Contact us at: sooddram@gmail.com

 

ஆவணி  2012ாதப் பதிவுகள்

ஆவணி 31, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 9)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறியவர்களில் மாறுபட்டு நிற்கின்றார் ராஜினி திரணகம. ஆனால் இவ்வாறு மாறுபட்டு நிற்பவர்களுக்கு புலிகள் என்ன செய்வார்கள் என்பதை மதிப்பீடு செய்வதில் தவறு விட்டுவிட்டார். பல்கலைக் கழக மனிதஉரிமை அமைப்பில் மிகவும் தீவிர தெளிவான செயற்பாட்டை கொண்டிருந்தவர் சிறீதரன் என்ற கணிதப் பேராசியர். இவரை 1970 களின் பிற்பகுதியில் யாழ்பல்கலைகழக கணிதவியல் விரிவுரையாளராக பணியாற்றிய போது கொம்சிறீ என்றே மாணவர்கள் அழைப்பார்கள். நானும் அதில் ஒருவன். காரணம் இவரிடம் நிலவிவந்த இடதுசாரி சிந்தனை செயற்பாடு பார்வைகள். விரிவுரையாளர் சிறீதரனிடம் இருந்த இந்த இடதுசாரிப் போக்கு ராஜினியிடம் இருந்திருக்கவில்லை. சமூக வர்க்க விடுதலையின் ஒரு அங்கமே பெண்விடுதலையாகும். தனித்தே பெண்ணிலைவாதம் பெண்விடுதலை என்பது சாத்தியமற்றது. அதுபோல் பெண் விடுதலையின்றி வர்க்க சமூக விடுதலை சாத்தியம் இல்லை முழுமைபெறவும் மாட்டாது. இதை போன்றதே மனித உரிமை செயற்பாடுகளும் ஆகும்.
(மேலும்....)

ஆவணி 31, 2012

சம்பந்தன் ஐயாவின் காலம்கடந்த ஞானம்   

(டென்சில - கனடா)

தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் திரிகோணமலையில் நடைபெற்ற கிழக்கு மாகாணசபைக்; தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் 22 வருடங்களின் பின்னர் தன்னை மறந்து  சில கசப்பான உண்மைகளை இப்போது கூறியுள்ளார். வீரகேசரிப்பத்திரிகையில் அவரது பேச்சு இடம்பெற்று இருந்தது. சம்பந்தன் அவர்கள் என்ன கூறியிருக்கின்றார் என்றால் :   “2000ம் ஆண்டில் சந்திரிகா அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்றை முன் மொழிந்தார் அது அதிகாரதீர்வை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதில் அதிகாரப்பகிர்வு பச்சையாக சமஸ்டி என்று கூறாவிட்டாலும் இந்திய மாநில அதிகாரங்களை விட அதிகாரங்களைக்கொண்டதாக அது அமைந்திருந்தது. ஆனால் அதுவும் ஐக்கியதேசியக்கட்சியின் எதிர்ப்பால் தடைபட்டுப்போனது.”  (நன்றி வீரகேசரி ). (மேலும்....)

ஆவணி 31, 2012

சரவாக்கு மாநிலத் தமிழர்

(மறவன்புலவு  க. சச்சிதானந்தன்)

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சைவ சமயச் சின்னங்கள் குச்சிங்குவில் உள்ள சரவாக்கு அருங்காட்சியகத்தில் முன்பிருந்தன. பிள்ளையார் சிலை, நந்தியின் சிலை போன்றவை சரவாக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொல்பொருளாய்வாளருக்குக் கிடைத்தவை. தென்னிந்தியப் பயணிகள், அரசுகள் சரவாக்குக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே வந்து சென்றதற்கான தொல் சான்றுகள் இவை. எனினும் அண்மைய தமிழர் வரவுகள் 1860களில் தொடங்குகின்றன. இலங்கையில் தேயிலைத் தோட்ட முகாமையில் பட்டறிவுபெற்ற அண்டர்சன் என்பாரை, சரவாக்கு அரசர் புறூக்கு 1860களில் வரவழைத்தார். தேயிலைத் தோட்டங்களை அண்டர்சன் அமைத்தார். 1860 தொடக்கம் தமிழர்  இங்கு கப்பலில் வந்தனர். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய இலங்கையின் மலைநாட்டில் இருந்தும் தமிழகத்திலிருந்தும் தொழிலாளர்களாக 2,000 தமிழர்களை ஆங்கிலேயர் குடியேற்றினர். கங்காணிகளாகக் கொச்சினில் இருந்து ஒரு சிலர் வந்தனர். (மேலும்....)

ஆவணி 31, 2012

அமெரிக்கா  ஒபாமாவின் மூர்க்கத்தனத்தின் வேர்  ஆவணப்படத்திற்கு அமோக வரவேற்பு

அமெரிக்க வாழ் இந்தி யர் ஒருவர் அதிபர் பாரக் ஒபாமா அமெரிக்காவை அழைத்துச் செல்லும் பாதை எப்படிப்பட்டது, எதிர் காலத்தில் அமெரிக்கா என் னவாகும் என்ற கேள்விக் கணைகளுடன் இந்த ஆவ ணப்படத்தை உருவாக்கியி ருக்கிறார். இந்த ஆவணப் படத்தை அமெரிக்காவில் வெளி யிட்ட போது, அந்நாட்டு மக்களிடம் அமோக வர வேற்பை பெற்றிருக்கிறது. இந்த ஆவணப்படம் திரை யிடப்பட்டதன் மூலம் இது வரை 93 கோடி டாலரை அள்ளி சாதனையும் புரிந்தி ருக்கிறது. (மேலும்....)

ஆவணி 31, 2012

தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் - பல்கலைக்கழக ஆசிரியர்கள்

இன்று வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில் தமது தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தப்பட மாட்டாது என பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அது ஒரு கொள்கை மட்டத்திலான ஆவணம் மாத்திரமே எனவும் சம்மேளனத்தின் கோரிக்கைகளுக்கான உறுதயான தீர்வு இல்லை எனவும் சம்மேளனத்தின் பேச்சாளர் கலாநிதி மஹிம் மெண்டிஸ் இன்று கூறினார். கல்வியியலாளர்களின் கோரிக்கைகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 8 தீர்மானங்கள் அடங்கிய அமைச்சரவைப் பத்திரம் சம்மேளனத்திற்கு கிடைத்தது எனவும் இப்பெறுபேறு குறித்து, சம்மேளம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். "மொத்த தேசிய உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்தல், சம்பள பிரச்சினைகளை தீர்த்தல் உட்பட எமது முக்கிய கோரிக்கைகள் எவை தொடர்பாகவும் இந்த ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை. 2011 ஆம் ஆண்டின் இடைக்கால தீர்வின்படி எமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்" என அவர் கூறினார்.

ஆவணி 31, 2012

யாழ். மாநகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக 24மணிநேர சுழற்சிமுறை கழிவகற்றல் திட்டம்

யாழ். மாநகரத்தை சுத்தமாக வைத்திருப்பதற்காக 24 மணிநேர சுழற்சி முறையிலான கமிவகற்றல் செயற்திட்டம் எதிர்வரும் செப்ரம்பர் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக யாழ்.மாநகர சபையின் சுகாதார குழுத் தலைவர் எஸ்.விஜயக்காந் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையில் 24 வட்டாரங்கள் இருக்கின்றன. இந்த வட்டாரங்களில் கழிவகற்றல் பணிக்காக 24 சுத்திகரிப்பு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ்.மாநகர எல்லைப் பகுதியில் தேங்கியுள்ள திண்மக் களிவுகளை உடனுக்குடன் அகற்றுவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள், அரச மற்றும் அரச சர்பற்ற நிறுவனங்களின் கழிவகற்றல்களுக்காக மேலதிகமாக 50 சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். சந்தைகளில் கழிவுகள் தேக்கமடையாமல் இருப்பதற்காக உடனுக்குடன் கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றது. கழிவு அகற்றல் செயற்பாடுகள் காரணமாக மாநகர சபைக்கு மாதம் 13 இலட்சம் வருமானம் கிடைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 31, 2012

எமது உறவுகள் எங்கே? வவுனியாவில் கண்ணீர்மல்கக் கோரிக்கை

சர்வதேச காணாமற் போனோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமற் போனோரின் உறவினர்களால் வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. எமது உறவுகள் எங்கே? அவர்களை மீட்டுத் தாருங்கள் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தனர். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மனிதாபிமான அமைப்புக்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்த இவ்வார்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆவணி 31, 2012

வெங்காய விவசாயிகளின் ஆர்ப்பாட்டம்

இறக்குமதி வரியை மேலும் அதிகரிப்பது பற்றி அமைச்சர் ஆராய்வு

நம்மிடம் வெங்காயத்தை கொள்வனவு செய்யாது அரசாங்கம் வர்த்தகர்களிடம் வெங்காயத்தைக் கொள்வனவு செய்வதிலேயே முனைப்பாக உள்ளதெனக்கூறி சீகிரிய பிரதேச பெரிய வெங்காய உற்பத்தியாளர்கள் நேற்று வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் காரணமாகப் பெரும் வாகனப்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், வாகனங்கள் ஸ்தம்பித்ததன் காரணத்தால் சாதாரண மக்கள் மட்டுமன்றி உல்லாசப் பிரயாணிகளும் அசெளகரியங்களுக்கு உட்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் வீதியின் குறுக்கே வெங்காய மூடைகளைப் போட்டுத் தமது ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். வெங்காய உற்பத்தி விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையிலேயே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் வெங்காயத்துக்கு கிலோவொன்றிற்கு ஐம்பது ரூபாவை இறக்குமதி வரியாக அரசாங்கம் அதிகரித்துள்ளது. விவசாயிகளிடமிருந்து தற்போது 65 ரூபாவுக்கு வெங்காயம் கொள்வனவு செய்யப்பட்டு வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைக்கு உரிய தீர்வு காணவும், இறக்குமதி வரியை மேலும் அதிகரிப்பதா என்பது தொடர்பிலும் சம்பந்தப்பட்டோரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 31, 2012

‘விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு உயர் விருதுகளை பெற்றுக் கொடுப்பேன்’

எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்திக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன்’ என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசினார். ஜெயா டி.வி. 14 ஆம் ஆண்டு தொடக்க விழா மெல்லிசை மன்னர்கள் எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி ஆகியோருக்கான பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமை தாங்கினார். எம். எஸ். விஸ்வநாதனுக்கு ‘திரை இசை சக்கரவர்த்தி’ என்ற பட்டத்தை வழங்கினார். அதையடுத்து எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் தலா 60 பொற் காசுகள் கொண்ட பொற்கிழியையும், ‘போர்டு பியஸ்டா’ காரையும் வழங்கி கெளரவித்தார். புகழுக்கும், பெருமைக்கும் உரிய எம். எஸ். விஸ்வநாதன், டி. கே. ராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளை பெற்றிருந்தாலும் அவர்களுக்கு தேசிய விருது பத்ம விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே மன வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான பத்ம விருதிற்கு பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய மத்திய அரசு, அதற்கு செவி சாய்க்கவில்லை. ‘ஜனாதிபதி அவார்டு வேண்டாம், ஜனங்க அவார்டு போதும்’ என்று இங்கிதம் தெரிந்த சங்கீத வித்வான் எம். எஸ். வி. கூறினாலும் நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்கு பத்ம விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்றார்.

ஆவணி 31, 2012

பரம்பரை நோய்களை தீர்க்க எளிய வழி

கருமுட்டைகளில் உட்கருவை மாற்றம் செய்வதன் மூலம், பரம்பரை நோய்கள் மற்றும் அரிய வகை நோய்களுக்கு முடிவு கட்டி விடலாம் என்று பிரிட்டன் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனித குணங்களை நிர்ணயிக்கும் டி. என். ஏ.யின் ஒரு நுண்ணுறுப்பு, ‘மைட்டோகான்ட்ரியா’. இது மொச்சை வித்து வடிவில் அமைந்திருக்கும். இது தான், ஒரு செல்லுக்கு சக்தியை வழங்குகிறது. இதில் ஏற்படும் குறைபாடுகளே பரம்பரை நோய்கள் வரக் காரணம் என்று நவீன மருத்துவம் கண்டறிந்துள்ளது. பிரிட்டனில் நடந்த ஆய்வுப்படி தாய் வழியில் வரும் பரம்பரை நோய்கள் 250 பேரில் ஒருவருக்கு மிகச் சிறிய அளவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 30, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 8)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

இந்திய அமைதிகாக்கும் படையுடனான தேன் நிலவு புலிகளுக்கு சீக்கிரத்தில் கசத்தது. இதற்கு முக்கிய காரணம் ஏனைய விடுதலை அமைப்புக்களின் செயற்பாடுகள் தமது ஏகபோகத்தை இல்லாமல் செய்துவிடும் என்பதினால். மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றனர். தருணம் பார்த்து இருந்தனர் புலிகள் இவற்றிற்கு முற்றுப் பள்ளி வைக்க. கடலில் ஆயுதக் கப்பலுடன் இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட தமது உறுப்பினர்கள் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்ற புலிகளின் கோரிக்கையை இந்திய அமைதிப்படை நிறைவேற்றவில்லை என்ற கோதாவில் புலிகள் இந்திய அமைதிப்படையை வலிந்த யுத்தத்திற்குள் இழுத்தனர். இதனையே ஜேஆர் என்ற குள்ள நரி இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது எதிர்பார்த்து செயற்பட்டார். இதற்கு செயல்வடிவம் கொடுத்தார்கள் புலிகள்.
(மேலும்....)

ஆவணி 30, 2012

கிழக்கிலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் மக்களின் அவமானச்சின்னம் இரா சம்பந்தன்.

திரு இரா சம்பந்தனால் அண்மைக்காலமாக அரங்கேற்றப்பட்ட அரசியல் நாடகங்களின் நிகழ்வுகளும், நினைவுகளும்.

அண்மைக்காலமாக  தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் தாங்களே எனக்கூறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்கள் (பிரபாகரனின் தலைமையில் உருவான பயங்கரவாதிகளாவர்) தமிழ் மக்களின் வாக்குகளை காலத்திற்கு. காலம் ஐ.தே.கட்சியினருக்கு குத்தகைமுறையில் விலைபேசி விற்பனை செய்யும் நிகழ்வுகள் திரு சம்பந்தனின் தலைமையில் இடம்பெறுகின்றது. ஏற்கனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளென தம்மை அறிமுகப்படுத்திய அரசியல்வாதிகள் எவராலும் மேற்கொள்ளப்படாத வாக்கு விற்பனை இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபியாக்களால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. (மேலும்....)

 

ஆவணி 30, 2012

அமெரிக்கப்படை நெருங்கிய போது ஒசாமா இறந்து இருந்தார் - தாக்குதலில் பங்கேற்ற அமெ. வீரர்

ஒசாமா பின்லாடனை அமெரிக்க நேவி சீல்ட் கடற்படை வீரர்கள் நெருங்கிய போது அவர் நிராயுதபாணியாக ஏற்கனவே இறந்து கிடந்ததாக அந்த இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க வீரர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடன் அபோதாபாத் தாக்குதலின் போது அமெரிக்க படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையிலே இந்த புதிய விபரம் அம்பலமாகியுள்ளது. பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் இடம்பெற்ற ஒசாமா பின்லாடன் தாக்குதலில் பங்கேற்ற அமெரிக்க கடற்படை வீரர் ஒருவர் அது குறித்த விபரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ‘நோ ஈசி டே’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இந்த புத்தகத்தில் மேற்படி கடற்படை வீரர் தமது உண்மையான பெயரை வெளியிடாமல் ‘மார்க் ஒன்’ என்ற புனைப்பெயரில் எழுதியுள்ளார். (மேலும்....)

ஆவணி 30, 2012

வடக்கு, கிழக்கு இணைப்பை முஸ்லிம்கள் விரும்பவில்லை

டக்கு, கிழக்கு இணைப்பை வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை என்பதை சர்வதேச சமூகத்துக்கு இந்த மாகாண சபைத் தேர்தல் மூலம் மக்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் வை. எம். எஸ். ஹமீட் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் தமது கட்சியைப் பாதுகாக்கவும் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதை நிறுத்தவும் வாக்களிக்குமாறு கேட்கின்றனர். அவ்வாறு பள்ளிவாசல்கள் பாதுகாக்கப்படுவதில் அவர்களுக்கு அக்கறையிருந்தால் அமைச்சரவையில் பாராளுமன்றத்தில் அதுபற்றி பேச வேண்டுமே தவிர மக்கள் முன் பேசுவதில் பயனென்ன? ஜெனீவா உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகள் பல்வேறு தளங்களில் பேசப்பட்டபோதும் இங்கு முஸ்லிம் மக்களும் உள்ளார்கள் என்பது எங்கும் கவனத்திற் கொள்ளப்படவில்லை. இதுபற்றி மு. காங்கிரஸ் எந்த அக்கறையும் இல்லை. கிழக்கில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்திருந்தால் மாகாண சபையில் சுமார் 17 ஆசனங்களைப் பெற்று நாம் பலமான ஆட்சியமைத்திருக்கலாம். இரு கட்சிகள் இதற்கு இணக்கப்பட்ட போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டும் கட்சியைப் பாதுகாக்க வேண்டும் எனக் கூறிவர மறுத்துவிட்டது.

ஆவணி 30, 2012

கண்ணீர் அஞ்சலி

வைத்திலிங்கம் – நவரெத்தினராஜா (தோழர் ராஜன்)

தோற்றம்-19.12.1968 – மறைவு-27.08.2012

யாழ்ப்பாணம், சிறுபிட்டியை பிறப்பிடமாக் கொண்ட தோழர்ராஜன்  இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் இலங்கையின் வடக்கு-கிழக்கில் தனக்கும், தனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு அற்ற நிலைமையும், உயிர் அச்சுறுத்தலும் ஏற்பட்டதை உணர்ந்து பாதுகாப்பு தேடி தமிழம் வந்து புழல் அகதிகள் முகாமில் வாழந்து வந்தார்.  ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில் தன்னை இணைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் பகுதிகளில் கட்சி பணியாற்றியுள்ளார். சாதிய அடக்குமுறைக்கும்,அரச அடக்குமுறைக்கும்,புலிகளின் அடக்குமுறைக்கும்  எதிராக தனது பங்களிப்பை செய்துள்ளார். இலங்கையில் ஏற்பட்ட அடக்குமுறைகளால் உலகம் பூராகவும் பரவிக்கிடக்கும் நம்சொந்தங்களிடம் உள்ள பரதவிப்பு,ஏக்கம் தோழர்ராஜனிடமும் இருந்ததை அவருடன் பேசும் போது உணரமுடியும், அவரிடம் ஒரு வீறாப்பு பேச்சு எப்போதும் காணப்படும். அது நம் சமூகத்தின் மேல் உள்ள கோபம்,அக்கறை என்றே நாம் உணரக் கூடியதாக இருக்கும்.அவர் எப்போதும் கலகலப்பாக இருப்பார் எந்த விடயத்ததைப்பற்றி பேசினாலும் அவரிடம் ஒரு தெளிவு காணப்பட்டது. நாம் பிறந்த இடத்தில் சொந்த பந்தங்களுடன் சேர்ந்து வாழ முடியாதது எமக்கு என்னதான் தலையெழுத்தோ, இறப்பில் கூட அந்தசந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்துடன் அவர் பிரிவால் துயருறும் அவர் மனைவி,பிள்ளைகளுக்கு நாம் ஆறுதல் கூறுவதுடன் அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.
பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்

ஆவணி 30, 2012

சிறைகளிலுள்ள புலிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் பணி ஆரம்பம்

சிறைச்சாலைகளில் இருக்கும் எல்.ரீ.ரீ.ஈ. சந்தேகநபர்கள் 74 பேர் முதற்கட்டமாக புனர் வாழ்வளிக்கப்படவுள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று தெரிவித்தார். சிறைவைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகளின் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு, அவர்களை புனர்வாழ்வளிப்பதன் மூலம் விடுதலை செய்யவென முன்னெடுக்கப்பட்ட திட்டத்தினடிப்படையிலேயே முதற்கட்டமாக 74 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். இதன்படி நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளிலுமிருந்த 48 தமிழ் சிறைக்கைதிகள் தமது வழக்குகளின் முடிவினடிப்படையில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பணிப்புரையின் பேரில் தமிழ் சிறைக் கைதிகள் 26 பேர் எவ்வித வழக்குகளுமின்றிய நிலையில் நேரடியாக புனர்வாழ்வு நிலையத்திற்கு மாற்றம் செய்யப்படவிருப்பதாகவும் அமைச்சர் கஜதீர குறிப்பிட்டார்.

ஆவணி 30, 2012

ஒரு இலட்சம் தொன் அரிசி துபாய் நாட்டுக்கு ஏற்றுமதி

ஒரு இலட்சம் தொன் அரிசியை துபாய் நாட்டிற்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இதுவரை 500 கொள்கலன்களில் அரிசி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். இலங்கை வரலாற்றில் முதற் தடவையாகவே இந்தளவு அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் மேலும் பல நாடுகள் இலங்கையில் இருந்து அரிசியை கொள்வனவு செய்ய முன்வந்துள்ளதாகவும் அவர் கூறினார். ஐ. ம. சு. மு. ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர், 2 மாதத்தினுள் 4 ஆயிரம் கொள்கலன்களில் அரிசி அனுப்ப திட்டமிடப்பட்டது. ஆனால், அரிசி ஆலைகளில் போதுமான நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத நிலையில் துரிதமாக அவற்றை வழங்க முடியவில்லை. இதனால் அரிசி ஆலைகள் நவீன தொழில் நுட்பங்களுடன் முன்னேற்றப்பட்டுள்ளன.

ஆவணி 30, 2012

இனவாத பிரசாரத்தை ஹக்கீம் நிறுத்தினால் முஸ்லிம்களுக்கு பெரும் நன்மை

கிழக்கில் முஸ்லிம் வாக்குகளைப் பெறும் நோக்கத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உடனடியாக தன்னு டைய இனவாத, வகுப்புவாத பிரசாரத்தை நிறுத்தினால் அது முஸ்லிம் சமூகத்துக்கு பெருமளவு நன்மையைப் பெற்றுக்கொடுக்கும் என்றும் பாராளுமன்ற உறுப்பினரான ஏ.எச்.எம். அஸ்வர் திருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், நாவற்குழி, அலீம் நகர், புல்மோட்டை, இறால்குழி ஆகிய இடங்களில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டங்களில் உரையாற்றும் போது வலியுறுத்தினார். முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால நல்வாழ்வை கருத்திற்கொண்டு முஸ்லிம்களுக்கு பெரும்பான்மை சமூகத்துடனும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுடனும் நல்லெண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார். முஸ்லிம்களின் 75 சதவீதமானோர் தென் இலங்கையிலும் 25 சதவீதத்தினரே வடக்கிலும், கிழக்கிலும் வாழ்கிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. கிழக்கில் இன்று மேற்கொள்ளப்படும் இனவாத பிரசாரங்கள் தென் இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆவணி 30, 2012

மும்பை தாக்குதல் குற்றவாளி

அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை

மும்பை தாக்குதலில் 160க்கும் மேற்பட்டோரை கொல்ல காரணமாக இருந்த பயங்கரவாதிகளில் ஒருவரான அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து இந்திய உச்சநீதிமன்றம் நேற்று இறுதி முடிவு செய்தது. கசாப் நாட்டுக்கும், மக்களுக்கும் எதிரான போர் செய்துள்ளான் என்பது நிரூபணமாகிறது. இதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளன. இவனை தூக்கில் விடுவதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று நேற்றைய தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மும்பை பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் நீதிபதிகள் தங்களின் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக இந்தியா சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த நிலையில் மும்பை பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மும்பை பயங்கரவாத தாக்குதலில் களமிறங்கிய பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவி செய்துள்ளது தகுந்த ஆதாரங்களின் மூலம் புலனாகி உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ஆவணி 30, 2012

ஆஸி. புகலிடக் கோரிக்கையாளர் படகிலிருந்து அபாய அழைப்பு

புகலிடக் கோரிக்கையாளர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற படகு இந்தோனேஷிய கடற்பகுதியில் மூழ்கியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்ட இந்தோனேஷியா ஒருசில மணி நேரங்களில் அதனை நிறுத்திக்கொண்டது. இந்தோனேஷியாவின் சுண்டா ஜலசந்தி பகுதியில் அந்தப் படகு குறித்த எந்த விபரமும் கண்டுபிடிக்க முடியாத நிலையிலேயே மீட்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்திரா கடற்பகுதியில் 150 பேருடன் வந்த சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று மூழ்குவதாக அபாய அழைப்பு வந்ததாக அவுஸ்திரேலிய கடற்பாதுகாப்பு நிர்வாகத்தின் மூலம் இந்தோனேஷிய மீட்புப் பிரிவுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தோனேஷிய ஹெலிகொப்டர்கள் மற்றும் மீட்பு படகுகளைக் குறித்த பகுதிக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அங்கு எந்தப் படகையும் காணாததால் மீட்பு நடவடிக்கைகளை ஒரு சில மணி நேரத்தில் இந்தோனேஷியா நிறுத்திக்கொண்டது. அபாயகரமான படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரிச் செல்வோர் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகிவருகின்றனர். இவ்வாறு இந்த ஆண்டில் மாத்திரம் 300 பேர் கடலில் மூழ்கிக் கொல்லப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா குறிப்பிட்டுள்ளது.

ஆவணி 30, 2012

பிளாஸ்டிக்கில் இருந்து கண்ணாடிக்கு மாறுவோம்!

கொஞ்சக் காலம் முன்பு வரை கண்ணாடிப் போத்தல்களின் உபயோகம் அதிகமாக இருந்து வந்தது. மருந்து, பானம், தேன், ஊறுகாய் போன்றவை கண்ணாடி போத்தல்களில் சேமிக்கப்பட்டு வந்தன. இன்றோ நிலைமை தலைகீழாகிவிட்டது. பிளாஸ்டிக் போத்தல்களுக்கு வழிவிட்ட நாம் நோய் நொடிகளுக்கும் வழி திறந்துவிட்டிருக்கிறோம். கைதவறி விழுந்தால் கண்ணாடி உடைந்துவிடும் என்று அச்சப்பட்டது ஒரு காலம். தற்காலத்தில் உடையாத கண்ணாடிகள் செய்யப்படுகின்றன. எளிதில் உடையாத இத்தகைய கண்ணாடிகள் விமானங்களிலும், கார், பஸ் போன்றவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன.(மேலும்....)

ஆவணி 29, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 7)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

1986 களில் ஈழ விடுதலைப் போராட்டத்திற்காக புறப்பட்ட ஒவ்வொரு விடுதலை அமைப்புக்களை இந்தியாவின் கை கூலி எம்மை அழிக்க தீர்மானித்து இருந்தனர். தாமே தமது செயற்பாட்டை நிறுத்திக் கொண்டு ஒதுங்கிவிட்டனர் எம்முடன் கலந்து விட்டனர் என்று கூறி துப்பாக்கிகளால் வட கிழக்கில் செயற்படவிடாது தடுத்த போது எந்த புத்திஜீவிக் கூட்டமும் இந்த புலிகளின் ஏகபோக பாசிச செயற்பாட்டிற்கு எதிராக வீதியில் இறங்கவில்லை போராடவில்லை. கொலைகளை தடுத்து நிறுத்தவில்லை. இன்னொருவகையில் மௌனம் காத்து தவறுகளுக்கு வழிவிட்டு நின்றனர். சிலர் குளிர்பானம் பரிமாறி மகிழ்ந்தனர். சிலர் வாய்புக்களைப் பயன்படுத்தி பிரமுகர் ஆகினர். இவர்கள் அன்று யோசிக்கவில்லை இந்த ஆயுத ஏகபோகம் ஒரு முள்ளிவாய்கால் முடிவுகளை இறுதியில் கொண்டு வந்து நிறுத்தும் என்று. (மேலும்....)

ஆவணி 29, 2012

வல்லரசுகளுக்கிடையேயான போட்டியின் பகடையாக த.தே.கூ மாறிவிடும் அபாயம் -  ஹக்கீம்

'தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கிடையிலே அரசியல் ரீதியான இணக்கப்பாடு என்பது எட்டப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம்தான் நிரந்தரமானதொரு தீர்வு சாத்தியமாகும். சர்வதேசம் அனைத்தினையும் வென்று தந்துவிடுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கொண்டிருக்கின்றது. ஆனால், வல்லரசுகளுக்கிடையிலான போட்டியின் பகடையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறிவிடும் அபாயம் உள்ளது. மு.காங்கிரஸ் சர்வதேசத்தினையும் நம்பவில்லை. இங்குள்ள ஆட்சியாளர்களையும் நம்பவில்லை. எங்களுடைய மக்களையே நாம் நம்புகின்றோம்' என்று மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி 29, 2012

தாக்குதலுக்குள்ளான தமிழ் அரசியல் கைதி சதீஸின் நிலை கவலைக்கிடம்

தாக்குதலுக்குள்ளாகி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுந்தரம் சதீஸ் என்ற அரசியல் கைதி நேற்றிரவு அவசரமாக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்...“தீவிரமான தாக்குதலுக்குள்ளான சதீஸ் - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது நிலைமை மோசமடைந்திருப்பதால் அவசரமாக கொழும்புக்கு நேற்றிரவு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சதீஸின் இடதுபக்கம் பரலைஸ் நிலையில் காணப்படுவதாகவும் தாக்குதலில் நரம்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் அவரது மனைவி கவிதா எம்மிடம் தெரிவித்தார். மிலேச்சத்தனமாக இத்தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம்” என்று மனோ கணேசன் கூறினார்.

ஆவணி 29, 2012

'காணாமல் போகும்' தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

இலங்கையிலும், இனப்பிரச்சினை, இனப்போராக மாறியிராவிட்டாலும், இந்த நிலைமையே தொடர்ந்திருக்கும். அதாவது, அதிக கல்வியறிவு மூலம் சிறந்த வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்லும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாகி இருந்திருக்குமே தவிர குறைந்திருக்காது. இதனை இனப்பிரச்சினையோடு சேர்ந்து இணைத்துப் பார்த்தால் தவறான முடிவுகளே கிடைக்கும். ஏன், இனப்போர் முடிந்த காலகட்டத்தில், அதனை இன்னமும் காரணம் காட்டி, ஓட்டை உடைசல் படகுகளிலும் வாரம் தோறும் வெளிநாடு செல்ல முயலும் நூற்றுக் கணக்கான தமிழர்கள் பொருளாதார முன்னேற்றம் கருதி மட்டுமே அவ்வாறான முயற்சிகளில் தங்களது உடமைகளையும் உயிரையும் பயணம் வைத்து செல்கிறார்கள்? இலங்கை என்று அல்ல, இந்தியாவில் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களையும் இந்த மோகம் கொல்வது வருந்த தக்கது. இது குறித்து தமிழ் சமூக-அரசியல் தலைமைகள் வாளாவிருப்பது, தமிழ் சமூகத்தின் சுய கௌரவத்தை பாதிக்கவில்லையா, என்ன? (மேலும்....)

ஆவணி 29, 2012

வெளிநாட்டு கடவுச்சீட்டுடைய 31500 பேர் வடக்குக்கு விஜயம்

இவ்வருட ஓகஸ்ட் மாதம் வரையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட 31500 வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்போர் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். 2011 ஜூலை மாதத்துக்கு பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 51 400 கடவுச் சீட்டுகளை வைத்திருப்போர் இலங்கை விஜயத்தை மேற்கொண்டபோது யாழ்ப்பாணத்துக்கும் சென்று வந்துள்ளனர். அதிகமானவர்கள் இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்களாவர். இவர்கள் தமது பரம்பரையினரின் வீடுகளையும் சொத்துக்களையும் நெருங்கிய உறவினரையும் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ளனர். சேர் ஜோன் கொத்தலாவலை இராணுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வைபவமொன்றில் உரையாற்றிய பாதுகாப்பு செயலர் ராஜபக்ஷ இத்தகவலை வெளியிட்டார்.

ஆவணி 29, 2012

வெனிசுலா எண்ணெய் ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாவேஸ் நேரில் ஆறுதல்

வெனிசுலாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத் தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிக ரித்துள்ளது. மேலும் திங்க ளன்று மூன்றாவது எண் ணெய் டேங்கிற்கு தீ பரவி யதில் மீண்டும் அந்த எண் ணெய் டேங்க் வெடித்து சித றியது. உலகில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் ஒன்றாக வெனிசுலா பாரரகுவானான பகுதியில் உள்ள அமுவெ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் ஒன்று. இங்கு நாளொன்றுக்கு 9 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நடைபெறும். இதன் மூலம் சுமார் 2 லட் சம் பேரல் பெட்ரோலியம் உற்பத்தி செய்யப்பட்டு வரு கிறது. இந்த சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த சனிக் கிழமை திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் இந்த ஆலை வெடித்து சிதறியது. இதில் உடனடியாக 24 பேர் பலி யாகினர். 50க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச் சை பெற்று வந்தனர். இந் நிலையில் இந்த விபத்திற் கான காரணம் என்ன வென்று இதுவரை தெளி வாக தெரியவில்லை. மேலும் இந்த விபத்து வாயு கசிவால் ஏற்பட்டிருக்க லாம் என கருதப்படுகிறது.  (மேலும்....)

ஆவணி 29, 2012

பெருச்சாளிகளின் ராஜ்யம்

சென்னையில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை பெருச்சாளி கடித்து இறந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. குறைவான எடையுடன் (2.2 கிலோ) பிறந்த குழந்தையை மருத்துவமனையில் பாதுகாப்பாக இன்குபேட்டரில் வைத்து, பராமரித்து வந்த நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. பாது காப்பான இத்தகைய அறைகளிலும் கூட பெருச்சாளி போன்ற ஜந்துக்கள் நடமாடிக் கொண்டிருக்கின்றன என்பது தமிழக அரசின் சுகாதாரத்துறையின் லட்சணத்தை பளிச் சென்று பறைசாற்றுகிறது. திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் அரசு மகப் பேறு மருத்துவமனையில் நடந்துள்ள இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை வட்டாரம் தன்னைத் தற்காத்துக்கொள்ள விளக்கங்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறது. (மேலும்....)

ஆவணி 29, 2012

ஆசியாவிலேயே அதிவேகமான கடலுக்குக் கீழான தரவுப் பரிமாற்ற இணைப்பு

ஆசியாவிலேயே அதிவேகமாக தரவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு உதவும் புதிய அதிவேக கடலுக்குக் கீழான இணைப்பு திறந்து வைக்கப்படவுள்ளது. 7800 கிலோ மீற்றர் நீளமான இந்தக் கடலுக்குக் கீழான இணைப்பானது ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை இணைக்கிறது. இந்த இணைப்பின் மூலம் தரவுகள் செக்கனுக்கு 40 ஜிகாபைட்ஸ் வேகத்தில் பரிமாற்றப்படுகிறது. இது சிங்கப்பூருக்கும் டோக்கியோவுக்குமிடையிலான எந்தவொரு இணைப்பை விடவும் 3 மில்லி செக்கன்கள் வேகமானதாகும்.  கணனிகளால் வியாபாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் தரவுப் பரிமாற்றம் மூலம் ஒரு செக்கனிலும் குறைந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான தரவுப் பரிமாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. வங்கிகளுக்கிடையிலான கடும் போட்டி காரணமாக தரவுப் பரிமாற்றத்தில் ஏற்படும் ஒரு செக்கன் தாமதமானது அவற்றின் இலாபத்தின் அளவைப் பாதிப்பனவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 29, 2012

நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை அமுல்படுத்த திறைசேரி நிதி ஒதுக்கீடு

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை நடைமுறைப்படுத்துவதற்கான செயற் திட்டத்திற்கு தேவையான நிதி வளங்களை திறைசேரி வழங்குவதற்கு முன்வந்திருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பு பேராயர் பேரருட்திரு மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகையை சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இந்தத் தகவலை வழங்கினார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பல்வேறு சிபார்சுகளை நடைமுறைப்படுத்தும் பொறுப்பை ஏற்கவிருக்கும் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச அதிகார சபைகளின் செலவுகளை ஈடுசெய்வதற்காகவே இந்நிதி ஒதுக்கப்படுகின்றது. சமீபத்தில் பலதரப்பட்ட அதிமுக்கிய வெளிநாட்டு விஜயங் களை மேற்கொண்ட அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் அரசாங்கம் வட மாகாணத்திற்கு எவரையும் சென்று பார்ப்பதற்கு இடமளித்திருக்கிறதென்றும் இதனால் நாடு பலதரப்பட்ட நன்மைகளை அடைந்திருக்கி ன்றது என்றும் கூறினார்.

ஆவணி 29, 2012

சகல விவசாய நிலங்களும் காப்புறுதி, வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பம்

நாட்டின் விவசாயக் கைத்தொழில் துறை மீது அபரிமித எதிர்பார்ப்பை கொண்ட அரசு எம்முடையதே என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனடிப்படையில் தான் விவசாயிகளுக்கு பலவிதமான சலுகைகளைப் பெற்றுக்கொடுத்து அவர்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்ப தாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். விவசாய மக்களின் நலன்களுக்காக சகல விவசாய நிலங்களையும் காப்புறுதி செய்யும் வேலை திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார். வரட்சியை என்னால் நிறுத்த முடியாது. என்றாலும் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தயார். நாட்டின் விவசாய மக்களுக்காக பெற்றுக் கொடுக்க கூடிய சகல நிவாரணத்தையும் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

ஆவணி 29, 2012

இலங்கை இராணுவத்தினருக்கு தொடர்ந்தும் பயிற்சி அளிக்கப்படும் - இந்தியா

இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவது தொடர்ந்து நடைபெறும் என மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் ராஜூ கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் தாம்பரத்தில் இலங்கை இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்து அறிந்ததும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் தொழில்நுட்ப பயிற்சி பெற்ற இலங்கை விமானப்படை வீரர்கள், 9 பேர் அங்கிருந்து பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை நிலை யத்துக்கு மாற்றப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலங்கை இராணுவ வீரர்களுக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையடுத்து முதல்வர் ஜெ. பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார்.ஆனால், அவர்கள் இருவரும் கடந்த மே 19ம் திகதி முதல் தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகின்றனர். அதாவது, மே மாதம் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி குறித்த உண்மைகள், என் தலைமையிலான அரசுக்கு தெரிவிக் காமலேயே மறைக்கப்பட்டுள்ளது. இச்செயல், மத்திய அரசு அற்பத்தனமாக செயல்பட்டு வருவதையே காட்டுகிறது என கூறியிருந்தார்.

ஆவணி 28, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 6)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

புலி உறுப்பினர் ஒருவர் புலிகளுடன் தீவிரமான செயற்பாட்டில் உள்ளார் என்பதை அறிவது மிகவும் சுலபம். மிக நீண்ட கால நட்பில் இருந்த ஒருவர் மாற்று ஈழவிடுதலை அமைப்பில் இருந்தார் என்றால் அவருடனாக உறவை மறுப்பர். மேலும் தவிர்க்க முடியாமல் நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு எற்படும் போது முகத்தை வேறுபக்கம் திருப்பி வெறுப்பைக்காட்டும் செயற்பாட்டை கொண்டிருப்பர் புலிகளின் தீவிர செயற்பாட்டாளர். இதனை இலண்டனில் ஈழவிடுதலை அமைப்பு மாற்று இயக்க உறுப்பினரும் இவரின் பல்கலைக் கழக சாகாவிடமே காட்டி இருக்கின்றார் என்றார் பார்த்துக் கொள்ளுங்களேன். அந்த அளவிற்கு புலிகளுடன் உறவில் ராஜினியின் தீவிரம் காட்டியிருந்தார். ஆனால் ராஜினி வெறுமனவே தலைமைக்கு தலையாட்டும் பொம்மையாக இருக்காது கேள்வி கேட்கும் செயற்பாட்டாளராக இருந்தார் என்பது இங்கு முக்கிய விடயம். (மேலும்....)

ஆவணி 28, 2012

முன்னாள் மேயர் சுட்டுக்கொல்லப்படும் போது நான் மௌனமாக இருந்தேன - டக்ளஸ்

முன்னாள் மேயர் சுட்டுக்கொல்லப்படும்போது நான் மௌனமாக இருந்தேன்.அவருடைய நினைவு நாள் இன்று. அவருடைய குடும்பத்தினரை மதிக்கின்றேன். பண்ணை சுற்றுவட்டாரத்தில் இச் சிலையை அமைப்பதற்கும் அங்கு பூங்காவை நிர்மாணிப்பதற்குமான நிதியுதவியை யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பா நினைவாக அவரது குடும்பத்தினர் வழங்கியுள்ளனர். அவர்களுக்கு ௭னது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன் ௭ன அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; கடந்த காலத்தில் அல்பிரட் துரையப்பா ௭வ்வாறு செயற்பட்டாரோ நாமும் அவ்வாறே செயற்படல்வேண்டும். நாம் இன்று அவரைக் கௌரவிக்கின்றோம். கீரைக் கடைக்கும் ஓர் ௭திர்கக்கடை வேண்டும். ஓர் ஆளுங்கட்சிக்கு ஓர் ௭திர்க்கட்சி இருத்தல் வேண்டும். அப்போது தான் ஆட்சி சிறப்பாக நடைபெறும். கோம்பயன் மயானத்திற்கு வடமாகாண ஆளுநர் ரூ.10 இலட்சம் நிதி ஒ துக்கியுள்ளார். கூடிய விரைவில் இந்த செயற்றிட்டம் நடைபெறும். இவை முன்னேற்றத்தை நோக்கியதாகவே இருக்கும். இன்றைய செயற்பாடுகள் நாளை நல்லதாகவே அமைய வேண்டும் ௭னவும் தெரிவித்தார்.

ஆவணி 28, 2012

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் -  வேதநாயகன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேர் இதுவரை மீளக்குடியேற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ௭ன். வேதநாயகன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் அரச அதிபர் மேலும் கூறுகையில்– முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. கல்வி, சுகாதாரம், கடற்றொழில், விவசாயம் வைத்தியசாலைகளின் அபிவிருத்தி போன்ற இன்னோரன்ன அபிவிருத்திப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக மீள்குடியேறியவர்கள் வசிப்பதற்கு வசிப்பிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வீடமைப்புத் திட்டப் பணிகளு ம் துரிதமாக இடம்பெற்று வருகின்றன. மாஞ்சோலையில் அமைந்துள்ள மாவட்ட பொது வைத்தியசாலை உட்பட ஏனைய இடங்களில் உள்ள வைத்தியசாலைகளும் அபிவிருத்தி கண்டுள்ளன.

ஆவணி 28, 2012

இடதுசாரிகள் கூட்டத்தில்   உரையாற்றிய அசாஞ்சே

பிரான்சில் இடதுசாரிக் கட்சிகள் நடத்திய கூட்டத்தில் விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே உரையாற்றினார். பிரான்சில் கிரிநோபிள் அருகே செயிண்ட் மார்ட்டின் டி ஹெரெஸ் பகுதியில் இடதுசாரியினர் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போது தொலைபேசி வழியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது :- பிரான்ஸ் எனக்கு எப்போதும் முக்கியமான நாடாகவே இருந்திருக்கிறது. என்னை பொறுத்தவரையில் நான் ஈக்குவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருப்பதற்கு காரணம், என்னை பிரிட்டன் அரசு சுவீடனிடம் ஒப் படைத்தால் நான் அமெரிக்காவிடம் ஒப்படைக்கப் படுவேன். அப்படி ஒப்படைக்கும் போது ராணுவ ரகசியங்களை வெளியிட்டதற்காக எனக்கு அந்நாட்டு அரசு மரண தண்டனை விதிக்கும். ஆகவேதான் நான் ஈகுவடாரில் தஞ்சம் புக இருக்கிறேன். சுவீடன் அரசு என்னை அமெரிக்காவிடம் ஒப்ப டைக்க மாட்டோம் என்று உறுதியளித்தால் நான் அந் நாட்டில் என்மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராவதில் எவ்வித தயக்கமும் இல்லை என்று கூறினார். அப்போது இடதுசாரிக் கட்சிகளின் தலைவர்களில் ஒருவரான ஜான்லுக்மெலென்கோன், பிரான்ஸ் நாட்டு அரசு அசாஞ்சேவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இந்த கருத்திற்கு பிரான்ஸ் பத்திரிகைகள் பலவும் ஆதவு தெரிவித்திருக்கின்றன.

ஆவணி 28, 2012

மகேஸ்வரன் எம்.பி. கொலை வழக்கில் பிரதான எதிரிக்கு மரண தண்டனை

முன்னாள் அமைச்சர் ரீ. மகேஸ்வரனை சுட்டுக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்பான வழக்கின் பிரதான எதிரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 2008 ஜனவரி முதலாம் திகதி காலை கொட் டாஞ்சேனை சிவன் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்துகொள்வதற்காகச் சென்ற முன்னாள் அமைச்சர் ரி. மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். முன்னாள் அமைச்சரையும் சந்திரகுமார் மஹிந்தன் என்பவரையும் சுட்டுக் கொலை செய்தது தொடர்பில் ஜோன் பொலின் வெலண்டின் என்பவருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். சந்திரகுமாரை சுட்டுக்கொன்றது தொடர் பில் போதிய ஆதாரங்கள் முன்வைக்கப் படாததால் மேற்படி குற்றச்சாட்டில் இருந்து சந்தேக நபர் விடுவிக்கப்பட்டார். ரீ. மகேஸ்வரனை சுட்டுக்கொலை செய்தது தொடர்பில் சந்தேக நபர் குற்ற வாளியென நிருபணமாகியுள்ளதாக நீதி பதி அறிவித்தார். குற்றவாளியை ஜனாதிபதி தீர்மானிக்கும் தினமொன்றில் குறித்த நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலையினுள் மூச்சு அடங்கும் வரை தூக்கிலிடுமாறு தொங்க வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

ஆவணி 28, 2012

மனித உரிமை மீறல் -மறுசிந்தனை தேவை

(தே.லட்சுமணன்)

இக்வாஜா யூனூஸ் என்ற இஸ் லாமிய இளைஞன், ஒரு கம்ப்யூட்டர் இன் ஜினியர். மராட்டிய மாநிலத்தைச் சேர்ந் தவன். ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னால், அதாவது காட்கோபார் குண்டு வெடிப்பில் குற்றவாளியாகக் கருதப்பட்டு சிறைபிடிக் கப்பட்டவன். 27 வயதான அந்த இளை ஞன் ஆயிஷா பேகம் என்ற தாய்க்கு ஒரே மகன். குண்டு வெடிப்பு குற்றவாளியாக மகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், வேதனை யோடு மனம் வெந்துக்கொண்டிருந்த தாய்க்கு மேலும் வேறொரு இடி. அதாவது சிறைபிடிக்கப்பட்ட சில நாட்களில் போலீஸ் காவலிலிருந்து அவன் தப்பி விட்டதாகவும், அவனை மீண்டும் கைது செய்ய போலீஸ் தீவிரமாக தேடுவதாகவும் தகவல். இந்தத் தகவல் தாய்க்குப் பிடிபடவில்லை. சந்தேகம் வலுத்தது. இது போலீஸ் பரப்பும் பொய்ச்செய்தி, ஏதோ என் மகனுக்கு போலீசாரால் அநீதி நடந்திருக்க வேண்டும் எனத் தாய் உறுதி யாக நம்பினார். தாயின் விடாமுயற்சியால் புகார் பட்டியல், நீதிமன்றம், விசாரணை என விஷயம் சூடுபிடித்துவிட்டது. “மிகிர் தேசாய்” எனும் வழக்குரைஞர் அந்தத் தாயின் வேகத்துக்கு ஒத்துழைத்து மிகவும் சிரமப்பட்டு வழக்குக்கும், விசாரணைக் கும் உதவினார்.  (மேலும்....)

ஆவணி 28, 2012

இரு படகுகளில் அவுஸ்திரேலியா சென்ற 72 பேர் திருமலை கடலில் வழிமறிப்பு

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 72 பேரை இரண்டு வள்ளங்களுடன் கடற்படையினர் திருமலை கடலில் கைது செய்துள்ளனர். ‘ரஷித் புத்தா’ என்ற வள்ளத்தில் 12 முஸ்லிம்களும் இரண்டு பெண்களுடன் 12 தமிழர்களும் பயணித்துள்ளனர். சதேவ் புத்தா - 1 என்ற வள்ளத்தில் இரண்டு குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 52 பேர் பயணித்துள்ளனர். இரண்டு வள்ளங்களும் திருகோணமலை மற்றும் மணற்காடு பகுதியில் இடைமறிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மூதூர், அம்பாறை, மட்டக்களப்பு, கிண்ணியா, மருதன்கேணி, சாவகச்சேரி, மற்றும் பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய் யப்பட்டுள்ளனர். திருகோணமலை கடற்படை முகாமுக்கு ஒரு வள்ளமும், காங்கேசன்துறை கடற்படை தளத்துக்கு மற்றைய வள்ளமும் கொண்டுவரப்பட்டு ஆரம்ப விசாரணைகளின் பின்னர் இரகசிய பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

ஆவணி 28, 2012

அமெரிக்க ஆயுத விற்பனை 2011 இல் பல மடங்காக அதிகரிப்பு

உலக சந்தையில் 78 வீதமான ஆயுதங்கள் அமெரிக்காவிடம்

அமெரிக்காவின் ஆயுத விற்பனை 2011 ஆம் ஆண்டில் மும்மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலக ஆயுத சந்தைக்கு அமெரிக்கா அதிக ஆயுத விற்பனை செய்த ஆண்டாகக் கடந்த ஆண்டு பதிவானது. அமெரிக்க ஆயுத விற்பனை தொடர்பில் அந்நாட்டு கொங்கிரஸ் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.  இதன்படி அமெரிக்கா கடந்த ஆண்டில் 66.3 பில்லியன் டொலருக்கு ஆயுதம் விற்றுள்ளது. இது அமெரிக்கா 2010 இல் விற்ற ஆயுதங்களின் பெறுமதியை ஒப்பிடும் போது மும்மடங்காகும். 2010 இல் அமெரிக்கா 21.4 பில்லியன் டொலருக்கு உலகுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது. அதேபோன்று அமெரிக்கா அதிக ஆயுதம் விற்ற ஆண்டு கடந்த ஆண்டுதான். முன்னர் 2009 ஆம் ஆண்டில் 31 பில்லியன் டொலருக்கு ஆயுதங்களை விற்றதே அதிகமாக இருந்தது. இதில் 2011 ஆம் ஆண்டில் உலக ஆயுத சந்தையில் முக்கால் பங்கிற்கும் அதிகமான ஆயுதங்களை விற்ற நாடும் அமெரிக்கா என கொங்கிரஸ் சபை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாக அண்மைய ஆண்டுகளாக சர்வதேச ஆயுத விற்பனையில் பாதிப்பு செலுத்தியுள்ளது. ஆனால் ஈரான் தொடர்பாக பெர்சிய வளைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலை ஆயுத விற்பனை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

ஆவணி 28, 2012

ஞாபக மறதியை ஒழிக்க இலகுவழி பயிற்சிகள்

பலரையும் பாதிக்கும் பிரச்சினை ஞாபக மறதி. சரியான காரணத்தைக் கண்டறிந்து சரி செய்தால் மறதியில் இருந்து விடுபடலாம் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். மறதி என்பது ஒரு நோய் அல்ல. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று நேரத்தைத்திட்டமிடாமை. காலையில் தாமதமாக எழுவதன் மூலம் அனைத்து வேலைகளையும் பதற்றத்துடன் செய்வதால் மனம் நிம்மதியற்றுப் போகிறது. இந்த சூழலில் சாதாரண விஷயங்கள் கூட எளிதில் மறந்து விடுகின்றன. நேரத்தை திட்டமிடுவதன் மூலம் பதற்றத்தில் இருந்து விடுபட முடியும். மனம் அமைதியாக இருக்கும் போது முக்கியமான விஷயங்களை திரும்பத் திரும்ப நினைவுக்குக் கொண்டு வந்து காலை நேரத்தை இனிமையாக மாற்றலாம். அப்படியே மறந்தாலும் ஒரு நிமிடம் நிதானித்து நினைவுக்குக் கொண்டு வர முடியும். மறதிக்கு இன்னொரு முக்கிய காரணம் கவனச்சிதறல், இதனால் முக்கிய விஷயங்கள் நினைவில் பதியாமல் போகின்றன. ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைச் செய்வது மற்றும் வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது போன்ற பழக்கங்களை உடனடியாகக் கைவிட வேண்டும். (மேலும்....)

ஆவணி 28, 2012

பக்கவாதத்தை தடுக்க தினமும் மூன்று வாழைப்பழங்கள்

நாளொன்றுக்கு மூன்று வாழைப் பழங்கள் சாப்பிடுவதால் பக்க வாதம் ஏற்படும் ஆபத்து குறைகிறது என்று பிரிட்டிஷ் மற்றும் இத்தாலி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித் துள்ளனர். காலை உணவு, மதிய உணவு பிறகு மாலையில் ஒரு வாழைப்பழம் என்று நாளொன்றுக்கு மூன்று வாழைப்பழங்கள் சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான பொட்டாசி யத்தை வழங்கி அதன் மூலம் மூளையில் இரத்தக் கட்டு ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது என்கின்றனர். இந்த ஆய்வாளர்கள். எனவே வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுப்பொருட்களான பசளிக் கீரை, பால், மீன், உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் பக்கவாதத்திலிருந்து தப்பிக்கலாம் என்றே கூறுகின்றனர் இந்த ஆய்வாளர்கள். வாழைப்பழங்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்று இதற்கு முந்திய ஆய்வுகள் தெரிவித் துள்ள நிலையில் தற்போது இந்த ஆய்வு முடிவுகள் மேலும் வாழைப் பழ உபயோகத்தை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆவணி 27, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 5)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

ராஜினியின் மூத்த சகோதரி நிர்மலாவும் மலையகத்தை பிறப்பிடமாக கொண்ட யாழ் பல்கலைக் கழக கலைப்பீட விரிவுரையாளர் நித்தியானந்தன் என்பவரும் அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர மறைமுக? செயற்பாட்டாளர்களாக இருந்தனர். இலங்கை பொலிஸாரால் காயம் ஏற்பட்டிருந்த புலிகளின் முக்கிய உறுப்பினர் சீலன். பாதுகாப்பு காரணங்களுக்காக சீலனுக்கு வைத்திய சாலைக்கு வெளியில் இரகசிய முறையில் சிகிச்சை அழித்தல் என்ற நிகழ்வில் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்பட வைத்ததன் மூலம் புலிகளுடனான ஒரு தொடர்பு வலைக்குள் உள்வாங்கப்பட்டார் ராஜினி. இதன் மூலம் ராஜினி அவரின் சகோதரி நிர்மலா நித்தியானந்தனால் புலிகளிடம் ஒரு சூழ்நிலைக் கைதியாக்கப்பட்டார். இந்நிகழ்வுக்காக நிர்மலா ராஜினியின் ஆவணப்படமான No More Tears Sister இல் கண்ணீருடன் வருந்தியதை நாம் யாவரும் பார்க்கமுடியும். ஆனால் ராஜினியின் மரணத்தின் பின்பு வரும் காலம் கடந்த ஞானமாக இது அமைந்தது துர்பாக்கியமாக அமைந்துவிட்டது. (மேலும்....)

ஆவணி 27, 2012

The VK Krishna Menon Award 2012

Krishna Menon must be turning in his grave in disgust to know that you all have decided to hand over the VK Krishna Menon Award, to a woman who believes that the alleged persecution of the Tamil minority in Sri Lanka is wrong.  And to right that wrong to support the Tamil Tigers from her community, the most ruthless terrorists in the world, who perfected the body-pack for suicide bombings and assassinated two heads of State, Rajiv Gandhi of India and President Premadasa of Sri Lanka, by killing, massacring and maiming thousands of innocent unarmed people from Sri Lanka’s majority Sinhalese community.  And that is what bothers me and why I resent you conferring this award to her.  Her sense of human rights is cock-eyed and skewed and that does not translate into “advancement of human rights” in any form. This is the Tamil MP who displayed the Tamil Tiger terrorist flag prominently on her face book pages no sooner she was elected to represent the Scarborough-Rouge River riding in Ontario in the Canadian parliament.    Krishna Menon must be squirming in his grave. (more....)

ஆவணி 27, 2012

ஆஸி. தீர்மானத்தை எதிர்த்து கிறிஸ்மஸ் தீவில் உண்ணாவிரதம்

அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை பப்புவா நியூகினி மற்றும் நவ்ரூ ஆகிய தீவுகளுக்கு மாற்றும் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பெண்கள், சிறுவர்கள் உட்பட 62 பேர் கிறிஸ்மஸ் தீவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் தொடர்ந்து வருவதாக அவுஸ்திரேலியச் செய்திகள் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் இலங்கையர்களும் இருக்கலாமென செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை, ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து பெரும் எண்ணிக்கை யானவர்கள் சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்கு புகலிடம் கோரி வருகின்றனர். அண்மைய மாதங்களில் இவ்வாறு அவுஸ்திரேலியாவுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தமையைத் தொடர்ந்து புகலிடக் கோரிக்கையாளர்களை பப்புவா நியூகினி மற்றும் நவ்ரூ ஆகிய தீவுகளுக்கு மாற்றும் தீர்மானத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிறைவேற்றி யிருந்தது.

ஆவணி 27, 2012

சுற்றாடல் மாசுபடுவதை தடுக்கும் காற்றாடியூடான மின் உற்பத்தி

பஞ்ச பூதங்களில் ஒன்றான இப்பிரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் வல்லமை வாய்ந்த வாயு பகவானின் கிருபையுடன் எங்கள் நாட்டில் மின்சக்தி தட்டுப்பாட்டை தீர்த்து வைப்பதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட முயற்சிக்கு உயிரூட்டுவதற்கு மின்சக்தி எரிசக்தி துறை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இப்போது தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். காற்றாடிகள் மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்வதே இந்த முயற்சியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. இதன் மூலம் 2020ம் ஆண்டளவில் இலங்கையின் மின் உற்பத்தி வலையமைப்பில் மேலும் 400 மெகாவாட்ஸ் காற்றாடிகள் மூலமான மின்சக்தியை இணைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். (மேலும்....)

ஆவணி 27, 2012

மிருக வேள்விக்கு எதிர்ப்பு

முன்னேஸ்வரம் காளிகோயில் முன்னால் நேற்று சத்தியாக்கிரகம்

மிருக வதைக்கு எதிரான அமைப்புக்களும், பெளத்த பிக்குமாரும் நேற்றுக்காலை முன்னேஸ்வரம் காளிகோவில் நுழைவாயிலுக்கு அருகே சக்தியாக்கிரக போராட்ட மொன்றில் ஈடுபட்டனர். முன்னேஸ்வரம் உற்சவ காலத்தின்போது பத்திரகாளி அம்மன் கோவிலில் நடை பெறும் வேள்வித் திருவிழாவின் போது ஆடுகள், கோழிகள் பலியிடும் சம்பிரதாயம் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இதனைக் கண்டித்தும், இம்முறை முதலாம் திகதி நடைபெறவுள்ள வேள்வித் திருவிழாவின் போது மிருகங்களைப் பலியிட வேண்டாம் எனக் கோரியுமே இவர்கள் நேற்று சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலாபம் பஸ் நிலையத்துக்கு முன்பாக பேரணியாகப் புறப்பட்ட இவர்கள், முன்னேஸ்வரம் சிவன்கோவில்வரை சென்றடைந்தனர். ஆடு, கோழி பலியிடும் நடவடிக்கைகள் முன்னேஸ்வரம் ஆலயத்தில் நடைபெறுகிறது என்ற தவறான கருத்தின்படி சிவன் கோவில் முன்றலில் சத்தியாக்கிரகம் செய்ததோடு, ஆலயத்துக்கு உள்ளே நுழையவும் முற்பட்டனர். ஆலய நிர்வாகமும், சிலாபம் இந்து மகா சபையினரும் அவர்களை இடைமறித்து ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர். பெளத்த பிக்குகள் உட்பட நூற்றுக் கணக்கானோர் ஒரே நேரத்தில் ஆலயத்திற்குள் நுழைய முற்பட்டதால் ஆலய முன்றலில் குழப்பநிலை தோன்றியது.

ஆவணி 27, 2012

பூநகரியில் 10 குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்

பூநகரி பிரதேசத்திலுள்ள பத்து குளங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்பு பணிகள் ஒரு மாத காலப் பகுதிக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தின் பொறியியல் பிரிவினால் முன்னெடுக்கப்படும் இந்த புனரமைப்புத் திட்டத்திற்கு தேவையான இயந்திர உதவிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சும், இயந்திரங்களுக்கான எண்ணெய் வசதிகளை வட மாகாண சபையும் வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். மேற்படி குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் இந்தப் பிரதேசத்திலுள்ள 800 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதுடன் விவசாயிகளும் பயனடையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மக்களின் நலன் கருதி இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் இளங்கோவன் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 27, 2012

தொழில்நுட்பத்தை திருடிய வழக்கு

சம்சுங், ஆப்பில் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டொலர் அபராதம்

தென் கொரியாவின் சம்சுங் நிறுவனத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட காப்புரிமை வழக்கில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வடிவமைப்பு தொழில்நுட்பங்களை திருடியதற்காக சம்சுங் நிறுவனம் ஒரு பில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். எனினும் இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்போவதாக சம்சுங் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் தனது கணனி, ஐபோட் உள்ளிட்ட சாதனங்களின் வடிவமைப்புத் தொழில் நுட்பங்களை சம்சுங் நிறுவனம் திருடுவதாக கலிபோர்னியாவில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் தான் தயாரிக்கும் 28 வகையான சாதனங்களை சம்சுங் அதே வடிவமைப்பில் உருவாக்குவதாகக் கூறி அவற்றைப் பட்டியலிட்டிருந்தது. எனினும், தனது காப்புரிமையை மீறி ஆப்பிள் நிறுவனம் ஐபோட், ஐபோன் ஆகியவற்றைத் தயாரித்ததாக சம்சுங் தனது பதில் மனுவில் குற்றம் சாட்டியது.

ஆவணி 27, 2012

இந்திய பிரதமரின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஈரான் பயணம்

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் எதிர்வரும் 30 மற்றும் 31 ஆகிய இரு திகதிகளில் அணி சேரா நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக,பிரதமர் மன்மோகன் சிங் டில்லியில் இருந்து 28 ஆம் திகதி டெஹ்ரான் புறப்பட்டுச் செல்கிறார். பிரதமர் மன்மோகன் சிங்கின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்குப் பிறகு ஈரான் செல்லும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். ஏற்கனவே கடந்த 2009 ஆம் ஆண்டில் எகிப்திலும், 2006 ஆம் ஆண்டில் கியூபாவிலும் நடைபெற்ற இரண்டு அணி சேரா நாடுகளின் மாநாட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அந்தநாட்டை தனிமைப்படுத்த வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் இந்தியாவை நிர்ப்பந்தித்து வரும் நிலையில், மன்மோகன் சிங்கின் இந்த பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஈரானில் நடைபெற இருக்கும் அணிசேரா நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இந்தியா முடிவு எடுத்து இருப்பது தனது வெளிநாட்டு கொள்கையில் பிடிவாதமாக இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

ஆவணி 27, 2012

பல்லின மக்கள் வாழும் இலங்கையில் தமிழ், சிங்கள மொழியறிவின் அவசியம்

சுதந்திர இலங்கைக்கு பின்னரான காலகட்டங்களில் மொழி ரீதியான பிரச்சினைகள் பல ஏற்பட்டன. அதன் காரணமாக இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை ஏற்பட்டது. இருப்பினும் அண்மையக் காலங்களில் மாற்றுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அவ்வாறு முன்வைக்கப்பட்ட திட்டங்களுக்குள் முதன்மையானது மொழி பற்றியதாகும். அந்த வகையில் மொழி உரிமை மிகவும் காத்திரமான ஒரு செயற்பாட்டுக்கு வித்திட்டது எனலாம். தமிழ் பேசும் மக்களின் மொழி தொடர்பான உரிமைகள் மறுக்கப்பட்டு மீறப்படுகின்ற சந்தர்ப்பங்கள் முன்னர் ஏற்பட்டன. பின்னர் சிறுபான்மைச் சமுதாயத்தின் மொழி உரிமை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரகாரம் சீர் செய்யப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 27, 2012

அவுஸ்திரேலியாவுக்கு படகில் சென்ற 58பேர் வடமராட்சி கிழக்கில் கைது

அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலமாகச்செல்ல முற்பட்ட 58 பேரை வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் நேற்று அதிகாலை கைதுசெய்துள்ளனர். வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் கொட்டோடை பகுதிக் கடற்கரையிலிருந்து அவுஸ்ரேலியாவுக்கு இயந்திப்படகு ஒன்றில் செல்ல முற்பட்டவர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். இவர்கள் அனைவரையும் பருத்தித்துறைக் கடற்கரைக்கு அழைத்துவந்த கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வடமராட்சி கிழக்கு , வடமராட்சி , முல்லைத்தீவுப் பகுதியைச்சேர்ந்த ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் , சிறுவர்கள் உட்பட 58பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா நோக்கி வடக்கு , கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றமையும் அவர்களைக் கடற்படையினர் கைதுசெய்து சட்டநடவடிககை மேற்கொள்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஆவணி 27, 2012

அமெரிக்க டொலர் 100 மி. சீன உதவியில் வடக்கு, கிழக்கு இராணுவ முகாம்கள் விஸ்தரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ முகாம்களின் உட்கட்டமைப்பை விருத்திசெய்யவும் இராணுவ முகாம்களுக்கு தேவையான விடுதி மற்றும் வசதிகளை மேம்படுத்திக் கொடுக்கவும் சீனா முன்வந்துள்ளது. அத்துடன் இலங்கையுடனான பொருளாதாரம்,வர்த்தம் மற்றும் இராணுவ உறவுகளையும் சீனா மேம்படுத்திக் கொள்ளவிருக்கின்றது. இராணுவ நலன்புரித் திட்டங்களை மேம்படுத்துவதற்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் வழங்கவிருக்கின்றது. அதுமட்டுமன்றி படை அதிகாரிகளின் பிள்ளைகள் கல்வி பயிலும் கொழும்பு பாதுகாப்புக் கல்லூரிக்கு உதவியளிக்கவிருக்கின்றது. தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதிலும் இராணுவமுகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கு ,கிழக்கில் இராணுவத்தைக் குறைக்குமாறு மேற்குலக நாடுகள் சிலவும் இந்தியாவும் இலங்கைக்கு அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே சீனா இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவிருக்கின்றது.

ஆவணி 27, 2012

புலி ஆதரவாளர்களின் பணயக்கைதியாக இன்று கூட்டமைப்பு செயற்படுகின்றது

புலம் பெயர் மக்களின் ஒரு பகுதியினரான புலி ஆதரவாளர்களின் பணயக் கைதியாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டுவருகின்றமை கவலையளிக்கின்றது. அதனடிப்படையிலேயே கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளாமல் பல்வேறு விடயங்களை முன்வைக்கின்றனர் ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்துகொள்ளும் முன்னர் கூட்டமைப்பும் அரசாங்கமும் பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவது ௭ன்பது அர்த்தமற்ற செயற்பாடாகும். அவ்வாறு இணக்கப்பாட்டுடன் தெரிவுக்குழுவுக்கு சென்றால் ஏனைய கட்சிகளுக்கு ௭வ்வாறு பதிலளிப்பது? மேலும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் அல்லர் ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அப்படியாயின் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதிலேயே அர்த்தம் இல்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழு ௭ன்பது அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற ஒரு அதி உயர்ந்த இடமாகும். அவ்வாறான தெரிவுக்குழுவில் அனைத்துக் கட்சிகளும் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வர முடியும். இது யதார்த்தமான விடயமாகவுள்ளது.

ஆவணி 26, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 4)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

யாழ்ப்பாணம் கொழும்பு கண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்ட மாணவர்கள் பிரதேச தரப்படுத்தல் முறமையினால் நன்மை அடைந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் பின்தங்கிய பிரதேச பல்கலைக்கழக அனுமதி முறமைகளில் உள்ள சலுகைகளை அப்பிரதேசங்களுக்கு தற்காலக இடம்பெயர்வுகள் மூலம் யாழ்ப்பாண மாணவர்களும் பயன்படுத்திக் கொண்டதுதான். கூடவே தமிழர்களுக்குள்ளேயே சாதி ரீதியாக தாழ்ந்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியிருந்தே கல்வி மறுப்பு என்ற மேட்டுக்குடி மக்களின் கல்விப் பாகுபாடும் நீண்டகாலமாக மூடி மறைக்கப்பட்டு வந்ததும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். தமது பிள்ளைகள் சாதாரண அரச பாடசாலைகளில் கல்வி கற்க வைத்து சமூகத்தின் சகல பிரிவின் வாழ்வையும் அறிய வைத்த பேராசிரியர் கைலாசபதிக அதிபராக செயற்படும் போது அதிகார வர்க்கத்திறகுரிய செயற்பாட்டை தன்னகத்தே கொண்டிருக்காமல் மாணவர் சமூகத்திற்கு சமத்துவ கொள்கையை அறிமுகப்படுத்திய கார்திகேயன் போன்ற நல் ஆசான்கள் பலர் தோன்றியிருந்தால் தமிழருக்குள் தமிழர் போட்டுக்கொண்ட கல்வி மறுப்பு தரப்படுத்தல் இல்லாமல் உடைத்தெறியப்பட்டிருக்கும். (மேலும்....)

ஆவணி 26, 2012

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைப்பு

நாடாளுமன்ற தெரிவுக்கான வன்னி தேர்தல் மாவட்ட ஆசனங்களின் எண்ணிக்கை ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது. இதேவேளை மொனராகல மாவட்டத்துக்கான ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.  2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் வன்னி தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதை அடுத்தே, ஒரு ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. 2009இல் வன்னி தேர்தல் மாவட்டதில், 270,701 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2010இல் இந்த எண்ணிக்கை 236,449 ஆக குறைவடைந்தது. 2011ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் 221,409 வாக்களர்களே பதிவு செய்யப்பட்டுள்ளதால், வன்னித் தேர்தல் மாவட்டத்துக்கான ஆசன ஒதுக்கீடு ஆறில் இருந்து ஐந்தாக குறைக்கப்பட்டுள்ளது. இங்கு குறைக்கப்பட்ட ஒரு ஆசனம் மொனராகல மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆவணி 26, 2012

7 மில்லியன் தோமஸ் சங்காராக்கள் வாழ்ந்த நாடு அது!

இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில், 1980 களில் ஒரு நாடு மட்டும் அசுர வேகத்தில் ஒளிவீசத்தொடங்கியது. அந்த நாட்டின் பெயர் புர்கினா ஃபசோ (Burkina Faso). ஒளிவீச காரணம் கேப்டன் தோமஸ் சங்காரா (Thomas Isidore Noλl Sankara). இன்று அவன் உயிருடன் இருந்திருந்தால், ஆபிரிக்காவில் முதல் அபிவிருத்தி அடைந்த நாடாக தோற்றம் பெற்றிருக்கும் புர்கினோ பசோ. இளம் புரட்சிகர தலைவனாக, ஏகாபத்திய எதிர்ப்பாளனாக ஆபிரிக்க மக்களிடையே அடையாளம் காணப்பட்ட தோமஸ் சங்காராவுக்கு மூன்றாம் உலகம் சூட்டிய பெயர் 'ஆபிரிக்காவின் சே குவாரா'. (மேலும்....)

ஆவணி 26, 2012

TNA கிழக்கு மாகாண சபையை

கைப்பற்றிவிடும் எனும் பயத்தில் அரசாம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபையை கைப்பற்றி விடும் என்ற பயம் அரசாங்கத்திற்கு இருக்கின்றது. இந்தப் பயத்தை எமது சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்துவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். என நீதி அமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் கூறினார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவான பிரச்சாரக்கூட்டமொன்று கிண்ணியாவில் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் மெளலவி எஸ்.எல்.எம். ஹஸன் (அஷ்ஹரி) தலைமையில் கிண்ணியா ஹஸனாத் பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி 26, 2012

நாய்களுக்கும் நீரழிவு நோய் வரும்

(by Noelnadesan)

கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர்.
அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி – முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் - வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். ‘எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ?’’ – என்றும் வைரமுத்து இந்த கவிதை நூலில் சொல்கிறார்.

அப்படிச் சொன்ன கவிஞருக்கும் - கவிஞரின் கவித்திறனுக்கும் ஆய்வுரை வழங்கிய கருணாநிதிக்கும் வாசகர்களுக்கும் - இது சமர்ப்பணம்.

(மேலும்....)

ஆவணி 26, 2012

தமக்குள் மோதி சமூகத்தை விற்றுப் பிழைக்கும் தமிழ்பேசும் தலைமைகள்

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பலமாகச் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்பேசும் தமிழ், முஸ்லிம் தலைமைகளினால் அங்கிருந்து எழுப்பப்பட்டுவரும் இன, மத, பிரதேச ரீதியான கருத்துக்களால் அவ்விரு சமூகங்களையும் சார்ந்த மக்கள் துவண்டு போயுள்ளனர். அரசியலுக்காக இப்படியுமா தமக்குள் மோதி சமூகத்தை விற்றுப் பிழைப்பு நடத்த வேண்டும் எனும் கேள்வி பெரும்பாலான கிழக்கு மாகாண மக்களின் மனங்களில் எழுந்து வருகின்றது. இது ஆரோக்கியமானதல்ல. இது ஒரு சமூகத்தை அச்சமூகத்திற்குள்ளும், ஏனைய சமூகங்களுடனும் ஆணித்தரமான குரோதத்தை ஏற்படுத்த வழிசமைத்துவிடும் என்பதே இன்றுள்ள அச்சமாகும். (மேலும்....)

ஆவணி 26, 2012

வாக்குப் பலம்பெற கிழக்கில் வாண வேடிக்கை

முஸ்லிம்களை அரவணைத்தே தமிழருக்கு அரசியல் தீர்வு!

இலங்கையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வொன்று வருகின்ற போது முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளின் ஆலோசனைகள் முடிவுகள் இல்லாமல் எந்தத் தீர்வும் எடுக்கப்பட மாட்டாது. முஸ்லிம் மக்களை அரவணைத்தே அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாகும். இந்தத் தேர்தலை சர்வதேச சமூகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கிறது. தனித்துவமிக்க இந்தத் தேர்தலை வெற்றி கொள்வதற்கு தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இதற்கு தமிழ் மக்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்க வேண்டும். தமிழ் மக்களின் பிறப்புரிமை, மண்ணுரிமை சுயமரியாதை, சுயகெளரவம் எல்லாம் இந்தத் தேர்தலில் தான் தங்கியிருக்கிறது. தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளையும் சுயகெளரவத்தையும் அடகுவைத்துவிட்டு இந்த நாட்டிலே வாழ முடியாது. எமது உரிமைகளுக்காக நாம் அரசியல் போராட் டத்திலே ஈடுபட வேண்டும். இதற்கு ஒவ்வொரு தமிழ் மகனும் ஆயத்தமாக வேண்டும். ஆகவே நிரந்தரத் தீர்வொன்று வருகின்ற போது முஸ்லிம் மக்களை அரவணைத்தே முடிவகளை எடுப்போம். எனவே இந்தத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என இரா சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 26, 2012

கிழக்குக்கு காணி அதிகாரம் வழங்குவதில் ஆட்சேபனையில்லை ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்குவதை ஆட்சேபிக்கிறேன் - சிரேஷ்ட அமைச்சர் பி. தயாரத்னா மனந்திறக்கிறார்

1970களில் தேசிய அரசியலில் பிரவேசித்து தொடர்ச்சியாக 07 தடவைகள் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு இன்று உணவு போஷக்குத்துறை அமைச்சராக திகழும் சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்னாவுடனான பேட்டி

கேள்வி: கிழக்கு மாகாணசபைக்கு பொலீஸ் காணி அதிகாரங்கள் வழங்குவது தொடர்பில் உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: காணி அதிகாரம் வழங்குவதில் எனக்கு உடன்பாடுண்டு ஆனால் பொலீஸ் அதிகாரம் வழங்குவதை எதிர்கின்றேன். அதற்கு நியாயமான காரணங்களுள்ளன. காணி அதிகாரங்கள் கிழக்குமாகாணசபைக்கு வழங்கலாம் ஆனால் அதில் நிபந்தனையும் தேவை. அதாவது மாகணத்திலுள்ள காடுகள், வனஜீவ நிலங்கள் போன்றன மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும். நான் இருவருடங்கள் அனைத்துகட்சி சம்மேளனத்தில் உறுப்பினராக இருந்தபோது காணி அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டுமென்று ஆலோசனை வழங்கினேன். ஆனால் பலர் எதிர்த்தனர். இலங்கை ஒரு சிறியநாடு. அதற்குள் பிராந்தியத்திற்கு பொலீஸ் அதிகாரிகளை வழங்குவதென்பது ஆபத்தானது. சிரேஷ்டத்துவத்தைப்பின் பற்றியே பொலீஸ் உயரதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள். பொலீஸ் அதிகாரப்பரவலாக்கம் மாகாண நிலைமையை சீரழிக்கும். உங்களுக்கே ஆபத்தாக மாறும். (மேலும்....)

ஆவணி 26, 2012

உலகுக்கு விடைகொடுத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங்

சந்திரனில் முதன்முதலாக காலடி எடுத்துவைத்த விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் தனது 82ஆவது வயதில் நேற்று உயிரிழந்துள்ளார். இம்மாத முற்பகுதியில் இருதய சத்திரசிகிச்சையொன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பிறகு சுகயீனமுற்ற நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் ஆம்ஸ்ட்ரோங்கின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நீல் ஆம்ஸ்ட்ரோங் கடந்த 1969 ஆம் ஆண்டு ஜுலை 20 ஆம் திகதி முதன்முதலாக சந்திரனில் காலடி எடுத்து வைத்தார். அமெரிக்க விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சியாளர்களிடையே மதிப்புக்குரியவராகத் திகழ்ந்த இவருக்கு கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் சிறந்த பிரஜை என்ற தங்க விருதை அந்நாட்டு அரசாங்கம் அளித்து கௌரவம் வழங்கியது.

ஆவணி 25, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 3)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

ராஜினியின் குடும்ப சூழல் கல்வி கற்ற பாடசாலை போன்ற வழிகளில் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தார். பல்கலைக் கழகத்தில் சிங்கள தமிழ் மாணவரிடையே நிலவி வந்த இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் ராஜினி புலமை பெற்றிருந்தமையினால் சக சிங்கள மாணவர்களுடனும் இலகுவில் தொடர்புகளைப் பேண ஏதுவாக இருந்தது. பல தமிழ் சிங்கள பல்கலைக்கழக மாணவரிடையே பழகுதலுக்கான தடையாக மொழி இருந்ததை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இரு மொழி(தமிழ் சிங்களம்)ப் புலமையின்மை இலங்கையில் மொழிப் பிரச்சனைக்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது. இலங்கையில் உள்ள சகல மக்களும் இரு மொழிப் புலமை பெற்றிருப்பின் இன முரண்பாடு என்று வளர்த்தெடுக்கபட்ட பிரச்சனை இவ்வளவு தீவிரம் அடைந்திருக்க வாய்ப்புகள் குறைவாகவே இருந்திருக்கும். பல்கலைக்கழக மாணவ போராட்டங்களினூடக ராஜினிக்கும் தயாபாலா திரணகமவிற்கும் இடையே ஏற்பட்ட அறிமுகம் நட்பு காதல் என்று பரிணாமம் அடைந்து. அது 1977ம் ஆண்டு கல்யாணம் என்ற பந்தத்திற்குள் புகுந்து கொண்டது. (மேலும்....)

ஆவணி 25, 2012

கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக இருப்பதை ஜனாதிபதி விரும்பவில்லை

(வடக்கில் 2 மணி நேரத்திற்குள் முழு முஸ்லீமையும் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தபோதும், கிழக்கில் முஸ்லீம்களின் தொழுகை நிலையங்களுக்குள் புகுந்து வகை தொகையில்லாமல் அவர்களை கொன்றபோதும் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர். தற்போது எந்த முகத்துடன் முஸ்லீம் மக்களை உங்களுடன் இணையுமாறு முஸ்லீம் காங்கிரங் ஊடாக கோரிக்கை விடுகின்றீர்கள் நீங்கள். சற்றே சிந்தியுங்கள் தமிழ் தேசியம் பேசும் த.தே. கூட்டமைப்பினரே!)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பைத் தவிர வேறு ௭ந்தக் கட்சியிலிருந்தும் ௭வரும் தெரிவு செய்யப்படப் போவதில்லை. கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் இதனை நிரூபணம் செய்தது போல் தமிழ் மக்கள் இம் முறையும் நிரூபணம் செய்வர். அடாவடித்தனம் கபட நோக்குடன் கிழக்கு மாகாண சபை­யைக் கலைத்து தேர்தல் நடத்தி சர்வதேசத்தை ஏமாற்றுவதற்கு முனைந்துள்ள அரசும் அதன் அடிவருடிகளும் தேர்தல்கள் நிலைவரம் கண்டு கதிகலங்கி நிற்கின்றனர். இதனால் அடாவடித்தனத்தை கிழக்கில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ளது. ௭னினும் இவை அத்தனைக்கும் முகம் கொடுக்கும் சக்தியை நாம் மக்களிடமிருந்து பெற்றுள்­ளோம். (மேலும்....)

ஆவணி 25, 2012

கூட்டமைப்புக் கூடாரத்துக்குள் ஓடிப்போகிறவர்கள் சொல்லும் நியாயங்கள் ஏற்கத்தக்கவையா?

வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்)

(எனது மனக்கிடக்கையும் எடுத்தியம்பி நிற்கும் கட்டுரை. இதே மாதிரியான கருத்து நிலையில் பல கட்டுரைகளிலும், கலத்துரையாடல்களிலும், கூட்டங்களிலும், ஏன் தனி நபர்களிடமும் கருத்தப் பரிமாற்றம் செய்திருக்கின்றேன். இலங்கை அரசுடன் அனுசரித்து போய் சாதிக்கலாமா...? என்பதுவும், மந்திரி டக்ளஸ் தேவானந்தாவை பிரேமதாச காலத்தில் ஆரம்பித்து இன்றுவரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் எதனையும் 'சாதிக்க' இலங்கை அரசுகள் அனுமதிக்கவில்லை. இனிமேலும் அனுமதிக்கப் போவது இல்லை என்பதுவும் தோழர் தேவாவிற்கும் தெரியும். சின்னத்தம்பி(யாழ்ப்பாணம்) தமிழ் கூட்டமைப்புத் தலைமைகள் பற்றி கூறும் கருத்துக்கள் மிகச்சரியானவை. – சாகரன்)

புலிகள் ஒழிந்த பின்பு ஆரம்பத்தில் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் தலையைக் காட்டத் தயங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், அரசாங்கம் வழங்கிய தாராள ஜனநாயக சுதந்திரத்தை பயன்படுத்தி அங்கு நுழைந்து அரசியல் செய்யத் தொடங்கினர். வரலாற்றுத் தவறுகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொண்டு ஏதாவது ஆக்கபூர்வமான அரசியலைச் செய்தார்கள் என்றால் அதுதான் இல்லை. பழையபடி மக்களுக்கு இனவாத விசமேற்றி, அவர்களை வெறியர்களாக்கித் தமது பழைய அரசியலையே மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அதன் மூலம் பாராளுமன்றத் தேர்தல்களில் நல்ல அறுவடையையும் பெற்றுக்கொண்டனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினரது இந்த அடாவடித்தனமான பிற்போக்கு இனவாத அரசியலைக் கண்டு பொறுக்காத மாற்றுத் தமிழ் அரசியல் கட்சிகள் பல ஒன்று சேர்ந்து தமிழ் கட்சிகளின் அரங்கம் என்ற ஜனநாயகபூர்வமான அமைப்பை உருவாக்கினர். உண்மையில் அந்த அரங்கத்தின் உருவாக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெலவெலக்க வைத்துவிட்டது. எனவே சதித்திட்டம் தீட்டி, தமது கையாட்களான மனோ கணேசன், எம்.கே.சிவாஜிலிங்கம் போன்றோரை அதற்குள் நுழைத்து, தமிழ் கட்சிகளின் அரங்கைச் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்டனர். (மேலும்....)

ஆவணி 25, 2012

Sri Lanka: Tamils must first be reconciled with Tamils

(By Shenali Waduge)

It is easy to be asking solutions but when asking for solutions that relate to human beings it is not something that can be hurried. The international propaganda of the LTTE has left out crucial components that reveal exactly how divided Tamils in reality are. Not many have cared to question why LTTE did not use its USD300 annual earnings to uplift the areas it aspired to control over its own people. Absolutely nothing had been done except to build sophisticated bunkers and homes for the LTTE and their families. Even the food and medicines were sent by Sri Lanka’s Government to the North throughout the LTTE’s rule. The world needs to know that there is a major difference in what the Tamils (who controlled the Tamils during the hayday of the LTTE) aspire and what the Tamils need (the Tamils who suffered at the hands of the LTTE/Tamil politicians and the Tamil Diaspora). (more...)

ஆவணி 25, 2012

பூந்தமல்லி முகாமில் இலங்கை அகதி உண்ணாவிரதம்

தமிழகம் பூந்தமல்லி சிறப்பு முகாமில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதம் நீடிப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 6ம் திகதி முதல் உண்ணா விரதமிருக்கும் செந்தூரன் என்ற இலங்கை அகதியை மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வருமாறும் உண்ணா விரதத்தை கைவிடுமாறும் பூந்தமல்லி கிராம அலுவலர் பேச்சு நடத்தினர் எனினும் அதனை ஏற்காது தொடர்ந்தும் அவர் உண்ணாவிரதமிருந்தார். பின்னர் மாலையில் செந்தூரனிடம் பேச்சுவார்த்தை நடத்த திருவள்ளூர் ஆர்.டி.ஓ. ரவிக்குமார் சிறப்பு முகாமிற்கு வந்தார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்தார். ஆனால் அதற்கும் செந்தூரன் மறுத்து விட்டதால், ஆர்.டி.ஓ. திரும்பி சென்று விட்டார். தமிழகத்துக்கு உரிய ஆவணங் கள் இன்றி கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை பொலிஸார் கைது செய்து பூந்தமல்லி, செங்கல்பட்டு உள்ளிட்ட சிறப்பு அகதி முகாமில் அடைந்துள்ளனர்.

ஆவணி 25, 2012

அமரர் சிவகுருநாதன் ஞாபகார்த்த கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் “கலாசூரி” ஆர். சிவகுருநாதன் அவர்களின் நினைவுப் பேருரையும், கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழாவும், பேராசிரியர் சபா. ஜெயராசா தலைமையில் “இலக்கிய புரவலர்” ஹாசிம் உமர், தினகரன் வார மஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர் ஆகியோர் முன்னிலையில் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இந் நிகழ்வில் லேக்ஹவுஸ் ஆசிரிய பீடப் பணிப்பாளர் சீலரத்ன செனரத், “கலாசூரி” ஆர். சிவகுருநாதன் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைப்பார். நிகழ்வுகளை “தமிழ்த் தென்றல்” தம்பு சிவா சுப்பிரமணியம் தொகுத்து வழங்குவார்.

ஆவணி 25, 2012

முன்னேஸ்வரம் காளி கோவிலில் இம்முறையும் மிருக பலி இல்லை

முன்னேஸ்வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தில் வேள்வியின் போது ஆடு, கோழி பலி கொடுப்பதை இம்முறையும் தடுத்து நிறுத்தப் போவதாக மக்கள் தொடர்பாடல் மற்றும் மக்கள் விவகார அமைச்சர் மேர்வின் சில்வா நேற்று தெரிவித்தார். எதிர்வரும் முதலாம் திகதி முன்னேஸ் வரம் பத்ரகாளியம்மன் ஆலயத்தின் வேள்வி உற்சவம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பலி கொடுப்பதற்காக எவரும் ஆடு, கோழிகளை ஆலயத்துக்குக் கொண்டு செல்ல வேண்டாம் எனவும் அமைச்சர் பகிரங்க வேண்டுகோள் விடுத்தார். அன்றைய தினம் மிருக பலிக்கு எதிராக தான் ஆலய முன்றலில் அமர்ந்து அமைதி பிரார்த்தனை செய்யப்போவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். எந்தவொரு மதமும் மிருக பலியை செய்யுமாறும் கூறவில்லை என்று கூறிய அமைச்சர் மிருக பலி கொடுப்பதை தடை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார். பசுக்களிலிருந்து பால் கரந்து நாம் பருகுகிறோம். ஆனால் மாடுகளை அறுப்பதும் இந்நாட்டில் நடைபெறுகிறது. இவற்றை தடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இதனைத் தெரிவித்தார்.

ஆவணி 25, 2012

சிலந்தி வலையின் விந்தை !

சிலந்தி தான் கட்டிய வலையில் சிக்கிக்கொள்வதில்லை. ஏன் தெரியுமா? சிலந்தி கட்டுகின்ற வலையில் வட்டமாகவும், குறுக்காகவும் இழைகள் இருக்கும். அதில் வட்டத்தில் உள்ள இழைகளில்தான் பசை இருக்கும். குறுக்காச் செல்கிற இழைகளில் பசை இருக்காது, சிலந்தி அதன் வலையில் நடமாடும் போது, இந்தக் குறுக்கு இழைகளில் தான் நடக்கும். வட்டமான இழைகளைத் தொடாது. அப்படி வட்ட இழைகளில் பட்டுவிட்டாலும் ஒட்டிக்கொள்ளாதிருக்க அதன் வளைந்த கால்களும், கால்களில் உள்ள பிரத்தியேக ரோமங்களும் உதவுகின்றன.

ஆவணி 24, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 2)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது.

இதே போன்ற ஒரு நிகழ்வை இவ்விடத்தில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இவ் நிகழ்வின் கதாநாயகன் யாழ் பல்கலைக் கழக மருத்து பீடத்தின் கோடியில் வீடமைத்து வாழ்ந்து வந்தவர். எம்மில் பலருக்கு தெரியாதவர் இவர். ராஜினி போல் பட்டப்படிப்போ சர்வதேச பிரபல்யமோ ஏன் உள்ளுர் பிரபல்யமோஈ அல்லது புத்திஜீவியோ இல்லை. ஈழவிடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகிய 1970 களில் இருந்து இடதுசாரி செயற்பாடுடைய ஈழவிடுதலை அமைப்பிற்காக தனது வீடு குடும்பம் என்று எல்லாவற்றையும் வழங்கியவர் வைகுந்தவாசம். இவர் திருநெல்வேலி மரக்கறிச் சந்தையில் குத்தகை சேகரிக்கும் கடைநிலை கிராம சேவை உத்தியோகஸ்தர் விவசாயி. 4 பிள்ளைகளின் தந்தை இவரும் இக்கால கட்டத்தில்தான் புலிகளால் சுட்டுக்கொலப்பட்டார்.
(மேலும்....)

ஆவணி 24, 2012

யாழில் இராணுவப் பிரசன்ன அதிகரிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

யுத்தம் முடிவடைந்து  3 வருடங்களானபோதிலும், அரசியல் தீர்வு விடயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. தமிழர்களுக்கான தீர்வை வழங்கப்போகின்றோம். அதற்கான  நடவடிக்கைகளை  எடுத்துவருகின்றோம் என 3 வருடங்களாக அரசாங்கம் கூறிவருகின்றதே தவிர, அதற்கான வழி எதனையும் அரசாங்கம் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. யுத்தம் முடிவடைந்த நிலையில் இற்றைவரை சீரான முறையில் மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லை.  இன்றும் பல பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுவருகின்றன. வடபகுதியில் தமிழ் மக்கள் மாத்திரமின்றி, முஸ்லிம் மக்களும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளனர். யுத்த சூழ்நிலையில் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேறியிருந்த 5,000 முஸ்லிம்; குடும்பங்களில் 500 குடும்பங்களே இதுவரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ளன. இவர்களுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவிகளும் மேற்கொள்ளப்படவில்லை. (மேலும்....)

ஆவணி 24, 2012

வெள்ளவத்தை முக்கொலை, சந்தேக நபர் கைது

கடந்தவாரம் வெள்ளவத்தை ராமகிருஸ்ண ட்ரெஸ்ட் வீடொன்றில் தாய், தந்தை, தங்கை ஆகிய மூவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த முக்கொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என கருதப்பட்ட கொலையுண்ட தம்பதியினரின் மூத்த மகனான 28 வயதுடைய பிரபாத் குமாரசுவாமி என்பவரையே பொலிஸார் கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இக்கைது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவிக்கையில்...“நேற்றைய தினம் இச்சந்தேகநபர் தொடர்பில் பத்திரிகைகளில் செய்தி வெளியிட்டோம். அதற்கமைய இன்று காலை 10.45 மணியளவில் கடவத்தை பகுதியில் பஸ்ஸில் பயணிக்கும்போதே மேற்படி  சந்தேக நபரை கைது செய்துள்ளோம். கொழும்பிலிருந்து குருணாகல் நோக்கி சென்ற பஸ்ஸிலேயே குறித்த சந்தேக நபர் பயணம் செய்துள்ளார். இவரை அடையாளம் கட்ட பயணி எமக்கு தகவல் வழங்கியதையடுத்து கடவத்தை பகுதியில் அவரை கைது செய்தோம்” என்று கூறினார்.

ஆவணி 24, 2012

ஆவணி 24, 2012

சிரிய கிளர்ச்சியாளர்களுடன் வெளிநாட்டு போராளிகள்

சிரியாவில் பல வெளிநாட்டு போராளிகள் கிளர்ச்சியாளர்களுக்காக போராடிவருவது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான சிரிய குடியிருப்பாளர்கள் தம்முடன் இணையவில்லை என கிளர்ச்சியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். சிரியாவில் மோதல் இடம்பெறும் பகுதியில் செய்தி சேகரிக்கும் அல் ஜீரா செய்தியாளர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:- “மோதல் களத்தில் அரபுப் போராளிகளைக் காணக்கூடியதாக உள்ளது. இவர்கள் சவூதி மற்றும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள். தம்மை படம்பிடிக்க இவர்கள் மறுத்தனர். இதில் சில போராளிகள் தம்மை அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்தினர்” என்று அந்த செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். எனினும் சிரிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவோரில் பெரும்பான்மையானவர்கள் சிரிய நாட்டவர்களாவர். ஆனால் இந்தப் போராட்டம் சுன்னி அரபு முஸ்லிம்களை கவர்ந்துள்ளதாக அல் ஜீரா செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். மறுபுறத்தில் சிரியா தொடர்பில் லெபனானில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதல்கள் நீடித்து வருகிறது.

ஆவணி 24, 2012

அகதிகளை வரவேற்கிறதா ஆஸ்திரேலியா?

தப்ப முயன்ற ஈழத் தமிழர்கள்

திருட்டுத் தோணியில் ஏறிப்போய் நடுவழியில் உயிரை விட்டிருப்பார்கள். இப்போது, ஆஸ்திரேலியாவிலும் அதிகமான கட்டுப்​பாடுகள் இருப்பதால், ஈழத் தமிழர்கள் தப்பி ஓட முயற்சிப்பது நல்லதல்ல'' என்றார் அகதிகளைப் பிடித்த தனிப்படையைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர். அகதிகள் முகாமில் இருப்பவர்கள் திருட்டுத்தனமாக ஆஸ்திரேலியாவுக்குச் தப்பிச் செல்ல முயற்சிக்கிறார்கள் என்றால், இங்கே அவர்களுக்கு அளவுக்கு அதிகமான கட்டுப்பாடுகளும் கொடுமையும் இருப்பதாகத்தானே அர்த்தம்? கொடுமை தாங்காமல் இலங்கையில் இருந்து அபயம் கேட்டு வந்தவர்களைத் தமிழ்நாடும் வஞ்சிக்கக் கூடாது. ஆஸ்திரேலியாவில் அவர்கள் எதிர்பார்க்கும் சுதந்திரத்​தையும், நிம்மதியையும் தமிழகம் தர வேண்டும். (மேலும்....)

ஆவணி 24, 2012

தமிழ் மக்கள் சுதந்திரக் கட்சி தேர்தல் விஞ்ஞாபனம்

பதவி மோகம் கொண்ட சந்தர்ப்பவாதிகளின் கூடாரமாக தமிழ்க் கூட்டமைப்பு மாறிவிட்டது

டந்த 60 வருட காலமாக கிழக்கு மாகாணத் தமிழர்கள் கடைப்பிடித்த அரசியல் பாதை எந்தவிதமான சமூக, பொருளாதார, அரசியல் நன்மைகளையும் எமக்கு பெற்றுத் தரவில்லை. மாறாக இருந்ததையும் இழந்து எமது எதிர்கால சமூக, பொருளாதார, அரசியல் இருப்பு இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. கட்டியிருந்த வேட்டியையும் பறிகொடுத்துவிட்டு இன்று கோவணத்தைக் காப்பாற்றும் நிலை எமக்கு. இந்த நிலையிலே உணர்வு பூர்வமாக மட்டும் சிந்திப்பதை விடுத்து அரசியலை விஞ்ஞான பூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் யதார்த்த பூர்வமாகவும் பார்க்க வேண்டியது கடந்த 60 வருட கால அனுபவம் எமக்கு கற்றுத் தந்த பாடமாகும். இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் சுதந்திரக் கட்சி எனும் ஓர் அரசியல் கட்சியை தோற்றுவித்து அதனூடாக இக்கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சுயேச்சைக் குழுவில் போட்டியிடும் வேட்பாளர் செல்வி க. தங்கேஸ்வரி தலைமை யிலான குழுவினர் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 24, 2012

வளர்ந்து வரும் இனவாத வன்மம்!

னசாட்சியைத் தட்டி எழுப்பும் கேள்விகள் யாரிடம் இருந்து வேண்டு​மானாலும் வரலாம். ''ஒரு மாதமாக அஸ்ஸாம் பற்றி எரிகிறது. கிராமங்கள் எல்லாம் சுடுகாடு ஆக்கப்பட்டு, நான்கு லட்சம் மக்கள் முகாம்களில் அடைபட்டுக் கிடக்கின்றனர். ஏன் உங்கள் யாருக்கும் உறைக்கவில்லை'' என்று கேட்கிறார் வீரேந்தர். அஸ்ஸாம் கலவரத்தின் தொடர்ச்சியாக, வடகிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று பரவிய வதந்தியால் அலறி அடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு ரயில் பிடித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் வீரேந்தர். அஸ்ஸாமின் ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதியுமான பக்ருதீன் அஜ்மல் சொல்வதுபோல, ''அஸ்ஸாமில் என்ன நடக்கிறது என்றும், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்றும் கவலைப்பட இந்தியா விரும்பவில்லை'' என்பதுதான் உண்மை. (மேலும்....)

ஆவணி 24, 2012

உணவு தேடும் வரை தாயின் வயிற்றுப்பையில் வாழும் கங்காரு குட்டி

ங்காரு அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த விலங்கு. இதன் குட்டிகள் முழுமையாக வளர்ச்சியடைவதற்கு முன்பே பிறந்து விடுகின்றன.  மிகுதி வளர்ச்சியெல்லாம் காங்காருவின் வயிற்றுப் பையில்தான் நடக்கும். குட்டி, பிறந்த உடனே வயிறு வழியாக ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். பிரசவ நேரத்தில் கங்காரு, குட்டி வெளியே வருகிற துளை முதல் வயிற்றின் மேல் பகுதிவரையான பாகத்தை நக்கும். இப்படி நக்கி நக்கி தன் உடல் ரோமத்தின் வழியே ஒரு பாதையை ஏற்படுத்தும். குட்டி இந்தப் பாதை வழியே ஊர்ந்து பைக்குள் வந்துவிடும். அம்மாவின் பாலைத் தவிர மற்ற உணவை சமிபாடடையக் கூடிய திறன் வரும்போதுதான் உட்கொள்ளும். இத்திறன் வரும் வரை குட்டி, அம்மாவின் பைக்குள்ளேயேதான் இருக்கும்.  குட்டியின்உடற் பகுதிகளெல்லாம் முழுமையாக வளர்ச்சியடைந்த பிறகுதான் கங்காரு, தன் குட்டியை கீழே இறக்கிவிடும். பிறகு எப்போதாவது நரியோ, கழுகோ, மற்ற விலங்குகளோ பிடிக்க வரும்போது குட்டி ஓடி வந்து தன் தாயின் பைக்குள் ஏறி ஒளிந்து கொள்ளும்.

ஆவணி 24, 2012

முஸ்லிம்களை வெளியேற்றும் சதியில் பயங்கரவாத எச்சங்களின் செயற்பாடு

வடக்கிலும், கிழக்கிலும் சமாதானத்தையும், செளஜன்யத்தையும் விரும்பும் மக்களை மீண்டும் இந்த மண்ணில் இருந்து வெளி யேற்றுவதற்கான சதிகள் இத் தேர்தலில் முன்னெடுக்கப்படு வதாக தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், தமிbழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள போதும், அதனது ஆதரவு எச்சங்கள் இன்னும் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார். (மேலும்....)

ஆவணி 24, 2012

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுவதை தடுக்கும் சட்டத்தில் திருத்தம்

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுவதை தடுப்பது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற் கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். தற்பொழுது அமுலில் உள்ள 2005 ம் ஆண்டின் 25ம் இலக்க பயங் கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுக்கும் சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதோடு அவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய் துள்ளதாகவும் அவர் கூறினார். ஜீ. 7 நாடுகளினால் அமைக் கப்பட்ட நிதி முடக்கம் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்தல் தொடர்பான கொள்கை தயாரிக்கும் செயலணி இது தொடர்பில் சிபார்சுகளை தயாரித்திருந்தது. இதனடிப்படையில், தற்பொழுதுள்ள சட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பிலான சட்டத்தை பலப்படுத்துவதினூடாகவே எதிர்காலத்தில் பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டப்படுவதற்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அதற்காகவே சட்ட வரையறைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆவணி 24, 2012

ஆஸி. ஆண்டுக்கு உள்வாங்கும் அகதிகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக அதிகரிப்பு

அவுஸ்திரேலியா தனது நாட்டில் புகலிடம் கோரும் அகதிகளின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 20,000 மாக அதிகரித்துள்ளது. முன்னர் ஆண்டுக்கு 13,750 அகதிகளுக்கே அவுஸ்திரேலியா அனுமதி அளித்திருந்தது. இதன்மூலம் ஆஸி. அரசு அகதிகளின் எண்ணிக்கையை 45 வீதமாக உயர்த்தியுள்ளதோடு இது 30 ஆண்டுகளில் மிகப்பெரிய அதிகரிப்பாகும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லாட் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே புகலிடக் கோரிக்கையா ளர்களுக்கான தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் பபுவா நியுகினியா மற்றும் நவுரு தீவுகளுக்கு கொண்டு செல்ல அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தமை குறிப்பிடத்தக்கது. அபாயகரமான படகுப் பயணத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி வருவோரை தடுக்கும் வகையிலேயே ஆஸி. அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன் மூலம் முறையான புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு ஊக்குவிக்க ஆஸி. அரசு முயற்சித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர் தொடர்பில் பிரதமர் நியமித்த மூன்று பேர் கொண்ட நியுணர்குழு 22 பரிந்துரைகளை செய்திருந்தது. அதில் அவுஸ்திரேலி யாவுக்கு வெளியில் தடுப்பு முகாம்களை மீண்டும் அமைக்கும் பரிந்துரை மற்றும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது ஆகியவற்றை ஆஸி. அரசு செயற்படுத்தியுள்ளது.

ஆவணி 23, 2012

பஷீர் சேகுதாவூத் பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்தார்!

சற்று முன்னர் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத் தனது பிரதியமைச்சர் பதவியை ராஜினாமாச் செய்வதற்கான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார். இது தொடர்பில் அவரைத் தொடர்புகொண்டு கேட்ட போது அவர் இதனை உறுதிப்படுத்தினார். இதற்கான காரணங்கள் தொடர்பில் எமக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், அண்மையில் தான் ஏறாவூரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றியதை தொடர்ந்து அரசில் அமைச்சர் பதவியொன்றை பெறுவதற்காக தான் முயற்சிசெய்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சட்டுகளை அடுத்து தான் இந்த முடிவுக்கு வந்ததாகவும், அமைச்சுப் பதவிகளுக்காக தான் முயற்சிப்பதில்லை என்றும், கட்சிக்காகவே தான் உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். அத்துடன் அரசின் பிரதியமைச்சராக இருந்துகொண்டு அரச வாகனங்களையும் வளங்களையும் பாவித்து முஸ்லிம் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வதை தான் விரும்பவில்லை என்றும், தனது சொந்தச் செலவில் கட்சிக்காக இந்தத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் தெரிவத்தார். கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு அறிவித்து விட்டே இந்த ராஜினாமாவை தான் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

ஆவணி 23, 2012

மரணத்தினுள் வாழ்ந்தோம்! (பகுதி 1)

(ஆகஸ்ட் 19ம் திகதி கனடாவில் கருமையம் என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'மரணங்களின் நினைவு கூர்த்தல்' என்ற நிகழ்வில் தோழர் ஜேம்ஸ் ஆற்றிய உரை)

"One day some gun will silence me and it will not be held by an outsider but by the son born in the womb of this very society, from a woman with whom my history is shared" - Rajini Thiranagama.

'இது பலரின் குரலாக இருந்த ராஜினியின் குரல். இதில்தான் ராஜினி சமூகம் சார்ந்து நிற்பது வெளிப்படுகின்றது'
 

1989 செப்ரம்பர் 21ம் நாள் வியாழக் கிழமை பி.ப 4 மணியளவில் யாழ்பாண பல்கலைக் கழகத்தின் மருத்து பீடத்திருந்து 2ம் வருட மருத்துவ பீட மாணவர்களின் இறுதிப்பரீட்சை முடித்து. இப் பரீட்சைக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி விட்டு வழமைபோல் தனது துவிச்சக்கர வண்டியில் வீடு திரும்புகின்றார் ராஜினி. அவரின் பின்புறத்தே இருந்து பெயர் கூறி அழைக்கப்பட்டார். துவிச்சக்கர வண்டியை நிறுத்தி அதிலிருந்து இறங்காமல் தன்னை அழைந்தவரை திரும்பி பார்க்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் அழித்தொழிக்கும் பிரிவினரால் நெத்தியில் சுடப்பட்டார் ராஜினி. அப்போது தனது தலையை பாதுகாப்பதற்கான கரங்களை மட்டும் ஆயுதமாக ராஜினி கொண்டிருந்தார். துப்பாக்கி சூட்டினால் நிலத்தில் வீழ்ந்த ராஜினியை மீண்டும் இரு தடவை தலையின் பின்புறமாக சுட்டனர் கொலைகாரர். இது அவர் உயிர் தப்புவதற்குரிய வாய்ப்புக்களை இல்லாமல் உறுதி செய்துவதற்காக சுடப்பட்ட சூடுகள். இதன் பின்னரே அவ்விடத்தை விட்டு கிழம்பினார்கள் கொலைகாரர்கள். (மேலும்....)

ஆவணி 23, 2012

நான் வாழ்க்கையில் தோற்றுப்போனேன்

என்னை சில தினங்களில் உருக்குலைந்த சடலமாக காணலாம்

௭ன்னை மன்னித்து விடுங்கள், நான் வாழ்க்கையில் தோற்றுப்போனேன். வாழ்க்கையை தொடர்ந்து கொண்டுசென்றிருந்தால் அம்மாவும், அப்பாவும் பாரிய பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்திருக்கும். ஆகையால்தான் நான் இந்த முடிவை ௭டுத்தேன் ௭ன வெள்ளவத்தை முக்கொலையின் பிரதான சந்தேகநபரான குமார சுவாமி பிரசான் மின்னஞ்சல்மூலமாக தனது சகோதரி ஒருவருக்குத் தெரிவித்துள்ளார். கடன் தொல்லை தாங்கமுடியாமலேயே நான் இந்த முடிவை ௭டுத்தேன். நான் கெட்டவன் அல்ல ௭ன்னை மன்னித்து விடுங்கள். சில தினங்களில் கிராமத்தில் காட்டுப்பகுதி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் ௭ன்னை நீங்கள் சடலமாக காணலாம். ௭னது இந்த முடிவை யார் மீதும் சுமத்தவேண்டாம் ௭னவும் அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆவணி 23, 2012

மற்றுமொரு வெள்ளை வேன் கடத்தலின் உண்மை அம்பலத்துக்கு வந்துள்ளது

 

பிரான்ஸில் இருந்து விடுமுறைக்காக இலங்கை வந்த ரொமிலா, வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக சில தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. சுன்னாகத்தை சொந்த ஊராகக் கொண்ட தம்பிராசா மற்றும் டைசிரணியா ஆகியோரின் மகளாகிய ரொமிலாவும் 2004 ஆம் ஆண்டு பிரான்சிக்குச் சென்று அந்நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தார். கடந்த 2012.06.25 ஆம் திகதி பிரான்ஸ்சிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக ரொமிலா தனது குடும்பத்துடன் இலங்கை வந்திருந்தார்.  விடுமுறையை ஊரில் கழித்துவிட்டு மீண்டும் பிரான்ஸ்க்கு செல்வதற்காக 2012.08.01ஆம் திகதி கொழும்புக்குச் சென்று அங்குள்ள எப்பலே என்ற விடுதியில் தங்கியிருந்தனர், மறுநாள் 02ஆம் திகதி தங்கிருந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த கொட்டஞ்சேனை மாதா தேவாலயத்திற்கு வழிபடுவதற்காகச் சென்றள்ளனர். (மேலும்....)

ஆவணி 23, 2012

இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும் - சம்பந்தன்

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் உள்ளுர் தீர்வுகள் பல உருவாக்கப்பட்டன. அவை அமுல்படுத்தப்படவில்லை என்பதால் உள்நாட்டுத் தீர்வு இங்கு பொருந்தாது என்பதுடன் இந்தியா, சர்வதேச தீர்வுகளை அமுல்படுத்தவும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் இன்று புதன்கிழமை சபையில் தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் சபையில் இன்று ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சமர்ப்பித்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். நிறைய விடயங்களை மூடி மறைக்கும் வகையிலே செயற்பாட்டுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இது உலகிற்கு காட்டுவதாக அமைந்தால் முரண்பாடுகளைத்தான் மென்மேலும் வளர்க்கும் என்பதுடன் செயற்பாட்டுத் திட்டத்தை திருத்தாவிடின் நல்லிணக்கம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 23, 2012

அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்கா விடுத்த எச்சரிக்கைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளதோடு அதனைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது எனவும் எச்சரித்துள்ளது. சிரியா இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தினால் அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அந்நாட்டின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வை சீனாவின் மூத்த பிரதிநிதி தாய் பின்க்கூ சந்தித்து சிரியா பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் செர்ஜி லாவ்ரோவ் கூறுகையில், ஒரு நாடு தனது நாட்டு எல்லைதாண்டி, அடுத்த நாட்டுப் பிரச்சினையில் தலையிட கூடாது. பன்னாட்டு சட்டத்தை கண்டிப்பாக மதித்து நடக்க வேண்டும். அப்படி மீறி தாக்குதல் நடத்தினால் அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. ரஷ்யாவும், சீனாவும் சிரியாவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில் அமெரிக்கா அங்கு தாக்குதல் நடத்துவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவணி 23, 2012

மன்னார் நீதிமன்றம் மீது தாக்குதல் சம்பவம், மேலும் ஐவர் கைது

மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் 5 சந்தேக நபர்களை விசேட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். மன்னார் மாவட்ட மேலதிக நீதவான் முன்னிலையில் இவர்களை ஆஜர் படுத்தியபோது இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு அடையாளம் காணப்பட்ட மேலும் 26 சந்தேக நபர்களையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்துமாறு மன்னார் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 23, 2012

அணி சேரா மாநாட்டில் பங்கேற்க பான் கி மூனுக்கு அமெ. எதிர்ப்பு

ஈரானில் நடக்கும் அணி சேரா நாடுகளின் மாநாட்டில், ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் பங்கேற்பதை, அமெரிக்கா எதிர்த்துள்ளது. ஈரான் நாடு அணு ஆயுதங்களை தயாரிப்பதாக, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குறைகூறி வருகின்றன. இதன் காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதற்கிடையே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வரும், 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் அணி சேரா நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது. ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் உள்ளிட்ட 41 நாடுகளின் தலைவர்கள், இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். 21 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், இதில் பங்கேற்க உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் ஐ. நா. பொதுச் செயலர் பான் கி மூன், எகிப்து ஜனாதிபதி முர்சி உள்ளிட்டோர் கலந்துகொள்ளக் கூடாது. இந்த மாநாட்டில் அவர்கள் பங்கேற்பது நல்லதல்ல. மற்ற நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். எனினும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும தலைவர்கள் அணு ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையை கைவிடும்படி, ஈரானுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரி விக்டோரியா கூறினார்.

ஆவணி 23, 2012

மாணவருக்கு இடையூறு

ஐ.ம.சு. முன்னணி வருத்தம் தெரிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் இனிமேல் எந்த தேர்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என உறுதியளிப்பதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார். அனுராதபுரத்தில் உயர்தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஐ.ம.சு.மு. பிரசார கூட்டமொன்று நடத்தப்பட்டது தொடர்பில் வருத்தத்தை தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர்; மாணவர்களுக்கு இடையூறாக இடம்பெற்ற மேற்படி பிரசாரக்கூட்டம் தேர்தல் ஆணையாளரினால் நிறுத்தப்பட்டது. இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்பதை தேர்தல் ஆணையாளருக்கும் மாணவர்களுக்கும் உத்தரவாதம் அளிக்கிறேன். இது தொ டர்பில் வேட்பாளர்களுக்கு அறிவூட்டி யுள்ளோம். அரச வாகனங்கள் பயன்படுத்துவது தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளோம். கடந்த ஆட்சிக் காலங்களில் மோசமான முறையில் அரச சொத்துக்கள் தேர்தலுக்கு பயன்ப டுத்தப்பட்டன. ஆனால் இந்த நிலை தற்பொழுது பெருமளவு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. எனது அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனமொன்றினூடாக விளையாட்டு உபகரணங்கள் பகிரப்பட் டதோடு, தேர்தல் ஆணையாளர் இது குறித்து அறிவித்ததை யடுத்து, அதனை நிறுத்த பணித்தேன்.

ஆவணி 23, 2012

இனவாதத்தை தூண்டி தமிழர்களை ஏமாற்ற கூட்டமைப்பு முயற்சி

தேர்தல் காலத்தில் இனவாதத்தை பரப்பி தமிழ் மக்களின் வாக்குகளை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கிறது. இது தொடர்பாக சிந்தித்து தமிழ் மக்கள் ஐ.ம.சு.முவுக்கு வாக்களிக்க வேண்டும் என ஜனநாயக தேசிய கட்சி தலைவரும் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்கள் ஐ.ம.சு.மு.வுக்கே வாக்களிப்பர், ஆனால் இனவாதம் பேசி த.தே. கூட்டமைப்பு மக்களிடம் வாக்கு கேட்கிறது. இதனூடாக சர்வதேச சமூகத்திற்கு தங்களுடைய பலத்தை காட்ட முடியும் என அது கூறி வருகிறது. கடந்த தேர்தல்களிலும் த.தே. கூட்டமைப்பு இதனை கூறியே மக்களிடம் வாக்கு கோரியது. ஆனால் த.தே. கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு என்ன சாதித்துள்ளது. தேர்தல் காலத்தில் இனவாதத்தை பேசி வாக்குகளை பெறும் த.தே. கூட்டமைப்பு பின்னர் மக்களை மறந்து விடுகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த தேர்தல்களில் த.தே.கூட்டமைப்பு வென்ற உறுப்பினர் பதவிகளினால் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால் தமக்கு அரசியல் செய்ய முடியாது என்பதாலே பிச்சைக்காரரின் காயத்தை போன்று இந்தப் பிரச்சினையை இழுத்தடிக்கிறது. இது குறித்து சிந்தித்து தமிழ் மக்கள் ஐ.ம.சு.முக்கு வாக்களிக்க வேண்டும்.

ஆவணி 23, 2012

சென்னையில் ஓரிரு மாதங்களில் 100 மினி பஸ்கள் ஓடும்

சென்னையின் எல்லை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் புறநகர் பகுதிகளில் இருந்து சென்னைக்கு தினமும் வந்து செல்கின்றனர். ஆண்டு தோறும் மாநகர போக்குவரத்து கழகம் மூலம் புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. குறிப்பாக உள்பகுதியில் உள்ள சாதாரண மக்களுக்கு போக்குவரத்து வசதி கிடைப்பதில் பெரிய பிரச்சினையாக உள்ளது. மாநகர பஸ்களுக்காக மணி கணக்கில் காத்திருக்கும் அவலமும் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 100 மினி பஸ்கள் இயக்கப் படும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி புதிய வழித்தடங்கள் பணியை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டது. வழித்தட தேர்வு முடிந்து, மாநகர போக்குவரத்து கழகத்திடம் ஒப்படைக்கப்பட் டுள்ளது. அடுத்து ஓரிரு மாதங்களில் சென்னையில் முதல்கட்டமாக 100 மினி பஸ்கள் இயக்கப்படவுள்ளது.

ஆவணி 23, 2012

தமிழ்க் கூட்டமைப்பு சர்வதேசத்திடம் மண்டியிடுவதனால் எதனையும் சாதித்துவிட முடியாது  - இனியபாரதி

வீரவசனங்களைப் பேசி தமிழ் மக்களை உசுப்பேற்றிய காலம் மலையேறிவிட்டது. மக்களின் இன உணர்வுகளைத் தூண்டி கேவலமான சுயநல அரசியலில் ஈடுபடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமிழ் மக்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். கொடூர யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதியினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினையும் வழங்க முடியும். இதனை விடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேசத்திடம் மண்டியிடுவதினால் எதனையும் சாதித்துவிட முடியாது. இந்த யதார்த்தத்தை உணர்ந்து தமிழ் மக்கள் ஜனாதிபதியின் கரத்தை கிழக்கு மாகாண சபைத் தேர்தல் மூலம் பலப்படுத்த ஒன்று திரள வேண்டும்.இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளரான வேட்பாளர் கே. புஸ்பகுமார் (இனிய பாரதி) தெரிவித்தார். (மேலும்....)

ஆவணி 23, 2012

வெள்ளவத்தை சடலங்கள்

தூக்கமாத்திரை கொடுத்தே மூவரும் கொலை செய்யப்பட்டிருப்பது ஊர்ஜிதம்

வெள்ளவத்தை பிரதேசத்தில் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கும் தூக்க மாத்திரை கொடுத்தே கொலை செய்யப்பட்டுள்ளமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகநபரான மகன் தனது தந்தை, தாய், சகோதரி ஆகிய மூவருக்கும் நாற்பது தூக்க மாத்திரைகளை குடிக்க கொடுத்துள்ளதாக சந்தேகிப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வெள்ளவத்தை, இராமகிருஷ்ண டெரஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை மூவரின் சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அங்கிருந்து தூக்க மாத்திரை அட்டைகள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான 27 வயதுடைய பிரசாந்த் மருந்துக் கம்பனி யொன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார். அத்துடன் சந்தேகநபர் தனது நண்பர் ஒருவருடன் பரிமாறிய மின்னஞ்சல் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவென இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பகுப்பாய்வு திணைக்களத்தின் அறிக்கையை வைத்தே இந்த சம்பவம் கொலையா, தற்கொலையா என்பன தொடர்பான இறுதி முடிவை மேற்கொள்ள முடியும்.

ஆவணி 22, 2012

சகல பல்கலைக்கழகங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டன

நாட்டிலுள்ள அனைத் துப் பல்கலைக் கழகங்க ளின் மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய சகல பீடங்களும் காலவரை யறையின்றி மூடப்படுவதாக உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களில் பல்வேறு மட்டங்களில் இடம் பெற்றுவரும் தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பல்கலைக்கழகங்களின் விரிவுரையா ளர்கள், உபவேந்தர்கள், மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர்களுடன் கடந்த 20 ஆம் திகதி நடத்திய பேச்சுவார்த்தை க்கு இணங்க இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்க அறிவித்துள்ளார். (மேலும்....)

ஆவணி 22, 2012

பூநகரி மக்கள் குடிநீரின்றி அசௌகரியம்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடும் வரட்சியினால் பூநகரிப் பகுதி மக்கள் குடிக்க நீரின்றி அலைந்து திரிவதுடன் ஒரு லீற்றர் நீரை ஒரு ரூபா கொடுத்துக் கொள்வனவு செய்கின்றனர். இந்த நிலையில் இந்த மக்களின் குடிநீரை அதிகாரத்தினைப் பயன்படுத்தி அபகரிக்கின்ற கடற்படையினர் தினமும் 2000 லீற்றர் நீரைக் குளிக்கப் பயன்படுத்துவதாகப் பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவிவருகின்ற கடும் வரட்சி காரணமாக மாவட்டத்தின் அனைத்துக் குளங்களும் என்றுமில்லாதவாறு வற்றியுள்ளதுடன் நிலத்தடி நீரும் குறைவடைந்துள்ளமையினால் மக்கள் குடிநீர் உள்ளிட்ட நீர்த் தேவைகளுக்காக அலைந்து திரிவதனைக் காணக்கூடியதாகவுள்ளது. குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மக்கள் இவ் வரட்சியின் முழுமையான தாக்கத்திற்கு உட்பட்டு குடிநீரைப்பெற்றுக் கொள்வதற்காக நாளாந்தம் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இப்பிரதேசத்தில் மக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கான நீரினை பணம் கொடுத்துப் பெற்று வருகின்றனர். அதாவது பூநகரிப் பகுதியில் ஒரு லீற்றர் தண்ணீர் ஒரு ரூபா கொடுத்துப் பெற்று வருகின்றனர். பிரதேச சபையினர் நீர் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோதிலும் அப்பிரதேச மக்களின் முழுத்தேவைகளையும் பூர்த்தி செய்யும் அளவிற்கு நீர் விநியோகம் இடம்பெறவில்லை.

ஆவணி 22, 2012

இலங்கை அகதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம்

இலங்கை அகதிகளை விடுதலை செய்யக்கோரி பூந்தமல்லி சிறப்பு முகாமை முற்றுகையிட முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வை.கோ உள்பட 500 இற்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர். போராட்டத்தின்போது திடீரென தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி தமிழகத்திற்கு கடல் வழியாக வந்த இலங்கை அகதிகளை, தமிழக பொலிஸார் கைது செய்து சிறப்பு அகதிகள் முகாம்களில் அடைத்து உள்ளனர். இதில் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஏற்பட்ட பிரச்சினையால், அங்கிருந்த சிலரை பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு அகதிகள் முகாமிற்கு மாற்றப்பட்டனர். (மேலும்....)

ஆவணி 22, 2012

பாலாவி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்க

இலங்கை விமானப்படைக்குரிய புத்தளம் பாலாவி விமான நிலையத்தினை உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு விமானப் போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் 1000 மீற்றர் கொண்ட விமான ஓடு பாதையினை 1500 மீற்றராக நீடிப்பதற்கும் இதில் சிறிய ரக விமானங்களை தரையிறக்குவதற்கு ஏதுவான வகையில் ஒழுங்குகளை மேற்கொள்வதற்கும் விமானப் போக்குவரத்து அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது அதிகரித்துள்ள நிலையில் அவர்கள் கற்பிட்டி, வில்பத்து சரணாலயம் உட்பட உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையிலான பகுதிகளுக்கு இலகுவாகச் செல்லக்கூடிய வகையில் இந்த விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இவ்வருட வரவு செலவுத்திட்டத்தில் உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அதன் கீழ் பாலாவி விமான நிலையம் துரிதமாக அபிவிருத்தி செய்யப்படும்.

ஆவணி 22, 2012

கொட்டகலையிலிருந்து கொழும்புக்கு அழைத்து வந்த இயமன்

அன்று பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. கூடுகளில் கண்ணயர்ந்து கொண்டிருந்த பறவைகள் இரை தேடுவதற்காக சிறகுகளை உல்லாசமாக விரித்து பறக்கத் தொடங்கின. ஊர்க் குருவிகளும் தமது சின்னஞ்சிறு சிறகுகளை அடித்தன. இருள் கௌவிக்கொண்டிருந்த வானம் சூரிய ஒளிக்கதிர்களைக் கண்டு மெல்லமாய் ஓடி ஒளிந்து கொண்டிருக்கையில் அழகிய கார் ஒன்று அந்த வீட்டு வாசலில் சர்ர்..என்று பிரேக் அடித்து நின்றது.மகனே வாடாப்பா! அம்மாவின் ஆனந்தக் கண்ணீர் ஆரத்தழுவி வரவழைக்க தந்தையும் பூரித்து நிற்கையில் ஒரேயொரு தங்கையும் அண்ணாவை கட்டியணைத்து அன்போடு வரவேற்றாள். அந்த மூவரும் ஒரே கட்டிலில் நிரந்தரமாக உறங்குவார்கள் என்று ஒருகணம் கூட எண்ணிப் பார்க்கவில்லை. அவர்கள். ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி இராணியப்பு தோட்டத்துக்குச் சென்று தலைமறைவாகியிருக்கும் சந்தேக நபரான மரண மடைந்துள்ள பெற்றோரின் மகனே அவர்களை 12ஆம் திகதி கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார். (மேலும்....)

ஆவணி 22, 2012

பகுத்தறிவு பாடல்கள் பாடுவதில் திறமை பெற்ற பட்டுக்கோட்டையார்

பாட்டுக் கட்டிப் பாடுவதே அவரது பணி. சிந்தனையைத் தூண்டும் தத்துவப் பாடல்கள் எழுதி, திரை உலகில் கொடி கட்டிப் பறந்தவர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள செங்கல்பத்தான்காடு என்னும் கிராமத்தில் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 13.04.1930ல் பிறந்தார்.  தந்தை பெயர் அருணாசலக் கவிராயர். தாயார் விசாலாட்சி. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள். இவர்களில் 4வதாகப் பிறந்தவர் கல்யாண சுந்தரம். மூத்தவர் கணபதி சுந்தரம். உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அண்ணன் கணபதி சுந்தரத்துடன் கல்யாண சுந்தரம் அரிச்சுவடி பயின்றார். அதோடு பள்ளிப்படிப்பு முடிந்தது. 2 ஆம் வகுப்புக்கு பிறகு பள்ளிக்கு போகவில்லை. அண்ணனிடமே சில ஆண்டுகள் அடிப்படைக் கல்வியையும், நாட்டு நடப்புகளையும் கற்றார். (மேலும்....)

ஆவணி 22, 2012

தரைக்கீழ் நீரை பாதுகாக்கத் தவறுவோமானால் நீருக்காக அலைய வேண்டிய நிலைமையேற்படலாம்

நிலத்தின் அடியில் மாசடையும் நீரை சுத்திகரிப்பதென்பது இயலாத காரியம். நீர்ப் பாதுகாப்பு சட்டங்கள் உருவாக்கப்படுவது அவசியம். நீரின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக ஒரு சொட்டு நீரின் விலை ஒரு சொட்டு பெற் றோலின் விலையை விடவும் கூடுதலான பெறுமதியை அடையக் கூடிய காலம் மிகவும் தொலை வில் இல்லை என்று ஆர்ஜென்டி னாவில் நடைபெற்ற ஐக்கிய நாடு கள் சபையின் நீரியல் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்ட சிரியாவின் பிரதிநிதியான சவூப் கெளல் கூறினார்.(மேலும்....)

ஆவணி 22, 2012

அவுஸ்திரேலியா செல்லமுற்பட்ட 69 பேர் நீர்கொழும்பில் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 69 பேர் நீர்கொழும்பு கடற்பரப்பில் இலங்கை கடற்படை யினரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையின் மேற்கு கடற்படைப் பிரிவினர் நீர்கொழும்பு கடற்பரப்பில் இவர்களை நேற்று கைதுசெய்திருப்பதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர். ரோலர் படகில் பயணித்த இவர்கள் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் பயணித்த ‘ஆஷா துவ’ எனும் படகும் கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களில் 48 தமி ழர்களும், 19 சிங்களவர்களும், 2 முஸ் லிம்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நீர்கொழும்பு, புல்மோட்டை, வவுனியா, மன்னார், யாழ்ப் பாணம், விஷ்வமடு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்ட இவர்கள் மோதரை மீன்பிடி துறைமுகத்துக்கு கடற்படையினரால் அழைத்துவரப் பட்டு,மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக் கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஆவணி 22, 2012

அம்பாறை மாவட்டத்தில்

8 ஆசனங்களுடன் ஐ. ம. சு. மு. அமோக வெற்றிபெறும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாரிய அளவில் வெற்றியீட்டவுள்ளது. இம் மாவட்டத்தில் எட்டு ஆசனங்களை முன்னணி பெறவுள்ளது. நீங்களும் இத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்து வெற்றியின் பங்காளியாக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தப் பிரதேசத்தில் மீதியாகவுள்ள குறைபாடுகளை நிர்த்தி செய்வதற்கு உங்கள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற இனிய பாரதி, புஸ்பராசா, செல்வராச போன்ற வேட்பாளர்களுக்கு நீங்கள் ஆதரவளித்து அவர்களை வெற்றிபெறச் செய்வதன் ஊடாக தமிழ் பிரதேசங்களில் பல்வேறு வகையான அபிவிருத்தித் திட்டங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்த நாட்டில் எந்தப் பகுதியிலும் பெளத்த, இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதங்கள் எந்த வேறுபாடுகளின்றி தத்தமது மத கலாசாரங்களைப் பேணி வாழ வசதிகளை அரசாங்கம் செய்துள்ளது. இதற்கு நீங்கள் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்க வேண்டும். (மேலும்....)

ஆவணி 22, 2012

மீண்டும் சென்னை திரும்பும் வட கிழக்கு மாநிலத்தவர்

வட கிழக்கு மாநிலத்தவர் தாக்கப்படுவதாக பரவிய செய்தி வதந்தி என உணர்ந்த வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மீண்டும் சென்னை திரும்பி வருவதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஒரு வார காலமாக வட கிழக்கு மாநிலத்தவர்கள், தாக்கப்படுகின்றனர் என நாடு முழுவதும் பரவிய வதந்தியால், ஆயிரக் கணக்கானோர், சென்னை உட்பட பல நகரங்களில் இருந்தும், தங்கள் சொந்த ஊர் சென்றனர். தாக்குதல் செய்தி வெறும் வதந்தி, அதற்கு பின்னால், வெளிநாட்டு சதி இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்து. சென்னையில் நடக்கும் பெரும்பாலான கட்டுமானப் பணிகளிலும், உணவகப் பணிகளிலும் வடகிழக்கு மாநிலத்தவரே பெரிய அளவில் பணிபுரிந்து வருவதால், ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. (மேலும்....)

ஆவணி 21, 2012

கண்ணீரின் உப்பு

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படை யினரின் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மத்திய அரசு, அளவுகடந்த அலட்சியத்துடன் நடந்து கொள்வது கவலையளிக்கிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வைச் சேர்ந்த 18 மீனவர்கள் 5 படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். வெள்ளப்பள்ளம் பகுதியில்அவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளனர். மீன்பிடி சாதனங்களை கடலில் அள்ளி வீசிய தோடு வலைகளையும் அறுத்துள்ளனர். இந்தத் தாக்குதலில் குப்புசாமி என்ற மீனவர் படுகாய மடைந்துள்ளார். மேலும் 7 மீனவர்கள் காய மடைந்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 21, 2012

நிதி சேர் இரவு விருந்து

(இந்த நிகழ்வை 1989 மே மாதத்திற்கு முந்தைய காலகட்டம், 1987 இல் இலங்கை இந்திய ஒப்பத்தம், 1977ம் ஆண்டு இலங்கையின் பொதுத் தேர்தல் போன்ற காலகட்டங்களின் தமிழரின் தலைமை என்று தம்மை விழித்துக் கொண்டவர்களுடன் இணைத்துப் பார்த்தால் அதற்கு நாம் பொறுப்பாளிகள் இல்லை)

அன்பார்ந்த நண்பர்களே!

2012 செப்டெம்பர் 8 ஆம் நாள் கிழக்கு மாகாண அவைத் தேர்தல் நடைபெற உள்ளதைத் தாங்கள் அறிவீர்கள்.  இத் தேர்தலில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறப் பொருள் வலுவும் மனித வலுவும் தேவைப்படுவதாகக் களச் செய்திகள் கூறுகின்றன. அவற்றை வழங்கி நம்மால் ஆன உதவியைச் செய்வோம். அதற்காக நிதி சேர்க்கும் முகமாக வருகிற ஞாயிற்றுக் கிழமை ஆகஸ்ட் 26ம் திகதி 5:30 மாலை Metropolitan Banquet Hall (3840 Finch Avenue East Scarborough) இல்  ஒரு நிதி சேர் இரவு விருந்து நடாத்த இருக்கிறோம். இவ் விருந்தில் தவறாது கலந்து கொண்டு ஆதரவு தாரீர்! மண் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் ததேகூ இன் கைகளை நாம் பலப்படுத்த வேண்டும். அரசியலுக்கு அப்பால் ததேகூ யை வெற்றிபெற வைக்க வேண்டிய இனநலம் சார்ந்த கடமை எமக்குண்டு! வெறும் கையால் முழம் போட முடியாது. பச்சைத் தண்ணீரில் பலகாரம் செய்ய முடியாது. இத்தேர்தலில் வெற்றி பெறுவதன் வாயிலாகக் கிழக்கு மாகாண மக்கள் தனது ஆட்சியை ஏற்றுத் தன்னோடு இருக்கின்றனர், தமிழ்மக்களுக்கு அரசியல் அடிப்படையிலான சிக்கல் ஏதும் இல்லை எனப் பன்னாட்டுச் சமூகத்துக்குக் காட்டலாம், தனது கைப்பொம்மையான ஒருவரை முதலமைச்சர் ஆக்கி அவரது ஒப்புதலோடு மாகாண அவைக்கு வழங்கப்பட்டுள்ள நிலம், காவல்துறை உள்ளிட்ட முதன்மையான அதிகாரங்களை மீளப்பெற்று விடலாம், அதன் பின்பு வலுவற்ற ஒரு மாகாணசபையைத் தமிழருக்குத் தீர்வாகக் காட்டலாம் எனச் சிறீலங்கா அரசு எண்ணுகிறது.  அரச தரப்பைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருமிடத்து தனது எண்ணத்தை மகிந்த அரசு நிறைவேற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. இதைத் தமிழராகிய நாம் அனுமதிக்க முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். (மேலும்....)

ஆவணி 21, 2012

அனைவரும் சட்டம் அறிவோம் 

இன்று படித்தவர்களிடம் கூட சட்டம் பற்றிய அறிவு என்பது குறைவாகவே இருக்கிறது. இன்றுள்ள சமூக சூழ்நிலையில் நீதிமன்றம் செல்வதும், போலிஸ் ஸ்டேசனுக்கு செல்வதும் யாராலும் தவிர்க்கவே முடியாத ஒன்றாகும். நமக்கு அரசால், பக்கத்து வீட்டுகாரர்களால் , ஏன் சொந்த பந்தங்களால் கூட ( உயிரை போல் நேசித்த கணவன், மனைவியால் கூட ) எதாவது பிரச்னை ஏற்படவே செய்கிறது. எனக்கு சட்டம் தெரியாது அதனால் நான் இந்த சட்ட மீறலை செய்து விட்டேன் என்று யாரும் கூறவே முடியாது. ஏனெனில் இந்த நாட்டில் பிறந்த அல்லது வசிக்கும்  ஒவ்வொருவருக்கும் சட்டம் தெரிந்ததாகவே அனுமானிக்கப்படும். நம்மால் முழுமையான சட்ட நிபுணராக முடியாவிட்டாலும், நமக்கு அடிப்படையாக தேவைப்படகூடிய அளவிற்கு சட்ட அறிவை நாம் வளர்த்துக் கொள்ளவே வேண்டும்.  (மேலும்....)

ஆவணி 21, 2012

இணைந்து போராடுவோம்

சுவிட்சர்லாந்தில் வாழும், தமிழர்கள், சிங்களவர்களுக்கு இடையில் பரஸ்பர புரிந்துணர்வையும், நல்லெண்ணத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. சென் காலன் நகரில் நடந்த நிகழ்வில், புலம்பெர்ந்த இலங்கையர் சங்கமும், சுவிஸ் மனித உரிமை ஸ்தாபனங்களும் ஒழுங்கு படுத்தி இருந்தன. இலங்கையில் மனித உரிமைகளையும், ஜனநாயகத்தையும் மேம்படுத்துவது பற்றி பேசப் பட்டது. குறிப்பாக வட பகுதி தமிழர்களின் பிரதேசம், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, நிலங்கள் தனியாருக்கு விற்கப் படும் பிரச்சினை குறித்தும் அலசப் பட்டது. ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்திற்காக தெரிவான குழு, 18 ஆகஸ்ட் அன்று, தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.

ஆவணி 21, 2012

ஐ.நா. அங்கீகரித்த, "நாடு கடந்த க்மெர் ரூஜ் அரசாங்கம்"

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை, ஐ.நா. மன்றம் அங்கீகரித்து, சபையில் ஒரு ஆசனத்தையும் ஒதுக்கிக் கொடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த சந்தர்ப்பத்தில், தமிழர்கள் பூமிக்கும் வானத்திற்கும் இடையில் துள்ளிக் குதித்து குதூகலிப்பார்கள். க்மெர் ரூஜ் இயக்கத்தின், "நாடுகடந்த கம்பூச்சிய அரசு", குறைந்தது பத்து வருடங்களாவது ஐ.நா. சபையில் அங்கம் வகித்தது. அதற்கு அமெரிக்காவும் பூரண ஆதரவு வழங்கியது. ஆனால், இன்று க்மெர் ரூஜின் நிலை என்ன? ஐ.நா. நீதிமன்றத்தின் முன் குற்றவாளிகளாக நிறுத்தப் பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை என்பது, உலக மகா அயோக்கியர்களின் கூட்டணி என்பதை பலர் உணர்வதில்லை. ஏகாதிபத்திய நாடுகளின் கைப்பொம்மையாகவே ஐ.நா. செயற்பட்டு வந்துள்ளது.
(Kalaiyarasan Kalai)

ஆவணி 21, 2012

வதந்திகளைத் தடுத்து  நம்பிக்கையை வளர்த்திடுக!
குடிமக்கள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் சென்று வாழ இந்தியாவின் அரசமைப்பு சாசனம் உரிமை அளித்திருக்கிறது. அதன் அடிப்படையில் ஒரு மாநிலத்து மக்கள் மற்ற மாநிலங்களுக்குச் சென்று பிழைப்புத் தேட முடியும் என்ற அளவில் ஒருமைப்பாடும் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. சமத்துவமற்ற சமூகப் பொருளாதார வளர்ச்சி நிலையில், ஒரு மாநில மக்கள் மற்றொரு மாநிலத் தில் சென்று தொழில்களிலும் வேலைகளிலும் கல்விப் பயிற்சிகளிலும் ஈடுபடுகிறபோது அந்நிய இடத்தில் இருப் பதாகக் கருதுவதில்லை. சொந்த நாட்டின் வேறொரு பகுதியில்தான் இருக்கிறோம் என்றே உணர்கிறார்கள். (மேலும்....)

ஆவணி 21, 2012

வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக வதந்தி  இணையதளங்கள் முடக்கம் தொடர்கிறது

பிறமாநிலங்களில் வசிக் கும் வடகிழக்கு மாநில மக் களிடம் பீதியை உண் டாக்கும் வகையில் பொய் யான தகவல்களை வெளி யிட்ட மேலும் 250 இணை யதளங்களை முடக்க மத் திய அரசு உத்தரவிட்டது. மக்களிடையே பீதி உணர்வுகளைக் கிளப்பி விடும் வகையில் சிதைக்கப் பட்ட படங்களையும், வீடி யோக் களையும் வெளி யிட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட இணைய தளங் களைத் தடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது வரை 130இணையதளங்கள் தடுக்கப்பட்டுள்ளன. மற்ற வைகள் விரைவில் தடுக்கப் படும் என்று மத்திய உள் துறை அமைச்சக அதிகாரி கள் கூறினர்.  சர்வதேச அமைப்பு களில் சர்ட்-இன் ஆய்வு முடிவு கள் குறித்து எழுப்புவது குறித்தும் அரசு ஆலோ சித்து வருகிறது. அண்மைக் காலங்களில் இந்தியா மீது சைபர் குற்றங்களை கிளப் பிவிடும் பெரும் முன்னு தாரணமாக அரசு இதை கருதுகிறது.
(மேலும்....)

ஆவணி 21, 2012

அசாஞ்சே கைதானால் கடும் விளைவுகள் ஏற்படும்  பிரிட்டனுக்கு ஈகுவடார் நட்பு நாடுகள் எச்சரிக்கை

பிரிட்டனில் உள்ள ஈகு வடார் தூதரகத்தில் தஞ்ச மடைந்துள்ள விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டன் காவல்துறை தூதரகத்திற் குள் நுழைந்து அத்துமீறி கைது செய்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரி டும் என ஈகுவடார் நட்பு நாடுகளின் கூட்டமைப்பு ‘அல்பா’ பிரிட்டனை எச் சரித்துள்ளது. அமெரிக்காவின் பல் வேறு சதித்திட்டங்கள் மற் றும் பல்வேறு அத்துமீறிய செயல்பாடுகளை விக்கி லீக்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தின் மூலம் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகிறது. இதனால் உலக அளவில் அமெரிக்காவின் உண்மை முகம் தெரிய வந்தி ருக்கிறது. இதனால் எரிச்ச லடைந்த அமெரிக்கா, எப் படியாவது அசாஞ்சேவை கைது செய்து அமெரிக்கா விற்கு கொண்டு வர வேண் டும் என பல்வேறு முயற்சி களை செய்து வருகிறது. (மேலும்....)

ஆவணி 21, 2012

அவுஸ்திரேலியா சென்று கொண்டிருந்த 2 படகுகள் திருமலை கடலில் வழிமறிப்பு

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக இரண்டு வள்ளங்கள் மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 83 பேரை திருகோணமலை கடலில் கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை கடலில் கிழக்கு பகுதியில் சுமார் 15 கடல் மைல் தூரத்தில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு படகுகளையும் நேற்றுக் காலை கடற்படையினர் வழிமறித்து கைது செய்தனர். முதலாவது படகில் 39 பேர் பயணித்தனர்.31 தமிழரும், 8 சிங்களவர்களும் இதில் இருந்ததாகவும் இவர்களுள் ஒரு பெண்ணும் 4 பிள்ளைகள் இருந் துள்ளனர்.  அடுத்த வள்ளத்தில் 35 தமிழர் களும் 6 சிங்களவர்களும், 3 முஸ்லிம்களுமாக ஒரு பெண் உட்பட 44 பேர் பயணித் துள்ளனர். நேற்று பிற்பகல் திரு§ காணமலை கடற்படை முகாமுக்கு அழைத்து வரப்பட்ட இவர்கள் முதற்கட்ட விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற் படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.‘காவந்தினி’, ‘பிரசன்ஷனிதுவ’ என்ற இந்த இரண்டு வள்ளங்களிலும் அதிகளவு பயணிகளை ஏற்றியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டில் நேற்றுவரை சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற ஆழ்கடல் வள்ளங்கள் 25ஐ கைப்பற்றி யுள்ளதுடன், இதன் மூலம் 1047 பேரின் உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளது.

ஆவணி 21, 2012

கிழக்கில் தேர்தலை பாதிக்கும் பாரிய வன்முறைகள் இல்லை - தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கபே

கிழக்கு மாகாணத்தில் ஒருசில தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளபோதும், தேர்தல் செயற்பாடுகளைப் பாதிக்கு மளவிற்கு எதுவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் அங்கு இதுவரை இடம்பெறவில்லையென தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை இரண்டு வன்முறைச் சம்பவங்களே பதிவாகியிருப்பதாக கபே அமைப்பின் தலைவர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பணிகளை அமைதியாக நடத்தக்கூடிய சூழ்நிலையே தற்பொழுது அங்கு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலை விட இம்முறை கிழக்கு மாகாணத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படுகிறது. ஆங்காங்கே ஒருசில வன்முறைச் சம்ப வங்கள் பதிவாகியுள்ளபோதும், பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லையென கீர்த்தி தென் னக்கோன் தெரிவித்தார். அதேநேரம், கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான தேர்தல் சுவரொட்டிகள், கட்டவுட்டுக்கள் என்பன 99 வீதம் அகற்றப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆவணி 21, 2012

மீண்டும்

யசூசி அக்காஷி இன்று இலங்கை விஜயம்

ஆறு நாள் உத்தி யோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் யசூசி அக்காஷி இன்று இலங்கை வருகிறார். இலங்கையில் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தங்கியிருக்கும் அக்காஷி அரசாங்கத்தின் முக்கியப் பிரதிநிதிகள் ஆளும் மற்றும் எதிர்க் கட்சிகளின் முக்கியஸ் தர்கள், சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.இதேவேளை, வட மாகாணத்தில் மோதல் இடம்பெற்ற பகுதிகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகளை கண்டறிவதற்கென இவர் வடக்குக்கு நேரில் விஜயம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்ப தாகவும் ஜப்பானிய தூதரகம் தெரிவித்தது. நாட்டில் முன்னெ டுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம், முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர் வாழ்வளித்தல், மோதல் இடம்பெற்ற பகுதிகளில் மீள்கட்டுமானப் பணிகள் முன்னெடுத்தல் ஆகிய அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு மத்தியில் அண்மையில், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரை களை அமுல்படுத்துவது தொடர்பான தேசிய வேலைத் திட்டமொன்றும் வெளியாகியுள்ள நிலையில் ஜப்பானின் விசேட சமாதானத் தூதுவர் அக்காஷியின் இலங்கைக்கான விஜயம் பொருத்தமானதாக அமையுமென நம்புவதாக ஜப்பானிய தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டு அக்காஷி இப்பதவியை ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து இவர் இன்று 22 வது தடவையாக இலங்கை வருகிறாரென்பது குறிப்பிடத்தக்கது.

ஆவணி 20, 2012

''பெண்கள் தங்கள் உரிமையை இழக்கக் கூடாது.'' - போராடு்ம் வேதநாயகி

வேலூர் மாவட்டம் ராணிபேட்டையைச் சேர்ந்தவர் வேதநாயகி. கடந்த ஐந்து வருடத்துக்கும் மேலாக வேலூர் மக்களிடையே மதிக்கப்படும் ஒருவராக இருப்பவர். இவர் தலைமையில் இயங்கும் 'தென்றல் இயக்கம்’ பெண்களுக்காகப் பல வகையிலும் பாடுபட்டுவருகிறது.  வேலூரில் உள்ள பெரியார் பூங்காவில் ஒரு மாலை நேரத்தில் வேதநாயகியைச் சந்தித்தேன். ''பெண்ணியம் பற்றி பேசுபவர்களைப் பற்றி சமூகம் வித்தியாசமாக நினைப்பதை மாற்ற முடியவில்லை. பெண்ணியம் என்றால் ஆண்களைவிட உயர்வாக இருப்பது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.  பெண்ணியம் என்பது ஆண்களுக்குச் சமமாக இருப்பது என்பது மட்டுமே: நம் நாட்டில் குழந்தைகள் முதல் திருமணமான பெண்கள் வரை எவ்வளவு பேர் ஆண்களிடம் சிக்கிச் சீரழிந்து இருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியும். ஏன், இதை நானே அனுபவித்தேன். எனக்கு நான்கு அக்கா. இருவர் திருமணமாகி அவர்களுடைய கணவர்களிடம் பட்ட பாட்டை கண் முன்னே பார்த்து வளர்ந்தேன். அப்போது எனக்கு 10 வயது. அப்போதே எந்தக் காலத்திலும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது  என்று முடிவு செய்தேன். (மேலும்....)

ஆவணி 20, 2012

அமெரிக்க நாடுகள் அமைப்பில் அமெரிக்கா சங்கடங்களைச் சந்திக்கும்

வாஷிங்டனில் வரும் வெள்ளியன்று நடைபெற வுள்ள அமெரிக்க நாடுகள் அமைப்பின் வெளியுற வுத்துறை அமைச்சர்கள் கூட்டம் ஈகுவேடர் நாட்டுக் கும் பிரிட்டனுக்கும் இடை யில் நிலவிவரும் ராஜதந்திர உறவில் ஏற்பட்டுள்ள பூசல் குறித்து ஆழமாக விவாதிக் கும் என்று அமெரிக்க நாடு கள் அமைப்பு கருத்து தெரி வித்தது. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கேக்கு லண்டனில் உள்ள ஈகுவே டர் தூதரகத்தில் பதுங்கியி ருந்த போது அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்தது. இதனால் பிரிட்டனுக்கும் ஈகுவேடருக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது. லண்ட னில் தங்கியிருந்த அசாங்கே அமெரிக்க அரசின் பல ரகசியங்களை வெளியிட்டு வந்தார். (மேலும்....)

ஆவணி 20, 2012

ஈரோஸ் கட்சி அலுவலகம் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு, பூம்புகார் பகுதியில் உள்ள ஈரோஸ் கட்சி அலுவலகத்தின் மீது இன்று காலை பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனந்தெரியாதோரால் அதிகாலை 1.40 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஆவணி 20, 2012

ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்புகள் 

(ந. முருகேசபாண்டியன்)

யாழ்ப்பாணம் பெண்கள் ஆய்வு வட்டம் சார் பில் வெளியான ‘சொல்லாத சேதிகள்’ தான் தமி ழில் வெளியான முதல் பெண் கவிதைத் தொகுப்பு. எட்டுப் பெண் கவிஞர்களின் இருபத்து மூன்று கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. அதே நூல் சிறிய திருத்தமுடன் 1987ஆம் ஆண்டு சிலிக்குயில் பதிப்பகத்தினரால் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. இத்தொகுப்பில் இடம் பெற்ற சிவரமணியும் செல்வியும் உலகிலிருந்து அகற்றப் படவில்லை. ஏனையோர் வெவ்வேறு இடங்க ளில் உறைந்துள்ளனர். சிங்கள ராணுவத்துடன் முரண்பட்டுப் போராடும் சூழலில், அகப் போராளி இயக்கத்தினருடன் முரண்பாடு நிற்கும் நிலையை ‘சொல்லாத சேதிகள்’ சொல்ல முயன்றுள்ளன. (மேலும்....)

ஆவணி 20, 2012

சட்டவிரோத அவுஸ்திரேலிய பயணம்

30 நாட்கள் கடலில் தத்தளித்த பேர் கடற்படையால் மீட்பு

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக கடந்த ஜுலை 17 ஆம் திகதி புறப்பட்டுச் சென்று வள்ளம் பழுதடைந்த நிலையில் ஆழ் கடலில் நீர் ஆகாரமின்றி 30 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த 30 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையின் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இலங்கைக்கு தென் கிழக்கு பகுதியில் 300 கடல் மைல் தொலைவில் அஷேன் புதா-2 என்ற ஆழ்கடல் வள்ளம் பழுதான நிலையில் இருப்பதாக கடற்படைக்கு கிடைத்த தகவலையடுத்து மீட்புப் பணிகளை கடற்படையினர் ஆரம்பித்தனர். கடந்த ஜுலை மாதம் 18 ஆம் திகதி நீர்கொழும்பிலிருந்து புறப்பட்ட மேற்படி வள்ளத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பகுதிகளைச் சேர்ந்த 19 தமிழர்களும் 11 சிங்களவர்களும் பயணித்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 20, 2012

சீன மாணவி உலக அழகியாக தேர்வு

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் தொங்க்செங் என்னுமடத்திலுள்ள உடற்பயிற்சி மைதான அரங்கில் உலக அழகி போட்டி நடைபெற்றது. உலகிலுள்ள பல நாட்டு அழகிகள் கலந்து கொண்ட இப் போட்டியில் இந்தியா சார்பாக வண்யா மிஸ்ரா என்ற அழகியும் கலந்து கொண்டார். பல்வேறு சுற்றுகளாக நடந்த இப்போட்டியில் இறுதியாக சீன அழகி வெண் சியா யு தேர்வு பெற்றார். பலவண்ண விளக்குகள் மின்னிய அரங்கில் கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலா அழகி இவியன் சார்கோஸ் தனது தங்க கிரீடத்தை சீனா அழகி வெண் சியா யுவுக்கு சூட்டி மகிழ்ந்தார். இசை பயிலும் மாணவியான 23 வயது உலக அழகிய வெண் சியா யு தான் ஒரு இசை ஆசிரியையாக வர விரும்புவதாக அப்போது கூறினார். வேல்ஸ் அழகியான சோபி மோல்ஸ் இரண்டாவதாகவும், ஆஸ்திரேலியா நாட்டின் அழகி ஜெசிக்கா கஹவாட்டி மூன்றாவது அழகியாகவும் தேர்வு செய்யப்பட்டு பட்டங்கள் சூட்டப்பட்டனர்.

ஆவணி 20, 2012

வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட சடலங்கள் கொலையா? தற்கொலையா?

கொழும்பு வெள்ளவ த்தை இராமகிருஷ்ண டெரஸ் ஒழுங்கையி லுள்ள வீடொன்றிலிரு ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கொழு ம்பு தேசிய வைத்திய சாலையில் நேற்று நடக்கவிருந்த பிரேத பரிசோதனைகள் இன் றைய திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட தனால் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்பது குறித்து எதையும் திட்டவட்டமாக கூற முடியாதிருப்பதாக பொலிஸ் பேச்சாளரும் வெள்ளவத்தை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரும் கூறுகின்றனர். சம்பவத்தில் ஹட்டன் கொட்டகலைப் பகுதியைச் சேர்ந்த தாயும் தந்தையும் மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் சங்கிலி குமாரசாமி (56), அவரது மனைவி பூபவதி (54), மற்றும் அவர்களின் மகளான அனித பிரியா (25) என பொலிஸார் ஊர்ஜிதம் செய்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 20, 2012

முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து ஆட்சி?

தமிழ் மக்களை ஏமாற்றிப் பிழைக்க தமிழ்க் கூட்டமைப்பு நாடகம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சிய¨ மக்கப் போகிறார்களாம். இதனைத் தமிழ் மக்கள் நம்ப வேண்டுமாம். சம்பந்தனின் இந்நாடகத்தை பகுத்தறிவுள்ள எந்தத் தமிழனும் ஏற்கமாட்டான். இது ஒரு பகற் கனவு. இவ்வாறு கூறுகிறார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன். கிழக்கு மாகாண சபைக்கான அம்பாறை மாவட்ட ஐ.ம.சு. முன்னணி வேட்பாளர் சோ. புஸ்பராசாவை ஆதரித்து சொறிக்கல் முனையில் அவரது பணிமனை முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காரைதீவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது, 2008 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலை இந்த த. தே. கூட்டமைப்பு புறக்கணித்தது. இதற்கு அப்போது சம்பந்தர் கூறியது, கிழக்கு மாகாண சபை என்று ஒன்றில்லை. (மேலும்....)

ஆவணி 20, 2012

இனப்பிரச்சினைக்கு வெளிநாட்டில் அல்லது இந்தியாவில் அல்லது ஐ.நாவிலிருந்து ஆலோசனைகள் அவசியமில்லை

இலங்கை மக்களே ஐக்கியமாக தீர்வொன்றை காணவேண்டும்

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

ந்த யோசனைகளின் படி கிராம மட்டத்திலான 3,000 உள்ளூராட்சி மன்றங்களை ஏற்படுத்துதல் அவற்றுடன் மாவட்ட, மாகாண அடிப்படையில் இருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்து பாராளுமன்றத்தில் 2வது பேரவைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் போன்ற விதிமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த 2வது சபையில் எல்லாமாக 75 அங்கத்தவர்கள் இருப்பார்கள் என்றும் இதில் 50 பேரை 25 மாவட்ட சபைகள் தெரிவு செய்யும் என்றும் எஞ்சிய 25 இடத்திற்கு ஜனாதிபதி உறுப்பினர்களை நியமிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும் ஜே. ஆர். ஜயவர்தனவின் அரசாங்கத்தில் தமிழர்களுக்கு எதிரான கொள்கையை தீவிரமாகக் கடைப்பிடித்த சிறில் மத்தியூ இந்த யோசனையை பகிரங்கமாக எதிர்த்தார். (மேலும்....)

ஆவணி 19, 2012

ஆவணி 19, 2012

பேராசிரியர் கைலாசபதியின் மகள்

அமெரிக்க நகரசபையின் உறுப்பினராக சுமங்களா!

இலங்கையின் புகழ் பூத்த பேரா சிரியர் கைலா சபதி யின் புதல்வி சுமங்களா கைலாசபதி அமெரிக்காவில் மிக்சிகன் மாநிலத்தில் உள்ள ஆன்ஆபர் நகர சபை உறுப்பினராக தெரிவாகி உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட் பாளராக போட்டியிட்ட இவர் கடந்த 7 ஆம் திகதி சக வேட்பாளரை வாக்கெடுப்பில் தோற்கடித்தார். சுமிக்கு வயது 45. இவர் கடந்த 19 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகின்றார். ஆன்ஆபரில் கடந்த 19 வருங்களாக வாழ்கின்றார். இவர் பொருளியலிலும், அரசியல் விஞ்ஞானத்திலும் தனித் தனியாக இளமாணி பட்டங்கள் பெற்றவர். அரசியல் விஞ்ஞானத்தில் பட்டப் பின் படிப்புக்கள் படித்தவர். கிழக்கு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் விரிவுரை யாளராக 10 வருடங்கள் கடமை ஆற்றி உள்ளார். அங்கீகாரம் பெற்ற கணக்காளராக நிறுவனம் ஒன்றில் கடமை ஆற்றி வருகின்றார். இவர் கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் வெற்றி ஈட்டி இருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும்.

ஆவணி 19, 2012

புலிகள் காலத்தில் ஒன்று, மடிந்த பின்னர் வேறொன்று

சுயமாகக்கூட சிந்திக்க தெரியாதவர்கள் அரசியலில்! சம்பந்தர் பயந்த கோழ - சந்திரகாந்தன்

2008இல் பிரிக்கப்பட்ட கிழக்கில் போட்டியிடுவது தமிழர்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம் என்று சொல்லிவிட்டு இன்று புலித் தலைமை மடிந்தபின்னர் என்ன கூறுகிறார்? அதிகாரம் மிக்க முதலமைச்சரையும் கிழக்கு மாகாணசபையையும் உருவாக்க காலத்தின் கட்டாயம் கருதி கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார்களாம்...!அப்படி என்றால் 2008 இல் எம் மக்களுக்கு அதிகாரங்களும் தீர்வுகளும் தேவையான விடயங் களாக இருக்கவில்லையா என்று தமிழ் மக்கள் விடுத லைப்புலிகள் கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களுக்குப் பணியாற்றவென்றே நாம் புறப்பட்டோம். நாம் தலைநிமிர்ந்து நிற்கின்றோம் ஆனால் சம்பந்தர் மிகவும் பயந்த ஒரு கோழை. நான் ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால் சந்திரிகா கொண்டு வந்த தீர்வுப் பொதியில் தமிழர்களுக்கு மிகவும் வலுவானதும் நியாயமானதுமான பல்வேறுபட்ட அதிகாரங்கள் மலிந்து காணப்பட்டன என்று சம்பந்தர் மிக அண் மையில் ஒரு கருத்தினை வெளியிட்டிருந்தார். (மேலும்....)

ஆவணி 19, 2012

டெசோவின் தீர்மானங்களில்தனிநாடு குறித்து ௭துவுமில்லை - விக்கிரமபாகு

டெசோ மாநாட்டு தீர்மானங்களில் தனி நாடு தொடர்பாக ௭துவும் இருக்கவில்லை. தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வேண்டும். யுத்தத்தால் இடம் பெயர்ந்த மக்கள் சகல வசதிகளுடன் சொந்த இடங் களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும் போன்ற விடயங்களே அத்தீர்மானங்களில் முக்கியத்துவம் பெற்றிருந்தன என கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மொத்தத்தில் இத்தீர்மானங்கள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தைப் போலவே இருந்தன. இலங்கை அரசு நியமித்த கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் இந்த 14 பிரேரணைகளை விடச்சிறந்தவை. இதை நான் டெசோ மாநாடு நடைபெற்ற தினத்தன்று காலை இடம்பெற்ற பிரதிநிதிகளின் கருத்தரங்கில் விளக்கிக் கூறினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளன. இதையும் நான் அந்தக் கருத்தரங்கில் தெரிவித்தேன். இலங்கையில் அதிகாரத்தில் உள்ளவர்கள் தமிழ் மக்களுக்கு ௭துவும் செய்யமாட்டார்கள் ௭ன்ற நிலைப்பாடே இந்நிகழ்வில் கலந்து கொண்ட தலைவர்கள் மத்தியில் காணப்பட்டது. இம்மாநாட்டில் நான் 13 ஆவது சட்டத்திருத்தத்திற்கு அப்பால் சென்று தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் ௭ன வலியுறுத்தினேன் ௭ன்றும் கூறினார்.

ஆவணி 19, 2012

Rajani

Rajasingham was brutally gunned down at Thirunelvely, as she was cycling back home from the Jaffna University. She was Professor of Anatomy at the Jaffna medical faculty. The 35 year old mother of two daughters was also a human rights activist, feminist, critic of narrow nationalism and opponent of irresponsible militarism. Her husband,Dayapala Thiranagama in a recent article on Rajini has referred to the manner in which she was killed. Here is the relevant excerpt; “The armed confrontation between the Tamil Tigers and the IPKF was at its peak at the time and no dissent was tolerated. She had had links with the LTTE and had treated injured Tamil militants before at the inception of Tamil tiger militancy. Then they were only a small band of armed men. Times had changed. Her assassins had been waiting for her on her way home after work at the Medical Faculty and she was gunned down near her home in Kokuvil, Jaffna on 21st September 1989 about 4.00pm.”(more....)

ஆவணி 19, 2012

ஆவணி 19, 2012

ஐ.நா மனித உரிமை அதிகாரிகள் குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதிகாரிகள் குழு அடுத்த மாதம் 14 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளை இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை நேரில் பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாது ௭ன்று அரசாங்கம் இதுவரை கூறிவந்தது. ஆனால் தற்போது, அரசாங்கம் அதற்கு அனுமதியை வழங்கியுள்ள நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் மூன்று அதிகாரிகளைக் கொண்ட குழு அடுத்தமாதம் கொழும்பு வரவுள்ளது. இந்தக் குழுவினர் இலங்கையின் வடக்குப் பகுதிகளுக்கு மட்டுமன்றி, தென்பகுதிக்கும் சென்று அங்குள்ள மனித உரிமைகள் நிலை குறித்து மதிப்பீடு செய்யவுள்ளனர் ௭னவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆவணி 19, 2012

தாய், தந்தை, மகள் மூவரும் வெள்ளவத்தையில் சடலமாக மீட்பு

கொழும்பு வெள்ளவத்தையில் தாய்,தந்தை,மகள் மூவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன சற்றுமுன் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். வெள்ளவத்தை இராமகிருஷ்ணா வீதியில் உள்ள வீடொன்றிலேயே இவர்களுடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்டார்களா, தற்கொலை செய்துகொண்டார்களா போன்ற விபரங்கள் இதுவரை அறியக்கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ஆவணி 19, 2012

ஆவணி 19, 2012

TNA யுடன் மு.கா இணைவது புலிகளுடன் கூட்டுக்கு சமம்!

புலிகளின் குரலாக இன்றும் செயற்பட்டுவருவதாக முஸ்லிம் மக்களால் நம்பப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள மறைமுகமான இரகசிய உடன் பாடானது முஸ்லிம் மக்களிடையே பாரிய எதிர்ப்பலை யையும் அதிருப்தியையும் உருவாக் கியுள்ளது. இது புலம் பெயர் தமிழர்களினதும், புலி ஆதரவாளர்களினதும் நிகழ்ச்சித் திட்டத் திற்கமையவுள்ள சூழ்ச்சிக்கு வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்களை அடகு வைப்பதற்குச் சமனாகும். வடக்கையும் கிழக் கையும் இணைக்கும் புலி ஆதரவு சர்வதேச சதித்திட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் துணை போவதுடன் முஸ்லிம்களுக்கு துரோகமிழைக்கும் நயவஞ்சகச் செயலுமாகும். (மேலும்....)

ஆவணி 19, 2012

அதிகாரம் கொண்ட ஆட்சியும் ஆளுமை மிக்க உறுப்பினர்களும்

தமிழ்பேசும் மக்களைப் பொறுத்தவரையில் கிழக்கு மற்றும் சபரகமுவ மாகாணம் உட்பட தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் தமிழ்பேசும் கட்சிகள் சில போட்டியிட்டாலும் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்பேசும் வேட்பாளர்களையே மக்கள் நிச்சயம் ஆதரிப்பர். கிழக்கு மாகாணசபையை யார் கைப்பற்றுவது என்பது குறித்தே பலரதும் கவனம் இப்போது சென்றுள்ளது. இம்மாகாண சபையானது இம்முறையும் ஆளுங்கட்சி வசம்தான் என்பது உறுதி என்றாகி விட்டது. தெற்கு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி யின் அரசாங்கத்தின் அசுர வேகத்திலான மாகாண அபிவிருத்தியும், அக்கட்சியின் தெரிவாக இடம்பிடித்துள்ள திறமையுள்ள வேட்பாளர் களும் சாட்சியாக அமைந்துள்ளனர். முன்னாள் மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனின் கட்சி உட்பட அமைச்சர்களான அதாவுல்லா, ரிசாத் பதியுதீன் ஆகியோரின் தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் களமிறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் இத்தேர்தலை ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் பார்வையிடாது மக்களுக்குச் சேவை செய்யும் ஒன்றாக நோக்குகின்றனர். (மேலும்....)

ஆவணி 19, 2012

யாழ்தேவியும் இந்தியாவும்

வடக்கு கிழக்கில் மக்கள் திரும்பாத கிராமங்கள் இருக்கின்றன. அதைப்போலவே திறக்கப்படாது மூடுண்ட வீதிகளும் இன்னமும் இருக்கின்றன. வாழ்க்கை மூடுண்ட வரலாற்றுச் சோகத்தில் வாழும் மக்களுக்கு வாழ்க்கை திரும்புதல் என்பது உண்மையில் எப்படியிருக்கும்? என்றே கேட்கத் தோன்றுகிறது. தமிழ் மக்களின் வாழ்க்கை திரும்புதல் என்பது எப்படியிருக்கும் என்பதை மெய்யான புரிதலுடன் நேர்மையாக அணுகுவது முக்கியமானதாகும். இந்தியா தமிழர்களுக்காக அக்கறையோடு இருக்கிறது! இந்தியா தமிழர்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும்!! இந்தியா யாழ் தேவி ரயிலை திருப்பி அனுப்பும்!! என்கிற அறிக்கைகள் இரண்டு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவைக் காப்பாற்றுவதைக் குறித்து முயற்சிக்கிறதே தவிர அது தமிழர்களின் வாழ்வை திருப்பிக் கொடுக்குமா என்பதே முக்கியமானது. (மேலும்....)

ஆவணி 19, 2012

இலங்கைக்கு தீங்கு ஏற்படுவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது - இந்திய ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி

தமிழ் நாட்டின் மூலம் இலங்கைக்கு தீங்கு ஏற்பட இந்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டாது. இலங்கைத் தீவை பாதுகாப்பதற்கு இந்தியா இருக்கிறது என்று அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனதாக் கட்சியின் தலைவருமான டாக்டர் சுப்ரமணியன் சுவாமி கூறினார். தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் எல்.டி.டி.ஈ யினருக்கு ஆதரவாக செயல்படுவது பற்றி சுப்ரமணியன் சுவாமி எடுத்துரைக்கையில் இலங்கை இந்த விடயத்தில் அதிக அக்கறை செலுத்தக் கூடாது. அங்குள்ள பெரும்பான்மையான மக்கள் ஈழக் கோரிக்கைக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் என்பதால் இலங்கையர்கள் அவர்களை அசட்டை செய்யப் பழகிக்கொள்ள வேண்டுமென்று கூறினார். (மேலும்....)

ஆவணி 19, 2012

சிரியா

அஸாத்தின் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி?

ஏறத்தாழ 17 மாதங்களுக்கு முன்னர் பஷீர் அல் அஸாத்தின் அரசுக் கெதிரான போராட்டங்கள் சிரியாவில் ஆரம்பித்திலி ருந்து, தினந்தோறும் செய்திகளை ஆக்கிரமித்தது சிரியா. ஒவ்வொரு நாளும் சிரியா பற்றிய செய்திகளை வாசிப்பவர்களுக்கும் இது எதில் போய் முடியப்போகின்றது என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது. சிரிய மோதல்களில் வெளித்தலையீடுகள் அவசியம் என்று மேற்குலக ஊடகங்கள் வலியுறுத்தி வருகின்ற வேளையில், வெளித் தலையீடுகள் சிரியர்களை பரம்பரை பரம்பரையாக இருண்டயுகத்துக்குள் தள்ளி விடும் என்று சர்வதேச அவதானிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல்கள் யுத்தமாக வெடிக்குமானால், அது சிரியாவுக்கு அப்பாலும் பரவும் ஆபத்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது. (மேலும்....)

ஆவணி 19, 2012

துப்பாக்கிச் சூட்டில் 36 பேர் பலி

தென்ஆப்ரிக்க சுரங்க நிர்வாகம் தொழிற் சங்கத்துடன் பேச்சுவார்த்தை!

சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்திய சுரங்க தொழிலாளர்கள் மீது போலீசார் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 36 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தென் ஆப்ரிக்காவின் ரஸ்டன்பர்க் அருகே உள்ளது மரிகானா. இங்கு விலை உயர்ந்த பிளாட்டினம் சுரங்கம் உள்ளது. உலகிலேயே இந்த சுரங்கம் மிக பெரியது. இது லண்டனை சேர்ந்த லோன்மின் நிறுவனத்துக்கு சொந்தமானது. சுரங்கத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்கின்றனர். கடினமான வேலை இருந்தும் தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் ரூ.4000தான். அத்துடன் சுரங்கத்தில் விபத்தில் பாதிக்கப்படும் தொழிலாளருக்கு சரியான இழப்பீடும் கிடைப்பதில்லை. இந்நிலையில் 3 மடங்கு சம்பள உயர்வு கேட்டு கடந்த 10ம் தேதி முதல் தொழிலாளர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். (மேலும்....)

ஆவணி 18, 2012

"கிழக்கு மாகாணசபைத் தேர்தல் கடவுளால் ௭மக்குத்தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம்"

ஜெனீவாத் தீர்மானத்தில் இலங்கை தமிழ் மக்களுக்கு அதிக பட்ச அதிகாரத்தை உள்ளடக்கிய அரசியல் தீர்வை வழங்குமாறு வலியு­றுத்தப்­பட்டுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் அதனை வழங்க விரும்ப­வில்லை. இந்த தேர்தலில் தமிழ் மக்கள் ௭டுக்கும் முடிவு சர்வதேச சமூகத்தின் ௭திர்பார்ப்பை பல­வீனப்படுத்துவதாக அமைந்து விடாமல் பலப்படுத்துவதாக இருக்க வேண்டும். நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கடவுளினால் ௭மக்கு தரப்பட்ட இறுதிச் சந்தர்ப்பம். ௭ன தமி­ழ்த் தேசிய கூட்ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரிவித்துள்ளார்.  (மேலும்....)

ஆவணி 18, 2012

சென்னையிலிருந்தும் வெளியேறும் வட கிழக்கு மாநிலத்தவர்கள்..!

தாக்குதல் பீதி காரணமாக பெங்களூர்,ஹைதராபாத்,மும்பை உள்ளிட்ட  நகரங்களிலிருந்து மட்டுமல்லாது சென்னையிலிருந்தும் வடகிழக்கு மாநிலத்தவர்கள்  வெளியேறி வருகின்றனர்.  அசாமில் வங்கதேசத்திலிருந்து குடியேறியவர்களுக்கும்,பழங்குடியினத்தவர்களுக்கும்  இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் காரணமாக கலவரம் வெடித்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் வாழும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தோர் மீது,  ஆகஸ்ட் 20-ம் தேதி ரம்ஜான் நோன்புக்குப் பிறகு அசாமில் நடத்தப்பட்டது போன்று   மிகப் பெரும் தாக்குதல் நடத்தப்படும் என்ற வதந்தி நேற்று முன்தினம் திடீரென  பரவியது. எஸ்.எம்.எஸ், இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், ட்விட்டர்   போன்றவை மூலம் இந்த வதந்தி வேகமாக பரவியது. இதனால் பீதியடைந்த வடகிழக்கு மாநிலத்தவர்கள், உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்  என்று தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்புவதற்காக தங்கள் உடைமைகளுடன் ஒரே   நேரத்தில் பெங்களூர் ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. (மேலும்....)

ஆவணி 18, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 57 பேர் கைது

சட்டவிரோதமாக ஆழ்கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 57 பேரை கடற்படையினர் நேற்று முன்தினம் மாலை புல்மோட்டை கடலில் கைது செய்துள்ளனர். புல்மோட்டை கடலில் சுமார் 40 கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த ஆழ்கடல் வள்ளமொன்றை கடற்படை படகுகள் சுற்றிவளைத்த போதே இவர்கள் 57 பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். 9 பிள்ளைகளும் 8 பெண்களுமாக 52 தமிழர்களும் 5 சிங்களவர்களும் இதில் பயணித்துக் கொண்டிருந்ததாக அவர் மேலும் தெரி வித்தார். திருகோணமலை கடற்படைத் தளத்துக்கு அழைத்து வரப்பட்ட 57 பேரும் ஆரம் கட்ட விசாரணைகளின் பின்னர் நேற்று இரகசிய பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்ப டைக்கப்பட்டதாக கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ஆவணி 18, 2012

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில்ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக  மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின்கூறப்பட்டுள்ளது. அதில்,  2004ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கான நிலக்கரி ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் உள்ளிட்ட 25 நிறுவனங்கள் சுரங்க உரிமங்கள் பெற்றதாகவும், இதற்கு சரியான ஏல நடைமுறைகள் கடைப்பிடிக்காததால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கமான கோல் இந்தியா நிறுவனத்திற்கு 116 மில்லியன் டன் உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனமான சாசன் மின் உற்பத்தி நிறுவனத்திற்கு கூடுதலாக 3 நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும்,  ரிலையன்ஸ் நிறுவனம் 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்திருப்பதாகவும் அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.

ஆவணி 18, 2012

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு திஸ்ஸ விதாரணவிடம் அறிக்கை கையளிப்பு

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு, கண்டி எர்ல்ஸ் ரிஜென்சி ஹோட்டலில் இன்று நடத்திய சர்வதேச மாநாடு ஒன்றில் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண அவர்களிடம் 'யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களது சமாதானம், பாதுகாப்பு ,அபிவிருத்தி தொடர்பாக இலங்கைப் பெண்களுக்கான நிகழ்ச்சித் திட்டம்" என்ற ஓர் அறிக்கையை கையளித்தது. இங்கு உரையாற்றிய சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்ததாவது, இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மிகப் பொருத்தமாக உள்ளன. இதனை அமுல் படுத்துவதில் நாம் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக நகரம் முதல் கிராமம் வரை அதிகாரப் பகிர்வு முழுமையாக அமுல் படுத்தப்பட வேண்டும். இதற்கு பாரிய நிதி ஒதுக்கப்படுதல் வேண்டும். அடுத்ததாக, பல் இன சமூகம் வாழும் எமது நாட்டில் இனங்களுக்கு இடையிலும் சமூகங்களுக்கிடையிலும் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பினால் மட்டுமே பெண்களது அபிவிருத்தியைப் பூரணமாக முன்னெடுக்க முடியும். (மேலும்....)

ஆவணி 18, 2012

வடக்கின் வசந்தம் வெற்றிகரமாக முன்னெடுக்க

இன, மத, குல பேதமின்றி சகலரும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்

இன, மத, குல பேதமின்றி ஒரே அரசாங்கம் என்ற ரீதியில் வடக்கின் வசந்தம் செயற்றிட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல சகலரும் பூரண ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அபிவிருத்தியின் மூலம் வடக்கு கட்டியெழுப்பப்பட்டு சகல மக்களும் சந்தோசமாக வாழவேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம். அதனை நிறைவேற்றுவதற்கு அனைத்து அரச ஊழியர்களும் உதவ வேண்டும் எனவும் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார். வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கான மாவட்ட விசேட அபிவிருத்திக் கூட்டம் நேற்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். வவுனியா, மன்னார் மாவட்டப் பிரதேசங்களில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என மூவின மக்களும் ஒன்றாக இணைந்து வாழ்கின்றனர். சகல மக்களுக்கும் ஒரே விதமான வசதிகள் அரசாங்கத்தால் சமமாகப் பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் எத்தகைய வேறுபாட்டுக்கும் இடமில்லை.

ஆவணி 17, 2012

நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கும் தமது பங்களிப்புத் தொடரும் - அசோக் கே.காந்தா

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் துரிதமாக செயல்படுத்துமாறு இலங்கை அரசை இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அத்துடன் நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான தனது பங்களிப்புத் தொடரும் எனவும் அது அறிவித்துள்ளது. இந்திய சுதந்திர தினத்தையொட்டி கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்தா விடுத்துள்ள செய்தியில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது: நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைத் துரிதமாகச் செயற்படுத்துவதானது தேசிய நல்லிணக்கத்தை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாட்டின் முன்னோக்கிய பாதையில் மிகப் பெரிய படிக்கல்லாக அமையும். இனப்பிரச்சினைக்குக் காலதாமதமின்றி அரசியல் தீர்வொன்று காணப்படும் முயற்சியில் இந்தியா தொடர்ந்தும் ஆதரவளித்துவரும். அத்துடன் சமத்துவமான வாழ்வியல், நீதி, சுயகௌரவம் மற்றும் சகல பிரஜைகளுக்குமான மதிப்பு ஆகியவற்றைப் பாதுகாக்கும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் முன் முயற்சிகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும். ஆயுத மோதலுக்கு முடிவு கட்டப்பட்டதானது இலங்கையர்கள் அனைவருக்குமான சிறந்ததொரு எதிர்காலத்;தைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தும் விடயத்தில் குறிப்பிட்டளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

ஆவணி 17, 2012

தன்மானத்தை இழக்காத ஈரான்!

பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா வழங்க முன்வந்த நிவாரண உதவியை ஏற்க முடியாது என, ஈரான் அரசு தெரிவித்துள்ளது. ஈரானில், தப்ரிஸ் நகரில், கடந்த 11ம் தேதி, இரண்டு முறை பூமியதிர்ச்சி ஏற்பட்டது. இதில், 306 பேர் பலியாகியுள்ளனர். பூகம்பத்தால் பலியானவர்களுக்காக இரங்கல் தெரிவித்த அமெரிக்க அரசு, நிவாரண உதவிகள் வழங்க தயாராக உள்ளதாக அறிவித்தது. தற்போது இதுகுறித்து, ஈரான் உள்துறை அமைச்சர் ஹசன் கடாமி குறிப்பிடுகையில், "பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா நல்லெண்ணத்துடன் உதவுவதாக தெரியவில்லை. தற்போது, எங்களுக்கு மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. அமெரிக்கா உண்மையில் உதவுவதாக நினைத்தால், மருந்துகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்க வேண்டும்' என்றார். மேலும் ஜேர்மனி, தாய்வான்ஆகிய நாடுகளிடமிருந்தான உதவிகளையும் ஈரான் ஏற்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் கட்டார், பாகிஸ்தான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழங்கிய உதவிகளை ஈரான் ஏற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. ஈரான் அணுச்செறிவாக்கல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி அமெரிக்க உட்பட பல நாடுகள் அதன்மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளன.

ஆவணி 17, 2012

நவநீதம்பிள்ளையின் பிரதிநிதிகள் மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் இலங்கைக்கு வரலாம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செயலாளர் நாயகம் நவநீதம்பிள்ளையினால் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பிரதிநிதிகள் மட்டுமல்ல எவர்வேண்டுமானாலும், இலங்கைக்கு வரலாம். எவருக்கும் எதுவித தடையுமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார். குறிப்பாக கடந்த காலங்களில் இலங்கை தொடர்பாக தவறான கருத்துக்களை கொண்டிருந்தார்கள். இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்கள், வாக்களித்தவர்கள் இலங்கைக்கு வருவார்களேயானால் அவர்களை நாம் வரவேற்கிறோம். அப்போது அவர்களுக்கு இங்குள்ள உண்மை நிலையை நேரடியாக கண்டறிய முடியும். கடந்த காலங்களில் சிலரை நாம் அனுமதிக்க வில்லை. அப்போது இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளின், மிதிவெடிகள் அகற்றும் பணிகள் முடிவடையாத நிலையில் இருந்தன. மிதிவெடிகள் அச்சுறுத்தல்களும் இருந்தன.

ஆவணி 17, 2012

கணினிக் கதிர்-கணினியையும், மனிதனையும் வேறுபடுத்தும் ‘கேப்ட்சா’

(எம். கண்ணன், என். ராஜேந்திரன்)

இணையவழியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும்போதும், இணைய வங்கிக் கணக்கு, புதிய மின்னஞ்சல் சேவையைப் பெறப் பதியும்போதும் கலைந்த நிலையில் வளைந்தும் நெளிந்தும் எழுத்துக்கள் சிறு படமாகக் கொடுக்கப்பட்டு அதனை சரியாக பூர்த்தி செய்யும்படிக் கேட்கப்படும். இந்த எழுத்துக்கள் அமைந்த படம்தான் கேப்ட்சா(CAPTCHA) வாகும். இது எதற்கு? இதனால் என்ன நன்மை? என்று கேள்வி தோன்றும். இந்த கேப்ட்சா அமைப்பு இணையக் கணக்குகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வழிமுறையாகும். (மேலும்....)

 

ஆவணி 17, 2012

SEPTEMBER 15, 2012

SATURDAY

5:00PM

UNIVERSITY OF WATERLOO

HUMANITIES THEATER

 FREE ADMISSION

Naathaswaram & Thavil, Classical Dances, Cine Dances, Drama, Classical Music,

Fashion Show, Multicultural Dances

& Music Band etc..

 Come with your Family and Friends 

and enjoy the fun filled evening with our cultural Flavors 

Administration

Thamil Heritage School of Waterloo Region & Guelph

 "WE LOVE OUR MOTHER LAND and MOTHER TONGUE"

ஆவணி 17, 2012

வாழ்க சுதந்திரம்!  வாழ்க நிரந்தரம்! 

இந்தியத்திருநாடு 66வது சுதந்திரத் திருநா ளை பெருமகிழ்வுடன் இன்று கொண்டாடுகிறது. நம் தாய்த்திருநாட்டின் மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகள் ஆயிரமாயிரம். சிறைச்சாலை சித்ர வதை, அடக்குமுறைகளை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டோர் லட்சோபலட்சம். அவர்கள் அனைவருக்கும் வீர வணக்கம் செலுத்துவோம், அவர்களது லட்சியத்தை முழுமையாக நிறை வேற்ற சூளுரைப்போம். சும்மா கிடைத்துவிடவில்லை இந்த சுதந் திரம். மகாகவி பாரதி பாடியதுபோல, கண்ணீர் விட்டு அல்லவோ வளர்த்தோம் சுதந்திரப்பயிரை. இந்திய மக்கள் அனைவரும் சாதி, மதம், இனம், மொழி, நிறம் என அனைத்து வேற்றுமைகளையும் மறந்து ஒற்றுமையாக போராடியதன் காரணமாகவே இந்திய விடுதலை சாத்தியமாயிற்று. அத்தகைய மகத்தான மக்கள் ஒற்றுமையை இப்போதும் முன்னெடுத்துச்செல்ல வேண்டியுள்ளது. (மேலும்....)

ஆவணி 17, 2012

13 இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இலங்கை புதிதாக இராஜதந்திர உறவு

பதின்மூன்று இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் ஊடகத் துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 13 நாடுகளுடன் புதிதாக உறவுகளை ஏற்படுத்தும் பொருட்டு இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் 33 இலத்தீன் அமெரிக்க நாடுகளில் 20 நாடுகளுடன் இலங்கை ஏற்கனவே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. உறவுகள் ஏற்படுத்தப்படாத புதிய நாடுகளுடனேயே இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துகின்றன. கெளதமாலா, சூரினேம், பெலிசி, ஹொன்டுராஸ், நிக்கரகுவா, அன்றிடுவா என்ட் பார்புடா, பார்படோஸ், டொமினிக்கா, கிரொடா, ஹெய்ட்டி சென்ட் கிற்ஸ் என்ட் நேவஸ், சென்ட் லூசியா மற்றும் சென்ட் வின்சன்ட் என்ட் த கிரெநெடைன்ஸ் ஆகிய 13 நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஐரேப்பிய நாடுகளினது காலனித்துவ நாடுகளாக இருந்த இலத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் தற்போது தன்னிறைவை நோக்கி முன்னேறுகின்றன.

ஆவணி 17, 2012

தீண்டிய தீ

(மேலாண்மை பொன்னுச்சாமி)

அப்போது நான் மனதளவில் திமுக ஆதரவாளன். தமிழக முதல்வர் பேரறிஞர் அண்ணா சென்னை மாநகரில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை நிறைவேற்றியதையும், தனியார் முதலாளி களின் கைவசமிருந்து பேருந்துகளை அரசுடமையாக்கியதையும் நினைத்து நினைத்துக் கொண்டாடிக் கொண்டிருந் தேன். மேலாண்மறைநாடு கிராமத்தில் என் கடையின் கூரைத் தாழ்வாரத்தில் வந்தவர்கள் போனவர்களிடமெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பேன். அப்போது விருதுநகர் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த தோழர் ஆர்.பெரியசாமி சனி, ஞாயிறுகளில் ஊர் வருவார். எனது பக்கத்துவீட்டுக்காரர். கையில் கொண்டு வருகிற தீக்கதிர் பத்திரிகையை விரித்துப்படிப்பார், என் கடைத்தாழ்வாரத்தில் உட்கார்ந்து. ஆர் வப்பெருக்குடன், உற்சாகத்துள்ளலுடன் நான் செய்கிற திமுக பரப்புரையை பார்ப் பார். கவனிப்பார். தற்செயலாக போட்டு விட்டுப் போகிற பாவனையில் தீக்கதிர் பத்திரிகையை கடைக்குள் போட்டு விட்டுப் போவார். (மேலும்....)

ஆவணி 17, 2012

கையூட்டு தருவதற்கு தனி கருவூலம்

(காண்டீபன்)

மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் தாலுகாவில் மையம் கொண்ட கிரானைட் ஊழல், மோசடி என்ற புயல் இப்பொழுது மொத்த தமிழகம் முழுவதும் சுழன்றடித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையின் சீற்றத்தால் சில சம யங்களில் பூமிப்பந்தில் இடமாற்றங்கள் நிகழ்வதுண்டு. அதனால் அந்த இடங்கள் வரைபடத்தில்காணாமல்போவதும்உண்டு; மாற்றியமைக்கப்படுவதும் உண்டு. அதுபோலத்தான் மேலூர் தாலுகா வில் ஏராளமான கண்மாய்களும், கால் வாய்களும் காணாமல் போய்விட்டன. முல்லைப் பெரியாறு பாசன வசதியால் கரும்பும், வாழையும், நெல்லும் நிரந்தரமாக சூழ்கொண்டிருந்த இப்பூமி இப்பொழுது வறண்ட பாலைவனமாக காட்சியளிக் கிறது.  மேலூர் தாலுகா முழுவதுமிருந்து சிறிய, பெரிய மலைகள் எல்லாம் சின்னா பின்னமாக்கப் பட்டுவிட்டன. 500 முதல் 600 அடி ஆழத்திற்கு பூமியை வெட்டிச் சிதைத்து கிரானைட் கற்களை வெட்டி யெடுத்திருக்கிறார்கள். வெட்டி எடுத்த தில், பணத்திற்கு ஆனது போக மீதியைப் போட்டு நீர்வரத்து மிக்க கண்மாய் களையும் மூடிவிட்டார்கள். (மேலும்....)

ஆவணி 17, 2012

இந்தியா எங்கள் எதிரியல்ல: சீனா அறிவிப்பு

இந்தியாவும் சீனாவும் நட் புறவு நாடுகளே தவிர எதிரி நாடுகள் அல்ல என்று சீனாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ப்யூ-இங் கூறினார். நேபாளம் மற்றும் பூடான் நாடுகளுக்கு அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப் போது அங்குள்ள தலைவர்களு டன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் சீனா திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த காலங்களில் இரு நாட்டு தலைவர்களிடையே நடந்த பேச்சுவார்த்தையில் வலு வான முன்னேற்றத்தை நாங்கள் கண்டுள்ளோம். தெற்கு ஆசிய நாடுகள் குறித்த சீனாவின் கொள்கைகள் இந்தி யாவின் நேச நாடுகளான நேபா ளம் மற்றும் பூடான் உள்ளிட்ட அனைத்து சார்க் நாடுகளின் நலனை பாதிக்காத வண்ணம் இருந்து வருகின்றன. இது ஆசியப் பகுதியில் பொதுவான வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. தென் ஆசியப்பகுதியில், வலு வான முன்னேற்றத்தை காணும் நோக்கில் சீனா, இந்தியாவுடன் தனது ஒத்துழைப்பை விரிவு படுத்தியுள்ளது. அதுமட்டுமில் லாமல் அனைத்து சார்க் நாடு களுடனும் இணைந்து செயல் பட சீனா தனது முழுமையான ஒத்துழைப்பையும் அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். தென் கிழக்கு ஆசியப் பகுதி யில் இந்தியாவும் சீனாவும் தங்க ளின் வலிமையை நிலைநாட்டு வதற்காக முயற்சிகள் மேற் கொண்டு வரும் நிலையில் சீன அமைச்சரின் பேட்டி முக்கியத் துவம் பெற்றுள்ளது.

ஆவணி 17, 2012

அரசியல் சிக்கல்களினால் சர்வகட்சி மாநாடு இயற்கை மரணத்தை எதிர்நோக்கியது

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

க்கிய தேசியக் கட்சி தமிழ் பேசும் மக்களை பல்வேறு பிரச்சினைகள் எதிர்நோக்கியிருக்கிறதென்பதை ஏற்றுக்கொள்கிறது. தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத காரணத்தினால் தமிழ் பேசும் மக்கள் தனி நாடொன்றை உருவாக்கும் இயக்கமொன்றை ஆதரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தேசிய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கியத்திற்கு முழு நாட்டிலும் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுத்தப்படுவது அவசியம் என்று கட்சி கருதுகிறது. எனவே கால தாமதம் இன்றி இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று இக்கட்சி விரும்புகிறது. (மேலும்....)

ஆவணி 17, 2012

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம்!  இஸ்ரேலிடம் அமெரிக்கா ரகசிய வாக்குறுதி

ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேலிடம் அமெரிக்கா ரகசிய வாக்குறுதி அளித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. ஈரான் ரகசியமாக அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக அமெரிக்காவும், இஸ் ரேலும் குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் ஈரான் இந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. ஈரான் அணுசக்தி தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் சர்வதேச அணு சக்தி ஏஜென் சியில் உறுப்பு நாடாகவும் ஈரான் உள்ளது. அணுசக்தியை மின்சாரம் உற்பத்தி செய் வது போன்ற ஆக்கபூர்வமான வழிகளில் தான் பயன்படுத்தி வருகிறோம் என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
(மேலும்....)

ஆவணி 17, 2012

சபாஷ்! தென்அமெரிக்க நாடு ஈகுவடோர்

அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்க ஈகுவடோர் தீர்மானம்!

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு அரசியல் தஞ்சம் வழங்கவுள்ளதாக ஈகுவடோர் அறிவித்துள்ளது. ஈகுவடோர் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரிகாடோ படினோ இவ்வறிப்பை மேற்கொண்டுள்ளார். பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவடோர் நாட்டு தூதரகத்தில் கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் தஞ்சமடைந்துள்ளார். பிரித்தானிய அரசாங்கத்தின் எச்சரிக்கைக்கு மத்தியிலேயே ஈகுவடோர் இம்முடிவினை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 17, 2012

அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவிய ரஸ்யா

ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலொன்று அமெரிக்க கடற்பரப்புக்குள் நுழைந்து உளவுப்பார்த்துச் சென்ற சம்பவம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. குறித்த கப்பலானது அமெரிக்காவின் அனைத்து கண்காணிப்புகளையும் மீறி தனது பணியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது. ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலெனத் தெரிவிக்கப்படுகின்றது. விளாடிமீர் புடின் மீண்டும் ரஷ்ய ஜனாதிபதியான பின்னரே இந்த ஊடுருவல் நடைபெற்றுள்ளதாகத் தெரிகின்றது. அக்கப்பல்அமெரிக்க கடல் பகுதியை விட்டு வெளியே சென்ற பிறகே இந்தத் தகவல் அமெரிக்கக் கடற்படைக்கு தெரியவந்துள்ளது. எனினும் அமெரிக்க இதனை மறைத்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலின் நோக்கம் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களை அழிப்பது மட்டுமே என இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டில் ரஸ்ய நீர்மூழ்கியொன்று அமெரிக்க கடற்பரப்பில் இணங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆவணி 17, 2012

நவரத்தினங்கள் எவ்வாறு தோன்றுகின்றன?

நவரத்தினங்களில் அனைவருக்கும் தெரிந்தது வைரவம். அது தவிர இரத்தினம், புஷ்பராகம், முத்து, பவளம், மாணிக்கம், வைடூரியம், மரகதம், கோமேதகம் போன்றவை உள்ளன. இரத்தினம் என்பது அலுமினியமும், ஒக்சிஜனும் அதிகம் சேர்ந்த கலவை. காலையில் அடர் நிறத்திலும், மாலையில் வெளிர் நிறத்திலும் ஜொலிக்கும். 17 ஆம் நூற்றாண்டில் இரத்தினக் கற்கள் அரச ஆபரணமாக இருந்தன. அதை மற்றவர்கள் யாரும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. தேன் மஞ்சள் நிறத்தில் இருக்கும் புஷ்பராகக் கல் பிரேசில் மற்றும் சைபீரியாவில் அதிகம் கிடைக்கிறது. (மேலும்....)

ஆவணி 16, 2012

'பிரபாகரன்... கொலைகாரன்!'

திடுக்கிட வைக்கும் தி.மு.க. பேச்சு

ம்புச் சண்டைக்குப் போவது தி.மு.க. முன் னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜாவுக்கு ஆசை ஆசையாக அல்வா சாப்பிடுவது மாதிரி. நிலத்தை ஆக்கிரமித்தார், ஆளைக் கட்டிவைத்து அடித்தார், கோஷ்டிச் சண்டையை வளர்க்கிறார் என்று நிறையவே குற்றச்சாட்டுகளைச் சந்தித்தவர். இப்போது ஈழ ஆதரவுத் தலைவர்களைக் கொச்சைப்படுத்தி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை ஒரு கொலைகாரர் என்று பகிரங்கமாகப் பேசி சர்ச்சையில் சிக்கி உள்ளார். ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டு நோக்கத்தை விளக்கவும் முன்னாள் அமைச்சர் என்.கே.கே. பெரியசாமியின் பவள விழாக் கொண்டாட்டமும் இணைந்த தி.மு.க. பொதுக்கூட்டம் கடந்த வியாழக்கிழமை ஈரோட்டில் நடந்தது. முதலில் பேசிய பொறுப்பாளர்கள் அனைவரும் வைகோ, நெடுமாறன், சீமான் போன்ற ஈழ ஆதரவுத் தலைவர்களை வறுத்து எடுத்தனர். அடுத்துப் பேசிய மாவட்ட தி.மு.க. செயலாளரும் முன்னாள் அமைச்சருமான என்.கே.கே.பி.ராஜாவின் பேச்சு, கூட்டத்தினரைத் திகில் அடையவைத்தது. (மேலும்....)

ஆவணி 16, 2012

பண்டா - செல்வா, டட்லி - செல்வா ஒப்பந்தங்கள்

நிறைவேற்றப்படாதமையினால் இனப்பிரச்சினை வன்முறையாக மாற்றமடைந்தது

(டாக்டர் சுப்ரமணியம் சுவாமி)

திகாரபரவலாக்கல் நாடு பிரிவடைவதற்கு முதற்கட்ட நடவடிக்கை என்றும் அதனால் இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள வளமான பிரதேசங்களை இந்தியா கைப்பற்றும் என்ற அச்சம் சிங்கள மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது. தமிழர்கள் 13வது திருத்தத்தின் மூலம் அதிகாரபரவலாக்கல் அமுலாக்கப்படும் என்று சிங்களவர்கள் கூறி காலம் கடத்த எத்தனிக்கிறார்கள் என்று சந்தேக மனத்துடன் இருந்தார்கள். சிங்கள, தமிழ் தலைவர்களிடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களும் இடை நடுவில் ரத்து செய்யப்பட்டதும் இதற்காகவே என்று தமிழர்கள் சந்தேகம் வெளியிட்டனர். 1957ம் ஆண்டில் இரு சமூகங்களுக்கிடையிலான பிரச்சினைகளை அதிகாரபரவலாக்கல் மூலம் தீர்த்து வைப்பதற்காக பண்டா, செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. (மேலும்....)

ஆவணி 16, 2012

புகலிடக் கோரிக்கையாளர்களை ஆஸிக்கு வெளியில் தடுத்து வைக்க முடிவு

புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை அவுஸ்திரேலியாவுக்கு வெளியில் அமைப்பதற்கான சட்ட மூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. இதன்படி, புகலிடக் கோரிக்கையாளர்களின் தடுப்பு முகாம்களை மீண்டும் பப்புவா நியுகினியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள சிறு தீவான நவ்ருவுக்கு கொண்டு செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லாட் நியமித்த சுயாதீன குழுவின் பரிந்துரைக்கமைய அந்நாட்டு பாராளு மன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் கொண்டுவரப்பட்ட சட்ட மூலத்திற்கு எம்.பிக்கள் ஆதரவளித்துள்ளனர். (மேலும்....)

ஆவணி 16, 2012

முன்னாள் எல். ரி. ரி. ஈ. போராளிகளின் புனர்வாழ்வுப் பணிகள் துரிதப்படுத்தப்படும்

புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுமென நெர்டோ அமைப்பின் செயலாளர் குமரன் பத்மநாதனின் (கேபி) ஏற்பாட்டில் இலங்கை வந்த புலம்பெயர் உணர்வாளர்களிடம் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை வந்த வெளிநாட்டு உணர்வாளர்களுடன் கடந்தவாரம் இடம்பெற்ற சந்தப்பிலேயே கோட்டாபய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்ததாக குமரன் பத்மநாதன் இணையமொன்றுக்கு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பு தொடர்பாக கேபி மேலும் கூறுகையில், கனடா, லண்டன், அவுஸ்திரேலியா, சுவிற்சர்லாந்து, சுவீடன், பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 22 உணர்வாளர்கள் நெர்டோ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்தவாரம் இலங்கை வந்தனர். இந்த உணர்வாளர்களுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்திய பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ பல உறுதி மொழிகளை வழங்கினார்.(மேலும்....)

ஆவணி 16, 2012

ஆவணி 16, 2012

வட்டுக்கோட்டை தீர்மானத்துக்கு பலம் சேர்க்கும் செயல்கள் இப்போதும் நடக்கின்றன

பயங்கரவாதம் நிறுத்தப்பட்ட போதும் நமது செயல்பாடுகள் நிறுத்தப்பட முடியாதது. வட்டுக்கோட்டைத் தனிநாடு கோரிக்கைக்குப் பலம் சேர்க்கும் நடவடிக்கைகள் இப்போதும் நடந்து கொண்டிருக்கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்கும் செயற்பாட்டுக்கும் நாம் செய்ய வேண்டியது பெருமளவு உள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி தனி இராச்சியத்துக்குப் பலம் சேர்க்க முயல்வோர் விடயத்தில் படையினர் மட்டுமன்றி முழு நாட்டு மக்களும் தெளிவுடன் செயற்பட வேண்டியுள்ளதெனவும் வலியுறுத்தினார். அண்மையில் நடந்த ஈழக் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் மாநாடு பற்றிக் குறிப்பிட்ட ஜனாதிபதி; அந்த மாநாட்டின் பின்னணி தனியான ஈழ இராச்சியக் கொள்கையே எனவும் சுட்டிக்காட்டினார். இது விடயத்தில் சகலரும் தெளிவுபெற்றிருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். (மேலும்....)

ஆவணி 16, 2012

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு

சவுதி - ஈரான் தலைவர்கள் அருகருகில்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் சவுதி மன்னர் அப்துல்லாவுக்கு அருகில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதிநஜாத் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. சிரிய விவகாரத்தில் ஷியா, சுன்னி என இருநாடுகளும் பிரிந்து செயற்படும் நிலையில் மாநாட்டின் முதல் நாளான நேற்று முன்தினம் இரு நாட்டு தலைவர்களும் அருகருகே அமர்ந்து புன்முருவலுடன் அளவளாவிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த மாநாட்டில் சிரியாவை இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து விலக்குவதற்கு பரிந்துரைக்கப்பட்டதற்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மாநாட்டில் உரையாற்றிய சவூதி மன்னர் அப்துல்லா, இஸ்லாமிய உலகில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாகவே முஸ்லிம் களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டார்.

ஆவணி 16, 2012

தாவூத் விருந்தில் பங்கேற்றேன் ; உச்ச நீதிமன்றத்தில் சஞ்சய் தத் ஒப்புதல்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆறு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத், உச்ச நீதிமன்றத்தில் நடந்த அப்பீல் மனுக்கள் மீதான விசாரணையின் போது, ‘நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், மும்பையில் கொடுத்த விருந்தில் பங்கேற்றது உண்மை தான். ஆனால் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை’ என்று தெரிவித்துள்ளார். மும்பையில் கடந்த 1993 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை, தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. இதில் 200 பேர் கொல்லப்பட்டனர். 713 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம், 2007 ஆம் ஆண்டு ஜுலை முதல் அக்டோபர் வரை தீர்ப்பு வழங்கியது. இதில் 12 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 78 பேருக்கு மூன்று ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை, பலவிதமாக தண்டனை வழங்கப்பட்டது. நடிகர் சஞ்சய் தத், மும்பை தொடர் குண்டு வெடிப்பு சதி குற்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆவணி 15, 2012

தமிழர்களுக்கு சமமான உரிமைகளை வழங்க வேண்டும் - ஜெயலலிதா

சிங்களவர்களுக்கு சமமான உரிமைகளை இலங்கைத் தமிழர்கள் பெறுவதற்கு இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி வழிவகை செய்து அவர்களின் துயரை நீக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சென்னையில் உள்ள கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீண்டும் சொந்த இடங்களில் குடியமர்த்த இலங்கை அரசை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சென்னையில் திமுக சார்பில் தமிழ் ஈழ ஆதரவாளர் மாநாடு நடத்தப்பட்டு, இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவும் சுதந்திர தின உரையில் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்.

ஆவணி 15, 2012

அரசாங்கம் அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறத - யாழ். ஆரப்பாட்டத்தில் கேள்வி

கருணா, கே.பி, பிள்ளையான் போன்றோருக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ள அரசாங்கம் அவர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட அப்பாவிப் போராளிகளை ஏன் படுகொலை செய்கிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்திருந்த இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கேள்வியெழுப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலையைக் கண்டித்தும், சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நவசமசமாஜக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி, உள்ளிட்ட தென்னிலங்கை முற்போக்குக் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தன. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்திற்கும், பொலிஸாருக்கும் எதிரான கோசங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளியிட்டனர். இந்த ஆர்பாட்டத்தின் முன்னணியில் குதிரை கஜேந்திரன், பின்னணியில் 'இடதுசாரி' செந்தில்வேல். வாழ்க எதிர்ப்பு ஐக்கியம். சிறைப் படுகொலையை எவ்கையிலும் நியாயப்படுத்த முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

ஆவணி 15, 2012

தென் அமெரிக்காவில் அடுத்த டெசோ மாநாடு?

டெசோ' வின் அடுத்த மாநாட்டை தென் அமெரிக்காவில் நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் பல போராட்டங்களுக்குப் பின்னர் சென்னையில் டெசோ மாநாட்டை நடத்தி முடித்தது திமுக.இதில் கலந்துகொள்வதாக கூறிய பல வெளிநாட்டு தமிழ் பிரமுகர்கள் வரவில்லை.இது திமுகவுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்தது. இந்நிலையில், அடுத்த மாநாடு வெளிநாட்டில் நடந்தால் சர்வதேச அளவில் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட முடியும் என்று திமுக கருதுவதாகவும், எனவே அடுத்த மாநாட்டை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் நடத்த முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து,அண்மையில் நடந்து முடிந்த டெசோ மாநாட்டின் இறுதியில் திமுக முக்கியப் பிரதிநிதிகள் கலந்து விவாதித்ததாகவும்,அப்போது இது குறித்து முடிவெடுக்கப்பட்டதாகவும் மேலும் கூறப்படுகிறது. அப்ப வெளிநாட்டு சினிமா சூட்டிங் மாதிரி எல்லோரும் ரூம் போட்டுக் கதைக்கலாம். ஆமாம் யார் செலவில் விமான ரிக்கெற்வாங்கிறது, ரூம் இற்கு காசு கட்டுறது...?

ஆவணி 15, 2012

மங்குனி சீமானும் அவரின் மொக்கை அரசியலும்? (பகுதி 3)

தமிழர்களிலேயே எந்தத் தமிழன்? என்ன சாதி? சாதியில் என்ன பிரிவு? பிரிவில் என்ன வகையறா? என்றெல்லாம் தமிழன் கொலைவெறியோடு சுற்றிக்கொண்டிருக்கிறான். முதலில் 'நாம் தமிழர்' என்று முழங்குபவர்களுக்கு தமிழகச் சூழலில் தமிழர்களுக்கு எது முதன்மையான பிரச்சனை? தமிழர்களை ஒன்றுசேர விடாமல் தடுப்பது எது என்கிற வரலாற்று, சமூக, அரசியல் அறிவு அவசியம். பன்னெடுங்காலமாக கூறுபோடுவது சாதியும் மதமும்தான். இவைதான் தமிழரின் வீழ்ச்சிக்கு மூலம். ஊர் என்றும் சேரி என்றும் இரண்டு குடியிருப்புகள் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இதைவிட வேறு என்ன அவமானம் இருக்கிறது? தமிழர்களே ஊர்த்தெரு தமிழர்களாகவும், சேரித்தெரு தமிழர்களாகவும் பிரிந்து கிடக்கிறார்கள். சக மனிதன் சாதியின் பெயரால் ஊருக்கு வெளியே தள்ளப்பட்டு இழிவுபடுத்தப்படும் நிலைகண்டு கொதிக்காதவன் என்ன புரட்சி பேசி என்ன ஆகப்போகிறது?  (மேலும்....)

ஆவணி 15, 2012

 I thought you should know...........the book
<