|
||||
|
ஆடி 2011 மாதப் பதிவுகள் ஆடி 31, 2011 மனித உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட வேண்டும் - நிருபமாராவ் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கை கட்டாயம் பரிசீலிக்க வேண்டுமென மாற்றலாகி செல்லும் முன்னாள் வெளியுறவு செயலர் நிருபமாராவ் கூறியுள்ளார். இந்தியாவின் "ஹெட்லைன்ஸ் டுடே' ஊட கத்திற்கு வழங்கிய பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கும் போது, இக் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த முடியாது. சனல்4 காணொளியின் படி யுத்தத்தின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. இது யுத்த வலய சோகச் சம்பவங்கள் ஆகும். சில சம்பவங்கள் பற்றி இந்தியா தொடர்ந்தும் இலங்கையுடன் பேச்சுகளை நடத்தும். மூன்றாம் தரப்பினரின் தலையீட்டை தவிர்க்க வேண்டும். இலங்கையின் அயல் நாடு இந்தியா என்பதால் தான் நாங்கள் நேரடியாக பேசவேண்டியுள்ளது. யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை நோக்கும் போதும், காயப்பட்டவர்கள், இடம் பெயர்ந்தவர்களைக் கணக்கிடும் போதும் இலங்கையில் நடந்த உள்நாட்டு யுத்தம் ஒரு சோக சம்பவம் தான். வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். குரோதங்கள் களையப்பட்டு சிறுபான்மையினரின் அபிலாஷைகள் கவனிக்கப்பட வேண்டும். அவர்களும் அந்நாட்டு பிரஜைகளே. அவர்களும் நாட்டின் சுபீட்சத்திற்காக பங்களிப்பு செய்யக் கூடியவர்களே என்றார். புலம்பெயர் மக்களை வாக்காளராக பதிய தேர்தல் ஆணையாளர் இணக்கம் - யோகராஜன் புலம் பெயர் மக்களை வாக்காளராகப் பதிவதற்கு தேர்தல் ஆணையாளர் இணக்கம்தெரிவித்திருப்பதாக ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நான்கு நாடாளுமன்ற ஆசனங்கள் குறைக்கப்பட் டுள்ளது தொடர்பில்தான் தேர்தல் ஆணையாளரை நேரில் சந்தித்த போதே அவர் இவ்வாறு இணக்கம் தெரிவித்ததாகக் குறிப்பிட்ட யோகராஜன் இது சம்பந்தமாக மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் உள்ள மொத்த 225 ஆசனங்களில் 29 ஆசனங்கள் தேசியப்பட்டியலுக்காக ஒதுக்கப்படுகின்றன. மிகுதியுள்ள 196 ஆசனங்களில், ஒரு மாகாணத்துக்கு நான்கு வீதமாக ஒன்பது மாகாணங்களுக்கும் 36 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. (மேலும்....)ஆடி 31, 2011 தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண தடையாக இருக்கும் ராஜபக்சே ராணுவமய போக்கு -பிரகாஷ் காரத் கடும் விமர்சனம் ராஜபக்சேவின் ராணுவமயமாக் கல் நடவடிக்கைதான் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண பெரும் தடையாக இருக்கிறது. இலங் கை அரசின் எதேச்சதிகார நடவடிக் கைக்கு எதிராக தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து செயல்பட முன்வரவேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் அறை கூவல் விடுத்தார். மேலும், அங்கு நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து உயர்மட்டக் குழு விசாரித்து, தவறு இழைத்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்றும், அரசியல் தீர்வு காணவும், மறுவாழ்வு பணிகள் தீவிரமாக நடைபெறவும் அவர் வலியுறுத்தினார். (மேலும்....)ஆடி 31, 2011 இலங்கைத் தமிழர் விவகாரம்; இந்தியப் பிரதமருடன் உலகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்திப்பு 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் முழு அதிகாரங்களும் வழங்கப்பட உறுதி செய்யுமாறு வேண்டுகோள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை உலகத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவர் சேதுராமன் உட்பட முக்கிய தமிழ் ஆர்வலர்கள் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் இடம்பெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவும் இச்சந்திப்பில் உடனிருந்தார். இலங்கைப் பிரச்சினை, ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்புக்கு வரும் போது, தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா நிற்க வேண்டும், போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து செய்ய வேண்டும். 13 ஆவது சட்டத்திருத்தம் அளிக்கும் அனைத்து உரிமைகளையும் இந்திய தமிழர்களுக்கு பெற்றுத்தர இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (மேலும்....) ஆடி 31, 2011 கஷ்ட காலங்களில் நட்பு:இன்று தனித்த செயற்பாடு TNA மீது SLMC தலைவர் கடும்போக்கில் கண்டனம்!
தமிழ், முஸ்லிம் உறவினை சரியாகப் பேணி எமது சிறுபான்மைச் சமூகங் களுக்கான
தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு
நாம் பங்காளர்களாக இருந்து செயற்பட்டோம். தமிழ்த் தேசிய சக்திகளுக்கு
மிகப்பெரும் பக்கபலமாக அன்று முதல் இன்றுவரை நாம் இருந்து வருகின்றோம். வட
கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மைச் சமூகத்திற்கு நியாயமானதொரு தீர்வு
கிடைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ், முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்படுவ தோடு,
இச் சமூகத்தினை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அமைப்புகளும் ஒருமித்து
செயற்பட வேண்டும். இந்த யதார்த்தத்தை அறியாமல் புறந்தள்ளிவிட்டு யார் செயற்
பட்டாலும் எமது சமூகத்திற்கான நிரந்தரத் தீர்வு கிடைக்காமல் எட்டாக்கனியாக
ஆகிவிடும். ஆடி 31, 2011 OPEN LETTER to Johnathan Miller and Channel 4 Producers of Sri Lanka Attack videosWhat is your problem, Johnathan? To me to have that kind of dishonesty merely proves that this man is no Fernando, but in the eyes of Major General Shavendra de Silva he is a “For-U-none-Ado”, just another phantom created in the studios of Channel 4. Surely, Johanathan, are you trying to tell me that your Fernando is a gutless-spineless-nincompoop not wanting to show his face on camera, and only interested in bloating his wallet and his bank balance by hook or by crook? (more.....) ஆடி 31, 2011 புன்னகையை விற்பவளின் கதை (திலினி தயானந்த)
பளபளக்கும் விழிகள், பூக்கும் இதழ்கள் என்பன மகிழ்ச்சி நிரம்பி வழியும் ஒரு வாழ்க்கையின் அறிகுறி. உண்மைதான், நான் இன்று எல்லோர் முன்னிலையிலும் புன்னகைக்கிறேன். இவ்வுலகில் வாழும் ஏனைய எல்லோருக்கும் இருக்கும் பிரச்சினைகள் எதுவுமே எனக்கு இல்லாதது போல பூரிப்புடன் உரையாடுகிறேன். உண்மையில் இன்னுமொருவர் முன்னிலையில் எனது விழிகளில் கண்ணீரைத் தேக்கி வைக்க எனக்கு உரிமையில்லை. (மேலும்....)
ஆடி 31, 2011 பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் (பிசிசிஐ) போட்டி திட்டமிடலில் இருந்த குறைபாடு காரணமாகவே லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு தோல்வி ஏற்பட்டது என்றார் பாகிஸ்தான் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம். இங்கிலாந்து தொடருக்கு இந்திய அணி முழு அளவில் தயாராகவில்லை இங்கிலாந்து தொடருக்கு முன், இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடியது அது இங்கிலாந்து தொடருக்கான சரியான பயிற்சி அல்ல லோர்ட்ஸில் ஏற்பட்ட தோல்வி அதை நிரூபிப்பதாக அமைந்தது என்றார். (மேலும்....) ஆடி 31, 2011 On farewell visit, Nirupama meets Mahinda Rajapaksa (R.K. Radhakrishnan) Foreign Secretary Nirupama Rao arrived here on Friday on a three-day visit, ahead of her retirement on July 31. She met Sri Lankan President Mahinda Rajapaksa over breakfast on Saturday. Officials described the meeting as a “farewell” that the President wanted to accord her because of the special relationship she had with the country: Ms. Rao, a 1973-batch IFS officer, had served as High Commissioner and, earlier, as First Secretary in the Indian mission here. The meeting was the result of a spontaneous invitation from Mr. Rajapaksa. Ms. Rao mentioned to Mr. Rajapaksa about her retirement when she came here last June as part of the troika to hold discussions on the rehabilitation and resettlement of the war-battered Tamils. Ms. Rao accepted the invitation to visit Sri Lanka ahead of her retirement, but a series of high-profile visits to New Delhi meant that she had to keep her visit in abeyance. The President's office handed over a formal invitation to her “about five days ago.” (more...) ஆடி 30, 2011 சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாறவேண்டுமென சம்பந்தன் தெரிவித்த செய்தியைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன் - ஆனந்தசங்கரி
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாகத் தமிழர்
விடுதலைக் கூட்டணித் தலைவரான ஆனந்தசங்கரி/சித்தார்த்தன் ஆகியோர்
செயற்பட்டார்கள். அதற்காக நான் பாராட்டுகிறேன். டக்ளஸ் தேவானந்தாவும்
அவ்வாறு மாற வேண்டும்' எனவும் கூறியுள்ளீர்கள். இது ஓர் விசமத்தனமான
விமர்சனம் என்றும் இது எம்மக்களின் நலனைப் பாதிக்கும் விடயமாக, உங்களுக்கும்
புரியவில்லையா? சித்தார்தனும் டக்ளஸும் தங்கள் நிலையை வெளிப்படுத்துவார்கள்.
என்னைப் பொறுத்தவரை இத்தேர்தலில் மட்டுமல்ல, எந்தத் தேர்தலிலும் உண்மைய
மட்டுமே கூறிவந்துள்ளேன். நெஞ்சில் நிறைந்துள்ள சுமையை இறக்கி
வைத்துவிட்டேன். எவரின் அழைப்புமின்றி நானும் தம்பி சித்தார்த்தனும் எதுவித
பலனையும் எவரது கைகளையும் எதிர்பாராது அரப்பணிப்புடன் செயற்பட்டோம். கடந்த
ஆறு மாதங்களாகியும் இதுவரை தங்களின் பாராட்டை எதிர்பார்க்காத நிலையில்
தங்களின் கருத்து எமக்கும் கூடுதலாக எமது ஆதரவாளர்களுக்கும் வேதனையளிக்கிறது.
நான் தங்களைப் பற்றிய விமர்சனங்களைச் செய்ய முற்பட்டால் நீங்களல்ல, எம்
மக்கள் தான் மிகவும் வேதனையடைவார்கள்.
(மேலும்......) கறுப்பு ஜூலை
"I am not worried about the opinion
of the Jaffna people... now we cannot think of them, not about their
lives or their opinion... the more you put pressure in the north, the
happier the Sinhala people will be here... Really if I starve the Tamils
out, the Sinhala people will be happy."
"Mobs of Sinhala youth rampaged
through the streets, ransacking homes, shops and offices, looting them
and setting them ablaze, as they sought out members of the Tamil ethnic
minority."
இச்சின்னஞ்சிறிய தீவு 1958,1977,1981 ஆம் ஆண்டுகளில் இனக் கலவரங்களைக் கண்டு
மனிதவளம், பொருளாதாரவளம் என்றெல்லாம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆனால்,
இவற்றிற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல 1983 ஆம் ஆண்டு ஜூலை கலவரம் அமைந்தது.
அதனால்தான் 1983 ஜூலை மாதம் "கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படுகிறது. ஆடி 30, 2011 சாதிவெறியின் தீவினை பேசும் நஞ்சுபுரம் (திரைவிமர்சனம்) (வித்யாசாகர்)
படம் பார்த்து வெளியே வருகையில் வளைந்து நெளிந்து திரும்பும் பாதையை கண்டாலும் பயம் வருகிறது பாம்பின் நினைவு எழுகிறது. வீட்டில் கால் கழுவ தண்ணீர் ஊற்றினாலும் தண்ணீர் கரைந்து கீழே போகும் நெளிவில் கூட பாம்பின் அசைவு தெரிகிறது. திரும்பினால் நீர் வரும் குழாய், கொடியில் வளைந்து கிடக்கும் புடவை, கீழே அறுந்துக் கிடக்கும் கொடிக்கயிற்றை கண்டால்கூட பாம்பும் நஞ்சுபுரம் திரைப்படத்தின் நினைவும் வருவதை தடுக்கவே முடிவதில்லை. காதலும் வீரமும் செறிந்ததவன் தான் தமிழன் என்பார்கள். காதலின்றி காவியங்களோ, கடைத்தெரு முனையில் நடக்கும் நாடகமோ, வீட்டில் தினமும் ஒளிபரப்பப்பட்டு வயதில் முதிர்ந்தவர்களுக்கு பொழுதுபோக்காக அமையும் சீரியலோக் கூட முடிவதில்லை. அப்படி காதல் நாளத்தின் வழியே ஓடும் ரத்தமாகக் கரைந்த தமிழரின்’ பல ஐதீக முறைகள் அக்காலத்திலிருந்தே பின்பற்றப்பட்டு வருவதை உற்றுநோக்கி அதில் ஒன்றை எடுத்து ஒரு கிராமாம் வளைத்து காதலின் வழியே ஜாதி வெறியின் கொடூரத்தையும் திறம்பட சொல்லி இருக்கிறார் இயக்குனர் சார்லஸ். (மேலும்......) ஆடி 30, 2011 பாலஸ்தீன மக்களோடு நிற்போம்-பால்கன் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிக்கை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்க்கும் வகையில், பாலஸ்தீன மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்து அவர்களோடு நிற்போம் என்று பால்கன் பகுதியிலுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிக்கை விடுத்துள்ளன. ஆக்கிரமிப்பு செய்துள்ள இஸ்ரேலிய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களிலிருந்து மக்களை விடுவிக்கவும், இஸ்ரேலுக்கு அருகிலேயே கிழக்கு ஜெருசலேமை தலைநகராகவும், 1967 ஆம் ஆண்டு இருந்த எல்லைகளோடும் இறையாண்மை கொண்ட ஒரு சுதந்திரமான பாலஸ்தீனத்தை உருவாக்கும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தில் இது முக்கியமான நிகழ்வாகும். (மேலும்......)ஆடி 30, 2011 ஐ.தே.க பிளவு உக்கிரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் இல்லாத சமயத்தில் கட்சித் தலைமைத் துவத்திற்கு கட்சி பிரதித்தலைவர் கரு ஜயசூரியவை கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் கட்சிக்குள் ஏற்பட்டிருந்த பிளவு மேலும் உக்கிரமடைந்து, கட்சி இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் கடந்த வாரம் நடப்பதற்கு முன்னரே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் லண்டன் பயணமானார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்குமாறு கட்சி பிரதித் தலைவர்களில் ஒருவரான சஜித் பிரேமதாஸ அடங்கலான மாற்றுக் குழுவினர் மற்றொரு பிரதித்தலைவரான கரு ஜயசூரியவை கோரினர். (மேலும்......) ஆடி 30, 2011 ராணுவ ரீதியில் ஈரான் ஆபத்தானதல்ல, நேட்டோ கருத்துக்கு ரஷ்யா மறுப்பு ஐரோப்பாவுக்கு ஈரான் ராணுவ ரீதியில் ஆபத்தான நாடு என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தெரி விக்கும் கருத்துக்கு ரஷ்யா மறுப்பு தெரிவித்துள்ளது. நேட்டோ அமைப்பின் கருத்துக்கு ரஷ்யாவின் பிரதி நிதி டிமிட்ரி ரோகோசின் பதிலடி கொடுத்திருக்கிறார். ஈரான், ஐரோப்பிய நாடு களை அச்சுறுத்தும் நாடாக இருக்கிறது என்கிற அமெ ரிக்காவின் கருத்து ஆதார மற்றது என்று கூறும் அவர், ஈரானின் அணுசக்தித்திட் டம் அமைதிப்பணிக்கா னது. அணுசக்தியை அமை திப்பணிக்காக பயன்படுத் தும் ஈரானின் முயற்சியை நாங்கள் உறுதியாக ஆதரிக் கிறோம். எந்த நாட்டையும் மிரட்டுவதற்கு அணுஆயு தங்களை ஈரான் குவித்து வைக்கவில்லை என்று குறிப் பிட்டுள்ளார். (மேலும்......)ஆடி 30, 2011 மட்டு. வங்கி கொள்ளை சம்பவம் வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 6 சூத்திரதாரிகள் மன்னாரில் கைது மட்டக்களப்பு வங்கிக் கொள்ளையின் பிரதான சூத்திரதாரிகள் இருவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் மன்னாரில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடொன்றுக்குத் தப்பிச் செல்வதற்காக மன்னாருக்குச் சென்று, அங்குள்ள தங்குவிடுதியொன்றில் தங்கியிருந்த போதே இவர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் பயணித்த ஜீப் வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி மட் டக்களப்பில் மக்கள் வங்கியை உடை த்து தங்க ஆபரணங்கள், ரொக்கப்ப ணம் என்பவற்றை கொள்ளையடித் துச் சென்றனர். இவர்கள் தேடப்பட்டு வந்த நிலையிலேயே நேற்று முன்தினம் 28 ஆம் திகதி கடற்படையின் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.ஆடி 30, 2011
நோர்வேயில் மீண்டும் மர்ம மனிதன் நடமாட்டம்அமைதிக்கு பெயர் பெற்ற நோர்வே நாட்டில் கடந்த வாரம் இரட்டை தாக்குதல் நடந்தது. தலைநகர் ஒஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்பிலும், ஒரு தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டதிலும் 83 பேர் பலியானார்கள். இதையடுத்து நாடு முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு மீண்டும் வெடிகுண்டு பீதியால் பரபரப்பு ஏற்பட்டது. ஒஸ்லோ மத்திய ரெயில் நிலையத்தில் இருந்து ஒரு பஸ் புறப்பட தயாரானது. அதில் 20 பயணிகள் இருந் தனர். பஸ் கிளம்ப தயாரானதும், பஸ்சில் இருந்த மர்ம மனிதன் தான் கொண்டு வந்த சூட்கேஸை பஸ்சில் வைத்து விட்டு வேகமாக இறங்கினான். கறுப்பு நிறத்தில் உடையும், வெள்ளை நிறத்தில் தொப்பியும் அணிந்திருந்த அவன், வேகமாக நடையை கட்டினான். (மேலும்......) ஆடி 30, 2011 பாக். அணுவாயுதம் தயாரிப்பதை தடுக்க அமெரிக்க, பிரிட்டன் முயற்சி
‘கடந்த 1970 களில், பாகிஸ்தான் அணு ஆயு தம் தயாரிக்கும் முயற்சியில்
ஈடுபட்டபோது, அதை தடுக்கும் முயற்சியில், அமெரிக்காவும், பிரிட்டனும்
ஈடுபட்டன’ என தகவல் வெளியாகி யுள்ளது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆவண
காப்பகத்திலிருந்து, சில முக்கிய தக வல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக
கடந்த 1970 ஆம் ஆண்டுகளில், பாகிஸ்தான், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில்
ஈடுபட்ட போது அதை தடுப்பதற்கு அமெரிக்கா மேற் கொண்ட முயற்சிகள் குறித்த
தகவல்கள் தற் போது வெளியாகியுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: கடந்த
1978 – 81 வரையிலான காலகட்டத்தில், அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில்
பாகிஸ்தான் ஈடுபட்டு இருந்தது. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சாஸ்மா என்ற
இடத்தில், அணு உலை அமைக்கும் நடவடிக்கைகளில், பாகிஸ்தான் ஈடுபட்டது. இதற்கு
தேவையான செறிவூட்டப்பட்ட யூரேனியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை, அணுசக்தி
அளிக்கும் நாடுகளிடமிருந்து பெறுவதற்கு பாகிஸ்தான் முயற்சித்தது.
(மேலும்......) ஆனந்த சங்கரி,சித்தார்த்தன் போன்று டக்ளஸ் தேவானந்தாவும் மாற வேண்டும் - சம்பந்தன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையைப் பேசி தமிழ் இனம் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் ஆகியோர் செயற்பட்டார்கள். அதற்காக அவர்களை நான் பாராட்டுகின்றேன். டக்ளஸ் தேவானந்தாவும் அவ்வாறு மாற வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். குச்சவெளிப் பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகப் போட்டியிட்டது. இதனால் அவர்களின் பிரச்சினையும் தீராது, எமது பிரச்சினையும் தீராது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையே தெளிவான புரிந்துணர்வு உண்டு. எனினும் எம்மிடையே ஒருமைப்பாடு தேவையாக உள்ளது. இதனை உணர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட வேண்டும். மக்களின் உரிமைகளைப் பொறுத்தவரை தெளிவான நிலைப்பாடு அவசியம். எமது வாக்குகளைப் பிரித்து பெரும்பான்மையினம் நன்மை பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சம்பந்தன் தெரிவித்தார். (மேலும்...) ஆடி 29, 2011 நோர்வே கொலையாளியை உருவாக்கியவர்கள் ? (சபா நாவலன்)
உலகத்தை ஆயுத மயமாக்கலையும் உலகை சாதாரண மனிதர்களின் வாழ்க்கைக்கு ஒவ்வாத பிரதேசமாக்குவதற்கும் நவீன ஏகாதிபத்திய அரசுகள் இஸ்லாமிய எதிர்ப்பு வாதத்தையும், அதனை எதிர்கொள்ள சாரி சாரியான மனிதப் படுகொலைகளையும் தீர்வாக முன்வைத்தன. இவ்வாறான மனிதப் படுகொலைகள் சமூக அங்கீகாரமாகவும் சமூகத்தின் பொதுப் புத்தியாகவும் மாற்றப்பட்டது. ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அப்பாவிகள் சாரி சாரியாகக் கொல்லப்படும் போது, ஏகபோகங்களின் படைகள் இரத்தக்குளிப்பு நடத்தும் போது மேற்கின் ஊடகங்கள் மூச்சுக்கூட விடுவதில்லை. அதே வேளை மேற்கின் இராணுவம் தாக்குதலில் கொல்லப்பட்டால் தேசத்திற்காக உயிரிழந்த மா வீரர்களாகச் சித்தரிக்கப்படுகின்றனர். நோர்வேயில் கொலை நிகழ்ந்த அதே நாள் இன்னொரு நாள் போன்று ஆப்கானில் விடிந்தது. ஐந்து அப்பாவிக் குழந்ததைகள் நேட்டோ படைகளின் குண்டுகளால் கடுமையான எரிகாயங்களுக்கு உள்ளாகினர். (மேலும்...) ஆடி 29, 2011 தமிழராய் பிறந்தது தவறா? ஓர் உண்மைச் சம்பவம் கொழும்பிலுள்ள பிரபலமான கணக்காய்வு நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர் ஒருவருக்கு நேர்ந்த கதி இது. கணக்காய்வு நிறுவனங்கள் பிற நிறுவனங்களின் நிதியிடல் அறிக்கைகளையும் கணக்காய்வுகளையும் மேற்கொள்கின்றன. அந்த வகையில் இந்தப் பிரபலமான நிறுவனத்துக்கு துறைமுகத்திலுள்ள ஏற்றுமதி இறக்குமதியுடன் தொடர்புடைய நிறுவனமொன்றின் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கிடைத்துள்ளது. அதன்பிரகாரம் துறைமுகத்துக்குள் அமைந்துள்ள அந்த நிறுவனத்துக்குச் சென்று கணக்காய்வுகளை மேற்கொள்ள பிரபல நிறுவனத்தின் சார்பாக நால்வர் நியமிக்கப்பட்டனர். அவர்களில் இந்தத் தமிழ் இளைஞரும் ஒருவர். (மேலும்...) ஆடி 29, 2011 யாழ். மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் 9இலிருந்து 5 ஆக குறைப்பு யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் நாடாளுமன்ற ஆசனங்களின் 9இலிருந்து 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே இதற்கான காரணம் என தேர்தல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். யாழ் மாவட்டத்திலிருந்து குறைக்கப்படும் இந்த 4 ஆசனங்களும் இரத்தினபுரி, குருணாகல், பதுளை, மாத்தறை மாவட்டங்களுக்கு தலா ஒன்றுவீதம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு தேர்தலின்போது யாழ் மாவட்டத்திற்கு 11 ஆசனங்கள் இருந்தன. 1994 ஆம் ஆண்டு தேர்தலின்போது அந்த எண்ணிக்கை 10ஆகவும் 2000 ஆம் ஆண்டு தேர்தலின்போது 9ஆகவும் குறைக்கப்பட்டிருந்தது.இனிவரும் தேர்தலின்போது யாழ் மாவட்டத்திலிருந்து 5 எம்.பிகள் மாத்திரமே தெரிவுசெய்யப்படுவர். முன்னர் யாழ் மாவட்டத்தில் 816,005 வாக்காளர்கள் இருந்தனர். எனினும் யுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானோர் இடம்பெயர்ந்த நிலையில் 2010 ஆம் ஆண்டின் வாக்காளர் பதிவுகளின்படி யாழ் மாவட்ட வாக்காளர் எண்ணிக்கை 484,791 ஆக குறைவடைந்துள்ளது. ஆடி 29, 2011 எங்கள் கடற்பகுதியில் வேவு பார்க்க வேண்டாம் அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை தங்கள் நாட்டின் கடற் கரையையொட்டி உள்ள பகுதிகளில் வேவு பார்ப் பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக் காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. தைவான் ஜலசந்தியில் கடந்த மாதத்தில் இரண்டு, மூன்று முறை அமெரிக்கா வின் ஆளில்லா உளவு விமா னங்கள் வட்டமிட்டுள்ளன. ஒருமுறை சீனாவின் போர் விமானங்கள் சீறிப்பாய்ந்து போய் அமெரிக்க ஆளில்லா விமானத்தை மடக்கியது. சீனாவை வேவு பார்ப்பது தான் அந்த உளவு விமானங் களின் நோக்கமாக இருந்தி ருக்கிறது. (மேலும்...)ஆடி 29, 2011 இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வாய்ப்பு இன்று உருவாகியிருக்கிறது கடந்த வார இறுதியில் நடந்து முடிந்த 65 உள்ளூராட்சி மன்றங் களின் தேர்தல் முடிவுகள் இலங்கையின் பயங்கரவாதத்தை உரு வெடுக்கச் செய்து, பல்வேறு பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமை த்திருந்த இனப் பிரச்சினைக்கு சகல மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிரந்தரமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு சிறந்த சூழ்நிலையை இன்று உருவாக்கியிருக்கிறது. இத்தேர்தல் முடிவுகளில் இந்நாட்டு பெரும்பான்மை மக்களின் பேராத ரவும், ஆணையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை யிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், தமிழ் மக்களின் அங்கீகாரமும், ஆணையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் மக் கள் தங்கள் வாக்குரிமையை சரியான முறையில் பயன்படுத்தி வழ ங்கியுள்ளார்கள். எனவே எத்தகைய அரசியல் தீர்வையும், இனப்பிரச்சினைக்கு தீர்வை ஏற்ப டுத்துவதற்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முதலில் இது விடயம் குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தி, அவர்களின் கருத்துக்களையும் நிலைப்பாடுகளையும் அறிந்து அவற்றையும் இறுதி அரசியல் தீர்வில் இணைத்துக் கொண்டு இந்நாட்டு மக்கள் அனைவரதும் அங்கீகாரத்துடன் அரசியல் தீர்வை கொண்டு வரு வதற்கு அரசாங்கம் இப்போது ஆர்வத்துடன் இருந்து வருகிறது. (மேலும்...) ஆடி 29, 2011 கடலில் மூழ்கிய தமிழகத்தின் தென்திசைக் குமரிக் கண்டம் 1960 ஆம் ஆண்டில் அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிதிக்கொடை அளித்து இந்து மா கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த உளவில் தமிழகத்தின் கன்னியா குமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். முதலாவதாக கப்பலில் சென்று ஒலிச் சமிக்கை அனுப்பி உளவு செய்ததில் (Ultra-Sonic Probing) தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத் தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். (மேலும்...) ஆடி 29, 2011 அமெரிக்க கடன் நெருக்கடி உலக பொருளாதாரத்தை பாதிக்கும் அமெரிக்காவின் கடன் நெருக்கடியைத் தீர்க்க விரைவில் ஒரு முடிவு எடுக்காவிட்டால், உலகப் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்.) தலைவர் கிறிஸ்டின் லேகார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா தன் கடன் உச்ச வரம்பான 14.3 டிரில்லியன் டொலரை, கடந்த மே மாதம் எட்டிவிட்ட நிலையில், கடன் நெருக்கடியைத்தீர்ப்பதற்கான முயற்சிகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சித்தரப்பில் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்க நிதியமைச்சகம், ஆகஸ்ட் 2ம் திகதிக்குள் இப்பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் அரசு அன்றாடச் செலவுகளுக்கே திண்டாட வேண்டி வரும். அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் உயர்ந்து விடுமென எச்ச ரிக்கை விடுத்திருந்த போதும் கூட, நேற்று வரை அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில், கடந்த 25ம் திகதி ஜனாதிபதி பராக் ஒபாமாவும், எதிர்க்கட்சித் தலைவரும் பிரதிநிதிகள் சபை சபாநாயகருமான ஜோன் பொய்னரும், தற்போதைய இழுபறிக்கு காரணம் யார் என்பது குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர். (மேலும்...) ஆடி 29, 2011 தமிழ்க் கூட்டமைப்பு வெற்றியீட்டிய பகுதிகளுக்கு போதிய நிதி வசதிகள் அபிவிருத்தி நடவடிக்கைகளை இனி அவர்களே முன்னெடுக்க முடியும் வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்ற சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் தேவையான நிதி உட்பட சகல வசதி வாய்ப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப் படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக் குத் தேவையான நிதி வழங்கப்படும். அபிவிருத்தி செயற்பாடுகளை இனி அவர்களே முன்னெடுக்க முடியும். எனினும், தேவையான நிதியையும் வசதிகளையும் அரசு செய்து கொடுக் கும். இது அரசின் கடமையுமாகும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். (மேலும்...) ஆடி 29, 2011 அவசரகால சட்டம் இவ்வாண்டு இறுதிக்குள் முற்றாக நீக்கம் இவ்வாண்டு இறுதியில் அவசரகாலச் சட்டம் முற்றாக அகற்றப்பட்டுவிடும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசே அமுலிலுள்ள அவசரகாலச் சட்டத்தின் பல சரத்துக்களை அகற்றியது. பெயரளவிலான ஒரு அவசரகாலச் சட்டமே அமுலிலுள்ளது. இதனையும் இவ்வருட இறுதியில் முற்றாக அகற்றி விடுவதற்கான ஆலோசனைகளை அரசு நடத்தி வருகிறது. அவசரகாலச் சட்டத்தை அகற்றுவதற் காக வெளியிலிருந்து வரும் அழுத் தங்களை நாம் ஏற்கப்போவதில்லை. அவசர காலச் சட்டம் அமுலில் இரு ப்பதை ஜனாதிபதி அவர்களும் விரும்பவில்லை. ஆடி 29, 2011 சோமாலிய அகதிகளால் திணறுகிறது கென்யா சோமாலியாவின் அண்டை நாடான கென்யா, பெரும் எண்ணிக்கையில் அகதிகள் வந்து கொண்டிருப்பதால் சமாளிக்க முடி யாமல் திணறிக் கொண்டி ருக்கிறது. சோமாலியாவில் நீண்ட காலமாகவே உள்நாட்டுக் குழப்பம் நிலவி வருகிறது. இந்தக் குழப்பத்தைப் பயன் படுத்தி அங்கு தனது படைத் தளத்தையும், ரகசிய சிறை களையும் அமைத்துள்ள அமெரிக்க ராணுவம், உள் நாட்டுக் குழப்பத்தைத் தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலை யில் அதிகரித்து வரும் நெருக் கடியால், சோமாலிய மக் கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான கென்யாவில் அகதி களாகத் தஞ்சம் புகுந்து வரு கிறார்கள். (மேலும்...)ஆடி 28, 2011 இலங்கையில் கூட்டாட்சி முறையை கொண்டு வர சந்திரிகா கோரிக்கை
சிங்களத்துக்கு இணை யான அந்தஸ்து தமிழுக்கும் வேண்டும் என்று தமிழர்
இயக்கங்கள் தொடர்ந்து முன்வைத்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட் டன.
இதனால் தமிழர் பகு திகளுக்கு அதிக அதிகாரங் கள் வேண்டும் என்ற கோரிக்கை
பிறந்தது. அந்த கோரிக்கை யும் ஏற்கப்படாததால் கூட் டாட்சி வேண்டும் என்று
கேட்கப்பட்டது. அதையும் நிராகரித்த காரணத்தால் தனி தமிழ் ஈழம் வேண்டும்
என்ற கோரிக்கை பிறந்தது. அரசு நிர்வாகத்தில் தமி ழர்களுக்கு எந்தவித பங்கும்
இல்லை. கல்வி - வேலை வாய்ப்பில் அவர்களுக்கு ஏதும் கிடையாது. எங்கும்
எதிலும் சிங்களம் மட்டுமே என்ற கொள்கை காரணமா கவே மிகப் பயங்கரமான மோதல்கள்
வெடித்தன. என்னுடைய தலைமை யிலான அரசு உள்பட அனைத்து அரசுகளுமே தமிழர்களின்
கோரிக்கை களைத் தொடர்ந்து புறக்க ணித்ததாலேயே தமிழர்களி டையே 5 போராளிக்
குழுக் கள் தோன்றின. அவர்களில் முன்னணியில் இருந்த விடு தலைப் புலிகள்
இயக்கம் உள்பட அனைத்துமே தமிழ் ஈழம் என்ற தனி நாட்டுக் காகப் போராடின.(மேலும்.....) புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் எண்ணங்களில் மாற்றம் வேண்டும் - தமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணங்களிலும் அவர்களின் செயற்பாடுகளிலும் மாற்றம் ஏற்படுவது அவசியம் என்ற கருத்தை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் லண்டனில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரிட்டிஷ் கிளை ஏற்பாடு செய்திருந்த வைபவத்தில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் அரசிற்கும் இடையிலான கடைசியாக நடந்த பேச்சுவார்த்தைகளின் போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இனப்பிரச்சினைக்கு தீர்வொன்றைக் காணும் போது பெரும்பான்மை சிங்கள மக்களாலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஓர் அரசியல் தீர்வே பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமைய முடியுமென்றும் கூறினார். (மேலும்.....) ஆடி 28, 2011 பலஸ்தீன் தனி நாட்டுக்கு அமெரிக்கா எதிர்ப்பு பலஸ்தீன் தனிநாடு உருவாவதற்கு ஐ.நா. பொதுச் சபையில் ஆதரவு அளிக்கப்போவதில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐ.நா. சபையில் பலஸ்தீனை தனி நாடாக அங்கத்துவம் கோர பலஸ்தீன அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை ஐ.நா. விடம் வரும் செப்டெம்பரில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல சர்வதேச நாடுகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனினும் பலஸ்தீன் தனி நாடாவதற்கு தாம் அதரவளிக்க போவதில்லை என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் துணைத் தூதுவர் ரொஸ்மெரி டிகாலோ இந்த தகவலை வெளியிட்டார். (மேலும்.....) ஆடி 28, 2011 ஈ.பி.டி.பி. ஆதரவாளர் மீது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தாக்குதல் வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கான உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சஜீவன் என்பவர் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கும்பலால் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான சந்திரபாலன் தாக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ள இம் மிலேச்சத்தனமாக தாக்குதலின் போது பன்னாலையில் அமைந்துள்ள சந்திரபாலனின் வர்த்தக நிலையமும் தாக்கி உடைக்கப்பட்டுள்ளதென ஈ.பி.டி.பி. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(மேலும்.....) ஆடி 28, 2011 சோமாலியாவை அடுத்து கென்யாவிலும் பட்டினியால் மக்கள் பலியாகும் அவலம் ஆபிரிக்க நாடுகளில் ஒரு கோடியே 16 இலட்சம் மக்கள் ஒருவேளை உணவுக்காக போராடுகிறார்கள். கென்யாவில் 35 இலட்சம் மக்கள் ஐ.நா. நிவாரண உதவியை எதிர்பார்த்து உள்ளனர். தெற்கு சோமாலியாவில் தீவிரவாத அமைப்பினர் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பட்டினி நிலை தீவிரமாக உள்ளது. கென்யாவில் வடகிழக்கு பகுதி மாவட்டங்களில் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. இந்த பகுதிகளில் செப்டம்பர் மாதங்களில் வறட்சி பிரச்சினை தீவிரமாகும் என கென்யாவுக்கான ஐ.நா. மனித நேய ஒருங்கிணைப்பாளர் நேற்று கூறினார். ஆடி 28, 2011 புலிகளின் கொடுமைகளை காண்பிக்காது அரசின் மீது போலியான குற்றச்சாட்டு சனல் 4 வீடியோ தொலைக்காட்சி விவரணச் சித்திரமானது எல்.ரி.ரி.ஈயின் தயாரிப்பு என்பதை வெள்ளிடை மலையாக எடுத்துக் காட்டுகிறதென்று அவுஸ்திரேலியாவில் இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகராக இருந்த திருமதி சசிகலா பிரேமவர்தன தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியத் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர் மேலும் கூறியதாவது, முன்னாள் கடற்படைத் தளபதியான எட்மிரல் திஸர சமரசிங்க அவுஸ்திரே லியாவின் உயர் ஸ்தானிகராக நியமிக் கப்படும் வரை பதில் உயர் ஸ்தானிகராக பதவியேற்ற இந்தப் பெண்மணி அவுஸ்திரேலிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரமுடைய திருமதி சூஸ் ஸ்பென்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இந்த சனல் 4 வீடியோ தொலைக்காட்சி தொகுப்பு ஒரு போலி தொலைக்காட்சி விவரணப் படம் என்பதை ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருப்ப தாகவும் இதன் சில காட்சிகள் எல்.ரி.ரி.ஈயின் தொலைக்காட்சியில் இருந்து இணைக்கப்ப ட்டிருப்பதாகவும் அதனை இந்த அவுஸ்தி ரேலிய தொலைக்காட்சியில் தெரிவிப்பது தவறு என்றும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். (மேலும்.....) ஆடி 28, 2011 Personal "goodwill mission" is perplexing to Canada's first Tamil MP
Rathika Sitsabaiesan elected new MP. Scarborough-Rouge River NDP candidate Rathika Sitsabaiesan celebrates her victory with her campaign manager Andrea Moffat and supporters May 2, 2011. file photo/DAN PEARCE Marlene Gallyot says she's determined to help Scarborough's large Tamil population by meeting with Sri Lanka's president next month. "I'm going to see how I can build a bridge of friendship for the Tamil community," said Gallyot, who ran as a Conservative in the May 2 federal election in the Scarborough-Rouge River riding but lost to rookie NDP candidate Rathika Sitsabaiesan -- Canada's first Tamil MP. Gallyot said she will ask Sri Lankan president Mahinda Rajapaksa, who has agreed to see her, to allow Tamils more freedom of movement in Sri Lanka and to let Canada to establish a High Commission in the northern city of Jaffna. " (more...) ஆடி 28, 2011 தேவேந்திரமுனையில் ஆரம்பித்த பாத யாத்திரை பருத்தித்துறை அடைந்தது யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான புற்றுநோய் பிரிவொன்றை நிர்மாணிப்பதற்காக தேவேந்திரமுனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை நேற்று காலை 8.45 மணிக்கு பருத்தித் துறையை வந்தடைந்தது. கடந்த ஜுலை முதலாம் திகதி தேவேந்திரமுனையில் ஆரம்பமான 670 கிலோ மீற்றர் தூர பாத யாத்திரை பருத்தித்துறையை வந்தடைந்தது. புற்றுநோய் ஆஸ்பத்திரி நிர்மாணிப்பதற்கு 200 மில்லியன் திரட்டுவதற்கான இந்த பாதயாத்திரை மூலம் 40 மில்லியன் ரூபா திரட்டப்பட்டுள்ளது. புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டதோடு 24 மாதங்களில் ஆஸ்பத்திரி நிர்மாணப்பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. (மேலும்.....) ஆடி 28, 2011 4 ஆயிரம் பேர் வேலையைப் பறித்தது அமெரிக்க அரசு அமெரிக்காவின் மத்திய விமானப் போக்குவரத்து நிர் வாக அமைப்பு இழுத்து மூடப் படும் அபாய நிலை உரு வாகியுள்ளது. இந்த அமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிக்க அமெரிக்க நாடாளுமன்றம் மறுத்துவிட்டது. இதனால் தற் போது இந்த நிர்வாக அமைப் பில் பணியாற்றிக் கொண்டி ருக்கும் ஊழியர்களுக்கு தற் காலிகமாக வேலை பறிபோ கிறது. அந்தக் காலகட்டத்திற் கான ஊதியம் கிடைக்க வாய்ப் பில்லை. வரக்கூடிய நாட் களில் மீண்டும் ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் ஏற்பாடுகள் நடந்தால்தான் இவர்களின் வேலைப்பறிப்பு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்பது தெரிய வரும். இது குறித்து கருத்து தெரிவித்த அமைப்பின் நிர் வாகிகளில் ஒருவரான ரான்டி பாப்பிட், ஏற்கெனவே மோச மான பொருளாதாரச் சூழல் நிலவுகிறது. தன்னை நம்பி ஒரு குடும்பமும் இருக்கக் கூடியவர்கள் அமைப்பின் ஊழியர்கள். சிரமமான காலகட் டத்தில் அவர்களுக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கக் கூடியது இந்த வேலைப்பறிப்பு என்கிறார்.ஆடி 28, 2011 கருணாநிதி - ஜெயலலிதா அரசியல் மோதலில் சிக்கித் தவிக்கிறது சமச்சீர் கல்வித் திட்டம் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டுள்ள சமச்சீர் கல்வித் திட்ட புத்தகங்கள் தரமானதாக இல்லை. சமச்சீர் கல்வித் தரத்தை தேசிய, சர்வதேச அளவில் தரம் வாய்ந்ததாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு கால அவகாசம் வேண்டும். எனவே, இந்த ஆண்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை அமுல்படுத்துவது சாத்தியமல்ல என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திமுக ஆட்சியில் அமுலாக்கப்பட்ட சமச்சீர் கல்வியை அதிமுக அரசு நிறுத்தி வைத்தது. மேலும் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் சமச்சீர் கல்வியை அ.தி.மு.க அரசு நிறுத்தி வைப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதற்கிடையே சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான சட்டத் திருத்தம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. (மேலும்.....) ஆடி 28, 2011 கண்டத் தீவுகளுக்கும் கடற் தீவுகளுக்கும் உள்ள வேறுபாடுகள்கண்டத் தீவுகள் (Continental Islands) என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். பெருங் கண்டத்துடன் அதன் அருகே தணிந்த கடல் ஆழத்தில் தளப்பரப்பால் இணைக்கப்பட்ட தீவே, கண்டத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இலங்கைத் தீவு உப கண்டமான இந்தியாவின் கண்டத் தீவு என்று சொல்லலாம். கடந்த 20,000 ஆண்டுகளில் பெருங் கண்டத்துடன் பிணைந்து கொண்ட தீவுகளே அப்பெயரைப் பெறுகின்றன. கண்டத் தீவுகளில் உள்ள சில செடி கொடிகள், உயிர் ஜந்துகள் (Fauna & Flora, Species) பெருங் கண்டத்தில் உள்ளவை போல் இருக்கின்றன. குறப்பிட்ட இடத்தில் பிறந்து விருத்தியாகும் ஜந்துகள் (Endemic Species) அங்கு இருப்பது அபூர்வந்தான். கடற் தீவுகள் (Ocean Islands) என்றால் என்ன? பூமியின் உட்கருவிலிருந்து கடற் தளத்தில் துளையிட்டு எரிமலைகள், சீறி எழுந்து, கடல் ஆழத்தில் உண்டாக்கப்பட்ட தீவுகள் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன. ஹவாயி தீவுகள், ஐஸ்லாந்து தீவுகள் ஆகியவற்றை இவற்றுக்கு உதாரணமாகக் கூறலாம். (மேலும்.....) ஆடி 28, 2011 பஹ்ரைன் கிராமங்களுக்கும் பரவியது ஜனநாயகத்திற்கான போராட்டம் சர்வாதிகார ஆட்சியை நடத்தி வரும் அல் கலிபா மன்னர் குடும்பத்தை அதி காரத்திலிருந்து அகற்ற வேண்டும் என்று பஹ்ரை னில் நடைபெற்று வரும் போராட்டங்கள் கிராமங் களுக்கும் பரவியுள்ளது. கடந்த சில மாதங் களா கவே பஹ்ரைனில் மக்கள் எழுச்சியுடன் போராடி வரு கிறார்கள். அரசியல் சீர் திருத்தங்கள் மற்றும் உரி மைகள் வழங்கக் கோரி இந் தப் போராட்டம் நடந்து வருகிறது. வட ஆப்பிரிக்க மற்றும் மேற்கு ஆசிய நாடு களில் நடைபெறும் போராட் டங்களால் உத்வேகம் பெற் றும், அதே போராட்டங் களுக்கு உத்வேகம் அளிக் கும் வகையிலும் பஹ்ரைன் மக்கள் போராடி வருகி றார்கள். (மேலும்.....)ஆடி 28, 2011 வருமானத்தை திட்டமிடுவதில் ஆணை விட பெண் முன்னிலை 'சேர்த்த பணத்தை சிக்கனமாக செலவு பண்ண பக்குவமா... அம்மா கையில் கொடுத்து போடு செல்லக் கண்ணு. அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக் கண்ணு' என்று அன்றே எழுதப்பட்ட பாடல், இப்போதைய பெண்களுக்கும் சரியாக பொருந்துகிறது. வருமானத்தை சிறப்பாக திட்டமிட்டு, முதலீட செய்வதன் மூலம் ஆணை விட குறைவாக வரி செலுத்துவது பெண்களே என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. பெண்களுக்கு வருமான வரி விலக்கு அதிகம் என்பது மட்டுமின்றி வருமானத்தை சிறப்பாக திட்டமிடுவதுடன் சரியான முதலீடுகள் மூலம் வரி சேமிப்பில் அவர்கள் ஈடுபடுவதுமே பெண்கள் குறைவாக வரி செலுத்த காரணம். மருத்துவ செலவு, வீட்டு வாடகை படி ஆகிய வழிகளில் வரி விலக்கு பெறுவதில் பெண்கள் முன்னிலை வகிக்கின்றனர் இவ்வாறு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. ஆடி 28, 2011 குரோத அரசியல் அண்மையில் நார்வேயில் நடந்த பயங்கர வாதத் தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு குறித்து அனைத்துத் தரப்பினரும் கவலை யும், கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்த கொ டூரமான கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட் டவர் ஆண்டர்ஸ் பெரிஷ் பிரவிக் என தெரியவந் துள்ளது. அவர் பயன்படுத்திய துப்பாக்கி மிகவும் நுட் பமானது, உடலை சிதற வைக்கக் கூடியது என கூறப்படுகிறது. ஏன் இந்த கொலை என்ற கேள்விக்கு ஒரே பதில் “வெறுப்பு அரசியலின் குரூர விளைவு” என தயங்காமல் கூறலாம். இவர் தன்னுடைய செய லை நியாயப்படுத்துவதற்காக கூறுகிற வாதங் கள் இந்தியாவில் ஆர்எஸ்எஸ், இந்து மதவெறி அமைப்புகள் முன்வைக்கிற அபத்தமான வாதங் களாகவும், அதேநேரம் மனிதர்களுக்குள் பகை மையை விசிறி விடுவதாகவும் அமைந்துள்ளன. (மேலும்.....)ஆடி 28, 2011 மட்டக்களப்பு புதூர் வங்கியில் கொள்ளையிடப்பட்ட 2 கோடி பெறுமதியான நகைகள் மீட்பு; கல்கிசையில் தமிழ்ப் பெண் கைது! மட்டக்களப்பு புதூர் அரச வங்கி ஒன்றில் கொள்ளையிடப்பட்ட 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியானவை கல்கிசைப் பகுதியிலும் மட்டக்களப் பிலும் இரகசியப் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. புதூர் அரச வங்கியொன் றில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன.இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ்ப்பெண் ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டுள்ளன. (மேலும்.....)ஆடி 27, 2011 புலிப் பயங்கரவாதத்தை நாமே தோற்கடித்தோம் - பொன்சேகா புலி பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக 6000 படையினரை இழந்தோம். மற்றுமொரு ஆறாயிரம் படையினர் அங்கவீனமாகியுள்ளனர். இவ்வாறான இழப்புகளுக்கு மத்தியிலேயே பயங்கரவாதத்தை நாம் தோற்கடித்தோம். அந்த பயங்கரவாதத்தை அரசியல் வாதிகள் தோற்கடிக்கவில்லை என்று முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்ற வெள்ளைக்கொடி விவகார வழக்கின் நேற்றைய விசாரணை நிறைவடைந்ததன் பின்னர் நீதிமன்ற கட்டிடத்தை விட்டு வெளியேறும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பயங்கரவாதத்தை அரசியல்வாதிகள் அல்ல படையினரே தோற்கடித்தனர். அதேபோல செயலாளருக்கு பின்னர் சென்ற மேஜர் ஜெனரல்களும் அல்ல என்றும் அவர் சொன்னார். இப்படி சொல்பவருக்குத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களை வாக்களிக்க கோரினர். தமிழ் மக்களும் பெருவாரியாக அவ்வாறே வாக்களித்தனர். இன்றும் அவ்வாற கோரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே தமிழ் மக்கள் பெருவாரியாக வாக்களித்துள்ளனர்._ ஆடி 27, 2011 என்ன செய்யப் போகிறது தமிழர் தரப்பு யுத்தம் முடிந்துவிட்டது." ஒரு நாடு ஒரே மக்கள்' தமிழர்களுக்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக ஜனநாயக ரீதியில் தீர்வு காணப்படும், வடக்கு கிழக்கில் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதற்கான சகல வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும் என கூறியது அரசாங்கம். இதனால் நம்பிக்கைகளும் எதிர்ப்பார்ப்புகளும் முன்னரைவிட அதிகளவில் மேலேழுந்தன. ஆனால் நடந்தது என்ன? வட, கிழக்கில் காணிகள் பறிபோகின்றன, பௌத்த விகாரைகள் முளைத்தெழும்புகின்றன. அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட்டிருக்கின்றன. சிவில் நிர்வாகம் என்பது என்ன என்று கேட்கும் அளவுக்கு நிலைமைகள் மாறிப் போயுள்ளன. தேசிய பாதுகாப்பு என்ற சிந்தனையின் கால்கோளாக யுத்தத்தின் பின்னர் வட, கிழக்கில் இராணுவத்தின் பிரசன்னம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இருக்கலாம் எனினும் பொதுமக்களது அன்றாட வாழ்க்கையில் இராணுவத்தரப்பு தலையிடுவது தமிழ் மக்களுடனான நல்லிணக்கத்தையோ அல்லது மக்களுக்கு பாதுகாப்பு உள்ளது என்ற எண்ணத்தையோ ஏற்படுத்தாது. (மேலும்...) ஆடி 27, 2011 Let’s talk about innovation and creativity Ms. Clinton (by Malinda Seneviratne) US Secretary of State, Hillary Clinton has voiced concern over the plight of internally displaced persons (IDPs) in Sri Lanka and said that the United States was looking at some innovative and creative ideas to break the impasse over the Sri Lankan Tamils issues. This was in Tamil Nadu, where she was being hosted by Chief Minister, Jayalalitha, once an LTTE sympathizer and a willing approver of Delhi’s policy of arming, funding and training Tiger terrorists. Clinton, for the record, received campaign funds from a pro-LTTE group in the USA, let us not forget. (more...) ஆடி 27, 2011 ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! பழைய ஞாபகம் வருதே! தலைவா..!- (கி.பாஸ்கரன்)
வருடாவருடம் வெகுவிமர்சையாக, எங்கள் ‘சூரியதேவன்’ பிரபாகரனுக்கு ‘பொங்கு தமிழ் விழா’ எடுத்து பொங்கி மகிழும் புலம்பெயர் வாழ் சூரிய தேவனின் பக்தர்கள் கடந்த இரண்டு வருடங்களாக இவ் விழாவை செய்யாமல் கைவிட்டுள்ளனர்.காரணம் என்னவென்பதை அவர்கள் உத்தியோக பூர்வமாக அறிவிக்கவுமில்லை. அதை பற்றியும் எதுவும் பேசவும் மறுக்கிறார்கள். தமிழ் மக்களை (மக்குகளை) ஒன்று திரட்டுகின்ற ஓர் நல்ல விழாவாக பல காலங்களாக நடந்த இவ்விழா திடீரென ஏன் நிறுத்தப்பட்டது? என்பதை சம்பந்தப்பட்டவர்கள் அறியத்தந்தால் நல்லது. (மேலும்...) ஆடி 27, 2011 முஸ்லிம்களிடம் இருந்து ஐரோப்பாவை காப்பதற்கே தாக்குதல் நடத்தினேன் “ஐரோப்பாவில் இஸ்லாமியர்கள் குடியேறுவதைத் தடுத்து நிறுத்தவும், மக்களுக்கு இதன் மூலம் உறுதியான செய்தி விடுக்கவும் தான் நான் தாக்குதல் நடத்தினேன்” என்று நோர்வே இரட்டை தாக்குதல் குற்றாவளி ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக், நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் கூறினார். இதையடுத்து அவரை எட்டு வாரங்கள் தனிமைச் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். நோர்வேயில் சமீபத்தில் நடந்த பிரதமர் அலுவலக குண்டு வெடிப்பு மற்றும் உடோயா தீவு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் உலகையே குலுக்கின. இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் நேற்று முன்தினம் அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆஜராவதற்கு முன் அவர் தன் வழக்கறிஞர் மூலம் நீதிபதிக்கு சில வேண்டுகோள்கள் விடுத்திருந்தார். அதன்படி பொலிஸ் உடையில் மக்கள் முன்னிலையில் தோன்றி தான் குண்டு வெடிப்பு நடத்தியது எதற்காக என்று விளக்கப் போவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கும்படியும் கோரியிருந்தார். (மேலும்...) ஆடி 27, 2011 கடாபி பதவி விலகினாலும் லிபியாவில் தொடர்ந்து இருக்கலாம் லிபிய ஜனாதிபதி கடாபி பதவியை விட்டு விலகினால் அவர் தனது நாட்டில் இருக்கலாம் என பிரான்ஸ் கூறியது. தற்போது இதே கருத்தை பிரிட்டனும் உறுதிப்படுத்தி உள்ளது. லிபியாவில் 42 ஆண்டுகளாக கடாபி ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சிக்கு எதிராக மேற்குலக அனுசரணையுடன் மக்கள் போராட்டம் வெடித்து உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் அலெயன் ஜுபேவை லண்டனில் சந்தித்து பேசுவதற்கு முன்னர் பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹக் இந்த கருத்தை தெரிவித்து உள்ளார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் விதித்த தடையை கூட்டணி நாடுகள் சரியாக செய்து வருகின்றன என்றும் அவர் பாராட்டினார். லிபியாவில் நேட்டோ படைகள் நான்கு மாதத்திற்கு முன்னர் செல்லாத பட்சத்தில் பெங்காசியில் இனப்படுகொலையை லிபிய அரசு நிர்வாகம் செய்து இருக்கும் என்றும் அவர் கூறினார். பெங்காசி லிபிய போராட்டக்காரர்களின் தலைமையிடமாகும். நேட்டோ படைகள் வான்வழித் தாக்குதலில் அப்பாவி மக்களை கொல்வதாக லிபிய அரசு நேற்று குற்றம் சாட்டியது. ஆடி 27, 2011 யாழ். சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலை நிதி சேகரிப்பு தேவேந்திரமுனை நடை பயணம் பருத்தித்துறை வெளிச்சவீட்டையடைந்தது யாழ். நகரில் சிறுவர் புற்றுநோய் ஆஸ்பத்திரி ஒன்றை அமைப்பதற்கு நிதி சேகரிப்பதற்காக தேவேந்திரமுனையிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் தனது இறுதி இலக்கான பருத்தித்துறை வெளிச்சவீட்டை இன்று சென்றடைகிறது. இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குமார் சங்கக்கார உட்பட முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டுள்ள இந் நடை பயண இறுதி நிகழ்வில் “இளைஞர்களுக்கான நாளைய” அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம். பி. யும் கலந்து கொள்ளவுள்ளார். இந்த நடைப்பயணக் குழுவினர் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையை அடைந்தனர். இக் குழுவினருக்கு மக்கள் கூடியிருந்து வரவேற்பளித்தனர். (மேலும்...) ஆடி 27, 2011 அமெரிக்க கடன் உச்சவரம்பு குடியரசு கட்சி மீது ஒபாமா குற்றச்சாட்டுஅமெரிக்கா தேசிய கடன் உச்சவரம்பை உயர்த்தும் விடயத்தில் பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சியினர் மெத்தனம் காட்டியதாக ஜனாதிபதி ஒபாமா குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் இந்த ஆண்டு வரவு செலவு நிதி நிலை பற்றாக்குறை 1.5 இலட்சம் கோடி டொலராக உள்ளது. இதனால் தேசிய கடன் உச்சவரம்பு அளவான 14.3 லட்சம் கோடி டொலரை எட்டும் அபாயம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டது. ஆகஸ்ட் மாதம் 2ம் திகதிக்குள் கடன் உச்சவரம்பை உயர்த்தாவிட்டால் அமெரிக்க அரசு எந்த திட்டப் பணிகளுக்கும் நிதி தர முடியாத நிலை ஏற்படும். எனவே, நிதிநிலை பற்றாக்குறையை குறைக்காத வரை கடன் உச்சவரம்பை அதிகரிக்க ஒப்புதல் அளிக்க முடியாது என குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தில் கூறினர். (மேலும்...) ஆடி 27, 2011 வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலை ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு சுமார் 1000 இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுக்கக்கூடிய வாறு ஆடை உற்பத்தித் தொழிற்சாலை யொன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கு அடிக்கல் நடும் நிகழ்வு 29ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. வவுனியா ராசேந்திரன்குளம் பகுதியில் ஒமேகா லைன் என்ற ஆடை உற்பத்தி தொழிற்சாலையே அமைக்கப்படவுள்ளது. இதேபோன்று ஒரிட் காமண்ட் ஆடை உற்பத்தி தொழிற்சாலையொன்றையும் அமைப்பதற்காக சுமார் 12 ஏக்கர் காணியும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரி வித்தார். இத் தொழிற்சாலைகளை அமைப்பதன் ஊடாக மேலும் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆடி 27, 2011 கொழும்பு - வவுனியா ரயில் சேவை நேர மாற்றம்கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் இரவு தபால் ரயில் முதலாம் திகதியிலிருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு வவுனியாவிற்கு அதிகாலை 5 மணிக்கு வரும் இந்த ரயில் ஓமந்தையினை 5.30 மணிக்குச் சென்றடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரயில் தற்போது தினமும் இரவு 8.30 க்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு அதிகாலை 3 மணிக்கு வவுனியாவை வந்தடைகின்றது. இதனால் தூர இடங் களுக்கு செல்லும் பயணிகளுக்கு பெரும் அசெளகரியங்கள் ஏற்படுகின்றது. அத்துடன் இந்த நேர அட்டவணை பயணிகளுக்கு சாதகமாக இல்லாததால் இரவு பயணிக்கும் பயணிகளுடைய எண்ணிக்கை வெகுவாக குறைந்து ரயில்வே திணைக்களத்திற்கு நட்டம் ஏற்பட்டு வந்தது. இதனை கவனத்தில் கொண்டு நேர அட்டவணை மாற்றும் செய்யப்பட்டுள்ளது. ஆடி 27, 2011 கொழும்பு - தூத்துக்குடிக்கு மேலும் ஒரு கப்பல்கொழும்புக்கும், தூத்துக்குடிக்கு மிடையிலான பயணிகள் கப்பல் சேவையில் ஏற்பட்டு வரும் முன் னேற்றத்தைக் கருத்திற் கொண்டு மற்றொரு கப்பலையும் இச்சேவையில் ஈடுபடுத்துவதற்கு உத்தேசித்திருப்பதாக இலங்கை கப்பல் கூட்டுத்தாபனத்தின் உயரதிகாரியொருவர் நேற்று தெரிவித்தார். தற்போது ஒரு கப்பலே பயணிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் வாரத்திற்கு இரு தடவைகளே இச்சேவை இடம்பெறுவதாகவும் அவர் குறிப் பிட்டார். கொழும்புக்கும், தூத்துக்குடிக்கு மிடையிலான பயணிகள் கப்பல் சேவை ஜூன் மாதம் முற்பகுதியில் ஆரம் பிக்கப்பட்டது. இச்சேவையை ஆரம்பித்த நாட்களில் சொற்ப தொகையினரே பயணத்தில் ஈடுபட்டனர். ஆனால் இச்சேவையைப் பயன்படுத்து வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. இது எதிர்வரும் ஓகஸ்ட் மாத விடுமுறை காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் கூறினார். இவ்வாறான நிலையில் தான் இந்த பயணிகள் கப்பல் சேவையில் மற்றொரு கப்பலையும் ஈடுபடுத்துவதற்கு உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆடி 26, 2011 இலங்கை தேர்தல் முடிவு உணர்த்துவது என்ன? இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர் தலில் வட பகுதியில் தமிழர் கட்சிகளின் கூட் டணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தின் பிற பகுதிகளில் ராஜபக்சே தலை மையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பு வெற்றி பெற்றுள்ள போதும், வட பகுதி யில் பெற்றுள்ள தோல்வி ராஜபக்சே அரசுக்கு பின்னடைவு என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வட பகுதியில் தமிழ்தேசியக் கூட்டமைப்பு 18 மாகாண சபைகளை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வடபகுதியில் இரண்டு மாகாண சபைகளை மட்டுமே பெற்றுள்ளது. (மேலும்..)
ஆடி
26, 2011 இந்நாட்டின் தன்னிகரற்ற தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்பதை கடந்த சனிக்கிழமை நடைபெற்ற 65 உள்ளூராட்சி சபை களுக்கான தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் வழங்கிய ஆணை உறுதிப்படுத்தியுள்ளது. 2005ம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிவாகை சூடி இந்நாட்டின் வரலாற்றில் தென்னிலங்கையில் இருந்து தோன் றிய ஒரு உதய சூரியனாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அன்றிலிருந்து தொடர்ச்சி யாக மக்களின் வாக்குகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகின்றதை அவதானிக்கும் எவரும் ஒரு தேசத் தலைவரின் நேர்மையான ஆளுமையும் பாரபட்சமற்ற நிர்வாக முமே இதற்கான பிரதான காரணமென்று சான்று பகர்வார்கள். (மேலும்..) ஆடி 26, 2011 நோர்வே தாக்குதல் குறித்து சந்தேக நபர் பரபரப்பு வாக்குமூலம் நோர்வேயில் துப்பாக்கிச் சூடு நிகழ்த்திய ஆண்டர்ஸ் பேரிங் ப்ரீவிக் தான் மட்டுமே இத்தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். "தன் செயல் கொடூரமானது என்றாலும், அவசியமானதும் கூட" என்றும் கூறி யுள்ளார். தாக்குதல் நடத்தியது ஏன் என்பது குறித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். நோர்வேயில் கடந்த 22ம் திகதி பிரதமர் அலுவலகத்தில் திடீரென குண்டு வெடித்தது. இச்சம்பவத்தில் ஏழு பேர் பலியாகினர். இதையடுத்து இரண்டு மணி நேரம் கழித்து, உடோயா தீவில், ஆளும் தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணி பயிற்சி முகாமில் பொலிஸ் உடையில் புகுந்த ஒரு நபர், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். (மேலும்..) ஆடி 26, 2011 அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோரை மலேசியாவுக்கு அனுப்ப ஒப்பந்தம் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் நூற்றுக்கணக்கானோரை மலேசியாவுக்கு அனுப்புவதற்கு இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. மலேசிய தலைநகர் குவாலாலம் பூரில் நேற்று இடம் பெற்ற நிகழ்வில் மலேசிய உள்விவகார அமைச்சர் ஹிஷாமுத்தீன் ஹுஸைன் மற்றும் அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் பவுன் ஆகியோர் சர்ச்சைக்குரிய இந்த ஒப் பந்தத்தில் கைச்சாத் திட்டனர். இந்த ஒப்பந் தத்தின்படி அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ள 800 பேர் மலேசியாவுக்கு அனுப்பப் படவுள்ளனர். ஆடி 26, 2011 தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி உறுப்பினர்கள் ஓகஸ்டில் பதவியேற்புநடைபெற்றுமுடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல்வாரத்தில் பதவியேற்கவுள்ளனர். கிளிநொச்சியில் இப்பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் அறிவித்திருப்பதாக, கூட்டமைப்பின் சார்பில் வல்வெட்டி நகரசபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். எனினும், உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வு தொடர்பான சரியான திகதி கட்சிப் பிரதிநிதிகளுடன் கூடி ஆராய்ந்த பின்னரே தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 23ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 18 உள்ளூராட்சி சபைகளையும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி கிளிநொச்சி மாவட்டத்தில் 2 உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றின. ஆடி 26, 2011 விருப்பு வாக்குகளின் அடிப்படையில் ஐ. ம. சு. மு. தலைவர்களை தெரிவு செய்யும்அதிக விருப்பு வாக்கு அடிப்படை யிலே ஐ. ம. சு மு. வென்ற உள்ளூராட்சி சபைகளுக்கு தலைவர்கள் தெரிவு செய்யப்படும் என ஐ. ம. சு. மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த் தெரிவித்தார் இது தொடர்பில் ஐ.ம. சு. மு. கூடி முடிவு செய்யும் என்று தெரிவித்த அவர் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மாத்திரம் வேறு நபர்கள் சபைத் தலைவர், பிரதித் தலைவர்களாக நியமிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 45 உள்ளூராட்சி சபைகளை ஐ. ம. சு. மு. வெற்றியீட்டியுள்ளது. இதன்படி அதிக விருப்புவாக்கு பெற்றவர்கள் சபை முதல்வர்களாக நியமிக்கப்படுவர். தேர்தல் ஆணையாளரின் உத்தியோகபூர்வ விருப்புவாக்குப் பட்டியல் ஓரிரு தினத்தில் கிடைக்கும். அதன் பின் ஐ.ம. சு. மு. வெற்றியீட்டிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தலைவர்கள் உபதலைவர்கள் விபரம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்கப்படும். ஆடி 26, 2011 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரதமருக்கும் சிதம்பரத்திற்கும் எல்லாம் தெரியும்: ராசா அதிரடி இந்திய அரசின் கருவூலத்தில் சேர்ந் திருக்க வேண்டிய ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன் னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச் சர் ஆ.ராசா முன்வைத்தார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், தற்போதைய உள்துறை அமைச்சரும் அப்போதைய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்திற்கும் தெரியும் என்று அப்போது பகிரங்கமாக கூறினார். (மேலும்..)ஆடி 26, 2011 When the outskirts of fear invade your home… by Malinda Seneviratne At least 91 people died when a gunman ran amok on Utoeya island, Norway, on Friday (July 22, 2011), hours after an Oslo bomb killed seven. Eric Solheim, Norwegian minister and a long supporter of the Liberation Tigers of Tamil Eelam who is often described as the face of Norway’s ‘peace efforts’ in Sri Lanka, was not dumbfounded by the attacks. He said it was too early to speculate about the identity of the gunman. He also said that the ‘horrible’ massacre was ‘an attack on Norway’s democratic values’. He expressed ‘enormous shock’. (more...) ஆடி 26, 2011
ஆடி 26, 2011 ஈரான் விஞ்ஞானியின் கொலைக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மீது குற்றச்சாட்டுஈரான் நாட்டைச் சேர்ந்த அணு விஞ்ஞானி டேரியஸ் ரெஜாய் (வயது 35) சுட்டுக் கொல்லப் பட்டதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. விஞ்ஞானிகளின் உதவியுடன் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக அமெரிக்கா அடிக்கடி குற்றம் சுமத்தியது. அதனை ஈரான் மறுத்து வந்துள்ளது. கடந்த சில வருடங்களில் ஈரான் நாட்டின் அறிவியலாளர் கள் அதிகளவில் சுட்டு கொல் லப்பட்டுள்ளனர். மேலும் கடந்த நவம்பர் மாதம் விஞ்ஞானி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். மற்றொருவர் காயமடைந்தார். அப்பொழுது இதே குற்றச்சாட்டை ஈரான் கூறியிருந்தது. அதற்கு வாஷிங்டன் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆடி 26, 2011
ஆடி 26, 2011 விவசாயத்துறைக்கு புத்துயிரளிக்க வடக்கில் விவசாய வாரம் பிரகடனம் விவசாய துறையை வடக்கிலே புத்துயிர்ப்பிக்கும் நோக்கில் ஆகஸ்ட் 01 முதல் 05 வரையில் விவசாய வாரம் ஒன்றினை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாய வாரத்தை வவுனியாவில் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.முப்பது வருடகால யுத்த சூழ்நிலை காரணமாக நவீன தொழில்நுட்ப முறை களை கற்றுக்கொள்வதற்கோ, உபயோகிப் பதற்கோ வடபகுதி மக்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அதனால் அந்த அறிவினை பெற்றுக்கொடுப்பதற் காக இத்திட்டத்தை ஆரம்பித்ததாகவும் அவர் மேலும் கூறினார். விவசாயத் துறை யிலே பயன்படுத்தப் படுத்த நவீன தொழில்நுட்ப முறைகள், புதிய விதை வகைகள், உரவகைகள் போன்றன தொடர்பாக விளக்கமளிக்க உள்ளதாகவும், அதன் மூலம் வடக்கிலே விவசாயத் துறையில் மறுமலர்ச்சி ஒன்றினை அரசாங் கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன மேலும் கூறினார். ஆடி 26, 2011 குணமடைந்து நாடு திரும்பினார் வெனிசுலா ஜனாதிபதிபுற்றுநோய்க்காக கியூபாவில் சிகிச்சை பெற்று வந்த வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் குணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை நாடு திரும்பினார். வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் 56 வயதான அவரது இடுப்பு எலும்புப் பகுதியில் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கடந்த மாதம் இவர் கியூபா புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்த அவர் பூரண குணமடைந்ததாக தெரிவித்ததை அடுத்து ஹியூகோ அங்கிருந்து நாடு திரும்பினார். அவரது அமைச் சரவை சகாக்கள் விமான நிலையத் தில் ஹியூகோவை வரவேற்றனர். அப்போது செய்தி யாளர்களிடம் பேசுகையில், நான் பூரண குணமடைந்து விட்டேன். புற்றுநோய்க்கான செல்கள் எனது உடம்பின் எந்தவொரு பகுதியிலும் இப்போது இல்லை என்று பரிசோரதனைக்குப் பிறகு மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர் என்றார். ஆடி 25, 2011 உள்ளூராட்சி சபை தேர்தலில் ஐ. ம. சு. முன்னணி பெரு வெற்றி
ஆடி 25, 2011 தேர்தல் தோல்வி மகிழ்ச்சியளிக்கின்றது - டக்ளஸ் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் ஏற்பட்ட இந்தத் தோல்வி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை. எல்லோரது கண்களும் விரைவில் திறந்து கொள்ளும் என்று பாரம்பரிய கைத்தொழில் சிறு தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா நடந்து முடிந்த தேர்தல் குறித்து கருத்து தெரிவித்தார். (மேலும்....) 18 சபைகளின் அதிகாரம் தமிழரசுக் கட்சியின் வசம் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கிலுள்ள 18 உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றியுள்ளது. இவற்றில் மூன்று நகர சபைகளும், 15 பிரதேச சபைகளும் அடங்கியுள்ளன. நாட்டிலுள்ள 65 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்திலுள்ள 13 உள்ளூராட்சி சபைகளையும் அம்பாறை மாவட்டத்தில் 02 உள்ளூராட்சி சபை களையும், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட் டங்களில் தலா ஒவ்வொரு உள்ளூராட்சி சபையையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி சாவகச்சேரி, பருத்தித்துறை, வல்வெட்டித்துறை ஆகிய மூன்று நகர சபைகளையும் கைப்பற்றியுள்ளது. இதேவேளை, யாழ். மாவட்டத்திலுள்ள காரைநகர், வலிகாமம் மேற்கு, வலிகாமம் வடக்கு, வலிகாமம் தென்மேற்கு, வலிகாமம் தெற்கு, வலிகாமம் கிழக்கு, வடமராட்சி தென் மேற்கு, பருத்தித்துறை, நல்லூர், சாவகச்சேரி, அம்பாறை மாவட்டத்திலுள்ள திருகோவில், காரைதீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி, திருமலை மாவட்டத்திலுள்ள பட்டணமும் சூழலும், முல்லைதீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் ஆகிய 15 பிரதேச சபைகளையும் தமிழரசு கட்சி கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. (மேலும்....)
ஆடி
25, 2011 நடந்து முடிந்த தேர்தல் அரசாங்கத்துக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றியாகும்நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், அவரது தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் நாட்டின் பாராளுமன்ற ஜனநாயக சம்பிரதாயங்களுக்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியாகும். 30 ஆண்டு காலம் பயங்கரவாதிகளின் கோரப்பிடியில் சிக்கி ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமையையும் இழந்து துன்பதுயரத்தில் ஆழ்ந்திருந்த எங்கள் நாட்டு மக்கள் இன்று சுதந் திர பிரஜைகளாக தாங்கள் விரும்பிய கட்சியை அல்லது வேட் பாளரை தெரிவுசெய்யும் பூரண உரிமையை பெற்றிருக்கிறார்கள். இந்த வாய்ப்பு வடபகுதி மக்களுக்கு ஜனாதிபதி அவர்களின் நேர்மை யான தலைமைத்துவத்தின் மற்றும் சிறந்த ஆளுமை மூலமே கிடைத்தது. (மேலும்....) ஆடி 25, 2011 ஐ. தே. க., ஜே. வி. பி. சகலதையும் இழந்தன நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும் படுதோல்வி அடைந்துள்ளன. 65 உள்ளூராட்சி சபைகளிலும் எந்தவொரு சபையையும் இவ்விரு கட்சிகளும் வெற்றி பெறவில்லை. அதேநேரம், தம் நிர்வாகத்தின் கீழ் வைத்திருந்த மினுவாங்கொடை நகர சபை, அக்குறணை பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, குளியாப்பிட்டி ஆகிய உள்ளூராட்சி சபைகளை இத்தேர்தலின் ஊடாக ஐ. தே. க. இழந்துள்ளது. இதேவேளை இத்தேர்தலில் ஐ.தே.க. சார்பிலும், ஜே.வி.பி. சார்பிலும் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் எண் ணிக்கையும் பெரிதும் குறைவடைந்துள்ளன. ஜே. வி. பி. பல உள்ளூராட்சி சபைகளில் தம் பிரதிநிதித்துவத்தை இத்தேர்தலில் முற்றாக இழந்திருக்கின்றது. ஐ. தே. க. வும் ஜே. வி. பி. யும் முன்னெடுக்கின்ற கொள்கைகளையும், செயற்பாடுகளையும் நாட்டு மக்கள் நிராகரித்து வருவதை இத்தேர்தல் முடிவு மீண்டும் உறுதிப்படுத்தியுள் ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டனர். ஆடி 25, 2011 திருக்கோவில் பிரதேச சபை தமிழரசுக் கட்சி இரு பிரதிநிதிகளை இழந்தது திருக்கோவில் பிரதேச சபைக்கான தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சி இரு ஆசனங்களை இழந்தது. கடந்த தேர்தலில் 8318 வாக்குகளைப் பெற்ற தமிழரசுக் கட்சி 9 ஆசனங்களையும் பெற்றிருந்தது. ஆனால், இம்முறை அக் கட்சி 6865 வாக்குகளை மாத்திரம் பெற்று 07 ஆசனங்களைப் பெற்றுள்ளது. அதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 1249 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத் தையும், ஐ. தே. கட்சி 810 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது. அதன்படி வரலாற்றில் முதன் முறையாக திருக்கோவில் பிரதேச சபையில் 2 ஆசனங்களை தமிழரசுக் கட்சி பறிகொடுத்துள்ளது. கடந்த 03 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 04 ஆசனங்களையும், நாவிதன்வெளிப் பிரதேசத்தில் 02 ஆசனங்களையும், தமிழரசுக்கட்சி இழந்திருந்தமை தெரிந்ததே. ஆனால், காரைதீவு பிரதேச சபை மாத்திரம் அதே வலு வான நிலையில் உள்ளமை குறிப் பிடத்தக்கது. ஆடி 25, 2011 பூநகரி, பச்சிலைப்பள்ளி நகர சபைகள் தமிழர் விடுதலை கூட்டணி வசம்நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் விடுதலை கூட்டணி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு பிரதேச சபைகளை வெற்றி கொண்டுள்ளது. நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பச்சிலை பள்ளி, பூநகரி ஆகிய இரு பிரதேச சபைகளையே தமிழர் விடுதலை கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆடி 25, 2011நோர்வே தாக்குதலில் கைதான நபர் தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஒப்புதல்நோர்வே குண்டு தாக்குதல் மற்றும் இளைஞர் முகாம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஆகிய குற்றச்சாட்டில் கைதான 32 வயதான நபர் தம் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். வலதுசாரி கிறிஸ்தவ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று கருதப்படும் மேற்படி அன்டர்ஸ் பெஹ்ரின் பிரைவிக் என்ற நபர், இந்த கொலை கொடூரமானது எனவும், ஆனால் கட்டாயம் நடத்தப்பட வேண்டிய தாக்குதல் எனவும் தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். பெர்விக் மீது இன்று நீதிமன்ற விசாரணை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை ஒஸ்லோ குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. (மேலும்....) ஆடி 25, 2011 இங்கிலாந்து பொப் இசை பாடகி எமி மர்ம மரணம் இங்கிலாந்து பிரபல பாடகி எமி ஒயின் ஹவுஸ் (வயது 27) வடக்கு லண்டனில் கேம்டன் சதுக்கத்தில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர். எமி இறந்து கிடப்பது நேற்று முன்தினம் மாலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. பொலிஸார் அங்கு விரைந்து சென்று அவரது பிணத்தை கைப்பற்றினார்கள். அவர் இறந்தது எப்படி என தெரியவில்லை. எமி ஒயின் ஹவுஸ் பேக்டூ பிளாக், ஹுஸ் பிளண்ட் ஆப் ஜாஷ், சோல் உள்ளிட்ட பொப் இசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்றார். கடந்த 1983ம் ஆண்டு டாக்சி ஒட்டுனரின் மகளாக பிறந்த அவர் வடக்கு லண்டனின் புறநகர் பகுதியில் வளர்ந்தார். 10 வயதாக இருக்கும்போதே தனது நண்பர்களுடன் சேர்ந்து பொப் இசை பயின்று புகழ்பெற்றார். இவரது பேக்டூ பிளாக் என்ற இசை ஆல்பம் கடந்த 2006ம் ஆண்டு 5 கிரம்மி விருதுகளை பெற்றது. ஆடி 24, 2011 வடக்கு கிழக்கில் தமிழரசு கட்சி தெற்கில் ஐ.ம.சு முன்னணி வெற்றி பெரும் பரபரப்புக்கு மத்தியில் நேற்று இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வடபகுதியில் வல்வெட்டித்துறை நகர சபை, வலிகாமம் தென் மேற்கு, வலிகாமம் வடக்கு மற்றும் துணுக்காய் பிரதேச சபைகளில் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. நெடுந்தீவு பிரதேச சபை ஐக்கிய சுதந்திர முன்னணி வசம் வந்துள்ளது. இருப்பினும் வடக்கில் பெரும்பாலான சபைகளில் தமிழரசுக் கட்சியே முன்னணியில் உள்ளதாக இன்று அதிகாலை 2 மணிவரை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. (மேலும்....)ஆடி 24, 2011 நாங்கள் இவங்களை (புலிகளை) மன்னிக்க வேண்டும். ஆனால் இவங்கள் செய்ததுகளை மறக்க ஏலாது” அ.வரதராஜப்பெருமாள்
கடந்த காலத்தில் அரச படைகள் என்ன செய்தன. அதனால் தமிழர்கள் எவ்வளவு இழப்புக்களுக்கு உள்ளானார்கள், எவ்வாறான துன்பங்களுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார்கள் என அசைபோட்டு அசைபோட்டு தமிழர்கள் மத்தியில் ஆத்திரமூட்டல்களையும் பழிவாங்கும் உணர்ச்சிகளையும் தூண்டுவதில் ஈடுபட்டிருப்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச இராணுவமாக இருந்தாலென்ன அல்லது புலி இராணுவமாக இருந்தாலென்ன யுத்தப்பிரபுக்களால் இனவெறியும் கொலைவெறியும் ஊட்டப்பட்ட இராணுவ வீரர்கள் யுத்தகளத்தில் பைத்தியக்காரர்களாக அல்லாமல் வேறென்னவாக இருந்திருப்பார்கள். ஒரு புறம் சிங்கள வெறி ஏற்றப்பட்ட படைகள், மறுபுறம் தமிழ் வெறி ஏற்றப்பட்ட படைகள். இந்த இரண்டு படைகளுமே யுத்தகளத்தில் மக்களைப் பற்றிக் கவலைப்;படவில்லை. முழுக்க முழுக்க சிங்களவர்களை மட்டுமே கொண்ட இலங்கை இராணுவம் நடந்து கொண்ட விதத்துக்கு எந்தவகையிலும் குறையாமலே முழுக்க முழுக்க தமிழர்களை மட்டுமே கொண்ட, தமிழர்களின் விடிவுக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்ட புலிகளும் தமது சுயநலத்துக்காக யுத்தகளத்தில் அகப்பட்டுப் போன தமிழ் மக்கள் மீது தமது கொலைவெறியைத் தீர்த்தனர் என்பதே உண்மை.(மேலும்....)
ஆடி 24, 2011 கொழும்பு கடுவெல பிரதேச சபை, ஐ.ம.சு.கூ வெற்றி கொழும்பு கடுவெல பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இதில் இலங்கை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 59987 வாக்குகளைப் பெற்று 20 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 24897 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. __ ஆடி 24, 2011 கிளிநொச்சி கராச்சி பிரதேச சபை, தமிழரசுக் கட்சி வெற்றி _ கிளிநொச்சி கராச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 18609 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 6097 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 133 வாக்குகளை மாத்திரம் பெற்றுடுள்ளது. ஆடி 24, 2011 வலிகாமம் மேற்கு பிரதேச சபை, தமிழரசுக் கட்சி வெற்றி _ வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 12117 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3041 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 420 வாக்குகளை பெற்றுடுள்ளது. ஆடி 24, 2011 வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை: இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதில் இலங்கை தமிழரசுக் கட்சி 12454 வாக்குகளைப் பெற்று 15 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2522 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 290 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளது. ஆடி 24, 2011 வேலணை பிரதேச சபை: ஐ.ம.சு.கூ வெற்றி யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வேலணை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3973 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 2221 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 39 வாக்குகளை மாத்திரம் பெற்றுக் கொண்டது. ஆடி 24, 2011 காரைநகர் பிரதேச சபை: இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி யாழ். மாவட்டத்தின் காரைநகர் பிரதேச சபையில் இலங்கை தமிழரசுக் கட்சி 1787 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1667 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தினையும் ஐக்கிய தேசிய கட்சி 928 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தினையும் பெற்றுள்ளன. வடக்கில் ஐக்கிய தேசியக் கட்சி தனது முதலாவது ஆசனத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது ஆடி 24, 2011 காரைதீவு பிரதேச சபை: இலங்கை தமிழரசு கட்சி வெற்றி காரைதீவு பிரதேச சபையினை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 4284 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2364 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது. ஆடி 24, 2011 பருத்தித்துறை பிரதேச சபை: இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பருத்தித்துறை பிரதேச சபையினை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 8938 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 3022 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 133 வாக்குகளை பெற்றுக்கொண்டது. ஆடி 24, 2011 வலிகாமம் தெற்கு பிரதேச சபை: இலங்கை தமிழரசு கட்சி வெற்றி வலிகாமம் தெற்கு பிரதேச சபையினை இலங்கை தமிழரசு கட்சி கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 12895 வாக்குகளைப் பெற்று 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 4027 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 435 வாக்குகளை பெற்றுக்கொண்டது. __ ஆடி 24, 2011 திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை : ஐ.ம.சு.மு வெற்றி திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 8,451 வாக்குகளை பெற்று 06 ஆசனங்களை பெற்றுள்ளது. இலங்கை தமிழரசு கட்சி 2,961 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை பெற்றுள்ளது. _ ஆடி 23, 2011 தமிழர்கள் இன்றைய தேர்தலில் நல்ல முடிவெடுத்து பயனடைய வேண்டும் இதுவரை காலமும் வடக்கிலுள்ள தமிழ் மக்களுக்கு தங்கள் விருப்பத்தி ற்கு அமைய, ஒரு கட்சியை அல்லது ஒரு வேட்பாளரைத் தெரிவு செய்யும் உரிமையை எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகள் பறித்து, அவர் களை அடிமைகளைப் போன்று சர்வாதிகார நாடுகளில் நடத்தப்ப டும் ஒரு கட்சித் தேர்தலைப் போன்று தங்கள் ஆணைப்படி தாங் கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு மாத்திரமே வாக்குகளை அளிக்க வேண்டும் என்றும், வேறு சில சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் முற்றா கப் பகிஷ்கரிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையிட்டு தமிழ் மக் களின் பாராளுமன்ற ஜனநாயக சுதந்திரத்தை முற்றாக அபகரித்திருந் தனர். (மேலும்....) ஆடி 23, 2011அமெரிக்க கடன் பிரச்சினைக்கு வரிகளை அதிகரிக்க ஒபாமா அரசு முடிவுஅமெரிக்காவின் கடன் உச்ச வரம்பு நிர்ண யிக்கப்பட்ட அளவை கடந்து விட்டது. இதனால் கடன் உச்ச வரம்பை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் தனது பதவிக்கும் ஆபத்து வரலாம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நாடாளுமன்றத்தில் கூறினார். கடன் உச்சவரம்பை அதிகரிப்பது தொடர்பாக குடியரசு கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது 3 இலட்சம் கோடி டொலர் புதிய கடன் உச்ச வரம்பிற்கு குடியரசு கட்சியினரும் ஒபாமாவின் ஜனநாயக கட்சியினரும் ஒப்புதல் அளிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். வாஷிங்டனின் இந்த அறிவிப்பால் உலக பங்குச் சந்தை விறுவிறுப்பு அடைந்து உள்ளது. கிaஸ் கடன் பிரச்சினைக்கு தீர்வு காண ஐரோப்பிய தலைவர்கள் உத்தேச ஒப்புதல் முடிவு எடுத்த நிலையில் பங்குச் சந்தை வேகம் பிடித்தது. (மேலும்....) ஆடி 23, 2011 ஐ.ம.சு.முவின் வெற்றி வாய்ப்பு உறுதி சகிக்க முடியாத தமிழ்க் கூட்டமைப்பு அரசாங்கத்தின் மீது சேறுபூச முயற்சி அரசாங்கம் வடபகுதியில் முன்னெ டுத்துவரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களின் விளைவாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் எதிர்க் கட்சிகளின் அபேட்சகர்களும், முக்கியஸ்தர்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைகின்றனர் என்று கமநல சேவைகள், வனவிலங்குகள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். ஐ.ம.சு.மு. எவரையும் பலாத்காரப் படுத்தியோ, வசதி வாய்ப்புக்களையும், வாக்குறுதிகளையும் வழங்கியோ தம் பக்கம் சேர்த்துக்கொள்ள வில்லை. மாறாக சகலரும் சுயவிருப்பின் பேரிலேயே ஆளும் கட்சியுடன் இணைவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஓரிரு ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் குறிப்பிட்டார்.(மேலும்....) ஆடி 23, 2011 கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பஞ்சம் : விவாதிக்க ஐ.நா. அவசர கூட்டம் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் நிலவும் பஞ்சத்திற்கு தீர்வு காண்பதற்காக ஐ. நா. சபையின் அவசரக் கூட்டம் வரும் 25ம் திகதி நடக்கிறது. கென்யா, எதியோப்பியா, சோமாலியா போன்ற நாடுகள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளன. சோமாலியா நாட்டின் உள்நாட்டு சண்டையால் அங்கு 20 ஆண்டுகளாக பஞ்சம் நிலவுகிறது. 37 லட்சம் பேர் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். ஒருவேளை உணவு கூட கிடைக்காத காரணத்தால் அவர்கள் அண்டை நாடுகளான கென்யா மற்றும் எத்தியோப்பாவுக்குள் ஊடுருவி வருகின்றனர். ஏற்கனவே, அந்த நாடுகளும் பஞ்சத்தில் சிக்கியுள்ளன. இந்த நாடுகளை அல் கொய்தா அமைப்பினர் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், வெளிநாட்டு உதவிகள் மறுக்கப்பட்டு வந்தன. தற்போது நிலைமை மோசமடைந்துள்ளதால் வெளிநாட்டு உதவிகள் ஏற்கப்படுகின்றன. ஆக்ஸ்பாம் தொண்டு அமைப்பு, கிழக்கு ஆபிரிக்க மக்கள் வறுமையில் சாவதை ஐரோப்பிய நாடுகள் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பேச, ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளின் அவசர கூட்டம் வரும் 25ம் திகதி ரோம் நகரில் நடைபெறவுள்ளது. ஆடி 23, 2011 வார்த்தைகளுக்குள் வஞ்சகம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் மூன்று நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்து சென்றிருக் கிறார். இந்திய அதிகார வர்க்கமும், ஊடகங் களும் அவரது பயணத்தைக் கொண்டாடி மகிழ் கின்றன. இந்த உற்சாகப் பெருவெள்ளத்தில், மயக்கத்தில் இந்திய இறையாண்மையைக் கேள்விக்குறியாக்கும் சில உண்மைகளை மறந்துவிடக் கூடாது. தனது பயணத்தின் முதல் நாள் புதுதில்லியில் ஹிலாரி வெளியிட்ட அறிக்கையில், அணுவிபத்து இழப்பீட்டுச் சட்டம், சர்வதேச அணுசக்தி முகமையின் அணுசக்தி விபத்துத் தொடர்பான சாசனத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மிகவும் கவனமாக, அர்த்தம் பொதிந்த விதத்தில் அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை சாமானியர்கள் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை. ஆனால் அந்த வார்த்தைகளுக்குள் வஞ்சகம் ஒளிந் திருக்கிறது. (மேலும்....)ஆடி 23, 2011 ஹிட்லர் உதவியாளரின் உடல் கடலில் கரைப்புஜேர்மனி கல்லறையில் புதைக்கப்பட்ட ஹிட்லர் உதவியாளரின் உடல் சாம்பல் 24 ஆண்டுகளுக்கு பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது. நாஜி படைத் தளபதி ஹிட்லரின் முக்கிய உதவியாளர் ருடால்ப் ஹெஸ். இவர் 1987ம் ஆண்டு பொலின் சிறைச்சாலையில் மரணம் அடைந்தார். அவரது உடல் ஹன்செடல் கல்லறையில் வைக்கப்பட்டது. புதைக்கப்பட்ட 24 ஆண்டுகளுக்கு பின்னர் ருடால்ப் ஹெஸ் கல்லறை இடிக்கப்பட்டு அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானது. இந்த தகவலை ஜெர்மனியின் தெற்கு மாநிலமான பவாரியாவில் உள்ள ஷன்செடல் கிறிஸ்தவ ஆலய அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார். ருடால்ப் ஹெஸ் புகைக்கப்பட கல்லறை குத்தகை இடம் புதுப்பிக்கப்பட வேண்டி உள்ளது. ஆனால் கிறிஸ்தவ ஆலய நிர்வாகம் ருடால்ப் ஹெஸ் இட குத்தகையை நீடிக்க விரும்பவில்லை. கல்லறையை இடிக்க ஹெஸ் குடும்பத்தினர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் கல்லறையை இடிக்க ஒப்புக் கொண்டனர். இரண்டாம் உலகப் போரை முன்னதாக கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்காக ருடால்ப் ஹெஸ் ஸ்கொட்லாந்தில் பாராசூட்டில் தரை இறங்கினார். அவரது இந்த பயணம் இப்போதும் நினைவு கூறப்படுகிறது. இருப்பினும் ருடால்ப் ஹெஸ் குற்றவாளி என்றும் 1946ம் ஆண்டு போர் தீவிரமாக அவர் காரணம் எனவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 93 வயதில் ருடால்ப் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஆடி 23, 2011 காஷ்மீர் பிரிவினைவாதி கைது, பாகிஸ்தான் எதிர்ப்பு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் கருத்துக்கு ஆதரவாக அமெரிக்க நாடா ளுமன்ற உறுப்பினர்களை வளைக்க முயன்ற காஷ்மீர் பிரிவினைவாத அமைப் பின் தலைவர் குலாம் நபி பைய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத் துக்கு எழுதியுள்ள கடிதத் தில், பைய் கைதுக்கு பாகிஸ் தான் தனது எதிர்ப்பை தெரி வித்துள்ளது. மேலும் ஜம்மு-காஷ்மீ ருக்காக காஷ்மீரி அமெரிக் கன் கவுன்சில் என்ற அமைப் பும், அதன் தலைவரான குலாம் நபி பையும் செய்துள்ள பணிகளை நாங்கள் பாராட் டுகிறோம் என்று அந்த கடி தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.(மேலும்....) ஆடி 23, 2011 பூமி வெப்பமயமாதலால் உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் உலகின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல் தருவதாக உலக வெப்பமயமாதல் உள்ளது என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் கவுன்சில் எச்சரித்து உள்ளது. உலக வெப்பமயம் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் சிறிய நாடுகளின் நிலபரப்பும் அழிந்து வருகின்றன என ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கவலையுடன் தெரிவித்தது. உலக வெப்பமயமாதல் நடவடிக்கையில் பெருந்தன்மையான சமரசம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா. வில் ஜேர்மனி தூதர் பீட்டர் தெரிவித்தார். உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அடுத்த கட்ட அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். கடல் நீர் மட்டம் அதிகரிப்பால் பல லட்சம் மக்கள் உள்ள பின்தங்கிய தீவுகள் அழியும் நிலையில் உள்ளன. கங்கை, நைல் மற்றும் பெரும் கடலோரப் பகுதிகளான கராச்சி. நியூயோக், சிங்கப்பூர், டோக்கியோ ஆகியவற்றின் பாதுகாப்பை மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்த ஐ.நா. அமைதி நடடிக்கையாளர்கள் எடுத்த முயற்சிகளும் உரிய பலனை அளிக்கவில்லை. மிக மோசமான விளைவு ஏற்படுவதற்கு முன்னர் தற்காப்பு நடவடிக்கை தேவை என்றும் பீட்டர் வலியுறுத்தி உள்ளார். ஆடி 23, 2011 நோர்வேயில் பாரிய குண்டுவெடிப்பு இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் அரசாங்க கட்டிடங்களுக்கு அண்மையில் ஒரு பெரிய குண்டு வெடிப்பு நிகழ்ந்து இதில் குறைந்தது இதுவரையில் ஒருவர் இறந்ததாகவும் 8 பேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகிறது. மேலும் இதில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதியில் இருந்த அரச கட்டிடங்கள் மற்றும் அதன் பாகங்களும் பலத்த சேதத்திற்குட்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ள. மேலும், இந்த குண்டுவெடிப்பின் நோர்வே பிரதமர் வீட்டிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பிரதமருக்கு எதுவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என ஒஸ்லோவில் அமைந்திருக்கும் இலங்கை தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளதுஇ எனினும் பாதிப்புக்கள் தொடர்பாக மேலும் அவதானிப்பதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. ஆடி 22, 2011 புலிகளின் இலட்சினைகள் பொறிக்கப்பட்டு லண்டனில் உலாவரும் பஸ்
பிரித்தானிய தேசிய கொடி ஒருபுறமிருக்க விடுதலைப் புலிகளின் இலட்சினைகள் பொறிக்கப்பட்ட பஸ் ஒன்று லண்டன் நகரில் உலாவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆடி 22, 2011 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல்65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவுகள் ஆரம்பமாகி பிற்பகல் 4 மணிவரை இடம்பெறும். ஒரு மாநகரசபை, 9 நகர சபைகள், 55 பிரதேச சபைகளில் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். 65 உள்ளூராட்சி சபைகளிலும் இருந்து 875 உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். (மேலும்....) ஆடி 22, 2011 முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் என துண்டுப்பிரசும் வெளியிட்ட அருந்தவபாலன் கைது முள்ளிவாய்க்காலில் பெருமளவு மக்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வாசகம் பொறித்த துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார் என்பதற்காக தமிழரசுக்கட்சி முக்கியஸ்தரும் சாவகச்சேரி ட்றிபேக் கல்லூரி அதிபருமான அருந்தவபாலன் புதன்கிழமை இரவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கையையொட்டி இவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் தொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணைக்காக இவர் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். இவர் பாடசாலை ஒன்றின் அதிபராக புலிகளின் பிரசன்ன காலத்தில் வேலை செய்தார் என்பதைவிட புலிகளின் தீவிர செயற்பாட்டளாராகவும் செயற்பட்டார். ஆசிரியர் குழாத்தை புலிகளுக்காக கட்டிப் போடுவதில் இவரின் செயற்பாடே முக்கியமாக இருந்தது. மேலும் இவரின் மகனும் புலிகளின் உறுப்பினராவார். ஆடி 22, 2011 வவுனியா- கொழும்பிற்கு இடையில் விமான சேவை ஆரம்பம் வவுனியாவிற்கும் கொழும்பு இரத்மலானைக்கும் இடையிலான பயணிகள் விமான சேவையொன்று இலங்கை விமானப்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை இலகுபடுத்தும் நோக்கில் இந்தச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் தெரிவித்தார். பயணி ஒருவரிடம் இருந்து ஒரு வழிக் கட்டணமாக ரூபா 6,600 அறவிடப்படும் எனவும் தெரிவித்தார். ஆடி 22, 2011 புற்றுநோய் சிகிச்சை பிரிவு அமைக்க நடைப்பயண அணியினர் 459கி.மீ தூரத்தை கடந்துள்ளனர் புற்று நோயாளர்களின் நன்மைக் கருதி, முழுமையான வசதிகளைக் கொண்ட புற்று நோயாளர் வைத்தியசாலை ஒன்றை யாழ். போதனா வைத்தியசாலையில் நிர்மானிப்பதற்காக நிதி சேகரிக்கும் முகமாக மாத்தறை தொந்திரா வெளிச்ச வீட்டில் இருந்து ஆரம்பமாகிய நடைப்பயண அணியினர் இன்று வரை சுமார் 459 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்துள்ளார்கள். சுமார் 200 இலட்சம் ரூபாவை நிதியாக திரட்டும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடை யாத்திரைக்கு தென்னிலங்கையைச் சேர்ந்த வர்த்தகப் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் உதவிகளை வழங்கி வருவதாக நடைபாதை யாத்திரையை மேற்கொண்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றார்கள். (மேலும்....)ஆடி 22, 2011 85 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு அமெ. அரசிடம் நிகரகுவா கோருகிறது நிகரகுவாவில் உள் நாட்டுச் சண்டையை தூண் டிவிட்டு பெரும் இழப்பை ஏற்படச் செய்த அமெ ரிக்கா, அந்த இழப்பை ஈடு செய்யும் வகையில் சுமார் 85 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும் என்று நிகரகுவா கோரிக்கை வைத்துள்ளது. தனக்கு அடிபணியாத நாடுகளில் குழப்பம் ஏற் படச் செய்து அவற்றை சீர ழியச் செய்வது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தி யாக இருந்து வருகிறது. இராக்கில் அந்நாடு செய்து வரும் அட்டகாசங்கள் தற் போதைய உதாரணமாக இருக்கிறது. 1980களில் மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவில் அத் தகைய நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்தது. (மேலும்....)ஆடி 22, 2011 சர்வதேசத்தின் தீர்வு நமக்கு தேவையில்லை எமது பிரச்சினைகளை நாமே தீர்க்க முடியும் சர்வதேசத்தின் தீர்வு நமக்குத் தேவையில்லை நமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன பூநகரியில் தெரிவித்தார். தமிழ், சிங்கள மக்கள் தமக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் இரு சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை வலுப்பெறும் எனவும் பிரதமர் தெரிவித்தார். கிளிநொச்சி பூநகரி பகுதிகளில் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்....) ஆடி 22, 2011வெற்றிப் பயணத்தில் சீனக் கம்யூனிஸ்டுகள் (என். குணசேகரன்) வட்ட மேசைக் கூட்டங்கள் சீனாவின் சாதனை விளக்கங்களாக மட்டும் அமைய வில்லை. சீனச் சமூகம் எதிர்கொள்ளும் பல எதிர்மறைப் பிரச்சனைகள், நீடிக்கும் குறைபாடுகள், திறந்தவெளிப் பொருளா தாரத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஊழல்கள், சுற்றுச் சூழல் பாதிப்பு உள் ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்த மனந்திறந்த கருத்துக்கள் சந்திப்புக் களில் வெளிப்பட்டன. இந்தக் குறைபாடுகளை அவர்கள் மூடிமறைக்கவில்லை. அவற்றை நன்கு ணர்ந்து, உரிய தீர்வுகளை இடைவிடாது மேற்கொள்ளும் அசாத்திய மனத்திண் மையை சீனக் கட்சியின் கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை காண முடிந்தது. சாதனைகளுக்கும் குறைவில்லை. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த அவர்கள் மேற்கொண்டுவரும் பெரும் முயற்சிகள் பலன் அளித்து வரு கின்றன. (மேலும்....) ஆடி 22, 2011சிலாபத்தில் குழாய்க் கிணற்றிலிருந்து எரிவாயு வெளியேற்றம் சிலாபம், முன்னேஸ்வரம் பெளத்த விகாரையில் தண் ணீருக்காக தோண்டப்பட்ட குழாய்க் கிணற்றிலிருந்து ஒரு வகை எரிவாயு வெளி யேறி வருகிறது. முதலில் குழாய்க் கிணறு தோண்டப்பட்ட போது நீருக்குள்ளிருந்து ஒருவகை வாயு வெளியேறுவது கண்டுபிடிக்கப்பட்டது. சுலபமாக தீப்பற்றிக் கொள் ளக்கூடியதாக இந்த வாயு இருந்ததுடன் இப்பகுதியில் மற்றுமொரு குழாய்க் கிணறும் தோண்டப்பட்டது. அதிலிருந்தும் இந்த வகையான வாயு வெளியேறியது. முதலில் மீதேன் வாயு என ஆய்வாளர்கள் குறிப்பிட்ட போதும் பின்னர் அதனை மறுத்துள்ளனர். சுமார் 200 மீற்றர் தொலைவிற்கு குழாய் மூலம் வாயுவை கொண்டு சென்று பரிசோதித்த போதும் மிக எளிதாக தீப்பற்றிக் கொண்டது. இப்பகுதியில் மேலும் 2 குழாய் கிணறுகளை தோண்டி ஆய்வு செய்யும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். விசேட குழுவொன்று இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது. ஆடி 22, 2011சுனாமி உண்டாக்கிய சுமாத்திரா கடற்தட்டுப் பிறழ்ச்சி இந்தோனேசியாவுக்கு மேற்கே சுமாத்திரா தீவுக்கு அருகே கடற்தளத்தில் அதே கோணத்தில் சாய்ந்திருக்கும் சுமாத்திரா நிலநடுக்கப் பழுது (Sumatran Fault) சுமார் 1100 மைல் நீளத்தில் இருப்பதாக அறியப்படுகிறது. 2004 ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி வெடித்த கடற்தள பூகம்பத்தில் பூதவடிவில் எழுந்த சுனாமி கால் மில்லியன் நபர்களைக் கொன்றதோடு, பன்னிரெண்டு நாட்டுக் கடற்கரை நகரங்க ளைத் தகர்த்துவிட்டது. நிலநடுக்கத்தின் போது மாபெரும் ஆற்றல் மிக்க அசுர சுனாமியை எழச் செய்த கடற்தள முறிவின் நீளம் சுமார் 700 - 800 மைல், அகலம் 60 மைல். அதாவது 48,000 சதுர மைல் (800x60) பரப்பும், பல ஆயிரம் அடி அழமுள்ள கடல் வெள்ளத்தை செங்குத்தாகத் தூக்கிப் பல முறை குலுக்கிப் போட்டுச் சுனாமிப் பேரலைகள் கரைநோக்கி அடுத்தடுத்துப் படையெடுத்துள்ளன. (மேலும்....) ஆடி 22, 2011வடக்கு மக்கள் கடந்த காலத்தைவிட இம்முறை தேர்தலில் ஆர்வம்வடமாகாண மக்கள் கடந்த காலங்களைவிடவும் இம்முறை தேர்தல் குறித்து மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் என்று தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு நிலையத்தின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி ரஸங்க ஹரிச்சந்திர நேற்றுத் தெரிவித் தார். பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்ட பின்னர் வடபகுதி யில் நடை பெறும் முதலாவது தேர்தல் இதுவாகும். அச்சம், பீதியற்ற சூழலில் இத்தேர்தல் நடைபெறுவதன் பயனாகவே வடமக்கள் அதிக ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறினார். கடந்த காலங்களில் வடபகுதியில் உள்ள காவலரண்களில் பாதுகாப்பு படையினரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இப்போது காவலரண்ங்களில் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்புக்குரியது என்றார். ஆடி 22, 2011 ஐ.தே.க, த.தே.கூ உறுப்பினர்கள் ஐ.ம.சு.முவில் இணைந்தனர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கரச்சி பிரதேச சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரான எம். சுப்பையா என்பவர் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி முன்னிலையில் ஐ.ம.சு.மு வில் நேற்று முன்தினம் இணைந்தார். த.தே.கூட்டமைப்பினாலும் புலிகளாலும் தமக்கோ, தமிழ் மக்களுக்கோ எந்த நன்மையுமே கிடைக்கவுமில்லை. அவற்றை அவர்களால் பெற்றுக் கொடுக்கவும் முடியாது. (மேலும்....) ஆடி 22, 2011 கனடா எல்லையில் துப்பாக்கிகளுடன் அமெரிக்கர்கள் கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் எல்லைப் பகுதியில் தற்போது புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த எல்லைப் பகுதியில் தாராள போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டாலும் பாதுகாப்பு சோதனைகள் கடுமையாக மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக அமெரிக்கர்கள் எடுத்து வரும் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் குறித்து பாதுகாலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கனடாவிற்கு வரும் அமெரிக்கர்கள் தாங்கள் எடுத்து வரும் துப்பாக்கி விபரங்களை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றும் உரிய அனுமதியையும் பெற்று இருக்க வேண்டும் என கனடா காவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர். கடந்த வாரம் பிரிட்டிஷ் கொலம்பியா எல்லைப் பகுதியில் குண்டுகள் நிரப்பப்பட்ட 10 துப்பாக்கிகளை காவலர்கள் கைப்பற்றினர். கனடா எல்லை சேவை முகமை தற்போது வெளியிட்டு உள்ள வரையறை அறிக்கையில் கொண்டு வரும் ஆயு தங்கள் குறித்து எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக் கப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத ஆயுதங்களை எல்லை பாதுகாவலர்கள் பறிமுதல் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆடி 21, 2011 மக்களின் பணத்தை சூறையாடிய சுரேஸ் கிளிநொச்சியை எப்படி காக்கப்போகிறார் ? அப்பாவி தமிழர்களின் பணத்தை சூறையாடி மகளை புதுடில்லிக்கு அனுப்பி வைத்திய கல்வியைப் புகட்டும் சுரேஷ் எவ்விதம் கிளிநொச்சியை காப்பாற்ற முடியும்? யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற அங்கத்தவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இன்று கிளிநொச்சியை கிளிநொச்சியாக இருக்கவிடுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்துகின்றார். (மேலும்....) ஆடி 21, 2011
வானவில் இதழ் 7 ஆடி 21, 2011 பொட்டு வைக்கும் பூசாரியாருக்கு ‘புலிகள்’ வந்து பொட்டு வைப்பார்களா?
நீங்க நல்லா இருப்பீங்கள் ஐயா! ஆடி 21, 2011 EQUAL HUMAN RIGHTS FOR ALL IN SRI LANKA - AMBASSADOR JALIYA WICKREMASURIYA (By Ravi LADDUWAHETTY) Sri Lanka’s Ambassador to the United States Jaliya Wickremasuriya, in an exclusive interview with the Sunday Observer, said the US should be aware that human rights have been restored equally to all Sri Lankans without fear or favour. The Sri Lankan envoy in Washington has also told the Western media, who has been very cynical of Sri Lanka’s human rights, that Sri Lanka has been very practical and implemented these rights equally unlike the Western world which is merely theoretical. The envoy also said 12 Fortune 500 listed multinational corporates have written to US Secretary of State Hillary Clinton last month that Sri Lanka’s investment climate was sound. (more...) ஆடி 21, 2011 ஜெயலலிதா - ஹிலாரி சந்திப்பு
இரண்டு நாள் பயண மாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அயல்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண் டன் புதனன்று சென்னை வந்தார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவர் சந் தித்தார். தமிழகத்தில் அமெ ரிக்க முதலீட்டை அதிகரிப் பது குறித்து இருவரும் விவா தித்ததாக தகவல்கள் கூறு கின்றன. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாணவர்களிடையே ஹிலாரி உரையாடினார். 21ம் நூற்றாண்டின் வர லாற்றின் பெரும் பகுதி ஆசி யாவில் இந்தியாவால் எழு தப்படும் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும் என்றார் அவர். 21ம் நூற்றாண்டில் இந் தியாவுக்கும், அமெரிக் காவுக்கும் இடையிலான உறவு வலுவடைந்துள்து. மேலும் வலுவடையும் என் றார். இந்தியாவில் தேர்தல் நடத்துவதில் தேர்தல் ஆணை யம் உலகத்தரம் வாய்ந்ததாக கருதப்படுகிறது என்று கூறிய அவர், பொருளா தாரம், பருவநிலை மாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட பல் வேறு துறைகளில் இருநாடு களும் இணைந்து செயல் படுகின்றன என்றார். பயங்கரவாதத்தை கட் டுப்படுத்துவதில் இந்தியா வும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட வேண்டியுள்ளது என்று கூறிய அவர், பயங்கரவாதக் குழுக்களை கட்டுப்படுத்து மாறு பாகிஸ்தானை கேட் டுக் கொண்டுள்ளதாக கூறி னார். இந்தியா - அமெரிக்கா - சீனா ஆகிய நாடுகளிடையே வலுவான உறவை ஏற்படுத்த உறுதிப்பூண்டுள்ளதாகவும், இது எளிதான வேலையல்ல என்றும் ஹிலாரி கூறினார். ஆடி 21, 2011 புலிகளிடம் பிள்ளைகளை பிடித்துக் கொடுத்த ஸ்ரீதரனா மக்களை காப்பாற்ற போகிறார்? (மண்ணின் மைந்தன் ) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அப்பாவி சிறார்களை கட்டாயமாக புலிகள் அமைப்பில் இணைப்பதற்கு வழியமைத்துக்கொடுத்த காரணத்தினால் கிளிநொச்சி கல்வி வலயத்தில் 10வது நிலையில் அதிபராகவிருந்த இவர் உயர்தரப் பாடசாலையின் அதிபராக பதவியுயர்வு பெற்றார் என்று மண்ணின் மைந்தன் என்பவர் எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இவர் கிரிக்கட் மட்டை பிடிக்கத்தெரியாத நடேசனின் மகனுக்கு முன்னணி கிரிக்கட் மட்டை பிடிப்பாளர் என பரிசுகொடுத்து காலத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி நன்மையடைந்தார். (மேலும்....) ஆடி 21, 2011 அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது ஈரான் ராணுவம் அதிரடி நடவடிக்கை ஈரானின் மத்தியப் பகுதி யில் உள்ள கோம் மாகா ணத்தில் வலம் வந்து கொண் டிருந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் ராணுவப்பிரிவான புரட்சி கர பாதுகாப்புப் படை யினர் சுட்டு வீழ்த்தினர். இது குறித்து தேசியப் பாதுகாப்பு மற்றும் வெளி யுறவுக் கொள்கைக்குழுவின் உறுப்பினர் அலி அகா சடே செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கோம் மாகாணத்தில் உள்ள ஃபோர்டோ அணுமின் நிலையத்தைச் சுற்றி அமெ ரிக்காவின் ஆளில்லா விமா னம் வலம் வந்து கொண்டி ருந்தது. அப்போது ஈரா னின் புரட்சிகர பாதுகாப் புப் படையினர் அதைச் சுட்டு வீழ்த்தினர். ஃபோர்டோ அணுமின் நிலையம் அமைந் துள்ள இடம், அதன் திறன் ஆகியவை பற்றிய விபரங் களை அறிந்து கொள்ளவே இந்த ஆளில்லா விமா னத்தை அனுப்பியுள்ளனர். சி.ஐ.ஏ.யின் உளவு நடவடிக் கைகளுக்கு உதவவே இந்த விமானம் வந்தது என்று குறிப்பிட்டார். ஆளில்லா விமானத்தை அனுப்பியதும் தங்கள் பொய்ப் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்க்கவே என்று ஈரான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கருத்து தெரி வித்துள்ளனர். ஆடி 21, 2011 ஆனந்தசங்கரியின் துரோகங்களை கிளிநொச்சி மக்கள் மறப்பது எப்படி? ஆலாலசுந்தரத்தை தோற்கடித்து பாராளுமன்றம் சென்றபின் ஆனந்தசங்கரி செய்த துரோகங்களை கிளிநொச்சி மக்கள் மறக்கமாட்டார்கள். தமிழரசுக் கட்சியின் வீரசிங்கமாம் ஆலாலசுந்தரத்தை எதிர்த்துப் போட்டியிட்டு 500 பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று பாராளுமன்றம் சென்ற ஆனந்தசங்கரி அன்றைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செய்தவற்றை கிளிநொச்சி வாழ் மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள் என்று கிளிநொச்சி வாழ் மைந்தன் எழுதியிருக்கும் கடிதத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். (மேலும்....) ஆடி 21, 2011 மேர்டோக் மீது இங்கிலாந்து பாராளுமன்றில் தாக்குதொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்ற குழு முன்பு ஆஜராகியிருந்த ‘நியூஸ் ஒப் தி வேல்ட்’ செய்தி நிறுவன உரிமையாளர் மேர்டோக் (79) மீது ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரிட்டனில், பல்வேறு தொலைபேசி ஒட்டுக் கேட்பு குற்றச்சாட்டில் சிக்கிய “நியூஸ் ஒப் தி வேல்ட்’ பத்திரிகை சமீபத்தில் மூடப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையாயினர். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரிட்டன் பாராளுமன்ற எம்.பி. க்கள் கொண்ட தேர்வு குழு முன்பு ‘நியூஸ் கோபரேஷன்’ தலைமை நிர்வாக அதிகாரி ரூபர்ட் மேர்டோக், இவரது மகன் ஜேம்ஸ் மேர்டோக் மற்றும் ‘நியூஸ் இன்டர்நேஷனல்’ முன்னாள் தலைவர் ரெபெக்கா ப்ரூக்ஸ் ஆஜராகி பதிலளித்தனர். அப்போது டுவிட்டர் இணையதள ஆர்வலர் ஒருவர் திடீரென மேர்டோக்கை நோக்கி வேகமாக வந்து அவர் மீது சவரம் செய்யும் கிரீமை எடுத்து மேல் ஊற்றி தாக்கினார். இதனால் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பாராளுமன்ற பாதுகாவலர்கள் அவனை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவன் பெயர் ஜானிமார்பில்ஸ் என்ற ஜோனாதன் (44) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடி 21, 2011 கிளிநொச்சியில் சர்வதேச விளையாட்டரங்கிற்கு ஜனாதிபதி அடிக்கல் 325 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கிற்கான அடிக்கல்லை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று நாட்டிவைத்தார். கிளிநொச்சி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு அங்கு பெரும் வரவேற்பளிக்கப்பட்டது. ஐ. ம. சு. முவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றினார். ‘தமிழ் மக்களின் உரி மைகள் அவர்களிடமே இருக்க வேண்டும். அதனை எவரும் தட்டிப் பறித்துக்கொள்ள முடியாது. 30 வருட காலம் தமிழர்கள் இழந்திருந்த உரிமைகளையும் ஜனநாயக த்தையும் பெற்றுக்கொடுத் துள்ளோம்’ என ஜனாதிபதி அங்கு கூறினார். ஆடி 21, 2011 குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் பல கோடி ரூபா வைரங்கள்!மும்பை குண்டுவெடிப்பு நடந்த ஓபரா ஹவுஸ் பகுதியில், பல கோடி மதிப்புள்ள வைரங்கள். இதில் 19 பேர் பலியானதுடன் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். ஓபரா ஹவுஸ் பகுதியில், குண்டுவெடிப்பில் சேதமான கட்டடங்களின் இடிபாடுகளை, பணியாளர்கள் சுத்தப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை கட்டட இடிபாடுகளை அகற்றும் போது, 65 வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை பணியாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து, மும்பை வைர வியாபாரிகள் சங்க உறுப்பினர் சஞ்சய் ஷா செய்தியாளர்களிடம் கூறியதாவது. குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில், இடிபாடுகளை அகற்றும் போது பணியாளர்கள் 65 வைரங்களை கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இதன் மதிப்பு 25 கோடி ரூபாய். குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள், மும்பையில் விற்பனைக்காக கொண்டு வந்தவையாக இருக்கலாம். இடிபாடுகளுக்கிடையில், இன்னும் வைரங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சஞ்சய் ஷா கூறினார். ஆடி 20, 2011 இது நிஜம் கலந்த கற்பனை (மோகன்)
ரொம்ப நாளா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் என்று மனம் தவியா தவிச்சிட்டே இருக்கிது. கூட்டமைப்பும், மகிந்தரும் ஏதோ பேசிக்கிறாங்கண்ணு நியூஸ் வருது. அப்படி என்னதான் பேசிக்கிறாங்க என்று யாருக்கும் தெரியல. எனக்கும் புரியல. ஐம்பது வருஷத்துக்கு மேலா இழுத்தடிச்சிட்டிருக்கிற நம்ம பிரச்சனைக்கு என்னதான் வேணுமெண்டு ஒரு ஐஞ்சு வரியில சொல்லிப்போடலாமே. இதோ பார் மகிந்தா! எங்களுக்கு இன்னென்ன தான் வேணும். இன்னென்ன வேணுமெண்டா நீயே வச்சுக்க. அதற்கு மகிந்தரும் இதோ பார் தம்பிகளா! என்னால உங்களுக்கு இன்னென்ன தான் தரமுடியும் அதைவிட்டிட்டு இன்னென்ன எல்லாம் கேட்கபடாது என்று சொன்னா போச்சு. (மேலும்....) ஆடி 20, 2011 ‘81 யாழ் நூலக எரிப்புடன் ‘உதயன்’ பத்திரிகை உரிமையாளர் சரவணபவானின் தந்தையும் தொடர்புபட்டவர் ! ஜனாதிபதி, பிரதமர் முன்னிலையில் அம்பலமாகிய அதிர்ச்சிச் செய்தி ! - நமது யாழ் நிருபர் 1981ம் ஆண்டு யாழ் பொதுசன நூல்நிலையம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் ‘உதயன’; பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் திரு சரவணபவானின் தந்தை ஈஸ்வரபாதமும் தொடர்புபட்டிருந்த செய்தி இன்று சாவகச்சேரியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் டி.எம்.ஜயரட்ண ஆகியோர் கலந்து கொண்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்ட மேடையில் அம்பலத்திற்குவந்து பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஜக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த திரு சரவணபவான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கடந்த 2010 தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக வந்திருந்தார். இதன் பின்னர் தனது ‘உதயன்’ பத்திரிகை ஊடாக கட்டம் கட்டமாக சில தமிழரசுக் கட்சித் தலைவர்கள் உட்பட பல கூட்டமைப்பு தலைவர்களை திட்டமிட்டு ஓரங்கட்டத்தொடங்கியதைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களினாலேயே இச் செய்தி முதலில் கசியவிடப்பட்டிருந்தது. (மேலும்....) ஆடி 20, 2011 Darusman Report & Chanel 4 Video I am still amazed, baffled and shaken that you have taken upon yourself to do your little Song and Bharathanatyam’s Alarippu Dance with your conspicuously selective anguish about the war-violence in Sri Lanka during the last five months of the Tamil Tiger terrorist Eelam War not realizing that the bloody war had been going on for 30 long years, which saw over 100,000 people dead, the majority were my Sinhalese people shot, bombed, bayoneted and chopped by the Tamil Tigers. And you are tagging on to two fraudulent artifacts, the Darusman Report put together by three anti-Sri Lanka “experts”, and the Channel 4 ‘The Killing Fields of Sri Lanka’ video which has begun to unravel like Salomé’s seven veils in front of the world opinion and will soon have its seventh veil drop showing its naked lies. The truth of the video according to digital video experts and video forensic experts is already making the producer and narrator uncomfortable. And very soon you will say: “Oops! I fell for it, didn’t I? It’s my fault. I should have listened to the sincere voice of Asoka Weerasinghe from Ottawa who wanted to guide me away from such frauds.” (more....) ஆடி 20, 2011 லிபிய கிளர்ச்சியாளர்களை அங்கீகரிப்பதற்கு ரஷ்யா எதிர்ப்பு லிபிய ஜனாதிபதி கடாபியின் எதிர்ப்பாளர்கள் தேசிய மாற்று கவுன்சில் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த கவுன்சிலை சட்டபூர்வமான அரசாங்கமாக அமெரிக்காவும், ஐரோப்பாவும் அங்கீகரித்து உள்ளன. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், எதிர்ப்பாளர்களை அங்கீகரித்து இருப்பவர்கள் உள்நாட்டு போரில் ஒருதரப்புக்கு ஆதரவாளர்களாக மாறி விட்டனர். இது பாரபட்சமானது என்று குறிப்பிட்டார். ஆடி 20, 2011 கிளிநொச்சியில் விமான ஓடுபாதை திறந்து வைப்பு இலங்கை விமானப் படை கிளி நொச்சியில் விமான ஓடு பாதை ஒன்றை நேற்றுக் காலை புதிதாக திறந்து வைத்தது. இந்த விமான ஓடு பாதையை உத்தி யோகபூர்வமாக திறந்து வைக்கும் பொருட்டு விமானப் படைக்குச் சொந்தமான y – 12 ரக விமானம் நேற்றுக்காலை 11.30 மணியளவில் அந்த ஓடு பாதையில் முதல் முறையாகத் தரையிறக்கப்பட்டது. புலிகளின் பலம் பொருந்திய தளமாகக் கருதப்பட்ட கிளிநொச்சியை ஊடறுத்துச் செல்லும் ஏ-9 பிரதான வீதியிலிருந்து சுமார் 7 கிலோ மீற்றர் கிழக்கே இந்த விமான ஓடு பாதை அமைக்கப்பட்டுள்ளதாக விமானப் படைத் தலைமையகம் தெரிவித்தது. இந்த ஓடு பாதையின் நீளம் ஒரு கிலோ மீற்றராகும். (மேலும்....) ஆடி 20, 2011
ஆடி 20, 2011 வடக்கு மக்களின் உரிமைகளை குழிதோண்டி புதைத்தது ஐ.தே.கவே 28 வருடங்களுக்கு முன்னர் வடபகுதி மக்களின் ஜனநாயக உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்த பாவத்திலிருந்து மீட்சிபெற ஐக்கிய தேசியக் கட்சியினருக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக இளைஞர் விவகார திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும நேற்று தெரிவித்தார். இந்தப் பாவத்திலிருந்து மீட்சிபெறுவதற்காக ஐ.தே.க.வினர் வெள்ளையாடையணிந்து நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு முன்பாகவோ அல்லது யாழ் நூலகத்துக்கு முன்பாகவோ சென்று 28 தடவைகள் அழுது, தியானம் செய்யவேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார். (மேலும்....) ஆடி 20, 2011 பாக். இராணுவத்தினரை தலிபான்கள் சுட்டுக்கொல்லும் வீடியோ வெளியீடுபாகிஸ்தான் இராணுவத்தி னரை தலிபான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அதில், பாகிஸ்தான் நாட்டு இராணுவ சீருடையுடன் வரிசையாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த வீரர்கள் முன்பு 4 தீவிரவாதிகள் நிற்கின்றனர். முகத்தை துணியால் மூடியுள்ளனர். அந்த தீவிரவாதிகளில் ஒருவர், ‘இவர்கள் கடவுளின் எதிரிகள். மதத்துரோகிகள். ஸ்வாட் பகுதியில் 6 குழந்தைகளை சுட்டுக் கொன்றவர்கள்’ என சப்தமாக கூறுவது வீடியோவில் தெரிகிறது. அதன் பின்னர், இராணுவத்தினரை தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடுகின்ற காட்சிகளும் இறுதியாக தலையில் சுட்டுக்கொல்லும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, கடந்த ஜூன் 1ம் திகதி அன்று ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள திர் மாவட்டத்தில் இருந்து பாகிஸ்தான் இராணுவத்தினரை தலிபான் தீவிரவாதிகள் கடத்திச் சென்றதாக பாகிஸ்தான் இராணுவ செய்தி தொடர்பாளர் அத்தர் அப்பாஸ் கூறினார். வேறு எந்த விபரத்தையும் அவர் தெரிவிக்கவில்லை. ஆடி 20, 2011 அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் காலம் உருவாகியுள்ளது - முருகேசு சந்திரகுமார் இன பேதங்களை கிளப்பி, குரோத மனப்பான்மையுடன் அரசியல் நடத்திய காலம் போய் நன்மை, தீமைகளை உணர்ந்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய காலம் தோன்றியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். அனைத்து பேதங்களையும் மறந்து இலங்கையர்களாகிய நாம் ஒன்றாக இணைந்து செயற்படுவதன் மூலம் ஒரே இனத்தவராக முன்னுக்கு செல்வதே தற்போது செய்யக்கூடிய செயலாகும் என்றும் அவர் கூறியுள்ளார். (மேலும்....) ஆடி 20, 2011 ஸ்பெக்ட்ரம் நடைமுறைகளில் பிரதமருக்குத் தொடர்பு? நீதிமன்றத்தில் ராசா வெளியிடவிருக்கும் தகவல்களால் மத்திய அரசுக்குள் கடும் பரபரப்பு!2 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொட்ரபான ஒவ்வொரு நடவடிக் கையும் பிரதமர் மன்மோகன் சிங்குக்குத் தெரியும் தனக்கும், பிரதமர் உள்ளிட்ட அரசுத்துறையினருக்கும் இடையேயான அனைத்து கடித்தத் தொடர்புகள் உள்ளிட்ட அசைக்க முடியாத ஆதாரங்களுடன் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தானே வாதாட முன்னாள் அமைச்சர் ராசா தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘2008ம் ஆண்டு நடந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். ஏல நடைமுறைகள் முன்கூட்டியே பிரதமருக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதுதொடர்பான ஒவ்வொரு நடவடிக்கை யும் பிரதமருக்கு முன்கூட்டியே தெரிவிக் கப்பட்டு விட்டது. எனவே அனைத்து நடைமுறைகளிலும் பிரதமருக்கும் தொடர்பு உள்ளது என்று ராசா கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....) ஆடி 20, 2011 வட பகுதி மக்கள் துரித அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு வரவேற்பு ஆரம்பத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பற்றி சந்தேகங்கள் தோன்றியிருந்தபோதிலும் இன்று ஜனாதிபதியின் நல்லாட்சி நடைபெறுகிறது என்ற நல்லெண்ணம் யாழ்ப்பாண மக்களின் மனதில் வலுவூன்றியுள்ளது. இதுவரையில் ஜனாதிபதியின் நல்லாட்சியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் சிறப்பாக இருப்பதனால் தாங்கள் எதிர்காலத்திலும் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு இருப்பதாகவும், எதிர்காலத்தில் இத்தகைய மாற்றங்கள் ஏற்படுவதை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும் அவர்கள் கூறுகின்றார்கள். யாழ்ப்பாணத்து இளைஞர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தை அமைக்கவிருப்பது குறித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்கள். கிளிநொச்சியில் சர்வதேச விளை யாட்டரங்கை அமைப்பதற்கு அரசாங்கம் 360 மில்லியன் ரூபாவை செலவிடவிருப்பது குறித்தும் இளைஞர்கள் பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்கள். (மேலும்....) ஆடி 20, 2011 ஆந்திராவில் யுரேனியம் தாதுப்பொருள் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு அணுமின் நிலையத் திற்கு தேவையான முக்கியமான பொருள் களில் ஒன்றான யுரேனி யம் தாது ஆந்திராவில் மிக அதிகளவில் உள்ள தாக அணு விஞ்ஞானி கள் கண் டறிந்துள்ளனர். ஆந்திராவின் தும் பலப் பள்ளி என்னும் இடத் தில் உள்ள சுரங்கங்களில் இந்தவகை தாதுப்பொ ருள் அதிகளவில் குவிந்து உள்ளதாகவும் உலகி லேயே அதிகள விலான யுரேனியம் இங்கு கிடைக்க கூடும் என அணுசக்தி ஆணையத் தின் தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி தெரி வித்துள்ளார். மேலும் ஜார்கண்ட் மேகாலயா கர்நாடகா மாநிலங்களில் யுரேனியம் இருப்பதை யுரேனியம் கார்பரேசன் ஆப் இந்தியா நிறுவனம் கண்டறிந்துள்ளது. கர்நாடகாவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள யுரேனியம் உயர்வகையை சேர்ந்தது என்றும் ஆந்திராவில் கண்டுபிடிக் கப்பட்டிருக்கும் யுரேனியம் உயர்வகை அல்ல என்றும் அவர் தெரிவித்தார். ஆடி 20, 2011 ஆக்கிரமிப்பை நிறுத்தினாலே அமெரிக்க கடன் தொல்லை தீரும் கருத்துக்கணிப்பில் மக்கள் கருத்து
கோடிக்கணக்கான ரூபாய்களை அமெ ரிக்காவின் கடன் தொட்டுள் ளது. தான் வைத்துக் கொள் ளும்
கடன் வரம்பை உயர்த் துங்கள் என்று அமெரிக்க அரசு நாடாளுமன்றத்தி டம் கெஞ்சிக்
கொண்டிருக் கிறது. இந்நிலையில், அமெ ரிக்கா செய்ய வேண்டிய நடவடிக்கை என்று கருத்
துத் தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள், ஆப் கானிஸ்தான், இராக் மற் றும் லிபியா
போன்ற நாடு கள் மீதான தாக்குதல்களை நிறுத்திவிட்டு, தனது ராணு வத்திற்கான செலவைக்
குறைப்பதன் மூலமே கடன் நெருக்கடியிலிருந்து தப்பித் துக் கொள்ளலாம் என்றனர். ஆடி 20, 2011 எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் தொடர்பில் சர்ச்சை எவரெஸ்ட் சிகரத்தின் உண்மையான உயரம் குறித்து சீனா வெளியிட்ட கருத்தால் ஏற்பட்ட குழப்பத்தினைத் தொடர்ந்து அதனை மீண்டும் அளக்க நேபாளம் முடிவெடுத்துள்ளது. உலகின் அதி உயரமான சிகரமாகக் கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் இமயமலைத்தொடரில் அமைந்துள்ளது. இதன் உயரத்தினை 1954 ஆம் ஆண்டு அளந்த இந்தியா எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீட்டர் என உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. எனினும் அதன் பின்னர் பல்வேறு தரப்பினரல் மேற்கொள்ளப்பட்ட அளவீடுகள் வேறுபட்ட அளவுகளை காட்டி நின்றன. இதேபோல் சீனாவும் எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,844 மீட்டர் எனவும் மேற்பகுதியில் உள்ள பனிப் பகுதியுடன் சேர்த்து கணக்கிடும் போது அதன் உயரம் 8.847 மீட்டர் எனவும் தெரிவித்துள்ளது . இந்நிலையில் எவரெஸ்ட்டின் உயரம் தொடர்பில் சர்ச்சை நிலவி வருகின்றது. (மேலும்....)ஆடி 19, 2011 ஒரே நாடு ஒரே மக்கள்
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் இந்து ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த மாணவ மாணவர்கள் முப்பது பேர் ஆசிரிய ஆசிரியைகள் ஆகியோர் அநுராதபுரம் தம்மென்னாபுர வித் தியாலயத்திற்கு வருகை தந்தனர். இவர்களை பாடசாலை அதிபர் எஸ். எம். திஸாநாயக்க உட்பட ஆசிரியர் குழாம், கிராமவாசிகள் மிகவும் இன்முகத்துடனும் மலர்செண்டுகள் வழங்கியும் வரவேற்றனர். இந் நிகழ்வுகளை முன்னிட்டு பாடசாலை தமிழ் கலாசாரங்களு க்கு ஏற்றவாறு வாழை மரங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை கண்கொள்ளா காட்சியாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஒரே நாடு, ஒரே தேசம் என்ற கொள்கையின் கீழ் வடக்கு, தெற்கு பாடசாலை மாணவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும். (மேலும்...) ஆடி 19, 2011 பயங்கரவாதத்தை ஒழித்த ஜனநாயக நாடு என அமெரிக்க அரசியல்வாதி பாராட்டு சமீபகாலத்தில் பயங்கரவாதத்தை முற்றாக தோல்வியடையச் செய்த ஒரே ஜனநாயக நாடு என்ற பெருமை இலங்கைக்கு கிடைத் திருக்கிறது. உலகின் மிகக் கொடிய பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈயை தோல்வியடையச் செய்த யுத்தத்தின் இறுதி நாட்களில் மனித உரிமை மீறல்களை எங்கள் நாட்டின் ஆயுதப் படையினர் மேற்கொண்டார்கள் என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை இன்று இலங்கைக்கு எதிரான சில சர்வதேச அமைப்புக்கள் சுமத்தி, நம்நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேற்கு நாடுகளில் தொடர்ந்தும் உல்லாச வாழ்க்கையை மேற்கொள்ளும் நோக்கத்துடன் சுயநல போக்கில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டு வரும், இங்கிருந்து புலம் பெயர்ந்து விரல்விட்டு எண்ணக்கூடிய சில தமிழர்களும் மேற்கொண்டு வருவ தும் வேதனை அளிக்கிறது. எமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற் படுத்தி வருவது வேதனையை அளிக்கிறது. (மேலும்...) ஆடி 19, 2011 பசுமை நகரம் ஜப்பானியர்கள் பீனிக்ஸ் பறவையைப் போன்றவர்கள். சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட போதிலும், அதில் இருந்து போராடி மீண்டு வருகிறார்கள். இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட பாதிப்புகளில் பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்ட அவர்கள், அதை பயன்படுத்தி அதி நவீன பசுமை நகரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முயற்சியில் அந்த நாட்டில் உள்ள பல்வேறு கட்டுமான நிறுவனங்களும், இலத்திரனியம் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கைகோர்த்துள்ளன. ஜப்பானில் உள்ள பனசோனிக் உள்பட 8 நிறுவனங்கள் இணைந்து புதிய பசுமை நகரம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் ஒன்றை வெளியிட்டுள்ளன. சுமார் 19 ஹெக்டயர் பரப்பளவில் இந்த நகரம் அமைய உள்ளது. இயற்கையாக கிடைக்கும் எரிபொருளைப் பயன்படுத்தியே இந்த நகரம் இயங்கும். உதாரணமாக சூரிய ஒளி, காற்று, சக்தி போன்றவற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட மின்சாரமே இங்கு பயன்படுத்தப்படும். இந்த நகருக்குள் இயங்கும் வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் மட்டுமே ஓடும். வீடுகளுக்கு தேவையான மின்சாரம் மற்றும் பிற எரிபொருட்களும் சூரிய சக்தியில் இருந்தே தயாரிக்கப்படும். (மேலும்...) ஆடி 19, 2011 யாழ். குடாநாட்டில் இருநூறு குளங்களை புனரமைக்க திட்டம்இந்த வருட முடிவுக்குள் யாழ்ப்பாணத்தில் நூறு குளங்களை புனரமைத்து வடக்கு விவசாயிகளின் விவசாயத்துறை மேம்பாட்டுக்காக நீர் வழங்க திட்டமிட்டுள்ளதாக கமநல மற்றும் வனவள அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்தார். கடந்த தினங்களில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்த அமைச்சர் வடக்கில் உள்ள 69 குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் கமநல அமைச்சும் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ். மாவட்டத்தில் உள்ள மேலும் 31 வாவிகள் மற்றும் குளங்களைத் துரிதமாக புனரமைக்க திட்டமிட்டுள்ளோம். மேற்படி புனரமைப்பு பணிகள் இந்த வருட முடிவுக்குள் பூர்த்தி செய்யப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார். ஆடி 19, 2011 மேற்கு ஆசியா - வட ஆப்பிரிக்க நாடுகள்-மீண்டும் மீண்டும் மக்கள் கிளர்ச்சிகள்! துனீசியாவில் துவங்கிய ஜனநாயகம் கோரும் மக்கள் கிளர்ச்சிகள் பல அரசு களைத் தூக்கி எறிந்த போதும் மாற்றங்கள் ஏற் படாததால் மீண்டும், மீண் டும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. துனீசியாவின் தலைநகர் துனீஸ், சௌஸ்சே, அல் அக்பா, மென்செல் போர் கிபா ஆகிய நகரங்களில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக் கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. கொள்கை மாற்றங்கள் வராததோடு ஊழலில் ஆள் வோரும், அரசு அதிகாரி களும் திளைக்கிறார்கள் என்று மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இவர் கள் அனைவருமே ஏற்கெ னவே முந்தைய அரசில் பணியாற்றியவர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. மென்செல் போர்கிபா என்ற இடத்தில் ஆர்ப்பாட் டக்காரர்கள் மீது பாது காப்புப் படையினர் கடும் தாக்குதல் நடத்தினர். ஏராள மான மக்கள் அதில் காய மடைந்துள்ளனர். (மேலும்...)ஆடி 19, 2011 பி.பி.சி. நிறுவனத்தில் ஆட்குறைப்பு உலகம் முழுவதும் செய்திகளைத் தரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பி. பி. சி. செய்தி நிறுவனம் தன்னுடைய ஊழியர்களை பணியில் இருந்து குறைக்க முடிவு செய்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களில் சுமார் 100 பேர்கள் வரையில் நீக்க முடிவு செய்துள்ளது. இது குறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அரசு அளித்து வரும் நிதியுதவி நிறுத்தப்பட்டதால் சுமார் 650 பணியிடங்களைக் குறைக்க வேண்டிய காட்டாய நிலைக்கு நிறுவனம் உள்ளாகியுள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் நிறுவனத்தின் நிதிநிலையில் 16 சதவீதம் வரையில் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனக் கூறியுள்ளார். ஆடி 19, 2011 இறக்குமதியை நிறுத்தியாவது வடக்கு விவசாய உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தியாவது வட மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் சிறிய வெங்காயம், செத்தல் மிளகாய் உற்பத்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுமென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். யாழ். மாவட்ட விவசாய நிலைய ங்களைப் பயன்ப டுத்தி மேற்கொள் ளப்படும் உற்பத்திகளின் மூலம் முழு இலங்கையுமே விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடையும் எனவும் கூறினார். (மேலும்...) ஆடி 19, 2011 இலங்கை நாணயத்தின் பெறுமதி சிங்கப்பூரில் தரமுயர்வு இலங்கையின் வெளிநாட்டு நாணய மாற்றின் மதிப்பை பி1 ‘ஸ்டேபிள்’ நிலையிலிருந்து பி1 ‘பொசிட்டிவ்’ நிலைக்கு சிங்கப்பூரிலுள்ள ஆமோடிஸ் முதலீட்டுசேவை அமைப்பு தரமுயர்த்தி யுள்ளது. இலங்கையில் நிரந்தர சமாதானம் நிலைபெற ஆரம்பித்ததையடுத்து அந் நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சியுடன் நிதிநிலையில் ஸ்திரநிலையொன்று உரு வாகியிருக்கின்றது என்றும், அதையடுத்தே தாங்கள் இலங்கை நாணயத்தின் மதிப்பை உயர்த்தியிருப்பதாக இந்த சிங்கப்பூர் அமைப்பு அறிவித்துள்ளது. (மேலும்...) ஆடி 19, 2011 65 உள்ளூராட்சி சபைகள் தேர்தல் பிரசாரங்கள் நாளை நள்ளிரவுடன் முடிவு நாட்டின் 65 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை (20) நள்ளிரவுடன் முடிவடைகிறதென தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு மாநகரசபை, 9 நகரசபைகள், 55 பிரதேச சபைகளுக்கென 65 உள்ளூராட்சி சபைகளுக்கும் எதிர்வரும் 23ஆம் திகதி தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. 20 அரசியல் கட்சிகளும், 72 சுயேட்சைக்குழுக்களும் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றன. 875 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 5 ஆயிரத்து 688 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக 2 ஆயிரத்து 140 தேர்தல் தொகுதி களில் வாக்களிப்பு நடத்தப்படவுள்ளது. 26 இலட்சத்து 30 ஆயிரத்து 985 வாக்காளர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளனர் எனவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் மாவட்டங்களில் 2 ஆயிரத்து 226 வாக்குச்சாவடிகளும், 383 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன. (மேலும்...) ஆடி 19, 2011 உரையரங்கு கருத்துரை: மனோரஞ்சன்(ஊடகவியலாளர்) 'புலம்பெயர் அரசியலில் தமிழர் தேசியம்?' தலைமை: சிவா சுப்பிரமணியம் (முன்னாள் பிரதம ஆசிரியர் – தினகரன்) இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம் 58 தர்மராம வீதி, கொழும்பு – 6 காலம்: ஜூலை 24, 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம் நிகழ்ச்சி ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் E-Mail: kailashpath@yahoo.com ஆடி 19, 2011 தவறான வழிநடத்தல தமிழர்கள் அவதானமாக இருக்க வேண்டும் தவறான வழியில் தமிழ் மக்களை வழிநடத்த முற்படுபவர்களிடமிருந்து அவதானமாக இருக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளையும், தேவைகளையும் தீர்த்து வைப்பதற்கு அரசாங்கம் ஒரு போதும் பின்நிற்காது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். “மீண்டுமொரு பிரச்சினைக்கு தமிழ் மக்கள் முகம்கொடுக்க ஒருபோதும் நாம் இடமளிக்கப்போவதில்லை. 30 வருடகால யுத்தத்துக்குப் பின்னர் நீங்கள் நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கிaர் கள். இனிப் பயம் என்பது உங்களுக்குக் கிடையாது” என்று தெரிவித்த ஜனாதிபதி, இறுதியாக “வெற்றியின் சின்னம் வெற்றிலைச்சின்னம் அது உங்கள் வெற்றியின் சின்னம், உங்கள் பிள்ளைகளின் வெற்றியின் சின்னம்” எனக் கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். (மேலும்...) ஆடி 18, 2011 அரசாங்கம் - த.தே.கூ பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே! (பகுதி 5 ) (தோழர் வரதரஜப்பெருமாள் )
ததேகூக்காரர்கள் உண்மையில் இன்றைய காலகட்டத்தில் தமிழர்களின் அரசியற் சூழ்நிலைகளை ஆண்டுநிற்கும் உள்நாட்டு வெளிநாட்டுக் காரணிகள் அனைத்தையும் தமது கணக்கில் சரியாக எடுத்துக் கொண்டு அரசுடனான பேச்சுவார்த்தை மூலம் ஓர் அரசியற் தீர்வினை எப்படியாயினும் நடைமுறைக்குக் கொண்டு வ்நதுவிட வேண்டும் என்ற இலக்கினை அடிப்படையாக வைத்து பேச்சுவார்த்தைக் களத்தில் செயற்பட வேண்டும். அதன்மூலம்... (மேலும்...)
ஆடி 18, 2011 உள்ளுராட்சி தேர்தலுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? (அ. விஜயன்) 'அரசாங்கம் தமிழ் பகுதிகளில் தமிழ் மக்களுக்கு உதவிகளைச் செய்து அவர்கள் மனங்களை வெல்வதன் மூலம் தமிழ் தேசியத்தை அழிக்க நினைக்கிறது. இது தமிழ் மக்களுக்கு ஆபத்தானது. இப்படியான போலி விளங்பரங்கள்கனை கண்டு தமிழ் மக்கள் ஏமாற மாட்டர்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது'. என தமிழ் தேசிய கூட்டமைப்பு காரர்கள் தமது வழக்கமான பாணியில் வசனங்கள் பேசிவருகிறார்கள். இந்த வீர வசனங்கள் பேசி தமிழ் வாக்காள பெருமக்களின் நரம்பை கூடேற்றி வோட்டுக்களை பெற அவர்கள் காலம் காலமாக செய்துவரும் உத்திதான் இதுவும் என எண்ணத் தோன்றுகிறது. (மேலும்....) ஆடி 18, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 8) (நேசன்) தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதன் ஆரம்பகாலங்களிலேயே வெறுமனவே சுத்த இராணுவக் கண்ணோட்டம் கொண்ட ஒரு குழுவின் தனிநபர் பயங்கரவாத நடவடிக்கையாகவே இருந்து வந்தது(ஐயரின் "ஈழ விடுதலைப்போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற தொடரை படிக்கவும்). தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் தோன்றிய முரண்பாடுகளும் அதன் பின்னான " புதியபாதைக்" குழுவினரின் பிரிவும் அன்றைய சூழலில் ஓரடி முன்னோக்கிய நகர்வாகவே பார்க்கப்பட வேண்டும். அன்றிருந்த சமூக, அரசியல் பின்னணியில் இருந்து " புதிய பாதை " யின் பணியை மதிப்பீடு செய்வோமானால் இது புலனாகும். நிலப்பிரபுத்துவ எச்ச சொச்சங்களுடன் கூடிய, பிரதேசவாத சிந்தனைகள், சாதிய அமைப்பு முறைகளுடன் கூடிய ஒரு "பிற்பட்ட" கலாச்சாரத்தைக் கொண்ட சமூகமாக எமது சமூக அமைப்பு இருந்தது. சிங்கள பேரினவாதம் ஒருபுறமும் தமிழ்க்குறுந்தேசியவாதம் மறுபுறமும் கோலோச்சிய காலமாக இருந்தது. (மேலும்....) ஆடி 18, 2011 நெடுந்தீவில்.....!இது எப்படியிருக்கு...?
ஆடி 18, 2011 சிறுத்தைக் கடியை 'சிங்கம்' கடியாக மாற்றினார் அரியநேந்திரனின் இராணுவம் மீதான குற்றச்சாட்டு அபாண்டம் 'சிறுத்தை கடித்து இழுத்ததை நான் மட்டுமல்ல் ஆயிரக் கணக்கானோர் கண்டுள்ளனர். உண்மை இவ்வாறிருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பியான அரிய நேந்திரன் சுமத்தும் குற்றச்சாட்டு அபாண்டமானது'. இவ்வாறு கதிர்காமப் பாதயாத்திரையின் போது சிறுத்தை கடித்து உயிரிழந்த தம்பிலுவில் பெண்ணின் தந்தையார் பொன்னையா கிருஷ்ணபிள்ளை (57 வயது) கண்ணீர் சிந்தியவாறு கூறினார். அன்பு மகளை இழந்து ஆறாத்துயரில் துடி துடித்துக்கொண்டிருக்கையில் எம்மீது அபாண்டமான பழியைச் சுமத்தி வரலாற்று ரீதியான வடுவை ஏற்படுத்தியுள்ளார் அரியநேந்திரன் எம்.பி. இவர்கள் தானா எமது தமிழினத்தின் காவலர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். (மேலும்....) ஆடி 18, 2011 இலங்கை விவகாரம் குறித்து மன்மோகனுடன் பேசுவார் ஹிலாரி
இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன்
இலங்கை விவகாரம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சுக்களை
நடத்தவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களே
இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை புதுடில்லி செல்லவுள்ள ஹிலாரி
கிளின்டன், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்துப் பேசவுள்ளார். இதன்போது
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் மட்டுமன்றி இலங்கை விவகாரம் தொடர்பாகவும்
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பேச்சு நடத்துவார் என்றும் அந்த வட்டாரங்கள்
தகவல் வெளியிட்டுள்ளன. மறுநாள் புதன்கிழமை இந்தோனேசியாவின் பாலித்தீவு செல்லும்
வழியில் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன் சென்னைக்கு செல்லவுள்ளார்
என்பது குறிப்பிடத்தக்கது.
(மேலும்....) காரைதீவு அதிரடிப்படை முகாம் அகற்றப்பட்டது காரைதீவில் அமைக்கப்பட்டிருந்த கிழக்கு மாகாண விசேட அதிரடிப்படை யினரின் பிரதான முகாம் நேற்று முன்தினம் முற்றாக அகற்றப்பட்டுள்ளது. 1990 ஆம் ஆண்டு முதல் காரைதீவில் இயங்கிவந்த இம்முகாம் இம்மாதம் 1 ஆம் திகதி அகற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், மேலதிக ஒப்படைப்பு மற்றும் பொருட்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இது தாமதமானது. இந்நிலையில் நேற்று முன்தினம் அம்முகாம் முழுமையாக அகற்றப்பட்டதுடன் முகாம் அமைப்புக்காக உள்வாங்கப்பட்டிருந்த காணிகளும், கட்டடங்களும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதனையடுத்து, காணி, கட்டடங்களின் உரிமையாளர்கள் நேரில் சென்று தமது சொத்துக்களை பார்வையிட்டனர். ஆடி 17, 2011 பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்க் கூட்டமைப்பு இடம்பெற்றால் ஐ.தே.க.வும் அதில் பங்கேற்கும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை தயாரிக்கும் நோக்கில் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேரணை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. பிரேரணை சமர்ப்பிக்கப் பட்டதும் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும். எவ்வாறெனினும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பங்கெடுத்தால் ஐக்கிய தேசிய கட்சியும் அதில் பங்கேற்பது குறித்து ஆராயும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறாவிடின் ஐக்கிய தேசிய கட்சி அதில் அங்கம் வகிப்பது அர்த்தமற்ற விடயமாகும். அரசாங்கமும் தமிழ்க் கூட்டமைப்பும் பேச்சு நடத்தி அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்....)ஆடி 17, 2011 கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது ஆதாரமற்றது - மகிந்த ஹத்துருசிங்க கிளிநொச்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று வெற்றிலைச் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு தவறானது எனவும் ஆதாரமற்றது எனவும் யாழ். படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி, மாசார் பிரதேசங்களில் படையினர் வெற்றிலைச் சின்னத்துகு வாக்களிக்குமாறு பொது மக்களை வற்புறுத்துகின்றனர் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹத்துருசிங்க இதனை குறிப்பிட்டுள்ளர். வடக்குத் தளபதி என்ற முறையில் அந்தக் குற்றச்சாட்டை மறுக்கின்றேன், படையினர் எவரும் இத்தகைய செயல்களில் ஈடுபடவில்லை. படையினர் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்கி வருகின்றனர். மக்களுக்கு படையினர் செய்யும் சேவையைப் பொறுக்க முடியாத சிலரே அவர்களைக் களங்கப்படுத்தி குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறனர். சிறிதரனின் கருத்தால் படையினர் கோபமாக உள்ளனர் எனவும் விளைவுகள் மோசமடையலாம் எனவும் ஹத்துருசிங்க தெரிவித்துள்ளனர். ஆடி 17, 2011 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ யாழ். விஜயம்! வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வை யிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் 18ஆம் திகதி விஜயம் மேற்கொ ள்ளவுள்ளார். யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட் டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். 18ஆம் திகதி புனர்வாழ்வு அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கிறார். அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார். இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார். ஆடி 17, 2011காஸ்மீரில் மூன்று இலங்கையர்கள் கைது- காஸ்மீர் மூத்த பொலிஸ் அதிகாரி-S M Sahai தெரிவித்துள்ளார்!மூன்று இலங்கையர்கள் உட்பட நான்கு பேர் காஸ்மீர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சபையர் கடத்தல்கார சர்வதேச கும்பலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஜம்மு மற்றும் காஸ்மீர் உலேதகங்கள் லிமிடெட் நிறுவனத்தின் சில உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள சபையர்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தலுடன் சில உயர் அதிகாரிகள் தொடர்புபட்டிருக்கிறார்கள் என சந்தேகிப்பதாக காஸ்மீர் மூத்த பொலிஸ் அதிகாரி S. M. Sahai தெரிவித்துள்ளார். ஆடி 17, 2011 அமெரிக்கா நடுத்தெருவில் 75 ஆயிரம் முன்னாள் ராணுவத்தினர் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல்வேறு நாடுகளில் பணியாற்றிய முன்னாள் அமெரிக்க ராணுவத்தினரில் சுமார் 75 ஆயிரம் பேர் குடியிருக்க வீடில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னாள் ராணுவத்தினருக்கான அமெரிக்க அரசுத்துறை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களே இதைக் காட்டுகின்றன. ஏற்கெனவே மனரீதியாகப் பாதிக்கப்படும் இவர்கள் நாடு திரும்பியவுடன் தங்குவதற்கு குடியிருப்பு இல்லாத நிலையில் கூடுதல் பாதிப்புக்குள்ளாகிறார்கள். ஜூன் மாதத்தில் எடுத்த புள்ளிவிபரத்தின்படி 75 ஆயிரத்து 700 பேர் இரவு நேரங்களில் தங்குவதற்கு சொந்த வீடு இல்லாமல் இருந்திருக்கிறார்கள். (மேலும்....)ஆடி 17, 2011 How Convincing is CTC’s Defamation Lawsuit Against Rohan Gunaratna? Convicted LTTE operative is former CTC director July 12 – (UPDATE: SL-USA) - Will the Canadian Tamil Congress (CTC), which has filed a defamation lawsuit against terrorism expert Dr. Rohan Gunaratna for alleging that it is an LTTE front, be able to present a convincing case given that one a convicted LTTE operative currently serving a prison term in the US was its director of communications in 2005? Sahilal ‘Sahil’ Sabaratnam is serving a 25- year prison term in the US in connection with a plan to purchase almost $1 million worth of high-powered weaponry for the Liberation Tigers of Tamil Eelam (LTTE), a designated foreign terrorist organization. (more....) ஆடி 16, 2011 அரசாங்கம் - த.தே.கூ பேச்சுவார்த்தை போகாத இடத்துக்கு ஆளுக்கு ஆள் வழி காட்டுகிறார்களா? ஆபத்து தமிழர்களின் அரசியற் கோரிக்கைகளுக்கே! (பகுதி 4 ) (தோழர் வரதரஜப்பெருமாள் )
மக்களுக்கும் தெரியாமல், தமது ஆதரவாளர்களுக்கும் புரிய வைக்காமல் ஏன்! தமது கட்சிகளின் சக தலைவர்களுடன் கூட கலந்துரையாடாமல் அப்படி என்னதான் பேசுகிறார்களோ என்று புரிய முடியாமல் இருக்கிறது! இதைப்பார்த்து நகைச்சுவை நடிகர் சந்திரபாபு அவர்கள் பாடியது போல “என்னமோ நடக்குது மர்மமா இருக்குது, ஒண்ணுமே புரியலை உலகத்திலே” என்றுதான் பாடத் தோன்றுகிறது. இப்படி திகில் நிறைந்த மர்மங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த அவர்கள் ததேகூக்காரர்களுக்கு அரசியற் தீர்வு தொடர்பாக அப்படி என்னதான் அறுதியான வாக்குறுதிகளை அள்ளி வழங்கி அரசுடன் இவர்கள் பேச்சுவார்ததை என்ற பெயரில் சுற்றிச் சுற்றி சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியருக்கிறார் என்பதுதான் புரியவில்லை. (மேலும்....) ஆடி 16, 2011 இலங்கை தமிழர்கள் மேல் பாசம் கொண்டிருக்கும் அன்பார்ந்த தமிழ்நாட்டு தமிழர்களே! சமீபகாலங்களில் தினமலர், தினமணி போன்ற வெப்சைட்களில் கருணாநிதி சம்பந்தமாகவோ அல்லது காங்கிரஸ் சம்பந்தமாகவோ செய்திகள் வரும் போது அதற்க்கான உங்கள் கருத்து பதிவுகளில் இலங்கையின் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழ்மக்களுக்கு காரணம் முற்றுமுழுதாக கருணாநிதியையும், காங்கிரஸ்சையும் சாரும் என்பது போன்று உங்கள் ஆவேசம் தெரிகின்றது. நீங்கள் இலங்கை தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பை பார்த்து பெரிதும் ஆச்சரியப்படும் அதே வேளையில் பல தவறான தகவல்களையும் உங்களிடத்தில் வைத்திருப்பதை எண்ணி கொஞ்சம் வேதனையும் படவைக்கிறது. (மேலும்....) ஆடி 16, 2011 தென்னை மரங்களை காப்பாற்றுவது மக்களின் கடமையாகும்
தென்னை மரங்கள் மனிதர்கள் குடியி ருக்கும் வீடுகளைக் கட்டுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. வீட்டுக் கூரைகளை போடுவதற்கு மட்டுமன்றி, வீட்டுக்குத் தேவையான தள பாடங்களையும் தென்னை மரங்களின் மூலம் மக்கள் தயாரிக்கிறார் கள். ஏழைகளின் குடிசைகளுக்குக் கூரையாக தென்னோலை வேயப் படுகின்றன. வீட்டையும், தோட்டத்தையும் சுத்தப்படுத்துவதற்காக தும் புக்கட்டை, விளக்குமாறு போன்றவையும் தென்னை மரத்திலிருந்து தயாரிக்கப்படுகின்றன. கோயில்களிலும், விகாரைகளிலும், தேவாலயங்களிலும், வழிபாடல்களின் போது, விளக்குகளை எரிய வைப்பதற்கும் தேங்காய் எண்ணெய் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றன. இவ்விதம் மனிதனின் நெருங் கிய நண்பனாக விளங்கிவரும், தென்னை மரங்கள் இன்று மனித னால் புறக்கணிக்கப்படுகின்றன. தென்னந்தோட்டங்களின் உரிமையா ளர்கள் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவும், உரத்திற்காக செல விடும் பணமும் அதிகரித்து வருகிறது என்று கூறி, தென்னந்தோட் டங்களை இன்று கூறுபோட்டு ஏல விற்பனைகள் மூலம் காணித் துண்டுகளாக வீடுகளைக் கட்டுபவர்களுக்கும், ஹோட்டல்களை நிர் மாணிப்பவர்களுக்கும் விற்று வருகிறார்கள். இனிமேலும் இந்த நிலை நீடித்தால், நாட்டின் தேவைக்கான தேங்காயை இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து தருவிக்க வேண்டிய அவசி யம் ஏற்படலாம் என்று தென்னந்தோட்டங்களை நிர்வகிப்பதில் அனு பவமிக்கவர்கள் இப்போது எச்சரிக்கை செய்ய ஆரம்பித்துள்ளார்கள்.(மேலும்....) ஆடி 15, 2011 கேபி கூறுகின்றார்பிரபாகரனுக்கு, அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த நடேசன் துரோகம் இழைத்து விட்டார்ஆனால் புலிகளின் இன்னொரு பிரிவினரோ நடேசனை இராணுவத்திடம் சரணடைய பிரபாகரன் வற்புறுத்தி (தான் தப்புவதற்காக) நடேசனை கொல்ல வைத்துவிட்டார் என்று. எதைத்தான் நப்புவதோ....? புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அந்த இயக்கத்தின் அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த பா. நடேசன் துரோகம் இழைத்து விட்டார் என்று பரபரப்புக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து உள்ளார் அதே இயக்கத்தின் முக்கிய பிரமுகர்களில் ஒருவராக இருந்த குமரன் பத்மநாதன். (மேலும்....)ஆடி 15, 2011 புதுப்பொலிவுடன் ‘சங்கிலியன்’ வருகிறான் (கீழே படத்தில் உள்ளது பழைய சிலை)
யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்குவதற்காக பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். யாழ். மாநகரசபையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இறுதியாக நடைபெற்ற மாநகர பொதுக்கூட்டத்தில் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னனின் சிலையை உடைத்து புதிய சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்தனர். இதற்கு எதிரணி உறுப்பினர் விந்தன் சிலையை அகற்றாது புனரமைப்பு செய்யுமாறு கோரியுள்ளார். எனினும் ஆளும் தரப்பால் இது முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது. இதனடிப்படையில் மாநகரசபையால் சங்கிலியனின் சிலை அகற்றப்பட்டு சிலை இருந்த பகுதி முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை அகற்றலும், புதுசிலை நிறுவுதலையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 'சிலை உடைப்பு' என்று மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கி உசுப்பேத்த முயன்றனர். குறிப்பாக 'சப்பறா' சரவணபவன் எம்பி இவ்விடயத்தை வைத்து குறந்தேசிய அரசியல் ஆதாயம் தேட முற்பட்டார். இது சம்மந்தமாக பொய்பிரச்சாரத்தை புலம் பெயர் தேசமெங்கும் பரப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். ஆடி 15, 2011அதிகளவான இலங்கை அகதிகள் நாடு திரும்புகின்றனர்
அதிகளவான இலங்கை அகதிகள் நாடு
திரும்பி வருவதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம்
அறிவித்துள்ளது. எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியில் நாடு திரும்பும்
அகதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதனால்
நாடு திரும்பும் அகதிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வடையும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆடி 15, 2011 Jaffna Lagoon protected from Salt Water Intrusion
With the commencement of the development projects in Jaffna soon after the end of war the prevention of salt water intrusion into agricultural lands became the centre stage for livelihood assistance. The Jaffna mainland and the Islands in Sri Lanka have 34 salt water exclusion bunds with funds allocated by the Ministry of Economic Development and 20 bunds have already been reconstructed. This bund constructed at a cost of Rs 120 million will prevent salt water intrusion in to the Jaffna lagoon through which water is provided to over 5000 acres of cultivatable land in Jaffna. The minister has set a target for completion of remaining 14 bunds by end of December 2011 and completion of all these bunds will help to cultivate 20,000 acres of land for paddy and other crops. Minister Basil Rajapaksa during his five day tour in Jaffna from 13th July, declared open on Friday the important Ariyalai Salt water exclusion bund at Navatkuli near Jaffna. The Minister inspected the bund with Minister Douglas Devananda and the Governor Northern Province G.A. Chandrassiri ஆடி 15, 2011 இந்தோனேசியாவில் தடுக்கப்பட்ட கப்பல் விடுதலைப்புலிகளுக்கு சொந்தமானது இலங்கையில் இருந்து அகதிகளாக வெளியேறி நியூசிலாந்தில் தஞ்சம் அடைவதற்காக மலேசியாவில் இருந்து எம். ஏ. எலிஸ் எனப்படும் கப்பல் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானது என இந்தோனேசிய புலனாய்வு பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இவர்கள் தஞ்சம் புகுவதற்கு அனுமதிக்க முடியாது என நியூசிலாந்து மறுத்துவிட்டது. ஆனால் தஞ்சம் வழங்கும் வரை கப்பலில் இருந்து இறங்கப் போவதில்லை என அந்தக் கப்பலில் உள்ளவர்கள் கூறி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆடி 15, 2011
ஆடி 15, 2011 வடக்கில் முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழருக்கு அழைப்பு தமிழ் மக்களின் சுபீட்சத்தி லும், விமோசனத்திலும் உண் மையான அக்கறை கொண் டவர்கள் என்றால் புலம் பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடபகுதியில் முதலீ டுகளை செய்ய முன்வரவேண் டும் எனத் தெரிவித்திருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அழைப்பு விடுத்துள்ளார். இதைவிடுத்து தமிழ் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பதாக வெளிநாடுகளில் கூறித்திரிவதால் இந்நாட்டுத் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது. இதனை புலம்பெயர் தமிழர்கள் உணர்ந்து செயற்படுவது மிக அவசியம். (மேலும்....) ஆடி 15, 2011 தென் அமெரிக்கா தொடரும் சிவப்பு அலை (பேரா.பெ.விஜயகுமார்) தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் ஜூன் முதல் வாரம் நடந்து முடிந்துள் ளது. தேர்தல் முடிவு, தென் அமெரிக்காவில் தொடர்ந்து அடித்து வரும் சிகப்பு அலை பெரு நாட்டையும் தாக்கியுள்ளது என்பதை தெளிவு படுத்தியுள்ளது. ஒலாண்டா ஹூமாலா என்ற இடதுசாரி தேசியவாதி 51 சதவீத வாக்கு களைப் பெற்று, அவரை எதிர்த்துப் போட்டி யிட்ட கெய்கோ ஃ பியூஜிமோரி என்ற பெண் மணியைத் தோற்கடித்துள்ளார். கெய்கோ ஃ பியூஜிமோரி பெருவின் முன்னாள் குடியர சுத் தலைவர் அல்ஃபெரடோ ஃபியூஜிமோரி யின் புதல்வியாவார். 2006ல் நடந்த தேர்தலில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய ஹூமாலா இம் முறை வெற்றி பெற்றுள்ளார். (மேலும்....) ஆடி 15, 2011 சங்கிலிய மன்னனின் சிலை புதுப்பொலிவுடன் புனரமைப்பு நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருக்கும் யாழ். சங்கிலிய மன்னனின் உருவச் சிலை மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் புனரமைக்கப்படவுள்ளது. இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து சிற்பாசாரி ஒருவர் வரவழைக்கப்பட்டு சங்கிலிய மன்னனின் உருவச் சிலை புதுப்பொலிவுடன் அதே இடத்தில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதேவேளை சங்கிலிய மன்னனின் சிலை உடைத்து சிதைக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இணையத்தளங் களிலும் இவ்வாறு செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க, யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் மற்றும் யாழ். மாநகர சபை முக்கியஸ்தர்கள் சிலருடனும் தொடர்புகொண்டு கேட்டபோது வெளியிட்டுள்ள செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை, பொய்யான செய்திகளை வெளியிட்டு லாபம் தேட முனைகின்றனர் என தெரிவித்தனர். யாழ். நல்லூரில் சங்கிலியன் மன்னனின் இராஜதாணி அமைந்திருந்த பகுதியை மையமாகக் கொண்டு யாழ். முத்திரைச் சந்தியில் சங்கிலிய மன்னனின் உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆடி 15, 2011 ஓய்வூதியர்களுக்கு தரப் பணம் இருக்காது - பாரக் ஒபாமா ஆகஸ்டு 2 ஆம் தேதிக் குள் கடன் வரம்பை உயர்த்து வதற்கான அனுமதியை அமெ ரிக்க நாடாளுமன்றம் தராவிட் டால் தங்கள் நாட்டில் உள்ள ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதி யத்தை மறுக்க வேண்டிய கட் டாயம் ஏற்படும் என்று அமெ ரிக்க அதிபர் பாரக் ஒபாமா புலம்பியுள்ளார். உலகின் பெரிய பொருளா தாரம் என்று சொல்லப்படும் அமெரிக்கா, ஓய்வூதியம் தருவ தற்குக்கூட பணம் இல்லை என்று கைவிரிக்கப்போகிறது. இது குறித்து கருத்து தெரி வித்த பாரக் ஒபாமா, பிரச்ச னையை நாம் தீர்த்துக் கொள் ளாவிட்டால், ஆகஸ்டு 3 ஆம் தேதி முதல் பல ஊழியர்களுக் கும், ஓய்வூதியர்களுக்கும் பணம் தர முடியாமல் போய்விடும். ஏனென்றால், அதற்குத் தேவை யான பணம் அரசின் கருவூ லத்தில் இருக்காது. இது வெறும் சமூகப் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான சிக்கல் மட்டு மல்ல. முன்னாள் போர் வீரர் கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான ஓய்வூதிய மும் அடங்கும் என்று கூறி யுள்ளார். (மேலும்....)ஆடி 15, 2011 க. பொ. த. உயர்தரம் 302 முன்னாள் புலி உறுப்பினர்கள் பங்கேற்புக. பொ. த. உயர்தரப் பரீட்சை எதிர் வரும் ஆகஸ்ட் 08 ஆம் திகதி ஆரம் பிக்கப்படுகிறது. இம்முறை 2 இலட்சத்து 94 ஆயிரம் மாணவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார். பாடசாலை பரீட்சார்த்திகள் 2 இலட்சத்து 4 ஆயிரம் பேரும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 90 ஆயிரம் பேரும் இம்முறை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாகவும் ஆணையாளர் கூறினார். இதேவேளை, களுத்துறை மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளைச் சேர்ந்த 50 சிறைக் கைதிகளும் வவுனியா புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 302 முன்னாள் புலி உறுப்பினர்களும் இம்முறை க. பொ. த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருப்பதாகவும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார். ஆடி 15, 2011 கோழைத்தனமான தாக்குதல் மும்பை மாநகரின் மீது இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, எப்போதும்போல் அப்பாவி மக்கள் 18 பேரின் உயிரை மாய்த்திருக்கிறார்கள். 2008ம் ஆண்டு கடல்மார்க்கமாக பாகிஸ்தானிலிருந்து வந்த பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய தாக்குத லில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் மக்களின் மனதிலிருந்து அகல்வதற்குள் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அடிக்கடி பயங்கரவாதிகளின் இலக்கிற்கு ஆளாகும் பகுதி மும்பை என்பதால் அம்மாநக ரில் ஏற்கெனவே கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உண்டு. இருப்பினும் அவற்றையும் ஏமாற்றி தீவிரவாதிகள் பட்டப்பகலிலேயே நாசவேலையை அரங்கேற்றியுள்ளனர்.(மேலும்....) ஆடி 15, 2011 முழங்காவில், ஒட்டுசுட்டான், பளை, பூநகரி நவீன வசதிகளுடன் வைத்தியசாலைகள் 20 ஆம் திகதி அடிக்கல் நாட்டு விழாவன்னிப் பிரதேசத்தில் முழங்காவில், பளை, ஒட்டுசுட்டான் மற்றும் பூநகரி ஆகிய இடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய வைத்தியசாலைகள் அமைக்கப்படவிருப்பதாக இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும், ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். யுத்தத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டு மீள்குடியமர்ந்து தமது சாதாரண வாழ்க்கையை ஆரம்பித்திருக்கும் மக்களின் சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் நவீன வசதிகளுடன் கூடிய வைத்தியசாலைகள் அமைக்கப்படவுள்ளன. தற்கான அடிக்கல் எதிர்வரும் 20 ஆம் திகதி நாட்டிவைக்கப்ப டவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார். கிளிநொச்சி மாவட்டம், பச்சிளைப்பள்ளி பிரதேசத்தில் புதிதாக புனரமைக்கப்பட்ட 6 கிராமிய வீதிகளைத் திறந்துவைத்து உரையாற்றும்போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் எஞ்சியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்கள் யாவரும் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். ஆடி 15, 2011தென் சூடானியர்களின் வடசூடான் பிரஜா உரிமை ரத்துபுதிதாக உருவாக்கப்பட்ட தென் சூடான் நாட்டவரின் பிரஜா உரிமையை ரத்துச் செய்ய வட சூடான் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரண்டு தசாப்த உள்நாட்டுப் போருக்குப் பின் தென் சூடான் கடந்த சனிக்கிழமை வட சூடானிடம் இருந்து பிரிந்து சுதந்திர நாடாக உருவாகியுள்ளது. இந்நிலையிலேயே தென் சூடானியர்களின் பிரஜா உரிமையை ரத்துச் செய்ய வட சூடான் தீர்மானித்துள்ளது. எனினும் கடந்த கால சிவில் யுத்தத்தின் போது தென் சூடானிலிருந்து இடம்பெயர்ந்த ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் இன்னும் வட சூடானிலேயே தங்கியுள்ளனர். இதில் பலரும் வட சூடானிலேயே பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென் சூடானின் பிரஜா உரிமையை பெறுபவர்களின் வட சூடானின் பிரஜா உரிமை ரத்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவான தென் சூடானுக்கும் வட சூடானுக்கும் இடையிலான எண்ணெய் பரிமாற்றம், எல்லைப் பிரச்சினை, சொத்து விவகாரம் என்பன குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தென் சூடான் நேற்று ஐ. நா. வின் 193 ஆவது நாடாக அங்கத்துவம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. ஆடி 15, 2011காட்டிக் கொடுக்கும் கைத்தொலைபேசிகள்இந்த நூற்றாண்டில் விஞ்ஞானம் வழங்கியுள்ள வினோத படைப்புகளுள் ஒன்று இந்த கைடக்க தொலைபேசி. ஆனால், விஞ்ஞானத்தின் மற்ற கருவிகளை போலவே இதற்கும் ஆபத்தான மறுபக்கம் ஒன்று உண்டு. அது என்ன? தீவிரவாதிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இதை தவறாக பயன்படுத்தும்போது, அது உலக அமைதிக்கே சவால் விடும் ஆபத்தான படைப்பாக மாறிப்போகிறது. பல குற்றப் புலனாய்வுகளில் கையடக்க தொலைபேசி பங்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நாம் தினம்தோறும் பத்திரிகைகள் மூலம் அறிகிறோம். எனவே, இந்த கையடக்க தொலைபேசிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. (மேலும்....) ஆடி 15, 2011 ஜூனியர் விகடன் கழுகாரின் தவறான சித்திரம் (அ.அன்வர்உசேன்) பொதுவுடைமை இயக்கம் குறித்து நியாய மான தகவல்களை சரியான கோணத்திலி ருந்து ஊடகங்கள் முன்வைப்பது இல்லை. பாராட்டுதலோ அல்லது சாதகமான அம்சங் களைக்கூட சொல்லித்தான் ஆகவேண்டும் எனும் நிலை வந்தால்தான் வாசகர்களுக்கு தெரிவிக்கின்றனர். அச்சமயத்தில் கூட சில பொய்களை அல்லது அவதூறுகளை இணைத் துக் கொள்வது ஊடகங்களின் வாடிக்கை! சமீபத்தில் ஜூனியர் விகடன் அப்படி பாராட்டுவது எனும் பெயரால் அவதூறை வாரி இறைத்துள்ளது. (மேலும்....)ஆடி 15, 2011 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் சிந்தித்து செயலாற்றுதல் நல்லது நாட்டை எதிர்நோக்கியிருக்கும் இனப்பிரச்சினைக்கு சமாதான தீர்வொ ன்றை ஏற்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அரசியல் சாசனத்தி ற்கு தேவையான சீர்திருத்தங்களை கொண்டுவந்து அவற்றை நடை முறைப்படுத்துவதற்கு தமக்கிருக்கும் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி யதார்த்தபூர் வமான நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் முடியுமென்று இரா சம்பந்தன் மேலும் கூறினார். இந்தச் சந்தர்ப்பத்தில் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எங்கள் நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தெரிவித்த சில யோசனைகளை இங்கு முன்வைக்க விரும்புகிறேன் என்றும் இரா சம்பந்தன் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்களுடன் இணைந்து அரசியல் தீர்வொன்றை ஏற்படு த்த எத்தணிக்க வேண்டுமென்று தெரிவித்த சம்பந்தன் இப்பாராளு மன்றத்தின் உறுப்பினர்கள் அரசியல், கட்சி பேதங்களை மறந்து, அவர்கள் அரசாங்கக் கட்சியின் அல்லது எதிர்க்கட்சியில் இருந்தா லும் அரசியல் தீர்வை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பை நல்க வேண்டுமென்று தாம் வேண்டுகோள் விடுப்பதாக இரா சம்பந்தன் தமது உரையில் மேலும் தெரிவித்தார். (மேலும்....) ஆடி 14, 2011 அமரர் அமிர்தலிங்கத்தின் 22வது தினைவு தினம் அமரர் அமிர்தலிங்கத்தின் 22வது தினைவு தினம் இன்று 13.07.2011 காலை யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சி காரியாலயத்தில் குலநாயகம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இங்கு தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, பேராசிரியர் சிக.சிற்றம்பலம், வடக்கு கிழக்கு மு;னனாள் முதல்வர் அ.வரதராஜபெருமாள் பேராசிரியர் சிவச்சந்திரன், சிவிகே சிவஞானம், எம்.கே.சிவாஜிலிங்கம் த.சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு தலைவர் அமரர் அமிர்தலிங்கத்தின் ஆற்றல், ஆழுமையை வெளிப்படுத்தி உரைநிகழ்த்தியதுடன் குத்துவிளக்கேற்றி அஞ்சலி செய்தனர். ஆடி 14, 2011ரொறன்ரோவாழ் தமிழர் நலன்விரும்பிகள் பெயரால் ராதிகாவுக்கு ரொறன்ரோ புலிகள் மிரட்டல்!!!இலங்கைக்கு துணைத் தூதுவர் கருணாரட்ண பாரணவிதாரணவுக்கும் -ராதிகா சிற்சபைஈசன் சந்திப்பு நடைபெற்றமை? ராதிகா சிற்சபைஈசன் எவ்வாறான சந்திப்பினை மேற்க்கொண்டார் என தெளிவுபடுத்தவேண்டும் என்கின்றனர் ரொறன்ரோவாழ் (புலிகளின்) தமிழர் நலன்விரும்பிகள்!
கடந்த மே மாதம் 2ம் திகதி நடைபெற்ற கனடிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலில்
போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபை ஈசனுக்கும்
ரொறன்ரோவில் உள்ள இலங்கை துணைத்துர்துவர் கருணாரட்ண பாரணவிதாரணவுக்கும்
இடையில் இரகசிச் சந்திப்பு இடம் பெற்றள்ளதாக "லங்கா நியூஸ் வெப்" இளையத்தளம்
தெரிவித்துள்ளது.
(மேலும்....)
ஆடி 14, 2011 சுவாமி விபுலாநந்த அடிகளின் நினைவு விழா-2011 காலம்: July 23, 2011 சனிக்கிழமை நேரம்: மாலை 5.00 மணி இடம்: YORK WOOD LIBRARY THEATRE (#1785 Finch Ave West - Between Keele and Finch) விழாவில் இயல், இசை, நடனம், நாட்டுக்கூத்து போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. அனைவரையும் சமூகம் தந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். www.vipulam.ca க.குமரகுரு சி.உதயகுமாரன் தலைவர் செயலாளர் 647-224-8871 905-568-0551 ஆடி 14, 2011 கனடியத் தமிழர் பேரவை புலிகளின் முதன்மை அமைப்பு அல்ல ரொஹான் குணரட்ணவுக்கு எதிராகக் கனடியத் தமிழர் பேரவை வழக்குத் தாக்கல்
சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக்
கற்கைகள் பற்றி விரிவுரையாற்றும் ரொஹான் குணரட்ண லக்பிமவுக்கு அளித்த
பேட்டியில் கனடியத் தமிழர் பேரவை, கனடாவில் புலிகளின் முதன்மையான முன்ணனி
அமைப்பு என்றும், விடுதலைப்புலிகள் கனடியத் தமிழர் பேரவை என்ற பெயரின் கீழ்
செயற்பட்டு வருவது குறித்துக் கனேடிய அரசு விசாரணை நடத்தி வருவதாகவும்
தெரிவித்திருந்தார். ரொஹான் குணரட்ணாவின் இக் கூற்று உண்மைக்குப் புறம்பானவை
என்றும், பொய்களால் சோடிக்கப்பட்டவை என்றும், இவ் வழக்கில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்....) சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம் ஜே.கிருஷ்ணமூர்த்தி சமச்சீர் கல்வி என்பது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதை முதலில் பதிவு செய்ய விரும்புகிறேன். நான்கு விதமான பாடத்திட்டங்களை ஒரே முறையில் மாற்றியதும் வரலாற்று சாதனைதான். இந்த சமச்சீர் கல்வியில் உள்ள குறைகளைக் களைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற் றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அது சமச்சீர் கல்வி அமலாக்கத்தை நிறுத்தி விட்டுச் செய்ய வேண்டும் என்ற அவசியத் துடன் தொடர்புடையது அல்ல. திட்டத்தை அமலாக்கிக்கொண்டே குறைகளைக் களை யலாம். அதுதான் மாணவர்களின் எதிர்காலம் குறித்த அக்கறை உள்ள செயலாக இருக்கும். தற்போது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. (மேலும்....)ஆடி 14, 2011 உதயத்தின் வலி
பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு ஜெர்மன் ஒன் றானது. செக்கோஸ்லோவாக்கியா மற்றும் யுகோஸ்லோவாக்கியா நாடுகள் சிதறடிக்கப் பட் டன. ஆக, ஒரு நாடு ஒன்றாக இருக்க வேண்டு மா அல்லது பிளவுபட வேண்டுமா என்பதை ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலனை கொண்டே தீர்மானிக்கின்றன. எண்ணெய் வளமும், கனிம வளமும் அதிகம் இருந்தால் ஏகாதிபத்தியத்தின் பார்வை அதற்கு ஒப்பவே அமையும். மக்களின் அதிருப்தியை ஆதரிப்பதா, நசுக்குவதா என் பதை ஏகாதிபத்தியங்கள் தங்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்கும். தெற்கு சூடானிலும் அதுதான் நடந்தேறியுள்ளது. தெற்கு சூடான் உதயமாகி விட்டது. அதற்கான வலி அதிகம். ஆயினும், பிரச்சனை தீரவில்லை. இன்னும் இருக்கிறது. (மேலும்....) ஆடி 14, 2011 யாழ். குடாநாட்டில் நீதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு உள்ளூராட்சி தேர்தல் சட்ட ஏற்பாடுகளை முழுமையாக செயலுருப்படுத்தி யாழ். குடா நாட்டில் நீதியான, சுதந்திரமான தேர்தலை நடாத்துவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படும் என்று பொலிஸார் உறுதியளித்துள்ளனர். தேர்தல்கள் பிரதி ஆணையாளர் மொஹமட் தலைமையில் யாழ். மாவட்ட செயவலகத்தில் நேற்று இடம்பெற்ற உயர் மட்ட மாநாட்டிலேயே பொலிஸார் இவ் உறுதி மொழியினை வழங்கியுள்ளனர். தேர்தல் விதி மீறல்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் மற்றும் அமைதியான தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்காக இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் இம்மாநாட்டில் கலந்துகொண்டனர். கட்சிகள் ஒவ்வொருவர் மீதும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டுகின்றன. இதனால் உரிய விசாரணைகளை நடத்த முடியாதிருப்பதால், தேர்தல் அசம்பாவிதச் சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் இருந்தால் ஆதாரத்துடன் முறையிடுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர். ஆடி 14, 2011 லிபிய ஜனாதிபதி கடாபி பதவி விலக தயார்? லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி பதவி விலக தயார் என்றும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்றும் லிபிய அரசின் தூதுவர்கள் தம்மிடம் தெரிவித்துள்ளதாக பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலைன் ஜுபே குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸ் இன்போ, வானொலிக்கு அளித்த பேட்டியிலேயே அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் இந்த தகவலை தெரிவித்தார் “லிபிய அரசின் மறைமுக தூதுவர்கள் எங்களை தொடர்பு கொண்டனர். அவர் கடாபி வெளியேற தயாராக இருப்பதாக எமக்கு தெரிவித்தனர்” என்று அவர் இதன்போது குறிப்பிட்டார். எனினும் லிபிய தூதுவர்களுடன் தாம் இன்னும் உத்தியோகபூர்வமாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவில்லை என்றும், அவர்கள் தம்மை லிபிய அரசின் தூதுவர்களாக அறிமுகப்படுத்தி இந்த தகவலை தெரிவித்தாகவும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜுபே கூறினார். (மேலும்....) ஆடி 14, 2011 கலாநிதி மாறனுக்கு பொலிஸார் அழைப்பாணைசன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா 3 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதில் சேலம் பட விநியோகஸ்தர் செல்வராஜ் என்பவர் கொடுத்த புகாரில் தான் மோசடி மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் சென்னை கே. கே. நகர் பொலிஸாரால் சக்சேனா முதலில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கே. கே. நகர் பொலிஸார், சன் டி.வி. நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறனையும் விசாரணைக்கு அழைத்து நேற்று முன்தினம் அழைப்பாணை அனுப்பினார்கள். அவரை கே. கே. நகர் பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும்படி அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத்தில் நேற்றுமுன்தினம் இரவு தெரிவிக்கப்பட்டது. ஆடி 14, 2011 மந்திரி சபையில் சேருமாறு ராகுலுக்கு பிரதமர் அழைப்புபுதிய மத்திய மந்திரிகள் பதவி ஏற்ற பிறகு, பிரதமர் மன்மோகன் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை மந்திரி சபையில் சேருமாறு நான் பல தடவை வேண்டுகோள் விடுத்துள்ளேன். ஆனால், தனக்கு கட்சிப்பணிகள் இருப்பதாக அவர் கூறிவிடுகிறார். அவர் தற்போது விவசாயிகளின் பிரச்சினைகளை நன்றாக புரிந்துகொள்வதற்காக முயற்சி மேற்கொண்டுள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கும், வேளாண்மை உற்பத்திக்கும் முக்கிய பங்காற்றும் விவசாயிகள் முக்கியமானவர்கள். அவர்களின் பங்கு அளப்பரியது. அத்தகைய விவசாயிகளின் தேவைகளை புரிந்துகொள்ள ராகுல் காந்தி சமீபத்தில் பாதயாத்திரை மேற்கொண்டார் என்றார். ஆடி 13, 2011 த.தே.கூ அரசியல் பலத்தை எமது மக்களின் அழிவுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தியது - டக்ளஸ் _
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் பலத்தை அழிவுகளுக்காக அன்றி எமது
மக்களின் அரசியலுரிமைக்காக ஒரு போதும் பயன்படுத்த விரும்பியிருக்கவில்லை
என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 77 இல் ஒற்றுமையை
உலகுக்கு காட்டுங்கள் என்றும், தனிநாட்டு கோரிக்கைக்கு ஆணை வழங்குங்கள்
என்றும் மக்களிடம் கோரியிருந்தார்கள். தமிழ் மக்களும் இவர்களை நம்பித்தான்
வாக்களித்திருந்தார்கள். இவர்களால் நரம்புகள் முறுக்கேற்றப்பட்டு
உசுப்பிவிடப்பட்ட இளைஞர் யுவதிகளும் அப்பாவி மக்களும் நடுத்தெருவில் நின்ற
போது இவர்கள் மட்டும் தமிழ் நாட்டிற்கு ஓடிச்சென்று தனிவீடுகள் பெற்று தமது
குடும்பங்களோடு ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். இது போலவே அதற்குப்
பின்னரும் கிடைத்திருந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் சுயலாப அரசியல்
தலைமைகள் வழங்கிய தேர்தல்கால வாக்குறுதிகளை நம்பி தமிழ் மக்கள் தமது
ஒற்றுமையின் பலத்தைக் காட்டி ஏமாந்திருக்கிறார்கள்.
(மேலும்....) மும்பையில் மூன்று இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் மும்பையில் இன்று மாலை மூன்று இடங்களில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. மும்பையின் மேற்கு தாதர் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரில் வெடிகுண்டு வெடித்தது. இதே போல், ஜாவேரி பஜார் பகுதியில் 2வது குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மூன்றாவது குண்டுவெடிப்பு தெற்கு மும்பையில் உள்ள ஓபரா ஹவுஸ் அருகே நடந்துள்ளது. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு ஒரு பயங்கரவாத தாக்குதல் என உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், ஜாவேரி பஜார் பகுதியில் வெடிக்காத குண்டு ஒன்றை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டுகள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மும்பை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து டில்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. (மேலும்....)ஆடி 13, 2011 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதி ரத்துச் செய்ய வேண்டும் - தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்க பலத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது. இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் முயற்சிக்கு அரசுடன் இணைந்துள்ள சில அமைச்சர்கள் துணைபோவதாகவும் அவ் ஒன்றியம் குற்றஞ்சாட்டியது. கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயா கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இதனை தெரிவித்தது. (மேலும்....)ஆடி 13, 2011 மன்னார் சிறு நாவற்குளம் கிராம மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார்-உயிலங்குளம் பிரதான
வீதியில் உள்ள சிறு நாவற்குளம் கிராமத்தில் இருந்து 1990 ஆம் ஆண்டு
இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம் பெயர்ந்து இந்தியா மற்றும் இலங்கையின்
ஏனைய பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் தற்போது குறித்த கிராமத்தில் மீண்டும்
மீள் குடியமர்ந்தப்பட்ட போதும் அம் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
(மேலும்....) புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 7) (நேசன்) புளொட் தனது கடந்தகால "இரகசிய" அல்லது "தலைமறைவு" என்ற நிலையிலிருந்து வெளியே வரத்தொடங்கியிருந்தது. இந்தியாவுக்குப் பயிற்சிக்கு ஆட்களை அனுப்புதல், அரசியல் பாசறைகள், மக்கள் அமைப்புக்களை உருவாக்குதல், என்பனவெல்லாம் ஒருவகை "அசுர" வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவற்றுக்கெல்லாம் மக்களது ஆதரவும், ஒத்துழைப்பும், பங்களிப்பும் கூட கேள்விக்கப்பாற்பட்டதாக இருந்தது. பேரினவாத அரசுக்கெதிராக சாத்தியமான அனைத்துவழிகளிலும் போராடுதல் என்பதே எமது நிகழ்ச்சிநிரலாக இருந்தது. இந்தக் காலப்பகுதியில் புளொட்டின் தலைமை பற்றியும், செயலதிபர் உமாமகேஸ்வரன் பற்றியும் உயர்ந்த மதிப்பும் தலைமை விசுவாசமும் என்னிடமும் இருந்தது என்று சொல்லவேண்டும். இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. (மேலும்....) ஆடி 13, 2011 EPRLF முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் ராஜி அக்காவின் தந்தை அமரர் நடராசாவின் பூதவுடலுக்கு அஞ்சலி!
EPRLF முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் ராஜி அக்காவின் தந்தை அமரர் நடராசாவின் பூதவுடலுக்கு அஞ்சலி! யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நடராசாவின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார். உரும்பிராய் கிழக்கு உரும்பிராயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் நடராசா தனது 85 வது வயதில் நேற்று காலமானார். அன்னாரின் இறுதி கிரியைகள் இன்றைய தினம் (12) அவரது இல்லத்தில் நடைபெற்ற போது
அவரது பூதவுடலுக்கு தமது இறதி அஞ்சலியை செலுத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் அனுதாபங்களைத் தெரிவித்தனர். இவர் EPRLF முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் ராஜி அக்காவின் தந்தையும் EPRLF பத்மநாபா அணியின் தலைவர் சிறிதரனின் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.சூத்திரம் இணையத்தளமும் அஞ்சலி நிகழ்வில் தன்னை இணைத்துக் கொள்கின்றது. ஆடி 13, 2011புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அமிர்தலிங்கத்தின் நினைவுதினம்
விடுதலைப்புலிகளினால் சுட்டுக் கொல்லபட்ட முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் 22வது நினைவு தினம் இன்று புதன்கிழமை வவுனியாவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. 1989ம் ஆண்டு ஜூலை 13ம் திகதி இரவு கொழும்பில் வைத்து அமிர்தலிங்கமும் முன்னாள் யாழ். எம்.பி. வீ. யோகேஸ்வரனும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர் இந்த சம்பவத்தில் கூட்டணியின் தலைவர் எம். சிவசிதம்பரம் காய மடைந்திருந்தார். இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா கிளை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய வவுனியா நகர சகல ஆலயங்களிலும் விசேட பிரார்த்தனைகள் நடைபெறும். நினைவு தின கூட்டத்தை அமைதியான முறையில் நடத்த தீர்மானித்துள்ளோமென கிளை தலைவர் டேவிட் நாகநாதன் தெரிவித்தார். அதேவேளை, புளொட் அமைப்பு அனுஷ்டிக்கும் வீரமக்கள் தின நிகழ்வு இன்று ஆரம்பித்து 16ம் திகதி நிறைவு பெறும். 1989ம் ஆண்டு ஜூலை இத்தினத்தில் தான் புளொட் செயலதிபர் உமாமகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். ஆடி 13, 2011வெளிநாட்டு இராஜதந்திரிகள் வடக்கு செல்ல அனுமதி கோர வேண்டியதில்லை-பாதுகாப்பு அமைச்சு!வெளிநாட்டு இராஜதந்திரிகள் வடக்கு செல்ல அனுமதி கோர வேண்டியதில்லை-பாதுகாப்பு அமைச்சு! வெளிநாட்டு இராஜதந்திரிகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் வடக்கிற்கு செல்வதற்கு இனிமேல் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதுவரை காலமும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வடக்கு செல்வதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி கோர வேண்டிய நிர்ப்பந்தம் காணப்பட்டது. எனினும், இன்று முதல் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பயண அனுமதி ஆவணமின்றி வெளிநாட்டு ராஜதந்திரிகள் வடக்கிற்கு செல்ல முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாட்டுக் கடவுச் சீட்டை உடையவர்கள் வடக்கு செல்வதற்கு காணப்பட்ட தடைகள் கடந்த வாரம் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறெனினும், நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் இராணுவ நிலைகள், இராணுவ உத்தியோகத்தர்களை சந்திக்க விரும்பினால் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆடி 13, 2011 ஒன்றரை மாத சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்புகிறார் ரஜினி
சிங்கப்பூரில், ஆறு வார சிகிச்சையை முடித்துக் கொண்டு, நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி ராணா படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது, நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இசபெல்லா மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைகளில், இரண்டு முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்குச் சென்றார். சிங்கப்பூர் டாக்டர்கள் அவரை நன்கு பரிசோதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சைக்கு பின், உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, அங்கேயே ஒரு மாதம் காலம் தங்கி ஓய்வு எடுத்தார். இந்நிலையில், ஆறு வார சிகிச்சையை முடித்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார். இந்த செய்திக்காகவே காத்திருந்த அவரது ரசிகர்கள், சென்னையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க தயாராகி வருகின்றனர். மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து அவரது வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் வரை வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆடி 13, 2011 அமெரிக்கா உலக அரங்கில் நடுநிலை கொள்கையை கடைப்பிடித்தல் நல்லது உ லகத்தில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்டும் பலம் மிக்க பொலிஸ்காரனாக இருக்கின்றேன் என்று மார்பு தட் டிக்கொள்ளும் அமெரிக்கா, மற்ற நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து எந்நேரமும் பிழை கண்டுபிடி த்து, கண்டனக்குரல் எழுப்புகின்ற போதிலும், அந்நாட்டின் ஆட் சியாளர்கள் தங்கள் நாட்டில் நடைபெறும் மனித உரிமை மீறல் கள் குறித்து உதாசீனப் போக்கை கையாண்டு வருவது மிகவும் வேதனையை அளிக்கின்றது. ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் நிர்வாகத்தின் கீழ் அமெரிக்க சிறைக் கூட ங்களில் அடைக்கப்பட்டிருந்த கைதிகள் மீது மனித உரிமை மீற ல்கள் மேற்கொள்ளப்பட்டன என்ற குற்றச்சாட்டுகள் இப்போது பகிரங்கமாகி இருக்கின்றது. (மேலும்....) ஆடி 13, 2011
ஆடி 13, 2011 பணம் சம்பாதிப்பதற்கு வாழ்க்கை ஒரு கருவியல்ல, வாழ்வதற்குத்தான் பணம் ஒரு கருவி...! உங்களையே நீங்கள் கேட்டுப் பார்க்க வேண்டிய கேள்வி இதுதான். உங்களால் ஆளுமைமிக்க மனிதராக விளங்க முடிகிறதா? இந்தக் கேள்வியைப் படித்தவுடனேயே உங்கள் நண்பர்கள் உங்களுக்கு வேண்டியவர்கள் உங்களைப் பற்றிச் சொல்லும் பாராட்டு மொழிகளும் உங்களுக்குக் கீழே பணிபுரிபவர்கள் உங்களிடம் காட்டும் பணிவும் உங்கள் நினைவுக்கு வரும். ஆம் நான் ஆளுமைமிக்க மனிதர்தான் என்று ஒரு குரல் உள்ளே எழும். இவை உங்களுக்குள் இருக்கும் ஆளுமைப்பண்பின் ஆரம்ப அறிகுறிகள்தான். இதுவரை சந்தித்திராத ஒரு மனிதரைப் பார்க்க நேர்கையில், பழகத்தொடங்கி பத்து நிமிடங்களுக்குள் அவரை உங்களால் ஈர்க்க முடிகிற தென்றால் உங்கள் ஆளுமைப்பண்பு தீர்க்கமாக இருப்பதாய்ப் பொருள். (மேலும்....) ஆடி 13, 2011 ஒன்றரை இலட்சம் கோடி ரூபா மதிப்புள்ள பொற்குவியல் யாருக்குச் சொந்தம்?திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் இரகசிய அறைகளில் உள்ள பொற்குவியலை என்ன செய்வது என்பது தொடர்பாக திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருடன் ஆலோசனை நடத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் உள்ள இரகசிய அறைகளில் இருந்து விலை மதிப்பிட முடியாத பொற்குவியல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ. ஒன்றரை இலட்சம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பு உள்ளதாக கருதப்படும் இந்த பொக்கிஷத்தை எப்படி பாதுகாப்பது? என்பது குறித்து தெரிவிக்குமாறு கேரள அரசிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு இருந்தது. கோயிலில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு பணிகளுக்கான செலவை யார் ஏற்பது எனவும் கேட்கப்பட்டு இருந்தது. கோயிலில் தினசரி பூஜைகளுக்கும், நம்பிக்கை, ஆசாரங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தொடர் நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்தது. பொற்குவியலை கோயிலிலேயே பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாடுதான் அரசுக்கு உள்ளது. ஸ்ரீபத்மநாப சாமியின் சொத்து, பத்மநாபசாமி கோயிலுக்கே உரியது. ஆடி 13, 2011 அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலம் ‘மக்கள் சபை’ திட்டம் நடைமுறைஅரசியல் யாப்பு திருத்தத்தின் ஊடாக மக்கள் சபை (ஜனசபா) திட்டம் நடை முறைக்கு கொண்டு வரப்படும் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த மக்கள் சபைத் திட்டம் நாட்டில் ஏற்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தின் பகுதியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இச்செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றிய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்த அமைச்சர் மேலும் கூறுகையில், இந்த மக்கள் சபைத் திட்டம் இந்தியாவின் பஞ்சாயத்து முறை போன்று இருக்கும். அதற்கு மேல் உள்ளூராட்சி சபைகள், மாகாண சபைகள், பாராளுமன்றம் என அரசியலதிகார கட்டமைப்புகள் செயற்படும் என்றார். ஆடி 13, 2011 பலஸ்தீனிலிருந்து ஆக்கிரமித்த பகுதியை பகிஷ்கரிப்போருக்கு தண்டனை பலஸ்தீனில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைப்பதை பகிஷ்கரிக்கும் பிரஜைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கும் சட்டமூலத்திற்கு இஸ்ரேல் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. சர்ச்சைக்குரிய இந்த சட்டமூலம் 47-36 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே இந்த சட்டமூலம் ஜனனாயக விரோதமானது என அந்நாட்டு மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பலஸ்தீனத்தின் எதிர்கால தலைநகராக கருதப்படும் மேற்குக்கரை பகுதியில் இஸ்ரேல் தமது குடியிருப்புகளை அமைத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலின் முக்கிய நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது அமைக்கப்பட்டு வரும் குடியிருப்புப் பகுதியை பகிஷ்கரிக்க முன்னணி நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் தீர்மானித்துள்ளன. ஆடி 13, 2011 வடபகுதி மீள்குடியேற்றம் 4 இலட்சம் சீமெந்து பக்கற்களை மேலும் வழங்க இந்தியா முன்வருகைவடபகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வீடுகளை நிர்மாணிப்பதற்கென மேலும் 4 இலட்சம் சீமெந்து பக்கற்றுக்களை இந்தியா வழங்கவுள்ளது. மீளக்குடியமர்த்தப்படும் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா 12 கூரைத்தகடுகளுடன் தலா ஏழு சீமெந்து பக்கற்றுக்களும் வழங்கப்பட்டன. ஏற்கனவே இந்தியாவிலிருந்து இலவசமாக வழங்கப்பட்ட 4 இலட்சம் சீமெந்து பக்கற்றுக்களே இவ்வாறு வழங்கப்பட்டன. எனினும் வழங்கப்பட்டுள்ள சீமெந்து போதுமானதாக இல்லாததால் மேலும் 4 இலட்சம் சீமெந்து பக்கற்றுக்களை வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவிக்கிறது. 2009 முதல் 2011 வரையிலும் 50,000 குடும்பங்களுக்கு 4 இலட்சம் சீமெந்து பக்கற்றுகள் வழங்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 18,475 குடும்பங்களுக்கு 1,47,800 சீமெந்து பக்கற்றுகளும், கிளிநொச்சியில் 9,120 குடும்பங்களுக்கு 72,960 சீமெந்து பக்கற்றுகளும், முல்லைத்தீவில் 6,405 குடும்பங்களுக்கு 51,240 பக்கற்றுக்க ளும், வவுனியாவில் 8000 பேருக்கு 64,000 சீமெந்து பக்கற்றுக்களையும் மன்னாரில் 8000 குடும்பங்களுக்கு 64,000 சீமெந்து பக்கற்றுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஆடி 13, 2011 ஒசாமாவின் ரத்த மாதிரி பெற போலி மருத்துவ முகாம்பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் ஒளிந்திருந்தது பின்லேடன் தானா என்பதை கண்டறிய அமெரிக்கா போலி மருத்துவ முகாம் ஒன்றை நடத்தியது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒசாமா பின்லேடன் கடந்த மே மாதம் 2 ஆம் திகதி அமெரிக்க படைகளின் தாக்குதலில் உயிரிழந்தார். இந் நிலையில், ஒசாமா அபோதாபாத்தில் ஒளிந்திருப்பதை மேலும் உறுதி செய்ய அவரது குடும்பத்தினரின் டி. என். ஏ. மாதிரிகளை சேகரிக்க அமெரிக்கா போலி மருத்துவ முகாம் ஒன்றை அந்த நகரத்தில் ஏற்பாடு செய்திருந்தது. அங்கிருந்தவர்கள் ரத்த மாதிரிகள் அந்த முகாமின் போது சேகரிக்கப்பட்டன. இதற்காக பாகிஸ்தான் மருத்துவர் ஒருவரை அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் அந்த மருத்துவரால் ஒசாமா தங்கியிருந்த வீட்டின் மதிலை தாண்டி உள்ளே சென்ற போதும், ஒசாமா தங்கியிருந்ததை பார்க்கவோ அல்லது அவரது குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை சேகரிக்கவோ முடியவில்லை என அமெரிக்க உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆடி 13, 2011 பலத்த முரண்பாடுகள், இழுபறிகள் மத்தியில் மத்திய அமைச்சரவையில் நேற்று மாற்றம்பலத்த முரண்பாடுள், இழுபறிகளுக்கு மத்தியில் இந்திய மத்திய அமைச்சரவை மாற்றம் நேற்று இடம்பெற்றது. பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் சோனியாவுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாகவே மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் இதுவரை இழுபறி நிலவி வந்தது. ஒவ்வொரு அமைச்சுப் பொறுப்பையும் யாரிடம் ஒப்படைப்பதென்ற விடயத்தில் மன்மோகன் சிங்கும் சோனியாவும் முரண்பட்ட கருத்துக்களைக் கொண் டிருந்தனர். இம்முரண்பாடுகளுக்கு மத்தியில் அமைச்சரவை மாற்றம் குறித்து இழுபறி நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அமைச்சரவை மாற்றம் நேற்று அறிவிக்கப்பட்டது. (மேலும்....) ஆடி 12, 2011 சாவகச்சேரியில் அமைச்சர் டக்ளஸ் துவிச்சக்கர வண்டியில் பிரசாரம்
சாவகச்சேரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துவிச்சக்கர வண்டியில் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்டார். இச்சூறாவளி பிரசாரத்தில் மக்களது தேவைகள் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். முக்கியமாக அப்பகுதியில் மக்களுக்கு பெரும் பிரச்சினையாகவுள்ள குடிநீர்ப் பிரச்சினை வீடு திருத்தம், மின்சாரம், வீட்டுத் திட்டம் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கோரிக்கைகளை முன்வைத்தனர். நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வலுச்சேர்க்கும் வகையில் துவிச்சக்கரவண்டியில் பயணித்ததுடன் ஆங்காங்கே மக்களைச் சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்தார். இதில் ஈ,பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கமலேந்திரன், தென்மராட்சி பிரதேச இணைப்பாளர் சார்ளஸ் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் ஈ.பி.டி.பி. வேட்பாளர்களும் பங்கேற்றனர். ஆடி 12, 2011 திருத்தவே முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்பும், திருந்தவே விரும்பாத தமிழ் மக்களும் (மோகன்) வெண்ணை திரண்டு வரும் போது சாடியை உடைப்பதும், நல்லது நடக்கும் தறுவாயில் அதை எட்டி தள்ளுவதும் தமிழ் மக்களின் உடன் பிறந்த குணங்கள். இதுவரை காலமும் தமிழ் பேசும் மக்கள் அளித்த வாக்குகள் எல்லாம் தங்கள் இரண்டு கண்களை இழந்தாலும் எதிரிக்கு சகுனம் பிழைத்தால் போதும் என்ற நப்பாசைகளுக்கே. மகிந்தாவிற்கு எதிராக பொன்சேகவுக்கு ஓட்டுப்போட்டது தமிழ் பேசும் மக்களது அந்த அதி மேதாவித்தன செயலில் ஒன்று. அகிலம் முழுவதுமே எங்களுக்கு சார்பாக இருந்த ஒரு தருணத்தில் நாம் எங்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகக்கூடுதலான அதிகாரங்களை பெற்றிருக்க கூடிய அந்த நல்ல சந்தர்ப்பத்தை சர்வ சாதாரணமாக நழுவவிட்டு இன்று அஞ்சுக்கும், பத்துக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். இன்னமும் இதற்கான காரணத்தை அறிய விரும்பாமல் வெறும் உணர்சிகளுக்கு அடிமைபட்டு சண்டித்தன முறையிலேயே எல்லாவற்றையும் பெற்று விடலாம் என்ற பத்தாம் பசலி கொள்கையிலேயே உறுதியாய் இருக்கிறார்கள். (மேலும்....) ஆடி 12, 2011 புகலிடம் கோரும் இலங்கையரை வரவேற்கத் தயாரில்லை - நியூசி.பிரதமர் ஜோன் கீ _ நியூஸிலாந்திற்கு வரும் வழியில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சுமார் 85 புகலிடக் கோரிக்கையாளர்களும் வரவேற்கப்படவில்லையென அந்த நாட்டு பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை இந்தோனேசியாவில் டன்ஜீங் பினாங் கடற்பரப்பில் மேற்படி அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் நங்கூரமிட்டு நின்ற போது அகதிகள் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கப்பலிலிருந்து இறங்குவதற்கும் மறுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)ஆடி 12, 2011 $50,000 reward offered in murder investigation Two years have passed since Kristian Thanapalan was surrounded by dozens of young bat-wielding men and savagely beaten to death in a Scarborough park — and the 22-year-old’s family is still waiting for justice. However, his family members are hoping a $50,000 reward announced Monday by Toronto Police will lead to an arrest in their loved one’s killing. “It has been two difficult years since we lost our beloved brother Kristian and no one has come forward in this murder,” Krishanthy Thanapalan said at Glamorgan Park, just steps from where her big brother was slain. (more....) ஆடி 12, 2011 கடனட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் லண்டனில் கைது லண்டனில் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டன் லிவர்புல் நகரில் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வேலை செய்து வந்த முருகையா என்பவர் நீண்டகாலமாக கடனட்டை மூலம் எரிபொருள் நிரப்புவர்களின் தகவல்களை மூன்றாம் தரப்பிற்கு வழங்கி சுமார் 73 இலட்ச ரூபா மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. முருகையா செல்வ குமாரன் என்ற 36 வயது நபர் அங்கு சட்டவிரோதமாகத் தங்கி இருந்ததுடன் போலிப் பெயரிலே வேலை செய்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தொழில் பார்த்த எரிபொருள் நிறப்பு நிலையம் இலங்கைத் தமிழ் குடும்பமொன்றுக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆடி 12, 2011 வீரமக்கள் தினம் 2011
இலங்கையில் தமிழ்மக்களின் தேசிய இன விடுதலைப் போராட்டத்திற்காகவும், போராட்டத்தின் பேரிலும் தங்கள் உயிரை ஈகை செய்த அனைத்து அமைப்புகளின் தலைவர்கள், போராளிகள், பொதுமக்கள் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை செலுத்துகின்றோம். இலங்கையில் தமிழ்மக்கள் சகல விடயங்களிலும் ஒதுக்கப்பட்டு, பலவீனப்படுத்தப்பட்டு, அரசியல், சமூக, பொருளாதார, கல்வி உரிமைகள் மறுக்கப்பட்டதும், அதன் காரணமாக, அவர்கள் தமது அடிப்படை உரிமைகளுக்காக பிரித்தானிய ஆட்சி முடிவுக்கு வந்த காலம் தொட்டே ஜனநாயக ரீதியிலும், ஆயுத ரீதியிலும் நடாத்திய போராட்டங்களுக்கு தமிழ்ப் பகுதிகளிலும், சர்வதேசத்திலும் தொடர்ச்சியாக கிடைத்து வந்த அங்கீகாரமும் எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாத விடயங்களாகும். (மேலும்....) ஆடி 12, 2011 Israel ranks among third world countries for human trafficking (By Brooke Anderson) Israel ranks alongside Botswana, Cambodia and Sri Lanka for being “a destination country for men and women subjected to forced labor and sex trafficking,” according to the U.S. State Department’s annual Trafficking in Persons report. The country, which tends to consider itself more modern and democratic than its neighbors, is criticized in the report for failing to do an adequate job in protecting victims of human trafficking. Low and unskilled workers from Asia, Eastern Europe and Africa regularly migrate to Israel to work in construction, agriculture and healthcare. (more....) ஆடி 12, 2011 பின்னோக்கிச் சுழலும் முதலாளித்துவம் (எஸ்.பி.ராஜேந்திரன்அமெரிக்காவில் மையம் கொண்ட முதலா ளித்துவப் பொருளாதாரத்தின் நெருக்கடி, வரலாறு காணாத ஆழமான வீழ்ச்சியை நோக்கி பயணிக்கத் துவங்கியுள்ளது. நெருக்கடியிலிருந்து மீட்சியடைந்து கொண் டிருப்பதாகக் கூற முதலாளித்துவப் பொருளா தார வல்லுநர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் உண்மையில், மீட்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். நவீன தாராளமயக் கொள்கைகளை மிகத் தீவிரமாக அமல்படுத்தி, ஆளும் வர்க்கங்களின் கொள்ளை லாபத்திற்காக மக்களின் வாழ்வா தாரத்தை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி தங்கு தடையில்லாமல் கட்டவிழ்த்துவிடப்பட்ட நிதி மூலதனத்தைக் கொண்டு சூறையாடிய அமெ ரிக்கப் பொருளாதாரம் 3 ஆண்டுகளுக்கு முன்பு கடும் நெருக்கடியில் சிக்கியது. லட்சக் கணக்கான மக்கள் வேலை பறிக்கப்பட்டு வீதிக்கு விரட்டப்பட்டனர். இதனால் அந்நாட் டின் இயல்பு வாழ்க்கையே நிலைகுலைந்தது. (மேலும்....) ஆடி 12, 2011 85 அகதிகளை விடுவிக்க இந்தோனேசியா மறுப்பு - ஏற்க நியூசிலாந்து மறுப்பு! நியூசிலாந்து நோக்கி அகதிகளாகச் சென்று கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்கள் 85 பேரை விடுவிக்க இந்தோனேசிய அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் அவர்களை ஏற்றுக் கொள்ள நியூசிலாந்து மறுப்புத் தெரிவித்துள்ளது. 85 இலங்கை அகதிகளை ஏற்றிய கப்பல் இந்தோனேசியாவின் பின்டன் தீவிலுள்ள தன்யுன்ங் பினெனங் நரகப் பகுதியிலுள்ள கடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை நங்கூரமிடப்பட்டுள்ளது. இந்தக் கப்பலில் உள்ள அகதிகளை ரொய்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளர் யூலி செஜெரி நேரில் சென்று சந்தித்துள்ளார். தாங்கள் நியூசிலாந்து நோக்கிச் செல்ல விரும்புவதாக குறித்த கப்பலில் இருந்த அகதிகள் குறிப்பிட்டுள்ளனர். கப்பலை விட்டு இறங்க இணக்கம் தெரிவிக்காத அகதிகள் ஐநா தலையீட்டாலும் ஏனைய வழிமுறைகளிலும் நியூசிலாந்து செல்ல முடியுமா என ரொய்டர் செய்திச் சேவையின் புகைப்படப் பிடிப்பாளர் யூலி செஜெரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். "நாம் நியூசிலாந்து செல்ல வேண்டும்... தயவு செய்து எங்களுக்கு உதவி செய்யுங்கள்..." என இலங்கை அகதிகள் யூலி செஜெரிஸிடம் மன்றாடிக் கேட்டுள்ளனர். இரண்டு வருடங்களாக இந்த கப்பலில் இருக்கும் மற்றுமொரு அகதி, இலங்கையில் தனது குடும்பம் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அதனால் கப்பலைவிட்டு வெளியே வருவதைவிட கப்பலிலேயே உயிர் நீத்தல் சிறந்தது எனவும் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கை அகதிகள் 85 பேரின் வழிமுறைகளை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ, அகதிகளை ஏற்றுக் கொள்ளத் தாயார் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆடி 12, 2011 சிரியா அரசின் முயற்சிக்கு ஆதரவாக பெருந்திரள் பேரணிகள் நாட்டின் நிர்வாகம் மற் றும் அரசியல் சீர்திருத்தங் கள் தொடர்பாக அரசு மேற் கொண்டு வரும் முயற்சி களுக்கு ஆதரவாக சிரியா முழுவதும் ஆதரவுப் பேர ணிகள் நடந்துள்ளன. இந்த பெருந்திரள் பேர ணிகளின் ஒருபகுதியாக கடலையொட்டி அமைந் துள்ள நகரமான லடாகியா வில் பெரிய அளவிலான தேசியக்கொடியை ஏந்திக் கொண்டு அந்நகரின் தெருக் களில் வலம் வந்தனர். உலகி லேயே மிகப்பெரிய அளவி லான தேசியக்கொடியை உருவாக்கியுள்ளோம் என்று பேரணியில் அதை ஏந்தி வந் தவர்கள் தெரிவித்தனர். 16 கி.மீ. நீளமும், நான்கு மீட் டர் அகலமும் கொண்ட அந்தக்கொடியோடு லட்சத் திற்கும் மேற்பட்ட மக்கள் அந்தப் பேரணியில் பங்கேற் றனர். (மேலும்....)ஆடி 12, 2011 தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெறுவதற்கு சரியான இடம் பாராளுமன்றத் தெரிவுக்குழு பாராளுமன்ற தெரிவுக்குழு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய வகையிலேயே அமைக்கப்படும். இதன் பயனாக ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பிக்கள் இக்குழுவில் உள்ளடக்கப்படுவர். இதனூடாக எல்லா மக்களும் விரும்பி ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான சிறந்த தீர்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். நாம் எடுக்கின்ற தீர்மானத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டிய நிலை ஏற்பட்டாலும் அது பாதிப்பாக அமையாது. இல்லாவிடில் சர்வஜன வாக்கெடுப்புக்கு எதிராகவும், ஆதரவாகவும் கட்சி ரீதியாக பிரிந்து நின்று செயற்படும் நிலமை உருவாகும். அது அதிக செலவையும், பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அதனை தவிர்க்க இக்குழு பெரிதும் உதவும். (மேலும்....) ஆடி 12, 2011 இடதுசாரிக் கொள்கையில் கட்சி தடம் புரள்கிறது - டோனி பிளேர் பிரிட்டனில் உள்ள தொழிலாளர் கட்சி இடது சாரிக் கொள்கைகளிலி ருந்து விலகிவிட்டது என்று அக்கட்சியின் தலைவர் களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான டோனி பிளேர் குற்றம் சாட்டி யுள்ளார். தற்போதைய தலைவர் எட்வர்டு மிலிபாண்டையும் அவர் குறை கூறினார். இடதுசாரிக்கட்சிகளின் மரபணுக்களிலேயே உள்ள விஷயம் என்னவென்றால், போதிய அளவு இடது சாரிக் கொள்கைகளில் உறு தியாக தலைமை இல்லா விட்டால் தோல்வியைத் தான் தழுவ வேண்டும் என் பதுதான். அதோடு, இத்த கைய தோல்வியில் மற் றொரு மோசமான விஷய மும் உள்ளது. வலதுசாரிக் கட்சியிடம்தான் ஒவ் வொரு முறையும் நாம் தோற்க வேண்டியுள்ளது.(மேலும்....) ஆடி 12, 2011 வடக்கு, கிழக்கை இணைக்க கோருவது தமிழீக் கோரிக்கைக்கு ஒப்பானது - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருவது தமிbழக் கோரிக்கைக்கு ஒப்பானது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கடந்தகாலத்தில் தமிழ்த் தலைவர்கள் எடுத்த பிழையான முடிவுகளே தமிழ் மக்களின் கணிசமானவர்கள் அழிவதற்குக் காரணமாக அமைந்தது என்றும் கூறினார். வடக்கு, கிழக்கு இணைக்கப்படும்போது தமிழர் பெரும்பான்மை என்பது தனிப்பட்ட முறையில் எனக்கும் விருப்பமானதுதான். ஆனால் நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைளுக்குப் பின்னால் சென்று மீண்டும் அழிய முடியாது. வடக்கு, கிழக்கு சட்டரீதியாக இணைக் கப்பட வேண்டுமாயின் கிழக்கில் வாக் கெடுப்பு நடத்தப்படும். (மேலும்....) ஆடி 12, 2011 கிழக்கு முதல்வர் தலைமையிலான குழு தென் மாகாண சபை விஜயம் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையி லான மாகாண அமைச்சரவைக் குழுவினர் தென் மாகாண சபைக்கான விஜயமொன்றை மேற்கொள்கின்றனர். இக்குழுவினர் தென் மாகாண முதல மைச்சர் ஷான் விஜேலால் சில்வாவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் இன்று நடைபெறவுள்ள தென் மாகாண சபை அமர்வினையும் பார்வையிடவுள்ளனர். இவர்கள் இரண்டு தினங்கள் அங்கு தங்கியிருப்பர். மாகாண சபை அமர்வு சபையின் செயற் பாடுகளைப் பார்வையிடும் அவர்கள் தென் மாகாண சபையின் அமைச்சரவை மற்றும் ஏனைய அதிகாரிகள் குழுவினரு டனும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளவர் என தென் மாகாண சபை முதலமைச்சர் ஷான் விஜேலால் சில்வா நேற்றுத் தெரிவித்தார். இரு மாகாண சபைகளுக்கிடையிலுமான தொடர்புகள் பற்றி குறிப்பிட்ட அவர், குறிப்பாக மாகாண போக்குவரத்துத் துறை சம்பந்தமான முக்கிய விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்தார். ஆடி 11, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 6) (நேசன்) 1982 ஜனவரி 02ம் திகதி யாழ்ப்பாணம் சித்திரா அச்சகத்தில் "புதியபாதை" பத்திரிகையின் அச்சுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் "புதியபாதையின்" ஆசிரியர் சுந்தரம்(வலிகாமம் மேற்கு, சுழிபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) தமிழீழ விடுதலைப் புலிகளால் கோழைத்தனமாக பின்னாலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார். சுந்தரத்தின் கொலையின் பின்னரே தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடுவதாக கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய விடுதலைக்காக போராடும் ஏனைய குழுக்களை "எதிரிகளாக" பகிங்கரமாக பிரகடனப்படுத்தி அரசியல் படுகொலைகளை நடத்திய "புதிய அத்தியாயம்" ஒன்று ஆரம்பித்தது.. சுந்தரத்தின் படுகொலையின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு விடயங்களைத் தெளிவுபடுத்தியிருந்தனர். (மேலும்...) ஆடி 11, 2011 நியூசிலாந்து செல்ல முயற்சி 87 இலங்கையர்கள் கைது இலங்கையிலிருந்து நியூசிலாந்துக்கு கப்பல் மூலம் சட்டவிரோதமாக செல்லவிருந்த இலங்கை தமிழ் அகதிகள் 87 பேரை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பெட்டன் எனும் இடத்துக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களில் சிறுவர்கள், பெண்களும் அடங்குவார்கள் எனவும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அலிசியா எனும் கப்பல் மூலம் நியூசிலாந்துக்கு புறப்பட்டு இருந்தனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கப்பலுடன் இந்தோனேசியாவுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆடி 11, 2011_ சர்ச்சைக்குரிய கருத்தால் தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அமெரிக்கா திருப்பி அழைத்தது இலங்கை இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப். கேணல் லோறன்ஸ் ஸ்மித் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். 2008ம் ஆண்டு ஜூன் மாதம் சிறிலங்காவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பொறுப்பேற்ற லேப். கேணல் லோறன்ஸ் ஸ்மித், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் கொழும்பில் பணியாற்றியவர். அண்மையில் சிறிலங்கா இராணுவம் நடத்திய போர்க்கருத்தரங்கில் பங்கேற்ற அவர், போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சரணடைய முன்வந்தனர் என்பதில் சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார். இதையடுத்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் லெப். கேணல் ஸ்மித்தின் கருத்து தனிப்பட்டது என்றும் , அது அமெரிக்காவின் அதிகாரபூர்வ கருத்தல்ல என்றும் கூறியிருந்தது. இந்த நிலையிலேயே அவர் அமெரிக்காவுக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். ஆடி 11, 2011 30 வருடங்களின் பின் தொண்டமனாறு அச்சுவேலி வீதி முழுமையாகத் திறப்பு யாழ் தென்மராட்சி தனங்கிளப்பு பகுதியில் 271 குடும்பங்கள் நேற்று மீள்குடியமர்த்தப்பட்டன. அதேநேரம், சுமார் 30 வருடங்களின் பின்னர் தொண்டமனாறு-அச்சுவேலி பிரதான வீதி முழுமையாக மக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது. தொண்டமனாறு செல்வச்சன்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கடந்த காலத்தில் இவ்வீதியூடாகவே சென்றனர். இப்பகுதியில் விவசாயிகளின் நிலப்பரப்புக்குள் உவர்நீர் வருவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், அதற்கான கால்வாய்களை அமைக்குமாறும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார். (மேலும்...)ஆடி 11, 2011 தெற்கு சூடான் உதயமானது 50 ஆண்டு காலம் ரத்தம் தோய்ந்த உள்நாட்டு மோத லில் இறுதியாக பிறந்த தெற்கு சூடான் சனிக்கிழ மையன்று தனி நாடாக உதயமானது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய நாடு சூடான். கடந்த ஐம்பது ஆண்டு களாக இங்கு கிறிஸ்துவ சூடானியர்களுக்கும், முஸ் லிம் சூடானியர்களுக்கும் இடையே கடும் உள்நாட் டுப் போர் நடந்து வந்தது. இந்த கடும் மோதலில் 25 லட்சத்திற்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். தெற்கு மற்றும் வடக்கு சூடான் பிராந்திய மக்களுக் கிடையே அமைதி ஏற்பட வாய்ப்பில்லை என்று ஐ.நா. உணர்ந்து, இரு நாடுகளும் பிரியலாமா என்பது குறித்து சூடானில் வாக்கெடுப்பு நடத்தியது. 2011ம் ஆண்டு 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் ஜனவரி 30ம் தேதி வெளியானது. அதில் 98.83 சதவீதம் பேர் தெற்கு சூடான் தனி நாடாக உரு வெடுக்க ஆதரவு கொடுத்தனர். (மேலும்...)
ஆடி
11, 2011 இலங்கை அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்குத் தேவையான சகல மருத்துப் பொருட்க ளையும் இந்திய மத்திய அரசின் ஊடாகக் கொள்வனவு செய்வதற்குத் தீர்மானித்திருப் பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இது விடயமாக இந்திய சுகாதார அமைச்சருடன் விரை வில் பேச்சுவார்த்தை நடத்த விருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தரக்குறைவான மருந்துப் பொருட்கள் விநியோகிக் கப்படுவதைத் தவிர்ப்பதற்கும், தேவை யான மருந்துப் பொருட்கள் உரிய காலவேளையில் தாமதமின்றிக் கிடைப்பதை உறுதிப்படுத்தவுமே இந்நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார். (மேலும்...) ஆடி 11, 2011 மாறன் சகோதரர்கள் கைதாகலாம்? ஏர்செல் நிறுவன முன்னாள் உரிமையாளர் சிவசங்கரனை சன் டிவி அலுவலகத்திற்கு வர வழைத்து கலாநிதி மாறன் மிரட்டியதாகவும், அங்கிருந்து சிவசங்கரன் சென்ற பின்னர் தொலைபேசி மூலம் தயாநிதி மாறன் மிரட்டியதாகவும் சிவ சங்கரன் அளித்துள்ள வாக்கு மூலம் தொடர்பான முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள் ளதாக கூறப்படுகிறது. இந்த ஆதாரம் உண்மை யானதாக இருக்கும் பட்சத்தில் இருவர் மீதும் உடனடியாக வழக்கு தொடரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இருவரும் கைது செய்யப்படு வதற்கான சூழல்களும் அதிக ரித்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. (மேலும்...)
ஆடி
11, 2011 ஆசியாவில் பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் மிகவும் பலம் வாய்ந்த இரு அயல் நாடுகளான இந்தியா வும், சீனாவும் தங்களின் குட்டித்தங்கையான இலங்கையை அன்புடன் அரவணைத்து சகல உதவிகளையும் செய்து வருகின்றன. பயங்கரவாத யுத்தம் இலங்கையில் உச்சக் கட்டத்தில் நடந்துகொண்டி ருந்தபோது ஏனைய மேற்குலக வல்லரசுகளை போலன்றி இவ் விரு நாடுகளும் எவ்வித மறைமுகமான அரசியல் இலாபத்தை யும் எதிர்பாராமல் உற்ற நண்பர்களாக பொருளாதார ரீதியிலும் இராணுவ ரீதியிலும் மனமுவந்து எமக்கு உதவி செய்தன. (மேலும்...) ஆடி 11, 2011 காங்.-திமுக உறவு தொடரும் காங்கிரஸ் - திமுக கூட் டணி தொடரும்’ என்று பிர ணாப் முகர்ஜி கூறினார். மத்திய நிதியமைச்சர் பிர ணாப் முகர்ஜி, வெள்ளிக்கிழ மை சென்னை வந்தார். ராஜ் பவனில் இரவு தங்கினார். காலையில் கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கரு ணாநிதி இல்லத்துக்கு வந்த பிரணாப் முகர்ஜியை முன் னாள் மத்திய அமைச்சர் தயா நிதி மாறன், பொன்முடி ஆகி யோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் கருணாநி தியை பிரணாப் முகர்ஜி சந் தித்து பேசினார். இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. (மேலும்...)ஆடி 11, 2011 தமிழர் பிரச்சினையை இலங்கை அரசு கையாளும் முறை தொடர்பில் மன்மோகன்சிங் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகள் இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றார்கள் என்பது தொடர்பாக பிரதமர் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பாக கொழும்பில் கடும் அமைதி காணப்படுகிறது. 2009 இல் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து முதற்தடவையாக மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் மீது பகிரங்கமாக இந்தியப் பிரதமர் விமர்சனங்களைத் தெரிவித்திருந்தார். சிங்கள இன மேலாதிக்கவாதம் யதார்த்தமான நிலைமை என்றும் கடும் போக்காளர்கள் தமிழ் மக்கள் சம உரிமையுடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு இடமளிக்க மறுக்கின்றார்கள் என்றும் அவர் கூறியிருந்தார். அதேசமயம், இலங்கையின் நிலைவரத்தை நேரடியாக தமிழ் நாட்டுடன் தொடர்புபடுத்தியிருந்தார். தமிழக அரசாங்கத்தை எமது பக்கத்தில் வைத்திருப்பது எமக்குச் சவாலான விடயமென்பதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார். (மேலும்...) ஆடி 11, 2011 பத்மநாப சுவாமி கோயில் குளத்தில் அடியிலும் புதையல் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் குளத்திலும் புதையல் இருப்பதாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையை சேர்ந்த வரலாற்று நிபுணர் கூறியுள்ளார். குளத்தில் உள்ள 3 கிணறுகளில் இந்த புதையல் இருப்பதாக அவர் கூறி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த கோயிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் 5 அறைகள் திறக்கப்பட்டு சோதனை செய்ததில் ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம், உலகின் பணக்கார கோயிலான திருப்பதி ஏழு மலையான் கோயிலையும் இந்த கோயில் முந்திவிட்டது. 6வது அறையில் ஏராளமான நகைகள் இருக்கலாம் என கூறப்படுவதால், நகைகளின் மதிப்பு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. (மேலும்...) ஆடி 10, 2011 வெலிக்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கான போராட்டங்கள் (அ. விஜயன்) தமிழகத்தில் தற்போது நடைபெறும் போராட்டங்களால் ஒன்றும் நடைபெறப்போவதில்லை தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் சிங்கள மக்களை அச்சமடையாமல் அமைய வேண்டும். இலங்கையில் உள்ள சகல இனத்தாரிடையேயும் தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் நல்ல செய்திகளை சொல்ல வேண்டும். மாறக அவர்களை பீதியடைய வைக்கக் கூடாது. இன வீராப்புடன் பேசும் பேச்சுக்கள், ஒட்டும் போஸ்டர்கள் கேட்பதற்கும், பார்பதற்கும் ஒரு உணர்வை ஏற்படுத்தலாம். இவை இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் எதனையும் ஏற்படுத்திடாது. (மேலும்....) ஆடி 10, 2011
ஆடி 10, 2011 கிளிநொச்சியில் சர்வதேச தரத்திலான வட மாகாண விளையாட்டரங்கு சர்வதேச தரத்திலான நவீன வசதிகளுடன் கூடிய வட மாகாணத் திற்கான விளையாட் டரங்கு 325 மில்லியன் ரூபா செலவில் கிளி நொச்சியில் அமைக்கப் படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பிரதாய பூர்வமாக எதிர்வரும் இருபதாம் திகதி அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கிறார். இந்த மைதானத்தில் ஒரே தடவையில் பல விளையாட்டுப் போட்டி களை நடத்தக் கூடிய வகையில் அமைக்கப்படுவதோடு உள்ளக விளையாட்டரங்கு நீச்சல் தடாகம், பார்வையாளர் அரங்குகள், தங்குமிட வசதிகள் வாகனத் தரிப்பிடங்கள் உள்ளிட்ட சகல வசதிகளுடன் அமைக்கப்பட இருக்கின்றது. இதனை விட கிளிநொச்சி மாவட்டத் திற்கான ஒரு மைதானமும், மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஒவ்வொரு மைதானமும் அமைக்கப்பட வுள்ளன. குறிப்பாக வட மாகாணத்திற்கான விளையாட்டரங்கின் கட்டுமானப்பணிகள் யாவும் ஒரு வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆடி 10, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 5) (நேசன்) இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் சிங்கள-தமிழ் முற்போக்கு சக்திகளின், உழைக்கும் மக்களின் ஒற்றுமை, சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் உழைக்கும் மக்களுடனும் இணைந்து பேரினவாத அரசுக்கெதிராக போராடுதல், சர்வதேச ரீதியில் ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் போராட்டத்துடன் கைகோர்த்தல், சிங்கள – தமிழ் உழைக்கும் மக்களுக்கிடையேயான ஜக்கியப்பட்ட போராட்டமில்லையேல் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் வெற்றியடையப் போவதில்லை என்ற நிலைப்பாடு அனைத்துமே முற்போக்கானதும் சரியானதுமாகும். இதையே தோழர் தங்கராசா தனது அரசியல் பாசறைகள், கருத்தரங்குகளில் மிகவும் எளிமையாகவும், தெளிவாகவும் எடுத்துச் சொல்வதோடு மட்டுமல்லாமல், இன்று இருக்கின்ற பழைய (தோழரின் சொல்லில் சொல்வதானால் "உழுத்துப் போன" பெருமளவுக்கு நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களுடன் கூடிய) சமூக அமைப்பைப் பற்றிய ஆழமான, விஞ்ஞானரீதியான விளக்கங்களுடன் எடுத்துச் சொல்வதுடன், அமையப்போகும் புதிய சமுதாய அமைப்பைப்பற்றியும் தெளிவாகக் குறிப்பிடுவார். (மேலும்....) ஆடி 10, 2011 தமிழரின் கோரிக்கைகள் தட்டிக்கழிப்பு, இனப்பிரச்சினைக்கு மூலகாரணம் இதுவே! தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அரசுகள் தமிழ் மக்களின் இந்த ஜனநாயகத் தீர்ப்பை அங்கீகரிப்பதற்குத் தவறியமையும் இலங்கைப் பிரஜைகளாக நியாயமாகவும் சமமாகவும் நடத்தப்படல் வேண்டும் எனத் தமிழ் மக்கள் விடுத்த தொடர்ச்சியான கோரிக்கைகளுமே தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட இவ்வாறான இனக் கலவரங்களுக்கான மூலகாரணம். முரண்பாட்டுக்குக் காரணமான அடிப்படை விடயங்களைத் தீர்ப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வொன்றை துரிதமாகக் காணவேண்டும். இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவும் மீள ஆரம்பிக்கவும் உதவும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்த வேண்டும். (மேலும்....) ஆடி 10, 2011 சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்தர்ப்பவாத அரசியலை மேற்கொள்கின்றது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் சரவணமுத்து விளையாட்டரங்கு இருக்க முடியுமென்றால், வடக்கில் ஏன் மஹிந்த ராஜபக்ஷ பெயரில் மைதானம் இருக்கக் கூடாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிழக்கிலும் ஜனாதிபதியின் பெயரில் விளையாட்டு அரங்கு ஒன்றை அமைக்குமாறு தாம், அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாணந்துறையில் பிரபாகரனின் தந்தை அமைத்த கோயில் ஒன்று காணப்படுவதாகவும், அதனைச் சிங்கள மக்கள் இடிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான ஓர் நிலையில் வடக்கில் பெளத்த விகாரை ஒன்று இருப்பதில் என்ன தவறு எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இந்து- பெளத்த சமாதானத்தை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். அரந்தாலாவ, தலதா மாளிகை மற்றும் பஸ் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தேவையென்றால் அரசாங்கத்தினால் காணொளி தொகுப்பு ஒன்றை தயாரிக்க முடியும் என்ற போதிலும், சமாதானத்தை நிலைநாட்டுவதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஆடி 10, 2011
இருதரப்பு பேசும்போது மூன்றாம் தரப்பு அதனைக்
குழப்புவதற்கு முயற்சி!
|
உனக்கு
நாடு இல்லை என்றவனைவிட
நமக்கு நாடே இல்லை
என்றவனால்தான்
நான் எனது நாட்டை
விட்டு விரட்டப்பட்டேன்.......
ராஜினி
திரணகம MBBS(Srilanka) Phd(Liverpool,
UK) 'அதிர்ச்சி
ஏற்படுத்தும்
சாமர்த்தியம்
விடுதலைப்புலிகளின்
வலிமை மிகுந்த
ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன்
நட்பு பூணுவது
என்பது வினோதமான
சுய தம்பட்டம்
அடிக்கும் விவகாரமே.
விடுதலைப்புலிகளின்
அழைப்பிற்கு உடனே
செவிமடுத்து, மாதக்கணக்கில்
அவர்களின் குழுக்களில்
இருந்து ஆலோசனை
வழங்கி, கடிதங்கள்
வரைந்து, கூட்டங்களில்
பேசித்திரிந்து,
அவர்களுக்கு அடிவருடிகளாக
இருந்தவர்கள்மீது
கூட சூசகமான எச்சரிக்கைகள்,
காலப்போக்கில்
அவர்கள்மீது சந்தேகம்
கொண்டு விடப்பட்டன.........' (முறிந்த
பனை நூலில் இருந்து) (இந்
நூலை எழுதிய ராஜினி
திரணகம விடுதலைப்
புலிகளின் புலனாய்வுப்
பிரிவின் முக்கிய
உறுப்பினரான பொஸ்கோ
என்பவரால் 21-9-1989 அன்று
யாழ் பல்கலைக்கழக
வாசலில் வைத்து
சுட்டு கொல்லப்பட்டார்) Its
capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with
the L.T.T.E. was a strange and
self-flattering affair.In the course of the coming days dire hints were dropped
for the benefit of several old friends who had for months sat on committees,
given advice, drafted latters, addressed meetings and had placed themselves at
the L.T.T.E.’s beck and call. From: Broken Palmyra வடபுலத்
தலமையின் வடஅமெரிக்க
விஜயம் (சாகரன்) புலிகளின்
முக்கிய புள்ளி
ஒருவரின் வாக்கு
மூலம் பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம் திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்? (சாகரன்) தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!! (சாகரன்) (சாகரன்) வெல்லப்போவது
யார்.....? பாராளுமன்றத்
தேர்தல் 2010 (சாகரன்) பாராளுமன்றத்
தேர்தல் 2010 தேர்தல்
விஞ்ஞாபனம் - பத்மநாபா
ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணி 1990
முதல் 2009 வரை அட்டைகளின்
(புலிகளின்) ஆட்சியில்...... (fpNwrpad;> ehthe;Jiw) சமரனின்
ஒரு கைதியின் வரலாறு 'ஆயுதங்கள்
மேல் காதல் கொண்ட
மனநோயாளிகள்.'
வெகு விரைவில்... மீசை
வைச்ச சிங்களவனும்
ஆசை வைச்ச தமிழனும் (சாகரன்) இலங்கையில் 'இராணுவ'
ஆட்சி வேண்டி நிற்கும்
மேற்குலகம், துணை செய்யக்
காத்திருக்கும்;
சரத் பொன்சேகா
கூட்டம் (சாகரன்) எமது தெரிவு
எவ்வாறு அமைய வேண்டும்? பத்மநாபா
ஈபிஆர்எல்எவ் ஜனாதிபதித்
தேர்தல் ஆணை இட்ட
அதிபர் 'கை', வேட்டு
வைத்த ஜெனரல்
'துப்பாக்கி' ..... யார் வெல்வார்கள்?
(சாகரன்) சம்பந்தரே!
உங்களிடம் சில
சந்தேகங்கள் (சேகர்) (m. tujuh[g;ngUkhs;) தொடரும்
60 வருடகால காட்டிக்
கொடுப்பு ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ்
மக்கள் பாடம் புகட்டுவார்களா? (சாகரன்) ஜனவரி இருபத்தாறு! விரும்பியோ
விரும்பாமலோ இரு
கட்சிகளுக்குள்
ஒன்றை தமிழ் பேசும்
மக்கள் தேர்ந்தெடுக்க
வேண்டும்.....? (மோகன்) 2009 விடைபெறுகின்றது!
2010 வரவேற்கின்றது!! 'ஈழத் தமிழ்
பேசும் மக்கள்
மத்தியில் பாசிசத்தின்
உதிர்வும், ஜனநாயகத்தின்
எழுச்சியும்' (சாகரன்) மகிந்த ராஜபக்ஷ
& சரத் பொன்சேகா. (யஹியா
வாஸித்) கூத்தமைப்பு
கூத்தாடிகளும்
மாற்று தமிழ் அரசியல்
தலைமைகளும்! (சதா. ஜீ.) தமிழ்
பேசும் மக்களின்
புதிய அரசியல்
தலைமை மீண்டும்
திரும்பும் 35 வருடகால
அரசியல் சுழற்சி!
தமிழ் பேசும் மக்களுக்கு
விடிவு கிட்டுமா? (சாகரன்) கப்பலோட்டிய
தமிழனும், அகதி
(கப்பல்) தமிழனும் (சாகரன்) சூரிச்
மகாநாடு (பூட்டிய)
இருட்டு அறையில்
கறுப்பு பூனையை
தேடும் முயற்சி (சாகரன்) பிரிவோம்!
சந்திப்போம்!!
மீண்டும் சந்திப்போம்!
பிரிவோம்!! (மோகன்) தமிழ்
தேசிய கூட்டமைப்புடன்
உறவு பாம்புக்கு
பால் வார்க்கும்
பழிச் செயல் (சாகரன்) இலங்கை
அரசின் முதல் கோணல்
முற்றும் கோணலாக
மாறும் அபாயம் (சாகரன்) ஈழ விடுலைப்
போராட்டமும், ஊடகத்துறை
தர்மமும் (சாகரன்) (அ.வரதராஜப்பெருமாள்) மலையகம்
தந்த பாடம் வடக்கு
கிழக்கு மக்கள்
கற்றுக்கொள்வார்களா? (சாகரன்) ஒரு பிரளயம்
கடந்து ஒரு யுகம்
முடிந்தது போல்
சம்பவங்கள் நடந்து
முடிந்துள்ளன.! (அ.வரதராஜப்பெருமாள்)
|
||
அமைதி சமாதானம் ஜனநாயகம் www.sooddram.com |