலமே வடக்கு ஈராக்கிற் கான மின்சாரம் மற்றும் நீர் வழங்கப்படுகிறது.

மீனவர்களின் படகுகளும் மீட்கப்படும்

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் படகுகளும் மீட்கப்படும் என்று மத்திய கனரகத் தொழில்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார். தமிழக மீனவர்கள் 94 பேர் இலங்கைச் சிறையிலிருந்து விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ளனர். அந்த மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விரைவில் அவை மீட்கப்படும். இலங்கைக் கடற்படை யினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதில் இருந்து தடுக்கவும், மீன்பிடி பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறோம். மீனவர் பிரச்சினையில் நிரந்தரத் தீர்வை நோக்கிப் பயணிக்கிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதில் வெற்றியும் அடைவோம். இந்த வெற்றியில் முதல்வர் ஜெயலலிதா உட்பட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பங்கு உண்டு.

இலங்கையின் பிரதான பிரச்சினையை இனங்காணத் தவறிய ஜே.வி.பி. ஒரு மார்க்சியக் கட்சியாக மிளிர முடியாது..!

தேசிய மட்டத்தில் மூன்றாவது பலம் பொருந்திய கட்சியாக ஜே.வி.பி. கருதப்பட்டது. இன்று அது பிளவின் விளிம்பில் வந்து நிற்கிறது. கடந்த நான்கு வருடங்களுக்குள் இடம்பெறும் இரண்டாவது பாரிய பிளவு என்று இதனைக் கொள்ள முடியும். 2008ஆம் ஆண்டு இன்றைய அமைச்சர் விமல் வீரவன்ச கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அவருடன் பத்து எம்.பீ.க்களும் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டனர். தற்போது ஜே.வி.பி. இரண்டு பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்கிறது. கட்சித் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு எதிரான அதிருப்தியாளர் குழுவுக்கு ஆதரவு அதிகமாக இருப்பது போலத் தெரிகிறது. (மேலும்....)

ஆகஸ்ட் 18, 2014

விசாரணை ஆரம்பம்

இலங்கையின் மனித உரிமை நிலைவரம் தொடர்பாக விசாரணை நடத்துவதானது நாட்டின் நற்பெயருக்கு இழுக்காக அமையும் என்பது உண்மை தான். ஆனால், அந்த விசாணையின் போது அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளப்படுமேயானால் அது அதை விட மோசமான நிலைமையை உருவாக்கும். முழு உலகமே பார்த்திருக்கும் போது இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீனத்தில் ஆயிரக் கணக்கான மக்களை குண்டு வீசி கொலை செய்யும் போது அதனை கண்டிப்பதற்குப் பதிலாக அவற்றை ஊக்குவிக்கும் மேற்கத்திய தலைவர்களுக்கு இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிப் பேச தார்மிக உரிமை இல்லை என இலங்கை அரசாங்கத்தின் தலைவர்கள் கூறுவது முற்றிலும் உண்மை தான். ஆனால், இந்த நாட்டில் போலவே சர்வதேச ரீதியிலும் அரசியல் என்று வரும் போது ஆசாரங்களுக்கு அல்லாது அதிகாரத்துக்கே அங்கீகாரம் கிடைக்கிறது.  அந்த நிலைமையை எதிர் கொண்டு நாட்டுக்கு ஏற்படப் போகும் பெரும் அவப் பெயரை தடுத்துக் கொள்வது அல்லது அதனை குறைத்துக் கொள்வதே இன்று அரசாங்கத்தின் முன் இருக்கும் சவாலாகும்.

மிழ் மக்களுக்கு அடுத்த தேசியத்தலைவா் தயார் நிலையில்

 

விடுலைப் புலிகளின் தலைவரின் ஆட்டம் முள்ளிவாய்க்காலில் முடிந்த பின்னா் தற்போது அவரைப் போல் ஆடுவதற்கு பலா் முண்டியடிக்கின்றனா். சிறிதரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சரவணபவன் போன்றோர் இந்தப்பதவியைக் பெறுவதற்கா தங்களது உயிரைத் தவிர எதையும் தாரை வார்க்கவும் மற்றவா்களைக் காட்டிக் கொடுக்குவும் தயாரான நிலையில் மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றார்கள். எல்லாருடைய மாடும் சவாரியில ஓடுதென்று பேரம்பலத்தின்ட பேத்தை மாடும் சவாரி ஓட ஆசைப்பட்டது போல வடக்கு மாகாண விவசாய அமைச்சருக்கும் தேசியத்தலைவரக மாறுவதற்கான ஆசை வெளிப்பட்டு்ள்ளது. அந்த ஆசையின் ஒரு வடிவம் இந்தப் புகைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. (மேலும்....)

கரிமலையூற்று பள்ளிவாயல் உடைப்பு

கிண்ணியா திருமலை வெள்ளைமணல் கரிமலையூற்று பள்ளிவாயல், நேற்று சனிக்கிழமை (16) இரவு முற்றாக உடைக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாகவும் அதனை பார்வையிடுவதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை (17) குறித்த இடத்திற்கு சென்ற போது, இராணுவத்தினர் தம்மை செல்லவிடாது தடுத்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு குறித்த பிரதேசத்தில் கடும் மழை பெய்ததாகவும் இந்த நேரத்தில் பள்ளிவாயல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு குறித்த பள்ளிவாயலின் கோபுரம் வழமையாக தென்படும் நிலையில், நேற்று இரவு முதல் கோபுரம் தெரியவில்லை என பொதுமக்களிடம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். அதனையடுத்து குறித்த இடத்திற்கு பொதுமக்களும்  பிரதேச முக்கியஸ்தர்களும் பள்ளிவாயல் நிர்வாகத்தினரும் சென்றுள்ளனர். இசம்பவம் தொடர்பில் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவை  தொடர்பு  கொண்டு கேட்ட போது, சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார். இந்த பள்ளிவாயல் 1733ஆம் ஆண்டு கட்டப்பட்டதுடன் 400 வருடங்கள் பழமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் மொழியில் நீங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.

உலகின் முதல் மொழியில் நீங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். எத்தனையோ மொழிகள் பிறந்திருக்கின்றன, பல மொழிகள் காணாமல் போயிருக்கின்றன. பல மொழிகள் நிலைத்திருக்கின்றன. பல மொழிகள் அழியும் நிலையில் இருக்கின்றன. முதன் முதலில் தோன்றிய உங்கள் மொழியோ நிலைத்திருக்கிறது, வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆம், பூமியில் வாயால் பேசப்படுகிற, கையால் எழுதப்படுகிற மற்ற மொழிகள் பிறப்பதற்கு முன் பிறந்த, அந்த மொழிகள் பிறப்பதற்கே கருவாக இருந்த மொழி உங்கள் சைகை மொழிதான். எந்த ஓசையும், பேச்சும் கேட்காத அமைதியான இடத்தில் இருக்க வேண்டும் என பலரும் விரும்புவதுண்டு. ஆனால், இயற்கையாகவே உங்கள் உலகம் அமைதியானது. உங்களோடு பேசக் கிடைத்த இந்த வாய்ப்பை என் வாழ்வின் முக்கியத் தருணமாகக் கருதுகிறேன். அனைவரின் சம உரிமைகளுக்காக நிற்பவன் நான் என்பதற்காக மட்டுமல்ல, நானும் ஒரு வகையில் உங்களைப் போல் ஒரு மாற்றுத் திறனாளிதான் - எனது ஒரு காது கேக்காது - என்பதாலும்தான்! (மேலும்....)

பொய் ஐங்கரநேசன்ரை புலுடாக்கதைகளுக்கு குறைவேயில்லை.

(வடபுலத்தான்)

பொய் ஐங்கரநேசன்ரை புலுடாக்கதைகளுக்கு குறைவேயில்லை.

பாருங்கோ... கொஞ்ச நாளைக்கு முதல், ஆள் காரைநகருக்கு வந்தரெல்லோ.... வந்து என்ன சொன்னார் எண்டால்.....

'தீவுப்பகுதியின்ரை தண்ணீர்ப்பிரச்சினையை இன்னும் அஞ்சாறு மாசத்தில வடமாகாணசபை முழுசாத் தீர்த்திடும். இப்ப காரைநகருக்கு ஒழுங்காகத் தண்ணி கிடைக்கிறதுக்கு முழு ஏற்பாடும் செய்திருக்கிறம். மாகாணசபைக்கு வாற காசை மத்திய அரசு கொள்ளை அடிக்கிது. அதால புலம்பெயர் நாடுகளில இருக்கிற சொந்த பந்தங்கள் எங்களுக்குக் காசை அனுப்புங்கோ... நாங்கள் எங்கட மக்களுக்கு ( சாய்... சனங்களில என்ன ஒரு பாசம்?) தண்ணிகுடுப்பம்' எண்டு சும்மா போட்டுத்தாக்கியிருக்கிறார்.
(மேலும்....)

கடும் வரட்சி நிலவிய பகுதிகளில் மழை

கடும்வரட்சி நிலவிய நாட்டின் பல பகுதிகளில் சுமார் 6 மாதங்களின் பின்னர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. வடமத்திய மாகாணம், மன்னார், மட்டக்களப்பு, வவுனியா, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் மழைபெய்துள்ளது. இந்தப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களில் மழைபெய்துள்ளது. நீண்ட காலத்தின் பின் பெய்திருக்கும் மழை தொடர்பில் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் 35.3 மில்லிமீற்றர் மழையும், மட்டக்களப்பில் 20.1 மில்லிமீற்றர் மழையும், யாழ்ப்பாணத்தில் 46.1 மில்லிமீற்றர் மழையும், மன்னாரில் 97 மில்லிமீற்றர் மழையும், இரத்தினபுரி மாவட்டத்தில் 16 மில்லிமீற்றர் மழையும், திருகோணமலையில் 9.6 மில்லிமீற்றர் மழையும், வவுனியா மாவட்டத்தில் 41.7 மில்லிமீற்றர் மழையும் பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி காலநிலை நிலவிவரும் சூழ்நிலையில் வளிமண்டத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைபெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. எதிர்பார்த்தளவு மழையின்மையால் ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 17 இலட்சம் பேர் நீர் தட்டுப்பாட்டுப் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் இராணுவ வீராங்கனையின் மரணத்துக்கு புற்றுநோயே காரணம்

இராணுவ சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி திருமுருகண்டியைச் சேர்ந்த பிரசாத் அஜந்தா (வயது 23) என்ற பெண் மரணமடைந்தமைக்கு புற்றுநோயே காரணமென யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி பவானி பசுபதிராஜா தெரிவித்துள்ளார். இராணுவ வீராங்கனையான பிரசாத் அஜந்தா கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே சிகிச்சை பெற்று வந்ததாகவும். இப்புற்றுநோய் உடலுக்குள் பரவி குடலில் தடைகளை ஏற்படுத்தியதாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக வைத்திய கலாநிதி பவானி பசுபதிராசா மேலும் விளக்கமளித்துள்ளார். இறந்த பெண் இராணுவ வீரங்கனை எந்தவொரு கடின பயிற்சிக்கும் உள்ளாக்கப்படவோ துன்புறத்தல்களுக்கு உள்ளாக்கப்படவோ இல்லை. இதனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதிக்குப் பொறுப்பாக இருந்த வைத்தியரும் வைத்தியசாலைப் பணிப்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளதுடன் இவருடைய மரணத்திற்கான காரணம் புற்று நோயென மரணச்சான்றிதழும் வழங்கியுள்ளார்கள். இவருடைய மரணச்சடங்கு இராணுவத்தினரால் இராணுவ மரியாதையுடன் நடத்தப்பட்டுள்ளது. இது முதல் தடவையாக வடக்கில் ஒரு தமிழ் இராணுவ வீராங்கனைக்கு இராணுவ மரியாதையாகும்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் ஊரடங்கு சட்டத்தையும் மீறி ஆர்ப்பாட்டம்

அமெரிக்காவின் பெர்கியுசன் என்ற புறநகர் பகுதியில் கடந்த வாரம் கறுப்பின இளைஞன் ஒருவன் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு வெளியிட்டு அங்குள்ள மக்கள் ஊரடங்கு சட்டத்தை யும் மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பெர்கியுசன் பகுதியில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நீடிப்பதால் மிசுரி மாநில ஆளுநர் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுடன் ஊரங்குச் சட்டத்தை பிறப்பித்தார்.  மைக்கல் பிரவுன் என்ற 18 வயது கறுப்பின இளைஞன் கடந்த ஓகஸ்ட் 09 ஆம் திகதி பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில் சனிக்கிழமை ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் நூற்றுக் கணக்கான ஆர்ப்பட்டக்காரர்கள் வீதியில் ஒன்றுதிரண்டனர். இதில் ஒருசிலர் அமைதியாக வெளியேறியபோதும் மற்றும் சிலர் ஊரடங்குச் சட்டத்தையும் மீறி எதிர்ப்பு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 17, 2014


புலிப்பார்வை விழாவில் மாணவர்களை இரும்பு ராடால் தாக்கிய நாம் தமிழர், பாஜக, ஐஜேகே கட்சியினர்!

புலிப்பார்வை இசை வெளியீட்டு விழாவில் அந்தப் படத்துக்கும், அதில் பங்கேற்ற சீமானுக்கும் கண்டனம் தெரிவித்த மாணவர்களை இரும்பு ராடால் கடுமையாகத் தாக்கினர் நாம் தமிழர், பாஜக மற்றும் ஐஜேகே கட்சியைச் சேர்ந்தவர்கள். இதில் மாணவர்களுக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. கை, கால்களிலும் பலத்த அடி ஏற்பட்டுள்ளது. வலியில் துடித்த மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்காமல், ஜாம் பஜாரில் ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர் காவலர்கள். (மேலும்....)

திருமலையில் சீனாவுக்கு 1200 ஏக்கர் நிலம்

திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலுள்ள சுமார் 1200 ஏக்கர் நிலத்தை,  நீண்ட கால குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவது தொடர்பான விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு  தனது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.  திருகோணமலை துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் சுமார் 1200 ஏக்கர் நிலம் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துக்காக சீன நாட்டிற்கு நீண்ட கால குத்தகையில் வழங்கப்படவிருப்பதை கிழக்கு மாகாண முதலமைச்சர் அறிவாரா?  இது தொடர்பாக  கிழக்கு முதலமைச்சருடன் அல்லது கிழக்கு மாகாண அமைச்சர்கள் வாரியத்துடன் ஆலோசிக்கப்பட்டதா?  போன்ற வினாக்களை உள்ளடக்கிய பிரேரணையில், குறித்த காணி குத்தகைக்கு வழங்கப்படும் நிலை ஏற்படும் போது 450 இற்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் பாதிக்கப்படுவதோடு, இந்து,இஸ்லாமிய  மத வழிபாட்டு தலங்களும் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதென்றும் அவரால் முன் வைக்கப்பட்டுள்ள அந்தப் பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழரசு கட்சியின் அடுத்த தலைவர் யார்?

கூட்டமைப்பினரின் தற்போதைய முக்கிய பிரச்சினை அரசியல் தீர்வோ அல்லது சர்வதேச விசாரணையோ இல்லை, மாறாக தமிழரசு கட்சியின் அடுத்த தலைவராக யாரை நியமிப்பது, தலைவரென்று ஒருவரை நியமித்துவிட்டால், அடுத்த கட்சியின் பொதுச் செயலாளராக யாரை நியமிப்பது? பட்டவர்த் தனமாக பார்த்தால் உண்மையில் இது தமிழரசு கட்சியின் பிரச் சினையே அன்றி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சினையில்லை. அப்படியானால் கூட்டமைப்பின் பிரச்சினையாக இதனை ஏன் குறிப்பிட வேண்டுமென்று நீங்கள் யோசிக்கலாம். இதில் ஒரு சங்கதி உண்டு. தற் போது கூட்டமைப்புக்கள் எல்லோ ரும் ஐக்கியமாக இருப்பதாக தெரிந்தாலும், உண்மையில் கூட்டமைப்பின் அதிகார பூர்வமான தலைமையாக தமிழரசு கட்சியே இருக்கிறது. அந்த அடிப்படையில், கூட்டமைப்பின் அதிகாரம்மிக்க செயலாளராக மாவை சேனாதி ராஜாவுமே இருக்கின்றனர். கூட்டமைப்பை திறக்கும், மூடும் சாவி தமிழரசு கட்சியின் கையில்தான் இருக்கிறது. (மேலும்....)

எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர்கள் வெள்ளைக்காரரே

எமது நாட்டில் மனிதப் படுகொலைகளை தொடக்கி வைத்தவர்கள் வெள்ளைக் காரர்களே. அவர்கள் இன்று அதனை விமர்சித்து எம்மைக் குற்றம் சாட்டி வருகின்றனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தினை வலப்பனை ரூபாஹ ஸ்ரீ சித்தானந்த மகா வித்தியாலயத்தில் திறந்து வைத்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மனிதப் படுகொலைகளை இந்த நாட்டில் ஆரம்பித்து வைத்தவர்கள் மேற்குலக நாட்டினரே. அவர்கள் ஆரம்பித்த இந்தச் சரித்திரத்தை அவர்கள் மறந்து கதைக்கின்றனர். அது மாத்திரமல்ல விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்த கொடூரப் படுகொலைகளைக் கற்றதும் இவர்கள் மூலம்தான். இவை அனைத்தையும் மறந்து இன்று மேற்குலகு நம்மை விமர்சிக்கத் தொடங் கியிருப்பது ஆச்சரியத்துக்குரியதே. மடுல்ல கிராமத்தில் ஆங்கிலேய வெள்ளைக்காரர்களால் 16 பேர் கற்குகையில் போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தையும் ஜனாதிபதி அங்கு நினைவு படுத்தினார்.

உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ள எபோல

சேவை அளிக்கும் தன்னார்வ மருத்துவர்களையும் இந்த நோய் விட்டு வைக்காத நிலை ஆபிரிக்க நாடுகள் மட்டுமன்றி உலக நாடுகளையே கதிகலங்க வைத்துள்ளது உயிர்கொல்லியான எபோலோ. இந்த வைரசின் தாக்குதலால் இந்த ஆண்டில் மட்டும் கினியா, லைபீரியா மற்றும் சியர்ராலியோன் ஆகிய நாடுகளை சேர்ந்த 1232 பேர் பலியாகிவிட்டனர். மிகவேகமாக ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா வைரஸ் உலகப் பேரழிவு நோயாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள ஜெனீவா நகரில் உலக சுகாதார அமைப்பின் இரு நாள் அவசரக் கூட்டத்தில் எபோலா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து நீண்ட நேரமாக விவாதிக்கப்பட்டது. எபோலா வைரஸ் நோயால் சுமார் 1,500 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். அந்த நோய் பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்கள் உலகளாவிய சுற்றுப்பயணத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நோயின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதால் பிற நாடுகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. (மேலும்....)

ஆகஸ்ட் 16, 2014

வட இலங்கை வறட்சி – BBC Tamil News

வானமும் பொய்த்தது,
வாழ்வில் வசந்தம் வரும்
என அள்ளியிறைத்த வாக்குகளும் பொய்த்தன.

கால்பதித்த நிலம் தண்ணீரின்றி காய்ந்தது
கனவுகளை சுமந்த கண்கள் கண்ணீரின்றி ஓய்ந்தது
அள்ள அள்ள குறையாத வாக்குகள் கொடுத்து
மக்களிடம் அள்ளிப்பெற்ற வாக்குகளை பெற்ற
மக்களின் பிரதிநிதிகளே!
உங்களை இதமான குளிர்காற்றால்
சுகமாக தூங்கவைக்கும் அந்த குளிர்காற்றை தரும் பெட்டியிலிருந்து
வழிந்தோடும் தண்ணீரையாவது இந்த மக்களுக்காக தாருங்குள்
அவர்களின் ஒருநேர தாகமாவது தீரட்டும்

(மோகன்)

(பி.கு: தென்இலங்கையும் வரட்சியில்தான் உள்ளது)

அமைதிப்படைக்கு அஞ்சலி...

இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, பத்தரமுல்லையிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் தூபியில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தலைமையில் இந்த மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சைக்கிளில் டபள் போக சி.வி.யை அழைத்த டக்ளஸ்

கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான சைக்கிள் பவனியில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சைக்கிள் ஓடுவதற்கு வரும்படி பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா அழைத்தார். எனினும் அதற்கு முதலமைச்சர் மறுப்பு தெரிவித்தார். வடமாகாணத்தில் இருதய சத்திரசிகிச்சைக்கான துறையொன்றை ஸ்தாபிப்பதற்கு நிதி திரட்டும் பொருட்டு, யாழ் கைலாசப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து சைக்கிள் பவனியொன்று வெள்ளிக்கிழமை (15) காலை ஆரம்பமாகியது. இதன்போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, சி.வி.க்கு சைக்கிளோட அழைப்பு விடுத்த அமைச்சர் டக்ளஸ், 'உங்களுக்கு சைக்கிள் ஓட்ட விருப்பம் இல்லாவிட்டால், வாருங்கள் நான் உங்களை எனது சைக்கிளில் ஏற்றிச் செல்கின்றேன். நீங்கள் முன்னுக்கும் ஏறலாம் பின்னுக்கும் ஏறலாம் எனவும் கூறினார். அதற்கு முதலமைச்சர், புன்னகையைப் பதிலாக வழங்கினார்.

கிருஷ்ணாக் குழு கைது

யாழில், வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஷ்ணா என்ற குழுவைச் சேர்ந்த 4 பேரை கைதுசெய்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஷ் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும்  அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், வியாழக்கிழமை (14) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர். மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்ட போது, அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர்.

சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்டிய இலங்கையுடன் நட்புறவுகளைப் பேணுவதில் இந்தியாவுக்கு பெருமை

மூன்று தசாப்தகாலம் நிலவிய முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்து சமாதானத்தையும், சுபீட்சத்தையும் நிலைநாட்டியிருக்கும் இலங்கையுடன் நட்புறவுகளைப் பேணுவது குறித்து இந்தியா பெருமையடைவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா தெரிவித்தார். இரு நாட்டுக்கும் இடையிலான சமூக பொருளாதார, அரசியல் மற்றும் வர்த்தக உறவுகள் மென்மேலும் பலமடைந்து வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் 68வது சுதந்திர தினம் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள் மற்றும் இலங்கையில் உள்ள இந்தியர்கள் என கலந்து கொண்டவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்....)

1978 ஐ.தே.க கொண்டுவந்த அரசியல் யாப்பு ஆட்சிக்கு வரமுடியாமல் அவர்களுக்கே ஆப்பு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காக ஐ.தே.க. தயாரித்த 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு இன்று ஐ.தே.க.வுக்கே ஆட்சிக்கு வருவதற்கு தடங்கலாக மாறியுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஐ.தே.க.வே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகம் செய்தது.  தமது கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். அவர் உண்மையாகத்தான் இவ்வாறு கூறுகிறாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார். ஐ,ம.சு.மு.வில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் ஜனாதிபதி முறையை ஒழிக்குமாறு கோரி வருகின்ற போதும் இது வரை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினால் அவ்வாறான யோசனை எதுவும் முன்வைக்கப்படவில்லை. அது குறித்து ஆராய்வதற்கு சுதந்திரக் கட்சியிலிருந்து யோசனை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் டி.யு. குணசேகர, 1978 முதல் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இடதுசாரி கட்சிகள் எதிர்க்கின்றன. இந்த விடயம் குறித்து அநேக கட்சிகள் பேசி வருகின்றன.

சூரத் வழக்கு

நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் “மனுஷி” என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. 1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள். இதேபோல, 2002 அக்சர்தாம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உள்ளிட்ட அனைவரையும் மே-16, 2014 அன்று நிரபராதிகள் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுவித்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தீர்ப்பு மோடியின் வெற்றிக் கொண்டாட்டக் கூச்சலில் அமிழ்ந்து போனது. (மேலும்....)

ஆகஸ்ட் 15, 2014

ராஜீவ் காந்தி படுகொலை விசாரணை குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்ட்ட சம்பவத்தின் பின்னணியிலுள்ள சதிகள் குறித்து விரிவாக ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் ஆயுட்காலத்தை மேலும் ஓர் ஆண்டு  இந்திய மத்திய அரசு நீடித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையின் பின்னணியில் உள்ள சதி அம்சங்களை ஆராய சி.பி.ஐ.யின் பல்நோக்கு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இதில், உளவுத்துறை, ரோ, வருவாய் உளவுப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.  இந்த குழுவின் ஆயுட்காலம் கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன்; முடிவடைந்ததுடன் ராஜீவ்காந்தி கொலை சதி பற்றிய விசாரணை குழுவுக்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்குவதாக, பணிக்காலம் முடிந்த 2 மாதங்கள் கழித்து, திடீரென தற்போது இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ் கொலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த குமரன் பத்மநாதனின் பங்கு பற்றி விசாரணை நடந்து வருவதாக குழு வட்டாரங்கள் தெரிவித்ததுடன் இவர்தான் கொலைக்கான நிதியுதவி செய்தவர் என்றும் அக்குழு சந்தேகிக்கிறது. பத்மநாபன் நான்காண்டுகளுக்கு முன்பு தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றில், கைது செய்யப்பட்டு இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

14 மாவட்டங்களில் வரட்சி: 1,750,575 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவுகின்ற வரட்சியால் 14 மாவட்டங்களில் 5 இலட்சத்து 2,574 குடும்பங்களைச்சேர்ந்த 17 இலட்சத்து 50 ஆயிரத்து 575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களும், கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் உலருணவு பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதாக அந்தந்த பிரதேச செயலகங்கள் அறிவித்துள்ளன. மேலும், மொனராகலை, பொலநறுவை, அனுராதபுரம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த 14 மாவட்டங்களிலும் பெரும்பரப்பிலான விவசாய நிலங்கள் வரண்டுவிட்டதாகவும் குளங்கள் மற்றும் நீர் நிலைகள் வற்றிவிட்டமையால் கால்நடைகள் மற்றும் வனவிலங்களுகம் பாதிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில்

பண்ணையொன்றை ஆரம்பிக்க வடமாகாண அமைச்சர் முட்டுக்கட்ட

வடமாகாண மக்களுக்கு பயன்தரக் கூடிய முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த வடமாகாணசபை அமைச்சர் ஒருவர் முட்டுக்கட்டையாக செயற்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னார்வ அமைப்பொன்று முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உத்தேச பண்ணையொன்றை ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான சகல அனுமதிகளையும் அரசாங்க அதிகாரிகளிடம் பெற்றுள்ளபோதும் வடமாகாண சபையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக நிற்பதாக தெரியவருகிறது. புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களின் உதவியுடன், வடபகுதியில் குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தக் கூடியதாக பண்ணையை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை ஆரம்பமாகக் கொண்டு மேலும் பல திட்டங்களை இம்மாவட்டத்தில் செயற்படுத்தவிருக்கும் நிலையில், குறித்த அமைச்சரின் செயற்பாடுகள் அதனைத் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரிவிக்கப் படுகிறது. இதேவேளை, கிளிநொச்சி ஸ்கந்தபுரம் பொதுச் சந்தையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வீண் செலவில் இரண்டாவது தடவையாக திறந்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச் சோலை பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பொலிஸ் பொதுமக்கள் மோதல் தொடர்பில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 13 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். இதில் புதன் கிழமை பாலிப்போடி குணசீலன் மற்றும் தேவநாயகம் கோவிந்தரசா மாணிக்கம் தவமலர், வேல்முருகு ஜெகரன், வேல்முருகு டிலக்ஜன், வேல்முருகு வல்லியம்மை, வேல்முருகு சுகர்சினி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று வியாழக்கிழமை சகாநாதன் ஜம்போகரன், தர்மலிங்கம் தங்கவடிவேல், சகாதேவன் ஜெய்கரன், வெள்ளத்தம்பி சதாசிவம் பாக்கியராசா யோகரசா உட்பட ஆறு பேர் சந்தேகத்தின் பெரில் கைது செய்யப்பட்டுள்ளனர். கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா பணை அறுப்பான் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை (12.08.2014) இரவு கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக கூறப்படும் வீடொ ன்றை பொலிஸார் சோதனையிட சென்ற போது அங்கு பொலிஸ் பொதுமக்கள் மோதல் ஏற்பட்டதால் ஏழு பொலிஸார் உட்பட 11 பேர் காயமடைந்தமை குறிப் பிடத்தக்கது.

உடன்பாட்டின் அடிப்படையிலேயே பாக். அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர்

பாகிஸ்தான் அரசாங்கத்துடனான உடன்பாட்டி னடிப்படையிலே இலங்கையில் தங்கியிருந்த பாகிஸ்தான் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டனர். சுற்றுலா விசாவில் 30 முதல் 3 மாதங்களுக்கு இலங்கை வரும் பாகிஸ்தான் பிரஜைகள் பின்னர் அகதி அந்தஸ்த்து கோருகின்றனர். நாம் 1951 ஆம் ஆண் டின் ஐ.நா அகதிகள் சாசனத்தில் கைச்சாத் திடவில்லை. நாம் அதன் பங்காளிகளாக இல்லாத நிலையில் அதன் உடன்பாடுகளில் பங்காளிகளாக தேவையில்லை. எமது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் வீஸா காலம் முடிந்த பின் தங்கியிருந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். நாம் எதுவித தவறும் செய்யவில்லை. இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா திருப்பி அனுப்புவது போன்றே இங்கும் நடந்தது.

பூமியில் நிலமும் நீரும் சந்திக்கிற இடங்கள் மட்டும்தானே இயற்கையான எல்லைக்கோடுகள்?

அளவற்ற அருளாளன் இறைவனை வணங்குவதாகக் கூறி இங்கே உரையாற்றிய நண்பர்கள் பலரும் தங்களது பேச்சைத் தொடங்கினார்கள். எனக்குக் கிடைத்த திருக்குரான் உள்ளிட்ட சமய நூல்களைப் படிக்கப்படிக்க, உலக நடப்புகளைப் பார்க்கப் பார்க்க, சொந்த வாழ்க்கை அனுபவங்களை நினைக்க நினைக்க, கடவுள் இல்லை என்ற என்ற என்ற புரிதல் மென்மேலும் வலுப்பெறுகிறது. எந்தக் கடவுளின் மீதும் நம்பிக்கை இல்லை என்பதாலேயே, எந்தச் சமயத்தின் மீதும் பற்றில்லை என்பதாலேயே, எந்தக் கடவுளானாலும் நம்பிக்கை உள்ள, நம்பிக்கை இல்லாத எல்லா மக்கள் மீதும் என் நேசம் மேலும் உறுதிப்படுகிறது. இறைவனின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், சாதியின் பெயரால் நடக்கிற கொடுமைகளையும் இழைக்கப்படுகிற அநீதிகளையும் கண்டு மனம் பதறுகிறது. பூமியில் நிலமும் நீரும் சந்திக்கிற இடங்கள் மட்டும்தானே இயற்கையான எல்லைக்கோடுகள்? (மேலும்....)

ஆகஸ்ட் 14, 2014

த.தே.கூ., இ.த.கவை கலைத்துவிடவும் - த.வி.கூ

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் மிகக்கௌரவமான முறையில் தம் ஸ்தாபனங்களை கலைத்து விட்டு தங்களுடைய உறுப்பினர்களையும் தமிழர் விடுதலை கூட்டணியுடன் இணையுமாறு கூறுவதே சரியானதாகும். அதற்காக தமிழர் விடுதலை கூட்டணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணி இராணி அப்புக்காத்து என கௌரவிக்கப்பட்ட அமரர் சா. ஜே வே. செல்வநாயகத்தினால் தமிழர்களுக்காக விட்டுச்செல்லப்பட்ட பெரும்சொத்து. தமிழரசு கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியபதங்களை இப்போது எவர் பாவிக்கின்றார்களோ அவர்கள் அவற்றின் உண்மை அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும்.  எனது அபிப்பிராயப்படி, அபிப்பிராயம் மட்டுமல்ல உண்மையும் கூட. இவ்விரு அமைப்புக்களும் எதுவித அதிகாரங்களுமின்றி மோசடி மூலம் ஆரம்பிக்கப்பட்டவையாக இருப்பதால் இவ்விரு அமைப்புக்களும் இயங்க அருகதை அற்றவையாகும். (மேலும்....)

பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருந்தால் பட்டியலிடப்படும்

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என ஒருவர் அடையாளம் காணப்பட்டால் உரிய ஆதாரங்களின் பிரதிகளும் அவரின் பெயர் விபரமும் தடைப்பட்டியலில் உள்ளடக்கப்படும் பயங்கரவாத தடைப்பட்டியலில் இருந்து தம்முடைய பெயர்களை நீக்கிக்கொள்ள வேண்டுமாயின் அது தொடர்பில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் தமது பெயர் நீக்குவதற்கான உரிய காரணத்தை முன்வைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஐ.நா பாதுகாப்பு சபையின் உறுப்புரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த பட்டியலில் இருந்து தமது பெயரை நீக்குமாறு மூவர் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தொடர்பில் ஆராய்ந்து உண்மைதன்மை தொடர்பில் கண்டறியப்பட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சின் சிபாரிசுக்கு அமைய குறித்த மூவரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிரான்ஸை சேர்ந்த கே.துரைரட்ணம், இந்தியாவை சேர்ந்த கே.சுதர்சன் மற்றும் இலங்கையரான த.பிரேமணி ஆகிய மூவரின் பெயர்களே  நீக்கப்பட்டுள்ளன.

ஊசியேற்றப்பட்ட நிலையில் உயிரிழந்த வைத்தியரின் உடற்பாகங்கள் பகுப்பாய்வு

அழகு சத்திர சிகிச்சை நிலையத்தில் ஊசி ஏற்றிக்கொண்ட நிலையில் உயிரிழந்த பெண் வைத்தியரின் உடற் பாகங்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பொலிஸ் மரணபரிசோதனை நிலையத்தில் இடம்பெற்ற மரண விசாரணைகளை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. தனது அழகை மெருகூட்டுவதற்காக பம்பலப்பிட்டி பிரதேசத்திலுள்ள அழகு நிலையமொன்றில், ஊசி ஏற்றிக்கொண்ட கொழும்பு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பெண் வைத்தியரான ஈ.ஏ.பிரியங்கா, நேற்று உயிரிழந்தார். இந்த மரணத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. இந்நிலையிலேயே, உயிரிழந்தவரின் உடற் பாகங்களை அரச பகுப்பாய்வுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளை விட வரிகளிற்கு அதிக தொகை செலவிடும் கனடியர்கள்.

சராசரி கனடிய குடும்பங்கள் உணவு, இருப்பிடம் மற்றும் ஆடைகள் அடங்கிய தங்களது அடிப்படைத் தேவைகளிற்கு செலவிடும் தொகையை விட வரிகளிற்கு அதிக தொகை செலவு செய்கின்றனரென புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. வன்கூவர் Fraser Institute  ஆய்வு அறிக்கை இதனை  வெளியிட்டுள்ளது. 2013-ல் சராசரி கனடிய குடும்பம் 77,381 டொலர்களை வருடமொன்றிற்கு உழைத்துள்ளது. இதில்  மொத்த வரிகளிற்கு வருமானத்தின் 41.8 சதவிகிதத்தை-32,369டொலர்களை செலுத்தி உள்ளது. இதே சமயம் உணவு, இருப்பிடம் மற்றும் ஆடைகள் சேர்ந்த தேவைகளிற்கு 36.1-சதவிகிதம் மட்டும் செலுத்தியுள்ளது. 1961-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி குடும்பம் 5,000 டொலர்களை உழைத்த போது வருமானத்தின் 56.5-சதவிகிதத்தை உணவு, இருப்பிடம் மற்றும் ஆடைகள் போன்றனவற்றிற்கு செலவிட்டதாகவும் அதே சமயம் வருமானத்தின் 33.5-சதவிகிதம் —- 1675 டொலர்களை மட்டும் வரிகளிற்கு செலவிட்டுள்ளனர். இவை  மத்திய, மாகாண மற்றும் உள் ஊர் அரசாங்கங்களிற்கு செலுத்தப்பட்ட, புலப்படும் மற்றும் மறைந்திருக்கும் மொத்த வரி மசோதாக்களையும் பிரதிபலிக்கும் என ஆய்வு கூறுகின்றது. வருமான வரிகள்,  ஊதிய வரிகள், சுகாதார வரிகள், விற்பனை வரிகள் ,சொத்து வரிகள் ,வாகன வரிகள், இறக்குமதி வரிகள், மதுபானம் மற்றும் புகையிலை வரிகள் என்பன இதற்குள் அடங்குகின்றன. 1961-லிருந்து சராசரி கனடிய குடும்பத்தின மொத்த வரி மசோதா 1,832-சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிக பணம் அரசாங்கத்திற்கு செல்வதாகவும் குடும்பங்கள் தங்களது கல்வி மற்றும் ஓய்வூதியம், கடன் அடைப்பு போன்ற தங்களது முன்னுரிமை செலவினங்களிற்கு மிக குறைந்த அளவான தொகையை மட்டுமே கொண்டுள்ளனர் எனவும் Fraser Institute    கூறுகின்றது.

ஆகஸ்ட் 13, 2014

புலிகளின் அழிவுக்கு காரணம் பெண் தெய்வம் கண்ணகியா?...

த‌மிழ்ப்பெண் க‌ண்ண‌கியைக் க‌ட‌வுளாக‌ வ‌ழிபடும் முறை த‌மிழ்நாட்டில் வ‌ழ‌க்கொழிந்து போனாலும் அது ஈழத்த‌மிழ‌ர்க‌ளிட‌மும், முன்னாள் சேர‌நாட்டுத் த‌மிழ‌ர்க‌ளாகிய‌ ம‌லையாளிக‌ளிட‌மும், சில‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளிட‌மும் இன்றும் காணப்ப‌டுகிற‌து. த‌ம‌து முன்னோர்க‌ள் த‌மிழ‌ர்க‌ள் என்ப‌தை ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கும் சிங்க‌ள‌வ‌ர்க‌ள் கூட‌ த‌ம‌து தமிழ் முன்னோர்க‌ள் வ‌ழிப‌ட்ட‌ க‌ண்ண‌கியை 'பத்தினி   தெய்யோ' இன்றும் வ‌ண‌ங்குவ‌தைக் காண‌லாம். த‌மிழ்நாட்டில் த‌ன‌து ம‌க்க‌ள்(த‌மிழ‌ர்க‌ள்) த‌ன‌க்கிழைத்த‌ கொடுமையை அதாவ‌து தன்னுடைய‌ க‌ண‌வ‌னை அநீதியாக‌க் கொன்று த‌ன்னை அனாத‌ர‌வாக்கிய‌தால் கோப‌முற்ற‌ சில‌ப்ப‌திகார‌ நாய‌கி க‌ண்ண‌கி ம‌துரையை எரித்துக் கோப‌த்தைத் தீர்த்த‌வுட‌ன், மேலும் த‌மிழ்நாட்டில் வாழ‌ விரும்பாம‌ல், அதாவ‌து த‌ன‌து பிற‌ந்த‌ வீட்டுக்கு வித‌வையாக‌ப் போக‌ விரும்பாம‌ல், ஈழ‌த்திலுள்ள‌ த‌ன‌து ம‌க்க‌ளுட‌ன் வாழ‌த் தீர்மானித்து இல‌ங்கைக்கு குடிபெயர்ந்த‌தாக‌வும் அவ‌ள் இல‌ங்கையில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ங்கிய‌ பின்ன‌ர் க‌டைசியாக‌ ப‌த்தாவ‌து இட‌த்தில் இளைப்பாறுவ‌த‌ற்கு த‌ங்கிய‌ இட‌ம் தான் ந‌ந்திக்க‌ட‌ல் அருகில் இருக்கும் ஊராகிய‌ இன்று வ‌ற்றாப்ப‌ளை என‌ அழைக்க‌ப்ப‌டும் ப‌த்தாம் ப‌ளை என‌வும் கூற‌ப்ப‌டுகிற‌து.  இன்று கூட‌ த‌ன‌து சொந்த‌ ஊரில் அனாத‌ர‌வாக்க‌ப்ப‌ட்டு, அல்ல‌து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்டு அப‌லைக‌ளாக்க‌ப் ப‌ட்ட‌ பெண்கள் த‌ம‌து உற‌வின‌ர்க‌ள் அல்ல‌து ப‌ங்காளிக‌ள் வசிக்கும் இன்னொரு ஊரில் போய்த்த‌ங்குவ‌து ந‌டைமுறையில் காண‌ப்ப‌டும் வ‌ழ‌க்க‌மாகும். (மேலும்....) 

நோர்வேயிலிருந்து திருமணத்துக்காக யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நேர்ந்த பரிதாபம்!?

திரு­ம­ணத்­திற்­காக நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்த குடும்பம் தங்­கி­யி­ருந்த வெள்ள­வத்­தையில் உள்ள வீடொன்றில் 60 இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பணம் மற்றும் நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­பவம் வெள்ள­வத்தை பீற்­றர்சன் ஒழுங்­கையில் உள்ள தொடர்­மா­டி வீடொன்றில் நேற்று முன்­தினம் நள்­ளி­ர­வுக்குப் பின்னர் இடம்­பெற்­றுள்­ள­து. திரு­மணத்திற்­கா­க சேக­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்த தங்க நகை­க­ளும் நோர்வே நாண­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருந்த 30 இலட்சம் வரை­யான பண­மு­மே கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. மிக சூட்­சு­ம­மான முறையில் நான்கு மாடிகள் ஏறி­வந்து வீட்டின் குளி­ய­லறை ஜன்னல் ஊடாக உள்­நு­ழைந்து இந்த கொள்ளை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. சம்­பவம் தொடர்பில் வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்­கப்­பட்­டதை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் ஸ்தலத்­துக்கு சென்று தட­யங்­களை சேக­ரித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர். இத­னை­ய­டுத்து நேற்று மாலை வரை பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் ஒரு­வரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்லர் கேசரியிடம் குறிப்பிட்டார். விசாரணைகள் தொடரும் நிலையில் மிக விரைவில் சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேற்குலகில் அதிகரித்து வரும் இஸ்ரேலுக்கு எதிரான இடதுசாரி யூதர்கள்

காஸா போரின் எதிர்விளைவாக, மேற்கத்திய நாடுகளில் இடதுசாரி யூதர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்களை பாவிக்கும் இளைய தலைமுறையை சேர்ந்த யூதர்கள், இஸ்ரேலுக்கு எதிராக திரும்புகின்றனர். மேற்கத்திய நாடுகளின் வெகுஜன ஊடகங்கள் உண்மைகளை மறைத்து, திரித்து கூறி வந்த போதிலும், சமூக வலைத்தளங்களின் ஊடாக பரவும் தகவல்கள், ஒரு சமூக அசைவியக்கத்தை உண்டாக்கி உள்ளது. இஸ்ரேலுக்கு அடுத்ததாக யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் அமெரிக்காவில், தலைமுறை இடைவெளி காரணமாக யூத குடும்பங்களுக்குள், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் வெடிக்கின்றன. இஸ்ரேலை நியாயப் படுத்தும் பெற்றோரும், இஸ்ரேலின் அடாவடித்தனங்களை எதிர்க்கும் பிள்ளைகளும், அடிக்கடி அரசியல் விவாதங்களில் ஈடுபடுகின்றனர். (மேலும்....)

சிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம் -  பசீர் சேகுதாவூத்

'சிறுபான்மை மக்களாகிய நாங்கள் விசேடமாக இலங்கைத் தமிழர்கள், மலையகத்தவர்கள், முஸ்லிம்கள் ஏனைய மத ரீதியாக சிங்களம் பேசுகின்ற கிறிஸ்தவர்கள்; ஒன்றிணைய வேண்டிய காலகட்டமாக இது உள்ளது.' இவ்வாறு உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். 'சிறுபான்மை இனங்களும் ஒரு தீர்வை முன்வைத்து அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்ற சக்தியாக உருவெடுக்கின்றபோதே இனப் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும். எதிர்வருகின்ற எந்தவொரு தேர்தலாக இருந்தாலும், இவ்வாறான சிறுபான்மைக் கூட்டிணைவின் மூலமே நாம் பேரம் பேசும் சக்தியாக நின்று உரிமைகளையும் அபிவிருத்தியையும் வென்றெடுக்க முடியும். இத்தகைய கூட்டிணைவினால் மாத்திரமே இனி இலங்கையில் பேரம் பேசும் சக்தி என்பது அர்த்தமுள்ளதாக இருக்கும். யுத்தத்துக்கு பின்னரான தற்போதைய காலகட்டத்தில் வரலாறு கண்டிராத அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. விசேடமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதியின்  நேரடி அக்கறையின் கீழ் பாரிய அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நாட்டின் அமைச்சர் என்ற வகையிலும் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்திக்குழுத் தலைவர் என்ற வகையிலும் சில விடயங்களை நான் வெளிப்படையாக சொல்லியேயாக வேண்டும். எல்லா இடங்களிலும் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டாலும், இந்த அபிவிருத்திகள் எதுவும் அரசாங்கத்துக்கு வாக்குகளைச் சேர்க்கின்ற விடயமாக அரசாங்கம் பார்க்கவில்லை. இதைத் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை இன மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.  ஏனென்றால், சிறுபான்மைக் கட்சிகள் இன்று அபிவிருத்திக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.

ஆகஸ்ட் 12, 2014

இஸ்ரேலிய பெருமித உணர்வு

இஸ்ரேலியர்கள் போல் வாழவேண்டும். அவர்கள் எமக்கு முன்னுதாரணம். எந்த ஒரு வளமும் இல்லாத அந்நாடு இன்று உலகத்திற்கே சவாலாக விளங்குகிறது. அவர்கள் உலகின்  மகா புத்திசாலிகள். அவர்களைப் போன்றவர்கள் தான் நாமும் என்று தமிழ் தேசியவாதம் மார்தட்டி வந்ததுண்டு. கடந்த தலைமுறை தமிழ் தலைவர்களின்  யாழ் முற்றவெளி மைதான கூட்டங்களில் இந்த புழங்காங்கிதம் 1970களில்  ஒலித்ததை அந்தகால கட்டத்தைச்சோந்த பலர் மறந்திருக்கமுடியாது. ஒரு படி மேலாக ஒரு நாடே இல்லாத யூதர்கள் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க முடிந்திருந்தால் நாம் ஏன் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்ற கேள்விகளும் இந்த மேடைகளில் அடிக்கடி கேட்கப்படும். இந்த இஸ்ரேல் மாயை யாழ் மத்தியதர வர்க்க மனங்களில் இன்று வரை குடி கொண்டுதான் இருக்கிறது. இந்த கருத்தியல் செல்வாக்கிற்குட்பட்ட புலிகள் 1980களின் முற்பகுதியில் இஸ்ரேலிய மொசாட்டிடம் பயிற்சி பெறும் அளவிற்கு சென்றது. (மேலும்....)

யாழ்தேவியை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்க கோரிக்கை

யாழ்தேவி ரயில் சேவையை மாத்தறையிலிருந்து ஆரம்பிக்குமாறு கரையோர ரயில் பயணிகளின் சங்கம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில், அந்த சங்கத்தின் தலைவர் குணபால வித்தாரண, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலத்திற்கு பின்னர் யாழ்ப்பாணம் வரை பயணத்தை ஆரம்பிக்கவிருக்கின்ற யாழ்.தேவி ரயில் சேவையின் பயணமானது கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பிப்பதால், வடக்குக்கும்-தெற்கிற்கும் இடையில் உண்மையான உறவுபாலம் ஏற்படாது. யாழ்தேவி ரயில் சேவை, தெய்வேந்திர முனைக்கு அண்மையிலுள்ள மாத்தறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டால் தென்னிலங்கை மக்களுடன் நல்லுறவை தொடரலாம் மற்றும் கதிர்காமத்திற்கு வருகின்ற யாத்திரிகர்கள் யாழ்ப்பாண மக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவர் என்றும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் இருக்கைகள்

ஊவா மாகாண சபை தேர்தலுக்காக முஸ்லிம் கட்சிகள் தனியானதோர் வேட்பாளர் குழுவொன்றை நிறுத்தியுள்ளன. முஸ்லிம் என்று கூறிய போதிலும் தேசிய மட்டத்திலான பல முஸ்லிம் கட்சிகள் இருந்தும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு தேசிய முஸ்லிம் கட்சிகள் மட்டுமே இந்த விடயத்தில் ஒன்றிணைந்துள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமது பெயரில் இருந்த முஸ்லிம் என்ற பதத்தை அகற்றிக் கொண்ட போதிலும் அக்கட்சி இன்றும் முஸ்லிம்களை மட்டுமே தமது வாக்கு வங்கியாக கொண்டுள்ளது. எனவே, அதனை முஸ்லிம் கட்சியாகவே கருத வேண்டியுள்ளது. அதேவேளை, முஸ்லிம் என்ற பதம் தமது பெயரில் இல்லாவிட்டாலும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக மு.காவுடன் முஸ்லிம் கட்சியாகவே ஒன்றிணைந்தும் உள்ளது. (மேலும்....)

இஸ்ரேலின் கொலை வெறிக்கெதிரான ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் கொலை வெறித்தாக்குதலைக் கண்டித்து, இஸ்ரேலின் அத்துமீறல் நடவடிக்கை காரணமாக குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் இஸ்ரேலின் இனஅழிப்பு நடவடிக்கையை கண்டித்தும் இடதுசாரி அமைப்புகளின்(CPI, CPM) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (11-8-2014)மாலை நடைபெற்றது.

ஓட்ஸ் என்னும் அரக்கன்

இன்றைய நவீன உணவு முறையில் ஓட்ஸ் என்பது அத்தியாவசிய உணவு என ஆகிவிட்டது. அதுவும் நீரிழிவு நோயாளிகள்,உடல் எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்கள் ஓட்ஸ் சாப்பிடுவதை பெருமையாக நினைக்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்வரை நம்நாட்டில் ஓட்ஸ் இல்லை. ஆனால் இன்று ஆண்டுக்கு சில ஆயிரம் கோடிகளுக்கு விற்பனை ஆகிறது. இதற்கு பின்னால் பன்னாட்டு வணிக மோசடி உள்ளது. ஓட்ஸ் ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாகவும் கொஞ்சம் ஐரோப்பிய நாடுகளிலும் விளையும் ஒரு பயிர்.அதை அப்படியே உணவாக சாப்பிட முடியாது. சில வழிமுறைகளில் தட்டையாக மாற்றப்படுகிறது. அதையும் நம்ம ஊர் உணவு போல அதிக அளவில் எடுத்துக்கொள்ள முடியாது. சில கிராம் மட்டுமே (ஒரு ஸ்பூன்) எடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுகிறோம். அதிலும் சத்து எதுவும் கிடையாது. பசியை கட்டும் குணம் மட்டுமே இதற்கு உண்டு. அதிக விலை கொடுத்து வாங்கும் ஓட்ஸ்-ஐ விட நம் ஊர் ராகியில் பல மடங்கு சத்து உள்ளது. சுமார் ஒரு கிலோ ராகி சாப்பிடுவது 4 கிலோ ஓட்ஸ் க்கு சமம். ஒரு கிலோ ராகி மாவு 35 ரூபாய். 4 கிலோ ஓட்ஸ் 140*4= 560 ரூபாய். எங்கோ ஆஸ்திரேலியாவில் விளையும் ( அவர்கள் அதிகம் சாப்பிடுவது இல்லை )ஓட்ஸை நாம் சாப்பிடுவதில் MNC கொள்ளை உள்ளது. சில ஆண்டுகளாக போலி விளம்பரங்கள் மூலமும் ,மருத்துவர் மூலம் கட்டாயப் படுத்தியும் நம்மை அடிமை ஆக்கிவிட்டன. [குறிப்பாக பெப்சி நிறுவனத்தின் QUAKER பிராண்ட். குளிர்பான தொழிலில் இந்திய நிறுவனங்களை ஒழித்ததுபோல உணவில் இந்திய பாரம்பரிய உணவுகளை ஒழிக்கப் பார்க்கிறது.] அங்கிருந்து இங்கு வர ஆகும் எரிபொருள் செலவு, MNC நிறுவனங்களின் கொள்ளை லாபம் எல்லாம் சேர்த்து பயனற்ற பொருளை நம் தலையில் கட்டுகின்றன. அதைவிட ராகி, கம்பு, சோளம், திணை, வரகு, சாமை எல்லாம் பலமடங்கு சத்துள்ளவை. விலையும் குறைவு. சிந்தியுங்கள்.

ஈழத்தவரின் இன்னொரு தாய்... கூறுகிறார் சுகு சிறிதரன்!

பால  நடராஜா  ஐயர்  எனப்படும்  சின்ன பாலா  அவர்களின் தாயார்   காமாட்சி  அம்மையார்  அவர்களின்  இழப்பு  குறித்து   ஈ..பி .ஆர்.எல்.எவ்.   அமைப்பின்  செயலாளர்  சுகு  சிறிதரன்  அவர்கள்  வெளியிட்டுள்ள  பதிவு  இது. சின்ன  பாலா  ஈழப்போராட்டத்தின்  முன்னோடிகளில்  ஒருவர். ஈரோஸ்   அமைப்பில்  இருந்த  இவரை  ஈரோஸ்  பாலா  என்றும்   அழைப்பார்கள். ஈ..பி.டி.பி  யின்  ஊடக  செயலாளராக  இருந்தவர். இளையவன்  மற்றும்  அம்பி  மகன்  போன்ற  பெயர்களில்  அரசியல்  கட்டுரைகை எழுதி  வந்தவர். முளையில்  வாடிய  பயிர்கள்  மற்றும்   மழையை தராத  வானம்  போன்ற  இவரது  நூல்கள்  ஈழப்போராட்டத்தின்   ஆவணங்களாக  இன்னமும்  உள்ளன. (மேலும்....)

சீமானின் பிரபாகரன் புராணம்

சீமானை இன்று வரை நாம், ஒரு நடிகனாக, இயக்குனராக மற்றும் ஈழ உணர்வாளராக ஏற்க முடியும். ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியாக ஏற்க முடியாது. புலத்தில் இருந்து, சமாதான காலப் பகுதியில் வன்னிக்கு வருவோரை சாதாரணமாக சந்திப்பது மாதிரித் தான், எம் தேசியத் தலைவரையும் சீமான் சந்திப்பதற்கு வாய்பு கிடைத்தது. சீமான் வன்னிக்கு வந்த காலத்தில், இரண்டு முறை தான் தேசியத் தலைவரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு முறையும் விருந்து அளித்த பொழுது, பக்கத்தில் இருந்த முக்கிய போராளிகள் இன்று வரை உயிரோடு தான் இருக்கின்றார்கள். சீமான், எம் தேசியத் தலைவர் தன்னிடம் "ஜங்கரன் இன்டநஷனலைக்கு" படம் செய் என்று சொன்னதாக, பொய்யான தகவல்களை பிரச்சாரமாக செய்வதை அவர்கள் கேள்விப்படும் போது ஏன் சீமான் இப்படியெல்லாம் செய்கின்றார் என்று வேதனையடை கின்றார்கள். (மேலும்....)

ஆகஸ்ட் 11, 2014

தாக்குதலுக்குள்ளான பல்கலை மாணவனை விடுவிக்க நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் தாக்குதலுக்குள்ளாகியுள்ள கிளிநொச்சி, முகமாலையைச் சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் என்ற மாணவன் விடயத்தில் உரிய கவனம் செலுத்தப்பட்டு அவரை விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அம்மாணவனின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்தில், சனிக்கிழமையன்று (09) சுதர்சனின் பெற்றோருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, மேற்படி மாணவன் மீது குறித்த பல்கலைக்கழகத்தில் வைத்து இனந்தெரியாதோர் சிலர் தாக்குதல் நடத்தியிருந்த விடயம் தொடர்பில் அம்மாணவனின் பெற்றோரால் அமைச்சருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்நிலையில், அம்மாணவன் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவரை விடுவித்து தரவேண்டுமெனவும் பெற்றோர்கள், அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கமைய குறித்த மாணவனை உரியவர்களுடன் கலந்துரையாடி விடுவித்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரால் உறுயளிக்கப்பட்டது. சந்திரகுமார் சுதர்சன் மீதான தாக்குதல் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் ஏனைய மாணவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கச்சதீவை சீனாவுக்கு வழங்க இலங்கை அரசு முயற்சிக்கிறது: பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு!

கச்சதீவை சீனாவுக்கு வழங்க இலங்கை அரசு முயற்சிக்கிறது என்று பழ.நெடுமாறன் குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழகத்தில் திராவிட கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து மக்களுக்கான திட்டங்களை சரிவர செயல்படுத்தாமல் வருகிறது. அந்த கட்சிகளுக்கு மாற்று முயற்சியை ஏற்படுத்துவோம். நாட்டில் லஞ்சம்இ ஊழல் அதிகரித்து விட்டது. மேலும் இயற்கையை சூறையாடுகின்ற செயலும் அதிகரித்து உள்ளது. இப்படி இயற்கையை அளவுக்கு அதிகமாக சூறையாடிவிட்டால் வருங்கால சந்ததியர் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது கடமையாகும். ஈழத்தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் அரசும்,  தற்போது வந்துள்ள பா.ஜ.க. அரசும் ஒரே மாதிரியான நடவடிக்கையை தான் எடுத்து உள்ளது.  இவர்கள் சிங்களவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். மத்திய அரசின் அணுகு முறையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு நிர்ப்பந்தம் கொடுக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் மற்றும் சிங்களவர்களால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க மீனவர்களுக்கு ஆயுத பயிற்சி கொடுக்க வேண்டும். இவர்கள் ஆயுதம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசை நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிர்ப்பந்தம் செய்ய வேண்டும். கச்சதீவை நாம் மீட்டு நமது உரிமையை பாதுகாக்க வேண்டும். இல்லை என்றால் நமது நாட்டின் பாதுகாப்புக்கு அது குந்தகம் விளைவிக்கும். இலங்கை அரசு கச்சதீவை சீனாவுக்கு வழங்க முயற்சி செய்து வருகிறது. எனவே மத்திய அரசு கச்சதீவை மீட்டு நமது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
நெடுமாறனுக்கான இந்த மாத பணப்பட்டுவாடா ஆகிவிட்டது என்று நினைக்கிறோம்.

இராணுவத்தில் தமிழ் யுவதிகள்

இராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள் தமது பயிற்சிகளை முடித்துக்கொண்டு வெளியேறும் வைபவம் கிளிநொச்சி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுசந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கிளிநொச்சி அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் இராணுவப் பெண்கள் அணியின் (தமிழ் பெண்கள்) அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவதை படத்தில் காண்க. (படம்: பந்துல செனவிரட்ண)

வடபகுதியில் ஏற்பட்ட வறட்சிக்கு காரணம் என்ன? அரசியல்வாதிகளின் சிறப்புப் பேட்டிகள் - வடபுலத்தான் - பகுதி 2

வடக்கு மாகாண விவசாய அமைச்சா் ஐங்கரநேசன் அவா்களுடனான சிறப்பு நோ்காணல்
கேள்வி - வணக்கம் அமைச்சா் அவா்களே!  வடக்கில் ஏற்பட்டுள்ள வறட்சி பற்றி நாம் முதலமைச்சருடன் நோ்காணல் ஒன்றை மேற் கொண்டிருந்தோம். அந்த நோ்காணலில் பின் அவா் வடக்கின் வறட்சி தொடா்பாக உங்களைக் கேட்கும் படி தெரிவித்திருந்தார்.  ஆகவே நீங்கள் இது தொடா்பாக ஒரு சிறப்பு விளக்கம் தருவீா்கள் என நினைக்கின்றோம். இந்த வறட்சி பற்றி என்ன நினைக்கின்றீகள்,?­
  (மேலும்....)

மெல்பனில்

முருகபூபதியின்   சொல்லமறந்த   கதைகள்

நூல் வெளியீட்டு   அரங்கு

படைப்பிலக்கியவாதியும்   பத்திரிகையாளருமான   அவுஸ்திரேலியா  மெல்பனில்   வதியும்   திரு. லெ.   முருகபூபதியின்   புதிய    புனைவிலக்கிய கட்டுரைத்தொகுதியின்   வெளியீட்டு   அரங்கு   எதிர்வரும்   23-08-2014           ஆம்  திகதி   மாலை   மணியிலிருந்து    மணிவரையில்   மெல்பனில்

Dandenong Central Senior Citizens Centre ( No 10, Langhorne Street , Dandenong, Victoria - 3175)

மண்டபத்தில்  நடைபெறும்.

கலை, இலக்கிய   ஆர்வலர்   திரு. கந்தையா  குமாரதாசன்   தலைமையில் நடைபெறவுள்ள  சொல்ல   மறந்த   கதைகள்  நூல்  தமிழ்  நாடு  மலைகள் பதிப்பகத்தின்   வெளியீடாகும்.

இலங்கை - தமிழக - அவுஸ்திரேலியா - கனடா   மற்றும்   ஜெர்மனியில் வெளியாகும்   இதழ்கள்   இணைய   இதழ்கள்   ஆகியனவற்றில்   பதிவான படைப்புகளின்   தொகுப்பு   சொல்ல  மறந்த  கதைகள்.    இலங்கையில் நீடித்த   போர்க்காலத்தில்   அரசியலிலும்   மூவீன    மக்களிடத்திலும்   ஏற்பட்ட மாற்றங்களையும்   ஒரு    ஊடகவியலாளனின்   மனிதநேய   -  மனித உரிமைப் பார்வையில்    இலக்கிய   நயமுடன்   பதிவுசெய்த   புதிய    தொகுப்பு   நூல் சொல்ல மறந்த கதைகள்.

1972  காலப்பகுதியில்  படைப்பு   இலக்கியம்   மற்றும்   பத்திரிகைத்துறையில் பிரவேசித்த   முருகபூபதியின்   இருபதாவது   நூல்   சொல்ல  மறந்த கதைகள்.    இவ்வெளியீட்டு  அரங்கிற்கு   அன்பர்களும்   கலை -  இலக்கிய ஆர்வலர்களும்    ஊடகவியலாளர்களும்     அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக   விபரங்களுக்கு:   திரு. லெ. முருகபூபதி -   தொலைபேசி: 04 166 25 766

சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணத்தையடுத்து தமிழகத்தில் இலங்கை அகதிகள் கணக்கெடுப்பு

தமிழ் நாட்டிலுள்ள அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதையடுத்து தமிழ் நாட்டில் அகதிகளாகவுள்ள இலங்கையர் தொடர்பாக கணக்கெடுப்பொன்றை நடத்த தமிழக அகதிகள் மறுவாழ்வுதுறை உத்தரவிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக மாநிலம் முழுவதும் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் மற்றும் வெளியே வேலைக்குச் சென்றவர்கள் பற்றிய கணக்கெடுப்புகளை நடத்துமாறும் அகதிகள் மறுவாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் இலங்கை தமிழ் அகதிகள் 157 பேர் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளனர். அவர்கள் இன்று சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்தே இலங்கை தமிழர் அகதி முகாமில் உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அகதிகள் மறுவாழ்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளவர்களின் பெயர்கள் சட்ட விரோதமாக சென்றவர்களின் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா என்பதை சரிபார்க்கவும் கோரியுள்ளது.

ஈராக்கின் சுன்னி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா மூன்றாம் சுற்று வான் தாக்குதல்

வடக்கு ஈராக்கில் இருக்கும் சிவில் மக்களை பாதுகாப்பதற்காக சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மூன்றாவது சுற்று வான் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈராக்கில் பெரும் நிலப்பகுதியை ஆக்கிரமித்து வேகமாக முன்னேறிவரும் ஈராக் இஸ்லாமிய தேசம் (ஐசிஸ்) கிளர்ச்சியார்கள் மீதே அமெரிக்கா வான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்த பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லோரன்ட் பபியஸ் ஈராக் விரைந்துள்ளார். மறுபுறத்தில் பிரிட்டனின் இராணுவ விமானம் வடக்கு ஈராக்கில் மனிதாபிமான உதவிகளை போட்டதாக உறுதிசெய்துள்ளது. ஐசிஸ் கிளர்ச்சியார்கள் ஈராக் மற்றும் சிரியாவில் பெருமளவு நிலத்தை கைப்பற்றி இஸ்லாமிய கிளாபத்தை (பேரரசு) தன்னிச்சையாக பிரகனம் செய்தனர்.

சமூக மேம்பாட்டுக்காக பணியாற்றியவர் திருமதி காமாட்சியம்மா

காலஞ்சென்ற அமரர் திருமதி கந்தசாமிஜயர் காமாட்சியம்மாவின் பூதவுடலுக்கு ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஊரெழுவிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் (10) சென்ற அமைச்சர் அவர்கள் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இதில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அஞ்சலிஉரையாற்றும் போது திருமதி காமாட்சியம்மா அவர்கள் சிறந்த சமூகசேவையாளரும், மக்களது நலன்சார்ந்து உழைத்த பெருமாட்டியும் ஆவார். அத்துடன், சமூக மேம்பாடு மட்டுமன்றி மக்களது நலன்சார் விடயங்களுக்கான பல்வேறு பொது அமைப்புக்களில் சேவையாற்றி வந்துள்ளார். அன்னாரது இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்லாது எமக்கும் பேரிழப்பாகும் என்றும் தெரிவித்தார். இதில் ஈ.பி.ஆர்.எல்.எப் (பத்மநாபா அணி) செயலாளர் சிறிதரன் (சுகு), தோழர் நக்கீரன் உள்ளிட்ட பலர் அஞ்சலி உரையாற்றினர். காலஞ்சென்ற அமரர் காமாட்சியம்மா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முன்னாள் ஊடகச் செயலாளரும், ஊடகவியலாளருமான காலஞ்சென்ற பாலநடராஜ ஐயர் (தோழர் சின்னபாலா) தாயார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரது இறுதிக்கிரியைகள் இன்றைய தினம் இடம்பெற்றன.

மக்களின் கோரிக்கைகளை செவிசாய்கும் அமைச்சர்....

யுத்தம் இடம்பெறும் வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டுக்கு திருப்பியழைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் உறவுகள் கோரிக்கை 10.08.2014 - ஞாயிற்றுக்கிழமைஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை யுத்தம் இடம்பெற்றுவரும் வெளிநாடுகளில் பணிபுரியும் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களது உறவினர்கள் சந்தித்து தமது உறவுகளை தாய்நாட்டிற்கு திருப்பியழைப்பது தொடர்பில் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் செயலகத்திற்கு இன்றைய தினம் (10) வருகைதந்த உறவுகள் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தனர்.இதுவிடயம் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் தேடப்படுவோரது பெயர், முகவரி தற்போது அவர்கள் தொழில்புரியும் நாடுகள் உள்ளிட்ட விடயங்களை தமக்கு உரிய முறையில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.அதுமட்டுமன்றி தாயகத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய முழுமையான விபரங்களையும் தமக்கு சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 10,2014

அரசிற்கு எதிரான அறிக்கைகள் மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் எதிராக திருப்பவும் முயற்சி

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு

எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும்

அரசிற்கு எதிரான அறிக்கைகள் மூலமாக தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் எதிராக திருப்பவும் முயற்சி பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். தமிழ் ஊடகங்கள் நினைத்தால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண தமது காத்திரமான பங்களிப்பை நிச்சயம் மேற்கொள்ள முடியும். இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இதய சுத்தியுடனேயே செயற்பட்டு வருகிறது. பேச்சுவார்த்தை மூலமாகத் தீர்வு காண வருமாறு அரசாங்கம் தொடர்ச்சியாகப் பல தடவைகள் தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு விடுத்து வருகின்றது. இரண்டு தினங்களுக்கு முன்னர் கூட அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர் ஜி. எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் வைத்து நேரடியாக ஒரு அழைப்பையும் விடுத்திருந்தார். ஆனால் அவர்கள் இதுபற்றி அலட்டிக் கொள்வதில்லை. மாறாக தமக்குச் சார்பான தமிழ் ஊடகங்களில் தமக்குச் சார்பாக அறிக்கைகளை விட்டு தமிழ் மக்களை ஏமாற்றி வருவதுடன் அம்மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பவும் முயற்சித்து வருகின்றனர். இது ஆரோக்கியமானதல்ல. எமது பொறுமைக்கும் ஓர் எல்லை உள்ளது. எமது பொறுமையை எவராவது பலவீனமாகக் கருதினால் அதன் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வவுனியா தாண்டிக்குளத்தில் வெடிபொருட்கள் மீட்பு

வவுனியா, தாண்டிக்குளம் ஏ9 வீதியில் குடிதண்ணீர் விநியோகக் குழாய்களை பொருத்துவதற்கு குழி வெட்டியபோது அதிலிருந்து பல வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் தாம் அங்கு சென்று வெடிபொருட்களை மீட்டனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்புச் சபையினர் வவுனியா, தாண்டிகுளம் ஏ9 வீதியில் உள்ள பிரமண்டு வித்தியாலயத்துக்கு அருகில் நீர்க்குழாய்களைப் பொருத்துவதற்காக நேற்றுச் சனிக்கிழமை நிலத்தை தோண்டியுள்ளனர். இதன்போது அப்பகுதியில் வெடிபொருள்கள் வெளிக்கிளம்பியுள்ளன. இதனையடுத்து வவுனியா பொலிஸா ருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அவற்றை மீட்டுள்ளனர். ஆர்.பி.ஜி.ஷெல்கள் -2, மோட்டார் ஷெல்கள் -2, கைக்குண்டு -1 மற்றும் ரவைகள் என்பனவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 09,2014

காணாமற்போனோர் தொடர்பான ஆணைக்குழு விசாரணைகள்

காணாமல் போனோர் தொடர்பான விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்று மன்னாரில் விசாரணைகளை ஆரம்பித்து 4 தினங்கள் இதன் விசாரணைகள் நடைபெறவு ள்ளன. விசாரணைக்காக ஒத்துழைப்பு வழங்குமாறு ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது. நேற்றும் இன்றும் மாந்தை பிரதேச செயலகப் பிரிவில் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு ஞாயிறன்று மன்னார் பிரதேச செயலகப்பிரிவில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். திங்களன்று மடு பிரதேசத்தில் விசாரணை நடத்த இருப்பதாக காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆணைக்குழு செயலாளர் டபிள்யூ குணதாஸ தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட இந்த ஆணைக்குவுக்கு இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளனர். இதில் 800 முறைப்பாடுகள் இதுவரை விசாரிக்கப் பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மாவட்டங் களில் இது வரை விசாரணை முன்னெடு க்கப்பட்டுள்ளன.

தமிழ் அடிமைகள்

ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு

யாழ்ப்பாணத்தில் டச்சு காலனிய படையினர் வந்திறங்கிய காட்சி 

ஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் சென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை. இன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு? (மேலும்....)

எஸ்.டி.பண்டாரநாயக்கா- புரட்சிகர அஞ்சலிகள்

எஸ்.டி.பண்டாரநாயக்க மறைந்தார் எனும் செய்தி தமிழ் சூழலில் மிகச் சாதாரணமாகக் கடக்கப்பட்டுள்ளது. தமிழ் ஊடகங்களும், சமூக வலைத் தளங்களும் ஒரு செய்தியாகவேனும் வெளிப்படுத்தத் தவறியிருந்தன. இது எமது இருப்பையே கேள்விக்குரியதாக எண்ணச் செய்கிற விவகாரம். பொதுவாகவே தமிழரிடம் வரலாற்றுணர்வு இல்லை. சமகால வரலாற்றின் ஒரு அழியாத்தடத்தைக்கூடக் காணத் தவறுகிரவர்களாகவா இருப்போம்? எஸ்.டி.பண்டாரநாயக்கா கம்பஹா தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். எஸ்.டபிள்.யூ.பண்டாரநாயக்கா தலைமையில் தேசிய முதலாளிவர்க்க அரசு 1956 இல் ஏற்பட்ட போது அதன் அங்கமாக இருந்தவர் எஸ்.டி.. பண்டா-செல்வா ஒப்பந்தம் ஏற்பட்டுப் பிரதேச சபைகள் ஏற்படுவதன் வாயிலாக இனப்பிரச்சனை தீர்க்கப்பட இருந்த சூழலைக் குழப்பும் நோக்குடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை சென்றுகொண்டிருந்த வேளையில் கம்பஹா மாவட்ட இம்புள்கொட என்ற இடத்தில் எஸ்.டி. தலைமையிலான தேசபக்தர்களால் முறியடிக்கப்பட்டிருந்தது ஜே.ஆரின் திட்டம். இதன் காரணமாக இம்புல்கொடவீரயா என்ற பட்டம் எஸ்.டி.யுடன் ஒட்டியிருந்தது. (மேலும்....)

இந்தியாவில் 9 இலங்கை அகதிகள் கைது

தமிழ்நாட்டின் கரையோர நகரான ஒரியூரில் இருந்து சட்டவிரோதமாக படகொன்றின் மூலம் அவுஸ்திரேலியா செல்லமுயன்ற 9 இலங்கை அகதிகளை, இந்திய பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) கைது செய்துள்ளனர். தமிழ்நாட்டின் வெவ்வேறு அகதிகள் முகாம்களில் இருந்து வந்திருந்த ஒன்பது பேரும் ஒரியூரில் புனித அருளானந்தர் கிருஸ்தவ தேவாயலயத்திற்கருகில் உள்ள அறைகளில் கடந்த இரண்டு நாட்களாக தங்கியிருந்துள்ளனர். பொலிஸார் தங்களை கண்காணிப்பது இவர்களுக்கு தெரியவந்தவுடன் வேறு இடமொன்றிற்கு செல்ல முயன்றுள்ளனர். இருந்தும் இவர்களில் அறுவர் தேவாலய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், கார் ஒன்றில் தப்பச்செல்ல முயற்சித்த மூவரையும் இடைமறித்து கைது செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவரை இலங்கைக்கு நாடுகடத்துவதை தடுத்து நிறுத்தியது அவுஸ்ரேலியா!

விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவின் இரண்டாம் நிலைத் தலைவருக்கு அவுஸ்ரேலியா புகலிடம் வழங்கியுள்ளதாக, சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான இரண்டாம் நிலைத் தலைவர் சுவர்ணராஜா பூர்ணராஜா என்பவரை மலேசிய அதிகாரிகள் கைது செய்து, இலங்கைக்கு நாடு கடத்தத் தீர்மானித்திருந்தனர். எனினும், அவரை நாடு கடத்துவதற்கு அவுஸ்ரேலியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவர்ணராஜாவிற்கு அவுஸ்திரேலியா அரசியல் புகலிடம் வழங்கியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பிலான புலனாய்வுத் தகவல்களை திரட்டும் பணியில் சுவர்ணராஜா ஈடுபட்டிருந்தார் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சுவர்ணராஜாவை கைது செய்த மலேசிய அரசாங்கம், இலங்கையிடம் ஒப்படைக்க இணங்கியிருந்தது. எனினும், அரசியல் புகலிடம் வழங்கிய ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியா, மலேசியாவிற்கு அறிவித்துள்ளது. இதனை அடுத்து சுவர்ணராஜாவை இலங்கைக்கு நாடு கடத்தும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

யாழ். பல்கலையில் விருந்துண்ட பலருக்கும் சத்தி, வயிற்றுப்போக்கு!

யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) மதியம் இடம்பெற்ற விருந்துபசாரத்தில் பங்குபற்றிய சுமார் எழுபது, எழுபத்தியைந்து ஊழியர்களில் பெரும்பாலானோர் சத்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுளைவு போன்ற அசெளகரியங்களுக்கு உள்ளாகினர். எட்டுப் பத்துப் பேர் பல்வேறு வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களுள் எழுபது வீதமானோர் இவ்வாறு சுகவீனமுற்றனர் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் 'மலரும்' இணையத்துக்குத் தெரிவித்தன. யாழ். நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றினால் விநியோகிக்கப்பட்ட மதிய போசனத்தை சாப்பிட்டோரே, இவ்வாறு உணவு நஞ்சாகி அசெளகரியத்துக்கு உள்ளாகினர் என்று கருதப்படுகின்றது. கற்கைநெறியை முடித்து கணினி விஞ்ஞானப் பிரிவில் புதிதாக நியமனம் பெற்ற மூவர் ஒன்றிணைந்து இந்த விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விடயம் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஏற்கனவே சம்பந்தப்பட்ட பகுதி சுகாதாரப் பரிசோதகர்களுக்கும், சுகாதார வைத்திய அதிகாரிக்கும் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளனர் என்று கூறப்பட்டது. எனினும், இதற்கு முன்னரே விடயத்தைக் கேள்விப்பட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துவிட்டார் என வேறு சில வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆகஸ்ட் 08,2014

இலங்கை மீதான ஐ.நா விசாரணை ஆரம்பம்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் நியமித்த ஆணைக்குழு, தனது விசாரணையை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைக் குழுவிடம் சமர்ப்பிப்பதற்காக தகவல் மற்றும் ஆதாரங்கள் வைத்திருப்பவர்கள், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. (மேலும்....)

காணாமல் போனோர் விசாரணை ஆணைக்குழு

சர்வதேச தலையீட்டை தடுக்கவே விசேட நிபுணர்கள் குழு நியமனம்

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க நியமிக்கப்பட்டுள்ள மூவரங்கிய விசேட நிபுணர் குழுவிற்கும் ஐ.நா. பிரேரணைக்கும் எவ்வித தொடர்புகளுமில்லையென அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச தலையீட்டைத் தடுக்கும் வகையிலேயே இந்த நிபுணத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இக்குழுவில் இடம்பெற்றுள்ள மூவரதும் தகைமை, துறை சார்ந்த நிபுணத்துவம், சர்வதேச தர சிறப்புத் தேர்ச்சி என்பவற்றைக் கருத்திற் கொண்டே ஜனாதிபதி இக்குழுவை நியமித்தார் எனவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நவநீதம்பிள்ளையை நியமித்துள்ளமை போன்று ஜனாதிபதி செயலகத்தினால் மேற்படி ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காகவே இந்த நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்குல நாடுகளின் உணவு இறக்குமதிக்கு ரஷ்யா தடை

உக்ரைன் விவகாரத்தில் பொருளா தார தடைக்கு முகம்கொடுத்திருக்கும் ரஷ்யா அதற்கு பதிலடியாக ஐரோப் பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் ஒருசில மேற்குல நாடுகளில் இருந்து உணவு இறக்குமதிக்கு முழுமையான தடை விதித்துள்ளது. இதில் பழ வகைகள், காய்கறிகள், இறைச்சி, மீன், பால் மற்றும் பால் பண்ணை இறக்குமதிகளுக்கும் இந்த தடை உட்படுவதாக ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெட்வடெவ் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியா, கனடா மற்றும் நோர்வே நாடுகளும் இந்த தடைக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. தவிர உக்ரைன் விமானங்கள் தமது வான்பரப்பை பயன்படுத்தவும் ரஷ்யா தடைவிதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க விமானங் களுக்கும் இந்த தடையை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பிரதமர் மெட்வடெவ் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்க விமானங்களுக்கு ரஷ்யாவின் சைபீரிய விமானப்பாதையை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் குறித்த விமானங்கள் ஆசிய நாடுகளுக்கு பயணிக்க பாரிய செலவை ஏற்க வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த மருத்துவத்தின் ஊடாக உளவியல் பிரச்சினைகளுக்கு தீர்வு

வடபகுதி இளம் சமுதாயத் தினரிடம் காணப்படும் மாறுபட்ட உளமாற்றங் களை சீர் செய்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சமூக மட்டங்களில் திட்டங்களை நடைமுறைப்படுத்து வதற்காக ஆயுர்வேத மருத்துவ உத்தி யோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று வடமாகாண சுதேச மருத்து வத்துறை ஆணையாளர் தலைமையில் கடந்த ஜுன் மாதம் 4ம் திகதியன்று மாகாண சுகாதார சுதேச வைத் தியத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற் றிருந்தது. (மேலும்....)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - மாவை சேனாதிராசா.

மக்கள் நம்பி வாக்களித்த கூட்டமைப்பு மறைவில் செய்யும் சதிகள் வெளிவர ஆரம்பித்துவிட்டன... எங்கள் மக்களுக்கு மாற்று வழிகள் தேவையாக உள்ளது..... வடமாகனசபைத் தேர்தல் காலத்தில் இந்திய 'ரா' உளவுத்துறையால் தமது நாட்டின் பாதுகாப்பிற்காக, எமது முன்னாள் துரோகிகள் விலைகொடுத்து வாங்கப்பட்டார்கள்.  இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இந்தியா வழங்கிய 5 கோடி, கனேடிய புலம்பெயர்ந்த மக்கள் வழங்கிய 1 கோடி, இங்கிலாந்து புலம் பெயர்ந்த மக்கள் வழங்கிய 50 லச்சம் எங்கே... புதில் தாருவாரா ??? ஆர். சம்பந்தன், எம். ஏ. சுமந்திரன், மாவை சேனாதிராஜா????? (மேலும்....)

 

பனைத் தொழில் மேம்பாட்டுக்கு தலைவர் சீவரத்தினம் அதிரடி!

பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் பகுதியால் வாழ்வாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இச்சபையின் வட மாகாணத்தை சேர்ந்த போதனாசிரியர்களுக்கு 05 நாட்கள் கொண்ட தொழிநுட்ப பகிர்வுக்கான வதிவிட பயிற்சிப் பட்டறை ஆராம்பிக்கப்பட்டு நடத்தப்படுகின்றது. சபையின் தலைவர் பசுபதி சீவரத்தினம் யாழ். சுண்டுக்குளியில் அமைந்து உள்ள பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவு சங்க சமாச மண்டபத்தில் வைத்து சம்பிராதாயபூர்வமாக நேற்று காலை ஆரம்பித்து வைத்தார். கிழக்கு மாகாணத்தை குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பனைக் கைத்தொழில் மூலமாக வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றமையில் மிகுந்த அக்கறை, அர்ப்பணிப்பு, பற்றுறுதி, உற்சாகம், உத்வேகம் ஆகியவற்றுடன் செயற்பட்டு வருகின்றனர், இவர்களை முன்னுதாரணமாக கொண்டு வட மாகாணத்தை சேர்ந்த மக்களும் பனைக் கைத்தொழில் மூலமாக உச்ச நன்மைகளை பெற வேண்டும் என்று இவர் பயிற்சிப் பட்டறையின் அங்குராஅர்ப்பணக் கூட்டத்தில் பேசினார். நவீன தொழிநுட்ப பயிற்சிகளை கற்பித்துக் கொடுக்க தென்னிலங்கையில் இருந்து தேசிய வடிவமைப்புச் சபையின் வடிவமைப்பாளர்கள் பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டு உள்ளார்கள்.

கூத்தாடிகள்' என்பது மண்ணின் கலைஞர்களை குறிக்கும் சொல். அந்த சொல் கொண்டு இவர்களை 'கெளரவ'ப்படுத்த வேண்டாம்!... இவர்கள் பச்சையான சந்தர்ப்பவாதிகள்.

(Venpura Saravanan)

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமான படுத்திய இலங்கை கண்டனத்திற்குறியது தான், அதனால் தங்களளின் ஒருநாள் கால்சீட்டை ஒதுக்கி வைத்து, போரடிய திடீர் போராளிகளான இந்த கூத்தாடிகளை பார்த்து கேட்கிறேன், என்றைக்காவது உங்களை புகழின் உச்சுக்கு ஏற்றிய இந்த சாமனிய மக்களுக்காக உங்கள் கால்சீட்டை ஒதுக்கி வைத்து போராடியதுண்டா ? இந்தியாவில் நடக்கும் சாதிக் கொடுமைகளை எதிர்த்து போராடி இருக்கிறீர்கள் ? உலகமுழுவதும் நடக்கும் ஒடுக்குமுறையை எதிர்த்து கேள்விக்கேட்டு இருக்கிறீர்களா ? கலைஞர் ஆட்சியில் அவரை கொண்டாடினீர்கள், இப்போ அம்மையாரை கொண்டாடுகிறீ்கள். ஆட்சி மாறும் போதெல்லலாம் உங்கள் மனமும் மாறுகிறது.

ஆகஸ்ட் 07,2014

திடுக்கிட வைக்கும் உண்மை

கிட்டு இந்தியாவின் உளவாளி!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னிலைத் தலைவர்களில் ஒருவரான கிட்டு இந்திய புலனாய்வு பிரிவான ரோவின் கையாளாக விளங்கினார் என்கிற பேரதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பாக புதிதாக வெளிவந்து உள்ள திடுக்கிடும் தகவல் இதுதான். ராஜிவ் காந்திக்கு மிக நெருக்கமான அன்பராக விளங்கியவர் ஆர். டி. பிரத்தன். ராஜிவ் மற்றும் சோனியாவுடன் எனது வருடங்கள் என்கிற தலைப்பில் இவர் சுய சரிதை ஒன்றை எழுதி உள்ளார். இதிலேயே கிட்டு ரோவின் கையாள் என்பதை இவர் வெளிப்படுத்தி உள்ளார். கிட்டுவுக்கு காந்தி குடும்பத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு இருந்தது என்பதையும் இவர் இந்நூலில் புட்டு வைத்து உள்ளார். ராஜிவ் காந்தி காந்தி படுகொலை தொடர்பான புலனாய்வு விசாரணை மேற்கொண்ட சி. பி. ஐ தலைமை அதிகாரி கே. ராகோத்தமன். ராஜிவ் காந்தி படுகொலைச் சதி என்கிற புத்தகத்தை இவர் எழுதி உள்ளார். கிட்டுவை ரோ உளவாளியாக பயன்படுத்தி இருந்தார் என்பதை ரோவின் தலைவர் கௌரசங்கர் வாஜ்பாய் ஒப்புக் கொண்டு இருந்தார் என்பதை ராகோத்தமன் இந்நூலில் வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் கிட்டுவின் பரம வைரியான மாத்தையாவை அல்லவா பிரபாகரன் போட்டுத் தள்ளியுள்ளார் உளவாளி என்று. இது எப்படி இருக்கு?

ஒரு இடதுசாரியின் வாழ்க்கைத் துணைவி

முப்பத்திரண்டு ஆண்டுகள் என்னோடு குப்பை கொட்டியவர் ரூபா என்ற பர்வத லட்சுமி. ஆம், அவர்கள் கொட்டுவதற்கு சொத்து. நகை என வேறு எதையும் சேர்த்துக்கொடுக்காதவன் நான். அப்போது அவர்கள் குடும்பத்தில் ஒரு துக்கம் ஏற்பட்டிருந்த நிலையில், மதுரையில் இருந்து தொழில் தொடர்பாக (ஒரு பொறியியல் நிறுவனத்தில் பிரதிநிதி) பாபநாசம் சென்றபோது, திரும்பி வரும் வழியில் அம்பாசமுத்திரத்தில் இருந்த அவர்களுடைய வீட்டில் இறங்கி இரங்கல் தெரிவித்துவிட்டு வருமாறு என் பெற்றோர் கூறியிருந்தார்கள். அதற்காக அவர்களுடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோதுதான் முதல்முறையாக ரூபாவைப் பார்த்தேன். (மேலும்....)

 

முதல்வருக்கும் தெரிந்துவிட்டுதோ......?

இராணுவத்துடன் இணைந்து மிகவும் கச்சிதமாக யாராலுமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உதயன் பத்திரிகையும் ஈசுவரபாதம் சரவணபவனும் இயங்கி யாழ்ப்பாணத்தை அடக்கி ஆளுகின்ற அராஜகத்தையும் அந்த சங்கதி..யையும். வைகாசி (May) 18 ,2014 அன்று தான் நான் இந்த உண்மையை சரியாக..confirm.மாக கண்டு பிடித்ததேன். அன்று நடந்த பிதிர்க்கடன், ஆத்மசாந்தி ஹோமயாகம், அன்னதானம் ஆகியவற்றை நடாத்த விடாமல் பலவிதமான முறைகளில் முதல்நாளான 17-5-2014அன்று தடுக்க முற்பட்டது, பின்பு இராணுவத்திற்கு தவறான தகவல்களை சொல்லி, பொய்கூறி தடுப்பதற்கு அவர்களுடன் சேர்ந்து எமக்கெதிராக செயற்பட்டது அதில் உதயன் ஆசிரிய பீடத்தை சேர்ந்த பிரேம் முக்கிய பங்கு வகித்திருந்தார். பின்பு திலீப் என்பவரும் தலையிட்டிருந்திருந்தார். அப்படியிருந்தும் பாதுகாப்புக்கு எந்தவித பங்கமும் ஏற்படாதென்றும் அரசியல்வாதிகளோ, பத்திரிகையாளர்களையோ உள்வாங்கமாட்டோம் என்றும் அன்றையதினம் உயிரிழந்த உறவுகளின் உறவுகள் மட்டும் தான் கலந்து கொள்வார்கள் என்றும் அதற்கு தான் பொறுப்பு என்றுகூறி எழுத்து மூலமான உறுதிமொழி தியாகராசா துவாரகனால் வழங்கப்பட்டதன் பேரிலும் நகுலேசுவர ஆலய பிரதம குருக்களின் திறமையாலும் அவரது உறுதியினாலும் தான் ஒப்புதல் வழங்கப்பட்டது. (இன்னும் பற்பல திறமைமிகுந்த முயற்சிகளும்) (மேலும்....)

Evidence Is Now Conclusive: Two Ukrainian Government Fighter-Jets Shot Down Malaysian Airlines MH17. It was Not a ‘Buk’ Surface to Air Missile

(By Eric Zuesse,,  Global Research, August 04, 2014)

We’ll go considerably farther than has yet been revealed by the professional intelligence community, to provide the actual evidence that conclusively shows that (and how) the Ukrainian Government shot down the Malaysian airliner, MH-17, on July 17th.

The latest report from the intelligence community was headlined on August 3rd by Robert Parry, “Flight 17 Shoot-Down Scenario Shifts,” and he revealed there that,“Contrary to the Obama administration’s public claims blaming eastern Ukrainian rebels and Russia for the shoot-down of Malaysia Airlines Flight 17, some U.S. intelligence analysts have concluded that the rebels and Russia were likely not at fault and that it appears Ukrainian government forces were to blame, according to a source briefed on these findings. This judgment — at odds with what President Barack Obama and Secretary of State John Kerry have expressed publicly — is based largely on the absence of U.S. government evidence that Russia supplied the rebels with a Buk anti-aircraft missile system that would be needed to hit a civilian jetliner flying at 33,000 feet, said the source, who spoke on condition of anonymity.” (more.....)

தலையணை சுகம்....?

அத்வானியின் 'என் தேசம்;என் வாழ்க்கை' சுயரிதை நூலைக் கொடுத்து, படிக்கிறியாப்பா என்று கேட்டார் நண்பர். அதனாலென்ன கொடுங்கள் படிக்கிறேன் என்று சொல்லி வாங்கி வந்தேன். புத்தகம் செம வெயிட். ஆங்கிலத்தில் சிறிய புத்தகமாகத்தான் இருக்கும். தமிழில் இவ்வளவு பெரிதானதுக்கு பேப்பர் குவாலிட்டி தான் காரணம் என்று சொன்னார். எழுத்து நடை ஈர்த்தால் ஊருக்கு போவதற்குள் படித்து விட வேண்டியது தான். வாங்கிய அன்றே நான் வேறு அந்த புத்தகத்துக்கு நன்றி உடையவனாகிவிட்டேன். ஆமாம், ரயிலில் தரும் மெல்லிய தலையணை எப்போதும் எனக்குப் பத்தாது. இம்முறை இந்த புத்தகத்தை வைத்து அதன் மேல் தலையணையை வைத்துக் கொண்டேன்; பயணம் அவ்வளவு சுகம். கொடுத்தவருக்கு இதைப் படிக்கும்போது கொலைவெறி ஆகும்தான். அதற்கு நான் என்ன செய்யமுடியும்? வரலாற்றைப் பதிவு செய்வது அத்வானிக்கு மட்டுமல்ல எனக்கும் முக்கியம் தானே!! (Karl Max)

ஆகஸ்ட் 06,2014

ராஜீவ் காந்தியின் வீட்டில் புலிகளின் உளவாளி'

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் வீட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவாளியொருவர் இருந்தார் என ராஜீவின் முன்னாள் உதவியாளரான ஆர்.டி.பிரதான், தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியானார். இந்நிலையில் அவரது முன்னாள் உதவியாளரான ஆர்.டி.பிரதான் 'மை இயர்ஸ் வித் ராஜீவ் அன்ட் சோனியா' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகத்திலேயே மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார். (மேலும்....)

பூந்தோட்டம் முகாமிலுள்ள தமிழர்களை மீள்குடியேற்ற தமிழ் கூட்டமைப்பு எதிர்ப்பு

வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் சுமார் 25 வருடங்களாக தங்கியிருக்கும் அப்பாவி தமிழ் மக்களை சொந்த வீடுகளில் மீளக் குடியேற்ற அரசாங்கமும் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகையில் தமிழ் கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அச்செயற்பாடுகள் பாதிக்கும் வகையில் நடத்துகொள்வதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம். கே. பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார். வறுமை நிலைமையிலுள்ள மேற்படி 104 குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நயினமடு பிரதேசத்திலுள்ள அரசாங்க காணிகளில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில் தனது அலுவல கத்தில் வைத்து தன்னை நேரில் சந் தித்த பாராளுமன்ற உறுப்பினர் அத ற்கான எதிர்ப்பினை வெளியிட்டதாகவும் அவர் கூறினார். வடக்கில் இடம்பெயர்ந்த நிலையில் நீண்டகாலமாக நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இந்த மக்கள் சொந்த காணி மற்றும் வீடுகளில் மீளக்குடியமர்த்தப்படுவதனை நிறுத்துவதில் தமிழ் இனத்தைச் சேர்ந்த ஆனந்தன் எம்.பிக்குள்ள நோக்கம் என்னவென்பதனை எம்மால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள்

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது.  கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர். (மேலும்....)

ஆகஸ்ட் 05,2014

பாதுகாப்பு சைக்கிளுக்கு மட்டுமா....? அல்லது செருப்பிற்குமா....?

நல்லூர் திருவிழாவில் நிறுத்த பட்டிருந்த ஒரு சைக்கிளுக்கு செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடு

நடிகர் விஜய் அவர்களின் (நடிப்பு) பேச்சு!

செய்தி:- முதல்வரை இழிவுபடுத்தியதை என் தாயை தப்பாக பேசியமாதிரி நினைக்கிறேன். விஜய் பேச்சு

அடுத்த சுப்பர்ஸ்டாராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயலும் நடிகர் விஜய் அவர்களுக்கு திடீரென தமிழக முதல்வர் மீது பாசம் ஏற்பட்டுள்ளது. அதனால் பொங்கியெழுந்து உணர்ச்சியைக் கொட்டி பேசியிருக்கிறார். ஆனால் ஜெயா அம்மையாரும் ஒரு காலத்தில் நடிகையாக இருந்தவர் என்பதையும் அவர் இதுபோல் பல நடிப்புகளை பார்த்தவர் என்பதையும் நடிகர் விஜய் கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழக அரசியலில் ஏற்கனவே பல தடவை ஜெயா அம்மையார் இழிவு படுத்தப்பட்டிருக்கிறார். அப்போதெல்லாம் வராத உணர்வு இப்போது மட்டும் நடிகர் விஜய் அவர்களுக்கு என் வந்திருக்கிறது? அப்போதெல்லாம் அது தன் தாயை இழிவு படுத்தியதாக அவர் கருதவில்லையா? பல கோடி ரூபா செலவில் எடுக்கும் அவருடைய “கத்தி” திரைப்படம் எந்தவித சிக்கலுக்கும் ஆளாகாமல் திரையிடப்பட வேண்டும் என்றால் அதற்கு தமிழக முதல்வர் ஜெயா அம்iயாரின் ஆதரவு வேண்டும் என்பதால் இந்த உணர்வு எற்பட்டதா? நடிகர் விஜய் அவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் பல்லாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது வராத உணர்வு, தமிழக முகாம்களில் ஈழ அகதிகள் துன்பப்படுகையில் வராத உணர்வு, தமிழக சிறப்புமுகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழ அகதிகளுக்காக வராத உணர்வு,  இப்போது வருகிறது என்றால் அது நிச்சயம் “கத்தி” திரைப்படத்திற்காகவே என்பதில் சந்தேகம் இல்லை. எனவே விஜய் அவர்களே! உங்கள் நடிப்பு திறமையை திரைப்படத்தில் மட்டும் காட்டுங்கள். தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு காட்ட வேண்டாம்! (பாலன் தோழர்)

நட்வார்சிங்கின் கருத்தை நிராகரித்தார் மணிசங்கர் ஐயர்…!!

இந்திய அமைச்சரவையின் அனுமதி இன்றி இலங்கைக்கு அமைதிகாக்கும் படையினர் அனுப்பி வைக்கப்பட்டதாக, இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வார் சிங் வெளியிட்டிருந்த கருத்துக்கு மீண்டும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன் லைப் இஸ் நொட் இனாவ் என்ற அவரது புத்தகத்தில் நட்வார்சிங் இதனைத் தெரிவித்திருந்தார். எனினும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் ஐயர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த காலப்பகுதியில் நட்வார் சிங், மாநில வெளிவிவகார அமைச்சராகவே செயற்பட்டிருந்தார். அவருக்கு உயர் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று மனிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார். இந்திய அமைதிகாக்கும் படையினரை அனுப்பு வைக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிய காலப்பகுதியில் இருந்து, அவர்கள் இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்படும் காலப்பகுதி வரையிலான கால இடைவெளியில் இது குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை மன்னிப்பு கேட்க சொன்னது தவறு - சுப்பிரமணியசாமி

இணைய தளத்தில் வெளியான கட்டுரைக்காக இலங்கையை மன்னிப்பு கேட்கச் சொன்னது தவறு என்று மதுரையில் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார். பாரதிய கிசான் சங்கம் சார்பில் மதுரையில் தேசிய நீர் வழிச்சாலை கருத்தரங்கு சனிக்கிழமை நடந்தது.இதில் பங்கேற்பதற்காக மதுரை வந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- இலங்கை இராணுவ இணையதளத்தில் தமிழக முதல்வரைப் பற்றி அவதூறு கட்டுரை வெளிவந்துள்ளதே? இலங்கை அரச இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் கட்டுரை எழுத வாய்ப்பு உண்டு.அப்படி யாரோ ஒரு பத்திரிகையாளர் கட்டுரையை இணையதளத்தில் வெளியிட்டதற்கு அரசாங்கம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது தவறு.(மேலும்....)

கலக்கத்தை ஏற்படுத்தும் காப்புறுதி சட்டமூலம்: பாராளுமன்றத்தில்; மோடி அரசுக்கு முதல் நெருக்கடி

பதவியேற்ற இரண்டு மாதங்களுக்குள் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ. கூட்டணி அரசுக்கு காப்புறுதி சட்டமூலம் வி'யத்தில் முதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை வலு ப்படுத்துவதற்கு மோடி தலைமையிலான மத்திய அரசு, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக, காப்புறுதித் துறையில் சீர்திருத்தம் மேற்கொள்ள முடிவெடுத் துள்ளது. காப்புறுதி துறையில் தற்போது 26 சதவீதம் வரை மட்டுமே, வெளிநாட்டு முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதை, 49 சதவீத மாக உயர்த்தும் சட்டமூலம் பாராளுமன்றத்தில்; கொண்டு வரப்படவுள்ளது. தற்போதைய பா.ஜ. அரசை பொறுத்த வரை இந்த சட்டமூலம் தான் முதல் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை. இதைத் தொடர்ந்து, இன் னும் ஏராளமான சீர்திருத்த அதிரடி நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த சட்டமூலம் நிறைவேறாவிட்டால் மற்ற சட்டமூலங்களும்; பின்ன டைவை சந்திக்க நேரிடும். பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள இந்த முதல் நெருக்கடியை எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தான் அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆகஸ்ட் 04,2014

இலங்கை வரும் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரம்

யு.என்.எச்.சி.ஆர் முறையாகக் கையாளவில்லை

இலங்கையில் புகலிடம் கோரியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு அகதிகள் அரசியல் விவகாரத்தை முறையான விதத்தில் நிர்வகிப்பதற்கு யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு தவறிவிட்டது என அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பியனுப்பு வதை அரசாங்கம் ஊக்குவித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கையில் தஞ்சமடைந்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறிப்பாக பாகிஸ்தானியர் களைத் திருப்பியனுப்புவது குறித்து தொடர்ச்சியாக கேள்வியெழுப்பப்படுவதாகத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு இதுதொடர்பாக விளக்கமொன்றையும் வெளியிட்டுள்ளது. இலங்கையின் பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிலிருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்படுவதையே அரசாங்கம் ஊக்குவிப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு நாடாக மாறியுள்ளது. 2013ஆம் 14ஆம் ஆண்டுகளில் இவ்வாறு வரும் புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய 1562 புகலிடக் கோரிக்கையாளர்களும் 308 அகதிகளும் இலங்கையில் தஞ்சமடைந்துள்ளனர்.

முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு கரையோர மாவட்டம் அல்ல

முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு கரையோர மாவட்டம் அல்ல என ஊக்குவிப்பு உற்பத்தி திறன் விருத்தி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். 'கரையோர மாவட்டம் என்பது அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினையாகும். கரையோர மாவட்டம் முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வாகாது. தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருக்க வேண்டும். இதற்காக எனது அமைச்சுப் பதவியையும் இராஜினாமாச் செய்ய ஆயத்தமாக உள்ளேன். நான் ஏற்கெனவே எனது பிரதியமைச்சுப் பதவிகளை மூன்று தடவைகள் இராஜினாமாச் செய்துள்ளேன். ஆனால், தற்போது எனது அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்து தலைவர் ரவூப் ஹக்கீமை சங்கடத்துக்குள் கொண்டுவர விரும்பவில்லை. எனது கட்சியின் தலைவர் ரவூப்; ஹக்கீம் எனக்கு மூன்று முறை தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தந்துள்ளார். இவற்றையெல்லாம் நான் மறந்து விடவில்லை. தற்போதைய சூழ்நிலையில் அரசிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சி அரசியலை நடத்திப் பார்க்க வேண்டும். காலம் கடத்துவதை விட இப்போதே இதைச் செய்வதையே நான் விரும்புகின்றேன். நான் கருத்துச் சொல்வதில் பின் நிற்கப் போவதில்லை. அரசுக்கு  ஒரு செய்தி சொல்ல வேண்டுமானால் அதற்குரிய நல்ல தருணம் இதுதான். தேர்தல் வந்த பின்னர் அதைச் செய்ய முடியாது. எதிர்க்கட்சி அரசியல் செய்வது என்பது ஐக்கிய தேசியக் கட்சியில் சரணாகதியடைவதாக கருதக்கூடாது.

விஜயலட்சுமிக்கு உத்தரவிட சி.வி.க்கு அதிகாரம் இல்லை

மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு. தவிர, அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (04) தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால், தனது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டதாக, வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான தீர்ப்பு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் நீதியரசர்களான ரோஹினி மாரசிங்க மற்றும் கே.ஸ்ரீபவன் ஆகியோரினால் இன்று வழங்கப்பட்டது. இதன்போது, மாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உள்ளதென தீர்ப்பளித்த நீதியரசர்கள் குழு, 'வட மாகாணசபையின் நடவடிக்கைகளை முறையாகக் கொண்டு செல்வதற்கு இரு தரப்பினரும் ஒற்றுமையாக சேவையாற்ற வேண்டும்' என்றும் அறிவுரை வழங்கியது. தனது வேலையில் தலையிடுகிறார் எனவும் தன்னை வேலையிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார் எனவும் கூறி முதலமைச்சர் விக்னேஸ்ரனுக்கு எதிராக வட மாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

சப். பல்கலையில் தமிழ் மாணவன் மீது இனந்தெரியாத குழு தாக்குதல்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவன் இனந்தெரியாத குழுவினால் தாக்குதலுக்கு இலக்காகி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இச்சம்பவம் (08) அதிகாலை 3 மணியளவில் இடம் பெற்றுள்ளது. முகமாலையை சேர்ந்த முதலாம் தரம் கற்கும் மாணவனே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். மாணவர்கள் விடுதியில் தங்கியிருந்தபோது 5 பேரைக்கொண்ட இனந்தெரியாத குழுவொன்றே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை கைது செய்து விசாரணைகளை நடத்துமாறும் பல்கலைக்கழக மாணவர் ஐக்கிய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பலாங்கொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காசாவில் ஐ.நா. அகதி முகாம் மீது இஸ்ரேல் மீண்டும் n'ல் தாக்குதல்: பத்துப்பேர் பலி

பலஸ்தீனர்களின் உயிரிழப்பு 1,759 ஆக உயர்வு

காசா எல்லைப்பகுதியில் மீண்டும் படைகளை குவிக்க ஆரம்பித்திருக்கும் இஸ்ரேல் இராணுவம் காசா மீதான வான் மற்றும் தரைவழி தாக்குதல்களையும் மேலும் தீவி ரப்படுத்தியுள்ளது. காசா பகுதிகளில் இருந்து இஸ்ரேல் பீரங்கிகள் மற் றும் துருப்புகள் வெளியேறிவருவதாக செய்திகள் வெளி யான நிலையில் இஸ்ரேல் அரசு தனது இராணுவ நடவ டிக்கையை புதுப்பித்திருப்பதாக நேற்று ஞாயிற்றுக் கிழமை அறிவித்தது. இந்நிலையில் காசாவில் பலஸ்தீன அகதிகள் தஞ்சம் புகுந்திருக்கும் மற்றுமொரு ஐ.நா. பாடசாலை மீது இஸ்ரேல் நேற்று நடத்திய n'ல் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ரபாவில் இருக்கும் ஐ.நாவினால் நடத்தப்படும் பாடசாலை மீதே நேற்று தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அகதிகள் தஞ்சம்புகுந்திருக்கும் ஐ.நா. முகாம் மீது ஒரு வாரத்திற்குள் இஸ்ரேல் நடத்தும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.

ஆகஸ்ட் 03,2014

நச்சென்று நாலு வார்த்தை

"அச்சுறுத்தல்களுக்கு" எதிராக யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் ஆர்ப்பாட்டம் – BBC News

முதலில் உங்கள் நியாயபூர்வமான ஆர்ப்பாட்டத்திறக்கு எனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறேன், இங்கே ஆனந்தி அக்கா பேச்சு சுதந்திரம் என்ற வாசகம் கொண்ட ஒரு பதாகை பிடித்திருக்கிறா, அம்மணி இதே பேச்சு சுதந்திரம் உங்கள் புலிகளின் காலத்தில் எப்படி இருந்தது? வெறும் அச்சுறுத்தலில் முடிந்து போனதா? ஆட்களை போட்டு தள்ளியல்லவா முடித்தார்கள், இந்த வாசகங்களை உச்சரிக்கவே கூச்சப்படவேண்டிய நீங்களெலெல்லாம் அதை சுமந்து கொண்டிருப்பதற்க்கு என்ன அருகதை இருக்கிறது? -மோகன்

கொழுத்திப் போடச் சொன்னது சுரேஷ்தான்!

கொழுதிப் போட்டது சுரேஸின் சகாக்கள்!!

சூடு வாங்கியது என்னவோ……. சுரேஸ் பிரேமசந்திரன்தான்

“எல்லாம் தெரிஞ்ச கமலாகரனா இப்பிடி? யாருடைய விமர்சனத்தை பற்றியும் கவலைப்படாமல் தனது இஸ்டத்திற்கு நடந்த ஒருவரை நாபாவின்ரை வழியிலை எப்பிடி விமர்சிக்கிறது? எப்பிடி ஆரோக்கியமாய் விமர்சிக்கிறது? இருந்தாலும் முயற்சிச்சுப் பார்ப்பம். சொத்துப் பிரச்சினை பற்றிப் பேச இங்கு யாருக்குத்தான் தகுதி இருக்கிறது ? என்று கேட்கிறீர்கள் சொத்துப் பிரச்சினையைப் பற்றிப் பேச ஒருவருக்கும் தகுதியில்லை எல்லாற்றை கையும் கறை படிஞ்சது தான் எண்டமாதிரி இப்ப சொல்ல வாறியளோ? சொத்துப் பிரச்சினையைப் பற்றிப் பேசும் தகுதி ஏணியாய் இருந்து உங்களை உயர்த்தி வைத்த உங்களை நம்பி ஏமாந்த அத்தனை தோழர்களுக்கும் இருக்கிறது. அதெப்பிடி பொதுச் சொத்தை சுருட்டிக்கொண்டு வெளியே போனால் மோசடி, பொதுச் சொத்தை சுருட்டிக்கொண்டு இங்கேயே நின்றால் புனிதமா? (மேலும்....)

கச்சதீவு போராட்டம் கைவிடப்பட்டது

இலங்கை கடற்படையால் தாம் கைது செய்யப்படுவதை கண்டித்தும், தமது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதை கண்டித்தும், இராமேஸ்வர மீனவர்கள் இன்று சனிக்கிழமை (02) ஏற்பாடு செய்திருந்த, கச்சதீவில் தஞ்சம் அடையும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று காலை குறித்த மீனவர்கள் வேர்கோடு பகுதியில் இருந்து வெள்ளைக்கொடி ஏந்தி கச்சதீவு நோக்கி செல்லும் போராட்டத்தை ஆரம்பித்தனர். இந்நிலையில் மீனவர் சங்க பிரநிதிகளிடம் தொலைபேசியில்  பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷணன், 10 நாட்களில் இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி மொழி அளித்தார். அமைச்சரின் வாக்குறுதியை அடுத்து, மீனவர்கள் ராமேஷ்வரத்தில் இருந்து கச்சதீவு செல்லும் போராட்டத்தை கைவிட்டுள்ளனர். எனினும் கச்சதீவு செல்லும் போராட்டம் கைவிட்டப்பட்டாலும் வேலை நிறுத்த போராட்டம்  தொடரும் என்று  மீனவர்கள் அறிவித்துள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது அனைத்து படகுகளையும் விடுதலை செய்யவும், பாரம்பரிய கடல் பகுதியில் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் பிரச்சினை இல்லாமல் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க  மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தியும் கடந்த 24 ஆம்  திகதி முதல் இராமேசுவரத்தில் விசைப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பிரச்சினைதான் என்ன?

மூன்றாம் உலக நாடுகளை தன்னுடைய விளையாட்டு பொம்மையாக கருதும் மனோபாவத்துடனேயே அமெரி க்கா செயற்பட்டு வருகிறது. அமெரிக்கா அறியாத யுத் தமா? அமெரிக்காவிற்கு தெரியாத உயிரிழப்புக்களா? பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்த பிரகடனத்தை செய்த அமெரிக்கா, தன்னால் பயங்கரவாத பட்டியலிடப்பட்ட ஒரு அமைப்பை அழிப்பதற்காக இடம்பெற்ற போரில்தான், தற் போது குற்றம் கண்டுபிடிக்கிறது. இலங்கை அரசாங்கம் போரை சரியாக செய்யவில்லை என்று குற்றம் சாட்டுகிறது. ஆனால் அதே அமெரிக்கா இன்று காசா வில் பலஸ்தீனியர்கள் மீது விழுந்து சிதறும் குண்டுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. அது குறித்து வாய்திறக்கவில்லை. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? யுத்தம் என்று வந்துவிட்டால் உயிரிழப்புக்கள் தவிர்க்க முடியாதவை என்பதை அமெரிக்காவை விட, வேறு எவரும் அறிந்துகொள்ள முடியாது. அப்படியிருந்தும் அமெரிக்கா இலங்கையில் இடம்பெற்ற போரில் மட்டும் குற்றம் காண்பது ஏன்? (மேலும்....)

பிணக் காடாக மாறி இருக்கும் காசா

கண்களை குத்தும் சொந்த விரல்கள்!

இந்தகற்துண்டுகளைத் தவிர இந்த பாலஸ்தீன தேசத்தில் எதுவும் மீதமில்லை' ஜுலை எட்டாம் திகதியிலிருந்து பிணக் காடாக மாறி இருக்கும் காசா பிரதேசத்தில் சுவாசிப்பதற்காக வழங்கப்பட்ட பனிரெண்டு மணி நேரயுத்த நிறுத்தத்தில் காற்றிலே காணாமல் போயுள்ள தனது வீட்டு அழிவுகளுக்குள் நின்று புலம்புகிறார் உம்மு அஹ்மத் எனும் பாலஸ்தீன தாய், இஸ்ரேலிய யுத்த டாங்குகளும் கனரக ஆயதங்களும் கொன்று குதறியுள்ள பாலஸ்தீன அப்பாவி உயிர்களின் எண்ணிக்கை கடந்த இருபது நாள் தாக்குதலில் 1052 இனைத் தாண்டி நிற்கின்றன.  இறந்த சஹீதுகளின் உடலங்களை அடக்கம் செய்வது கூட அங்கு பெரும் சிரமமாக உள்ள சூழலில் இந்த திணிக்கப்பட்ட மனிதப் படுகொலைகளின் பின்னணியில் உள்ள சதி தனது காய்களை லாவகமாக நகர்த்தத் தொடக்கி விட்டுள்ளது. (மேலும்....)

ஆகஸ்ட் 02,2014

என்மனவலையிலிருந்து……

சுரேஷ் குழுவினருக்கு பதில்

இரண்டாம் உலப்போர் காலத்தில் சோவியத்யூனியன் கிட்லரின் பாசத்திற்கு எதிராக தனக்கு முரண்பாடான அமெரிக்க, பிரித்தானிய நாடுகளுடன் ஐக்கிய முன்னணிஅமைத்து பாசிசத்தை தோற்கடித்து மக்களை காப்பாற்றியது வரலாறு. ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலிகள் மாற்றுக்கருத்தாளர்கள், ஏனைய சமூகங்களான முஸ்லீம், சிங்கள மக்களையும், ஏன் இறுதியில் தமிழ் மக்களையும் தனது பாசிச செயற்பாட்டினால் குழி தோண்டி புதைத்தது நாம் வாழும் காலத்து சாட்சியங்கள். கிட்லரின் வதை முகாங்களுக்குள் நடைபெற்றவற்றிற்கு எந்தவகையிலும் குறைவில்லா செயற்பாட்டைக் கொண்டிருந்தனர் புலிகள். இவர்களுடன் இணைந்து செயற்பட முற்பட்டதன் ஆரம்ப நிலையே சுரேஷ் எங்களின் ஒருவன் என்ற நிலையை இல்லாமல் செய்தது. இது சரேஸின் செயற்பாட்டுடன் இணைந்து கொண்ட அனைத்து அவரின் சகாக்களுக்கும் பொருந்தும். இதன் தொடர்சியான பொது மக்கள், மாற்றுக் கருத்தாளர்கள் ஏன் தனது அமைப்புகளில் உள்ளோர் என பலரையும் வகை தொகையில்லாமல் புலிகள் கொலை செய்தபோது அவர்களுடன் ஈபிஆர்எல்எவ்(சுரேஸ்பிரிவு), ஈபிஆர்எல்எவ்(புலிப் பிரிவு) என்பது போலவே செயற்பட்டது. இதற்காக சுரேஸ் அவர்களின் சகாக்களும் பல கொலைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில், சிறப்பாக தோழர் றொபேட்டின் மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் இவர்களே ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். 2009 மே மாத புலிகளின் ஆயுத ரீதியான(அரசியல் ரீதியான தோல்வி என்று குறிப்பிடவில்லை, ஏன் எனில் புலிகளிடம் எப்போதும் அரசியல் இருந்தது இல்லை) தோல்விகளுக்கு பின்னர் ஏற்பட்ட புதிய ஜனநாயக இடைவெளியில் எவ்வாறு தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒரு புதிய செயற்பாட்டை நோக்கி பயணிக்கலாம் என்று நான் சாகரன் என்ற பெயரில் பல கட்டுரை அக்காலத்தில் எழுதியுள்ளேன். இதில் சிறப்பாக ’30 வருடகால அரசியல்சுழற்சியல்…..’ என்று ஆரம்பமாகும் கட்டுரையை சுரேஸின் விசுவாசிகள் வாசித்து பார்க்கவும்;. புலிகள் உட்பட அவர்களுடன் இணைந்து செயற்பட்ட சுரேஸ் உம் எமது மக்களின் விடுதலைப் போரட்டத்தை படுகுழியில் தள்ளி இன்று மிகவும் பலவீனமான ஒரு சமூகமாக தமிழ் பேசும் கமூகத்தை கொண்டு வந்து நிறுதியது உள்ளது என்ற வரலாற்று அரசியல் துரோகத்தனததை செய்தது என்பதுவே இவர்கள் செய்த மாபெரும் மன்னிக்க முடியாத குற்றமாகும். சரி இன்று புலிகள் இல்லாத? நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், பாராளுமன்னறம் என்றும், மகாண சபை என்றும் பயணிக்கும் சுரேஸின் பாதையில் பதவிகளும் தனதும் தன் குடுப்பத்தினதும் சுக போக வாழ்வுகள் என்பதற்கு அப்பால் தனது அரசியல்? செயற்பாட்டில் ஏக போகமாக நிற்றல் என்பது எப்போதும் வெளிப்பாடாக இருந்து வருகின்றது. முரண்பட்டவர்களுடன்  ஜக்கியப்பட்டு  செயற்படுதல் என்பது ‘இரண்டு ஈபிஆர்எல்எவ் இருக்க முடியாது’ என்ற சுரேஸின் வாதங்களிலிருந்து அடிபட்டே போகின்றது. முதலில் புலிகளுடன் இணைந்து செயற்பட்டது ஒரு வரலாற்று துரோகம் என்பதை பொது மக்கள் மன்றத்தில் சுரேஸ{ம் அவர் சகாகளும் ஒத்து கொள்ளட்டும். தொடர்ச்சியாக தனது முன்னாள் தோழர்கள் பலரின் மரணத்திற்கு தாங்களும் புலிகளுடன் இணைந்து செயற்பட்டதுவும் மூலம் காரணம் என்பதை ஒத்துக்கொள்ளட்டும் பின்பு முரண்பட்டவர்களுடன் இணைந்து செயற்படுதல் என்பதில் ஏதாவது அர்த்தம் உண்டா என்பதை மறுபரிசீலனை செய்ய நாம் முற்படுகின்றோம். அதுவரை தோழர் நாபாவின் நாமத்தை உச்சரிப்பதுவும் ஈபிஆர்எல்எவ் என்ன பெயரை பணன்படுத்துவதும் அவரகளின் மனச்சாட்சிக்கே (அப்படி ஒன்ற அவர்களிடம் இருந்தால்) விரோதமான செயற்பாடாகும். இவை எல்லாவற்றிற்கும் அப்பால் இந்தியாவில் தனது வாழ்வை தொடரும் சரேஸ் இன் சகாவிற்கு தெரிந்திருக்குமோ தெரியாது ஐக்கியத்தை ஏற்படுத்த முரண்பாடுகளை பேசித் தீர்தல் என்ற நீண்ட பயணத்தில் 1990 களில் என்தேசத்தை விட்டு புலம்பெயர்ந்த பின்பு எவ்வளவு பங்களிப்புகளை தொடர்சியாக செய்து வருகின்றேன் என்பது. உங்கள் சகாகள் உளசுத்தியுடன்(சிவசக்தி ஆனந்தன், இரவி, வில்சன்) பேசுவார்கள் என்றால் இவற்றை உங்களால் அறிய முடியும். கடந்த முறை இந்தியா வந்த போதும் பல விடயங்கள் பேச வேண்டி இருந்தும் சில விடயங்களை மட்டும் நானாக தேடிவந்து சுரேஸின் சகாவான உங்களுடன் பேசிவிட்டு சென்றதும் இவற்றின் ஒரு தொடர்ச்சிதான். நாங்கள் ஈபிஆர்எல்எவ் என்ற வட்டத்திற்கு அப்பால் ஐக்கிய முன்னணி, மக்களின் விடுதலையை முன்னிலைப்படுத்தும் அரசியல் செயற்பாடுகள், கலந்துரையாடல், பேச்சுவார்த்தை என்ற தளங்களில் நான் எவ்வாறு செயற்பட்டேன் செஙற்பட்டு வருகின்றேன் என்பது உங்கள் அளவிற்கு பிரபல்யம் உள்ளவராக நான் இல்லாவிட்டாலும் என் அளவில் செய்து வருவது மிகச் சிலருக்கு தெரியும். உங்கள் மீதான தனிப்பட்ட கோபம் என்பதை விட உங்கள் போன்றோரின் அரசியல் நிலைப்பாட்டினால் இலங்கை வாழ் தமிழ் சமூகம் முழுவதும் மீளமுடியாத அளவிற்கு? படுகுழியில் தள்ளப்பட்டு விட்டது என்ற கோபம் நிறையவே உங்கள் மீது உண்டு. இது அவ்வப்போது வெளிப்பட்டே வரும். இந்த கோபத்தின் அளவு தங்கள் அரசியல் நிலைப்பாட்டின் மீதும், புலிகள் மீதும் ஒரேயளவாகத்தான் இருக்கின்றது. கொல்வின் ஆர்டி சில்வா சொன்னது போல் ஜேஆர் உம் நானும் நண்பர்கள் என்று என்னால் கூற முடியாது.  ஏன் எனில் நான் இன்றுவரை மக்களை நேசிப்பவன். பாசிசத்துடன், மகள் விரோதிகளுடன் என்றும் சமரசம் செய்து கொண்டு எனது வாழ்வை தக்க வைத்துக் கொண்டவன் அல்ல.

(தோழர் ஜேம்ஸ்)(ஆகஸ்ட் 02,2014)

தமிழீழம் கேட்ட பிரபாகரனும்- நாறிமணக்கும் வல்வெட்டித்துறை நகரசபையும்.

பதவி போட்டிகளால் குழப்பங்களுடன் காணப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தி உள்ளார். வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த மூன்று வருடங்களாக தலைமைப் பதவியைக் குறி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குழப்பங்களுக்கு வடமாகாண முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமக்குப் பதவியை விட்டுத் தராவிட்டால், வல்வெட்டித்துறை நகர சபையை முடக்கப் போவதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்த எஸ்.எக்ஸ்.குலநாயகமும் அவரது குழுவினரும் இணைந்து வல்வெட்டித்துறை நகரசபையை முடக்கி, வல்வெட்டித்துறை மக்களுக்கும், தவிசாளருக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களை நகரசபை நிர்வாகத்திற்கு எதிராகத்தூண்டிவிடும் வகையில் நகரசபையின் கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம் வழங்கமுடியாதெனத் தெரிவித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. (மேலும்....)

இலங்கை பிரச்சினையை ராஜீவ் காந்தி தவறாக கையாண்டார் - நட்வர் சிங்

1987ஆம் ஆண்டில் இந்திய அமைச்சரவையின் அனுமதியின்றியே இலங்கைக்கு இந்திய இராணுவத்தை, அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, அனுப்பி வைத்தார் என்று இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார். அத்துடன், இலங்கைப் பிரச்சினையை ராஜீவ் காந்தி தவறாகவே கையாண்டார். இதனாலேயே அவர் கொல்லப்பட்டார் என்றும் நட்வர் சிங் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி குடும்பத்துக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து தனது சுயசரிதை என்ற பெயரில் புத்தகமொன்றை எழுத்தியுள்ள அவர், அப்புத்தகத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 2005ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த போது ஈராக்குக்கு உணவுக்கு எண்ணெய் ஊழல் திட்டத்தில் சிக்கி தனது பதவியை ராஜினாமா செய்தவரே இந்த நட்வர் சிங். பின்னர் காங்கிரஸை விட்டு வெளியேறி, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். அங்கும் சில மாதங்கள் மட்டுமே நீடித்தார். இந்த நிலையில் தற்போது தனது சுயசரிதையை வெளியிட்டுள்ளார். அதிலேயே அவர், சோனியா காந்தியின் குடும்பத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதா- மோடி குறித்து தரமற்ற விமர்சனம்: மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய படம், கட்டுரை வெளியானது குறித்து இலங்கை அரசு மன்னிப்பு கேட்டுள்ளது. இலங்கை பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.defence.lk என்ற இணையதளத்தில் இன்று  முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த அவதூறான கருத்துக்கள் வெளியாகியிருந்தது. குறிப்பாக தமிழக மீனவர்கள் கைது விவகாரம் குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் குறித்து மிகவும் தரக்குறைவான விமர்சனங்கள் அந்த கட்டுரையின் முகப்பு பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் இருந்து முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த சர்ச்சைக்குரிய படமும், கட்டுரையும் நீக்கப்பட்டது.இதனிடையே, சர்ச்சைக்குரிய கருத்து வெளியானது குறித்து இலங்கை அரசு நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கடிதம் எழுதியிருந்தார்.இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து சர்ச்சைக்குரிய படம் வெளியானது குறித்து இலங்கை அரசு மன்னிப்பு கோரியுள்ளது.

காசா

72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு

காசாவில் நேற்று வெள்ளிக்கிழமை 72 மணிநேர மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட ஒருசில மணி நேரத்திற்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் முடிவுக்கு வருவதாகவும் மீண்டும் தாக்குதல்கள் ஆரம்பிக்கப்படு வதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.  பலஸ்தீன ஆயுதக் குழுக்கள் யுத்த நிறுத்தத்தை மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதன்படி யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் காசாவில் மேலும் 25 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இஸ்ரேல் - ஹமாஸ¤க்கு இடையில் நிபந்தனைகளுடனான மனிதாபிமான யுத்த நிறுத்தம் உள்ளூர் நேரப்படி நேற்றுக்காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப் பட்டதைத் தொடர்ந்து காசாவில் தாக்குதல்கள் தணிந்திருந்தது. ஆனால் யுத்த நிறுத்தம் ஆரம்பமாகி மூன்று மணி நேரத்திற்குள் காசாவில் ரபா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு பலருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாக பலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.(மேலும்....)

காசா பற்றிக் கூறுகையில் கதறி அழுத ஐ.நா. அதிகாரி

காஸா விவகாரம் குறித்து ஊடகம் முன் பேசுகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய அதிகாரி கிறிஸ் கின்னஸ் கதறி அழுதார். அத்துடன் தொடர்ந்து பேச முடியாமல் வெளியேறினார். "பலஸ்தீன மக்கள், அவர்களது குழந்தைகளின் உரிமை ஒட்டு மொத்தமாக நிராகரிக்கப்படுகிறது" என்று அல் ஜஸீரா தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியின் போது குறிப்பிட்டார். ஆனால் தொடர்ந்து அவரால் பேச முடியாத நிலையில் முகத்தை கையால் மறைத்து கதறி அழ ஆரம்பித்தார்.  காசா ஜபலியா பகுதியில் பலஸ் தீனர்கள் தஞ்சம் புகுந்திருக்கும் ஐ.நா. பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி பெண்கள், குழந்தைகள் 20 பேரை கொன்றது குறித்த கின்னஸ், அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவிக்குபோதே இந்த சம்பவம் நிகழ்ந்தது. ஆனால் தனது கண்ணீர் வார்த்தைகளையும் விட உரத்துப் பேசியதாக கின்னஸ் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே கிறிஸ் கின்னஸை அங்கிருந்து நீக்க வேண்டும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அவருடைய கருத்துக்கள் அனைத்தும் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக உள்ளது என்று கூறி அவரை அங்கியிருந்து நீக்க வேண்டும் என்று ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கடிதம் எழுதியுள் ளார் என்று தகவல்கள் தெரிவித் துள்ளன.

ஆகஸ்ட் 01,2014

ஆனந்த தமிழீழம் மலரும்

கியூபாக்கு பயணம் மேற்கொண்ட தமிழினப் படுகொலையாளன் மஹிந்த ராஜபக்சேவின் விமானம் கனடாவில் தரையிறங்கி எரிவாயு நிரப்புவதற்கு கூட கனடா அரசு அனுமதி மறுப்பு! ஈழத் தமிழர்களுக் எல்லா நிலையிலும் ஆதரவாக மட்டுமல்ல இனப்படுகொலையாளனை தன் நாட்டுக்குள் தரையிறங்கக்கூட அனுமதி மறுத்த கனடா நாட்டவர் தான் உண்மையான மனிதர்கள்.! உலகத்தமிழர்கள் சார்பாக நன்றிகள் கோடி கனடா அரசாங்கத்துக்கு...
நன்றி

பி.கு: இன்று இஸ்ரேல் நடாத்தும் பாலத்தீன மக்கள் படுகொலைகளை கனடா அரசு இஸ்ரேலின் பக்கம் நின்று நியாயப்படுத்துகின்றது.

இலங்கை அகதிகளை கடத்திய விடயம் தொடர்பான தகவல்களை எதிர்பார்க்கிறோம் - புதுச்சேரி பொலிஸ்மா அதிபர்

சட்ட விரோதமாக புதுச்சேரியிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு இலங்கை அகதிகளை கடத்திய விடயம் தொடர்பாக, அவுஸ்திரேலியாவிடமிருந்து உத்தியோக பூர்வமான வழியில் சில தகவல்களை எதிர்பார்த்திருப்பதாக புதுச்சேரியின் புதிய தலைமை பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ்மா அதிபர் பிரவீன் ரஞ்சன் தெரிவித்தார். புகலிட கோரிக்கையாளர், புதுச்சேரி கரையிலிருந்து படகில்; புறப்பட்டு சென்றதாக பலர் கூறினும் இவர்களை யாரும் காணவில்லை. இது இவ்வளவு இரகசியமாக எவ்வாறு நடந்ததென்பது பொலிஸாருக்கும் தெரியவில்லை. இதனால்தான் நீங்கள் எங்களிடமிருந்து உத்தியோகபூர்வ அறிக்கையை பெற முடியாது என அவர் கூறினார். தற்போது அரசாங்க வழியில் சில தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறிய ரஞ்சன், இந்த தகவலின் அடிப்படையில் குறித்த ஒரு படகின் மீது ஒரு வழக்கை பதிவு செய்தோம். இதில் பயணித்தவர்கள் புதுச்சேரியின் நியாயாதிக்கத்தினுள் வராத முகாம்களில் வாழ்ந்தவர்கள்.  படகின் உரிமையாளர்களான இருவர் கைது செய்யப்பட்டுள்ளபோதும் இதில் பயணித்தவர்கள் பற்றியும் இவர்கள் பிடிபடாமல் புறப்பட்டு சென்றது எவ்வாறு எனவும் ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகவல்கள் இல்லையென ரஞ்சன் கூறினார். (தி இந்து)

காசா தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு ஆயுதம் விநியோகிக்கும் அமெரிக்கா

காசா மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க ஆயுதக்கிடங்கில் இருந்து ஆயுதங் களை பெற அமெரிக்கா அனுமதி அளித்திருப்பதோடு குறித்த ஆயுதக்கிடங்கிற்கு கடந்த வாரத் தில் கையெறி குண்டுகள் மற்றும் பீரங்கிக் குண்டுகளை விநியோ கித்ததை அமெரிக்கா உறுதிசெய் துள்ளது. அமெரிக்காவின் ஆயுதத் தேவைக்காக இஸ்ரேலுக்குள் இந்த ஆயுதக் கிடங்கு அமைக் கப்பட்டுள்ளது. இந்த ஆயுதங் களை அவசர நிலைகளில் பயன் படுத்த இஸ்ரேலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவசர நிலையின்றி 10 தினங்க ளுக்கு முன்னரே இந்த கிடங்கில் இருந்து ஆயுதங்களை பெற இஸ்ரேல் அனுமதி கோரியுள்ளது. 'இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா பொறுப்புகூற வேண் டும். இஸ்ரேலின் அபிவிருத்திக்கு உதவுவது மற்றும் அதன் சுயபாது காப்பு திறனை தயார் நிலையில் வைத்திருப்பது அமெரிக்க தேசிய நலனுக்கு முக்கியமானதாகும்" என்று அமெரிக்க பாதுகாப்பு மைய மான பென்டகனின் பேச்சாளர் ரியர் அட்மிரல் ஜோன் கிர்பி குறிப் பிட்டார். மறுபுறத்தில் இஸ்ரேலின் ஏவு கணை பாதுகாப்பு முறைக்கு மில் லியன் டொலர்களை மேலதிக நிதி யாக வழங்க அமெரிக்க கொங் கிரஸ் அவையில் அனுமதி பெற அந்நாட்டு அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.

ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஹமாஸ் அழைப்பு

இஸ்ரேலுக்கு எதிரான போராட் டத்தில் இணையும்படி பலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் லெபனான் 'ஷியா’ குழுவான ஹிஸ்புல்லாஹ்வுக்கு அழைப்பு விடுத்துள்ளது. 'போராட்டத்தில் லெபனான் முன்னணியும் எம்முடன் இணையும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்" என்று ஹமாஸ் அரசியல் பிரிவு துணைத்தலைவர் மூசா அபு+ மர்சூக் ரஷ்ய செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். இதில் இஸ்ரேல் எல்லையான தெற்கு லெபனானில் இருந்து தாக்குதலை ஆரம்பிக்குமாறு ஹிஸ்புல்லாஹ்வை அவர் கோரியுள்ளார். 'லெபனான் எதிர்ப்பு போராட்டம் பெரும் தாக்கத்தை செலுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை" என்று கெய்ரோவில் இருக்கும் மர்சூக் குறிப்பிட்டார்.  முன்னதாக காசா எதிர்ப்பு போராட்டத்திற்கு ஹிஸ்புல்லாஹ் தலைவர் செய்யித் ஹசன் நஸ்ருல்லாஹ் தமது ஆதரவை வெளியிட்டிருந்தார்.

இஸ்ரேலை தீவிரவாத தேசமாக பிரகடனம் செய்தது பொலிவியா

காசா மீதான இஸ்ரேலின் தாக்கு தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலி வியா இஸ்ரேலுடனான விசா விலக் களிக்கும் ஒப்பந்தத்தை அகற்றிக் கொண்டதோடு இஸ்ரேலை ஒரு 'தீவிரவாத தேசம்" என்றும் பிரகட னம் செய்தது. பொலிவிய ஜனாதிபதி எவோ மொராலஸ் இந்த அறிவிப்பை விடுத்தார். இஸ்ரேலுடனான விசா விலக்கு ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 1972 ஆம் ஆண்டிலிருந்து இஸ்ரேல் நாட்டவர்கள் பொலிவியா வுக்கு விசா இன்றி சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். 'காசா மீதான தாக்குதல் மூலம் இஸ்ரேலின் உயிருக்கு மதிப்பளிக் காத கொள்கை உறுதியாகிறது. அமைதி மற்றும் இணக்கத்துடன் சக வாழ்வை கொண்ட ஆட்சியை நடத்தும் சர்வதேச சட்டத்தையும் அது மதிப்பதில்லை" என்று மொரா லஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து பொலிவியா இஸ்ரேலுடனான இராஜதந்திர உறவை இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.

என் தேவியே, யாழ்தேவியே

என் தேவியே, யாழ்தேவியே
மீண்டும் யாழ் நோக்கி வருகிற என்தேவியே
வருக, வருக என வாழ்த்துகிறே