தை 2015 மாதப் பதிவுகள்
ஜனவரி
31, 2015
யாருடனும்
பேசமுடியாதவர்கள்!
ஆட்சி
மாற்றத்திற்கு தமிழ் மக்களை வாக்களிக்கச் சொல்லி, அதன்படி புதிய
அரசாங்கத்தையும் தாங்களே கொண்டுவந்ததாகச் சொல்லிக்கொள்ளும் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பு, கொண்டுவந்த அரசாங்கத்துடன் தீர்வுப் பேச்சிற்கான முயற்சிகளைச்
செய்வதாக ஏதும் செய்திகளைக் காணோம். இந்த அரசும் சரிவராது, அகிம்சைப்
போராட்டம் இந்த அரசுக்கெதிராகவும் வெடிக்கும் என்று ஒற்றைவிரலை உயர்த்தி
முழங்கிய மாவையாரின் பிரகடனம்தான் வந்திருக்கிறது. இந்தமுறை காலக்கெடு
எதையும் சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பாமல் போராட்டத் திகதியை திறந்தபடி
விட்டிருக்கிறார்.
(மேலும்....)
என்
மனவலையிலிருந்து......
முஸ்லீம்
மக்களுடனான இணைத்தல்கள்
(மேலே உள்ள 'யாருடனும் பேசமுடியாதவர்கள்!' கட்டுரைக்கான எதிர்வினையாக இது
எழுதப்பட்டது)
(சாகரன்)
த.தே.கூ மட்டுமா இப்படி செயற்படுகின்றது. யாழ்ப்பாண மாநகரசபையை தேர்தல்
மூலம் ஈ.பி.டி.பி கைபற்றிய போது நல்லிணக்க சமிக்கையாகவும், முஸ்லீம் மக்களை
யாழ் ஐ விட்டுத் துரத்திய மூர்க்கமான செயற்பாட்டிற்கு ஒத்தணம்
கொடுப்பதற்காகவும் முஸ்லீம் ஒருவரை யாழ் மாநகர சபையின் உதவி மேயராக
நியமிக்க வேண்டும் என்று என்னைப் போன்றவர்கள் ஈ.பி.டி.பி இன்
முக்கியஸ்தர்களிடம் கோரிக்கை வைத்தோம். இதற்கு அவர்களிடம் இருந்து கிடைத்த
பதில் முடியாது என்பதே. தேர்தலில் அதிக விருப்பு வாக்குப் பெற்ற ஒருவர் (ஆமாம்
அது தமிழர்தான்) இதற்கு நியமிக்கப்படுவார் என்று கூறி எல்லா
நம்பிக்கைகளையும் தகர்த்தவர்கள் இவர்கள். கூடவே புலிகளுடனான யுத்தம்
நடைபெற்ற காலத்தில் இலங்கை இராணுவத்தின் கரங்களில் ஜனவரி 2009 இல் ஏ9 பாதை
விழுந்தது. இதன் பின்னர் உத்தியோக பூர்வமாக பொது மக்கள் பாவனைக்காக ஏ9 பாதை
திறந்தபோது இலங்கை அரசுடன் ஈ.பி.டி.பி யும் இணைந்து திறப்பு விழாவில் கலந்து
கொண்டனர். இந்த நிகழ்வில் மேளதாளத்துடன் முதன் முதலாக முஸ்லீம் சகோதரர்களை
அழைத்துச் சென்று புலிகள் செய்த இனச் சுத்திரிப்பிற்கு நாம் மன்னிப்புக்
கோரும் குறியீட்டு அணுகுமுறை மூலம் முஸ்லீம் மக்களுக்கு தமிழ் மக்கள் மீதான
ஒரு நம்பிக்கை பாலத்தை ஒருவாக்க வழி சமைப்போம் என்று பகிரங்க அறை கூவல்
விடுத்திருந்தோம். இதனை சம்மந்தப்பட்டவர்கள் வாசித்திருபார்களோ தெரியாது.
இதுவும் நடைபெறவில்லை. எப்போதும் தமிழர் தரப்பில் அது தமிழரசுக்
கட்சியாகட்டும், த.தே.கூட்டமைப்பாகட்டும் மறுவளத்தில் ஈ.பி.டி.பி ஆகட்டும்
வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்வில்லை என்பதே எமது தாழ்மையான
எடுத்தியம்புதல் ஆகும். இதற்கு எதிர்வினையாக முகப் புத்தகத்திலும் ஏனைய
இணைத்தளங்களிலிலும் இக்கருத்தை கூறுபவர்களை வசைபாடுவதையே கைங்கரியமாக
கொண்டிருந்தால் இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் தமிழ் முஸ்லீம்
இடையேயான உறவுகள் பலப்படப்போவது இல்லை. சிறுபான்மை இனங்களின் ஐக்கியம் இன்று
இலங்கையின் இனங்களுக்கிடையேயான சமத்துவம் இன்மையை போக்கும் இரசியல்
செயற்பாட்டிற்கு அத்தியாவசியமானது. இந்த அத்தியாவசியத்தை உணர முடியாவிட்டால்
இலங்கையில் தமிழ் இனம் ஒன்று இருந்தது என்பதை வரலாற்று நூல்களில் மட்டுமே
எதிர்காலத்தில
அறியவேண்டிய துர்ப்பாக்கி நிலமைக்கு நாம்
தள்ளப்படுவோம்.
தோழர்
குமார் குணரட்ணத்தை நாடுகடத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்!
முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைவரும், மத்திய குழு உறுப்பினருமான தோழர்
குமார் குணரத்தினம் அவர்களை நாடு கடத்த தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ள
மைத்திரி ஸ்ரீசேன அரசு முயன்று வருகிறது. இதை எதிர்த்து முன்னிலை சோசலிசக்
கட்சி மற்றும் ஜனநாயக இடதுசாரிக் கட்சிகளும் இணைத்து நாளை ஆர்ப்பாட்டம்
ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். இப்போராட்டம் கீழ் வரும் இரண்டு கோரிக்கைகளை முன்
வைத்து நடத்தப்படுகிறது.
தோழர். குமார் குணரத்தினத்தின் அரசியல், ஜனநாயக, குடியியல் உரிமைகளை
அங்கீகாரி!
மஹிந்த ராஜபக்ஷ அரசால் துரத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்கள் அனைவரையும்
நாட்டுக்குள் வர விடு!
போராட்ட விபரம்:
இடம் : கொழும்பு மைத்திய புகையிரத நிலையம் முன்பாக
காலம் : சனிக்கிழமை 31.01.2015
நேரம் : 12 மணிக்கு
அமெரிக்க அதிபர்
ஒபாமாவின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானம் பற்றிய சிறப்புத் தகவல்கள்!!

இலங்கையர்களுக்கு இரட்டை
பிரஜாவுரிமை
இலங்கையில் பிறந்த சகலருக்கும் இரட்டை இரட்டை பிரஜாவுரிமை பெறமுடியுமென
நிதியமைச்சர் ரவிகருணாநாயக்க தெரிவித்தார். 2015ஆம் ஆண்டுகான இடைக்கால
வரவு-செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை
பிரஜாவுரிமையை பெறமுடியும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் 10மில்லியன்
டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை
பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும். இரட்டை
பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின்
அங்கிகாரத்தை பெறவேண்டும். இவர்களுக்கான விஸா கட்டணம் 2.5மில்லியன்
ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துகொள்ளவேண்டும்.
நாடு திரும்பும்
அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்?
- இந்தியா
இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தாயகம் திரும்ப விரும்பினால், அவர்களின்
வாழ்வாதாரத்துக்கு எத்தகைய உத்தரவாதத்தை இலங்கை அரசாங்கம் அளிக்கும் என
இலங்கை தூதரக அதிகாரிகளிடம் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள்
செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க இரு நாட்டு
அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை, டெல்லியில் நேற்று
வெள்ளிக்கிழமை(30) நடைபெற்றுள்ளது. இந்தியாவின் சார்பில் வெளியுறவுத் துறை
இணைச் செயலர் சுசித்ரா துரை தலைமையில் மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை,
நிதித் துறை ஆகியவற்றின் அதிகாரிகள் அடங்கிய குழுவினரும், இலங்கையின்
சார்பில் டெல்லியில் உள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் துணைத் தூதர்
எம்.ஆர்.கே.லெனகாலா தலைமையிலான குழுவினரும் கலந்து கொண்டனர்.
(மேலும்....)
நிலமும்
வேலைவாய்ப்பும் கிடைத்தால் நாடு திரும்ப அகதிகள் விருப்பம்
இலங்கையில் தங்களுடைய நிலங்கள் திரும்பக் கொடுக்கப்பட்டு வேலைவாய் ப்புகள்
அளிக்கப்பட்டால் தாயகம் திரும்பத் தயாராக இருப்பதாக தமிழகத்தில் இருக்கும்
பெரும்பாலான இலங்கை அகதிகள் கூறுவதாக இந்திய பாராளுமன்ற நிலைக் குழு ஒன்று
தெரிவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான
சுதர்சன நாச்சியப்பன் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற
நிலைக்குழு புதன்கிழமை இராமேஸ்வரம் மண்டபம் ஆகிய பகுதிகளில் மக்களின்
குறைகளைக் கேட்டறிந்தது.
(மேலும்....)
வேலையற்ற
பட்டதாரிகளின் நிலைமைக்கு யார் காரணம்?
தமக்கு
வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று கூறி மீண்டும் பட்டதாரிகள் போராட்டங்களை
நடத்தத் தொடங்கியூள்ளனர். புதிய ஆட்சி மாற்றத்தின் பின்னர்,
யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் இவ்வாறான போராட்டங்கள்
நடைபெற்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியூள்ளன. க.பொ.த.
உயர்தரத்துக்குத் தோற்றும் சுமார் 3 இலட்சம் வரையிலானவர்களில்,
பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் சுமார் 25,000 வரையிலானவர்கள், தமது
பட்டக்கல்வியை நிறைவூசெய்த பின்னர் ஒவ்வொரு முறையூம் இப்படி தம்மைத் தாமே
வேலையற்ற பட்டதாரிகள்(வேலையற்ற என்று சொல்லாமல், வேலை தேடும் என்று
சொல்லலாமே?) என்று பிரகடனப்படுத்திப் போராட்டங்களை நடத்துவது வழக்கமாகவே
இருந்து வருகிறது.
(மேலும்....)
வாழ்க்கை தத்துவம்
குளிர்பதன வசதியுள்ள வாகனத்தில்
சிவா தன் தந்தையை உட்கார வைத்து நகர்வலம் வந்து கொண்டு இருக்கும் வேளையில்,
“அப்பா உங்கள் வாழ்க்கையில் சொத்துசுகம், சேமிப்பு ஏதுமே இல்லாமல் எழுபது
வயதைக் கடந்து விட்டீர்களே’ என்றான். வண்டி ஒரு கல்யாணப் பந்தலருகே
போகும்போது நிறுத்தச் சொன்னார் தந்தை “தம்பி பந்தலில் உள்ள வாழை மரத்தைப்
பார்த்தாயா” இதன் சரித்திரம், என்ன, தெரியுமா? இது தன்னுடைய வாழ்நாளில் இலை,
பூ, காய், கனி, பட்டை ஆகிய எல்லாவற்றையும் தானமாக கொடுத்து விடுகிறது. இந்த
வாழை மரத்தின் சேமிப்பு கன்றுகள் மட்டும்தான் இந்த வாழ்க்கைத் தத்துவம்
மணமக்களுக்கும் புரிய வேண்டுமென்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள்
மணப்பந்தலில் வாழை மரம் கட்டுவதை பழக்கமாக வைத்தார்கள். தந்தை கொடுத்த
உயிர்தான் மனிதனுக்கு மூலதனம். அதைக் கொண்டு முன்னேறுவதுதான் தனக்கும்
தன்னுடைய தந்தைக்கும் பெருமை இயற்கை விதியின்படி வாழும் மரங்களுக்கு துன்பமோ
துயரமோ கிடையாது புரிந்துகொள்’ என்றார் தந்தை.
ஊர்ல இருக்க
அம்புட்டு அறிவாளியும் நம்ம ஊர்ல தான் இருக்காங்க....

ஜனவரி
30, 2015
மக்களுக்கு அதிகளவு
நிவாரணம் வழங்கிய வரவு செலவுத் திட்டமாக இந்த வரவு செலவுத் திட்டம் அமையும்
விவசாயிகளின் கடன்கள் 50 வீதத்தினால் குறைக்கப்படும். விவசாயிகளின் கடன்கள்
50 வீதத்தினால் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். வணிக
வங்கிகளில் விவசாயிகள் பெற்றுக்கொண்டுள்ள கடன்களுக்கு 50 வீத சலுகை
வழங்கப்பட உள்ளது. விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உர மானியம்
தொடர்ச்சியாக வழங்கப்படும் குறிப்பிட்டுள்ளார். தேயிலை கொழுந்து மற்றும்
இறப்பர் ஆகியவற்றுக்கு உத்தரவாத விலைகள் நிர்ணயிக்கப்படும் தெரிவித்துள்ளார்.
தேயிலை கொழுந்து ஒரு கிலோ 80 ருபாவிற்கு விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற
உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் என ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 13
அத்தியாவசிய பொருட்ளுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளது. 13 அத்தியாவசிய
பொருட்ளுக்கான விலைகள் குறைக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க
தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களுக்கான வரிகளை குறைப்பதன் மூலம்
இவ்வாறு விலைகள் குறைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
(மேலும்....)
புதிய அரசிடம்
சமவுரிமை இயக்கத்தின் கோரிக்கைகள்
சமவுரிமை இயக்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பின் அறிக்கை
22.01.2015
இன்று மருதானை டீன்ஸ் வீதியில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில் சமவுரிமை
இயக்கம் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. ஜனாதிபதித்
தேர்தலின் பின்பதான நாட்டின் அரசியல் நிலவரம் தொடர்பில், கொள்கை அளவில் தமது
நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஊடகவியலாளர்
சந்திப்பில் சமவுரிமை இயக்க அமைப்பின் தேசிய ஏற்பாட்டாளர் ரவீந்திர முதலிகே
மற்றும் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான தர்மலிங்கம் கிருபாகரன்,
எஸ்.எம்.கிரிசாந்த ஆகியோர் கலந்து கொண்டனர்.
(மேலும்....)
பெண்களின்
வாழ்க்கையில் விளையாடும் மோடி அரசு
- குஷ்பு
மோடி ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இல்லை, ஜாதி- மத கலவரம் எங்கு எப்போது
நடக்கும் என்ற பயமும் பீதியும் நிலவுகிறது என குஷ்பு ஆவேசமாக பேசியுள்ளார்.
சென்னையில் நடந்த காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு,
கிராமத்தில் வாழும் ஏழைப் பெண்கள் தங்களது குடும்ப செலவுக்காக 100 நாள் வேலை
திட்டத்தில் சேர்ந்து பயன் அடைந்து வந்தனர். இந்த திட்டத்துக்கும் மோடி அரசு
வேட்டு வைக்க பார்க்கிறது. கிராமப்புற பெண்கள் மற்றவர்களை சார்ந்து
இருக்காமல் சுயமாக இந்த வேலையில் ஈடுபட்டு குடும்ப செலவை கவனித்து
கொண்டனர். ஆனால் அவர்களது வாழ்க்கையிலும் மோடி அரசு விளையாடுகிறது. பாஜக
ஆட்சியில் மக்கள் யாரும் நிம்மதியாக இல்லை, இந்தியா முழுவதும் இதே நிலைதான்
உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையே மோடி அரசு
செயல்படுத்துகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் மோடி அணுசக்தி ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டது புதியது அல்ல, 10 ஆண்டுக்கு முன்பே காங்கிரஸ் ஆட்சி
காலத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது கையெழுத்து மட்டும்தான் இப்போது
மோடி போட்டு இருக்கிறார். 10 வருடங்களில் காங்கிரஸ் ஆட்சி செய்த சாதனைகளை,
100 வருடங்கள் ஆனாலும் மோடியால் சாதிக்க முடியாது என்று பேசியுள்ளார்.
சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளை குற்றச்சாட்டுக்கள் ஏதும் இன்றி நீண்டகாலம்
தடுத்து வைக்க கனடிய அரசாங்கம் பரிசீலனை.
ஒட்டாவா- கொன்சவேட்டிவ் அரசாங்கம் கனடாவின் பயங்கரவாத
எதிர்ப்புச்சட்டங்களில் மாற்றங்களை கொண்டுவர பரிசீலனை செய்கின்றது. இந்த
மாற்றம் சந்தேகத்திற்குரிய பயங்கரவாதி ஒருவரை குற்றச்சாட்டுக்கள் ஏதுமின்றி
நீண்ட காலத்திற்கு தடுத்து வைக்க பொலிசாருக்கு அனுமதி வழங்கும். இந்த
மாற்றம் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படுமென எதிர்பார்க்கப் படுகின்றது. தற்போது
எவராவது பயங்கரவாத செயல்பாட்டிற்கு திட்டமிடுகின்றார் என பொலிசார் நம்பும்
பட்சத்தில் அந்நபரை பொலிசார் குற்றச்சாட்டு இல்லாமல் கைது செய்யலாம்.
பின்னர் 72 மணித்தியாலங்களிற்குள் பொலிசார் போதுமான ஆதாரங்கள்
கொண்டுவராவிடில் சந்தேக நபர் விடுதலை செய்யப் படவேண்டும்.
பரிசீலனையில் இருக்கும் புதிய சட்டம் பொலிசார் ஒரு நீதிபதி முன் தோன்றி
இரண்டு மேலதிக 48-மணித்தியாலங்களை பெற்று தங்கள் விசாரனையை தொடர அதிக
நேரத்தை செலவிட அனுமதிக்கின்றது. அதாவது குற்றவியல் சட்ட முன்கூட்டிய
தடுப்பு கைது விதிகளின் கீழ் பொலிசார் மொத்தமாக 7-நாட்கள் ஒருவரை தடுத்து
வைக்கலாம்.
கனடிய டொலர்
யு.எஸ்.சின் 80-சதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

கனடிய டொலர்
கிட்டத்தட்ட 6-வருடங்களில் முதல் தடவையாக யுஎஸ்.சின் 80-சதத்திற்கு கீழே
சறுக்கியுள்ளது. புதன்கிழமை கனடிய டொலர் யுஎஸ்சின் 79.87-சதமாக
காணப்பட்டுள்ளது. இது செவ்வாய்கிழமையை விட சதத்திற்கு முக்கால் விகிதம்
குறைந்துள்ளது. யுஎஸ். டொலரின் பெறுமதி கனடா உட்பட்ட உலகின் பல பெரிய
நாணயங்களிற்கு எதிராக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கனடிய லூனியின்
பெறுமதி வீழ்ச்சியடைந்த பின்னர் ஒரு யுஎஸ் டொலரை வாங்க அதிகார பூர்வமான
பரிமாற்ற விகிதமாக 1.25 கனடிய டொலர்கள் வேண்டும். 2009-ஏப்ரலில் இருந்து
கனடிய டொலர் 80-சத யுஎஸ்சிற்கு பரிமாற்றம் செய்யப்படவில்லை. அடுத்த சில
மாதங்களிற்கு நிலைமை மோசமாகலாம் எனவும் கூறப்படுகின்றது. கச்சா எண்ணெயின்
விலை புதன்கிழமை பீப்பா ஒன்றிற்கு டொலர்கள் 1.78 குறைந்துள்ளது. சந்திரனை
விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து
கொண்டிருக்கிறது.
அண்ணலும் நோக்கினான் அம்பானியும் நோக்கினான் !
இனி ஒபாமா
இருக்கும் இடம்தான் மோடிக்கு அயோத்தி. அனுமானுக்கு கணையாழி…ஆர்.எஸ்.எஸ்.
சுக்கு அணு உலை…
ராமாயண குடியரசு
மோடி, ஒபாமா, வீடணன்
வீடணன் என்றால்
என்ன மோடி என்றால் என்ன தேசத்துரோகம் ஒன்றுதான்!
ராமா என்றால் என்ன
ஒபாமா என்றால் என்ன
ராமாயணம் ஒன்றுதான்!
வீடணன் என்றால் என்ன
மோடி என்றால் என்ன
தேசத்துரோகம் ஒன்றுதான்!
அசுரநிலத்தை ஆக்கிரமிக்கும்
ஆரண்ய காண்டத்து காட்சிகளை
குடியரசு தின அணிவகுப்பில்
கண்டு மகிழ்கிறான்
அந்நிய ராமன்…(மேலும்....)
சந்திரனை
விட மூன்று மடங்கு பெரியதான விண்கல் ஒன்று பூமியை நெருங்கி வந்து
கொண்டிருக்கிறது.
கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு நியூ மெக்சிகோவில் உள்ள Lincoln Near-Earth
Asteroid Research (LINEAR) தொலைநோக்கி புதிய விண்கல் ஒன்றை கண்டுபிடித்தது.
சந்திரனை விட மூன்று மடங்கு பெரிதான விண்கல்லுக்கு, ‘2004 பிஎல் 86′ (2004
BL86) என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் தற்போது குறித்த விண்கல்
பூமிக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறது. தற்போது பூமியில் இருந்து
745,000 மைல் (12 லட்சம் கிலோ மீட்டர்) தூரத்தில் உள்ள இந்த விண்கல், வெகு
விரைவில் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து செல்லும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற விண்கல் பூமியை 200 ஆண்டுக்கு ஒருமுறை
மட்டுமே கடக்கும் என்றும், அதே நேரத்தில் பூமியில் மோதாமல் கடந்து செல்லும்
எனவும் நாசா மையத்தின் ஜெட் புரோ புல்சன் ஆய்வகம் (Jet Propulsion
Laboratory) தெரிவித்துள்ளது.
புதிய அரசியலமைப்பை
உருவாக்கும் பணிகள் ஆரம்பம்
நூறுநாள்
செயற்றிட்டமானது எம்முன்னால் காணப்படும் பாரிய ஒரு சவாலாகும்.
அச்செயற்றிட்டத்தை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன்
செயற்படுகிறோம். அந்த சவாலை வெற்றிகொள்வதற்கு நாம் இரவு பகல் பாராது
உழைக்கின்றோம். சிலர் நூறுநாள் செயற்றிட்டத்தை குறைகூறுகின்றனர். நியாயமான
குறைகளுக்கு நாம் மதிப்பளிக்கின்றோம். நூறுநாள் செயற்றிட்டத்தை வளமடையச்
செய்யும் உங்கள் கருத்துக்களை நாம் ஏற்றுக்கொள்வோம். ஒரு நாள் இரண்டுநாள்
பிந்துவதாக சிலர் கூறுகின்றனர். குடும்ப ஆட்சியையும், ஏகாதிபத்திய
ஆட்சியையும் முழுமையாக அழித்து மக்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட இறைமையை
மீண்டும் மக்களுக்கு வழங்கும் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம். தனிநபரை
மையப்படுத்தி காணப்படும் அதிகாரங்களைக் கொண்ட நிறைவேற்று அதிகாரம் மிக்க
ஜனாதிபதி முறைக்குப் பதிலாக அமைச்சரவை மற்றும் பாராளுமன்றிற்கு அதிகாரம்
கிடைக்கும் புதிய அரசியலமைப்பு முறையொன்றை அமைப்பதற்கான செயற்பாடுகளை நாம்
ஆரம்பித்துள்ளோம். யாப்பு நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை தற்போதைக்கு நாம்
நியமித்துள்ளோம். அவர்கள் தயாரிக்கும் அபிப்பிராய எழுத்தாவணத்தை மிக
விரைவில் கட்சித் தலைவர்களிடம் பெற்றுக்கொடுப்பதற்கு நாம்
எதிர்பார்க்கின்றோம். கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னரே அதனை
அமைச்சரவைக்கு சமர்ப்பிப்போம்.
புத்திசாலித்தனம்..........?
பத்தாம் வகுப்பு
படிக்கும் பக்கத்து விட்டுப் பெண்ணிடம்,
தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி
கேட்கப்பட்டிருந்தது.
எனக்கு, அது தெரியாது என்பதால், அப்பெண்ணிடமே கேட்டேன்.
உடனே அப்பெண், “1 2 3 4 5 6 7 8 9 0என்ற எண்ணுக்கு
முறையே, க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, 0′ என்றாள்.
“இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி,வாக்கியமாக்கி
மனப்பாடம் செய்ததாக கூறினாள்.
அதாவது, “க’டுகு, “உ’ளுந்து, “ங’னைச்சு, “ச’மைச்சு, “ரு’சிச்சு, “சா’ப்பிட்டேன்,“எ’ன,
“அ’வன், “கூ’றினான்; “ஓ’ என்றாள்.
இதைக்கேட்டு, வியந்து பாராட்டினேன். இக்காலப் பெண்கள், எதிலும் சளைத்தவர்கள்
அல்ல எனப் புரிந்தது.
என்ன செய்யலாம் கிழக்கு முதல்வர் விடையத்தில்
கிழக்கு
மாகாணசபைக்கான முதலமைச்சரை நியமிப்பதில் தமிழரசுக் கட்சியும் முஸ்லிம்
கொங்கிரசும் இழுபறிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதனால் கிழக்கு முதலமைச்சர்
விடயம் விவகாரமாகியுள்ளது.இப்படி விவகாரமாகும்போது தமிழ் - முஸ்லிம் உறவில்
மேலும் மேலும் இடைவெளியும் காயங்களுமே ஏற்படும். இந்த இடத்தில் தமிழரசுக்
கட்சி முஸ்லிம்களுக்கு அந்தப் பதவியை விட்டுக்கொடுப்பது நல்லது. அப்படிச்
செய்வதன் மூலமாக முஸ்லிம் மக்களிடம் தமிழ் மக்களின் நல்லெண்ணத்தையும்
விட்டுக்கொடுப்பையும் புரிந்துணர்வையும் வெளிப்படுத்திக் கொள்ள முடியும்.
அத்துடன், கடந்த காலங்களில் தமிழ்த்தரப்பினால் முஸ்லிம்களுக்கு
ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளையும் காயங்களையும் ஆற்றுப்படுத்தவும் இந்தத்
தீர்மானம் உதவும். இது தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டியெழுப்புவதற்கான
அத்திவாரமாக அமைவதுடன், சிங்கள இனவாதச் சக்திகள் இந்தச் சமூகங்களைப்
பிரித்தாள முற்படும் தந்திரோபாயத்தை முறியடிப்பதாகவும் இருக்கும்.
பெருந்தன்மையாக நடந்து கொள்வதும் பொருத்தமான சந்தர்ப்பங்களில்
விட்டுக்கொடுப்பதும் தலைமைத்துவத்தின் மாண்பாகும். இத்தகைய மாண்புக்குரிய
செயல்களே வரலாற்றுத் திருப்பங்களை உருவாக்குகின்றன. (Karunakaran)
யாழ்ப்பாணத்து
ஒடியல் கூழ்

ஒடியல் கூழ்
செய்யும் முறை
தேவையானவை
ஒடியல் மா - 1/2 கிலோ
மீன் - 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது
நல்லது)
நண்டு - 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் - 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் - 250
கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் - 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
ஒரு பிடி கீரை, அல்லது கீரை வகைகள் ஒரு பிடி
அரிசி - 50 கிராம்
பச்சை மிளகாய் 10 இரண்டாக பிளந்தது
செத்தல் மிளகாய் - 15 அரைத்தது
பழப்புளி - 100 கிராம்
உப்பு - சுவைக்கேற்ப
ஜனவரி
29, 2015
Waste oil mixed
in the drinking water wells
-Jaffna
TNA-------- busy with next election
EPDP ------ busy with securing sand business
Diasporas --busy demanding Tamil eelam - surly not for them
Akka is visiting temples - to make sure to get back the seat
Nilbalakaya- busy with legal matters
All the rest sleeping - i have not seen with whom
Some people did politics with ICE cream - may be business competition
who is to take up the issue ?
Is Mano ganeshen around there ?
அகிம்சைப்போர் அறிவிப்பு “பென்டிங்”கில் இருக்கத்தக்கதாக, அரசுக்கெதிரான
இரண்டாவது அகிம்சைப் போராட்ட அறிவிப்பு

கடந்த ஜனவரி
முதலாம் திகதி தொடங்குவதாக அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு பிரகடனம்
செய்த அகிம்சைப்போர் அறிவிப்பு “பென்டிங்”கில் இருக்கத்தக்கதாக,
அரசுக்கெதிரான இரண்டாவது அகிம்சைப் போராட்ட அறிவிப்பையும் அதேயளவு
ஆக்ரோசத்துடனும் உக்கிரமாகவும் வெளியிட்டிருக்கிறார் மாவை சேனாதிராஜா
அவர்கள். January 28,2015 அரசுக்கெதிராகப் போராட மக்களைக் கூவியழைக்கும்போது
ஆவேசம் பொங்கும் மாவையார் குறித்து புதிதாக நாம் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஆனால், திரும்பத் திரும்ப இந்த சத்தியாவேசங்களை சலனம் எதுவுமின்றி
கேட்டுக்கொள்ள முடிகிற தமிழ் மக்களைப் பார்த்துத்தான் ஒரே வியப்பாக
இருக்கிறது!
(மேலும்....)
இலங்கை தமிழர்கள்
தங்கள் சொந்த நாட்டுக்குச் செல்லவே விருப்பம்
இலங்கை அகதி களில்
70 சதவீதம் பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்லவே விருப்புகின்றனர். 20
சதவீதம் பேர் இந்தியாவில் இருக்க விரும்புவதாகவும் 10 சதவீதம் பேர் கல்வி,
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்ல தயார் என்றும்
கூறியதாக இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சுதர்சன நாச்சியப்பன்
கூறியுள்ளார். நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் சுதர்சன நாச்சியப்பன்
தலைமையிலான குழு தமிழ் நாடு இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில்
இலங்கையிலிருந்து இந்தியா வந்து மண்டபம் முகாமில் உள்ள அகதிகள் மற்றும்
மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் உள்ளிட்ட அவர்களது குறைகளை கேட்க,
கருத்து கேட்பு கூட்டம் ஒன்றை நடத்தினார். இச்சந்திப்பின் பின்னர் சுதர்சன
நாச்சியப்பன் செய்தியாளர்களிடம் கூறுகையில், இலங்கை அகதிகளில் 70 சதவீதம்
பேர் தங்கள் சொந்த நாட்டுக்கு செல்லவே விரும்புகின்றனர் என்றும், 20 சதவீதம்
பேர் இந்தியாவில் இருக்க விரும்புவதாகவும், 10 சதவீதம் பேர், கல்வி,
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்தால் இலங்கைக்கு செல்ல தயார் என்று
கூறியதாக கூறினார்.
மன்னார்
கடற்பரப்பில் கண்டு பிடிக்கப்பட்ட எரிவாயு குறித்து ஆய்வு
மன்னார்
கடற்படுகையில் கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயு தொகுதியில் மீள் முப்பரிமான
ஆய்வுகளை மேற்கொள்ள கெய்ன் இந்திய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த
செயற்பாடுகள் தொடர்பாக 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ம் திகதி
முடிவடைந்த மூன்றாம் காலாண்டிற்கான அறிக்கையிலேயே கெய்ன் இந்தியா நிறுவனம்
தெரிவித்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட எரிவாயுவை வர்த்தகமயமாக்குவதில் பெரும்
சவால்கள் காணப்படுகிறன. அதனால் நிறுவனம் ஆய்வுவளங்களை அடிப்படையாகக் கொண்டு
சுத்திகரிப்பு குறித்த தொழில்நுட்ப மதிப்பீடுகளை கவனத்தில் கொண்டுள்ளதோடு
அதுகுறித்து ஆராய்ந்து அதற்கான வாய்ப்பு பற்றி எதிர்பார்த்துள்ளது.
இறுதியில் கெய்ன் நிறுவனம் முப்பரிமான தரவுகளுடன் நடப்பு காலாண்டில் தமது
அகழ்வு ஆய்வு நடவடிக்கைகளை மீளவும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது என
நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த கெய்ன்
நிறுவனம் தற்போதுள்ள மசகு எண்ணெய் விலைச் சூழலுக்கு ஏற்ப எமது செயற்பாடுகளை
முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்.
பிரதம நீதியரசர்
கடமையில் ஷிராணி பண்டாரநாயக்க
43வது
பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க இலங்கை ஜனநாயக சோசலிச
குடியரசின் பிரதம நீதியரசராக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய இந்த நியமனம்
வழங்கப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபயக்கோன் நேற்று உச்சநீதிமன்ற
பதிவாளருக்கு அறிவித்தார். 2013ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் திகதி ஷிராணி
பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை சட்டரீதியாக
மேற்கொள்ளப்படாததால், இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், 44வது பிரதம
நீதியரசர் மொஹான் பீரிஸின் நியமனம் ஆரம்பம் முதல் சட்டவிரோதமான நியமனம்
என்றும் ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி செயலாளர் அறிவித்துள்ளார்.
பிரதம நீதியரசராகவிருந்த மொஹான் பீரிஸை பதவியைவிட்டு விலகிச்செல்லுமாறு
வலியுறுத்தி ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் ஒன்றியம் நேற்று புதுக்கடை
நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது. கலை
8.30 மணிக்கு ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க
நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு வரும்வரை சுமார் நண்பகல்வரை நீடித்திருந்தது.
அமைச்சர் ஸ்மிருதி
இரானிக்கு பாதுகாப்பு கொடுக்கும் மோடி….மனைவிக்கு பாதுகாப்பு அளிக்கவில்லையே
பிரதமர்
நரேந்திர மோடி மனைவியை கைவிட்டவர் என்று விமர்சித்த காங்கிரஸ் கட்சியின்
மூத்த தலைவர் குருதாஸ் கமாத்திற்கு பாரதீய ஜனதா பதிலடி கொடுத்துள்ளது.
மும்பையில், மராட்டிய அரசுக்கு எதிராகவும், கிரேட்டர் மும்பை மாநகராட்சியை
கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள்
மத்திய மந்திரியுமான குருதாஸ் கமாத் பேசுகையில், மோடி, அவரது மனைவியை கடந்த
40 ஆண்டுகளாக கைவிட்டது மிகவும் வெட்கமானது.
பிரதமர் மோடி திருமணம் ஆனவராகவே உள்ளார். அவர்கள் விவாகரத்து செய்யவில்லை,
மோடி அவரது மனைவியை கைவிட்டுவிட்டார். (மேலும்....)
தஞ்சம் கோரி படகில்
சென்ற இலங்கை தமிழர்களை கடலில் தடுத்தது சரியே
-
அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம்
அவுஸ்திரேலியாவுக்கு அகதி தஞ்சம் கோரி படகில் கடல் வழியாகச் சென்ற 157
ஈழத்தமிழர்களை நடுக்கடலில் தடுத்து வைத்த அவுஸ்திரேலிய அரசின் செயல்
சட்டப்படி சரியான செயலே என்று அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்திருக்கிறது.சென்ற ஆண்டு இந்த அகதித் தஞ்சம் கோரியவர்களை சுமார்
ஒருமாதகாலம் நடுக்கடலில் அவுஸ்திரேலிய கடற்படையினர் படகில் தடுத்து
வைத்திருந்த செயல் பெரும் சர்ச்சையை தோற்றுவித்தது.சிறு குழந்தைகள் உட்பட
157 பேரையும் நாட்கணக்கில் நடுக்கடலில் பலவந்தமாக தடுத்து வைத்ததன் மூலம்
அவுஸ்திரேலியா அரசு அகதிகளை நடத்துவதற்கான தனது சர்வதேச கடப்பாடுகளை
மீறிவிட்டதாக ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள்
கண்டித்திருந்தன. இது தொடர்பான வழக்கில் இன்று புதன்கிழமை
தீர்ப்பளித்திருக்கும் அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அவுஸ்திரேலிய அரசின்
செயல் சட்டப்படி சரியே என்று தெரிவித்துள்ளது. இன்றைய தீர்ப்பு தனது
நடவடிக்கைகளுக்கு கிடைத்த நீதிமன்ற அங்கீகாரமாக அவுஸ்திரேலிய அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய தீர்ப்பு அகதிகள் மற்றும் அகதித்தஞ்சம்
கோருபவர்களின் அடிப்படை மனித உரிமைகளுக்கு இது பின்னடைவாக அமையும் என்று
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்திருக்கிறார்கள்.
சு.கவுக்கு
தலைமை தாங்கி அரசியல் பணிகளை முன்னெடுக்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்
அடுத்த பொதுத்
தேர்தலில் சுதந்திரக் கட்சிக்கு தலைமை வழங்கி அரசியல் நடவடிக்கைகளை
முன்னெடுக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கிறார். அடுத்த பாராளுமன்ற
தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் தலைமையின் கீழ் சுதந்திரக்
கட்சி வெற்றியீட்டும் என எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா
தெரிவித்தார். சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் வகையில் அனைவரும் செயற்பட
வேண்டும் என்று கூறிய அவர் ஏனைய கட்சிகளுடன் இணைந்து வெற்றிக்காக
செயற்படப்போவதாகவும் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால
டி சில்வா நேற்று சுப நேரத்தில் எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் தமது
கடமைகளை பொறுப்பேற்றார். (மேலும்....)
டெல்லி
சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மியின் செல்வாக்கு அதிகரிப்பு
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி
நிலவுகிறது என்றும் தற்போதைய நிலவரப்படி பாஜகவின் செல்வாக்கு சரிந்தும் ஆம்
ஆத்மியின் செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு ஒன்று
தெரிவிக்கிறது. டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் திகதி தேர்தல்
நடைபெறுகிறது. கடந்த தேர்தலில் அதிக இடங் களை பிடித்திருந்தபோதிலும் பாஜவால்
ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த முறை எப்படியாவது வெற்றி பெற்று விட
வேண்டும் என்ற முனைப்புடன் பாஜ தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.
முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை பாஜ அறிவித்தது. அன்னா ஹசாரேவின் ஊழல்
எதிர்ப்பு இயக்கத்தில் அரவிந்த் கெஜ் ரிவாலுடன் இணைந்து செயல்பட்டவர்
கிரண்பேடி. பாஜக, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில்,
அரவிந்த் கெஜ் ரிவாலுக்கு எதிராக கிரண் பேடியை பா.ஜ.க களம் இறக்கி இருப்பது
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரண் பேடி தற்போது தீவிர பிரசாரத்தில்
ஈடுபட்டு வருகிறார். கடந்த தேர் தலில் படுதோல்வி அடைந்த காங் கிரஸ் இம்முறை
கௌவுரமான இடங் களை பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வாக்காளர்களை
சந்தித்து வருகிறது. மூத்த தலைவரான அஜய் மக்கானை காங்கிரஸ் கட்சி இந்த
தேர்தலில் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வருகிறது.
இந்தியா
உள்ளிட்ட பகுதிகளுக்கு தலைவரை அறிவித்தது ஐ.எஸ். அமைப்பு!
இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான ஐ.எஸ். பயங்கரவாத தலைவரை
அந்த இயக்கம் அறிவித்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம், சிரியா, ஈராக்கைக்
கடந்து, தெற்கு ஆசியாவில் தங்களது ஆதிக்கத்தை விரிவாக்கம் செய்து அல்-கொய்தா
பயங்கரவாத அமைப்புக்குச் சவால்விட முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுதொடர்பாக இணையதளங்களில் ஐ.எஸ். அமைப்பு வெளியிட்ட ஒரு
விடியோவில், ஐ.எஸ். அமைப்பின் தளபதி அபு முகமது அல்-அட்னி பேசும் காட்சிகள்
இடம்பெற்றுள்ளது. அதில், ''ஐ.எஸ். அமைப்பின் "குராஸன்' பகுதிக்கான தலைவராக,
தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் முன்னாள் தளபதி ஹபீஸ் சயீத் கான்
நியமிக்கப்படுகிறார்'' என்று அவர் அறிவித்தார். இதன் மூலம், ஆப்கானிஸ்தான்,
பாகிஸ்தான், இந்தியாவின் சில இடங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கான இஸ்லாமிய தேச
(ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்புக்கான தலைவராக, தலிபானிலிருந்து வெளியேறிய
தளபதியை அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
ஜனவரி
28, 2015
உடனடி
அவதானத்துக்கு……!
சுன்னாகத்தில்
தொடங்கி யாழ் செம்மண் பிரதேசத்தில் பரவலாகி வரும் கழிவுஎண்ணைக்கலப்பு மிக
மிக பாரதூரமான பிரச்சனை . இதனை வைத்து தமக்கு சம்பந்தம் இல்லை என்பது போல
அரசியல் சித்து விளையாட்டு ஒன்று நடக்கிறது. இந்த பாரதூரமான நிலைமை
முன்கூட்டியே தடுத்து நிறுத்தியிருக்கமுடியும். இதற்கு பதிலளிக்க
வேண்டியவர்களின் பாசாங்கு தான் சகிக்க முடியவில்லை. இது ஒரு மக்கள்
கூட்டத்தின் வாழ்வு இருப்பு தொடர்பான பிரச்சனை. இந்த பாரதூரமான
பிரச்சனையிலிருந்து நீரையும் மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்கு உலகளாவிய
அளவில் பரந்து வாழும் எமது புலமையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
ஒருங்கிணைந்து உடனடியாகச் செயற்படவேண்டிய தருணம்.
நச்சென்று ஒரு வார்த்தை

கே.பி. விவகாரம்
பெப். 5 இல் ஆப்பா......? அங்கீகாரமா......?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களை விநியோகித்தவரும்
அவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர்
அவ்வியக்கத்தின் தலைவர் என்று கூறப்பட்டவருமான குமரன் பத்மநாதனை (கே.பி)
கைது செய்வதா அல்லது விசாரணைக்கு உட்படுத்துவதா என்பது தொடர்பில் அறிக்கை
சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று
(27) உத்தரவிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின்
தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன் பத்மநாதன் மீது மஹிந்த
ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற ரீதியில்
அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி
கோரயிருந்தது. கே.பி. மீது குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையிலும், எந்தவிதமான
விசாரணைகளும் இன்றி, எந்தவிமான சட்டநடவடிக்கைகளும் இன்றி கிளிநொச்சியில்
அவர் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றார். பணம், தங்கம், கப்பல்கள்
அனைத்தையும் மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் கே.பி.யும் சேர்ந்து
பகிர்ந்துகொண்டார்களா என்கின்ற ஒரு கேள்வி மக்கள் மத்தியில் எழுகின்றது
என்றும் அக்கட்சி கூறியிருந்தது. விடுதலைப் புலிகளின் முன்னாள்
உறுப்பினர்கள் பலர் புனர்வாழ்வு பெற்று சிவில் வாழ்க்கையில்
இணைந்துகொண்டுள்ள நிலையில், கே.பி. என்கின்ற குமரன் பத்மநாதன் எந்தவிதமான
புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கும்; உள்ளாக்கப்படவில்லை. கே.பி.யின்
கட்டுப்பாட்டில் உள்ள சொத்துக்களின் விபரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக
விளக்கம் கோரப்படும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி ஏற்கெனவே கூறியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
நாளை
வருமாறு அழைத்தனர்
- குணரட்னம்
முன்னணி சோசலிசக்கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் இலங்கைக்கு திரும்பியதன்
பின்னர் மேற்கொண்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து, வாக்குமூலம் கொடுப்பதற்கு
அவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்துக்கு இன்று (28)
சென்றிருந்தார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னணி சோசலிச கட்சியின் தலைவராக எனது
செயற்பாடுகள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள்
என்னிடம் கேட்டார்கள். மேலும் தேர்தல் காலத்தில் இடம்பெற்ற தேர்தல் வன்முறை
சம்பவங்களில் நான் சம்பந்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள்
கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைக்கு நாளை (29)
திணைக்களத்துக்கு வருமாறும் தெரிவித்தனர். அது மட்டுமன்றி எனது குடியுரிமை
பிரச்சினைகள் குறித்தும் விசாரணைகளை நடத்தினார்கள். பன்னிப்பிட்டியவிலுள்ள
முன்னணி சோசலிச கட்சியின் அலுவலகத்துக்கு குடிவரவு திணைக்கள அதிகாரிகள்,
குமார் குணரட்ணத்திடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக திங்கட்கிழமை (26)
சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நம்பிக்கை தரும் உறவுகள்
இவர்களுடன் இன்னொருவரும் இணைந்து இருந்திருத்தால்......?

அமெரிக்காவுடனான உறவுக்கு பிடெல் காஸ்ட்ரோ ஆதரவு?
அமெரிக்கா மற்றும் கியூபாவுக்கு இடையிலான உறவை மீள ஏற்படுத்தும்
திட்டத்திற்கு கியூப முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ மறைமுக ஆதரவு
அளித்துள்ளார். காஸ்ட்ரோ எழுதியிருக்கும் கடிதம் ஒன்றில், "அமெரிக் காவின்
கொள்கைகளை நான் நம்பப்போவதில்லை. அவர்களுடன் நான் எந்த வார்த்தையையும் பரி
மாறப்போவதுமில்லை. ஆனால் இது மோதலுக்கு அமைதியான தீர்வை நிராகரிப்பதாக
அர்த்தம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். கியூபா-அமெரிக்காவுக்கு
இடையிலான இராஜதந் திர உறவை மீள ஏற்படுத்தும் வரலாற்று முக்கியம் வாய்ந்த
அறிவிப்பு கடந்த டிசம்பரில் வெளியிடப் பட்டதன் பின்னர் அது குறித்து பிடெல்
காஸ்ட்ரோ கருத்து வெளியிடுவது இது முதல் முறையாகும். இரு தரப்புக்கும்
இடையிலான உயர்மட்ட பேச்சு வார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. காஸ்ட்ரோ
எழுதிய கடிதம் கியூப அரச பத்திரிகையான கிரன்மா வில் நேற்று
பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில், "உல கில் இருக்கும் அனைவருடனும்
ஒத்துழைப்பு மற் றும் நட்பை பாதுகாப்போம். இதில் எமது அரசியல் எதிரிகளும்
உட்படுகிறார்கள்" என்று விபரித்துள்ளார். கியூபாவின் தற்போதைய ஜனாதிபதியான
தனது இளைய சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ அரசு எடுத் திருக்கும் முடிவையே 88 வயது
பிடெல் ஆதரித் துள்ளார்.
வருகையும்
வரவேற்பும் எதற்கான குறியீடு?
உலக நாடுகளிடையே நல்லுறவு வளர வேண்டும், எல்லைகள் தாண்டி மக்களிடையே
நட்புறவு மேலோங்க வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட்டுகளின் விருப்பம். பிறகு ஏன்
அமெரிக்க அதிபரின் இந்திய வருகையை கம்யூனிஸ்ட்டுகள் எதிர்த்தார்கள், ஒபாமாவே
திரும்பிப் போ என்றார்கள் என்று சிலர் கேட்கிறார்கள. பயணம் முடிந்ததும்
ஒபாமா தமது நாட்டிற்குத் திரும்பத்தானே போகிறார் என்று சிலர் நகைச்சுவையாகக்
கேட்டுவிட்டு அவர்களாகவே சிரிக்கிறார்கள். ஒபாமா வருகையிலும் அவருக்கு இங்கே
தரப்பட்ட மிகப்பெரிய வரவேற்பிலும் உள்ள குறியீடு என்ன என்பதை மக்களுக்குச்
சொல்வதற்காகவே அந்தப் போராட்டங்கள். அவர் இங்கே வந்ததற்கும், அதற்கு முன்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அங்கே வரவேற்றதற்கும் பின்னணியில்
இந்தியாவின் சுயமரியாதையும் மக்களின் பொருளாதார நலன்களும், ஏன்
உயிர்ப்பாதுகாப்பு நலன்களும் கூட விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன், அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் அன்றைய
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் இருவரும் செய்துகொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை
மேலும் பத்தாண்டுகள் நீட்டிப்பதற்கு மோடி ஒப்புக்கொண்டிருக்கிறார்.
(மேலும்....)
மணிசங்கர் ஐயருடன் பத்மநாபா E.P.R.L.F

முன்னாள் இந்திய
மத்திய அரசாங்கத்தின் அமைச்சர் மணிசங்கர் ஐயர் அவருடன் வந்த குழுவினரை
பத்மநாபா E.P.R.L.F சத்தியன் 21/01/2015 சாயா ப்லூ ஹோட்டேலில் [Chaya Blue
Hotel] இடம்பெற்ற சந்திப்பில் 13ம் திருத்த சட்டபடி இந்திய இலங்கை
ஒப்பந்தத்தை மிக விரைவாக நடைமுறைபடுத்துவதற்கு இந்திய மத்திய அரசையும்
இலங்கை அரசையும் வலியுறுத்துமாறு கேட்டு கொண்டதுடன் இலங்கையின் ஆட்சி
மாற்றத்தினால் ஒரு ஜனநாயக சூழல் உருவாகியுள்ள நிலையில் இலங்கையின் தேசிய
பிரச்சனையாக உள்ள தமிழ் பேசும் மக்களின் தீர்வு திட்டத்தின் அடிப்படையில்
இந்த 13வது திருத்த சட்ட மூலம் ஏற்படுத்தபட்டது. வடக்கு கிழக்கு மாகாண சபை
கடந்த காலங்களில் இருந்து வந்த இலங்கை அரசுகளினால் 13வது திருத்த சட்டமூலம்
சரியாக நடைமுறைபடுத்தபடவில்லை. அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவில்லை. மாறாக
இரு மாகாண சபைகளாக பிரித்து விட்டார்கள்.
(மேலும்....)
மோடியின்
மேக் இன் இந்தியா திட்டம்...!!!
மேக் இன் இந்தியா
என்று ஊர் முழுக்க விளம்பரம் செய்யும் மோடி செய்த வேலை என்ன தெரியுமா...??

இந்தியாவின்
66வது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதில்
பெரிதும் சர்ச்சையை கிளப்பியது மோடி அணிந்திருந்த ஆடை. நரேந்திர தாமோதரதாஸ்
மோடி என்ற தனது முழு பெயரையும் கோடுகள் போன்று எழுதப்பட்டிருந்த ஆடை.
உலகிலேயே இந்த ஆடைக்கு தேவையான துணியை வழங்குவது லண்டனை சேர்ந்த Holland &
Sherry Fabrics என்ற நிறுவனம். இது உலக புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனம்.
இந்த நிறுவனம் பிரத்யேகமாக பல வகை ஆடைகளை வெளியிட்டு வருகிறது. அந்த
வரிசையில் அந்த நிறுவனம் வெளியிட்ட ஓர் ஆடைதான் "Signature Fabric". இது பல
ரகங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலை ஒரு மீட்டர் துணி 300 பவுண்டுகள்.
இதன் சிறப்பம்சமே துணியில் கோடுகள் போன்று தனிமனிதர் பெயரோ அல்லது ஒரு
நிறுவனத்தின் பெயரோ நெய்து தரப்படும். இந்த ஆடையை தைப்பது சிட்னியை சேர்ந்த
உலக புகழ் பெற்ற நிறுவனமான Tom James என்ற நிறுவனம். மோடி நேற்று
அணிந்திருந்த ஆடையின் துணி மட்டும் 7 மீட்டர் நீளம் கொண்டது. அதன் மதிப்பு
மட்டும் 3000 பவுண்டுகள்(2,78,200 ரூபாய்). இதனை தைப்பதற்கும் சேர்த்து ஆன
மொத்த தொகை 10,000 பவுண்டுகள்(9,27,332 ரூபாய்).
எளிமையான தலைவர், தான் பெங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இந்திய கலாச்சாரத்தை
காப்பாற்றும் மிக அற்புதமான தலைவர் செய்த வேலை தான் இது..!!
லண்டனில் இருந்து துணி...!!
அதனை தைக்க ஆஸ்திரேலிய கம்பெனி..!!
இப்படி உடை அணிபவருக்கு எப்படி ஐயா பிரிட்டிஷ் காரர்களினால் அரைநிர்வாணப்
பக்கிரி என்று அழைத்த) காந்தியைப் பிடிக்கும்
(Shankar)
நாட்டு வைத்தியம்!
பித்தவெடிப்பு,(கால்
ஆணி) சரியாக...
பித்தவெடிப்பு
வந்தா... கால் அசிங்கமா தெரியும். வலி வேறஒரு வழி பண்ணிரும். இதுக்கும்
வைத்தியம் இருக்கு பயப்படாதீங்க. நன்னாரிவேர் 10 கிராம் எடுத்துக்கோங்க,
அதோட ஒரு டம்ளர் தண்ணி சேர்த்து கொதிக்க வச்சு, அரை டம்ளரா குறுகினதும்
வடிகட்டி வச்சிக்கோங்க. அதுல பனங்கல்கண்டு சேர்த்து குடிச்சிட்டு வந்தா...
பித்தவெடிப்பு மறைஞ்சிரும். ஒரு தடவை பயன்படுத்தின நன்னாரிவேரை 3, 4
தடவைகூட பயன்படுத்தலாம்.
பித்தவெடிப்பு உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டாலும் குணம்
கிடைக்கும். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையை பொடி செஞ்சு, ஒரு சிட்டிகை தேன்
சேர்த்து, ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தாலும் பித்தவெடிப்பு சரியாகும்.
நகச்சுத்து விலக...
நகச்சுத்து உள்ள இடத்துல மருதாணி இலையை அரைச்சு பத்து போட்டு வந்தா குணம்
கிடைக்கும்.
வேப்பிலை கொஞ்சம் எடுத்துக்கோங்க, அதோட மஞ்சள்துண்டு சேர்த்து அரைச்சு
நகச்சுத்து வந்த இடத்துல பூசினா... குணம் கிடைக்கும். இதை தொடர்ந்து ஒரு
வாரம் செஞ்சுட்டு வந்தா உரிய பலன் கிடைக்கும்.
(மேலும்....)
கோணங்கியின்
பேச்சும் என் கோணல் புத்தியும்
ஜனவரி 25 அன்று சென்னையில் பல முக்கிய நிகழ்வுகள். இந்தியாவின் தேசிய
மொழிகள் அனைத்தையும் ஆட்சிமொழியாக அறிவிக்கக் கோரி கடற்கரையில் ஒரு பேரணி -
தமிழகத்தின் மொழிப்போர் தியாகிகளுக்கு சரியானததொரு நினைவேந்தலாக நடைபெற்றது.
நாடு தழுவிய அளவிலும் தமிழகத்திலும் கருத்துச் சுதந்திரத்தின் மீது
தொடுக்கப்படும் சாதிய-மதவாத ஒடுக்குமுறைகளுக்கு எதிரான விழிப்புணர்வை
மக்களிடையே எப்படிக் கொண்டுசெல்வது என்பது தொடர்பாக ஒரு கலந்துரையாடல்
எழும்பூரில் உள்ள ஜீவனஜோதி அரங்கில் நடைபெற்றது. இதே போன்ற மற்றொரு நிகழ்வு,
அசோக் நகரில் உள்ள தமிழர் திடலில் நடைபெற்ற பெருமாள் முருகன், துரை கண்ணா,
கண்ணன் ஆகியோருக்கு ஆதரவாகவும், கருத்து வெளிப்பாட்டு ஒடுக்குமுறைகளை
எதிர்த்தும் நடைபெற்ற கண்டனக் கூட்டம். ‘தமிழில் சிற்றிதழ்கள் இயக்கம்’
அந்த கண்டனக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
(மேலும்....)
இட்லி
சாப்பிடுங்கள்!
நாம் அடிக்கடி
சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில்
இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம். இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன. (மேலும்....)
நகைச்சுவை
நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்
- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்
வானொலி:
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது
உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான்
கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை
முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல
சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல
ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால
வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக
அவிழ்த்துக் கொண்டே வருவார்கள். கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று
எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை
யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ
வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும்
வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும். இதில்
உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.
ஆடுமாடுகள் மேயும். குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே
போய்ச் சேரும். மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக்
கொண்டேயிருக்கும்.!!!
"சேகுவேரா"
இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு...!!

அக்டோபர் 9...
அதிகாலை 6.00... லா ஹிகுவேராவின் பள்ளிக்கூட வளாகத்தில் ஒரு ஹெலிகாப்டர்
வட்டமடித்தபடி வந்து இறங்குகிறது. அதிலிருந்து சக்திவாய்ந்த ரேடியோ மற்றும்
கேமராக்களுடன் ஃபெலிக்ஸ் ரோட்ரிக்ஸ் எனும் சி.ஐ.ஏ. உளவாளி இறங்குகிறார்.
கசங்கிய பச்சைக் காகிதம் போல கைகால்கள் கட்டப்பட்ட நிலையில், அழுக்கடைந்த
ஆடைகளுடன் 'சே'வைப் பார்த்ததும், அவருக்கு அதிர்ச்சி. அமெரிக்காவுக்குச்
சிம்ம சொப்பனமாக இருந்த ஒரு மாவீரனா இந்தக் கோலத்தில் இங்கே நாம் காண்பது
என அவருக்கு வியப்பும் திகைப்பும்! பிடிபட்டிருப்பது 'சே'தான் என
அமெரிக்காவுக்குத் தகவல் பறக் கிறது. 'சே'வின் டைரிகள் மற்றும் உடைமைகள்
கைப்பற்றப்படுகின்றன. தான் கொண்டுவந்த கேமராவில் 'சே'வை பல கோணங்களில்
புகைப் படங்கள் எடுக்கிறார் ஃபெலிக்ஸ். கைவிடப்பட்ட ஏசு கிறிஸ்துவைப் போலக்
காட்சி தரும் 'சே'வின் அப் புகைப்படங்கள் இன்றளவும் வரலாற்றின் மிச்சங்கள். (மேலும்....)
மலையகத்தில்
தமிழ்க் கட்சிகளின் கூட்டமைப்பு உதயம்
எதிர்கால மக்கள் நலன்கருதி, மலையகம் மற்றும் கொழும்பினை
பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பொன்றினை
உருவாக்கவுள்ளதாக நம்பகரமாக அறியமுடிகிறது. தனித்தனிக் கட்சிகளாக பிரிந்து
அரசியல் நடத்துவதிலும் பார்க்க, தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற
கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து அரசியலில் ஈடுபட்டால் பாரியளவிலான
மாற்றமொன்றினை ஏற்படுத்த முடியுமென்ற காரணத்துக்காகவே இந்த கூட்டமைப்பு
உருவாக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது. வடக்கு, கிழக்கினைப் பொறுத்தமட்டில்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த
கூட்டமைப்பிலும் பல கட்சிகள் இணைந்திருக்கின்றன. அதேபோல், மலையகத்திலும்
தலைநகரிலும் உள்ள தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்பட
முடிவுசெய்துள்ளார்கள். இந்தக் கூட்டமைப்பில், ஜனநாயக மக்கள் முன்னணித்
தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்,
மலையக மக்கள் முன்னணி அரசியல்துறை தலைவர் வே.இராதாகிருஸ்ணன், ஐக்கிய தோட்டத்
தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் கே.வேலாயுதம், முன்னாள் பிரதி அமைச்சர்
புத்திர சிகாமணி ஆகியோர் இந்த கூட்டமைப்பில் அடங்கவுள்ளதாக தெரியவருகிறது.
இக் கூட்மைப்பை ஆழமாகப்பார்த்தால் ஒன்று உணர முடியும். இது மலையக அடிமட்ட
மக்களைப் பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பு அல்ல மாறாக மேல்த்தட்டு இந்திய
வம்சாவழியினரை பிரநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருப்பதை.
கல்லுண்டாய்
வெளியில் கழிவுகள் கொட்டுவதை நிறுத்துமாறு உத்தரவு
யாழ்ப்பாணம்,
வலி தென்மேற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட காக்கைதீவு கல்லுண்டாய் வெளிகளில்
யாழ் மாநகரசபையோ ஏனைய உள்ளுராட்சி சபைகளோ கழிவுகள் கொட்டுவதை உடனடியாக
நிறுத்துமாறு வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சி.மகேந்திரன்
உத்தரவிட்டுள்ளார். 27.01.2015ஆம் திகதி செவ்வாய்கிழமை முதல் உடன்
நடைமுறைப்படுத்துமாறும் இதனை மீறுவோர் மீது கடும் சட்ட நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
(மேலும்....)
ஜனவரி
27, 2015
6 புதிய ஆளுநர்கள்
நியமனம்
வடக்கு, கிழக்கு, வடமத்தி, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கு
நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநர்களுக்கான நியமனக்கடிதங்களை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன வழங்கிவைத்தார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்தே
இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வடக்கு மாகாண
ஆளுநர்- எச்.எம்.ஜி.எஸ்.பலிஹக்கார. கிழக்கு மாகாண ஆளுநர்- ஒஸ்டின்
பெர்ணான்டோ. சப்ரகமுவ மாகாண ஆளுநர்- பி.எம்.ஏ.ஆர். பெரேரா. மத்திய மாகாண
ஆளுநர்- சுரங்கனி எல்லாவல. வட மத்திய மாகாண ஆளுநர்- பி.பீ.திஸாநாயக்க. ஊவா
மாகாண ஆளுநர்- சட்டத்தரணி எம்.பி.ஜயசிங்க
போராட்ட
வெடிப்பும், அரசின் சிரிப்பும்!
வவுனியா
மண்ணுக்கு அப்படி என்னதான் மாவையாருக்குச் சூடு கிளப்பிவிடும் தன்மை
இருக்கிறதோ தெரியவில்லை. “புதிய அரசினையும் நம்பத் தயாரில்லை, அகிம்சைப்
போராட்டம் வெடிக்கும்” என நாலே மாதங்களுக்குள் மீண்டும் அந்த மண்ணில் நின்று
சூளுரைத்துள்ளார் தமிழரசுக் கட்சியின் தலைவர். நேற்றுமுன்தினம்
சனிக்கிழமையன்று தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தினைத்
திறந்துவைத்து உரையாற்றும்போதே மாவையாரின் இந்த அரசு மீதான கோபமும் பொங்கி
வெடித்திருக்கிறது. நாலு மாதத்திற்குள் மற்றொரு தேர்தல் வரப்போகிறதென்றால்
அவரும்தான் என்ன செய்வார் பாவம், மீண்டும் மற்றொருமுறை போராட்டத்தை வெடிக்க
வைக்க வேண்டிய அவசரம் ஏற்பட்டுவிட்டது.(மேலும்....)
அமெரிக்க ஜனாதிபதியை
சந்திக்க மறுத்த காமராசர்
அமெரிக்க
ஜனாதிபதி நிக்ஸன் பெருந்தலைவர் காமராஜரைச் சந்திக்க, அப்பாயிண்ட்மெண்ட்
கேட்டார்.சர்வ அலட்சியமாக நிக்ஸனின் வேண்டுகோளை நிராகரித்த காமாராஜர்,
பின்வருமாறு கூறினார். "நம்ம அண்ணாதுரைய சந்திக்க மறுத்த நிக்ஸனை, நான்
எதுக்கு சந்திக்கணும்னேன். பெருச்சாளி போல வளரும் நாடுகளை சுரண்டி வாழும்
அமெரிக்காவை நான் கண்டிக்கிறேன்னேன். அமெரிக்க அதிபர்களை, நாம முக்கிய
விழாக்களுக்கு டெல்லிக்கு கூப்பிடக் கூடாதுன்னேன்". பெருந்தலைவரின் இந்த
வீர உரையை சீன, ரஷ்ய, ஐப்பான் ஊடகங்கள் மீண்டும், மீண்டும் ஒலிபரப்பின.
அதைக்கேட்ட ஒட்டு மொத்த ஆசியக்கண்டமும், எழுந்து நின்று ஆரவாரம் செய்து
பெருந்தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தன. (மேலும்....)
முகமாற்ற
ஆட்சியும் - இடதுசாரி அரசியலும்
முகமாற்றம்
நடந்து முடிந்திருக்கின்றது. முகப் பூச்சுகள் நடந்து வருகின்றது. இந்த
பின்னணியில் மாற்றங்களுக்கு ஏற்ற எதிர்பார்ப்புகளுடன் கூடிய பொது அரசியல்
மேலெழுந்து காணப்படுகின்றது. இதற்கு பின்னால் இடதுசாரிய அரசியல் முடங்கிவிட
முடியுமா? அதாவது முகமாற்றமும், முகத்துக்கு மேல் அடிக்கும்
வெளிப்பூச்சுகளும் தானாக அம்பலமாகும் வரை காத்திருப்பதல்ல இடதுசாரியம். இது
இடதுசாரிய சிந்தனையாகவோ, நடைமுறையாகவோ இருக்க முடியாது. மாறாக இவை சூழலுக்கு
பின்னால் வால்பிடிப்பதாகும். தேர்தல் முன்பாகவே, முகமாற்றத்தை உண்மையான
மாற்றமாக கருதுகின்ற அரசியல் போக்கு இருந்தது. இதை அரசியல்ரீதியாக எதிர்
கொள்ளவும், இடதுசாரிய அரசியல் மூலம் கற்றுக் கொடுக்கவுமே, நாம் இடதுசாரி
முன்னணி வேட்பாளரை நிறுத்தினோம். இந்த அரசியல் போராட்டம், தேர்தல்
முடிந்தவுடன் முடிவுக்கு வந்துவிடுவதில்லை. அதேநேரம் அது தானாக அம்பலமாகும்
வரை, காத்து இருப்பதில்லை.
(மேலும்....)
ஹிஸ்புல்லாவின்
மோசடிகளும்! ஹக்கீமின் காடைத்தனங்களும்….
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 25-01-2015 நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு
செய்த ஊடகவியலாளர் சந்திப்பொன்று காத்தான்குடி, கடற்கரை வீதியில்
அமைந்துள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊழல் மோசடிகள் இஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் காடைத்தனம் தொடர்பில் நல்லாட்சிக்கான தேசிய
முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா, ஹக்கீம் இருவரும் வயிற்றுப் பிழைப்பு நடத்த முஸ்லீம் மக்களை
அழிக்கிறார்கள் என ஆதங்கப்படுகிறார்.
யாழ்.போதனா
வைத்தியசாலை
127 தொண்டர்
பணியாளர்களை உதவி சுகாதார உதவியாளர்களாக சேர்க்க முடிவு
யாழ்ப்பாணம்
போதனா ஆஸ்பத்திரியில் தொண்டர் அடிப்படையில் பணியாற்றும் 127 பேரையும்
சுகாதார உதவியாளர்களாக இணைத்துக் கொள்வதற்கு சுகாதாரம் மற்றும் உள்நாட்டு
மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன நடவடிக்கை எடுத்துள்ளார். யாழ்.
போதனா வைத்தியசாலையில் சிற்றூழியர் பற்றாக்குறை தீவிர நிலையை அடைந்துள்ளதால்
தொண்டர் அடிப்படையில் பணியாற்றவென 127 பேர் 2013ல் சேர்த்துக்
கொள்ளப்பட்டனர். இவர்கள் நாளொன்றுக்கு ரூபா 75.00 கொடுப்பனவுக்கு சேர்த்துக்
கொள்ளப் பட்டனர். ஆனால் அக்கொடுப்பனவு ரூபா 175.00 வரை அதிகரிக்கப்பட்டது.
இருப்பினும் கடந்த மூன்று மாத காலமாக அக்கொடுப்பனவு வழங்கப் படவில்லை. யாழ்.
போதனா ஆஸ்பத்திரியில் ஏற்பட்டிருக்கும் இந்நிலைமை குறித்து இலங்கை குடியரசு
சுகாதார சேவைகள் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டொக்டர் சேனாரட்னவை
நேற்று சந்தித்துக் கலந்துரையாடினர். இவ்விடயத்தை சங்கத்தின் பிரதிநிதிகள்
விரிவாக எடுத்துக் கூறினர். இதன் அடிப்படையிலேயே அமைச்சர் மேற்படி ஆலோசனையை
வழங்கியுள்ளார்.
இந்திய, இலங்கை
தலைவர்களின் விஜயம் உறவுகளைப் பலப்படுத்தும்
இலங்கை, இந்திய
அரச தலைவர்களின் பரஸ்பர விஜயங்கள் மூலம் இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள்
மேலும் பலப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா
தெரிவித்தார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம்
இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். இந்த விஜயம் அவருடைய முதலாவது வெளிநாட்டு
விஜயமாக அமையவுள்ளது. அதேநேரம், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி
கூடியவிரைவில் இலங்கை வரவுள்ளார். இந்த அரச தலைவர்களின் விஜயங்களின் போது
எடுக்கப்படக்கூடிய தீர்மானங்கள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள்
மேலும் பலப்படும் என்றும் அவர் கூறினார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள
சமரவீர தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா வந்திருந்தமையையும் அவர்
சுட்டிக்காட்டியிருந்தார். இந்தியாவின் 66வது குடியரசு தினம் கொழும்பிலுள்ள
இந்திய இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய தேசியக்கொடியை
ஏற்றிவைத்து உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் இவ்வாறு கூறினார். வடக்கு,
கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களின் அபிவிருத்தியில் இந்தியா உதவிகளை
வழங்கியுள்ளது. அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவில்
பாதிக்கப்பட்டவர் களுக்கும் இந்தியா உதவிகளை வழங்கியுள்ளது.
கசகசா இற்குள் புதைந்திருக்கும் இரகசியம்

இந்திய உணவுகளில்
கசகசாவுக்கு தனி இடம் உண்டு. இந்தி மொழியில் 'கஸ்கஸ்' என்று
அழைக்கப்படுகிறது. இது உணவுப் பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் நிறைந்த
மூலிகையும் கூட. கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற
கனிமங்களை நிறைய அளவு பெற்றிருக்கின்றன. ‘கசகசாவினால் குடற்புழு, தினவு,
குருதிக் கழிச்சல், தலைக்கனம், தூக்கமின்மை போகும். அழகும் ஆண்மையும் கூடும்’
என்கிறது சித்தர் பாடல். காரசாரமான மட்டன், சிக்கன் குழம்பு மற்றும்
பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் ருசியைக் கூட்ட கசகசா சேர்க்கப்படுகிறது.
மேற்குலக நாடுகளிலும் ‘பாப்பி விதை’ (POPPY SEED) என்று அழைக்கப்படும்
கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. பாப்பி மலர்கள் அலங்காரத்துக்காக
பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.(மேலும்....)
பூமியில் மனிதன்
தோற்றம் எப்போது?
சுமார் 6
மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இத்தனை உறுப்பினர்கள் இல்லை. எல்லாம்
சேர்ந்து ஒரே இனமாகத்தான் இருந்தது. பின்னர் ஒவ்வொன்றும் தனித்தனியாக
ஒவ்வொரு வகை மிருக இனமாக பிரிந்துவிட்டன. அதில் ஒரு பிரிவுதான் மனித
இனம்.கொரில்லா, சிம்பன்ஸி, போனோபோ, உராங் உடான் மனிதன் எல்லாம் சேர்ந்து ஒரே
குடும்பம்தான். இந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு சில உறுப்பினர்கள் இன்று
இல்லை. அவை எலும்பு பாஸில்களாக உலகமெல்லாம் புதைந்து கிடக்கின்றன”மனிதனுக்கு
மிக நெருங்கிய மிருகம் சிம்பன்ஸிதான். இரண்டுக்கும் இடையே 99 விழுக்காடு
DNA ஒற்றுமை காணப்படுகிறது.“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ்
போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”மனித ஜினோமில்
மொத்தமாக 3 பில்லியன் எழுத்துக்கள் உள்ளன. கிட்டத்தட்ட அத்தனை எழுத்துக்கள்
சிம்பன்ஸி ஜினோமிலும் உள்ளன. இரண்டுக்கும் இடையே 15 மில்லியன் எழுத்துகள்
மாறியிருக்கின்றன. அதாவது 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே எழுத்து பேதங்கள்
உள்ளன. மனித ஜினோமை ஈயின் ஜினோமுடன் ஒப்பிட்டால், அளவிலும் எழுத்து
பேதங்களிலும் 40 சத வேற்றுமை இருக்கிறது. கடந்த 40,000 ஆண்டுகளில் மனித இனம்
சக குரங்கு இனத்தலிருந்து தன்னை மாற்றிக் கொண்டது. ஆயுதம், சடங்குகள், கலை,
இலக்கியம், கட்டடம், தொழில்நுட்பம், ஆன்மிகம், கோயில்கள்.... இப்படி எத்தனை
எத்தனை விதத்தில் மனிதன் வேறுபட்டிருக்கிறான்.(மேலும்....)
ஏகாதிபத்திய
யுத்த வெறியன் ஒபாமா வருகையை எதிர்ப்போம்!
ஒபாமா வருகையின் நோக்கம் …
• அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் சரிந்துவரும் நிலையில், தனக்குப்
போட்டியாக சீனா வளர்ந்து வரும் சூழ்நிலையில், சீனாவை எதிர்த்து அமெரிக்கத்
தலைமையில் ஆசிய-பசிபிக் இராணுவ, பொருளாதாரக் கூட்டமைப்பில் பங்குகொள்ள
இந்தியாவை இணங்க வைப்பது.
• அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக இந்தியாவின் அனைத்துத்
துறைகளிலும் தாராளமய, தனியார்மயக் கொள்கைகளை அமல்படுத்த இந்திய அரசை
நிர்ப்பந்திப்பது.
• அமெரிக்க-இந்திய இராணுவ ஒப்பந்தத்தை மேலும் பத்து ஆண்டுகள் தொடர்வதற்கு
உத்தரவாதப் படுத்துவது.
• இராணுவத் தளவாட உற்பத்தியில் அமெரிக்கப் பன்னாட்டு கம்பெனிகளின் ஏகபோகத்தை
உத்தரவாதப் படுத்துவது.
• அமெரிக்க அணு உலை முதாளிகளின் கொள்ளை லாபத்திற்காக அணு உலை விபத்து
இழப்பீட்டுச் சட்டத்தை நீக்க வற்புறுத்துவது.
• இந்துத்துவ ஆர்.எஸ்.எஸ் மதவெறி அமைப்புகளுக்கு அமெரிக்க முதலாளிகள் நிதி
உதவி வழங்குவது மூலம் மோடி கும்பலின் கரங்களை வலுப்படுத்துவது.
• ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பேரால் அமெரிக்காவுக்கு அடிபணிய மறுக்கும்
அரசுகளை கவிழ்த்தல் மற்றும் ஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கு ஆதரவளிக்க இந்திய
அரசை இணங்க வைப்பது.

இத்தகைய
அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க நோக்கங்களுக்கு இந்திய அரசை
நிர்ப்பந்திக்கவே ஒபாமாவின் வருகை. எனவே கீழ்க்கண்ட முழக்கங்களின்
அடிப்படையில் அணிதிரள அறைகூவி அழைக்கின்றோம்!
அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்தை எதிர்ப்போம்!
ஜனநாயகத்தின் பேரால், மேலாதிக்கத்திற்குப் பணிய மறுக்கும் அரசுகளைக்
கவிழ்ப்பதை எதிர்த்துப் போராடுவோம்!
ஆசிய-பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஒபாமாவின்
கனவைத் தகர்ப்போம்!
புதிய தாராளக் கொள்கைகளின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தை புதிய
காலனியாக்கும் முயற்சிகளை முறியடிப்போம்!
ஏகாதிபத்திய யுத்த வெறியன் ஒபாமா – இந்துத்துவப் பாசிச மோடி கூட்டணியை
முறியடிப்போம்!
மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், தமிழ்நாடு
ஜனவரி
26, 2015
காவியும், கழுகும் கை கோர்க்கின்றன

1580 கோடி ரூபாய்
மதிப்புள்ள பறக்கும் வெள்ளை மாளிகை
அமெரிக்க
ஜனாதிபதியின் அலுவல் விமானத்தின் பெயர் "ஏர்போர்ஸ் 1". போயிங் 747 ரக
விமானமான இதில் தான் அவர் டில்லிக்கு வந்தார். அணுஆயுதங்களால் கூட இந்த
விமானம் பாதிக்கப்படாது. 1580 கோடி ரூபாய் மதிப் புள்ள இந்த விமானமே ஒரு "பறக்கும்
வெள்ளை மாளிகை". அதாவது, அந்த அளவுக்கு இதிலேயே ஜனாதிபதி; அலுவ லகமே
இயங்கும். அதிநவீன தகவல் தொடர்பு சாத னங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவுக்குள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வ தற்கு அவர்
"மெரைன் ஒன்" என்ற ஹெலிகொப்டரை பயன்படுத்துவார். இதுவும் அமெரிக்காவில்
இருந்து வர வழைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி யுடன்; அமெரிக்காவின் நவீன "மெரைன்'
பாதுகாப்பு படையினர் இருப்பர். வானிலும் அமெரிக்க விமானப்படை தொடர்ந்து
கண்காணித்தபடி இருக்கிறது. அணு ஆயத இழப்பீடு சட்ட மசோதா குறித்து விவா
திக்கப்படும் என தெரிகிறது. எரிவாயு விநியோகம், திரவ இயற்கை வாயு, எரிசக்தி
தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையே பாதுகாப்பு
தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் மற்றும் கூட்டு பாதுகாப்பு பயிற்சி போன்ற
வி'யங்கள் விவாதிக்கப்பட உள்ளன. ஸ்மார்ட் சிட்டி, ரயில்வே போன்ற துறைகளில்
அமெரிக்க முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறலாம்.
ஐ.எஸ்.ஐ.எஸ். மற்றும் பாக். - ஆப்கன் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக
நடவடிக்கை ஒருங்கிணைந்த பயற்சி பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்படலாம்.
உலக புகைப்பட தினம்.




பெருமாள் முருகன் எழுதியதில் என்ன தவறு இருக்கின்றது

உண்மையை எழுதிய
எழுத்தாளர் பெருமாள் முருகனால் எங்கள் கலாச்சாரம் கேட்டு விட்டது என்று
ஒப்பாரி வைக்கும் சாதி மற்றும் காவி வெறிபிடித்த கலாச்சார காவலர்கள்
மேலேயுள்ள கோவில்களில் அமைக்கப்பட்டு இருக்கும் காட்சிகளுக்கு என்ன பதில்
சொல்லப் போகிறார்கள். அதெல்லாம் எங்க ஊர் கோவில் கிடையாது என்றா ? அந்த
கோவில்கள் எல்லாம் ஏதோ கல் தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன் தோன்றியதல்ல
...அவையெல்லாம் பெருமாள் முருகன் குறுப்பிட்ட காலகட்டத்தில் வாழ்ந்த
கலாச்சாரத்தை பாதுகாத்த முன்னோர்கள் கட்டி எழுப்பியது தான். எங்களுடைய
கலாச்சாரம் பெண்களை போற்றும் கலாச்சாரம் என்று சொல்லும் அன்னக்காவடிகள்
பெண்களை சீலை இல்லாமல் சிற்பமாக்கி இருக்கும் அந்த கலையுணர்விற்கு என்ன
சொல்ல போகிறார்கள் ? என்றாவது அது போன்ற கோவில்களுக்கு சென்று போராட்டங்களை
முன்னெடுத்து இருக்கிறார்களா ? அங்கெல்லாம் பெண்கள் வர மாட்டார்களா ?
பெருமாள் முருகனின் புத்தகத்தால் கெட்டு போய்விடுவார்கள் என்று
கதறுபவர்களுக்கு அங்கு வருகிற பெண்களின் கண்கள் அந்த சிற்பங்கள் அலை
பாய்ந்து அவர்களுடைய மனது கெட்டு போய் விடும் என்று ஏன் கதறுவதில்லை ?
நடேசனுடன் சந்திப்பு
எதிர்வரும்
27.01.2015 செவ்வாய்கிழமை பி.பகல் 4.00 மணிக்கு கிளிநொச்சியில் எழுத்தாளர்
நடேசனுடன் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது. நண்பர்களும் ஆர்வமுள்ளவர்களும்
கலந்து கொள்ள அழைக்கப்படுகின்றனர்.
நடேசனின் நாவல்கள் -
1. வண்ணாத்தி குளம்
2. உனையே மயல்கொண்டு
3. அசோகனின் வைத்தியசாலை
சிறுகதைத் தொகுதி -
1. மலேசியன் ஏர்லைன் 370
அனுபவக்கதைகள்
1. வாழும் சுவடுகள் - பாகம் 01
2. வாழும் சுவடுகள் - பாகம் 02
அடுத்து வரவுள்ளவை
1. வாழும் சுவடுகள் - பாகம் 03
2. எகிப்து - கட்டுரை
கிரேக்கத்தில்
இடதுசாரிகளின் மாபெரும் வெற்றி! SYRIZA ஆட்சி அமைக்கிறது!
கிரேக்க
இடதுசாரிக் கட்சிகளின் கூட்டான SYRIZA கிரேக்கப் பாராளுமன்ற தேர்தலில்
25.01.2015, இரவு 9:40 வரையான வாக்கு எண்ணிக்கையின்படி 149 ஆசனங்களை வென்று
பாரிய வெற்றியடைந்துள்ளது!

25.01.2015 இன்று
ஆறு மணியுடன் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவுக்கு வந்தது.
அதன் தொடர்சியாக வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பிலேயே SYRIZA பாரிய
வெற்றியடையும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, தேர்தலில் வென்றுள்ள SYRIZA
(25.01.2015, இரவு 9:4 வரை) 35.92ம% வீதமான வாக்குகளை பெற்றுள்ளது. 50%
வீதமான வாக்குகளை SYRIZA பெறாவிட்டாலும், 300 ஆசனங்களைக் கொண்ட கிரேக்க
பாராளுமன்றத்தில், கிரேக்க தேர்தல் சட்டப்படி 50 வீததுக்கும் மேலான
ஆசனங்களைப் பெறும் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்படையில் இது வரை ஆளும்
கட்சியாகவிருந்த புதிய ஜனநாயகம் என்ற நவதாராள பழைமைவாதக் கட்சியின்
தலைமையிலான அரசு இன்று இரவு பதவி விலகியது. அதன் பிரதம மந்திரி அந்தோனியோ
சமராஸ் தோல்வியை ஒப்புக்கொண்டு, SYRIZAவின் பிரதமர் வேட்பாளர் அலெக்சிஸ்
சீபிராஸ் - Alexis Tsipras அவர்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.
தனிப்பெருங்க கட்சியாக வென்றுள்ள போதும் SYRIZAதனித்து கிரேக்கத்தில் ஆட்சி
அமைக்காமல், தனது கொள்கைக்கு உகந்ததாக அரசியல் இணக்கம் காணக்கூடிய வேறு
கட்சிகளையும் இணைத்தே ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)
ஊழல் பேர்வழிகள்,
வெள்ளை வான்காரர்கள் தண்டிக்கப்படுவார்களா?
நாட்களை
குறிப்பிட்டு அரசாங்கம் நிறைவேற்றவிருக்கும் பணிகளுள் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷவின் கீழும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழும்
இடம்பெற்ற மாபெரும் ஊழல்களைப் பற்றியும் வெள்ளை வான்களில் மேற்கொள்ளப்பட்ட
குற்றச்செயல்களைப் பற்றியும் விசாரணை நடத்தி சம்பந்தப்பபட்டவர்களுக்கு
தண்டனை வழங்குவதும் அடங்கும். ஆனால், அந்தப் பணியை புதிய அரசாங்கம்
நிறைவேற்றுமா என்ற சந்தேகம் மக்களிடையே படிப்படியாக உருவாக ஆரம்பித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்தவுடன் ஊழலைப் பற்றி பெயர் பெற்ற சிலர்
வெளிநாடு சென்றமை இந்த சந்தேகத்துக்கு பிரதான காரணமாகும். அவர்களை
பிடித்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததைப் போலவே, அவர்களைப் போன்ற
பலர் இப்போதும் தப்பிச் செல்ல எந்தவித தடையும் இருப்பதாக தெரியவில்லை.
(மேலும்....)
Is this the beginning of a ‘Maithri
regime’..? watch out..!
A younger brother of Maithripala Sirisena who was cutting down trees
under past regime has been appointed as the chairman of the Sri Lanka
telecom (SLT) of the modern era which is abounding with knowledge of
commerce and science, and when that vacancy should be filled by a
mathematician or someone with knowledge in that field . Besides , this
appointment being made by Maithri himself is a matter for deep regret.
It is an indisputable and obvious fact the protesting people of the
country, on 8thJanuary 2015 ,at last succeeded in destroying almost
insurmountable obstacles in the face of the gravest odds , to get rid of
a most brutal , barbaric corrupt murderous despotic family regime which
during its 9 years reign only fanned nepotism , cronyism and favoritism
thereby appointing all its relatives , crooks ,corrupt and competent
individuals to the highest offices in the country, and in the end led
itself into inevitable disaster and despair.
(more....)
திஸ்ஸவுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் வழக்கு?
ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கும் இடையில் நாட்டை பிரிவினைக்குட்படுத்தும் புரிந்துணர்வு
ஒப்பந்தமொன்று கைச்சாத்தாகியது என பகிரங்கப்படுத்திய முன்னாள் சுகாதார
அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் வழக்குத்
தாக்கல் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் காலத்தில்
ரணில் விக்ரமசிங்கவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில்
கைச்சாத்திடப்பட்டதாக தெரிவித்து போலி ஆவணமொன்றை, திஸ்ஸ அத்தநாயக்க
பகிரங்கப்படுத்தியதாக அவர்மீது குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு
செய்யப்பட்டது. இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட
குற்றப்புலனாய்வுப் பிரிவினர், திஸ்ஸ அத்தநாயக்கவினால் காண்பிக்கப்பட்ட
ஒப்பந்தம் போலியானது என கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில்,
கையெழுத்து மோசடி தொடர்பில் திஸ்ஸ மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு 7 வருட
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சாத்தியங்கள் சட்டத்தில் இருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
2015
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டைப்பின் தேசியத்தலைவர் இப்படி
கூறுகின்றார்
புலிகள் விவகாரத்தை சரியாக கையாளாவிடின் பயங்கரவாதம்
தலைதூக்கும்
- பொன்சேகா
மேலைத்தேய
நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்
இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள்
இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும்
இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை
மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக்
கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். வடக்கில் இராணுவ
பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம்
உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது.
தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை
மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
(மேலும்....)
பழம்பெரும்
நடிகர் வி.எஸ்.ராகவன் காலமானார்
பழம்பெரும் திரைப்பட நடிகர் வி.எஸ். ராகவன் சென்னையில் காலமானார். அவருக்கு
வயது 90. உடல்நலக் குறை வால் சென்னையில் உள்ள தனியார் மருத்து வமனையில்
அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். 1925ஆம் ஆண்டு
காஞ்சிபுரம் மாவட்டம் வெம்பாக்கத்தில் பிறந்தவர் வி.எஸ்.ராகவன். ஆரம்ப
காலங்களில் பத்திரிகை ஒன்றில் பணியாற்றி வந்தார். நடிப்பு மீது கொண்ட
ஆர்வத்தால், நாடகங்களில் நடித்து வந்த அவர், பின்னர் திரைப்படங்களில் குணச்
சித்திர வேடங்களில் தோன்றி புகழ் பெற்றார். 1954ல் வைரமாலை என்ற
திரைப்படத்தில் அறிமு கமான அவர், ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன்
நடித்துள்ளார். திரைப் படங்களில் மட்டுமின்றி சின்னத்திரை தொடர் களிலும்
நடித்துள்ளார். ஆல் இன் ஆல் அழகுராஜ, கலகலப்பு, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சாகும் வரையிலும் நடித்துக்
கொண்டே இருக்க வேண்டும் என்பதே வி.எஸ்.ராகவனின் ஆசையாக இருந்தது. இவர்
கடைசியாக நடித்த காத்தாடி திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில்
உடல் நலக்குறைவால் வி.எஸ்.ராகவன் காலமானார். வி.எஸ். ராகவன் இல்லம்
மந்தைவெளி ராம கிருஷ்ணா நகரில் உள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பெசன்ட்
நகர் மயானத்தில் அவரின் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
எகிப்தில்
ஆர்ப்பாட்டம் நடத்திய இடதுசாரி பெண் சுட்டுக் கொலை
எகிப்து
முன்னாள் ஜனா திபதி ஹொஸ்னி முபா ரக்கை பதவி கவிழ்த்த 2011 மக்கள் எழுச்சி
போராட்டத்தின் நான்கு ஆண்டு பூர்த்தியை ஒட்டி தலைநகர் கெய்ரோவில் இடம்பெற்ற
இடதுசாரிக் களின் அர்ப்பாட்டத்தில் பெண் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர்
நெருங்கிய இடைவெளியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சுமத்தப்படும்
குற்றச்சாட்டை எகிப்து உள்துறை அமைச்சு நிராகரித்துள்ளது. பேரணி
நடத்தியவர்களே வெடிக்கும் கருவிகளை பயன்படுத்தியதாக அது நியாயம் கூறி
இருந்தது. காயத்திற்கு உள்ளான குறித்த பெண் மருத்துவமனையில் வைத்து
மரணமடைந்துள்ளார். இவ்வாறான ஒன்றுகூடல்களை நடத்துவதற்கு எகிப்து அரசு
ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஹெய்மா அல் சபாக் என்ற குறித்த
பெண்ணின் வாயில் இருந்து இரத்தம் வழிவது போன்ற பல்வேறு வீடியோக்கள்
இணையதளத்தில் பரவியுள்ளன. எனினும் அவர் சூட்டுக்கு இலக்கானார் என்பது உறுதி
செய்யப்படவில்லை. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த பேரணி தலாத் ஹார்ப் என்
பகுதியில் இருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது
பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆறு பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
'எதிர்காலத்தில்
இண்டர்நெட் காணாமல் போகும்!'
இணையம் இல்லாமல் நவீன வாழ்க்கை இனி இல்லை என்று நினைக்க துவங்கியிருக்கும்
நேரத்தில், இணையம் மறைந்து போகும் நிலை வரும் என்று சொன்னால் எப்படி
இருக்கும்? முன்னணி தேடியந்திர நிறுவனமான கூகுள் நிறுவன தலைவர் எரிக்
ஸ்கிமிட் தான் இவ்வாறு கூறி வியக்க வைத்திருக்கிறார். ஆனால் கவலை வேண்டாம்,
ஸ்கிமிட் சொல்வது இணையம் இல்லாமல் போகும் என்பதல்ல, நாம் அறிந்த வகையில்
இணையம் காணாமல் போய் , நாம் அதன் இருப்பை உணராத அளவுக்கு எங்கும் இணையம்
வியாபித்திருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார். நீக்கமற நிறைந்திருப்பது
என்பார்களே அதே போலதான் இணையமும் ஆகிவிடும் என்று அவர் சொல்லியிருக்கிறார். (மேலும்....)
யாழ்.குடாநாட்டை
அச்சுறுத்தும் கழிவு ஒயில் !!
யாழ்.குடாநாட்டில்
தற்போது பாரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் நிலத்தடி நீரில் கழிவு
எண்ணைய் கலக்கும் விடயம் தொடர்பாக பலவிதமான கதைகள் அடிபடுகின்றன. வலி.வடக்கு
மற்றும் வலி.கிழக்குப் பகுதியில் இக்கழிவு ஒயில் கசிவு மிக வேகமாகப் பரவி
வருகின்றது. இதனால் அப்பகுதி மக்களின் தண்ணீர் மற்றும் குடிதண்ணீர்த் தேவைப்
பாதிக்கப்பட்டு வருகின்றமை உண்மையான விடயம். இதனை யாரும் மறுக்கவோ மறுக்கவோ
முடியாது. ஆரம்பத்தில் சுன்னாம் பகுதிகளில் பரவி வந்த இவ் எண்ணைக் கசிவு
சுமார் 4 மாதங்களுக்குள்ளேயே தெல்லிப்பழை யூனியன் கல்லூரிப் பிரதேசம் வரை
சென்றுவிட்டது. நிலத்தின் சுண்ணாம்புப் பறைகளின் இடுக்குகளுக்கு இடையினால்
கசிந்து செல்லும் இக்கழிவு எண்ணைய் நிலத்தடி நீரூற்றுக்களில் கலந்து
கிணறுகளில் போய் விழுகின்றன. இதனால் அன்றாடம் மக்கள் பயன்படுத்தி வரும்
கிணற்று நீர்களுடன் கழிவு எண்ணையும் சேர்ந்து உள்ளது. இதனால் மக்களுக்கு
பலவிதமான நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
(மேலும்....)
ஜனவரி
25, 2015
‘அதிகாரமில்லாத’
மாகாண சபை
பதவி எதுக்கு?
கிழக்கு முதலமைச்சர் பதவியினை தமக்கு விட்டுத்தருமாறும் புதிய ஆட்சி
அமைவதிலுள்ள சிக்கல் நிலைமையினை தீர்த்துவைக்குமாறும் கோரி தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பினர் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து
வேண்டுகோள் விடுத்துள்ளனர். இச்சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நேற்றுப்
பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவர்களான இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரே
ஜனாதிபதியுடனான இம்முக்கிய சந்திப்பில் கலந்துகொண்டனர். கிழக்கு மாகாண
சபையின் முதலமைச்சராக தமிழர் ஒருவர் வருவதற்கான காரணங்களை எடுத்துரைத்த
கூட்டமைப்பினரின் கருத்துக்களை நிதானமாகச் செவிமடுத்த பின், “தங்களது
நியாயமான கருத்துக்களை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால் நான் பொதுவாக மாகாணசபை
விடயங்களில் தலையிடுவதில்லையென எண்ணியிருக்கிறேன்” என்று ஜனாதிபதி
தெரிவித்துள்ளார்.
(மேலும்....)
ரணில் ஒரு
ஆபத்தானவர்
நாம்
கவனமாக இருக்க வேண்டும்
- கூட்டமைப்பு எம்.பி. சிறீதரன்
மஹிந்த சிந்தனையை
தோற்கடித்து மைத்திரி யுகத்தை உண்டாக்குவதல்ல எங்கள் நோக்கம். மாற்றம் என்ற
ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்றது. மூச்சு வீடுவதற்கான காலம்
வேண்டும். பேச்சுச் சுதந்திரம் வேண்டும் என்பதற்காக அந்த காலத்திற்காக
வாக்களியுங்கள் என கேட்டிருந்தோம். அதனூடாக ஜனவரி 9 ஆம் திகதி இந்த நாட்டில்
மாற்றம் ஏற்பட்டது.
100 நாட்களுக்குள் எல்லாம் நடந்து விடும் என்று எங்கள் மக்களிடம் நாங்கள்
பொய்களைச் சொல்ல முடியாது. அதற்கு கால இடைவெளி இருக்கின்றது. அந்த கால
இடைவெளியில் நாங்கள் அதனை செய்து கொண்டுதான் செல்ல வேண்டும்.ரணில் நல்லது
செய்வார் அல்லது மைத்திரி நல்லது செய்வார் என்று பார்க்காது, இவர்கள்
எவ்வளவு தூரம் எமது பிரச்சினையில் கவனம் செலுத்துவார்கள் என்பதையே
நோக்கவேண்டும். தமிழ் தேசியக்கூட்டமைப்பில் இருக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர்களையே ரணில் விக்கிரமசிங்க சில வேளைகளில் தனித்தனியே சந்திப்பார்.
அவர் மிக மிக முக்கிய ஆபத்திற்கு உரிய நபர் என்றார்.
(மேலும்....)
எண்ணையின் விலை
வீழ்ச்சி! அரசின் அடிப்படையான வளர்ச்சித் திட்டத்திற்குப் பாதிப்பு
ஏற்படப்போவதில்லை
– கனடா பிரதம மந்திரி
கனடாவில் எண்ணையின் விலை குறைந்தமையால் சில பாதிப்புக்கள் ஏற்பட்டாலும்,
தமது அரசின் அடிப்படையான வளர்ச்சித் திட்டத்திற்குப் பாதிப்பு
ஏற்படப்போவதில்லையென பிரதம மந்திரி ஸ்டீபன் ஹாப்பர் கூறினார். சென்
கதரின்ஸில் சிறு வணிக நிறுவனங்கள் கடன்களைப் பெறுவதை இலகுவாக்கும் திட்டம்
ஒன்று குறித்த அறிவிப்பை வெளியிட்ட நிகழ்வில் அவர் இந்த விடயத்தைக் கூறினார்.
கனேடிய மத்திய வங்கி அதன் பிரதான வட்டிவீதத்தை காற் சதவீதத்தால் குறைத்த
நிலையில், மேலதிக பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் தேவையில்லையென அவர்
கூறினார். பொருளாதார வளர்ச்சி நிலவும்போது, வரவு செலவுத் திட்டத்தைச்
சமப்படுத்துவதுதான் தேவையான நடவடிக்கையென அவர் தெரிவித்தார்.
'புதிய
ஜனாதிபதியை நம்புகிறோம்'
-
கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்
தற்போது இந்த
நாட்டில் ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ளது. ஜனநாயகத்தைக் கொண்டு நடத்தக்கூடிய
புதிய ஜனாதிபதி தெரிவாகியுள்ளார். இந்த புதிய ஜனாதிபதியை தாங்கள்
நம்புகின்றோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார். 'இலங்கையில்
புரையோடிப்போயுள்ள தேசியப் பிரச்சினையான இனப்பிரச்சினைக்கு தீர்வு
காணவேண்டும் என்பதற்காக சிறுபான்மையின மக்களின் அமோக வாக்குகளால் புதிய
ஜனாதிபதி வெற்றி பெற்றுள்ளார் என்பதை இலங்கை மாத்திரமின்றி, சர்வதேசமே
உன்னிப்பாக அவதானித்துள்ளது. கடந்தகால போராட்ட காலத்தில் உயிரைத் தியாகம்
செய்த எத்தனையோ இளைஞர்கள் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறு
சிறையில் வாடும் இளைஞர்களை விடுவிக்கவேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம்
கோரிக்கை விடுத்துள்ளோம். சிறையிலுள்ளவர்களின் விபரங்களை அரசு எம்மிடம்
கோரியுள்ளது. மிக விரைவில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று
நாம் எதிர்பார்க்கின்றோம்' என்றார்.
தமிழ் - முஸ்லிம்
தரப்பு இணைந்தே கிழக்கில் ஆட்சி அமைக்க வேண்டும்
கிழக்கு மாகாணத்தில்
தமிழர்களை முஸ்லிம்களோ, முஸ்லிம்களைத் தமிழர்களோ விட்டுவிட்டு நிர்வாகத்தை
அமைப்பது நியாயமற்ற செயல் என்பதே எமது நிலைப்பாடு. இந்த நிலைப்பாட்டில் நாம்
உறுதியாக இருக்கிறோம். இனியும் பிரிந்து நின்று ஒருவரை ஒருவர்
புறக்கணித்துவிட்டு ஆட்சி அமைப்பது ஆரோக்கியமானதல்ல என தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இறுதியாக நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக்
கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் பெற்றுக்
கொண்டன. முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது. இந்த மூன்று
கட்சிகளும் பெற்றுக் கொண்ட ஆசனங்களையும் சேர்த்தால் அரசாங்கத்திற்கு எதிரான
ஆசனங்கள்தான் அதிகமாக இருந்தன.
(மேலும்....)
பொழுதுபோக்கிற்காக தேர்தலில் போட்டி
இரட்டைப்
பிரஜாவுரிமைக்காரர்கள்
கபடம்
இரட்டை பிரஜாவுரிமை கொண்டோரை நாட்டில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும்
போட்டியிட அனுமதிக்கவோ, இடமளிக்கவோ கூடாது என யாழ்ப்பாண மாவட்டத்துக்கான
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம அமைப்பாளரும், கட்சியின் மத்திய குழு
அமைப்பாளருமான கலாநிதி வேல்முருகு தங்கராசா தெரிவித்துள்ளார். இத்தகையவர்கள்
தமது குடும்பம், தமது நலன் பற்றிய சிந்தனையிலேயே எப்போதும் இருப்பர்.
போட்டியிட்டதும் குடியுரிமை பெற்ற நாடுகளுக்கு தமது மனைவி, பிள்ளைகளையும்,
உறவுகளையும் பார்க்க ஓடிவிடுவர். இங்கே பொழுது போக்கிற்காகவே வந்து செல்வர்.
இவர்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு இவர்களால் ஒருபோதுமே திருப்தியான
சேவையைச் செய்ய முடியாது. எனவே இத்தகைய இரட்டைக் குடியுரிமை கொண்டோர்
இனிவரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிடக் கூடாது எனத் தடை விதிக்க
வேண்டும் எனவும் கலாநிதி தங்கராசா தெரிவித்துள்ளார்.
ரத்தின தேரரின்
கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
தமிழர் கலாசாரம் மதுவால் திட்டமிட்டு சீரழிக்கப்படுகிறது என ஜாதிக ஹெல
உருமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கவலை
வெளியிட்டிருக்கிறார். உண்மைதான். ரத்தின தேரர் பெளத்த ஐந்து கலாசார
அமைப்பில் முக்கிய பதவி வகிக்கும் ஒருவர் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி
சென்று அம்மகளுடன் அந்நியோன்யமாகப் பழகி வருகிறார். அவர் அங்கு கண்ணுற்ற
காட்சிகளை வைத்தே இதனைக் கூறியிருக்க வேண்டும். வடக்கின் குறிப்பாக
யாழ்ப்பாணத்தில் விடியற் காலையில் பாதையோரங்களில் சிதறிக் கிடக்கும் பியர்
வெற்றுக் கான்களை பார்த்தாலேயே தேரரின் கூற்று உண்மை என்பது புலனாகும்.
இனியாவது சம்பந்தப்பட்டவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.
ஜனவரி
24, 2015
அறிவிற்கெதிரான
அதிகாரம், கலகம்.
(சுகு-ஸ்ரீதரன்)
வரலாற்றை நவீன
உலகில் தொல்லியல் மற்றும் மானிடவியல் மற்றும் இலக்கியங்கள், மரபார்ந்த
பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகளிலிருந்தும் இவற்றை விஞ்ஞான ரீதியான
விசாரணைக்கு உட்படுத்தி பதிய முற்படுகிறார்கள். ஆர்தர் .சி கிளார்க், ஐசாக்
அசிமோவ் போன்றவர்கள் ஆர்வக் கிளர்ச்சி ஏற்படுத்தும் புனைவுகளைத்
தந்தார்கள்.இரண்டு சூரியன்கள் நிலவும் கிரகம் கண்டு பிடிக்கபட்டபோது அது
ஆர்தர்.சி. கிளார்க்கின் புனைவொன்றை ஒத்திருந்தது.தென்னிந்திய இலங்கை
வரலாற்று ஆய்வுகளை ஐராவதம் மகாதேவன், நாகசாமி, இந்திரபாலா,
சேனகபண்டாரநாயக்கா, செரான் தெரணியகல, ரகுபதி போன்றவர்கள் பிரதானமாக
தொல்பொருளியல் மற்றும் மானிடவியல் தகவல்களைக் கொண்டு திராவிட மற்றும் இலங்கை
சமூகங்களின உருவாக்கம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
தற்போது டிஎன்ஏ - பரம்பரை இயல் தகவல்கள் மூலம் மக்கள் சமூகங்களின்
பூர்வீகங்களை அறிய முயற்சிக்கின்றனர். இன்னும் சொற்ப காலத்தில் இது மிக
எளிதாகி விடும்.
(மேலும்....)
உலக பேரழிவு
கடிகாரம் நள்ளிரவை எட்ட இன்னும் மூன்று நிமிடங்கள்
காலநிலை மாற்ற அச்சுறுத்தல் மற்றும் அணு ஆயுத அபாயம் காரணமாக உலகப் பேரழிவு
குறித்து கணிக்கப்படும் கடிகாரத்தில் நள்ளிரவை எட்ட நிமிட முள் இரண்டு
நிமிடம் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இந்த பேரழிவு கடிகாரம் அமெரிக்க அணு
விஞ்ஞானிகளால் முன்னெடுக்கப்படுகிறது. இந்த கடிகாரத்தில் மாற்றம்
ஏற்படுத்தப்பட்டிருப்பதால் அது நள்ளிரவை எட்ட மேலும் மூன்று நிமிடங்களே
எஞ்சியுள்ளது. இந்த கடிகாரம் நள்ளிரவை எட்டுவதென்பது உலகில் பேரழிவு நிகழும்
என்பதை எச்சரிப்பதாக இருக்கும். 1947 ஆம் ஆண்டு அமைக் கப்பட்ட இந்த பேரழிவு
கடிகாரம் இதுவரையில் 18 தடவைகள் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 1957 ஆம்
ஆண்டு அமெரிக்கா ஹைட்ரஜன் வெடிகுண்டு ஒன்றை சோதித்தபோது இந்த பேரழிவு
கடிகாரம் நள்ளிரவுக்கு இரு நிமிடங்கள் நெருங்கியது. அதேபோன்று 1991 ஆம்
ஆண்டு பனிப்போர் முடிவுக்கு வந்தபோது அதிபட்சமாக இந்த கடியாரம் நள்ளிரவுக்கு
17 நிமிடங்கள் விலகிச் சென்றது. கடைசியாக இந்தக் கடிகாரம் 2012 ஜனவரியில்
மாற்றத்திற்கு உள்ளானது. இதன்போது கடிகாரம் ஒரு நிமிடம் முன்னகர்த்தப்பட்டது.
"தடையற்ற காலநிலை மாற்றம் மற்றும் அணு ஆயுதப் போட்டியின் விளைவாக இன்று
மனித இனத்தின் இருப்புக்கு சந்தேகம் இல்லாமல் அச்சுறுத்தல்
ஏற்பட்டிருக்கிறது" என்று மேற்படி கடிகாரத்தை இயக்கும் குழுவின் நிறைவேற்று
இயக்குனர் கெனட் பெனடிக்ட் நேற்று முன்தினம் இடம்பெற்ற செய்தியாளர்
மாநாட்டில் குறிப்பிட்டார்.
சரத்பொன்சேகாவின் விசேட ஏற்பாட்டில். SRITHARAN M.P
ற்கு. விசேட இராணுவ பாதுகாப்பு. வழங்கப்பட்டது

டக்ளஸ்
தேவானந்தாவுக்கு பாதுகாப்பு வழங்கிய இராணுவத்தினர் அவரது பாதுகாப்பு
அகற்றப்பட்டபின்பு. புலம்பெயர்து வாழும் தமிழர்களின் நிதியை அதிகமாக
கையாழும் Sritharan M.P ற்கு சரத்பொன்சேகாவின் ஏற்பாட்டில். பாதுகாப்பு.
வழங்கி வருகின்றனர்
விவசாயிகள்
தமது வேதனையை வெளியிட்டுள்ளனர்
தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதி வேட்பாளர்
மைத்திரிபால சிறிசேனா தான் ஒரு விவசாய குடும்பத்திலிருந்து வந்தவர் எனவும்
விவசாயிகளின் துன்ப, துயரங்களை நன்கறிவேன் எனவும் தெரிவித்திருந்தார். அவரை
ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்திய பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 100
நாள்களில் நடைமுறைக்கு வரும் உத்தேச நலன்சார் வேலைத்திட்டம் என்ற தலைப்பில்
நெல் கொள்வனவு செய்யும் போது கிலோ ஒன்றின் உத்தரவாத விலையை 50 ரூபாவாக
அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்போது பெரும்போக நெல்
அறுவடை ஆரம்பித்துள்ளபோதும் அரசாங்கம் விவசாயிகளி டமிருந்து நெல்லை கொள்வனவு
செய்வதற்கோ, அதற்கான உத்தரவாத விலையை வழங்கு வதற்கோ இதுவரை நடவடிக்கை
எடுக்கப்படவில்லை. கடந்த வருடத்தில், விவசாயிகள், தனியாரிடம் 3000
ரூபாவுக்கு விற்பனை செய்யக் கூடியதாயிருந்த 70 கிலோ நெல்லினை இப்போது
தனியார்துறை வர்த்தகர்கள் விவசாயிகளிடமிருந்து 2000 ரூபாவிற்கு கொள்வனவு
செய்வதாக விவசாயிகள் தமது வேதனையை வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ சமர்ப்பித்த வரவு செலவுத்
திட்டத்தில் ஒரு கிலோ நெல்லின் உத்தரவாத விலை 43 ரூபா என
தெரிவிக்கப்பட்டிருந்தது அந்த விலையும் கூட கிடைக்காமல் ஒரு கிலோ நெல்லின்
விலை 28 ரூபா 50 சதமாக குறைவடைந்திருப்பது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை
விளைவிக்கும். எனவே வடக்கு மாகாண விவசாய அமைச்சரும், பாராளுமன்றத்தில் தமிழ்
மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த
விடயத்தை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்து, அரசாங்கம்
விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கும் ஒரு கிலோ நெல்லின்
உத்தரவாத விலை 50 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தேர்தலின் போது வழங்கப்பட்ட
வாக்குறுதியை நடைமுறைப்படுத்தி விவசாயிகள் நெற்பயிர்ச் செய்கையில்
ஈடுபட்டதன் பயனைப் பெறவும் ஆவன செய்தல் வேண்டும்.
(தோழர் – மோகன்)
புதிய மூன்று
ஆளுநர்கள் நியமனம்
மேல் மாகாணத்தின் புதிய ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன்
மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள், இன்றைய தினம் - ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள்.
அதற்கமைய - மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண
ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி
ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீ.சு.கா.வின் மத்திய குழு இன்று கூடுகிறது
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு அதன் தலைமையகத்தில் இன்று
கூடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தனது டுவிட்டர் இணையத்தளத்தில்
குறிப்பிட்டுள்ளார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் முன்னாள்
ஜனாதிபதிகளான சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும்
கலந்துகொள்ளவுள்ளனர்.
கூலித்
தொழிலாளியா வேலை செய்யும் மாகாண, பிரதேசசபை உறுப்பினர்கள்.
அன்று ஒரு நாள் அனுர குமாரவின் பேட்டி ஒன்று ஹிரு டிவியில்
ஒளிபரப்பாகிக்கொண்டு இருந்தது. அதில் பொதுவாக பெரும்பாலானோர் மத்தியில்
இருக்கும் ஒரு சந்தேகத்தை ஹிரு நிருபர் கேட்டார்.
கேள்வி-
ஜேவிபி ஏனைய கட்சிகளை விட அரசியலில் அதிகம் பொதுக்கூட்டங்கள்,
ஆர்ப்பாட்டங்கள், போஸ்டர்கள், பொதுநல வழக்குகள் என்று சுறுசுறுப்பாக வேலை
செய்யும் ஒரு கட்சி. இதற்குரிய பணம் எங்கிருந்து வருகிறது ??
பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களின் சம்பளங்கள், ஜேவிபியின்
வெளிநாட்டு கிளைகளின் ஊடான கொடுப்பனவுகள், அவர்களின் அச்சகத்தின் ஊடாக வரும்
வரவுகள், உறுப்பினர்களின் அன்பளிப்புகள் என்று பதில் சொல்லிக்கொண்டு போன
அனுரகுமார, கட்சியின் நிதி சேகரிப்புக்கு சொன்ன இன்னுமொரு வழி எனக்கு
ஆச்சரியமாக இருந்தது. அதாவது வெள்ளாமை அறுவடை காலங்களில் ஜேவிபியின்
உறுப்பினர்கள் அந்த இடங்களுக்கு சென்று பல நாள் அறுவடை வேளைகளில் ஈடுபட்டு
அதில்வரும் கூலிகளை அப்படியே கட்சிக்கென்று கொடுப்பார்களாம். அதை போலவே,
நகரங்களில் இருக்கும் உறுப்பினர்கள் கொங்கிரீட் போடும் தொழிலாளிகளாக
வேலைசெய்து அதை கட்சிக்கென்று கொடுத்துவிடுவார்களாம். இதில் இன்னொரு
ஆச்சரியம் என்ன என்றால் இந்த வேலைகளில் ஜேவிபியின் பிரதேச சபை மற்றும்
மாகாண சபை உறுப்பினர்கள் கூட வேலை செய்வார்களாம்.
வெள்ளை வான்
கடத்தல் தொடர்பில் வித்தியிடம் விசாரணை?
வெள்ளை வான்
கடத்தல்களில் பின்னணியில் யார் யாரெல்லாம் செயற்பட்டார்கள் என்பது தொடர்பில்
விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதன் முதற்கட்டமாகவே வித்தியாதரனிடம்
வாக்குமூலம் பெறப்படவுள்ளது. 2009ஆம் ஆண்டு லசந்தவின் கொலைக்கு பின்னர்,
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வித்தியாதரன் பேட்டி ஒன்றினை வழங்கியிருந்தார்.
அதில் தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும், கடத்தல்களின் பின்னணி தொடர்பில்
ஆராயப்படவேண்டும் என்பதோடு, வீட்டிலிருந்து வருகின்ற நாங்கள் உயிருடன்
மீண்டும் வீட்டுக்கு திரும்புவோமா என்பது தெரியாது எனவும்
குறிப்பிட்டிருந்தார். அந்த பேட்டியின் பின்னர், முன்னாள் பாதுகாப்புச்
செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை குறித்த வெளிநாட்டு ஊடகவியலாளர் பேட்டி
எடுப்பதற்காகச் சென்றிருந்தார். அந்த ஊடகவியலாளர் கோட்டாபாயவின் அலுவலக
வாசலுக்கு செல்லும்போதுதான் வித்தியாதரன் கடத்தப்பட்டார். இதுதொடர்பில்
வெளிநாட்டு ஊடகவியலாளர், கோட்டாவிடம் கேட்டபோது பகிரங்கமாகவே வித்தியாதரனை
விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்படுத்தி திட்டித்தீர்த்தார். அவர் ஒரு
தீவிரவாதி எனவும் குறிப்பிட்டார்.
(மேலும்....)
பெருமாள் முருகன்
எழுத்தாளனுக்காக எல்லோரும் குரல் எழுப்பித் தம் ஆதரவைத் தொடர்கின்றார்கள்
முள்ளிவாய்க்
கால் அழிவுக்குப்பின் காணாமல் போன புலிகளின் அரசவைக் கவிஞர் புதுவை
இரத்தினதுரை பற்றி யாரும் பெரிய அளவில் போராட்டம் நடத்திப் பொங்கியதாக
இதுவரை நான் கேள்விப்படவில்லையே...[அப்படி ஏதும் நடந்திருந்தால்
மன்னிக்கவும்] முள்ளிவாய்க்கால் பிரசினையின்போதோ ,அதற்கு முன்னரோ பலவந்தமாக
ஆட்கள் சேர்க்கப் பட்டபோதெல்லாம் மௌனம் காத்த ஒருவருக்காகப் பொதுவில்
எல்லோரும் போராடுவது எப்படிச் சாத்தியமாகும்?. அவர் சார்ந்தவர்கள் இப்போதும்
கிளர்ந்தெழுந்து ஓங்கிக் குரல் கொடுத்துப் போராடினால் என்ன
கெட்டுப்போய்விடும். போராடுங்களேன் யார் வேண்டாமென்றது. பெருமாள் முருகன்
ஒரு தனிப்பட்ட எழுத்தாளன். மாதொரு பாகனுக்கு முதலே நிறைய எழுதியிருக்கிறார்.
அவருடைய எழுத்துக்கள் யாரையும் துன்புறுத்தும் நோக்குடன் சீண்டவில்லை.
உண்மைகளை ஆராய்ந்தே தன் கருத்துக்களை வெளியிட்டது ,.... சமயப்
பாதுகாவலர்களால் [!] பொறுக்கமுடியாமலே....., பலவித தடைகள்கொண்ட
எதேச்சாதிகாரமாக வெளிவந்திருக்கின்றது. இந்தக் கருத்துச் சுதந்திர மறுப்பை
நீடிக்கவிட்டால் ...எந்தவொரு எழுத்தாளனும் தன் சுய புத்தியோடு எழுத முடியாது.
எனவேதான், பாதிக்கப்பட்ட பெருமாள் முருகன் என்ற தனிப்பட்ட எழுத்தாளனுக்காக
எல்லோரும் குரல் எழுப்பித் தம் ஆதரவைத் தொடர்கின்றார்கள் .கவனத்தில்
கொள்ளவும் , இவர் யாரையும் சார்ந்தவர் அல்ல.!
(புஷ்பராணி)
சிங்கள ஸ்ரீக்கு டக்ளஸ் தேவா வைத்த ஆப்பு!
வாகன இலக்கத்
தகட்டில் தமிழ் எழுத்தை பொறித்த முதலாவது தலைவர் இன்றைய ஈ. பி. டி. பி
கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். 1985 ஆம் ஆண்டு காலப் பகுதி. ஈ.
பி. ஆர். எல். எப், ரெலோ, தமிழீழ விடுதலைப் புலிகள், புளொட், ஈரோஸ், தமிழீழ
விடுதலை இராணுவம் ஆகியன உட்பட பல தமிழ் போராட்ட அமைப்புக்கள் தீவிரமாக
செயல்பட்டு வந்த காலம். யாழ். கோட்டை உட்பட பல இடங்களிலும் இராணுவம்
ஆங்காங்கு நிலை கொண்டிருந்தது. சில இடங்களில் பொலிஸ் நிலையங்களும்
காணப்பட்டன. அப்போது வாகன இலக்கத் தகடுகளில் சிங்கள ஸ்ரீயை
பயன்படுத்த வேண்டும் என்கிற சட்டம் மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட்டு
வந்தது. தமிழ் தலைவர்களும் சிங்கள ஸ்ரீயை கொண்ட இலக்க தகட்டையே வாகனங்களில்
பயன்படுத்தினர். ஆனால் ஒரே ஒரு தமிழ் தலைவர் மாத்திரம் சிங்கள ஸ்ரீயை கொண்ட
இலக்கத் தகட்டை திட்டவட்டமாக நிராகரித்தார்.
(மேலும்....)
ஜனவரி
23, 2015
கூட்டமைப்பால் கல்விச் சமூகத்திற்கு மிரட்டல்! நீதி கேட்டதற்கு பரிசு!!

தெல்லிப்பழை
யூனியன் கல்லூரி மாணவர்கள் நேற்று புதன்கிழமை நடத்திய போராட்டத்தை முடக்க
கூட்டமைப்பு முற்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கின்றது. வழமை
போன்றே பாடசாலை முடிவடைந்த பின்னர் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில்
ஈடுபட்டிருந்த நிலையிலேயே அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தை
நிறுத்துமாறு உடனடியாகவே வடக்கு மாகாணக் கல்வி அமைச்சு உத்தரவிட்டதாகவும்
அந்த உத்தரவை மீறியும் மாணவர்கள் தமது நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி
ஆர்ப்பாட்டம் நடத்தியதாகவும் தெரியவருகின்றது.
(மேலும்....)
போராளிகள்
உட்பட அனைவரும் இலங்கைக்கு திரும்பி வரலாம்-
வெளிவிவகார
அமைச்சர்!
இலங்கையில் இருந்து போரினால் இடம்பொயர்ந்து இந்தியா மற்றும் உலகின் ஏயை
இடங்களிலும் அகதிகளாக வாழுகின்ற தமிழர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பி
வரவேண்டும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர்
மேலும் தெரிவிக்கையில், உலகில் எங்கும் இலங்கையர்கள் அகதிகளாக வாழக் கூடாது.
முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் திரும்பி வரலாம். அவர்களுக்கு எந்தப்
பிரச்சினையும் இருக்காது. அவர்கள் அனைவரும் எமது மக்கள். பல்வேறு
காரணங்களுக்காக அவர்கள் தமது தாயகத்தை விட்டுச் சென்றுள்ளனர். பல
பத்தாண்டுகளாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் முயன்றோம். ஆனால்
முடியவில்லை. எமது அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு எல்லா இன மக்களும்
வாக்களித்துள்ளனர். இந்தநிலையில் அனைவரும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும்
வாழ வேண்டும். முன்னைய அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட குழுக்களைச் சேர்ந்த
பலரை நான் லண்டனில் சந்தித்துள்ளேன். அவர்களைத் தீவிரவாதிகளாக என்னால் நம்ப
முடியவில்லை. அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசியுள்ளது.
அவர்களை அரசாங்கத்தில் இணைந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளோம். உண்மையான
தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு அவர்களின் பங்களிப்பும் உதவியும் அவசியம்.
தேசிய நல்லிணக்கத்துக்கு ஏற்கனவே பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. திம்பு
யோசனைகள், மங்கள முனசிங்க திட்டம், சந்திரிகாவின் திட்டம், இன்னும் பல
யோசனைகள் உள்ளன. தேசிய நல்லிணக்கத்தை எட்டுவதற்கு இதுவரை முடியாமல் போனதற்கு
அரசியல் இணக்கபாடின்மையே காரணம். இப்போது அரசியல் இணக்கபாடு உள்ளது. எனவே
தீர்வை எட்டமுடியும் என்று நம்புகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாழ்வாதாரப்
பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி கராச்சி குச்சவெளி பிரதேசத்துக்கு உட்பட்ட
கும்புறுபிட்டி மக்கள் கோரிக்கை !

2009ம் ஆண்டு (ரைகம்)
என்னும் நிறுவனம் பெரிய கராச்சி குச்சவெளி பிரதேசத்துக்கு உட்பட்ட
கும்புறுபிட்டி என்னும் இடத்தில் உப்பு உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு 1800
ஏக்கர் காணியை எடுப்பதற்கு அங்கு வாழும் மீன்பிடி தொழிலை செய்யும் மக்களை
ஏமாற்றி அவர்களிடம் இருந்து கையெழுத்து வாங்குவதற்காக அரசாங்கத்தின் கூட்டம்
நடப்பதாக சொல்லி மக்களை அவ்விடத்துக்கு அழைத்து வந்து 1 சோற்று பார்சலும்
200 ரூபா பணமும் கொடுத்து கையெழுத்து வாங்கிவிட்டு உப்பளம் செய்வதற்கு
மக்கள் அனைவரும் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று காண்பித்து காணியை
குச்சவெளி பிரதேச செயலகம் ஊடாக 2000 ஏக்கர் நிலப்பரப்புக்கு வேலி
அடைத்துவிட்டனர்.
(மேலும்....)
வடக்கு கிழக்கு
மாகாணங்களை மீள இணைக்க வேண்டுமென கோரிக்கை
இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட வேண்டுமென தமிழ்
தேசிய முன்னணி கட்சியின் ஸ்தாபகர் பழ நெடுமாறன் கோரிக்கை
விடுத்துள்ளார்.தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க வேண்டுமாயின்,
இலங்iகியன் புதிய அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு
நடவடி;ககை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 13ம் திருத்தச்
சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், அவ்வாறு
அமுல்படுத்தப்படாவிட்டால் கடந்த கால அரசாங்கங்களைப் போன்றே புதிய
அரசாங்கமும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்து வரும் சிங்கள மக்கள் அங்கிருந்து
வெளியேற்றப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். யுத்தக் குற்றச்செயல்கள்
தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு இந்த
அரசாங்கமும் கடந்த அரசாங்கத்தை போன்றே அனுமதியளிக்கவில்லை
தெரிவித்துள்ளார்.1989 களில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணசபையில் கலைக்க
வேண்டும், இல்லாமல் செய்யவேண்டும் என்று புலிகளுக்காக கூக்குரலிட்டு
பிரேமதாசாவுடன் இணைந்து அம்மகாண சபையைக் கலைத்தவர்கள் இன்று இணைப்பு
வேண்டும் என்றும், 13வது திருத்தச்சட்டம் அமுல்படுத்த வேண்டும் என்றும்
கோரிக்கை விடுப்பது வேடிக்கையாக இருக்கின்றது.
தலைமன்னார் -
இராமேஸ்வரம் விரைவில் நேரடி கப்பல் சேவை
தலைமன்னார் -
இராமேஸ்வரம் மற்றும் கொழும்பு - தூத்துக்குடிக்குமிடையில் நேரடி கப்பல்
சேவைகளை ஆரம்பிக்கவும் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான நேரடி விமான
சேவைகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் மங்கள
சமரவீரவின் இந்திய விஜயத்தின்போது இது குறித்து ஆராயப்பட்டதாக அமைச்சரவை
பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பு- கண்டிக்கிடையில்
இரட்டை ரயில் பாதை அமைத்தல், பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 4
ஆயிரம் தோட்ட வீடுகளை நிர்மா ணித்தல் என்பன குறித்தும் இதன்போது கவனம்
செலுத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டிலுள்ள இலங்கை அகதிகளை
மீள இலங்கைக்கு அழைத்துவருதல், வர்த்தக மற்றும் முதலீட்டு தொடர்புகளை
மேம்படுத்தல், மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணுதல் என்பன தொடர்பாகவும்
இதன்போது ஆராயப்பட்டது. இந்திய பிரதமர் தான் இலங்கைக்கு விஜயம் செய்ய
எதிர்பார்ப்பதாகவும் அறிவித்துள்ளார். 1987 ஆம் ஆண்டின் பின்னர் இந்திய
நாட்டு தலைவரொருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் முதலாவது
சந்தர்ப்பமாக இது அமைய உள்ளது.
யாழ்.மாநகரசபை
அமைய ஊழியர்கள் வேலை நீக்கம், அரசியல் பழிவாங்கல் என ஊழியர்கள் ஆதங்கம்
யாழ்.மாநகரசபையில் தற்காலிக நியமனம் வளங்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில்
வேலைசெய்துவந்த ஊழியர்களை தற்போதைய ஆட்சி மாற்றத்தின் காரணமாக மாநகரசபை
நிர்வாகம் நிறுத்துவதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதாக பாதிக்கப்பட்ட
ஊழியர்கள் யாழ்மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் முறைப்பாடு
செய்துள்ளனர். இன்று காலை யாழ்.மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்
தலைமைக்காரியாலயத்திற்கு சென்ற மாநகரசபை ஊழியர்கள் ஒருங்கிணைப்பாளர்
வி.கே.ஜெகனுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு முறைப்பாடு செய்துள்ளனர்.(மேலும்....)
கொழும்பு
கோட்டையில் அதி உயர் பாதுகாப்புக்கு மூடப்பட்ட வீதிகள் திறப்பு
உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் கொழும்பு மாநகரில் மூடப்பட்டிருந்த பல
வீதிகள் நேற்றுமுதல் மீண்டும் பொதுமக்கள் பாவனைக்காகத்
திறந்துவிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பு, கிறிஸ்தவ விவகார மற்றும்
அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் பணிப்புக்கு அமைய இந்த
வீதிகள் திறக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
இதற்கமைய உயர்பாதுகாப்பு வலயமாக மூடப்பட்டிருந்த ஜனாதிபதி மாவத்தை, பரோன்
ஜயதிலக மாவத்தை, சதாம் வீதி உள்ளிட்ட வீதிகள் மக்கள் பாவனைக்காக நேற்றுமுதல்
திறக்கப்பட்டுள்ளன. பழைய பாராளுமன்ற சுற்றுவட்டத் திலிருந்து ஜனாதிபதி
மாவத்தை ஊடாக மணிக்கூட்டுக் கோபுரம் வரையான வீதியில் சில இடங்களில் ஒருவழி
போக்குவரத்து அமுல்படுத்தப்படவுள்ளது. அதேநேரம், பெளத்தாலோக மாவத்தையில்
ஸ்டான்லி விஜயசுந்தர மாவத்தை சந்திக்கும், தும்முள்ளை சந்திக்கும்
இடைப்பட்ட வீதியில் பல வருடங்களாக பஸ் போக்குவரத்துக்கு
விதிக்கப்பட்டிருந்த தடை நேற்றுடன் நீக்கப்பட்டுள்ளது. இந்த வீதியூடாக
இனிமேல் பஸ் போக்குவரத்து இடம்பெறும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும்
தெரிவித்தார்.
கியூபா-அமெரிக்காவுக்கு இடையில் வரலாற்று முக்கியம் வாய்ந்த பேச்சு
அமெரிக்கா
மற்றும் கியூபாவுக்கு இடையில் பல தசாப்தங்களுக்கு பின்னர் கியூப தலைநகர்
ஹவானா வில் உயர்மட்ட பேச்சு வார்த்தை இடம்பெற்றுள் ளது. இரு நாட்டு
உறவுகளை யும் புதுப்பிப்பது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும்
கியூப ஜனாதிபதி ராவுல் காஸ்ட்ரோ கடந்த மாதம்; அறிவித்த நிலையிலேயே கடந்த
புதனன்று இரண்டு நாள் பேச்சுவார்த்தை ஆரம்பமானது. இதில் முதல் நாள்
சந்திப்பு முன்னேற்றம் கொண்டதாக இருந்ததென்று அமெரிக்க அதிகாரி ஒருவர்
விபரித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான இராஜதந்திர உறவுகளை
ஏற்படுத்துவது மற்றும் புலம்பெயர்வு தொடர்பில் இரண்டாவது நாள் சந்திப்பில்
அதிக கவனம் செலுத்தப்பட்டது. கியூபா சென்றிருக்கும் அமெரிக்க தூதுக்
குழுவுக்கு லத்தீன் அமெரிக்காவுக்கான உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரியும்
இராஜாங்க திணைக்களத்தின் துணைச் செயலாளருமான ரொபடா ஜகொப்சன் தலைமை
வகிக்கிறார். கடைசியாக அமெரிக்கா உயர்மட்டக் குழுவென்று கியூபா சென்றது 35
ஆண்டுகளுக்கு முன்னராகும். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கொங்கிரஸ் அவையில்
ஆற்றிய உரையில் கியூபாவுக்கு எதிரான பொருளாதார தடைகளை அகற்றுவது குறித்து
கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மோடியைப்
புகழும் காங்கிரஸ் தலைவர்கள்...சுதாரிக்காத சோனியா!
காங்கிரஸ்
மூத்த தலைவர்கள் பலர் பிரதமர் மோடியை புகழ்ந்து கொண்டே, பா.ஜனதாவுக்கு
தாவவும் தருணம் பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில், கட்சித் தலைமை அதனை
மவுனமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே என்ற குமுறல்கள் காங்கிரஸ்
தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளன. மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு
அமைந்த உடனேயே மோடியை முதல் ஆளாக புகழ்ந்த காங்கிரஸ் தலைவர் சசி தரூர்.
அப்பொழுதே காங்கிரஸில் முணுமுணுப்புகள் எழுந்தன. தொடர்ந்து அவர் மோடியின் 'தூய்மை
இந்தியா' திட்டத்தை வெகுவாக புகழ, பா.ஜனதாவினர் குஷியாகி, காங்கிரஸ் கட்சியை
சீண்ட தொடங்கினர். இதனையடுத்து கட்சியின் இமேஜை காப்பாற்ற ராகுல் காந்தியே
களமிறங்கினார். மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் விளம்பர நோக்கத்திலானாது,
வெற்று விளம்பரத்திற்காக மோடி துடைப்பத்துடன் போஸ் கொடுக்கிறார் என்று
கடுமையாக சாடினார்.
(மேலும்....)
எங்கேயோ இடிக்குதே......?
'ஆண்ட
பரம்பரை மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைப்பதில் என்ன தவறு'

'சந்திரிகாவின்
மகன்
விமுக்தி நடைபெறப் போகும் பாராளுமன்றத் தேர்தலில்
போடடியிடுவார்' - செய்தி
உண்மையில் உக்ரேன் விடயத்தை ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு நோக்குகின்றன....?
Ukraine என்ற
நாட்டில் நடக்கும் யுத்தத்தை பற்றி ஜேர்மன் ஆய்வாளர் கூறுவது தான்
முற்றிலும் உண்மையான விடயம். Ukraine , ரஷ்யா ,அமரிக்கா, ஐரோப்பா ஆகிய
நான்கு அமைப்புகளும் சேர்ந்து கதைக்க முடியாத அளவு போர் சென்று கொண்டு
இருப்பதாகவும் Ukraine முடிவு செய்திருக்கிறது தமது நாட்டின் கிழக்கில்
நடக்கும் போரை இராணுவத்தினால் தீர்க்க முடியும் என்று. அது தனியாக இந்த
முடிவை எடுக்கவில்லை என்று இவர் கூறுவதின் ரகசியம் அமரிக்காவுடன் சேர்ந்து
என்பது தான். ஐரோப்பா இந்த முடிவை இட்டு சந்தோசப்படவில்லை என்றும் Ukraine
மிகுந்த கடன் தொல்லையால் துன்பப்படும் நாடு என்று அது தனது கடன்களையே
திரும்ப செலுத்த முடியாத நாடு என்றும் கூறுகிறார்.
(மேலும்....)
ஜனவரி
22, 2015
மகிந்தவை
அழித்தொழித்த விமல்!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இல்லாதொழித்தது விமல் வீரவன்சவே என
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முந்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் முதற்தடவையாக பாராளுமன்றம் சபாநாயகர் சமல்
ராஜபக்ஷ தலமையில் நேற்று முந்தினம் கூடியது. இதன்போது உரையாற்றிய பிரதமர்,
விமல் வீரவன்சவை நோக்கி மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய
பிரதமர் , " நாட்டின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் ,
இலங்கையர்களாக நாம் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் , நான் இன்று விமல்
வெளியிட்டுள்ள கருத்தைக் கண்டு புதுமை அடைந்தேன் " எனத் தெரிவித்ததோடு விமல்
வீரவன்சவை நோக்கி முன்னாள் ஜனாதிபதியை இல்லாதொழித்தது நீங்களே எனவும்
மீதமிருப்பதை அழிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார். மேலும் இனவாதத்தை மறந்து
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்துவோம் எனவும்
தெரிவித்தார்.
இந்த அரசு நல்லதா, கெட்டதா?

மகிந்த ஆட்சி
போய் மைத்திரி ஆட்சி வந்துவிட்டது. பெரும் பான்மையான தமிழ் மக்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், இந்த ஆட்சியிலாவது தமிழ் மக்களது
பிரச்சினைகளின் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பித்து ஒரு முடிவைக் காண்
பதை துரிதப்படுத்த வேண்டும். 2015 ஆம் ஆண்டில் எப்படியும் தீர்வைக் காண்போம்
என்று ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தமிழர சுக்
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வவுனியாவில் நடைபெற்ற கட்சி மாநாட்டில்
உரையாற்றும்போது உறுதிபடத் தெரிவித்திருந்தார். அதன்பின்னர், ஜனாதிபதித்
தேர்தல் நாளுக்கு ஒருவாரம் முந்தியதாக, இந்தியாவிலிருந்து கொழும்புக்குத்
திரும்பியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அவரது
வீட்டில் நடந்த கூட்டமைப்புத் தலைவர்களின் கூட்டத்தில், 2015-ல் நிச்சயம்
தீர்வு என்று அழுத்தந்திருத்தமாகத் தெரிவித்ததாகச் செய்திகள்
வெளியாகியிருந்தன.
(மேலும்....)
டெலிகொம்
தலைவராக ஜனாதிபதியின் சகோதரர் நியமனம்
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்துக்கு புதிய தலைவராக, ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவின் சகோதரர் குமாரசிங்க சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். தகுதி
அடிப்படையில் மிகமூத்த அதிகாரியான குமாரசிங்க சிறிசேன, டெலிகொம்
நிறுவனத்தின் தலைமைக்கு பொருத்தமானவர் என்ற காரணத்தினாலேயே இப்பதவி
வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களை அரச
நியமனங்களுக்கு பயன்படுத்தமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன -
தேர்தல் காலத்தில் தெரிவித்திருந்த நிலையில், அவரது சகோதரருக்கு ஸ்ரீ லங்கா
டெலிக்கொம் தலைவர் பதவி வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 2006ஆம்
ஆண்டிலிருந்து கடந்த வருடம் டிசெம்பர் வரை, அரசாங்க மரக்கூட்டுத்தாபனத்தின்
பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பொது முகாமையாளராகவும் குமாரசிங்க சிறிசேன
கடமையாற்றியிருந்தார். அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொதுவேட்பாளராக
மைத்திரிபால சிறிசேன களமிறங்கியதன் பின்னர் குமாரசிங்க சிறிசேனவின் பதவி
பறிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிவந்துவிட்டது வானவில் 47
நாட்டின் முன்னேற்றப்
பயணம் பின்தள்ளப்படும் அபாயம்!
1977இல் எப்படி
அன்றைய ஐ.தே.க, அன்று ஆட்சியில் இருந்த சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான
அரசின் தற்காலிக பொருளாதார நெருக்கடிகளை பயன்படுத்தி மக்களுக்கு நல்லாட்சி
தருவதாக பொய் வாக்குறுதிகள் தந்து ஆட்சியை கைப்பற்றிவிட்டு, பின்னர் 17
வருடங்களாக மக்களையும் நாட்டையும் நரக குழிக்குள் தள்ளினரோ, அச்சொட்டாக
அதுபோன்ற ஒரு சூழ்நிலையில்தான் இன்றும் எதிரணியினர் ஆட்சியை
கைப்பற்றியுள்ளனர். ஒரு புதிய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கணிப்பிட ஒரு சில
நாட்கள் போதாது என்பது உண்மையென்ற போதிலும், புதிய ஜனாதிபதியின் பின்னால்
அணிதிரண்டு நிற்கும் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் யார் யார் என்பதை வைத்து
அது எந்தப் பாதையில் செல்லப் போகின்றது என்பதை அனுமானிப்பது ஒன்றும்
சிரமமான விடயமல்ல. வெளிநாட்டு வல்லாதிக்க சக்திகள் பெரும் பிரயத்தனப்பட்டு
இந்த ஆட்சி மாற்றத்தை கொண்டு வந்தது பொழுதுபோக்கு வேடிக்கைக்காக அல்ல.
(மேலும்....)
யாழ்
மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் குறைப்பு
யாழ்
மாவட்டத்தில் 1991ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 09ஆக இருந்த நிலையில்
இம்முறை நடைபெற உள்ள தேர்தலில் அது 7ஆக குறைக்கப்பட்டது வாகக்காளர்களின்
பதிவில் ஏற்பட்ட தாக்கமே இந்த குறைப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து குறைக்கப்பட்ட இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்
ஆசனங்கள், நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு
வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்திய ஆண்டிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனங்கள் குறைக்கப்பட்டமை
குறித்த செய்திகள் வெளியாகி இருந்த போதும், அது தாக்கம் செலுத்தி
இருக்கவில்லை.
எனினும் இந்த ஆண்டு பொதுத் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ள நிலையில்,
யாழ்ப்பாணத்தில் இருந்து ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே தெரிவாகும்
நிலைமை உருவாகி இருக்கிறது. அந்த மாவட்டத்தில் இருந்து பல வெளிநாடுகளுக்கும்,
வெளி மாவட்டங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ள நிலையில், மாவட்டத்தின்
வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையே இதற்கான பிரதானகாரணமாக
சுட்டிக்காட்டப்படுகிறது.
தீபிகாவின் கதை
அழகி என்ற வார்த்தை யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, தீபிகா படுகோனேவுக்கு
கண்டிப்பாக பொருந்தும்... இந்த தைரியம் எத்தனை பிரபலங்களுக்கு வரும்!!!...
இது போன்றவைகளே மேலும் மேலும் மக்களுக்கு தங்களின் பிரச்சினைகளை வெளியே
சொல்ல உதவும்... தயவுசெய்து பகிரவும்...
(Translated from Hindustan Times, Mumbai edition, January 15th. Reported
by Kavita Awaasthi)

ஹிந்தி படங்களில்
காணப்படுவது போல தடைகளை தகர்க்கும் கதைதான், ஆனால் இது ஆபூர்வமான ஒன்று.
உங்களுக்கு தெரியுமா?... கடந்த வருடம் தன்னை பாலிவுட்டின் முன்னணி நடிகையாக
நிலை நிறுத்த போராடியபோது தீபிகா படுகோனே மன அழுத்தத்தால்
பாதிக்கப்பட்டிருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் தன்
மனம் திறந்து தன் வாழ்கையின் இந்த இரு வேறு அம்சங்களை எப்படி ஒன்றிணைத்து
வெற்றி கண்டார் என்பதை பற்றி பேசுகிறார்...(மேலும்....)
இயக்குனர்
ஷங்கரின் "ஐ" யும் திருநங்கைகளும்
ஐ
திரைப்படம் வெளியாகி என்னுடைய சக திருநங்கை சகோதரிகள் எதிர்ப்பு
தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் செய்தும் போராடியும் வருவதை கண்டு அந்த
திரைபடத்தில் அப்படி என்ன திருநங்கைகளுக்கு அவமானம் தேடி தரும் அல்லது மனம்
புண்படும் விடையம் என்ன உள்ளது என்பதை கண்டறிய திரைப்படம் காண சென்றேன்.
இயக்குனர் ஷங்கர் ஒரு முன்னணி இயக்குனர் என்கிற அடையாளத்தோடு சமூக அக்கறை
மிக்க கருத்தாக்கங்களை திரையில் வெளிபடுத்தியவர் என்கிற நினைப்பு என் மனதில்
உள்ளது. அவருடைய இந்தியன், அந்நியன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் என்னை
இன்றளவும் கவர்ந்த படங்கள். திருநங்கைகளை காலம் காலாமாய் திரைப்படங்களில்
அவமானதுக்கூரிய பொருளாக சித்தரித்து பல படங்கள் வந்தாலும் ஒரு சில சொற்ப
படங்கள் மட்டுமே கண்ணியாமாக வெளிக்காட்டியுள்ளது.
(மேலும்....)
வெலிக்கடை
படுகொலை திட்டமிடப்பட்டவை சாட்சியங்கள் உள்ளன
- உதுல்
இரண்டு
வருடங்களுக்கு முன்னர் வெலிகடை சிறைச்சாலையில் நடந்த கைதிகளின்
போராட்டத்திற்கு சிறையதிகாரிகள் தீர்வு கண்ட நிலையில் அங்கு சென்ற
பாதுகாப்பு படையினர் பல கைதிகளை சுட்டுக்கொலை செய்தனர். முன்னைய அரசாங்கம்
மேற்கொண்ட இந்த திட்டமிட்ட கொலை தொடர்பான சாட்சியங்கள் இருப்பதாக சட்டத்தரணி
உதுல் பிரேமரட்ன தெரிவித்தார். நாட்டின் இன்றைய அரசாங்கம் இந்த படுகொலை
குறித்து நியாயமான விசாரணைகளை நடத்த குழுவொன்றை நியமித்தால், சாட்சியங்களை
முன்வைக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிக்காவின் மகன்
விமுக்தி வருகிறார்!
விரைவில் நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்க போட்டியிடவுள்ளார்
என தெரிய வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் கம்பஹா மாவட்டத்தில்
அவர் போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பில் தனது மகனுடன் சந்திரிகா
கலந்துரையாடியுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதேவேளை,
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல்
முறையிலேயே நடத்தப்படவுள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்
பின்னரே தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
EPDP சந்திரகுமார்
100 கோடிசொத்து குவிப்பு
யாழில் நிலை கொண்டுள்ள டக்கிலஸ் அணி பெரும் அட்டூழியங்களை மகிந்த ஆட்சியில்
புரிந்து வந்தது . தற்போது மகிந்தா ஆட்சி கவிழ்க்க பட்ட பின்னர் அடங்கி
போனது. இவர்கள் ஆட்டம் நடந்து முடிந்த தேர்தலின் போது கட்டுக்கடங்காது
சென்றது. தற்போது ஆட்சிபீடம் மாறிய நிலையில் கூலி வேலை செய்து திரிந்த
சந்திரகுமார் நூறு கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ளாராம்? இந்த சொத்து எப்படி
வந்தது என்பது தொடர்பான விசாரனைகளை ஆரம்பிக்க ஆளும் தரப்பு
உத்தரவிட்டுட்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகிறது.
இந்திய அகதிகள்
முகாம்களில் இலங்கையர்கள் மீது தாக்குதல்
இந்திய அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் மீது தாக்குதல் நடத்திய
சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமாரி
பிரதேசத்தில் அமைத்திருக்கும் பெருமால்புரம் எனப்படும் அகதிகள் முகாமில்
வசிக்கும் பெண் மற்றும் அவரின் சகோதரர்கள் மீது தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் தெரிவிக்கின்றது. இரும்பு மற்றும்
தடிகளுடன் அவ்விடத்திற்கு வந்த இனந்தெரியாத நபர்களால் தாக்குதல்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அசரிபல்லம் பிரதேச
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த
சம்பவம் தொடர்பாக 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை கைது
செய்வதற்காக இந்திய பொலிஸார் மேலதிய விசாரனையை ஆரம்பிதத்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
பொன். கந்தையா
(கரவைதாசன், டென்மார்க் )
வர்க்க
உணர்ச்சியும், உண்மையான ஜனநாயகப் பிரியமும்புரட்சிகர உணர்ச்சியும் கொண்ட
வர்களை எப்பொழுதும் கொம்யூனிஸ்டுகள் வசீகரிப்பதைப்போல் வேறெவரும்
வசீகரிப்பதில்லை. ஐம்பதுகளில் இலங்கைத் தீவே வர்க்கத்துருவப்பட்டிருந்தபோது
வடமராட்சியில் கம்யூனிஸ்ட்கள் தோழர் பொன் கந்தையா அவர்களை
வசீகரித்திருந்ததில் வியப்பேதும் இல்லை! அன்று தமிழ்மக்கள் பாராளுமன்ற
அங்கத்தவராகத் தேர்ந்தெடுத்த ஒரேயொரு இடதுசாரி பாராளுமன்ற அங்கத்தவர் தோழர்
பொன். கந்தையாதான். இல்லையேல் சரித்திரம் ஒட்டுமொத்த தமிழர்களையே
பிற்போக்குவாதிகள் என்று நாமாகரணம் சூட்டியிருக்கும்.
(மேலும்....)
இடதுசாரி,
முற்போக்கு முன்னணிகளுடன் ஸ்ரீ.ல.சு.க பொது தேர்தலில் போட்டி
மூன்று மாதத்தில்
நடைபெற உள்ள பொதுத் தேர்தலை இலக்கு வைத்து எமது கட்சி சார்பிலும் 100 நாள்
திட்டமொன்று முன்வைக்கப்பட்டதுடன் ஏனைய கூட்டுக் கட்சிகளுடன் இணைந்து
தேர்தலுக்கு தயாராகவுள்ளதாகவும் எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி
சில்வா தெரிவித்தார். அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்திற்கு ஆதரவு வழங்கும்
அதேவேளை அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் ஆழமாக ஆராய்ந்து வருவதாகவும்
அவர் குறிப்பிட்டார். எனது நீண்டகால அரசியலுக்கு பரிசாக இருந்த பதவி
கிடைத்துள்ளது. சுதந்திரக் கட்சி, இடதுசாரி முற்போக்கு சக்திகளை அழியவிடாது
உயிரூட்ட நடவடிக்கை எடுப்பேன். எமக்கு வாக்களித்த 57 இலட்சம் மக்களின்
கஷ்டங்கள், பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்பவும் அவை
குறித்து ஜனாதிபதிக்கு அறிவித்து நிவாரணம் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை
எடுக்கப்படும். சுதந்திரக் கட்சி செயற்குழுவினதும் மத்திய குழுவினதும்
ஏகமனதான தீர்மானத்தின் படி எதிர்க்கட்சி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
எமது கட்சியை முன்னேற்ற நடவடிக்கை எடுப்பேன். புதிய அரசாங்கத்தின் 100 நாள்
திட்டத்திற்கு ஒத்து ழைப்பு வழங்குவோம். இந்த ஆதரவு என்பது ஐ. தே. க வுடன்
கூட்டுச் சேர்வதல்ல.
நாட்டின்
முக்கியத்துவம்மிக்க யோசனைகள் தேசிய நிறைவேற்று சபையிடம் முன்வைப்பு
பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து வருடங்களாகக் குறைத்தல் உள்ளிட்ட
அரசியலமைப்பு மறுசீர மைப்பு, காணாமல் போனவர்கள் மற்றும் படுகொலைகள் குறித்த
விசாரணை, வடக்கில் இடம்பெயர்ந்த மக்கள் இழந்த தங்கநகைகளை
மீளப்பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தேசிய
நிறைவேற்று சபையிடம் யோசனைகள் முன்வைத்திருப்பதாக ஜே.வி.பி தெரிவித்தது.
ஊடகவியலாளர் சிவராம், லசந்த விக்ரமதுங்க உள்ளிட்டோரின் படுகொ லைகள், போத்தல
ஜயந்த ஆகியோர் மீதான தாக்குதல்கள் குறித்து உடனடி விசாரணை நடத்தப்பட
வேண்டும். இறுதி யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் வடக்கில்
இடம்பெயர்ந்தபோது அவர்களிடமிருந்த வாகனங்கள் பல கைவிடப்பட்டன. இந்த
வாகனங்களை உரியவர்களிடம் கையளிப்பதற்கு அப்போதைய அரசாங்கம் நடவடிக்கை
எடுக்கவில்லை. புலிகளின் வங்கிகளில் அடகுவைக்கப் பட்டிருந்த நகைகளுக்கு
என்ன நடந்தது என்பது தெரியாமல் போயுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட நகைகளுக்கு
என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என தாம்
கோரிக்கை விடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். நிறைவேற்று ஜனாதிபதிமுறை
முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. எனினும் நூறு
நாட்களுக்குள் அதனை நிறைவேற்றுவது கடினம். அதேநேரம் மக்களின் ஆணையால்
வெற்றிபெற்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை இல்லாமல் செய்ய முடியாது.
எனவே சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லாமல் அரசியல மைப்பின் ஊடாக குறைக்கக்
கூடிய ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட
வேண்டும் என தேசிய நிறைவேற்று சபையில் தாம் வலியுறுத்தியதாகவும் அநுரகுமார
திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.
An open letter to our newly
minted President.
thayagam featured-president
Dear Mr.President,

It looks like an open season in Sri Lanka for presidents, past and
present. There are gunmen and penmen (Shall I say, gunpersons and
penpersons!) on the hunt for presidents. Those who lived by the sword
should have known better. And those in the pursuit should better know
now.
But what’s wrong with the penpersons?
You are flooded with open letters from everywhere. Santa wouldn’t get
this many letters pre-christmas, ever. Yes, It was your fault. You
opened the floodgate. You called on dissidents and intellectuals to come
back. So instead of jumping and swimming to the shores of our
motherland, they are testing the waters, with their open letters.
(more....)
இன்று (21/01/2015) தோழர் லெனின் மறைந்த நாள்

மன்னர்களின் ஆட்சியை ஒழித்து தனது புரட்சிகர சிந்தனையால் மனிதகுலத்திற்கு
மாபெரும் மாறுதலை கொண்டு வந்து மக்களால் மக்களுக்கான ஆட்சிமுறையை
உருவாக்கிய புரட்சியாளர் தோழர் லெனினுக்கு வீரவணக்கம்!
"ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்குவோர்களுக்கும், சுரண்டப்படுபவர்களுக்கும்
சுரண்டுவோருக்கும் இடையே சமத்துவம் என்பது இல்லை. அப்படி ஏற்படவும் முடியாது.
ஆண்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பூர்வமான தனி உரிமைகளால் பெண்குலம்
பாதிக்கப்படும் வரை மூலதனத்திலிருந்து தொழிலாளிக்கு விடுதலை கிடைக்காத வரை,
முதலாளி நில உரிமையாளர் வணிகர் ஆகியோரின் அதிகாரத்தில் இருந்து உழைக்கும்
விவசாயிக்கு விடுதலை கிடைக்காத வரையில் உண்மையான சுதந்திரம் என்பது கிடையவே
கிடையாது."
- தோழர் லெனின்
எண்ணெய்
தோய்ந்த சுன்னாகம் மண்ணை இனி என்ன செய்யலாம்
(சி.சிவன்சுதன்)
சுன்னாகத்திலே பல கிணறுகளில் எண்ணெய்ப் படவங்கள் மிதப்பது தற்பொழுது ஒரு
பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் இந்த
எண்ணெய்ப்படிவுகளால் பல சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியக்கூறுகள்
தோன்றி இருக்கின்றன. இதனால் ஏற்படக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைத்
தவிர்ப்பதற்கு பல்வேறுபட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய தேவை
எழுந்திருக்கிறது. சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் சுற்றுவட்டாரப்
பகுதியிலுள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணெய் எவ்வாறு கலந்தது? 1958 ஆம்
ஆண்டிலிருந்தே சுன்னாகம் மின் உற்பத்தி நிலையத்தின் கழிவு எண்ணெய்
அகற்றப்படும் பொறிமுறையிலே ஏதாவது பிரச்சினைகள் இருந்தனவா? அல்லது இடைக்
காலங்களிலே இந்த விடயங்களில் உரிய கவனம் செலுத்தப்படவில்லையா? அல்லது
அண்மைக்காலத்து நடவடிக்கைகளில் ஏதாவது கவனக் குறைவுகள் இருந்தனவா? என்பன
பற்றி எல்லாம் விவாதித்துக் கொண்டு இருப்பதிலும் பார்க்க, இந்த
நிலையிலிருந்து மீட்சி பெறுவதற்கு இனி என்ன செய்யலாம் என்று சிந்திப்பது
பயனுடையதாக அமையும்.
(மேலும்....)
ஜனவரி
21, 2015
யார் கிழக்கு முதல் அமைச்சர்
கூட்டமைப்பு
முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு தோல்வி
இலங்கையில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில்
நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இலங்கையில் கிழக்கு மாகாண
சபையில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவது தொடர்பாக தமிழ் தேசிய
கூட்டமைப்புக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையில் நடந்த
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. முதலமைச்சர் பதவி தொடர்பாக
இணக்கப்பாடு ஏற்படாததே இந்த தோல்விக்குக் காரணம் என இரு தரப்பும்
கூறுகின்றன.
(மேலும்....)
அரசியலமைப்பை
மாற்றுவதற்கு ஒத்துழைப்போம்
வடக்கு கிழக்கிலுள்ள
மக்கள் தமது தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்காக தீவிரமாக வாக்களித்தனர்
-
அநுர
நாங்கள் முன்பே முன்வைத்த தகவல் அறியும் உரிமையை உறுதியாக ஆதரிப்போம் என்று
தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க,
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பை மாற்றும் நடிவடிக்கைகளுக்கு
நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்' என்றும் கூறினார். நாடாளுமன்றத்தின் 2015ஆம்
ஆண்டுக்கான கன்னியமர்வு நேற்று, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில்
ஆரம்பமானது. அங்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது கன்னியுரையை ஆற்றினார்.
அதனையடுத்து கட்சித்தலைவர்கள் உரையாற்றினர். இதன்போதே அநுர குமார
திசாநாயக்க, மேற்கண்டவாறு தெரிவித்தார்.கூட்டணியாக அமைக்கப்பட்ட அரசாங்கம்
மற்றும் எதிர்கட்சி எங்களுக்கு தேவையில்லை என்பதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திர
கட்சி உறுப்பினர்களையும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் கொண்டு அரசாங்கம்
அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.மோசடி மற்றும்
ஊழல்களில் ஈடுப்பட்ட அனைத்து நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
என்பதுடன் ஊழல் பற்றி ஜனாதிபதி தேர்தல் விவாத மேடையில் பரவலாக பேசப்பட்டது.
அவை தொடர்பில் கொஞ்சம் கொஞ்சம் வெளிச்சத்துக்கு தற்போது
கொண்டுவரப்படுகின்றது. நாங்கள் முன்பே முன்வைத்த தகவல் அறியும் உரிமையை
உறுதியாக ஆதரிப்போம். ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதற்காக அரசியலமைப்பை
மாற்றும் நடிவடிக்கைகளுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். வடக்கு மற்றும்
கிழக்கிலுள்ள மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதற்கு
நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.வடக்கு
கிழக்கிலுள்ள மக்கள் தமது தேசிய தலைவரை தேர்தெடுப்பதற்காக தீவிரமாக
வாக்களித்தனர்.
அரசில்
தீர்வுக்கு முன்னுரிமையளிக்கவேண்டும்
- நிமல்
தேசிய
பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வளர்த்தெடுப்பதற்கு புதிய அரசாங்கம்
முன்னுரிமையளிக்க வேண்டுமென புதிய எதிர்க்கட்சித் தலைவரான நிமல் சிறிபால டி
சில்வா கேட்டுக்கொண்டார். புதிய அரசாங்கம் தனது நூறுநாள் திட்டத்தை பூர்த்தி
செய்ய தனது கட்சி ஒத்துழைக்கு என்றும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தின்
நேற்று ஆரம்பமான 2015ஆம் ஆண்டுக்கான கன்னியமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்
போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கான தீர்வை
எவ்வாறாயினும் அடைந்தே தீரவேண்டும். சகல சமுதாயத்தினருக்கும் ஏற்புடைய
தீர்வொன்று காணப்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.புதிய அரசினது, சகல
தரப்பினரையும் அணைத்து செல்லும் கொள்கையை செயற்படுத்துவதற்கு, எதிர்க்கட்சி
ஆதரவாளர்கள் மீது அவிழ்த்து விடப்பட்டுள்ள வனடமுறை கட்டுப்படுத்தப்பட
வேண்டுமென அவர் கூறினார்.
அரசியலமைப்பு திருத்தத்தில் ஒற்றையாட்சி தன்மை பேணப்படும்
- ரணில்
அரசியலமைப்பு
திருத்தங்களின் போது அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தன்மை பேணப்படுமென பிரதமர்
ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.புதிய அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்றபின்,
தனது முதலாவது உரையை நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் நூறுநாட்கள் வேலைத்திட்டத்தை
செயற்படுத்தும் முறைபற்றி அவர் தனது உரையில் விளக்கினார். 18ஆவது
திருத்தத்தை வலுவிழகக் செய்த சுதந்திர ஆணைக்குழுக்களை மீளவும் அமைத்து
19ஆவது திருத்தம் மீளவும் கொண்டுவரப்படுமென அவர் கூறினார்.
நாடாளுமன்றத்துக்கும் அமைச்சரவைக்கும் நிறைவேற்று அதிகாரங்களை கையளிக்கும்
புதிய அரசியலமைப்பு திருத்தங்கள் கொண்டு வரப்படும். இவற்றை செய்யும் போது
அரசியலமைப்பின் ஒற்றையாட்சி இயல்பை பேணுவோம். இந்த கொள்கையடிப்படையில்
13ஆவது திருத்தம் செயற்படுத்தப்படுமெனவும் அவர் கூறினார். ஒரு புதிய அரசியல்
கலாசாரத்துக்கான களம் அமைக்கப்பட்டுள்ளது. முரண்படும் போக்குக்கு பதிலாக
இணங்கிச்செல்லும் போக்கு அரசியல் முன்னெடுக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த நாடு அரசியல் பொருனாதார பிரச்சினைகளில் மூழ்கியுள்ளது. சர்வதேச
மட்டத்திலும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம். இதையெல்லாம் தாண்டி நாம்
முன்னேற வேண்டும்.
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, தமிழீழத்தைத் தவிர மறுபேச்சுக்கு
இடமில்லை

13 வருடங்களின்
பின், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் `முன்னாள் செயலாளர்` மைத்திரிபால
ஜனாதிபதியாகியிருக்கும் சூழலில், ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில்
மீண்டும் பிரதமராக, புதிய அரசாங்கத்தின் பாராளுமன்ற அமர்வில் இன்று ஆற்றிய
சிறப்புரையில், `தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காக
13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான தீர்வு திட்டம் தயாரிக்கப்படும்`
எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தரப்பில் அடைந்திருக்கக் கூடிய அதியுச்ச
அரசியல் தீர்வு கிடைக்ககூடிய வாய்ப்பைப் புறம்தள்ளி, ஒரு தோல்வி யுத்தத்தை
மாவிலாற்றில் தொடங்கிய புலிகளின் தலைமை தமிழ் மக்கள் வாயில் மண்ணள்ளிப்
போட்டது. இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை நிராகரித்து, தமிழீழத்தைத் தவிர
மறுபேச்சுக்கு இடமில்லை என்ற ஒற்றை வரி அரசியல் கோட்பாட்டில் சுமார் 20
வருடங்கள் நீண்ட யுத்தத்தின் முடிவு, இறுதியில் தமிழ் மக்களை அரசியல் கையறு
நிலைக்குள் தள்ளியுள்ளது. (மேலும்....)
பிரிக்கப்படாத
நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்
- சம்பந்தன்
தமிழ் மக்கள்
முகம் கொடுக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என நம்புகிறோம். அதற்கு
நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஆதரவு வழங்குவரென எதிர்பார்ப்பதாக
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தெரிவித்தார்.
தேர்தலின் பின்னர் நடைபெற்ற முதலாவது பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர்
மேலும் கூறியதாவது, புதிய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எமது பாராட்டை
தெரிவிக்கிறோம். எதுவித பலனும் எதிர்பார்க்காமலே நாம் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினோம். மக்களின் உணர்வுகளுக்கு இடமளித்து செயற்
பட்டோம். முழு நாட்டு மக்களுக்கும் தேர்தலின் போது சமமான வாய்ப்பு
வழங்கப்படவில்லை. தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல்
பிரசாரங்களுக்கு அரச அதிகாரம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. வடக்கு,
கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் ஆர்வமாக வாக்களித்தார்கள். நாட்டில்
மாற்றமொன்றை ஏற்படுத்த தமது ஒத்துழைப்பை வழங்கினார்கள். 100 நாள்
திட்டத்தினூடாக முழு நாட்டிற்கும் நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பிரிக்கப்படாத நாட்டிற்குள் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
கடந்த 60 வருட காலத்தில் எமக்கு முன் பல அனுபவங்கள் காணப்படுகின்றன. நாடு
பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தது. தமிழ் மக்கள் முகம் கொடுத்த
பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும். அது குறித்து எமக்கு நம்பிக்கை
உள்ளதோடு. நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் இதற்கு தமது ஆதரவை வழங்குவர் என
எதிர்பார்க்கிறோம்.
பாராளுமன்ற
தேர்தல் தொகுதிவாரி முறையில் நடைபெறாதென ஜனாதிபதி உறுதி
ஐக்கிய மக்கள்
சுதந்திர முன்னணி கட்சி தலைவர்களு க்கான விசேட கூட்டம் கடந்த (19) திங்கட்
கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தலைமையில் இடம்பெற்ற இவ் விஷேட கூட்டத்தில் கட்சித் தலைவர்களும்,
பாராளுமன்ற உறுப்பினர்களுமான சுசில் பிரேம ஜயந்த, டி.யு.குணசேகர, தொண்டமான்,
அதாவுல்லாஹ், அனுர பிரியதர்சன யாப்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும்,
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்,
முதலில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு
கட்சி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து உரையாற்றிய அவர்,
பாராளுமன்ற தேர்தல் தொகுதி முறைக்கு வருகின்ற பொழுது முஸ்லிம்கள் இந்த
நாட்டிலே பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ய முடியாத நிலை ஏற்படும்.
முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாக்கப்படும் நிலை தோன்றும். ஏப்ரல் மாதம்
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொகுதிகளை பிரிப்பதற்கு தற்போது காலம்
போதாத காரணத்தால் தற்போது அமுலில் உள்ள மாவட்ட மட்ட முறையில் தேர்தலை
நடத்துமாறும் தெரிவித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல் லாஹ்வின்
கூற்றை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஏப்ரல் மாதம்
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தொகுதி முறையில் தேர்தல் நடைபெறாது எனவும்
தற்போது அமுலில் உள்ள மாவட்ட மட்ட முறையே பின்பற்றப்படும் என ஜனாதிபதி
உறுதிமொழி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் மேலும்
தெரிவித்தார்.
சகல தமிழ்
கைதிகளின் பெயர் விபரங்களை சமர்ப்பிக்க ஜனாதிபதி பணிப்பு
பயங்கரவாத தடை
சட்டத்தின் பிரகாரம் சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள
அனைத்து தமிழ் கைதிகளின் பெயர் மற்றும் வழக்கு விபரங்களையும் நிறைவேற்று
சபைக்கு சமர்ப்பித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் செயற்திட்டத்தை
ஆரம்பிக்கும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் விடுத்த
கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளார். இதன்
பிரகாரம், இந்த விபரங்களை திரட்டி தேசிய நிறைவேற்று சபை உறுப்பினர்களின்
கவனத்துக்கு சமர்ப்பிக்கும்படி சபை செயலாளர் திலக் ரணவிராஜாவுக்கு ஜனாதிபதி
பணிப்புரை விடுத்துள்ளார். வருடக்கணக்கில் குடும்பங்களை பிரிந்து வாழும்
இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும். தண்டனை பெற்றவர்களும்
குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட
வேண்டும். வழக்குகளை எதிர்கொள்கின்றவர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டும்.
அல்லது அவர்களும் புனர்வாழ்வு பயிற்சித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு
விடுவிக்கப்பட வேண்டும். இவையே இந்த நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாக
தீர்த்துவைக் கக்கூடிய வழிமுறைகள் ஆகும்.
எதிர்வுகூறல்களை
அப்பா நம்பியிருக்கவில்லை
சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எனது தந்தை எடுப்பார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிரேஷ்ட புதல்வி சத்துரிக்கா சிறிசேன
நாட்டில்
கலவரம் வெடித்த சமயங்களில் கட்சித் தலைவர்களை உயிரையும் பொருட்படுத்தாது
காப்பாற்றுவதற்கு தந்தை முன்னின்று செயற்பட்டார். சிறிமாவோ பண்டாரநாயக்க,
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க போன்றே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுடனும் நம்பிக்கையுடன் செயற்பட்டார். யுத்தத்துக்கு முடிவு
கட்டப்பட்ட கடைசி தினத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டில் இருந்தார்.
அந்த சமயத்தில் பாதுகாப்பு அமைச்சராக எனது தந்தையே செயற்பட்டார். யுத்த
வெற்றி செய்தியை நாட்டு மக்களுக்கு வெளியிடாமல் நாட்டுத்தலைவர் திரும்பி
வரும்வரை அதனை இரகசியமாக பாதுகாத்தார். எமது தந்தை அதுபோன்ற நேர்மையான
மனிதர்.
(மேலும்....)
புதிய சூழலுக்குள் சகல சமூகங்களுக் கிடையிலும் மீள் இணக்கமும் சக வாழ்வும்
உருவாக்க கூடியதான நல்லாட்சியை நோக்கி ......
இன்று நாட்டில்
ஏற்பட்டுள்ள சாதகமான புரள்விற்கு தமது உயிரையும் எதிர்காலத்தையும் துச்சம்
என மதித்து கைகோர்த்து செயற்பட்ட அனைவரினதும் ஒத்தாசையுடன் தேசிய
நல்லிணக்கத்திற்கான வேலைதிட்டமொனறு உடனடியாக தொடங்க வேண்டியது அவசியம் எனக்
கருதுகிறேன். பல தசாப்தங்களாக மக்கள் தமது மனங்களுக்குள் வைத்துக் குமையும்
கவலை, வேதனை, ஒருவருக்கெதிராக மற்றவர் கொண்டிருக்கும் சந்தேகம், பகையுணர்வு
அவற்றுக்கு வகைசெய்த காரணிகள் என்பவற்றை ஒன்றாக உட்கார்ந்து பேசவும் அதனை
ஒவ்வொருவரும் செவிமடுக்கவும் அவசியமான ஒரு சூழலை உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
அதற்கான இடைவெளியை ஏற்படுத்திக்கொள்ளல் வேண்டும். அதி தீவிவிரவாத
கருத்துக்களினுள் ஆட்பட்டு மொழி, மதம், இனம் என்பவற்றின் பெயரால் சமூகங்கள்
என்ற வகையில் நாம் ஒருவரை ஒருவர் மிக மோசமாக காயப்படுத்திக் கொண்டுள்ளோம்.
இம்சைக்கு உட்படுத்தியுள்ளோம். அக்காயங்களை ஆற்றுவதை விடுத்து அவற்றை
நியாயப்படுத்தவும், அவற்றைக் கண்டு மகிழவும், அக்காயங்களை மென்மேலும் கிளறி
விட எங்களை ஊக்குவிகின்ற அரசியல் சூழலுகுள் வாழவும்
நிர்பந்திக்கப்பட்டுள்ளோம். இருந்தாலும், இன்று நாம் ஏற்படுத்திக்கொண்டுள்ள
இந்த புதிய சூழலுக்குள் சகல சமூகங்களுக் கிடையிலும் மீள் இணக்கமும் சக
வாழ்வும் உருவாக்க கூடியதான நல்லாட்சியை நோக்கி நகர இந்த புதிய அரசுக்கு
அழுத்தம் இடக்கூடியதான வேலைதிட்டமொன்றை உடனடியாக தொடங்க வேண்டியது
அவசியமாகும் - Mano Ranjan
இலங்கை அகதிகளை
அழைத்து வர நடவடிக்கை
தமிழ் நாட்டிலுள்ள இலங்கை அகதிகள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை மீண்டும்
நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என இருநாட்டு வெளிவிவகார
அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வ
விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர்
மங்கள சமரவீர மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை
ஆகியோருக்கு இடையில் சந்திபோன்று நேற்று டெல்லியில் நடைபெற்ற இந்த
சந்திப்பின் போதே மேற்கண்ட இணக்கம் எட்டப்பட்டதாக எமது சென்னை செய்தியாளர்
தெரிவித்தார். இதற்கான பேச்சுவார்த்தை இம்மாத இறுதியில்
ஆரம்பமாகவுள்ளதகாவும் அவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய
வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி மாற்றப்பட்டார்!
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ் பெருந்தோட்டக்
கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம்
வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக வடக்குமாகாண சபை முதலமைச்சர்
விக்னேஸ்வரனுடன் முரண்பட்ட இவர், மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் இடையூறு
ஏற்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாணத்தின்
பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தற்போது இவர்
அந்தப் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சீன உதவித்
திட்ட மீளாய்வு குறித்த கருத்து நிராகரிப்பு
இலங்கையில் சீனாவின் உதவித் திட்டங்கள் மீளாள்வு செய்யப்படும் என்ற கருத்தை
சீனா நிராகரித்துள்ளது. இலங்கைக்கும் தமது நாட்டுக்கும் இடையிலான உறவு
தொடர்ந்தும் சீரான முறையில் பேணப்படும் என்று சீன அரசாங்கம் நம்பிக்கை
வெளியிட்டுள்ளது. இலங்கையும் சீனாவும் நட்புரிமை நாடுகள். இரண்டு நாடுகளும்
புரிந்துணர்வுடன் செயற்பட்டு வந்ததாக சீன வெளியுறவு செயலாளர் ஹொங் லீய்
நேற்று சீன தலைநகர் பீஜிங்கில் வைத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில்
குறித்த புரிந்துணர்வு தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று தாம்
நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் 1.4 பில்லியன் டொலர்
நிதியுதவியின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படும் போட் சிட்டி நிர்மாணம்
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் மீளாய்வுக்கு உள்ளாகும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தநிலையிலேயே சீனாவின் உத்தியோகபூர்வ பதில்
வெளியாகியுள்ளது.
ஜனவரி 20, 2015
மைத்திரிபால
சிறிசேன இராஜினாமா
புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு
வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேன தனது நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியைஇராஜினாமாச் செய்துள்ளார். தற்பொழுது நாடாளுமன்றத்தில் நடைபெற்று
வரும் புதிய அரசாங்கத்தின் முதலாவது அமர்வுக்கு வருகைதந்த ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தனது இராஜினாமாக் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர்
நாயகத்திடம் கையளித்துள்ளார். பொலனறுவை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்கு தெரிவான
மைத்ரிபால சிறிசேன, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது
வேட்பாளராக போட்டியிட்டு நாட்டின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை இறுதி யுத்தம்
இலங்கை இராணுவம்
வென்றது எப்படி?
(பிரபாகரனின் இறுதி நாட்கள் என்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு
மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே
எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் ஆங்கில நூலின் தமிழாக்கத்தின் ஒரு பகுதி
இறுதி நாள் -19 மே 2009)

தங்கள் இறுதி இலக்குக்கு மிக மிக அருகில் வந்துவிட்டோம் என்று படைகளுக்குப்
புரிந்துபோனது. மேஜர் ஜெனரல் கமல் குணரத்னே தன் அணியின் ஒவ்வொரு நகர்வையும்
மிகவும் நெருக்கமாகப் பார்த்து வந்தார். அவர் உடனேயே சார்ஜண்ட்
விஜேசிங்கவின் ஆட்களைத் தடுப்பு வியூகத்தில் நிற்கச் சொன்னார். தப்பிச்
செல்லும் அனைத்து வழிகளையும் அடைக்குமாறு கூறினார். 8 பேர் அடங்கிய
தரைப்படைக் குழு ஒன்றும் நால்வர் அடங்கிய டாஸ்க் போர்சும் விஜேசிங்கவின்
குழுவுக்குப் பக்க பலமாக உடனடியாக அனுப்பப்பட்டன. இந்த இரண்டாவது குழுவுக்கு
சார்ஜண்ட் டி.எம்.முத்துபண்டா தலைமை தாங்கினார்.
இந்த அணியினர் முன்னேறும்போது மீண்டும் துப்பாக்கிச் சூடு ஆரம்பமானது.
கடுமையான துப்பாக்கிச் சண்டை நிகழ்ந்தது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகு
சதுப்பு நிலக்காட்டில் அமைதி. இரு அணிகளும் மிகவும் மெதுவாகப் புதர்களுக்கு
இடையே முன்னேறினர். 18 இறந்த உடல்கள் கிடைத்தன. அதில் வேலுப்பிள்ளை
பிரபாகரனும் ஒருவர். இலங்கை அரசை 30 ஆண்டுகளாகத் துன்புறுத்தி வந்தவர்.
அப்போது காலை 8.30 மணி.19 மே 2009.
(மேலும்....)
மேர்வினின்
கருத்து தொடர்பில் விசாரிக்குமாறு ஹிருணிகா முறைப்பாடு
தனது தந்தையான பாரத லக்ஷமன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் முன்னாள்
அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த கருத்து பற்றி, விசாரணைகளை
மேற்கொள்ளுமாறு கோரி, மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர
முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்திலும் அங்கொடை பொலிஸ்
நிலையத்திலுமே இவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இந்த கொலை
சம்பவத்துக்கும் ஏனைய முக்கிய சில கொலைகளுக்கும் முன்னாள் பாதுகாப்பு
செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவே ஆசிரியர் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின்
சில்வா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு
திணைக்களத்திடம் கடந்த சனிக்கிழமை முறைப்பாட்டை செய்துவிட்டு ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை கூறியிருந்தார். இதனையடுத்து, தனது
தந்தையின் படுகொலை தொடர்பில் விசாரணை செய்யுமாறு கோரி ஹிருணிக்கா முறைப்பாடு
செய்துள்ளார்.
கே.பி.க்கு
எதிராக வழக்குத் தொடரும் ஜேவிபி
விடுதலைப்
புலிகளின் முன்னாள் பொறுப்பாளர்களில் ஒருவரான கே.பி. என்றழைக்கப்படும்
குமரன் பத்மநாதனுக்கு, தொடர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை
விடுத்துள்ளதாக இலங்கையின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள
கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குமரன் பத்மநாதனுக்கு
எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜேவிபி
என்கின்ற மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. ராஜீவ் கொலை விசாரணைக்காக
இந்தியாவின் சிபிஐ இண்டர்போலின் உதவியை கோரியுள்ளது யுத்தம் முடிவடைந்த
பின்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் என்று தன்னை அறிவித்துக் கொண்ட குமரன்
பத்மநாதன் மீது மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் சட்டப்படி நடவடிக்கை எதுவும்
எடுக்கவில்லை என்ற ரீதியில் அவர் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என்று
மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி
முன்னெடுக்கின்ற வழக்கு நடவடிக்கை தொடர்பில் குமரன் பத்மநாதனுடன் தமிழோசை
தொடர்புகொண்டு கேட்டபோது, அதுபற்றி தற்போது கருத்துக்கூற முடியாது என்று
கூறிவிட்டார்.
அதிகளவு
சுயாட்சி வழங்க அரசாங்கம் தயார்
- பிரதமர் ரணில்
தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அதிகளவிலான
சுயாட்சியை வழங்குவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். இந்தியாவின் ஆங்கில
தொலைக்காட்சி சனல் என்.டி.டிவிக்கு அளித்திருக்கும் விஷேட பேட்டியிலேயே
ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்திருக்கின்றார். முன்னாள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷவுடன் பின்வாசல் வழியாக கைகோர்க்கும் பேச்சுக்கே இடமில்லை.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் சீனாவுடன் சேர்ந்து கொண்டு
இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டார்.
ராஜபக்ஷ காலத்தில் சீனாவுடன் செய்து கொண்ட பல்வேறு திட்டங்களுக்கான
ஒப்பந்தங்களை நாங்கள் மறுஆய்வு செய்ய உள்ளோம். விடுதலை புலிகளுக்கு எதிராக
நடந்த போரின்போது இழைத்த குற்றங்களுக்காக ஐ.நா.நடத்தும் விசாரணைக்கு இலங்கை
முழு ஒத்துழைப்பை அளிக்கும். இதுவரை மகிந்த ராஜபக்ஷ அதற்கு ஒத்துழைப்பு
அளிக்காமல் இருந்துவந்தார். இனிமேல் அது நடக்காது. கொள்கைரீதியாக தமிழர்
அதிகமாக வசிக்கும் பகுதிகளுக்கு முழு சுயாட்சி உரிமையை வழங்க எங்கள் அரசு
தயாராக உள்ளது எனவும் ரணில் தெரிவித்தார்.
மணல் சேவை
வைப்புப் பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளது
- மகேஸ்வரி
நிதிய செயற்திட்ட இணைப்பாளர்
மகேஸ்வரி
நிதியத்தினூடாக பாரவூர்தி உரிமையாளர் சங்கத்திலிருந்து விலக
விரும்புபவர்களுக்கு மணல் சேவை வைப்புப்பணம் மீளக் கையளிக்கப்படவுள்ளதாக
நிதியத்தின் செயற்திட்ட இணைப்பாளர் றஜீவ் தெரிவித்துள்ளார். மகேஸ்வரி
நிதியத்தினூடாக மணல் ஏற்றி இறக்குவதற்கு 500க்கும் மேற்பட்ட பாரவூர்தி
உரிமையாளர்கள் பாதுகாப்பாக ரூபா 5000 செலுத்தியிருந்தனர். இந்நிலையில்
குறித்த சேவையிலிருந்து விலக விரும்பும் உரிமையாளர்களுக்கு அடுத்த 2ம் திகதி
முதல் கட்டம் கட்டமாக பணம் மீளளிப்பு செய்யப்படவுள்ளதாக திட்ட இணைப்பாளர்
றஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டின்
நிச்சயமற்ற நிலைமை
மைத்திரிபால,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இருக்கிறார்.
அக் கட்சியைச்சேர்ந்த சிலர் அவரது அமைச்சரவையிலும் இருக்கிறார்கள். அக்
கட்சியின் பெரும்பாலானவர்கள் எதிர்க் கட்சியில் இருக்கிறார்கள். அமைச்சர்கள்
நாடாளுமன்றத்தில் எந்தப் பக்கத்தில் அமரப் போகிறார்கள் என்ற கேள்வியும்
எழுகிறது. மறுபுறத்தில் இப்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு
நாட்டில் சகல கட்சிகளினதும் ஆதரவு இருப்பதால் அவர் விரும்பினால் நிறைவேற்று
ஜனாதிபதி முறையை இரத்துச் செய்தல் உட்பட சகல தேர்தல் வாக்குறுத்களையும்
நிறைவேற்ற முடியும். அல்லது நன்றி கெட்டவராக ஐ.தே.க.வை கைவிட்டு
ஸ்ரீ.ல.சு.க., மு.கா, ஹெல உறுமய போன்ற கட்சிகளோடு சேர்ந்து கடந்த நவம்பர்
மாதத்துக்கு முன்னர் இருந்த நிலைமையை உருவாக்கவும் முடியும். வாக்குறுதிகளை
உதறித் தள்ளி விடவும் முடியும். எல்லாம் அவரது விருப்பத்திவேயே
தங்கியிருக்கிறது. ஆனால், அதன் பிரதிபலனையும் அவர் அடுத்த பொதுத் தேர்தலின்
போதும் ஜனாதிபதித் தேர்தலின் போதும் அனுபவிக்க தயாராக இருக்க வேண்டும்.
(மேலும்....)
குண்டுகள்,
தோட்டாக்களால் சேதமாக்க முடியாத தனி காரில் ஒபாமா வருகை
அமெரிக்க
ஜனாதிபதி ஒபாமா தலைநகர் டில்லியில் 26-ந் திகதி நடைபெறுகிற குடியரசு தின
விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக அவர் மனைவி
மிச்செல், உயர் மட்ட தூதுக் குழுவினருடன் 25-ந் திகதி தனி விமானம் மூலம்
டில்லி வந்து சேர்வார். ஒபாமாவின் வருகையையொட்டி டில்லியில் குடியரசு தின
விழாவுக்கு வரலாறு கண்டிராத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொதுவாக குடியரசு தின விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ள தலைமை விருந்தினர்,
ஜனாதிபதியுடன் அவரது குண்டு துளைக்காத காரில் வருவது வழக்கம். ஆனால் ஒபாமா
தனியாக தனது காரில் வந்து சேருவார் என தகவல்கள் கூறுகின்றன. ஒபாமா பயணம்
செய்ய குண்டு துளைக்காத கார் வரவழைக்கப்படுகிறது. இந்த காரின் டயர், டீசல்
டேங்க் போன்றவையும் துப்பாக்கியால் சுட முடியாத அளவுக்கு பாதுகாப்பு
கவசத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தீ பீஸ்ட் என்று அழைக்கப்படும் இந்த
கார் 18 அடி நீளமும் 8 தொன்கள் எடையும் கொண்டது. எட்டு அங்குல தடிப்பமும்
கொண்டது. இந்த காரின் எடை போயிங் 757 விமானத்தை விட அதிக எடை கொண்டது என்று
கூறப்படுகிறது. பஞ்சர் ஆகாத வகையில் இந்த காரின் டயர்கள்
வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒட்சிசன் தாங்கிகளும் தீயணைப்பு கருவிகளும்
உள்ளன. மேலும் இரவையும் துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் கெமரா
அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இரகசிய சேவையில் பயிற்சி பெற்ற நபர்தான்
இந்த காரை இயக்குவார். அதிவேகமாக ஓட்டுவதுடன் 180 டிகிரி கோணத்தில் காரை
திருப்பும் பயிற்சியும் இவர் பெற்றிருப்பார்.
இராயப்பரின் இராஜ விசுவாசம்

இராயப்பரின்
இராஜ விசுவாசம். ஒரு புறம் மத்தியில் ஏற்பட்டுள்ள பேரசுக்கானது மறுபுறம்
வடக்கை ஆளும் சிற்றரசு மீதான இராஜ விசுவாசம். போங்கள் இராஜப்பரின் இராஜ
விசுவாசம் எல்லோரையும் புழகாங்கிதம் அடைய வைத்து விட்டது. வன்னியை பிரபா
அரசன் ஆண்டபோது காட்டிய இராஜ விசுவாசத்தைவிட இந்த புதிய இராஜ விசுவாசம்
விஞ்சிவிட்டதாக தாயக உறவுகள் பேசிக்கொள்கின்றன. கொடிய யுத்தமானது ஆரம்பித்த
காலம் முதற்கொண்டு எமது இளைஞர், யுவதிகள் பலவந்தமாக இயக்கத்தில்
இணைக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமற்போயிருந்தனர் . இதனால் காணா
மற்போனோரின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியதுடன் அவர்களது
குடும்பபங்களும் மிகவும் கஷ்டத்திட்குள்ளாகியது.
(மேலும்....)
மரண
அறிவித்தல்

திரு சூசைபிரகாசம் மனுவல்பிள்ளை
(சின்ராசா மாஸ்டர், ஓய்வுபெற்ற ஆசிரியர்- நெடுந்தீவு, அனலைத்தீவு, றாகலை,
கினிகஸ் தென்ன, St.Charles யாழ்ப்பாணம்)
பிறப்பு : 14 டிசெம்பர் 1930 — இறப்பு : 14 சனவரி 2015
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சூசைபிரகாசம்
மனுவல்பிள்ளை அவர்கள் 14-01-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பிரகாசம் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு
மகனும், மாட்டீன், Dr.சவேரியன், சிறில் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளம்மா, பொலின், காலஞ்சென்ற றொமீனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனிவா, நிறஞ்சனி, நந்தினி, விஜிதா, சுஜிதா, றஜிதா ஆகியோரின் பாசமிகு
பெரியப்பாவும்,
பெர்ணடேட், றெசின், யூலியட், பிரேமா, டங்கன் வைற் ஆகியோரின் அன்புச்
சித்தப்பாவும் ஆவார். அன்னாரின் நல்லடக்க ஆராதனை யாழ்ப்பாணம் மரியன்னை
பேராலயத்தில் 17-01-2015 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் திருப்பலி
ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பேராலய சேமக்காலையில் நல்லடக்கம்
செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்
ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
கிழக்குமுதலமைச்சர் விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு
இடமேயில்லை!
கிழக்குமுதலமைச்சர் விடயம் ஒரு பேசுபொருளல்ல. அவ்விடயத்தில்
விட்டக்கொடுப்புக்கு இடமேயில்லை.ஆளும் மத்திய அரசாங்கம்
தார்மீகஅடிப்படையிலியங்கி கிழக்கில் நல்லாட்சிக்கான சூழ்நிலையை
ஏற்படுத்தவேண்டும்.நாம் எந்தவொரு இனத்திற்கும் பாதிப்பேற்படாதவகையில்
ஆட்சிநடாத்துவோம். இவ்வாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் சிரேஸ்ட
உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரட்ணம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் விடயத்தில் த.தே.கூட்டமைப்பிற்கும்
மு.கா.விற்கும் இழுபறி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றனவே இது பற்றித்
தங்களின் கருத்து என்ன என்றுகேட்டபோது அவர் மேற்கண்டவாறு கூறிப்பிட்டார்.
(மேலும்....)
நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு இன்று
நாடாளுமன்றத்தின் 2015ஆம் ஆண்டுக்கான கன்னியமர்வு இன்று செவ்வாய்க்கிழமை
பிற்பகல் 1.30க்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமாகும்.
அதனைதொடர்ந்து, ஆளும் கட்சியின் பிரதம கொறடா,சபை முதல்வர் மற்றும்
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் சபாநாயகர் முன்னிலையில்
சத்தியப்பிரமாணம் செய்துகொள்வர். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
அரசாங்கத்தின் இறுதியமர்வு கடந்த டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டதுடன் ஜனாதிபதியாக
மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவும் தெரிவு
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
வடமாகாண முன்னாள் ஆளுநரின் கீழிருந்த பணிகள் மாற்றம்
வடமாகாண முன்னாள் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்த விடயதானங்களில்
வடமாகாண சபையின் கீழ் மாற்றம் செய்வதற்கு வடமாகாண உறுப்பினர்களின் சம்மதம்
பெறப்பட்டுள்ளது. வடமாகாண ஆளுநருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு 89 ஆயிரத்து 169
மில்லியன் ரூபாய் ஆக இருந்த செலவினம் 2015ஆம் ஆண்டில் 132 ஆயிரத்து 917
மில்லியன் ரூபாய் என அதிகரித்தமைக்கான புதிய செயற்றிட்டங்களை வடமாகாண
சபையின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாக வடமாகாண அவைத்தலைவர்
சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.பிராந்திய ஆணையாளர் என்ற பதவி வகித்து
தற்பொழுது உதவிச் செயலாளர்களாகப் பணியாற்றுவோர் ஆளுநர் செயலகத்திலிருந்து
மாகாணப் பொது நிர்வாகப் பகுதிக்கு மாற்றம் செய்யப்படுவார்கள். இவர்களுக்கான
ஆளணி, ஆளுநர் செயலகத்துடன் இணைந்துள்ளதால் இந்த மாற்றத்துக்கான அங்கிகாரத்தை
புதிய ஆளுநர் ஒப்புதலுடன் முகாமைத்துவ மாகாணப் பொது நிர்வாகப் பகுதியிடம்
இருந்து பெற்றுக்கொள்ளுதல்.ஆளுநர் செயலகத்துடன் இணைக்கப்பட்டுள்ள வடமாகாண
இணையத்தளம் முன்பிருந்தது போல திட்டமிடல் பகுதிக்கு மாற்றப்படுதல். இந்த
மாற்றங்கள் தொடர்பான விடயங்கள் வடமாகாண ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி
உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பதவி இல்லையாம் கணவன் எதற்கு! மகிந்தவின் மனைவி
பெண்களின் குணத்தை தானும் காட்டியுள்ளார் மகிந்தவின் மனைவியான ஷிரந்தி.
கணவனுக்கு பதவி இல்லாது போனவுடன் கணவன் கசக்கத் தொடங்கிவிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினுள் ஏற்பட்டுள்ள குழப்பம்
காரணமாக அவரது மனைவி ஷிரந்தி, தனியாகப் பிரிந்து வசிப்பதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருவதாவது, ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து,
மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினுள் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இருவரும்
ஹம்பாந்தோட்டைக்குச் சென்றடைந்த பின்னர் ஷிரந்தி ராஜபக்ஷ தனது கணவருடன்
முரன்பட்டதாகத் தெரியவருகின்றது. தற்போதைய நிலையில் கொழும்பு அருகேயுள்ள ஒரு
மாளிகையில் தனது மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ஷவுடன் ஷிரந்தி தனியாக
வசித்துக் கொண்டிருப்பதாக அவருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்தவுக்கு நெருக்கமான சிலர் ஷிரந்தியை சமாதானப்படுத்த முயற்சிகளை மேற்
கொண்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே புனித பாப்பரசரின் வருகையின் போது அவரைச் சந்திக்கும் சாக்கில்
ஷிரந்தியுடன் சமாதானமாகும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ஷ நேரடி முயற்சியில்
ஈடுபட்டுள்ளார். கத்தோலிக்க மதத்தவரான தனது மனைவி தன்னுடன் இணைந்து
பாப்பரசரை சந்திக்க வரக் கூடும் என்று எதிர்பார்த்த மஹிந்தவுக்கு கடைசியில்
ஏமாற்றமே எஞ்சியுள்ளது.சிராந்தி பாப்பரசரை சந்திக்க மட்டும் மகிந்தருடன்
இருந்துவிட்டு அப்புறம் சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது, முன்னாள்
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் பசில்
ராஜபக்ஷ ஆகியோருக்கு அரசாங்க விடயங்களில் முக்கியத்துவம் வழங்கியமை
காரணமாகவே மஹிந்த தோற்றுப் போக காரணமாக அமைந்தது என்பதுதான் ஷிரந்தியின்
கோபத்துக்கு காரணம் என்று கூறப்படுகின்றது. 2005ம் ஆண்டின் ஆரம்பம் தொட்டே
கோத்தபாய மற்றும் பசில் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஷிரந்தி
ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ இவ்வளவு அமைதியாகக் கவிழ்க்கப்படுவார் என்று யாருமே
எதிர்பார்த்திருக்கவில்லை, அவரும் கூடத்தான். அவர் இவ்வளவு அமைதியாக
ஆட்சிப்பொறுப்பை மைத்திரியிடம் கையளிப்பார் என்றும் அநேகமானவர்கள்
எதிர்பார்த்திருக்கவில்லை. தேர்தலில் அவர் தோற்றால் ஆட்சிப்பொறுப்பை
கையளிக்க மறுத்து படைத்தரப்பின் உதவியைப் பெறக் கூடும் என்றவாறான ஊகங்கள்
ஏற்கனவே மேற்கத்தேய தூதரகங்கள் மத்தியில் காணப்பட்டன. சக்திமிக்க நாடொன்றின்
தூதுவர் இது தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவரோடு
உரையாடியிருக்கிறார்.
ஆனாலும், கத்தியின்றி இரத்தமின்றி ஆட்சிமாற்றம் நிகழ்ந்துவிட்டது. அது
மட்டுமல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மீதான பிடியை அவர் அமைதியாகக்
கைவிட்டதும் இதற்குள் அடங்கும்.
(மேலும்....)
பசிலும், மனைவியும் மற்றுமொரு சிக்கலில் சிக்கினர்!
உதவிய அதிகாரிகளும் மாட்டினர்
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவியை
சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு அனுப்பி வைத்துள்ளதாக கட்டுநாயக்க
விமான நிலையத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய மற்றும் முகாமையாளர் சேன
நந்திவீர ஆகியோருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விமான நிலைய
தொழிற்சங்கங்கள் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில்
உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்வதற்கு உரிய
அனுமதி பெற்றுக்கொள்ளாது பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள்
பகுதியின் ஊடாக சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முக்கிய பிரபுக்கள் பகுதியில் பயணம் செய்ய வேண்டுமாயின் வெளிவிவகார அமைச்சு
அல்லது நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். விமான நிலையத்தின்
தலைவர் பிரசன்னவின் அறிவுறுத்தலுக்கு முகாமையாளர் சேன சந்திவீரவின்
கையொப்பத்துடன் பசிலும் அவரது மனைவியும் முக்கிய பிரபுக்கள் பகுதியின் ஊடாக
நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். முன்னாள் அமைச்சர் ஒருவரும் அவரது
மனைவியும் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச்
சென்றுள்ளதாகவும் அதற்கு விமான நிலைய நிர்வாகம் ஒத்துழைப்பு
வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிடம்
எழுத்து மூலம்தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
எம்.ஜி.ஆர்
உயிருடன் இருந்திருந்தால் தமிழீழம் மலர்ந்திருக்குமா?

1983 ல் எம்.ஜி.ஆர்
அனைத்து இயக்க பிரதிநிதிகளையும் கோட்டையில் சந்தித்தார். அப்போது அவர் புளட்
இயக்க ஆதரவாளராக இருந்தமையினால் எல்லா இயக்கங்களையும் புளட் இயக்கத்தில்
சேரும்படி ஆலோசனை கூறினார். அவருடைய ஆலோசனையை ஒரு இயக்கமும்
ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது பாலஸ்தீன விடுதலை அமைப்பு போல் எல்லா இயக்கமும்
ஒரு குடையின் கீழ் வருவதாகவும் அதனை இந்திய அரசு அங்கீகரிக்க அவர் வழி
செய்ய வேண்டும் எனவும் இயக்கங்களின் சார்பில் அவரிடம் கோரிக்கை
வைக்கப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் அதில் விருப்பம் காட்டவில்லை.
(மேலும்....)
தமிழ் மொழியின் சிறப்புகளில் சில......
* சீனப்
பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில்எழுதபட்டிருக்கும்.
* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்ற
என்பது பொறிக்கபட்டிருகும்.
* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்..
* ரஷ்ய அதிபர் மாளிகையில் தமிழ்
மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டுள்ளது
* உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாகஅதி
கமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்
திருக்குறள்..
ஜனவரி 19, 2015
கிழக்கு முதலமைச்சர் விவகாரம்
ஜனாதிபதியுடன் ரி.என்.ஏ இன்று பேச்சு
கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் உள்ளிட்ட புதிய ஆட்சி அமைப்பு விவகாரம்
தொடர்பாக இன்று 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும்
கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம் தெரிவித்தார். கிழக்கில்
தமிழ் மக்கள் சார்பாக 11 உறுப்பினர்கள் மாகாண சபையில் உள்ளனர். இருந்தும்
கடந்த கலங்களில் இந்த சபை தமிழ் மக்கள் விடயத்தில் மிகவும்
பொடுபோக்குத்தனமாக நடந்துகொண்டமை வேதனைக்குரிய தமிழ் மக்களின்
அபிவிருத்தியிலும் நியமனத்திலும் இடமாற்றத்திலும் கிழக்கில் பாரிய
புறக்கணிப்புகள் நடந்தேறின. கிழக்கில் குரல் கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இம்முறையும் அதேபோன்றதொரு தவறைச் செய்ய நாம் விரும்பவில்லை.
எனவே ஜனாதிபதி பிரதமரிடம் இது பற்றிக் கூறி தார்மீகக் கடமையைச் செய்யுமாறு
வேண்டவுள்ளோம். சிலவேளை அரைவாசிக் காலத்திற்கு எம்மையும் மீதிக் காலத்திற்கு
மு. க.வும் முதலமைச்சர் பதவியை வகிக்குமாறு கோரப்படுமாயின் எமக்கே முதல்
காலப் பகுதி வழங்கப்பட வேண்டுமென்பதில் நாம் உறுதியாகவிருக்கின்றோம்.
பேச்சுக்கு நாம் தயார், தீர்வுத் திட்டத்தை உருவாக்க அரசு தயாரா
-
கூட்டமைப்பு
தீர்வுத் திட்டம் சம்மந்தமான வரைபு கூட்டமைப்பிடம் உள்ளதா...?
- பொது மகன்
இலங்கை
கேட்கும் அத்தனை திட்டங்களையும் செய்து கொடுத்தார்கள். அதில் பல கோடிகள்
அப்போது இருந்தவர்களின் சட்டைப்பைகளுக்குள் போயிருந்தன. ஆனால், இந்த ஆட்சி
மாற்றத்தின் பலனாக அதிலும் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது சீனாவின்
விடயங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது தற்போதைய அரசு. தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷ அரசுடன் ஒரு வருட காலத்தில் 18 தடவைகள்
பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான
முன்னேற்றமும் கிடைக்கவில்லை. நாம் தீர்வு திட்டத்தை கொடுத்த போது அரசு
அதற்கு கருத்தை சொல்லாதிருந்து, தெரிவுக்குழுவுக்கு வருமாறே அழைத்தனர்.
தற்போதைய அரசிலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்தில் ஈழத்தமிழ் மக்களின்
பிரச்சினைகளை தீர்வுக்கான எந்த சொற்றொடரும் கிடையாது. குறைந்தது தமிழ்
மக்களின் அன்றாட பிரச்சினைகளை தீர்க்கும் வேலைத்திட்டம் கூட அதில் கிடையாது.
ஆனால், தேர்தலுக்கு பிற்பாடு சம்பந்தன், சுமந்திரன் மற்றும் நான் உட்பட
ஜனாதிபதியையும் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்திரிக்காவையும் சந்தித்தோம்.
அதன்போது எமது மக்களின் பிரச்சினைகளைப் பற்றி சொல்லியிருக்கின்றோம்.
வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலை இடைநிறுத்தம்
வடக்குக்கான அதிவேக
நெடுஞ்சாலையின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதற்கு அரசாங்கம்
தீர்மானித்துள்ளது. அந்த நெடுஞ்சாலைக்கான முழுமையான செலவுகளை ஆராய்ந்து
பார்ப்பதற்காவே இந்த பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 750
கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வடக்குக்கான அதிவேக
நெடுஞ்சாலையின் செங்கடகல நுழைவாயிலுக்கான அடிக்கல், ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாட்டப்பட்டது. 300
கிலோமீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த நெடுஞ்சாலையானது, நான்கு கட்டங்களாக
நிர்மாணிக்க ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. முதற்கட்டமாக,
என்டேரமுல்லயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலும், இரண்டாம் கட்டமாக குருநாகல்
முதல் பெலெந்தெனிய வரையிலும், மூன்றாம் கட்டமாக தம்புள்ளை வரையிலும்
நான்காம் கட்டமாக தம்புள்ளையிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலும்
நிர்மாணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தினால்
தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த திட்டத்தை
அமுலாக்குவது குறித்து விரிவாக ஆராயப்பட்டதன் பின்னரே தீர்மானம்
எடுக்கப்படும்என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
சுரேஸுக்கு ஆனந்த கண்ணீர், சுமந்திரனுக்கு
சோக கண்ணீர்!
சுமந்திரன் மீது சுரேஸ் பாய்ச்சல் …………………?
(அருந்ததி)
அமைச்சுப்பதவி என்றால் அதன் மீது ஒட்டுண்ணி போல் ஒட்டிக் கொள்ளவே சுரேஸ்
பிரேமச்சந்திரனுக்கு அலாதிப்பிரியம். தனக்கு கிடைக்காத அமைச்சு வேறு
ஒருவருக்கும் கிடைக்க கூடாது என்பதே அவரது விருப்பம். இலங்கை இந்திய
ஒப்பந்தத்தின் போது ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைமையில் வடக்கு கிழக்கு இணைந்த
மாகாணசபை ஆட்சி உருவாக்கப்பட்டது. அப்போது நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்துக்கு
வருகிறது. அப்போது இந்திய தூதுவராக இருந்தவர் டிக்ஸித். கொழும்பு இந்திய
தூதகரத்தில் வடக்கு கிழக்கு மாகாண சபை அமைச்சர்களை நியமிப்பது குறித்து ஒரு
கூட்டம் நடந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் பத்மநாபாதான் முதலமைச்சர் என்றார்
டிக்ஸித். ஆனாலும் அதை பெருந்தன்மையோடு பத்மநாபா ஏற்க மறுத்து விட்டார். இதையடுத்து
துள்ளி குதித்த சுரேஸ் தானே முதலமைச்சர் என்றார். அதற்காக டிக்ஸித்தின்
காலைப் பிடிக்காத குறையாக தன்னையே முதலமைச்சராக நியமிக்குமாறு மன்றாடினார்.
ஆனாலும் அதை ஏற்க மறுத்த டிக்ஸித் வரதராஜப்பெருமாளே முதலமைச்சர் என்று
உறுதிபட தெரிவித்து விட்டார்.(மேலும்....)
தொளிலாளர்
நலன்களுக்கு ஆப்பு வைக்கும் உத்தரவு
மக்கள்
தேவைகளை நிறைவேற்றாத அரசாங்க அதிகாரிகளுக்கு தண்டனை
பொதுமக்களின்
தேவைகள், கோரிக்கைகள் தொடர்பாக முறையாக நடவடிக்கை எடுக்காமல்
தான்தோன்றித்தனமாக கடமைகளைப் புறக்கணிக்கும் அரச அதிகாரிகளுக்கு எதிராக
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க பிரதமரின் அலுவலகம்
முன்வந்துள்ளது.தவறிழைக்கும் அரச அதிகாரிகளின் வருடாந்த சம்பள உயர்வினை
இடைநிறுத்தவும் கவனம் திரும்பியுள்ளதாக பிரதமரின் செயலர் சமன் ஏக்கநாயக்கா
தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியவாறு
நல்லாட்சி வேலைத் திட்டத்தின் முக்கிய அங்கமாக பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இத்திட்டம் அமுலாகும். கடிதம் கிடைத்து
14 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். கடிதம் கிடைக்கும் மொழியில் பதில்
அனுப்பப்பட வேண்டும். அலுவலகங்களில் உள்ள அதிகாரிகளுக்குக் கிடைக்கும்
தொலைபேசி அழைப்புக்கு பதில் கூறாமல் கூட்டம், மாநாடு என்று பதில் வழங்கும்
அதிகாரிகள் தொடர்பாக உடன் முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம்
கேட்கப்பட்டுள்ளது.
கட்சித்
தாவல்களை மேற்கொண்டால் பதவிகள் ரத்து
கட்சித் தாவல்களை மேற்கொள்ளும் உறுப்பினர்களின் பதவிகளை ரத்துச்
செய்வதற்கான புதிய சட்ட திட்டங்களை வரைவதற்கு தேசிய நிறைவேற்றுச் சபை
ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது. இரட்டைப் பிரஜா உரிமை உள்ளவர்களுக்கு தேசிய,
பிரதேச தேர்தல்களில் போட்டியிட முடியாதெனக் கூறும் சட்டங்களைக் கொண்டு
வருவதும் தொடர்பாகவும் ஆராயப்பட்டு ள்ளது. 100 நாள் வேலைத் திட்டத்தில்
முன்னுரிமை அளிக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது. இந்த
நிறைவேற்றுச் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க, மாதுலுவாவே சோபித தேரர், பாட்டலி சம்பிக்க ரணவக்க, அநுர
குமார திசாநாயக்க. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க,
ரவூப் ஹக்கீம், ஆர். சம்பந்தன். சரத் பொன்சேகா, மனோ கணேசன். ரிசாட்
பதியுதீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நாளை 20 ஆம் திகதி இச்சபை ஜனாதிபதி
செயலகத்தில் மீண்டும் கூட உள்ளது.
அமெரிக்க
கோரிக்கையை இந்தியா நிராகரிப்பு
குடியரசு தின விழாவின் போது ராஜ் பத் பகுதியில் 5 கி.மீட்டர் சுற்றளவுக்கு
விமானங்கள் பறக்க தடைவிதிக்க வேண்டும் என்ற அமெரிக்க கோரிக்கையை இந்தியா
நிராகரித்தது. டெல்லியில் எதிர்வரும் 26ந் திகதி நடைபெறும் குடியரசு தின
விழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.
இதற்காக அவர் தனது மனைவி மிச்செல்லுடன் 25-ந் திகதி டெல்லி வருகிறார். ஒபாமா
வருகையை யொட்டி டெல்லியில் ஒரு மாதத்துக்கு முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகள்
தொடங்கிவிட்டன. குடியரசு தின விழா நடைபெறும் ராஜபாதை டெல்லி பொலிஸ்
கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 5 கி.மீ. சுற்றளவுக்கு
பொலிஸார் கடுமையாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். விழாவில்
ஒபாமா கலந்து கொள்ளும் நேரத்தில் ராஜபாதையில் 5 கி.மீ. சுற்றளவுக்கு
விமானங்கள் பறக்க தடை விதிக்க முடியுமா என்று ஒபாமா பாதுகாப்பு அதிகாரிகள்
மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர். இதை ஏற்க மத்திய அரசு
மறுத்துவிட்டது.
ஜனவரி 18, 2015
போவோமா ஊர்கோலம்.....
யாழ்ப்பாணம் கைதடி

மஹிந்தவின் தோல்வியில் 'றோவின் வகிபாகம்'
ஜனாதிபதி
தேர்தலுக்கு ஒரு மாதத்துக்கு முன்னராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை
தோற்கடிப்பதற்கு, வேலை செய்ததாக கூறப்பட்டு, இந்திய உளவு ஸ்தாபனமாகிய றோவின்
கொழும்பு தலைமை அதிகாரியை இலங்கை அகற்றியது என ராய்டர் செய்தி
வெளியிட்டுள்ளது. ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து வெளியேறிய மைத்திரிபால
சிறிசேனவுக்கு கொழும்பு, புதுடெல்லியிலுள்ள பல தகவல் மூலங்கள், உற்சாகம்
அளித்துடன் தேர்தல் சமயத்திலும் அவருக்கு உதவி வழங்கியதால், றோவின் முகவரை
மீளப்பெறுமாறு இந்தியாவிடம் கேட்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளன. இந்தியாவின்
பகைமையுடனான சீனாவின் பக்கம் முன்னாள் ஜனாதிபதி சாய்ந்தமையினால், இலங்கை
மீது இந்தியாவின் செல்வாக்கு குறைவாகப்பேசப்பட்ட சமயத்தில், ராஜபக்ஷ
எதிர்பார்க்காத விதத்தில் தோற்றப்பட்டார். மைத்திரிபால சிறிசேன உட்பட பல
நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திலிருந்து வெளியேற தூண்டியதாகவும்
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடாது
இருக்க தீர்மானிக்க வைத்து, வெல்லக்கூடியவரும் இந்தியாவுடன்
ஒத்துபோகக்கூடியவருமான ஒருவரை களத்திலிறக்க உதவினார் என்றும் இலங்கையின்
றோவின் தலைவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. றோ உளவு நிறுவனம் ரணிலை சந்தித்து
கட்சித்தலைவர்களை தூண்டி சந்திரிக்காவையும் கொண்டுவந்தது என ஒரு நாடாளுமன்ற
உறுப்பினர் ராய்டருக்கு கூறினார்.
சோதனை மேல் சோதனை மகிந்தவுக்கு..
சிறீலங்கா
சுதந்திரக் கட்சியின் தற்போதைய யாப்பின் படி சிறீலங்கா சுதந்திரக் கட்சியின்
ஒருவர் அதிபராக தேர்வாகும் போது அவருக்கு அதன் தலைமை பதவி உரித்தாகும் என -
மகிந்தவால் சட்டம் மாற்றப்பட்டது. இது சந்திரிகாவை கட்சியிலிருந்து
ஒதுக்குவதற்காக மகிந்தவால் மாற்றப்பட்டது. எனவே அப் பதவி இப்போது
மகிந்தவுக்கு ஆப்பாகி மைத்ரி வசம் வந்துள்ளது. மைத்ரி பொது அபேட்சகராவதற்கு
முன்னர் - எந்தவொரு கட்சியிலும் அங்கத்துவம் இல்லாமல் இருத்தல் வேண்டும்
எனும் நடைமுறையிலே அதிபராக போட்டியிட உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டு
அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இது ரதண -ரணிலுடன் கூடிய ஒரு ரகசிய
ஒப்பந்தம். வெளியே வரவில்லை. இப்போது மைத்ரி தனக்குள்ள அதிகாரத்தை
பயன்படுத்தி தனக்கு கிடைத்த சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை பதவியை -
யாப்பை மாற்றி சந்திரிகாவுக்கு கொடுக்கவுள்ளார். மகிந்த ஒன்றை நினைக்க
மைத்ரி ஒன்றை செய்கிறார். சந்திரிகாவை இல்லாமல் செய்ய - செய்த வலையில்
மகிந்த. சந்திரிகா மீண்டும் கட்சி தலைமைக்கு பொறுப்பேற்கவுள்ளார். ம்ம்ம்....
காலி துறைமுகத்தில் மிதக்கும் ஆயுதக்கப்பல்
காலி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மஹநுவர கப்பலில் உள்ள 12
கொள்கலன்கள்களில் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல்கள்
கிடைத்துள்ளன. இந்த ஆயுத களஞ்சியசாலை தனியார் நிறுவனத்துக்கு சொந்தமானது
என்று கூறப்படுகின்றது. காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள கப்பலில்
சந்தேகத்துக்கிடமான பொருட்கள் இருப்பதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர்
ஏ.எஸ்.டீ.எஸ் குணவர்தனவுக்கு இன்று நண்பகல் தகவல் கிடைத்தது. அந்த
தகவலின் அடிப்படையில் நங்கூரமிடப்பட்டிருந்த மஹநுவர கப்பல் சோதனைக்கு
உட்படுத்தப்பட்டது. அந்த கப்பல், எவன்காட் என்ற தனியார் பாதுகாப்பு
நிறுவனத்தினால் குத்தகைக்கு பெறப்பட்டதாகும். அந்த கப்பலில் ஆயுதங்கள் பல
இருந்தன. ரி-56 ரக துப்பாக்கிகள், மெஷின் கன், 84 எஸ் ரய்பில் எனும் ஆயுதம்
மற்றும் தன்னியக்க ஆயுதங்கள், அரைவாசி தன்னியக்க ஆயுதங்கள் உள்ளிட்ட 3,000
ஆயுதங்கள் இருந்ததாக அந்த கப்பலுக்கு பொறுப்பாக இருந்தவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து அனுமதிபெற்றுக்கொள்ளப்பட்டதாகவும் கப்பலுக்கு
பாதுகாப்பு வழங்குவதற்காக அதற்குள் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலையும்
இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்னும்
இரண்டு கொள்கலன்கள் சிக்கின
ஜனாதிபதி மாளிகையிலிருந்த சில பொருட்கள் அடங்கிய இன்னும் இரண்டு கொள்கலன்கள்
கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது. பேலியகொடை
பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த கொள்கலன்கள் இரண்டும்
கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். பேலியகொடை-நீர்கொழும்பு
வீதியிலுள்ள ஓரிடத்தில் வைத்தே இவ்விரு கொள்கலன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவ்விரு கொள்கலன்களிலும் ஆடைகள், மர தளபாடங்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள்
இருந்துள்ளன. அந்த கொள்கலன்களுடன் சென்ற அதிகாரிகளிடம் இதுதொடர்பில் விசாரணை
நடத்தியபோது, அது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய
குடும்பத்தின் தனிப்பட்ட பொருட்கள் என்றும் தெரிவித்துள்ளனர். இவை
தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
என்றும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
யாழ் வடமாராட்சி
கிழக்கில்
மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகல்வுக்கு இடைக்காலத் தடை
யாழ்.வடமராட்சி கிழக்கில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்டுவந்த மணல்
அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட அனுமதிப்பத்திரம் முறையற்றவகையில்
பெறப்பட்டுள்ளதாக மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டையடுத்து குறித்த பகுதியில்
மணல் அகழ்வதற்கும், அகழப்பட்ட மணலை அள்ளுவதற்கும் காவல்துறை இடைக்கால
தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குடத்தனை, அம்பன், நாகர்கோவில் பகுதிகளில்
ஈ.பி.டி.பி அமைப்பின் மகேஸ்வரி நிதியத்தினால் கடந்த சில வருடங்களாக
சட்டத்திற்கு மாறான வகையிலும், வழங்கப்பட்ட நியமங்களை மீறியும் மணல்
அகழப்பட்டுவந்ததாக மக்கள் மற்றும் அரசியல் தரப்புக்களால் குற் ற்றம்
சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் அம்பன் பகுதியில்,
தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இணைந்து
வடமராட்சி கிழக்கில் சட்டத்திற்கு மாறான வகையில் மேற்கொள்ளப்பட்டுவரும் மணல்
அகழ்வினை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் மற்றும் உழவு
இயந்திர உரிமையாளர்களுடன் இணைந்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றிணை
நடத்தியிருந்தனர்.
(மேலும்....)
யாழ் மக்கள் தமது வாழ்வாதாரப் பிரச்சனைக்காக வீதியில் இறங்கியுள்ளனர்

வலி.வடக்குப் பிரதேசத்தில் கழிவு எண்ணெய் பரவலால் பாதிக்கப்பட்ட மக்கள் நீதி
கோரி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை 8.30 மணி தொடக்கம்
சுன்னாகம் மின் நிலையம் முன்பாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். சுன்னாகத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையம் கழிவு எண்ணெயை
நிலத்தின் கீழ் செலுத்தியமையால் சுன்னாகம், தெல்லிப்பழை, மல்லாகம், உடுவில்
பிரதேச மக்களின் கிணறுகளில் கழிவு எண்ணெய் கலந்தது. இந்தக் கழிவு எண்ணெய்
நீரைப் பயன்படுத்தினால் தோல் சம்பந்தமான நோய்கள், புற்றுநோய், மலட்டுத்தன்மை,
குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பதுடன் வேறு பல நோய்கள் ஏற்படும் என சுகாதாரப்
பகுதியினர் எச்சரித்தனர். ஆனால் இந்தப் பிரச்சினைகள் குறித்து
அரசியல்வாதிகளோ, அரச உயர் அதிகாரிகளோ கண்டு கொள்ளவுமில்லை. நடவடிக்கை
எதுவும் எடுக்கவும் இல்லை. இதனைக் கண்டித்தும், இந்தப் பிரச்சினைகள்
குறித்து உடனடிக் கவனம் எடுக்குமாறு கோரி மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில்
கலந்து கொண்டனர்.
இலங்கை
2015 தேர்தல் - சில அவதானங்கள்.
பாசிச கிட்லரின் தொடர்மரபுதான் (Legacy) 2ம் உலக போரும் பின்வந்த
பனிப்போரும். அது போலவே பாசிச பிரபாகரனின் தொடர்மரபுதான்
மகிந்தராச்சியமும், டக்ளசின் சிற்றரசும். 1987 இல. இந்திய ஓப்பந்தம்
பிரபாகரனால் சீரழிக்கப்படாவிட்டால் EPRLF ல் இருந்து
விலக்கப்பட்ட டக்ளசு அரசியல்வாதியாக வந்திருக்கவே முடியாது. இத்தேர்தலில் 2
மக்கள் விரோதர்களின் முடிவு மகத்தான விளைவு. மகிந்த வென்றிருந்தால் இனி
சனநாயகமே இல்லாத ராணுவமய ஆட்சியை நோக்கி நாடு போயிருக்கும். யாழ்
பல்கலைக்கழகத்துக்கு
பொருத்தமான துணைவேந்தரான Ratnajeewan Hoole ஐ சிபார்சு செய்யும் படி 100
க்கு மேற்பட்ட Noel Nadesan, Chinniah Rajeshkumar, M. Sripathy ( former
Hartley college principal and university senate member) Dr. Rajeswary
Balasubramanium, Prof. Carlo Fonseka's முதலிய தமிழ் சிங்கள அறிஞர்கள்,
நலன்விரும்பிகள் டக்ளசிடம் வேண்டினார்கள். டக்ளசு செய்ததோ மக்களின்
விருப்பை புறக்கணித்து கதைக்க பேசவே தெரியாத பொம்மை வசந்தியை
துணைவேந்தராக்கினார். சீனா இலங்கை உறவால் பயன்பட்டது மகிந்தகுடும்பமும்
சீனாவுமே. இந்தியாதான் கடனாக அல்லாமல் உதவியாக பெருந்தொகைப் பணம்
இலங்கைக்கு கொடுத்தது. மாக்சிய சித்தாந்த மயப்படுத்தலுக்குட்பட்டவர்கள்
இந்திய வெறுப்பு சீன காதல் வாய்ப்பாட்டிலிருந்து விலகி திறந்த மனத்தோடு
இப்பிரச்சனையை அணுகவேண்டும்.
(Nadchathran Chev-Inthiyan)
வடக்கு,
கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானம் இல்லை
- ருவன்
வணிகசூரிய!
வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில்
எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன்
வணிகசூரிய தெரிவித்தார். அங்குள்ள முகாம்கள் மற்றும் பிரதேசங்களின்
பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய அறிக்கையொன்றை
பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது. மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால மற்றும்
எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருக்க
வேண்டிய பிரதேசங்கள் எவை?, பாதுகாப்பு படையினர் அகற்றப்பட வேண்டிய
பிரதேசங்கள், வடக்கில் கடமையாற்றுபவர்களை அங்கேயே கடமையாற்ற விடுவதா? இல்லை
வேறு இடங்களுக்கு அவர்களை மாற்றுவதா உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த
பின்னரே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீர்மானமொன்றுக்கு வரும்பூ என
பேச்சாளர் கூறினார். இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள ஆயிரக்கணக்கான
காணிகளை பொதுமக்களிடத் கையளிப்பது தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மகிந்த போனார்
மைதிரி வந்தார். மீண்டும் உண்டியல் குலுக்கல் ஆரம்பம்
லண்டனில் தாயக மக்களுக்கான அவசர நிவாரண உண்டியல் முனைப்பு !
இலங்கைதீவின் தமிழீழத் தாயக பகுதியில் இடைவிடாது பெய்த கனமழை காரணமாக
இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவிடும் பொருட்டு லண்டனில் நிவாரண உண்டியல்
முனைப்புபெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக அபிவிருத்தி
அமைச்சின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றிருந்த இந்த நிவாணர உண்டியல் முனைப்பு
தமிழர்கள் கூடுகின்ற பகுதிகளெங்கும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த
பேரினவாதத்தின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக 2009ம் ஆண்டு தமது சொந்த
நிலங்களில் இருந்து முழுதாக பெயர்த்தெறியப்பட்ட மக்களே, கடந்த சில
வாரங்களாக பெய்த கடும் மழைக்குள் அகப்பட்டு பெரும்துயரைச் சந்தித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் 31,536 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 10,896 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 9,715 பேரும், மன்னார் மாவட்டத்தில் 6,495 பேரும்,
மொத்தமாக 58,642 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தாயகச் செய்திகள்
தெரிவிக்கின்றன. இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தாயக
அபிவிருத்தி அமைச்சு இந்த நிவாரண உண்டியல் முனைப்பினை லண்டனில்
மேற்கொண்டுள்ளது. மனமுவர்ந்து உண்டியலில் இடுகின்ற ஒவ்வொரு சிறுதுளியும்
தாயக மக்களின் கண்ணீர்துளிகளை துடைக்கும் என தெரிவித்துள்ள தாயக அபிவிருத்தி
அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் பிறந்திருக்கும் இப்புத்தாண்டில் நம்
அனைவரதும் முதற்கொடையாக இது அமையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.
தீர்வு காண்பதற்கான நல்ல தருணம், புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை
சகல கட்சிகளையும் உள்வாங்கியதாக புதிதாக ஆட்சி பீட மேறியுள்ள ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினையைத்
தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுமெனத் தாம் திடமாக நம்புவதாக தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்
பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இப்புதிய அரசாங்கத்தின் மீது தமிழ்க்
கூட்டமைப்பு நம்பிக்கை வைத்துள்ளதாக வும், அதில் சகல கட்சிகளும் இணைந்தி
ருப்பதால் எவ்விதமான எதிர்ப்புக்களும் இன்றித் தீர்வினைக் காண முடியும்
எனவும் அவர் தெரிவித்தார். அடுத்துவரும் நாட்களில் தமிழ்க் கூட்டமைப்பு
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் பேச்சுவார்த்தைகளை
நடத்தி வடக்கு கிழக்கில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள், வடமாகாண சபை மற்றும்
இராணுவக்குறைப்பு, காணி விவகாரங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும்
அவர் தெரிவித்தார்.
ஐவருக்கு எதிராக எழுந்துள்ளது குற்றச்சாட்டு
சதித்திட்டம் குறித்து தகவல் திரட்டும் விசேட பொலிஸ் குழு
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது இராணுவத்தை
பயன்படுத்தி ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் விசேட
விசாரணை ஒன்றை நடத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய
ராஜபக்ஷ, முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், மாகாண சபை அமைச்சர்
உதய கம்மன்பில, பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகிய ஐவருக்கும் எதிராக
எழுந்துள்ளது. அவசர காலச் சட்டத்தை ஏற்படுத்தி இராணுவத்தினரை அனைத்து
வாக்கெண்ணும் நிலையங்களுக்குள்ளும் புகுத்தி முடிவுகளை மாற்றவும், பனாகொடை
இராணுவ முகாமில் உள்ள வீரர்களைக் கொண்டு தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த
தேசப்பிரிய உள்ளிட்டவர்கள் இருந்த தேர்தல்கள் செயலக கட்டிடத்தை
சுற்றிவளைத்து முடிவுகளை மாற்றவும் சதி பின்னப்பட்டதாக குற்றப்புலனாய்வுப்
பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டு மக்களின் அதிர்ஷ்டமாக பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனும்,
இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் தயா ரத்னாயக்கவும், சட்ட மா அதிபர் யுவஞ்சன்
விஜேயதிலகவும் இந்த சதியை எதிர்த்ததாகவும் அதனாலேயே அத்திட்டம் பலிக்காது
போனதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரியின் அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்வகட்சி அரசாங்கத்துக்கு தற்பொழுது
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்துள்ள நிலையில் அது தனது
பெரும்பான்மையை நாளை மறுதினம் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கூடவுள்ள
2015ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் நிரூபிக்கும் என்று
தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன்
பாராளுமன்றத்திலுள்ள அரசாங்கத்துக்கு ஆதரவான உறுப்பினர்களின் எண்ணிக்கை
113ஆக அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 42 உறுப்பினர்களும்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 13 உறுப்பினர்களும், ஜனநாயக தேசியக்
கட்சியின் 6 உறுப் பினர்களும், தேர்தல் காலத்தில் எதிரணியில் இணைந்து கொண்ட
25 உறுப்பினர்களும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் 21 உறுப்பினர்களும் என
மொத்தமாக 107 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கினர். இதேவேளை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை அங்கீகரித்து மேலும் பல
பாராளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு இணைந்து கொண்டனர். முன்னாள் அமைச்சர்களான
விஜித் விஜிதமுனி சொய்சா, சரத் அமுனுகம, ஜகத் புஷ்பகுமார, ரெஜினோல்ட் குரே,
எஸ்.பி.நாவின்ன, அதாவுட சென விரட்ன உள்ளிட்ட சுமார் 15 பேர் தேசிய
அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளனர். அத்துடன் மேலும்
பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன, விநாயகமூர்த்தி
முரளிதரன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, டியூ.குணசேகர, உதித் லொக்குபண்டார,
சனத் ஜெயசூரிய, முன்னாள் பிரதியமைச்சர் அப்துல் காதர், முன்னாள் சிரேஷ்ட
அமைச்சர் ஏ.எச்.எம்.பெளஸி உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
தலைமையிலான தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.
மஹிந்தவின் தலமையில் அரசாங்மொன்றை அமைப்போம்
- வாசுதேவ
நாணயக்கார
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் அரசாங்கமொன்றை அமைக்கப்
போவதாக முன்னாள் தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான
அரசாங்கமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தேச விடுதலை முன்னணி, மஹஜன கட்சி
உள்ளிட்ட கட்சிகள் இந்த திட்டத்திற்கு ஏற்கனவே ஆதரவினை தெரிவித்துள்ளதாகக்
குறிப்பிட்டுள்ளார். தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன கட்சி கொள்கைகளில்
மாற்றம் ஏற்படுத்திக் கொள்ளாது என கருதுவதாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய
அரசாங்கத்தின் ஊடாக நாட்டுக்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடுமென
தாம் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகள்
கிடைக்காத காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியைத்
தழுவியதாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருவதாகவும் இதன் மூலம் மீண்டும் இனவாதம்
தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள
பௌத்த மக்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் மஹிந்த ராஜபக்ஸவிற்கு போதியளவு
வாக்குகள் கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ
தொடர்பில் முழு அளவில் நம்பிக்கை உண்டு எனவும், நிச்சயமாக பொதுத் தேர்தலில்
வெற்றியீட்டி ஆட்சியை கைப்பற்றுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ நல்லாட்சி நடத்திய காரணத்தினாலேயே ஜனநாயக ரீதியான தேர்தல்
ஒன்றை முன்னெடுக்க முடிந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தள விமான நிலையத்துக்கு மூடுவிழா?
மத்தள சர்வதேச விமான நிலையத்தின் சகல செயற்பாடுகளையும் நிறுத்துவதற்கு
தீர்மானித்துள்ளதாக விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. மத்தள
விமான நிலையத்தினால் அமைச்சுக்கு பெரும் இழப்பு ஏற்படுகின்றது. இதனாலேயே
இந்த விமான நிலையத்தின் நடவடிக்கைகள் வரும் பெப்ரவரி 9ம் திகதியுடன்
நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் இரண்டாவது சர்வதேச
விமான நிலையம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொந்த மாவட்டமான
அம்பாந்தோட்டையில் மத்தள என்ற இடத்தில் கடந்த ஆட்சியின் போது திறக்கப்பட்டது.
அதேவேளை, இந்த விமான நிலையத்துக்காக விமானங்களை இயக்குவது பெரிய அளவு
நட்டத்தை ஏற்படுத்துவதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெருக்கோடியில் உள்ள மளிகைக்கடை ஈட்டும் வருமானத்தைக் கூட இந்த விமான
நிலையம் ஈட்டித் தரவில்லை என்று நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட ஒரு
அறிக்கையில் புதிய அரசாங்கம் கூறியுள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து
சேவை வழங்க தனியார் விமான நிறுவனங்கள் ஆரம்பத்திலிருந்தே பெரிதாக ஆர்வம்
காட்டவில்லை. மகிந்த ராஜபக்சவின் பெயரில், அவரது சொந்த மாவட்டத்தில், அவரது
ஆட்சிக் காலத்தில் இந்த விமானநிலையம் தவிர துறைமுகம் ஒன்றும் சர்வதேச
மாநாட்டு மண்டபம் ஒன்றும் கலையரங்கம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 17, 2015
தேசிய நிறைவேற்று சபை உருவாக்கம்! சம்பந்தன், மனோ, ஹக்கீம் உள்ளிட்ட 11 பேர்
நியமனம்
100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய நிறைவேற்று சபை என்ற உயர் சபையை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார். இச்சபையின் முதல்
கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 100 நாள் வேலைத்திட்டம்,
உறுதியளிக்கப்பட்டுள்ள அரசியல் அமைப்பு திருத்தங்கள், கடந்த அரசின் ஊழல்,
சட்டவிரோத நடவடிக்கைகள், மனித உரிமை மீறல்கள், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின்
போது நடைபெற்ற முறைகேடுகள், கொழும்பு மாநகரிலும், வடக்கு, கிழக்கு உட்பட
நாடு முழுக்க நடைபெற்ற காணிக்கொள்ளைகள், தேசிய கணக்காய்வாளர் நடவடிக்கைகள்
உட்பட புதிய அரசாங்கத்தின் தேசிய முன்னெடுப்பு தொடர்பாக முடிவுகளை இந்த
உயர்சபை எடுக்கும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் இந்தத் சபை ஜனாதிபதி
செயலகத்தில் கூடி ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும். இந்த சபையின்
அங்கத்தவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
வண. சோபித தேரர், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சம்பந்தன், மனோ
கணேசன், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், சரத் பொன்சேகா, அனுரகுமார
திசாநாயக்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகிய 11 பேர் பணியாற்றுவர்.
மேவின் டி சில்வா
கோட்டாவிற்கு தோட்டா
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ,
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய
ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பொதுமக்கள் தொடர்பாடல் அமைச்சின் முன்னாள்
அமைச்சர் மேர்வின் சில்வா, குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தில் இன்று
சனிக்கிழமை(17) முறைப்பாடுசெய்துள்ளார். கடந்த ஆட்சிக்காலத்தில்
இவ்விருவரும் செய்த ஊழல்கள் தொடர்பிலேயே அவர் முறைப்பாடு செய்ததாக
தெரிவிக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அமைச்சராக இருந்தபோதும்
இப்போதும் மேவினின் செயல்களுக்கு தோட்டா வைத்திருக்க வேண்டும் மக்கள். ஆனால்
இன்று மேவின் வைக்கும் தோட்டாவைப் பார்த்து சிரிப்பதைத் தவிர வேறு என்ன
செய்ய முடியும்.
குடும்ப
ஆட்சியே யுத்தவெற்றிக்கு உதவியது
- நாமல்
எங்களது குடும்ப ஆட்சியே தமிழீழ விடுலைப் புலிகளுக்கெதிரான யுத்தத்தை
வெற்றிகொள்ள வழிவகுத்தது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள அவரது சட்ட நிறுவன அலுவலகத்தில் வைத்து
இந்திய என்.டி.ரீ.விக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்துள்ளார். தனது தந்தை மற்றும் சிறிய தந்தையான பாதுகாப்பு மற்றும்
நகர அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷக்கு
இடையிலான நெருக்கமான தொடர்புகளே எல்.ரீ.ரீ.ஈயினருடனான போரில் இலங்கை
இராணுவம் வெற்றிபெற காரணம் எனவும் அவர் கூறினார். தமது
குடும்பத்துக்கிடையேயுள்ள பிணைப்பே யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததாக
தெரிவித்த நாமல், எந்தவொரு தலைவருக்கும் நம்பிக்கைக்குரிய பாதுகாப்பு
செயலாளர் ஒருவர் தேவைப்படுவார் என்றார். அத்துடன் எனது தந்தை அரசு
தலைவர்களுடன் சேர்ந்து தனிப்பட்ட உறுதியான முடிவுகளை எடுக்கமுடிந்ததது.
ஆனால், அந்த தலைவருக்கு உண்மையானவர்கள் தேவைப்பட்டதாகவும் நாமல்
தெரிவித்தார்.
தமிழ் பகுதியிலிருந்து இராணுவத்தை நீக்க
வட,
கிழக்கின் பாதுகாப்பு நிலைமை அறிக்கை கோரும் அமைச்சு
வடக்கு, கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் இதுவரையில்
எந்தவொரு தீர்மானமும் எட்டப்படவில்லை. அங்குள்ள முகாம்கள் மற்றும்
பிரதேசங்களின் பாதுகாப்பு நிலவரங்கள் தொடர்பான சகல விடயங்களும் உள்ளடங்கிய
அறிக்கையொன்றை பாதுகாப்பு அமைச்சு கோரியுள்ளது என இராணுவ பேச்சாளர்
பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். மேற்படி பிரதேசங்களின் நிகழ்கால
மற்றும் எதிர்கால பாதுகாப்பு நிலைமை, பாதுகாப்புப் படையினர்
நிலைகொண்டிருக்க வேண்டிய பிரதேசங்கள் எவை?, பாதுகாப்பு படையினர் அகற்றப்பட
வேண்டிய பிரதேசங்கள், வடக்கில் கடமையாற்றுபவர்களை அங்கேயே கடமையாற்ற விடுவதா?
இல்லை வேறு இடங்களுக்கு அவர்களை மாற்றுவதா உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்
ஆராய்ந்த பின்னரே இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு தீர்மானமொன்றுக்கு வரும்
என பேச்சாளர் கூறினார். இதேவேளை, பாதுகாப்பு தரப்பினர் வசமுள்ள
ஆயிரக்கணக்கான காணிகளை பொதுமக்களிடத் கையளிப்பது தொடர்பிலும் பாதுகாப்பு
அமைச்சு ஆராய்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு
நீக்கம்!
- பாதுகாப்பமைச்சு
இலங்கைக்கு வடக்குக்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்காக விதிக்கப்பட்டிருந்த
கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வைத்திருப்போர்
வடக்கு செல்வதற்கு முன்னைய அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
இந்தநிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று இடம்பெற்ற
முதலாவது பாதுகாப்பு சபை கூட்டத்தின்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
இலங்கையில் அமைதியான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்தக்கட்டுப்பாடு அவசியம்
இல்லை என்று எண்ணியே இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு
தெரிவித்துள்ளது. இதேவேளை ஆயுதங்கள், இராணுவ சீருடைகள், வெடி பொருட்களை
தவிர, வடக்கு கிழக்குக்கு விதிக்கப்பட்டிருந்த பொருட்களுக்கான விநியோகத்
தடையையும் பாதுகாப்பு அமைச்சு நீக்கியுள்ளது.
வட மாகாண
மீள்குடியேற்றத்தில் வெளி மாவட்டத்தினருக்கு அனுமதி இல்லை
மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத எவரும்
இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம் என்று அகில இலங்கை மக்கள்
காங்கிரஸ் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுத்தீன்
தெரிவித்தார். புதிய மீள் குடியேற்ற அமைச்சர், வட மாகாண முதலமைச்சர், வட
மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன்
நாமும் ஒன்றிணைந்து வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளை ஒழுங்கு
முறையாகவும், திட்டமிட்ட அடிப்படையிலும் மேற்கொள்ள நாம் திட்டமிட்டுள்ளோம்
என்றும் அவர் குறிப்பிட்டார். அ. இ. ம. கா. தலைவரான அமைச்சர் ரிஸாட்
பதியுத்தீன் மேலும் கூறியதாவது, வட மாகாண மீள்குடியேற்ற நடவடிக்கைகளைத்
திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்கு முறையாக மேற்கொள்ளுவதற்குத்
திட்டமிட்டுள்ளோம். இதன் நிமித்தம் புதிய மீள்குடியேற்ற அமைச்சர், வட மாகாண
முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற
உறுப்பினர்கள் ஆகியோருடன் நாம் இணைந்து செயற்படவிருக்கின்றோம். இதன்படிவட
மாகாணத்தில் ஏற்கனவே வாழ்ந்தவர்கள் யார்? மீளக்குடியேறியவர்கள் யார் என்பன
குறித்து நாம் முதலில் கவனம் செலுத்துவோம். கடந்த காலத்தில் சில சதி
நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மையினர்
இங்கு அழைத்து வரப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக நாம்
புதிய மீள்குடியேற்ற அமைச்சர் வடக்கு முதலமைச்சர், வட மாகாண சபை, தமிழ்
தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாடி முடிவுகளை
எடுப்போம். மீள்குடியேற்றம் என்ற போர்வையில் வட மாகாணத்தைச் சாராத சிங்களவரோ,
தமிழரோ, முஸ்லிமோ இம்மாகாணத்தில் குடியேற நாம் இடமளிக்க மாட்டோம். கொள்கை
ரீதியில் நான் இதற்கு எதிரானவன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
காந்தி கொலை
கேள்வி
-பதில் வடிவில் சில உண்மைகள்
(அ.மார்க்ஸ்)

கேள்வி: சுதந்திரத்திற்குப்
பிந்திய இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் பயங்கரவாதச் செயல்
அ. காந்தி கொலை ஆ. 2001 நாடாளுமன்றத் தாக்குதல் இ. மும்பை தாக்குதல்
சரியான பதில் ‘அ’. காந்தி படு கொலை யாரோ சிலர் தன்னிச்சையாக மேற்கொண்ட
அரசியல் கொலை அல்ல. இந்த நாட்டை ஒரு “இந்து அரசாக” (இந்து ராஷ்ட்ரா)
அமைப்பதற்கு பெரும் மக்கள் செல்வாக்கைப் பெற்றிருந்த காந்தி தடையாக
இருந்தார் என்பதற்காக அவரை ஒழித்துக் கட்டும் முயற்சி 1934 தொடங்கி
மேற்கொள்ளப்பட்டது. அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.
அமைபுகளிலிருந்து இந்தக் கொலைக் கும்பல் விலகிவிட்டதாகக் காட்டிக்
கொண்டதும்கூட அமைப்பு ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஒரு முடிவுதான். இந்தத்
தாக்குதலின் போது காந்தியுடன் சேர்ந்து அருகில் நிற்போரும் கொல்லப்பட்டாலும்
கவலை இல்லை என்பதால்தான் முன்னதாக மேற்கொண்ட கொலை முயற்சிகளில் வெடி
குண்டுகளையும் பயன்படுத்தினர்.
(மேலும்....)
நாடாளுமன்றம் ஏப்ரல் 24ஆம் திகதி கலைக்கப்படும்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி
நாடாளுமன்றத்தை கலைத்து ஜுன் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவார் என
அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய அரசாங்கத்தின் 100 நாட்கள்
வேலைத்திட்டம் முடிந்த பின்னர் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல்
நடத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவிடம் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக்கட்சியின்
தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை (16) கையளித்துள்ளார். புதிய
ஜனாதிபதியின் தலைமையிலேயே நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னேடுத்துச்
செல்வதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி திட்டமிட்டுள்ளது. எவ்வாறிருப்பினும்,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும்
100 நாட்கள் வேலைத்திட்டத்தின் போது, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி,
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியாகவே செயற்படும் என்றும் அந்த தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அச்சம் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த ஊடகவியலாளர்களை நாடு
திரும்புமாறு அழைப்பு
சிறந்த ஊடகக் கலாசாரத்தை ஏற்படுத்தி ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக
செயற்படுவதற்கான காத்திரமான சூழலை ஏற்படுத்த உச்சளவில் நடவடிக்கை
எடுக்கப்போவதாக புதிய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.
கடந்த காலங்களில் ஊடகவிய லாளர்கள் சுதந்திரமாக செயற்பட முடியாத அச்சுறுத்தல்
நிலவியதைக் குறிப்பிட்ட அமைச்சர், இதன் காரணமாக வெளிநாடுகளில் தஞ்சம்
புகுந்த ஊடகவியலாளர்களை மீள தாய் நாட்டுக்கு வருமாறும் அமைச்சர் அழைப்பு
விடுத்தார். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அமைச்சர்கள்
முக்கியஸ்தர்கள் அமைச்சரின் உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஊடக
அமைச்சின் செயலாளர் கருணாரத்ன பரணவிதாரணவும் மேற்படி நிகழ்வில் கலந்து
கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சு.க தலைமைப் பதவியை கையளித்தார் மஹிந்த
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை இன்றுமுதல் (நேற்று) கையளி
ப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக நேற்று
அறிவித்துள்ளார். கட்சித் தலைவர் பொறுப்பு உட்பட கட்சியில் பல்வேறு பதவிகளை
வகித்து, கடந்த 50 வருடங்களாகக் கட்சியைப் பாதுகாப்பதற்கு தான் அரும்
பங்காற்றியிருந்ததாகவும் அவர் விடுத்திருக்கும் அறிக்கையில்
குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் ஆபத்தைத் தான்
பார்க்க விரும்பவில்லையென்று குறிப்பிட்டிருக்கும் அவர், ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியை விரும்புபவர்கள் என்ற ரீதியில் இந்தப் பிளவிலிருந்து
கட்சியைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பெரும் ஒத்துழைப்பு வழங்கிய கட்சியின்
பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அவர் தனது அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, புதிய தலைமைத்துவம் மற்றும் நிறைவேற்றுக்
குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் கட்சியின் நலனைப் பேணுவது
மட்டுமன்றி நாடு தொடர்பிலும் அக்கறைசெலுத்த வேண்டும் என்றும் அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்புக்கும் மற்றும்
கட்சிக்குள் ஜனநாயகத்தைப் பேணுவதற்கும் அனைவரும் பொறுப்புடன்
செயற்படுவார்கள் என நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது
அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெருமாள்
முருகனை ஆதரிப்போம்
ஒரு படைப்பாளி தான் விரும்புவதை, நினைப்பதை, சிந்திப்பதை, கற்பனை செய்வதை
எழுதுவதற்கும் படைப்பதற்கும் முழு உரிமை உடையவர். அவற்றுடன் எமக்கு உடன்பாடு
இல்லை எனில் நாம் விமர்சனம் எழுதலாம் அல்லது அதற்கு மாற்றான ஒரு படைப்பை
உருவாக்கலாம் ஆனால் ஒரு படைப்பை அல்லது படைப்பாளியை எழுதாதே எனத் தடுக்கவோ,
தடை செய்யவோ யாருக்கும் உரிமை இல்லை. அவ்வாறு ஒரு படைப்பை எழுத்தை எதிர்க்க
வேண்டுமானால் எழுத்தை எழுத்தால் மட்டுமே எதிர்க்க வேண்டும். இதற்கு மாறான
வேறுவகையான எந்த நடவடிக்கைகளையும் அதை முன்னெடுப்பவர்களையும் நாம் எதிர்க்க
வேண்டும். பெருமாள் முருகனின் படைப்புகளுடன் கருத்துக்களுடன் எங்களுக்கு
உடன்பாடு இருக்கலாம். உடன்பாடு இல்லாமலும் இருக்கலாம் அல்லது அவரது
படைப்புகளை வாசித்திருக்கலாம் வாசிக்காமலும் இருக்கலாம். எந்த நிலையிலும்
இன்று நாம் செய்ய வேண்டியது அவரை இச் சந்தர்ப்பத்தில் ஆதரிப்பது மட்டுமே
செய்ய வேண்டும். பெருமாள் முருகனுக்கு எங்கள் ஆதரவையும் அவருக்கான
பாதுகாப்பையும் நாம் அளிக்க வேண்டும். இது எங்கள் பொறுப்பு. பெருமாள்
முருகன் அவர்கள் மீண்டும் எழுத வேண்டும். இப் போராட்டம் வெறுமனே பெருமாள்
முருகனுக்கானது.(Meera Bharathy)
பொதுவாழ்வில் தூய்மையின் அடையாளம்
தோழர் ஜோதிபாசு இந்திய பொதுவுடைமை இயக்க வரலாற்றில் என்றென்றும் ஒளிவிடும்
ஒரு பெயர். விடுதலைப்போராட்டக்காலத்தில் பொதுவாழ்வில் துவங்கிய அவரது பயணம்,
நாடு விடுதலைபெற்ற பின்பு மக்கள் நலன |