Contact us at: sooddram@gmail.com

 

ஆடி 2012 மாதப் பதிவுகள்

ஆடி 31, 2012

தமிழ்க் கூட்டமைப்பு நிபந்தனைகளை விதித்து பேச்சுவார்த்தைகளை தட்டிக் கழிப்பது தவறு

நாம் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மாத்திரம் பேசி இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இதற்கு பாராளுமன்றத்தின் மூலமே நிரந்தரமான இறுதித் தீர்வை காண முடியும். எனவே, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எல்.ரி.ரி.ஈயைப் போன்று சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் புதிய நிபந்தனைகளை விதித்து, பேச்சு வார்த்தைகளை தட்டிக் கழிப்பது தவறாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமன்றி இந்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை காண வேண்டும். இது என்னுடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இது இந்நாட்டு மக்கள் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினை. (மேலும்.....)

ஆடி 31, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ, 47 பேர் பலி

புது டில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெல்லூர் அருகே வந்த போது ரயிலின் ஒரு பெட்டியில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பயணிகள் பலியாயினர். புது டில்லியில் இருந்து சனிக்கிழமை இரவு 10.30க்குப் புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்து சேரவேண்டிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை 4.30 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே வந்தபோது ரயிலின் 11ஆவது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து குறித்து அறிந்ததும் ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். ஆயினும் இந்த விபத்தில் ‌பலர் காயமடைந்துள்ளனர். நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்துக்‌கு விரைந்த‌ார். விபத்தைப் பார்வையிட்ட பின் அவர் செய்தியாளரிடம் பேசியபோது இதுவரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார்.

ஆடி 31, 2012

பகிரங்க அரசியல் விவாதத்திற்கு வரத்தயாரா? ஸ்ரீரங்கா எம்பியிடம் ஜ. ம. மு. கேள்வி

கடந்த பொது தேர்தலில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து ஐதேக பட்டியலில் தெரிவு செய்யப்பட்ட தனியார் தொலைகாட்சி ஊடகவியலாளரான ஸ்ரீரங்கா எம்பியை, நடுநிலையான நடத்துனரின் பங்குபற்றலுடன் கூடிய நேரடி ஒளிபரப்பு தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தம்முடன் கலந்துகொள்ள தயாரா என கேட்டும், அதில் அவரை கலந்து கொள்ளுமாறு கோரியும், பகிரங்க அழைப்பை ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பாக கட்சியின் ஊடக செயலாளர் எஸ். பாஸ்கரா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீரங்கா எம்பியின் நலன் கருதி, அவர் தன்னை தயார் படுத்தி கொள்வதற்காக குறிப்பிட்ட விவாதத்தில் ஜமமு கலந்துரையாட விரும்பும் விடயங்கள் பற்றியும் ஸ்ரீரங்கா எம்பிக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 31, 2012

ஆஸி சென்று கொண்டிருந்த போது வழிமறிப்பு

திருமலை, நீர்கொழும்பு கடலில் 3 வள்ளங்களுடன் 103 பேர் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 103 பேரை மூன்று வள்ளங்களுடன் திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்படையினர் நேற்று கைது செய்துள்ளனர். கடந்த 29 ஆம் திகதி சுமார் 8.30 மணியளவில் நீர்கொழும்பு கம்மல்துறை பகுதியில் அவுஸ்திரேலியா செல்ல ஆயத்தமாகவிருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் இவர்களை அனுப்புவதற்கு முற்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து சுமார் 6 இலட்சத்து 89,000 ரூபாவும் கைப்பற்றப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்வதற்காக புறப்பட்டுச் சென்றவர்கள் கடலில் இருப்பதாக கைதுசெய்யப் பட்டவர்கள் மூலம் கிடைத்த தகவலின் அடைப்படையில் கடற்படையினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டன. இத்தகவலின் அடிப்படையில், நீர்கொழும்பு கடற்பரப்பில் மரிய தின்டரி என்ற ஆழ்கடல் வள்ளத்திலிருந்த 25 பேரும் அஷேன் புத்தா என்ற ஆழ்கடல் வள்ளத்திலிருந்த 44 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் சமந்தா தத்சரண என்ற ஆழ்கடல் வள்ளத்திலிருந்த 34 பேரை திருகோணமலை கடல் பரப்பில் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர். யாழ்ப்பாணம், சிலாபம், வவுனியா, முல்லைத்தீவு, கல்முனை, நாவலப்பிட்டி, திருகோணமலை, நீர்கொழும்பு, பாணந்துறை, குருணாகல் மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 103 பேரே மூன்று வள்ளங்களுடன் கைது செய்யப் பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

ஆடி 31, 2012

பூமி மீது மோதிய கிரகத்தின் சிதறல் சந்திரன்

பூமியின் மீது மோதிய கிரகத்தின் சிதறலே சந்திரன் என புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சந்திரன் எப்படி உருவானது என ஆய்வு நடைபெற்று வருகிறது. பூமியின் சிதறலே சந்திரன் என முந்தய ஆய்வு தெரிவித்தது. அந்த சிதறல் எப்படி உருவானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தற்போது ஆராய்ந்தனர். அப்போது சந்திரன் மற்றும் பூமியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் சந்திரனில் உள்ள மாதிரியில் பூமியை போன்றே இரும்பு தாதுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் ஒரே அளவில் அவை இல்லை. அளவுகள் வித்தியாசப்பட்டன. இதற்கிடையே தியா என்ற கிரகத்தின் மாதிரியுடன் தொடர்புடையதாக உள்ளன. எனவே, பூமி அதிவேகமாக சுற்றிய போது தியா என்ற பெரிய கிரகம் மோதியதில் விபத்து ஏற்பட்டிருக்கலாம். அதில் இருந்து விழுந்த சிதறலே சந்திரன் ஆக மாறி இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஆடி 31, 2012

அமெ. தேவாலயத்தில் கறுப்பின திருமணத்திற்கு மறுப்பு

அமெரிக்க தேவாலயம் ஒன்றில் கறுப்பின ஜோடியினர் திருமணம் செய்ய மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசிசிபி மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் சார்லஸ், டி. ஆன்ட்ரீயா, கறுப்பினத்தைச் சேர்ந்த இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக இந்த மாகாணத்தின் கிறிஸ்டல் ஸ்பிரிங் பகுதியில் உள்ள தேவாலயத்தின் பாதிரியாரை தொடர்பு கொண்டனர். “இந்த தேவாலயம் 1883 இல் கட்டப்பட்டது முதற்கொண்டு கறுப்பினத்தவருக்கு திருமணம் செய்வித்தது கிடையாது. எனவே, உங்களுக்கும் திருமண சடங்கை இங்கே செய்ய முடியாது” என பாதிரியார் ஸ்டேன் வெதர்போர்ட் தெரிவித்துள்ளார். இந்த தேவாலயத்தில் சார்லஸ் உறுப்பினராக இல்லை. ஆனால் ஆன்ட்ரியாவின் தந்தை மற்றும் உறவினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். திருமணத்துக்கு பின்னர் இந்த தேவாலயத்தில் உறுப்பினராக சார்லஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால் இவர்களுக்கு திருமணம் செய்ய முடியாது என கூறப்பட்டதால் பிரச்சினை எழுந்துள்ளது. இருப்பினும் வேறொரு தேவாலயத்தில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

ஆடி 31, 2012

உடைந்தது பெரியார் திராவிடர் கழகம்

பெரியார் திராவிடர் கழகம் உடைந்ததைத் தொடர்ந்து அதன் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் தலைமையில் புதிய அணிகள் தொடங்கப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 15 மாவட்டங்களில் பெரியார் திராவிட கழகம் செயல்பட்டு வருகிறது. தற்போது பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் கு. ராம கிருஷ்னண் ஆதரவாளர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கழகத்தில் பிளவு ஏற்பட்டுள் ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி கூறியது: பெரியார் கொள்கையின் படி இணைந்து செயல்பட்டு வந்தோம். தற்போது பிரிவது என்று முடிவு செய்துள்ளோம். நடைமுறையில் முன் னுரிமை கொடுக்க வேண்டிய பிரச்சினை களுக்கு முன்னுரிமை கொடுக்காததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஆடி 31, 2012

கடந்த கால அனுபவங்களில் இருந்து  அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் - அமெரிக்க தூதர் 

கடந்த கால அனுபவங்களில் இருந்து அமெரிக்கா பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்காவுக்கான தூதர் கூறினார். ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க தூதர் ரெயான் சி.கிரேக்கர். இவர் இன்னும் சில தினங்களில் தூதர் பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். இவர் காபூலில் நிருபர்க ளிடம் கூறியதாவது:- உலகில் அமெரிக்கா சூப்பர் சக்தியாக விளங்குகிறது. ஆனால் நமது எல்லையை காக்க அமெரிக்க படைகள் போரிடவில்லை. வேறொரு நாட்டில் அமெரிக்க படைகள் போரிட்டு வருகின்றன. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. ஒரு நாட்டின் மீதி படையெடுக்கும் முன்பு அந்த நாட்டின் வரலாறு, அரசியல், சுற்றுச்சூழல் ஆகியவை பற்றி தெளிவாக அறிந்திருக்க வேண்டும். சிரியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் முன்பு கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளும்படி அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களை ராஜதந்திரிகள் வலியுறுத்த வேண்டும். அவர்கள் 3 விஷயங்களில் தெளிவாக இருக்க வேண்டும். உள்நோக்கம் இல்லாத பலன் தரக்கூடிய சட்டத்தை நினைவில் கொள்ள வேண்டும். அமெரிக்காவின் உண்மையான திறனின் எல்லையை அறிந்திருக்கவெண்டும். ஒருமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.கடந்த 2002-ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது ஏற்படும் விளைவுகள் குறித்து உள்துறை அமைச்சருக்கு ரகசிய அறிக்கை அளிக்க ரெயான் சி.கிரேக்கரும், வில்லியம் ஜெ.பர்ன்சும் நியமிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடி 30, 2012

கிழக்கு தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு, தமிழ் சிவில் சமூகம் விடுக்கும் வேண்டுகோள்!

தேர்தல்களில் பங்குபற்றுவது என்பது ஓர் அரசியல் இலக்கை எய்துவதற்கான கருவியாக இருக்குமிடத்து அவற்றில் பங்குபற்றுவது சரியாக இருக்கும். மாறாக அவ்வாறாகப் பங்கெடுப்பதானது எடுத்துக் கொண்ட அரசியல் இலக்குகளுக்கு பாதகமாக இருக்குமிடத்து மாற்றுபாயங்களைப் பற்றிச் சிந்திப்பதும் எம்மீது திணிக்கப்படும் ஓர் தேர்தலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது தொடர்பில் முன்யோசனையுடனும் தூர நோக்குடனும் செயற்படுவதும் இற்றைக்காலத்தில் தமிழ்த் தேசிய அரசியலின் முன்னகர்வுக்கு அத்தியாவசியமானது. தமக்கெதிராக இழைக்கப்படும் அட்டூழியங்களிற்கெதிராகத் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு மக்கள் தேர்தல்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அங்கலாய்க்கின்றமை விளங்கிக் கொள்ளக் கூடியதே. அத்தகைய எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தல் என்பது ஒரு பக்கமிருக்க தேர்தலில் பங்குபற்றுவதனால் ஏற்படக் கூடிய அரசியல் பாதகங்களையும் கவனிக்காமல் விட முடியாது.(மேலும்.....)

ஆடி 30, 2012

இயக்கச்சியில் புத்தர் சிலை திறப்பு

இயக்கச்சியில் இலங்கை இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட புதிய புத்தர் சிலை கடந்த வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் முதலாவது இயந்திர காலாட்படைப்பிரிவினரால் இந்தப் புத்தர்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்பு விழாவில் முதலாவது இயந்திர காலாட்படைப்பிரிவின் அதிகாரிகளும் படையினரும் பங்கேற்றதுடன், ஏழு பௌத்த பிக்குகளுக்கும் தானம் வழங்கப்பட்டுள்ளது. 1992 இல் இயக்கச்சிப் பகுதியை இலங்கை இராணுவத்தினர் கைப்பற்றும் வரை அங்கு எந்த பௌத்த வழிபாட்டுச் சின்னமும் இருந்திருக்கவில்லை. இயக்கச்சிப் பகுதி ஆனையிறவுப் பெருந்தளத்துடன் இணைக்கப்பட்டதை அடுத்தே, அங்கு புத்தர் சிலை ஒன்று இலங்கைப் படையினரால் அமைக்கப்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆனையிறவுப் பெருந்தளம் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட போது இந்தப் புத்தர் சிலை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 30, 2012

மன்னார் சட்டத்தரணிகள் 8 ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பு

மன்னார் நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து சட்டத்தரணிகள் மேற்கொண்டு வரும் பணிப்பகிஷ்கரிப்பு இன்று திங்கட்கிழமையும் தொடர்ந்து இடம் பெறுவதினால் மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன. கடந்த 18 ஆம் திகதி மன்னார் நீதிமன்றம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்தும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யக்கோரியும் மன்னார் நீதிமன்றத்தில் கடமையாற்றுகின்ற சட்டத்தரணிகள் கடந்த 19 ஆம் திகதி முதல்(19-07-2012) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் 8 ஆவது நாளாக இந்த பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்துள்ளது. இன்று அனுராதபுர சிறைச்சாலையில் இருந்து பல கைதிகள் மன்னார் நீதிமன்றத்திற்கு தவணைக்காக அழைத்துவரப்பட்டு மீண்டும் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதேவேளை பல்வேறுபட்ட வழக்கு விசாரனைகளுக்காக இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு வந்த நூற்றுக்கணக்கானவர்கள் திரும்பிச்சென்றுள்ளனர். _

ஆடி 30, 2012

சச்சரவுள்ள கட்சியை ஆதரித்து அதில் நானும் ஒரு பங்காளியாக விரும்பவில்லை பொன்சேகா

சச்சரவுள்ள ஒருகட்சியை ஆதரித்து அந்த சச்சரவில் நானும் ஒரு பங்காளியாக விரும்ப வில்லை என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். கடவத்தை, இஹல பியன்வில என்ற இடத்தில் இடம் பெற்ற ஒரு பொதுக் கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது- சச்சரவு மலிந்த ஒரு கட்சியில் நானும் பங்காளியானால் அத்தகைய சச்சரவுகளுக்கு நானும் ஒரு பங்காளியாக வேண்டிவரும். இருவரது பிரச்சினைகளையும் நான் பொறுப் பேற்கத் தேவையில்லை. எனவே சிறிது காலம் பொறுமையாக இருந்து நடப்பதை அவதானிப்போம். அதற்குரிய அவகாசத்தை வழங்குவோம். அரச சார்புக் கட்சியும் சரி, எதிரத்தரப்புக் கட்சியானாலும் சரி அவர்கள் இன்னும் தொடர்ந்து தவறு செய்ய அவகாசம் வழங்குவோம் என்றார்.ஐ. தே. கட்சியின் செயற்பாட்டை நேரிடையாக தெரிவிக்க விரும்பாத முன்னாள் ஜெனரல் இவ்வாறு தெரிவிக்கின்றார்.

ஆடி 30, 2012

ஓமானில் உள்ள 9 நிறுவனங்கள் இலங்கையின் கறுப்புப் பட்டியலில்

ஓமானில் உள்ள 9 நிறுவனங்கள் இலங்கையின் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓமானில் இயங்கும் இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை ஊழியர்களை வேலைக்கமர்த்தும் விடயமாக இடம்பெற்ற மோசடிகள் காரணமாகவே மேற்படி ஒன்பது நிறுவனங்களின் பெயர் கறுப்புப் பட்டியலில் (பிளக் லிஸ்ட்) சேர்க்கப்பட்டுள்ளது. இன்னும் 14 நிறுவனங்களின் செயற் பாடுகளையும் தடைசெய்துள்ளது. இந்நிறுவனங்கள் முறையாக சம்பளம் வழங்காமை, ஊழியர் உரிமை மீறல்கள் போன்ற குற்றச் சாட்டுக்களுடன் தொடர்புடையனவாகும். கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவன அதிகாரிகள் விசா வழங்க இலங்கைக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் ஊழியர்கள் சேர்ப்பிற்கும் தடை விதித்துள்ளது.

ஆடி 30, 2012

ஆடி 30, 2012

முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஊடுருவலை இல்லாமல் செய்ய தமிழனை முதலமைச்சராக்க வேண்டும் - வி. முரளிதரன்

தமிழ் மக்கள் மத்தியில் தற்போதுள்ள முஸ்லிம் அரசியல் வாதிகளின் ஊடுருவலை இல்லாமல் செய்யவேண்டுமானால் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் ஒரு தமிழனுக்கு வாக்களித்து முதலமைச்சராக்க வேண்டும் என மீள்குடியேற்ற துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கருத்து வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் 5 முஸ்லிம்கள் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் போட்டியிடும் பங்காளிக் கட்சிகளை விட நேரடிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் போட்டியிடும் ஒரு தமிழனை வெற்றிபெறச் செய்து முதலமைச்சராக்குவதன் மூலம் நாம் பாரிய அபிவிருத்திகளை அடைய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சித்தாண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஆடி 30, 2012

தனது கச்சா எண்ணெய்க்கு காப்புறுதி வழங்க ஈரான் முடிவு

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு பொருளாதார தடை விதித்துள்ளதால், ஏற்றுமதி செய்யும் மசகு எண்ணெய் டேங்கர்களுக்கு காப்பறுதி வசதி வழங்க ஈரான் முடிவு செய்துள்ளது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுடன் பல கோடி மதிப்பிலான மசகு எண்ணெய் ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை, ஈரான் செய்துள்ளது. இந்நிலையில், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரானுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளன. ஈரானிலிருந்து ஏற்றுமதியாகும் 90 சதவீத மசகு எண்ணெய் டேங்கர்களுக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் காப்புறுதி வழங்கி வந்தன. இப்போது அவை காப்புறுதி வழங்குவதை நிறுத்திக் கொண்டதால் ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொண்ட நாடுகளுக்கும் மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது 47 மசகு எண்ணெய் டேங்கர்களுக்கும் காப்புறுதி செய்து தர ஈரான் முடிவு செய்துள்ளது. எனினும் பொருளாதாரத் தடை என்பது நிதி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதால், விபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை மற்ற நாடுகளுக்கு ஈரான் எப்படி வழங்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ஆடி 30, 2012

16 நாட்கள் ஆழ்கடலில் தத்தளித்த 28 இலங்கையர்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று கொண்டிருந்த போது படகு செயலிழந்ததால் 16 நாட்கள் ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 28 இலங்கையர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கரைக்கு கொண்டுவரப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். இந்த 28 பேரில் 26 பேர் தமிழர்கள் என்றும் இருவர் முஸ்லிம்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். காலியிலிருந்து முந்நூறு கடல் மைல்களுக்கு அப்பால் ஆழ் கடலில் படகொன்று தத்தளிப்பதாகவும், அதில் ஆட்கள் காணப்படுவதாகவும் அவர்கள் இலங்கை யராக இருக்கலாம் என்றும் தகவல் எமக்குக் கிடைத்தது. இத்தகவலை அடிப்படையாக வைத்து நாம் உடனடி யாக செயற்பட்டோம். இந்த வகையில் குறிப்பிட்ட படகுக்கு அண்மையில் பயணிக்கும் பிரான்ஸ் நாட்டுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பலொன்றை இனம் கண்டு அக்கப்பலுடன் உடனடியாகத் தொடர்பு கொண்டு அவர்களை மீட்பதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அதற்கேற்ப அக்கப்பல் மூலம் படகில் தத்தளித்தவர்கள் மீட் கப்பட்டனர். இவர்களை விசாரணைக்கு உட்படுத் திய போது, தாம் கடந்த 13 ஆம் திகதி வாழைச் சேனையிலிருந்து கடல் வழியாக அவுஸ் திரேலியாவுக்குச் செல்ல புறப்பட்டதாகவும், இடை வழியில் படகு இயந்திர கோளா றுக்குள்ளானதால் ஆழ்கடலில தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

ஆடி 30, 2012

சிரிய அரச படையின் தாக்குதலை தவிர்க்க கிளர்ச்சியாளர்கள் ஆயுத கோரிக்கை

சிரிய அரச படை அந்நாட்டின் மிகப்பெரிய நகரான அல்ப்போ மீது கடும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் சிரிய எதிர்ப்பாளர்களின் தேசிய கவுன்ஸில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கும்படி சர்வதேச நாடுகளை கோரியுள்ளது. ஜனாதிபதி பஷர் அல் அஸாத் படுகொலை ஒன்றுக்கு முயற்சிப்பதாகவும் எனவே அலப்போவில் ரத்த ஆறு ஓடுவதை தவிர்க்குமாறும் சிரிய தேசிய கவுன்ஸிலின் தலைவர் அப்துல் பாசித் செய்தா எச்சரித்துள்ளார். ‘ஜெட் விமானங்கள் மற்றும் டாங்கர்களின் தாக்குதலை தடுக்க எமக்கு ஆயுதம் வேண்டும். தற்போது எமக்கு அதுதான் தேவை’ என்று செய்தா ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

ஆடி 30, 2012

மன்னார் சம்பவம் தொடர்பில் பக்குவமாக அணுகி உரிய தீர்வை பெற உதவுவேன் - அமைச்சர் ஹக்கீம்

மன்னார் நீதிமன்றம் அமைந்துள்ள பிரதேசத்தில் இந்தச் சம் பவம் நடந்து கொண்டிருந்த அதேவேளை யில் நீதிச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அப்பிரதேசத்தில் அமைதியின்மை நிலவுவதாக எனக்கு அறிவிக்கும்படி பிரதம நீதியரசர் கூறியதாக சொன்னார். அன்றைய தினம், நாங்கள் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தனித்து போட்டி யிடுவது என்ற முடிவை மேற்கொண்டு, கட்சி தலைமையகத்தில் 24 மணித்தியா லங்களுக்குள் மூன்று மாவட்டங்களுக்குமான வேட்பாளர் பட்டியல்களை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் அந்த தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. உடனடியாகவே ஸ்தலத்துக்கு செல்வதற்கு முடியாத நிலையில் இருந்ததால் பொலிஸ் உயர் அதிகாரியுடன் தொடர்புகொண்டு நிலைமையை அறிந்துகொண்டேன். இது பற்றி நானும், ஜனாதிபதியும் இரு தடவைகள் கலந்துரையாடியுள்ளோம். நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். நீதித் துறையின் சுயாதிபத்தியம், சட்டத்தின் ஆட்சி என்பவற்றை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டிய கடப்பாடு நாட்டின் நீதி அமைச்சர் என்ற முறையில் எனக்குண்டு. அதேவேளையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற முறையிலும், அரசியல்வாதி என்ற முறையிலும் சமூகத்தைப் பற்றிய கரிசனையும் என்னிடம் காணப்பட வேண்டும். இந்த அடிப்படையில், மன்னாரில் அண்மையில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில் அதனை மிகவும் பக்குவமாக அணுகி உரிய தீர்வைப் பெறுவதற்கு உதவுவேன். அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார்.

ஆடி 30, 2012

இந்திய அதி நவீன ஏவுகணை வெற்றிகரமாக நேற்று ஏவப்பட்டது

இந்தியாவின் அதிநவீன சூப்பர் சோனிக் ஏவுகணை பிரமோஸ், ஒடிஸாவின் சந்திப்பூர்கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து நேற்றுக் காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது. நேற்றுக் காலை 10.45 மணி அளவில் பாலசோர் மாவட்டம் சந்திப்பூர் ஒருங்கிணைந்த தளத்தில் இருந்து இது ஏவப்பட்டது. இந்த ஏவுகணை இதன் முந்தைய வடிவத்தில் இருந்து சற்று மேம்பட்டதும் மறு சோதனை முயற்சியாகவும் ஏவப்பட்டது என்று அதன் இயக்குநர் எம். பி. கே. வி. பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதன் தாக்குதல் பரப்பு 290 கி. மீ. மற்றும் 300 கி. கி. எடையுள்ள ஆயுதப் பொருட்களை சுமந்து செல்லும் வகையில் உள்ளது. இது இந்திய ரஷ்ய கூட்டுத் தயாரிப்பு என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஏவுகணை கப்பல்கள், விமானந் தாங்கி கப்பல்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள் உள்ளிட்டவற்றிலும் சுமந்து செல்லப்படும் வகையிலுள்ளது. இது அமெரிக்காவின் சப்சோனிக் டோமஹாக் ஏவுகணைகளைக் காட்டிலும் 3 மடங்கு அதிவேகம் கொண்டது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆடி 30, 2012

சென்னையில் ஒரே நாள் இரவில் 669 பேர் கைது

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 669 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பொலிஸார் கூறியது, சென்னை பெருநகரை குற்றங்கள் அற்ற அமைதியான பெருநகராக உருவாக்கும் வகையில் சென்னை பொலிஸ் ஆணையர் திரிபாதி உத்தரவின் படி, நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் ரவுடிகள், பழைய குற்றவாளிகள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்யவும் கண்டுபிடித்து விசாரிக்கவும் அவர்களைக் கண்காணித்து நீதிமன்ற பிடியாணைகளை நிறைவேற்றவும் வாகனத் தணிக்கைகளை மேற்கொள்ளவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆடி 30, 2012

திருப்பரங்குன்றம் கோவில் யானை மரணம்

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவில் யானை ஔவை கடந்த 1971ம் ஆண்டு அதன் 12 வது வயதில் பொள்ளாச்சியில் இருந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வாங்கப்பட்டது. அன்று முதல் வெள்ளிக்கிழமை வரை திருப்பரங்குன்றம் கோவில் யானையாக உலா வந்தது. தினமும் முருகனின் அபிஷேகத்திற்காக காலை 51/2 மணிக்கு சரவணப் பொய்கை சென்று குடத்தில் தண்ணீர் எடுத்து வரும். அந்தத் தண்ணீரைக் கொண்டு தான் முருகனுக்கு அபிஷேகம் நடைபெறும் திருபரங்குன்றம் உற்சவர், வெளியே புறப்படும் போதெல்லாம் ஒலிவையும் உடன் செல்வது வழக்கம். மீனாட்சி கோவில் திருக்கல்யாணம், புட்டுத்திரு விழா போன்ற விழாக்களின்போது திருப்பரங்குன்றம் முருகன் மதுரைக்கு வருவார். அப்போது ஔவையும் மதுரை வரும், ஜனாதிபதியாக ஆர் வெட்கட்ராமன் இருந்தபோது அவர் முன்பு இந்த யானை மவுத் ஒர்கான் வாசித்து பரவசப்படுத்தியது. இந்த நிலையில் வயோதிகம் காரணமாக கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த ஔவை யானை நேற்று முன்தினம் மரணம் அடைந்தது. திடீரென்று யானைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சற்று நேரத்தில் இறந்தது.

ஆடி 30, 2012

ஆப்கானிஸ்தான் கனிம புதையல்!

ஆப்கானிஸ்தானில் புதையல் தேடி அலையும் அமெரிக்கா

ப்கானிஸ்தானில் பெரும் கனிமத் தாதுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முயற்சியால் கண்டறி யப்பட்டுள்ள இதன் மதிப்பு மட்டும் 1 ட்ரில்லியன் டொலர்கள் என முதல் நிலைத் தகவல்கள் கூறுகின்றன. முழுமையான விவரங்கள் வந்தால் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ் தானின் பொருளாதாரத்தை நிமிர்த்தும் பெரும் புதையல் இது என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள். இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் லித்தியம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் ஸ்மெல் பண்ணவர்கள் அமெ ரிக்காவின் பாதுகாப்புத் துறையான பெண்டகன் தான். இந்தக் கனிமங்கள் தவிர தொழில்துறையின் அடிப்படையை உருவாக்கத் தேவையான அத்தனை தாதுகளையும் பேரளவில் கண்டுபிடித் துள்ளனர். இப்படியொரு தாதுப் படுகை, பெரும் பொக்கிஷம் தங்கள் நாட்டில் இருப்பதே தெரியாமல் போரிலும் மத்த தீவிரவாதத்திலும் காலத்தைக் கழித்து வந்துள்ளனர் ஆப்கன் ஆட்சியாளர்கள். இப்போதும் கூட தாதுப் புதையலின் ஒரு பகுதிதான் ஆப்கன் அரசுக்கு சொல்லப் பட்டுள்ளது. மீதி விவரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்துள்ளது.

ஆடி 30, 2012

வலுவான ஒரு எதிர்க்கட்சி இருந்தால் நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்கும்

பொதுத் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூ ராட்சி மன்ற தேர்தல்கள் நடத்தப்படும் காலகட்டத்தில் பொதுவாக அரசியல் கட்சிகள் தங்களுக்கிடையே உள்ள சிறு கருத்து மோதல்களை தற்காலிகமாகவாவது மறந்து கட்சியின் ஐக்கியமும், வலுவும் உச்ச கட்டத்தில் இருக்கிறது என்பதை எதிரணி களுக்கு தெரிந்துகொள்ளக்கூடிய வகையில் தங்களை தயார்படுத் திக்கொள்வதுண்டு. இதுவும் அரசியல்வாதிகள் பொதுத் தேர்தல்கள் போன்ற நிகழ்வுகளின் போது கையாளும் ஒரு தந்திரோபாயமாகும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதனை சீராக செய்து வருகின்றது. தங்கள் கட்சியைச் சேர் ந்த உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் அல்லது கட்சி அங்கத் தவர்கள் கொலை, கொள்ளை, சிறுவர்களை பாலியல் ரீதியில் துஷ் பிரயோகம் செய்தல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடு படுகிறார்கள் என்ற ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் எழும் போது அவர்களை கட்சியில் இருந்து தற்காலிகமாக அல்லது நிரந் தரமாக வெளியேற்றி அவர்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் பதவிகளையும் பறித்துவிடுவதுண்டு.(மேலும்.....)

ஆடி 29, 2012

நடக்காததை நடந்தது என்று கூறவிழையும் மன்னார் சம்பவம்

(அபூ அஸ்ஜத்)

வடக்கில் முஸ்லிம்களின் வரலாற்று பதிவுகளை அகற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலம் போன்ற நிலையை மீண்டும் அங்கு காணமுடிகின்றது. குறிப்பாக 1990 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் வடமாகாணத்திலிருந்து விரட்டப்பட்டு 23 வருடங்கள் உருண்டோடிவிட்ட நிலையில் தற்போது அம்மக்கள் தமது தாயகத்தில் மீள்குடியேற செல்கின்றபோது எண்ணிலடங்காத பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தாம் வாழ்ந்த பூர்வீக பூமியில் தமக்கு உரிமையில்லையென்று சொல்லுமளவுக்கு ஆக்கிரமிப்புக்கள் நடந்தேறுகின்றன. (மேலும்.....)

ஆடி 29, 2012

இனப்பிரச்சினை தொடர்பாக ஆப்த நண்பனுடன் கருத்து பரிமாறத் தவறிய கருணாநிதி

தமிழ் நாட்டினதும், அதன் கட்சித் தலைவர்களினதும் விவேகமில்லாத தூர நோக்கற்ற ஆத்திரமூட்டும் செயற்பாடுகள் இலங்கைத் தமிழருக்கு சாதகத்திற்குப் பதிலாக பாதகமான விளைவுகளைத் தந்துவிடுமெனவும் எச்சரிக்கிறார் அரசியல் மேதாவி ஆனந்தசங்கரி அறுபது ஆண்டுகள் அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள, நான்கு தடவைகள் பாராளுமன்றத்துக்கு தெரிவாகி யுனெஸ்கோவின் சகிப்புத் தன்மையையும், அகிம்சையையும் முன்னெடுப்பதற்காக வழங்கப்பட்ட மதன்ஜித் சிங் விருது பெற்ற மூத்த அரசியல்வாதியின் அவசர நடவடிக்கையாக இவ் வேண்டுகோள் வருகிறது. இது இலங்கையின் இனப்பிரச்சினையை அமைதியாகவும் அவதானமாகவும் கையாளுமாறு தமிழ் நாட்டிற்கு விடப்படும் ஒரு செய்தியாகும். (மேலும்.....)

ஆடி 29, 2012

பூமியின் திருவே! புரட்சியின் உருவே! நீ வாழ்க!

(உசிலை த.சோமநாதன்)

இன்று எந்த கியூபா சோஷ லிஸச் சுடரைக் கையிலே ஏந்தி கம்யூ னிஸப் பெருஞ்ஜோதியை நோக்கி நடைபோடுகிறதோ இதே கியூ பாவைத்தான் அமெரிக்க முதலாளிகள் தங்களது வேட்டைக்காடாக்கிக் கொண்டிருந்தனர். கியூபாவின் வர லாறு ஒரு கண்ணீர்க் காவியமாகும். பத் தொன்பதாம் நூற்றாண்டில்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது விஷ மூச்சை லத்தீன் அமெரிக்க நாடுகளிலே பரப்ப ஆரம்பித்தது. வேளங்கனியின் ஓடு இருக்கவே அக்கனியின் உள் சதை யை உறிஞ்சிவிடும் யானையைப் போல - லத்தீன் அமெரிக்காவின் கனிவளம், நிலவளம், நீர்வளம், தொழில்வளம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் தன்னு டைய எஜமான தத்துவத்தால் அம்மக் களைச் சுரண்டிக் கொழுத்தது அமெரிக்கா. வானத்திலே தொற்றி ஏறும் கோடைச் சூரியனுக்குச் சூடு அதிகமாவதைப் போலவே வருஷங்கள் வளர வளர அமெரிக்க முதலாளிகளின் கொள்ளை லாபமும் பெருக ஆரம்பித்தது. குறிப் பாக 1945ம் வருடத்திலேயிருந்து 1955 ஆம் வருடம் வரை (இடைப்பட்ட 10 ஆண்டுகளில்) 561 கோடி டாலர்களை, லத்தீன் அமெரிக்காவின் இரத்தச் சொட்டுகளை லாபக் கணக்கிலே ஏற்றினர். மறைமுகமான மூலதனத்தின் வாயிலாகவும், தனியாரின் நேரடி மூல தனத்தின் மூலமாகவும் அந்நாட்டு மக்க ளின் பொருளாதாரக் குரல்வளையை நெரித்தனர். (மேலும்.....)

ஆடி 29, 2012

கருணாநிதியின் டெசோ மாநாடும் இந்தியாவும்

இலங்கையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுவிப் புக்கான இலங்கையே தட்டுத்தடு மாறிக் கொண்டுள்ள தருணத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச் சர் முத்துவேல் கருணாநிதி இலங்கைக்குள் மூக்கை நுழைத்துக் கொண்டு உத்தேசமாக நடக்கக் கூடியதையும் நடக்க இருப்பதையும் குழைத்துக்கொட்டு வதற்கு புடம் போடுவது போன்று தமிழீழக் கனவு காண்பதும், டெசோ மாநாட்டை நடத்தவுள்ளமையும் நிச்சயமாக இலங்கைத் தமிழ் மக்களை குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மாத்திரமின்றி தமிழ் பேசும் மக்களையும் இக்கட்டான நிலைக்குத் தள்ளும் என இலங்கை மற்றும் இந்திய சிரேஷ்ட அரசியல் முக்கியஸ்தர்கள் கூறிவருகின்றனர். (மேலும்.....)

ஆடி 29, 2012

இன, மத, பிரதேசவாதம் பேசுவதற்கு எவருக்குமே இடமளிக்க கூடாது

நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலானது இந்நாட்டிலுள்ள சிறுபான்மையினங்களான தமிழ்மொழி பேசும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பாரியதும் நிரந்தரமானதுமான பிளவை ஏற்படுத்திவிடுமோ எனும் அச்சம் தற்போது எழுந்து வருகின்றது. குறுங் கட்சிகளினாலும், அக்கட்சிகளினது வேட்பாளர்களினாலும் எழுப்பப்பட்டுவரும் இனத் துவேசமான பிரசாரக் கருத்துக்கள் இன,மத, பிரதேச ஒற்றுமையை விரும்பும் மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்திவருகிறது. அத்துடன் இச்செயலானது அரசாங்கத்தின் மீது வேண்டுமென்றே பழியைப் போடும் ஒரு முயற்சியாகவும் அமைந்துள்ள மையை அண்மைய நாட்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் மூலமாக அவதானிக்க முடிகிறது. (மேலும்.....)

ஆடி 29, 2012

தொழிலாளர் விரோதத்தை வளர்க்கும் ஊடகங்கள் 

(எஸ். கண்ணன்)

அரசியல் கட்சிகள் தங்களைச் சார்ந்த தொழிற்சங்க அமைப்புகளை மறுகட்டுமானம் செய்ய வேண்டியத் தேவை இருக்கிறது. இல் லையென்றால் கட்சியின் கொள்கைக் கட்டுப் பாட்டில் இல்லாமல், தலைமைக் கட்டுப்பாட் டிலும் இல்லாமல், தனித்துச் செயல்படும் நிலைமை உருவாகி விடும். இது பல தகராறு களுக்கும், கொலைகளுக்கும் வழிவகுத்து விடும்” - இந்த வார்த்தைகளை தொலை நோக்கு அக்கறையுடன் முன் வைத்ததாக நினைத்துக் கொண்டு, தினமணி நாளிதழ் தலையங்கம் தீட்டியுள்ளது. தொழிற்சங்கங் கள் தொழிலாளர்களின் நலனுக்காகக் குரல் கொடுப்பவையாக இல்லாமல், இடைத்தரகர் களாக மாறுவதுதான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்பதை யாரும் சொல்லத் தயாராக இல்லை. பூனைக்கு யார் மணி கட்டுவது? என தினமணி தலையங்கத்தை நிறைவு செய் துள்ளது. (மேலும்.....)

ஆடி 29, 2012

ஹக்கீம், ஹசன் அலி, பசீர் சேகுதாவூத் மும்முனைகளில் ஆடிய கபடம்

கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட எடுத்த முடிவு ஏற்கனவே நன்கு திட்ட மிட்டு மேற்கொள் ளப்பட்ட தெனவும் ஆசன ஒதுக்கீட்டில் ஏற்பட்ட முரண் பாடுகள் இதற்குக் காரணமேயல்லவெனவும் தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா வாரமஞ்சரிக்கு நேற்று தெரிவித்தார். தான் தனித்துக் களமிறங்கியமைக்கு வேட்பாளர் ஒதுக்கீட்டில் இணக்கம் ஏற்படாமையே பிரதான காரணமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தினகரன் வாரமஞ்சரிக்கு தெரிவித்தார். மன்னாரில் இன மோதல் ஒன்று உருவாகக் கூடாது என்ற ஒரே நோக்கிலேயே அங்கு நடந்து கொண்டிருந்த சம்பவம் தொடர்பாக எனக்குத் தகவல் கிடைத்ததும் மன்னாருக்கு உடன் விரைந்தேன். அங்கு ஆவேசத்துடன் இருந்த பாதிக்கப்பட்ட மக்களை பள்ளிவாசலுக்கு அழைத்து ஆசுவாசப்படுத்த முயன்றேன். (மேலும்.....)

ஆடி 29, 2012

துளியளவும் வெட்கமில்லாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கிழக்கு தமிழர்களின் தலைகளில் மிளகாய் அரைக்க முயலும் TNA

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆட்சியமைக்க கூடாது என்றும் ஆளும் கட்சியில் போட்டியிடும் எந்தத் தமிழனும் முதல மைச்சராக வரக் கூடாது என்றும் சம்பந்தன் கூறியி ருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் சம்பந்தனால் எமது தேசியக் கொடி, புலிக்கொடி என்று கூறமுடியுமா? தமிழீழம் வேண்டுமென இளைஞர்களின் உணர்வினைத் தூண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் எவருடைய பிள்ளைகளாவது ஆயுதமேந்திப் போராடியிருக்கிறார்களா? சிங்கள அமைச்சர்களின் பிள்ளைகளும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களது பிள்ளைகளும் கொழும்பில் பிரபல்யமான பாடசாலைகளில் ஒன்றாகவே கல்வி கற்கின்றனர். (மேலும்.....)

ஆடி 29, 2012

முஸ்லிம்களின் வாக்குகளால் முதலமைச்சரா?

சந்திரகாந்தனின் கனவு இனியும் பலிக்காது

முஸ்லிம்களின் வாக்குகளினால் முதலமைச்சராக காத்திருக்கும் முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு இம்முறை முஸ்லிம்கள் வாக்களித்து தமது வாக்குப் பலத்தை விரயம் செய்யப் போவதில்லை. இது அவரது முதலமைச்சர் கனவுக்கு ஆப்பு. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் சீர் அஹமட் தெரிவித்தார். முஸ்லிம் வேட்பாளர்களையும் நம்பி களம் இறங்கியிருக்கும் பிள்ளையானுக்கு முஸ்லிம்கள் நிச்சயமாக வாக்களிக்கப் போவதில்லை. இது தொடர்பில் மேலும் தெரிவித்தஅவர், இம் முறை தேர்தலில் அரச தரப்புக்குச் செல்லும் கிழக்கு முஸ்லிம்களின் வாக்குகள் அனைத்தும் அவர்களது அபிலாசை களுக்கும் தனித்துவத்திற்கும் விழும் மரண அடியாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கும் தமிழர்கள், தமது உரிமை போராட்டத்திற்கான இன்னுமொரு மைல் கல்லை சர்வதேசத்தில் உருவாக்குவார்கள். அவர்களது எல்லாத் தோல்விகளையும் ஏறக்கட்டி பரணில் போடும் ஒரு சிறப்புப் பணியினை இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தல் செய்யும். இது தமிழர்களின் உயிர்ப் போராட்டம் என்பது அவர்களுக்குத் தெரியும். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை தனித்து நிற்பதும் அத்தகைய காரணங்களின் அடிப்படையில்தான் என்பதை முஸ்லிம் சமூகம் நன்கு அறியும். தெளிவுற சிந்திக்கும் எந்தவொரு முஸ்லிமும் ஐ.ம.சு. முவுக்கு வாக்களிக்க மாட்டார். இது பிள்ளையானின் முதலமைச்சர் கனவுக்கு வைக்கும் ஆப்புதான் என்றும் அவர் தெரிவித் தார்.

ஆடி 29, 2012

வெற்றி ஜமைக்காவின் பக்கம்

2012 ஆகஸ்ட் 6 ஜமைக்காவின் சுதந்திர தினம். லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெறும் நாளும் அன்று தான். வெற்றி மேடையில் யார் இருப்பார்கள். உசைன் போல்ட், அஸபா பவல், யோஹான் ப்ளாக்... ஜமைக்காவின் 1-2-3 ஃபினிஷ் நடக்கக்கூடாது என்றில்லை. 100 மீட்டர் ஓட்டத்தில் மீண்டும் ஜமைக்காப் புயலை வரவேற்க லண்டன் காத்திருக்கிறது. 1948 ஆம் ஆண்டில்தான் முதன் முதலாக ஜமைக்கா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்தது. இதுவரை 13 தங்கப் பதக்கங்கள் உள்பட 55 ஒலிம்பிக் பதக்கங்களை ஜமைக்கா வென்றுள்ளது. இதில் 54 பதக்கங்கள் ஓட்டப்பந்தயக் களத்தில் வென்றவையாகும். 1962 ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு மட்டும் 46 ஒலிம் பிக் பதக்கங்களை ஜமைக்கா வென்றுள்ளது. ஓட்டக்களத்தில் பெய்ஜிங் கில் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் 100, 200 மீட்டர், ஆண்கள் பிரிவு 4x100 மீட்டர் ஓட்டப்பந்தயப் பதக்கங்களை ஜமைக்கா வென் றது. ஒலிம்பிக் வரலாற்றில் 100, 200 மீட்டர் 4x100 மீட்டர் போட்டிகளில் ஒரு தங்கப் பதக்கம் கூட வெல்லாமல் அமெரிக்கா தலை தாழ்ந்து நின்றது. அமெரிக்கா வழக்கமாக தங்கப்பதக்கம் வெல்லும் 400 மீட்டர் தடை தாண்டும் போட்டியிலும் மெலய்ன் வால்க்கர் என்ற ஜமைக்கா வீரர் மூலமாக அமெரிக்காவிற்கு அடி விழுந்தது. (மேலும்.....)

ஆடி 28, 2012

(மிக அருமையான கட்டுரை. தற்போதைய பொருளாதார மந்தந்திற்கான தீர்வை மிகச்சரியாக ஆய்வு செய்து தீர்வையும் முன்வைத்திருக்கின்றார். யாபேரும் வாசிக்க வேண்டிய கட்டுரை இது -ஆர்)

சூழும் ஆபத்தும் மீளும் வழியும்! 

(பேராசிரியர் பிரபாத் பட்நாயக்)

உலகம் தற்போது இரண்டு நெருக்கடி களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒன்று, பரவலாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக் கிற பொருளாதாரச் சரிவு மற்றும் வேலை வாய்ப்பின்மை. இந்த நெருக்கடி 2008ம் ஆண்டு அமெரிக்க வீட்டுவசதிக் கடன் என் னும் குமிழ் வெடித்துச் சிதறியபோது துவங் கியது. இது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இரண்டாவது நெருக்கடி என்னவென்றால், உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கடுமையான உணவு நெருக்கடி. தலைக்கு சராசரியாக கிடைக்க வேண்டிய உணவு தானியத்தின் அளவு 1980-களின் ஆரம்பக் கட்டத்திற்குப் பிறகு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. எங்கும் நிறைந்துள்ள நவீன தாராளமயமாக் கல் ஆதிக்கப்பிடியின் கீழ் உலகம் முழுவதும் உள்ள சாதாரண மக்களின் வாங்கும் சக்தி மிக அதிகமாக சுரண்டப்பட்ட நிலையில், 2008ம் ஆண்டிற்குப் பிறகு உணவு தானியங்களின் விலையில் ஒரு செங்குத்தான உயர்வு ஏற் பட்டது. (மேலும்.....)

ஆடி 28, 2012

இலங்கையில் மீண்டும் இன மோதல் வெடிக்கும் - எரிக் சொல்ஹெய்ம்

இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமைகளை வழங்காவிட்டால் அங்கு மீண்டும் இன மோதல் வெடிக்கும் என்று நார்வே நாட்டின் முன்னாள் அமைதித் தூதர் எரிக் சொல்ஹெய்ம் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் நார்வே நாட்டின்நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில்,"இலங்கையில் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டத்துக்கு தமிழர் பிரச்னையே காரணமாக இருந்தது. விடுதலைப்புலிகளை ராணுவம் தோற்கடித்த பிறகும் அப்பிரச்னை தீர்க்கப்படவில்லை. தமிழர்களுக்கு சம உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இதையும் அவர்கள் இன்னும் செய்யவில்லை.இந்த விவகாரங்கள் தீர்க்கப்படாவிட்டால், இலங்கையில் எதிர்காலத்தில் மீண்டும் இன மோதல் புதிய வடிவங்களில் வெடிக்கும். (மேலும்.....)

ஆடி 28, 2012

கருணை உதவி கோருகின்றார்

கந்தசாமி ரதீஸ்குமார் இல.24 யூனியன்குளம் கோணாவில் கிளிநொச்சியை சேர்ந்த இவர் தற்பொழுது சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிறுநீரக மாற்றுச் சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்களால் சிபார்சு செய்யப்பட்டுள்ளது,ஆனால் யுத்தத்தின் பாதிப்புக்களை சுமந்து மிகவும் வறுமைகோட்டின் கீழ் வாழும் இவரது குடும்பம் இவருக்கான சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான மூன்று இலட்சம் ரூபாவினை பெற்றுக்கொள்ளமுடியாது பெரும் துன்பப்படுகின்றனர். எனவே இவரது குடும்பம் உதவிசெய்யும் கொடையாளிகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்க்கின்றனர்.

ஆடி 28, 2012

முஸ்லிம்கள் மீதான தமிழ் புத்திஜீவிகளின் பிழையான அரசியல் கண்ணோட்டம் களையப்பட வேண்டும் - மு.கா பிரதித் தலைவர்

'முஸ்லிம்களைப் பற்றிய ஒரேவிதமான வரலாற்றுப் பார்வை கொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணப்போக்குகளில் புதிய மாற்றங்கள் வேண்டும். அறிவார்ந்த ஒரு சமூகமாக உலகம் பூராவும் புலம் பெயர் ஈழத் தமிழர்களாக வாழ்ந்து வரும் தமிழர்களிடம், இலங்கைவாழ் முஸ்லிம்கள் பற்றி இதுகாறும் இருந்து வரும் பழமைவாத கருத்துப் பார்வைகளிலிருந்து, நவீனத்துவப் பார்வை கொண்ட அணுகுமுறை அவசியம்' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவர் நசீர் அஹமட் தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 28, 2012

தனியார்மயத்தின் லாபவெறிக்கு பிஞ்சு பலி

பணம் குவிப்பதே ஒரே இலக்கு என்ற வெறியில் செயல்படும் தனியார் கல்வி நிலையங் களில் விதிமுறைகள் எல்லாம் விதிமீறல்களாக உள்ளன. மாணவர்களின் உயிரை பற்றி கூட கவ லையில்லாமல் பல தனியார் கல்வி நிலை யங்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கு கும்ப கோணம் பள்ளி தீவிபத்து உள்பட பல உதார ணங்களை கூறமுடியும். சமீபத்திய உதாரணம், கடந்த புதன்கிழமை பள்ளி முடிந்து மகிழ்ச்சி யுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்த7வயது சிறுமி ஸ்ருதி மிகமோசமாக பலியான சம்பவம் தான். சென்னையில் இருந்து 35 கி.மீ தூரத்தில் முடிச்சூரில் உள்ள சியோன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படித்து வந்த அந்தச்சிறுமி பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது தனது இருக்கையின் அடியில் இருந்த ஓட்டை யில் விழுந்து அதே பேருந்து சக்கரத்தாலேயே நசுக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். (மேலும்.....)

ஆடி 28, 2012

Liberal MP, Jim Karygiannis

During the Tamil Tiger war in Sri Lanka he was the spokesperson for his Tamil constituents pulling out all his shenanigan's flaying at the Sri Lankan government at every turn. During the February 4, 2009, Emergency Debate on Sri Lanka in parliament which I christened 'The Canadian Parliament's Tamil Blarney Gong Show', he was flaying his arms to the left and right like a drunken Greek sailor, and had the audacity to tell the Harper Government, "When is the government going to rise and say that if Sri Lanka does not change its ways, it is going to be kicked out of the Commonwealth?" (more....)

ஆடி 28, 2012

தயாநிதி மாறனிடம் மீண்டும் சிபிஐ விசாரணை

ஏர்செல் நிறுவ னத்தின் முன்னாள் உரிமை யாளர் சி.சிவசங்கரனின் பங்குகளை விற்க அதிகாரத் தைப் பயன்படுத்தி மிரட் டியது தொடர்பாக முன் னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனிடம் சிபிஐ மீண்டும் விசாரணை நடத்தியது. சிவசங்கரன் நிறுவனப் பங்குகளை, அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறப்பட்ட தாகக் கூறப்படும் வழக்கில், தயாநிதிமாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன், மலேசிய தொழிலதிபரும், மேக்சிஸ் கம்யூனிகேசன் தலை வருமான டி.அனந்த கிருஷ் ணன் ஆகியோர் மீதும் வழக்கு உள்ளது. ஏர்செல் விவகாரத்தில் மேக்சிஸ் நிறுவனம் சாதக மான பலன் பெற்றதற்காக மாறன் சகோ தரர்களுக்கு ரூ.549. 96 கோடி யை சன் டைரக்ட் மூலம் வாங்கப்பட்டது சிபிஐ குற் றம் சாட் டியது. இந்த வழக் குத் தொடர்பாக தயாநிதிமா றனிடம் கடந்த வாரம் சிபிஐ விசாரணை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆடி 28, 2012

LTTE Global Operations and Creepy Motives of Paikiasothy Saravanamuttu
(
John MacKinnon)

There are folks who love their country and are willing to die for it. Then there are folks who get everything from a developing nation and attack the same nation to make a living. Some time back, Paikiasothy Saravanamuttu came on the radar with his pro-LTTE anti-Sri Lankan and most obviously anti-Sinhalese agenda. Saravanamuttu happens to be just another operative in a vast global network that has creepy motives. The following is our response to a professional journalist who was kind enough to have a civil conversation about the issues. We invite you all to add your comments. The real names of the journalists were removed. Let’s rock! (more...)

ஆடி 28, 2012

பிரான்சில் அதிகரித்துவரும் வேலையின்மை

பிரான்ஸ் நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் வேலைக்காக பதிவு செய்தோரின் எண்ணிக்கை 23,700 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், பிரான்ஸ் நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 20 லட்சத்து 94 ஆயிரத்திற்குமேல் சென்றுவிட்டதாக அந்த அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வேலையின்மைவிகிதமும் மாதத்திற்கு 0.8 சதவிகிதமும் வருடத்திற்கு 7.8 சதவிகிதமும் அதிகரித்து வருகிறது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் ஹாலண்டே, பிரான்சில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், அவர் பதவியேற்ற பிறகு, பிரான்சில் உள்ள ஐரோப்பாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான பிஎஸ்ஏ பியூஜியெட் சிட்ரான் நிறுவனம் 989 மில்லியன் டாலர் நிகர நஷ்டம் ஏற்பட்டதன் காரணமாக 8 ஆயிரம் தொழிலாளர்களை நிறுத்தியது. பிரான்சில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிற்சாலை மூடப்படுவது இது முதல் முறையாகும்.

ஆடி 28, 2012

Govt under fire from left allies

Eastern PC polls

(by Shamindra Ferdinando)

The Socialist Alliance (SA) yesterday alleged that the forthcoming election to the Eastern Provincial Council could jeopardize the post-war national reconciliation process. The government couldn’t be unaware of the ground reality, Senior Minister Dew Gunasekera, the General Secretary of the Communist Party of Sri Lanka [CPSL] told The Island yesterday. The SA comprises UPFA constituents, CPSL, Lanka Sama Samaja Party (LSSP) and the Democratic Left Front (DLF). In a hard hitting letter, Ministers, Gunasekera, Prof. Tissa Vitharana (LSSP) and Vasudeva Nanayakkara (DLF) have told UPFA General Secretary, Petroleum Minister Susil Premjayanth that the SA has been compelled to go it alone as it has been deprived of an opportunity to field candidates on the UPFA ticket. They have reminded Minister Premjayanth that left parties were denied a chance to contest the May 2008 PC polls in the East as well on the UPFA ticket. (more....)

ஆடி 28, 2012

அசாம் கலவரம்

பலி 58 ஆனது  மத்திய அரசே காரணம் முதல்வர் குற்றச்சாட்டு

அசாமில் 4 மாவட்டங் களில் பரவியுள்ள மோச மான இனக்கலவரத்திற்கு 58 பேர் பலியாகியிருக்கின்ற னர். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் அரசு மோசமான நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்த அளவுக்கு கலவ ரம் பரவியதற்கு மத்திய அர சே காரணம் என்று முதல் வர் தருண் கோகய் அதிரடி யாக குற்றம்சாட்டியுள்ளார். அசாம் மாநிலத்தில் போடோ பழங்குடியினக்குழுக்களுக்கும், வங்கதேசத்திலிருந்து இடம் பெயர்ந்து வந்து பல ஆண் டுகளாக வசித்து வரும் முஸ் லிம் சிறுபான்மை இனத்த வருக்கும் இடையே ஏற்பட் டுள்ள மோதல் இனக்கலவ ரமாக வெடித்துள்ளது. ஒரு வார காலமாக நீடித்து வரும் இந்த கலவரத்தில், சிராங் மாவட்டத்தில் 14 பேரின் உடல்கள் வெள்ளியன்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 58 பேர் பலியா னது உறுதி செய்யப்பட்டது. (மேலும்.....)

ஆடி 28, 2012

சவுதி அரேபியாவில்

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பேரணி 

சவுதி அரேபியாவில் அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி அந்நாட்டில் பேரணி நடைபெற்றது. பேரணியை அந்நாட்டு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தி கலைத்தது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். சவுதி அரேபியாவில் அந்நாட்டு அரசு அரசியல் ரீதியாக போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்திருக்கிறது. மேலும்ஏற்கனவே ஜனநாயக ரீதியாக போராடியவர்களை கைது செய்து அரசியல் கைதிகளாக சிறையில் அடைத்திருக்கிறது. இவர்களை விடுதலை செய்திட வேண்டும். நாட்டில் ஜனநாயக ஆட்சி மலர வழிவகுத்திட வேண்டும். அதற்கு ஏதுவாக சவுதி அரேபிய மன்னர் அல் சவுத் ராஜினாமா செய்திட வேண்டும் என்று அந்நாட்டினர் அரசரின் ஆட்சிக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் வெள்ளியன்று சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பஹ்ரைனில் போராடும் பொதுமக்கள் மீது சவுதி அரேபியாஆதரவு படைகளை கொண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும். சவுதி ஆதரவு படைகளை பஹ் ரைன் பகுதியில் இருந்து திரும்பப் பெற வேண்டும். போராடும் குடிமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறு த்த வேண் டும் என்பது உள் ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தினர். இதையடுத்து அங்கு வந்தஅரசின்ஆதரவுப்படைகள் போராட்டக்கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தின. இதில் பலர் காயமடைந்தனர். தொடர்ந்து சவுதி அரேபியாவில் அந்நாட்டின் அரசாட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகின்றனர்.

ஆடி 28, 2012

ஓட்டைப்பேருந்துக்கு எப்.சி. கொடுத்த ஆர்டிஓ சஸ்பெண்ட்   மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

தாம்பரம் ஜியோன் பள்ளியின் ஓட்டைப்பேருந்தில் மாணவி ஸ்ருதி பலியான வழக்கில், இப்பேருந்துக்கு எப்.சி கொடுத்த வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட் டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும் ஆர்டிஓ பட்டப்பசாமி சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வியாழன்று உயர்நீதிமன் றம் கிடுக்கிப்பிடி போட்டதைத் தொடர்ந்து அன்று இரவு தாம்பரம் ஆர்டிஓ பட்டப்பசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகிய இருவரையும் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்தனர். பின்னர் ராஜசேகரனை மட்டும் கைது செய்தனர். இந்த ராஜசேகரன்தான் 20 நாட்களுக்கு முன்பு ஸ்ருதியின் உயிரைப் பறித்த பேருந்துக்கு நல்ல நிலையில் உள்ளது என்று கூறி எப்.சி. கொடுத்தவர். அவர் மீது ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவான ஐபிசி 304-2ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஆடி 28, 2012

நான் நீதியையும் சட்டத்தையும் உச்ச அளவில் மதிப்பவன்

கேள்வி:- அண்மையில் மன்னாரில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தற்போது பரவலாகப் பேசப்படுகின்றது. ஆகவே இச்சம்பவம் தொடர்பாகவும், அச்சம்பவம் இடம்பெற ஏது வான பின் னணி குறித் தும் வன்னி மாவ ட்ட மக்கள் பிரதி நிதி என்ற வகை யில் சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்:- ஆம். வட மாகாணத்திலுள்ள மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்கள் சில மணிநேரக் காலக்கெடுவுடன் உடுத்த உடையோடு 1990ம் ஆண்டில் புலிகளால் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் நானும் ஒருவனாவேன். எதுவித குற்றமும் அறியாத வட மாகாண முஸ்லிம்கள், முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் வட மாகாணத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்டனர். (மேலும்.....)

ஆடி 28, 2012

இரண்டாம் கட்ட எண்ணெய் அகழ்விற்கு கெய்ன்லங்கா தயார்

இலங்கையில் எண்ணெய் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் கெய்ன் லங்கா நிறுவனம் அடுத்தாண்டு நடுப்பகுதியில் இரண்டாம் கட்ட எண்ணெய் அகழ்வு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக கெய்ன் இந்திய நிறுவனம் தெரிவித்துள்ளது. 600 சதுரகிலோமீற்றர் பரப்பளவில் 3 ளி தரவுகள் மூலம் அதிர்வுகள் தொடர்பாக தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளை அடுத்தாண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ள முடியும் என கெய்ன் லங்காவின் தாய் நிறுவனமான இந்தியா வெளியிட்டுள்ள 2012/2013 காலாண்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 28, 2012

தமிழகத்தில் நான்கு செல்லாத வாக்குகள் வெட்கக்கேடானது

ஜனாதிபதித் தேர்தலில் விழுந்துள்ள செல்லாத வாக்குகள் பற்றி வெட்கமாகவும் வருத்தமாகவும் உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்கள் எம். பி. க்கள்- எம். எல் ஏக்களும் தான். அப்படி வாக்களித்தவர்களில் 52 பேர் செல்லாத வாக்குகள் அளித்துள்ளனர். தமிழகத்தில் நான்கு செல்லாத வாக்குகள் அளித்துள்ளனர். இது வருத்தத்திற்குரிய செய்திதான். திருநெல்வேலி மாவட்டம், நாங்கு நேரியில் இரண்டாவது நாளாக பதற்றம் நீடிக்கிறது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிக்கு விடுமுறை. என்ன காரணம் தெரியுமா சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் என்பவரால் வானுமாமலை என்பவர் சுடப்பட்டு இறந்திருக்கிறார். இறந்தவரின் மனைவி மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தில் நான்கு நாட்களுக்கு முன் தன் கணவர் பைக்கில் வந்து கொண்டிருந்த போது இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழி மறித்து மாமுல் கொடுக்காமல் எத்தனை நாள் இருப்பாய் என்று கேட்டு, அவரிடமிருந்த பணத்தை பறித்துச் சென்றதாக சொல்லியிருக்கிறார். இன்ஸ்பெக்டர் ஒருவரே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தி. மு. க. ஆட்சியில் நடைபெற்றிருந்தால் ஜெயலலிதா இந்நேரம் என்ன செய்திருப்பார்?

ஆடி 28, 2012

பள்ளிப்பேருந்துகளின் பாதுகாப்பு  புதிய விதிகளை வகுக்க   உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளிப் பேருந்துகளின் பாது காப்பு பற்றிய புதிய விதிகளை ஒரு வார காலத்திற்குள் வகுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விதிகள் அமலாவது குறித்து கண்காணித்துக்கொண்டே இருப் போம் என்று அரசுக்கு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகு தியைச் சேர்ந்த சிறுமி ஸ்ருதி தான் பயிலும் தனியார் பள்ளியான சேலை யூர் சீயோன் பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந் தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலை யில் ஏறி மிகக் கொடூரமான முறையில் ஸ்ருதி உயிரிழந்தாள். இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. புதனன்று நடந் திருக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட் டனர். இந்த நிலையில் இந்த விவகா ரத்தை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வியாழனன்று முதல் வழக்காக எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இந்த விவ காரத்தைக் கையில் எடுத்தது. (மேலும்.....)

ஆடி 28, 2012

கிழக்கின் உதயம் திட்டத்தின் கீழ் மட்டு. மாவட்டம் பாரிய வளர்ச்சி

கிழக்கின் உதயம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. மீன்பாடும் தேன் நாடு என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தலைநகரம் இன்று ஒரு நவீன நகரைப் போன்று அழகாக தோற்றமளிக்கின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் அடையாள சின்னமாக இருந்த கல்லடி பாலம் இப்போது அகலப் படுத்தப்பட்டு, புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது இருக்கும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 26ஆயிரத்து 965 ஆகும். இவர்கள் அனைவரும் யுத்தத்தினால் அல்லது சுனாமியினால் அல்லது இயற்கை காரணங்களினால் கணவன்மார்களை இழந்து கைம்பெண்ணானவர்களே இவர்களாகும். இதில் 18ஆயிரத்து 468 பேர் இயற்கை காரணத்தினாலும் 2ஆயிரத்து 883பேர் யுத்தத்தினால் கணவன்களை இழந்தவர்களாகும். (மேலும்.....)

ஆடி 27, 2012

என்று முடியும் இந்த ஏமாற்று வேலை? (பகுதி 4)

ஒரு பாதை மூடும் போது தான் இன்னுமொரு பாதை திறக்கின்றது. திறக்கும் புதிய பாதையில் பயணிக்கப் போகின்றோமா அல்லது இன்னும் குருட்டு நம்பிக்கையுடன் இருக்கப்போகின்றோமா? இதுவரை புலிகளுடனும், கூட்டமைப்புக்காரர்களுடனும் பயணித்த நாம் இனி எமக்கான ஒரு புதிய பாதையை உருவாக்கிக் கொள்ளவேண்டும். ஏனெனில் முள்ளிவாய்க்காலின் பின் புலிகளின் செயற்பாட்டாளர்கள் தமிழர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தகமையை இழந்து விட்டார்கள். ஒரு சிக்கலான பயங்கரவாத அரசியற் பின்னணியுடன் உள்ள புலிகள் அமைப்பால் சர்வதேச அளவிலான அங்கீகாரம் கிடைக்கப் போவதில்லை. எப்படியோ இனி புதிதாகத் தான் எமக்கான அரசியல் ரீதியான பலத்தை உருவாக்கப்போகின்றோம். அங்கே பயங்கரவாத சகவாசம் உள்ள யாருமே இருக்கக் கூடாது. எனவே பலப்படுத்தவேண்டியிருக்கும் தமிழர்களின் அரசியல் பலம் புதிய ஒரு அமைப்பூடாக கொண்டு சென்றால் தான் நாம் வெற்றிபெற முடியும் . (மேலும்.....)

ஆடி 27, 2012

"மனம் மகிழ்வெளி " பிற்போடப்பட்டுள்ளது

July 29 ,2012 நடைபெறவிருந்த "மனம் மகிழ்வெளி " பிற்போடப்பட்டுள்ளது.
கடந்த அரங்காடல்களில் எம்மோடு பங்காற்றிய சத்யா ,பிரதீபா, தான்யா தில்லைநாதன் சகோதரிகளின் தம்பியாரது அகால மறைவையொட்டி "மனம் மகிழ்வெளி " பிற்போடப்பட்டுள்ளது.இதனை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆடி 27, 2012

உரையரங்கு

'இலங்கையின் தேசிய இனங்களும் முரண்பாடும்'

என்ற தலைப்பில்

எல்.ஜோதிகுமார் (சட்டத்தரணி) உரையாற்றுவார்.

தலைமை: க.இராசரத்தினம்

காலம்: ஜூலை 29, 2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி

இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்

     58 தர்மராம வீதி, கொழும்பு – 6

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்

E-mail: kailashpath@yahoo.com

ஆடி 27, 2012

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தேசிய வேலைத்திட்டம் - அமைச்சரவை ஏகமனதாக அங்கீகாரம்

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரித்துரைகளை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய வேலைத் திட்டத்திற்கு அமைச்சரவை நேற்று அங்கீகாரம் வழங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று தெரிவித்தார். இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான உயர்மட்டக் குழுவொன்றின் ஒத்துழைப் புடன் இதற்கான வேலைத் திட்டங்கள் பரவலான முறையில் துரிதப்படுத்தப் படவிருப்பதாகவும் அவர் கூறினார். அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இணைந்து வெளிவிவகார அமைச்சில் நேற்று இது தொடர்பாக பத்திரிகையாளர்களுக்கு விளக்கமளித்தனர். (மேலும்.....)

ஆடி 27, 2012

ஆசை வார்த்தைகளை நம்பி அவுஸ்திரேலியா செல்லாதீர்கள் - நாடு கடத்தப்பட்ட தயான் அன்டனி

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்று உயிராபத்தை எதிர்நோக்காதீர்கள் எனவும் அங்குள்ளவர்கள் தற் போது மீண்டும் அனுப்பப்படுகிறார்கள் எனவும் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தயான் அன்டனி தெரிவிக் கிறார். முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி தாம் பட்ட கஷ்டங் களை பிறரும் படக்கூடாது எனத் தெரிவிக்கும் அவர், இனியும் அவுஸ்திரேலி யாவுக்கு சடடவிரோதமாக போக எண்ணி ஆபத்தை எதிர்நோக்க வேண்டாம் என அவர் தெரிவித்தார். நீர்கொழும்பு வாசியான தயான் அன்டனி கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களைச் சந்தித்ததுடன் தாம் இங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளால் எத்தகைய துன்புறுத்தலுக்கும் உள்ளாக வில்லை எனவும் இன்று தனது உறவினர்களுடன் ஊர் திரும்பவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவில் என்னைப் போன்று திருப்பி அனுப்பப்படுவதற்காக இன்னும் 150 பேர் கைகளில் விலங்குகளிடப்பட்ட நிலையில் உள்ளனர்’ எனக் கூறுகின்றார் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று திரும்பி அனுப்பப்பட்டுள்ள தயான் அந்தனி.

ஆடி 27, 2012

30வது ஒலிம்பிக் போட்டிகள் இன்று லண்டனில் கோலாகல ஆரம்பம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகள் இன்று லண்டனில் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. இந்தப் போட்டியின் தொடக்க விழா இலங்கை நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு இடம்பெறும் என அறியவருகிறது. இந்தப் போட்டி எதிர்வரும் 12ம் திகதி நிறைவடையும். இந்த ஒலிம் பிக் போட்டி யில் 5 கண்ட ங்களில் உள்ள 204 நாடுகள் பங்கேற் கின்றன. மொத்தமாக 10,490 வீர, வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். ஒலிம்பிக் ஸ்டேடியம் உட்பட 34 மைதானங்களில் போட்டி நடக்கிறது. இங்கிலாந்து நாட்டின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடன நிகழ்ச்சிகள் நடைபெறும். ஸ்லம்டாக் மில்லியனர் படப்புகழ் தயாரிப்பாளர் டேனி பாயில் மேற்பார் வையில் தொடக்க விழா நிகழ்ச்சி நடக்கிறது. 3 மணி நேரம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. 27 மில்லியன் யூரோ செலவில் இதற்கான ஏற்பாடுகளை மிகப் பிரமாண்டமாக செய்துள்ளார். அரங்கத்தில் செயற்கை மழைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கிரிக்கெட் மைதானத்தைப் போன்ற செட் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஏகப்பட்ட தகவல்கள் கிடைக்கின்றன.

ஆடி 27, 2012

வட பகுதி முஸ்லிம்கள் மீள் குடியேற திரைமறைவில் சதித்திட்டங்கள்

இடம்பெயர்ந்த வடபகுதி முஸ்லிம்களை மீண்டும் தாயக மண்ணில் மீளக் குடியமர்த்துவதற்கான பணிகளை முன்னெடுக்கும் அரசியல் நிலைமைகளின் பணிகளுக்கு திட்டமிட்ட வகையில் போடப்பட்டு வரும் தடைகளைக் கண்டிக்க முஸ்லிம்கள் முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இயதுல் உலமாவின் மன்னார்க் கிளை வேண்டுகோள் விடுத்துள்ளது. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் 22 வருடங்களின் பின்னர் தமது தாயக மண்ணில் மீள்குடியேறும் முஸ்லிம்களுக்குகெதிராக பல்வேறுபட்ட இன்னல்களும், தடைகளும் தொடர்ந்த வண்ணம் இருப்பதை இந்த நாட்டு மக்களாகிய யாவரும் அறிவர். வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு நியாயம் கோரி பல்வேறுபட்ட முயற்சிகள் எமது அரசியல் தலைமைகளால் எடுக்கப்பட்டு வந்தபோதும், அதற்கெதிராக சில சக்திகள் செயற்பட்டு எமது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வேலையினை மேற்கொண்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் இந்த நாட்டு முஸ்லிம்கள், வடக்கு முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டு வரும் இந்த அநீதிகளுக்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது அவர்களது கடமையென நாம் கருதுகிறோம். ஆயுதமுனையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக புலிகள் செய்த சதியை இன்று சிலர் இன, மத வாதத்தை தூண்டி செய்ய முற்படுகின்றனர். 22 வருடங்களுக்கு முன் வெளியேற் றப்பட்ட வட புல முஸ்லிம்களை அரசா ங்கம் உடனடியாக மீள் குடியேற்ற வேண்டும் என்றும் கோரியுள்ள முஸ்லிம் கவுன்ஸில் இதற்காக அனைத்து பேதங்க ளையும் மறந்து முஸ்லிம்கள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது.

ஆடி 27, 2012

சிவாஜிலிங்கம் உட்பட 8 பேர் நெல்லியடியில் கைது

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல்துறைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே. சிவாஜிலிங்கம் உட்பட அக்கட்சியின் முக்கிய செயற்பாட்டாளர்கள் 8 பேரை நெல்லியடி பொலிஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து சிவாஜிலிங்கம் தெரிவிக்கையில், ஜூலை 25 படுகொலைகளை நினைவுகூரும் வகையிலும் 1983 இல் வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி தங்கதுரை உள்ளிட்ட 53 பேரைப் படுகொலை செய்தமையை நினைவுகூரும் சுவரொட்டிகளை நேற்று வியாழக்கிழமை இரவு ஒட்டிக்கொண்டிருந்தபோதே படையினராலும் பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டோம். யாழ். குடாநாடு முழுவதும் வெலிக்கடை படுகொலைகளை நினைவுகூரும் சுவரொட்டிகளை ஒட்டியபோதிலும் நெல்லியடியிலேயே எம்மைக் கைது செய்துள்ளனர் எனக் கூறினார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறுகையில், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட அவரது சகாக்கள் எட்டுப் பேரும் விசாரணைக்காகவே பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களைக் கைது செய்ததாகக் கூறுவதில் உண்மையில்லை என்றார்.

ஆடி 27, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர் பொலிஸாரால் கைது

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தயான் அந்தனி ௭ன்ற இலங்கையர் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட இவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவரை இரகசியப் பொலிஸார் விசாரணைக்காக கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி விமான நிலைய குடிவரவு–குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் இரகசியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்றதாகவும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு ௭திராக 2011 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆடி 27, 2012

அமைச்சர் ரிஷாத்தை பாதுகாக்க முயற்சிக்கவில்லை: - அரசாங்கம்

மனுவை தாக்கல்செய்கின்ற தரப்பு தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவருமாயின் அச்சுறுத்தல் விடுக்கவேண்டாம் ௭ன நீதிமன்றம் பிரதிவாதி தரப்பிற்கு அறிவுறுத்தும் ௭ன்பதுடன் சட்டத்திற்கு மேலே யாருமே இல்லை ௭ன்று அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். மன்னார் நீதிமன்றம் தாக்கப்பட்டு சேதமாக்கப்பட்டது மற்றும் நீதிவானுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ௭திராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் கீழ் அவரை செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 27, 2012

பேரறிவாளன் உட்பட மூவரின் கருணை மனு கோப்பு முகர்ஜியிடம் செல்கிறது வலியுறுத்தல் தொடரும் - கருணாநிதி

ஜனாதிபதித் தேர்தலில் முகர்ஜி வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டவுடன், ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியான தி.மு.க.வின்  தலைவர் கருணாநிதி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தமது கட்சியின் வலியுறுத்தல் தொடர்ந்து இருக்கும் என்று கூறியுள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் தான் கதைத்ததாகவும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்ததாகவும் நிருபர்களிடம் கூறிய கருணாநிதி, முகர்ஜியும் தனக்கு தொலைபேசியில் அழைத்து ஆதரவளித்ததற்காக தனக்கு நன்றி தெரிவித்ததாகவும் தி.மு.க. சார்பில் தான் அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் எனது நிலைப்பாடு குறித்து நான் ஏற்கனவே கதைத்துள்ளேன். பொதுவாக நான் மரணதண்டனைக்கு எதிரானவன் பேரறிவாளன் மற்றும் ஏனையோரின் மரண தண்டனை விவகாரம் குறித்து எனது கோரிக்கையை எமது கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது. அந்தக் கோரிக்கை தொடர்ந்தும் இருக்கும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

ஆடி 27, 2012

தனிநாடாவதற்கான பொருளாதார தகைமை பலஸ்தீனத்திற்கு இல்லை

பலஸ்தீன தனி நாட்டுக்கு ஆதரவளிக்கும் அளவுக்கு அதன் பொருளாதாரம் ஸ்திரமானதாக இல்லை என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஓர் இறையான்மையுள்ள அரசுக்கு செலவுகள் குறைக்கப்பட்டு வருவாயை அதிகரிக்கும் சாமர்த்தியம் இருக்க வேண்டும் என உலக வங்கியின் 181 பக்க அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பலஸ்தீன நிர்வாகம் தனிநாடொன்றை உருவாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அதனது பொருளாதாரம் அதற்கு உதவுவதாக இல்லை. பலஸ்தீன நிர்வாகத்தின் பொருளாதாரம் வெளிநாட்டு உதவிகளிலேயே தங்கி இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, தனது நிர்வாகம் பாரிய பொருளாதார சிக்கலை சந்தித்து வருவதாக பலஸ்தீன நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்திருந்தது. வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் இருப்பதாகவும் 500 மில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறை இருப்பதாகவும் பலஸ்தீன நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது. கடந்த 1994 ஆம்ஆண்டு ஒஸ்லோ உடன்படிக்கைக்கு அமைய அமைக்கப்பட்ட பலஸ்தீன நிர்வாகம் சந்திக்கும் பாரிய நிதி நெருக்கடி இதுவென கூறப்பட்டுள்ளது.

ஆடி 27, 2012

உடற்பயிற்சி இன்மையால் மரணங்கள்

புகை பிடித்தல், உடல் பருமன் போன்றவை காரணமாக ஏற்படும் மரணங்களுக்கு சமாந்தரமாக உடற்பயிற்சிக் குறைவும் உலகெங்கும் மக்களைக் கொல்கிறது என்று புதிய மருத்துவ ஆராய்ச்சியொன்று கண்டறிந்திருக்கிறது. மருத்துவ சஞ்சிகையான 'தெ லான்செட்'டில் வெளியான இந்த ஆய்வு, மக்கள் வாரத்திற்குக் குறைந்தது இரண்டரை மணி நேரமாவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, தோட்ட வேலை செய்வது போன்ற மிதமான உடற் பயிற்சிகளை செய்தால் 50 இலட்சத்துக்கும் மேலானோர் இறப்பதைத் தவிர்க்கலாம் என்று கூறுகிறது. இதய நோய், சர்க்கரை வியாதி, சில வகை புற்றுநோய்கள் ஏற்படுவது ஆறிலிருந்து பத்து சதவீதமாகக் குறையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. இந்த உடற்பயிற்சியின்மை என்ற பிரச்சினை, குறிப்பாக பிரிட்டனில் மிகவும் மோசமாகக் காணப்படுவதாகக் கூறும் இந்த ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டனில், மூன்றில் இரண்டு வயது வந்தோர், பரிந்துரைக்கப்பட்ட உடற் பயிற்சியை செய்யத் தவறுகிறார்கள் என்று கூறுகின்றனர்.

ஆடி 27, 2012

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அமைச்சர் ரிஷாதுக்கு உத்தரவு

கைத்தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டுமென மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. வழக்கொன்றின் தீர்ப்பு குறித்து மன்னார் நீதவானுக்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து தான் ஏன் தண்டிக்கப்பட கூடாது என்பதற்கான காரணங்களை அன்றைய தினம் முன்வைக்குமாறு நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற சுயாதிக்க தன்மை ஆகியவற்றை பாதுகாக்கும் நோக்கிலே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றுக்கு தெரிவித்தார். மனுதாரர்கள் சட்டத்தரணிகள் என்ற ரீதியில் மன்னார் சம்பவத்தை கண்டிப்பதாகவும் ரொமேஷ் டி. சில்வா நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். இந்த மனு தொடர்பான சகல ஆவணங்கள் மற்றும் சம்பவம் தொடர்பாக நீதவான் பொலிஸாரிடம் செய்த முறைப்பாடு என்பவற்றையும் மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் இந்த சம்பவம் தொடர்பாக நீதவானுடன் பரிமாற்றிக்கொண்ட கடிதங்கள் மற்றும் மனுதாரர்களின் சத்தியக் கடதாசிகள் என்பவற்றையும் வாசித்து தெளிவுபெற்றதாக மேன்முறையீட்டு நீதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஆடி 27, 2012

We Remember Black July 1983

For the attention of all the Sinhalese Members of the SLWB,

In your Mission Statement you say - " Sri Lankans Without Boarders (SLWB) is a growing non-for-profit network based in Toronto, Canada that provides you Canadians of Sri Lankan origin with opportunities to connect, build and lead initiatives that promote dialogue, reconciliation and peace in the diaspora community...." All that sounds good, extremely good and I am a Buddhist-Sinhalese, and ready to have a dialogue with you lot. I just read your announcement of - WE REMEMBER BLACK JULY 1983.  And unfortunately there ended your good intentions, which I have now pasted across your Mission Statement - THESE ARE A BUNCH OF NO GOOD SICK HUMBUGS.  Here's my problem.  With your "Remembering this event" and not others events of the Tamil separatist war, which I will come to you later, is not an initiative for "reconciliation" but wanting to keep the pot boiling of the ethnic divide."Being a Sinhalese-Buddhist, I will peel off that note pasted across  your Mission Statement when you bunch likewise remember the following days in a big way and be honest with yourselves with your intentions.

 WE REMEMBER THE BUDDHIST SACRED CITY OF ANURADHAPURA MASSACRE OF WESAK 1985

WE REMEMBER THE ARANTHALAWA MASSACRE OF  33 NOVICE BUDDHIST MONKS OF BLACK APRIL 1987

 WE REMEMBER THE BLACK 1998 THE ATTACK ON THE DALADA MALIGAWA

 Now that you all have recognized Black July 1983, the day in Sri Lanka's  history of the ethnic divide, I want you all to recognize the days in Buddhist history of this sick,  nasty Tamil Tiger War of my Motherland equally.

 Failing I would say that you  mainly Sinhalese members of  SLWB have been duped to make the honest effort of  "reconciliation"  by the Sri Lankan Goevrnmme look a cronic farce.  You all recognizing "We Remember Black July 1983" which has an undertone of  "the poor Tamils who got the brunt of the July 1983 riots", paint you all as a bunch of humbugs wanting to keep the Canadian flood gates open for the Tamils to come in rusty boats  to Canada as refugees.  I implore you not to be shy of  wanting to disassociate  yourselves with this "humbug organization".  Just get out.

 Let's have a dialogue.

 Sincerely,

Asoka Weerasinghe

ஆடி 26, 2012

என்று முடியும் இந்த ஏமாற்று வேலை? (பகுதி 3)

ஒரு வேளை பிரபாகரன் நோயினால் யுத்தகளத்திற்குவெளியே மரணித்திருந்தால் கூட நீங்கள் சிங்கள அரசிற்கு எமது பலவீனத்தை காட்டாது மறைக்கலாம். ஆனால் முள்ளிவாய்க்கால் முடிவுரையை எழுதிய எதிரிக்கு எல்லா உண்மைகளும் தெரியுமே. பிரபாகரனும் அவர் கூட்டமும் தலைக்குமேல் கையைத் தூக்கியது முதல் பிரபாகரன்  தலை பிளந்து செத்ததுவரை எல்லாமே அவர்களுக்குத் தெரியும்.  இனியும் எதற்காக ஏமாற்றுகிறீர்கள். மக்களுக்குப் பொய் கூறிக்கொண்டிருப்பதனை நிறுத்துங்கள். ‘இனியும்  பிரபாகரன் விடயத்தில் உண்மை உறங்கக்கூடாது. உரியவர்களை உண்மை பேசவைப்பது உலகிலுள்ள  தமிழ் மக்களின் கடமை'. சீமான் போன்றோரும் நெடுமாறனும் வை.கோ வும் சொல்கின்றார்கள் பிரபாகரன் உயிருடனும் நலமுடனும் இருக்கின்றார். மீண்டும் வருவார் ஐந்தாம் கட்ட ஈழப்போரை நடத்துவார் என்று. அத்துடன் நின்று விடாது குறிப்பாக சுவிஸ்ஸர்லாந்து நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்களே உங்களை உரிமையுடன் கேட்கிறேன் என்று கூறுகின்றார்.  (மேலும்.....)

ஆடி 26, 2012

மூன்று வாரத்துக்குள் தீர்வின்றேல் 2 இலட்சம் ஆசிரியர்களும் போராட்டம்

ஆசிரியர்கள் ௭திர்நோக்கும் பிரச்சினைகளுக்கு மூன்று வாரத்துக்குள் தீர்வில்லையெனில் நாடு முழுவதும் கடமையாற்றும் 2 இலட்சம் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதிப்பர் ௭ன்று இலங்கை ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். ஆசிரியர்கள் ௭திர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டி நேற்றுக் காலை இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட சில ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இணைந்து கல்வி அமைச்சின் முன்னால் மேற்கொண்ட கவனயீர்ப்புப் போராட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், ஆசிரியர்கள் ௭திர்நோக்கும் பல பிரச்சினைகள் வருடங்கள் பல கடந்தும் இன்னும் தீர்த்துவைக்கப்படவில்லை. பதவி உயர்வு, சம்பளம், சம்பள நிலுவைக் கொடுப்பனவு உட்பட 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து ௭மது போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். கல்வி அமைச்சின் அமைச்சரும் செயலாளரும் மாறிக்கொண்டிருக்கிறார்களே தவிர ௭ங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு ௭துவும் கிட்டவில்லை.

 
ஆடி 26, 2012

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத ஆட்கடத்தல்

முக்கிய சூத்திரதாரிகள் மூவர் திருகோணமலையில் கைது. பிரதான சந்தேகநபர் சுரேஷ்குமார் தமிழ்க் கூட்டமைப்பு வேட்பாளர்

சட்ட விரோத ஆட்கடத்தலுடன் தொடர்புடையவர்கள் எனச்சந்தேகிக்கப்பட்ட மூன்று பேரை திருகோணமலை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கடல் வழியாக அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மேற்படி மூவரில் ஒருவர் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவராக இருந்து அந்தப் பதவியை இராஜினாமாச் செய்து தற்போது கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராகவுள்ள வெள்ளதம்பி சுரேஷ் குமார் (வயது 38) என்பவராவார். (மேலும்.....)

ஆடி 26, 2012

ஓநாயின் ஒப்பாரி

ஆடுகள் ஆரோக்கியமாக இல்லையே என்று ஓநாய் ஒப்பாரி வைத்த கதையாக இருக்கிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது, இந்தியப் பொருளாதாரச் சீர்திருத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறியுள்ள கருத்துக் களை படிக்கும்போது. பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் நிர்ப்பந்தித்த நவீன தாராளமயமாக்கல் கொள்கையை செயல்படுத்தியதால் இந்தியப் பொருளாதாரம் சுயசார்புத்தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது. ஆனால் இதுவும் போதாது; இன்னமும் வேகம் வேண்டும்; இந்தியப் பொருளாதாரத்திற்கு சொந்தமாக வேர்களே இருக்கக்கூடாது என்று ஆதங்கப் பட்டிருக்கிறார் ஒபாமா. (மேலும்.....)

ஆடி 26, 2012

தேசிய விளையாட்டு அணியில் 8 முன்னாள் புலிகள் இணைப்பு

புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்கள் எட்டு பேர் இலங்கையின் தேசிய விளையாட்டு அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டி ருப்பதாக விளையாட்டுத்துறையமைச்சு உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது. குறி பார்த்து சுடும் போட்டிக்காக கனகசுந்தரம் ரஜீவன், தயாபரன் காவேந் திரன், செல்லமுத்து சுரேஷ்குமார், பத்மராஜன் ததீபன், கோபாலகிருஷ்ணன் பிரேமகுமார் ஆகிய ஐவரும் தெரிவாகியுள் ளனர். இதேபோன்று கிரிக்கட்டிற்காக சிவகுமரன் துஷியந்தன், எஸ். நவதீபன் ஆகியோரும் கராட்டேக்காக எஸ். கிருபாகரனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், பயிற்சிகளைத் தொடர்ந்து சுகததாச விளையாட்டு மைதானம், கெத்தாராம கிரிக்கெட் மைதானம் மற்றும் வெலிசரை கடற்படை மைதானம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட விசேட பரீட்சையிலேயே தெரிவாகியிருப்பதாகவும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்து ள்ளது. எதிர்காலத்தில் இலங்கை சார்பாக வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் கலந்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் இவர்களுக்கு கிடைக்குமெனவும் அமைச்சர் கூறினார்.

ஆடி 26, 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து

இலங்கையர் ஒருவர் நாடு கடத்தல்

புகலிடம் கோரி அவுஸ்திரேலியா சென்று அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்தால் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதி ஒருவர் நேற்று 25 ஆம் திகதி புதன்கிழமை நாடு கடத்தப்பட்டார். இவரை நாடு கடத்தலில் இருந்து தடுப்பதற்கான முயற்சிகளை சட்டத்தரணி கள் மேற்கொண்ட போதும் அது தோல்வியில் முடிவடைந்துள்ளது. இதன்படி குறித்த இலங்கையர் அவுஸ் திரேலிய நேரப்படி நேற்று மாலை 2.35 அளவில் பேங்கொக்குக்கு அனுப்பப்ப ட்டார். அங்கிருந்து அவர் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறித்த நபரை இலங்கைக்கு நாடு கடத்தினால் அவருடைய உயிருக்கு ஆபத்து என அவர் சார்பான சட்டத்தரணி மனு தாக்கல் செய்தபோதும் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள போதுமான நேரம் இருக்கவில்லை என தெரிவிக் கப்படுகிறது. குறித்த இலங்கையர் 2010 ஆம் ஆண்டு புகலிடம் கோரி அவுஸ்தி ரேலியாவுக்குச் சென்றிருந்தவராவார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தனது சகோதரர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என சகோதரி கூறியுள்ளார்.

ஆடி 26, 2012

குருநாகல், மகுலுவெவ பள்ளிவாசல் பதற்றம், பொலிஸ் தலையீட்டால் நிலைமை சுமுகம்

குருநாகல் வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட (இக்குறுவத்தை) தெதுறு ஓயாகம மகுலுவெவ கிராமத்திலுள்ள முஸ்லிம் பள்ளிவாசலொன்று சிலரால் பலாத்காரமாக மூடப்பட்டு தொழுகை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை குருநாகல் மாவட்ட சுதந்திரக்கட்சி அமைப்பாளர் அப்துல் சத்தார் நேற்று முழுமையாக நிராகரித்தார். சில தரப்பினர் இடையூறு செய்ய முற்பட்ட போதும் பொலிஸாரின் தலையீட்டுடன் அந்த முயற்சி தடுக்கப்பட்டதோடு மத அனுஷ்டானங்கள் வழமை போல இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்காக ஐ. தே. க.வுடன் தொடர்புடைய சிலரே இவ்வாறு தேவையற்ற பிரச்சினைகளைத் தூண்டி பொய் வதந்திகளை பரப்புவதாகவும் சு. க. அமைப்பாளர் தெரிவித்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளிவாசலுக்கு அருகில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது. ஐ. தே. க. முக்கியஸ்தர்களில் ஒருவரான பிக்கு ஒருவரின் தலைமையில் வந்த சிலர் அங்கு குழப்பம் ஏற்படுத்த முயன்றதாக அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப் பட்டதையடுத்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படாமல் பொலிஸார் நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர்.

ஆடி 26, 2012

கிரீன்லாந்தில் அசாதாரணமாக உருகும் பனித்தகடுகள்

கிரீன்லாந்தின் பாரிய பனித்தகடுகள் அசாதாரணமான முறையில் உருகி வருவதாக செய்மதி மூலம் பெறப்பட்ட படங்களை ஆதாரம் காட்டி நாஸா அறிவித்துள்ளது. இது கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான செய்மதி தரவுகளில் அவதானிக்கப்படாத நிகழ்வு என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா கூறியுள்ளது. எனினும் இந்த பருவகாலத்தில் கிரீன்லாந்தின் பாதியளவான பனித்தகடுகள் உருகி பின்னர் உடனடியாக உறைந்து விடும் என்று கூறியுள்ள நாஸா, இம்முறை வழமைக்கு மாறாக அதிகளவான பனித்தகடுகள் உருக ஆரம்பித்திருப்பதாக கூறியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 1889 ஆம் ஆண்டு கிரீன்லாந்தில் இவ்வாறு பனித்தகடுகள் உருகியுள்ளன. இவ்வாறு 150 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாரிய அளவில் பனித்தகடுகள் உருகுவதாக இது தொடர்பான ஆய்வை மேற்கொள்ளும் புவியியலாளர் லோராகொனிங் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இது இயற்கையான நிகழ்ச்சியா அல்லது புவி வெப்பமடைவதன் விளைவா என்பது குறித்து ஆய்வாளர்கள் எந்த கணிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. எனினும் எதிர்வரும் ஆண்டுகளிலும் இவ்வாறு பனித்தகடுகள் உருக ஆரம்பித்தால் அது அபாயமானதாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆடி 26, 2012

தே.மு.தி.க. எதிர்க்கட்சியானாலும் மக்கள் மத்தியில் தி.மு.க.வே எதிர்க்கட்சி

மக்கள் மத்தியில் தி.மு.க.வே எதிர்க்கட்சியாக இருக்கிறது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தைப் பொறுத்த வரை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் நடைபெறுகிறது. 2006 ஆம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. ஆட்சியைப் பிடித்திருந்த போது சொன்னதை எல்லாம் செய்தோம். இப்போது ஆட்சி நடைபெறுகிறதா என்பதே சந்தேகமாக இருக்கிறது. 3 ஆயிரம் பேர்தான் சேர்வதாக முன்பு சொல்லப்பட்டது. இப்போது 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தி.மு.க.வில் சேர்ந்துள்ளனர். இது தி.மு.க.வுக்கு ஏற்பட்டுள்ள எழுச்சியைக் காட்டுகிறது. தி.மு.கவினர் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள் அதிகமானோர் பங்கேற்றனர். சிறையில் போதுமான இடம் இல்லாததால் தி.மு.க.வினர் விடுவிக்கப்பட்டனர். மக்கள் பிரச்சினைக்காக தி.மு.க.தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சட்டப் பேரவையில் தே.மு.தி.க. எதிர்க் கட்சியாக இருக்கலாம். ஆனால் மக்கள் மத்தியில் தி.மு.க.தான் எதிர்க் கட்சியாக இருக்கிறது என்றார் மு.க.ஸ்டாலின்.

ஆடி 26, 2012

மக்களுக்கு இயற்கை அளித்த வரம் தென்னை

தென்னை எந்த நாட்டுக்கு உரியது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் இந்தியாவில் மிகப் பழங்காலந்தொட்டே தென்னை இருந்து வருகிறது என்ற கருத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்கின்றனர். மலேசிய பசிபிக் பெருங்கடலின் மேற்கிலும் மத்தியிலும் உள்ள தீவுகள், கிழக்குத் தீவுக் கூட்டம், இந்தியாவின் கரையோரப் பகுதிகள் ஆகியவற்றில் தென்னை அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. ஏறக்குறைய 80 இலட்சம் ஏக்கரில் இது பயிராகிறது. ஆண்டு விளைச்சல் 14 ஆயிரம் கோடி தேங்காய்கள். பிலிப்பைன்ஸ் தீவுகளே தேங்காய் விளையும் பகுதிகளில் முதன்மையாகத் திகழ்கின்றன. அங்கு 20 இலட்சம் ஏக்கரில் தேங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு 300 கோடி தேங்காய்கள் விளைவிக்கப்படுகின்றன. பரப்பளவைப் பொறுத்தவரை இது உலக அளவில் மூன்றாவது. விளைச்சலில் இரண்டாவது. (மேலும்.....)

ஆடி 26, 2012

மனிதன் உருவாக்கிய அறிவியல் புரட்சியினால் பிராணிகளும் மரங்களும் உயிர்வாழ்வதில் சங்கடம்
(
கிருஷ்ணன் ரஞ்சனா )

மிழ் நாட்டிலுள்ள ஓடைப் பட்டி கிராமம் திராட்சைகளின் சொர்க்கம். இங்கு கறுப்பு திராட்சை அதிகமாக விளையும். அதே சமயம் அணில்களும், சிறு குருவிகளும் ஆயிரக் கணக்கில் பழங்களைத் தின்பதற்கு கும்பல் கும்பலாக வரும். அவற்றை விரட்டுவதற்கென்று தோட்டம் முழுதும் ஆங்காங்கே இரண்டு உயர்ந்த மரக் கம்பங்களை ஊன்றி நூல் கட்டி அதில் பழைய தகர டப்பாக்களைத் தொங்க விட்டிருப்பார்கள். அதன் இறுதி முனையில் ஒரு நூல் தொங்கும் அதை இழுக்கும்போது ஒட்டுமொத்த டப்பாக்களும் ஆடுவதால் அதி பயங்கர சப்தம் எழும். விடுமுறை நாட்களில் சிறுவர்களுக்கு வேலையே இதுதான். பிற நாட்களில் பெரியோர்கள் இவ்வேலையில் ஈடுபடுத்தப்படுவர். இதன் ஒலியால் அவை பயந்து ஓடும். இதையேதான் தினை புலத்தில் கவண் எடுத்து கல்லெறிந்து பறவைகளை விரட்டுவாள் சங்க கால இளம் கதாநாயகி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னேறிய அறிவியல் இன்று இந்த வேலையை தன் கையில் எடுத்து மனித உயிருக்கு மட்டுமல்ல, சிறு உயிரிகளுக்கும் உலை வைக்கத் துவங்கியுள்ளது. (மேலும்.....)

ஆடி 26, 2012

மக்களின் அமோக ஆதரவுடன் ஐ. ம. சு. மு கிழக்கில் வெற்றியீட்டும் - முரளிதரன்

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் கிழக்கு மாகாண சபையை அரசாங்கம் வெற்றி கொள்வது உறுதியென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் ஒருபோதுமில் லாதவாறு பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண் டுள்ளது. பெருமளவு வேலை வாய்ப்புக ளையும் வழங்கியுள்ளது. எதிர்வரும் தேசத்துக்கு மகுடம் அபிவிருத்திக் கண்காட்சியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு மட்டும் 5,000 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் கிழக்கு மக்கள் மனதில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதைக் குறிப்பிட முடியும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது. எதற்கும் பிரயோசனமில்லாதவர்கள் என்ற மனநிலை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதால் அரசாங்கத்தின் மீது மக்கள் அதீத நம்பிக்கையுடன் உள்ளனர்.

ஆடி 26, 2012

கட்டாரில் அந்நியத் தொழிலாளர்கள் நடத்தும் சோக நாடகம்

டோஹா விமான நிலையத்தின் வரவுப் பகுதியில் காத்துக்கொண்டிருந்தேன். மத்தியான நேரம். நிறைய விமானங்கள் இறங்கியிருந்தன. மக்கள் அலையலையாக வெளியே வந்து கொண்டிருந்தனர். பொதுவாக அரபு நாட்டினரும் இந்தியத் துணைக்கண்டத்தைச் சேர்ந்தவர்களுமே பயணிகள். இதில் ஏறத்தாழ எழுபத்தைந்து வீதத்தினர் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலானோர் சாதாரண திறனிலாத் தொழிலாளர்கள்தாம். வண்டி வண்டியாக பெட்டிகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் தள்ளிக்கொண்டு வரும் அரபு நாட்டுப் பயணியர் மத்தியில் மூட்டை முடிச்சுகளை சுமந்து கொண்டு சாரை சாரையாக வந்து கொண்டிருந்த இவர்கள் வித்தியாசமாகப் பட்டனர். இவர்கள் வட இந்திய மாநிலங்களிலிருந்தும் நேபாள், பங்களாதேசம் போன்ற நாடுகளிலிருந்தும் வருபவர்கள் என்று தோற்றத்திலிருந்து கணிக்க முடிந்தது. (மேலும்.....)

ஆடி 26, 2012

என்றுமே மறக்க முடியாத ஜூலை 83

(ஐ.தி.சம்பந்தன்)

சிங்களவர் கலவரம் செய்வது புதிய ஒரு விடயம் அன்று. அன்று ஸ்ரீ லங்கா என்ற நாடு, இலங்கை என்று அழைக்கப்பட்ட காலம் தொட்டே  சிங்களவர்களின் கலவரம் நிலை கொண்டிருந்தது கண்கூடு. ஆரம்ப காலத்தில் பௌத்த மத வளர்ச்சியில் நாட்டம் கொண்ட பௌத்த மத தீவிரவாத பிக்குமார், சிங்கள வெறியையும் பௌத்த மத மேம்பாட்டையும் வளர்க்க தம்மாலான சகல முயற்சிகளையும் எடுத்தனர். அன்று பௌத்த மத வரலாற்றையும் சிங்கள  இனத்தின் ஆரம்பத்தையும் மஹா நாமா என்ற பௌத்த பிக்கு பாளி மொழியில் எழுதினார். அவர் எழுதிய வரலாற்று நூலே மஹாவம்சம் என்று அழைக்கப்படுகிறது. இந் நூல் ஏழாம் நூற்றாண்டு அளவில் எழுதப்பட்டது. புத்த பிரானின் பிறப்பு நிர்வாண நிலை பற்றி எழுதிய இந்த நூலாசிரியர் பௌத்த மதம் பரவியது பற்றி எழுதும் போது  பொய் ,புனை சுருட்டு, கற்பனைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். (மேலும்.....)

ஆடி 25, 2012

என்று முடியும் இந்த ஏமாற்று வேலை? (பகுதி 2)

பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுவதன் மூலம் எதை நீங்கள் சாதிக்கப்போகிறீர்கள்?
தமிழ்இனம் இன்று ஒவ்வொருதிசையில் ஒற்றுமையின்றி இருப்பதற்கு முக்கியகாரணம் பழைமைவாதக்கொள்கைகளுடன்கூடிய புலச் சிந்தனையாளரகளே. அவர்களின் சிந்தனைஎல்லாம் தமது சுயநல வாழ்கைக்கானதாகவே அமைந்திருக்கும் அவர்களால் எதையும் செய்யமுடியாது. பணம் பண்ணுவதிலேயே குறியாக இருப்பார்கள்.
பிரபாகரனின் நிலைமை என்ன என்று தேடுவதை முதலில் நிறுத்தி. புலி என்ற மாயையில் இருந்து வெளியே வாருங்கள். சில நேரங்களில் எல்லாமே எமக்கு எதிராக நடக்கிறது. இதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும் உண்மை அதுதான் என்றால் அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
(மேலும்.....)

ஆடி 25, 2012

ஆட்கடத்தலுடன் தொடர்புடைய கூட்டமைப்பு வேட்பாளர் கைது

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் ஆட்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின்பேரில் திருகோணமலையில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் சுரேஷ்குமார் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. ___

ஆடி 25, 2012

மன்னார் ஊடகவியலாளர்கள் மூவர் சீ.ஐ.டி யினரால் விசாரணை

மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து மன்னாருக்கு வருகை தந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவு (சி.ஐ.டி) பொலிஸார் மன்னார் ஊடகவியலாளர்கள் மூன்று பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூன்று பேருக்கும் தனித்தனியே அவர்களுடைய தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்திய ஒருவர் தாம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் இருந்து கதைப்பதாகவும் கொழும்பு 4 ஆம் மாடியில் இருந்து வருகைதந்துள்ளதாகவும் ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட நேரத்திற்கு அமைய காலை 10.30 மணி முதல் இரவு 8 மணிவரை குறித்த 3 ஊடகவியலாளர்களும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன் போது கடந்த 18 ஆம் திகதி இடம் பெற்ற சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் முழுமையான வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு சம்பவ தினம் ஊடகவியலாளர்கள் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்காட்சிகளையும் சீ.ஐ.டி யினர் பெற்றுக்கொண்டனர்.

ஆடி 25, 2012

வவுனியாவில் பெண் தொழிலதிபர் சடலமாக மீட்பு

வவுனியா கோவில்குளத்தில் உள்ள விடுதியொன்றிலிருந்து பெண் தொழிலதிபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், தெஹிவளை, வவுனியா ஆகிய இடங்களில் ‘வி கெயார்’ என்ற பெயரில் அழகுக்கலை நிலையத்தினை நடத்திவந்த கேதாரலிங்கம் விசாகினி (31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவராவார். வவுனியா ஹோட்டலுக்கு நேற்றிரவு இளைஞர் ஒருவருடன் விசாகினி தங்கியிருந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த இளைஞரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். இரவுப்பொழுதில் அவருடன் தங்கியிருந்ததாகவும் காலையில் விழித்துப்பார்த்தபோது விசாகினி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருப்பது தெரியவந்ததாகவும் அந்த இளைஞர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ___

ஆடி 25, 2012

கறுப்பு ஜுலையை நினைவு கூர்ந்து இக்கட்டுரை பிரசுரமாகின்றது

வரலாற்று சிறப்பு மிக்க தமிழ் மக்கள் விடுதலைப் பிரகடனம் !!

இலங்கையில் தமிழ் சிங்கள மக்கள் மொழி இன கலாச்சாரங்களில் இணைந்தவர்கள் அவர்கள் தமது இனஉறவுகளின் அடிப்படையை நன்கு புரிந்தே வரலாற்று காலம் தொட்டு வாழ்கிறார்கள் இலங்கையில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிங்கள பௌத்த இனவாத கட்சிகள், தமது பதவிக்காலங்களில் பௌத்த இனவாத இராணுவ அரச இயந்திரங்களை பாவித்து இலங்கையில் இரு மொழிபேசும் மக்களையும் பிரித்து மோதவிட்டு தமது சுயலாபங்களை ஈட்டி சென்று விடுகின்றனர் இதன் அடிப்படையில் இன்றுள்ள இலங்கை அரசும் அதன் உச்சக்கட்டமான நடவடிக்கையில் தானே மாட்டிக் கொண்டிருப்பது நல்ல உதாரணங்களாகும். (மேலும்.....)

ஆடி 25, 2012

எங்களது போராட்டம் இந்தியாவுக்கு எதிரானதல்ல - விடுதலைப் புலிகள்

(ராஜீவ் காந்தியை கொலை செய்த 'துன்பியல்' நிகழ்விற்கும், உலகத்தின் 4 வது மிக்பெரிய இராணுவத்தை அடித்து துரத்தினோம் என்று கொக்கரிக்க முன்பு யோசித்திருக்க வேண்டிய விடயம் இது)

இறைமையை மீட்பதற்கான எமது போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகம் இன்று  விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,” இந்தியாவில் தமிழீழ  விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஈராண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான  அறிவித்தலை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் வெளிவந்த அறிக்கையில், எமது  அமைப்புக் குறித்தும் எமது விடுதலைப் போராட்டத்தைக் குறித்தும் வெளியிடப்பட்ட  கருத்துக்கள் தொடர்பாக எமது ஆழ்ந்த கரிசனையையும் ஆட்சேபத்தையும் தெரிவிக்க  விரும்புகின்றோம். (மேலும்.....)

ஆடி 25, 2012

இருவேறு உலகின் இருவேறு நங்கையர்

(கோவை ஈஸ்வரன்)      

சென்ற திங்களில் உலக நாளிதழ்களின் முகப்புகள் இரண்டு நங்கையர்களின் படங் களை -முரண்பாடுடைய இரு வேறு சமுதாய அமைப்புகளின் வாழ்க்கைமுறைகளைத் தாங்கிப் பாரெங்கும் பவனி வந்தன.கிரிஸ்டியானா மார்கரெட் கீலர் என்ற இருபத் தோரு வயது நிரம்பிய ஆங்கிலப் பொன்னிறக் கூந்தலழகி ஒருத்தி. வாலண்டினா தெரோஸ்கேவா என்ற இருபத்தாறு வயது நிரம்பிய ரஷ்யாவின் பேரழகுப் பெட்டகம் மற்றொருத்தி. முன்னவள் விலைமாது; பின்னவள் விண் வெளியைச் சுற்றிய வீராங்கனை! ஒருத்தி குற்றம் சுமத்தப்பட்டவள்; இன்னொருத்தி வெற்றி முரசு கொட்டியவள்! ஆனால் இந்த இரண்டு பேரும் தங்கள் தங்கள் தாயகத்தின் -தங்களைத் தயாரித்த சமுதாய அமைப்பு களின் அழியாச் சின்னங்கள்! (மேலும்.....)

ஆடி 25, 2012

Sri Lankans wish to live in unity

No external force can solve our problems - KP

(By Shanika SRIYANANDA )

Shanmugam Kumaran Tharmalingam alias KP, former arms procurer of the now defunct LTTE, questioned the concern of the Tamil Nadu politicians in creating an Eelam state in Sri Lanka, while Tamils here want to live peacefully in a united country. “It is hilarious to see the concern of the TN politicians to create a separate land for us in an era where the Sri Lankan Tamils want to live in a united country. I strongly believe now that no external force can solve our problems, which are only unique to us”, he said. In an exclusive interview with the Sunday Observer KP, who is under a protective environment, said Sri Lankan Tamils know how to solve their problems and don’t want external intervention. Discussing the issues such as the intention of the Tamil Nadu politicians to intervene in Sri Lankan issues, political mishaps of Tamil politicians in Sri Lanka, the forthcoming event – the Tamil Eelam Supporters Association (TESO) conference in Chennai and the dubious role of the Tamil National Alliance (TNA), he said he believed the problems of Tamils could be solved through devolution of power. (more....)

ஆடி 25, 2012

இலங்கையில் முன்னோடி மாவட்டமாக மிளிர்ந்து வரும் மீன்பாடும் தேன்நாடு

எம். எஸ். பாஹிம்...-

(அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஊடகவியலாளர்களின் சுற்றுப் பயணத்தின் பின்னர் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.)

(நேற்றைய தொடர்ச்சி)

இந்த வருட முடிவுக்குள் அனைவருக்கும் மின்சார வசதி அளிக்கும் நோக்குடன் கிராமிய மின்சாரத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 563.91 மில்லியன் செலவில் இடம்பெறும் இந்தத் திட்டங்கள் மூலம் மக்களும் 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் வழங்கப்படும். அடுத்த ஜனவரி மாதம் ஆகும் போது மட்டு மாவட்டத்தில் மின்சார வசதி இல்லாத எந்த ஒரு வீடும் இருக்காது என பிரதி அமைச்சரும் மட்டு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 25, 2012

மன்னார் சம்பவம் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை

மன்னார் நீதிமன்ற சம்பவம் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் யார் தொடர்புபட்டிருந்தாலும் தராதரம் பாராது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் மைத்திரிபால சிரிசேன தெரிவித்தார். மேற்படி சம்பவம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், நீதிமன்றத்தின் சுதந்திரத்தை பேண எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது இந்த சம்பவத்தை ஐ.ம.சு.மு.வும் சு.க.வும் கண்டிக்கிறது. ஜனாதிபதியும் கவலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து துரித விசாரணை நடத்தி அதன் அறிக்கையின்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கும் சி.ஐ.டி.யினருக்கும் ஜனாதிபதி பணித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக பக்க சார்பின்றி சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் யார் தொடர்புபட்டிருந்தாலும் தராதரம் பாராது நடவடிக்கை எடுப்போம். இத்தகைய சம்பவங்களுக்கு இடமளிக்க முடியாது. விசாரணை முடிவிலே இதில் யார் தொடர்புபட்டுள்ளனர் என்பது புலனாகும் என்றார்.

ஆடி 25, 2012

எகிப்தின் புதிய பிரதமராக கன்தில் நியமனம்

எகிப்தின் புதிய பிரதமராக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ஹிஷாம் கன்தில்லை ஜனாதிபதி மொஹமட் முர்சி நியமித்துள்ளார். அத்துடன் புதிய அமைச்சரவையை அமைப்பதற்கும் கன்திலுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். மொஹட் முர்சி எகிப்து ஜனாதிபதியாக பதவியேற்று 25 தினங்கள் கழிந்துள்ள நிலையிலேயே புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளார். ஹிஷாம் கன்தில் தற்போதைய அமைச்சரவையில் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக செயற்படுகிறார். சுயாதீனமான நபர் ஒருவரை பிரதமர் பதவிக்கு தேர்வு செய்வது குறித்து நீண்ட ஆய்வுக்கு பின்னர் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி முர்சியின் பேச்சாளர் யாசிர் அலி குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று கன்தில் தற்போதைய நெருக்கடி நிலைக்கு சிறப்பாக முகம்கொடுக்கக் கூடியவர் எனவும் யாசிர் அலி கூறியுள்ளார். 50 வயதான கன்தில் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்து அமெரிக்காவில் பட்ட பின் படிப்பை தொடர்ந்தவராவார். எகிப்தில் இராணுவத்திற்கும் புதிய ஜனாதிபதிக்கும் இடையில் அதிகார போட்டி தொடரும் நிலையிலேயே கன்தில் பிரதமராக நியமக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 25, 2012

அரச சொத்துக்களை ஒப்படைக்காத மாகாண முன்னாள் அமைச்சர்கள் மீது கடும் நடவடிக்கை

தேர்தல் நடைபெறும் மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த முன்னாள் அமைச்சர்களுக்கு தாம் பயன்படுத்திய அரச வாகனங்கள் மற்றும் அரச சொத்துக்களை மீள வழங்குமாறு அறிவித்துள்ளோம். பலர் அவற்றை திருப்பி வழங்கியுள்ளதோடு, மீள வழங்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ம.சு.மு. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். ஐ.ம.சு.மு. நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர்களின் மனைவிமார் மற்றும் பிள்ளைகள் ஆகியோருக்கு இம்முறை ஐ.ம.சு.மு.பட்டியலில் போட்டியிட இடமளிக்கப்படவில்லை. அரசியலில் இருந்து ஒதுங்குவதாக எழுத்து மூலம் அளித்த அமைச்சர் ஜகத் பாலசூரிய பிரதி அமைச்சர் எம்.கே.டபிள்யு.எஸ். குணவர்தன ஆகியோரின் பிள்ளைகளுக்கு மட்டுமே புதிதாக இடமளித்துள்ளதாக சு.க. செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த் தெரிவித்தார்.

ஆடி 25, 2012

பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்ட ஜும்மா பள்ளிவாசல்

குருணாகல் வெல்லவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பகம ௭ன்ற இடத்தில் அமைந்துள்ள அல்– அக்ரம் ஜும்ஆ பள்ளிவாசல் புத்த பிக்குமாரின் ௭திர்ப்பினால் மூடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 7.30 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி ஜும்ஆ பள்ளிவாசலுக்கு ௭திராக நீண்டகாலமாக புத்த பிக்குமாரினால் ௭திர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டுள்ளன. திடீரென நேற்று இரவு 7.30 மணியளவில் பிக்குமாரும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரும் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரித் ஓதியுள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் வெல்லவ பொலிஸிற்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து பள்ளிவாசலை மூடும்படி கூறியதாக மேல் மாகாண சபை உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்தார். இது குறித்து வெல்லவ பொலிஸார் கூறுகையில், பாலர் பள்ளியாக நீண்டகாலமாக இயங்கிவந்த மேற்படி இடத்தில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அப்பிரதேச மக்களும் பிக்குமாரும் ௭திர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். பிக்குமாரையும் பிரதேசவாசிகளையும் பள்ளிவாசல் நிர்வாகிகளையும் இன்று புதன்கிழமை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதுடன் குறிப்பிட்ட இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் ௭ன்றனர்.

 ஆடி 24, 2012

என்று முடியும் இந்த ஏமாற்று வேலை? (பகுதி 1)

பிரபாகரன் இருக்கிறார் என்று கூறுவதன் மூலம் எதை நீங்கள் சாதிக்கப்போகிறீர்கள்?
ஒரு மனிதனாக பிறந்து கிட்டத்தட்ட 30 வருடத்திற்கு மேல் மிருகமாக மாறி தன் இனத்துக்காகப் போராடுவதாகக் கூறிக்கொண்டு பல படுகொலைகளையும் மனித விரோத செயல்களையும் செய்து ஒரு கோழையாக மரணித்த  ஈனப்பிறவியின் இறப்பை ஏன் மறைக்க முற்படுகிறீர்கள்? அரசியற் காரணங்களிற்காக மறைக்கப்படும் உண்மைகள் கூட நீண்டகாலத்திற்கு மறைக்க முடியாது எப்பவோ வெளிவரத்தான் போகின்றது.
(மேலும்.....)

ஆடி 24, 2012

தீரமும், கருணையும் நிரம்பிய கம்யூனிஸ்ட் தலைவர்  கேப்டன் லட்சுமிக்கு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு புகழஞ்சலி

உத்வேகமூட்டக்கூடிய, தீரமிக்க விடுதலைப்போராட்ட வீரரும் அர்ப்பணிப்பு உணர்வோடும், கருணை உள்ளத்தோடும் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்து வந்த மருத்துவரும் பெண் உரிமைப்போராளியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உன்னதமான மதிப்புமிக்க உறுப்பினருமான கேப்டன் லட்சுமி செகால் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு தனது இதயப்பூர்வமான ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை உருவாக்க உறுதுணையாக இருந்த தலைவர்களில் ஒருவரான அவர் மறையும்போது அந்த அமைப்பின் புரவலராக இருந்தார்.
(மேலும்.....)

ஆடி 24, 2012

'தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக நாவலொன்று பிரெஞ்சு மொழிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாரிஸ் 'இலக்கிய மாலை' நிகழ்வில் கு. சின்னப்ப பாரதியின் நாவலுக்குப் பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் பாராட்டு..!

'உலக நாடுகளின் கலை இலக்கியங்களை வரவேற்கும் பண்பு பாரிஸ் மாநகருக்கு உண்டு. இந்தப் பண்பாடு நீண்ட காலமாகவே எம்மிடம் இருக்கிறது. எங்கள் நன்மைக்காகவே அந்த வரவேற்பை நாம் அளிக்கின்றோம். அந்த வகையில் தமிழ் மொழியிலிருந்து முதன்முறையாக ஒரு நாவல் பிரெஞ்சு மொழிக்கு வந்திருப்பதை நாம் பெருமையுடன் வரவேற்கிறோம். பாராட்டுகிறோம்.. இந்நாவல் மொழிபெயர்ப்பு அர்த்தமுள்ளது. காத்திரமானது. இந்திய மக்களுடன் எங்கள் அரசியல் தொடர்புகள் ஆழமானது. இந்நாவல் தமிழக மலைவாழ் மக்களின் அவல வாழ்வையும், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறைகளையும், அதற்கெதிரான போராட்ட வழிமுறைகளையும், அந்த மக்களின் எதிர்கால வாழ்வுக்கான நம்பிக்கையையும் - வழியையும் அழகுறச் சுட்டிக்காட்டுகிறது. இதன் ஆசிரியர் கு. சின்னப்ப பாரதியின் நீண்டகால மக்கள் பணியின் அனுபவங்களை நூலை வாசித்து முடிந்ததும் எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அவரது மக்கள் பணிக்கும், இலக்கியச் சாதனைக்கும் எமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தோழமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.' (மேலும்.....)

ஆடி 24, 2012

இராக்கில் தொடர் குண்டு வெடிப்பு  100 பேர் பலி, 100 பேர் படுகாயம்

இராக்கில் ஞாயிறன்று நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 100 பேர் கொல் லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்துள்ளனர். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத் தின் தொடக்கத்தில் இத் தாக்குதல் நடைபெற்றி ருப்பது அந்நாட்டு மக்களி டையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி யிருக்கிறது. இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் ஞாயிறன்று மூன்று இடங்களில் தொடர் வெடிகுண்டு வெடித்தது. இதில் சுமார் 15 பேர் உயிரி ழந்தனர். 60 க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர் என்று அந்நாட்டின் உள் துறை அமைச்சகம் தெரி வித்துள்ளது. இந்த தாக்கு தல் மக்கள் கூடும் இடங் களை குறிவைத்து தொடுக் கப்பட்டிருக்கிறது. குறிப் பாக மார்க்கெட், வாகனம் நிறுத்தும் இடம், மக்கள் அதிகமாக வாழும் குடி யிருப்பு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக் கிறது. (மேலும்.....)

ஆடி 24, 2012

இலங்கையின் இன்னொரு பக்கம்

சென்னையில் நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் தமிழ் ஈழம் குறித்த தீர்மானம் இடம்பெறாது என்று திமுக தலைவர் கருணா நிதி கூறியுள்ளார். டெசோ மாநாட்டிற்கான கருத்துருவை அவர் வெளியிட்டுள்ளார். அதி லும் தமிழ் ஈழத்தை வலியுறுத்துவதற்கான வாசகங்கள் இடம்பெறவில்லை. இலங்கையில் இனப்பிரச்சனை துவங் கிய காலத்திலிருந்தே தமிழ் ஈழம் சாத்தியமா? சாத்தியமில்லையா? என்ற விவாதமும் தமி ழகக் கட்சிகளிடையே நடைபெற்று வரு கிறது. இலங்கை இனப் பிரச்சனைக்கு தமிழ் ஈழம் தீர்வாகாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அதிகபட்ச சுயாட்சி வழங்க வேண்டும். இலங்கையில் தமிழ்மக்கள், பெரும்பான்மை யான சிங்கள மக்களை போன்று அனைத்து நிலைகளிலும் சமமாக நடத்தப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன் பின் முரணின்றி வலியுறுத்தி வந்துள்ளது. (மேலும்.....)

ஆடி 24, 2012

வட மாகாண மருத்துவ அதிகாரிகள் இன்று அடையாள வேலை நிறுத்தம்

வட மாகாணத்திலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளில் கடமையாற்றும் மருத்துவ அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற முறையில் நீதியான விசாரணையை நடத்தும்படி கோரியே இந்த அடையாள வேலை நிறுத்தத்தை நடத்துவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் டொக்டர் பி. நிரஞ்ஜன் நேற்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். போதனா ஆஸ்பத்திரியின் அரச சொத்துகள் துஷ்பிரயோகம் செய் யப்பட்ட சம்பவம் குறித்து நாம் சுகாதார அமைச்சுக்கு ஏற்கனவே பல முறை புகார் செய்தோம். இப்புகார்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு இச் சம்பவம் குறித்து ஆரம்ப விசாரணை நடத்தியது. (மேலும்.....)

ஆடி 24, 2012

வியட்னாம், தாய்வான் சொந்தம் கொண்டாடும் தீவில் சீன படை

சர்ச்சைக்குரிய தென் சீன கடற்பகுதியில் உள்ள தீவுகளுக்கு சீனா இராணுவ படை ஒன்றை அமைக்கவுள்ளது. இதற்கான அனுமதியை சீன அரசு அளித்துள்ளது. இந்த நடவடிக்கை பிராந்திய நாடுகளுக்கு இடையில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இராணுவப் படைத்தளம் வூடி தீவின் சன்ஷா நகரில் அமைக்கப்படவுள்ளது. இந்த நகருக்கு கடந்த ஜூனில் சீன அரசு தனி நிர்வாக சபை ஒன்றையே அமைத்தது. இதில் நகரின் கொங்கிரஸ் சபைக்கு 45 பிரதிநிதிகளையும் சீன அரசு நியமித்துள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு வூடி தீவுக்கு சொந்தம் கொண்டாடும் பிராந்திய நாடுகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. வூடி தீவு அமைந்துள்ள தென் சீன கடற் பகுதியின் பரகல் தீவுகளுக்கு வியாட்னாம், தாய்வானும் சொந்தம் கொண்டாடுகின்றன. எனினும் 1974 ஆம் ஆண்டு மேற்படி இரு நாடுகளுடனான மோதலுக்கு பின் சீனா இந்த தீவுகளை கைப்பற்றின. இங்கு மொத்தம் ஒரு சில ஆயிரம் மக்களே வசிக்கின்றனர். அனைவரும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த தீவுகளுக்கு சீனாவின் மக்கள் புரட்சி படையின் இராணுவ தளம் ஒன்றை அமைத்து தீவுகளின் பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது. சீனாவின் இந்த நடவடிக்கையை ஒட்டி வியட்நாமில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று ள்ளன.

ஆடி 24, 2012

நல்லூர் கந்தன் இன்று கொடியேற்றம்

வரலாற்றுப் புகழ்மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத் திருவிழா நடைபெறுகிறது. இன்று முதல் எதிர்வரும் ஒகஸ்ட் 17ம் திகதி வரை 24 நாட்கள் திருவிழா நடைபெறவுள்ளது. தினமும் காலையிலும் மாலையிலும் நல்லைக் கந்தன் வெளிவீதியுலா வருவார். 10 ம் திருவிழாவான ஒகஸ்ட் 2ம் திகதி மஞ்சத் திருவிழாவும், 18ம் திருவிழாவான கார்த்திகைத் திருவிழா ஒகஸ்ட் 10ம் திகதியும், ஒகஸ்ட் 15ம் திகதி சப்பரத் திருவிழாவும் 16ம் திகதி தேர்த்திருவிழாவும் நடைபெறவுள்ளன. 16ம் திகதி 7 மணிக்கு தேர்த்திருவிழா நடைபெறவிருக்கும் நிலையில் 17ம் திகதி காலை 7 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது. இன்றைய கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை கொன்றடி வைரவர் கோவிலுக்கு அண்மித்த வேல்மடம் முருகன் ஆலயத்துக்கு அருகிலுள்ள செங்குந்தரின் வீட்டிலிருந்து தேரில் பக்தர்களால் எடுத்து வரப்பட்டிருந்தது.

ஆடி 24, 2012

இலங்கையில் முன்னோடி மாவட்டமாக மிளிர்ந்து வரும் மீன்பாடும் தேன்நாடு

எம். எஸ். பாஹிம்...
(அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பான ஊடகவியலாளர்களின் சுற்றுப் பயணத்தின் பின்னர் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.)

லங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ள மாவட்டங்களில் மட்டக்களப்பிற்கு முக்கிய இடமுள்ளது எனலாம். மீன்பாடும் தேன் நாடு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மட்டக்களப்பு எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி) படுவான்கரை (சூரியன்மறையும் பகுதி) என இரு வாவிகளால் பிரிக்கப்படுகிறது. பொதுவாக வெப்பம் கூடிய பிரதேசமாக இருப்பினும் வேறுபட்ட பருவ காலங்களில் வேறுபட்ட மாற்றங்களை கொண்ட மட்டக்களப்பு இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கள், வாவிகள், தீவுகள், மலைகள் என சகல வளங்களும் நிறைந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தமிழ் மக்களும் அடுத்து முஸ்லிம்களும் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் பேர்கர், சிங்களவர் ஆகிய இனத்தவரும் ஒன்றுபட்டு வாழ்கின்றனர். விவசாயம், மீன்பிடித் துறை, கால்நடை வளர்ப்பு என்பனவே இங்கு பிரதான வாழ்வாதார வழிகளாகும்.(மேலும்.....)

ஆடி 23, 2012

நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்க - இந்தயா

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைத் தீர்வுக்கு சர்வதேசத்தை நம்பியிருக்காமல் அரசாங்கம் நியமித்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றி இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வைக் காணவேண்டுமென இந்தியா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே. காந்தா தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்களை அழைத்து இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு எம்.பி.க்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் மாலை யாழ்ப்பாணத்திலுள்ள டெல்கோ ஹோட்டலில் இடம் பெற்றது. இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பு எம்.பி.க்களான மாவை சேனாதிராஜால சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எஸ் சிறிதரன், ஈ சரவணபவன் ஆகியோர் கலந்து கொண்டனர். (மேலும்.....)

ஆடி 23, 2012

இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜி அதிகப்படியான வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டார். மொத்தமுள்ள 10.5 இலட்சம் வாக்குகளில் பிரணாப் முகர்ஜி 5.25 இலட்சம் வாக்குகளைப் பெற்றார். பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் தமது வாழ்த்துக் களைத் தெரிவித்துள்ளனர். இவர் எதிர்வரும் 25ஆம் திகதி முற்பகல் 11.30 மணிக்குப் பதவியேற்கவுள்ளார். கடந்த 19ஆம் திகதி இந்தியக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் நேற்று வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகின. (மேலும்.....)

ஆடி 23, 2012

வாக்குகளை சிதறடிக்காது தமிழ் மக்கள் நிதானமாக செயற்பட வேண்டும்

கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும்கட்சியை விட்டும் பிரிந்து சென்று தனித்து போட்டியிடுவதை நாம் குறையாக பார்க்க முடியாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். சனிக்கிழமை 21 ஆம் திகதி மட்டக்களப்பிலுள்ள சுபராஜ் விடுதியில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே பிரதியமைச்சர் முரளிதரன் மேற்கண்டவாறு கூறினார். கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர் களை அறிமுகம் செய்யும் இந்த ஊடகவிய லாளர் மாநாட்டில் தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிக்கட்சி, அவர்களுக்கென்று கொள்கை இருக்கின்றது.  (மேலும்.....)

ஆடி 23, 2012

விண்வெளிப் பயணத்தின் முதலாவது உயிர்த்தியாகி

உலகின் முதல் விண்வெளிப் பயணி ‘லைக்கா’ என்கிற நாய் ஆகும். 1957 ஆம் வருடம் நவம்பர் மூன்றாம் திகதி ரஷ்யாவின் ஸ்புட்னிக் விண்கலத் தில் பறந்தது லைக்கா. இது சுற்றுப் பாதையில் நான்கு நாட்கள் உயிரோடு இருந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்தார்கள். உண்மையில் ரொக் கெட் கிளம்பும் போது பயத்திலேயே உயிரை விட்டுவிட்டது லைக்கா. இந்த உண்மை கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து 2003 ஆம் ஆண்டுதான் தெரிய வந்தது. ‘நிலவிலே கால் பதித்தவர்’ என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருபவர் நீல் ஆர்ம்ஸ்ட் ரோங். ஆனால், அவரோடு நிலவுக்குச் சென்ற பஸ் ஆல்ட்ரினை நம்மில் பலருக்குத் தெரியாது. உண்மையில் நிலவில் முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் ஆல்ட்ரின்தான். அவரைப் புகைப்படம் எடுக்க அனுப் பப்பட்டவர்தான் ஆம்ஸ்ரோங். அமெ ரிக்க விண்கலம் நிலவில் இறங்கிய கொஞ்ச நேரத்துக்கு தூசு மண்டலம் தரையை மறைக்க, புதைகுழியில் இறங்குவது போன்ற பயம் ஆல்ட்ரினு க்கு வந்துவிட்டது. எனவே அவர் இறங்கவில்லை. இதைக் கவனிக்காமல் ஆம்ஸ்ட்ரோங் இறங்கிவிட்டார். இந்த குற்ற உணர்ச்சியாலோ என்னவோ ஆம்ஸ்ட்ரோங் நிலாவில் தன்னை ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ளவில்லை.

ஆடி 23, 2012

நீதியிலும் ஏகாதிபத்திய ‘திமிர்‘!

அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறு வனம் போபாலில் விஷவாயுவை கசிய விட்டதன் மூலம் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த துயரச்சம்பவம் குறித்த வழக்கில் அமெரிக்க நீதி மன்றம் துளியளவும் நீதியை பார்க்காமல் அநீதி யான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதுவும் ஆண் டர்சனுக்கும், அவரது கம்பெனிக்கும் சிறிதும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்ற எண்ணத் தோடு அந்நிறுவனத்தின் தலைமை இயக்கு நரின் வாதம் போன்று தீர்ப்பின் வரிகள் அமைந் திருக்கின்றன. (மேலும்.....)

ஆடி 23, 2012

வங்கத்தில் காங்கிரசுடன் உறவு முறிந்தது  - மம்தா

காங்கிரஸ் மேலிடத் திற்கு மேற்கு வங்கத்திலிருந்து ஓர் கடுமையான செய்தியை மம்தா பானர்ஜி தெரிவித்தி ருக்கிறார். மேற்குவங்கத்தில் காங்கிரசுடனான உறவு முறிந்துபோய்விட் டது என்று அவர் அறிவித்திருக்கிறார். எனினும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச் சரவையில் தொடர்வதாக கூறியிருக் கிறார். “எவர் ஒருவரின் கருணையிலும் நாங்கள் ஆட்சி நடத்த விரும்பவில்லை. தில்லியைப் பொறுத்தவரை நாங்கள் அமைச்சரவையிலிருக்கிறோம், தொடர்ந்து நீடிப்போம். ஆனால் வங்கத்தில் உறவு முறிந்துவிட்டது. நாங்கள் தனியாக செல்கிறோம்” என்று கொல்கத்தாவில் சனிக்கிழமை திரிணா முல் காங்கிரஸ் நடத்திய கூட்டத்தில் மம்தா பானர்ஜி கூறினார். மேற்குவங்க மாநிலத்திற்கு மத்திய அரசு கடன் வட்டி தள்ளுபடி செய்ய மறுப்பதாகவும், தான் கேட்கும் நிதி யை ஒதுக்க மறுப்பதாகவும் புகார் கூறிய மம்தா, தேவைப் பட்டால் மத்திய அர சை எதிர்த்து தில்லி நோக்கி போராட் டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என்றும் கூறினார். மத்திய அரசில் நீடிப் போம் என்று கூறிவிட்டு அடுத்த நொடி யே அதே மத்திய அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்றும் மம்தா கூறியது கூட்டத்தில் பங்கேற்ற அவரது கட்சித் தொண்டர்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தனது கட்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியோடு சேர்ந்துகொண்டு காங்கிரஸ் சதி செய்கிறது என்று தனது வழக்கமான பல்லவியையும் மம்தா பாடி னார்.

ஆடி 23, 2012

அமெரிக்க வல்லூறின்  அத்துமீறிய செயல்

அமெரிக்கக் கடற்படையால் நடுக்கடலில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள் ளது. ஐக்கிய அரபு வளைகுடாவில் நிறுத்தப்பட் டிருந்த அமெரிக்கக் கடற்படையின் ரப்பனாக் என்ற கப்பலை நோக்கி மீன்பிடி படகு முன் னேறியதால்தான் தாக்குதல் நடத்தவேண்டிய தாயிற்று என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அலுவலகமான பென்டகன் கூறியுள்ளது. அமெரிக்காவின் வாதம் முற்றிலும் பொய் என்பதை சங்கருடன் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் வாக்குமூலங்கள் வெளிப்படுத்து கின்றன. எந்தவித எச்சரிக்கையும் செய்யாமல் துப்பாக்கியால் சுட்டனர் என்றும் தாங்கள் பதுங் கிக் கொண்டதால் உயிர் பிழைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். (மேலும்.....)

ஆடி 22, 2012

நாளைக்கு கறுப்பு ஜூலை என்பது எத்தனைபேருக்கு நினைவிருக்குமோ?

நாளைக்கு கறுப்பு ஜூலை தினம். அதை அனுபவித்தவர் களிடம் கேட்டால் உடம்பெல்லாம் புல்லரித்துப் போவர். ஒரு கணம் தம்மை மறந்து நிலை குலைந்து விடுவர். கறுப்பு ஜூலையா அப்படியெண்டால் என்னவென்று கேட்கிற தமிழ்ச்சனமும் இருக்கத்தான் செய்யினம். ஐக்கிய தேசியக் கட்சிக்காரர் காடையரைக் கொண்டு அன்று செய்த சதி இருபத்தொன்பது வருடமாகியும் மாறாத வடுவாக நமது நாட்டு வரலாற்றில் இருத்து கொண்டே இருக்கிறது. அதுக்குப் பிறகு தமிழரது உரிமைக்காக என்று உருவான புலி அமைப்பும் தன்ர கொள்கையை மாற்றியமைத்ததால் இல்லாதொழிக்கப் பட்டுவிட்டது. ஆனால் அப்போது ஆரம்பமான பல இயக்கங்கள் இன்று அரசியல் கட்சிகளாக உள்ளன. அவையாவது தமிழருக்குத் தீர்வு கிடைக்க முயற்சிக்க வேண்டும்.

ஆடி 22, 2012

தமிழினத்தை அடக்கியாள முனைந்த ஆடிக்கலவரம்

(இந்தப் புகைப்படத்தை ஒரு சிங்கள சகோதரர் புகைப்படம் பிடித்தார் என்பது கவனத்தல் கொள்ளப்பட வேண்டும்) (மேலும்....)

ஆடிக்கலவரம், அது இடம்பெற்று இருபத்தொன்பது வருடங்கள் கழிந்து விட்டன. ஆனாலும் அதன் தாக்கம் தமிழர் மனங்களிலிருந்து இன்னமும் அகலவில்லை. இலங்கையின் வரலாற்றில் கறைபடிந்த தினங்களாகவே 1983 ஜுலை இனக்கலவரம் அமைந்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில் அதிகாரத்தின் உச்ச நிலையைப் பயன்படுத்தி அன்றைய ஆட்சியாளர்களின் அனுசரணையுடன் நடச்தேறிய ஒரு இனச் சுத்தி கரிப்புச் செயற்பாடே ஆடிக் கலவரமாகும். தமிழ் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாக அமைந்துள்ள அந்த நாட்களின் வலிகளை எண்ணிப்பார்க்கவும் முடியாதுள்ளது. தமிழரின் உடைமைகளுக்கு மட்டுமல்ல உயிர்களுக்கும் தீவைத்துக் கொளுத்தி மகிழ்ந்த காடையர்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமாறு படையினருக்குப் பணித்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியாளர்களில் பலர் இன்று உயிருடன் இல்லை. என்றாலும் சிலர் அதே கொடூர விஷத்துடன் இன்றும் கட்சியை வழிநடத்தி வருகின்றனர். (மேலும்.....)

ஆடி 22, 2012

பொறுப்பும் பொறுப்பின்மையும்

(இக்கட்டுரையில் சொல்லப்பட்ட விடயம் 'நம்ம' இசைப்பிரியா, சனல் 4, புலம் பெயர் தேசத்து புலி ஊதுகுழல்களுக்கும் பொருந்தும் - சாகரன்)

“ஒருவர் தீக்குளித்தால் அதைத் தடுப்பதும் தீயை அணைப்பதும் சமூக சேவ கர் வேலை; அதைப்படம் பிடிப்பதும் செய்தி யாக்குவதும் பத்திரிகையாளன் வேலை” என்பது நான் ஊடகத்துறையில் சேர்ந்த போது மூத்தோர் சொல்லித்தந்த பாலபாடம். அசாம் மாநிலத்தில் ஒரு பெண் பட்டப் பகலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தும் அதனைப் படம் பிடித்து ‘நியூஸ் லைவ்’ என்ற தொலைக்காட்சி அலைவரிசை வெளி யிட்டதும் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள் ளது. ஆளும் வர்க்கமோ அதிகார வர்க் கமோ மக்களுக்கு இழைக்கும் கொடுமை களைப் படம் பிடித்து அம்பலப்படுத்துவதும் இளம் பெண் ஒருவருக்கு சமூக விரோத கும் பலால் இழைக்கப்படும் கொடுமையைப் படம் பிடித்து நேரலை போல் காட்சிப்படுத்துவதும் சமமாகுமா? படம்பிடிக்கப்பட்டாலும் அதை வெளியிடுவதா? வேண்டாமா? எந்த அள வுக்கு என்பதையெல்லாம் தீர்மானிக்கும் பொறுப்பு தொலைக்காட்சி அலைவரிசைக்கு இல்லையா? ‘நியூஸ் லைவ்’ என்பதால் இப்படிப்பட்டக் கொடுமைகளை உள்ளது உள்ளபடி காட்டுவது பொறுப்பா? பொறுப் பின்மையா? (மேலும்.....)

ஆடி 22, 2012

 

அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 54 பேர் நிலாவெளியில் கைது

திருகோணமலை நிலாவெளிப் பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 54 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 41 தமிழர்கள், முஸ்லிம்கள் ஐவர் மற்றும் சிங்களவர்கள் 7 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் பெண்கள் ஆவர். திருகோணமலை நிலாவெளி பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை, நீர்கொழும்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரியவந்துள்ளது. இவர்கள் தற்போது திருகோணமலை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை தெரிவித்துள்ளது.

ஆடி 22, 2012

புலிக்கொடி சம்பவம் தொடர்பாக யாரும் முறையிடவில்லை: யாழ். பிரதி பொலிஸ் மா அதிபர்

நெல்லியடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது புலிக்கொடி காட்டியச் சம்பவம் தொடர்பாக யாரும் பொலிசாரிடம் முறையிடவில்லை. அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெற்றதாக யாராவது முறையிட்டால் தாம் அது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் இடையேயான சந்திப்பு யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் இன்று பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் ஊடகவியலாளர்கள் நெல்லியடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது புலிக்கொடியுடன் மோட்டார் சையிக்கிளில் திரிந்தவர்களை பொலிசார் கைது செய்யாமை பற்றி கேட்ட போது பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடரந்து கருத்து தெரிவித்த அவர், ஊடகங்களில் படங்கள் பிரசுரிக்கப்பட்டள்ளன. ஆனால் படங்களில் முகங்கள் அடையாளம் தெரியாததுடன் மோட்டார் சையிக்கிள் இலக்கங்களும் தெரியவரவில்லை. இத்தகைய நிலையில் எதன் அடிப்படையில் யாரை கைது செய்வதெனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடி 22, 2012

ஒக்டோபர் 26 வெளியாகிறது, விண்டோஸ் 8

விண்டோஸ் 8 இயங்குதளமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 8 இயங்குதளமானது விற்பனையில் சாதனை புரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மைக்ரோசொப்டின் வரலாற்றில் அதன் மற்றைய இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மாறுதல்களுடன் வெளியாகும் இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது. புரட்சிகரமான மெட்ரோ யு.ஐ இனைக் கொண்டதுடன், புதுமையான பல வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் பீட்டா தொகுப்பு ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது இறுதி வெளியீடான விண்டோஸ் 7 ஐ விட 8 ,பல மடங்கு திறன் வாய்ந்தது என மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது. டெஸ்க்டொப் கணனிகள் மட்டுமன்றி டெப்லட், லெப்டொப் ஆகியவை இயங்கும் வகையிலேயே விண்டோஸ் 8 உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடுதிரைகளைக் கொண்ட சாதனங்களுக்கு இது இன்னும் சிறப்பாக செயற்படுமென மைக்ரோசொப்ட் தெரிவிக்கின்றது.

ஆடி 22, 2012

 

கொழும்பு வந்த சொகுசு பஸ் இயக்கச்சியில் கவிழ்ந்தது மூவர் பலி, 20 பேர் படுகாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து சனிக்கிழமை இரவு கொழும்பு நோக்கி வந்த பயணிகள் சொகுசு பஸ் ஒன்று இயக்கச்சியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு கவிழ்ந்ததில் மூவர் உயிரிழந்ததுடன், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
42 பயணிகளுடன் கொழும்பு நோக்கி மிகவேகமாக  வந்து கொண்டிருந்த இந்த பஸ், இயக்கச்சி சந்தி வளைவில் திரும்பிய போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது. இதனால் பஸ் மூன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் குத்துக்கரணமடித்துள்ளதாகவும் பஸ்ஸிலிருந்த பயணிகளில் வயோதிபர்களான ஆணொருவரும் பெண்ணொருவரும் மற்றொருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இரவு சுமார் 10 மணியளவில் இந்த விபத்து நடைபெற்ற போது இந்த பஸ்ஸின் பின்னால் வந்த பஸ்ஸிலிருந்தவர்கள் விபத்துக்குள்ளான பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததை பார்த்துள்ளனர். இதையடுத்து அவர்களும் வேறு பஸ்களில் வந்தவர்களும் விபத்துக்குள்ளான பஸ்ஸிலிருந்தவர்களை மீட்டதுடன், பின்னர் அங்கு வந்த படையினரின் உதவியுடன் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்துக்குள்ளான பஸ்ஸின் சாரதி காயமடைந்த நிலையில் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அதெப்படி விபத்து நடைபெறும் போதெல்லாம் வாகன சாரதி யமடையாமல்? தலை மறைவாகி போவது மட்டும் எப்போதும் நடைபெறுகின்றது.

ஆடி 22, 2012

கிழக்கு தேர்தல் முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸுக்கு சாதகமாக அமையாது முன்னாள் முதலமைச்சர்

 

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியை தீர்மானிக்கின்ற,சவால் விடுகின்ற, பெரும் சக்தியாக வருமளவுக்கு தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அமையாது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.மட்டக்களப்பில் 6பேரும் அம்பாறையில் 3பேரும், திருகோணமலையில் 3பேரும் போட்டியிடுகின்றோம். இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்தது 5ஆசனங்களையும், அம்பாறை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் அதே போன்று திருகோணமலை மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையும் பெற்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அதிகமான ஆசனங்களைப் பெறும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள் அதிகமான ஆசனங்களைப் பெறும் கட்சிக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்படும். (மேலும்.....)

ஆடி 22, 2012

பூமிக்கு அருகே உயிர்கள் வாழக்கூடிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு

பூமிக்கு அருகே மேலும் புதிய கிரகம் இருப்பதை கலிபோர்னியா விண்வெளி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்கழகம், வாஷிங்டன் கார்னேஜி நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அதில், பூமிக்கு அருகே மேலும் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். 22 ஒளி வருட தூரத்தில் உள்ள இந்த கிரகத்திற்கு 'கிளிசெ 581ஜி' என்று பெயரிட்டுள்ளனர். பூமியை விட இரு இருமடங்கு பெரிதாக உள்ள இந்த கிரகத்தில் உயிர் வாழ முடியும் எனவும் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி ஸ்டீபன் வோட் கூறுகையில், இங்கு திரவம் உறைந்த நிலையில் காணப்படுகிறது என்றும் அவை மேற்பரப்பில் உறைந்து கிரகத்திற்குள் பாய்ந்து செல்லும் தன்மையுடனும் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆடி 22, 2012

கூட்டிணைந்ததன் வெற்றியைப் பற்றிக்கொள்ள

தலைவர்கள் உணர்ந்த உண்மைகளை தொண்டர்களும் உணர வேண்டும்

சபரகமுவவில் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துக் களமிறங்க முடியுமானால் ஏன் முஸ்லிம் காங்கிரஸால் முடியாது என்றும் மலையகத்தில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை ஏன் வடக்கு கிழக்கில் ஏற்படுத்த முடியவில்லை என்றும் கேள்விகள் எழாமல் இல்லை. அதன் தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனிவழி சென்றிருந்தாலும் அஃது ஏனைய முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைத்துக்கொள்வதில் தோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்த வரை சாத்தியமில்லாத முஸ்லிம் காங்கிரஸடன் கூட்டுச் சேர முயற்சிகளை மேற்கொண்டதே தவிர ஏனைய தமிழ்க் கட்சிகள் தொடர்பில் அக்கறை கொள்ளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை இந்த மாகாண சபைத் தேர்தலுக்கு அரசியல் அங்கீகாரத்தைக் கொடுத்துவிடாமல் தாமும் வெற்றி பெறாமல், ஆளுங்கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டடையே கொண்டிருக்கிறது. ஆனால், முஸ்லிம் காங்கிரஸைப் பொறுத்தளவில், அதன் வெற்றி தோல்வியில்தான் எதிர்காலத் திட்டத்தை தீர்மானிக்க வேண்டியிருக்கிறது. (மேலும்.....)

ஆடி 22, 2012

பக்குவமாகக் கையாளாமல்  பதற்றத்தை ஏற்படுத்தலாமா?

அறிவியல் கண்ணோட்டம் வளர்க்கப்படாத, வாழ்க்கை நிலைமைகளில் முன்னேற்றங்கள் ஏற்படாத, நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பி லிருந்து இன்னும் விடுபடாத சமுதாயத்தில் மக்கள் தங்களது பழைய நம்பிக்கைகளி லிருந்தும் சடங்குகளிலிருந்தும் அவ்வளவு எளி தில் வெளிவந்துவிட மாட்டார்கள். அவர்களி டையே சரியான புரிதல்களை ஏற்படுத்துவதற்கு மாறாக, அச்சுறுத்துவதன் மூலமாகவும், அடக்கி ஒடுக்குவதன் மூலமாகவும் புதிய ஆணை களை நடைமுறைப்படுத்த முயல்வது, அந்த ஆணைகள் எவ்வளவு நியாயமானவை என்ற போதிலும் எதிர்மறை விளைவுகளையே ஏற் படுத்தும். சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்துக் கோவில் விழாவின் எருதாட்டு நிகழ் வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 19 அன்று அங்கே ஏற்பட்ட வன்முறை மோதல் இந்த உண்மையைத்தான் உரத்துச் சொல்கிறது.
(மேலும்.....)

ஆடி 22, 2012

தேசியப் பிரச்சினைக்கான தீர்வும் பரிமாணங்களும்

நவீன காலத்தில் இலங்கையின் தேசியப்பிரச்சினையில் தெளிவான இரு பரிமாணங்கள் காணப்படு வதை உணர முடிகிறது. முதலாளித்துவத்தின் கீழ் பல்வேறு இனப்பிரிவுகள் - தேசிய அக்கறைக்குள் தூண்டப்பட்டமை மற்றும் பிரிட்டிஷாரின் கீழ் குடியேற்றவாதம் ஆரம்பித்த காலம் ஆகியவற்றை கூற முடியும். முதல் பரிமாணமானது குடியேற்றவாதத்திலிருந்து / சுதந்திரம் அடையாளப்படுத்தியது. அல்லது இன்னும் இதுவரையில் அடையாளப்படுத்துகிறது. 1948 சுதந்திரத்துக்குப்பிறகு குடியேற்ற வாதத்திலிருந்து சுதந்திரம் / அல்லது தற் போது காண்பது போன்ற ஏகாதிபத்தியவாதம் அல்லது வெளிவாரித்தலையீடு களாகும். அடிப்படையில் மேற்குலகில் இருந்து எழுகின்ற தலையீட்டைக் குறிப்பிடலாம். இதனையே தேசியப்பிரச்சினையின் வெளியாக பரிமாணம் என கருத்தேற்றம் செய்யப்படுகிறது. (மேலும்.....)

ஆடி 22, 2012

யாழ்.தேவி

தென் மாகாணத்திற்கும் வட மாகாணத்திற்குமான உறவுப் பாலமாக ஆரம்பிக்கப்பட்ட “யாழ்தேவி” புகையிரத சேவை - 411 மீற்றர் தூரத்தைக் கொண்ட கொழும்பு கோட்டைக்கும் காங்கேசந்துறைக்கு மிடையில் இடம்பெற்றது. இந்த புகையிரத சேவையினூடாக தமிழர்கள், சிங்களவர்கள், மற்றும் முஸ்லிம்கள் என அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடனும் பயணம் செய்தனர். கொழும்பில் தொழில்புரியும் வட மாகாணத்தை சேர்ந்தவர்கள் வார இறுதி நாட்களில் தங்களின் சொந்த ஊர்களில் விடுமுறையை கழிப்பதற்காக இந்த புகையிரதத்தையே பயன்படுத்தினர். இதற்கு மேலதிகமாக கப்பல் மூலம் இந்தியாவுக்கு செல்வோரும் இந்த புகையிரதத்தின் மூலமே மதவாச்சி சென்றனர். பின்னர் அங்கிருந்து தலைமன்னார் சென்று இந்தியா செல்வது வழமை. (மேலும்.....)

ஆடி 22, 2012

உல்லாச புரியாக மாறிவரும் கிழக்கின் பாசிக்குடா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பாசிக்குடா பகுதியில் அமைக்கப்பட்டு வரும் உல்லாச பயணிகளுக்கான ஹோட்டல்களுக்கு தேவையான ஹோட்டல் உத்தியோகஸ்தர்களை பயிற்றுவிக்க மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹோட்டல் பணியாளர் பயிற்சி பாடசாலையொன்று அமைக்கப்படும் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 22, 2012

வடக்கு சர்வாதிகாரத்தை கிழக்கிலும் ஏற்படுத்த தமிழ் கூட்டமைப்பு முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு கிழக்கு மாகாண மக்கள் உரிய பாடம் கற்பிப்பார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் யாழ்ப்பாணத்தில் சர்வாதிகார அரசியலை முன்னெடுத்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கிழக்கிலும் அந்நிலையை ஏற்படுத்த முனைந்துள்ளனர் எனவும் அதற்கு கிழக்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்காது எதிர்வரும் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார். சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுக்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பிளவுபடும். நடைபெறவுள்ள தேர்தலில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சகல இன மக்களையும் ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிடுவோம்.

ஆடி 21, 2012

500 ஆண்டு பழைமை வாய்ந்த யாழ். பழைய பூங்கா புதுப் பொலிவுடன் திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் பழைய பூங்கா வெள்ளிக்கிழமை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழரின் வரலாற்றுப் பொக்கிஷமான இந்தப் பூங்கா 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. கடந்த யுத்த நடவடிக்கையின் போது முற்றாக சிதைவடைந்த இந்தப் பூங்கா புதுப் பொலிவுடன் திறந்துவைக்கப்பட்டது.
யாழ்.  மாவட்ட செயலகத்திற்கு முன்னால் உள்ள பழைய பூங்காவின் கேணியுடன் அண்டிய முன்பகுதி வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் பொழுது போக்குமையமாக மாற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. 18 மில்லியன் ரூபா செலவில் இப்பூங்கா புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் புனரமைப்புச் செய்யப்பட்ட பனை ஆராய்ச்சி நிறுவனமும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினரால் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
(மேலும்.....)

ஆடி 21, 2012

பனம் சாராயத்தை நவீனப்படுத்தி, அதன் சந்தை வாய்ப்பினை பெருக்கிக் கொள்வது தொடர்பில் அமைச்சர் தலைமையில் ஆராய்வு

யாழ் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பனம் சாராயத்தை நவீனப்படுத்தி, அதன் சந்தை வாய்ப்பினை பெருக்கிக் கொள்வது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள அமைச்சரின் செயலகத்தில் மேற்படி விடயம் தொடர்பாக இன்றையதினம்  கலந்துரையாடப்பட்டது. இதன்போது யாழ் மாவட்டத்திலுள்ள பனை, தென்னை அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் - யாழ்ப்பாணம், தென்மராட்சி, வலிகாமம், மற்றும் வடமராட்சி ஆகிய 04 கொத்தணிகளையும் ஒன்றிணைத்து தனியார் கம்பனி ஒன்றினை உருவாக்குவதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் பனம் சாராயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் கூடியதாக உற்பத்திகளைச் செய்வதினூடாக சிறந்த சந்தை  வாய்ப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும்.இதன்பிரகாரம் எதிர்காலத்தில் பனந்தொழில் சார்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய வாய்ப்புக்கிட்டியுள்ளது. யாழ் மாவட்டத்தில் 19 பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டறவுச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இக்கலந்துரையாடலின்போது பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் (உதயன்), பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், வடமாகாண மதுவரித் திணைக்களப் பணிப்பாளர் கிறிஸ்டி ஜோசப் உள்ளிட்ட துறைசார்ந்தோர் பலரும் கலந்துகொண்டனர்.

ஆடி 21, 2012

BASL wants Minister arrested

(BY LAKMAL SOORIYAGODA)

The Bar Association of Sri Lanka (BASL) at a meeting with the Attorney General had requested that necessary action be taken to arrest the minister and other suspects who were involved in a mob attack on the Mannar Courts complex. BASL President Wijedasa Rajapakse PC said he met the AG at his office and requested him to take necessary action to arrest those involved in the incident including a government minister. Mr. Rajapakse said all lawyers in the country refrained from carrying out their duties in Courts yesterday in protest over the mob attack on the Mannar Courts complex. Mr. Rajapakse said the BASL had taken a decision to file contempt of court charges in the Court of Appeal against those involved in the attack. Work at all Courts in the country came to standstill after the BASL and Judges Associations refrained from carrying out their normal duties in protest over the threats on Mannar Magistrate by a minister and the attack on the Mannar Court complex. (more...)

 

ஆடி 21, 2012

 

வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்

தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம்

'கள்ளத்தனமாக ஆஸ்தி​ரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற  ஈழ அகதிகள் கேரள போலீஸாரிடம் பிடிபட்டார்கள்’, 'திருவண்ணாமலையில் நடைபெற்ற சமூக சேவகர் கொலையில் போலிக் குற்றவாளிகளாக அகதி முகாம் இளைஞர்கள் இருவர் சரண்’, 'அகதி முகாமில் பெண் தற்கொலை’ என்று அடிக்கடி செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அகதி முகாம் மக்களது வாழ்க்கை நிலைமை என்ன என்பதை அறிய மண்டபம் முகாம் பற்றி விசாரித்தோம்!  மண்டபத்தில்தான், தமிழகத்திலேயே பெரிய அகதிகள் முகாம் இருக்கிறது. ஆங்கிலேயர்கள் காலம் தொடங்கி இயங்கிவருகிறது. ஈழப் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் முதலில் வந்து சேர்வது, இங்கேதான். இங்கே இருந்துதான் தமிழகம் முழுக்க உள்ள 103 முகாம்களுக்கும் பிரித்து அனுப்பப்படுவார்கள். மண்டபம் அகதி முகாமில் உள்ளவர்களின் உண்மை நிலை குறித்து அறிந்து வந்திருக்கிறார் ராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா. அவரிடம் பேசினோம். (மேலும்.....)

ஆடி 21, 2012

முரண்பாட்டுடனன்றி இணக்கப்பாட்டுடன் தனித்துப் போட்டி

தேர்தலின் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட இணக்கம் காணப்பட்டுள்ளது

கடைசி நிமிடம் வரை அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதற்கே முஸ்லிம் காங்கிரஸ் முன்னுரிமை வழங்கியது. வேட்புமனுத் தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைய 24 மணி நேரம் இருக்கும் நிலை யிலே தனித்துப் போட் டியிட முடிவு செய்யப் பட்டது என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முரண்பாட்டுடன் அன்றி அரசாங் கத்துடன் இணக்கப்பாட்டுடனே மு.கா. கிழக்கில் தனித்துப் போட்டி யிடுகிறது. தேர்தலின் பின் அரசாங்கத் துடன் இணைந்து செயற்பட வாய் மூலமான இணக்கப்பாடு எட்டப்பட் டுள்ளது எனவும் அவர் கூறினார். (மேலும்.....)

ஆடி 21, 2012

சிரியாவுக்கு எதிரான அமெ. தீர்மானம் தோல்வி

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிரியா மீது பொருளா தாரத் தடை விதிக்க வேண்டும் என்று பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடு கள் கொண்டு வந்த தீர்மானம் தோல்வியடைந்தது. ரஷ்யா வும், சீனாவும் தங்களது ரத்து அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வியுறச் செய்தன. சிரியாவில் அரசியல் நிலையற்ற தன்மை நீடித்து வருகிறது. அதனை பயன் படுத்தி, அமெரிக்கா தனக்கு சாதகமான நபர் ஆட்சி அதி காரத்திற்கு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகி றது. தற்போது சிரிய ஜனாதி பதியாக இருக்கும் பஷார் அல் அஸாத், அமெரிக்காவின் நிர்ப் பந்தத்திற்கு பணிய மறுத்து வருகிறார். இந்நிலையில் அந் நாட்டில் குழப்பத்தை விளை விக்க அமெரிக்காவின் உளவு பிரிவான எப்பிஐ உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து முயன்று வருகின் றன. குறிப்பாக துருக்கி வழி யாக சிரியாவிற்கு ஆயுதங் களை விநியோகித்து, உள் நாட்டு கலவரத்தை தீவிரப் படுத்தி வருவதாக அரபு நாடு கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. (மேலும்.....)

ஆடி 21, 2012

அமெரிக்க திரையரங்கில் மர்மநபர் துப்பாக்கிச்சூடு, 12 பேர் பலி, 50 பேர் படுகாயம்

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் தலைநகர் டென்வரின் புறநகர் பகுதியான அரோராவில் அமைந்துள்ள திரையரங்கமொன்றினுள் புகுந்த முகமுடி அணிந்த மர்ம நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகியுள்ளதுடன் 50 பேர் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டு நேரப்படி நள்ளிரவு 12.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அம்மாகாணத்தின் புறநகர் பகுதியான அரோராவில் உள்ள சென்ச்சுரி அரோரா-16 மூவி என்ற திரையரங்கிலேயே இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த திரையரங்கில் 'பெட்மேன் தி டார்க் நைட் ரைசஸ்' படம் வெளியாகியுள்ளது. இதன் போது உள்ளே நுழைந்த மர்ம மனிதனொருவன் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியுள்ளான். இந்தப் புகைமூட்டத்தின் நடுவே அவன் பார்வையாளர் வரிசையை நோக்கிச் சரமாரியாகச் சுட்டான். இதில் 12 பேர் பலியானார்கள். 50 பேருக்கும் மேல் படுகாயமடைந்தனர் என டென்வர் மாகாணான பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவன் துப்பாக்கியால் 15 நிமிடங்கள் சுட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். அம் மர்ம நபரிடம் 3 துப்பாக்கிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தனது கண்டனத்தினை வெளியிட்டுள்ளார்.

ஆடி 21, 2012

ஆடி 21, 2012

நியாண்டர்தால்கள் வேட்டையாளர்களல்ல! 

உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் நியாண்டர்தால்களின் எலும்புகளின் அம்சங்கள் குறித்த ஆய்வை நடத்தினர். பொதுவாகவே, நியாண்டர்தால்கள் என்றால் வேட்டையாடுபவர்கள் என்றுதான் நாம் அறிந்துவைத்திருக்கிறோம். விலங்குகளை வேட்டையாடுவதற்காக, அதிக எடையுள்ள ஈட்டிகளையும், ஆயுதங்களையும் பயன்படுத்தியதால் அவர்களது உடல் மிகவும் வலிமையானதாக மாறியதாக வரலாறு தெரிவித்தது. ஆனால், விலங்குகளிடமிருந்து தங்களை காத்துக்கொள்வதற்காக, கடுமையான பாறைகளை செதுக்கி குகைகளைஉருவாக்கவும், ஆடைகளை தயாரிப்பதற்குமே பெரும்பகுதி நேரத்தை செலவிடுவது தெரியவந்துள்ளது. இதற்காக கடினமான வேலைகளை அவர்கள் செய்ததால்தான் எலும்புகள் மிகவும் வலிமையாக மாறியதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவிக்கையில், நியாண்டர்தால்கள் வேட்டையாளர்கள் என்ற கோணத்திலிருந்து மாறி, நாங்கள் எங்களது ஆராய்ச்சியை மேற்கொண்டோம். இதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. நியாண்டர்தால்கள் வேட்டையாளர்களல்ல. அவர்கள் வேட்டையாடுவதை விட குகைகளை கட்டுதல், ஆடைகளை வடிவமைத்தல் போன்ற மற்ற வேலைகளிலேயே அதிக நேரத்தைசெலவிட்டுள்ளனர். நியாண்டர்தால்களின் இடதுகையின் பலத்தை விட அவர்களது வலது கையின் பலம் 50 சதவிகிதம் கூடுதலாக உள்ளது. இவர்களின் கைகள் நவீன கால மனிதனின் கைகளை விட மிகவும் வலிமையாக உள்ளது. வேட்டையாடுவது அவர்களின் முக்கியப் பணியாக இருந்தாலும், அதுவே பிரதானமாக இல்லை. அவர்களது எலும்புகளை ஆய்வு செய்து பார்க்கையில், நியாண்டர்தால்கள் ஈட்டிகளை தங்களது கைகளுக்கு அடியில் வைத்துத்தான் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆடி 21, 2012

மன்னார் நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் கவனம்

மன்னார் நீதிமன்ற சம்பவத்தை தொடர்ந்து எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பி னர்களுடன் பேசிவருவதாகவும் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேற்படி சம்பவத்தை கண்டிப்பதாக வும் அது குறித்து கவலையடைவதா கவும் கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக பிரதம நீதியரசர் கவனம் செலுத்தியுள்ளதோடு அது குறித்து நீதிச் சேவை ஆணைக்குழு என்னு டன் கலந்தாலோசித்தது. இந்தப் பிரச்சினை பூதாகரமாகியிருப்பது குறித்து சட்டத்தரணிகள் சங்க தலைவருடனும் பேசினேன். நாம் மன்னாருக்குச் சென்று இது குறித்து பேசவும் திட்டமிட்டு ள்ளோம். இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டாலும் விசாரணை முடிவிலே உண்மை வெளியாகும். அதுவரை எதுவும் கூற முடியாதுள்ளது. சில சட்டத்தரணிகள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் வழக்கு தொடர தயாராவதாகவும் அறிகிறோம்.

ஆடி 21, 2012

அமெரிக்காவில் கடுமையான வறட்சி   விலைகள் கிடுகிடு உயர்வு

அமெரிக்காவில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இத னால் பொருட்களின் விலை யும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள் ளாகியுள்ளனர். இது குறித்து அமெரிக்க வேளாண்துறை செயலா ளர் டாம்வில்ஜாக் வெள் ளை மாளிகையில் நடை பெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது : அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான வறட்சி யில் 61 சதவிகித விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டி ருப்பது உறுதிப்படுத்தப்பட் டிருக்கிறது. பயிரிடப்பட் டிருந்த 78 சதவிகித சோளப் பயிர்கள் வறட்சியால் கருகி யிருக்கின்றன. இதே போல் 77 சதவிகித சோயா பீன்ஸ் பயி ரும் பாதிக்கப்பட்டிருக் கிறது. இதற்கு கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அள விற்கு தற்போது அமெரிக் காவில் நிலவும் கடும் வறட் சியே காரணம் ஆகும். இத னால் உணவுப் பொருட்க ளின் விலையும் உயர்ந்து வரு கிறது. (மேலும்.....)

ஆடி 21, 2012

புதிய விமான நிலையங்கள், துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்

யுத்தம் முடிவடைந்து 3 ஆண்டுகளுக்குள் நாட்டின் அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் சிறப்பான முறையில் இன்று நிறைவேற் றிக் கொண்டிருக்கிறது. பாதைகளை அகலப்படுத்தி செப்பனிடும் பணி நகரங்களில் மட்டுமன்றி கிராமப் புறங்களிலும் பாரபட்சமின்றி மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றை விட நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள் ஆகியனவும் வேகமாக நிர்மாணிப்படுகின்றன. (மேலும்.....)

ஆடி 20, 2012

Sri Lanka police arrest former LTTE leader of Batticaloa

Sri Lanka police had arrested a former Tamil Tiger terrorist leader at the airport yesterday upon his return to Sri Lanka. Police Media spokesman Superintendent of Police Ajith Rohana has said that a former leader of the terrorist group Liberation Tigers of Tamil Eelam (LTTE) Sinnatambi Pathmanathan has been arrested by the Terrorism Investigation Bureau Tuesday when he returned to Sri Lanka after staying abroad. Pathmanathan is the LTTE leader for the Batticaloa area in the Eastern province and he has fled the country in 2002, Hiru FM reported. He had reportedly led several terrorist attacks in the East and is believed to be responsible for the attack on Kalkuda police station during the war time.

ஆடி 20, 2012

முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஆர்ப்பாட்டம்

மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவ சமூகத்திற்கு சொந்தமான கோந்தபிட்டி மீனவ வாடிகளை விடத்தல்தீவு மீனவர்கள் பலாத்காரமாக பிடித்துள்ளதையடுத்து ஏற்பட்ட முறுகல் நிலையில் உருவான கலவரத்தில் பலர் கைது செய்யப்பட்டும் பலர் காயங்களுடன் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு வாழும் முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் அவர்களின் காணிகளை அவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கக் கோரியும் , அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் வழங்குமாறு கோரியும் இன்று ஜும்ஆ தொழுகையின் பின் காத்தான்குடி-05 ஜாமியுழாபிரீன் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். ஆர்பாட்டம் ஆரம்பமானதைத் தொடர்ந்து அங்கு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஆடி 20, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட சகல கட்சிகளும் இன்று வேட்புமனுத் தாக்கல்

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, உட்பட சுயேட்சைக்குழுக்கள் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தன. இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதித் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பொன் செல்வராசா, மற்றும் அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் சட்டத்தரணி கே.துரை ராஜசிங்கம் , ஜனா ஆகியோர் மாவட்ட செயலகத்தில் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். இதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் அதன் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் தாக்கல் செய்தனர். இதே போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீம், தவிசாளர் பிரதியமைச்சர் பசீர் சேகுதாவூத், தலைமை வேட்பாளர் நசிர் அகமட் உட்பட அதன் வேட்பாளர்கள் வேட்புமனுப்பத்திரத்தைத் தாக்கல் செய்தனர். ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் அதன் தலைமை வேட்பாளர் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரசரட்ணம் சசிதரன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.மாசிலாமணி ஆகியோரும் வேட்புமனுப் பத்திரத்தைத் தாக்கல் செய்தனர்.

ஆடி 20, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13அரசியல் கட்சிகளும் 21 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட 34 வேட்புமனுப்பத்திரங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார். இதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை தமிழரசுக்கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் விடுதலை முன்னணி உட்பட 13 அரசியல் கட்சிகளும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. அத்தோடு 21 சுயேட்சைக்குழுக்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றன. வேட்புமனுப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதையடுத்து நண்பகல் 12 மணி தொடக்கம் 1மணிவரை முறைப்பாடு செய்யும் நேரமாக அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் பிரதி நிதிகளுக்கான கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் சுயேட்சைக்குழுக்களுக்கு சின்னங்களும் இதன் போது வழங்கப்பட்டன.

ஆடி 20, 2012

அம்பாறை மாவட்டத்தில் 16 கட்சிகள், 18 சுயேட்சைக் குழுக்கள் போட்டி: ஒரு சுயேட்சைக்குழு நிராகரிப்பு

கிழக்கு மாகாண சபைக்கென அம்பாறை மாவட்டத்தில் 16 அரசியற் கட்சிகளும் 19 சுயேட்சைக் குழுக்களும் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்தன. எனினும் சுயேட்சைக் குழுவொன்றின் தலைமை வேட்பாளர் ஒப்பமிடாத காரணத்தால் அக்குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதன்படி இம்மாவட்டத்தில் 16 அரசியல் கட்சிகளும் 18 சுயேட்சைக் குழுக்களும் தேர்தலில் குதித்துள்ளன. அம்பாறைக் கச்சேரியில் நேற்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மாகாண முன்னாள் அமைச்சர் ஐ.தே.க. விமலவீர திசாநாயக்க, தேசிய அமைப்பாளர் தயாகமகே, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஹசன் அலி எம்.பி., எச்.எம். ஹரிஸ், அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரும் ம.வி.மு. சார்பில் முன்னாள் எம்.பி.வசந்த பியதிஸ்ஸவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜாவும் வருகை தந்திருந்தனர். அம்பாறை மாவட்டத்தில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்காக 14 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு ஒவ்வொரு கட்சியிலிருந்தும் 17 பேர் போட்டியிடுகின்றனர். ___

ஆடி 20, 2012

தமிழ்நாட்டில் சிறு குழுக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் இலங்கை - இந்திய உறவு மிகவும் வலுவாகவே உள்ளது

தமிழ் நாட்டில் இலங்கைக்கு எதிராக சிறு சிறு குழுக்கள் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களில், எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவு மிகவும் வலுவாகவே உள்ளது என ஊடகத் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையுடன் இந்தியாவுக்குள்ள மிக நெருக்கமான உறவு காரணமாகவே இந்தியா புலிகள் இயக்கத்தை மீண்டும் தடை செய்துள்ளது. அத்துடன் கலைஞர் கருணாநிதி தனிநாட்டுக் கோரிக்கை தீர்மானத்தை நிறைவேற்றப் போவதாக அறிவித்திருந்த போதும் மத்திய அரசு அதனை கைவிடுமாறு வலியுறுத்தியிருந்தது. அவரும் அதனை ஏற்று கைவிட்டுள்ளார். தமிழ் நாட்டில் பயிற்சிக்காக சென்ற அதிகாரிகளை வெளியேறக் கோரி சிலர் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். இலங்கையின் முப்படையினருக்கு பயிற்சிகள் வழங்கும் பிரதான முதன்மை நாடாக இந்தியா விளங்குகிறது. இதனடிப்படையிலேயே எமது அதிகாரிகள் அங்கு சென்றனர். சிலரது எதிர்ப்பு காரணமாக வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். தமிழ் நாட்டில் சில குழுக்கள் எதிர்ப்புகளை தெரிவித்தாலும் இந்தியா இலங்கையுடனேயே உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

ஆடி 20, 2012

பொறுப்பேற்கத் தயார்  - ராகுல்

மத்திய ஆட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி யில் முக்கியப்பங்கு வகிக்க தயார் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். எனினும் இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது கட்சித்தலைமைதான் என்று அவர் கூறி யுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், கட்சி மற்றும் ஆட்சி யில் முக்கியப் பொறுப்பேற்க தயார் என் றும், எனினும் இதற்கான நேரம் குறித்து முடிவெடுக்க வேண்டியது கட்சித்தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர்தான் என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதனன்று, கட்சியில் மிகப்பெரிய பொறுப் பை ஏற்று செயல்படுவது குறித்து ராகுல் காந்திதான் முடிவு செய்ய வேண்டும் என் றார். அவரின் சார்பில் வேறு யாரும் முடி வெடுக்க முடியாது. அவர்தான் முடிவெ டுக்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறிய அடுத்த நாளே ராகுல் காந்தி இவ் வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சி யின் செயல் தலைவராக ராகுல் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களின் போது பிரச்சாரம் செய்து வந்தபோதும் நேரடியாக ஆட்சி மற்றும் கட்சியில் பொறுப்பேற்க ராகுல் காந்தி தயங்கி வந் தார். ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நாளில் அவர் தனது முடிவை வெளியிட் டுள்ளதும் பல்வேறு ஹேஸ்யங்களை எழுப்பி யுள்ளது.

ஆடி 20, 2012

மன்னாரில் பதற்றம் தணிவு, நகரம் வழமைக்கு திரும்பியது

மன்னாரில் வெள் ளிக்கிழமை முதல் ஏற்பட்டிருந்த பதற்றம் தணிந்துள்ளதுடன், நகரத்தின் அன்றாட செயற்பாடுகள் வழ மைக்கு திரும்பியுள் ளன. புதன்கிழமை காலை ஏற்பட்ட சில அசம்பாவிதங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் தாக்குதல் சம்பவங்களால் சிலர் சிறிய காயங்களுக்குள்ளானதாகவும், இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட பொது மக்கள் சிலர், சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக வைத்திய சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 20, 2012

தமிழ் மணம் கமிழும் பிரசன்னம் இதுவல்லவோ....?

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய நேற்று மட்டக்களப்பு வருகை தந்த அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களுடன் காணப்படுகிறார். பிரதியமைச்சர்கள் வி. முரளிதரன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோரையும் காணலாம்.

ஆடி 20, 2012

இந்திய அரசியற்கட்சி தலைவர்கள் பிரமுகர்கள் சமயப் பெரியோர்கள் ஆகியோர்களுக்கு வேண்டுகோள். - வீ. ஆனந்தசங்கரி

ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை ஆதரிக்காது இந்திய அரசு நடுநிலை வகித்திருந்தாலும் அது எப்படியும் தானாக நிறைவேறியிருக்கும்.  இந்திய அரசு நடுநிலை வகித்திருப்பின் இலங்கையுடனான நல்லுறவை பயன்படுத்தி நிரந்தர தீர்வொன்றை காண உபயோகித்திருக்கலாம். இந்த நிலை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதை அனைவரும் அறிந்ததே. இலங்கை இனப்பிரச்சனை சம்பந்தமாக தமிழ்நாடு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் மிகக் கவனமாக கலந்துரையாடப்பட்டும், பரிசீலிக்கப்பட்டும் செயற்படாவிட்டால் அவை எதிர்பார்க்கும் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தாது தமிழர் பிரச்சனை தீர்வுக்கு பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.(மேலும்.....)

ஆடி 20, 2012

இஸ்ரேலியர்களை ஏற்றிய பஸ் மீது பல்கேரியாவில் குண்டு தாக்குதல்

பல்கேரியாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை ஏற்றிய பஸ் ஒன்று வெடித்ததில் 7 பேர் கொல்லப்பட்டதோடு 30 பேர் காயமடைந்தனர். இந்த குண்டு தாக்குதலுக்கு இஸ்ரேல் அரசு ஈரான் மீது குற்றம் சாட்டியுள்ளது. கிழக்கு பல்கேரிய நகரான பர்காஸ் விமான நிலையத்தில் இஸ்ரேல் சுற்றுலா பயணிகளை ஏற்றியிருந்த பஸ்ஸே குண்டு வெடிப்புக்கு இலக்காகியுள்ளது. மேற்படி பஸ்ஸில் ஒருவர் ஏறியதும் பஸ் வெடித்ததாக சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். இது ஈரானின் செயல் என குற்றம் சாட்டிய இஸ்ரேல் அரசு, ஈரான் தீவிரவாதத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. கடந்த 1994 ஆம் ஆண்டு ஆர்ஜன் டீனாவினால் இஸ்ரேல் யூத அமைப்பின் தலைமையகத்திற்கு ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய குண்டு தாக்குதலின் 18ஆவது ஆண்டு நிறைவு தினமான நேற்று முன்தினத்தில்இந்த குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1994ஆம் ஆண்டு தாக்குதலில் 85 பேர் கொல்லப் பட்டனர்.

ஆடி 20, 2012

ஆஸி செல்லும் போது வழிமறிப்பு

வென்னப்புவ கடலில் நேற்றும் 67 பேர் கடற்படையால் கைது

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 67 பேரை கடற்படையினர் நேற்று முன்தினம் இரவு வென்னப்புவ கடல் பகுதியில் கைது செய்துள்ளனர். வென்னப்புவ கடல் பகுதியில் சுமார் 8 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் வள்ளத்துடன் இவர்கள் 67 பேரும் கைது செய்யப்பட்டதாக கடற்படையின் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கொழும்பு, நீர்கொழும்பு, வென்னப்புவ, யாழ்ப்பாணம், நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதிகளைச் சேர்ந்த 54 தமிழர்களும், 13 சிங்களவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 67 பேருடன் குறித்த ஆழ்கடல் வள்ளம் முகத்துவாரம் மீன்பிடித்துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் 67 பேரும் கடற்படையினரின் முதற்கட்ட விசாரணையின் பின் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ஜுலை மாதத்தில் மட்டும் இதுவரை 400 பேர் இவ்வாறுகைது செய்யப்பட்டுள்ளதாக கெமாண்டர் கோசல வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார்.

ஆடி 20, 2012

சட்டவிரோத ஆட்கடத்தல் கும்பல்

அரசை இக்கட்டான நிலைக்கு தள்ள முயற்சி, புலம்பெயர் அமைப்புகளும் பின்னணியில்

சட்டவிரோதமாக கடல் வழியாக ஆட்கடத்தல்களில் சில கும்பல்கள் திட்டமிட்டு செயற்படுவதுடன், இவர்கள் அரசாங்கத்தை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ள எத்தணிக்கின்றனர் என்றும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அவுஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தும் வேலைகளில் பலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர். புலம் பெயர் தமிழர்களும் (டயஸ் போராவும்) இதற்கு பின்னணியில் செயற்படுகிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் தொடர்பான அமர்வு நடைபெறவுள்ள இந்த வேளையில் இலங்கையில் தமிழர்கள் வாழ முடியாத நிலையிலேயே புகலிடம் கோரி செல்கின்றனர் என்ற ஒரு நிலைமையை உருவாக்க சிலர் திட்டமிட்டு செயற்படுகின்றனர் என்பதும் புலனாகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆடி 20, 2012

டமஸ்கஸ்ஸில் 5ஆவது நாளாகவும் மோதல், நகரெங்கும் புகைமூட்டம்

சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸின் பல பகுதிகளிலும் 5 ஆவது நாளாக நேற்றைய தினத்திலும் அரசு படைக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் மூன்று முக்கிய பிரமுகர்கள் குண்டு தாக்குதலில் நேற்று முன்தினம் கொல்லப்பட்ட நிலையில் தலைநகரில் மோதல் நீடிக்கிறது. இதில் டமஸ்கஸ்ஸின் பல பகுதிகளில் இருந்தும் புகை மண்டலம் வெளியேறி வருகிறது. அரச படைகள் தலைநகரின் கபூன் மற்றும் பர்சா பகுதிகளில் நேற்றைய தினத்தில் எறிகணை தாக்குதல் நடத்தின. அதேபோன்று அல் மீதான், சாஹிர பகுதிகளில் கடும் மோதல் இடம்பெற்று வருவதோடு மஷ்ரூ டுமார் பகுதியில் பாரிய வெடிப்பு சத்தங்கள் கேட்பதாக சிரியாவுக்கான இணைப்புக் குழு செய்தி வெளியிட்டுள்ளது. இதில் கடந்த புதன்கிழமை நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சிரியாவில் மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமான 16 மாத காலத்தில் அஸாத் அரசுக்கு ஏற்பட்ட பாரிய இழப்பு என கருதப்படுகிறது. இந்த குண்டு தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் தாவுத் ரஜா மற்றும் ஜனாதிபதி அஸாத்தின் சகோதரியை மணந்தவரும் அந்நாட்டின் துணை பாதுகாப்பு அமைச்சருமான அஸ்ஸாப் ஷசுகத் மற்றும் நெருக்கடி முகாமை அலுவலக பிரதித் தலைவர் ஜெனரல் ஹஸன் துர்கொமனி ஆகியோர் கொல்லப்பட்டனர். (மேலும்.....)

ஆடி 20, 2012

கிழக்கில் முடிந்தால் ஐ.தே.க. தன் பலத்தை நிரூபித்துக் காட்டட்டும்

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை வெவ்வேறு விதமாகக் குறை கூறுகின்ற ஐ.தே.க. வினர் ஒரே அணியாக இருந்து ஒரு புகைப்படமாவது எடுக்க முடியுமா? என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும், அமைச்சருமான டளஸ் அழகப்பெரும நேற்று சவால் விடுத்தார். கிழக்கு மாகாண சபையில் 35 ஆசனங்கள் உள்ளன. அவற்றில் குறைந்தது ஆறு ஆசனங்களைக் கூட ஐ. தே. க. வினரால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நாட்டின் பிரதான எதிர்க் கட்சியாகக் கருதப்படுகின்ற ஐ.தே. க. நான்காவது இடத்திற்குத் தள்ளப்படுவது உறுதி எனவும் அவர் கூறினார். (மேலும்.....)

ஆடி 20, 2012

பொலிவியா -அர்ஜென்டினாவிற்கிடையே  புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடியை பொலி வியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் இணைந்து எதிர்கொண்டு வளர்ச்சி காண்பதற்கான புதிய ஒப் பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. அர்ஜென்டினாவின் அதிபர் கிரிஸ் டியானா பெர்னான்டஸ் ஒரு நாள் சுற்றுப்பயணமாக பொலிவியா சென் றார். அவருக்கு பொலிவியாவின் அதி பர் எவோ மோரல்ஸ் சிறப்பான வரவேற்பு அளித்தார். பின்னர், தற் போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் வகையில், இரு நாட்டு அதிபர்களும் பல்வேறு பிரச் சனைகள் குறித்து விவாதித்தனர். பின்னர் பொலிவியாவின் கோச்ச பம்பா மாகாணத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இரு நாட்டின் உள் நாட்டு சந்தைகளை விரிவாக்கம் செய் வது, ஹைட்ரோகார்பன் வர்த்தக உடன்பாடு, தகவல் பரிமாற்றம் மற் றும் கல்வியில் இருநாடுகளுக்கி டையே ஒத்துழைப்பை நல்குவது போன்ற பல ஒப்பந்தங்கள் கையெழுத் தானது. இந்த ஒப்பந்தத்தில் இரு நாட்டு அதிபர்களும் மனப்பூர்வமாக கையெழுத்திட்டனர். (மேலும்.....)

 

ஆடி 19, 2012

மன்னாரில் நீதிமன்று முன் ஆர்ப்பாட்டம்: பெரும் பதற்றம்: நீதிமன்றுக்கு கல்வீச்சு, சேதம், பலர் காயம்

மன்னார் நீதவான் நீதிமன்றுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்திய ஆர்ப்பாட்டக்காரர்கள் கல் வீச்சு நடத்தியதில் நீதிமன்றத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளனர். நேற்றுக்காலை 11.00 மணியளவில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கல் வீச்சு நடத்தி கலகம் ஏற்படுத்திய 16 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் கூடியிருந்த சுமார் நூறு ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் பொருட்டு கண்ணீர்புகை பிரயோகம் செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 19, 2012

41 பேருடன் மற்றொரு படகு மட்டு கடலில் வழிமறிப்பு

சட்டவிரோதமாக கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 41 இலங்கையர் நேற்று மட்டக் களப்புக்கு கிழக்கே கடலில் கடற்படையினரால் கைது செய்யப் பட்டனரென கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுல சூரிய தெரிவித்தார். மட்டக்களப்புக்கு கிழ க்கே 35 கடல் மைல் தொலைவில் ஆழ்கடல் வள்ள மொன்றில் பய ணித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த நான்கு பெண்கள் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 41 பேரும் கடற்படையின் திருகோண மலை கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கடற்படையினரின் விசா ரணைகள் முடிவடைந்தவுடன் அவர்கள் பயணித்த வள் ளத்துடன் 41 பேரும் மேலதிக விசாரணைகளுக்காக இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் கொமாண்டர் கோசல வர்ண குலசூரிய மேலும் தெரிவித்தார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்லும் போது கடற்படையினரால் இதுவரை 334 பேர் கைது செய்யப்பட்டனர். ஏழு ஆழ் கடல் மீன்பிடிப் படகுகளும் கைப்பற்றபட்டுள்ளன.

ஆடி 19, 2012

கனடாவில் வெப்பநிலை உயரும் அபாயம், மக்களுக்கு எச்சரிக்கை

ஒண்டோரியாவிலும், கியூபெக்கிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கனடாவின் சுற்றுச் சூழல் துறை தெரிவித்துள்ளது. இந்த வார இறுதியில் கியூபெக்கில், குறிப்பாக அதன் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் வெப்பநிலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் அதிக தண்ணீர் பருகுமாறு அறிவுறுத்தப்பட்டது. வயதானவர்களும், சிறுவர்களும் வெப்பம் தாக்காத வண்ணம் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டது. நேற்று மொன்றியல் நகர மக்கள் வெயிலின் கொடுமையிலிருந்து தப்பிக்க விரும்பி கடற்கரைகளில் குவிந்தனர். அங்கு வெயில் 33 டிகிரி செல்சியஸ் ஆக இருந்த போதிலும், அதனால் ஏற்பட்ட வெப்பத்தின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு இருந்தது. ஒட்டாவா மாகாணத்தில் ரிடியு ஆற்றின் நீர்மட்டம் வெப்பத்தின் தாக்கத்தால் குறைந்து கொண்டே வருகிறது. நேற்று முன்தினம் இரண்டாம் கட்ட வறட்சி எச்சரிக்கை விடப்பட்டது. தெற்கு ஒண்டோரியாவிலும் அடுத்த சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இப்பகுதியினர் தங்கள் வீடுகளை குளிரூட்டவும், மின்விசிறி பொருத்தவும் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். ஒண்டோரியோவின் கிழக்கு மற்றும் தென்பகுதிகளில் டொரொண்டோ, கிங்ஸ்ட்டன் மற்றும் பெலிவெலி நகரங்களில் அலைகாற்று வீசும் அபாயமும் உள்ளது. வெயில் அதிகரிப்பதோடு அனல் காற்று வீசுவதும் அதிகரிக்கும். மேலும், தற்போது சில வாரங்களாக கனடாவின் பல பகுதிகளிலும் வெயிலின் அளவு அதிகரித்து வருகிறது.

ஆடி 19, 2012

பாசிச முன்னாள் புலி உறுப்பினர்களே உசாரு....?

நாஸி காலத்து யுத்த குற்றவாளி 97 வயதில் கைது

அடொல்ப் ஹிட்லர் காலத்து 97 வயது முக்கிய யுத்த குற்றவாளி ஒருவர் ஹங்கேரி நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். பல தசாப்தங்களாக தேடப்பட்டு வந்த க்சிசிக் சதடி என்ற நாசிக் காலத்து சிலோவாக்கிய நாட்டு பொலிஸ் பிரதானியே கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 15, 700 யூதர்களை ஹிட்லரின் வதை முகாம்களுக்கு நாடுகடத்தியதாக இவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 1948 ஆம் ஆண்டு சதடி மீது மரண தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது அடையாளத்தை மாற்றி கனடாவுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 1997 ஆம் ஆண்டு இவரது உண்மையான அடையாளம் தெரிய வந்தபோது கடந்த 15 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை ஹங்கேரி தலைநகரில் வைத்து சதடி கைது செய்யப்பட்டார். இவர் சிறந்த தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக அரச தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார். இச் செய்தி பாசிச புலிகளில் இணைந்து செயற்பட்டவர்களுக்கும் பொருந்தும். ஏன் சிறப்பாக சுரேஷ் பிரேமசந்திiனுக்கும் பொருந்தும்.

ஆடி 19, 2012

தற்கொலை தாக்குதலில் சிரிய பாதுகாப்பு அமைச்சர் பலி

சிரிய தலைநகர் டமஸ்கஸ்ஸில் நேற்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தாவுத் ரஜியா கொல்லப்பட்டுள்ளார். சிரிய நாட்டு தேசிய பாதுகாப்பு சபை தலைமையகத்தை இலக்குவைத்தே இந்த தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது அங்கு அமைச்சர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அவசர கூட்டத்தில் பங்கேற்றிருந்ததாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அரசின் பல முக்கியஸ்தர்களும் படுகாயத்திற்குள்ளாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிரிய கிளர்ச்சியாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் தலைநகரில் கடும் மோதல் நீடிக்கும் நிலையிலேயே இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் காயமடைந்தோருள் உள்துறை அமைச்சர் மொஹமட் அல்ஷாரும் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதில் கொல்லப்பட்ட கிறிஸ்தவரான பாதுகாப்பு அமைச்சர் ரஜா, பிரதி இராணுவ தளபதி, அமைச்சரவையின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

ஆடி 19, 2012

அதிர்ச்சி சம்பவம்

மனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்!

தனது மனைவி வேறு யாரிடமும் போய் விடக் கூடாது என்பதற்காக அவரது மர்ம உறுப்பில் பூட்டுப் போட்டு பூட்டி வைத்திருந்தார் ஒரு கணவன். அந்த மிருக குணம் படைத்த நபரை போலீஸார் கைது செய்து வழக்குத் தொடர்ந்துள்ளனர். முட்டாள்தனத்திற்கும், மூடத்தனத்திற்கும் அளவே இல்லாமல் போய் விட்டது. இந்தூரைச் சேர்ந்த ஒரு மெக்கானிக், தனது மனைவி வேறு ஆணுடன் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அவரது மர்ம உறுப்பில் பூட்டுப் போட்டு பூட்டி வைத்துள்ளார். கடந்த நான்கு வருடமாக இந்த சித்திரவதையை அவர் செய்து வந்துள்ளார். இந்த மெக்கானிக்குக்கு கல்யாணமாகி 19 வருடங்களாகிறது. ஐந்து குழந்தைகள் உள்ளனர். நான்கு வருடங்களுக்கு முன்பு தனது மனைவியின் மர்ம உறுப்புக்கு அருகே துளை போட்டுள்ளார். பின்னர் தான் வெளியே போகும் போதெல்லாம் ஒரு பூட்டைப் பொருத்தி பூட்டி, சாவியை எடுத்துக் கொண்டு போய் விடுவாராம். (மேலும்.....)

ஆடி 19, 2012

யாழில் போக்குவரத்துப் பொலிஸார் அதிகளவில் இலஞ்சம் பெறுகின்றனர் _

அரசாங்கத்தினால் வரி அறவிடுவதைப் போன்று யாழ். குடாநாட்டு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் பொது மக்களிடமிருந்து இலஞ்சம் பெற்று வருவதாக குற்றம் சாட்டிய குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் எம்.பி. குடாநாட்டில் கடமையிலுள்ள போக்குவரத்துப் பொலிஸார் அதிகளவிலான இலஞ்சம் பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். அரச நிறுவனங்களில் முறையõக எந்தவொரு அலுவல்களை நிறைவேற்றிக் கொள்ள முடியாத நிலைமை யாழ். குடாநாட்டில் நிலவுகின்றது. இந்த நிலையில் பல்வேறு சலுகைகளையும் அதிக சம்பளங்களையும் பெறுகின்ற அரச அதிகாரிகள் அப்பாவி ஏழைகளிடத்தில் இலஞ்சம் பெறுகின்றனர். இவ்வாறான அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் நேற்று சபையில் வலியுறுத்தினார். (மேலும்.....)

லிபிய தேர்தல் முடிவுகள் அறிவிப்பு

முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை பின்தள்ளி லிபரல் கூட்டணிக்கு அதிக ஆசனங்கள்

லிபியாவில் கடந்த அரை நூற்றாண்டுக்கு பின்னர் நடைபெற்ற முதலாவது ஜனநாயக தேர்தலின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் லிபரல் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதோடு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு பின்தள்ளப் பட்டுள்ளது. எனினும் எந்த தரப்பும் பெரும்பான்மை பெறாத நிலையில் பாராளுமன்றத்தில் யார் ஆதிக்கம் செலுத்துவார் என்பது தெளிவில்லாமல் உள்ளது. கடந்த 10 தினங்களுக்கு முன்னர் நடந்த 200 ஆசனங்களுக்கான பாராளுமன்ற தேர்தலின் இறுதி முடிவு திரிபோலியில் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. லிபிய இடைக்கால அரசின் தலைவர் முஸ்தபா அப்துல் ஜலீல், பிரதமர் அப்துல் ரஹிம் அல் கிப் முன்னிலையில் அந்நாட்டு தேர்தல் ஆணையம் இந்த முடிவை வெளியிட்டது. (மேலும்.....)

ஆடி 19, 2012

ஜனாதிபதியின் சொல்லுக்கு அடிபணிந்து செயலாற்றும் முதலமைச்சர் எமக்கு தேவையில்லை - சம்பந்தன்

கிழக்கு மாகாண சபைக்கு தெரிவாகும் முதலமைச்சர் இறைமையின் அடிப்படையிலான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்தக் கூடிய வல்லமையுடையவராக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றது. அதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், ஜனாதிபதியின் சொல்லுக்கு அடிபணிந்து செயலாற்றும் முதலமைச்சர் எமக்குத் தேவையில்லை. இறைமை என்பது தனியொரு இனத்துக்கு மட்டும் சொந்தமானதொன்றல்ல. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் சொந்தமானது. இறைமையின் பங்காளர்களாக அனைத்து மக்களும் வாழக் கூடியதான ஆட்சியை நாட்டில் ஏற்படுத்த வேண்டும். தமது பாரம்பரிய வாழ்விடங்களில் ஒவ்வொருவரும் கௌரவமாகவும் பாதுகாப்பாகவும் சுயமரியாதையுடனும் வாழ்வதற்கு ஏற்றவாறு இறைமை பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். தமிழ் பேசும் மக்கள் அடிமைகளாகவோ இரண்டாந்தரப் பிரஜைகளாகவோ தங்களின் பாரம்பரிய இடங்களில் வாழ்வதற்கு தயாரில்லை. இதனை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் உறுதிபடக் கூறுவதாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வழங்கும் தீர்வு அமைய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆடி 19, 2012

கூடங்குளத்தில் புதிய இரண்டு அணு உலைகள்

கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைக்க ரூ. 18,700 கோடி கடன் அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது. இந்தியா, ரஷ்யா கூட்டு முயற்சியில் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 2 அணு உலைகள் உள்ளன. அதில் முதலாவது அணுஉலையில் இன்னும் ஒரு மாதத்திற்குள் மின் உற்பத்தி துவங்கவிருக்கிறது. இந்த நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மேலும் 2 அணு உலைகளை அமைக்க இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2 அணுஉலைகள் அமைப்பதற்கான கடனுக்கான ஆவணங்கள் நேற்று முன்தினம் கையெழுத்தாகின. அதன்படி 3வது மற்றும் 4வது அணு உலைகளை அமைக்க மொத்தம் ரூ. 32,000 கோடி செலவாகும். அதில் ரூ. 18,700 கோடியை ரஷ்யா கடனாக அளி க்க முன்வந்துள்ளது. அத்துடன் அணு உலை அமைப்பு பணிகளில் சப்ளை மற்றும் சேவைகளில் ரஷ்ய அணுசக்தி ஏஜென்சிகள் ஈடுபடும் என்று அது தெரிவித்துள்ளது.

ஆடி 19, 2012

அ. இ. மு. காங்கிரஸ், தே. காங்கிரஸ் ஐ.ம.சு.முவுடன் இணைந்து போட்டி

அமைச்சர் அதா வுல்லா தலைமை யிலான தேசிய காங்கிரஸ் மற்றும் அமைச்சர் றிசாட் பதியுதீன் தலை மையிலான அகில இலங்கை முஸ் லிம் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பட்டிய லில் கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டி யிடுகின்றன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து அம்பாறை மாவட்டத்தில் 5 வேட்பாளர்களும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெளியேற்றத்தை அடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று வேட்பாளர்களும் அம்பாறை மாவட்டத்தில் ஒரு வேட்பாளரும் திருகோணமலை மாவட்டத்தில் இரண்டு வேட்பாளர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

ஆடி 19, 2012

மு.கா. எங்களுக்கு எதிராளி கட்சியல்ல, புரிந்துணர்வுடன் செயற்படுகிறோம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளமை அரசாங்கத்துடன் புரிந்துணர்வு அடிப்படையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொறுப்பாளரும் அமைச்சருமான டளஸ் அழகப்பெரும கூறினார். மு.கா. எங்களது எதிராளிக் கட்சி யல்ல எனக் கூறிய அமைச்சர் டளஸ், பலதரப்பு சுற்றுப் பேச்சுவார்த்தைகளையடுத்து புரிந்துணர்வின் அடிப்படையிலேயே எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இரு கட்சிகளிடையிலும் சிறந்த புரிந்துணர்வு உள்ள நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதேயன்றி, கட்சிகளுக்கு இடையிலான உட்பூசல்கள் எதுவும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார். “இது ஒரு பெரிதாகத் தூக்குப் பிடிக்கும் விடயமல்ல” என்றும் அவர் தினகரனுக்குக் கூறினார்.

ஆடி 18, 2012

தமிழ்க் கட்சிகள், அமைப்புகள் தமது பொறுப்புணர்ந்து செயற்படுகின்றனவா?

(த.மனோகரன்)

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், தேவைகள் சரியான முறையில் தெளிவாக இனங்காணப்பட்டுள்ளனவா என்றால் அதற்கான பதிலை உறுதியுடன் கூறும் ஆற்றல் சமூக வழிகாட்டிகளென்றும் நம்மிடையே வலம் வருபவர்கள், வாக்குக் கேட்பவர்கள் எவரிடமும் இல்லை. இதுவே உண்மை நிலை. யதார்த்தநிலை. தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுக்க மீட்கவென்று திடீர், திடீரென்று பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புகள் தோன்றி வருகின்றன. வீரவசனம் பேசுகின்றன. அறிக்கைகள் விடுக்கின்றன. ஏற்கனவே இருப்பவர்களுக்குச் சமூகத் தேவைகள்தொடர்பான அறிவோ, பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் ஆற்றலோ இல்லையா என்ற வினா சிந்திக்கும்  ஆற்றல் கொண்ட சீர்தூக்கும் அறிவு கொண்ட ஒவ்வொருவர் மத்தியிலும் இயல்பாக ஏற்பட வேண்டும். இலங்கையில் ஏனைய சமூகங்களோடு ஒப்பிடும் போது அரசியலிலாகட்டும் தொழிற்சங்க ரீதியிலாகட்டும் பல்கிப் பெருகிய அரசியல் கட்சிகளையும் தொழிற்சங்கங்களையும் கொண்ட சமூகமாகத் தமிழ்ச் சமூகம் விளங்குகின்றது. நம்மத்தியிலே புதிய, புதிய அரசியல் , தொழிற்சங்க அமைப்புகள் முளைவிடுவதால் சமுதாய நலன் பலமடையுமா, பாதிக்கப்படுமா என்பது தொடர்பில் அவதானிக்க வேண்டும். அரசியல்வாதிகளே சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கின்றார்களேயன்றி சமூகத்திலுள்ள புத்திஜீவிகளோ, ஆய்வாளர்களோ, தனவந்தர்களோ சமயப் பிரமுகர்களோ, சமூக சேவையாளர்களோ வேறு எவருமோ அல்ல. ஒரு நாட்டின் சமூகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்ட அரசியல் புனிதமாக இருத்தல் வேண்டும். புனிதப்பட வேண்டும். புனிதப்படுத்தப்பட வேண்டும். (மேலும்.....)

ஆடி 18, 2012

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானம்

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன் தெரிவித்தார். முஸ்லீம் கட்சிகளிடையே கடந்த சில கிழமைகளாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்ததைகள் வெற்றி பெறாமையினால் இந்த முடிவிற்கு முஸ்லீம் காங்கிரஸ் வந்ததாக அறிய முடிகின்றது.

ஆடி 18, 2012

கி.மா.தேர்தலில் போட்டியிட ம.வி.மு. வேட்பு மனுத் தாக்கல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று (18.7.2012)காலை நியமனப் பத்திரம் தாக்கல் செய்தது. ம.வி.மு. கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் இணைப்பாளருமான ஹந்துன் நெத்தி மற்றும் அதன் முக்கியஸ்தர்கள் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு வருகை தந்து மட்டு.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸிடம் வேட்புமனுப் பத்திரத்தைக் கையளித்தனர்.

ஆடி 18, 2012 _

மன்னாரில் பதற்றம்

மீனவ குழுக்களிடையேயான முறுகலின் எதிரொலி _

மன்னாரில் இன்று காலை முதல் பதற்றம் நிலவுகிறது. மன்னார் உப்புக்குளம் பிரதேச மீனவர்கள், கோந்துப்பிட்டி வாடி மீனவர்களை அங்கிருந்து வெளியேற்றி தம்மை மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரி வீதி மறியலில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் பிரதான பாலத்தை மறித்த மீனவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தால் பிரதேசத்தின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை பாதுகாப்புக் கடமையில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸார் கண்ணீர்ப் புகைப் பிரயோகம் செய்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆடி 18, 2012

மட்டு.மாவட்டத்தில் தலைமை வேட்பாள ர்

வீட்டுக்குள்ளிருந்து வெளியேறாதவாறு துரைராஜசிங்கத்தின் வீட்டுக்குப் பூட்டு

இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதி செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கே.துரைராஜசிங்கத்தின் வீட்டின் கதவுகள் இனந்தெரியாதோரால் பூட்டுப் போடப்பட்டு அவர் வெளியேறாதவாறு செய்யப்பட்டுள்ளது. இவர் வசித்து வரும் மட்டக்களப்பு லேக் வீதியிலுள்ள இவரின் வீட்டின் கதவுகள் சங்கிலியால் இணைக்கப்பட்டு பூட்டு போடப்பட்டுள்ளது. இவரும் இவரது உறவினர்களும் தூங்கிக் கொண்டிருக்கும் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவர் காலை வெளியில் வருவதற்கு முயற்சித்த போது கதவுகள் சங்கிலியால் பூட்டுப்போடப்பட்டுள்ளதை அவதானித்து பொலிசாருக்கு அறிவித்துள்ளார். மேற்படி சட்டத்தரணி துரைராஜசிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டு.மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதாகத் தெரியவருகின்றது. _______

ஆடி 18, 2012

அவுஸ்திரேலியா செல்லும் போது வழிமறிக்கப்பட்ட ஆறு படகுகளும் இனி கடற்றொழிலில் ஈடுபட முடியாது

கடல் வழியாக சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டு கைப்பற்றப்பட்டுள்ள ஆழ்கடல் வள்ளங்களின் கடற்றொழில் செய்வதற்காக வழங்கப்பட்ட பதிவுகள் அனைத்தையும் ரத்துச் செய்ய கடற்றொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது.இதன்படி, எக்காரணம் கொண் டும் ஆட்கடத்தலில் ஈடுபட்ட வள்ளங்களுக்கு இனிமேல் கடற்றொழில் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட மாட்டாது என அமைச்சு உறுதியாக அறிவித்துள்ளது. சட்டவிரோதமாக அவுஸ்திரேலி யாவுக்கு ஆட்கடத்தலில் ஆழ்கடல் வள்ளங்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதனால் ஆழ்கடல் கடற்றொழில் செய்பவர்களுக்கே பாரிய இழுக்கை இவர்கள் ஏற்படுத்துகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் இதுவரை ஆட்கடத்தலில் ஈடுபட்ட சுமார் ஆறு ஆழ்கடல் வள்ளங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆழ்கடல் வள்ளங்களில் தொழில் புரியும் மீனவர்கள் ஆட்கடத்தல் தொழிலில் ஈடுபடுவதில்லை. வள்ளங்களின் உரிமையாளர்களே பெருந்தொகை பணத்துக்காக இதனைச் செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலர் உரிமையாளர்களிடமிருந்து பெருந்தொகை பணத்தைக் கொடுத்து ஆழ்கடல் வள்ளங்களை கொள்முதல் செய்து ஆட்கடத்தலுக்காக பயன்படுத்து கின்றனர்.

ஆடி 18, 2012

புதிய ஜனாதிபதி தெரிவானதன் பின்னர் ராகுலுக்கு முக்கிய பதவி

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செய லாளராக இருந்து வந்தாலும் ராகுலுக்கு இன்னும் முக்கிய பொறுப்புகள் கொடுத்து காங்கிரஸை தூக்கி நிறுத்திட வழி செய்ய வேண்டும் என்ற கோஷம் தற்போது ஓங்கி ஒலிக்க துவங்கியிருக்கிறது. ராகுல் இந்திய அரசியலில் முக்கிய இடத்திற்கு வருவதற்கான காலம் கனிந்து விட்டது. இதற்கான வழிமுறைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. சற்று பொறுத் திருந்து பாருங்கள், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் முடியட்டும். காங்கிரசின் மிகப் பெரிய பொறுப்புக்கு நிச்சயம் அவர் அமர்த்தப்படுவார். குறிப் பாக செப்டெம்பர் மாதத்திற்குள் ஒரு நல்ல மாற்றமான முடிவை காண்பீர்கள். ராகுல் அமைதியாக இருப்பதாக பத்தி ரிகைகள் விமர்சனம் செய்கின்றன. ராகுலுக்கு முக்கிய பொறுப்பு அது பிரதமர் பதவியாக கூட இருக்கும் என்று டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு பிரதமர் மீதான விமர்சனங்கள் ஆகியவற்றால் தொய்வு நிலையில் இருக்கும் காங்கிரசுக்கு ராகுலின் பொறுப்பு பெரும் உதவியாக இருக்கும் என மூத்த தலைவர்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆடி 18, 2012

அஸாத் சாலி இராஜினாமா

கிழக்கில் சுயேச்சையாக போட்டியிட தீர்மானம்

கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அஸாத் சாலி கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். கிழக்கு மாகாண சபை தேர்தலில் சுயேச்சையாக களத்தில் குதித்து போட்டியிடவுள்ளதாக அஸாத் சாலி தெரிவித்தார். தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்த பின்னர் ஊட கங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், அவர் மேலும் குறிப்பிடுகையில்: கிழக்கு மாகாணத்திலுள்ள முஸ்லிம் கட்சிகள் உரிய நேரத்தில் பொருத்தமான முடிவு ஒன்றை எடுக்காத நிலையிலேயே கிழக்கு மாகாண முஸ்லிம்களின் நலன் கருதி தான் இந்த தீர்மானத்தை எடுத்ததாக அவர் மேலும் கூறினார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் கொழும்பு மாநகர சபை தேர்தலில் வெற்றிபெற்ற அஸாத் சாலி கிழக்கு மாகாண சபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் பொருட்டு தனது இராஜினமா கடிதத்தை கொழும்பு மாநகர மேயர் ஏ.ஜே.எம். முஸம்மிலிடம் கையளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆடி 18, 2012

“திட்டங்கள்’ சிறப்பானவை தான் ஆனால் “தீர்வு’ தான் முடிவிலி

அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் என்பன ஏற்கனவே சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருக்கின்ற போதிலும் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டு 24 வருடங்கள்  முடிவடைந்த நிலையில் அவை ஒரு போதுமே அமுல்படுத்தப்படவில்லை என்பது அதாவது அவற்றை மாகாண சபைகளுக்கு பகிர்ந்தளிக்க அரசாங்கங்கள் மறுத்து வருகின்றன என்பது புதியதொரு விடயமல்ல.
யாவற்றுக்கும் மேலாக அரசியல்  தீர்வு விடயத்தில் இதய சுத்தியுடன் இருப்பதாக எப்போதுமே ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்கள் கூறிவருகின்ற போதிலும் அது தொடர்பாக ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுப்பதில்லை. அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்வதற்கு தயார் என்று அறிவித்திருந்த ஜனாதிபதி இப்போது அந்த “அப்பால் செல்வது’ என்பது பாராளுமன்றத்தில் இரண்டாவது சபையான செனட் சபையே என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செனட் சபையானது  இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் தயாரிக்கப்பட்ட முதலாவது அரசியல் அமைப்பில் உள்ளீர்க்கப்பட்டிருந்து பின்னர்  1972 ஆம் ஆண்டு  குடியரசு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்ட போது இல்லாமல்  செய்யப்பட்ட தொன்றேயாகும்.
(மேலும்.....)

ஆடி 18, 2012

ஹிலாரி ஈரானுக்கு எச்சரிக்கை

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க அமெரிக்கா தனது அனைத்து சக்திகளையும் பயன்படுத்தும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அறிவித்துள்ளார். இஸ்ரேல் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஹிலாரி கிளின்டன் இஸ்ரேல் ஜனாதிபதி ஷிமொன் பரிஸ் மற்றும் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஆகியோருடனான சந்திப்புக்கு பின்னர் நடத்திய ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக மேற்கு நாடுகள் கூறும் குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந் நிலையில் ஈரான் அணு ஆயுதம் தொடர்பான உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் ஈரானுடன் கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தியது. எனினும் அந்த பேச்சுவார்த்தையில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்பட வில்லை. இதேவேளை எகிப்து இஸ்ரேலுட னான அமைதி உடன்படிக்கையை தொடர்ந்து கடைபிடிப்பதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, ஹிலாரி கிளின்டனிடம் வலியுறுத்தியுள்ளார். ஹிலாரி கிளின்டனுடனான சந்திப்பின்போதே நெதன்யாகு இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஆடி 17, 2012

அமிர்தலிங்கம், யோகேஸ்வரனின் நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அ.அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரின் நினைவு தினம் இன்று யாழ். மாவட்ட தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிர்வாக உறுப்பினர் அ.சங்கையா தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு மௌன அஞ்சலியுடன் ஆரம்பிக்கப்பட்ட நினைவு தினக் கூட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள் இருவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்துக் கௌரவித்ததுடன், அமிர்தலிங்கம் கட்சியின் செயலாளராக கடமையாற்றிய போது தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவைகள் குறித்தும் நினைவுப் பேருரை ஆற்றினர். (மேலும்.....)
 

ஆடி 17, 2012

மீண்டும் தமிழீழ குத்துக்கரணம்

ஜெயலலிதா, சீமான், வைகோ போன்றவர்களுக்கு பிழைப்பை ஏற்படுத்திய கருணாநிதி

டெசோ மாநாட்டில் தனி ஈழம் குறித்த தீர்மானம் நிறைவேற்ற உத்தேசமில்லை,'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று திடீரென அறிவித்தார். மேலும், ""ஆயுதப் போராட்டத்தையும் விரும்பவில்லை,'' என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவதற்காக, "தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பை' கருணாநிதி மீண்டும் துவங்கினார். இந்த அமைப்பின் மாநாடு, ஆகஸ்ட் 12ம் தேதி சென்னையில் நடத்தவும் திட்டமிட்டு, அதற்கான பணிகளை தி.மு.க., முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில், விடுதலைப்புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்ததோடு, புலிகள் ஆதரவு சக்திகள் தமிழகத்தில் பலம் பெற்று வருவது கவலையளிப்பதாகவும் தெரிவித்தது.தி.மு.க., நடத்தும், "டெசோ' மாநாட்டிற்கு, பல்வேறு தரப்பில் எதிர் கருத்துகள் எழுந்தன. இந்நிலையில், நேற்று தி.மு.க., தலைவர் கருணாநிதி தன் நீண்ட பேட்டியில், "தனி ஈழ ஆதரவு இல்லை' என்பதை தெளிவுபடுத்தினார். (மேலும்.....)

ஆடி 17, 2012

கருமலையூற்று

பாதுகாப்புப்படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு முஸ்லிம் கிராமம்

தற்போது கருமலையூற்றுக்கிராமத்தின் ஐம்பத்துநான்கு ஏக்கர்பரப்பை சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிவாசலை யாரும் அணுகவோ, சுத்தப்படுத்தவோ, தொழுகை நடாத்தவோ, பெரியார்களின் அடக்கத்தலங்களை சுத்தப்படுத்தவோ, கந்தூரி கொடுக்கவோ மீன்படிக்கவோ, சென்றுதம் இருப்பிடங்களில் வாழவோ முடியாதபடி மக்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாமல் தற்போது பொதுமக்களுடனான எந்தவொரு சந்திப்பையும் இராணுவம் தவிர்த்து வருகிறது. அதற்கு ஒரு பின்னணி இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கருமலையூற்றுக்கிராமத்திற்கு வருகை தந்த ராணுத்தின் உச்சஅதிகாரம் பொருந்திய ஒருவரின் வருகையின் பின்பே இராணுவத்தின் இக்கடும்போக்கு அதிகரித்துள்ளதாக மக்கள் நம்புகின்றனர். மேலும் மக்களது இல்லிடங்களை அழித்து, ஜீவனோபாயமாகிய மீன்பிடியையும் தடுத்து இங்கு உல்லாச ஹோட்டல்கள் அமைத்து காசு சம்பாதிக்கும் பின்னணி இடம்பெறுவதாக மக்கள் கருதுகின்றனர். (மேலும்.....)

ஆடி 17, 2012

Peter MacKay’s wife Nazanin Afshin-Jam shocked TD closing accounts of Iranian Canadians

Nazanin Afshin-Jam believes the bank is “unintentionally” misinterpreting the sanctions, and says it is the government’s responsibility to properly explain the details of these sanctions to financial institutionsThe Iranian-born wife of Defence Minister Peter MacKay says she is shocked at TD Canada Trust’s decision to close a number of accounts belonging to Iranian Canadians without offering them a proper explanation. TD (TSX:TD) began notifying Iranian-Canadian clients in May that it would no longer provide them with banking services — in some cases referring to Ottawa’s economic sanctions against the Tehran regime. Nazanin Afshin-Jam, a dedicated human rights activist, says she believes the bank “unintentionally misinterpreted” the broad application of the sanctions, aimed at cracking down on Iran’s nuclear program. (more....)

ஆடி 17, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தல்

திருமலை மாவட்டத்தில் நேற்று கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல்

கிழக்கு மாகாண சபை திருகோண மலை மாவட்டத்திற்கான வேட்பாளர் பட்டியலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நேற்று தாக்கல் செய்துள்ளது. கல்வி நிபுணத்துவ ஆலோசகர் சி. தண்டாயுத பாணி முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார். திருகோணமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் பின்வருமாறு ;- சி. தண்டாயுதபாணி (முதன்மை வேட்பாளர்), க. கணேஸ்வரன் (தபால் அதிபர்), இந்திராணி தர்மராஜா (சுதேச மருத்துவர்), எஸ். அந்தோனிப் பிள்ளை (சமாதான நீதவான்), எம். எஸ். பசுல் (புல் மோட்டை), க. நாகேஸ்வரன் (மூதூர்).

ஆடி 17, 2012

51 இலங்கையர்களுடன் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்த படகு

51 இலங்கையர்களை ஏற்றிய அகதிகள் படகொன்று அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் இவர்களைக் கைது செய்துள்ளதாக தெரியவருகிறது. பாதுகாப்பற்ற வகையில் இந்த படகு அவுஸ்திரேலியாவைச் சென்ற டைந்துள்ளது.

ஆடி 17, 2012

சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தல்

கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களில் இ.தொ.கா. நேற்று வேட்புமனு தாக்கல்

மலையக மக்கள் முன்னணி, ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இலங்கை தொழிலாளர் காங்கிரஸடன் இணைந்து சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றன. இதற்கான வேட்பு மனுவை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்ட மான் கேகாலை மாவட்டத்திலும் இரத்தினபுரி மாவட்டத் திலும் நேற்று (16) திங்கட்கிழமை தாக்கல் செய்தார். கேகாலை மாவட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி முன் நேற்றுக் காலை (10.15 மணியளவில்) அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் வேட்பு மனுவை தாக்கல் செய்ததுடன், இரத்தினபுரி மாவட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சுனில் கன்னங்கரவிடம் நேற்று பிற்பகல் 1.30 மணிக்கு தாக்கல் செய்தனர். கேகாலை மாவட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தமது வேட்பாளரை நிறுத்த வில்லை.

ஆடி 17, 2012

பிரேசில் கடற்கரையில் 500 பென்குயின் உடல்கள்

தென் பிரேசில் கடற்கரையில் 500க்கும் மேற்பட்ட பென்குயின் பறவைகளின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. இவைகளின் மரணம் குறித்து விலங்கு மருத்துவர்கள் ஆய்வு நடத்தி வருவதாக பிரேசிலின் கடலோர ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் பிரேசிலின் 100 கிலோ மீற்றர் கடற்கரையைக் கொண்ட பகுதியில் 512 பென்குயின் உடல்கள் கரையொதுங்கியுள்ளன. எனினும் இந்த பென்குயின் உடல்களில் காயங்கள் ஏற்பட்டதற்கான எந்த அறிகுறிகளோ அல்லது எண்ணெய்கறைகளோ இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த பென்குயின்களின் மரணம் குறித்து மர்மம் நீடிக்கிறது. மகலரிக் பென்குயின்கள் என அழைக்கப்படும் இவை தென் ஆர்ஜன்டீனா மற்றும் சிலி பகுதிகளில் கூட்டமாக வசிக்கின்றன. இவை மார்ச் மற்றும் செப்டம்பர் இடையில் வடக்கு திசைக்கு இடம்பெயர்கின்றன. சிறிய மீன்கள் மற்றும் கிரூஸ்டேசியன் என்ற நீர் வாழ் பிராணி ஆகியவையே இந்த பென்குயின்களின் பிராதான உணவாகும். இவைகளின் பிரதான எதிரியாக தென் பகுதியிலுள்ள கடல் சிங்கம் கருதப்படுகிறது.

ஆடி 17, 2012

மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் யாழில் சிங்களத் திரைப்படம்

யாழ்ப்பாணத்தில் சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் சிங்களத் திரைப்படம் ஒன்று வெளியிடப்படவுள்ளது. சந்திர ரத்ன மாபிடிகம இயக்கியுள்ள ‘சிஹினய திகே என்ன‘- (கனவின் வழி வாருங்கள்) என்ற திரைப்படமே எதிர்வரும் வரும் 20 ஆம் திகதி யாழ்.நகரில் உள்ள ராஜா திரையரங்கில் திரையிடப்படவுள்ளது. தமிழ் உபதலைப்புகளுடன் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. சனத்குணதிலக, வீனா ஜயக்கொடி, உதாரி வர்ணகுலசூரிய , அமில அபயசேகர, நயனா உட்பட பல பிரபல நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளன. ___

ஆடி 17, 2012

அம்பாறையில் ஜே.வி.பி. இன்று வேட்பு மனு தாக்கல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜே.வி.பி. கட்சியினர் அம்பாறை மாவட்டத்துக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்யவுள்ளதாக ஜே.வி.பி. யின் அக்கரைப் பற்று அமைப்பாளர் எம். ஐ. அபூ சஹீட் தெரிவித்தார். ஜே.வி.பி. கட்சியின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த பிய திஸ்ஸவை தலைமை வேட்பாளராக கொண்டே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். வேட்பாளர் பட்டியலில் சம்மாந் துறையைச் சேர்ந்த எம்.எஸ்.எம். புஹாரி அக்கரைப் பற்றைச் சேர்ந்த எம். ஐ. அபூ சஹீட் ஆகிய இரு முஸ்லிம் களும் போட்டியிடவுள்ளனர். ஜே.வி.பி. கட்சியினர் மட்டக் களப்பு, திரு கோணமலை மாவட்டங்களுக்கான வேட்பு மனுவை 19 ஆம் திகதி தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. _

ஆடி 17, 2012

மயக்கமூட்டி கிளிநொச்சி நபரிடமிருந்து பணமும் உடைமைகளும் பறிமுதல் _

கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதாகச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் காட்டுக்குள்ளிருந்து மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்­ளார். அவரிடமிருந்த பணம், மோதிரம், தொலைபேசி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச் சம்பவத்தில் கிளிநொச்சி – உருத்திரபுரத்தைச் சேர்ந்த சிவசம்பு சுவிராவா (வயது 40) ௭ன்பவரே மயக்கமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த குடும்பஸ்தர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியிலுள்ள ‘கராஜ்’ ஒன்றுக்கு உழவு இயந்திர உதிரிப்பாகம் ஒன்றைத் திருத்துவதற்காக துவிச்சக்கர வண்டியில் புறப்பட்டு துவிச்சக்கர வண்டியை கிளிநொச்சில் நிறுத்திவிட்டு பஸ் ஒன்றில் யாழ்ப்பாணம் ஆரியகுளத்திற்குச் சென்றுள்ளார். (மேலும்.....)

ஆடி 16, 2012

Drop Tamil Eelam agenda

Chidambaram to Karunanidhi

Union home minister P Chidambaram on Sunday reportedly conveyed to DMK chief M Karunanidhi the central government's displeasure over a move by the ally to pass a resolution to demand Tamil Eelam at a meeting of the Tamil Eelam Supporters Organisation (TESO) in Chennai on August 12. The TESO, which comprises supporters of Eelam (separate Tamil land in Sri Lanka) and was revived by Karunanidhi after three decades, is seen as a political strategy to boost the flagging morale of his party, which lost the 2011 assembly polls, as well as to reiterate his importance as a Tamil leader. But such a meeting, to be organised by a key ally of the UPA government, could prove a huge embarrassment for India, whose stated international policy is for cordial ties with Sri Lanka. The nearly half-anhour discussion between Chidambaram and Karunanidhi took place at the DMK chief's CIT Colony residence in Chennai on Sunday. (more....)

ஆடி 16, 2012

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்

(நொயல் நடேசன், அவுஸ்திரேலியா)

1996 ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி அதிகாலை 6 மணிக்கு 1200 இராணுவத்தினர் இருந்த முல்லைத்தீவு முகாம் விடுதலைப்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டபோது, அங்கு இராணுவத்தினரில் Sinhala எஞ்சியிருந்தவர்கள் 6 ஆவது விஜயபா படையணியில் இருந்த எட்டு இராணுவத்தினர் மட்டும்தான். அவர்கள் எண்மரும் தண்ணீர்த் தாங்கியில் மறைந்து பதுங்கி உயிர் பிழைத்தனர். இந்தத் தாக்குதல் நான்கு நாட்களில் அதாவது 22ஆம் திகதி முடிவுக்கு வந்தது. வட்டுவாய்க்கல் வன்னிப்பிரதேசத்துடன் முல்லைத்தீவை, இணைக்கும் பிரதேசம். இங்கு 400 இராணுவ வீரர்கள் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த போது அந்த இடத்தில் அவர்கள் எல்லோரும் கொலை செய்யப்பட்டார்கள். எவரையும் போர்க் கைதிகளாக தொடர்ந்து வைத்திருக்க பிரபாகரன் மறுத்ததே அதற்குக் காரணமாகும். (மேலும்.....)

ஆடி 16, 2012

டெசோ மகாநாட்டு கலகலப்புகள், சலசலப்புகள்

இலங்கையில் தனித்தமிழ் ஈழம் அமைக்க வேண்டுமென்ற கோரிக் கையை முன்நிறுத்தி, தி.மு.க., நடத்தவுள்ள, "டெசோ' மாநாடுக்கு, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. புலிகள் ஆதரவு அமைப்புகளுக்கு மத்திய உள்துறைஅமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தடைகளை மீறி, "டெசோ' மாநாடு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. (மேலும்.....)

ஆடி 16, 2012

தமிழ் மக்களின் 'குறும் ஞாபக சக்தி' யை பயன்படுத்தும் தமிழ் தேசிய(ம்) கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு - கடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவில்லையல்லவா? அதற்கு அவர்கள் கூறிய காரணம்தான் என்ன? 'வடக்கு – கிழக்கு ஒரே நிலப்பகுதி. வடக்கையும் கிழக்கையும் தனித்தனியாகப் பிரித்தமையை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், கிழக்குத் தேர்தலில் நாம் போட்டியிட்டால், வடக்கு – கிழக்கு பிரிப்பை ஏற்றுக் கொண்டதாகி விடும். எனவே – கிழக்குத் தேர்தலை நாம் பகிஷ்கரிக்கின்றோம். மேலும், கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கூறியிருந்தது. இதில் பகிடி என்னவென்றால், 'கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்' என்று கடந்த முறை தொண்டை கிழியப் பேசிய அதே தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இம்முறை இடம்பெறும் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தலில் கச்சை கட்டிக் கொண்டு களம் இறங்குகின்றது. அதாவது, கிழக்குத் தேர்தலில் போட்டியிடுவதென்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த முறை துரோகம், இம்முறை – சாணக்கியம்! அப்படியென்றால், 'அரசாங்கத்தோடு இணைந்து போட்டியிடுவதை' இந்தத் தேர்தலின்போது துரோகம் என்று சொல்லும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அடுத்த தேர்தலில் சாணக்கியமாகப் பயன்படுத்த மாட்டாது என்பதற்கு என்னதான் உத்தரவாதம்?!!

ஆடி 16, 2012

பத்மநாபா

 

வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும்

 

(சபா நாவலன்)

(இக் கட்டுரையின் விடயங்கள் பலவற்றில் எமக்கு உடன்பாடு இல்லை. தகவல்கள் தவறாகவும் புரியப்பட்டிருக்கின்றன, பதியப்பட்டிருக்கின்றன. ஆனாலும் ஆயிரம் பூக்கள் மலரட்டும்.....- ஆர்)

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் நூல் ஒன்றின் அட்டைப்படத்தைப் பார்த்ததும் அங்கிருந்த ஒருவர் “இது ரஞ்சன் தோழர்” என்று உரக்கச் சத்தமிட்டார். இல்லை இது பத்மநாபா, ஈ.பி.ஆர்.எல்.எப் << ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி>> என்ற இயக்கத்தின் செயலாளர் என்றதும், அவர் நம்ப மறுத்துவிட்டார். இல்லை இது ரஞ்சன் தோழர் தான், எனது மகனுக்குப் பெயர் வைத்தது கூட இவர் தான் என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர். இவர் ஈ.பி.எல்.ஆர் இல் சேர்ந்துவிட்டது தனக்குத் தெரியும் என்றும் சொன்னார். அவரது மகன் கூட சமரன் என்றே பெயர் சூட்டப்பட்டிருந்தார். இப்போது நான் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய இருப்பதாக உணர்ந்தேன். அவர்கள் ரஞ்சன் தோழரைப் பற்றிக் கூறத் தொடங்கினர். கிராமியத் தொழிலாளர் சங்கத்திற்கு வேலை செய்தவர். அப்போதே தாடி வைத்திருந்தார். எங்களைக் கூலிப் போராட்டங்களுக்குத் தயார் படுத்தினார். தன்னைப்பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள மாட்டார். அவர் எங்களவர். எங்களோடு வாழ்ந்தவர். ஈ.பி.எல்.ஆர் இற்காக எங்களைவிட்டுப் போய்விட்டார் என்றார்கள். இப்படி பலவற்றைக் கூறிய போது ரஞ்சன் தோழர்தான் “பிரபல” பத்மனாபா என உறுதிப்படுத்திக்கொள்ள எனக்கு நேரமெடுக்கவில்லை. (மேலும்.....)

ஆடி 16, 2012

கையால் மலம் அள்ளும் அருந்ததிய மக்களின் துயரம், பிரதமரை சந்திக்கிறார் அமீர்கான்

கையால் மலம் அள்ளி சுத்தம் செய்யும் கொடூரத்தை இன்னும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலாக அனுபவித்துக் கொண்டிருக்கும் அருந்ததிய மக்களின் துயரத்திற்கு முடிவு கட்டக்கோரி பிரத மர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட பிரபல நடிகர் அமீர்கான் முடிவு செய்துள்ளார். திங்களன்று காலை பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்திருப்பதாக அமீர்கானின் செய்தித் தொடர்பாளர் தில்லியில் ஞாயிறன்று தெரிவித் தார். நடிகர் அமீர்கான் தொலைக் காட்சியில் “சத்யமேவ ஜயதே” என்ற பெயரில் வாரந்தோறும் சமூகப் பிரச் சனைகள் குறித்து விழிப்பு ணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். கடந்த வாரம், நாடு முழுவதும் நிலவும் தீண்டாமைப் பிரச்சனை குறித்தும், அருந்ததிய தொழிலாளர்களின் அவல நிலை குறித்தும் விரிவாக அலசிய நிகழ்ச்சியை அவர் நடத்தினார்.

ஆடி 16, 2012

“கடுமையான ‘சீர்திருத்தங்களை’ நிறைவேற்றியே தீர வேண்டும்”  அமெ.முதலாளிகளை திருப்திபடுத்துவீர்! மன்மோகன் அரசுக்கு ஒபாமா கட்டளை

அமெரிக்க முதலாளிகளின் சமூகத்தை திருப்தி படுத்தும் விதத்தில் இந்திய அரசு தனது உள்நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார ‘சீர்திருத்தங்களை’ உடனடியாக மேற்கொண்டே தீரவேண்டுமென அமெ ரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நிர்ப்பந்தித்துள்ளார். சில்லரை வர்த்தகம் உள்பட பல்வேறு துறை களில் அந்நிய நேரடி முதலீடு நுழைய முடியாமல் இருக்கும் சூழ்நிலைமையை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், அதைச் செய்யும்போதுதான் இந் தியாவில் முதலீடு செய்வதற்கான உகந்த சூழ்நிலை நிலவுகிறது எனக் கருத முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். (மேலும்.....)

ஆடி 16, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட  20 பேர் சிலாபத்திலும் 109 பேர் கல்குடாவிலும் கைது

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 20 பேர் சிலாபத்திலும், 109 பேர் மட்டக்களப்பு கல்குடாவிலும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கடற்கரையிலிருந்து வள்ளத்திற்கு செல்வதற்காக திட்டமிட்டிருந்த இவர்களை சிலாபம், மற்றும் முன்னேஸ்வரம் பகுதியில் கைது செய்தனர். சிலாபம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மனோஜ் ரணகலவின் தலைமையிலான பொலிஸார் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இவர்களை கைதுசெய்தனர். (மேலும்.....)

ஆடி 16, 2012

அரபு எழுச்சி நாயகன் பவ்சிசியின் தாய் கைது

அரபு மக்கள் எழுச்சிக்கு காரணமாக இருந்த துனீஷிய நாட்டின் மொஹமட் பவ்சிசியின் தாயார் அரச அதிகாரியை அவமதித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதியுடன் தர்க்கித்த குற்றச்சாட்டில் 60 வயதான மனுபியா பவ்சிசி கைது செய்யப்பட்டதாக துனீஷிய நீதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மனுபியா பவ்சிசியின் மகனான 27 வயது மொஹமட் பவ்சிசி கடந்த 2010 டிசம்பரில் பொலிஸார் மற்றும் அரச அதிகாரிகளின் செயற்பாட்டை கண்டித்து தீக்குளித்து தற்கொலை செய்தார். இதனைத் தொடர்ந்தே துனீஷியாவில் மக்கள் எழுச்சி போராட்டம் ஆரம்பமானது. இதுவே அரபு நாடுகள் எங்கும் பரவியமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மரணமடைந்த தனது மகனுக்காக மக்கள் எழுச்சி போராட்டத்தில் கொல்லப்பட்டோருக்கான அரசின் நஷ்டயீட்டை பெறுவதற்காக நீதிமன்ற வளாகத்திற்கு சென்றபோதே மனுபியா பவ்சிசி கைதுசெய்யப்பட்டுள்ளார். எனினும் தனது தாய் நீதிமன்றத்தின் எழுதுவினைஞரோடே வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும் நீதிபதியுடனல்ல என்றும் அவரது மற்றொரு மகனான சலிம் பவ்சிசி குறிப்பிட்டுள்ளார். எனது தாய் மனிதாபிமான மில்லாத முறையில் நடத்தப்பட்டார். அதிகாரிகள் மக்களுக்கு கெளரவமளிக்க தெரிந்துகொள்ளவேண்டும். நாம் இதனை சும்மாவிட மாட்டோம் என்றார்.

ஆடி 16, 2012

இலங்கை அகதிகளை விரைவில் திருப்பி அனுப்ப சுவீடன் தீர்மானம்

சுவீடனில் உள்ள இலங்கை அகதிகளை இலங்கைக்கு விரைவில் திருப்பி அனுப்ப அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இலங்கையில் யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், யுத்தத்தை காரணம்காட்டி சுவீடனில் அகதி அந்தஸ்த்து கோரிய இலங்கையர்களை அங்கிருந்து வெளியேற்ற தீர்மானித்திருப் பதாக கூறப்படுகிறது. இது தொடர்பில் சுவீடனில் உள்ள இலங்கை அகதிகளுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கையின் பாதுகாப்பு நிலைவரங்கள் குறித்து சுவீடன் அரசாங்கம் திருப்தி கொண்டதன் பின்னர், இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆடி 16, 2012

தொழிலாளர் விரும்பினால்

இலங்கையில் அரச பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக அதிகரிக்கலாம்

இலங்கையில் அரச பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60 வயதாக அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போது அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 55 ஆக உள்ளது. எனினும் 60 வயது வரை சேவை நீடிப்புப் பெற முடியும். எவ்வாறாயினும்,57 வயதுக்குப் பின்னர், ஆண்டு தோறும் சேவை நீடிப்புக்கு கோர வேண்டும். புதிய திட்டத்தின் படி அரச பணியாளர்கள் 60 வயது வரை சேவை நீடிப்புக் கோராமலேயே பணியாற்ற முடியும். அதேவேளை அரச பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை தொடர்ந்தும் 55 வயதாகவே இருக்கும். அரச பணியாளர்கள் 55 வயதுடன் ஓய்வுபெற விரும்பினால் ஓய்வு பெற்றுச் செல்ல முடியும்.

ஆடி 16, 2012 ___

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே மீண்டும் அரசியலுக்கு வருவேன் - சந்திரிகா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமே மீண்டும் அரசியலுக்கு வருவேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். நான் இன்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராவேன். மீண்டும் செயற்பாட்டு அரசியலில் களமிறங்கினால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடாக மட்டுமேயாகும். எனினும் மீண்டும் அரசியலில் களமிறங்குவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து சந்திரிகா புதிய அரசியல் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எனினும் அரசியலில் களமிறங்கினால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக மட்டுமே என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆடி 16, 2012

50 ஆண்டுகளில் முதல் முறையாக கியூபாவில் அமெரிக்க கப்பல்

அமெரிக்காவில் இருந்து 50 ஆண்டு களுக்கு பின் கியூப துறைமுகத்திற்கு கப்பலொன்று சென்றடைந்துள்ளது. அமெரிக்காவின் மியாமியில் இருந்து மனிதாபிமான உதவிகளுடன் இந்த கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை ஹவானா பே துறைமுகத்தை அடைந் துள்ளது. அனா கெசிலியா என்ற இந்த சிறிய கப்பலில் உணவு, மருந்துவகை, உடை, மின்சார சக்கர நாட்காலி ஆகிய உதவிப் பொருட்கள் இருந்துள்ளன. மியாமியில் இருக்கும் தன்னார்வ தொண்டர்கள், புலம்பெயர்ந்த கியூப நாட்டவர் ஆகியோர் இந்த பொருட்களை கியூபாவுக்கு அனுப்பியுள்ளனர். கமியுனிச நாடான கியூபாவுக்கு 1962 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. எனினும் அண்மைக் காலமாக அமெரிக்கா அந்த தடையை தளர்த்தியுள்ளது. எனினும் இந்த உதவிப் பொருட்களை கொண்டு சென்ற கப்பல் குறித்து இரு நாட்டு அரச தரப்பும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும் கடந்த 2009 இல் அமெரிக்கரான அவான் கிரோஸ் என்பவர் கியூபாவிலுள்ள யூத சமூகம் ஒன்றுக்கு கணனிகள் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டார். இந் நிலையில் ஒபாமா அரசு அமெரிக்காவில் இருக்கும் புலம்பெயர்ந்த கியூப நாட்டவர்கள் கியூபாவில் இருக்கும் தமது உறவினர்களுக்கு உதவுகளை வழங்க அனுமதி அளித்தது.

ஆடி 16, 2012

யாழ். மாவட்டத்தில் 15 பாரிய குற்றச் செயல்கள், ஆறு பேர் கைது _

யாழ். மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் 15 பாரிய குற்றச் செயல்கள் இடம் பெற்றுள்ளதுடன் இக் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனக்கருதப்படும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த வாரத்தில் நான்கு வீடுடைப்புச்சம்பவங்கள் ,இரண்டு சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மற்றும் காசோலை மோசடி, கடவத்தையில் இருந்து 65 இலட்சம் ரூபா வாகனத்தை வாங்கி வந்து பணம் கொடுக்காது மோசடி செய்தமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வாரத்தில் இடம் பெற்ற குற்றங்கள் அனைத்தும் யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் இடம் பெற்றுள்ளதாகவும் காங்கேசன்துறைப் பொலிஸ் அத்தியட்சர் பிரிவில் எத்தகைய குற்றங்களும் நடை பெறவில்லையென்வும் தெரிவித்ததுடன் கடந்த காலத்தில் யாழ்ப்பாணம் ஐந்து சந்தி மற்றும் சுன்னாகம் மின்சார நிலைய வீதியிலும் இளைஞர்கள் அட்டகாசம் செய்வது சம்பந்தமாக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இந்தப் பகுதிகளில் பொலிசாரினால் விழிப்புணர்வு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆடி 15, 2012

IPKF உடன் மோதலில் ஈடுபட வேண்டாமெனக் கெஞ்சிய யாழ். மக்கள்  

உளவாளிகள், காதலர்களை ஈவிரக்கமின்றி சித்திரவதை செய்து கொன்று குவித்த புலிகள்!

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் அனைவருமே துரோகிகள் என அந்த அமைப்பின் முன்னாள் பெண் உறுப்பினரான நிரோமி டி சொய்சா என்பவர் தான் எழுதியுள்ள 308 பக்கங்களைக் கொண்ட தமிழ் டைக்ரஸ் (Tamil Tigress) என்ற புத்தகத்தில் அந்த இயக்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அமைதி காக்கும் துருப்பினர் இலங்கையில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் உளவாளிகளை விடுதலைப் புலிகள் படுகொலை செய்ததுடன், தமிழர்களின் வர்த்தக நிலையங்களில் கொள்ளைச் சம்பவங்களையும் மேற்கொண்டதாக நிரோமி டி சொய்சா குறிப்பிட்டுள்ளார். 1987ம் ஆண்டு தமது 17 வயதில் நிரோமி டி சொய்சா புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டதாக தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். நிரோமி டி சொய்சா தற்போது அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார். வன்முறைகளால் தமிழீழ கோரிக்கையை அடைய முடியாது என அறிந்து கொண்டதன் பின்னர் தாம் இயக்கத்திலிருந்து விலகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

ஆடி 15, 2012

புலிகளுக்காக ஆட்சியை இழந்ததாக கருணாநிதி புரளி

அதிகாரம் உள்ளபோது மெளனம் இல்லாமல் போனதும் ஞானோதயம்!

விடுதலைப் புலிகளின் நலன்களுக்காகத் தான் 1991இல் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி, என தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே கலைஞர் மேற்படி கூறியுள்ளார். டெசோ மாநாட்டிற்கு மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும், இலங்கையிலே உள்ள தமிழ் எம்.பிக்களையும் அழைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  (மேலும்.....)

ஆடி 15, 2012

கூட்டமைப்பில் சமத்துவ பிரதிநிதித்துவமா? கேட்க சித்தா, சங்கரிக்கு அருகதையில்லை

ஒருவர் கட்டுக்காசை இழந்தவராம், மற்றவர் காட்டிக்கொடுத்தவராம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் கட்சிகள் தங்களுக்குச் சமத்துவப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்பது எந்த வகையிலும் நியாயமாகாது. சென்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட ஆனந்தசங்கரியின் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு 9223 வாக்கு கள் மட்டும் விழுந்தன. போட்டியிட்ட அனைவரும் கட்டுக்காசை இழந்தனர். அப்படியான கட்சிக்கு எப்படி சமத்துவப் பிரதிநிதித்துவம் கொடுக்க முடியும்? (மேலும்.....)

ஆடி 15, 2012

சீமான், வைகோ, கருணாநிதி போன்றவர்கள் தடைக்கு காரணம்....?

தமிழீழம் இந்தியாவுக்கு எதிரானது! விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிப்பு

குடிமக்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்திய அரசு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருத்திற் கொண்டு அதனை தடை செய்துள்ளதாக இந்திய மத்திய உள்துறை அமைச்சின் செயலாளர் தர்மேந்திரா ஷர்மா தெரிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கமானது 1991 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின்னர் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. இதன் பின்னதாக இந்த தடை உத்தரவானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீடிக்கப்பட்டு வருகிறது. (மேலும்.....)

ஆடி 15, 2012

முதலமைச்சர் போட்டி இனப் பிளவாக கூடாது

கிழக்கில் தமிழ் - முஸ்லிம் இன ஐக்கியம் மீண்டும் கனிந்து வரும் சூழலில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் நடவ டிக்கைகளால் அந்த ஒற்றுமை மீண்டும் சிதைவடைய அரசியல் தலைமைகள் இடமளிக்கக் கூடாதென குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீ.ல.சு.க அமைப்பாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் வாழ் பவர்கள் தாம் சார்ந்த சமூகம்தான் முதல மைச்சராக வரவேண்டுமென்று வரிந்து கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில் அவர்களின் அபிலாஷைகளால் இன நல்லுறவு பாதிப்படையக்கூடாது. அது அங்கு வாழும் மக்களின் எதிர்கால நன்மைக்கு ஆரோக்கி யமற்றதாக அமையக்கூடாதென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இந்த விடயத்தை மிகவும் அவ தானமாகக் கையாளவேண்டும். அரசில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் பிரசார நடவடிக்கைகளில் ஆளை ஆள் விமர்சிப்ப தில்லையென அறிவித்துள்ளமை வரவேற்க வேண்டியதே. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகியன தமது இனத்தின் அபிலாஷைகளை வென்றெடுக்க பாடுபட வேண்டிய தேவை யுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆடி 15, 2012

ஆறுமுகனும் மனோவும் ஓரணியில் பயணிக்க முடிவு

தமிழ் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய தீர்மானம்

சப்ரகமுவ மாகா ணசபைத் தேர்தலில் தமிழ்ப் பிரநிதித் துவத்தை உறுதிசெய்யும் முயற்சியில் மலை யகத்தில் பிரதான அர சியல் கட்சிகள் ஒன்றி ணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுக்கும் இடையில் நடந்துள்ள சந்திப்பின் போது இந்த இணக்கம் எட் டப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 15, 2012

வடக்கில் அவசியம் ஏற்படும் போது மட்டுமே இராணுவம் வெளியேவந்து செயற்பட உத்தரவு

வடக்கு கிழக்கு அவசியம் ஏற்படும் போது மட்டும் இராணுவத்தினர் வெளியில் வந்து செயற்பட வேண்டுமென்று தான் உத்தரவிட்டிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகையே உலுக்கிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளை இல்லாதொழித்த பெருமை எமது படை வீரர்களையே சாரும். அத்தகைய சாதனை செய்தவர்கள் இன்று மக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இதனை ஒருசிலரால் தாங்கிக் கொள்ள முடியாம லிருக்கிறது என்றும் ஜனாதிபதி தெரி வித்துள்ளார். இந்தியாவின் பிரபல நாளேடான இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றிலேயே ஜனாதிபதி இவ் வாறு தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஆடி 15, 2012

நான் பெரியவன், நீ சிறியவன் என்ற பேச்சு எழக்கூடாது

தமிழரின் இரத்தத்தாலும், சதையாலும் உருவான அமைப்பே தமிழ் கூட்டமைப்பு

தமிழ் மக்களின் இரத்தத்தாலும் சதையினாலும் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழிப்பதற்கு அதனுள் இருப்பவர்களுக்கு எந்த உரிமையும் அருகதையும் இல்லையென வன்னி மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரா ளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மக்களால் உருவாக்கப்பட்டது. சின்னத் தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு கூட்டமைப்பை தொலைப்பதற்கான எந்த அருகதையும் உரிமையும் அதில் இருப்ப வர்களுக்கு இல்லை. இது மக்களின் இரத்தத்திலும் சதையிலும் உருவான அமைப்பு. (மேலும்.....)

ஆடி 15, 2012

மு.கா.வின் அரசியல் சாணக்கியம்; பின்பற்ற TNA யிடம் கோரிக்கை

எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபட்டு அரசுடன் இணைந்து போட்டியிட முன் வருவது மிகச் சிறப்பான தெரிவென்றும், அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசுடன் இணைய முன்வருவது மிகப்பெரும் சாணக்கிய செயல்பாடு எனவும் ஐனாதிபதியின் இணைப்பாளர் ஆர். பாபுசர்மா தெரிவித்துள்ளார். இதே போன்று பிரதி அமைச்சர் விநா யகமூர்த்தி முரளிதரனின் அழைப்பை ஏற்று தமிழ்க் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவு அளிப்பதன் மூலம் வடகிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வினை விரைவாக பெறுவதற்கான முயற்சியாக இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலை தமிழ் கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும். 60 வருடமாக தமிழ் மக்களின் அரசியல் ரீதியிலான எதிர்ப்பு போராட்டமும் ஆயுத போராட்டமும் தமிழர்களின் இருப்பைகூட இன்று கேள்விக்குறியாக்கிவிட்டது. இணக்கப்பாட்டு அரசியலை முன்னெடுத்து தமிழ்மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அதற்கு சமாந்தரமாக அரசி யல் தீர்வையும்பெற முயற்சிக்கலாம் என பாபு சர்மா மேலும் தெரிவித்துள்ளார். தனது அரசியல் சாணக்கியத்தின்மூலம் அரசுடன் இணைந்து தனது நிலைப்பாட்டை முன்னெடுத்து செல்வார் என்பதில் ஐயம் இல்லை. இது போன்று தமிழ் கூட்டமைப் பும் அரசியல் சாணக்கியத்துடன் செயற்பட வேண்டும் என பாபுசர்மா மேலும் தெரிவித்துள்ளார்.

ஆடி 15, 2012

கலைஞரின் டெசோ தனிநாடும் சம்பந்தனின் ஐக்கிய இலங்கையும்

இலங்கையில் தமிழர்களுக்கு என்று தனி நாட்டு கோரிக்கையை வலியுறுத்தி, ஓகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதி தமிழ் நாட்டு எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க) ஏற்பாட்டில் நடைபெறவிருந்த “டெசோ” மாநாடு ஏற்பாட்டாளர்களிடையே காணப்பட்ட குழப்பநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னொரு தடவை மதுரை நகரில் இதேபோன்றதொரு கோரிக்கையை வலியுறுத்தி “டெசோ” மாநாடு நடைபெற்ற போது, விடுதலை புலிகள் இயக்கம் அதனை புறக்கணித்திருந்தது. இன்று, விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த முயற்சி மீண்டும் முன்னெடுக்கப்படுவது குறித்துப் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.  (மேலும்.....)

ஆடி 15, 2012

தம்பியுடையான் படைக்கு அஞ்சான்!

வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை தீர்வு விடயத்தை தமிழ் கூட்டமைப்பு சரியாகவே கையாண்டு வருகிறது. நான் ஒன்றும் கண்மூடி இருக்கவில்லை. தேவையெண்டு வந்தால் சரியான நேரத்தில் தேவையான ஆதரவும், அழுத்தமும் என் மூலமாகவும் வெளிவரும். தம்பி ஆறுமுகன் தொண்டமானின் கூற்று தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள வயதான மற்றும் இளமையான அண்ணாமாருக்கு புரிந்திருக்குமோ தெரியாது. பலமுள்ள தம்பியைப் பற்றி யோசிக்காமல் தம் மூலம் பலம் தேடும் மலையக குழந்தைப் பிள்ளை அரசியல்வாதிகளுடன் கூட்டுவைப்பதால் என்ன பலன்?

ஆடி 14, 2012

 

டெசோவைக் குலைக்க சதியா?

திடீரென, தமிழ் ஈழ முழக்கம் கொடுத்த கருணாநிதிக்கு ஏகப்பட்ட கண்டனங்கள், விமர்சனங்கள். ஆனால், அவற்றைப் புறந்தள்ளி விட்டு டெசோவுக்கு மீண்டும் உயிர் கொடுத்து ஆகஸ்ட் மாதம் விழுப்புரத்தில் மாநாடு என்று நாள் குறித்தார் கருணாநிதி. அதன் பிறகு, தலைவர்களின் வருகை சிரமங் களைக் காரணம் காட்டி சென்னைக்கு மாற்றப்பட்டது. ஆகஸ்ட் 12 அன்று நடைபெற இருக் கும் டெசோ மாநாட்டை பிசுபிசுக்கச் செய்யும் வேலையில் சிலர் தீவிரமாக களம் இறங்கி உள்ளதாக தி.மு.க. வட்டாரம் வருத்தப்படுகிறது. ''80-களின் தொடக்கத்தில் ஈழம் குறித்த வலுவான தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தியது தி.மு.க-தான். இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடந்தபோது, கொத்துக்கொத்தாக ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதும், அகதிகளாகத் தமிழகத்துக்கு வருவதும் அதிகரித்தது. (மேலும்.....)

ஆடி 14, 2012

India extends ban on LTTE

The government has extended the ban on LTTE declaring that it continues to adopt a strong anti-India posture and pose a grave threat to the security of its citizens. In a notification, the Home Ministry said the activities of LTTE are detrimental to the sovereignty and territorial integrity of India and there is a continuing strong need to control all such separatist activities by all possible means. "LTTE continues to adopt a strong anti-India posture as also continues to pose a grave threat to the security of Indian nationals, it is necessary to declare LTTE as an 'unlawful association' with immediate effect," the Home Ministry notification issued by joint secretary Dharmendra Sharma said. (more....)

ஆடி 14, 2012

மன்னாரில் பதிவில் உள்ள முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை வழங்குமாறு கோரிக்கை

மன்னார் முச்சக்கர வண்டிச் சாரதிகளை அடையாளம் காணும் வகையிலும்,மன்னார் முச்சக்கர வண்டி சங்கத்தில் பதிவில் உள்ளவர்களையும் அடையாளம் காணும் வகையில் அவர்களுக்கு சீருடைகளை வழங்க உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என மன்னார் மக்களும்,சமூக ஆர்வலர்களும் உரிய தரப்பினரிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். தொடர்ந்தும் மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரால் இளம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ள போதும் மன்னார் முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்புத் தெரிவிக்கின்றனர். மன்னார் தனியார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாகவுள்ள முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து சேவையாற்றி வரும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சிலர் மீதே குறித்த குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. (மேலும்.....)

ஆடி 14, 2012

வெளிநாட்டு தூதரகங்களில் கடமையாற்றும் இலங்கை ராஜதந்திரிகள் நேற்று கிளிநொச்சி விஜயம்

வெளிநாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டனர். கிளிநொச்சிக்கு வருகைதந்த அவர்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் வரவேற்றனர். இதன்போது, கனடா, மலேசியா, இத்தாலி, ரஷ்யா, சிங்கப்பூர், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திர பிரதிநிதிகள் என எண்பதுக்கு மேற்பட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர். ___

ஆடி 14, 2012

புனர்வாழ்வளிக்கப்படவுள்ள கைதிகளை இடமாற்ற நடவடிக்கை

புனர்வாழ்வு பெற்று விடுதலையாக விரும்பும் சிறைக் கைதிகளின் பெயர்ப்பட்டியல்கள் நீதி மற்றும் பாதுகாப்பு அமைச்சுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதென புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர நேற்று தெரிவித்தார். நீதி அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் இப்பெயர் பட்டியலை ஆராய்ந்து உடனடியாக புனர்வாழ்வு அளிக்கக் கூடியவர்களை தெரிவு செய் ததும் வெகு விரைவில் அவர்களை தாம் சிறைச்சாலையிலிருந்து புனர்வாழ்வு நிலையங்களுக்கு மாற்றம் செய்வோமெனவும் அமைச்சர் கூறினார். இதேவேளை மேற்படி சிறைக் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தும் முகமாக புதிதாக நியமிக்கப்பட்ட மன்னார் நீதிமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஏனையோர் அவர்களது குற்றங்களுக்கமைய கட்டம் கட்டமாக புனர்வாழ்வளிக்கப்படுவர். இவர்களது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்தும் முகமாகவே மன்னார் மற்றும் அநுராதபுரம் நீதிமன்றங்களின் செயற்பாடுகள் இவ்வாரத்திற்குள் ஆரம்பிக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆடி 14, 2012

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 41 பேர் கைது

சட்ட விரோ தமான முறை யில் அவு ஸ்தி ரேலி யா செல்வதற்கு முற்பட்ட 41 பேர் கட ற்படையினரால் கைதுசெய்யப் பட்டுள்ளனர். நேற்று பகல் வேளையில் மீன்பிடி படகில் திருகோணமலை கடற்பரப்பின் ஊடாக செல்ல முற்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பெண்களும் ஐந்து சிறுவர்களும் அடங்குவர். இவர்கள் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.

ஆடி 14, 2012

ஆடி 14, 2012

எதுவரை "இணைய சஞ்சிகையின் (ஜூலை) 03வது இதழ் பதிவேற்றப்பட்டுள்ளது.

வாசியுங்கள், எழுதுங்கள்! உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள், இணைய தளத்தினை உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்....

http://eathuvarai.net/?page_id=961

ஆடி 14, 2012

மணியான ரத்னம்

இயக்குநர் மணிரத்னம் தனது மான சீக குருவாக அகிரா குரோசோவை சொல்லுவார். அவர் அதிகம் விரும்பி பார்ப்பது அகிராவின் படங்களைத்தான். தொட்டதற்கெல்லாம் சென்டிமென்ட் பார்க்கும் தமிழ் திரையுலகில் இவர் சற்று மாறுபாட்டவர். தனது படத்திற்கு பூஜை போடுவது, கேமிராவுக்கு தேங்காய் உடைப்பது, ராகுகாலம், எமகண்டம் பார்ப்பது எல்லாம் இல்லை. இவை அவருக்கு நேர விரயம். உன்னை நம்பு உன் உழைப்பை நம்பு அது போதும் என்பது மணியான ரத்தினத்தின் பாலிசி!

ஆடி 14, 2012

ஆடி 14, 2012

மலையக தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து இ.தொ.கா. சேவல் சின்னத்தில் போட்டி

சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் இ.தொ.கா. அதன் சேவல் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது. அண்மைக் காலமாக சப்ரகமுவ மாகாணத்தில் இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் மீள் உருவாக்கம் செய்யப்பட வேண்டும். அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என்ற ஒருமித்த கருத்து ஊடகங்கள் வாயிலாகவும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட புத்திஜீவிகள் சிவில் சமூக அமைப்புகள் மூலமாகவும் எமது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை இ.தொ.கா. தலைமைப் பீடம் கலந்தாய்வு செய்து அனைத்து மலையக அரசியல் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு அதன் சேவல் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருப்பதாக இ.தொ.கா. உபதலைவர்களில் ஒருவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பி. ராஜதுரை விடுத்த ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஆடி 14, 2012

இந்தியாவில்

ஜனாதிபதி தேர்தலில் வாக்குப்போடும் எம்.பி., எம்.எல்.ஏக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் குற்றவாளிகள்

புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் தகுதி எந்த அளவில் உள்ளது என்று சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 4896 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 1450 பேர் அதாவது மூன்றில் ஒருவர் கிரிமினல் என்று தெரிய வந்துள்ளது. அவர்களில் 641 பேர் கற்பழிப்பு, கொலை, கொள்ளை, ஊழல் போன்ற மிகப்பெரிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள், இத்தகைய கிரிமினல்கள் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 74 சதவீதம் பேர் உள்ளனர். பீகார் மாநில எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் 58 சதவீதத்துடன் 2 வது இடத்திலும் மராட்டிய மாநில எம்.பிக்கள் எம்.எல்.ஏ.க்கள் 51 சதவீதத்துடன் 3வது இடத்திலும் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் பல்லை இளித்துக் கொண்டு கும்பிடு போடும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் அதன் பிறகு மக்களை வேட்டையாடுபவர்களாக மாறிவிடுகிறார்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இத்தனைக்கும் மக்கள் பிரதிநிதிகளில் பாதிப் பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். 31 சதவீத கிரிமினல் எம்.பி. எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் மீது கற்பழிப்பு வழக்கு இருக்கிறது. 145 பேர் திருடர்கள் என்று பொலிஸ் நிலையங்களில் வழக்கு உள்ளது. 141 பேர் கொலையாளிகள், 90 பேர் கடத்தல்காரர்கள், 75 பேர் கொள்ளையர்கள் என்று குற்றச்சாட்டுக்கள் உள்ளன. 352 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவாகி உள்ளது.

ஆடி 14, 2012

அமாவாசைக்கு முன்னர் கூட்டமைப்பு வேட்பு மனுத்தாக்கல்

எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்லில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து போட்டியிடும் வகையிலான வேட்பு மனுக்கள் அடங்கியதான நியமனப் பத்திரத்தினை கூட்டமைப்பினர் எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையன்று தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி பணிமனையில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிய வந்துள்ளது. எதிர்வரும் புதனன்று அமாவாசை தினமாகையால் இதற்கு முன்னரே நியமனப் பத்திரத்தினை கையளிக்க வேண்டும் என கூட்டமைப்பு வட்டாரங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் நாளை ஞாயிற்றுக்கிழமைக்கிடையில் வேட்பு மனுவினை பூரணப்படுத்தும் வகையில் தீவிர செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருமலை மாவட்டத்தில் போட்டியிடும் வகையில் 37 பேர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவ்வாறு விண்ணப்பித்தோரில் கடந்த காலங்களில் கல்வித்துறையில் உயர்மட்ட அதிகாரியாகப் பணியாற்றிய ஒருவர் முதன்மை வேட்பாளராக தெரிவு செய்யப்படவுள்ள அதேவேளை நீண்ட காலம் கட்சிப் பணியாற்றியவர் இரண்டாவது வேட்பாளராக தெரிவு செய்யும் வகையிலும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூதூரைச் சேர்ந்தவரும் கூட்டறவுத் துறையில் பணியாற்றி வரும் மற்றொருவரும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதுடன் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த சமூகப் பணியாளர் ஒருவரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகவும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆடி 14, 2012

அரசாங்கத்தை மு.கா. ஆதரித்தால் தமிழருக்கு மட்டுமல்ல முஸ்லிம்களுக்கும் பாதிப்பு - மாவை

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் மக்களில் பெரும்பாலானோர் அரசுக்கு ஆதரவு வழங்கக்கூடாது என்ற தமது உள்ளத் துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கத்தை ஆதரித்தால் அது தமிழ் மக்களைப் பலவீனப்படுத்துவதாக மட்டுமல்ல முஸ்லிம் மக்களையும் பாதிக்கும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எடுக்கவிருக்கும் முடிவு என்னவென்பது குறித்து முஸ்லிம் மக்கள் இன்று கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம் மக்கள் அரசுக்கு ஆதரவை வழங்கக் கூடாது என்ற தமது உள்ளத்துடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்.....)

ஆடி 14, 2012

Still complain of discomforts despite working in an office with all modern comforts…!!!???

How about her…!!!???

ஆடி 14, 2012

அரசுடன் இணைந்து போட்டியிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

௭திர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென நேற்றிரவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கும் நோக்கில் நேற்றுக் கூடிய முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் இந்த முடிவை ஏகமனதாக ௭டுத்ததாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அந்த வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் சில தினங்களில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 13, 2012

இராஜநாயகம் ஜோர்ஜ் அவர்கள்   கனடாவில் காலமானார்

(அ.விஜயன்.)

பெரியகல்லறு 2ம் குறிச்சியை பிறப்பிடமாக்க கொண்ட ஜோர்ஜ் அவர்கள்,இராஜநாயகம் ரெட்டம்மா தம்பதிகளின் ஆண் பிள்ளைகளில் மூன்றாவது வாரிசாவார். பல நாட்களாக நோய்வாய்பட்டு ஹோமா நிலையில் இருந்த அவர் 11.7.12 அன்று காலமானார். ஈழ போராட்ட முன்னோடிகள் பலருக்கு அவர் ஆரம்ப நாட்களில் பல உதவிகள் செய்ததை நாம் கட்டாயம் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம். பெரியகல்லாற்றில் பலநோக்கு கூட்டுறவு கடை ஒன்றில்  அவர் முகாமையாளராக கடமையாற்றிய போது பல இளைஞர்கள் அவரை அணுகி உதவிகள் கேட்டபோதெல்லாம் தன்னால் இயலுமானவரை அவர் உதிவிகள் செய்துள்ளார்.ஈழ மாணவர் பொது மன்றத்தின் போஸ்டர்களை ஒட்டுவதற்கு  'ஆட்டர்மா' கொடுத்ததும் என நினைவுகளுக்கு வருகிறது. (மேலும்.....)

ஆடி 13, 2012

தடை செய்த அமைப்புக்கு பரிவு காட்டினால் கடும் நடவடிக்கை

"இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு தடை விதித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு குறித்த விவரங்களை, அனைத்து மாவட்ட கலெக்டர், தமிழக டி.ஜி.பி., மற்றும் சேலம், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி டி.ஐ.ஜி.,க்கள், க்யூ பிரிவு, குற்றப் புலனாய்வு, நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு, மத்திய உள் விவகாரத்துறை அமைச்சக இணைச் செயலர் தர்மேந்திர சர்மா, அனுப்பி உள்ளார். (மேலும்.....)

ஆடி 13, 2012

புலிகளுக்காகவே ஆட்சியை இழந்தேன்! கருணாநிதி உருக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் நலன்களுக்காகத் தான் 1991-ல் திமுக ஆட்சியை இழந்தது என்பதை இப்போதாவது புரிந்து கொண்டால் சரி, என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
நேற்றையதினம் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவிக்கையில் தான் மேற்படி கூறியுள்ளார்.செய்தியாளர்களிடத்தில் கருணாநிதி முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு
(மேலும்.....)

ஆடி 13, 2012

வெலிக்கடை சிறையில் 30 கையடக்க தொலைபேசிகள்

வெலிக்கடை சிறைக் கைதிகளிடமிருந்து 30 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட் டிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு. கொடிபிலி தெரிவித்தார். நேற்று அதிகாலை வெலிக்கடை சிறைக் கைதிகளிடம் திடீரென மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைக் கைதிகளிடமிருந்து மீட்கப் பட்டிருக்கும் கையடக்கத் தொலைபேசி களுள் நான்கு’3மி’ தொழில்நுட்பம் கொண்டவையாகும். இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதேவேளை, மேற்படி சட்டவிரோத செயற்பாடுகளுக்கு சிறை அதிகாரிகள் உதவியிருப்பதற்கான சான்றுகள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக் கெதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

ஆடி 13, 2012

சப்ரகமுவ மாகாண சபைக்கு இ. தொ. கா. தனித்துப் போட்டி

சப்ரகமுவ மாகாண சபைக்காக நடை பெறவுள்ள தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிடவுள்ளதாக இ. தொ. க.வின் தலைவரும், பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். பிரதேச தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக இ.தொ.கா தீர்மானித் திருந்தது. அந்த கட்சிகளுக்கு தமது முடிவை அறிவிக்க நேற்று மாலை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. எனினும் உரிய காலத்திற்குள் விருப்பங்களை தெரிவிக்காததால் இ. தொ. காவும் நேற்று இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக தலைவர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். விருப்பு வாக்குகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கக் கட்சி போன்ற பெரிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவில்லையென்றும் அவர் கூறினார்.

ஆடி 13, 2012

புடினுடன் ரால் காஸ்ட்ரோ சந்திப்பு  மேலும் பயனுள்ள உறவு வளரும்

ரஷ்ய ஜனாதிபதி விளா டிமிர் புடினை கியூப ஜனா திபதி ரால் காஸ்ட்ரோ புதன்கிழமையன்று புடி னின் நோவோ - ஓகார் யோவோ வீட்டில் சந்தித் தார். “இன்றைய காலகட் டங்களில் இரு நாடு களின் உறவுகளில் பல்வேறு கட் டங்கள் இருந்தன. இப் போது உறவுகள் மேலும் பயனுள்ளதாகிவிட்டன” என்று சந்திப்பின் தொடக் கத்தில் புடின் குறிப்பிட் டார். சோவியத் யூனியன் 1991ல் சிதறுண்டபின் வந்த ரஷ்ய ஆட்சியாளர்கள் கியூபா வை புறக்கணித்துவிட்ட னர். 2000ம் ஆண்டில் புடின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் புறக்கணிப்பு முடிவுக்கு வந்தது. அவர், பாரம்பரியக் கூட்டாளி என்று கியூபா வை வர்ணித்தார். அவரைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், அரிய நண்பர் பிடல் காஸ்ட் ரோவிடம் தம்முடைய நல் வாழ்த்துக்களைக் கூறும் படியும் புடின், கியூப ஜனாதி பதி ரால்காஸ்ட்ரோவிடம் கூறினார். (மேலும்.....)

ஆடி 08, 2012

தோழர் பத்தமநாபா

குறும் தமிழ் தேசியவாத்திற்கும், பெரும் தேசியவாதத்திற்கும் அடிபணியாத போராளி

(தோழர் ஜேம்ஸ்)

தமிழ் பேசும் மக்கள் ஒரு பலமான தலைமை இன்றி தவிக்கின்றனர் என்பது தற்போது பலரது குரலாக ஒலிக்கும் விடையம். கடந்து வந்த ஆயுதப் போராட்ட காலத்தில் புலிகள் தமது இயக்கத்திற்குள்ளும், இயக்கத்திற்கு வெளியேயும் பிரபாகரன் என்றொரு தனி நபரைத் தவிர்த்து ஏனைய தலைமை சக்திகளை அழித்தொழிப்பதில் தமது கடமையை சரிவரச் செய்துவந்தனர், இதில் புலிகள் வெற்றி கண்டனர். தமிழ் மக்கள் தோற்றுப் போயினர் என்பதுவும் வரலாற்று உண்மை. புலிகளின் இக்கடமையில் பலியான பலம் மிக்க தீர்க்தரிசனம் மிக்க தலைவர் அது பத்தமநாபா என்றால் மிகையாகாது. ஈழவிடுதலைப் போராட்டம் என்பது ஆயுதப் போராட்ட வடிவத்திலிருந்து சர்வதேசஅங்கீகாரம், அனுசரணை, ஆதரவு, ஒத்துழைப்புடன் நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வு, பரிந்துரை அடிப்படையில் பேச்சுவார்த்தை மூலமே தீர்க்கப்படலாம். அவ்வாறு தீர்கப்பட வேண்டிய உலக அரசியல் சூழலே தற்போதுள்ளது என்பதை உணரந்து கொண்டார் தோழர் பத்தமநாபா.  (மேலும்.....)

ஆடி 08, 2012

கனடாவில்
தியாகிகள் தினம்


இடம்: ரொறன்ரோ
கனடா
காலம்: ஜுலை 08, 2010 (ஞாயிற்றுக் கிழமை) மாலை 2.00 – 5.00 வரை

ஆடி 08, 2012

தமது இருப்பு, அரசியல் பிரசாரத்திற்காக கைதிகளுடன் விளையாட்டு

சரவணபவன் MP போன்ற TNA காரரின் சிறுபிள்ளைத்தன செயலுக்கு கண்டனம்

சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் விடுதலைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் களை விடவும் நானே ஆரம்பம் முதல் குரல் கொடுத்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதி லுள்ள சட்டச் சிக்கல் குறித்து நன்கு தெரிந் திருந்தும் தமது இருப்பிற்காகவும், அரசியல் பிரசாரத்திற்காகவும் சரவணபவன் எம்.பி போன்றவர்கள் என்னையும், பிள்ளையான், கே.பி போன்றோரையும் விதண்டாவாதமாகப் பயன்படுத்திவருகின்றனர். இது அவர்களது அறியாமையையும், சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டையுமே வெளிக்காட்டுவதாக பிரதியமைச்சர் வி. முரளிதரன் குற்றம் சாட்டினார். (மேலும்.....)

ஆடி 08, 2012

கிழக்கில் வலுப்பெற்றுவரும் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை

தமக்குள் கூட்டணி அமைத்து ஒருமித்த குரலில் அரசுடன் பேச்சு நடத்த முடிவு

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கை வலுவாக எழுந்துள்ள நிலை யில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சி களான முஸ்லிம் காங்கிரஸ், ரிசாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ஆகிய மூன்று முஸ்லிம் கட்சியும் முதலமைச்சர் கோரிக்கையில் ஒருமித்து செயற் படுவதெனவும், தேர்தல் பிரசாரங்களில் ஆளை ஆள் விமர்சிப்பதில்லையெனவும் முடிவெடுத்துள்ளன. (மேலும்.....)

ஆடி 08, 2012

நானே வடக்கின் அரசாங்க பிரதிநிதி வேறு எவரிடமும் ஏமாற வேண்டாம் - அமைச்சர் டக்ளஸ்

யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 2084 பட்டதாரிகளுக்கு நியமனக் கடிதங் கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதி யாகக் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த நியமனங்கள் உரிய வகையில் பயன்படுத் தப்பட வேண்டுமென்பதே எனதும் எமது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இந் நியமனங்கள் எமது அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்றன. இவற்றில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடமளிக்கக்கூடாது. 2004 ஆம் வருடத்தில் வழங்கப்பட்ட பட்டதாரிகளுக்கான நியமனங்களை விடவும் இந்த வருடத்தில் நாடளாவிய ரீதியில் அதிகமான பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றது. அதிலும் குறிப்பாக விகிதாசார அடிப்படையின்றி யாழ். மாவட்டத்தில் அதிகளவிலான பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்றன. (மேலும்.....)

ஆடி 08, 2012

கிழக்குவாழ் தமிழருக்கு இதுவரை எதையுமே செய்யாதவர்கள் இன்று எம் மக்களது அபிலாசைகள் பற்றி சிந்திக்கிறார்களாம்!

இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்காக குறிப்பாக கிழக்குவாழ் தமிழருக்காக எதனையுமே செய்யாத தமிழ் தேசிய அரசியல்வாதிகள் தற்போதுதான் கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகள் குறித்து சிந்திக்கிறார்களாம். இதனைக் கேட்டால் குழந்தைப் பிள்ளைக்கும் சிரிப்பு வரும். ஏன் என்றால் தற்போது கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப் பட உள்ள நிலையில், தங்களது கொள்கைகளுக்கும் அப்பால், அதா வது வடகிழக்கு இணைந்த தனித் தமிழ் ஈழமே எங்களது உயிர் மூச்சு என்று எழுபது ஆண்டுகாலம் வங்குரோத்து அரசியல் நடத்திய யாழ்மேலாதிக்க வாதிகளை முழுமையாகக் கொண்ட தமிழ் தேசியக் கூட்ட மைப்பு கட்சியினர் தற்போது தங்க ளது கொள்கை கோத்திரங்கள் எல் லாம் தூக்கி எறிந்து விட்டு இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக கிழக்கு மாகாண சபைத் தேர்தலிலே போட்டியிடப் போகின்றார்களாம். (மேலும்.....)

ஆடி 08, 2012

தமிழ்த் தேசியத்தை வைத்து பத்திரிகை வியாபாரம் செய்வதை இனியும் அனுமதிக்க முடியுமா?

ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களையும், அரசின் தீர்வு முயற்சிகளையும், அபிவிருத்தித் திட்டங்களையும் கண்மூடித்தனமாகவும், பொய் கலந்த கற்பனையான கருத்துக்களுடனும் விமர்சித்துவரும் யாழ். கொழும்பு இணைந்த இரு பத்திரிகைகள் இன்று அதே அரசாங்கத்தின் கீழ்வரும், திணைக்களங்கள், வங்கிகள், நிறுவன விளம்பரங்களை பல மில்லியன் ரூபாய்களுக்குப் பக்கம் பக்கமாக பெற்றுவருவது மட்டுமல்லாது பாதுகாப்புச் செயலாளர் உட்பட முக்கிய பல அமைச்சர்களின் பேட்டிகளையும் பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கும் அளவிற்கு இந்த நாட்டில் இன்றைய அரசாங்கத்தினால் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 08, 2012

கனவாகிப்போன தூத்துக்குடி கப்பல் சேவை!

(எம்.எஸ்.ஷாஜஹான் )

வருவார் ஆனால் வரமாட்டார். வந்தார் மீண்டும் திரும்பமாட்டார். இந்த அமைப்பில்தான் உள்ளது கொழும்பு தூத்துகுடி நேரடி கப்பல் சேவை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய முயற்சி இது. தூத்துகுடியில் புதிய கட்டிட அமைப்பு மற்றும் பயணிகள் வருகைக்கான இடவசதி எல்லாம் ஒழுங்கு செய்யப்பட்டன. ஆனால் அன்றைய முதலமைச்சர் செல்வியார் அனுமதி தரமறுத்துவிட்டார். புலிகளைக் காரணம் காட்டினார். அவர்கள் வந்து குவிவார்கள். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போகும் என்று சப்பு கொட்டினார் தனக்கும் ஆபத்து என்றார். அப்போதைய இலங்கையின் கப்பல் துறை அமைச்சர் என்னிடம் இது பற்றி பேசியபோது ‘வெட்டவேண்டியதை வெட்டுங்கள் அவர் கையெழுத்து போடுவார்’ என்றேன். இது அரசின் முயற்சி அது சாத்தியமில்லை என்றார் அவர்.அதே நிலைப்பாட்டைத்தான் இப்போதும் ஜெயலலிதா எடுத்துள்ளார். (மேலும்.....)

ஆடி 07, 2012

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும - இந்தியப் பிரதமர் _

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தகுந்த அரசியல் தீர்வு காண்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளோம் என்று இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் எழுதிய கடிதத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங் பதில் அனுப்பியுள்ளார். இக் கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, இலங்கை ஜனாதிபதியின் பேச்சு இலங்கை அமைச்சர் சம்பிக ரணவக்க பேச்சு தொடர்பாக ஜூன் 20 ஆம் திகதியிட்ட தங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றேன்.  ஜூன் 21 ஆம் திகதி ரியோடி ஜெனீரோ மாநாட்டில் இலங்கை ஜனாதிபதியை சந்தித்தேன். அப்போது இந்தப் பிரச்சினை தொடர்பாகவும் இலங்கைத் தமிழர்கள் மறு வாழ்வு அமைத்துக் கொடுப்பதற்காக இலங்கை அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் பேசினேன்.  தமிழர் பிரச்சினைக்கு இலங்கைக்கு உள்ளேயே தகுந்த அரசியல் தீர்வு காணத் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டிய அவசியம் குறித்து இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினேன். அதுதான் இலங்கைத் தமிழர்கள் கௌரவமான வாழ்க்கை வாழவும், சொந்த வீட்டில் வசிப்பது போன்ற உணர்வைப் பெறவும் போதுமான நடவடிக்கையாக அமையும் என்றும் தெரிவித்தேன். இவ்வாறு அந்தக் கடிதத்தில் பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.

ஆடி 07, 2012

மன்னார் கடற்பரப்பினுள் இந்திய ரோலர் படகு மீனவர்களின் அத்துமீறும் செயற்பாடு அதிகரிப்பு

பல வருடங்களுக்கு மேலாக மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து அடாத்தாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் இந்திய ரோலர் மீன்பிடி தொழிலாளர்களின் குறித்த செயற்பாடுகளினால் மன்னார் மாவட்ட மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர். கடந்த யுத்த காலத்தில் இருந்து தற்போது வரை இந்திய ரோலர் படகு மீனவர்கள் மன்னார் கடற்பிராந்தியத்தினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததோடு மீனவர்களின் பெறுமதி வாய்ந்த மீன்பிடி உபகரணங்களையும் சேதப்படுத்தி விட்டுச் செல்லுகின்றனர். குறித்த பிரச்சினை தற்போதும் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.யுத்தம் முடிவுற்ற நிலையிலும் இந்திய ரோலர் படகுகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் காணப்படுவதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆடி 07, 2012

பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தை படையினரிடமிருந்து மீட்க ஆர்ப்பாட்டம் நடத்தத் தீர்மானம்

மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்டத்தில் குடி கொண்டுள்ள கடற்படையினர் வெளியேறாத பட்சத்தில் மன்னாரில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டு அப்பகுதியில் இருந்து வெளியேறினர்.இதன் போது கடற்படையினரும் பொலிஸாரும் அந்த இடத்தில் காவலரண்களை அமைத்து குடியேறினர். தற்போது பொலிஸார் வெளியேறிய போதும் கடற்படையினர் வெளியேற மறுக்கின்றனர்.இவ்விடயம் தொடர்பில் கடற்படையினரிடம் கேட்டால் உரிய பதில் எதுவும் கூறுவதில்லை.  குறித்த குடியேற்ற மக்கள் தற்போது வாடகை வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

ஆடி 07, 2012

வட,கிழக்கிலிருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரையாக இம்முறை அதிகமான முருக பக்தர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இம்முறை பெருமளவிலான முருக பக்தர்கள் பாதயாத்திரையாக கதிர்காமத்திற்குச் செல்கின்றனர். கதிர்காமம் முருகன் ஆலயக் கொடியேற்றம் இம்மாதம் 18 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. இதனை முன்னிட்டு பெருமளவிலான முருக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு பாதயாத்திரையாக் செல்கின்றனர். கிழக்கில் சிறு சிறு குழுக்களாக இணையும் முருக பக்தர்கள் தற்போது மட்டு-அம்பாறை மாவட்டங்களின் பிரதான பாதைகளூடாக செல்வதை அவதானிக்க முடிந்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிடுகிறார். இவ்வாறு பாத யாத்திரையாகச் செல்லும் பக்தர்கள் குழுவினர் உகந்தை முருகன் ஆலயத்தைச் சென்றடைந்து காட்டுவழி ஊடாக கதிர்காமத்தைச் சென்றடையவுள்ளனர்.

ஆடி 07, 2012___

வாழைச்சேனை பகுதியில் ஆயுதங்கள் மீட்பு

வாழைச்சேனை பேத்தாழை பகுதியில் ஒரு தொகை ஆயுதங்களை சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேத்தாழையில் ஒரு தொகை ஆயுதங்களை வெலிக்கந்தையில் இருந்துவந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். பேத்தாழை,விநாயகபுரம் பகுதியில் மக்கள் நடமாற்றம் அற்ற பகுதியிலேயே குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதனடிப்படையில் ரி 56 ரக துப்பாக்கி ஒன்றும்,கைக்குண்டு ஒன்றும்,மிதிவெடியொன்றும் இவ்வாறு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவை கடந்த காலங்களில் விடுதலைப்புலிகளால் மறைத்துவைக்கப்பட்டவையாக இருக்கலாம்

ஆடி 07, 2012

மதுரையை சர்வதேச நகரமாக்க… ராஜபக்ஷே பெயரில் வருகிறது விமானம்!

வெளிநாட்டு விமானங்கள் ஏதும் இதுவரை எட்டிப் பார்க்காத மதுரை விமான நிலையத்துக்கு, முதன் முதலில் வந்து இறங்கப் போவது, இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் விமானம்தான் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசால் நடத்தப்படும் ‘மிகின் ஏர்’ விமான நிறுவனத்தின் விமானங்கள் வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து மதுரைக்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள இந்திய விமான நிலைய அதிகார மையம் (AAI – Airports Authority of India) மிகின் ஏர் விமானங்கள் வாரத்தில் 3 நாட்கள் (திங்கள், புதன், வெள்ளி) மதுரையில் தரையிறங்க அனுமதி வழங்கியுள்ளது. கொழும்புவில் இருந்து இந்த விமானங்கள் இயக்கப்படவுள்ளன. (மேலும்.....)

ஆடி 07, 2012

Sri Lankan envoys to learn handling pro-LTTE lobby

Facing flak for failing to counter adverse propaganda against their country by pro-LTTE lobby, Sri Lanka's top diplomats posted overseas have been summoned home to take part in a workshop aimed at helping them better handle the island nation's foreign policy. The External Affairs Ministry officials said the two-day resident workshop will take place at the hilly resort of Diyatalawa this weekend.  It will be attended by senior ministers and top officials of the External Affairs Ministry, apart from Sri Lanka's ambassadors, high commissioners and consul generals. "The diplomats will be better geared to handle foreign policy and relations in a positive frame of mind. The emphasis would be on getting the maximum from Sri Lanka's missions towards economic development and promoting investment," an official source said. (more....)

ஆடி 07, 2012

ஸ்பெயினில் மறைக்கப்படும் போர்க்களம்

கடந்த ஜூன் முதலாம் திகதியிலிருந்து ஸ்பெயினில் சிறிய யுத்தம் ஒன்றே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அஸ்ரூரியாஸ் மற்றும் லெனொன் ஆகிய இரண்டு பிரதேசங்களின் சுரங்கத்தொழிலாளர்களதும் அவர்களது குடும்பங்களதும் நாளாந்த வாழ்க்கை கலகம் அடக்கும் போலீசாருக்கும் இடையேயான யுத்த களமாகவே காட்சி தருகிறது. சுரங்கத் தொழில் துறை அரசிற்கு அதிக வருமானம் வழங்கும் தொழில் துறையாக இல்லாத காரணத்தால், அதற்கான உதவிகளையும் மானியங்களையும் 60 வீதத்தால் குறைப்பதென ஸ்பானிய அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் சுரங்கத் தொழிலை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பாடுள்ளதால் 8 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. தவிர, இதனோடு தொடர்புடைய உப தொழில்களில் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை உருவாகியுள்ளது. பொருளாதாரத்தைக் காப்பாற்றுவது என்ற தலையங்கத்தில் தனியார் வங்கிகளுக்கு இலவசமாகப் பணத்தை வழங்கும் அரச அதிகாரம் இந்தத் தொழிலாளர்கள் குறித்துத் துயர் கொள்ளவில்லை. சுரங்கப் பகுதிகளுக்குள் அரச படைகளை நுளைய விடாமல் தடுக்க முனையும் தொழிலாளர்களும், போராட்டங்களை நடத்தவிடாமல் தடுக்கும் அரச படைகளும் என ஐரோப்பாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார நாட்டினுள் மக்கள் போராட்டம் உத்வேகத்துடன் ஆரம்பித்துள்ளது.

ஆடி 07, 2012

கனடாவில் வீடுகளின்  விற்பனை கடும் சரிவு

கனடாவில் வீடுகளின் விற்பனை சரிந்துள்ளது. கனடாவில் உள்ள வான்கூவர் மாகாணத்தில் தற்போது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீடுகளின் விற்பனை பெரும் சரிவைக் கண்டுள்ளதாக வான்கூவர் வீட்டுமனை வாரியம் தெரிவித்துள்ளது. இங்கு கடந்த மே மாதத்தில் 2853 வீடுகள் விற்பனை செய்யப்பட்டன. அதுவே, ஜூன் மாதத்தில் 2362 என இருந்தது. இதனால். ஒரே மாதத்தில் வீடுகளின் விற்பனை 17.2 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. இது கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தோடு (3262 வீடுகள்) ஒப்பிடுகையில், 27.6 சதவிகிதம் அளவு குறைந்திருக்கிறது. அதேபோல், 2000 முதல் 2012 வரையிலான காலகட்டத்தில், வீடுகளின் விற்பனை கடுமையாக சரிவடைந்துள்ளது.

ஆடி 07, 2012

பருவ நிலை மாற்றத்தால் தீவுகள் விரைவில் மூழ்கும்

உலக அளவில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றத்தால் கரீபியன் தீவுகள், மாலத்தீவு, ஆசிய பசிபிக் தீவுகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் கடலில் மூழ்கிவிடும் என தேசிய வளிமண்டல ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.  பருவநிலை மாறுபாடுகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆய்வு மையம் ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவு குறித்து சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கூறியதாவது: நாளுக்கு நாள் பருவநிலை மாற்றம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட துவங்கியிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக புவிவெப்பம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பனிப்படலம், பனிமலைகள் வேகமாகஉருகிவருகின்றன.பசுங்குடில் வாயுக்கள் அதிகமாக வெளியாவதால் ஓசோன் படலத்தில்ஓட்டைஉள்ளிட்ட பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியாக மனித இனங்கள் மட்டுமின்றி கடல் வாழ் உயிரினங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.  (மேலும்.....)

ஆடி 07, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா புறப்பட முயன்ற 41 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 41 பேர்களை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி கரையோரப் பகுதியில் வித்தியாசமான ஆள் நடமாட்டம் காணப்பட்டமை தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலையடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். புத்தளம், சிலாபம், திரு கோணமலை, முல்லைத்தீவு, வல்வட்டித்துறை, காரைதீவு போன்ற இடங்களை சேர்ந்தவர்களில் ஒரு பெண் உட்பட 2 குழந்தைகளும் 38 ஆண்களும் கைது செய்யப்பட்டனர். இதேவேளை அவர்கள் பயன்படுத்திய 2 வேன்கள், 2 இயந்திரப் படகுகள் ஆட்டோ ஒன்று மருத்துப் பொருட்கள், உணவுப் பொருட்கள், பிஸ்கட்டுக்கள், குளுக்கோஸ் போன்றவை கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர்களை வெள்ளிக்கிழமை காலை வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முகவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

ஆடி 07, 2012

கிழக்கு தேர்தல்

சுயேற்சைக் குழு கட்டுப்பணம்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலு க்கு மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகம் தயா ராகி வருகின்றது. நேற்று சுயேற்சைக் குழு மாகாண சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார். காத்தான்குடியைச் சேர்ந்த ஏ. ஜீ. ஹாறூன் என்பவர் இக்கட்டுப் பண த்தைச் செலுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் விடுமுறை நாட்கள் உட்பட வாரத்தில் ஏழு நாட்களும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான அலுவல்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இம்மாவட்டத்தில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கவென 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர் தகுதி பெற்றுள்ளதாகவும் உதவி தேர்தல் ஆணையாளர் அசங்க ரத்னாயக்கா தெரிவித்தார்.

ஆடி 07, 2012

காலி பிரதி பொலிஸ் மா அதிபர் பதவி நீக்கம்

காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோனின் பணிப்பின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2007ம் ஆண்டு இடம்பெற்ற சம்பவ மொன்று தொடர்பில் காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி மீது லஞ்ச ஊழல் ஒழிப்புத் திணைக்களத் தினர் கொழும்பு பிரதான நீதவான் நீதி மன்றில் நேற்று (06) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். ஹெக்டர் தர்மசிறி மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய போது கிராம பாதுகாப்பு சிப்பாய்கள் நால்வர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் ஆகியோரை கடமை நேரத்தில் தனிப்பட்ட வேலைக்காக அமர்த்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லஞ்சக் குற்றச்சாட்டு இவர் மீது சுமத்தப்பட்டுள்ளதால் ஒழுக்க அடிப் படையில் காலி பிரதி பொலிஸ் மா அதிபர் ஹெக்டர் தர்மசிறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

ஆடி 07, 2012

மும்பை குண்டு வெடிப்பில் நடிகர்களுக்கும் தொடர்பு

தீவிரவாதிகளின் மும்பைத் தாக்குதலுக்கு அம்மாநில நடிகர்களும் மாநிலம் சாராத நடிகர்களும் உதவியதாக அபு ஜிண்டால் கூறியதாக ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வழிகளிலும் ஆதரவளிக்க மத்திய அரசு தயார்நிலையில் உள்ளது. இன்றைய பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு தேவையான அனைத்து வழிகளையும் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசித்து வருகிறார் என்று கூறினார். மேலும் அவர் கூறும் போது மும்பை தாக்குதலில் தொர்புடைய தீவிரவாதி அபு ஜிண்டாலிடம் மேற்கொண்ட விசாரணையில், தீவிரவாதிகளின் மும்பைத் தாக்குதலுக்கு அம்மாநில நடிகர்களும், மாநிலம் சாராத நடிகர்களும் உதவியதாக அபு ஜிண்டால் கூறியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது என்று கூறினார்.

ஆடி 07, 2012

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலின் ‘ஏ’ அறை திறப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற மிகப் பழமையான பத்மநாப சாமி கோவில் உள்ளது. இங்குள்ள மூலஸ்தானத்தின் கீழ் 6 ரகசிய அறைகள் இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த ரகசிய அறைகளுக்கு ஏ, பி, சி, டி, இ, எப் என பெயர்கள் சூட்டப் பட்டது. இந்த அறைகளில் மன்னர் காலத்து பொற்குவியல்கள், நகைகள், நவரத்தின கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ. 11/2 இலட்சம் கோடிக் கும் மேல் இருக்கும் என்றும் கூறப் பட்டது. இந்த அறைகளில் எவ்வளவு தங்கம் மற்றும் பொருட்கள் உள்ளது. அவற்றின் மதிப்பு எவ்வளவு என மதிப்பீடு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மதிப்பீடு செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவையும் நீதிமன்றம் நியமித்தது. கடந்த ஆண்டு ஜுலை மாதம் இந்த அறைகளை திறந்து நகைகளை மதிப்பிடும் பணி தொடங்கியது. சி முதல் எப் வரை உள்ள அறை களில் அந்த அரிய வகை பொக்கி ஷங்களை அறிவியல் முறைப்படி, அதிநவீன உபகரணங்கள் உதவி யுடன் துல்லியமாக மதிப்பிட்டு பட்டியில் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் குழுவினர் தலைமையில் இந்த பணிகள் நடைபெற்றது.

ஆடி 06, 2012

கிழக்கு மாகாணசபை தேர்தல் தமிழ் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது

கிழக்கு மாகாண தேர் தலை பொருத்த வரையில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகவுள்ளன. ஏனெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டி யிடுகின்றன. இதில் தமிழ் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த தேர்தலில் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் சேர்ந்து வாக்களித்தால் கண்டிப்பாக அரசாங்கம் ஆட்சிக்கு வந்துவிடும். தமிழர்கள் வாக்களிக்காமல் விட்டாலும் இந்த நிலை ஏற்படும். ஆனால் தமிழ் மக்கள் ஏன் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டுமென்றால் நாம் இம்முறை வேட்பாளர்களாக புத்திஜீவிகள் உட்பட முக்கிய உறுப்பினர்களை களத்தில் நிறுத்தவுள்ளோம். தமிழ் மக்கள் இவர்களுக்கு வாக்களிப்பதன் ஊடாகத்தான் கிழக்கின் முதலமைச்சர் பதவியை ஒரு தமிழருக்கு எடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. (மேலும்.....)

ஆடி 06, 2012

கிழக்கு மாகாண சபைக்கு இம்முறை முஸ்லிம் முதலமைச்சர் - ஹுனைஸ் பாருக்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இம்முறை முஸ்லிம் முதலமைச்சர் ஒருவர் தெரிவு செய்யப்படுவாரென்றும் அதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தேசிய இணைப்பாளர் சட்டத்தரணி ஹுனைஸ் பாருக் தெரிவிததுள்ளார். கட்சியின் அதியுயர் பீடக் கூட்டம் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தலைமையில் கொழும்பில் இடம் பெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குறித்த கூட்டம் மிகவும் முக்கியமானதொன்று என்றும் அதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பொதுஜன ஜக்கிய முன்னணியின் செயலாளர் நாயகம் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் தமது கட்சி கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார். (மேலும்.....)

ஆடி 06, 2012

மரத்தில் வரையப்பட்ட பாரதத் தலைவர்களின் முகத்தோற்றங்கள்

இப்படத்தை உற்றுப்பார்த்தால் இந்தியாவின் மறைந்த தலைவர்கள் 10 பேரின் முகத்தோற்றங்கள் ஒரு மரத்தின் கிளைகளில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். கண்டுபிடிக்க முடிகிறதா? அவர்கள்: (மேலும்.....)

ஆடி 06, 2012

சேதுக்கால்வாய் திட்டத்திற்கு  சாதகமாக தீர்ப்பு வரட்டும்

தமிழக மக்களின் நீண்டகாலக் கனவு ஒன்று கைக்கு எட்டுவது போல வந்து பின்னர் கை நழு விப் போகுமோ என்ற கவலையை ஏற்படுத்தி யது. அதுதான் சேதுக் கால்வாய்த் திட்டம். தமி ழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந் தியாவின் பொருளாதாரத்திற்கும் உதவக் கூடிய இந்தத் திட்டத்திற்கான கோரிக்கை 150 ஆண்டு களாக ஒலித்து வந்தது. இடதுசாரிகள் ஆதர வோடு அமைந்த முதல் சுற்று ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு இந்தத் திட்டத்தை ஏற்று, செயல்படுத்துவதற்காக என தனித்துறையை ஏற்படுத்தி, நிதி ஒதுக்கீடு வழங்கியது. தமிழக மக்களின் உற்சாக வரவேற்புடன் கடலில் மணல் மேட்டைத் தகர்த்து வாய்க்கால் அமைக் கிற பணியும் தொடங்கியது. (மேலும்.....)

ஆடி 06, 2012

நீதித்துறைக்கு மிரட்டல்

சி.ஐ.டி விசாரணைக்கு யாழ். நீதவான் கணேசராஜா உத்தரவு

யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் விதிக்கப்பட்ட தடை உத்தரவு சம்பந்தமாக உதயன் பத்திரிகையில் வெளிவந்த செய்தி மற்றும் சுமந்திரனினால் நீதித்துறை தொடர்பிலும் நீதிமன்ற தடைக்கட்டளை தொடர்பாகவும் மேற் கொள்ளப்பட்ட விமர்சனங்கள் தொடர் பிலும் நீதித்துறைக்கும், நீதவானுக்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் விடுக்கப்பட்டு வரும் மிரட்டல்கள் தொடர்பில் முழு மையாக புலனாய்வு விசாரணைக்கு நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த சில சட்டத்தரணிகளின் நடவடிக்கைகள் தமக்கும், நீதித்துறைக்கும் மறைமுகமான பாரிய அச்சுறுத்தல் விடுக்கும் வகை யிலும், அவமதிக்கும் வகையிலும் அமைந்திருப்பதால் அது தொடர்பாகவும் முழுமையான விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் புலனாய்வு விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உதயன் பத்திரிகை ஆசி ரியர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப் புக் கோரியதுடன், அது தொடர்பில் நீதி மன்ற வழக்கேட்டில் கையெழுத் திட்டு சென்றிருப்பதுடன், ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங் கம் நீதிவான் சுமந்திரனிடம் மன் னிப்புக் கேட்கவில்லை என பகிரங்க நீதிமன்றில் குறிப்பிட்டதும் குறிப்பிடத் தக்கது.

ஆடி 06, 2012

கம்போடியாவில் மர்ம நோய்; 61 குழந்தைகள் மரணம்

கம்போடியாவில் பரவிவரும் மர்மமான நோய் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் 61 குழந்தைகள் மரணமடைந்துள்ளன. 7 வயதுக்குட் பட்ட குழந்தைகள் அடையாளம் காணப்படாத இந்த நோய் காரணமாக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு சில தினங்களுக்கும் மரணமடைந் துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த நோய் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கம்போடிய சுகாதார அமைச்சு மற்றும் சர்வதேச சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நரம்பியம் மற்றும் கடுமையான சுவாச நோய்க்கான அறிகுறிகள் இந்த அடையாளம் காணப்படாத நோயில் தென்படுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆடி 06, 2012

சிரிய நாட்டு ஆவணங்கள் விக்கிலீக்ஸ்ஸால் அம்பலம்

சிரிய அரசியல் பிரமுகர்களின் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை அம்பலப்படுத்துவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் பல்வேறு ரகசியங்களை வெளியிட்டு பிரபலமடைந்த விக்கிலீக்ஸ் நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டது. “விக்கிலீக்ஸ் சிரிய நாட்டு ஆவணங்களை வெளியிட ஆரம்பிக்கிறது. இதன்படி கடந்த 2006 ஆம் ஆண்டு முதற் கொண்டு சிரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரான 2012 மார்ச் மாதம் வரையான காலத்தில் அந்நாட்டு அரசியல் பிரமுகர்களின் ஆவணங்கள் வெளியிடப்படவுள்ளது. இதில் சிரிய நாட்டு அரசியல் பிரமுகர்கள், அமைச்சர்கள், அரசின் இணைநிறுவனங்கள் ஆகியவற்றின் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட ஆவனங்கள் அம்பலப்படுத்தப்படவுள்ளன” என விக்கிலீக்ஸ் பேச்சாளரும் ஊடகவியலாளருமான சாரா ஹரிஸன் லண்டனில் நேற்று தெரிவித்தார்.

ஆடி 06, 2012

முதல் ஆறு மாத காலத்தில் 700 சிறுவர் பாலியல் சம்பவங்கள்

இந்த வருடம் ஜனவரி முதல் ஆறு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் 700 சிறுவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். இலங்கையில் சிறுவர்கள் மீதான பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள், அதிகரித்துச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்தார். முதல் ஆறு மாத காலப் பகுதிக்குள் சுமார் 900 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இவற்றில் 700 சம்பவங்கள் சிறுவர்களுடன் தொடர்புடையதாகும் என்றார். கடந்த வருடம் மாத்திரம் 1775 துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள் ளன. இவற்றில் 1160 சம்பவங்கள் சிறுவர்கள் மீதானவையாகும் என்றும் குறிப்பிட்டார். இணைய தள பாவணை, விடுதிகள் அதிகரிப்பு, சிறுவர்கள் மீது கவனம் செலுத்தாமையே இவற்றுக்கு பிரதான காரணங்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

ஆடி 06, 2012

யாழ். போதனா வைத்தியசாலை

தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தையும் தொழிற் சங்க நடவடிக்கையையும் இடைநிறுத்துமாறு யாழ். நீதவான் நீதிமன்ற, நீதவான் மாணிக்கவாசகர்கணேசராஜா உத்தரவிட்டுள்ளார். யாழ். பொலிஸாரினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு அமைய இத்தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் உத்தர விட்டுள்ளார். இத்தடை உத் தரவு தொடர்பாக யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் பரிசோ தகருக்கு இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர் எஸ். விமலன் மற்றும் உதவிச் செயலாளர் மு. கணேசநாதனால் 06.07.2012 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோத ஆர்ப்பாட்டத்தையும் தொழிற்சங்க நடவடிக்கையும் இடைநிறுத்துவதற்கு இத்தால் கட்டளை இடுகின்றேன். குறித்த கட்டளை இன்றிலிருந்து 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும். (மேலும்.....)

ஆடி 06, 2012

அறிவியல் ஆய்வில்  ஒரு மைல் கல்

பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை அறிய உலகமே பல நூறு ஆண்டுகளாக ஆர்வத் துடன் காத்திருந்தது. இதுகுறித்து ஆய்வுகளும் அடிக்கடி நடைபெற்று வந்தன. இந்த ஆய்வில் விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள் ளனர். அணுத் துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறி வித்துள்ளனர். இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா, இல்லையா என்பது தொடர்பான கேள்வி களுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது. பெரும் வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கோள்களும், இந்த பிரபஞ்ச மும் உருவாயின என்பது கோட்பாடு. இதன்படி ‘‘பிக் பேங்’’ வெடிப்பு நிகழ்ந்த கணத்தில், அணுக்கள் ஒளியை விட பயங்கரமான வேகத் தில் எல்லா திசைகளிலும் சிதறின. (மேலும்.....)

ஆடி 06, 2012

லண்டன்   புறக்கணிக்கப்படும் உள்ளூர் தொழிலாளர்கள்  குறைந்த கூலிக்கு பணிபுரியும் வெளிநாட்டவர்

ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ளது. இதற் காக, விளையாட்டு மைதா னங்கள், வீரர்களுக்கான விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் அடங்கிய பிரம் மாண்டமான ஒலிம்பிக் பூங்காவை பிரிட்டன் அரசு அமைத்து வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளில் ஏராளமான தொழிலா ளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். ஆனால், இப்பணிகளில் ஈடுபடுபவர்களில் பெரும் பாலானோர் வெளிநாட் டைச் சேர்ந்த தொழிலாளர் கள் என தகவல்கள் தெரி விக்கின்றன. முன்னதாக, ஒலிம்பிக் விநியோக ஆணையம் (ஒலிம்பிக் டெலிவரி அத்தாரிட்டி), லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளுக் காக மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்திலும் உள்ளூர் தொழிலாளர்க ளுக்கு முன்னுரிமை அளிக் கப்படும் என உறுதியளித் திருந்தது. ஆனால், தற் போது, ஒலிம்பிக் பூங்கா கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் 46,000 பணியாளர் களில் 18,400 பணிகள் வெளி நாட்டைச் சேர்ந்த தொழி லாளர்களிடமே ஒப்ப டைக்கப்பட்டுள்ளது. குறிப் பாக, கிழக்கு ஐரோப்பா வைச் சேர்ந்தவர்களே இப் பணிகளில் அதிகம் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். (மேலும்.....)

ஆடி 05, 2012

கிறிஸ்மஸ் தீவை நோக்கி 180 அகதிகளுடன் செல்லும் படகு: விபத்தில் சிக்கலாமென அச்சம்

சுமார் 180 அகதிகளை ஏற்றிய மற்றுமொரு படகு அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படகு விபத்துக்கு உள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த படகு மூன்று மீற்றர் உயரமுடைய அலைகளுக்கு மேல் பாய்ந்து செல்வதால் விபத்தில் சிக்கக்கூடும் என இந்தோனேசிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். படகு விபத்துக்குள்ளாகலாம் என படகில் உள்ளவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் (இந்தோனேசிய நேரம்) தமக்கு அறிவித்துள்ளதாக இந்தோனேசிய கடற் பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து படகு பயணித்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வணிகக் கப்பல் ஒன்றையும் விமானத்தையும் அனுப்பி வைத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். பலகையால் செய்யப்பட்ட அகதிகள் படகு விபத்து அபாயத்தை அடுத்து இந்தோனேசிய கடற்பக்கம் திரும்பியதாகவும் படகில் உள்ளவர்கள் இந்தோனேசியா செல்ல விருப்பம் கொள்ளாததால் படகு தற்போது கிறிஸ்மஸ் தீவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ___

ஆடி 05, 2012

சென்னை புழல் அகதிகள் முகாமில் அவுஸ்திரேலியா செல்ல முயன்றவர்கள் கைது

(எமது சிறப்பு நிருபர்: அருள்)

புழல் அகதிகள் முகாமில் சில இளைஞர்கள் அவுஸ்திரேலியா செல்ல எடுத்த முயற்சியின் போது கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக முகாமில் எழுந்த அசாதாரண நிலைமை அனைவரையும் கவலை அடைய செய்துள்ளது. அவுஸ்திரேலியா ஜுரம் தற்போது அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் சில இளைஞர்கள் புழல் அகதிகள் முகாமில் இருந்து வெளியில் சென்று அதற்கான வேலைகளில் ஈடுபட்ட போது போலிசாரால்  கைது செய்யப்பட்டார்கள். (மேலும்.....)

ஆடி 05, 2012

கிழக்கு பல்கலை மாணவர் விடுதிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுகாதார சௌக்கிய விஞ்ஞானபீடத்தின் மாணவர் விடுதிக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நேற்று ஞாயிற்றுக்கிழமை நாட்டிவைத்தார். இந்தக் கட்டிடம் 360 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான வைபவத்தில் பிரதி அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, விநாயகமூர்த்தி முரளிதரன் கிழக்கு பல்லைக்கழக வேந்தர் திருமதி யோகராசாநாயகம், உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா, கிழக்கு பல்கலைக்கழக சுகாதார சௌக்கிய விஞ்ஞானபீடத்தின் பீடாதிபதி டாக்டர் எம்.கருணாகரன், கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிறேம்குமார், கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எம்.மகேஸன், கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஆடி 05, 2012

வட பகுதி மக்களின் மனோநிலையை அறிந்துகொள்ள மாகாண சபை தேர்தல் அவசியம் - ஜே.வி.பி.

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை வெளிப்படுத்தும் நிறுவனங்களாக மாகாண சபைகள் மாறிவிட்டன. இவற்றின் மூலம் நாட்டின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்நிலையில் வடக்கில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினாலும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடப் போவதில்லை என தெரிவித்துள்ள ஜே.வி.பி. ஆனாலும் வடக்கில் மக்களின் மனதை சோதிக்க வேண்டுமென்றால் இதுவரை நடத்தப்படாதிருக்கும் வட மாகாண சபை தேர்தலையே அரசாங்கம் முதற்கட்டமாக நடத்தியிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. (மேலும்.....)

ஆடி 05, 2012

2013 செப்டெம்பருக்குள் வட மாகாண சபை தேர்தல்

வட மாகாண சபைக்கான தேர்தல் ஒருவருட காலத்திற்குள் கட்டாயம் நடாத்தப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர், இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அந்த அடிப்படையில் வட மாகாண சபைக்கான தேர்தல் 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்கு முன்னர் நடத்தத் தேவையான சகல நட வடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.(மேலும்.....)

ஆடி 05, 2012

உங்களுக்கு ஒன்று சொல்வேன்

வெள்ளவத்தையில் தங்கியிருக்கும் யாழ்ப்பாண யுவதியொருவருக்கு கொழும்பு நகருக்கு வெளியே உள்ள முஸ்லிம் பாடசாலையொன்றில் ஆசிரிய நியமனம் கிடைத்திருக்கிறது. அந்த பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்க நிருவாகிகள் கடந்த வெள்ளிக்கிழமை வானொன்றில் யுவதியைத் தேடி வெள்ளவத்தைக்கு வந்தனர். யுவதி தற்போது யாழ்ப்பாணம் சென்றுவிட்டார். யுவதி தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர்கள் வானில் வந்தவர்களைக் கண்டு பயந்து ஏதோ என்னவோ என்று பதறியடித்து விசாரித்தனர். ஏதாவது விசாரணைக்குத்தான் இரகசியப் பொலிஸார் வந்திருக்கிறார்களோ அல்லது கடத்திகிடத்திக் கொண்டு போகத் தான் வந்திருக்கிறார்களோ என்று கூட அவர்கள் பயந்திருக்கக்கூடும்.(மேலும்.....)

ஆடி 05, 2012

எப்படியிருக்கும் எகிப்தின் எதிர்காலம்?

(சு.வெங்கடேஸ்வரன்)

பொதுவாக எந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும், அனைத்து நாடுகளும் அதனை உன்னிப்பாகக் கவனிப்பது வழக்கம். ஏனெனில், அங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி, அதிகாரத்துக்கு வரும் நபர்களின் கொள்கைகள் தங்கள் நாட்டுக்கு எந்த அளவுக்குச் சாதகமாக அல்லது பாதகமாக அமையும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதற்குக் காரணம். அந்த வகையில் இப்போது அனைத்து நாடுகளின் கவனத்துக்கு உள்ளாகியிருப்பது எகிப்து. அங்கு ஹோஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்து முதல்முறையாக சுதந்திரமான முறையில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியின் முகமது முர்ஷி அதிபராகியுள்ளார். பொறியியலாளரும், அமெரிக்காவில் சென்று உயர்கல்வி பயின்றவருமான முர்ஷி அதிபராகியுள்ளது பெரும்பாலான நாடுகளுக்குத் திருப்தியை அளித்துள்ளது. (மேலும்.....)

ஆடி 05, 2012

சுவிஸ் வங்கிகளில் கடந்த வருடம் இலங்கையர் வைப்பிலிட்ட தொகை 85 மி. சுவிஸ் பிராங்

சுவிட்ஸர்லாந்து வங்கிகளில் 85 மில்லியன் சுவிஸ் பிராங் பணத்தை இலங்கையர்கள் கடந்த வருடம் வைப்பிலிட்டுள்ளனர். இலங்கையைச்  சேர்ந்த தனிப்பட்டவர்கள், கம்பனிகள் அல்லது இலங்கை அரசாங்கம் சுவிஸ் இரகசியக் கணக்குகளில் 85 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை மொத்தமாக 2011 இல் வைப்பிலிட்டதாக உத்தியோகபூர்வ விபரங்கள் தெரிவிக்கின்றன. சுவிஸ் தேசிய வங்கியின் உத்தியோகபூர்வ விபரத்திலிருந்தே இத்தகவல் வெளியாகியுள்ளது.
(மேலும்.....)

ஆடி 05, 2012

நீரிழிவு நோயாளிகளுக்கு காயங்கள் ஏன் ஆறுவதில்லை?

(டாக்டர் எம். சண்முகவடிவேல்)

நீரிழிவு வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாமல் போவதற்கு என்ன காரணம் என்பதைப் பார்ப்போம். பொதுவாகவே நீரிழிவு வியாதிக்காரர்களின் இரத்தத்தில் சீனியின் அளவு அதிகமாகவும் அதிக நாட்களாகவும் இருந்தால் நுண்ணிய மெல்லிய, சிறிய, பெரிய என இரத்தக் குழாயில் பல விதமான பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதனால் நரம்புகள் சிறுநீரகங்கள், கண்கள் ஆகிய உறுப்புகள் பாதிப்படைகின்றன. இதில் பெருமளவு பாதிக்கப்படுவது நரம்புப்பகுதிகளே. தொடு உணர்வு, அளுத்துகின்ற உணர்வு, வெப்பமானது எது? குளிர்ச்சியானது எது? என அனைத்துவிதமான உணர்வுகளையும் நமக்கு உணரச் செய்யும் நரம்புப் பகுதிகள் பாதிக்கப்படுவதால் நீரிழிவு வியாதிக்காரர்கள் உணர்விழந்த நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். (மேலும்.....)

ஆடி 05, 2012

கிழக்கு மாகாண ஈ. பி. ஆர். எல். எப். புளொட் உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு

கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஈ. பி. ஆர். எல். எப். மற்றும் புளொட் உள்ளூராட்சிச் சபை உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று விசேட ஊடக மாநாடொன்றை நடத்திய இவர்கள் எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கப் போவதாகவும் உறுதியளித்தனர். (மேலும்.....)

ஆடி 05, 2012

பொலிஸாரினால் தாக்கப்பட்டு எந்தக் கைதியும் உயிரிழக்கவில்லை

வவுனியா சிறைச்சாலை மோதல் சம்பவத்தின் போது பொலிஸாரினால் தாக்கப்பட்ட எந்த கைதியும் இறக்கவில்லை. இருதய நோய்க்கு சிகிச்சைபெற்று வந்த கைதி ஒருவரே நேற்று ராகம ஆஸ்பத்திரியில் இறந்துள்ளதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். சிறைச்சாலை அதிகாரிகளினாலும் பொலி ஸாரினாலும் தாக்கப்பட்ட கைதி ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் சபையில் குற்றஞ்சாட்டினார். (மேலும்.....)

ஆடி 05, 2012

கிழக்கு தேர்தலில் தனித்தா, கூட்டா மு.காவின் கூட்டம் இழுபறியில்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதா இல்லை தனித்துப் போட்டியிடுவதா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் தலைமையில் அவரது இல்லத்தில் இடம்பெற்ற கூட்டமும் முடிவுகள் எட்டப்படாது முடிவுற்றது. ஆசனப்பகிர்வு, சக கட்சி வேட்பாளர்களை களமிறக்கும் இடங்கள் என்பவற்றில் ஐ.ம.சு.மு, மு.கா விடையே இழுபறிகள் உள்ளன. முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இது குறித்துப் பேசினர். இக்கூட்டத்தில் எழுந்த பலத்த வாதப் பிரதிவாதங்களையடுத்து எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில் கூட்டம் முடிவின்றி இழுபறியில் முடிவடைந்தது. (மேலும்.....)

ஆடி 05, 2012

மூன்று மாகாணங்களிலும் அரசு அமோக வெற்றி பெறுவது உறுதி - சு.க. தலைவர்கள்

மூன்று மாகாண சபைகளுக்காக நடைபெறவுள்ள தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றிபெறுவது உறுதி என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர். ஜனநாயக முறையிலும், நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக் கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர், சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித் தார். (மேலும்.....)

ஆடி 05, 2012

புதிய அணுத்துகள் கண்டுபிடிப்பு, கடவுளின் துகளாக இருக்குமென நம்பிக்கை - விஞ்ஞானிகள்

பிரபஞ்ச ரகசியத்தின் புதிரை விடுவிக்கக் கூடியதாக கருதப்படும் புதிய அணுத்துகளை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஐரோப்பிய அணு ஆராய்ச்சி மையமான செர்ன் விஞ்ஞானிகள் ஜெனீவாவில் நேற்று நடத்திய ஊடக மாநாட்டில் வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இந்த அறிவிப்பை வெளியிட்டனர். கடந்த அரை நூற்றாண்டு காலமாக தேடப்பட்டு வரும் ஹிக்ஸ் பொஸொன் என்ற துணை அணுத்துகளாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த புதிய அணுத்துகள் இருக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். எனினும் அதனை உறுதி செய்ய மேலும் ஆய்வு நடத்த வேண்டியுள்ளதாக செர்ன் விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர். (மேலும்.....)

ஆடி 05, 2012

மக்களின் மனம் கவர்ந்த தலைவன் அமரர் அருணாசலம் தங்கத்துரை

1970 ம் ஆண்டு மூதூர்த் தொகுதியின் "கிளிவெட்டி" எனும், கிராமத்திலிருந்து, இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக அமரர், தந்தை செல்வ நாயகத்தால், அறிமுகம் செய்து வைக்கப்பட்ட இளைஞர் தான் அருணாசலம்- தங்கத் துரை. இதற்கு முந்திய காலங்களில், தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றாலும், மூதூர் தொகுதியின் தமிழர் பிரதி நிதித்துவம் பாதுகாக்கப்பட்டாலும், மூதூர் தொகுதியின் தமிழ் கிராமங்களின் அபிவிருத்தி, இளைஞர்களின் தொழில் விருத்தி, தமிழ் மக்களின் அடிப்படைத் சேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலை காணப்படவில்லை. இவ்வாறாக தமிழர்கள் அநாதைகளாக விடப்பட்ட நிலையில்தான், அமரர் அருணசாலம் தங்கத்துரை என்ற இளைஞனின் அரசியல் பிரவேசம் அமைந்திருந்தது. (மேலும்.....)

ஆடி 05, 2012

பருவ நிலை மாற்ற ஆய்வும் விலங்குகளும்

ழிந்துவரும் உயிரினங்களில் பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து அறிய ஓநாய்கள் உதவும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இது தொடர்பாக, அமெரிக்காவின் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஓநாய்களின் எண்ணிக்கை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, மாறிவரும் பருவ நிலை எவ்வாறு ஓநாய்களின் எண்ணிக்கை, உடல் அளவு, மரபணுவியல் மற்றும் பிற உயிரியல் அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அறிவதற்கான ஒரு வழியைக் கண்டுபிடித்தனர். அதன்படி, எந்த மாதிரியான பருவ நிலை மாற்றம், விலங்குகளின் எண்ணிக்கையிலும், அவற்றின் பரிணாமத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தங்களால் கணிக்க முடிகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது கிடைத்திருக்கும் முடிவுகளைக் கொண்டு, எதிர்காலத்தில் பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப ஓநாய்களின் எண்ணிக்கை எவ்வாறு மாறும் என்று அறிந்து, அது குறித்து வன உயிரினக் காப்பாளர்களுக்குத் தெரிவிக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை. சுற்றுச் சூழல் மாறுபாட்டால் உயிரினங்களின் உடல் அளவு, எடை போன்றவற்றில் ஏற்படும் சிறுசிறு மாற்றங்களும் எதிர்காலத்தில் அந்த உயிரினத் தொகுப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று கருதப்படுவதால் இந்த ஆய்வு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

ஆடி 05, 2012

கட்சிகளும் சுயேச்சைகளும் நாய், புலிச்சின்னங்களை பயன்படுத்துவதற்கு தடை
 

தேர்தலில் போட்டியிடும் அங் கீகரிக்கப்பட்ட கட்சிகளினதும் சுயேச்சைக் குழுக்களினதும் சின் னங்களிலிருந்து நாய் மற்றும் புலிச் சின்னங்கள் நீக்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் 139 சின்னங்கள் அங்கீகரிக்கப்படுவதாக 1686/46 2010 டிசம்பர் 31 ஆம் திகதி அரச வர்த்தமானி மூலம் தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார். இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டிருந்த கட்சிச் சின்னங்களிலிருந்தே நாய் மற்றும் புலிச் சின்னங்கள் நீக்கப்படுவதாக குறிப்பிட்டார். இதேவேளை புலிச் சின்னத்துக்குரிய கட்சி தடை செய்யப்பட்டதால் இச்சின்னம் நீக்கப்படுவதுடன் இனிவரும் காலங்களில் நாய், புலி, சிங்கம், தாமரை, சுத்தியலுடன் கூடிய அரிவாள், இரண்டு வாள்கள், ஆலவட்டம் போன்ற சின்னங்களுமே இனிவரும் காலங்களில் வழங்கப்படமாட் டாது என்றும் குறிப்பிட்டார். அத்துடன் நாயை சின்னமாக ஏற்றுக்கொள்ள எந்தவொரு கட்சியும் சுயேச்சைக் குழுக்களும் முன்வருவதுமில்லை. இதேபோன்று புறா சின்னமும் காளை மாடு சின்னமும் அவற்றுக்குரிய கட்சிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. எனவே இவ்விரு சின்னங்களையும் சுயேச்சைக் குழுக்கள் பயன்படுத்த முடியும் என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

ஆடி 05, 2012

ஆர்வமின்மையால் அவதிப்படும் பெண்கள்

(டாக்டர் கே. எஸ். ஜெயராணி)

மனித இனப்பெருக்கத்திற்கும் தம்பதிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் அடிப்படையாக இருப்பது, தாம்பத்திய உறவு எனப்படும் செக்ஸ். ஆனால், இப்போது அடிப்படையையே ஆட்டம் காண வைக்கும் விதத்தில் பெண்கள் செக்ஸ் ஆர்வமின்மையால் அவதிப்படுகிறார்கள். கிட்டத்தட்ட 30 சதவீத பெண்களுக்கு செக்ஸில் ஆர்வமே இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். கர்ப்பக் காலம், நோயாளியாக இருக்கும் காலம், மாதவிலக்கு நின்றுபோகும் "மனோபாஸ்' காலங்களில் இயல்பாகவே பெண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறையும். அதனை தவிர்த்து பொதுவான எல்லாக் காலகட்டங்களிலும் செக்ஸ் ஆர்வம் இல்லாமல் இருப்பதே பிரச்சினைக்குரியதாகக் கருதப்படுகிறது. (மேலும்.....)

ஆடி 05, 2012

(மேலும்.....)

ஆடி 04, 2012

ஏகாதிபத்தியங்கள்

ஈராக்கில் ஏன் இந்தக் கொலைவெறி

ஈராக்கில் உள்ள மார்க்கெட்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்து சிதறின. இதில் 44 பேர் பரிதாபமாக பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஆடி 04, 2012

நிமல் ரூபனின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும்

வவுனியா சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை அதிகாரிகளால் ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, பின்னர் உயிரிழந்த நிமல் ரூபனின் உயிருக்கு மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமே முழு பொறுப்புக் கூற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்தார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் நோக்கத்திற்காக இலங்கையிலுள்ள சிறைகளில் பல்லாயிரக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர். இவர்கள் உண்மையிலேயே அரசியல் கைதிகளாவர். இந்தக் கைதிகள் குறித்து இந்த அரசாங்கம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. (மேலும்.....)

ஆடி 04, 2012

தமிழ்க் கைதிகள் அரசாங்கத்துடன் இணைந்தால் மட்டுமே விடுதலை பெறலாம  - மனோ கணேசன்

தமிழ்ச் சிறைக்கைதிகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்துவம் பெற்றால் உடனடியாக விடுதலை கிடைக்கும். எனவே தமிழ்ச் சிறைக்கைதிகள் அனைவரும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்து உடனடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைய வேண்டும் என ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் சற்றுமுன் தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 04, 2012

இலங்கை கடற்படை தமிழ் அதிகாரியின் அகதி கோரிக்கை கனடாவில் நிராகரிப்பு

இலங்கை கடற்படையில் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றிய தமிழர் ஒருவரின் அகதிக் கோரிக்கையை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடராஜா குருபரன் என்ற இலங்கை கடற்படையைச் சேர்ந்த தமிழர் ஒருவரதும், அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் தொடர்பிலான வழக்கு ஒன்றிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு வரை இலங்கை கடற்படையில் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த நடராஜா குருபரன் அதில் இருந்து பதவி விலகியதன் பின்னர் கனடாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தமது குடும்பத்துடன் அகதி அந்தஸ்து கோரி இருந்த போதும், அதனை கனேடிய குடிவரவுத் திணைக்களம் நிராகரித்தது. இதன்பின்னர், அவர் பிராந்திய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது, இதற்கான தீர்ப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. சுமார் 50 பக்கங்கள் கொண்டதாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடராஜா குருபரனுக்கு கனடாவில் குடியுரிமை வழங்க முடியாது. அவரை நேர்மையான அகதியாக கொள்ள முடியாது என சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவரை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளது.

ஆடி 04, 2012

யாசர் அராபத் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா?

பலஸ்தீனத்தின் தலைவராக திகழ்ந்த யாசர் அராபத் விஷம் வைத்துக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளமையானது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட யாசர் அராபத் பெரீசில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி பரிதாபமாக இறந்தார். இவரது சாவில் மர்மம் இருப்பதாகவும் அவரது மனைவி சுஹா அராபத் கருதினார். எனவே அவரது உடலில் இருந்து இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது. பின்னர் அவை சுவிட்சர்லாந்தில் உள்ள லாசனே பல்கலைக்கழகத்தில் உள்ள கதிரியக்க இயற்பியல் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அதன் முடிவை அரசு ஆய்வகத்தின் தலைவர் பிரான்கோயல் போசுட் வெளியிட்டுள்ளார். அதில், அவரது ரத்த மாதிரிகளில் பொலோனியம் என்ற கதிரியக்க நச்சு பரவியுள்ளது என தெரிவித்துள்ளார். இதன்மூலம், அவர் கதிரியக்க விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகவலை அல்-ஜசீரா வெளியிட்டுள்ளது. பொலோனியம் என்ற கதிரியக்க விஷம் கொடுத்து ரஷியாவின் முன்னாள் உளவாளி அலெக்சாண்டர் விட்வினென்கோ கொல்லப்பட்டார். கடந்த 2006-ம் ஆண்டு லண்டனில் உள்ள ஒரு விடுதியொன்றில் அவர் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. __

ஆடி 04, 2012

ஜனாதிபதியுடனான பேச்சு திருப்தியளிக்காமையினால் ரணிலை சந்தித்து நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம் - சம்பிக்க

பிக்குமார்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவதை தடுக்க சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்ட போதிலும் அது கூடியளவில் திருப்தியளிக்கவில்லை. எனவேதான் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினோம். இதில் தவறேதும் கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவித்தது. இது குறித்து அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக ரணவக்க கூறுகையில், இலங்கை வரலாற்றில் உள்நாட்டு ஆட்சியிலும் ஏனைய நிர்வாகங்களிலும் பிக்குகள் முக்கிய பங்குகளை வகித்துள்ளனர். இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அப்போதும் தற்போதும் இடம்பெறுகின்றன. (மேலும்.....)

ஆடி 04, 2012

ஏழ்மையை உற்பத்தி செய்யும் வால்மார்ட் எங்களுக்கு தேவையில்லை

வால்மார்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 8.81 டாலர் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு பணிபுரியும் முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக 8ஆயிரத்து 990 டாலர் வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைத்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம். வார்ல் மார்ட் கடந்த வருடம் அதன் நலன்களை பாது காக்க பிரச்சாரம் செய்த செலவு மட்டும் 430 கோடி டாலர் ஆகும். வால்மார்ட் நிறுவனத்தின் உரிமையாளர் வால்டனின் குடும்ப சொத்தின் மதிப்பு அமெரிக்காவில் வாழும் 40 சதவிகித மக்களின் மொத்த சொத்து மதிப்பை விட கூடுதலாக இருக்கிறது என போர்பர்ஸ் பத்திரிகை சமீபத்தில் புள்ளிவிபரத்தை வெளியிட்டிருந்தது. (மேலும்.....)

ஆடி 04, 2012

புதிய உச்சத்தை தொட்டது  ஐரோப்பிய வேலையின்மை

உலக அளவில் கடுமை யான பொருளாதார நெருக் கடியைச் சந்தித்து வரும் ஐரோப்பிய யூனியனில் ஏற் பட்ட வேலைவாய்ப்பின் மை புதிய உச்சத்தை எட்டி யுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. யூரோ மண்டலங்களில் ஐரோப்பிய யூனியனின் புள் ளியியல் துறை மேற் கொண்ட ஆய்வின்படி, கடந்த மே மாதத்தில் யூரோ மதிப்பைப் பயன்படுத்தும் நாடுகளில் ஒரு கோடியே 75 லட்சம் பேர் வேலையின்றி உள்ளனர். இதில், 25 வயதிற் குக்கீழ் உள்ள இளைஞர் களில் 34 லட்சம் பேர் வேலையின்றி தவிக்கின்ற னர். இது கடந்த ஆண்டில் 2,54,000 ஆக இருந்தது. யூரோ மண்டலங்களில் நிலவி வரும் கடுமையான கடன் நெருக்கடியின் காரணமாக, நிறுவனங்கள் அனைத்தும் தங்களது நிதிச்சூழலை காக் கும் வகையில் ஆட்குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதனால், தினசரி ஏராளமானோர் தங்களது வேலையிலிருந்து நீக்கப்படுகின்றனர். இதுகுறித்து ஐரோப்பிய சபை தெரிவிக்கையில், ஐரோப்பிய யூனியனில் ஏற் பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக இளைஞர்கள் மத்தியில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வரு வது மிகவும் கவலையளிக் கும் வண்ணம் உள்ளது. இது, மிகவும் அபாயகர மான சூழல் என எச்சரிக் கை விடுத்துள்ளது.

ஆடி 04, 2012

விடுதலைப்புலிகளின் ஆயுதக்குவியல் கண்டுபிடிப்பு

இலங்கையின் வடக் கில் உள்ள கிளிநொச்சி பகுதியில் விடுதலைப்புலிக ளுக்கு சொந்தமான ஆயு தக்குவியலை இலங்கை அரசு கண்டுபிடித்துள்ளது. இதில் ஏராளமான ஆயுதங் களும் வெடி பொருட்க ளும் சிக்கின. கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் கோட்டையாக இருந்தது. சுமார் 2.5 லட்சம் சுற்று கள் கொண்ட டி56 தோட் டாக்கள், சுமார் 1.9 லட்சம் சுற்றுகள் கொண்ட எம்பி எம்பி தோட்டாக்கள், விமான எதிர்ப்பு துப்பாக்கி தோட்டாக்கள், 81மிமீ பீரங்கி குண்டுகள் ஆகிய வை கைவிடப்பட்டகிணற் றில் கிடைத்தன.

ஆடி 04, 2012

கியூபாவில் அனைவருக்குமான   இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவத்திட்டம்

கியூபாவில் அனைவருக்கும் இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவ திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்கா அருகில் உள்ள குட்டி நாடு கியூபா. இங்கு ரால் காஸ்ட்ரோ தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. கியூபா சிறிய நாடாக இருந்தாலும் மருத்துவத் துறையில் பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. குறிப்பாக இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறது. கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் தலைந கர் பெய்ஜிங்கில் உலக சுகாதார அமைப்பின் மாநாட்டில் இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்து வத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் 6-வது மாநாட் டில் இயற்கை மற்றும் பாரம்பரிய மருத்துவத் துக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. (மேலும்.....)

ஆடி 04, 2012

ஏழு மாவட்டங்களில் கடும் காற்று

466 பேர் பாதிப்பு, 339 வீடுகள் சேதம்

ஏழு மாவட்டங்களில் ஆங்காங்கே வீசிய கடும் காற்றினால் 466 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 339 வீடுகள் சேதமடைந்துள்ளன. நுவரெலியா, கம்பஹா, கொழும்பு, மாத்தளை, குருநாகல், காலி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே கடும் காற்றின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 114 குடும்பங்களைச் சேர்ந்த 466 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 04, 2012

எகிப்து

போராட்டம் காத்திருக்கிறது

மோர்சியின் வெற்றி முந்தைய ஆட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஒரு சிறிய அளவில் முன்னேற்றம் என்று கொள்ளலாம். முஸ்லிம் பிரதர்ஹூட் கட்சியின் நம்பகத்தன்மை குறித்தும் எண்ணற்ற தகவல்கள் கசிந்து கொண்டிருக்கின்றன. இக்கட்சி ஆயுதப் படைகளுடன் சேர்ந்துகொண்டு பத் தாண்டிற்கு முன் துருக்கியில் இருந்தது போன்ற ஒரு ஜனநாயக அமைப்பை உருவாக்கிடலாம் என்று கூறுகிறார்கள். அத்தகையதொரு நட்பு பிரதர்ஹூட் கட்சிக்கும், ராணுவத்திற்கும் இடையே ஏற்பட வேண்டும் என்றுதான் அமெரிக் காவும் விரும்புகிறது. அதே சமயத்தில், ஜனநாயகத்திற்காக நடைபெற்ற மக்கள் எழுச்சி இஸ்லாமிய அமைப்பிடமும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள ஜனநாயக இயக் கத்தின் ஆதாயங்களைப் பாதுகாத்திட வேண்டும் என்று அது விரும்பினால், ஆயுதப் படையினருக்கு எதிரான போராட்டத்தில் உறுதியுடன் நின்று, இழந்த அதிகாரங்களை மீண்டும் வென் றெடுத்திட அது முன்வர வேண்டும். (மேலும்.....)

ஆடி 04, 2012

துருக்கி விமானம் சுடப்பட்டதற்கு சிரிய ஜனாதிபதி அஸாத் மன்னிப்பு

துருக்கி யுத்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சிரிய ஜனாதிபதி மன்னிப்புக் கேட்டுள்ளார். “சிரிய எல்லைக்குள் புகுந்த துருக்கி ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு நான் 100 வீதம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அஸாத் குறிப் பிட்டுள்ளார். துருக்கியில் இருந்து வெளியாகும் ‘கியும் ஹரியட்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியிலேயே அஸாத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் சிரியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட துருக்கி யுத்த விமானம் மெடிடேரியன் கடலில் விழுந்தது. அதில் சென்ற இரு விமான ஓட்டுனரும் இதுவரை கண்டிபிடிக்கப்படவில்லை. தமது வானெல்லைக்குள் ஊடுருவிய விமானமே சுட்டுவீழ்த்தப்பட்டதாக சிரியா கூறியதோடு சர்வதேச வானெல்லை யில் சுட்டுவிழ்த்தப்பட்டதாக துருக்கி தரப்பில் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடை யிலான பதற்றம் அதிகரித்துள்ளது. சிரியா தமக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகன் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் துருக்கி தனது சிரியாவை ஒட்டிய எல்லையில் இராணுவத்தை உஷார்படுத்தியுள்ளதோடு எறிகணைகள் மற்றும் விமான எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்பியுள்ளது. தவிர எப். 16 ரக யுத்த விமானத்தையும் துருக்கி தனது எல்லைக்கு அனுப்பியுள்ளது. இந்நிலையிலேயே சிரிய ஜனாதிபதி இந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட் டுள்ளார். “இரு நாடுகளுக்கும் இடை யிலான யுத்தம் மூளுவதை நான் அனுமதிக்கமாட்டேன். (மேலும்.....)

ஆடி 04, 2012

ரஷ்யாவில் உலகிலேயே நீளமான பாலம்

ரஷ்யாவில் விலாடி வோஸ்டாக் நக ரையும் ருஸ்கி தீவையும் இணைக்கும் வகையில் மிக நீளமான பாலம் கட்டப்பட்டுள்ளது. இது 1,104 மீற்றர். அதாவது 3622 அடி நீளம் கொண்டது. ருஸ்கி தீவில் வரும் செப்டம்பர் மாதம் ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்து ழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. அதையொட்டி இந்த பாலம் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது. அதை ரஷ்ய பிரதமர் டிமிட்ரி மெத்வதேவ் திறந்து வைத்தார். இதன்மூலம் உலகின் மிக நீள மான கேபிள் பாலமாக இது பதிவானது. இதற்கு முன்பு சீனாவில் யாஸ்ட் ஷ¤ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கேபிள் பாலம்தான் உலகிலேயே மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றது. தற்போது அந்த பெருமை ரஷ்யாவுக்கு கிடைத்துள்ளது.

ஆடி 04, 2012

பிரதமராவதற்கு சட்டப்படி தகுதியானவர் சோனியா

பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என திங்கட்கிழமை குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது, பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது. சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை மாறாக, மன்மோகன் சிங்கை பிரதம ராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை என்றார் கலாம். நொய்டாவில் நடைபெற்ற மருத்துவமனை செவிலியர் மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆடி 04, 2012

அரசியல் கட்சிகள் நற்பண்பாளர்களை வேட்பாளர்களாக நியமிக்க வேண்டும்

ஒரு தார்மீக சமுதாயத்தை ஒரு நாட்டில் ஏற்படுத்துவதற்கு மாதா, பிதா, குரு, மற்றும் சமூகத் தலைவர்களின் முன்மாதிரியும், நல்வழிகாட்டல்களும் அவசியம் என்று முதாதையர் கூறுவார் கள். இவர்களுடன் அரசியல் தலைவர்களும் கீழ் மட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேச ரீதியிலான தலைவர் களும் ஒரு நாட்டில் தார்மீக சமுதாயம் ஒன்றை கட்டியெழுப்பு வதற்கு தங்களின் பூரண பங்களிப்பையும் ஆதரவையும் அளிப் பது அவசியமாகும். இவ்விதம் அரசியல்வாதிகள் மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து நாட்டில் வன்முறை அற்ற அமைதியான தார்மீக சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு உதவி செய்வதாயின், அரசியல்வாதிகள் அப்பழுக்கற்ற நேர்மையான வாழ்க்கையை நடத்துபவர்களாக இருக்க வேண்டும். அத்தகைய அதி உன்னதமானவர்களையே மக்கள் தங்கள் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களின் வழியில் தேசப்பற்றுடன் நாட்டின் மேம்பாட்டுக்காக உழைப்பார்கள். (மேலும்.....)

ஆடி 03, 2012

என்று தணியும் இலங்கைத் தமிழர் சோகம்?

கடந்த சில நாட்களுக்கு முன்பு கேர ளத்தையொட்டிய அரபிக் கடல் பகுதியில் கேரள போலீஸ் ரோந்து சென்றபோது ஒரு படகை வளைத்து சோதனை செய்துள்ளனர். அதில் 140-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் அதில் 25 பேர் தான் பயணம் செய்ய வேண்டும். அவர் கள் அனுமதியில்லாமல் செல்கிறார்கள் என் பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீஸ் மேற் கொண்டு விசாரித்தபோது தமிழ்நாட்டின் பல்வேறு அகதிகள் முகாமில் இருந்து தாங் கள் ஆஸ்திரேலியா சென்று கொண்டிருப் பதாக கூறியுள்ளார்கள். அவர்களில் 42 பேர் இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமி லிருந்து சென்றவர்களும் இருந்துள்ளனர். அவர்கள் கூறிய தகவலில், முகாம்களிலேயி ருந்து எங்களது வாழ்க்கையை இழக்க விரும்பவில்லை. இலங்கையில் யுத்தத்திற்கு பின்பு நிலைமை சரியாகவில்லை. தமிழகத் திலேயோ நாங்கள் எத்தனை ஆண்டுகள் இருந்தாலும் அகதிகளாகத்தான் இருக்க வேண்டிய நிலைமை. (மேலும்.....)

ஆடி 03, 2012

தெரிவுக் குழு விவகாரம் தொடர்பில் ரணில் சம்பந்தன் சந்தித்துப் பேச்சு _

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் அரசால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது குறித்து கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று முன் தினம் காலை இடம் பெற்றது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்பது குறித்தும், தெரிவுக் குழு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பங்களிப்பு குறித்தும் இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் எதிர்க் கட்சிகள் பங்கேற்பது குறித்தும், நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இதற்கு மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் அண்மையில் சந்திப்பொன்று இடம் பெற்றது.

ஆடி 03, 2012

வவுனியா சிறைக் கைதிகளில் 27 பேர் மகர சிறை வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா சிறைச் சாலையில் இருந்து அனுராதபுரத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 27 தமிழ் அரசியல் கைதிகள் தற்போது மஹர சிறைச் சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அந்தக் கைதிகளின் உறவினர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். வவுனியா விளக்க மறியல் சிறைச் சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளினால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 3 சிறைக் காவலர்களையும் முப்படையினரும் இணைந்து மீட்டு எடுத்ததன் பின்னர் வவுனியா சிறையில் இருந்த கைதிகள் அனைவரும் அனுராதபுரம் சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது தெரிந்ததே. அவ்வாறு அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் 30 பேரும் தற்போது மகர சிறைச் சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 03, 2012

சேதுக் கால்வாய் திட்டம்  மாற்றுப்பாதை சாத்தியமில்லை  உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

ஆதாம் பாலம் என்று கூறப்படும் மணல்திட்டு வழியாக மட்டுமே சேது சமுத்திரத் திட்டத்தை நிறை வேற்ற முடியும் என்றும், மாற்றுப் பாதையில் இந்தத் திட்டத்தை நிறைவேற்று வது சாத்தியமில்லை என் றும் பிரபல சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே.பச்சோரி தலைமையிலான குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள தாக உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித் துள்ளது. மணல்திட்டை ராமர் பாலம் என்று கூறி, அதன் வழியாக சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்றும், அதை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதி மன்றத்தில் இந்து மதவெறி அமைப்புகளும் சுப்பிர மணிய சாமி உள்ளிட்டோ ரும் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து இதுபற்றி ஆராயுமாறு மத்திய அர சுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டது. இதைத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டப் பணிகளை நிறுத்தி வைத்த மத்திய அரசு, மாற் றுப்பாதை குறித்து ஆராய நோபல் பரிசு வென்ற சுற்றுச்சூழல் வல்லுனர் ஆர். கே.பச்சோரி தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. திங்களன்று இந்தக் குழு வின் அறிக்கையை உச்சநீதி மன்றத்திடம் மத்திய அர சின் சொலிசிட்டர் ஜென ரல் ரோகின்டன் நாரிமன் தாக்கல் செய்தார். அதில், சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த மாற்றுப் பாதையை தேர்ந் தெடுப்பது பொருளாதார ரீதியாகவும், பூகோள ரீதி யாகவும் சாத்தியமற்றது என்று கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பச் சோரி கமிட்டியின் அறிக் கையை மத்திய அமைச் சரவை இன்னும் ஆராய வில்லை என்பதால், இதன் மீது முடிவு ஏதும் எடுக்கப் படவில்லை என்றும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்திடம் தெரிவித்துள் ளது. இதைத் தொடர்ந்து சேது திட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க 8 வார கால அவகாசம் அளித்து விசாரணையை உச்ச நீதி மன்றம் ஒத்திவைத்தது.

ஆடி 03, 2012

மெர்காசர் அமைப்பில் சேர்ந்தது வெனிசுலா


அர்ஜெண்டினா, பிரேசில், பராகுவே, உருகுவே ஆகிய தென் அமெரிக்க நாடுகள் ஒன்று சேர்ந்து கடந்த 1991-ம் ஆண்டு மெர்காசர் என்ற அமைப்பை உருவாக்கின. தாராள வர்த்தகம், பொருள் களை எளிதாக எடுத்துச் செல்வதற்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் தென் அமெரிக்க நாடு கள் பல சேர்ந்தன. மெர்காசர் அமைப்பில் முன்பு பராகுவே இடம் பெற் றிருந்தது. பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ மீது ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூன் 21-ந்தேதி செனட் சபை அவர் மீது விசா ரணை நடத்தியது. இதனால் மெர்காசர் அமைப்பில் இருந்து பராகுவே நீக்கப்பட்டது. இதற்கிடையே தென் அமெரிக்காவில் உள்ள வெனி சுலா நாடு தன்னை மெர்காசர் அமைப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 1991ம் ஆண்டு முதல் கோரி வந்தது.
(மேலும்.....)

 

ஆடி 03, 2012


இஸ்ரேலில் வெடித்துக் கிளம்பும் மக்கள் போராட்டம்

இஸ்ரேலில் மக்களின் வாழ்வாதாரச் செலவினங் கள் நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து மக்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ் வும் அதிகரித்து வருகிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள மக்கள் கடும் நெருக் கடிக்கு உள்ளாகியுள்ளனர். இதையடுத்து மக்கள் அந் நாட்டின் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள் ளனர். இஸ்ரேலில் வாழ்வா தார செலவினங்கள் கடுமை யாக அதிகரித்திருக்கிறது. இதனால் ஒருபகுதி மக்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே பெரும் பாடாக இருந்து வருகிறது. இதே நேரத்தில் மற்றொரு பகுதியில் செல்வந்தர்கள் வளம்கொழித்து வருகின் றனர். இதனால் இந்நாட்டு மக்களிடையே ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வு கடுமையாக அதி கரித்து வருகிறது. இதனால், அங்கு வாழும் மக்கள் மிகுந்த பாதிப்பிற்குள்ளாகி யுள்ளனர். மேலும், இஸ் ரேல் அரசைக் கண்டிக்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக் கான மக்கள் ஆர்ப்பாட் டம், பேரணி என தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்ற னர்.

ஆடி 03, 2012

நீதியிலும் ஏகாதிபத்திய ‘திமிர்‘!

அமெரிக்காவின் யூனியன் கார்பைடு நிறு வனம் போபாலில் விஷவாயுவை கசிய விட்டதன் மூலம் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த துயரச்சம்பவம் குறித்த வழக்கில் அமெரிக்க நீதி மன்றம் துளியளவும் நீதியை பார்க்காமல் அநீதி யான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. அதுவும் ஆண் டர்சனுக்கும், அவரது கம்பெனிக்கும் சிறிதும் பாதிப்பு வந்து விடக்கூடாது என்ற எண்ணத் தோடு அந்நிறுவனத்தின் தலைமை இயக்கு நரின் வாதம் போன்று தீர்ப்பின் வரிகள் அமைந் திருக்கின்றன. (மேலும்.....)

ஆடி 02, 2012

 

தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் அகதிகளும் பிழைப்புவாதிகளும்

 

(வியாசன்)

ஈழப் போராட்டத்தில் இந்தியத் தலையீடு என்பது கொலைகளையும் ரணங்களையும் அவலங்களையும் எச்சமாக விட்டுவைத்த சாபக்கேடு என்றால் தமிழ் நாட்டு அரசியல் வாதிகளின் தலையிடு அதற்கும் மேலானது. பரந்துபட்ட தமிழ்நாட்டு மக்களுக்கோ அங்கே வாழ்வதற்காகப் போராடும் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கோ முகவரி தெரியாத அரசியல் பிழைப்பு வாதிகள் ஈழம் பெற்றுத்தருகிறோம் என்று நரம்பு புடைக்கக் கொக்கரிக்கும் போது மனிதம் மறுபடி மறுபடி சாகடிக்கப்படுவதாய் உணர்கிறோம். புலம்பெயர் நாடுகளில் உணர்ச்சியூட்டும் கவர்ச்சிக் கூச்சல்களுக்கு விசிலடிக்கும் ஒரு சிறிய கூட்டத்தைத் தவிர இந்தப் பிழைப்பு வாதிகளை யாரும் கண்டுகொள்வதில்லை. வைகோ, திருமாவளவன், ராமதாஸ், நெடுமாறன், சீமான் என்ற ஒரு நீண்ட வரிசையைக் காணலாம். ஈழத்தில் மக்கள் சாரி சாரியாக் கொன்று குவிக்கப்பட்ட போதெல்லாம் இந்த வரிசைப் படுத்தல்களில் உள்ளடங்கியவர்கள் ஒரு துரும்பைக் கூட அசைக்க முயலவில்லை. (மேலும்.....)

ஆடி 02, 2012

வடக்கு தமிழர் விவகாரத்தில் அரசாங்கம் தொடர்ந்தும் பாரபட்சம் - அமெரிக்கா _

வடக்கில் உள்ள தமிழர்களுக்கு அரசு தொடர்ந்தும் பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா குற்றஞ் சுமத்தியுள்ளது. இந்நிலைமையினை மாற்றுவதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர் தெரிவித்துள்ளார். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் அமெரிக்க மகிழ்ச்சி வெளியிட்டுள்ள அதேவேளை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமிழ் மக்களின் அமைதியை நிலைநாட்ட இலங்கை அரசுக்கு பாரியதொரு பொறுப்பு தற்போதும் உள்ளது எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆடி 02, 2012

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை, பிறப்பு சான்றிதழ்

தமிழ் நாட்டு அகதி முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையானது நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி விழுப்புரம் முகாமிலுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 59 குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. கும்மிடி பூண்டி முகாமிலுள்ளவர்களுக்கும், கீழ்ப்புதுப்பட்டு முகாமிலுள்ளவர்களுக்கும் இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் ஆர்.கே.எம். ஏ. ராஜகருணா இவற்றை வழங்கி வைத்தார். 2009ம் ஆண்டிற்கு பின்ன தாக 4,033 இலங்கை அகதிகளுக்கு பிறப்பு மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு முகாம்களிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களுக்குச் சென்று வாழ்க்கையை ஆரம்பிப்பதை ஊக்குவிக்கும் முகமாகவே இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித் துள்ளார். இந்தியாவில் 110 தமிழ்நாட்டு அகதி முகாம்களில் இலங்கைத் தமிழர்கள் தற்போதும் வசித்து வருகின்றனர்.

ஆடி 02, 2012

8 மாகாணங்களில் 2814 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது

நாட்டின் எட்டு மாகாணங்களிலும் கடந்த 10 நாட்களாக மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் நீதிமன்றத்தினால் பிடியாணை விடுக்கப்பட்ட 2814 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடியாணை விடுக்கப்பட்ட சந்தேக நபர்களை மிகவும் குறுகிய காலப்பகுதிக்குள் தேடிக் கண்டு பிடித்து கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோன் சகல மாகாணங்களுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கியிருந்தார். இதற்கமைய கடந்த ஜூன் மாதம் 20ம் திகதி முதல் 30ம் திகதி வரையான பத்து நாட்களுக்குள் மேற்கொண்ட நடவடிக்கை யின் மூலமே 2814 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் தென் மாகாணத்தைச் சேர்ந்த 550 பேரும், வயம்ப 466, கிழக்கு மாகாணத்தில் - 375, வட மாகாணத்தில் - 122 பேரும், மத்திய மாகாணத்தில் - 573 பேரும், வடமத்திய மாகாணத்தில் - 215 பேரும், ஊவா மாகாணத்தில் - 196 பேரும், சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த - 317 சந்தேக நபர்களும் அடங்குவர்.

ஆடி 02, 2012

இலங்கையிலிருந்து ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க விரைவில் புதிய சட்டம்

அரசாங்கம் குடிவரவு, குடியகல்வு சட்டத்திற்கு புதிய திருத்தங்களைக் கொண்டுவந்து இலங்கையில் இருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதை முற்றாகத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்திச் செல்பவர்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு இந்த புதிய சட்டத் திருத்தம் வகைசெய்யும் என்றும் இதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் விரை வில் தாக்கல் செய்யப்படும். இந்தப் புதிய சட்டத்துக்கு அமைய மனிதர் களைக் கடத்திச் செல்பவர்களுக்கு மட்டுமன்றி இந்தக் கடத்தல் முயற்சிகளுக்கு அனுசரணை அளிப்பவர்களுக்கும் கடுமை யான தண்டனை வழங்கப்படும். சமீப காலமாக இலங்கையில் இருந்து பலர் எவ்வித வசதிகளும் இல்லாத சிறிய படகுகளில் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பெருமளவு கட்டணத்தைச் செலுத்திய பின்னர் கொண்டு செல்லப்படு கின்றார்கள். இவ்விதம் செல்பவர்களின் படகுகள் ஆழ்கடலில் மூழ்குவதனால் மரணித்தல் போன்ற பலதரப்பட்ட துன் பங்களை அனுபவிக்கின்றார்கள்.

ஆடி 02, 2012

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணத்துக்கான கேள்விப்பத்திர வேலைகள் டிசம்பருக்குள் பூர்த்தி

வடக்குக்கான அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதற்குத் தேவையான கேள்விமனு பத்திர (டெண்டர்) நடவடிக்கைகளை இவ்வருட முடிவுக்குள் பூர்த்திசெய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். கண்டி - குருநாகலை இணைத்து திருகோணமலை - யாழ்ப்பாணம் வரை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டி ருக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் தூரம் 300 கிலோ மீற்றர்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்டத்தை நிர்மாணிப்பதற்கான திட்டம் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

ஆடி 02, 2012

பிரபாகரன் போன்ற தலைவரை வரலாற்றில் கண்டதே இல்லை! ஈழம் மலரும்! - தமிழருவி மணியன்

பிரபாகரன் போன்ற தலைவரை வரலாற்றில் கண்டதே இல்லை! ஈழம் மலரும்! - தமிழருவி மணியன்

(சமரன்)

பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழம் மலர்வதைக் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது என  தமிழருவி மணியன் தெரிவித்தார். கேரளாவைச் சேர்ந்த திருவெங்கடம் வேலுப்பிள்ளையின் மகன் பிரபாகரனைப் போன்ற ஒரு பயங்கரவாதத் தலைவனை தமிழர்களின் வரலாறு கண்டதே இல்லை. சிட்னி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 02, 2012

புலிகளுக்கு 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக சாட்சிங்களை முன்வைத்து: ராஜ் ராஜரட்னத்திற்கு எதிரான வழக்கு அமெரிக்க உயர் நீதிமன்றத்திற்கு! .  

இதே மாதிரியாக கனடாவிலும் வழக்கு பதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

75 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக கோரி, புலிகளின் குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 30 உறவினர்கள், தமிழ் வர்த்தகரான ராஜ் ராஜரட்னத்திற்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கு அமெரிக்க உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்;டுள்ளது. ராஜ் ராஜரட்னம் புலிகளுக்கு 5 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதாக சாட்சிங்களை முன்வைத்து, பிரபல சட்டத்தரணியான மைக்கல் எல்ஸ்னர் இந்த வழக்கை அமெரிக்க உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். நுகேகொட, கோட்டை தொடருந்து நிலையம், பிலியந்தல, வெலிவேரிய ஆகிய இடங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு, ராஜரட்னத்தின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் தண்டனை பெற்றுள்ள ராஜ் ராஜரட்னம் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. இதே மாதிரியாக புலிகளுக்கு நிதி வழங்கிய முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக கனடாவிலும் வழக்கு பதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது

ஆடி 02, 2012

நிறைவான ஓய்வில் இருக்கும் மனோகனேசன் அவர்களுக்கு

(தீர்வில் மட்டும் முஸ்லிம்களுக்கு என்ன பங்கு? எனக் கேட்ட திரு. சுரேஸ்பிரேமசந்திரனுக்கான பதிலே உங்களுக்கும் பொருந்தும். தமிழ் தேசியவாதம்  வடக்கு, கிழக்குpல் இருந்து வந்தாலென்ன மேலகத்தில் இருந்து வந்தாலென்ன'முஸ்லிம்களுக்கு உரிமை தேவையெனில் போராடுங்கள்' என அறிவுரை பகர்ந்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்-திரு.சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களுக்கு)

' உரிமை தேவையென்றால் போராட வேண்டும். அதைவிடுத்து அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து பேச்சில் கலந்து கொள்ளவேண்டும் என்று கோருவது எந்த வகையில் சரியானது? அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் மகிந்த வீடு தேடிப்போய்க்கூடப்  பேசியிருக்கிறார். அப்படியிருக்க முஸ்லிம் அமைச்சர்களுடன் ஏன் பேசக் கூடாது? இதற்கு ஹக்கீடம் என்ன பதில் சொல்லப்போகிறார்' (மேலும்.....)

ஆடி 02, 2012

கட்சிகளின் புனரமைப்புப் பணிகளும் மாகாண சபைத் தேர்தல்களும்

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளை கலைத்து அவற்றுக்கான தேர்தல்களை செப்டம்பரில் நடத்துவதென தீர்மானிக் கப் பட்டுள்ளது. குறித்த சபைகள் கலைப்பு மற்றும் முற்படுத்தப்படுகின்ற தேர்தல்களுக் கான காரணம் எதிர்வரும் செப்டம்பர் மாதத் தில் ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம் பெறு கையில் அரசாங்கத்தின் மக்கள் செல்வாக்கை எண்பிப்பதே என்று தெரிவிக்கப்பட்டது. (மேலும்.....)

ஆடி 02, 2012

ஜிம்மி கார்ட்டரின் பார்வையில் இன்றைய அமெரிக்கா

மனித உரிமைகள், தனியார் சுதந்திரம் உள்ளிட்ட ஏனைய அடிப்படை உரிமைகள் குறித்த அமெரிக்காவின் இன்றைய போக்குகள் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் கவலை வெளிப்படுத்தியுள்ளார். மனித உரிமைகள், ஜனநாயகம் போன்றவற்றில் உலகின் உச்சக்கட்ட நம்பிக்கையை வென்றிருந்த அமெரிக்கா இன்று எல்லா வகையான மனித, தனிப்பட்ட, மத உரிமைகளை மீறி நடப்பதாகவும் ஜிம்மி கார்ட்டர் வேதனைப்படுவதை அவரது கருத்துக்களிலிருந்து உணர முடிகிறது. 2002 ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்ற கார்ட்டர் 32 வருடங்களுக்கு முன் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர். 1980 ஆம் ஆண்டு அவர் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறி அரசியலிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். (மேலும்.....)

ஆடி 02, 2012

சொந்த மண்ணில் குடியேற விரும்பும் வடக்கு முஸ்லிம்கள்

1990 ஆம் ஆண்டு வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 21 வருடங்கள் கழிந்துவிட்டன. தாம் சுதந்திரமாக தமது தாயக மண்ணான வடக்கில், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தப்பட்டதன் பின்னரே வெளியேற்றப்பட்டனர். அவர்கள் வெளியேற்றப்பட்ட போது தமது கையில் எதனையும் எடுத்துவருவதற்கு புலிகள் சந்தர்ப்பம் கொடுத்திருக்கவில்லை.  (மேலும்.....)

ஆடி 01, 2012

ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் பத்மநாபாவிற்கு தியாகச்சுடர் ஏற்றி அஞ்சலியுரை

பிரபாகரன் உட்பட புலிகளின் ஒட்டுமொத்த அழிவை உறுதி செய்தார் மாவை எம்.பி

தியாகிகள் தின நிகழ்வில் அழையா விருந்தாளியாக கலந்து அசத்தினார்

(எஸ். சுரேஷ் )

விடுதலைப் புலிகளால் துரோகிகள் எனக்கூறிப் படுகொலை செய்யப்பட்ட ஈ.பி. ஆர். எல். எப். இயக் கத்தின் தலைவர் பத்மநாபா மற்றும் ரொபர்ட் உட்பட பன்னிரு போராளிகளை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணத்தில்நடைபெற்ற தியாகிகள் தின நிகழ்வில், தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி அழையா விருந்தாளியாகக் கலந்துகொண்டது மட்டுமல்லாது தியாகச் சுடரை ஏற்றி வைத்து மலரஞ்சலி செலுத்தி அஞ்சலி உரையும் நிகழ்த்தியதன் மூலமாக புலிக ளின் தலைவர் பிரபாகரனின் மரணத்தை உறுதி செய்துள்ளதுடன் புலிகளில் ஒருவரும் உயிருடன் இல்லை என்பதையும் உலகிற்கு தெளிவாக்கி யுள்ளார். (மேலும்.....)

ஆடி 01, 2012

தியாகச்சுடர் விவகாரம், மாவையின் தனிப்பட்ட செயல்

தனது பதவியை மறந்தமையே கவலை

ஈ.பி.ஆர்.எல்.எப் தியாகிகள் தின நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டமை, தியாகச் சுடர் ஏற்றியமை, அஞ்சலியுரை நிகழ்த்தியமை அனைத்துமே அவரது தனிப்பட்ட விவகாரம். அதனை தமிழரசுக் கட்சியுடனோ அல்லது தமிழ்க் கூட்டமைப்புடனோ முடிச்சுப் போட முனைய வேண்டாம் என்று அக்கட்சியின் பெயர் குறிப்பிடவிரும்பாத சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் சீறிப் பாய்ந்தார். மாவையின் தியாகச் சுடர் ஏற்றல் தொடர்பாக கட்சியின் நிலைப்பாடு என்ன என்று கேட்டபோதே அவர் இவ்வாறு எகிறிப் பாய்ந்தார். மாவை எம்.பி செய்வது சரியல்ல. தனது கடந்தகால பழைய தனிப்பட்ட நட்பு காரணமாக அவர் அந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கலாம். ஆனால் அவர் தற்போது தமிழ் மக்கள் நேசிக்கும் பிரதான கட்சியின் செயலாளர் நாயகம் என்பதை மறந்துவிட முடியாது. இப்படியானவர்கள் தமது பதவியிலிருந்து விலகிவிடுவதே சிறந்தது என்றும் அந்த சிரேஷ்ட உறுப்பினர் சீறிப் பாய்ந்தார். (நன்றி: தினகரன்)

ஆடி 01, 2012

அன்று துரோகிகள், இன்று தியாகிகள்

மாவையின் மனமாற்றம் தமிழருக்கு இனியாவது விடிவைத் தருமா?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக, சுபிட்சமான எதிர்காலத்திற்காக போராடி 19.06.1990 இல் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பத்மநாபாவையும் தமிழ் மக்களின் விடிவுக்காக தம் உயிரை அர்ப்பணித்த தோழர்கள், இதர அமைப்புக்களை சேர்ந்தவர்கள், பொதுமக்களையும் நினைவு கூர்ந்து வருடம் தோறும் ஜூன் 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் தியாகிகள் தின வைபவம் வழமைபோன்று இவ்வருடமும் அதே ஜூன் 19 ஆம் திகதி பத்மநாபா ஈபிஆர் எல்எப் கட்சியின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் நடைபெற்றது. உயிர் நீத்த தோழர்களின் நினைவாக இரத்த தானமும் வழங்கப்பட்டது. இவ்வருடம் இந்த தியாகிகள் தினத்திற்கு விசேடமாக வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தியாகிகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தியமையே விசேட நிகழ்வாகக் காணப்பட்டது. (மேலும்.....)

ஆடி 01, 2012

கடல் கடந்து சென்றாலும் காக்காவையே சுடும் வேடன் போன்று புலம்பெயர் தமிழர்

இலங்கையில் தமிழர்கள் இத்தனை துன்பங்களையும் அனுபவித்த பின்னரும் திருந்தாவிட்டால் இனி அவர்களை இறைவனே காப்பாற்ற வேண்டும். ஆனால் அதற்கு உள்நாட்டில் வாழ்ந்து வரும் தமிழினம் இடம் வைக்கவில்லை. இப்போது அவர்களது வாழ்வு முறையில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. இன்று விரும்பியோ விரும்பாமலோ இனி எமது வாழ்வு இப்படித்தான் அமைய வேண்டும் என்பதாகக் கருதி எப்படி வாழ்ந்த மக்கள் எப்படியும் வாழத் துணிந்து விட்டார்கள். இது காலத்தின் கட்டாயம். (மேலும்.....)

ஆடி 01, 2012

A former child-soldier demits office

(R. K. Radhakrishnan, The Hindu)

இலங்கையில் கிழக்கு மாகாண சபைக்கு இசுலாமியத் தமிழர் முதலமைச்சராகும் வாய்ப்பு! உலகிலேயே இசுலாமியத் தமிழர் முதலாவது முதலமைச்சராக!

(இந்து நாளிதழ் தரும் கணிப்பு)

It election time again in Sri Lanka. Late on Wednesday night, the North Central, Sabaragamuwa and Eastern Province Councils were dissolved. The Northern Province continues to be the only one without an elected council. Elections to these three provincial councils are likely to be held in August, after a notification and a 45-day campaign. The most important of these elections will be in the Eastern Province, which has the only Tamil Chief Minister outside Tamil Nadu, Sivanesathurai Santhirakanthan alias Pillaiyan, a former LTTE child soldier. “There are 10 more months for my term of office to end. But I am sure people will bring us back with a thumping majority. I was for dissolving the Council and going for fresh elections…I leave the post of Chief Minister with great satisfaction,” said Mr. Santhirakanthan, in his first interview after the news of the dissolution was announced. (more.....)

ஆடி 01, 2012

பெத்த மகனைப் பார்க்கப் போக முடியலை!

 

செங்கல்பட்டு முகாமில் தீராத சோகம்..

செங்கல்பட்டு சிறப்பு முகாம் மீண்டும் அனலில் தகிக்கிறது. இந்த முகாமில் 30 இலங்கைத் தமிழர்களும் மூன்று நைஜீரிய கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். முகாமில் இருக்கும் இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்கக்கோரி உண்ணாவிரதம் மேற்கொள்வதும், 'விரைவில் விடுவிக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்று அதிகாரிகள் வாக்குறுதி கொடுப்பதும் அடிக்கடி நடப்பதுதான். கடந்த உண்ணாவிரதத்தின்போது, '45 நாட்களில் தீர்வு கிடைத்துவிடும்’ என்று அதிகாரிகள் நம்பிக்கையுடன் கூறி இருந்தார்கள். அந்த அவகாசம் முடிந்துவிட்டதால், கடந்த 15-ம் தேதியில் இருந்து மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கிவிட்டார்கள். போராட்டம் நடத்து​பவர்களில் பலருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்​டதால், முகாமுக்கு மருத்துவர்கள் அழைத்து வரப்பட்டார்கள். கடந்த 21 மற்றும் 22-ம் தேதிகளில் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள்.(மேலும்.....)

ஆடி 01, 2012

இணைந்து போராடுவோம் என்பது மேடை பேச்சில் மட்டுமே

தீர்வில் பங்கு கேட்கும் தரப்பினர் போராட்டத்தில் பங்கேற்பதில்லையே! - மனோ

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும் என்றும், தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமைக் கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடத்தும் போராட் டங்களிலும் பங்கு பெற வேண்டும். உண்மையில் அதற்கு போராட முஸ்லிம் மக்கள் தயாராக இருக்கின்றார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்கள் சிலர்தான் தயங்கி நிற்கிறார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

ஆடி 01, 2012

வரலாறு தெரியாத மனோவின் ஏற்கமுடியாத கூற்று

போராட்டத்தில் பங்குபற்றியது மட்டுமல்ல வேதனைகளையும் சந்தித்தவர்கள் முஸ்லிம்கள் - காசிம்

இனப்பிரச்சினையில் தமிழ்ச்சமூகம் பாதிக்கப்பட்ட அளவுக்கு குறைவில்லாத வகையில் முஸ்லிம் சமூகமும் பாதிக்கப் பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தெரிவித்தார். முஸ்லிம்கள் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபடாது தீர்வில் பங்கு கேட்பது நியாயமற்ற தென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கூறியிருப் பது ஏற்றுக்கொள்ளமுடியாத கூற்று எனவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

ஆடி 01, 2012

மேனனின் வருகையால் பூரிப்படைந்த கூட்டமைப்பு?

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவின் ஈடுபாடு மேலும் நெருக்கமடை வதற்கான ஒரு படியாக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ் சங்கர் மேனனின் இலங்கை விஜயத்தை தான் நோக்குவதாக தமிழ் தேசிய கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறினார். சிவ்சங்கர் மேனனை சந்தித்த பாரா ளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் அதன்பின் கருத்துத் தெரிவித்தபோது இவ்வாறு கூறினார். அரசாங்கத்துடனான பேச்சுவார்த் தைகள் முறிவடைந்தமைக்கான காரணத்தையும் பாரா ளுமன்றத் தெரிவுக் குழு வில் பங்குபற்றுவதி லுள்ள பிரச்சினைகளை யும் சிவ்சங்கர் மேனனு க்கு தான் விளக்கியதாக அவர் கூறினார். “இவ்விடயம் தொடர்பாக நாம் பிடிவாதமாக இருக்க விம்பவில்லை. இத்தெரிவுக்குழுவானது அர்த்த பூர்வமாக செயற்பட வேண்டும். எனினும் எமது கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன. அவற்றை அற்பமானதாக ஒதுக்கிவிட முடியாது” என அவர் கூறினார்.

ஆடி 01, 2012

ஒரு இலட்சம் தமிழர் வாழும் இரத்தினபுரியில் தமிழ் எம்.பி ஒருவர் கூட தெரிவாகவில்லை!


இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு லட்சத்திற்கு அதிகமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். இருந்தபோதும் மாகாணசபையிலோ. நகரசபை பிரதேச சபையிலோ பாராளுமன்றத்திலோ ஒரு தமிழ் பிரதிநிதித்துவமாவது கிடைக்கவில்லை. பெருந்தொகையான தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் இப்பிரதேசத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவமாவது கிடைக்காதது பெரும் வேதனைக்குரிய விடயமாகும். இன்று இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றார்கள். குறிப்பாக காணிப்பிரச்சினை, தோட்ட தொழிலாளர் பிரச்சினை இவற்றோடு ஆசிரிய பற்றாக்குறை, பாடசாலை கட் டட வசதியின்மை போன்ற பல பிரச் சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவற்றை எல்லாம் யாரிடம் முறையிடுவது என்ற கேள்வி இன்று தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. (மேலும்.....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com