Contact us at: sooddram@gmail.com

 

மாசி 2012 மாதப் பதிவுகள்

மாசி 29, 2012

வெளிநாடுகள், உள்நாட்டில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்ந்தும் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள், மிலோனோ நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்பட்ட நேரத்துக்கு ஏற்ற சமனான காலத்தில் இவர்கள் மிலானோ நகரில் தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர். அதேவேளை ஜெனீவாவில் இக்கூட்டத் தொடர் மார்ச் 23 வரை தொடரவிருப்பதனால் ஜெனீவா சென்று ஐ.நா. அலுவலகம் முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் இத்தாலி வாழ் இலங்கையர்கள் தீர்மானித்துள்ளனர். “இலங்கை ஒரு சுதந்திரமான, இறைமையுள்ள நாடு. இந்நாட்டிற்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் பிரேரணைக்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களான நாம் குரல் கொடுக்க வேண்டும் என்றே ஐரோப்பா வாழ் இலங்கையர்கள் குரல்கொடுத்து வருகின்றனர். இதேவேளை, நேற்றும் நாட்டின் பல பாகங்களிலும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கண்டனப் பேரணிகளும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. கல்முனை நகரில் பெருந்திரளான மக்கள் நேற்று கூடி நின்று பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர்.

மாசி 29, 2012

ஐ.நா.மனித உரிமைகள் பேரவை, இலங்கைக்கு எதிரான பிரேரணை

ஈரான், ச வூதி, கட்டார், மலேசியா முஸ்லிம் நாடுகள் இலங்கையை ஆதரிக்க தீர்மானம்

ஐ. நா. மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது அமர்வின் போது இலங்கைக்கு எதிராகக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிக்க ஈரான், கட்டார், சவூதி அரேபியா, மலேசியா போன்ற முஸ்லிம் நாடுகள் உறுதியளித்துள்ளன. தாய்லாந்தும் இலங்கைக்கு எதிரான பிரேரணையை தோற்கடிக்கும் வகையில் வாக்களிப்பதாக அறிவித்துள்ளதாக இலங்கைத் தூதுக் குழுவுடன் ஜெனீவா சென்றுள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தெரிவித்தனர். மனித உரிமைப் பேரவையில் இலங்கைத்தூதுக் குழுத் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆற்றிய உரையை நாடுகள் பலவும் பாராட்டியுள்ளன. (மேலும்.....)

மாசி 29, 2012

Woman found dead inside hotel room

A 48 year old woman was found dead with stab wounds, inside a hotel room in Kollupitiya early this morning, the police said. She was identified as Sudarashani Kanagasabay. Police spokesman Ajith Rohana said that the victim had sustained serious injuries in her neck possibly with the use of a sharp weapon. Police said that the hotel staff who gave statements following the incident had stated that she was living together with another person inside the room and they were last seen together last Thursday (23). Since they had not come out of the room since then the hotel staff had broken the door and entered the room this morning. She had come to Sri Lanka with her mother in the second week of January from the United Kingdom but her mother had gone back a few days later. Information has come to light that she was married to a person who is believed to have been with her in her room. But the person had not been seen inside the hotel since last Thursday. Investigations are underway to arrest him. Since she arrived she had stayed at the hotel by obtaining the first room on the first floor.

மாசி 29, 2012

சிரியா

பொது வாக்கெடுப்பு  அரசுக்கு பெரும்பான்மை ஆதரவு

புதிய அரசியலமைப்புச் சட்டத் தின் நகலுக்கு சிரியாவின் பெரும் பான்மையான மக்கள் ஆதரவு தந்து வாக்களித்திருக்கிறார்கள். பல்வேறு சீர்திருத்தங்களை இணைத்து அஸாத் தலைமை யிலான சிரியா அரசு மக்கள் முன் பாக புதிய நகல் அரசியலமைப்புச் சட்டத்தை வைத்தது. அதன்மீது பொது வாக்கெடுப்பும் நடத்தப்பட் டுள்ளது. வாக்களித்தவர்களில் 89.4 சதவீத வாக்காளர்கள் சீர்திருத்தங் களைக் கொண்ட புதிய அரசியல மைப்புச் சட்டத்திற்கு ஆதரவு தெரி வித்துள்ளனர். மேற்கத்திய நாடுக ளின் ஆதரவு பெற்று குழப்பங்க ளைச் செய்து வரும் எதிர்க்கட்சி கள் இந்த வெற்றியை விமர்சித்துள்ளன. (மேலும்.....)

மாசி 29, 2012

சமாதானம், அபிவிருத்தியில் தமிழர்களின் அபிலாஷைகள்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் கலந்துகொண்டி ருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பண்பாட்டு அரச பிரதிநிதிகளையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகிறார். தமிழ் பேசும் மக்களுக்கு தேவையானது அமைதி, சமாதானம், அபிவிருத்தி மற்றும் அரசியலுரிமை என்றும் இவைகளை விரைவாக அடைவதற்கும் நிறைவேற்றுவதற்கும் நாம் அரசாங்கத்துடன் மட்டுமே உறவுகளை வலுப்படுத்த வேண்டும் என்றும் கருத்து தெரிவித்திருப்பதோடு அரசாங்கத்துடன் பகைமையுணர்வுகளை வளர்ப்பதன் ஊடாக எதையும் நாம் சாதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் ஒருவராக மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தலைவர் என்ற வகையில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதியாகவும் ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் தான் கலந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மாசி 29, 2012

உங்களுக்கு இங்கு என்ன வேலை?  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஆப்கன் மக்கள் முழக்கம்

கடந்த ஒருவாரமாக அமெரிக்காவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானின் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆர்ப் பாட்டத்தை ஒடுக்குவதற் காக ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கக் கைப் பாவை அரசு மேற்கொண்ட வன்முறைத் தாக்குதலுக்கு 30 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் அமெரிக்கப் படைகள் இஸ்லாமியர்களின் புனித நூலான குர் ஆனை எரித்த தாகத் தகவல்கள் வெளியா கின. இதற்கு எதிர்ப்பு தெரி வித்து நாடு முழுவதும் லட் சக்கணக்கான மக்கள் அன் றாடம் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகிறார்கள். சில பகுதிகளில் அமெரிக்க எதிர்ப்பை ஒடுக்குவதற்காக கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையால் ஆர்ப் பாட்டக்காரர்கள் காய மடைந்துள்ளனர். ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தக வல்கள் வெளியாகி வரு கின்றன. (மேலும்.....)

மாசி 29, 2012

கெடுபிடி யுத்த களமாக மாறிவரும் ஜெனீவா மனிதஉரிமைகள் பேரவை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் வியூகங்களை முறியடிக்கும் முயற்சியில் கொழும்பு

ஜெனீவாவில் ஐ.நா.  மனித  உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடர் நடைபெறும் நிலையில் இலங்கைக்கு பாரிய நெருக்கடியை  கொடுக்கும் நோக்குடன் அமெரிக்காவிலிருந்து 15 பேரடங்கிய உயர் மட்டக்குழுவும் பிரிட்டன் எம். பி. க்கள் 4 பேரும் ஜெனீவாவுக்கு வருகைதரவுள்ளதாக அறியவருகிறது. ஜெனீவா வந்துள்ள அரசாங்க குழுவினரே இந்தத் தகவலை அறியப்படுத்தினர். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான பிரதிச் செயலாளரான மரியா ஒடேரா இக்குழுவில் இடம்பெறுவாரென தெரியவருகிறது. இவர் அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார். ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முழு வீச்சுடனும்  ஏனைய நாடுகளின் ஆதரவை திரட்டும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருவதால் இலங்கை தரப்பு கடும் விசனமடைந்துள்ளது. (மேலும்.....)

மாசி 29, 2012

சோமாலியா  பெரிய மீனுக்காக சின்ன மீனைப் போடும் பிரிட்டன்! 

சோமாலியாவில் ஏற்பட் டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறோம் என்று களத் தில் இறங்கியுள்ள பிரிட் டனுக்கு சுயநல நோக்கம் உள்ளது என்று அந்நாட்டி லிருந்து வெளியாகும் ‘கார் டியன்’ நாளிதழ் குற்றம் சாட் டியுள்ளது. சோமாலியாவுக்கு மனி தாபிமான மற்றும் பாது காப்பு ரீதியான உதவிகளை பிரிட்டன் செய்து தர முன் வந்திருக்கிறது. அந்நாட் டின் எரிபொருள் வளத்தில் தனக்குக் கணிசமான பங் கைப் பெற்றுக் கொள்ள லாம் என்ற எண்ணத்தில் தான் உதவிக்கரம் நீட்டி யிருக்கிறது என்கிறது கார்டி யன். சோமாலியா பற்றிய சர்வதேச மாநாடு ஒன்றிற்கு பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரூன் கடந்த வாரத்தில் ஏற்பாடு செய்தி ருந்தார். இதில் கூடுதல் நிதி யுதவி மற்றும் பயங்கரவாதத் திற்கு எதிரான நடவடிக்கை ஆகியவற்றிற்கு உறுதி மொழிகள் வழங்கப்பட்டன. (மேலும்.....)

மாசி 29, 2012

இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் _

இலங்கைக்கு எதிரான ஜெனீவாவின் தீர்மானங்களுக்கு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் அமெரிக்காவை போன்று இந்தியா துரோகத்தனமாக செயற்படாது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைகளுக்கு இலங்கையரசு இடமளிக்காது. என்று அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். அரசாங்கத்தை பாதுகாக்க பொது மக்கள் நாடளாவிய ரீதியில் போராடி வருகின்றனர். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் சூழ்ச்சிக்கு கிடைத்த முதல் பதிலடி எனவே உள்நாட்டில் பொது மக்கள் பேதங்களை மறந்து அரசாங்கத்திற்கு ஆதரவாக போராட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

மாசி 29, 2012

மனித உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே சர்வதேச அழுத்தங்களை தவிர்க்க முடியும் - ஜே.வி.பி.

மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்து நிலையான நல்லாட்சியை உறுதிப்படுத்துவதன் மூலமே சர்வதேச தலையீடுகளையும் அழுத்தங்களையும் தவிர்க்க முடியும். மாறாக போலியாக ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால் எதனையும் சாதித்துவிட முடியாது என்று ஜே.வி.பி. தெரிவிக்கிறது. அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட பல மேற்கத்தேய நாடுகள் இலங்கை விவகாரத்தில் அதிகமான தலையீடுகளையும் அழுத்தங்களையும் பிரயோகித்து வருகின்றன. இதன் உச்சக்கட்டமாகவே எமது நாட்டின் மீதான பிரேரணையொன்றை சமர்ப்பிக்கும் திட்டமாகும். சர்வதேச தலையீடுகள் மற்றும் அழுத்தங்களுக்கு அரசாங்கமே முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இந் நாட்டில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் இல்லாது செய்ததே அரசாங்கம் தான். வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு இன்றைய பொழுதிலும் இராணுவமயமாகவே காட்சியளிக்கின்றது. சிவில் நிர்வாகத்துக்கான நிலைமை அங்கு தூரமாகவே இருக்கின்றது. மேற்போன்ற நிலைமைகளின் காரணத்தினாலேயே சர்வதேச தலையீடுகளும் அழுத்தங்களும் அதிகரித்திருக்கின்றன. இவ்வாறான அழுத்தங்கள் இலங்கை மீது எழுவதை தடுக்க வேண்டுமேயானால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கின் நிலைமைகளை சீர்செய்ய வேண்டும்.

மாசி 28, 2012

இலட்சக்கணக்கான மக்கள் பேரணி, எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கையின் இறைமையில் தலையிட வேண்டாமென நாடெங்கும் கோஷம்

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்பட உள்ள பொய்க் குற்றச்சாட்டுக்களடங்கிய பிரேரணைக்கு எதிராக வடக்கு, கிழக்கு உட்பட நேற்று நாடு முழுவதும் பாரிய கண்டனப் பேரணிகள் நடத்தப்பட்டன. நேற்றுக் காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் இன, மத, அரசியல் பேதமின்றி இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். நாடு பூராவும் இடம்பெற்ற இந்தப் பேரணிகளில் சிங்கள, முஸ்லிம், தமிழ், கிறிஸ்தவ, கத்தோலிக்க மதத் தலைவர்கள், பெண்கள், வேடுவர்கள், கலைஞர்கள், அரசாங்க ஊழியர்கள், அரசியல்வாதிகள், பல்வேறு அமைப்புகள் உட்பட பெருந்திரளான வர்கள் கலந்துகொண்டனர். இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டதோடு அன்றாட நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன. (மேலும்....)

மாசி 28, 2012

இலங்கைக்கு எதிரான சவால்கள் வெற்றிபெறும்

ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கெதிராக கொண்டு வரப்படும் சகல எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் இலங்கை வெற்றிபெறுவது உறுதியென அமெரிக்காவிலுள்ள இலங்கை மாணவர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்தனர். ‘நாம் உங்களுடன் இருக்கிறோம்’ என நம்பிக்கையூட்டிய அவர்கள் இலங்கைக்கெதிரான சகல சவால்களும் வெற்றிபெறும் எனவும் தெரிவித்தனர். நேற்றைய தினம் நாலந்தாக் கல் லூரியில் நடைபெற்ற வைபவமொ ன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதியு டன் செய்மதி தொழில்நுட்பத்தினூ டாக மேற்படி மாணவர்கள் கலந்து ரையாடினர். புதிய தகவல் தொடர்பாடல் நிலையமொன்றும் நேற்றுக் கல்லூரியில் திறந்து வைக்கப்பட்டதுடன் நாலந்தாக் கல்லூரி மாணவர்களும் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரி மாணவிகளும் செய்மதியினூடாக நாலந்தாக் கல்லூரி மாணவர்களுடன் உரையாடியமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

மாசி 28, 2012

உளவு அமைப்புகளின் மின்னஞ்சல்களை அம்பலப்படுத்துகிறது விக்கிலீக்ஸ்

ரகசியங்களை அம்பலப்படுத்தும் இணையத்தளமான விக்கிலீக்ஸ் அமெரிக்க உளவுப் பிரிவுகளுடன் தொடர்புடைய மின்னஞ்சல்களை வெளியிட ஆரம்பித்துள்ளது. அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் நிழலில் இயங்கும் சர்வதேச பாதுகாப்பு பகுப்பாய்வு நிறுவனங்களின் 5 மில்லியன் மின்னஞ்சல்களை அம்பலப் படுத்துவதாக விக்கிலீக்ஸ் கூறியுள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2011 டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் பரிமாறப் பட்ட மின்னஞ்சல்களே வெளியிடப்பட்டு வருகிறது. இந்த மின்னஞ்சல் மூலம் தனியார் உளவு அமைப்புகள் எவ்வாறு இயங்குகின்றன. அதன் தனிநபர் இலக்குகள் எவ்வாறு செயற்படுத்தப்படுகின்ற மற்றும் அரசுடனான அதன் தொடர்புகள் பற்றி இந்த மின்னஞ்சல்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என விக்லீக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாசி 28, 2012

அரச ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் மேற்குலகத்திற்கு நல்ல சமிக்ஞையை கொடுத்திருக்கும்

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளுக்கு எதி ராக இந்நாட்டு மக்கள் தேசப்பற்றுடன் நாட்டின் நாலா பக்கங்க ளிலும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எதிர்ப்பு ஆர்ப் பாட்டத்தை நேற்று நடத்தி சாதனை புரிந்தார்கள். மக்களின் இறைமையை பிரதிபலிக்கக்கூடிய தேசத் தலைவர் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ அவர்களுக்கு மக்கள் தங்கள் ஏகோபித்த ஆதரவை வெளி ப்படுத்தும் இந்த நாடளவிலான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அரசியல் கட் சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் சாதி, மத, பிரதேச பேதங்கள் இன்றி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. பயங்கரவாதத்தினால் பெரும் பாதிப்பிற்குள்ளான நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கத்தை ஆதரிக்கும் அதேவேளையில், அரசாங் கத்திற்கு துன்புறுத்தல்களை செய்து கொண்டிருக்கும் மேற்கத்திய வல்லர சுகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றிருந்தமை உண்மையி லேயே இந்நாட்டு மக்களின் இன ஐக்கியத்தையும், தேசப்பற்றையும், ஒரு மைப்பாட்டையும் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. (மேலும்....)

மாசி 28, 2012

2012 இன் ஒஸ்கார் விருதுகள் அறிவிப்பு சிறந்த படம் த ஆர்ட்டிஸ்ட், நடிகர் டூர்காடின்

2012  ஆம் ஆண்டிற்கான ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றிருக்கும் நிலையில், சிறந்த திரைப்படத்திற்கான விருதினை த ஆர்ட்டிஸ்ட் படம் பெற்றுக்கொண்டுள்ள அதேவேளை, சிறந்த நடிகருக்கான விருதும் அதே திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஜீன் டூர்ஜாடினுக்கு வழங்கப்பட்டுள்ளது. 84 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றபோதே இவ்விருதுகள்  அறிவிக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

மாசி 28, 2012

ஆஸி., தொழிலாளர் கட்சி தேர்தலில் ஜூலியா கில்லார்டுக்கு மகத்தான வெற்றி

ஆஸ்திரேலியாவின் ஆளும் தொழிலாளர் கட்சித் தலைவர் போட்டியில், பிரதமர் ஜூலியா கில்லார்டு, மீண்டும் பெரும் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து, அவரே மீண்டும் பிரதமராகத் தொடர்வதற்கான வழி ஏற்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவில், அடுத்தாண்டு பொதுத் தேர்தல் வர உள்ளது. இந்நிலையில், ஆளும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்தவரும், கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமருமான கெவின் ரூத், கடந்த வாரம் திடீரென தனது வெளியுறவு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.தொடர்ந்து, கட்சித் தலைவருக்கான போட்டியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதையடுத்து, ஆஸி., அரசியல் வட்டாரத்தில், பரபரப்பு பற்றிக் கொண்டது.இந்நிலையில், நேற்று ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைமை அலுவலகத்தில், மொத்த செயற்குழு உறுப்பினர்களான, 103 பேர் வாக்களிக்கும், தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. இதில், கில்லார்டுக்கு ஆதரவாக, 71 பேரும், ரூத்துக்கு ஆதரவாக 31 பேரும் வாக்களித்தனர். (மேலும்....)

மாசி 27, 2012

ஜெனீவா கூட்டம் புறக்கணிப்பு

சம்பந்தர் - சுரேஷ் கருத்துப் பிளவு - BBC

ஜெனீவாவில் நடக்கவுள்ள ஐ.நா.வின் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாக கலந்துகொள்ளப்போவதில்லை என்கிற முடிவு சம்பந்தர் மற்றும் சுமந்திரனின் கருத்துக்களே தவிர, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கருத்தல்ல என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன். ஐ.நா. கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நேரடியாக பங்குபெற வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்து என்றும், அனால் அதற்கு மாறான முடிவெடுக்கப்பட்டிருப்பதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் அவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த பிரத்யேக செவ்வியில் தெரிவித்தார். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிலரை சந்தித்துவிட்டு(நாம் அறிந்த வரை தனது குடும்பத்தலைவியை சந்தித்துவிட்டு) இலங்கை திரும்பிக்கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன், பிபிசி தமிழோசையிடம் பேசுகையில், ஐ.நா. மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பதாக முடிவெடுக்கப்பட்ட விதம் மிகவும் ஆரோக்கியமற்ற ஒன்று என்றும், இந்த பிரச்சினை தொடர்பாக தாம் கொழும்பு சென்றதும் மற்றவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்போவதாகவும் தெரிவித்தார். சனிக்கிழமை தமிழோசையிடம் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜெனிவா கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொள்ளாது என்று முடிவெடுத்ததாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மக்களை தூண்டிவிடும் செயற்பாடுகளை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயங்கள் எழாமல் இருப்பதற்காகவும் தமது கட்சி ஜெனீவா மாநாட்டில் பிரசன்னமாகாதிருக்க தீர்மானித்ததாகவும் அவர் கூறியிருந்தார். அதேசமயம், இதற்கான காரணங்களை ஊடகங்களுடன் முழுமையாக விவாதிக்க தாம் விருமபவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

மாசி 27, 2012

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது ஜெயானந்தமூர்த்தி!

ஜெனிவா ஐ.நா.சபையில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கலந்து கொள்ளாததன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு மீண்டும் ஒரு வரலாற்றுத் துரோகத்தைச் செய்துள்ளது என இலண்டனில் ‘ஒழித்து’ வாழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி காட்டமாத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எமது மக்களை அழித்து படுகொலை செய்த சிறிலங்கா அரசுக்கு எதிராக ஐ.நா. சபையில் இம்மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் முக்கியமான தீர்மானமொன்றை கொண்டு வருவதற்கு உலக நாடுகள் திடசங்கற்பம் பூண்டுள்ளன. அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள இத்தீர்மானத்தில் உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்கப்போகின்றன. (மேலும்....)

மாசி 27, 2012

ஜெனீவாவில் தீர்மானமும் உளவியல் யுத்தமும்

(சபா நாவலன்)

ஐக்கிய நாடுகள் சபையின் “மனித உரிமை” ஆணையகம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள அதன் கூட்ட அமர்வுகளில் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றலாம் என எதிர்வுகூறப்படுகிறது. சில மேற்கு நாட்டு அரசுகளால் இலங்கை அரசிற்கு எதிரான பரிந்துரை முன்மொழியப்படும் எனவும் எதிர்வு கூறப்படுகின்றது. இது வரை எந்த மேற்கு நாடுகளும் இலங்கை அரசிற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. உலகமக்களை அதிர்ச்சியில் உறையவைத்த, குறுகிய நாட்களில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மனிதப்படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட மூன்றாவது ஆண்டை அண்மித்துக்கொண்டிருக்கிறோம். சாரி சாரியாக மக்கள் கொல்லப்பட்ட வேளைகளில் செய்மதிகளில் அவற்றைப் பார்த்துக் கொண்டு வாழாவிருந்த அமரிக்காவையும் யுத்தத்திற்கான அழிவு ஆயுதங்களை வழங்கிய மேற்கு நாடுகளையும் மீண்டும் ஒரு முறை நம்புங்கள் எனக் கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. மேற்கு நாடுகள் ராஜபக்ச அதிகாரத்திற்குத் தண்டனை வழங்கும் என மக்களின் உணர்வுகளில் அறைந்து சொல்லப்படுகின்றது. (மேலும்....)

மாசி 27, 2012

Nomination of Channel 4 UK Video for 2012 Nobel Peace Prize

Channel 4 was not present on the ground, nor were the rights groups any where near the battle field in Sri Lanka. However, these very same rights groups have written reports running into hundreds of pages based on hearsay coming from prejudiced sources, which needed to be translated from Tamil to English leaving room for the added spin of the translator. Channel 4 and the rights groups came up with baseless guesstimates of civilian casualties and a string of unsubstantiated allegations. The much hyped extra-judicial killings shown in the Channel 4 video has been shown to be a doctored one of LTTE men dressed in Sri Lankan Army uniforms killing captured Sri Lankan security forces personnel or Tamil dissidents, or a staged video done with the intention of framing the Sri Lankan authorities.  Furthermore, one of the narrators of a segment of the video was one Vany Kumar who was an LTTE activist from the UK, whilst yet another woman who was described as a Tamil journalist working for the LTTE was in fact a trained military cadre holding the rank of Lt. Colonel.(more....)

மாசி 27, 2012

இறைமையுள்ள நாட்டுக்கெதிராக மேற்குலகம் அநீதி

ஜெனிவா மாநாட் டில் இலங்கைக்கு எதிராக இன்று கொண்டுவரப்பட வுள்ள தீர்மானமானது இறைமையுள்ள ஒரு நாட்டுக்கு எதிராக மேற்குலகம் மேற்கொள்ளும் அநீதியான செயலாகவே கருதவேண்டும். இவ்வாறு திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பொ. பியசேன தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில், இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதற்காக மேற்குலக நாடுகள் எடுக்கும் சதிமுயற்சி குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பயங்கரவாதம் ஒழித்துக் காட்டப்பட்டு, இன்று தமிழ் மக்கள் நிம்மதியோடு, பொட்டும் வைத்து, பூவும் வைத்து சுதந்திரமாக வாழும் இக்கால கட்டத்தில், ஜெனீவா மாநாட்டில் அமெரிக்கா தலைமையில் எடுக்கப்படவிருக்கும் தீர்மானமானது இலங்கை வாழ் மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இலங்கையில் இடம்பெற்றது போர்க்குற்றம் எனக் கூறும் அமெரிக்கா, லிபிய நாட்டு தலைவர் காடாபியையும், அந்நாட்டு மக்களையும் உயிரோடு பிடித்து சித்திரவதை செய்து கொன்று குவித்த பாவத்திற்காக முதல் பிராச்சித்தம் தேட வேண்டும்.

மாசி 27, 2012

ஆதித்தமிழர்களும் பரிணாம அறிவியலும்

Evolution of Species Seen Through the Gradual Evolution of the Sensory Perceptions, by the Ancient Tamils. Even before 10th Century B.C, the Tamils started classification of things and put forward unambiguous definition Things. One such definition is the classification & order of evolution of species through six senses, namely, Touch, Taste, Smell, Sight, Hearing & Intellect. (more....)

மாசி 27, 2012

ஈரானை சமாளிக்க பாரசீக வளைகுடாவில் அமெ.படைகுவிப்பு

ஈரான் தாக்கினால் பதிலடி கொடுப்பதற்காக பாரசீக வளைகுடா பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல் மற்றும் தரைப்படைகளை குவித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. ஈரான் நாடு பாதாள அறைகளில் அணு உலை அமைத்து யுரேனியத்தை செறியூட்டி வருகிறது. இதை மின்சார உற்பத்தி போன்ற ஆக்கபூர்வ பணிகளுக்கே பயன்படுத்துவதாக ஈரான் கூறி வருகிறது. ஆனால் இதை அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் ஏற்கவில்லை. அணு குண்டு தயாரிப்பதில் ஈரான் ஈடுபடுவதாக குற்றம்சாட்டின. இந்நிலையில் சர்வதேச அணு சக்தி முகாமை வெளியிட்ட அறிக்கையில் ஈரான் தனது அணு உலையில் மின் உற்பத்தி தேவையை விட அதிக அளவிலான யுரேனியத்தை செறவூட்டி இருப்பதாக தெரிவித்தது. இது அமெரிக்காவுக்கு புதிய சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. ஈரான் நாட்டையொட்டியுள்ள பாரசீக வளைகுடா பகுதி வழியாகத்தான் கப்பல்கள் மூலம் பல்வேறு நாடுகளுக்கு தேவைப்படும் சுமார் 20 சதவீதம் மசகு எண்ணெய் எடுத்துச் செல்லப்படுகிறது. எனவே இதற்கு இடையூறு ஏற்படாமல் இருக்க அமெரிக்க போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஈரான் அடிக்கடி இந்த கடல் பகுதியில் போர் ஒத்திகை நடத்துவது மற்றும் அதிவேக படகுகளை இயக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை இருக்கிறது.

மாசி 27, 2012

மக்கள் இலங்கை மீது வெளிநாடுகள் தலையீடு வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 19 ஆவது உச்சி மாநாட் டுக் கூட்டத் தொடர் இன்று 27 ஆம் திகதியன்று சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் நடைபெறுகின்றது. இங்கு இலங்கைக்கு எதிராக கண் டனக் குரல் எழுப்பும் ஒரு தீர்மானம் அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுக ளினால் சமர்ப்பிக்கப்படும் என்ற பரவலான எதிர்பார்ப்பு இருக்கின்ற போதி லும், இந்தக் கூட்டத் தொடர் அந்தளவுக்கு இலங்கைக்கு தாக்கத்தை ஏற்ப டுத்தாது என்று இப்போது ஜெனிவா நகரில் இருந்து கிடைத்து வரும் தக வல்கள் எடுத்துரைக்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை இப்போது மேற்குலக நாடுகள் ஒரு நல்ல அறிக்கை என்று ஏற்றுக்கொண் டுள்ள போதிலும், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை ஜெனிவா கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது. (மேலும்....)

மாசி 27, 2012

ஆப்கானில் தொடரும் போராட்டம்: அதிகாரிகளை வெளியேற்ற நேட்டோ முடிவு

ஆப்கானிஸ்தானில் அலகுர்ஆன் எரிப்பு போராட்டம் வலுத்து வரும் நிலையில், தலைநகர் காபூலில் இருந்து அதிகாரிகளை வெளியேற்ற நேட்டோ படை முடிவு செய்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ஆதரவு நேட்டோ படையினர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்ததை அடுத்து அங்கு நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டக்காரர்களுக்கும், நேட்டோ படையினருக்கும் நடைபெற்ற மோதலில் இதுவரை 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகரம் காபூர் மற்றும் நாடு முழுவதும் தற்போது கலவரம் பரவி உள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த கலவரத்தில் மட்டும் 12 பேர் பலியானார்கள் தொடர்ந்து நிலைமை மோசமாக உள்ளது சனிக்கிழமையன்று வடக்கு ஆப்கனிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை கட்டடத்தின் மீது கலவரக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். குர்ஆன் எரிப்பு சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மன்னிப்பு கேட்ட பின்னரும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. குர்ஆன் எரிப்பு சம்பவத்தினால் ஆப்கானிஸ்தானில் மட்டும் அல்லாமல் பாகிஸ்தான் மற்றும் மலேசியா நாடுகளிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் காபூலில் உள்ள அதிகாரிகளை வெளியேற்ற நேட்டோ படைகள் முடிவு செய்துள்ளன.

மாசி 27, 2012

ஐ.நா. மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கை மீதான பொய் குற்றச்சாட்டுகள் , நாடெங்கும் இன்று கண்டன பேரணி

இலங்கைக்கு எதிராக மனித உரிமை என்ற போர்வையில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவுள்ள அபாண்ட குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரேரணையை எதிர்த்து இன்று நாடு முழுவதிலும் மாபெரும் மக்கள் பேரணி இடம்பெறவுள்ளது. அரசியல் இனம், மதம் என்ற சகல பேதங்களை மறந்து ஒரே நாடு என்ற மகுடத்தின் கீழ் நாட்டை பாதுகாக்கும் இந்த மாபெரும் மக்கள் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவர்கள் நேற்று வேண்டுகோள் விடுத்தனர். கொழும்பிலுள்ள மகாவலி கேந்திர நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்களான டியூ குணசேகர, வாசுதேவ நாணக்கார, கீதாஞ் சன குணவர்தன, டலஸ் அழகப் பெரும, டிலான் பெரேரா மற்றும் மஹிந்தானந்த அலுத்கம ஆகியோர் இந்த பகிரங்க வேண்டு கோளை விடுத்தனர். இதற்கமைய வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் இந்த மக்கள் பேரணி இடம்பெறவுள்ளன. கொழும்பு உட்பட 150 நகரங் களிலும் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெறவுள்ள இந்த மாபெரும் மக்கள் பேரணி யில் நாட்டின் பெருந்திரளான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

மாசி 27, 2012

அமீரின் இளமையை திருப்பித்தர முடியுமா? 

(ஆர்.ஹரிஹரன், கோவை)

“நூறு குற்றவாளிகள்கூட தப்பிக்கலாம், ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது” என்பதுதான் நீதியின் செய்தி. இதற்கு மாறாக ஒரு சம்பவம் நமது மண்ணில், அதுவும் தலைநகரில் அரங்கேறியுள்ளது. தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை உலகிலிருந்து ஒழிப்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. அதற்காக மனிதனின் பெயரில் இஸ்லாமிய வாசம் தென்பட்டால், உடனே தீவிரவாதியோ என அதிகாரிகளின் அச்சம் அப்பாவிகளை அவமானப்படுத்துகிறது. அதில் கமல்ஹாசன், ஷாருக்கான் மற்றும் நமது முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் கூட தப்பிக்க முடியவில்லை! இந்திய தூதரக அலுவலகத்தில் பணியாற்றும் சீக்கிய அதிகாரியும் பெண்மணியும்கூட இதில் அடங்குவர். ஏன், நமது முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் இருமுறை ஆடைகள் களைந்து சோதனை செய்யப்பட்டுள்ளார்! இவைகளையெல்லாம் அமெரிக்காதான் பாதுகாப்பு என்ற பெயரில் பாதகம் செய்துள்ளது. இதில் அமெரிக்காவின் மேலாதிக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது. (மேலும்....)

மாசி 27, 2012

ஒசாமா தங்கியிருந்த கட்டடம் இரவோடிரவாக இடித்து தகர்ப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த பாகிஸ்தானின் அபோதாபாத் நகரிலுள்ள பிரமாண்ட கட்டடம் தகர்க்கப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் இந்த கட்டடத்தில் தங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப்படை சுட்டுக்கொன்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவோடிரவாக புல்டோசர்கள் கொண்டு இந்த கட்டட வாளகத்தை இடிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கட்டட இடிப்பையொட்டி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு அப்பகுதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்ததாக உள்ளூர் வாசிகள் குறிப்பிட்டனர். குறிப்பாக ஊர்வாசிகளுக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண் டாம் என பொலிஸார் உத்தரவிட்டிருந்ததாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கட்டடம் பிரமாண்டமான மதிகளைக் கொண்டு பாதுகாப்பான முறையில் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு ஒசாமா பின்லேடன் 5 ஆண்டுகள் அளவு தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மே 2 ஆம் திகதியே இந்த கட்டடத்தை இடிக்க தீர்மானிக்கப்பட்டதாகவும் விசாரணைக்காக அதில் தமாதம் ஏற்பட்டதாக பாக். நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

மாசி 27, 2012

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் சர்வதேச தலையீடுகள் தேவையில்லை

வடபகுதி மக்களுக்கு அமைதி, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்திக்கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக சர்வதேச சக்திகள் கொடுத்துவரும் அழுத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். குடாநாட்டு மக்கள் ஒன்றுதிரண்டு எதிர்ப்பை வெளிக்காட்ட விருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார். இலங்கையின் உள்விவகாரத்தில் எந்தவொரு சர்வதேச நாடுகளும் தலையிடத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே யாழ் குடாநாட்டு மக்கள் உள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் கோவில் வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திலிருந்து யாழ் நகர்வரை யாழ் குடாநாட்டு மக்களின் அமைதிப் பேரணியொன்று இன்று நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கையின் உள்விவகாரத்தில் எந்தவொரு சர்வதேச நாடும் தலையிடத்தேவையில்லை. இலங்கை விடயத்தில் அமெரிக்காவோ வேறு எந்தவொரு நாடோ தலையிடத் தேவையில்லை என்பதே யாழ் குடாநாட்டு மக்களின் ஏகோபித்த கருத்து என்றும் அவர் மேலும் கூறினார்.

மாசி 27, 2012

தண்ணீர்

பொலிவியா தரும் படிப்பினை

(தே. இலட்சுமணன்)

பொலிவியாவில் எல்லா பொது நிறுவனங் களும், மின்சாரம், ஆகாயப் போக்குவரத்து, சுரங்கம், காடுகளில் கிடைக்கும் எல்லா வளங்களும் மற்றும் செய்தித் தொடர்புகள், ஹைட்ரோ கார்பன் இப்படி - அனைத்தும் முழுக்க, முழுக்க தனியார்மயம் ஆகிவிட்டன. அந்த நாட்டில் மிச்சமிருந்த தண்ணீர் ஒன்று தான் தனியார்மயமாகாமல் இருந்தது. அதைப் பொறுக்காத உலக வங்கி தண்ணீரையும், தனி யாருக்குத் தாரை வார்க்க பொலிவியா அரசை நிர்ப்பந்தித்தது. ஆசை வார்த்தைகள் பல வற்றை அள்ளி வீசியது. பொலிவியா அரசும் மயங்கி பேரம் பேசி ஒப்பியது. பொலிவியாவின் நீர் வளங்களை தனியார் கம்பெனிகளுக்கு ஒப்பந்தம் போட்டுக் கொடுத்து விட்டால், பொலிவியா அரசு உலக வங்கிக்கு கொடுக்க வேண்டிய கடன் 600 மில்லியன் டாலரை ரத்து செய்து விடுவதாக தாஜா செய்தது. அர சும் ஏற்றது. குழியில் வீழ்ந்தது. ஆம். ஆண்டு கள் பலவாக, பல தலைமுறைகளாக சமூகத் தின் ஆளுமையின் கீழ் சொந்தம் கொண்டா டப்பட்ட நீர் “சரக்கு - பண்டம்” என நாமகரணம் சூட்டப்பட்டு, தனியார் கம்பெனிகளின் ஆளு கையின் கீழ் கொண்டுவரப்பட்டு, அதற்கு விலையும் நிர்ணயிக்கப்பட்டது.மக்களின் அடிப்படை வாழ்க்கையோடு ஜீவாதாரத் தோடு பொலிவியா எதேச்சதிகார அரசு விபரீத விளையாட்டைத் துவக்கி விட்டது. குடிநீர் மட்டுமல்ல, விவசாயத்துக்குப் பயன்படும் பாசன நீரும் அளவின் அடிப்படையில் விலைக்கு விற்கப்பட்டது. (மேலும்....)

மாசி 26, 2012

ஜெனீவா பிரேரணைக்கு 25 நாடுகள் ஆதரவு?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 19ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிராகக்கொண்டுவர உள்ளதாக கூறப்படும் தீர்மானத்தை 25 நாடுகள் ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு நாளை ஆரம்பமாக உள்ள நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா, கனடா அல்லது மேற்கு நாடு ஒன்று கொண்டு வரலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தபோதும் ஆபிரிக்க அல்லது தென்னமெரிக்க நாடு ஒன்றே அதனைக் கொண்டு வரும் என்று இப்போது தெரிவிக்கப்படுகிறது. 47 நாடுகளைக் கொண்ட மனித உரிமைகள் சபையில் 24 நாடுகளின் ஆதரவு இருந்தால் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்குத் தமது உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளன. அதேபோன்று ஆபிரிக்க நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவிக்க உள்ளன. ஆபிரிக்க நாடுகள் இரண்டு மற்றும் மெக்ஸிக்கோ உள்ளிட்ட தென்னமெரிக்க நாடுகள் இரண்டு மற்றும் பெல்ஜியம் ஆகியன ஐந்து நாடுகளில் ஒன்று அல்லது ஐந்தும் கூட்டாகப் பிரேரணையை முன்வைக்கலாம் என்று கூறப்படுகின்றது. மேலும் இப்பிரேரணை அனேகமாக நிறைவேறிவிடும் என்றும் நம்பப்படுகின்றது.

மாசி 26, 2012

சரணடைவதற்கு சாட்சியமாக செல்வதற்கு கொழும்பிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை ஐ.நா. வின் நம்பியார் கூறுகிறார்

ஐ.நா.வில் வெள்ளைக்கொடி விவகாரம் பற்றி  ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் தலைமை அதிகாரி விஜே நம்பியார்  இன்னர் சிற்றி பிரஸ்ஸிடம் கருத்துத் தெரிவித்துள்ளார்.  இலங்கை அரசாங்கம் அவரைத்தடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைய வந்த  கைதிகள் தொடர்புபட்ட இலங்கையின் போர்க்  குற்றச்சாட்டுகள்  பற்றிய சர்ச்சையுடன் இன்னர் சிற்றி பிரஸ் பெப்ரவரி 24 நாளில் ஐ.நா. அதிகாரி விஜே நம்பியாரிடம் கேள்வி எழுப்பியது. வெள்ளைக்கொடி  விவகாரம் தொடர்பாக அவரின் பங்களிப்பை விபரிக்குமாறு கேட்டுக் கொண்டது. அத்துடன் ஐ.நா. அமைதி காக்கும் நடவடிக்கையில் சிரேஷ்ட ஆலோசகராக சவேந்திர சில்வா  சம்பந்தப்பட வேண்டுமா என்றும் அவரை இன்னர் சிற்றி பிரஸ்  கேட்டுக் கொண்டது (மேலும்....)

மாசி 26, 2012

ஜெனீவா மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது இனப்படுகொலைக்கு? அங்கீகாரம்

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணையகத்தின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தீர்மானித்துள்ளது. இந்தியாவில் தங்கியிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், கொழும்பில் தங்கியிருக்கும் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோரின் ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அமரிக்க மற்றும் இந்தியத் தூதரகங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவரும் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இந்த முடிவிற்கு வருவதற்கான காரணங்கள் இலங்கை, இந்திய மற்றும் அமரிக்க அரசுகளின் அழுத்தங்களே காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. மனித உரிமை ஆணையகம் எந்த முடிவையும் எப்போதும் மேற்கொள்வதில்லை. அது கருத்துக்களை மட்டுமே வெளியிட முடியும். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு ஆணையகம் மட்டுமே செயற்திட்டங்களை முன்வைக்க முடியும். இலங்கை அரசிற்கும் பேரினவாதத்திற்கும் இனப்படுகொலைக்கும் எதிரான பொது அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் தீர்மானங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்தக் குறைந்தபட்ச அரச எதிர்ப்பு நிலையக் கூட முன்னெடுக்கத் தயாரற்ற நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு காணப்படுகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற பாரளு மன்ற சந்தர்ப்ப வாதிகளை நிராகரித்து மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்குவதும், புதிய அரசியல் தலைமையை உருவாக்குவதும் அவசியம் என்பதை நடைமுறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உணர்த்தியுள்ளது.

மாசி 26, 2012

வானவில் இதழ் 14 வெளிவந்துவிட்டது

இலங்கையின் சுதந்திரமும் சுயாதீனமும், பாதுகாக்கப்பட வேண்டடும் - வானவில்

இலங்கையின் தேசிய சுதந்திரமும், இறைமையும், பிரதேச ஒருமைப்பாடும், ஸ்திரத்தன்மையும் முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு பெரும் சவால்களை எதிர்நோக்கி நிற்கிறது. முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு என்று வர்ணிப்பதற்கு பொருத்தமான காரணிகள் இருப்பதால், தற்பொழுது ஏற்பட்டுள்ள நிலைமை மிகப் பாரதூரமானது என்றே சொல்லலாம். இலங்கையின் 2500 வருட வரலாற்றில் முன்னரும் பல தேசிய அபாயங்களும் நெருக்கடிகளும் ஏற்பட்டு வந்ததும், அவை எல்லாம் இலங்கை மக்களால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன என்பதும் உண்மை என்ற போதிலும், தற்போதைய நெருக்கடியையும் நாம் மெத்தனமாக எடுத்துவிட முடியாது. (மேலும்....)

மாசி 26, 2012

 

ஜெனீவாவில் வீண் பழி!

புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடுருவிக் காணப்படும் எல். ரி. ரி. ஈ. ஆதரவாளர்கள் சிலர் தமது சர்வதேச வலைப்பின்னலூடாக சில உலக நாடுகளை தமது பக்கம் ஈர்த்து இலங்கைக்கு எதிராகச் சில பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி சர்வதேச விசாரணை நடத்தக் கோரி வருகின்றனர். உள்நாட்டு யுத்தத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை சற்றும் அறியாத உலக நாடுகள் சில ‘சனல்-4’ போன்ற போலியாக வடிவமைக்கப்பட்ட ஒலி ஒளி நாடாக்களைப் பார்த்துவிட்டு ஒரு ஜனநாயக நாட்டின் அரசிற்கு எதிராக குரல்கொடுத்து வர முனைந்துள்ளன. அதிலும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் தரும் விடயம் யாதெனில், எல்.ரி. ரி. ஈ. பயங்கரவாதிகளால் தமக்கும், தமது நாட்டிற்கும் கூட ஆபத்து எனக் கூக்குரலிட்டு அந்த இயக்கத்தை அழிக்குமாறு உதவிகள் பல செய்த சில நாடுகளும் கூட இன்று இலங்கை அரசிற்கு எதிராகக் கிளம்பியுள்ளமையானது வேடிக்கையாகவும் உள்ளது. (மேலும்....)

மாசி 26, 2012

இறைமையும், ஜனநாயக மரபும் கொண்ட நாட்டின் மீது ஏன் இந்தக் கொலைவெறி?

மேற்குலகத்திற்கு எதிராக நாளை நாடளாவிய பொதுமக்கள் பேரணி! இன, மத, கட்சி பேதமின்றி ஒன்றிணைய மதத்தலைவர்கள் வேண்டுகோள்

ஜனாதிபதி முதலாவது தடவையாக பதவி ஏற்ற போது விடுதலை புலிகளின் தலைவர் வே. பிரபாகரனை கிளிநொச்சியில் சந்திக்க தயார் என அறை கூவல் விடுக்கப்பட்ட போதும் அவர்களும் அதை கணக்கில் எடுக்கவில்லை. இன்று இலங்கையை அபகீர்த்திக்குள்ளாகும் நாடுகள் கூட தங்கள் நாட்டின் வர்த்தக துறைக்காவும், நமது நாட்டின் பாதுகாப்பு கருதியும் தமிழர் அரசியல் பிரச்சினைகளை தமக்கு சாதகமாக்கி தங்கள் நலத்துக்கே பாவிக்கின்றார்களே அன்றி தமிழ் மக்கள் மீது உள்ள பரிதாபம் அல்ல. இலங்கையை தங்களது சுயநல தேவைக்காக பயன்படுத்த நினைக்கின்றார்கள். இதன் எதிரொலி தான் ஜெனிவாவில் நடைபெற உள்ள மாநாட்டில் இலங்கை நாட்டை அபகீர்த்திக்குள்ளாக்கும் முயற்சிகள் சில சர்வதேச நாடுகளினால் முயற்சிக்கப்படுகின்றது. இந்த நாடுகள் இலங்கையை அவலநிலைக்கு உள்ளாக்காமல் அபிவிருத்திக்குதவுவதுடன் மக்களின் சுபீட்ச வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளரும் ஸ்ரீவித்யா குருகுல அந்தண சிறுவர்களின் சமஸ்கிருத பாடசாலை ஸ்தாபகருமான பிரம்மஸ்ரீ ராமச்சந்திரகுருக்கள் பாபுசர்மா தெரிவித்துள்ளார். (மேலும்....)

மாசி 26, 2012

ஜெனீவா கூட்ட முதல் நாளே அறிக்கை சமர்ப்பிக்க சந்தர்ப்பம்

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமை ஆணைக் குழுவின் ஆரம்பக் கூட்டத் தொடரில் முதலாவது தினத் திலேயே இலங் கையின் சார்பில் உத்தியோகபூர்வ கொள்கை விளக்க மொன்றை அளிப்பதற்கு இப்போது அனுமதி கிடைத்திருக்கிறது. இலங்கை அரசாங்கம் இதுவரையில் மேற்கொண்டு வரும் மனிதாபிமான செயற்பாடுகள் குறித்தும், அரசாங்கத்திற்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் அபாண்ட குற்றச்சாட்டுக்களுக்கும் இந்த கொள்கை விளக்கத்தில் ஆதாரபூர்வமான பதில் கொடுக்கப்பட்டிருப்பதாக பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சரும் ஜனாதிபதியின் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இந்த மனித உரிமைகள் மாநாடு சுவிற்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நாளை 27ம் திகதியன்று ஆரம்பமாகி, மார்ச் மாதம் 23 ஆம் திகதி நிறைவுபெறும். யுத்தம் முடிவடையும் கடைசி நாட்களில் இலங்கையில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டுவதற்கு இந்த கொள்கை விளக்க அறிக்கையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மாசி 26, 2012

தேசியப் பிரச்சினைக்கான

தீர்வில் ஜனாதிபதியின் ‘செனட்' எனும் எண்ணக்கரு

ஈராண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் வைத்து இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் இடம்பெற்ற பேச்சுக்களின் போது முதன் முதலாக ஜனாதிபதி தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக 13 வது திருத்தத்துக்கு அப்பால் செல்லும் தமது நோக்கத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சமீபத்தில் கருத்துக்கூறிய ஜனாதிபதி - 13 வது திருத்தத்துக்கு அமைவாக அதிகாரப் பகிர்வுக்கு தயார் என்று தான் கூறிய போதிலும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்குவதற்குத் தயாராக இல்லை என்று கூறியிருந்தார். அப்படியானால் ஜனாதிபதி பிரச்சினைக்குத் தீர்வாக முன்மொழிந்த 13+ என்பது உண்மையில் எதனைப் பொருள்படுத்தியது என்ற ஆச்சரியம் பலருக்கும் ஏற்பட்டது. சிறுபான்மையினருக்காக ஆட்சிக் கட்டமைப்பில் போதியளவு பிரதிநிதித்துவத்தை வழங்கும் வகையில் செனட் சபையை தாபிப்பதே ஆச்சரியத்துக்கு விடையாயமைந்தது, அதனையே அரசாங்கமும் கூறுகிறது. உண்மையிலேயே- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2010ல் தேர்தலுக்கு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனமான "மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு" கையேட்டில் அடங்கியுள்ள வாக்குறுதிகளில் ஒன்றே செனட் சபை தாபிப்பாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது. (மேலும்....)

மாசி 26, 2012

ஆப்கானிஸ்தானில் கடும்போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்
(
ஏ.ஜி.எம். தெளபீக் )

ஆப்கானிஸ்தானில் ஆர்ப்பாட்டங்கள் மோதல்கள் கல்லடிகள் எனக்கலவரங்கள் இந்த வாரம் களைகட்டின. தலைநகர் காபூலுக்கு வடக்கேயுள்ள பக்ராம் நேட்டோ படை முகாமில் முஸ்லிம்களின் புனித வேத நூலான குர்ஆன் மற்றும் சமய நூல்கள் ஆவணங்கள் குப்பையில் போட்டு எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவுகளே இவை. இந்த முகாமிலுள்ள களஞ்சியசாலைகள் வாசிகசாலையை துப்புரவு செய்த போது படையினர் நான்கு குர்ஆன் பிரதிகளையும் இன்னும் சமய நூல்களையும் குப்பையிலே எறிந்து தீயிட்டனர் என்பதே விடயம். ஆனால் இவை வேண்டுமென்று செய்யப்பட்டதா இல்லை தெரியாமல் நடந்ததா என்பதை கண்டறிய விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் மேல் மட்ட குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களைப் பெரும்பான்மையாகவும் மேலைத்தேய நாகரிகங்களை அடிப்படையாகவும் கொண்ட அமைப்பே நேட்டோ. இப்படை வீரர்களுக்கு குர்ஆனைப் பற்றியோ அரபு எழுத்தணிகள் குறித்தோ அல்லது ஆப்கானிஸ்தான் மொழியில் (உர்து) எழுதப்பட்ட சமய நூல்களின் விளக்கங்களோ தெரியாதிருக்கலாம் இதனால் குர்ஆன் பிரதிகள், சமய நூல்கள் என்பன குப்பைத் தொட்டியில் எறியப்பட்டுள்ளன என்கிறார் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க இராணுவத் தலைவர் ஜோன் அலியான். (மேலும்....)

மாசி 26, 2012

இந்திய கால்சென்டர்கள் மூலம் மிரட்டி  ரூ.25 கோடி வசூல் செய்த அமெரிக்க நிறுவனம்

இந்தியாவில் உள்ள கால் சென்டர்கள் மூலம் மிரட் டல் விடுத்து அமெரிக்கர் களிடம் அந்நாட்டு நிறு வனம் ஒன்று ரூ.25 கோடி கடன் வசூல் மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி யுள்ளது. மக்களிடம் இருந்து வந்த புகாரை அடுத்து கலி போர்னியாவைச் சேர்ந்த “இபீஸ் எல்எல்சி’ என்ற அந்நிறுவனத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க அந்நாட்டு மத்திய வர்த்தக ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இதுகுறித்த விவ ரம் வருமாறு:- அமெரிக்காவில் உள்ள இபீஸ் எல்எல்சி நிறுவனம் தன்னை ஒரு கடன் அளிக் கும் நிறுவனம் என்று அறி முகப்படுத்திக் கொண்டுள் ளது. கடன் தேவைப்படு வோர் அணுகலாம் என்றும் விளம்பரப்படுத்தியுள்ளது. இதை நம்பி ஏராளமான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தை அணுகியுள் ளனர். அவ்வாறு அணுகிய வர்களிடம் இருந்து வங்கிக் கணக்கு எண், முகவரி, தொலைபேசி எண் உள் ளிட்ட முக்கியமான விவ ரங்களை பெற்றுக்கொண் டுள்ளது. பின்னர் கடனுக்கு நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது என்றும் ஆன் லைனில் விண்ணப்பிக்கு மாறும் கேட்டுக்கொண் டுள்ளது. (மேலும்....)

மாசி 26, 2012

அமெரிக்க அதிபரின் முடிவால்  இந்திய நிறுவனங்கள் பாதிப்பு

அயல் பணி ஒப்படைப்பு நிறுவனங்களுக்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு வேலைகளை அளிக்கும் நிறுவனங்கள் வரி விதிப்புக்குள்ளாகும். இது இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு நெருக் கடியை சமாளிக்க முடியாமல் அதிபர் ஓபாமா திணறி வரு கிறார். இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து பணிகளை வெளிநாடுகளுக்கு அளிக்கும் நிறுவனங்களால் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பறி போகிறது. ஆகவே அமெரிக்க பணிகளை செய்யும் வெளிநாட்டு நிறு வனங்களுக்கும் வரி விதிக்கப்படும் என ஓபாமா அறி வித்துள்ளார். குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பெருமளவிலான பணிகளை இந்தியா போன்ற நாடுகள் நிறைவேற்றித் தருகின்றன. இப்போது வரி விதிக்கப் படுவதால் இந்நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதேசமயம், வெளிநாடுகளின் மூலம் நிறைவேற்றி வரும் பணிகளை அமெரிக்காவிலேயே திரும்ப நிறை வேற்ற முன்வரும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் அதிபர் தேர்தலைக் கருத்தில் கொண்டு இத் தகைய முடிவை ஒபாமா எடுத்திருப்பதாக கருத்துகள் வெளியாகியுள்ளன. மேலும் அமெரிக்காவில் வேலை வாய்ப்பின்றி இருக்கும் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற அடிப்படையில் இந்த நட வடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

மாசி 26, 2012

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா வைத்தியசாலையில்

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, வயிற்றுவலி தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டரசு தெரிவித்துள்ளது. 93 வயதான நெல்சன் மண்டேலா, கடந்த ஒருவருட காலத்திற்கும் மேலாக, சுவாசக் கோளாறு காரணமாக ஜோகன்னஸ்பர்க் மில்பார்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நீண்டகாலமாக வயிற்றின் அடிப்பக்கத்தில் காணப்படும் வலிக்கு விஷேட மருத்துவ சிகிச்சை பெற வேண்டுமென வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியன் காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெல்சன் மண்டேலா விரைவாக குணமடைய வேண்டுமென தென் ஆபிரிக்கர்களும், உலக மக்களும் பிரார்த்திப்பதாக தென்னாபிரிக்க ஜனாதிபதி மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 1993இல் நோபல் பரிசுபெற்ற நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு பதவி வகித்ததன் பின் 1999இல் பதவியை விட்டு விலகினார்.

மாசி 25, 2012

ஜெனிவா அமர்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது

கூட்டத்தொடரிலே இலங்கை தொடர்பான விடயம் முக்கிய இடம் வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அறிக்கை, மற்றும் இலங்கை அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் ஆணைக்குழுவின் அறிக்கை ஆகிய இரு அறிக்கைகள் சர்வதேச மனிதநேய மற்றும் மனித உரிமைகள் சட்டம் ஆகியவைகளை மீறியமை, இனப்பிரச்சினைக்கான காரணிகள், மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய அரசியற்தீர்வொன்றை அடைதல், இராணுவமயமாக்குதலை நீக்குதல், துணை ஆயுதக்குழுக்களைக் கட்டுப்படுத்தல், குடியியல் நிர்வாகத்தை வலிவூட்டுவதற்கான அத்தியாவசியத் தேவை, தகவல் சுதந்திரம், ஊடக சுயாதீனம், தடுப்பு சம்பந்தமான வெளிப்படைத்தன்மை, மேலும் தடுத்துவைத்துள்ளவர்களைச் சந்திக்கும் சுயாதீனம் உட்பட வேறு விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. (மேலும்....)

மாசி 25, 2012

தமிழர் நாங்கள் விழித்தெழுவோம்.

நாங்கள் வங்கிக்கடன் எடுத்து எங்கள் பணத்தை இவர்களுக்கு இலட்சம் இலட்சமாககொடுத்திருந்தோம். திருப்பித்தருவதாக சொன்ன பணத்தை ஏன் இன்னும் தரவில்லை. எங்கள் பணத்தை எங்களிடம் இருந்து பறித்தவர்கள் தாயகத்தில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். நாங்கள் மட்டும் இவர்களுக்கு எடுத்து கொடுத்த வங்கிக்கடனை மாதாந்தம் செலுத்துவதற்கு கஷ்டப்பட்டு உழைக்கின்றோம். வங்கிக்கடன் எடுத்துத்தந்த எங்கள் பணம் எங்கே? அதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். எங்கள் பணத்தை கொள்ளையடித்து நீங்கள் சேர்த்த சொத்துக்களை விற்று எங்கள் வங்கிக்கடன்களை செலுத்த முன்வாருங்கள். நாங்கள் யாரையும் நம்பி ஊர்வலம் வரமாட்டோம். எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள். எங்கள் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்காதீர்கள். எங்கள் உறவுகளை சந்திக்க நாங்கள் தாயகம் சொல்ல விரும்புகின்றோம். எந்த விமோசனமும் இல்லாத ஜெனீவா ஆர்ப்பாட்டத்தை புறக்கணிப்போம்.விரைவில் நாங்கள் யார் என்று சொல்வோம். (மேலும்....)

மாசி 25, 2012

LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்தால் போதுமானது - EU

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம்வலியுறுத்தியுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் உரியமுறையில் அமுல்படுத்தப்பட்டால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில்பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கான பிரதான ஏதுவாக உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக் கொள்வதாக ஒன்றியம்தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் மெய்யான பிரச்சினைகளுக்கு உரிய முறையில் தீர்வுகாணப்படவில்லை என ஆணைக்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சகல இன சமூகங்களுக்கும் இடையில் மெய்யான நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டியது மிகவும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் என்ன நடைபெறப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பே இந்த அறிக்கை. ஆயிரமாயிரம் மக்களைப் படுகொலை செய்துவிட்டு உலக அரங்கில் சர்வதேச அதிகாரங்களுடன் இணைந்து உலாவரும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டத்தை போலி நம்பிக்கைகளுக்கு ஊடாக மழுங்கடிக்கும் அரசியல் வியாபாரிகளின் அமரிக்க ஆதரவு லொபி அரசியல் இத்தோடு முற்றுப்பெற வேண்டும்.

மாசி 25, 2012

கூடங்குளம் போராட்டத்திற்கு அமெரிக்க என்.ஜி.ஓ.க்களே காரணம்: பிரதமர் மன்மோகன் சிங்!

அமெரிக்காவைச் சேர்ந்த சில என்.ஜி.ஓ.க்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க இடையூறு செய்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள அணுமின் நிலையத்தை செயல்படவிடாமல் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அணுமின் நிலையத்தை மூடும் வரை போராட்டம் ஓயாது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை போராட்டக்குழு தலைவர் உதயகுமார் மறுத்தார். இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த சில என்.ஜி.ஓ.க்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க இடையூறு செய்து வருவதாக பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அமெரிக்க பத்திரிக்கையான சயின்ஸுக்கு கூறியதாவது, அமெரிக்காவைச் சேர்ந்த சில என்.ஜி.ஓ.க்கள் தான் கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க இடையூறாக உள்ளன. இந்தியாவில் மின் உற்பத்தி அதிகரிப்பதை அவை விரும்பவில்லை. சிந்தித்து செய்ல்படும் மக்கள் அனைவரும் அணு சக்திக்கு ஆதரவாக உள்ளனர். விஞ்ஞானிகளை சும்மா உட்கார வைக்க முடியாது. அவர்கள் பல மாதங்களாக வேலையின்றி இருக்கின்றனர். அமெரிக்கா மற்றும் ஸ்கான்டினேவியன் நாடுகளைச் சேர்ந்த என்.ஜி.ஓ.க்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றார்.

மாசி 25, 2012

 

2009 மே 17ல் வன்னிப் போர்முனையில் நிகழ்ந்தவை என்ன? – கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மேரி கொல்வினின் சாட்சியம்

‘நாங்கள் எமது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டோம்’ என மே 17 அன்று, புலிகள் தமது இறுதி நிலையை அமைத்திருந்த சிறிலங்காவின் வடகிழக்கு கரையோரத்தில் உள்ள ஒடுங்கிய சதுப்பு நிலக் காட்டுப் பகுதி ஒன்றில் நின்றவாறு பா.நடேசன் செய்மதி வழி தொலைபேசி மூலம் என்னிடம் இறுதியாக தெரிவித்திருந்தார். நடேசன் தொலைபேசியில் என்னுடன் கதைத்துக் கொண்டிருந்த வேளையில், பின்னணியில் இயந்திரத் துப்பாக்கிகளின் குண்டுச் சத்தங்களை என்னால் கேட்க முடிந்தது. “நாங்கள் எமது பாதுகாப்பு விடயத்தில் ஒபாமா மற்றும் பிரித்தானிய அரசாங்கங்களின் உத்தரவாதத்தை எதிர்பார்த்து நிற்கிறோம். அவ்வாறான பாதுகாப்பு உத்தரவாதம் எமக்கு வழங்கப்படுமா?” என அவர் என்னிடம் வினவினார். (மேலும்....)

மாசி 25, 2012

‘Tamil Diaspora numbering over 300,000 a powerful inducement’

Lanka alleges UK Labour MP timed debate for UNHRC sessions

by Shamindra Ferdinando in Geneva

The UK continued to play politics with SriLanka’s national reconciliation process, government officials, now in Geneva for the 19th sessions of the United Nations Human Rights Council (UNHRC), told The Island yesterday (23). They alleged that a group of British parliamentarians, too, was campaigning against Sri Lanka at the behest of the LTTE. The officials were responding to a British onslaught directed at President Mahinda Rajapaksa’s government at Wednesday’s private member’s motion debate secured by Labour backbencher, Virendra Sharma, who represents Ealing Southall constituency. (more....)

மாசி 25, 2012

நாகை மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, இலங்கை மீனவர்கள் அட்டூழியம்

நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது, இலங்கை மீனவர்கள், பெட்ரோல் குண்டு வீசி, பயங்கர ஆயுதங்களால் தாக்கி, பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். படுகாயமடைந்த நாகை மீனவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாகை துறைமுகத்திலிருந்து, கடந்த 18 ம்தேதி, எட்டு மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் இரவு, 1.30 மணியளவில், தோப்புத்துரைக்கு கிழக்கில், தமிழக கடல் பகுதியில், மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு, நான்கு பைபர் படகுகளில், பயங்கர ஆயுதங்களுடன் வந்த இலங்கை மீனவர்கள், 25க்கும் மேற்பட்டோர், தமிழக மீனவர் படகை சுற்றி வளைத்து, பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் படகின் மேற்கூரை, கண்ணாடி தடுப்புகள் சேதமடைந்தன. அதிர்ச்சியடைந்த நாகை மீனவர்கள், படகில் படுத்துக் கொண்டனர். படகில் ஏறிய இலங்கை மீனவர்கள், நாகை மீனவர் படகில் இருந்த மீன்களை அவர்களது படகில் ஏற்றுமாறு கூறினர். நாகை மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பயங்கர ஆயுதங்களால் நாகை மீனவர்களை தாக்கி, படகில் இருந்த மீன்பிடி உபகரணங்கள், மொபைல் போன்களை பறித்துக் கொண்டு, மீன்களையும் தங்கள் படகுகளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து சென்றனர். படுகாயமடைந்த நாகை மீனவர்கள் நேற்று காலை கரைக்கு திரும்பி, கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிராமத்தினர் சார்பாக, நாகை மீன்வளத் துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள், நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.

மாசி 25, 2012

தமிழர் ஒருங்கிணைப்பு குழுவுக்கு பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை- 6பேருக்கு சிறைத் தண்டனை!

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் ஆறுபேர் குற்றவாளிகளாக காணப்பட்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டதுடன் பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு மீதான தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் இத்தீர்ப்பை நேற்று வழங்கியுள்ளதாக பரிஸில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு நிதி சேர்த்தார்கள் என இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பரிதி என்று அழைக்கப்படும் எம்.நடராசா மதிந்திரனுக்கு 5வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேத்தா என்று அழைக்கப்படும் அரவிந்தன் துரைசுவாமிக்கு 5வருட சிறைத்தண்டனையில் 18மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. யோகராசா சிவதர்சனுக்கு 3வருட சிறைத்தண்டனையில் ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்திரேசுப்பிள்ளை வின்சட், லோறன்ஸ் செல்வராசா அல்லது புலேந்திரன், எம்.ரவிமாணிக்கம் ஆகியோருக்கு 2வருடசிறைத்தண்டனை 6மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாசி 25, 2012

Govt. denies claim Gen. Shavendra barred from UN peacekeeping panel

... complains about chairperson’s high-handedness to Asia, UNSG

A top diplomatic source in New York last night blasted the Canadian Chairing the UN peacekeeping committee Louise Frechette of behaving like an outrageous white supremacist after she unilaterally issued a statement stating that Sri Lanka’s Deputy Permanent Representative to the world body, who was appointed to the panel by the Asia-Pacific group, was dropped from the committee. (more....)

மாசி 25, 2012

கூட்டமைப்பினர் ஜெனீவா சென்றால் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து பதிலளிக்க வேண்டியிருக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டில் பங்குபற்றுவார்களாயின், புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்கு அவர்கள் பதிலளிக்க வேண்டி வரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் 2001 ஆம் மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் தாம் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனங்களில் புலிகளின் ஏகபிரதிநிதிகளாகவே தாம் பாராளுமன்றம் செல்வதாகக் குறிப்பிட்டிருந்தனர். அதனால் இந்நாட்டில் புலிகள் ஆயிரக் கணக்கான அப்பாவி மக்களையும், அரசியல் தலைவர்களையும் படுகொலை செய்தும், ஊனங்களுக்கு உட்படுத்தியும், சொத்துக்களை அழித்தும் இருக்கின்றார்கள். இவர்களில் தமிழ் மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ் சமூக, அரசியல் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆகவே இவற்றுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பதிலளிக்க வேண்டி வரும். (மேலும்....)

மாசி 25, 2012

ஏகாதிபத்திய சூழ்ச்சிகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது

மனித உரிமை, ஜனநாயகம் என்ற பெயரில் சர்வாதிகாரத்தை திணிக்க அமெரிக்கா முயற்சி

உலகின் பல்வேறு நாடுகளில் பலம் வாய்ந்த தலைவர்களாக விளங்கும் தலை வர்களை அவ்விடத்திலிருந்து அப்புறப் படுத் தும் சூழ்ச்சிகரமான நடவடிக்கைகளில் அமெரிக்கா போன்ற நாடுகள் ஈடுபட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை என்று மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மனித உரிமை, ஜனநாயகம் என்ற பேரில் சர்வாதிகாரத்தை திணிக்கவே அமெரிக்கா முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். அமெரிக்கா வானது, லிபியா, சிரியா ஆப் கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், தூனீஷியா, எகிப்து மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ள நிலையை இலங்கையிலும் ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார். இலங்கைக்கோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கோ இது போன்ற நிலைமையை உருவாக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

மாசி 25, 2012

குர்ஆன் எரிப்பு விவகாரம்

கர்சாயிடம் மன்னிப்பு கேட்டார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா

ஆப்கானில் குர்ஆன் எரிக்கப்பட்ட நிகழ்விற்கு, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் அமெரிக்க இராணுவ முகாமில், குர்ஆன் சிலநாட்களுக்கு முன் எரிக்கப்பட்டது. இது தொடர்பாக, ஆப்கான் படையினர், அமெரிக்க இராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றுள்ளனர். இது மட்டுமல்லாது, இந்நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிபர் பராக் ஒபாமா, ஆப்கான் ஜனாதிபதி கர்சாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அமெரிக்க வீரர்களின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து ள்ளார்.

மாசி 25, 2012

மனிதனை சாய்க்கும் மனவியல்பு சிக்கல்கள்

மனவியல்பு சிக்கல் (கொம்ப்ளக்ஸ்) இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப் பிரச்சினையாக இருக்கிறது. ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின் அவர் பிறரை விட தன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார். மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான். இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானது. ஒரு மனிதனை Superiority Complex என்ற நிலைக்குக் தள்ளுகிறது. இந்த மனப் பங்கானது அறிவுபூர்வ நிலையிலிருநுது ஒரு மனிதனை திருப்பி அவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்தி அவனது ஆளுமையில் (Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது. (மேலும்....)

மாசி 25, 2012

சிரியாவுக்கான தூதராக கோபி அனான் நியமனம்

சிரியாவில் நிலவிவரும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும், மனித உரிமை மீறல் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், ஐ.நா. சபை, மற்றும் அரபு நாடுகள் சார்பில் சிரியாவுக்கான தூதராக கோபி அனான் நியமிக்கப்பட்டுள்ளார். 73 வயதாகும் கோபி அனான், ஐ.நா. அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாசி 25, 2012

அமெரிக்காவில் அதிகம்   சம்பாதிப்பவர்களுக்கு அதிக வரி

அமெரிக்காவில் ஒரு சத விகித பெரும் முதலாள களின் நலனுக்காக 99 சத விகித மக்களின் மீது வரி வாரிஇறைக்கப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா வில் வால்ஸ்டிரீட்டை கைப்பற்றுவோம் என மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில் வரவிருக் கும் அதிபர் தேர்தலில் இப் பிரச்சனை பிரதானமாக எதிரொலிப்பதை தவிர்க்க அமெரிக்க அதிபர் ஒபாமா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அமெரிக்கா வில் அதிகம் சம்பாதிப்பவர் களுக்கு அதிக வரிவிதிக்க வும் திட்டமிட்டு வருகிறார். வளரும் நாடான இந்தி யாவில் அதிகபட்ச வரு மான வரி 30 சதவீதமாக உள்ளது. ஆனால், வளர்ந்த நாடான அமெரிக்காவிலோ இதைவிட வரி மிகவும் குறைவு. அதிகபட்சமாக 30 சதவீத வருமான வரி விதிப் பது பற்றி அமெரிக்க அரசு இப்போதுதான் ஆலோசிக் கத் தொடங்கி உள்ளது. இதுகுறித்து, ஒபாமா கூறுகையில், ஆண்டுக்கு ரூ.4.9 கோடிக்கு (1 மில்லியன் டாலர்) மேல் வருமானம் உள்ளவர்கள் 30 சதவீதம் வரி செலுத்த தயாராக இருக்க வேண்டும். இதை சட்டமாக இயற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும். இதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கவேண்டும். அவ் வாறு இது சட்டமானால், சுமார் 16 கோடி நடுத்தர பிரிவு ஊழியர்களின் வரி குறைக்கப்படும்’’ என்றார்.

மாசி 24, 2012

டோஹோவிலிருந்து 30 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்

டோஹோவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் 30 பேர் இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவர்களிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கின்றார். இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் கனடாவிற்கு சட்டவிரோதமாக குடியேற கடத்தல்காரர்களுக்கு இவர்கள் பணம் கொடுத்துள்ளனர். கடத்தல்காரர்களால் டோஹோ வரை அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கைவிடப்பட்டதாக நாடு திரும்பியோர் தெரிவித்துள்ளனர். டோஹோவிலிருந்து மேலும் 70 இலங்கையர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டவுள்ளதாக தெரியவருகின்றது.

மாசி 24, 2012

அக்கரைப்பற்றில் தொடர்கிறது ஆர்ப்பாட்டம்

அம்பாறை அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரி அதிபரின் இடமாற்றத்தைக் கண்டித்து இன்று இரண்டாவது நாளாகவும் கல்லூரி மாணவர்கள் வீதியில் இறங்கி டயர்கள் எரித்து சுலோகங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கரைப்பற்று தொழில்நுட்பக்கல்லூரியின் அதிபராக இருந்த ஏ.ஜி.எம். தவூத் இடமாற்றம் செய்யப்பட்டு அவ்விடத்திற்கு எம்.எம். ஹசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டு உடன் கடமைப் பொறுப்பை ஏற்குமாறு வாழ்க்கைத் திறன் தொழில் பயிற்சி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்டதையடுத்து இவ் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் கல்லூரியின் வாசல் கதவுக்குப் பூட்டுப் போடப்பட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட்டுவருவதால் இரண்டு தினங்களாக கல்லூரியின் கற்றல,கற்பித்தல் செயற்பாடுகள் முற்றாகத் தடைப்பட்டுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தையடுத்து கலகமடக்கும் பொலிஸாரும் இராணுவத்தினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மாசி 24, 2012

ஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கும் மனிதஉரிமை தொடர்பான தீர்மானம்

இலங்கை அரசாங்கத்தை, அது நியமித்த கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கத்துக்குமான ஆணைக்குழு செய்த சிபாரிசுகளையும் அவை தொடர்பான ஏனையவற்றையும் நடைமுறைப்படுத்தும் படி எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கொண்டு வரும் தீர்மானத்தினை ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் ஆதரிக்கலாம் என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அமெரிக்காவின் வெளிவிவகார அமைசசர் ஹிலாரி கிளின்டன் இலங்கை அரசாங்கத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அதில் அவர் இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையினை சமர்ப்பித்தமையினை அறிந்து கொண்டதாக கூறியுள்ளதுடன் அவ்வறிக்கையானது சில முக்கியமானதும் எதிர்மறையற்றதுமான சிபாரிசுகளை தேசிய நல்லிணக்கத்தினை ஊக்குவிப்பதற்காக கூறியுள்ளமையினையும் தெரிந்து கொண்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் கூறியுள்ளார். (மேலும்....)

மாசி 24, 2012

Policing Toronto raid highlights high cost of insurance fraud

(Timothy Appleby)

Sometimes the auto “accidents” were crudely staged, police said, but more often there was no accident at all.In early-morning raids across the Toronto area – but focused chiefly on Scarborough’s Tamil community – 37 suspects were scooped up Thursday and charged in one of the largest alleged car-insurance scams seen in years. Arrest warrants were issued for several other people, in what authorities said was an orchestrated, multi-million-dollar rip-off involving about 10 organizers and more than two dozen lesser players. In large part, the 77 incidents scrutinized by police in an investigation dubbed Project Whiplash, involved phony claims for damaged vehicles. The alleged scam also encompassed four rehabilitation clinics and six people associated with them, including paralegals, all charged under Ontario’s Insurance Act with submitting false invoices to insurers. (more.....)

மாசி 24, 2012

சுத்து மாத்தும் மானம் கேட்ட பிழைப்பும்

கனடா டொராண்டோவில் தன்மானம் என்று சொல்லி

தமிழன் நல்ல வளமான பொருளாதாரம் வாழ்க்கை என்று

இப்படியான செய்கையில் உள்ளனர்

"தமிழர்ன் என்று சொல்லடா தலை குனிந்து நில்லடா"

Canada - Toronto Police Release 37 people are arrest today Feb 23,2012

Click report from Toronto Police :  http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/22844.pdf

மாசி 24, 2012

உங்கள் முன் ஒன்றாக நிற்கிறோம்​. இந்த ஒற்றுமையை வலுப்படுத்​துங்கள் - புளொட் தலைவர் த.சித்தார்​த்தன்

மக்களின் வாழ்வு வலுப்படுகின்றதோ தெரியாது. ஆனால் 'ஒற்றுமைப்பட்ட? 'இவர்களின் வாழ்வு மட்டும் வழப்படப்போகின்றது என்னவோ உண்மைதான் பொறுத்திருந்து பாருங்கள். 60 வருடங்களாக தமிழ் ஏக தலமைகள் செய்வதையே இவர்களும் செய்ய முண்டியடிக்கின்றனர் என்பது என்னவோ உண்மைதான். நாற்காலிக்கான ஒற்றுமையே இது? - சாகரன்

வவுனியா நகரசபை மண்டபத்தில் கடந்த 18ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து மக்கள் சந்திப்பொன்றை நடத்தியிருந்தனர். கூட்டத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன், சிறீதரன், சரவணபவன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, வவுனியா நகரசபைத் தலைவர் கனகையா, நகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிசபைத் தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவு பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தனர்.(மேலும்....)

மாசி 24, 2012

உழைக்கும் வர்க்கத்தின் தொழிற்சங்கம் அமைக்கும்  உரிமையினைத் தடுக்கும் போக்கை முறியடிப்போம்

தோற்றதில்லை தோற்றதில்லை தொழிற்சங்கம் தோற்றதில்லை. கேட்டதில்லை கேட்டதில்லை தோற்ற சரித்திரம் கேட்டதில்லை என்ற முழக்கம் எங்கும் ஒலித்த காலம் ஒன்று இருந்தது. தொழிலாளர் அலுவலகங்களில் தொழில் தாவாக்கள் அப்போதெல்லாம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தன. வேலை நிறுத்தங்கள், தர்ணாக்கள், உண்ணா விரதங்கள், பொதுக் கூட்டங்கள் என தொழிலாளர் பிரச்னைகளை மக்கள் முன் நிறுத்திய பல்வேறு நிகழ்வுகள் தொழிலாளர் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் அப்போது நிரம்பி வழிந்தன. ஒரு வகையான போர்க்குணமிக்க அரசியல் சூழல் அப்பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அப்படிப்பட்ட ஒரு சூழல் இல்லை. அதற்குக் காரணம் அப்போதிருந்த தொழிற்சாலைகள் எல்லாம் இப்போது இல்லாமல் போய்விட்டதனாலில்லை. மாறாக ஒரு காலத்தில் விவசாயம் மட்டுமே ஓரே தொழிலாக நிலவிய நமது கிராமப்புறப் பகுதிகளில் தற்போது பல தொழிற்சாலைகள் புதிது புதிதாக முளைத்துள்ளன. இருந்தும் அப்படிப்பட்ட போர்க்குணமிக்க தொழிலாளி வர்க்க அரசியல் மட்டும் இல்லாமல் போய்விட்டது. முன்பிருந்ததைப் போல் தொழிற்சாலைகளுக்கு முன்பு பல்வேறு தொழிற்சங்கக் கொடிகள் பறக்கும் காட்சி அறவே இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. சில காலங்களுக்கு முன்பு பத்திரிக்கைகளும் இதை அங்கீகரித்து எழுதின: தொழிற்சங்கங்களுக்கு தொழில் வளாகங்களிலிருந்து பிரியாவிடை கொடுக்கப்பட்டுவிட்டது என்று. (மேலும்....)

மாசி 24, 2012

மரி கொல்வினின் மரணத்தின் பின்புலத்தில் ..

வன்னிப் படுகொலைகளை வெளியுலகிற்கு செய்தியாகச் சொன்ன ஊடகவியலாளர் மரி கொல்வின் இன்று(22.02.2012) கொலை செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய ஊடகவியலாளர்களுள் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் அறியப்பட்டவரான மரி, சிரியாவில் இன்று கொலைசெய்யப்பட்டுள்ளார். மத்திய கிழக்கில் எண்ணை வளங்களைக் கொள்ளையிடுவதற்காக சர்வாதிகாரிகளை ஆட்சியில் அமர்த்திய அமரிக்க அணி அதே சர்வாதிகாரிகள் அமரிக்காவிற்கு எதிரான அணிகளோடு சமரசம் செய்துகொள்ள முற்பட்ட போது அந்த நாடுகளின் மீது இராணுவ ஆக்கிரமிப்பைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. லிபிய மக்களினதும் ஆபிரிக்க மக்களதும் அபிமானத்தைப் பெற்றிருந்த கடாபியையும் இவ்வாறே அமரிக்கா கொன்றொழித்தது. (மேலும்....)

மாசி 24, 2012

இலங்கையை பழிவாங்கும் செயற்பாடுகளில் அமெரிக்கா

இலங்கையை பழிவாங்கும் வகையில் ஜெனீவாவில் நடை பெறவுள்ள மனித உரிமை ஆணைக்குழு அமர்வில் அமெரிக் காவே குற்றப் பிரேரணையை முன்வைக்கவுள்ளதாக நிர்மாணத் துறை, பொறியியல் சேவை, வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால் இலங்கை யில் பயங்கரவாதத்தை முறிய டித்தமையே இதற்கு பிரதான காரணம் என்று அவர் மேலும் தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தீர்மானங்களை அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் இங்கு மேலும் உரையாற்று கையில், சூழ்ச்சி, தேர்தல் ஒன்றின் மூலம் அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாத நிலையிலேயே மனித உரிமை போன்ற குற்றச்சாட்டுக்களை 27 ஆம் திகதி மனித உரிமை அமர்வின் போது அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைக்கவுள் ளது. ஜனாதிபதி அவர்களையும், எமது தாய்நாட்டின் விடுதலைக்காக போராடி உயிரை அர்ப்பணிப்பு செய்த படை வீரர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதே மேற்கத்திய நாடுகளின் நோக்கமாகும். (மேலும்....)

மாசி 24, 2012

பத்மநாபசுவாமி கோயில் ஆபரணங்களில் தமிழ் எழுத்து

பத்மநாபசுவாமி கோயில் இரகசிய அறைகளில் உள்ள ஆபரணங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பத்மநாபசுவாமி கோயில் இரகசிய அறையில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடும் பணி கடந்த 20ம் திகதி தொடங்கியது. கடந்த 3 நாட்களில் மற்றும் எப் அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கெடுக்கப்பட்டன. நேற்று முன்தினம் 3வது நாளாக பொக்கிஷங்களை கணக்கெடுக்கும் பணி நடந்தது. இதில் தங்கம், வெள்ளி, குடங்கள் , போர் கவசங்கள், சுவாமி முக கவசம், தங்க அங்கிகள் ஆகியவை கணக்கெடுக்கப்பட்டன. இதில் வெள்ளி மற்றும் தங்க குடங்களில் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் பழங்கால எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தொல்பொருள் துறை ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர்.

மாசி 24, 2012

மனித உரிமை செயற்பாட்டுத் திட்டம்

முழுமையான அமுல்படுத்தலுக்கு அரசியலமைப்பை திருத்தத் தயார்

அரசாங்கம் தயாரித்துள்ள மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுத் திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தேவைப்பட்டால் அரசியலமைப்பு ரீதியான திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை பேரவை கூட்டத்தில் மனித உரிமை தொடர்பான செயற் திட்டமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அது குறித்து சபைக்கு தெளிவுபடுத்துமாறும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க கவனயீ ர்ப்புப் பிரேரணையொன்றை சமர்ப்பித்து அரசாங்கத்தை கோரியிருந்தார். இதற்கு அரசாங்கம் சார்பாக அமைச்சர் திணேஷ் குணவர்தன நேற்று பாராளு மன்றத்தில் பதில் வழங்கினார். மனித உரிமை தொடர்பான செயற்பாட்டுத் திட்டம் பாராளுமன்றத்திலு ள்ள விடயங்கள் குறித்து விசேட பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஆராய முடியும் என்று கூறிய அவர் ஆனால் ஐ. தே. க. இது வரை தமது பிரதிநிதியை நியமிக்கவில்லை எனவும் கூறினார். (மேலும்....)

மாசி 23, 2012

ஜெனீவாவில் இராஜ தந்திர சமருக்கு தயாராகும் ஆரவாரத்தில் கொழும்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இன்று கூடி ஆராயும் இரு தலைக்கொள்ளி எறும்பின் நிலையில் இந்தியா

ஜெனீவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி  ஆரம்பமாகும் ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை முறியடிப்பதற்கான வியூகங்களுடன் அமைச்சர்கள், இராஜதந்திரிகளடங்கிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் அங்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த அமர்வு தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தை தமிழ்க் கூட்டமைப்பு இன்று வியாழக்கிழமை எடுக்கவுள்ளது. இதேவேளை, இந்த விடயத்தில் இந்தியா இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையில் இருப்பதாக இந்துப் பத்திரிகை தெரிவித்திருக்கிறது. (மேலும்.....)

மாசி 23, 2012

Road from Geneva to Nanthikadal

(By Shamindra Ferdinando
in Geneva)

After a second round of talks in April 2006 failed to materialize due to transgression on the part of the LTTE, Norway arranged for the two parties to meet in Oslo on June 8 and 9, 2006. The LTTE refused to meet the government delegation on the basis it wasn’t led by a minister. The LTTE took up the position that Dr. Palitha Kohona wasn’t important enough for them to sit at the negotiating table. The LTTE also objected to the presence of Sri Lanka Monitoring Mission (SLMM) personnel from EU states, Denmark, Sweden and Finland, due to the EU proscribing the LTTE as a terrorist organization.  Had the LTTE heeded President Mahinda Rajapaksa’s call to return to the negotiating table in the immediate aftermath of his victory over UNP candidate, Ranil Wickremesinghe, at the Nov. 2005 presidential polls, there wouldn’t have been a confrontation between the Sri Lankan government and a section of the international community, at the United Nations Human Rights Commission (UNHRC). (more.....)

மாசி 23, 2012

முருகன், சாந்தன், பேரறிவாளனது மனுக்களை இந்திய ஜனாதிபதி நிராகரிப்பு

தூக்குத் தண் டனை பெற்றுள்ள 23 கைதிகளுக்கான தண்டனையை ஆயுள் தண்டனை யாக குறைப்புச் செய்த இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுள்ள சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரது கருணை மனுக்களையும் நிராகரித்தார். டில்லியைச் சேர்ந்த சமூக சேவகர் சுபாஷ் அகர்வால் என்பவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் மனுத் தாக்கல் ஒன்றை செய்தார். அதில் இந் திய ஜனாதிபதி பிரதீபா பட்டேலுக்கும் கருணை மனு அனுப்பிய தூக்குத் தண் டனை கைதிகளில் எத்தனை பேரின் தண் டனை குறைக்கப்பட்டுள்ளன என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அவருக்கு உடனடியாக பதில் கிடைத்தது. அதில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ராஜீவ்காந்தி கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் உட்பட 31 பேர் கருணை மனு அனுப்பி இருந்தனர். அதில் 23 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக ஜனாதிபதி குறைத்தார். எனினும் ராஜிவ் கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் கருணை மனுவை மட்டும் நிராகரித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரதீபா பட்டேல், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவனை நரபலி கொடுத்த சுசில்மூர் என்பவரின் தூக்குத் தண்டனையை கூட ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாசி 23, 2012

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கைக்கு மேலதிகமாக அரசாங்கம் செயற் திட்டம்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக அரசாங்கம் ஜெனீவாவில் சமர்ப்பிக்கவுள்ள மனித உரிமை செயற்றிட்டம் தொடர்பில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்த கவனயீர்ப்புப் பிரேரணை அறிக்கைக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்பட்ட விடயங்களுக்கு மேலதிகமாக எதிர்க் கட்சித் தலைவர் பல்வேறு விடயங்களைத் தெரிவித்துள்ளார். அதற்கான பதிலை வழங்கும் அதிகாரம் பாராளுமன்ற சபாநாயகருக்கே உரியது என தெரிவித்த அமைச்சர், எனினும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அறிக்கை இதற்கு மேலதிகமாக மனித உரிமை தொடர்பிலான அரசாங்கத்தின் தேசிய திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு இன்று பதில் அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மாசி 23, 2012

மாலைதீவில் சுமுகநிலை, அச்சமில்லை

மாலைதீவில் சுமுக நிலை தோன்றியிருப் பதுடன், உல்லாசப் பயணிகள் எந்தவித மான அச்சமும் இன்றி தொடர்ச்சியாக வரு கின்றனர். அதேநேரம், முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நட் டைக் கைதுசெய்வதற் கான எந்த நடவடிக்கை யையும் புதிய அர சாங்கம் மேற்கொள்ள வில்லையென இலங் கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஹசைன் ஷிஹாப் தெரிவித்தார். மாலைதீவில் அமைதி நிலவுகிறது. பெப்ரவரி 8ஆம் திகதியின் பின்னர் மாலைதீவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்துவதற்காக மூவர் அடங்கிய தேசிய ஆணைக்குழுவொன்றை ஜனாதிபதி மொஹமட் வாஹீட் நியமித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். கொழும்பிலுள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர். (மேலும்.....)

மாசி 23, 2012

சிலாபம் கடற்றொழிலாளர்கள் தொழிலுக்கு செல்ல இணக்கம்

அரசு வழங்கும் எரிபொருள் மானியத்தைப் பெற்றுக் கொண்டு கடற்றொழிலுக்கு செல்வதற்கு சிலாபம் மீனவர்களும் நேற்று இணக்கம் தெரிவித்தனர். 10 நாட்களுக்குப் பின்னர் சிலாபம் கடற்றொழிலாளர்கள் இன்று தொழிலுக்காக செல்லவுள்ளனர். கிராம சேவகர்கள் ஊடாக வழங்கப்படும் விசேட படிவங்களை பயன்படுத்தி எரிபொருள் மானியத்தை தற்போது பெற்றுக் கொள்ளுமாறும், எரிபொருள் மானியத்துக்காக வெளியிடப் படவுள்ள விசேட கூப்பன்கள் அடுத்தவாரம் வழங்கப்பட்ட பின்னர், அதனை பயன்படுத்தி எரிபொருள் மானியத்தை பெற முடியும். இதனை ஏற்றுக் கொண்ட கடற்றொழிலாளர்கள் அனைவரும் இன்று முதல் தொழிலுக்குச் செல்வதாக இணக்கம் தெரிவித்தனர்.

மாசி 23, 2012

அரிதான இளஞ்சிவப்பு வைரக்கல் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிப்பு

உலகில் மிக அரிதான இளஞ்சிவப்பு நிற வைரக்கல் அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு அவுஸ்திரேலியாவின் கிழக்கு கிம்ப்லி பகுதியிலுள்ள வைர சுரங்கத்திலிருந்தே இந்த வைரக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12.76 கரட் கொண்ட இந்த வைரக்கல் பல மில்லியன் டொலர் பெறுமதியானது என கருதப்படுகிறது. இந்த வைரக்கல் பட்டை தீட்டுவதற்காக பேர்த் நகருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  10 நாட்களில் பட்டை தீட்டப்பட்டு கண்காட்சிக்காக சர்வதேச அளவில் அனுப்பப்படவுள்ளது. தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் ஏலம் விடப்படும் என வைரக்கல்லை கண்டுபிடித்த சுரங்க நிறுவனம் கூறியுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு 24. 78 கரட் கொண்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஒன்று ஜெனிவாவில் ஏலம் விடப்பட்டது. அதனை பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் 46 மில்லியன் டொலருக்கு வாங்கினார். இதுவே உலகில் அதிக தொகைக்கு ஏலம்போன ஆபரணமாக சாதனை யிலுள்ளது.

மாசி 23, 2012

ஈரானை தாக்குவது இஸ்ரேலுக்கு எளிதல்ல - அமெரிக்கா

 

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஈரான் மீது போர் தொடுக்க இஸ்ரேலுக்கு பல சிக்கல் உள்ளது என அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணு ஆயுதங்களை ஈரான் தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி ஐ.நா. மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இங்கிலாந்து, பிரான்சுக்கு மசகு எண்ணெய் விநியோகத்தை ஈரான் அதிரடியாக நிறுத்தியது. மேலும் அணு ஆயுத திட்டங்களை கைவிட வேண்டும், தங்கள் நாட்டு பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதை நிறுத்த வேண்டும் இல்லாவிட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறிவருகிறது. அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று அமெரிக்க இராணுவ அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். இஸ்ரேலில் இருந்து ஈரானை சென்றடைய ஆயிரம் கிலோ மீற்றருக்கு மேல் பயணம் செல்ல வேண்டும். இதற்கு விமான எரிபொருள் நிறைய தேவைப்படும். இடையில் வானிலேயே விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப வேண்டி இருக்கும். அத்துடன் 100க்கும் அதிகமான விமானங்கள் இருந்தால் தான் ஈரானில் உள்ள பல பதுங்கு குழிகள் அணு சக்தி திட்டங்கள் நடக்கும் இடங்களில் தாக்குதல் நடத்த முடியும் இதற்கு அதிக செலவாகும், சிக்கலானது என்று அமெரிக்க முன்னாள் இராணுவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாசி 23, 2012

நீராலான கிரகம் கண்டுபிடிப்பு

வானியலாளர்களால் கண்டுபிடிக்கப் பட்ட கிரகம் ஒன்று வழமைக்கு மாறாக அதிக நீரைக் கொண்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கிரகத்தில் மலைகளோ, வாயுக்களோ அல்லது ஏனைய மூலப்பொருட்களோ பெரிய அளவு இல்லை என்றும், சுற்றி வர சூடான நீர் காணப்படுவதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாஸாவின் ஹப்ல் தொலைநோக்கி மூலம் ஆய்வு நடத்திய ஹார்வட் ஸ்மித் மத்திய நிலைய வானியலாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த கிரகம் பூமியை விடவும் 2.7 அதிக விட்டம் கொண்டதாகும். அத்துடன் இது பூமியை விடவும் 7 மடங்கு அதிக எடை கொண்டதாகும். பின்னர் 2010 ஆம் ஆண்டு இந்த கிரகம் குறித்து மேலதிக ஆய்வு நடத்திய வானியலாளர் இங்கு 450 டிகிரி வெப்பநிலை காணப்படுவதாக கண்டறிந்தனர். அத்துடன் இங்கு அதிகப்படியான நீர் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க விஞ்ஞானிகள் நடத்திய புதிய ஆய்வில் மேற்படி கிரகத்தை சூழ நீர் காணப்படுவதை உறுதி செய்துள்ள னர். எமது சூரிய மண்டலம் மூன்று வகையான கிரகங்களை கொண்டதாக அமைந்துள்ளது. ஜூபிடர் போன்ற வாயு கிரகங்கள், யூரேனஸ் போன்ற பனி கிரகங்கள் பூமி போன்ற பாறைகள் கொண்ட கிரகங்களாகும். ஆனால் ஜிஜே 1214பி கிரகம் இவை அனைத்தையும் விட மாறுபட்டதாக காணப்படுவதாக வானியியலாளர்கள் கூறியுள்ளனர். எனினும் இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 40 ஒளியாண்டுகளுக்கு அப்பால் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாசி 23, 2012

இணையம் தோன்றிய வரலாறு

சாகா வரம் பெற்றது, யாராலும் அழிக்க இயலாதது என்ற அடைமொழிக்கு பொருத்தமான இணையப் பயன்பாடு குறித்து நாம் எல்லோரும் அறிந்திருந்தாலும் அதன் தோற்ற வரலாறு பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1960 ஆம் ஆண்டு வாக்கில் கணினிகளின் பயன்பாடு அதிகரித்த போதிலும், ஒரு கணினியிலுள்ள தகவல்களை மற்றொரு கணனியிடம் பகிர்ந்துகொள்ளும் நிலை வரவில்லை. இது கணினி பாடத்திட்டங்களை நடத்திவரும் பல பல்கலைக்கழ கங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அமெரிக்காவின் டார்ட்மெளத் மற்றும் பெர்க்லீ பல்கலைக்கழகங்கள் ஐ. பி. எம். கணினிகளைப் பெருமளவில் பயன்படுத்தி வந்தன. அந்த பல்கலைக்கழகங்களுக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்த இப்பிரச்சினை பற்றி ஐ. பி. எம்.க்கு தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்சினையே இணையம் உருவானதற்கு அடி கோலியது எனலாம். (மேலும்.....)

மாசி 23, 2012

சீனியும் மதுபானம் போன்றதே!

சீனியும் மதுபானம் (அல்கஹால்) போன்று உடம்புக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே எனவே மதுபானத்தைப் போல சீனியின் அளவுக்கும் அரசுகள் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ரொபர்ட் லஸ்டிக் தலைமையிலான குழு இவ்வாறு குரல் கொடுக்கிறது. இவர்கள் கூறுகையில், சீனியானது அதிகப் பருமன், இதய நோய், புற்றுநோய், ஈரல் பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. எனவே சீனி விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில் புகையிலை, மதுபானம் போல இதற்கும் வரி, கட்டுப்பாடு விதிக்க வேண்டும், என்கிறார்கள். அதேநேரம் சீனிக்கான தேவையையும் விநியோகத்தையும் குறைப்பது மலை போலக் கடுமையான விடயம்தான் என்றும் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். சீனியின் பல்வேறு வகைகளான சுக்ரோஸ், பிரக்டோஸ், ஏன் குளுக்கோஸ் மற்றும் கரும்பிலிருந்து தயாரிக்கும் சீனி சர்க்கரையும் கூட புகையிலை, மதுபானம் அளவுக்குத் தீங்கு விளைவிப்பவை என்கிறார்கள். அமெரிக்காவில் மட்டும் மக்கள் தொகையில் சரிபாதிப் பேர் உரிய எடையை விட அதிக எடை உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் பாதிப்பேர் அளவுக்கு மிக அதிகமான எடையால் அவதிப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சினைகளுக்கு சீனி ஒரு முக்கிய காரணமாகத் திகழ்வதாக மேற்கண்ட ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் சீனி உடம்புக்கு அதிகமான தீங்கை ஏற்படுத்தும் என்பதை சில ஆய்வாளர்கள் ஏற்க மறுத்து வருகிறார்கள்.

மாசி 23, 2012

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல்  தடுக்கும் எலுமிச்சை சாறு

சிறுநீரகத்தில் கல் உருவா காமல் எலுமிச்சை சாறு தடுக் கும் என்று அமெரிக்க மருத் துவ நிபுணர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சான்டி யாகோவில் உள்ளது ஒருங் கிணைந்த சிறுநீரக நல மையம். அதன் இயக்குனர் ரோஜர் சர். அவர் கூறியதாவது: சிறுநீரகத்தை நலமுடன் பராமரிப்பதில் எலுமிச்சை யின் செயல்கள் பற்றி எனது தலைமையில் ஆய்வு நடத்தப் பட்டது. தினசரி 4 ஸ்பூன் எலுமிச் சைச் சாற்றை இரண்டு லிட் டர் தண்ணீருடன் கலந்து சிறிது சிறிதாக சிலரை குடிக் கச் செய்து பரிசோதித்தோம். சிறுநீரகத்தில் கற்கள் சேர் வதற்கான வாய்ப்பு 1 புள்ளியில் இருந்து 0.13 புள்ளியாகக் குறைந்தது தெரிய வந்தது. எலுமிச்சையில் சிட்ரஸ் அதிகளவில் உள்ளது. மற்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களைக் காட்டிலும், சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் தடுப்பதில் எலு மிச்சை சிறப்பாக செயல்படு கிறது. எலுமிச்சை, சாத்துக் குடி தவிர்த்து மற்ற பழங்களில் சிட்ரஸ் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பு, கால்சியம், புரோட்டீன் ஆகிய வற்றின் பாதிப்பைக் குறைக்க, எலுமிச்சை சாறு மிகவும் உத வும். உப்பில் உள்ள கால்சியம் தான் சிறுநீரக கல் உருவா வதில் அதிக பங்கு வகிக்கிறது. எனவே, உணவில் உப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் கல் உருவாவதை தவிர்க்க முடியும் என்றார் ரோஜர் சர்.

மாசி 22, 2012

மண்ணை நாம் நாசப்படுத்துகிறோம்

வடக்கில் பயங்கரவாதிகளினால் பாதுகாக்கப்பட்ட மண்ணை நாம் இன்று நாசப்படுத்தி கொண்டிருக்கின்றோம். நிறுவனங்கள் இலாபநோக்குடனேயே செயல்படுகின்றன. கிருமிநாசினிகள் பிரபாகரனை விடவும் மோசமானது என்று ஆளும்கட்சியின் எம்.பி. யான அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற பீடை கொல்லிகளைக் கட்டுப்படுத்தும் சட்ட மூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பிரபாகரனை விடவும் நிறுவனங்களின் செயற்பாடுகள் அபாயகரமானவை. இயற்கை பசளைகளால் பயங்கரவாதிகளினால் வடக்கில் பாதுகாக்கப்பட்ட மண்ணை நாம் நாசமாக்குகின்றோம். நிறுவனங்களின் செயற்பாடு, கிருமிநாசினிகளின் பயன்பாடு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவதானத்தைச் செலுத்த வேண்டும். கிருமிநாசினிகள் ஆபத்தானவையாகும். இரசாயனம் மனிதனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது. அபாயகரமானது. இதனால் நீரிழிவு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன. (மேலும்.....)

மாசி 22, 2012

யுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்களின் பின் இன்றைய இலங்கை

தலைநகர் கொழும்பில் வீதிகள் சுத்தமாகக் காணப்பட்டன. ஜப்பானிய கார்கள், மோட்டார்கள் சைக்கிள்களான நிசான், டெயோட்டோ, ஹொண்டா, யமகா, அதிக வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. காலணித்துவ ஆட்சிக் கட்டிடங்கள் பிரமாதகமாகக் காணப்பட்டன. இலங்கையில் மிக உயரமான கட்டிடமாக 152 மீற்றர் உயரம் கொண்ட உலக வர்த்தக நிலையம் காணப்படுகிறது. புதிய கட்டிடத் தொகுதிகள் காணப்பட்டன. அமான், தாஜ், ஹில்டன், இன்டர்கொன்டினன்டல் போன்ற ஹோட்டல்கள் சிறப்பான விதத்தில் இருக்கின்றன. இளைஞர்களின் டிஸ்கோ மற்றும் நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. நகரம் சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. (மேலும்.....)

மாசி 22, 2012

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடை உத்தரவை எதிர்க்கும் வைகோவின் வழக்கை ஏற்க முடியாது

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடைவித்து தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வைகோ தாக்கல் செய்த மனுவை ஏற்கக்கூடாது என்று சென்னை கைகோட்டில் தமிழக அரசு பதில் மனுதாக்கல் செய்துள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைவித்து மத்தி யஅரசு கடந்த 14.5.10 அன்று அறிவிப்பானை வெளியிட்டது. இது தொடர்பாக டெல்லி கைகோட்டு நீதிபதி தலைமையில் தீர்பாயம் அமைக்கப்பட்டு விசாரனை நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடை செய்யப் பட்ட இயக்கமாக அறிவித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து 12.11.10 அன்று தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கைகோட்டில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தர்மாராவ், கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று (20.2.12) வந்தது. நீதிபதிகள் முன்பு வைகோ ஆஜரானார். (மேலும்.....)

மாசி 22, 2012

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர் கட்சியினர்

எரிபொருள் விலை சீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டிகளில் மாகாண சபைக்கு நேற்று சென்றனர். இவர்கள் பத்தரமுல்ல, கொஸ்வத்தை சந்தியிலிருந்து மாகாண சபைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் துவிச்சக்கர வண்டியில் செல்லுவதற்காக மிகவும் விலையுயர்ந்த சொகுசு துவிச்சக்கர வண்டிகளை, ட்ரக் வண்டியில் கொண்டு வந்து இறக்கப்படுவதையும், துவிச்சக்கிர வண்டி ஓடத் தெரியாத மாகாண சபை உறுப்பினர் ஒருவர் விழுந்து கிடப்பதையும் படங்களில் காணலாம். ஈரான் மீதான அமெரிக்காவின் எரிபொருள் ஏற்றுமதித் தடையே இலங்கை போன்ற நாடுகளில் எரிபொருள் விலையேற்றத்திற்கான முக்கிய காரணம். அமெரிக்காவிற்கு எதிராக போராடாமல் இலங்கை அரசை மட்டும் குறை கூறுவது அமெரிக்காவை திருத்திப்படுத்தும் செயல் ஆகும்.

மாசி 22, 2012

அணு உலைகளை பாதுகாக்க ஈரான் விண்ணில் போர்ப் பயிற்சி

அணு உலைகளை பாதுகாக்கும் முயற்சியாக ஈரான் இராணுவம் விண்ணில் போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான இந்தப் போர்ப் பயிற்சி 4 நாட்கள் நடைபெறும் என கதமால் அன்பியா விமானப் படைத்தள ஒருங்கிணைப்பாளர் அறிவித்துள்ளார். இதன்போது யுத்த விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கொண்டு இந்த போர் ஒத்திகை இடம்பெற்றுவருகிறது. ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஈரான் இந்தப் போர் ஒத்திகையை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த போர் ஒத்திகைக்கு ‘சரொல்லா’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தை ‘இறைவனின் பதிலடி’ என்ற அரேபிய பொருளைக் கொண்டதாகும். இந்த போர் ஒத்திகை குறித்து ஈரான் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டிலுள்ள முக்கிய தளங்களை, குறிப்பாக அணு உலைகளை பாதுகாக்கும் முயற்சியாக இந்த இராணுவ பயிற்சி முன்னெடுக்க ப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. இதேவேளை ஈரான் சென்றுள்ள ஐ. நா.வின் அணுசக்தி கண்காணிப்புக் குழு அணு உலைகளில் ஆய்வு நடத்தாது என ஈரான் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த குழு தெஹ்ரானில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் மாத்திரமே ஈடுபடும் என அது கூறியுள்ளது.

மாசி 22, 2012

அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அத்துமீறுவதை தவிருங்கள்

கொழும்பிலுள்ள எந்தவொரு பிரதே சங்களில் எவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்தாலும் பரவாயில்லை. ஆனால், அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதையோ, அதற்குள் ஆர்ப்பாட் டங்களை செய்வதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க வேண்டுகோள் விடுக்கின்றார். அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைவதையோ, ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதையோ, பொறுப்புவாய்ந்த வர்கள் என்ற அடிப்படையில் பொலிஸார் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.  ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் அநீதியான முறையில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்றும் அவற்றை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்.....)

மாசி 22, 2012

உலகின் மிக உயரமான சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் எவ்வளவு என்பதில் நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் சீனா - நேபாள எல்லையில் உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848 மீற்றர் என்று நிர்ணயிக்கப்பட்டது. இந் நிலையில் மலைகளின் உயரத்தை அளக்கும் போது அதன் மீது படர்ந்திருக்கும் பனியை கணக்கில் கொள்ளக் கூடாது. வெறும் மலையின் உயரத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே 8,844.43 மீற்றர் உயரம் தான் எவரெஸ்ட் உள்ளது. இந்த உயரத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று நேபாளத்தை சீனா நிர்ப்பந்தப்படுத்தி உள்ளது. அதன்படி எவரெஸ்ட் சிகரம் 3.57 மீற்றர் உயரம் குறைத்து கணக்கிடப்படும். கடந்த 1975 ஆம் ஆண்டு நேபாள – சீன எல்லை வரை படம் குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டது. அதில் எவரெஸ்ட்டின் உயரம் 8,848.13 மீற்றர் என்று அப்போது சீனா ஒப்புக் கொண்டது. இப்போது சிகரத்தின் உயரத்தில் சர்ச்சை எழுப்பி உள்ளது. இந்த பிரச்சினையை மேலும் பெரிதாக்கும் வகையில் அமெரிக்க தேசிய புவியியல் சமூகம் ஒரு கணக்கை கடந்த 1999 ம் ஆண்டு வெளியிட்டது.

மாசி 22, 2012

52 நாட்களில்

86 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழப்பு

இவ்வருடம் ஜனவரி முத லாம் திகதி முதல் பெப்ர வரி 21 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் 86 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனரென வெளிவிவகார அமைச்சின் கொன்சுயுலர் பிரிவைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார். வழமையிலும் பார்க்க இவ்வருடம் முதல் இரண்டு மாதங் கள் முடிவுறுவதற்கு முன்பாகவே வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் மரணவீதம் பாரிய அதிகரிப்பை எட்டியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சாதாரணமாக வருடத்திற்கு 60 தொடக்கம் 65 வரையான இலங்கையர்களே வெளிநாடுகளில் உயிரிழப்பது வழமை. இதற்கு முன்னர் குறுகிய காலப் பகுதிக்குள் ஆகக்கூடியது சுமார் 25 வரையிலான இலங்கையர்கள் வெவ்வேறு நாடுகளில் உயிரிழந்திருந்தனர். அந்தவகையில் கடந்த 52 நாட்களுக்குள் 86 இலங்கையர்களின் மரண வீதம் பாரிய அதிகரிப்பைக் காட்டுவதாகவும் அவர் கூறினார். கிடைக்கப் பெற்றிருக்கும் தகவல்கள் அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கையர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் விபத்து, சுகயீனம் மற்றும் தற்கொலை ஆகிய காரணங்களினாலேயே கூடுதலாக மரணமடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்களை விட அதிகளவிலான ஆண்களே குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் உயிரிழந்துள்ளனர்.

மாசி 22, 2012

வட மாகாண அபிவிருத்தி

அரசு - ஐ. நா. ஐந்தாண்டுத் திட்டம்: ஒப்பந்தம் கைச்சாத்து

வட மாகாண உதவிக்கான ஐ. நா. கூட்டுத் திட்டத்திற்கான ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. கொழும்பிலுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்ற நிகழ்வின் போது அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்னிலையில் அரசாங்கத் திற்கும் ஐ. நாவுக்கும் இடையிலான இந்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. அரசாங்கத்தின் சார்பில் வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் எஸ். பி. திவாரட்ண, ஐ.நா. சார்பில் அதன் பிரதி நிதி சுய்னே நன்டி ஆகியோரும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். 2013 தொடக்கம் - 2018 வரையான ஐந்தாண்டு காலத்திற்கு வட மாகாணத் திற்கு உதவி வழங்கும் வகையிலேயே இந்த ஒப்பந் தம் கைச்சாத்திடப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திர சிறி தெரிவித்தார். வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கே இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளது. மீளக் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுத்தல், வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், அபிவிருத்தித் திட்டங்கள் இந்த நிதியுதவி மூலம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜேலட்சுமி தெரிவித்தார்.

மாசி 22, 2012

மறதிக்கு உதவும் மாத்திரை

நமக்கு உடல் உழைப்பு குறைந்து, உற்றார் உறவினரை சார்ந்து வாழத் தொடங் கிவிட்டாலே பிரச்சினைதான். ஏனென்றால், "எப்போது இவரை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடலாம்" என்று சிந்திப்பவர்கள் அதிகரித்து விட்ட காலமிது. இது போதா தென்று வயோதிபத்துடன் சேர்த்து நோய் களாலும் பாதிக்கப்பட்டால் கேட்கவே வேண்டாம். காரணம், அன்றாட உணவு மட்டுமின்றி வேளா வேளைக்கு அந்த மாத்திரை, இந்த மாத்திரை என்று சில பல மாத்திரைகளை தவறாமல் சாப்பிட்டே ஆக வேண்டும். தவறினால் நிலைமை இன்னும் மோச மாகிவிடும். இத்தகைய பிரச்சினைகளால் அல்லல்பட் டுக் கொண்டிருக்கும் நம் தாத்தா, பாட்டிகளின் வயிற்றில் பாலை வார்க்க வந்துவிட்டது "ஸ்மார்ட் பில்" என்றழைக் கப்படும் புத்திசாலி மாத்திரை! இதற்கு ஹீலியஸ் மாத்திரை என்று பெயர். (மேலும்.....)

மாசி 22, 2012

அமெரிக்காவை இந்தியா தொடர்ந்து   அவமானப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு

அமெரிக்காவை, இந்தியா தொடர்ந்து அவ மானப்படுத்தி வருவதாக அமெரிக்க முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்கு மதி செய்வதற்கு, ஐரோப் பிய யூனியன் தடை விதித் துள்ளது. சர்வதேச அள வில் ஈரானைத் தனிமைப் படுத்துவதற்காக, ஈரானின் எண்ணெய்யை வாங்க வேண்டாம் என, அமெரிக் கா தனது நட்பு நாடுகளிடம் கூறி வருகிறது. இந்தியா அதைப் புறக் கணித்து விட்டு தொடர்ந்து ஈரானிடம் இருந்து எண் ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சகத் தின் முன்னாள் சார்புச் செய லர் நிக்கோலஸ் பர்ன்ஸ் கூறியிருப்பதாவது: ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்வது என்ற இந்தியாவின் முடிவு, அந்நாட்டோடு நெருங்கிப் பழகி வரும் அமெரிக்கா வுக்கு மிகப் பெரிய ஏமாற் றம் தான். மேலும், கடைசியாக இருந்த மூன்று அமெரிக்க அதிபர்கள் இந்தியாவின் அடுத்தடுத்த அரசுகளுடன் மேற் கொண்ட அரசியல் ரீதியி லான உறவுகளுக்குப் பின்ன டைவுதான். ஈரான் விவகாரத்தில் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செல்லாமல் தனித்துச் செல்வதாக இந் தியா எடுத்த முடிவு, அதன் தலைமைத்துவம் பற்றிய சந் தேகங்களையும் எழுப்பு கிறது. இவ்வாறு பர்ன்ஸ் தெரி வித்துள்ளார்.

மாசி 21, 2012

யாழிலிருந்து ஒரு குரல்-மாவீரர்களின் பெயரால் ஜிம் அடிக்கத் துடிக்கும் கனேடிய தமிழர் தேசிய அவையினர் (NCCT)

தமிழ் மக்களுக்காகவும், மண் மீட்புக்காகவும் தன்னுயிரை துச்சமென எண்ணி களமாடி உயிர் நீத்தவர்கள்தான் எங்கள் மாவீரர்கள்.அவர்கள் தங்களின் உயிர் தியாகங்களைச் செய்தமைக்கு ஒரேயொரு காரணம்தான் அமையக் கூடும். அதாவது இலங்கைத் தமிழ் மக்களுக்கான தனிநாடு. அதை விடுத்து வேறெந்த உள்நோக்கமும் அவர்களுக்கு இருந்ததில்லை. ஆனால் புலம்பெயர் நாடுகளில் புகுந்திருக்கும் சோம்பேறிகள், தங்கள் கைகளைக் கொண்டு பிழைப்பு நடத்தத் தெரியாதவர்கள் மாவீரர்களின் பெயர்களைக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முனைப்புக் காட்டுகின்றனர். அந்த வகையில் கனேடியத் தமிழர் தேசிய அவையினர் 69 கோடி ரூபாய் செலவில் தொடர்பாடல் மையம் அமைப்பதற்கான காணி கொள்வனவு செய்து அதில் ஒரு அறைக்குள் மாவீரர்களுக்கான நினைவு மண்டபம் ஒன்றை அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளனர். (மேலும்.....)

மாசி 21, 2012

Few refugees recognized from Sun Sea, Ocean Lady

The refugee claims from the nearly 600 Sri Lankans who paid smugglers to ferry them to Canada are moving slowly and face dwindling odds of success, new statistics show. More than two years after the Ocean Lady arrived off Vancouver Island carrying 76 Sri Lankan asylum seekers, only one has been accepted as a refugee so far, according to newly released Immigration and Refugee Board figures. Another has been ordered deported and the remaining claims are pending. Of the 492 Sri Lankans who arrived in 2010 aboard the MV Sun Sea, only three have been recognized as refugees while 13 claims have been withdrawn and five abandoned. The remainder of the cases are scheduled to be dealt with over the next few months. Together with an acceptance rate for Sri Lankan refugee claimants that plummeted to 57% last year, from 76% in 2010 and 91% in 2009, the figures suggest that the 568 boat people who arrived on Canada’s West Coast may face a tougher time than their countrymen who arrived earlier. (more....)

மாசி 21, 2012

பெருமை பிடித்தவர்கள் யாழ்ப்பாணத்தார்! - விக்கிலீக்ஸ்

வட மாகாணத் தமிழர்கள் குறித்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் சேகரித்து வைத்திருக்கின்ற தகவல்கள் மிகவும் சுவையானவையும், சுவாரஷியம் நிறைந்தவையும் ஆக உள்ளன. வட மாகாண தமிழர் – பெருமை பிடித்தவர்கள் என்கிற உப தலைப்பில் இத்தகவல்கள் எழுதப்பட்டு உள்ளன. பரந்த விரிந்த சமுதாய நோக்கின்படி வட மாகாண தமிழர்களுக்கும், கிழக்கு மாகாண தமிழர்களுக்கும் இடையில் மிக நீண்ட காலமாகவே பதற்ற நிலை காணப்பட்டு வருகின்றது. பொதுவாக இந்து உயர் சாதியைச் சேர்ந்த வட மாகாண தமிழர்கள் அதிகம் படித்தவர்கள், நகரவாசிகள். கிழக்கு மாகாண தமிழர்கள் பொதுவாக வறியவர்கள், கிராமவாசிகள். (மேலும்.....)

மாசி 21, 2012

நம்பினால் நம்புங்கள்...?

ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடாதென அமெரிக்கா, பிரிட்டன் இஸ்ரேலுக்கு அழுத்தம்

ஈரானின் அண்மைய செயற்பாடுகளால் இஸ்ரேல் அதன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகியன எச்சரித்துள்ளன. எனினும் அவ்வாறான தாக்குதல்களை முன்னெடுக்கக் கூடாது என மேற்படி நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன. ஈரான் தனது யுத்த கப்பல்களை சூயெஸ்கால்வாயூடாக மத்தியதரை கடலுக்கு கொண்டு சென்றுள்ளது. அந்த யுத்தக் கப்பல்கள் தற்போது சிரியாவின் டார்டவ்ஸ் துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஈரான் தனது அணுசக்தி செயற்பாடுகள் குறித்து அண்மையில் அறிவித்தன. இந்த நிலையில் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹக் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகளின் தளபதி மார்டின் டெப்சி ஊகம் வெளியிட்டுள்ளனர். (மேலும்.....)

மாசி 21, 2012

எரிபொருளுக்கு பதில் இலை ஒளிச்சேர்க்கை

தாவரங்களில் ஏற்படும் ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பத்தின் மூலம் வாகனங்களை இயக்குவது குறித்து இங்கிலாந்தின் கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞா னிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதற்காக செயற்கை இலை ஒன்று தயாரித்துள்ளனர். அதில் சூரிய ஒளி மூலம் ஒளிச் சேர்க்கையை ஏற்படுத்தி அதன் மூலம் மின் சக்தியை உருவாக்கி கார்களை இயக்க முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தொழில் நுட்பம் இன்னும் 2 ஆண்டுகளில் உருவாக்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து 5 ஆண்டுகளில் இக்கார் சோதனை ஓட்டம் நடத்தப்படும் இதே தொழில்நுட்பத்தின் மூலம் கப்பல்கள் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். இந்த தகவலை ஆய்வுக் குழுவின் தலைவர் பேராசிரியர் ரிச்சர்ட்காக்டெல் கூறியுள்ளார். இன்னும்10 ஆண்டுகள் கழித்து உலகில் இந்த தொழில் நுட்பத்தின் மூலமே வாகனங்கள் இயங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மாசி 21, 2012

சிரியாவுக்கான தூதரை திரும்ப அழைத்தது எகிப்து

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் பல்வேறு தடைகளால் சிரியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்துள்ளாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் எகிப்து சிரியாவுக்கான தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது. சிரியாவில் ஜனாதிபதி பஷிர் அல்-அசாத், சர்வதேச நெருக்கடியைப் பொருட்படுத்தாமல், ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மற்றும் எதிர்த்தரப்பு இராணுவம் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறார். கடந்த 11 மாத காலப் போராட்டத்தில் இதுவரை ஏழாயிரம் பேர் பலியாகியுள் ளனர். இந்நிலையில் சிரியாவின் தொழிலதிபர் ஒருவர் அளித்துள்ள பேட்டியில், சர்வதேச சமூகம் சிரியா மீது விதித்துள்ள பல்வேறு தடைகளால், நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான கட்டத்தில் இருப்பதாகத் தெரிவித்துள் ளார். இராணுவம் மிகவும் தளர்ந்து விட்ட நிலையிலும், கடைசி வரை போராடிப் பார்த்து விடுவது என்ற முடிவில் ஜனாதிபதி அசாத் இருப்பதாக அவர் தெரிவித்தார். ஏற்கனவே அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களது தூதர் களை திரும்ப அழைத்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மாசி 21, 2012

இலங்கைக்கெதிரான செயற்பாடுகளை தடுப்பதில் நாம் வெற்றி பெறுவோம்- டியூ குணசேகர

மனிதாபிமான நடவடிக்கைகள் மூலம் மூன்று இலட்சம் மக்களைப் பாதுகாப்பதில் நாம் வெற்றி கண்டது போல் புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் அழுத்தங்களுடன் முன்னெடுக்கப்படும் இலங்கைக்கெதிரான செயற்பாடுகளை தடுத்து நிறுத்தி வெற்றிபெறுவது உறுதியென அமைச்சர் டியூ குணசேகர நம்பிக்கை தெரிவித்தார். தமிழ் மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் எடுத்துவரும் முன்னேற்றகரமான நடவடிக்கையைப் போன்றே மனிதாபிமான யுத்தத்தின் போது படையினரால் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அது பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. (மேலும்.....)

மாசி 21, 2012

தமிழகத்தில் கடும் பனிமூட்டம்; போக்குவரத்து பாதிப்பு

தமிழகத்தில் சென்னை உட்பட பல மாவட்டங்களில் நேற்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை கடற்கரையில் வழக்கமான நடைப்பயிற்சி மேற்கொள்வோர் இதுவரை இல்லாதபடி எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்ததாகத் தெரிவித்தனர். ஊட்டி போன்ற மலைப் பிரதேசங்களில் இருப்பது போல் பனி முட்டத்தை உணர்ந்ததாக சிலர் கூறினார் இந்தப் பனி மூட்டத்தால் காலை வேளையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படட்டுள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டனர். இந்தப் பனி மூட்டத்தால் ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ரயில்களின் வேகத்தைக் குறைத்து ஓட்டும்படி ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்திருந்தது. சென்னையில் விமான சேவையும் இதனால் பாதிக்கப்பட்டது. தமிழகத்தில் பரவலாக இந்தப் பனி மூட்டம் நிலவியது. தரைக்காற்றின் ஈரப்பதம் அதிகரித்ததே பனி மூட்டத்துக்குக் காரணம் என்றும், படிப்படியாக சில மணி நேரத்தில் பனிமூட்டம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

மாசி 21, 2012

பண, ஆவண மோசடிகள் அம்பலம், விழிப்புடன் இருக்குமாறு வேண்டுகோள்

தொழில் வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவருபவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். இவ்வாறான மோசடிக்காரர்கள் தொடர்பில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கொழும்பு மோசடி தடுப்பு பிரிவின் புலனாய்வு மற்றும் விசேட நடவடிக்கை களுக்கான பொறுப்பாளர் சப் இன்ஸ்பெக்டர் ஜனக சமிந்த கேட்டுக் கொள்கின்றார். இலங்கையிலிருந்து கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 269 பேரிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு ஆபிரிக்க நாடான டோஹோ மற்றும் மாலிக்கு கொண்டு சென்று கைவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரதான சூத்திரதாரி ஒருவரை மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் வெள்ளவத்தையில் மடக்கிப் பிடித்தனர். (மேலும்.....)

மாசி 21, 2012

அரபு எழுச்சியே அமெரிக்காவில் பிரதிபலிக்கிறது  - ஆய்வுகள் கருத்து

அமெரிக்காவில் நடை பெற்று வரும் ‘கைப்பற்றுவோம்’ போராட்டங்கள், போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றிற்கு அரபு எழுச்சிதான் காரணம் என்று தற்போது நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் தெரிவிக் கின்றன. கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று துவங்கிய முதலா ளித்துவ எதிர்ப்பு போராட்டங் கள் இன்று வரை அமெரிக்கா வில் தொடர்ந்து நடந்து கொண் டிருக்கின்றன. இந்தப் போராட் டங்களில் ஈடுபட்டதற்காக இதுவரையில் 6 ஆயிரத்திற் கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் தாக்கம் உலகம் முழு வதும் உள்ள பல்வேறு நகரங் களில் எதிரொலித்தன. (மேலும்.....)

மாசி 21, 2012

பிரான்ஸ், பிரிட்டனுக்கான எண்ணெய் ஏற்றுமதி நிறுத்தம் - ஈரான் அறிவிப்பு

பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் நிறுவனங்களுக்கான மசகு எண்ணெய் விற்பனையை ஈரான் நிறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பிரான்ஸ் பிரிட்டனுக்கான எண்ணெய் விற்பனையை நிறுத்தி அதற்கு பதிலாக புதிய வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் விற்க தீர்மானித்துள்ளதாக ஈரான் எண்ணெய் அமைச்சின் இணைய தளத்திற்கு தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, கிறிஸ், போர்த்துக்கல், ஸ்பெயின் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக் கான எண்ணெய் விற்பனையை ஈரான் நிறுத்த வில்லை என குறிப்பிடத்தக்கது. (மேலும்.....)

மாசி 20, 2012

இலங்கைக்கு எதிரான போலி வீடியோ ஆவணத் தயாரிப்பு அம்பலம்

இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச மட்டத்தில் அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்த கும்பல் தொடர்பான தகவல்கள் அம்பலமாகி யுள்ளன. இலங்கையிலிருந்து கனடாவுக்கு அனுப்புவதாக கூறி 269 பேரிடமிருந்து பல கோடி ரூபாவை பெற்றுக் கொண்டு ஆபிரிக்க நாடான டோஹோ மற்றும் மாலிக்கு கொண்டு சென்று கைவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசார ணையின் போதே இந்த தகவல்கள் அம்பலமாகி யுள்ளன. புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய பலரை இவ்வாறு ஏமாற்றி இவர் வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளார். "இலங்கை தமிழ் மக்கள் வாழ்வதற்கு உகந்த நாடல்ல. இங்கு அச்சுறுத்தல்கள் நிறைந்து காணப்படு கின்றன" என்று இங்கிலாந்து சென்றவர்களிடம் வீடியோ ஒளிப்பதிவுகளை செய்துள்ளமையும் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக கொழும்பு மோசடி தடுப்புப் பிரிவின் புல னாய்வு மற்றும் விசேட நட வடிக்கைகளுக்கு பொறுப்பாளர் சப் இன்ஸ்பெக்டர் ஜனக சமிந்த தெரிவித்தார். (மேலும்.....)

மாசி 20, 2012

ஜெனீவாவில் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்

இலங்கைக்கு எதிராகப் பிரேரணை முன்வைத்தால் முறியடிக்க நடவடிக்கை

ஜெனீவாவில் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டவர முயற்சிக்கப்படும் பிரேரணையை முறியடிப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளும் இலங்கைக் குழுவினர் இவ்வார இறுதி யில் ஜெனீவா செல்லவுள்ளனர். வெளிவிவகார அமைச்சு என்ற ரீதியில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவர முயற்சிக்கப்படும் பிரேரணையை முறியடிப்பதற்கான முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். இந்த முயற்சிகளை முறியடிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மனித உரிமைகள் தொடர்பில் தேசிய, சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்படும் தவறான பிரசாரங்களைப் முறியடிப்பதற்காக அமைச்சரவை உபகுழுவொன்று அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே வேளை, இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் உள்ளடங்கலாக 51 பேர் கொண்ட உயர்மட்டக்குழுவொன்று அடுத்தவாரம் ஜெனீவா செல்லவுள்ளது.

மாசி 20, 2012

What is Sri Lanka’s crime to deserve all the threats and accusations by the rich and the powerful?

(Asada M Erpini)

The latest salvo that has been directed at Sri Lanka is from the US Assistant Secretary of State for South and Central Asian Affairs – no stranger to seeing evidence of Human rights violations under every bush in the island – and the State Department’s Undersecretary for Civilian Security, Democracy, and Human Rights. The duo during their 12-14 February visit to Sri Lanka granted an audience to the representatives of the Tamil National Alliance almost as soon as they received their diplomatic clearance to get into the country, met a few other Sri Lankans, as it were, in passing, and, as one would have expected, proclaimed that the US will support a resolution against Sri Lanka that is to be tabled at the UN Human Rights Council later this February. (more....)

மாசி 20, 2012

கொக்கட்டிச்சோலை புனித பிரதேசமாக பிரகடனம்

கொக்கட்டிச்சோலை பிரதேசம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று (17) நடைபெற்ற பட்டிப்பளை பிரதேச ஒருங்கிணைப்பு அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கொக்கட்டிச்சோலை கருணா அம்மான் கலாசார நிலையத்தில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு தலைமை வகித்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக் கொட்டிச் சோலை புனித பிரதேசமாக பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயம் உள்ள பிரதேசத்தில் தேவையற்ற சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இப் பிரதேசத்தில் புதிய மதுபான சாலை களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு தெரிவிக் கின்றனர். இனிமேல் புதிய மதுபான சாலைக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது.

மாசி 20, 2012

1979 க்கு பின்

ஈரான் யுத்தக் கப்பல்கள் சூயஸ் கால்வாய் ஊடாக மத்திய தரைக் கடலுக்கு பயணம்

ஈரானின் போர்க் கப்பல்கள், சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடலுக்கு சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து ஈரான், இஸ்ரேல் இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், “ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, மத்திய ஆசியாவில், பனிப் போரை உருவாக்கும்” என பிரிட்டன் வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹக் எச்சரித்துள்ளார். இந்தியா, தாய்லாந்தில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் ஜோர்ஜியாவில் தாக்குதலுக்கான முயற்சி ஆகியவற்றின் பின்னணியில், ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இந் நிலையில் ஈரானின் ஐ. ஆர். என். ஏ. செய்தி நிறுவனம், வெளியிட்ட செய்தியில் அந்நாட்டின் ஷாகித் காண்டி மற்றும் கார்க் ஆகிய போர்க் கப்பல்கள் சூயஸ் கால்வாயைக் கடந்து மத்திய தரைக் கடலுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மாசி 20, 2012

வன்முறையை கைவிடும்படி சீனா வலியுறுத்து: சிரியாவில் அமெரிக்க விமானங்கள் கண்காணிப்பு

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்தும், எதிர்க்கட்சிகளும், எதிர்த்தரப்பு இராணுவமும் உடனடியாக, வன்முறை அராஜகங்களை நிறுத்த வேண்டும் என, சீன வெளியுறவு துணை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில், ஹோம்ஸ் நகரில் ஜனாதிபதியின் இராணுவம் குண்டு மழை பொழிந்தது. இதில், எத்தனை பேர் பலியாகினர் என்பது தெரியவில்லை. சிரியாவில், மக்கள் மீது ஜனாதிபதி அசாத்தின் இராணுவம் நடத்தி வரும் வன்முறை அராஜகங்களுக்கு, ஐ.நா. பொதுச் சபையில் கண்டம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிரிய நிலவரத்தை நேரில் அறிவதற்காக, சீன வெளியுறவு துணை அமைச்சர் ஜாய் ஜுன் நேற்று முன்தினம் தலைநகர் டமாஸ்கஸ் சென்றார். அங்கு சிரிய வெளியுறவு துணை அமைச்சர் பைசல் மெக்தத்தை சந்தித்தார் தொடர்ந்து ஜனாதிபதி அசாத்தையும் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, ஜுன் அளித்த பேட்டியில், “சிரியாவில் அனைத்துத் தரப்பினரும், தங்கள் வன்முறைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதுதான், சீனாவின் நிலைபாடு. அதேநேரம் ஜனாதிபதி அறிவித்துள்ள புதிய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கான பொது வாக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்த பாராளுமன்ற தேர்தல்கள் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் என நம்புகிறோம்” என்றார்.

மாசி 20, 2012

நம்மைப் பற்றி பேசும் “தோனி”!

பிரகாஷ் ராஜ் முதன் முதலில் இயக்குநர் பொறுப் பேற்றுத் தயாரித்து வழங் கியிருக்கும் படம் தோனி . இன்றைய கல்வி முறையின் தொடர் பாதிப்புகளைக் காட்டமான விசாரணைக்கு உட்படுத்துகிறது இந்தப் படம் . சமகாலத்தில் பெற் றோரையும், சமூகத்தையும் குழந்தைக்கு நேர் எதிராக நிற்க வைக்கும் கல்வி அணு குமுறை குறித்துச் சாட்டை யடியாக விவாதங்களை தோனி முன்வைக்கிறது. பதினேழாம் வாய்ப்பாடு தெரியாது. இரண்டு பக்க அறிவியல் பாடத்தை எந்தக் காலத்திலும் மனப்பாடம் செய்ய முடியாது. ஒரு பாடத்திலும் பாஸ் மார்க் கூட அல்ல, ஒற்றை இலக் கத்திற்கு மேல் மார்க் வாங்க இயலாது. இப்படியான மாணவனை ஒன்பதாம் வகுப்பு வரை அரசு விதிக ளின் படி தாங்கிவந்த பள் ளிக் கூடம், அதற்குமேல் படி ஏறாவிட்டால், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு பாஸ் சதவீதத்தைக் குறைத்து, பள்ளியின் பெரு மையைச் சிதைத்து, அடுத்த டுத்து புதிய மாணவர் சேர்ப்பு விகிதத்திலும் கை வைத்துவிடும் அபாயம் உண்டு என்பதால், பெற் றோர் அவர்களாகப் ஒன்பதாம் வகுப்பிலேயே பையனைத் தங்கவைத்து விட விண்ணப்பம் கொடுக்க வேண்டும் அல் லது டி சி வாங்கிக் கொண்டு வேறு பள்ளிக்கு ஓடிவிட வேண்டும். (மேலும்.....)

மாசி 20, 2012

ஜெர்மனி ஜனாதிபதி பதவி விலகினார்

தொழிலதிபர்களுடன் முறையற்ற வகையில் தொடர்பு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நெருக் கடியில் உள்ள ஜெர்மனி ஜனாதிபதி கிறிஸ்டியன் ஷல்பை விசாரிப்பதில் தடை உள்ளதால் அவரை பதவியை விட்டு நீக்க வேண்டும் என நாடாளு மன்றத்தை விசாரணையா ளர்கள் கேட்டு கொண்ட நிலையில், ஜனாதிபதி பதவி விலகினார். மக்களின் முழு நம்பிக்கையைப் பெற்ற ஜனாதிபதி, ஜெர்மனிக்குத் தேவை என்பதால், தாம் பொறுப்பில் இருந்து விடுபடுவதாக அவர் தெரி வித்தார். முழுமையான விசார ணை மூலம் தம் மீதான குற்றச்சாட்டில் இருந்து விலக முடியும் என அவர் கூறினார். ஐரோப்பிய பொருளா தாரப் பிரச்சனை இடையே, பணக்காரர்களுடன் முறை கேடான உறவுகளை மேற் கொண்ட ஜனாதிபதி நட வடிக்கையால் அதிபர் ஏஞ் சலா மெர்கெலின் அரசு, மேலும் பிரச்சனையில் தவித்துள்ளது. மார்டெல், வெள்ளிக்கிழமை இத்தாலி பிரதமர் மரியோ மான்டி யுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஷல்ப் ராஜினா மாவால் மெர்கெல் பய ணத்தை தள்ளிவைத்தார். திங்கட்கிழமை (பிப்.20) பிரஸ்சல்ஸ்நகரில் ஐரோப் பிய நிதியமைச்சர்கள் கூட் டம் நடக்கிறது. இதில் அதி பர் கலந்து கொள்கிறார். ஷல்ப் ராஜினாமா விவகா ரம் ஜெர்மனியின் புகழை ஐரோப்பிய நாடுகளில் குறைத்துள்ளது மெர்க லுக்கு மனப்புழுக்கத்தை யும் தந்துள்ளது. இரண்டு ஜனாதிபதிகளை அவர் தொடர்ந்து இழந்துள்ளார்.

மாசி 20, 2012

புதிய போர்க்குற்ற ஆவணத்தை "சனல் 4' அடுத்த வாரம் வெளியிடும் _

"இலங்கையில் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி, இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை வெளிப்படுத்தும் மற்றொரு ஆவணப்படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளது. சனல் 4 வெளியிட்ட "இலங்கையில் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்தி வழங்குனரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த ஆவணப்படம் வெளியிடப்படவுள்ளதாக இலங்கை அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, சனல் 4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்ச்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், "இலங்கையின் கொலைக்களங்கள்' ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை புதிய போர்க்குற்ற ஆதாரங்களுடன் வெளியிடப் போவதாக கூறியிருந்தது. ___

மாசி 19, 2012

எமக்கு வழங்க வேண்டிய உரிமையைப் பறிக்கும் நாடு நகர திருத்த சட்டமூலத்தை முற்றாக எதிர்ப்போம்  - கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைரெட்ணம் (பத்மநாபா ஈபிஆர்எல்எவ்)

சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கிழக்கு மாகாண சபையில்  எமக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை பறிக்கப் போகின்ற நாடு நகர திட்டமிடல் திருத்த சட்டமூலத்தை நிராகரியுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் குறித்த ஒத்திவைக்கப்பட்ட விவாதம் எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர்  வெளியிட்டுள்ள  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; 13 ஆவது திருத்தச் சட்டமூடாக, மாகாண சபைக்கு வழங்கப்பட்ட வழங்க வேண்டிய அதிகாரங்களையும் ஏனைய அதிகாரங்களையும் மத்திய அரசின் புத்தசாசன அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கும் கையகப்படுத்துவதற்குமாக 31012012 அன்று செவ்வாய்க்கிழமை நாடு நகரத் திட்டமிடற் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான தொரு சட்ட மூலத்தை புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு கிழக்கு மாகாண  ஆளுநர்  ஊடாக கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு சமர்ப்பித்துள்ளது. (மேலும்.....)

 

மாசி 19, 2012

பிரபாகரனின் மரணத்தில் மகிழ்வடைந்த ராகுல் காந்தி?

தந்தையின் படுகொலையால் ஆத்திரமாம்! - விக்கிலீக்ஸ்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்துக்காக காங்கிரஸ் கட்சி தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்று அமெரிக்காவுக்கு தெரிய வந்துள்ளது. பிரபாகரனின் மரணத்தைக் காண்கின்றமைக்கு ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் தலைமையின் ஒரு பிரிவினர் காத்து இருந்தனர் என்றும் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலைக்கு பழிவாங்க கறுவிக்கொண்டு இருந்தனர் என்றும் தி. மு. க. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தயாநிதி மாறன் அமெரிக்காவின் சென்னைத் துணைத் தூதரக அதிகாரிகளுக்கு தெரிவித்து இருந்தார் என துணைத் தூதரகத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு நவம்பர் 03 ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் உள்ளது. இதனால் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ¤க்கும் தி. மு. க.வுக்கும் இடையில் பிளவு காணப்படுகின்றது என்றும் மாறன் சொல்லி இருக்கின்றாராம்.

மாசி 19, 2012

வாழ்வு தருவாயோ.....?

மாசி 19, 2012

பேச்சுவார்த்தை குறித்த சில கேள்விகள்

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுகள் ஐம்பது ஆண்டுகளாகப் பல்வேறு காலகட்டங்களிலும் நடைபெற்றுள்ளன. இந்தப் பேச்சுகளில் வெவ்வேறு தலைமைகள் பங்குபற்றி யிருக்கின்றன. இந்தப் பேச்சுகளின் விளைவாகப் பல உடன்படிக்கைகள் எட்டப்பட்டுமுள்ளன. ஆனால், அந்த உடன்படிக்கைகள் பின்னர் வலுவற்றதாகி செயலிழந்தன அல்லது மீறப்பட்டன. சில பேச்சுகள் முன்னகர முடியாமல் இடைமுறிந்ததும் உண்டு. உள்ளரங்கில் மட்டுமல்ல, அதற்கப்பால், வெளியே பிராந்திய அரங்கில் இந்திய மத்தியஸ்தத்துடனும் சர்வதேச அரங்கில் நோர்வேயின் மத்தியஸ்தத்துடனும் பேச்சுகள் நடைபெற்றுள்ளன. இவ்வளவும் நடந்தபோதும் அடிப்படையில் எந்தப் பேச்சும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்ந்ததாகவோ, சமூகங்களுக்கிடையில் நம்பிக்கையை உருவாக்கியதாகவோ இல்லை. (மேலும்.....)

மாசி 19, 2012

வடக்கின் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் சர்ச்சை!

வடமாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் தெரிவில் தமிழ்த் தேசிய கூட் டமைப்பின் தலைவர்களிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. குறிப்பாக மாவை சேனாதிராஜா எம்.பிக்கும், சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பிக்குமிடையே கடுமையான போட்டி காணப்படு கிறது. இதனால் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு பெரும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. ஒருவரை ஆதரித்தால் மற்றவருடன் பகைத்துக் கொள்ள நேரிடும் என்பதால் அவர் மெளனம் சாதித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இவர்களது போட்டியைப் பாவித்து மூன்றாவது நபர் ஒருவர் தான் முதலமைச்சர் வேட்பாளராக வருவதற்கு முனைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாசி 19, 2012

பெப்ரவரி மாத நிகழ்வு!

யோ.கர்ணனின் படைப்புலகமும் ,மற்றும்ஜெனிவாவில், இலங்கை தொடர்பான போர்க்குற்றமும் மனித உரிமை விவகாரமும் எனும் தலைப்பிலான அரசியல் உரையாடலும்!

மாதமொருமுறை தொடர்ச்சியான சந்திப்பு,உரையாடல் அரங்கம் ஒன்றினை சாத்தியப்படுத்தும் முயற்சியில் பல்வேறு கருத்துநிலை,பார்வை கொண்டோர்களிடையே பல்துறைசார்ந்து உரையாடுவதனை நோக்காகக் கொண்டு இம்மாதம் மூன்றாவது சந்திப்பு அரங்கினை ஒழுங்குபடுத்தி உள்ளோம். இம்முறை முள்ளிவாய்க்கால் துயரின் நேரடி சாட்சியாளர்களில் ஒருவராகவும் அத்துயரையும் அந்த வலியை அடைவதற்கான அரசியலையும், அதிகார மையங்களையும் தனது எழுத்தின் ஊடாக பதிவு செய்யும், ஒரு காலகட்டத்தின் சிதைந்தழிந்த வாழ்வின் கதைசொல்லியான யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத் துணி", "சேகுவரா இருந்த வீடு" ஆகிய அவரது இரு சிறுகதைத் தொகுதிகளை முன்வைத்து முதலாவது அமர்வும் கருத்துரையும் இடம்பெற உள்ளது. இரண்டாவது அமர்வாக, ஜெனிவாவில், இலங்கை தொடர்பான போர்க்குற்றமும் மனித உரிமை விவகாரமும் எனும் தலைப்பிலான அரசியல் உரையாடலும் கருத்துப் பகிர்வும் இடம்பெற உள்ளது. (மேலும்.....) 

மாசி 19, 2012

கிரிக்கட் போட்டியின் போது புலிக்கொடியை காட்டியவர் கைது

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கட் போட்டியின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் கொடியை காட்டியவா கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் இன்று சிட்னியில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியின் போது, நபர் ஒருவர் புலிக்கொடியை அசைத்துள்ளார். இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய போது புலிக் கொடி அசைக்கப்பட்டது. குறித்த நபரை அவுஸ்திரேலிய காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து இலங்கை ரசிகர்கள் இருந்த பகுதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேவேளை, சி.பீ கிண்ண முக்கோன ஒருநாள் போட்டித் தொடரில் இலங்கை அணி முதல் வெற்றியை நேற்று பதிவு செய்து கொண்டது. அவுஸ்திரேலிய அணியை எட்டு விக்கட்டுகளினால் வீழ்த்தி இலங்கை நேற்று வெற்றியீட்டியது.

மாசி 19, 2012

எந்தவொரு இணக்கத்திற்கும் வரமுடியாது 10 வருடங்களுக்கும் மேலாக தொடரும் பேச்சுவார்த்தை?

TNA - SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிருப்தி, சந்தேகம், கவலை!

இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தையை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இதுவரை தமக்கிடையே ஒரு நிலையான நிலைப்பாட்டிற்கோ அல்லது ஒரு இறுதியான தீர்மானத்திற்கோ வரமுடியாத நிலையில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தை எவ்வாறு ஒரு முடிவிற்கு வரமுடியும் எனும் சந்தேகம் எழுந்துள்ளது. (மேலும்.....)

மாசி 19, 2012

அரசனை நம்பி புரு'னை கைவிட்ட நிலையாக அமைந்துவிடக் கூடாது!

சர்வதேசம், சர்வதேசம் என்று கூறிக் கொண்டே இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் விடயத்தை பின்தள்ளிக் கொண்டு செல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் பிரதேசங்களில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழும் சூழலைத் தோற்றுவிக்கும் முயற் சிகளில் தோல்வியைக் கண்டுவருகிறது. முப்பது வருடங்களாக புலிகளை நம்பி ஏமாந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழர்கள் இன்னும் முப்பது வருடங்கள் இந்த தமிழ்க் கூட்டமைப் பினரை நம்பி ஏமாற வேண்டுமென்பது அவர்களது தலையெழுத்தாக அமைந்துவிட்டது போலவே தெரிகிறது. யுத்தம் முடிவடைந்து மூன்று வருடக்களாகியுள்ள போதிலும் ஆரம் பக் கட்டத்தைக் கூட எட்டமுடியாத நிலையிலேயே தீர்வுக்கான முயற்சிகள் உள்ளன. (மேலும்.....) 

மாசி 19, 2012

An Observation on Dr. Pakiasorthy Saravanamuttu’s Talk on 7 February 2012, in Ottawa

I promised you to provide a post-mortem according to my observations on Dr. Pakiasorthy Saravanamuttu’s (PS) talk on post-War Sri Lanka, “Human Rights and Reconciliation Process in Sri Lanka: Domestic and International Dimensions”, at Amnesty International Headquarters in Ottawa on February 7, 2012.  I have been quite busy with the manuscript for my next book of poetry, and hence this delay.Knowing that PS is a Tamil, I understand why he is an ardent supporter and batting for the Tamils in the North and East of the island which they claim to be their ‘homeland’.  You did notice, I hope, that PS didn’t have to bat for the Tamils in the South, in particular those in the capital Colombo of which he is one, as they will turn around and tell him,  “We are alright  Pakiasorthy, why don’t you keeping lobbying around the world to claim the North and East for us as we are blazing ahead to colonize Sri Lanka’s capital region, Colombo and its surroundings as 41% of the population of Colombo are our Tamil people and we have bought and own 75%  of the prime real estate in Wellawatte, the rich suburb of Colombo and keeping away the Sinhalese from renting annexes, flats,  and room in our houses.!” (more....)

மாசி 19, 2012

காணி, பொலிஸ் அதிகாரங்களைதரமாட்டார்கள் என்று நினைத்து கேட்காமல் இருந்துவிட முடியாது - கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன்

ஒரு காலத்தில் பிள்ளையான் என்றால் கிழக்கில் படபடக்கும். (தற்போதும்தான்) முதலமைச்சரான புதிதில் ப்பூ... இவரா என்றுகூடச் சிலர் நினைத்திருக்கலாம். ஆனால், கடந்துவிட்டிருக்கும் இந்த நான்கு ஆண்டுகாலம் கிழக்கில் வாழும் சகல மக்களுக்கும் ஒரு பொன்னான காலமாகத்தான் இருக்கிறது என்கிறார் முதலமைச்சர் சந்திரகாந்தன். யாருமே நினைத்தும் பார்த்திராத அளவுக்கு அரசியலை அக்குவேறு ஆணி வேறாக்கிப் பிய்த்து வைக்கிறார். போராட்ட காலம், அதற்குப் பின்னரான காலம் என்று பார்த்தால் சகல துறைகளிலும் தன்னையும் வளர்த்து தமிழ்ச் சமூகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துபவராகத் திகழ்கிறார் என்பதை கடந்த வாரம் தேசிய வானொலியில் ஒலிபரப்பான ஓர் அரசியல் கலந் துரையாடலில் தெட்டத் தெளிவாகப் புரிய வைக்கிறார் முதலமைச்சர். ஏ.எம்.தாஜின் நெறிப்படுத்த லில் மக்கள் அவரிடம் எழுப்பிய சகல கேள்விகளுக்கும் அணுவும் பிச காமல் பதில் அளித்தார் முதலமைச்சர். (மேலும்.....)

மாசி 19, 2012

விசுவமடுப் பயணத்தில் கிடைத்த புதிய அனுபவங்கள்

உங்களால் சகல மக்களையும் சில சமயங்களில் ஏமாற்றலாம். அதேபோல் உங்களையும் சில மனிதர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் ஏமாற்றக்கூடும். ஆனால் உங்களால் சகலரையும் எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏமாற்ற முடியாது. பேர்னாட் ஷோ என்ற எழுத்தாளர் ஒரு சந்தர்ப்பத்தில் கூறிய அந்த பெறுமதிமிக்க வார்த்தைகள், எல்.ரீ.ரீ.ஈ. அன்று ஏமாற்றிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களின் மத்தியில் நாம் சந்தித்த நாட்டுப்பற்றுள்ள தமிழ் மக்களினால் தான் எமது மனதில் மீண்டும் மீண்டும் உறுதியாக்கப்பட்டது. “ஐயா எந்த நாளும் தீவுகளின் மக்கள் வாழ்க்கையைப் பற்றி தேடிக்கொண்டிருக்காமல் தரைமார்க்க இடங்களையும் கொஞ்சம் சுற்றிப் பாருங்க. அன்றைக்கு இந்த பயங்கரவாதிகள் எமது பயிர் நிலங்களையும் அழிவுக்குட்படுத்தினார்கள். கிராமங்களை எரித்தார்கள். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்துக்கு உதவிய அப்பாவி தமிழ் மக்களுக்கு சொல்ல முடியாத வகையில் துன்பங்களை இழைத்தார்கள். கடைசியில் இவர்கள் சரியாகச் சாப்பிடக் கூட வழியில்லாதிருந்த அந்த அப்பாவி மக்களை ஒரு குவியலாக வைத்து கொலை செய்தனர்.” (மேலும்.....) 

மாசி 19, 2012

ஹொண்ராஸ் சிறை தீ பொறியில் விழுந்த கைதிகள்

ஹொண்டூராஸ் சிறையில் எழுந்த தீ 358 பேரின் உயிரைக் காவுகொண்ட போது எத்தனையோ உறவுகளின் இதயங்களை வேரறுக்கச் செய்தது. சென்ற செவ்வாய்க்கிழமை இரவு 10.30 மணிக்கு ஹொன்டூராஸின் கொமாயகுவா சிறையில் வெகுண்டெழுந்த தீ சுமார் மூன்று மணிநேரம் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி முழு மூச்சுடன் பெரும் சுவாலைகளைக் கிளப்பியெரிந்தது. செய்தி கேட்ட உறவினர் அயலவர்கள் எல்லோரும் ஆலாய்ப் பறந்து வந்து பார்த்தபோது சிறைக்குள்ளே அமர்க்களமும் அவலக்குரலும் உயிரைக் கையிலே பிடித்துக் கொண்டு வெளியே தாவிப்பாய்ந்து தப்பித்துக் கொள்ள முயன்றோர் சிறையில் வைத்து எரிக்கப்பட்ட சடலங்கள் போல் கருகிமாண்டனர். களவு, கொள்ளை, கப்பம், கொலை போன்ற குற்றங்களுக்காகத் தண்டனை விதிக்கப் பட்டோர் வாழும் இடமே சிறைச்சாலை. வாரக்கணக்கில் மாதக்கணக்கில் வருடக்கணக்கில் இன்னும் ஆயுள் தண்டனைக்கும் உள்ளானாரே இச்சிறையிலிருந்தனர். அச் சிறையில் தீ யேற்பட்டதால் ஆயுள்தண்டனை பெற்ற சிலர் தப்பி யோடியும், மாத வருடக்கணக்கில் அடைக்கப்பட்டோர் வாழ்வேயில்லாமல் சிறைக்குள் சாம்பலானதும் இறைவனின் ஏற்பாடே. என்ன வடிவில் ஆண்டவனின் இந்த ஏற்பாடு வந்ததோ தெரியாது. (மேலும்.....)  

மாசி 18, 2012 

வியட்னாம், கொரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில்

யுத்தக் குற்றங்கள் புரிந்த சில மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்த முயல்கின்றன

 இலங்கைக்கு எதிரான மேலைத்தேய சக்திகளின் சதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் துணை போவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும குற்றஞ்சாட்டி யுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான ஆவணமொன்றை எதிர்க்கட்சித் தலைவர் கடந்த 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதில் சனல்-4 குற்றச்சாட்டு தொடர்பாகவும், 2002இல் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இந்த செய்தி சிங்கள ஊடகங்கள் எதிலும் பிரசுரமாகவில்லை. இந்த விடயத்தின் பின்னணி குறித்து பாரிய சந்தேகம் எழுகிறது. ஐ.தே.க. தலைவர் பாரிய காட்டிக்கொடுப்பொன்றை செய்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவரா? இலங்கை நாட்டவரா? என்ற சந்தேகம் எழுகிறது. மார்ச் மாதம் இலங்கையை பலி எடுக்கும் மாதம் என சில சர்வதேச தரப்புகள் முன்கூட்டி ஆரூடம் தெரிவித்துள்ளன. வியட்னாம், கொரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் யுத்தக் குற்றங்கள் புரிந்த சில மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்த முயல்கின்றன. சர்வதேச சக்திகளின் இந்த முயற்சிக்கு ஐ.தே.க. தலைவர் தனது செயலினூடாக அழைப்பு விடுத்துள்ளார் என்றும் கூறினார்.

மாசி 18, 2012 

மீனவர்கள் கொலை

இத்தாலி கப்பல் ஊழியர்களிடம் விசாரணை

2 இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற இத்தாலிக் கப்பல் நேற்று கொச்சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு அதன் ஊழியர்களிடம் பொலிசாரும், கடலோரப் பாதுகாப்புப் படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொச்சி எண்ணெய் முனையத்தில் அந்த கப்பல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னதாக கடல் கொள்ளையர்கள் என்று நினைத்து இந்திய மீனவர்கள் சென்ற படகை நோக்கி அந்த கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 மீனவர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த கப்பலை இந்திய கடலோரக் காவலப்படையினர் சுற்றி வளைத்தனர். மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கப்பல் ஊழியர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாசி 18, 2012 

ஏகாதிபத்தியத்தின் எண்ணெய் வெறியால் போர்மேகம் சூழ்கிறது  ஈரானை எந்த நேரமும் தாக்க அமெரிக்கா முஸ்தீபு  ரஷ்யா எச்சரிக்கை

சர்வதேச விதிமுறைகளை மீறி, போர் வெறியுடன் ஈரான் மீது அமெ ரிக்கா தாக்குதல் நடத்துமானால், அது ரஷ்யாவின் தெற்கு பிரதேசங்கள் அனைத்தையும் போர்ச்சூழலுக்குள் தள்ளும் என்றும், இதையடுத்து மிகப் பெரும் போராக அது மாறும் என்றும் ரஷ்ய ராணுவத்தளபதி ஜெனரல் நிகோ லாய் மக்கரோவ் எச்சரிக்கை விடுத் துள்ளார். இன்னும் சில மாதங்களில் ஈரான் மீது போர் தொடுப்பதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் அமெரிக்கா மேற் கொண்டிருக்கிறது என்று அவர் எச்ச ரித்தார். அமெரிக்கா தாக்குமானால், அதே அளவுக்கு ஈரானும் பதிலடி கொடுக்கவும் தயாராகி வருவது தெரி கிறது என்றும் அவர் கூறினார். (மேலும்...)

மாசி 18, 2012 

கொழும்பு வெளிச்சுற்று வட்ட பாதை

இரண்டாம் கட்ட நிர்மாண பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்

கொழும்பு வெளிச்சுற்று வட்டப் பாதையின் இரண்டாம் கட்டப் பணிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று கடவத்தை நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளன. கடுவளையில் இருந்து கடவத்தை வரையான 8.9 கிலோமீட்டர் பாதை ரூ. 44.88 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இப்பணி 3 கட்டங்களாக முன்னெடுக் கப்பட உள்ளதோடு, ஜய்கா நிறுவனம் இதற்கு நிதி உதவி வழங்குகிறது. முழு சுற்று வட்டப்பாதை 29.1 கிலோ மீட்டர் நீளமானது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலை என்பன இங்கு இணைகின்றன. இதற்கு 24.9 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

மாசி 18, 2012 

மருதநாயகத்தில் ரஜினி - கமல் இணைவு

‘விஸ்வரூபம்’ படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல் இயக்க இருக்கும் பிரம்மாண்டமான படம் ‘மருதநாயகம்’. மருதநாயகம் படத்தின் ஆரம்பக் கட்ட பணிகள் 1997 ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அதற்கான தயாரிப்பு செலவுக்கு பணப் பற்றாக்குறையால் படம் அப்போதைக்கு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இப்போது கமல் அப்படத்திற்கான பணிகளில் ஈடுபட தயாராக உள்ளார். படத்தின் இப்போதைய பட்ஜெட் 150 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘மருதநாயகம்’ படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார். ‘மருதநாயகம்’ படத்தில் ரஜினிகாந்திற்கு ஏற்ற பாத்திரம் ஒன்று இருக்கிறதாம். ‘பல வருடங்களுக்கு முன் நானும், ரஜினியும் இணைந்து நடித்தோம். அதன் பின்னர் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பதற்கேற்ற கதையோடு யாரும் எங்களை அணுகவில்லை. இப்போது நானே அதைச் செய்துவிட்டேன்.’ என கமல் தெரிவித்துள்ளார். ரஜினியும், கமலும் இணையும் இப்படத்தை திரையில் விரைவில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

மாசி 18, 2012 

கரைதுறைபற்று, புதுக்குடியிருப்பில் புதிய வாக்களிப்பு நிலையங்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடத்துவதற்காக புதிய வாக்களிப்பு நிலையங்களை ஸ்தாபிக்க தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது. யுத்தம் காரணமாக வாக்களிப்பு நிலையங்கள் அழிந்துள்ள நிலையில் புதிய வாக்களிப்பு நிலையங்களை அமைக்க வேண்டிய பிரதேசங்கள் குறித்து அடுத்த வாரம் விசேட ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதற்காக தேர்தல் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று 22ம் திகதி முல்லைத்தீவு செல்ல உள்ளதாக உதவித் தேர்தல் ஆணை யாளர் மொஹமட் கூறினார். இதன் போது வாக்களிப்பு நடத்துவதற்கு ஏற்ற புதிய வாக்களிப்பு நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவை வர்த்த மானி அறிவித்தல் மூலம் வெளியிட ப்பட உள்ளன. மிதிவெடி அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில் இரு உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன. மேற்படி இரு உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் மார்ச் 24ம் திகதி நடைபெற உள்ளது.

மாசி 18, 2012 

ஆப்கன் அரசு சார்பில் தலிபான்களுடன் அமெரிக்கா பேச முடியாது - கர்சாய்

ஆப்கானிஸ்தான் அரசு சார்பில் தலிபான் தீவிரவாதி களுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தமுடியாது என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் வெள்ளிக்கிழமை கூறினார். தீவிரவாதக் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் இடத்தை தமது நாட்டு அரசு மட்டுமே முடிவு செய்ய முடி யும் என்றும் அவர் கூறினார். தங்கள் நாட்டு விஷயத் தில் அமெரிக்கா குறுக்கிட முடியாது என்பதை, கர் சாய், திட்டவட்டமாகத் தெரிவித்தார். (மேலும்...)

மாசி 18, 2012 

அபிவிருத்தி பணிகளின் போது மழை நீரை அகற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கையில் நகரப்புறங்களிலும் பின்தங்கிய கிராமங்களிலும் இன்று அபிவிருத்திப் பணிகள் துரித வேகமாக வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டு வருகின்றன. நகரங்களில் பல அடுக்குமாடிக் கட்டி டங்கள் வானத்தை தொடும் அளவிற்கு உயரமாக நிர்மாணிக்கப்பட்டுள் ளன. வீதிகளின் அகலம் விஸ்தரிக்கப்பட்டு, இரட்டை வழிப் பாதையில் எதிரும், புதிருமான வாகனங்கள் கூடுதலாக செல்லக்கூடியதாக நாடெ ங்கிலும் உள்ள வீதிகள் இப்போது நெடுஞ்சாலைகளாக மாறியுள்ளன. இந்த அபிவிருத்தி பணி நகரங்களில் மட்டுமன்றி கிராமங்களிலும் குறி ப்பாக பின்தங்கிய கிராமங்களிலும் இப்போது தங்கு தடையின்றி மேற் கொள்ளப்படுகின்றன. இதனால், இன்று நகரங்களில் மட்டுமன்றி கிரா மங்களிலும் வர்த்தகம், தொழில்துறை, சுயவேலைவாய்ப்புத் துறை ஆகி யன பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளன. (மேலும்...)

மாசி 18, 2012 

தொழிலாளர் வேலைநிறுத்தம்

பிராங்க்பட்டில் 300 விமானங்கள் ரத்து

ஐரோப்பாவின் 3வது மிகப் பெரிய விமான நிலையமான ப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் காரணமாக 300க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப் பட்டன. இது குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு நிறுவனமான ப்ராபோர்ட் ஏஜி கூறுகையில், மொத்தம் இயக்கப்பட வேண்டிய 1300 விமானங்களில் 300க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று இயங்கவில்லை என்றார். ஊதிய பிரச்சினை காரணமாக விமான நிலைய ஜி.சி.எஃப். வர்த்தக ஒன்றியம் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது. தொழிலாளர்கள் கேட்கும் ஊதியம் மிகவும் அதிகமாக உள்ளது என ப்ராபோர்ட் கூறியுள்ளது.

மாசி 18, 2012 

மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு கப்பல் மோதி விபத்து

சீனாவில் கடலில் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மற்றொரு சரக்கு கப்பல் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் தெற்கு சீன கடலில் இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சரக்கு கப்பல் கடல் சீற்றத்தின் காரணமாக விபத்துக்குள்ளாகி மூழ்கி கொண்டிருக்கிறது. இந்த கப்பலில் இருந்த எட்டு பேர் கடலில் அடித்து செல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதே வழியாக வந்த மற்றொரு சரக்கு கப்பல் மூழ்கி கொண்டிருந்த கப்பல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் இருந்த 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காணாமல் போன மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.

மாசி 18, 2012 

இஸ்ரேல் அதிகாரிகள் மீது தாக்குதல், ஹிஸ்புல்லா மறுப்பு

இஸ்ரேல் அதிகாரிகள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தவில்லை என்று ஹிஸ்புல்லா இயக்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவிலும், ஜோர்ஜியாவில் அண்மையில் இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் மற்றும் அதன் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இயக்கம்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் இத்தாக்குதலுக்கு தாங்கள் எந்தவிதத்திலும் காரணமல்ல என்று லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லா மறுப்பு தெரிவித்துள்ளார். எங்களது இலக்கு இஸ்ரேல் வீரர்களோ அல்லது தூதர்களோ அல்ல யார் உண்மையான இலக்கு என்பது அவர்களுக்கே தெரியும். அவர்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அவர்களுக்கு நான் கூறிக்கொள்வதெல்லாம் இமாத் முக்னி படுகொலைக்கு ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஒருநாள் பழிவாங்குவார்கள் என்றார்.

மாசி 18, 2012 

இலங்கையில் நீரிழிவு நோய் தாக்கம் அதிகரிப்பு

உணவுப் பழக்கவழக்கங்களும் உடல் உழைப்பற்ற சொகுசு வாழ்க்கையுமே காரணம் என்கின்றனர் வைத்தியர்கள். நீரிழிவு நோய் இன்று இலங்கை மக்களுக்கு வயது பாரபட்சமின்றி அனைவரும் பேராபத்தை உண்டுபண்ணக்கூடிய அளவுக்கு வியாபித்துக்கொண்டிருக்கின்றது. இரண்டு வகை நீரிழிவு நோய்கள் பெரும்பாலும் நம்நாட்டு இளம் சந்ததியினரைப் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன. தெற்காசியாவில் சிறுபிள்ளைகளுக்கும் இளைஞர் யுவதி களுக்கும் நீரிழிவு நோய் அதிகமாக காணப்படுகின்றது என்ற தகவல் சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. இதன் அடிப்படையில் இலங்கையின் சிறுபிள்ளைகளும் இளம் வயதினரும் நீரிழிவு நோயினால் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றார்கள். இதுவரை காலமும் தெற்காசிய நாடுகள் நீரிழிவு நோய் அதிகமாக இல்லாத ஒரு பிராந்தியமாக விளங்கி வந்தது. அதற்கு சுமார் ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் நம்நாட்டு மக்கள் குரக்கன், சாமை, வரகு மற்றும் தவிட்டரிசி போன்ற உடல் ஆரோக்கியத்துக்கு வலுவூட்டும் உணவுகளை உண்டமையே காரணமாகும். (மேலும்...)

மாசி 18, 2012 

திருமணம் செய்வோருக்கு சவூதியில் புது கட்டுப்பாடு

சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பம் நடத்துவது குறித்து வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களை மட்டும், திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது தொடர்பாக, சவூதி அரேபிய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. சவூதி அரேபியாவில் தற்போது, குடும்ப சண்டை அதிகரித்து வருகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆண்கள் சிலர், பெண்களின் கன்னித் தன்மை பரிசோதனை குறித்து மருத்துவ அறிக்கையை கேட்கின்றனர். இது போன்ற பிரச்சினைகளையெல்லாம் குறைக்க, திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியினருக்கு திருமணத்துக்கு முன்பாக, சண்டை சச்சரவு இல்லாமல் குடும்பத்தை நடத்துவது குறித்து மேலாண்மை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே திருமணம் செய்து கொள்ள அனுமதிப்பது குறித்து, சவூதி நீதித்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது. நீதித்துறை அமைச்சகத்தின் இந்த திட்டத்துக்கு , சமூகத்துறை அமைச்சகம் ஒத்துழைப்பு அளிக்க உள்ளது.

மாசி 18, 2012 

பாங்கொக் குண்டு வெடிப்பு, 5வது ஈரானியருக்கு பிடியாணை

பாங்கொக்கில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புபட்ட 5வது ஈரானியர் ஒருவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. கடந்த வாரம் பாங்கொக்கில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று ஈரானியர்கள் தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் குண்டுவெடிப்புக்கு இலக்கான 28 வயதான சயிட் பொராடி என்பவருடன் 42 வயதான மொஹம்மத் ஹஸாய், ஆகியோர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டதோடு, மஸ¤த் செட கட்சடா என்ற 31 வயதான மற்றுமொரு ஈரானியர் மலேஷியாவில் கைதானார். அத்துடன் ரொஹானி லைலா என்ற பெண் ஒருவரும் இச்சம்பத்துடன் தொடர்பு பட்டவர் என தாய் லாந்து பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர். இவரும் ஈரான் நாட்டவர் ஆவார். இந்நிலையில் நிக்கா பார்ட் ஜவட் என்ற 52 வயதான மற்றுமொரு ஈரான் நாட்டவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற ஈரானியர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் இவரும் இருந் துள்ளார். மேற்படி சந்தேக நபர்கள் இஸ்ரேல் ராஜதந்திரிகளை இலக்குவைத்து தாக்குதல் நடத்த முற்பட்டிருக்கலாம் என தாய்லாந்து பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இதனையொட்டி இத்தாக்குதலின் பின்னணியில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பு இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் இரு தரப்பும் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளன.

மாசி 18, 2012 

ஈரான் தொடர்பில் தீர்வுக்கு இன்னும் நேரம் உள்ளது  - அமெரிக்கா

அணு ஆயுத விவகாரத்தில் ஈரானுடன் சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்க இன்னும் நேரம் உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், சர்வதேச அளவில் நல்ல முறையிலான தீர்வு காண ஈரான் விரும்பினால், அதனை தூதரக அளவில் தீர்வு ஏற்படுத்துவதற்கான நேரம் மற்றும் அவகாசம் உள்ளதாக கூறியுள்ளது. மேலும் ஈரானுக்கு ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் எழுதப்பட்ட கடிதம் எங்களுக்கும் கிடைத் துள்ளது. அந்த கடிதத்திற்கு ஈரான் பதில் வழங்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த நேரத்தில் கடிதம் தொடர்பாக எந்தவித பதிலும் வழங்க விரும்ப வில்லை என கூறினார்.

மாசி 18, 2012 

மட்டு. படுவான்கரையில் கம்பியாற்றுக்கு குறுக்கே ரூ. 11 கோடி செலவில் பாலம்

மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரையின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கம்பியாறுக்கு குறுக்காக 1100 இலட்சம் ரூபா செலவில் பாலம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. கடந்த 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்த நிலைமை காரணமாக கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட பிரதேசங்களில் இப்பிரதேசமும் ஒன்றாகும். மேற்படி பாலம் அமைக்கப் படுவதன் மூலம் ஆணை கட்டியவெளி, நெடியவட்டை, சின்னவத்தை, மாலையர்கட்டு, காக்காச்சிவட்டை, விழாந்தோட்டம் உட்பட பல்வேறு பிரதேச மக்கள் நன்மை அடையவுள்ளனர். இந்த ஆற்றை தினமும் பாடசாலை மாணவர்களும் அரச, தனியார் ஊழி யர்களும் பெரும் சிரமத்தின் மத்தியில் கடந்து செல்ல வேண்டியுள்ளது. வெள்ள காலங்களில் ஆற்றில் நீர் மட்டம் அதிகரிக்கும் வேளையில் மக்களின் போக்குவரத்து முற்றாக தடைப்படுவதுடன் அவ்வேளைகளில் பல கிலோ மீற்றர் தூரத்தை சுற்றி மாற்றுவழியை பயன்படுத்தியே களுவாஞ்சிக்குடி மற்றும் மண்டூர் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டியுள்ளதாகவும் அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

மாசி 17, 2012

சிலாபத்தில் இன்று....

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் கடற்கரை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் நகருக்குள் பிரவேசிக்க முற்பட்ட போது, அதனைத் தடுக்க பாதுகாப்புத் தரப்பு மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த 32 வயது நிரம்பிய என்டனி பெர்னாண்டோவின் இறுதிக்கிரியைகள் நாளை இடம்பெறவுள்ள நிலையில் இன்று நகர்ப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மரணமானவரின் மனைவி வெளிநாட்டிலிருந்து திரும்பியதை அடுத்து இறுதி சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன. இங்கு தமிழில் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும் பல இடங்களிலும் காணப்படுகின்றன. இதில் வீரமரணம் எய்திய வீரனுக்கு எமது ஆழந்த அனுதாபங்கள் என்றும் அச்சிடப்பட்டுள்ளது.

மாசி 17, 2012 

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் கண்ணீர்புகை பிரயோகம்!

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்பாட்டத்திற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு பேரணியாகச் செல்ல முற்பட்ட ஆர்பாட்டக்காரர்களை பொலிஸார் தடைகளை இட்டு மறித்துள்ளனர். எனினும் அதனை மீறிச் சென்ற ஆர்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால் புறக்கோட்டை பகுதியில் தற்சமயம் பதற்றம் நிலவுவதோடு பாரிய போக்குவரத்து நெரிசலும் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மாசி 17, 2012

ஈரான் மீது போர் வேண்டாம் இஸ்ரேல் ராணுவ அமைச்சரிடம் ஜப்பான் பிரதமர் வேண்டுகோள்!

டோக்கியோ::அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கிடையில் டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் மீது தாக்குதல் நடந்தது. மறுநாளே தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த 2 தாக்குதலுக்கும் காரணம் ஈரான்தான் என்று இஸ்ரேல் புகார் கூறிவருகிறது. தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.இந்நிலையில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று இஸ்ரேல் அதிபர், பிரதமரை ஜப்பான் பிரதமர் நோடா கேட்டுக் கொண்டுள்ளார். ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சர் ஹெ§த் பராக்கிடம், நோடோ இதை வலியுறுத்தினார். ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பயங்கர பின்விளைவுகள் ஏற்படும். இப்போதுள்ள பிரச்னையும் பூதாகரமாகி விடும். எனவே பொறுமையாக இருங்கள். ராணுவ நடவடிக்கை வேண்டாம்Õ என்று பராக்கிடம் நோடா கூறியுள்ளார்.

மாசி 17, 2012

புதுடில்லியில் ஒடேரோ ஜெனீவா அமர்வின் போது வாஷிங்கடனின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் சாத்தியம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் மரியா ஒடேரோ தனது இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்று செவ்வாய்க்கிழமை புதுடில்லிக்கு சென்றுள்ளார். கடந்த 12 ஆம் திகதி முதல் இலங்கையில் தங்கியிருந்த ஒடேரோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட பல தரப்பினருடனும் சந்திப்புக்களை நடத்தி மதிப்பீடுகளை மேற்கொண்டதன் பின்னரே அடுத்த கட்ட விஜயமாக இந்தியா சென்றுள்ளார்.  (மேலும்....)

மாசி 17, 2012

சவேந்திர சில்வா தொடர்பான நவநீதம்பிள்ளையின் கருத்து ஒழுக்க நெறியை மீறுகின்றது

 ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணி தொட்ரபான சிரேஷ்ட ஆலோசனை குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்தை ஐக்கிய நாடுகள் சபைக்காக இலங்கைத் தூதரகம் நிராகரித்துள்ளது. நவநீதம்பிள்ளையின் கருத்து நியாயமற்றதும் ஒழுக்க நெறியை மீறுவதாகவும் உள்ளதாக அந்த தூதரகம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணி தொடர்பான சிரேஷ்ட ஆலேசானைக் குழுவில் இலங்கையின் இராணுவ ஜெனரலான சவேந்திர சில்வாவை நியமித்தமை தொடர்பில் கவலை தெரிவித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு கடிதமொன்றை தான் எழுதியுள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார். (மேலும்....)

மாசி 17, 2012

கொல்லங்கலட்டியில் பாழடைந்த கிணற்றில் மண்டை ஓடுகள்,எலும்புகள் கண்டுபிடிப்பு

வலிகாமம் வடக்கு கொல்லங்கலட்டி பகுதியில் நீண்டகாலமாகப் பாவனையற்ற கிணற்றைத் துப்புரவு செய்யும்போது கிணற்றிலிருந்து மனித எலும்பு எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
கொல்லங்கலட்டி பகுதி நீண்டகாலமாக உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த நிலையில் அண்மையில் இந்தப் பகுதிக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தினை அண்டியுள்ள வீடொன்றின் உரிமையாளர் வெளிநாட்டிலிருந்து வந்து வளவினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
(மேலும்....)

மாசி 17, 2012

சிரியாவும் உலக யுத்தத்திற்கான விதைகளும்

சிரியாவில் தலையீடு செய்வதற்கு வழிவகுக்கும் ஒரு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தை ரஷ்யாவும்  சீனாவும் வீட்டோ அதிகாரத்தை கொண்டு தடுத்தமை அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளிடமிருந்து  கடுங்கோபமான ஒரு பிரதிபலிப்பை தூண்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதரகம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டங்களுக்கு உலகளாவிய ஒப்புதலை கோரிவரும் “ மனித உரிமை பாதுகாவலர்களின் ஒரு முன்னணி பிரதிநிதியமான சுசான் ரைஸ், வீட்டோ நடவடிக்கையை  வெட்கக்கேடான மற்றும் அருவருக்கத்தக்கதாக, முத்திரை குத்தியதோடு “ வருங்காலத்தில் இந்த முடிவிற்காக அவர்கள் வருத்தப்பட வேண்டியிருக்கும்  என்றும் அச்சுறுத்தினார்.
(மேலும்....)

மாசி 17, 2012

விளையாட்டு வினை ஆகிறது

சும்மா ஒரு நாகரிகத்திற்காக வேலைப்பளு, மன உளைச்சல் மற்றும் காதல் தோல்வியை மறக்க போன்ற பல்வேறு காரணங்களினால் விளையாட்டாக புகைப்பழக்கம் தொடங்குகிறது. விளையாட்டு வினை ஆனது என்பது போல விளையாட்டாக தொடங்கும் இந்த புகைப்பழக்கம் ஒருவரது புத்திகூர்மையை குறைத்து விடுகிறது. இரத்த அழுத்தத்தினை அதிகரிக்கிறது மற்றும் கண்புரை நோயை ஏற்படுத்துகிறது என்று கூறுகிறார்கள் புகைப்பழக்கம் குறித்த ஆய்வுகள். புகைப்பழக்கத்தை கைவிடுவது உடல் நலனுக்கு பல நன்மைகளை உண்டாக்கும் என்பது நாமனைவரும் அறிந்த செய்தி. ஆனால், புகைப்பழக்கத்தை கைவிடுவதால் அறிவு சார்ந்த செயல்திறனும் அதிகரிக்கிறது என்பது இந்த புதிய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்கிறார் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளர் முனைவர் டாம் ஹெபர்னான்! இதற்கு முந்தைய ஆய்வுகளில் புகைப்பழக்கத்தை கைவிடுவதால் ‘பின்னோக்கிய ஞாபக சக்தி’ (அதாவது, ஒரு விடயத்தை படித்து பின்னர் தேவைப்படும்போது அதை நினைவு கூரும் திறன்) மேம்படுகிறது என்பது தெரிய வந்தது. ஆனால் இந்த புதிய ஆய்வின் நோக்கம் ஆய்வில் கலந்து காண்டவர்களின் ‘தொலைநோக்கு ஞாபக சக்தி’யை (அதாவது, ஒரு குறிப்பிட்ட செயலை ஞாபகம் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதை செயல்படுத்தும் திறன்) கணக்கிடுவதே! உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட மாத்திரையை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துக் கொள்ள தொலைநோக்கு ஞாபக சக்தி அவசியம்.

மாசி 17, 2012

ஒசாமா இருந்தது முஷாரப்புக்கு தெரியும் - சி.ஐ.ஏ. முன்னாள் தலைவர் தகவல்

பாகிஸ்தானின் அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் ஒளிந்திருந்தது, அப்போதைய ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்புக்கு, நன்றாகவே தெரியும் என, சி.ஐ.ஏ.முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார். அபோதாபாத்தில் ஒசாமா இருந்தது குறித்து, எதுவும் தெரியாது என்று பாக், முன்னாள் ஜனாதிபதி முஷாரப் கூறி வருகிறார். இந்நிலையில், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏ.யின் முன்னாள் தலைவர் ப்ரூஸ் ரிடல், ஒசாமா ஒளிந்திருந்தது முஷாரப்புக்குத் தெரியும் என, ஐ.எஸ்.ஐ, முன்னாள் தலைவர் ஜியாவுதீன் க்வாஜா என்ற ஜியாவுதீன் பட் கூறியதாக, “தி டெய்லி பீஸ்ட்’ இணையத்தளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளார். ஐ.எஸ்.ஐ.யின், முன்னாள் தலைவரான இஜாஸ் ஷாவின் உத்தரவின் பேரில் தான், அபோதாபாத்தில், ஒசாமாவுக்காக மிகவும் பாதுகாப்பான முறையில் அந்த வீடு கட்டப்பட்டதாக ஜியாவுதீன் தெரிவித்ததாக எழுதியுள்ளார். மேலும், ஒசாமாவை அபோதாபாத்தில் பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் தங்க வைத்ததற்கு, இஜாஸ் ஷா தான் பொறுப்பு எனவும், இவை எல்லாம் முஷாரப்பிற்குத் தெரியும் எனவும் ஜியாவுதீன் கூறியதாகவும் ரிடல் எழுதியுள்ளார். “ஜியோ” செய்தி நிறுவனத்திற்கு, இது குறித்து பதில் அளித்த ஜியாவுதீன் பட், தான் தவறாக மேற்கோள் காட்டப்பட் டுள்ளதாக மட்டும் தெரிவித்தார். வேறு எந்த விபரங்களையும் அவர் அளிக்கவில்லை.

மாசி 17, 2012

சிலாபம் மீனவர்கள் நேற்றும் பணிப் பகிஷ்கரிப்பு

சூட்டு சம்பவம் குறித்து சி.ஐ.டி. விசாரணை, வாள்கள், குண்டுகள் மீட்பு

சிலாபம், மஹாவெல்ல பகுதியில் நடைபெற்றுள்ள ஆர்ப்பாட்டம், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் 04 வாள்கள், 06 பெட்ரோல் குண்டுகள், 04 இரும்புக் கம்பிகள் 80 போத்தல்களையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். நேற்று நான்காவது நாளாகவும் சிலாபம் மீன் சந்தை உட்பட கடற்கரை பிரதேசம் வெறிச்சோடிக் கிடந்தன. சிலாபம் மற்றும் அதனை அண்டியுள்ள பகுதியிலுள்ள எந்தவொரு மீனவரும் கடற்றொழிலுக்காக செல்லவில்லை. எந்நேரமும் ஆர்ப் பாட்டக்காரர்கள் நகருக் குள் நுழையலாம் என்ற நோக்கில் சிலாபம் கடற் கரை வீதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நகரில் இராணுவ டிரக் வண்டிகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விசேட அதிரடிப்படைக்கு பதிலாக இராணுவத்தினரே அதிகளவு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதேவேளை, மரணமானவரின் மனைவி இன்று நாடு திரும்புகிறார். வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைத் சென்றுள்ள அவர் நாடு திரும்பிய பின்னர் நாளை எண்டனி பர்னாண்டோவின் இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளன.இறுதிப் கிரியைகள் நடை பெறுவதை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாசி 17, 2012

பாகிஸ்தானில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல்: 6 பேர் பலி

ஆப்கான் எல்லை அருகே பாகிஸ்தானின் வடமேற்கு பழங்குடியினர் பகுதியில் அமெரிக்கா நடத்திய 2 ஏவுகணைத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. தலிபான் மற்றும் அல்கொய்தா ஆதிக்கம் மிகுந்த வடக்கு வாஜிரிஸ்தான் பழங்குடியினர் பகுதியில் ஸ்பால்கா கிராமத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு வாரத்துக்கு முன்பு இந்த கிராமத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்த நிலையில் நேற்று மீண்டும் அதே கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் புலனாய்வுத் துறையினர் தெரிவித்தனர்.

மாசி 17, 2012

மண்ணெண்ணெய்

ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம்

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது. 25 மாவட்டங்களின் 330 பிரதேச செய லக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என நேற்று சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த மண்ணெண்ணெய் நிவா ரணத்தை பெற்றுக் கொடுப் பதற்காக அரசாங்கத்திற்கு மாதாந்தம் 80 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி செல வாவதுடன், இது எரி பொருள் விலை அதிகரிக்கப் பட்ட பின்னர் மாதத்திற்கு செல விடப்படும் 6 லீற்றர் மண்ணெண் ணெய்க்கு மேலதிகமாக செலவிடப்படும் நிதிக்கு சமமான நிவாரணமாக அமைந்துள்ளது.

மாசி 17, 2012

ஹொன்டுராஸ் சிறைச்சாலை தீ விபத்து: பலி எண்ணிக்கை 358 ஆக அதிகரிப்பு

ஹொன்டுராஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 358 ஆக அதிகரித்துள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்ட கொடியாகுவா சிறைச்சாலையின் இயக்குனர் மற்றும் அந்நாட்டின் தேசிய சிறைச்சாலை ஒழுங்குமுறை குழுவின் தலைவர் ஆகியோரை ஹொன்ரொஸ் ஜனாதிபதி பொர்பிரியோ லொபோ உடன் இடைநீக்கம் செய்துள்ளார். அத்துடன் இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார். வட மத்திய அமெரிக்க நாடான ஹொன்ரொஸில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தீ விபத்தில் பல சிறைக்கைதிகளும் தமது சிறைச்சாலை அறைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் கருகி இறந்துள்ளனர். இந்த கைதிகளை மீட்பதற்கு தீ அணைப்பு படையினர் முயற்சித்தாலும் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளின் சாவிகளை வைத்திருக்கும் அதிகாரிகளை கண்டுபிடிக்க முடியாததால் அந்த முயற்சி தோல்வியடைந் துள்ளது. இந்த சிறைச்சாலையில் தீ விபத்து ஏற்படும் போது 856 கைதி கள் அடைக்கப்பட்டிருந்தனர். இது சிறைச்சாலையில் உள்ள இட வசதியை விடவும் இருமடங்காகும். இந்நிலையில் இந்த தீ விபத்தை தொடர்ந்து நூற்றுக்கணக்கான கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

மாசி 17, 2012

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவுக்கு ஏழு உறுப்பினர்கள் நியமனம்

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களாக 7 பேர் நிய மிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் நியமனத்திற்கு பாராளுமன்றப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. சுயாதீனப் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் தூதுவர் ஜனாதிபதி சட்டத்தரணி சேனக வலகம்பாய நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர்களின் பெயர்களை சிபார்சு செய்திருந்தார். நேற்று முன்தினம் கூடிய பாராளுமன்ற பேரவை மேற்படி நியமனங்களுக்கு அனுமதி அளித்ததாக பாராளுமன்ற பேரவை உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வர் எம்.பி. கூறினார். இதன்படி, சேனக வலகம்பாய தலைவராகவும் பொலிஸ் ஆணைக் குழு உறுப்பினர்களாக எல்லே குணவங்ச தேரர், டி. திசாநாயக்க, திருமதி சாமெணி மதுரசிங்க, ஆர். சிவராமன், எம். எம். எம். மெளஜுத், ஐ. ரி. என். முன்னாள் பணிப்பாளர் நியுடன் குணரத்ன ஆகியோர் நிய மிக்கப்பட்டுள்ளனர். 18 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் பாராளுமன்ற பேரவை நியமிக்கப்பட்டுள்ளதோடு இதனூடாக சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படுகின்றன. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்குமாறு ஐ. தே. க. கோசமெழுப்பி வருகிறபோதும் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவை நியமிப்பதற்கான கூட்டத்தில் ஐ. தே. க. தலைவரும் அவரது பிரதிநிதியும் கலந்துகொள்ளவில்லை என அஸ்வர் எம். பி. கூறினார்.

மாசி 17, 2012

70 -ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்தில் அனாதைகளாக இறந்த அடிமைத் தமிழ்த் தொழிலாளர்க்கு எமது அஞ்சலி !

1942-45 ஆண்டுகளில் ஜப்பானியர்களால் 2- வது உலகப் போரின்போது தாய்லாந்து - பர்மா தொடர்வண்டி போடப்பட்டது. இதில் அனாதைகளாக இறந்த 90000 - பேரில் பலர் தமிழர்கள் !  அவர்கள் நோயினாலும், பட்டினியாலும் அனாதைகாளாக இறந்து அழிந்தது மலேயாவிலிருந்த அவர்கள் உறவினர்கள் யாருக்கும் தெரியாது என்பது கொடுமையல்லவா ? அந்த வலி பட்டவருக்கே புரியும் ! இங்கிலாந்து, கனடா, டச்சு , ஆஸ்திரேலிய நாடுகளிலிருந்து இந்த மரண ரயிலில் இறந்த தான் நாட்டு படை வீரர்கள் உறவினர் இன்றும் வந்து அஞ்சலி செய்கிறார்கள் !  ஆனால் அநாதை தமிழன் அழிந்ததை தமிழராகிய நாம் அறிவோமா ? நாம் தான் அறியாதவர்கள் ஆயிற்றே  ! எதைப் பற்றியும் கவலைப் படாதவர் ஆயிற்றே !

காணொளி காண இணைப்பை சொடுக்குக: 90000 பேர் பலி ! சயாம் மரண ரயில் (1942-45) ! Death Railway !

http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/death_railway.htm

http://www.far-eastern-heroes.org.uk/Reg_Rainer_Returns/html/map_of_death_railway.htm

தஞ்சை  கோ.கண்ணன்

மாசி 17, 2012

ஹிட்லருக்கும் நரேந்திர மோடிக்கும் எந்தவொரு வித்தியாசமும் இல்லை

ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில்தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த வீதிகள் அமைக்கப்பட்டன. அதுபோல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும் சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜேர்மனியர்கள்  யாரும்கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார் என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார். 2002 இன் கலவரத்தை மறந்துவிட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடைமையையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்கச் சொல்வது சரியானது அல்ல என்றும் நந்திதா தாஸ் கூறினார். (மேலும்....)

மாசி 16, 2012

நாகை அழைக்கிறது

(ஏ.வி.முருகையன்)

(இக் கட்டுரையில் உள்ள விடயங்கள் இலங்கைக்கும் சிறப்பாக இலங்கைத் தமிழ் மக்களுக்கும் பொருந்தும் என்பதினாலும் இங்கு இதனை பிரசுரிக்கின்றோம். 1970 களில் சங்கானை, மாவிட்டபுரம் போன்ற இடங்களில் நடைபெற்ற சாதிய எதிர்ப்பு போராட்டங்களை நினைவுபடுத்துவாதாகவும் அமைகின்றது. – ஆர்)

சலவைத் தொழிலாளிகளை வண் ணான் என்றும், முடிதிருத்துபவர்களைப் பரியாரிகள், அம்பட்டர்கள் என்றும், தச்சு வேலை செய்பவர்களை ஆசாரி என்றும், துப்புரவு ஊழியர்களைத் தோட்டி, தொம் பன் எனவும், மயானம் காப்பாளர்களை வெட்டியான், பறையன் என்றும் சாதிக் குச் சாதி இத் தொழிலாளர்கள் பிரிக்கப் பட்டு, நிலச் சுவான்தார்கள் இஷ்டப் பட்டுக்கொடுக்கும் கூலியை பெற்று, வாயிருந்தும் ஊமைகளாக வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்வதே நிலச் சுவான்தார் களின் சுகபோக வாழ்க்கைக்குத் தான் என நடந்து கொண்டிருந்த காலத்தில் தான் (மேலும்....)

மாசி 16, 2012

Appeal from a LTTE cadre for pardon

(By K.T.Rajasingham )

I am K. Athiththan, was a member of the LTTE for 14 years and is now kept as a remand prisoner for the last three years. This is my story narrated by me to 'Asian Tribune'. I take this opportunity to appeal to the Government and people of Sri Lanka through 'Asian Tribune' to apologize me for being with an organization knowingly or unknowingly, which has destabilized the country and brought misery, destruction, and deaths.I commenced my primary schooling at Mullaitivu Government Tamil Mixed School. I continued my studies from 5th Standard to G.C.E.(A/L) at Mullaitivu Vidyananda College.In the year of 1995, while I was at home in Mulliyavalai, after having sat for the G.C.E A/L examinations, I was forcibly abducted and kept in the L.T.T.E camp at Kilinochchi. During that period I was there, my parents were denied permission either to visit or see me and my father was issued with a threat to his life. (more.....)

மாசி 16, 2012

ஆர்க்டிக் துருவத்தின் வளங்களை நோக்கி……… 

(ஷியாம் சரண்)

பூமிப்பந்தின் தென் துருவமான அண்டார் டிக்காவிலும், வட துருவமான ஆர்க்டிக்கிலும் ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன. உலக நாடுகளின் கவனமெல்லாம் தற்போது இவைகளைக் கையகப்படுத்துவதில் திரும்பி யுள்ளது. ஆனால், 1959ல் ஒரு நல்ல திருப்ப மாக உலக நாடுகளெல்லாம் ஒன்றுசேர்ந்து அண்டார்டிக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டன. பனி சூழ்ந்த இக்கண்டத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளை மட்டும் மேற்கொள்வது என்ற ஆரோக்கியமான முடிவு மேற்கொள்ளப்பட் டுள்ளது. எண்ணெய், எரி வாயு மற்றும் ஏராள மான இயற்கை வளங்கள் நிறைந்திருந்தாலும், இக்கண்டத்தின் நிலப்பரப்பினை பங்கீடு செய்துகொள்ளவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ உலக நாடுகள் தற்போதைக்கு எத்தணிக்க வில்லை என்பது திருப்திகரமான விஷய மாகும். இந்த ஒப்பந்த காலம் முடிந்த பிறகு அண்டார்டிக் பகுதியிலும் உலக நாடுகள் வளங்களைத் தேடும் தங்களின் போட்டியைத் தொடங்கலாம்.  (மேலும்....)

மாசி 16, 2012

இந்திய சிறைகளில் இறுதியாக இருந்த 25 இலங்கை மீனவரும் விடுதலை

இந்தியாவில் இறுதியாக சிறை வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை மீனவர்களும் அவர்களது 05 மீன்பிடி படகுகளுடன் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். இம்மீனவர்கள் தமது படகுகளுடன் அடுத்தவாரமளவில் இலங்கை வந்தடைவரென மீன்பிடியமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் வைத்து கடந்த 06 ம் திகதி கைது செய்யப்பட்ட லக்சயுகு, கவிஷ புத்தா, லக்சிறி-1, லக்சிறி-11 மற்றும் லக்சிறி- 4 ஆகிய மீன்பிடி படகுகளும் அதில் பயணம் செய்த 25 மீனவர்களுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி தற்போது வரை எந்தவொரு இலங்கை மீனவரும் இந்தியாவில் சிறைவைக்கப்படவில்லையெனவும் அவ்வதிகாரி கூறினார். இம்மீனவர்கள் 25 பேரும் ஜனவரி மாதம் 26ம் திகதி தங்கல்லை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்களாவர். இவர்கள் இந்தியாவின் தமிழ்நாட்டு கடல் எல்லையை அத்துமீறி துழைந்தார்களென்ற குற்றச்சாட்டின் பேரில் கரையோர பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர்களாவர். மீன்பிடியமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்னவின் நேரடி தலையீட்டையடுத்தே இம்மீனவர்களை உடனடியாக விடுவிக்க முடிந்திருப்பதாகவும் அவ்வதிகாரி மேலும் கூறினார்.

மாசி 16, 2012

சிலாபத்தில் கடற்றொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம்

பொலிஸாரைத் தாக்க முற்பட்டோர் மீது கண்ணீர்ப்புகை, துப்பாக்கி சூடு, ஒருவர் பலி

கடற்றொழிலாளர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்துள்ள வேளையிலும் நேற்று சிலாபம் மீனவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்த வேளையில் பொல்லுகளாலும், தடிகளாலும், வாள்களுடனும் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்பட்டனர். ஆர்ப்பாட்டக் காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முற்பட்டவேளை சிலாபம் மீனவர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமானார். மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். சிலாபம் கடற்கரை வீதிக்கு அருகே நேற்றுக்காலை சுமார் 11.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிலாம் கடற்கரை வீதியிலுள்ள பொலிஸ் அத்தியட்சகரினதும், சிலாபம் நீதிவானினதும் உத்தியோக இல்லத்திற்கருகே மீனவர்கள் முன்னேறி வர முடியாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கலகம் அடக்கும் பொலிஸாரும் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். கண்ணீர்ப் புகைக் குண்டுகளும் வீசப்பட்டன. கலகக்காரர்களை பின்வாங்கச் செய்வதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். கலகக்காரர்களுக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்குமிடையே பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. கலகக்காரர்கள் பாதுகாப்புப் பிரிவினரிடமிருந்த துப்பாக்கியை பறிக்க முற்பட்ட வேளையிலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக சிலர் தெரிவித்தனர்.

மாசி 16, 2012

ஹொர்முஸ் நீரிணையூடாக அமெ. இரண்டாவது யுத்த கப்பல் பயணம்

சர்ச்சைக்குரிய ஈரான் கடல் எல்லையான ஹொர்முஸ் நீரிணையூடாக அமெரிக்கா வின் இரண்டாவது யுத்தக் கப்பல் நேற்று முன்தினம் பெர்சிய வளைகுடாவுக்குள் சென்றுள்ளது. அமெரிக்க கடற்படையின் தாக்குதல் படகுகளின் உதவியுடன் யு.எஸ்.எஸ். அப்ரஹாம் லிங்கன் விமானம் தாங்கி யுத்த கப்பல் ஹொர்முஸ் நீரிணையூடாக பயணித்தது என்று மேற்படி கப்பலின் கட்டளை தளபதி ரியர் அட்மிரர் டிரொய் ஷொமேகர் குறிப்பிட்டார். எனினும் ஹொர்முஸ் நீரிணையை கடக்கும் போது ஈரானின் இரு படகுகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே யு.எஸ்.எஸ். ஜோன் சி. ஸ்டென்னி யுத்த கப்பல் ஒரு மாதத்திற்கு முன்னர் ஹொர்முஸ் நீரிணையூடாக பெர்சிய வளைகுடாவுக்குள் சென்றது. அந்த யுத்த கப்பல் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தில் தரித்து வைக்கப்பட் டுள்ளது. வளைகுடா நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் பயணிக்கு ஹொர்முஸ் நீரிணையூடாக அமெரிக்க யுத்தக் கப்பல்கள் தடைவிதிப்பதாக ஈரான் அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாசி 16, 2012

பிரதீபா தர்மதாஸவின் புதிய இசை இறுவட்டு வெளியீடு, 'அந்திக்கு முன் வாருங்கள்'
(ஷு தில்ஹான் நாணயக்கார )

பிரதீபா தர்மதாஸ தனது பாடல்கள் மூலம் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான உறவுப் பாலத்தை அமைப்பது தொடர்பில் தனது புதிய பாடல்களை வெளியிடவுள்ளார். கடந்த 30 வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களில் பெண் என்ற வகையில் பார்த்தால் துன்பம், கண்ணீர், இரத்தத்தின் நிறம் என்பது வடக்கில் வாழும் பெண்ணுக்கும் தெற்கில் வாழும் பெண்ணுக்கும் ஒரேமாதிரியாக இருக்கின்றது. ஒரு பிள்ளை இறந்து போனால் ஒரு தாயின் இதயத்தில்வரும் சோகம் வடக்கு தெற்கு என்று பேதம் இல்லை. இந்த விடயத்தை கலைஞர்களாகிய நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதால் உணர்ச்சிகொள்ள வில்லை என்று நான் நினைக்கிறேன். ஆனாலும் இன்று அந்த நிலைமை முடிந்து விட்டது. இந்த நிலையில் நம் இரு இனங்களுக்குள் சகோதரத்துவத்தை உருவாக்குவதற்காக தமிழ் மொழியும் சிங்கள மொழியும் இந் நாட்டின் பிரதான மொழிகளாக வேண்டும். அத்தோடு இனங்களுக்கிடையிலான உறவுப் பாலத்தை கலைஞர்களுக்கு தான் மிகச்சிறந்த முறையில் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். (மேலும்....)

மாசி 16, 2012

சோனியா காந்தி, பிரியங்கா ஒரே மேடையில் பிரசாரம்

உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் சோனியா காந்தியும், அவருடைய மகள் பிரியங்காவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் சார்பில் பிரியங்கா, கடந்த ஞாயிறன்று ராகுலுடன் சேர்ந்து பிரசாரம் செய்தார். ரேபரேலிக்கு உட்பட்ட, பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் சோனியாவும், பிரியங்காவும் ஒன்றாக பங்கேற்றனர். அதில் பேசிய சோனியாவும், பிரியங்காவும் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுத்த ஒரு இலட்சம் கோடியில் முதல்வர் மாயாவதி பெருமளவில் ஊழல் செய்துள்ளார் என்று குற்றம்சாட்டினர். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, பாஜ. கட்சிகளே உபி.யின் இப்போதைய பரிதாப நிலைக்கு கார ணம். எனவே ஜாதி மதத்தின் பெயரில் செய்யப்படும் தவறான பிரசாரத்தை மக்கள் நம்பக் கூடாது என்றார். அதே நேரம் கூட்டத்தில் பங்கேற்ற மக்களிடையே சென்று பிரியங்கா வாக்குகேட்டார்.

மாசி 16, 2012

தேசத்துரோக சக்திகளின் சதிமுயற்சிகள் மக்களால் முறியடிக்கப்படும்

இன்று முழு உலகத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் சர்வதேச பயங்கரவாத இயக்கங்களில் மிகவும் கொடுமையான இயக்கமாக கருதப் பட்ட எல்.ரி.ரி.ஈ.யை படுதோல்வியடையச் செய்ததைப் பார்த்து சில நாடு கள் மறைமுகமாக மகிழ்ச்சியடைந்தாலும், பல்வேறு அரசியல் காரணங் களுக்காக அவை இந்த யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப் பட்டன என்ற போலிக் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலேயே நவனீதம்பிள்ளையின் அறி க்கை, தருஸ்மன் அறிக்கை மற்றும் சனல் 4 செய்தி வீடியோ காட்சிகள் போலி ஆதாரங்களை மேற்கோள் காட்டி தயாரிக்கப்பட்டமை குறிப் பிடத்தக்கது. (மேலும்....)

மாசி 16, 2012

தாய்லாந்து குண்டு வெடிப்பு தொடர்பில் இரு ஈரானியர் கைது: இந்தியா, ஜோர்ஜியா சம்பவத்துடன் தொடர்பு - ஈரானை குற்றம் சாட்டுகிறது இஸ்ரேல், ஈரான் மறுக்கின்றது

இந்தியா, ஜோர்ஜியா மற்றும் தாய்லாந்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரானுக்கிடையிலான முறுகல் நிலை மேலும் அதிகரித்துள்ளது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னணியில் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் இந்த குற்றச்சாட்டை ஈரான் அரசு முற்றாக மறுத்துள்ளது. கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் இஸ்ரேல் ராஜதந்திரிகள் மீது இலக்கு வைக்கப்பட்டிருந்தது. டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகில் இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் வெடித்ததில் அந்த அதிகரிக்கு காயம் ஏற்பட்டது. அதேபோன்று அன்றைய தினத்திலேயே ஜோர்ஜியாவிலும் இஸ்ரேல் இராஜதந்திரிகளை இலக்குவைத்து குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது. (மேலும்....)

மாசி 15, 2012

கனடாவுக்கு செல்ல முயன்று டோகோ நாட்டில் கைதியாகி திரும்பியவரின் கதை

‘ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு சட்டரீதியான முறையில் ஆட்களை அனுப்புவதாகக் கூறி பல லட்சம் பணத்தை பெற்றபின் ஏதாவது ஒரு நாட்டில் இறக்கிவிட்டு பணத்தைச் சூறையாடுபவர்களிடமிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்’ என கடனடாவுக்கு அனுப்பப்படுவதாக கூறி டோகோவில் கைவிடப்பட்டு அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டபின் நாடு திரும்பியுள்ள மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த ஒருவர் தெரிவிக்கிறார்.“மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த நான் படித்துப் பட்டம் பெற்று 5 வருடங்களாகியும் வேலைகள் எதுவும் கிடைக்கவில்லை. திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பொருளாதாரப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வாழ்க்கையை நடத்திவநதேன். எனது நண்பர் ஒருவர் மூலமாக கனடாவுக்கு வேர்க் பேமிற மூலமாக செல்ல முடியும் என அறிந்து கொண்டேன். அவரூடாக கொழும்பில் அந்த முகவரைச சந்தித்தேன். அவர் சட்டரீதியாக கனடாவுக்கு வேலை அனுமதிப்பத்திரம் பெற்றுத் தருவதாகச் சொன்னார். 25 லட்சம் பணம் தர வேண்டும் என்றும், அரைவாசி முதலில் தரவேண்டும் என்றும் மிகுதி கனடா சென்று உழைத்துத் தர வேண்டும் என்றும் ஆசைவார்த்தை காட்டினார். (மேலும்....)

மாசி 15, 2012

இந்தியாவும் ஈழத் தமிழர் பிரச்சனையும் ஒரு விரிவான ஆய்விற்கான முன்வரைபுக் குறிப்புகள்

(யதீந்திரா)

இந்தியாவிற்கு அருகில் ஒரு குட்டித் தீவு கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக தன்னைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறதென்றால், அதற்கு ராஜதந்திரம் தேவை – இது பேராசிரியர் இந்திரபாலாவின் கருத்து. கொழும்பின் ராஜதந்திர அணுகுமுறைகள் குறித்து பலரும் அவ்வப்போது வியந்து பேசியிருக்கின்றனர். இது பற்றி அதிகம் தமிழில் பேசியவர், ஈழத்தின் மூத்த, முன்னனி அரசறிவியலாளரான மு.திருநாவுக்கரசு ஆவார். கொழும்பின் ராஜதந்திரம் பற்றிய அவதானங்கள் எவையுமே மிகைப்படுத்தல்களல்ல. ஆனால் இந்த ராஜதந்திரத்தின் அடிப்படையாக இருப்பது எங்கள்பக்க தவறுகள்தான், என்பதை புரிந்து கொள்வதில்தான், ஈழத் தமிழ்த் தேசியவாதிகள் என்போரும், அந்தத் தேசியவாதிகளின் கருத்துக்களை மறுப்பின்றி ஆமோதித்து வரும் தமிழ்நாட்டு ஆதரவு சக்திகள் என்போரும் தொடர்ந்தும் தடுமாற்றங்களை வெளிப்படுத்திவருகின்றனர். இது குறித்து ஒரு முதிர்ச்சியற்ற போக்கே தொடர்கிறது. (மேலும்....)

மாசி 15, 2012

இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவு

இலங்கைக்கெதிரான பிரேரணைக்கு அமெரிக்கா முழு ஆதரவு என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனநாயகம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் மாரி ஒட்டேரோ மற்றும் மத்திய, தெற்காசிய விவகாரங்களுக்கு பொறுப்பான உதவிச் செயலர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளனர். அரசாங்கமும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி நிரந்தர அரசியல் தீர்வை காண வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தைக் கூறுவதற்கான சந்தர்ப்பம் மற்றும் பொறுப்புக்கூறல், மனித உரிமை மற்றும் ஜனநாயம் போன்ற விடயங்களில் இலங்கைக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கும் வகையிலேயே மனித உரிமை பேரவைக்கு கொண்டுவரப்படும் பிரேரணைக்கு ஆதரவு வழங்குகின்றோம் என்றும் அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.__

மாசி 15, 2012

How could Amb. Blake forget TNA’s war-time partnership with LTTE’

(By Shamindra Ferdinando )

It would be interesting to know whether US Under Secretary for Civilian Security for Democracy and Human Rights, Otera had inquired into the circumstances, in which the LTTE held about 300,000 people hostage and how the TNA reacted to the catastrophic situation. "Those human rights champions weren’t interested at all about the civilians. They felt civilian hostages can impede military operations to such an extent that the government will give into efforts to evacuate Prabhakaran, his family and top commanders, including Pottu Amman." Had the LTTE leadership survived with the help of those pursuing an international inquiry targeting Sri Lanka, the TNA wouldn’t have had the clout it enjoyed today, Bogollagama said. Instead of thanking the government for giving it a fresh opportunity to serve the Tamil speaking people not only in the Northern and Eastern Provinces, but in the South as well, the TNA was making a despicable attempt to undermine the very government, which facilitated its return to national politics by eradicating terrorism. (more.....)

மாசி 15, 2012

போர் வெறியும் கார் எரிப்பும்

 

தலைநகர் தில்லியில் பிரதமர் இல்லத்தில் இருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில், பாது காப்புமிக்க ஒளரங்கசீப் சாலையில் அமைந் துள்ளது இஸ்ரேலியத் தூதரகம். இத்தூதரக அலுவலகத்திற்கு அருகில், தூத ரக அதிகாரி ஒருவரின் கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. திங்களன்று மாலை நடந்த இச் சம்பவம் ஒரு உலகப் பெரும் பயங்கரவாதத் தாக்குதலாக இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய அரசு களாலும் கார்ப்பரேட் ஊடகங்களாலும் சித்தரிக் கப்பட்டுள்ளன. இஸ்ரேலியத் தூதரக அதிகாரியின் காரை இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்ததாகவும், சிக்னலில் நின்றபோது காரின் பின்புறத்தில் ஏதோ ஒரு பொருளை ஒட்டிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அடுத்த சில நிமிடங்களில் அப்பொருள் வெடித்து கார் தீப் பற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. (மேலும்....)


மாசி 15, 2012

Strong LTTE supporters believe

Sri Lanka’s Mahinda Rajapaksha cracks under US/India pressure?

  • War veteran General Sarath Fonseka to be granted presidential pardon before the end of the month

  • An action plan with time frames to be established of implementing the LLRC recommendations on a priority basis

  • Consent agreement to be signed between the TNA and the Government

The Obama administration threatened Rajapaksha regime with possible actions in international forums such as in the United Nations Human Rights Council in Geneva that could result in international war crimes investigation into alleged breaches of international human rights and humanitarian laws by government forces. (more....)

(மேலும்....)

மாசி 15, 2012

கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு புதிய உபவேந்தர்

கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக கனடாவிலுள்ள கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன்  2010ஆம் ஆண்டு நடு பகுதியில் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையொன்றின் காரணமாக பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது. இந்நிலையில் குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன் கிழக்குபல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.சுதர்சன் கனடாவில் வசிக்கும் கலாநிதி கிட்ணன் கொபிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன. இதனையடுத்தே கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். கணித துறையில் கலாநிதி பட்டம் பெற்ற இவர் 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் கிழக்கு பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். கிழக்கில் நிலவிய அசாதாரன சூழ்நிலை காரணமாக 2004ஆம் ஆண்டு  நாட்டை விட்டு வெளியேறிய  இவர் தற்போது கனடாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றுகின்றார்.

மாசி 15, 2012

டெல்லி பொலில் தீவிர விசாரனை

பிரதமர் வீட்டருகே குண்டு வைத்தது லஷ்கர் அமைப்பா?

பிரதமர் மன்மோகன் சிங் வீட்டருகே இஸ்ரேல் தூதரக கார் நேற்று சென்று கொண்டிருந்த போது வெடித்தது. இதில் நாலுபேர் காயணமடைந்தனர். இந்தச் சதியில் பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் தொய்பா தீவிரவாத அமைப்பு ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் டெல்லி பொலிசாருக்கு ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மிகவும் பாதுகாப்பான பிரதமர் மன்மோன்சிங் வீட்டிற்கு ஐந்நூறு மீட்டர் தூதரத்தில் உள்ளது அவுரசிப் சாலை பலத்த கண்காணிப்பு வலையத்துக்குள் உள்ள இந்தச் சாலையில். இஸ்ரேல் துர்தரகத்தைச் சேர்ந்த கார் நேற்று சென்று கொண்டிருந்தது. காரில் இஸ்ரேல் தூதரக ஊழியரின் மனைவி இருந்தார். கார் வெடித்து தீ பிடித்ததில் கார் டைவர் உட்பட நாலு பேர் காயமடைந்தனர். உடனடியாக டெல்லி முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. (மேலும்....)

மாசி 15, 2012

"News & Views" High Commission Newsletter.

Sri Lanka High commission/Ottawa (more....)

மாசி 15, 2012

நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அமுலுக்கு வந்ததும் அமெரிக்க நிலைப்பாடு மாறும்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதும் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றமடையும் என பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோ சனையை அரசாங்கம் கோரியுள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக் கப்பெற்றதும் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்து ரைகளை நிறைவேற்ற இலங்கை தவறி விட்டதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் என்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் துணைச் செயலாளர் மரியா ஒட்டேரே நேற்றுமுன்தினம் கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கூறியிருந்தார். இது தொடர்பில் கருத்துக் கேட்டபோதே வெளிவிவகா பிரதியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

மாசி 15, 2012

Kadhal Mozhi HD (Jaffna Version)

காதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது. தமிழ் மொழியை காதலிப்பதாக அமைந்துள்ள இப்பாடல் நவீன தொழில்நுட்ப தரத்துடன் அதி உயர் வடிவத்தில் (1080p Full HD) நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளமை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இளம் இசையமைப்பாளர் SJ ஸ்ரலின் பாடலின் வரிகளை எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். கடந்தவருடம் இவரது இசையில் வெளிவந்த தண்ணீர் குறும்படம் சிறந்த இசைக்கான விருதினை பெற்றிருந்ததோடு, இவரது அண்மையில் வெளிவந்த ‘தமிழ் கொலைவெறி யாழ்ப்பாணப் பதிப்பு’இசைக்காணொளி உலகம் பூராகவும் பலரது வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ் இசைக்காணொளியை யாழ்-மியூசிக் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இக் காணொளி யாழ்-மியூசிக் நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. (இசைக்காணொளி ........)

மாசி 15, 2012

அமெரிக்க இராணுவக் குவிப்புக்கு சீன துணை ஜனாதிபதி எச்சரிக்கை

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன துணை ஜனாதிபதி ஷி ஜின்பிங், ஆசிய பசுபிக் மண்டலத்தில் அமெரிக்காவின் படைக் குவிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள தற்போதைய துணை ஜனாதிபதி ஷி ஜின்பிங் நான்கு நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் சென்றார். தனது பயணம் குறித்து “தி வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் ‘ஆசிய பசுபிக் மண்டலத்தில் சீனா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்குத் தேவையான இடம் உள்ளது. ஆனால் அமைதி பொருளாதார வளர்ச்சியை விரும்பும் நாடுகள், அந்த மண்டலத்தில் படையைக் குவிப்பதை அப்பகுதி நாடுகள் நம்பிக்கையுடன் பார்க்கவில்லை. இருப்பினும், அமெரிக்காவுடன் சீனா பல்வேறு தரப்புகளிலும் தனது ஒத்துழைப்பை முழுமையாக அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

 

மாசி 15, 2012

காணிப்பிரச்சினையை தீர்க்கக் கோரி மட்டு. விகாராதிபதி உண்ணாவிரதம்

மட்டக்களப்பு மங்களராமய விகாரை யின் முன்னாள் விகாராதிபதி நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்கு மாறும் ஜனாதிபதி தலையிட்டு இதை தீர்த்து வைக்க வேண்டுமெனக் கேட்டும் விகாராதிபதி இவ் உண்ணா விரதத்தை ஆரம்பித்தார். இவரின் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்து அம்பாறை மற்றும் மட்டக் களப்பு மாவட்டங்களை சேர்ந்த சிங்கள, முஸ்லிம்கள் சிலர் பதாகைகளை தாங்கியவாறு பேரணியில் ஈடுபட்டனர். கிழக்கு மாகாணத்தில் நிலவும் மூவின மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறும் இதற்காக ஜனாதிபதி பொறுப்பு வாய்ந்த அமைச்சர் ஒருவரை அனுப்பி காணிப் பிரச்சினையை தீர்த்துவைக்க வேண்டுமென வும் தேரோ தெரிவித்துள்ளார். உண்ணாவிரத இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி கே. திஸாநாயக்கவிடம் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான மகஜரையும் இதன் போது தேரோ கையளித்தார்.

மாசி 15, 2012

இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் தாக்குதலுக்கு ஈரானே காரணம்

இஸ்ரேல் கண்டனத்துக்கு ஈரான் மறுப்பு

டிபிலிசி மற்றும் டில்லியில் நடந்த தாக்குதலுக்கு ஈரான் நாடு தான் காரணம் என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறப்பிடுகையில், ‘ஈரான் நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இஸ்ரேல் மீதும் அதன் தூதரகங்கள் மீதும் முன்பு நடந்த தாக்குதல் சம்பவங்களுக்கு இவர்கள் தான் காரணமாக அமைந் துள்ளனர்’ என்றார். இதனை நிராகரித்துள்ள ஈரான், யூதர்களை மட்டுமே தனித்துவமாக முன்வைக்கும் ஜியோனிச சித்தாந்தத்தைக் கடைப்பிடிக்கும் இஸ்ரேல்தான் ஈரானுக்கு எதிராக உளவியல் போரை நிகழ்த்தி வருகிறது என்று பதிலளித்துள்ளது. அண்மைக் காலமாக ஈரானின் அணு விஞ்ஞானிகளை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல்தான் படுகொலை செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது. (மேலும்....)

மாசி 15, 2012

ஐரோப்பிய நாடுகளின் கடன் மதிப்பீடு குறைப்பு

நாடுகளின் கடன் தரத்தை நிர்ணயிக்கும் ‘மூடிஸ்’ நிறுவனம் 6 ஐரோப்பிய நாடுகளின் கடன் மதிப்பீட்டு குறியீடுகளை குறைத்துள்ளது. ஐரோப்பிய நாடுகளின் நிதி நெருக்கடிக்கு இன்னும் தீர்வுகாணப்படாத நிலையிலேயே மூடிஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி இத்தாலி, மோல்டா, போர்த்துக்கல், ஸ்லோவாகியா, ஸ்லோவேனியா மற்றும் ஸ்பெயின் நாடுகளின் கடன் தரம் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் கடன் தரம் குறைக்கப்படும் என எச்சரிக்கப்பட்ட ஆஸ்திரியா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் தனது ஏஏஏ கடன் தரத்தை தக்கவைத்துக் கொண்டன. கடன் மதிப்பீட்டு குறியீடு ஒரு நாட்டின் கடன் தாங்கு திறனைக் கணக்கிடப் பயன் படுகிறது.

மாசி 15, 2012

அமைதியின்மையை நோக்கி நகர்கிறது பிரிட்டன்?

பொருளாதார நெருக் கடி, ஏற்றத்தாழ்வுகள் அதி கரிப்பு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளோடு வேலையின்மை அதிகரிப் பும் உள்ளதால், வரும் கோடைக்காலத்தில் கடுமை யான அமைதியின்மை பிரிட்டனில் ஏற்படும் என்று அங்கு மேற்கொள் ளப்பட்ட ஆய்வொன்று தெரிவிக்கிறது. சிட்டிசன்ஸ் யு.கே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் பல்வேறு விபரங்கள் தெரிய வந்துள்ளன. 1930களின் பெருமந்தக் காலகட்டத்தில் இருந்ததைவிட மோசமாக வேலையின்மை உருவாகி யுள்ளது. வேலையின்மை என்பது பெரும் நெருக்கடி யாக உருவாகியுள்ள அதே வேளையில், சரியான வேலை கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் லட்சக் கணக்கான இளைஞர்கள் உள்ளனர். கிட்டத்தட்ட ஒருதலைமுறையே தங்கள் எதிர்காலம் பாழாகிவிட் டது என்ற நிலையில் இருக் கிறார்கள். (மேலும்....)

மாசி 14, 2012

புலிகள் அழிக்கப்பட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன் என கூறியவர் அமைச்சர் டக்ளஸ் - சுரேஷ் எம்.பி

யாழ் பல்கலைக் கழக முன்றலில் 1986ம் ஆண்டு புலிகளுக்கு 'தோழர்' சுரேஷ் சவால் விட்டதை சுரேஷ் பிமேசந்தின் எம்பி சற்று மீட்டுப் பார்ப்பது நல்லது  –  சாகரன்

பிரசாரத்தில் மாத்திரமே அரசியல் செய்து கொண்டாடுகின்ற அமைச்சர் டக்ளஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுப்பதற்குப் பொருத்தமானவர் அல்ல அத்துடன் பாராளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி.பி யின் ஆலோசனையை எதிர் பார்திருக்கவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட எம்.பியுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். போட்டி அரசியலை கைவிடுவதாக கூறுகின்ற அமைச்சர் டக்ளஸ் ஏற்கனவே புலிகள் அழிக்கப்பட்டால் அரசியலில் இருந்தே ஒதுங்கிவிடுவதாகக் கூறியிருந்தார். எனவே தான் முதலில் கூறியதைச் செய்து காட்ட வேண்டும் என்றும் அவர் சொன்னார். (மேலும்....)

மாசி 14, 2012

காதலர் தினம் இளைஞர் சமுதாயத்தின் எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும்

மேற்கு நாடுகளில் அறிமுகமான காதலர் தினம் இன்று இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற இந்து, இஸ்லா மிய கலாசாரம் வேரூன்றியுள்ள பண்டைய சம்பிரதாயங்களை சீர்குலைக்கும் அளவிற்கு இளம் சமுதாயத்தின் நற்பண்புகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. காதல் என்பது ஒரு புனிதமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையில் நிரந்தரமான அன்பையும், பாசத்தையும் வலுப்படுத்தும் ஒரு தூய்மை யான பாசப்பிணைப்பாகும். இன்று மேற்கத்திய நாகரீகம் காதலின் புனிதத்துவத்தை இழிவுபடுத்தக்கூடிய வகையில் காதலர் தினம் என்ற ஒரு புதிய தத்துவத்தை அறிமுகம் செய்து, அதனை வர்த்தக ரீதி யில் இலாபம் திரட்டுவதற்காக பயன்படுத்தி வருவது வேதனைக் குரிய விடயமாகும். (மேலும்....)

மாசி 14, 2012

புலிகளின் தபால் முத்திரை குறித்து ஜெர்மனி மன்னிப்பு கோரியுள்ளது!

புலிகளின் சின்னங்கள் பொறிக்கப்பட்ட தபால்முத்திரைகள் வெளியிடப்பட்டமை தொடர்பில் ஜெர்மன் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. வேண்டுமென்றே தபால் முத்திரை வெளியிடப்படவில்லை என ஜெர்மன்அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான புலிச் சின்னங்கள் தாங்கிய தபால் முத்திரைகள்எதிர்காலத்தில் அச்சிடப்பட மாட்டாது என உறுதியளிக்கப்பட்டுள்ளது. தபால் முத்திரைகளுக்கும் புலிகளுக்கும் இடையிலான தொடர்பைஅறிந்து கொள்ளாமல் முத்திரைகள் வெளியிடப்பட்டதாக ஜெர்மன் தபால் திணைக்களத்தின் துணைத்தலைவர் டொக்டர் ரெனியர் வென்ட் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் இலங்கை மக்களிடமும், இலங்கை அரசாங்கத்திடம்மன்னிப்பு கோருவதாக ரெனியர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தபால் முத்திரைப் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்என அவர் உறுதியளித்துள்ளார்.

மாசி 14, 2012

காதலர் தினத்தை ஒரு வணிக இலச்சினையாகவே நாம் கருத வேண்டும்

(சக்தி)

உலக நாடுகளில் இன்று காதலர் தினம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. காதலர் தினம் ஆரம்பிப்பதற்கு மகப் பேற்றை பெற்றுக் கொடுக்கும் ரோம சாம்ராஜ்யத்தின் காதல் கடவுள் என்ற ழைக்கப்படும் ஒரு வரின் ஞாபகார்த்த மாகவே இந்த காதலர் தினம் ஆரம்ப மாகியது. அங்கு அந்நாட்டு மக்கள் மகப் பேற்றை பெற்றுக் கொடுக் கும் இந்தக் கடவுளை வணங்கி வந்தார்கள். இன்றைய காதலர் தினத்தன்று ஆண் களும், பெண்களும் பரஸ்பரம் தாங்கள் விரும்புபவர்களுக்கு வாழ்த்து அட்டை களை அனுப்பி வைப் பார்கள் அல்லது சிறிய அன்பளிப்பு களை கொடுப்பார்கள், சற்று வசதியுடையவர் கள் சிறிய சொக்கலட் டுகளையும் அதைவிட சற்று வசதியுடையவர் கள் தங்கள் காதலி களுக்கும் காதலர் களுக்கும் விலை உயர்ந்த நகைகளையும் அன்பளிப்பு செய்வார்கள். (மேலும்....)

மாசி 14, 2012

இனப்பிரச்சினைத் தீர்வில்

முஸ்லிம்களின் பரிமாணம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

யுத்தத்திற்கு பின்னரான நாட்டின் தற்போதைய நிலைமை, பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய சட்டங்களும் சட்டத்திருத்தங்களும் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் பரிமாணம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் பற்றி அமெரிக்க பிரதிநிதிகளுக்கு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று விளக்கமளித்தார். தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஒ பிளேக், மனித சிவில் பாதுகாப்பு, மனித உரிமைகள், ஜனநாயகம் தொடர் பான அமெரிக்க இராஜாங்க துணைச் செயலாளர் மரியா ஒடேரோ ஆகியோரும், அவர்களது குழுவினரும் நீதியமைச் சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை நீதி அமைச்சில் நேற்று காலை திங்கள் கிழமை (13.02.2012) சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினர். இந் நாட்டு பிரதான முஸ்லிம் கட்சி யின் தலைவர் என்ற முறையில் இல ங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி கருத்துத் தெரிவிப்பதற்கு அமைச்சர் ஹக்கீ முக்கு சகல அருகதைகளும் உண்டென ரொபேர்ட் ஒ பிளேக் தெரிவித்தார்.

மாசி 14, 2012

லிபிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த கடாபி மகன் சாதி நைகரில் வீட்டுக்காவல்

நைகருக்கு தப்பிச் சென்ற லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சாதி கடாபியை அந்நாட்டு அரசு வீட்டுக்காவலில் வைத்துள்ளது. லிபிய இடைக்கால அரசை எச்சரித்ததைத் தொடர்ந்தே சாதி கடாபி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரை தம்மிடம் ஒப்படைக்குமாறு லிபிய இடைக்கால அரசு கோரியுள்ளது. லிபியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் போது சாதி கடாபி நைகருக்கு தப்பிச் சென்றார். அங்கு அவருக்கு மனிதாபிமான அடிப்படை தஞ்சம் வழங்கப்பட்டது. இந்நிலையில் அல் அராபியா செய்திச் சேவைக்கு அவர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், தான் லிபியர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் பல குழுக்களும் புதிய அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்த தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சாதி கடாபியின் எச்சரிக்கை குறித்து லிபிய இடைக்கால அரசு நைகர் அரசை அறிவுறுத்தியதையடுத்து சாதி கடாபி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவரை லிபிய இடைக்கால அரசிடம் ஒப்படைக்க நைகர் அரசு மறுத்துள்ளது. சுதந்திரமான, பக்கச்சார் பற்ற நீதிமுறை ஒன்று இருக்கும் அரசிடமே சாதி கடாபியை ஒப்படைக்க முடியும் என நைகர் அரச பேச்சாளர் மவ்ரொவ் அமன்டோ குறிப்பிட்டுள்ளார்.

மாசி 14, 2012

25 நகரங்களின் பெயர்களை மாற்ற உள்துறை அமைச்சு அனுமதி

கடந்த பத்தாண்டுகளில் நாடு முழுவதும் 25 நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சில நகரங்களின் பெயர்கள் உண்மைத் தன்மை மாறி வேறு பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்களின் உணர்வுகளை மதித்து, அந்த நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளிக்கிறது. அதன்படி கடந்த பத்தாண்டுகளில் 25 நகரங்களின் பெயர்களை மாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளாவில் 17 நகரங்களின் பெயரையும், பஞ்சாபில் 4 நகரங்களின் பெயரையும், ஒடிசாவில் 2 நகரங்களின் பெயரையும் மாற்ற அனுமதி கொடுத்துள்ளது. கேரளாவில் குயிலான் என்பது கொல்லம் என்றும், அலப்பி என்பது ஆலப்புழா என்றும், மன்னான்டாடி என்பது மானந்தவாடி என்றும், சுல்தான் பேட்டரி என்பது சுல்தான்பத்தேரி என்றும், பாடகரே என்பது வடகரா என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ஒடிசாவில் புல்பானி நகரம் பவுத் கவுதமால் என்றும், சோனாப்பூர் என்பது சுவர்னபூர் என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் இரண்டு நகரங்களின் பெயர்களை மாற்றவும் அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில் அம்மாநிலத்தின் தலை நகரான போபால் என்பதை போஜ்பால் என மாற்ற மத்திய அரசு மறுத்து விட்டது.

மாசி 14, 2012

CONGRESSIONAL LETTER TO PRESIDENT OBAMA LAUDS

SRI LANKA’S PROGRESS, PROPOSES STRONGER U.S.-SRI LANKAN TIES

A group of influential members of Congress have urged President Barack Obama to strengthen ties between the United States and Sri Lanka, noting Sri Lanka’s May 2009 triumph over terrorism, its flourishing trade ties with U.S. companies and its regional strategic importance. “After three decades of internal strife, Sri Lanka has an opportunity to move forward as a unified nation guided by its democratic ideals and institutions,” the letter states.“For the first time in more than a generation, the United States has an opportunity to develop a relationship with a united Sri Lanka,” the letter tells President Obama. “Accordingly, we urge your Administration to take steps to strengthen our ties with Sri Lanka.” (more....)

மாசி 14, 2012

தமிழக அரசியல் வானில் புதிய கூட்டணி?

விஜயகாந்த் ஸ்டாலின் - கார்த்தி சிதம்பரம் சந்திப்பு!

அ.தி.மு.க. அணியிலிருந்து முற்றிலுமாக தே.மு.தி.க. விலகிவிட்ட நிலையில், மதுரையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்த தனியார் விமானம் ஒன்றில் சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் விஜயகாந்தும், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினும், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் ஒன்றாகப் பயணித்தது அரசியல் வானில் புதிய கூட்டணி ஒன்று உருவாவதற்கான சாத்தியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த சந்திப்பும், விமானத்தில் அவர்கள் மூவருக்கும் இடையில் நடந்த கலந்தாலோசனையும் எதிர்க் கட்சிகள் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்பை அதிகரித்திருப்பதாக தே.மு.தி.க. மற்றும் தி.மு.க. தரப்பு முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். (மேலும்....)

மாசி 14, 2012

கிழக்கு மாகாண சபை

எதிர்ப்பையடுத்து அமர்வு ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குழப்ப நிலையையடுத்து கிழக்கு மாகாண சபையில் நேற்று (திங்கட்கிழமை) இடம் பெற்ற விசேட அமர்வு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நாடு மற்றும் நகரத் திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் சட்ட விரோதமானது என தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்த்தனர். (மேலும்....)

மாசி 14, 2012

பொழுதுபோக்கு நட்பையும் உறவையும் வளர்க்கும்

எப்போ பாடசாலை மணி அடிக்கும், ஓடியாடி விளையாடலாம் என மணி மேல் விழிவைத்துக் காத்துக் கிடந்த பால்ய காலம் ஞாபகம் இருக்கிறதா? அதன் பின் படிப்பு, வேலை என வாழ்க்கை யின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு தாவியபோது நழுவிப் போன ஒரு விடயம்தான் பொழுது போக்கு. பொழுது போக்கு என்றால் இயல்பாகவே ஒரு சின்ன உற்சாகம் மனதுக்குள் ஓட வேண்டும். சிலரோ ‘அதற்கெல்லாம் ஏது நேரம். வேலையைப் பார்க்கவே நேரம் இல்லை’ என சலித்துக் கொள்வார்கள். ஒருவேளை நீங்களே கூட அப்படி புலம்பும் பார்ட்டியாய் இருக்கலாம். பொழுது போக்கு என்றாலே ஏதோ மிச்ச மீதி இருக்கும் நேரத்தைச் செலவிடும் வெட்டி விடயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அதுவும் நமது வாழ்வின் ஒரு பாகமே. (மேலும்....)

மாசி 14, 2012

ஜப்பான்  பெரிய கட்சிகளைக் கலக்கிய கியோட்டோ மேயர் வேட்பாளர்

ஜப்பான் பெரிய கட்சிகளின் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் திரண்டு வருகிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், கியோட்டோ நகர மேயர் தேர்தல் அமைந்திருக் கிறது. இந்தத் தேர்தலில் மாற்றுக் கொள் கைகளை முன்னிறுத்துவோரிடம் தோற்றுவிட்டால் தங்கள் அரசிய லுக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால் நாட்டில் உள்ள ஜனநாயக, தாராள ஜனநாயக மற்றும் கொமேய் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் பொது வேட்பாளரை நிறுத்தின. மேயராக இருந்த கடோகவா டய்சாகுவிற்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அவ ருக்கு எதிராக ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு பெற்ற நகமுரா கசு வோ நிறுத்தப்பட்டார். கடந்த முறை யில் இவர் போட்டியிட்டிருந்தார்.  தேசிய மருத்துவக் காப்பீட்டுத்திட் டத்தில் வெட்டு, வேலைவாய்ப்புகள் போன்ற அம்சங்களில் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடன் நின்ற நகமுராவின் பிரச்சாரம் மக்கள் மத்தியில் நல்ல ஆதரவைப் பெற்றது. பேரழிவின்போது கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றிய சேவைப் பணிகள் நகமுரா விற்கு கூடுதல் ஆதரவு கிடைக்கச் செய் தது. மேலும், 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இப்பகுதியில் நின்ற கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாள ரை விட மேயர் தேர்தலில் கூடுதல் வாக் குகள் கிடைத்திருப்பது அதிருப்தி அதிகரித்துள்ளதையே காட்டுகிறது.

மாசி 14, 2012

மாலத்தீவில் அமெரிக்கா தலையீடு  7 புதிய அமைச்சர் நியமனம்

மாலத்தீவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்ற முகமது வாஹித் ஹசன் தமது அமைச்சரவையில் பல்வேறு கட்சியினரை சேர்ந்த 7 பேரை அமைச்சராக்கிக் கொண் டுள்ளார். இப்புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அஸிமா சாக்கூர், மாலத்தீவு நாட்டின் முதலாவது அரசு தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றியவர். இதேபோல் பதவி விலகிய நஷீத்தின் பிரதான எதிரி யான முன்னாள் அதிபர் கயூமின் செய்தித் தொடர்பாளர் முகமது ஹூசைன் செரீப்பையும் அமைச்சரவையில் வாஹித் சேர்த்துக் கொண்டுள்ளார். இவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது. நஷீத் பதவி விலகியதைத் தொடர்ந்து மாலத்தீவு தலைநகர் மாலேயில் முகாமிட்ட அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான துணை அமைச்சர் ராபர்ட் பிளேக், ஜனாதிபதி வாஹித் மற்றும் அந்நாட்டின் அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மாசி 14, 2012

கைப்பற்றுவோம் போராட்டங்கள்  அடுத்த இலக்கு அமெரிக்க வங்கிகள்!

முதலாளித்துவ எதிர்ப் புப் போராட்டமாக அமெ ரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட்டங்கள், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள், பொது இடங்கள், துறை முகங்கள் உள்ளிட்ட பல் வேறு இடங்களைக் கைப் பற்றி போராட்டங்களை நடத்தி வரும் அமெரிக்க மக்கள், வங்கிகளைத் திடீ ரென்று கைப்பற்றும் போராட்டத்தை அறிவித் துள்ளனர். வால் ஸ்டிரீட் டில் அமைந்துள்ள பல வங் கிகளைத் திடீரென்று கைப் பற்றிக் கொள்வதன் மூலம் “ஒரு விழுக்காட்டினர்” மீது நிர்ப்பந்தம் செலுத்த முடியும் என்று போராட் டக்குழுவினர் கூறியுள்ளனர். 99 விழுக்காடு மக்களின் தேவைகளை அலட்சியப் படுத்தும் அமெரிக்க அரசு, வங்கிகளைப் பாதுகாக்க நிதியை வாரி வழங்குகிறது. இதைக்கண்டு அமெரிக்க மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் இந்தப் பிரச்சனைகளை முன்வைத்து கைப்பற்று வோம் போராட்டங்கள் நின்றுவிடவில்லை என்ற செய்தியையும் அமெரிக்க மக்களுக்குச் சொல்ல வேண் டியுள்ளது. சொல்லப் போனால் கூடுதல் வலு வோடு நாம் முன்னேறு கிறோம் என்கிறார்கள் போராட்டக்குழுவினர்.

மாசி 13, 2012

மாலத்தீவு கலவரமும், அமெரிக்க தலையீடும்

(சாகரன்)

தற்போது அமெரிக்காவிற்கு கிடைத்துள்ள 'அரிய' வாய்ப்பு மாலை தீவில் ஏற்படுத்தப்பட்ட வலிந்த ஆட்சி மாற்றம். ஒரு நாளில் ஏற்பட்ட 'கலகம்' மக்களின் அமோக ஆதரவில் வென்ற ஜனாதிபதியை சுயவிருப்பின் பேரில் இராஜினமா செய்தது நம்பும் படியாக இல்லை. எதிர்காலத்தில் 'விக்கிலீக்ஸ்' க்குகள் உண்மையை உடைக்காமலா விடப் போகின்றன. இந்த வலிந்த ஆட்சி மாற்றத்தை பாவித்து எப்படியாவது தாம் நினைப்பதை நிறைவேற்றி விட அமெரிக்கா முழு வீச்சில் செயற்படNவு முனைகின்றது. தனக்கு சாதகமான 'பொம்மை அரசை' ஆசீர்வதித்து நிறுவ விரைந்திருக்கின்றனர் மாலை தீவிற்கு அமெரிக்க 'இராஜ தந்திரிகள்' இவர்களுக்கு மாலை தீவு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.(மேலும்......)

மாசி 13, 2012

இலங்கையுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த அமெரிக்காவுக்கு உகந்த நேரம்

இலங்கையுடன் நெருக் கமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு தகுந்த காலம் ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க கொங்கிரஸ் உறுப்பினர்கள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் தெரிவித்துள்ளனர். மூன்று தசாப்தகால பயங்கரவாத சூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டை முன்னேற்றிச்செல்வதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்குத் தோன்றியிருக்கும் நிலையில், இலங்கையுடனான நட்புறவுகளைப் பலப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு சந்தர்ப்பம் தோன்றியிருப்ப தாக காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்துள் ளனர். ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளைச் சேர்ந்த 11 காங்கிரஸ் உறுப்பினர்கள் இணைந்து கையொப்பமிட்டு, பராக் ஒபாமாவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. (மேலும்......)

மாசி 13, 2012

Ruthless_Part I

போர்க் குற்றங்கள் சம்மந்தமாகவும் புலிகள் சிறார்களை படையில் இணைத்தது போன்ற விடயங்கள் சம்மந்தமான இலங்கை அரசின் தன்னிலை விளக்க வீடியோ இது.

Abduction of 600 from St Mary's church at valayanmadam and shelling the church compound around 21 March 2009 - Ministry of Defence and Urban Development, Sri Lanka (to watch video....)

மாசி 13, 2012

5 ஐரோப்பிய நாடுகளில்

புலிகளின் பிரிவினை கொள்கை பரப்பும் 420 பாடசாலைகள்

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து ஐந்து ஐரோப்பிய நாடுகளில் தமிழர்கள் எல். ரி. ரி. ஈ. இயக்கத்தின் கொள்கைகளைப் பரப்பக்கூடிய 420 பாடசாலைகளை நடத்தி வருவதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளன. எதிர்காலத்தில் தமிழ் மக்களிடையே எல். ரி. ரி. ஈயின் பிரிவினவாத அரசியல் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்வதற் காகவே வெளிநாடுகளில் உள்ள புலம் பெயர் தமிழர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக அறிவிக்கப்படுகின்றது. (மேலும்....)

மாசி 13, 2012

ஆட்சியை நான் கவிழ்க்கவில்லை; விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் - மாலைதீவின் புதிய ஜனாதிபதி வாஹிட்

மாலைதீவின் முன்னாள் ஜனா திபதி மொஹமட் நஷிட் ஆட்சியைத் தான் கவிழ்க்க வில்லையெனத் தெரிவித்திருக்கும் மாலைதீவின் புதிய ஜனாதிபதி மொஹமட் வாஹீட், இதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் பட்சத்தில் அதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் எனக் கூறியுள்ளார். ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியதன் பின்னணியில் சதி இருப்பதாகவும், ஆயுத முனையில் வழங்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே தான் பதவி விலகியதாகவும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷிட் தெரிவித்திருந்தார். இதன் பின்னணியில் தற்போதைய ஜனாதிபதி இருப்பதாகவும் நஷிட் குற்றஞ்சாட்டியிருந்தார். (மேலும்....)

மாசி 13, 2012

பாராளுமன்ற தெரிவுக் குழுவில்

பங்கேற்பது அனைத்து கட்சிகளினதும் கடமை - பிரதமர் டி. எம். ஜயரத்ன

நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் பங்குபற்றி நாட்டு மக்களின் விருப்பப்படி, பிரச்சினையைத் தீர்த்துக் கொள்வதே சகல கட்சிகளின் பொறுப்பாகும். சகல கட்சிகளையும் இனங்களை யும் சேர்ந்த மக்களைப் பிரதி தித்துவப்படுத்தும் நாடாளுமன்றமே, இனப்பிரச்சினைத் தீர்க்க ஆலோசனை வழங்கவுள்ள அதி உயர்ந்த ஜனநாயக நிறுவனம் என்பதையும் ஜனாதிபதி தெளிவாக வலியுறுத்தி உள்ளார் என பிரதமர் டி. எம். ஜயரத்ன கூறினார். (மேலும்....)

மாசி 13, 2012

ரொபேர்ட் ஓ பிளேக் தமிழ்க் கூட்டமைப்பு, மு.காவுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட்.ஓ.பிளேக் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத் துணைச் செயலாளர் மரியா ஒட்டேரோ ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை நேற்றுச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இவர்கள் இன்றையதினம் முற்பகல் 9.45 மணிக்கு நீதியமைச்சுக்குச் சென்று நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீமைச் சந்திக்கவுள்ளனர். இலங்கையின் பிந்திய நிலைவரங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆராயப்படும் என அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்றுமாலை, அமெரிக்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து ஆராய்ந்துள்ளனர். இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு இவர்கள் புதுடில்லிக்குச் சென்று இந்தியாவின் முக்கியஸ்தர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதுடன், பின்னர் அங்கிருந்து நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கும் செல்லவுள்ளார்கள்.

மாசி 13, 2012

நாடு, நகர கட்டளை திருத்த சட்ட மூலம்

கிழக்கு மாகாண சபையில் இன்று விவாதம்
 

கிழக்கு மாகாண சபையில் இன்று நாடு, நகர கட்டளைத் திருத்தச் சட்ட மூலம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த மாதம் 31 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக இந்த திருத் தச் சட்ட மூலம் மாகாண சபையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து கிழக்கு மாகாண சபையின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராயப்பட்டு, இன்று சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. நாடு, நகர திட்டமிடல் கட்டளை சட்டத்தை திருத்துவதற்கான சட்ட மூலம் 2011.10.17 ஆம் திகதிய அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் அமைச்சரின் விருப்பத்தின் பேரில் ஏதேனும் மாநகர இடப்பரப்பினுள், நகர அபிவிருத்தி இடப்பரப்பினுள் அல்லது பெருவழி வீதி இடப்பரப்பினுள் வர்த்தமானியில் வெளியிடப்படும் கட்டளை மூலம், கட்டளைச் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு பயன் கொடுப்பதற்காக வரையறுக்கப்பட்ட ஏதேனும் காணி அல்லது இடப்பரப்பை. (மேலும்....)

மாசி 13, 2012

அணுசக்தி தொடர்பில் ஈரான் அரசு சில தினங்களில் முக்கிய அறிவிப்பு

ஈரானின் மிகப் பெரிய அணுசக்தி சாதனை குறித்து இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக் கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநஜாத் அறிவித்துள்ளார். எனினும் அந்த அறிவிப்பு குறித்து ஈரான் ஜனாதிபதி எந்த மேலதிக தகவலையும் வெளியி டவில்லை. எனினும் ஈரான் தனது யுரேனிய செறி வூட்டலை நிறுத்தாது என அவர் குறிப்பி ட்டார். யுரேயினிய செறிவூட்டலினூடாகவே அணுவாயுதம் தயாரிக்க முடியும் என்பது குறிப் பிடத்தக்கது. ஈரான் இஸ்லாமிய புரட்சியின் 33 வது ஆண்டு நிறைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இடம்பெற்ற ஊர்வல த்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அஹமதி நஜாத் இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேற்கின் தொடர்ச்சியான பயமுறுத்தல் மற்றும் ஆயுதங்களுக்கு ஈரான் ஒரு போதும் அடிப்பணியாது என அவர் உறுதியளித்தார். (மேலும்....)

மாசி 13, 2012

சீன யுவானின் மதிப்பு உயர்வு

சீன நாணயமான யுவானின் மாற்று மதிப்பு கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. டொலருக்கு நிகரான மாற்று மதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சீனாவின் துணை ஜனாதிபதி ஸி ஜின்பிங், அடுத்த வாரம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். விரைவில் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள ஜின்பிங், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் யுவானின் மதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு டொலருக்கு 6.2 யுவான் தந்தால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்களாக யுவானின் மதிப்பு உயர்ந்து வந்துள்ளது. சீனாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஒக்டோபரில், 1170 கோடி டொலர் அதிகரித்தது. இதனால் சீனாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 3 இலட்சம் கோடி டொலருக்கும் அதிகமாகும்.

மாசி 13, 2012

ஆளப்போகும் அண்ரோயிட்
(எஸ். நாராயணன் )

ணினி என்றவுடனேயே நினை வில் வருவது பில்கேட்சின் மைக்ரோசொப்ட் நிறுவன தயாரிப்பான விண்டோஸ் இயங்குதளம்தான். மென்பொருள்களா கட்டும், வீடியோ கேம்ஸ் ஆகட்டும், இணையத்தளங்களாகட்டும் அனைத்திற்கும் இயங்குதளமாக விளங்குவது விண்டோஸ்தான். யுனிக்ஸ், மெக் போன்ற இயங்குதளங்கள் இருப்பினும் புதிதாக உருவாக்கப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை விண்டோஸ் இயங்குதளத்தில் செயல்படும் வகையில்தான் வடிவமைக்கப்படுகின்றன. எனவேதான் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. கணினிக்கு எப்படி ஓர் இயங்குதளம் தேவையோ, அதுபோல கைப்பேசிகளுக்கு ஓர் இயங்குதளம் தேவை. இந்நிலையில் தற்போது கைபேசி என்றவுடனேயே நினைவில் வரும் வகையில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் அண்ரோயிட் இயங்குதளம்தான். (மேலும்....)

மாசி 13, 2012

நேரம் பொன்னானது

னிதன் உருவாகும் போதே அவனின் மரணமும் உறுதி செய்யப் படுகிறது! மனிதனுக்கு மட்டுமல்ல உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் இதுவே, பொதுவான நியதி! ஆயுளின் அளவு களில் வேண்டுமானால் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் பிறப்பின் முடிவு இறப்பு என்றும், ஆக்கத்தின் முடிவு அழிவு என்றும், ஒவ்வொரு தொடக்கத்துக்கும் ஒரு முடிவு இருக்கவே செய்கிறது. ஒரு மனிதன், பிறந்த வினாடியிலி ருந்து, அவனின் ஆயுள் காலம் முழுவதும் அவனை நிழலாய் பின் தொடர்வது இரண்டு விடயங்கள்தான். ஒன்று உணவு மற்றது மரணம். ஒருவனின் உணவு நிறைவுறும் போது, மரணம் அவனை தழுவச் செய்யும், அல்லது மரணம் அவனை தீண்டும் போது... அவனின் உணவு முடிவுற்றிருக்கும். மரணத்தை வென்றவர் எவருமிலர் என்ற நிதர்சன உண்மையை ‘மறுப்ப வரும் எவருமிலர் ஆயினும் தன் விடயத்தில் மட்டும், “அது எப்போதோ... தற்போதைக்கு இல்லை...” என்ற அலட்சியமே ஒவ்வொரு மனிதனுக்கும். (மேலும்....)

மாசி 13, 2012

Merchants of death and lies, the so called Great British Media defamation of Channel 4

UK which preaches media freedom to others is now feeling the pinch of such media excesses (unlawful acts) and the David Cameron administration has appointed a committee headed by Lord Justice Leveson to advise what should be done to curb the exuberance of unrestrained media.Complaint to OfcomThere is a fundamental issue here. How does an offended party respond/reply to reports/programmes broadcast by the electronic media, particularly television. I suppose the same argument could be raised against websites and internet-based media especially if they are outside the jurisdiction of the country concerned.The C4 video on Sri Lanka is a case in point. (more...)

மாசி 12, 2012

தமிழ்-முஸ்லிம் கட்சிகளின் ஒற்றுமையில் தங்கியுள்ள பதின்மூன்று பிளஸ் வெற்றி

இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது எப்படி என்பது தொடர்பாகவே பெரும்பா லான கருத்தாடல்கள் தற்போது அரசியல் வட்டாரங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த தீர்வு காணும் விடயத்தை முன்வைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் தமக்குத் தெரிந்த சில கருத்துக்களை முன்னிலைப்படுத்தி மக்க ளைத் தமது பக்கம் ஈர்க்க முற்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறது. அரசியலில் வங்குரோத்து நிலை கண்ட சில அரசியல் வாதிகளோ இந்த விடயத்தைப் பெரும் தர்க்க மாக்கி வருவதுடன், சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கள் ஒற்றுமைப்பட்டாலும் அவர்களை ஒன்றுசேர விடாது பிரித்தாளும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். (மேலும்....)

மாசி 12, 2012

ஸ்டீவ் தொடர்பில் கசிந்த அதிர்ச்சித் தகவல்கள்!

தொழில்நுட்ப உலகின் தந்தை என பலரால் வர்ணிக்கப்படும் அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபர் ஸ்டீவ் ஜொப்ஸ் தொடர்பில் அதிர்ச்சிகரமான தகவல்கள் சில அமெரிக்க புலனாய்வுத் துறையின் அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஜோர்ஜ். எச்.டபிள்யூ. புஷ்ஷின் அரசாங்கத்தில் ஸ்டீவ் ஜொப்ஸிற்கு முக்கிய பதவியொன்றை வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்தது. இதற்காக எப்.பி.ஐ. உளவுப் பிரிவினரால் ஜொப்ஸ் தொடர்பில் விசாரணைகள் சில மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கென ஆவணங்கள் பலவும் திரட்டப்பட்டுள்ளன. இவற்றில் ஜொப்ஸின் நண்பர்கள், அவரிடம் வேலைபார்த்த ஊழியர்கள் அவர் தொடர்பில் வழங்கிய செய்திகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும் அவர்களுடைய பெயர்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 1991 ஆம் ஆண்டுப்பகுதியில் தயாரிக்கப்பட்ட 191 பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்கை தற்போது எப்.பி.ஐ. இன் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. (மேலும்....)

மாசி 12, 2012

யாழ். அச்சுவேலியில் படையினர் நடத்திய மருத்துவ முகாம்!

511 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் பிரிகேடியர் கேர்ணல் எம்.டீ.யூ.வி. குணதிலக தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இலவச மருத்துவ முகாமொன்று இடம்பெற்றது. அச்சுவேலி மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இம்முகாமில் சுமார் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சையில் ஈடுபட்டனர். இதன்போது, 400 பேருக்கு இலவசமாக கண்ணாடிகள் வழங்கப்பட்டன. அத்துடன் சுமார் ஐம்பது கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கான உணவும் வழங்கப்பட்டது.

மாசி 12, 2012

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடையும் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களும்

உலகப் பொலிஸ்காரனான அமெரிக்காவின் கவனம் எண்ணெய் வளமிக்க நாடான ஈரான் மீது திரும்பி விட்டதை உலகம் அறிந்த வண்ணமுள்ளது. தனக்கு நிகராக அல்லது தனது பணியை ஒத்த பணியை பிறிதொரு நாடு செய்யக்கூடாது அல்லது சவாலாக இருக்கக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து தட்டிப்பறிப்பது அமெரிக்காவுக்கு கைவந்த கலையாகும். இந்தப் பின்னணியில் மசகு எண்ணெய் இறக்குமதியில் கூடுதலாக தனது நேச நாடான ஈரானை நம்பியிருக்கும் இலங்கைக்கு ஈரான் மீதான அமெரிக்க தடைகள் மசகு எண்ணெய் தொடர்பில் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஈரான் மீதான தனது தடைவிதிப்புக்களில் இருந்து விதிவிலக்களிக்குமாறு இலங்கை அமெரிக்காவை கோரியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இத்தகைய தடை நடவடிக்கை பொருளாதாரத்தை மோசமான முறையில் பாதிப்படையச் செய்யலாம் என்று சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறினார். (மேலும்....)

மாசி 12, 2012

மாடுகளின் பருமனையே ஒத்திருக்கும் ஆடுகளைத் தேடி அனலைதீவுக்கு...

ஏன் இந்தத் தீவுக்கு “அனலை தீவு” என்று சொல்வது என்று நான் அந்த அதிகாரியின் உதவியோடு அந்த இளைஞர்களிடம் கேட்டேன். அதில் ஒரு இளைஞன் கொடுத்த பதிலால் நாம் சிறிது திகைப்படைந்தோம். நீல நிற கடலால் சூழப்பட்ட இந்த சிறிய தீவில் பிறந்து இங்கு மிகக் கஷ்டத்துக்கு மத்தியில் படித்த அந்த இளைஞன் தமிழ் பேராசிரியர் ஒருவரைப் போல் பேசினார். அந்த அறிவை எமக்கு ஊட்டும் அதிகாரியின் மொழிபெயர்ப்பும் அதைவிட மேலாக இருந்தது. “அனலை” என்பதற்கு தமிழ் மொழியில் பல அர்த்தங்களுண்டு, அதிலொன்று தான் கலப்பம் என்று சொல்வது, அது சரியாக கலப்படம் போன்ற தொன்றாகும். அடுத்தது வெட்கை என்று சொல்வது. என்பது அதிக உஷ்ணத்துடன் கூடிய சூடான அல்லது வெப்பத்துடன் கூடியது என்று சொல்வதாகும். “எமது மூதாதையர் கூறும் கதைகளின்படி இந்த யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தீவுகளில் அதிக வெப்பத்தைக் கொண்ட தீவு அனலை தீவாகும். சிலர் இதற்கு அனல் தீவு” என்றும் கூறுகின்றனர். அது சரியென்று தான் எமக்கும் தோன்றுகின்றது. (மேலும்....)

மாசி 12, 2012

பின்னடைவை நோக்கிச் செல்கிறதா இந்திய அணி?

இந்திய கிரிக்கெட் அணியைப் போன்றே அதன் ரசிகர்களும், விமர்சகர்களும் விசித்திரமானவர்கள். தொடக்க ஆட்டக்காரர்கள் கடகடவென ஆட்டமிழந்து சென்றால், ஒட்டுமொத்த அணியுமே மிகக் குறைந்த ஓட்டங்களுக்கு சுருண்டு கொள்ளுமோ அதைப் போலத்தான் இந்திய ரசிகர்களும், விமர்சகர்களும் இந்திய அணி வெற்றி பெற்றால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அவர்கள் அடிக்கும் ஒவ்வொரு அடியையும் வர்ணிப்பார்கள். வீசும் ஒவ்வொரு பந்தையும் பாராட்டுவார்கள். தோற்க ஆரம்பித்து விட்டால் போதும், வீட்டை உடைப்பது, கூழ்முட்டை எறிவது பத்திரிகைகளில் திட்டித் தீர்ப்பது என்று, தமது கோபத்தைக் காட்டுவார்கள். கபில்தேவ் இந்திய அணியை வழிநடத்திய காலத்தில் இருந்தே இந்திய அணி, அந்நிய மண்ணில் குறிப்பாக ஆசிய கண்டத்துக்கப்பால் வெற்றிபெறுவது கடினம் என்று கிரிக்கெட் விமர்சகர்களும், ரசிகர்களும் கூறிவந்தனர். (மேலும்....)

மாசி 12, 2012

ஜனநாயக ஆட்சிக்கு ஏற்பட்ட கதி!

மாலைதீவு மக்கள் மனக் கொதிப்பு

மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் அன்னி நஷித் கடந்த 08ம் திகதி பதவி பறிக்கப்பட்டு பரிதாபத்துக்குள்ளானார். செய்தியைக் கேள்வியுற்றோரின் கண்கள் அகல விரிந்தன. காதுகள் கனத்து அடைத்துப் போயின. எவ்வளவு பெரிய பதவி. எத்தகைய செல்வச் செழிப்பு வாழ்க்கை இவ்வளவும் இல்லாமற் போனதே இறைவா. மாலைதீவின் முப்பது வருட தனிமனித ஆட்சியை (மஹ்மூத் அப்துல் கையும்) தவிடு பொடியாக்கி 2008 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவர்தான் மொஹமட் அன்னி நஷித். ஆசியாவிலே மிக நீண்ட காலம் ஜனாதிபதியாகவிருந்தவர் என்ற மஃமூன் அப்துல் கையுமின் ஆட்சி அதிகாரம், அட்டகாசம், அதிகாரக் கெடுபிடிகள் அனைத்தையும் எடுத்த எடுப்பில் வீசியெறிந்து ஜனாதிபதியாகத் தெரிவானவரின் நிலைமை இன்று நடுத்தெருவில். (மேலும்....)

மாசி 12, 2012

முறிகண்டி பிள்ளையார் யாருக்குச் சொந்தம்?

'இங்கு மக்களின் பாவனைக்கு உகந்த மலசல கூடம் கட்டி மக்கள் பாவனைக்கு விடுபவனுக்கே சொந்தம்'

வடபகுதிக்குச் செல்லும் ஏ-9 வீதியில் அமைந்துள்ள முறிகண்டி பிள்ளையார் கோவிலின் உரிமைக்காக இருதரப்பும் நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ள நிலையில் அங்கு தொழில் புரியும் சுப்பிரமணியம் கார்த்திகேசு எனும் தொழிலாளியோ தான் யாருக்குச் சொந்தம் என்பதை அந்த விநாயகரே தீர்மானிக்க வேண்டும் எனத் தெரி வித்துள்ளார். வயதில் மூத்தவரான சு. கார்த்திகேசு இறை பணியில் நாட்டம்கொண்டு ஆலயத்தில் பணிபுரிந்து வருகிறார். இக்கருத்து பிள்ளையாரை உரிமை கொண்டாட நினைத்து நீதிமன்றம் வரை சென்றிருக்கும் இருதரப்பினரையும் சற்றுச் சிந்திக்க வைத்திருக்கும். மேற்படி ஆலய நிர்வாக சர்ச்சை தொடர்பான மனு விசாரணையை தமிழ் நீதியரசர்கள் மூவர் எதிர்வரும் மே மாதம் 29 ஆம் திகதி நடத்தவுள்ளனர். (மேலும்....)

மாசி 12, 2012

காதோடு காதாக...

பிரபாகரனுடன் ஒரே மேசையில் சாப்பிட்டனான்?

தமிழ் மக்களிடம் வாக்குகளை இலகுவாகக் கவர தமிழ்த் தேசியம் பேச வேண்டும் என்பது நமது தமிழ் அரசியல்வாதிகளால் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று. அதில் வெற்றி கண்டவர்கள் வடக்கு கிழக்கில் தமிழ்க் கூட்டமைப்பு, தெற்கில் மனோ கட்சி, முன்னர் மலையகத்தில் அண்ணன் சந்திரசேகரன். இப்ப இதிலும் ஒருபடி மேலே போய் பிரபாகரனுடன் நல்ல உறவாக இருந்தனான், அவரது நெருங்கிய நண்பன், ஒரே மேசையில் ஆனால் வேறு வேறு பிளேட்டில் உரையாடிக்கொண்டே சாப்பிட்டனான் எண்டு காட்டி வாக்குகளைப் பெறலாம் என்று சிலருக்கு பகல் கனவு. அதற்காக தாமே ஊடகங்களுக்கு தம்மிடமுள்ள படங்களை வேறுயாரோ கொடுப்பது போலக் கொடுத்து வருகின்றனராம். பயங்கரக் கில்லாடிகள்தான். ஆனால் தமிழ் மக்களை உப்பிடியெல்லாம் ஏமாற்றிய காலம் மலையேறிவிட்டது தம்பி. (மேலும்....)

மாசி 12, 2012

வீரவசன அறிக்கைகள் விட்டு, தமிழ் தேசியம் பேசியதால்

தமிழ் மக்கள் அளித்த 28,000 வாக்குகளை அம்மணிக்கு தாரைவார்த்த மனோ அண்ணா

தமிழ்த் தேசியம் பேசி வீரவசன அறிக்கைகளை விட்டு கொழும்பு வாழ் தமிழ் மக்களை ஏமாற்றிப் பெற்ற 28,000 வாக்குகளை பொருத்தமற்ற பெண்மணிக்கு மனோ கணேசன் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார் என பிரபா கணேசன் எம்.பி தனது கவலையுடன் கூடிய கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் வாக்களித்தது மனோவுக்கே அல்லாது பிரியா ணிக்கு அல்ல. மேடைகளில் தமிழ்த் தேசியம் பேசி தமிழரின் வாக்குகளை அபகரித்துவிட்டு அதனை பிறிதொருவருக்கு விலைபோன கதையாகவே மனோவின் செயல் அமைந்துள்ளதாகவும், கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இவரது இந்தச் செய்கையால் கடும் கோப மடைந்துள்ளதாகவும் பிரபா கணேசன் எம்.பி தெரிவித்தார். (மேலும்....)

மாசி 12, 2012

கறைபடியாத புதிய தலைமை!

அரசாங்கம் மாறினாலும் ஆக்கள் மாற இல்லைத்தானே? அண்டைக்குப் பெடியளோடை நிண்டு தடிவிட்டவை இண்டைக்கு அரசாங்கத்தோடை நிக்கினம். அப்பாவிகளின்ரை பெடி, பெட்டைகளைப் பிடிச்சுக் குடுத்து இப்ப எங்கை நிக்கினம் பாத்தியளே? நேர்மையாய், விசுவாசமாய் நல்லதைச் செய்ய மாறினா நல்லது தானே நடக்கும்? ஆனா சிலபேர் சனத்திலை சவாரி விட நினைக்கினம். அதுசரி வாத்தியார், இப்ப எங்க இருந்து வாறியள்? நான் தம்பர் உந்த 'லைப்றரி'க்கு ஒருக்காற் போக வேணுமெண்டு எண்ணி இண்டைக்குத் தான் முடிஞ்சுது. நான் பொடியனாயிருக்கேக்கை மார்க்சின்ரை 'மூலதனம்' வாசிச்சனான். இப்பவும் ஒருக்காய்ப் படிப்பம் எண்டு பார்த்தன். அதுல பொறுப்பாயிருக்கிற பெட்டையும் தெரிஞ்சபெட்டைதான். கேட்டுப் பாப்பம் எண்டு தான் போனனான். புத்தகமுங்கிடக்குது, ஆனா நான் கேக்கயில்லை. நடைமுறைக்கு முரணாக நடக்கக் கூடாது தானே? ஆனால் தம்பர் அந்த நூலகத்தைப் பார்க்கப் பெரிய வேதனையாய்க் கிடக்கு. கரைச்சிக் கிராமச் சபையாக கிளிநொச்சி இருந்த காலத்திலை ஆனந்த சங்கரி தலைவரா வந்து முதல் முதல் இந்த நூலகத்தைத் திறந்து வைச்சார். (மேலும்....)

மாசி 11, 2012

உலக பொருளாதாரத்தினை ஆசியமயமாக்க ஈரான் நடவடிக்கை

  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் தடை ஈரானை பாதிக்காது;

  • சீனா, இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி

மேற்கு நாடுகளையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு இயங்கும் உலகின் பொருளாதாரத்தை ஆசியமயமாக்குவதற்கு ஈரான் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பாவில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகும் என்று இலங்கையில் உள்ள புதிய ஈரானியத்தூதுவர் மொஹமத் உஷானி பெளர் தெரிவித்துள்ளார். ஈரான் தொடர்ந்தும் இலங்கைத் தேயிலையை வாங்குமென்றும் அத்துடன் இலங்கை உடனான தனது நட்புறவை எதிர்காலத்தில் மேலும் ஈரான் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.(மேலும்....)

மாசி 11, 2012

Rathika Sitsabaiesan NDP, Tamil Member of Parliament for Scarborough-Rouge River,Ontario   House of Commons, Ottawa.

You failed me and made me resentful, when you purposely alluded  that the person who shot at may have been a government soldier, but you purposely ignored letting the audience know of the other possibility, that if it had truly happened - “I wasn’t sure whether the person was a uniformed Tamil Tiger, who had come to kidnap me to train me as a suicide bomber. That is what they were doing, kidnapping young girls to brain wash them and train them as suicide bombers.”  That would have been more cogent for an intended drama.  What you also did not tell the audience was whether you were playing hopscotch as a five year old under a mango tree when it happened.  Obviously you were outside the house to have been shot at and whether it was a soldier or a Tamil Tiger, either perpetrator was a bad shooter not to get you at short range.  And  that is why I don’t believe your story. That is how silly and a bunch of outrageous baloney, it was.  My hunch is that you were not telling the truth and you certainly weren’t a convincing storyteller either. (more.....)

மாசி 11, 2012

ஐ.நாவில் ‘இலங்கை அரசு தண்டிக்கப்படும்’ நாடகக் காட்சி

(கோசலன்)

இலங்கையின் இனப்படுகொலை மிகக் குறுகிய கால எல்லைக்குள் வன்னி நிலப்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெரும் படுகொலை. உலகின் அத்தனை அதிகார மையங்களும் அண்ணார்ந்து பார்த்து மனிதப் பிணங்களை எண்ணிக்கொண்டிருக்க சாரி சாரியாக நடத்தப்பட்ட படுகொலை. ஒரு தேசத்தின் எல்லைக்கு உட்பட்ட சிறுபான்மைத் தேசிய இனம் என்பதால், ஒடுக்கப்படும் தேசிய இனம் என்பதால் கொலையுண்டுபோனவர்கள் அப்பாவித் தமிழ்மக்கள். உலகம் முழுவதும் எதிர்ப்பியக்கங்கள் அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்க்கின்றன. மில்லினியத்தின் முதலாவது பத்தாண்டின் இறுதியில், சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத பலம் மிக்க இயக்கமாக வளர்ச்சி பெற்றிருந்தனர் என்பது மட்டுமன்றி உலகின் விரல்விட்டெண்ணக்கூடிய இராணுவ இயக்கங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. (மேலும்....)

மாசி 11, 2012

நக்கீரன் கோபாலை கைது செய்யக் கூடாது

முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறான செய்தியை வெளியிட்டது பற்றிய புகார்கள் தொடர்பான வழக்கில் நக்கீரன் ஆசிரியர் கோபாலை கைது செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. முதல்வர் ஜெயலலிதா பற்றி உண் மைக்குப் புறம்பான செய்தியை நக்கீரன் இதழ் வெளியிட்டதாகக் கூறி அதன் ஆசி ரியர் கோபால் மீது தமிழகத்தின் பல் வேறு காவல் நிலையங்களில் அ.தி.மு.க. வினர் புகார் அளித்தனர். இது தொடர்பாக சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கோபாலை கைது செய்யாத வகையில் அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதேபோல் தமிழகத்தில் 200 க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை ஜாம் பஜார் காவல் நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் கோபால் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஓய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோரைக் கொணட முதன்மை அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ. நவநீத கிருஷ்ணன், இந்த மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மாசி 11, 2012

போக்லண்ட் இராணுவம் குவிப்பு: இங்கிலாந்து மீது ஐ.நா.வில் புகார் செய்வோம்  - ஆர்ஜெண்டினா அதிபர்

ஆர்ஜெண்டினா அருகே இங்கிலாந்துக்கு சொந்தமான போக்லண்ட் தீவு உள்ளது. இந்த தீவுக்கு ஆர்ஜெண்டினாவும் உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து இங்கிலாந்து போக்லண்ட் பகுதிக்கு போர் கப்பல்களை அனுப்பி வருகிறது. இது தொடர்பாக ஆர்ஜெண்டினா அதிபர் கிறிஸ்டினா கூறியதாவது:- இங்கிலாந்து தெற்கு அட்லாண்டிக் பகுதியில் இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் சர்வதேச சமூ கத்தில் போர் பதட்டத்தை உருவாக்குகிறது. இது சம்பந்தமாக ஐ.நா. பாதுகாப்பு சபையிலும், பொது சபையிலும் புகார் செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.

மாசி 11, 2012

சட்ட விரோதமாக 550 கோடி ரூபா பெற்ற குற்றம்

பிரணாப் முகர்ஜியிடம் காப்பாற்ற கோரினார் தயாநிதி

சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பெற்ற குற்றத்திற்காக விரைவில் அழைப்பாணை அனுப்ப அமுலாக்கப் பிரிவு முடிவு செய்து உள்ளதால் கலாநிதி, தயாநிதி தரப்பு பீதியடைந்துள்ளது. வழக்கிலிருந்து காப்பாற்றும்படி, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தயாநிதி நேரில் சந்தித்து கூறினார். அவர் தன்னால் எதுவும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார். மேலும், அமுலாக்கப் பிரிவு இலாகாவை கவனிக்கும் தன்னை முன் அனுமதி பெறாமல் சந்திக்க வந்ததற்காக தயாநிதியை பிரணாப் கடிந்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், சட்ட விரோத பணப் பரிவர்த்தனை செய்ததாக தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மற்றும் அவரின் சகோதரரும், சன் குழுமத் தலைவருமான கலாநிதி மீது கடந்த செவ்வாய் கிழமை அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. மலேசிய கம்பெனியுடன் “சன் டைரக்ட்” நிறுவனம் சட்ட விரோதமாக 550 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை செய்து கொண்டிருப்பதால், வழக்கு பதியப்பட்டது. (மேலும்....)

மாசி 11, 2012

கிரகத்தில் உள்ள வைரம்

இந்த பிரபஞ்சத்தில் அதிக மதிப்புடைய பொருள்களில் முதன்மையானது வைரம். சிறிய குண்டூசியளவு வைரக்கல் கூட பல இலட்சம் விலை பெறுமதியானது. இதுவரை உலகில் தோண்டி எடுக்கப்பட்ட வைரக் கற்களில் மிகப்பெரியது என்று கருதப்படுவது இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட கோகினூர் வைரம் ஆகும். அதன் அளவு ஒரு தேசிக்காயின் அளவை ஒத்தது அதன் தற்போதைய அளவு 105.602 கரட் 21.61 கிராம் எடை கொண்டது. பல பில்லியன் டொலர் மதிப்பு மிக்கது. இப்போது லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக காபன் (கரி) என்னும் மூலப்பொருள் இறுக்கமடைந்து பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வைரக் கல்லாக மாறுகிறது. சமீபத்தில் அண்டவெளியில் (Milk Waw) ஒரு கிரகம் வானியல் வல்லுநர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

மாசி 11, 2012

ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் புற்றுநோயை குணமாக்கலாம்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி மாதம் 4ம் திகதியன்று உலக புற்றுநோய் தினம் உலகநாடுகள் எங்கும் நினைவுகூரப்பட்டது. எல்லா நோய் களையும் விட இன்று புற்றுநோயினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை உலகநாடுகளில் அதி உயர் மட்டத்தில் இருக்கின்றது. இலங்கையில் மாத்திரம் ஒரு வருடத்திற்கு சுமார் 15ஆயிரம் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுகிறார்கள். புற்றுநோய் ஆபத்தில் இருந்து நம் நாட்டு மக்களை காப்பற்றுவதற்காக கொழும்பு றோட்டரிக்கழகம் சுகாதார அமைச்சின் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்புத் திட்டத்தின் கீழ் புற்றுநோயினால் பீடிக்கப்பட்டவர்களை ஆரம் பத்திலேயே கண்டுபிடிக்கும் உயிர்காக்கும் ஒரு பாரிய திட்டத்தை ஆரம்பித் துள்ளது. (மேலும்....)

மாசி 11, 2012

மாலத்தீவில் கலவரம்  சிறப்புத் தூதரை அனுப்பியது இந்தியா

அரசியல் நெருக்கடி தீவி ரமடைந்துள்ள மாலத் தீவுக்கு இந்தியா வெள்ளி யன்று தனது சிறப்புத் தூதரை அனுப்பியுள்ளது. துப்பாக்கி முனையில் தன்னை ராஜிநாமா செய்ய வைத்தார்கள் என்று மாலத் தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கூறியதைத் தொடர்ந்து, அங்கு அவரது ஆதரவாளர்கள் பலர் கல வரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாலத் தீவின் தற்போதைய நிலை மையை மதிப்பிட, இந்திய வெளியுறவுத் துறையில் மேற்குப்பகுதி செயலராகப் பணியாற்றி வரும் கணபதி அந்த நாட்டுக்கு புறப் பட்டுச் சென்றார். தில்லியில் இந்திய- ஐரோப்பிய உச்சிமாநாட் டின்போது செய்தியாளர் களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், மாலத்தீவு நிலைமையை ஆய்வுசெய்ய தூதரை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டார். அமைதிப் பேச்சுவார்த் தை மூலம் மாலத்தீவு விவ காரம் தீர்க்கப்படும் என்று நம்புகிறேன். நமது முயற்சிக ளும் அதை நோக்கியே இருக்கும் என மன்மோகன் சிங் தெரிவித்தார். மாலத்தீவை விட்டு குடும்பத்தோடு வெளியே றிய அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் இலங்கை யில் அடைக்கலம் கோரி யுள்ளார். இத்தகவலை நஷீத்தின் மனைவி உறுதிப்படுத்திய தாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தஞ்சம் கோருவது தொடர்பாக மாலத் தீவை விட்டு வெளியேறும் முன்பு மகிந்தா ராஜபக்ஷே விடம் தாம் தொலைபேசி யில் உரையாடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாசி 11, 2012

அமெரிக்க பொருளாதார நெருக்கடி இளைஞர்களுக்கே அதிக பாதிப்பு

2008 ஆம் ஆண்டில் துவங்கிய அமெரிக்கப் பொருளாதார நெருக்கடி யால் அதிகமாகப் பாதிக்கப் பட்டவர்கள் இளைஞர்கள் தான் என்று பியூ ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. லட்சக்கணக்கான மக்களின் வேலைகளைப் பறித்த பொருளாதார நெருக்கடி, கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முத லாளித்துவக் கொள்கைகள் தான் இந்த நெருக்கடிக்குக் காரணம் என்று கூறி அமெ ரிக்கா முழுவதும் “கைப்பற் றுவோம்” போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கின் றன. அதில் லட்சக்கணக் கான மக்கள் பங்கேற்று வரு கின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று துவங் கிய போராட்டங்கள் இன் றுவரை தொய்வில்லாமல் தொடர்கின்றன. (மேலும்.....)

மாசி 11, 2012

மொட்டைத் தலையுடன் யுவ்ராஜ்

நுரையீரல் புற்றுநோய்க்கட்டிக்காக கீமோதெரபி சிகிச்சை பெற்றுவரும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங், தன்னுடைய மொட்டைத் தலையுடன் கூடிய படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கீமோதெரபி சிகிச்சை பெறுபவரின் தலையில் முடி உதிர்வது இயல்பாகும். அவ்வாறு முடிவு உதிர்ந்த தலையுடன் கூடிய முகத்தை ட்விட்டரில் யுவ்ராஜ் வெளியிட்டுள்ளார். “கடைசியில் முடி உதிர்ந்துவிட்டது. ஆனால் வலுவுடன் இருக்கிறேன். திடமாக வாழ்கிறேன்” என்று ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். யுவ்ராஜ் சிங் ஜனவரி முதல் அமெரிக்காவில் உள்ளார். முப்பது வயதான யுவ்ராஜ் சிங் பாஸ்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் கீமோ தெரபி சிகிச்சை பெற்றுவருகிறார். ‘நான் ஒரு போராளி இன்னும் வலுவுடன் வருவேன். எனது நாடு எனக்காக பிரார்த்தனை செய்கிறது. ஆதரவாகச் செயல்படுவதுடன், எனது தனிமையை மதிக்கும் ஊடகத்துக்கு நன்றி’ என்று ஏற்கெனவே யுவ்ராஜ் எழுதியுள்ளார். “மீண்டும் நாடு திரும்பி இந்திய அணியின் சீருடையும் தொப்பியும் அணிந்து நாட்டுக்காக ஆட விரும்புகிறேன் ஜெய்ஹிந்த்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாசி 10, 2012

மாலைதீவில் நடந்ததுதான் என்ன?

குறைந்தளவிலான மக்களைக் கொண்ட இந்து சமுத்திரத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்படும் ஒரு தீவாக விளங்கும் 'மாலை" தீவில் நடந்தது தான்என்ன? அன்று செவ்வாய்க்கிழமை! ஜனாதிபதி மொஹமட் நஷீட் எதிர்பார்த்திராத நாள் என்று கூடக் கூறலாம். திடீரென நாடளாவிய ரீதியில் வெடித்த பாரிய ஆர்ப்பாட்டம். முஹமட் நஷீட் பதவிவிலக வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தின் பிரதான கருப்பொருளாக இருந்தது. இந்நிலையில் செய்வதறியாது , சொல்வதறியாது தடுமாறிய ஜனாதிபதி முஹம்மது நஷீட் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரது பதவி விலக்கல் ஒரு திட்டமிட்ட சதியா? அல்லது சர்வதேசங்களின் மறைமுக அழுத்தமா என்ற கேள்வி எழும்புகின்றது. (மேலும்....)

 

மாசி 10, 2012

பாலகுமாரன் – யோகி ஆகியோர் கடுமையாக விசாரிக்கப்பட்ட பின்னர் நன்றாக கவனிக்கப்படுகிறார்கள், புதுவை இரத்தினதுரை மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சிறிலங்கா கார்டியன் தகவல்!

விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களான வே.  பாலகுமாரன் மற்றும் யோ.யோகி ஆகியோர் சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கார்டியன் தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் இருவரும் போர்முனையில் கொல்லப்பட்டு விட்டதாக சிறிலங்கா அமைச்சர் டியு.குணசேகர முன்னர் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், நம்பத்தகுந்த சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இவர்கள் தடுப்பில் இருப்பதாக கூறியுள்ளார். தெற்கிலுள்ள இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில்- இறுக்கமான இராணுவப் பாதுகாப்பின் கீழ் விடுதலைப் புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுடன் இவர்கள் இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

மாசி 10, 2012

புலி உறுப்பினர்கள் தொடர்ந்த

சவேந்திர சில்வா மீதான குற்றச்சாட்டுகள் நியூயோர்க் நீதிமன்றத்தினால் நிராகரிப்பு

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக அமெரிக்காவின் நியூயோர்க் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சவேந்திர சில்வா குற்றமற்றவர் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பெண் புலி உறுப்பினர்கள் இருவரால் தொடரப்பட்ட வழக்கில் இலங்கை அரசுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச் சாட்டுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன. தென் ஆபிரிக்காவில் நிரந்தர வதிவிடத்தைப் பெற்றுள்ள தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் வத்சலாதேவி மற்றும் கே. சீதாராம் ஆகிய இரண்டு பெண் புலி உறுப்பினர்களும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இலங்கை அரசுக்கும் எதிராக பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு தொடர்ந்துள்ளனர் என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தொலைபேசி மூலம் நியூயோர்க்கிலிருந்து தெரிவித்தார். (மேலும்....)

மாசி 10, 2012

பிழையாக வழிநடக்கும் பவுத்த வெறியர்கள்

(இமாட் மஜீத்)

2009 ஆம் ஆண்டு முடிவுற்ற போரின் பின்னர் ஒரு புதிய வியப்பு நிலைமை தோன்றியுள்ளது. அது யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் ஏ9 நெடுஞ்சாலையில் நிறுவப்பட்டுள்ள பவுத்த உருவச்சிலைகள். போர் முடிந்த பின்னர் 28 க்கும் அதிகமான புத்தர் சிலைகள் இந்தப் பாதையில் காணப்படுகின்றன. இந்தப் பம்மாத்துப் பற்றிய நகைச்சுவை (வேறு எப்படி இதனை அழைப்பது?) என்னவென்றால் இந்தச் சிலைகள் பவுத்தர்கள் சிறிதளவு அல்லது முற்றாக இல்லாத இடங்களில் நிறுவப்பட்டுள்ளது ஆகும். (மேலும்....)

மாசி 10, 2012

Canadian pleads guilty in NY to providing material support to Tamil Tigers

(By: The Canadian Press)

A former University of Waterloo student has pleaded guilty in a New York district court to conspiring to provide material support to a terrorist group in Sri Lanka.The FBI says Ramanan Mylvaganam pleaded guilty Wednesday in connection with his attempt to procure sophisticated technology for the Liberation Tigers of Tamil Eelam. According to court documents, in March 2006, Mylvaganam conspired to purchase approximately $22,000 worth of submarine design software for the Tamil Tigers. Mylvaganam also attempted to purchase night vision equipment for the LTTE from a company in British Columbia, the FBI says. The FBI says Mylvaganam falsely told the company's representative that the night vision equipment was for a university design project he was doing. Mylvaganam faces a maximum sentence of 15 years in prison. (more.....)

மாசி 10, 2012

15 இலங்கை மீனவர், படகுகள் ஆந்திராவில் விடுவிப்பு

இந்தியாவில் சிறை வைக்கப் பட்டிருந்த 15 இலங்கை மீனவர் களும் இன்று நாடு திரும்புகின்றனர். ‘நிரஞ்சலா’ ‘சம்பா-06’, ‘கப்பிலபுத்தா- 04’ ஆகிய மூன்று படகுகளும் அதில் பயணம் செய்திருந்த 15 இலங்கை மீனவர்களுமே இன்று கடல் மார்க்கமாக நாடு திரும்பவுள்ளனர். இவர்களை ஆந்திர மாநிலத்தின் கரையோர பாதுகாப்பு அதிகாரிகள் நண்பகல் 2 மணியளவில் மேற்படி மூன்று படகுகளையும் காங்கேசந்துறையிலுள்ள இலங்கை கடற்படை யினரிடம் ஒப்படைப் பரென மீன்பிடித் துறை மற்றும் நீரியல்வளத்துறையமை ச்சின் அதிகாரியொருவர் கூறி னார். இம்மீனவர்கள் 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி திருமலை மீன்பிடித்துறை முகத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். இவர் கள் ஆந்திர கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிக்கச் சென்றார்க ளென்ற குற்றச்சாட்டில் ஆந்திர அரசாங்கத்தினால் கைது செய்யப் பட்டிருந்தனர். ஆந்திர நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட மேற்படி இல ங்கை மீனவர்கள் அந்நாட்டு சட்ட திட்டங்களுக்கமைய அபரா தம் செலுத்திய பின்னர் விடு தலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டார்.

மாசி 10, 2012

ஜனாதிபதி மஹிந்தவுக்கு இந்தியாவின் அதியுயர் விருது வழங்க வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி

இந்தியாவின் அதி உயர் சிவிலியன் விருதான “பாரத ரத்னா” விருதை எல்.ரி.ரி.ஈ.யை துவம்சம் செய்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டுமென இந்திய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி கேட்டுள்ளார். எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளை இலங்கை மண்ணில் அழித்து ஒழித்த இந்த சாதனை வீரர் மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த எல்.ரி.ரி.ஈ.யை துவம்சம் செய்ததனால், அவருக்கு இந்திய அரசாங்கமும், மக்களும் நன்றி செலுத்தும் முகமாக பாரத் ரத்னா வழங்க வேண்டுமென்று கூறியுள்ளார். எல்.ரி.ரி.ஈ. அழிக்கப்படாமல் இருந்தால் அவ்வியக்கம் தனது இராணுவ, கடற்படைகளை வலுப்படுத்தி இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கு காரணமாக இருந்திருக்குமென்றும் சுப்ரமணியம் சுவாமி சுட்டிக்காட்டுகிறார்.

மாசி 10, 2012

மாலைதீவில் தொடர்ந்தும் பதற்றம்

மாலைதீவு முழுவதும் கலவரம் பரவிவரும் நிலையில் பதவி விலகிய அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நiட்டுக்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. என்றாலும் அவர் கைது செய்யப்படமாட்டாரென புதிய ஜனாதிபதியின் பேச்சாளர் கூறினார். எனினும் எந்த குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டது என்பது தெரியவில்லை என நாட்டின் மாலைத்தீவு ஜனநாயக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நான் நாளை சிறைப்படுத்தப்படுவேன் என மொஹமட் நாட் கூறியுள்ளார். ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய மொஹமட் நiட் ஆதரவாளர்கள் நேற்று நாடு பூராகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு கலவரம் பரவி வரும் நிலையிலேயே நாட் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. முன்னதாக தான் துப்பாக்கி முனையில் பதவி விலக்கப்பட்டேன் என மொஹமட் நாட் நேற்று முன்தினம் தமது ஆதரவாளர்களுக்கு மத்தியில் குறிப்பிட்டார். இந்நிலையில் நேற்றைய தினத்தில் அந்நாட்டின் பல தீவுகளிலும் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவாக கலவரம் வெடித்தது. இந்நிலையில் இந்த நிலவரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஐ.நா. விசேட தூதுக் குழு அடுத்தவாரம் மாலைதீவு செல்லும் என ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்துள்ளார்.

மாசி 10, 2012

நீரிழிவு நோயாளி புண் ஆற புதிய நனோ கலவை

நீரிழிவு நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற திருப்புவனம் பட்டதாரி புதிய நனோ கலவையை கண்டுபிடித்துள்ளார். நீரிழிவு நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி புதிய நனோ கலவையை உருவாக்கியுள்ளார். மதுரை யாதவா கல்லூரியில் நுண் உயிரியல் முடித்துள்ளார். நேசமணி கூறுகையில்; ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஓர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதியம் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதியங்களுடன் ஒருவகை நனோ இரசாயனத்தை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் நீரிழிவு நோயாளி புண்களில் உள்ள இரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த கலவையை பயன்படுத்தி 'பிளாஸ்டர் பெண்டேஜ்' தயார் செய்யலாம். சென்னை ஐ. ஐ.டி. யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன் என்றார்.

மாசி 10, 2012

உடற்பயிற்சி மருந்தாகிறது ஹோமோன்

உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் உடலமைப்பை பேண முடியுமா என்றால் முடியாது. அமெரிக்க ஆய்வாளர் புரூஸ் ஸ்பீகெல்மேன் தலைமையிலான ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கும் இயற்கை ஹோமோன் ஒன்று உடற்பயிற்சி போலவே செயல்பட்டு கெட்ட கொழுப்பினை நல்ல கொழுப்பாக மாற்றுகிறது என்பதுதான் ஆய்வுலகின் சமீபத்திய தகவல். இந்த ஹோமோனுக்கு ‘ஐரிசின்’ என்று பெயரிட்டிருக்கிறார் ஸ்பீகெல்மேன், மனிதர்கள் கடவுளுடன் தொடர்புகொள்ள அனுமதி கொடுத்த கிரேக்க பெண் தெய்வத்தின் பெயர் ஐரிஸ். அதுபோல உடற்பயிற்சியானது உடலின் பல திசுக்களுடன் தொடர்பு கொள்ள இந்த ஹோமோன் உதவுவதால் இதற்கு ஐரிசின் என்று பெயர் வைக்கப்பட்டது என்கிறார். (மேலும்....)

மாசி 10, 2012

வீதி விதிகளை கடைப்பிடிக்காதவர்களை பொலிஸார் கடுமையாக தண்டிக்க வேண்டும்

30 ஆண்டுகால பயங்கரவாத யுத்தத்தில் இருந்து மீண்டு இன்று பூரண சுதந்திரத்தையும் அமைதியான வாழ்க்கையையும் அனுபவித்துக்கொ ண்டிருக்கும் நம் நாட்டு மக்களுக்கு வாகன விபத்துக்களின் உருவில் இன்னும் ஒரு பயங்கரவாத அரக்கன் இப்போது அச்சுறுத்திக்கொண்டிருக்கி றான். ஒரு நாடு பொருளாதாரத்துறையில் அபிவிருத்தியடைவதற்கு அந்நாட்டில் சிற ந்த நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் அதிவேக நெடுஞ் சாலைகள் மிகவும் அவசியமாகும். இன்றைய அபிவிருத்தி யுகத்தில் நம் நாட்டு மக்கள் ஒரு விநாடியைக்கூட அநாவசியமாக போக்குவரத்துக்காக வீணாக்க விரும்புவதில்லை. அவர்கள் ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு மிகக் குறைந்த நேரத்தில் சென்றடைந்து தங்கள் பணிகளை நிறைவேற்றி முடிக்க விரும்புகிறார்கள். (மேலும்....)

மாசி 10, 2012

வெனிசுலாவின் அடுத்த சாதனை

ஆயுதக் கலாச்சாரத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி!

பல்வேறு நாடுகளில் உள்ள ஆயுதக்கலாச்சாரம் பற்றி விரிவான அறிக்கை ஒன்றை ஐக்கிய நாடுகள் சபை தயாரித்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் நிலவும் ஆயுதக்கலாச்சாரம் கவலையளிக்கிற நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதில் வெனிசுலாவின் நடவடிக்கை மிகவும் அபாரம் என்று ஐ.நா.சபை பாராட்டியுள்ளது. வன்முறைக் குற்றங்கள் தடுப்பு மற்றும் குடிமக்களைப் பாதுகாக்கும் கொள்கை ஆகியவைதான் இத்தகைய மாற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கிறது. இதற்கிடையில், இந்த சாதனையைக் குலைக்கும் வகையில் சில குழந்தைகள் துப்பாக்கிகளை ஏந்தி நிற்பது போன்று சில புகைப்படங்கள் வெளியாகின. இந்த சதிவேலையைச் செய்தது யார் என்ற விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. (மேலும்....)

மாசி 09, 2012

 

அவஸ்தையுறும் சிறுமிக்கு உதவுங்கள்

ஷெல் தாக்குதல்களின் போது தனது இடது கண் பாதிக்கப்பட்ட நிலையில் அவஸ்தைப்படும் மதுஷா என்ற 6 வயது சிறுமியையே படத்தில் காண்கிறீர்கள். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பிலுள்ள கோம்பாவில் என்ற ஊரைச் சேர்ந்த இந்தச் சிறுமிக்கு சிகிச்சை வழங்க பெருந் தொகை நிதி தேவைப்படுகிறது. இந்தச் சிறுமியின் இடது பக்கக் கண்ணுக்குள் ஷெல் துண்டொன்று சிக்கி இருப்பதால் சிறுமி பெரும் கஷ்டப்படுகிறார். இவருக்கு சிகிச்சையளிக்க பெருந்தொகை நிதி தேவைப்படுவதால் தனவந்தர்கள் கொடையாளிகள் விரும்பினால் உதவி வழங்க முடியும். மேற்படி சிறுமியின் கண்ணில் சிக்கியுள்ள ஷெல் சிதறு துண்டினை சத்திர சிகிச்சை மூலம் அகற்றுவதுடன் பார்வையை மீளப் பெறுவதற்கான சிகிச்சையும் அளிக்கப்படல் வேண்டும். கடந்த மூன்று வருடங்களாக வவுனியா றிவாணக் கிராமத்தில் தங்கியிருந்து நேற்று முன்தினம் முதல் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட் பட்ட கோம்பாவில் பகுதியிலுள்ள திம்பிலி கிராமத்தில் இச்சிறுமி தனது பெற்றோருடன் மீள்குடியேறியுள்ளார். உதவி செய்ய விரும்புகிறார். நா. மகேந்திரன், 2 ஆம் வட்டாரம், திம்பிலி வீட்டுத் திட்டம், கைவேலி, புதுக்குடியிருப்பு என்ற விலாசத்துடன் தொடர்புகொள்ளலாம். அல்லது 077- 9379483 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு சிறுமியின் தந்தையாரான நா. மகேந்திரனுடன் தொடர்புகொண்டு விபரங்கள் அறிய முடியும். நா. மதுஷா என்ற இந்தச் சிறுமி மூன்று வயதாக இருக்கும்போதே ஷெல் தாக்குதலுக்கு இலக்காகியிருந்தார்.

முன்னாள் போராளிகள் 42 பேர் பெற்றோரிடம் கையளிப்பு

அநுராதபுரம் மாவட்டத்தின் தந்திரிமலையிலுள்ள ஓயாமடு பிரதேசத்தில் ஆறாவது வருடமாக நடைபெற்றுவரும் 'தேசத்திற்கு மகுடம்' கண்காட்சியில் நேற்றுப் பகல் முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் 42 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் பிரதான மண்டபத்தில் வைத்து சிறைச்சாலைகள் புனருத்தாரன மற்றும் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவினால் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன. வெலிகந்த கந்தகொட முகாமைச்சேர்ந்தவர்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி

மொஹமட் நஷீடின் மனைவி, பிள்ளைகள் இலங்கையில் தஞ்சம் _

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருவர் பாதுகாப்புக்கருதி இலங்கையில் தஞ்சமடைந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இலங்கை வந்த யூ.எல்- 102 என்ற விமானத்திலேயே இவர் கள் இலங்கையை வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை பதவி விலகக் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை மாலைதீவில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து நஷீட் தனது பதவியை இராஜிநாமா செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. ___

"இலங்கை - இந்திய நட்புறவைப் பாதுகாப்பது சவாலாகிவிட்டது" _

இலங்கை - இந்திய நட்புறவைப் பாதுகாப்பது என்பது பாரிய சவாலாகிவிட்டது. அரசியல் இலாபங்கள் கருதி இரு நாட்டிலும் பல குழுக்கள் செயற்படுகின்றன என்று தென்னிந்தியாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.  யுத்தத்திலிருந்து விடுபட்டு இலங்கை அபிவிருத்தி இலக்குகளை நோக்கி மிக விரைவாகப் பயணிக்கிறது. இதற்கு இந்தியா உட்பட ஏனைய நாடுகள் இலங்கைக்கு நட்புறவுடன் உதவி செய்ய வேண்டும். சுயபோக்குடையவர்களுடன் இணைந்து இடையூறுகளைச் செய்யக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். சென்னையில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே துணைத்தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார். இலங்கை மற்றும் இந்திய மக்களிடமோ, அரசாங்கங்களிடமோ எவ்விதமான மோதல்களும் இல்லை. ஆனால் மோதல்களை ஏற்படுத்த அரசியல் இலாப நோக்குடையவர்கள் செயற்படுகின்றனர் எனவும் அவர் கூறினார்.

மாசி 09, 2012

தனுஷ் இன் மற்றும் ஒரு 'கொலைவெறி'

தனுஷ், அனுஷ்கா, அனிருத் கூட்டணியில் 'சச்சின் புகழ்' பாடல்

கொல வெறி பாடல் மூலம் அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளையடித்த நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் கூட்டணியில் புதிய பாடலொன்று வெளியாகியுள்ளது.  பூஸ்ட் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ள இக் காணொளிப் பாடலில் முற்றிலுமாக சச்சின் புகழ் பாடப்படுகின்றது. இப்பாடல் தயாரிப்பு தொடர்பான காட்சிகள் சில தினங்களுக்கு முன் இணையத்தில் வெளிவந்துள்ள நிலையில், தற்போது கொலவெறி பாடலின் பாணியிலே அமைந்த Sachin Anthem பாடலும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கொலவெறி பாடல் போன்றே இப்பாடலுக்கும் மிகுந்த வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'கொலவெறி' புகழ் அனிருத்தின் இசையில் இப்பாடலையும் சச்சினுக்காக எழுதியிருப்பவர் தனுஷ். பாடலில் தனுஷுடன் அனிருத், அனுஷ்கா ஆகியோரும் தோன்றி ஆட்டம் போட்டிருக்கிறார்கள். (பாடலைக் கேட்க....)

 

மாசி 09, 2012

போரில் சிறுவர்கள் கட்டாய பங்கேற்பு

புலிகளின் வன்முறை குறித்த வீடியோ

சிறுவர்களை கட்டாயப்படுத்தி,போரில் ஈடுபடுத்திய விடுதலைப்புலிகளின் வன்முறை குறித்த வீடியொவை, இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ம் ஆண்டு மே மாதம் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்த போது போர் குற்றம் நடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இலங்கை ராணுவத்தின் அத்துமீறல் குறித்து பிரிட்டனில் 'சனல் 4' ;டிவி' யிலும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்த காட்சிகளையெல்லாம் வைத்து பிரிட்டன்,  இலங்கை அரசு மீது புகார் தெரிவித்திருந்தது. ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் தீர்மானம் கொண்டுவரவள்ளது. இந்த நிலையை சமாளிக்க இலங்கை அரசு தற்போது, விடுதலைப புலிகளின் வன்முறை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளது. (மேலும்....)

மாசி 09, 2012

இராணுவ உயரதிகாரிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்! - ஹிலாரி அரசாங்கத்திடம் கோரிக்கை

வன்னிப் போரில் கடமையாற்றிய உயர் இராணுவ அதிகாரிகளுக்கு தண்டனை விதிக்குமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார் வடக்கு கிழக்கு இராணுவ முகாம்களை அகற்றுமாறும் படையினருக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஹிலாரி கிளின்ரன் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியின் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட விசேட கடிதத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகள் அமுல்படுத்தவில்லை என ஹிலாரி வருத்தம் வெளியிட்டுள்ளார். இதேவேளை, ஹிலாரி கிளின்ரன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக சிரேஸ்ட படையதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் உங்கள் படைகள் செய்த மனிதப்படுகொலைகளுக்கு ஜோர்ஜ் புஸ், தற்போதைய ஜனாதிபதி ராஜாங்க செயலாளர் நீவிர் மீது தண்டனை விதிக்க யார் ஆணையிடுவது கூறுவிர்களா கிலாரி அம்மையாரே...?

மாசி 09, 2012

மாலைதீவில் கூட்டரசை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும்

மாலைதீவில் உறுதியான ஐக்கிய கூட்டரசொன்றை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டுமென மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி மொஹமட் வாஹீட் அகமட் அழைப்புவிடுத்துள்ளார். ஜனாதிபதிப் பதவியிலிருந்து மொஹமட் நட் விலகியதைத் தொடர்ந்து புதிய ஜனாதிபதியாக வாஹீட் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன் பின்னர் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துரைத்த மாலைதீவு ஜனாதிபதி வாஹீட், மாலைதீவில் உறுதியான ஐக்கிய கூட்டரசொன்றை உருவாக்க அனைவரும் முன்வரவேண்டுமென அழைப்பு விடுத்திருப்பதுடன், இதன் மூலம் நிலையான, ஜனநாயக நாடொன்றைக் கட்டியெழுப்ப முடியுமென்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நாட்டின் சட்டங்களையும், நீதியையும் தமது அரசாங்கம் மதித்து அதன்படி செயற்படுமென்றும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி நட் பதவிவிலகுவதற்குத் தானும் அழுத்தம் கொடுத்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களைப் புதிய மாலைதீவு ஜனாதிபதி மறுத்துள்ளார்.

மாசி 09, 2012

 

Yahoo தலைவர் திடீர் ராஜினாமா

கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியின் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் தெரிவித்துள்ளார். இணையத்தள சேவைகள் வழங்குவதில் கூகுள், பேஸ்புக் நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த களத்தில் யாகூவும் உள்ளது. இந்நிலையில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கிடையேயான போட்டியில் தங்களால் சிறப்புற செயல்பட முடியவில்லை என்று யாகூ நிறுவன தலைவர் ராய் போஸ்டோக் மற்றும் அதன் இயக்குனர்கள் யோமேஷ் ஜோஷி, ஆர்தர் கெர்ன் மற்றும் கேரி வில்சன் உள்ளிட்டோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாசி 09, 2012

 

பொக்லாந்து தீவில் பிரிட்டன் படை: ஆர்ஜன்டீனா ஐ.நாவில் முறைப்பாடு

சர்ச்சைக்குரிய பொக்லாந்து தீவில் பிரிட்டன் இராணுவத்தை குவிப்பது குறித்து ஆர்ஜன்டீன அரசு ஐ.நா. சபையிடம் முறைப்பாடு செய்யவுள்ளது. ஆர்ஜென்டீனாவுக்கு அருகே இங்கிலாந்து நாட்டுக்கு சொந்தமான பொக்லாந்து தீவு உள்ளது. இந்த தீவுக்கு உரிமை கொண்டாடி ஆர்ஜென்டீனாவும் இங்கிலாந்தும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 1982ம் ஆண்டு ஆர்ஜென்டீனா பொக்லாந்து தீவை கைப்பற்றிக் கொண்டது. இதனால் இங்கிலாந்து தாக்குதல் நடத்தி அந்த தீவை மீட்டது. சமீபகாலகமாக ஆர்ஜென்டீனா மீண்டும் பொக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து- ஆர்ஜென்டீனா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆர்ஜென்டீனா திடீரென தாக்கிவிடக் கூடாது என கருதி இங்கிலாந்து பொக் லாந்தில் படையை குவித்து வருகிறது. (மேலும்....)

மாசி 09, 2012

ஒசாமா பின்லேடனை சந்தித்த மும்பை குண்டு வெடிப்பு கைதி

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஹாருன் நாயக், கடந்த 2001ல் பாகிஸ்தானுக்கு சென்று ஒசாமா பின் லேடனை சந்தித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை வட்டாரங்கள் கூறியதாவது கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்தது தொடர்பான வழக்கில், ஹாருன் நாயக் ஷேக் என்பவர் கடந்தாண்டு மும்பையில் கைது செய்யப்பட்டார். விசாரணையில், கடந்தாண்டு ஜுலையில் நடந்த குண்டு வெடிப்பிலும் ஹாருனுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் ஹாருனிடம் நடத்திய விசாரணையில், மேலும்பல முக்கிய தகவல்களும் தெரிய வந்துள்ளன. கடந்த 2001ல் பாகிஸ்தானுக்கு சென்ற ஹாருன், அங்குள்ள பவால்பூரில் அல்குவைதா முன்னாள் தலைவரும், அமெரிக்க படையினரின் தாக்குதலில் கொல்லப்பட்டவருமான ஒசாமா பின்லேடனை சந்தித்தது தெரிய வந்துள்ளது. அங்கு 40 நாட்கள் பயிற்சி பெற்றதும் தெரிய வந்துள்ளது. அப்போது, லஷ்கர் அமைப்பின் தலைவர் ஜாகி-உர் ரகுமான் லக்வியையும் ஹாருன் சந்தித்தது தற்போதைய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாசி 09, 2012

 

'எல்.ரி.ரி.ஈ.யினரின் இறுதிக்கட்ட கொடுமைகள்' பாதுகாப்பு அமைச்சினால் டி.வி.டி. வெளியீடு

வன்னியில் இடம் பெற்ற இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது புலிகளால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவர் களால் மேற்கொள்ளப்பட்ட வன்முறை நடவடிக்கைகளை வெளிக்கொணரும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களுடன் கூடிய டி.வி.டி.யொன்றை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது. ‘எல்.ரி.ரி.ஈ.யினரின் இறுதிக்கட்ட கொடுமைகள்’ எனும் தலைப்பில் பாதுகாப்பு அமைச்சினால் தயாரிக்கப்பட்ட இந்த டி.வி.டிகளை தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹலுகல்ல வெளியிட்டுவைத்தார். (மேலும்....)

மாசி 09, 2012

குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகம் வவுனியாவில் திறக்கப்பட்டது!

குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் வவுனியாவில் இன்று திறந்துவைக்கப்பட்டது. வடமாகாணத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த திணைக்களத்திற்கான முதலாவது அலுவலகம் இதுவாகும். புதிய அலுவலகத்தின் மூலம் வட பகுதி மக்களுக்கு விரைவாகவும், இலகுவாகவும் கடவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. 50 இலட்சம் ரூபா செலவில் சகல வசதிகளும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட இந்த அலுவலகம், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் எஸ்.ஹேட்டியாராய்ச்சி மற்றும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

மாசி 08, 2012

 

200 ஆண்டுகளுக்கு தேவையான எரிபொருள் மன்னார் வளைகுடா கடலில் உள்ளது

மன்னார் வளைகுடா கடலில் 200 ஆண்டுகளுக்குத் தேவையான எரி பொருள் உள்ளது என கடல்சார் துறை, தென் மண்டல இயக்குனர் விஜயன் பேசினார். இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை முகம்மது சதக் பொறியியல் கல்லூரியில், மரைன் மாணவர்களுக்கான பயிற்சிப் பட்டறை, முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் ஹமீது அப்துல் காதர் தலைமையில், தாளாளர் யூசுப் சாகிப் முன்னிலையில் நடந்து. கடல் சார் துறை தென் மண்டல இயக்குனர் விஜயன் பேசியதாவது :- இந்தியாவில் 12 பெரிய துறைமுகங்கள், 215 சிறிய துறைமுகங்கள் உள்ளன. கடலில், 14 மீற்றர் ஆழம் இருக்கும் பகுதிகளில் தான் சரக்குக் கப்பல்கள் செல்ல முடியும். ஆழம் குறைவு காரணமாக, நீர் வழிப் போக்குவரத்தில், சரக்குகள் கொண்டுசெல்வதில் தொய்வு காணப்படுகிறது. இருப்பினும், ஆண்டுக்கு 10 இலட்சம் தொன் சரக்குகள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. மன்னார் வளைகுடா கடலில், ‘ஹைட்ராய்டு’ என்ற எரிபொருள், 200 ஆண்டுகள் பயன்படுத்தும் அளவிற்கு இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாசி 08, 2012

ஜனாதிபதியுடன் பேசினால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்  - சுப்பிரமணிய சுவாமி

  • வெளிநாட்டு அழுத்தங்களால் எதுவும் நடக்காது

  • கச்சதீவை இந்தியா திரும்ப பெற முடியாது

  • மலையக மக்கள் மீது இந்தியாவின் அக்கறை அவசியம்

“இலங்கையை இரண்டாகப் பிரித்து இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. அது எந்த வகையிலும் சாத்தியப்படவும் மாட்டாது. இன்றைய நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நம்பி அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இலங்கையிலுள்ள பிரச்சினைக்கு வேறு நாடுகளால் தீர்வு காண முடியாது” (மேலும்....)

மாசி 08, 2012

அவுஸ்திரேலியாவில் சறுக்கி விழுந்து அமைச்சர் கெஹலியவுக்கு சத்திர சிகிச்சை

அவுஸ்திரேலியாவின் ‘மெல்போர்ன்’ நகரில் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்ல திடீர் விபத்துக்கு உள்ளானதால் அவருக்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையொன்றில் இரு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைச்சர் ரம்புக்வெல்லவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல இலங்கை கிரிக்கெட்டின் ஏ அணியில் விளையாடுகின்றார். அவரது முழங்காலில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்குச் சிகிச்சை பெற்றுக் கொடுப்பதற்காக அமைச்சர் ரம்புக்வெல்ல கடந்த 31ம் திகதி அவுஸ்திரேலியாவுக்குப் பயணமானார். அமைச்சர் தங்கியிருந்த ஹோட்டல் படியில் வழுக்கி இரு மாடிகளுக்கு கீழே விழுந்ததால் இரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதனால் அவருக்கு இரு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மற்றொரு சத்திர சிகிச்சை இன்று மேற்கொள்ளப்பட வுள்ளது. இதேவேளை அமைச்சர் ரம்புக்வெல்ல, தாம் அடுத்துவரும் சில தினங்களுக்குள் தாயகம் திரும்பி விடுவதாகவும் அதற்கு ஏற்றவகையில் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மாசி 08, 2012

கடந்த காலங்களை தவறவிட்டது போல் இத் தருணத்தையும் இழக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

பாராளுமன்றத் தெரிவுக் குழு மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார். இதனைக் குழப்ப முயல வேண்டாம் என கேட்டுக்கொண்ட அமைச்சர், சில கட்சிகள் கடந்த காலங்களைப் போன்று இந்த அரிய சந்தர்ப்பத்தையும் நழுவ விட்டு விடக்கூடாதெனவும் அமைச்சர் தெரிவித்தார். (மேலும்....)

மாசி 08, 2012

ஈரான் மீது அமெ. மேலும் தடை

ஈரானின் அரச சொத்துக்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் இந்த புதிய தடைகள் தொடர்பாக ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று முன்தினம் கைச்சாத்திட்டார். முன்னதாக அமெரிக்க அரசு அண்மையில் ஈரான் அரச வங்கி களுக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது. ஈரானின் அணு ஆயுத திட்டத்திற்கு அழுத்தம் கொடு க்கும் வகையில் இந்த தடைகள் விதிக்கப் பட்டதாக அமெ ரிக்க திறை சேரி அறிவித் துள்ளது.

மாசி 08, 2012

இரண்டு வருடங்களில் முல்லைத்தீவு மாவட்டம் நகர வாழ்க்கைக்குள் நுழையும் - பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

முல்லைத்தீவு மாவட்டம் இரண்டு வருடங்களில் அபிவிருத்தியடைந்த மாவட்டமாக மாற்றப்படும். அதுவரை மக்கள் பொறுமை காப்பதுடன், அரசாங்கம் மீள்குடியேற்றங்களை மேற்கொள்ளவில்லை யெனக் குற்றஞ்சாட்டி மக்களைக் குழப்புவதற்கு முயற்சிக்கும் தரப்பினரின் ஏமாற்றுப் பேச்சுக்களை செவிமடுக்க வேண்டாமென்றும் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கோம்பாவில் கிராமசேவகர் பிரிவில், திம்பிலி கிராமத்தில் மீள்குடிய மர்த்தப்படும் 209 குடும்பங்களுக்கான 200 வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் நேற்றுக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். (மேலும்....)

மாசி 08, 2012

சிரிய ஹோம்ஸ் நகரில் தொடர்ந்தும் தாக்குதல்: ரஷ்ய வெளியுறவு அமைச்சர் விரைவு

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் அந்நாட்டு பாதுகாப்பு படை தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சிரியா சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். சிரியாவில் அரச எதிர்ப்பாளர்கள் ஆதிக்கத்தில் உள்ள ஹோம்ஸ் நகர் மீது அரச படை நேற்று முன்தினம் தொடர்ச்சியான எறிகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் 95 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்ப்பாளர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பு படையினர் ஹோம்ஸ் நகர் மீது தரைவழி தாக்குதல்களை நடத்தக்கூடும் என பொதுமக்கள் அச்சப்படுவதாக அங்கிருக்கும் பி. பி. சி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை பதவி விலகக் கோரும் பாதுகாப்புச் சபையின் தீர்வுத் திட்டத்திற்கு எதிராக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சிரியாவில் அரச படைகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனிடையே சிரியாவில் தொடரும் வன்முறைகள் குறித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரொவ் டமஸ்கஸ் செல்லவுள்ளார். சிரியாவில் தொடரும் குழப்ப நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தவே லவ்ரொவ் அங்கு செல்லவுள்ளதாக ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மாசி 08, 2012

தாவரங்கள் ஒன்றுடன் ஒன்று பேசுவது கண்டுபிடிப்பு

செடி - கொடிகள் போன்ற தாவரங்கள் ஒன்றுடன், ஒன்று பேசிக் கொள்கின்றன என்பதை இங்கிலாந்து நாட்டில் உள்ள எக்ஸ்டெர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். முட்டை கோஸ்செடியானது ஆபத்து வரலாம் என உணர்ந்தால் தனது இலைப் பகுதியில் சிறிய வெடிப்பை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஒருவித வாயுவை வெளியேற்றி ஒலியை ஏற்படுத்தி பக்கத்தில் உள்ள செடியை எச்சரிக்கை செய்கிறதாம். நுட்பமான கெமராவின் மூலம் ஆய்வு செய்து முதன் முறையாக இதை கண்டுபிடித்து இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

மாசி 08, 2012

பிலிப்பைன்ஸ் பூமியதிர்ச்சி: பலியானோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரிப்பு

 பிலிப்பைன்ஸ் நாட்டின் 3வது பெரிய தீவாக கருதப்படும் நிகரோஸ் தீவில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது. கடலுக்கு அடியில் 46 கி.மீ. ஆழத்தில் நில நடக்கம் தாக்கியது. இருப்பினும், சேதம் கடுமையாகவே இருந்தது. துமாகுவட், பகோலாட் உள்ளிட்ட நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. பாலங்கள், சாலைகள் சேதம் அடைந்தன. வீடுகள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்து வெளியே ஓடினர். பல இடங்களில் மின் விநியோகம் சீர்குலைந்தது. இந்த நில நடுக்கத்தில், 7 பேர் பலியானதாகவும், 29 பேரை காணவில்லை என்றும் முதலில் கூறப்பட்டது. சாவு எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது. இத்தகவலை ஒரு இராணுவ அதிகாரி தெரிவித்தார். பலியானவர்களில் தொடக்கப்பள்ளி மாணவிகள் 2 பேரும் அடங்குவர். நில நடுக்கத்தால், அவர்களின் பள்ளி கட்டடம் இடிந்து அவர்கள் மீது விழுந்ததால் அவர்கள் பலியானார்கள். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

மாசி 08, 2012

பேரழகி கிளியோபட்ரா

கிளியோ பட்ரா உண்மையில் சரித்திரத்தில் ஆர்வம் உள்ள வர்களுக்கு, கிளியோபாட்ராவின் வாழ்க்கையும் அந்நாளைய எகிப்து தேசத்தின் சமூக அரசியல் நிலைமை யும் சுவாரசியம் தரக்கூடியவை. கிளியோபட்ராவின் காலம் கி.மு. 69 லிருந்து 30 வரை என்று வரலாற் றுப் புத்தகங்கள் சொல்லுகின்றன. எகிப்தை ஆண்ட பன்னிரெண்டாம் டாலமி என்கிற மன்னனுக்கும் இஸிஸ் என்கிற அவனது ஒரு அரசிக்கும் பிறந்தவள் கிளியோபட்ரா. சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த கிளியோபட்ரா வுக்கு முன்னால் ஏழு கிளியோபாட் ராக்கள் இருந்திருக்கிறார்கள் என்ப தால் இவள் பிறக்கும்போதே எட்டாம் கிளியோபட்ரா என்றே குறிப்பிடப் பட்டு வந்திருக்கிறாள். முந்தைய ஏழு பேர் பெறாத பேரையும் புகழையும் இவள் எப்படிப் பெற்றாள் என்றால் அதற்கு இரண்டு காரணங்கள்: முதலாவது, இவளது புத்திசாலித் தனம் அடுத்த காரணம், அழகு, அழகு என்றால் ஐஸ்வர்யாராய் அழகல்ல அதற்கெல்லாம் நூறுபடி மேலே என்கிறார்கள் எகிப்து சரித்திரவியலாளர்கள். (மேலும்....)

மாசி 08, 2012

ரவூப் ஹக்கிமின்

கிழக்கிற்கு ஒரு முகம் மேல் மாகாணத்திற்கு இன்னொரு முகம்

மாகாண சபைகளுக்கான காணி அதிகாரங்களை பறிக்கும் நாடு நகர திட்டமிடல் சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வெளியிட்டுள்ளது. ஆனால் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே ரவூப் ஹக்கிமின் உண்மையான 'முகம்" என்ன என்பதை சமூகத்தக்கு வெளிப்படுத்த வேண்டும் என மேல் மாகாண சபை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பினார். எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோன்று இ.தொ.கா., ஈ.பி.டி.பி., உட்பட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளின் இச்சட்டமூலம் தொடர்பான நிலைபாடு என்ன என்பதை தாம் சார்ந்த சமூகத்திற்கு பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும். அரசாங்கத்தில் உள்ள அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கு அடிப்பணிந்தே இச்சட்டமூலம் கொண்டு வரப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

மாசி 08, 2012

சம்பந்தன் - ரெப் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் யுத்தக்குற்ற விவகாரக் கையாளுகைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் ஸ்டீபன் ஜே. ரெப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சமகால அரசியல் விவகாரம், அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின் காலம் கடத்தல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்கள் எதிர்கொண்டுள்ள அவசர அவசிய பிரச்சினைகள், மீள்குடியேற்றம், வாழ்வாதார நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இங்கு பேசப்பட்டதாக கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றது. அத்துடன் இறுதிக்கட்ட யுத்த நிலைமை குறித்தும் இங்கு பேசப்பட்டதாக தெரியவருகின்றது. ______

மாசி 07, 2012

Stunning photos of Europe's deep freeze

மாசி 07, 2012

பத்தி எழுத்தாளர் கஜேந்திரகுமாரின் கயிறு திரிப்பு!

திருவிளையாடல் திரைப்படத்தில் ஒரு நகைச் சுவைக் காட்சி.  மதுரையை ஆண்ட சண்பக பாண்டியனுக்கு ஓர் அய்யம். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதா?' என்பதே சண்பக பாண்டியனின் அய்யம்.  'உண்டு' என்பது மதுரை இறையனார் கருத்து.  'இல்லை' என்பது புலவர் நக்கீரரின் வாதம். அய்யத்தைப் போக்கும் புலவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு எனப் பாண்டிய மன்னன் முரசு அறிவிக்கிறான். இதைக் கேட்ட ஏழைப் புலவன் தருமி அந்தப் பரிசைப் பெற ஆசைப்படுகிறான். தருமியின் புலம்பலைக் கேட்ட  இறைவன் அவனுக்கு ஒரு பாடலை எழுதிக் கொடுக்கிறார்.  தருமியாக நாகேசும் இறைவனாக சிவாஜி கணேசனும் நடித்திருந்தார்கள். (மேலும்....)

மாசி 07, 2012

ஆயுதங்கள் தயாரிக்க பயன்படும்

செம்மர கட்டைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி ராமேஸ்வரத்தில் மூன்று வாலிபர்கள் கைது

ராமேஸ்வரம் அருகே உள்ள மண்டபம் கடற்கரை பகுதியில் கியூபிரிவு போலிசார் நேற்று(5.2.12) இரவு ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கடற்கரையில் உள்ள முள்வேலி மரங்களுக்கிடையே பதுக்கி வைக்கபட்டிருந்த 35 செம்மரக்கட்டைகளை கண்டுபிடித்தனர். கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகள் ஒவ்வொன்றும் 8 அடி முதல் 5 அடி வரையும்,12 கிலோ முதல் 15 கிலோ வரை இருந்தன. விசாரனையில் செம்மரக்கட்டைகளை பதுக்கி வைத்த மண்டபம் காந்தி நகரைச் சேர்ந்த தங்கராஜ், முனியசாமி, முருகன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். செம்மரக்கட்டைகள் சென்னையில் இருந்து கடத்தி வரப்பட்டு மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கிருந்து படகுமூலம் இந்த செம்மரக்கட்டைகள் இலங்கைக்கு கடத்த இருப்பது விசாரனையில் தெரியவந்தது. இதுகுறித்து போலிசார் தெரிவிக்கையில், இந்த செம்மரக்கட்டைகள் பயங்கர ஆயதங்கள் தயாரிக்க பயன்படும். இதன் மதிப்புகள் கோடியை தாண்டும் என்றனர். இலங்கையில் போர் முடிந்து தற்போது அமைதி நிலவி வரும் வேளையில் செம் மரக்கட்டைகள் கடத்த முயற்சிப்பது கியூ பிரிவு போலிசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாசி 07, 2012

மலையக சமூக விடுதலைக்காக இளைய சமூகம் மாற்று சிந்தனையை உள்வாங்க வேண்டும் 

(எஸ்.மோகனராஜன்)

ஒதுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து புரட்சி வெடிக்கும் என்பது அரிஸ்டோட்டிலின் கருத்து. இதற்கு எரிமலை சிறந்த உதாரணம். உள்ளே இருப்பது தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வதற்காக கிளர்ந்தெழும் உலகில் நடந்த புரட்சிகள் எல்லாவற்றையும் இந்த அடிப்படையிலேயே நோக்க வேண்டும் புரட்சி பொழுதுபோக்காகவோ, விளையாட்டுக்காகவோ தோன்றுவதில்லை தன்னை ஆள முயன்ற பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 13 அரசுகள் ஒன்று சேர்ந்து அமெரிக்க சுதந்திர போராட்டத்தை நடத்தியதன் மூலமே ஐக்கிய அமெரிக்க குடியரசு உருவானது. ஓஐஏ ம் லூயி மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த மக்களின் வெடிப்புதான் மன்னன் தலையை துண்டாக அறுத்து பிரான்சிய புரட்சிகள் தோன்றியது. (இதன் விளைவாக ஐரோப்பிய நாடுகள் மக்களுக்கு உரிமைகள் வழங்க முன்வந்தன) ஆரம்பத்தில் ரோம சாம்ராஜ்ஜியத்தில் அடாவடித்தனங்களை கொண்ட மிக மோசமான ஆட்சிக்கு எதிராகவே ஸ்பாட்டர்கள் கிளர்ந்தெழுந்தனர். ரஷ்யாவிலும் 11ம் சார் நிக்கலஸ் மன்னுக்கு எதிராகவும் இதே நிலைதான் தென்னாபிரிக்காவில் வெள்ளையின ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கருப்பினத்தவர்களது போராட்டம் அமைந்தது. (மேலும்.....)

மாசி 07, 2012

பேச்சுவார்த்தையை குழப்புவதால் மக்களுக்கு நன்மை ஏதும் இல்லை  - சாவகச்சேரியில் ஜனாதிபதி

  • வெளிநாடுகளிலுள்ள யாழ். புத்திஜீவிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

  • புரிந்துணர்வு ஏற்படுத்த ஊடகப் பங்களிப்பு அவசியம்

  • தீர்வுகாண முடியாத விடயங்களை முன்வைப்பது ஏற்புடையதல்ல

பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாகத் தீர்வு காணக்கூடிய விடயங்களை விடுத்து தீர்வு காண முடியாத விடயங்களை முன்வைத்து பேச்சை குழப்புவதால் மக்களுக்கு எந்த நன்மையுமே கிடைக்காது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் நேற்றுத் தெரிவித்தார். வடக்கு வாழ் மக்களுக்குத் தேவையான சகல வசதிகளையும் பெற்றுக் கொடுப்பதே தமது ஒரே நோக்கம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார். (மேலும்.....)

மாசி 07, 2012

கோம்பாவிலில் 209 குடும்பங்கள் இன்று மீள்குடியமர்வு

வவுனியா செட்டிக்குளம் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள 209 குடும்பங்கள் இன்று புதுக்குடியிருப்பு கோம்பாவிலில் மீள்குடியமர்த்தப்படவுள்ளன. இவர்களுக்கு 2,85,000 ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்ட 209 வீடுகளும் கையளிக்கப்படவுள்ளன. இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் மீள்குடியேற்றத்துறை அமைச்சர் குணரட்ன வீரக்கோன், மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாசி 07, 2012

டோகோவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 28 பேர் இலங்கை வந்தடைந்தனர்

சட்டவிரோதமாகக் கனடாவுக்குச் செல்லும் நோக்கில் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 28 பேர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். விசேட விமானம் மூலம் வந்தடைந்த இவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. 27 தமிழர்களும், ஒரு முஸ்லிமும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டிருப்பதுடன், இதில் 25 ஆண்களும், 3 பெண்களும் உள்ளடங்குகின்றனர். நேற்று அதிகாலை நாடு திரும்பிய இவர்கள் பெரும்பாலும் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களையும், கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளையும் சார்ந்தவர்கள் என குடியகல்வுக்கான சர்வதேச நிறுவனத்தின் கொழும்புக் கிளையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

மாசி 07, 2012

எல்.ரி.ரி.ஈ. முக்கியஸ்தர் வி. பாலகுமாருக்கு (முன்னாள் ஈரோஸ் அங்கத்தவர்) என்ன நடந்தது?

யுத்தம் முடிவடைந்த பின்னர் உள்ளூரில் இடம்பெயர்ந்த சுமார் 3 இலட்சம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்தமை, 11 ஆயிரம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளித்தமை அரசாங்கத்தின் சாதனைகள் ஆகும். அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் 700 முன்னாள் புலி உறுப்பினர்கள் மாத்திரமே இன்னமும் உள்ளனர் என்றார். எல்.ரி.ரி.ஈ. முக்கியஸ்தர் வி. பாலகுமாருக்கு (முன்னாள் ஈரோஸ் அங்கத்தவர்) என்ன நடந்தது என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாதுகாப்புச் செயலாளர், அவர் தடுப்புக் காவலில் இருக்கிறாரா அல்லது யுத்த முனையில் கொல்லப்பட்டாரா என்பது தெரியாது. இறுதி மனிதாபிமான நடவடிக்கையின் போது பலர் ஐ. சி. ஆர். சி. அமைப்பிடம் சரணடைந்தனர். (மேலும்.....)

மாசி 07, 2012

பெரிய பூ, சிறிய பூ

உலகிலேயே மிகப் பெரிய மலர் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் காணப்படுகிறது. பூமியில் வேறு எங்கும் பார்க்க முடியாத பல அற்புத மலர்கள் இங்கு காணப்படுகின்றன. இந்த அற்புத மலர்களில் ‘ராபெல்சியா அர்னால்டி’ என்ற மலரும் உண்டு. இந்த மலரின் எடை 7 கிலோ. குறுக்களவு 3 அடி. ‘வாட்டர்-மீல்’ அல்லது ‘வோல்பியா குளோபோசா’வின் பூதான் உலகத்திலேயே மிகச் சிறிய மலர். ஒரு சிறு புள்ளியளவே உள்ள ‘வோல்பியா குளோபோசா’ ஓர் அங்குலத்தின் 42ல் 1 பங்கு நீளமும் 85ல் ஒரு பங்கு அகலமும் இருக்கும். எடையோ ஓரு அவுன்சின் 1 இலட்சத்து 90 ஆயிரத்தில் ஒரு பங்கு. (மேலும்.....)

மாசி 07, 2012

வெளிநாட்டவரின் தலையீடின்றி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் சக்தி எமக்கு இருக்கிறது

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை திறந்து வைத்து உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரு யாதார்த்த பூர்வமான கருத்தை வெளியிட்டார். இந்தக் கருத்தை அரசாங் கத்தை எதற்கெடுத்தாலும் கண்டித்து, குறைகாணும் எதிர்க்கட்சியின ருக்கு இப்போதாவது ஞானோதயத்தை ஏற்படுத்துமென்று நாம் நம்புகிறோம். சிலர் எங்களைப் பார்த்து நாம் கோடான கோடி ரூபாவை செலவிட்டு, தேசத்திற்கு மகுடம் என்ற பெயரில் ஒரு பெரிய களியாட்ட விழாவை கொண்டாடுகிறோம் என்று ஏளனம் செய்கிறார்கள். அவர்களுக்கு பிரதம மந்திரியாகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இருந்த ஆர். பிரேமதாஸ நடத்திய கம்உதாவ களியாட்ட விழாக்களை நாம் ஞாப கப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி தெரிவித்தார். (மேலும்.....)

மாசி 07, 2012

பிடல் காஸ்ட்ரோ தனது நினைவுக்குறிப்புகளை வெளியிட்டார்

கியூபா தலைநகர் ஹவா னாவில் உள்ள ஹவானா கருத்தரங்க மையத்தில் பிடல் காஸ்ட்ரோ, தனது நினைவுக்குறிப்புகளை கடந்த வெள்ளிக்கிழமை யன்று (பிப்ரவரி 3) வெளி யிட்டார் என்று கியூபா அரசு ஊடகங்கள் தெரிவித்தன. பொது இடங்களில் காஸ்ட்ரோ தோன்றுவது அரிதாகிவிட்ட சூழ்நிலை யில், அவருடைய நூல் வெளியீட்டு விழாவில் அவர் ஆறுமணி நேரத் தைச் செலவிட்டார். தொலைக்காட்சிகளில் வெளியான அந்நிகழ்ச்சி யில் சற்றே மெலிந்த தேகத் துடன் புன்சிரிப்புடன் அடர்த்தியான வண்ணம் கொண்ட டிராக்சூட் - சட் டையில் காணப்பட்டார். (மேலும்.....)

 

 

மாசி 07, 2012

உலக அமைதிக்கே வேட்டு

இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் லட்சக் கணக்கான அப்பாவி மக்கள் அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் படை களால் கொலை செய்யப்பட்டனர். அங்கிருந்து வெளியேறுகிறோம் என்று அமெரிக்க அரசு அறிவித்தாலும், அவ்வாறு வெளியேறும் ராணுவத்தினரை அடுத்த கொலைக்களத்துக்கு அனுப்பும் திட்டத்துடன் ஈரான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளைக் குறிவைத்திருக்கிறது. நாங்கள் எதையும் சட்டபூர்வமாகத்தான் செய்வோம் என்று சொல்லிக் கொள்ள ஐக்கிய நாடுகள் சபையை ஆயுதமாகப் பயன்படுத்து கிறார்கள். ஈரான் மற்றும் சிரியா மீது பல்வேறு தடைகளைக் கொண்டு வந்துள்ளனர். மக்க ளுக்கு எதிராகக் கடும் வன்முறையைப் பிரயோ கித்துக் கொண்டிருக்கும் சவூதி அரேபியா, எகிப்து, ஏமன் போன்ற நாடுகளை அமெரிக் காவும் கண்டு கொள்ளவில்லை, ஐக்கிய நாடுகள் சபையும் கண்டு கொள்ளவில்லை. அங்கெல்லாம் அமெரிக்கா சொன்னால் குட்டிக் கரணம் அடிக்கும் ஆட்சியாளர்கள் இருப்பதே அதற்குக் காரணம். (மேலும்.....)

மாசி 06, 2012

உலகையே அதிர வைக்கும் மாயர் கணக்கு

(நெல்லை சு. முத்து )

பத்து பழங்களைப் பத்துப் பேருக்கு பகிர்ந்து அளித் தால் ஆளுக்கு ஒரு பழம் கிடைக்கும். ஒரு எண்ணினை அதே எண்ணினால் வகுத்தால் மிகுதி ஒன்றுதானே’ கணிதப் பாடம் நடத்தினார் கும்பகோண ஆசிரியர். ‘ஏன் சார் பூஜ்யத்தைப் பூஜ்யத்தால் வகுத்தால் ஒன்று வருமா? இல்லாத பழங்களை இல்லாத ஆள்களுக்குப் பகிர்ந்து கொடுத்தால், ஆளுக்கு ஒரு பழம் கிடைக்குமா சார்?’ ஒரு சுட்டி மாணவன் போட்டானே ஒரு போடு, திகைத்துப் போனார் ஆசிரியர். கேட்டது வேறு யாருமல்ல, இந்திய நாட்டின் கணித மேதை சீனிவாச இராமானுஜம்தான். ஒருமுறை அண்ணல் காந்தி ஆசிரமத்தில் திரட்டப்பட்ட மக்கள் நிதிப் பணத்தில் மறுநாள் கணக்கு சரியாகவில்லை. சில சதங்கள் குறைந்ததாம். இரவு முழுவதும் மகான் உறங்கவே இல்லை. ஏதோ ஒரு ஏழையின் பணம் தம் கையில் வந்து தொலைந்துவிட்டதே என்கிற கவலை. அதனால்தானோ என்னவோ இந்தியர்கள் காணா மல் விடுபட்ட காசு என்றால் காந்தி கணக்கு என்கிறார்கள். (மேலும்.....)

மாசி 06, 2012

புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் நான்தான் - பிரதிமைச்சர் (கருணா)விநாயகமூர்த்தி முரளிதரன்!

புலிகளின் சகல ரகசியங்களையும் அறிந்த, உயிருடன் உள்ள ஒரே நபர் தான் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்காக எந்த விசாரணைகளையும் சந்திக்க தயராக இருப்பதாக பிரதிமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சகல போர் குற்றங்களும் தனக்கு தெரியும் எனவும் அவற்றை தான் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். புலிகளின் இந்த போர் குற்றங்களுடன் தொடர்புடைய தலைவர்கள் பல நாடுகளில் உள்ளனர். எனினும் எந்த நாடுகளும் அவர்களை கைதுசெய்வதில்லை. சம்பந்தன் போன்றவர்கள் யார் என்பது பற்றி அறியாதவன் அல்ல. அவர்கள் புலிககளுடன் இணைந்து செயற்பட்டவர்கள். ஆனால் தற்போது எதுவும் தெரியாதவர்கள் போன் செயற்படுகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யோசனைகள் முழு தமிழ் மக்களின் யோசனைகள் அல்ல.அவை தமிழ் மக்களுக்கு தேவையானவை அல்ல. மிகவும் கெட்ட அரசியலில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மாசி 06, 2012

Sri Lanka 64 th Independence Day celebration in Toronto 04-02-2012

 Sri Lanka’s Independence Day celebration was held in Don Bosco, Auditorium in Toronto, with the participation of huge Sri Lankan crowd, including over 300 Tamils and over 100 Muslims living in Toronto area. Toronto Tamil resident Ingenious Sellaiya Manoranjan was the master of the ceremony. Buddhist and Tamil Hindu and catholic priests blessed the crowd. In his speech Tamil Hindu priest request all Sri Lankan Tamils living in Toronto to take part in rebuilding Sri Lanka. Addressing the crowd Ajex Tamil Resident Mr. Chandrakumaran using Canadian Parliamentarian Joe Daniel quote and said none of the money collected by LTTE front organizations in Toronto reaches Sri Lanka.  Former Conservative Candidate Ms. Marlene Gallyot  and Canadian Parliamentarian Joe Daniel  present at the event. The ceremony was filled with Sri Lankan cultural dances including Baratha Natyam preformed by a Sri Lankan Tamil dancing group in Toronto. Participants were also treated with tasty Sinhala and Tamil foods at the end of the event. The ceremony was organized by Sri Lankan Consulate General’s office in Toronto.

ஈழப் போராட்டம் – அழித்தவர்க​ள் யார்

(அஜித்)

ஒடுக்குமுறையும் வன்மமும் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் போதெல்லாம் அவற்றிகு எதிராக மக்கள் போராடுகிறார்கள். மக்களின் போராட்டங்கள் அரசியல்ரீதியாகத் திட்டமிடப்படும் போது மக்கள் இயக்கங்களாக வளர்ச்சியடைகின்றன. மக்கள் இயக்கங்கள் மீதான அரச பயங்கர வாதம் எதிர்கொள்ளப்படும் போக்கில் தலைமறைவு இயக்கங்கள் புரட்சிகரக் கட்சிகளால் தலைமை தாங்கப்படுகின்றன. இரண்டாம் உலக யுத்ததின் பின்னான காலகட்டம் முழுவதிலும் விடுதலை இயக்கங்களை அரசுகளும் ஏகபோகங்களும் உருவாக்கிக் கொள்வதும் இறுதியில் இரத்த வெள்ளத்தில் மனிதப்பிணங்களை காண்பிப்பதும் பொதுவான நிகழ்ச்சிப் போக்கக அமைந்தது. (மேலும்.....)

Get lost’ around the corner for the TNA

The Tamil National Alliance (TNA) is making demands from the Government.  Seeking betterment is legitimate in a democracy.  There’s nothing wrong in wanting the moon.  Proposal must match grievance, however, aspirations should be reasonable and practical realities cannot be wished away.  First of all, there is the issue of territory and relevant boundaries.  Arbitrarily drawn, the provincial boundaries make for claims that are ill-supported by history and demography.  Tamil Chauvinism has always been thin on fact, thick on myth and fidgety when it comes to substantiation and in drawing a solid line between grievance and proposal.  More than half the Tamils live outside the North and East.  Vast swathes of land in the East happen to be traditional Sinhala villages and this is discounting ‘colonization’.  The TNA’s one time lord and master, Velupillai Prabhakaran ethnically cleansed the Jaffna Peninsula of Sinhalese and Muslims.  The archaeological evidence rebels against exclusive homeland claims while place names and their Tamil corruption further compromise the Tamil chauvinistic narrative. (more....)

சிரியா தீர்வுத் திட்டத்தை ‘வீட்டோ' மூலம் நிராகரித்தது சீனா, ரஷ்யா

சிரிய அரசியல் நெருக்கடிக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் முன்வைக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தை நிரந்தர அங்கத்துவ நாடுகளான ரஷ்யா, சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்தன. அரபு லீக் அமைப்பு மற்றும் மேற்கு நாடுகள் கொண்டு வந்த தீர்வுத் திட்டத்தையே ரஷ்யா, சீனா நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது. இந்த தீர்வுத் திட்டம் மேலும் மேம்படுத்தப்படவேண்டும் என ரஷ்யா, சீனா குறிப்பிட்டன. எனினும் இந்த வீட்டோ அதிகாரமானது ‘வெட்கக்கேடானது’ என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அதேபோன்று வீட்டோ அதிகாரம் சிரிய மக்களை கீழே தள்ள உதவும் என பிரிட்டன் கூறியுள்ளது. பிரான்ஸம் தீர்வுத் திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. (மேலும்.....)

மாசி 06, 2012

ஏகாதிபத்தியங்களின் அழுத்தங்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாடுகளின் தாளத்திற்கு ஆடுகின்ற ஓர் பொம்மை அல்ல என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு ஏகாதிபத்திய நாட்டுக்கோ, அமைப்புக்கோ ஒரு போதும் அடிமையாகாது எனவும் அவர் கூறினார். இன்று பொருளாதார ரீதியாக வலுவான நாடுகளாக விளங்குபவைகளுக்கு உள்ளதோ இருநூறு, முந்நூறு வருட வரலாறு தான். ஆனால் நாமோ ஆயிரக்கணக்கான வருட வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். புலிப் பயங்கரவாதம் 1980 களில் நாட்டில் உருவானது. இதனால் நாடு பெரும் பேரழிவுக்கு முகம் கொடுத்து வந்தது. மனித உரிமைகள் என்ற பெயரிலும் வெவ்வேறு ஆணைக்குழுக்கள் ஊடாகவும், ஐக்கிய நாடுகள் சபை மூலமும் எம்மீது அழுத்தம் பிரயோகிக்க முடியுமென புலிகளின் ஆதரவாளர்கள் சர்வதேச மட்டத்தில் வெவ்வேறு சூழ்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். நாம் புலிகளையும் அவர்களை இயக்கிய தலைவர்களையும் அவர்களது ஆயுதங்களையும் அழித்துள்ளோம். என்றாலும் சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கு ஆதரவு நல்கக்கூடிய சிலர் உள்ளனர்.

மாசி 05, 2012

இனப்பிரச்சினை தீர்வில் சுதந்திர இலங்கையின் வரலாற்றுப் பதிவுகள்

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி சுதந்திரமடைந்த நாம் 64 வது சுதந்திரதின கொண்டாட்டங்களில் ஈடுபட்டவண்ணமுள்ளோம். திண்டாட்டங்கள் தீர்ந்து தீர்மானங்கள் தீர்வுகளாகி ஒருதாய் மக்கள் போன்று ஒரே தேசம், ஒரே நாடு என்ற உரத்த தொனியில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என்ற பேதமின்றி மனப்பூர்வமாகவும், மகிழ்ச்சியாகவும் ஏககாலத்தில் ஒன்றிணைந்து சுதந்திரத்தை கொண்டாடக்கூடிய தருணத்தையே இலங்கை இன்னும், இன்றும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதை தொட்டுக்கட்டாமலிருக்க முடியாது. இதனையே ஜனாதிபதியும் நேசிக்க விரும்புகிறார். ஆனால் இனக்குமுறல் என்ற உளக்குமுறல் உள்ளங்களையும், உணர்வுகளையும் உதாசீனப்படுத்தி வருவதை நாம் காண்கிறோம். புற்றுநோய்க் கிருமிகள் உடம்பை ஆக்கிரமிப்பது போன்று இனப்பிரச்சினையும், அதிகார பங்கீட்டுப் பிரச்சினையும் நம் தேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது.(மேலும்.....)

மாசி 05, 2012

பேச்சுவார்த்தைகள் அடுத்ததலைமுறைக்கும் தொடருமா?

தமிழ் மக்கள் இன்று அரசியல் அநாதைகளாக உள்ளனர் என்று கூறினால் அதில் உண்மை இல்லாமல் இல்லை. ஏனெனில் அம் மக்களை சரியான முறையில் தலைமை வகித்து வழிநடத்த பொறு ப்பான தமிழ் அரசியல்வாதிகள் அவர்கள் மத்தியில் இன்று இல்லை எனக் கூறலாம். அதனால் அரசாங்கமே தமிழ் மக்களின் பிரதி நிதிகளாகவும் இருந்து செயற்படுகின்றது என்று கூறினாலும் அது பொய்யாகாது. ஒரு காலத்தில் வடக்கு கிழக்கைப் பொறுத்த வரையில் அங்கு வாழும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே எனப் புலிகள் தமக்குத் தாமே மகுடம் சூடி வந்தனர். அந்த மக்கள் விரும்பியோ விரும்பாமலோ அதனை ஏற்றுக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதுதான் அன்றைய கால கட்ட நிலையாக இருந்தது. அதனால்தான் அப்போது பதவி வகித்த அரசாங்கங்கள் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடு பட்டன. (மேலும்.....)

மாசி 05, 2012

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை யாழ்ப்பாணம் விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம் செல்கிறார். சாவகச்சேரி செல்லும் அவர் சாவகச்சேரி வைத் தியசாலை வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள விடுதிக் கட்டடத் தொகுதியைத் திறந்து வைக்கிறார். அதேநேரம் யாழ். செயலகத்துக்குச் செல்லும் ஜனாதிபதி அபிவிருத்தித் திட்டங்களை ஆராயவுள்ளார். இதனையொட்டி நாளைய தினம் சகல அதிகாரிகளையும் தவறாது கடமைக்குச் சமூகம் தருமாறு யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தி திட்டங்கள் 600 மில்லியன் ரூபா செலவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிதியை வழங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோருக்கு சுதந்திர தின நன்னாளில் மக்கள் சார்பாக நன்றி தெரிவிப்பதாகவும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் யாழ்ப்பாண செயலகத்தில் தேசிய கொடியை ஏற்றி கொடி வணக்கம் செய்த பின்னர் யாழ்ப்பாண செயலக கருத்தரங்கு மண்டபத்தில் பணியாளர் கள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார். சகல பணியாளர்களும் தமது வரவைப் பதிவு செய்து நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.

மாசி 05, 2012

மட்டக்களப்பு பேச்சுத் தமிழுக்கு செந்தமிழ் அங்கீகாரம்..

மட்டக்களப்பு பேச்சித் தமிழுக்கு யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் செந்தமிழ் அங்கிகாரம் வழங்கியிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் ஒன்றல்ல. மட்டக்களப்பு தமிழர்கள் எவ்வாறு பூர்வீகக் குடிகளோ அவ்வாறே அவர்கள் பேசும் தமிழ் செந்தமிழாகப் போற்றப்படுவதற்கு வடமொழிக்கலப்பு மிகவும் குறைவான இருப்பது ஒரு காரணமாகும் என பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள் வெளியான மட்டக்களப்பு மாநாட்டு நினைவு மலர்-1996 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தமிழர்கள் பேசும் தமிழ் பழந்தமிழ் இலக்கியங்களில் எல்லாம் இழையோடி நிற்ப்பதனை சான்றாதாரத்துடன் நிரூபித்திருக்கும், இலங்கையில் ஆரம்ப குடிகளாக இங்குள்ள தமிழர்களும் வாழ்ந்தார்கள் என்பதனை வாகரை வாணன் அவர்களின் ‘”பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டக்களப்புத் தமிழ்’ எனும் நூலை ஆதாரமாகக்கொண்டு ஆணியடித்துச் சொல்ல இதனை வரைகிறேன். (மேலும்.....)

மாசி 05, 2012

அனுராதபுரத்தில் கோலாகலமான சுதந்திர தினக் கொண்டாட்டம்

வரலாற்றுப் புகழ்மிக்க அநுராதபுரம் நகரில் இலங்கையின் 64வது சுதந்திர தின விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அநுராதபுரம் நகரம் விழாக்கோலம் பூண்டிருந்ததுடன், நகரிலும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டி ருந்தன. பொலிசாரும் முப்படையி னரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததுடன் நாடளாவிய ரீதியிலிருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் சுதந்திர தின விழாவில் கலந்துகொண்டனர். இலங்கையில் 64 வது சுதந்திர தினத்தை யொட்டி நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத வழிபாடுகள் அநுராதபுரத்திலும் கொழும்பிலும் நேற்றுக் காலை நடைபெற் றன. இந்த மத வழிபாடுகளில் அந்தந்த மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். பெளத்த சமய வழி பாடுகள் நேற்றுக் காலை 6.30 மணிக்கு அநுராதபுரம் ஸ்ரீ மகா போதியில் நடை பெற்றன. அதற்கு சமகாலத்தில் இந்து சமய வழிபாடுகள் அநுராதபுரம் ஸ்ரீ கதிரேசன் தேவஸ்தானத்திலும் இஸ்லாமிய சமய வழிபாடுகள் அநுராதபுரம் முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலிலும் கிறிஸ்தவ மத வழிபாடுகள் அநுராதபுரம் புனித சூசையப்பர் பேராலயத்திலும் நடைபெற்றன.

மாசி 05, 2012

மக்களைப் பேரவலத்திற்குள் அமிழ்த்தப்போகும் அபிவிருத்தியும் வல்லரசுக் கனவும்

மூழ்கிக்கொண்டிருக்கும் அமரிக்கப் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற அழகிய சொற்களுக்குள் அமரிக்கப் பொருளாதாரம் அடிமைகளை மீண்டும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை நியூயோர்க் டைம்ஸ் இல் வெளியான வரைபடம் விபரிக்கின்றது. 1980 இல் உலக மயமாதல் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து தொழிலாளர்களின் வேலைசெய்யும் திறன் அதிகரிக்கும் அதே வேகத்தில் அவர்களின் ஊதியம் குறைந்து கொண்டே செல்கிறது. பணம் மேலும் பணம்படைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சென்றடைகிறது. இறுதியில் வேலையின்மை அதீத வறுமை என்பன விழைபலனாகிறது. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இன்று அபிவிருத்தி என்ற பெயரில் நடைபெறும் கொள்ளையும் சூறையாடலும் பணம்படைத்தவர்களுக்கானது. ஏற்கனவே வறுமைக்குள் வாடும் இந்த நாட்டு மக்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கும், உலகில் என்றுமில்லாத அவலத்திற்குள் இந்த நாடுகள் தள்ளப்படும் என்பதற்கும் வரைபடம் காட்டும் அமரிக்கா வாழும் உதாரணம். (வரைபடச் செய்திகளை பார்க்க.......)

மாசி 05, 2012

பிரபாகரன்

வாழ்வும் மரணமும்’’ – பிரபாகரனின் முரட்டுக் காதல்

(பா.ராகவன்)

(இக்கட்டுரையில் பல தகவல்தவறுகள் இருப்பதை சிறுபிள்ளைகள் கூட அறிந்து கொள்ள முடியும். இராணுவம் மாதகலில் இருந்து புறப்பட்டதாம்.....?. அடுத்தது திலீபனை உண்ணாவிரதம் இருக்கச் செய்து மரணிக்க விட்டவர்கள் பெண்களை மட்டும் சாகவிடாமல் எப்படி தடுத்தார்கள். எதிரியின்கையில் பிடிபடால் சாவை தழுவிக் கொள்பவர்கள் என்ற பெருமை இருக்கும் போது எப்படி முள்ளிவாய்காலில் 10 ஆயிரத்திற்க மேற்பட்ட அதிலும் ஆயிரம் வரையிலான அதி முக்கிய புலி உறுப்பினர்களும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர். இதில் பிரபாகரன், பாரகுமார் ஈறாக.... இப்படியே அடுக்கின் கொண்டு போகலாம். ராகவன் போன்றவர்கள் புலிகளின் புழுகுகளை ஈழவிடுதலைப் போராட்டத்தின் வராலாறு ஆக்கப் பார்க்கின்றனர். இதில் கடைசியாக இணைந்தவர் எழுதத் தெரியாக ஆரம்பகால உறுப்பினர் ஐயர்(கணேசன்) வேறு.......   - சாகரன்)

பிரபாகரனின் மரணம், அவரது வாழ்வைக் காட்டிலும் அதிகம் செய்தி சுமந்தது. முப்பத்தி மூன்றாண்டு கால ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய ஒரு போராளி, ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுக்கும் காவல் அரண்போல் நின்ற ஒரு மனிதன், அவர்களது தனி ஈழக் கனவுக்கு இறுதி நம்பிக்கையாக இருந்த தலைவன் – இப்போது இல்லை. ஆயிரக்கணக்கான, முகமறியாத போராளிகளின் மரணத்தை ‘மாவீரர் மரணம்’ என்று அங்கீகரித்து கௌரவித்தவர் இப்படி அநாதையாக சிங்கள ராணுவத்தால் எரித்துக் கடலில் கரைக்கப்பட்டுவிட்டாரே என்று ஈழத் தமிழர் உலகமே கண்ணீர் சிந்தியது. அவரது இறப்பு புலிகள் தரப்பிலேயே உறுதிப்படுத்தப்பட்ட பிறகும் அவர் இறக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கச் சிலர் இருந்தார்கள். (மேலும்.....)

மாசி 05, 2012

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண தெரிவுக்குழுவே சிறந்த பொறிமுறை

தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவே சிறந்த பொறிமுறையாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் எத்தகைய தீர்வுகளும் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என தெரிவித்த ஜனாதிபதி; சகலரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார். தேசிய பிரச்சினைக்கு சகல கட்சிகளும் இணைந்து மேற்கொள்ளும் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தீர்மானமே சிறந்த தீர்வாக அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். (மேலும்.....)

மாசி 05, 2012

அனைத்து தரப்பினரையும் உள்வாங்கிய இணக்கப்பாடே காலத்தின் தேவ

30 வருட கொடூர யுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இந்நாட்டில் நிரந்தர சமாதானம் நிலைபெற யுத்த த்தை தோற்றுவித்த அடிப்படைக் காரணிகள் களையப் படுதல் வேண்டும். அவ்வடிப்படைக் காரணிகள் களையப்படுவதிலும் பார்க்க அக்காரணிகளின் தாக்கத்திலிருந்து பாதுகாப்புத் தரவல்ல சிகிச்சையாகவே தீர்வுத் திட்டம் பேசப்படுகின்றது. சிகிச்சைகள் பக்க விளைவுகளை தரக் கூடியவை. உடம்பின் எந்தப் பாகத்தின் நோயைத் தீர்க்க சிகிச்சை நாடப்படுகின்றதோ அச்சிகிச்சை உடம்பின் மற்றொரு பாகத்திற்கு பக்க விளைவுத் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய தேவை வைத்தியர் களுக்கு இருக்கின்றது. எனவே ‘அரசாங்கம்’ என்ற வைத்தியர் ‘தமிழ் மக்கள்’ என்ற உடற்பாகத் தின் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கான சிகிச்சையைச் செய்ய விழைகின்ற பொழுது இலங்கை மக்கள் என்ற உடம்பின் அடுத்த பாகங்களான ஏனைய சமூகங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது. எனவேதான் த.தே. கூட்டமைப்புடன் பேசுகின்ற அதேவேளை பாராளுமன்றத் தெரிவுக் குழுவையும் அமைத்து சகல தரப்பினரையும் உள்வாங்கி ஒரு பொதுவான இணக்கப்பாட் டிற்கு வர முயற்சிக்கின்றது. (மேலும்.....)

மாசி 05, 2012

உள்ளக இறைமை என்பதன் பொருள்

ஒரு சமூகத்தின் நல்லாளுகை தொடர்பாக எழும் சவால்களை எதிர்கொள்ள இறைமை என்கிற கோட்பாட்டை வலுவானதொரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் இறைமை என்பதன் பொருள் என்ன என்பதை விளங்கி, ஒரு சமூகத்தின் ஆளுகை நடைமுறையை எவ்வாறு ஒழுங்கு செய்துகொள்ள முடியும்? அதிலும் குறிப்பாக பல்வேறு ஆளுகை அமைப்புகளுக்கு இடையில் அதிகார பரவலாக்கல் ஒழுங்குகளை எவ்வாறு வகுத்துக்கொள்ள முடியும் என்பதை முடிவு செய்வதில் பலர் தெளிவின்றி உள்ளனர். இறைமையின் பல்வேறு பண்புகளைப் பற்றி அறிந்திருத்தல் இப்பணியினை இலகுவாக அமுல் செய்யத் துணைபுரியும். தற்கால அரசியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகின்ற இறைமைக் கோட்பாடு ஒரு மேலைத்தேயக் கோட்பாடாகும். எமது நீதி நூல்களிலும் இலக்கியங்களிலும் கூறப்படும் இறைமை வேறு பொருள் கொண்டவை. இறைமை என்ற கருத்து சோக்கிரட்டீஸ் காலத்தில் தோன்றி மத்திய கால அரசுகளில் வலுப்பெற்று நவீன காலத்தில் மேலும் விரிவடைந்துள்ளது. (மேலும்.....)

மாசி 05, 2012

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!

- வன்னியன்

என்னடா பொடி, நான் வந்ததும் தெரியாம பாரதியோடு ஒண்டிக் கிடக்கிறாய். அப்படி என்னடா பாரதி சொல்லுறார்? எல்லாரும் பொலீஸ் அதிகாரம், காணிப் பதிவு பற்றித்தான் படிக்கினம். கதைக்கினம். நீ என்னடா எண்டா பாரதியோடை இருக்கிறாய். அப்பா, பாரதியை ஒரு கவிஞனாய் மட்டும்தான் பலர் பார்க்கினம். நான் எப்பவும் அவனை அப்படிப் பார்ப்பதில்லை. மனித குல மேம்பாட்டுக்காக கவி படைக்கப் பிறந்த தலைசிறந்த சிந்தனையாளனாயே பாக்கிறன். அவன் கவிதைகள் சிந்திக்கிறவனைப் புயலாக்கி, தீ மூட்டி சமூகக் கொடுமைகளைத் தகர்த்தெறிய வைக்கிறது. இந்த வரியைப் பாரப்பா, ‘தனியொருவனுக்கு உணவில்லையேல் - இந்த ஜெகத்தினை அழித்திடுவோம்’ எவ்வளவு கடுப்பு அவனுக்கு; ஏழ்மையைக் கண்ட கொதிப்பு, (மேலும்.....)

தோழர்.எஸ்.ராஜகோபால் (வயது 60) இலங்கையில் காலமானார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தோழர்களில் ஒருவரான தோழர்.எஸ்.ராஜகோபால் (வயது 60) இலங்கையிலுள்ள பண்டாரவளையில் மாரடைப்பால் காலமானார். தோழர் ராஜகோபால் அவர்கள் எம்.ஜி.ஆர்.நகரின் வளர்ச்சியிலும் அப்பகுதி மக்களின் மேம்பாட்டுக்கும் தொடர்ந்து உழைத்தவர். எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் பயணிகள் நிழற்குடைகள் முழுக்க முழுக்க ராஜாகோபால் அவர்களின் முயற்சியால் உருவானது. திருவள்ளுவர் பெயயரில் அச்சகம் நடத்தி பல பயனுள்ள வெளியீடுகளை வெளியிட்டுள்ளார். ஈழ விடுதலைப் போராட்டம் முனைப்படைந்த வேளைகளில் எமது இயக்க உறுப்பினர்களுடன் அரசியல் ரீதியான கலந்துரையாடல்களில் கலந்துக் கொண்டு பல பயனுள்ள கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதுடன், ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.  2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாநகராட்சி தேர்தலில் 130 வது வார்டில் வேட்பாளாராகப் போட்டியிட்ட தோழர் ராஜகோபால்,  இந்தியக் கலாச்சார நட்புறவுக் கழகம் (ISCUF), இந்தியப் பெருங்கடல் அமைதிப் பேரியக்கம் (IMPIO), திருவள்ளுவர் நற்பணி மன்றம் போன்ற அமைப்புகளில் பொறுப்புத் தலைவர்களில் ஒருவராக செயல்பட்டவர். 2003 ஆம் ஆண்டு தன் மனைவி அன்பரசியின் சொந்த நாடான இலங்கைக்குப் புலம்பெயர்ந்து  இந்திய வம்சாவழித் தமிழர்கள் வாழுகின்ற  பண்டாரவளையில் வாழ்ந்து வந்ததுடன், இந்திய வம்சாவழித் தமிழர்களின் மேம்பாட்டிற்காக உழைத்தும் வந்தார். அங்கு இலங்கை தங்க நகைத் தொழிலாளர்கள் நல உரிமைச் சங்கத்தின் செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். தோழரின் மறைவிற்கு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தனது கண்ணீர் அஞ்சலியை காணிக்கையாக்குகிறது.

இனிய தோழனே
உனது உழைப்பு உயர்ந்தது
உனது சிந்தனை சிறந்தது
உனது நியாயம் நிஜமானது
அதனால்...
உனது வாழ்க்கை தொடர்கதையானது !

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி - சென்னை

மாசி 05, 2012

ஊர்காவற்றுறை மக்களுக்கு இனியாவது விடிவு கிட்டுமா?

எமக்கு தைப்பொங்கலைப் போலவே சிங்களப் புது வருடமும் பிறந்து விட்டது. நாங்கள் சிங்கள கிராமியக் கவிதைகள், தமிழ் கிராமியக் கவிதைகளைப் பாடிக் கொண்டு ஊஞ்சல்களைக் கட்டிக் கொண்டு புதுவருடத்தில் குதூகலமாக இருந்தோம். அது எவ்வளவு மகிழ்ச்சியான காலம் தெரியுமா?

வியர்வைக்கும் கண்ணீருக்கும் கடனில்லாது பூமிக்கு பாரமற்றிருக்கும் ஊர்காவற்றுறை மக்கள் மத்தியிலே தீவின் ஒவ்வொரு இடத்துக்கும் கால் நடையாகச் செல்ல நான் முயற்சித்தேன். ஆடு, மாடுகள் போன்ற கால் நடைகளைக் கொண்டு நடத்துவதே அவர்களின் ஜீவனோபாயம் என்று நான் முன்னொரு நாள் உங்களுக்கு எழுதினேன். ஆனால் இடைக்கிடை வெளியாக்கப்பட்ட பயிர் நிலங்களுக்கிடையே புகையிலை பயிர் செய்து வாழும் ஒருவரை நாம் சந்தித்தோம். நாம் வரும் வழியை மிக உன்னிப்போடு பார்த்துக் கொண்டிருந்த அவர், வெற்றிலை கறை படிந்த பற்களைக் காட்டிக் கொண்டு ஒரு அப்பாவி போல் சிரித்தார். (மேலும்.....)

மாசி 04, 2012

சீனாவின் பட்டுப்பாதை ஆராய்ச்சியும் இலங்கையும்

(சிவலிங்கம் சிவகுமாரன்)

திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியையும் அது கேட்டுள்ளது. அதாவது கடல் மார்க்கமாக அக்காலத்தில் வந்த கப்பல்கள் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் முழ்கியிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ள சீன அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைக் கோரியுள்ளது. பட்டுப்பாதை என்பது பண்டைய காலத்தில் வண்டிகளும் கடற்கலங்களும் பயணம் செய்த பாதையாகும். (மேலும்.....)

மாசி 04, 2012

64th Independence Day Ceremony & the Cultural Fiesta

on

 Saturday, 4th February 2012

 at the

 Don Bosco Auditorium

2, Saint Andrews Boulevard, Etobicoke, Ontario. M9R 1V8

 From 5.30 p.m. to 8.30 p.m.

  Consulate General of Sri Lanka,

  36, Eglinton Avenue West,

  Suite 301, Toronto,

  Ontario. M4R 1A1.

  Email: srilanka@bellnet.ca

  Tel: 416-323-9133 begin_of_the_skype_highlighting              416-323-9133      end_of_the_skype_highlighting

மாசி 04, 2012

புலிகளுக்கு ஆதரவான சினிமா

வைகோ ரகசியமாக பார்த்தார்

ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தும் வகையில், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார். மீண்டும் விடுதலைப்புலிகளளின் பேர் தொடரும் என்ற ரீதியில் தயாரிக்கப்பட்டுள்ள, 'தேன் கூடு;' என்ற திரைப்படத்தை, ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ நேற்று சென்னையில் ரகசியமாக பார்த்தார். அப்படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பும் என்றும், சென்சார் போர்ட்டு அனுமதியும் கிடைக்காது என்றும், திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (மேலும்.....)

மாசி 04, 2012

உத்தர பிரதேசத்தில் மாற்றம் வர வேண்டும்

உத்தர பிரதேசத்தில் மக்கள் வாக்கின் வலிமையைப் பயன்படுத்தி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் நல்ல ஆட்சியை அமைக்க தயாராகி விட்டனர் என்றும் தேர்தல் பிரசாரத்தின்போது பிரியங்கா தெரிவித்தார். அவர் அரசியலுக்கு வருவாரா என பலரும் பேசிக்கொண்டிருந்த நேரத்தில் அவர் சொன்னது எனது சகோதரர் ராகுல் கேட்டு கொண்டால் அரசியலில் குதிப்பேன் என்றார். இதற்கிடையில் இன்று உ.பி., மாநிலத்தில் ராகுல் தொகுதிக்குட்பட்ட பல்பத்ராபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.தேர்தல் நெருங்கி வரும் இவ் வேளையில் வாக்காளர்களாகிய நீங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களில் அறிவுபூர்வமாக உள்ளவரையும், உண்மையாக உழைக்கக் கூடியவரையும் தெரிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சி இது போன்ற நல்ல நபர்களை தேர்தலில் நிறுத்தியிருக்கிறது. குற்றம் புரிந்தவர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.இங்கு சந்தர்ப்பவாத அரசியல் நடந்து வருகிறது. (மேலும்.....)

மாசி 04, 2012

சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் சு.ப தமிழ்ச்செல்வன் சிக்கினாரா ?

விடுதலைப் புலிகளின் கடல் தளபதி சூசைக்கு விரிக்கப்பட்ட வலையில் புலிகளின் அரசியல் தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிக்கினார் என்ற செய்தியை தற்போது விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 2ம் திகதி இலங்கை வான்படைகள் கிளிநொச்சியில் உள்ள இரகசிய இடம் ஒன்றைத் தாக்கினர். அங்கே அதிகாலை 6 மணியளவில் இருந்த சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் கொல்லப்பட்டார். இருப்பினும் தாம் வேறு ஒரு நபரையே தாக்க முற்பட்டதாக இராணுவ பேச்சாளராக இருந்த பிரிகேடியர் நாணயகார அமெரிக்கத் தூதுவருக்கு தனிப்பட்ட ரீதியில் தெரிவித்துள்ளார். தாம் கடற்படைத் தளபதி சூசை அவர்களையே தாக்க முற்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

மாசி 03, 2012

துரோகி ஈழ அரசியலின் பூமறாங்

எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது- அது 1990- விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவர் கோபாலசாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகாமத்திற்கு வருகிறார்.ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். ஏங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்கு சந்தனப்பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கினறன.அப்போது இணக்கம் என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒரு பேச்சுகுத்தானும் கேள்வுற்றிராத காலம் அது. எனது கிராமத்தில் 'இயக்கம்' என்னும் சொல்லைக்கூடப் பெரியளவில் புழக்கத்தில் இருக்கவில்லை. பொதுவாக இயக்கங்களைப் 'பொடியள்' என்றே மக்கள் அழைப்பதுண்டு. பின்னர் காலம் என்னையும் தமிழ் தேசிய பக்கமாக நகர்த்தியது. ஆனால் ஆச்சரியம்- தமிழ் தேசியத்தைச் சொற்களாகக்கூடக் கேள்வியுறாத காலத்தில் மலர் தூவி வரவேற்கப்பட்ட மாத்தையா,நான் தமிழ்த் தேசிய அரசியல் குறித்து அறிந்து  கொள்ள முற்பட்டபோது, எனக்கு துரோகியாகவே அறிமுகமானார். (மேலும்....)

மாசி 03, 2012

24 இலங்கையர் டோக்கோவிலிருந்து நாளை நாடு கடத்தல்

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு செல்ல முயற்சித்து டோக்கோவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 200 இலங் கைத் தமிழர்களுள் 24 இற்கும் மேற்பட் டோர் நாளை ஐ. ஓ. எம். நிறுவனத்தின் அனுசரணையுடன் நாடு திரும்புகின்றனர். புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பின் (ஐ. ஓ. எம்) திரும்புதல் மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிகழ்ச் சித்திட்டத்தின் கீழ் தமது சொந்த நாட் டிற்கு மீள வரவிரும்புவோரை விமானம் மூலம் அழைத்துவர ஐ. ஓ. எம். அனு சரணை வழங்குவதாக தென் இலங்கைக் கிளையின் அதிகாரியொருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த 200 இலங்கைத் தமிழர்கள் இந்தியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளினூடாக சட்டவிரோதமான முறையில் கனடா செல்ல முற்பட்டபோது இவர்கள் டோகோவில் வைத்து தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் பி.பி.சி. செய்திச் சேவைக்கு கருத்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாசி 03, 2012

தெரிவுக்குழுவுக்கு சுதந்திரக் கட்சியும் யோசனை சமர்ப்பிக்கும்

சகல அரசியல் கட்சிகளையும் இணைத்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடாகவே தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்ற நிலைப்பாட்டிலே அரசாங்கம் உள்ளது. தெரிவுக் குழுவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனையும் முன்வைக்கப்படும். இங்கு எட்டப்படும் தீர்வுக்கு தாம் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவினூடாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அமைச்சர், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களுக்கும் மற்றும் தரப்பினருக்கும் அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அனைத்துக் கட்சிகளையும் ஒன்றி ணைத்து தெரிவுக் குழுவினூடாக எட் டப்படும் தீர்வே சிறந்ததாக அமையும். பொலிஸ், காணி அதிகாரம் குறித்தும் 13 பிளஸ் அதிகாரம் பற்றியும் பரவலாகப் பேசப்படுகின்றன. பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் யதார்த்தபூர்வமான சிக்கல்கள் காணப்படுகின்றன. 13 ஆவது திருத்தமா அதற்கும் அப்பால் 13 பிளஸ் அதிகாரமா என்பது குறித்து பாரா ளுமன்றத் தெரிவுக் குழுவினூடாக ஆராய்ந்து தீர்வு எட்ட முடியும். இது தொடர்பில் பல் வேறு பட்ட கருத்துகள் காணப்படுகிறது. இந்த விடயத்தை ஆழமாக ஆராய்ந்தே தீர்வுகாண வேண்டியுள்ளது. 13 பிளஸ் தொடர்பில் ஜனாதிபதி பல இடங்களில் கருத்துக்கூறியுள்ளார்.

மாசி 03, 2012

64 ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை

 

இலங்கையின் 64 வது சுதந்திர தினம் நாளை மிகப் பிரமாண்டமான முறையில் கொண்டாடப்படவுள்ளது. ‘ஆச்சரியமான தேசத்தை கட்டியெழுப்புவோம்’ என்ற தொனிப் பொருளில் இம்முறை நடைபெறவுள்ள சுதந்திர தினத்தை முன்னிட்டு வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின பிரதான வைபவம் இம்முறை அநுராதபுரம் ஸ்ரீ சம்புத்தத்த ஜயந்தி மாவத்தை வளாகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பிரதான வைபவம் காலை 8.30 மணிக்கு கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. இதனை முன்னிட்டு அநுராதபுரம் உட்பட அதனை அண்மித்த பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பத்தாயிரத்திற்கும் அதிகமான பொலிஸாரும் அவர்களுக்கு உதவியாக முப்படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 200 வெளிநாட்டு தூதுவர்கள், பிரதிநிதிகள், 300 மதத் தலைவர்கள் மற்றும் அழைக்கப்பட்ட பிரமுகர்கள் இரண்டாயிரம் பேர் உட்பட பலர் இதில் கலந்து கொள்வர்.

மாசி 03, 2012

பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதால் தமிழர்களுக்கு என்ன இலாபம்? - பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

நாட்டிலுள்ள சகல மக்களுக்கும் சம உரிமை இருக்க வேண்டும். குறிப்பாக வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ் மக்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும். இதுவே எனது நோக்கம். இதனை இலக்காகக் கொண்டே நான் செயற்படுகிறேன் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் எனக்கும் இடையில் எதுவித விரிசல்களும் இல்லை. பொலிஸ் அதிகாரம் வழங்கப்படுவதால் தமிழருக்கு என்ன இலாபம்? என்றுதான் கேட்கிறேன். காணி அதிகாரம் இப்போது இல்லை என்று சொல்லி விட முடியாது. ஒவ்வொரு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் காணிகள் உள்ளன. முதலமைச்சர் என்பவர் இந்த மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து செயற்பட்டாலேயே அதனை பெற்றுவிட முடியும். மாவட்ட செயலாளரின் அனுமதி இன்றி காணிகளை எவரும் பெற்றுவிட முடியாது. நான் முதலமைச்சர் சந்திரகாந்தினை அச்சுறுத்தவில்லை. முதலமைச்சர் பொதுசன ஐக்கிய முன்னணியில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒருவர். (மேலும்....)

மாசி 03, 2012

லிபிய தலைநகரில் மீண்டும் மோதல்

லிபியாவில் கடாபி மகன் மாளிகையை மீட்க அவரது ஆதரவாளர்கள் இராணுவத்துடன் துப்பாகி சண்டையில் ஈடுபட்டனர். லிபியாவில் முஅம்மர் கடாபியின் 42 ஆண்டு கால ஆட்சி பொது மக்களின் 8 மாத போராட்டத்துக்கு பின்னர் அகற்றப்பட்டது. கடாபியும் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி, மகள் மற்றும் மகன்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். கடாபியின் மகன் சாதி கடாபி நைகர் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். இதற்கிடையே சாதி கடாபியின் ஆடம்பர கடற்கரை மாளிகை மத்திய திரிபோலியில் உள்ளது. தற்போது இது அரசின் வசம் உள்ளது. இந்த நிலையில் அந்த மாளிகையை கைப்பற்றும் திடீர் நடவடிக்கையில் சாதி கடாபியின் ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். திடீரென அங்கு புகுந்து பாதுகாப்பாக நின்ற இராணுவ வீரர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இருந்தும் அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புடன் கூடிய கரும்புகை சூழ்ந்தது.

மாசி 03, 2012

ஆசிய நாடுகள் உதவியை எதிர்பார்த்து அமெரிக்காவை நாடுகிறது - ஒபாமா

தங்களை மேம்படுத்தவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக, அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறியுள்ளார். அமெரிக்க தலைநகர் வொஷிங்டனில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா கூறியதாவது, கடந்த மூன்றாண்டுகளில், நாம் அனேக பிரச்சினைகளைக் கடந்து வந்து விட்டோம். அதேகாலகட்டத்தில், நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபின், ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அது, உலகம் இன்னும் நமது தலைமையை எதிர்பார்த் திருப்பது தான். நம்மிடம் உள்ள அதிகாரத்திற்காக, அவர்கள் நம்மை எதிர்பார்க்கின்றனர். ஆசியாவில், சீனாவின் வளர்ச்சியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அவர்களின் பொருளாதார எதிர்காலம், நம்மோடு மட்டுமல்ல, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவோடும் தொடர்பு கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால், ஆசியாவின் சிறிய நாடுகள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் இயற்கை வளங்கள் சுரண்டப்படாமல் முறையாக மேம்படுத்தவும் விரும்புகின்றனர். அதனால் அவர்கள் நம்மை விரும்புகின்றனர்.

மாசி 03, 2012

“ஈரானைத் தாக்காதே!”-அமெரிக்க மக்கள்  எதிர்ப்பு முழக்கம்

இராக் மற்றும் ஆப்கா னிஸ்தான் ஆகிய இரு நாடு களையும் நிர்மூலமாக்கி விட்டு ஈரான் மீது கண் வைத்திருக்கும் அமெரிக்கா வின் போர் வெறிக்கு , சொந்த நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி யுள்ளது. போர் எதிர்ப்பு அமைப் புகள் சார்பில் வாஷிங்ட னில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்த எதிர்ப்புப் பேரணி யில் ஆயிரக்கணக்கான மக் கள் பங்கேற்றனர். சுமார் 50 அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தன. மேலும் நாடு முழுவதும் லட்சக்கணக் கான மக்கள் பங்கேற்கும் வகையில் ஏராளமான பேர ணிகளுக்கு திட்டமிட்டுள் ளனர். பிப்ரவரி 4 ஆம் தேதி யன்று இந்த பேரணிகள் நடைபெறும். போர் கூடாது, தடை களை நீக்கு, தலையிடாதே, ஈரானில் படுகொலை வேண் டாம் என்ற முழக்கங்களை மக்கள் எழுப்பி வருகிறார் கள். இதே முழக்கங்கள் பிப். 4 ஆம் தேதியன்று நாடு முழு வதும் எதிரொலிக்கப்போகி றது என்று போர் எதிர்ப்பா ளர்களை ஒருங்கிணைக் கும் ஸ்டாப்வார்ஆன்ஈரான் என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் முதலாளித்து வத்திற்கும், அமெரிக்காவின் போர் வெறிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் இத்தகைய போராட்டங்கள் பற்றிய செய்திகளை வெளியிடுவ தில்லை. அதனால் இணைய தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவற் றின் மூலமாக மக்களைத் திரட்டும் வேலை நடந்து வருகிறது.
 

மாசி 02, 2012

மும்மொழி அறிவு இனங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும்

இலங்கையில் ஏற்பட்ட 30ஆண்டுகால பயங்கரவாத யுத்தம் காரணமாக இனங்களிடையே, சமூகங்களிடையே இருந்துவந்த பகைமை, சந்தேக உணர்வு, நம்பிக்கையின்மை இவை அனைத்திற்கும் 1956ம் ஆண்டு முதல் அமுலாக்கப்பட்ட சிங்கள மட்டும் சட்டமே அடித்தளமாக அமை ந்திருந்ததை நன்கு உணர்ந்திருக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் மொழிப்பிரச்சினைக்கு சமூக தீர்வு கண்டால் இந்நாட்டு மக்களிடையே உண்மையான சமாதானத்தையும் இன ஐக்கியத்தையும் ஏற்படுத்த முடி யும் என்று அசையாத நம்பிக்கை கொண்டிருக்கிறார். தமது இந்த நம்பிக்கையை நிறைவேற்றும் முகமாக ஜனாதிபதி அவர்கள் நாடெங்கிலும் மும்மொழித்திட்டத்தை அறிமுகம் செய்யும் செயற்பாட் டில் இப்போது இறங்கியுள்ளார். தனது நெருங்கிய நண்பரான சிரேஷ்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவிடம் இதனை நிறைவேற்றும் பொறு ப்பை ஒப்படைத்திருக்கும் ஜனாதிபதி, சிங்களவர்கள் தமிழ் மொழியை யும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கட்டாயம் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும் இவ்விரு மொழிகளுடன் சர்வதேச மொழியான ஆங்கில மொழியையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றும், பொதுமக்க ளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். (மேலும்....)

மாசி 02, 2012

கதிர்காமத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி 5 வருடங்களுக்கு முன் தயாரிக்கப்பட்டது

கதிர்காமத்தில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி தொடர்பில் இதுவரை பத்துப் பேரிடம் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த அங்கியினை திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்தார். கதிர்காமம் பகுதியிலுள்ள விடுதியிலிருந்து நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் இந்த தற்கொலை அங்கி மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட அங்கியானது இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் ஐந்து வருடத்துக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட தற்கொலை அங்கியே அது எனக் கண்டறியப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் இந்த தற்கொலை அங்கி கொண்டுவரப்பட்டு இவ்விடுதியில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ___

மாசி 02, 2012 

யாழில். பாரிய குண்டிலிருந்து உயிர் தப்பிய ஊழியர்கள்...

வலி. வடக்கு காங்கேசன்துறையில் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்களால் பாரிய குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்காக நேற்று புதன்கிழமை மேடை அமைப்பதற்கு மண்வெட்டிய போது நிலத்தின் கீழ் புதையுண்ட நிலையிலேயே இந்தக் குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பலாலியிலுள்ள இராணுவ படைத் தலைமையகத்திற்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரின் பொறியியல் பிரிவினர் உடனடியாகக் குறிப்பி;ட்ட இடத்திற்கு விரைந்து குண்டை வெடிக்காத நிலையில் மிகவும் அவதானமாக மீட்டுள்ளனர். பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியம் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்து பதினாறு வருடங்கள் கடக்கும் நிலையில் இக்குண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தெய்வாதீனமாக இக்குண்டு வெடிக்காதமையினால் பல உயிர்கள் பாதுகாக்கப்பட்டு பெரும் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியரொருவர் தெரிவித்தார். ___

மாசி 02, 2012

வாசகர் ஒருவரின் விமர்சனம். பல பூக்கள் மலரட்டும்.....?

அன்புள்ள சூத்திரம் ஆசிரியருக்கு,

தங்கள் இணையத்தளத்தில் ஒரு செய்தியை வாசித்தேன். அதில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரத்தினம் என்பவர் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்கள் புத்த விகாரை அமைப்பதாக குறை கூறியிருக்கிறார். தமிழர்கள் சிங்களப் பகுதிகளில் குடியேறி வாழவும் அங்கு இந்துக் கோவில்கள் அமைக்கவும் முடியுமென்றால் சிங்களவர்கள் தமிழ் பகுதிகளில் வாழவும் விகாரை அமைக்கவும் முடியாதா? தமிழர்களுக்கு ஒரு நீதி சிங்களவர்களுக்கு இன்னொரு நீதியா? இந்த துரைரத்தினம் என்பவர் முன்பும் இந்த மாதிரி பல தமிழ் இனவாத அறிக்கைகளை விடுத்திருப்பதை பேப்பர்களில் படித்திருக்கிறேன். ஒருமுறை வெளிநாடுகளில் வாழும் புலிக்கு எதிரானவர்களை புல்லுருவிகள் என்றும் கண்டித்து அறிக்கை விட்டதைப் பார்த்தனான். சில வேளைகளில் புலிகளோ தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ கூட விடாத இனவாத அறிக்கைகளை இவர் விடுகிறார். இப்படி அறிக்கை விட்டால் பாராளுமன்ற எம்.பி ஆகலாம் என ஆசைப்படுகிறாரோ தெரியல்லை. சூத்திரம் ஈ.பி.ஆர்.எல்லுக்கு சார்பான இணையத்தளம் போல தெரிகிறது. அப்படி இருக்க இந்த பச்சை இனவாதி துரைரத்தினத்தின் அறிக்கைகளை ஏன் வெளியிடுகிறதோ தெரியவில்லை. ஒரு நண்பர் சொல்லித்தான் சூத்திரத்தை பார்க்க ஆரம்பித்தேன். இப்படி இனவாத செய்திகளை போடுமாக இருந்தால் பார்ப்பதில் பிரயோசனம் இல்லை. எனது கருத்தில் குறை இருந்தால் மன்னிக்கவும்.

தங்கள் வாசகன்

க. வேலும் மயிலும்

மாசி 02, 2012

சிரியா விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு சபை கூட்டத்தில் முடிவில்லை

சிரிய விவகாரம் குறித்த ஐ. நா. பாதுகாப்புச் சபை கூட்டம் எந்த தீர்மானமும் எட்டப்படாமல் முடிவடைந்தது.நியூயோர்க்கில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தை பதவி விலகக் கோரும் அரபு லீக் அமைப்பின் தீர்வுத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. எனினும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளிடம் இருந்து இந்த தீர்வுத் திட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் வெளியாயின. இதனால் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் அங்கத்துவ நாடுகளுக்கு இடையில் பொதுவான கருத்தை பெறமுடியாமல் போனது. (மேலும்....)

மாசி 02, 2012

2012 முடிவுக்குள் மாங்குளம் வரை ரயில் சேவை

இந்த வருட முடிவுக்குள் கொழும்பில் இருந்து மாங்குளம் வரையிலான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் நம்பிக்கை தெரிவித்தது. யுத்தத்தினால் அழிவடைந்த வட பகுதிக்கான ரயில்பாதைகளை மீளமைக்கும் பணிகள் இந்திய இர்கொன் கம்பனியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காணிகளை சீரமைத்தல், மட்டப்படுத்துதல் போன்ற பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கட்டம் கட்டமான வட பகுதிக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளன. ஏற்கனவே வவுனியாவில் இருந்து ஓமந்தை வரையான ரயில்பாதை மீளமைக்கப்பட்டுள்ளன. ஓமந்தையில் இருந்து மாங்குளம் வரையான ரயில்பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதே வேளை மதவாச்சியில்இருந்து தலைமன்னார் வரையான ரயில்பாதையை மீளமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது. (மேலும்....)

மாசி 02, 2012

ஐரோப்பிய மண்டலத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு

ஐரோப்பிய மண்டல நாடுகளில் வேலையில்லாதோர் எண்ணிக்கை வரலாறு காணத அளவில் அதிகரித்துள்ளது. யுரோ நாணயத்தை பயன்படுத்தும் 17 நாடுகளில் கடந்த டிசம்பரில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 10.4 வீதமான அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த டிசம்பர் மாதத்தில் யூரோ மண்டல நாடுகளில் 16. 5 மில்லியன் பேர் வேலையில்லாமல் இருந்துள்ளனர் என ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் கணக்கெடுப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. இதில் ஸ்பெயினில் அதிகப்படியாக 22.9 வீதமானோர் வேலையில்லாமல் உள்ளனர். அதே போன்று கிaஸில் வேலையற்றோர் எண்ணிக்கை 19.2 வீதமாக பதிவாகியு ள்ளது. அதிலும் இளை ஞர்களே அதிகமாக வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். ஸ்பெயின் இளைஞர் களில் பாதிப்பேர் முழுநேர வேலையில்லா மல் திண்டாடி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கடன் பிரச்சினையில் சிக்கியுள்ள ஐரோப்பிய மண்டல நாடுகள் சிக்கன நடவடிக்கையை கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில் அங்கு வேலையில்லாதோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என பொருளியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மாசி 02, 2012

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி உட்பட

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து 3 கட்சிகள் நீக்கம்


 
ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியல் கட்சி களின் பட்டியலில் இருந்து மூன்று கட்சிகளின் பெயர்கள் நீக்கப் பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். இதன்படி தேசிய ஐக்கிய முன்னணி, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி, விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்படும். இது 2012 ஆம் ஆண்டில் 67 கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

மாசி 02, 2012

 

அர்ஜெண்டினாவுடன் மோதல்: இங்கிலாந்து நவீன போர்க்கப்பல் பாக்லாந்து விரைந்தது

அர்ஜெண்டினா நாட்டுக்கு அருகே இங்கிலாந்துக்கு சொந்தமான பாக்லாந்து தீவு உள்ளது. இந்த தீவை அர்ஜெண்டினா எங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடி வருகிறது. 1982 ஆம் ஆண்டு அர்ஜெண்டினா பாக்லாந்து தீவை கைப்பற்றி கொண்டது. இதனால் இங்கிலாந்து தாக்குதல் நடத்தி அந்த தீவை மீட்டது. சமீபகாலமாக அர்ஜெண்டினா மீண்டும் பாக்லாந்து பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து - அர்ஜெண்டினா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. அர்ஜெண்டினா திடீரென தாக்கி விடக்கூடாது என கருதி இங்கிலாந்து பாக்லாந்தில் படையை குவித்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்தின் அதி நவீன போர் கப்பலான எச்.எம்.எஸ். டான்ப்லெஸ் பாக்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர நீர் மூழ்கி கப்பல்களும் அங்கு சென்றுள்ளன. அர்ஜெண்டினாவுடன் மோதல் காரணமாகத் தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளதா? என்று இங்கிலாந்திடம் கேட்டபோது வழக்கமான ரோந்து பணிக்காகத்தான் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.

மாசி 02, 2012

வட பகுதிக்கு முழு மின்சார வசதி, ரூ. 735 மில்லியனில் பாரிய திட்டம்

வட பகுதி மக்களுக்கு நூறு வீதம் முழுமையாக மின்சார வசதி அளிக்கும் நோக்குடன் 735 மில்லியன் ரூபா செலவில் பல மின்சார திட்டங்களை ஆரம்பிக்க மின் சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை வட பகுதிக்கு விஜயம் செய்ய உள்ள மின்சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க இந்த மின்சாரத் திட்டங்களை ஆரம்பித்து வைப்பார். இந்த வருடத்தினுள் அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய யுத்தத்தினால் முழுமையாக அழிவடைந்த வட பகுதி மின்கட்டமைப்பை மீளமைக்க மின்சக்தி எரிசக்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. (மேலும்....)

மாசி 02, 2012

தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் நேரடி உதவி

ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் அமைப்புக்கு பாகிஸ்தான் பாதுகாப்புச் சேவை நேரடியாக உதவி வருவதாக நேட்டோ அமைப்பின் புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி பி. பி. சி. செய்தி வெளியிட்டு ள்ளது. இந்த புலனாய்வு தகவல்களுக்கு அமைய தலிபான் அமைப்புக்கு ஆப்கான் மக்களிடம் இன்னும் பரந்த அளவில் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில் தலிபான் அமைப்பின் முன்னணி தலைவர்கள் இருக்கும் இடங்கள் பாகிஸ்தானுக்கு தெரியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நேட்டோவின் இந்த தகவல்கள் ஆப்கானில் செயற்படும் சர்வதேச படைகளுக்கும் ஆப்கான் அரசுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

மாசி 02, 2012

இந்தியாவில்

தனிநபர் வருமானம் ரூ. 50000 தாண்டியது

இந்தியாவில் தனிநபர் ஆண்டு வருமான சராசரி ரூ. 50,000ஐ முதல் முறையாக தாண்டியுள்ளதாக மத்திய புள்ளியல் துறை அறிக்கை தெரிவிக்கிறது. மத்திய புள்ளியல் மையத்தின் தேசிய வருமான வரைவு கணக்கெடுப்புஅறிக்கை நேற்று முன்தினம் வெளியானது. அதில் கூறியதாவது, இந்தியாவின் தனிநபர் வருமான சராசரி, 2009,10ம் நிதி ஆண்டில் ரூ 46,117 ஆக இருந்தது. அது 2010,11ம் நிதி ஆண்டில் ரூ 53,331 ஆக அதிகரித்தது. இது 15.6 சதவீத உயர்வு தனிநபர் வருமானம் ரூ 50,000ஐ தாண்டியது இதுவே முதல் முறை. கடந்த நிதி ஆண்டான 2010, 11ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதமாக இருந்தது. இப்போதைய விலைவாசி நிலவரப்படி நாட்டின் மொத்த பொருளாதார மதிப்பு 2010,11ம் ஆண்டில் ரூ. 71 இலட்சத்து 57 ஆயிரத்து 412 கோடி இது. முந்தைய நிதி ஆண்டின் ரூ 60 இலட்சத்து 91 ஆயிரத்து 485 கோடியைவிட 17.5 சதவீதம் அதிகம் 2004, 05ம் நிதி ஆண்டு விலை நிலவர அடிப்படையில் மார்ச் 2011ல் முடிந்த நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் என கணக்கிடப்பட்டுள் ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாசி 01, 2012

போவோம் ஆனா போகமாட்டோம் - தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொள்வது குறித்து உத்தியோகபூர்வமான தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று வீரகேசரிக்கு தெரிவித்தார். ஜெனிவாவில் எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.நா.வின் 19ஆவது மனித உரிமைகள் பேரவை மா நாடு இடம்பெறவுள்ளது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் இதுவரையில் எடுக்கவில்லை. சமகால அரசியல் நகர்வுகள் குறித்து கூட்டமைப்பு மிகத் தீவிரமாக அவதானித்து வருவதாகவும் அவர் கூறினார். இலங்கை அரசுடனாக பின் கதவு உறவு சம்மந்தன், சுரேஸ் கோஸ்டியை தீர்மானம் எடுக்க முடியாமல் தடுக்கின்றது. அதே வேளை புலம் பெயர் தேசத்து புலி வாலுகளின் டாலர்கள் அறிக்கை போரை நடத்த தூண்டுகின்றது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

மாசி 01, 2012

மூலதன சர்வாதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி  ஸ்பெயின் மக்கள் அறைகூவல்

ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளா தார நெருக்கடியில் கடுமை யாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயி னில் பல துறைகளைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட் டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பாக மாட்ரிட் உள் ளிட்ட பல்வேறு நகரங்க ளில் ஆயிரக்கணக்கான மக் கள் பங்கேற்ற ஆர்ப்பாட் டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்றன. தற்போது ஸ்பெயினின் முக்கிய நகரங் களில் ஒன்றான பார்சிலோ னா அமைந்திருக்கும் கடா லோனியா மாகாணத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டங் களில் பங்கேற்றுள்ளனர். பல்வேறு சேவைகளை முடக்கும் வகையில் நிதி வெட்டுகளை மாகாண நிர் வாகம் அறிவித்துள்ளது. அதைக் கண்டித்து பார்சி லோனாவில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் கலந்து கொண்டனர். (மேலும்....)

மாசி 01, 2012

சிறிய நாடுகளை அமெரிக்கா தண்டிக்கிறத - ராஜபக்ஷே

ஈரானுக்கு விதிக்கப்படும் பொருளாதாரத் தடை மூலமாக இலங்கையைப் போன்ற சிறிய நாடுகளை அமெரிக்கா தண்டிப்பதாக ராஜபக்ஷே குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் ஈரானுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதால், இலங்கை அரசு பெரும் கவலையில் உள்ளது. தனது எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு, ஈரானில் இருந்து வாங்கப்படும் கச்சா எண்ணெயை மட்டுமே இலங்கை முழுக்க முழுக்க நம்பியிருப்பதே இதற்குக் காரணம். வேறு நாட்டை நாடுவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக கூறியுள்ள இலங்கை அதிபர் ராஜபக்ஷே, "எங்களுக்கு மாற்று தேவைப்படுகிறது. இறுதியில் அவர்கள் (அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்) ஈரானை தண்டிக்கவில்லை; எங்களைப் போன்ற சிறிய நாடுகளை தண்டித்திருக்கிறார்கள்," என்றார்.

கடற்புலிகளின் தளபதி சூசையின் மனைவி சத்தியதேவி மனம் திறந்து பேசுகிறார் பகுதி 1

(டி.பி.எஸ்.ஜெயராஜ்)

சூசை என்றழைக்கப்படுபவரான தில்லையம்பலம் சிவநேசன் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி மற்றும் கடற்புலிகள் என்றழைக்கப்படும் அதன் அதன் கடற்படைப் பிரிவின் விசேட தளபதி ஆகிய பதவிகளை வகித்து வந்தார் .வடமராட்சியில் உள்ள பொலிகண்டி என்கிற பிரதேசத்தை தன் சொந்த இடமாகக் கொண்டிருந்த இவர்,யுத்தத்தின் இறுதிவரை போரிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் என்கிற இடத்தில் 2009 மே 17 – 18 ல் மரணமடைந்தார். (மேலும்....)

மாசி 01, 2012

த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்துகொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி அழைப்பு

"எல்.ரி.ரி.ஈ.யில் அங்கத்தவர்களாக இருந்த பலர் இன்று தமிழ் தேசிய கூட் டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வேறு சிலர் எல்.ரி.ரி.ஈ.யை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களாகவும் இருக்கிறார்கள்."

என்னை பத்திரிகைகளில் கிண்டல் செய்வதையோ, கேலிச் சித்திரங்கள் மூலம் நையாண்டி செய்வதையோ நான் பொருட் படுத்துவதில்லை. முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஆர். பிரேமதாஸவை எழுத்தாக்கங்கள் மூலமும் கேலிச் சித்திரங்கள் மூல மும் கிண்டல் செய்தவர்களுக்கு நடந்தது என்னவென்று உங்களுக்கு தெரியும் தானே. அப்பாவி ரிச்சட் சொய்சா கூட அதற்காகவே உயி ரிழந்தார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகை பிரதம ஆசி ரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடக பொறுப்பாளர்களுடனான சந் திப்பில் கூறினார். நான் அவ்விதம் எத்தகைய கேலி, கிண்டல்களையும் சகித்துக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட அரசியல்வாதி. ரணிலும் என்னைப் போன்று எந்தக் கேலிக் கிண்டல்களையும் பொருட்படுத்தும் ஒருவர் அல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார். (மேலும்....)

மாசி 01, 2012

தேசத்திற்கு மகுடம் கண்காட்சி மூலம் அபிவிருத்தி அடையும் அநுராதபுர மாவட்டம்

அநுராதபுரம் நகரிலிருந்து சுமார் 35 கி. மீ. தொலைவிலுள்ள ஓயாமடுவ பிரதேசம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 1500 ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தேசத்திற்கு மகுடம் கண்காட்சி அபிவிருத்தி பணிகளுக்கென 21000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மாவட்டத்திலுள்ள 23 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு பிரச்சி னைகளுக்குத் தீர்வு காணப்பட்டன. சகல அமைச்சுகள், திணைக்களங்களின் மூலம் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விலச்சிய, தந்திரிமலை ஓயாமடு மாவாச்சி, பதவியா போன்ற பிரதேச மக்கள் இப்பாரிய திட்டங்களின் மூலம் அப்பகுதி மக்களினது மனங்களில் புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது. (மேலும்....)

 மாசி 01, 2012

ஏ.ரீ.எம்.(ATM)  இயந்திரம் உருவான வரலாறு

ஒவ்வொரு கருவிக்கும் ஒவ் வொரு வரலாறு இருக்கிறது. எனினும் ஏ. ரீ. எம். இயந்திரங்கள் உருவான கதை கொஞ்சம் ரொமான்டிக்கானது. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஜான் ஷெப்பர்ட் பாரோன் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி பணத்தை எடுக்க வங்கியில் வரிசையில் நின்றார். தன் முறை வந்த போது பணத்தைக் கொடுக்க வேண்டிய காசாளர், நேரம் முடிந்துவிட்டது என்று கருமபீடத்தை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார். ஜான் வெறுங்கை யோடு மனைவியைப் பார்க்க விரும்பவில்லை. கையில் இருந்த கொஞ்சநஞ்ச சில்லறையை வைத்து, கொஞ்சம் சொக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை சமாதானப் படுத்தலாம் என்று நினைத்து சொக்லெட் வெண்டிங் இயந்திரத்தை தேடிச் சென்றார். அப்போதைக்கு அவர் மனைவியை சமாதானப் படுத்தினாலும், சாத்திய வங்கி கருமபீடமும் காசு போட்டால் உதிர்ந்த சொக்லேட்களும் அவர் மனதில் திரும்பத் திரும்ப வந்து போனது. அதன் விளைவுதான் முதல் ஏ. ரீ. எம். உருவாக்கத்துக்கான வித்து. (மேலும்....)

மாசி 01, 2012

ராகுல் பிரதமராகட்டும் அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து விடுவோம்

இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ளன. இந்தக் காலத்திற்கு ராகுல்காந்தி பிரதமராக இருக்கட்டும். அப்போதுதான் அவரது திறைமையை இந்த நாடு அறிந்துகொள்ள முடியும். நாட்டின் பிரச்சினைகள் குறித்த அவரது அறிவு என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று சவால் விட்டுப் பேசியுள்ளார் பா. ஜ. க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத். இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ளன அவரது திறமை என்ன என்பதை இந்த நாட்டு மக்கள் பார்க்கட்டும் உணரட்டும். நாட்டின் பிரச்சினைகளை அவர் எந்தளவுக்குப் புரிந்து வைத்துள்ளார் என்பதையும் மக்கள் பார்த்துக் கொள்ளட்டும். ராகுல் பிரதமராக பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. சிரமப்பட வேண்டியதில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கைப் பதவி விலகச் சொன்னால் போதும் என்றார் பிரசாத். பிரசாரத்தின் இந்த சவாலுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், உண்மையை அவர்கள் இப்போதாவது ஒத்துக்கொண்டுள்ளார்களே அதற்காகப் பாராட்ட வேண்டும். 2014 ல் காங்கிரஸ் தான் மீண்டும் ஆட்சிக்கு வரப்போகிறது. உ.பி.யில் இந்த ஆண்டே வரப் போகிறது. இதுதான் உண்மை. இதை மாற்றவோ, நிறுத்தவோ முடியாது.

மாசி 01, 2012

மத்திய வங்கி தாக்குதலில் பலியானோர் நினைவு தினம்

மத்திய வங்கியை இலக்கு வைத்து 1996ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட மத்திய வங்கிப் பணியாளர்களின் 16வது நினைவுதினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இவர்கள் நினைவாக மத்திய வங்கித் தலைமையகத்தின் உள்முகப்பில் வெண்கலத்தினாலான நினைவுச் சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இதனைத் திறந்துவைத்ததுடன், குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட 41 மத்திய வங்கி பணியாளர்களின் குடும்பத்தினர் மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலி செலுத்தினர். (மேலும்....)

மாசி 01, 2012

பண்டைக் கால மக்களின் விண்வெளி அறிவு!

கோள்கள், வானவெளியில் உள்ள பொருட்கள் போன்றவற்றின் இயக்கம் பற்றிய விவரம் ஆரம்ப காலம் முதற்கொண்டே பலரது கவனத்தைக் கவர்ந்து வந்துள்ளது. பண்டைக் காலத்தில் வானியலும், ஜோதிடமும் நெருங்கிய தொடர்புகொண்டு வளர்ந்த கலைகளாக விளங்கின. பல்வேறு நாடுகளில் இந்த இரு கலைகளையும் ஒருங்கே வளர்த்து வந்தனர். கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா, சீனா, எகிப்து பாபிலோனியா, கிரேக்கம், தென்அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளில் வாழ்ந்த மக்கள் வானியலிலும், ஜோதிடத்திலும் ஆர்வம் காட்டி வந்தனர். சூரிய, சந்திரனின் மறைவு பற்றிய நுட்பங்களைச் செவ்வனே அறிந்து அவை நிகழக்கூடிய காலங்களை முன்கூட்டியே கூறும்அறிவாற்றல், இந்த நாட்டு மக்களிடம் இருந்தது. (மேலும்....)

மாசி 01, 2012

சிரியா தொடர்பில் தீர்மானம் நிறைவேற்ற பாதுகாப்புச் சபையில் தீவிர முயற்சி

‘வீட்டோ’வை பயன்படுத்துவதாக ரஷ்யா அறிவிப்பு

சிரிய விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்புச் சபை முக்கிய தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பாதுகாப்புச் சபை கூட்டத்தில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிரிய படையின் வன்முறைகள் குறித்து தீர்வொன்றுக்கு வரும்படி பாதுகாப்புச் சபை நாடுகளிடம் அழைப்பு விடுக்கப்போவதாக ஹிலாரி கிளின்டன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிரியாவில் தமது கட்டுப்பாட்டை இழந்துள்ள ஜனாதிபதி பஷர் அல் அசாத் உடன் பதவி விலக வேண்டும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. பஷர் அல் அசாத்தை பதவி விலகக்கோரும் அரபு லீக் தீர்வுத் திட்டத்தை ஏற்குமாறு சிரிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை பாதுகாப்புச் சபையில் நிறைவேற்றுவதற்கு மேற்கு நாடுகள் திட்டமிட்டுள்ளன. எனினும் இவ்வாறான தீர்வுத் திட்டத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துவதாக பாதுகாப்புச் சபையின் நிரந்தர அங்கத்துவ நாடான ரஷ்யா எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கில் குழப்பத்தை விளைவிக்கும் நாடுகளின் அறிக்கைகளுக்காக வருந்தமடைகிறோம். இந்த நாடுகள் தமது முட்டாள்தனமான முயற்சிகளை மத்திய கிழக்கில் பரிசோதிக்கிறது என்று சிரிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. முன்னதாக சிரியாவுக்கு எதிராக பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்தை ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தமது வீட்டோவால் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

மாசி 01, 2012

மாத்தறை - அளுத்கம

அதிவேக ரயில் சேவை 21 ஆம் திகதி ஆரம்பம்

மாத்தறைக்கும் அளுத்கமைக்கு மிடையிலான அதிவேக ரயில் சேவையை இம் மாதம் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் பி. ஏ. பி. ஆரியரத்ன தெரிவித்தார். ரயில் பாதை நிர்மாணப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு மாத்தறைக்கும் கொழும்புக்குமிடையிலான முழுமையான ரயில் சேவை ஏப்ரல் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ரயில்வே திணைக்கள தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, காலிக்கும் ஹிக்கடுவைக்கு மிடையில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் பாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

மாசி 01, 2012

கதிர்காமம் விடுதியில் தற்கொலை அங்கி கண்டுபிடிப்பு

கதிர்காமம் பகுதியிலுள்ள வாடி வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி ஒன்றை பொலிஸார் மீட்டெடுத்துள் ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தி யட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்தச் சம்பவம் நேற்றுக் காலை 9.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் ஒன்றை அடுத்து கதிர்காமம் பகுதியிலுள்ள வாடி வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதன் போது குறித்த வாடி வீட்டிலுள்ள சலவை இயந்திரத்திலிருந்து தற்கொலை அங்கியை பொலிஸார் கண்டெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மேற்படி தற்கொலை அங்கி அந்த வாடி வீடுக்குள் எவ்வாறு கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை யும் தெரிய வரவில்லை என்று தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர், மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அரசாங்க பகுப்பாய்வாளரிடம் தற்கொலை அங்கியை ஒப்படைத்துள்ளதாகவும் சுட் டிக் காட்டினார். விசேட பொலிஸ் குழு மேற்படி சம் பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மாசி 01, 2012

அமெரிக்கா - தலிபான் பேச்சு: முதல் கட்டத்தில் தோல்வி

ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பினருக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், சிறைக் கைதிகள் பரிமாற்றம் தொடர்பாக நடந்த பேச்சு தோல்வி அடைந்து விட்டது. அரபு நாடான கட்டாரில், அமெரிக்காவுக்கும், தலிபானுக்கும் இடையில் பேச்சு நடந்து வருகிறது. இதை அமெரிக்கா இன்னும் உறுதிப்படுத்தவில்லை. முதற்கட்டமாக, குவான்டனமோ சிறையில் உள்ள பயங்கரவாதிகளில் ஐந்து பேரை விடுவிப்பது குறித்து பேச்சு நடந்தது. பாகிஸ்தானின் தெற்கு வஜீரிஸ்தானில் 2009ல், தலிபானால் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர் போவ் பெர்க்தல் என்பவரை தலிபான் விடுவிக்க வேண்டும். அதற்கு மாற்றாக குவான்டனமோவில் அடைக்கப்பட்டுள்ள தலிபான் பயங்கரவாதிகளில் ஐந்து பேரை, அமெரிக்கா விடுவிக்க வேண்டும். ஆனால் இந்த விடுவிப்பிற்கு முன்பாக ஆப்கானில் தங்களின் தாக்குதல்களை தலிபான் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. ஆனால் அதை தலிபான் ஏற்க மறுத்து விட்டது. இதனால் இப்பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.

மாசி 01, 2012

Bound for Canada, stranded in Togo

(Sivaramakrishnan Parameswaran )

Some two hundred Sri lankan refugees stranded in the tiny West African state of Togo have told the BBC that they fear for their life if they are deported back to their country. They are detained at an open stadium, in the country’s capital Lome, which they say belong to the Military. “We have been arrested and detained here on charges of over staying our visa period since 24th October last year and have been told that unless we voluntarily return to Sri Lanka, we would be deported forcefully” a resident at the detention centre told the Tamil Service. Over 200 people mainly from the North and East of Sri Lanka, sought to flee from the country with the aim of arriving in Canada through boat, who have been duped by an agent and dumped in Togo, the inmates in Lome detention centre say. (more....)

மாசி 01, 2012

பாகிஸ்தானில் ஏவுகணை தாக்குதல் - ஒபாமா

பாகிஸ்தானுக்குள் தலிபான் மற்றும் அல்கொய்தா பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்த நாட்டின் ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்தார். பாகிஸ்தானில் நடைபெறும் ஏவுகணைத் தாக்குதல் குறித்து அமெரிகக அரசு சார்பில் யாரும் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் ‘கூகிள் பிளஸ்’ மற்றும் யூடியூப் இணையத்தள வாசகர்களுக்கான உரையாடல் ஒன்றின் போது பாகிஸ்தானின் பழங்குடி யினர் பகுதிகளில் ஏராளமான ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என ஒபாமா குறிப்பிட்டார். அமெரிக்கர்களையும் அமெரிக்க நிறுவனங்களையும் தாக்க முயற்சிக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலைக் கொண்டு ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என ஒபாமா கூறினார்.

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com