|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
சித்திரை 2012 மாதப் பதிவுகள் சித்திரை 30, 2012
தனி ஈழம் அமைக்க ஐ.நா. பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்-டெசோ தீர்மானம் - கருணாநிதி
சித்திரை 30, 2012
அரசின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் போட்டியிடவுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் ஆதாரமற்ற அடிப்படையற்ற செய்தியென கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல். எப். (பத்மநாபா அணி) முக்கியஸ்தருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார். வரதராஜப் பெருமாள் அரசாங்கத்தின் ஆதரவுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் குதிக்கவுள்ளதாகவும் அதற்காக இலங்கையில் இருந்து சென்ற குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளியான செய்தி தொடர்பில் மாகாண சபை உறுப்பினரை தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (மேலும்.....) சித்திரை 30, 2012 தமிழ் தேசிய காங்கிரஸ்(TNC) பற்றி
சுதந்திர இலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் குறுகிய இனவாதத்தை முன்வைத்து அரசியலை முன்னெடுத்தமை எழுபதுக்களின் இறுதிப் பகுதியில் கால்நூற்றாண்டு கால யுத்தம் ஒன்றுக்கு வித்திட்டது வரலாறாகி உள்ளது. இந்த உள்நாட்டு யுத்தம் மே 18 2009இல் முடிவுக்கு வந்த போதும் உள்நாட்டு யுத்தத்துக்கு அடிப்படைக் காரணமாக இருந்த இன முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு காத்திரமான முயற்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக ஜனநாயகமற்ற அரசியல் போக்கு நாடு முழுவதும் காணப்படுகிறது. இது குறிப்பாக தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகங்களான வடக்கு கிழக்கிலும் காணப்படுகின்றது. (மேலும்.....) சித்திரை 30, 2012 இராஜதுரையை துரோகி என்று கூறும் சிவாஜிலிங்கம் உத்தமரா? அரியநேத்திரன் கேள்வி! இராஜதுரையை துரோகி என்றும், மட்டக்களப்பு துரோகிகள் என்றும் சிவாஜிலிங்கம் தான் உத்தமரா என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை துரோகி என்று காட்டும் போது மற்ற மூன்று விரல்களும் உன்னைக்குற்றவாளி என்று காட்டும் என்பதை சிவாஜிலிங்கம் உணர்ந்து கொள்ளவில்லையா என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். (மேலும்.....) சித்திரை 30, 2012 இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 1) (அ.ஆனந்தன்) [ இலங்கையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் சண்டைகளால் வீடிழந்து, நாடிழந்து, உயிரிழந்து, உற்றார்-உறவை இழந்து நிற்கும் மக்களில், பிறந்தது முதல் சண்டையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு தலைமுறையும் உருவாகிவிட்ட சூழலில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிறந்த துன்பங்களுக்கு காரணமான இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்த நமது விருப்பு வெறுப்பற்ற ஆய்வு இது . இதில் தமிழர் பிரச்னையை முன் வைத்து எல்.டி.டி.ஈ அமைப்பினை ஆதரித்துக் கொண்டிருக்கும் அமைப்புகளின் கருத்துக்கள் என நாம் முன் வைத்துள்ளவை 'ஈழ விடுதலை - நமது கடமை என்ன?' என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்]இலங்கைத் தமிழர் பிரச்னை இப்போது முற்றிலும் மாறுபட்ட ஒரு கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கைத் தமிழ் போராளிகள் குழுவான எல்.டி.டி.ஈ. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முக்கியப் பகுதிகள் பலவற்றை இழந்துள்ளது. கிளிநொச்சி, ஆனையிறவு ஆகியவற்றுடன் வடக்குப் பகுதியையும் இலங்கையின் பிற பகுதியையும் இணைக்கும் கண்டி - யாழ்ப்பாணம் சாலை முல்லைத்தீவு நகர் ஆகியவை எல்.டி.டி.ஈ. கட்டுப்பாட்டில் இருந்து சிங்கள ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுள்ளன. (மேலும்.....) சித்திரை 30, 2012 கைகொடுக்கும் மே தினம்
பல்லாண்டு காலமாக மே முதலாந் திகதி செவ்வாய்க்கிழமை சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படுகின்றது. ஏலவே உலகளாவிய ரீதியில் மே முதல் நாளை மேதினமாகக் கொண்டாட சர்வதேச தொழிலாளர் சமூகம் ஏகமனதாக முடிவு செய்தது. இத்தினத்தில் தொழிலாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற நிகழ்வுகள், அணிவகுப்பு ஒற்றுகூடல் என்பன பிரதான பங்கினை வகிக்கின்றன என்றும் கூறலாம். மே தினத்தை தேசிய விடுமுறை தினமாக (National Holiday) இலங்கை அடங்கலாக அனேக நாடுகள் அறிவித்துள்ளன. நம் நாட்டில் அன்றுதொட்டு இன்றுவரை ஆட்சிபுரியும் அரசாங்கங்கள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக பிரகடனம் செய்துள்ளன. இதனால் வர்த்தக வங்கி சேவையாளர் உட்பட அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு (Employees) பொது விடுமுறை தினமாக்கப்பட்டுள்ளது. (மேலும்.....) சித்திரை 30, 2012 மே தினக் கொண்டாட்டங்கள் கேளிக்கையாகக் கூடாது மே தினத்தின் ஆழ்ந்த எண்ணக் கருவினை விளங்கிக் கொள்ளாது அதனை ஒருவெறும் கேளிக்கையாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. மே தினம் என்பது வர்க்கச் சார்புடையது. தனிச் சொத்துரிமையினாலும் செல்வக் குவிப்பினாலும் வர்க்கங்கள் உருவாக்கம் பெற்றன. தமது வாழ்வாதாரத்தின் பொருட்டு உழைப்பை விற்பவர்களே தொழிலாளி வர்க்கத்தினராகின்றனர். நிலம், மூலதனம், உழைப்பு, முயற்சியாண்மை என்ற வகையில் உழைப்பு என்பது ஓர் அடிப்படை உற்பத்திக்காரணியாகக் கருதப்படுகின்றது. உழைப்பை வழங்குபவர்கள் பல நிலைப்படுவர். சாதாரண உடல் உழைப்பை வழங்குபவர்களிலிருந்து அதிக திறன்மிக்க உள உழைப்பை வழங்குபவர் வரை அனைத்துத் தரப்பினரும் உழைப்பாளிகள் என்ற தொகுதிக்குள் அடங்குவர். (மேலும்.....) சித்திரை 30, 2012 தாயகத்தைத் தேடி !!
சித்திரை 30, 2012 ஐ. தே. கவின் யாழ். மே தினம் கட்சிப் பிளவின் வெளிப்பாடு இந்த மே தினம் ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாகப் பிளவுபடுவதன் ஆரம்பமாக அமையலாம் என்று அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். பொதுவாக தேசியக் கட்சி பெரும்பான்மை சிங்கள மக்கள் இருக்கும் பிரதேசங்களிலேயே மே தினக் கூட்டங்களை ஒழுங்கு செய்வதுண்டு. ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இதன் அடிப்படையில் கொழும்பிலோ அல்லது தென்னிலங்கையிலோ மலையகத்திலோ உள்ள பிரதான நகரங்களில் மே தினக் கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி தங்கள் கட்சிகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதுண்டு. இந்தத் தடவை ஐக்கிய தேசியக் கட்சி தனது 60 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்றில் முதற் தடவையாக யாழ்ப்பாணத்தில் தங்கள் மே தினக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருப்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பார்த்து, அரசியல் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட கட்சித் தலைவர் என்று கிண்டல் செய்யும் அளவுக்கு அவரது மதிப்பு மிகவும் குறைந்துள்ளது. (மேலும்.....) சித்திரை 30, 2012 பொது இடங்களில் டிஜிடல் இரத்த அழுத்த கருவி பொது மக்கள் தங்களது இரத்த அழுத்தத்தை சுலபமாகப் பரிசோ தித்துக் கொள்வதற்கு ஏற்றவகையில் டிஜிட்டல் இரத்த அழுத்த சோதனைக் கருவிகள் இன்று 30 ஆம் திகதி முதல் செயற்பட ஆரம்பிக்கின்றன. இக்கருவிகள் கொழும்பு மாவட்டத்தில் பொதுமக்கள் சுலபமாக இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளக்கூடிய இடங்களில் பொருத்தப்பட்டிருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். இந்தக் கருவிகள் சுகாதார அமைச்சின் சிற்றுண்டிச்சாலை, கொழும்பு தேசிய கண்ணாஸ்பத்திரி, அரச மருந்தாக்கற் கூட்டுத்தாபனக் கட்டடம், பொரள்ளையிலுள்ள தொழுநோய் சிகிச்சை பிரிவு, புறக்கோட்டையிலுள்ள இலங்கை வங்கித் தலைமையகக் கட்டடம் ஆகிய ஐந்து இடங்களில் பொறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். உயர் இரத்த அழுத்தம் காரணமாக தினமும் பலர் இருதய பாதிப்புக்கும், உயிராபத்து நிலைக்கும் உள்ளாகின்றனர். அதனால், 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வாரத்திற்கு ஒரு தடவையாவது தமது இரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக் கொள்ளுவது அவசியம். இதற்காக டொக்டரை அணுக வேண்டும். என்றாலும், உயர் அழுத்தம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளவர்கள் கூட இப்போது தங்களது இரத்த அழுத்த நிலைமையை ஒழுங்குமுறையாக பரிசோதித்துக் கொள்ளாதிருப்பது தெரிய வந்திருக்கின்றது. சித்திரை 30, 2012 சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் கடத்தும் கப்பல் லெபனானில் சிக்கியதுசிரியாவுக்கு ஆயுதம் கடத்திச் சென்ற கப்பல் ஒன்றை லெபனான் கப்பற் படையினர் கைப்பற்றியுள்ளனர். சியரலியோனில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்டிருந்தன. இந்த கப்பலில் வந்த 11 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதோடு கப்பலில் இருந்த மூன்று கண்டைனர் கொள்கலன்களில் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு கொண்டு செல்லப்படுவதென சந்தேகிக்கப்படுகிறது. இவ்வாறு கைப்பற்றப்பட்ட ஒரு சில ஆயுதங்களில் லிபிய நாட்டு அடையாளம் பதியப்பட்டுள்ளதாக ராய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. சட்ட விரோத ஆயுதங்கள் கொண்டு வரப்படுவதை தடுக்கும் லெபனானுக்கான ஐ. நா. படையின் பேச்சாளர் மிலொஸ் ஸ்ட்ரகர், இந்த ஆயுதக் கப்பல் லிபிய துறைமுகத்தில் இருந்து வந்தது என உறுதி செய்துள்ளார். சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு திரிபோலி முக்கியதளமாக இருந்து வருவதாகவும் அங்கிருந்து ஆயுதங்கள் உள்நாட்டுக்கு கடத்தப்படுவதாகவும் சிரிய அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. லிபியா, சிரிய நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வருவதாக ரஷ்யாவும் குற்றம் சாட்டியுள்ளது. சித்திரை 29, 2012 கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாட்டை அறியாது வாக்களித்த மக்கள் குழப்பத்தில்! தமிழ்க் கூட்டமைப்பின் உண்மையான நிலைப்பாடு என்ன என்பதை அறியாது தமிழ் மக்கள் குழம்பிப் போயுள்ளனர். புலத்தில் அதாவது உள்நாட்டில் அரசாங்கத்தி ற்கு நல்லெண்ணத்தைக் காட்டுவது போல நடிப்பதும் வெளிநாடுகளிலுள்ள புலம் பெயர் சமூகத்திற்கு தாம் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் எனக் காட்டுவதுமாக இர ட்டை முகத்துடனேயே கூட்டமைப்பு இன்று செயற்பட்டு வருகின்றது. எனவே கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஊடகங்கள் மூலமாகத் தமது நிலைப்பாட்டை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில் கூட்டமைப்பிலுள்ள சிலர் அரசின் செயற்பாடுகளை ஆதரிப்ப தாகவும், சிலரோ எதிர்ப்பதாகவுமே இன்றைய நிலை உள்ளது. இரா. சம்பந்தன் அவ ர்களின் மெளனத்தின் அர்த்தம் தான் என்ன? தமிழ் மக்களின் நலனுக்காக என்று இவர்கள் கூறி அரசுக்கு நல்லெண்ணத்தை வெளிப்படுத்த விரும்பினால் அது குறி த்து ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி தாம் எடுத்த முடிவுக்கான காரணத்தை யும் தெளிவாக விளக்கினால் தமிழ் மக்கள் நிச்சயம் அதனை ஏற்றுக்கொள்வர். (மேலும்.....) சித்திரை 29, 2012 முதலில் வெளிப்படையான தேர்தலை நடத்துங்கள் - அமெரிக்காவுக்கு சாவேஸ் அறிவுரை நடப்பாண்டு நவம்பர் மாதத்தில் புதிய அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. தற்போதைய அதிபர் பாரக் ஒபாமா மீண்டும் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கான வேட்பாளரைத் தேர்வு செய்யும் பணியில் குடியரசுக் கட்சி தற்போது ஈடுபட்டிருக்கிறது. தற்போதுள்ள நிலையில் மிட் ரோம்னி வேட்பாளர் தேர்வில் முன்னணியில் இருக்கிறார். ஒபாமாவைப் பொறுத்தவரை, மிட் ரோம்னிக்கு எதிரான பிரச்சாரத்தைத் துவக்கி விட்டார். பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள வேளையில், நெருக்கடி தீர்ந்து விட்டது என்று தேர்தலுக்காக அறிக்கையும் வெளியிட்டார். தனது தேர்தல் பிரச்சார மும்முரத்திலும், தங்களுக்குத் தலையாட்டாத நாடுகளை சீண்டுவதை அவர் நிறுத்தவில்லை. (மேலும்.....)
சித்திரை 29, 2012 தம்புள்ளையில் நடந்தது என்ன? (சுஐப் எம். காசிம் ) இஸ்லாம் சாந்தியைப் போதிக்கும் மார்க்கம். சமாதானத்தை விரும்பும் மார்க்கம். பிற மதத்தவரையும் இனத்தவரையும் மதிக்கும் மார்க்கம். அந்த மார்க்கத்தை பின்பற்றும் இந்த நாட்டிலே வாழும் முஸ்லிம்கள் இதுகாலவரை எந்த மதத்தினரையும் தூஷித்ததில்லை. முஸ்லிம்கள் எங்கு வாழ்கின்றார்களோ அங்குள்ள ஏனைய இன மக்களை சோதரர்களாகவும் நண்பர்களாகவும் மதித்து உடன் இருந்து வாழும் கொள்கையுடையவர்கள். கொழும்பிலும் சரி தம்புள்ளையிலும் சரி முஸ்லிம்கள் இவ்வாறே வாழ்ந்து வருகின்றனர். வாழவும் விரும்புகின்றனர். தம்புள்ளையில் வாழும் சிங்கள மக்களோடு அங்குள்ள முஸ்லிம்களும் வர்த்தகர்களும் மிகவும் நெருக்கமாகவும் அந்நியோன்யமாகவும் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அண்மையில் நடந்த விரும்பத் தகாத அசம்பாவிதங்களின் போது அங்கு பூர்வீகமாக வாழ்ந்து வரும் சிங்கள மக்களின் உணர்வுகளில் இருந்து புரிந்துகொள்ள முடியும். (மேலும்.....) சித்திரை 29, 2012
அமெரிக்காவில்
கைது தொடர்கிறது சித்திரை 29, 2012 படையினரால் உயிர் பிழைத்த கஜேந்தினி.
“எனக்கு முந்தி ஆமியெண்டா பயம். அவை நல்லவை எண்டு இப்ப விளங்குது என்ரை வாழ்க்கையில அவையள மறக்கேலாது” என்று கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் கஜேந்தினி. சில தினங்களுக்கு முன்பாக, யாழ்ப்பாணத்தில், இராணுவத்தால் உயிர் காக்கப்பட்ட பெண் என்று பரபரப்பாகப் பேசப்பட்ட செய்திக்குச் சொந்தக்காரி. 15 நாட்களே உயிர் வாழ்வார் என மருத்துவர்களால் காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில் பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியால் இன்று உயிர் பிழைத்திருக்கும் அதிசயம் அவர். யாழ்ப்பாண இராணுவக் கட்டளை பீடத்தின் ஏற்பாட்டிலான இலவச இருதய சத்திரசிகிச்சை மூலம் உயிர் காக்கப்பட்ட கஜேந்தினியை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற போதே கஜேந்தினி கண்ணீர் மல்க மேற்கண்டவாறு நன்றி தெரிவித்திருக்கிறார். (மேலும்.....) சித்திரை 29, 2012 கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் பதவிப் போட்டி? என்னைத் தவிர எவராவது முயற்சித்தால் அது வெறும் பகற் கனவாகுமென்கிறார் பிள்ளையான் TNA போட்டியிடின் கதையே வேறு - யோகேஸ் எம்.பி. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால் அடுத்த முதலமைச்சரும் தானே எனவும் அதில் எவருடைய கனவும் பலிக்காது எனவும் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்திருக்கிறார். தனது பதவிக் காலத்தில்தான் மக்களுக்குச் சேவை செய்து வருவதை மக்கள் இலகுவில் மறந்துவிட மாட்டார்கள். தான் ஒருபோதும் மக்களை விட்டு விலகிச் சென்றது கிடையாது. என்னைத் தெரிவு செய்த மக்களுடன் கூடவே இருந்து அவர்களது குறைகளை நிவர்த்தி செய்து வருகின்றேன். சிலர் போன்று பதவி களைப் பெற்றுக்கொண்டதும் மக்களைத் திரும்பியும் பார்க்காதவன் நானில்லை எனவும் பிள்ளையான் தெரிவித்திருக்கிறார், எனவே எவருக்காவது முதலமைச்சராக வரும் எண்ணமிருந்தால் அது வெறும் பகற் கனவாகவே அமையும். ஏனெனில் நான் தமிழ் மக்களுக்கு மட்டுல்ல கிழக்கில் வாழும் முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் எவ்விதமான பாரபட்சமற்ற சேவையாற்றி வருவதாகவும் பிள்ளையான் தெரிவித்தார். (மேலும்.....) சித்திரை 29, 2012 பகாசுர நிறுவனம் நாட்டுடைமை அர்ஜெண்டினா செனட் சபை ஒப்புதல் ஸ்பெயின் நாட்டு பகாசுர எண்ணெய் நிறுவனமான ரெப்சோலின் துணை நிறுவனமான ஒய்.பி.எப். எண்ணெய் நிறுவனத்தை நாட்டுடைமையாக்கும் அர்ஜெண்டினா அரசின் முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒய்.பி.எப். எண்ணெய் நிறுவனம் அரசுக்குச் சொந்தமான நிறுவனமாகவே இருந்து வந்தது. ஐ.எம்.எப் பரிந்துரைகளால் நாட்டின் பொருளாதாரம்சின்னாபின்னமாக்கப்பட்டபோது இந்த நிறுவனம் ஸ்பெயினைச் சேர்ந்த பகாசுர நிறுவனமான ரெப்சோலுக்கு தாரை வார்க்கப்பட்டது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதித்து வந்தது. கச்சா எண்ணெய் வளத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலான தென் அமெரிக்க நாடுகள் அதைத் தங்களின் வசம் வைத்துள்ளன அல்லது தற்போது எடுத்துக் கொண்டுள்ளன. (மேலும்.....)
சித்திரை 29, 2012 பிரான்ஸ் ஜனாதிபதி யார்? இரண்டாம் கட்ட தேர்தலில் ஹோலண்ட் சர்கோஸி (ஏ.ஜி.எம். தெளபீக் )
பிரான்ஸில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்த லில் ஐந்து பேர் போட்டி யிட்டதால் எவரும் ஐம்பது வீதமான வாக்குகளைப் பெற முடியவில்லை. இதனால் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமை (மே 06) நடைபெறவுள்ளது. எல்லோரும் ஆசைப்பட்டால் மக்கள் யாரைத் தெரிவு செய்வார்கள் என்ற இழுத்தடி ப்பே இது. முதலாம் கட்ட வாக்களிப்பு முடிவுகளின்படி ஹோலண்ட் 28.5 வீத வாக்குகளையும் நிக்கலஸ் சர்கோஸி 27.1 வீதத்தையும் பேரின்லிபென் 18.1, ஜீன் லக் 11.1, பிரான்ஸ் கொஸ் 8.5 வாக்குகளையும் பெற்றனர். இப்போது பதவியிலுள்ள ஜனாதிபதி சர்கோஸி இரண்டாம் இடத்துக்குச் சென்று பின்னடைவிலுள்ளார். இதேவேளை ஹோலண்ட் முன்னிலைக்கு வந்து ஜனாதிபதியாகும் அதிஷ்டத்தை நெருங்கிவிட்டார். (மேலும்.....) சித்திரை 29, 2012 புத்தபெருமான் வருகை தந்த ‘லங்கா பட்டண’ துறைமுகத்துக்குச் சென்றோம்
பல மாதங்களாக நாம் யாழ்ப்பாணத்தின் தீவுக்கூட்டங்களுக்கிடையே திரிந்து சென்றோம். அத்தீவுகளில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை மட்டுமன்றி அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களில் யுத்தத்தால் இருளடைந்த பகுதிகளுக்கும் சென்றோம். இன்று பிரசுரிக்கப்படுவது இறுதிப் பாகமாகும். விசேடமாக தந்ததாது இலங்கைக்கு கொண்டு வந்து வைத்த லங்கா பட்டண ஸ்ரீ சமுத்ரசிறி ரஜ மகா விகாரையோடு தொடர்புடைய கதையையும் எடுத்துக் கொண்டு வருகிறோம். நான் இந்த வரலாற்றுப் புகழ் மிக்க பிரதேசம் அமைந்துள்ள கிழக்கு மாகாணத்திலமைந்துள்ள திருகோணமலை பக்கமாக வாகனத்தைத் திருப்புமாறு அனுரங்கவுக்கு கூறினேன். மூதூர் நகருக்கு சுமார் 35 கிலோ மீற்றர் தெற்குப் பக்கமாகவும் சேருவில புனித பூமிக்கு கிழக்குப் பக்கமாக நேரடியாகத் தெரிகிறபடி சுமார் 6 கிலோ மீற்றர் தூரத்திலும் இந்த மனோரம்மியமான புனித ஸ்தலம் அமைந்துள்ளது. (மேலும்.....) சித்திரை 28, 2012 இலங்கை பிரச்சனைக்கு சர்வதேச பரிணாமம் (டி.கே.ரங்கராஜன் எம்.பி.,) நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடரில் இலங்கைப் பிரச் சனை குறித்து இரு அவைகளிலும் கூர் மையான விவாதம் முன்னுக்கு வந்தது. இலங்கையிலிருந்து எட்டு கட்சிகள் குழு ஒன்று தில்லிக்கு வந்து பல்வேறு கட்சித் தலைவர்களை சந்தித்து உரையாடியது. இதைத் தொடர்ந்து மக்களவை, மாநி லங்களவையில் இலங்கைப் பிரச்சனை என்பது தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க் கள் மட்டுமே பேசும் ஒரு பிரச்சனை என்ற நிலை மாறி பல்வேறு கட்சிகள் இலங்கைப் பிரச்சனை குறித்து தங்களது கருத்துக்களை முன்வைத்தன. இலங் கைப் பிரச்சனைக்கு ஒரு அகில இந்திய பரிமாணம் கிடைத்தது. இலங்கைத் தமிழ் மக்களின் துயரத் திற்கு முடிவு காணப்பட வேண்டும். அங்கு ஒரு அர்த்தபூர்வ அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென அனைத்துக் கட்சி களும் ஒருமித்தக் குரலில் வலியுறுத்தின. (மேலும்.....)சித்திரை 28, 2012 எனது எஞ்சியவாழ்நாளின் இலட்சியம் தமிழீழமே - கருணாநிதி என் எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம். தமிழீழமே. அதனை உருவாக்கி விட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்வேன் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி சூளுரைத்துள்ளார். வடசென்னை தி.மு.க சார்பில் பெரவள்ளூரில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "பேரறிஞர் அண்ணா, காந்தி வழியில் அறப்போராட்டம் நடத்தி தமிழீழம் கிடைக்க போராடுவேன். தனி ஈழம் அமைப்பதற்கு 1980களில் உருவாக்கப்பட்ட 'டெசோ' எனப்படும் தமிழீழ ஆதரவாளர்களை மீண்டும் தொடங்க வேண்டும். அந்த இயக்கம் திமுகவின் துணை இயக்கமாக செயலாற்றி தமிழீழம் உருவாக்கப்படும். தந்தை செல்வாவின் (தமிழீழத்திற்காக அகிம்சை வழியில் போராடியவர்) வன்முறையற்ற வழியில் அமைதிப் போராட்டம் அங்கு புதிய வடிவம் பெறும். இலங்கை ஜனாதிபதி இதனை நிராகரிக்கலாம். ஆனால், இதுதான் என் எஞ்சிய வாழ்நாளின் இலட்சியம். தமிழீழத்தை உருவாக்கி விட்டுத் தான் இந்த உலகத்தை விட்டுச் செல்வேன்" என்றார். 1987ம் ஆண்டு உருவான இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை பலமிக்கதாக செயற்பட ஒத்துழைப்பை 'தாத்தா' அன்று வழங்கியிருந்தால் இன்று தமிழ் பிரதேசங்களில் நிலமைகள் ஓரளவேனும் சீரான செயற்பாடுகள் நடைபெற உதவியிருக்கும். அன்று புலி. பிரேமதாச, ஜேவிபி யுடன் கை கோர்த்து இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைத்து விட்டு இன்று 'தாத்தா' சாகும்வரை என சபதம் எடுப்பது பொரிமாத் தோண்டிக் கதையைதான் ஞாபகப்படுத்துகின்றது. சித்திரை 28, 2012 தமிழீழம் குறித்துப் பேச கருணாநிதிக்கு எதுவித தகுதியுமில்லை - வைகோ தமிழீழம் குறித்துப் பேச திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு எதுவித தகுதியுமில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையில் தமிழர்களை அழிக்க அனைத்து வகையிலும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு உதவி செய்தது. மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் அதற்குத் துணைபோயினவே அன்றி எதிர்த்து எதுவுமே பேசவில்லை. இலங்கைக்கு ஆயுத உதவி செய்தபோதோ, படுகொலைகள் அரங்கேறிய போதோ அவற்றைத் தடுத்து நிறுத்தக் குரல் கொடுக்காமல் மௌனம் காத்தார் கருணாநிதி. ஆனால், இப்போது தமிழீழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று குரல் எழுப்புகிறார். தனி ஈழம் குறித்துப் பேச அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை" என்றார். ___ சித்திரை 28, 2012 வடகிழக்கில் காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் அவற்றை பெற்றுக் கொள்ள வகை செய்யும் சட்டம் - ரவூப் ஹக்கீம்!
யுத்தகாலத்தில் நாட்டின் வடகிழக்கு
மாகாணங்களில் தமது காணிகளை பறிகொடுத்த உரிமையாளர்கள் மீண்டும் அவற்றை
பெற்றுக்கொள்வதற்கு வகை செய்யும் விதத்திலான சட்டம் மிக விரைவில்
அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை
(27) முற்பகல் தம்மைச் சந்தித்து கலந்துரையாடிய அவுஸ்திரேலிய தூதுவர்
ரொபின்மூடிடம் அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார். யுத்தத்திற்கு
பின்னரான காலகட்டத்தில் நிலக் கண்ணி வெடி அகற்றலுக்கும், மீள்குடியேறும்
மக்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கும்
அவுஸ்திரேலிய அரசாங்கமும் பங்களிப்புகளை செய்து வருவதாக அந் நாட்டுத்
தூதுவர் தெரிவித்தார். கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்துமென
தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். சிறையிலுள்ள தமிழ் சந்தேக நபர்கள்
பற்றிய தூதுவரின் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அமைச்சர் ஹக்கீம், அவ்வாறான
ஏறத்தாழ பன்னிரண்டாயிரம் பேரில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டு
விட்டதாகவும், சமூகமயப்படுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறியதோடு,
குற்றச்சாட்டுகள் உள்ள குறிப்பிட்ட சிலரின் விவகாரத்தில் விரைவில் உரிய
தீர்வு காணப்படவிருப்பதாகவும் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின கொண்டாட்டம் கொழும்பில் மேதினக் கொண்டாட்டங் களை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பிரதான கட்சிகள் மும்முரமாக முன்னெடுத்துள்ளன. இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதின விழா கொழும்பு நகர சபை முன்றலிலும் ஐக் கிய தேசியக் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணைந்த மே தினக் கூட்டம் யாழ்ப் பாணத்திலும் நடைபெறவுள்ளன. கொழும்பில் நடைபெறும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் கூட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இ.தொ.கா.வின் மே தினக் கூட்டம் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் கினிகத்தேனையில் நடைபெறுவதுடன் ஜே.வி.பி.யின் மேதினக் கூட்டம் கொழும்பிலும் தொழிலாளர் விடுதலை முன்னணி, புரட்சிகர ஐக்கிய கேந்திரக்கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச’ லெனினிசக் கட்சி ஆகியனவை இணைந்து ஹட்டன் நகரிலும் மேதினக் கொண்டாட்டங்களை நடத்தவுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இம்முறை தமது மே தின விழாவை யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடத்தவுள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சி உள்ளிட்ட இடது சாரிக் கட்சிகள் ஒன்றிணைந்து கொழும்பிலும், ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் மஸ்கெலியாவிலுள்ள சாமி மலையிலும் மலையக மக்கள் முன்னணி பூண்டுலோயாவிலும் மேதினக் கொண்டாட்டங்களை நடாத்தவுள்ளன. சித்திரை 28, 2012 சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்!'பேஸ்புக்', 'டுவிட்டர்' போன்ற சமூக வலைத்தளங்களில் பெண்களின் ஆதிக்கம்' அதிகரித்து வருகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் பிரபலமான சமூக, வலைத்தளங்களில் ஈடுபாடு காட்டுபவர்களில் 58 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிய வந்திருக்கிறது. பியூ ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். அப்போது, 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2010ல் சமூக வலைத்தளங்களில் இணைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காகி 85 கோடியாகியிருக்கிறது. ஆனால் இந்த வலைத்தளங்களில் இணையும் ஆண்களின் எண்ணிக்கை 3 சதவீதம் குறைந்துள்ளது. இந்த விடயம், சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் திருப்பியுள்ளது. அவை, ஆண்களை ஈர்க்கும் விடயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆண்கள் தொடர்பான நிகழ்வுகளையும் படங்களையும் அதிகம் இடம்பெறச் செய்ய ஆரம்பித்திருக்கின்றன. 'வரலாற்று ரீதியாகவே பார்த்தால், உறவுக்கான வலைப்பின்னலாக பெண்களே உள்ளனர்'. சித்திரை 28, 2012 ஜனாதிபதிக்கும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. கிழக்கு மாகாணசபையை கலைப்பது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. மாகாணசபையின் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னதாக மாகாணசபையை கலைக்க வேண்டுமாயின் அதற்கு முதலமைச்சரின் இணக்கம் அவசியமானது எனத் தெரிவிக்கப்படுகிறது. கிழக்கு மாகாணசபை கலைப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் நோக்கில் முதலமைச்சர் பிள்ளையானுடன், ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கிழக்கு மாகாணசபைக்கு மேலதிகமாக மேலும் இரண்டு மாகாணசபைகளும் கலைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சித்திரை 28, 2012
இலங்கை பயணம் தொடர்பாக சுஷ்மா சுவராஜ் மே 3ல் விவாதம்இலங்கைப் பயணம் குறித்து இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் தனது தலைமையிலான குழுவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மே 3ம் திகதி விவாதிக்கவுள்ளார். இது தொடர்பாக எம்.பிக்களுக்கு அவர் அழைப்பு அனுப்பியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழ் மக்களின் நிலைமை குறித்தும், இந்தியாவின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வுத் திட்டங்களை ஆராயவும் இந்திய நாடாளுமன்றத்தின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் குழு இலங்கையில் 6 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் 21ம் திகதி வரை பயணம் செய்த அந்தக் குழுவுக்கு இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமை வகித்தார். (மேலும்.....) சித்திரை 28, 2012 நாடாளுமன்ற உறுப்பினராகிறார் சச்சின் டெண்டுல்கர் இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான (ராஜ்ய சபா) நியமன உறுப்பினராக இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த வேளையில் நாடாளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை பிரதமர் வழங்கியதாகவும், அதை சச்சின் டெண்டுல்கர் ஏற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 250 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியாவின் மாநிலங்களவையில் 12 உறுப்பினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்றனர். இது கலை, இலக்கியம், விஞ்ஞானம், சமூக சேவை போன்றவற்றில் மிகச் சிறந்து விளங்குபவர்களுக்காக வழங்கப்படுவது ஆகும். இந்த அடிப்படையில் தெரிவுசெய்யப்படும் முதலாவது விளையாட்டு வீரர் ஆவதற்கான வாய்ப்பு சச்சின் டெண்டுல்கருக்கு கிட்டியுள்ளது. இந்தியாவில் சச்சின் டெண்டுல்கரின் புகழ் மற்றும் செல்வாக்கு காரணமாக சச்சின் டெண்டுல்கரின் நியமனத்திற்கு எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது. நியமனம் முற்று முழுதாக உறுதிப்படுத்தப்பட்ட நிச்சயமான ஒன்றாக கருதப்படுகிறது. சச்சின் டெண்டுல்கரின் பெயரை இந்தியாவின் ஆளுங் கட்சியாக காங்கிரஸ் கட்சியே பரிந்துரை செய்துள்ளது. இந்தியாவில் பலத்த உள்ளூர் எதிர்ப்புக்களைச் சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி, இந்த எதிர்பாராத அறிவிப்பை விடுத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தியைச் சந்தித்ததன் பின்பு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சச்சின் டெண்டுல்கர் சந்தித்துள்ளார். சித்திரை 28, 2012
Sam Rajendran,
The president of the Canadian Democratic Tamil Cultural Association. சித்திரை 28, 2012 பொலிஸ் பொதுமக்கள் நட்புறவு வளர வேண்டும்30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்ததை அடுத்து பயங்கரவாத மும் பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நாட்டின் முப்படைககளின் நேரடிப் பாதுகாப்பு பணிகள் பெருமளவில் குறைந்திருக்கிறது. நாட்டின் கேந்திர நிலைகளுக்கு பாதுகாப்பு அளித் தல், நீர்த் தேக்கங்கள், இராணுவ முகாம்கள், மின்சக்தி நிலையங்கள், ஆஸ்பத்திரிகள், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கக் காரியாலயங்களு க்கு அளித்தல், பிரதான பாதைகளுக்கு பாதுகாப்பு அளித்தல் போன்ற காரியங்களுக்கு மாத்திரமே பாதுகாப்புப் படையினர் இப்போது பாதுகாப்பு அளிக்கும் பணிகளை செய்து வருகிறார்கள். (மேலும்.....) சித்திரை 28, 2012 மோடிக்கு விசா வழங்க முடியாது - அமெரிக்கா குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க மறுக்கும் நிலை பாட்டில் மாற்றம் இல்லை என்று அமெரிக்கா கூறி யுள்ளது. மோடிக்கு விசா அளிப் பது குறித்த நிலைபாட் டில் மாற்றங்கள் இல்லை என்று அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் விக்டோரியா மூலந்த் கூறி னார். அன்றாடம் நடை பெறும் செய்தியாளர் கூட்டத்தில் அவர் இவ் வாறு கூறினார். மோடிக்கு விசா வழங் குவதில்லை என்ற 2005ம் ஆண்டு தீர்மானத்தை அமெரிக்க அரசு மாற்றிக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வால்ஷ், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாலி கிளிண்டனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். மோடிக்கு விசா வழங்கும் 2005 முடிவை மாற்றக் கூடாது என்று அமெரிக்க முஸ்லிம் சமு தாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள் ளது. அமெரிக்காவால் ஆசீர்வதிகப்பட்ட அடுத்த பிரதம மந்திரிக்கு ஏன் அமெரிக்கா தற்போது விசா மறுக்கின்றது என்பது புரியாத புதிராக இருக்கின்றது. சித்திரை 28, 2012 மேற்கத்திய நாடான கனடாவில் ஷாருக்கானை தொடர்ந்து கமலஹாசனுக்கும் அவமதிப்பு அமெரிக்க விமான நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தி திரையுலகின் முன்னணி நடிகர் ஷாருக்கான் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்டார். அமெரிக்காவில் ஷாருக்கான் ஏற்கனவே இவ்வாறு பலமுறை அவமதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டது குறித்து இந்திய அரசின் சார்பில் கடும் ஆட்சேபணை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழ்திரையுலகில் உலகநாயகன் என அழைக்கப்படும் கமலஹாசனும் மேற்கண்டவாறு விமான நிலைய அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத் தப்பட்டு அவமதிக்கப்பட் டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், இம்முறை மற்றொரு மேற்கத்திய நாடான கனடாவில் அத்தகைய சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், அமெரிக்கர்களுக்கு கமலஹாசன் என்ற எனது பெயரை உச்சரிக்கும்போது முஸ்லிம் பெயர் போல் தோன்றி உள்ளது. இதனால். அமெரிக்காவில் ஷாருக்கானுக்கு நிகழ்ந்த சம்பவம்போல், கனடா விமான நிலையத்தில் என்னை தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் அரை மணி நேரம் என்னிடம் கேள்விகளை கேட்டு சோதித்து பார்த்தனர். சித்திரை 27, 2012 இலங்கை வரலாற்றின் வழித்தடத்தில் (டி.கே.ரங்கராஜன் எம்.பி.,) இலங்கைக்கு இதுவரை மூன்று முறை சென்று வந்துள்ளேன். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற் பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சென்று வந்தேன். அடுத்து கொழும்பில் நடைபெற்ற மேதின விழா ஒன்றில் பங்கேற்க கட்சியின் சார்பில் சென்று வந்தேன். தற்போது, இந்திய நாடா ளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கட்சி யின் சார்பில் பிரதிநிதியாக இடம் பெற்று சென்று வந்தேன். 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்கி 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை நீடித்த இலங்கை உள்நாட்டுப் போர் என்பது துயரம் மிகுந்த ஒரு வர லாறாகும். 1983ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தப் போர் நீடித்தது. இதன் காரணமாக ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளது. சொந்த நாட்டிலேயே நிலை குலைந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் ஒரு பகுதி என்றால், உலகம் முழுவதும் அகதிகளாகச் சென்று வாழ்க்கையை கழித்து வருகின்றனர் ஒரு பகுதித் தமிழர்கள். (மேலும்......)சித்திரை 27, 2012 தம்புள்ளை பள்ளிவாசல் தாக்கப்பட்ட விவகாரம்: அம்பாறையில் ஹர்த்தால்
தம்புள்ளை நகரிலுள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் ஹைரியா ஜூம்மாப் பள்ளிவாசலை பேரினவாத கடும்போக்குவாதிகள் தாக்கியதைக் கண்டித்தும் அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றி வேறு இடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டு. - திருகோணமலை வீதியிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பஸார் வீதி போன்ற இடங்களிலுமுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பஸார் வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இதேவேளை, காத்தான்குடிப் பிரதேசத்திலும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவில்லை. அத்துடன் பாடசாலை மாணவர்களின் வருகையிலும் வீழ்ச்சி காணப்படுகிறது. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, அக்கரைப்பற்று, நிந்தவூர், சம்மாந்துறை உள்ளிட்ட பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் இயங்காமலிருப்பதோடு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு மக்கள் தமது எதிர்ப்பினையும் தெரிவித்து வருகின்றனர். சித்திரை 27, 2012 முஸ்லிம்கள் எக்காலத்திலும் தாய்நாட்டுக்கு விசுவாசமாகவே செயற்பட்டு வருகின்றனர்‘சிங்கள மக்களில் பெரும்பான்மையினர் இந்த நாட்டின் ஏனைய சமூகங்களுடன், சகோதரத்துவத்தையும் சமாதான வாழ்வையும் விரும்புகின்றனர். ஆனால் சிலர் காழ்ப்புணர்ச்சிகளை கட்டவிழ்த்து விடுகின்ற பொழுது அதன் தாக்கம் சிறுபான்மை சமூகத்தினை மட்டுமல்லாது பெரும்பான்மையினையும் சேர்த்தே பாதிக்கின்றது. இதைத்தான் கடந்த காலங்களில் நமது நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளில் கண்டோம்.' (மேலும்......) சித்திரை 27, 2012
இராசதுரைக்கு - கறுப்புக்கொடி காட்டினார்
சிவாஜிலிங்கம்! தந்தை செல்வா முன்நிலையில் சண்டையிட்ட கூட்டமைப்பு தலைவர்கள்!! யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார். சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, "தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டும்" என போராட்டத்தில் ஈடுபட்டார். (மேலும்......) சித்திரை 27, 2012 அரச நிறுவன அதிகாரிகளின் வரி ஏய்ப்பு; 'கோப்' குழு விசாரணைகளில் அம்பலம் கூடுதலான வருமானம் ஈட்டும் பிரதான அரசங்க நிறுவன உத்தியோகத்தர்கள் அரசாங்கத்துக்கு வருமான வரி செலுத்தாது முறைகேடு செய்திருப்பது ‘கோப்’ விசாரணை மூலம் தெரியவந்துள்ளது இவர்களுக்காக அரசாங்கம் 2.3 கோடி ரூபா வருமான வரி செலுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவன முன்னாள் தலைவர்களை விசாரிக்க உள்ளதாக கோப் குழு தலைவரும் சிரேஷ்ட அமைச்சருமான டியூ. குணசேகர கூறினார்.சில மோசடிகள், மற்றும் முறைகேடுகள் தொடர்பில் சி. ஐ. டி. மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவுக்கு அறிவித்தாலும் அவை குறித்து விசாரணை செய்யப்படாது காலங்கடத்தப்பட்டுள்ளது. (மேலும்......) சித்திரை 27, 2012 The Manoir Ronald McDonald Children’s House To whom it may concern
To coincide with Vesak, the Sri Lanka High Commission in Ottawa is organizing a meritorious activity to be held at the Manoir Ronald McDonald Children’s House, 407 Smyth Road, Ottawa K1H 8M8 on Saturday 12th May at 10.00 a.m. The High Commission wishes to invite the Sri Lankan community and well-wishers to collaborate with the High Commission in this project. Those who wish could donate the following:
White face / bath towels, dishwasher detergent, hand detergent , Laundry Detergent (for high efficiency machines), toys, books for all ages, serviettes, toothpaste, tooth brushes, soap, tea, coffee, sugar, stationery and toilet tissues.
The Manoir Ronald McDonald Children’s House is a ‘home away from home’ for families with children up to 18 years suffering from cancer or other serious illnesses being treated at the Children’s Hospital of Eastern Ontario. As the treatment for some of the sick children may take a long period, the Ronald McDonald Children’s House is a place to call home while the child is receiving treatment.
The Ronald McDonald Children’ House provides affordable comfortable accommodation in a home like atmosphere where the parents can be near their hospitalized children.
The House is owned and operated by the National Capital Children’s Oncology Care Inc. and is a not-for-profit organization. This community resource relies on individuals and community groups, and businesses in Ottawa for it’s maintenance.
Your generosity & contribution towards this meritorious act is much appreciated. Chitranganee Wagiswara High Commissioner 26/04/2012 (All donations could be handed over to the Sri Lanka High Commission on or before 10th May. For further information please contact Judy/Sarath on 613 233 8449) சித்திரை 27, 2012 நாடு திரும்பினார் சாவெஸ் வெனிசூலா ஜனா திபதி ஹுகோ சாவெஸ் கியூபாவில் 11 நாள் புற்றுநோய் சிகிச்சைக்கு பின் நாடு திரும்பி யுள்ளார். வெனிசூலா தலைநகர் கரகாசுக்கு நேற்றுக் காலை திரும்பிய சாவெஸ் துணை ஜனாதிபதி மற்றும் தமது அரசின் முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். சாவெஸ் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் மேலும் 6 ஆண்டு தவணைக்காக போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. சித்திரை 27, 2012 தம்புள்ளை விவகாரம்: நிந்தவூரில் எதிர்ப்புப் பேரணி
தம்புள்ளை நகரிலுள்ள முஸ்லிம்களின் வணக்கஸ்தலமான மஸ்ஜிதுல் கைரியா ஜும்மாப் பள்ளிவாயல் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் அவ்விடத்திலிருந்து பள்ளியை அகற்றி வேறிடத்தில் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்திலுள்ள இளைஞர் ஒன்றியம் எதிர்ப்புப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்தது. இப்பேரணியில் பல இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இப்பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டும் வருகின்றது. சித்திரை 27, 2012 ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம் குறித்து மன்னிப்பு சபை அறிக்கைஐரோப்பிய முஸ்லிம்கள் வெளிப் படையாக தமக்கு எதிரான பாரபட்சத்திற்கு முகம்கொடுத்து வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளை தடுக்க ஐரோப்பிய அரசுகள் முன்வர வேண்டும் என அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில், கல்வி மற்றும் பாரம்பரிய உடை அணிவதில் ஐரோப்பிய முஸ்லிம்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முகத்தை மறைக்கும் பர்தா அணிவதற்கு ஒரு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருப்பதற்கும் மன்னிப்புச் சபை தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. “முஸ்லிம் பெண்கள் தமது பாரம்பரிய உடையை அணிவதால் அவர்களுக்கு தொழில் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. வகுப்பறைகளுக்கு சமுகமளிக்கவும் அவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு பர்தா அணிவது போன்றே ஆண்கள் இஸ்லாமிய அடிப்படையில் தாடி வைத்துக் கொள்வதாலும் பாரபட்சத்திற்கு முகம்கொடுக்கிறார்கள்” என்று சர்வதேச மன்னிப்புச் சபையின் பாரபட்சத்திற்குள்ளாகும் சமூகங்கள் தொடர்பிலான நிபுணர் மார்கோ பொரொலினி குறிப்பிட்டார். சித்திரை 27, 2012 முல்லைத்தீவு நெற்செய்கையாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல் _ ![]() பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முல்லைத்தீவு மாவட்ட புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட நெற்செய்கையாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சந்தித்து தாம் எதிர்நோக்கி வருகின்ற இடர்ப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். முள்ளியவளையில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் இணைய மண்டபத்தில் நேற்று முன்தினம் இச் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தாம் செய்கை பண்ணும் நெல்லை விற்பனை செய்ய முடியாதுள்ளதாகவும், இதனால் தாம் பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும், இது விடயம் தொடர்பில் தாம் பல்வேறு தரப்பினருக்கும் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவர்கள் பராமுகமாகவே இருந்ததாகவும் சுட்டிக்காட்டினர். அத்துடன் நெல்லைக் களஞ்சியப்படுத்தக்கூடியதாக உடையார் கட்டுப்பகுதியில் நெற்களஞ்சியமொன்று அமைக்கப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இவ்விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த அமைச்சர் அவர்கள் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களின் போது இறக்குமதி செய்யப்படும் அரிசிக்குப் பதிலாக உள்ளூர் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்குமாறும் உடையார்கட்டுப் பகுதியில் நெற்களஞ்சியம் ஒன்றை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்ததுடன் ஏனைய கோரிக்கைகள் தொடர்பிலும் ஆராயப்படுமெனவும் தெரிவித்தார். சித்திரை 27, 2012 பிரிட்டனில் மீண்டும் பொருளாதார வீழ்ச்சிபிரிட்டன் பொருளாதாரம் மீண்டும் நெருக்கடியான நிலையை சந்தித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரிட்டனில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதே போன்று இதற்கு முந்தைய காலாண்டிலும் பிரிட்டிஷ் பொருளாதாரம் வீழ்ச்சியை கண்டது. டபுள் டிப் ரிஸஷன் எனப்படும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழுந்த பிரிட்டன் மீண்டும் இன்னொரு வீழ்ச்சிக்குள் செல்லும் இரண்டாவது நெருக்கடியை 1970ம் ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் தடவையாக சந்தித்துள்ளது. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதை காட்டும் புள்ளிவிபரங்கள் மிக மிக ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் டேவிட் கெமரூன் கூறியுள்ளார். சித்திரை 27, 2012 பருவ நிலைகளுக்கேற்ப மாறும் கிணற்று நீர்பொதுவாக கிணற்று நீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெது வெதுப்பாகவும் இருக்கும். இதற்கு காரணம் தரைமட்டத்திற்குக் கீழ் சுமார் 50-60 அடி ஆழத்தில் கிணற்று நீர் கிடைக்கிறது. மண் அரிதில் வெப்பத்தைக் கடத்தும் என்பதால், கிணற்றின் ஆழத்தில் உள்ள நீர் ஏறக்குறைய 20-25 செ. கி. வெப்ப நிலையில் எப்போதும் இருக்கிறது எனலாம். கிணற்றின் வெளிப்புற வெப்பம் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறுதல் அடையும். குளிர் காலத்தில் சில பகுதிகளின் சுற்றுச் சூழல் வெப்ப நிலை 4-5 செ. கி. அளவுக்கும் செல்வதுண்டு. இந் நிலையில், கிணற்றுநீர் 20-25 செ. கி. அளவில் இருப்பதால், அது வெது வெதுப்பான நீராக உணரப் பெறுகிறது. இதற்கு நேர்மாறான நிலை கோடைகாலத்தில் உண்டாகிறது. கோடையில் சில பகுதிகளின் வெப்ப நிலை 40- 45 செ. கி. அளவில் இருப்பதை நாம் அறிவோம். அக்காலங்களிலும் கிணற்று நீர் 20-25 செ. கி. அளவில் இருப்பதால், சுற்றுச் சூழல் வெப்ப நிலையோடு ஒப்பிடுகையில், கிணற்றுநீர் குளிர்ந்த நீராக நம்மால் உணரப் பெறுகிறது. சித்திரை 27, 2012 துனீசியா தனியார்மயத்திற்கு எதிராக மக்கள்! வரக்கூடிய மாதங்களில் துனீசியாவின் அரசு தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு அந் நாட்டு மக்கள் மத்தியில் கடு மையான எதிர்ப்பு கிளம்பி யிருக்கிறது. இந்த அறிவிப்பு மேலும் பல தனியார் மய அறிவிப் புகளுக்கு இட்டுச் செல்லும் என்பதே எதிர்ப்பாளர்க ளின் கருத்தாகும். அரசு அதி காரி ஒருவர் மூலமாக இந்த அறிவிப்பு வெளியானவு டன் அரசியல் கட்சிகளிட மிருந்து கண்டனக் குரல்கள் உடனடியாக எழுந்தன. பல சமூக ஆர்வலர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு நிற்காமல், தலை நகர் துனிசில் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கும் ஏற் பாடு செய்தனர். அரசுத் தொலைக்காட்சி மற்றும் ஊடகங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனி நபர்கள் கைகளில் சிக்கிக் கொள்ளக்கூடாது, அவ்வாறு செல்லும்பட்சத் தில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கே அது அழைத் துச் செல்லும், அதிகாரத் தில் உள்ளவர்களின் புகழ் பாடுவதில்தான் அந்தத் தொலைக்காட்சி கவனம் செலுத்தும் என்கிறார்கள் எதிர்க்கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள். சித்திரை 26, 2012 தம்புள்ளை பள்ளிவாசலும் கோயிலும் புனித பூமிக்கு வெளியே உள்ளன தம்புள்ளை முஸ்லிம் பள்ளிவாசலும் கோயிலும் தம்புள்ளை புனித பூமி பிரதேசத்துக்கு வெளியிலே உள்ளன. இந்தப் பள்ளிவாசல் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அங்கு இயங்கி வருகிறது. அது சட்ட விரோத கட்டிடமல்ல. மூன்று முஸ்லிம்களின் பெயரிலே பள்ளிவாசல் காணி உள்ளது. மத ஸ்தலம் என்பதால் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு சோலை வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது என காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். (மேலும்......) சித்திரை 26, 2012 சுயவிளம்பரக் கலாச்சாரத்தின் கோரப்பிடியில் தமிழ்ச் சமூகம் (அ.ஆனந்தன்)
தமிழ்ச் சமூகம் ஆரியம் போன்றவற்றின் கலப்பின்றி இருந்திருக்குமானால் மிக உன்னதமாக ஒரு வழிப்பாதையில் வளர்ந்தோங்கி இருக்குமென்று முன் வைக்கப்படும் கருத்து சுருக்கமாகச் சொன்னால் பாமரத்தனமானது. சமூக வாழ்க்கை பல சிக்கல்கள் நிறைந்தது. அதனுடைய வளர்ச்சிப் போக்கை இவ்வாறு பார்ப்பது எந்த வகையிலும் விஞ்ஞானபூர்வ பார்வையாக இராது. பிற சமூக கலப்புகள் இன்றி வாழ்ந்த சமூகம், இன்றும் வாழ்ந்து வரும் சமூகம் என்று எதுவுமே இருக்க முடியாது. அவ்வாறு ஒன்று இருக்குமானால் அது தேங்கிய குட்டைபோல் ஆகி அதன் மக்கட் தொகையும் சுருங்கி அச்சமூகமே ஒரு நாள் இல்லாதொழிந்துவிடும். பல ஆதிவாசிக் குழுக்கள் இவ்வாறு அழிந்துபோனதே அதற்கு எடுத்துக்காட்டு. (மேலும்......) சித்திரை 26, 2012 Totally distorted picture of Sri Lanka that has been propagated in the West. Speech delivered by Sam Rajendran, President, CDTCA in Toronto on 22 April 2012 on the occasion of Sinhala Tamil New Year Celebration organized by CDTCA: On behalf of the CANADIAN DEMOCRATIC TAMIL CULTURAL ASSOCIATION, I am extremely delighted to welcome you all to our Celebration of Sri Lankan Solidarity on the occasion of the Sinhala Tamil New Year. I am especially proud to welcome the Sri Lankan High Commissioner to Canada, Her Excellency Mrs. Wagiswara as our chief guest this evening. It is also my great pleasure to welcome the Sri Lankan Consul General in Toronto, Hon Mr. Karunarathna Paranawithana, and all our special guests. (more....) சித்திரை 26, 2012 கியூபாவின் வழி தனி வழி (சில வருடங்கள் முன்பு கியூபா சென்ற பின்பு எழுதியது) (நடேசன்) கியூபா என்றதும் பலருக்கும் சேகுவேராவும் காஸ்ட்ரோவும்தான் நினைவுக்கு வருவார்கள். இன்னும் சிலருக்கு அழகான பெண்களும் (ஆண்களும்) நைட்கிளப்புகளும் நினைவுகளில் ஊஞ்சல் ஆடும். இதைவிட கியூபா சுருட்டும் ஹவானா ரம்மும் மறக்க முடியாதவை. பிடல் காஸ்ட்ரோ உயிர் வாழும் போதே கியூபா செல்லவேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்ற கடந்த தை மாதம் அங்கு சென்றேன். எனக்கு ஹவானா விமானநிலையத்தைப் பார்த்த போது ஒரு மூன்றாம் உலக நாட்டின் விமான நிலையம் போல்தான் காட்சியளித்தது. அரை குறையான ஆங்கிலமும் புன்னகை குறைவாக அணிந்திருந்த குடிவரவு அதிகாரிகளின் முகங்களும் ஏற்கனவே அமெரிக்க பிரசாரங்கள் படித்திருந்த என் மனத்தில் கொட்டையற்ற பழப்புளியை கரைத்தது போல் இருந்தது. ஆஸ்திரேலிய பணத்தை மாற்றி கியூபா பணத்தைப் பெற்றுக் கொண்டு டாக்சியில் ஏறியமர்ந்து பயணித்தபோதுதான் கியூபாவின் தனித்தன்மை எனக்கு ஆச்சரியம் அளித்தது. (மேலும்......) சித்திரை 26, 2012 Most Amazing Lines Written by Man!!! When I was born, A Woman was there to hold me : My Mother As I grew up as a child, A woman was there to care & play with me: My Sister I went to school, A Woman was there to help me learn: My Teacher I became depressed when I lost, A Woman was there to offer a shoulder: My Girlfriend I needed compatibility, company & Love, A Woman was there for me: My Wife I became tough, A Woman was there to melt me: My Daughter When I will die, A Woman will be there to absorb me in: My Motherland If you are a Man, value every Woman. & If you are a Woman, feel Proud to be one சித்திரை 26, 2012 இலங்கை விஜயம் திருப்தியளித்தது: 13 வது திருத்தம் குறித்தும் பேசினோம் - இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் இலங்கை விஜயம் திருப்தி கரமாக அமைந்திருந்ததாக இந்திய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவியும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாராளுமன்றக் குழுவின் தலைவியுமான சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். தமது இலங்கை விஜயம் தொடர்பாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமளித்த பின்னர் ஊடகவியலாளர்க ளுக்கு கருத்துத் தெரிவித்த போதே சுஷ்மா சுவராஜ் இவ்வாறு கூறினார். மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது மற்றும் 13வது திருத்தச் சட்டமூலத்தை அமுல்படு த்துவது உள்ளிட்ட விடயங்கள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்களுடன் கலந்துரை யாடியிருந்ததாகவும் அவர் கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வுகாணப்பட வேண்டும் என்பதையே தமிழ்க் கூட்ட மைப்பினர் வலியுறுத்தி யிருந்தனர். (மேலும்......) சித்திரை 26, 2012 சூடான் தம்மீது யுத்த பிரகடனம் சூடான் மற்றும் தென் சூடான் படைகள் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதிகளில் இருந்து வெளியேறும்படி ஆபிரிக்க ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. அத்துடன் தென் சூடான் மீதான வான் தாக்குதல்களை நிறுத்தும்படி சூடானுக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை அழுத்தம் கொடுத்துள்ளது. எனினும் சூடான் தமது நாட்டின் மீது யுத்த பிரகடனம் செய்துள்ளதாக தென் சூடான் ஜனாதிபதி செல்வா கயிர் அறி வித்துள்ளார். சூடான், தென் சூடானுக்கு இடையிலான அண்மைய மோதல் இரு நாட்டுக்கும் இடையில் மீண்டும் ஒரு நீண்ட யுத்தத்திற்கு வழிவகுக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் சூடான் ஜனாதிபதி தனது சுற்றுப்பயணத்தை பாதியில் நிறுத்தி நாடு திரும்புவதாக நேற்று அறிவித்துள்ளார். சித்திரை 26, 2012 விண்கல்லில் சுரங்கம் தோண்ட திட்டம்
பூமிக்கு அருகில் உள்ள விண்கற்களில் சுரங்கம் தோண்ட கோடிஸ்வர வர்த்தகர்களைக் கொண்ட அமைப்பொன்று திட்டமிட்டுள்ளது. இயந்திர விண்கலம் மூலம் பல பில்லியன் டொலர் பெறுமதி கொண்ட இந்த சுரங்கம் தோண்டும் திட்டத்தை செயற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இதன் மூலம் விண்கல்லில் இருக்கும் இரசாயன எரிபொருள் கூறுகள் மற்றும் பிளாடினம், தங்கம் போன்ற மூலப்பொருட்களை பெற முடியும் என அந்த அமைப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சுரங்கம் தோண்டும் கோடிஸ்வர வர்த்தகர் அமைப்பை ஹொலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கமரூன், கூகிள் இணையதள நிறைவேற்று அதிகாரி பற்றிபேஜ் மற்றும் அதனது நிறைவேற்று இயக்குநர் எரிக் ஸ்கமிட் ஆகியோர் இணைந்து அமைத்துள்ளனர். இவர்கள் எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் விண்வெளியில் எரிபொருள் கிடங்கை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். எனினும் இந்த திட்டம் மிகக் கடினமான அதிக செலவுகொண்டது என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் இந்த திட்டத்தை எதிர்வரும் 18 முதல் 24 மாதங்களுக்குள் ஆரம்பிக்க அதன்தோற் றுவிப்பாளர்கள் தீர்மானித்துள்ளனர். இதற்காக தொலைகாட்டி ஒன்றை அமைத்து விண் கற்களை அடையாளம் காணவுள்ளனர். சித்திரை 26, 2012 இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தானும் வெற்றிகரமாக ஏவுகணை சோதனைஅணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியுள்ளது. இந்தியா நீண்ட தூர ஏவுகணை சோதனை செய்து ஒருவாரத்திற்குள் பாகிஸ்தான் இந்த சோதனையை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஷஹீன் 1-ஏ என்ற இடைநிலை தூரம் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது. இந்த ஏவுகணை இந்திய இலக்குகளை எட்டக்கூடிய சக்திவாய்ந்ததாகும். எனினும் தற்போது சோதனை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் ஏவுகணை செல்லும் தூரம் பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும் இது 2,500 முதல் 3000 கிலோ மீற்றர் வரை விண்ணில் தாவக்கூடியது என நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்தியா கடந்த வாரம் வெற்றிகரமாக சோதித்த அக்னி வி ஏவுகணை 5000 கிலோ மீற்றர்வரை தாவிச்சென்று இலக்குகளை தாக்கக்கூடியதாகும். பாகிஸ்தானிடம் சிறிய, மத்திய மற்றும் நீண்ட தூரங்களை தாக்கும் ஏவுகணை வலு உள்ளது. சித்திரை 26, 2012 உலகின் கண்டங்கள் அனைத்தும் இணைந்து புதிய அமேசியா கண்டம் உருவாகும்உலகில் உள்ள கண்டங்கள் அனைத்தும் இணைந்து அமேசியா என்ற புதிய பெரிய கண்டம் உருவாகும் என புவியியல் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். அமெரிக்காவின் யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் அமெரிக்கா மற்றும் ஆசியா கண்டங்களின் வடக்கு, அப்பகுதி நீர் மற்றும் காற்றுப் போக்கினால் இணையும். இதனுடன், ஆர்டிக் கடலும் கரீபியன் கடலும் ஒன்றாக சேரும். இதன் மூலம் மிகப் பெரிய புதிய கண்டம் உருவாகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், பூமியின் அடியில் உள்ள தட்டுகள் தற்போது நகர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களின் வடக்கு முனை பூமித் தட்டுகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கும் அபாயம் உள்ளன. அதுபோன்ற மாற்றங்களினால் அவுஸ்திரேலியா கண்டம் இந்தியாவுடன் இணையலாம். என தெரியவந்துள்ளதாக தகவல் வெளியிட்டு உள்ளார். சித்திரை 26, 2012 கடல் எல்லை 1982 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் மன்றம் United Nations Convention on the law of the Sea எஎன்ற அமைப்பை உருவாக்கியது. இந்த அமை ப்புதான், உலக நாடுகளின் கடல் எல்லை களை வரையறுத்தது. இவர்கள் வரைந்த ஒப்பந்தத்தில், இதுவரையிலும், 158 நாடுகள் கையெழுத்து இட்டு உள்ளன. கடலில், மூன்று வகையான எல்லைகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. கரையில் இருந்து ஆறு நாட்டிகல் மைல் தொலைவுக்கு உட்பட்ட. ‘கரைக்கடல்’. இதில் கட்டுமர மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அடுத்த ஆறு நாட்டிகல் மைல், ‘அண்மைக் கடல்’ இதில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கலாம். அதன் பின் உள்ளது தான் ‘ஆழிக்கடல்’ இதில் கப்பல்களில் மீன் பிடிக்கலாம். இப்போது கரை ஓரங்களில் மீன்வளம் குறைந்து விட்டது. எனவேதான். கட்டு மர மீனவர்கள் அண்மைக் கடலுக்கும் ஆழிக்கடலுக்கும் செல்லுகிறார்கள். (மேலும்......) சித்திரை 26, 2012 இதயசுத்திசுடனான கூட்டு உழைப்பே கிளிநொச்சியின் கல்வி மேம்பாட்டுக்கு வழிசமைக்கும்
கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற அபிப்பிராயம் பொதுவாகப் பலரிடமும் காணப்படுகிறது. மாவட்டரீதியான கல்வியின் முன்னேற்றமானது, போர்க்காலத்தில் இருந்த அளவுக்கு போர் முடிந்தபின்னர் காணப்படவில்லை என்ற கருத்து இதில் முதன்மையானது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றுக்கு அப்பால் மாவட்டத்தின் அனைத்து தரப்பினரதும் இதயசுத்தியுடனான கூட்டு உழைப்பின் மூலம் மாவட்டத்தின் கல்வி நிலையினை மேம்பாட்டுக்கு கொண்டுவரமுடியும் என பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.(மேலும்......) சித்திரை 25, 2012 13 ஆவது திருத்தம் இந்திய எம்.பி.க்களுடன் கலந்துரையாடப்பட்டதா? இலங்கைக்கு வருகை தந்த இந்திய எம்.பி.க்களுடன் 13 ஆவது திருத்தம் குறித்து கலந்துரையாடப்படவில்லையா? என்ற கேள்வியை சென்னையிலிருந்து வெளியிடப்படும் “இந்து’ பத்திரிகை செவ்வாய்க்கிழமை எழுப்பியுள்ளது. 2012 ஏப்ரல் 21 இல் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு தலைமை தாங்கிய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் 13+ குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கதைத்திருந்ததாகத் தெரிவித்திருந்தார். முன்னர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இப்போது இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா ஸ்வராஜ் என்று ஆட்டப்பந்தய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறுவதாகத் தென்படுகிறது என்று இந்து குறிப்பிட்டுள்ளது. (மேலும்......) (ஆங்கில கட்டுரையை வாசிக்க....) சித்திரை 25, 2012 இலங்கை விவகாரத்துக்கு விக்கிரமாதித்தன் கதையுடன் சமாந்தரம் வரைகிறார் ஹரிகரன் இலங்கையின் இன நெருக்கடித் தீர்வு விவகாரத்தில் இந்தியாவின் முயற்சிகளுக்கும் விக்கிரமாதித்தன் கதைக்கும் இடையில் சமாந்தரம் வரைந்துள்ளார் கேணல் ஆர்.ஹரிகரன் . இந்திய பாராளுமன்றக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பாக புரிந்து கொள்ளக் கூடியவை என்ற தலைப்பில் தெற்காசிய ஆய்வுக் குழுமம் (South asia Analysis Group ) கேணல் ஹரிகரன் கட்டுரையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை நிலை கொண்டிருந்த காலத்தில் அப்படையின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகப் பணி ஆற்றிய வரும் தெற்காசியா தொடர்பான ஓய்வு பெற்ற இராணுவ புலனாய்வு நிபுணருமான கேணல் ஹரிகரன் இலங்கைக்கான இந்தியப் பாராளுமன்றக் குழுவின் 6 நாள் விஜயம் தொடர்பான செய்திகளில் சாதகமானதும் , பாதகமானதுமான இரு அம்சங்களும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். (மேலும்......) சித்திரை 25, 2012 வதிரி சந்தி வாள்வெட்டில் ஒருவர் பலி ! இன்று மதியம் 1.30 மணயளவில் வடமராட்சி வதிரி சந்தியில் 28 வயது நிரம்பிய வாலிபர் ஒருவர் வாள்வெட்டுக்குப் பலயாகியுள்ளார். மோட்டார் சையிக்கிளில் மேற்படி இளைஞரைத் தொடர்ந்துவந்த இருவர் வதிரிச் சந்தியில் வைத்து அவரை வாளால் வெட்டிக் கொலைசெய்துவிட்டுத் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உள்ஊர் தகவல்களின்படி, மேற்படி இளைஞர் ஒரு முன்னாள் போராளியென்றும், அண்மையில் வெளிநாடொன்றிலிருந்து திரும்பியிருந்தவர் எனவும் தெரியவருகிறது. இவரது பெயர் சிவஞானம் சிவரூபன் எனவும் இவர் தொண்டமானாறைச் சேர்ந்தவர் எனவும் உள்ஊர் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. (நன்றி: தேனி) சர்கோஸியின் வாட்டர்லூ! (எம். மணிகண்டன் )
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வாட்டர்லூ அருகே கடும் யுத்தம் நடந்தது. அந்த யுத்தத்தில் பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் தோற்கடிக்கப்பட்டார். நாடு விட்டு நாடு ஓடினார். எங்கும் ஒளிந்து கொள்ள முடியாமல், கடைசியில் பிரிட்டிஷ் படைகளிடம் சரணடைந்தார். ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு இறந்தும் போனார். நெப்போலியனின் ஆட்சிக்கு முடிவு கட்டியதுடன், ஐரோப்பாவின் அரசியல் போக்கையே மாற்றியமைத்த யுத்தம் அது. அதைப்போன்ற இன்னொரு யுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் நடந்தது. பிரான்ஸின் அதிபர் தேர்தல் வடிவில். பதவிக்கு வரும்போதே, பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸியை நவீன கால நெப்போலியன் என்றார்கள். உறுதியான முடிவுகள், பிரச்னைகளைக் கண்டு அஞ்சாத தன்மை, சர்ச்சைகளைக் கடந்து வரும் துணிச்சல் போன்ற சர்கோஸியின் குணங்கள் பாராட்டப்பட்டன. ஆனால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவரும் மாவீரன் நெப்போலியனைப் போலவே வாட்டர்லூ யுத்தத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.(மேலும்......) சித்திரை 25, 2012 60 வருடகால பழைமை வாய்ந்த விநாயகர் ஆலயத்தை அகற்ற உத்தரவு??
தம்புள்ளைப் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்ட
விவகாரத்தையடுத்து , கிழக்கில் திருகோணமலையில் 60 வருடகால பழைமை வாய்ந்த
விநாயகர் ஆலயத்தையும் அகற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது?.
திருகோணமலை பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்தப் பிள்ளையார்
ஆலயத்தின் கும்பாபிஷேகம் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில்,
நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்த
நடவடிக்கையானது மக்களின் சமய விடயங்களில் கைவைக்கும் விடயமாக மாறியுள்ளதுடன்
இந்து மதத்தையும் பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. திருகோணமலை
பொதுவைத்தியசாலை வளாகத்தினுள் அமைந்துள்ள இந்த ஆலயம் சுமார்
60வருடங்களுக்கு முற்பட்ட பழைமைவாய்ந்தது. இந்த ஆலயம் கடந்த காலங்களில்
நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது புனர்நிர்மாணம்
செய்யப்பட்டுள்ள நிலையில் வீதி அபிவிருத்தியைக் காரணம் காட்டி பிள்ளையார்
மீது கைவைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இலங்கை அரசு நாட்டினுள்
நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்ற
நிலையிலேயே இவ்வாறான செயல்களும் நாட்டில் அரங்கேற்றப்படுகின்றன. இதனால்,
மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.விசனம் தெரிவித்துள்ளனர். சனல் 4 தொலைக்காட்சி சேவை போன்று நம்நாட்டு தொலைக்காட்சிகள் செயலாற்றலாகாது சனல் 4 தொலைக்காட்சியின் இலங்கைக்கு எதிரான செயற்பாடுக ளுக்கு இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மணியொருவர் பின்னணியில் இருக்கிறாரென்ற உண்மைத் தகவல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமை கள் மகாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவும் அதனை ஆதரிக்கும் நாடுகளும் கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதர வாக வாக்களிக்க வேண்டுமென்று சனல் 4 தொலைக்காட்சி நிறு வனத்தினர் பல்வேறு நாடுகள் மீது அழுத்தங்களை கொண்டு வரும் அளவுக்கு இலங்கைக்கு எதிரான துரோகச் செயல்களில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. சிராணி சுப்பிரமணியம் என்ற பெயருடைய ஒரு இலங்கைத் தமிழ் பெண், சனல் 4 தொலைக்காட்சி சேவையின் நிர்வாகப் பணிப் பாளரை மணம் புரிந்து லண்டனில் வசித்து வருகின்றார் என்ற தகவல் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான மகாநாடு நடந்து கொண் டிருந்த காலகட்டத்தில் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது. (மேலும்......) சித்திரை 25, 2012 தமிழகத்தின் உறவு அவசியம் - அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர!இந்திய மத்திய அரசாங்கத்துடனான உறவினை விட, தமிழகத்தினுடனான ராஜதந்திர உறவுகளை இலங்கை அரசாங்கம் விரித்தி செய்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு குணசேகர நேற்று இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் எந்த ஒரு அரசாங்கமும், தமிழகத்துடன் ராஜதந்திர ரீதியான உறவினை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரையில் தமிழகத்தின் முதலமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதில்லை. இதேநேரம் இலங்கையின் உயர்மட்ட அமைச்சுக் குழு ஒன்று தமிழகத்துக்கான விஜயத்தை இதுவரையில் மேற்கொண்டதும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் தமிழ் மக்கள், தமிழக மக்களுடன் கொண்டுள்ள மொழி மற்றும் கலாசார தொடர்புகள் குறித்து, இலங்கையின் ஒவ்வொரு அரசாங்கமும் மறந்தே செயற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சித்திரை 25, 2012 சோனியாவை பிரதமராக விடாமல் தடுத்த அப்துல் கலாமை காங்கிரஸ் ஏற்குமா?முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் ராஷ்ட்ரபதி பவனுக்கு திரும்பக்கூடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீலின் பதவிக்காலம் முடிவதையடுத்து விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடக்கவிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும்3 மாதங்கள் கூட இல்லை. இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை மீண்டும் குடியரசுத் தலைவராக்க சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மற்றும் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் விரும்புகின்றனர். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் அரசியல் தொடர்பில்லாத ஒருவரே குடியரசுத் தலைவராக வர வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித் துள்ளார். சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு வரவிடாமல் தடுத்தவர் என்பதால் தான் கலாமை காங்கிரஸ் கட்சி இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக விடாமல் தடுத்தது. ஆனால் இப்போது அனைத்துத் தரப்பினரும் நெருக்கடி தருவதால் காங்கிரஸ் முழிக்கிறது. அதேநேரத்தில் கலாம் தவிர்த்த எதிர்க் கட்சிகள் சொல்லும் வேறு ஒரு பொது வேட்பாளரை ஏற்க காங்கிரஸ் தயாராகவே இருக்கும் என்று தெரிகிறது. சித்திரை 25, 2012 உங்களுக்குத்தெரியுமா? இந்த 16 கேள்விகளுக்கும் விடை..? (ஞாநி) 1. ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்துவந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா? 2. கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத்தெரியுமா? 3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? சித்திரை 25, 2012 கிழக்கு பல்கலைக்கழத்திற்க்கு உதவி வழங்க இந்தியா உறுதியளித்துள்ளது - உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய நடாளுமன்ற குழுவினர் கிழக்கு பல்கலைக் கழகத்தின் அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் கலாநிதி கே.கோவிந்தராஜனுடன் கரந்துரையாடினார்கள். பல்கலைக் கழகத்திதற்கு தாம் உதவ தயாராக இருப்பதாகவும் அதுதொடர்பான திடட்ட அறிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சருடாக சமர்ப்பிக்கப்டவேண்டும் எனவும் உபவேந்தரிடம் இந்திய உயர்மட்ட குழு கேட்டுக் கொண்டது. இதற்கான நடவடிக்கைகளை உபவேந்தர் மேற்கொண்டுவருகிறார்.(மேலும்......) சித்திரை 25, 2012 பாகிஸ்தான் நீண்ட தூர ஏவுகணை சோதனை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதையடுத்து பாகிஸ்தானும் நீண்ட தூர ஏவுகணையை பரிசோதிக்க முடிவுசெய்துள்ளது. அடுத்த 5 நாட்களில் இந்தியப் பெருங்கடளில் நீண்டதூர ஏவுகணையை பரிசோதிக்க உள்ளதாக இந்தியாவிடம் பாகிஸ்தான் தகவல் அளித்துள்ளது. ஏவுகணையை பரிசோதிக்க உள்ளதால் அப்பகுதியில் விமானங்கள் பறக்காமல் பார்த்துக்கொள்ளுமாறு இந்தியாவை பாகிஸ்தான் கேட்டுக்கொண்டுள்ளது. சித்திரை 25, 2012 நேட்டோ நாடுகளின் அழுத்தத்தால் அக்னி 5 ஏவுகணை விண்ணில் பாயும் தூரம் குறைக்கப்பட்டது - சீன பத்திரிகைஇந்தியா சமீபத்தில் 5,000 கிலோ மீட்டர் தூரம் வரை விண்ணில் பாய்ந்து எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி - 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து வெற்றி கண்டது. இந்நிலையில், நேட்டோ நாடுகளின் அழுத்தத்தால் ஏவுகணையின் பரிசோதனை தூரத்தை 9,000 கிலோ மீட்டரில் இருந்து 5,000 கிலோ மீட்டர் ஆக குறைக்கப்பட்டதாக சீனாவில் இருந்து வெளிவரும் குளோபல் டைம்ஸ் எனும் பத்திரிகை தெரிவித்துள்ளது. இப்பத்திரிகை அக்னி - 5 ஏவுகணை சோதனைக்கு முன்பே சீனா இந்தியாவை காட்டிலும் அணு சக்தியிலும், ஏவுகணை தொழில் நுட்பத்திலும் பல மடங்கு முன்னேறியுள்ளதாகவும், அவைகள் மிகவும் நம்பகத்தன்மை மிக்கதாக இருப்பதா கவும், எனவே இந்தியா விற்கு இது போன்ற ஏவுகணை சோதனை தவிர்க்க இயலாத ஒன்று என முன்பே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய- சீன உறவு குறித்து அப்பத்திரி கையில், சர்வதேச நாடுகள் இவ்விரு நாடுகளையும் எதிரி நாடுகள் போல சித்தரிக்க முயல்கிறது. எனவே இதை இவ் விரு நாடுகளும் இணைந்து முறியடி க்க வேண்டும் என வும் இரு நாடுகளுக் கிடையே யான நட்பு பாலத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இந்தியாவும், சீனா வும் இணைந்திருந் தால் ஆசிய கண்டம் வலிமையானதாக இருக்கும் எனவும், இல்லையென்றால் ஆசிய கண்டம் பல வீனமான ஒன்றாகவே இருக்கும் எனவும் மேலும் தெரிவித் துள்ளது. சித்திரை 25, 2012 அமெரிக்க சமூக அமைப்புகளுக்கு எகிப்தில் அனுமதி மறுப்புஎகிப்தில் இயங்கும் அமெரிக்காவின் 8 அரச சார்பற்ற சமூக அமைப் புகளின் அனுமதிப் பத்திரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது. இதில் தேர்தல் கண் காணிப்பு பணியில் ஈடுபடும் காடர் சென்டர் அமைப்பும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. எகிப்து ஜனாதிபதி தேர்தல் இடம்பெற ஒரு மாதம் இருக்கும் நிலையிலேயே ஆளும் இராணுவ கவுன்ஸில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எகிப்தின் காப்புறுதி மற்றும் சமூக விவகார அமைச்சே இந்த தொண்டு நிறுவனங்களின் அனுமதி பத்திரத்தை ரத்துச் செய்துள்ளது. தேசத்தின் இறையான்மையை மீறி செயற்படுவதால் இந்த அமைப்புகளின் அனுமதிப்பத்திரம் மறுக்கப்பட்டுள்ளது. என அந்த அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சித்திரை 25, 2012 தென் சூடான் மீது சூடான் தொடர்ந்து தாக்குதல்சூடான் யுத்த விமானங்கள் தென் சூடான் எல்லைப் பகுதிகளில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் தென் சூடானுடன் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பiர் அறிவித்துள்ளார். எனினும் சூடான், தென் சூடான் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் உடன் நிறுத்த வேண்டும் என ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உத்தரவிட்டுள்ளார். கடந்த 10 தினங்களாக சூடானுக்கு சொந்தமான எண்ணெய் வளமுள்ள ஹெக்லிக் பகுதியை ஆக்கிரமித்திருந்த தென்சூடான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமது படையை அங்கிருந்து வாபஸ் பெற்றது. எனினும் சூடான் இராணுவம் தென் சூடான் எல்லை பகுதிகளில் தொடர்ந்தும் தாக்குதல் நடாத்தி வருகின்றது. இதனால் இந்தப் பகுதியில் மீண்டும் ஒரு முழு நீள யுத்தம் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இதனிடையே தென் சூடான் ஜனாதிபதி செல்வா கியிர் சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். 6 நாள் சுற்றுப்பயணமாக அங்கு சென்றுள்ள கியிர் சீன ஜனாதிபதி ஹு ஜின்டாவோவையும் சந்திக்கவுள்ளார். சூடானில் கடந்த 20 ஆண்டுகள் நீடித்த சிவில் யுத்தத்தில் 15 இலட்சம் பேர் பலியாகியுள்ளனர். ஐ. நா. தலையீட்டின் பேரில் கடந்த ஆண்டு தென் சூடான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. எனினும் இருநாட்டு எல்லைகள் இன்னும் வரையறுக்கப் படவில்லை என்பதோடு மேலும் பல தீர்க்கப்படாத சர்ச்சைகள் இரு நாட்டுக்கும் இடையில் நீடித்து வருகிறது. சித்திரை 25, 2012 நெதர்லாந்து அரசை கலைக்க பிரதமர் மகாராணியிடம் கடிதம்நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட் தமது அரசை கலைப்பதற்கான ராஜினாமா கடிதத்தை அந்நாட்டு மகாராணி பீட்ரிக் ஸிடம் சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் நெதர்லாந்தில் முன்கூட்டியே தேர்தல் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மையற்ற மார்க் ருட் அரசுக்கு ஆதரவு அளித்துவந்த தீவிர வலதுசாரி கட்சியான சுதந்திரக் கட்சி வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவளிக்காததைத் தொடர்ந்தே நெதர்லாந்து அரசை கலைக்க கோரப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நெதர்லாந்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கையை தமது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கியதைத் தொடர்ந்தே சுதந்திர கட்சி அரசுக்கான தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் நெதர்லாந்து பிரதமர் ருட், மகாராணியை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். இதன்போது ராஜினாமாவை ஏற்றுள்ள மகாராணி காபந்து அரசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளதாக நெதர்லாந்து அரச ஊடக சேவை தெரிவித்துள்ளது. இந்நிலையில் நெதர்லாந்தில் மூன்கூட்டி தேர்தல் இடம்பெற்றால் இஸ்லாமிய எதிர்ப்பு கட்சியான சுதந்திர கட்சி முன்னிலை பெற வாய்ப்பு உள்ளது. சித்திரை 24, 2012 முஸ்லிம் பிரதிநிதிகளும் எம்முடன் இணைந்து செயலாற்ற வேண்டும் - சம்பந்தன் _ ![]()
தமிழ்பேசும் மக்களுடைய பிரச்சினைகள் சர்வதேச மயப்படுத்தப்பட்ட நிலையில்
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு செயற்படுவதுடன் முஸ்லிம் பிரதிநிதிகளும்
எம்முடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம் எமது குறிக்கோளை அடைய முடியும்.
இதற்கான அழைப்பினை புல்மேட்டையில் விடுக்கின்றேன் என திருகோணமலை மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்
தலைவருமான இரா சம்பந்தன் புல்மோட்டை பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களைச்
சந்தித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(மேலும்......) தம்புள்ளையில் அரசின் காடைத்தனம் – முஸ்லீம் தேசிய இனத்தின் மீதான வன்முறை (சபா நாவலன்) இலங்கைத் தீவில் முதலாவது தேசிய இனங்களுக்கு எதிரான வன்முறை 1915 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் மீதான தாக்குதல். பிரித்தானிய ஏகாதிபத்தியம் திட்டமிட்டு உருவாக்கிய தேசிய இன முரண்பாட்டின் பேரினவாத முகவராகச் செயற்பட்ட அனகாரிக தர்மபால எல்லா சிறுபான்மைத் தேசிய இனங்களுக்கும் எதிரான “பௌத்த தத்துவவியலை” வளர்த்தவர். முஸ்லிம்களைக் கடலில் தள்ளிக் கொன்றுவிட வேண்டும் என்று சூழுரைத்தவர். தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களுக்கு எதிரான முதலாவது வன்முறைக்கு தமிழ்ப் பேசும் இந்துக்களும் மானசீக ஆதரவை வழங்கிய கறைபடிந்த வரலாற்று பக்கங்கள் இலங்கை முஸ்லீம்கள் மத்தியில் நீண்ட உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. (மேலும்......) சித்திரை 24, 2012 யாழ்ப்பாணத்தில் மேதினக் கூட்டத்தை நடத்துவது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பாதகமாக அமையும் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்து அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னப் படுத்தக்கூடிய வகையில் 1983ம் ஆண்டு ஜூலை இனக்கலவரம், யாழ் நூலகத்தை எரித்து சாம்பலாக்கியமை போன்ற அநியாயங்களை தமிழ் மக்களுக்கு இழைத்த ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பி.யினரும் ஆடைகளை அணிந்து கொண்டா இன்று யாழ்ப்பாணத்திற்கு சென்று தங்கள் பிரசாரங்களை மேற்கொள்ள எத்தனிக்கிறார்கள் என்று தமிழ் புத்திஜீவிகளும், சாதாரண மக்க ளும் இவ்விரு கட்சிகளையும் பார்த்து ஏளனம் செய்யக்கூடிய அள விற்கு இக்கட்சிகள் இன்று அவமானச் சின்னங்களாக மாறியிருக் கின்றன. (மேலும்......) சித்திரை 24, 2012 30,000 மணி நேரம் பயன்படுத்த கூடிய மின்குமிழ் அறிமுகம் இருபது வருடங்கள் அல்லது 30,000 மணித்தி யாலங்கள் பயன்படுத்தக் கூடிய மின்சாரத்தை சிக்கனமாக மீதப்படுத்தும் எல். ஈ. டீ. மின்குமிழ் ஒன்றை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு அமெரிக்க கம்பனி ஒன்று தயாராகி வருகிறது. அமெரிக்காவின் வலு திணைக்களத்தினால் அண்மையில் நடாத்தப்பட்ட போட்டியிலும் 10 வோட் அளவினைக் கொண்ட எல்.ஈ.டீ. மின்குமிழுக்கே முதலிடம் கிடைத்துள்ளது. மூன்று வருட உத்தரவாதத்தினைக் கொண்ட இந்த மின் குமிழை சந்தைப்படுத்த தயாராகிவரும் அதன் உற்பத்தி நிறுவனம் ஒரு மின்குமிழின் விலை 60 அமெரிக்க டொலராக நிர்ணயித்துள்ளது. (7,800 ரூபா) சீஎல்எவ் மின்குமிழை விடவும் ஒருபடி முன்னேற்றமான முறையில் மேற்படி மின்குமிழ் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. இந்த மின்குமிழ் சந்தைக்கு வந்த உடனேயே இதனை மக்கள் அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்வதற்கு அதிகம் முன்வருவார்கள் என்று எதிர்பார்க்க முடியாத போதிலும் காலப் போக்கில் மக்கள் இதனை கொள்வனவு செய்ய முன்வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அமெரிக்காவின் ‘டைம்ஸ்’ சஞ்சிகை தெரிவிக்கின்றது. சித்திரை 24, 2012 பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் பிரதமர்தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தை கலந்துரையாடல் மூலம் தீர்க்கலாம்இன மற்றும் மத ரீதியான பிரச்சினைகள் எழும்போது கலந்துரையாடல்களின் மூலம் ஒரு தீர்வுக்கு வருவதே அதனைத் தீர்ப்பதற்குரிய பொருத்தமான வழிமுறையென பிரதமர் தி. மு. ஜயரத்ன அவர்கள் வலியுறுத்தினார். சிறு சிறு கருத்து வேறுபாடுகளை பூதாகர மாக மாற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது எனவும் அவ்வாறான பிரச்சினைகளின்போது சகல தரப்பி னர்களினதும் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு தீர்வொன்றிற்குச் செல்லவேண்டும் எனவும் பிரதமர் அவர்கள் சுட்டிக் காட்டினார். வரலாற்றுப் புகழ்மிக்க ரங்கிரி தம்புலு புனித பூமி பிரதேசத்தில் தற்போது ஏற் பட்டிருக்கும் சமய புனிதஸ்தலம் சம்பந்த மான பிரச்சினையையும் கலந்துரையாடல் மூலம் தீர்த்துக் கொள்ளலாம் எனக் கூறிய பிரதமர் அவர்கள், அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், உலகிலுள்ள அனைத்து முஸ்லிம் நாடுகளும் இலங்கையுடன் நட்புணர்வுடன் செயலாற்றும் இத்தருணத்தில் இவ்வாறான அற்ப விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இனங்கள் மற்றும் மதங்களுக் கிடையில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் செயலை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது. சித்திரை 24, 2012 இஸ்ரேலுடனான எரிவாயு உடன்படிக்கையை ரத்துச் செய்தது எகிப்து இஸ்ரேலுக்கு எரிவாயு விநியோகிக்கும் ஒப்பந்தத்தை எகிப்து ரத்துச் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் விதி மீறல் ஏற்பட்டுள்ளதாக எகிப்து இயற்கை வாயு நிறுவனம் கூறியுள்ளது. எனினும் இந்த முடிவால் இரு நாட்டு அமைதி ஒப்பந்தத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் தமது எரிவாயுவுக்கு நான்கு மாதங்களாக கட்டணம் செலுத்தவில்லை என்று எகிப்து இயற்கை வாயு நிறுவன தலைவர் மொஹமட் ஹொயெப் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுவதற்கு பொருளாதார காரணங்களுக்கு வெளியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும் தாம் கட்டணம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சு மறுத்துள்ளது. இஸ்ரேல் - எகிப்துக்கு இடையில் 1979 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட அமைதி உடன்பாட்டின் கீழ் இரு நாடுகளுக்கு இடையிலான எரிவாயு உடன்பாடு எட்டப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான மிகப்பெரிய வர்த்தக உடன்பாடு இதுவாகும். எனினும் எகிப்தின் இந்த உடபடிக்கை பிராந்திய நாடுகளுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதோடு உள்நாட்டிலும் சர்ச்சையை கிளப்பியது. இஸ்ரேல் தனது மின் உற்பத்திக்கு எகிப்தின் 40 வீதமான இயற்கை வாயுவை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது. சித்திரை 24, 2012 இலங்கை மற்றும் மதுரைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி!இலங்கை மற்றும் மதுரைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் அனுமதி அளித்துள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சி எம்பி மணிக்கா டகொரே தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து இலங்கை வந்த நான்கு காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களில் மணிக்கா டகொரேவும் ஒருவராவார். இலங்கை ஜனாதிபதியுடனான சந்திப்பில் இரு நாட்டு கலாசார உறவுகளை மேம்படுத்திக் கொள்வது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் இதன்போது மதுரை - இலங்கைக்கு இடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணங்கியதாகவும் மணிக்கா டகொரே குறிப்பிட்டுள்ளார். சித்திரை 24, 2012 பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு சென்றது, சார்கோசிக்கு பின்னடைவு பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பிரான்கொய்ஸ் ஹொல்லான்ட் சிறு இடைவெளியில் நிகொலஸ் சார்கோசியை வென்றுள்ளார். எனினும் முதல் சுற்றில் எவரும் 50 வீத வாக்குகளை வெல்லாத நிலையில் ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு இரண்டாம் சுற்று தேர்தல் நடத்தப்பட வேண்டி ஏற்பட்டுள்ளது. இதில் முதல் சுற்றில் ஹொல்லான்ட் 28.6 வீத வாக்குகளை வென்று முதலிடத்தை பிடித்தார். தற்போதைய ஜனாதிபதி நொகலஸ் சார்கோசி 27.1 வீத வாக்குகளை பெற்றார். தேர்தலில் வலது சாரி தேசிய முன்னணி வேட்பாளர் மரின் லேயென் 18.1 வீத வாக்குகளை வென்றார். இதன்படி முதல் சுற்றில் முதல் இரு இடங்களை பிடித்த ஹொல்லான்ட் மற்றும் சார்கோசி இரண்டாம் சுற்று தேர்தலில் போட்டியிடவுள்ளனர். இரண்டாம் சுற்று தேர்தல் எதிர்வரும் மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதில் ஹொல்லான்ட் பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வாகும்பட்சத்தில் பிரான்கொய்ஸ் மிட்டரன்டுக்கு பின்னர் பிரான்ஸ் ஜனாதிபதியாக தேர்வு பெறும் முதல் இடது சாரி வேட்பாள ராக பதிவாவார். மறுபுறத்தில் சர்கோசி இந்த தேர்தலில் தோல்வியுறும் பட்சத்தில் 1981 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதியாக இருந்து தோல்வியடையும் முதல் வேட்பாளராக பதிவாவார். சித்திரை 24, 2012 தத்தளிக்கும் கருணாநிதி எரிமலையாக வெடிக்கும் அழகிரி, ஸ்டாலின் மோதல் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின் இடையிலான பதவிப் போர் பெரும் உச்சத்தை எட்டியுள்ளது. இவர்களுக்கு நடுவில் மாட்டிக் கொண்டு இரு தலைக் கொள்ளி எறும்பு போல தத்தளித்து வருகிறார் கருணாநிதி. எத்தனையோ பெரிய பெரிய எதிரிகளை, சவால்களை, சங்கடங்களை, சஞ்சலங்களை, சலசலப்புகளைப் பார்த்தவர் கருணாநிதி. ஆனால் இன்று அவரது பிள்ளைகள் ரூபத்தில் எழுந்து நிற்கும் சவாலை சந்திக்க முடியாமல், முடிவு காண முடியாமல் பெரும் குழப்பத்திலும், கலக்கத்திலும் இருக்கிறார் கருணாநிதி. தற்போது இந்தப் பிரச்சினை மேலும் ஒரு புதிய மெருகோடு வெடிக்க ஆரம்பித்துள்ளது. மதுரைக்கு வந்த ஸ்டாலினுக்கு உரிய மரியாதையை அழகிரி ஆதரவாளர்கள் கொடுக்கவில்லை என்பதே புதிய சர்ச்சை. இதுதொடர்பாக அழகிரி ஆதரவாளர்களுக்கு தலைமைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு அழகிரி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். (மேலும்......)சித்திரை 23, 2012இந்திய பாராளுமன்றக்குழுவினரின் இலங்கை விஜயம்
சித்திரை 23, 2012 இந்தியா மீது ராஜபக்ச குற்றச்சாட்டு 13 வது சட்டத்திருத்தத்தை திணிக்கிறது - இலங்கை அதிபர் ராஜபக்ச 13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாக இந்தியா மீது இலங்கை அதிபர் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். இந்திய எம்.பி.க்கள் குழு இலங்கை வந்து சென்ற நிலையில்,இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு சாத்தியமில்லை என்றும்,13 வது அரசியல் சட்டத்திருத்தத்தை தங்கள் நாட்டு மீது இந்தியா திணிக்க முயற்சிப்பதாகவும் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளியாகும் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ளது. இதற்கிடையே இலங்கை சென்று திரும்பிய இந்திய எம்.பி.க்கள் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. சித்திரை 23, 2012 தம்புள்ளை பள்ளிவாசல் மீதான தாக்குதலின் பின்னர்.... தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் பிக்குகள் தலைமையிலான பெரும்பான்மை இனத்தவர்களால் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. அதன் சுருக்கம் வருமாறு, (மேலும்.....)சித்திரை 23, 2012 தம்புள்ளை சம்பவம் கவலை, ஆத்திரம், அப்பப்போ ஆவேசம்... – ஹக்கீம்
இந்த நாட்டிலே நாலா புறத்திலும் வாழுகின்ற முஸ்லிம்களின் மனதிலே இன்று
மிகப்பெரிய ஒரு பாதிப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்திய நிகழ்வு கடந்த
வெள்ளிக்கிழமை அதாவது இரண்டு நாட்களுக்கு முன்பு தம்புள்ளையில் நடந்த
சம்பவம் எங்கள் எல்லோரையும் ஆழ்ந்த கவலையை அதே நேரம் ஆத்திரம் அப்பப்போ
ஆவேசம் என்ற நிலைமைக்கு தள்ளியிருக்கிறது என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரித்தார்.(மேலும்.....) அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து முன்வைக்கும் தீர்வே காலத்தின் தேவை இனப்பிரச்சினைக்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றைக் காண்பதே காலத்தின் தேவையாக உள்ளது என சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதிலும் பார்க்க அனைத்துக் கட்சிகளும் இணைந்து தீர்வொன்றை காண்பதே காலத்தின் தேவையாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதி த்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகத் தீர்வொன்றை காண்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நிலைப்பாடு சிறப்பானது என்பதே எமது கருத்து. (மேலும்.....) சித்திரை 23, 2012 ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார் வடக்கில் இராணுவத்தினர் மக்கள் சேவை யுத்தம் முடிவடைந்து மூன்றாண்டு காலம் கடந்து விட்ட இவ்வேளையிலும் கூட வட மாகாணத்திலிருந்து இராணுவத்தினரை அரசாங்கம் வெளியேற்றி விடுமென்று எதிர்பார்ப்பது ஒரு நியாயமற்ற செயலென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை அலரி மாளிகையில் தன்னை சந்தித்த இந்திய பாராளுமன்ற தூதுக்குழுவினருக்கு தெரிவித்திருக்கிறார். ஆயுதப் படைகளின் பிரதம தளபதியென்ற முறையில் தான் எவ்விதம் இத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியுமென்று இந்திய பாராளுமன்ற தூதுக் குழுவின் தலைவி திருமதி சுஷ்மா சுவராஜிடம் கேள்வியெழுப்பிய ஜனாதிபதி, இலங்கை அரசாங்கம் வெளிநாடொன்றில் தனது படைகளை நிலை கொள்ள வைக்கவில்லை யென்றும் ஐக்கிய இலங்கையின் ஒரு பகுதியான வடபகுதியிலேயே இராணு வத்தினர் சேவையிலீடுபடுத்தப்பட்டி ருப்பதாகவும் கூறினார். ஏன் நீங்கள் இராணுவத்தினரை வட பகுதியிலிருந்து வெளியேற்ற தவறியி ருக்கிaர்களென்று இந்திய தூதுக்குழுவின் ஒரு அங்கத்தவர் ஜனாதிபதியை பார்த்து கேட்ட போது சிரித்துக் கொண்டே பதிலளித்த ஜனாதிபதி என்னால் எங்கள் இராணுவத்தை இந்தியாவுக்கு அனுப்ப முடியுமா? அதனால்தான் அவர்கள் வடபகுதியில் அமைதியாக மக்களுக்குப் பணி செய்யும் கடமையில் ஈடுபடுத்தப்பட் டுள்ளார்களென்றும் அவர் கூறினார். சித்திரை 23, 2012 கொழும்பு வனாத்தமுல்லை பகுதியில் சுற்றிவளைப்பு, 33 சந்தேக நபர்கள் கைது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த 33 சந்தேக நபர்களை பொலி ஸார் கைது செய்துள்ளனர். பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனாத்தமுல்லை, ரி - 20 தோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், போதை வஸ்து தடுப்புப் பிரிவினருடன் இணைந்து நேற்று முன்தினம் அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.00 மணி வரை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே 33 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....) சித்திரை 23, 2012 இந்தியக் குழுவினரின் விஜயம் அர்த்தமற்றது ! தன்னை தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தியக் குழுவினருடனான சந்திப்பில் சேர்க்காததால் குமுறுகின்றார் - பொன் செல்வராசா பா.உ இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற குழுவினர் விஜயம் அர்த்தமற்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்துள்ளார். நேற்றைய (20.04.2012) தினம் இந்திய நாடாளுமன்ற குழுவினர்மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல திட்டங்களை ஆரம்பித்து வைத்தனர். அத்துடன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் தலைமையில் அமோக வரவேற்ப்பும் அழிக்கப்பட்டது. பல கோடி மதிப்பான தொழிற்பயிற்சி உபகரணங்களை இந்திய நாடாளுமன்ற குழுவினர் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கிய சந்தர்பத்தில் வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த சில்லிக்கொடியாறு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஒரு தொகுதி மரத்தளபாடங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போது பொன் செல்வராசா பா.உ மனவிரத்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....) சித்திரை 23, 2012 ‘என்னிடம் கேட்காதீர்கள் கலைஞரிடம் கேளுங்கள்’ கடந்த நான்கு நாட்களாக இந்தியப் பாராளுமன்றத் தூதுக்குழுவைச் சேர்ந்த நாம் காலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையில் எவ்வித ஓய்வும் இன்றி எமது இலங்கை விஜயத்தின் போது சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடல் நடத்தியதுடன் பல பொது நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டோம். எங்களுக்கு நாடு திரும்பும் போது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சிறிய பரிசில்களைக் கூட கடைத் தெருவுக்குச் சென்று வாங்குவதற்கு நேரம் இருக்கவில்லை என்று பத்திரிகையாளர்களிடம் திருமதி சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். எனது தூதுக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினருடன் இந்தியாவில் இருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது மனைவி நீங்கள் கொழும்பு மாநகரத்தைச் சுற்றிப் பாத்தீர்களா என்று கேட்டிருக்கிறார். (மேலும்.....) சித்திரை 23, 2012 இந்தியாவின் தேசிய பானமாக தேநீர்பாமரர்கள் முதல் கோடீசுவரர்கள் வரை தினமும் ருசித்து பருகும் பானமாக தேனீர் (டீ) இருந்து வருகிறது. உழைப்பாளர்களுக்கு தேநீர் தான் உற்சாக பானமாக உள்ளது. அந்த வகையில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பிரதான இடத்தை பிடித்த தேநீர் இந்தியாவின் தேசிய பானமாகிறது என்று மத்திய திட்டக் குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா தெரிவித்தார். அசாம் தேயிலை பயிரிடுவோர் சங்க பவள விழாவில் நேற்று முன்தினம் கலந்துகொண்டு பேசிய அவர் அசாமில் முதன் முதலாக தேயிலை பயிரிட்ட மணிராம் தேவனின் 212 ஆம் ஆண்டு பிறந்த நாளான அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் திகதி முதல் தேனீர் இந்தியாவின் தேசிய பானம் ஆகும் என்றார். இதற்கு இன்னொரு முக்கிய காரணம், தேயிலை தொழிலில் பெருமளவில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்று இருப்பதும் ஆகும் என்றும் அவர் கூறினார். சித்திரை 23, 2012 கதவு அமைக்கப்படும் விதம்வீடுகளின் கதவுகள் உள்ளேயும், பொதுக் கட்டடங்களின் கதவுகள் ஏன் வெளியேயும் திறப்பவையாக உள்ளன தெரியுமா? தீயிலிருந்து பாதுகாக்கும் எச்சரிக்கையாகத்தான் பொதுக் கட்டிடங்களின் கதவுகள் வெளியே திறப்பவையாக உள்ளன. தீ விபத்து போன்ற வேளைகளில் பலரும் கதவின் வழியாக வெளியே வசதியாக கதவு வெளியே திறக்கும்படி அமைக்கப்படுகிறது. திருட்டை நினைத்து அச்சப்படும் நிறுவனங்களில் மட்டும் நம் வீட்டுக் கதவுகளைப் போல உட்புறம் திறப்பவையாக அமைக்கப்படுகின்றன. உட்புறம் திறப்பதால் தப்பிக்கச் சிறிது நேரம் ஆகும். தவிர, அந்த கதவுகளுக்கான ‘கீல்’கள் உட்புறமாக இருப்பதால் கொள்ளையர்கள் கதவைப் பெயர்த்து எடுத்துச் செல்ல முடியாது. சித்திரை 23, 2012 மீண்டும் தெருக்களில் இறங்கி எகிப்து மக்கள் போராட்டம் எகிப்தில் மீண்டும் மக் கள் தெருக்களில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ள னர். எகிப்தில் 32 ஆண்டுகள் அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக் ஆட் சிக்கு எதிராக கடந்த ஆண்டு பல்வேறு அமைப்புகள் சார்பில் மக்கள் போராட் டம் நடத்தினர். இதனால் முபாரக் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து ஆட்சி ராணுவம் வசம் ஒப்படைக் கப்பட்டது. ஓராண்டு காலத்திற்குள் ஜனநாயக முறையில் மக்கள் வாக் களித்து புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் முபாரக் பதவி விலகி ஓராண்டு ஆகியும் இன்னும் அதிபர் தேர்தல் நடைபெறவில்லை. இதை அடுத்து மக்கள் போராட் டத்தில் இறங்கினர். எனவே அதிபர் தேர்தல் அறிவிக்கப் பட்டது. அதில் போட்டி யிட பதவி விலகிய முபா ரக்கின் ஆதரவாளர்களே மனுத் தாக்கல் செய்துள் ளனர். இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ராணுவம் தன் அதிகாரத் தைத் தக்கவைத்துக் கொள்ள முபாரக் ஆதரவா ளர்களை வேட்பாளர்க ளாக நிறுத்தியுள்ளது எனக் குற்றம் சாட்டப்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் முபாரக் ஆதரவாளர்களை நீக்க வேண்டும் என்றும் முழக்க மிட்டனர். இப்போராட்டத்தினை எகிப்தின் இஸ்லாமிஸ்ட் மற்றும் மதச்சார்பற்ற சக்திகள் தலைமை தாங்கி நடத்தி வருகின்றன. சித்திரை 23, 2012 சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை அதிகரிக்க பாதுகாப்பு சபை இணக்கம்சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்களை அதிகரிக்க பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறை வேற்றியுள்ளது. இதன்படி சிரியாவில் தற்போதுள்ள 30 யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களை 300 ஆக அதிகரிக்க பாதுகாப்புச் சபை அங்கத்துவ நாடுகள் இணங்கியுள்ளன. இவர்கள் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளார். இது தொடர்பில் நேற்று முன்தினம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 15 நாடுகளும் ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது. சிரிய படை மற்றும் எதிர்த்தரப்பினருக்கு இடையிலான வலுவில்லாத யுத்த நிறுத்தத்தை கண்காணிக்க ஐ.நா.வின் சிறு கண்காணிப்புக் குழுவொன்று அங்கு இயங்கிவருகிறது. இந்நிலையில் சிரியாவில் அரச எதிர்ப்பாளர்கள் வலுவாக உள்ள ஹோம்ஸ் நகருக்கு செல்ல ஐ.நா. யுத்த நிறுத்த கண்காணிப்பாளர்களுக்கு சிரிய அரசு அனுமதி அளித்துள்ளது. இங்கு மோதல்கள் நீடித்துவரும் நிலையில் கண்காணிப்பாளர்கள் சென்றுள்ளனர். சித்திரை 23, 2012 பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் வாக்கு பதிவு முடிவுநிதி நெருக்கடி, வேலையின்மை அதிகரிப்பு, யூரோ மண்டல சர்ச்சைக்கு மத்தியில் பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் தற்போதைய ஜனாதிபதி நிகொலஸ் சார்கோசி தனது இரண்டாவது தவணைக்காக போட்டியிடுகிறார். வலுவான பிரான்ஸை உருவாக்க தம்மால் மாத்திரமே முடியும் என்ற தேர்தல் பிரசாரத்துடன் அவர் போட்டியிடுகிறார். எனினும் அவரை எதிர்த்து போட்டியிடும் சோஸலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஹொலன்ட் சார்கோசிக்கு கடும் சவாலாக கருதப் படுகிறார். மொத்தமாக பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் 10 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஒருவரும் 50 வீத வாக்குகளை பெறாத பட்சத்தில் முதல் கட்ட தேர்தலில் முதல் இரு இடங்களையும் பிடிக்கும் வேட்பாளர்கள் இரண்டாம் கட்ட தேர்தலுக்கு முகம்கொடுக்க வேண்டி வரும். இவ்வாறு நிகழும்பட்சத்தில் மே 6 ஆம் திகதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும். நேற்றைய தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 4 கோடியே 40 இலட்சம் வாக்களார்கள் வாக்கு பதிவில் ஈடுபட்டனர். இதில் கடைசி வாக்குச் சாவடி மூடப்பட்டதைத் தொடர்ந்து முதல் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவு வெளியிடப்படவுள்ளது. சித்திரை 22, 2012 இந்திய எம்.பிக்களின் வருகை கண்துடைப்பா? தமிழருக்கு காலந்தான் பதில் சொல்ல வேண்டும் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட எமது பிள்ளைகள் எங்கிருக்கின்றனர் என்று இன்றுவரை தெரியவில்லை என்று வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமிற்கு சென்ற இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் அங்குள்ள மக்கள் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்திருந்ததுடன் பாவப்பட்ட தங்கள் மீது இரக்கம் கொண்டு காணாமல் போன எமது பிள்ளைகளை மீட்டுத் தாருங்கள் என்றும் அந்த அகதி மக்கள் இந்திய எம். பி. க்கள் குழுவிடம் கோரியுள்ளனர். இந்த மக்களின் இக்கோரிக்கையை குழுவினர் சோக உணர்வுடன் கேட்டுக் கொண்டாலும் எவ்விதமான பதிலையோ, உறுதிமொழியையோ வழங்காது நமது அடுத்த கட் டத்திற்கு நகர்ந்து சென்றனர். (மேலும்.....) சித்திரை 22, 2012 “அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்” - இந்தியா இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் இந்தியா மிக தீவிரமாக உள்ளது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய நாடாளுமன்ற தூதுக்குழுவின் தலைவியான சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவின் இலங்கை விஜயத்தின் இறுதியில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார். “அரசியல் தீர்வு விடயத்தில் நாம் மிக மிக தீவிரமாக இருக்கிறோம்” எனக் கூறிய அவர், அரசாங்கமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இயன்றவரை விரைவாக பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கூறினார். (மேலும்.....) சித்திரை 22, 2012 “நீர் ஒரு தமிழனா” இல்லை... - இரா. சம்பந்தன் "நான் தமிழ் வளர்க்கும் தன்மானமுள்ள முஸ்லிம்" - அஸ்வர் எம்.பிதமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தன்னை ஒரு ‘தமிழன்’ என்று கூறியதற்கு அஸ்வர் எம்.பி. கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்திய நாடாளுமன்றக்குழு பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுடன் சந்திப்பை நடத்திய போது இடம்பெற்ற கடுமையான வாக்குவாதத்தின் பின்னர் சம்பந்தன் எம்.பி. அஸ்வர் எம்.பி.யைப் பார்த்து நீங்கள் ஒரு தன்மானமுள்ள தமிழனா என்று கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்த அஸ்வர் நான் தமிழன் அல்லன். தமிழை வளர்க்கும் தன்மானமுள்ள முஸ்லிம் என்று கூறினார். நீங்கள் உண்மையான நேர்மையான அரசியல்வாதியென்றால், இந்திய வீடமைப்புத் திட்டத்தில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று குறிப்பிட்டார். சித்திரை 22, 2012 ஜெயலலிதா, கருணாநிதி, வை.கோ., சீமான் வெறும் கிணற்றுத் தவளைகள் உண்மை நிலவரம் தெரியாது தமிழக மக்களை குழப்பி வரும் தலைவர்கள் இலங்கையில் தமிழர் பிரதேசங்களில் உண்மையில் என்ன நடக்கிறது? அம்மக்கள் சிலர் நினைப்பது போல அல்லது சில ஊடகங்களில் சித்தரிக்கப்படுவது போன்று உண்மையிலேயே கஷ்டப்படுகிறார்களா? என்பதை தமிழக அரசியல் தலைவர்களான முதல்வர் செல்வி ஜெயலலிதா, கலைஞர் மு. கருணாநிதி, வை. கோ, பழ. நெடுமாறன், சீமான், விஜயகாந்த் போன்றோர் நேரடியாக வந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இலங்கை வந்துள்ள இந்திய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். வெறுமனே கடல் கடந்து கண்ணுக்கு எட்டாத தூரத்தில் நின்று உண்மை எதுவென்று நேரில் காணாது கூக்குரலிடுவதால் எவ்விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. முப்பது வருடகால கொடூரமான யுத்தம் நிறைவடைந்து இன்னும் மூன்று வருடங்கள் கூட பூர்த்தியாகாத நிலையில் அழிவுகள் அனைத்திற்குமே தீர்வு காணப்பட்டுவிட்டதாக பொய்யுரைக்கத் தேவையில்லை. ஆனால் இந்த மூன்று வருட காலத்தில் இலங்கை அரசாங்கம் தனது சக்திக்கும் மீறி வெளிநாட்டு உதவிகளுடன் தமிழருக்கு தேவைக்கு அதிகமாகவே செய்துள்ளதை நேரில் சென்று பார்த்தபோது என்னால் உணர முடிந்தது. (மேலும்.....) சித்திரை 22, 2012 தொடர்கதையாகும் செங்கல்பட்டு இலங்கை தமிழ் அகதிகளின் போராட்டம்! தமிழகத்தின் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகள், தங்களை அங்கிருந்து விடுவிக்க கோரி தொடர்ந்து நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இதுவரை எவ்வித பதில் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இச்சிறையில் இலங்கையைச் சேர்ந்த 32 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கடவுச்சீட்டு இல்லாமல் தங்கியது, சந்தேகப்படும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இராமேஸ்வரம், மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் பிடிபட்ட இவர்கள் கடந்த சில மாதங்களாக இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களை திறந்த வெளி முகாமுக்கு மாற்றுமாறு கோரி கடந்த 3 மாதங்களுக்கு முன் உண்ணாவிரதம் இருந்தனர். அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் 45 நாட்களுக் குள் கோரிக்கைக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, உண்ணாவிரதத்தை கைவிட்ட இலங்கைக் கைதிகள் 45 நாட்கள் கடந்ததும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கடந்த 15ந் திகதி முதல் மீண்டும் 10 பேர் உண்ணாவிரதத்தை தொடங்கினார்கள். 5ஆவது நாளாக தொடரும் உண்ணா விரதத்தில் இலங்கைக் கைதிகளான பிஷ்பி, சதீஷ்குமார் ஆகியோர் மயக்கம் அடைந்தனர். நாங்கள் நிரபராதிகள், எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரதம் தொடரும் என சிறையில் உள்ள இலங்கைக் கைதிகள் தெரி வித்துள்ளனர். சித்திரை 22, 2012 கிழக்கு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். எம். மன்சூர்? கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் பட்சத்தில் இம்முறை அத்தேர்தலில் முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். மன்சூரை பொதுவான முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த சில கட்சிகள் கூடி ஆராய்ந்து வருவதாக நம்பகரமான வட்டாரத்திலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்கின் முதல்வர் கிழக்கிலிருந்தே வரவேண்டும் எனவும், இரண்டாவது முதல்வராக தமிழ்பேசும் இன்னுமொரு இனமான முஸ்லிம் சமூகத்திலிருந்து வரவேண்டும் எனும் கருத்துக்கள் கிழக்கில் வலுப்பெற்றுள்ள நிலையில் இவை இரண்டுக்கும் பொருத்தமான தற்போதைய தலைவராக மன்சூர் காணப்படுவதால் அவரைப் பொது வேட்பாளராக அரசாங்கத்தின் சார்பில் தேர்தலில் நிற்க வைப்பதெனும் தீர்மானத்திற்கு கிழக்கிலங்கை கட்சிகள் பலவும் கூடித் தீர்மானித்துள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்தவராக இருந்த போதிலும் தனது கடந்தகால அரசியல் பயணத்தில் மாவட்ட மற்றும் மத்திய அமைச்சர் பதவிகளின்போது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடு காட்டாது சேவையாற்றி வடக்கு, கிழக்கு மக்களின் மனங்களில் தனக்கென தனியானதொரு இடத்தைப் பிடித்து வைத்துள்ளார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. சித்திரை 22, 2012 சண்முகம் சிவலிங்கம் காலமானார்.
(சண்முகம் சிவலிங்கம் (1937 - ஏப்ரல் 20, 2012, பாண்டிருப்பு) ஈழத்தின் மிகமுக்கிய கவிஞரும், விமர்சகரும், சிறுகதையாளருமான சண்முகம் சிவலிங்கம் இன்று [20-04-2012 வெள்ளிக்கிழமை] அதிகாலை காலமானார்.இரவு படுக்கைக்குச் சென்றவர் காலையில் எழும்பவில்லை; மாரடைப்பு காரணமாக நித்திரையிலேயே அவர் இறந்துவிட்டார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவர். 1960 முதல் இலக்கியத்துக்குப் பங்காற்றி வரும் சண்முகம் சிவலிங்கம் ஓர் ஓய்வுபெற்ற விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர்.இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாண்டிருப்பப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவர் பிறந்தது ஒரு இந்துக் குடும்பத்தில். ஆனால் பாடசாலை காலத்திலேயே கத்தோலிக்கராக மதம் மாறியவர். ஒரு கத்தோலிக்கக் குடும்பத்திலேயே திருமணம் செய்து கொண்டவர். இவரது கிராமத்தில் இவர் ஸ்டீவன் மாஸ்டர் எனவே அழைக்கப்பட்டார். இவருக்கு ஆறு ஆண் பிள்ளைகள். கேரளத்தில் படித்து அறிவியலில் பட்டம் பெற்றவர் அவர். அறிவியல் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஆற்றினார். இவரது கவிதைகளின் தொகுதி ஒன்று 1988இல் நீர்வளையங்கள் என்ற பெயரில் வெளியானது. இவர் விமர்சனக் கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதுவதோடு கவிதை மொழிபெயர்ப்பிலும் பங்காற்றியுள்ளார். ஒரு கவிஞராகவே பரவலாக அறியப்பட்டாலும் இவரது சிறுகதைகளும் மிகவும் தரமானவையே. இவரது சிறுகதைகளைத் தொகுக்கும் முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. சண்முகம் சிவலிங்கம் எழுதிய ஆக்காண்டி கவிதை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சித்திரை 22, 2012 தம்புள்ளை ஹைரியா ஜம்ஆ பள்ளி மீண்டும் வழமையான நடவடிக்கைகளில்!தம்புள்ளையில் அமைந்துள்ள 60 வருட கால பழமைவாய்ந்த ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அந்தப் பகுதிக்கு அமைச்சர் பெளஸி தலைமையில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஹுனைஸ் பாரூக் எம்.பி., முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என். எம். அமீன், வக்பு சபைத் தலைவர், முஸ்லிம் கலாசார பணிப்பாளர் நவவி அடங்கிய உயர் மட்டக்குழு ஒன்று விஜயம் செய்து நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் அங்குள்ள சிங்கள, முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயம் தொடர்பாக நேற்று முன்தினமிரவு இந்த அமைச்சர்களுடன் கலந்துரையாடல் நடத்திவிட்டு குழுவை அங்கு அனுப்பி வைத்தார். நேற்றுக்காலை அங்கு சென்ற குழுவினர் பள்ளிவாசல் தர்மகர்த்தாக்கள், பொதுமக்கள் ஆகியோருடன் பள்ளிவாசலில் கூட்டம் ஒன்றை நடத்தினர் அதன் பின்னர் பிரதேச சிங்கள மக்களுடன் கலந்துரையாடியபோது அவர்கள் இந்தத் தாக்குதலுக்கும் தமக்கும் எத்தகைய தொடர்புமில்லையெனவும் இது வெளியாரின் ஒரு நடவடிக்கையே எனவும் தாங்கள் இதனை வெறுப்பதாகவும் தெரிவித்தனர். முஸ்லிம்களுடன் நாங்கள் காலா காலமாக அந்நியோன்யமாகவே நடந்து வருகின்றோம். இது திட்டமிட்ட செயலெனவும் கூறி வருத்தம் வெளியிட்டனர். சித்திரை 22, 2012 தொற்று நோய் பரவ அசுத்தமான குடிநீரே காரணம் நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை லிந்துலை பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் இருவர் உயிரிழக்கவும், 800 இற்கு மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்ட மைக்கும் அசுத்தமான குடிநீர் பாவனையே காரணமாகும் என லிந்துலை வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஜகத் அபேகுணவர்தன தெரிவித்தார். குறித்த நோயாளி வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதே மரணமடைந் திருந்ததாகவும் வயிற்றோட்டம் காரணமாக கடந்த 31ஆம் திகதி குழந்தையொன்று உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை பிரதேசத்தை அண்மித்த பகுதிகளில் இருந்து நீர் மாதிரிகள் கொழும்பு வைத்திய ஆய்வு நிலையத்தி ற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லிந்துலை கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார். (மேலும்.....) சித்திரை 22, 2012 இலங்கைப் பிரச்சினையும் இந்திய தூதுக்குழு மேற்கொண்ட விஜயமும்
அன்பான சிநேகிதனை ஆபத்திலே அறிகிறோம், அதுபோன்று இலங்கை ஆபத்திலே மாட்டிக்கொண்டிருந்த தருணம் அன்பான சிநேகிதனாகக் கருதப்பட்ட இந்தியா உதவுவதற்குப் பதிலாக ஆற்றிலே தள்ளிவிடுவது போன்று தள்ளிவிடப்பட்ட இலங்கையின் முகத்தில் தோன்றிய காயம் ஆறுவதற்கு முன்பதாக நாட்டுக்கு விஜயம் செய்து திரும்பிய இந்திய நாடாளுமன்றத் தூதுக் குழுவின் வருகை/ மேற்பார்வைச் சுற்றுலா போன்றதே! ஆற்றில் தள்ளிவிட்டமைக்கு ஒரு வகை ஆறுதலளிக்கும் சுற்றுலா என்றும் எடுத்துக்கொள்ளலாம். சந்து பொந்துகள் முதல் சர்வதேசம் வரை இழையோடி புரையோடிப் போன இலங்கையின் இனப் பிரச்சினை இலங்கையை ஆட்சிசெய்த இரு பெரிய கட்சிகளின் ஸ்திரமற்ற கொள்கைகளின் பிரதிபலிப்பாக அந்நிய நாடுகள் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றுமளவுக்கு நிலைமைகள் மாறியுள்ளன எனில் அதற்குக் காரணம், இலங்கையின் அசமந்தப்போக்கே. மூன்று தசாப்தங்களை விழுங்கிய இனத் தகராறு தீர்த்து வைக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் தோன்றிய ஒவ்வொரு தருணத்திலும் / கடும்போக்குவாதிகளின் பேரினவாதச் சிந்தனைகளுக்கு அரசாங்கங்கள் பலியாகியமை வரலாறாகும். (மேலும்.....) சித்திரை 22, 2012 ஐ.பி.எல் இல் சாதனை படைத்த ….. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கடந்த முறையைப் போன்றே இம்முறையும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இம்முறை போட்டித் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ரெய்னா, பீட்டர்சன், டில்சான், கெயில், மஹேல, சங்கக்கார, தோனி, கோஹ்லி, செவாக் போன்ற முன்னணித் துடுப்பாட்ட வீரர்களையெல்லாம் முந்திச் சென்று ரெஹ்னே, ஒவைஸ் ஷா, பெஸஸ்ஸி, ரெய்டர் போன்ற வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். (மேலும்.....) சித்திரை 22, 2012 தமிழர் பகுதியிலிருந்து ராணுவத்தை விலக்குக! ராஜபக்ஷேயிடம் இந்திய எம்.பி.க்கள் குழு நேரில் வலியுறுத்தல் தமிழர்கள் பகுதியிலிருந்து ராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்ளுமாறும், தமிழர் பிரச்ச னைக்கு அரசியல் தீர்வுகாண அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இலங்கை ஜனாதி பதி மகிந்த ராஜபக்ஷேயிடம் இந் திய எம்.பி.க்கள் குழு நேரில் வலி யுறுத்தியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் சில பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் இது போது மானதல்ல. குறிப்பாக தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் முற்றாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அனைத்து நிலைகளிலும் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும். மக்களின் அச் சம் போக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். தாங்கள் சென்ற பகுதிகளில் சந்தித்த மக்கள், கோவில்களில் கூட ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வழிபாட்டு உரிமை, பண்பாட்டு உரிமை பாதிக்கப்படுகிறது என்று கூறியதை ராஜபக்ஷேவிடம் எடுத்துரைத்தார். (மேலும்.....)சித்திரை 21, 2012 தமிழீழம் கோத்தாபாயவுக்கு கருணாநிதி பதிலடி! இந்திய அரசு இலங்கை அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை என்று கோத்தபாய ராஜபக்சவுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதிலடி கொடுத்துள்ளார். ஈழத் தமிழர்கள் சிந்திய ரத்தமும்,கொடுத்த உயிர்ப் பலிகளும் வீண் போகாது என்றும், இன்றில்லாவிட்டால் நாளை தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும் என்று கூறியிருந்தார். இது இலங்கை அரசை கடுமையாக ஆத்திரமடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து,”தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ளட்டும், தங்கள் நாட்டில் அது ஒருபோதும் சாத்தியமாகாது.தனித் தமிழ் ஈழத்தை ஆதரிப்பவர்கள் பயங்கரவாதிகள்” என இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கடுமையாக கூறியிருந்தார். (மேலும்.....) சித்திரை 21, 2012 ராஜபக்சவை சுஷ்மா தனியாக சந்தித்ததால் சர்ச்சை! இலங்கை அதிபர் ராஜபக்சவை இந்திய எம்.பி.க்கள் குழுவாக சந்திக்க திட்டமிட்டபோதும் அவரை சுஷ்மா ஸ்வராஜ் தனியாக சந்தித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இலங்கை வந்துள்ள இந்திய எம்.பி்.க்கள் குழு நேற்று மாலை ராஜபக்சேவை சந்திக்க இருந்த நிலையில்,நேற்று காலை குழுத் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மட்டும் தனியாக போய்ச் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கு காலை விருந்தளித்துள்ளார் ராஜபக்சே.இருவரும் உணவருந்தி கொண்டே பேச்சுவார்த்தை நடத்தியதாக ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ராஜபக்சேவுடன் சாப்பிட விரும்பவில்லை. அப்படிச் சாப்பிட்டால் தமிழகத்தில் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்பதால், நாளை ராஜபக்சேவுடன் நடப்பதாக இருந்த காலை விருந்துடன் கூடிய சந்திப்பை ரத்து செய்யுமாறு தமிழக எம்.பி.க்கள் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டதால் அச்சந்திப்பு ரத்து செய்யப்பட்டு நேற்று மாலை இந்தியக் குழுவினரை ராஜபக்சே சந்திக்க திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில் திடீரென சுஷ்மாமட்டும் போய் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.ஒருவேளை மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் சுஷ்மா மட்டும் தனியாக சந்தித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.சித்திரை 21, 2012 தமிழர் சிந்திய குருதி வீண் போகாது, தமிழீழம் ஒரு நாள் மலரும் - கருணாநிதி இன்றில்லாவிட்டால் நாளை அல்லது மறுநாள் தனித் தமிழ் ஈழம் நிச்சயம் உருவாகும். தமிழர்கள் சிந்திய இரத்தம் வீண் போகாது என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், "கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு திமோர், மாண்டி நீக்ரோ ஆகியவற்றை தனி நாடாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் நடத்தப்பட்ட வாக்கெடுப்புகளே காரணமாக அமைந்தன. அதேபோல இலங்கையிலும் வாக்கெடுப்பு நடத்துவது குறித்து சிலர் ஆலோசிக்கத் தொடங்கியுள்ளனர். அதேபோன்ற ஒரு நடைமுறையை தான் தனித் தமிழ் ஈழத்தைப் பொறுத்தவரை பின்பற்ற வேண்டுமென்று நாம் கோருகிறோம். அதற்கு தான் மத்திய அரசின் ஒத்துழைப்பை நாடுகிறோம். இந்த வாக்கெடுப்புப் பற்றி, நான் இப்போதல்ல, 14-10-1987இல் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போதே கூறியிருந்தேன். (மேலும்.....) சித்திரை 21, 2012 தமிழீழக் கனவை இந்தியாவில் வைத்துக் கொள்ளுங்கள் - கருணாநிதி மீது கோத்தபாய சீற்றம் _ தமிழீழத்தை அமைக்கும் தனது கனவை, திமுக தலைவர் மு.கருணாநிதி இந்தியாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இலங்கையில் அது ஒருபோதும் சாத்தியமாகாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனித் தமிழீழம் அமைக்க ஐ.நாவின் கண்காணிப்பில் பொதுவாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதி ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனையடுத்தே , அவரைக் கடுமையாக பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சாடியுள்ளார். (மேலும்.....)சித்திரை 21, 2012 கனடாவில் தமிழ் - சிங்கள புத்தாண்டு விழா கனடிய ஜனநாயக தமிழ் கலாச்சார சங்கம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் - சிங்கள புத்தாண்டு விழா பல்கலாச்சார நிகழ்ச்சிகள் காலம்: 2012 ஏப்ரல் 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி இடம்: கொரிய கலாச்சார மண்டபம் 1133, லெஸ்லி வீதி, ரொறன்ரோ நுழைவுச்சீட்டு விபரம்: தனிநபருக்கு - 10 டொலர்கள் குடும்பத்துக்கு – 15 டொலர்கள் விபரங்களுக்கு அழைக்கவும்: 416 588 3230 தேசத்தின் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் எடுத்துக்காட்ட அனைத்து இன மக்களும் திரண்டு வருக! சித்திரை 21, 2012 பாகிஸ்தானில் 127 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து கராச்சியிலிருந்து 127 பயணிகளுடன் புறப்பட்ட பொஜா ஏயார்லைன்ஸ்விமானம் பாகிஸ்தானின் ராவல்பிண்டிக்கு அருகாமையில் வெடித்துச் சிதறியுள்ளது. குறித்த விமானம் கராச்சியிலிருந்து இஸ்லாமபாத்திற்கு புறப்பட்ட வேளையில் மோசமான காலநிலை காரணமாக ராவல்பிண்டிக்கு அருகாமையில் வைத்து வீழ்ந்து வெடித்துச்சிதறியுள்ளது. மேலும் விமானம் முற்றாக தீப்பிடித்து சேதமாகியுள்ளதாக பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரியான அக்பர் தெரிவித்துள்ளார். உயிரழப்பு மற்றும் சேதம் தொடர்பான விடயங்கள் குறித்து இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மேலும் தற்போது அங்கு மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றது. (மேலும்.....) சித்திரை 21, 2012 தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல்
தம்புள்ளை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கைரியா ஜும்ஆப் பள்ளிவாசல் இன்று நண்பகல் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணியாக வந்த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாசலைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை தம்புள்ளையிலுள்ள பிரபல விகாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர். (மேலும்.....) சித்திரை 21, 2012 பன்னாட்டு நிறுவனம் நாட்டுடைமையானது-அர்ஜெண்டினா அதிரடி நடவடிக்கை நாட்டின் இயற்கை வளங்கள் மற்றும் உற்பத்தி அதிகரிப்பு ஆகிய இரண்டையும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளும் வகையில் ஸ்பெயின் நிறுவன மான ஒய்.பி.எப் எரிவாயு நிறுவனத்தை அர்ஜெண்டினா அரசு நாட்டுடைமை யாக்கியிருக்கிறது. ஸ்பெயினின் பகாசுர நிறுவனமான ரெஸ்போலின் துணை நிறுவனமாக இந்த ஒய்.பி.எப் எரிவாயு நிறுவனம் இயங்கி வந் தது. ஏற்கெனவே மற்றொரு துணை நிறு வனமும், கச்சா எண்ணெய்த்துறையில் பெரிய நிறுவனமுமான ஒய்.பி.எப் எண் ணெய் நிறுவனம் அரசின் கட்டுப்பாட் டின் கீழ் கொண்டு வரப்பட்டது. (மேலும்.....) சித்திரை 21, 2012 பெற்றோர்கள் சண்டையால் குழந்தைகள் பாதிப்பு வீட்டில் பெற்றோர்களுக்கிடையில் ஏற்படும் சண்டையால் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாகப் பெண் குழந்தைகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றன. குழந்தைகள் பற்றி ஆய்வு செய்து வரும் அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள்தான் இந்தக் கருத்தைக் கூறியிருக்கிறார்கள். பள்ளிக்குச் செல்வதற்குக் தயாராகிக் கொண்டிருக்கும் குழந்தைகளில் சுமார் 1,600 பேரின் நடவடிக்கைகள் மற்றும் உடல்நிலையை ஆய்வு செய்துள்ளனர். சமூகத்தில், குறிப்பாகக் குடும்பத்தில் ஏற்படும் பல்வேறு சிக்கல்கள் பெண் குழந்தைகளின் உடலிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இளம் வயதிலேயே அவர்கள் உடல் பருமன் அடைந்து விடுகிறார்கள். வளர, வளர அவர்களின் உடல் நிலை பெரும் பாதிப்புக்குள்ளாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதிலும், தாய் பாதிக்கப்படுவதால் மனரீதியாக பெரும் பாதிப்புக்கு இக்குழந்தைகள் உள்ளாகிறார்கள். குடும்ப வன்முறை, மன அழுத்தம், போதை மருந்துக்கு அடிமையான பெற்றோர், தங்க இடமின்மை, உணவுப் பாதுகாப்பின்மை போன்றவை தங்களைச் சிறு வயதில் கடுமையாகப் பாதித்ததாக பெண் குழந்தைகள் கூறியுள்ளனர். சித்திரை 21, 2012 ஆயிரம் படகுகளில் 5 ஆயிரம் மீனவர்களுடன் இராமேஸ்வரம் செல்லத் தயாராகும் அமைச்சர் டக்ளஸ் இலங்கைக் கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடருமானால் அடுத்தவாரம் ஆயிரம் படகுகளில் வடபகுதியைச் சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்களை இராமேஸ்வரம் அழைத்துச் சென்று அத்துமீறல்களைத் தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த இந்திய பாராளுமன்றக் குழுவினரிடம் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மகஜர் ஒன்று வடபகுதி கடற்றொழிலாளர்களால் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்துமீறல்கள் தொடர்ந்தும் இடம்பெற்றால் இவ்வாறான போராட்டத்தில் வடபகுதி கடற்றொழிலாளர்கள் ஈடுபட நேரிடும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடபகுதி மீனவர்களையும் இந்திய மீனவர்களையும் நேரடியாக கச்சதீவில் சந்திக்க வைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது இரு நாட்டு கடற்படையினரும் இணைந்து கடல் எல்லைப் பகுதியில் கூட்டு ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதன் மூலமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் அத் தீர்மானம் இன்றுவரை நடைமுறைப்படுத்தப்டவில்லை.இதனால் எமது மீனவர்கள் தொடர்ச்சியாகப் பெரும் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சித்திரை 21, 2012 மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு - கிழக்கு முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன்!
இந்தியாவின் ஒத்துழைப்பினால் 1987 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமைக்கு அமைய அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கிடைக் இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன் இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தது. இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரை குறித்த இந்திய நாடாளுமன்றக்குழு சந்தித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர், '1987 ம் ஆண்டு மாகாணசபை முறையினை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாதான். இந்தியாவின் காத்திரமான பங்களிப்பினாலேயே 1978 ம் ஆண்டு மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இங்கு செயலற்று காணப்படுகின்றது. அதிலுள்ள பல அதிகாரங்கள் இல்லாமல் இருக்கின்றது. எனவே மாகாணசபை முறைமையில் என்னென்ன அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததோ அவையமைத்தும் மாகாணசபைகளுக்கு கிடைக்கும்படி செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது. இதனை அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். சித்திரை 20, 2012 ராஜபட்ச விரித்த வலை... இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு திங்கள்கிழமை இலங்கை சென்று சேர்ந்தவுடன், மாற்றியமைக்கப்பட்ட பயணத் திட்டத்தை வெளியிடுகிறது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். புதிய பயணத் திட்டத்தின்படி, 21-ஆம் தேதி இலங்கை அதிபர் ராஜபட்சவுடன் சிற்றுண்டி உண்பதாக இருந்த திட்டம் மாற்றப்பட்டு, 20-ஆம் தேதி மாலை அவரைச் சந்தித்து உரையாடுவதாக மாற்றப்பட்டுள்ளது. திமுகவும், அதிமுகவும் இந்தப் பயணத்திலிருந்து விலகிக் கொண்டுவிட்டதால், இலங்கை அதிபர் ராஜபட்சவை தர்மசங்கடத்தில் ஆழ்த்தும் கேள்விகளை யாரும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் மாற்றி அமைத்திருப்பார்களோ என்னவோ!(மேலும்.....) சித்திரை 20, 2012 தனி ஈழம் அமைக்க பொதுஜன வாக்கெடுப்பு - கருணாநிதி தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் - சம்பிக்க ரணவக்கஇலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழ் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள அவர் ஐ.நா. இதை செயல்படுத்துவதற்கு இந்தியா ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதியின் கோரிக்கைக்கு, இலங்கையின் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க பதிலளித்துள்ளார். தமிழ்ஸ்தான் மற்றும் காஸ்மீர் ஆகியவற்றுக்கு முதலில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தனித் தமிழீழம் ஒன்றை அமைப்பது தொடர்பில் ஐக்கிய நாடுகள் வாக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, காஸ்மீர் மற்றும தமிழ்ஸ்தான் ஆகியவற்றுக்காக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தனித் தமிழ் நாட்டுக்காக போராடியவர் என்ற ரீதியில் மத்திய அரசாங்கத்திடம் தனித் தமிழ்நாட்டு கோரிக்கையை கருணாநிதி முன்வைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். காஸ்மீரை தனிநாடாக அங்கீகரிப்பது தொடர்பில் 1948ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சம்பிக்க சுட்டிக்காட்டியுள்ளார். எனவே முதலில் காஸ்மீர் தொடர்பிலான தீர்மானத்திற்கு புது டொல்லி தேர்தல் நடத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.சித்திரை 20, 2012தமிழ் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திகள் குறித்து இந்தியக் குழு திருப்தி இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று மூன்றாவது நாளாக யாழ். நகரில் நடைபெற்ற நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் இரவு யாழ். நகர் சென்ற குழுவினர் இரவு டில்கோ ஹோட்டலில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்டனர். நேற்றுக் காலை வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறியினால் ஏற்பாடு செய்யப்பட்ட காலை விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். யாழ். ஞானம்ஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ் விருந்துபசாரத்தின் விசேட கலந்து ரையாடல்களும் நடைபெற்றன. (மேலும்.....) சித்திரை 20, 2012 மாகாணங்களுக்கு காணி-பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் அரசாங்கம் தெரிவித்துள்ளது! மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயாரில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய மாநிலங்களில் அமுலில் உள்ள பொலிஸ் அதிகாரங்களைப் போன்று, இலங்கையின் மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும். பயங்கரவாத ஒழிப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, வடக்கில் அரசாங்கம் ஏற்படுத்தி வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். சித்திரை 20, 2012சேதுவை அகழ்ந்து கப்பல் விடுவோம்! (செ. முத்துக்கண்ணன்) தமிழகத்தின் 160 ஆண்டுகால கனவு திட்டமாக உள்ள சேது கால்வாய்திட் டத்தை உடன் அமலாக்கிட வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் சார்பில் கால் நுாற்றாண்டுகளாய் பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்துள் ளோம். தென் மாவட்டங்களில் போதிய தொழிற்சாலைகள் இல்லை, இயற்கை ஏமாற்றுவதால் விவசாயம் பொய்த்துக் கொண்டே இருக்கிறது, வேலைவாய்ப்பு கள் அருகிக் கொண்டே வருகிறது, வாழ வழியில்லாமல் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும், தேசங்களுக்கும் சென்று கொண்டிருப் போர் அரை நுாற்றாண்டுகளாய் அதிகரித்த வண்ணம் உள்ளது. (மேலும்.....)சித்திரை 20, 2012இலங்கை குற்றத்தடுப்புப் பிரிவினரால் லலித்தும் குகனும் இன்று அழைத்துச் செல்லப்படனர்
மக்கள் போராட்டக் குழு மற்றும், முன்னிலை
சோசலிசக் கட்சி ஆகியவற்றின் பிரதான தோழர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர்
தெமட்ட்க்கொடவில் அமைந்துள்ள இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினரால் தடுத்து
வைக்கப்பட்டிருந்தனர். இன்று (19) அதிகாலை 2.20 அளவில் அங்கிருந்து வேறு
இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மிகவும் நம்பதகுந்த தரப்புத் தகவல்கள்
தெரிவிக்கின்றன என லங்கா நியூஸ் வெப் இணையம் தெரிவித்துள்ளது. சித்திரை 20, 2012தீவிரவாதிகள் உடல்களுடன் அமெரிக்க வீரர்கள், கைப்படங்கள் வெளியானதால் சர்ச்சை ஆப்கானிஸ்தானில் மனித வெடிகுண்டாக செயல்பட்ட பயங்கரவாதிகளின் உடல் பாகங்களை கையில் பிடித்தபடி அமெரிக்க வீரர்கள் நிற்பது போன்ற புகைப்படங்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘லோஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ இதழ் புதன்கிழமை இந்தப் புகைப்படங்களை வெளியிட்டது. 2010ம் ஆண்டில் அமெரிக்க இராணுவ வீரர்களாலேயே இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப் பட்டிருக் கிறது. ஒரு புகைப்படத்தில், இறந்த பயங்கரவாதியின் இரு கால்களையும் இரு இராணுவ வீரர் தலைகீழாகப் பிடித்திருப்பது போலவும், மற்றொரு புகைப்படத்தில் இராணுவ வீரரின் தோளில் பயங்கரவாதியின் கை இருப்பது போலவும் காணப்படுகிறது. இது போல மொத்தம் 18 புகைப்படங்கள் தங்கள் வசம் இருப்பதாக அந்த இதழ் குறிப்பிட்டுள்ளது. சம்பந்தப்பட்ட வீரர்கள் ஆப்கானிஸ் தானில் செயல்படும் அமெரிக்காவின் 82 வது வான் தாக்குதல் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்திருக்கிறது. புகைப்படங்கள் வெளியா னதை தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அமெரிக்க இராணுவம் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. சித்திரை 20, 2012நெருங்கிய சொந்தத்தில் ஏன் திருமணம் செய்யக் கூடாது ? ஹீமோபிலியா (Hemophilia) என்பது இரத்தம் தொடர்பான ஒரு பரம்பரை நோய். இது ஆண்களிடமிருந்து ஆண்களுக்கு மட்டுமே வரும். இதில் பெண்கள் ஹீமோபிலியா நோயின் சுமப்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள். இந்த நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு, ஏதாவது ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறத் தொடங்கினால், இரத்தம் நிற்காது; இரத்தம் உறையாது. தொடர்ந்து இரத்தம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் பொதுவாக நம் உடலில் ஒரு காயம் ஏற்பட்டு இரத்தம் வெளிப்பட்டால், இரத்தம் வெளிக் காற்றைச் சந்தித்த நொடியிலேயே, அதனுடன் தொடர்பு கொண்டு, இரத்தம் உறைந்துவிட ஆரம்பிக்கும். இதுதான் இயல்பு. அப்படி இன்றி தொடர்ந்து இரத்தம் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டே இருந்தால், இரத்த இழப்பு ஏற்பட்டு உயிர் இழக்க நேரிடும். (மேலும்.....) சித்திரை 20, 2012பிரிட்டனின் அட்டூழியங்கள் கூறும் ஆவணம் வெளியீடுபிரிட்டன் காலனிய அரசின் இறுதி ஆண்டுகளில் நடந்த சித்ரவதைகளும், கொலைகளும் குறித்த அரசாங்க ஆவணங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனின் காலனித்துவ நாடுகள் சுதந்திரமடைந்த போது இது குறித்த கோப்புகள் ரகசியமாக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கென்யாவின் மவு மவு கிளர்ச்சிக்காரர்கள் மற்றும் 1950 ஆம் ஆண்டில் மலாயாவின் கம்யூனிஸ்ட் கிளர்ச்சிக்காரர்கள் ஆகியோருக்கு எதிரான பிரிட்டனின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களும் இதில் அடங்குகின்றன. டியோகோ கார்சியாவில் அமெரிக்க தளத்தை நிறுவ வழி செய்வதற்காக சாகோஸ் தீவுகளில் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த குடும்பங்களை வெளியேற்றியமை குறித்து ஐ.நா.வுக்கு பிரிட்டன் அதிகாரிகள் தவறான தகவல்களைக் கொடுத்து அதனை தவறாக வழி நடத்தியதாக இந்த ஆவணங்கள் கூறுகின்றன. இவற்றைப் போன்ற மேலும் பல ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது. சித்திரை 20, 2012 சூரியக் குடும்பம் - சில சுவையான தகவல்கள் சூரியக் குடும்ம் எவ்வாறு தோன்றியது? இதற்கு உறுதி பூர்வமான கொள்கையோ, பதிலோ இதுவரை கண்டறியப் படவில்லை. சூரியக் குடும்பம் தோன்றியது குறித்து இதுவரை பல்வேறான கருத்துக்கள் கூறப்பட்டு வந்துள்ளன. தொடக்கத்தில் 18ம் நூற்றாண்டில் புகையுருக் கோட்பாடு என்ற தத்துவம் ஒன்று கூறப்பட்டது. பல வாயுக்களால் அமைந்த பெரும் தொகுதி ஒன்று, சுழற்சியினால் மெதுவாகக் குளிர்ந்து சுருங்கத் தொடங்கியது. அச்சுருக்கத்தின் காரணமாக, அந்தத் தொகுதி முழுவ தும் ஈர்ப்பு- சக்தியின் அணைப்பினால் சுழற்சி வேகம் மேலும் அதிகரித்து: அதனால் அத் தொகுதியின் வெளிப்பரப்பின் வேகம் மிகவும் அதிகமாக, ஈர்ப்பை மீறத் தொடங்கியது. இதிலிருந்து சிறு சிறு துண்டுகள் விடுபட்டுக் கோள்கள் உருவாயின. நடுப்பகுதி மட்டும் சூரியனாக ஒளியையும், வெப்பத்தையும் அளித்துக் கொண்டுள்ளது. இவ்வாறு புகையுருக் கோட்பாடு, சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றிக் கூறுகிறது. (மேலும்.....) சித்திரை 20, 2012 சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள் முன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடுசிரியாவில் ஐ.நா. கண்காணிப் பாளர்களுக்கு மத்தியில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. எனினும் இந்த தகவலை ஐ.நா. கண்காணிப்பாளர்கள் உறுதி செய்யவில்லை. யுத்த நிறுத்த கண்காணிப்பு பணிகளுக்காக சிரியா சென்றுள்ள கண்காணிப்பாளர் டமஸ்கஸ்ஸின் சபாப் பகுதிக்கு சென்ற போது அங்கிருந்து நூற்றுக்கணக்கான அரச எதிர்ப்பாளர்கள் அவர்களது வாகனத்தை சூழ்ந்துள்ளனர். இதன்போது அவர் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (மேலும்.....) சித்திரை 20, 2012 இந்தியா டுடே கணிப்பீடுசெல்வாக்கு உள்ளவர்கள் பட்டியலில் ரஜினிகாந்த்ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் செல்வாக்கும் உயர்மதிப்பும் கொண்ட மிக முக்கியமான மனிதர்களை பட்டியலிடுவது இந்தியா டுடே பத்திரிகையின் வழக்கம். இந்த ஆண்டும் அப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த பட்டியலில் தமிழ் நாட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார். இத்தனைக்கும் கடந்த இரு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் ஏதும் வெளிவரவில்லை. உடல் நலக் குறைவு, 'ராணா' தள்ளிப்போனது என பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு, ரசிகர்களின் அபிமானம், வரவிருக்கும் 'கோச்சடையான்' மீதான எதிர்பார்ப்பு போன்றவற்றால், அவரே செய்திகளின் நாயகனாகத் திகழ்கிறார். இந்தியா டுடே கடந்த வாரம் வெளியிட்டுள்ள அந்த 'டொப் -50' பட்டியலில் அன்னா ஹசாரே, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், யுவ்நாடார், சச்சின் டெண்டுல்கர். அஜீம் பிரேம்ஜி என பல பிரபலங்கள் இடம்பிடித்திருக்கிறார்கள். (மேலும்.....) சித்திரை 20, 2012 அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் அக்னி 5 சோதனை வெற்றி பெற்றதாக விஞ் ஞானிகள் தெரிவித் தனர். ஒடிசா மா நிலம் வீலர் தீவில் நடந்த சோதனை வெற்றி பெற்றதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி. 5000 கி.மீ. வேக த்தில் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் திறன் கொண்டது இந்த அக்னி 5 ஏவுகணை ஒரு தொன் எடையுள்ள அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்டது இந்த ஏவுகணை. மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை வைத்துள்ள நாடுகளில் இந்தியா தற்போது சேர்ந்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸிடம் மட்டுமே இது போன்ற ஏவுகணை உள்ளது. கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை நேற்று முன்தினம் மாலை 7 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. சித்திரை 20, 2012ஒன்பது தலைமுறையாக பாதிக்கப்பட்டுள்ளோம் பிரிட்டனுக்கு அர்ஜெண்டினா பதிலடி தங்களுக்குச் சொந்த மான மால்வினாஸ் (பாக் லாந்து) தீவுகளை பிரிட்டன் ஆக்கிரமித்துக் கொண்டுள் ளதால் ஒன்பது தலைமுறை யாகச் சொந்த மண்ணில் கால் வைக்க முடியாமல் அர்ஜெண்டினா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்ஜெண்டினா பதிலடி கொடுத்துள்ளது. அர்ஜெண்டினாவின் கடற்கரையிலிருந்து 300 மைல்கள் தூரத்தில் இந்த மால்வினாஸ் தீவுகள் உள் ளன. 1833 ஆம் ஆண்டில் பிரிட்டன் இதை ஆக்கிர மித்துக் கொண்டது. 1982 ஆம் ஆண்டில் இதை விடு விக்க அர்ஜெண்டினா எடுத் துக் கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. 74 நாட் கள் நடந்த சண்டையில் பிரிட்டன் வெற்றி பெற்றது. ஆனால் தற்போது நிலை மைகள் மாறியுள்ளன. பிரிட் டனின் பலம் குறைந்துள் ளது. பொருளாதார ரீதியா கத் தடுமாறி வருகிறது. (மேலும்.....)சித்திரை 19, 2012இந்திய பாராளுமன்ற குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான தமது விஜயத்தினை மேற்கொண்டனர்!
சித்திரை 19, 2012 மீண்டும், மீண்டும் வழி தவறும் தமிழக கட்சிளும், இலங்கை தமிழ் கட்சிகளும் (தோழர் ஸ்ரனிஸ்) இந்திய பாராளுமன்ற குழுவை சந்தித்த தமிழ் கட்சிகள் அனைத்தும் இந்தியாவிடம் இலங்கை பிரச்சியை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றாக சந்தித்திருந்தால் அதற்கு வலிமை உண்டு. எந்த தமிழ் கட்சிகளையும் உதாசீனம் செய்யாமல் எந்த பேச்சுவார்த்தையானாலும் அனைவரும் பங்குபற்ற வேண்டும். இதனை தமிழ் கட்சிகள் அனைவரும் ஒற்றுமையுடன் பங்குபற்ற வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னுதாரணமாக செயல்பட்டடிருக்க வேண்டும். தமிழக கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக இன்று இரு அணிகாளக இருக்கிறது ஒன்று தி.முக சார்பு மற்றயது அ.தி.மு.க சார்பு. இதில் தி.மு.க ஆளும் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ளது. இருந்தும் மாநில அரசியல் தொடர்பாக அது காங்கிரசில் இருந்து விலகியே இருக்கிறது. அ.தி.மு.க வை பொறுத்தவரை அது காங்கிரசை முற்றுமுழுதாக எதிர்க்கும் நிலைப்பாட்டிலே உள்ளது. இலங்கை அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்பதைப்போல. (மேலும்....) சித்திரை 19, 2012உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார்கள் தமிழ் நாட்டில் அடிமைகளாக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள்
80 களில் ஆரம்பித்து வன்னி இனப்படுகொலை வரை, பெரும்பான்மையான இந்திய அரசியல்வாதிகள் தமிழின் பெயராலும், தேசியத்தின் பெயராலும் ஏற்படுத்திய அழிவுகள் ஏராளம். இன்று ஈழம் வேண்டும் என்று நீலிக் கண்ணீர்வடிக்கும் கருணாநிதியோ, இந்திய பார்பனீய அதிகாரத்தின் தமிழ் நாட்டு அடியாளான தமிழின விரோதி ஜெயலலிதாவோ நடத்துகின்ற சூதாட்டத்தில் நசுங்கி மாண்டுபோகின்றவர்களுள் தமிழ் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழ அகதிகளும் அடங்கும். ஒரு சமூகத்தின் தலைவிதியையே நிர்ணயிக்கப் போவதாக வரிந்து கட்டிக்கொண்டு உணர்ச்சி அரசியல் நடத்தும் ஒவ்வொரு அரசியல் வாதிக்கும் தனது கொல்லைப் புறத்தில் அகதிகள் மிருகங்கள்போல நடத்தப்படுவது தெரியாதா என்ன? இவர்களுக்கும் மேல் புலம் பெயர் நாடுகளில் மில்லியன்களை சுருட்டிக்கொண்ட ‘தேசிய வியாபாரிகள்’ இந்த அடிமைகள் குறித்துப் பேசுவதே கிடையாது. செங்கல்பட்டு அகதிகள் முகாம் என்ற மாட்டுத்தொழுவம் ஒரு சிறைகூடம். அங்கும் ஈழ அகதிகள் சிறை வக்கப்பட்டுள்ளனர். அவர்களைக் கண்டுகொள்வதற்கு யாரும் முன்வந்ததில்லை. செங்கல்பட்டு முகாமில் சீமான், வை.கோ, நெடுமாறன் போன்ற உணர்ச்சி அரசியல் வியாபரிகளது காலடிகூடப்பட்டதில்லை. தமிழின விரோதி ஜயலலிதாவினதும், காப்ரேட் கருணாநிதியினதும் கோரப்பிடிக்குள் ஆண்டாண்டுகளாகச் சிக்கித் தவிக்கும் இந்த அடிமைகள் விடுதலை செய்யப்பட வேண்டும். சித்திரை 19, 2012
THIS
IS THE ONLY TIME WE WILL SEE AND LIVE THIS EVENT
This year, July has 5 Fridays, 5 Saturdays and 5 Sundays. This
happens வடக்கில் வரலாற்றில் அதிகூடிய விளைச்சல் 2 இலட்சத்து 50 ஆயிரம் மெ. தொ. நெல் அறுவடைகடந்த பெரும்போகத்தின் போது வட மாகாணத்தில் இருந்து 2 இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் நேல் அறுவடை செய்யப்பட் டதாக விவசாய அமைச்சு கூறியது. இது வட மாகாணத்தில் இருந்து இதுவரை பெறப்பட்ட அதிகூடிய நெல் அறுவடை எனவும் இம்முறை 85 ஆயிரம் ஹெக்டயரில் நெல் பயிரிடப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்தது. யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் வடபகுதியில் கூடுதலான நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டதோடு விவசாயிகளுக்கு பல்வேறு நிவாரணங்கள் உபகரணங் கள் என்பன வழங்கப் பட்டன. இந்த நிலையில் இம்முறை சாதனை படைக்கும் வகையில் அதிகூடிய அறுவடை கிடைத் துள்ளது. யுத்தத்திற்கு முன்னர் கூட வடக்கில் இந்தளவு கூடுதல் நெல் அறுவடை கிடைக்கவில்லை எனவும் விவசாய அமைச்சு கூறியது. நாட்டின் ஏனைய மாகாணங்களிலும் கூடுலாக நெல் அறுவடை செய் யப்பட்டுள்ளதோடு மேலதிக நெல்லை ஏற்றுமதி செய்யவும் அமைச்சு திட்டமிட்டுள்ளது. சித்திரை 19, 2012ஒபாமா பாதுகாப்பு வீரர்களின் பாலியல் சர்ச்சை: 20 பெண்கள் தொடர்புஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொலம்பிய சுற்றுப் பயணத்தின் போது அவரது மெய்ப் பாதுகாப்பு வீரர்கள் ஹோட்டலுக்கு விலை மாதர்களை அழைத்து வந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குறைந்தது 20 வெளிநாட்டு பெண்கள் தொடர்புபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்கா மற்றும் ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆபத்து இருந்ததா என அமெரிக்க பிரதிநிதிகள் சபை, புலனாய்வுத்துறை இயக்குனர் மார்க் சுல்லிவானிடம் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பில் விளக்கமளித்த சுல்லிவான், ஒபாமாவின் 11 பாதுகாப்பு வீரர்கள் ஹோட்டலில் 11 பெண்களை சந்தித்துள்ளனர். இதில் வெளிநாட்டு பெண்களே பெரும்பாலும் ஈடுபட்டுள்ளனர். என்றார். கடந்த வெள்ளிக்கிழமை கொலம்பியா சென்ற பராக் ஒபாமா தங்கியிருந்த ஹோட்டலுக்கே அவரது மெய்ப் பாதுகாவலர்கள் மேற்படி பெண்களை அழைத்து வந்துள்ளனர். சித்திரை 19, 2012குறுகிய காலத்தில் துரித மீள்குடியேற்றம் அரசாங்கத்துக்கு இந்தியக் குழு பாராட்டு
இலங்கை வந்துள்ள இந்திய எதிர்க் கட்சித் தலைவி ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் நேற்று வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு விஜயம் செய்தனர். இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் – 412 ரக பிரபுக்கள் பயணிக்கும் ஹெலிக்கொப்டரில் இந்திய பிரதிநிதிகள் 12 பேரும் வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தை நேற்றுக் காலை 9.45 மணியளவில் சென்றடைந்தனர். மீள் குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், வவுனியா அரச அதிபர் பீ. எம். எஸ். சார்ள்ஸ் ஆகியோர் பிரதிநிதிகளை வரவேற்றனர். (மேலும்....) சித்திரை 19, 2012செச்னியாவில் டைனோசர் முட்டைப் படிமம்ரஷ்யாவின் செச்னியா பகுதியில் டைனோசர் முட்டை படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். வடக்கு கவ்கெசஸ் மலைப் பகுதியில் இந்த முட்டைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. செச்னிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகைப்படங்களையும் அந்த விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். இந்த முட்டைகள் சுமார் 102 சென்டி மீற்றர் நீளம் கொண்டவையாக அமைந்துள்ளன. உலகில் இந்த அளவு பெரிய முட்டைகள் இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என அந்த விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான 40 மேற்பட்ட முட்டை படிமங்கள் மேற்படி மலைப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற முட்டைகள் மேலும் இந்த பகுதியில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த முட்டைகள் 60 மில்லியன் ஆண்டு பழைமை வாய்ந்தது என்று நம்பப்படுகிறது. எனினும் செச்னியப் பல்கலைக் கழக விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பை மொஸ்கோ விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு உண்மையல்ல. டைனோசர் இவ்வளவு பெரிய முட்டையை இடாது. சித்திரை 19, 2012
கொழும்பு - மாத்தறை அதிவேக ரயில் பாதை இன்று திறப்பு தனி ஈழம் அமைக்க பொதுஜன வாக்கெடுப்பு - கருணாநிதி இலங்கையில் தனி ஈழம் அமைப்பது குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தும் யோசனைக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் தனி ஈழம் அமைவது தொடர்பான பொதுஜன வாக்கெடுப்பு நடத்துவதை தான் ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இம்முறையின் கீழ் சில நாடுகள் அங்கீகாரம் பெற்றுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள அவர் ஐ.நா. சபையின் தலையீட்டின் கீழ் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இவ்விஷயத்தில் இந்திய அரசு முக்கிய பங்காற்ற முடியும் என்று தெரிவித்துள்ள அவர் ஐ.நா. இதை செயல்படுத்துவதற்கு இந்தியா ஆதரவும் அழுத்தமும் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். சித்திரை 18, 2012 இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய குழுவுடன் த.வி.கூட்டணி,(பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எவ்,) புளொட் தலைவர்கள் சந்திப்பு
சித்திரை 18, 2012 தென் சூடானை எதிரி நாடாக பிரகடனப்படுத்தியது சூடான்தென் சூடானை எதிரி நாடாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் சூடான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'தென் சூடான் அரசு எதிரி நாடாகும். அதனது அரச அமைப்புகள் அனைத்தும் எமக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது' என அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. தென் சூடான் தமது எண்ணெய் தளமான ஹெக்லிக்கை கடந்த வாரம் கைப்பற்றியதற்கு எதிராகவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சூடான் தொலைத் தொடர்பு அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் தமது எல்லையிலுள்ள எண்ணெய் தளத்தின் மீது சூடான் தாக்குதலைத் தொடர்வதாக தென் சூடான் குற்றம் சாட்டியுள்ளது. சூடான், தென் சூடானுக்கு இடையில் தசாப்த காலமாக நீடித்த சிவில் யுத்தம் கடந்த 2005 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்த கடந்த ஆண்டு ஜூலையில் தென் சூடான் தனி நாடாக சுதந்திரம் பெற்றது. எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் எண்ணெய் விவகாரம் மற்றும் எல்லைப் பிரச்சினைகள் நீடித்து வருகிறது. சித்திரை 18, 2012 இந்திய பாராளுமன்ற குழுவினர் நேற்று கொழும்பில் பல தரப்பினருடனும் சந்திப்பு
உண்மை நிலையை தமிழகத்துக்கு தெளிவுபடுத்த வேண்டும் இனங்களிடையே சந்தேகங்கள் களையப்படுவது அவசியம் - இந்தியக்குழு வலியுறுத்தல் சித்திரை 18, 2012 ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்) அறிக்கை “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம்” என்னும் சொற்களை நாங்கள் சொல்லும் பொழுது, குடியிருப்பு நிலப்பரப்புகளை மட்டுமே அவை குறிப்பிடவில்லை. வேளாண்மை (விவசாய) நிலங்கள் - அடர்ந்த காடுகள் - வெறுமையாக உள்ள வறண்ட நிலப்பரப்புபள் - கடல்கரைப் பகுதிகள் - தமிழ் மீனவர்களுக்கு வாழ்க்கைத் தேவைகளை வழங்கும் பரந்து விரிந்த வடக்குக் கிழக்கு கடல் பிரதேசங்கள் - முதலானவை அந்த வார்த்தைக்குள் அடக்கிக் காட்டுவன ஆகும். நாடு விடுதலை பெற்ற 1948ஆம் ஆண்டு முதல்கொண்டே, வடக்கு மற்றும் கிழக்குத் தமிழ் மாகாணங்களில் மேற்சொன்ன எல்லாப் பகுதிகளிலுமே தங்களின் இராணுவத்தின் மூலம் சிங்களவர் குடியேற்றங்களை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்புச் செயலை சிறிலங்கா அரசு தொடங்கி விட்டது. அதன் விளைவாக, “ஈழம்” என்னும் தங்களுக்கே சொந்தமான தாயக நிலத்திடம் தங்களுக்கு உள்ள பிறப்பு உரிமையையே இழக்கும்படியான கட்டாய நிலைமைக்குத் தமிழர்கள் தள்ளப்பட்டனர். கி.பி. 2009-ஆம் ஆண்டுவரை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மறைவான இரகசிய முறையில் ஏற்படுத்தப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்கள், இன்றைக்கு வெளிப்படையாகவே எந்த வகைத் தயக்கமும் இல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதிலுமே அமைக்கப்பட்டு வருகின்றன. அதற்குக் காரணம், அந்தத் தமிழ்ப் பகுதிகள் அனைத்தும் சிங்களவர்களுக்கு மட்டுமே உரிமை உடையவை என்பதை உறுதிப் படுத்திவிட வேண்டும் என்கிற உள்நோக்கமே ஆகும். (மேலும்....) சித்திரை 18, 2012 ஒபாமா தலைக்கு பரிசு சர்ச்சையில் பிரிட்டன் எம்.பி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தலைக்கு 10 மில்லியன் டொலர் பரிசு தொகை அறிவித்து பிரிட்டன் எம். பி. நமர் அஹமட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அவர் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நமர் அகமது பிரிட்டன் பாராளுமன்ற பிரபுக்கள் (மேல்) சபை உறுப்பினர் ஆவார். பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த வாரம் பாகிஸ்தான் சென்றிருந்த போது ஹரிபூரில் நடந்த நிகழ்ச்சியில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பாகிஸ்தான் வரும் பட்சத்தில் அவரது தலைக்கு 10 மில்லியன் டொலர் பரிசுத் தொகை அறிவிக்க வேண்டும் என கூறினார். சித்திரை 18, 2012 தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் (2)(T .சௌந்தர்)தமிழ்த்திரைப்பட இசையுலகில் இசையமைப்பாளர் யாரென அறியப்படாத காலத்தில் பாடல்களை அமைத்தவர் இசை அறிஞர் பாபநாசம் சிவன்.கர்னாடக கீர்த்தனைகள் அப்படியே ஒலித்த காலத்தில் அந்த முறையிலேயே தனது பாடலகளையும் அமைத்துக் கொடுத்தவர்சிவன். பின்னர் இசையமைப்பாளர்களுடன் இணைந்த போதும் பாடல்களுக்கான் சுரங்களை எழுதிக் கொடுத்துவிடுவார். பாடலுக்கு வாத்தியம் சேர்ப்பது இசையமைப்பாளர்களின் வேலையாக இருந்தது.தமிழ் செவ்வியல் இசைப் [ கர்னாடக இசைப்] பாடலான ” எப்ப வருவாரோ ..” என்ற பாடல் மெட்டில் ” சர்ப்ப கோண போதன் …” என்ற பாடலை தியாகராஜபாகவதர் பாடினார்.பாபநாசம் சிவனின் inspiration தமிழ் செவ்வியல் இசையே . (மேலும்....) சித்திரை 18, 2012 முன்னாள் கெரில்லா போராளி தீமோர் ஜனாதிபதியாக தேர்வுகிழக்குத் தீமோரின் ஜனாதிபதியாக முன்னாள் கெரில்லா போராளியான தவுர் மடன் ருவக் தேர்வு செய்யப்பட் டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் ருவக் எதிர்த்து போட்டியிட்ட பிரான்சிஸ்கோ குடரஸ்ஸை விடவும் அதிக பெரும்பான்மை வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தேர்வு பெற்றுள்ளார். இதில் ருவக் 61.23 வீத வாக்குகளை வென்றதோடு பிரான்சிஸ்கோ 31.77 வீத வாக்குகளை பெற்றார். 55 வயதான ருவக் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை பிரதானியாக இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த பதவியை ராஜினாமா செய்தார். இவர் இந்தோனேஷியாவுடனான சுதந்திரப் போரில் கெரில்லா போராளியாக இருந்தவராவார். இதன்படி நோபல் விருது வென்ற ஜொஸ் ரொமஸ் ஹோர்டாவுக்கு பதில் திமோர் ஜனாதிபதியாக ருவக் பதவி ஏற்கவுள்ளார். ஹொர்டா தீமோர் தேர்தலின் முதல் கட்ட வாக்கெடுப்பிலேயே மூன்றாவது இடத்தை பெற்று தோல்வி அடைந்தார். சித்திரை 18, 2012 அகதிகள் அனைவருக்கும் பசி ஒன்றென்பதை புரிந்து பணியாற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன்வடபகுதி முஸ்லிம்கள் குறித்து சிந்திப்போமேயானால் அவர்கள் போரின் கொடூரத்தினால் இடம் பெயர்ந்த சராசரி அகதிகள் அல்லர். அவர்கள் இனரீதியில் ஓர் இன சுத்திகரிப்புக்கான சதியில் சிக்கி, ஓரிரு மணித்தியால அவகாசத்தில் வெறுங்கையோடு விரட்டப்பட்ட நிர்ப்பந்தத்தின் பேரில் வெளியேற்றப் பட்ட பாவாத்மாக்கள், 'ஓரினத்தின் சிலர்' என்ற வரைவிலக்கணத்தைத் தாண்டி ஒட்டுமொத்த முழு சமூகம் என்ற அடிப்படை யில் வடபகுதி முஸ்லிம்கள் பாரம்பரியப் பண்பியலோடு பரம்பரையாக வாழ்ந்து வந்த சொந்த மண்ணை துறந்து வந்த அகதிகளாவர். இப்படி 1990 இல் விரப்பட்டு, 21 ஆண்டுகள், நிறைந்துவிட்டன. வட பகுதி முஸ்லிம்களின் அகதி வாழ்வுக்கு வயது 21 ஆகும். இவ்வாறு பலவந்தமாக விரப்பட்டு அகதிகளாக வடபகுதி முஸ்லிம்கள், இன்றும் அதாவது 22 ஆவது வருடங்களாக புத்தளம் உட்பட, அநுராதபுரம், குருநாகல் ஏனைய பிரதேசங்களில் பல்வேறு சொல் லொணா துயரங்களுடன் அவதி வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். (மேலும்....) சித்திரை 18, 2012 உலகில் உயரமான கட்டடம் சவூதியில்உலகிலேயே மிக உயரமான கட்டடம் சவூதி ஆரேபியாவின் ஜித்தா நகரில் கட்டப்பட உள்ளது. லகின் தற்போதைய மிக உயர கட்டடமான புரஜ் கலிபா, டுபாயில் உள்ளது. இந்த கட்டடத்தின் உயரம், 830 மீற்றர், இதற்கு போட்டியாக சவூதி அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் ஆயிரம் மிற்றர் உயரத்தில் கட்டடம் கட்டப்பட உள்ளது. இதற்கான, அனுமதியை கடந்த பெப்ரவரி மாதம் ஜித்தா மாநகரசபை வழங்கியுள்ளது. பல நிறுவனங்களின் முதலீட்டில் இந்த கட்டடம் கட்டப்பட உள்ளது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள், 63 மாதங்களில் நிறைவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரை 18, 2012 உலக வங்கி தலைவராக ஜிம் யோங் கிம் தேர்வுஉலக வங்கியின் தலைவராக அமெரிக்கா வாழ் தென்கொரியரான ஜிம் யோங் கிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகவங்கியின் தலைவராக உள்ள ரூபர்ட் ஜிலோயிக் பதவி காலம் வரும் ஜூலை மாதம் நிறைவு பெறுகிறது. புதிய தலைவரை உலகவங்கி தலைமை நிர்வாகம் அறிவித்தது., கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்கவாழ் தென்கொரியாவைச் சேர்ந்த ஜிம்-யோங்-கிம்மை பரிந்துரை செய்தார். அதன்படி உலகவங்கி இவரை புதிய தலைவராக நேற்று முன்தினம் அறிவித்தது. தென்கொரியாவின் சியோல் நகரைச் சேர்ந்த ஜிம்-யோங்-கிம் (52) இதற்கு முன்பு ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பின் எச்.ஐ.வி. எய்ட்ஸ் ஒழிப்புத்துறையின் இயக்குனராக இருந்தார். தற்போது உலகவங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜப்பான், நைஜீரீயாவைச் சேர்ந்தவர்களும் உலகவங்கி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர். இறுதியில் தென்கொரியாவின் ஜிம்யோங்கிம் தேர்வு செய்யப்பட்டார். வரும் ஜுலை மாதம் பதவியேற்க உள்ளார். சித்திரை 17, 2012 தமிழ் சினிமாஇசையில் அகத்தூண்டுதல் (1) (T.சௌந்தர்) அன்றாடம் நம்மைச் சுற்றி நிகழும் சம்பவங்கள் நம்மைப் பாதிக்கின்றன.நாம் பார்க்கும் ,கேட்கும் , படிக்கும் விசயங்களிலிருந்து கிடைக்கும் அறிவு நம்மைச் சிந்திக்கவும் தூண்டுகின்றன.இந்த ” தூண்டுதல் ” அல்லது “உந்துதல்” அல்லது இந்த நிகழ்வுகள் ஏற்ப்படுத்தும் ” பாதிப்பு ” நம்மைச் செயலாற்றவும் வைக்கின்றன.நாம் அனுபவிக்கும் பல விசயங்களில் சில நம்மை அறியாமலேயே நமது மனங்களில் பதிந்தும் விடுகின்றன.இவை பொதுவாக எல்லா மனிதர்களிளிடமும் வெவ்வேறுவிதமாக நிகழ்கின்றன. இந்த தூண்டுதல் அல்லது உந்துதல் என்பதே எல்லாக் கலைகளுக்கும் அடிப்படையானதாகவும் உள்ளது.ஒரு சம்பவத்தால் தூண்டப்படும் , உந்தப்படும் அல்லது பாதிப்புக்குலாகும் கலைஞன் தன்னுடைய ஆற்றலுக்குத் தக்கவாறு தனது உணர்வுகளை வெளிப்படுத்துகிறான்.கவிஞன் என்றால் கவிதையாகவும் , ஓவியன் என்றால் ஓவியமாகவும் ,சிற்பி என்றால் சிற்பமாகவும் ,இசைக்கலைஞன் என்றால் பாட்டாகவும் ,இசையாகவும் வெளிப்படுத்துவான்.தூண்டுதல் ,உந்துதல் , பாதிப்பு என்பதை ஆங்கிலத்தில் Inspiration என அழைப்பர்.ஆயினும் தமிழில் அகத்தூண்டுதல் ,அக எழுச்சி , உள்ளுயிர்ப்பு , உளத்தூண்டுதல், திடீர் கிளர்ச்சி , உத்வேகம் , துணையூக்கம் போன்ற சொற்கள் அதன் அர்த்தத்தை தெளிவுற விளக்க உதவுகின்றன. (மேலும்....) சித்திரை 17, 2012 இலங்கையில் எழுபதுகளில் இருந்து அரசு அதிகார பயங்கரவாதம் கட்டி எழுப்பட்டுள்ளது - EPRLF-P அணியின் செயலாளர் தி சிறிதரன்
20 வருடங்களாக தெற்கில் மக்கள் விடுதலை முன்னணியும் 20 வருடங்களாக வடக்கில் விடுதலை புலிகளும் பயங்கரவாதம் நடவடிக்கை மேற்கொண்டது போல அரசு அதிகார பயங்கரவாதம் 40 வருடங்களாக கட்டி எழுப்பட்டுள்ளது என தெரிவித்தார். அரசியல் பின் பலத்தில் வந்த நாங்கள் அரசும் தமிழரும் என்ற வகையிலே எமது நடவடிக்கைகள் அமைந்திருந்தன இலங்கையில் அறுபது வருடங்களுக்கு மேலாக புரையோடியுள்ள இனப்பிரச்சனை தொடர்பாக இனிமேலும் இழுத்தடிக்க முடியாத என்ற நிலையில்தான் இன்று இலங்கையிருக்கின்றது. அரசு பயங்கரவாதம் ஊடாக இலங்கையில் பல இனக்கலவரங்கள் நடைபெற்றன அது மட்டும் இல்லாது பல சித்திரவதை கூடங்கள் அரசு பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்டன அதன் தாக்கம் தான் யாழ்ப்பாண நூல்நிலையம் தீக்கிரையாக்கபட்டதும் பல மக்கள் படுகொலைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்களையும் நாம் மறந்து விடகூடாது இச்சம்பவங்களில் ஈடுபட்ட அரசு பயங்கரவாத அதிகாரிகள் இன்னும் வாழந்து வருகிறார்கள். (மேலும்....) சித்திரை 17, 2012 கெய்ன் லங்காவின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா " கிருஷ்ணா – கோதாவரி" படுகையில் இரண்டாவது கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியுள்ளது ![]()
இலங்கை மன்னார் கடற்பரப்பில் வெற்றிகரமாக எண்ணெய் அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்ட
கெய்ன் லங்கா நிறுவனத்தின் தாய் நிறுவனமான கெய்ன் இந்தியா நிறுவனம் KG-ONN-2003/1
எனப்படும் கிருஷ்ணா கோதாவரி படுகையில் தமது இரண்டாவது கண்டுபிடிப்பை
உறுதிப்படுத்தியுள்ளது. கெய்ன் இந்தியா நிறுவனத்தின் இணை நிறுவனமான கெய்ன் எனர்ஜி
இந்தியா நிறுவனம் (CEIL) இந்தியாவின் கிழக்குக் கரையில் கிருஷ்ணா கோதாவரி படுகையின்
KG-ONN-2003/1 பகுதியிலுள்ள Nagayalanka-SE-1 கிணற்றிலிருந்து எரிபொருளை
கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளது. இப்பகுதியில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளில்
ஈடுபட்ட கெய்ன் எனர்ஜி இந்திய நிறுவனம் 24 வீதத்தையும் கெய்ன் இந்திய நிறுவனம் 25
வீதத்தையும் இவர்களுடன் இணைந்து ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்ட எண்ணெய் மற்றும்
இயற்கை எரிவாயுக் கழகமான ஒ.என்.ஜி.சி 51 வீதத்தையும் தங்களிடையே பகிர்ந்து கொண்டன.
(மேலும்....) கள்ளத்தோணி 1948களுக்குப் பின் 1960 வரை தென்கடலிலும் வடகடலிலும் எதிர் எதிர் கரைகளுக்கிடையே பல்லாயிரம் ஆண்டுப் பழமை வாய்ந்த படகுப் பயணிகளைப் புதிதாக அழைக்கப் புழங்கிய சொற்றொடர். கொழும்பு மேலாட்சியாளர் மட்டுமல்ல, தமிழகக் கரைகளிலும் ஈழத்தின் வட, வடமேற்குக் கரைகளிலும் வாழ்ந்தோர் வழங்கிய சொற்றொடர். அந்தச் சொல்லுக்கும் கொழும்பு கொம்பனித் தெரு முகாமுக்கும் நெருங்கிய தொடர்பு. கள்ளத் தோணியில் வந்து இலங்ககைக் கடற்படையிடம் (தலைவர், தமிழரான அட்மிரல் கதிரகாமர்) கைதாவோர் சேருமிடம். 1960க்குப் பின்னர் ஆள்கள் பயணிப்பது குறைந்து பொருள்கள் கடத்துவோராக அப்படகுகளைக் கருதினர். தமிழகக் கரையோரத்தில் கைதாகாது ஈழக் கரையோரங்களில் கைதானோருள் பெரும்பாலானவர் வல்வெட்டித்துறைக் கடலாடிகள். 1980க்குப் பின்னர் இப்படகுகள் போரளிகளுக்கும் அப்போர்வையில் கடத்தல்காரருக்கும் உதவியதாக இலங்கை அரசு கருதிப் படகுகளைச் சுட்டது. 1983க்குப்பின், தமிழகக் கரையோரங்களை வந்தடைந்த புகலிடம் தேடுவோரிடம் இந்தியக் கடலோரக் காவற்படை கைப்பற்றிய 1000த்துக்கும் கூடுதலான படகுகளில் 500க்கு மேல் இன்னமும் ஈழம் திரும்பாமலே உடைந்தும் களவுபோனதுமான கள்ளத்தோணிகள். (மேலும்....)சித்திரை 17, 2012 கொழும்பில் சி.சி.ரி.வி கமராவுடன் நடமாடும் வான் சி.சி.ரி.வி. கமரா பொருத்தப் பட்ட நடமாடும சேவை பொலிஸ் மாஅதிபர் என். கே. இளங்ககோனினால் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று மாலை 4.00 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. சி.சி.ரி.வி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொழும்பு நகரத்தை பாதுகாத்தல் மற்றும் குற்றச் செயல்களற்ற நகராக கொழும்பை மாற்றும் நோக்குடனே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய 110 சி.சி.ரி.வி. கமராக்கள் கொழும்பின் முக்கிய நகரங்களில் பொருத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சித்திரை 17, 2012பட்ஜட் பற்றாக்குறையை 5.2 % குறைப்பதே அரசின் இலக்குசுதந்திரத்தின் பின்னர், இலங்கை பொருளாதாரத்தின் சாதாரண வரவு செலவு பற்றாக்குறை, தேசிய உற்பத்தியில் 08 வீதமாக அதிகரித்திருந்தது. 2011 ஆம் ஆண்டில் இது 6.9 வீதம் வரை வீழ்ச்சி கண்டிருந்தது. 1986 முதல் 2010 ஆம் ஆண்டுவரை முழு வரவு செலவு பற்றாக்குறை 8.3 வீதமாக இருந்தது. 2010 ஆம் ஆண்டில் இது 08 வீதமாக அமைந்தது. 2011 ஆம் ஆண்டாகும் போது இது 6.9 வீதமாக வீழ்ச்சி கண்டமை இலங்கை பெற்ற பொருளாதார வெற்றியாகும். இதன் பிரகாரம் இந்த சாமான்ய வரவு செலவு பற்றாக்குறையை 5.2 வீதம்வரை 2014 ஆம் ஆண்டில் குறைத்துக் கொள்வதே அரசின் இலக்காகும். உற்பத்தி பிரதேசத்தைப் பார்க்கும் போது, பொருளாதார வளர்ச்சிக்காக தொழில்நுட்ப, சேவைப் பிரிவுகளிலிருந்து விசேட பங்களிப்பு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டில் தொழில்நுட்ப, சேவாப் பிரிவுகளின் பங்களிப்பு முறையே 10.3 வீதமாகவும் 8.6 வீதமாகவும் அதிகரித்துள்ளது. 2011 ஆம் ஆண்டில் தேசிய உற்பத்தி 6542663 மில்லியன் ரூபாவாகும். பாவனைச் செலவீனம் 5536095 மில்லியன் ரூபாவாகும். முதலீடு 1958833 மில்லியன் ரூபாவாகும். இதனால் பெருந்தெருக்கள், துறைமுகம், விமான நிலையம், பாடசாலை பிரதேச அபிவிருத்தி திட்டங்களுக்கும் நீர்ப்பாசன திட்டங்களுமாகப் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் வரவு செலவு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள அரசினால் இயலுமாகி உள்ளது. சித்திரை 17, 2012புதிதாக கட்டப்பட்ட மலசலகூடத்தை தனியாக திறந்து வைத்த எம். எல். ஏ.தொகுதி நிதியில் கட்டப்பட்டு, திறக்கப்படாமல் இருந்த மலசலகூடத்தை தி.மு. க. எம். எல். ஏ. டி.பி. எம். மைதீன்கான் தன்னந்தனியாக திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தொகுதி எம். எல். ஏ. டி. பி. எம். மைதீன்கான், 2001ல் இதே தொகுதியில் எம். எல். ஏ. வாகவும், 2006ல் தி. மு. க அமைச்சரவையில் விளையாட்டு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராகவும் இருந்தார். மூன்றாம் முறையாக தற்போது எம். எல். ஏ. வாக உள்ளார். இவர் கடந்த ஐந்தாண்டுகளில் தமது தொகுதி நிதியில் இருந்து நெல்லை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மகப்பேறு வளாகத்தில் மலசலகூடம் மற்றும் குடிநீர் தொட்டிக்காக 15 இலட்சம் ரூபாவை ஒதுக்கியிருந்தார். கடந்த ஆட்சியின்போது கட்டப்பட்ட பணிகள் என்றாலும் தற்போது அவற்றை திறக்காமல் பொதுப் பணித்துறையினர் இழுத்தடித்தனர். இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரிடம் எம்.எல். ஏ. கேட்டபோது, எங்களிடம் அந்த கட்டட சாவி ஒப்படைக்கப்படவில்லை என கூறினார்களாம். எனவே நேற்று முன்தினம் தன்னந்தனியாக போய் மலசலகூடம் மற்றும் குடிநீர் தொட்டியை எம். எல். ஏ. மைதீன்கான் திறந்து வைத்தார். இதில் பொதுப் பணித்துறை அதிகாரிகளோ, ஆஸ்பத்திரி டீன் டாக்டர்கள் மட்டுமல்லாது அரசு சார்பில் ஊழியர்கள் யாரும் பங்கேற்கவில்லை. எனவே தன்னந்தனியாக மலசலகூடங்களை திறந்து வைத்து பார்வையிட்டார் மைதீன்கான். அவர் கூறுகையில், ‘தி. மு. க. எம். எல். ஏ. என்பதால் அரசு அதிகாரிகள் என்னை பார்ப்பதையே பாவம் என்று நினைக்கிறார்கள். நான் ஆஸ்பத்திரிக்கு சென்றதை பார்த்ததும் ஒரு அதிகாரி வேறு திசையில் ஓட்டம்பிடித்தார். எனவே யாரையும் எதிர்பார்க்காமல் நானே தன்னந்தனியாக திறந்து வைத்துவிட்டேன் என்றார். சித்திரை 17, 2012சர்ச்சைக்குரிய அக்சாய்சின் மலைப் பகுதியில் பிரமாண்ட வானியல் மையம் கட்டும் சீனாஜம்மு காஷ்மீரின் வட மேற்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய அக்சாய்சின் பகுதியில் பிரமாண்ட வானியல் கண்காணிப்பு நிலையம் அமைக்கும் முயற்சியில் சீனா இறங்கியுள்ளது. சீனாவுடன் இணைந்து இந்நிலையத்தை அமைக்க முன்வருமாறு தாய்வான், ஜப்பான், தென்கொரிய ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. (மேலும்....) சித்திரை 17, 2012உலகில் அரசாங்க அலுவல்களுக்கு அங்கீகாரம் பெறாத மொழி ‘எஸ்பெரண்டோ'புதிதாக உருவாக்கப்பட்ட பத்து துணை மொழிகளில் இதுவும் ஒன்று செம்மொழியாக ஒரு மொழியை தெரிவு செய்ய அதன் இலக்கிய படைப்புக்கள் வளம் மிகுந்ததாகவும் பழைமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும் என்பது மொழி வல்லுநர்கள் கோட்பாடு. உலகில் இன்று பேசப்படும் 6,900 மொழிகளில் 8 மொழிகளே உலகின் பண்டைய கால செம்மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தமிழும் ஒன்று என்பது பெருமைக்குரியது தான். இக் கட்டுரை தமிழ் மொழியில் அதிகம் அலசப்பட்டிராத ஓர் புதிய மொழியைப் பற்றி விவரிக்கிறது. (மேலும்....) சித்திரை 17, 2012சீனா உரிமைகோரும் பகுதியில் பிலிப்பைன் - அமெரிக்காவின் இராணுவ பயிற்சி ஆரம்பம் சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில் அமெரிக்க - பிலிப்பைன்ஸ¤க்கு இடையிலான இராணுவ பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா தனது கண்காணிப்பு கப்பலை நிலைநிறுத்தியுள்ள நிலையி லேயே இந்த இராணுவ பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. பலிகதான் என அழைக்கப்படும் இந்த இராணுவ பயிற்சி எதிர்வரும் 27ஆம் திகதிவரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவப் பயிற்சி சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடும் தென் சீன கடற்பகுதியான பலவானில் இடம்பெற்றுள்ளது. இந்த இராணுவ பயிற்சியில் 700க்கு மேற்பட்ட இராணுவத்தினர் பங்கேற்கின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸை ஒட்டிய தென்சீன கடற்பகுதியில் சீன கண்காணிப்பு கப்பல்கள் தொடர்ந்தும் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. இந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் யுத்த கப்பலும் நங்கூரமிட்டுள்ளது. கடந்த வாரம் மேற்படி பகுதியில் பிலிப்பைன்ஸ் கடற்படை சீன மீன்பிடி கப்பல்களை கைது செய்ய முற்பட்ட போது சீன கண்காணிப்பு படகுகள் அதனை தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து தொடர்ந்தும் பதற்ற நிலை நீடிக்கிறது. இது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் தீர்வு எட்டப்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக பிலிப்பைன்ஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதி முழுவதையும் சீனா உரிமை கொண்டாடிவருகிறது. எனினும் அந்த பகுதியிலுள்ள பிலிப்பைன்ஸ், புருனாய், மலேசியா, வியட்நாம் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளும் இந்த கடற்பகுதிக்கு சொந்தம் கொண்டாடுகிறது. சித்திரை 17, 2012 இலங்கைக்கு வரும் சீனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கை 2009ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2009ஆம் ஆண்டில் சுமார் 8000 சீனர்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் 16,000 சீனர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர். அண்மைக் காலத்தில் வர்த்தக மற்றும் ஏனைய உறவுகளை இலங்கையும் சீனாவும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையை நோக்கி சீனர்கள் அதிகளவில் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமானப் போக்குவரத்து அதிகரிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ___ சித்திரை 17, 2012 கியூபா, பொக்லாந்து தீவு சர்ச்சை அமெரிக்க நாடுகளின் மாநாடு இணக்கப்பாடின்றி முடிவுகியூபா மற்றும் பொக்லாந்த தீவு தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து கொலம்பியாவில் நடைபெற்ற அமெரிக்க நாடுகளின் மாநாடு எந்த இணக்கப்பாடும் எட்டப்பாடாமல் முடிவுக்குக் வந்தது. அமெரிக்க பிராந்தியத்தின் 30 நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில் கியூபாவுக்கு அழைப்பு விடுப்பது குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது. 50 ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் அமெரிக்க நாடுகளின் மாநாட்டில் கியூபாவுக்கு தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பனாமாவில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடுகளின் மாநாட்டுக்கு கியூபாவுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என லத்தீன் அமெரிக்க நாடுகள் இந்த மாநாட்டில் கோரிக்கை விடுத்தன. எனினும் இதற்கு அமெரிக்கா, மற்றும் கனடா எதிர்ப்புத் தெரிவித்தன. (மேலும்....) சித்திரை 17, 2012 வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் 16 வயது யுவதியுடன் தங்கியிருந்த 67 வயது நபர், ஹோட்டல் உரிமையாளர் விளக்கமறியலில்! 16 வயதான யுவதியொருவருடன் ஹோட்டலில் தங்கியிருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான 67 வயதான ஆணொருவரையும் ஹோட்டலில் தங்குவதற்கு அனுமதியளித்த குற்றச்சாட்டில் கைதான ஹோட்டல் உரிமையாளரையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிபதி அலெக்ஸ்ராஜா நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார். அத்துடன், குறித்த யுவதியை வைத்தியப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறும் நீதிபதி பணித்தார். (மேலும்....)சித்திரை 16, 2012
பெரும்பான்மையான சிங்கள
மக்கள், தமிழர்களுக்கு
அதிகாரம்
பகிரப்படுவதனை
எதிர்க்கவில்லை
– சந்திரிக்கா!
பெரும்பான்மையான சிங்கள மக்கள், தமிழர்களுக்கு அதிகாரம் பகிரப்படுவதனை ஒருபோதும் எதிர்க்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலர் பெரும்பான்மையான சிங்களவர்கள், தமிழர்களுக்கு அதிகாரம் பகிரக் கூடாது என்ற நிலைப்பாட்கை; கொண்டிருப்பதாக கூறி வரும் கருத்துக்கள் அபத்தமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலம் வரையில் பெரும்பான்மையான சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தெரியாமலேயே இருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்கள் எதிர்நோக்கி பிரச்சினைகளை அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக சிங்கள மக்களிடமிருந்து மூடிமறைத்து வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அரசியல் லாபங்களை ஈட்டும் நோக்கில் அரசியல்வாதிகள் இனப் பிரச்சினையை தூண்டிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். (மேலும்.....) சித்திரை 16, 2012 இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் இருந்து தி.மு.க. விலகல் இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் விலகியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். லோக்சபா பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான, 15 எம்.பி.,க்கள் அடங்கிய குழு, நாளை ஐந்து நாள் பயணமாக இலங்கை செல்ல இருந்தது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை செல்ல உள்ள எம்.பி.க்கள் குழுவில் தி.மு.க.வும் இடம் பெறாது என்று கூறியுள்ளார். முன்னதாக அ.தி.மு.க. எம்.பி.கள் இலங்கை செல்லமாட்டார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்திரை 16, 2012 நிரந்தர தீர்வுக்காக தமிழ் கட்சிகள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும் சுயநிர்ணய உரிமை, தேசியம் என்று பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை - வீ. ஆனந்தசங்கரி தயக்கம் காண்பிக்காமல் பேச்சுவார்த்தைகளில் தமிழ்க் கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் அதுவே தீர்வுக்கு அடித்தளமாக அமையும் என்கிறார் ஆனந்தசங்கரி. தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஏனைய தமிழ் அரசியல் அமைப்புகளும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை காண்பதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவது அவசியம் என்றும் அதன் மூலமே 30 ஆண்டுகாலமாக நீடித்துக் கொண்டிருக்கும் தமிழர் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண முடியும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. ஆனந்த சங்கரி தினகரனுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியொன்றில் வலியுறுத்தினார். இது குறித்து தினகரனுக்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இனப்பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்காக அரசு முன்வைக்கும் யோசனைகள் மீது பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் தயக்கம் காண்பித்து வருவதனால் இப்பிரச்சினையை சுமுகமாக தீர்த்து வைக்க முடியாதிருக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகள் தமிழ் மக்களின் தேவைகளையும் அபிலாஷைகளை யும் தீர்த்து வைக்ககூடியதாக இருக்கவில்லை. (மேலும்.....) சித்திரை 16, 2012 காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது தாக்குதல்! காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர். எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் உள்ள இராணுவ வீரர் ஒருவர் (சாதாரண இராணுவ சிப்பாய்) விடுமுறையில் ஊருக்கு வரும்போது அங்குள்ள தமிழ் குடும்பங்களை சந்தித்து தன்னை ´சேர்´ அல்லது ´மாத்தயா´ என்றுதான் அழைக்க வேண்டும் என அச்சுறுத்தி வந்துள்ளார். எனினும் இலங்கை நாட்டு பிரஜைகள் என்பதால் அந்த இராணுவ சிப்பாய்க்கு அடிபணிய திலிதுற தோட்ட தமிழ் குடும்பங்கள் மறுத்து வந்துள்ளனர். இதனால் இந்த மக்கள் மீது இராணுவ சிப்பாய்க்கு கடும் கோபம் இருந்து வந்துள்ளது. கடந்த 11ம் திகதி புதுவருட விடுமுறையில் வந்துள்ள இராணுவ சிப்பாய் (றுவான் குமார என்பது பெயர் என தெரியவருகிறது) திலிதுற தோட்டத்திற்குச் சென்று இளைஞர் ஒருவரிடம் தன்னை ´சேர்´ என அழைக்கும்படி வற்புறுத்தியுள்ளார்.(மேலும்.....)சித்திரை 16, 2012 இந்திய பாராளுமன்ற குழு இன்று இலங்கை வருகை இந்திய பாராளுமன்றக் குழு இன்று இலங்கை வருகின்றது. ஆறு நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இந்தக் குழு வடக்கு, கிழக்கு, மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளது. இலங்கை தங்கியிருக்கும் காலத்தில் இந்தக் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், பிரதமர், டி. எம். ஜயரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் உட்பட முக்கியஸ்தர்களையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதி களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்யும் இந்திய பாராளு மன்றக் குழு சபாநாயகர் உட்பட இலங்கை பாராளுமன்ற உறுப்பி னர்கள் பலரையும் சந்திக்கவுள்ளன. (மேலும்.....) சித்திரை 16, 2012 பாசிச பாதையில் பீடு நடை போடும் மம்தா
ஜாதவ்பூர் பல்கலைகழகத்தின் வேதியல் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா, மம்தாவின் அரசியலை விமர்சனம் செய்து கார்டூன் போட்டு அதை இமெயிலில் 65 பேருக்கு அனுப்பினார் என்று குற்றம் சாட்டி அவரை கைது செய்துள்ளது மேற்கு வங்க அரசு. அத்தோடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குண்டர்களை ஏவி விட்டு பேராசிரியர் அம்பிகேஷ் மகாபத்ரா மீது தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. மம்தாவின் இந்த கருத்துரிமைக்கு எதிரான பாசிச மனோபாவம் பலராலும் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு தன் மீது யாரும் சிறு விமர்சனத்தையும் கூட வைக்ககூடாது என்று கொக்கரிக்கும் மம்தா மேற்கு வங்க அரசு இயந்திரம் முழுவதையும் பாசிசமயமாக்கி வருகிறார். . முதலாளிகளின் கைப்பாவையாக பாசிச பாதையில் நடைபயிலும் மம்தா பானர்ஜியின் சர்வாதிகார போக்குகளை முறியடிக்கவும் கருத்துரிமை காக்கவும் ஜனநாயக எண்ணம் கொண்டோர் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும். (மேலும்.....) சித்திரை 16, 2012 மரணத்தின் வாசல்வரை சென்று வந்த திமுத்துவுடனான உரையாடல் ஒலி வடிவில்
பாசிச ராஜபக்சவின் அரசபடைகளால் கடத்தப்பட்டு கொலைசெய்வதற்காகத் தடுத்து வைக்கப்பட்டு மரணத்தின் வாசல்வரை சென்றுவந்த திமுத்து ஆட்டிகலவுடனான உரையாடல் கீழே தரப்படுகிறது. முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் அணியின் பொறுப்பாளரான திமுத்து உரையாடலின் போது தன்னைச் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.தொலைபேசி தெளிவின்மை தடங்கல்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நடைபெற்ற உரையாடலின் ஒலி வடிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசிற்கு அழுத்தங்கள் வராமல் இருந்திருந்தால் நிச்சயமாகத் தன்னைக் கொலைசெய்திருப்பார்கள் என்று கூறும் திமுத்து, அபாயகரமான சூழலிலும் மக்களை அணிதிரட்டிப் போராடுவது ஒன்றே எமக்கு முன்னுள்ள ஒரே வழி என்று கூறும் போது தன்னம்பிக்கையும், உறுதியும், சமூக உணர்வும் மக்கள் பற்றும் வெளிப்படுகிறது.(மேலும்.....) சித்திரை 16, 2012 இலங்கையில் காணாமல் போனதாக அறிவிக்கப்படும் ஆயிரக் கணக்கானோர் போலி அடையாளங்களுடன் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள் யுத்தத்தில் காணாமல் போனவர்கள் என்று அறிவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டு அரசாங்கங்களின் அனுசரணையுடன் புதிய அடையாள அட்டைகளை பெற்றிருக்கலாம். சமீபத்தில் செய்திகளில் முக்கிய இடம்பெற்றிருந்த குணரட்னம் என்பவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் N 1016123 இலக்கத்தைக் கொண்ட கடவுச்சீட்டொன்றை பெற்றுக் கொடுத்திருந்தது. இவர் புதிதாக அமைக்கப்பட்ட முன்னிலை சோசலிஷ கட்சியின் தலைவர். இவ்விதம் தனது உண்மையான அடையாளத்தை மறைத்து வேறொரு பெயரில் இவர் நடமாடியிருக்கிறார் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். இந்தக்கூற்றை ஊர்ஜிதம் செய்ய முடியுமா? என்று ஒரு ஆங்கில வாரப்பத்திரிகையின் நிருபர் கேட்டபோது பதிலளித்த பாதுகாப்பு செயலாளர் கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் ரொபின் மூடி, காணாமல் போனதாக கூறப்படும் குணரட்னம் தான் நொயல் முதலிகே என்று ஊர்ஜிதம் செய்ததாக கூறினார். இவர் ஒரு அவுஸ்திரேலிய பிரஜை என்பதையும் ஊர்ஜிதம் செய்தார். (மேலும்.....) சித்திரை 16, 2012 பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ் நேற்று இலங்கைக்கு விஜயம் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் இரு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றிரவு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்த ஜனாதிபதி அப்பாஸ¤க்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அடங்கலான வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் பலஸ்தீன தூதுக் குழுவினரை வரவேற்று அழைத்து வந்தனர். இலங்கையில் இருநாட்கள் தங்கியிருக்கும் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களையும் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் அடங்களான உயர்மட்ட அமைச்சர்கள், மற்றும் உயரதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸிற்கு இன்று (16) காலை ஜனாதிபதி செயலகத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. அவருக்கு அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து இருநாட்டு ஜனாதிபதிகளும் சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து பேச உள்ளனர். பலஸ்தீன ஜனாதிபதியுடன் இங்கு வரும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் டாக்டர் என். ஏ. மல்கிக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸுக்குமிடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் நடைபெறவுள்ளது. பலஸ்தீனுடன் இலங்கை நெருங்கிய உறவுகளைப் பேணி வருவது குறிப்பிடத்தக்கது. சித்திரை 16, 2012 தப்பான அபிப்பிராயங்களை ஏற்படுத்தி நாட்டின் அமைதியை குலைக்க புலி ஆதரவாளர்கள் முயற்சி - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷநாட்டின் பெளதிக அபிவிருத்தியைப் போன்று எதிர்காலத் தலைமுறையை ஆன்மீக ரீதியிலும் அபிவிருத்தி செய்வதன் அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். முதியவர்களை மதிக்கும், எம்மைப் பற்றிய தெளிவு கொண்ட, நற்பண்புகள் மிக்க எதிர்காலத் தலைமுறையை நாட்டில் உருவாக்கவில்லையானால் நாம் பெறும் அபிவிருத்தியால் பலன் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார். இந்நாட்டை சுதந்திரம் அடையச் செய்யும் போராட்டமே கடந்த காலத்தில் இருந்தது. நாம் பயங்கரவாதத்தை ஒழித்து அந்தச் சுதந்திரத்தைப் பெற்றோம். எல்.ரி.ரி.ஈ. இளைஞர், யுவதிகளை புனர்வாழ்வில் ஈடுபடுத்தி அவர்களைச் சமூகத்துக்கு பலன்மிக்க பிரஜைகளாக நாம் உருவாக்கினோம். இருந்தும் கூட இன்று உலகில் இருந்து எமது தாய்நாட்டைப் பற்றிய பல்வேறு அபிப்பிராயங்களைக் கொண்டு வந்து அதன் மூலம் நாட்டைச் சீர்குலைக்க எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் முயற்சி மேற்கொள்கின்றனர். இந்த விடயமாக நாம்அனைவரும் தெளிவாக செயற்பட வேண்டும். இந்த நாட்டைப் பிரித்து, வேறாக்க இடமளிக்க முடியாது. இது ஒரே நாடு. இன்று சகல மக்களும் சமாதானத்துடனும், ஐக்கியத்துடனும் ஒரே நாட்டில் வாழ்கின்றனர். இனங்களுக்கு இடையில் நம்பிக்கை, ஐக்கியம் உருவாக்கப்பட்டு உள்ளது. மாகாண சபை, பிரதேச சபை உட்பட சகல நிறுவனங்களையும் ஒன்றுபடுத்தி நாட்டின் அபிவிருத்தியும் தொடர்ந்து முன் எடுக்கப்படுகிறது. சித்திரை 16, 2012 ஈரான் அணுப் பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவுஈரானுடன் அணு விவகாரம் தொடர்பில் 6 நாடுகள் நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் இன்னும் நீண்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் ஈரானிடம் இருந்து தெளிவான திட்டங்கள் தேவை என்றும் ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணு விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கடந்த சனிக்கிழமை ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த 15 மாதங்களுக்குப் பின்னர் சர்வதேச நாடுகள் இது தொடர்பில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தியது முதல் முறையாகும். இரண்டாம் கட்ட பேச்சவார்த்தை எதிர்வரும் மே 23ஆம் திகதி பக்தாதில் இடம்பெறவுள்ளது. ஈரானின் அணு செயற்பாடுகள் மக்கள் நலனுக்கானது என அந்நாட்டு அரசு கூறிவருகிறது. எனினும் அதனை மறுத்து வரும் அமெரிக்கா உட்பட நாடுகள் ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டுகிறது. சித்திரை 16, 2012 சோகம் ஏற்படுத்தும் உடலியல் பாதிப்புகள்தன் துணையை இழந்த மறு விநாடியே உயிர் துறந்து இறந்து போகுமாம் அன்றில் பறவை. இது ஒருவர் மற்றவர் மீது வைத்திருக்கும் உள்ளார்ந்த அன்பு அல்லது காதல் எவ்வளவு உண்மையானது. வலிமையானது என்பதை உணர்த்த சுட்டிக் காட்டப்படும் உதாரணங்களில் ஒன்று. இந்த உன்னதமான பண்பு பறவை இனத்துக்கு மட்டுமல்லாது மனிதர்களுக்கும் உரியது. உதாரணமாக காதலர்களில் ஒருவர் இறந்த துக்கம் தாளாமல் மற்றொருவர் இறந்து போவது அல்லது கணவன் மனைவி இருவரில் ஒருவர் இறந்தால் மற்றொருவர் இறந்து போவது குறித்த செய்திகளைய |