|
||||
|
புரட்டாசி 2010 மாதப் பதிவுகள் புரட்டாசி 30, 2010 தங்களை தாங்களே காட்டிக் கொடுக்கும் செயற் திறன் இதுவோ...? புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழீழ தேசிய சொத்துக்களை குறிவைக்கும் இலங்கை! பாதுகாப்பதற்கு செய்ய வேண்டியது என்ன? கடந்த வாரம் சிறீலங்கா ஜனாதிபதியின் ஐக்கியநாடுகள் அமர்வின் கூட்டத்தொடறிற்கான அமெரிக்கப் பயணத்தின் பின்னர் மெல்ல மெல்ல வெளியே கசிந்த செய்திகளின் பிரகாரம் கீழ்க்கண்ட விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இதனை பெரும்பாலும் சிங்கள ஊடகங்களே வெளிக் கொண்டு வந்துள்ளன. விடுதலைப்புலிகளின் நடவடிக்கை பற்றியும் சொத்துக்கள் பற்றியும் மேற்குலக நாடுகளுடன் பேசுவதற்கென்று ஒரு அதிகாரிகள் குழு ஜனாதிபதியுடன் வந்துள்ளது.நோர்வே பிரதமரிடம் மகிந்த நேரடியாகவே விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலைப் பின்னலில் உள்ளவர்களை ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். இதேகோரிக்கை வேறு சில நாடுகளிடமும் விடப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.(மேலும்....)
புரட்டாசி 30, 2010
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லை. வவுனியா மாவட்டத்தில் ரூ. 249 இலட்சம் நஷ்டஈடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த முல்லைத்தீவு, வவுனியா மாவட்ட மக்களுக்கு நஷ்ட ஈடாக நேற்று 249 இலட்ச ரூபாவை வழங்கியதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை அபிவிருத்தி பிரதியமைச்சர் விஜித விஜய முனிசொய்சா தெரிவித்தார். வவுனியா, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்கும் நிகழ்வுகள் நேற்றுக்காலை வவுனியாவிலும் பிற்பகல் முல்லைத்தீவிலும் நடைபெற்றன. மேற்படி நிகழ்வுகளில் நேரடியாகக் கலந்து கொண்ட அமைச்சர் டியூ குணசேகர, பிரதியமைச்சர் விஜித விஜயமுனிசொய்சா ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று நஷ்ட ஈட்டுக்கான காசோலைகளை கையளித்துள்ளனர். பிரதியமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மக்கள் கடந்த முப்பது வருட கால யுத்தம் காரணமாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவர்களது சொந்த இடங்களில் குடியேற்றுவது மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். புரட்டாசி 30, 2010 அயோத்தி நிலம் மூன்று தரப்பினருக்கும் சொந்தம் : இன்று நீதிமன்றில் தீர்ப்பு
Sri Lanka Asks Canada to Help Stop LTTE Activities
புரட்டாசி 30, 2010 வடபகுதி நெற்செய்கையில் மீண்டும் தொடங்கும் மிடுக்கு அரியாலையில் நேற்றுமுன்தினம் ஏர்பூட்டு விழா நடைபெற்றது. குடாநாட்டில் பெரு ம்போக நெற்செய்கையை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வாக இது அமைந்தது. நெற்செய்கையை மங்கலமாக ஆரம்பித்து வைப்பதற் காக இப்படியான விழாவொன்று நடைபெறுவது புதி யதல்ல. யாழ்ப்பாண மன்னர்களின் காலத்தில் இவ் வாறான விழாக்கள் நடைபெற்றன. அது ‘ஏர் மங்க லம்’ என அழைக்கப்பட்டது. அரசர் அரண்மனை வய லில் கலப்பை பிடித்து ஏரோட்டும் நிகழ்வே ஏர்மங் கலம். அந்த நிகழ்வுக்குப் பின்னர்தான் குடிமக்கள் நெற்செய்கையை ஆரம்பிப்பார்கள். (மேலும்....) புரட்டாசி 30, 2010 கிளிநொச்சியில் தமிழ் கட்சிகளின் அரங்கம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி நடைபெறும் தமிழ் கட்சிகளின் அரங்கம் மகாத்மா காந்தியின் ஜெயந்தி தினமான எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறும். இக் கூட்டம் திரு. ஆனந்தசங்கரியின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் அரங்கத்தின் சந்திப்பிற்கு முன்னதாக திரு. ஆனந்தசங்கரி அவர்களின் கிளிநொச்சி அலுவலகம் அன்றைய தினம் உத்தியோகபூர்வமாகவும் திறந்து வைக்கப்படவுள்ளது. (மேலும்....) புரட்டாசி 30, 2010 Toronto goes into crisis mode to cope with fire’s aftermath(Patrick White and Anna Mehler Paperny)Days after a six-alarm blaze tore through Canada’s largest social-housing building, authorities in Toronto are still in the dark: They won’t even guess at what could have caused the fire, what sent it flaming out of control or when the structure’s 1,200 residents – many of them the city’s most vulnerable – will be able to go home. In the meantime, the complex effort to house the newly homeless, clean up the mess, assess the damage and make repairs is pushing the city’s resources to its limits. (more...) புரட்டாசி 30, 2010 அவமானம் அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகள் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர்.(மேலும்....) புரட்டாசி 30, 2010 89,000 War Widows Some 89,000 females in North and East have become widows due to war, Ministry of Child Development and Women’s Affairs said today. Deputy Minister of Child Development and Women’s Affairs, M.L.A.M Hizbullah, stated that there are 49,000 widowers in the East while 40,000 in the North. “About 25,000 are from Batticaloa, of which 12,000 are below age 40 and about 8000 of them have minimum three children, but none of them have any form of income,” he said. Deputy Minister explained that President Mahinda Rajapaksa had entered into an agreement that the Indian Government to conduct programs on self employment. புரட்டாசி 30, 2010 Forbes 400 list 2010 has been very good to the richest Americans
(By Tom
Eley) புரட்டாசி 30, 2010 ஈராக், ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் அமெரிக்கா நுழைகின்றது....? பாகிஸ்தானில் உள்ள பழங்குடி இனப் பகுதியில் தஞ்சம் புகுந்து இருக்கும் வெளிநாட்டு தீவிரவாதிகள் முகாம்களை தகர்க்க நீங்கள் மறுத்தால், எங்கள் தரைப்படை உங்கள் நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழிக்கும் என்று அமெரிக்க இராணுவத் தளபதி ஜெனரல் டேவிட் எச். பெட்ராயஸ் பாகிஸ்தானை எச்சரித்தார். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு உள்ள நேட்டோ இராணுவத்தின் தளபதியான அமெரிக்க இராணுவ ஜெனரல் பெட்ராயஸ் நிருபர்களிடம் கூறியதாவது, பாகிஸ்தானில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் பகுதியானது அல்கைதா, தலிபான் தீவிரவாதிகளின் சொர்க்கமாக இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் அரசாங்கம் தயங்குகிறது. இது அமெரிக்க அதிகாரிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. (மேலும்....) புரட்டாசி 30, 2010 யாழ். பல்கலைக்கழகத்தை விஸ்தரிக்க இந்தியா உதவி யாழ்ப்பாண பல்கலைக்கழ கத்தில் பொறியியல் பீட மொன்றை அமைக்கவும் விவசாய பீடத்தை விஸ்தரிக் கவும் இந்தியாவின் உதவியைப் பெறவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்கா தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள அமைச்சர் திஸாநாயக்க, இந்திய மனித வள அபிவிருத்தி அமைச்சர் கபில் சிபிலை நேற்று முன் தினம் (28) சந்தித்தார். அப்போதே மேற் குறித்த விடயம் தொடர்பாக அவர் இந்திய அமைச்சருடன் பேசினார். அத்துடன் பிரபல இந்திய பேராசிரியர்களையும் சிரேஷ்ட விரிவுரையாளர்களையும் அவர்களது விடுமுறை நாட்களில் இலங்கை பல்க லைக்கழகங்களில் விரிவுரை யாற்றும் வாய்ப்பு பற்றியும் அமைச்சர் திஸாநாயக்க ஆராய்ந்து வருகிறார். அத்துடன் இலங்கை விரிவுரையா ளர்களுக்கு இந்தியாவில் பயிற்சி வழங்கும் சாத்தியம் பற்றியும் இரு அமைச்சர்களும் பேசியுள்ளனர்.(மேலும்...) புரட்டாசி 30, 2010 SRI LANKA Former female fighters strive for a better life BATTICALOA, 29 September 2010 (IRIN) - Lalitha* was 23, from Petiva Pullumalai, deep in Sri Lanka's eastern interior, when the Liberation Tigers of Tamil Eelam (LTTE) came for her. At the time, each family living under LTTE control was required to provide a child to the separatist forces fighting for an independent Tamil homeland for three decades. Lalitha joined up to spare her younger sister. After heading a female Tamil Tiger team in battle for nine years, Lalitha escaped in 2004 to take care of her then-ailing mother, only to end up on the run. (more...) புரட்டாசி 29, 2010 புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
புலிகளின் ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்ததை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். ஆனால்
தமிழ்ப் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுப் போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை.
இந்த ஜனநாயகப் போராட்டத்தின் வெற்றியில்தான் தமிழ்ப்பேசும் மக்களின் எதிர்காலம்
தங்கியுள்ளது. தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைக் கையாளும்போது ஐக்கியத்
தேசியக் கட்சி இருமுகம் காட்டுகிறது. தமிழரைத் திருப்திப்படுத்த தமிழர்களுக்கு
சார்பாகவும் சிங்களவரைத் திருப்திப்படுத்த சிங்களவர்களுக்கு சார்பாகவும் பேசி,
அரசியல் நடத்துகிறது. தமிழ் காங்கிரஸில் ஆரம்பித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வரை
தங்கள் வர்க்க நலன்களின் அடிப்படையில் ஐ.தே, கட்சியை தமிழ் மக்களின் நண்பனாக தமிழ்
மக்கள் மத்தியில் காட்டுவதற்காக ஐ.தே. கட்சியின் தமிழ் பிரிவு போல் செயற்பட்
டதே உண்மை நிலை. (மேலும்...) சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி கிடைப்பதை பெற்றுக் கொள்ளுவோம் -அமைச்சர் டக்ளஸ்
நமக்கு கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களை பயன்படுத்தி கிடைப்பவற்றை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாரம்பரிய மற்றும் கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அரியாலை கிழக்கில் உள்ள வயல்நிலங்கள் 15 வருடங்களின் பின்னர் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அரியாலை கிழக்கில் குறித்த வயல்நிலங்கள் கையளிக்கப்படும் ஏர் பூட்டு விழா என்ற நிகழ்வு இன்று நடைபெற்றது. யாழ் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினரால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் மதகுருமார்களுடன் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டார். (மேலும்...) புரட்டாசி 29, 2010 சட்டவிரோத ஆட்கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் நடவடிக்கைக்கு கனடா ஆதரவு ‘ஓஸன் லேடி’, ‘சன் சீ’ ஆகிய கப்பல்கள் மூலம் சட்ட விரோதமாக கனடாவுக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையர் தொடர்பாக இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு உதவும் நோக்கில் கனேடிய அரசு நியமித்துள்ள விசேட பிரதிநிதி விரைவில் கொழும்புக்கு வரவுள்ளார். சட்ட விரோத ஆட்கடத்தலை தடுப்பதற்கு இலங்கையும், கனடாவும் இணைந்து செயற்படுவதென இரு நாடுகளினதும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்களும் இணக்கம் கண்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை (25) நியூயோர்க்கில் சந்தித்து பேசியபோதே இவர்கள் இணக்கம் கண்டிருக்கின்றனர். (மேலும்.....) புரட்டாசி 29, 2010 எல்லோரையும் எல்லாக் காலமும் ஏமாற்ற முடியாது இனப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வொன்றைக் காணும் நோக்கம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கவில்லை என்பதையும் புலிகள் இயக்கத்தைத் திருப்திப்படுத்துவதற்கான தந்திரோபாயமாகவே ஒஸ்லோ அறிக்கையைக் கட்சி ஏற்றுக்கொண்டது என்பதையும் திஸ்ஸ அத்தநாயக்க கூறிய காரணம் வெளிப்படுத்துகின்றது. ஒஸ்லோ அறிக்கை வெளியாகிய நாளிலிருந்து இவ்வளவு காலமும் ஐக்கிய தேசியக் கட்சி சமஷ்டி பற்றிப் பேசித் தமிழ் பேசும் மக்களை ஏமாற்றி வந்திருக்கின் றது என்பதும் இப்போது தெளிவாகிவிட்டது. (மேலும்.....) புரட்டாசி 29, 2010 அமெரிக்காவில் வேலையின்மை அதிகரிப்பு அமெரிக்காவில், செப் டம்பர் 18ந்தேதியுடன் நிறை வடைந்த வாரத்தில், வேலை இல்லாதோர் எண்ணிக்கை 12,000 அதிகரித்து 4.65 லட்சமாக உயர்ந்துள்ளது. இது, அமெரிக்க நிறுவனங் கள் வேலைவாய்ப்பை அதி கரிக்க தயங்குவதை எடுத்துக் காட்டுகிறது. இதற்கு அந் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து வருவதே காரணமாகும். அமெரிக்க வீட்டு வசதி கடன் சந்தையில் ஏற்பட்ட சீர்குலைவால், அந்நாட்டின் பொருளாதாரத்தில் பின்ன டைவு ஏற்பட்டது. இதிலி ருந்து அந்நாடு சென்ற 2009ம் ஆண்டு ஜூன் மாதத் தில் மீண்டது. இருப்பினும், அந்நாட்டு நிறுவனங்கள், புதிய பணியாளர்களை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றன. (மேலும்...)புரட்டாசி 29, 2010 தீர்ப்பு வரட்டும்!
பிரித்தாளும் கலையில் தேர்ந்தவர்களான பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்தில் அயோத்தியில் பிரச்சனையை துவக்கி வைத்தனர். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே ராமர் கோவில் இருந்ததா என்ற சர்ச்சை தொடர்பான வழக்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதனிடையே ஆர்எஸ்எஸ் - பாஜக பரிவாரம் இதை தனது மதவெறி நோக்கத்திற்கு பயன்படுத்திக்கொண்டது. அத்வானியின் ரத யாத்திரையின் தொடர்ச்சியாக கரசேவை என்ற பெயரில் டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதற்கு முன்பும் பின்பும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க இயலவில்லை என்பதுதான் யதார்த்தம். இந்நிலையில் நீதிமன் றம் மூலமாகவே தீர்வு காண முடியும். (மேலும்...) புரட்டாசி 29, 2010 விண்வெளி ஒரு திறந்தவெளி ஆய்வுகூடம் இன்றைய வானவியல் கிறிஸ்துவின் பிறப்பிற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பைதகரஸ் (Pythagoras) என்ற கிரேக்க நாட்டுத் தத்துவ ஞானியிலிருந்து தொடங்கியது எனலாம். இவரே முதன் முதலாகப் பூமி உருண்டையானது என்று தெரிவித்தவராவார். அதற்குப் பிறகு 200 ஆண்டுகளுக்குப் பின் வந்த அரிஸ்டோட்டில் சந்திர கிரகணத்தின் போது நிலவின் பரப்பில் ஒரு வட்டவில் போல விழும் பூமியின் நிழலைக் கண்டு பூமியின் உருண்டை வடிவத்தை உறுதிப்படுத்தினார். (மேலும்.....) புரட்டாசி 29, 2010 RULE OF LAW AND THE LAW OF RULE (By Hasaka Ratnamalala) Recently I came across some news and pictures in Sri Lankan media, on a group of Sri Lankan lawyers agitating with a coffin in front of Supreme Court claiming that RULE OF LAW in the country is dead. When taking a closer look at the pictures I identified three of the lawyers; in the agitation. According to my understanding one of them is notably a wife beater, the other one is a massive fraudster collaboration with some police officers specially during the times of Colombo lodge raids and had a fraud document case against him at one of the courts in Colombo but somehow managed to hide the case under the carpet and the third one once took part in an illegal bailing episode of a corrupt millionaire in a poya day (public Holiday in Sri Lanka). (more....) புரட்டாசி 29, 2010 அவுஸ்திரேலியாவில் இந்தியர் மீது தாக்குதல் அவுஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் மீது மீண்டும் தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரத்தில் சான்டவுன் பூங்கா ரெயில் நிலையம் உள்ளது இந்த ரெயில் நிலையம் அருகே இந்தியாவை சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சென்று கொண்டு இருந்தார். அபபோது 4 பேர் கொண்ட ஒரு கும்பல் வந்து இந்திய இளைஞரை வழிமறித்து ‘நீ இந்தியனா?’ என்று கேட்டு, திடீரென்று அவர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். தொடர்ந்து அவர்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்தனர். இதில் அந்த இளைஞருக்கு முகம் மற்றும் உடலின் பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. பிறகு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. அந்த வழியாக வந்த 2 பேர் படுகாயம் அடைந்த இந்தியரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். (மேலும்.....) புரட்டாசி 29, 2010 Ambassador’s suspicions proved true Major scam at Embassy in Rome uncovered (by Mike Andree) During the month of August 2009, when Sri Lanka’s Ambassador to Italy Hemantha Warnakulasuriya suspected that the Embassy’s funds had been and were being misappropriated, he informed the then Minister of Foreign Affairs Rohitha Bogollagama and former Foreign Secretary Dr. Palitha Kohona of his suspicions. A team of investigators, from the Foreign Ministry, comprising Chief Accountant K. D. Ranjith and Director - Internal Audit and Investigations J. H. Liyanage, was sent to Rome in October that year. After a thorough investigation, which lasted several days, the investigators were able to uncover the operation and an officer attached to the Embassy was interdicted. (more....) புரட்டாசி 29, 2010 வெனிசூலா பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ஹியூகோ சாவெஸுக்கு வெற்றி வெனிசூலாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜாதிபதி ஹியூகோ சாவெஸின் கட்சி வெற்றி பெற்றது. இதுவரை வெளியான முடிவுகளின் பிரகாரம் சாவெஸின் வெனிசுலா ஐக்கிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.யு.வி) 95 ஆசனங்களைப் பெற்றதாகவும் எதிர்க்கட்சி எம்.யு.டி 63 ஆசனங்களையும் சாவெஸின் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பி.ரி.ரி கட்சி 02 ஆசனங்களைப் பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடந்த இத்தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களித்தனர். 66% வீதமான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையிலேயே சாவெஸின் கட்சிக்கு 95 ஆசனங்கள் கிடைத்துள்ளன. பெரும்பான்மையைப் பெற வேண்டுமானால் 110 ஆசனங்களைப் பெற வேண்டும். இதனைப் பெற்றால் 2012ல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சாவெஸ் போட்டியிடவும் வெற்றி பெறவும் வாய்ப்பேற்படுமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். (மேலும்.....) புரட்டாசி 29, 2010 யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு முல்லை, வவுனியாவில் இன்று நஷ்டஈடு
புரட்டாசி 29, 2010 குடாநாட்டிலுள்ள வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை யாழ். போதனா வைத்தியசாலை உட்பட குடாநாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் குறைபாடுகளை நிவர்த்திப்பதுடன் தாதியர் பற்றாக்குறை மற்றும் சிற்றூழியர் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட கலந்துரையாடல் ஒன்றிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் சுகாதார அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது.(மேலும்.....) புரட்டாசி 29, 2010 வவுனியாவில் ரெப்பியாவின் அலுவலகம் திறப்பு வட மாகாணத்தில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ள மக்களுக்கு துரித சேவைகளை வழங்கும் வகையில் புனர்வாழ்வு அதிகார சபையின் அலுவலகமொன்று இன்று வவுனியாவில் திறக்கப்படவுள்ளது. புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் டியூ குணசேகர மேற்படி அலுவலகத்தினை இன்று முற்பகல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளதாக புனர்வாழ்வு அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எஸ். எம். பதுர்தீன் தெரிவித்தார். மேற்படி அலுவலகம் வவுனியா மாவட்டச் செயலகத்தில் இயங்கவுள்ளதுடன் வடக்கின் சகல மாவட்டங்களுக்குமான சேவையினை இவ்வலுவலகம் வழங்கவுள்ளது. புரட்டாசி 29, 2010 சுற்றுலா பயணிகளின் வருகை 36 வீதத்தால் அதிகரிப்பு இந்த வருடத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 36 வீதத்தினால் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கையின் பிரதான வருமானத்தை ஈட்டும் துறையாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும். சுற்றா டலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கையில் சுற்றுலாத்துறை முன்னேற் றப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். உலக சுற்றுலா தின பிரதான வைபவம் நேற்று முன்தினம் மாத்தறை கிருலகெலே பிரதேசத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா மேற்கண்டவாறு கூறினார். (மேலும்.....) புரட்டாசி 29, 2010 மட்டு. நகரில் இந்திய உதவியுடன் ரூ. 10 ஆயிரம் மில். செலவில் நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலை மட்டக்களப்பில் இந்திய நிதியுதவியுடன் 10,000 மில்லியன் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட புதிய வைத்திய சாலையொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப கட்டப் பேச்சுவார்த்தை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகாதார அமைச்சில் நடைபெற்றது. இப்பேச்சுவார்த்தையில் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சுகாதார அமைச்சின் செயலாளர் ரவிரு பேரூ, இந்திய நிறுவனத்தின் தலை வர் சுனில் அகர்வால் மற்றும் இந்திய அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சுகாதார, அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிடம் விடுத்த வேண்டுகோளுக்கி ணங்கவே மேற்படி வைத்தியசாலை மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படவுள்ளது.(மேலும்.....) புரட்டாசி 28, 2010 மக்களோடு மக்களாய் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் ரீதியாக உயிர் வாழ்வதற்கு அரசாங்கம் உதவுகிறது - அ. வரதராஜப்பெருமாள்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தங்களுக்கு பயனற்ற ஒன்று என மக்கள் நினைக்கிறார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் தங்களுக்கு எதையும் பெற்றுத்தர முடியாது என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் தங்களுக்கு எல்லாவற்றையும் செய்து விடும் என்றுஅவர்கள் திருப்திப் படுகிறார்கள் என்கிற கருத்தாக இது ஆகிவிடாது.ஏனெனில் அவர்கள் அரசாங்கத்தின் மீது பலத்த சந்தேகம் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசாங்க எதிர்ப்பு எண்ண அலைகள்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உதவி செய்கிறது.உண்மையில்அவர்களின் சொந்தத் திறமையல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் உயிர் வாழ்வதற்கு இந்த அரசாங்கம் மறைமுகமாக உதவி புரிகிறது. (மேலும்...) புரட்டாசி 28, 2010 UNP rejects federal solution There is no need for a federal political solution in Sri Lanka, the country's main opposition has said.
The United National Party (UNP),that has agreed for a federal solution with the Tamil Tigers, said it is no longer necessary to devolve the centralised power into regions as there are no longer 'armed militants'. In the Oslo statement agreed by the UNP-led government and the LTTE it was stated that "both parties have decided to explore a political solution founded on internal self-determination based on a federal structure within a united Sri Lanka". (more...) புரட்டாசி 28, 2010 நம்பிக்கை தரும் மிக முக்கிய செயற்பாடு பலாலி உயர் பாதுகாப்பு வலய பாடசாலைகள் மீளக் கையளிப்பு பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைகளுக்கென கையளிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை சுமார் 64 வருடம் பழைமை வாய்ந்தது என்று வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதை அடுத்து 1990 ஆம் ஆண்டு தொடக்கம் வசாவிளான் பாடசாலை யாழ். உரும்பிராய் பகுதியில் தற்காலிகமாக இயங்கி வருவதாகத் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு 1352 மாணவர்கள் கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார். (மேலும்...) புரட்டாசி 28, 2010 தமிழில் இதற்கு மேலேயும் முடியும்....?
(நன்றி: பிரிய நேசன்) புரட்டாசி 28, 2010 நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளில் வாழும் இலங்கையரின் ஒத்துழைப்பு அவசியம் இலங்கை தற்போது இன, மத, பேதமின்றி அனைவருக்கும் சமாதானமாக வாழக் கூடிய நாடாக உள்ளது. 2005 இல் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு மக்கள் எனக்கு ஆணை வழங்கினர். அதனை நான் செவ்வனே நிறைவேற்றியுள்ளேன். அது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ள ப்பட்ட யுத்தமல்ல. இதேவேளை 2010 இல் மக்கள் மீண்டும் எமக்கு நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஆணை வழங்கி யுள்ளனர். அதனை நிறைவேற்றுவதற்கு வெளி நாடுகளில் உள்ள அனைத்து இலங்கையர்களினதும் ஆதரவு எதிர்காலத் திலும் அவசியப்படுகின்றது என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (மேலும்...) புரட்டாசி 28, 2010 புலிகளின் சட்ட விரோத காணிப் பங்கீடு தமது காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக நாடு திரும்புவோர் முறையீடு 20 - 25 வருடங்களின் பின்னர் நாட்டுக்கு திரும்பி வருவோரின் காணிகள் சட்ட விரோதமாக வேறு சிலரால் ஆக்கிரமிக் கப்பட்டுள்ளதாக கூறும் பல முறைப்பாடுகள் வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து கிடைத்து வருவதாக மேற்கூறிய மாவட்டங்களில் உள்ள அரசாங்க அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்படி காணிகள் புலிகளின் மாவீரர் குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டுள்ளதாகவும் இவ்வாறு சட்ட விரோதமாக காணியில் குடியிருந்தோருக்கு யுத்தநிறுத்த காலத்தின் போது அப்போதைய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அதிகாரபூர்வ காணி உறுதிகளை வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். (மேலும்...) புரட்டாசி 28, 2010 வட மாகாண கல்வித்துறை மீண்டும் தலைநிமிர்கின்றதுவட மாகாணத்தைக் கட்டியெழுப்பும் பணியில் அம் மாகாணத்திலுள்ள எல்லாப் பாடசாலைகளையும் வழ மையான இடங்களில் போதுமான வளங்களுடனும் கூடுதலான தரத்துடனும் இயங்க வைப்பது முக்கிய மானது. இதன் அத்தியாவசியத் தன்மையைப் புரிந்து கொண்டு அரசாங்கம் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. வட மாகாணத்தில் எண்பதுக்கு மேற்பட்ட பாடசாலை கள் கண்ணிவெடிகள் அகற்றப்படாததாலும் முற்றாகச் சேதமடைந்ததாலும் இயங்க முடியாத நிலையில் இருக்கின்றன. இவற்றை விரைவில் இயங்க வைப் பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள் கின்றது. கண்ணிவெடிகளை அகற்றும் பணி துரிதப் படுத்தப்படுகின்றது. சேதமடைந்த பாடசாலைகள் மீள நிர்மாணிக்கப்படவுள்ளன. (மேலும்...) புரட்டாசி 28, 2010 முட்டை இன்று முதல் உத்தரவாத விலையில் கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் உத்தரவின் பேரில் புறக்கோட்டை சந்தையில் இன்று முதல் வெள்ளை முட்டை ஒன்றை 13 ரூபா 20 சதத்துக்கும், சிகப்பு நிற முட்டை ஒன்றை 13 ரூபா 70 சதத்துக்கும் பெற்றுக் கொள்ள முடியுமென கூட்டுறவு மற்றும் உள்ளூர் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், அண்மைக் காலத்தில் முட்டையின் விலை அதிகரித்து ஒரு முட்டை 15 முதல் 17 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் (சதொச) மூலம் பண்ணைகளுக்கு சென்று முட்டைகளை கொள்வனவு செய்து பொருளாதார கேந்திரங்கள் மற்றும் லக் சதொச மூலம் அவற்றை நுகர்வோருக்கு விற்பனை செய்யுமாறு உத்தரவு பிறப்பித்தார். இதனால் முட்டை விலை குறைந்துள்ளது. புரட்டாசி 28, 2010 கம்யூனிஸ்ட் நாடுகள் கை கோர்க்கின்றன ரஷ்யாவிலிருந்து சீனாவுக்கு குழாயூடாக எரிவாயு விநியோகம் உலகில் அதிகளவான எரிவாயுவை கொண்டுள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. சீனாவின் பாரிய பொருளாதார வளர்ச்சி ரஷ்யாவின் எரிவாயுவில் தங்கியுள்ளது. சீனாவுக்கான எரிவாயுவை கிழக்கு சேர்பியா ஊடாக குழாய் மூலம் விநியோகம் செய்யும் யோசனை உள்ளபோதும் இவை இன்னும் பூர்த்தியாகவில்லை. சீனாவின் நிபந்தனை, ரஷ்யாவின் எதிர்பார்ப்பு என்பவற்றுக்கிடையில் உள்ள வேறுபாடுகளே காரணமாகும். எனினும் சீனாவுக்கான எரிவாயு விநியோகத்தில் எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லையென்றும் ரஷ்ய அதிகாரிகள் கூறினர். குழாய்களைப் பதிப்பதற்கான செலவினம் எரிவாயுவின் விலை என்பவை தொடர்டபாக ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் கலந்துரையாடவுள்ளனர். அத்துடன் வடகொரியாவின் விவகாரமும் இச்சந்திப்பில் இடம்பெறவுள்ளதாகவும் ரஷ்யாவின் எண்ணெய்க் கம்பனியின் தலைவர் விளக்கினார். ரஷ்யாவின் குழாய்க் கம்பனியும் சீனாவின் எண்ணெய் கம்பனியும் எரிவாயுவைக்கொண்டு வருவதற்கான இறுதி ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளன. (மேலும்...) புரட்டாசி 28, 2010 வடக்கு அபிவிருத்தி மேலும் துரிதம் நிர்மாணப் பணிகளில் திருப்தி இன்றேல் ஒப்பந்த அனுமதி ரத்துவட மாகாண அபிவிருத்தி, நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்தக் காரர்கள் தமது பணிகளை சரிவர செய்யத் தவறும் பட்சத்தில் அவர்களது ஒப்பந்த அனுமதிப் பத்திரங்கள் ரத்துச் செய்யப்படும். வடமாகாணத்தில் அரசாங்கம் முன்னெடுத் துச் செல்லும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை துரிதப்படுத்துவதே இதன் பிரதான நோக்கம். வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேலும் துரிதப்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தக் காரர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறியியலாளர்களுடன் விரிவாக ஆராய தீர்மானித்துள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார். வடபகுதியில் நானூறுக்கு மேற்பட்ட ஒப்பந்தக்காரர்கள் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த அவர், வவுனியா கலாசார நிலையத்தில் இவர்களை 29ம் திகதி புதன்கிழமை சந்தித்து பேசவுள்ளதாகவும் தெரிவித்தார். வடமாகாண அபிவிருத்திப் பணிக ளுக்குத் தேவையான போதிய நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்த அவர் அதனை துரிதப்படுத் துவதே பிரதான நோக்கம் என்றும் குறிப்பிட்டார். டாலர் மீதான நெருக்குவாரம் கூடுகின்றது வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கு டாலர் பரிவர்த்தனைக்கு வரி ஐக்கிய நாடுகள் சபையில் ஸ்பெயின் யோசனை மில்லினியம் வளர்ச்சி இலக்கை எட்டுவதற்கு, சர்வதேசப் பணமாகப் புழங்கும் அமெரிக்க டாலர் பரிவர்த்தனை செய்வதற்கு வரி விதிக்கலாம் என்று ஐக்கியநாடுகள் சபையின் பொதுக்குழுக் கூட்டத்தில் ஸ்பெயின் யோசனை கூறியுள்ளது. தற்போதிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடியானது சில படிப்பினைகளைக் கொடுத்திருக்கிறது. அதன்படி சர்வதேச சந்தைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது ஒரு முக்கியமான படிப்பினையாகும். நிதி நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடியைச் சமாளிக்க உலக அளவில் நெறிப்படுத்தும் சட்டங்களும், உயர்ந்தபட்ச ஒருங்கிணைப்பும் தேவை என்று ஸ்பெயின் வெளியுறவுத் துறை அமைச்சர் மிக்கெல் ஏஞ்சல் மோரெசனஸ் கூறினார். இதற்கு ஜி-20 அமைப்பை பொருளாதார ஆளுமை செய்யும் புதிய அமைப்பாகப் பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார். (மேலும்...) புரட்டாசி 28, 2010 இஸ்ரேல் மீண்டும் குழப்புகின்றது மேற்கு கரைப் பகுதியில் மீண்டும் கட்டுமானப் பணி, இஸ்ரேல் தொடங்கியது கடந்த 10 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பணி மேற்கு கரை பகுதியில் மீண்டும் துவங்கியது. பாலஸ்தீனம் மேற்கு கரைப் பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இந்தப் பகுதியில் தமது மக் களின் குடியிருப்பு அமர்வுக் காக கட்டுமானப் பணி களையும் இஸ்ரேல் மேற் கொண்டது. தங்களது தலைநகராக உருவெடுக்கும் பகுதியில் கட்டுமானப் பணி மேற் கொள்ளக் கூடாது என பாலஸ்தீனம் கடும் எச்ச ரிக்கை விடுத்தது. மேற்குகரை கட்டுமான பிரச்சனையால் மத்திய கிழக்கு பகுதியில் பதட்ட நிலை நிலவுகிறது. இதனை தவிர்ப்பதற்கு அமெரிக்கா தலையீட்டின் பேரில் இஸ் ரேல் பிரதமர் நெடன்யாகூ வும் பாலஸ்தீன ஜனாதிபதி மகமது அப்பாசும் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த ஜனாதிபதிப் பேச்சுவார்த் தையை இரு தரப்பினரும் தொடர விருப்பம் தெரிவித் திருந்தனர். இந்தநிலையில், 10 கட்டுமான தடை ஞாயி றன்று முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து திங் களன்று மேற்கு கரைப் பகு தியில் கட்டுமானம் மேற் கொள்ள புல்டோசர்கள் இயக்கப்பட்டன. புரட்டாசி 28, 2010 திருகோணமலையில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி தொழில் சாலை திருகோணமலை மாவட்டத்தின் கப்பல் துறையில் 40 மில்லியன் செலவில் ஆயுர்வேத மருந்து உற்பத்தி தொழில்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் இந்திராணி தர்மராஜா தெரிவித்தார். கிழக்குமாகாண சுதேச வைத்தியத்துறை அமைச்சின் நிதியில் இது அமையவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொழில்சாலைக் கட்டடங்களும் இயந்திரங்களுமாக பெரியளவான இந்தத் தொழில்சாலை அமைக்கப்பட்ட பின்னர் சுமார் 32 பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு வழங்கமுடியும். இங்கிருந்து மருந்துகள் உற்பத்தியாக தொடங்கியதும் மிகக் குறைந்த விலைகளில் மருந்துகளைப் பெறக் கூடியதாக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். திருமலை வனபரிபாலன திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட 10 ஏக்கர் நிலத்தில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளமை தொடர்பில் அண்மையில் தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. புரட்டாசி 27, 2010 சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க 30 வரை காலக்கெடுகல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் கிராமங்களில் சட்டவிரோதமான சுடுகலன்களை (ஆயுதம்) வைத்திருப்பவர்கள் எதிர்வரும் 2010.09.30ம் திகதிக்குள் தங்களது பிரதேசங்களில் உள்ள பள்ளிவாசல்களில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (24ம் திகதி) கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலை மையில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட் பட்ட பள்ளிவாசல்களின் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலேயே இத்தீர் மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம். என். எஸ். மென்டிஸ் அறிவித்துள்ளார். குறிப்பிட்ட திகதிக்குள் சட்டவிரோத ஆயுதங்களை அனுமதிப்பத்திரமின்றி ஆயுதமொன்றை வைத்திருந்த குற்றத் திற்காக 1996ம் ஆண்டின் 22ம் இலக்க சுடுகலன் (ஆயுதம்) சட்டக்கோவை, சட்டம் 2ம் பிரிவில் திருத்தியமைக் கப்பட்ட 2(1) பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் பட்சத்தில் 20 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு ஆளாக நேரிடுமென அவர் எச்சரிக்கை விடுத் துள்ளார். சுற்றி வளைப்புத் தேடுதல் நடைபெறும் போது ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறி விக்கப்பட்டுள்ளது. புரட்டாசி 27, 2010 34 குடும்பங்கள் முல்லைத்தீவில் இன்று மீள் குடியமர்வுவவுனியா நிவாரணக் கிராமங்களிலுள்ள 34 குடும்பங்களைச் சேர்ந்த 96 பேர் இன்று முல்லைத்தீவு மாவட் டத்தில் மீளக்குடியமர்த்தப்படவுள் ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் முதலாம் திகதி நிவாரணக் கிராமங்களிலுள்ள 283 குடும்ப த்தைச் சேர்ந்தோர் கரச்சி பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னர் நடைபெற்ற மீள்குடி யேற்றத்தை தவறவிட்ட 100 குடும்பங்களைச் சேர்ந்தோரை எதிர்வரும் 11 ஆம் திகதி தமது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக் கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கேதீஸ்வரன் கூறினார்.புரட்டாசி 27, 2010 பேலியகொடை கொள்ளை தகவல் தருவோருக்கு ரூ. 25 இலட்சம் சன்மானம் பேலியகொடையில் கடந்த வெள்ளிக் கிழமை இடம்பெற்ற 7 கோடி ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சரியான தகவல்களை வழங்கு வோருக்கு 25 இலட்சம் ரூபாவை சன்மானமாக வழங்கப்படும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித் துள்ளது. அவ்வாறு தகவல் தெரிந்தவர்கள் 011-2662311, 011-2662323, 011-2685151 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பொலிஸ் திணைக்களம் பொது மக்க ளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தனியார் வங்கி ஒன்றின் தன்னியக்க பணமாற்ற (டெல்லர்) இயந்திரங் களில் வைப்பதற்காக வாகனம் ஒன்றில் 7 கோடி ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு செல்லப்பட்ட போது இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புரட்டாசி 27, 2010 சுற்றுலாத்துறை அபிவிருத்தி யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சுமுக நிலைமை மீண்டும் உருவாகியதையடுத்து இலங்கை மீது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனம் மீண்டும் திரும்பியிருக்கிறது. இலங்கையில் யுத்தம் நிலவிய காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த எண்ணிக்கையானது அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிக்குமென்பதே இலங்கையின் நம்பிக்கையாகும். ‘இந்து சமுத்திரத்தின் அழகிய முத்து’ என்று அக்காலம் முதலே வர்ணிக்கப்பட்டு வருகிறது எமது நாடு. இயற்கை வளங்களும் கண்கவர் இயற்கைக் காட்சிகளும் நிறைந்துள்ளதாலேயே இலங்கைக்கு அப்பெயர் வந்தது. (மேலும்....) புரட்டாசி 27, 2010 இலங்கையில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல சிங்களவர்களும் நிம்மதியாக வாழ முடியாத சூழல் - ஜேவிபி காலாகாலமாக இலங்கைக்கு வழங்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ. எஸ். பி. சலுகை இல்லாமல் போனதற்கு உள்நாட்டில் மனித உரிமைகளும் நல்லாட்சியும் இல்லாமையே காரணமாகும். அத்தோடு யுத்தம் முடிந்துள்ள போதிலும் வடக்கு கிழக்கில் பாதுகாப்பு வலயங்கள் காணப்படுகின்றன. கம்பி வேலிகளுக்குள் தமிழ் மக்கள் சிறைப்படுகின்றனர். இன்னும் ஆள்கடத்தல்கள் கூட முடிவிற்கு வரவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு இலங்கையே சுதந்திரமான நாடு என்பதில் எவ்விதமான உண்மையும் இல்லை. (மேலும்....) புரட்டாசி 27, 2010 குண்டு புரளியையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டது கனடாவின் டொரொன்டோ நகரிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி வந்த விமானமொன்று பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக தரையிறக்கப்பட்டது. 273 பயணிகளுடன் இந்த விமானம் சனிக்கிழமை புறப்பட்டவேளை பயணியொருவர் குண்டுப் புரளியைக் கிளப்பிவிட்டார். இதனால் இவ்விமானம் சுவீடனில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் பாகிஸ்தானுக்குச் சொந்தமானதாகும். டொரண்டோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பின்னர் விமானத்தில் பயணி யொருவர் குண்டுடன் செல்வதாக டொரொன்டோ விமான நிலைய அதிகாரிகள் விமானிக்கு அறிவித்ததையடுத்தே இந் நிலைமையேற்பட்டது. ஸ்டொச் ஹோம் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு படையினர் கடுமையாகச் சோதனை செய்தனர். எனினும் எதுவும் விமானத்தில் கண்டுபிடிக்கப்படவில்லை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் ஒருவரைக் கைது செய்தனர். இவர் கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தானியராவார். புரட்டாசி 27, 2010 ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை கிடைக்க சீனா ஆதரவுஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமாக இடம்பெற சீனாவின் ஆதரவு கிடைக்குமென்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ. நா. சபை கூட்டம் நடைபெற்று வருவதை யொட்டி நிருபமா ராவ் நியூயோர்க் சென்றுள்ளார். இந்நிலையில் சீன அரசு டி. வியான சீனா மத்திய தொலைக்காட்சி சேனலுக்கு சனிக் கிழமை அவர் பேட்டியளித்தார். அதில் கூறியிருப்பது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பிடிக்க தகுதியுள்ள நாடுகள் குறித்து இப்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இந்தியா இதில் முக்கிய இடம்பெற்றுள்ளது. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தரமாக இடம்பிடிக்க இந்தியாவுக்கு அனைத்து தகுதிகளும் உள்ளது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. (மேலும்....) புரட்டாசி 27, 2010 ஐதேக சிரேஷ்ட உறுப்பினர் ஜோன் அமரதுங்க அரசுடன் இணைவார்? நியூயோர்க் சென்றிருக்கும் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிப் பிரதம கொரடாவான ஜோன் அமரதுங்க அரசுடன் இணைந்து கொள்வார் என அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஐதேக மற்றுமொரு சிரேஷ்ட உறுப்பினரை இழக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. ஜோன் அமரதுங்க இலங்கை வெளி விவகார அமைச்சின் விசேட அழைப்பின் பேரில் நியூயோர்க் செல்ல இருப்பதாக முன்னர் தெரிவித்தார். இதற்கு ஐ.தே.கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. அதன் பின்னர், தாம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு நியூயோர்க் செல்வதாக அவர் தெரிவித்தார். அவர் இன்று 27ஆம் திகதி நாடு திரும்பியதும் அரசுடன் இணைந்துகொள்வார் எனவும், அமைச்சரவை மறுசீரமைப்பில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புரட்டாசி 26, 2010 ஜனாதிபதியிடம் பான் கீ மூன் தெரிவிப்பு விசாரணை செய்யும் அதிகாரம் நிபுணர் குழுவுக்கு இல்லை இலங்கைக்கு எதிரான குற்றச் சாட்டுகளை விசாரணை செய்யும் சட்ட ரீதியான அதிகாரம் எதுவும் தமது நிபுணர் குழுவுக்குக் கிடை யாதென்று ஐக்கிய நாடுகள் சபை யின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் மீண்டும் வலியுறுத்தித் தெரிவித்துள்ளார். நியுயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஜனாதிபதி யுடன் நடந்த சந்திப்பின்போதே பான் கீ மூன் இதனைத் தெரி வித்துள்ளார். இலங்கையுடனான எதர்கால உறவு எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியே நிபுணர் குழு தமக்கு ஆலோசனை வழங்கு மென்றும், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அதிகாரம் எதுவும் அதற்குக் கிடையாதென்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் லுசியன் ராஜகருணாநாயக்க நியூயோர்க்கிலிருந்து தெரிவித்துள்ளார். (மேலும்....) புரட்டாசி 26, 2010 விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதென்றால், பின்னர் இந்தியாவில் இன்னும் ஏன் தடை? - பழ.நெடுமாறன் பேச்சு
அழிந்து போன புலிகளுக்குத் தடை இருந்தாலென்ன, இல்லாவிட்டால் தான் என்ன?
வையாபுரியையும், நெடுமாறனையும் சீமானுடன் சேர்த்து அடைத்துவிட்டால் எல்லாம்
சரியாகிவிடும்……? ஏன் அடைத்து விடவேண்டும்....? அனுப்பா விட்டால்(டாலர்)
போதும் எல்லாம் சரியாகிவிடும்……(மேலும்...) மொழித் தடையை நீக்க வேண்டும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவை வெகுவாகப் பாதித்த விடயங்களில் அரசகரும மொழிச் சட்டம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. சிங்களம் மட்டும் சட்டம் என அறி யப்பட்ட இச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் இனங்களுக்கு இடையிலான இடைவெளி காலத்துக்குக் காலம் விசாலித்து வரத் தொடங்கியது. அரசகரும மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன் இல ங்கை மக்களுக்கு அந்நியமான ஆங்கிலமே நிர்வாக மொழியாக இருந்த போதிலும், தமிழ் மொழி பேசுவோரில் கணிசமானோர் ஆங்கில மொழியறிவு உள்ளவர்களாக இருந்ததால் அம்மக்கள் நடைமுறையில் பெருமளவு கஷ்டங்களுக்கு உள்ளாகவில்லை. சிங் களம் நிர்வாக மொழியாகியதும் சிரமங்களை அவர்கள் எதிர் நோக்கினர். அரச அலுவலகங்களில் தங்கள் கருமங்களை ஆற்று விப்பதில் சிரமப்பட்டனர். (மேலும்....) புரட்டாசி 26, 2010 கைதிகளின் திறமைகளை சிறை நிர்வாகம் ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதியமைச்சர் விஜித விஜயமுனி சொய்சா தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல். நேர் கண்டவர் : பி. வீரசிங்கம் கேள்வி : வடக்கு கிழக்கு யுத்தத் தின் போது கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்தவர்களின் நிலைமைகள் எப்படியிருக்கிறது? பதில் : தற்போதைய நிலையில் 11 நிலையங்களில் 7399 பேர் இருக்கின்றனர். இதில் 986 பெண்களும், 6413 ஆண்களும் அடங்குகின்றனர். பயங்கரவாத தடுப்பு பிரிவின் பொறுப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 686 பேராகும். புனர்வாழ்வளிக்கப்பட்டு இதுவரை 2439 ஆண்களும் 1149 பெண்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 53 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. 3550 பேர் விவசாயத் துறை மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் விடுதலை தொடர்பாக நானும் எனது அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர், புலனாய்வுப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின்னர் ஒரு தீர்க்கமான முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் வைத்தே வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டது. இதற்கு பூரண ஒத்துழைப்பை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வழங்கியிருக்கிறார். (மேலும்....) புரட்டாசி 26, 2010 ஆயுதப் போராட்டத்துக்கு அள்ளிக் கொடுத்ததன் மூலம் தமிழ் மக்களின் அவலங்களுக்கு டயஸ்போறாவும் பொறுப்பாளி ஆயுதப் போராட்டத்துக்குத் தாராளமாக அள்ளிக்கொடுத்து உதவியவர்கள் அந்த உதவியின் விளைவாக ஏற்பட்ட சிதைவுகளை நிமிர்த்துவ தற்கும் அள்ளிக்கொடுக்கத் தயாராக வேண்டும். இவர்கள் அமைப்பொ ன்றை உருவாக்கி அந்த அமைப்பின் மூலம் சில அபிவிருத்திச் செயற் பாடுகளை மேற்கொள்ளலாம். யுத்தம் காரணமாக வீடுகளை இழந்த ஆயிரக் கணக்கானோர் உள்ளனர். அவர்களுக்கு வீடுகளைக் கட்டிக் கொடுப்பது அவர்களின் மனங்களை வெல்லும் காரியம் மாத்திரமன்றி வட பிரதேச அபிவி ருத்திக்குக் கைகொடுப்பதுமாகும். அபிவிருத்தியுடன் நிற்காமல் அரசியல் விடயத்திலும் புலம் பெயர் தமிழர்கள் பங்களிப்புச் செய்ய முடியும். (மேலும்....) புரட்டாசி 26, 2010 இன்று எஸ்.டபிள்யூஆர்.டி பண்டாரநாயக்கவின் 51வது நினைவு தினம் அரசியல் சிந்தனையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க (ரவி ரத்னவேல்) தேசியத்தை நிலைநாட்டும் வகையில் பண்டாரநாயக்க தலைமையில் சிங்கள மகா சபை உருவாக்கப்பட்டதுடன், அதன் மூலம் நம் நாட்டிற்கு உகந்த செயற்றிட்டங்களை உருவாக்கினார். கல்வி, சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி, நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்ற வேண்டுமென்பது அவரது இலட்சியமாக இருந்தது. சிங்கள மக்களுடன் இணைந்து ஏனைய இன மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான வழியமைக்க வேண்டும் என விரும்பிய பண்டாரநாயக்க, சிங்கள மொழியை அரச கரும மொழியாக அங்கீகரிப்பதில் முன்னின்று உழைத்தார். (மேலும்....) புரட்டாசி 26, 2010
சங்கத் தமிழ் பெருமை மட்டும் பேசாமல் (அருள்சத்தியநாதன்) சுவசுதிக் எனப்படும் ஓங்காரக் குறியீடு சிந்துவெளிக் காலத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து நீடிக்கிறது. இதனைத் தமிழ் எழுத்துகளாகப் பிரித்து ஓம் என்று படித்துக் காட்டியிருக்கிறேன். இந்தக் குறியீடு கி.மு. 6000 சார்ந்த மெகர்கார் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து சுவசுதிக் எனப்படும் ஓங்கார எழுத்து கி.மு. 6000 முதல் தமிழ் மொழி எழுத்தாக வழங்கியது என்று காட்டுவதற்குச் சான்றாக உள்ளது. உலகில் கி.மு. 6000 முதல் தொடர்ந்த எழுத்து வரலாறு கொண்ட மொழி தமிழ் அன்றி வேறெதுவுமில்லை. எனவே, தமிழ் எழுத்தின் தொடர்ச்சி இன்றுவரை 8000 ஆண்டு காலமாகத் தொடந்து வந்திருக்கிறது. இதனை மேலும் உறுதிப்படுத்த தமிழ் எழுத்துக்களின் வரலாறு தனி நூலாக எழுதப்பட வேண்டும். (மேலும்....) புரட்டாசி 26, 2010 மட்டு.மீன்பிடி பிரதேசங்களுக்கு அமைச்சர் வி.முரளிதரன் விஜயம் ![]() மட்டக்களப்பு மாவட்டத்தின் மீன்பிடித்துறையை அபிவிருத்திச் செய்யும் வகையில் புன்னைக்குடா, களுவன்கேணி, மற்றும் பாலையடித்தோணா ஆகிய பிரதேசங்களுக்கு நேற்று சனிக்கிழமை விஜயம் செய்த மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் அப்பிரதேசங்களைப் பார்வையிட்டதுடன், மீனவர்களுடனும் கலந்துரையாடினார். இந்திய முதலீட்டாளர்களும் அமைச்சருடன் வருகை தந்து இப்பிரதேச மீன்படித்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டனர். (மேலும்...) புரட்டாசி 25, 2010 மனமிரங்குவார்களா தமிழ்த் தலைவர்கள்? துன்பத்தில் துவண்டு மீண்டுள்ள மக்களின் மீள்குடியேற்ற த்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் எந்த வகையிலாவது தமிழ்த் தலைவர்கள் பாடுபட்டேயாகவேண்டும். இல்லா விட்டால், வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோக மாகவே அதனைக் கருதவேண்டியிருக்கும். மக்கள் அகதிகளாகி அல்லல்படுவதற்கு அரசாங்கத்தை மட்டும் குற்றம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது! இந்த நிலவரத்துக்கான தார்மீகப் பொறுப்பை 50 ஆண் டுகள் அரசியல் நடத்திய தமிழ்த் தலைமைகளும் ஏற்றாக வேண்டும் என்பது பற்றி எத்தனையோ தடவை சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது. எனவே, தமிழ் தலைவர்கள் தமிழ்ச் சமூகத்திற்கு இழைத் திருக்கும் பாவங்களைப் போக்கிக்கொள்ளவாவது இனி யும் தாமதிக்காமல் அவர்கள் மக்கள் நலன் குறித்துச் சிந்தித்துச் செயலில் இறங்கவேண்டும். அவர்கள் மனம் மாறவேண்டிய தருணம் இது. (மேலும்...) புரட்டாசி 25, 2010 நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம் ஐக்கிய நாடுகள் சபையில் ஈரான் அதிபர் அகமதிநிஜாத் ![]() நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர். ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர். ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். (மேலும்...) புரட்டாசி 25, 2010 தஞ்சை பிரகதீஸ்வரம் ஒரு ஆற்றங்கரை நாகரிகத்தின் வரலாற்றுப் பதிவு (பாலகுமாரன் நாவலாசிரியர்) இது கோவிலா? வழிபாட்டுத் தலமா? வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா? இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரிகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வட மொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்ட திரை காலம் அழிக்க முடியாத சான்றிதழ் காவிரிக்கரை மனிதர்களின் சூட்சும குணத்தின் வெளிப்பாடு, விதவிதமான கலைகளின் மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம் முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள். முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கின்றன. திருச்சிக்குச் சற்றுத் தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த் தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீற்றர் எப்படிக் கொண்டு வந்தனர். இவ்வளவு பெரிய கற்பாறைகளை? பல்சகடப் பெரு வண்டிகள் பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. (மேலும்...) புரட்டாசி 25, 2010 New Economic Measures in Cuba Statement by the Cuban Federation of Workers The economic crisis has affected all economies around the world and Cuba is no exception. Despite the seriousness of the crisis and the ongoing illegal US blockade of Cuba, the socialist state protected workers better than their counterparts in capitalist economies. The government has announced a number of important measures to deal with the current situation and deepen the construction of socialism on a more efficient basis. These have been misreported in the mass media as signaling the failure of and even abandonment of socialism by Communist Party leaders and the Cuban government. Nothing could be further from the truth. The following is a statement* by the National Secretariat of the Cuban Federation of Workers (CTC) to Cuban workers explaining the new measures (more....) புரட்டாசி 25, 2010 ஜப்பானின் அழைப்பை சீனா நிராகரிப்பு சீன கடலில் உள்ள தீவு யாருக்கு சொந்தம் என்பதில் சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் அந்த தீவில் ஜப்பான் ரோந்து கப்பல்கள் சென்ற போது அவற்றின் மீது சீன மீன்பிடி கப்பல் மோதியது. இதைத் தொடர்ந்து அந்த கப்பலின் தலைவரை ஜப்பான் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தியது. அவரை 29 ஆம் திகதி வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் கப்பல் தலைவனை உடனடியாக விடுவிக்கும்படி சீனா கேட்டுக்கொண்டுள்ளது. தவறினால் ஜப்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் விளைவுகளுக்கு ஜப்பான்தான் பொறுப்பு என்றும் சீனா மிரட்டி உள்ளது. இந்த நிலையில் இந்த பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வரும் படி சீனாவை ஜப்பான் அழைத்தது. இந்த அழைப்பை சீனா ஏற்க மறுத்துவிட்டது. முதலில் ஜப்பான் எந்தவித நிபந்தனையுமின்றி கப்பல் தலைவனை விடுவிக்க வேண்டும் என்று சீன வெளிநாட்டு அமைச்சின் அதிகாரி தெரிவித்து இருக்கிறார். பிந்திக் கிடைத்த செய்திகளின்படி கப்பல் தலைவன் தற்போது நிபந்தனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளான். புரட்டாசி 25, 2010 தலிபான்களுக்கெதிராகப் போராட சி.ஐ.ஏ.யின் கண்காணிப்பின் கீழ் இரகசிய இராணுவம் ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் செயற்படும் அல்கொய்தா, தலீபான் இயக்கத்தினரை வேட்டையாடுவதற்காக அமெரிக்கா இரகசிய இராணுவம் ஒன்றை உருவாக்கி உள்ளது. இதில் 3 ஆயிரம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். பாகிஸ்தானில் மறைந்து இருந்தபடி, அல்கொய்தா மற்றும் தலீபான்கள் அமெரிக்க இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் இராணுவம் தயங்குகிறது. அந்த நாட்டுக்குள் அமெரிக்க இராணுவம் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதற்கும் பாகிஸ்தான் அரசு அனுமதி தர மறுத்து வருகிறது. பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத முகாம்களை அழிக்காதவரை அமெரிக்கா இந்த போரில் வெற்றி பெறமுடியாது என்று ஜனாதிபதி ஒபாமா கருதுகிறார். (மேலும்...) புரட்டாசி 25, 2010 பேலியாகொடையில் 7 கோடி ரூபா கொள்ளை கொழும்பு, பகுதிகளிலுள்ள தனியார் வங்கியொன்றில் டெலர் இயந்திரங்க ளுக்கு வைப்பு செய்வதற்காகக் கொண்டுசென்ற ஏழு கோடி ரூபா ஆயுதமுனையில் நேற்று கொள்ளை யிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நெஷனல் லொஜிஸ்டிக் செலிவிஷன் லங்கா தனியார் நிறுவனத்தினர் ஏழுகோடி ரூபாவை வாகனமொன்றில் எடுத்துச் செல்கையிலேயே இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி முனையில் இக்கொள்ளையை நடத்தியுள்ளனர். பாதுகாப்பு உத்தியோத்தர்களின் துப்பாக்கிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். (மேலும்...) புரட்டாசி 25, 2010 முஸ்லிம்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை இலங்கையில் வாழும் 20 இலட்சம் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் மத்தியில் எந்த பயங்கரவாத இயக்கமோ அல்லது ஆயுதக் குழுக்களோ இங்கில்லை. முஸ்லிம்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்காக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பிரசுரிக்கின்றன. ஊடகங்கள் செய்திகளில் உண்மைத் தன்மையை எழுத வேண்டும். இவ்வாறு மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா தெரிவித்தார். (மேலும்...) புரட்டாசி 25, 2010 சூடானின் எதிர்காலம் குறித்து பேச்சுவார்த்தைசூடான் வடக்கு தெற்கு என்று பிரிந்து போகுமா?சூடானின் தென் மாகாணம் தொடர்ந்தும் வடக்கோடு சேர்வதா அல்லது பிரிந்து செல்வதா என்பதற்கான மக்கள் ஆணை கோரி ஜனவரியில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. 2005ல் ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கைக்கமைய இந்த முடிவு எட்டப்படட்டது. ஆனால் சில ஆயுதக் குழுக்கள் சுதந்திரமாக நடமாடுவதால் நம்பகமான தேர்தலை நடத்த முடியாது போகலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரைக்கும் வாக்காளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகவில்லை. (மேலும்...) புரட்டாசி 25, 2010 முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டுள்ளப்படவுள்ளன.
தெற்கில் களவாடப்பட்டு வன்னிக்குக் கொண்டு செல்லப்பட்டுத் தற்போது கைவிடப்பட்ட நிலையில் உள்ள வாகனங்களின் உரிமையாளர்களைக் கண்டறிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தின் போது கைவிடப்பட்ட வாகனங்களுள், தெற்கிலிருந்து களவாடிச் செல்லப்பட்ட பெருமளவு வாகனங்கள் உள்ளதாகவும், அவை போலி ஆவணங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் ஆரியசிங்க தெரிவித்தார். (மேலும்...)
புரட்டாசி 25, 2010 இனங்களுக்கிடையே முரண்பாடுகளைத் தீர்க்க நிறுவன ரீதியான ஏற்பாடு அவசியமானது - பேரியல் அஷ்ரப் இனங்களுக்கிடையே அமைதியையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு நிறுவனமய ரீதியான ஏற்பாடொன்று அவசியமானதென்று முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். இனங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்த்து அமைதியை நிலைநாட்டும் பொருட்டு இந்த அமைப்பை தேசிய ரீதியில் ஏற்படுத்த வேண்டுமென்றும் திருமதி அஷ்ரப் குறிப்பிட்டார். (மேலும்...) புரட்டாசி 25, 2010 சோசலிசப் பாதைதான் இலக்கை எட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயிரமாண்டு மேம்பாட்டு இலக்குகள் உச்சிமாநாடு நியூயார்க் நகரில் மூன்று நாட்கள் நடைபெற்றுள்ளது. 2015 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய அம்சங்கள் என்று வறுமையை ஒழித்தல், அனை வருக்கும் கல்வி, குழந்தைகள் நலன் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைக் குறிப்பிட்டு விவாதிக்கப்பட்டுள்ளது. 192 நாடுகளும் இந்த இலக்கை அடைய நடவடிக்கைகள் எடுப்போம் என்று ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளன. இதில் முதல் அம்சமே வறுமை ஒழிப்புதான். நெருக்கடி காலகட்டத்திலும் வளர்ச்சி கண்ட சீனா மற்றும் பல்வேறு தென் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களை மேற்கண்ட நிகழ் வுகளோடு ஒப்பிட்டால் சோசலிசப் பாதையே ஆயிரமாண்டு இலக்குகளை அடையச் செய்யும் என்பது திண்ணம். (மேலும்...)புரட்டாசி 24, 2010 மக்களோடு மக்களாய் வவுணதீவு அபிவிருத்தியை அரசாங்கம் புறக்கணிக்கின்றது: இரா.துரைரெத்தினம் ![]()
வவுணதீவு அபிவிருத்தியை அரசாங்கம் புறக்கணிப்பதாக கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் இரா.துரைரெத்தினம் அவர்கள் கிழக்கு மாகணசபை ஆளுநருக்கு
சமர்ப்பித்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில்
வவுணதீவுப் பிரதேசம் அமைந்துள்ளது. இப்பிரதேசம் யுத்தகாலத்தில் அதிகஷ்டப்
பிரதேசமாக இருந்தது வந்தது. தற்போது பல திட்டங்கள் இடப்பட்டும் அவை
புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.
(மேலும்...) மீண்டும் இராஜதுரை கிழக்கு முதல்வருடன் தமிழரசுக்கட்சி சி. இராஜதுரை
மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி. இராஜதுரை கிழக்கு மாகாண முதலமைச்சரின் சேவை நலனைப் பாராட்டி அவருக்குப் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார். புதன்கிழமை மட்டக்களப்பில் அவரது வீட்டில் முதலமைச்சர் சநத்திரகாந்தனைச் சந்தித்து பேசுகையில், "கிழக்கு மாகாண தமிழ் மக்களுக்கான கட்சி என்ற அடிப்படையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல சேவைகளைப் புரிந்து வருகிறது. மக்களின் நலனில் அக்கறை கொள்கின்ற ஒரு கட்சியாகவும் இது செயற்படுகிறது. எனது ஆதரவு த.ம.வி.பு. கட்சிக்கு என்றும் உண்டு. மேலும் பல சேவைகளை எமது மக்களுக்காக ஆற்ற வேண்டி இருக்கின்றது. அதற்கு த.ம.வி.பு. கட்சியுடனான உறவு வலு சேர்க்கும் என நான் நம்புகிறேன்" என்றார்.(மேலும்...) ___ புரட்டாசி 24, 2010 நாகதாழ்வு கிராம மக்கள் 20 வருடத்திற்கு பின் மீண்டும் மீள்குடியேற்றம் _ மாந்தை நாகதாழ்வு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த 20 வருடங்களின் பின் மீண்டும் தமது சொந்த இடங்களில் இன்று மீள்குயேற்றம் செய்யப்பட்டனர். மன்னார் நகரப்பகுதியில் உள்ள அவர்களுடைய உறவினர்களின் வீடுகளில் வாழ்ந்து வந்த 44 குடும்பங்களைச் சேர்ந்த 148 பேர் இவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிரதேசச் செயலாளர் ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார். இவர்களுக்கான மதிய உணவு வழங்கப்பட்டதோடு வாழ்வுதய அமைப்பினால் தற்காலிக கொட்டில்களும் அமைத்து கொடுக்கப்படுகின்றது. மீள்குடியேறிய மக்களுக்கு இராணுவத்தினரும் பல உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதேவேளை கடந்த 20 ஆம் திகதி 52 குடும்பங்களைச் சேர்ந்த 167 பேர் மாந்தை எள்ளுப்பிட்டி கிராமத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. புரட்டாசி 24, 2010 தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும் - மாவை சேனாதிராஜா எம்.பி _ கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வன்னி மக்கள் அளித்த சாட்சியத்தை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாட்சியமளித்த மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். யுத்தம் என்ற பெயரில் வடக்கு கிழக்கில் எமது சமூகத்தை அழித்தொழித்தது போதும். சொத்துக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தியதும் போதும். தற்போது அங்கு இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத சுண்ணக்கல் அகழ்வை தடுத்துநிறுத்துமாறும் எமது பிரதேசங்களையாவது பாதுகாக்குமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார். (மேலும்...)புரட்டாசி 24, 2010 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழரின் மனங்களை வெல்ல வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவை - சமசமாஜ கட்சியின் மூத்த உறுப்பினர் பட்டி வீரக்கோன் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகுமென்று இலங்கை சமசமாஜக் கட்சியின் மூத்த உறுப்பினர் பட்டி வீரக்கோன் தெரிவித்தார். தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுக்காமல் 13ஆவது திருத்தத்திற்கும் அப்பால் செல்ல வேண்டியதில்லை என்றும் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் முன்னிலையில் நேற்று (23) சாட்சியமளித்தபோது பட்டி வீரக்கோன் குறிப்பிட்டார். (மேலும்...) புரட்டாசி 24, 2010 சம்பந்தன் எம்.பி.க்கு மூன்று மாத விடுமுறை தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்ட எம். பி. இரா. சம்பந்தன் மூன்று மாத காலத்திற்கு சபைக்கு சமுகமளிக்காதிருப்பதற்கான விடு முறை பிரேரணைக்கு பாராளும ன்றம் நேற்று அங்கீகாரம் வழங்கி யது. தமிழரசுக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரன் சபாநாயகரின் அனுமதி யைப் பெற்று இப்பிரேரணையை சபைக்குக் கொண்டு வந்தார். இச் சமயமே பாராளுமன்றம் இப்பிரேர ணைக்கு அனுமதி வழங்கியது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று பிற்பகல் 1.00 மணிக்குக் கூடியது. சபை அமர்வின் வழமையான ஆர ம்ப நிகழ்வைத் தொடர்ந்து சுமந்தி ரன் எம். பி. இப்பிரேரணையை சபையின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். நல்ல தொழில் அப்பா! சம்பளத்துடன், சலுகையுடன் இப்படி தொழில் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தமிழ் மக்களை இவர்கள் காப்பாற்ற போகின்றார்கள். 'நம்புங்கள் நாளை தமிழீழம் மலரும்...?'தொடர்ந்து மூன்றுமாதத்திற்கு மேல் விடுமுறை எடுத்த ஈழவேந்தன் இன்று கனடாவில் தஞ்சம் புகுந்து உல்லாசம். சம்மந்தரின் கதி அவ்வாறு அமையாது. தற்போதுதான் தமிழ்செல்வன் இல்லையே. புரட்டாசி 24, 2010 வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பில் தமிழில் கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் விரைவில் கடமைதமிழ் மொழியில் நன்கு கருமமாற்றக் கூடிய 593 பொலிஸார் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பகுதிகளில் விரைவில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர் என்று பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். தமிழ் மொழியை நன்றாக எழுத, வாசிக்க, முறைப்பாடுகளைப் பதிவு செய்யக்கூடிய வகையில் ஐந்து மாத கால கற்கை நெறியை முடித்துக் கொண்டு இவ்வாண்டு டிசம்பரில் 593 பொலிஸார் வெளியேற உள்ளதாகத் தெரிவித்த அவர், இவர்கள் உடனடியாக மேற்படி பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றார். தமிழ் மொழியில் நன்கு கருமமாற்றக் கூடிய வகையில் வருடமொன்றுக்கு 1200 பொலிஸார் என்ற அடிப்படை யில் ஐந்தாண்டு காலத்திற்குள் 6000 பொலிஸார் பயிற்றுவிக் கப்படவுள்ளனர் என்று பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார். (மேலும்...) புரட்டாசி 24, 2010 September is for remembering (by Malinda Seneviratne) US troops massacred 300 Lakotas in 1890. The USA has sent troops abroad or carried out military strikes against other countries on 216 occasions since independence from Britain. Since 1945, the USA has intervened in more than 20 countries throughout the world. People are aware of ‘Vietnam of course, where over 3 million people were killed before the then US President decided to withdraw. There are other unhappy countries. These include China (1945-46), Korea (1950-53), Guatemala (1954), Indonesia (1958), Cuba (1959-60), Guatemala (1960), Congo (1964), Peru (1965), Laos (1964-73), Vietnam (1961-73), Cambodia (1969-70), Guatemala (1967-69), Grenada (1983), Lebanon (1984), Libya (1986), El Salvador and Nicaragua (throughout the 1980s), Panama (1989), Iraq (ongoing), Sudan (1998), Afghanistan (ongoing) and Yugoslavia (1999). After World War II, the USA has assisted in over 20 different coups throughout the world and the CIA orchestrated countless assassinations and attempted-assassinations of dozens of political heads of state. (more...) புரட்டாசி 24, 2010 லயன்களில் பூத்த மலர்கள் தரம் - 5 புலமைப் பரிசில் கலகா ஸ்ரீ இராமகிருஷ்ணன் மத்திய கல்லூரி மாணவன் எம். சபீர் இரண்டாம் இடம்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெறுபெறுகள் நேற்று வெளியாகின. இதில் தமிழ் மொழிமூல பிரிவில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற கண்டி கல்வி வலயத்தைச் சேர்ந்த கலகா நகரில் இயங்கும் ஸ்ரீ கிராமகிருஷ்ணன் மத்திய கல்லூரியில் கல்வி பயிலும் மாணவன் சுக்ரி மொஹமட் சபீர் 192 புள்ளிகளைப் பெற்று இப்பாடசாலைக்குப் பெருமை தேடித் தந்துள்ளதாகப் பாடசாலை அதிபர் எம். பி. சந்திரசேகரன் தெரிவித்தார். (மேலும்...) புரட்டாசி 24, 2010 18ஆவது திருத்தம் நேற்று முதல் சட்டமாகியுள்ளது - சபாநாயகர் அரசியலமைப்புக்கான 18ஆவது திருத்தம் நேற்று (23ம் திகதி) முதல் நாட்டின் சட்டமாகியுள்ளதாக சபாநாயகர் சமல் ராஜபக்ஷ நேற்று சபையில் அறிவித்தார். பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் நேற்று பிற்பகல் கூடியது. இச்சமயம் அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது சபாநாயகர் மேற்படி அறிவிப்பை சபையில் விடுத்தார். அரசியலமைப்புக்கான 18வது திருத்தம் கடந்த 08ம் திகதி சபையில் மூன்றிலிரண்டுக்கும் மேற்பட்ட பெரும்பான்மையுடன் நிறைவேறியது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு சபாநாயகர் கையெழுத் திட்டதும் அது நாட்டின் சட்டமாகும். அதற்கு ஏற்ப அரசியலமைப்புக்கான 18வது திருத்தமும் நேற்று முதல் நாட்டின் சட்டமாகியுள்ளது. புரட்டாசி 24, 2010 போருக்குள்ளும் வெல்வோம்... தரம் - 5 புலமைப் பரிசில் பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவன் பிரியநேசன் மூன்றாம் இடம்
பரீட்சை பெறுபேறுகள் வெளி வந்ததாக மட்டுமே முதலில் கேள்விப்பட்டேன். பின்னர் 190 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தில் தெரிவு செய்யப்பட்டேன் என்றதும் பெருமகிழ்ச்சியடைந்தேன். பரீட்சையை நல்லமுறையில் எழுதினேன். பெற்றோரினதும் பாடசாலை ஆசிரியருடைய அறிவுரைகளின் பிரகாரம் நடந்து கொண்டதினால் இந்த பெறுபேற்றை என்னால் பெறமுடிந்தது. இவ்வாறு வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா கல்லூரி மாணவன் யோகேஸ்வரன் பிரியநேசன் தெரிவித்தார். (மேலும்...)
புரட்டாசி 24, 2010 பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தி புதிய பரிமாணங்களை எட்டுவோம் - ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரை
எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கும் அதன் காயங்களை ஆற்றுவதற்குமான நடைமுறை எமக்குள்ளேயே உருவாக வேண்டும் என்று நாம் நம்புகிறோம். சரித்திரம் நமக்கு ஒன்றை சொல்லிக் கொடுத்திருக்கிறது. என்றால் அது வெளியில் இருந்து திணிக்கப்பட்ட தீர்வுகள் மனக்கசப்பை தோற்றுவித்து இறுதியில் தோல்வியையே ஏற்படுத்தும் என்பதாகும்.நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டுவரும் அரசியல் விவகாரங்களில் பலஸ்தீன மக்களின் உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படும் விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும். இந்த விடயம் தாமதமின்றி தீர்க்கப்பட்டு அடுத்த வருட பொதுச்சபை கூட்டத்தில் பலஸ்தீனம் பூரண அங்கத்துவ நாடாக கலந்து கொள்ளும் என்று நாம் நம்புகிறோம். (மேலும்...)
புரட்டாசி 24, 2010 கப்பல் தலைவர் விவகாரம் சீனா, ஜப்பானிடையே முறுகல் சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே தகராறாயுள்ள ஒரு தீவில் ரோந்து சென்ற 2 ஜப்பான் படகுகள் மீது சீன மீன்பிடி கப்பல் மோதியது. இந்த கப்பல் கேப்டனையும், மீனவர்களையும் ஜப்பான் கைது செய்து அழைத்துச் சென்றது. பிறகு மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் வந்த கப்பலும் விடுவிக்கப்பட்டது. ஆனால் கப்பல் கேப்டன் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று சீனா கேட்டுக் கொண்டது. ஆனால் இதற்கு ஜப்பான் மறுத்துவிட்டது. இந்த நிலையில் சீனா பிரதமர் வென் ஜியாபோ ஜப்பானுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். கப்பல் கேப்டனை விடுவிக்காவிட்டால் ஜப்பானுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்று அவர் எச்சரித்தார். இந்த பிரச்சினையில் பிரதமர் போன்ற மூத்த தலைவர் பேசி இருப்பது இது தான் முதல் முறை ஆகும். எங்கள் ஆலோசனையை காதில் வாங்கி கொள்ளாமல் தொடர்ந்து ஜப்பான் பிடிவாதம் பிடித்தால் ஜப்பான் மீது சீனா நடவடிக்கை எடுக்கும். அதன் பிறகு ஏற்படும் விளைவுகளுக்கு ஜப்பான் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் சீனப் பிரதமர் எச்சரித்தார் புரட்டாசி 24, 2010 யூதக்குடியேற்றங்களை தொடர்ந்தும் நிறுத்தி வைக்குமாறு இஸ்ரேலுக்கு அழுத்தம்மத்திய கிழக்கு நேரடிப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் ஆரம்பிக்கப்பட வேண்டுமானால் மேற்குக் கரை குடியேற்றங்களை இஸ்ரேல் தொடர்ந்தும் நிறுத்த வேண்டுமென பலஸ்தீனுக்கு உதவி வழங்கும் அமைப்புகள் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளன. இஸ்ரேல் நிறுத்தி வைத்த மேற்குக் கரை யூத குடியேற்றங்களின் கால எல்லை இம் மாதம் 26 உடன் நிறைவடைகின்றது. இஸ்ரேல், பலஸ்தீனப் பேச்சுக்கள் ஆரம்பமானதையிட்டு இக் குடியேற்றங்கள் நிறுவும் வேலைகளை சுமார் 10 மாதங்களாக இஸ்ரேல் நிறுத்தியது. (மேலும்...) புரட்டாசி 23, 2010 நெருப்பில்லாமல் புகைகின்றது என்கின்றார் அரியநேந்திரன் ததேகூவில் மேலும் சிலர் அரசுடன் இணைவு? அரியநேத்திரன் மறுப்பு _ (சாகரன்) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மேலும் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனிடம் கேட்டபோது, "இவ்வாறான சந்தர்ப்பங்களில் இது போன்ற வதந்திகள் வெளிவருவது வழக்கம். என்றாலும் இப்போதுள்ள 13 நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவரும் கட்சி மாறக்கூடிய வாய்ப்பு இல்லை. ஒருவர் கூட மாற மாட்டார் என நான் உறுதியாக நம்புகின்றேன்" என்றார். (மேலும்...)புரட்டாசி 23, 2010 (By Yohan Perera) The Tamil National Alliance (TNA) submitted names of seven MPs to monitor the resettlement work and development work carried out in the North and East. The seven members are R Sampanthan, Mavai Senathirajah, Suresh Premachnadran, Selvam Adaikalnathan, S Shritharan, P Selvarasa and M. A. Sumanthiran. Mr. Sumanthiran told the Daily Mirror these names were sent to presidential secretary Lalith Weeratunga and an acknowledgement had been already received. He said the seven members were named as per the agreement which the party had with the government during the initial discussions earlier during the year where both parties decided to work together in developing the North and the East and to find a solution to the National issues. Mr. Sumanthiran said President Mahinda Rajapksa was expected to approve these names when he returned from New York. He said a separate mechanism would be adapted to work together with the government to find a political solution to the national issue. Several TNA MPs had also discussed the issue of developing the North when they met Economic Development Minister Basil Rajapaksa at the District Development Council meeting in Jaffna recently. புரட்டாசி 23, 2010 புலிகள் சார்பில் ஆஜராக வைகோவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இந்தியாவின் தடையை எதிர்காலத்தில் நீடிக்கலாமா? இல்லையா என்பது குறித்து டில்லி மேல் நீதிமன்றம் விசேட விசாரணை நடத்தி வருகிறது. புலிகள் சார்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அங்கு ஆஜராகி வாதாடுவதற்கு அனுமதி வழங்க மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் இயக்கத்தின் சார்பில் வைகோ வாதாட முடியாது என்று தடை விதித்தது. ஆயினும் சட்டத்தரணி ஒருவர் மூலமாக சமர்ப்பணங்களை வைகோ மன்றுக்கு சமர்ப்பிக்க முடியும் என்று தெரிவித்து நீதிபதி இவ்வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரைஒத்தி வைத்தார். (மேலும்...) புரட்டாசி 23, 2010 தமிழ் மொழி மூல பிரிவில் தம்பிலுவில் மாணவி சுபதா அகில இலங்கை ரீதியில் முதலிடம்
புலமைப் பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூல பிரிவில் முதலிடம் பெற்ற தம்பிலுவில் கலைமகள் வித்தியாலய மாணவி மாலவன் சுபதா (193 புள்ளிகள்) நேற்று தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தான் தினமும் அதிகாலையில் எழுந்து படித்து வருவதாகவும் தனக்கு பெற்றோரும் வகுப்பாசிரியரும் அதிகம் ஊக்கமளித்ததாகவும் சுபதா கூறினார். தனது வெற்றி குறித்து தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட சுபதா மேலும் கூறியதாவது :- ‘அகில இலங்கை மட்டத்தில் முதலிடம் பெற்றது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். எனது பெற்றோரும், ஆசிரியர்களும், அதிபரும் தந்த ஊக்குவிப்பு காரணமாகவே என்னால் இந்த வெற்றியை அடைய முடிந்தது. (மேலும்...) புரட்டாசி 23, 2010 சிறுவர் போராளிகளின் புனர்வாழ்வில் அரசின் செயற்பாடுகள் முழுத்திருப்தி ஆயுத மோதல்களில் ஈடுபட்டிருந்த சிறுவர்களுக்குப் புனர்வாழ்வளித்து அவர்களின் கல்விச் செயற்பாடுகளைப் பலப்படுத்தும் இலங்கை அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களை ஐ. நா. செயலாளரின் விசேட பிரதிநிதி கலாநிதி ராதிகா குமாரசுவாமி பாராட்டியுள்ளார். சிறுவர் போராளிகளற்ற சூழலொன்று இலங்கையில் உருவாகியுள்ளமை சிறந்த நிலையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள் ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் சிறுவர் மற்றும் ஆயுத மோதல்கள் விவகாரம் தொடர்பான ஐ. நா. செயலாளர் நாயகத் தின் விசேட பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி க்குமிடையிலான முக்கிய பேச்சுவார்த்தை யொன்று நேற்று முன்தினம் நியூயோர்க்கில் நடைபெற்றுள்ளது. (மேலும்...) புரட்டாசி 23, 2010 யுத்தத்தின் பாதிப்பு காரணமாக வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அதிக நிதி தேவை வடக்கு, கிழக்கு பிரதேச உட்கட்டமைப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் பாரிய நிதியை செலவிட நேர்ந்துள்ளதாகவும் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட அழிவுகளே இதற்குக் காரணமெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நோர்வே பிரதமரிடம் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நோர்வே பிரதமர் ஜோன்ஸ் ஸ்டோல் டன்பர்க்கிற்குமிடையிலான பேச்சுவார்த்தையின் போதே ஜனாதிபதி இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார். (மேலும்...) புரட்டாசி 23, 2010 பாதுகாப்புத் தரப்பினர் மீதான இடம்பெயர்ந்தோரின் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழுவில் விசாரணை இடம்பெயர்ந்த மக்கள் பாதுகாப்புத் தரப்பினர் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் குறித்து நல்லிணக்க ஆணைக்குழு முல்லைத்தீவில் இராணுவத்தினரிடம் திங்கட்கிழமை (20.09.2010) விசாரணைகளை மேற்கொண்டது. புலிகளின் பிடியில் இருந்து தப்பி வந்தபோது தம்மை இராணுவத்தினர் தாக்கியதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழு முன்னிலையில் பொதுமக்கள் சாட்சியம் அளித்துள்ளனர். எனவே பொதுமக்களின் குற்றச்சாட்டுகள் குறித்து இராணுவத்தினரின் விளக்கத்தை அறிந்துகொள்ளும் முகமாக முல்லைத்தீவு 59 ஆம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் ஆரியசிங்க தலைமையிலான அதிகாரிகளிடம் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா தலைமையிலான குழுவினர் விசாரணகளை மேற்கொண்டனர். (மேலும்...) புரட்டாசி 23, 2010 பிரபாகரன் கூறுகின்றார் பாலகுமார் அல்ல தமிழ் மக்களின் அவல வாழ்வுக்கு தமிழ்த் தலைவர்களே காரணம் "தமிழர் விடுதலைக்கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர்கள் அன்று செய்த தவறின் காரணமாகவே வடக்கு, கிழக்கிலிருந்து 18 லட்சம் தமிழர்கள் புலம்பெயர்ந்ததுடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 35 ஆயிரம் இளைஞர் யுவதிகள் மண்ணோடு மண்ணாகப் புதைக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான விதவைகளும் ஊனமுற்றோரும் உருவாகினர்." தமிழ் பேசும் மக்களின் தேசியம் வெல்லப்பட வேண்டுமென்பதுதான் எமது இலக்கு. கௌரவமான, காத்திரமான அரசியல் அதிகாரம் வேண்டும். (மேலும்...)புரட்டாசி 23, 2010 கலிலியோ நிலாக்கள்
சூரியன்தான்
இந்த ஓட்டுமொத்தக்
கிரகங்களின்
மையப்புள்ளி சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களில் ஒன்று தான் வியாழன். சூரியக் குடும்பம் பற்றிய பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள வியாழன் தான் உதவியாக இருக்கிறது. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு வரை, பூமியைத்தான் எல்லா கிரகங்களும் சுற்றி வருவதாக அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர். இந்தக் கூற்று தவறு என்று முதலில் சொன்னவர், வானியல் அறிஞரான கொப்பணிக்கஸ் ‘நாம் வசிக்கின்ற சூரியக் குடும்பத்தில் பூமி உட்பட எல்லாக் கிரகங்களும் சூரியனைத் தான் சுற்றுகின்றன’ என்றார். ஆனால் அவர் கூறியதற்கு அப்போது ஆதாரம் எதுவும் இல்லாததால் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. (மேலும்...) புரட்டாசி 23, 2010 பலஸ்தீன் மீதான தடைகள் பொருளாதார வளர்ச்சிக்குப் பாதிப்புபலஸ்தீனின் பொருளாதரம் அபிவி ருத்தியடைய வேண்டுமானால் இஸ்ரேல் விதித்துள்ள தடைகள் நீக்கப்பட வேண்டுமென உதவி வழங்கும் அமைப்புகள் தெரிவித்தன. பலஸ்தீனுக்கு உத்தரவாதமளித்த நிதியுதவிகளை விரைவில் வழங்குமாறும் உதவி வழங்கும் அமைப்புகள் வலியுறுத்தின. அரபு நாடுகள் பலஸ்தீனின் பொருளாதாரம் குறித்து விசேட கவனமெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இந்த அமைப்புகள் வலியுறுத்தின. ஐ.நா.வின் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த அரபு தலைவர்களின் மாநாடு நியூயோர்க்கில் நடந்தது இதற்கு நோர்வேயின் வெளிநாட்டமைச்சர் தலைமை தாங்கினார். பலஸ்தீனுக்கு உதவி வழங்கும் அமைப்புகள் இம்மாநாட்டை ஏற்பாடு செய்தன. இக்கூட்டத்தில் பலஸ்தீனின் எதிர்காலம், சுயாட்சி, பொருளாதாரம் குறித்த பிராதன விடயங்கள் ஆராயப்பட்டன. புரட்டாசி 23, 2010 முதலாளித்துவத்தின் இறுதி தவிர்க்க முடியாதது புதிய உலக அமைப்பைத் தொடங்க திட்டமிடுங்கள் - அகமதி நெஜாத் ஐ.நா. சார்பில் நடை பெறும் ஆயிரமாண்டு மேம் பாட்டு இலக்கு மாநாட்டில் பேசிய ஈரான் ஜனாதிபதி அகமதி நெஜாத், அமெரிக்க பாணி முதலாளித்துவத்தின் இறுதி தவிர்க்க முடியாதது என்பதால் உலகத் தலை வர்கள் புதியதொரு உலக அமைப்பைத் தொடங்க திட்டமிட வேண்டும் என்று உலகத் தலைவர் களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஐ.நா. மேடையில் உரை யாற்றிய அவர் தற்போது அரசு கட்டமைப்புகள், காலாவதியான அமைப்பு கள் மற்றும் மாறி வரும் கார்ப்பரேட் நிறுவனங் களையும் அவற்றுக்கு ஊக் கமளித்துவரும் அமெரிக்கா உள்ளிட்ட ஆணவமான நாடுகள் உலகம் முழுவதும் துயரத்தை உருவாக்கி வரு கின்றன என்று கூறினார்.(மேலும்...) புரட்டாசி 23, 2010 சோமாலிய பிரதமர் ராஜினாமா ஆபிரிக்காவில் உள்ள சோமாலி யாவில் இஸ்லாமிய தீவிரவாதம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வன்முறைகள் அதிகரித்து இருக்கின்றன. அதை கட்டுப்படுத்த முடியாததால், பிரதமர் ஒமர் அப்திராஷித் ஷார்மார்கே தன் பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், பாதுகாப்பற்ற நிலைமை அதிகரித்து வருவதால் நான் பதவி விலக தீர்மானித்தேன் என்று குறிப்பிட்டார். அப்போது ஜனாதிபதி ஷேக் ஷரீப் அகமது உடன் இருந்தார். அவர் பிரதமரின் முடிவை வரவேற்பதாக தெரிவித்தார். விரைவில் புதிய பிரதமரை நியமிப்பேன் என்றும் அவர் தெரிவித்தார். புரட்டாசி 23, 2010 தஞ்சை பெரிய கோயிலின் பின்னணி! (வெ.ஜீவக்குமார்)
1006ஆம் ஆண்டு துவங்கி 1010ஆம் ஆண்டுவரை கோயிலின் கட்டுமானப் பணிகள் நடந்துள்ளன. இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ புயல், மழை, சூறாவளி, வறட்சியைச் சந்தித்துப் பெரிய கோயில் செம்மாந்து நிற்கிறது. பெரிய கோயில் கோபுர விமானத்தில் உள்ள ஒரே கல்லின் எடை 8 டன் ஆகும். ராஜராஜனின் பெருமைகளின் கம்பீரமான சாட்சியமாக விளங்குவது தஞ்சை பெரிய கோயில்தான். ராஜராஜன் உள்ளிட்ட சோழர்கள் ஆட்சியில் அனைத்து விதமான ஆண்டான் அடிமைத்தனமும் இருந்துள்ளது. பெண்கள் அடிமைகளாக விற்கப்பட்டமைக்கும் ஏராளமான சான்றுகள் கிடைக்கின்றன. அக்காலத்தில் ஒரு பெண் விதவையானால் சந்திக்க நேரிடும் கொடுமைகளுக்கு அஞ்சி உடன் கட்டை ஏற்றச்சொல்லி தன் உடலை கயிற்றில் கட்டி தானே கேட்டுக்கொண்ட கல்வெட் டுச் செய்தி கிடைக்கிறது. அரச குடும்பத் துப்பெண்கள் மட்டுமே மெல்லிய மேலாடை அணியலாம் மற்ற பெண்கள் ரவிக்கை அணியக்கூடாது. முதலாம் ராஜராஜ னுக்கு 12 மனைவிகள் இருந்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் தஞ்சை பெரிய கோவில் நிமிர்ந்து நிற்பது பெருமைதான். இந்த சூழலில் தமிழர் களின் கலை பொறியியல் நுட்பம் குறித்து சோழர்கால ஆட்சிமுறை குறித்து ஆய் வுகள் வெளிவருவதும் பலன் தரும்.ராஜராஜன் காலத்தில்தான் தேவதாசி முறை வேரூன்றி உள்ளது. புரட்டாசி 22, 2010 கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி அவர்கள் 13-09-2010 அன்று வழங்கிய சாட்சியம்
இந்த நாட்டிலுள்ள மிக மோசமான குற்றவாளியே தான் தலைவர் என்றும், தான் தான் பிரபாகரனின் வாரிசு என்றும் உரிமை கோருகின்றார். இச் செயலை முழு உலகும் அவதானிப்பதையிட்டு நான் வெட்கமடைகின்றேன். களத்திலே இருந்த பல அரச சார்பற்ற நிறுவனங்கள் பெரும் பணியில் ஈடுபட்டு மக்களுக்கு உணவளித்தும், வேலை வாய்ப்பளித்தும் அவர்கள் தொடர்ந்து இயங்க அனுமதி மறுக்கப்படுகின்ற வேளையில் குறிப்பிட்ட பயங்கர குற்றவாளியும் இன்னும் 09 புலம் பெயர்ந்தவர்களும் எமது நாட்டை அபிவிருத்தி செய்ய முன் வருகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழர்களை ஒத்த அளவு தமிழர்கள் பிற நாடுகளில் வாழ்கின்றார்கள். பல இலட்சம் தமிழ் மக்கள் உலகளாவிய அளவில் பரந்து வாழ்கின்றார்கள் கனடா, ஜேர்மனி, ஐக்கிய ராச்சியம் போன்ற நாடுகளில் வாழ்கின்றவர்களும் புலம் பெயர்ந்தவர்கள்தான். ஆனால் 09 பேர் மட்டும் நாட்டை அபிவிரு;தி செய்ய முன் வந்துள்ளார்கள். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் ஒழிய முழுப் போராளிகளும் உடலால் சரணடைந்தார்களே அன்றி சிந்தனையால் அல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். ஒரு நாள் இந்த நாட்டை அழிக்க 05 நபர்கள் போதுமானதாகும். இப்படி ஏன் நடக்காது என் நான் வினவுகின்றேன். பிரபாகரனின் வாரிசு என்று சொல்கின்றவர் களத்தில் நிற்கிறார். இராணுவ முகாம்களுக்கு விஜயம் செய்கின்றார். நாட்டையும் சுற்றி வருகின்றார். அத்தகைய ஒருவரால் இப்படி ஏன் நடக்காது, இத்தகையோரிடமிருந்து என்னை போன்றவர்களுக்கு என்ன பாதுகாப்பு உண்டு? இந்த கேள்விகள் பரிசீலிக்கப்பட வேண்டியவையாகும். (மேலும்...) புரட்டாசி 22, 2010 3023 former LTTErs released - Minister D.E.W.Gunasekara A total of 3023 former LTTE combatants had been released from August 2009 to date following a three pronged approach of rehabilitating, prosecuting or releasing, said Prison Reforms and Rehabilitation Minister D.E.W.Gunasekara. Those released comprised university students, children, sick and disabled cadres,court ordered releases, expectant mothers with infants and youths with minor involvement with the LTTE, said Mr. Gunasekara. “They have been released for further education and re-unification with their families. As at 30 June this year, 8,057 beneficiaries were being accommodated in 12 accommodation and rehabilitation centres,” he said. Mr. Gunasekara said the Sri Lankan Government had launched a five year strategy extending from 2008 to 2012 to disarm, demobilize and rehabilitate misguided personnel and successfully integrate them into their families and communities as individuals with a positive attitude. With 11,698 ex-combatants identified and earmarked for rehabilitation, the Bureau of the Commissioner General of Rehabilitation (BCGR) had dedicated itself to its mission to transform them into useful members of society through rehabilitation, he said.Mr. Gunasekara said the BCGR had to deal with a mixed gender population of 11,698 which included 594 children. Many of the children had been conscripted as child soldiers. புரட்டாசி 22, 2010 முல்லைத்தீவில் முஸ்லிம்கள் மீள்குடியமர்வு, தண்ணீரூற்று பள்ளிவாசல் மீண்டும் திறப்பு முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து வெளி மாவட்டங்களில் அகதிகளாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களில் ஒரு தொகுதியினர் மீண்டும் சொந்த வாழ்விடம் திரும்பியுள்ளனர். இவ்வாறு தண்ணீரூற்றுப் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீளக்குடியமர்ந்துள்ளன. நேற்றைய தினமும் சுமார் 200 குடும்பங்கள் புத்தளத்திலிருந்து சொந்த இடம் திரும்பியுள்ளன. இந்த நிலையில் தண்ணீரூற்று பெரிய பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மீண்டும் திறக்கப்பட்டு தொழுகைகள் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. (மேலும்...) புரட்டாசி 22, 2010 இலங்கை அகதிகளிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் கைது _ அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதாக இலங்கை அகதிகளிடம் பணம் மோசடி செய்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர். அவர் பஸ்சில் அழைத்து வந்த 36 அகதிகளையும் மடக்கிப் பிடித்தனர். சென்னையில் இருந்து 37 இலங்கை அகதிகள் பஸ்சில் திருச்சி வருவதாகவும் பின் அவர்கள் கள்ளத்தனமாக அவுஸ்திரேலியாவுகக்கு செல்ல இருப்பதாகவும் திருச்சி கியூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் வந்தது. குறித்த இடத்துக்கு சென்ற பொலிஸார் அந்த வழியாக வந்த ஓர் பஸ்சில் 37 பேர் இருந்தனர். விசாரணையில், அவர்கள் தமிழகத்தில் சென்னை, மண்டபம், வேலூர் உள்ளிட்ட பல்வேறு அகதி முகாம்களில் இருப்பவர்கள் என அறியமுடிந்தது.(மேலும்...)புரட்டாசி 22, 2010 Tamil Nadu justifies ban on LTTE
Marumalarchi Dravida Munnetra Kazhagam (MDMK) general secretary Vaiko made a fervent plea before the tribunal that he be heard as one of the parties. When the judge pointed out that under the provisions of the Act, only an office-bearer or a member of a banned organisation could challenge the ban, Mr. Vaiko said that according to the Centre, the LTTE was decimated. The LTTE could not represent itself before the tribunal as it had no office-bearers, and it was banned in India. He said the MDMK was cited as one of the political parties supporting the LTTE, and this was cited as the reason for the ban. Therefore, he was entitled to make his representation on behalf of the Tamils. Mr. Vaiko said there was not a single valid reason for imposing the ban. In view of the ban, innocent boys and girls coming from Sri Lanka were branded LTTE sympathisers and they were facing problems. No unlawful activity had taken place warranting the ban, he argued. (more...) புரட்டாசி 22, 2010 23.09.2010 ரிபிசியின் வியாழக்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல் இந் நிகழ்ச்சியில் இலங்கையிலிருந்து சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீம், ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், தேசம் இணையத்தளத்தின் ஆசிரியர் ரி சோதிலிங்கம், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். வியாழக்கிழமை மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம் தொடர்புகளுக்கு: 00 44 208 9305313 or 00 44 7817063682 புரட்டாசி 22, 2010 6 வது அழிவுக்கு ஆயத்தமாகும் பூமி ஆயிரம் மடங்கு வேகத்தில் அழியும் இயற்கை
கடந்த 1980களில் அன்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் முதன் முதலில் கண்டறிந்தனர். இதன் வழியாக ஊடுருவி பூமிக்கு வரும் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்பட்டன. ஏர்கண்டிஷன் கருவியில் இருந்து வெளியேறும் குளேரோபுளோரோ கார்பன் தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழ காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.கடந்த 1984ல் மான்ட்ரீயல் நகரில் நடத்தப்பட்ட உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் 158 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று குளோரா புளோரா கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதன் விளைவாக ஓசோன் ஓட்டை பெருமளவு அடைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.ஓசோன் பிரச்னையில் இருந்து தப்பித்த பூமி, இன்று புவி வெப்ப பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. பூமி தன்னுடைய 460 கோடி ஆண்டு வரலாற்றில் இதுவரை ஐந்து முறை மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது ஆறாவது முறையாக மிகப்பெரிய பேரழிவை சந்திக்க பூமி தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறது; அதற்கான அறிகுறிகள் தற்போது தெரியத் துவங்கியுள்ளன. (மேலும்...) புரட்டாசி 22, 2010 இனப்பிரச்சினையும் அபிவிருத்தியும் வடபகுதி அபிவிருத்தி தொடர்பாகத் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புடன் பேசுவதென அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகச் செய்தி வெளியாகியிரு க்கின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்ட த்தில் உரையாற்றியபின் ஜனாதிபதி நாடு திரும்பிய தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உத்தியோகபூ ர்வ அழைப்பு விடுக்கப்படுமெனத் தெரிய வருகின் றது. இந்தச் சந்தர்ப்பத்தைக் கூட்டமைப்புப் பாராளும ன்ற உறுப்பினர்கள் சரியான முறையில் பயன்படுத்துவார்களென நம்புகின்றோம். (மேலும்...) புரட்டாசி 22, 2010 ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின் பத்திரிகை அறிக்கை ஈழத் தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி தற்போதைய அரசியல் நிலமைகள் பற்றியும், இந்திய பத்திரிகை சில இன்றும் புலிகளை காப்பாற்ற மயலுவதையும் தமது பத்திரிகை மூலம் அம்பலப்படுத்துகின்றது. (மேலும்....) புரட்டாசி 22, 2010 Toronto Socialist Action Presents - Rebel Films Show time: Every Friday, from September 24 to November 5, 2010 at 7 p.m. Each of the films in this series will be preceded by a brief introduction, and will be followed by a commentary, and an open floor discussion period. OISE, 252 Bloor St. West, Room 2-212, Toronto, Canada at the St. George Subway Station. Everyone welcome. $4 donation requested. Please visit: www.socialistaction-canada.blogspot.com or call 416 – 535-8779. (more...) புரட்டாசி 22, 2010 புலிகளின்? புதையல் தோண்டிய வாகரை ஏ.எஸ்.பி கைது பொலன்னறுவை, புராதன சிறிபுர ரஜமகா விகாரையை அண்மித்த காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின்பேரில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பத்துப் பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் வாகரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட எட்டு பொலிஸாரும், இரண்டு சிவிலியன்களும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார். மேற்படி காட்டுப் பகுதியில் இவர்கள் நேற்று முன்தினம் இரவு புதையல் தோண்டியதன் சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். பிரதேச மக்கள் வழங்கிய இரகசியத் தகவலை அடுத்து மன்னம்பிட்டிய சோதனைச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்த ஆயுதங்களையும் இவர்கள் பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். (மேலும்...) புரட்டாசி 22, 2010 மரங்கள்.... மண்ணின் வரங்கள்.. ஆலமரமாய் இருந்த குடும்பம் இன்று ஒற்றைப்பனையாய் ஒதுங்கி நிற்கிறது
பறவைகளின் பயணியர் விடுதிகள். பாதசாரிகளுக்கு இருக்க இடம் கொடுக்கும் பொதுவுடைமை வீடுகள். சூரிய நெருப்பு சுடுகிற பாதங்களுக்கு நிழல் கொடுக்கும் வெண்கொற்றக் குடைகள். மரங்களின் பயன்கள் மகத்தானவை. பசிக்குப் பழங்கள் தருகின்றன. நோய்க்கு மருந்தைக் கொடுக்கின்றன. சுவாசிக்கக் காற்றைத் தருகின்றன. குழந்தைகளுக்குத் தொட்டிலையும், இளமைப் பருவத்தில் சுட்டிலையும், முதுமைப் பருவத்தில் ஊன்று கோலையும், இறக்கும்போது எரிக்க விறகையும் தருகின்றன. மரங்களின்றி வாழ்வு ஏது? ஒரு மரம் சிறந்ததா? இல்லையா? என்பதை, மரத்தைக் கேட்டு யாரும் தீர்மானிப்பதில்லை. அந்த மரம் கொடுக்கும் பயன்பாடுகளை வைத்துதான் தீர்மானிப்பார்கள். அதுபோல்தான் ஒரு மனிதன் சிறந்தவனா? இல்லையா? என்பது அவனது செயல்களைக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. (மேலும்...) புரட்டாசி 22, 2010 வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி ஸ்ரீவல்லிபுர ஆழ்வார் கோவிலின் தேர்த்திருவிழா இன்று 22ம் திகதி புதன்கிழமை நடைபெறுகிறது. இன்றைய தினம் காலை 8 மணிக்கு வசந்த மண்ட பப் பூசை நடைபெற்று சுவாமி எழுத்தருளி காலை 9.15 மணிக்கு தேரில் ஆரோகணிப்பார். நாளை 23ம் திகதி மாலை 5 மணிக்கு கற்கோவளம் வங்காள விரிகுடா கடலில் சமுத்திர தீர்த்தத் திருவிழா நடைபெறும். சமுத்திர தீர்த்தத் திருவிழாவுக்கு கடற் பகுதிக்கு பக்தர்கள் சென்றுவர இம்முறை படையினர் அனுமதி வழங்கியுள்ளனர். 24ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு கேணித் தீர்த்தத் திருவிழா நடைபெறும். கண் முன்னே நிழலாடும் அந்த தேர்த் தீர்த்தத் திருவிழாவை காண ஆயிரம் கண்கள் போதுமோ. சனிக்கிழமை தோறும் மரங்களில் கீழ் கூடிப் பொங்கி மகிழும் தினங்கள் தற்போதும் எங்கள் கண்களில் நிழலாடுகின்றது. புரட்டாசி 22, 2010 அதிசக்தி வாய்ந்த ‘சூரிய சக்திப் புயல்’ 2012ம் ஆண்டளவில் பூமியைத் தாக்கக் கூடும் ஓர் அதிசக்தி வாய்ந்த ‘சூரிய சக்திப் புயல்’ 2012ம் ஆண்டளவில் பூமியைத் தாக்கக் கூடும் என்று எச்சரிக்கை மணி அடிக்கிறார்கள், விண்ணியல் ஆய் வாளர்கள். பூமியில் சாதாரணமாக வாண வேடிக்கை நிகழ்த்திக் காட்டும் ‘எரிகல் மழை’யைப் போல பல மடங்கு பலமானதாக அந்த சூரியசக்திப் புயல் இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதாவது, அப்புயலின் சக்தி, 10 கோடி ஹைட்ரஜன் குண்டுகளின் சக்திக்கு இணையானதாக இருக்குமாம். சமீபத்தில் அமெரிக்காவில் ஒரு பெரிய ‘எரிகல் மழை’ பொழிந்தது. அது சூரிய சக்திப் புயலின் முன்னோட்டம்தான் என்று புளியைக் கரைக்கிறார்கள் ‘நாசா’ விஞ்ஞானிகள். வீசப்போகும் சூரிய சக்திப் புயல் பூமியின் ஒட்டுமொத்த மின் தொடர்பையே துடைத்தெறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கி றார்கள். (மேலும்...) புரட்டாசி 22, 2010 நாகர்கோவிலுக்கு நேற்று மின்விநியோகம் ஆரம்பம் நாகதம்பிரான் ஆலயத்துக்கும் மின்சாரம்வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கிராமத்திற்கும் அங்குள்ள வரலாற்றுப் புகழ்மிக்க நாகதம்பிரான் ஆலயத்திற்குமான மின்சார விநியோகத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று ஆரம்பித்துவைத்தார். பருத்தித்துறை வெற்றிலைக்கேணி பிரதான வீதியில் அமைக்கப் பட்டுள்ள பெயர்பலகையையும் அமைச்சர் திரைநீக்கம் செய்த பின்னர் நாகர் கோவில் கிராமத்திற்கான மின் விநியோகத்தினையும் ஆரம்பித்துவைத்தார். இலங்கைக்கு மின்சாரத்தை அறிமுகப்படுத்திய டி.ஜே.விமலசுரேந்திரவின் 136 வது நினைவு தினம் கடந்த வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி ‘இலங்கைக்கு ஒளியேற்றுவோம்’ என்ற திட்டத்தின் கீழ் அனுஷ்டிக்கப்பட்டதன் தொடர்ச்சியாகவே மேற்படி புதிய மின்விநியோகத் திட்டத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடக்கி வைத்தார். புரட்டாசி 22, 2010தடை செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை மீனவர்களிடம் மீள ஒப்படைக்க நடவடிக்கைபாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட வடக்கு கிழக்கு மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 40 குதிரை வலுவுடைய 141 மீன்பிடிப் படகுகளையும் மீனவர்களிடம் மீள ஒப்படக்க உள்ளதாக கடற்றொழில் நீரியல் வள அமைச்சு நேற்று தெரிவித்தது. பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்படி மீன்பிடிப்படகுகளை மீன்பிடி அமைச்சுக்கு ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளது. அவை மீள வழங்கப்பட்டதும் விசேட குழுவொன்றினூடாக படகுகள் மீனவர்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இது தொடர்பாக அமைச்சர் ராஜித சேனாரத்ன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தினார். பாதுகாப்புக் காரணங்களுக்காக கடந்த காலங்களில் 40 குதிரை வலுவுள்ள மீன் பிடிப் படகுகளுக்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. புரட்டாசி 22, 2010ஐ.நா. செயலாளர் - ஈரான் ஜனாதிபதி நியூயோர்க்கில் விசேட சந்திப்புஈரான் ஜனாதிபதி அஹ்மதி நெஜாத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கிமூனுடன் விசேட சந்திப்பில் கலந்து கொண்டார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கவென நியுயோர்க் சென்றபோது இரு தலைவர்களும் பிரத்தியேகமாகச் சந்தித்தனர். ஈரான் மீதான பொருளாதாரத்தடை மேற்குலக நாடுகளுக்கும், ஈரானுக்குமிடையிலான முரண்பாடுகள் குறித்து பான்கிமூனும், அஹ்மெதிநெஜாதும் விரிவாகப் பேசினர். யுரேனியம் செறிவூட்டல் தொடர்பாக ஈரான் மீது ஐ.நா. கொண்டுவந்துள்ள தடைகள் தீர்வுகளை பரஸ்பர ஒத்துழைப்பினூடாக ஏற்றுக் கொள்ளல் என்ற அடிப்டையில் பேச்சுக்கள் அமைந்ததாக பான்கிமூன் சொன்னார். (மேலும்...) புரட்டாசி 22, 2010 ரஷ்ய விஞ்ஞானிகளின் அபாரம்.... மின் சக்தியாகும் பூமியின் உள்வெப்பம்! உலக மக்களை எப்போதும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் அம்சமாக அணுசக்தி சார்ந்த விஷயங்கள் உள்ளன. உலகில் அணு ஆயுதங்களை ஒழித்துவிட்டாலும், மின்சாரத் தேவைக்காக அணு மின்சக்தி உற்பத்தியைத் தொடரத்தான் வேண்டும். அணு ஆயுதங்களின் கதிரியக்கங்களை அணு உலைகளில் எதிர்பொருளாகப் பயன்படுத்தும் திறமை நமக்கு உண்டு. ஆனால் அவற்றை அணு உலைகளுக்குத் தேவையான விதத்தில் மாற்றி அமைக்கப் பெருஞ்செலவு பிடிக்கும். அதற்குப் பதிலாக பூமியின் உட்பகுதியில் உள்ள வெப்பத்தை வெளியில் எடுத்துப் பயன்படுத்தலாம் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து தெரிவித்திருக்கின்றனர். அதற்கு கதிரியக்கத் தனிமங்களை மாற்றியமைக்கத் தேவையில்லை. பூமியின் உள்பகுதி வெப்பம் எதிர்காலத்தில் ஒரு முக்கியமான எரிசக்தி ஆதாரமாக அமையும் என்று கருதப்படுகிறது. புரட்டாசி 22, 2010 எந்திரப்பல்லி கண்ணாடி போன்ற வழுவழுப்பான பரப்புகளிலும் செங்குத்தாக ஏறும். ‘சுவரில் ஒட்டுவதற்கு காற்று உறிஞ்சப்படும் சிறு ‘கப்’களை பயன்படுத்த வேண்டும். அது மெதுவானது, திறன் குறைந்தது எனவே அதற்கு வேறு தீர்வு ‘உலர் ஒட்டு’ முறை. அதைத்தான் பல்லிகள் பயன்படுத்துகின்றன. அதையே நானும் முயற்சித்துப் பார்ப்பது என்று முடிவு செய்தேன்’ என்று விளக்கிக் கூறுகிறார் இந்தப் பேராசிரியர். பல்லியின் ஒவ்வொரு காலிலும் லட்சக்கணக்கான மிக நுண்ணிய, நுனியில் பிளவுபட்ட முடிகள் இருக்கின்றன. அவைதான் ‘வான்டர் வால்ஸ்’ சக்தி என்பதைப் பயன்படுத்தி சுவருடன் ஒட்டுகின்றன. (மேலும்...) புரட்டாசி 21, 2010 மக்களோடு மக்களாய் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் ஊர்காவற்துறை, கொக்குவில் பகுதி மக்களுடன்
மக்கள் தமக்கு வழங்கப்படும் சிறு சலுகைகளோடு மட்டும் திருப்தி கொள்ளாது தமிழர்களின் அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக இருப்பது தமக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். 'அரசாங்கத்தில் அமைச்சராக அங்கம் வகிப்பவர்கள் மட்டுமே அரசாங்கத்தின் காசினை செலவளிக்க முடியும் என்னும் உண்மை அனைவரும் அறிந்த ஒன்றாகும். நான் பணத்துடன் உங்கள் முன்வரவில்லை ஆனால் எனது மனச்சாட்சியுடன் உங்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன்' எனத் தெரிவித்தார். 'நீங்கள் விரும்பும் கேள்விகளை என்னிடம் கேட்க முடியும். உங்கள் கருத்துக்களை நீங்கள் துணிந்து கூற வேண்டும். அதுவே எனது வருகை அர்த்தமுள்ளதாக அமையும். நானும் நான் சார்ந்த அமைப்பும் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்போம். எங்களுடைய கட்சி அரசாங்கம் தரும் சலுகைகளோடு திருப்திப்பட்டு தமிழ் மக்களுக்கான உரிமைகளுக்கு குரல் கொடுக்காமல் இருக்காது. அதேவேளை அரசாங்கம் மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்கள், புனர்வாழ்வு உதவிகள் எமது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரசாங்கம் ஆக்கபூர்வமாக செயற்பட வைக்கவும் முயற்சிப்போம் எனத் தெரிவித்தார். (மேலும்....) புரட்டாசி 21, 2010 அகதிகள் குறித்த சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசு உத்தேசம் (சாகரன்)
இலங்கை அகதிகள் தொடர்பான சட்டதிட்டங்களைக் கடுமையாக்க கனேடிய அரசாங்கம்
உத்தேசித்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலிய
குடிவரவுக் கொள்கையைக் கனடாவும் பின்பற்றுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகள் தொடர்பில்,
அவுஸ்திரேலிய கடுமையான கொள்கையை கடைபிடித்து வருவதால் அங்கு அகதிகள் வருகை
குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால்தான் சன் சீ கப்பல், தனது ஆஸி.
பயணத்தை ரத்து செய்து, கனடாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. எனவே ஆஸியின்
கொள்கையைக் கனடாவும் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ளதாக கனேடிய செய்திகள்
தெரிவிக்கின்றன.
(மேலும்...) இலங்கைக்கு திருப்பி அனுப்பப்போவதாக அவுஸ்திரேலியா முடிவு சிட்னியில் கூறைமீதேறி அகதிகள் ஆர்ப்பாட்டம், தற்கொலை செய்வதாகவும் எச்சரிக்கை
சிட்னியின் வில்வூட் தடுப்பு முகாம் கூறையின் மீதேறி ஆர்ப்பாட்டம் செய்துவரும் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த 11 பேரும், தமது புகலிட கோரிக்கையை ஆஸி. குடிவரவு திணைக்களம் மீள் பரீசீலனை செய்யாவிட்டால், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று பிஜி நாட்டைச் சேர்ந்த 36 வயதான ஜொசிபா ரலினி என்பவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவரது மரணம் தொடர்பாக எவ்வித மேலதிகத் தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்ற போதும் அவர்களை தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்புவதற்கான முனைப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர். புரட்டாசி 21, 2010 வெகு விரைவில் களை கட்டப்போகும் வடமாகாணத் தேர்தல் வட மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசதரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிகின்றது. எதிர்வரும் நவம்பர் மாதம் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.(மேலும்....)புரட்டாசி 21, 2010 திருக்குறளுக்கும் கல்வியியலுக்குமான புதிய பார்வை - புதிய பங்களிப்பு (லெனின் மதிவானம்) முற்போக்குவாதத்தையும் மார்க்சியத்தையும் இன்றைய யதார்த்த சூழலுடன் பொருத்திப் பார்க்காது வெறுமே மூல நூலை ஒப்புவிப்போரும் பாராயணம் செய்வோரும் கருதுகோள்களையும் முடிவுகளையும் மனப்பாடம் செய்துவிட்டு அவ்வப்போது மேற்கோள் காட்டி விட்டாலே எல்லாப் பிரச்சனைகளையும் தீர்த்துவிடலாம் என முடங்கிய இவர்கள் திருக்குறளை நிராகரிப்பது வியப்பிற்குரியதொன்றல்ல. இந்நிலையில் திருக்குறள் பற்றிய இவர்களது பெரும்பாலான ஆய்வுகளில் திருக்குறள் குறித்து எழுந்த பொழிப்புரையே ஆய்வுக்கான மூல நூலாக அமைந்திருக்கின்றது. எனவே திருக்குறளில் வெளிப்பட்ட சமுதாயம் சார்ந்த சிந்தனையை இவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது இருக்கின்றனர். அதன் விளைவாக திருக்குறளை, நிலவுடமை மற்றும் அதிகாரத் தரப்பு சார்ந்த நூல் எனவும் அது பெண்ணடிமைத்தனத்தை போற்றுகின்ற நூல் எனவும் கருத்து கூறப்பட்டன. (மேலும்....) புரட்டாசி 21, 2010 மனித குலத்துக்கு எதிரான குற்றம்! மருத்துவ விஞ்ஞானமும் புதிய கண்டுபிடிப்புகளும் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கும் அதேவேளையில் பயங்கர மான புதிய புதிய வியாதிகளும் மனித குலத்தை அச்சுறுத் தத் தொடங்கியுள்ளன. விஞ்ஞான வளர்ச்சியானது எவ்வளவுதான் உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பினும் சில நோய்களு க்கு இன்னும்தான் உரிய பரிகாரத்தைக் கண்டு கொள்ள மருத்துவ உலகத்தினால் முடியாதிருக்கிறது. மருத்துவத்துறையின் தோல்வி யென்றே இதனைக் கொள்ள வேண்டியுள்ளது. உயிரியல், பெளதிக, இரசாயன, தொழில்நுட்ப விஞ்ஞானத் துறை களில் நாளாந்தம் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகுவதன் விளை வினாலேயே மனித குலத்துக்கு புதிய வியாதிகளும் அறிமுக மாகின்றன என்ற கண்டனங்களில் உண்மை இல்லாமலில்லை. (மேலும்....) புரட்டாசி 21, 2010 எங்கும் பிரச்சினைதான்! சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது ஹொங்கொங். தொழிற்சாலைகள் நிறைந்த வர்த்தக நகரம். பிரிட்டன் - சீனா இடையே நடந்த ஓபியம் யுத்தத்தில் ஹொங்கொங், பிரிட்டிஷ் வசமானது. ஒரு சமரச உடன்பாட்டில் ஹொங்கொங் 99 ஆண்டுகளுக்கு பிரிட்டனிடம் குத்தகைக்கு விடப்பட்டது. ஒப்பந்தம் முடிந்தவுடன் பிரச்சினை ஆரம்பம். சீனாவுடன் இணைந்தால் ஹொங்கொங் பொதுவுடமையாக்கப்படுமோ என்ற அச்சம்தான் காரணம். சந்தைப் பொருளாதார நிலை அப்படியே நீடிக்கும் என்ற ஒப்பந்தத்துடன் தனிநாடாக (ஆனால் சீனாவின் கீழ்) இருக்கிறது ஹொங்கொங். (மேலும்....) புரட்டாசி 21, 2010 பாரிய சவால்களை எதிர்கொள்ளும் நிலையில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப்சுமா தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப்சுமா தலைமையில் ஆபிரிக்க காங்கிரஸ் கூட்டம் இந்த வாரம் கூடவுள்ளதாகவும் இதில் ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்ள நேரிடுமென்றும் தென்னா பிரிக்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க காங்கிரஸ் கூட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளதால் இக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ் வொன்றாக கருதப்படுகிறது. நிலக்கரி விவகாரம், பொருளாதார நிலைமைகள் என்பனவை தென்னாபிரிக்க ஜனாதிபதியின் அரசியல் எதிர்காலத் தைக் கேள்விக் குள்ளாக்கியுள்ளன. இரண்டாம் தவணைக்கு ஜகோப் சுமாவை ஆதரிக்கப்போவதில்லை யெனத் தெரிவித்துள்ளனர். மூன்று மாதங்களாக நிலக்கரித் தொழி லாளர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்தத்தால் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமாக நலிவடைந்துள்ளது. இவர்களின் பிரச்சினைக்கு இன்னமும் தீர்வு காணப் படவில்லை. இதனால் 2014 ஆம் ஆண்டுவரைக்கும் பதவியிலிருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதியின் ஆசைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது. புரட்டாசி 21, 2010 சுவீடன் தேர்தல், ஆளும் கட்சி வெற்றிசுவீடனில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் கட்சி வெற்றியீட்டியது. சனிக்கிழமை நடந்த தேர்தலில் ஆளும் கட்சியை சிறியளவான பெரும்பான் மையைப் பெற்றது. தேர்தலுக்கு முன்னர் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பீடுகள் ஆளும் கட்சி அதிகூடிய பெரும்பான் மையைப் பெறுமெனக் கணிக்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் ஆளும் கூட்டமைப்பை அதிர்ச்சிக்குள்ளாகியது. எனினும் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பிரதமர் கடுமையான முயற்சிகளில் இறங்கினார். எதிர்க்கட்சி ஆட்சியமைக்க முயன்ற போதும் அம்முயற்சிகள் தோல்வியுற்றன. புரட்டாசி 21, 2010 முன்னாள் புலிப் போராளிகளுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கினார் - கிழக்கு முதல்வர்
தொழில் பயிற்சியளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தனினால் தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. வெளிக்கந்த சேனபுரவிலுள்ள பாதுகாப்பான தங்குமிடவசதி மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. தொழில் பயிற்சியை முடித்த 250 போராளிகளுக்கு இதன் போது தொழில் உபகரனங்களை முதலமைச்சர் சந்திரகாந்தன் வழங்கி வைத்தார். இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் மற்றும் வெளிக்கந்த புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் காமினி உட்பட படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். புரட்டாசி 21, 2010 அமெரிக்காவின் அவலம் மாதமொன்றுக்கு 14 வங்கிகள் மூடப்படுகின்றன விஸ்கான்சின் மாநிலத் திலிருந்து செயல்படும் கடல் வழி சேமிப்பு வங்கியான வெஸ்ட் ஆலிஸ் வங்கியை ஒழுங்கமைப்பு ஆணையம் மூடியது. நடப்பாண்டில் அமெரிக்காவில் மூடப்படும் 125 வது வங்கியாகும் இது. இந்த வங்கிக்கு 35.05 கோடி டாலர் மதிப்புள்ள சொத்து முதலீடுகள் உள்ளன. அத்துடன் அதன் டெபாசிட்டுகளில் 24.81 கோடி டாலர் மதிப்புள்ள முதலீடுகளும், வைப்புநிதிகளும் உண்டு. உலகப் பொருளாதாரம் நிதி நெருக்கடியில் இருந்து மீட்சி அடைந்து வருவதா கச் சொல்லப்படுவதெல்லாம் ஒருமாயையை உரு வாக்கும் முயற்சி. (மேலும்....)புரட்டாசி 21, 2010 தொடரும் தாக்குதல் தாக்குப்பிடிக்குமா? ஈராக் ஈராக் நாட்டில் சமீபகாலமாக வன் முறைகள் அதிகரித்து வருகின்றன. அங்கு சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப் பெரும் பான்மை கிடைக்காததால் யாரும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் தீவிரவாதிகள் அராஜகம் பெருகி விட்டது. பாத்தாத் அருகே ஒரே நேரத்தில் நடந்த 2 கார்க் குண்டு தாக்குதல்களில் 23 பேர் பலியாகினார்கள். பாக்தாத் அருகே உள்ள மன்கர் பகுதியில் மொபைல் போன் கம்பனி அலுவலகத்துக்கு முன்னால் நிறுத்தப்பட்டு இருந்த காரில் இருந்த குண்டுகள் வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர். (மேலும்....) புரட்டாசி 21, 2010 ஜனாதிபதி தலைமையிலான குழு நேற்று நியூயோர்க் சென்றடைவு உலகின் மோசமான பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் முதலாவது ஐ. நா. சபை மாநாடு இதுவாகுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், இம்மாநாட்டிற்கு வருகை தரும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கு இலங்கையின் அபிவிருத்தி உத்திகள் தொடர்பில் விளக்கவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்தது. (மேலும்....) புரட்டாசி 21, 2010 சட்டவிரோத ஆட்கடத்தல் குற்றத்தை ஏற்ற இலங்கையருக்கு அவுஸ். நீதிமன்று 5 வருட சிறை அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 5 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை வழங்க உள்ளது. சிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில் என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரான பத்மேந்திரா புலேந்திரன் (வயது 36) என்கிற இளைஞனே இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார் என்பதை நேற்று சிட்னிஸ் டவ்னிங் நிலைய மாவட்ட நீதிமன்றில் ஒப்புக்கொண்டார். இவர் நீதிபதி ரொபின் டொப்மென் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். 20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அவுஸ்திரேலியா வருகின்றமைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று இச்சாட்சியத்தில் ஒப்புக் கொண்டார். இப்படிப் பார்த்தால் கனடாவிலும் பலர் கைதாகலாம் சிறைத் தண்டனை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை....? புரட்டாசி 21, 2010
இரு வருடங்களில் வேலைகள் பூர்த்தி யாகும் தலைமன்னாருக்கான ரயில்பாதை நிர்மாணம் அடுத்தமாதம் ஆரம்பம் மதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடை யிலான ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் கூறியது.ரயில் பாதை நிர்மாணிப்பதற்குத் தேவையான தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள் மற்றும் பொருட்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார். மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான 106 கிலோ மீற்றர் நீளமான பாதையை மீளமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திட்டன. (மேலும்....) புரட்டாசி 20, 2010 அல்லலுறும் போராளிகள், பொதுமக்களின் புனர்வாழ்வே முக்கிய தேவை - நேர்டோ கனடாக் கிளை தலைவனின் சொல்லுக்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த மாவீரர்களின் வழித் தோன்றல்களான போராளிகள் இன்று திக்குச்திசை தெரியாமல் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல இந்தப் போராட்டத்தைத் தாங்கிப்பிடித்த மக்கள் வாழ்வதற்கு வழிதெரியாமல் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அடிப்பைட வாழ்விற்கான தேவைகளை நிறைவேற்றுவதே எமது தற்போதைய தலையாய கடமை என்றும், இவர்கள் புலம்பெயர்ந்த உறவுகளை தங்கள் வாழ்வின் விடிவெள்ளிகளாக நினைத்துக் காத்திருக்கும் இவ்வேளையில், நாம் இவர்களது அன்றாட வாழ்விற்குத் திரும்ப உதவி செய்யாவிட்டால் நாம் தமிழராய் பிறந்ததில் பலனேயில்லையென நேற்று நடைபெற்ற நேர்டோக் கனடாக் கிளையின் அங்குரார்பனக் கூட்டத்தில் திரு. இன்பம் பேரின்பநாயகம் குறிப்பிட்டார். (மேலும்...) புரட்டாசி 20, 2010 உசாரு…. ஐயா! உசாரு….. கிளம்பீட்டாங்க….. ஐயா!…. கிளம்பீட்டாங்க ….மீண்டும் உண்டியல் குலுக்க. (தானாமூனா) உசாரு ஐயா உசாரு….. கிளம்பீட்டாங்க ஐயா…. கிளம்பீட்டாங்க ….மீண்டும் உண்டியல் குலுக்க. தற்போது தலைவரின் அவசர நிதித் தேவை என்று சொல்ல முடியவில்லை. தமிழீழ வைப்பகத்தில் வைப்பிலிட்டு உலக நாடுகளுக்கு காட்டி தமிழீழ பிரகடனம் செய்யப் போவதாக சொல்ல முடியவில்லை, சாம் 7 வாங்கவென்று காட்ட முடியவில்லை. இறுதிக்கட்ட போர்நிதி என்றும் சொல்ல முடியவில்லை, ஏன் சுனாமி என்றும் சொல்லி சுருட்ட முடியவில்லை. பின்னே என்ன சொல்லிப் புறப்பட்டு விட்டார்கள்? மகிந்தாவின் அனுசரயையுடன்?, தலைவர் கேபியின் ஆசீர்வாதத்துடன் புனர்வாழ்வு என்று புறப்பட்டு விட்டார்கள். (மேலும்...) புரட்டாசி 20, 2010 Ranil , GL and a boomerang called ‘No-Confidence’ (by Malinda Seneviratne) G.L. Peiris is a politician. He’s also a professor of law. He ought to know constitutions. He ought to be able to study and assess the costs and benefits of legislation, proposed and enacted. We can’t be faulted for thinking that he’s studied constitutions and constitutional history and as such is able to make intelligent comments by comparing and contrasting constitutions across time and space. His track record in these matters is hardly the stuff to vow anyone. G.L. Peiris was a minister is the cabinet of Chandrika Kumaratunga when her government put together the notorious and short-lived ‘political package’ not too long after coming to power in 1994. It is unlikely that he was not consulted. It is also unlikely that his opinion was not solicited when her government came up with a draft constitution in the year 2000 whereby the President tried to sell the country the dummy of abrogating the executive presidency so that an Eelam try could be scored (under the goal posts, virtually). (more...) புரட்டாசி 20, 2010 பூநகரியில் நேற்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வு முள்ளிவாய்க்கால் பகுதியிலிருந்து மீண்டது குறித்து சாட்சியமளித்தோர் விபரிப்பு
அரசாங்கம் அறிவித்திருந்த பாதுகாப்பு வலயங்களில் புலிகள் தமது நிலைகளைப் பலப்படுத்துவதற்கான வழி ஏற்பட்டிருந்தது. மக்களை பணயமாக அவர்கள் வைத்திருந்ததால் பாதுகாப்பு படையினருக்கும், புலிகளுக்குமிடையிலான மோதலில் தாம் சொல்லொணா துன்பங்களை அனுபவித்தாகச் சுட்டிக் காட்டினர். புலிகளின் பிடியிலிருந்து மீண்டு இராணு வத்தினரிடம் பாதுகாப்புக்காக சென்று விடுவதற்கு புலிகளுடன் பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். (மேலும்...) புரட்டாசி 20, 2010 புனர்வாழ்வு பெற்ற மேலும் 440 பேர் உறவினரிடம் ஒப்படைப்பு அமைச்சர் டியு குணசேகர தலைமையில் அண்மையில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின் போது, அமைச்சரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளு க்கமைய 119 பேர் இதன்கீழ் எதிர்வரும் 30ம் திகதி தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். மேலும் நூறு பெண்கள், அங்கவீனமானோர், சுகயீனமுற்றோர் மற்றும் முழுமையாக புனர்வாழ்வு பெற்று வேலை செய்ய தகுதி பெற்றோர் ஆகியோரே இம்முறை விடுவிக்கப்படவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த மாதம் புனர்வாழ்வு நிலையங்களி லிருந்து 500க்கும் மேற்பட்டோர் தமது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மேலும்...) புரட்டாசி 20, 2010 கெஞ்சும் பிரதமர் விஞ்சும் ஆதரவுக் கட்சியினர் அரசாங்கம் கவிழும் சூழ்நிலையை தோற்றுவிக்க வேண்டாம் - அவுஸ்திரேலியப் பிரதமர் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி களில் ஈடுபட வேண்டாமென தோழமைக் காட்சிகளைக் கேட்டுக் கொண்ட அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியட் கிலாட் அரசாங்கத்தின் உறுதி மொழிகள் படிப்படியாக நிறைவேற்றப்படுமென்று நம்பிக்கை தெரிவித்தார். பெரும்பான்மை பலமில்லாததால் இந்த தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைக்க நீண்டகாலம் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்க சில உத்தரவாதங்களையும் பிரதமர் ஜுலியட் கிலாட் வழங்கியிரு ந்தார். அதன் பின்னர் அரசாங்கம் அமை க்கப்பட்டு புதிய அமைச்சர வையும் தெரிவு செய்யப்பட்டது. இவ்வாறான நிலையில் தோழ மைக் கட்சிகளில் ஒன்றான கிறின் கட்சி கடுமையான வரிகளை விதிக்குமாறும் தடைசெய்யப்பட்ட சில விடயங்களை மீண்டும் அமு லாக்கும் படியும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்தே பிரதமர் ஜுலியட் கிலாட் அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் இறங்க வேண்டாமென தோழமைக் கட்சிகளை கேட்டுக் கொண்டார். புரட்டாசி 20, 2010 முகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகள் விடுதலை தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழு ஜனாதிபதிக்கு பரிந்துரை பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் சுயமாக முன்வந்து சாட்சியமளிக்கவென சுமார் நூறு பொது மக்கள் வருகை தந்திருந்தனர். அநேகர் விதவைப் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பச்சிலைப் பள்ளியில் (பளை) தான் தீவிர மோதல் இடம்பெற்றதாகவும் இதனால், அநேகமான பெண்கள் வித வைகளாகி உள்ளதாகவும் அங்கு சாட்சி யமளித்த ஒருவர் சுட்டிக்காட்டினார். எனவே, அந்தப் பெண்களின் வாழ்வாதாரத் திற்கு உதவுமாறும் அவர் கேட்டுக் கொண்டார். இங்கு சாட்சியமளித்த அநேகமான பெண்கள், தமது கணவன்மாரை விடு வித்துத் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கைகளைச் செவி மடுத்த ஆணைக் குழுவின் உறுப்பினர் திருமதி மனோரி இராமநாதன் “நாங்களும் மனிதர்கள். உங்களுக்கு நன்மை பெற்றுத் தருவதற்காக எம்மால் இயன்ற அனைத்து உதவிகளை யும் செய்வோம்” என்றார். (மேலும்...) புரட்டாசி 20, 2010 இந்தியாவில் 6 இலங்கை மீனவர் விடுதலை; 46 தொடர்ந்தும் தடுப்பில் மீனவர்கள் பயணம் செய்த படகு கடந்த பெப்ரவரி 21ம் திகதி இந் திய கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தல் ஈடுபட்டிருந்ததுடன் போதை வஸ்து கடத்தலிலும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப் பட்டனர். மேற்கூறிய குற்றச்சாட்டுகள் காரணமாக குறிப்பிட்ட மீனவர்கள் பயணம் செய்த படகு தடுத்து வைக்கப்பட்டு மீனவர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட் டுள்ளதாக மீன்பிடி மற்றும் நீர்வள அபி விருத்தி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்று கூறுகிறது. இந்த மீனவர்களை விமான மூலம் இலங்கைக்கு அழைத்துவர அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா செலவாகியுள்ளது.(மேலும்...) புரட்டாசி 20, 2010 அகற்றும் பணி மூன்று வருடகாலம் நீடிக்கலாம் முகமாலை, கிளாலி பிரதேசங்களில் கண்ணிவெடிகள் மிகவும் செறிவு யுத்த காலத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளாக விளங்கிய முகமாலை மற்றும் கிளாலி உள்ளிட்ட சில பகுதிகள் கண்ணிவெடிகள் மிகவும் செறிவாக உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, கிளாலி இத்தாவில், வேம்படிக்கேணி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் மிகவும் கூடுதலாகப் புதைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ள தாக பச்சிளைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் தெரிவித்தார். இந்தப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு குறைந்தது மூன்று வருட காலம் நீடிக்கலாம் என்று பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். (மேலும்...) புரட்டாசி 20, 2010 இந்தியாவின் 50 ஆயிரம் வீடுகளுக்கு மேலதிகமாக 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு வவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார். இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார். (மேலும்...) புரட்டாசி 20, 2010 ஆப்கான் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு ஐ.நா, ஐரோப்பிய யூனியன் பாராட்டுஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற வன்முறைகள், தலிபான்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தேர்தலில் வாக்களித்த மக்களை ஐ. நா.வும் நேட்டோ படையும் வாழ்த்தியுள்ளன. மிகக் கடுமையான பாதுகாப்புச் சவால்களுக்கிடையிலும் ஆப்கானிஸ்தான் மக்கள் தைரியத்தை வெளிப்படுத்தி யதாகவும் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தல் ஆப்கானிஸ்தானின் கட்டுக்கோப்புக்கு இன்றியமையாதவொன்று என்றும் ஐ. நா., ஐரோப்பிய யூனியன், நோட்டோ படைகள் என்பன பாராட்டியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. 34 மாகாணங்களிலிருந்தும் 249 பேரை பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்ய இத்தேர்தல் நடத்தப்பட்டது. 2500 பேர் இதில் போட்டியிட்டனர். 249 பேரில் 68 பெண்களும் தெரிவாகவுள்ளனர். இம்மாதம் 30ம் திகதியே வாக்குகள் எண்ணப்படவுள்ளன. (மேலும்...) புரட்டாசி 20, 2010 தேன் கூட நஞ்சாகுமா? ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளிலிருந்து இந்தியாவில் இறக்குமதி செய் யப்படும் தேனிலும், உள்நாட்டில் தேன் உற் பத்தியில் ஈடுபட்டுள்ள ‘டாபர் ஹனி’ போன்ற பெரிய நிறுவனங்களின் தேனிலும் 2 முதல் 5 வகையிலான - கடுமையான எதிர் உயிரி (ஆன்டி பயாடிக்) மருந்துகள் கலந்திருப்பதை இந்த ஆய்வு அம்பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக மேற்கண்ட இரண்டு நாடுகளிலும் தடை செய் யப்பட்டுள்ள, கெட்டுப்போன தேன் இந்தியச் சந்தைகளில் மிகவும் சர்வசாதாரணமாக அனு மதிக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிய வந்துள்ளது.இத்தகைய கெட்டுப்போன தேனை தொடர்ந்து உட்கொண்டால், உயிர்காக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பிற்காலத்தில் எடுத்துக்கொள்ள நேரிடும் போது, அந்த மருந்துகள் செயலிழந்து போகும் அபாயமும் உள்ளது என்றும் தெரியவந்துள்ளது. (மேலும்...) புரட்டாசி 20, 2010 சஜித் பிரேமதாசவை தலைவராக நியமிக்க பல மாவட்டங்களில் ஆதரவு
ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டும் என்ற கோஷம் வலுவடைந்து வருகிறது. இது தொடர்பாக அனுராதபுரம் மாவட்ட உள்ளூராட்சி அமைப்புக்களின் 48 அங்கத்தவர்களில் 36 பேர் ஆதரவு தெரிவித்து தீர்மானமொன்று நிறைவேற்றியுள்ளனர். அதேபோல், காலி மாவட்டத்தைச் சேர்ந்த 57 அங்கத்தவர்களில் 44 பேரும், பொலன்னறுவை மாவட்ட உள்ளூராட்சி சபையின் 19 அங்கத்தவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது போல் இன்னும் பல மாவட்டங்களிலும் ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புரட்டாசி 20, 2010 கிழக்கு முதலமைச்சர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு விஜயம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வாழைச்சேனை பொது வைத்தியசாலைக்கு இன்று திடீர் விஜயம் மேற்கொண்டார். இங்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களை பார்வையிட்டதுடன் வைத்திய அதிகாரிகளிடம் வைத்தியசாலையின் தேவைகளையும் கேட்டறிந்தார். புரட்டாசி 19, 2010 மக்களோடு மக்களாய் தவறுகளை கண்டிக்கின்றார் நல்லவற்றை பாராட்டுகின்றார் கரடியனாறு சம்பம் போன்று இனி நடக்காமல் நாம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்: இரா. துரைரட்ணம் ![]()
கரடியனாறு வெடிப்புச் சம்பவமானது முழுநாட்டையுமே விழிப்புடன்
திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களையும்
கூட ஒருகணம் திகைப்படையவைத்துள்ளது. எனவே கரடியனாறு சம்பவம் போல் இனி
நடக்காமல் பாத்துக் கொள்வது அனைவரினதும் பொறுப்பாகும் என ஈ.பி.ஆர்.எல்.எப்.
பத்மநாபா அணியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரட்ணம்
தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் நடந்த பகுதியில் உள்ள
மக்கழும் பாதிக்கப்பட்ட மக்களும் மிகவும் வறியமக்கள். இவர்களின் இறுதிக்
கடமைக்காக பாலர்சேனை, இலுப்பையடிச்சேனை கிராமத்திற்கு நான் இவர்களின்
வீடுவீடாகசென்று பார்தபோது இவர்களின் வறுமை சொல்லிலடங்காது. இதனால் விரைவாக
நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இச்சப்பவத்தில்
பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ உதவியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
செங்கலடி பிரதேச வைத்தியசாலை, கரடியநாறு மாவட்ட வைத்தியசாலை போன்ற
வைத்தியசாலைகளில் கடமையாற்றிய ஊழியர்கள், தாதியர்கள், வைத்தியர்கள்,
வைத்திய நிபுணர்கள், பணிப்பாளர் இவர்கள் அனைவரினதும் துரிதசேவையானது மிகவும்
பாராட்டதக்க சேவையாகும்.(மேலும்.....) கரடியனாறு சம்பவம் மட்டக்களப்பில் துக்கத்தினம் அனுஷ்டிப்பு
கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வெடி விபத்தில் பலியானவர்களுக்காக இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரின் பிரதான மணிக்கூட்டுக் கோபுரம், அரசடி ஆஞ்சநேயர் மணிக்கூட்டுக்கோபுரம், மற்றும் பிரதான வீதிகள் , ஏனைய பிரதேசங்களிலும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. பஸ் நிலையம், பொலிஸ் நிலையம் வர்த்தக நிலையங்களிலும் வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்ததுடன் வீதிகள் வெறிச்சோடிக் கணப்பட்டடிருந்தது. கரடியனாறில் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன், அஞ்சலி செலுத்தும் வகையில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பு இதற்கான அழைப்பை விடுத்திருந்தது. புரட்டாசி 19, 2010 கரடியனாறு வெடிப்புச் சம்பவம் காயமடைந்தவர்களை பார்வையிட்டார் சனத் ஜெயசூரியா, கருணா ![]()
மட்டக்களப்பு கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மீள்
குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல
கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய ஆகியோர் இன்று பார்வையிட்டதாக
அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். இவர்களுடன் மீள் குடியேற்ற
பிரதி அமைச்சரின் செயலாளர் சாந்தினி பெரோ, மீள் குடியேற்ற அமைச்சின்
இணைப்புச் செயலாளர்களான பி.ரவீந்திரன், உருத்திரமலர் ஞானபாஸ்கரன் ஆகியோர்
பார்வையிட்டனர்.
(மேலும்...) புரட்டாசி 19, 2010 அரசியல் தீர்வு முயற்சியில் பெற்ற அனுபவம் கசப்பானதுயதார்த்தத்துக்கு ஏற்றவாறு மாறுவதே இன்றைய தேவை நடைமுறைச் சாத்தியமற்ற கொள்கை என்பதால் தனிநாட்டுக் கோரிக்கை பலனளிக்கவில்லை. தவறான அணுகுமுறை காரணமாகச் சமஷ்டிக் கோரிக்கை பலனளிக்கவில்லை. சமஷ்டி என்ற பதம் பல்வேறு அதிகாரப் பகிர்வு ஆட்சி முறைகளைக் குறிக்கின்றது. கனடாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டியும் அவுஸ்திரேலியாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டியும் இந்தியாவில் நடைமுறையிலுள்ள சமஷ்டியும் அதிகார அமைப்பைப் பொறுத்த வரையில் வெவ்வேறானவை. தமிழரசுக் கட்சி சமஷ்டி எனக் கூறிய போதிலும் எவ்வாறான அதிகார அமைப்பைக் கொண்ட சமஷ்டி என்பது பற்றித் தெளிவு படுத்தவில்லை. இதனால் மக்கள் தங்கள் மனோநிலைக்கு ஏற்ற விதத்தில் அர்த்த நிரூபணம் செய்தார்கள். சமஷ்டி என்றால் பிரிவினை என்ற கருத்தைச் சிலர் சிங்கள மக்கள் மத்தியில் விதைப்பதற்கும் இது காரணமாகியது. (மேலும்....) புரட்டாசி 19, 2010 உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருப்பின் யாழ். காணிகளின் மீது உரிமை கோருவதில் தடையேதுமில்லை கேள்வி:- யாழ்ப்பாணத்தின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறமுடியுமா? பதில்:- இல்லை. வடமராட்சி கிழக்கில் 3500 குடும்பங்களைச் சேர்ந்த 11,000 பேர் மீளக் குடியமர்த்தப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். பாதுகாப்பு அனுமதி கிடைத்ததும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பக் கூடியதாக இருக்கும். யாழ்ப்பாணத்தின் மீள்குடியேற்ற அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டம் கடந்த புதன்கிழமையன்று பொருளாதார அபிவிருத்தியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வலிகாமம் தெற்கு இளவாலை, கொல்லன்கலட்டி, வீமன்காமம், கட்டுவன், வலுத்தலைவிளான் முதலான ஜே 221 முதல் ஜே 242 வரையான பகுதிகளில், 4146 குடும்பங்களைச் சேர்ந்த 14,600 பேரை மீளக்குடியமர்த்துவது பற்றி ஆராயப்பட்டது. (மேலும்....) புரட்டாசி 19, 2010 பூப்புனித நீராட்டு பெண்ணை அடிமைப்படுத்தும் சடங்குகள் தேவைதானா? இலங்கையில் மட்டுமல்லாமல் புலம்பெயர் வாழ்வில், தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் சடங்குகளில் முக்கியமானது பூப்புனித நீராட்டு விழா. போட்டி போட்டுக் கொண்டு மிகுந்த ஆடம்பரத்துடன் தங்கள் பிள்ளைகளின் பூப்புனித நீராட்டு விழாவை நடாத்துவதில் பெற்றோர் முனைப்புக் காட்டுகின்றனர். ஆரம்பத்தில் பெண்ணின் பெருமை பேசுவதாய் அமைந்த இவ்விழா பின்னர், மாதமொரு தடவை அவள் தீட்டானவளாக விலக்கானவளாக ஆவாள் என்பதை உலகுக்கும் பறைச்சாட்டும் விழாவாக மாற்றம் பெற்றிருக்கின்றது. இவ்வாறான சடங்குகளை கேள்விக்குட்படுத்தாமல், நாம் கொண்டாடிக் கொணடிருப்பதன் காரணம் என்ன?பெண்ணுரிமை பேசுபவர்கள், பெண் விடுதலையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள், இவ்வாறான சடங்குகள் பெண்களை எவ்வாறு அடிமைப்படுத்துகின்றன என்பது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும். (மேலும்....) புரட்டாசி 19, 2010 பொப் இசைப்பாடகர்...மனிதர்….. நித்தி கனகரத்தினம் “என் திருமணத்துக்கு பல்லி மிட்டாய் வாங்கி வந்திருந்த செல்லம்மா...'' ’செல்லம்மா பாக்கியம், தம்பையா இவர்களை என்னால் மறக்க முடியாது. இவர்கள் அனைவருமே தலித் வகுப்பைச் சேர்ந்தவர்கள். தம்பையா ஒரு சலவைக்காரர். நான் எஸ். எஸ். சி. படிக்கும் போது கிளாசுக்கு இருபது ரூபா பணம் கட்ட நான் கஷ்டப்பட்ட போது எனக்கு இருபது ரூபா பணத்தை கொடுத்து உதவி செய்தவரே இந்தத் தம்பையா. அப்புறம் பாக்கியம் அக்கா ரொம்பவும் கஷ்டத்தில் இருந்தவர். தனது மரணக்கு செலவுச் என ஒரு 500 ரூபாவை இவர் ஒதுக்கி வைத்திருந்தார். தன் மரணத்தின் பின்னரும் பிறருக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்ற நல்ல எண்ணம். அவளின் இந்த ஐநூறு ரூபா விடயம் ஊருக்கே தெரியும். நான் இந்தியாவிற்கு படிக்கப் போகும் போது என் கஷ்ட நிலையை உணர்ந்திருந்த பாக்கியம் அக்கா, எனக்கு உதவியாக இருக்குமே என்று தான் பொக்கிஷமாக வைத்திருந்த 500 ரூபாவை என்னிடம் தந்தாள். பின்னர் நான் வளர்ந்து பெரிய பாடகனான பிறகு பாக்கியம் அக்காவை சந்தித்தேன். அவளின் காலில் விழுந்து வணங்கி அவளிடம் வாங்கிய ஐநூறு ரூபாவை திருப்பிக் கொடுத்தேன். அப்போது நான் அவளை அம்மா என்று அழைத்தேன். நான் அப்படி அழைத்ததும் அவள் ரொம்பவும் நெகிழ்ந்து போனாள். அவருக்கு பிள்ளைகள் இல்லை. எனக்கு ஒரு மகன் கிடைத்து விட்டான் என்று என்னை கட்டிப் பிடித்து அழுதாள். (மேலும்....) புரட்டாசி 19, 2010 ஐ. தே. க வின் 4 எம். பிக்களின் கட்சி உறுப்புரிமை நீக்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளை கட்சியின் செயற்குழு நேற்று ரத்துச் செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இதனை அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில் உபேக்ஷா சுவர்ணமாலி, நிமால் விஜயசிங்க, மனுஷ நாணயக்கார மற்றும் அப்துல் காதர் ஆகியோரின் கட்சி உறுப்புரிமைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. கட்சியில் போட்டியிட்டு பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட மாற்றுக் கட்சிகளின் பி. திகாம்பரம், ஜே. ஸ்ரீரங்கா மற்றும் பிரபா கணேசன் ஆகியோருடன் எவ்விதத் தொடர்புகளையும் கட்சி கொண்டிருக்கப்போவதில்லை என்றும் கட்சியின் செயற்குழு முடிவெடித்துள்ளது. அதே வேளை, நீதிமன்றத்தை நாடி யுள்ள ஏர்ள் குணசேகர, லக்ஷ்மன் செனவிரத்ன ஆகியோர் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படும் என்றும் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். புரட்டாசி 19, 2010 வடக்கு, கிழக்கில் சர்வதேச விளையாட்டு மைதானங்கள்வடக்கு, கிழக்கில் சர்வதேச விளையாட்டு மைதானங்களை அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தற்போது உயர் மட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கில் யுத்தம் தற்போது முடிவுற்ற நிலையில், அப்பகுதிகளில் விளையாட்டுகளில் பங்குபற்றும் வீரர்களின் ஆர்வம் மிகவும் மும்முரம் அடைந்துள்ளதால், சர்வதேச தரத்தில் விளையாட்டு ¨தானங்களை அமைத்து பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் விளையாட்டு வீரர்களை சர்வதேச தரத்தில் உள்ள வீரர்கள் போன்று திறம்பட விளையாட்டுக்களில் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (மேலும்....) புரட்டாசி 18, 2010
மக்களோடு
மக்களாய்
புரட்டாசி
18, 2010
புரட்டாசி 2010
இலங்கை இடதுசாரி இயக்க முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமான கம்யூனிஸ்ட் மு.கார்த்திகேசன் அவர்களின் 33வது வருட நினைவு தின நிகழ்வு
இடம்: யாழ்ப்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடம்
காலம்: 19 – 09 – 2010 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணி
தலைமை: தேவராஜன் ரெங்கன், சட்டத்தரணி
நினைவுரைகள்:
நினைதின நிகழ்வையொட்டி, 'கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் - நகைச்சுவை, ஆளுமை, தீர்க்க தரிசனம்' என்ற தலைப்பிலான நூல் ஒன்றும் வெளியிடப்படுகின்றது. நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வு ஏற்பாடு:
கார்த்திகேசன் நினைவுக் குழு இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் யாழ்.ஆய்வறிவாளர் அணியம் புரட்டாசி 18, 2010 வடக்கில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை வேரூன்ற வைத்தவர் நாளை யாழ்ப்பாணத்தில் நினைவுதின நிகழ்வு (சண்முக சுப்பிரமணியம்)
புரட்டாசி 18, 2010 நச்சுத்தன்மை நிறைந்த காய்கறிகள் பயன்பாட்டால் நோய்கள் அதிகரிப்பு உணவுகளில் நச்சுத் தன்மை கலப்பதால் மக்களுக்கு ஏற்படக்கூடிய நோய்த் தாக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இன்று ஒரு முக்கிய பிரச்சினையாகும். விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதால் நச்சுத் தன்மை கலந்த காய் கறிவகைகளையே மனிதன் தன் அன்றாட உணவுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்த் தாக்கங்களின் அதிகரிப்புக்கு விவசாயிகள் இரசாயனக் கலவைகளைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது. இதனால் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தாதவாறு நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி விவசாய உற்பத்தியை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் இன்று முக்கியம் பெறுகின்றது. (மேலும்....) புரட்டாசி 18, 2010 மத்திய கிழக்கு நேரடிப் பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் - பலஸ்தீன் தலைவர்கள் திருப்தி சுமார் ஐந்து இலட்சம் யூதர்கள் மேற்குக் கரை கிழக்கு ஜெரூசலத்தில் அமைக்கப்பட்டுள்ள 120 கட்டடத் தொகுதிகளில் குடியமர்த்தப்பட் டுள்ளனர். அந்த காலத்தில் அமையவுள்ள பாலஸ்தீனத்தின் தலைநகராக கிழக்கு ஜெருஸலேமே அமையவுள்ளது. இதனால் பலஸ்தீனர்கள் இதை எதிர்க்கின்றனர். குடியேற்றங்களை இஸ்ரேல் நிறுத்தினால் சமாதானம் சாத்தியமாகும். இவ்வாறான நிலையிலே நேரடிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகியுள்ளது. இதன் போது இஸ்ரேலிடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் கிடைக்கும் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. சுமார் பத்து மாதங்களாக வெளிநாடுகளின் கண்டனங்கள் அழுத்தங்களால் மேற்குக் கரை கிழக்கு ஜெருஸலத்தில் இஸ்ரேல் யூதக் குடியேற்றங்களை நிறுவவில்லை. (மேலும்....) புரட்டாசி 18, 2010 கரடியனாறில் கொள்கலன் வெடி விபத்து பொலிஸ் நிலையம் தரைமட்டம் வாகனங்கள் சுக்கு நூறு மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 25 பேர் பலியானதுடன் 52 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர். பலியானவர் களில் இருவர் சீன பிரஜைகளாவர். காயமடைந்தவர்களில் 24 பேர் பொலிஸார் எனவும் 28 பேர் சிவிலியன்கள் எனவும் பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று முற்பகல் 11.35 அளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த 52 பேரும் மட்டக்களப்பு, ஏறாவூர், செங்கலடி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். இதேவேளை பலத்த காயங்களுக் குள்ளானவர்களில் ஐந்து பேர் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டனரென இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். (மேலும்....) புரட்டாசி 18, 2010 இந்தியா - சீனா வேகமாக முன்னேறி வருகின்றன - ஒபாமா இந்தியாவிலும், சீனா விலும் அறிவுத் திறன் வாய்ந்த மக்கள் உள்ளதால் அவ்விருநாடுகளும் முன் னேறி வருகின்றன. நாம் சவால் களை எதிர்கொள் ளும் சூழலில் உள்ளோம் என அமெ ரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார்.கல்வி ரீதியாக பின்தங்கி உள்ளோம். நமக்கு மருத்துவ ஆரோக்கியமுறை இருந்தது. அது முறிந்து விட்டது. மத்திய தர குடும்பத்தினரின் வருமானம் உயரவில்லை. ஆனால், அவர்களது கல் லூரி கட்டணம், மருத்துவ ஆரோக்கிய கட்டணம் எல்லாம் கடுமையாக உயர்ந்து விட்டது. பகுதி அளவில் சாதகமாக உள்ளன. சில கடினமான நிகழ்வுகளை நாம் மேற்கொண்டுள் ளோம் (மேலும்....)புரட்டாசி 18, 2010 நான்கு குற்றச்சாட்டுகளிலும் பொன்சேகா குற்றவாளி சரத் பொன்சேகா மீது விசாரணை நடத்திய இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அவரை குற்றவாளியென அறிவித்துள்ளது. இராணுவத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை, கேள்விப் பத்திர நடைமுறைக்குப் புறம்பாக ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டமை உட்பட 4 குற்றச்சாட்டுக்கள் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருந்தன. மேற்படி 4 குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரித்த இரண்டாவது இராணுவ நீதிமன்றம் நேற்று அவரை குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு ஜனாதிபதியின் அங்கீகாரத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டு ள்ளது. ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைத்தாலே தீர்ப்பு நடைமுறைப்படுத் தப்படும். புரட்டாசி 18, 2010 பாகிஸ்தானின் பிரபல அரசியல்வாதி பிரிட்டனில் சுட்டுக்கொலை பாகிஸ்தானின் பிரபல அரசியல்வாதியொருவர் பிரிட்டன் தலைநகர் லண்டனில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். வியாழக்கிழமை இவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்டது. ஐம்பது வயதுடைய இம்ரான் பாருக் என்பவரே இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவரின் சடலம் முழுவதும் சித்திரவதைக்குள்ளான காயங்களும் உள்ளன. கராச்சியில் பிரபல அரசியல் வாதியான இம்ரான் பாருக் 1992 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டுவரை தீவிர அரசியலில் ஈடுபட்டார். பின்னர் அரசியல் புகலிடம் கோரி லண்டன் சென்றார். கராச்சியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் இவரது பெயரும் தொடர்புபடுத்தப்பட்டதால் இம்ரான் பாருக் இரகசியமாக பிரிட்டன் சென்றார். இவரது கட்சியின் வருடாந்த மாநாடு லண்டனில் நடைபெறவிருந்த வேளை இனந்தெரியாதோர் பாருக் இம்ரானை கடத்திச் சென்று கொலை செய்துள்ளனர். சடலம் வீதியில் கிடப்பதாக சுற்றத்தார் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பாருக் இம்ரான் கொலை செய்யப்பட்டமை தெரியவந்தது. இவரின் செய்திகள் கட்சி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன. புரட்டாசி 18, 2010 மாவோயிஸ்டுகள் சாதித்தது என்ன? (நிர்மலன்சு முகர்ஜி) இதுநாள் வரையிலும் மத்திய இந்தியாவி லுள்ள தண்டகாரண்யா பகுதியில் மாவோ யிஸ்டுகளின் செயல்பாடுகளும், அணுகு முறையும் எப்படி இருக்கிறது என்று புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லாமல் இருந்தது. இப் போது அவர்களின் இரண்டு மூத்த தலைவர் கள் மற்றும் இரண்டு ஆதரவாளர்கள் எழுதி யுள்ள ஆவணங்கள் கிடைத்துள்ளது. இந்த நான்கின் அடிப்படையில் கடந்த கால் நூற் றாண்டு காலத்தில் மாவோயிஸ்டுகள் இப்பகு தியில் என்ன சாதித்திருக்கிறார்கள் என்பது குறித்து அறிந்துகொள்ள முடிகிறது. அரசு கடந்த காலத்தில் பழங்குடியின மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. இவர்கள் ஆதிவாசி களின் நலனுக்காக ஏதேனும் செய்திருக் கிறார்கள் என்பதைவிட ஆதிவாசிகளை தங் களுடைய ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என் பதே உண்மை. (மேலும்...)புரட்டாசி 18, 2010 தோல்வியே வெற்றியின் படிக்கட்டுகள் வீட்டு மேல் கூரையில் ஒரு சிலந்தி தனது எச்சிலை நூலாக்கி வலை பின்னிக் கொண்டிருந்தது. மிகமிக மெல்லிய நூல் இழை. அதில் தொங்கிக் கொண்டே தன் கால்களை அப்படியும் இப்படியும் அசைத்து அசைத்துத் தனது குடியிருப்பை… வலைப்பின்னலை உருவாக்கிக் கொண்டிருந்தது. சிலந்தி வலை அறுந்து அறுந்து போனாலும் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், ஓய்ந்து விடாமல் பாய்ந்து பாய்ந்து வலை பின்னியது சிலந்தி. தோல்வி அந்தச் சிலந்தியைப் பாதிக்கவே இல்லை. (மேலும்....) புரட்டாசி 18, 2010 Mystery Surrounding the Break-In and Loss of a Computer at the CTC Office I refer to the recent news reports pertaining to the supposed break-in and theft of a computer from the office of the Canadian Tamil Congress (CTC) in Scarborough which was announced to the media by the CTC’s spokesperson Mr. David Poopalapillai on the 13th of September 2010. Initially, Mr. Poopalapillai claimed that the stolen computer contained personal data of more than 300 of the illegal Tamil migrants who arrived in BC aboard the cargo ship named the MV Sun Sea. He further said that the information included the names of relatives of these migrants living in Sri Lanka and Canada as well, and even went on to blame the Government of Sri Lanka for the break-in and theft. Is this a ruse to get rid of incriminating evidence by manipulating the whole episode? (more....) புரட்டாசி 17, 2010 மக்களோடு மக்களாய் மேய்ச்சல் காணிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்க வேண்டாம் - இரா.துரைரத்தினம் ![]()
மட்டக்களப்பில் மேய்ச்சல் தரைக்கு ஒதுக்கப்பட வேண்டும் என
தீர்மானிக்கப்பட்ட பகுதிகளை வெளிநாட்டு கம்பனிகளுக்கு வழங்குவதற்காக
செங்கலடி, பெரிய புல்லுமலை, கோப்பாவெளி வவுணதீவு போன்ற போன்ற இடங்களை
பார்வையிடப்பட்டுள்ளமை கண்டனத்துக்குரியதாகும் என கிழக்கு மாகாண சபை
உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணியின் தலைவருமான
இரா.துரைரத்தினம் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு இது
தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அவசரக் கடிதத்திலேயே மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ளார்.
(மேலும்...) புரட்டாசி 17, 2010 கனடா உலகத்தமிழர் இயக்க “ஊழியர்களால்” தொடரும் காட்டிக் கொடுப்புகளும் கைதுகளும் (திகதி: 16.09.2010) (நன்றி: சங்கதி இணையத்தளம்) பதவிக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு தங்கள் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக கனடா உலகத்தமிழர் ஊழியர்கள் சிலரால் காட்டிக் கொடுப்புக்களும் கைதுகளும் தொடர்ந்தவண்ணமுள்ளன. இதை நாம் இனியும் கண்டும் காணாது இருக்க முடியாத நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். இவற்றை வெளிக் கொணர்வதின் மூலம் தமிழீழத் தேசியத் தலைவரினால் கட்டியெழுப்பப்பட்ட உலகத்தமிழர் இயக்கத்தினுள் கடந்த பல வருடமாக பெருந்தொகைப் பணத்தினை ஊதியமாகப் பெற்றுக்கொண்டு செயற்பட்டுவரும் ஒரு சிலரின் தவறான போக்கை மக்கள் முன் கொண்டுவருவது எமது தலையாய கடமையாகவுள்ளது. (மேலும்...) புரட்டாசி 17, 2010 தாய்மொழியில் கருமமாற்றுவது மக்களுக்கு சிறந்த வாய்ப்பு நாட்டில் இனமுரண்பாடு உருவானமைக்கு மொழிப் பிரச்சினையும் ஒரு காரணமாக அமைந்திருந்த தென்பது உண்மை. பலமொழிகள் பேசப்படுகின்ற இலங்கை போன்ற எந்தவொரு நாட்டிலும் மொழி ரீதியான பிரச்சினைகள் உருவாகுவது வழமை. இதன் பாதிப்புகளை எமது நாடு நீண்டதொரு காலப் பகுதியில் நன்கு அனுப வித்துள்ளது. வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் தங்களது மாகாணத்துக்கு உள்ளே அரசாங்க திணைக்களங்கள் சார்ந்த கருமங்களை நிறைவேற்றிக் கொள்வதில் சிக்கல்கள் இருப்பதில்லை. ஆனால் கொழும்பு மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்லும் போதே பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.(மேலும்....) புரட்டாசி 17, 2010 தமிழ் சினிமா பண்பாட்டை அழிக்கும் பாதை (இ.டி. ஹேமாமாலினி) குதிரையின் கண்களின் ஓரங்களில் சேணம் கட்டப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரியும். இந்த சேணம் இல்லையென்றால் என்னாகும்? நாலாபுறமும், குதிரை தன் பார்வையைத் திருப்பி, சவாரி செய்பவரை, சாக்கடையில் தள்ளிவிடும். குதிரைக்குச் சேணம் போன்றது தான் திரைத் துறைக்குத் தணிக்கைத் துறை, ஆனால் இந்த தணிக்கை என்ற சேணம், கண்ணாடியாக மாற்றப்பட்டு விட்டதோ என்றுதான் அண்மைக் காலத் திரைப்படங்களை பார்க்கிற போது நினைக்கத் தோன்றுகிறது. ஆபாச, வன்முறைக் காட்சிகள் கற்பனைக்கும் எட்டாத அளவில் கொடிகட்டிப் பறப்பதைப் பார்த்தால், வேறு என்ன எண்ணுவது? ஒரு கலையின் வடிவம் என்பது பார்க்கும் மனிதரின் மனங்களில் மாறுதல் ஏற்படுத்தும் அதி அற்புத சக்தி வாய்ந்தது. சிறு வயதில், ‘அரிச்சந்திரா’ நாடகம் பார்த்த, ‘மோகன்தாஸ்’ பின்னாளில், ‘மகாத்மாவாக மாறிய வரலாற்றின் பின்னணியில், ‘அரிச்சந்திரா’ அங்கம் வகிக்கிறது. (மேலும்....) புரட்டாசி 17, 2010 அமெரிக்காவில் ஈரான் ஜனாதிபதி ஈரான் ஜனாதிபதியை கைது செய்யக்கோரி யாரும் கவனஈர்ப்பு போராட்டம் நடத்வில்லை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஆயுத தவிர்ப்பு மாநாட்டில் ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் கலந்துகொள்வாரென ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் நம்பிக்கை தெரிவித்தார். இம்மாநாடு 24ம் திகதி நடைபெறவுள்ளது. அடுத்த வாரம் ஐ. நா.வின் பொதுச் சபை நியூயோர்க்கில் கூடவுள்ளது. இதையடுத்து ஆயுத போட்டிகளைத் தவிர்த்து நாசகார நவீன ஆயுதங்களை இல்லாமல் செய்வதற்கான மாநாடும் கூட்டப்படவுள்ளது. இம்மாநாட்டை ஐ. நா. செயலாளர் பான் கீ மூன் கூட்டவுள்ளார். இதில் ஈரானின் விடயமும் பேசப்படவுள்ளது. சர்வதேச அணு முகவர் அமைப்பின் ஈரான் தொடர்பான அறிக்கையும் இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா 24ம் திகதி சூடான் செல்லவுள்ளதால் அவர் இதில் பங்கேற்க மாட்டார். (மேலும்....) புரட்டாசி 17, 2010 புலம்பெயர் நாடுகளில் தொடரும் கோஷ்டி மோதல்கள்
இத்தாலியின் Pellegrino நகரத்தில் உள்ள சுவாமி கீதானந்தா ஆச்சிரமத்தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நான்கு இலங்கைத் தமிழர்களில் இருவர் படுகொலை முயற்சிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எஸ்.நிருஜன்(வயது 24), ஏ.சுதர்சன்(27) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆவர். இருவரும் அங்கு Genoa நகரத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஒரு காதல் விவகாரமே மோதலின் காரணம் என்று பொலிஸார் நம்புகின்றனர். இம்மோதலில் கத்திக் குத்துக்கள் இடம்பெற்றன. ஏனைய இரு இலங்கையர்களும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். சம்பவம் இடம்பெற்றபோது ஆச்சிரமத்தில் 500 பக்தர்கள் வரை திரண்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்துக்கு ஆச்சிரம நிர்வாகிகள் மன வருத்தம் தெரிவித்துள்ளார்கள். புரட்டாசி 17, 2010 துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் கொல்லப்பட்ட விவகாரம் 5 பொலிஸ் உட்பட 9 பேர் கைது, இரு அத்தியட்சகர்கள் இடமாற்றம் பேருவளையில் பொலிஸாருக்கும் கொள்ளைக் கோஷ்டியொன்றுக் குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரில் ஏழு வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐந்து பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்றது. சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் மகரகம பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஐந்து பொலிஸாரும் நான்கு பொது மக்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்....) புரட்டாசி 17, 2010 தமது வாரிசான ததே கூட்டமைப்பு சுமந்திரன் பாராளுமன்ற சபைக்கு எதிர்க்கட்சி தலைவரால் சிபார்சு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரிப்பு அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற சபைக்கு எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நியமனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள் ளது. அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அத்திருத்தத்தின் கீழ் உருவாக்கப் படும் பாராளுமன்ற சபையில் அங்கம் வகிப்பதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே தீர்மானித்திருப் பதாக அக்கட்சியின் தேசியப்பட்டியல் எம்.பி. எம். சுமந்திரன் நேற்றுத் தெரிவித்தார். (மேலும்....) புரட்டாசி 17, 2010 அமெரிக்க, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர்கள் வாஷிங்டனில் முக்கிய பேச்சுவார்த்தை அமெரிக்க, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் களுக்கிடையிலான உயர்மட்டச் சந்திப்பு வாஷிங்டனில் நடந்தது. இரண்டு முக்கிய விடயங்களில் ஒப்பமிடவும் மூன்று சம்பிரதாயபூர்வமான உடன்படிக்கையில் கையெழுத்திடும் பொருட்டும் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ஐந்து வருடங்களின் பின்னர் ரஷ்ய அமைச்சர் அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா, ரஷ்யா இடையே எழுந்த மறைமுக முறுகலைத் தணிக்கும் பொருட்டு இரு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களும் சந்தித்துக்கொண்டனர். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ், முன்னாள் சி.ஐ.ஏ அதிகாரி உட்பட அமெரிக்காவின் பாதுகாப்புத்துறைக்குப் பொறுப்பான முக்கிய அதிகாரிகளுடன் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்னியுகோ பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார். (மேலும்....) புரட்டாசி 17, 2010 சன்சீ’ கப்பல் விவகாரம் நான்கு பெண்களின் விடுதலைக்கு கனடா இடைக்கால தடை ‘சன் சீ’ கப்பல் மூலம் கனடா சென்ற இலங்கை அகதிகளில் நான்கு பெண்களை தடுப்பு நிலையத்தில் இருந்து விடுவிப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவை தற்காலிகமாக நிறுத்திவைக்க கனேடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘சன் சீ’ கப்பலில் சென்ற மூன்று தாய்மார் மற்றும் ஒரு தனிநபர் என நான்கு பெண்களை விடுவிப்பதற்கு கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகளுக்கான சபை கடந்த செவ்வாய்க்கிழமை காலை முடிவு செய்திருந்தது. எனினும் கனேடிய அரசாங்கம் சமஷ்டி நீதிமன்றத்தில் இவர்களின் விடுதலைக்கு எதிராக தாக்குதல் செய்த மனுவொன்றை அடுத்தே இந்த நான்கு பேரினதும் விடுதலைக்கு இடைக்காலத்தடை விதிக்கப்பட்டுள்ளது. (மேலும்....) புரட்டாசி 17, 201 ஐதே கட்சி எம்பி கொழுத்திப் போடும் வெடிகள் பிரபாகரன் மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள அழிவுகளை ஒவ்வொருவரும் மீட்டிப்பார்க்க வேண்டும் - பூநகரி மாவீரர் கிராமத்தில் ரங்கா எம்.பி உரை வன்னியை முப்பது வருடங்களாகத் தம் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பிரபாகரன் அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கோ, அங்கு வாழ்கின்ற மக்களின் மேம்பாட்டுக்கோ எதுவும் செய்யவில்லை. மாறாக பிரபாகரனிட மிருந்து மக்களுக்கு இன்று எஞ்சி இருப்பது அழிவுகள் மாத்திரமே. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீரங்கா தெரிவித்தார். பிரபாகரனின் தேவைக்காக தம் உயிர்களை அர்ப்பணித்த வர்களின் குடும்ப உறுப்பினர் களின் நலன்புரி நடவடிக்கை களை கூட இன்று அரசாங்கமே மேற் கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தி லுள்ள பூநகரி பிரதேசத்தி லுள்ள மாவீரர் கிராமத்திலி ருக்கும் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற வைபவ த்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார். (மேலும்....) புரட்டாசி 17, 2010 ஜப்பான் பிரதமர் நஒட்டா கானின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரிப்பு ஜப்பான் பிரதமர் நஒட்டாகானின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதனால் பிரதமராகத் தொடர்ந்து பதவி வகிக்கவும் ஜப்பான் ஜனநாயகக் கட்சியின் தலைமையை வழிநடத்தவும் வாய்ப்பேற் பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. செவ்வாய்க் கிழமை இந்த கருத்துக் கணிப்பீடு நடத்தப்பட்டது. 1553 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பீடு மேற்கொள்ளப் பட்டபோது 71 வீதமானோர் பிரதமர் நஒட்டாகானை ஆதரித்தனர். பின்னர் 1820 பேரிடம் நேர்கண்டபோது 57 வீதமானோர் நஒட்டாகானை ஆதரித்தனர். இரண்டு மாதங்களுக்கு முன்னரும் இவ்வாறான கணிப்பீடு நடந்தது. அந்நேரம் 54 வீதமனோரும் பின்னர் 49 வீதமானோரும் பிரதமர் நஒட்டாகானை ஏகமனதாக ஆதரித்தனர். (மேலும்....) புரட்டாசி 17, 2010 வட்டக்கச்சியில் ரூ. 20 மில்லியன் செலவில் இரு பாடசாலை கட்டடங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வட்டக்கச்சியில் இரண்டு பாடசாலைகளில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டிடங்களுக்கான அடிக்கல் நேற்று நடப்பட்டது. இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ எம்.பி, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினர். வட்டக்கச்சி பிரதேசத்தில் மீளக்குடியமர்த்தப்பட்ட மாணவ, மாணவிகளின் கல்வி நடவடிக்கையை கருத்திற் கொண்டு வட மாகாண கல்வி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட தற்காலிக கற்கை நிலையங்கள் இரண்டு நேற்று திறந்து வைக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித் தார். (மேலும்...) புரட்டாசி 17, 2010 நிவாரணக் கிராமங்களில் இன்னும் 25,000 பேர் மாத்திரமே இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 25 ஆயிரம் பேரே மீள்குடியேற்றுவதற்காக எஞ்சியுள்ளனர். இவர்களில் அதிகமானவர் கள் காலையில் வேலைக்குச் சென்று விட்டு மாலை வீடு திரும்புவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. நிவாரணக் கிராமங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, 10 வீதமானவர்களே மீள்குடியேற்றப்பட வேண்டியுள்ளனர். இவர்கள் முகாம்களில் வைக்கப்பட்டுள் ளதாக கூற முடியாது. ஏனென்றால் அவர்கள் தினமும் தொழிலுக்குச் சென்று மாலையில் திரும்பி வருகின் றனர். புரட்டாசி 17, 2010 அன்று புலிப் பயங்கரவாதம், இன்று ஆயுதப்படைகளிள் பயங்கரவாதம்- JVP கே.டீ. லால்காந்த _ வட கிழக்கு யுத்தம் முடிவுக்கு வந்த போதும் அங்கு இன்னும் பாதுகாப்பு படையினரினதும் பொலிஸாரினதும் ஆதிக்கம் காணப்படுகின்றது எனவும் அன்று புலிப் பயங்கரவாதம், இன்று ஆயுதப்படைகளிள் பயங்கரவாதம் உள்ளது என்று தேசிய தொழிற்சங்க அமைப்பின் தலைவரும் மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினருமான கே.டீ. லால்காந்த தெரிவித்தார். வவுனியாவில் எமது காரியாலயம் இருக்கும் வீட்டுக்கு அடிக்கடி படையினர் செல்கின்றனர். யாழ்ப்பாணத்தில் எமது பிரசுரங்களை ஒட்டிக் கொண்டிருந்த உறுப்பினர்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணத்து சாதாரண பொது மக்கள். அன்று புலிப் பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப் பட்டவர்கள் இன்று ஆயுதப்படைகளால் அச்சுறுத்தப் படுகின்றனர் என்றும் அவர் கூறினார்.(மேலும்...)புரட்டாசி 17, 2010 ஐ. நா. மாநாடுஜனாதிபதி தலைமையிலான குழு நியூயோர்க் பயணம்ஐ. நா. வின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு நியூயோர்க்கிற்கு புதன்கிழமை பயணமானது. முற்பகல் 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட யூ. எல். 503 இலக்கமுடைய லண்டன் செல்லும் விமானத்தில் இக் குழு பயணமானது. ஜனாதிபதி தலைமையிலான குழுவில், வெளி விவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் அடங்குகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் உச்சி மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் ஈமிலேனியம் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும். புரட்டாசி 17, 2010 சந்திரகாந்தன் மதுபான சாலை உரிமையாளர்களுடன் கலந்துரையாடல் _ முதலமைச்சர் சந்திரகாந்தன் கடந்த 13 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து மதுபான சாலை உரிமையாளர்களையும் அழைத்து தனது அலுவலகத்தில் கலந்துரையாடினார். இங்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர், கடந்த காலங்களிலே விடுதலைப்புலிகளுக்கு அதிகம் பணம் வழங்கி இருந்தீர்கள், பின்னர் த.ம.வி.புலிகளுக்கு உதவினீர்கள். தற்போது இவையெல்லாம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, சுமுகமாக கிழக்கு மாகாண சபையால் உருவாக்கப்பட்ட சட்டமூலத்தின் அடிப்படையில் வரி அறவிடப்பட சட்டமூலம் இயற்றி அது இன்று அமுலில் இருக்கின்றது. (மேலும்...)புரட்டாசி 16, 2010 கனடிய தமிழ் காங்கிரஸ் காரியாலய உடைப்பு, உள் வீட்டு நாடகம்? (கனடா கந்தசாமி) பூபாலபிள்ளை கூறுவது போல, இலங்கை அரச புலனாய்வுப் பிரிவுதான், அவரது காரியாலயத்தை உடைத்து கணினியைத் திருடியிருந்தால், உண்மையில் அது ஒரு உலக சாதனைதான். ஏனெனில் இலங்கையிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கப்பால் இருக்கும் கனடாவுக்கு வந்து, மிகவும் பாதுகாப்பு மிகுந்த இந்த நாட்டில், கனடிய தமிழ் காங்கிரஸ் காரியாலயத்தைக் கண்டு பிடித்து, அந்த குறிப்பிட்ட கணினியையும் மோப்பம் பிடித்து, அதைத் திருடியிருந்தால், அது உலக அதிசயம் அல்லாமல் வேறு என்ன? அப்படிச் செய்பவர்கள், கே.பியை மலேசியாவிலிருந்து லாவகமாகக் கடத்திச் சென்றது போல, கனடியத் தமிழர்களின் புதிய ‘மேய்ப்பனான’ டேவிட் பூபாலபிள்ளையையும் ஒரு நாள் கடத்திச் சென்றால் ஆச்சரியம் இல்லையல்லவா? இலங்கை அரசின் புலனாய்வுப் பிரிவுக்கு அத்தகைய ஒரு அசகாய சூரத்தனம் இருக்குமானால், உலகின் முன்னணி உளவு அமைப்புகளான சீ.ஐ.ஏ., கே.ஜி.பி., மொசாட், றோ என்பன, இனிமேல் இலங்கை அரசின் உளவு அமைப்பிடம் பயிற்சி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை! (மேலும்...) புரட்டாசி 16, 2010 யாழ். குடாவில் மீளக்குடியேற
யாழ். குடா நாட்டில் மீளக்குடி யேறுவதற்கு 150 சிங்களக் குடும்பங்கள் விண்ணப்பித்திருப்பதாக யாழ்ப்பாண பாதுகாப்பு படையின் சிவில் விவகார பொதுசன அலுவலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இந்த 150 குடும்பங்களின் உறுப்பினர்களும் இடம் பெயர்ந்து அனுராதபுரம், மிஹிந்தல போன்ற பல இடங்களில் நண்பர்கள், உறவினர்களின் இருப்பிடங்களில் தற்போது தங்கி இருப்பதாகவும் அவ்வதிகாரி கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், யாழ். குடா நாட்டில் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக வசித்து வந்த இந்த சிங்களக் குடும்பங்களின் உறுப்பினர்களே திரும்பவும் யாழ்ப்பாணத்தில் குடியேற விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருக்கின்றார்கள். இவர்களில் பலர் திருநெல்வேலி, கொழும்புத்துறை போன்ற பிரதேசங்களில் வசித்துள்ளார்கள். அவர்களது காணிக்கான உரிமைப் பத்திரங்களையும் அவர்கள் வைத்திருக்கின்றார்கள். இவர்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்று, தொழில் புரிந்துள்ளார்கள். புரட்டாசி 16, 2010உயர் பாதுகாப்பு வலயமானயாழ். வலிகாமம் வடக்கு பகுதியில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதியாழ். உயர் பாதுகாப்பு வலயமான வலிகாமம் வடக்கு பகுதியில் மீள் குடியேற்றத்துக்கான அனுமதி நேற்று வழங்கப்பட்டதாக யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். வலி வடக்கு பகுதியில் கீரிமலை, மாவட்டபுரம், கட்டுவன் பகுதியில் சுமார் 4146 குடும்பங்களைச் சேர்ந்த 14,500 பேரை மீளக்குடியமர்த்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் யாழ். அரச அதிபர் தெரிவித்தார். இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் யாழ். நகரில் பல்வேறு பகுதிகளில் உறவினர்கள் நண்பர்கள் வீடுகளில் பல வருடங்களாக தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரையும் மீளக்குடியமர்த்துவதற்காக வலி வடக்கு பகுதிக்கு இவர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர். புரட்டாசி 16, 2010 களைகட்டும் ததே கூட்டமைப்பு அரசு உறவு அமைச்சர் பசில் தலைமையில் யாழ். மாவட்ட மீளாய்வுக் கூட்டம் யாழ். மாவட்ட அபிவிருத்தி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று யாழ்ப்பாணம் செயலகத்தில் இடம்பெற்றது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் வடமாகாணத்திற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதில் கலந்து கொண்டார். யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அபிவிருத்தி முன்னேற்றங்கள் குறித்து விளக்கினார். இந்தக் கூட்டத்தில் பாரம்பரிய கைத்தொழில் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வட மாகாண ஆளுநர் ஜி. ஏ. சந்திரசிறி, வட மாகாண பொது நிர்வாக செயலாளர் தி. இராசநாயகம், கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ. சரவணபவன், இ. சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், பிரதேச சபை செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். (மேலும்...) புரட்டாசி 16, 2010 தனித்துவம் மிக்க தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் (நினைவு தினம் இன்று)
கிழக்கிழங்கை முஸ்லிம் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பிரதேசமாகும். முஸ்லிம்கள் அடர்த்தியாகவும் செறிவாகவும் வாழும் இப்பிரதேசமானது தனது வரலாற்றில் தனக்கென தனித்துவமிக்க தலமைத்துவத்தை உருவாக்கி வரலாறு படைத்துக்கொண்டது. இவ்வரலாறு என்பது அஷ்ரஃப் எனும் பெரும் ஆளுமையாகும். இலங்கை அரசியலில் அஷ்ரஃப் ஏற்படுத்திய அதிர்வுகள் சிறுபான்மைச் சமூகம் ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதித்துக்காட்ட முடியும் என்பது நிரூபிக்கப்பட்டது. (மேலும்...)
புரட்டாசி 16, 2010 உலக ஓசோன் தினம் இன்று பூமியின் நண்பர்களாவோம்! (எஸ்.எம். மன்சூர்) புவியின் கடல் மட்டத்திலிருந்து பதினைந்து தொடக்கம் முப்பது கிலோ மீற்றர் வரையான உயரத்தில் காணப்படுகின்ற ஓசோன் வாயுப்படலத்தில் சூரியனிலிருந்து பூமியை அதாவது வளிமண்டலத்தை நோக்கியதாக வருகின்ற கதிர்வீச்சில் காணப்படுகின்ற ஊதாக்கதிர்கள் வளியிலுள்ள ஒட்சிசனைத் தாக்கி ஓசோனை உருவாக்குகின்றன. ஓசோன் ஓட்டைகள் விசாலமாகி வருவதை உணர்ந்ததன் விளைவு விஞ்ஞானிகளினால் 1920 ஆண்டு காலப்பகுதியில் தயாரிக்கப்பட்ட சில வகையான இரசாயனப் பதார்த்தங்கள் காரணமென கண்டறிந்தனர். இதில் முக்கியமானதுதான் குளோரோ புளோரே காபன்களாகும். ஓசோன் படலம் அரிப்புறுமானால் மனிதனுக்கு மட்டுமன்றி புவியில் காணப்படுகின்ற அனைத்துவகை உயிரினங்களுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதையும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். (மேலும்...) புரட்டாசி 16, 2010 சிறைச்சாலைகள் சீர்திருத்த மையங்களே நாட்டில் குற்றச் செயல்கள் இடம் பெறுவதை இயன்ற ளவு குறைப்பதற்குத் துணை புரிவதே சிறைச்சாலை களிலிருந்து எதிர்பார்க்கப்படும் பணி. நாட்டில் குற் றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத் தண் டனை விதிப்பது அவர்களைச் சமூகத்திலிருந்து ஓரங்கட்டுவதற்காகவல்ல. தண்டனைக் காலத்தில் அவர்கள் திருந்தி நல்ல பிரசைகளாக வாழவேண்டும் என்ற நோக்கத்துடனேயே சிறைத்தண்டனை விதிக்கப்படு கின்றது. தண்டனைக் காலத்தில் தங்கள் தவறை உணர்ந்து திருந்தி நற்பிரசைகளாக வாழ்பவர்கள் பற் றிய தகவல்கள் கிடைக்கின்ற அதேவேளை சிறை ச்சாலைகளில் இடம்பெறும் குற்றச் செயல்கள் பற் றிய தகவல்களும் நாளாந்தம் வெளிவருகின்றன. (மேலும்...) புரட்டாசி 16, 2010 பாலஸ்தீனம் - இஸ்ரேல் நேரடிப் பேச்சுவார்த்தையின் இரண்டாம் கட்டம் கெய்ரோவில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பல வழிகள் உள்ளன. இஸ்ரேல், பலஸ்தீன் தலைவர்களது நடவடிக்கைகளிலே அந்த வழிகள் தங்கியுள்ளன. அடிப்படை பிரச்சினைகளை இலக்காக வைத்து பேச்சுக்களைத் தொடர்ந்தால் சமாதானத்தை சாதிக்க முடியும். இரண்டு நாடுகள் இரு எல்லைகள் என்ற அடிப்படையை நோக்கியதாய் பேச்சுக்கள் அமையவேண்டும். யூதக் குடியேற்றம் தொடர்பான வீண் விவாதங்களை வீசிவிட்டு பிரயோசனமுள்ள பேச்சுக்களில் கவனம் செலுத்துவதற்கான கால எல்லைக்குள் நுழைந்துவிட்டோம். (மேலும்...) புரட்டாசி 16, 2010 காலநிலை பாதுகாப்பு மகாநாட்டில் 17 நாடுகளின் பிரதிநிதிகள் சந்திப்பு காலநிலையைப் பாதுகாப்பது தொடர்பான முக்கிய கூட்டமொன்று இம்மாதம் 20, 21ம் திகதிகளில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் உலகில் எண்பது வீதமான காபனீரொட்சைட்டை வெளியிடும் 17 நாடுகள் பங்கு கொள்ளவுள்ளதாக அமெரிக்க அதிகாரியொருவர் சொன்னார். காலநிலையைப் பாதுகாப்பது தொடர்பான மாநாடு கடந்த வருடம் டென்மார்க்கின் தலைநகர் கொபன்ஹேகில் நடந்தது. இம்மாநாடு அமெரிக்கா போன்ற நாடுகளின் கடும் போக்கால் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. (மேலும்...) புரட்டாசி 16, 2010 புதுக்குடியிருப்பு பிரிவில் மீள்குடியேற்றம் ஆரம்பம் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக் குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவில் மக்களை மீள் குடியேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முல்லைதீவு அரச அதிபர் வேத நாயகம் நேற்று கூறினார். இதன்படி முதலில் விஸ்வமடு மேற்குப் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 989 பேர் மீள் குடியேற்ற ப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இதன்படி முதற் தடவையாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மக் கள் மீள் குடியேற்றப்பட்டுள்ள தோடு அடுத்து விஸ்வமடு கிழக்கில் மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ள தாகவும் அரச அதிபர் கூறினார். இந்த வார இறுதிக்குள் விஸ்வமடு கிழக்கு பகுதி முற்றாக மிதிவெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்து க்காக கையளிக்கப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது. (மேலும்...) புரட்டாசி 16, 2010 வடமராட்சி கிழக்கில் மீள் குடியேறும் மக்களுக்காக அடிப்படை வசதிகள்வடமராட்சி கிழக்கில் மீள்குடியேறிவரும் மக்களின் நலன் கருதி அரசின் பல்வேறு நல சேவைத் திட்டங்கள் நேற்று முன்தினம் (செவ்வாய்) பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டன. யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, அரச நிர்வாகத் தொடர்பாடல் உள்ளிட்ட பல்வேறு நலச் சேவைகள் இதில் அடங்குகின்றன. ஆழியவளை – பருத்தித்துறை, ஆழியவளை - கொடிகாமம் ஆகிய பாதைகளுக்கான பஸ் சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் செம்பியன் பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை, வடமராட்சி கிழக்கு பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் வத்திராயன் கிளை, மருதங்கேணி அரசினர் கிராமிய வைத்தியசாலை ஆகிய சேவைகள் மீள ஆரம்பித்து வைக்கப்பட்டன. (மேலும்...) புரட்டாசி 16, 2010 ஐரோப்பிய பிரதிநிகள் கிழக்கு மாகாண முதலமைச்சரை சந்தித்துள்ளனர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளுக்கான வதிவிட இணைப்பாளர் நீலவூனே தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் பிரதிநிதிகள் மற்றும் உதவி வழங்குநர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனை திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து நேற்று நடத்தியுள்ளனர். இச்சந்திப்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு துறைகள் சார்ந்த அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டியுள்ளது, தற்போது பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல வெளிநாட்டு உதவி வழங்குனர்களினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. (மேலும்...) புரட்டாசி 16, 2010 பசங்க’ திரைப்படத்திற்கு 3 தேசிய விருது சிறந்த இசையமைப்பாளர் இளையராஜா சிறந்த நடிகர் அமிதாப்பச்சன் 2009-ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள், புதனன்று அறிவிக்கப்பட் டன. இதில், சிறந்த பிராந்திய மொழித் திரைப்படமாக, தமிழில் வெளியான “பசங்க” தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த உரையாடல் ஆசிரியர்க் கான விருது, சிறந்த குழந்தை நட்சத் திரங்களுக்கான விருது ஆகியவையும் “பசங்க” திரைப்படத்திற்கு கிடைத் துள்ளது. சிறந்த உரையாடல் ஆசிரியர்க்கான விருதை, “பசங்க” படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் பெற்றுள்ளார். இப்படத்தில் நடித்த ஜீவா, அன்புக்கரசி ஆகியோர் சிறந்த குழந்தை நட்சத்திரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். (மேலும்...)புரட்டாசி 16, 2010 வவுனியா ரயில் தொடர்ந்தும் அநுராதபுரம் வரை அநுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் கடந்த 13ம் திகதி மாலை சாலியபுர பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதையடுத்து பாதிக்கப்பட்டுள்ள கொழும்பு, வவுனியா வரையிலான ரயில் சேவையை மேற்கொள்வதற்கு இன்னும் இரு தினங்களுக்கு மேல் செல்லுமென அநுராதபுரம் புகையிரத நிலைய அதிபர் தம்பிராசா செந்தில்நாதன் தெரிவித்தார். தற்சமயம் ரயில் தடம்புரண்ட பகுதியிலுள்ள ரயில் பாதையை திருத்தும் பணிகளில் புகையிரத திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதுடன் கொழும்பிலிருந்து வரும் ரயில் சேவைகள் அனைத்தும் அநுராதபுரம் வரை இடம்பெறுவதாக அவர் மேலும் தெரிவித்தார். புரட்டாசி 16, 2010 கிழக்கில் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்: சந்திரகாந்தன். _ ![]() கிழக்கில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் தமிழ் மக்களுக்கு சேவை செய்யும் ஒரே கட்சி மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தங்களது அன்றாட தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாமல் பல தமிழ் மக்கள் இருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறுபட்ட தேவைகளுடைய மக்களுக்கு சேவை செய்கின்ற அரசியல் கட்சி என்றால் அது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை தவிர வேறொன்றுமில்லை. என கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார். (மேலும்...) புரட்டாசி 15, 2010 மக்களோடு மக்களாய் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இன்று ஐக்கியமே முக்கியம்
வரதராஜபெருமாள் அவர்கள் தமிழ் கட்சிகளிடையே ஐக்கியத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். தமிழ் மக்கள் அனுபவித்த, அனுவிக்கின்ற துன்பங்கள், துயரங்களுக்கு பரிகாரம் காணவும், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கவும் இது அவசியம் எனவும் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் ஐக்கியத்தை ஏற்படுத்த ஈபிஆர்எல்எவ் முன்முயற்சி எடுத்து செயற்படுத்தி காட்டிய காலகட்டங்களையும் நினைவுபடுத்தினார். இந்தியா எமக்கு உதவ முன்வந்த சந்தர்ப்பத்தில் இந்தியாவை உதாசீனம் செய்தவர்கள் இப்போது இந்தியா உதவிக்கு வரவில்லை என அங்கலாய்க்கிறார்கள். 50 களிலிருந்து வீரவசனங்களை பேசிவந்த தமிழ் தலைவர்கள், தமிழ் மக்களுக்க எதையும் பெற்றுத்தரவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். (மேலும்...) புரட்டாசி 15, 2010 தமிழ் தேசியக் கூட்டமைப்பு நகரபிதா நாதனின் செயலை ஆட்சேபித்து வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மைதானத்தில் சத்தியாக்கிரகம் வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டத்தை நகரசபைத் தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை இடை நிறுத்தி வைத்ததையடுத்து சபை உறுப்பினர்கள் 10 பேரும் மேற்படி சனநாயக விரோதச் செயலை கண்டிப்பதாகத் தெரிவித்து அமைதியான முறையில் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கொளுத்தும் வெய்யிலில் சுமார் இரண்டு மணி நேரம் வாய்களை கறுப்புத் துணியினால் கட்டியவாறு உறுப்பினர்கள் அமைதியான முறையில் மைதானத்தின் நடுவில் அமர்ந்திருந்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உப தலைவர் முகுந்தரதன் உள்ளிட்ட உறுப் பினர்களான எஸ். சுரேந்திரன், எஸ். சிவகுமார், இ. கனகையா, புளொட் உறுப்பினர்களான எதிர்க்கட்சி தலைவர் ரி. லிங்கநாதன், சு. குமாரசாமி, பார்த்திபன், பொதுசன ஐக்கிய முன்னணி உறுப்பினர்கள் லலித் ஜயசேகர, அப்துல்பாரி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் எல். முனாபர் ஆகிய பத்து சபை உறுப்பினர்களும் தலைவரின் நடவடிக்கையினை ஆட்சேபித்து கட்சி பேதமற்ற முறையில் தாங்கள் இந்தப் போராட்டத்தில் இறங்கியதாக குறிப்பிட்டனர். புரட்டாசி 15, 2010
கனடாவில் புகலிடம் பெறும் சன் k கப்பலில் வந்த முதல் குடும்பம் சன் k கப்பலின் மூலம் கனடாவை வந்தடைந்த இலங்கை அகதிகளில் முதற் தடவையாக, ஒருதாய் மற்றும் மூன்று குழந்தைகளுக்கு புகலிடம் வழங்கப்பட்டு ள்ளது. அடைக்கலம் வழங்கப்பட்ட பெண் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், ஏனையோருக்கான விசாரணைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதேவேளை, அடைக்கலம் கோரிய மற்றுமொரு தாய் மற்றும் குழந்தைக்கு கனேடிய அதிகாரிகள் அடைக்கலம் வழங்க மறுத்துள்ளனர். புரட்டாசி 15, 2010 பெரியாருடன் ஒரு பயணம் பெரியார் தனது சிந்தனைகளை பகிரங்கப்படுத்தியதும், பிரச்சாரம் செய்ததும் அதிலிருந்து பொருள் ஈட்டவோ, புகழ் பெறவோ அல்ல; தேர்தலில் வாக்குகள் பெறவும் அல்ல. மாறாக அவரது சிந்தனைகள் அன்றைய சமூகப் போக்கிற்கு நேர் எதிராக இருந்த காரணத்தால் எதிர்ப்புகளையும் இழப்புகளையுமே அவர் சந்தித்தார். பெரியாரின் இந்த நெடும்பயணம் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொரு மனிதனுக்கு வழிகாட்டியாக இருக்கக் கூடியது. அந்தப் பயணத்தின் சில பக்கங்களை, மிக முக்கியமான பக்கங்களை, பெரியாரின் சிந்தனைப் போக்கை, பெரியாரின் சொற்களிலேயே அறியும் வாய்ப்பாகவே பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் குடி அரசு தொகுப்பு விளங்குகிறது. (மேலும்...) புரட்டாசி 15, 2010 15.09.2010 ரிபிசியின் விசேட அரசியல் கலந்துரையாடலில்: ஜக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ச அத்தநாயக்க 15.09.2010 ரிபிசியின் புதன்கிழமை விசேட அரசியல் கலந்துரையாடல் இந் நிகழ்ச்சியில் ஜக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ச அத்தநாயக்க ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம்; ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் செ ஜெகநாதன் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் ஒன்றியத்தின் முன்னால் தலைவர் நஜாமுகமட் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் புதன்கிழமை மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம் தொடர்புகளுக்கு: 00 44 208 9305313 To participate you can call us on 00 44 208 9305313 at 8.00 pm to 10.00 pm புரட்டாசி 15, 2010 Break-in at Canadian Tamil Congress Office in Scarborough I refer to the front page news report of September 13th filed by Jayme Poisson and a follow up report with a picture of the CTC spokesperson David Poopalapillai in the Greater Toronto section of today’s edition filed by San Grewal, where the reported loss of alleged data pertaining to illegal Tamil migrants aboard the MV Sun Sea has been scaled back to a couple of dozen names from the prior figure of more than 300 records. (more...) புரட்டாசி 15, 2010 ONTARIO POLICE WARNING - this is serious! THIS IS NOT A JOKE. I have been asked by local authorities to write this email in order to get the word out to car drivers of a very dangerous prank that is occurring in numerous cities. Some person or persons have been affixing hypodermic needles to the underside of gas pump handles. These needles appear to be infected with HIV positive blood. In the Simcoe area alone there have been 17 cases of people being stuck by these needles over the past five months. (more....) புரட்டாசி 15, 2010
Arms Purchase: Poopalapillai disowns his predecessor in the CTC
The Canadian Tamil Congress (CTC) spokesperson David Poopalapillai, said that he did not know Sahilal Sabaratnam who was listed in 2005 in a press release as the director of communications of CTC. Sabaratnam was one of the three Canadians of Sri Lankan origin who were arrested in the US three days ago on charges related to purchase of arms for the LTTE and bribing US bureaucrats for certain favours that involved illegal activities. Poopalapillai who lent vociferous objections to Canada’s ban of the Liberation Tigers of Tamil Eelam along with his CTC colleagues, went to the extent of saying that he didn’t think any Sri Lankans in Canada would knowingly contribute support to the rebel group meaning the LTTE. (more....) புரட்டாசி 15, 2010 அபிவிருத்தியடைந்த மாவட்டமாக கிளிநொச்சி இன்றைய கிளிநொச்சி மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டத் தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அடிப்படையில் விவசாயப் பிரதேசமான கிளிநொச்சி அபிவிருத்தியைப் பொறுத்த வரையில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்தது. யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகத்தினால் குடியேற்றத் திட்டங்கள் உருவாக்கப்பட்டதைத் தவிர அபிவிருத்தித் திட்டம் எதுவும் அங்கு செயற்படுத்தப்படவில்லை. அக் குடியேற்றத் திட்டங்க ளில் குடியமர்த்தப்பட்டவர்களே இன்று கிளிநொச்சி மாவட்ட சனத்தொகையில் கணிசமான பிரிவினராக உள்ளனர். கிளிநொச்சியை ஒரு விவசாயப் பிரதேசமாக அடையாள ப்படுத்திய போதிலும் அங்கு வேறு வளங்கள் இல்லாமலில்லை. கால்நடை வளர்ப்புக்கும் இது உகந்த பிர தேசம். பால் பதனிடும் தொழிற்சாலையொன்றை இங்கு அமைப்பதற்கான சகல வளங்களும் இங்கு உண்டு. (மேலும்...) புரட்டாசி 15, 2010 வியப்பூட்டும் இந்திய - சீன பாரம்பரியம் (டி.ஞானையா) ஒரு மிகப்பெரிய வினோதம், சீனாவின் பல பிராந்தியங்களில் சரஸ்வதி என்ற தெய்வம் வழிபடப்படுகின்றாள். கல்வி, ஞானம், போரில் வெற்றி, இயற்கை சீற்றங்களிலிருந்து பாது காப்பு ஆகியவை இந்த சரஸ்வதி தேவதை யின் மகத்துவம் என்று மக்கள் நம்பி வந்தனராம். யானைமுகம் தெய்வமான விநாயகர் சில பகுதிகளில் வணங்கப்படுவது உண்டு. கி.பி. 6ம் நூற்றாண்டிலிருந்து புனித யாத்திரை தலங்களில் விநாயகர் உருவ பொம்மைகள் விற்கப்பட்டு வருகின்றனவாம். ஷான்க்ஸி மாகாணத்தில் சிவலிங்கம் போன்ற வடிவில் ஒரு பகோடா (பவுத்த ஆலயம்) காட்சி யளிக்கின்றது. அதை ஒட்டியுள்ள குகை களில் சிவன், இந்திரன், விஷ்ணு ஆகியோ ரின் விக்கிரகங்கள் காணலாம். சிவபெருமான் மூன்று தலைகள், எட்டுகால்களுடன் ஜம் மென்று தனது வாகனமான காளை மாட்டின் மீது சவாரி செய்கிறார்! (மேலும்...) புரட்டாசி 15, 2010 நுண்ணுயிர்கொல்லி மருந்தின் வயது 1500 நோய்க் கிருமிகளை அழிக்கக் கூடிய மருந்தான டெட்ராசைக்ளின் மருந்து 1500 ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் பயன்படுத்தியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அன்டிபயட்டிக் மருந்து குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் விஞ்ஞானிகள் சூடான், எகிப்து நாடுகளின் எல்லைப் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கு ஒரு பதப்படுத்தப்பட்ட மம்மி கிடைத்துள்ளது. அதனை ஆராய்ச்சி செய்த போது நவீனகாலக் கண்டுபிடிப்பான டெட்ராசைக்ளின் மருந்து பயன்படுத்தப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும் ஆராய்ச்சி செய்தபோது 1500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்திருந்த மக்கள் தாங்கள் அருந்திய மதுபானங்களில் இந்த வகை மருந்துக்கான மூலப் பொருட்களை கொண்டு தயார் செய்திருப்பதை கண்டறிந்தனர். மேலும் ஆராய்ச்சி செய்து இதனை உறுதிப்படுத்தினர். மேலும் இந்த 20ம் நூற்றாண்டில் தான் அன்டிபயட்டிக் எனப்படும் டெட்ராசைக்ளின், பென்சிலின் போன்ற மருந்துகள் அறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி 15, 2010 ஜப்பானில் 100 வயதிற்கு மேற்பட்டோர் பலரைக்காணவில்லைபட்டியலில் உள்ள 884 பேர் இப்போது உயிருடன் இருந்தால் அவர்களின் வயது 150 ஆக இருக்க வேண்டும். 77118 பேரின் வயது 120 ஆக இருக்கவேண்டும். இதனால் அரசாங்கம் 120 வயதை தொட்டவர்கள் அல்லது அதை கடந்தவர்களின் வசிக்குமிடம் தெரியாவிட்டால், அவர்களின் பெயர்களை நீக்கும்படி உத்தரவிட்டு உள்ளது. ஜப்பானில் சராசரி ஆயுள் காலம் ஆண்களுக்கு 79.59 என்றும் பெண்களுக்கு 86.44 என்றும் அந்த நாட்டு சுகாதார துறை அறிவித்து உள்ளது. இதுவே உலக சாதனை ஆகும். (மேலும்...) புரட்டாசி 15, 2010 அப்படிப்போடு அரிவாளை சம்பந்தன், மாவையின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பத்தை அனுபவிக்கவில்லை அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் யுத்தத்தின்போது துன்பங்களை அனுபவிக்கவில்லை. அவர்கள் இந்தியாவிலும், இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயின்றனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா தெரிவித்தார். அப்பாவித் தமிழ் மக்களின் பிள்ளைகள் யுத்தத்தின் துன்பங்களை அனுபவிக்கையில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா போன்றோரின் பிள்ளைகள் வெளிநாட்டு பல்கலைக்கழகங் களில் கல்வி பெற்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் இந்த அப்பாவி மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக இவர்கள் வந்து விடுகின்றனர். தம்பிள்ளைகளைப் போன்று அடுத்தவரின் பிள்ளைகளையும் பார்க்க வேண்டிய பண்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு வரவேண் டும் எனவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....) புரட்டாசி 15, 2010 18வது அரசியலமைப்புத் திருத்தம் அமெரிக்காவின் கருத்து உள்விவகார தலையீடாகுமென இலங்கை அதிருப்தி “18 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக அமெரிக்கா தெரிவித்துள்ள கருத்து எமது நாட்டின் உள்விவகாரத்தில் தலையீடு செய்வதாகும். இது தொடர்பிலான எமது அதிருப்தியை அமெரிக்காவுக்கு தெரிவித்துள்ளோம்”. “அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பிலான எமது தெளிவான நிலைப்பாட்டை முன்வைத்தோம். எமது நிலைப்பாட்டை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் தெரிவித்தார். ஒரு நாட்டின் உள்விவகாரம் தொடர்பில் செயற்படுகையில் இதனைவிட கவனமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். (மேலும்.....) புரட்டாசி 15, 2010 சிறைகளிலுள்ள முதியோர், சிறுவரை விடுவிக்க நடவடிக்கை ஜனாதிபதி பணிப்புரை சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவி க்கும் சிறுவர் மற்றும் முதியவர்களை விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். சிறுவர் மற்றும் முதியோரை விடுதலை செய்யும் வகையில் சிபாரிசினை தமக்கு முன்வைக்குமாறு ஜனாதிபதி அமைச்சர் டியூ. குணசேகரவிற்கு உத்தரவிட்டார். நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற தேசிய கைதிகள் நலன்புரி தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி அத்தாட்சிப்படுத்தப்பட்ட அனுமதி மூலமாக ஐந்து சிறைக் கைதிகளை விடுதலை செய்தார். புரட்டாசி 15, 2010 வெனிசுலாவில் விமான விபத்து 15 பேர் பலிவெனிசுலாவில் உள்ள கியூபாடு கயானாவில் மானுவல் கார்லோஸ் விமான நிலையத்தில் இருந்து ஏ.டி.ஆர். 4வது டர்போபாப் பயணி கள் விமானம் பொலிவர் மாகாண த்தில் உள்ள மார்கார்டியா என்ற சுற்றுலா தீவுக்கு சென்றது. இந்த விமானத்தில் 47 பயணிகள் இருந் தனர். மேலும் 4 ஊழியர்களும் பயணம் செய்தனர். விமானம் கியூபாடு கயானாவில் இருந்து புறப்பட்ட வுடன் அதன் அருகே உள்ள இரும்பு தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 15 பேர் உயிரிழ ந்தனர். 36 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம& |