Contact us at: sooddram@gmail.com

 

வைகாசி 2014 மாதப் பதிவுகள்

மே 31, 2014

யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 33வது ஆண்டு நிறைவு இன்று (01.06.2014)!

(தங்க முகுந்தன்)

எனது இந்தக் கட்டுரை ஒரு ஆராய்வாக அமைகிறது – காரணம் நூலக வரலாற்றை நான் அறிந்தவரை நிறைய முரணான தகவல்கள் இருக்கின்றதுபோலத் தோன்றுகிறது!  நூலகத்தோடு  சம்பந்தப்பட்ட விடயங்களை மாத்திரம் வரலாறாக  பதிய முற்படும்போது வேறு சில விடயங்களையும் குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. காரணம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு பட்டதாகத் தெரிகிறது! மேலும் வரலாறு எழுதுபவர்கள் தாம் நினைத்த விடயங்களையும் - தமக்குப் பிடித்தமானவர்களைப் புகழ்பாடும் விதங்களில் சில நிகழ்வுகளைத் தவிர்த்தும் சிலவற்றை புதிதாகப் புகுத்தியும் எழுதி எமது வரலாற்றை கொச்சைப்படுத்துவதுபோல நடந்துகொள்வதை பார்த்துக் கொண்டிருக்க முடியாத காரணத்தினாலேயே இக்கட்டுரையைத் தொகுத்து வழங்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டேன். ஏனெனில் யாரும் இவற்றை தொடர்ச்சியாக மறுத்து உரிய நடவடிக்கை எடுக்க தவறியதே உண்மையாகிறது!  (மேலும்....)

முடி கொட்டுகிறதா

அதை தடுக்க இப்படி பண்ணுங்க ..!

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும். அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்.

இலங்கை வருகின்றார் சுஷ்மா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருவதற்கு முன்னார் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவாராஜ் எதிர்வரும் மாதங்களில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கட்சியின் முன்னாள் தலைவியாக இருந்த போது வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இவர் 2012ஆம் ஆண்டு இலங்கைக்கு நாடாளுமன்றத்துக்கு குழு ஒன்றுடன் வருகை தந்திருந்தார். அந்நேரத்தில் மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களுக்கு சென்று யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களையும் உள்நாட்டு தலைவர்களையும் சந்தித்தார். அதே போன்று மலையத்தில் வாழும் இந்திய வம்சாவளியினருக்காக இந்திய நிதிதிட்டம் ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.

தமிழ்க் கூட்டமைப்பை அழைக்கவுள்ள ஜெயா?

இலங்கைத் தமிழர் விவ­காரம் தொடர் பில் பேசு­வ­தற்­காக தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்கு அழைப்பு விடுக்­கலாம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இலங்கைத் தமி­ழரின் பிரச்­சினை தீர்­வுக்கு இந்­தியா மேற்­கொள்ளும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­மாறு, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு தமி­ழக முதல்வர் ஜெய­ல­லி­தா­வுக்கு கடி­த­மொன்றை அனுப்­பி­யி­ருந்­தது. இந்த கடிதம் தமி­ழக முதல்­வ­ருக்கு கிடைக்­கப்­பெற்ற நிலையில், அதற்கு சாத­க­மான பதில் வழங்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதன்­படி, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் பிர­தி­நி­தி­களை விரைவில் தமது அலு­வ­ல­கத்­துக்கு அழைத்து ஜெய­ல­லிதா பேச்­சு­வார்த்தை நடத்­துவார் என்று முத­ல­மைச்சர் அலுவலகத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மே 30, 2014

நான் இயக்கமாக இருந்து எழுதுகிறேன்

வன்னிக் காடுகளின் புதல்வி தமிழ்க்கவி. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருபது வருடங்களாகப் பல்வேறு துறைகளிலும் இயங்கியவர். கடைசிவரை புலிகளுடன் களத்தில் இருந்தவர். தமிழீழ சட்டக் கல்லூரியில் கற்றுத் தேறிய சட்டவாளர். புலிகள் இயக்கத்தின் நட்சத்திர மேடைப் பேச்சாளர். ‘புலிகளின் குரல்’ வானொலி, ‘தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி’ ஆகியவற்றில் முதன்மையான நிகழ்ச்சித் தயாரிப்பாளர். சிறுகதை, நாவல், பத்தி எழுத்து, நாட்டாரியல், நடிப்பு, இசை, ஒலி - ஒளிப்பதிவு, மொழிபெயர்ப்பு எனக் கலையின் வெவ்வேறு பரிமாணங்களையும் வசப்படுத்திக்கொண்டவர். இவ்வருடத்தின் தொடக்கத்தில் தமிழ்க்கவியின் ‘ஊழிக்காலம்’ நாவலை தமிழினி பதிப்பகம் வெளியிட்டபோது அனைத்துலகத் தமிழ் இலக்கிய வாசகப்பரப்பிலும் தமிழ்க்கவி கவனம் பெற்றார். இறுதி யுத்தத்திற்குள் சிக்கியிருந்த மூன்று இலட்சம் மக்களது சாட்சியமாக அந்த நாவல் இருந்தது. இலங்கை அரச படைகளது இனவழிப்பையும் கொடூரங்களையும் நிணமும் தசையுமாக முன்னே வைத்த நாவல்; விடுதலைப் புலிகள் தமது சொந்த மக்களையே கொன்றொழித்ததையும் அவர்களது மனிதவுரிமை மீறல்களையும்கூட பதிவு செய்யத் தவறவில்லை. தன்னை உறுதியான தமிழ்த் தேசியவாதியாகப் பிரகடனப்படுத்தும் தமிழ்க்கவி என்ற படைப்பாளியின் நேர்மைத்திறனான சாட்சியம் அந்த நாவல். (மேலும்....)

யுத்தம் முடிவுற்று இந்த ஐந்து வருடங்களில் அப்படி என்னதான் நடந்திருக்கின்றது?

(சாகரன்)

ஓட்டு மொத்தத்தில் ஒரு பலவீனமான சமூகத்தை இந்த யுத்தம் விட்டுச் சென்றிருக்கின்றது. பலவீனமான சமூகத்தை பலமாக்கும் முயற்சிகளை யாரும் செய்யவில்லை. செய்வதில் பாரிய முயற்சிகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவில்லை. யுத்தம் முடிவுற்று ஐந்து வருடங்கள் ஓடியாகிவிட்டது, மிகுந்த நம்பிக்கையுடன் இலங்கை மக்கள் எதிர்பார்த்து இருந்த சமாதான, சக வாழ்விற்கான பயணத்தில் நாம் கடந்து வந்த பாதைகளைப் பார்த்தால் அவ்வளவு ஆரோக்கியமானதாக காண முடியவில்லை. இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உரிமைக்கான போராட்டம் பிழையான திசை வழியில் இழுத்துச் செல்லப்பட்டு பயங்கரவாத செயற்பாடுகளாக புலிகளினால் உருவாக்கிய நிலமையில் புலிகளை இலங்கையிலிருந்து அகற்றிவிட்டதாக இலங்கை அரசாங்கம் சந்தோஷப்படும் அதே வேளை தொடர்ந்தும் தமிழ் மக்கள் சம்மந்தமாக தான் சந்தேகப்படும் போக்கையே அது கொண்டிருப்பதாகவே காணக் கூடியதாக இருக்கின்றது.  (மேலும்....)

என் சிங்களத்து சகோதரியே

என் வீட்டுக் கோடிக்குள் மட்டும் அல்ல உன் வீட்டுக் கோடிக்குள்ளும் கொலை வெறி தாண்டவம் ஆடுகின்றது. இணைந்த கரங்களின் போராட்டமே இதற்கு தீர்வாக அமையும் என்பதை நீ உணர்வாய். சகோதரியே! உன் ஆத்ம சாந்திக்காக உன்னை நான் முத்தமிட்டு, இறுதியாத்திரைக்கு அனுப்பி வைக்கின்றேன். - சாகரன்

4.05.2014 அன்று ஒரு இராணுவ வீரனால் படுகொலை செய்யப்பட்ட 21 வயதான கொழும்பு பல்கலைக்கழக மாணவி செல்வி.டிமாஷா கயனகி படுகொலை செய்யப்படுவதற்கு முன் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவுசெய்திருந்த சிங்களக் கவிதையின் தமிழ் வடிவம்.

எப்போதேனுமொரு நாள் இவையெல்லாவற்றையும்
விட்டுச் செல்லவேண்டியிருக்கும்
எவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் பயணமல்ல அது
எனினும் அதை
துயரமின்றிச் செல்லமுடிந்தால்
எவ்வளவு நன்றாகவிருக்கும்

(மேலும்....)

மதப்பயங்கரவாதி மோடியும், கொள்ளைக்காரி ஜெயலலிதாவும் கிளிநொச்சி சிறிதரனின் நம்பிக்கை நட்சத்திரங்களாம்!!!

இந்தியாவின் அடுத்த பிரதமராக சவால்களையே சாதனைகளாய் மாற்றி இந்திய மக்களின் பெரும் நம்பிக்கையை பெற்ற குஜராத்தின் பூகம்ப மலர் நரேந்திரமோடி அவர்கள் அரியணை ஏறுவது கண்டும் அவர் தலைமையின் கீழ் அமையும் இந்திய பெரும் முதற்சபையில், தமிழர்களின் உணர்வு பூமியாம் தமிழ்நாட்டில் இருந்து தனித்தொரு பெண்ணாய் வரலாற்றுப் பக்கங்களில் சாதனைகளுக்குச் சொந்தக்காரியாய் திகழும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மையாரின் வழிகாட்டலின் கீழ் நிகரற்ற பெரு வெற்றிபெற்று தமிழர் குரலாய் செல்ல இருக்கும் பெரு மாண்புக்கும், போர் நடந்த ஈழத்தமிழ் மண்ணில் இருந்து தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அன்பும், பட்சமும் நிறைந்த என் அண்ணாச்சி மோடியே, அக்காச்சி ஜெயலலிதாவே என்று உருகி, உருகி வாழ்த்து சொல்லுகிறார் பாசக்காரத்தம்பி கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன். அடப்பாவிகளா!! உங்களிற்கு எல்லாம் அறிவு, அனுபவம், அரசியல் என்று எதுவுமே கிடையாவிட்டாலும், கண்ணுக்கு முன்னால் நடந்தது கூடத் தெரியாத கபோதிகளா நீங்கள். இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட முஸ்லீம்களை துடிக்க, துடிக்க கொலை செய்தவனை, முஸ்லீம் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து இன்னும் பிறக்காத அந்த பச்சைக்குழந்தையையும் கொலை செய்த கொலைகாரக்கும்பலின் அதிகாரபூர்வ தலைவனை வாழ்த்துகிறீர்களே நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா? (மேலும்....)

இலங்கை விவகாரங்களுக்காக சிறப்பு பிரதிநிதியை நியமிக்க மோடி முடிவு

இலங்கை விவகாரங்களைக் கவனிப்பதற்கென தனது நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்புப் பிரதிநிதி ஒருவரை நியமிக்க இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்திருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, தமது ஆட்சிக் காலத்தில் இலங்கை விவகாரங்களுக்காக மட்டும் ஜி. பார்த்தசாரதியை சிறப்பு பிரதிநிதியாக நியமித்திருந்தார். அதேபோல் இலங்கை விவகாரங்களை தமது சார்பில் நேரடியாக கையாளக் கூடிய சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அப்படி நியமிக்கப்படும் சிறப்பு பிரதிநிதியானவர் வெளிவிவகார அமைச்சர், அவ்வமைச்சின் செயலாளர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கும் மேலான அதிகாரங்களைக் கொண்டு செயற்படக்கூடியவராக இருப்பார் என்றும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரதிநிதியை நியமிப்பதால் இலங்கை மீதான இந்தியாவின் நெருக்கடி அதிகரிக்கும் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

த.தே.கூவிலிருந்து கௌரிகாந்தன் நீக்கம்

யாழ்.மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கே.கௌரிகாந்தினைக் கட்சியிலிருந்து நீக்குவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசா கடிதம் அனுப்பியுள்ளார். அதனை,வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் நேற்று வியாழக்கிழமை (29) உறுதிப்படுத்தினார். கட்சியின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு எதிராகச் செயற்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டே இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பிரதேச சபையின் வரவு – செலவுத்திட்டம் இரண்டு முறை தோற்கடிப்பதற்கு காரணமாக இருந்தமை, பிரதேச சபைத் தவிசாளர் பதவி விலகக் காரணமாக இருந்தமை மற்றும் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் நடவடிக்கைகளை பிரதேச சபைக்குள் கொண்டு வந்தமை உள்ளிட்ட விடயங்களைக் காரணம் காட்டி இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதுடன், பிரதேச சபை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்குவது தொடர்பாக தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

எம்.எச் 370வின் சமிக்ஞைகள் பெறப்பட்ட பிரதேசம் அந்த விமானத்தின் பயணம் இறுதியாக முடிவடைந்த இடமல்ல

காணாமல் போன மலேசிய எம்.எச் 370 விமானத்தினது என கருதப்படும் சமிக்ஞைகள் பெறப்பட்ட பிரதேசம் அந்த விமானத்தின் பயணம் இறுதியாக முடிவடைந்த இடமல்ல என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அந்தப்பிரதேசத்தில் தேடுதலை மேற்கொண்ட புளுபின் 21 ஆழற்ற ரோபா நீர்மூழ்கிக்கப்பல் எதனையும் கண்டுபிடிக்கப்படவில்லையென அவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் விசேட உபகரணத்தைப் பயன்படுத்தி கடல் அடித்தளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் தரவுகளை மதிப்பீடு செய்யும் முயற்சியில் நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். எம்.எச். 370 விமானம் கடந்த மார்ச் 8 ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நகருக்கு 239 பேருடன் பயணித்த வேளை காணாமல் போனது. செய்மதி தரவுகளின் பிரகாரம் மேற்படி விமானத்தின் பயணம் அவுஸ்திரேலிய பேர்த் நகரின் வடமேற்கே இந்து சமுத்திரத்தில் முடிவடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காணாமல் போன விமானத்தின் கறுப்பு பெட்டியிலிருந்து வெளிப்பட்டது என நம்பப்படும் 4 சமிக்ஞைகளை அடிப்படையாக வைத்து  புளுபின் 21 ஆளற்ற நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சமுத்திரத்தின் அடியில் தேடுதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் மேற்படி நீர்மூழ்கிக் கப்பல் சமுத்திரத்தின் கீழான தனது இறுதி தேடுதல் நடவடிக்கையை புதன் கிழமை மாலை பூர்த்தி செய்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பலால் சேகரிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த அவுஸ்திரேலிய ஒருங்கிணைப்பு முகவர் நிலையம் காணாமல் போன விமானத்துக்கான எந்தவொரு அடையாளமோ சிதைவுகளோ கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்தது. இதன் பிரகாரம் எம். எச். 370 விமானம் இறுதியாக பயணத்தை முடித்துக் கொண்ட இடமாக அப்பிரதேசத்தை கருத முடியாதுள்ளதாக அவுஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பணிமனை தெரிவித்தது.

அமெரிக்கா சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளிக்க ஒபாமா வாக்குறுதி

அமெரிக்காவின் புதிய வெளிநாட்டு கொள்கை வெளிநாட்டு நட்பு நாடுக ளுடன் இணைந்த கூட்டு நடவடிக்கையை அடிப்படையாக கொண்டதாக இருக்கும் என்று ஜனாதிபதி பராக் ஒபாமா உறுதி அளித்துள்ளார். நியுயோர்க்கில் நேற்று முன்தினம் நடந்த அமெரிக்க இராணுவ அகடமி பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஒபாமா, கடந்த காலங்களில் நிகழ்ந்த பாரிய தவறுகள் தவிர்க்கப்படும் என்றார். எனினும் இந்த விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் முன்னின்று செயற்படும் என்று ஒபாமா குறிப்பிட்டார். சர்வதேச தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு 5 பில்லியன் டொலர் நிதியத்தை அறிவித்த அவர், 'போர்க்களத்தின்; மூலம் அமெரிக்கா மேலும் எதிரிகளை உருவாக்காது" என்று வாக்குறுதி அளித்தார். ஒரு பலவீனமான வெளிநாட்டு கொள்கை குறித்து கண்டனம் வெளியிட்ட அவர் உக்ரைன் மற்றும் ஈரானில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து வரவேற்பு வெளியிட்டார். 'கூட்டு இராணுவ நடவடிக்கைகளின் திறன் குறித்து எப்போதும் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது. அவ்வாறானவர் கள் சர்வதேச நிறுவனங்கள் அல்லது சர்வதேச சட்டத்தை மதிப்பதை பலவீன மாக கருதுகிறார்கள். அவர்களது முடிவு தவறென்று நான் நினைக்கிறேன்." இதில் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கை இருக்கவேண்டும் என்றும் ஒபாமா குறிப் பிட்டுள்ளார்.

மே 29, 2014

பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு உரிமைகோரியே சிலர் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர் உரை நிகழ்த்திய பிரதேசத்துக்கு அண்மித்த பிரதேசத்தை உரிமை கோரியே சிலர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர் என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறினார். கொள்ளுப்பிட்டியில் உள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் கூறியதாவது, கிளிநொச்சியில் கைப்பற்றியுள்ள பிரதேசத்தில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சில தமிழ் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அந்த நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் சாவகச்சேரியில் இருந்து வாகனங்களில் கொண்டுவரப்படட 42 பேர் கலந்துகொண்டனர். இக்காணிகளுக்கு உரிமை கோரும் எவரிடமும் சட்ட ரீதியான காணி உறுதிகள் இல்லை, மேலும் ஒரு காணிக்காக பலர் உரிமை கோரும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சட்ட ரீதியான காணி உறுதிகளைச் சமர்ப்பித்தவர்களுக்கு கிளிநொச்சியில் 108 ஏக்கர் காணிகளை நாம் மீளக் கையளித்துள்ளோம் என்றும் பிரிகேடியர் மேலும் கூறினார்.

மீன் வளத்தை அழித்தொழிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்

லங்கையின் கடல்நீர் வளத்தையும் நன்னீர் மீன் வளத் தையும் அழித்தொழிக்கும் செயற்பாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது மிகவும் கவலைக்குரியதாகும். இந்திய மீனவர்களின் அத்துமீ றிய நடவடிக்கையினால் எமது நாட்டின் கடல் வளம் விரை வாக அழிந்துகொண்டு செல்கிறது. அதேசமயம் உள்நாட்டு நீர் நிலைகளில் காணப்படுகின்ற மீன்வளத்தை அழிக்கும் சட்ட விரோத செயலிலும் ஒருசாரார் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகி ன்றனர். மீன்வளம் அழிந்து விடாமல் தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமா னால் சில கட்டுப்பாடுகளை அவசியம் கடைப்பிடித்தே ஆக வேண்டும். மீனவர்களால் அன்றாடம் பிடிக்கப்படுகின்ற மீன் கள், இறால், நண்டு போன்றவற்றின் தொகைக்கு ஈடான வகை யில் அவற்றின் இனப்பெருக்கத்துக்கும் இடமளிக்கப்பட வேண் டும். அதிகரித்த மீன்பிடியும் குறைந்தளவான மீன் பெருக்க மும் இருக்குமானால் நாட்டின் நீர் நிலைகளில் மீன்வளத்தைத் தொடர்ந்தும் பேணுவது முடியாத காரியமாகும். (மேலும்....)

மே 28, 2014

மலேஷியாவில் கைதான 3 புலி உறுப்பினர்களும் T.I.D அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்து வருகை

புலிகளை மீண்டும் உயிர்பெறச் செய்யும் வகையில் மலேஷியாவில் செயற்பட்டு வந்த மூன்று முக்கியஸ்தர்களை இலங்கை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு அழைத்து வந்துள்ளனர். எல்.ரீ.ரீ. ஈயை மீண்டும உயிரூட்டுவதற்காக நாடுகடந்த நிலையில் நேரடியாகவும், மறைமுக மாகவும் செயற்பட்டு வந்த புலிச் சந்தேக நபர்களுக்கு இண்டர்போல் ஊடாக ‘ரெட் அலர்ட்’ அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி மேற்படி மூன்று பேரும் மலேஷிய பொலிஸாரினால் அண்மையில் கைது செய்யப்பட்டனர். புலிகள் இயக்கத்தில் முல்லைச் செல்வம் என்றழைக்கப்படும் சந்திர லிங்க ராஜா குஷாந்தன் (வயது 45) மீசாலை வடக்கைச் சேர்ந்த இவர் 94 ஆம் ஆண்டு புலிகளின் அரசியல்துறையில் இணைந்து அதன் பின்னர் புலிகளின் விமானப் படைப் பிரிவில் இணைந்துள்ளார். புலிகளின் சங்கர் மாஸ்டர் என்பவரின் சகோதரரின் மகளை பிரபாகரனின் விசேட அனுமதியுடன் திருமணம் செய்துகொண்ட இவர் 2004 ஆம் ஆண்டு மலேஷியாவுக்கு சென்றுள்ளார். மலேஷியாவில் இலக்ரோனிக் என்ஜினீயரிங் கற்று தொழில் புரிந்தவாறு புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். (மேலும்....)

காட்டுக் குடிசைகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்காக குரல் கொடுப்பது இனவாதமாகாது

வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக் காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காண்பதற்காக இங்கு தான் விஜயம் செய்ததாக மீள்குடியேற்ற அபிவிருத்தி அமைச்சர் குணரத்தின வீரக்கோன் நேற்று முசலிப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதெ மெற்கண்டவாறு தெரிவித்தார். இல்லறமின்றி, காடுகளுக்குள் முடங்கிக்கிடக்கும் உங்கள் துயரத்தைக் கண்டு நான் வெதனையடைகின்றேன். இப்படிப்பட்ட உங்களுக்காக குரல் கொடுக்க ஓர் அமைச்சராகவும் தலைவராகவும் றிசாத் பதியுத்தீன் செயற்பட்டு வருகின்றார்.உங்களுக்கு காணி பெற்றுத் தந்த காரணங்களுக்காக மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் அமைச்சராகவும் அவர் காணப்படுகின்றார். காடுகளை அழித்து முஸ்லிம்களை குடியேற்றுகின்றார். என்று அமைச்சர் றிசாத் மீது இன்று பெளத்த பேரினவாத அமைப்பொன்று நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் பிரசாரம் செய்கின்றது. (மேலும்....)

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி இல்லை

சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி இல்லை என வர்த்தக துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வர்த்தக துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிர்மலா சீதாராமன் இன்று தமது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது என்றும், இந்த விஷயத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியபடி நடப்போம் என்றும் தெரிவித்தார்.

13 வது சட்டதிருத்தம்

ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தல்!

இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியபோது,  தமிழர் பிரச்னை குறித்து  விவாதிக்கப்பட்டதாகவும், இலங்கை வருமாறு ராஜபக்சே விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புடன், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியபோது, தீவிரவாதம் குறித்து விவாதித்தார். மேலும், தீவிரவாத ஊடுருவல் குறித்து நவாஸிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்க கூடாது என்றும் அவரிடம் மோடி வலியுறுத்தினார். இதேபோல், இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழர் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், 13வது சட்ட திருத்தத்தையும் அமல்படுத்துமாறு ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார். மேலும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்துமாறு ராஜபக்சேவை மோடி கேட்டுக்கொண்டதாகவும்,  தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13 வது சட்டதிருத்த பிரிவை அமல்படுத்துமாறு வலியுறுத்தியதாகவும் சுஜதா சிங் தெரிவித்தார். அதே சமயம் இலங்கை உடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார். மேலும் இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இலங்கை வர பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தார்.

மே 27, 2014

பாரதிய ஜனதா கட்சி ஆட்சி இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதையே செய்யும் என நம்புவோம்.

(ஸ்ரனிஸ)

ஆட்சியை இழந்த காங்கிரசுக்கு இலங்கைத் தமிழர் பிரச்சினையால் ஏற்பட்ட நெருக்கடிகள் இன்று பா.ஐ.க ஆட்சி  பொறுப்பை ஏற்குமுன்பே ஏற்பட்டுவிட்டது. பல மாநிலங்களைக்  கொண்ட இந்தியாவில் ஒரு மாநிலத்தின் பிரச்சினையை நரேந்திரமோடி அரசு எப்படி கையாளப்போகிறது என்பதே இன்று எல்லோர் முன்னுள்ள கேள்வியாக இருக்கிறது. தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி மீது இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு இருந்த வெறுப்பை விட இலங்கையில் வாழும் சில தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் பலருக்கு வெறுப்பு இருந்ததென்பது அவர்கள் காங்கிரசை தூற்றியும் மோடியை போற்றியும் எழுதியதிலும் பேசியதிலும் இருந்து தெரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.  (மேலும்....)

டில்லியில் ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம், பிரதமரானார் மோடி

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று மாலை சுபவேளையில் பதவியேற்றுக்கொண்டார். சார்க் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட பதவியேற்பு நிகழ்வு இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பதவியேற்பு நிகழ்வில், 23 அமைச்சரவை அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய மத்திய இணை அமைச்சர்கள் 10 பேரும், மத்திய இணை அமைச்சர்கள் 12 பேரும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீட் கர்சாய், மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியாவின் அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி, வெங்கையா நாயுடு, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, உமா பாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், கல்ராஜ் மிஸ்ரா, மேனகா சஞ்சய் காந்தி, அனந்த் குமார், ரவிசங்கர் பிரசாத், கீதே, கஜபதி ராஜூ, நரேந்திர சிங் தோமர், ஹர்மிஸ்ராத் பாதல் கவுர், ஜூவால் ஓரம், ராதா மோகன் சிங், தாவர் சந்த் கெலோட், ஸ்மிருதி இராணி, ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்ட 23 பேர் அமைச்சரவை அமைச்சர்களாகப் பதவியேற்றனர். தமிழகத்திலிருந்து தெரிவான பா.ஜ.க உறுப்பினரும், தமிழ்நாட்டின் பா.ஜ.க தலைவருமான பொன்.இராதாகிருஷ் ணனுக்கு இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜபக் ஷே வருகை

தமிழர் பிரச்னைக்கு பின்னடைவு இல்லை

இலங்கையைப் பொறுத்த வரையில், அதிபராக இருந்த ஜெயவர்த்தனா முதல், அனைவருமே புத்திசாலித்தனமாகவே, தமிழ் இன பிரச்னையை கையாண்டு வருகின்றனர். தமிழர் பிரச்னையில், அவர்கள் தங்களுக்கு சாதகமான அம்சங்களை மட்டுமே பிரதானப்படுத்தி, அதை வைத்து இலங்கையிலும், வெளியேயும் மிகப் பெரிய லாபத்தை சம்பாதிப்பவர்கள். அப்படிப்பட்டவர்களில், மிகுந்த சாதுர்யமான நபராக தன்னை காட்டி வருபவர் தான், ராஜபக் ஷே. அவரை, நாம் அவ்வளவு எளிதாக அணுகி, பிரச்னையை தீர்த்துவிட முடியாது.புதிய அரசின் வெளியுறவு கொள்கை என்ன என்பதே, முழுமையாக அறியாத சூழ்நிலையில், அவரின் இந்திய வருகையால், இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு கிட்டிவிடும் என்றோ, பிரச்னை இன்னும் மோசமான சூழ்நிலையை எட்டப் போகிறது என்றோ யாரும் சொன்னால், அதை கேட்க வேண்டிய அவசியமில்லை. (மேலும்....)

சட்டி சுட்டதடா 

முள்ளிவாய்க்காலின்  ஆரம்பம்  

( ரஞ்சன்)

சமாதான முன்நெடுப்புக்களில் எந்தளவு முன்னேற்றம் இருந்ததோ இல்லையோஅல்லது சமாதான பேச்சக்களில் முன்னேற்றம் இருந்ததோ இல்லையோ சமாதான முன்னெடுப்புக்களில் இரு தரப்புக்கும் எந்தளவுக்கு அக்கறை இருக்கிறது என்பதை அளவிடும் அல்லது கண்காணிக்கும் பணியாகவே கண்காணிப்பாளர்களின் பணியும் சர்வதேசத்தின் பணியும் இருந்தது என்பது காலம் தாழ்த்தியே எல்லோருக்கும் புரிந்தது. இதில் ரணில் விக்கிரமசிங்க ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கின்றார். அவர் சர்வதேசத்தின் மத்தியிலும் தமிழ்மக்கள் மத்தியிலும் சமாதானத்தின் மீது அக்கறை கொண்டவர் போன்று காட்டிக்கொண்டமை அன்றைய கால கள நிலவரங்கள் உணர்த்துகின்றன. அவர் 30 வருட கால போராட்டத்தை 3வருடத்தில் சுருக்கி காட்டியுள்ளார். இதை உணராத புலிகள் தொடர்ந்தும் வன்முறைகளிலேயே ஈடுபட்ட வண்ணம் இருந்தனர்.  (மேலும்....)

ராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு

மோடியின் ராஜதந்திரம் புரியாமல் நடக்கும் கூத்து

நரேந்திர மோடி, இந்திராவை விட இரும்பு மனிதராக இருந்து செயல்படக் கூடியவர் என்பது, ராஜபக் ஷேவுக்கு நன்கு தெரியும். இதெல்லாம் தெரிந்து தான், பதவியேற்பு விழாவை புறக்கணித்து, ஆரம்பத்திலேயே இந்தி யாவில் ஏற்பட்டிருக்கும் புதிய அரசோடு நெருடலை ஏற்படுத்திக் கொண்டால், அது பழைய படியே பிரச்னையை ஏற்படுத்தி விடும் என பயந்தார் ராஜபக் ஷே.அதனால் தான், அவர் நரேந்திர மோடியிடம் இருந்து அழைப்பு என்றதும், வருகை தர உடனே ஒப்புக் கொண்டு விட்டார். அதேபோல், இலங்கையில் யார் அதிபராக இருந்தாலும், பின்னணியில் இருந்து ஆட்சி பரிபாலனத்தை நடத்திக் கொண்டிருக்கும் புத்த பிட்சுக்களும், இந்த ஆபத்தை உணர்ந்தே இருக்கின்றனர். அதனால், அவர்களும், ராஜபக் ஷேவின் இந்திய பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. (மேலும்....)

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலைகள்'


யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் 'தறுதலை' என்ற வார்த்தையினை வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் மாறி மாறி பேசிக்கொண்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் இணைத் தலைமையில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று திங்கட்கிழமை (26) இடம்பெற்றது. இதன்போது, மகேஸ்வரி நிதியம் தொடர்பான விவாதம் இடம்பெற்றபோது, முருகேசு சந்திரகுமாரினால் தறுதலை ஆசிரியர்கள் என்ற வசனம் பயன்படுத்தப்பட்டது. அதன்போது, தறுதலை ஆசிரியர் என்று நீங்கள் யாரைக் கூறுகின்றீர்கள் என கஜதீபன் கேட்க, 'உம்மைத் தான் தறுதலை ஆசிரியர் என்று கூறினேன்' என்று சந்திரகுமார் கூறினார். அதற்கு பதிலளித்த கஜதீபன் 'நான் தறுதலை ஆசிரியர் என்றால் நீர் ஒரு தறுதலை அரசியல்வாதி' எனக் கூறினார். அதற்கு சந்திரகுமார் 'ஆமாம் நான் தறுதலை அரசியல்வாதி தான்' எனக் கூறிமுடித்தார். வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஓர் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

மே 26, 2014

எல்.ரீ.ரீ.ஈ சந்தேகநபர்கள் மூவரையும் நாடு கடத்த மலேசியா நடவடிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவில் கைதான மூன்று சந்தேகநபர்களையும் இலங்கைக்கு நாடு கடத்த அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது தொடர்பில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்துள்ள மலேசியாவின் உயர் பொலிஸ் அதிகாரியொருவர், ஐரோப்பாவிலும், ஏனைய நாடுகளிலும் உள்ள தொடர்புகள் மூலம் விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உருவாக்குவதற்கான முயற்சிகளில் இந்த மூன்று சந்தேகநபர்களும் ஈடுபட்டதாகக் கூறினார். பல நாடுகளில் தடை செய்யப்பட்ட புலிகள் அமைப்புக்கு நிதி சேகரிப்பது மற்றும் அதற்கான பரப்புரைகளை செய்வது ஆகிய நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய விசா மற்றும் ஆவணங்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இவர்கள் மலேசியாவில் தங்கியிருந்துள்ளனர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்ததாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தேகநபர்கள் மூவரையும் விரைவில் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து இலங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

புலி சந்தேகநபர்கள் மூவர் மலேசியாவில் கைது        

தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலாலம்பூர், பி.ஜே. கிலாங் எனும் பிரதேசத்தில் வைத்தே இம்மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர்  பொலிஸார் தெரிவித்துள்ளனர். மே மாதம் 15ஆம் திகதி அமைக்கப்பட்ட விசேட பயங்கரவாத குற்றப்பிரிவினரின் மூலமே குறித்த சந்தேக நபர்கள், கிலாங் மற்றும் பெடலிங் ஜெயா ஆகிய நகரங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை வைத்திருந்ததாகவும், முக்கியமாக தேசிய அளவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை  பரப்புவதற்காக முனைந்துள்ளனர் எனவும் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸ் உயர் அதிகாரியான டான் ஸ்ரீ காலிட் அபூபக்கர் ஞாயிற்றுக்கிழமை (25) தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தை பிரசாரம் செய்யவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும், தொழிநுட்ப சாதனங்களும் மற்றும் 24 நாடுகளுக்கு சமனான வெளிநாட்டு பணம் போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. அந்நாட்டு அதிகாரிகளிடம் இருந்து மறைந்திருப்பதற்காகவே அவர், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையகத்தினால் அங்கீகாரிக்கப்பட்ட அட்டைகளை பயன்படுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரிவினையை எதிர்க்கிறோம் - பா.ஜ.க

இந்தியா-இலங்கையின் உறவு என்பது தமிழர்கள் பிரச்சினையால் பகையாகிவிடக் கூடாது. தமிழர்களின் பிரச்சினைகளை கொழும்பு, உண்மையாகவும் சுமுகமாகவும் தீர்க்கும் என நாம் கருதுகின்றோம்.இலங்கையில் பிரிவினையை எதிர்க்கிறோம், இதில் மற்ற நாடுகள் தலையிடுவதையும் எதிர்க்கிறோம் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ ஆங்கில இதழான 'ஆர்கனைசர்' இன் முன்னாள் ஆசிரியரும். பா.ஜ.க-வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கும் மும்பைவாழ் தமிழருமான சேஷாத்ரி சாரி தி இந்து வுக்கு அளித்துள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். (மேலும்....)

இரணைமடு நீர் விநியோகம்

வடமாகாண சபையின் தீர்க்கதரிசனமற்ற தீர்மானம்

, வ்வளவு வேகமாகத் தீர்மானம் நிறைவேற்ற முடிந்தவர்களால் இச்சபை கலையும் முன்னர் ஏதாவது ஒரு திட்டத்தையாவது உருவாக்கி நடைமுறைப்படுத்திக் காட்ட முடியுமா? என்று கேட்கத் தோன்றுகின்றது. கிளிநொச்சி - யாழ்ப்பாணம் நீர் விநியோகத் திட்டம் தொடர்பாக 29.04.2014 அன்று வடமாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி உள்ளது. இந்தத் தீர்மானம் தீர்க்கதரிசனமற்ற முறையில் அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனிப்பட்டோரினது அகங்கார வெற்றிக்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகவே இதைக் கருத வேண்டி உள்ளது. மேலும் இத்திட்டம் தொடர்பாகப் பொது மக்கள் மத்தியில் கருத்துருவாக்கம் ஒன்று ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கத்தினையும் இது கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது உண்மையில் எதிர்மாறான விளைவினையே ஏற்படுத்தும் என்கின்ற சாதாரண உண்மை கூட புலப்படத் தேவையான கால அவகாசம் சபை அங்கத்தவர்களுக்கு வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. (மேலும்....)

பதவிப்பிரமாண அரசியல்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

இலங்கை விடயத்தில் தமிழ் நாட்டுத் தலைவர்கள் விடுத்த முதலாவது கோரிக்கையை புதிய இந்திய பிரதமராகப் போகும் நரேந்திர மோடி நிராகரித்துள்ளார். மோடி, பிரதமராக சத்தியப் பிரமாணம் செய்யும் வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வதை தமிழ் நாட்டுத் தலைவர்களான முதலமைச்சர் ஜெயலலிதா, எதிர்க் கட்சித் தலைவர் மு.கருணாநிதி மற்றும் மோடியின் பாரதீய ஜனதாக் கட்சியோடு கூட்டமைப்பு அமைத்து போட்டியிட்ட வைகோ ஆகியோர் எதிர்த்த போதிலும் பா.ஜ.க அந்த எதிர்ப்பை ஏற்கவில்லை. சந்தோஷமான நிகழ்வொன்றின் போது அயலவர்களை அழைப்பது தான் இங்கு நடந்துள்ளது என்றும் அதனை தமிழ் நாட்டுத் தலைவர்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் பா.ஜ.க. பேச்சாளர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். (மேலும்....)

மோடியுடன் இணைந்து செயல்பட ரஷ்யா விருப்பம்

இந்தியாவில் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடியுடன் ரஷ்யா இணைந்து செயல்பட விரும்புவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் பொருளாதார, இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு இருதரப்பிலும் இணைந்து செயல்பட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது, இந்தியாவுடன் உள்ள ரஷ்ய உறவு அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு என்றும் இந்திய மக்களுடன் நல்ல நட்புடன் தான் இருந்து வருகிறோம். மோடியை நான் சந்தித்து இருக்கிறேன் அவருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக உள்ளதாக அப்போது அவர் தெரிவித்தார். இந்தியாவில் 10 ஆண்டுகளாக இருந்த ஐ.மு.கூட்டணி அரசை தூக்கி எறிந்துவிட்டு புதிய அரசை மக்கள் தேர்ந்தெடுத்து உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக இருந்த ஐ.மு.கூட்டணி அரசுடன் ரஷ்யா கொண்டிருந்த நட்பும் தற்போது மோடி தலைமையிலான அரசுடன் உள்ள நட்பு குறித்து பேசுகையில் இந்தியா-ரஷ்யா உறவு அரசியலுக்கு அப்பாற்பட்ட உறவு.இந்தியா சிறந்த நாகரீகத்தை கொண்டது. அவர்களின் ஜனநாயக தேர்தலை வெற்றியுடன் நடத்தியுள்ளது பாராட்டுக்குரியது என்றார். இந்தியாவுடன் பொருளாதார உறவு, மனிதநேயத் தொடர்புகள், இராணுவ மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்து வருகிறது. அனைத்தையும் நிறைவேற்ற தயாராகி வருகிறோம் என்றார் புடின்.

அடுத்த தேர்தல் வெற்றி கருதியே தமிழ்க் கூட்டமைப்பினர் அஞ்சலி நாடகங்களை அரங்கேற்றி வருகின்றனர் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

இருபது வருடங்களுக்கு மேலாக பலத்த சவால்களுக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக எனக்கு அரசியல் அங்கீகாரத்தை வழங்கி வருகின்ற தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும் எமது மக்களின் நீடித்த துயர்களைப் போக்குவதற்காக நான் அங்கம் வகித்து வருகின்ற அரசாங்கத்தின் அமைச்சர் என்ற ரீதியிலும் இந்தச் சபையில் நான் சில நியாயங்களை எடுத்துரைக்க விரும்புகின்றேன். நாம் வெறுமனே அரசியல் உரிமைக்காக மட்டும் குரல் கொடுத்து உழைத்து வருபவர்கள் அல்லர். அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்களை உருவாக்கவும், கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கவும் நாம் அன்றிலிருந்து குரல் கொடுத்து வருபவர்களாவர். அத்தோடு மனித குலத்தை, மக்கள் சமூகத்தை சீரழிக்கும் எந்த செயல்களையும் நாம் ஒரு போதும் எற்றுக்கொண்டவர்கள் அல்ல. மனித சமூகத்தையே சீரழிக்கும் போதைவஸ்து பாவனையை நாம் கொள்கை ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் எமது ஆரம்பகால உரிமைப் போராட்ட காலத்தில் இருந்தே எதிர்த்து வந்திருக்கின்றோம். (மேலும்.....)

மே 25, 2014

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் - 8)

(அ. வரதராஜப்பெருமாள்)

வடக்கு மாகாணசபை வெறுமனே தமிழ்த் தேச சுயநிர்ணய அரசியற் களமாக மட்டும் தான் இருக்க வேண்டுமென்றால், திரு விக்கினேஸ்வரன் போன்ற ஒருவரை தமிழர்கள்  முதலமைச்சராக ஆக்கியிருக்கி வேண்டிய அவசியமில்லையே! இவரை விட அதனை திரு மாவை சேனாதிராஜாவையோ அல்லது கௌரவ அடைக்கலநாதன் செல்வத்தையோ  அல்லது கௌரவ சுரேஷ் பிரேமச்சந்திரனையோ முதலமைச்சர் ஆக்கியிருந்தால்  மிகத் திறமையாக ஆக்ரோஷம் கொப்பளிக்கும் களமாக மாகாண சபையை எப்போதும் சுடச்சுட வைத்துக் கொண்டிருப்பார்களே! எல்லோரையும் விட, சிவாஜிலிங்கமும், அனந்தியும் மாகாண சபையை முள்ளிவாய்க்காலில் நடத்தி எப்போதும் அதனை ஒரு சுடுகாட்டுக் கொதிநிலையிலேயே வைத்திருந்திருப்பார்களே! (மேலும்.....)

மோடியின் பதவியேற்பு விழாவில் யாழ். மேயர், தொண்டமான் பங்கேற்பு

இந்தியாவின் 14ஆவது பிரதமராகப் பதிவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் தானும் பங்கேற்கவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா  தெரிவித்தார். டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ள முடியாத சூழலில் இவர் கலந்து கொள்வதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமிருந்து சனிக்கிழமை (24) இரவு வந்த அழைப்பினை ஏற்று, தான் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார். இதேவேளை, ஜனாதிபதியின் இந்த இந்திய விஜயத்தில் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானும் பங்கேற்கவுள்ளார் என இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் அறிவித்துள்ளார். இந்த இந்திய விஜயத்தில் பங்கேற்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு, வெளிவிவகார அமைச்சரினூடாக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த போதிலும் அந்த அழைப்பை முதலமைச்சர் விக்னேஷ்வரன் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. முரண்படும் அரசியல் செயற்பாட்டடை த.தே கூட்டமைப்பு கையாளுவதாகவே தெரிகின்றது. குளத்தோ கோவித்துக் கொண்டு அசுத்தத்தை கழுவாத செயலாகவே இதனைப் பார்க்கமுடியும்.

ராஜபக் ஷே வருகையை இன உணர்வு பார்வையில் பார்ப்பதா?

இலங்கை தமிழர் பிரச்னை என்பதை சில கட்சிகள், தங்கள் கருத்துக்கு ஏற்ப ஓட்டு வங்கியாக மாற்றியதாலோ என்னவோ, அக்கட்சிகளுக்கு தங்களது உரிமை மீறல்கள் தெரியாமலேயே போய் விட்டது. இதற்காக, ஒவ்வொரு முறையும் ஒரு ராஜீவை பலி கொடுத்து, அவர்களை மவுனிகளாக்க முடியாது. இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உரிய உரிமைகளை பெற்றுத் தர வேண்டியது, இந்தியாவின் முக்கிய கடமை. எப்போது, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின் கீழ், பதிமூன்றாவது சட்ட திருத்தம் இலங்கையில் இயற்றப்பட்டதோ, அப்போதே அந்த கடமை துவங்கி விட்டது. அன்று, விடுதலை புலிகள் இயக்கமும், தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பும், இதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் தான், அடுத்தடுத்து வந்த இலங்கை அரசுகளும், அதையும் காரணம் காட்டி, பதிமூன்றாவது சட்ட திருத்தத்தை அமல்படுத்தாமல் விளையாட்டு காட்டுவதற்கு பழகி விட்டார்கள். மாறாக, பதிமூன்றாவது சட்ட திருத்தத்தை அன்றே ஏற்றுக் கொண்டுஇருந்தால், அதன் செயல்பாட்டின் அடிப்படையில், இலங்கையில் உள்ள மாகாணங்கள் அதிக அதிகாரங்களை பெற்றிருக்கும். தமிழர்களுக்காக இல்லைஎன்றாலும், இலங்கையின் மீதமுள்ள எட்டு மாகாணங்களில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளும் மக்களுமே, ஒன்றுபட்ட வடகிழக்கு மாகாணத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றங்களை கண்டு, அதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பார்கள். (மேலும்......)

ஈழப்போர்-5 ஐரோப்பாவில் தொடங்கியது!

மதியுரைஞர் சேரமானின் கதிகலங்கும் வியூகம்!!

இலங்கை அரசு, வெளிநாடுகளில் உள்ள 16 தமிழர் அமைப்புகளை ‘விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய அமைப்புகள்’ என கூறி தடைசெய்துள்ள நிலையில், அந்த 16-ல் ஒன்றான பிரித்தானிய தமிழர் பேரவைமீது, அதே 16-ல் மற்றொன்றாக நெடியவன் படையணி, ‘தேசிய பன்முக தாக்குதலை’ தொடுத்துள்ளது. நெடியவன் படையணியின் மதியுரைஞர் (ஆலோசகர் என்று அர்த்தம்) சேரமான், தமது புதிய அறிக்கையில், பிரித்தானிய தமிழர் பேரவையை போட்டுத் தாக்கியுள்ளதுடன், ‘சைட்-கிக்’ ஆக, தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரையும் ஒருகை பார்த்துள்ளார். (உருத்திரகுமாரனின் ஈழமும், இலங்கை அரசு பட்டியலில் உள்ள 16-ல் ஒன்று) இலங்கை அரசு, 16 வெளிநாட்டு தமிழர் அமைப்புகளை தடை செய்தால், அந்த 16 அமைப்புகளும் ஒன்று சேர்ந்து இலங்கை அரசை தாக்க வேண்டும் என்பது, அறிவிலிகள் போடக்கூடிய வியூகம். ஆனால், மதியூகியான மதியுரைஞர் ஒருவரை கொண்டுள்ள நெடியவன் படையணி, வித்தியாசமான வியூகத்தை வகுத்துள்ளது. (மேலும்......)

பதவியேற்பு விழாவில் ஜனாதிபதி மஹிந்த பங்கேற்கிறார்

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி ஜனாதிபதி முகர்ஜி முன்பாக பதவிப்பிரமாணம்

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நாளை 26 ஆம் திகதி திங்கட்கிழமை பதவியேற்கிறார். இந்தியக் குடியரசுத் தலைவரின் மாளிகையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் அவருக்குப் பதவிப் பிரமாணம், இரகசியக் காப்புப் பிரமாணம் ஆகியவற்றை குடியரசுத் தலைவரான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி செய்து வைக்கவுள்ளார்.இந்தியாவில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் அதிகாரத்ததைப் பெற்றது. ஆட்சியமைப்பது தொடர்பாக பா.ஜ.க, கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் இந்திய நாடாளுமன்றில் நடந்தது. இதில் மோடி தலைமையில் மத்தியில் ஆட்சி அமைக்க ஒருமனதாக ஆதரவு தெரிவித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் நிகழ் வில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங் கேற்பது உறுதிப்ப டுத்தப்பட்டுள்ளதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இதனை ஜனாதிபதி செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பிரதமர் மோடி தனியாகச் சந்தித்து இரு நாட்டு நல்லுறவு தொடர்பாகக் கலந்துரையாடுவார். சம்பிரதாய பூர்வமான இந்தச் சந்திப்புகள் தலா 30 நிமிடங்கள் வரை நீடிக் கும் என்றும் புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கலந்து கொள்வார் என பாகிஸ்தான் ஒலிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மோடி பதவி யேற்பு விழாவில் சார்க் கூட்டமைப் பில் உள்ள நாடு களின் தலைவர்கள் அனைவரும் பங் கேற்பது உறுதி யாகியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த வருகைக்கு எதிர்ப்பு

தமிழக கட்சிகள் மீது மோடி அதிருப்தி டுவிட்டரில் வெளிப்படுத்தினார்

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சியை பிடித்துள்ள பா. ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. நாளை 26 ஆம் திகதி நரேந்திரமோடி, பிரதமராக பதவியேற்கிறார். இந்த விழாவில் பங்கேற்க சார்க் அமைப்பில் இடம் பெற்றுள்ள 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. இதன்படி இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட அவர் மோடி பிரதமராக பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி. மு. க. தலைவர் கருணாநிதி, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, பா. ம. க. நிறுவனர் ச. ராமதாஸ், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், இந்திய கம்யூனிஸ்டு, நாம் தமிழ் கட்சி. தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்நிலையில். ஜனாதிபதி ராஜபக்ஷவின் இந்திய வருகை தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசியல் கட்சிகள் மீது நரேந்திர மோடி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி, மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நிர்வகிப்பது. தாங்கள் அல்ல... மத்திய அரசுதான் என்பது தெரியாமல் இலங்கை அதிபருக்கு விடுக்கப்பட்ட அழைப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டின் கட்சிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் என்ற மனப்பான்மையில் இருந்து தமிழர்கள் விடுபட வேண்டும் - TULF தலைவர் வி. ஆனந்தசங்கரி

 புலிப்பயங்கரவாதத்தை தோல்வி அடையச் செய்து நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டி இன்றைக்கு ஐந்து வருடங்கள் ஆகின்றன. கடந்த காலத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன? யுத்தம் முடிவிற்கு வந்ததன் பின்னர் இந்த அரசாங்கம் நாட்டில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றது. அந்த வகையில் யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களை மீள்குடியமர்த்தும் வேலைத்திட்டத்தைக் கூட சிங்களவர்களிடம் கையளித்திருந்தால் அதையும் இன்னும் சிறப்பாக செய்திருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். சுனாமியினால் வட கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டபோது கூட இந் நாட்டு சிங்கள பெளத்த மக்களே அவர்களுக்குப் பெரிதும் உதவினார்கள்.  (மேலும்......)

மே 23, 2014

நந்தி கடலில் பதுங்கி இருந்த பிரபாகரனை காட்டி கொடுத்த பாடிகார்ட் -மெய் நடுங்கும் கண்ணீர் சம்பவங்கள் (பகுதி இரண்டு)

மீண்டும் சற்று பின்நோக்கி போகலாம். 2009-ம் ஆண்டு மே, 17-ம் தேதி. மாலை 6 மணி. விடுதலைப் புலிகள் இருந்த சிறிய பகுதியை சுற்றி முற்றுகையிட்டிருந்த இலங்கை ராணுவ படைப்பரிவுகளில், 58-வது, 59-வது படைப்பிரிவுகளின் முற்றுகை லைன் பாதுகாப்பு ஏற்பாடுகளை செக் பண்ணிக்கொண்டு இருந்த தளபதி லெப். கர்னல் செனக விஜேசூர்யவுக்கு போன் அழைப்பு வந்தது. பேசியவர், வன்னி ஆபரேஷன் கமான்டர், மேஜர் ஜெனரல் ஜகத் ஜயசூர்ய. “விடுதலைப் புலிகளின் ரேடியோ தொடர்புகளை ஒட்டுக் கேட்டதில் இருந்து, இன்றிரவு அவர்கள் முற்றுகை லைனை உடைத்துக் கொண்டு வெளியேறும் திட்டம் ஒன்று வைத்திருப்பது தெரிகிறது. அவர்கள் தமது ரேடியோ உரையாடலில் படகுகள் பற்றி பேசினர். எனவே, இந்த தாக்குதல் நந்திக்கடல் பக்கம் இருந்து வரலாம். உங்களது டிவிஷன் பாதுகாப்பு லைனை பலமாக வைத்திருங்கள். இன்றிரவு தாக்குதல் நடக்கலாம் என சொல்கிறது எம்.ஐ. (மிலிட்டரி இன்டெலிஜென்ஸ்)” என்றார். (மேலும்....)

மோடி பதவியேற்பு விழாவில் மஹிந்த பங்கேற்பார்

இந்தியாவின் 14 ஆவது பிரதமராக எதிர்வரும் 26 ஆம் திகதி பதவியேற்கவுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அதனை இந்தியச்செய்தி உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர் நலன் கருதியே இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  அழைக்கப்பட்டுள்ளார் என்று தமிழக பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார். இதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கூட்டணியில் உள்ள கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல்

பகுதி - 3

- டி.பி.எஸ் ஜெயராஜ்

வவுனியா

விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு புதிய தகவல் வவுனியாவிலிருந்து கிளம்பியது. காவலில் உள்ள நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, வவுனியா சிறிமா நகரிலுள்ள வீடொன்று சோதனையிடப்பட்டது. தாய்.தந்தை மற்றும் ஆறு மற்றும் நான்கு வயதுள்ள இரண்டு பிள்ளைகள் ஆகிய நான்கு பேரைக் கொண்ட குடும்பம் ஒன்று அங்கிருந்து கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது. பெற்றோர்கள் இருவரும் கிழக்கு பிராந்திய தமிழர்கள் வவுனியாவில் வசித்து வந்தவர்கள் மற்றும் கிட்டத்தட்ட அந்தப் பகுதிக்கு அந்நியர்களாக இருந்தார்கள். அந்த பிள்ளைகள் இரண்டையும் விட்டு வர வேறு யாரும் இல்லாததால் அவர்களும் அழைத்து வரப்பட்டார்கள். பின்னர் அவர்கள் பெற்றோரின் சம்மதத்துடன் உறவினர்களிடம் கையளிக்கப் பட்டார்கள். (மேலும்....)

நினைவுக் குறிப்புகள்

போராட்டங்களின் தோழர் உமாநாத்!

(எஸ்.கல்யாண சுந்தரம்)

மூத்த தலைவர் உமாநாத்

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர்.உமாநாத் இன்று திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 92. தோழர் உமாநாத் கேரளா மாநிலம் காசர்கோடு என்ற இடத்தில் 1921 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21-ம் தேதி பிறந்தார். தந்தை பெயர் ராமநாத் ஷெனாய். தாய் நேத்ராவதி. பிராமண குடும்பத்தில் பிறந்த இவருக்கு 5 சகோதரிகளும், ஒரு சகோதரனும் உள்ளனர். மார்க்சிஸ்ட் மாநில உறுப்பினர் யு.வாசுகி, நிர்மலா ராணி மற்றும் லக்‌ஷ்மி ஆகியோர் இவரது மகள்கள் ஆவர். உமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார். கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை மேற்கொண்டார். (மேலும்....)

அம்பலத்திற்கு வரும் சயந்தனின் திருவிளையாடல்கள்! சீற்றத்தினில் சக கூட்டமைப்பு உறுப்பினர்கள்!!

வடமாகாணசபையினில் இன்று பொதுச்சுடரேற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதை தடுப்பதினில் கூட்டமைப்பு சார்பு மாகாணசபை உறுப்பினர் சயந்தனே முக்கிய குழப்பங்களை ஏற்படுத்தியதாக ஏனைய உறுப்பினர்கள் கடுமையான சீற்றத்தினை வெளியிட்டுள்ளனர். சட்டத்தரணியான குறித்த நபர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கள் ஏதும் வெளியிடப்பட்டால் அரசு பக்கம் தாவலாமென அவரது கட்சி சார்ந்த தரப்புக்கள் குற்றஞ்சாட்டுகின்றன. சட்டத்தரணியான குறித்த நபர் கொழும்பினை மையமாக கொண்டு பணியாற்றி வருகின்றார்.கடந்த மாகாணசபை தேர்தலில் அங்கிருந்தே கொழும்பு சிபார்சினில் தேர்தல் களத்தினில் குதித்திருந்ததுடன் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தினிலேயே வெற்றியும் பெற்றிருந்தார். முன்னதாக கூட்டமைப்பின் மேதினத்தை சாவகச்சேரியினில் நடத்தியமை மற்றும் அங்கு தலைவர் பிரபாகரனை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் விமர்சித்த விடயத்திலும் குறித்த சயந்தனே பின்னாலிருந்தமை அம்பலமாகியுள்ளது.இன்றைய தினம் காலை இடம்பெற்ற நினைவேந்தல் சுடரேற்றலிலும் முதலமைச்சர் மற்றும் பேரவை தலைவர் ஆகியோருடன் அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரன் பங்கெடுக்காது விட்டிருக்க இவரே காரணமென கண்டறியப்பட்டுள்ளது. நினைவேந்தலில் சுடரேற்ற தயார் ஆகுவது பற்றி தகவல்களை தொலைபேசியினூடாக வழங்கி அவர்களை பேரவைக்கு தாமதமாக வருகை தர இவரே அறிவுறுத்தியதாக தெரியவருகின்றது.இதையடுத்தே சுடரேற்றல் முடிவுற்றதும் அவர்கள் சபைக்கு வருகை தந்துள்ளனர்.நேற்றை கூட்டத்திலும் கறுப்பு பட்டி மட்டுமே அணிய முடியுமென தெரிவித்து ஏனையவர்களுடன் இவர் வாக்குவாதத்தினில் ஈடுபட்டமையினை உறுப்பினரான விந்தன் கூட்டிக்காட்டினார்.முன்னதாக நேற்று இடம்பெற்ற ஒத்திகைக்கூட்டத்திலும் குறித்த நபர் கடந்த 16ம திகதி முன்னெடுக்கப்பட்ட சுடரேற்றல் நிகழ்வினை நையாண்டி செய்திருந்ததாக மற்றொரு மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் வேதனையுடன் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி பதவி

அணி திரளும் அதிமுக, திரிணாமுல், பிஜூ ஜனதா!

நாடாளுமன்ற எதிர்க்கட்சி பதவியில் இருந்து காங்கிரசை ஓரம் கட்ட மூன்று மாநில கட்சிகள் முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 7ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 12 ஆம் தேதி வரை 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவித்ததுமே நாட்டில் மூன்றாவது அணியை அமைத்து மத்தியில் ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை ஓரம் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட குறைந்த பட்சம் 10 சதவீத தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்ற விதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது. எனவே, காங்கிரஸ் தனது கூட்டணி கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்க்கட்சியாக செயல்பட முடிவெடுத்துள்ளது. (மேலும்....)

அகதிகளை மனிதாபிமானத்துடன் ஏற்று தஞ்சம் கொடுக்கும் நாடு

மேற்குலகை சேர்ந்த பணக்கார நாடுகள் மட்டுமே, அகதிகளுக்கு தஞ்சம் கொடுப்பதாக பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், மேற்குலகை சேராத பிற உலக நாடுகளில் தான் பெருமளவு அகதிகள் புகலிடம் கோரியுள்ளனர். செர்பியாவும் அதில் ஒன்று. பல ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை சேர்ந்த அகதிகள், செர்பியாவில் சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருகின்றனர். அதற்கு நன்றிக் கடனாக, தற்போது செர்பியா வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள நேரம், அகதிகள் சிரமதானப் பணி செய்து உதவியுள்ளனர். முன்னாள் யூகோஸ்லேவிய குடியரசான செர்பியாவில், பன்னாட்டு அகதிகளுக்கு தஞ்சம் கொடுத்து பராமரிக்கிறார்கள் என்று சொன்னால் பலர் நம்ப மாட்டார்கள். அந்தளவிற்கு, மேற்குலக பிரச்சாரங்களை மட்டுமே, உண்மையான தகவல்கள் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக, இந்த தகவல் எந்தவொரு மேற்கத்திய ஊடகத்திலும் வந்திராது.

Tamil Canadian politician claims to be walking in Prabhakaran’s footsteps

By Camelia Nathaniel

A terrorist ideologue is masquerading as a politician in Canada.  He is planning to contest the forthcoming Ontario Provincial election in the riding of Scarborough Rouge River on June 12, 2014.  Having penetrated the Provincial political system, his mission is to penetrate the Canadian political system at a federal level. He is none other than Neethan Shanmugaraja who operates under the name Neethan Shan. A shadow leader of the LTTE in Canada, Neethan radicalized an entire generation of Tamil youth to support the LTTE, a proscribed terrorist group in Canada. Neethan Shan is the directing figure of the Tamil Youth Movement (TYO), designated as a ‘terrorist entity’ under the United Nations Security Council Resolution 1373 and holds the post of National Director in the National Council of Eelam Tamils (NCCT), another organization designated as a ‘terrorist entity’ under the same UN resolution. Very good at hiding himself, he came to the attention of the authorities after he was nominated as the New Democratic Party candidate to contest the elections. He was unsuccessful in the past, but this time he has mobilized the entire LTTE machinery in Canada to support him. (more.....)

உங்களுக்குத் தெரியுமா?


முன்னாள் சோவியத் குடியரசான துருக்மேனிஸ்தானில், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் அனைவருக்கும் இலவசமாக வழங்கப் படுகின்றது! அந்த நாட்டில், எந்த வீட்டிலும் எரிபொருள் பாவனையை அளக்கும் மீட்டர் கிடையாது. ஐந்து மில்லியன் சனத்தொகை கொண்ட துருக்மேனிஸ்தான், பல நூறு வருடங்களுக்கு போதுமான எரிவாயு, எண்ணை போன்ற இயற்கை வளங்களை கொண்டுள்ளது.

தாய்லாந்தில் ஆட்சியை கைப்பற்றியது இராணுவம்

தாய்லாந்தில் ஓர் இராணுவ சதிப்புரட்சியாக, அந்நாட்டு அரசை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக தாய்லாந்து இரா ணுவ தளபதி nஜனரல் பிரயுத் சான் ஒசா அறிவித்துள்ளார். நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நாட்டவும் அரசியல் சீர்திருத்தத்தை கொண்டுவரவும் இராணுவம் நட வடிக்கை எடுக்கும் என்று நேற்று தொலைக்காட்சி முன் தோன்றிய இராணுவ தளபதி அறிவித்தார். கடந்த இரு தினங்களாக தாய் லாந்து இராணுவம் அந்நாட்டு அரசி யல் தரப்புகளை சந்தித்து பதற்ற சூழலை தணிக்க மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி யடைந்த நிலையிலேயே நாட்டை யும் அரசையும் தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவருவதாக இராணுவம் அறிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக தாய் லாந்தில் அரசியல் பதற்றம் நீடித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை அந்நாட்டு இராணுவம் நாட்டில் இராணுவ சட்டத்தை அமுல்படுத்தியது. இந்நிலையில் ஆர்ப்பாட்ட முகாம் களில் இருந்து ஆர்ப்பாட்டக்காரர் களை அகற்றுவதற்கு இராணுவம் நேற்று துருப்புகளையும் வாகனங் களையும் அனுப்பியுள்ளது.

மே 22, 2014

அரசியல்மயமாக்கப்பட்ட ஞாபகார்த்தங்கள்

தமிழ் மக்கள் தாம் நினைவுகூர்வது புலிகளை அல்ல தமது பிள்ளைகளையே என்று கூறிய போதிலும் உண்மையிலேயே அவர்கள் நினைவுகூர்வது புலிகளையா அல்லது தமது உறவினர்களையா என்பது தெளிவில்லை. ஏனெனில், வடக்கில் நினைவுகூர்தல்கள் இடம்பெறும் இரண்டு நாட்களும் புலிகளுக்காக ஒதுக்கப்பட்ட நாட்களாகும். நவம்பர் 27 என்பது புலிகளின் மாவீரர் நாளாகும். போர் இடம்பெற்ற வருடங்களில் மற்றொரு நாளொன்றில் இறந்த ஒருவரை, அவர்களது உறவினர்கள் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூர்ந்துவிட்டு தாம் புலிகளை நினைவுகூரவில்லை என்று வாதிடலாமா? நவம்பர் 27 ஆம் திகதி நினைவுகூர்தல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டுவிட்டு தாம் வருடத்தில் மற்றொரு நாளில் இறந்த தமது மகனை அல்லது தந்தையை அல்லது கணவனை நினைவுகூர்ந்ததாக வாதிடலாமா? அதேவேளை தமது உறவினர் புலி உறுப்பினராக இருந்தாலும் நவம்பர் 27ஐத் தவிர்த்து அவர் இறந்த நாளிலேயே நினைவுகூர்ந்தால் அது சர்ச்சைக்குரியதாகிவிடுமா? பாதுகாப்பு படையினர் அதற்கு தடை விதிப்பார்களா?
மே மாதம் 18ஆம் திகதியும் அது போலவே சர்ச்சைக்குரிய நாளாகும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதிக்கு முன்னர் போர் களத்தில் சிக்குண்டிருந்த மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு இருந்தார்கள். 18ஆம் திகதியாகும் போது போர் களத்தில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்கள் புலிகளின் அனுமதியுடனோ அல்லது அனுமதியில்லாமலோ இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு சென்றிருந்தார்கள். சாதாரண மக்கள் மட்டுமன்றி புலி உறுப்பினர்கள் பலரும் அம் மக்களோடு சென்றிருந்தார்கள்.
(மேலும்....)

ஊடக விபசாரமும் தமிழ் தேசிய ஈன பிண பிழைப்பும்

இசைபிரியாவின் கொலை செய்யப்படும் புதிய புகை படமொன்றை சனல் நான்கு தொலைகாட்சி அண்மையில் வெளியிட்டுள்ளது.  கடந்த வருடமும் இதே காலப்பகுதியில் வீடியோ காட்சி ஒன்றை மேற்படி தொலைக்காட்சி வெளியிட்டது. இதை ஊடகங்களும் இணையங்களும் பூதாகாரமாக வெளியிட தொடங்கியவுடன் இசைபிரியாவின் குடும்பத்தினர் இவ்வாறான படங்களை வெளியிடாதீர்கள். அந்த படங்களை பார்க்கும் மன தைரியம் எமக்கு இல்லை என்று கூறி ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதையும் மீறி இந்த வருடமும் படம் வெளிவந்தவுடன் ஊடகங்களும் இணையங்களும் முக நூல்களும் இதனை பூதாகார படுத்துகின்றன. இசைபிரியாவின் குடும்பத்தினரது வேண்டுகோளையும் மீறி உண்மையில் இந்த படத்தை வெளியிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மை என்ன? சந்தோசம் என்ன? உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு இவ்வாறான சம்பவம் நடந்தால் இப்படியான படங்கள் வெளிவரும் போது அதனை ஏற்றுக் கொள்வீர்களா? (மேலும்....)

மே 21, 2014

என் மனவலையிலிருந்து.....

இந்தியத் தேர்தல் முடிவை மீள்பரிசீலனை செய்வோம்

(சாகரன்)

சில சந்தர்பங்களில் எமது விருப்பங்கள் எமது ஆய்வு? கட்டுரைகளில் தாக்கங்களை ஏற்படுத்துவதுண்டு. இதுதான் இந்தியத் தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்ற ஆய்வுக் கட்டுரையில் அதிகம் ஏற்பட்டிருக்கின்றது. என் விருப்பங்கள் என் கட்டுரையில் நான் அதிகம் ஆதிக்கம் செய்திருக்கின்றது என்பதை சுயவிமர்சனமாக ஏற்றுக்கொள்கின்றேன். இந்த என்விருப்பம் பொது நலனிகளின் அக்கறை என்ற பார்வையிலிருந்து உருவானது. இவை ஒருபுறம் இருக்க இந்திய மக்களின் ஜனநாயக கூறலுக்கு கிடைத்த தேர்தல் முடிவை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இந்தியாவின் தலைவிதியை பாரதிய ஜனதா கட்சியிடம் இந்திய மக்கள் ஒப்படைத்திருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களிடம் இருந்த வெறுப்பும், மோடி இந்தியாவை குஜராத்தை வளர்ச்சியடைந்த? மாநிலமாக மாற்றியதைப் போல் இந்தியாவையும் மாற்றுவார் என்ற பா.ஜ.க வின் கருத்தை ஏற்றிருப்பதையும் இந்த வெற்றி எடுத்துக்காட்டுகின்றது. இந்தியாவின் ஆளும்வர்க்கம் எப்போதும் தேர்தலில் யார் வென்றாலும் மாற்றம் அடைவதில்லை. இதேபோல் இந்திய அரசின் கொள்கை வகுப்பாளர்கள் கட்சிகளை மீறி தற்போதும் ஆதிகத்தில் இருப்பதனால் ஆட்சி  மாற்றம் இந்திய அரசின் செயற்பாட்டில் அதிகம் மாற்றத்தை உள்நாடு, வெளிநாட்டுக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தப் போவது இல்லை. பிஜேபி கட்சியின் வாஜ்பேயின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் ஒன்றும் காங்கிரஸ் கட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்களுக்கு சளைத்தது அல்ல. இது இந்திய திருநாட்டின் சாபக்கேடுகளில் ஒன்று. ஆனாலும் மக்கள் இதனையெல்லாம் மறந்து மாறி மாறி இந்த ஒரு குட்டை மட்டைகளையே தமது ஆட்சியாளர்களாக ஏற்றிருக்கின்றனர். இந்தியாவின் மிகப் பெரும் சக்தியாக விளங்கும் இளைஞர்கள் ஒரு முற்போக்கான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயமே. தற்போதெல்லாம் முற்போக்கு கருத்தியலை நன்கு பரப்பப் கூடிய நகரத்து இளைஞர்கள் பல் தேசியக் கம்பனிகள் வழங்கும் 14 மணி நேரத்திற்கு அதிகமான வேலைசெய்தல் என்பதை ஒரு வகையில் ஏற்றுக்கொண்டு இதுதான் வாழ்வு என்று ஓடிக்கொண்டு இருக்கின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி என்பதைவிட தன்னுடைய வளர்ச்சி என்ற சுயநலக்கிடங்குக்குள் வீழ்ந்து கிடக்கின்றனர். இந்த கிடங்கிலிருந்து இவர்களை தட்யெழுப்ப வேண்டிய அவசியமும் அவசரமும் இருக்கின்றது. இந்த மாற்றம் நிகழாதவரைக்கும் இந்திய ஆட்சியில் பாரிய முற்போக்கு மாற்றம் ஏற்படப்போவது இல்லை. இதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய தேவை இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும் முன்னேற்றத்திற்கும், சமாதான சக வாழ்விற்கும் உண்மையான விசுவாசமான சிந்தனை உள்ளவர்கள் செய்தே ஆக வேண்டும். இதற்கான ஒரு பலமான அமைப்பிற்கான வெற்றிடம் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. நபர்களாக பலர் இருந்தும் இவர்கள் ஒரு ஐக்கியப்பட்ட அமைப்பை இதுவரை கட்டியமைக்கவில்லை. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் கருணாநிதியின் சாணக்கியத்தை பயன்படுத்த முடியாத அவரின் அரசியல் வாரிசின் தேர்தல் வியூகம் தோற்று விட்டது என்றே சொல்ல வேண்டும். மற்றயபடி அம்மாவின் இலவசங்களும், அம்மா கடையும் இதனைப்போன்ற தாக்கங்களுகம் அவர்மீது மக்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதை தேர்தல் முடிவுகள் எடுத்தியம்பி நிற்கின்றது. தமிழ் நாட்டில் அதிமுக வின் வெற்றி, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளின் தோல்விகளை விட என்னை அதிகம் பாதித்தது சாதியத்தை முன்னிறுத்தி வெறியராக செயற்படும் ராமதாஸின் கட்சி ஒரு இடத்தில் வெற்றியடைந்தது. இது எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல. அண்மைக்காலங்களில் காதலைக்காட்டி நடைபெற்ற சாதிக்கலவரங்களில் எல்லாம் இவரகளின் கரங்கள் இருந்தும் அன்பு மணியின் வெற்றி தமிழகத்திற்கு அடித்துள்ள அபாய மணியாகும். இது கவனத்தில் கொள்ளப்படவேண்டும். இந்தியத் தேர்தலில் பங்கு பற்றிய மூன்று முக்கிய பெண்மணிகளில் ஜெயலலிதா, மம்மதா பானர்ஜி, மாயாவதி ஆகிய மூவரில் மாயாவதி  மொத்த வாக்குகளில் அதிகம் பெற்றிருந்தாலும் ஒரு தொகுதியைக் கூட இவரால் வெல்ல முடியாத போனபோது மற்றய இருவரின் அமிர்தமான வெற்றி கருத்தில் கொள்ளப்பட வேண்டியததான். ஆம் ஆத்மி கட்சி டெல்லியல் ஒரு தொகுதயையேனும் வெல்ல முடியாத போதும் பஞ்சாபில் மட்டும் 4 தொகுதிகளில் வென்றிருப்பது நல்ல ஆரம்பம்தான். பாரம்பரிய இடசாரிகள் ஒன்பது, ஒன்று என தமக்குள் வெற்றிகளை தமதாக்கிக் கொள்கையில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி கருத்தில் கொள்ளப்பட வேண்டியதே. பொறுதிதிருந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை பிஜேபி இந்தியாவின் மத, இன நல்லிணகத்திற்கும்  அயல்நாடுகளுடனான நல்லுறவிற்கும் ஆரோக்கிமான செயற்பாட்டை கொண்டிருக்கப் போவதில்லை. மாறாக மன்மோகன் சிங்கின் அமெரிக்க சார்பின் பல மடங்கை தன்னகத்தே கொண்டு பல் தேசியக் கம்பனிகளை கட்டுப்பாடின்றி அவிழ்த்து விட்டு இந்திய உழைக்கும் மக்களின் உழைப்பை உறுஞ்ச அகழியை வெட்டிவிடும்.

(மே 19, 2014) (சாகரன்)

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் பகுதி - 2

(டி.பி.எஸ் ஜெயராஜ்)

கணணிகளில் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மற்றும் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகள் அதேபோல கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்திய தகவல்கள் என்பன புலனாய்வாளர்கள் எல்.ரீ.ரீ.ஈ புத்துயிர்ப்பு முயற்சிகள் பற்றிய ஒரு தோராயமான அறிவைப் பெறுவதற்கு உதவின. புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிச் சக்திகள் இந்த நடவடிக்கைகளுக்கு நிதி வழங்கியிருப்பது தெளிவாகத் தெரிந்தது. பாதுகாப்பு தரப்பினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது என்னவென்றால் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயின் பிளவுபட்ட வௌ;வேறு பிரிவுகளின் ஆதரவு இந்த முயற்சிக்கு கிடைத்திருப்பதுதான். ஒப்பீட்டளவில் பெரிய பிரிவுகளான நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான அனைத்துலக செயலகம்,அதேபோல அதற்குச் சமமான பிரிவான விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகத்தின்  தலைமையிலான தலைமைச் செயலகம் போன்ற இரு பிரிவுகளுமே இதற்கு உதவியுள்ளன. விநாயகம் பிரிவின் நிதியுதவி பிரதானமாக பிரான்சில் இருந்து கிடைத்த அதேவேளை நெடியவன் பிரிவிலிருந்து பணம் சுவிட்ஸலாந்தில் இருந்து வந்துள்ளது. (மேலும்....)

புலிகள் - பசில் ராஜபக்ஷ மே 17 முதல் மே 18 காலை 8.00 மணிவரை நடந்த தொடர்பாடல் !
 

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி காலை 6.50க்கும் 8.00 மணிக்கும் இடையே, புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ப.நடேசன் மற்றும் புலித்தேவன் ஆகியோர் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். இவர்களோடு சென்ற சுமார் 40 காயப்பட்ட போராளிகள் மற்றும் பெண்கள் அனைவரும் சுட்டுக்கொல்லபட்டார்கள். இது நடந்த விடையம் பலருக்கு தெரியும். ஆனால் அங்கே என்ன தொடர்பாடல் நடந்தது ? இலங்கை அரசின் உயர்மட்ட தலைவர்கள் யார் யார் , தொடர்பில் இருந்தார்கள் ? எந்த நாடுகளுக்கு இவர்களின் சரணடைவு தெரிந்திருந்தது. இதோ நிமிடத்திற்கு நிமிடம் நடைபெற்ற தொடர்பாடலை இங்கே நாம் தருகிறோம்: இலங்கையில் சந்திரகாந்தன் சந்திரநேரு இவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் வகித்துள்ளார். (மேலும்....)

தமிழீழ பிரதமரை நேரில் சந்திக்க நரேந்திர மோடிக்கு வாய்ப்பு கொடுத்த அமெரிக்காவுக்கு நன்றி! - தமிழீழ அமைச்சர்

புதிதாக பதவியேற்கவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்கா விசா கொடுக்க முடிவு செய்துள்ளதை வரவேற்றுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு, இந்த முடிவை எடுத்ததற்கு அமெரிக்க அரசுக்கு தமது பாராட்டை தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவில் வசித்தபடி தமிழ் ஈழத்தை ஆட்சி செய்யும் பிரதமர் உருத்திரகுமாரை இந்திய பிரதமர் சந்திக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது, தமிழீழம். இது தொடர்பாக தமிழீழம் சார்பில் இலங்கை உள்நாட்டு அபிவிருத்தி(யை வெளிநாட்டில் இருந்து கவனிக்கும்) அமைச்சர் (Homeland Development Minister) முருகதாஸ் கூறுகையில், “புதிதாக பதவியேற்கவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரை சந்திக்க முடியாத துரதிஷ்ட நிலை சில நாட்களின் முன் ஏற்பட்டிருந்தது. தமிழீழ பிரதமர் உருத்திரகுமாரிடம் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் கிடையாது என்பதால், அவரால் அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது. இந்திய பிரதமர் மோடியிடம் பாஸ்போர்ட் இருந்தும், அவருக்கு அமெரிக்க விசா இல்லாததால், அவரால் அமெரிக்கா செல்ல முடியாது. இதனால், ஆசியப் பிராந்தியத்தின் இரு முக்கிய பிரதமர்களும் சந்திக்க முடியாத துரதிஷ்ட நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது, அமெரிக்க அரசு இந்திய பிரதமர் மோடிக்கு விசா வழங்குவதாக அறிவித்த காரணத்தால், இந்தியப் பிரதமர் அமெரிக்கா வந்து, தமிழீழ பிரதமரை சந்திக்க வழி ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இந்திய பிரதமர் பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். நல்ல வேளையாக, தமிழீழ பிரதமர் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, இந்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்கிறது என இவர்கள் கூறவில்ல.

வியட்நாமின் தந்தை என்று அழைக்கப்படும் ஹோச்சிமின் பிறந்தநாள்.

பிரெஞ்சு, அமெரிக்க ஆதிக்கத்திற்கெதிராக போராடிய வியட்நாமியர்களை “யானையை எதிர்க்கும் வெட்டுக்கிளிகளின் போர்’’ என்று சொன்னவர்களை பார்த்து வியட்நாமின் தலைவர் ஹோசிமின் கூறுகிறார்: “விமானங்களையும், பீரங்கிகளையும் எதிர்க்க மூங்கில் குச்சிகளை தவிர நம்மிடம் ஒன்றும் கிடையாது. ஆனால் மார்க்சியம், லெனினியம் என்ற வழிகாட்டுதலில் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்காலத்தையும் பார்ப்பதால் "இன்று வெட்டுக்கிளிகள் யானையுடன் சண்டைபோடுகின்றன. ஆனால் நாளை யானையின் குடல் பிடுங்கி எறியப்படும்." யுத்தம் தொடங்கிய போது மேலாதிக்க நாடுகளின் ஏளனப் பேச்சுக்களை கண்டு சலிக்காமல் மூங்கில் கழிகளையும், கற்களையும் ஆயுதங்களாக்கி போராடிய வியட்நாம் மக்கள் (வெகட்டுக்கிளிகள்) கடைசியில் யானையின் குடலையும் பிடுங்கி எறிந்தார்கள்.  நாட்டின் இக்கட்டான நேரத்தில் எதிரிகளிடம் இருந்து நாட்டையும், மக்களையும் காப்பாற்ற மிகச் சிறந்த தலைவனாய் முன்நின்று மக்களுக்கு தைரியம் சொல்லிக் கொண்டு, ஆயுதங்களுக்கு முன் மார்க்சிய / கம்யூனிஸ கொள்கையை தற்காப்பு கருவியாய் முன்நிறுத்தி போராடிய தோழர் ஹோசிமின் பிறந்த தினமான இன்று தோழரின் வரலாற்று சுவடுகளில் இருந்து தன்னம்பிக்கை நம்மையும் தொற்றிக் கொள்கிறது...

- தமிழச்சி

ஒட்டுசுட்டான் கருவேலன் கண்டல் மானுருவியில் காட்டு யானை அட்டகாசம்

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி நிலை காரணமாக காட்டு யானைகள் மக்களின் குடியிருப்பு கிராம பகுதிகளுக்குள் நுழைய ஆரம்பித்துள்ளது.ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் மானுருவிக் கிராமத்தில் இரவு வேளைகளில் காட்டுயானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதால் தாம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தினமும் கிராமத்துக்குள் புகும் யானைகள் தென்னை, வாழை, பப்பாசி உள்ளிட்ட பயன்தரு மரங்களைத் தள்ளி வீழ்த்தி அவற்றை அழிப்பதுடன் வீடுகளுக்குள் இருக்கும் உணவுப் பொருள்களையும் இழுத்து எடுக்கின்றன. அத்துடன் வீட்டுக்கூரைகளைப்பிடுங்கி எறிவதுடன் சுவர்களையும் தள்ளி வீழ்த்துகின்றன. இதனால் இரவில் வீட்டில் நிம்மதியாகப் படுத்துறங்க முடியாதுள்ளதாகவும் அச்சத்துடன் விழித்திருந்து யானைகளை விரட்டவேண்டியுள்ளதாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகள் உடன் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தம்புள்ளயில் 25 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

தம்புள்ள பிரதேச போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த 25 பொலிஸாருக்கு 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தும் விதத்தில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஜீ.ஜே சந்ரகுமாரவின் பணிப்புரைக்கமைவாக தம்புள்ள போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட 13 பேர் , சீகிரிய, கலேவெல மற்றும் மாத்தளை பொலிஸ் நிலையங்களுக்கும் கலேவெல பொலிஸ் நிலையம் மற்றும் சீகிரிய பொலிஸ் நிலையம் என்பவற்றிலிருந்து தலா 6 பேர் தம்புள்ள பொலிஸ் நிலையத்திற்குமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெஸாக் பெளர்ணமி தினத்திலும் , மறுதினத்திலுமாக இரண்டு தினங்கள் தொடர்ச்சியாக தம்புள்ள பிரதேசத்தில் வெவ்வேறு இரு வீதி விபத்துக்களினால் இருவர் உயிரிழந்த சம்பவங்களை யடுத்தே, போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர்கள் இடமாற் றம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்டு கின்றது.

மே 20, 2014

 

மே 18. முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

இதற்கு அரசியல் ரீதியான பெறுமதி ஒன்றுமில்லை

மே 18. முள்ளிவாய்க்கால் நினைவுதினம். முகநூலில் பதியப்படும் புகைப்படங்கள் நெஞ்சை அறுக்கின்றன. கண்ணில் ஈரம் துளிர்க்காமல் நகர முடியவில்லை தான். ஆனால், ஏய் ராஜபக்ஷே என்ற அடிவயிற்று உறுமல் எனக்கு எழவில்லையே ஏன்? இதைச் சொல்லக் கூச்சம் ஒன்றுமில்லை. தமிழில் நிகழும் இந்த வெற்று உறுமல்கள் ஒரு கும்பல் மனநிலையின் கையாலாகாத கோபம். அது ஒரு மதிக்கத்தக்க உணர்வுதான். ஆனால் அதற்கு அரசியல் ரீதியான பெறுமதி ஒன்றுமில்லை.  கடந்த இருபது ஆண்டுகளில் ஈழத்தில் நடந்தது என்ன? தமிழகத்தின் நம் அரசியல் தலைமைகள் ஈழமக்களின் நலன் குறித்து சாதித்தது தான் என்ன? ஒன்றுமே இல்லையா என்றால், ஆம்.ஒன்றுமே இல்லைதான். பிரபாகரன் குறித்த சிறிய விமர்சன முணுமுணுப்பு கூட தமிழில் எழவில்லையே ஏன்? இந்த அறிவு மொன்னைத் தனம் தான் புலிகளை, சக மனிதர்கள் என்று பார்க்காமல் ஒரு சாகசக்காரர்களாக தமிழின் வெகுஜன மனநிலையில் நிலை நிறுத்தியது. தமிழீழ அரசியல் பேசிய எல்லோரும் இதில் தவறிழைத்தவர்கள் தான். (மேலும்....)

புலிகளால் நிர்பந்த (தற்)கொலை செய்யப்பட்ட சிவரமணி

விடுதலைப் போராட்ட நிழலாக “புதிய வாழ்வின் சுதந்திர கீதத்தை இசைத்துக் களிப்போம் வாருங்கள் தோழியரே” என்று எழுதிய நெருப்பு பற்றி, இளைஞர்களின் விடுதலை எழுச்சியின் பிண்ணனியில் “என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி, ஒரேயொரு கைக்குண்டு, என் எதிரிக்கெதிராய்ப் போரைப் பிரகடனம் செய்ய என்னிடம் ஒரேயொரு துப்பாக்கி ஒரேயொரு கைக்குண்டு எனினும் நான் தளரவில்லை......” என்று வீரமா உருவாகிய தமிழர் கலை இலக்கிய மலர்ச்சியின் எழுச்சியில் உருவாக்கிய ஒரு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர் சிவரமணி, சிவரமணி எழுதிய எல்லாக் கவிதைகளையும்,சேர்த்து வைத்து இருந்த புத்தங்கங்கள் எல்லாத்தையும் ஒன்றாகப் போட்டு நெருப்பு பத்த வைத்துப் போட்டு ,நித்திரைக் குளிசையை அள்ளிப்போட்டு "....மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள் என் பாதங்களுக்கிடையில் மூச்சையுற என் வெளிச்ச நோக்குகை இன்மையை விரட்டுகிறது...." என்று விரக்தியாக எழுதிய சிவரமணி இருவத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்து இன்றுடன் 24 வருடங்களாகிவிட்டன. (மேலும்....)

இந்தியத் தேர்தல் ஒரு புள்ளிவிபர பார்வை

இந்தத் தேர்தலின் விசித்திரங்களில் ஒன்று. மம்தா, ஜெயா ஆகிய லேடிகளோடு சேர்ந்து கலக்கியிருக்க வேண்டிய இன்னொரு லேடி மாயாவதி குறித்தது. முட்டை வாங்கியிருக்கும் கட்சிகளில் அவருடைய BSP யும் ஒன்று. ஆனால் பிஜேபி, காங்கிரசுக்கு அடுத்து மூன்றாவதாக அதிகம் வாக்கு வாங்கியிருக்கும் கட்சி இந்திய அளவில் அதுதான். பிஜேபி 31%, காங்கிரஸ் 19.3% பிஎஸ்பி 4.1%. 34 இடங்களில் இரண்டாவது இடம் BSP க்கு. இன்னொரு முக்கியமான விசயத்தையும் கவனிக்கத் தவறலாகாது. பிஜேபி வாங்கியிருக்கும் மொத்த ஓட்டு 17.16 கோடி. காங்கிரஸ் வாங்கியிருக்கும் ஓட்டு 10.7 கோடி. 7 கோடிகள் ஓட்டு வித்தியாசத்தில் எத்தனை இடங்களை இழந்திருக்கிறது பாருங்கள் காங்கிரஸ். இந்த கணக்கு வழக்குகளில் அடிக்கடி முட்டை வாங்குவது அரசியல்வாதிகள் மட்டுமல்ல. தேர்தலை வெறும் புள்ளிவிபரக் கணக்காக அணுகும் அனலிஸ்ட்களும் தான். ஆனால் இந்த தேர்தலில் மோடி குறிவைத்து அடித்த இடம் ஒன்று உண்டென்றால் அது புதிய வாக்காளர்கள். 10 கோடிக்கும் மேற்பட்டவர்கள் இந்த தேர்தலில் முதல் முறை வாக்களித்திருக்கிறார்கள்.

நமது வரலாற்றின் கறைகள்.....இந்து மதத்தின் அவமானம்....!

பெண்கள் மார்பகத்தை மறைப்பதற்கு உரிமை கேட்டு போராடிய கொடுமை! தோள் சீலைப் போராட்டம்!

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. அப்போது மனுதர்ம அடிப்படையில் ஆட்சி நடந்து வந்த இந்து நாடாக இருந்தது திருவாங்கூர் சமஸ்தானம். தாழ்த்தப்பட்டவர்களும் சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் [நாடார்], பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள்ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணிவது மாபெரும் குற்றம்." இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மார்பகத்தை உயர் சாதியினருக்கு எப்பொழுதும் காட்டி மரியாதை செய்யவேண்டும். பிறந்த குழந்தையிலிருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயராக, பாட்டியாக, இருந்தாலும் "மார்பகத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கவேண்டும்."(மேலும்....)

இசைப்பிரியாவுக்கு அருகில் இருப்பவரை அடையாளம் கண்டனர் அவரது பெற்றோர்

இறுதிப்போரின் இராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாக கூறப்பட்டு, அதற்கான ஆதார படமாக அண்மையில் வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இசைப்பிரியாவுக்கு அருகில் இருக்கின்ற மற்றைய யுவதி, மல்லாவியைச் சேர்ந்த குணலிங்கம் உஷாளினி என அவரது பெற்றோர் நேற்று உறுதிப்படுத்தினர். இறுதிப்போரில் போது நாம் முள்ளிவாய்க்காலுக்குச் சென்றிருந்தோம். அப்போது எமது மகள் உஷாளினி, 2009 மே மாதம் முற்பகுதியில் காணாமற்போயிருந்தார். மீள்குடியேற்றத்தின் பின்னர் எமது மகள் காணாமற்போனமை தொடர்பாக பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்திருந்தோம். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிலும் சாட்சிகளைப் பதிவு செய்திருந்தோம். இந்த நிலையில், ஊடகங்களில் வெளியாகிய புகைப்படத்தில் இசைப்பிரியாவுககு அருகில் எமது மகள் இருப்பதை நாம் அடையாளம் கண்டோம் என்கிறார்கள் அவரது பெற்றோர். இராணுவத்திடம் சரணடைந்த இசைப்பிரியா உட்பட ஏராளமானவர்கள், கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் துன்புறுத்தப்படுவது போன்ற காட்சிகள் அடங்கிய புகைப்படம்ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்ததே.

மோடி அலை, பிஜேபி அலை என்று எதுவும் வீசவில்லை

எல்லா புள்ளி விவரங்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மோடி அலை, பிஜேபி அலை என்று எதுவும் வீசவில்லை. இந்தியாவில் இதுவரை தனியே மெஜாரிட்டி அடைந்த எந்தக் கட்சியின் ஆட்சியை விடவும் இப்பொது பிஜேபி குறைவான வாக்கு விகிதம் பெற்றுதான் அதிக இடங்களை அடைந்திருக்கிறது. பிஜேபிக்கு 31 சதவிகிதம். காங்கிரசுக்கு 19 சதவிகிதம். மீதி 50 சதவிகிதம் வாக்குகளும் இதர பல்வேறு கட்சிகளுக்குத்தான். கேரளம், தமிழகம், ஒடிசா, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா இங்கெல்லாம் பிஜேபி இன்னமும் ஒரு முக்கிய இடத்தை தொடவே இல்லை. காங்கிரஸ் ஆட்சி எதிர்ப்பு அலையின் பயனை, பரவலாக அந்த எதிர் வாக்குகள் பிரிந்ததன் பயனை , பிஜேபி ஒரு லாட்டரி பரிசு போல அடைந்திருக்கிறது. ஹிந்தி மாநிலங்களில் மதவாதப் பிரசாரக் கூர்மைப்படுத்தலும், மோடி என்றால் வளர்ச்சி என்ற பொய்யை கெப்பல்ஸ் பாணியில் ஓயாமல் பிரசாரம் செய்து புது வாக்காளர்களை ஏமாற்றியதும் கணிசமாக அதற்கு உதவியிருக்கிறது. இதற்கு மேல் இந்தத் தேர்தல் ஒன்றும் ரொம்ப வித்யாசமான தேர்தல் என்று சொல்வதற்கில்லை. அடுத்த ஐந்தாண்டுகளில் , பிஜேபியை ஆட்சிக்குக் கொண்டு வரக் கடுமையாக உழைத்த ஆர்.எஸ்.எஸ்சுக்கும், சர்வதேச கார்ப்பரேட் சக்திகளுக்கும் இடையே மெல்ல முரண்பாடுகள் கூர்மையாகி முற்றி சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும். அப்போது போலி தேசபக்தி, எதிரியை ஒழித்துக் கட்ட யுத்தம் என்ற வழக்கமான ஆயுதத்தைக் கையிலெடுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால் அவையெல்லாம் முரண்பாடுகளை இன்னும் கூர்மையாக்கும். மாற்று அரசியலுக்காக உழைப்போர் எல்லாரும் மக்களிடம் தீவிரமாக, திட்டமிட்ட கருத்துப் பிரசாரம் செய்து மக்களை இந்த ஏமாற்றத்திலிருந்து வெளி வரச் செய்வது ஒன்றுதான் மாற்றத்துக்கு வழி வகுக்கும்.

மே 19, 2014

திருமதி னந்தி எழிலனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!  திருமதி இசைச்செல்வி தமிழ்செல்வனுக்கு வெளிநாட்டு விசா!!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கென பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பொலிஸ் பாதுகாப்புடனேயே அனந்தி சசிதரன் இன்று (16) வடமாகாண சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமென்று விண்ணப்பிக்க முடியும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தமையடுத்து, அனந்தி சசிதரன் விண்ணப்பம் செய்து மேற்படி பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு. அது கேபி இல் ஆரம்பித்து அனந்தி வரை. பொது மக்களுக்கு துப்பாக்கி மிரட்டல். அதுவும் உரிமைகளுக்காக குரல் கொடுத்தால். மேலும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர் பாஸ்போட் விசா இத்தியாதி. தமிழ் செல்வனின் மனைவியிற்பு சாதாரண பொது மக்கள் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்கான தப்பி செல்கையில் பிடிபட்டால் விசாரணை தண்டனை இத்தியாதி....? என்னடா கேசவா இலங்கையில் என்னதான் நடக்கின்றது. பிரேமதாஸ காலத்திலிருந்து இன்று வரை புலிகள் அரசின் விருந்தினர்கள்தான் போங்கள் நல்ல தமாசுதான்.

ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் குறைப்பிரசவ முயற்சியின் உடற்கூற்றியல் (பகுதி 1)

( டி.பி.எஸ் ஜெயராஜ்)

தேவிகன் - அப்பன் - கோபி மூவர் குழாத்தின் தலைமையில் ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ யினை புதுப்பிக்கும் புலம் பெயர்ந்தவர்களின் மூன்றாவது முயற்சி எப்படி முறியடிக்கப்பட்டது - கட்டுரையின் மூன்றாவது பகுதி

ஜெயகுமாரி பாலேந்திராவினை கைது செய்து தடுத்து வைத்ததின் விளைவாக அரசாங்கத்தை கடுமையாகக் கண்டித்து பெரும் கூக்குரல் எழுந்தது. ஜெயகுமாரி மற்றும் அவரது மகள் ஆகியோர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் நன்கு அறியப்பட்ட பங்கேற்பாளர்களாக இருந்ததால் இந்தக் கைதுக்கு ஒரு எதிர்மறை ஒளி பாய்ச்சப்பட்டது. மனித உரிமையை பாதுகாப்பவர்களை அச்சுறுத்தி அவர்களை மௌனமாக்கும் முயற்சிக்காக மனித உரிமைகள் ஆர்வலர்களை அரசாங்கம் வேட்டையாடுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈ க்கு புத்துயிர் ஊட்ட முயற்சிப்பவர்களுடன் ஜெயகுமாரிக்கு தொடர்பு உள்ளதாக சாட்டப்படும் குற்றச்சாட்டு பாதுகாப்பு தரப்பினரின் கற்பனையில் உருவான கட்டுக்கதை என்று அலட்சியமாக புறந்தள்ளப் பட்டது. (மேலும்....)

சமாதானத்தை வெற்றி கொண்ட தினத்தையே நினைவு கூருகிறோம் - மஹிந்த ராஜபக்ஷ

நாம் யுத்த வெற்றியை அனுஷ்டிக்கவில்லை. சமாதானத்தின் வெற்றியே இது என்று தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆயிரக்கணக்கான தமிழ். முஸ்லிம், சிங்கள மக்களை கொலை செய்த குரூரமான பயங்கரவாதியான பிரபாகரனுக்கு மலர்வளையம் வைக்க சிலர் முயல்கின்றனர் என்று குறிப்பிட்டார். ஆனால் புலிகளால் கொல்லப்பட்ட மக்களின் அடகஸ்தலங்களையோ, அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், ரவிராஜ், கதிர்காமர் போன்றவர்களையோ கெளரவிக்க எவரும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தேசிய பிரச்சினையின் போது இணக்கப்பாடு ஏற்படுத்தக் கூடிய சிறந்த இடமான பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைப்பது சகல கட்சிகளின் பொறுப்பு என்று குறிப்பிட்ட ஜனாதிபதி டயஸ்போராக்களுடன் இணைந்து மீண்டும் பயங்கரவாதத்தை தலைதூக்க வைக்க முயல்வது நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்யும் அநீதியாகும் என்றும் கூறினார். பயங்கரவாதிகள் குழுவொன்று நைஜீரியாவில் மாணவர்களை கடத்திய சம்பவம் உலக ஊடகங்களின் கூடுதல் கவனத்தைப் பெற்றது. ஆனால் 30 வருட யுத்தத்தின் போது பல ஆயிரம் சிறுவர்களை புலிகள் படையில் இணைத்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 600க்கும் அதிகமான சிறுவர்கள் சரணடைந்ததோடு அவர்கள் பெற்றோரிடமும் உறவினர்களிடமும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாடசாலைகளுக்கு செல்ல வசதி அளிக்கப்பட்டது. இது குறித்து சில நாடுகள் ஊமையாக, குருடாக, செவிடாக உள்ளன. நாம் இதனைக் கொண்டாடுவதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

கதிர்காமம் பாத யாத்திரைக்குழு வற்றாப்பளையை சென்றடைந்தது சிங்களவரும் இணைவு

யாழ்ப்பாணத்திலிருந்து கடந்த சனிக்கிழமையன்று ஆரம்பமான கதிர்காமத்திற்கான பாத யாத்திரைக் குழுவினர் 07 தினங்களின் பின் கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு வற்றாப் பளையை சென்றடைந்துள்ளனர். அங்குள்ள கிணற்றில் நீர் பொங்கி வழியும் அதிசயத்தை பாத யாத்திரைக் குழுவினர் கண்டு வியந்ததாக தலைவர் வேல்சாமி அங்கிருந்து தெரிவித்தார். பொங்கிவழியும் நீர் குழாய் வழியாக பக்கத்து வளவுகளுக்குள் அனுப்பப் படுகிறது. இன்னமும் பக்தர்கள் இவ்வற்புதத்தை பார்க்க வருகிறார்கள். அவர்கள் எமது அதிசய வெள்ளி வேலையும் பார்த்து முருகனின் அற்புதத்தை நினைந்து அரோகரா கோசம் எழுப்பியவாறு செல்கின்றனர். இதேவேளை, எமது பாத யாத்திரைக் குழுவில் பெரும்பான்மையின சிங்கள சகோதரர் ஒருவரும் இணைந்துள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.கொழும்பு தெஹிவளையைச் சேர்ந்த 54 வயதான ஏ. கே. என். பெர்னாண்டோ என்பவரே இவ்விதம் பாத யாத்திரைக் குழுவில் முதற் தடவையாக இணையும் பெரும்பான்மையினத்தவராவார். கடந்தவருடம் இணையத்தளமொன்றில் பாத யாத்திரைக் குழுவினரின் படங்களைப் பார்த்ததாகவும் தானும் அதேபோன்று பாத யாத்திரையில் ஈடுபட்டு முருகனின் அருளைப் பெறவேண்டுமென்பதற்காகவும் இதில் கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.

வியட்னாம் கலவரம் தீவிரம்

பிரஜைகளை அழைத்துவர ஐந்து சீன கப்பல்கள் விரைவு

சீன எதிர்ப்பு கலவரங்கள் வியட்னாமில் தீவிரமடைந்துள்ள நிலையில் தமது நாட்டு பிரஜைகளை அங்கிருந்து வெளியேற்ற சீனா ஐந்து கப்பல்களை அனுப்பியுள்ளது.  ஏற்கனவே சீன அரசு வியட்னாமில் இருக்கும் 3000 க்கும் அதிகமான சீனர்களை வெளியேற்றி விட்டதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட் டுள்ளது. இந்நிலையில் வியட்னாம் விரைந்திருக் கும் சீன கப்பல்களில் முதல் கப்பல் நேற்று தனது பிரஜைகளை ஏற்றிக்கொண்டு சீனா நோக்கி புறப்பட்டுச் சென்றது. சீனா சர்ச்சைக்குரிய நீர்ப்பகுதியில் எண்ணெய் கிணறு தோண்டுவது குறித்து வியட்னாமில் ஏற்பட்டிருக்கும் சீனாவுக்கு எதிரான கலவரத்தில் இரு சீன தொழிலாளர்கள் கொல்லப்பட்டி ருப்பதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு வியட்னாம் அரசு கடந்த சனிக்கிழமை கோரிக்கை விடுத்தது. இந்த சட்ட விரோத செயற்பாடுகள் உடன் நிறுத்த வேண்டும் என்றும் இது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றும் வியட்னாம் அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட் டிருந்தது. தென் சீன கடற்பகுதியில் வியட்னாம், தாய் வான் நாடுகளும் உரிமை கொண்டாடும் பகுதி யில் சீனாவின் எண்ணெய் கிணறு தோண்டும் செயற்பாடு தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகி றது. இந்த விவகாரத்தில் வியட்னாம் தேசிய வாதிகள் கடும்போக்கு நிலைப்பாட்டை கொண்டி ருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். இதில் சீனாவினால் வெளியேற்றப்பட்டுவரும் பெரும்பாலானோர் வியட்னாமில் இருக்கும் சீன தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் சீன நாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடியின் ந(ஞ்)ச்சு பதில்கள்

கேள்வி : நரேந்திர மோடி என்று சொன்னால் 2002 குஜராத் கலவரத்துடன் தான் சம்பந்தப்படுத்திப் பார்க்கிறார்கள். நீங்கள் அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

பதில் : இந்தியா ஒரு ஜனநாயக நாடு. யாருக்கும் யாரையும் விமர்சனம் செய்யவும், குறை கூறவும் உரிமை உண்டு. செய்யாத குற்றத்திற்காக ஒருவர் குற்றம் சாட்டப்படும் போது சற்று வேதனை இருக்கத்தான் செய்யும். உச்சநீதிமன்றம் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து அந்தக் குழு எனக்கும் குஜராத் கலவரத்திற்கும் தொடர்பில்லை என்று தெளிவுபடுத்திய பிறகும், அரசியல் ஆதாயத்திற்காக என் மீது பழிசுமத்தி அதில் சிலர் குளிர்காய்கிறார்கள். நான் முதலமைச்சராக இருந்தபோது அப்படியொரு சம்பவம் நடந்திருக்கக் கூடாது. அதற்காக நிச்சயமாக வருத்தப்படுகிறேன். நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேள் என்கிறார்கள். அந்தச் சம்பவத்திற்கு நான் காரணமல்ல எனும் போது ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கேள்வி : டில்லியில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு காங்கிரஸ் மன்னிப்புக் கேட்டிருக்கிறதே?

பதில்: அவர்களுக்கு நேரடித் தொடர்பு இருந்திருக்கிறது. மனசாட்சி உறுத்தியிருக் கலாம். மன்னிப்புக் கேட்டார்கள். குஜராத் கலவரத்தைப் பொறுத்தவரை எங்கள் அரசு கலவரத்தை அடக்கப் பெரும் முயற்சி செய்தது என்பதுதான் நிஜம். அதனால் வருத்தம்தான் தெரிவிக்க முடிகிறதே தவிர மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் புரியவில்லை.

இசைப்பிரியாவை கொன்றது இலங்கை ராணுவம்தான் - அல்ஜசீரா

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் போராளி இசைப்பிரியா போரில் உயிரிழந்தார் என்று இலங்கை ராணுவம் கூறி வந்த நிலையில், ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தபோதுதான் இசைப்பிரியா கொல்லப்பட்டிருக்கிறார் என்பது தற்போது வெளியாகியுள்ள படம் அம்பலப்படுத்தியுள்ளது.  இறுதிக்கட்ட போரின்போது இவர் மிகவும் கோரமான முறையில் உயிரிழந்திருந்தார். ராணுவத்தினருடனான மோதல் ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவர் ராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக அல்ஜசீரா ஊடகத்தின் பெண் ஊடகவியலாளர் ஒருவரும் அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது கணவரும் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தனர். மேலும் அதற்கான ஆதாரங்களை சேனல் 4 தொலைக்காட்சியும் வெளியிட்டிருந்தது.

மே 18, 2014
 

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 7)

உண்மையில் இப்போதுள்ள மாகாண சபைகள் ஏதோ ஒரு வகையில் சிறிதளவாயினும் இன்றைய காலத்துக்கு அவசியமானதாக இருந்தாலும் கூட, அதனை ஓரளவாயினும் பயனுடையதாக ஆக்குவதற்கு வாய்ப்பு இருந்தாலும் கூட, அதன் மீது மக்களுக்கு சிறிதளவு நம்பிக்கையும் ஏற்பட்டு விடாமற் பார்த்துக் கொள்வது அவசியம் என்றும் தமது தமிழ்த் தேசிய சுயநிர்ணய உரிமை சுலோகங்கள் கொண்ட அரசியலுக்கு இந்த மாகாண சபையை செயற்திறன் உள்ளதாக ஆக்குவது பொருந்தமற்றது என்றுமே பெரும்பான்மையான ததேகூக்காரர்கள் கருதுவது தெளிவாகத் தெரிகின்றது. தமிழர்களின் பிரச்சினையை உலகறியச் செய்யவும், மஹிந்த அரசை அம்பலப்படுத்தவும், சர்வதேச அளவில் தமிழ்த் தலைமைகளுக்கு ஓர் உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்கவும், அதன் மூலம் சர்வதேச சமூகம் தமிழர்கள் விரும்புகின்ற ஒரு தீர்வை ஆக்கித் தரவுமான நிலைமையை ஏற்படுத்தவுமே தாங்கள் வடக்கு மாகாண சபையைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். ஆக மொத்தத்தில ததேகூக்காரர்களைப் பொறுத்த வரையில் (மேலும்....)

கூட்டமைப்பின் திருகுதாளம்

டையினரையும் வரவழைத்து கொண்டாடிய முள்ளிவாய்க்கால் நினைவு தினம்

 மிகவும் திட்டமிட்ட முறையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களை மீண்டும் மடையர்கள் ஆக்கியுள்ளது. படையினருடன் சேர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைக் கொண்டாடியுள்ளனர் கூட்டமைப்பு குப்பாடிகள். இறந்த படையினருக்கும் மக்களுக்குமாகச் சேர்ந்து நாம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைக் கொண்டாடுகின்றோம் என படையினருடன் சேர்ந்து ஒப்பந்தம் செய்த பின்னரே கூட்டமைப்பினர் இந்தத் திருவிளையாடல் நாடகத்தை அரங்ககேற்றியுள்ளதாகத் தெரியவருகின்றது. தமிழ்மக்களைத் தொடர்ந்து பேயர், விசரர் என்று எண்ணி தங்களின் திருகுதாளங்களை தொடர்ந்தும் செய்து கொண்டிருக்க மக்கள் இனிவரும் காலங்களில் அனுமதிக்கமாட்டார்கள் என்பதை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு  நினைவில் வைத்திருத்தல் அவசியம்.

தேர்தல் முடிவு

‘வைகோவின் ஈழம்’ விருதுநகரில் இருந்தே டேக்-ஆஃப் ஆகவில்லை!

வைகோவின் (பார்டர் லைனில்கூட இல்லாத, படு) தோல்வி, ம.தி.மு.க. தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதற்கு சாதகமாக மோடி அலை அடிக்கிறது  என்பது ஓட்டுப் போடுவதற்கு முன்னரே அனைவருக்கும் தெரிந்திருந்த நிலையில், ஒருவேளை வைகோ ஜெயித்தால் மத்திய அமைச்சராவார் என்பதும் தெரிந்திருந்த நிலையில், மத்திய அரசில் அங்கம் வகித்தால், இலங்கை தொடர்பாக இந்திய வெளியுறவு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வைகோ அழுத்தம் கொடுப்பார் என்பதும் தெரிந்திருந்த நிலையில், “நீங்க எதுக்கு சார் டில்லிக்கெல்லாம் போயி சிரமப்படணும் பேசாம ஊரிலேயே இருந்துடுங்க” என்று சொல்லியிருக்கிறார்கள், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்கள். வைகோவுக்கு விழுந்த அடி, ‘அம்மா-1000’ திட்டத்தால் மட்டுமே விழுந்தது என்று ம.தி.மு.க.-வில் நம்பினால், அவர்களால் இனி வரும் எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. தமது தரப்பில் என்ன தவறு உள்ளது என்பதை புரிந்து கொண்டால்தான், பூச்சியத்தில் இருந்து ராச்சியம் போக எத்தனிக்கலாம். (மேலும்....)

உதைபந்தாடி முள்ளிவாய்க்கால் தினத்திற்கு கொள்ளி வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

முள்ளிவாய்க்கால் தினத்தை சோக நிகழ்வாகக் காட்டி அதை துக்க தினமாகக் கொண்டாடுமாறு தமிழ்மக்களுக்கு கூறும் கூட்டமைப்பினர் இன்று பருத்தித்துறையில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து சிறப்பித்து முள்ளிவாய்கால் துக்க தினத்திற்கு கொள்ளி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


பலாலி ஆமிக்காரத் தளபதியுடன் பகல் விருந்து இரவு விருந்து உண்பது. பின்னர் தமிழ்த் தேசியம் பற்றி மக்களுக்கு கொப்பளிப்பது என்று நீங்கள் செய்யும் திருவிளையாடல்கள் இனியும் தொடரத்தான் வேண்டுமா?


மாவை சேனாதிராசா அவர்களே !! வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரம் தேவை இல்லைப் போல் தெரிகிறது.



சிவாஜி அண்ணா பொலிஸ்காரர் விளக்கேற்றயது கோபமா ? பக்கத்திலி நிற்பர் என்ன சொல்லுகின்றார்? இன்னும் ஒழுங்கா பிடித்து  ............................(மெழுகுதிரி கொளுத்தத் ) தெரியாதவன் எல்லாம் அரசியல் கதைக்கிறான் என்று சொல்லவில்லைத்தானே ?

சாமத்திய வீட்டில ஆளாத்தி எடுக்கப் போறவைமாதிரி என்ன வெக்கம் சுரேஸ் அண்ணா...... சும்மா ஜமாயுங்கள்.... முள்ளிவாய்க்காலும் கொள்ளி வாய்க்காலும் .

சரி இவை எவை நடந்தாலும் நாளைக்கு எலக்சன் என்ற ஒன்ற வந்தால் நித்தரைப்பாயால் கண்ணை கசக்கிக்கொண்மு எழும்பி வீட்டுக்க நேரே புள்ளடி போடுவதூன் எமது வழக்கம் என்று சாமான்ய பொது மகன்  கூறுவதும் எமக்கு கேட்கத்தான் கேட்டுகிறது

மூவர் மட்டும் கலந்து கொண்ட முள்ளிவாய்கால் நிகழ்வு

இவர்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மட்டுமே. முள்ளிவாய்க்காலும்,உயிரிழந்தவர்களும் தேவைப்பட்டார்கள். வடமாகாண சபை முன்றலில் இன்றைய தினம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டவர்களோ வெறும் மூவரே.

அரசாங்கத்திற்கு மு.கா மீது நம்பிக்கை இல்லை  - ஹக்கீம்

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் சமன்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரசாங்கமும் என்கின்ற இரண்டு தரப்புக்களுக்கிடையில் நின்று ஸ்ரீலமுகா தனது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக பல வியூகங்களை வகுத்துச் செயற்பட்டிருக்கின்றது.
அபிவிருத்தி என்கின்ற ஒரு விசயத்தை அடைந்து கொள்வதற்காக பலவிதமான முன்னெடுப்புக்களை வித்தியாசமாக எடுத்து சின்னச்சின்ன அடைவுகளை எல்லோரும் அடைந்திருக்கலாம்.அந்த அடைவு மட்டம் போதாது. ஆன்மீகப் பிளவுகளும் முஸ்லிம் அரசியலிலே தாக்கங்களை ஏற்படுத்தி விடலாம் என்று ஒரு சிலர் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். புலிகள் இருந்த கட்டத்தை விடவும் வித்தியாசமான சூழ் நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.புலிகள் இருந்த இடத்திலே இப்பொழுது சிங்கள மேலாதிக்க சக்திகளின் தீவிரப்போக்குடைய கும்பல்கள் இருக்கிறார்கள். புலிகளிளுக்குச் சமமாக இந்த சிங்கள மேலாதிக்க சக்திகளின் தீவிரப்போக்குடைய கும்பல்களின அட்டகாசம் இருக்கின்றது. இப்பொழுது வடகிழக்குக்கு வெளியிலே இருந்த நிலவரம் முன்பு வடகிழக்கிலே இருந்தது மாதிரியான ஒரு அச்ச உணர்வைத் தோற்றுவித்திருக்கின்றது.
(மேலும்....)

 

இலங்கை தமிழர் விடயத்தில் உண்மை நிலையை உணர்ந்து கொண்ட தமிழக மக்கள்

(எஸ். சுரேஸ்)

இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து தமிழகத்தில் வெளிப்படையாகவே தமது அரசியலை நடத்தி வந்த தொல். திருமாவளவன் மற்றும் வைகோ என அழைக்கப்படும் வை. கோபாலசாமி ஆகிய இருவரும் மற்றும் நடிகர் விஜயகாந்த் அணியினரும் நடந்து முடிந்த இந்திய பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளனர்.  இவர்களைப் போன்றே இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக அறிக்கை விட்டும், புலிகளுக்கு ஆதரவாக கவி பாடியும், இலங்கைத் தமிழருக்காக ஆதரவுக் குரல் கொடுப்பதாகவும் நடித்து வாக்குக் கேட்ட கலைஞர் கருணாநிதியின் தி.மு.க வின் அனைத்து வேட்பாளர்களும் படுதோல்வியைச் சந்தித்துள்ளனர். இதிலிருந்து தமிழக மக்கள் இனியும் இத்தகைய உள்ளூர் அரசியல்வாதிகளின் பொய்யுரைகளை நம்பத் தயாரில்லை என்பதை இத்தேர்தல் மூலமாக உணர்த்தியுள்ளனர். இது தமிழகத்திலிருந்து இலங்கைத் தமிழருக்காக நீலிக் கண்ணீர் வடித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் ஏனைய ஏமாற்றுக்காரரான பழ. நெடுமாறன், சீமான் போன்ற வர்களுக்கும் நல்லதோர் படிப்பினை என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

பிரபாகரனை சர்வாதிகாரி எனும் உண்மையை கூறிய விக்கியை காப்பாற்றிய சுமந்திரன் எம்.பி.

கடந்த 01.05.2014 அன்று சாவ கச்சேரியில் நடைபெற்ற கூட்ட மைப்பின் மே தினக் கூட்டத்தில் புலிகளின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்று உண் மையை உரைத்த வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக் னேஸ்வரன் பேசியிருந்த மறுநாளே அவர் மாரடைப்பால் வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானதும் யாவரும் அறிந்ததே. பிரபாகரனை சர்வாதிகாரி என்ற உண்மையை உரைத்த விக்னேஸ்வரனுக்கு தாயகத் திலும், தமிழகத்திலும், புலம் பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலிருந்தும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. கூடவே தமிழ் தேசிய ஊடகங்களும் கொதித்தெழுந்து விக்னேஸ்வரனை வன்மையாகக் கண்டித்த தோடு, அவரின் தொலை பேசி, பக்ஸ், மின்னஞ்சல் தொடர்பு முகவரிகளையும் எல்லோரது பார்வைக்காகவும் பதிவேற்றி, நியாயம் கேளுங்கள். விசாரணை செய்யுங்கள், கேள்வி எழுப்புங்கள் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்தின. (மேலும்....)

நரேந்திர மோடி

மோடி அவர்களது அறுதிப்பெரும்பான்மை வெற்றி மூலமாக பாரதத்தில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அமைகிறது. இந்தியா இதுவரை 16 லோக்சபா தேர்தல்களை எதிர்கொண்டிருக்கிறது. 1984ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இந்திரா படுகொலையால் ஏற்பட்ட அனுதாபத்தின் விளைவாக காங்கிரஸ் கட்சிக்கு 415 இடங்கள் கிடைத்தன. அதன் பின்னர் நாட்டில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையைப் பெறவில்லை. எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.கவுக்கும் கிடைக்கவில்லை. தற்போது 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் முதல் முறையாக தனிப் பெரும்பான்மை பலத்துடன் பாரதிய ஜனதா மத்திய அரசை அமைக்கிறது. பெரும்பான்மைக்கு தேவை 272 இடங்கள். தற்போது பாஜக 277 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அத்துடன் தனிப்பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ் அல்லாத முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. மேலும் காங்கிரஸ் அல்லாத வலிமையான தனிப்பெரும்பான்மையுடன் கூடிய முதல் மத்திய அரசையும் பாரதிய ஜனதா அமைக்கிறது. மேலும் இந்தியாவில் இதுவரை இருந்து வந்த கூட்டணி ஆட்சி சகாப்தம் என்பது முடிவுக்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

மே 17, 2014

இந்தியத் தேர்தல் முடிவு

ஒன்றும் குடிமுழுகிப் போய்விடவில்லை

1999-2004 இல் வாஜ்பாயி தலைமையில் பிஜெபி ஆண்ட போது இருந்த நிலையே அடுத்த 5 வருடங்களிலும் இருக்கும் என்று தோன்றுகிறது. அதை விட இன்னும் மோசமாக போய்விடாது என்று ஒரு நம்பிக்கை. மேலும் அடுத்த பொது தேர்தலில் மாறுதல் வரும். எனவே குடி முழுகி போய்விட்டது என்று விரக்தி அடைய தேவையில்லை. இந்தியா இன்னும் ஜனனாயக நாடு தான். நீதி துறை பலமாகவே இருக்கிறது. ஒரு பிரதமரால் அரசியல் சட்டத்தை அத்தனை சுலபமாக திருத்தி விட முடியாது. அதே போல் தான் ராமர் கோயில் விவகாரமும். உச்ச நீதி மன்றத்தை மீறி பிஜெபி ஒன்றும் செய்துவிட முடியாது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

காந்தி – இந்தியா

(சுகு-ஸ்ரீதரன்)

காலனி ஆதிக்கத்திற்கெதிரான இந்திய சுதந்திர இயக்கம் இந்தியாவிற்கும் உலகிற்கும் பல அறங்களைக் கற்றுத் தந்தது. வன்முறை சாராத காந்தியாரின் போராட்ட முறைமை எதிரிகளின் மனச்சாட்சியை உலுக்கியது. இந்தியாவின் கோடான கோடி மக்களை ஆகர்சித்தது. குஜராத் -இங்கிலாந்து- தென்னாபிரிக்கா வாழ்க்கை, தேடல் என்பன அற உணர்வின் உன்னதங்களை நோக்கி மோகன்தாஸ் கரம்சம் காந்தியை வழி நடத்தியது. தாய் தந்தையர் மற்றும் உறவுகள் -நண்பர்கள் -சுற்றாடல் அனுபவங்கள அரிச்சந்திரன், இராமாயணக்கதைகள் கலாச்சாரம் பழக்கவழக்கங்கள் எல்லாமே அவர் மீது செல்வாக்குச் செலுத்தின. தாயைப் போற்றும்  இந்திய பண்பாட்டு மரபுகளும் அவரைச் செப்பனிட்டன. துன்புறும் மனிதர்கள் மீது அவர் கருணை கூர்ந்தார். இந்திய ஆன்மிக உலகில் உருவான எளிமையான வாழ்க்கை, கொல்லாமை, பொய்யுரையாமை என சமூக விழுமியங்கள் அவர் மீது தளை விட்டன. தென்னாபிரிக்க வாழ்க்கையில் நிறவெறி -அதிகாரம் ஆபிரிக்க- இந்திய மக்கள் மீது காட்டிய வெறுப்பு அடக்குமுறை- அதிகாரம் ,வாழ்வைப்பற்றி அவர் மனம் புழுங்கினார். (மேலும்....)

குமுதினிப் படுகொலை- 1985may 15

ஆம் ஆண்டு மே 15ஆம் திகதி 65பேருடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருக்கும் போது நடுக்கடலில் வைத்து கடற்படையினரால் வெட்டியும் குத்தியும் அடித்தும் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகள் சிங்கள இராணுவத்தை தாக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும் மக்கள் பழிவாங்கப்பட்டனர். அன்றைய சம்பவமும் அவ்வாறு தான் இடம்பெற்றது. அநுராதபுரத்தில் இடம்பெற்ற மோதல் ஒன்றிற்காக நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி குமுதினியில் வந்த மக்கள் நடுக்கடலில் வைத்து கடற்படையால் வஞ்சகம் தீர்க்கப்பட்டனர். எனினும் குமுதினிப்படுகொலை நினைவான கட்டப்பட்ட கட்டடமும் உடைக்கப்பட்டு தற்போது நினைவுத்தூபி மட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.மக்களின் இழப்புக்களில் தங்களை பலப்படுத்திக்கொண்டவர்கள் கூண்டோடு அழிந்ததுமில்லாமல் எஞ்சிய மக்களை பழையநிலைக்கே விட்டுச்சென்றார்கள். மக்கள் நலனை கருத்தில் கொள்ளாத பாசிசத்தின் முடிவு இது. இதன் எச்சங்கள் இன்னமும் மக்கள் நலனை கருத்தில் கொள்வதாக தெரியவில்லை. (மேலும்....)
 

அத்வானியா மோடியா சிறந்தவர் கொலைகளை கொண்டாடுவதில்......?

மோடியை விட மோசமான கொலைகாரர் அத்வானி தான். மோடி முன்னிருந்தபடாமல், அத்வானியே பிரதம வேட்பாளராக இருந்திருந்தால், இத்தனை கோபம், எதிர்வினை உருவாகியிருக்காது என்று தான் தோன்றுகிறது. அது தான் சோகம். உண்மையில் நவீன இந்தியாவில், 80களுக்கு பின் இந்த்துவ விஷத்தை ஆழமாக, பரவலாக விதைத்ததில் மிக மிக முக்கியமானவர் அத்வானி தான். 80கள் வரை பெருசா அறியபடாத அயோதியா ‘பிரச்சனையை’ கையில் எடுத்து, ரத யாத்திரைகள் நடத்தி, மத வெறியை பரப்பி, பெரும் அழிவை உருவாக்கி, அதன் மூலம் பிஜெபியை பெரும் கட்சியாக உருமாற்றிய ‘பெருமை’ அவருக்கு தான். ஆனால் அதை எல்லாம் இன்று பலரும் மறந்து விட்டோம். (உடனே நான் மோடியை ஆதரிப்பதாக யாரும் புரிந்து கொள்ள வேண்டாம்). அத்வானியை ‘மன்னித்து’ ஏற்று கொண்டது போல (1999-2004) இனி மோடியையும் சகித்து கொள்ள வேண்டியது தான் போல.என்ன அத்வானிக்கு ரதயாத்திரையை செய்து பாபர் மசூதியை இடித்து விட்டு பதவிவை பெற முடியவில்லை. மோடிக்கு ரயில் யாத்திரயில் வந்வரகளை கொழுத்தி கொலை செய்து விட்டு அறுதிப் பெரும் பான்மையுடன் பதவியைப் பெறும் திறமை இருக்கின்றது. இதில் யார் சிறந்தவர் என்று நான் என்ன சொல்ல முடியும்

இந்திய இடதுசாரிகள் பற்றி சொல்லும் தேர்தல் முடிவுகள்

இடதுசாரிகள் மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேற்றபட்டுவிட்டார்கள். வெகுவிரைவில் கேரளாவிலும் நடக்குமா? இடது சாரிகள் தங்களை ஒரு தொழிலாளர் கட்சியாக மாற்றித் கொண்டு ஐரோப்பால் உள்ள கட்சிகள்போல் தொழில்படாததால் இந்தியாவில் தற்பொழுது தொழிலாளர் நன்மை பேசுவதற்கு யாரும் இல்லாத நிலை ஏற்படப்போகிறது. முக்கியமாக இந்தகாலகட்டத்தில் தொழிலாளர் நலம் ,சுழல் மற்றும பிற்பட்டோர் நலனை பற்றி பேசுபவர்கள் தேவை . . ஒருவிதத்தில் மார்கிரட் தச்சர் யுகத்தையே பிஜேபியின் உருவாக்குவார்கள். அதுதேவையானதும் கூட ஆனால் எதிர்த்தரப்பு தேவை.

மே 16, 2014

மத்தியில் ஆட்சி அமைக்கிறது பாஜக, பிரதமராகிறார் மோடி!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 260க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் அந்த கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகி விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி பாஜக 271 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. காங்கிரஸ் 81 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலை பெற்று வருவதால் மத்தியில் அக்கட்சி ஆட்சி அமைக்கப்போவது உறுதியாகிவிட்டது. மோடி பிரதமராவதும் உறுதியாகிவிட்டது.  27 நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். தி.மு.க. வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். சேலத்தில் அதிமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இந்திய தேர்தல் முடிவுகள் இன்று

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. 543 ஆசனங்க ளுக்காக கடந்த ஏப்ரல் 07 முதல் மே 12ம் திகதி வரை 09 கட்டங்களாக தேர்தல்கள் நடாத்தப் பட்டன. இவற்றுக்கான முடிவுகளை அறிவிக் கும் பொருட்டு இன்று வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின்றன. இதற்கென நாடு முழுவதும் 989 வாக்கு என்னும் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இன்று காலை பத்து மணி முதல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு மாலை நான்கு மணிக்குள் சகல முடிவுகளும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு விடும். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய 3 மணி நேரத்திற்குள் (காலை 11 மணி) நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் வேட்பாளர்களின் முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். அடுத்து ஆட்சி அமைக்கப்போகும் கட்சி அல்லது கூட்டணி எது என்ற கேள்விக்கான பதிலும் கிடைத்துவிடும். இறுதி முடிவு மாலை 3 முதல் 4 மணிக்குள் வெளியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீடிப்பு

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.இலங்கையில் 1976ம் ஆண்டு உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், தனி ஈழத்துக்காக போராடி வந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டபோது விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இலங்கை ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே கடந்த 2009ம் ஆண்டு நடந்த இறுதி கட்டப் போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். இதனால், அந்த அமைப்பின் செயல்பாடு முடங்கியுள்ளது. இந்நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நேற்றில் இருந்து மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரபாகரனை நினைவு கூரவேண்டாம்

இலங்கை அகதிகளுக்கு அறிவுறுத்தல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக எவ்வித நிகழ்வுகளையும் எதிர்வரும் 18 மற்றும் 19 ஆம் திகதிகளில்  மேற்கொள்ளக்கூடாது என்று இலங்கை அகதிகள் முகாமில் உள்ள அகதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய கரையோர காவல்துறையினராலேயே இவ்வாறு அறுவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு முன்னாயத்தங்கள் தொடர்பில் தமிழகத்தின் கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் தெளிவு நடவடிக்கை ஒன்றை நடத்தினர். நினைவு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுமானால் அது எதிர்காலத்தில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்று கரையோர காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதேவேளை, புதிதாக எவரினதும் நடமாட்டங்கள் இருக்குமானால் அது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் கரையோர காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். கீழ்புதுப்பத்து இலங்கை அகதிகள் முகாமில் 454 குடும்பங்கள் வசிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்

கப்பம் பெறுதல், பாரிய பண மோசடி

தயாபரராஜா, உதயகலா தம்பதியை பிடிக்க இன்டர்போல் உதவியை நாடும் இலங்கை

வட மாகாண மக்களிடம் பாரிய பண மோசடியில் ஈடுபட்டதன் பின்னர் இந்தியாவின் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள தயாபரராஜா. உதயகலா தம்பதியினரை கைதுசெய்வதற்கு இன்டர்போலின் உதவியை நாட தீர்மானித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார். உதயகலா என்னும் மேற்படி பெண் வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக ஆட்கடத்துவதுடன் தொடர்புடைய முக்கிய புள்ளியென்பதும் அவரினால் ஏமாற்றப்பட்ட மக்களின் வாக்குமூலங்கள் மூலம் அம்பலத்திற்கு வந்துள்ளது. மோதல்களைத் தொடர்ந்து மன்னாரில் தலைமறைவாகியிருந்த மேற்படி தம்பதியினர் எவ்வித ஆவணங்களுமின்றி தமிழ்நாட்டிற்கு சட்ட விரோதமாக சென்றவேளை தனுஷ்கோடியில் வைத்து தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்....)

உலகின் விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம்

உலகின் விலைமதிப்பு மிக்க வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக லண்டனிலுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு இடம்பெற்றுள்ளது. 4 இலட்சம் சதுர அடிகள் பரப்பளவில் 27 மாடிகளைக் கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான 'அண்டிலியா' வின் பெயரை சு+ட்டியுள்ளார். இந்த வீட்டின் மதிப்பு 1 லிருந்து 2 பில்லியன் டொலர் வரை இருக்கும் என 'போர்ப்ஸ்"மதிப்பிட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் 12 ஆயிரம் கோடியாகும். 27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார் நிறுத்துவதற்கு வசதிக்காகவும் ஹெலிகொப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டிடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது. இது அவரால் உறுஞ்சப்பட்ட உழைப்பாளர்களின் இரத்தம், வியர்வையை காட்டி நிற்கும் அடையாளச் சின்னம் அல்லவா? 

துருக்கி சுரங்க விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 282 ஆக அதிகரிப்பு

துருக்கியின் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ள நிலையில் அந்நாட்டு தொழிற்சங்கங்கள் ஒருநாள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. அண்மையில் சுரங்க தொழிற்துறையை தனி யார் மயப்படுத்தியது பணியாளர்களின் தொழிற் தளத்தின் பாதுகாப்பை மேலும் அபாயத்திற்கு உட்படுத்தி இருப்பதாக தொழிற்சங்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சுரங்க விபத்தையொட்டி நாட்டின் பல பகுதிகளிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. சுமார் 787 சுரங்க பணியாளர்கள் நிலத்திற்கு கீழ் இருக்கும்போது மின்சார அலகில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக சுரங்கப்பாதை சரிந்து விழுந்து பல பணியாளர்களும் சிக்கிக்கொண் டனர். வெடிப்பு ஏற்பட்டு ஒரு மணிநேரத்திற்குள் 363 சுரங்கப் பணியாளர்கள் மீட்கப்பட்டதாக அரச அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். எனினும் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற மீட்பு நடவடிக்கையில் எவரும் உயிருடன் மீட்கப்படவில்லை. இந்நிலையில் பல தொழிற்சங்கங்களும் ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருப்பதாக துருக் கியின் புரட்சிகர தொழிற்சங்கங்களின் கூட்டணி தலைவர் நேற்று ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

பெரும் நஷ்டத்தில் சோனி நிறுவனம்

உலகளவில் ஒரு காலத்தில் மின்னணு வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த ஜப்பானிய நிறுவனமான சோனி, கடந்த ஆண்டு 1.3 பில்லியன் டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தை மறுசீரமைக்கும் பணியின் போது, கணனி தயாரிப்பிலிருந்து வெளிவருவது என்று எடுக்கப்பட்ட முடிவே இந்த அளவுக்கு பெரும் நஷ்டத்துக்கு காரணம் என, விளையாட்டுக்கு பயன்படும் ப்ளேஸ்டே'ன்களைத் தயாரிக்கும் சோனி கூறுகிறது. நடந்து செல்லும்போதோ அல்லது பயணத்தின் போதோ இசையைக் கேட்டவாறு செல்லவதற்கு வசதியாக, சோனி நிறுவனம் அறிமுகப்படுத்திய வோக்மேன், மனிதர்கள் இசையை கேட்டு ரசிக்கும் போக்கையே மாற்றிய புரட்சியை ஏற்படுத்தியது. எனினும் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிள் மற்றும் சாம்சுங் போன்ற போட்டியாளர்களிடம் தமது சந்தைப் பங்கை சோனி கணிசமான அளவுக்கு இழந்துள்ளது. தொலைக்காட்சி தயாரிப்பிலும் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ள சோனி, அதை லாபமீட்டும் வகையில் மாற்றியமைக்கும் பணிகளிலும் சிரமங்களை சந்திக்கிறது. இந்த ஆண்டும் சோனி நஷ்டத்தையே எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஓரளவுக்கு ஈடுகட்டும் வகையில், அமெரிக்கத் தலைமையம் போன்ற பல சொத்துக்களை விற்பதற்கு அப்பாற்பட்டு, 5000 பேரை வேலையிலிருந்து நீக்கவும் சோனி திட்டமிட்டுள்ளது.

மே 15, 2014

இந்தியத் தேர்தல் 2014

இந்திய மக்களின் நல்லிணக்கம் வலுப்பெற உதவுமா....?

(சாகரன்)

2014 தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்கவேண்டும் என்ற தவிர்க்க முடியாத சூழலே இன்று இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்டு இருக்கின்றது. இது தேர்தலுக்கு பிறகு பாரிய பதவி அடிப்படையிலான பேரம் பேசல், கட்சிகளை, பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப் போகின்றது. இது இந்திய ஜனநாயகம் முகம் கொடுக்க வேண்டிவரும் பாரிய சவால் ஆகும். இந்தப் போக்கு மத்தியில் மாத்திரம் அல்ல மாநிலங்கள் மட்டத்திலும் விரிந்தே இருக்கின்றது. இதுவும் ஒரு வகை ஜனநாயகத்தின் வெற்றிதான். ஐக்கிய முன்னணித் தன்மை கொண்ட இது ஒரு ஜனநாயக செயற்பாட்டின் வெளிப்பாடாக இருந்தாலும் இந்த ஜனநாயகம்? த்தை கட்டியாள்வது பணநாயகம் என்பது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. ஐக்கிய முன்னணி கொள்கையின் அடிப்டையில் மக்கள் நலன்களை முன்னிலைப்படுத்தியே உருவாக்கப்படவேண்டும். எதிர்காலத்தில் இந்திய ஜனநாயகத்தின் இருப்பு இதில்தான் தங்கியிருக்கின்றது. (மேலும்....)

நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் நில அபகரிப்பும், படைக்குவிப்பும் நடக்கிறது என்று யாரும் நீலிக்கண்ணீர் வடிக்கும் அவசியம் இருக்காது

 

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்துவிட்டால் இங்கு நில அபகரிப்பும், படைக்குவிப்பும் நடக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டிய அவசியம் இருக்காது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்கு வாருங்கள் என நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தொடர்ச்சியாக பகிரங்க அழைப்பு விடுத்து வருகின்றேன். இறுதியாக நான் விடுத்த அறிக்கைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் விடுத்திருந்த பதிலறிக்கையில், சுயலாப அரசியல் சேற்றில் ஊறிப்பெருத்த அவர்களது பொய் முகங்களே தெரிகின்றன. (மேலும்....)
 

படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட புலி முக்கியஸ்தர் இந்தியாவில் தஞ்சம்

காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்ற விடயம் எல்.ரீ.ரீ.ஈ. யின் முன்னாள் உறுப்பினர் கே. தயாபரராஜா தனது குடும்பத்தாருடன் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதன் மூலம் ஊர்ஜிதமாகியுள்ளதென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். எல்.ரீ.ரீ.ஈ. முன்னாள் உறுப்பினரான தயாபரராஜா (33) யாழ்ப்பாணத்தில் கணனித்துறை பொறியியலாளர் ஆவார். இவர் இறுதிக்கட்ட மோதலின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த போதும், துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சர்வதேச செய்திச் சேவைகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் படத்துடன் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் அவர் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு சென்றவேளை, தனுஷ்கோடியில் வைத்து தமிழ் நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட தயாபரராஜா இது கால வரை தலை மறைவாக வாழ்ந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

 சீன கம்யுனிஸ்ட் கட்சி மத்திய குழு இலங்கை வருகை

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய இராணுவ ஆணைக் குழுவின் பிரதித் தலைவரும், இராணுவ ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜெனரல் சூ கிலியாக் தலைமையிலான குழுவொன்று இலங்கை வந்துள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இக்குழுவினரை பாதுகாப்பு படைகளின் பிரதானி, இராணுவத் தளபதி, கடற்படை மற்றும் விமானப்படை தளபதி ஆகியோர் வரவேற்றனர்.கம்போடியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய மூன்று நாடுகளுக்கான விஜயத்தை மேற் கொண்டே சீன குழுவினர் இல ங்கை வந்துள்ளனர். இந்த சீனக்குழுவினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு மற் றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபாய ராஜ பக்ஷ, முப்படைத் தளபதிகள் மற் றும் பொலிஸ்மா அதிபர் ஆகி யோரைச் சந்திக்கவுள்ளனர். இவர் கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் சீனன்குடா இராணுவ அக்கடமி, திருகோணமலை கடற் படை அக்கடமி, கண்டி தலதா மாளிகை, கட்டுநாயக்க விமானப் படைத் தளம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய இடங்களுக்குச் சென்று பார்வையிடவுள்ளனர்.

 மே 14, 2014

பரபரப்பு உலகில் காணாமல் போன கூட்டுக் குடும்பம் உறவுகள்

இந்தியாவில் ஆட்சி அமைக்கப் போவது

பா.ஜ.க வா? காங்கிரசா?  மூன்றாவது அணியா?

(ஸ்ரனிஸ்) 

நடந்து முடிந்த இந்திய பொதுத்தேர்தல் முடிவுகள் வரும் 16ம் திகதி வெளியாகவுள்ளது. இதில் தமிழகத்தில் பாண்டிச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகள் அடக்கம். இந்தியாவின் சகல மாநிலங்களில் இருந்தும் 543 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். சாதி உணர்வு, மத உணர்வு,  இன உணர்வு, மாநில உணர்வு என சகல விதமான உணர்வுகளையும் தட்டியெழுப்பி விட்டு முடிவுக்காக அரசியல் கட்சிகள் காத்துக்கிடக்கின்றன  தமிழகத்தில் ஐந்து முனை போட்டி இருந்தபோதும் பெரும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் அ.தி.மு.க, தி.மு.க இடையே போட்டி என்ற நிலமையை பா.ஐ.க கூட்டணி மாற்றிவிட்டது. (மேலும்....)

மீனவர் பேச்சுவார்த்தையில் முடிவில்லை; நாடு திரும்பியது தமிழகக் குழு

இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற இரண்டாவது சுற்று பேச்சுவார்த் தையின் முழுமையான அறிக்கை எதிர்வரும் திங்கட் கிழமை கடற்றொழில் அமைச்சர் டொக்டர் ராஜித சேனார ட்னவிடம் கையளிக்கப்படும். இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கும் தலைமையேற்ற தேசிய மீனவர் சம்மேளனத்தின் பிரதிநிதியான தங்கவேலு சதாசிவம் கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நிமால் ஹெட்டியாராச்சி ஆகியோர் இந்த அறிக்கையை அமைச்சரிடம் கையளிக்கவுள்ளனர். பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் இரவு எட்டு மணிக்கு முடிவடைந்தபோதும் 120 நாட்கள் இலங்கை கடற் பரப்பிற்குள் வருவதற்கு அனுமதி வேண்டும் என்று தெரிவித்த தமிழக மீனவர்கள் ஆகக்குறைந்தது 90 நாள் அல்லது 70 நாட்களாவது தாருங்கள் என கேட்டனர். இதேவேளை தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தையில் பார்வையாளராக வருகை தந்திருந்த மீன் வளத்துறை வாரியத்தின் செயலர் டொக்டர் விஜயகுமாரும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் வர அனுமதி யுங்கள் என கேட்டுக் கொண்டார். (மேலும்....)

வரலாற்றில் முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குப்பதிவு

இந்தியாவின் 16வது பாராளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 7ந்திகதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 9 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் மிக நீண்ட காலமாக நடந்தாலும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 9 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 66.38 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பாராளுமன்றத் தேர்தலில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி இருப்பது சுதந்திர இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இந்தத் தேர்தலில் ஏராளமான புதிய வாக்காளர்கள் வாக்களித்ததும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதற்கு முன்பு அதிக அளவாக கடந்த 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் 64.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டதால் எழுந்த அனுதாப அலையும் ஒரு காரணம் ஆகும். கடந்த 2009ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் 58.19 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு உக்ரைனை ரஷ்யாவுடன் இணைக்க பிரிவினைவாதிகள் அழைப்பு

கிழக்கு உக்ரைன் இறையாண்மை கொண்ட சுதந்திர தேசம் என்று பிரகடனம் செய்திருக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கும் அழைப்பு விடுத்துள்ளனர். கிழக்கு உக்ரைன் பிராந்தியங்கள் சுயாட்சி பெறுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் மக்கள் பெரும்பான்மை ஆதரவளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்த பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மறுபுறத்தில் இந்த முன்னெடுப்புகள் உக்ரைன் அரசுக்கு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழுத்தத்தை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. டொனட்ஸ்க் மக்கள் குடியரசு ரஷ்யாவுடன் இணைய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று சுயமாக அறிவித்துக்கொண்ட பிரிவினைவாத தலைவரான டெனிஸ் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் குறிப்பிட்டார். "வரலாற்று நீதியை மீட்க டொனட்ஸ்க், ரஷ்ய கூட்டணியுடன் இணைய நடவடிக்கை எடுக்கும்" என்று குறிப்பிட்டார். (மேலும்....)

மே 13, 2014

மரணத்தினுள் வாழ்ந்தோம்! - (சாகரன்)


(இரு தினங்களுக்கு முன்பு எமது இணையத்தளத்தில் ராஜினி திரணகம பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட்டு இருந்தோம். இக்கட்டுரைக்கு பலரிடமும் இருந்து நல்ல வகையான விமர்சனங்கள் கிடைக்கப் பெற்றோம். இதனால் ஏற்பட்ட உந்துதலால் தோழர் ஜேம்ஸ் இனால் இரு வருடங்களுக்கு முன்பு நிகழ்தப்பட்ட ராஜினியின் நினைவு தினப் பேருரை ஒன்றை 9 பாகங்களாக இங்கு மறு பிரசுரம் செய்கின்றோம். - ஆசிரியர் குழு)
 

(ஆகஸ்ட் 19, 2012 ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

1989 ம் ஆண்டு செப்ரம்பர் 21ம் நாள் வியாழக் கிழமை பாதுகாப்பு காரணங்களுக்காக எனது மட்டுப்படுதப்பட்ட நடமாட்டத்துடன் வவுனியா நகரிலிருந்தேன். 1989 ம் ஆண்டு செப்ரம்பர் 23ம் நாள் மதியமளவில் ராஜினியின் மாணவர் எனது மைத்துனி தவணை விடுமுறைக்காக வவுனியா வீட்டிற்கு வந்தவர் என்னை ஒரு வாங்கு வாங்கிவிட்டார். உங்கள் குறூப்தான் எங்கள் விருப்பமான விரிவுரையாளைரை கொன்றது. ஏன் இப்படி அநியாயம் செய்கின்றீர்கள்என்று. நான் கூறினேன் விசாரித்து சொல்கின்றேன். ஆனால் எங்கள் குறூப் செய்வதற்கு சந்தர்பம் இல்லை என்று. பாதுகாப்பு காரணங்களினால் வவுனியா நகரை விட்டு நகர்ந்து சென்று உண்மைகளை அறிய முடியாத நிலமைகள் எனக்கு. இன்று போல் அன்று தொடர்பு சாதனங்கள் பெரிய அளவில் இல்லாத கால கட்டம்.
(பகுதி 1), (பகுதி 2), (பகுதி 3), (பகுதி 4), (பகுதி 5), (பகுதி 6), (பகுதி 7), (பகுதி 8), (பகுதி 9), (பகுதி 10)

இலங்கைத் தம்பதியை கைது செய்ய இன்டர்போல் உதவி

தமிழகத்திற்கு அகதியாக வந்த இலங்கைத் தமிழர்கள் இருவரை (தம்பதி) கைது செய்ய, இன்டர்போல் பொலிஸாரின் உதவியை இலங்கை அரசாங்கம் நாடியிருப்பதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு பகுதியிலிருந்து கடந்த மே 5 ஆம் திகதி  தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு 2 தனித்தனிப் படகுகளில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் அகதிகளாக வந்தனர். இலங்கை இராணுவத்தினரால் எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இதனால் உயிர்ப் பிழைப்பதற்காகவே அகதிகளாக ராமேஸ்வரம் வந்தோம் என்று அவர்கள் தெரிவித்திருந்தனர். முன்னதாக, அகதிகளாக வந்த கதிர்வேலு தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகிய இருவரும் பல்வேறு பண மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையிலுள்ள பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் சாவகச்சேரி ஆகிய நீதிமன்றங்களில் பிடிவிறாந்துகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தற்போது, இந்த தம்பதியர் தஞ்சம் கோரி தமிழகத்திற்கு வந்துள்ள செய்தி, இலங்கையிலுள்ள ஊடகங்களில் படத்துடன் வெளியாகின. இதனைப் பார்த்த இந்தத் தம்பதியினரால் பாதிக்கப்பட்டவர்கள் சாவகச்சேரி காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சாவகச்சேரி நீதி அறிக்கை தாக்கல் செய்து தயாபரராஜா, உதயகலா தம்பதியினரை தம்பதியரை இன்டர்போல் காவல்துறையின் உதவியுடன் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் நாட்டில் அம்மா சாப்பாட்டுக் கடை

ஜெரோமி கொன்சலிற்றா வழக்கு; பாதிரியார்கள் மன்றில் சாட்சியம்

குருநகரில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோமி கொன்சலிற்றாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இரண்டாவது தடவையாக யாழ்.நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது வழக்கில் சந்தேக நபர்கள் எனக் கருதப்படும் இரண்டு பாதிரிமாரும் மன்றில் முன்னிலையாகிச் சாட்சியமளித்தனர். ''எமக்கும் உயிரிழந்த யுவதிக்கும் தனிப்பட்ட வகையில் எந்த தொடர்பும் இருக்கவில்லை. அவர் மறைக்கல்வி ஆசிரியராக இருந்ததன் காரணமாக அது தொடர்பான தொடர்பே இருந்தது. இதுதவிர இந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவுமில்லை. குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்) அனுப்பவுமில்லை''- என்று மன்றில் சாட்சியமளித்தனர் இரண்டு பாதிரியார்களும். வழக்கை விசாரித்த நீதிவான் பொ.சிவகுமார் மீண்டும் அடுத்தமாதம் 6ஆம் திகதிக்கு அதனை ஒத்திவைத்தார். பாலியல் ரீதியாக பாதிரியார்கள் இருவரும் தொந்தரவு கொடுத்ததன் காரணமாகவே தமது மகள் தற்கொலை செய்துகொண்டார் என உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் மன்றில் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பாதிரியார்கள் சார்பாகச் சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம், மு.றெமீடியஸ் ஆகியோர் முன்னிலையாகி வாதிட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன இந்த யுவதி மறுநாள் கிணற்றிலிருந்து சடலமா க மீட்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகூர் ஹனீபா

ஓர் இசையின் கதை!

சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர். தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பாடல்கள் ஒலிக்காத பெருநாள்கள் இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை. (மேலும்....)

 

 

ஈழ வரலாற்றிக்கான ஏக உரிமை சபாலிங்கத்தின் மரணம் - சிவராம் தராக்கி

புளொட் இயக்கத்தின் ஆரம்ப உறுப்பினராக இணைந்து குறுகிய காலத்துள் உமா மகேஸ்வரனின் கொலைப்படையின் மூளையாக மாறிய சிவராமின் அரசியல் வரலாறு கறைபடிந்தது. புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதி கருணாவின் பிளவின் பின்புலத்தில் செயற்பட்ட சிவராமின் இறுதிக் கால வரலாறு வரைக்கும் அவர் அதிகாரத்தைச் சார்ந்தே செயற்பட்டிருப்பது புலனாகும். சிவராம் ஊடகத் துறைக்கு முன்னுதாரணமல்ல.வரலாற்றை மறைத்து, தேசியம் என்ற பெயரில் அயோக்கியர்கள் நடத்தும் தர்ப்பாரில் சிவராம் போன்றவர்களை எதிர்கால சந்ததிக்கு முன்னோடிகளாகச் சுட்டிகாட்டப்படுகின்றனர். இதுவரைக்கும் ஊழிக்காலத்தின் கர்த்தாக்களாகவிருந்த நயவஞ்சகர்கள் புதிய சந்ததியைக்கூட விட்டுவைக்க மாட்டார்கள் போலும். இவர்களின் ஒருவேளைச் சோற்றிலும் ‘தேசிய இரத்தம் கலந்திருப்பதை சிவராமைப் புனிதனாக்குவதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.(மேலும்....)

ரீயூனியன் என்று ஒரு அதிசயமான தமிழர் பூமி …!!

மிழ்நாட்டில் பலர் கேள்விப்படாத இடம். ஆனால் தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப் பகுதி ஒன்று. சுமார் எட்டரை லட்சம் மக்கள் வாழும், இந்த ரீ யூனியன் என்கிற தீவு, ஆப்பிரிக்க கண்டத்திற்கு கிழக்கே  இந்து மகா கடலில், மொரீசியஸ் அருகே உள்ள, உலக வரைபடத்தில் ஒரு புள்ளியாகக் காணப்படும் ஒரு மிகச்சிறிய தீவு. இந்த தீவின் மொத்த மக்கள் தொகை – சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே. ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு – சுமார் ஒன்றரை லட்சம்….!!!

சுயாட்சி பெற 89-96 வீதமானோர் ஆதரவு

கிழக்கு உக்ரைன் சர்வஜன வாக்கெடுப்பில் பிரிவினைவாதிகள் வெற்றி பிரகடனம்

கிழக்கு உக்ரைனின் டெனஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்கள் சுயாட்சி பெறுவதற்கு மக்கள் அமோக ஆதரவளித்திருப்பதாக ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். ஆனால் உக்ரைன் அரசு இந்த சர்வஜன வாக்கெடுப்பு சட்டபு+ர்வமற்றது என கண்டனம் வெளியிட்டிருப்பதோடு வெறுமனே கேளிக்கூத்து என்று விமர்சித்துள்ளது. எனினும் கிழக்கு பிராந்தியங்களில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சர்வஜன வாக்கெடுப்பில் 89 முதல் 96 வீதமானோர் வரை "சுயாட்சி"க்கு ஆதரவளித்திருப்பதாக பிரிவினைவாதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வாக்கெடுப்பில் குழப்பமான நிலை இருந்ததாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்களிப்பு சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அங்கிருக்கும் பி.பி.சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

மே 12, 2014

இலங்கை அகதிகள் தொடர்பில் கேர்ணல் ஹரிஹரன் எச்சரிக்கை! - புலிச் சந்தேகநபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம்

தமிழகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழ் அகதிகள் 10 பேர் தொடர்பில் இந்திய அரசாங்கமும்,  தமிழக அரசாங்கமும் அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைவர் கேர்ணல் ஹரிஹரன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து அகதிகளாக சென்ற அவர்களில் மூன்று ஆண்கள் முன்னாள் விடுதலைப் புலிகளின் போராளிகள். அவர்களுக்கு முன்னதாகவே இலங்கை அரசாங்கம் புனர்வாழ்வளித்திருந்தது. அதன் பின்னரும் அவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பி வந்துள்ளார்கள் என்றால்,  இது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் புலிச் சந்தேக நபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம்

அகதி முகாம்களில்ழ தங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்களை நாடு கடத்த இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சிலர் தமிழக அகதி முகாம்களில் தங்கியிருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது, இவ்வாறு தங்கியிருக்கும் சந்தேக நபர்களை நாடு கடத்த இந்தியா இணங்கியுள்ளது. 2010ம் ஆண்டு குற்றவாளிகளை பரிமாறிக் கொள்வது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் முகாம்களில் தங்கியிருந்தால் அவர்களை கைது செய்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா அறிவித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமை, சட்டவிரோதமான முறையில் பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியமை, சட்டவிரோதமான முறையில் ஒன்றுகூடி இலங்கைக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை தீட்டியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள், அகதி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளது. அகதிகள் என்ற போர்வையில் தங்கிருக்கும் குற்றவாளிகள் தொடர்பான தகவல்களை இலங்கை அரசாங்கம், இந்திய வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது. இந்த ஆவணங்களை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. சந்தேக நபர்களை எவ்வாறு ஒப்படைப்பது என்பது குறித்து சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஏற்கனவே பேசப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

ஊடக அறிக்கை!..

நாடாளுமன்றத் தெரிவுக் குழு மூலம் பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் நான் தொடர்ந்தும் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக உள்ளேன்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மீண்டும் பகிரங்க அழைப்பு!

நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசாங்கம் நியாயமாக நடக்கத் தவறினால் தான் தொடர்ந்தும் அரசில் இருப்பது குறித்து மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் அங்கம் வகிக்க வருமாறு  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி மீண்டும் பகிரங்க அழைப்பு விடுத்து உள்ளார்.(மேலும்....)

முன்னாள் தளபதி மகேந்தியின் குடும்ப மரணத்தில் உதவாத “TNA” மற்றும் வெளிநாட்டுப் “புலிகள்”

புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த குழந்தையினது பூதவுடலை கொழும்பிலிருந்து எடுத்துச் செல்ல பெண் தொழிலாளர்கள் கைகொடுத்து முன்னுதாராணம் ஆகியுள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பின் யாழ்.தளபதிகளுள் ஒருவராக இருந்தவர் மகேந்தி. அவருட்பட மூன்று பேர் குடும்பத்திலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்தனர். அவர்கள் எவரும் தற்போது உயிருடனில்லை. இந்நிலையில் அவர்களது ஒரு சகோதரனான யோகேந்திரன் தனது குடும்பத்துடன் வன்னியில் வறுமையில் வாழ்ந்து வருகின்றார். அவரது மகளான தமிழ்மதி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு போதிய சிகிச்சையின்றி உயிரிழந்துள்ளார். கொழும்பு சென்று மருத்துவ சிகிச்சையினைப்பெற போதிய பணவசதி இன்மையினாலேயே அக்குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அரச அம்புலன்ஸ் மூலம் கொழும்பில் சிகிச்சைக்கென கொண்டு செல்லப்பட்ட இக்குழந்தை தற்போது உயிரிழந்துள்ளது. (மேலும்....)

புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க

வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து!

புற்று நோயால் பாதிக்கப் படுகிறார்களாம். சொந்த செலவிலேயே சூனியம் வைக்கறதுக்கு சமம். சொன்னா யார் கேட்கப்போறா !? புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டுபிடித்து , குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை , ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். (மேலும்....)

கறுப்பு இன மக்களின் மனித உரிமைகளை பறிக்கும் அமெரிக்கா தமிழர்களுக்காக நீரிக்கண்ணீர் வடிக்கிறது

அமெரிக்காவில் டெக்ஸஸ் சிறைச்சாலையில் சர்வதேச மனித உரிமைகள் மீறப்பட்டு அங்குள்ள சிறைக்கைதிகள் துன்புறுத்தப்படுவதுடன் சித்திரவதைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இதனால் 2007ம் ஆண்டில் மாத்திரம் இந்த டெக்ஸஸ் சிறைச்சாலையில் 14 கைதிகள் உயிர்துறந்தனர். மனித உரிமைகள் குறித்து உலகத்துக்கு உபதேசம் செய்யும் நல்லாசானைப் போல் வேஷமணிந்து இலங்கை போன்ற சிறிய நாடுகளை துன்புறுத்தும் அமெரிக்க ஆட்சியாளர்கள் இலங்கையிலும் ஏனைய உலக நாடுகளிலும் மனித உரிமை மீறப்படுகின்றன, யுத்தக் குற்றங்கள் இடம்பெறுகின்றன என்ற ஆதாரமற்ற குற்றங்களை ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பிரேரணைகளை நிறை வேற்றுவதற்கு முன்னர் தங்கள் நாட்டில் இவ்விதம் மனித உரிமைகள் பேணப்ப டுகின்றனவா என்பதை முதலில் திரும்பிப் பார்த்துச் செயற்படுவது நல்லது.(மேலும்....)

யாழ். நகரை உலுக்கிய அச்சுவேலி முக்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அந்த இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்

அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வீடு புகுந்து மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாது முழு நாட்டிலுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தில் நிர்குணானந்தம் அருள்நாயகி (வயது 50), இவரது மகன் நி. சுபாங்கன் (வயது 20). யசோதரன் மதுசா (வயது 28) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இதேவேளை இச்சம்பவத்தில் நி. தர்மிகா (வயது 24), த. யசோதரன் (வயது 31) ஆகிய இருவரும் படுகாயமடைந்தவர்களாவர். காயமடைந்தவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடந்தது என்ன? (மேலும்....)

சிங்கள இராணுவத்திற்கு பெண்களை கூட்டிக்கொடுத்த நபர்கள் இந்தியாவில் !

இந்தப் படத்தை பார்த்த உடனே உங்களுக்கு தெரியும். ஏதோ ஒரு செய்தியில் இவர்கள் தொடர்பாக படித்திருப்பீர்கள் என்று. ஆம் இவர்கள் தான் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு வேலைசெய்த மானம் கெட்ட தமிழர்கள் ! தற்போது இவர்கள் இந்தியா சென்றுள்ளார்கள் ! அங்கே பல பேட்டிகளை கொடுத்து ஏதோ இலங்கை இராணுவத்தின எதிரிகள் போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். சிறிலங்காவிலிருந்து அண்மையில் தமிழகத்திற்குச் சென்றவர்களில் தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோர் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி வதைத்து ஏறக்குறைய ஐந்து கோடி ரூபா நிதி மோசடி செய்துகொண்டு அகதி என்ற பெயரில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. (மேலும்....)

மேற்குலகின் எச்சரிக்கைக்கு மத்தியில் கிழக்கு உக்ரைன் சுதந்திரம் பெற வாக்குப் பதிவு

இரண்டாவது கட்டமாக ரஷ்யாவுடன் இணைய வாக்கெடுப்பு

உக்ரைன் அரசு மற்றும் மேற்குலகின் கண்ட னத்திற்கு மத்தியில் ரஷ்ய ஆதரவு பிரிவினை வாதிகள் கிழக்கு உக்ரைனின் இரு பிராந்தி யங்களில் சுயாட்சிக்கான சர்வஜன வாக்கெ டுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.  எனினும் வாக்காளர்களின் பதிவு மற்றும் வாக்களிப்பதில் ஒழுங்கின்மை ஆகியவற்றால் வாக்குச்சாவடிகள் குழப்பமான நிலையில் காணப் பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்த சர்வஜன வாக்கெடுப்பை ஒத்தி வைக்கும்படி விடுத்த கோரிக்கையை நிராகரித்தே டொன்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்திய பிரிவினைவாத தலைவர்கள் இந்த தேர்தலை நடத்தியுள்ளனர். இந்த வாக்கெடுப்பு பிராந்தியங்களில்; சுய அழிவையே ஏற்படுத்தும் என்று உக்ரைன் எச்சரித்துள்ளது.

மே 18 ஐ நினைவுகூர பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு

முள்ளிவாய்க்கால் மே 18ஐ  நினைவு தினத்தினை நினைவுகூர வருமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 'அன்பான எம் உறவுகளே. மே மாதம் என்றதும் எமது உறவுகள் கொத்துக் கொத்தாக தமது உயிர்களைக் காவு கொடுத்த அந்தக் காட்சிகளே எமது மனதின் முன் தோன்றும். பலர் எம் கண் முன்னாலும் இன்னும் பலர் எவ்வாறு என்று தெரியாமலும் தமது உயிர்களைக் காவு கொடுத்தனர். இக்கொடூரக் காட்சிகளை இதயமுள்ள எவருமே மறக்கமாட்டார்கள். இலங்கையில் இவ்வாறு பல தடவைகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குச் சிங்களவர்கள் தமிழர்கள் முஸ்லீம்கள் என்ற வேறுபாடு காட்டப்படவில்லை. ஆனால் 2009 மே மாதம் வன்னியில் நடந்தது போல் எந்தவொரு காலகட்டத்திலும் நடந்ததில்லை.  இங்கு குழந்தைகள், சிறுவர்கள் சிறுமியர்கள், பெண்கள், வயோதிபர்கள், நோயாளிகள், இளைஞர்கள் என எந்தவொரு பாகுபாடுமின்றி ஆயிரக்கணக்கானவர்கள் துடிதுடித்து மாண்டனர். எனவே மே மாதம் என்பது சொல்லொணாத் துன்பங்களை நாம் அனுபவித்த துன்பங்களில் மாதங்களில் மிகவும் துயரம் மிகுந்த மாதமாகும். நாம் இலங்கையின் சட்டங்களை மீறாத வகையில் எம்மவர்களை எங்கும் நினைவு கூருவோம். வீடுகள், பாடசாலைகள், கோவில்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் அமைதியான முறையில் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். எந்தவொரு கட்டத்திலும் சட்டத்திற்கு முரணான செயல்களில் ஈடுபடாது பிரார்த்திப்போம்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது,

 மே 11, 2014

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 6)

வடக்கு மாகாண சபையில் ஆட்சியாளர்களாக உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு குறிப்பிட்ட கட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களல்ல. அது பல்வேறு போக்குடையவர்களை உள்ளடக்கிய ஒரு கதம்ப அரசியற் கூட்டு என்பதனால் அதிலிருக்கும் சிலரின் அரசியல் ஆசைகளைத் திருப்திப்படுத்த அவர்களுக்கும் அவ்வப்போது இடமளிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று என்பதை நாம் முற்றாகப் புறக்கணிக்கவில்லை. அதனால் ஆட்சியிலுள்ள கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் கொண்டுவரும் தீர்மானங்கள் சாராம்சம் அற்றவையாக இருந்தாலும் அல்லது சட்டரீதியான அர்த்தம் அற்றவையாயினும் அவற்றிற்கும் சிறிது இடமளிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றே. அந்த உறுப்பினர்களின் அரசியற் சிற்றின்பங்களுக்கும் சிறு இடம் அளிப்பது தவிர்க்கமுடியாததுதான். ஆனால் அந்தவாறான சிலரின் அரசியற் சிற்றின்ப தீர்மானங்களுக்கான மன்றமாக மட்டுமே வடக்கு மாகாண சபை மாற்றப்பட்டிருப்பதுதான் இங்கு விமர்சனத்துக்குரியது. (மேலும்....)

பிரபாகரனில் தொங்கிக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன்?

விக்னேஸ்வரனை ஜனாதிபதியாக்க ஆசைப்படுவோர் முதலில் நல்ல முதலமைச்சராக நிரூபித்துக்காட்ட அவருக்கு வழிவிட வேண்டும்

லமான சச்சரவுகளுக்கு பின்னர் தான் ஓய்வுபெற்ற நீதிபதி விக்னேஸ்வரன் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தனையும் கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனையும் விட்டால், கூட்டமைப்பில அங்கத்துவம் வகித்துவரும் ஐந்து கட்சிகளுமே ஆரம்பத்தில் விக்னேஸ்வரனை கண்டுகொள்ளவில்லை. அனைவருமே விக்னேஸ்வரனை எதிர்த்தனர். தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைகள் அனைத்திலிருந்தும் எதிர்ப்புக்கள் கிளம்பின. அவர்கள் அனைவரும் தமிழரசு கட்சியின் செயலாளர் நாயகம் அரசியலில் சம்பந்தனைவிடவும் அனுபவசாலியான மாவை சேனாதிராஜாவின் பெயரைத்தான் பிரேரித்திருந்தனர். ஆனாலும் இறுதியில் சம்பந்தன் தான் நினைந்தவாறு விக்னேஸ்வரனையே முதலமைச்சர் வேட்பாளராக ஆக்கினார்.(மேலும்....)

சர்வதேச விசாரணையை தவிர

ஐ.நா.வின் சகல கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார் - ஜனாதிபதி

சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற தயார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேஜி கிஹாராவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் எந்த வகையில் இலங்கைக்கு உதவும் என்று ஜப்பான் குழு ஒன்றை அமைத்து ஆராய்ந்திருந்தது. எனினும் இந்த தீர்மானம் இலங்கைக்கு உதவாது என்பதை ஜப்பான் பின்னர் புரிந்து கொண்டது. இந்த நிலையிலேயே தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் ஜப்பான் கலந்துக் கொள்ளவில்லை என்று ராஜபக்சேவிடம் கிஹாரா கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த ராஜபக்ச, இதனை மற்ற நாடுகளுக்கும் தெளிவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதோடு, சர்வதேச விசாரணையை தவிர ஐ.நா.வின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்ற தயார் என்று தெரிவித்துள்ளார். ஐ.நா.வின் கோரிக்கைகளை இலங்கை அரசு நிறைவேற்றி வருவதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இறுதிக் கட்டப்போரில் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் பற்றி சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்த புலிகளில் இவன் மிகவும் கொடூரமானவன்

மனிதர்களைத் தெருத்தெருவாக உயிருடன் ரயர் போட்டுக் கொழுத்திய கொடூரன்,நரகாசுரன் பிரபாகரனின் சீடன் குரங்கினைக் கொஞ்சுகிறான்.

இவனை மிருகங்கலுடன் கூட ஒப்பிட முடியாது. காரணம் அதுகள் கூட தன் இனத்தை கொல்வது இல்லை. இந்த கிட்டு, என்ற அரக்கன், அன்று தன் இன விடுதலைக்காக போரடிய, சக போரளிகளை, உயிருடன் பிடித்து வீதிகளில் தீயில் போட்டு துடிக்க துடிக்க எரித்து கொன்றழித்த கொடியவன் இந்த இனத் துரோகி, இவனை மறுபிறப்பில் கூட மன்னிக்காது மானிட மனித இனம்.

அந்த கால கட்டங்களை முழுமையா புரிந்து கொள்ள பரந்த வாசிப்பும், திறந்த மனமும் தேவை...

1960கள். 70களில் இந்தியாவில் இருந்த அரசியல், சமூக, பொருளியல் நிலைகளை, தொடர்ந்து உருவான போராட்டங்களை இன்றைய தலைமுறை புரிந்து கொள்வது அவசியம். (ஆனால் இன்னும் இந்த காலங்கள் பற்றி தெளிவாக பலருக்கு தெரிந்திருக்கவில்லை). 1949இல் சீன புரட்சி, பின் 1959 இல் கூப புரட்சி என மார்க்சியம் உலகத்தில் மிக மிக வலிமையான, rationalஆன சித்தாந்தமாக பெரும் தாக்கத்தை உருவாக்கியிருந்த காலங்கள். ஆசியாவில் கம்யூனிசம் வலுபெற்று, மொத்த ஆசியாவும் (தென் அமெரிக்காவும்) கம்யூனிச பாதைக்கு செல்லும் என்று நம்பட்ட காலங்கள். சீனாவில் மாவோவும், கூபாவின் சே மற்றும் ஃபிடலும் ஆண்ட காலங்கள். மலேசியா, இந்தோனேசிய, இலங்கை மற்றும் இந்தியாவில் செம்புரட்சி சாத்தியமாகும் என்று நம்பிய லட்சியவெறி கொண்டு இளைஞர்கள் நக்சல்பாரிகளாக உருப்பெற்ற காலங்கள். இலங்கையில் ஜேவிபி, இந்தியாவில் நகசல்கள், மலேசியாவில், இந்தோனேசியாவில் செம்புரட்சியாளர்கள் வளர்ந்த காலங்கள். வியட்நாம் போர் 1968இல் உச்சம் அடைந்திருந்து. பனி போரும் தான். (மேலும்....)

T - நகர் வியாபார விலையங்களின் உண்மை முகம்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். (மேலும்....)

மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறினார் முகுந்தன்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அக்கட்சியின் முக்கியஸ்தர் தங்க முகுந்தன் யாழ்ப்பாணத்திலுள்ள கட்சிக் காரியாலயத்திலிருந்து தனது மூட்டை முடிச்சுக்களுடன் வெளியேறிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தான் கட்சியின் சகலவிதமான அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் விடுபட்டு சுதந் திரமாக குடும்பத்துடன் ஒற்றுமையாக வாழவுள்ளதாக முகுந்தன் தெரிவித்தார். அந்தளவிற்கு தழிழ் அரசியல் கீழ்த்தரமடைந் துள்ளதாகவும், எந்தவொரு தமிழ் அரசி யல்வாதியுமே தம்மை நம்பியிருக்கும் தமிழ் மக்களுக்காக உண்மையாக நடப்பதில்லை எனவும், மக்கள் நலனை விடவும் தமிழ் அரசியல்வாதிகளிடம் தாம் சார்ந்த சுயநலமே மேலோங்கிக் காணப்படுவதாகவும் முகுந்தன் தெரிவித்தார். தான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அங்கத்தவர் இல்லை என ஆனந்தசங்கரி கூறியதை தான் நிராகரிப்பதாகவும் கடந்த 25 வருட காலமாக இக்கட்சிக்காக தான் பாடுபட்டுழைத்ததாகவும் அவர் தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களைத் தான் வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பட்ட துன்பங்கள், நிர்க்கதி நிலைக்கு இந்தியா தான் முழுக்காரணம்

ஆயுதக்குழுக்களை வளர்த்து தமக்குள் மோதவிட்ட இந்தியாவிற்கு தமிழர் தீர்வில் நாட்டமில்லை

போர் முடிவுக்கு வந்த பின்னர் கூட காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை

- பேராசிரியர் சி.க. சிற்றம்பலம்

தமிழருக்கு இந்தியா மீதுள்ள அதிருப்தியைத் துணைத்தூதுவர் மகாலிங்கம் மத்திய அரசிடம் எடுத்துக்கூற வேண்டும். எமது பிராந்தியத்தில் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்கி அந்தக் குழுக்களை மோதவிட்டு எமது இனத்தை அழிக்கும் நடவடிக்கைக்கு இந்தியா துணை போயிருந்தது என்று பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் கூறினார், ஆயுதக் குழுக்களை வளர்த்து விட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியா, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கூட தமிழருக்கு காத்திரமான தீர்வைப்பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவர் வி. மகாலிங்கத்துக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. அங்கு அவர் உரையாற்றுகையில், ஒரு குழுவுக்கு ஆதரவு வழங்கியிருந்தால் பரவாயில்லை. ஆனால் இந்தியா எல்லா ஆயுதக் குழுக்களுக்கும் ஆதரவு வழங்கியிருந்தது. இதனால் குழு மோதல்கள் இடம்பெற்றன. இதன் பின்னணியில் இந்தியா இருந்தது எனவும் தெரிவித்தார். குழுக்களை மோதவிட்டுப் பிராந்தியத்தில் அழிவை ஏற்படுத்திய இந்தியா, தமிழரின் ஆயுதப் போராட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. தமிழ் மக்கள் படும் துன்பங்கள், நிர்க்கதி நிலைக்கு இந்தியா தான் காரணம் எனவும் குறிப்பிட்டார்.

மே 10, 2014

பஞ்சாப் பிரச்னையைப் புரிந்து கொள்வதற்கு முதலில் சீக்கியர்களைப் புரிந்துகொள்ள வேண்டும்.

முகலாயர்கள் படையெடுப்பின் காரணமாக இந்து மதத்தின் மீது நேர்ந்த தாக்கங்களின் ஒரு விளைவு சீக்கிய மதம். 'இந்து என்று யாரும் இல்லை. முஸ்லிம் என்று யாருமில்லை. கடவுள் ஒருவரே’ என்று சொல்லி சீக்கிய மதத்தைத் துவக்கி வைத்தார் குருநானக். முகலாயர்கள் ஆட்சியில் நிறைய துன்புறுத்தப்பட்டது இந்து மதம். ஒளரங்கசீப் செய்த அக்கிரமங்களைப் பொறுக்க முடியாமல், இந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக ஏற்பட்ட இந்த மதத்தை, போர்க்குணம் கொண்ட அமைப்பாக மாற்றி அமைத்தார் பத்தாவது குரு கோவிந்த்சிங், அவருடைய நெருக்கமான ஐந்து சீடர்களை அழைத்தார். இரும்புப் பாத்திரத்தில் சர்க்கரைத் தண்ணீர் எடுத்து கத்தியால் ஒரு கலக்குக் கலக்கி, அவர்கள் தலையில் தெளித்தார். அந்தத் தண்ணீரை (அமிர்தம்) குடிக்கச் சொன்னார். அவர்கள் புனிதமடைந்தார்கள். இனிமேல் அவர்கள் பெயர்கள் 'சிங்’ (சிங்கம்) என்று முடியும். அவர்கள் தலையையோ, முகத்தையோ மழிக்க மாட்டார்கள். தலையில் ஒரு இரும்புச் சீப்பைச் சொருகிக் கொள்வார்கள். கையில் ஒரு இரும்பு வளை அணிவார்கள், இடுப்பில் எப்போதும் ஒரு சிறு கத்தி வைத்திருக்க வேண்டும். (மேலும்.....)

ஆடத் தெரியாதவனுக்கு மேடை கோணலாம்

TNA  யின் செயற்பாடின்மை குறித்து சுவாமி MP கருத்து

வடக்கில் இராணுவம் நிலை கொண்டிருப்பதைக் காரணமாகக் கூறிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை அப்பகுதியின் அபிவிருத் திக்கோ அல்லது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கோ உருப்படியாக எதனையும் செய்ததாகத் தெரியவில்லை என்பதாகப் பொருள்படும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவர் இவ்வாறு குறைபட்டுள்ளார்.  வட மாகாண சபையை தமிழ்க் கூட்டமைப்பு கைப்பற்றி எட்டு மாதங்களாகப் போகின்றன. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அவர்கள் தமிழ் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்த அக்கட்சி தவறியுள்ளதாகவே எனக்குத் தென்படுகிறது. இராணுவத்தை வெளியேறக் கூறும் அரசியல் செயற்பாடுகள் ஒருபுறமிருக்க தாம் தமது மாகாண அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளைச் செய்ய வேண்டும். வெறுமனே ஒன்றைத் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருப்பதில் எவ்விதமான அர்த்தமும் கிடையாது, பதவிகளுக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தவும் தெரிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

றைக்கப்பட்ட உண்மைகள்

ராஜினி திரணகமவின் கொலைக்கு பின்னால் உள்ள புலி மாணவர்கள

யாழ்பாணத்தில எங்களின் வாழ்விடதுக்கு அண்மையாக ,இருந்த ராஜசிங்கம் மாஸ்டருக்கு ,நான்கு பெண் பிள்ளைகள் இருந்தார்கள்,அதில் இருவர் ஈழ விடுதலைப் போராட்டத்தில் அரசியல் ரீதியாக பங்கெடுத்தனர் , தலை மறைவாக வாழ்ந்த அக்கா நிர்மலா நித்தியாந்தன் ஒருவர்,மற்ற சின்னப் பெண், தங்கசி டாக்டர் ராஜனி திரணகம, அரசியல் அராஜகம், மனித உரிமைகள் மீறல் பற்றி ஒரு புத்தகம் எழுதியதுக்காக 35 வயதில் போட்டு தள்ளப்பட்ட இரண்டு பெண் குழந்தைகளின் அம்மா . ராஜசிங்கம் மாஸ்டர் கணக்கு மாஸ்டர், எந்த நேரமும் அவர் கதைக்கும் போது தலையை சொறிந்து சொறிந்து சிரித்துக்கொண்டே கதைப்பார் , அவர்கள் வட்டுக்கோட்டை தென் இந்திய திருசபை சேர்ச்சுக்கு சேர்மதியானா படித்த,பண்பான,சோலி சுரடுக்கே போகாத குடும்பம், எல்லாருக்கும் உதவி செய்யும் ,அமைதியான அவர்கள் வீடில் இருந்து எப்படி இரண்டு பெண்கள் இப்படி அரசியலில் வந்தார்கள் என்பது இண்டு வரை ஒரு குழப்பம் ,இங்க நான் கொஞ்சம் சொல்லப் போவது டாக்டர் ராஜனி பற்றி, (மேலும்....)

தமிழகத்தில்

அபாயத்தில் 6 மாவட்டங்கள்!

'நாளை மதியம் தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டம் இருக்கிறது. வரவும்!’ - ஏப்ரல் 28-ம் தேதி தமிழகத்தில் உள்ள ஆறு மாவட்ட கலெக்டர்களுக்கு மட்டும் இப்படி ஒரு அவசர அழைப்பு போனது. ஆறு மாவட்ட கலெக்டர்களும் சென்னைக்கு விரைந்தனர். தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் தலைமையில் நடந்த அந்த திடீர் கூட்டம் எதற்குத் தெரியுமா? அடுத்த சில வாரங்களில் தமிழகம் சந்திக்க இருக்கும் தண்ணீர் பிரச்னையைப் பற்றியது. உள்துறைச் செயலாளர், நிதித் துறை முதன்மைச் செயலாளர், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர், ஊரக மேம்பாட்டுத் துறை செயலாளர்கள் அங்கு இருந்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆறு மாவட்ட கலெக்டர்கள்தான் அவசரக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டவர்கள். பிற்பகல் 3.30 மணிக்குத் தொடங்கிய அந்தக் கூட்டம் முடிய இரவு 8 மணி ஆனது. (மேலும்....)

செல்வி சிவரமணியின் நினைவாக

சென்ற நூற்றாண்டில் ஈழத்து நவீன கவிதையில் முக்கிய கவிதா சொல்லியாக பயணித்த சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் பிறந்தவர். யாழ்பல்கலைக் கழகத்தில் அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகியவற்றைக் கற்றவர். இலக்கியத்தில் மட்டுமன்றி ஓவியம், இசை ஆகியவற்றிலும் ஈடுபாடு கொண்டவர். இறுதிப்பரீட்சைக்குச் செல்லும் முன்னரே 1991ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவருக்கு வயது இருபத்திமூன்று ஆகும். தான் தற்கொலை செய்வதற்கு முன்னர் தான் எழுதிய கவிதைகள் யாவற்றையும் எரித்தார். அவ்வாறு எரிக்காமல் எஞ்சியவை இருபத்தியிரண்டு கவிதைகள் ஆகும். இவை சிவரமணி கவிதைகள் என்னும் பெயரில் சித்திரலேகா மௌனகுரு அவர்களால் தொகுக்கப்பட்டு நூலுருப் பெற்றது. தாமரைச் செல்விப் பதிப்பகம் 1996இல் செல்வி – சிவரமணி கவிதைகளை இணைத்து நூல் ஒன்றையும் வெளியிட்டது. (மேலும்....)

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளில் அதிகார வர்க்கம்

தப்படித்து (பறை), சங்கு ஊதி போய் அழைக்கும் வழக்கத்தை மீறிவிட்டதாக ஆதிக்க சாதியினரால் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட தலித் மக்களை சந்திப்பதற்காக இன்று காலையில் செவ்வூர் (சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில்) கிராமத்திற்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினோம். டிஎஸ்பி, வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் கூறினார்கள். உடனடியாக, தலித் சமூகத்தின் பெரியவர்கள் சிலரை அழைத்துக் கொண்டு திருப்பத்தூர் வட்டாட்சியரிடம் புகார் அளிப்பதற்காக சென்றோம். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, புகார் மனுவை வட்டாட்சியரிடம் கொடுத்தேன். (மேலும்....)

மூன்று முறை எம்.எல்.ஏ. சொந்த வீடு இல்லை

1950களில் வீரத்தெலங்கானா புரட்சிப்படைக்கு தபால்கள் கொண்டு செல்லும் முக்கியமான பணியை மேற்கொண்ட தோழர் குன்ஜா போஜ். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மூன்று முறை (1985, 1989, 1994) சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். கோயா பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர். பழங்குடி மக்களால் மிகவும் மதிக்கத்தக்க, பிரபலமான தலைவர் இவர். மூன்று முறை எம்.எல்.ஏ., வாக இருந்தவர் என்பதால், மற்ற கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.,க்களளைப் போல கார்கள், பங்களாக்கள், பண்ணை வீடு, கணிசமான வங்கி இருப்பு என ‘செட்டில்’ ஆகியிருப்பார் என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், இது எதுவுமே இவருக்குக் கிடையாது. (மேலும்....)

18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்த அகதி

உலக அகதிகளின் எண்ணி க்கை 15.4 மில்லியனை தாண்டியுள்ளது. தனது வாழ்வாதாரத்திற்காக அன்றாடம் போராடும் இந்த அகதிகளின் கதை கொடூரமானது. ஆனால் ஈரான் நாட்டைச் சேர்ந்த மஹ்ரான் கரீமி நஸ்ஸரி என்ற அகதியின் கதை சற்று சுவாரஸ்யமானது. இவர் தனது அகதி வாழ்வை விமான நிலையத்தில் கழித்துள்ளார். அதுவும் ஓரிரு தினங்கள் அல்ல சுமார் 18 ஆண்டுகள் அவர் விமான நிலை யத்திலேயே வாழ்ந்திருக்கிறார். ஈரானின் மன்னர் ஷாஹ்வின் ஆட்சிக் காலத்தில் அவருக்கு எதிராக செயற்பட்டதற்கு சிறை மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளான மஹ்ரான் நஸ்ஸரி நாட்டை விடடு வெளியேற்றப்பட்டார். இவ்வாறு ஐரோப்பாவில் புகலிடம் கோரி அலைந்து திரிந்த அவரை எந்த நாடும் ஏற்கவில்லை. (மேலும்....)

மே 09, 2014

யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த அமைதிப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை (09) நடைபெற்றது. பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகளை எச்சரிக்கை செய்து பல்கலைக்கழக வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த துண்டுப்பிரசுரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 'நினைத்தவுடன் பல்கலைக்கழகத்தை மூடுவது தான் மாணவர் மையக் கல்வியா?', 'யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மகத்தான ஆயுதம் பேனா முனையே தவிர துவக்கு முனையல்ல?', 'பல்கலைக்கழகம் என்பது கல்விக்கழகமா அல்லது கொலைக்களமா?' போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை  தாங்கியவாறு போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

ஏழ்மை, ஏக்கம்..... தவிப்பு.........! இது யாரின் தவிர்ப்பால்?

வாழ்க்கையில் எதிலும் ஏற்ற தாழ்வுகள் வரலாம்..குழந்தைகளின் கல்வியில் இருக்ககூடாது இல்லை என்றால் கல்வி இல்லா குழந்தைகளின் வாழ்வில் ஏக்கங்கள் மட்டுமே மிச்சம் இருக்கும்

காரைநகர் கடற்படை முகாம் தாக்குதலில். மரணித்த தோழர்களின் நினைவு நாள் 4 மே 1985.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியால் நடத்தப்பட்ட பாரிய தாக்குதல்களில் குறிப்பிட்டு சொல்லத் தக்க ஒன்று. இத்தாக்குதலில்தான் ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் போராளி தோழர் சோபா களப் பலி ஆனார்.

இதயத்தை தொட்ட வீடியோ விளம்பரம்.

பயங்கரவாதிகளை நினைவுறுத்தும் வைபவங்கள், வழிபாடுகளுக்கு தடை

பலியான உறவுகளுக்கு தனிப்பட்ட முறையில் அஞ்சலி செலுத்தலாம்

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிரிழந்தோருக்கான சமய சடங்குகளை அவரவர் தனிப்பட்ட முறையில் முன்னெடுக்கலாமே தவிர எல். ரீ. ரீ. ஈ. அமைப்பையோ அதற்காக உழைத்த உறுப்பினர்களையோ பிரதிபலிக்கும் வகையில் சமய கிரியைகளை நடத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படாதென பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். நமது நாட்டை கடந்த 30 வருட காலமாக சீரழித்த அபிவிருத்தியை பின்னோக்கி இழுத்துச் சென்ற எல். ரீ. ரீ. ஈ. அமைப்பினையோ அதனை முன்னின்று செயற்படுத்தியவர்களையோ நினைவுகூரும் வகையிலான நிகழ்வுகளை நடத்த நினைப்பது அசாதாரணமானது. அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதெனவும் அவர் கூறினார். நினைவு தினத்தினை அனுஷ்டிக்கும் வகையிலான சமய சடங்குகளை அவரவர் முறைப்படி வீடுகளிலோ அல்லது கோயில்களிலே தனிப்பட்ட முறையில் நடத்துவதற்கு தாராளமாக இடமளிக்கப்பட் டுள்ளதாகவும் பிரிகேடியர் வணிகசூரிய தெரிவித்தார்.

தமிழக அரசியலும், மதிமுகவும்!

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, மதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்து, அது 21 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தமிழர் பிரச்னைகளை கையிலெடுத்து போராடுவது, தமிழர் நலனுக்கு எதிரானவற்றை எதிர்த்து குரல் கொடுப்பது, மதுவிலக்கை கொண்டுவர வலியுறுத்துவது என மதிமுகவும், அக்கட்சி தலைவர் வைகோவும் தமிழக அரசியல் களத்தில் இயங்கினாலும், கட்சி ஆரம்பித்து 20 ஆண்டுகளுக்கு பின்னரும் இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் சட்டமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ உறுப்பினர்களை அனுப்ப இயலாமல் தடுமாறிக்கொண்டுதான் உள்ளது மதிமுக என்றும், அதே சமயம் வைகோவுக்கு பின்னர் பல ஆண்டுகள் கழித்து தேமுதிகவை ஆரம்பித்த விஜயகாந்த் கூட எதிர்க்கட்சி தலைவர் ஆகும் அளவுக்கும், நாடாளுமன்ற தேர்தலில் மற்ற கட்சிகள் அவருடன் கூட்டணி அமைக்க விரும்பி வரும் அளவுக்கும் வளர்ந்துவிட்டார் என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. (மேலும்....)

இந்திய நாட்டின் முதல் வாக்காளர் 97 வயது ஷியாம் சரண் நேகி

நாட்டின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி (வயது 97) நேற்று முன்தினம் தன் வாக்குரிமையை அளித்ததுடன், அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் வாக்க ளிக்க வேண்டும் என வேண்டு கோளும் விடுத்தார். ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்த இந்தியா 1947ல் விடுதலை பெற்ற போதிலும் முதல் பொதுத்தேர்தல் 1951ல் தான் நடைபெற்றது. நாட்டின் பிற மாநிலங்களில் பொதுத்தேர்தல் துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் பனி சூழ்ந்த இமயமலை மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. கொட்டும் பனி, கடும் குளிருக்கு நடுவே 1951 அக்டோபரில் சினி என்ற இடத்தில் இருந்த வாக்குச்சாவடியில் முதல் ஆளாக வந்து இவர் வாக்களித்தார், அப்போது 34 வயதாக இருந்த ஷியாம் சரண் நேகி இதன் மூலம் நாட்டின் முதல் வாக்காளர் என்ற பெருமையை பெற்றார். அதன்பின் நடைபெற்ற எந்த தேர்தலிலும் அவர் வாக்களிக்காமல் இருந்ததில்லை. காங்கிரசை சேர்ந்த முதல்வர் வீரபத்ர சிங் தலைமையிலான இமாச்சல பிரதேசத்தின் நான்கு லோக்சபா தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தலில் நாட்டின் முதல் வாக்காளர் நேகி மாலை மரியாதையுடன் அழைத்து வரப்பட்டு வாக்களிக்கச் செய்யப ;பட்டார். அவருடன் மனைவி ஹிரா மணி (87) வந்து வாக்களித்தார். பின் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் முன் பேசிய நேகி, அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும்; வாக்களிப்பது தான் நம் முதல் ஜனநாயக கடமை. நான் இதுவரை ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காமல் இருந்ததில்லை.

புலிகள் இயங்குவதை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தற்போதும் இயங்குகின்றதாகவும் சில புலம்பெயர்ந்தோரூடாக நிதிகளை பெற்று வருவதாகவும், அமெரிக்கா அண்மைக்கால அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக கூறியுள்ளதென இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. பயங்கரவாத இயக்கம் பற்றிய அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அண்மைய அறிக்கை, தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் தற்போதும் இலங்கைக்கும் மற்றும் சர்வதேசத்திற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக அறிவித்துள்ளதென பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை (08) கூறினார். தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் அதன் சர்வதேச தொடர்புகள் முலம் வட அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாளும் தமிழர்களின் ஆதரவுடன் ஆயுதங்கள், நிதிகள் மற்றும் தேவைகளை பெற்றுவருகின்றதென அமெரிக்காவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் அதன் செயற்பாடுகளுக்கு நிதி சேகரிக்கவும் நிதிகளை அனுப்பவும் தர்ம நம்பிக்கை நிதியங்களை முகப்பாக பயன்படுத்தி வருகின்றது என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பயங்கரவத எதிர்ப்ப நிறுவகம் அதன் புதிய வருடாந்த அறிக்கையில் கூறியுள்ளது. தமிழீழ விடுதலை புலிகளுக்கு நிதி வழங்கும் முகமாக வெளிநாடுகளில் இயங்கும் பல குழுக்களையும் தனியாட்களையும் இலங்கை அரசாங்கம் அண்மையில் பட்டியலிட்டுள்ளது. இதுவரையில் கனடா மட்டுமே இந்தப் பட்டியலை ஏற்கப்போவதில்லையென தெரிவித்திருப்பது, இலங்கையின் பட்டியலை கனடா ஏற்க மறுப்பதானது, கனடா, ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக பெருட்படும் என பிரிகேடியர் ருவான் வணிகசூரிய கூறினார்.

கோவாவில் குண்டுவெடிப்பு

கோவாவில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவாவின் மட்கான் பகுதியில் இன்று மாலை வெடிகுண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் ஒருவர் உயிரிழந்து உள்ளதாகவும், 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், வெடிகுண்டு நிபுணர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

வட மாகாண புதிய ஆளுநராக அநுர சேனநாயக்கா?

வட மாகாணத்தின் புதிய ஆளுநராக, தற்போதைய பிரதிப் பொலிஸ் மா அதிபரான அநுர சேனநாயக்கா நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக நம்பத்தகுந்த அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய ஆளுநர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியின் பதவிக்காலம் அடுத்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அந்த சமயத்தில் தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்கா தமது பதவியிலிருந்து ஓய்வுபெற்று விடுவார் என்றும், அதையடுத்து அவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச தலைமைப்பீடத்துக்கு மிக நம்பிக்கையானவரான அநுர சேனநாயக்கா, அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படக்கூடும் என முன்னர் எதிர்ப்பார்க்கப்பட்டது. அண்மையில் அவரது பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவிக்காலம் முடிவுற்ற சமயம் அது மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுமிருந்தது. அவரை அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கும் நோக்குடனேயே அந்த பதவி நீடிப்பு வழங்கப்பட்டதாகவும் கருதப்பட்டது. எனினும், அரசு தலைமை, தற்போதைய பொலிஸ்மா அதிபரே அப்பதவியில் தொடரட்டும் என்றும், அநுர சேனநாயக்காவை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கலாம் என்றும் இப்போது முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகின்றது. அநுர சேனநாயக்கா, தென்னிலங்கையில் பெரும் வரவேற்பைப் பெற்ற சிங்கள மேடைப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பல சிங்களப் பாடல் இறுவட்டுக்கள் வெளிவந்துள்ளன. சிங்கள மக்கள் மத்தியில் அவை அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. (நன்றி: மலரும்)

மாணவிகளை இராணுவம் துன்புறுத்துவதாக வெளியான செய்திக்கு புதுமுறிப்பு அதிபர் மறுப்பு

கிளி / புது முறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவிகள் இராணுவ சிப்பாய்களினால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுவதாக ‘தமிழ் கார்டியன்’ பத்திரிகையில் வெளியான செய்தியினை பாடசாலை அதிபர் மறுத்துள்ளார். இணைய தளத்தில் வெளியான தவறான செய்தி தமது பாடசாலைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியிருப்பதுடன், இராணுவத்தினரின் சேவைகளை கலங்கப்படுத்தியிருப்பதாகவும் குறிப்பிட்டு அதிபர், பரந்தனிலுள்ள 662 வது படைத் தளபதிக்கு உத்தியோகபூர்வ கடிதமொன்றை வரைந்துள்ளார். ரோந்தின் போதும் இராணுவத்தினர் எமது பிள்ளைகளுக்கு எந்தவொரு கெடுதலையும் செய்த தில்லை. இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளில் எமது பிள்ளைகள் பங்குபற்றுவார்கள். செய்திகளில் குறிப்பிடுவது போல் எமது பிள்ளைகளுக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றிருப் பின், அவர்களது பெற்றோர் அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதித்திருக்க மாட்டார்கள். மீள்குடியேற்றத்தினைத் தொடர்ந்து எமது பிரதேசத்துக்குப் பொறுப்பான படைத்தளபதி பாடசாலையின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கி வரும் அதேநேரம், எமது கல்வி நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துச் சேவைகள், வருடாந்த சுற்றுலா ஆகியவற்றுக்கும் இராணுவத்தினர் உதவி புரிகின்றனர்.

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் பெற திட்டமிட்டபடி சர்வஜன வாக்கெடுப்பு

கிழக்கு உக்ரைன் சுயாட்சி பெறுவது அல்லது சுதந்திரம் பெறுவது குறித்த சர்வஜன வாக்கெடுப்பு திட்டமிட்டபடி இந்த வார இறுதியில் நடத்தப்படும் என ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் அறிவித்துள்ளனர். இந்த சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைக்கும்படி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விடுத்த கோர்க்கையை பிரிவினைவாதிகள் ஏற்க மறுத்துள்ளனர். இதில் பேச்சுவார்த்தைக்கு நிபந்தனை விதித்து சர்வஜன வாக்கெடுப்பை ஒத்திவைக்குமாறு புடின் கடந்த புதன்கிழமை கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் கிளர்ச்சியாளர்களின் முடிவு கவனத்தில் கொள்ளப்பட மாட்டாது என்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் உக்ரைன் அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் சர்வஜன வாக்கெடுப்புக்காக மில்லியன் கணக்கான வாக்குச் சீட்டுகள் தயாராக உள்ளன. (மேலும்....)

மே 08, 2014

கோதரப் படுகொலையே தமிழர் உரிமைப் போராட்ட தோல்வியின் முதல் படி ரெலோ (லண்டன்)

புலிகளின் சகோதரப்படு கொலைகளால் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் ரெலோ தோழர்களுக்கு எமது அஞ்சலி !

ரெலோ ஈபிஆர்எல்எப் மீதான புலிகளின் படுகொலைகளே புலிகளின் ஈழப்போராட்டத்தின் தோல்வியாகும் தமிழர்களின் ஜக்கியத்தை குலைத்து மக்களை கொலை செய்து அடிபணியவைத்து அந்த மக்களின் போராட்த்திற்க்கு தலைமை கொடுத்ததே புலிகளின் வெற்று இராணுவ போராட்டமாகும் இது புலிகள் அழிந்த பின்னரும் தமிழர் உரிமைப் போராட்டத்தில் பாதிப்புக்களை ஏற்ப்படுத்திக் கொண்டிருக்கின்றது. தமிழீழ போராட்ட வரலாற்றில் அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழ் இனப்படுகொலையை மட்டும் காரணமாக எடுத்துக் காட்டி எமது தமிழர் உரிமைப்போராட்ட தோல்வியினை எழுதிவிட முடியாது. எமது போராட்ட வராலாற்றில் தனிமனிதர்களின் சாகசங்களும் கொலை வெறிகளும் தன்னை மட்டும் முன்நிறுத்தி அல்லது தான் சார்ந்த இயக்கத்தை மட்டும் முன்னனிறுத்தி போராட்டத்தை தனது தலைமையில் மட்டும் செய்துவிடலாம் என்ற பிரபாகரனின் அரசியல் வறுமையுமே போராட்ட தோல்விக்கான முதல் காரணங்களாகும். (மேலும்....)

கனடாவில்

ஆக்க பூர்வ சிந்தனை செயற்பாடுகளுக்கான தமிழ் மக்கள் மையம்  நடாத்திய  மேதின நிகழ்வு

இலங்கையில் தொழிற்சங்கங்களிலும், இடதுசாரி அமைப்புக்களிலும் ஈடுபட்டு இன்றுவரை இடதுசாரிகளாக தமது செயற்பாட்டை முன்னெடுத்து வரும் முதிர்ந்த பழம்பெரும் இடதுசாரித் தோழர்களால் வழமைபோல் இவ்வருடமும் தொழிலாளர் தனிமான மே தினம், மே 2ம் திகதி கனடா ரொரன்ராவில் ஒரு கலந்துரையாடல் என்ற வகையில் அனுஷ்டிக்கப்பட்டன. வழமைபோல் நானும் இவ் நிகழ்வில் கலந்து கொண்டேன். இடதுசாரிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட மேதினம் என்றாலும்; சிங்கள, முஸ்லீம் மக்கள் அற்ற ஏனைய தமிழ் பேசும் செயற்பாட்டாளர்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். மூத்த தொழிற்சங்க, இடதுசாரிச் செயற்பாட்டாளர் தோழர் தருமராஜா அவர்களின் தலைமையில் இக் கூட்டம் நடைபெற்றது. (மேலும்....)

சென்னைக்குள் மேலும் இரு உளவாளிகள் ஊடுருவி இருக்க வாய்ப்பு, மிகப்பெரிய தாக்குதலுக்கு தீவிரவாதிகள் சதித்திட்டம்

இலங்கையில் இருந்து, தீவிரவாதிகள் கடல் வழியாக வந்து, தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னையில் சமீபத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடர்பு வைத்திருந்ததாக ஜாகீர்உசேன் என்பவர் கைது செய்யப்பட்டார். இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இருவர் தன்னை சென்னைக்கு உளவு பார்க்க அனுப்பியதாக ஜாகீர்உசேன் தெரிவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. 3 நாட்கள் காவலில் வைத்து ஜாகீர் உசேனிடம் விசாரணை நடத்திட நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அவரிடம் இரகசிய இடத்தில் வைத்து கியூ பிரிவு பொலிசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் ஜாகீர் உசேன் மேலும் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கியூ பிரிவு பொலிசார் இதை உறுதி செய்யவில்லை. (மேலும்....)

உலகிலேயே மிகப் பெரிய தடுப்பு முகாம் எந்த நாட்டில் இருக்கிறது தெரியுமா?

உலகிலேயே மிகப் பெரிய தடுப்பு முகாம் எந்த நாட்டில் இருக்கிறது தெரியுமா? இஸ்ரேல்! எகிப்தின் சினாய் பாலைவனத்தின் ஊடாக இஸ்ரேலுக்குள் நுழைந்து அகதித் தஞ்சம் கோரும், ஆயிரக் கணக்கான ஆப்பிரிக்க அகதிகளை தடுத்து வைப்பதற்காக அந்த சிறைச் சாலை கட்டப் பட்டு வருகின்றது. அது கட்டி முடிக்கப் பட்டவுடன், சுமார் 8000 அகதிகளை அடைத்து வைக்கலாம். எரித்திரியா, சூடான், போன்ற நாடுகளில் இருந்து, யுத்தம், சர்வாதிகார அடக்குமுறை காரணமாக புலம்பெயரும் அகதிகள், பல்லாயிரம் டாலர்கள் செலவழித்து இஸ்ரேலுக்கு செல்கின்றனர். லிபியாவிலிருந்து இத்தாலி செல்லும் கடல் வழிப்பாதை அடைக்கப் பட்டு விட்டதால், வேறு வழியின்றி எகிப்து மூலமாக இஸ்ரேலுக்கு செல்கின்றனர். சினாய் பாலைவனத்தில் சட்டவிரோதமாக எல்லை கடக்க உதவும், எகிப்திய பெதூயின் கடத்தல்காரர்கள், அதிக பணம் கறப்பதற்காக பல்வேறு நெருக்கடிகளை கொடுக்கின்றனர். அடித்து துன்புறுத்தப் படுத்தல், பாலியல் பலாத்காரம் போன்ற இன்னல்களைக் கடந்து இஸ்ரேல் வந்து சேர்ந்தாலும், அங்கே அகதியாக ஏற்றுக் கொள்ளப் படுவதில்லை. சட்டப்படி வேலை செய்ய முடியாது. மருத்துவ உதவியும் கிடைக்காது. இன்றைய இஸ்ரேலில், ஆப்பிரிக்க அகதிகள் படும் அவலம், ஐரோப்பாவில் யூதர்கள் பட்ட அவலத்திற்கு சற்றிலும் குறைந்ததல்ல.
 

முருங்கைக் கீரையில் உள்ள மருத்துவக் குணம்

ஒவ்வொரு கீரையிலும் ஒவ்வொரு மருத்துவக் குணம் உண்டு. ஆகையினால் தினம் ஒரு கீரையைப் பயன்படுத்தி முன் கூட்டியே நோய் வராமல் பாதுகாப்போம். எல்லா இடங்களிலும் தாராளமாகக் கிடைக்கும் கீரைகளுள் முருங்கையும் ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்காது. இதில் விற்றமின் A,B,C  ஆகிய உயிர்ச்சத்துக்களுடன் புரதச்சத்து, இரும்புச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் ஏராளமாய் உள்ளன. இது குளிர்ச்சியைத் தர வல்லது. இக்கீரை உடல் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் மிகவும் ஏற்றது. நரம்புகளை வலுவூட்டுகின்றது. பித்தத்தைத் தணிக்கும் ஆற்றல் இதற்குண்டு. பித்தம் சம்பந்தமான நோயால் வருந்துபவர்கள் இக்கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிடலாம். சிலருக்கு குரல் வளையில் வீக்கமும் வலியும் இருக்கும். அத்தகையவர்கள் இக்கீரையை சாப்பிட வீக்கமும் வலியும் குணமாகும். வயிறு, குடல், கல்லீரல், மண்ணீரல் போன்ற உறுப்புகளுக்கு வலுவைத் தரவல்லது. உணவு எளிதில் ஜீரணமாவதுடன் உணவிலுள்ள சத்துக்கள் இரத்தத்துடன் கலக்க உதவும். (மேலும்....)

பல்கலைக்கழத்திற்கு இராணுவம், பொலிஸ் உள்நுழையாது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்திற்குள் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் உள்நுழைவதனை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடம் யாழ்.மாவட்;ட படைகளின் கட்டளைத் தளபதி உதய பெரேரா உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர், பீடாதிபதிகள், சிரேஷ்;ட மாணவ ஆலோசகர்கள், மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் மற்றும் யாழ்.மாவட்ட படைகளின் தளபதிக்கு இடையிலான கலந்துரையாடல் காங்கேசன்துறையில் அமைந்துள்ள தல்செவன விருந்தினர் விடுதியில் புதன்கிழமை (07) நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் ஒட்டப்பட்ட துண்டுப்பிரசுரம் மற்றும் முள்ளவாய்க்கால் நினைவு தினம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் பலரும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்துள்ளதால் அவர்களை நினைவுகூர்ந்து பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் துக்க தினத்தினை அனுஷ்டிக்க அனுமதிக்கும்படி மாணவர் ஒன்றியத்தினர் கேட்டிருந்தனர். எனினும் அதற்கு இராணுவத்தளபதி, கூட்டமாகச் சேர்ந்த அனுஷ்டிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனித்தனியாக நீங்கள் உங்கள் வீடுகளில் அனுஷ்டிக்கலாம் எனவும் தெரிவித்தார். அத்துடன், மாணவர்கள் கல்வியில் அக்கறை செலுத்தவேண்டுமே தவிர அரசியல் விடயங்களில் உள்நுழைய வேண்டாம் எனவும் உதயபெரேரா மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும், பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் பல்கலைக்கழத்திற்கோ அல்லது விடுதிகளுக்கோ இராணுவத்தினர் உள்நுழையாமல் இருக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிரிய அரச எதிர்ப்பாளர் கோட்டையான ஹோம்ஸ் நகரிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற்றம்

சிரிய கிளர்ச்சியாளர்கள் தமது கடைசி கோட்டையாக இருந்த ஹோம்ஸ் நகரில் இருந்து வெளியேற ஆரம்பித்திருப்பதாக செயற்பாட்டா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐ.நா. மத்தியஸ்த்தர்களுடன் ஏற்பட்ட உடன் படிக்கைக்கு அமையவே நகரில் இருந்து பஸ் வண்டிகள் மூலம் கிர்ச்சியாளர்கள் வெளியேற ஆரம்பித்துவிட்டதாக அங்கிருந்து வரும் செய் திகள் குறிப்பிடுகின்றன. இதன்படி நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரின் வடபகுதிக்கு வந்த இரு பஸ் வண்டிகள் ஆயுததாரிகளை ஏற்றிச்சென்றுள்ளது. ஜனாதிபதி அசாத் அரசுக்கு எதி ரான மக்கள் எழுச்சி போராட்டத்தின் மையமாக இருந்த ஹோம்ஸ் நகரின் மையப்பகுதி தற்போது கிளர்ச்சியாளர்கள் அற்ற இடமாக மாறிவருகிறது. ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்ற இலக் குடன் செயற்பட்ட கிளர்ச்சியாளர்களும் அவர் களது குடும்பத்தினரும் கவலையுடன் நகருக்கு விடைகொடுத்ததாக அங்கிருக்கும் செய்தியா ளர்கள் குறிப்பிட்டுள்ளனர். (மேலும்....)

மௌனம் கலைத்தார் மோனிக்கா

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி; பில் கிளிண்டனுடன் பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் வெள்ளை மாளிகை பயிற்சி ஊழியர் மோனிக்கா லூயின்ஸ்கி அவ்விவகாரம் குறித்து தனது நீண்ட கால மௌனத்தைக் கலைத்து, மனம் திறந்துள்ளார்.அமெரிக்காவின் 'வேனிட்டி பேர்' என்ற சஞ்சி கைக்கு அளித்த பேட்டியில், இப்போது 40 வயதாகும் மோனிக்கா, கிளிண்டனுடன் நடந்த இந்த பாலியல் தொடர்பு குறித்து தான் வருந்துவதாகக் கூறியிருக்கிறார். ஜனாதிபதி கிளிண்டன் தன்னைப் பயன்படுத் திக்கொண்டார் என்று கூறியிருக்கும் மோனிக்கா, ஆனால் தங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு என்பது இருவரும் மனதொப்பி நடந்ததுதான் என்றும் கூறியிருக்கிறார். ஜனாதிபதி கிளிண்டனைப் பாதுகாக்க, தான் ஒரு பலியாடாக்கப்பட்டதாகவும் மோனிக்கா கூறுகிறார். கிளிண்டன் நிர்வாக அதிகாரிகள், அவர் மீது வழக்கு தொடர்ந்த சிறப்பு ப்ரொஸிக்யு+ட்டரின் ஏவலாட்கள், இரு கட்சிகளின் ஆட்கள், ஊடகங்கள் என்று எல்லோருமே தன் மீது கறை பூசியதாக மோனிக்கா கூறுகிறார். (மேலும்....)

தென்னாபிரிக்காவில் பொதுத்தேர்தல் நிறைவு

சிறுபான்மை வெள்ளையின ஆட்சி முடிவுற்று 20 ஆண்டுகளை எட்டும் நிலையில் தென்னாபிரிக்காவில் நேற்று பொதுத் தேர்தல் இடம்பெற்றது. ஆபிரிக்க தேசிய கொங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஜக்கப் சுமா தனது இரண்டாவது ஐந்து ஆண்டு தவணைக்கு தேர்வாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டிசம்பரில் தென்னாபிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா மரணித்த பின் அங்கு இடம்பெறும் முதல் தேர்தல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தோர்தலில் வாக்களிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதில் தென்னாபிரிக்காவில் நிறப்பாகுபாட்டு ஆட்சி முடிவுற்ற 1994 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் முதல் முறை பங்கேற்கும் தேர்தலாகவும் இது அமைந்தது. இந்த தேர்தலில் ஆளும் ஏ.என்.சி. கட்சி 60 வீத வாக்குகளை வென்று வெற்றிபெறும் என்று கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. எனினும் இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஆதிக்கம் குறித்து தெளிவில்லாமல் இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியாக நிறப்பாகுபாட்டு எதிர்ப்பாளர் ஹெலன் சில்லேவின் தேசிய கூட்டணி உள்ளது. அதேபோன்று ஏ.என்.சி. கட்சியில் இளைஞர் தலைவராக இருந்த ஜ_லியஸ் அலேமேவினால் கடந்த ஆண்டு நிறுவப்பட்ட வர்த்தக சுதந்திர போராளிகள் கட்சி ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மே 07, 2014

இந்திய பன்முக வாழ்வியலின் மீதான தாக்குதல்

சென்னை மத்திய ரயில் நிலையம். தென்னகத்தின் ஆத்மா ஒருவரலாற்றுக் குறியீடு. பல இன மத மொழி மானிடர்களின்  சங்கமம் அது. இந்தியாவின் 8 திசையிலும் இருந்தும்  மனிதர்கள் வருவதும் -போவதும்- காத்திருப்பதும் உறங்குவதுமாக வண்ணங்களின் கலவையாக அது எப்போதும் இருந்த கொண்டிருக்கும். மனிதர்கள் நாம் ஒன்றாக வாழலாம் என்ற பெருநம்பிக்கையை ஏற்படுத்தும் ஸ்தலம் அது. உலகளாவிய மானிடம் எப்படி இருக்கும் என்பதற்கு அது ஒரு மாதிரி. இத்தகைய இடங்கள் உலகில் பேணிப்பாதுகாக்கபடவேண்டிவை. மகத்தான வாழ்வின் ஆதார சுருதி. மனித குலத்தின் உயிர்ப்பு- ஜீவன் இங்கு இரவு பகலாக இருக்கும். இந்த ரயில்நிலையங்கள் பயணங்கள் பற்றி அற்புதமான பதிவுகள் இந்திய உன்னத இலக்கியங்கள் சினிமாக்களில் இடம்பெற்றிருக்கின்றன. தேசிய ஒருமைப்பாட்டின் சின்னம் இது. வாழ்வின் மீதானபிடிப்பை ஏற்படுத்தும் இடம். (மேலும்....)

இலங்கை அகதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - ராமதாஸ்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பான உலகத்தின் கண்டனங்களையெல்லாம் கண்டுகொள்ளாத இலங்கை அரசு, அந்த நாட்டில் மீதமுள்ள தமிழர்களையும் கொன்றொழித்துவிட்டு முழுமையான சிங்கள தேசத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இவ்வளவுக்கு பிறகும் இலங்கையிடம் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பது எவ்வகையிலும் பயனளிக்காது.   இனப்படுகொலை முடிந்து 5 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், உலக நாடுகள் கொடுத்த அழுத்தங்களிலிருந்து இலங்கையை பாதுகாத்ததுடன், அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இந்தியா பாதுகாத்து வருகிறது. அதன்விளைவாகத் தங்களைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்ற துணிச்சலில் ஆட்சியாளர்கள் மீண்டும் இனப்படுகொலையை தொடங்கியுள்ளனர். இதைத் தடுக்காவிட்டால் இலங்கையில் தமிழினம் முற்றாக அழிக்கப்பட்டுவிடும். (மேலும்....)

சிக்கிய ஜாகீர்... சிதறிய ரயில்...

இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆயுதங்களை அனுப்ப வேண்டும். வெடிகுண்டுகளை வெடிக்க வேண்டும் - இந்த மூன்றும்தான் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்களின் டியூட்டி என்பார்கள்.  அந்த டியூட்டி மே 1-ம் தேதியன்று காலை 7.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அரங்கேறியது. இரட்டை வெடிகுண்டுகள் வெடித்ததில் ஓர் இளம்பெண் பரிதாபமாக இறந்துபோக, 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதன் பின்னணியில் சொல்லப்படும் பெயர் ஜாகீர் உசேன். இரண்டு நாட்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்கிற உளவாளியை சென்னை திருவல்லிக்கேணியில் வைத்து க்யூ பிரிவு போலீஸார் பிடித்தனர். ஆரம்பத்தில் எதுவுமே பேசாமல் மௌனம் சாதித்த ஜாகீர் உசேனிடம், சில ஆதாரங்களை போலீஸார் காட்டியவுடன் மிரண்டு போனார். ஒரு கட்டத்தில், 'என் மீது கை வைத்தால் தமிழகத்தின் அமைதி கெடும். பார்க்கிறீர்களா?' என்று சவால் விட்டிருக்கிறார். அதையடுத்து, போலீஸார் அன்பாக விசாரிக்க ஆரம்பித்ததும், கடகடவென விஷயத்தைக் கொட்டினாராம். (மேலும்....)

Canada’s Rathika, MP or Terrorist

(By Camelia Nathaniel)

Young Canadian politician is under investigation for her links to separatist politicians, criminals and terrorists in India and Sri Lanka. Arriving as a tourist, Rathika Sitsabaiesan met with separatist politicians, criminals and terrorists in Tamil Nadu and northern Sri Lanka. Rathika met with LTTE patrons in Tamil Nadu who supported Velupillai Prabhakaran’s three decade long campaign of terror. Since the defeat of the LTTE, to revive violence in Sri Lanka, the LTTE remnant leaders in the West are linking with Tamil Nadu separatist leaders. Rathika visited Tamil Nadu to meet the LTTE patrons there. Due to a Canadian and US travel ban, these separatist leaders can no longer visit the West. There are some restrictions on leaders of LTTE fronts travelling to India as well. For supporting the revival of the LTTE, Global Tamil Forum (GTF) President Fr. S.J. Emmanuel was deported from Chennai, India on October 11, 2011. Both GTF and its Canadian wing, the Canadian Tamil Congress (CTC), are designated as terrorist entities. Fr. Emmanuel is the ideological mentor of Rathika and David Poopalapillai, the National spokesperson of CTC, is her patron. (more....)

கிழக்கு உக்ரைனில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் பலர் பலி

கிழக்கு உக்ரைனில் தொடரும் மோதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். இதில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் உக்ரைன் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்றையும் சுட்டுவீழ்த்தியுள்ளனர். ஸ்லோவியன்ஸ்க் நகரை கட்டுப்பட்டில் வைத்திருக்கும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் நான்கு துணை இராணுவ பொலிஸாரும் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை காலை படையினர் நகரை நோக்கி முன்னகர்ந்தபோது ஆயுததாரிகள் பதுங்கி நின்று தாக்குதல் நடத்தியுள்ளனர். உக்ரைன் அமைச்சு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு ஒன்றில் அதிகாரிகள் கொல்லப்பட்ட விதம் குறித்து விபரிக்கப்படவில்லை. ஆனால் பிரிவினைவாதிகள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், உக்ரைன் துருப்புகள் 800 ரஷ்ய ஆதரவு படையினருக்கு எதிராக தீவிரவாத எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது கனரக இயந்திர துப்பாக்கி கொண்டு எம்.ஐ. 24 ஹெலிகொப்டர் ஒன்று ஸ்லோவியான்ஸ் நகருக்கு அருகில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. எனினும் விமானிகள் உயிர்தப்பியதாக உக்ரைன் அரசு குறிப்பிட்டுள்ளது. கிளர்ச்சியாளர் பகுதியில் உக்ரைன் இராணுவம் யுத்த நடவடிக்கையை முன்னெடுத்ததை அடுத்து அது இழந்த மூன்றாவது ஹெலிகொப்டர் இதுவாகும். ரஷ்ய ஆதரவு செயற்பாட்டாளர்கள் உக்ரைனின் கிழக்கு நகரங்களில் உள்ள அரசு கட்டிடங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோகா கோலா பானங்களில் பயன்படுத்தும் சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்க முடிவு

உலகின் மிக பெரிய குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான கோகா கோலா, அது தயாரிக்கும் சில குளிர் பானங்களிலிருந்து ஒரு சர்ச்சைக்குரிய மூலப்பொருளை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. பானங்களில் சுவையை நிலைப்படுத்த பயன்படுத்தப்படும் 'பி.வி.ஒ.- பிரோமினேடட் வெஜpடபிள் ஒயில்' அதாவது புரோமீன் என்ற ரசாயனம் கலந்த தாவர எண்ணெயை மாற்றவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த எண்ணெய் தீயணைப்பு பொருட்களிலும் காணப்படுகின்றது என்பது குறிப்பிடதக்கது. இந்த மூலப்பொருள், கோகா கோலா நிறுவனம் தயாரிக்கும், பெண்டா, பவரேட் போன்ற குளிர்பானங்களில் காணப்படுகிறது. 'பி.வி.ஒ.'வை நீக்கும் இந்த முடிவு பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்டது அல்ல என்றும் இந்த குறிப்பிட்ட இரசாயனத்தின் பயன்பாடு அந்த குளிர்பானங்கள் விற்கப்படும் அனைத்து நாடுகளின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றும் ஜhஷ் கோல்ட் என்ற கோகா கோலா நிறுவனத்துக்காகப் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கோகா கோலாவின் இந்த முடிவு, நிறுவனங்கள் மீது பொதுமக்களின் அழுத்திற்கு இருக்கும் சக்தியை பிரதிபலிக்கிறது. 'பி.வி.ஒ.'வின் பயன்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பும் ஒரு இணையதள மனுவில் ஆயிரக்கணக்கான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.

திருமலை இலங்கைத்துறை கரையோரத்தில் துப்பாக்கி மீட்பு

திருகோணமலை இலங்கைத் துறை கரையோரத்தில் ரி56 ரகத் துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ரவைகள் காணப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கைத்துறை மற்றும் ஈச்சிலம்பற்று பகுதியில் தேடுதல் நடத்தப்பட்டிருப்பதுடன், விசாரணைகள் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார். இலங்கைத் துறை கரையோரத்தில் ரி56 ரகத் துப்பாக்கியொன்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகள் உள்ள பையொன்றும் கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை மாலை 6.30 மணிக்கு உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இரண்டு நபர்கள் உரப்பையில் ஏதோவொரு பொருளைத் தூக்கிச் சென்றுள்ளதை கண்டுள்ளார். குறித்த அதிகாரியைக் கண்டதும் இரண்டு சந்தேகநபர்களும் தப்பியோடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை நடத்தியதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்துள்ளார்.

கடமையிலிருந்த இரு கொன்ஸ்டபிள்கள் ஆயுததாரிகளால் நள்ளிரவில் கடத்தல்

குருணாகல் - தம்புள்ளை வீதியில் நள்ளிரவில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மற்றுமொரு பொலிஸ் கொன்ஸ்டபிள் படுகாயமடைந்து குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிராயுதபாணிகளாக வீதிச்சோதனை யில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தி யோகத்தர்களை வெள்ளைவானில் கடத்திச்சென்று சீருடைகளைக் களற்றி சுட்டுக்கொன்ற சம்பவம் குருணாகல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத் தியுள்ளது. மின்னேரியா, மட்டக்களப்பு, திருகோணமலை, இங்கினியாகல, வவுனியா, சிலாபம், முந்தல், மன்னார், குருநாகல் ஆகிய பகுதிகளிலும் இவர் கடமையாற்றியுள்ளார். தம்புள்ளை - குருணாகல் வீதியில் இரவு போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்தபோது தம்புள்ளை பகுதியிலிருந்து வந்த வெள்ளை நிற வானொன்றை நிறுத்தி சோதனையிட் டுள்ளனர். வானின் அனுமதிப்பத்திரம், சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை கோரியபோது, வானுக்குள்ளிருந்தவர்கள் திடீரெனப் பாய்ந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரையும் பிடித்து கடத்தி படகமுவ காட்டுப் பகுதிக்குக் கொண்டு சென்றுள்ளனர்.காட்டுப் பகுதியில் வைத்து பொலிஸ் கொன்ஸ்டபிள் சம்பத்தை வெளியே இழுத்து ரி56 ரகத் துப்பாக்கியினால் சுட்டுக் கொன்றுள்ளனர். இதனையடுத்து மற்றைய பொலிஸ் கொன்ஸ்டபிளான விஜயசூரிய கொலையாளிகளுடன் போராடியுள்ளார். இதன்போது துப்பாக்கியின் மகசின் கழன்றுள்ளது. இவர் வானில் வந்த நபர்களுடன் போராடி படுகாயத்துடன் இருளில் ஓடித்தப்பியுள்ளார். இதனையடுத்து கிராமத்து மக்கள் வரவே சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

ஒருதலை காதலால் இளம்பெண் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை

ஒருதலைக் காதலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொலை செய்து துண்டு, துண்டாக உடலை வெட்டி ஏரியில் வீசியுள்ளார். சென்னையில்தான் இந்த பயங்கர சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை அருகே உள்ள போரூர் ஏரியில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்ட ஒரு பெண்ணின் உடலை காவல்துறையினர் கைப்பற்றி விசாரித்தனர். அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அதனை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறையினர் இறங்கினர். (மேலும்....)


மே 06, 2014

மூன்றாவது புலம்பெயர் அமைப்பினரது பின்துணையுடன் தேவிகன் - அப்பன் - கோபி ஆகிய மூவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டம் முயற்சி எப்படி ஸ்ரீலங்காவினால் முறியடிக்கப்பட்டது. -- (2)

(டி.பி.எஸ்.ஜெயராஜ்)

கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சேகரித்த தகவல்கள் ஊடாக பாதுகாப்பு நிறுவனங்களில் எச்சரிக்கை சமிக்ஞைகள் அனுப்பப்பட்டன. மேலதிக விசாரணைகள் மற்றும் புலனாய்வுகள் மூலமாக ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈயினை உயிர்பிப்பதற்கு உலகத் தமிழ் புலம்பெயர்ந்தவர்களிடையே உள்ள புலிகள் மறறும் புலி சார்பு சக்திகள் முயற்சிக்கின்றன எனும் தகவல் வெளிப்பட்டது. அதைப்பற்றி அறியப்படுவது என்னவென்றால் பிரான்சிலுள்ள கமலநாதன் சதீஷ்குமார் எனும் புலிச் செயற்பாட்டாளர் நவம்பர் 2011ல் இந்தியாவுக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.அவர் தமிழ்நாட்டில் வாழும் சில முன்னாள் புலி உறுப்பினர்களை ஒன்று சேர்த்து, எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் அளிப்பது சம்பந்தமாக சில இரகசியக்கூட்டங்களை நடத்தினாராம். குமரன் என்கிற சதீஷ்குமார் இன்னமும் பிரான்சில் வாழ்ந்து கொண்டு வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈயில் தலைமையக குழுவுக்கு தலைமையேற்றிருக்கும் விநாயகம் என்கிற சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தியின் தலைமையின் கீழ் பணியாற்றி வருகிறார். (மேலும்......)

ங்கும் சர்வாதிகாரம்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு சர்வாதிகாரி என்ற அர்த்தப்பட பேசிவிட்டு அதைப் பற்றி விளக்கமளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தின் போது தான் முதலமைச்சர இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். அதை சர்ச்சைக்குரிய கருத்தாக சிலர் கூறிய போதிலும் முதலமைச்சர் தாம் அதனை கூறவில்லை என்று மறுக்கவோ அல்லது அதனை வாபஸ் பெறவோ இல்லை. அவர் அதனை வலியுறுத்தி விளக்கம் அளித்து அறிக்கையொன்றையே வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களின் கோரிக்கைகள் விடயத்தில் இறுமாப்புடன் செயற்படுவதாகவும் அவர் எப்போதோ ஒருநாள் பிரபாகரனைப் போல் தாமும் அதிகாரத்திலிருந்த சருகி விழ நேரிடும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அவரது நோக்கமாக இருந்துள்ளது.
(மேலும்......)

இலங்கைத்துறைப் பகுதி படையினரால் சுற்றி வளைப்பு


திருகோணமலை, வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பல கிராமங்கள் இன்று செவ்வாய் அதிகாலை முதல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டு வருகின்றது. இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் இராணுவத்தினர் சுற்றி வளைத்து தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். 15 வயதிற்கு மேற்பட்டவர்களை தாங்கள் விசாரிக்கப்போவதாகவும் இதற்கு பொது மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறும் படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுத்ததன் பின்னர் இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றுவருகின்றது. இலங்கைத்துறை, ஈச்சிலம்பற்று, புன்னையடி, கல்லடி இலங்கைத்துறை முகத்துவாரம் போன்ற கிராமங்கள் இந்த சுற்றி வளைப்புக்கு உள்ளாகியுள்ளது. இதேவேளை 15 வயதிற்கு மேற்பட்டவர்களையும் சந்தேகித்திற்குகிடமானவர்களையும்  படையினர் தடுத்து வைத்து விசாரித்து வருவதாகத் தடுக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை நேற்று மாலை இலங்கைத்துறை கடற்கரைப் பகுதியில் சிலர் சந்தேகத்திற்கிடமாக நடமாடியதாகவும் உடனடியாக அந்தப் பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, 2 மகஸின்கள், 78 தோட்டாக்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் கடற்படைத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

Canadian school bans LTTE flag

A Canadian high school has banned a student from carrying the LTTE flag which he insists is a flag representing Tamils, a Canadian media report said The Toronto Sun reported that Kumar Makandu, a Grade 12 student at Central secondary school in Southwestern Ontario, had carried a Tamil flag at the annual assembly for the past two years but was told by administration leading up to the event last Friday that he couldn’t showcase the flag. The flag depicts a tiger jumping through a circle of bullets — though Makandu says it’s the sun — with two crossed bayonets. Central principal Jim Robertson decided only the flags from internationally recognized countries would be included in the assembly after a student last year thought the Tamil flag was connected to the LTTE. “We’re not trying to get into the politics of aspirational governments,” Robertson said. “I don’t want students to feel threatened.”  But Makandu said there’s no connection between the Tamil flag to the Liberation Tigers, an organization the Canadian government put on its terrorism list in 2006. “If I can’t even bring my flag up, how can I share my culture?” said Makandu, adding he spoke to many of his fellow students prior to the assembly and they told him they had no problem with him carrying the flag. Makandu showed up for the assembly wearing a shirt depicting the flag, but a teacher promptly asked him to take it off. He did so, not wanting to create trouble, and walked under the Sri Lankan flag at the assembly. “It’s pretty upsetting that I can’t represent my culture in a multicultural country like Canada where we embrace other cultures,” he said.

அச்சுவேலி கதிரிப்பாய் படுகொலை சந்தேக நபருக்கு 16 வரை விளக்கமறியல்

யாழ்ப்பாணம் அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலைக ளுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல் லாகம் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் தனது மனைவியின் சகோதரி, மனைவி யின் சகோதரன் மற்றும் மனைவியின் தாயார் ஆகியோரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் தனஞ்சயன் என்பவர் நேற்றுமுன்தினம் அச்சுவேலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தில் தனஞ்சயனின் மனைவியும், மனைவியின் சகோதரி யின் கணவரும் படுகாயமடைந்த நிலை யில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டனர். இச்சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபரான தனஞ்சயன் கைது செய்யப்பட்டதுடன், கொலை யாளி பயன்படுத்தியதாக நம்பப்படும் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார். நேற்றுக்காலை அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகக் கூடிய கிராம மக்கள் குறித்த நபரைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு ஆக்ரோசமாக கூச்சலிட்டனர்.  எனினும், பொலிஸார் குறித்த நபரை பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். நீதிமன்ற வளாகத்திலும் பெருமளவு மக்கள் கூடியிருந்தனர். மூவரைக் கொலை செய்தமை தொடர்பில் பிரதான சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளில் ஒத்துக்கொண்டு ள்ளமை தெரியவந்துள்ளது. குறித்த நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

விதித்த தடையை ஏற்றது இந்தியா

16 புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் 424 தனி நபர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் விதித்திருந்த தடையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. த டைம்ஸ் ஒப் இந்தியா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த தடை செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது, அவர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதே நடைமுறையை ஈரானும் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்தியாவும் இலங்கை அரசாங்கத்தின் தடையை தமது நாட்டில் நடைமுறைப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனினும் முன்னதாக கனடா இந்த தடையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. உலகெங்கிலும் இயங்கிவரும் 16 தமிழ் அமைப்புகள் மற்றும் 424 தனிநபர்களை தீவிரவாத முத்திரை குத்தி இலங்கை அரசு தடை செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட உலகின் முக்கிய நாடுகளுக்கு கடந்த மார்ச் மாதம் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரைன் படையினருக்கும் இடையில் மோதல் வெடிக்கும் அபாயம்

ரஷ்ய ஆதரவாளர்களின் கோட்டையாக இருந்துவரும் உக்ரைனின் சொல்வியன்ஸ்க் நகர் மீது படையினர் தாக்குதலை முன்னெடுக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் உக்ரைன் இராணுவம் நகருக்கு செல்லும் பிரதான வீதியை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் முடக்கி வைத்துள்ளது. இந்நிலையில் சொல்வியன்ஸ்க் நகர் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். சொல்வியன்ஸ்க் புறநகர் பகுதியில் வைத்து கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் இரு உக்ரைன் ஹெலிகொப்டர்களை சுட்டுவீழ்த்தினர். எனினும் நகருக்குள் ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கு பலமான ஆதரவு இருப்பதாக நகரில் இருக்கும் சுதந்திர ஊடகவியலாளரான ஹரியட் சலம் குறிப்பிட்டுள்ளார். எனினும் நகரின் மையப்பகுதியை கைப்பற்ற உக்ரைன் படை நடவடிக்கை எடுக்கும் அபாயம் இருப்பதாக குடியிருப்பாளர்களுக்கு இடையில் அச்சம் அதிகரித்துள்ளதென அந்த செய்தியாளர் மேலும் விபரித்துள்ளார்.  உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் அரச கட்டிடங்களை ரஷ்ய ஆதரவாளர்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில் அந்நாட்டு படைகள் அரசு முன்னெடுக்கும் தீவிரவாதத் திற்கு எதிரான நடவடிக்கை என்ற முழக்கத்துடன் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மே 05, 2014

மூன்றாவது புலம்பெயர் அமைப்பினரது பின்துணையுடன் தேவிகன் - அப்பன் - கோபி ஆகிய மூவர் தலைமையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்டம் முயற்சி எப்படி ஸ்ரீலங்காவினால் முறியடிக்கப்பட்டது. -- (1)

 (டி.பி.எஸ்.ஜெயராஜ்)

மழை நின்றாலும் தூறல் நிற்கவில்லை என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இதே மாதிரியில் புலிகளின் கூறுகள், சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(எல்.ரீ.ரீ.ஈ) புத்துயிர் ஊட்ட எடுத்த முயற்சி பாதுகாப்பு கருவிகளினால் முறியடிக்கப்பட்டது, ஆனால் அதை துடைத்தழிக்கும் பணி நாட்டில் தொடர்கிறது. வடபகுதிக் காடுகளில் இடம்பெற்ற தேவிகன்;, அப்பன், கோபி ஆகியோரது மரணங்கள்.ஸ்ரீலங்காவில் எல்.ரீ.ரீ.ஈக்கு புத்துயிர் ஊட்டும் திட்டத்தை கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டுவந்துள்ளது, ஆனால் பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினர் இந்த முழு நடவடிக்கையில் ஓரளவு தீர்க்கப்படாமல் எஞ்சியுள்ள தளர்வான பகுதிகளை இறுக்கி முடிவதற்கான நடவடிக்கைக்கு வேண்டிய புலனாய்வுகளை மேற்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். (மேலும்......)

இலங்கை மீதான விசாரணை

இம்மாத பிற்பகுதியில் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து இம்மாத பிற்பகுதியில் அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளை நடத்துவதற்கான பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார். இவ்வாறான விசாரணைகளை மேற்கொள்வதற்கு எப்படியும் சில காலம் எடுக்கும். அது மாத்திரமல்லாது நியூயோர்க்கிலுள்ள ஐ.நா சபையினால் வரவு - செலவு திட்டம் அங்கிகரிக்கப்பட வேண்டும். அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த பின்னர் இம்மாத பிற்பகுதியில், விசாரணை பற்றி அறிவிக்கப்படும் என்று அவர் மேலும் கூறியுள்ளார். இலங்கை மீதான விசாரணைகளை மேற்கொள்வதென, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் கடந்த மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வின் போது விசாரணையை அணில்படுத்துவதற்காக 1,460,000 அமெரிக்க டொலர்கள் தேவை என்று அறிவிக்கப்பட்டது. இலங்கை மீதான விசாரணை கோரிக்கை, அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்ட போதிலும் யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புலிகளை உயிரூட்டும் புலம் பெயர் அமைப்புகள் அமெரிக்காவின் அறிக்கையில் அம்பலம்

இலங்கையின் பயங்கரவாத செயற்பாடுகளை மீண்டும் உயிரூட்ட புலிகளின் புலம்பெயர் அமைப்புக்கள் நிதி சேகரிக்கும் விடயங்கள் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையின் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளளது. இவ்வாறான அமைப்புக்களை தடை செய்ய இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் அங்கீகரித்துள்ளதை கனடா கவனத்தில் எடுக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங் கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார். எல். ரி. ரி. ஈ. யின் வலையமைப்பு உயிர்த்துடிப்பாக உள்ளதாகவும் அவர்கள் வன்முறையைக் கைவிடவில்லை என்பதையும் அமெரிக்க அறிக்கை தெளிவாக இனம் காட்டியுள்ளன. இந்த அமைப்புக்கள் இன்னும் இலங்கையில் குழப்பங்களை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்த நிலையில் 16 எல். ரி. ரி. ஈ. முன்னிலை அமைப்புக்கள் மீதான இலங்கையின் தடையை தாம் அங்கீகரிப்பதில்லை என கனடா தெரிவித்துள்ளமை துரதிஷ்டவசமாகும். ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் அநேக தமிழர்கள் எல். ரி. ரி. ஈ. நிகழ்ச்சி நிரல்களுக்கு ஆதரவாக இல்லை. தமது சொந்த மண்ணில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரிப்பதை கனடா கவனத்திற் கொள்ளவில்லை. மனிதாபிமான அமைப்புக்கள் எனக் கூறிக் கொள்ளும் அத்தகைய அமைப்புகள் தொடர்பாக கண்டறியப்பட வேண்டும். இலங்கையில் எல். ரி. ரி. ஈ. யின் நடவடிக்கைகள் பூர்த்தி பெற்ற பின்னர் உருவான அமைப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மோடி பிரதமராவதை தடுக்க 3வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும்

தேர்தலுக்கு பின்பு மோடி பிரதமர் ஆவதை தடுக்க 3-வது அணிக்கு காங்கிரஸ் ஆதரவை அளிக்கும் என்று மார்க்சிஸ்ட் தலைவர் பிரகாஷ் கரத் கூறினார். மார்க்சிஸ்ட் கம்ய+ னிஸ்டு கட்சியின் பொதுச் செயலா ளர் பிரகாஷ் கரத் நேற்று முன்தினம் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தேர்தலுக்கு பின்பு 3-வது அணியின் தலைமையிலான மத சார்பற்ற அரசு அமையும் சூழ்நிலை உருவானால் அப்போது காங்கிரஸ் முக்கிய பங்காற்றும் சூழ்நிலை ஏற்படும். மத்தியில் பா.ஜனதா அரசு அமைவதை காங்கிரஸ் விரும்பாது. அதனால் மதசார்பற்ற மாற்று அரசை அமைப்பதில் காங்கிரஸ் தனது பங்க ளிப்பை தரவேண்டிய நிலை வரும். எனவே, 1966-ம் ஆண்டு தேவேகவுடாவின் ஆட்சிக்கு வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததுபோல் இப்போதும் தரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

மலேசிய விமானம் கடத்தல்: 11 தீவிரவாதிகள் கைது

காணமல் போன மலேசிய விமானம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை அடுத்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் நேற்று(03) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன. தென்னிந்திய பெருங்கடலில் மலேசிய விமானம் விழுந்ததாக கூறப்பட்ட போதும் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்காத நிலையில் விமானத்தை குறித்த11 தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என பலத்த சந்தேகம் நிலவுவதாக கூறப்படுகின்றது. கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் 22 முதல் 55 வயதுள்ளவர்கள் எனவும் ஒரு இளம் விதவையும் இதில் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து விலகுவதாக தங்கமுகுந்தன் கடிதம் மூலம் அறிவிப்பு

தாங்கள் இருக்கும்வரை எமது கட்சியாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தவிதமான ஆக்கபூர்வமான பணிகளையும் மக்களுக்குச் செய்ய முடியாது என்பதால் தாங்கள் எமது கட்சியைவிட்டுப் போகும்வரை அல்லது உங்களது இறுதிக்காலத்தின் பின்னர் கூட்டணியில் எனது பணியை நான் செய்யலாம் என முடிவெடுத்துள்ள படியால் இத்தால் நான் கட்சியிலிருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறியத் தருகிறேன். கடந்த 6.4.2014, மற்றும் 28.4.2014 உங்களுடன் வாக்குவாதப் பட்ட பின் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்பதால் இன்னும் ஓரிரு நாட்களில் அலுவலகத்திலிருந்து வெளியேறுவேன் என்பதையும் அறியத்தருகிறேன். மேலும் சில விடயங்களை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் எனபதற்காக இலக்கமிட்டுப் பிரச்சினைகளையும் உங்களுக்கு விளக்கமாக குறிப்பிட விரும்புகிறேன்.(மேலும்......)

முகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக அறிக்கை விடுகிறார் ஆனந்தசங்கரி கிண்டல்

தங்க முகுந்தன் எமது கட்சியில் அங்கத்தவராக இருந்தால்தானே கட்சியிலிருந்து விலக முடியும். அவர் எமது கட்சி அங்கத்தவரே இல்லை. அப்படியிருக்க அவரது அறிக்கையை ஒரு கதை என்று என்னிடம் சிலர் விசாரிக்கின்றனர். குடும்பத் தகராறு காரணமாக சுவிஸிலிருந்து வந்த அவருக்கு தங்க இடமும், சம்பளமும் கொடுத்து பாவம் எனக் கருதி எம்முடன் வைத்திருந்தால், அவர் எமக்கே துரோகம் செய்ய முனைகிறார். அவரது முட்டாள் தனத்தை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தெரிவித்தார். அவர் இதுவரை எம்முடன் இருந்து கொண்டே எமக்குத் துரோகம் இழைத்துள்ளார். இப்போது அது தெரியவந்ததும் எம்மீது வீண் பழி சுமத்திவிட்டுத் தப்பித்துக் கொள்ளப்பார்க்கிறார். இதுவரை காலமும் என்னுடன் ஒரு எட்டப்பனை வைத்திருந்தமையையிட்டு நான் வேதனை அடைகின்றேன் எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார். அவரை நான் விலக்க அவர் கட்சி அங்கத்தவர் இல்லை என்பதால் அவர் விரைவாக எமது அலுவலகத்திலிருந்து தானாக வெளியேறுவது அவருக்குத்தான் நல்லது எனவும் ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

Canada's Ukrainian borsch has bitter anti-Russian taste

Canada ardently takes most severe sanctions against Russia, following the U.S. or even paving the way itself. Canadian Prime Minister Stephen Harper is even more categorical than his American counterpart Barack Obama. Canada is neither a global player, nor a world power, its army is weak and poorly armed. Why is Canada so strongly against Russia? Canada was the first, after the U.S., to introduce sanctions against Russia. The country at first expelled Russian military men, who were undergoing linguistic and software training at Canadian universities. Afterwards, Canada took the initiative to hold a G8 summit without Russia, joined all lists of targeted sanctions, suspended all scientific and business projects with Russia, including in space, aviation and in the Arctic. All this was being done with the use of rude and inconsiderate rhetoric, destroying everything positive that had been accumulated in previous years. One can say that Ottawa's militancy put the bilateral relations with Russia on the brink of collapse. (more....)

கூட்டமைப்பின் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனுக்கும் கூட்டமைப்பின் சுமந்திரனுக்கு. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பதிலடி?

தமக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என்ற நம்பிக்கையுடனும், தமக்கு மட்டுமே எல்லா வல்லமைகளும் உண்டு என்ற சிந்தனையுடனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒருசிலர் செயற்படக்கூடாது. சுரேஷ் பி. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை வகுப்பு என்பது ஒரு சிலர் மட்டும் மேற்கொள்ளும் ஒரு செயலாக இருக்க முடியாது அவ்வாறு வகுக்கப்படும் கொள்கைகள் வெற்றிகரமானதாகவும் அமையாதென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பி. இன்று காலை, யாழ்ப்பாணம் - நீர்வேலியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச செயலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், மற்றும் பல வட மாகாண சபை உறுப்பினர்களும், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்த இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சுரேஷ் பி-(மேலும்......)

மே 04, 2014

இலங்கையின் மாகாணசபைகளை ஆற்றலுள்ளவைகளாக ஆக்குவதை நோக்கி முயற்சிக்க ஏதாவது வழியண்டா! (கடிதத் தொடர் – 5)

(அ. வரதராஜப்பெருமாள்)

வடக்கு-கிழக்கு தமிழர்களிடமிருந்து மட்டுமல்ல, அதற்கும் மேலாக தென்னிலங்கையிலுள்ள சிங்களத் தலைவர்கள் சிங்கள மக்கள் மத்தியிலுள்ள சமூக சக்திகள் மத்தியிலிருந்தும் இவைகள் பற்றி வலுவாகவே குரல்கள் எழுப்பப்படுகின்றன என்பதை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. இங்கு மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபியினர்) அதிகாரப் பகிர்வு விடயத்தில் வேறுபாடான கருத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் உட்பட பெருந்தொகையான சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரலெழுப்புகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். (மேலும்......)

அந்தோ தமிழ்நாடே!

உன் தந்தையைக் கொன்றவன் இன்னும் உன் நண்பனா?(பாகம் 5)

யாழ்ப்பாணத்தில் முருகன் தான் களத்தில் குதிப்பதற்குண்டான ஆயத்தங்களைச் செய்து வரலானார். சிவராசனோடு அடிக்கடி தொடர்புகொண்டு, நிலவரங்களை அறிந்து வந்த முருகன், இப்போது ஜயகுமாரன், ரொபர்ட் பயாஸ் ஆகிய இரண்டு இளைஞர்களை சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார். இருவருமே சிவராசனின் உடுப்பிட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பெப்ரவரி துவக்கத்தில் சென்னை வந்து, போரூரில் உள்ள மைத்துனர் அறிவு என்ற பேரறிவாளனுடன் தங்கினார்கள். கம்ப்யு+ட்டர் சயின்ஸ் டிப்ளோமா பட்டதாரியான அறிவு, 1990 முதல் சென்னையில் வசித்து வந்தார்." என்று முடிந்திருந்தது. ஆனால் இந்த அறிவு என்ற பேரறிவாளன் இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். வேலூர் மாவட்டம் சோலையார்பேட்டையில் பிறந்து வளர்ந்தவர் என்பது உறுதியாகி இருக்கிறது. சென்னை பெரி யார் திடல், விடுதலை அலுவலகம் கணனிப் பிரிவில் பணியாற்றியதாகவும் அங்கேயே தங்கியதாகவும் கூறுகிறார். (மேலும்......)

பிளவு நிலையில் TNA

சமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட்டுத் தலைமைகளை கணக்கெடுக்காமை:

ஒதுக்கப்படுவதாக சங்கரி, சித்தா போர்க்கொடி, சுரேஷ், செல்வம் மௌனம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய உட்கட்சி மோதல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளதாகக் தெரிய வருகிறது. ஐந்து கூட்டுக் கட்சிகளுக்குள் கட்சிகளுக்கிடையிலான பூசலாகவும், அது தவிர ஐந்து கட்சிகளுக்குள்ளும் தனித்தனியாக உட்கட்சிப் பூசலாகவும் முன்னெப்போதும் இல்லாதவாறு மோதல்கள் இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. தமிழரசுக் கட்சிக்குள் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கும் கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையே நேரடியாகவும், மறைமுகப் பனிப் போராகவும் மோதல்கள் இடம்பெற்றுவரும் அதேவேளை அக்கட்சியானது கூட்டமைப்பிலுள்ள ஏனைய நான்கு கட்சிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டுச் செயற்பட முனைந்து வருவதால் கூட்டுக் கட்சிகளின் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்......)

VERY INTERESTING  CANADIAN COURT RULINGS

Federal Court Decisions. An interesting Judgment Canada

TNA = LTTE

http://decisions.fct-cf.gc.ca/fc-cf/decisions/en/item/71270/index.do

Case Name: Kanagendran V Canada(Citizenship and Immigration)

Court (s) Database: Federal Court Decisions

Date:  2014-04-28

Neutral Citation:  2014FC384

File number:  IMM-7522-12

[4] The Applicant is a citizen of Sri Lanka, born in 1932.  He was and admits to having been a member of the TNA.  He joined the TNA in 2002 and served as a TNA-appointed Member of Parliament from 2004-2007.  Members of the TNA, including himself, occasionally attended meetings and lunches organized by the LTTE.  LTTE members also attended rallies and meetings held by the TNA.  The Applicant had met with LTTE leaders several times both before, and while he was with the TNA.  He knew that the LTTE used violent means to achieve their goals, and does not dispute that the LTTE committed acts of terrorism and crimes against humanity.
[8]  The Applicant came to Canada in early August 2009 and filed a claim for refugee protection claiming fear for his life due to the rise in murders of Tamil activists in Sri Lanka.  The ID found that, by virtue of his membership with the TNA, the Applicant was in fact a member of the LTTE

மூவர் வெட்டிக் கொலை: இருவர் படுகாயம்

அச்சுவேலி கதரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவரும் இனந்தெரியா நபரிகளினால் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். இன்று (04) அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் நிக்கோநாதன் அருள்நாயகி(50), யாசோதரன் மதுசா(27), நிக்கோநாதன் சுபாங்கன்(19) ஆகிய மூவரும் உயிரிழந்துள்ளதுடன், நிக்கோநாதன் தர்மிகா (25), க. யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் வீட்டிலிருந்த 3 வயதுக் குழந்தை எவ்விதமான உயிராபத்துகளும் இன்றி தப்பித்துள்ளது.

கோபியின் மனைவி விடுதலை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டு பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் மூன்று பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நெடுங்கேணி காட்டுப்பகுதியில் இராணுவ சுற்றிவளைப்பொன்றின் போது சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவரான கோபி என்று இராணுவத்தினரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்த கஜீபன் என்பவரின் மனைவி சர்மிளா, கஜீபனின் தாயாருக்கு உதவியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படும் புவனேஸ்வரி ஆகிய இரண்டு பெண்களுமே விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பேக்கரி உரிமையாளர் எனக் கூறப்படும் ஒருவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த பேக்கரியில் பணியாற்றியதாகத் தெரிவிக்கப்படும் மற்றுமொருவர் விடுதலையாகியுள்ளார். நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதற்கும், விடுதலைப்புலிகளை மீளிணையச் செய்வதற்கும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களின் உதவியோடு இலங்கையில் சிலர் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக இராணுவம் குற்றம் சுமத்தியிருந்தது. இந்த முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்றும், அவர்களுக்கு உதவினார்கள் என்றும் குற்றம் சுமத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டிருந்தார்கள். அவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இன்னும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பூஸா முகாம் உட்பட தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டிருப்பவர்கள் உட்பட கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பற்றிய மேலதிக தகவல்களை காவல்துறை பேச்சாளரிடம் உடனடியாகப் பெறமுடியவில்லை.(பிபிசி)

மே 03, 2014

சர்ச்சைக்குரிய மே தின உரை - சி.வி விளக்கம்

சாவகச்சேரியில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் தான் ஆற்றிய உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர், 'எமது ஜனாதிபதியின் ஜனாதிபதி வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒரு கேள்விக்குறி. இரண்டாவது அவரின் எண்ணங்களைக் கொண்டவர்களே இனிவரும் அரசாங்கத்தில் தொடர்ந்தும் பதவியில் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்.  ஒரு காலத்தில் பிரபாகரனும் கேட்பார் இன்றி அதிகாரத்தில் இருந்தார். அதை ஜனாதிபதி அறியாதவர் அல்ல. அப்படியாயிருந்தும் இப்பேர்ப்பட்ட சவாலான கருத்துக்களை ஏன் அவர் முன் மொழிகின்றார் என்று எண்ணிப் பரிதாபப்பட்டேன்' என்று கூறியிருந்தார்.(மேலும்......)  

I didn't unilaterally declare independence Varadaraja Perumal

(By Dilrukshi Handunnetti)
 
A revolutionary Tamil youth, who co-founded the Eelam People's Revolutionary Liberation Front (EPRLF) in 1979 and later became the Chief Minister of the merged North-East Provincial Council, Varadaraja Perumal, still believes the two provinces should be merged at a referendum where the voters of the island's Eastern Province makes the political decision, according to constitutional provisions. In a wide-ranging interview with Ceylon Today, Perumal, who is self-exiled in India, speaks about collaborations between the Sri Lankan Government and the LTTE that caused the collapse of the North-East Provincial Council and for him to flee the country, fearing for his life. Perumal denies unilaterally declaring an independent State of Eelam and deems it as the propaganda work of the Sri Lankan State and the LTTE to undermine the process of devolution that had just begun and says, the Provincial Council system is in crisis not simply due to insufficient power sharing but erroneous interpretations of the Constitution itself. (more.....)

உழைக்கும் மக்களின் சமகால பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்போம்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இல. 294, கண்டி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமானது. கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பலர் கலந்து கொண்ட இக்கூட்டத்திற்கு கட்சியின் யாழ் பிராந்திய செயலாளர்  தோழர் மோகன்  தலைமை வகித்து உரையாற்றுகையில், முதலாளித்துவம் வளர்ச்சியுற்று தொழிற்சாலைகள் அதிகரித்துக் கொண்டிருந்த 1880 களில் நாளொன்றில் 12 மணித்தியாலங்கள் தொடக்கம் 18 மணித்தியாலங்கள் தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டு வந்த காலகட்டத்தில் எட்டு மணி நேர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடினார்கள். இவர்களின் போராட்டங்களை முதலாளிகளும், முதலாளிகள் சார்பான ஆட்சியாளர்களும், ஆயுதப் படைகளை தொழிலாளர்கள் மீது ஏவிவிட்டு அவர்களது நியாயமான போராட்டங்களை அடக்கி ஒடுக்கின. தொழிலாளர்களோ தமது ஒற்றுமையை பலமான ஆயுதமாகக் கொண்டு தொடர்ந்து போராடினார்கள், இரத்தம் சிந்தினார்கள், உயிரை அர்ப்பணித்தார்கள் இந்த அர்ப்பணிப்புக்களால் கிடைத்தவை தான் 8 மணி நேர வேலை என்ற தொழிலாளர்களின் உரிமையும், மேதினமும் ஆகும். (மேலும்......)

தமது சக்தியை உணராதவர்களாக உழைக்கும் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

நமது நாட்டில் 1960 களில் இத்தகைய அடக்குமுறையை எதிர்கொண்ட, அதற்கெதிராகப் போராடிய தலைவர்கள், தொழிலாளர்கள் நம்மத்தியில் இன்றும் உள்ளனர். 1990 களில் மேதினம் புலிகளின் பலத்தை பறைசாற்றுகின்ற தினமாகவே கொண்டாடப்பட்டது. புலிகளைத் தவிர வேறெந்த அமைப்பும் மேதினத்தை அனுஷ்டிக்க புலிகள் அனுமதிக்கவில்லை. மே தினத்தை அனுஷ்டிக்க விரும்புவர்கள் புலிகள் நடாத்தும் மேதின நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். மே 1ம் நாள் கூட்டுறவு சங்கங்கள் உட்பட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்தவர்களும் “ஊர்திகள்” “பதாகைகளுடன்” புலிகளின் மேதினத்தில் பங்கேற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இதே பாணியில் இம்முறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊர்திகளோடு மேதினத்தில் பங்கேற்குமாறு யாழ் மாவட்டத்தில் தமது அதிகாரத்தின் கீழ் உள்ள உள்ளுராட்சி மன்றங்களைப் பணித்திருக்கிறது. (மேலும்......)

யாழ். பல்கலைக்கழத்தில் போராட்டம்.

யாழ். பல்கலைக்கழக பதில் பிரதம பாதுகாப்பு அதிகாரி கலைப்பீட மாணவர்களால் தாக்கப்பட்டதைக் கண்டித்து பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இன்று(02.05.2014) காலை 8 மணிமுதல் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழையும் அனைத்து மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளுக்கும் நுழைவுச்சீட்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த புதன்கிழமை கலைப்பீட மாணவர்கள் துவிச்சக்கர வண்டி ஒன்றின் பூட்டினை உடைக்க முற்பட்டவேளையில் பதில் பாதுகாப்பு உத்தியோகத்தரான வி. தூயகுமார் இதனை தடுத்து பாதுகாப்புக் காரியாலயத்தில் உரிய பதிவுகளைச் செய்து வண்டியை எடுத்துச்செல்லுமாறு கூறியுள்ளார். இதன் போது குறித்த மாணவர்களால் உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளார். எனவே குறித்த மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்ககை எடுக்கக்கோரி இந்த கவனயீர்பு போரட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

சென்னையில் கைதானவருடன் எந்ததொடர்பும் இல்லை - இலங்கைக்கான பாக். தூதரகம்

சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ஜாகீர் ஹூசேனுக்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் மறுத்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சென்னையில் சில நாட்களுக்கு முன்பு இலங்கையைச் சேர்ந்த ஜாகீர்ஹூசேன் என்பவர் சிக்கினார். அவர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. உளவாளி. அவரை இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள், இந்தியாவில் நாசவேலைகளுக்காக உளவு பார்க்க அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் உளவு அமைப்பு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததையும் ஜாகீர்ஹூசேன் தெரிவித்திருந்தான். இந்நிலையில் சென்னையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிக்கும் தங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று கொழும்பில் உள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரகம் மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த எந்த ஒரு அதிகாரியும் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடவில்லை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கியில் தொழிலாளர் தினத்தையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

துருக்கிய இஸ்தான்புல் நகரிலுள்ள தக்ஸிம் சதுக்கத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கானோரை அந்த நாட்டு பொலிஸார் தண்ணீர் பாய்ச்சியும் கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொண்டும் கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆரம்ப்பாட்டக்காரர்களை கலைந்து செல்வதற்கு பொலிஸார் விடுத்த இறுதி எச்சரிக்கையை அவர்கள் அலட்சியம் செய்ததை அடுத்தே அவர்களை பலவந்தமாக கலைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பிராந்தியத்திலேயே எகிப்திய பிரதமர் நிசெப் தாயிப் எர்டோகனின் அலுவலகம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் சுமார் 40,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டனர். அதேசமயம் இஸ்தான்புல்லின் கடிகோயி சதுக்கத்தில் தொழிலாளர் தினத்தையொட்டி பிறிதொரு ஊர்வலம் நடத்தப்பட்டுள்ளது. இஸ்தான்புல் நகரிலுள்ள  பல வீதிகள் மூடப்பட்டதால் பொது போக்குவரத்துகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. கடந்த வருடம் மே தின ஊர்வலத்தில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குமிடையே வன்முறை மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

நவநீதனுக்கு உதவிய சந்தேக நபர் கைது

எல். ரி. ரி. ஈயை மீண்டும் உயிரூட்ட முற்பட்ட போது பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பனுக்கு (நவநீதன்) உதவிய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பன் அநுராதபுரம் பகுதியில் தலை மறைவாக இருந்தபோது மேற்படி சந்தேக நபர் அப்பனுக்கு தங்குமிட வசதி உட்பட பல்வேறு உதவிகளை அளித்துள்ளதாக பொலிஸார் கூறினர். இவர் தபால் ஊழியர் எனவும் இது தவிர திறப்புவெட்டும் தொழில் செய்து வந்துள்ளார் எனவும் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. புலிகளை மீள உயிரூட்ட முயன்ற அப்பன், தேவகன். கோபி ஆகியோர் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் புலிகளை மீண்டும் உயிரூட்டுவதற்காக வட பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டியிருந்தது தெரிந்ததே.

புலனாய்வு அதிகாரிகள் எவரும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படவில்லை

எல்.ரி.ரி.ஈ யுடன் தொடர்பு டைய சர்வதேச அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக புலனாய்வு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் ஊடகத் தகவல்களை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. எல்.ரி.ரி.ஈக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக 18 புலனாய்வு அதிகாரிகள் 18 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதலொன்று வெளியிட்டிருக்கும் செய்தியை மறுப்பதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தைத் தடுப்பது தொடர்பான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சரத்து மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 40வது சரத்தின் கீழ் எல்.ரி.ரி.ஈ மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அமைப்புகளைத் தடை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக

பொருளாதாரத்தில் இந்தியா முன்னேற்றம்

கடந்த ஆறு ஆண்டுகளில் இந் தியா பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2005ம் ஆண்டு பொரு ளாதாரத்தில் இந்தியா 10வது இடத்தில் இருந்து வந்தது. மேலும் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2005ம் ஆண்டு 10வது இடத்தில் இருந்த இந்தியா 2011ம் ஆண்டு 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பி டுகையில் சீனா, இந்தியா, இந் தோனே'pயா நாடுகளின் பொரு ளாதார வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வந்துள்ளது. 2011ம் ஆண்டு உலகம் முழுவதுமான பொருட்களின் மொத்த உற்பத்தியில் பாதியளவு குறைந்த வருவாய் உடைய நாடுகளில் மேற ;கொள்ளப்பட்டிருப்பதாக அவை தெரிவித்துள்ளது. இது மட்டுமல்லாது மொத்த உள்நாட்டு உற்பத்தியை பொருத்த வரையில் இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தோனே'pயா, மலே சியா 32.3 சதவீதமும் அமெரிக்கா, ஜப்பான், nஜர்மனி, பிரான்ஸ் ,இங்கி லாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் 32.9 சதவீதமும் பங்கு வகிக்கின்றன. இது மட்டுமல்லாது இந்தியா, சீனா போன்ற நாடுகள் உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீத பங்கு வகிப் பதாகவும் உலக வங்கியின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 02, 2014

என் மனவலையிலிருந்து.....

மே தினத்தில் உறுதி மொழி எடுப்போம்!

(சாகரன்)

ஐக்கியம் என்பது முதலில் குடும்பத்திற்குள் கூட்டுக் குடும்பம் என்ற ஆதாரத்துடன் உருவாகி அது சமூகமாக உருவெடுத்து பின்பு பிரதேசங்களாகவும், தேசங்களாகவும், தேசியங்களாகவும், மனித் குலமாக ஐக்கியப்பட்டு, பலப்பட்டு உரிமைகளுக்காக ஒருமித்த குரலில் குரல் கொடுப்பதைத் தடுக்கும் செயற்பாடாக நவீன முதலாளித்துவம் இதனை செய்து வருகின்றது. இப்படி செய்து வருபவர்களே இன்று தமது வயதான காலத்தில் குடும்பங்கள் அன்புகள் இன்றி தனி மனிதர்காளாக பாரமரிப்பு இல்லங்களில் தனிமையில் வாடி உயிர் இழக்கும் அவல நிலயிற்கு தள்ளப்பட்டிருப்பதுதான் அந்தோ பரிதாபம். இலங்கையில் போருக்கு பின்னரான நிலமைகள் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் விட்டுச் சென்ற சோம்பலான உழைக்கும் வலுவை உடல், உள ரீதியில் இழந்து நிற்கும் ஒரு உழைக்கும் மக்களை பெருவாரியாக விட்டு சென்றிருக்கின்றது. இந்த உழைக்கும் சக்திகள் இதிலிருந்து மீண்டு வருவதற்கான உடல், உள வளர்ச்சிக்கான ஆதாரங்களை, ஆலோசனைகளை தாயக மக்களுக்கு வழங்க வேண்டிய அவசியத்தில் இன்று நாம் இருக்கின்றோம். (மேலும்......)  

உலகத் தொழிலாளி வர்க்கத்தின் புரடச்சிகர தினமான மே நாளை நினைவுகூர்ந்து

மேதின ஒன்று கூடலும் கலந்துரையாடலும்

காலம்: மே 02 – 2014 வெள்ளிக்கிழமை மாலை 5.00 – 9.00 வரை

இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் – அறை இலக்கம்  1

Scarborough Civic Centre – Room No: 1

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நிகழ்ச்சி ஏற்பாடு: ஆக்க பூர்வ சிந்தனை செயற்பாடுகளுக்கான தமிழ் மக்கள் மையம்

இலங்கை அரசாங்கத்தின் 424 தடைக்கு!

கனடா வெளிவிவகார அமைச்சர் பதில், ஏமாற்றமா??

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடையானது நல்லிணக்க முனைப்புக்களை மேலும் பாதிக்கும் என கனடா அறிவித்துள்ளது. 16 புலம்பெயர் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்களையும் இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்த விடயம் குறித்து கவனம் செலுத்தி வருவதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் தடை கனடாவில் பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளது. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் கருத்துக்களை வெளியிட கனடாவில் எவ்வித தடையும் கிடையாது என அறிவித்துள்ளது. எவ்வாறெனினும், இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கனேடியர்களிடம் கேள்வி எழுப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களில் புலம்பெயர் தமிழ் மக்கள் முக்கிய பங்காற்றி வருவதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான சகல நடவடிக்கைகளும் சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். சகலவிதமான பயங்கரவாத செயற்பாடுகளையும் கனடா எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலி வெளிநாட்டு அணிகளுக்கு சிக்கல்: அமெரிக்க பயங்கரவாத தடுப்பு துறை ரிப்போர்ட்!

அமெரிக்க பயங்கரவாத தடுப்பு துறையிடம் இருந்து, இலங்கை அரசுக்கு சாதகமான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. “விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ந்தும் வெளிநாடுகளில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி நடவடிக்கைகளும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படுகின்றன” என்கிறது, இந்த அறிக்கை. அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்ட்டின் கீழ் இயங்கும், The Bureau of Counterterrorism of the United States வெளியிட்ட அறிக்கையில், “2009-ம் ஆண்டு இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், அதற்கு முன்னரே வெளிநாடுகளில் ‘நிழல் அமைப்புகளின்’ மூலம், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி சேகரிப்பு, ஆயுத கொள்வனவு ஆகியவை செய்யப்பட்டன. (மேலும்......)

புலிகள் தொடர்ந்தும் இயங்குகின்றனர்! ஆயுதங்களையும் கொள்வனவு செய்கின்றனர்!- அமெரிக்கா

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமெரிக்காவின் வருடாந்த பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இலங்கையில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  எனினும் அவர்கள் சர்வதேச வலையமைப்புகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. எனினும் 2013ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய ஆரம்பித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக வட அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பாரிய அளவு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் நிதித் திரட்டல்கள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.  இதேவேளை அமெரிக்கா, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடையை இந்த வருடமும் நீடித்துள்ளது.

சூரிச் மாநிலத்தில் புளொட்டின் மேதின ஊர்வலம்..!

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்; சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் இணைந்து இன்று நடத்திய மேதின (தொழிலாளர்தின) ஊர்வலத்தில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சுவிஸ் கிளையினரும் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்த நிகழ்வின்போது தமிழ் இனத்தின் பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வு எட்டப்பட வேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், மறுக்கப்பட்டு வரும் இடம்பெயர்ந்துள்ள மற்றும் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை உரிமைகள் வழங்கப்பட வேண்டும். அனைத்து அதிகாரங்களும் உழைக்கும் மக்களுக்கே, அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம், போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன. (மேலும்......)

மே 01, 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் 9 வது பிளாட்பாரத்தில் இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 9வது பிளாட்பாரத்தில் இன்று காலை 7.10 மணி அளவில் பெங்களூரிலிருந்து சென்னை வழியாக கவுகாத்தி செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் 9 வது பிளாட்பாரத்திற்கு வந்தது. பயணிகள் இறங்கியும், ஏறியும்  கொண்டிருந்த நிலையில், அந்த ரயிலின்  எஸ்-4 மற்றும் எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது. இதில் ஸ்வாதி என்ற 22 வயது இளம்பெண் பலியானார். ஆவ்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இவர் பெங்களூரிலிருந்து குண்டூர் செல்வதற்காக இந்த ரயிலில் பயணித்துள்ளார். (மேலும்......)

மே தினம் 2014 சமகாலச் சவால்கள்

உள்ளுரில் குறைந்த பட்சம் வடக்குகிழக்கு மாகாண சபைகளை இயக்குவோர் ஆற்ற வேண்டிய கடமைகள்

(புகைப்படம்: நன்றி. தினகரன்)

  • அநாதரவானோர் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு கண்ணியமான வாழ்வு.

  • கல்வியும் வைத்தியமும் வியாபாரம் ஆகியருப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை.

  • அன்றாடம் பீதியூட்டுவதாக அமைந்த வாழ்வை பாலியற்கொடுமைகளும், களவும் கொள்ளையும் என்ற நிலைமைகளில்  மாற்றங்களை கொண்டுவர முயற்சிக்க வேண்டாமா?

  • உணவுப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைப்பதற்கான சந்தை நிலவரங்களை உருவாக்கமுயற்சிக்க வேண்டாமா?

  • விவசாய, மீன்பிடி உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான சந்தை கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டாமா? வறுமையில் வாழும் குடும்பங்களின் இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் வேலை வாய்ப்புக்களை உருவாக்க முயற்சிக்க வேண்டாமா?

  • தீண்டாமை, வறுமை அநீதிகளுக்குள் தலையெடுக்கமுடியாமல் நிலம் தொழில் சமூகவாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தார்மீக அறவழிகளில் தீர்வுகாண முயல்வது

  • குடிநீர் மற்றும் குடியிருப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது.

  • நாழும் பொழுதும் நாசமாகிக் கொண்டிருக்கும் எமது சுற்றாடலை தூய்மைப்படுத்துவதற்கான  நிரந்தரமான முயற்சிகளை மேற்கொள்வேண்டாமா?

  • எமது உள்ளுராட்சி சபைகள் தூங்கி வழிகின்றன.

(மேலும்......)

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை!

வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது. அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள குறித்த நாடுகளிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய புலி உறுப்பினர்கள் மறைந்திருக்கும் பதினெட்டு நாடுகளுக்கு ஏற்கனவே புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. கைது செய்யப்படும் புலி உறுப்பினர்களை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட உள்ளது. பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் கனடாவில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு முதலமைச்சர்கள் விஷேட சந்திப்பு

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் ஆகியோரக்கிடையில் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற்றது. நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை முதற்கட்டமாக இடம்பெற்ற இச்சந்திப்பு நட்பு ரீதியான சந்திப்பாக அமைந்திருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நல்லுறவை வலுப்படுத்துவதும், பேணுவதும் இச்சந்திப்பின் முக்கிய நோக்கமாக அமைந்திருந்தது. 'புல்மோட்டை மீனவர்கள் எதிர்நோக்கும் மீன்பிடி தொடர்பான பிரச்சினைகள்', 'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப் பிரச்சினைகள்', வடக்கு மாகாணத் திணைக்களங்களில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தில் குடியிருப்புக்களைக் கொண்ட உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகள் ஆகிய முக்கிய மூன்று விடயங்கள் தொடர்பில் இச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலில் இறுதி முடிவுகள் எதுவும் எட்டப்படாத நிலையில் மேற்படி விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்துவதற்கு உடன்பாடு காணப்பட்டது. இவ்வாறான சந்திப்புக்கள் எதிர்கால செயற்பாடுகளுக்கு நல்ல ஆரம்பமாக அமையும் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர்சி.வி..விக்னேஷ்வரன் இதன்போது தெரிவித்தார்.

One World விமான சேவையுடன் ஸ்ரீ லங்கன் விமான சேவை இணைவு

இலங்கை விமானச் சேவை வன் வேர்ல்ட் (One World) பூகோள விமானச் சேவையுடன் நேற்று உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டது. இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்காக உயர்தர சேவையை வழங்கும் பொருட்டு உலகின் முதற்தர விமான சேவைகளின் இணைப்பான வன் வேர்ல்டுடன் 15 ஆவது நாடாக ஸ்ரீலங்கன் விமான சேவை இணைந்துகொள்வதாக ஸ்ரீ லங்கா விமானச் சேவை தெரிவித்தது. இந்திய உபகண்டத்தில் முதலாவது சர்வதேச விமான சேவையாக ஸ்ரீலங்கன் விமான சேவை வன் வேர்ல்ட் குழுமத்துடன் கைகோர்க்கிறது. இதனூடாக பல சலுகைகள், வசதிகள் கிடைக்க உள்ளதோடு, பல சர்வதேச விமான சேவைகளுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பும் கிடைக்கவுள்ளது. வன்வேர்ல்டுடன் இணைந்துள்ள பயணிகளுக்கு வன்வேர்ல்ட் குழுமத்திலுள்ள எந்தவொரு விமானச் சேவையில் பயணித்தாலும் பல விசேட சலுகைகள் கிடைக்க உள்ளன. வன்வேர்ல்ட் குழுமத்தில் 180 மில்லியன் பேர் இணைந்துள்ளனர். வன்வேர்ல்ட் அங்கத்தவர்களுக்கு விமான ஆசனம் ஒதுக்குவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, இரட்டிப்பான பயண சலுகைகளும் கிடைக்க இருப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்தது.

இரு ரயில்கள் மோதி கோர விபத்து

குருநாகல் பொத்துஹெர பிரதேசத்தில் நேற்று இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் 75 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் குருநாகல் அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் இவர்களில் 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக குருநாகல் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்றுக்காலை 8.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. பொத்துஹெர ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வவுனியா - மாத்தறை சொகுசு ரயிலில் வவுனியா - கொழும்பு அதிவேக ரயில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தை யடுத்து நான்கு நீண்டதூர ரயில் சேவைகள் நேற்று இடை நிறுத்தப்பட்டன. பளை, வவுனியா. மட்டக்களப்பு, திருகோணமலைக்கான ரயில் சேவைகளே தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்தது. விபத்தின் போது ரயில் பெட்டிகள் இரண்டிற்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன் ரயில் பெட்டிகள் 20 அடி தூரம் வரை வீசப்பட்டுள்ளன. அத்துடன் ரயில் என்ஜின்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

கிழக்கு உக்ரைனை கட்டுப்படுத்த முடியாதென ஜனாதிபதி கைவிரிப்பு

கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு செயற்பாட்டாளர்கள் முன்னெடுக்கும் அமைதியின்மை நடவடிக்கைகளுக்கு முன் தமது படையினர் உதவியற்ற நிலையில் இருப்பதாக உக்ரைன் இடைக்கால ஜனாதிபதி ஒலக்சான்டர் டர்சினோவ் குறிப்பிட்டுள்ளார். பதற்ற நிலை பரவுவதை தடுப்பதே தற்போதைய ஒரே குறிக்கோளாகும் என்று டர்சினோவ் குறிப்பிட்டார். ரஷ்ய ஆதரவு செயற்பாட்டாளர்கள் உக்ரைனில் பல கட்டிடங்களையும் ஆக்கிரமித்திருப்பதோடு, சர்வதேச கண்காணிப்பாளர்கள் உட்பட பலரையும் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர். ரஷ்ய படை ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதால் இராணுவத்தினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்ப தாகவும் டர்சினோவ் குறிப்பிட்டார். "டொனட்ஸ்க் மற்றும் லுஹன்ஸ்க் பிராந்தியங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திறனுடன் படையினர் இல்லை என்பதை நான் வெளி;ப்படையாக கூறிக்கொள்ள வேண்டும்" என்று இடைக்கால ஜனாதிபதி பிராந்திய தலைவர்களை சந்தித்தபோது குறிப்பிட்டார். பாதுகாப்பு படையினருக்கு சிவிலியன்களை பாதுகாக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

கூட்டமைப்பின் எதிர்காலத்தை தீர்மானிக்க எண்மர் நியமனம்

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் தென்னாபிரிக்கா மத்தியஸ்துடனான தீர்வு மற்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் பங்களிப்பை பெறுவது என்பவற்றோடு நாட்டின் அரசியல் ரீதியாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அடுத்து எதிர்நோக்கவுள்ள தேர்தல் தொடர்பாக ஆராய்ந்து செயற்படுவதற்கு, நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளருமான மாவை சேனாதிராஜா தலைமையிலான எட்டுப்பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று (30) திருகோணமலையில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் கலந்து கொண்ட கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்றைய சந்திப்பு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா சம்மந்தன் கருத்து தெரிவிக்கும் போது, இன்று அமைக்கப்பட்ட 8 பேர் கொண்ட குழுவானது எதிர்காலத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக சுதந்திரமாகவும் அற்பணிப்புடனும் செயற்படும். மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்படும் இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்களநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், பொன். செல்வராஜா, சுமந்திரன் மற்றும் வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயதபாணி மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் உள்ளடங்குவார்கள் என்றார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com