Contact us at: sooddram@gmail.com

 

ஒக்ரோபர் 2014 பதிவுகள

ஒக்ரோபர் 31, 2014

மலையகப் பேரவலம்.

(சுகு-ஸ்ரீதரன்)

2004 டிசம்பர் சுனாமிக்குப் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த பேரவலம் இது எனலாம். பதுளை ஹல்திமுல்ல கொஸ்லாந்த பகுதியில்120 வீடுகள் அள்ளிச் செல்லப்பட்டிருக்கின்றன. 150 பேர் வரை மண் சரிவில்சிக்கியிருக்கிறார்கள். பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புபணி அடைமழை மோசமான காலநிலையின்  மத்தியில் சிரமத்துடன் முன்னெடுக்கப்படுகிறது. 800 இற்கு மேற்பட்டோர் பாடசாலைகளில் தங்கவைக்கபட்டிருக்கிறார்கள். 3 கிலோமீற்றர் சுற்றளவுள்ள ஒரு கிராமமே அழிந்து போயிருக்கிறது. (மேலும்....)

விடுமுறைக்கு இலங்கை செல்லும் தமிழா?? உமக்கு அவசர வேண்டுகோள்….

எப்போதாவது நண்பர்கள் சந்தித்துக்கொள்ளும் போது மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடு செல்வதோ, வங்கிகளில் கடன்பெற்று பூப்புனித நீராட்டு விழா, ஐம்பதாவது பிறந்ததினம் ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றைக் கொண்டாடுவதோ புலம்பெயர் நாடுகளில் மகிழ்ச்சியாகக் கருதப்படுகிறது. பல வருடங்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் வாழ்பவர்கள் இந்த அவலமான வாழ்க்கைக்குப் பழக்கப்பட்டுவிடுகின்றனர்.
மனிதர்களோடு மனிதர்கள் உறவாடாத சிறை ஒன்றை விலைகொடுத்துத் தாமே வாங்கிக் கொண்டு அதற்கு முடங்கிப் போகின்றனர். எலும்பை உறையவைக்கும் குளிரில் சுமக்கமுடியாத உடையணிந்து சிறையிலிருந்து வெளியேவரும் மனிதன், நாளாந்த வாழ்க்கையை ஓட்டுவதற்காக சில வேளைகளில் பதினைந்து மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சில குடும்பங்களில் கணவன் மனைவி பிள்ளைகள் ஒன்றாக சந்தித்து கொள்வது ஒன்றாக உணவருந்துவது சில நாட்களில் மட்டும் என்ற கசப்பான உண்மையும் உண்டு.
(மேலும்....)

தொடர்ந்து 6 நாட்களுக்கு இருளில் மூழ்கப் போகும் பூமி! - நாசா

இந்த வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை உலகம் முழுதும் இருளாக தொடர்ந்து இருக்குமென நாசா நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஓர் பயங்கர சூரிய மண்டல புயல் வீசுமெனவும் அதனால் ஏற்படுகின்ற மாற்றத்தால் தூசி, துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைப்படும் என்றும் அவர் கூறுகின்றார். நாசாவின் தலைவர் சார்ஸ் போல்டன் மேலும் தெரிவிக்கையில், இந்த சூரிய மண்டலப் புயலால் பூமி இருளில் மூழ்கினாலும் எந்தவித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது. இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை. இது 250 வருடங்களில் ஏற்படப்போகின்ற மிகப்பெரிய சூரிய மண்டல புயலாகும். 216 மணித்தியாலங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் ஆறு நாட்கள் பூமியில் மின் விளக்குகளுடனேயே செயலாற்ற வேண்டி வரும் என்று குறிப்பிட்டார். இது சம்பந்தமாக மேலதிக விபரங்களை நாசா இணையத்தளத்தில் பார்வையிட முடியுமென விஞ்ஞானி ஏர்ல் கொடோயில் தெரிவிக்கின்றனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியா உதவத் தயார்

பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவில்   பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியளிப்பதற்கு  இந்தியா தயாராக உள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா தெரிவித்துள்ளார். மேற்படி பகுதியில் நேற்று புதன்கிழமை காலை பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இந்த நிலையில், இலங்கை வெளிவிவகார அமைச்சர்  ஜி.எல்.பீரிஸை  தொலைபேசி மூலமாக தொடர்புகொண்ட    இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, இது தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே, மண்சரிவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவியளிப்பதற்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.  இலங்கையில் மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை  மீட்கவும் உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும் நிவாரண உதவிகள் வழங்கவேண்டும் என்று இலங்கைக்கு, இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பிய வான் பாரப்பில் ரஷ்ய யுத்த விமானங்கள்

ரஷ்யாவின் இராணுவ விமானங் கள் கடந்த இரு தினங்களில் ஐரோப்பிய வான்பரப்பில் பறப்பது அசாதாரணமாக அதிகரித்திருப் பதாக நேட்டோ குறிப்பிட்டுள்ளது. இதில் டியு-95 ரக விமானம் மற்றும் மிக்-31 யுத்த விமானம் உட்பட நான்கு பிரிவு விமானங் கள் அட்லான்டிக் கடலுக்கு மேலால் பறப்பது அவதானிக்கப் பட்டதாக நேட்டோ வெளியிட்டி ருக்கும் செய்திக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உக்ரைனின் கிரிமின் பிராந்தி யத்தை ரஷ்யா தனது நிலப்பகுதிக் குள் உள்வாங்கிக்கொண்டதை அடு த்து அதன் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித் தது. உக்ரைன் அரசுடன் போராடி வரும் கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யா உதவுவதாகவும் மேற்குலகம் குற்றம் சாட்டுகிறது. எனினும் நேட்டோ புதனன்று வெளி யிட்ட செய்திக் குறிப்பில், உக்ரைன் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதில் ரஷ்யாவின் கணிசமான விமா னங்கள் அசாதாரணமான முறையில் அளவுக்கு அதிகமாக பறந்ததாக அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. எனினும் எந்த அசம் பாவித சம்பவமும் பதிவாக வில்லை. ரஷ்ய விமானங்கள் கருங்க டல், பெல்டிக் கடல், வட கடல் மற்றும் அட்லான்டிக் கடலுக்கு மேலால் பறந்ததாக நேட்டோ குறிப்பிட்டுள்ளது.

McDonald’s Closes All Their Restaurants in Bolivia

Bolivia became the first McDonald’s-free Latin American nation, after struggling for more than a decade to keep their numbers out of ‘the red.’ And that fact is still making news. After 14 years in the nation and despite many campaigns and promos McDonald’s was forced to close in 2002, its 8 Bolivian restaurants in the major cities of La Paz, Cochabamba and Santa Cruz de la Sierra. McDonald’s served its last hamburgers in Bolivia on a Saturday at midnight, after announcing a global restructuring plan in which it would close its doors in seven other countries with poor profit margins. The failure of McDonald’s in Bolivia had such a deep impact that a documentary titled “Por que quebro McDonald’s en Bolivia” or “Why did McDonald’s Bolivia go Bankrupt,” trying to explain why did Bolivians never crossed-over from their empanadas to Big Macs. The documentary includes interviews with cooks, sociologists, nutritionists and educators who all seem to agree, Bolivians are not against hamburgers per sé, just against ‘fast food,’ a concept widely unaccepted in the Bolivian community. The story has also attracted world wide attention toward fast foods in Latin America. El Polvorin blog noted: “Fast-food represents the complete opposite of what Bolivians consider a meal should be. To be a good meal, food has to have be prepared with love, dedication, certain hygiene standards and proper cook time.”

ஒக்ரோபர் 30, 2014

6 லயன்கள் புதையுண்டன, 400 பேர் மாயம்

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவு காரணமாக 6 லயன் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீரியபெத்தையில் ஆற்று பள்ளத்தாக்கை அண்மித்தாக உள்ள 7,8,9,10,11 மற்றும் 12ஆம் இலக்க லயன் குடியிருப்புக்களே  மண்ணில் புதையுண்டுள்ளன. 7ஆம் இலக்க லயனில் 8 வீடுகளும் 8ஆம் இலக்க லயனில் 16 வீடுகளும் 9ஆம் இலக்க லயனில் 20 வீடுகளும் 10ஆம் இலக்க லயனில் 10 வீடுகளும் 11ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் 12 ஆம் இலக்க லயனில் 6 வீடுகளும் இருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகல்கள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

வேலுபிள்ளையின் காணியை உரிமை கோருகின்றனர்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளைக்கு சொந்தமான காணியை, அதேயிடத்தைச் சேர்ந்த ஒருவர் உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.'வல்வெட்டித்துறை நகரசபைக்கு பொது விளையாட்டு மைதானம் தேவையென்ற நோக்குடன் 2000ஆம் ஆண்டு திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் 238 பரப்பளவு காணி மைதானத்திற்கு தேவையென்ற ரீதியில் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு சில பொதுமக்கள் தங்கள் காணிகளை நன்கொடையாக வழங்கினார்கள். அத்துடன், அதனை அண்டியிருந்த காணிகளும் இணைக்கப்பட்டன. அதற்கு எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நன்கொடை காணிகளில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் காணியும் உள்ளடங்குகின்றது. இந்நிலையில், பிரபாகரனுடைய தந்தையின் காணியின் ஒரு பகுதி தன்னுடையது எனக்கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் 2000ஆம் ஆண்டு பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கடந்த 14 வருடங்களாக நடைபெற்று வருகையில், வல்வெட்டித்துறை நகர சபையின் தற்போதய தவிசாளர் எஸ்.அனந்தராஜ் மேற்படி காணிகள் நகரசபைக்கு தேவையில்லையென நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதனால், விளையாட்டு மைதான காணியானது உரிமை கோரும் நபரிற்கு செல்லவுள்ளது. இந்த வழக்கிற்கான தீர்ப்பு 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வழங்கப்படவுள்ளது. இதுதான் ஐயா யாழ்ப்பாண மேலாக்கவாத காணிபிடிப்போரின் மனநிலை. இதில் 'தேசியத் தலைவர்' இன் தந்தையின் காணி என்ன வறிய மக்களின் காணி என்ன .....?

பதுளை - மிகுந்த வலி - தொடரும் இழப்புக்கள்.
இணைந்து உதவுவோம் !

ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 300 பேரைக் காணவில்லை என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 600 பேர் வரை புதையுண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை 30க்கும் அதிகமான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணால் போன 300 பேரும் உயிழந்திருக்கலாம் எனவும் அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ; ஆனாலும் உயிரிழைந்தவர்களின் முழுமையான விபரங்களை வெளியிட அரசாங்கம் தயக்கம் காண்பிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இணைப்பு ஹல்துமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 14 பேரின் சடலங்கள் மீட்பு. பதுளை ஹல்துமுல்ல மீரியாபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்குண்ட 14 பேரின் சடலங்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் 500க்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 100 விசேட அதிரடிப்படை உத்தியோகத்தர்களும், நூற்றுக் கணக்கான காவல்துறையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுபோல ஒரு மண்சரிவில் சில குடும்பங்கள் மலையகத்தில் முப்பது வருடங்களின்முன் மரணித்த நிகழ்வு நினைவில் வருகிறது. அப்போது இலங்கைத் தொழிலாளர் கொங்கிரஸ் தலைவர் ஒருவர் "இது அந்த மக்களின் விதி" எனக் கூறி இருந்தார். அதற்கு தோழர் சண்முகதாசன் சொன்ன பதில் முக்கியமானது. "இந்த விதி தொழிலாளர்களுக்கு மட்டும் அமைவது, பாதுகாப்பற்ற இடங்களில் அவர்களது வதிவிடம் இருப்பதன் காரணத்தாலேயே." மிகுந்த பாதுகாப்பாக குன்றின்மேல் அமைந்துள்ள துரைகளின் பங்களாக்களுக்கு இதுபோன்ற விதி அமைவது அபூர்வம். இந்த விதியை மாற்ற ஒன்றிணைவோம்!

லைக்கா உரிமையளர் இலங்கையில் கைது!

ஊடகங்களின் தமிழ்த் தேசிய அசிங்கம்

லைக்கா மோபைல் நிறுவனத்தின் உரிமையாளரும். சிறீலங்கன் ஏர்லைன்ஸ் இன் பிரதான முகவரான லைக்கா பிளை, லைக்கா புரடக்ஷன் ஆகியவற்றை நடத்திவருபவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தமிழ் ஊடக மாபியாக்கள் கட்டுக்கதை ஒன்றை பரப்பினர். அதிர்வு இணையம், தீபம் தொலைக்காட்சி, தமிழ்வின் இணையம் ஆகியவற்றில் இப் பொய்ச் செய்தி பரப்பப்பட்ட, சீமான் கும்பல் அதனை உள்வாங்கிப் பிரசாரத்தில் இறங்கியது. கைதான செய்திய ஐரோப்பிய நேரம் இன்று மாலைவரை பரப்பிய இந்த ஊடகங்கள் இறுதியில் எதிர்பார்த்தபடி சுபாஸ்கரன் விடுதலையானார் என்ற செய்தியையும் வெளியிட்டன. நேர்த்தியாகத் திட்டமிடப்பட்டு இச் செய்தி புலம்பெயர் நாடுகளிலும் தமிழகத்திலும் பரப்பப்பட்ட போதிலும் இறுதியில் மிகப்பெரும் ‘சொதப்பலில்’ முடிவுற்றது. (மேலும்....)

''அது 'கத்தி' அல்ல... காப்பி!''

என்னுடைய கதை இதுதான் என்று, நீதிமன்றத்தில் கோபி கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்த மனுவில் உள்ள கதைக்கும் 'கத்தி’ படத்துக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை என்பது படம் பார்த்தவர்களுக்குத் தெரியும். அவரிடம் தொடந்து பேசியபோது, ''கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தன்னுடைய ஊரில் பன்னாட்டு நிறுவனம் ஒன்று நிறுவனம் தொடங்க அப்பாவி மக்களிடம் இருந்து நிலத்தை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்தியது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை வைத்தும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரை மனதில் வைத்தும்,  'மூத்தகுடி’ என்ற தலைப்பில் இந்தக் கதையை எழுதினேன். அதை தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் சொன்னேன். அப்போது ஜெகன் என்பவர் எங்களுடன் இருந்தார். மூன்று மணி நேரம் நான் அந்தக் கதையை சொல்லி முடித்ததும், தற்போது என்னால் இந்தக் கதையை திரைப்படமாகத் தயாரிக்க முடியாது என்று விஸ்வாஸ் சுந்தர் சொல்லிவிட்டார். ஆனால், அப்போது அவருடன் இருந்த ஜெகன், இந்தக் கதை அற்புதமாக உள்ளது என்றும் இதைத் திரைப்படமாகத் தயாரிக்க இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் முருகதாஸிடம் சொல்லி, தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்னார். (மேலும்....)

ஐரோப்பாவில் தமிழர் கடைகளில் நடப்பது என்ன? நோர்வேயில் அம்பலம்….

சிலவேளைகளில் தமிழர் தான் தமிழர்களுக்கு எதிரியாக உள்ளார்கள் என்று கூறுவது சரியா என்று நினைக்கத்தோன்றும் அளவு பல சம்பவங்ள் ஐரோப்பாவில் இடம்பெற்று வருகிறது. லண்டன் , ஜேர்மனி , பிரான்ஸ் , நோர்வே, சுவிஸ் போன்ற நாடுகளில் பல தமிழர்கள் வியாபார நிலையங்களை வைத்திருக்கிறார்கள். பலர் தம்மிடம் வேலைபார்கும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தை கொடுத்து வருகிறார்கள். ஆனால் அதில் சிலர், தமிழர்களையும் வேற்று நாட்டவர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களின் வியர்வையையும் ரத்தத்தையும், உரிஞ்சி வருவதைகண்கூடாக காணக்கூடிய ஒரு விடையமாக உள்ளது. இந்த வகையில் நோர்வே “பேர்கன்” நகரைச் சேர்ந்த ஈழத் தமிழர் ஒருவரும், இதுபோல குறைந்த சம்பளத்தில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி அவர்களை பிழிந்து எடுத்து வந்துள்ளார். ஆனால் இவ்விடையம் பொலிசாருக்கு தெரிந்ததால் அவர்கள் உடனே அன் நபரைக் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளார்கள். லண்டனில் சராசரியாக ஒருவர் மணித்தியாலத்திற்கு வேலைசெய்ய சுமார் £5.50 பவுன்டுக்கு மேல்கொடுக்கவேண்டும் என்ற சட்டம் உள்ளது. ஆனால் லண்டனில் உள்ள சில கடைகளில், ஒரு மணித்தியாலத்திற்கு 3.00 பவுன்களையே தமிழ் முதலாளிகள் தமது ஊழியர்களுக்கு கொடுத்து வருகிறார்கள். இது சட்டப்படி குற்றம் ஆகும். இதேவேளை அதிக லாபம் சம்பாதிக்கவே இவர்கள் போன்ற முதலாளிகள் முனைப்பு காட்டி வருவதும், நல்லதொரு உதாரணமாகவும் அமைந்துள்ளது.

இந்தியா - வியட்நாம் ஒப்பந்தம்: அதிர்ச்சியில் சீனா கண்டனம்

கடல் பகுதியிலிருந்து எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்த இந்தியா - வியட்நாம் இடையிலான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதற்கு, சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீனாவின் தெற்கு கடல் பகுதி யில், அந்நாட்டு ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் அமைந்துள்ள வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் அச்சம் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர், டான் டங் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது இரு நாட்டு உறவு கள், வர்த்தகம் பற்றிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் முக்கிய அம்சமாக, சீனாவின் தெற்கு கடல் பகுதியில், இந்திய கப்பல்கள் சுதந்திரமாக சென்று வரவும், அப்பகுதியில், இயற்கை எரிவாயு, எண்ணெய் வளங்கள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளவும், வியட்நாம் அனுமதி வழங்கியுள்ளது.ஏற்கனவே, வியட்நாமுடன் மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், நேற்று புதிதாக இரு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்திய - வியட்நாம் உறவு குறித்து கருத்து தெரிவித்துள்ள சீனா, தெற்கு சீன கடல் பகுதியில், இந்தியா எவ்வித நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என எச்சரித்துள்ளது.

ரெஹானா ஜப்பாரி
மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது

அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா? இந்த உலகம் என்னை எந்தக் கவலையுமின்றி 19 ஆண்டுகள் வாழ அனுமதித்தது. கொடூரம் நிறைந்த அந்த இரவில் நான் கொல்லப்பட்டிருக்க வேண்டும். என்னுடைய உயிரற்ற உடல் நகரின் ஒரு மூலையில் தூக்கி வீசப்பட்டிருக்கும். சில நாட்களுக்குப் பிறகு, போலீஸார் வந்து என்னுடைய சடலத்தை அடையாளம் காட்டுவதற்காக உன்னை அழைத்துச் சென்றிருப்பார்கள். என்னைப் பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்துக் கொன்றார்கள் என்பதும் உனக்கு அப்போது தெரிந்திருக்கும். கொலைகாரன் யாரென்று யாருக்குமே தெரியாமல் போயிருக்கும். காரணம், நாம் அவர்களைப் போல பணமோ, செல்வாக்கோ படைத்தவர்கள் அல்லவே? அதன் பிறகு, உன்னுடைய வாழ்க்கை அவமானமும் துயரமும் நிறைந்ததாக மாறியிருக்கும். இந்த வேதனைகளைத் தாங்காமல் நீயும் சில ஆண்டுகளில் இறந்திருப்பாய், அதுதான் நம்முடைய தலையெழுத்தாக இருக்கும்.(மேலும்....)

ஒக்ரோபர் 29, 2014

என் மனவலையிலிருந்து………

மைக் கரிசின் இருண்ட காலம் மீண்டும் வருகின்றது……..?

(சாகரன்)

நேற்று இரவு...  மேயராக பெரு வெற்றி பெற்ற ஜோன் ரோறியின் வெற்றி விழா...

1990 களில் கனடாவின் ஒன்றாறியோ மாநிலத்தின் ஆட்சியை நடாதியது என்டிபி என்னும் இடதுசாரிக்கட்சி. இது சாதாராண உழைக்கும் மக்களுக்கான பல நியாயமான சலுகைகளை, உரிமைகளை நிறைவேற்றி செயற்படுத்தி வந்ததது. இதில் பல கோடீஸ்வரர்கள், அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் எதிர்ப்புக்களுக்கும் உள்ளானது இந்த அரசு. இதில் சிறப்பாக நிதி நிறுவனங்கள் என்று தம்மை பிரகடனப்படுத்திய காப்புறுதி நிறுவனங்களின் பாரிய கோபத்திற்கு உள்ளானது இந்த அரசு. கனடாவில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் பல பணமுதலைகளின் கைகளில் உள்ளன. இவை எல்லாம் சேர்ந்து இந்த அரசை அடுத்த தேர்தலில் மட்டும் அல்லாது எந்தத் தேர்தலிலும் வெல்லக் கூடாது என்பது போன்ற பிரச்சாரங்களை அன்று தொடக்கம் மேற்கொண்டு வருகின்றன. இதன் வெளிப்பாட்டை நடைபெற்று முடிந்த ஒன்றாறியோ மாநிலத்தின் முக்கிய நகர சபையான ரொறன்ரோ தேர்தலிலும் பார்க்கக் கூடியதாக இருந்தது. தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமான காலகட்டத்தில்(6 மாதங்களின் முன்பு) மக்களின் இயல்பான ஆதரவு பெற்றவராக இடதுசாரிச் செயற்பாட்டாளரான ஒலிவியா சோ இருந்தார். அப்போது மிகக் குறைந்த கடை நிலை மக்கள் ஆதரவில் இருந்தார் ஜோன் ரொறி. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில், கடந்த காலங்களில் பல வேறு தேர்தல்களில் தொடர்ந்து தோற்றவரும் முன்னாள் றொஜேஸ் என்ற நிறுவனத்தின் தலைவருமான ரொறியே வென்றுள்ளார். இவர் ஒரு கடும் போக்கான வலதுசாரி கட்சியின் உறுப்பினர் ஆவார். இவரின் வெற்றிகாக சகல மீடியாக்களும் கடுமையாக உழைத்தன. சகல முன்னிலைப் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் இவருக்கான ஆதரவை பகிரங்கமாக தெரிவிதத்து பிரச்சாரம் செய்தன.. இவரின் வலதுசாரித்தனமான தேர்தல் வெற்றியில் கலந்து கொண்டு எதிர்கால அரசியல் பதவிகளுக்காக காத்திருக்கும் எம்மவர்கள் சிலரை இங்குள்ள படத்தில் காண்கின்றிர்கள். ஒன்ரோறியா மாகாணத்தின் இருண்ட கால ஆட்சியான மைக் கரிசின் மிக நெருங்கிய சகா இந்த புதிய மாநகரசபை முதல்வர.; இனிவரும் காலம் தமிழ் பேசும் மக்கள் தினக் கூலிகளாக வாழும் இந்த மாநகரத்தில் இவர்களின் உழைப்பாளர் நலன்கள் தோண்டிப் புகைகப்படுவதை நேரடியாக காணக்கூடியதாக இருக்கும். இவரின் வெற்றி மேடையில் காட்சியளிக்கும் எம்மவரகள்; சாதாரண ‘தின உழைப்பாளிகள்’ அல்ல. இவரகளில் பலர் தமிழ் மக்களின் உழைப்புக்களை பெரும்பாலும் சுரண்டி வாழும் நபர்கள் என்பது அங்கிருந்துவரும் செய்திகள் மூலம் அறியக்கிடக்கின்றது. வாழ்க தமிழ்த் தேசியம் ‘வாழ்க’ உழைப்பாளர் நல மாநகர ஆட்சி. இனிவரும் 4 ஆண்டுகளும் ரொறன்ரோ மாநகரத்திற்கு மேலும் இருண்ட காலம்தான்.

(சாகரன்)

(ஓக்ரோபர் 29, 2014)

நாடகம் ஆடுகிறது கூட்டமைப்பு! நம்பிக் கெடுகிறது தமிழினம்!!

 

இலங்கையில் தமிழ் மக்களின் வாக்குகள் வெறும் கடதாசியில் பென்சிலால் போடப்படும் புள்ளடிகள் அல்ல. மாறாக தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தங்களின் இரத்தங்களினால் போடப்பட்ட புள்ளடிகள். தமிழ் மக்களை ஏமாற்றித் தங்களைத் தியாகிகள் எனக் கூறிக் கொண்டு மக்களின் வாக்குகளைப் பெற்று அரசியல் எனும் போர்வையில் சகல சௌபாக்கியங்களையும் சுகங்களையும் அனுபவித்து வரும் கூட்டமைப்பின் நாடகங்கள் தற்போது மெல்ல மெல்ல வெளிப்பட்டு வருகின்றது. ஆளும் கட்சியுடன் அன்னியோன்யமாக நடந்து கொண்டு வெளியில் எதிரிகளாகத் தங்களைச் சித்திரித்துக் கொண்டு தங்கிளின் அரசியலைத் தக்க வைத்துக் கொள்ள பல்வேறுபட்ட தெருக்கூத்துக்களில் கூட்டமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் மக்கள் இலங்கையில் வாழ முடியாத ஒரு நிலைமை உள்ளது என்று பிரச்சினைகளைத் தாங்களே தயாரித்து வெளியுலகுக்குக் காட்டியும் வருகின்றனர். ஆனால் ஆளும் கட்சியுடன் தமது உறவுப் பாலத்தை இறுக்கமாக வைத்துக் கொள்ளும் இக் கூட்டமைப்பினரின் நாடகங்கள் பல அரங்கேறி வருகின்றது. இதனை அறியாத தமிழ் மக்கள் மீண்டும் மீண்டும் அவர்களின் ஆக்ரோஷமான பேச்சினாலும் தேர்தல் விஞ்ஞாபனத்தினாலும் கவரப்பட்டு கடைசியில் மண்கவ்வும் நிலைமைதான் இலங்கை அரசியல் வரலாற்றில் இடம்பெற்று வருகின்றது. எனவே இனிவரும் காலங்களிலாவது தமிழ் மக்கள் தமது நிலையில் நின்று சிந்தித்து ஒரு தீர்க்கமான, இறுதியான முடிவினை எடுத்துச் செயற்படுவது தமிழ் மக்களின் எதிர்கால அரசியலுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.

வட மாகாண சபையில் த.தே.கூ உறுப்பினர்களிடையே வாய்ச்சண்டை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி அதிகாரத்தின் கீழிருக்கின்ற வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு கடந்த 25ஆம் திகதியுடன் ஒருவருடம் நிறைவடைந்துள்ள நிலையில், வடமாகாண சபையின் நேற்றைய அமர்வில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையே கடும் வாய்ச்சண்டை நிலவியது. இதனால் சபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. வாய்ச்சண்டையின் போது தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டே எதிர்த்தரப்பினர், அவர்களுக்குள்ளே அடித்து கொள்கின்றனர் என்று முணுமுணுத்து கொண்டனர். எனினும், சபையில் ஒன்றுமே நடக்காதது போல, முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் ஏதோ ஆவணங்களை புரட்டிக்கொண்டிருந்தார். (மேலும்....)

எல்லையில் பாதுகாப்பு நிலைகளை அமைக்க இந்தியா முடிவு

இந்திய- சீனா எல்லையில் இந்தோ- திபெத்திய எல்லை பாதுகாப்பு நிலைகளை அமைக்கும் இந்தியாவின் முடிவிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதுடன் மிரட்லும் விடுத்துள்ளது. சீன வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.  சீனா - இந்தியா இடையிலான எல்லைப் பிரச்சினையில் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய எந்த நடவடிக்கையிலும் இந்தியா ஈடுபடாது என தாங்கள் நம்புவதாக அவர் தெரிவித்தார். இல்லையென்றால் இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்சினை மேலும் சிக்கலாகிவிடும் என்று கூறிய அவர், இவ்விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது என்றும் தெரிவித்தார். எல்லைப் பிரச்சினைக்கு இந்தியாவுடன் நட்பு ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண சீனா விரும்புவதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் ஒருங்கிணைந்த வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தை தமது தன்னாட்சி பகுதியான தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே இதுவரை 17 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. சமீபத்தில் இந்தியா வந்த சீன அதிபரிடம் எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

வட மாகாண முஸ்லிம் தலைமையை இல்லாதொழிக்க சில விஷமிகள் சதி

வட மாகாணத்திலுள்ள முஸ்லிம் அரசியல் தலைமையை இல்லாதொழிக்க மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்படுமென முசலி பிரதேச சபையின் பிரதி தவிசாளர் (அ. இ. ம. கா) பைறூஸ் தெரிவித்தார். வடக்கில் முஸ்லிம்கள் பெரும்பான் மையாக வாழும் பிரதேசம் முசலியாகும். இதை நான் எனது இதயமாகவே பார்க்கின்றேன். புத்தளம், மன்னார் வீதியை திறக்க இனவாதிகள் சதிசெய்த போது அதனை முறியடித்து அந்த வீதியை திறந்து வைத்தவர் அமைச்சர். இந்திய வீடமைப்புத் திட்டம் வந்த போது அந்த திட்டத்தை மன்னாரில் எங்கு கொண்டு செல்வது என்று இந்திய தூதரகம் யோசித்துக்கொண்டிருந்த போது முசலிக்குத் தான் அதனை வழங்க வேண்டும் என்று விடாப்பிடியாக நின்று அதனையும் செய்து காட்டியவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனே. மீனவர் துறைமுகம் அமைக்க அரசாங்கம் திட்டமிட்ட போது சிலாபத்துறைக்கு அந்த துறைமுகத்தை பெற்றெடுப்பதற்கு சிபாரிசு செய்து கொடுத்தவரும் அவர்தான். அரசியல் ரீதியாகவும் பலமொன்றை இந்த மண்ணுக்கு பெற்றுக் கொடுத்தவரும் எமது அமைச்சர் தான். இப்படியாக எத்தனையோ அபிவிருத்திகளை முசலி பிரதேசம் கண்டுள்ளது. இங்குள்ள ஒவ்வொரு கல்லும் அதற்கு சாட்சியாக உள்ளன. ஆனால் இதனை மறைக்க இந்த மண்ணிலிருந்து அமைச்சரை தூரப்படுத்த இப்போது ஒரு சிறு குழுவால் சதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

துனீஷிய தேர்தலில் இஸ்லாமியவாதிகளை பின்தள்ளி மதச்சார்பற்றோர் அதிக ஆசனம்

துனீஷிய பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியில் இருந்த இஸ்லாமியவாதிகளை பின்தள்ளி மதச்சார்பற்றோர் அதிக ஆசனங்களை வென்றுள்ளனர். 217 ஆசனங்கள் கொண்ட பாராளுமன்றத்தில் மதச்சார் பற்ற நிதா துனீஸ் கட்சி சுமார் 83 (38 வீதம்) ஆசனங்களை வென்றுள்ளது. ஆட்சியில் இருந்த இஸ்லாமிய வாதிகளான அன்னஹ்தா கட்சி 68 (31 வீதம்) ஆசனங்களை வென்றுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் வெற்றி பெற்ற நிதா துனீஷ் கட்சிக்கு அன்னஹ்தா வாழ்த்து களை தெரிவித்திருப்பதோடு அனைத்து தரப்பையும் ஒன்றிணைத்து அரசை அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 2011 பிராந்தியத்தில் ஏற்பட்ட அரபு எழுச்சி போராட்டத்திற்கு பின்னர் வெற்றிகரமான ஜனநாயக ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்த ஒரே நாடாக துனீஷிய கருதப்படுகிறது. இந்த அரபு எழுச்சி மூலம் சர்வாதிகார ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர் குறைவான வன்முறைகள் இடம்பெற்றதும் துனீஷியாவிலாகும். தேர்தலில் எவரும் பெரும்பான்மை பெறாத நிலையில் ஆட்சி அமைப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் அதிகார பகிர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

55 அரச நிறுவனங்களில் 06 நிறுவனங்களே நஷ்;டத்தில்

55 அரச நிறுவனங்களில் 6 அரச நிறுவனங்களே நஷ்டத்தில் இயங்குகின்றன. மின்சாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கூட இலாபமீட்டும் நிலைக்கு முன்னேறியுள்ளன. வரலாற்றில் ஒருபோதும் இத்தகைய முன்னேற்றநிலை இருந்தது கிடையாது என சிரேஷ்ட அமைச்சர் டி.யூ.குணசேகர தெரிவித்தார். கடந்த 10 வருடத்தில் அரச வருமானம் அதிகரிக்கவில்லை. மொத்தத் தேசிய உற்பத்தியில் 12 வீதமாகவே அரசாங்க வருமானம் காணப்படுகிறது. 1978ல் மொத்தத் தேசிய உற்பத்தியில் 24 வீதமாக அரச வருமானம் காணப்பட்டது. அன்று முதல் அரச வருமானம் குறைந்து வருகிறது. இதனை நிவர்த்தி செய்ய அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 1978 முதல் மறைமுக வரி விதிக்கப்பட்டு வருகிறது.  அரச வருமானம் குறையும்போது சுகாதாரம், கல்வி போன்றவற்றிக்கு நிதியை ஒதுக்க முடியாத நிலை ஏற்படும். கடந்த 10 வருடத்தில் மத்திய தரத்தினர் தொகை 4 மடங்கினால் அதிகரித்துள்ளது. இதனோடு கறுப்பு பொருளாதாரமொன்றும் உருவாகிறது. மக்கள் பாவனை செய்கிறபோதும் வரி செலுத்துவதில்லை, சேமிப்பதுமில்லை. பாவனையை கட்டுப்படுத்த வரிமுறை தேவைப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதி மேம்பாட்டுக்கு கடந்த காலத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டது. நிதி வளம் உட்கட்டமைப்பு வசதி இருந்தாலும் மனிதவள மேம்பாடு பிரதானமாகும். மின்சாரசபையும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இலாபம் பெறும் நிலைக்கு மாறியுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

பனிப்போரில் அமெரிக்கா நாஜிக்களை உளவாளியாக பயன்படுத்தியது அம்பலம்

இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு பின்னர் அமெரிக்கா நூற்றுக்கணக்கான நாஜிக்களை உளவாளிகள் மற்றும் தகவல் வழங்குபவர்களாக பயன்படுத் தியது அமெரிக்காவின் கடந்த கால இரகசிய ஆவணங்கள் மூலம் அம்பலமாகியுள்ளது. பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியத்தை வீழ்த்துவதற்கு அமெரிக்கா தனது முன்னாள் எதிரிகளை பயன்படுத்தியதாக அந்நாட்டின் மத்திய உளவுத்துறை அமைப்பின் அதிகாரிகள் விபரித்துள்ளனர். இந்த இரகசிய ஆவணங்களை ஆய்வு செய்திருக்கும் நிபுணர்கள் அமெரிக்கா குறைந்தது 1000 முன்னாள் நாஜிக்களை பயன்படுத்தியதாக கணித்துள்ளனர். இதில் ஹிட்லரின் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்க ளைக் கூட அமெரிக்கா ஐரோப்பாவில் உளவு பார்க்க பயன்படுத்தியுள்ளது. நாஜிக்களின் எஸ்.எஸ். படை அதிகாரியான ஒட்டோ வொன் பொல்விங், யூதர்களை எவ்வாறு அச்சுறுத்து வது என்பது குறித்த கொள்கை வகுத்தவராவார். ஆனால் இவர் இரண்டாவது உலக மகா யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவில் உளவு பார்ப்பதற்கு அமெரிக்க உளவு நிறு வனமான சி.ஐ.ஏ. வினால் பணியமர்த்தப்பட்டுள்ளார். பின்னர் தனது விசுவாசமான பணிகளுக்காக குடும்பத்தினருடன் 1950களில் நியூயோர்க்கிற்கு வரவ ழைக்கப்பட்டு அங்கேயே குடியமர் த்தப்பட்டார். அதேபோன்று லிது வேனியாவில் ஆயிரக்கணக்கான யூதர்கள் படுகொலை செய்யப்படு வதற்கு காரணமான நாஜி உறுப்பினரான அலக்சான்ட்ரஸ் லிலைக்கிஸ் கிழக்கு ஜேர்மனியில் அமெரிக்க உளவாளியாக பணியமர்த்தப்பட்டு பின்னர் பொஸ்டனில் குடியமர்த்தப்பட்டுள்ளார். இதில் லிலைக்கிஸ்ஸின் யுத்த குற்ற விசாரணையின் போது சி.ஐ.ஏ. அதில் தலையிட முயற்சித்ததற்கான ஆதாரங்களும் உள்ளன.  நாஜி யுத்த குற்றச்சாட்டு சந்தேக நபர்களுக்கு அமெரிக்க பாதுகாப்பு நலத்திட்டதின் கீழ் மில்லியன் டொலர் சம்பளம் வழங்கப்பட்டது தொடர்பான விவகாரம் ஏ.எப்.பி. செய்திச் சேவை விசாரணைகள் மூலம் வெளிச் சத்திற்கு வந்து ஒரு சில வாரங்களிலேயே புதிய தகவல் கள் அம்பலத்திற்கு வந்துள்ளன.

ஒக்ரோபர் 28, 2014

கனடா தேர்தலில் 3 தமிழர்கள் வெற்றி

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொறென்டோவின் அடுத்த மேயராக, ஜோன் டொறி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த வெற்றி, டொறென்டோ நகர சபையில் இடம்பெற்ற வோட் சகோதரர்களின் அடிக்கடி- கொந்தளிப்பான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை குறிக்கின்றது என கூறப்பட்டுள்ளது. ஜோன் ரொறி ஒரு முன்னாள் றொஜெர்சின் நிர்வாகியும் வானொலி தொகுப்பாளருமாவார். பிரம்ரன் மேயராக லின்டா ஜெவ்ரி தெரிவுசெய்யப்பட்டார். Hazel McCallionனின் 36 வருடகால ஆட்சியின் பின்னர் முதலாவது மிசிசாகா மேயராக  Bonnie Crombie தெரிவு செய்யப்பட்டுள்ளார். டொறென்டோ நகரசபையில் பல புதிய முகங்களுடன் ஒருவராக ரொறி இருப்பார். முதுபெரும் அரசியல் வாதியான ஜிம் கரிஜியானிஸ் வார்ட் 39-ன் மேயராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 2003ஆம் ஆண்டில்  டேவிட் மில்லர் 43.26 சதவீத வாக்குளை பெற்று ரொறியை வென்று மேயர் பதவிக்கு வந்தார். அச்சமயம் டொறி 38.03 சதவீத வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். 11 வருடங்களின் பின்னர் முன்னாள் புறோகிறசிவ் கொன்சவேட்டிவ் தலைவர் பெரும்பான்மை பெற்று தெரிவாகியுள்ளார். இத் தேர்தல்களில் போட்டியிட்ட தமிழர்களில், மார்க்கம் கல்விச் சபைக்கான பிரதிநிதி வொனிற்றா நாதன் மற்றும் டொறென்டோ கல்விச்சபைக்கான பிரதிநிதி பார்த்தி கந்தவேல் ஆகியோருடன் மார்க்கம் நகராட்சி மன்ற உறுப்பினர் லோகன் கணபதி ஆகியோர்  வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள், 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி

'தமிழக தலைவர்களின் கண்டனங்களும், தீர்மானங்களும், இலங்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இலங்கை அரசை கண்டித்து, தமிழகத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும் போது, தங்களுக்கான உரிமைகள் கிடைப்பது தள்ளிப் போவதாகவே, அங்குள்ள தமிழர்கள் கருதுகின்றனர்' என, தமிழகம் வந்துள்ள இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் இதழியல் கருத்தரங்குசென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையுடன், இலங்கை, யாழ்ப்பாண பல்கலையின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி மையம் இணைந்து, கடந்த 20ம் தேதி துவங்கி, வரும் 31ம் தேதி வரையிலான, 12 நாள், தமிழ் இதழியல் கருத்தரங்கை நடத்துகின்றன. அதில், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து, 25 மாணவர்கள், ஒரு இயக்குனர் பங்கேற்றுள்ளனர். (மேலும்....)

கனடா துப்பாக்கிதாரியின் தாக்குதலுக்கு முன்னரான வீடியோ பொலிஸாரால் ஆய்வு

கனடா பாராளுமன்றத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய துப்பாக்கிதாரியினால் பதிவுசெய்யப்பட்டிருக்கும் வீடியோவின் மூலம் குறித்த நபரின் தாக்குதலுக்கு அரசி யல் மற்றும் சிந்தனை தாக்கம் இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் மைக்கல் செஹப் பிபியு ஒரு விடியோவை பதிவுசெய்தி ருப்பதை கனடா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வீடியோ இன்னும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து பொலிஸார் தொடர்ந்து ஆய்வு நடத்தி வரு கின்றனர். துப்பாக்கி ஏந்திவந்த பிபியு, ஓட்டோவா போர் நினை வகத்தில் காவலில் இருந்த இராணுவ வீரரை சுட்டுக் கொன்றுவிட்டு அருகில் இருக்கும் பாராளுமன்றத்திற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியபோது அவர் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிதாரிக்கு தீவிரவாத சித்தாந்தம் ஊட்டப் பட்டிருப்பதாகவும் ஆனால் மத்திய கிழக்கில் இருக் கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இல்லை என்றும் கனடா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சுமார் 15 நிமிடங்கள் வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது அங்கு இருந்த பிரதமர் ஸ்டிபன் ஹப்பர், இதனை ஒரு தீவிரவாத தாக்குதல் என்று விபரித்துள்ளார். எனினும் பிபியுவின் விடியோவில் உள்ளடக்கப்பட்டி ருக்கும் விடயங்கள் குறித்து மேலதிக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.(தினகரன்)

இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒருபோதும் ஊறு விளைவிக்க மாட்டோம்’  - இலங்கை கடற்படை தளபதி

இந்தியாவின் பாதுகாப்புக்கு ஒருபோதும் ஊறு விளைவிக்க மாட்டோம் என இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்தா பெரேரா கூறினார். காஷ்மீரின் லடாக் பகுதிக்கு கிழக்கே சுமர் பகுதியில் கடந்த மாதம் சீனப்படைகள் ஊடுருவி பல நாட்களாக கூடாரம் அமைத்து தங்கியிருந்தன. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. இது குறித்து இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், சீனப்படைகள் திரும்பி சென்றன. இதற்கிடையே சீனப்படைகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவியிருந்த சமயத்தில், சீனாவின் 2 போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் ஒரு வாரம் நிறுத்தப்பட்டிருந்தது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அணுசக்தியில் இயங்கும் சாங்செங்–2 என்ற நீர்மூழ்கி கப்பலும் அப்போது கொழும்பு துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியிருந்த நேரத்தில், கொழும்புவில் போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்த விவகாரம் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து இந்தியா கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.மேலும் கடந்த வாரம் இந்தியா வந்த இலங்கை ராணுவ மந்திரி கோத்தபய ராஜபக்சேவிடமும் இது குறித்து இந்திய அதிகாரிகள் பேச்சு நடத்தியதாக தெரிகிறது. கொழும்பு துறைமுகத்துக்கு சீன போர்க்கப்பல்கள் வருவது வழக்கமான நடவடிக்கை தான். கடந்த மாதமும் நல்லெண்ண அடிப்படையில்தான் சீன போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வந்தன. அந்த நீர்மூழ்கியும் அணுசக்தி நீர்மூழ்கியல்ல, வழக்கமான நீர்மூழ்கி கப்பல்தான். அங்கு எந்த சீன வீரர்களும் இல்லை என்பதை உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவு வைத்துள்ளோம். இந்தியா அல்லது எந்த ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் நாங்கள் ஒருபோதும் ஊறு விளைவிக்க மாட்டோம். இந்தியாவின் பாதுகாப்பே, எங்கள் பாதுகாப்பு. சீனா, ரஷியா மட்டுமின்றி அனைத்து அண்டை நாடுகளுடனும் நாங்கள் இணக்கமான உறவு வைத்துள்ளோம். என்றார்.

மக்கள் நலத் திட்டங்களை நிராகரித்து வடமாகாண சபை எல்லை மீறுகிறது

 • மீண்டுவரும் செலவாக 13,650 மில்லியன் ரூபா, மூலதன செலவாக 1876 மில்லியன் ரூபா இவ்வருடம் ஒதுக்கீடு

 • ஒதுக்கிய நிதிகளை பயன்படுத்தாது திண்டாட்டம்: மாகாணசபையுடன் தொடர்பற்ற 150 தீர்மானங்கள் இதுவரை நிறைவேற்றம்
  - மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராஜ

வடமாகாண சபை கடந்த வருட பதவிக்காலப் பகுதியினுள் வடபகுதி மக்களுக்கு உருப்படியாக எதனையும் சாதிக்கவில்லை. ஒதுக்கப்பட்ட நிதியிலும் கடந்த 10 மாதகாலத்தினுள் 25.71 வீதம் மட்டுமே செலவிடப்பட்டிருப்பதாக வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தவராஜா தெரிவித்தார்.(மேலும்....)

கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் அரசியல்வாதிகள் பெயர்கள் இல்லை

சுவிஸ் நாட்டில் கறுப்பு பணம் வைப்பில் இட் டுள்ளவர்களின் பட்டியலில் பலரது பெயர்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில் வர்த்தக ரீதியிலான 3 பேரின் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளன. காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. பிரமுகர்கள் பெயர்கள் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில் தொழிலதிபர்கள் 3 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பின்னர் கறுப்பு பணம் மீட்கப்படும். வெளிநாடுகளில் இந்தியா பேச்சு நடத்தி தேவையான நடவடிக் கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதி மொழி அளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில்; கறுப்பு பணம் பதுக்கியவர்கள் பட்டியலை மத்திய அரசு தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்திய தாக காங்கிரஸ் புகார் தெரிவித்தது. இந்த பட்டியலை வெளியிட்டால் காங்கிரசுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்nஜட்லி கூறினார். இதற்கு பதில் அளித்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறுகையில், இது ஒன்றும் எங் களுக்கு தலைக்குனிவை தராது என்றார். இது தனிப்பட்ட மனித ஒழுக்க விவகாரம் நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார்.

கனடாவில் தேர்தலில் பங்கு கொண்ட புலம் பெயர் தமிழர்களில் மூவர் வெற்றி

கனடாவில் மூன்று தமிழர்கள் மாநகர சபைத் தேர்தலிலும் , கல்விச் சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பகுதியில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . பார்த்தி கந்தவேல் ரொறொண்டோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார். 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ரொறொண்டோ மாநகரில் 300000 க்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது.

பிரேஸில் ஜனாதிபதியாக ரொசப் இரண்டாவது தவணைக்கு வெற்றி

பிரேஸில் ஜனாதிபதி டில்மா ரொசப் தனது இரண்டாவது தவ ணைக்காக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ளார். ரொசப் கடந்த ஞாயிறன்று நடந்த தேர்தலில் கடும் போட்டிக்கு பின் 51 வீத வாக்கு களை வென்றுள்ளார். இரண்டாவது சுற்று தேர்தலில் ரொசப்பை எதிர்த்து போட்டியிட்ட அசியொ நெவஸ் உத்தியோகபூர்வ வாக்கு எண்ணிக் கையின்படி 48 வீத வாக்குகளை வென்றுள்ளார். ரொசப் தனது வெற்றி உரையில், இதுவரை இருந்த ஜனாதிபதியை விடவும் சிறந்த முறையில் செயற்பட எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டார். ரொசப் தனது கடந்த கால பதவிக்காலத்தில் ஊழ லுக்கு எதிராகவும், உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு அதிக செலவுகள் செய் ததாகவும், மோசமான சேவைகள் வழங்கப்படுவதற்காகவும் பாரிய மக் கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முகம்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.  கடந்த 2010 ஆம் ஆண்டு தொடக் கம் பதவியில் இருக்கும் ரொசப் அரசின் நலத்திட்டங்கள் மூலம் பிரேஸிலின் வறிய மக்களின் ஆத ரவை பெற்றுள்ளார். எனினும் லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய நாடான பிரேஸில் இம்முறை தேர்தலில் சமூக வர்க்கம் மற்றும் புவியியல் அடிப்படையில் வேறுபட்டே தமது வாக்குகளை அளித்திருந்தனர். எவ்வாறாயினும் பிரேஸிலின் எதிர் காலத்திற்காக அனைவரும் ஒன்றுபடும்படி ரொசப் அழைப்பு விடுத்தார்.

உக்ரைன் பாராளுமன்றத் தேர்தலில் மேற்குலக ஆதரவு முகாம் வெற்றி

உக்ரைன் பாராளுமன்ற தேர்தலில் மேற்குலக ஆதரவு மற்றும் தேசியவாத கட்சிகள் வெற்றியீட்டியுள்ளன. எனி னும் கடந்த ஞாயிறன்று நடந்த தேர்தலை நாட்டின் கிழக்கு பகுதியில் போராடும் ரஷ்ய ஆதரவு பிரிவினை வாதிகள் புறக்கணித்திருந்தனர். ஜனாதிபதி பெட்ரோ பொரொன்கோ கூட்டணி மற்றும் பிரதமர் ஆர்சனி யெட்சன்யுக் முன்னணி முறையே 23 மற்றும் 21 வீத வாக்குகளை வென்றுள்ளன. எனினும் பதவி கவிழ்க் கப்பட்ட ரஷ்ய ஆதரவு முன்னாள் ஜனாதிபதி விக்டொர் யனுகொவிச் சின் எதிர்க்கட்சி வெறும் 8 வீத வாக் குகளையே வென்றது. பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் இரு பகுதிகளில் வாக்கெடுப்பு நடத்தப்பட வில்லை. இதன்படி குறித்த பகுதிகள் மற்றும் ரஷ்யா தமது நாட்டுக்குள் உள்வாங்கிக்கொண்ட கிரிமியா பிராந்தியத்திற்கான 27 ஆசனங்களும் தொடர்ந்து காலி யாக உள்ளன. இதில் கொம்மியுனிஸ்ட் கட்சி முதல் முறை ஆசனத்தைக் கூட வெல்லாமல் தோல்வியை சந்தித்துள்ளது. கிழக்கு உக்ரைனில் பிரிவினைவா திகளுக்கு எதிராக இந்த ஆண்டு ஆரம்பம் தொடக்கம் இடம்பெற்று வரும் யுத்தத்தில் இதுவரை 3,700க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒக்ரோபர் 27, 2014

என் மனவலையிலிருந்து…..

புலம் பெயர் தேசத்து பொது வாழ்க்கையும், புலுடாக்களும்

(சாகரன்)

தற்போது புலம் பெயர் தேசங்களில் குறிப்பாக தமிழ் மக்கள் அதிகளவில் புலம் பெயர்ந்து வாழும் கனடா போன்ற நாடுகளில் எம்மவரில் சிலர் தேர்தல்களில் பங்கு பற்றுவது என்பது ஒரு புதிய தொழில் முயறசியாக ஆரம்பித்துவிட்டது. பொதுவாக பாடசாலை ஆலோசனை சபை உறுப்பினர் என்ற கீழ் நிலையிலிருந்து ஆரம்பித்து படிப்படியாக நகரசபை, மாநிலங்கள் அவை, பாராளுமன்ற உறுப்பினர் என்று தம்மை உயர்த்திக் கொள்ளல் என்ற கனவுகளுடன் புறப்படத் தொடங்கிவிட்டனர். இவர்கள் யாரிடமும் மக்கள் சேவை என்ற சிந்தனை கிஞ்சிதமும் இல்லை. மாறாக ஒரு பாதுகாப்பான பெருந்தொகையை சம்பளமாகவும், உதவித்தொகையாகவும், இன்ன பிற பயணச்செலவுகள்… இத்தியாதி… இத்தியாதி…. என சட்டவரம்பிற்குள் பெற்று சுகபோக வாழ்வு வாழ்வதே இவர்களின் ஓரே நோக்கம். (மேலும்....)

‘கத்தி’ச் சண்டை எதற்காக?

(ஞாநி)

லைக்கா பிரச்சினை மிக எளிமையானது. எதிரியை விட துரோகியையே அதிகம் எதிர்க்க வேண்டும் என்ற கோட்பாட்டிலானது. லைக்கா, யுத்தம் முடியும் வரை விடுதலைப்புலிகளின் அமைப்பாக இருந்துவந்தது. காற்று திசை மாறுவதற்கேற்பக் கட்சி மாறியவற்றில் அதுவும் ஒன்று. இந்தத் துரோகத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத முன்னாள் கூட்டாளிகள் இப்போது கடுமையாக அதை எதிர்க்கிறார்கள். அவ்வளவுதான். மற்றபடி ராஜபக்ச அரசுடன் உறவு வைத்திருப்போரையெல்லாம் எதிர்ப்பது என்பது பாவனைதான். அப்படி எதிர்ப்பதானால், முதலில் மோடி, மோடியின் அமைச்சர்கள் யாருமே தமிழ்நாட்டுக்குள் நுழையக் கூடாது என்று கறுப்புக் கொடி காட்டியிருக்க வேண்டும்.(மேலும்....)

ஆர்.எஸ்.எஸ். இதழ் கட்டுரையால் சர்ச்சை!

காந்திக்குப் பதில் நேருவை கொலை செய்திருக்கலாம்

மகாத்மா காந்திக்குப் பதிலாக நேருவை கோட்சே கொலை செய்திருக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். வார இதழில் வெளியான கட்டுரையால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரபூர்வ மலையாள வார இதழான ‘கேசரி’யில் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி சர்ச்சைக்குரிய ஒரு கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. அந்த கட்டுரையை, நாடாளுமன்றத் தேர்தலில் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய பா.ஜ.க. வேட்பாளர் கோபால கிருஷ்ணன் எழுதியுள்ளார். கட்டுரையில், வரலாற்றை நியாயமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் மக்களுக்கு உண்மைகள் புரியும் என குறிப்பிட்டுள்ள எழுத்தாளர் கோபால் கிருஷ்ணன், இந்தியா-பாகிஸ்தான் பிரிவு, காந்தியின் படுகொலைக்கு ஜவஹர்லால் நேருவின் சுய நலம்தான் காரணம் என்றும் கூறியுள்ளார். (மேலும்....)

எபோலா

நைஜீரியாவிடம் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

எபோலா நோயை துரிதமாக கட்டுப்படுத்துவதில், நைஜீரியாவின் சாதனையில் இருந்து இந்தியா உள்பட உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஜூலை 2014, நைஜீரிய நாட்டின் லாகோஸ் விமான நிலையத்திற்கு ஒரு அழையா விருந்தாளி வந்திறங்கினார். மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் நோய் வாய்ப்பட்டிருந்த தனது சகோதரியை பேணி வந்த அந்த நபர் திடீரென நோய் வாய்ப்பட்டார். அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க முற்பட்டது மருத்துவமனை. ஆனால், சிகிச்சைக்கு உட்படாமல் அந்த நபர் விமானம் ஏறி நைஜீரியா வந்தடைந்தார். அவர் மட்டும் வரவில்லை. நோய்க்கிருமியையும் கொண்டு வந்தார். (மேலும்....)

யாழ் - கொழும்பு ரயில்

வியாழன் வரை ஆசனப் பதிவு இல்லை

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் ஐந்து தினங்களுக்கு முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளதாகவும் இதனால், எதிர்வரும் வியாழக்கிழமை வரையில் ஆசனப் பதிவுகள் இடம்பெறாது எனவும் யாழ். புகையிரத நிலைய பிரதம அதிபர் என்.தவானந்தன் தெரிவித்தார். யாழிலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களை முற்பதிவு செய்துகொள்வதற்காக கடந்த வாரம் அதிகளவான பொதுமக்கள் புகையிரத நிலையம் வருகை தந்தனர். இந்நிலையில், யாழ் - கொழும்பு சேவையில் ஈடுபடும் குளிரூட்டப்பட்ட கடுகதி, கடுகதி, யாழ்.தேவி, தபால் புகையிரதம் ஆகிய ரயில்களின்  இருக்கைகள் முழுவதும் முற்பதிவு செய்யப்பட்டன. அத்துடன், யாழ் - கொழும்பு – மாத்தறை (ஞாயிற்றுக்கிழமை மட்டும்) செல்லும் ரயிலுக்கான இருக்கைகளும் முற்பதிவு செய்யப்பட்டு பூர்த்தியாகியுள்ளன. இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை (26) முதல் தொடர்ந்து வரும் 5 நாட்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதற்கான ரயில்களின் ஆசனப் பதிவுகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த நிலைமையைத் தவிர்ப்பதற்காக, குறித்த ரயில்களில் மேலதிகப் பெட்டிகளை இணைப்பது பற்றி உத்தேசிக்கப்பட்டு வருவதாகவும் அது தொடர்பில் இதுவரையில் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் சீனாவின் தலையீடு: இந்தியா கரிசனை

இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்படுகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இந்தியா விசேட கவனம்செலுத்தியுள்ளது என்று இந்திய ஊடங்களை தெரிவிக்கின்றன. இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்புகளின் போமே மேற்படி விவகாரம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. இலங்கை கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கி கப்பல் நுழைந்தமையானது இந்தியாவின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றும் அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

உலகத்தையே உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸ் காய்ச்சல் பற்றிய தகவல்களும் அவற்றின் அறிகுறிகளும் மற்றும் அவற்றை தடுக்கும் வழிமுறைகளும்  

1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வந்தது. இதுவரை ஆப்பிரிக்காவில் பரவி பல மக்களை கொன்றுள்ளது. ஏனெனில் ஆப்பிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினால் தாக்கப்பட்டால் மரணத்தைக் கூட தழுவக்கூடும். எபோலா வைரஸ் நோயானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல. விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும்ம் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. (மேலும்....)

புலிகளின் தமிழீழம் என்பது முஸ்லிம்களற்ற தனிநாடு…

(ஸர்மிளாஸெய்யித்)

போருக்குப் பிறகான இன்றைய சூழலில் தமிழர்கள் என்கின்ற  ஒற்றை அடையாளத்திற்குள்ளாக  இஸ்லாமியர்களைப் பொருத்தி வைக்க இயலுமா?

முடியாது. இலங்கையைப் பொறுத்த வரையில், வரலாற்று ரீதியாக தமிழ் இஸ்லாமியர்களின் தாய் மொழியென  நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிற அதேநேரம், அவர்கள்  எக்காலத்திலும் மொழியைவிட மதத்துக்கே முன்னுரிமை கொடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். அதுமட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்கள் தமிழை நேசித்து வரும் அதேநேரம், மதத்தைச் சுவாசித்து வருகிறார்கள். தமிழ் பேசுகின்ற ஏனைய இந்து, கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றுகின்ற மக்கள் மதத்தையும் தங்கள் மொழியையும் சமாந்தரமாக  நேசிப்பதையும், சுவாசிப்பதையும் காணமுடிகின்றது. சைவமும் தமிழும் இரு கண்கள்” என்பதான ஆறுமுக நாவலர் போன்றோரின் கடந்த நூற்றாண்டுக் கருத்துக்கள்  தமிழ் மொழியையும் இந்து மதத்தையும் இணைத்ததாக மட்டுமே காட்டப்படுகின்றது. ஆக தமிழ் பேசும் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் “தமிழர்கள்” என்ற ஒற்றை அடையாளத்திற்குள் தங்களைப் பொருத்திக் கொள்ள எக்காலத்திலும் சித்தமாயிருக்க, முஸ்லிம்கள் எக்காலத்திலும்  தமிழர்கள்”  என்ற அடையாளத்திற்குள் பொருத்திக் கொள்ள  விரும்பியவர்களாக இருந்ததில்லை. (மேலும்....)

ஒக்ரோபர் 26, 2014

புலிகள் அமைப்புக்களுடன் தொடர்புடையவர்களே......!

கனடா பயங்கரவாதத் தாக்குதல்களின் எதிரொலி, தமிழர்களிற்கு வரும் பாரிய சங்கடம்

கனடாவின் உள்ளூர் பயங்கரவாதத்தின் வளர்ச்சியால் ஒரு வாரத்திற்குள் இரண்டு படை வீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வானது, கனடாவின் ஆட்சியமைப்புக்களில் பயங்கரவாதம் பற்றிய பார்வையை கடுமையாக்கியுள்ளது. கனடாவின் சார்பில் இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்டவரும், கனடிய வெளிவிவகார அமைச்சின் செயலரும், கனடியப் பாதுகாப்பு கட்டமைப்பின் உறுப்பினருமான கௌரவ டீபக் ஒபராய் இது குறித்து செய்தியாளருக்குத் தெரிவித்த கருத்தில், கனடாவில் ஒரு சில தமிழ் அமைப்புக்கள் பயங்கரவாத இயக்கங்களாகத் தடை செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுடன் தொடர்பு கொள்வது தண்டனைக்குரிய குற்றம் என கனடிய அரசின் முக்கிய பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

வளர்ப்பு நாய்களும் வைக்கோற்பட்டறையும்

 

விடுதலைப்புலிகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பார்களானால் அவா்களால் கொல்லப்படவேண்டியவா்களின் முக்கிய பட்டியலில்  தமிழத் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினா்கள் இடம்பெற்றிருப்பா்.விடுதலைப்புலிகள் முற்றிலுமாகச்  செயலிழந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணமாக தமிழ்த்தேசியம் கதைக்கும் தற்போதய தமிழ் அரசியல்வாதிகள் திகழ்கின்றார்கள். அன்றைய தமிழ் அரசியல்வாதியான தந்தை செல்வா சொன்னது போல், இனிவரும் காலம் வடக்குக் கிழக்குத் தமிழா்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். புலித்தோல் போர்த்திய ஓநாய்க் கூட்டங்களால் தற்போது தமிழ்த்தேசியம் கற்பழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. யார், யார் உண்மையான தமழ்த்தேசியவாதிகள் என்று தெரியாத அளவிற்கு போலிகள் உலாவிக் கொண்டு இருக்கின்றனா். (மேலும்....)

பிரபாவை கொல்ல மாத்தையாவிற்கு ஆயுதமும் பணமும் வழங்கிய ஐ.தே.க - சஜித் பிரேமதாச

விடுதலைப் புலிகளின் தவைர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர் மாத்தை யாவிற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது என கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். போர் இடம்பெற்ற காலத்தில் பிரபாகரனுக்கும் மாத்தையாவிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பயன்படுத்தி பிரபாகரனை கொலை செய்ய ஐக்கிய தேசியக் கட்சி திட்டம் தீட்டியது. இதற்காக மாத்தையாவிற்கு ஐ. தே. க. ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கியது. மாத்தையாவின் ஊடாக பிரபாகரனை கொலை செய்து போரை முடிவுக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் திட்டமாக அமைந்திருந்தது. இந்த திட்டம் வெற்றியளித்திருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாத்திருக்க முடியும். எனினும் துரதிர்ஷ்டவசமாக இந்த திட்டம் தோல்வியடைந்தது. விடுதலைப் புலிகள் மாத்தையாவை கொலை செய்தனர். போரின் போது வகுக்கப்படும் அனைத்து திட்டங்களும் வெற்றியளிப்பதில்லை. போர் தந்திரோபாயங்கள் வெற்றியளித்தால் மக்கள் பாராட்டுவார்கள். தோல்வியடைந்தால் எல்லோருடைய விமர்சனங்களையும் எதிர்நோக்க நேரிடும். இதுவே உலக நியதி என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் அதிகாரத்தை இழந்து வரும் பண்டாரநாயக்கா குடும்பம்

(சென்றவாரத் தொடர்ச்சி....)

பிரதம மந்திரி துப்பாக்கியால் சுடப்பட்ட செய்தியை கேட்டவுடன் அன்று இலங்கையின் மகா தேசாதிபதியாக இருந்த சேர் ஒலிவர் குணதிலக்க தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலமான குயின்ஸ் ஹவுஸில் புதிதாக பதவியேற்ற இத்தாலிய தூதுவரின் சத்தியப் பிரமாண வைபவத்தில் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்வு முடிவடைந்தவுடன் அவர் அவசரமாக பிரதம மந்திரியின் வாசஸ்தலமான ரொஸ்மிட் பிளேஸ் இல்லத்துக்கு விரைந்தார். செல்லும் வழியில் அவர் பாராளுமன்றம் வழமை போல் கூட வேண்டும் என்றும் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.(மேலும்....)

குற்றவாளிகளுடன் தன்னால் பணியாற்ற முடியாதென்று கூறிய முன்னாள் நீதிபதி!

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் வலுவடைகின்றன. சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற கூட் டமைப்பின் அனைத்து கட்சிக ளுடனான சந்திப்பொன்றின் போது விக்னேஸ்வரன் தெரிவித்திருந்த கருத்துக்கள் கடும் சர்ச்சைகளையும் வாக்குவாதங்களையும் ஏற்படுத்தியிருந் தது. மேற்படி கூட்டத்தின் போது முன் னாள் வன்முறையாளர்களுடன் தன்னால் இணைந்து பணியாற்ற முடியாதென்று விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார். கூட் டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் புர ட்சிகர விடுதலை முன்னணியின் நாடா ளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் வடக்கு மாகாணசபையில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட் டிய போது, அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.(மேலும்....)

ஒக்ரோபர் 25, 2014

“நாலு இட்லி, ஒரு டீ கொடுத்து திருடப்பட்டதுதான் ‘கத்தி’ கதை!”

விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், பெயர் குறிப்பிடப்படாத “யாரோ” தயாரித்த ‘கத்தி’ திரைப்படம் தீபாவளியன்று திரைக்கு வந்தது. இந்த படத்தை பார்த்தபிறகு, “இது கோபியின் கதைதான். முருகதாஸால் திருடப்பட்டிருக்கிறது” என்று பிரபலமான இரண்டு முக்கிய பிரமுகர்கள் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பா.ஏகலைவன். ‘குமுதம்’ பத்திரிகையில் பணியாற்றியவர். இன்னொருவர் முத்து கிருஷ்ணன். எழுத்தாளர், சுதந்திர செய்தியாளர், சமூக ஆர்வலர். ‘விஜய் டிவி’யின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பலமுறை பங்கேற்று, தனது தனித்துவமான கருத்துக்களை பதிவு செய்திருப்பவர். அவர்களது சாட்சியங்கள் இங்கே:- (மேலும்....)

நான் மறுபடி பிறப்பேனேயாகின் இதே புரட்சிகரப் பாதையையே தேர்வேன் - பிடல் காஸ்ட்ரோ

நிகரகுவாவின் அமைச்சரக 11 ஆண்டுகளிருந்த தோமஸ் போர்ஹே ஸான்டினிஸ்டா கெரில்லா தலைவராக இருந்தவேளை 1978இல் பிடல் காஸ்ட்ரோவை முதன் முதலில் சந்தித்தார். 14 ஆண்டுகளுக்கு பின் மறுபடியும் அவர் பிடல் காஸ்ட்ரோவைச் சந்திப்பதற்காக கியூபத் தலைநகர் ஹவானாவுக்கு வநதிருந்தார். மூன்று நாட்களில் 12 மணி நேரங்களில் பல்வேறு விசயங்கள் குறித்து நண்பர்கள் உரையாடினார்கள். அந்த உரையாடலின் விளைவான பேட்டி இது. உலகெங்கும் தேச விடுதலைக்குப் போராடும் புரட்சியாளர்களுக்கு உத்வேகமூட்டும் பேட்டி இது. (மேலும்....)

வாயை மூட முடியாமல் தவிப்பது இதுதானோ.....?

அரச ஊழியர்களின் ஆகக் குறைந்த சம்பளம் 30,000 ரூபா

அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று பி. பகல் 1.33 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதில், அரசாங்க ஊழியர்கள், தனியார் துறையினர், ஓய்வூதியக் காரர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், குறைந்த வருமானம் பெறுவோர் உட்பட மக்கள் நலன்சார் முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் சில:

 • அரச ஊழியர்களின் ஆகக்குறைந்த வருமானம் 30,000 ஆக அதிகரிப்பு

 • வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 2,200 ரூபாவால் அதிகரிப்பு

 • 180 நாள் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

 • அடுத்த வருடம் 50,000 ஆசிரியர் உதவியாளர் நியமனம். 9,500 ரூபா மாதாந்த கொடுப்பனவு.

 • தனியார்துறையினருக்கு ஆகக்குறைந்த சம்பளம் 10,000 ரூபா 500 ரூபா சம்பள உயர்வு

 • முதியோர்களுக்கான கொடுப்பனவு ரூ. 1,000 ரூபாவினால் அதிகரிப்பு

 • மாகாண கிராமிய பாதைகளை இணைக்க 20,000 மில்லியன் ரூபா

 • நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிப்பு 34 ரூபாவாக இருந்து 40 ரூபா வரை

 • சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்தம் 3000 ரூபா

 • மருத்துவர்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு ரூ. 5 இலட்சம் கடன் திட்டம்.

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. தமிழ் திரையுலகில் பராசக்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். மதுரை சேடப்பட்டியில் பிறந்த அவர் நூற்றுக்கும் அதிகமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனது திரைப்படங்களில் திராவிட இயக்க கருத்துக்களை கொண்ட வசனங்களை பேசி நடித்ததால், ரசிகர்கள் அவரை ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர் என்று அழைத்தனர். தேனி சட்டப்பேரவை தொகுதியில் 1962-ல் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய வரலாற்றில் தேர்தலில் வென்ற முதல் நடிகர் என்ற பெருமையும் எஸ்.எஸ்.ஆருக்கு உண்டு. எஸ்.எஸ்.ஆர் சில ஆண்டுகள் திமுகவிலும் அதன்பின் அதிமுக விலும் இருந்து வந்தார். பின்னர், அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற அவர், சென்னை எல்டாம்ஸ் சாலையிலுள்ள தனது வீட்டில் மனைவி தாமரைச்செல்வி மற்றும் மகன் கண்ணனோடு வாழ்ந்து வந்தார். இந்நிலையில், இன்று காலை 11.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ரத்தக் கண்ணீர், ரங்கூன் ராதா, சிவகங்கைச் சீமை, பூம்புகார், மறக்க முடியுமா, பார் மகளே பார், குங்குமம், பச்சை விளக்கு, கைகொடுத்த தெய்வம், சாரதா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஏன் இந்த தனியார் மோகம்?

உலகில் அதிக அளவு நிலக்கரி வளத்தை பெற்றிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று: சுமார் 30,100 கோடி டன்கள். அப்படி இருந்தும், சென்ற ஆண்டும் மட்டும் 17.4 கோடி டன்கள் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 12,000 கோடி ரூபாய். இந்தியாவில் இவ்வளவு நிலக்கரி வளத்தை வைத்துக்கொண்டு இறக்குமதி செய்வதற்குக் காரணம் நிலக்கரித் துறையின்மீது அரசு நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்துக்கு இருக்கும் மேலாதிக்கம்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறது. தனியார் நிறுவனங்களுக்குப் போதுமான சுதந்திரத்தையும், அந்நிய நேரடி முதலீட்டையும் அனுமதிப்பதன் மூலம் இந்திய நிலக்கரித் துறைக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. (மேலும்....)

 

ஒக்ரோபர் 24, 2014

துண்டுவிழும் தொகை ரூ.512 பில்லியன்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 512 பில்லியன் ரூபாய் துண்டுவிழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2210 பில்லியன் ரூபாவாகும்.

கனடா தாக்குதல் சம்பவம்: மஹிந்த கவலை

பல நாடுகளில், தற்போது கனடாவிலும் கூட, அதிகரித்துவரும் தீவிரவாத நடவடிக்கைகள் கவலையளிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலுக்கெதிராகப் போரிடுவதற்கு அனைவரும் சரிசமமான பங்குதாரர்களாக ஒன்றுகூட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். கனடாவில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று புகுந்து தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒரு வீரர் உயிரிழந்தார். தலைநகர் ஒட்டவாவில் நடைபெற்ற இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிவியாவைப் பாருங்கள் மோடி
(வே. வசந்தி தேவி)

முதலாளித்துவத்துக்கு எதிரான போரில் பொலிவியாவைப் பின்பற்றுமா உலகம்?

லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தலில் ஈவோ மொராலிஸ் 60% வாக்குகள் பெற்று மூன்றாம் முறையாக அமோக வெற்றி பெற்றிருக்கிறார். ஈவோ மொராலிஸ் பொலிவியாவின் பெரும்பான்மையான, ஆனால் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களிலிருந்து தோன்றிய முதல் அதிபர். பல காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியமும், பெருநிறுவன அசுரர்களும் பொலிவியாவைக் கொடிய சுரண்டலுக்கு உள்ளாக்கி, தங்கள் கைப்பாவை அரசுகள் மூலம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர். அந்த சகாப்தத்தை 2005-ல் முடிவுக்குக் கொண்டுவந்து, பெரும் மக்கள் ஆதரவுடன் மொராலிஸும், அவர் தலைமையிலான சோஷலிஸத்தை நோக்கிய இயக்கமும் வெற்றி கண்டன. (மேலும்....)

அமெரிக்க வான் தாக்குதல்களில் சிரியாவில் இதுவரை 533 பேர் பலி

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுக்கு எதிராக சிரியா மீது அமெரிக்கா வான் தாக்குதல்களை ஆரம்பித்து ஒரு மாதம் எட்டும் நிலையில் இந்த தாக்குதல்களில் இதுவரை 533 பேர் கொல்லப்பட்டிருப்பதாக கண்காணிப்பு குழுவொன்று குறிப்பிட்டுள்ளது. இதில் அதிக பொரும்பாலானவர்கள் ஜpஹாதிக்கள் என்று அது கூறியுள்ளது. இந்த தாக்குதல்களில் இஸ்லாமிய தேசம் குழுவின் 464 போராளிகளும் அல் கொய்தா கிளை அமைப்பான அல் நுஸ்ரா முன்னணியின் 57 போராளிகளும் 32 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. கொல்லப்பட்டிருக்கும் பொதுமக்களில் ஆறு சிறுவர்கள் மற்றும் ஐந்து பெண்களும் அடங்குவதாக சிரியாவெங்கும் வலையமைப்பை பெற்றிருக்கும் மேற்படி கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. ஐ.எஸ். குழுவுக்கு எதிராக கடந்த ஓகஸ்டில் ஈராக் மீது தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா தலைமையிலான கூட்டணி கடந்த செப்டெம்பர் 23 ஆம் திகதி அதனை சிரி யாவுக்கு விரிவுபடுத்தி யது. "கொல்லப்பட்டிருக்கும் ஜpஹாதிக்களில் ஐ.எஸ். மற்றும் நுஸ்ராவில் இணைந் திருக்கும் வெளிநாட்டு போராளிகளே பெரும்பா ன்மையானவர்களாகும்" என்று கண்காணிப்பு குழு வின் இயக்குனர் ரமி அப்தல் ரஹ்மான் குறிப் பிட்டுள்ளார்.

ஒக்ரோபர் 23, 2014

என் மனவலையிலிருந்து…….

கனடாவிலும் கலக்கம்….. ஜிகாதிகளின் கை வரிசையா….?

(சாகரன்)

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் வட அமெரிக்க கண்டத்தில் தனது வன்முறைச் செயற்பாடுகளை விஸ்தரித்திருந்தது ஒசமா பில்லாடன் போன்றவர்களின் புனிதப் போர் என்ற தீவிரவாதம். ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்துவிடப்பட்ட அமைப்பே பில்லாடனின் தலிபான், அல் கைதா போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள். இவை போன்ற அமைப்புகள் இணைந்து Islamic Unity of Afghanistan Mujahideen என்ற அமைப்பை தோற்றுவித்தன. பாகிஸ்தானின் செல்லப்பிள்ளைகளாக அமெரிக்க, அதன் கூட்டாளிகளின் ஆதரவுடன் வலுப்பெற்ற அமைப்புக்கள் இவை. இது ஒரு காலத்து சரித்திரம். இந்த சரித்திரத்தில் இவ் அமைப்புக்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருந்த சோவியத் சார்பு நஜிபுல்லா அரசை கவிழ்க்க அமெரிக்காவால் வளர்க்கப்பட்ட தீவிரவாதம் ஒரு காலத்தின் பின்பு அமெரிக்காவிற்கு கசத்தது என்னமோ உண்மைதான். அமெரிக்காவின் எதிர்பார்ப்பிற்கு தீனிபோடாமல் இஸ்லாமிய அடிப்படைவாத ஆட்சியை இந்தக் கூட்டணி  உமல் முல்லா தலமையில் செயற்படுத்த முனைந்தது உலக மக்களின் கண்டனங்களுக்கு பெரிதும் உள்ளானது. இந்த எதிர்ப்பு அலையை நன்கு அறுவடை செய்து இவர்களுக்கு எதிராக போரைத் தொடுத்தது அமெரிக்காவும், அதன் கூட்டாளி நாடுகளும். இந்தக் கூட்டாளி நாடுகளில் கனடாவும் உள்ளடக்கி இருந்தாலும் 9/11 இற்கு பின்னரான ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு எதிரான யுத்தத்தில் நேரடியாக தன்னை இணைத்துக் கொள்ளாமல் தந்திரோபாய ரீதியில் தவிர்த்துக்கொண்டது. கடனாவின் லிபரல் கட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலங்களும் மாறின. லிபரல் கட்சியின் தலைமையில் இருந்து ஜோன் கிரிஸ்ரியன் ஓய்வு பெற கட்சி பலவீனம் அடைந்தது. கனடாவின் ஆட்சியும் பழமைவாதக் கட்சியின் பிடியிற்குள் சிக்கியது. இதனைத் தொடரந்து கனடா என்ற தனித்துவமான நாடு என்பதற்கமைய செயற்படுவதை தவிர்த்து அமெரிக்காவின் கொள்கைகளை அப்படியே கடைப்பிடித்து வருவதில் தீவிரம் காட்டிவருகின்றது. இதனால் கனடாவும் அமெரிக்காவிற்கு இருப்பதுபோன்று முஸ்லீம் அடிப்படைவாத தீவிரவாதத்தின் கோபத்திற்குள் தன்னையும் உள்படுத்தி விட்டதோ என்ற ஐயப்பாட்டைத் தோற்றிவித்துள்ளது இன்றைய கனடா பாராளுமன்றம் மீதான தாக்குதல்கள் இதன் ஒருவடிவம்தான் என்றால் கனடா என்ற அமைதிப் பூங்காவின் எதிர்காலம் பல கேள்விகளை எமக்குள் கேட்டு நிற்கின்றது. அணிசாராக் கொள்கையை இறுகப் பிடித்து பல்லின, பல்கலாச்சார, பல மொழி பேசும் நாடாக தன்னை முன்னிலைபடுத்தி உலகில் நிமிர்ந்து நிற்குத் நாடு அமைதிப் பூங்காவாக தொடர்ந்தும் தன்னை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளப் போகின்றது என்பதே இன்றைய சராசரி கனடிய பிரஜை ஒவ்வொருவரினதும் கேள்வியாகும். கனடாவின் பூர்வீகக் குடிகளின் கலகம் அவர்களுக்கான சமத்துவத்தை இதுவரை அவர்களுக்கு பெற்றுத்தராத நிலையிலும் பல்லின பல்கலாச்சாரா நாடாக தொடர்ந்து தலை நிமிர்ந்து நிற்பதன் இரகசியம் கனடாவின் அணிசாராக் கொள்ளையே என்பதை இவ்விடத்தில் நினைவு கூர்தல் சாலப் பொருத்தமானது என நம்புகின்றேன்.எந்த விதமான ஆயுதப் பயங்கரவாதமும் வேண்டாம் என்று உறுதி எடுத்த நிலையில் தமது நாடுகளில் ஏற்பட்ட ஆயுதப் பயங்கரவாதத்தை வெறுத்து அகதி தஞ்சம் அடைந்த பல்லின மக்களும் குண்டுகள் அற்ற சமாதான பூமியை தமது வாழ்விடப் பூமியாக தொடர்ந்தும் நேசித்து அதனை தொடரந்தும் நிலை நிறுத்த கனடிய அரசும் மக்களும் இணைந்து செயற்படுவார்கள் என நம்புவோம். கனடாவின் பூர்வீகக் குடிகளின் கலகம் அவர்களுக்கான சமத்துவத்தை இதுவரை அவர்களுக்கு பெற்றுத்தராத நிலையிலும் பல்லின பல்கலாச்சாரா நாடாக தொடர்ந்து தலை நிமிர்ந்து நிற்பதன் இரகசியம் கனடாவின் அணிசாராக் கொள்ளையே என்பதை இவ்விடத்தில் நினைவு கூர்தல் சாலப் பொருத்தமானது என நம்புகின்றேன்.

ஒக்ரோபர் 22, 2014

(சாகரன்)

இலங்கைத் தூதரின் இல்லத்தை புதுப்பித்தது புலிகளின் நிறுவனமா?

2009-ம் ஆண்டுக் காலப்பகுதியில், ஜெனீவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிதி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததை தான் கண்டுபிடித்து விசாரணை நடத்த அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தமாரா குணநாயகம் அண்மையில் பரபரப்புக் குற்றச்சாட்டொன்றை ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். தமாரா குணநாயகத்துக்கு முன்னதாக ஜெனீவாவில் பணியாற்றியவர், தற்போது இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளராகவுள்ள ஷெனுக்கா செனவிரட்ண. ஷெனுக்காவின் காலத்திலேயே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் வேலை நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜேவிபி குற்றம் சாட்டிவருகின்றது. (மேலும்....)

எங்கள் நிறுவனத்துக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை'

ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் அதிகாரபூர்வ இல்லத்தை 2009-ம் ஆண்டில் புதுப்பித்த செல்வாசுக் நிறுவனம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையது என்று இலங்கையில் வெளியாகும் குற்றச்சாட்டுக்களை அந்த நிறுவனம் மறுத்துள்ளது. ஷெனுக்காவின் காலத்திலேயே விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நிறுவனத்துடன் அந்தக் கட்டடத்தை புதுப்பிக்கும் வேலை நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜேவிபியும் குற்றம் சாட்டிவருகின்றது. 2012-ம் ஆண்டில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரிகள் நால்வர் சுவிட்சர்லாந்துக்கு சென்று நடத்திய ஆய்வின் முடிவில் தயாரிக்கப்பட்டது என்று நம்பப்படுகின்ற அறிக்கை ஒன்றையும் ஜேவிபி ஊடகங்களுக்கு கசியவிட்டிருந்தது. இந்த பின்னணியிலேயே, இலங்கைப் பிரதிநிதியின் இல்லத்தை புதுப்பித்துக் கொடுத்த செல்வாசுக் நிறுவனத்தின் உரிமையாளர் பி.டி. துரைராஜா பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்டார். தமது நிறுவனத்தை விடுதலைப் புலிகளுடன் தொடர்புபடுத்தி வெளியான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்தார். தான் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்றும் துரைராஜா தமிழோசையிடம் கூறினார்.

கனடாவின் நாடாளுமன்றத்தில்

பொலிஸ்காரரை கொன்று கனடிய நாடாளுமன்றத்தில் நுழைந்த துப்பாக்கிதாரி

கனடாவின் ஒட்டாவாவில் நாடாளுமன்றத்தை ஒட்டியிருந்த நினைவிடம் ஒன்றில் காவலுக்கு நின்ற சிப்பாயை துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுவிட்டு, பின்னர் பொலிசார் விரட்ட நாடாளுமன்றக் கட்டிடத்துக்குள் அவர் நுழைந்துள்ளார். சிப்பாய்களாலும் பொலிசாரும் சூழ்ந்துகொள்ள நாடாளுமன்றம் அடைக்கப்பட்டுள்ளது. இடத்தை அடைத்து சிப்பாய்கள் தேடி வருகின்றனர் கருப்பு உடையணிந்த ஒருவர் துப்பாக்கி ஏந்தி வந்ததைப் பார்த்ததாக சாட்சிகள் கூறுகின்றனர். துப்பாக்கி சத்தம் தொடர்ந்து கேட்டபடி இருக்க பொலிசார் பதுங்குவதை நாடாளுமன்றத்துக்குள் எடுக்கப்பட்ட வீடியோ படங்கள் காட்டுகின்றன. வந்த துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. வேறு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்வதற்காக கட்டிடத்தை பொலிசார் தேடிவருகின்றனர். ஒட்டாவாவில், ஜன்னல்களை ஒட்டியும், மேற்கூரையிலும் நிற்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனடாவில் பயங்கரவாத அச்சுறுத்தலை, குறைந்த அளவில் இருந்து மத்திய அளவுக்கு அரசாங்கம் அறிவித்து சில நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த திங்களன்று கியுபெக் நகரில் அண்மையில் இஸ்லாத்துக்கு மாறியிருந்த நபரொருவர் கனடிய சிப்பாய்கள் இருவர் மீது காரைக் கொண்டுவந்து மோதி அதில் ஒருவரைக் கொன்றும் ஒருவரைக் காயப்படுத்தியும் இருந்தார். அந்நபரை பொலிசார் சுட்டுக் கொன்றிருந்தனர்.

ஈசலுக்கும் திறந்திருக்கிறது இயற்கையின் வாசல்

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? தோல்வியின் தோள்களில் தொங்கிக் கொண்டு, வெறுமையை மட்டுமே தொடர்ந்து நான் சந்தித்துவருகிறேன்..வெற்றி எனக்கு வெறுங்கனவாய் போகுமோ? என்று சலித்துக்கொள்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தக் கட்டுரை.அடாத மழையிலும் விடாது முளைக்கும் காளான் போல, எரிந்துபோனாலும் சாம்பலிலிருந்து மீண்டும் உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போலத் தோல்வியிலிருந்து துள்ளி எழுவதல்லவா வாழ்க்கை! யாருக்குதான் துயரமில்லை... துயரமின்றி உயரமில்லை... துன்பமின்றி இன்பமில்லை... அடிகளால் அனுபவங்கள் கிடைக்கின்றன; அனுபவங்கள் நமக்கு ஆசானாகின்றன. தண்ணீரில் மிதக்கும் கப்பலை சிறுதுளைவழியே உள்நுழையும் தண்ணீரே கவிழ்க்கிறது. நாம் நம் மனதிற்குள் அனுமதிக்கிற கவலைகள்தான் நம்மைக் கவிழ்க்கின்றன. வெற்றிஎன்பது வெற்றுச்சொல்லன்று. சிலருக்கு மட்டுமே கிடைக்கும் வரமும் அன்று. மெய்வருத்தம் பாராமல்,மேனிநலம் பேணாமல், பசி நோக்காமல் கண் துஞ்சாமல், தோல்விகளைக் கண்டு அஞ்சாமல் தொடர்ந்து மேற்கொள்ளும் அருஞ்செயலின் விந்தை விளைவே வெற்றி. வெற்றி என்பது பெற்றுக்கொள்வதென்றால் தோல்வி என்பது கற்றுக்கொள்வது. (மேலும்....)

சிரியாவின் கொபானி நகரில் தவறுதலாக ஐ.எஸ்.க்கு ஆயுதம் கொட்டிய அமெரிக்கா

சிரியாவில் துருக்கி எல்லையோர நகரான கொபானியில் குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்கா விமா னம் மூலம் போட்ட ஆயுதங்களை ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றி யுள்ளனர். இவ்வாறு அமெரிக்கா கொட்டிய ஆயுதப் பொதிகளில் ஒரு பொதி ஐ.எஸ். கட்டுப்பாட்டு பகுதியில் விழுந்திருப்பதோடு மேலும் பல ஆயுதப் பொதிகளை அந்த குழு கைப்பற்றி இருப்பதாக பிரிட்டனை மையமாகக் கொண்டு இயங்கும் சிரிய நாட்டு கண்காணிப்புக் குழுவை மேற்கோள் காட்டி ஏ.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.  கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் கையெறி குண்டுகள், வெடிபொருட் கள் மற்றும் வெடிகுண்டு ஏவும் கருவிகள் உள்ளடங்குகின்றன. இவ்வாறு கைப்பற்றிய ஆயுதங்கள் அடங்கிய வீடியோவை ஐ.எஸ். ஆதரவுக் குழு இணையதளத்தின் பதிவேற்றியுள்ளது.  இதில் ஐ.எஸ். க்கு எதிரான யுத்தத்திற்கு உதவியாக ஈராக் குர்திஷ் நிர்வாகம் வழங்கிய 27 ஆயுதம் மற்றும் மருத்துவ பொதிகளை அமெரிக்க விமானங்கள் சிரிய குர்திஷ் போராளிகளுக்காக கடந்த திங்கட்கிழமை கொபானி நகரின் மீது கொட்டியது. கொபானி நகரை கைப்பற்ற ஐ.எஸ். போராளிகள் ஒரு மாதத்திற்கு மோலாக போராடி வருகின்றனர். இந்த மோதல் காரணமாக அந்த நகரில் இருந்து சுமார் 200,000 மக்கள் துருக்கியில் தஞ்சமடைந்துள்ளனர். நகரில் குர்திஷ்கள் தரை வழியாக போராடுவதோடு அமெ ரிக்கா தலைமையிலான சர்வதேச கூட்டணி ஐ.எஸ். மீது வான் தாக்குதல்களை நடத்தி வரு கின்றது.

ஓமந்தை வேதனைச் சாவடி

புலிகள் அழிக்கப்பட முன் கொழும்பு யாழ்ப்பாணம் பிரயாணம் எவ்வளவு கஸ்டமானதாக இருந்தது. கொழும்பு செல்வோர் கோண்டாவிலுக்குச் சென்று புலிகளின் நந்தவனத்தில் பாஸ் எடுக்கவேண்டும். முகமாலையில் இராணுவத்தினதும் புலிகளினதும் சோதனைச் சாவடியில் இறங்கி ஏறவேண்டும். பின்னர் புலியங்குலத்தில் புலிகளின் சோதனைச் சாவடி, பிறகு ஓமந்தையில் இராணுவத்தின் சோதனைச் சாவடி கொழும்பு செல்லும் வரையில் ஆங்காங்கே இராணுவத்தின் சொதனைச் சாவடிகளைக் கடந்து கொழும்பு சென்று திரும்பும்போது அதே கதைதான் ஓமந்தையில் இராணுவத்தின் சோதனைச் சாவடியைக் கடந்தபின் புளியங்குளத்தில் புலிகளின் வேதனைச் சாவடி. (மேலும்....)

 

 

 

 

ஒக்ரோபர் 22, 2014

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புலி முக்கியஸ்தர் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய தலைவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் புலிகளின் ஆயுத மற்றும் புலனாய்வுப் பிரிவை சேர்ந்தவர். இது வரை காலமும் கைது செய்யப்படாமலும், புனர்வாழ்வு பெறாமலும் தலைமறைவாகி இருந்து உள்ளார்.  இவரைப் போன்றவர்களின் பெயர்ப் பட்டியல் பாதுகாப்பமைச்சால் கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு கையளிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.  இவர் கட்டாருக்கு செல்ல முயன்றபோது கைது இடம்பெற்று உள்ளது. இதே நேரம் கடல் படை பஸ் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுக் கொடுத்த புலி உறுப்பினர் வவுனியாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். இவரும் இது வரை காலமும் தலைமறைவாகி இருந்து உள்ளார் என்று இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

யாழில் 'புகையிரத நகரம்': பணிகள் ஆரம்பம்

நகர அபிவிருத்தி அதிகார சபையின் வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தால்  யாழ்;.புகையிரத நிலையத்தில் 'புகையிரத நகரம்' நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் செவ்வாய்க்கிழமை (21) தெரிவித்தார். 8.5 ஏக்கர் நிலப்பரப்பில் யாழ்.புகையிரத நிலையத்தை சுற்றி இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது.  யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் வடக்கு பக்கமாகவுள்ள ஸ்டான்லி வீதி, தெற்கு பக்கமாகவுள்ள யாழ் புகையிரத நிலைய வீதி, கிழக்கு பக்கமாகவுள்ள இராசாவின் தோட்ட வீதி, மேற்கு பக்கமாகவுள்ள வைத்தியலிங்கம் வீதியையும் இணைத்து இந்த புகையிரத நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இந்த புகையிரத நகரத்தில், வணிக அபிவிருத்தி, உள்ளக அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி செயற்றிட்டங்கள் தொடர்பான வேலைத்திட்டங்களும் பொதுமக்களுக்கு தேவையான தொடர்பாடல் வசதிகள், ரயில் பணியாளர்களுக்கான விடுதிகள், பேருந்து, வாகன தரிப்பிடங்கள், நவீன வசதிகளுடனான விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளடங்கலாகவும் இந்நகரம் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இந்த சுற்றாடலில் யாழ். மாநகர சபையின் அலுவலகம் நிறுவப்படவுள்ளது. இதற்காக செலவிடப்படவுள்ள நிதி தொடர்பிலான விபரங்கள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

உலகின் மூன்றில் ஒரு பெண் கைதிகள் அமெரிக்க சிறைகளில்

உலக பெண் சிறைக் கைதிகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் அமெரிக்க சிறைகளில் இருப்பதாக சிறைச்சாலை ஆய்வுகளுக்கான சர்வதேச மையத்தின் தரவுகளை மேற்கோள்காட்டி போபஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சிறைச்சாலைகளில் மொத்தம் 201,200 பெண் கைதிகள் உள்ளனர். இது அந் நாட்டு மொத்த கைதிகளில் 8.8 வீதமாகும். இதற்கு அடுத்து சீனாவில் 84,600 பெண் கைதிகள் உள்ளனர். இது மொத்த கைதிகளில் 5.1 வீத மாகும். ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருப்பதோடு அங்கு 59,000 பெண்கள் சிறைகளில் உள்ளனர். இது மொத்த கைதிகளின் சனத்தொகையில் 7.8 வீதமாகும். சர்வதேச அளவில் 625,000 பெண்கள் மற்றும் சிறுவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மாத்திரம் 7 மில்லியன் பேர் கைதி களாகவோ, தடுப்புக்காவலிலோ அல்ல நன்ன டத்தை காலத்திலோ அல்லது பிணையிலோ உள்ளனர். இதன்படி அமெரிக்காவில் இருக்கும் வயதுவந்த 35 பேரில் ஒருவர் கைதிகளாக உள் ளனர்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவருக்கு உயிரணு மாற்று மூலம் நடக்கும் திறன்

இடுப்புக்குக் கீழ் முழுமையாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரணு மாற்று சிகிச்சை மூலம் மீண்டும் நடக்கும் திறனை பெற்றுள்ளார். பல்கேரிய நாட்டின் 38 வயது டெரிக் பிடிக்கா என்பவர் கடந்த 2010 ஆம் ஆண்டில் கத்திக்குத்தினால் முதுகுத் தண்டு பிளந்து பக்கவாதத்திற்கு ஆளான நிலையில் அதிலிருந்து சிகிச்சை மூலம் சுகம்பெற்ற முதலாமவராக பதிவாகியுள்ளார். போலாந்து நாட்டு அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் இணைந்தே இந்த மருத்துவ சிகிச்சையில் வெற்றி கண்டுள் ளனர். இதன்போது மருத்துவர்கள் பெடிகா வின் மூக்கு செல்களை பயன்படுத்தி நரம்பு செல்களை வளரச்செய்து அதனை அவரது முதுகுத்தண்டில் செலுத்தி உடைந்த பகு தியை சரிசெய்துள்ளனர். மீண்டும் தன்னால் நடக்க முடியுமானது நம்பமுடியாத உணர்வை ஏற்படுத்துவதாக பெடிகா குறிப்பிட்டுள்ளார். "உங்களது உட லின் அரைப்பகுதி எந்த உணர்வும் அற்ற நிலையில் இருக்கும்போது நீங்கள் உதவி யற்ற நிலைக்கு ஆளாவீர்கள். ஆனால் அது மீள கிடைத்ததால் மீண்டும் பிறந்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது" என்றார்.

இவர்கள் இன்றும் இருந்திருந்தால் இன்று.......?

புலிகள் பாடசாலை கட்ட நிதி கேட்கவில்லை. ஒரு ஆஸ்பத்திரி கட்ட நிதி கேட்கவில்லை. ஒரு முதியோர் இல்லம் கட்ட நிதி கேட்கவில்லை. ஒரு வீதி ஒன்றை அமைக்க நிதி கேட்கவில்லை.பாலம் கட்ட நிதி கேட்கவில்லை. தண்ணீர்ப் பிரச்சனையை தீர்க்க ஒரு குளத்தை அமைக்க நிதி கேட்கவில்லை. கல்வியை மேம்படுத்த ஒரு பாடசாலையை அமைக்க நிதி கேட்கவில்லை. ஆனால் நிதி உதவி கேட்பதெல்லாம் மயானம் அமைக்கவும் கல்லறை கட்டவும்தான். வெளிநாடுகளில் நிதி சேர்த்தது யுத்தம் செய்ய மட்டும்தான். மொத்தத்தில் தமிழ் மக்களுக்கு கல்லறை கட்டத்தான் இவர்கள் ஆயுதம் தூக்கினார்கள். இவர்களை அழித்திராவிட்டால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் வரை கல்லறைகளாகத்தான் இருந்திருக்கும்.

ஒக்ரோபர் 21, 2014

தேர்தல் யாத்திரை

யாழ்தேவி ரயில் 24 வருடங்களுக்குப் பின்னர் கடந்த 13ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணத்தை நோக்கிச் சென்றது.  வடகில் வாழும் தமிழ் மக்களையும் தெற்கில் வாழும் சிங்கள மக்களையும் இணைக்கும் பாலம் போன்ற இந்த ரயிலை அன்று ஓட்டிச் சென்ற சாரதியின் தந்தை தமிழர் என்றும் தாய் சிங்களவர் என்றும் செய்திகள் கூறின. தற்செயலானதாயினும் அதுவும் முக்கியமான செய்தி தான். 13ஆம் திகதி வரை யாழ்தேவி ரயில், பளை ரயில் நிலையம் வரை மட்டுமே சேவையில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது. 13ஆம் திகதி யாழ்ப்பாணம் வரையிவான அதன் பிரயாணத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அதில் சென்று யாழ்ப்பாண ரயில் நிலையம் உட்பட பல இடங்களை திறந்து வைத்தார்.  அவரது இந்தப் பயணத்தை அடுத்த வருடம் நடைபெறப் போவதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்ட தேர்தல் யாத்திரையாகவே பலர் கருதுகிறார்கள். (மேலும்....)

Ranil meeting Sri Lankan Diaspora

(by Rajasingham Jayadevan)

 

Campaign orchestrated by the wings of the Sri Lankan government against the Opposition Leader Ranil Wickramasinghe is clearly a calculated, diabolical and depraved drive of harassment to gain petty parochial mileage to overshadow the political setbacks experienced by the Rajapakse family. I write as one of those who had the opportunity to meet the Opposition Leader in London. I together with Tamils representing diverse Tamil polity excluding the LTTE met Mr Ranil Wickramasinghe and discussed wide ranging issues centred on the authoritarian governance in Sri Lanka. We were one of the Tamil groups. He was frank and forthright in his comments and reflected the maturity of a seasoned and an educated politician to explain the way forward to overcome the difficulties. (more.......)

ஐ.தே.கவின் இன ஒழிப்பால் டயஸ்போரா உருவானது

ஐரோப்பிய நாடுகளில் Diaspora  உருவாவதற்கு 1983 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர்கள் மீதான இனக்கலவரமே காரணம் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார். அதிலிருந்து உருவானதே புலம்பெயர் அமைப்பு. எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு விரும்பி நிதி வழங்கிய நிலை மாறி அச்சுறுத்தி நிதி சேகரிக்கும் நிலைமை ஏற்பட்டது. இது மீண்டும் இடம்பெறலாம். ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நிலை ஏற்பட்டவுடனேயே இந்தியாவிலும் எல்.ரீ.ரீ.ஈ. மீதான தடையை நீக்க வேண்டும் என வைகோ, ராமதாஸ் போன்றோரும் குரல் எழுப்புகின்றன. ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு ஐ.தே.க.வுக்கு நேரடியாகவோ, அல்லது மறைமுகமான தொடர்புகள் உள்ளன. ரணில் விக்கிரம சிங்கவின் ஐரோப்பிய விஜயத்தின் போது அவரது சந்திப்புகள் தொடர்பாக படங்களும் செய்திகளும் கிடைத்துள்ளன. ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரம சிங்க பிரதமராக இருக்கும் போதே பிரபாகரனுடன் நாட்டை பிரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டார். இவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியானால் என்ன செய்யமாட்டார். புலிகளுடன் ரணில் செய்த ஒப்பந்தத்தின் பின்னர் எமது படையினரும் பொலிஸாரும் அந்தப் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட ஒரு வெளிநாட்டுப் பிரஜையை கைது செய்வதற்காக மன்னாருக்குச் சென்ற எமது மூன்று பொலிஸாரை புலிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தமிழீழத்தினை கைவிட்ட நிலையில் உலகத் தமிழர் பேரவை மீதான சிறிலங்கா தடை விலகும் சாத்தியம்

ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசையான தமிழீழத்தினை கைவிட்டு விட்டதாக உலகத் தமிழர் பேரவை சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் அந்த அமைப்பின் மீதான சிறிலங்காவின் தடை விலக்கப்படலாம் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் ஒற்றையாட்சிக்குள் பரந்துபட்ட அதிகார பகரிர்வுடன் சிங்களவர்களுடன் இணைந்து வாழ்வதற்கு தாம் தயாரென சமீபத்தில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவல் அடிகள் மற்றும் அந்த அமைப்பின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள் தெரிவித்திருந்தனர். சமீபத்தில் கிளிநொச்சி பயணத்தின் போது தனி ஈழத்தினை கைவிட்டு விட்டு வாருங்கள் என தமிழ் அரசியல் தலைமைகளுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பும் விடுத்திருந்தார். இந்நிலையில் உலகத் தமிழர் பேரவை தமிழீழத்தினை கைவிட்டு விட்டதான நிலைப்பாடு அவர்கள் மீதான சிறிலங்காவின் தடை விலகலுக்கு வழியமைத்துள்ளதாக சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை சிறிலங்காவின் எதிர்கட்சித் தலைவரை உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சமீபத்தில் லண்டனில் சந்தித்து உரையாடியிருந்தார். ரணில் விக்ரமசிங்கவும் 13வது திருத்தச் சட்டத்துக்கு அமையவே தமிழர்களுக்கான தீர்வு திட்டம் எனவும் அறிவித்துள்ளார். இந்நிலையில் தடை விலகும் பட்சத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஊடகப் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் சிறிலங்காவுக்கு வருகை தர வாய்ப்பு உள்ளதாக அந்தச் சிங்கள ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

தனது வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொள்ள புலிகளின் வாலைப் பிடித்த மாவை - ஆனந்தசங்கரி

இன்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரென பெரிதாக பாராட்டைப்பெறுகின்ற திரு. மாவை சேனாதிராசா அவர்கள் 30 ஆண்டுகளாக இயங்காத நிலையில் இருந்த தமிழரசு கட்சியை அக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் அவர்கள் 1977ஆம் ஆண்டு, மறைந்து 26 ஆண்டுகளுக்குப் பின்னர் எவருடைய அனுமதியும் இன்றி புதுப்பித்துள்ளார் அப் புனரமைப்பை திரு. சோனதிராசா அவர்கள் 2003ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 14ஆம் திகதி கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் உப தலைவர் திரு தங்கனை சந்தித்து பேசினார். மிகவும் மனவேதனை தரும் விடயம் என்னவென்றால் இப் புனரமைப்புப் பணியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும், பேராசிரியர் ஒருவரும், த.வி.கூ யின் வரலாறு தெரியாத சில ஊடகவியலாளர்களும் சேர்ந்தே மேற்கொண்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட அதே கதி இலங்கை தமிழரசு கட்சிக்கும் ஏற்பட கூடாதென்பதற்காக த.வி.கூ செயலாளர் நாயகமும் அன்றைய பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான அமரர். அ.அமிர்தலிங்கம் கட்சியின் பதிவை பாதுகாத்தே வந்தார். (மேலும்....)

Sri Lankan refugee in limbo, both protected and inadmissible to Canada

Torstar News Service Kogularamanan Arulanantham, 33, was granted refugee status in Canada in 2006 but has been waiting for years for permanent residency because he's deemed inadmissible for working at a retail story run by a terror group. As a “protected person,” Kogularamanan Arulanantham cannot be removed from Canada to Sri Lanka. As someone deemed “inadmissible” to Canada as an alleged member of the Tamil Tigers, the Brampton man cannot become a permanent resident and must renew his temporary permit to remain here every year – unless he is granted a reprieve from Public Safety Minister Steve Blaney. Border officials’ broad definition of membership means a person can be considered a member of a banned terrorist group by simply donating money to the organization or being loosely associated with its members. (more.....)

வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பேற்படாத வகையில் சபையில் புதிய சட்டம்

வெளிநாட்டவர்கள், வெளிநாட்டுக் கம்பனிகள் மற்றும் வெளிநாட்டுப் பங்குகளை வைத்துள்ள நிறுவ னங்களுக்கு இலங்கையிலுள்ள காணிகளை பராதீனப்படுத்துவதை (Restriction on Alienation) கட்டுப்படுத்துவதற்காகவே காணி (பராதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் படுவதாக சிரேஷ்ட அமைச்சரும், பிரதி நிதியமைச்சருமான சரத் அமுனுகம தெரி வித்தார். இந்த சட்டத்தின் கீழ் வெளிநாட் டவர்கள், வெளிநாட்டுக் கம்பனிகள் மற்றும் வெளிநாட்டு பங்குகளை வைத்துள்ள நிறுவனங்களுக்கு காணிகளை குத்தகைக்கு வழங்குகையில் காணி குத்தகை வரியொன்று அறிவிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டு முதலீடுகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் ஊடாக வெளிநாட்டவர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும் அவற்றுக்கு சில சலுகைகளும் கிடைக்கவுள்ளன. இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் வெளிநாட்டு வங்கிக்கடன் பெற்று இயங்கும் நிறுவனங்கள் செயல்நுணுக்க கருத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் போன்றன இந்த சட்டத்தின் கீழ் சலுகை பெறும். இதற்கு முன் அமுலில் இருந்த சட்டத்தை விட புதிய சட்டத்தின் கீழ் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு காணி பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த வரி 25 ல் இருந்து 7.5 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போராடும் குர்திஷ்களுக்கு ஆயுதம் கொட்டிய அமெரிக்கா

சிரியாவின் முக்கிய நகரான கொபானியில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) கிளர்ச்சியாளர்க ளுக்கு எதிராக போராடிவரும் குர்திஷ் போரா ளிகளுக்கு அமெரிக்க இராணுவ விமானம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் மருத்துவ பொருட்களை போட்டுள்ளது. சி-130 ரக போக்குவரத்து விமானம் ஈராக் குர்திஷ் நிர்வாகம் வழங்கிய பொருட் களை பல தடவைகள் கொட்டியது என்று அமெரிக்க கட்டளை மையம் குறிப்பிட் டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான கூட்டணி யின் வான் தாக்குதல் உதவியோடு ஐ.எஸ். போராளிகள் துருக்கி எல்லைக்கு அருகில் இருக்கும் நகரில் இருந்து குறிப் பிடத்தக்க அளவில் பின்வாங்கச் செய் யப்பட்டுள்ளனர்.  எனினும் அமெரிக்கா இவ்வாறு உதவிப் பொருட்களை வானிலிருந்து கொட்டுவது தனது நட்பு நாடான துருக்கியை ஆத்திர முறச்செய்துள்ளது. குர்திஷ் போராளிகள் அமெரிக்காவின் ஆயு தங்களை பெறுவதை அனுமதிக்க முடியாது என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்து கான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிருப்தி வெளி யிட்டிருந்தார். கொபானியில் போராடும் குர்திஷ் களுக்கு உதவும் கோரிக்கைக்கு துருக்கி தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருகிறது. இந்த போராளிகளை துருக்கியில் தீவிரவாதிகளாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் பி.கே.கே. குர்திஷ் போராளிகளுடனேயே துருக்கி ஒப்பிட்டு வருகிறது. துருக்கி ஒரு தசாப்தத்திற்கும் மோலாக உள் நாட்டில் பி.கே.கே. வுடன் யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. பி.கோ.கே. போராட்டக் குழுவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் தீவிரவாதிகளாகவே முத்திரை குத்தியுள்ளன. ஐ.எஸ். போராளிகள் சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான நிலத்தை கைப்பற் றியுள்ளனர். ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் ஐசிஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ.எல். என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஹரியாணா எம்.எல்.ஏ-க்களில் 83% கோடீசுவரர்கள்: ஏ.டி.ஆர். தகவல்

ஹரியாணா மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், அங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 83% கோடீசுவரர்கள் என்று ஹரியாணா தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பும் தெரிவித்துள்ளது. புதிய சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் சராசரி சொத்து நிலவரம் ரூ.12.97 கோடி என்கிறது இந்த ஆய்வு. 2009-ஆம் ஆண்டு தேர்தலில் வென்ற எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.71 கோடியாக இருந்தது. இந்த 5 ஆண்டுகளில் சொத்து மதிப்பு சுமார் 2 மடங்கு பக்கம் அதிகரித்துள்ளது. கட்சி அளவில், இந்திய தேசிய லோக் தள் வேட்பாளர்கள் பெரும் கோடீசுவரர்களாக இருக்கின்றனர். இதில் பணக்கார வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.01 கோடி. காங்கிரஸ் உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.12.45 கோடி. பாஜக உறுப்பினர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.10.5 கோடி. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற 5 சுயேட்சை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.13.95 கோடி. வெற்றி பெற்றவர்களில் பணக்கார வேட்பாளர் ஒருவரின் சொத்து மதிப்பு ரூ.212 கோடி. தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் 10 சதவீதத்தினர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன.

கியூபாவைப் பாருங்கள் ஒபாமா!

உலக வரைபடத்தை அதிபர் பராக் ஒபாமா ஒரு நிமிடம் உற்றுநோக்கினால் பக்கத்து நாடுகளுடன் இருதரப்பு உறவு களைச் சீர்படுத்துவதில் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்ற வருத்தம் நிச்சயம் அவருக்கு ஏற்படும். கியூபாவைப் பொறுத்த வரை கொள்கையில் சிறிது மாற்றம் செய்தாலே போதும், உறவு சுமுகமாவதுடன் பொருளாதாரப் பலன்களும் கிட்டும். அர்த்தமற்ற வகையில், அந்த நாட்டுக்கு எதிராக இப்போதும் கடைப்பிடிக்கப்படும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா முதலில் விலக்கிக்கொள்ள வேண்டும். ஃபிடல் காஸ்ட்ரோ பதவிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் கழித்து, 1961 முதல் கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை மற்றும் தூதரக உறவுகளுக்குத் தடை விதித்தது. அதே சமயம், கியூபாவின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைதான் காரணம் என்று கூறிய அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ, அந்த நாட்டு மக்களை வெளியுலகத் தொடர்பில்லாமலேயே நெடுங்காலம் வைத்திருந்தார். (மேலும்....)

ஒக்ரோபர் 20, 2014

போலிச் சித்தாந்தமும் கலையரசனும்

(இரகு கதிரவேலு)

{இரகு கதிரவேலு, கலையரசன் என்ற தனி நபர்கள் கருத்தியலுக்கு அப்பால் இக் கட்டுரையில் ஒரு சமூகப் பார்வை புதைந்துள்ள. இதன் அடிப்படையில் இந்தக் கட்டுரையை பிரசுரிக்கின்றது சூத்திரம் இணையத் தளம் – சாகரன்}

கலையரசன் தான் ஒருகொம்மியூனிச வாதியாகக் காட்டிக்கொண்டு அதற்கு முரணாக எழுதிக்கொண்டிருக்கிறார்.. தனது.தந்தையார் புலிகளின் அரசியல் ஆர்வலராக வன்னியில் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் தமிழினப்படுகொலை, பேரினவாத அரசு.பாசிச அரசு என்றெல்லாம் சிங்கள மக்களையும் அரசாங்கத்தையும் விமர்சித்து எழுதிக்கொண்டிருக்கிறர். தமிழர்கள் தமிழர்களால் நசுக்கப்பட்டதும், நசுக்கப்பட்டுக்கொண்டு வருவதும் இவருக்குப் புலப்படவில்லை. (மேலும்....)

நீதிக்காக குரல் கொடுப்போம்

திண்டுக்கல் நத்தம் பகுதி கோட்டயூரைச் சேர்ந்த சகோதரி சர்மிலா பானு வயது 22 ,
சென்னை சிறப்பு காவல் படையில் பணியில் இருந்த காவலரை கற்பழித்து கொலை செய்து பின்னர் அந்த பெண்ணின் மீது பொய் குற்றச்சாட்டு கூறி அந்த பெண்ணின் சடலத்தையும் அவர் பெற்றோரிடம் ருபாய் 15000 கொடுத்து மிரட்டினர்,  பின்னர் த.மு.மு.க கலமிறங்கி அந்த பெண்ணின் உடலை 2 ஆம் முறையாக பிரோத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் போது காவல்துறையினர் வழிமறித்து சடலத்தை கைப்பற்ற வந்தனர்.  பின்னர் தடையை மீறி ஜனாசா ஊர்வலமாக எடுத்துச் சென்று மறியல் போராட்டத்திற்கு பின் மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இது பற்றி எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியீட வில்லை.. இச் செய்தியை வெளியீட தயங்குவது  ஏன்......? நீதிக்காக குரல் கொடுப்போம்
நண்பர்களே......!

அபிவிருத்தியை முன்னெடுப்பதில் வடக்கு முதல்வர் பின்னடிப்பு

ஐயாயிரம் மில்லியன் ரூபாவில் 20 சதவீதம் மட்டுமே செலவு

ஏனைய மாகாணங்களை அந்த முதல மைச்சர்கள் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி வரும் நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் மட்டும் அபிவிருத்தியை முன்னெடுப்பதில் பின்னடித்து வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசனம் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒவ்வொரு மாகாணங்களிலுமுள்ள முதலமைச்சர்களும் தமது பகுதிகளை கல்வி, விளையாட்டு, போக்குவரத்து, சுகாதாரம், உட்கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் முன்னேற்றும் அதேவேளை, பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் இதற்கு விதிவிலக்காக வடக்கு மாகாண முதலமைச்சர் மட்டும் அரசையும் வட மாகாண ஆளுநரையும் குறைகூறிக் கொண்டும் அபிவிருத்திகளை முன்னெடுக்க விரும்பாதவராகவும் முடியாதவராகவும் காணப்படுகின்றார். ஏனைய மாகாணங்களை விடவும் வடக்கு மாகாணத்திற்கே அதிகளவு நிதி அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஐயாயிரம் மில்லியன் ரூபாவில் இதுவரையில் 20 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் மிகுதியான நிதி திறைசேரிக்கு திரும்பிச் செல்லவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அத்துடன் தமக்கான சொகுசு வாகனங்களை பெற்றுக் கொள்வதற்கு வடமாகாண ஆளுநரின் அனுமதி கிடைத்ததென்றால் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு ஆளுனர் ஒருபோதும் தடையாக இருக்கமாட்டார் என்றும் தெரிவித்தார். அவ்வாறுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் செயற்பட்டு வருகின்றமை வேதனையளிக்கின்றது என்றும் தெரிவித்ததுடன், மக்களுக்கு நல்வழியைக் காட்டி அதனூடாகவே அபிவிருத்தியையும். வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் வழிகாட்ட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

மீண்டும் ஒரு அபாயமா?

2004 டிசம்பர் 26ஆம் நாளன்று அறிவிப்பே கொடுக்காமல் நம்மை வந்து தாக்கிய ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவம் நம் ஞாபகங்களிலிருந்து இன்னும் கரைய மறுக்கின்றது. அது உருவாக்கிய நாசங்களும் உயிர்ச்சேதங்களும் அளப்பரியன. அந்த பாதிப்புக்கு ஆளாகாத இதர பகுதி மக்களையும் அந்தப் பேரழிவு மருள வைத்தது. அதன் பின்னரே ‘சுனாமி’ என்ற உலக வழக்குச் சொல்லை நாம் அறியலானோம். நம் கதைகளிலும் தொன்மங்களிலும் மாத்திரம் நாம் பேசிவந்த அந்தக் கடல்கோள் வெறும் கற்பனையல்ல என்கிற உண்மைக்குள் நாம் உறைந்து போயிருக்கிறோம். (மேலும்....)

நீர் அரசியல்

இரணைமடு இலங்கையின் வடக்கில் உள்ள மிகப் பெரிய நீர்த்தேக்கம். முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பகுதியில் உள்ள இந்த நீர்த்தேக்கத்துக்கு வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து நீர் வருகிறது. ஆனால் இந்தக் குளத்தின் பாசனநீர் மற்றும் பயன்பாட்டு நீர் கிளிநொச்சி மாவட்டத்திற்கே செல்கிறது. 1912இல் தொடங்கி 1922இல் கட்டி முடிக்கப்பட்ட இந்த நீர்த்தேக்கம் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் இலங்கை அரசியலில் செல்வாக்காக இருந்த சேர். பொன். இராமநாதனின் பரிந்துரையில் அவருடைய 1000 ஏக்கர் நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்ச் செய்கைக்காகக் கட்டப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தைக் கட்டும் பணியில் இந்தியாவில் இருந்து வருவிக்கப்பட்ட தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பின்னர் அது படிப்படியாக விரிவாக்கப்பட்டு இப்பொழுதுள்ள ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ஹெக்டர் நீர்ப்பரப்பளவைப் பெற்றுள்ளது. இந்தக் குளத்தில் இருந்தே கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதியில் நெற்பயிரிடல் மேற் கொள்ளப்படுகிறது. (மேலும்....)

எப்படியெல்லாம் வீணடிக்கிறோம் நாம்!

வேலைவாய்ப்புகள் முன்னெப்போதையும் விடப் பல மடங்கு பெருகியிருந்தாலும் வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் தீர்ந்தபாடில்லை. இது, எல்லா நாடுகளிலும் உள்ளதுதான் என்றாலும் இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் வேலை தேடுவோர் எண்ணிக்கை சுமார் 11 கோடிக்கும் மேல். வேலை செய்யும் பருவத்தினரில் இந்த அளவு 15%. இந்தியக் குடும்பங்களில் சுமார் 28% வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நேரடியாகப் பாதிக்கப் பட்டுள்ளன. 15 வயது முதல் 60 வயது வரையிலான வேலை செய்யக் கூடிய பருவத்தினரில் வேலை கிடைக்காதோர் எண்ணிக்கை மட்டுமே 7.5 கோடிக்கும் மேல். இவர்கள் மொத்தம் 7 கோடி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். (மேலும்....)

உன்னைச் சொல்லாத நாளில்லை.....

(கமலாகரனின் வார்த்ததைகள் புலிகளால் கொல்லப்பட்ட அனைத்து மனிதர்களுக்கும் சமர்ப்பணம்.....? - சாகரன்)

(புலிகளால் படுகொலை செய்யப்பட்ட யாழ் சென்ரல் கல்லூரி அதிபர்தான் இந்த சித்தப்பா)

சித்தப்பா ....!
சித்து விளையாட்டுக்குள் சிக்காதவர்..
சித்தம் தெளிந்து சிந்திக்க தெரிந்தவர்.
என் சித்தியை மட்டுமின்றி- தன்
மாணவர் சித்தியையும் காதலிப்பார்.
பொல்லாத போக்கிரி அவர்.
கல்லாத மனிதர் முன்னே வந்தால்.
சொல்லாலும் அடிப்பார்
கல்லாலும் அடிப்பார்
புல்லர்கள் எதிரில் வந்தால்.
"அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும்."
அன்று எனக்கு நம்பமுடியாச் சொற்றொடர் .
இன்று நான் நம்புகின்ற ஒரே சொற்றொடர்.
என் சித்தப்பாவை வாரிச் சுருட்டிய மரணம்
சொல்லிச் சென்ற பாடமிது.
மரணத்திலும் வாழும் மகத்துவம் தெரிந்த
மனிதருள் ஒருவர் அவர்.

எங்கள் சித்தப்பா..
எம்மை விட்டுப் பிரிவதுமில்லை
நாங்கள் அவரை விட்டு விலகுவதுமில்லை

என் சித்தப்பாவை கொன்றவர்கள் யார் என்பது எனக்கு வேண்டியதில்லை...கொல்லத் தூண்டியது எது என்பதே இங்குள்ள கேள்வி. கொல்லச் சொன்னவனும் கொன்றவனும் இன்றில்லை.அவ்வளவுதான். சித்தப்பாவின் மரணம் விதைத்துவிட்ட கேள்விகளுக்கு நாளை நிச்சயம் பதில் கிடைக்கும். ஏனெனில் வரலாறு எப்போதும் சரியாகவே நகருகிறது. - கமலாகரன்

புலிகளின் தடை நீக்கப்பட்டமைக்கு ரணில் பிரதான பங்களிப்பு

ஐரோப்பிய ஒன்றியம்  விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிய பின்னணியில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருங்கிய தொடர்புகள் இருக்கக் கூடுமென்ற, நியாயமான சந்தேகம் எழுந்திருப்பதாக ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தினகரனுக்குத் தெரிவித்தார். அரசியல் இலாப நோக்கில் எதிர்க் கட்சித் தலைவரும் அடிக்கடி டயஸ்போராக்களை இரகசியமாவும் வெளிப்படையாகவும் சந்தித்து வருகின்றார். எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் டயஸ் போராக்களினதும் தமிழ் மக்களினதும் மனங்களை வெல்வதற்காக விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ஏதேனும் பங்களிப்பு செய்திருக்கலாமென்றே ஊகிக்கத் தோன்றுகின்றது என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார். எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பாவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு நாடு திரும்பியிருந்த நிலையிலேயே புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதாக அறிவிப்பு வெளிவந்தது. இதற்கு முன்னரும் டயஸ்போராக்களை சந்திப்பதற்காக ரணில் பல தடவைகள் இங்கிலாந்து மற்றும் மலேசியாவுக்கு சென்று வந்துள்ளார்.

அரியானாவில் பா.ஜ. ஆட்சி மலர்கிறது மகாராஷ்டிராவிலும் பா.ஜ. முன்னணியில்

பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர் இரண்டா வதாக நடக்கும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வுக்கு இரண்டு மாநிலங்களிலும் கணிசமான வெற்றி கிடைத்து வருகிறது. கடந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மணிப்பூர், அசாம், உ.பி., பீகார் இடைத்தேர்தல்களில் பா.ஜ.வுக்கு உரிய வெற்றி கிட்டவில்லை. இதில் பிரதமர் மோடியின் செல் வாக்கை குறைத்து எதிர்கட்சியினர் விமர்சனம் செய்தனர். ஆனாலும் இது மாநில அளவிலான கூட்டணி மற்றும் கட்சியின் செல்வாக்கை பொறுத்து அமைந்தது என்று பா.ஜ. தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் இப்போது நடைபெற்றுள்ள மாநில முழு அளவிலான சட்டசபை தேர்தலில் இது வரை இந்த மாநிலங்களில் கிடைக்காத அள விற்கு பா.ஜ.க வெற்றியை குவித்து வருகிறது. அரியானாவிலும் மகாராஷ்ட்டிராவிலும் பா.ஜ.க ஆட்சி மலரும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

ஐ.எஸ். போராளிகளுக்கு விமானம் ஓட்ட பயிற்சி

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுடன் இணைந்திருக்கும் ஈராக் நாட்டு விமான ஓட்டிகள் அந்த குழுவின் சிரிய நாட்டு போராளிகளுக்கு விமானம் ஓட்டுவதற்கான பயிற்சிகளை அளித்து வருவதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐ.எஸ். கைப்பற்றியிருக்கு மூன்று யுத்த விமானங்களை இயக்குவதற்காகவே இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அலப்போவில் இருக்கும் விமானப்படை தளமொன்றை சூழவிருக்கும் பகுதியில் விமானங்கள் பறப்பதை கண்டவர்களை மேற்கோள் காட்டி சிரிய உள்நாட்டு யுத்தம் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் மனித உரிமை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் ஈராக் முன்னாள் தலைவர் சதாம் குசைன் அரசில் விமான ஓட்டிகளாக இருந்த அதிகாரிகளை பயன்படுத்தியே இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. சிரிய விமானப்படையிடம் இருந்து அலப்போ மற்றும் ரக்கா பகுதிகளில் இருந்த மூன்று விமானங்கள் ஐ.எஸ். கைப்பற்றி இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் ஐ.எஸ். விமானங்களை பயன்படுத்தியதற்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று அமெரிக்க கட்டளை தலைமையகம் ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தின் மர்மமான விண்வெளி விமானம் 674 நட்கள் வட்டமிட்டு பூமிக்கு திரும்பியத

ஆளில்லாமல் பறக்கின்ற அமெரிக்க இராணு வத்தின் விண்வெளி விமானம் ஒன்று கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு காலம் இடைவிடாது பூமியைச் சுற்றி வட்டமடித்து பறந்துவிட்டு தற்போது அமெரிக்காவில் தரையிறங்கியுள்ளது. இந்த விண்வெளி விமானம் என்ன நோக்கத்துக் காக அனுப்பப்பட்டது, அது பறந்து என்ன பணி செய்தது என்பதெல்லாம் பெரிய இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்-37பி என்று அழைக்கப்படும் இந்த ஆளில்லா விண்வெளி விமானம் கலிபோர்னியாவில் தரை யிறங்கியது. சரியாக 674 நாட்கள் இந்த விண் வெளி விமானம் பூமியைச் சுற்றி வட்டமடித்துள்ளது. இந்தப் பயணத்தின் நோக்கம் மிகப் பெரிய இரகசிய மாக இருந்துவருகிறது. சீனா விண்வெளியில் உருவாக்கிவருகின்ற ஆராய்ச்சிக் கூடத்தை கண்காணிப்பதுதான் இந்த வேவு விமானத்தின் நோக்கம் என்ற ஊகங்கள் தெரிவிக்கப்படு கின்றன. ஆனால் நிபுணர்கள் அந்த ஊகங்களுக்கு முக்கியத்துவம் தந்து பேசுவதில்லை. ஐரோப்பாவும் அடுத்த சில வாரங்களில் தனது ஆளில்லா விண்வெளி விமானம் ஒன்றை பறக்கவிட்டு பரிசோதிக்கவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதமுற்ற கட்டடங்கள், குளங்கள் பலகோடி ரூபாவில் புனரமைப்பு

கேள்வி : உங்களைப்பற்றிய அறிமுகமொன்றை சுருக்கமாக கூறுவீர்களா?

பதில் : தந்தை செல்வநாயகத்தின் காலத்தில் இருந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் மிகத்தீவிர ஒரு போராளியாக இருந்தேன். அந்தக்காலத்தில் இளைஞராக இருந்த நான் தமிழரசுக்கட்சியின் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டேன். அதன் பின்னரான காலப்பகுதியில் ஒவ்வொரு பிரச்சினைகளும் உருவாகியமையினால் அவற்றில் இருந்து விடுபட்டு விடுதலைப்புலிகளின் அரசியல் துறையுடன் சேர்ந்து செயற்பட்டுக்கொண்டிருந் தோம். அப்போது 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டம் சார்பில் என்னை போட்டியிடுமாறும் தேர்தலுக்குரிய பணம், பிரசாரம் உள்ளிட்ட தேர்தலுக்கு தேவையான உதவிகளைச் செய்வதாகக் கூறி வற்புறுத்தினார்கள். (மேலும்....)

ஹரியானாவில்,  மஹாராஷ்டிராவில் ஆட்சியமைக்கிற அளவுக்கும் பாஜக வெற்றி பெற்றிருப்பது யாருக்கு சாதகமாக இருக்கும்?

“மக்களுக்கு பாதகமாக இருக்கும். அப்படி ஆகவில்லை என்றால் மகிழ்ச்சிதான், ஆனால் ஆறு மாத மத்திய பாஜக ஆட்சியின் அனுபவங்கள் அந்த மகிழ்ச்சிக்கான நம்பிக்கையைத் தரவில்லை. அடிப்படையில் பாஜக-வின் இந்த வெற்றிக்குக் காரணம், ஹரியானா காங்கிரஸ் அரசும், மஹாராஷ்டிராவின் காங்கிரஸ்-என்சிபி அரசும் மக்களின் கடுமையான அதிருப்திக்கு உள்ளானதுதான். ஹரியானாவில் முன்னாள் முதலமைச்சர், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது 4 முதல் 5 லட்சம் கோடி ரூபாய் வரையில் மக்கள் பணம் சூறையாடப்பட்டது தொடர்பான புகார்கள் இருக்கின்றன. வேண்டப்பட்ட முதலாளிகள் சிலருக்கு எல்லா வகையான சலுகைகளையும் அளித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அங்கே முக்கிய எதிர்க்கட்சியான ஐஎன்எல்டி மீதும் அழுத்தமான ஊழல் கறைகள் உண்டு, அதன் தலைவர் சவுதாலா சிறையிலிருந்து உடல் நலத்தைக் காரணம் கூறி ஜாமினில் வெளியே வந்து, தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியதற்காக மறுபடியும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். (மேலும்.....)

நியாயமான மனக் குமுறல்கள்

அரங்கியல் விழா - நிகழ்வு 01

பல தருணங்களில் என் கை கட்டப்பட்டிருக்கின்றது. விமர்சனங்கள் என்பது வெறும் முதுகு சொறிதல், இல்லையேல் நண்பர்களை இழப்பது என்று இரண்டு பிரிவுகளாகிப் பலவருடங்களாகிவிட்டது. இருப்பினும் ஒரு சாதாரண பெண்ணாயேனும் இதனைச் சொல்லாமலிருக்க என்னால் முடியவில்லை. நேற்று ”தாய்வீடு” பத்திரிகையின் அரங்கியல் நிகழ்வில் இடம் பெற்ற ”தீவு” எனும் நாடகம், இதுவரையில் கனடாவில் எந்த ஒரு மேடையிலும் பார்த்திராத அளவிற்குப் பெண்களைக் கொச்சைப்படுத்திக் கேவலப்படுத்தியிருக்கின்றது. இதனை நான் கண்டிக்கின்றேன். - Karupy Nava

இதே மாதிரியான ஒரு நாடக நிகழ்வுதான் யாழ் இந்துக்கல்லூரி (கனடா) பழைய மாணவர் சங்கத்தின் விழாவில் (18 வருடங்களுக்கு முன்பு….? ஆண்டுகள் சரியாக ஞாபகம் வருகுது இல்லை. நடைபெற்ற இடம் ரொரன்ரோ வோபர்ன் கல்லூரி மண்டபத்தில்)  நடைபெற்றது. நகைச்சுவை நாடகம் என்ற கோதாவில் பெண்களை படு கேவலமாக இழிவுபடுத்தும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.  அக்கல்லூரியின் பழைய மாணவனாக இருந்தும், இந்த நிகழ்வுக்கு பின்னர் நான் இன்றுவரை அக்கல்லூரியின் கலையரசி விழாவில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்து கடைப்பிடித்தும் வருகின்றேன். - சாகரன்

வசந்தத்தை தேடிச் செல்வோம்!

இன்றைய நவதாராளமய முதலாளித்துவம், மனித சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் எந்த அளவுக்கு  அழிக்கின்றது  என்றால், இது சம்பந்தமாக மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு உலகம் பூராவும் நகரங்களில் வீதிகள் தோறும் வெடித்துக் கிளம்புகிறது . இந்த அளவு எதிர்ப்பு இருந்தாலும் நவதாராளமய முதலாளித்துவம் வீழ்த்து விடாமல் இருப்பது எப்படி? எதிப்புக் காட்டுபவர்களை அடக்கியும், கோட்பாட்டு மாயைகளினால் நெருக்கடியை மறைத்தும்  நவதாராளமயம் நிலைத்து நிற்கின்றது. வாழ்கையின் அனைத்து துறைகளையும்  உள்ளடக்கிச் செயற்படும் இவ்வாறான சித்தாந்தங்கள் உண்மையான எதிரிகளை மறைப்பதற்கு, போலி எதிரிகளை உருவாக்கவே முன்னுரிமை அளிக்கின்றன.  (மேலும்.....) 

ஒக்ரோபர் 19, 2014

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து ஆலோசிக்கவில்லை -  இந்தியா

இந்தியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் பேசும்போது, ''ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்கிய போதிலும், அந்த அமைப்பின் மீதான தடையை இந்தியாவில் நீக்குவது குறித்து மத்திய அரசு இதுவரை ஆலோசிக்கவில்லை. சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்" என்றார்.

நீதன் சாண்னுக்கு

கனடா உலகத்தமிழர் அமைப்பினர் ஏன் தான் ஆப்பு வைத்தார்கள்

சிறு வயதில் இருந்து பல வருடங்களாக ஈழப் போராட்டத்திற்கு குரல் கொடுத்து வரும், கனடா புதிய ஜனநாயக கட்சியின் மாநிலத்தலைவரான நீதன் சாண்னுக்கு, கனடா உலகத்தமிழர் அமைப்பினர் ஏன் தான் ஆப்பு வைத்தார்கள் வரும் நகரசபை தேர்தலுக்கு ? கனடா உலகத்தமிழர் அமைப்பினர் நடாத்தும் கனடிய தமிழ் தேசிய வானொலியில் நீதன் சாண்னுக்கு எதிராக அந்த தொகுதியில் போட்டியிடும் நீதன் சபாவிற்கு ஆதரவாக திடிரென "நேரு குரங்கு" குத்துக்கரணம் அடித்ததன் நேக்கம் தான் என்ன ? கடிநொடியின் ஆய்வின் அடிப்படையில், நேரு மற்றும் கனடா உலகத்தமிழர் அமைப்பினர் நீதன் சாணை புறக்கணிப்பது, நீதன் சாணுக்குத் தான் நல்லது. "ஆமை புகுந்த வீடு உருப்படாது மாதிரி" நேரு யாரை ஆதரித்தாலும் அவர்களிற்கு தோல்வியில் தான் முடியும். அது நேருவின் வரலாற்றுச் சாதனை. நேருவை நம்பி யாரும் அரசியலுக்கு போய் விடாதீர்கள். தேசியத்தின் சொத்துக்களை பதுக்கி வைத்திருக்கும் கனடா உலகத்தமிழர் அமைப்பும் மற்றும் அவர்களால் உருவாக்கப்பட்ட கனடா தமிழர் தேசிய அவையும், இப்படி நீதன் சாணுக்கு செய்த துரோகத்தை பார்த்தால், எந்த தமிழரும் இவர்களின் பின் நிக்க தயங்குவார்கள். தேவைக்கு மட்டும் பாவித்த பின் தூக்கி எறியும் பழக்கத்தை பாவிக்கின்றார்கள். வரும் நகரசபை தேர்தலில் நீதன் சாணுக்கு வெல்லும் வாய்ப்பு இருக்கின்றது. அதை சரியாக பயன் படுத்துங்கள். கடந்த தேர்தலில் நீதன் சாண் சில நூறு வாக்குகளால் தான் தோல்வியை தழுவினார். ஆனால் இந்த தேர்தலில் அவருக்கு வெல்லும் வாய்பு அதிகமாக இருக்கின்றது. இரண்டு தமிழர்கள் நிற்கும் பட்சத்தில் வாக்குகள் சிதறும், அதை மக்கள் சுயமாக சிந்தியுங்கள். வெற்றி வாய்ப்பு இருக்கும் நீதன் சாணுக்கு, அந்த தொகுதியில் இருக்கும் கனடா வாழ் எம் உறவுகள் வாக்களித்தால் கடிநொடிக்கு மிக்க மகிழ்ச்சி.
கடிநொடி (Facebook ID : KadyNody)

Fidel Castro offers cooperation with US in fight against Ebola

Fidel Castro has expressed Cuba’s readiness to cooperate with the US in the global fight against Ebola. Cuba has been on the frontline of international response to the worst outbreak in the disease's history. In his article “Time of Duty,” which was published on Saturday, the retired Cuban leader said that medical staff trying to save lives are the best example of human solidarity. Fighting together against the epidemic can protect the people of Cuba, Latin America, and the US from the deadly virus, he added.  “We will gladly cooperate with American [medical] personnel in this task – not for the sake of peace between the two states which have been adversaries for many years, but for the sake of peace in the world,” wrote Castro. (more.....)

அல்கைதாவுடன் தொடர்புடைய சந்தேகநபர்

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் முன்னாள் அரசியல்வாதி

மலேஷியாவிலிருந்து புதன்கிழமை நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஹுசைன் மொஹமட் சுலைமான் என அடையாளம் காணப்பட்ட, அல்கொய்தாவுடன் தொடர்பான இலங்கையர், 2002 இல் செய்யப்பட்ட கொலைக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நீர்கொ ழும்பு மாநகரசபை உறுப்பினர் என விசாரணையிலிருந்து தெரியவந் துள்ளது. அவர் 1998 தொடக்கம் 2002 வரையான காலப்பகுதியில் நீர்கொழும்பு மாநகரசபை உறுப்பினராக இருந்துள்ளார். நால்வருடன் சேர்ந்து 2002 இல் ஒரு முஸ்லிம் வர்த்தகரை கொலை செய்த இவர், நாட்டை விட்டு ஓடினார். ஆயினும் நீர்கொழும்பு உயர் நீதிமன்றம் இவருக்கு இவ்வ ருடம் மரணதண்டனை விதித்தது. சுலைமான், கோலாலம்பூரில் மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் தென்னிந்தியாவிலுள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேல் துணைத்தூதரங்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல் செய்ய மேற்கொள் ளப்பட்ட சதியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படுகின்றது. சுலைமானை இந்ததியாவுக்கு அனுப்புமாறு இந்தியா கேட்டு வருகின்றது. பாகிஸ்தானின் புலனாய்வு சேவையில் நியமிக்கப்பட்ட வேறொரு இலங்கையரான மொஹமட் சாகிர் ஹுசைன் என்பவருடன் சேர்ந்து இவர் இந்த சதியை திட்டமிட்டார் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ் நாட்டு பொலிஸார் ஹுசைனை ஏப்ரல் 29ஆம் திகதி கைதுசெய்து விசாரித்தபோது பெறப்பட்ட தகவல்கள் சுலைமானின் கைதுக்கு வழி வகுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

விடுதலையான ஜயலலிதா சென்னை வந்தடைந்தார்

21 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு பெங்களூர் சிறையிலிருந்து வெளியே வந்தார். அவருடன் சசிகலா, இளவரசியும் சேர்ந்து ஒரே காரில் ஏறிக்கொண்டனர். பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேருக்கு தனித்தனியாக ரூ. ஒரு கோடி பத்திரத்துக்கான உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களை பிணையில் விடுவித்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உத்தரவிட்டார். பின்னர் இந்த உத்தரவின் நகல் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு அ.தி.மு.க. பிரமுகர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கொண்டுசென்றனர். இந்த உத்தரவு நகல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து சிறையை விட்டு வெளியே வந்த ஜெயலலிதாவை அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். வழக்கமான இசட் பிளஸ் பாதுகாப்புடன் அவர் தனி விமானத்தில் ஏறி சென்னை சென்றடைந்தார். ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் அ.தி.மு.க. தொண்டர்களும் ஆதரவாளர்களும் இனிப்புப் பண்டங்களை வழங்கியதுடன் பட்டாசு கொளுத்தியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அமரர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மறைவு

இலங்கையின் முதலாவது அரசியல் கொலை

(சென்றவார தொடர்...)

இவருக்கு பொரளையில் ஆயுர்வேத கண் சிகிச்சை நிலையம் ஒன்றும் இருந்தது. இவர் பிரதம மந்திரியை சந்தித்து ஆயுர்வேத கல்லூரி எதிர்நோக்கியிருக்கும் கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கு அவரது உதவியை நாட விரும்பினார்.  1915ம் ஆண்டில் தல்துவ ரத்துகம ராலகே வேரிஸ் சிஞ்சோ என்ற பெயரில் சோமாராம தேரர் 1915ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ரத்துமக ராலகே டேலிஸ் அப்புவாமி தாயாரின் பெயர் இசோ ஆமி. சோமாராம தேரர் தல்துவ இயல பாடசாலையிலும் தெஹியோவிட்ட பாடசாலையிலும் ஆரம்ப கல்வியை பெற்றார். 1929ம் ஆண்டு ஜனவரி 20ம் திகதி சாதாரண மனிதராக இருந்த இவர் தனது 14வது வயதில் கண்டியில் துறவறம் பூண்டார்.  (மேலும்....)

மன்மோகனார் குழி தோண்டினார். மோடியார் மண் மூடி நிரப்பினார்.

இதை, இதை, இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று புளகாங்கிதத்துடன் மோடி அரசைப் பாராட்டுகிறார்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் பகவான்கள். அவரை உண்மையிலேயே பிரதமராக்கியது அவர்களே அல்லவா? பெட்ரோல் விலையைத தொடர்ந்து டீசல் விலையிலும் அரசு தனது கட்டுப்பாட்டை முற்றிலுமாகத் தனியாருக்கு விட்டுக்கொடுக்கும் முடிவை சனிக்கிழமையன்று (அக்.18) எடுத்தது. சந்தை நிலவரப்படி இனிமேல் பெட்ரோல், டீசல விலை ஏறும் இறங்கும், அதிலே அரசாங்கம் தலையிடாது என்பதே இதன் பொருள். உலகச் சந்தையில் தற்போது பெட்ரோலிய எண்ணை விலை குறைந்துள்ள நேரத்தில் இந்த முடிவை அறிவித்து, பார்த்தீர்களா எங்கள் ஆட்சியில் பெட்ரோல் - டீசல் விலை குறைந்துவிட்டது என்று விளம்பரப்படுத்திக்கொள்ளலாம், விலை உயரும்போது உலகச் சந்தையின் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ளலாம் என்பதே இவர்களது தந்திரம். இதனால் மற்ற அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயரும், எளிய மக்களின் வாழ்வு மேலும் சீர்குலையுமே...? அதனாலென்ன, சுதந்திரச் சந்தையில் அதெல்லாம் ஆரோக்கியமான பொருளாதாரத்தின் அறிகுறி என்று தத்துவம் சொல்லவும், அப்படியும மக்கள் கொந்தளித்தால் திசை திருப்பவும் தெரியாதா என்ன! பெட்ரோலிய தொழிலில் உள்நாட்டு - வெளிநாட்டுத் தனியார் பெரு நிறுவனங்கள் நுழைந்தபிறகுதான் இந்த முடிவுகள் வேகமாக எடுக்கப்படுகின்றன என்பதை மக்கள் உணர்ந்தாக வேண்டும். மன்மோகனார் குழி தோண்டினார். மோடியார் மண் மூடி நிரப்பினார். புதைக்கப்பட்டிருப்பது அரசின் பொறுப்பும் மக்களுக்கான பொருளாதாரப் பாதுகாப்பும்.

(Kumaresan Asak)

ஜெயலலிதாவுக்கு பின் எப்படி இருக்கிறது தமிழக தலைமை செயலகம்?

தேரடி வீதியில் தேவதை வந்தா, திருவிழானு தெரிஞ்சுகோ…' என்ப துபோல முன்னாள் முதலமைச்சர் சென்னையில் இருந்தாலே, களைகட்டும் தமிழகத்தின் தலைமைச் செயலகமான ஜார்ஜ் கோட்டை, இப்போது திருவிழா முடிந்த திடல்போல நிற்கிறது. 'தமிழ்நாட்டு க்கு 'முதலமைச்சர்' என ஒருவர் இருக்கிறாரா?' என்று சந்தேகம் வரும் அளவுக்கு கப்சிப் அமைதியில் இருக்கிறது கோட்டை விட்டாரம். ' ஜெயலலிதாவுக்கு முன்'… ' ஜெயலலிதாவுக்குப் பின்' என பல அலேக் மாற் றங்கள் தலைமைச் செயலகத்தில். நுழைவாயிலில் பார்வையாளர்களை சோதனை செய்யும் இடத்தில் காக்கிகளின் எண்ணிக்கை குறைந்துவிட் டது. முன்பெல்லாம் சிகரெட், பீடி, பான்பராக், பிளேடு, சீப்பு போன்றவை நுழைவாயில் சோதனையில் பெட்டி பெட்டியாகப் பறிமுதல் ஆகும். இப் போது அந்தப் பெட்டிகள் காலியாகக் காற்றாடுகின்றன. (மேலும்....)

பெண்கள் இல்லாத தமிழகம்?

எதிர்கால இந்தியா சந்திக்கும் பெரிய பிரச்சினை இதுதான் என்று எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள். இந்தியாவில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை வெகுவாய்க் குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் 2020இல் திருமணம் செய்து கொள்ள பெண் கிடைக்காமல் மூன்று கோடி ஆண்கள் இருப்பார்களாம்! குழந்தைகளின் இறப்பு விகிதாசாரத்தைக் குறைக்கவும், அவர்கள் கருவிலே முழுமையாக உருப்பெறுவதற்கு முன் உடலிலுள்ள குறைபாடுகளைக் கண்டுபிடித்து ஏற்ற சிகிச்சையளித்து கருவிலேயே சீர்செய்து ஊட்டச் சத்துள்ள குழந்தைகளை ஈன்றெடுக்கும் நோக்கோடும் கொண்டுவரப்பட்டதுதான் ஸ்கேனிங்கருவி. ஆனால் இன்றைய பெற்றோர்களோ குழந்தையின் ஆரோக்கிய பரிசோதனையை புறம்தள்ளிவிட்டு, கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து கொள்வதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர். (மேலும்....)

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்ற தேர்தல் முடிவு

மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. மகாராஷ்ட்ராவில் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஹரியானாவில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 15ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மகாராஷ்ட்ராவில், பா.ஜ.க., காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டனர். இதேபோல், ஹரியானாவில் பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தளம் கட்சிகள் களத்தில் நின்றன. இந்த தேர்தலின் வாக்குப்பதிவுகள் எண்ணிக்கை இன்று (19ஆம் தேதி) காலை தொடங்கி நடந்து வருகிறது. இதில், மகாராஷ்ட்ரா மற்றும் ஹரியானா மாநிலத்தில் பா.ஜ.க. முன்னிலை பெற்று வருகிறது. மகாராஷ்ட்ராவில், பா.ஜ.க. 115 இடங்களிலும், காங்கிரஸ் 49 இடங்களிலும், சிவசேனா கட்சி 58 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 44 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 18 இடங்களில் இதர கட்சிகள் முன்னிலையில் உள்ளது. இங்குள்ள ஒரு தொகுதியில் மட்டும் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இதேபோல், ஹரியானாவில், 46 இடங்களில் பா.ஜ.க.வும், காங்கிரஸ் 15 இடங்களிலும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி 20 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. 9 இடங்களில் இதர கட்சிகள் முன்னிலையில் உள்ளது.

ஒக்ரோபர் 18, 2014

ஒட்டுக்குழு உறுப்பினர் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரனே! அன்று தெற்கில் இன்று வடக்கில் - ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்  தெரிவிப்பு  

எங்களை பார்த்து  ஒட்டுக்குழு என்று கூறும் வடக்கின் முதல்வர் விக்னேஸ்வரன் அன்று தெற்கில் ஒட்டுக்குழுவாக இருந்தவர் .இன்று வடக்கில் ஒட்டுக்குழுவாக இருப்பவர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் எஸ்.விந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (12) தெல்லிப்பளையில் நடந்த  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய அலுவலக  திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபை என்பது மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் இரங்கிப்பெற்ற பிச்சையல்ல. மாறாக நாங்கள் இரத்தம் சிந்தி போராடியதால் பெற்ற உரிமையாகும். 13 வது  திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி அதிலிருந்து எமது அரசியல் இலக்கை நோக்கி செல்வதே எமது நடைமுறை யதார்த்த கொள்கையாகும். (மேலும்....)

யாழ் தேவி ரயில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் காங்கேசன்துறை பயணம்

யாழ் தேவி ரயில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் காங்கேசன்துறை வரை பயணம் செய்யும். கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவையும் டிசம்பரில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என புதிய ரயில்வே பொது முகாமையாளர் விஜய அமரதுங்க தெரிவித்தார். 2016ஆம் ஆண்டில் மின்சார ரயில் சேவை ஆரம்பிக்கவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் ரயில் சேவையை நவீன மயப்படுத்த புதிதாக ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் என்பன கொள்வனவு செய்வதற்காகவும் அரசாங்கம் 1200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ரயில்வே சேவையை மேம்படுத்த அரசாங்கம் பெருமளவு நிதி முதலீடு செய்துள்ளது. இதன் கீழ் ரயில் பாதைகளை மறுசீரமைக்கவும் புதிதாக ரயில் என்ஜின்கள், ரயில் பெட்டிகள் தருவிக்கவும் உள்ளோம். இது தவிர மேலும் பல பாரிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. மக்களுக்கு பாதுகாப்பான வசதியான சேவை வழங்குவதே எமது நோக்கமாகும். யாழ்தேவி யாழ்ப்பாணம் வரை சேவையை ஆரம்பித்துள்ளது. யாழ் - காங்கேசன் துறை மற்றும் மடு - தலைமன்னார் இடையி லான ரயில் பாதைகள் ரயில் நிலையங்கள் என்பன துரிதமாக நிர்மாணிக்கப்படுகிறது. டிசம்பரில் அப்பகுதிகளுக்கான சேவை ஆரம்பிக்கப்படும். 2016இல் மின்சார ரயில் சேவை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதனூடாக ரயில் சேவைகளுக்கு செலவிடும் தொகை குறைவடையும் என்றார்.

குற்றமற்றவர் என நிரூபணமாகும் வரை ஜெயா தேர்தலில் போட்டியிட முடியாது

ஜெயலலிதாவுக்கு தண்டனையை நிறுத்தி வைத்து பிணை வழங்கப் பட்டுள்ளதே தவிர அவர் 'குற்ற வாளி" என்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பு க்கு இன்னும் தடை விதிக்கப்பட வில்லை. எனவே கர்நாடகாவில் மேல் முறையீடு விசாரணை முடிந்து அவர் குற்றமற்றவர் என்று கூறும் வரை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது, அவரது பதவி பறிப்பும் தொடரும். உச்சநீதிமன்றம் நேற்று nஜயல லிதாவுக்கு நிபந்தனை பிணை வழ ங்கி உத்தரவிட்டுள்ளது. பிணை வழங்குவது என்றால், தண்டனையை நிறுத்தி வைப்பது என்று அதற்கு மற்றொரு பெயரும் உண்டு என்பது சட்டம் அறிந்த அனைவருக்கும் தெரி ந்ததே. தண்டனை நிறுத்தி வைத்தும் பிணை கிடைத்தும் கூட ஜெயல லிதாவுக்கு பயனில்லையே! எனவேதான் ஜெயலலிதாவின் தண் டனையை நிறுத்தி வைத்து பிணை அளிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தண்டனை அனுபவிக்கும் ஒருவர் எப்படி பிணையில் வெளியே போக முடியும் என்ற சின்ன லொஜிக் இதன் பின்னால் ஒளிந்துள்ளதால் தண்ட னையை ரத்து செய்துவிட்டு பிணை வழங்குவதாக அறிவித்துள்ளனர் நீதிபதிகள். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு தவறு என்று கூறி ஜெயலலிதாவை விடு வித்தால் தேர்தலில் போட்டியிடும் தகுதியை பெறுவார். எனவே இந்த விசாரணைகள் முடியும்வரை ஜெயலலிதா எந்த பதவிக்கும் வர முடி யாது, தேர்தலிலும் போட்டியிட முடி யாது. இப்போது விடுதலையாகி ஜெயலலிதா சென்னை வந்தாலும் அவ ரால் முழு நேர அரசியல்வாதியாக எதிலும் ஈடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டிகை என்பதன் அர்த்தம் குடியும் கும்மாளமும் தானா?

பண்டிகை என்றதும் குடியும் கும்மாளமும் தான் எனப் பலர் நினைக்கின்றனர். பண்டிகைக்காக பிள்ளைகளுக்குப் புத்தாடை வாங்குவதிலோ, வீட்டுத் தேவைக்குரிய அவசியப் பொருட்களை வாங்குவதிலோ கவனம் செலுத்தாமல், மதுபானத்தை மாத்திரம் முன்கூட்டியே வாங்கி பத்திரப்படுத்தி வைக்கும் குடும்பத் தலைவர்கள் பலர் உள்ளனர். மலையகத் தோட்டப் பகுதிகளில் தீபாவளிக் கொண்டாட்டத்துக்காக சில குடும்பத் தலைவர்கள் இவ்விதமாக செயற்படுவதைக் காண வேதனையாக உள்ளது. தோட்டப்பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்களில் தற்போது மதுபானம் பல மடங்கு விற்பனை செய்யப்படுவதைக் காண முடிகிறது. மதுபானசாலைக்கு முன்பாக தோட்டத் தொழிலாளர்கள் பலர் முண்டியடித்தபடி மதுபானம் வாங்குகின்றனர். தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்காகவே இவ்விதம் அதிகளவு மதுப்போத்தல்களைக் கொள்வனவு செய்வதாக அவர்கள் கூறுகின்றனர். கடந்த காலங்களை விட இம்முறை கூடுதல் மது விற்பனை நடைபெறுவதை தோட்டப் பகுதிகளில் அவதானிக்க முடிகிறது. (மேலும்....)

கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய அவையிலே அரியநேந்திரன் கொட்டித்தீர்த்த அருவருக்கத்தக்க வார்த்தைகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் அரசியல் என்பது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களை எவ்வளவு கீழ்த்த ரமாக கையாளுகின்றது என்பதற்கு அரிய நேந்திரனின் இந்த பேச்சு மீண்டுமொரு உதாரணமாகியுள்ளது. தனக்கு தேவையெண்டால் எல்லோரும் தமிழன் இல்லையெண்டால் சக்கிலி பறையரோ" இலங்கையின் பெண்ணியவாதியும் எழுத்தாளருமான இராஜேஸ்வரி பாலariyendranசுப்ரம ணியம் எழுதிய நாவல்களில் முக்கியமானது "தில்லையாற்றங்கரை"என்பதாகும். இந்த நாவல் சுமார் இருபது வருடங்களுக்குமுன் எழுதப்பட்டது.இந்தநாவல் தமிழரசு கட்சியின் தொடக்ககாலங்களில் அவரது சொந்த கிராமங்களான அம்பாறை மாவட்டத்தின் கோளாவில்,மற்றும் ஆலையடிவேம்பு கிராமவெளிகளில் பயணிக்கின்றது.அதில் வருகின்ற ஒரு கம்யுனிஸ்ட் வாத்தியார் ஒரு தமிழரசுகட்சி பிரமுகரை பார்த்து இப்படி கேட்பார். (மேலும்....)

தோழர்களே!

எமது அன்புக்கினிய தோழரும் தோழர் நாபாவின் நெருங்கிய தோழனுமாகிய "பல்லவன் தாஸ்" அவர்களின் அன்புப் புதல்வி ரூபிகா வின் திருமணம் எதிர்வரும் 30-10-2014 [ வியாழக்கிழமை] சென்னையில் நடைபெறவுள்ளது. ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து அர்ப்பணிப்போடு செயல் புரிந்த தோழர்களில் தோழர் தாஸ் மிகவும் முக்கியமானவர் என்பதை அவரை நன்கு அறிந்த தோழர்களுக்கு தெரியும். எனவே அவரது இல்லத்தின் முதல் திருமணமான இந்த நிகழ்வை வெளிநாடுகளில் உள்ளோர் இதனூடாக வாழ்த்துவதோடு, தமிழகத்தில் உள்ளோர் நடைபெறும் விழாவுக்கு நேரடி அழைப்பாக இதை ஏற்று நேரில் வந்திருந்து அவரது மகளை வாழ்த்தியருளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தோழர் தாஸ் தொடர்புகளுக்கு: கைபேசி இலக்கம்:  91-9382165791

ஒக்ரோபர் 17, 2014

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என நிபந்தனை

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவருக்கு டிசம்பர் 18-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டது. மேலும், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நடைமுறைகளை நிறுத்திவைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுகவின் 43-வது ஆண்டு விழாவன்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில், அக்கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். (மேலும்....)

ஆட்சி மாற்றத்திற்கான சாத்தியம் உண்டா?

(யதீந்திரா)

ஒப்பீட்டளவில் இன்றைய சூழலில் சிங்கள மக்களின் இனவுணர்வுக்கு நெருக்கமானதொரு தலைவராக ஜனாதிபதி ராஜபக்‌ஷவே இருக்கிறார். அவரது தலைமையிலான அரசு குறித்தும் அவரது சகோதரர்கள் குறித்தும் என்னதான் எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைத்தாலும் அவ்வாறான விமர்சனங்களால் ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செல்வாக்கை பெருமளவிற்கு சரிக்க முடியவில்லை. இதற்கு எதிரணியில் ஒரு ஆளுமைகொண்ட தலைவர் இல்லாமையும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். சமீபகாலமாக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் எதிர்க்கட்சியினர் ஆலோசித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் சிலரது பெயர்களும் வெளிவந்தன. எனினும் அவர்கள் எவராலும் ராஜபக்‌ஷ என்னும் மனிதருக்கு எதிராக சிங்கள மக்களை திருப்ப முடியுமா என்பது சந்தேகமே! இன்றும் தெற்கில் ஒரு ராஜபக்‌ஷ அலைதான் இருக்கிறது. அவருக்கு நிகராக ரணில் அலை சந்திரிக்கா அலை அல்லது சோபித அலையோ இல்லை. ராஜபக்‌ஷவிற்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் ஒரு அலையை தோற்றுவிக்கக் கூடிய தலைவர்களாக எவரையும் அடையாளம் காண முடியவில்லை. இந்த பின்புலத்தில் நோக்கினால் ஆட்சிமாற்றம் ஒன்று ஏற்படுவதென்பது பலரும் விவாதிப்பது போன்று எளிதான ஒன்றல்ல. (மேலும்....)

சமவுரிமை இயக்கம்

மீண்டும் ஒரு தற்கொலை முயற்சியா?

கனடாவில் ரொன்ரொடோ நகரில் சமவுரிமை இயக்கத்தின் முக்கியஸ்தவர்களும் முன்னிலை சோசலிக் கட்சியின் தலைவர்களும் பங்குபற்றிய கூட்டம் நடைபெற்றது. கூட்டதிற்கு வழமையாக வருகின்றவர்களே வந்திருந்தார்கள். அதிலும் வழமையாக வருகின்ற முக்கியமான சிலரைக் காணமுடியவில்லை. “சமவுரிமைக்கான இயக்கம் எனக் கூறப்பட்டபோதும் ரொரன்டோவில் வாழ்கின்ற சிங்கள முஸ்லிம் நண்பர்களைக் காணமுடியவில்லை. மாறாக கருத்துரை வழங்குவோராக சிங்களவர்களும் தமிழர்களும் இருந்தனர். கேட்போராக தமிழர்கள் மட்டுமே இருந்தனர்” என ஒருவர் குறிப்பிட்டார். ஆகவே இக் கூட்டமே இவர்களது அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றது. அல்லது தமிழர்களை மட்டும் உள்வாங்கும் இவர்களது வேலைத் திட்டமோ இது என சந்தேகம் கொள்ள வைக்கின்றது. இருப்பினும் வீக்கிரமாதித்தன் கதைபோல மீண்டும் நம்பிக்கையுடன் செயற்பட ஆரம்பித்திருப்பவர்களை நேர்மறையாக பார்த்து அவர்களது கருத்துக்களை கொள்கைகளை கோட்பாடுகளை நாம் விமர்சிப்போம்.
(வ.க.செ வீகேஎஸ் மீராபாரதி)

மலேஷியாவில் கைதான இரு இலங்கையர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை

இந்தியாவில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேஷியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையரான ஷாகீர் உசைன் வழங்கிய தகவலுக்கு அமைய மொஹமட் உசையின், மொஹமட் சுலைமான் எனும் இருவர் கடந்த மே மாதம் கோலாலம்பூரில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் தென்னிந்தியாவில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் சிலவற்றுக்கு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. எனவே, இவர்களிடம் விசாரணை நடத்தும் பொருட்டு இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு மலேஷியாவிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது. எனினும் அதனை மலேஷியா நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.

ஜெயாவின் பிணை மனு மீது இன்று விசாரணை

முன்னாள் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா பிணை கோரினால் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று அறிவித்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சுப்பிரமணிய சுவாமியின் இந்த புதிய மனுவால் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படி பெங்களூர் சிறையில் இருக்கும் ஜெயலலிதா பிணை கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை இன்று வருகிறது. விசாரணையின் முதல் நாளே பிணை கிடைக்குமா? அல்லது தள்ளிப்போகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு குறித்து முதன் முதலில் வழக்கு தொடுத்த சுப்பிரமணிய சுவாமி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில் “ஜெயலலிதாவுக்கு பிணை வழங்குவது குறித்து மனுதாரர் என்பதால் என்னுடைய கருத்தையும் கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு பிணை கோரினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிடைக்காமல் செய்வேன் என்று கூறிவந்த சுப்பிரமணிய சுவாமி அதன்படியே நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துவிட்டார்.

யாழ். தேவி

இரு தினங்களில் ரூபா 9 இலட்சம் வருமானம்

யாழ். தேவி ரயிலூடாக கடந்த இரண்டு நாட்களில் 09 இலட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். ரயில் நிலைய அதிபர் நா. தபானந்தன் நேற்று வியாழக்கிழமை (16) தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி பளையில் இருந்து யாழிற்கான யாழ். தேவி ரயில் சேவையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பித்து வைத்தார். அதன் பின்னர் கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத சேவைகளில், 3 இலட்சத்து 26 ஆயிரத்து 220 ரூபாவும். கடந்த 15 ஆம் திகதி யாழில் இருந்து கொழும்பிற்கான புகையிரத சேவையில் 6 இலட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபா வருமானமும் கிடைக்கப் பெற்றுள்ளதாக அவர் கூறினார். இதன் அடிப்படையில் இரு தினங்களும் 9 இலட்சத்து 80 ஆயிரத்து 525 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகவும் அதி விசேட இருக்கைகளுக்கான பதிவுகள் முன்கூட்டியே மேற்கொள்ளப்படுவதால் அதி விசேட இருக்கைகளுக்கான தட்டுப்பாடுகள் நிலவுகின்றதாகவும் ரயில் நிலைய அதிபர் மேலும் கூறினார்.

சுரேஷ் பிரேமச்சந்திரனால் தெரிவுசெய்யப்பட்ட கோப்பாய் பிரதேச கிளை நிர்வாகிகள் தமிழரசு கட்சியினால் நிராகரிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோப்பாய் கிளை தொகுதியின் நிர்வாகிகளின் தெரிவை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதென தமிழரசு கட்சியின் கோப்பாய் பிரதேச கிளையின் செயலாளரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான அ. பரஞ்சோதி தெரிவித்துள்ளார். பரஞ்சோதி நிர்வாகிகள் தெரிவு குறித்து தெரிவிக்கையில் கடந்த 04-10-2014 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கான கோப்பாய் பிரதேச கிளைக்கான நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளமையை தமிழரசு கட்சியின் கோப்பாய் பிரதேச கிளை நிர்வாக செயலாளர் என்றவகையில் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.  இத் தெரிவின் போது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சியையோ அல்லது ஏனைய கட்சிகளையோ  அழைக்காமல் அறிவிக்காமல் நடத்தப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழரச கட்சியினராகிய நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பிரதான அங்கம் வகிப்பதால் தமிழரசு கட்சியின் பிரசன்னம் அவசியம் என்பது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சியினருக்கும் தெரிந்த விடயமாகும்.  தமிழரசு கட்சியின் கோப்பாய் தொகுதி செயலாளர் என்ற முறையில் கோப்பாய் கிளை நிர்வாகிகள் தெரிவுபற்றி கூட்டமைப்பு தலைமையினால் எனக்கு அறிவித்தல் கொடுக்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக கூட்டமைப்பின் தலைமையிடம் கேட்டபோது பிரதேச மட்டத்தில் ஒரு கிளை அமைப்பதாகத் தீர்மானிக்கப்படவில்லை என கூறினார்கள்.  அத்துடன் கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளையும், அழைக்காமல் கூட்டமைப்பின் தலைமையின் தீர்மானம் இன்றி ஒரு கட்சியினால் சுட்டப்பட்ட இந்தக் கூட்டம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்பதை கோப்பாய் பிரதேச ஆதரவாளர்களுக்கு தெரிவித்துக் கொள்வதாக கூறினார். கோப்பாய் பிரதேச கிளைத் தொகுதியின் நிர்வாகிகள் தெரிவு தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவம் வகிக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனால் மேற்கொள்ளப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஒக்ரோபர் 16, 2014

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தினால் புலிகள் மீதான தடை நீக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது.  தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்குறைஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் போது, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதம் ஏந்தவில்லை. தங்களது மக்களுக்காக வன்முறையற்ற வழிகளில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் போராட விரும்புகின்றனர் என்று வாதிடப்பட்டது.  மேலும் விக்கிபீடியா தகவல்களை அடிப்படையாகக் கொண்டு விடுதலைப் புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இலங்கையில் இனப்படுகொலை என்று கூறுமளவுக்கான ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகத்தான் நியாயமான போராட்டத்தை விடுதலைப் புலிகள் நடத்தினர் என்றும் புலிகளின் வழக்குறைஞர் கோப் வாதிட்டார். இன்று இந்த வழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

என் மனவலையிலிருந்து….

வடமாகாண முதல் அமைச்சர் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்

(சாகரன்)
முன்னாள் ஆயுதப் போராட்ட அமைப்புக்களுடன் சேர்ந்து இயங்கமுடியாது -
வடமாகாண முதலமைச்சர்

வட மகாண முதல் அமைச்சர் விக்னேஸ்வரனின் பேச்சு கண்டனத்திற்குரியது. கவலையழிப்பது, கபடத்தனமானதும் கூட. அதுவும் இன்றைய நிலையில் தமிழ் மக்களின் முக்கிய அரசுத் தலைமைப் பதவியில் இருப்பவர் இப்படி பொறுப்பற்றதனமாக பேசுவது எந்தவகையிலும் ஏற்புடையது அல்ல. அதுவும் முன்னாள் நீதிபதி, மூத்த குடிமகன், பெருவாரியான  தமிழ் மக்களின் விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவரின் வாக்கு மூலம் ரொம்பவும் வருத்தம் அளிக்கின்றது. இவரின் நேர்மைத் தன்மையை, உண்மைத் தன்மையை மேலும் கேள்விக் குறியாக்கி நிற்கின்றது. (மேலும்....)

சூடு பிடிக்கிறது கறுப்பு பண வேட்டை அதிகாரிகள் குழு சுவிஸ் பயணம்

சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள கறுப்பு பணம் குறித்த தகவல்களை சேகரிக்க இந் திய அதிகாரிகள் குழு ஒன்று சுவிட்சர்லாந்து செல்கிறது. இந்தியாவில் உள்ள பலர் கறுப்பு பணத்தை சுவிஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிக ளில் பதுக்கி வைத்துள்ளனர். இதனால் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத் ;தின் போது வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்பதே எங்கள் குறிக்கோள் என பா.ஜ. கூறியது. இதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த பா.ஜ. அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ள இந்தி யர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் என இந்திய அரசு சுவிட்சர்லாந்து நாட்டிற்கு கோரிக் கை வைத்தது. முதலில் இதற்கு தயங்கிய அந் நாடு, பின்னர் அந்நாட்டின் விதிமுறைக்குட்பட்டு தகவல்களை தர ஒப்புதல் அளித்தது. இதை யடுத்து சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கி வைத்துள்ளவர்கள் குறித்த விவரங்கள் பரிமாறப் பட்டன. மற்ற நாடுகளிலும் இதே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒரு புறம் அம்பானி கோஷ்டிகளுக்கு சாமரம் வீசிக் கொண்டும்இ மறு புறம் அமெரிக்காவின் காப்ரேட் நிறுவனங்களுக்கு இந்திய மக்களின் உழைப்புகளைச் சுரண்ட கதவுகளை அகலத் திறந்து விட்டுக் கொண்டும் கறுப்புப் பண வேட்டையாம். மோடி அரசின் இரட்டை வேடம் இந்திய மக்களுக்கு புரியாதோ....?

புலிகளிடம் இழந்த நகைகளை மக்கள் மீளப்பெறும் வாய்ப்பு

புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை உரியவர்களி டம் கையளிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர் இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனரென தெரிய வருகிறது. கடந்த 12 ஆம் திகதி (12.10.2014) கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சுமார் 20 ஆயிரம் பேருக்குக் காணி உறுதிகளை வழங்கினார். இங்கு சகலரையும் திகைப்படையச் செய்யும் வகையில் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. புலிகளிடம் நகைகளைப் பறிகொடுத்து அடையாளம் காணப்பட்ட சிலருக்கு ஜனாதிபதி நகைகளை மீளக்கையளித்தார். ஜனாதி பதியிடம் மேடையில் நகைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மிக வும் மகிழ்ச்சி பொங்கியவர்களாக ஜனாதிபதியின் கரங்களை இறுகப்பற்றி உணர்வுகளை வெளிப்படுத்தினர். புலிகள், வன்னிப்பிரதேசத்தை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத் துக்கொண்டு நிழல் அரசாங்கமொன்றை சட்டவிரோதமாக நடத்தி னர். இங்கு சட்டவிரோதமாகச் செயற்படுத்தப்பட்ட தமிழீழ வங்கி களிலும் அடகு நகை நிலையங்களிலும் ஏராளமான நகைகள் வைக்கப்பட்டிருந்தன. (மேலும்....)

எபோலாவால் 70 வீத உயிர்ப் பலி

மேற்கு ஆபிரிக்காவை தாக்கியிருக்கும் எபோலா வைரஸினால் பாதிக்கப்பட்ட 10 இல் 7 பேர் கொல்லப்படுவதாக குறிப்பிட்டிருக்கும் உலக சுகாதார அமைப்பு இதனை இரண்டு மாதங்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால் வாரமொன்றுக்கு 10,000 பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. உத்தியோகபூர்வ மாக கணித்திருக் கும் 50 வீத மர ணத்தை விடவும் மரண வீதம் அதிக மாகும். இந்த தாக் கத்தை உடன் கட்டுப்படுத்தாவிட் டால் ஏராளமான வர்கள் கொல்லப் படுவார்கள் என்று உலக சுகாதார அமைப்பின் உதவி செயலாளர் நாய கம் டொக்டர் பிரூஸ் அய்ல்வாட் குறிப்பிட்டுள்ளார். "இந்த நிலை தொடர்ந்தால் இன்றிலிருந்த மூன்று அல்லது நான்கு வாரத்தில் வாரமொன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிப்படைவார்கள்" என்று அவர் கூறினார். உலக சுகாதார அமைப்பு செவ்வாயன்று வெளியிட்ட தரவுகளின்படி எபோலாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,914 ஆக உயர்ந்திருந்தது. அதில் மொத்தம் 4,447 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சியரலியோன், கினியா மற்றும் லைபீரிய நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. மனிதனின் உடல் திரவங்களால் பரவும் எபோலா வைரஸ{க்கு இதுவரை சிகிச்சை முறைகள் கண்டறியப்படவில்லை.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாண பணிகள் ஆரம்பம்

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் அடுத்த மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்படவிருக்கிறது. வரலாற்றில் அதிகூடிய முதலீடான 300 முதல் 350 பில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் முதலாம் கட்டம் 4 வருடங்களில் நிறைவு செய்யப்பட இருப்பதாக நெடுஞ்சாலை திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். இதனூடாக கண்டிக்கும், தம்புள்ளைக்கும் 1 1/4 மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்று தெரிவித்த அமைச்சர் அடுத்து யாழ்ப்பாணத்துக்கும் திருகோணமலைக்கும் நெடுஞ்சாலையை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். முதலில் 4 வழிப்பாதையாக அமைக்கப் பட்டு அடுத்து ஆறு வழிப்பாதையாக அதிகரிக்கப்படும். தம்புள்ள வரையான பாதை அதிக வாகன நெரிசல் கொண்டது. அங்கு செல்ல கூடுதல் நேரம் பிடிக்கிறது. நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பின்னர் இது ஒன்றேகால் மணித்தியாலயமாக குறையும். இந்தத் திட்டத்தினூடாக குருணாகல், கேகாலை, மாத்தளை, கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் 3/4 பகுதி மக்கள் பயனடைய உள்ளனர். மக்களின் தேவை உணர்ந்தே இந்த திடம் ஆரம்பிக் கப்பட்டது.

ஹொங்கொங் பிரதான வீதியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியேற்றம்

ஹொங்கொங்கில் அரச தலைமையகத் திற்கு செல்லும் வழியை இடைமறித் திருந்த ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட் டக்காரர்களை பொலிஸார் கலைத்துள் ளனர். இதன்போது இரு தரப்புக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது. கலகம் அடக்கும் அங்கிகளை அணிந்திருந்த பொலிஸார் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிராக மிளகுப்பொடிகளை விசிறியதோடு பலரையும் கைதுசெய்தனர். இதன்மூலம் நேற்று புதன்கிழமை காலை லியுங் வு+ பிரதான வீதியை பொலிஸார் விடுவித்தனர். ஹொங்கொங்கின் மையப்பகுதியை இரண்டு வாரங்களுக்கு மேலாக ஆக்கிரமித்திருக்கும் ஆர்ப்பாட்டக்காரர் களில் மாணவர்கள், ஜனநாயக ஆர்வலர் களும் அடங்குகின்றனர். ஹொங்கொங்கின் அடுத்த தலைவரை தேர்வுசெய்வதற்கு சுதந்திரமான தேர்தலை கோரியே இவர்கள் போராட்டம் நடத்து கின்றனர். ஹொங்கொங்கை நிர்வகிக்கும் சீனா, மக்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கியபோதும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முன்கூட்டியே தேர்வு செய்யப்படவுள்ளனர். எனினும் கடந்த மூன்று தினங்களாக ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் வீதிகளில் இருந்து படிப்படியாக அகற்றி வருகின்றனர். இதில் ஆர்ப்பாட்டக் காரர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.

ஒக்ரோபர் 15, 2014

நமு பொன்னம்பலம் சமூகத்தளம்

http://www.namuponn.ca/media/Sequence%2011_1.mp4

உத்தரதேவி இணையுமா?

பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி புகையிரத சேவை 24 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.  எனினும், இந்த யாழ்தேவியுடன் இணைந்த சேவையாக 60களில் இணைத்து கொள்ளப்பட்ட உத்தர தேவி, மறக்கப்பட்டுவிட்டதா இன்றேல் யாழ்தேவிக்கு இணைந்ததாக உத்தர தேவியும் சேவையில் இணைத்துகொள்ளப்படுமா என்று கேள்வி எழும்பியுள்ளது.யாழ்தேவி புகையிரத சேவையை யாழ்ப்பாணம் வரையிலும் ஈடுபடுத்துவதற்கான பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளமையினால் உத்தரதேவி தொடர்பிலான தகவல்களை தம்மால் வழங்கமுடியாதுள்ளது. யாழ்தேவி (யாழ் தேவி எஸ்பிரஸ்) என்ற சேவை, 1956ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.  யாழ்தேவி கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் ஊடாக காங்கேசன்துறை வரை இயங்கிய பயணிகள் புகையிரத சேவையாகும்.இச்சேவை இராகமை, பொல்கஹவெல, மாஹோ, அநுராதபுரம், வவுனியா, கிளிநொச்சி போன்ற இடங்களை தனது பயணப்பாதையில் கடந்து சென்றது. (மேலும்....)

புலிகளிடம் நகைகளை பறிகொடுத்தோர் ஆதாரங்களுடன் விண்ணப்பியுங்கள்

புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட வடபகுதி மக்களின் நகைகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2377 சட்டபூர்வ உரிமையாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதோடு புலிகளின் வங்கிகளிலும் அடகு நிலையங்களிலும் தமது நகைகளை அடகு வைத்த ஏனைய மக்களும் உரிய ஆதாரங்ளுடன் விண்ணப்பிக்குமாறு பாதுகாப்பு படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புலிகள் இயக்கத்தினால் நிர்வகிக்கப்பட்ட தமிbழ வங்கி மற்றும் ஈழ அடகு நிலையங்கள் என்பவற்றில் யுத்த காலத்தில் வடபகுதி மக்கள் தமது தங்க நகைகளை அடகு வைத்திருந்தனர். அவை அடகு வைக்கப்பட்ட ஆவணங்களுடன் அட்டவணைப்ப டுத்தப்பட்டு பாதுகாப்புப் படையினரால் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. புலிகளின் வங்கிகள் மற்றும் அடகு நிலையங்களில் தமது நகைகளை அடகு வைப்பதற்காக பயன்படுத்திய ஆவணங்கள் அல்லது வேறு ஆவணங்கள் என்பவற்றுடன் வன்னி, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் யாழ்ப்பாண சிவில் இணைப்பு அலுவலகங்களில் ஒப்படைக்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.சரியான உரிமையாளர்களால் அடையாளங் காண முடியாத தங்க நகைகள் யாவும் அரச சட்ட ஒழுங்குகளுக்கு அமைய மத்திய வங்கியிடம் கையளிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

யாழ்.தேவியில் மக்கள் ஆர்வத்துடன் பயணம்: அடுத்தவாரம் முதல் முன்பதிவு

நேற்று முதல் ஆரம்பமாகியிருக்கும் கொழும்பு - யாழ்ப்பாணம் இடையிலான ரயில் சேவையில் கட்டண விபரங்களை ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட நகர் சேர் கடுகதி ரயிலின் கட்டணம் சகல வகுப்புகளுக்கும் 1500 ரூபா. தேசத்திற்கு மகுடம் நகர் சேர் கடுகதி ரயிலின் மூன்றாம் வகுப்பு கட்டணம் 520 ரூபா. இரண்டாம் வகுப்பு கட்டணம் 800 ரூபா. யாழ். தேவி மற்றும் இரவு தபால் ரயிலின் சாதாரண கட்டணம் மூன்றாம் வகுப்பு 320 ரூபா, இரண்டாம் வகுப்பு 570 ரூபா முதலாம் வகுப்பு 1020 ரூபா. யாழ் தேவி ரயிலின் உறங்கலிருக்கை கட்டணம் இரண்டாம் வகுப்பு 700 ரூபா. இரவு தபால் ரயிலின் உறங்கலிருக்கை கட்டணம் மூன்றாம் வகுப்பு 500 ரூபா இரண்டாம் வகுப்பு 700 ரூபா முதலாம் வகுப்புக்கான படுக்கை வசதி கட்டணம் 1400 ரூபா. கல்கிஸ்ஸையில் இருந்து தினமும் 2 ரயில்களும் புறக்கோட்டையிலிருந்து 3 ரயில்களும் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. டயலொக், மொபிடெல், எடிசலாட் ஊடாக 365 இலக்கத்தை அழைப் பதினூடாகவும் டெலிகொம் தொலை பேசியூடாக 1365 இலக்கத்தை அழைப் பதினூடாகவும் முன்பதிவு செய்ய முடியும். ரயில் பெட்டியொன்றை ஒதுக்க முடியும் எனவும் இதற்காக 90 ஆயிரம் ரூபா அறவிடபடும் எனவும் வர்த்தக அத்தியட்சகர் தெரிவித்தார்.

பலஸ்தீன தேசத்திற்கு பிரிட்டன் எம்.பிக்கள் ஆதரவாக வாக்களிப்பு

பிரிட்டன் பாராளுமன்ற கீழவை யில் நேற்று முன்தினம் இடம் பெற்ற இந்த வாக்கெடுப்பில் அரைவாசிக்கும் குறைவான உறுப் பினர்களே பங்கேற்றிருந்தனர். இதில் 274-2 என்ற அடிப்படையில் இஸ்ரேலையொட்டி பலஸ்தீன தேசத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. பிரதமர் டேவிட் கெமரூன் மற்றும் அமைச்சர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. இந்த வாக்கெடுப்பில் எந்த முடிவு கிடைத்தாலும் நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கெமரூன் முன்கூட்டியே அறிவித்திருந்தார். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்திற்கு ஆளுங்கட்சியின் ஒருசில உறுப்பினர்களும் வாக்களித்தனர்.முன்னதாக ஐரோப்பாவின் முக் கிய நாடுகளில் ஒன்றான சுவீடன் அண்மையில் பலஸ்தீன தேசத் திற்கு அங்கீகாரம் அளித்தது. எனி னும் இதனை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நிராகரித்தன. பலஸ் தீன சுதந்திரம், பேச்சுவார்த்தை ஊடாகவே அங்கீகரிக்கப்பட வேண் டும் என்று இந்த நாடுகள் கூறி வருகின்றன. பலஸ்தீன தேசத்தை உலகில் 134 நாடுகள் அங்கீகரித்திருப்பதாக பலஸ்தீன அதிகார சபை கணித் துள்ளது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளும் பலஸ்தீன சுதந்திரத்தை ஏற்கின்றன.

ஒக்ரோபர் 14, 2014

யாழ்.சென்றடைந்தது யாழ்தேவி

1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, 24 வருடங்களுக்கு பின்னர், இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் (ஒக்ரோபர் 14, 2014 காலை 10 மணி) யாழ்ப்பாணம் சென்றடைந்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால், இந்த உத்தியோகபூர்வ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையத்தையும்  ஜனாதிபதி சற்றுமுன்னர் திறந்துவைத்தார். பளை ரயில் நிலையத்திலிருந்து இன்று முற்பகல் 10.09 சுபமுகூர்த்த வேளையில், யாழ்தேவியில் ஏறி அமர்ந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர், ஆயிரக்கணக்கான மக்களுடன் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர். இந்திய அரசின் நிதியுதவில் இலங்கை ரூபாய்ப்படி 10,400 கோடி ரூபாய் செலவில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்ட நிலையில், யாழ்தேவி தனது உத்தியோகபூர்வ பயணத்தை இன்று மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அண்ணாவின் மீது ஆணையாக ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப்பீடத்தில் அமரலாம் என்ற கனவு பலிக்காது - கருணாநிதி


அப்போது அவர்,  ‘’பேரறிஞர் அண்ணாவும், நாமும் உருவாக்கிய திராவிட இயக்கம் என்ற இந்த இயக்கத்தினுடைய நிழலில் தன்னை வளர்த்துக்கொண்டு இந்த இயக்கத்தையே ஒழித்து வீழ்த்துகின்ற வகையிலே ஜெயலலிதா செயல்பட்டு, இதற்கு முடிவே கிடையாதா என்றெல்லாம் அனைவருமே ஏக்கத்தோடு, பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அவர்களாகவே வலையில் சிக்கிக்கொண்டு இன்றையதினம் திராவிட இயக்கத்தை நாம் தூக்கி நிறுத்துவதற்கு தங்களை அறியாமல் துணையாக வந்து விட்டார்கள் என்று கண்கூடாக காணுகின்ற ஒன்றாகும்.
(மேலும்....)

தாய்வீடு இதழ் வழங்கும்
அரங்கியல் விழா

எதிர்வரும் ஒக்டோபர் 18ம் 19ம் திகதிகளில்
1785 Finch Avenue  வில் அமைந்திருக்கும்
York wood கலையரங்கில்,
மூன்று நாடகங்கள்,
கே. கே. ராஜாவின் நெறியாள்கையில் 'தீவு'
ஞானம் லம்பேட்டின் நெறியாள்கையில் 'காத்திருப்பும் அகவிழிப்பும்'
பொன்னையா விவேகானந்தனின் நெறியாள்கையில் 'சுமை'
18ம் திகதி சனிக்கிழமை
பிற்பகல் ஒன்று முப்பதுக்கும்  ஆறு மணிக்குமாக 
இரண்டு காட்சிகள்,
19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை
நான்கு மணிக்கு
ஒரு காட்சி.
அன்றாட வாழ்வின் அரங்கப் பதிவுகளாக
தாய்வீடு வழங்கும்
அரங்கியல் விழா.
மேலதிக விபரங்களையும்
நுழைவுச் சீட்டுகளையும் பெற்றுக்கொள்ள அழையுங்கள்
416 857 6406

ஜே.ஆர். போட்டது அவிழ்க்க முடியாத முடிச்சு

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன போட்ட முடிச்சானது யாராலும் அவிழ்க்க முடியாத வகையில் போட்டப்பட்டுள்ள முடிச்சாகும் என்று உடகம ஸ்ரீ புத்தரக்பித்த மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையில் உள்ள தேவையற்றவற்றை நீக்கவேண்டும். இந்த முறைமையை அவரவர்கள் தங்களுடைய தனிப்பட்ட நலன் கருதியே பயன்படுத்தியுள்ளனர். இதனூடாக நாட்டுக்கு ஏற்படவிருக்கும் அழிவு குறித்து அவர்கள் சிந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை 1972இல் குடியரசான போதும் பிரதம மந்திரியே நாட்டின் தலைவராக இருந்தார். ஆனால், இவ்வமைப்பு 1978இல் மாற்றப்பட்டது. 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி (அரசுத்தலைவர்) அரசியலமைப்பு மாற்றத்தின் மூலம் உருவாக்கப்பட்டது. இதன்படி ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும் அரசின் தலைவராகவும் இருக்க வழிகோலப்பட்டது. பிரதமமந்திரி, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி இறக்கும் போது பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாவார். நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் வரையில் அல்லது புதிய ஜனாதிபதி தேர்தல் நடக்கும் வரையில் தற்காலிக ஜனாதிபதி பதவியில் இருக்கலாம்.

இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் போராடுவதில் பலன் கிடைக்காது - பழ.நெடுமாறன்

இலங்கை தமிழர்களுக்கு டெசோ மூலம் போராடுவதில் பலன் கிடைக்காது என்று பழ.நெடுமாறன் கூறினார். திருவாரூரில் நடைபெற்ற தமிழ் தேசிய முன்னணியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மாநில தலைவர் பழ.நெடுமாறன், ''தமிழக மீனவர்கள் பிரச்னையில் காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் தலைமையிலான கட்சிகள் ஒரே நிலையை தான் பின்பற்றுகின்றன. உலகிலேயே மிகப்பெரிய கடற்படையை கொண்ட நாடுகளில் 5வது இடத்தில் உள்ள இந்தியா, ஒரு சிறிய நாடான இலங்கையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வேதனை அளிக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டில் தமிழகத்தில் முதலமைச்சராக கருணாநிதி இருந்தபோதும், தி.மு.க., காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும் தான் இலங்கையில் 1½ லட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். அதனால், தற்போது டெசோ என்ற அமைப்பின் மூலம் போராடுவதால் எந்த பலனும் கிடைக்காது. பின்னை எப்படி ஐயா இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும். 'அவர்கள்' வழங்கும் மாதப் பட்டுவாவுடன் சுக வாழ்க்கை நடத்தினாலா...? நீங்களும் இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக 30 ஆண்டுகளாக போராடி? தான் வருகிறார்கள்.  நிலைமை 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் மோசமாகி தான் உள்ளது.  இப்போது என்ன செய்யலாம் என்று ஆக்க பூர்வமாக சொல்லலாமே ? நிற்க - அங்கிருந்து வரும் தமிழர் தலைவர்கள் உங்களையோ அல்லது வை கோ அவர்களையோ ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலையில் இன்னமும் ஏன் நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள் ? இங்கே உள்ள தமிழர்களுக்கு உங்கள் பணியை செய்யலாமே ?

ஜெயலலிதா பிணை மனு

வெள்ளிக்கிழமை விசாரணை

புதுடில்லியில் தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா பிணை மனு மீதான விசாரணையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்துவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அமர்வு நேற்று அறிவித்துள்ளது. ஜெயலலிதா பிணை மனுவை உடனடியாக விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்திவிட்டது. ஜெயலலிதா பிணை மனு தொடர்பான கோரிக்கை நேற்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் முன்வைக்கப்பட்ட போதே உச்ச நீதிமன்ற அமர்வு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. மூத்த வழக்கறிஞர் எஸ் நாரிமன் வாய்மொழி மூல கோரிக்கையாக விடுத்த போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் கடந்த 27 ஆம் திகதி அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபா அபராதமும் விதித்தது. அதேபோல அவரது தோழி சசிகலா உள்ளிட்ட 4 பெருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 10 கோடி ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக் கின்றன.

ஹொங்கொங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் முகமூடிதாரிகளுக்கும் இடையே மோதல்

ஹொங்கொங் நகர மையப் பகுதியில் ஜனநாயக ஆர்ப்பாட் டக்காரர்களுக்கும் முகமூடி அணிந்த குழுவென்றுக்கும் இடையில் நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முகா மிட்டிருக்கும் தடுப்புகளை மீறி சுமார் 500 முகமூடிதாரிகள் ஊடுருவியதை அடுத்தே இரு தரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது பொலிஸார் ஒருசிலரை கைது செய்துள்ளனர். இதில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிரானோரே இவ் வாறு முகமூடி அணிந்து எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதன்போது இரு தரப்பையும் பிரிப்பதற்கு பொலிஸார் மனித சங்கிலி அமைத்து செயற்பட்டனர். ஆர்ப் பாட்டக்காரர்களை அகற்றி வீதிகளை திறக்குமாறு எதிர்ப்பாளர்கள் பொலிஸாரிடம் கோரியுள்ளனர். முன்னதாக வீதியை இடை மறித்து தரித்திருந்த ஆர்ப்பாட் டக்காரர்களை பொலிஸார் கலைத் தனர். எனினும் முழு ஆர்ப்பாட்ட வலயத்தையும் கலைக்கும் எண் ணம் இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர். ஹொங்கொங்கில் மாணவர்கள், ஜனநாயக ஆதர வாளர்கள் நகரின் பிரதான வர்த் தக பகுதியில் கடந்த ஒருசில வாரங்களாக முகாமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.  2017 ஆம் ஆண்டு ஹொங்கொங் தலைவரை தேர்வு செய்யும் தேர்தலுக்கான வேட்பாளர் சீன ஆதரவு குழு வால் முன்கூட்டியே தேர்வுசெய்யப்படும் திட்டத்தை கைவிடக்கோரியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப் படுகிறது.

ஒக்ரோபர் 13, 2014

ஹாங்காங்கின் எதிர்க்குரல் நியாயமானதா?

ஹாங்காங் போராட்டம்குறித்து மேலைநாட்டு ஊடகங்கள் முன்வைப்பது தவறான பார்வை.

ஹாங்காங் மாணவர்கள் கூடுதல் ஜனநாயகத்துக்காகப் போராடிவருகிறார்கள். இதனால் ஹாங்காங் மூன்றாவது முறையாக உலகச் செய்திகளில் மையம் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் வெளிச்சம் முதன்முறையாக ஹாங்காங்கின் மீது பரவியது 1997 ஜூன் 30 நள்ளிரவில். அபினி யுத்தத்தில் ஹாங்காங்கைக் கைப்பற்றிய பிரிட்டன், ஒன்றரை நூற்றாண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்குத் திரும்பக் கொடுத்த வைபவம் அந்த இரவில் நிகழ்ந்தது. அப்போதைய சீன ஜனாதிபதி ஜியாங் ஜெமின், பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸின் கைகளை இறுக்கமாகக் குலுக்கியபோது, யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, மக்கள் சீனத்தின் கொடியும் கூடவே ஹாங்காங்கின் தனிக் கொடியும் ஏற்றப்பட்டன. (மேலும்....)

நிறைவேற்ற முடியாத நிபந்தனையின்அடிப்படையில்?

ஜனாதிபதி முறைமையை மாற்ற தயார் - மஹிந்த

 

சில குழுக்களும் அமைப்புக்களும் இணைந்து, தனித் தமிழீழத்துக்கான அறைகூவலை விடுத்து வருகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கு உதவி வருகின்றது. இந்த ஈழக் கோரிக்கை நிறுத்தப்பட்டால், நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு விருப்பம் தெரிவிக்கும் முதல் நபர் நானாவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று (12) தெரிவித்தார். நாடு கடந்த தமிழீழ அரசுடன் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க கதைத்துள்ளார்.  யார் எங்கு சென்று கதைத்தாலும் இலங்கையில் பிரிவனவாதத்தை ஏற்படுத்தவோ அல்லது தமிழீழத்தை ஏற்படுத்தவோ ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் எனவும் அவர் கூறினார். ஜனாதிபதி முறையை மாற்றும்படி தெற்கு மற்றும் வடக்கிலுள்ள கட்சிகள் கோரி வருகின்றன. அவர்களின் கோரிக்கைக்கு இணங்க அந்த முறைமையை மாற்றுவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். நாங்கள் யுத்தத்தை தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தவில்லை. பயங்கரவாதிகளை ஒழிக்கவும் அவர்களிடமிருந்த ஆயுதங்களை கீழே வைக்கவுமே யுத்தத்தை நடத்தினோம். 30 வருடகால யுத்தத்தால் மக்கள் தங்கள் உடமைகள், உறவுகள் என பலவற்றை இழந்துள்ளனர். வடமாகாண முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், மக்களுக்கான சேவைகளை வழங்கவேண்டும். வடமாகாண மக்களுக்காக தெற்கிலிருக்கும் ஆறு ஒன்றை இரணைமடுவுடன் இணைத்து அதன் மூலம் யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்க தீர்மானித்தேன். அதற்கான நிதியையும் ஒதுக்கிக்கொடுத்திருந்தேன். இருந்தும், அது செயற்படுத்தப்படாமல் கிடப்பில் கிடக்கின்றது என்று  ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

யாழ். நகருக்கு இன்று முதல் யாழ்.தேவி

பளையிலிருந்து ஜனாதிபதி ரயிலில் பயணம்

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகின்றன. இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் இன்று நடைபெறுகிறது. இதன் முதல் அங்கமாக பளையில் இருந்து யாழ்தேவி இன்று யாழ்ப் பாணத்துக்கு பயணம் செய்கிறது. பளையிலிருந்து யாழ்ப்பாணம்வரை ரயிலில் பயணிக்கும் ஜனாதிபதி, கொடிகாமம் மற்றும் நாவற்குழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில் நிலையங்களையும் திறந்துவைக்கிறார். அதனைத் தொடர்ந்து ரயிலில் பயணிக்கும் அவர் யாழ்ப்பாண புகையிரத நிலையத்தைச் சென்றடைந்து புனரமைக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் காட்சியளிக்கும் யாழ்ப்பாணம் ரயில் நிலையத்தையும் திறந்துவைக்கவுள்ளார். கொழும்புக்கும் பளைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டிருக்கும் யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் யாழ்ப் பாணம்வரை சேவையைத் தொடர்கிறது. பயணிகளின் வசதி கருதி கொழும்பு புறக்கோட்டைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் மட்டுப்படுத் தப்பட்டிருந்த ரயில் சேவை கல்கிஸ்சை வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கல்கிஸ்சையிலிருந்து தினமும் நகரங்களுக்கிடையிலான இரண்டு கடுகதி ரயில் சேவைகள் (இண்டர்சிட்டி) ஆரம்பமாகவிருக்கும் அதேநேரம், யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இரண்டு ரயில்கள் கல்கிஸ்சையை வந்தடையும். இதனைவிட புறக்கோட்டையிலிருந்து மேலும் இரண்டு ரயில் சேவைகள் யாழ்ப்பாணத்துக்கு தினமும் இடம்பெறும்.

அமெரிக்காவில் சுகாதார பணியாளருக்கு ஆட்கொல்லி எபோலா வைரஸ் பாதிப்பு

அமெரிக்காவில் ஆட்கொல்லி எபோலா வைரஸ் தொற்றி மரணமடைந்த தோமஸ் டன்கனுக்கு சிகிச்சை அளித்த சுகாதார பணியாளருக்கும் எபோலா வைரஸ் தொற்றியுள்ளது. "இரண்டாவது எபோலா நோயாளி கண்டறியப்பட்டிருக்கிறார். இந் நிலைக்கு நாம் எம்மை தயார் செய்திருக்கிறோம்" என்று டெக்ஸாஸ் மாநில சுகாதார ஆணையாளர் டொக்டர் டேவிட் லக்கி குறிப்பிட்டுள்ளார். டன்கன் தனது சொந்த நாடான லைபீரியாவில் எபோலா வைரஸ் தொற்றிய நிலையில் அமெரிக்கா திரும்பி டல்லாஸ் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். இந்நிலை யில் எபோலா பாதிப்புக்கு முகம்கொடுத்திருக்கும் சுகாதார பணியாளரின் பெயர் வெளியிடப்பட வில்லை. இதில் மரணமடைந்த டன்கன் அமெ ரிக்கா திரும்பி 10 தினங்கள் கழித்து செப்டெம்பர் 10 ஆம் திகதியே அவர் எபோலா நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது. ஸ்பெயினிலும் இவ்வாறு எபோலா வைரஸ் தொற்றியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ தாதி ஒருவருக்கு நோய் தொற்றியது. எபோலா வைரஸினால் லைபீரியா, கினியா மற்றும் சியரலியோனில் 8,300 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த வைரஸ் காரணமாக 4,033 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

நான் சிவாஜி கட்சி

என் சிலேட்டுப் பருவத்தில் ஓர் உறவினரைப் போலவே சினிமா வழியாக எனக்குப் பரிச்சயமானார் சிவாஜி கணேசன். தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து மைல்கல் தொலைவில் நன்னிலம் என்கிற ஊரைத் தொட்டுக்கொண்டு இருந்தது மணவாளம்பேட்டை. அங்கு இருந்த லட்சுமி டாக்கீஸில்தான் நான் முதன்முதலாக சிவாஜியை பாபுவாகப் பார்த்தேன். திரையில் நான் பார்த்த முதல் சிவாஜி படம் அது. அந்த நடிப்பில் இருந்த வசீகரம் என்னை உள்வாங்கிக்கொண்டது. படத்தில் கை ரிக்‌ஷாவை இளமைத் துடிப்புடன் இழுத்துக்கொண்டு ஓடுபவராக, இளமையின் வசீகரம் உதிர்ந்து முதுமையின் கரங்களில் தன்னை ஒப்படைத்தவராக, நொடித்துப்போன ஒரு குடும்பத்துக்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட விசுவாசத்தின் பிரதிநிதியாக சிவாஜி தோன்றியிருப்பார். (மேலும்....)

ஒக்ரோபர் 12, 2014

கட்சியாக பதிவு என்ற பேச்சுக்கே இடமில்லை - மாவை சேனாதிராஜா

தமிழ் தேசியக் கூட்ட மைப்பு ஒரு தனிக்கட்சியாகப் பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்ட மைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தனிக் கட்சியாகப் பதிவு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது” என்றும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்வோம்” என்ற வாக்குறுதியை நானோ எனது கட்சித் தலைவர்களோ ஒருபோதும் வழங்கியதில்லை” என்றும் மாவை சேனாதிராஜா அங்கு தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் “அவரவர் விடுகின்ற அறிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கி ஒன்றுபட்டு செயற்பட லேண்டும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள நிலையில் மாவை சேனாதிராஜா அது தொடர்ந்தும் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈ. பி. ஆர். எல். எப். (சுரேஷ் அணி) தமிழர் விடுதலைக் கூட்டணியாகவே தனித்து இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

TNA பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும் - வி.ஆனந்தசங்கரி

விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடன டியாகக் கலைத்துவிட்டு அனை வரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் தம்மை இணை த்து முன்னர் போன்று செயற்பட வேண்டும் என அக்கட்சியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  நான் எப்போதுமே உண்மையைக் கூறுவதால் என்னை எல்லோருமே ஓரங்கட்டிவிட நினைக்கிறார்கள். ஆனால் நான் உண்மையைக் கூற ஒருபோதும் தயக்கம் காட்டமாட்டேன். என்னைப் பொறுத்தவரை தமிழ்க் கூட்டமைப்பு பதியப்பட அல்ல கலைக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். தமிழரசுக் கட்சிக்கும் நல்ல பெயர் கிடையாது என்பதால் தமிழர் விடுதலைக் கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதே சரியான முடிவு எனவும் அவர் கூறினார்.

கூட்டமைப்பு விரைவாக பதிவு செய்யப்பட வேண்டும் - சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு விரைவில் பதியப்பட வேண்டு மெனவும், அதுவே ஒட்டு மொத்த தமிழ் மக்க ளின் கோரிக்கையாகவும் உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வழங்கிய ஒரு செவ்வியில் கூட்டமைப்பு பதியப்பட தேவையில்லையென மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நாங்கள் எங்கள் கட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கூட்டமைப்பை ஒரு கட்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம். இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டியவர்கள் பொது மக்களாகவே இருக்கின்றார்கள். இது வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாகாண சபை உறுப்பினர்களோ எடுக்கின்ற விடயமல்ல. மக்கள் அனைவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகவே பார்க்கின்றனர். அதனால் கூட்டமைப்பை பதிவு செய்தல் மிக மிக அவசியம் என்றார்.

தமிழ் தேசியக் கூட்ட மைப்பு ஒரு கட்சியாகப் பதிவு செய்யப்பட்டால் ரெலோ கலைக்கப்படும்   - செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு விரைவில் பதியப்பட வேண்டு மெனவும், அதுவே ஒட்டு மொத்த தமிழ் மக்க ளின் கோரிக்கையாகவும் உள்ளது என “ரெலோ” இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். “ரெலோ” இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தங்கள் இயக்கத்தை கலைக்கப் போகிறார்கள் எனக் கூறியிருக்கிறார்

தமிழ் கூட்டமைப்பிற்குள் பாரிய குழப்பம்

அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் விடயத்தில் பற்றி எரியும் உட்கட்சிப் பூசல்கள்

தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ. பி. ஆர். எல். எப். (சுரேஷ் அணி) புளொட், ரெலோ ஆகிய ஐந்து தமிழ்க் கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் புதிவு செய்யும் விடயத்தில் மீண்டும் அக்கட்சிக ளுக்கிடையில் பாரிய உட்கட்சிப் புசல்களும், வாக்குவாதங்களும் ஏற்பட்டுள்ளன. கடந்த வாரம் லண்டன் சென்றிருந்த தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் கூட்டமைப்பை ஒருபோதும் பதிவு செய்யமாட்டோம் எனத் தெரிவித்திருந்தார். அதேபோன்று வடமாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மூன்று பிரதான கட்சிகளான புளொட், ரெலோ, ஈ. பி. ஆர். எல். எப். ஆகிய கட்சிகளை ஆயுதம் தாங்கிப் போராடிய வன்முறையாளர்களைக் கொண்ட கட்சிகள் எனக் கூறியிருந்தார். (மேலும்....)

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளிடையே கூர்மையான பிளவு தோன்றியுள்ளது

2014.10.02 ஆம் திகதி நடை பெற்ற கூட்டத் தில் தமிழ் தேசி யக் கூட்டமைப்பில் உள்ள TNA கட்சிகளின் மத்தியில் கூர்மையான பிளவு தோன்றியுள்ளது நன்கு வெளிப்பட்டது. இலங்கைத் தமி ழரசுக் கட்சியின் அங்கத்தவர்களில் ஒரு பிரிவினர், தமிழ் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கும் முன்னாள் தமிழ் ஆயுதக்குழு அங்கத்தவர்களோடு உள்ள கூட்டை தாங்கள் விலக்கிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள் ளார்கள். அதனால் அந்தக் கூட்டம் எதுவித தீர்மானமும் மேற்கொள்ளா மல் முடிவடைந்தது. அத்துடன் தற்பொழுது தமிழ் தேசி யக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் வட மாகாணசபை முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரனும், முன்னாள் ஆயு தக்குழு அங்கத்தவர்களுடன் தன்னைத் தொடர்பு படுத்திக் கொள்வது தனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை என்று சொன் னதாக அறிக்கைகள் தெரிவிக்கின் றன. வட மாகாணசபை முதலமைச்ச ரின் அறிவிப்பு, முன்னாள் ஆயுதக்குழு அங்கத்தவர்கள் என அழைக்கப்படுப வர்கள் மத்தியில் கடும் கண்டனங்க ளையும் மற்றும் நிந்தனைகளையும் தோற்றுவித்துள்ளது. (மேலும்....)

அமரர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவின் மறைவு

இலங்கையின் முதலாவது அரசியல் கொலை

1983ம் ஆண்டில் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி அடக்கு முறை அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உதாசீனம் செய்து அவர்களை இராணுவப் பலத்தையும் தங்கள் கட்சி குண்டர்களை முடுக்கி விட்டும் அடக்கி அடிமைகளாக வைத்திருப்பதற்கு எடுத்த சட்ட விரோத முயற்சிகளின் பக்க விளைவாகவே இலங்கையில் பயங்கரவாத யுத்தம் தோன்றியது. 1983ம் ஆண்டில் கறுப்பு ஜுலை இனக்கலவரம் இலங்கை சிறுபான்மையோரை அழிக்கும் ஒரு நாடு என்ற தப்பான உணர்வை உலக நாடுகளில் ஏற்படுத்துவதற்கு ஜே.ஆர்.ஜயவர்தன அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான அதிகார துஷ்பிரயோகமே பிரதான காரணமாகும். இந்த பயங்கரவாத வன்முறைகளினால் நூற்றுணக்கான தமிழ் சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகள் பயங்கரவாதிகளின் கண்மூடித் தனமான துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிர் இழந்தனர்.  (மேலும்....)

ஐ.தே.க எம்.பி.க்கள் இருவர், ஆளுங்கட்சியில் இணைய முஸ்தீபு

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஆளுங்கட்சியில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரின் தலைமையில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகவும் மேற்படி தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ் எம்.பி மார் வாகனம், சம்பளம், சாப்பாடு, வீடு, பாதுகாப்பு, இன்னும் பல

சகலவிதமான சலுகைகளையும் அனுபவிப்பு பாராளுமன்றத்தை மட்டும் அவமதிப்பு

தமிழ் உறுப்பினர்கள் பாராளு மன்றை அவமரியாதை செய்து வருவதாக ஆளும் கட்சியின் பாரா ளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் குற்றம் சாட்டியுள்ளார். பாராளுமன்றின் வாகனங்களைப் பெற்றுக்கொண்டு, பாராளுமன்றில் சாப்பிட்டுவிட்டு அதன் மூலமாகக் கிடைக்கும் சம்பளம், வீடு, பொலிஸ் பாதுகாப்பு எனச் சகலவிதமான வசதிகளையும், சலுகைகளையும் ஒன்று விடாது கேட்டுப் பெற்றுக் கொள்ளும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றை அவமரியாதை செய்கின்றனர் என அஸ்வர் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். அரசாங்கம் ஒருபோதும் தேர்தல் களுக்கு அஞ்சியதில்லை. வடக்கில் தேர்தல்களை உரிய நேரத்தில் நடத்தினோம். நாட்டில் ஜனநாயகம் ஒரே விதமாக வியாபித்துள்ளது. யாழ்தேவி ரயில் மீண்டும் யாழ்ப்பாணம் நாளை முதல் யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணிக்க உள்ளது. யாழ்ப்பாணம் இன்று பாரியளவில் அபிவிருத்தி அடைந்துள்ளது. யாழ்ப்பாண மக்கள் சமாதானத்தின் பிரதிபலன்களை நன்கு அனுபவிக்கின்றார்கள்.

ஒக்ரோபர் 11, 2014

உலகின் பொருளாதார வல்லரசு: அமெரிக்காவை முந்தியது சீனா

உலகின் மிகப்பெரிய பொரு ளாதாரமான அமெரிக்காவின் கௌரவத்தை சீனா நூற்றாண் டுக்கு பின்னர் முதல்முறை வீழ்த்தியுள்ளது.  சர்வதேச நாணய நிதியத் தின் (ஐ.எம்.எப்.) புதிய தரவுக ளின்படி சீன பொருளாதாரத் தின் மதிப்பு 17.61 டிரில்லியன் டொலர்களாக இருப்பதோடு அமெரிக்காவின் பொருளாதார மதிப்பு 17.4 டிரில்லியன் டொலர்களாக வீழ்ச்சி கண் டுள்ளது. அமெரிக்கா 1872 ஆம் ஆண்டு பிரிட்டனை பின்தள்ளி பொருளாதார வல்லரசாக மாறிய பின் அது பின்தள்ளப் பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். கடந்த தசாப்தத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சியை பெற்றுவரும் சீனாவின் பொருளாதார மதிப்பு 2019 ஆம் ஆண்டாகும்போது 26.98 டிரில்லியன் டொலர்களாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. இந்த காலப் பிரிவாகும்போது அமெரிக்க பொருளாதாரத்தை விடவும் இது 20 வீதம் அதிகமாகும். அதாவது குறித்த காலத்தில் அமெரிக்க பொருளாதார மதிப்பு 22.3 டிரில்லியன் டொலர்களாக இருக்கும்.  நுகரும் திறன் குறியீட்டின் அடிப்படையிலேயே இந்த தரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த குறியீட்டை தவிர்த்து சீன பொருளாதாரம் அமெரிக் காவை விடவும் கீழ் நிலையிலேயே இருப்பதாக பொரு ளாதார வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறாயினும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஏதோ ஒரு வகையில் பின்தள்ளி இருப்பது உலக பொருளாதாரத்தின் திருப்புமுனையாக அமைவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆட்சி மாற்றத்துக்காக சர்வதேச மட்டத்தில் சதி

ஆட்சி மாற்றமொன்றுக்காக சர்வதேச மட்டத்தில் சதி நடைபெறும் அதேவேளை தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக எதிர்க் கட்சித் தலைவர் டயஸ்போராக்க ளுடன் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் ரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இது தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இதற்கு முன்னரும் இவ்வாறான சதிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,எ ல். ரி. ரி. ஈ. டயஸ்போராக்கள் தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காகவே செயற்படுகின்றன. நாட்டை துண்டாடவே முயல்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் அபிலாசைகள் வேறுவிதமானவை. அவர்கள் தமது காணி பிரச்சினை தீர வேண்டும் எனவும் அன்றாட வாழ்வு சுமுகமாக அமைய வேண்டும் எனவும் விரும்புகின்றனர். போக்குவரத்து மற்றும் வசதிகள் குறித்தே அவர்கள் சிந்திக்கின்றனர். அந்த மக்களின் தேவைகளை முடிந்தளவு நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தமது தேர்தல் செயற்பாடுகளுக்கு உதவுமாறு ரணில் விக்ரமசிங்க டயஸ்போராக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமது சந்திப்பு குறித்த படங்களையும் தகவலையும் வெளியிடாமல் மறைக்க அவர் முயன்றாலும் எம்மிடம் அது பற்றிய ஆதாரங்கள் இருக்கின்றன.

அருண் செல்வராசனை மீண்டும் 3 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பு காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை மீண்டும் 3 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பு காவலில் விசாரிக்க பூவிருந்த வல்லி சிறப்பு நீதிமன்றம் அனு மதி வழங்கியுள்ளது. பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு க்காக உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட அருண் செல்வராசன் கடந்த மாதம் 10ம் திகதி சென்னையில் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டு ள்ள அருணை 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் பூவிருந்வல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி மோனி இன்று காலை 11 மணி முதல் 3 நாள் அருணை காவ லில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தர விட்டார். ஏற்கனவே கடந்த மாதம் 18ம் திகதி முதல் 6 நாட்கள் அருண் செல்வராசனை காவலில் எடுத்து விசாரித்த தேசிய புலனாய்வு அமைப்பினர் பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். ஆனால் தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பாதுகாப் பான இரகசியங்களை பாகிஸ் தான் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பியது தொடர்பான முக்கிய விவரங்களை தெரிவிக்க அப்போது அருண் செல்வராசன் கூற மறுத்து விட்டதாக கூறப்ப டுகிறது. இதையடுத்தே தேசிய புலனாய்வு அமைப்பினர் அருணை முண்டும் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது.

பலஸ்தீன ஐக்கிய அரசு முதல்முறை காசாவில் கூடியது

பலஸ்தீன ஐக்கிய அரசின் அமைச்சரவைக் கூட்டம் இஸ்ரேல் தாக்குதலால் அழிவுற்றிருக்கும் காசாவில் முதல் முறை இடம்பெற்றுள்ளது. 2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் காசாவில் அமைச்சரவை கூட்டம் ஒன்று நிகழ்வது இது முதல் முறையாகும். "இது அனைத்து பலஸ்தீனர்களுக்குமான அரசாகும். காசா மக்களின் வாழ்வு வழமைக்கு திரும்புவதற்கான கட்டியெழுப்பும் பணிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க கோருகிறேன்" என்று பலஸ்தீன பிரதமர் ரமி அப்தல்லாஹ் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது குறிப்பிட்டார். பத்தாஹ் அமைப்புடனான நல்லிணக்கத்தை தொடர காசாவின் முன்னாள் பிரதமரும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவருமான இஸ்மைல் ஹனியான் வலியுறுத்தினார். "இந்த கூட்டம் பலஸ்தீனர்களின் ஒற்றுமையை உறுதிசெய்திருக்கிறது. தேசத்தினதும் எமது அரசி யலிலும் பாரிய பாதிப்பை ஏற்படுத்திய பிரிந்து நின்று வாழ்ந்ததை முடிவுக்கு கொண்டுவந்தி ருக்கிறது" என்று ஹனியான் குறிப்பிட்டார். பலஸ்தீனத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட ஐக்கிய அரசு மூலம் காசா மற்றும் மேற்குக் கரையில் இருந்த வௌ;வேறு அரசுக ளுக்கு முடிவு காணப்பட்டது. இந்நிலையில் காசாவை கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவியை பெறும் நோக்கிலேயே மேற் குலகின் ஆதரவு பெற்ற மஹ்மூத் அப்பாஸ் தலை மையிலான பலஸ்தீன ஐக்கிய அரசு காசாவில் அமைச்சரவை கூட்டத்தை நடத்தியிருப்பதாக நம் பப்படுகிறது.

வடகொரிய தலைவர் எங்கே ?

சர்வதேச மட்டத்தில் இப்போது மிகவும் அதிகமாக அசை போடப்படும் விடயம், வடகொரிய தலைவர் கிம் யொங் உண் எங்கே போனார் என்பதாகும். நீண்ட நாட்களாக அவர் பொது வைபவங்களில் தென்படாமல் இருப்பது பலவிதமான வதந்திகளுக்கு வழி செய்துள்ளது. கம்யூனிஸ வடகொரியாவின் 69 வது ஆண்டு நிறைவு வைபவத்திலும், அங்கு பெரிதாகப் போற்றப்படும் அந்தத் தலைவரைக் காணவில்லை. இந்த மர்மம் குறித்த ஊகங்களை குறைத்துப் பேசும் அந்த நாட்டின் அரசாங்க ஊடகம், அவருக்கு அசௌகர்யம் தரும் உடற்சுகவீனம் ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றது. ஆனால், அவருக்கு மிகவும் கடுமையான சுகவீனம் என்றும், அங்கு ஒரு அரசியல் சதிப் புரட்சி நடந்துவிட்டதாகவும் வதந்திகள் உலாவருகின்றன. வடகொரியாவுக்கான பிபிசியின் செய்தியாளர் ஸ்டீவ் இவான்ஸ் அவர்களின் காணொளி.

மிக நல்ல பணி... யார் செய்தாலும் பாராட்ட தவறக் கூடாது..!!

மாங்குளத்தில் 20 அடி ஆழமான கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தையை காப்பற்றிய இரண்டு இராணுவத்தினருக்கு பாராட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பாராட்டுப் பரிசு வழங்கும் நிகழ்வு நேற்று கிளிநொச்சி படைகளில் தலைமை யகத்தில் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்றது. மாங்குளம் பிரதேசத்தில் கடந்த 2 ஆம் திகதி சேவையில் ஈடுபட்டிருந்த 57வது படைப் பிரிவு மற்றும் 3வது கஜபா படைப் பிரிவின் அதிகாரிகள் பிரதேசத்தை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர். அப்போது பிரதேசத்தில் உள்ள கிணறு ஒன்றில் பிள்ளை விழுந்துள்ளதுடன், காப்பாற்றுமாறு தாய் கதறி அழுததுடன் இராணுவத்தினரின் உதவியை கோரியுள்ளார். உடனடியாக செயற்பட்ட கோப்ரல் எம்.டப்ளியூ. விஜித பெரேரா, கோப்ரல் டி.எம். லீலாரத்ன ஆகியோர் கிணற்றிக்குள் குதித்து சிவக்குமார் சிந்துஜன் என்ற பிள்ளையை காப்பாற்றியதுடன் குழந்தை குடித்திருந்த தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

தாக்குதலை குறைத்தது பாகிஸ்தான்

இந்திய ராணுவத்தின் பதிலடியால் பின்வாங்கியது

எல்லையில் இந்திய ராணுவத்தின் பதிலடியைத் தாங்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை குறைத்துக் கொண்டுள்ளது. காஷ்மீர் எல்லையில் கடந்த 9 நாட்களாக இந்திய ராணுவ நிலைகள், கிராமங்களைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசி வருகிறது. நேற்று முன்தினம் ஜம்மு பிராந் தியத்தில் சுமார் 60 எல்லைச் சாவடிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்கு தல் நடத்தியது. இதற்கு இந்திய தரப்பில் கடும் பதிலடி கொடுக் கப்பட்டது. இந்திய தாக்குதலை பாகிஸ் தானால் தாக்குப் பிடிக்க முடிய வில்லை. இதனால் நேற்று ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் ராணுவம் அமைதி காத்தது. எனினும் கதுவா மாவட்டத்தில் 4 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். எல்லையில் நீடிக்கும் சண்டை யால் இந்தியத் தரப்பில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 13 ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் காயமடைந்துள்ளனர். 113 கிராமங்கள் காலி செய்யப்பட்டு சுமார் 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதனை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் பல்வேறு சதித் திட்டங்களை தீட்டி வருகிறது. பெரும் எண்ணிக்கையிலான தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச் செய்ய திடீர் தாக்குதல்களை நடத்தி வருவதாக இந்திய ராணுவ அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பாஜகவில் சேர்ந்தால் 'சூப்பர் ஸ்டார்' புகழை இழப்பீர்கள்: ரஜினிக்கு சுப.உதயகுமாரன் எச்சரிக்கை

பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் 'சூப்பர் ஸ்டார்' புகழையும் இழந்துவிடுவீர்கள் என்று நடிகர் ரஜினிக்கு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுப.உதயகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் முதுகுகளில் ஏறி அரசியல் அதிகாரமும் பெற்று மக்களைத் தொடர்ந்து ஏய்த்துக் கொண்டிருக்கும் சினிமாத் துறையே தமிழினத்தின் முதல் எதிரி என்று நான் உறுதியாக நினைக்கிறேன். தங்கள் விடயத்திலும் இது உண்மை என்பதை நாம் எல்லோரும் அறிவோம். கர்நாடகத்தில் காலூன்றியிருக்கும் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் எத்தனை தலைமுறையானாலும் தலைதூக்காது. செல்லாக்காசான இந்தக் கட்சியில் சேர்ந்து தாங்கள் எங்கேயும் போய்ச்சேர முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரையும், அதன் காரணமாக இந்தியா முழுவதும் பெற்றிருக்கும் “சூப்பர் ஸ்டார்” எனும் புகழையும் இழந்து விடுவீர்கள். ஆனால் சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான். ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன" என்று அந்தக் கடிதத்தில் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார்.

மிருகம்_மனிதநேயம்_காட்டியது
மனிதன்_மிருகநேயம்_கூட_காட்டவில்லை.

கற்கள் விழுவது குறையும் வரை, அவன் மீது பட்டுவிடாத மாதிரி மறைத்து நின்றுள்ளது. டில்லி தேசிய உயிரியல் பூங்காவில் இருந்து அந்த புலி சம்பவம் பற்றி செய்திகள் படித்திருப்போம். அந்த நிகழ்வின் தடயவியல் அறிக்கை வந்துள்ளதாம், அதன் படி, மேலே இருந்த பார்வையாளர்களின் கல்வீச்சில் இருந்து அவனை காப்பாற்றவே அந்த பையனை கவ்வி ஓரமாக கொண்டு சென்றுள்ளது...

காரணம்,

 • கல் எறியாத முதல் 15 நிமிடம் வரை புலி அவனை 1 அடி தள்ளியே நின்றுள்ளது.
 • புலிகள் தன் குட்டிகளை பிற மிருகங்களிடம் இருந்து காப்பாற்ற இது போன்று தான் கவ்வி செல்லும், புலியின் பற்கள் 18% மட்டுமே அவன் கழுத்தில் இறங்கியுள்ளது.
 • கற்கள் விழுவது குறையும் வரை, அவன் மீது பட்டுவிடாத மாதிரி மறைத்து நின்றுள்ளது.
 • அந்த பல் தடயங்களை விட, உடம்பில் வேறு எங்கும் ஒரு கீறல் கூட இல்லை (மேல் இருந்து விழுந்ததை தவிர்த்து), {விலங்கியல் பூங்காவில் மாமிசம் தின்று வளர்ந்த புலி, சாப்பிட வேண்டும் என நினைத்திருந்தால் ஒரு பாகம் கூட மிஞ்சிருக்காது.
 • அந்த புலியின் தவறு, தன் குட்டிகளை போலவே இவனுக்கும் தடித்த தோல் பிடிப்பு இருக்கும் என எண்ணியது மட்டுமே..

மிருகம்_மனிதநேயம்_காட்டியது
மனிதன்_மிருகநேயம்_கூட_காட்டவில்லை.

ஒக்ரோபர் 10, 2014

மலாலா, கைலாஷுக்கு அமைதிக்கான நோபல் பரிசு

இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசப்ஸாய் ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நோபல் குழுவின் தலைவர் தோர்ப் ஜோயெர்ன், இன்று அமைதிக்கான நோபல் விருதுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப் புற மாகாணத்தில் 1997ஆம் ஆண்டு பிறந்தவர் சிறுமி மலாலா யூசப்ஸாய். அப்பகுதியில் பெண்கள் கல்வி கற்க தலிபான் தீவிரவாதிகள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், தலிபான்களின் ஒடுக்குமுறை குறித்து பீ.பீ.சி.யின் உருது மொழி இணையதளம் ஊடாக பரப்புரை மேற்கொண்டு வந்தார் மலாலா. பின்னர் வெளிப்படையாக தொலைக்காட்சியில் பேட்டியளித்தார். இதனால், 2012ஆம் ஆண்டு மலாலாவை கொல்ல தலிபான் தீவிரவாதிகள் முயன்றனர். தன் பின்னர் தொடர்ந்தும் பெண்களின் கல்வி முன்னேற்றம் பற்றிய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். மலாலாவின் பிறந்த நாளை, 'மலாலா தினம்' என்று ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. பாகிஸ்தான் நாட்டின் முதலாவது அமைதி, உலக அமைதி அறக்கட்டளையின் தைரியத்துக்கான விருது ஆகியவற்றை பெற்ற மலாலாவுக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே மிகச் சிறிய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமை மலாலாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த கைலாஷ் சத்யார்த்தி. டெல்லியில் வசித்து வருகிறார். இவர் தனது 'பச்பான் பச்சோ அந்தோலன்' என்ற அமைப்பின் மூலம் சுமார் 80 ஆயிரம் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். இவர், 1984ஆம் ஆண்டு முதல் பல்வேறு மனித உரிமை விருதுகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

நீண்டகாலமாக வழக்குகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மற்றும் பாலேந்திரன் ஜெயக்குமாரியை விடுவிக்குமாறு கோரி  வவுனியாவில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் நகரசபை முன்றலில் ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி,  வவுனியா நீதிமன்ற வளாகம்வரை சென்றது. 'ஜெயக்குமாரியை விடுவிக்க வேண்டும்', 'நிபந்தனை இன்றி அரசியல் கைதிகளை விடுதலை செய்', 'சிறிலங்கா அரசே தாயையும் மகளையும் பிரிக்காதே', 'நீதி வேண்டும் நீதி வேண்டும் அரசியல் கைதிகளுக்கு நீதி வேண்டும்', 'எமது வாழ்வு எமது கைகளில் அந்நியரிடமில்லை', 'போடாதே போடாதே பொய் வழக்கு போடாதே' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தாங்கியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோநோகராதலிங்கம், ஈ.சரவணபவன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், உறுப்பினர்களான து.ரவிகரன், எஸ்.சிவமோகன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொ.கஜேந்திரகுமார். முற்போக்கு தமிழ் தேசியக்கட்சியின் தலைவர் சு.விஜயகாந்த், மன்னார், முல்லைத்தீவு, வவுனியா பிரஜைகள்குழு பிரதிநிதிகள், தென்னிலங்கை மனித உரிமை அமைப்பு பிரதிநிதிகள், அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வேறு மாகாணத்தினர் வடக்கில் குடியேற முடியாது - சி.வி

வேறு மாகாணங்களை சேர்ந்த மக்களை வடமாகாணத்தில் குடியேற்றும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. அதனை ஏற்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.  வடமாகாண சபையின் காணி தொடர்பிலான விசேட அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிட தொகுதியில் வியாழக்கிழமை (09) நடைபெற்று வருகின்றது. இதன்போதே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் வவுனியாவில் இடம்பெறும் காணி கையேற்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளரிடம் விளக்கம் கேட்டேன். அவர் தாம் பொதுத்தேவை கருதி இராணுவத்திற்கு காணிகளை வழங்கி வருவதாக கூறினார். நான் கேட்டேன் இராணுவத்திற்கு வழங்குவது எவ்வாறு பொதுத்தேவையாகும் எனக்கேட்டேன். அதற்கு அவர், மக்களின் பாதுகாப்பிற்காக இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டுள்ளனர். ஆகையால் காணிகளை வழங்குகின்றோம் எனக் கூறினார். மக்களின் பாதுகாப்பிற்கு இராணுவத்தினர் இல்லை. இராணுவத்தினரை வடக்கிலிருந்து வெளியேற்றுவதற்காகவே வடமாகாண தேர்தலில் மக்கள் எங்களுக்கு வாக்களித்தனர்.  அக்கோரிக்கையையே நாங்கள் மக்களிடம் முன்வைத்து தேர்தலில் வென்றோம் என அவருக்கு விளக்கம் கொடுத்தேன். வடக்கிலிருந்த