Contact us at: sooddram@gmail.com

 

கார்த்திகை 2011 மாதப் பதிவுகள்

கார்த்திகை 30, 2011

கொதிநிலையில் பாகிஸ்தான்

பாகிஸ்தானில் நீண்டகாலமாக அதிகாரத் தில் இருந்த ராணுவ ஆட்சியாளர்களும் சரி, குறைவான காலமே ஆட்சியில் இருந்துள்ள ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களும் சரி, அமெரிக்காவுக்கு வெண் சாமரம் வீசியதன் விளைவை அந்த நாடு அறு வடை செய்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா, தனது “ஆப்-பாக்.” திட்டத் தின் அடுத்த கட்டமாக, பாகிஸ்தானை கேள்வி ஏதும் கேட்காத முழு அடிமையாக்க முயல்கிறது. அதன் அடையாளங்கள் தான், கடந்த பிப்ர வரியில் அமெரிக்கத் தூதர் என்ற பெயரில் இயங் கிய சிஐஏ ஏஜெண்டான ரேமண்ட் டேவிஸ் என்பவர், லாகூர் சந்தையில் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் இரண்டு அப்பாவி இளை ஞர்களைச் சுட்டுக்கொன்றார். அடுத்து, மே மாதம் அபோட்டாபாத்தில் அமெரிக்கப் படை கள் அத்துமீறிப் புகுந்து பின்லேடனைக் கொன் றது; இப்போது நேட்டோவின் தாக்குதலில் 24 ராணுவ வீரர்கள் பலி...! அமெரிக்காவை நம்பி வாழ்ந்த நாடு எதுவும் இல்லை. அந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் சேருகிறது. இனியும் அமெரிக்காவின் ஏவலாளி களாக பாகிஸ்தான் ஆளும் வர்க்கத்தினர் நீடிக்க முடியாது. அந்த நிர்ப்பந்தம் ராணுவத் திற்குள்ளேயே எழுந்துள்ளது. ஏகாதிபத்தியத் தின் தாக்குதல் மட்டுமின்றி வேலையின்மை யும் வறுமையும் விரட்டுவதால் வீதிகளில் மக்கள் திரள்கிறார்கள். இந்த எழுச்சி பரவட்டும். பாகிஸ்தான் மக்கள் வெல்லட்டும்! (மேலும்....)

கார்த்திகை 30, 2011

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் - மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள்!

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே தீர்வு வழங்க முடியும் என இரண்டு மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எந்தவொரு நாடோ அல்லது அரசாங்கமோ தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். எம்.மனோகரன் மற்றும் எஸ். ராமகிருஸ்ணன் ஆகிய மலேசிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தினால் மட்டுமே அந்நாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இனப்பிரச்சினையால் தமிழ் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தல் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமன்றி யுத்த வலயத்தில் இயல்பு நிலைமையை ஏற்படுத்தவும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கார்த்திகை 30, 2011

கொட்டியாரம் வரலாற்று அறிமுகம்

இவ்வரலாற்றுக் குறிப்புக்களில் முஸ்லிம்கள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெறவில்லை அது தனியாக பார்க்கப்படவேண்டிய விடயம். இங்கு நான் குறிப்பிடும் தகவல் என் அறிவுக்கு எட்டிய வரையில் தொகுக்கப்பட்டுள்ளன.இதற்கு மேலதிகமான ஈழத்தில் புராதனமான வரலாற்று சான்றுகள் நிறைந்த இடங்களில் கொட்டியார பிரதேசமும் முக்கியம் பெறுகிறது. இங்கு கிடைக்கபெற்ற கல் வெட்டுக்கள், சாசனங்கள், இலக்கியங்கள், செப்பேடுகள், பழைய கட்டிட இடிபாடுகள், தொல்மரபுக்கதைகளும் பாடல்களும் இப்பிரதேசத்தின் வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. பல்லாயிரம் வருடங்களுக்கு முந்தய பழம் தொல் குடி இடப்பெயர்வுகள் இப்பிரதேசத்தில் உள்ள துறைமுகங்களான இளக்கந்தை, இலந்தத்துறை, வெருகல் ஆகியவை பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. வெருகல் பிரதேசத்தில் கண்டெடுக்கபட்ட முதுமக்கள் தாழி கிறிஸ்துவுக்கு முற்பட்ட கால மனித நாகரிகத்தை சுட்டி நிற்கிறது. அத்தோடு கறுப்பு சிவப்பு மட்பாண்ட அழிபாடுகள் தொல்பழங்கால மரபை சுட்டி நிற்கின்றன. (மேலும்....)

கார்த்திகை 30, 2011

Come comrades of Eelam dear! Let’s celebrate non-existence

(By Karthika Gnanachandran)

The prime minister of this state was totally absent concerned about crossing the world’s longest border in case he becomes a state guest.  The same predicament applied to the speakers, ministers and parliamentarians of all the non-existing governments and thirteen more yet to be, before the Olympic Year Maveerar Day. As for the crowd participation, a pro-TVI spokesperson ‘guestimated’ 40,000, a pro-LTTE enthusiast on the site said 4,000 and the festival tent could seat only 2,000.  This number game is certainly puzzling unless there were 38,000 who had gathered to buy kacchan halva at the nearby Chinese delicatessen. By Saturday all the Tamil shops were ordered to close and most did and did their rare mall shopping with hardly any one going to the Markham Fair Grounds. (more....)

கார்த்திகை 30, 2011

கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு

தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, திகார் சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வரும்போது, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியிடமுள்ள தலைமை நிலைய முதன்மை செயலர் பதவியை கனிமொழிக்கு பரிசாக வழங்கி அவரை கட்சியின் பெண் தலைவராக முன்னிலைப்படுத்தவும், தி.மு.க. தலைவர் கருணாநிதி திட்டமிட்டுள்ளார். இதற்கு மத்திய அமைச்சர் அழகிரி, பொருளாளர் ஸ்டாலினும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை 30, 2011

விடுதலைப் புலிகள் இருந்த காலத்திலே தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினரால் கூட அங்கு செல்ல முடியாத நிலைமை இருந்தது  - அமைச்சர் முரளிதரன்

சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்குக், கிழக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாகக் கூறினார். அவ்வாறு அவர் கூறுவதாக இருந்தால் ஏன் அவர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித் தார்கள்? அன்று ஓர் இராணுவத் தளபதி ஜனாதிபதியாக வரமுற்பட்ட பொழுது அல்லது ஜனாதிபதித் தேர்தலிலே போட்டியிட்ட பொழுது அவர்கள் அந்த இராணுவத் தளபதியை ஆதரித் தார்கள். இன்றும் ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆகவே, வடக்குக் கிழக்கிலே இன்று இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்பது உண்மையிலே முற்றுமுழுதாக தவ றான ஒரு விடயம்! ஏனென்றால் கடந்த பிரதேச சபைத் தேர்தல், மாநகர சபைத் தேர்தல் என்பன மிகவும் சுதந் திரமான முறையில் வடக்கு, கிழக்கு மாகா ணங்களிலே இடம்பெற்றதாக உலகக் கண்காணிப்பாளர்கள் அறிக்கை சமர்ப்பித்துள் ளார்கள். அத்தேர்தல்களிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வென் றிருக்கின்றது. அங்கு இராணுவ ஆட்சி நடைபெற்றி ருக்குமாகவிருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தேர்தல்களிலே வெற்றி யடைந்திருக்க முடியாது. (மேலும்....)

கார்த்திகை 30, 2011

Arch-anarchist Father Xavier Francis redeems himself as peace pacifist

(A Report from Toronto)
 
Sixteen years ago, he was raising an emergency fund to meet the immediate needs of the LTTE for certain sophisticated small arms inviting a selected group of people to lend a repayable sum of Rs.25,000 each to purchase and dispatch these weapons. He was an ace campaigner for armed struggle and would have succeeded in his efforts. He is a strange kind of parson not quite sure how his moods will dictate his actions. Once he tried to force himself into a Hindu   ritual of initiating the child in learning the first elements of education much to the irritation of the parents. Today four score and for years old, Father Francis Xavier had a Roman Cathoic beginning that took him to the pulpit and the confessorial but celibacy evidently did not appeal to him. (more......)

கார்த்திகை 30, 2011

நயாகரா!

உலகின் மிகப் பெரிய அருவியான நயாகராவுக்கு அப்பெயர் எப்படி ஏற்பட்டது தெரியுமா? நயாகரா பகுதியில் வாழ்ந்த மக்களின் மொழியில் இந்த அருவி “ஒங்கியாஹ்ரா” என்று அழைக்கப்பட்டது. அதற்கான சான்று 1641 இல் காணப்பட்டது. ஆனால் அந்தப் பழங்குடியின மொழிக்கு எழுத்து வடிவம் இல்லை. ஒங்கியாஹ்ரா என்பது பின் ஒங்கியாரா என்று சுருங்கியது, “ஒங்கியாஹ்ரா” என்பதற்கு “இடி போல விழுகின்ற நீர்” என்று பொருள். ஒங்கியாரா என்ற வார்த்தை வாய் மொழி வழியாகவே பரவியதால் அது நாளடைவில் நயாகரா என்று மருவி விட்டது.

கார்த்திகை 30, 2011

ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் மரணம்

முன்னாள் சோவியத் ரஷ்யாவின் சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலினின் ஒரே மகள் ஸ்வெட்லானா ஸ்டாலினா தனது 85 ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவில் வசித்து வந்த ஸ்டாலினா விஸ்கோனில் உள்ள பராமரிப்பு நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி காலமானார். மரணமடையும் போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்கு பின்னர் பல இன்னல்களையும் சர்ச்சைகளையும் சந்தித்த ஸ்வெட்லான ஸ்டாலினா மூன்று திருமணங்கள் முடித்துள்ளதோடு நான்கு புத்தகங்களை எழுதியுள்ளார். எனினும் அவர் இறுதி காலத்தில் வறுமையில் வாடியதாகத் தெரியவருகிறது. ஸ்வெட்லான கடந்த 2010 ஆம் ஆண்டு அமெரிக்க சஞ்சிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஜோசப் ஸ்டாலின் பற்றி கூறும் போது; “அவர் என் வாழ்க்கையை குழப்பிவிட்டார்” என கூறியுள்ளார். “சுவிட்சர்லாந்து, இந்திய, அவுஸ்திரேலியா என எங்கு நான் சென்றாலும் எனது தந்தையின் அரசியல் கைதியாகவே நான் பார்க்கப்படுகிறேன்” என அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பின்னர் அவர் இங்கிலாந்து, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா என பல நாடுகளிலும் வசித்துள்ளார்.

கார்த்திகை 29, 2011

ஐ.தே.க.வின் ஆர்ப்பாட்டப் பேரணி, பின்னணியிலுள்ள அரசியல்!

மக்களுக்குப் பயன் கிடைக்காத நிலையில் தயாரிக்கப்பட்டுள்ள 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கு, சரத் பொன்சேகாவின் விடுதலை போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக ஐ.தே.க. அழைப்பு விடுத்திருந்தாலும், இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் நிபந்தனையுடனேயே பங்கேற்பதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி, ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளமை குறிப்பிட்டு நோக்கத்தக்கது. இந்த ஆர்ப்பாட்டத்தில், நீண்டகலாமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள், நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த கோரிக்கைகள் இதில் உள்ளடக்க வேண்டும் என்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட ஐக்கிய சோஷலிசக் கட்சி, நவ சமாஜக் கட்சி ஆகியன கேட்டுக் கொண்டதற்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமை ஒப்புக்கொண்டமை தமிழ்க் கட்சிகளையும் இணைத்த வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்குக் கிடைத்துள்ள ஒரு வாய்ப்பாக உள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

புலிகளின் தளபதி நகுலன் இரகசியத் தடுப்பு முகாம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தெரிவித்துள்ளது?

புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பிக்கைக்குரிய தரப்புத் தகவல் மூலம் தமக்கு தெரியவந்துள்ளதாக லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தெரிவித்துள்ளது. கேர்ணல் நகுலன் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 மே 18ம் நாள் புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றின் தலைவராக கேர்ணல் நகுலன் செயற்பட்டிருந்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து

தமிழருக்கு விரைவில் அதிகாரத்தை பரவலாக்க வேண்டும் - திஸ்ஸ விதாரண

இனப் பிரச்சினைத் தீர்வுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழுவை உடனடியாக அமைத்து தமிழ் மக்களுக்கு விரைவாக அதிகாரப் பரவலாக்கலைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென சிரேஷ்ட அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த தெரிவுக் குழு உடனடியாக அமைக்கப்பட்டு அத னூடாக தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை விரைவாகப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குத் தேவையான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும். வரிச் சுமைகள் அப்பாவி மக்கள் மீது திணிக்கப்படக்கூடாது என்பதே எமது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடாகும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

கிழக்கு மாகாண அடுத்த முதலமைச்சர் தமிழரா? முஸ்லீமா? - கிழக்கு மாகாண முதல்வர்

கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் விகிதாசாரத்தை நோக்கினால் எந்தவொரு இனரீதியான கட்சியினாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. கிழக்கு மாகாணம் பல்வேறு புறக்கணிப்புகளை அனுபவித்தும் அதைப் புரியாதவர்கள் இன்னும் வடக்கு தலைமைகளுக்கு தலை குனிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது என கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

அனுராதபுரம் சிறைச்சாலையின் தமிழ்க் கைதிகளை வவுனியாவுக்கு மாற்றுங்கள் -  சிவாஜிலிங்கம்

மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதம் இருக்கும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். "மாவீரர் தினத்தைக் கொண்டாடுவதாகக் கூறி சுமார் 65 கைதிகளை திறந்த வெளிக்கு அழைத்துள்ள அதிகாரிகள் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பலரை நிர்வாணமாகவும் தாக்கியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கதாகும். இச்சம்பவத்தினைக் கண்டித்து தமிழ்க் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்தா சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிரகாரம் அமைச்சின் ஆலோசகர் கெனடி அனுராதபுரம் சிறைச்சாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். எனினும் கைதிகள் அவரைச் சந்திப்பதற்கு இணங்கவில்லை.பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு கைதிகளின் உறவினர்கள் ஊடாக தகவல் தெரிவித்திருந்தோம். அத்தோடு அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக இவ்வாறான பிரச்சினைகள் நிலவுவதால் தமிழ்க் கைதிகளை வவுனியா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யுமாறும் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

கார்த்திகை 29, 2011

தமிழ் பிரதேசங்களுக்கு தமிழ் பேசும் பொலிஸார்

பொலிஸ் நியமனங்களின் போது தமிழ்ப் பிரதேசங்களுக்கு பெருமளவில் தமிழ் பேசும் பொலிஸாரை நியமிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதென ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தற்போது 500 தமிழ் பொலிஸார் பல பதவிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், கொத்மலையிலுள்ள பயிற்சி நிலையத்தில் சிங்கள பொலி ஸாருக்குத் தமிழ் மொழிப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொலிஸாருக்கான புதிய நியமனங்களின் போது தமிழ், சிங்களம் என இரு மொழி தேர்ச்சி கவனத்தில் கொள்ளப்படுகிறது. அதேவேளை தமிழ், சிங்கள பொலிஸாருக்கு ஆங்கில மொழி பயிற்சிகளை வழங்கு வதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் 430 பொலிஸ் நிலையங்கள் உள்ளன. இவற்றில் 83,423 பொலிஸார் கடமையிலுள்ளனர். மொத்த மாக 92,023 பொலிஸார் தேவைப்படுகின்றனர். ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்ளும்போது இன ரீதியான ஆட்சேர்ப்பு கொள்கை யொன்றில்லை. இதற்கிணங்க சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்கள் 81,328 பேரும் தமிழ் உத்தியோகத்தர்கள் 1093 பேரும், முஸ்லிம் உத்தியோகத்தர்கள் 952 பேரும், மலே உத்தியோகத்தர்கள் 25 பேரும், பேகர் உத்தியோகத்தர்கள் 09 பேரும் கடமையில் உள்ளனர். எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 29, 2011

Reconciliation the Way Forward for Sri Lanka – Secretary Defence Gotabaya Rajapaksa

 In areas under LTTE dominance, matters were even worse. The LTTE did not tolerate any opposition. It assassinated democratic leaders and intellectuals in the Tamil community in order to style itself the sole representative of the Tamil people. In this effort, it killed such democratic politicians as former Opposition Leader A. Amirthalingam, Secretary General of the Tamil United Liberation Front, Mr. Y. Yogeshwaran and Dr. Neelan Tiruchelvam of the same party, Mr. Sam Thambimuttu and Mr. K Pathmabanda of the EPRLF. In addition to moderate politicians, the LTTE also assassinated the leaders of other armed groups in these areas, including C. Thanabalasingham of the TNT, K Sundaram of PLOTE and Sri Sabaratnam of TELO. On occasion, the LTTE even wiped out the entire command structure of groups it saw as opponents. By eliminating all rivals, the LTTE was able to keep the people in the areas it dominated under a virtual dictatorship. Though it pretended, at its height, to have a judicial system and a police force, these were shams constructed to disguise a territory ruled at gunpoint. No one in those areas was truly safe; no one was truly free. (more.....)

கார்த்திகை 29, 2011

ரூபாய் மதிப்பு

வீழ்ச்சியும், விளைவுகளும்

(இ.எம். ஜோசப்)

பொதுவாக டாலர் மதிப்பு, தங்கத்தின் விலை, சர்வதேச எண்ணெய் வர்த்தகம் ஆகிய மூன்றிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எண்ணெய் வர்த்தகம் ஆகப் பெருமளவில் டாலர் அடிப்படையில் நடைபெறுவதால் டாலருக்கான சர்வதேசக் கிராக்கியும் அதன் காரணமாக அதன் மதிப்பு உயர்வதும் எண்ணெய் வர்த்தகம் கீழிறங்கும் போது டாலர் மதிப்பு குறைவதும் நாம் தொடர்ந்து கண்டு வரும் காட்சிகள். அதே போன்று டாலர் மதிப்பு குறையும் போதெல்லாம் முதலீட்டாளர்கள் தங்களது சேமிப்புக்களை தங்கத்திற்கு மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கி றோம். அண்மையில் சீனா, இந்தியா உட்பட சில அரசாங்கங்கள் தங்கத்தை விலை கொடுத்து வாங்கின. தங்கத்திற்கும் அதே போன்று மற்றொரு அரிய உலோகமான வெள்ளிக்கும் ஏற்பட்ட அத்தகைய கூடுதல் கிராக்கி அவற்றின் விலைகளை எவ்வாறு உயர்த்தின என்பதும் இன்றைய காட்சி களேயாகும். சில மாதங்களுக்கு முன்பு வரை டாலரின் மதிப்பு சற்றுக் குறைவாகவே இருந்து வந்தது. ஆனால் அண்மையில் டாலர் மதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. இது எப்படி? (மேலும்....)

கார்த்திகை 29, 2011

“பெரும் போராட்டங்களின் துவக்கக் கட்டம்”  பிரிட்டன் தொழிற்சங்கம் கருத்து

நவம்பர் 30 ஆம் தேதியன்று நடைபெற விருக்கும் நாடு தழுவிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தம், வரவிருக்கும் பெரும் போராட்டங்களின் துவக்ககட்டம்தான் என்று பிரிட்டனின் பெரிய தொழிற்சங்க மான தொழிற்சங்கக் காங்கிரஸ் கூறியுள்ளது. பிரிட்டன் அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளர் விரோதக் கொள்கை மற்றும் கல்வியை வியாபார மாக்கும் அணுகுமுறை ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் நவம்பர் 30 அன்று நடைபெறுகிறது. பெரும் பாலான தொழிலாளர்களின் வேலைநிறுத் தம் செய்ய வாக்களித்துள்ளனர். இதில் சுமார் 30 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற் பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்....)

கார்த்திகை 29, 2011

அநுராதபுரம் சிறைச்சாலை

தாக்குதல் குற்றச்சாட்டு குறித்து விசாரணை, தேடுதலில் 19 செல்லிடபேசிகள் கண்டுபிடிப்பு

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து சிறைச்சாலை திணைக்களம் விசாரணை நடத்துவதாக சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் திசாநாயக்க தெரிவித்தார். சிறைச்சாலையினுள் ‘மாவீரர் தின’ அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்கு இடமளிக்காததாலே தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கைதிகள் பொய்க் குற்றம் தெரிவிப்பதாகவும் கைதிகள் மீது எவ்விதத் தாக்குதலும் நடத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபர்கள் சிறைச்சாலை யினுள் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கப் போவதாக கிடைத்த தகவலையடுத்து சிறைச்சாலை அதிகாரிகள் இங்கு சோதனை நடத்தியுள்ளனர். இதன் போது கைதிகள் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாகவும் கைதிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் சிறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன் போது கைதிகளிடம் இருந்து 19 கையடக்கத் தொலைபேசிகள் கண் டெடுக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 29, 2011

சீனா

“அனைவருக்கும் வீடுகள்” 

சீனக்குடிமக்கள் அனைவருக்கும் சொந்தமான வீடு என்ற இலக்கை நோக்கி மக்கள் சீனம் விரைந்து கொண்டிருக்கிறது. இதற்காக வரும் ஐந்து ஆண்டுகளில் 3 கோடியே 60 லட்சம் வீடுகளைக் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர். நடப்பாண்டிற்குள் 1 கோடி வீடுகளைத் தயார் செய்துவிடுவது என்பதும் அவர்களின் முடிவாகும். அந்த இலக்கை அடைவதற்கான பணிகள் முழு மூச்சாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப்பணிகளை கண்காணிப்பதற்காக அந்நாட்டின் துணைப்பிரதமர் லி கெகியாங் தலைமையில் ஒரு குழு இயங்கி வருகிறது. சாதாரண மக்களுக்கு அவர்களின் சக்திக்கேற்ற வகையிலான, அதே வேளையில் மிகவும் தரமான வீடுகளை உருவாக்கி விநியோகம் செய்யவுள்ளனர். இவ்வாறு செய்வதன் மூலம் மக்களுக்கு வாழ்வாதாரம் உருவாவது மட்டுமில்லாமல், பொருளாதாரமும்மேம்பாடுஅடைய வாய்ப்பு ஏற்படும் என்று குறிப்பிடுகிறார் லி கெகியாங். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

தலைமன்னாரில் மீள்குடியேறிய மக்களுக்கு காணிகளை உடன் வழங்க ஜனாதிபதி பணிப்பு

வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள தமிழ்-முஸ்லிம் மக்களது காணிப்பிரச்சினைகளை இனிமேல் கையாளுவதற்கு வடக்கு- கிழக்கு பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைச்சர்களது குழுவொன்றை நியமிப்பதுடன், காணி மற்றும் சுற்றாடல் அமைச்சர்களையும் அதில் உள்வாங்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியின் சாதகமான பதில் கிட்டியுள்ளது. தற்போது நாட் டில் குறிப்பாக வடக்கு-கிழக்கு மாகா ணங்களில் தமிழ்,முஸ்லிம் மக்கள் மீள் குடியேறும்போதும், அதேபோன்று அங்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும், மக்கள் எதிர்நோக்கும் காணிப் பிரச்சினையினை தீர்த்துக்கொள்வதற்கு அம்மக்களின் பிரதிநிதிகளை கொண்ட குழுவொன்றை ஏற்படுத்தி, அந்த பிரச்சினைக் கான தீர்வை பெற்றுக்கொடுப்பதன் சாதகமான நிலைகளை அமைச்சர் றிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்திருந்த துடன், இவ்விடயத்தில் பாதுகாப்புத் தரப்பினரின் பிரசன்னம் அவசியமாக இருக்காது என்பதனையும் சுட்டிக்காட்டி யிருந்தார். (மேலும்....)

கார்த்திகை 29, 2011

எகிப்தில் தேர்தல்

மக்கள் எழுச்சியால், அமெரிக்க ஆதரவு ஆட்சியாளரான ஹோஸ்னி முபாரக் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்ட எகிப்தில், நீண்டகாலத்திற்கு பிறகு முதல்முறையாக நவம்பர் 28 திங்களன்று நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்றது. தலைநகர் கெய்ரோ, அலெக்சாண்ட்ரியா உள்பட முக்கிய நகரங்களிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு காலை 8 மணிக்குத் துவங்கி இரவு 7 மணி வரை நடைபெற்றது. மூன்று கட்டமாக நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் நடவடிக்கைகள் அடுத்த மார்ச் மாதம் முடிவடையும் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அமெரிக்க கைப்பாவையான ராணுவப் படைகளின் சுப்ரீம் கவுன்சில் தலைமையில் கடந்த வாரம் கமால் அல் - கன்சோரி என்பவர் இடைக்காலப் பிரதமராக நியமிக்கப் பட்டார். அவரது கண்காணிப்பின் கீழ் தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலில் தனது கைக்கூலிகளை ஆட்சிக்கு கொண்டுவர அமெரிக்க ஏகாதிபத்தியம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மறு புறத்தில் முழு ஜனநாயகத்தை இத்தேர்தல் மூலம் மலரச் செய் வோம் என மக்கள் உறுதிபூண்டுள்ளனர்.

கார்த்திகை 29, 2011

அனில் அம்பானியின் சொத்துக்களை முடக்க ஜார்க்கண்ட நீதிமன்றம் உத்தரவு

வாடிக்கையாளரை மோசடி செய்த குற்றத்திற்காக இந்திய தொழிலதிபரான அனில் அம்பானியின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிபதி பி.கே. பாண்டே உத்தரவிட்டார். இந்தியாவில் மொபைல் ரீசார்ஜ் தொடர்பான மோசடி வழக்கில் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனில் அம்பானியின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள தான்பாத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக பிரதாப்குமார் வர்மா என்பவரின் மனைவி ரிலையன்ஸ் செல்போன் சிம்கார்ட் வாங்கி இருந்தார். அதை ஈசி ரீசார்ஜ் செய்த போது குறிப்பிட்ட திட்டத்துக்கென ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்திருந்த சலுகைகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ரிலையன்ஸ் நிறுவனம், தனது வாக்குறுதியை காப்பாற்றவில்லை. வாடிக்கையாளர்களை மோசடி செய்கிறது. எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு பிரதாப் குமார் வர்மா ரிலையன்ஸ் நிறுவன தலைவர் அனில் அம்பானி மீது மோசடி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் கடந்த மே 21 ஆம் திகதி ஜார்கண்ட் நீதிமன்றம் அனில் அம்பானிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. எனினும் அனில் அம்பானி இதுவரை கைது செய்யப்படாத நிலையில் அவர் தலைமறைவாக இருப்பதாக கருதி அவரது சொத்துகளைப் பறிமுதல் செய்யுமாறு நீதிபதி பி.கே. பாண்டே உத்தரவிட்டார்.

கார்த்திகை 29, 2011

நேட்டோ படை தெரிவித்த வருத்ததை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுப்பு

தங்கள் நாட்டு வீரர்கள் கொல்லப்பட்ட தற்கு நேட்டோ படை தலைவர் தெரிவித்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது. கடந்த வார இறுதியில் ஆப்கான் எல்லையையொட்டி அமைந்துள்ள சோதனை சாவடியில் பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் மீது ஆப்கானில் முகாமிட்டுள்ள நேட்டோ படையின் ஹெலிகொப்டர் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 25 பாகிஸ்தான் வீரர்கள் பலியாயினர். இது பாகிஸ்தானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு நேட்டோ படை பொதுச் செயலர் ஆண்டர்ஸ் பாக். பாகிஸ்தான் பிரதமர் கிலானிக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதினார். ஆனால் நேட்டோ படையின் இந்த வருத்தத்தை ஏற்க பாகிஸ்தான் இராணுவம் மறுத்துவிட்டது. பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு வெறும் வருத்தம் போதுமானதல்ல என்று அந்நாட்டு இராணுவ பேச்சாளர் அக்தர் அப்பாஸ் தெரிவித்தார். நேட்டோ நடத்திய தாக்குதல் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் கூறினார்.

கார்த்திகை 29, 2011

பூமியை ஒத்த கிரகம் கண்டுபிடிப்பு

அமெரிக்காவின் கலிபோர் னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி துறை பேராசிரியர் ஸ்டீவன் வோக்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூமியை போன்ற மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித் துள்ளனர். அந்த கிரகத்துக்கு ‘கிளைஸ் 58 ஜி’ என பெயரிட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 123 லட்சம் கோடி தொலைவில் உள்ளது. இந்த புதிய கிரகத்தில் தண்ணீர் உள்ளதாக நம்பப்படுகிறது. எனவே அங்கு உயிரினங்கள் வாழும் சூழ்நிலை இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை 28, 2011

2ஜி வழக்கில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து திமுக தலைவர் மு.கருணாநிதியிடம் கேட்டதற்கு, 'கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று கூறினார். முன்னதாக, ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குனர் சரத் குமார், பாலிவுட் சினிமா தயாரிப்பாளர் கரீம் மொ ரானி, ஸ்வான் டெலிகாம் நிர்வாகி சாகித் உஸ்மான் பால்வா, குசேகான் புருட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குனர் ஆசிப் பால்வா, ராஜீவ் அகர்வால், தொலைத்தொடர்பு துறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். அவற்றை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து இந்த 6 பேரும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதையடுத்து, கனிமொழி உள்ளிட்ட 6 பேரின் ஜாமீன் மனுக்கள் இன்று விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் எம்பி கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கார்த்திகை 28, 2011

புலிகளுக்கு ஆதரவான யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்!

புலிகளின் மாவீரர் தினகொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த புலி பிரிவினைவாதத்திற்கு துணை போகும் புலிகளுக்கு ஆதரவான யாழ்.பல்கலைக்கழக மாணவன் வேதாரணியம் லத்தீஸ் கடத்தப்பட்டுள்ளார்! நேற்றிரவு யாழ்.திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நணபர்ளை சந்தித்து விட்டு கைதடியிலுள்ள தனது விடுதிக்கு திரும்பிக் கொண்டிருக்கையிலேயே இவர் கடத்தப்பட்டிருக்கலாமென குடும்பத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சொந்த இடமாக கொண்ட இவர் வன்னியில் படையினரால் பிடிக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையிலேயே பூஸா தடுப்பு முகாமிலிருந்து இழுபறிகளின் பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகையால் வழமை போல திருநெல்வேலியிலுள்ள பாலசிங்கம் விடுதியிலுள்ள தனது சக நண்பர்ளை சந்திக்க வந்து திரும்புவது இயல்பானதென நண்பர்கள் கூறுகின்றனர். நேற்று புலிகளின் மாவீரர் தினகொண்டாட்டங்களில் மாணவர்கள் பாலசிங்கம் விடுதியில் ஈடுபட்டிருந்ததையடுத்து விடுதி சூழலில் படையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். புலிகளின் மாவீரர் தினகொண்டாட்ட மாணவர்கள் அச்சம் காரணமாக அனைவரும் ஒன்று கூடி விடுதிகளுள் முடங்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

கார்த்திகை 28, 2011

காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்காக போராடும் பலஸ்தீனம்

பலஸ்தீன மண்ணில் மேற்கொள்ளப் படும் காலனித்துவ நடவடிக்கை களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் அஹிம்சை வழிப் போராட்டத்தின் நினைவு தினம் இன்றாகும். நவம்பர் மாதம் 29 ஆம் திகதி இந்த தினம் அமைந்துள்ளது. புதிய தாய் நாட்டை விடுவித்துக் கொள்வதற்காக ஆக்கிரமிப்புக்கு எதிராக, அந்த பூமியின் சொந்தக்காரர் கொண்டு செல்லும் நியாய மான போராட்டமானது இற்றைக்கு சுமார் ஆறு சகாப்தங்களாக பல மிக்க முறையில் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. பலஸ்தீனப் பிரச்சினையில் எமக்கு தெளிவாக இரண்டு தரப்பினரை காணக் கூடியதாக உள்ளது. அந்த இரண்டு தரப்பினர்களாவன. ஒன்று ஆக்கிரமிப்பாளர் கள் மற்றையது பாதிக்கப்பட்ட மக்கள். எனவே ஆக்கிரமிப்புக்கு ஆளான மக்கள் சுதந்திரத்திற்காக கிளர்ந்தெழுவது சட்ட ரீதியானதும், நியாயமானதும் மற்றும் இயற்கையானதுமாகும். (மேலும்....)

கார்த்திகை 28, 2011

ஏன் இந்த கொலைவெறி ?

(ஞாநி)

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்ட செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடாமல் எட்டாம் பக்கம், பத்தாம் பக்கங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிற ஓர் ஆங்கில செய்தித்தாள், முதல் பக்கத்தில் ‘கொலைவெறி’ சினிமாப் பாடல் சூப்பர் ஹிட்டான செய்தியை நான்கு காலம் தலைப்பிட்டு வெளியிடுகிறது. ஏன் இந்தக் கொலைவெறி ?

கம்ர்ஷியல் சினிமாகாரர்கள் எப்போதும் மிகையான பப்ளிசிட்டியில் ஈடுபடுவது வழக்கம். அது அவர்களுக்கு ‘தொழில் தர்மம்’. இருபது லட்ச ரூபாயில் ஒரு செட் நிர்மாணித்தால், மூன்று கோடி செலவிட்டதாக சொல்வார்கள். நடிக்கும் பாத்திரத்துக்காக நடிகர் தன்னை என்னென்னவோ விதத்தில் வருத்திக் கொண்டதாக சொல்வார்கள். அசல் வருத்தம் 10 சதவிகிதம் என்றால் பப்ளிசிட்டி வருத்தம் 150 சதவிகிதமாக இருக்கும். அறுபதுகளில் ஒரு முறை ஒரு நடிகர் தான் நடிக்கும் பாத்திரத்துக்காகத் தொடர்ந்து தலையை மொட்டையடித்துக் கொள்வதாக செய்தி வெளியானபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் அப்போது அவருக்கிருந்த அவருக்கே உரிய நையாண்டியில் கேட்டார் : அந்த நடிகர் ஒரு இஸ்லாமியர் வேடத்தில் நடித்தாரே, அதற்காக முறைப்படி சுன்னத் செய்துகொண்டாரா ?! சினிமாகாரர்கள் பப்ளிசிட்டி செய்ய வேறு எதுவும் இல்லாவிட்டால், குறைந்தபட்சம், ஒரு நடிகரோ நடிகையோ அண்ணா சாலையில் நடந்து போகிற காட்சியை படம் பிடித்ததைக் கூட, ‘கொளுத்தும் வெயிலில் காலில் செருப்பு இல்லாமல் நடித்த ஜிகினாஸ்ரீ மருத்துவமனையில் கொப்புளங்களுடன் அனுமதி ‘ என்று பரபரப்பாக்குவார்கள். (மேலும்....)

கார்த்திகை 28, 2011

மாவீரர் தினம்

இராணுவ அழிப்பிற்குத் துணை போகும் புலம்பெயர் வியாபாரிகள்

(அஜித்)

இன்று (27/11/2011) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த போராளிகள் நினைவாக மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான அப்பாவிமக்கள் இலங்கை அரசால் திட்டமிட்டு இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் மூன்றாவது தடவையாக இப்போது இத்தினம் கொண்டாடப்படுகிறது. இதே வேளை இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் இலங்கை ராஜபக்ச குடும்ப பாசிச அரசு இராணுவ ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஏற்கனவே கோரமான இராணுவ ஒடுக்குமுறைக்குள்ளும், இலங்கை உளவுத்துறையின் கண்காணிப்பினுள்ளும் வாழும் தமிழ்ப் பேசும் மக்கள் மீது பெருந்தேசிய வாத ஒடுக்குமுறை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  (மேலும்....)

கார்த்திகை 28, 2011

கொழும்பு - யாழ் அதிவேக நெடுஞ்சாலை அமைப்புக்கான ஆரம்பப் பணிகள் பூர்த்தி - விந்தையின் நுழைவாயில் திறப்பு விழாவில் ஜனாதிபதி

 • கொழும்பிலிருந்து 3 மணி நேரத்தில் யாழ். செல்ல முடியும்

 • எல்லைகள் சுருங்க பிரிவினைவாதம் இல்லாதொழியும்

 • நவம்பர் 27: இருண்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி

 • மனங்கள் இணையும் போது பிரிவினைக்கு தீர்வு கிட்டும்

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் அதிவேக நெடுஞ்சாலை அமைப்பதற்கான ஆரம்பகட்ட வேலைகள் பூர்த்தியடைந்திருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று கரந்தெனியவில் தெரிவித்தார். இந்த நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதும் மூன்று, நான்கு மணித்தியாலங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்குமென்றும் ஜனாதிபதி அவர்கள் கூறினார். இந்த நெடுஞ்சாலை வடக்கும், கொழும்பும் ஒன்றிணைவதற்கும் அவற்றுக்கிடையிலான பயணத்தூரம் சுருங்குவதற்கும் வழிவகுக்கும். அப்போது பிரிவினை என்ற சிந்தனையே எழாது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். (மேலும்...)

கார்த்திகை 28, 2011

வயதான உயிரணுக்களை நீக்கினால் ஆயுள் நீளும்

மனித உடலின் இயல்பான வளர்ச்சியின் போது உடலின் உயிரணுக்களுக்கு வயதாக வயதாக அவற்றில் ஏற்படும் சில மாற்றங் களால் புற்றுநோய் கூட ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதால், அந்த உயிரணுக்களை நம் உடலானது செயழிக்கச் செய்துவிடும். இவ்வாறு செயலிழந்துபோகும் வயதான செல்களுக்கு இரண்டு விதமான முடிவுகள் உண்டு. ஒன்று இறந்து போவது, மற்றொன்று செயலிழந்த நிலையிலேயே பிற ஆரோக்கியமான உயிரணுக்களுடன் ஒட்டிக்கெண்டு காலம் கழிப்பது. சரி இறந்துபோகாத இந்த வயதான உயிரணுக்கள் சும்மா இருந்துவிட்டாலாவது பரவாயில்லை. ஆனால் அவை சும்மா இருப்பதில்லை என்பதுதான் இங்கு பிரச்சி னையே. இறக்காமல் ஒட்டிக்கொண்டிருக்கும் உயிரணுக்கள், ‘உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்வதைப் போல்’ தங்கள் பங்குக்கு தேவையில்லாத உடலின் ஆரோக்கியத்துக்கு ஊறு விளைவிக்கக்கூடிய ‘தவறான புரதங்களை’ உற்பத்தி செய்கின்றனவாம். இந்த உயிரணுக்களிலிருந்து அனுப்பப்படும் இரசாயன சமிக்ஞைகள், சுற்றியிருக்கும் ஆரோக்கியமான உயிரணுக்களை மோச மாகப் பாதிக்கின்றன. இந்தப் பாதிப்பு மூப்படைதலுடன் தொடர்புடைய பல நோய்களை உண்டாக்குகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். (மேலும்...)

 

கார்த்திகை 28, 2011

 

'நான் வாய் திறந்தால் பலர் உள்ளே செல்ல நேரிடும்' - ஸ்பெக்ட்ரம்  ராஜா

நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும் என முன்னாள் அமைச்சர் ராஜா கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய தொலைத் தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ராஜா, பத்து மாதங்களுக்கு மேலாக, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற அனைவரும், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். ஆனாலும், ராஜா, இன்னும் ஜாமின் கோரவில்லை. திகார் சிறை வாழ்க்கை தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும், என்னை பக்குவப்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகள் எம்.பி.யாக பதவி வகித்து வருகிறேன். ஏறக்குறைய 12 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறேன். இந்த இரண்டிலுமே, கற்றுக் கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன. இந்த வழக்கில் நான், நிரபராதி என அறிவிக்கப்படும் நாளுக்காக காத்திருக்கிறேன். நான் பேசத் துவங்கினால், மேலும் பலர் சிறைக்குச் செல்ல நேரிடும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நிகழ்ந்த ஒவ்வொன்றையும் நான் குறிப்புகளாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

கார்த்திகை 28, 2011

விமான தளத்திலிருந்து வெளியேற அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் காலக்கெடு

நேட்டோ படையின் எல்லை மீறிய தாக்குதலையடுத்து 15 நாள் அவகாசம்

பலுகிஸ்தான் மாகாணத்தில் உள்ள தனது விமானப் படை தளத்தில் இருந்து 15 நாட்களுக்குள் வெளியேறுமாறு அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. நேட்டோ படை கடந்த வெள்ளிக்கிழமை எல்லை மீறி நடத்திய தாக்குதலில் 25 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்தே பாக். அரசு இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தான், அமெரிக்க உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. நேட்டோ படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் பாதுகாப்புப் படை பிரதானி களுடன் பிரதமர் யூசுப் ராசா கிலானி வெளியுறவு அமைச்சகத்தில் அவசர கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் நேட்டோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  (மேலும்...)

கார்த்திகை 28, 2011

புதிய குறியீட்டுடன் 100 ரூபாய் நோட்டு

மும்பை ரிசர்வ் வங்கி, ரூபாயை குறிக்கும் ‘ஆர்’ என்ற தேவநகரி சின்னத்துடன் 100 ரூபாய் நோட்டுக்களை வெளியிட உள்ளது. டாலர், யூரோ போன்ற கரன்சிகளுக்கு உள்ள சின்னம் போன்று, இந்தியாவின் ரூபாய்க்கு ‘ஆர்’ என்ற சின்னம் உருவாக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் உருவாக்கிய இந்த சின்னத்தை, இந்திய ரூபாயின் அதிகாரபூர்வ குறியீடாக, ரிசர்வ் வங்கி அங்கிகரித்தது. கடந்த வாரம், இந்த குறியீட்டுடன் 1000 மற்றும் 10 ரூபாய் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, மகாத்மா காந்தி உருவம் பொறித்த 100 ரூபாய் கரன்சி, புதிய ரூபாய் குறியீட்டுடன் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 28, 2011

Friendship and hosanna-singing

Mahinda Rajapaksa, when he was sworn in as the fifth President with executive powers in November 2005, made a stirring speech at Galle Face.  He spoke of friends and friendship.  He said ‘I believe my friends are those who offer just criticism and not those who sing hosannas in my praise’. While we don’t know whether the President has assessed friendship-worth of hosanna singers, it is very clear that in the six years that have passes since that significant political moment there has been no lack in the matter of singing hosannas.  Indeed it would seem that those who are in a position to sing praises, metaphorically and literally, have not understood the friendship parameters laid out by the President six years ago.  Two recent incidents come to mind which illustrate what might be called the classic occupational hazard of rulers.  First, there was the assault on placard carrying opposition members while the President was presenting the annual budget in Parliament. (more....)

கார்த்திகை 28, 2011 

பிரிட்டன் தூதுவரை வெளியேற்ற ஈரான் பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

ஈரானுக்கான பிரிட்டன் தூதுவரை வெளியேற்றி அந்நாட்டுடனான இராஜதந்திர, பொருளாதார உறவுகளை குறைத்துக் கொள்ள ஈரான் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்துள்ளது. அணு ஆயுத விவகாரம் தொடர்பில் ஈரான் மீது பிரிட்டன் பொருளாதாரத் தடை விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பில் ஈரான் பாராளுமன்றத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் பிரிட்டனுடனான உறவுகளை குறைத்துக்கொள்வதற்கு ஆதரவாக 179 வாக்குகள் கிடைத்ததோடு எதிராக 4 வாக்குகள் மாத்திரமே பதிவானது.

கார்த்திகை 28, 2011 

மீண்டும் வந்திருக்கின்றார் அகாசி

பிரதான அரசியல் கட்சிகளுடன் யசூசி அகாசி பேச்சுவார்த்தை

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக் கும் ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி வெளிவிவகார அமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஆளும், எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். யசூசி அகாசிக்கும், முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையிலான சந்திப்பு நாளை முற்பகல் 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூவ் ஹக்கீமின் கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற வுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவிருப்பதாக ஜப்பானியத் தூதரக வட்டாரங்கள் தெரி விக்கின்றன. இவருடனான சந்திப்பில் இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட பல் வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரை யாடவிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தெரிவித்தார். இலங்கையில் அமைக்கப்பட்டி ருக்கும் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை திறப்புவிழாவில் கலந்துகொள்ளும் பொருட்டு ஐப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாசி இலங்கை வந்துள்ளார்.

கார்த்திகை 28, 2011 

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட புடினுக்கு அனுமதி

அடுத்த மார்ச்சில் நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சியின் சார்பில் போட்டியிட பிரதமர் விளாடிமிர் புடின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த புடின் 2008ம் ஆண்டு ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினார். எனினும் மீண்டும் போட்டியிட விருப்பம் உள்ளதாக செப்டம்பரில் அவர் அறிவித்திருந்தார். இதையடுத்து அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய ரஷ்ய கட்சியால் முறைப்படி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கார்த்திகை 28, 2011 

உணவகங்கள், சிற்றுண்டிச்சாலைகளை வகைப்படுத்தும் பணி இன்று ஆரம்பம்

நாடெங்கிலுமுள்ள சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் உணவகங்களின் உணவு தயாரிக்கும் இடங்களைப் பரிசோதித்து வகைப்படுத்தும் வேலைத் திட்டம் இன்று 28ம் திகதி ஆரம்பிக்கப்படவிருக்கின்றது. நாட்டிலுள்ள உணவு தயாரிக்கும் பல இடங்கள் அதற்குரிய தரத்தில் இல்லை என்று மக்கள் சுகாதார அமைச்சுக்குத் தெரிவித்த புகார்களின் அடிப்படையிலேயே சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இவ்வேலைத் திட்டத்தை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்திருக்கின்றார். உணவு தயாரிக்கும் இடங்களை பரி சோதித்து வகைப்படுத்தும் வேலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கு தேவை யான சுற்றறிக்கை மாகாண மற்றும் மாவட்ட சுகாதார சேவைப் பணிப்பாளர்க ளுக்கும், மாநகர சபைகளின் பிரதம மருத்துவ அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கிலுமுள்ள சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூலம் மக்களுக்கு தரமான உணவுவகை களைப் பெற்றுக்கொடுப்பதை நோக்காகக் கொண்டே இவ்வேலைத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பரிசோதிக்கப்படும் உணவு தயாரிக்கும் இடங்களுக்கு ஏ.பி.சி.டி என வகைப்படும் என்றும் அவ் வதிகாரி குறிப்பிட்டார். இத்திட்டத்தின் கீழ் கொழும்பு மாவட்ட பரிசோதனை நடவடிக்கை நாவல பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

கார்த்திகை 28, 2011 

எகிப்தில் இன்று தேர்தல்

இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் எகிப்தில் முதல்கட்ட பாராளுமன்ற தேர்தல் இன்று ஆரம்பமாகவுள்ளது. இன்றும் நாளையும் நடைபெற வுள்ள முதல் கட்ட தேர்தலில் எகிப்தின் பிரதான நகரங்களில் வாக்கெடுப்புகள் நடைபெற வுள்ளன. தலைநகர் கெய்ரோ, அலக்சான்ட்ரியா, பயூம், லக்ஷர், போர்ட் சயித், டெமியட்டா, கப்ர் அல் ஷெய்க் மற்றும் செங்கடல் மாகாணம் ஆகிய பகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. எஞ்சிய பகுதிகளில் டிசம்பர் 14 மற்றும் ஜனவரி 03 ஆம் திகதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனினும் ஆளும் இராணுவ கவுன்ஸிலை பதவி விலகக் கோரி தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எகிப்தில் ஹொஸ்னி முபாரக் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின் அந்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான முதலாவது தேர்தலே இன்று ஆரம்பமாகவுள்ளது.

கார்த்திகை 28, 2011 

மட்டக்களப்பு, அம்பாறை பகுதியில் வானம் வெளுத்தது, மழை ஓய்ந்தது

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்க ளில் நேற்று மழை பெய்யாததால் இரு மாவட்டங்களிலும் இயல்பு நிலை வழமைக்குத் திரும்பியிருந்தன. நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்கள் தமது அன்றாடப் பணிகளில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருந்த வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளது. மேற்படி இரு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கி இருந்தன. ஆயினும் நேற்று மழை பெய்யாததனால் வெள்ளம் வடிந்தோடி வருவதாக அங் கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன. பெரும்போக நெற் செய்கை மேற்கொள் ளப்படாத காணிகளில் வெள்ளம் தேங்கி யுள்ளதனால், விதைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையேற்பட் டுள்ளது. இம்முறை பெரும் போகத்தில் 94 ஆயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெற் செய்கையை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இத் தொகையில் குறைவேற்படலாம் என நம்பப்படுகின்றது. சீரற்ற கால நிலை காரணமாக கடற் றொழிலாளர்கள் எவரும் கடலுக்குச் செல்ல வில்லை.

கார்த்திகை 28, 2011 

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் கட்சிக்கு வெற்றி

நியூசிலாந்து பொதுத் தேர்தலில் ஆளும் தேசிய கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இதையடுத்து பிரதமர் ஜோன் கீ 2 வது முறையாக பிரதமராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 121 உறுப்பினர்களைக் கொண்ட நியூசிலாந்து நாடாளுமன்றத்துக்கு கடந்த சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடைபெற்றது. அன்றைய தினமே தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இதில், ஆளும் தேசிய கட்சி 60 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

கார்த்திகை 28, 2011 

மொரோக்கோ பொதுத் தேர்தலில் இஸ்லாமிய கட்சி வெற்றி

மொரோக்கோவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் இஸ்லாமிய கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி வெற்றிபெற்றுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற 395 ஆசனங்களுக்கான தேர்தலில் 288 இடங்களுக்கான முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி 80 ஆசனங்களைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் 100 ஆசனங்களை பெற முடியும் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது. எந்த கட்சியும் பெரும்பான்மை பெறாததால் கூட்டு ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளது. இதன்படி மொரோக்கோவில் முதல் முறையாக பாராளுமன்றத்தால் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படவுள்ளார். இதற்கு முன்னர் அந்நாட்டு மன்னர் 6ஆவது முஹம்மத்தே பிரதமரை தேர்வு செய்து வந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கார்த்திகை 28, 2011

‘யானை வரும் பின்னே!’

துனீஷியாவில் விரட்டியடிக்கப் பட்ட பென் அலி, எகிப்தில் விரட்டி யடிக்கப்பட்ட ஹோஸ்னி முபாரக், லிபியாவில் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்த முகமது கடாபி போன்றவர் களுக்கு சற்றும் குறைவில்லாதவர்தான் சிரியாவின் பஷார் அல் - அசாத். இவரது ஆட்சியில், எண்ணெய் வளம் கொழிக்கும் இந்த பூமியில் கூட 32 சதவீத மக்கள் வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். நாள் ஒன் றுக்கு 2 டாலருக்கும் குறைவாகவே வரு மானம் கிடைக்கும் நிலையில் இருக் கிறார்கள். மிக நீண்ட ஆண்டுகளாக மக்கள் இயக்கங்கள் மீதான ஒடுக்கு முறை தொடர்கிறது. அசாத்தின் அரசு வீழ்த்தப்பட வேண்டிய அரசே! ஆனால், அசாத் அரசை வீழ்த்தி விட்டு அங்கு அமரப்போவது யார் என் பதே இப்போதைய மிக முக்கியமான கேள்வி. துருக்கி, சவூதி அரேபியா ஆகிய வற்றின் ஆதரவோடு, அமெரிக்காவால் ஆசீர்வதிக்கப்பட்டு ஒரு அரசு அமையு மானால், அது சிரிய மக்கள் மீதான முன் னெப்போதும் இல்லாத தாக்குதலாகவே அமையும். லிபியாவில் அமெரிக்க கைப் பாவை அரசு ஆட்சியில் அமர்த்தப்பட் டிருப்பதை உலகம் பார்க்கிறது. அவர்கள் லிபியாவில் கோரத்தாண்ட வம் ஆடி வருகிறார்கள் என்பதையும் அதிர்ச்சியோடு பார்த்துக் கொண்டிருக் கிறது. (மேலும்....)


கார்த்திகை 27, 2011

புலம் பெயர் தேசத்து மாடி வீட்டு ஏழைகளான மாவீரர் கொண்டாட்டக்காரர்

பணத்தை மையப்படுத்தி செயற்படும் புலம்பெயர் தேசத்து புலிகள் ஐரோப்பா, கனடா போன்ற நாடுகளின் பணத்தின் அடிப்படையில் பிரிந்து நின்று அடிபட்டு 'மாவீரர்' தினத்தை கொண்டாடுகின்றனர். ஆனால் எல்லோருரிடமும் ஒரு விடயத்தில் மட்டும் ஒற்றுமை நிலவுகின்றது. அது 'சூரியத் தேவன்' பற்றி மரணம் பற்றிய மௌனம் சாதித்தல் என்பதே அது. நெடியவன் குழு,, விநாயகம் குழு கேபி(ரெஜி) குழு காங்கிரஸ் குழு, நாடுகடந்த அரசுக் குழு எனப் பிரிந்து நின்றாலும் நாடு கடந்த அரசு, காங்கிரஸ் குழுக்கள் மாடி வீட்டு ஏழைகளாக காணப்படுகின்றனர். புலிகளின் ஊதுகுழல்கள் எல்லோரும் ஓரணியில் நின்று மாவீரர் கொண்டாட்டங்கள் செய்கின்றனர் என்று ஊதினாலும் வெட்டுப்பாடுகள், குத்துப்பாடுகளுக்கு குறைவு இல்லை. இலங்கை அரசை தன் வழியிற்கு கொண்டு வர நேட்டோ நாடுகள் 'முதலாளித்துவ ஜனநாயகப் பண்பு' களின் அடிப்படையில் புலம் பெயர் தேசத்து புலிகளின் இச்செயற்பாடுகளுக்கு மறைமுக ஆதரவை வழங்கி நிற்கின்றனர். மேலும் சனங்களும் கூடவில்லை என்பதுவும் பரிதாபமே.

கார்த்திகை 27, 2011

அடுத்த இலக்கு யாழ்ப்பாணத்திற்கான அதிவேக வீதியே - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ

யாழ்ப்பாணம் இடையே அதிவேக வீதியை நிர்மாணிப்பதே அரஙசாங்கத்தின் அடுத்த இலக்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் முதலாவது அதிவேக மார்க்கமான தெற்கு அதிவேக வீதியை திறந்துவைப்பதற்காக இன்று நண்பகல் காலியில் நடைபெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாட்டை உருவாக்குவதற்கான வீதிகள் அபிவிருத்தி எடுத்துக்காட்டுவதாக ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.. கொழும்பையும் காலியையும் இணைக்கும் அதிவேக பெருந்தெருவை மக்கள் போக்குவரத்திற்காக திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். சிறந்த வீதிக் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டால் பிரிவினைவாத உணர்வுகள் களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தையும் கொழும்பையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கொழும்பையும் காலியையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலைக்காக 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளன.

கார்த்திகை 27, 2011

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச எல்லைப்பகதிகளை காணிகளை கைப்பற்றும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டுகோள் - இரா.துரைரெட்ணம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் (பத்மநாபா EPRLF)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் எல்லைப்புற பிரதேசங்களில் 15000 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை அம்பாரை மாவட்டத்துடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 27, 2011

மாவீரர் தின மோதல்கள்

விநாயகம், நெடியவனிடையே சொத்துக்கான சண்டைகள்

பிளவுபட்ட புலி ஆதரவு இணையங்களில் வெளியான செய்திகள்

ஜேர்மனியில் மாவீரர் படங்கள், நினைவு கல்லறைகள் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு தீவைப்பு!

பாரிஸ் - லா சப்பலில் மாவீரர் கொடிகள் அறுத்தெறியப்பட்டது !

ஜேர்மனியில் விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலக மாவீரர் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக செய்யப்பட்ட கல்லறைகள், மற்றும் மாவீரர் படங்கள், துயிலும் இல்ல முகப்பு, தமிழீழ வரைபடம், மற்றும் சோடனைகள்  வைக்கப்பட்டிருந்த வீட்டிற்கு கடந்த இரவு சில விஷமிகள் தீவைத்துள்ளனர் என காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஜேர்மனி ரெட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. முன்சன்கிளப் பார்க் ( கொமர்சியல் பார்க்) என்ற இடத்திலேயே விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தன. ஜேர்மன் விடுதலைப்புலிகளின் தலைமைச்செயலக மாவீரர்நாள் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரான குஞ்சன் என்று அழைக்கப்படும் புவனேஸ்வரன் என்பவர் வீட்டில் பின்பக்க கராஜில் மாவீரர் நினைவு கல்லறைகளும், மாவீரர் படங்களும் , சோடனைகளும், மாவீரர்நாள் நடைபெறும் இடத்தில் கொண்டுபோய் வைப்பதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போது அவ்வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த விஷமிகள் மாவீரர் படங்களுக்கும், நினைவு சின்னங்களுக்கும் தீவைத்துள்ளனர் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 27, 2011

கார்த்திகை 27, 2011

சூரியதேவனின் பிறந்தநாள் செய்தி !

 

 ‘‘புலிகளின் சொத்துக்களை இனியாவது பொதுமைப்படுத்தி யுத்தத்தால் பாதிக்ப்பட்டவர்களுக்கு உதவ இவ்வருட மாவீரர் நாளை பயன்படுத்துங்கள்.’’

கார்த்திகை 27, 2011

யாழில் திடீரென முளைக்கும் விடுதிகளால் என்றுமில்லாதவாறு கலாசார சீரழிவு!

(க. சிவராசா)

யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டதும் ஏ-9 பாதை திறக்கப்பட்டது. அதனால் யாழ்ப்பாணத் திற்கு எவரும் வந்துபோகும் நிலை ஏற்பட்டது. எவ்விதமான கட்டுப்பாடும் கிடையாது. இவ்வாறு வந்துசெல்லும் நபர்கள் தங்குவதற்குத் தங்குமிட தேவையேற்பட்டபோது பலரும் வருமானத்தை ஈட்டுவதற்காக சிறிய இடங்களைக் கூடத் திருத்தி தங்குமிட விடுதிகளாக்கினர். அவ்வாறு ஆரம்பித்து தங்குபவர்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்க தங்குமிடத்திலேயே மதுபான வகைகள் அனுமதி பெறாமலேயே தாராளமாக விநியோகிக்கப்படுகிறது. அதன் பின்னர் தங்க வருபவர்களை மேலும் ஈர்ப்பதற்காக மதுவுடன் சேர்த்து மாதுக்களையும் ஒரு சில விடுதி உரிமையாளர்கள் விநியோகிக்கத் தொடங்கினர். அதன் பரிணாம வளர்ச்சியின் ஒரு அங்கமாகவே அண்மையில் அந்த விடுதியில் கைதான இளம் பெண்கள் விவகாரமும் அமைந்துள்ளது. சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொலிஸார் தமது கடமையில் இறுக்கமாக இருந்திருந்தால் இந்நிலை ஒருபோதும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு சம்பம் நடந்த பின்னர் அதனைக் கண்டுபிடித்து விசாரணை நடத்துவது பெரிய கெட்டித்தனமாகக் கொள்ள முடியாது. நடக்கவிடாமல் தடுப்பதே உண்மையான கெட்டித்தனம். (மேலும்....)

கார்த்திகை 27, 2011

தெற்கை நோக்கிய அதிவேக நெடுஞ்சாலை...

அதி நவீன கமராக்கள் பொருத்தப்பட்டு வழி நெடுகிலும் பலத்த பாதுகாப்புடன் குறுகிய நேரத்திற்குள் குறிப்பிட்ட இடத்தை சென்றடையக் கூடிய நெடுஞ்சாலையொன்று முதன் முதலில் இலங்கையில் அங்குரார்ப் பணம் செய்து வைக்கப் படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை 27ம் திகதி ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவிருக்கும் இப்பெ ருஞ்சாலை கொட்டாவையிலிருந்து காலி மாவட்ட பின்னடுவ வரை 96 கிலோ மீட்டர் தூரத்தைக் கொண்டது. சுமார் 700 கோடி ரூபா செலவில் அமைக்கப் பட்டுள்ள இந்நெடுஞ்சாலைக்கு ஜப்பான் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. எட்டு தொடு முனைகளைக் கொண்ட இந்நெடுஞ்சாலையில் விசேடமாக நியமிக்கப்பட்ட போக்குவரத்து பொலிசார் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபடுத் தப்படவிருக்கின்றனர். ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள நவீன சிசிரிவி கமராக்கள், வாகனங்களின் ஓட்டத்தை கண்காணித்துக் கொண்டிருக்கும். (மேலும்....)

கார்த்திகை 27, 2011

ரிசானாவுக்கு விடுதலை கிடைக்குமா?

(சுஐப் எம். காசிம்)

இன, மத பேதமின்றி எல்லா மக்களினதும் கவனத்தையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொண்ட சம்பவம் தான் ரிஸானா நபீக் எனும் பணிப் பெண்ணுக்குக் கிடைத்த மரண தண்டனையாகும். வறுமையின் கோரம் தாங்க முடியாத மூதூரைச் சேர்ந்த நபீக் எனும் தந்தை தனது அன்பு மகள் ரிஸானாவை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணிப்பெண்ணாக சவூதியிலுள்ள ரியாத் நகருக்கு அனுப்பி வைத்தார். ரிசானா அனுப்பும் பணத்தால் தமது வறுமை தீரும் என்ற அவரது ஆசைக் கனவுகள் குறுகிய காலத்தில் நிராசையாகின. 2005 மே மாதம் 4ம் திகதி ரிசானா ரியாதுக்குச் சென்று ஒரு கிராமத்து வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார். பால் புகட்டும் போது நய்வ் ஜிஸியான் காலவ் என்ற எஜமான ரின் ஆண் குழந்தை மரணமாக நேர்ந் தது. தனது குழந்தை இறந்த துக்கத்தில் நடவடிக்கை மேற்கொண்ட அந்தக் குடும்பம் பொலிஸில் முறையிட்டது. (மேலும்....)

கார்த்திகை 27, 2011

இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை

இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலை இன்று திறந்து வைக்கப்படுகிறது. நூறு கிலோ மீற்றர் தொலைவை 100 கிலோ மீற்றர் வேகத்தில் கடந்து செல்ல முடியும். கொட்டாவையில் இருந்து காலி நகரத்திற்கு ஒரு மணித்தியாலத்தில் சென்றுவிட முடியும். நூறு கிலோ மீற்றர் வேகத்தில் செல்ல முடியாத எந்தவொரு வாகனமும் இந்தப் பாதையால் செல்வதற்கு அனுமதியில்லை. பாதசாரிகள் நடந்து செல்ல முடியாது. மீறினால் ஐயாயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும். வாகனத்தில் பயணிப்பதற்கு நானூறு ரூபாய் முதல் இரண்டாயிரம் ரூபாய் வரை கட்டணம் செலுத்த வேண்டும். அதன் விபரங்கள் வேறு பக்கங்களில் வெளியாகியுள்ளன. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள முடியும். இந்தப் பாதை திறந்து வைக்கப்படும் இன்றைய நாள் இலங்கை வரலாற்றில் முக்கியமான நாள். (மேலும்....)

 

கார்த்திகை 27, 2011

யாழ்.பல்கலைக்கழக வளவில் பொலிஸ் பாதுகாப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்கலைக்கழகத்தின் சுற்றுப் புறங்களில் தமிழீழ மாவீரர் நாள் தொடர்பான பிரசுரங்கள் ஒட்டப்பட்டதன் பின்னணியே பொலிஸார் காவற்கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றனர். பல்கலைக்கழகத்தின் விளம்பரப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த மாவீரர் நாள் தொடர்பான பிரசுரங்கள் இனந்தெரியாத மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களினால் கடந்த 24 ஆம் திகதி கிழித்தெறியப்பட்டது. தமிழீழ மாவீரர் நாள் இன்று பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்படும் என்ற அச்சம் காரணமாகவே பொலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2009 ஆம் ஆண்டு அரச படைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு பகுதிகளில் மாவீரர் நாள் அனுஷ்டிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஆனால் புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் பிரதேசம் எங்கும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதேவேளை வடக்கு கிழக்குப் பகுதிகளில் உள்ள அனைத்து மாவீரர் கல்லறைகளும் அரச படைகளினால் அழிக்கப்பட்டுள்ளன.

 

கார்த்திகை 26, 2011

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வழங்கிய அறிக்கையின் பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியது!

தமிழ் தேசிய கூட்டமைப்பு அமெரிக்காவிடம் வழங்கிய அறிக்கையின் பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியது! அமெரிக்கப் பயணத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிடம் ஒப்படைத்த விசேட அறிக்கையின் ஒரு பிரதி இலங்கை அரசின் கைகளில் சிக்கியிருப்பது கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஒக்ரோபர் மாத பிற்பகுதியில் அமெரிக்காவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அமெரிக்க வெளிவிவகார அமைச்சிற்குச் சென்று அங்கு உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தனர். அத்துடன், இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவை தொடர்பிலான அரசின் செயற்பாடுகள் என்பன பற்றிக் குறிப்பிட்டு விசேட அறிக்கை ஒன்றையும் கூட்டமைப்பினர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

நாடெங்கும் அடைமழை, வெள்ளம், மினிசூறாவளி

கிழக்கில் கிராமங்கள் நீரில் மூழ்கின தெற்கில் மினி சூறாவளி

நாடளாவிய ரீதியில் நேற்று பெய்த கடும் மழை, மற்றும் மினிச் சூறாவளியினால் வடக்கு, கிழக்கு உட்பட பல பிரதேசங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மினிச் சூறாவளி மற்றும் வெள்ளம் காரணமாக மாத்தறை மாவட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்னர். 106 வீடுகள் முழுமையாக சேதமாகியுள்ளதுடன் 955 வீடுகள் பகுதிகளாக பாதிப் படைந்துள்ளன. மாத்தறையில் மினிச் சூறாவளியினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் 3 பேரும் கடலுக்குச் சென்றவர்கள் நால்வருமே உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. அநுராதபுரம், மொனராகலை பகுதிகளில் இருவர் காணாமற் போயுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

‘விந்தையின் நுழைவாயில்’ நாளை திறப்பு

“விந்தையின் நுழைவாயில்” என்றழைக்கப்படும் இலங்கையின் முதலாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு-காலி வீதி நாளை காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்படவுள்ளது. கொட்டாவையிலிருந்து காலி வரை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நெடுஞ்சாலை 95.2 கிலோமீற்றரைக் கொண்டதாக அமைந்துள்ளதுடன் ஒரு மணித்தியாலத்தில் காலியைச் சென்றடைய இப்பாதை வழிவகுக்கிறது. நூறு கிலோ மீற்றர் வேகத்தில் வாகனங்கள் இந்த நெடுஞ்சாலையில் பயணிப்பதுடன், பயணிகள் போக்குவரத்துச் சேவைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. சர்வதேச அதிவேக நெடுஞ்சாலைகளின் தரத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கு முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது. கொட்டாவையிலிருந்து காலி செல்லும் வழியில் நான்கு முக்கிய நகரங்களிலிருந்து இந்த நெடுஞ்சாலையில் இணைவதற்கான பிரவேச வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 26, 2011

மார்க்சிய சிந்தனை மையம் நடத்தும் 'மார்க்சிய படிப்பு வட்டம்'

மார்க்சிய சிந்தனை மையம் ஒவ்வொரு மாதமும் நாகர்கோவிலில் மார்க்சிய படிப்பு வட்டத்தை  சிறப்பாக நடத்தி வருகிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த தோழர்களும், முற்போக்கு எண்ணம் கொண்டவர்களும்  கலந்து கொள்கிறார்கள். இந்த மாதத்திற்கான வகுப்பு வரும் 27.11.2011 அன்று நாகர்கோவில், தக்கலை, லைசியம் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த படிப்பு வட்டத்தில் கடந்த இரண்டு வகுப்புகளில் நடத்தப்பட்டு வரும்   இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் தொடர்ச்சி தோழர் அ.ஆனந்தன் அவர்களால் எடுக்கப்பட இருக்கிறது. இந்த படிப்பு வட்டத்தில்  அனைத்து மார்க்சிய சிந்தனைவாதிகளும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : லைசியம் பள்ளி, தக்கலை , நாகர்கோவில்

நாள் : 27 .11 .2011 , ஞாயிற்றுக்கிழமை காலை 10 .00 மணி

பொருள்  : இயக்கவியல் பொருள்முதல்வாதம்

தலைமை : தோழர்.பிரசாத்

சிறப்புரை :தோழர். அ.அனந்தன்

ஒருகிணைப்பாளர் : தோழர்.போஸ்

தொடர்பிற்கு : தோழர் மகிழ்ச்சி செல் : 9443347801

கார்த்திகை 26, 2011

சனல் 4 இன் முகத்திரையை கிழிக்குமா லண்டன் சூட்டுக்குறி?

(பீமன்)

இலங்கையில் புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் புலம்பெயர் தேசத்திலுள்ள புலிகள் தமது பணவசூலிப்பை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்வதற்கான ஆயுதமாக போர்குற்றம், சர்வதேச விசாரணை எனும் கோஷங்களை கையிலெடுத்துள்ளனர். வன்னியிலே புலிகள் தனியானதொரு சட்டவிரோத நிர்வாகக் கட்டமைப்பை வைத்திருந்தபோது, அவர்கள் தமக்கெனத் தனியான தொலைக்காட்சி , வானொலி சேவைகளையும் வைத்திருந்தனர். புலம்பெயர் தேசத்திலே தமக்கு தேவையான நிதி மற்றும் வளங்களை பெற்றுக்கொள்வதற்கான மூளைச்சலவைச் பிரச்சாரங்கள் இவ்வூடகங்களுடாக முன்னெடுக்கப்பட்டது. (மேலும்....)

கார்த்திகை 26, 2011

சாதனையா? வேதனையா?

(எஸ்.நூர்முகம்மது)

தமிழகத்தில் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் மாறி மாறி மக்களை ஏமாற்றியே வந்துள்ளன. மக்கள் தலையில் மிளகாய் அரைப்பதில் இரண்டும் போட்டியிட்டு வருகின்றன. வாக்களித்தபின் மக்கள் கையறு நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களும் வேறு வழி தெரியாமல் மாறி மாறி வாக்களித்தும், கிடைப்பதெல்லாம் மக்கள் விரோத ஆட்சி தான். உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாற்று உருவாக்கப்பட முயற்சி நடந்தபோது மக்கள் பல காரணங்களால் மாற்றை உரிய அளவில் அங்கீகரிக்கவில்லை. விளைவு, கடும் தாக்குதல் மக்கள் மீது உடனடியாகவே. மக்கள் தி.மு.க, அதிமுகவிற்கு உரிய மாற்றை பற்றி யோசிக்க வேண்டும். இடதுசாரி கட்சிகளும், பிற மதச்சார்பற்ற கட்சிகளும் வலுப்படாமல் அது சாத்திய மல்ல. தற்போது தங்கள் மீது தொடுக்கப் பட்டு வரும் மத்திய, மாநில அரசுகளின் தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிட, இடதுசாரி இயக்கங்களு டன் இணைந்து நின்று தெருவில் இறங்கி போராடுவதே தற்போதுள்ள ஒரே வழி. (மேலும்....)

கார்த்திகை 26, 2011

“எங்களுக்கு வாக்களியுங்கள்” - தயாரானது ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சி

ரஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய பட்டியல் பத்து பேர் தலைமையில் உருவாக் கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்டுகள் மற்றும் கட்சியில் இல்லாதவர்கள் ஆகியோருக்கிடை யிலான ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்தப்பட்டியல் உள்ளது. மிகவும் அனுபவம் வாய்ந்த கட்சித்தலைவர்கள், கட்சித்தலை மையில் உள்ள இளம் உறுப்பினர்கள் ஆகி யோரும் இந்தப்பட்டியலில் இடம் பெற்றுள் ளார்கள். இவர்கள் கடுமையான சோதனை களைக் கடந்து வந்தவர்களாவர். பல்வேறு கட்சி, பொருளாதார மற்றும் நாடாளுமன்றப் பொறுப்புகளில் பணியாற்றி பெரும் அனுபவம் கொண்டவர்களாவர்.  பட்டியலில் முதல் மூன்று இடங்களில் முக் கியமான தலைவர்கள் இடம் பெற்றிருக் கிறார்கள். கட்சி மத்தியக் குழுவின் தலை வரும், டுமாவில் கட்சியின் தலைவருமான கென்னடி யுகானோவ், டுமாவில் கட்சியின் துணைத்தலைவராக இருக்கும் விளாதிமீர் கோமோயெடோவ் மற்றும் கட்சியின் தலை மைக்குழு உறுப்பினரும், ரஷ்ய இளம் கம்யூ னிஸ்ட் லீக்கின் தலைவருமான யூரி அஃ போனின் ஆகியோர்தான் முதல் மூன்று நபர் களாக பட்டியலில் உள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

பரந்து விரியும் “கைப்பற்றுவோம் போராட்டங்கள்”!

செப்டம்பர் 17 ஆம் தேதியன்று வெறும் 150 பேர் திட்டமிட்ட கைப்பற்றுவோம் போராட்டம், ஓரிரு வாரங்கள் நடந்துவிட்டு அப்படியே காணாமல் போய்விடும் என்ற அமெரிக்க ஆட்சியாளர்களின் எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டு, நூறாவது நாளை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது. பொதுவான அதிருப்தியாக இருந்த நிலை மாறி, கல்வி, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகளை முன்வைத்த போராட்டக்களமாக உருவெடுத்துள்ளது. பேராசை, லாபவெறி, சொத்துக்குவிப்பு, சுரண்டல் என்பதன் மொத்த உருவமாக முதலாளித்துவம் உள்ளது என்று முதலாளித்துவ நாடுகளில் உள்ள மக்கள் வீதிகளில் முழக்கமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்....)

கார்த்திகை 26, 2011

அவதார் பாணியில் ரஜினியின் கோச்சடையான்

ராணா படம் இப்போதைக்கு இல்லை என்று ஒருவாயாக ரஜினி தரப்பில் அறிவிக்கப்பட்டு விட்டது. ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டுள்ளது. அவதார் பாணியில் 3 டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ். ரவிக்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். செளந்தர்யா ரஜினி இயக்குகிறார் கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். கோச்சடையான் படத்தை அடுத்தாண்டு ஓகஸ்ட் மாதத் தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. கோச்சடையான் படம் முடிந்தபின் ராணாவில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த புதிய படத்தையும் ராணா தயாரிப்பாளர் ஈராஸ் மற்றும் மீடியா குளோபல் ஒன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

கார்த்திகை 26, 2011

சிரியா மீது படையெடுக்க அமெரிக்கா ஆயத்தம்! போர்க்கப்பலை அனுப்பியது

சிரியாவின் கடல் எல் லைக்கு அருகில் போர்க்கப் பலை அனுப்பியதோடு, சிரி யாவில் உள்ள அமெரிக்கர் கள் அனைவரும் உடனடி யாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. தனக்கு எதிராக இருக் கும் அரசுகளை அகற்றி விட்டு, பொம்மை அரசு களை அமைக்கும் அமெ ரிக்காவின் அடுத்த இலக்கு சிரியாவாக இருக்கிறது. அந்த அரசு பற்றி ஏராள மான பொய்ப்பிரச்சாரங் களைக் கட்டவிழ்த்து விட் டுள்ளதோடு, ஐ.நா.சபை, அரபு லீக் ஆகிய அமைப் புகள் மூலமும் தனது ஆக் கிரமிப்புக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. சிரியா விலிருந்து கொண்டே சதி வேலைகளை செய்து கொண்டிருந்த அமெரிக்கத் தூதுவர் ராபர்ட் ஃபோர்டு அக்டோபர் மாதத்தில் வெளியேறினார்.  (மேலும்....)

கார்த்திகை 25, 2011

யசூசி அகாசி நாளை இலங்கை விஜயம்

ஜப்பானின் விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாசி நாளை இலங்கை வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாளை மறுதினம், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையைத் திறந்து வைப்பதற்காகவே அவர் இலங்கை வருகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் அரச தலைவர்களை இவர் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் எதிர்வரும் 30 ஆம் திகதி ஜப்பானுக்குத் திரும்பிச் செல்வார் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. ___

கார்த்திகை 25, 2011

2012ம் ஆண்டு மும்மொழி இலங்கையாக பிரகடனம்

2012 ஆம் ஆண்டை மும்மொழி இலங்கையாகப் பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல், ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மும்மொழி இலங்கை அமுலாக்கலுக் காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் அமைச்சரவைக்கு சமர்ப் பிக்கப்பட்ட பத்தாண்டு கால தேசிய திட்டத்திற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் மேலும் விளக்கமளிக்கையில்:- மூன்று தசாப்தங்களாக நாட்டில் தலை விரித்தாடிய பயங்கரவாதம் தோற்கடித்த பின்னர் எடுக்கப்பட வேண்டிய துரதிருஷ்ட நடவடிக்கைகளில் ஒன்றாக இலங்கை மக்கள் மும்மொழிகளிலும் சரளமாக தொடர்புகொள்ள கூடிய வழிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று அரசாங்கம் கருதியதை யடுத்தே இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 25, 2011

போரில் உயிரிழந்த, காணாமல் போனோரின் தகவல் விரைவில் வெளியிடப்படும

போரின்போது உயிரிழந்த மற்றும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களை திரட்டிவருவதாகவும் விரைவில் அந்த எண்ணிக்கை வெளியிடப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நிலையத்தில் நடைபெற்றுவரும் நல்லிணக்கமும் போருக்குப் பின்னரான நிலைமையும் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். "தொகைமதிப்பீட்டு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரிகள் வடக்கில் குடிசன மதிப்பீட்டை செய்துவருகின்றனர். அத்துடன் யுத்தத்தின்போது உயிரிழந்த மற்றும் காணாமல்போனோர் தொடர்பான தகவல்களையும் அவர்கள் திரட்டிவருகின்றனர். அந்த எண்ணிக்கையை நாம் விரைவில் வெளியிடுவோம். அது, சில வெளிநாட்டுச் சக்திகள் கூறுவதுபோல அதிகூடிய எண்ணிக்கையாக அமையாது" என அவர் மேலும் தெரிவித்தார். ___

கார்த்திகை 25, 2011

‘பல்கலைக்கழகங்களைக் கைப்பற்றுவோம்’  அமெ. மாணவர்கள் போராட்டம் தீவிரமடைகிறது

அமெரிக்காவில் நடைபெற்று வரும் கைப்பற்றுவோம் போராட் டங்களின் ஒருபகுதியாக அந்நாட்டு மாணவர்களும் தங்கள் போராட் டங்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தப் போராட்டங்களுக்கு எதிராக காவல்துறை நடத்தும் வன்முறை நடவடிக்கைகள் மற்றும் கல்விக்கான பட்ஜெட்டில் வெட் டுகளுக்கான முயற்சிகள் ஆகியவற் றிற்கு எதிராக மாணவர்கள் குரல் எழுப்பி வருகிறார்கள். நவம்பர் 28 அன்று முழுமையான வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து மாணவர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரவை நடைபெற்றது. அதில் பங்கேற்ற மாணவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு ஒப்புதல் அளித்தனர். (மேலும்....)

கார்த்திகை 25, 2011

மாவட்டத்திற்கு மாவட்ட குறைகாண்பதை விடுத்து, கூட்டமைப்பில் இருக்கும் குறைகள் திருத்தப்படுமா?

கடந்த 2009 ஆம் ஆண்டிருந்து இன்றுவரைக்கும் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தவறு இழைத்துத்தான் வருகின்றது. முள்ளிவாய்க்காலில் சிறீலங்கா மேற்கொண்ட இனப்படுகொலைக்கு பின்னர் தமிழ் மக்கள் தலைமையின்றி அனாதைகளாக்கப்பட்டு விட்டனர் என்ற எண்ணத்திலிருந்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீளவேண்டும். அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உபதவிசாளர் படைத்துணைக்குழு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளதாகவும், அது தமிழர்க்கு இழைத்த தவறு என்று கூறினால், நேற்று (22-11-2011) நாடாளுமன்றத்தில் மஹிந்தாவும், அவரின் கூட்டங்களுடன் நாடாளுமன்றத் தொகுதியில் தேனீர் அருந்துவதை எவ்வாறு சொல்வது? கொழும்பில் கூட்டமைப்பு தலைமைகள் தேனீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டால் அது அரசியல் ராஜதந்திரம்? (மேலும்....)

கார்த்திகை 25, 2011

சவூதி அரேபியாவில் ஆளும் குடும்பத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

மத்திய கிழக்கில் தீவிர அமரிக்க சார்பு நாடான சவூதி அரேபிய அரசிற்கும் ஆளும் அல் சவூட் குடும்பத்திற்கும் எதிராக மக்கள் எழுச்சிகள் இடம்பெறுகின்றன. கடந்தவாரம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சவூதி அரேபிய பாதுகாப்புப் படைகள் குறைந்தது ஐந்து பொதுமக்களையாவது கொலைசெய்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது. கொலைசெய்த பாதுகாப்புப் படையினர் தண்டிக்கப்பட வேண்டும் என்று இன்று வியாளன் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. சவூதி அரேபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கும் அமரிக்க அரசும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் சவூதி அரேபிய அரசின் படுகொலைகள் குறித்து மௌனம் சாதிக்கின்றன.

கார்த்திகை 25, 2011

2279 குடும்பங்கள் இன்னமும் நிவாரணக் கிராமங்களில்: மீள்குடியேற்ற அமைச்சு

வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த குடும்பங்களில் கதிர்காமர் மற்றும் ஆனந்த குமாரசாமி நிவாரணக் கிராமங்களில் 2279 குடும்பங்கள் இன்னும் தங்கியுள்ளன. அக்காலப்பகுதியில் இடம்பெற்ற குடும்பங்களில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 482 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்று மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.யான சரவணபவன் கேட்டிருந்த கேள்விகளுக்கு சபா பீடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.  இக்கேள்விக்கான பதிலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சபா பீடத்தில் சமர்ப்பித்தார். இந்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்தவர்களில் ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 482 குடும்பங்களைச் சேர்ந்த 455,906 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். வடக்கில் இடைத்தங்கல் முகாம்களில் எவருமே இல்லை.
(மேலும்....)

கார்த்திகை 25, 2011

வடக்கில் இராணுவ ஆட்சி என்பது பொய் - அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்

வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கும் குற்றச் சாட்டில் எதுவித உண்மையுமில்லை. அங்கு இராணுவ ஆட்சி நடக்குமா னால், த. தே. கூட்டமைப்புக்கு தேர்தலில் போட்டியிடவோ வெற்றி பெறவோ முடிந்திருக்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட மூன்றாம் நாள் விவாதத்தின் போது த. தே. கூட்டமைப்பு எம். பி. தெரிவித்த சில குற்றச் சாட்டுகளுக்கு பதிலளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரதி அமைச்சர் மேலும் கூறியதாவது:-சுரேஷ் பிரேமச்சந்திரன் எம். பி. சபையில் பல கருத்துக்களை கூறினார். கொக்குசான்குளத்தில் சிங்களக் குடியேற்றம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் த. தே. கூட்டமைப்பு ஆதரவு வழங்கும் ஐ. தே. க. ஆட்சியிலே இங்கு குடியேற்றம் நடைபெற்றது. எமது அரசாங்கம் இங்கு குடியேற்றம் மேற் கொள்ளவில்லை. ஏற்கனவே குடியேற்றிய மக்களை இப்பொழுது வெளியேற்ற முடியாது. வடக்கில் இராணுவ ஆட்சி நடைபெறுவதாக த. தே. கூட்டமைப்பு குற்றஞ்சாட்டினாலும் இராணுவமே அங்கு பல சேவைகளை செய்து வருகிறது. சுரேஷ் எம். பி. யின் குற்றச் சாட்டை முழுமையாக நிராகரிக்கிறேன்.

கார்த்திகை 25, 2011

அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

அமெரிக்கா அதன் ஏவுகணை பாதுகாப்பு திட்டங்களை தொடர்ந்தால் ரஷ்யா தனது ஏவுகணைகளை ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் நிறுத்தும் என ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை அமைத்து வருகிறது. இது தொடர்பில் அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா வுடன் உடன்பாட்டுக்கு வரத்தவறினால் ரஷ்யாவின் நவீன ஆயுதங்கள் ஐரோப்பாவை இலக்கு வைத்து நிறுத்தப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி மெட்வடெவ் குறிப்பிட்டார். நேற்று வெளியிடப்பட்ட தொலைக்காட்சி அறிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். அத்துடன் அமெரிக்காவின் இந்த செயலால் அதனுடனான புதிய ஆயுத உடன்படிக்கையும் நிராகரிக்கப்படலாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 25, 2011

இனி ‘விழி நுனியில்’ தகவல் பெறலாம்

கண்ணின் கருவிழியின் மீது அணியும் கான்டாக்ட் லென்ஸ் வழியாக இணையத்தை இணைத்து தகவல்களைப் பெறும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவரது அறிவுத்திறனைப் பாராட்டும் வகையில், ‘அவர் பெரிய அறிவு ஜீவி. எதைப் பற்றி கேட்டாலும் பதில் சொல்லிவிடுவார். தகவல்களை விரல் நுனியில் வைத்திருப்பார்’ என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். இனி இந்தப் பாராட்டு அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒரே வித்தியாசம், தகவல் அனைத்தும் உங்கள் விரல் நுனியில் அல்ல, விழி நுனியில் வரப்போகிறது. இதைச் சாதித்திருப்பது, (வழக்கம் போல) அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகம் மற்றும் பின்லாந்தின் ஆல்டா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான். (மேலும்....)

கார்த்திகை 25, 2011

யாழ் பல்கலைக்கழத்தில் புலி உளவாளிகளின் மாவீரர்தின சுவரொட்டியுடன் கூடிய பெயர்பலகை அடித்து நொருக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழத்தில் புலி உளவாளிகளின் மாவீரர்தின சுவரொட்டியுடன் கூடிய பெயர்பலகை அடித்து நொருக்கப்பட்டது! யாழ் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் மாவீரர் தினத்தை முன்னிட்டு புலிகளின் எடுபிடிகளினால் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்த பெயர்ப்பலகையை அடித்து நொருக்கியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதனால் யாழ் பல்கலைக்கழக சூழல் பதற்றத்துடன் காணப்படுட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். எதிர்வரும் 27 ஆம் திகதி வரும் புலிகளின் மாவீரர் நினைவு தினத்தை முன்னிட்டும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த தினத்தை முன்னிட்டும் யாழ் பல்கலைக்கழக மாணவர் பொதுஅறையில் உள்ள பெயர்ப்பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்பது சட்ட விரோதமானது - வாசுதேவ நாணயக்கார

தேசிய கீதத்தை தான் விரும்பிய மொழியைப் பாவிக்க அரசியலமைப்பினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மேற்படி நிலையின் கீழ் மீறப்படவில்லையா? இதன் காரணமாக சிங்கள மக்களுக்கும் ஏனைய இன மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுக்கு தாக்கம் ஏற்படுத்துமா? போன்ற கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதிலளிக்கையில், இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தேசியக் கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று கூறுவது சட்ட விரோதமானது. இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஒரு குழப்பமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் தான் குழப்பமான நிலை ஏற்படுத்தப்பட்டது. அந்தக் குழப்பமான நிலைமை தீர்த்து வைக்கப்பட்டது. இலங்கை தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேசியக் கீதத்தை தாம் விரும்பிய மொழியில் பாடலாம் என்றார்.

கார்த்திகை 24, 2011 __

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் முதலமைச்சர் சந்திரகாந்தன் இன்று சந்திப்பு 

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் றென்கின், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் மற்றும் அடுத்த ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விதவைகளின் வாழ்வாதார மேம்பாடு, மற்றும் சிறுவர் கல்வி அபிவிருத்தி என்பன தொடர்பாக எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு குறித்த சில உதவிகள் வழங்குவது தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் இதன்போது தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 24, 2011

தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. அவை படைத்தரப்பினரால் அபகரிக்கப்படுகின்றன.

வட மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் அனைத்தும் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ள மாவட்டங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு கிராம மட்டங்களில் இராணுவ நிலைகள் ஏற்படுத்தப்பட்டு இராணுவம் நிலை கொண்டுள்ளது. வட மாகாணத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சம் படையினர் நிலை கொண்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. ஆயிரக் கணக்கான தமிழ் மக்களின் குடியிருப்பு நிலங்களும், வீடுகளும் இவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 24, 2011

7 இலட்சத்து 50 ஆயிரம் பயணிகளை எட்டிய சுற்றுலாத்துறை

இலங்கை சுற்றுலாத்துறை வரலாற்றில் முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 7 இலட்சத்து 50 ஆயிரத்தினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வருடத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை, இன்று மாலை வருகை தந்த பலஸ்தீன நாட்டு சுற்றுலாப் பயணியுடன் மொத்தமாக, 7 இலட்சத்து 50 ஆயிரமாக பதிவாகியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கார்த்திகை 24, 2011

"யாழ்ப்பாணத்தில் இராணுவம், பொலிஸாரைத் தவிர வேறு எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது"

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரையும் பொலிஸாரையும் தவிர எவரும் ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. இராணுவம் தற்போதைய நிலைமையில் சண்டையிடுபவர்கள் என்ற ஸ்தானத்திலிருந்து பாதுகாப்பாளர்கள் என்ற இடத்தை அடைந்துகொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஆயுதங்கள் ஒருபோதும் பொதுமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படமாட்டாது என யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். "வடக்கில் இராணுவம் என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள். மக்களிடம் இராணுவம் தொடர்பாகக் காணப்பட்ட தோற்றப்பாட்டை மாற்றி வருகிறோம். தற்போதைய நிலைமையில் மக்கள் எம்மை பாதுகாப்பாளர்களாகப் பார்க்கின்றனர். யாழ்ப்பாணத்தில் 99.3 வீதமான பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. பெரும்பாலும் இராணுவமே இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்தது" என அவர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 24, 2011

மத்திய அமைச்சரை கன்னத்தில் அறைந்த இளைஞர்

மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மீது சீக்கிய இளைஞர் ஒருவர், கன்னத்தில் அறைந்த சம்பவம் டில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு மத்திய அமைச்சர் சரத்பவாரே காரணம் என்று அந்த இளைஞர் கோஷமிட்டார். மேலும் சரத்பவாரை கொல்லத்தான் நினைத்தேன் என்று கூறிய அந்த இளைஞர், விளம்பரத்துக்காக அவர் கன்னத்தில் அறையவில்லை என்று கூறித் தனது கையைக் கத்தியால் கிழித்துக் கொண்டார். மேலும், நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அதை தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என அந்த இளைஞர் ஆவேசமாக கூறினார். இந்தச் சம்பவம் புதுடில்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே இளைஞர் தான், ஊழல் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீது தாக்குதல் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 24, 2011

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு உளவாளிகள் ஈரானில் கைது

அமெரிக்க சி.ஐ.ஏ. மற்றும் இஸ்ரேலிய மொஸாட் உளவாளிகள் எனக் கருதப்படும் 12 பேர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சி.ஐ.ஏ. (அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு) மற்றும் இஸ்ரேலின் மொஸாட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் ஈரானின் அணு ஆயுத நடவடிக்கைகளை புலனாய்வு செய்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா , இஸ்ரேல் ஆகியன ஈரானுக்கெதிராக இத்தகைய பல்வேறு சதித்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினரின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஈரானிய அதிகாரிகளின் துரித நடவடிக்கைகளின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னரும் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவாளிகள் பலர் ஈரானில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் பலர் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 24, 2011
மாவீரர் தினம்

வியாபாரிகளை வீட்டுக்கு அனுப்புவோம்

(கோசலன்)

அயோக்கியர்கள் அணிந்துகொள்ளும் இறுதி முகமூடி தேசியம் என்பதை அழிவுகளின் பின்னர் நடைபெறும் மாவீரர் தினம் அழகாகக்ப் படம்போட்டுக் காட்டுகிறது. அரசியலற்ற வெற்றுத் தேசிய முழக்கத்தை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இலங்கை பாசிச அரசின் உளவாளிகள், இந்திய அரசின் கொலைகார்கள், அமரிக்க உளவு வலைப்பின்னர் என்ற எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிரான போராட்டம் கூட இப்படித்தான் பயன்பாட்டிற்கு உட்பட்டது. இதற்கெல்லாம் புலிகள் மட்டும் காரணமாகிவிட முடியாது. இன்று அரசியல் குறித்துப் பேசுகின்ற நாம் அனைவரும் தான் காரணம். (மேலும்....)

 

 

கார்த்திகை 24, 2011

இன்று புதிதாய் பிறப்போம்..

‘மனித நேயம்’

அவருக்கு வரலாறு தந்த மாற்றுப்பெயர்!

வரலாற்று நாயகர் வரிசையில்

வாழ்ந்துகொண்டிருக்கும் வண்ண ஒளிவிளக்கு!

உலகத் தமிழர்கள் உணரத்தவறிய உன்னத வரலாறு!

முரண்பட்ட மனிதர்களையும்

உடன்படவைக்கும் உயர்ந்த உள்ளம்!

பகைவனையும் பண்படவைக்கும் பகுத்தறிவுப் பெட்டகம்!

(மேலும்....)

 

கார்த்திகை 24, 2011

ஸ்பெக்ட்ரம்

ஐவருக்கு நீதிமன்றம் பிணை, கனிமொழிக்கும் பிணை கிடைக்கும் வாய்ப்பு
 

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் 5 தொலைத் தொடர்புத் துறை நிறுவன அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கி உத்தரவிட்டது. ஸ்வான் டெலிகொம் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் கோயங்கா, அனில் அல்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிகாரிகள் ஹரி நாயர், கெளதம் தோஷி, சுரேந்திர பிபாரா மற்றும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா ஆகியோருக்கு நேற்று பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுடன் கூட்டு சேர்ந்து முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்களுக்கு பிணை வழங்க சிபிஐ கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. இவர்களை விடுவித்தால், சாட்சிகளை அழித்துவிடுவர் என்று சிபிஐ தரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால் அதையும் மீறி இவர்களுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

மட்டு., அம்பாறையில் அடை மழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இங்கே கல்முனை, கிட்டங்கி தாம்போதிக்கு மேலாக வெள்ளம் பாயும் காட்சி. போக்குவரத்து இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை 24, 2011

பாரிஸ் மாநகரில்

வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்'

நூல் வெளியீட்டு விழா..!

ஐரோப்பாவில் வாழும் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான வி. ரி. இளங்கோவனின் 'மண் மறவா மனிதர்கள்' கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா மார்கழி மாதம் 11 - ம் திகதி (11 - 12 - 2011) ஞாயிறு பிற்பகல் 3மணியளவில் பாரிஸ் மாநகரில் (50, Place de Torcy, 75018 Paris -  Mιtro:  Marx Dormoy) நடைபெறவுள்ளது. அரசியல், இலக்கியம், சமூகம், சமயம், தமிழியல், இதழியல், மருத்துவம் ஆதியாம் பல்வேறு துறைகளில் ஒப்பரிய பணிகளைச் செய்தவர்களின் சிறப்பை 'மண் மறவா மனிதர்கள்' நூல் அழகுற எடுத்தியம்புகின்றதெனவும், வருங்காலச் சந்ததியினர் நம்மவரின் பணிகளை நன்கு அறிந்துகொள்ள இந்நூல் நல்லதோர் ஆவணமாக அழைந்துள்ளதெனவும் பேராசிரியர்கள் பாராட்டியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 24, 2011

புஷ், பிளேர் போர்க்குற்றவாளிகள்  மலேசியா போர்க்குற்ற நீதிமன்றம் தீர்ப்பு

இராக் போரின்போது போர்க்குற்றங்களை செய் தார்கள் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் பிரிட்டன் முன் னாள் பிரதமர் டோனி பிளேர் ஆகியோர் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாட்டு களை மலேசிய போர்க் குற்ற விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. 2003 ஆம் ஆண்டு இராக் கிற்குள் படைகளை அனுப்பி மனிதகுலத்திற்கு எதிரான கொடூர நடவடிக் கைகளில் அவர்கள் ஈடுபட் டனர் என்று ஐந்து உறுப் பினர்களைக் கொண்ட நீதிபதிகள் குழு முடிவுக்கு வந்துள்ளது. பேரழிவு ஆயு தங்களை குவித்து வைத்தி ருக்கிறார் என்று சதாம் உசேன் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை எழுப்பி, சர்வதேச சட்டங்களை மதிக்காமல் படையெடுத் துச் சென்றனர் என்று இந்த இருவரின் மீதும் குற்றச் சாட்டுகள் எழுப்பப்பட்டன. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

சீனாவுடன் போரிட வேண்டுமா, ஏன்?

(சமஸ்)

இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு எழுதுவது இந்தியர்களுக்கு சுவாரஸ்யத்தைத் தரலாம். ஆனால், உண்மை நிலவரம் இந்தியர்களால் சகித்துக்கொள்ள முடியாதது! நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனிநபர் உற்பத்தி இந்தியாவைக் காட்டிலும் சீனாவில் 4 மடங்கு அதிகம். ஓர் உதாரணம், இந்தியக் குடிமகனின் சராசரி ஆண்டு வருமானம் கடந்த 2009-ல் 3,200 டாலர்கள். சீனா 9 ஆண்டுகளுக்கு முன் எட்டிய அளவு இது. ஒரு சீன விவசாயி சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு உற்பத்தி செய்யும் தானியத் தின் அளவு 10,500 கிலோ; இந்திய விவசாயி 2,203 கிலோ. கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்துக்காக சீன அரசு செலவிடும் தொகை இந்தியாவைக் காட்டிலும் 4 மடங்கு அதிகம். முத்தடுப்பூசி போடப்படும் குழந்தைகள் எண்ணிக்கை சீனாவில் 97 சதவிகிதம்; இந்தியாவில் 66 சதவிகிதம். சீனாவில் ஒரு குடிமகனின் சராசரி ஆயுள் 73.5 ஆண்டுகள்; இந்தியாவில் 64.4 ஆண்டுகள். சீனாவில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 94 சதவிகிதம்; இந்தியாவில் 63 சதவிகிதம். உயர்கல்விக்குச் செல்வோரின் எண்ணிக்கை சீனாவில் 25 சதவிகிதம்; இந்தியாவில் 13 சதவிகிதம். கடந்த 30 ஆண்டுகளில், வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கையை 64 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாகக் குறைந்திருக்கிறது சீனா. இந்தியா அல்ல; உலகின் எந்த ஒரு நாட்டுடனும் இதை ஒப்பிடவே முடியாது. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்தைவிட  இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகம் 

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை, நேபாளத்தை விட பெட்ரோல் விலை இந்தியாவில் அதிகம் என்று நாடாளுமன்ற மாநிலங்கள வையில் தெரிவிக்கப்பட்டது.  தொடர்ந்து உயர்த்தப் பட்ட பெட்ரோல் விலை யில் நவம்பர் 16ம் தேதி லிட் டருக்கு ரூ.2.22 பைசா குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டது. தில்லியில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.66.42 பைசாவுக்கு விற்கப்படு கிறது. அதேநேரத்தில் பாகிஸ்தானில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.48.64க்குதான் விற்பனை செய்யப்படுகிறது. இலங்கையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.61.38க் கும் நேபாளத்தில் 1 லிட்டர் ரூ.65.26க்கும் விற்கப்படுகி றது. நேபாளத்தில் எண் ணெய் சுத்திகரிப்பு நிறு வனம் எதுவும் இல்லை. இந் தியாவிலிருந்து இறக்குமதி செய்துதான் நேபாளம் தனது தேவையைப் பூர்த்தி செய்துகொள்கிறது என் பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010 ஏப்ரலுக்குப் பிறகு இந்தியாவில் பெட் ரோல் விலை 39 சதவீதம் அளவுக்கு, அதாவது லிட்ட ருக்கு ரூ.18.49 பைசா அள வுக்கு உயர்த்தப்பட்டுள் ளது. கடந்த ஆண்டு தில்லி யில் ஒரு லிட்டர் பெட் ரோல் விலை ரூ.47.63 ஆக இருந்தது. சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலின் விலை லிட் டருக்கு ரூ.32.82 மட்டுமே ஆகிறது என்றும் அதில் போக்குவரத்திற்காக ரூ.2.25ம், எக்சைஸ் வரிக்கு ரூ.11.7ம் வசூலிக்கப்படுகிறது. தில்லி அரசாங்கம் லிட்ட ருக்கு விற்பனை வரியாக ரூ.11.7 வசூலிக்கிறது.

கார்த்திகை 24, 2011

ஐ.நா. மேற்பார்வைக் குழுவில் இந்தியா

உலகம் முழுவதும் உள்ள ஐ.நா. அமைப்புகளை மதிப் பிடவும், மேற்பார்வையிடவும், விசாரிக்கவும் அதிகாரம் படைத்துள்ள சுயேச்சையான மேற்பார்வைக் குழு உறுப்பி னர் பதவிக்கு நடந்த தேர்த லில் இந்தியா வென்று, குழு வின் உறுப்பினர் ஆகியுள்ளது. ஆசியா - பசிபிக் மண் டலத்துக்கான தேர்தலில் இந் தியாவும், சீனாவும் போட்டி யிட்டன. ஐ.நா. பொதுக்குழு வில் நடந்த தேர்தலில் 183 நாடுகள் வாக்களித்தன. இந் தியா 106 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. சீனா 77 வாக் குகள் பெற்றது. 1.1.2013 முதல் ஐந்தாண்டுகளுக்கு இந்தியா குழுவில் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன் 1968 முதல் 1977 வரை இந்தியா ஐ.நா. மேற் பார்வைக் குழுவில் உறுப் பினராக இருந்துள்ளது. இக்குழுவில் 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பதவிக்காலத்தை மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள் ளலாம். ஜெனிவாவில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தி யாவின் நிரந்தரப் பிரதிநிதியாக உள்ள ஏ.கோபிநாதன் இக் குழுவில் உறுப்பினராக இருப் பார்.

கார்த்திகை 24, 2011

Why we should take down Wall Street

(By Nalliah Thayabharan)

WALL Street is a confidence trick, a dazzling edifice built on paper promises, gambling, bets and rampant speculations. Wall Street doesn't manufacture or produce anything. Wall Street, however attractive it may appear, is built on paper. Wall Street speculation caused a 70 percent increase in the price of wheat from June to December 2010 and severe food crisis in more than 35 countries. However, there was no significant change in the global food supply or in food demand. The total value of Wall Street speculative financial derivatives reached more than US$600 trillion - about 10 times global GDP. Wall Street's speculative derivatives are virtually untaxed and banks often avoid paying tax on profits from selling derivatives. Every consumer is paying more for commodities including food and fuel due to the excessive speculation by Wall Street. (more....)

 

கார்த்திகை 24, 2011

பாலஸ்தீனம்  பதா-ஹமாஸ் தலைவர்கள் சந்திப்பு

எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக பாலஸ்தீன தேசிய நிர்வாகத்தின் ஜனாதிபதி முகமது அப்பாஸ் வந்துள்ளார். எகிப்தில் மக்கள் எழுச்சி காரணமாக இஸ்ரேலுக்கு நெருக்கமாக இருந்த ஹோஸ்னி முபாரக் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். அதன்பிறகு எகிப்திலி ருந்து பாலஸ்தீனத்திற்கு நுழையும் எல்லைப்பகுதியும் திறக்கப்பட்டது. இது இஸ்ரேலின் முற்றுகையை ஓரளவு தகர்க்க உதவியது. இந்நிலையில் பதா மற்றும் ஹமாஸ் ஆகிய இரு அமைப்புகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் துவங்கின.
(மேலும்....)

கார்த்திகை 24, 2011

தொடரும் புலிகளின் அவலம் சுவிஸ்வாழ் (உண்டியல் உதயனின்) வெள்ளைசேட்டின் அங்கீகரிக்கமுடியாத காதலால் சிதைந்த எனது குடும்பம் தொடர் பாண்டியாகிய நான் காயத்ரி எழுதுகிறேன்…

புலிகளின் முகவர்களாக வீடுவீடாக பணத்திற்காக கதவுகளை தட்டும் வெளிநாட்டுவாழ் புலிகளின் முகவர்கள் உண்மையில் புலிகள் அல்ல மண்ணுக்குள் அமைதியுடன் உறக்கம் கொள்ளும் எங்கள் வீர வேங்கைகள் தான் உண்மையான புலிகள் என நான் முனமுர்ந்து கூறுகிறேன் வெளிநாடுகளில் மாவீர்களை வைத்து மாவீரர்கள் தினம் என்றபோர்வையில் வியாராம் நடாத்தி கொத்துரொட்டி விற்று அதில் வரும் வருமானத்தில் புலிகளின்  முகவர்கள் தமிழீழம் பெற்று தருதாக மக்களிடம் பொய்யுரைத்து பெற்ற பணங்களை மீளகொடுப்பதற்காக அலைந்து திரியும் ஏமாற்றுபேர்வழிகளை உங்களுக்கு நான் கூறக்கடமைப்பட்டுள்ளேன் புலிகளின் முகவர்களை நினைத்து நாம் கவலை கொள்ள தேவையுமில்லை காரணம் இவர்கள் நாட்டிலிருந்து மக்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்த புறப்பட்டவர்கள் இறுதிக்கால யுத்திற்க்கு துணைப்படைகளுக்காக சேகரித்த பணங்கள் அனைத்தும் உதயனும் கருணாநிதியும் நாட்டுக்கு அனுப்பாமல் பகிர்ந்து எடுத்துள்ளனர் அந்த பணங்களை எனது மனைவியின் துணையுடன் என்வீட்டில் குளிர்சாதன பெட்டிக்கு அடியில் தோண்டி பலஇலட்சக்கணக்கான பணங்களை உதயன் மறைத்து வைத்திருந்ததை நான் கண்டிருக்கிறேன் தற்பொழுது அந்த பணங்களை உதயன் என்ன செய்தான் என்று தெரியவில்லை. (மேலும்....)

கார்த்திகை 24, 2011

இராணுவ கவுன்ஸிலின் கோரிக்கை நிராகரிப்பு, 5 ஆவது நாளாகவும் எகிப்தில் ஆர்ப்பாட்டம்

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக 5 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நேற்று நீடித்தது. தலைநகர் கெய்ரோவில் தஹ்ரியார் சதுக்கத்தில் தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் நிலைகொண்டுள்ளனர். இதன் போது எதிர்ப்பாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தலைநகரின் பல பகுதிகளிலும் மோதல் ஏற்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தியதோடு கலவரக்காரர்களை அடக்க இராணுவம் மற்றும் பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் ரப்பல் குண்டு தாக்குதல்களை நடத்தினர். (மேலும்....)

கார்த்திகை 24, 2011

ஆரோக்கியம் காக்கும் கைப்பட்டை

ருவர் கூட்டுக் குடும்பத்தில் வசிக்கிறார் என்றால், அவர் எப்போது சாப்பிட வேண்டும். எப்போது உறங்க வேண்டும், உடலை எவ்வாறு பேண வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள். இன்று மனிதர்கள் தனித்தனித் தீவுக ளாகி விட்ட நிலையில், அதற்கான வாய்ப்புக் குறைவு. இந்நிலையில் பெரியவர்களின் பொறுப்பை ஒரு 'கைப்பட்டை' எடுத்துக் கொண்டுவிட்டது. சுமார் 6 ஆயிரம் ரூபாய் விலையுள்ள இந்தக் கைப்பட்டையை மணிக்கட்டில் அணிந்துகொண்டால், அது அவரது சாப்பாடு. தூக்க முறைகள், உடற்பயிற்சி முறை போன்றவற்றைக் கண்காணிக் கும். அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி மென்பொருள் வாயிலாக, குறிப்பிட்ட நபர் எப்படி ஆரோக்கிய மாக இருப்பது என்று தனிப்பட்ட ஆலோசனையை வழங்கும். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

 

தலைக்கனம் இல்லாத தலைவர் மண்டேலா மட்டும்தான்!

(எழுத்துப் போராளி ரான் ரைடனவர்)

'இன்று சேகுவேரா இருந்​திருந்தால், இதை அனு​மதித்து இருக்க மாட்டான்’ என்று இலங்கைப் படுகொலைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ரான் ரைடனவர் ஒரு பத்திரிகை​யாளர். இனப்படுகொலைக்கு எதிரான போராளி. அமெரிக்காவில் பிறந்து டென் மார்க்கில் வசிக்கும் இந்த இடதுசாரி எழுத்தாளர் எழுதிய 'வெனிசுலாவின் ஓசைகள்’, 'தமிழ் நேஷன் இன் ஸ்ரீலங்கா’ ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, ரான் ரைடனடவரிடம் பேசிய தில் இருந்து... (மேலும்....)

கார்த்திகை 23, 2011

அரசின் கொள்கைத்தீர்மானத்துக்கு அமையவே ரூபா பெறுமதி மதிப்பிறக்கம்

அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின் பிரகாரமே இலங்கை நாணயத்தின் பெறுமதி மூன்று வீதத்தினால் மதிப்பிறக்கம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் ஏற்றுமதியாளர்கள் நீண்ட நாட்களாக விடுத்துவந்த கோரிக்கைக்கு அமைவாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று பிரதி நிதியமைச்சரும் சர்வதேச நாணய கூட்டுறவுக்கான சிரேஷ்ட அமைச்சருமான கலாநிதி சரத் அமுனுகம தெரிவித்தார். இம்முறை சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத் தயாரிப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்கள் எதுவுமில்லை. அவ்வாறு நாணய நிதியம் எமக்கு அழுத்தங்களை முன்வைக்கவில்லை. எவ்வாறெனினும் நாங்கள் தொடர்ந்து நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2011 ___

மட்டக்களப்பில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் அபாயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பெரும்போக வேளாண்மைச் செய்கை நீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்தும் மழை பெய்தால், தங்களது வேளாண்மைச் செய்கை அழிந்துவிடக்கூடிய அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த வருட பிற்பகுதியிலும் இவ்வருட முற்பகுதியிலும் தொடர்ந்து பெருவெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த வருட பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஏற்பட்ட இழப்பு மற்றும் நட்டங்களிலிருந்து இதுவரை தாம் இன்னும் மீளமுடியாத நிலையில், தற்போது பெய்துவரும் பருவமழை காரணமாக தாம் தொடர்ந்தும் பாதிப்புகளை எதிர்நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவமழை காரணமாக கட்டடம், தச்சு, நடைபாதை வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான, நாளாந்த உழைப்பாளிகள் தொழில் இழந்த நிலையில் தமது வீடுகளில் முடங்கிக் கிடக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கார்த்திகை 23, 2011

பாராளுமன்ற சம்பிரதாயங்களை எதிர்க்கட்சித் தலைவர் மறந்துவிட்டாரா?

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தையும், மக்களின் நல்வாழ்வை யும் கருத்திற் கொண்டு எதிர்காலத்தில் இலங்கையை பொருளாதார ரீதியிலும், மற்றெல்லாத் துறைகளிலும் வளம்மிக்க நாடாக உருவாக் குவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட யோசனைகள் ஒரு வலுவான அடித்தள மாக அமைந்துள்ளது. இந்த வரவு செலவுத் திட்டத்தில் அதிகமாக நன்மையடைபவர்கள் சாதாரண பொதுமக்களும் நாட்டுக்காக தங்கள் உழைப்பை பெற்றுக் கொடுக்கும் அரசாங்க ஊழியர்களுமாகும். இலங்கைக்கு வருமானத்தை பெற்றுக் கொடு க்கும் உல்லாசப் பிரயாணத்துறையை வளப்படுத்தி, அதன் மூலம் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதுடன் இலட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பை நேரடியாகவும், மறைமுகமாகவும் பெற்றுக் கொடுப்பதற்கும், ஜனாதிபதி அவர்கள் உல்லாசப் பிரயாணத்துறைக்கு வரிச் சலுகைகளை யும் ஏனைய உற்சாகமூட்டும் செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தியி ருப்பது பாராட்டக்கூடிய ஒரு விடயமாகும். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பயங்கரவாத தடைச்சட்டம்

கைதிகள் மீது வழக்கு விசாரணையா? விடுதலையா?

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தற்போது 893 பேர் உள்ளனர். இவர்களில் தற்போது 64 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்கு தாக்கல் செய்யப்படாமல் இதுவரை 259 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட போதும் பிணை வழங்கப்படாமல் 33 பேர் உள்ளனர். வழக்கு தாக்கல் செய்யப்படாமல் 10 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 100 பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய வழக்கு தாக்கல் செய்வது தொடர்பாக சட்ட மா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. வழக்குத் தாக்கல் செய்வதா? வழக்குத் தாக்கல் செய்யாமல் விடுதலை செய்வதா? என்பது பற்றி சட்டமா அதிபர் திணைக்களமே தீர்மானிக்கும். அதன் பதிந்துரைக்கு அமையவே அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கார்த்திகை 23, 2011

உண்டியல் வியாபாரிகளே உசாரு....?

களுபோவில பிரதேசத்தில் சட்ட விரோதமாக நடாத் தப்பட்டு வந்த நாணய மாற்று (உண்டியல்) விற்பனை நிலையம் ஒன்றை கொழும்பு மோசடி புலனாய்வு துறை பொலிஸார் முற்றுகையிட்டுள் ளனர். மேற்படி நிலையத்திலிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். மோசடி புலனாய்வு பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றையடுத்து களுபோவில வைத்தியசாலை வீதி பகுதியில் சுமார் 2 மணித்தியாலம் மேற்கொண்ட சோதனையடுத்தே மேற்படி நிலையத்தை பொலிஸார் கண்டுபிடித்து முற்றுகையிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் கல்கிஸ்சை மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2011

உத்வேகமூட்டும்  எகிப்தியர்கள்!

நாகரிகங்கள் தோன்றிய பூமிகளில் ஒன்றாம் எகிப்தில் மீண்டும் ஒரு மகத்தான மக்கள் எழுச்சி துவங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக தலைநகர் கெய் ரோவிலும், அலெக்சாண்ட்ரியா முதல் சூயஸ் வரையிலும், கீழ்த்திசை நகரங்கள் முதல் நைல் டெல்டா வரையிலும் மக்கள் போர்க்கோலம் பூண்டிருக்கிறார்கள். இந்தாண்டு துவக்கத்தில், அமெரிக்க கைக் கூலியான எதேச்சதிகாரி ஹோஸ்னி முபா ரக்கை எதிர்த்துக் களம் கண்ட இம்மக்கள், தற் போது, அவரது இடத்தில் அமர்ந்துகொண்டு ஜனநாயக மறுமலர்ச்சியை அமெரிக்க ஆயுத உதவியோடு நசுக்க முனையும் ராணுவ ஆட்சி யாளர்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கி யுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

மாயாவதி அரசின் முடிவால் டில்லியில் அரசியல் பதற்றம்

லோக்சபா எம். பி.க்கள் 81 பேரை வைத்துக் கொண்டு இந்திய அரசியலை ஆட்டிய படைக்கும் உத்தரப் பிரதேசத்தை, நான்கு சிறிய மாநிலங்களாகப் பிரிக்க, அம்மாநில சட்டசபை நிறைவேற்றியுள்ள தீர்மானம், டில்லியில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. உ.பி.யை பிரிக்கும் மாயாவதியின் நடவடிக்கையை, தேசியக் கட்சிகள் ஆதரிக்கவில்லை. பொதுவாக, சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு ஆதரவு தரும் பா.ஜ. மாயாவதியின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ளது."கூர்காலேண்ட்டை மேற்கு வங்கத்திலிருந்து பிரிக்கக் கூடாதென கூறிவரும், மார்க்சிஸ்ட் கம்யூ., தெலுங்கானா போன்ற தனி மாநிலங்கள் அமைவதை, வன்மையாக எதிர்த்து வருகிறது. நேற்று முன்தினம் உ.பி.யை பிரிக்கும் தீர்மானம் குறித்து, அக்கட்சி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. மாயாவதியின் மாநில பிரிப்பு நட வடிக்கைக்கு, பீகார் முதல்வர் நிதீஷ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

உன்னிச்சை மலைக்குகையினுள் இருந்து ரீ. 81 ரக துப்பாக்கிகள் மீட்பு

மட்டக்களப்பு - உன்னிச்சைப் பிரதேச மலைக் குகையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரீ-81 ரக 14 தன்னியக்கத் துப்பாக்கிகளை ஆயித்தியமலை பொலிஸார் நேற்று கண்டெடுத்துள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அம்பாறை அரந்தலாவ விஹாரையில் பெளத்த பிக்குகளைப் படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களாக இவை இருக்கலாமெனச் சந்தேகிப்பதாக ஆயித்தியமலை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ.எம்.எஸ். பண்டார தெரிவித்தார். உன்னிச்சை குளத்தருகிலுள்ள மலைக்குகையில் இத்துப்பாக்கிகள் பொதிசெய்யப்பட்ட நிலையில் மறைத்து வைத்து மணல் இட்டு மூடப்பட்டிருந்தன. இவை கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இங்கு வைக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் கூறுகின்றனர். இந்த துப்பாக்கிகள் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் துருப்பிடித்து காணப்பட்டதாக தெரிவிக்கப் படுகிறது. பொதுமக்களிடமிருந்து கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து உன்னிச்சைக் காட்டுப்பகுதிக்கு வள்ளத்தில் குளத்தைக் கடந்து சென்ற பொலிஸ் குழுவினர் இவற்றைக் கண்டெடுத்துள்ளனர்.

கார்த்திகை 23, 2011

போர் முரசு கொட்டத் தயாராகும் நேட்டோ நாடுகள்

அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஈரான் மீது புதிய தடைகள் விதிப்பு

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகள் ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக ஐ. நா. வின் கண்காணிப்பகம் வெளியிட்ட புதிய அறிக்கையைத் தொடர்ந்தே மேற்படி மூன்று நாடுகளும் புதிய பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன்படி பிரிட்டினில் உள்ள அனைத்து நிதி நிறுவனங்களும் ஈரானுடன் வியாபார தொடர்புகளை மேற்கொள்ள அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இதற்கமைய ஈரான் வங்கிகளுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படும் என பிரிட்டன் வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது. அதேபோன்று ஈரானின் நிதி மற்றும் அணுசக்தி துறைகளின் மீது கனடா அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஈரானின் மத்திய வங்கி உட்பட வேறு பல வங்கிகளோடும் எந்த வித நிதிப் பரிவர்த்தனைகளை செய்யக் கூடாது என்று கனடா தடை விதித்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 23, 2011

இது சமூகத்தின் கட்டுப்பாட்டில்...!! 

கைப்பற்றுவோம் போராட்டங்களின் ஒரு பகுதியாக வீடில்லாதவர்கள் இணைந்து கலிபோர்னியாவில் உள்ள ஃபிராங்கிளின் பள்ளிக்கூடத்தை கைப்பற்றினர். இப்பள்ளிக்கூடம் நீண்டநாட்களாக இயங்காமல் இருந்து வந்தது. நான்கு மாடிகளைக் கொண்டுள்ள இந்தப் பள்ளிக்கூடக் கட்டிடத்தில் ஏறிய போராட்டக்காரர்கள் இந்தப் பொதுச்சொத்து சமூகத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்ற முழக்கத்துடன் கூடிய பதாகையைத் தொங்க விட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமாக பள்ளிக்கூடத்தில் நுழைந்ததாகக் கூறி 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கட்டிடத்தை அவர்களிடமிருந்து விடுவிக்கும் வகையில் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

புன்னாலைக்கட்டுவனில் 66 பவுண் நகைகள் கூரை பிரித்து கொள்ளை

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக் கட்டுவன் பகுதியில் வீடொன்றினுள் நள்ளிரவு வேளையில் வீடு புகுந்த கொள்ளையர்கள் சுமார் 66 பவுண் நிறையுடைய 35 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் இருந்தவர்களை அறை களினுள் பூட்டியும் கட்டியும் அச்சு றுத்தியே கொள்ளையர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: யாழ் – பலாலி வீதியில் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்று (22.11.2011) நள்ளிரவு 12.30 மணியளவில் கூரை ஓடுகள் வழியாக உள் நுளைந்த கொள்ளையர்கள் வீட்டு மின் இணைப்பை பியூஸ்ப் பகுதியை அகற்றி துண்டித்துள்ளனர். இதன் பின்னர் வீட்டில் இருந்தவர்களை அறையினுள் பூட்டி வைத்துவிட்டும் சிலரை கட்டி வைத்துவிட்டும் கொள்ளையர்கள் வீட்டை சல்லடைபோட்டுத் தேடியுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பஹ்ரைன்  அம்பலமானது அல் கலிபா அரசின் கொடூரத் தாக்குதல்

ஜனநாயக உரிமைகள் கோரி மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மீது பஹ்ரைனின் சர்வாதிகார அரசு கொடூரமான வகை யில் தாக்குதல்களை நடத் தியதற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகி யுள்ளன. பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் மக்கள் பெருந் திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்தியபோது, அவர்க ளைக் கலைக்க பெரும் அளவில் அடக்குமுறை கை யாளப்பட்டது. ஆர்ப்பாட் டம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை காவல் துறையைச் சேர்ந்தவர் இரும்புக்கம்பியால் தாக்கு வது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. பெரும் அடக்குமுறை எதையும் மக்கள் மீது பிரயோகிக் கவில்லை என்று சொல்லி வந்த அரசு, தற்போது அத் தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது உண்மைதான் என்று ஒப்புக் கொள்கிறது. (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பாக். அரசு மன்னிப்பு கேட்க பங்களாதேஷ் அழுத்தம்

பங்களாதேஷ் விடுதலை போரில் ஈடு பட்ட போது அதற்கு எதிரான அட்டூ ழியங் களில் ஈடுபட்டதற்காக எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பங்களாதேஷ் கேட்டுக் கொண்டுள்ளது. பங்களாதேஷ€க்கான பாகிஸ்தான் புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ள வரை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் டிபு மோனி சந்தித்துப் பேசினார். அப்போது 1971 ஆம் ஆண்டு விடுதலை போர் 9 மாத காலம் நடந்தது. அப்போது பாகிஸ்தான் உள்ளூர் குண்டர்கள் உதவியுடன் சேர்ந்து 30 இலட்சம் பேரை கொன்று குவித்தது. 2 இலட்சம் பெண்களை கற்பழித்தது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த அட்டூழியங்களுக்காக பாகிஸ்தான் அரசு பங்களாதேஷிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு சொத்துக்களை பிரித்து கொள்வதற்கான பிரச்சினை இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறது. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கார்த்திகை 23, 2011

காஷ்மீர் குறித்த தவறான வரைபடம்

அமெரிக்க அரசுக்கு இந்தியா கண்டனம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீர் பகுதியை பாகிஸ்தானுடன் இணைந்த பகுதியாக குறிப்பிட்டு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட தவறான வரைபடம் இந்தியாவின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து அதிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் www.state.gov என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில், தான் தூதரக உறவு வைத்துள்ள நாடுகளின் பட்டியலையும், அதன் தேசியக் கொடி, வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது. அந்த இணைப்புகள் வெளியுறவுத்துறையின் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன. அதில் இந்தியா குறித்த பகுதியில், தவறான இந்திய வரைபடத்தை அமெரிக்க அரசு வெளியிட்டிருந்தது. பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை முழுமையாக பாகிஸ்தானுடன் இணைத்துள்ளனர். அதேசமயம், சீனா ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியான அக்ஷய சீன பகுதியை இந்தியா சொந்தம் கொண்டாடும் பகுதி என்று அம்புக்குறியிட்டு குறிப்பிட்டுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2011

பொலிஸ் பதிவானது தமிழ் மக்களுக்கு மாத்திரமானதல்ல, இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்குமானது

நாடுமுழுவதிலும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிஸ் பதிவு தொடர்பில் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கிறது. இந்த பொலிஸ் பதிவானது தமிழ் மக்களுக்கு மாத்திரமானதல்ல, இலங்கையில் வாழும் சகல இன மக்களுக்குமானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமையவே இந்தப் பதிவு மேற் கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர், மக்களின் நலன் கருதியே இந்த பதிவு மேற்கொள்ளப் படுகிறது என்றார். ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் வாழும் மக்களை இலகுவாக தெரிந்து கொள் வதுடன், குற்றச் செயல்கள், அசம்பாவிதங்கள் புரிபவர்களை இலகுவில் அடையாளங்காணும் நோக்குடன் இந்த பதிவு இடம்பெறுகிறது. (மேலும்....)

கார்த்திகை 23, 2011

லெபனான்

சிஐஏ நடவடிக்கைகளைத் தகர்த்தது ஹிஸ்புல்லா

லெபனானில் இருந்த அமெரிக்க ஆதரவு ஆட்சி யாளர்கள் உதவியுடன் பல் வேறு சதி வேலைகளைச் செய்து வந்த சி.ஐ.ஏ. (அமெ ரிக்க மத்தியப் புலனாய்வுக் குழு)வுக்கு பெரும் பின்ன டைவை ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க எதிர்ப்பு மற்றும் தேசிய விடுதலை யை முன்னிறுத்தும் அமைப் புகளை வளரவிடாமல் தடுக்க, அமெரிக்க உளவுத் துறை சி.ஐ.ஏ. பல்வேறு சதி வேலைகளை மேற்கு ஆசி யாவில் செய்து வருகிறது. இந்த நடவடிக்கைகள் லெப னானிலும் நடந்து வந்தது. ஆனால், நடப்பாண்டில் மட்டும் ஏராளமான அமெ ரிக்க உளவாளிகள் ஹிஸ் புல்லா அமைப்பால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். சதி வேலைகளில் ஈடுபட்டவர் களை அடையாளங்கண்டு, கைப்பற்றும் வேலையில் ஹிஸ்புல்லா அமைப்பு தீவிரமாக இயங்கி வந்தது.
(மேலும்....)

கார்த்திகை 23, 2011

சபரிமலை யாத்திரிகையின் போது இரு முடி எடுத்து செல்ல

விமானத்தில் கெடுபிடி, கையில் வைத்துக் கொள்ள அனுமதி மறுப்பு

விமானத்தில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், இரு முடியை எடுத்துச் செல்ல தனியார் விமான நிறுவனம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் இதுவரை கைப் பையில் வைத்து எடுத்துச் சென்ற இரு முடிகள், பொதிகள் மூலம் கொண்டு செல்லப் பட்டன. கேரளாவிலுள்ள சபரிமலைக்கு ஆண்டு தோறும் இலட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து சென்று வருகின்றனர். சபரிமலை யாத்திரிகையின் போது இரு முடி எடுத்துச் செல்வது ஐதீகம், கனடா, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் வசிப்போரும் இரு முடி தாங்கி விமானம் மூலம் கேரளாவின் பல்வேறு விமான நிலையங்களுக்கு சென்று அங்கிருந்து சபரிமலை செல்கின்றனர். இவர்கள் விமான பயணத்தின் போது தங்களுடனேயே இரு முடியை கைப் பையில் வைத்துக் கொள்ள இதுவரை எந்த தடையும் இருத்ததில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சென்னையிலிருந்து கொச்சி புறப்பட்ட தனியார் விமானம் மூலம் கொச்சி சென்ற ஐயப்ப பக்தர்களின் இரு முடிவுள் கைப் பையில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் இரு முடியை பொதிகளில் இட்டு எடுத்துச் சென்றனர்.

கார்த்திகை 22, 2011

நோய்க்கு வித்திடும் மருந்துகள்!

(சீத்தாராம் யெச்சூரி எம்.பி.,)

“2008 நிதி நெருக்கடியைச் சமாளிக்க முதலாளித்துவம் தேர்ந்தெடுத்த வழிமுறை கள், மேலும் ஆழமான நெருக்கடிக்கு இட்டுச் செல்லும்; அத்தகைய மீட்சி முழுமை பெறும் முன்னரே புதிய நெருக்கடியில் சிக்கி இரட்டைத் தாழ்வு மந்தத்தில் போய் முடியும் என நான் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தேன். நான் கணித்தது போலவே நடந்துவிட்டது என்பது குறித்து நான் ஒன்றும் மகிழ்ச்சி அடையவில்லை. கார்ப்பரேட் கடன்களை அரசாங்கக் கடன்களாக மாற்றுகிற இந்த உத்திகளுக்கு உலகெங்கிலும் லட்சக்கணக் கான மக்கள் பலியாகியுள்ளனர். மீட்புத் திட் டம் என்ற பெயரில் எந்தக் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு கொள்ளை கொள்ளையாய் அள்ளிக்கொடுக்கப்பட்டதோ, அந்தக் கம் பெனிகள் உருவாக்கிய நெருக்கடிதான் அர சுக் கடன்கள் பெருமளவு பெருகியதற்கு அடிப் படைக் காரணம் என்பதை மறந்துவிடக்கூடாது.
(மேலும்....)

கார்த்திகை 22, 2011

புலிகள்-சீக்கிய பயங்கரவாதிகள் மூலம் சதிதிட்டம் லஷ்கர் பயங்கரவாதிகள் ஒப்பந்தம்-போலீஸ் உஷார்

இலங்கையில் தங்களுடைய படை பலத்தை முற்றிலுமாக இழந்து நிற்கும் புலிகள் தற்போது வெளிநாடுகளில் வசித்து வரும் இவர்களை இந்தியாவில் நுழைய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் பணித்துள்ளதாகவும், இதன் மூலம் மும்பையில் பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் மத்திய உளவுத்துறையினர் மும்பை அரசுக்கு தெரிவித்து முழு எச்சரிக்கையாக இருக்குமாறு அலர்ட் செய்துள்ளனர். இலங்கையில் பெரும் போரை நடத்தி தலைவர் முதல் அனைவரும் உயிரிழந்து விட்டாலும், இவர்களில் இருந்து தப்பிய சிலர் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்தும், பணம் வசூலித்து மீண்டும் தங்கள் இயக்கத்தை உயிர்ப்பிக்க வைக்கவும் மறைமுக வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனை இலங்கை அதிபர் ராஜபக்சே சமீபத்தில் மாலத்தீவில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்றபோது ஒரு நிருபரிடம் ஒத்துக்கொண்டார்.  (மேலும்....)

கார்த்திகை 22, 2011

வெற்றி அடைவதற்கு அப்போ என்னதான் மேலும் வேண்டும்

உங்களுடன் ஒரு நிமிடம்...

 • சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது

 • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது

 • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது

 • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது

 • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது

 • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது

 • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது

 • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது

 • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது

 • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது

 • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது

 • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது

 • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது

 • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது

 • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது

 • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது

 • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது

 • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது

(நன்றி: தனபாலசிங்கம்)

கார்த்திகை 22, 2011

நியாயப்படுத்துவது நியாயமல்ல!

பேருந்து, பால் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி, மக்களை வதைத்துள்ள அதிமுக அர சுக்கு கண்டனம் அதிகரித்து வருகிறது. பேருந் தில் ஏறுபவர்களும், பால் வாங்கச் செல்பவர் களும் அதிர்ச்சியில் உறைவதோடு, அரசு மீதான தங்களது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கட்டணத்தை குறைப்பதற்கு பதிலாக முதல்வர் ஜெயலலிதா பஸ் கட்டணம் மற்றும் பால் விலை உயர்வை நியாயப்படுத்தி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். விலை உயர்வை அறிவித்த அறிக்கையைப் போன்றே, இந்த அறிக்கையிலும் பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அரசுப் போக்குவரத்து கழகங்கள், ஆவின் பால் நிலையம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் யாருக் கும் ஆட்சேபணை இருக்கப்போவதில்லை. (மேலும்....)

கார்த்திகை 22, 2011

ஈரான் அணுசக்தி விவகாரம்  அமெரிக்க குடியரசுக்கட்சிக்குள் குழப்பம்

ஈரான் மீது ராணுவ ரீதி யான நடவடிக்கை மேற் கொள்வதற்கான தயாரிப்பு களை ஒபாமா நிர்வாகம் செய்து வருகையில், குடியர சுக்கட்சிக்குள் இது குறித்து பெரும் குழப்பம் ஏற்பட் டுள்ளதாகத் தெரிகிறது. ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முடக்குவதற் காக, அணு ஆயுதம் தயாரிக் கிறார்கள் என்கிற ஆதார மற்ற குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் முன்வைக் கிறார்கள். ஒபாமாவின் ஜன நாயகக்கட்சி ஈரான் மீது நடவடிக்கை எடுக்க ஆதரவு தெரிவித்துப் பேசி வருகிறது. நவம்பர் 12 ஆம் தேதியன்று இந்தப்பிரச்சனை பற்றிப் பேசிய குடியரசுக்கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருக்கும் நியூட் கிங்ரிச், வெறியேற் றும் வகையில் பேசினார். ஈரானின் அணு விஞ்ஞானி கள் அனைவரையும் கொன்று குவிக்க வேண்டும் என்றும், ஈரானின் அணுசக்தி உலை களைத் தகர்க்க பயங்கரவாத நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். (மேலும்....)

கார்த்திகை 22, 2011

விவாதம் முடியும் வரை த.தே.கூ., ஜே.வி.பி. சபையில்

பாராளுமன்றத்தில் வரவு-செலவுத் திட்டத்தினை சமர்ப்பித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றியபோது, ஐ. தே. க. யினர் வெளிநடப்பு செய்த போதும் எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களும் ஜனநாயக ஐக்கிய முன்னணி (ஜே.வி.பி.) உறுப்பினர்கள் சபையில் அமர்ந்திருந்தனர். ஐ. தே. க. உறுப்பினர்களின் ஆசனங்கள் வெறுமனே காணப்பட்டன. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் அனைவரும் வரவு-செலவுத் திட்ட உரையை மிக உன்னிப்பாக அவதானித்துக் கொண்டி ருந்தனர். வரவு-செலவுத் திட்ட உரை நிறை வுற்ற பின்னரும் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற விருந்துபசாரத் திலும் ஐ.தே.க.வினர் கலந்துகொள்ளவில்லை.

கார்த்திகை 22, 2011

தபால் ஊழியர் போராட்டம் முடிவு

அமைச்சருடனான பேச்சில் இணக்கம்

ஒரு வாரத்துக்கு மேலாக நீடித்த தபால் ஊழியர்களின் தொழிற் சங்கப் போராட்டம் நேற்று நண்பகலுடன் முடிவடைந்தது. தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்கவுக்கும் தொழிற் சங்க பிரதிநிதிகளுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்தே தபால் ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டதாக தபால் சேவை அமைச்சு கூறியது. தபால் மா அதிபரை உடனடியாக பதவி விலக்கக் கோரி கடந்த வாரம் முதல் 16 தொழிற் சங்கங் கள் மேலதிக நேர பகிஷ்கரிப்பில் ஈடு பட்டு வந்ததோடு உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் தபால் சேவைகள் பெரிதும் பாதிக் கப்பட்டதோடு 10 இலட்சத்துக்கும் அதிகமான கடிதங்கள் மற்றும் பொதிகள் தபால் பரிவர்த்தனை நிலையத்தில் தேங்கிக்கிடந்தன. இந்த நிலையில், தபால் சேவைகள் அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோர் நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுநடத்தினர். தபால்மா அதிபருக்கு எதிராக முறையான ஒழுக்காற்று விசா ரணை நடத்துவது தொடர்பான குற்றப் பத்திரத்தை பொது நிர்வாக அமைச்சின் செயலாளருக்கு இன்று (22) அனுப்புவதாக உறுதியளிக்கப்பட்டதையடுத்து தொழிற்சங்க போராட்டத்தை கைவிட தொழிற் சங்கங்கள் இணக்கம் தெரிவித்தன.

கார்த்திகை 22, 2011

இராணுவ ஆட்சிக்கு எதிராக எகிப்தில் 3 ஆவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம்

எகிப்தில் இராணுவ ஆட்சிக்கு எதிராக தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் மக்கள் ஆர்ப்பாட்டம் நீடித்தது. இதன் போது பாதுகாப்புப் படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் கொல்லப் பட்டோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. 1,750 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வாரமாக நடைபெறும் இப்போராட்டம் கடந்த வெள்ளிக்கிழமை தீவிரம் அடைந்தது. தலைநகர் கெய்ரோவில் உள்ள தஹ்ரீர் சதுக்கத்தில் கூடிய சுமார் 50 ஆயிரம் பேர் அங்கு கூடாரங்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். அவர்களை கலைத்து கூடாரங் களை பொலிஸார் அகற்றினர். இதைத் தொடர்ந்து பொலிஸாருடன் பொதுமக்கள் மோதலில் ஈடுபட்டனர். பொலிஸார் நடத்திய ரப்பர் குண்டு, துப்பாக்கி சூடு, கண்ணீர் புகை வீச்சு மற்றும் தடியடியில் 2 பேர் உயிரிழந்தனர். 750 பேர் காயம் அடைந்தனர். (மேலும்....)

கார்த்திகை 22, 2011

ஸ்பெயின் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிக்கு வெற்றி

ஸ்பெயின் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியான பொப்பியுலர் கட்சி வெற்றிபெற்றுள்ளது. ஸ்பெயினில் பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், நாட்டின் வளர்ச்சியின்மை, வறுமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தேர்தலின்போது பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. அதில் எதிர்க்கட்சியான பொப்பியுலர் கட்சி 44 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியான சோசலிஸ கட்சிக்கு 29 சதவீத வாக்குகளே கிடைத்தன. இதை தொடர்ந்து 350 ஆசனங்கள் உள்ள பாராளுமன்றத்தில் பொப்பியுலர் கட்சிக்கு 186 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொப்பியுலர் கட்சி தலைவர் மரியானோ ராஜோய் பிரதமர் ஆகிறார். பொப்பியுலர்கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து மெட்ரிட் உள்ளிட்ட பல நகரங்களில் அக்கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். கொடிகளை அசைத்தபடி தங்கள் கட்சி தலைவர்களுக்கு வாழ்த்து கூறினர். சோசலிஸ கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோஸ் பிளாங்கோவும் வெற்றி பெற்ற பொப்பியுலர் கட்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். அடுத்த மாதம் (டிசம்பர்) பாராளுமன்றம் கூடும்போது புதிய பிரதமராக ராஜோய் பதவி ஏற்கிறார்.

கார்த்திகை 22, 2011

எயிட்ஸ் நோயாளர்களின் மரண எண்ணிக்கை குறைவு - ஐ. நா. அறிக்கை

மருத்துவ சிகிச்சை காரணமாக வரலாற்றில் இல்லாத அளவில் உலகில் அதிகப்படியானோர் எயிட்ஸ் நோயுடன் வாழ்வதாக ஐ. நா.வின் எயிட்ஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலகில் 34 மில்லியன் பேர் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் மருத்துவ சிகிச்சை காரணமாக அதிகமானோருக்கு எயிட்ஸ் நோயுடன் உயிர் வாழ முடிந்துள்ளதாக ஐ. நா. கூறியுள்ளது. ஐ. நா.வின் எயிட்ஸ் அமைப்பின் ஆண்டு அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதில் 2010ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சை காரணமாக எயிட்ஸ் நோயாளர்களின் மரண எண்ணிக்கை 1.8 மில்லியனாக குறைந்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

கார்த்திகை 22, 2011

கடாபி உளவுப் பிரிவு தலைவர் சனூசியும் பிடிபட்டார்

சைப் அல் இஸ்லாமை தொடர்ந்து லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி அரசின் உளவுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனூசி இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்டுள்ளார். லிபியாவின் தென் பகுதியில் உள்ள அல் குயிரா பிராந்தியத்தில் வைத்து சனூசி கைது செய்யப்பட்டதாக இடைக்கால அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இது குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு ஒரு நாளுக்குள் சனூசியும் பிடிபட்டுள்ளார். இதன்படி கடாபி அரசின் முக்கிய பிரமுகர்களில் கடைசி நபராக சனூசி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 62 வயதான அப்துல்லா பின் சனூசி முஅம்மர் கடாபியின் மைத்துனராவார்.

கார்த்திகை 22, 2011

பாதுகாப்பாக இருப்பதாக சைப் அல் இஸ்லாம் பேட்டி

லிபிய இடைக்கால அரசினால் கைது செய்யப்பட்ட முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம், தான் பிரச்சினை இன்றி இருப்பதாக தெரிவித்துள்ளார். மறைமுகமான இடமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சைப் அல் இஸ்லாம் ஊடக மொன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் எனது சகோதரர்கள் உறவினருடன் பிரச்சினையில்லாமல் இருக்கிறேன். எனினும் காயத்திற்கு மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்து பேச்சு நடத்தி வருகிறேன். சைப் அல் இஸ்லாமின் கைவிரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. நேட்டோ படையின் தாக்குதலாலேயே இந்த காயம் ஏற்பட்டதாக சைப் அல் இஸ்லாம் கூறியுள்ளார். “நாம் பானி வலீதை விடடுச் செல்லும் போது சிலுவை படை வான் தாக்குதல் நடத்தியது. அப்போது எமது வீரர்கள் 26 பேர் கொல்லப்பட்டதோடு பலருக்கு காயம் ஏற்பட்டது. எனக்கும் காயம் ஏற்பட்டது. வாடி சம்சம் பகுதியில் பல மாதங்களாக நான் காயத்துடன் இருந்தேன். நல்வேளை லிபியர்கள் எவரும் எம்மை தாக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

கார்த்திகை 22, 2011

உடல் நலத்தை மேம்படுத்தும் சைக்கிள் சவாரி

இன்று உலகில் எல்லா நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக சவால் விடும் வகையில் வேகமாக வளர்ந்து கொண்டிருக் கும் சீனாவுக்கு சென்றவர்களுக்கு நன்றாகத் தெரியும், அங்கு பெட்ரோல் வாகனங்களுக்குப் பதிலாக எந்த வகையில் சைக்கிள் களைப் பயன்படுத்துகிறார்கள் என்று. எவ்வளவு உயர்ந்த பதவியில் இருப்பவர்களும் சைக்கிளில் செல்வதை மிக பெருமையாக கெளரவமாகவே கருதுகிறார்கள். வீதிகளிலும் சைக்கிள்கள் செல்வதற்கு தனியாக பாதை ஒதுக்கிக்கொடுத்து இருக்கிறார்கள். ரயில் நிலையங் கள் பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் ஒவ்வொரு அலுவலகங்கள் முன்பும் சைக்கிள் களை நிறுத்த அமைக்கப்பட்டுள்ள சைக்கிள் ஸ்டாண்டுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சைக்கிள்களின் எண்ணிக்கையைப் பார்த்தால் ஆச்சரியத்தின் எல்லைக்கே போய்விடலாம்.  பெட்ரோல் பயன்பாட்டைக் குறைக்க சீனா இப்போது புதிதாக நடவடிக்கையைத் தொடங்கவில்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. 1990 இல் சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்தது. அப்போது தமிழ் நாட்டிலிருந்து பத்திரிகை களின் சார்பில் செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அங்குள்ள மீடியா சென்டரில் அவர்களுக்கு மொழி பெயர்ப்பு மற்றும் உதவிகள் வழங்குவதற்காக ‘தவுகான்’ என்ற கல்லூரி மாணவி நியமிக்கப்பட்டு இருந்தார். அந்த பெண்ணின் தகப்பனார் பொதுப்பணித்துறை தலைமை பொறியியலாளர், தாய் ஒரு பெரிய பால் பண்ணையின் முகாமையாளர். இவர் ஒரே பெண். உங்கள் வீட்டில் என்ன வாகனம் இருக்கிறது? என்று தமிழக செய்தியாளர் கேட்டவுடன் ‘திரி பைசைக்கிள்ஸ்’ அதாவது 3 சைக்கிள்கள் என்று அந்த பெண் பெருமையோடு சொன்னார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

வாழ்க்கையை கொண்டாடுவோம்

நவம்பர் 19 தோழர் பத்மநாபா பிறந்தநாள்

தியாகிகள் . ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் பெருமைக்குரிய செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபா அவர்களின் பிறந்ததினம இன்றாகும். தோழர் பத்மநாபாவும் பன்னிரண்டு தோழர்களும் தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டதை நினைவு கூர்ந்த ராஜீவ்காந்தி அவர்கள் தனது தாயார் இந்திரா காந்தி அவர்களும் தோழர் பத்மநாபா அவர்களும் ஒரே தினத்தில்தான் பிறந்தவர்கள். ஒரே விதமான இலட்சியங்களுக்காக போராடி மரணித்தவர்கள் என தனது இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் சுதந்திரம், சர்வதேச

சகோதரத்துவம் நவ காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை வரிந்து கொண்டவர் அவர். இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும் சமூகங்களிடையே சகோதரத்துவத்துக்காகவும், சமூக மாற்றத்துக்காகவும் உழைத்தவர் அவர். சகல விதமான அடிமைத்தனங்களையும் அவர் எதிர்த்தவர். நீதியான சமூக அமைப்பை, பாரபட்சமற்ற சமூக அமைப்பை அவர் வேண்டி நின்றவர். (மேலும்....)

 

கார்த்திகை 21, 2011

2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை வரவு – செலவுத் திட்டம் தொடர்பான சாரம்சம்!

நடமாடும் மொழி ஆய்வுக்கூடங்களை உருவாக்க 100 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு.
பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் 750 ரூபா கொடுப்பனவு.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு 700 ரூபாவால் அதிகரிப்பு
சமுர்தி கொடுப்பனவு 210 ரூபா முதல் 615 ரூபா வரை பெறுவோருக்கு 750 ஆக அதிகரிப்பு – 900 ரூபா பெறுவோருக்கு 1200 ஆக அதிகரிப்பு
ஆரம்ப பாடசாலைகள், தர்ம பாடசாலைகளுக்கு உதவுவதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
புராதன சமய தலங்களைச் சூழ்ந்து காணப்படும் பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் பாதைகளுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
25 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் சிரேஷ்ட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மோட்டார் கார் கொள்வனவுக்கு வட்டியில்லாக் கடன்
குறைந்த வருமானம் பெறுவோருக்கு சட்ட ரீதியில் உதவ 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
புதிய கலை கேந்திர நிலையத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
ஆராய்ச்சி, விதை அபிவிருத்தி மற்றும் விரிவாக்கலை உருவாக்க 200 மில்லியன் ரூபா மூலதனம்
மரக்கன்று மற்றும் சமயல் எண்ணெய் மீதான செஸ் வரி அதிகரிப்பு
தெங்கு,பனை மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதான வரி நீக்கம்
கால் நடை உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் மீதான செஸ் வரி விலக்களிப்பு
திவி நெகும ஊக்குவிக்கக் கடன் திட்டம்
கரையோரப் பாதுகாப்புக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு
கிராம நகரங்களை இணைக்கும் பாதை வலையமைப்பினை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபா 5 வருடங்களில் செலவிட எதிர்பார்ப்பு
48 சதவீத குடிநீரைச் சேமிப்பதோடு 680 மில்லியன் ரூபா முதலீடு
5 மில்லியன் குடும்பங்கள் மின்சாரத்தை நுகர்வதற்கு 34 ஆயிரத்து 187 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
பஸ்,லொறி டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வை 50 சதவீதம் குறைப்பு

கார்த்திகை 21, 2011

இலங்கை பாராளுமன்றத்தில் இன்று அமைதியின்மை!

2012 ஆம் ஆண்டிற்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 1.52 க்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு - செலவுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றினார். ஜனாதிபதி உரை நிகழ்த்த ஆரம்பித்து சில நிமிடங்களின் பின்னர் பாராளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது. எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் பல்வேறு எதிர்ப்புகளை முன்வைத்து, பதாகைகளை ஏந்திய வண்ணம் எதிர்ப்பில் ஈடுபட்டமையே இதற்குக் காரணமாகும். இதனைத் தொடர்ந்து ஆளுங்கட்சியின் சில உறுப்பினர்கள் சபையின் நடுவே பிரவேசித்து, எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். இந்த அமைதியின்மைக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வரவு - செலவுத் திட்டம் தொடர்பாக தனது உரையை தொடர்ந்தும் நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 21, 2011

விட்டுக் கொடுக்க முடியாத விடயங்களை நாங்கள் விட்டுக் கொடுக்கப் போவதில்ல - சம்பந்தன் எம்.பி

"போரின் இறுதிக்காலப்பகுதியில் என்ன நடைபெற்றது என்பது பற்றிய உண்மை முழுமையாக அறியப்பட வேண்டும் என்பதை மேற்குல நாடுகளின் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது நாம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வீரகேசரி இணையத் தளத்திற்கு வழங்கியுள்ள பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளார். இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதைப் பொறுத்தவரையில் ஒரு நியாயமான, நிதானமான நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு தீர்வை ஏற்படுத்துவதில் அரசாங்கத்தினுடைய அசமந்தப்போக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கின்ற தாமதம் உட்பட பல விடயங்கள் பற்றியும் நாங்கள் அவர்களுக்குத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் அவர் இந்தப் பேட்டியின் போது குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

ஐரோப்பாவும் அமரிக்காவும் எந்தக் கணத்திலும் சரிந்து விழலாம் (இரண்டாம் பகுதி)

(சபா நாவலன்)

சரிந்து விழுந்து கொண்டிருந்த பொருளாதாரத்தைத் தற்காலிகமாகத் தூக்கி நிறுத்த கீன்ஸ் முன்வைத்த ஒடுக்குமுறைக் கோட்பாட்டை ஐரோப்பிய, அமரிக்க அரசுகள் பயன்படுத்த ஆரம்பித்திருந்தன. அதாவது வீழ்ச்சி ஏற்படும் வேளைகளில் பொருளாதாரத்தில் அரசு தலையிட்டு அதனை ஊக்குவிக்கும் வழிமுறையைக் கையாள்வதற்கான அனைத்துப் பொறிமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டன. சமூகதின் இயக்கத்தை முற்றாகப் புறக்கணித்த முட்டாள் தனமான இவரின் கோட்பாடு பெரு முதலாளிகளின் பணப்பசிக்குத் தீனி போட்டது. தொந்தரவின்றி சுதந்திரமாக உலவ விடப்பட்ட பெரு முதலாளிகள் தமக்குச் சேவை செய்வதற்கான அரசுகளையும் அவற்றின் அதிகாரக் நாற்காலியில் உட்கார்ந்து கொள்ளப் போகிறவர்களையும் கூடத் தீர்மானித்தனர். பொதுவாக பொருளாதர நெருக்கடிக்கையை சுதாகரித்துக் கொள்வதற்காக அரசுகள் பணத்தை முதலீடு செய்கின்ற காலப்பகுதிகளில் ஐரோப்பாவில் “இடதுசாரிகள்” என அழைக்கப்படுவோர் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டனர். நெருக்கடி சீர் செய்யப்படும் நிலையை அடைந்ததும் “வலது சாரிகள்” என்று அழைக்கப்பட்டோர் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்டனர். விரல் விட்டு எண்ணத்தக்க பெரு முதலாளிகளுக்குச் சேவை செய்வதற்காகவே ஊடகங்களிலிருந்து கருத்தை உருவாக்கும் அனைத்துச் சாதனங்களும் செயற்பட்டன. உலகின் ஒவ்வொர் அங்கமும் ஒரு குறித்த பொறிமுறைக்குக் கீழ் வலிந்து இயக்கப்பட்டது. கீன்ஸ் இன் கோட்பாடு தற்காலிகமாக அழிவிலிருந்து தக்கவைப்பதற்கான வலுவை வழங்கிய அதே வேளை 1970 ஆம் ஆண்டு மேற்கின் முதலாளித்துவ அமைப்பில் மற்றொரு நெருக்கடி உருவாகின்றது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

கனடியத் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நாடுகடந்த அரசின் அனுசரணையுடன் இம்முறை மாவீரர் நாள்(2011) முன்னெடுப்பு.

இம்முறை என்றுமில்லாதவாறு  மாவீரர் நாள்(2011)கார்த்திகைத் திங்கள் 27ந் திகதி ஞாயிற்றுக்கிழமை கனடியத் தமிழர் பேரவைத் தலைவர் திரு. டேவிட்  பூபாலபிள்ளை அவர்களின் தலைமையில் மிகவும் பிரமாண்டமானமுறையில் டவுண்ஸ்  வியூ மைதானத்தில் நடைபெறும் என்பதை கனடியத்தமிழர் அனைவருக்கும் அறிவிப்பதில் பெருமையடைகின்றோம்.திரு. பூபாலபிள்ளை அவர்கள் மாவீரர் பணிமனையொன்றை அமைப்பதிலும், கனடிய அரசாங்கத்தின் (RCMP, CIS) உதவியுடன் வளமைக்குமாறாக முன்கூட்டியே மாவீரர் விழாவுக்குரிய மண்டபத்தையும் ஒழுங்குசெய்வதிலும் முன்னின்று உழைத்ததை யாராலும் மறக்கமுடியாது. உலகத்தமிழர்களின் தலைவரும் நாடுகடந்த அரசின் பிரதமருமான மேன்மைதங்கிய உருத்திரகுமாரன் அவர்களின் மாவீரர் உரையானது நேரடியாக உலகெங்கும் ஒலிபரப்பப்படும்.இவரின் கொள்கை விளக்க உரையைக் கேட்பதற்கு தமிழ்மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளார்கள்.40,000 மேற்பட்ட‌ மாவீரர்களின் தியாகங்களை மதித்து அனைத்துக் கனடியத் தமிழ்மக்களும் டவுண்ஸ் வியூ மண்டபம்நோக்கி அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

தமிழர்களின் தாகம் தமிழீழத்தாயகம்.

எதற்கும் கீழே இருக்கும் செய்தியையும் படிக்கவும்.

கார்த்திகை 21, 2011

இலண்டனில் புலிகளின் ஆதரவாளர்கள் மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்காக மேற்கொண்டு வந்த ஏற்பாடுகளை இறுதி நேரத்தில் ரத்து

இலண்டனில் புலிகளின் ஆதரவாளர்கள் மாவீரர் நாள் கொண்டாட்டத்திற்காக மேற்கொண்டு வந்த ஏற்பாடுகளை இறுதி நேரத்தில் ரத்துச்செய்யபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. ஏதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினத்திற்கெனப் பதவு செய்யப்பட்டிருந்த இரண்டு மண்டபங்கள் இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. பிரிட்டனில் விநாயகம் குழுவினருக்கும் நெடியவன் குழுவினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியின் காரணமாக மாவீரர் நாள் கொண்டாட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. முன்பு மாவீரர் தினத்தைக் கொணடாடுவதற்காகப் புலிகள் பயன்படுத்தி வந்த எக்சல் மண்டபத்தை இம்முறை விநாயகம் பிரிவினர் பதிவு செய்திருந்தனர். அதேநேரத்தில் நெடியவன் குழுவினர் ஐந்து இடங்களில் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், இறுதி நேரத்தில் விநாயகம் பிரிவினரின் பதவினை ரத்துச் செய்த எக்சல் நிர்வாகம் அவர்கள் செலுத்தியிருந்த 50 ஆயிரம் பவுண்ஸ் முன்பணத்தையும் திருப்பிக் கொடுத்துள்ளது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

தென்னிந்தியாவிலிருந்து 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர்

தென்னிந்தியாவிலிருந்து சுமார் 4 ஆயிரம் இலங்கை அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். இலங்கையில் சுமார் 30 வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களே தற்போது நாடு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.ஐ.நா அகதிகள் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்குடியேற்ற திட்டத்தின் கீழ் இடம்பெயர்ந்த இலங்கையர்கள் பலர் தற்போது புனர்வாழ்வுக்காக மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.  (மேலும்....)

கார்த்திகை 21, 2011

மாவோவின் குரு...

புகழ்பெற்ற, அறி வொளிமிக்க, கூர்நுட்பமிக்க, லி டா சௌ தான் 1917ஆம் ஆண் டின் அக்டோ பர் ரசியப் புரட்சி யைப் புகழ்ந்த முதலாவது சீன அறிவு ஜீவி ஆவார்; சீன அறிவுஜீவிகளிடத்தில் முதன் முதலாக மார்க்சிய சிந்தனையை அறிமுகப்படுத்தியவராகவும் அவர் விவரிக்கப்படுகிறார். 30 வயது இளைஞராக இருந்தாலும் முற் போக்கு கருத்துக்களுக்கும் தனிப் பட்ட துணிச்சலுக்கும் மாபெரும் புகழ்பெற்றவராக இருந்தார். மூச்சைத் திணறடிக்கும் கடந்த காலத்தின் ஒழுக்கவிதிகளையும் மதிப்பீடுகளையும் நிராகரிப்பதன் மூலம்தான் ஒரு மறுமலர்ச்சியை ஏற் படுத்த முடியும் என்று அவர் நம்பி னார்; மாணவர்களின் மனதில் செவ் வியல்கள் திணித்த சிந்தனை முடக் கத்தை “பாதங்கள் கட்டப்பட்ட பெண்களுடன்” அவர் ஒப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

அலுத்து வருது

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கூட்டமே இல்லை. முதல் நாள் ஆட்டத்தைக் காண சுமார் 10 ஆயிரம் பேர் வந்தனர். அவர்களும் சச்சி னின் 100 வது சதத்தைக் காண வந்தவர்கள். சச்சி னின் ஆட்டம் இழந்தவுடன் அவர்களும் சென்று விட்டனர். லட்சுமணும், தோனியும் சதம் அடித்த போது கைதட்டுவதற்கு ஆட்களைத் தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்திய கிரிக்கெட் அணி தோற்கும் போது எல் லாம் வீரர்கள் ஆடி ஆடி அலுத்தும் களைத்தும் போய் விட்டனர் என்ற காரணத்தை அனைவரும் மறக்கா மல் கூறுவார்கள். ஆனால் வீரர்கள் அப்படியெல் லாம் ஒன்றுமில்லை என்றென்றும் வெற்றி காண முடியுமா என்று மழுப்புவார்கள். இல்லாவிட்டால் முதலில் ஆம் அலுத்துவிட்டது என்று கூறிவிட்டு பின்னர் என்னைத் தப்பாகப் புரிந்து கொண்டார்கள் என்று பல்டியும் அடிப்பார்கள். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

எல்.ரீ.ரீ.ஈ யை தோற்கடிக்க முடியுமென கோத்தாபய நம்பிக்கை கொண்டிருந்தார் - எரிக்சொல்கெய்ம்

சமாதானத்திற்கான காய் நகர்த்தல் என்ற தொனிப் பொருளில் நோர்வேயில் மேற்கொண்ட ஆய்வறிக்கையில்  கூறப்பட்டிருக்கும் முக்கிய இரகசியத் தகவல்கள் வருமாறு, ‘2008ம் ஆண்டு வரையில் இந்திய புல னாய்வுத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூட எல்.ரீ.ரீ.ஈயை இராணுவ ரீதியில் தோற்கடிக்கமுடியுமென்று நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. என்றாலும் எம்.கே. நாராயணன் போன்ற ஏனைய உயர் அதிகாரிகள் தங்களது பழைய நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு, இலங்கை பாதுகாப்பு படை யினருக்கு எல்.ரீ.ரீ.ஈயை பயங்கரவாதிகளை துவம்சம் செய்ய முடியுமென்ற புதிய நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றும் எரிக்சொல்கெய்ம் கூறியிருக்கிறார். அமெரிக்கா கூட எல்.ரீ.ரீ.ஈ.யை இரா ணுவ ரீதியில் தோற்கடிக்க முடியாது என்றே நம்பிக்கை கொண்டிருந்ததாக சொல்கெய்ம் கூறியிருக்கிறார். (மேலும்....)

கார்த்திகை 21, 2011

இலங்கையை பாதிக்கும் விடயங்களை நீக்க கூகிள் இணக்கம்

இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணைய உள்ளடக்கத்தை இலங்கையின் வேண்டுதலின் பேரில் கூகிள் நீக்கியுள்ளது. இப்படியான கோரிக்கையொன்று விடுக்கப்பட்டதாகவும், அதற்கு தாம் இணங்கியதாகவும் கூகிள் அறிவித்துள்ளது. வேறு தொழில்நுட்ப தொடர்பாடல் நிறுவனங்களைப் போல், சிரமமாக இலங்கை அரசு காரியாலயங்களிலிருந்தும் உலகிலுள்ள நீதிமன்றங்களிலிருந்தும் தமது இணையத்திலிருந்து உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரிக்கைகள் விடப்படுகின்றன. சில அவதூறு ஏற்படுத்துவதாகவும், சில உள்நாட்டு சட்டங்களை மீறுவதாக வும், சில பாலியல் மற்றும் வெறுப் புணர்ச்சியை வெளிப்படுத்து வதாகவும் உள்ள உள்ளடக்கங்கள் நீக்கப் படுகின்றன. நாட்டுக்கு நாடு இச்சட்ட விதிகள் வேறுபட்டு காணப்படுகின்றன.

கார்த்திகை 21, 2011

இன்று பட்ஜட்

ஜனாதிபதியால் சபையில் சமர்ப்பிப்பு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது. பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடும். சபை அமர்வின் வழமையான ஆரம்ப நிகழ்வைத் தொடர்ந்து நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றுவார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற இரண்டாவது வரவு-செலவுத் திட்டமாக இவ் வரவு-செலவுத் திட்டம் அமைந்திருக்கின்றது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

ஸ்பெக்ட்ரம் வழக்கில் திருப்பம்

பா.ஜனதா ஆட்சியில் உரிமம் வழங்கப்பட்ட செல்போன் நிறுவனங்களில் சி.பி.ஐ சோதனை

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் காரணமாக மத்திய அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கைத் துறை கண்டுபிடித்து அறிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சி.பி.ஐ. வழக்கப் பதிவு செய்து முன்னாள் மத்திய மந்திரி ஆ. ராசா, கனிமொழி எம்.பி, கலைஞர் ரி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் உட்பட 14 பேரை கைது செய்து டில்லி திகார் ஜெயிலில் அடைத்துள்ளனர். ஸ்வான், யூனிடெக், ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை டில்லி சிறப்பு சி.பி.ஐ. கோர்ட்டில் நீதிபதி சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இதுவரை சி.பி.ஐ. இந்த வழக்கில் இரண்டு குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. சதி கூட்டு வசதி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல், அரசுக்கு எதிராக நம்பிக்கை துரோகம் செய்தல் என பல பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 21, 2011

ரிஸானாவுக்கு மன்னிப்பு வழங்கும் சாத்தியம்

மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்தின் ஊடாக நாம் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்று அந்நாட்டின் அல் - உத்தைபி கோத்திரத் தலைவர் முஹம்மத் பைஹான் சுரைம் அல் உத்தைபி உறுதியளித்துள்ளார். மரண தண்டனைக் கைதியாக இருக்கும் ரிஸானா நபீக்குக்கு மன்னிப்பு வழங்கி விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் உயர் மட்டக் குழுவொன்றை அந்நாட்டுக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்தது. இக் குழுவினருடன் ரிஸானா நபீக்கின் பெற்றோரும் அழைத்துச் செல்லப்பட்டி ருந்தனர். இக் குழுவினர் ரிஸானா நபீக் வேலை செய்த வீட்டு உரிமையாளரையும், அவர்கள் கட்டுப்பட்டு இருக்கின்ற கோத்திர தலைவர் உள்ளிட்ட முக்கியஸ் தர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் அஹமத் ஜவாத் மேற்கொண்டார். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

சென்னை புழல் அகதிகள் முகாமில் பத்மநாபா,அன்னை இந்திரா காந்தி

பிறந்த நாள் நிகழ்வு

19.11.2011 அன்று அன்னை இந்திரா காந்தி,தோழர்பத்மநாபா ஆகியோரின் பிறந்தநாள் தினமாகும். இந்த தினத்தை புழல், அகதிகள் முகாமில் உள்ள தோழர்கள், வருடா வருடம் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்த அடிப்படையில் இவ்வருடமும் இந்த நிகழ்வு நடைபெற்றது. முகாமில் உள்ளவர்கள் முகாம் முன்னாள் உள்ள தோழர்பத்மநாபா வாசிகசாலை முன் சரியாக காலை 8.00 மணிக்கு ஒன்று கூடினர். அங்கு வைக்கப்பட்டிருந்த இருவரது புகைப்டத்துக்கும் முகாம் மக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இரு பெண்கள் அவர்களது திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்தனர். முகாமில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. எமது நாட்டை சீரழித்த புயங்கரவாதத்துக்கு எதிராக முகாமில் உள்ளவர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.பத்மநாபா போன்ற தலைவர்கள் இன்று இருந்திருந்தால் இலங்கை தமிழ் மக்கள் படும் இன்னல்களுக்கு ஒரு நல்ல வழிழையைக் காட்டிருப்பார் என்ற ஆதங்கம்  இந்த நிகழ்வுக்குக்கு வந்தவர்களின் குசு,குசு பேச்சுக்களில் தென்பட்டது. குசு,குசு பேச்சுக்களில் மட்டுமல்ல உண்மையும் அதுவாகத்தான் தெரிகிறது. அவரால் ஏற்படுத்தப்பட்ட மாகாண அரசு என்பது, எமக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம் அதை வைத்து நாம் தமிழ் மக்களின் உரிமைகளை படிப்படியாக பெற்றிருக்க முடியும், பழையதை நினைத்தும்,எழுதியும் இன்று நாம் ஆதங்கப்படுகிறோம்.

கார்த்திகை 20, 2011

தோழர் பத்மநாபா 

உழைக்கும் மக்கள் பற்றிய சீரிய சிந்தனையாளன், 

ஒடுக்கப்பட்டவர்களின் விடிவுக்கான அயராத உழைப்பாளி, 

எதிரிகளையும் மதித்த உயரிய மனிதாபிமானி,

இன மொழி மதங்களைக் கடந்த சர்வதேசப் புரட்சியாளன்

தோழர் நாபா அவர்களின் சிந்தனை வழியில் தமிழர்களின் தலைவர்கள் நடந்திருந்தால், அவரின்  செயன்முறை வழிகாட்டல்களை தமிழர் சமூகம் உரிய காலகட்டத்தில் புரிந்து ஏற்றிருந்தால் இலங்கைத் தமிழர்களுக்கு இன்றைக்கு உலகில் எங்குமே உண்மையான நண்பர்கள் இல்லை என்று ஏற்பட்டிருக்கும் நிலை எற்பட்டிருக்கமாட்டாது. இன்னமும்; காலம் முற்றாகக் கடந்து விடவில்லை. தோழர் நாபா அவர்களின் அரசியற் சிந்தனைகளும் செயற்பாட்டு வழிமுறைகளும் இன்றைக்கும் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் விடிவுக்கு அவசியமானவைகளாகும். புலியிசத்தின் போலித்தனமான எச்சங்களால் இன்னமும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு செயற்திறன் கெட்டு சீரழிந்து கொண்டிருக்கும் இலங்கைத் தமிழ்ச் சமதாயத்தில் முற்போக்கான சிந்தனைகளும் புரட்சிகரமான

அரசியலும் முன்னணிக்கு வரவேண்டுமானால், மக்களின்; உரிமைகள் நிலைநாட்டப்படவும் சீரான வாழ்வை நோக்கி முன்னேற்றங்கள் ஏற்படவும் வேண்டுமானால் அந்த அடிப்படைகளில் புதிய தலைமுறையினர் அணிதிரட்டப்பட்டு வழிநடத்தப்பட வேண்டுமானால் பிரபாகரன்களல்ல மீண்டும் பத்மநாபாக்களே உயிர்த்தெழ வேண்டும் என்பதே இந்த நாளில் எமது சத்தியமாகட்டும்.  (மேலும்....)

 

 

 

கார்த்திகை 20, 2011

A Sri Lankan Tamil who could have made a difference (Comment)

(By M.R. Narayan Swamy )

If the Tamil Tigers had not assassinated him, K. Pathmanabha would have turned 60 Saturday. A Sri Lankan Tamil who embraced militancy in the 1970s, Nabha - as he was known - did not have the glamour of Velupillai Prabhakaran. He did not kill at will. True, the man did later head a "People's Liberation Army". But it was a rag tag force more suited for a photo opportunity than to wage war against Sri Lanka. A humble man, he embraced Marxism like so many of his era. Nabha strongly believed that salvation for the Tamils lay in forging bonds with like-minded Sinhalese and building a new non-racist Sri Lanka. He did not advocate ethnic hatred. In the process, he lost the race among militants to the Liberation Tigers of Tamil Eelam (LTTE) that ballooned with tit-for-tat killings after the 1983 anti-Tamil violence. The Tamil community then sought revenge. Prabhakaran delivered them what they wanted. The likes of Pathmanabha took a backseat. To the LTTE, men like Pathmanabha were a hindrance to the fight for Tamil Eelam. One day, Prabhakaran sent hit men who shot dead Nabha and his close associates in Chennai in June 1990. (more.....)

கார்த்திகை 20, 2011

எல்லோருக்கு​ம் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)

(வித்யாசாகர்​)

தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம். அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

தமிழ் மக்களின் அரசியலுடன் இரண்டறக் கலந்த அமரர் சிவதாஸன்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவருமான எஸ். சிவதாசன் தனது 77 வது வயதில் இயற்கை எய்தினார். அவர் 50 வருட கால அரசியல் வரலாற்றைக் கொண்டவர் என்பதுடன் மூன்று மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்ற சிறந்த மொழி பெயர்ப்பாளருமாவார். தனது மாணவப் பருவத்திலேயே இடதுசாரி அரசியலில் ஈடுபாடு கொண்டு இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து கொண்டவர் என்பதுடன் வடக்கு கிழக்கில் நிகழ்ந்த பல்வேறு அரசியல் போராட்டங்களில் பங்குபற்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சிறைக்கும் சென்றவர். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

தனது இருப்பை வலுப்படுத்துவதற்காகவே வெளிநாடுகளுக்கு கூட்டமைப்பு விஜயம் - பிரபா கணேசன்)

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையிலே அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம் முதலிய நாடுகளுக்கு விஜயம் செய்தது பற்றி என்ன கூற விரும்புகின்aர்கள்?

பதில்:- அவர்களது விஜயத்தின் முக்கிய நோக்கம் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மக்களைத் திருப்திப்படுத்துவதுதான். புலம்பெயர் மக்கள் வடபுலத்தின் வாக்குகள் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறார்கள். வட புலத்தில் தற்போது வாழும் மக்களின் உறவினர்களே வெளிநாட்டில் வாழ்கின்றார்கள். வடபுலத்தின் தேர்தல்களில் அளிக்கப்படும் வாக்குகள் வெளியில் வாழ்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. எனவே தான் புலம்பெயர் மக்களைத் திருப்திப்படுத்தித் தமது வாக்கு வங்கியை ஸ்திரப்படுத்தவே அவர்கள் விஜயம் செய்திருக்கலாம். அவர்களது விஜயத்தின் போது செயலாளர் நாயகத்தையோ உதவிச் செயலாளர் நாயகத்தையோ அவர்களால் சந்திக்க முடியவில்லை. இந்த விஜயம் திட்டமிட்டு மேற்கொள்ளப்படவில்லை என்பதனையே இது காட்டுகின்றது. (மேலும்....)

கார்த்திகை 20, 2011

TNA யையும் தன்னையும் மோத விடுவதாக மனோ பாய்ச்சல்

சிங்கள ஊடகத்தில் கடுமையான விமர்சனம் ; தமிழில் கசிந்ததும் மூடி மறைத்து ஆட்சேபனை?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது புலம்பெயர் தமிழர்களிடம் ஈழத் தமிழர்களை விற்றுப் பிழைப்பதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை புலம் பெயர் மக்களிடம் எடுத்துக் கூறப்போவதாக கூறிக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று அங்கு டிக்கட் விற்பனை செய்து அதன் மூலம் கூட்டமைப்பு பணம் கறப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களுக்கு என புலம்பெயர் தமிழர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினால் இவ்வாறு பெற்றுக் கொள் ளும் பணத்தை அவர்கள் தங்களின் பக்கற்களிலேயே போட்டுக் கொள்கின்றனர். அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் வெளிநாடு சென்றிருந்த போது அங்கு வாழும் தமிழர்கள் ஒவ் வொருவரிடமிருந்தும் 75 அமெரிக்க டாலர்களை அறவிட்டுக் கொண்டனர் என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார் என இணையமொன்று செய்தி வெளி யிட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 20, 2011

உழைப்புக்குச் சன்மானமாய் உதயமாகுமா மலையகத்தில் தனித்துவ பல்கலைக்கழகம்

மலையக மக்கள் மத்தியில் உள்ள அரசியல்வாதிகள் சிலர் மலையகத்திற்கென தனியான பல் கலைக்கழகம் அவசியமா? எனக் கேள்வி கேட்டு எதிர்க்கிறார்கள்! தனிப் பல்கலைக்கழகம் இப்போதைக்கு அவ சியம் இல்லை என்கிறார்கள். அப்படி அமைத்தால் எல்லோரையும் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி விடுவார்கள் என்றும் தனிப் பல்கலைக்கழகம் அமைக்கக் கோரும் பேராசிரியர்கள் தொழில் இல்லாமல் இருக்கிறார்கள். அதனால் பல்கலைக்கழகம் அமைத்துத் தொழில் தேட முயற்சிக்கிறார்கள் என்றும் அரசியல் வாதிகள் சிலர் கருத்துத் தெரிவிக்கிறார்கள். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறைக்கு சாத்தியமான உறுதியான தீர்வு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு சட்ட, நிறைவேற்று, நீதி அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதிகாரங்கள் கையளிக்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்ற விடயங்கள் பற்றி விரிவாக ஆராய்வதற்காக அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம், 6ம், 14ம், 15ம் திகதிகளில் கூடிப் பேசவுள்ளன. அடுத்த மாதம் அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள இப் பேச்சுவார்த்தையின் போது பொலிஸ் மற்றும் நில அதிகாரங்கள், அதிகாரத்தை கையளிப்பதற்கான அலகு, ஆளுநர்களின் அதிகாரங்கள், அரசாங்கத்திடம் பாரப்படுத்தப்படவுள்ள அதிகாரங்கள் என்பவை உட்பட பல விடயங்கள் பேசப்படவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

கார்த்திகை 20, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம்

கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக் கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை இன்று 20ம் திகதி ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள் ளதாக ஆணைக்குழுவின் ஊடக அதிகாரி லக்ஷ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக நிறைவுக்கு வரும் நிலையில் 20ம் திகதி அது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவுறுத்தியுள்ளார். கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்கமும் பற்றிய ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு 2010 மே மாதம் 15ம் திகதி நியமிக்கப்பட்டது. சுமார் 11 மாதங்களாகச் செயற்பட்ட இவ்வாணைக்குழு 27 பொது சந்திப் புக்களையும் சமார் 40 இடங்களில் 12 வெளிக்கள விஜயத்திலும் ஈடுபட்டதோடு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல பகுதி மக்களிடமும் சாட்சியங்களைப் பெற்றிருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் நேரடி சாட்சியம் அளித்ததோடு 5400 கடிதங்கள் மூலமான சாட்சியங்களும் ஆணைக்குழு வுக்குக் கிடைக்கப்பெற்றன.

கார்த்திகை 20, 2011

சேவை ஆரம்பித்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டன

ஆறு மாதங்கள் கப்பல் ஓடினால் தூக்கில் தொங்குவேன் எனச் சவால் விட்ட சீமான்?

கொழும்பிற்கும் தூத்துக்குடிக்குமிடையில் ஆரம்பிக்கப்படும் கப்பல் சேவை ஆறு மாதங்கள் தொடருமானால் தான் தூத்துக்குடி துறைமுகத்தில் தூக்குமரம் கட்டி அதில் தொங்கித் தற்கொலை செய்வேன் என நாம் தமிழர் அமைப்பின் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் இந்திய ஊடகங்களில் சவால் விட்டிருந்தார். இன்று அக்கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டு சரியாக ஆறு மாதங்கள் கடந்து விட்டது. இந்நிலையில் சீமான் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவாரா என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. சவால்கள் விடுவதில் வீரரான சீமான் இதுபோன்று பல வாய்ச்சவடாக்களை முன்ன ரும் விட்டுள்ளார். எனினும் எதனையும் அவர் நிறைவேற்றியதில்லை. அதனாலேயே அவருக்கு இவ்விடயத்தை குறும்புக்காக ஞாபகப்படுத்தினோம் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறந்தேனும் ஒரு உயிரைக் காவு கொள்ள ஒருபோதும் நாம் உடந்தையாக இருக்கமாட்டோம் என்றும் இனிமேலாவது சவால் விடும்போது சிந்தித்துச் செயற்பட வேண்டும் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீமானின் ஆறு மாதத்திற்கு முன்னரான இச் சவால் விட்ட செய்தியை இலங்கையில் தாமே முன்னணிப் பத்திரிகைகள் எனத் தமக்குத் தாமே மகுடம் சூடிக்கொள்ளும் பத்திரிகைகள் சிலவும் வீரவசனத் தலைப்பிட்டுப் பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 19, 2011

மனிதநேயத்தின் மறுபிறவி தோழர் க.பத்மநாபாஅவனியில் அவதரித்து அறுபது ஆண்டுகள்

(19.11.1951--19.11.2011)

மக்களின் அவலம் கண்டு-தன்

மடியிலிருந்து தந்தாள்-மக்களுக்காக

மாசற்ற மாணிக்கம் தனை-அவர்தான்

மரணத்தை வென்ற மகாத்மா

மனிதநேயம் கொண்ட தோழன் எங்கள் நாபா

(மேலும்....)

கார்த்திகை 19, 2011

மக்களை மட்டும் நேசித்த மக்கள் போராளி தோழர் பத்மநாபா

(சாந்தன்)

இன்று தோழர் பத்மநாபாவின் அறுபதாவது பிறந்த தினம். தோழர் பத்மநாபா 1951  ம்  ஆண்டு நவம்பர் மாதம் 19  ம் திகதி பிறந்தார், அவர் பாசிச்டுக்களினால் படுகொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 39 மாத்திரமே. அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் சந்தித்த மனிதர்களிடம் அவர் ஏற்படுத்திய தாக்கம், எமது மக்களின் நியாயமான, உரிமைகளுக்காக தீர்க்கதரிசனத்துடன் அவர் வகுத்துக்கொண்ட அணுகுமுறைகள், வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பது படிப்படியாக வெளிச்சத்துக்குவந்து கொண்டிருக்கின்றது. 1950 களில் பிறந்தவர்களுக்கு தெரியும் அன்றைய சூழ்நிலை எவ்வாறு இருந்ததென்பது.  தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் குறிப்பாக 60 களில் சத்தியாகிரகப்போராட்டம் பலனற்றுப்போயிருந்தமையும் 70  பதுகளில் நடைபெற்ற தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டு  மரணங்கள்    ஏற்படுத்திய தாக்கம்,  கல்வியில் தரப்படுத்தும் முறை ஏட்படுத்தப்பட்டமை, இவ்வாறான தொடர் சம்பவங்களும் ஒரு விதமான எழுச்சியை அன்றைய இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

கடாபியின் மகன் சயிப் கைது

லிபிய ஜனாதிபதி கடாபியின் மகன் சயிப் அப் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தகவலை அந்நாட்டு இடைக்கால அரசின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். லிபியாவின் தெற்கு பகுதியில் வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை கடாபியின் மகன்களில் அதிக அதிகாரம் கொண்ட ஒருவராகக் கருதப்பட்ட சயிப் லிபியாவை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக ஆரம்பத்தில் நம்பப்பட்டது. இவர் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடையலாம் எனவும் ஆரம்பத்தில் எதிர்ப்பார்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 19, 2011

ஆறு புதிய ரயில் பாதைகளை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை

புதிய ரயில் பாதைகள் அமைக்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதற்கு வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், கொழும்பிலிருந்து அம்பாந்தோட்டை வரையிலும், பாணந்துறையிலிருந்து ஹொரணை வரையிலும், மாகோவிலிருந்து திருகோணமலை வரையிலும், மதவாச்சியிலிருந்து திருகோணமலை வரையிலும் புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக ரயில்வே அதிகாரி வீ. ஆரியரத்ன தெரிவித்தார். குருநாகலிலிருந்து ஹபரண ஊடாக தம்புள்ளவரைக்கும், வெல்லவாயவிலிருந்து பிபிலை ஊடாக பதுளை வரைக்கும் மேலும் இரு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த ரயில்வே அதிகாரி, போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கம, பிரதியமைச்சர் றோஹண குமார திசாநாயக்க ஆகியோரின் ஆலோசனைகளின் பேரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கார்த்திகை 19, 2011

முருகன் நிரபராதியா?

கேள்விகள் எழுப்பும் காங்கிரஸ் பிரமுகர்

ஜூ.வி.யில் வெளிவந்த முருகனின் தொடருக்கு எதிர்வினையாக வந்த கடிதங்களில் ஒன்று இது! 

அன்னை இந்திரா, ஐயா மூப்பனார் மக்கள் நல்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த ஆர்.கே.குப்பு சாமி (செய்யார்) நமக்கு எழுதி இருக்கிறார்...''உலகத்தை உலுக்கும் வகையில் இந்திய மண்ணில் நிகழ்ந்த படுகொலைகள் மூன்று. முறையே மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி. முதன்மை மரணங்கள் இரண்டும் தனி மனிதனைச் சார்ந்தவை. ராஜீவ் காந்தியின் படுகொலை மட்டும் மிகவும் பயங்கரமானது. அதில் இறந்தவர் களின் எண்ணிக்கை மட்டும் 18. அதில் 10-க்கும் மேற்பட்டோர் இந்தியப் பாதுகாப்புத் துறையைச் சார்ந்த உயர் அதிகாரிகள்! (மேலும்....)

கார்த்திகை 19, 2011

ஒரு புதிய வரலாற்றின் துவக்கம்! 

(பேரா. பிரபாத் பட்நாயக்)

“வால்ஸ்டிரீட்டை ஆக்கிரமிப்போம்” எனும் மாபெரும் போராட்டம், அமெரிக்காவின் மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கி னருடைய ஆதரவோடு நடந்துவருகிறது. சர்வதேச அளவில் இந்த இயக்கம் ஏற்படுத்தி யுள்ள தாக்கம் குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா விலேயே ஏறத்தாழ 100 நகரங்களிலும், உல கின் பிற பகுதிகளில் உள்ள எண்ணற்ற நகரங்களிலும், இந்த இயக்கம் அந்தந்த நகரங் களின் பொருளாதார மற்றும் வாழ்க்கைத் தரத் திற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டு பரவியுள்ளது. தனக்கென ஒரு சொந்த வடிவினைக் கொண்டுள்ளது. ஆனால், இந்த இயக்கத்தின் முக்கியத் துவம் என்பது, வெறுமனே எத்தனை பேர் இந்த இயக்கத்தின் கீழ் அணி திரண்டு வரு கின்றனர் என்பதிலோ அல்லது எந்தச் சூழ லில் இருந்து அல்லது பின்னணியில் இருந்து வந்துள்ளனர் என்பதிலோ இல்லை. மாறாக, சமீபத்திய மக்கள் எழுச்சிகளில் இருந்து இது மாறுபட்டு நிற்பதற்கு மூன்று முக்கியமான, தெளிவான காரணங்கள் உள் ளன. இந்த காரணங்களினாலேயே இந்த இயக்கம், வரலாற்று ரீதியாக முற்றிலும் ஒரு புதிய எதிர்ப்பியக்கமாக, அறவழி எதிர்ப்பின் ஒரு புதிய துவக்கமாக உள்ளது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிவரும் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஹக்கீம் ஆராய்வு

இருபது ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறி வரும் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், யாழ் மாவட்ட செயலாளர் (அரசாங்க அதிபர்) திருமதி. இமெல்டா சுகுமாருடன் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் அவரது அலுவலகத்தில் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார். சுமுகநிலை ஏற்பட்டுள்ளதையடுத்து முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்த முஸ்லிம்கள் கட்டம் கட்டமாக அங்கு திரும்பி மீள்குடியேறி வருவதாகவும், அவர்கள் அநேக பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாகவும், அவற்றை நிவர்த்தி செய்ய அரசாங்க மட்டத்தில் தேவையான வசதிகள் அனைத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் ஹக்கீம் மாவட்ட செயலாளரிடம் கேட்டுக் கொண்டார். (மேலும்....)
 

கார்த்திகை 19, 2011

Desperate LTTE diehards go for the young ones

(By Jacinta Cruz in Ottawa)

Toronto’s Tamil media organizations largely controlled by the diehards of the LTTE are going all out to give the impression that there is widespread support for them among the Tamil Diaspora.Those who have followed the news and announcements of the LTTE-controlled CMR (Canadian Multicultural Radio) and TVI would have gathered that for the next ten days or so there will be continuous meetings and celebrations marking the LTTE Maveerar Day (Heroes Day) in almost all of the universities in and around Ottawa and Toronto; also Waterloo and Windsor too. (more....)

கார்த்திகை 19, 2011

மரணத்தை வென்ற மனிதநேயம்

தோழர் பத்மநாபா நினைவு மலரிலிருந்து...

பத்மநாபா பற்றி தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள்...

தா. பாண்டியன், மாநில செயலாளர். இந்திய ஐக்கிய பொதுவுடமைக் கட்சி

இந்தியாவை நம்பிய அந்த நம்பிக்கைக்குரிய நண்பனை, இந்திய மண்ணிலேயே இந்திய எதிரிகள் கொன்றனர். அவர் சிந்திய இரத்தம் காலப்போக்கில் பலரது கண்களைத் திறக்கும். நட்புக்காக, நீதிக்காக, நிரபராதியாக நின்று உயிர்நீத்த தோழர் பத்மநாபாவின் நினைவு எங்கள் நெஞ்சில் என்றும் நின்று நிலைக்கும். மரணத்திற்குப் பின் வெற்றியைப் பெற இருக்கிறார் பத்மநாபா. இது நடந்தேறும். அவருக்கு அன்றைக்கு நான் மீண்டும் மலர் அஞ்சலி செய்வேன்.

சோ. இராமசாமி, ஆசிரியர், துக்ளக்.

விடுதலைப் புலிகளால் கொல்லப்படுகிறவர்கள் பத்மநாபா ஆனாலும் சரி, அமிர்தலிங்கம் ஆனாலும் சரி, அப்பாவித் தமிழன் ஆனாலும் சரி, அவர்களெல்லாம் தமிழர்களே அல்ல. விடுதலைப் புலிகள் மட்டும் தான் அசல் தமிழர்கள். அவர்களை ஆதரிப்பவர்கள் அப்போதைக்கப்போது தமிழர்கள். இப்படி ஒரு சூழ்நிலை தமிழக அரசின் ஆதரவோடு இங்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

நிதி சீர்திருத்தம் கோரி நியூயோர்க்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

நிதி சீர்திருத்தம் கோரி அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 300க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டதோடு 5 பொலிஸாருக்கு காயம் ஏற்பட்டது. நியூயோர்க் நகரில் நேற்று முன்தினம் கூடிய ஆயிரக்கணக்கான வோல்தெரு ஆக்கிரமிப்பு போராட்டக்காரர்கள் நகர் முழுவதும் ஊர்வலமாக சென்றனர். இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளொயிட் சதுக்கத்தில் இருந்து ஆரம்பித்து லோவ மன்ஹட்டன் ஊடாக பிரூக்லி பாலம் வரை சென்றனர். இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 300க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப் பட்டனர். 5 பொலிஸார் காயமடைந்ததாக நகர மேயர் மைக்கல் பிளும்பேர் குறிப்பிட்டார். அமெரிக்காவில் நிதி சீர்திருத்தம் கோரி வோல் தெரு ஆக்கிரமிப்பு போராட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் தொடக்கம் நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 19, 2011

பெண் உரிமைக்கு ஆண் வர்க்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்

சர்வதேச ஆண்கள் தினம் இன்று உலகெங்கிலும் உள்ள நாடுகளில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு ஆண் கள் அளித்து வரும் பங்களிப்பு, அவர்கள் செய்யும் தியாகங் களை பெரும்பாலும் எவரும் சரியாக புரிந்து கொள்வதில்லை. ஆணு க்கு ஒரு பெண் துணை என்பதற்கு அமைய, ஆண்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு சேவையிலும் பெண்களுக்கு சம அந்தஸ்தை கொடுத்து கல்வித்துறை, பொருளாதாரம், சமூகப் பணி மற்றும் தொழி ல்நுட்ப முன்னேற்றங்களுக்காக கடுமையாக உழைத்து அவர்கள் வாழும் சமூகத்தை முதலிலும் பின்னர் தேசத்தையும் அடுத்து அந் நாடு அமைந்துள்ள பிராந்தியத்தையும் இறுதியில் உலகத்தையும் மேம் படுத்தக்கூடிய வகையில் தனது பணிகளை ஒரு ஆண் மகன் செய் கின்றான். (மேலும்....)

கார்த்திகை 19, 2011

இந்தியா, சீனா எங்கள் மீது தாக்குதல் நடத்தலாம்  - அமெரிக்கா

இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லீயான் பென்னடா கருத்து தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனம் நடத்திய பொது நிகழ்ச்சியில் பேசிய அவர் அமெரிக்காவிற்கு வளரும் நாடுகளிலிருந்து போர் அபாயம் ஏற்பட்டு ள்ளதாக கூறினார். மேலும், அமரிக்காவிடம் பசுபிக் பகுதியில் போதுமான அளவுக்கு பாதுகாப்புகளும், ஏவுகணைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுரைப் படுத்தப் பட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சீனாவின் இராணுவப் பலம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதாக கூறினார். மேலும் சீனாவிடம் தொலைவிலுள்ள இலக்குகளை விரைவில் தாக்க கூடிய ஏவுகணைகள் உள்ளதாக கூறினார்.

கார்த்திகை 19, 2011

பிரபஞ்சத்தின் உண்மைத் தன்மையை உய்த்தறிய நடைமுறை உலகம் சிறந்த புத்தகம்

நாம் வாழும் இப்பூமி திடீரென 2012 டிசம்பர் 21ல் முடிவுக்கு வரப்போகின்றதா? ஆம் என்கின்றது ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது. மாயன், இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம். அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது. ஆதி எகிப்திய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது. புவியின் துருவப்பகுதிகள் இடம்மாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டும், வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறைய 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம் புகின்ற இன்னோர் குழுவினர். (மேலும்....)

கார்த்திகை 19, 2011

அழிந்து வரும் மூலிகையினங்கள்

இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் அரிய வகை மூலிகையினங்கள் வளர்ந்து வருகின்றன. அவை முறையற்ற வகையில் கையாளப்படுவதால் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள் ளது என்று நிபுணர்கள் அச் சம் தெரிவித்தனர். வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டு நிதிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கருத் தரங்கில் இப்பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட் டது. அரிய வகை மூலிகைக ளிலிருந்து மருந்துப் பொருட் களைத் தயாரிக்கும் பல மருந்து நிறுவனங்கள் மூலி கைகளைச் சேகரிப்பதற் காக உடலுழைப்புத் தொழி லாளிகளைப் பயன்படுத்தி வருகின்றன. அவர்கள் அதி கக் கூலியைப் பெறும் எண் ணத்தில் அதிகமான மூலி கைகளைப் பறித்து விடுவ தால் இவ்வகை மூலிகை யினங்கள் அழிவின் விளிம் பில் உள்ளன. மக்களின் அறியாமை காரணமாகவும் செயல் திட்டமற்ற வகையில் அவற்றைப் பயன்படுத்து வதாலும் பலவித முக்கிய மான மூலிகைகள் அழிந்து விட்டன. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

முதலாளித்துவ தீய சக்திகள் உலாவும் இடம்-பங்குச்சந்தை குறித்து அமெரிக்க மக்கள் விமர்சனம்

ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வலுக்கட்டாயமாக போராட்டக்கா ரர்களை வெளியேற்றிய சம்பவம், அமெரிக்க மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதலாளித்துவ எதிர்ப்புப் போராட்டத்தின் மூன்றாவது மாதம் துவங்கியதை அமெரிக்கா முழுவதும் போராட்டக்காரர்கள் அனுசரித்துள்ளனர். ஜூக்கோட்டி பூங்காவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும், அதற்கு அருகில்தான் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த போராட்டக்குழுவினர் திரண்டனர். வால் ஸ்டிரீட்டை நோக்கி ஊர்வலமாகச் சென்ற மக்கள், வால் ஸ்டிரீட்டை இழுத்து மூடு மற்றும் நாங்கள்தான் 99 விழுக்காட்டினர் என்ற முழக்கங்களை எழுப்பினர். முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்வதைச் சகித்துக் கொள்ள முடியாத அமெரிக்கக் காவல்துறை, ஆயிரக்கணக்கான காவல்துறையினரைக் குவித்திருந்தது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் இரும்புத் தடுப்புகள் போன்றவற்றைக் கொண்டு சாலைகளை மறித்து, ஊர்வலத்திற்கு இடையூறு ஏற்படுத்தவும் காவல்துறை ஏற்பாடு செய்திருந்தது. (மேலும்....)

கார்த்திகை 19, 2011

வெனிசுலாவில் அனைவருக்கும் வீடு திட்டம்: ஏழு மாதங்களில் லட்சம் வீடுகள்

நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியிருக்க வீடு என்ற பெரும் திட்டத்தை வெனிசுலாவின் ஹியூகோ சாவேஸ் தலைமையிலான இடதுசாரி அரசு உருவாக்கியது. அதை நடைமுறைப்படுத்தும் வகையில் கடந்த ஏழு மாதங்களில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டுவிட்டது. இவற்றில் 62 விழுக்காடு வீடுகள் பொதுத்துறை மூலமாகவும், 38 விழுக்காடு தனியார் துறை மூலமாகவும் கட்டப்பட்டுள்ளன. வெனிசுலா வரலாற்றில் இத்தகைய பணி இவ்வளவு விரைவில் நடைபெற்றதில்லை. ஒரே ஆண்டில் ஏராளமான மக்கள் சொந்த வீடுகளைப் பெறவிருக்கிறார்கள். வெனிசுலாவில் குடியிருக்க வீடின்மை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வுகாண 2011 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் வீடுகளைக் கட்டத் திட்டமிட்டுள்ளனர். 2012ல் இரண்டு லட்சம், 2013ல் மூன்று லட்சம் என்று இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பது அரசின் திட்டமாகும். ஏழு ஆண்டுகளில் இருபது லட்சம் வீடுகளைக் கட்டுவது என்று அரசு இலக்கை நிர்ணயித்துள்ளது.

கார்த்திகை 18, 2011

சாதனையாளரான ஜனாதிபதி அவர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்

சாதனை வீரரும் மக்கள் தலைவருமான மாண்புமிகு மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் ஓரா ண்டு நிறைவு விழாவும் ஜனாதிபதி அவர்களின் பிறந்த தின மும் இன்று நாட்டு மக்களால் நன்றி உணர்வுடன் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி அவர்கள் 2005ம் ஆண்டில் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட போது அவரை இரண்டு பாரிய பிரச்சினைகள் எதிர்நோக் கியிருந்தன. ஒன்று சுனாமியினால் ஏற்பட்ட மனித மற்றும் கட்டிடங் களுக்கும், தேசிய பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அழிவு. இரண்டா வதாக எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதம். இனப்பிரச்சினைக்கும் ஒரு நிரந்தரமான தீர்வை ஏற்படுத்துவதற்கான சகல அரசியல் கட்சிகளும் அங்கத்துவம் வகிக்கும் பாராளுமன்ற தெரிவுக் குழுவிடம் இதற்கான எல்லா மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வை தயாரிக்கும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். பாராளுமன்ற தெரிவுக்குழு எடுக்கும் முடிவை தான் நன்கு பரிசீலனை க்கு எடுத்துக் கொண்ட பின்னர் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிரந் தரத் தீர்வை ஏற்படுத்துவேன் என்று ஜனாதிபதி அவர்கள் உறுதிய ளித்துள்ளார். (மேலும்....)

கார்த்திகை 18, 2011

வெள்ளைக்கொடி விவகாரம்

சரத் பொன்சேகாவிற்கு மூன்று வருட சிறை

வெள்ளைக்கொடி விவகார வழக்கில் முன்னாள் இராணுவத்தளபதியும் கூட்டுப்படைகளின் பிரதானியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதிகள் குழு அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. அவருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மூன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் தீபாலி விஜயசுந்தர இன்று வெள்ளிக்கிழமை வாசித்தார். வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகை தந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையே ட்ரயல் அட்-பார் முறையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜயசுந்தர தலைமையிலான எச்.என்.பி.பி வராவௌ, சர்பிக் ரஷீன் ஆகிய நீதிபதிகள் குழு முன்னிலையில் நடைபெற்றது. மேற்படி வெள்ளைக்கொடி வழக்கினால் நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 18, 2011

இலங்கை - இந்திய உடன்படிக்கை

காங்கேசன்துறை - பளை ரயில் பாதை புனரமைப்பதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

காங்கேசன்துறையிலிருந்து பளை வரையான சுமார் 56 கிலோமீற்றர் தூரம் ரயில் பாதை புனரமைப்பு செய்வதற்கான இலங்கை - இந்திய உடன்படிக்கையொன்று சைச்சாத் திடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கையை இலங்கை ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.பி. ஆரியரத்ன இந்தியாவின் ஐ.ஆர்.சி.ஓ.என். நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மோகன் திவாரி ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர். இதன்போது அமைச்சர் குமார் வெல்கம, இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்தா போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தம்மிக்க பெரேரா இந்தியாவின் ரயில்வே அமைச்சின் சார்பில் ஏ.பி. மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர். 149.30 மில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இப்பாதை புனரமைப்புப் பணிகள் இரண்டு வருடத்திற்குள் பூர்த்தியடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை 18, 2011

ஆசியாவில் தொடர்ந்து படைகளை நிறுத்திவைக்க அமெரிக்கா திட்டம்

அமெரிக்க படைகள் தொடர்ந்து ஆசிய பசிபிக் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா சென்றுள்ள ஒபாமா அங்கு பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அமெரிக்கா பசிபிக் பகுதிகளில் பலம் வாய்ந்த நாடாக உள்ளது. ஆசிய பசிபிக் பகுதிகளில் அமெரிக்க படைகளின் இருப்பும், செயல்பாடும் தமது நாட்டின் முன்னுரிமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். ஆஸி பிரதமர் ஜூலியா கில்லார்டை நேற்று முன்தினம் சந்தித்த ஒபாமா அவருடன் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். அதன்படி அவுஸ்திரேலியாவின் டார்வின் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 2500 வீரர்கள், 250 போர்க்கப்பல்களில் 6 மாதங்களுக்கு முகாமிட்டிருப்பார்கள் இந்நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து அமெரிக்க படைகள் இருக்கும் என்ற அறிவிப்பு சீனாவுக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது.

கார்த்திகை 18, 2011

A Letter from Canada

(Richards Karunairajan)

The Wanni in particular has been utterly devastated and the people there are badly in need of help. LTTE funds have bought mansions in Markham, built malls and markets, enabled holidays in splendour, oceanic cruises, pleasure trips to Caribbean hot spots and showy family functions at which thousands of dollars are excessively expended but the people of the Wanni still have to contend with tarpaulins. Yet this very Diaspora, not even a generation ago, were mere refugees. No one should be allowed to get away with these funds that belong to the people and no one should be allowed to appropriate them for their personal benefit. Why are the Canadian Tamils not raising this question? Are these people who hold these funds not rogues? They used the excuse of a political issue in Sri Lankan to amass wealth for themselves. (more...)

கார்த்திகை 18, 2011

பிரிட்டனில் வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு

பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் மட்டும், ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர், வேலையில்லாத் திண்டாட்டப் பட்டியலில் சேர்ந்துள்ளனர். ஒட்டு மொத்தமாக பிரிட்டனில் வேலையின்மை 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரிட்டனில் கடந்த செப்டெம்பர் மாதத்தோடு முடிந்த மூன்றாவது காலாண்டில் வேலையில்லாத திண்டாட்டம் 26 லட்சத்து 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 19 ஆண்டுகளைப் பார்க்கும்போது மிக அதிகம். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் (செப்டம்பரோடு முடிந்த காலாண்டில்) வேலை யில்லாதோர் பட்டியலில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர். வேலை தேடுவோருக்கான உதவித்தொகை பெறுவோர் எண்ணிக்கையில் 5,300 பேர் சேர்ந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து தற்போது 16 லட்சம் பேர் உதவித் தொகை பெறுகின்றனர். வேலையில்லாதோரில் 16 முதல் 24 வயது வரையில் உள்ளவர்கள் மட்டும் 10 இலட்சத்து 20 ஆயிரம் பேர், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வேலையில் இருந்து வெளியேறியவர்கள் 67 ஆயிரம் பேர்.

கார்த்திகை 18, 2011

கடல்சார் விவசாயமும் விரிவாக்க முயற்சிகளும்

(முனைவர் தி.ராஜ்பிரவீன்)

“இரண்டாம் பசுமைப் புரட்சிக்கான” தளமாக கடல்சார் வேளாண் தொழில் நுட்பங்களை புதிய வேளாண் ஆராய்ச்சி கள் மற்றும் விரிவாக்க முயற்சிகள் வாயி லாக நாம் மேற்கொள்ளும் போது முந் தைய பசுமைப் புரட்சியின் பொருளா தாரப் பயன்களை பெறாத ஏழை, எளிய சிறு மற்றும் குறு விவசாயிகள் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படச் செய்ய முடியும். தற்போதைய வேளாண் வல்லுனர்களின் சிந்தனை மாற்றம் மற்றும் கடலோரத் தமிழகத்தை வேகமாக விலைக்கு வாங்கி வரும் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரு முதலாளிக ளின் நிலவேட்கையை அடங்கச் செய்யும் உறுதியான வாழ்வுரி மைப் போராட்டங்கள் ஆகியவையே இரண்டாம் பசு மைப் புரட்சியின் தளமாக கடல்சார் விவசாயத்தை உருவாக்கி நீடித்த தமிழக வளர்ச்சிக்கு, வேளாண் உற்பத்திப் பெருக்கத்திற்கு வழிவகை செய்யும். இதற்கு வேண்டிய விரிவாக்கப் பணிகளை திறம்பட மேற்க்கொள்ள வேண்டியது அவசியம் என்பதில் சந் தேகம் இல்லை. (மேலும்....)

கார்த்திகை 18, 2011

West is not Sri Lanka’s enemy – Prof. Rohan Gunaratna

Addressing a distinguish crowd at the British Scholars Association on Wednesday(16) renown international terrorism Prof. Rohan Gunaratna expert told that Sri Lanka needs to address western world and the west is not an innate enemy of Sri Lanka. He also told that LTTE remnants in West are engaged in criminal activities such as credit card fraud while another section is heading a misinformation campaign against Sri Lankan state. Prof. Gunaratna warned that several LTTE front organizations masquerading as human rights group are trying to influence and mislead prestige human rights groups as well.  He stressed the importance of a systematic government information campaign to engage with human rights and NGO community and to give the true picture of Sri lankan situation at the present.

கார்த்திகை 18, 2011

சிரியா

அடுத்த சதிவேலையைத் துவக்கியது அமெரிக்கா?

சிரிய அரசு எதிர்ப்பாளர்கள் நடத் தியுள்ள தாக்குதல்களில் ராணுவத் தைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப் பட்டுள்ளதால் லிபியாவுக்கு அடுத்த படியாக சிரியாவில் தனது சதிவேலை யை அமெரிக்கா துவங்கிவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க ஆதரவு பொம்மை அர சுகள் அதிகமாக இடம் பெற்றுள்ள அரபு லீக்கிலிருந்து சிரியாவைத் தற்கா லிக நீக்கம் செய்து வைத்த நிகழ்வைத் தொடர்ந்து, ஆயுதந்தாங்கிய சிரிய அரசு எதிர்&#