மாசி
2011 மாதப் பதிவுகள்
மாசி
28, 2011
சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து காப்பாற்ற ருத்திரகுமாரன் கொழும்பு
பயணம்?
சிறிலங்காவை போர்க் குற்றத்தில் இருந்து
தப்பிக்க வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் சில நாடுகள் மற்றும்
அமைப்புக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அதனையும் தாண்டி
சிறிலங்கா மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் மிகவும் இறுக்கமான கட்டத்தை
அடைந்துகொண்டிருக்கின்றன. இந்த விடயத்தில் ஐ.நா பொதுச் செயலர்கூட
ஒதுங்கிப்போக நினைத்தாலும் வெளிவந்திருக்கும் போர்க் குற்ற ஆதாரங்களும்
புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மற்றும் தமிழ்க் கட்டமைப்புக்களின்
தொடர்ச்சியான சிறிலங்கா அரசின் மீதான குற்றச்சாட்டுக்களும் பெரும்
நெருக்கடியை ஏற்படுத்தி வந்தன, வருகின்றன. இதனால், சிறிலங்கா மீது
பெயரளவிற்கேனும் எதாவது ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்
ஐ.நாவிற்கு ஏற்பட்டது. இதன் காரணமாக பான் கீ மூனினால் அமைக்கப்பட்டதுதான்
நிபுணர்கள் குழு. இந்தக் குழு இத்தனை காலமாக எதனைச் செய்து முடித்துள்ளது
என்பது தெரியவில்லை. எனினும், இந்தக் குழுவின் பதவிக் காலம் விரைவில்
நிறைவடைய இருக்கின்றது. ஆனால், நிபுணர் குழுவின் பதவிக்காலம் நீடிக்குமா
என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது.
(மேலும்....)
மாசி
28, 2011
சென்னையில் இருந்து டெல்லிவரையான ஈ.என்.டி.எல.எப் இனரின் நடைபயணம் இனிதே
நடைபெற்று முடிவுற எமது இனிய வாழ்த்துக்கள்
ஜனவரி 16ம் திகதி ஸ்ரீபெரும்புத்தூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து
டெல்லி வரை தொடங்கிய ஈ.என்.டி.எல்.எப் இனரின் நடைப்பயமானது இலங்கைத் தமிழர்
பிரச்சினையில் இந்தியா தலையிடவேண்டும் என்பதற்கு மேலும் ஓரு அழுத்தத்தை
கொடுக்கும். இந்த நடைப்பயணம் தொடங்குவதற்கு மனஉறுதி வேண்டும்., மனிதன்
தங்களை வருத்தி கடவுளிடம் வேண்டுதல்களை வைப்பது போலேவே இதுவும் ஒப்பானது.
ஈ.என்.டி.எல்.எப் தொடங்கிய நடைப் பயணத்தின் செய்திகள் ஊடகங்களில்
இருட்டடிப்பு செய்யப்படுகிறது. ஒரு சில இணையதளங்களில் வருவதும்
வரவேற்க்கத்தக்கது. செய்தியை இருட்டடிப்பு செய்வது மனவேதனையை அளிக்கிறது.
நடந்து செல்பவர்களின் மன உறுதியையாவது இந்த ஊடகங்கள் பாராட்ட வேண்டாமா?
செய்திகளை இருட்டடிப்பு செய்யும் ஓர வஞ்சனை என்பது இந்திய-இலங்கை ஒப்பந்தம்
ஏற்பட்ட காலத்திலேயே தொடங்கியது அது இன்னும் தொடர்வது இலங்கைத் தமிழர்கள்
வாழ்வில் ஆரோக்கியமானவை எதையும் ஏற்படுத்தி விடாது.
(மேலும்....)
மாசி
28, 2011
தூத்துக்குடி - கொழும்பு பயணிகள் கப்பல் சேவை இன்று ஆரம்பம்!
துறைமுகத்திற்கும் தென் இந்தியாவின் தூத்துக்குடி துறைமுகத் திற்கும்
இடையிலான முதலாவது பயணிகள் கப்பல் சேவை இன்று திங்கட்கிழமை தூத்துக்குடியில்
இருந்து ஆரம்பமாகின்றது. 500 பயணிகளை அவர்களின் பொதிகளுடன் மிகவும் சிறந்த
முறையில் ஏற்றிச் செல்லக் கூடிய வசதிகளைக் கொண்ட இந்த கப்பலை இந்தியாவில்
தனியார் நிறுவனம் ஒன்று நிர்வகித்து வருகின்றது. தூத்துக்குடி
துறைமுகத்திலுள்ள பாரிய களஞ்சிய சாலையொன்றை பயணிகளின் தங்குமிடமாக
மாற்றியமைத்துள்ளார்கள். இங்கு பொதிகளை சோதனையிடல், சுங்க பரிசோதனைகள்,
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கரும பீடங்கள் போன்ற வசதிகள்
செய்யப்பட்டுள்ளன.
(மேலும்....)
மாசி
28, 2011
கடாஃபியின்
கழுத்து இறுகுகிறது!
கடைசி ஆணும்..
கடைசிப் பெண்ணும்... கடைசி குண்டும்...
லிபியா
நாட்டு சர்வாதிகாரி மம்மர் கடாஃபியின் மகுடம் சரிந்து கொண்டு இருக்கிறது.
அவரது கழுத்தை, புரட்சி ரீங்காரம் நெருக்கும் காலம் இன்னும் ஒரு சில
நாட்களே இருக்கக்கூடும்! மன்னர் இண்டிரிசின் ஆட்சியைத் தனது அசைக்க
முடியாத தைரியத்தாலும், படை பலத்தாலும், பேச்சுத் திறமையாலும் வீழ்த்தி, 42
ஆண்டுகளுக்கு முன்னால் வட ஆப்பிரிக்க நாடான லிபியாவின் ஆட்சியைப் பிடித்தவர்,
மம்மர் கடாஃபி.'மன்னரை வீழ்த்திய கடாஃபிக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும்.
சாதாரண மக்களுக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது புரியும். அடிப்படைத்
தேவைகளைக் கொடுத்து, சுதந்திரக் காற்றை சுவாசிக்கவைப்பார்’ என்ற
நம்பிக்கையில்தான் முழுக்கவே அந்த நாட்டில் இருந்த இஸ்லாமிய மக்கள் இவரை
ஆதரித்தனர். ஆனால், மன்னர் ஆட்சிக் காலத்தில் அடக்குமுறையும் ஆணவமும்
மட்டுமே இருந்தது என்றால், இவரது ஆட்சியில் மத மயக்கமும் கலந்தது. மக்களின்
மத உணர்வுகளைத் தூண்டிவிட்டதால், கடாஃபி என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும்
சகித்துக்கொண்டார்கள் லிபியர்கள்.
(மேலும்....)
மாசி
28, 2011
இலங்கைக்கும் UKக்கும் இடையிலான விமான சேவை விஸ்தரிக்கப்பட உள்ளது
பயணத்தில் ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையை
அதிகரிப்பதற்கு இலங்கைக்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான விமான
போக்குவரத்து சேவை விஸ்தரிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பயணத்தில்
ஈடுபடும் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு இரு நாட்டு விமான சேவை
உயரதிகாரிகளும் இணங்கியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடி விமான
சேவை 14 இலிருந்து 21 ஆக உயர்த்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த
விமான சேவைகளை கனடா வரையில் நீடிப்பதற்கும் பிரித்தானிய அதிகாரிகள் இணக்கம்
தெரிவித்துள்ளனர். இதன்படி வாரத்தில் ஏழு விமானங்கள் கனடா நோக்கிப்
பயணிக்கும் என விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா
தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்கள் பல
இலங்கைக்கான சேவையை ஆரம்பிக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
மாசி
28, 2011
Basil to personally survey flood recovery in Batticaloa
(Wilson Gnanadass)
Economic Development Minister
Basil Rajapaksa is scheduled to undertake a tour of the east today to
ascertain for himself the progress made with regard to the flood
recovery programme, launched by his ministry immediately after the
floods.The economic development ministry, on the directives of Minister
Rajapaksa initiated the recovery programme soon after the floods hit the
east last month.Basil is expected to address all the heads of department
and local politicians in Batticaloa to review the flood recovery
programme, today.
(more....)
மாசி
28, 2011
மனிதர் வாழ்வதற்கு ஏற்ற 1235 கோள்கள்
தினமும் காலையில் உதயமாகி மாலையில் மறையும் சூரியன் போல சிறியது முதல்
பெரியது வரையில் ஒரு இலட்சம் கோடி முதல் 4 இலட்சம் கோடி நட்சத்திரங்கள்
கொண்ட பிரமாண்ட வான்வெளி பால்வழித் திரள், (கலக்சி) என்று அழைக்கப்படுகிறது.
மிகவும் அதிக தொலைவு என்பதால் இவற்றின் தொலைவுகள் ஒளி ஆண்டு அடிப்படையில்
கணக்கிடப்படுகின்றன. ஒளியின் வேகத்தில் அதாவது, கண் இமைக்கும் நேரத்தில்
200 இலட்சம் கி.மீ வேகத்தில் போனால்கூட பிரபஞ்சத்தின் இந்த பக்கத்தில்
இருந்து அந்த பக்கம் போவதற்கு ஒரு இலட்சம் ஆண்டுகள் ஆகுமாம். அப்படி என்றால்
அதன் பிரமாண்டத்தை கற்பனை செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.
(மேலும்....)
மாசி
28, 2011
உணவகங்கள் மீது சுகாதார பரிசோதனை: சட்ட நடவடிக்கை
சண்டிலிப்பாய்ப் பிரதேசத்தில் நெருப்புப்
காய்ச்சல், வயிற்றோட்டம் போன்ற நோய்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, உணவு
கையாளும் நிலையங்கள் உட்பட பேக்கரிகள், தனியார் வர்த்தக நிலையங்கள் ஆகியன
சுகாதாரப் பரிசோதகர்களின் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையைத் தொடர்ந்து, தற்பொழுது பல
இடங்களில் புதுப்புது உணவு நிலையங்களும், வர்த்தக நிலையங்களும்
ஆரம்பிக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
(மேலும்....)
மாசி
28, 2011
லிபியாவில்
இரத்தக்களரி ஏற்படும் அபாயம்
தமது ஆதரவாளர்களுக்கு ஆயுத கிடங்கை திறந்துவிட்டு லிபியாவில் ரத்தக் களறியை
ஏற்படுத்த அந்நாட்டு ஜனாதிபதி கடாபி திட்டமிட்டுள்ளார். லிபியாவில் அதிபர்
42 ஆண்டு கால ஆட்சியை எதிர்த்து மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை அடக்க கடாபி இராணுவத்தை ஏவி விட்டுள்ள போதிலும் பல இடங்களை
போராட்டக்காரர்கள் கைப்பற்றி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட
உலக நாடுகளும் வன்முறையை தடுத்து நிறுத்துமாறும் போராட்டத்தில் ஈடுபடும்
மக்கள் மீது படையினரை ஏவிவிட வேண்டாம் என்றும் வலியுறுத்தி வருகின்றன.
மேலும் ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடாபிக்கு கடுமையாக எச்சரிக்கை
விடுத்துள்ளது.
(மேலும்....)
மாசி
28, 2011
மக்களின் சீர்குலைந்துள்ள சுகாதாரம் இப்போது மேம்படுத்தப்பட்டுள்ளது
இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன் எமது
நாட்டு மக்கள் இயற்கை உரத்தை பயன்படுத்தியே நெல் உற்பத்தியையும் காய்கறிச்
செய்கையையும் மேற்கொண்டதுடன் கிருமி நாசினிகளின் பாவனையும் அன்று மிகவும்
குறைவாகவே இருந்தது. அதனால் அன்றைய மக்கள் நச்சுத்தன்மையற்ற நல்ல சுத்தமான
உணவை உட்கொண்டார்கள். அதுவும் அவர்களின் நீண்ட ஆயுளுக்கு ஒரு அடிப்படை
காரணமாக விளங்கி வந்தது. மக்கள் சினிமாப் படங்களையும், வானொலியையும் மட்டுமே
தங்கள் பொழுது போக்காக அன்று பயன்படுத்தி வந்தார்கள். அன்றைய காலகட்டத்தில்
இரவு ஒன்பதரை மணியுடன் சினிமா படக் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிடும். அது
போன்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சிகளும் இரவு 10
மணியுடன் நிறைவுபெறும். இதனால் அன்றைய மக்கள் ஒன்பது, ஒன்பதரை மணிக்கு
நித்திரைக்கு சென்று அதிகாலை 5 மணிக்கு எழும்பி தங்களது நாளாந்த கடமைகளை
ஆரம்பிப்பார்கள். மக்களுக்கு ஆழ்ந்த நித்திரை செய்வதற்கு அன்று வாய்ப்பு
இருந்த காரணத்தினால் மக்கள் அன்று தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து வந்தார்கள்.
(மேலும்....)
மாசி
28, 2011
லிபியாவில்
சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி தொடங்கியது
லிபியாவில் சிக்கியுள்ள 18 ஆயிரம்
இந்தியர்களை மீட்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக இரண்டு
சிறப்பு விமானங்கள் லிபியா தலைநகர் டிரிப்போலிக்கு அனுப்பப்பட்டன. இதில்
முதல் விமானத்தில் 300 பேர் நேற்று முன்தினம் இரவு டில்லி வந்து சேர்ந்தனர்.
விமானங்கள் தவிர நான்கு கப்பல்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
லிபியா தலைவர் முஅம்மர் கடாபி, பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரு
வாரங்களாக அந்நாட்டு மக்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். கடாபி
ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்ததால்,
ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். அங்கு தங்கியிருந்த வெளிநாட்டவர்கள்,
அந்தந்த நாடுகளால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகின்றனர். கலவர பூமியாக
மாறிவிட்ட லிபியாவில் தற்போது 18 ஆயிரம் இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.
(மேலும்....)
மாசி
28, 2011
இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் அத்துமீறல்
எல்லை
தாண்டினால் படகு உரிமம் ரத்தாகுமென இந்தியா எச்சரிக்கை
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள்
அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் சம்பவங்கள் தொடர்வதாக யாழ் மீனவர்கள்
தெரிவிக்கின்றனர். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னரும் தமிழக மீனவர்கள்
இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டிருந்ததாக யாழ்.
மீனவர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தார்.
எனினும், முன்னர்போன்று அதிக எண்ணிக்கையான தமிழக மீனவர்கள் அத்துமீறி
மீன்பிடிப்பது சற்றுக் குறைவடைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை,
இந்தியக் கடல் எல்லையைத் தாண்டிச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு
அரசாங்கத்தால் வழங்கப்படும் எரி பொருள் மானியம், படகு உரிமம் என்பன
இரத்துச்செய்யப்படும் என இந்தியக் கடற்படையினர் எச்சரித்து ள்ளனர்.
(மேலும்....)
மாசி
28, 2011
பிரதேச
சபைகளுக்குள்ள நிறைவேற்று அதிகாரம் வேண்டும்
பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம்
இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை
மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியடையும் வகையில்
வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரதேச சபைகளுக்கான
தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள்
மத்தியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா
தெரிவித்தார்.
(மேலும்....)
மாசி
28, 2011
இனப்பிரச்சினைக்கு சமஷ்டி தீர்வாகாது
- ஜே.வி.பி._
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறைமை தீர்வாகாது. கடந்த 25
வருடகால கொள்கையில் எவ்விதமான மாற்றமும் கிடையாது. நாட்டை பிரிக்காமல்
சமஷ்டியில் தீர்வு பெற்றுக்கொண்டுள்ள உலக நாடுகளை இலங்கை முன்னுதாரணமாகக்
கொள்வதே சிறந்தது என்று ஜே.வி.பி. குறிப்பிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்ததன்
பின்னர் நாடு அடைந்த சுதந்திரமோ, சமாதானமோ எவரையும் சென்றடையவில்லை.
தங்கத்தையும் பணத்தையும் திருடியவர்கள் இன்று அத்தியாவசிய உணவுப் பொருட்களை
திருடுகின்றனர் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
(மேலும்....)
மாசி
28, 2011
லிபியா விவகாரம் உலக நாடுகள் சீற்றம்
அவசரமாக கூடியது
ஐ.நா.பாதுகாப்புச் சபை
* கடாபியின் சொத்துகளை முடக்கியது
அமெரிக்கா
* பொருளாதார தடையை கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முயற்சி
* அமைதி காப்பு நடவடிக்கைகளில் ஐ. நா. பாதுகாப்பு சபை தீவிரம்
(மேலும்....)
மாசி
27, 2011
அரசாங்கத்திற்கும் TNAக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைவைப்பு!
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையிலான
பேச்சுவார்த்தைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும்
மார்ச் மாதம் 1ம் திகதி அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும்
இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருந்தது. அரசாங்கத்தினால் இந்த பேச்சுவார்த்தைகள்
ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிருப்தி
வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
(மேலும்....)
மாசி
27, 2011
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சு நடத்தத் தயாராகிறது அரசு
புலம்பெயர்ந்த தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை
மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த
பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும்
ஒழுங்குபடுத்தியுள்ளதாக அரச தரப்பு பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாகக் கொண்டிருக்கும் எண்ணக்கருவை மாற்றுவதற்காக
புலம்பெயர்ந்துள்ள தமிழர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதே இந்தப்
பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும் எனவும் கூறப்படுகிறது.
(மேலும்....)
மாசி
27, 2011
நெருக்கடியின் பிடியில் மும்மர் கடாபி லிபியாவை தாக்க அமெ.
திட்டம்
லிபியா மீது நேட்டோ படைகளை ஏவி தாக்குதல் நடத்தி அந்நாட்டை கைப்பற்ற அமெரிக்கா
திட்டமிட்டுள்ளது என்று கியூபாவின் தலைவர் பிடல் காஸ்ட்ரோ எச்சரித்துள்ளார். அரபு
நாடுகளில் கடந்த இரண்டு வார காலமாக மக்கள் போராட்டம் கொந்தளிப்பு டன் நீடித்து
வருகிறது. ஏமன், பஹ்ரைன், ஈரான் உட்பட கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே போராடும்
மக்கள் மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். லிபியா விலும்
42 ஆண்டுகளாக ஆட்சி அதிகா ரத்தில் நீடித்துவரும் ஜனாதிபதி மும்மர் கடாபி, மக்களின்
கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதற்கு பதிலாக தனது அதிகா ரத்தை தக்கவைத்
துக்கொள்வதற்காக கடும் அடக்குமுறை யை ஏவியுள்ளார். தலைநகர் திரிபோலி, பெங்காஸி
உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் கிளர்ச் சியில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக் கான
மக்கள் மீது தனது ராணுவப் படை யினரை மட்டுமின்றி, ஆப்பிரிக்காவின் இதர
நாடுகளிலிருந்து லிபியாவிற்கு குடி பெயர்ந்து வந்த மக்களிடையே இருந்து
கிடைக்கப்பெற்ற கூலிப் படையினரையும் ஏவி தாக்குதல் தொடுத் துள்ளார்.
(மேலும்....)
மாசி
27, 2011
சர்வதேசப் புகழ்பெற்ற
பொதுவுடமைத் தத்துவ ஆசான் தோழர் சண்முகதாசன்
வடபகுதியில் தீண்டாமைக் கொடுமைக்கெதிரான பேராட்டம் கட்சிக்குப் பெருமை சேர்த்தது
எனலாம். அன்றைய பாராளுமன்றப் பிரதிநிதிகள் தமது பதவிகளையும், வர்க்க
நிலைப்பாட்டையும் காப்பாற்றிக்கொள்ள துரோகமிழைத்துவந்தவேளை, 1966 அக்டோபர் 21-ம்
திகதி யாழ் முற்றவெளிப் பொதுக்கூட்டத்தில் சண் விடுத்த அறைகூவல் வடபகுதில்
ஆலயப்பிரவேசப் போராட்டங்களுக்கும், தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களுக்கும்
உந்துசக்தியானது. சங்கானை - நிற்சாமம், கரவெட்டி - கன்பொல்லை, நெல்லியடி, சுன்னாகம்,
காங்கேசந்துறை, மட்டுவில், கொடிகாமம் உட்படப் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.
இப்போராட்டங்கள் குறித்து இலங்கை வானொலி மௌனம் சாதித்தவேளைகளில் பீக்கிங் வானொலி
உண்மைநிலை குறித்து தொடர்ந்து செய்திகளை ஒலிபரப்பியது. தீண்டாமை ஒழிப்பு வெகுஜன
இயக்கம் மகத்தான வெற்றிகளைக் கண்டது. சண் தலைமையில் கட்சி இதற்கு உறுதுணையாகவிருந்து
பூரண ஆதரவு வழங்கியது. தென்னிலங்கை மக்களின் ஆதரவைப் பெற்றுக் கொடுத்தது. இலங்கைப்
பாராளுமன்றத்திலும்; தமிழ்த் தலைவர்களது வர்க்க நிலைப்பாடு அம்பலமானது.
(மேலும்....)
மாசி
27, 2011
ஈழத்
தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 41,
42வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின்
41வது நாளான (25-02-2011, வெள்ளிக்கிழமை) நேற்று நடைபயண வீரர்கள் தேசிய நெடுஞ்சாலை
– 7 வழியாக 38 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்திருந்தனர். 42வது நாளான (26-02-2011,
சனிக்கிழமை) இன்று காலை 7:00 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயணத்தைத் தொடர்ந்து,
40 கிலோ மீற்றர் தூரம் கடந்து இரவு முகாம் அமைத்தனர். நடைபயண வீரர்கள் இன்னும்
கடக்க வேண்டிய தூரம் 787கிலோ மீற்றர் தூரம் மட்டுமே!
(மேலும்....)
மாசி
27, 2011
Dual
citizenship gone - to avoid war crime charges?
(By
Ranga Jayasuriya)
Some key positions of this government have been filled by dual citizens.
Gotabaya Rajapaksa - the powerful Defence Secretary is a dual citizen of Sri
Lanka and the USA. Basil Rajapaksa - Investment Development Minister has a US
Green Card in addition to his Sri Lankan citizenship. Sarath Fonseka, the now
incarcerated former army commander is also a Green Card holder. Palitha Kohona,
Sri Lanka’s Permanent Representative to the United Nations also holds his
Australian citizenship in addition to his Sri Lankan citizenship.
The government directive stopping dual citizenship is not retrospective - hence
it would not affect the citizenship status of those who have already obtained
dual citizenship. But it effectively deprives thousands, possibly hundreds of
thousands of expatriate Sri Lankans of their Sri Lankan citizenship.
And, there are other explanations, as advanced by diaspora Tamils on the
discontinuance of the applications for dual citizenship.
(more....)
மாசி
27, 2011
பேச்சுவார்த்தை
விபரங்களை வெளியிட அரசு-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறுப்பு
அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது எதைப்பற்றி பேசுகின்றோம். என்ன கோரிக்கையை
வலியுறுத்துகின்றோம் என்று ஏதும் கூற முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்,
சந்திப்பு நடக்கும் அதுபற்றி எதுவும் கூற இயலாது என அரச தரப்பும் கூறுகின்றன.
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெறும்
பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்களைத் தெரிவிக்குமாறு கேட்டபொழுதே இரு தரப்பினரும்
இவ்வாறு பதில் அளித்தனர். தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்காக
இருதரப்பினராலும் பேசப்படவுள்ள விடயங்கள் குறித்து தமிழ் மக்களுக்கே அறிந்துகொள்ள
முடியாத அளவுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக இல்லை என்பதே முக்கியமான
விடயமாகும்.
(மேலும்....)
மாசி
27, 2011
"என்னை
பின்பற்றாவிட்டால் முழு லிபியாவையும் எரித்துவிடுவேன்"
- கடாபி _
போராட்டங்களை உடனே கைவிடாவிட்டால் லிபியா முழுவதையும் எரித்து அழித்து விடுவதாக
லிபிய ஜனாதிபதி எச்சரித்துள்ளார். தொலைக்காட்சியொன்றில் திடீரென தோன்றிய கடாபி
எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும் தன்னை பதவியிலிருந்து விலக வைக்க முடியாதெனவும்,
எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். தன்னோடு இணைந்து
ஆர்பாட்டங்களை முடிவுக்கு கொண்டுவர ஒத்துழைக்குமாறு தனது ஆதரவாளர்களுக்கு அழைப்பு
விடுத்துள்ளார். இதேவேளை லிபியாவில் இடம்பெற்றும் வரும் ஆர்ப்பாட்டங்களை வன்முறையால்
ஒடுக்க முயல்வதை அந்நாட்டு அரசு கைவிட வேண்டும் என கடாபியை ஐக்கிய நாடுகள்
சபை வலியுறுத்தியுள்ளது. (மேலும்....)
மாசி
27, 2011
அழிவின் விளிம்பில் 19 மொழிகள் கொலம்பிய அரசு கவலை
கொலம்பியாவில் பேசப்படு வதில் 19 மொழிகள் அழிவின் விளிம்பில் இருப்பதாக அந் நாட்டின்
கலாச்சாரத்துறை கவலை தெரிவித்துள்ளது. இந்த 19 மொழிகள் அழியும் நிலையில் இருப்பதோடு,
மேலும் ஐந்து மொழிகள் கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டன. டினிகுவா என்ற மொழியை ஒரே
ஒருவர்தான் பேசிக் கொண்டிருக்கிறார். நோனுயா என்றொரு மொழியை மூன்று பேர் மட்டும்
பேசுகிறார்கள். கரி ஜோனா, பிசாமிரா மற்றும் டொடோரோ ஆகிய மூன்று மொழிகளும் ஐம்பதுக்
கும் குறைவானவர்களால்தான் பேசப்படுகின்றன.
(மேலும்....)
மாசி
26, 2011
யாழ்.பல்கலைக்
கழகத்துக்கு விரைவில் பொறியியல் பீடம்
யாழ். பல்கலைக்கழகத்தில் விரைவில் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில்
ஜனாதிபதி பல நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றார் என்று அமைச்சர் பஷில்
ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். கொக்குவிலில் தொழில்நுட்பவியல் கல்லூரியை திறந்துவைத்து
உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து அமைச்சர் பசில்
ராஜபக்ஷ உரையாற்றுகையில், என்னால் எழுதியாவது தமிழில் பேசு முடியாமைக்கு உண்மையில்
மன வேதனை அடைகின்றேன். ஆனாலும் உங்கள் அனைவரினதும் இதயங்களில் நாங்கள் வாழ்கின்றோம்
என்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
(மேலும்....)
மாசி
26, 2011
ஏமன், பஹ்ரைன், லிபியா மக்கள் கிளர்ச்சி தீவிரம்
ஏமன், பஹ்ரைன், இராக், ஈரான், லிபியா, அல்ஜிரியா உள்பட பல்வேறு அரபு நாடுகளில்
அரசின் அடக்குமுறை களையும் மீறி மக்கள் கிளர்ச்சி நாளுக்கு நாள் தீவிரமடைந்து
வருகிறது. ஏமன் தலைநகர் சனாவில் பல்க லைக் கழக மாணவர்கள் பல்லாயிரக்க ணக்கானோர்
உள்பட மிகப் பெருவாரி யான மக்கள் வெள்ளியன்று நகரின் முக் கிய சதுக்கத்தில் கூடி
பெரும் போராட்டம் நடத்தினர். அமெரிக்க ஆதரவாளரான ஜனாதிபதி அலி அப்துல்லா சலே உட
னடியாக பதவியை விட்டு வெளியேற வேண்டுமென வலியுறுத்திய இந்தப் போராட்டம் ஏமனின் பிற
நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற் புடன் நடைபெற்றது.
(மேலும்....)
மாசி
26, 2011
மாசி
26, 2011
Libyan solidarity march
‘No to Qaddafi! Yes to freedom and democracy across the Arab World!’
R A L L Y & M A R C H
Saturday, February 26
Assemble at 12:00 p.m.
Yonge-Dundas Square
TTC: Dundas
மாசி
26, 2011
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஜே.வி.பிக்கும் இத்தேர்தலில் மக்கள் தண்டனை கிடைக்கும்
மார்ச் மாதம் 17ம் திகதி நடைபெறவிருக்கும்
உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் கழுதைகள் மற்றும் கருநாகம் ஆகியனவும் தேர்தல்
சின்னங்களாக இல்லாவிட்டாலும் பிரசாரத்தின்போது முக்கியத்துவத்தை பெற்று வருகிறது ஒரு
வகையில் விந்தையாகவும் இந்தளவிற்கு நாட்டின் அரசியல் தரம் விரைந்து
செல்கின்றதென்றும் பொதுமக்களை சிந்திக்க வைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியில்
இன்று வலுப்பெற்று வரும் உட்கட்சி மோதல்கள் அதன் முக்கியத் தலைவர்களை கழுதைகளுக்கு
ஒப்பிட்டு பேசுமளவிற்கு அக்கட்சி மக்கள் ஆதரவை இழந்து இன்று பரிதாப நிலைக்குத்
தள்ளப்பட்டுள்ளது.
(மேலும்....)
மாசி
26, 2011
மிகப் பெரும்
பனியுடைப்பு
பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரமாண்டமான ஒரு வாயுக் கோளம்,
எப்போதும் பூமிக்கு குடை பிடித்து வருகிறது. வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவு
கூடிக் குறையும்போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது. அந்த
வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து
கரியமில வாயு போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்க ளின் திணிவு மிகையாகிறது.
வாயுக்களின் திணிவு அதிகமாகும்போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன்
உஷ்ணமும் கூடுகிறது.
(மேலும்....)
மாசி
26, 2011
லிபியாவில்
தொடரும் போராட்டம்: உள்நாட்டுப் போர் மூளும் அபாயம்
டுனீசியா, எகிப்துக்கு அடுத்தபடி யாக லிபியாவில்
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போரா ட்டங்கள் இடம்பெற்று வருகி ன்றன.
ஜனாதிபதி முஅம்மர் கடாபி யின் 41 ஆண்டு கால ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. லிபிய நாட்டின்
கிழக்குப் பகுதி எதிர்ப்பாளர்கள் வசமாகிவிட்டது. இராணுவத் தளபதிகளே கடாபியின் ஆட்சி
பிடிக்காமல் மக்களோடு சேர்ந்துகொண்டு விட்டனர். லிபி யாவின் தூதரக அதிகாரிகள் ஒவ்
வொருவராக பதவி விலக ஆரம் பித்துவிட்டனர். முஅம்மர் கடாபியின் ஆட்சிக்கு முடிவு
கட்டும் நேரம் வந்து விட்டது என்று அமெரிக்கா, பிரித் தானியா, பிரான்ஸ், ஜெர்மனி
உள்ளி ட்ட மேற்கத்திய நாடுகள் முடிவு செய்துவிட்டன. அப்பாவி மக்கள் படுகொலை
செய்யப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள்
சபையின் பொதுச் செயலர் பான்கி மூனும் அறிவித்துவிட்டார்.
(மேலும்....)
மாசி
26, 2011
இறக்குமதியை மட்டுப்படுத்தினால் பொருளாதார சவாலை வெல்ல முடியும்
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் உபயோகத்தை
மட்டுப்படுத்த முடியுமானால் பொருளாதார சவாலை எம்மால் வெற்றிகொள்ள முடியும் என
வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். உலகில் ஏற்பட்டுள்ள
காலமாற்றம் இயற்கை அனர்த்தங்களுக்கு அன்றாடம் பல நாடுகள் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
நாட்டிற்கான சவாலை வெற்றிகொண்டுள்ள நாம் உலகிற்கேற்ப எமது பொருளாதாரத்தை
கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. இலாபத்தை மட்டும் கருத்திற்கொள்ளாது எமது தேசியத்திற்கு
முக்கியமளிப்பது கவனத்திற்கொள்ள வேண்டும்.
(மேலும்....)
மாசி
26, 2011
அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் மறைவு புலிகளுக்குப்
பேரிழப்பு-விமானப்படைத்
தளபதி ரொஷான் குணதிலக!
புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்குப்
பேரிழப்பாக அமைந்ததாக விமானப் படைத்தளபதி சீப் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்க
சுட்டிக்காட்டுகின்றார். புலிகளின் பல தலைவர்கள் நீண்ட காலமாக விமானப்படையினரால்
இலக்கு வைக்கப்பட்டு தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களில்
அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனும் உள்ளடங்கியிருந்தார். அவர்
கிளிநொச்சியில் தங்கியிருக்கும் இடம் பற்றிய தகவல் 2008 நவம்பரில் துல்லியமான
புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்து அவரது மறைவிடம் மீது
தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இலக்கு கடினமானதாக இருந்த போதிலும் கடைசியில் வெற்றி
கிட்டியது.
(மேலும்....)
மாசி
26, 2011
வடக்கை அபிவிருத்தி செய்வதில் அரசு அர்ப்பணிப்புடன் செயற்பாடு
-
ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள்
மோதல்கள் இடம்பெற்ற வடபகுதியில் உட்கட்டமைப்புக்களை
அபிவிருத்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக இலங்கைக்கு
விஜயம் மேற்கொண்டிருக்கும் தெற்காசியாவுக்கான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு
தெரிவித்துள்ளது. ஐந்து நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஐரோப்பிய
ஒன்றியப் பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் கொழும்பு சினமன்ட் கிரான்ட் ஹோட்டலில்
ஊடகவியலாளர் மாநாடொன்றை நடத்தியிருந்தது. முன்னாள் மோதல் பகுதிகளுக்கு விஜயம்
மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளைக் கண்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களையும்
நேரடியாகச் சந்தித்து அவர்களின் நிலைப்பாடுகளைக் கேட்டறிந்துகொண்டதாக இலங்கைக்கு
விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றியக் குழுவின் தலைவர் ஜீன் லம்பெர்ட் கூறினார்.
(மேலும்....)
மாசி
26, 2011
பிரமுகர்கள்
வெளியேற எகிப்து இராணுவம் தடை
முன்னாள் பிரதமர் அடேப் ஒப யோட் உள்ளிட்ட முக்கிய
பிரமுக ர்கள் எகிப்தை விட்டு வெளியேறு வதற்கு இராணுவம் தடை விதித் துள்ளது.
எகிப்தில் சமீபத்தில் ஏற்பட்ட புரட்சியால் ஜனாதிபதி முபாரக் கடந்த 11 ஆம் திகதி பதவி
விலகினார். தற்போது நாட்டின் நிர்வாகத்தை இராணு வம் கவனித்து வருகிறது. இந்நிலையில்
பதவி விலகிய ஜனாதிபதி முபாரக்கிற்கு நெருக்க மானவர்கள் மீது இராணுவம் அதிரடி
நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக எகிப்தின் முன்னாள் பிரதமர்
அடேப் ஒபயோட், கலாசாரத்துறை அமைச் சராக பணியாற்றிய பரூக் ஹோஸ்னி தொலைக்காட்சி
ஒலிபரப்பு மற்றும் துறைகளுக்கு தலைவராக பணி யாற்றிய ஒசாமா எல் ஷேக் மற்றும்
தொழிலதிபர்கள் ஒன்பது பேர் ஆகி யோர் எகிப்தில் இருந்து வெளி நாடுகளுக்கு செல்வதற்கு
தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் எகிப்தில் இருந்து வெளி யேற முடியாத நிலை
ஏற்பட்டு ள்ளது. விரைவில் இவர்கள் மீது விசாரணை நடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக
தகவல் வெளி யாகியுள்ளது.
மாசி
26, 2011
மத்திய கிழக்கு நாடுகளின் சுதந்திரக் குரல்கள்
(எஸ்.வி.வேணுகோபாலன்)
வாழ்க்கையின் தேர்வு
வாழ்க்கையின் தேர்வின்படிவாழ்ந்துவிட
மக்கள் துணிந்து விடுவார்களானால்
விதியால் என்ன செய்ய முடியும் -
வழிவிட்டு நிற்பதைத் தவிர ?
இரவு தனது முகத்திரையைத் துறந்துவிடுகிறது..
சங்கிலிகள் எல்லாம் உடைந்து நொறுங்குகின்றன..
(மேலும்....)
மாசி
25, 2011
ஜெயலலிதாவின் அதிமுக வுடன் விஜயகாந்தின் தேதிமுக இன் கட்சி இணைந்தது
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு,
கட்சித் தலைவர் விஜயகாந்த் கொடுத்துள்ள பிறந்த நாள் பரிசாகும் என்று கூறியுள்ளார்
தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். நேற்று மாலை அதிமுக தலைமைக் கழக
அலுவலகத்திற்கு வந்த பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையிலான தேமுதிக குழுவினர் தொகுதிப்
பங்கீடு குறித்த பேச்சுக்களை மேற்கொண்டனர். ஒரு வழியாக அதிமுகவைத் தேடி தேமுதிக
வந்ததைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்களும், கூடவே தேமுதிக தொண்டர்களும் மகிழ்ச்சி
அடைந்தனர். அதிமுக அலுவலகத்திற்கு வெளியே கூடியிருந்த அவர்கள் மகிழ்ச்சி கோஷங்களை
எழுப்பினர்.
(மேலும்...)
மாசி
25, 2011
லிபியாவை நெருங்கியது இந்தியக் மீட்புக் கப்பல்
லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போராடி வரும்
மக்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்பட் டுள்ள நிலையில் தலைநகர் திரிபோலி உட்பட அனைத்து
நகரங்களிலும் பெரும் பதட்டம் நிலவு கிறது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 18 ஆயிரம்பேர்
அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர் களை மீட்க இந்திய அர சின் சார்பில் ஏற்பாடுகள்
செய்யப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச் சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரி வித்தார்.
இந்தியர்களை மீட்க ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற கப்பல் அனுப்பப்பட் டுள்ளது என்றும்,
அது லிபியாவின் துறைமுக நகர மான பெங்காசியை நெருங் கிவிட்டது என்றும் தெரி வித்த
கிருஷ்ணா, மேலும் ஒரு கப்பல் அனுப்பப்படு கிறது என்று கூறினார். கப் பல் மூலம்
மீட்கப்படும் இந் தியர்கள் உடனடியாக விமானம் மூலம் அழைத்து வரப்படுவார்கள் என்றார்.
மாசி
25, 2011
புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்டவர்களில் மூவர்
விடுதலை
மன்னார் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு
முன்னர் புலனாய்வுத்துறையினரினால் கைது செய்யப்பட்ட 05 தமிழர்களில் மூவரை கொழும்பு நீதவான்
நீதிமன்ற நீதிபதி விடுதலை செய்துள்ளார். விடுதலை செய்யப்பட்டவர்கள் மன்னார் பேசாலை
கிராமம் 7 ஆம் வட்டாரத்தினைச்சேர்ந்த ஜெயராஜ் பெனோ பெல்டானோ,8 ஆம் வட்டாரத்தினைச்
சேர்ந்தவர்களான அருள் சீலன் மெறான்டா,மற்றும் சந்தியோகு மெசனட் குருஸ் ஆகியோரவர்.
மாசி
25, 2011
பிள்ளையானுக்கு சவால் விடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு
கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிக்கும் படலத்தையே
எங்கும் தொடர்ந்து வருகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விமர்சிப்பதற்கு இவர்
அருகதையற்றவர். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
போட்டியிட்டிருந்தால் இவர் கதிரை ஏறியிருக்க முடியாது'' இவ்வாறு தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சி. யோகேஸ்வரன் கூறினார்.
(மேலும்...)
மாசி
25, 2011
ஈழத்
தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
40வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின்
40வது நாள் 24-02-2011 வியாழக்கிழமையான இன்று நெடுந்தூர நடைபயண வீரர்கள் “குரை”
என்ற இடத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை – 7 இல் பயணித்தனர். இதற்கிடையில் நடைபயண
வீரர்களை தலைமையேற்று நடத்தும் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்கள் திரு. சுதர்சன்
அவர்களின் இறுதிக் கிரியைகளை முடித்துவிட்டு இன்று நடைபயண வீரர்களுடன் இணைந்துள்ளார்.
(மேலும்...)
மாசி
25, 2011
அ.
தி. மு. க. கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு ஆசனம்
அ. தி.
மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது வீட்டில் அகில
இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தேசிய செயலாளர்கள் நரேந்திர டே, ஜி.தேவராஜன், மாநில
பொதுச் செயலாளர் பி. வி. கதிரவன் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை சந்தித்தனர்.
அப்போது, அ. தி. மு. க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது என்று ஒப்பந்தம்
கையெழுத்தானது. பின்னர் தேசிய செயலாளரும் மாநில தேர்தல் பார்வையாளருமான ஜி.தேவராஜன்
நிருபர்களிடம் கூறுகையில், ‘பேச்சுவார்த்தை முடிவில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு
தொகுதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்டோம். எங்களது கட்சிக்குரிய
‘சிங்கம்’ சின்னத்தில் போட்டியிடுவோம். மேற்கு வங்கத்தில் இருந்து கட்சியின் மூத்த
தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார்கள் என்றார்.
மாசி
25, 2011
பஹ்ரைன் மன்னருக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு மன்னிப்பு
மனாமா, பஹ்ரைனில் மன்னருக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாகக் குற் றம் சாட்டப்பட்ட
எதிர்க்கட்சித் தலைவர்கள் இருவருக்கு, மன்னர் மன்னிப்பு வழங்கியுள்ளார். எதிர்க்
கட்சிகளின் கோரிக்கைகளின்படி நேற்று 50 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இவர்களில் கடந்தாண்டு அக்டோபரில் சட்டவிரோத அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம்
பயங்கரவாதத்துக்கு நிதி யுதவி செய்து தவறான தகவலை பரப்பி யதாகக் குற்றம்
சாட்டப்பட்டு கைது செய் யப்பட்ட 25 ஷியா பிரிவினரும் அடங்குவர். தொடர்ந்து, ‘அல் ஹக்’
என்ற எதிர்க் கட்சியின் தலைவர்களான ஹசன் முஷைமா மற்றும் ஷியா முஸ்லிம் அறிஞர் முகமது
அல் மொக்தாத் இருவ ருக்கும் மன்னர் மன்னிப்பு அளித்துள்ளார். இவர்களில் முஷைமா,
தற்போது லண்டனில் உள்ளார். இவர் நாடு திரும்பி விட்டதாக செய்திகள் வெளியாயின.
மாசி
25, 2011
வடக்கில் 4 சனச வங்கி கிளைகள்
வடக்கில் சனச அபிவிருத்தி வங்கியின் நான்கு புதிய கிளைகள் அடுத்த மாதத்திற்குள்
திறந்து வைக்கப்படவுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம், பளை ஆகிய இடங்களில் இரு
கிளைகளும், யாழ். மாவட்டத்தில் பருத்தித்துறையில் ஒரு கிளையும் மன்னார் மாவட்டத்தில்
அடம்பனில் ஒரு கிளையும் திறந்துவைக்கப்படவுள்ளதாக சனச அபிவிருத்தி வங்கியின்
யாழ்.கிளை முகாமையாளர் அ. நாகேந்திரன் தெரிவித்தார். இந்நான்கு புதிய கிளைகளும்
சென்ற மாதம் திறக்கப்படவிருந்த போதிலும் நாட்டில் பெய்த பலத்த மழை, வெள்ளப்
பெருக்குக் காரணமாக ஒத்திவைக்க ப்பட்டிரு ந்தன என்பது குறிப்பிடத்தக்கது. புதிய
கிளைகள் நான்கும் ஒரே தினத்தில் திறந்துவைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. சனச
அபிவிருத்தி வங்கிக் கிளை கள் தற்போது யாழ்ப்பாணத் திலும் மன் னார் மாவட்டத்தில்
நானாட் டானிலுமே இயங்கவுள் ளன.
மாசி
25, 2011
எச்.
ஐ. வி. பற்றிய ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனை!
எச்.ஐ.வி. எனப்படும் எயிட்ஸ் நோயைப் பற்றி புரிந்து கொள்வது எப்படி அதற்கு
சிகிச்சையளிப்பது எப்படி என்பன போன்ற விடயங்களில் விக்டோரியா பல்கலைக்கழக
ஆராய்ச்சியாளர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். மருந்துகளால் கட்டுப்படுத்த முடியாத
இந்த எயிட்ஸ் வைரஸ்களை அவற்றின் ஜீன் உள்ள இடங்களை கண்டுபிடித்து சிகிச் சையளிப்பதே
இந்தப் புதிய கண்டுபிடிப்பாகும். விக்டோரியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவப்
பொறியியலாளர் ஸ்டீபர்னி வில்லர்த்ஸ் நடத்திய ஆராய்ச்சியின் முடிவிலேயே இது
தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல், இன்புளுவன்ஸா மற்றும் கொடிய எபோலா வைரஸ்
என்பனவற்றையும் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். வைரஸ்களின் ஜீன் பற்றித்
தெரிந்துகொள்ளவும் அவற்றின் தோற்றம் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ளவும் அடுத்த
தலைமுறை டி. என். ஏ. முறையை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
மாசி
25, 2011
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ். அலுவலகத்திற்கு மூடு
விழா
இருபது வருடங்களுக்கு மேலாக இயங்கிவந்த, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் யாழ்ப்பாண
அலுவலகம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது. எவ்வாறிருந்தபோதும்
மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள தேவைகள் தொடர்பான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக
இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக ஐ.சி.ஆர்.சி.
வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச செஞ்சிலுவை
சங்கத்தின் யாழ் அலுவலகம் 21 வருட சேவையின் பின்னர் மூடப்படுகின்றது. செஞ்சிலுவைச்
சங்கத்தின் சேவைகள் தொடர்பான வரலாற்றில் இதுவொரு முக்கிய கணப்பொழுதாகும்.
(மேலும்...)
மாசி
25, 2011
ஜூலியன்
அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு
அமெரிக்க இராஜதந்திர தகவல்களை அம்பலப்படுத்திய
விக்கிலீக்ஸ் இணையத்தள ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவை சுவீடனுக்கு நாடு கடத்தும்படி
பிரித்தானிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அசாஞ்சேக்கு எதிராக சுவீடன் நாட்டு
நீதிமன்றத்தில் இரண்டு பாலியல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. சுவீடனின் வேண்டுகோளின்
பேரில் பிரிட்டனில் வைத்து அசாஞ்சே கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பிணையில்
விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை சுவீடனுக்கு நாடு கடத்தும்படி
பிரித்தானிய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாக
அசாஞ்சே அறிவித்துள்ளார். மேற்படி மனுவானது நிராகரிக்கப்படுமாயின் அவர்
நாடுகடத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி
25, 2011
நான்
பணம் செலுத்தமாட்டேன்’ கிரீஸ் மக்களின் புதுமையான சட்டமறுப்பு போராட்டம்
அரசின் கொள்கை களுக்கு எதிராகப் போராடி வரும் கிரீஸ் நாட்டு மக்கள் புது வகையான
போராட் டம் ஒன்றைக் கையில் எடுத் துள்ளனர். “நான் பணம் செலுத்த மாட்டேன்” என்று பெய
ரிட்டுள்ள இந்தப் போராட் டம் கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் நகருக்கு வெளியிலுள்ள
குடியிருப்புகளைச் சேர்ந்த சிலரால் துவக்கப்பட்ட தாகும். பெரும் பொருளா தார
நெருக்கடியில் சிக்கி யுள்ளதைக் காரணம் காட்டி மக்கள் நலப் பணிகளைக் குறைப்பது
மற்றும் ஊதிய வெட்டு செய்வது ஆகிய நட வடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதற்கு
மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
(மேலும்...)
மாசி
25, 2011
தெலுங்கானா
பிரச்சினை
மக்களவையில் கடும் அமளி
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி மக்களவையில் டீ.ஆர்.எஸ்.
தெலுங்கு தேசம் காங்கிரஸ் கட்சிகளின் எம்.பிக்கள் நேற்று முன்தினம் கடும் அமளியில்
ஈடுபட்டனர். இதனால் அவை 3 முறை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற வரவு செலவுக் கூட்டத்
தொடர் கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. கடந்த செவ்வாய்க்கிழமை
நாடாளுமன்றம் கூடிய போது ஸ்பெக்ட்ரம் விவகாரம் பற்றி விசாரிக்க ஜே.பி.சி.
அமைக்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்ததால் அவை அமைதியாக நடந்தது.
(மேலும்...)
மாசி
25, 2011
130
ராணுவத்தினருக்கு மரண தண்டனை? லிபியாவில் கடாபி அரசின் கொடூரத்தனம்
ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்திவரு பவர்கள் மீது சுடுவதற்கான உத்தரவு இட்ட பிறகு,
அதை நிறைவேற்றாமல் இருந்த 130 ராணுவத்தின ருக்கு மரண தண்டனை தரப்பட்டுள்ளது என்று
மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பிரஸ்டிவி
வெளியிட்டுள்ள செய்தி யில், கைகள் பின்புறத்தில் கட்டப்பட்டுள்ள நிலை யில் 130
ராணுவத்தினரின் உடல்கள் இருக்கும் வீடி யோக்காட்சிகள் இருப்பதா கக் கூறப்பட்டுள்ளது.
லிபி யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள அல்-பைதா நகரில் வைத்து இந்தக் கொடூரச்
சம்பவம் நடைபெற்றுள் ளது. கலகக்காரர்கள் என்று அவர்கள் மீது குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டுள்ளது.
(மேலும்...)
மாசி
25, 2011
ஐ.நாவின்
நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து கடாபியின் மகள் நீக்கம்
லிபியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம்
தீவிரமடைந்து வரும் நிலையில் அந்நாட்டின் ஐ.நா.வுக்கான நல்லெண்ண தூதராக
நியமிக்கப்பட்டிருந்த முஅம்மர் கடாபியின் மகள் ஆயிஷா கடாபியின் பதவியை ஐ.நா.வுக்கான
மேம்பாட்டு நிதியகம் நீக்கிவிட்டது. லிபியாவில் ஜனாதிபதி முஅம்மர் கடாபி பதவி
விலகக்கோரி கடந்த ஒரு வாரமாக போராடி வருகின்றனர். இதில் 1000 த்திற்கும் மேற்பட்டோர்
பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் பதவி விலகமாட்டேன் என்றும்,
ரத்தம் இருக்கும் வரை போராடுவேன் என்றும் பிடிவாதம் காட்டி வருகிறார். ஐ.நா.வின்
பல்வேறு அமைப்புகள் கடாபியை கண்டித்துள்ளன. இந்நிலையில் ஐ.நா.வுக்கான மேம்பாட்டு
நிதியகத்தின் சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த பிரசாரம் மேற்கொள்ளவும்
நல்லெண்ண தூதராக கடந்த 2009 ஆம் ஆண்டு லிபியா சார்பில் ஜனாதிபதி கடாபியின் மகள்
ஆயிஷா கடாபி நியமிக்கப்பட்டிருந்தார். இவரை அப்பதவியிலிருந்து நீக்கி
உத்தரவிட்டுள்ளதாக ஐ.நா. மேம்பாட்டு நிதியத்தின் செய்தி தொடர்பாளர் நெஸர்கி
தெரிவித்துள்ளார்.
மாசி
24, 2011
24.02.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்
இந்
நிகழ்ச்சியில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணியின் பொதுச்செயலாளர்
திருநாவுக்கரசு சிறிதரன், ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம்,
ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் திரு .செ .ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ்
ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர் மாலை
8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு
சிறப்பிக்கலாம்
தொடர்புகளுக்கு: 00 44 208 9305313 00
44 208 9305313 or 078107063682
Visit our website : www.tbcuk.com
or www.tbcuk.net
V.Ramaraj , Thamil Broadcasting
Centre UK Ltd (TBC)
00 44 7817063682, 00 44 208 930
5313
SKYPE ID: TBCUKLIVE
மாசி
24, 2011
அரபு நாடுகளின் மக்கள் போராட்டம்
சவூதி மன்னர் அரச ஊழியர்களுக்கு திடீர் சலுகை வழங்கல்
_
மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் அரசு
எதிர்ப்பலையால் பீதியடைந்துள்ள சவூதி மன்னர் அப்துல்லா தன்னாட்டு அரசு ஊழியர்களுக்கு
சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
மொராக்கோவில் சிகிச்சை பெற்று வந்த சவூதி மன்னர் அப்துல்லா நாடுதிரும்பிய வேளையிலேயே
இதனை அறிவித்தளை விடுத்துள்ளார். 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களை
அறிவித்தார். இதில் அரசு ஊழியர்களின் சம்பளம் 15 சதவீத உயர்வு, அவர்களுக்கான
வீட்டுக் கடன், சமூகப் பாதுகாப்பு, வெளிநாடுகளில் படிக்கும் சவூதி அரேபிய
மாணவர்களின் கல்விக் கட்டண உதவி, வேலையில்லாத இளைஞர்களுக்கு நிதியுதவி மற்றும்
இலக்கியச் சங்கங்களுக்கு நிதியுதவி ஆகியவை அடங்கும். இவை தவிர வாங்கிய கடன்களைத்
திருப்பிச் செலுத்தாமல் சிறையில் வாடும் சிலருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டு அவர்களது
கடனை அரசே வழங்கும் என்றும் அறிவித்துள்ளார்.
___
மாசி
24, 2011
பயங்கரவாதிகளின் பட்டியலில் மீண்டும் புலிகள்
ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பட்டியலில் புலிகள்
இயக்கத்தின் பெயர் மீண்டும் உள்ளடக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு
அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி
உருவாக்கிய பயங்கரவாத அமைப்புக்களைத் தடைசெய்யும் சட்டத்திற்கமைய புலிகள் இயக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்களின்
பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப் பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின்
உத்தியோகபூர்வ சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட 26 அமைப்புக்களின்
பட்டியலில் புலிகள் இயக்கமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள்
தாம் தடைசெய்யப்பட்டமைக்கான காரணங்களைக் கோர முடியுமென்று 2010 ஆம் ஆண்டு ஜுலை மாதம்
ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்த போதும் எந்தவொரு அமைப்பும் அதற்கான கோரிக்கையை
விடுக்க வில்லையென்றும் ஐரோப்பிய ஒன்றியத் தின் சஞ்சிகையில் மேலும் குறிப்பி
ட்டுள்ளது.
மாசி
24, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 38,39வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின்
38வது நாளான 22-02-2011 செவ்வாய்கிழமை காலை 07:00 மணியளவில் நடைபயண வீரர்கள் சியோனி
என்ற இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். இதேவேளை, விபத்தில் காயமடைந்த திரு. ரஞ்சித்
அவர்களை அனுமதித்திருந்த மருத்துவமனையில் சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படவில்லை
என்று ரஞ்சித் அவர்கள் தெரிவித்ததாலும், மேலும் நடைபயண வீரர்கள் அனைவரும் நாக்பூர்
மாநகரை கடந்து செல்வதாலும், திரு. ரஞ்சித் அவர்களை அங்கிருந்து சென்னைக்கு மாற்ற
வேண்டும் என்று முடிவெடுத்து டெல்லியில் இருக்கும் அவரது சகோதரனையும் வரவழைத்தனர்.
(மேலும்...)
மாசி
24, 2011
கடற்படையினரின்
பயன்பாட்டிலுள்ள காணிகள் மூன்று மாதத்தில் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
வடக்கில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் 1/3 ஆக
குறைக்கப்பட்டுள்ளதோடு படிப்படியாக பொதுமக்களின் காணிகள், வீடுகள் மீள
கையளிக்கப்பட்டு வருவதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று
பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வன்னிப் பிரதேசத்தில் கடற்படையினர் பயன்படுத்தும்
தனியார் காணிகள் 3 மாத காலத்தினுள் மீள உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றும் அவர்
கூறினார்.
(மேலும்...)
மாசி
24, 2011
இந்தியாவின்
புதிய நாணயம் வெளியீடு
இந்தியாவின் நாணய வரலாற்றில் முதல் முறையாக 150
ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிடுகிறது. வருமான வரித்துறை தொடங்கப்பட்டு, 150
ஆண்டுகள் ஆவதை குறிக்கும் வகையில், இந்த சிறப்பு நாணயம் வெளிப்படு கிறது. எதிர்வரும்
28 ஆம் திகதி, பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பொதி பட்ஜெட்
தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த நாணயத்தை வெளியிடுகிறார். இந்த நாணயம், வெள்ளி,
செம்பு, நிக்கல், துத்தநாகம் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன்
முன்பக்கம், ‘சத்யமேவ ஜெயதே’, ‘இந்தியா’ ஆகிய வார்த்தைகளுடன் சர்வதேச வடிவமைப்பு
கொண்டதாக இருக்கும். பின்பக்கத்தில், சாணக்கியர் படமும், தேனீயுடன் தாமரை மலர்
படமும் இடம்பெற்று இருக்கும். 150 ரூபாய் மதிப்புள்ள 200 நாணயங்கள் அச்சிட்டு
வெளியிடப்படும். மேலும், வருமான வரித்துறையின் 150 வது ஆண்டு கொண்டாட்டம்
நிறைவடையும்போது 5 ரூபாய் மதிப்புள்ள 100 சிறப்பு நாணயங்கள் வெளியிடப்படும்.
நாணயங்களும், 150 ரூபாய் நாணய வடிவமைப்பிலேயே. ஆனால் சற்று சிறியதாக இருக்கும்.
மாசி
24, 2011
யாழ்ப்பாணத்திலிருந்து பெருமளவு மரக்கறி, வெங்காயம் தென்னிலங்கைச் சந்தைக்கு
வந்துள்ளது
மரக்கறி, உருளைக்கிழங்கு, வெங்காயம், பச்சை மிளகாய் போன்றவை யாழ்ப்பாணத்திலிருந்து
தம்புள்ளை பொருளாதார வர்த்தக நிலையத்துக்கு வந்துள்ளன. பீட்றூட் கிழங்கு, வெங்காயம்
போன்ற வை இலட்சக் கணக்கான கிலோக்கள் தம்புள்ளைச் சந்தைக்கு வந்து சேர்ந்துள்ளன.
இதனால் அண்மைக் காலமாக அதிகரித்திருந்த மரக்கறி விலைகள் தற்போது குறைவடைந்து
வருகின்றன. பயங்கரவாதத்தை ஒழித்து அப்பகுதியில் இயல்பு நிலையை தோற்றுவித்ததன்
பயன்களாகவே இதனைக் கருதமுடியும்.
(மேலும்...)
மாசி
24, 2011
தமிழக சட்டசபை தேர்தலில் துணை இராணுவத்தை பயன்படுத்தத் திட்டம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் துணை இராணுவத்தை பயன்படுத்துவது குறித்து பரிசீலனை செய்ய
தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாநகராட்சி,
நகராட்சி தேர்தலில் காங்கிரஸ் - திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
அப்போது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் அரசு எந்திரத்தையும் அந்த கட்சிகள்
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தின. மேலும், சமூக விரோதிகளையும், ரவுடிகளையும்
பயன்படுத்தி வாக்குச் சாவடிகளில் கத்தி முனையில் தேர்தல் அதிகாரிகளை மிரட்டி தேர்தலை
சாதகமாகக்கிக் கொண்டனர். தமிழக டி.ஜி.பி. உட்பட யாரும் இதை தட்டிக் கேட்கவில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் திருமங்கலம், வந்தவாசி, பென்னாகரம், திருச்செந்தூர் போன்ற
தொகுதிகளில் வாக்காளர்களுக்கு மது, பிரியாணி, பணம் கொடுத்து ஓட்டுகளை வாங்கி வெற்றி
பெற்றனர். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தேர்தலை நேர்மையுடன் நடத்த தமிழக அரசு
அதிகாரிகள், ஊழியர்கள், காவல்துறையினர் ஆகியோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படக்
கூடாது. ஒட்டு மொத்த தேர்தல் மற்றும் ஓட்டு எண்ணிக்கை ஆகியவற்றை துணை இராணுவத்தைக்
கொண்டு நடத்த முன்வர வேண்டும்.
மாசி
24, 2011
வீடுகளை இழப்பவர்களுக்கு மாற்று இடங்களில் குடியிருப்புக்கள்
வழங்கப்படும்
நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீடுகளை இழப்பவர்களுக்கு மாற்று இடங்களில்
குடியிருப்புக்கள் வழங்கப்படும். எவருக்கும் அநீதி இழைக்கப்பட மாட்டாது என்று
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நகர
அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீடுகளை இழப்பவர்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின்
செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் தாம் கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு
உறுதியளித்தார் என சுற்றாடல் துறை பிரதியமைச்சர் ஏ.ஆர். எம். அப்துல் காதர் நேற்று
கூறினார்.
(மேலும்...)
மாசி
24, 2011
அமெரிக்காவின் பிரதிநிதி அரபு நாடுகளுக்கு விஜயம்
அரபு நாடுகளின் தற்போதைய நிலைமைகளை நேரில் கண்டறிய மத்திய கிழக்கிற்கான
அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஜெப்ரி பெல்ட்மான் அங்கு பயணமானார். கட்டார், குவைத்,
பஹ்ரைன், ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளார்.
அந்நாட்டுத் தலைவர்களுடன் தனித்தனியே பேச்சுக்களை நடத்தும் ஜெப்ரி பெல்ட்மான்
அரசியல், பொருளாதார, சமூகம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் கொண்டு வரப்பட வேண்டிய
மாற்றங்களையும் ஆராய்வதற்கு இஸ்ரேல் குறித்த அமெரிக்கா வின் நிலைப்பாடு அரபு நாட்டு
மக்களி டையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ள இக்கால கட்டத்தில் இவரின் விஜயம்
முக்கியம் வாய்ந்ததாக உள்ளதெனக் கருதப்படுகிறது. குவைத்தின் 50வது சுதந்திர
வைபவங்களிலும் அவர் பங்கேற்பார்.
மாசி
24, 2011
சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு அமெரிக்கா, பிரிட்டன் மீது பிரிட்டன் பிரதமர்
குற்றச்சாட்டு
மனித உரிமைகளை ஒடுக்கி ஆட்சி புரிந்த சர் வாதிகாரிகளுக்கு அமெ ரிக்கா மற்றும்
பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆதரவு தந் ததும், தற்போது எழுந் துள்ள நிலையற்ற தன்மைக் குக்
காரணம் என்று பிரிட் டன் பிரதமர் டேவிட் கேம ரூன் குற்றம் சாட்டியுள் ளார். குவைத்
நாட்டு நாடா ளுமன்றத்தில் உரையாற் றுகையிலேயே டேவிட் கேமரூன் இவ்வாறு குறிப்
பிட்டார். மேலும் பேசிய அவர், மேற்கு ஆசியாவில் தற்போது எழுந்துள்ள மக் கள்
எழுச்சிகள், இத்தகைய ஆதரவு அளித்தது எவ்வ ளவு தவறு என்பதையே காட்டுகிறது.
சர்வாதிகாரி களுக்கும், ஒடுக்குமுறை அரசுகளுக்கும் மேற்கத்திய நாடுகள் ஆதரவளித்து
வந் தன. ஆனால், ஜனநாயகம் கோரி ஆர்ப்பாட்டம் நடத் துபவர்களுக்கு ஆதரவாக பிரிட்டனின்
தற்போதைய அரசு இருக்கும்.
(மேலும்...)
மாசி
24, 2011
யுத்தத்தினால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன
எல்.ரி.ரி.ஈ. இயக்கத்துக்கும், ஆயுதப்படைகளுக்கும்
இடையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது சின்னாபின்னமாகி அழிவை எதிர்நோக்கியிருந்த
முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போது, சகஜ நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. இம் மாவட்
டத்தில் உள்ள 127 கிராம சேவை உத்தியோகஸ்தர் பிரிவுகளில், 100 பிரிவுகளில் மக்களை
மீள்குடியேற்றம் செய்யும் நடவடிக்கை கள் பூர்த்தியடைந்துள்ளன. இது பற்றி தகவல்
தெரிவிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசா ங்க அதிபர், இன்னும் 27 கிராம சேவை
உத்தியோகஸ்தர் பிரிவுக ளில் மக்களை குடியேற்றுவதற்கான ஏற்பாடுகள் துரித கதியில்
நடைபெறுவதாகவும் இராணுவத்தினரும், அரச சார்பற்ற அமை ப்புக்களும் ஒன்றிணைந்து இந்த
27 பிரிவுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இப்போது ஈடுபட்டு வருவதாக
தெரிவித்தார். இப்பிரதேசங்களிலிருந்து நிலக்கண்ணிவெடிகள் முற் றாக
அகற்றப்பட்டுவிட்டன என்ற சான்றிதழ் தமக்கு கிடைத்த வுடன் அங்கு மக்கள்
மீள்குடியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.
(மேலும்...)
மாசி
23, 2011
இலங்கைக்கு
எதிரான தென்னிந்திய ஆர்ப்பாட்டங்கள் ஆரோக்கியமான தீர்வுகளுக்கு வழிவகுக்குமா?
இலங்கைக்கு எதிராக தென்னிந்தியாவில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களும் கண்டனப்
பேரணிகளும் இடம்பெற்றுவருகின்றன. மீனவப் பிரச்சினை தென்னிந்தியாவிலும்
இலங்கையிலும் பேசப்படும் கருப்பொருளாக தற்போது உருவெடுத்துள்ளது. யுத்தம்
நடைபெற்ற காலப்பகுதியில் கட்சிக்குக் கட்சி, ஆளுக்கு ஆள் என
முண்டியடித்துக்கொண்டு இலங்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும்
களமிறங்கினார்கள்.‘கொதித்தெழுந்தது தமிழகம்’, ‘இறுதிவரைப் போராடுவோம் என
உறுதிமொழி’, போன்ற தலைப்புகளில் அடிக்கடி செய்திகள் வெளியாயின. இலங்கைப்
பிரச்சினை, தமிழக அரசியலில் தீர்மானிக்கும் ஒரு சக்தியாகவும் மாறியிருந்தது.
எனினும் அந்தப் போராட்டங்கள் அனைத்தும் எந்த வகையில் சாதகமான
தீர்மானத்துக்கு வித்திட்டன என்பதைத் தமிழ் மக்கள் நன்கறிவார்கள்.
(மேலும்....)
மாசி
23, 2011
தப்பியோடவில்லை
என கடாபி அறிவிப்பு
லிபியாவில் அந்நாட்டு ஜனாதிபதி கடாபிக்கு
எதிரான போராட்டங்கள் உக்கிரமடைந்து வரும் நிலையில் "நான் நாட்டை விட்டு
தப்பியோடவில்லை" என அந்நாட்டு அரச தொலைக்காட்சி சேவையில் தோன்றிய கடாபி
தெரிவித்துள்ளார். தான் வெனிசூலாவிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்படுபவை
பொய்யென்றும் ஒருபோதும் பதவியை விட்டுக்கொடுக்க போவதில்லையெனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார். அங்கு இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை
நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடாபிக்கு ஆதரவான
இராணுவத்தினரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுடப்படுவதாகவும் சடலங்கள் வீதிகளில்
கிடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக நாடுகள் பல கடாபிக்கு தங்களது
கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
மாசி
23, 2011
தமிழ்க் கட்சிகள்
முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றத் தயார் -
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
வட பகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள்
குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பினருடனும் ஏனைய தமிழ்க் கட்சியினருடனும்
நடாத்தப்படவிருக்கும் பேச்சுவார்த்தைகளின் போது முன்வைக்கப்படும் நியாயமான
கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றுத் தெரிவித்தார். இதனடிப்படையில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் மார்ச் முதலாம் திகதி இரண்டாவது
தடவையாகப் பேச்சுவார்த்தை நடாத்தவிருப்பதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
அவர்கள் கூறினார். அதேநேரம் வடபகுதி மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள்
குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வி. ஆனந்த சங்கரி, தர்மலிங்கம்
சித்தார்த்தன் ஆகியோரின் கட்சிகளுடனும் பேச்சுவார்த் தைகள் நடாத்தப்படும்
எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
(மேலும்....)
மாசி
23, 2011
இருதேச
பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை இடைநிறுத்தம்
இருதேச பிரஜா வுரிமை வழங்கும் நடைமுறையைத்
தற்போது அரசாங்கம் இடை நிறுத்தி வைத்திருக்கிறது என்று தெரிவித்த ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், சிலர் இந்த சலுகையைப் பயன்படுத்தி இலங்கைக்கு
துரோகம் இழைக்கும் சதிகளில் ஈடுபட லாம் என்ற சந்தேகம் எழுந்திருப்பதனால்
இருதேச பிரஜாவுரிமை கோரி விண்ணப்பிப்பவர்கள் பற்றி நன்கு விசாரணை செய்த
பின்னரே அவர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்று கூறினார். இது பற்றி
ஒரு தீர்க்க மான முடிவை எடுப்பதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான குழுவொன்று
இப்போது நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த
பின்னரே இருதேச பிரஜாவுரிமையை வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் மீண்டும்
ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி கூறினார்.
(மேலும்....)
மாசி
23, 2011
கொழும்பில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டார் திருமாவளவன்
மறைந்த பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில்
பங்கேற்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சிறிலங்கா அரசினால் திருப்பி
அனுப்பப்பட்டுள்ளார். திருமாவளவன் நேற்றிரவு சென்னையில் இருந்து விமானத்தில்
கொழும்பு சென்றதாகவும், ஆனால் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தை விட்டு
வெளியேற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. இதனால்
அவர் மீளவும் அதே விமானத்திலேயே சென்னை திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
சிறிலங்கா அரசின் இந்தச் செயலை வன்மையாக கண்டித்துள்ள தொல்.திருமாவளவன் இது
இந்தியாவுக்கே அவமானம் என்று கூறியுள்ளார். எனினும் இதுபற்றி சிறிலங்கா
அரசதரப்புத் தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இன்று
வல்வெட்டித்துறையில் நடைபெறும் பார்வதியம்மாளின் இறுதி நிகழ்வில்
பங்கேற்கவுள்ளதாக தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி
23, 2011
ராஜபக்ஷேவின் நாடகமா?!
நாகை மீனவர்கள் சிறைப்பிடிப்பு..
இலங்கை வடமராட்சி வடக்குக் கடல்
தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாஜத் தலைவர் அந்தோணிப்பிள்ளை
எமிலியாம் பிள்ளையிடம் பேசினோம். ''சம்பவத்தன்று, எங்கட ஆட்கள் முதல் நாள்
கடலில் போட்ட வலைகளை எடுக்கப் போக... இந்திய இழுவைப் படகுகளால் வலைகள்
நாசமாகிக் கிடந்திருக்கு. எங்கட ஆட்கள் கோபத்தில் பேச, இரு தரப்பிலயும்
வாக்குவாதம்! தமிழக இழுவைப் படகுகளைக் கரைக்குக் கொண்டு வந்தோம். 30
வருடங்களா போரால் துன்பத்தை அனுபவிச்சுட்டு, இப்போதான் ஆழ்கடலில
மீன்பிடிக்க அனுமதி கிடைச்சுது. போரில் குடும்ப உறவுகளை இழந்து, சொத்துகளை
வித்தோ... கடன் வாங்கியோதான் மீன்பிடி சாதனங்களை வாங்கியிருக்கோம். இந்த
நேரத்தில இழுவைப் படகைக் கொண்டுவந்து, எங்கட மீன்பிடி சாதனங்களை அழிக்கலாமா?
வலை போட்டுப் பிடிச்சா, மேற்பரப்பில உள்ள மீன்களைப் பிடிக்கலாம், அடியில
மீன்குஞ்சுகள் இருக்கும். தொடர்ந்து மீன்வளம் அழிக்கப்படாமல் இருக்கும்.
தமிழகத்தில் இருந்து வர்ற சகோதரர்களை எங்க கடற்பிரதேசத்தில மீன்பிடிக்கக்
கூடாதுன்னு சொல்லல. எங்களப் போலவே வலையைப் போட்டு மீன்பிடிங்க. நீங்க
இழுவைப் படகைப் பயன்படுத்துறதால எங்கட இயற்கை அழிஞ்சதுன்னா, இந்தத் தொழிலையே
நம்பியிருக்கிற நாங்க எங்க அய்யா போக?' என்று கேட்டார் எமிலியாம்பிள்ளை.
(மேலும்....)
மாசி
23, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
37வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 37வது நாளான 21-02-2011 திங்கள் கிழமை அகால மரணமடைந்த
சந்திரதாஸ் சுதர்சன் அவர்களின் இறுதி கிரியைகள் புதுக்கோட்டை லேனாவிளக்கு
அகதி முகாமில் நடந்து கொண்டிருக்கும் வேளையில், நெடுந்தூர நடைபயண வீரர்கள்
சுதர்சன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய, அவரது இலட்சியக் கணவை நிறைவேற்ற
நெடுந்தூர நடைபயணத்தினை வெற்றியுடன் முடிக்க உறுதி எடுத்துக்கொண்டு,
சுதர்சன் அகால மரணமடைந்த இடத்திலிருந்து சுதர்சன் அவர்களின் நினைவுகளுடன்
மீண்டும் நடைபயணத்தை ஆரம்பித்தனர்.
(மேலும்....)
மாசி
23, 2011
இன்று எகிப்து... நாளை இந்தியா?!
(பாரதி
தம்பி)
எகிப்தின் அடிப்படைப் பிரச்னை என்ன?
வரலாற்றில் ரோம சாம்ராஜ்யம் என அறியப்படும் ஒட்டுமொத்தப் பிரதேசத்துக்கும்
ஒரு காலத்தில் தானிய ஏற்றுமதி செய்த செல்வச் செழிப்பான நாடு எகிப்து. ஒரு
வல்லரசு ஆவதற்கான தகுதியுடைய நாடுதான். ஆனால், எங்கும் வறுமை, உணவுப் பஞ்சம்,
வேலைவாய்ப்பு இன்மை. எகிப்தின் மொத்த வளத்தையும் தன் சொந்த உடைமையாகக் கருதி
கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருந்தார் அதிபர் முபாரக். கடுமையான பொருளாதார
நெருக்கடி, குழு மோதல்களாகவும் கலவரங்களாகவும் ஆங்காங்கே வெடித்தன.
அப்போதுதான் நடந்தது மற்றோர் அரபு நாடான துனிஷியாவின் மக்கள் புரட்சி.
உண்மையில் தற்போதைய எகிப்து எழுச்சியின் துவக்கப் புள்ளி துனிஷியாவில்தான்
தொடங்குகிறது.
(மேலும்....)
மாசி
23, 2011
கனடா போன்ற நாடுகள் எல். ரி. ரி. ஈ.யின் சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன.
நாட்டுக்குத் துரோகமிழைக் கும் புலம் பெயர்ந்த எல். ரி. ரி. ஈ. யைச்
சார்ந்தவர்களுக்கு எதிராக இப்போது ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கைகளை
எடுக்க ஆரம்பித்துள்ளன. குறிப்பாக கனடா போன்ற நாடுகள் எல். ரி. ரி. ஈ.யின்
சொத்துக்களை முடக்கி வைத்துள்ளன. எல். ரி. ரி. ஈ.யினர் இப்போது கனடாவுக்கு
ஒரு பெரும் தலையிடியாக இருக்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளில் எல். ரி. ரி. ஈ.
யினர் இப்போது கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள்.
(மேலும்....)
மாசி
23, 2011
தமிழ் இனத்துக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வரும் மீனவர்கள்!
இலங்கையின் எண்பத்தைந்து சதவீத கடல்பகுதிகள்
தமிழ் இனத்துக்குச் சொந்தமானது. இன்று இலங்கையின் கடற்பகுதி 100 சதவீதமும்
சிங்கள இனத்துக்கானதாகிவிட்டது. ஓர் சிறிய பகுதியான யாழ்ப்பாணமும்
மன்னாரும்தான் தமிழர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள
பகுதிகளாக இருக்கிறது. ஆழ்கடல் மீன்பிடி உரிமை தமிழர்களுக்கு
வழங்கப்படவில்லை. ஈழத் தமிழ் மீனவர்கள் முன்னொரு காலத்தில் இலங்கையின்
தேவையில் பாதிக்கும் அதிகமான மீன்களை கொழும்புக்கு அனுப்பி வந்தனர்.
இனப்பிரச்சினை தலைதூக்கியதும் தமிழர்களின் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்காக
மீன்பிடித் தொழிலையும் முடக்கினர் சிங்கள ஆட்சியாளர்.
(மேலும்....)
மாசி
23, 2011
(மேலும்....)
மாசி
23, 2011
HC Levy wants Sri Lanka to accommodate Tamil Diaspora
Surely you are not requesting the
Sri Lankan government to give them one-third of the real estate of the
north and east of the island bordered by 60 percent of the coast line
that 30,000 of the Tamils took to the streets of Ottawa and Toronto
carrying head-high a sea of red Tamil Tiger flags on March, April and
May of 2009 asking the Canadian government to speak for them and not to
let the Sri Lankan armed forces wipe out the Tamil Tigers who were
fighting for that very separate Tamil racist state, Eelam. Come on
Bruce! You know that it will never happen, especially when Canada, the
country you represent wouldn’t want to hand over the Canadian Province
of Quebec to the separatist Quebecois, little alone to the October
1970’s FLQ.
(more.....)
மாசி
23, 2011
மாவோயிஸ்டுகளின்
14 கோரிக்கைகளில் 08 கோரிக்கைகள் ஒரிசா மாநில அரசால் ஏற்பு
மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. கிருஷ்ணா, பொறியாளர்
பவித்ரா மஜ்சி ஆகிய இருவரையும் விடுவிப்பது தொடர்பாக அரசுக்கும்,
மாவோயிஸ்டுகளுக்கும் இடையேயான 2ம் நாள் பேச்சுவார்த்தை திங்கட்கிழமை
நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது மாவோயிஸ்டுகள் விடுத்த 14
கோரிக்கைகளில் 8 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுவிட்டதாக அந்த மாநில உள்துறை
செயலர் பெஹரா தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரையும் பொறியாளரை யும் விரைந்து
பத்திரமாக மீட்கும் பொருட்டு இந்த 8 கோரிக்கைகளையும் அரசு முன்வந்து
ஏற்றுக்கொண்டுள்ளது.
(மேலும்....)
மாசி
23, 2011
மேலும் 8
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் ஒத்திவைப்பு
மேலும் எட்டு உள்ளூராட்சி சபைகளின்
தேர்தல்களை தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் தயானந்த
திஸாநாயக்க அறிவித்துள்ளார். திருகோணமலை நகரசபை, குளியாபிட்டி பிரதேச சபை,
ருவன்வெல்ல பிரதேச சபை, கிரிபாவ பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை,
திருக்கோயில் பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, மெரிடைம்பற்று பிரதேச சபை
என்பவற்றுக்கான தேர்தல்களையே தேர்தல் திணைக்களம் ஒத்திவைத்துள்ளது. ஏற்கனவே
தேர்தல் திணைக்களம் 59 உள்ளூராட்சி சபை தேர்தல் களை ஒத்திவைத்திருந்தது.
மாசி
23, 2011
அமெரிக்காவுக்கெதிராக பலஸ்தீனில் ஆர்ப்பாட்டம்
அமெரிக்கா தான்தோறித்தனமான முடிவுகளை எதிர்த்து பலஸ்தீனின் மேற்குக்கரையில்
ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இஸ்ரேலின் திட்டமிட்ட யூதக்
குடியேற்றங்களைக் கண்டித்து ஐ. நா. பாதுகாப்புச் சபை நிறைவேற்றிய கண்டனத்
தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் ரத்துச் செய்யப்பட்டது. இதைக்
கண்டித்தே மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பதா
அமைப்பினர் இதை ஏற்பாடு செய்தனர். அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாடு
தெரிந்துவிட்டது. மத்திய கிழக்கில் சமாதானத்தை கொண்டு வரும் எண்ணம்
அமெரிக்காவிடம் இல்லையென ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோஷமிட்டனர்.
இஸ்ரேலின் யூத விஸ்தரிப்புக் கொள்கையை ஐ. நா. பாதுகாப்புச் சபையிலுள்ள 15
நாடுகளில் 14 நாடுகள் எதிர்த்தன. சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ்,
பிரேஸில், பொஸ்னியா, கொலம்பியா, காபொன், ஜேர்மன், இந்தியா, லெபனான்,
நைஜீரியா, போர்த்துக்கல், தென்னாபிரிக்கா என்பன இஸ்ரேலுக்கெதிராக
வாக்களித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத் தீர்மானத்தை
அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தில் செல்லுபடியற்ற தாக்கியது. இஸ்ரேலின்
அநீதியான செயற்பாடுகளை அமெரிக்கா ஆதரிப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
மாசி
23, 2011
ரூபா 90 மில்லியன் செலவில் கிழக்கில் 13 ஹோட்டல்கள்
கிழக்கு மாகாணத்தில் உல்லாசப் பிரயாணத் துறையை மேம்படுத்தும் வகையில் 871
அறைகளைக் கொண்ட 13 உல்லாச ஹோட்டல்கள் நிர்மாணிக் கப்படவுள்ளன. இதற்கென
அரசாங்கம் 90 மில்லியன் அமெரிக்கன் டொலர் நிதியினைச் செலவிடவுள்ளதாக
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று
தெரிவித்தார். அத்துடன் திருகோணமலை, குச்சவெளி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளிலும் மேலும் 34 உல்லாச பிரயாண ஹோட்டல்களை நிர்மாணிக்கவுள்ளதுடன்
இதற்கென பல பில்லியன் ரூபா நிதியினைச் செலவிடவுள்ளதாகவும் அமைச்சர்
தெரிவித்தார். யுத்த சூழ்நிலை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து வடக்கு,
கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்ள பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
முன்வந்துள்ளனர். கற்பிட்டி மற்றும் குச்சவெளி பகுதிகளில் உல்லாசப் பிரயாண
ஹோட்டல்களை நிறுவுவதற்கு பல முதலீட்டாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய விடயங்கள் எத்தகைய ஒளிவு மறைவுமில்லாமல் நடைபெறுவதை உறுதிசெய்யும்
வகையில் நிதி பரிமாற்றங்களை திறைசேரியே நேரடியாக மேற்கொள்ளுமெனவும் அவர்
மேலும் தெரிவித்தார்.
மாசி
23, 2011
லிபியாவில் பெரும் அரசியல் நெருக்கடி மக்கள் மீது விமானங்கள் குண்டு மழை
லிபிய ஜனாதிபதி மொஹமட் கடா பியை உடனடியாகப் பதவி விலகுமாறு ஐ.நா.வுக்கான
லிபியாவின் பிரதித் தூதுவர் கோரியுள்ளார். மக்களைக் கொலை செய்தமைக்கான
போரியல் குற்றச்சாட்டையும் மனிதப் படுகொலைக் கான விசாரணைகளையும் எதிர்கொள்ள
மொஹமட் கடாபி தயாராக வேண்டு மெனத் தெரிவித்த ஐ.நா.வின் பிரதித் தூதுவர்
மொஹமட் கடாபியின் 42 வருட ஆட்சி நிறைவடையும் காலம் நெருங்கி விட்டதாகவும்
விளக்கினார். லிபியாவின் நிலைமைகள் தொடர்பாக பி.பி.சிக்கு விளக்கமளிக்கையிலே
ஐ.நா. வுக்கான லிபியாவின் பிரதித் தூதுவர் இவ்வாறு கூறினார்.
(மேலும்....)
மாசி
23, 2011
மும்மொழிக் கொள்கையின் மூலம் இன ஐக்கியத்தை கட்டியெழுப்பலாம்
மும்மொழிக் கொள்கை நாட்டின் முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த ஒற் றுமைப்பாலமாக
அமையும். எங்கள் நாட்டில் இனங்களிடையே பகைமை உணர்வும், சந்தேகமும் கடந்த
காலத்தில் நிலைகொண் டிருந்தமைக்கு பிரதான மற்றவர்களின் மொழியை இன்னுமொரு
சமூகத்தினர் தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தே பிரதான கார ணமாகும். இனிமேல்,
இலங்கையில் அப்படியான நிலை ஏற்படாது என்று உறு தியளிக்கும் அமைச்சர்
வாசுதேவநாணயக்கார, இந்த மும்மொழிக் கொள்கையை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு
அரசாங்க அதி காரிகள், தனியார்துறை உயரதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பூரண
ஒத்துழைப்பை அளிப்பது அவசியம் என்று வலியுறுத்தி யுள்ளார். இந்த மும்மொழிக்
கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஆங்கில அறிவு மிகவும் அவசியமாக இருக்கின்ற
போதிலும், கூடிய வரை தமிழிலும், சிங்களத்திலும் பேசவும், எழுதவும் அரச கரும
ங்களை சரியான முறையில் நிறைவேற்றக் கூடிய திறமைமிக்க வர்களுக்கு அரசாங்க
பதவிகளைக் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிப்பது என்றும் அரசாங்கம் இப்போது
தீர்மானித்துள்ளது.
(மேலும்....)
மாசி
23, 2011
நியுஸிலாந்தில்
பெரும் பூகம்பம், 65 பேர் பலி, கட்டடங்கள் சேதம்
நியுஸிலாந்தில் திங்கட்கிழமை பாரிய பூகம்பம்
ஏற்பட்டது. இதன் அளவு 6.3 ரிச்டர் எனப் பதிவாகியுள்ளது. இப் பூகம்பத்தில்
சிக்கி 65 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தும் காணாமலும்
போயுமுள்ளனர். சுமார் 15 நிமிடம் வரை இப்பூகம்பம் உணரப்பட்டது. இதையடுத்து
வைத்தியசாலைகள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டதுடன் காயமடைந்தோரைக்
கொண்டுவர அம்பியுலன்ஸ் வண்டிகளும் சேவையிலீடுபடுத்தப்பட்டன. பாடசாலைகள்,
அரச அலுவலகங்கள், போக்குவரத்துக்கள் என்பன இயங்கவில்லை. மக்கள் பாதுகாப்பான
இடங்களை நோக்கிப் புறப்பட்டனர்.விமான சேவைகள் நிறுத்தப்பட்டு விமான
நிலையங்களும் மூடப்பட்டன. தொலைபேசி வயர்கள் துண்டிக்கப்பட்டதால் தொடர்பாடல்
வசதிகள் யாவும் செயலிழந்து காணப்பட்டன. நியுஸிலாந்தின் கிரிஸ்சேர்ச் என்ற
பகுதியிலே இப்பாரிய பூகம்பம் ஏற்பட்டது. இதேபோன்றதொரு பாரிய பூகம்பம் சென்ற
ஆண்டு செப்டம்பரில் நிகழ்ந்த வேளை ஏராளமான மக்கள் கட்டட இடிபாடு களுக்குள்
மாட்டிக்கொண்டனர். 1931ஆம் ஆண்டுக்கும் பின்னர் ஏற்பட்ட பாரிய அதிர்வை
இப்பூகம்பத்தில் மக்கள் உணர்ந்ததாக புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கிரஸ்சேர்து மேயர் இது தொடர்பான சேதவிபரங்களை நியுஸிலாந்து அரசாங்கத்திடம்
கையளிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசி
22, 2011
கூட்டமைப்புக்கு
அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும்
-
வீ.ஆனந்தசங்கரி
_
வடக்குகிழக்கில் இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க்
கட்சிகளுடன் இணைந்து களமிறங்கியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு மக்கள்
அளிக்கும் வாக்குகள் அரசாங்கத்தை அதிரவைக்க வேண்டும் என தமிழர் விடுதலைக்
கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கூறியுள்ளார். தமிழ் தேசியக்
கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத பல கட்சிகளையும் உள்வாங்கிய தமிழ் தேசியக்
கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்கிய நிலையில்
மட்டக்களப்பிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம்
சனிக்கிழமை வந்த வீ.ஆனந்தசங்கரி நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை
சந்தித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
(மேலும்....)
மாசி
22, 2011
அன்பான மக்களே... இதையும் படியுங்கள்!
புலிகளுக்கு பயந்து பதுங்கி வாழ்ந்த சமூகவிரோதி. புலி உறுப்பினர் புலிகளின்
முக்கியஸ்தர், புலிகளின் இரகசிய இரட்டை உளவாளியாக வலம்வரும் சுரேஸ்
பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தி!
ஈழத் தமிழர்கள் அரசியல் ரீதியாக தன்னாட்சி உரிமையைப் பெறுவதும் அதை நோக்கி
உழைப்பதுமே திருமதி வேலுப்பிள்ளை பார்வதி அம்மாளுக்கு நாம் செய்யும்
அஞ்சலியாக அமையும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற(புலி)
உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் வெளியிட்டுள்ள இரங்கற் செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமதி வேலுப்பிள்ளை பார்வதியம்மாள் அமரத்துவம்
அடைந்த செய்தி தமிழ் மக்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. புலிகளின் தலைவர்
வே. பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த கருவறை என்ற வகையில் ஈழத்தமிழர்கள்
மாத்திரமல்லாமல் உலகத் தமிழர்கள் அனைவருமே பார்வதியம்மாளை உணர்வு ரீதியாகத்
தமக்கு நெருக்கமான ஓர் உறவாகவே கருதி வந்துள்ளனர்.
(மேலும்....)
மாசி
22, 2011
மாசி
22, 2011
2ஜி:
திரைமறைவில் சில உண்மைகள்
(ஆர்.பத்ரி)
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீடு தொடர்பான விவாதங்கள் பரபரப்பாக ஒவ்
வோர் நாளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் தங்கள் கோணங்
களில் கருத்துக்களை வாத, பிரதிவாதங்க ளாக எடுத்து வைத்துக்கொண்டிருக்கின்ற
னர். மக்கள் அனைத்தையும் மவுனமாக உள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் எழுந்துள்ள இந்த முக்கியப்பிரச்சனை,
பொது வெளியில் அனைத்துத் தரப்பினராலும் விருப்புவெறுப்பின்றி நடுநிலையோடு
விவா திக்கப்படவேண்டும்.
(மேலும்....)
மாசி
22, 2011
துயரத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்ட நடைபயண விரார்கள் தமது புதுடில்கியை
நோக்கிய நடைபயணத்தை நாக்பூர் நகரை அடைந்து உள்ளனர்
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின்
சென்னையிலிருந்து புது டில்கியை நோக்கிய ஈழத் தமிழர் விடுதலைக்கான
நெடுந்தூர நடைபயணத்தின் போது ஈழத் தமிழர் விடுதலைக்காக தன்னுயிர் துறந்த
செல்வன். ச. சுதர்சன் அவர்களின் பூதவுடலுக்கு நடை பயணவீரார்களின் இறுதி
மரியாதைக்கு பின் உடல் விமானத்தில் புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு
நல்லடக்கம் செய்யபட்டுள்ளது. துயரத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்ட
நடைபயண விரார்கள் தமது புதுடில்கியை நோக்கிய நடைபயணத்தை நாக்பூர் நகர் ஊடாக
மேற்கொண்டு உள்ளனர்.
(மேலும்....)
மாசி
22, 2011
China, the elephant in the
global economic-recovery room
(DOUG SAUNDERS)
In public, the world’s financial chiefs warn of a
“two-speed recovery” in which some countries, especially China, are
experiencing fast-growing economies while others, notably the United
States and much of Europe, are mired in debt and unemployment and barely
growing at all. In private, though, the central bankers and finance
ministers of the world’s 20 largest economies, gathered in Paris this
weekend to confront looming global economic problems, almost all paint a
picture of China’s surging economy as a powerful black hole whose inward
draw is sucking up a huge share of the world’s debt, currency reserves,
food, commodities and jobs.
(more.....)
மாசி
22, 2011
அரசாங்க கட்சி இந்த தேர்தலிலும் வெற்றிவாகை சூடும்
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பொய் வதந்திகளை
தொடர்ந்தும் பரப்பி, அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் எதிர்ப்பை
வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இப்போது, தங்களின் தேர்தல் பிர
சாரங்களை முடுக்கிவிட்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சி யும், ஜே. வி. பி.
யினரும் உட்கட்சி பூசல்களினால் நிலைதடுமாறி இருப்பதாக அரசியல் அவதானிகள்
கூறு கிறார்கள். மக்கள் ஆதரவை இழந்து வரும் ஜே. வி. பி. யினர் கடந்த
பாராளுமன்ற பொதுத் தேர்தலில் இப் போது செல்லாக் காசாக மாறி, சிறைக் கைதியாகி
இருக் கும் சரத் பொன்சேகாவின் செல்வாக்கைப் பயன்படுத்தி தங்களின்
பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக் கையை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற
முயற்சியில் வெற்றிக் கிண்ண சின்னத்தில் போட்டியிட்டும் படு தோல்விக்கு
முகம் கொடுத்தனர். இதனால் ஜே. வி. பி.யினர் மீண்டும் தங்களின் பழைய மணி
தேர்தல் சின்னத்துடன் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
(மேலும்....)
மாசி
22, 2011
Tigers’ defeat made ICC Cricket World Cup 2011 matches possible at SL
venues
(Chief
of Defence Staff)
Fearing LTTE attacks, Australia and the West Indies declined to play
their opening games in Colombo in 1996 at the Wills World Cup.
(by Shamindra Ferdinando)
Chief of Defence Staff Air Chief Marshall Roshan Goonetileke says Sri
Lanka’s war victory over the LTTE has made it possible to hold the ICC
Cricket World Cup 2011 matches in the country. Had the LTTE
leadership escaped the army cordon and sought refuge in the northern
jungles, the group could have posed a threat in spite of losing its
conventional military capability, the SLAF Commander told The Island.
(more....)
மாசி
22, 2011
500 ஆண்டு பழமையான “கிறிஸ்டி” மொழி அடியோடு அழிந்து போகும் பரிதாபம்
மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் பேசப்படும் 500 ஆண்டு பழைமை
வாய்ந்த கிறிஸ்டி என்ற மொழி, தற்போது படிப்படியாக அழிந்து வருகிறது.
மகாராஷ்டிராவின் கொங்கன் பிராந்தியத்தில் உள்ளது ரய்காட் மாவட்டம்.
இங்குள்ள அலிபாக் நகரத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் கொராலி என்ற
கிராமம் உள்ளது. இங்கு 1,200 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 500
ஆண்டுகளுக்கு முன் போர்த்துக்கேயர்கள் இங்கு ஆதிக்கம் செலுத்திய போது
கிறிஸ்டி மொழி இங்கு பரவியது. போர்த்துக்கேய மொழியின் ஒரு பிரிவாக இது
கருதப்படுகிறது. கொராலி கிராமத்தில் மட்டும் அல்லாமல் அதை சுற்றியுள்ள மற்ற
பகுதிகளிலும் இந்த மொழியை பேசுவோர் கணிசமான அளவில் இருந்தனர்.
(மேலும்....)
மாசி
22, 2011
பிரதேச சபைகளை
கைப்பற்றுவதன் மூலம் ;பின்தங்கிய கிராமங்களை அபிவிருத்தி செய்ய முடியும்
வவுனியா மாவட்டத்தில் பிரதேச சபைகளை நாம்
கைப்பற்றுவதன் மூலம் பின்தங்கியுள்ள கிராமங்கள் பல வகையிலும் துரிதமாக
அபிவிருத்தி காணும் என தெரிவித்துள்ள வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் றிசாட்
பதியுதீன், அதற்காக எங்களுடைய வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என
கேட்டுக்கொண்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் வவுனியா
மாவட்டத்தில் போட்டியிடும் நான்கு பிரதேச சபைகளின் வேட்பாளர்களுடனான
சந்திப்பு வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போது
மேற்கண்டவாறு அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரின் இணைப்பாளரும், வவுனியா
நகர சபை உறுப் பினருமான அப்துல்பாரி சரீப்வ் உள்ளிட்ட அனைத்து வேட்பா
ளர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். வேட்பாளர்கள் வாக்காளர்களை
வாக்களிக்க ஊக்குவிக்க வேண் டும். அத்துடன் கிராமிய மட்டத் தில் சிறு
கருத்தரங்குகளை வைத்து அரசாங்கத்தின் வேலைத் திட்டங் களை விளக்கலாம் என்றார்.
மாசி
22, 2011
எமனில் அரச ஆதரவாளர்கள் பல்கலை மாணவரிடையே மோதல்
எமன் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையே நடந்த
மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். பலர் காயமடைந்தனர். தலைநகர் சனாவிலுள்ள
பல்கலைக்கழக மாணவர்கள் அண்மையில் அரசுக்கெதிரான போராட்டங் களை
ஆரம்பித்திருந்தனர். ஜனாதிபதி மாளிகையை நோக்கி பல்கலைக்கழக மாணவர்கள்
ஆர்ப்பாட்டங்களை முன்னெ டுத்த போது எமன் ஜனாதிபதி அலி அப்துல்லா சாலிஹ்
ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு நிலைமைகள் மேசமடைந்தன.
தொடர்ந்தும் மாணவர்கள் ஜனாதிபதிக்கெதிரான போக்கை கடைப்பிடிப்பதால் அரசின்
ஆதரவாளர்கள் பொல்லுகள், போத்தல்கள், கற்கள் சகிதம் பல்கலைக்கழகத்துக்குள்
நுழைந்தனர். இதனையடுத்தே இரு தரப்பாரிடையேயும் மோதல்கள் வெடித்தன. வீதிகளை
மாணவர்கள் தடைசெய்ததால் இதில் பொலிஸார் தலையிடவேண்டியேற்பட்டதாக அரசாங்கம்
அறிவித்தது.
மாசி
22, 2011
லிபியாவில் பணியாற்றிய வெளிநாட்டு தூதுவர்கள் பதவி விலகல்
லிபியாவில் அரசாங்கத்துக்கு எதிராக ஏற்பட்டுள்ள மக்கள் போராட்டத்தையடுத்து
அங்குள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் இருவர் பதவி விலகியுள்ளனர். சீனா,
அரபுலீக் என்பவற்றுக்கான தலைவர்களே தங்கள் பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர்.
இதேவேளை லிபியாவுக்கான இன்னும் சில தூதுவர்களும் லிபியாவில் ஜனநாயகம் இல்லை,
எனவே அந் நாட்டுக்கான தூதுவராகப் பணியாற்றுவதில் கெளரவம் இல்லையெனக்
கூறியுள்ளனர். அப்பாவி மக்களை லிபிய இராணுவ கொலை செய்கின்றது. இதை சர்வதேச
சமூகம் தடுக்க வேண்டுமென லிபியாவின் எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள்
விடுத்துள்ளதுடன் வெளிநாடுகளுக்கான எண்ணெய் ஏற்றுமதிகளை நிறுத்தப்
போவதாகவும் தெரிவித்துள்ளார். இதே வேளை லிபிய ஜனாதிபதியின் மகன்
ஆர்ப்பாட்டக்காரர்களை எச்சரித்துள்ளார்.
மாசி
22, 2011
தமிழக எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் அதிர்ச்சி பின்னணி
தமிழக எம்.பி.க்களில் 11 பேர் மீதும் எம்.எல்.ஏ.க்களில் 76 பேர் மீதும்
குற்ற வழக்குகள் உள்ளன. இதில் ஏழு எம்.பி.க்கள் 25 ஏம்.எல்.ஏ.க்கள் மீதான
வழக்குகள் கொலை, கொலை முயற்சி ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட கடுமையான
குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்டவை. மேலும் 36 எம்.பி.க்கள், 54
எம்.எல்.ஏ.க்கள் கோடீஸ்வரர்கள். நெஷனல் எலக்ஷன் வட்ச் மற்றும் அசோசியேஷன்
ஆப்டெமாகிரடிக் ரிபார்ம்ஸ் ஆகிய அமைப்புக்கள், தமிழக எம்.பிக்கள்,
எல்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் மற்றும் சொத்து விவரங்களை தொகுத்து
வெளியிட்டுள்ளது. அவை பல அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்துபவையாக
உள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த 39 லோக்சபா எம்.பி.க்களில் 10 பேர் மீது குற்ற
வழக்கு கள் (ஆறு எம்.பி.க்கள்) மீது கடுமையான வழக்குகள் உள்ளன. தி.மு.க.
எம்.பி.க்கள் 18 பேரில் நான்கு பேர் மீது குற்ற வழக்கும், ஒருவர் மீது
கடுமையான வழக்கும், அ.தி.மு. க. எம்.பி.க்கள் ஒன்பது பேரில் நான்கு பேர்
மீது கடுமையான குற்ற வழக்கும், ம.தி.மு.க. வின் ஒரு எம்.பி.யின் மீது குற்ற
வழக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு எம்.பி. மீது கடுமையான குற்ற
வழக்கும் உள்ளன. விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள கேரளா, தமி ழகம்,
புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தமிழகத்தில் தான் அதிக
எம்.எல். ஏ.க்கள் மீது குற்ற வழக்கு உள்ளது.
மாசி
22, 2011
ஜனாதிபதியின் சிந்தனைப்படி அனைவருக்கும் மும்மொழி தேர்ச்சி அவசியம்
பல் ஊடகக் கருவியைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் நவீனமுறைக் கற்பித்தலை
வகுப்பறைகளில் மேற்கொள்ள வேண்டும் என வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் ப.
விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று உலக நாடுகளில் கற்பித்தலில் நவீன
முறைகள் கையாளப்பட்டு வருகின்றன. மாறி வரும் உலகிற்குகேற்ப நாமும் எம்மை
மாற்றிக் கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் பல்ஊடக உபகரணங்களைப் பயன்படுத்தி கணனி
ஊடாக கற்பிக்க வேண்டும். இந்த நவீன முறைக் கற்பித்தல் உத்தி மாணவர்களின்
கவனத்தை ஈர்க்கக் கூடிய கவர்ச்சிமிகு கற்பித்தல் முறையாகும். 2020 ஆம்
ஆண்டில் எல்லோரும் கணனி அறிவு பெற்றிருக்க வேண்டும். அத்துடன் தமிழ்,
சிங்களம் உட்பட மும்மொழிகளிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
என்று கூறி வரும் ஜனாதிபதி அவர்களின் இலக்கினை நிறைவேற்ற அனைவரும்
முயற்சிக்க வேண்டும்.
மாசி
22, 2011
See…. CPU for all Scams….RADIA
மாசி
22, 2011
மேற்கு வங்க தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்
மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில், மேற்கு வங்காளத்தில் முக்கிய
எதிர்க்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. ஆனால்,
காங்கிரஸின் பல்வேறு கொள்ளைகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மத்திய
ரெயில்வே மந்திரியுமான மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்தார். எனவே, மேற்கு
வங்காளத்தில் விரைவில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடப்
போவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் கொல்கத்தாவில் நடந்த மாபெரும்
கண்டன பேரணியில் மம்தா பானர்ஜி உரையாற்றினார். அப்போது அவர், “காங்கிரஸ்
மற்றும் எஸ்.யு.சி.ஐ. கட்சிகளுடன் எங்கள் கட்சி கூட்டணி அமைப்பதில் எந்த
சந்தேகமும் வேண்டாம். மேற்கு வங்காளத்தில் 35 ஆண்டுகளாக நடந்து வரும்
இடதுசாரி ஆட்சியை அகற்ற காங்கிஸுசுடன் கூட்டணியை தொடர விரும்புகிறோம்.
மாநிலத்தில் உள்ள இடதுசாரி சிந்தனை கொண்ட மக்கள் அனைவரும் திரிணாமுல்
காங்கிரஸ் கூட்டணியை ஆதரிக்க வேண்டும்”
மாசி
22, 2011
சவூதி
அரேபியாவில்
புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க முனைந்தோர் கைது
சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரஜைகளை உடனடியாக விடுதலை
செய்ய வேண்டுமெனக் கேட் டுள்ள மனித உரிமை அமைப்பு அரசியல் கட்சிகளின்
செற்பாடுகளுக்கு சவூதி அர சாங்கம் அனுமதியளிக்க வேண்டுமென்றும் கேட்டுள்ளது.
அரசியல் கட்சியொன்றைப் பதிவு செய்வதற்கான அனுமதியை சவூதி மன்னரிடம் கோரிய
05 பேர் அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இன்னும்
விடுதலையாகவில்லை. ‘இஸ்லாமிக் உம்மா கட்சி’ என்ற அரசியல் கட்சியையே இவர்கள்
ஸ்தாபிக்க இருந்தனர். இவர்கள் கைது செய்யப்பட்ட தைக் கண்டித்து சவூதியில்
ஆர்ப்பாட்டங் களும் இடம்பெற்றன. 2005ம் ஆண்டு மாநகர சபைக்கான பிரதிநிதிகளைத்
தெரிவு செய்ய தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாசி
21, 2011
சமஷ்டி, சுயாட்சி என்ற பேச்சு இனி எடுபடாத விடயங்களா?
இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக ஏறக்குறைய ஏழு மாதங்களுக்கு
முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்
சில அபிப்பிராயங்களை தெரிவித்திருந்தார். 13வது திருத்தச்சட்;டத்தின்
அடிப்படையில் முதற்கட்டமாக அதிகாரப் பகிர்வுகளை சாத்தியப்படுத்துதல், இநத
அதிகாரப் பரவலாக்கல் சம்பந்தப்பட்ட விடயத்தை சரியான முறையில்
செயற்படுத்துதற்கு உடனடியாக ஒரு ஆணைக்குழுவை ஏற்படுத்துதல். இந்த அதிகாரப்
பரவலாக்கல் ஆணைக்குழுவில் அரசியல் யாப்பு சம்பந்தமான விடயங்களில்
நிபுணத்துவமுடையவர்கள் விடயங்களைத் திறமையாக நிர்வகிக்கக்கூடிய
திறனாளர்களைக் கொண்ட நிபுணர்குழுவொன்றை அமைத்தல் அவசியமாகும் என்பது
வரதராஜப்பெருமாளின் சாராம்சக் கருத்தாகும்.
(மேலும்....)
மாசி
21, 2011
கடற்றொழிலாளர்களை அரசியல் பகடைக்காய்களாக பயன்படுத்துவது தவறு
கடற்றொழிலாளர்கள்
இந்தியர்களாகவோ இலங்கையர்களா கவோ இருந்தாலும், அவர்கள் அனைவரும் தங்கள்
உயிரை பணயம் வைத்து மக்களுக்கு தேவையான போஷாக்கு உணவான மீனை பிடித்து
வருகிறார்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இவர்கள், கடல் கொந்தளிக்கும்
போதும், மழை, காற்று போன்ற சீரற்ற காலநிலையிலும் கடலுக்கு சென்று தொழில்
புரிகிறார்கள். இந்தக் கடல் தொழிலாளர்கள் தாங்கள் படும் கஷ்டத்திற்குரிய
வருமானத்தைப் பெறுகிறார்கள் என்று நாம் கூறமுடியாது. பெரும்பாலும்,
கடலுக்குச் செல்லும் இழுவைக் கப்பல்களின் உரிமையாளர்களும், மீன் தரகர்களுமே
கடல் தொழிலாளர்களின் உழைப்பின் மூலம், கொள்ளை லாபம் சம்பாதித்து
வருகிறார்கள்.
(மேலும்....)
மாசி
21, 2011
"When
u can't laugh on the same joke again & again, then why do u keep crying
over the same thing over and over again”
A wise man
once sat in the audience & cracked a joke.
All laughed like crazy. After a moment he cracked the same joke again
and a little less people laughed this time.
He cracked the same joke again & again, when there was no laughter in
the crowd,
he smiled and said,
"When u can't laugh
on the same joke again & again, then why do u keep crying over the same
thing over and over again”
மாசி
21, 2011
புதுமாத்தளனில் கைவிடப்பட்டவை
உரிமைகோராத வாகனங்களை ஏலத்தில் விற்க தீர்மானம்
புதுமாத்தளனில் கைவிடப்பட்ட நிலையில் மீட்டெடுக்கப்பட்ட வாகனங்கள் மற்றும்
உபகரணங்களின் உரிமையாளர் தங்களது அடையாளத்தை உறுதிப்படுத்தி விட்டு பெற்றுச்
செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டு ஒரு வருடகாலம் கழிந்துள்ள நிலையிலேயே
அதனை ஏலத்திற்கு விற்பதற்காக தீர்மானத்தை தான் எடுத்ததாக ஆளுநர்
சுட்டிக்காட்டினார். மீட்டெடுக்கப்பட்ட கனகர வாகனங்கள், மோட்டார்
சைக்கிள்கள் மற்றும் உபகரணங்களின் பெருமளவிலானவை உரிமையாளர்கள் அடையாளத்தை
உறுதிப்படுத்தியதை அடுத்து கையளிக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர், 800
மோட்டார் சைக்கிள்கள், 50 கனகரக வாகனங்கள், கணனி, போட்டோ பிரதி இயந்திரம்,
வானொலி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளே எஞ்சியுள்ளதாகவும்
சுட்டிக்காட்டினார்.
(மேலும்....)
மாசி
21, 2011
அமெரிக்கா அமெரிக்காதான்……?
இஸ்ரேலுக்கு
எதிரான கண்டன தீர்மானத்தை அமெரிக்கா ரத்து செய்தது
இஸ்ரேல் சட்டவிரோதமாக கட்டிவரும்
குடியிருப்புகள் குறித்து கண்டனத் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையில்
அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தின் மூலம் ரத்து செய்தது. 15 உறுப்பினர்கள்
கொண்ட இந்த சபையில் இதற்கான தீர்மானத்தை மற்ற நாடுகள் அதரித்து கண்டன
தீர்மானங்கள் கொண்டுவந்தன. ஆனால் அத்தீர்மானம் நிறைவேற்றாமல் தனது ரத்து
அதிகாரம் மூலம் ரத்து செய்தது. ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலஸ்தீன்
பகுதிகுயில் சட்ட விரோதமாக குடியமர்த்தும் பணியில் இஸ்ரேல் ஈடுபட்டு
வருகிறது. இதைக் கண்டிக்கும் தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தப்
பிரதிநிதி மன்ஜீவ் சிங்க் பூரி கொண்டு வந்தார்.
(மேலும்....)
மாசி
21, 2011
Two doctors accused of drugging and sexually assaulting woman
Two doctors have been charged
Friday for allegedly drugging and sexually assaulting a 23-year-old
woman at a downtown hotel on Sunday. Police believe there may be more
victims. The victim met with the two men at a hotel bar on Queen St. W.
and University Ave. Sunday, police said. The men said they would provide
her with career advice, police added. The woman was later taken to a
second bar in the Wellington St. W. and Spadina Ave. area, where they
allegedly put an unknown substance in her drink. The accused took her
back to the hotel, where they allegedly sexually assaulted her, police
said. Amitabh Chauhan, 32, of Ancaster and Suganthan Kayilasanathan, 32,
of Markham have been charged with administering a noxious substance and
two counts of gang sexual assault. Anyone with information is asked to
contact police or Crime Stoppers anonymously at 1-800-222-TIPS (8477).
மாசி
21, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 35,36வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 35 வது நாளான நேற்று (19-02-2011) நடைபயண வீரர்கள் அனைவரும்
சோகத்துடன் காணப்பட்டனர். நடைபயணம் மேற்கொள்ளபடவில்லை. நெடுந்தூர
நடைபயணத்தின் 36வது நாளான இன்று 20-02-2011 ஞாயிற்றுக் கிழமை பகல் 2
மணியளவில் நடைபயண வீரர்கள் அனைவரும் ஈழத் தமிழர் விடுதலைக்காக தன்னுயிர்
துறந்த செல்வன். ச. சுதர்சன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதன்
பின்ன்னர் இரவு 7:00 மணியளவில் சுதர்சன் அவர்களின் உடல் விமானத்தில்
புதுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்படுகிறது. சென்னைவரை விமானத்திலும் அதன்
பிறகு அமரர் ஊர்தியிலும் சுதர்சன் அவர்களின் உடல் கொண்டு செல்லப்பட்டு
21-02-2011 திங்கள்கிழமை காலையில் புதுக்கோட்டையில் (லேனாவிளக்கு) உள்ள
அகதிகள் முகாமிற்கு கொண்டு வரப்படும். அன்னாரின் இறுதிச் சடங்கு
புதுக்கோட்டை (லேனாவிளக்கு) அகதி முகாமில் 21-02-2011 திங்கள்கிழமை பிற்பகல்
நடைபெறும்.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
ஈ.என்.டி.எல்.எப்.
மாசி
21, 2011
Cuba Public Forum
How to Improve Socialist Economy: Speaker: Jorge F. Soberón Luis,
Honourable Consul General of Cuba in Toronto
U.S.-based terrorism against Cuba and the case of the Cuban Five
Speaker: Lorne Gershuny, Attorney at Law
WhenThu, February 24, 7pm – 9pm GMT-05:00
WhereO.I.S.E., 252 Bloor Street W., Room #2-281
Who(Guest list has been hidden at organizer's request)
மாசி
21, 2011
உலகின் சிறந்த விமான நிலையம்
உலகில் மிகச் சிறந்த சர்வதேச விமான நிலையம் என்ற பெயரினை இந்தியாவில்
ஐதராபாத் நகரில் உள்ள ராஜிவ்காந்தி சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து
இரண்டாவது முறையாக பெற்றுள்ளது. டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்
4ம் இடத்தில் உள்ளது. சர்வதேச விமான நிலையங்களுக்கான கவுன்சில் என்ற
அமைப்பைச் சேர்ந்த ஏ. எஸ். கியூ என்ற நிறுவனம் உலக அளவில் சர்வதேச விமான
நிலையங்களில் உள்ள பல்வேறு வசதிகள், பயணிகளுக்கு அளிக்கும் சேவை குறித்து
ஏறத்தாழ 3 இலட்சம் விமான பயணிகளிடம் சர்வே நடத்தியது. இதில் இந்தியாவில்
ஆந்திர மாநில ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையம் உலகில் சிறந்த
விமான நிலையம் என தேர்வு செய்துள்ளது. டில்லியில் உள்ள இந்திரா காந்தி
சர்வதேச விமான நிலையம் 4ம் இடத்தில் உள்ளது. இதில் ஐதராபாத் சர்வதேச விமான
நிலையம் ஜி. எம். ஆர். என்ற நிறுவனம் வடிவமைத்து அதனை நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில் இந்த விமான நிலையத்திற்கான விருது வரும் ஏப்ரல் மாதம் 7ம் திகதி
டில்லியில் நடக்கவுள்ள விழாவில் வழங்கப்படுகிறது.
மாசி
21, 2011
யாழ்.பிராந்திய நிலையத்தில் பொறியியல்மாணி கற்கை
இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகத்துக்கு பொறியியல் தொழில்நுட்ப மாணி,
கைத்தொழில்மாணி, தொழில்நுட்ப டிப்ளோமா, கைத்தொழில் கல்வி டிப்ளோமா
கைத்தொழில் கல்வி சான்றிதழ் தொழில்நுட்ப முதுமாணி 2010/2011 கற்கை நெறிக்கு
புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விசேட கருத்தரங்கு எதிர்வரும் 12ம்
திகதி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அமைந்துள்ள யாழ். பிராந்திய நிலையத்தில்
நடைபெறவுள்ளது.
இக்கற்கை
நெறிகள் அனைத்தும் இலங்கைத் திறந்தவெளிப் பல்கலைக்கழக யாழ். பிராந்
தியத்தில் நடத்தப்படவுள்ளதாக யாழ். பிராந்திய இணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
இக்கற்கை நெறிக்கான விண்ணப்பப்படிவங்கள் 12ம் திகதி முதல் 26ம் திகதிவரை
யாழ். பிராந்திய நிலையத்தில் வழங்கப்படவுள்ளதாகவும் மாணவர்கள் இக்கற்கை
நெறிக்கான தகுதிகளை அலுவலக விளம்பரப் பலகையில் பார்வையிட்டு விண்ணப்பிக்க
முடியுமென அறிவித்துள்ளார்.
(மேலும்....)
மாசி
21, 2011
கறுப்புப்பண
குற்றச்சாட்டுக்கு பதில்
அத்வானிக்கு
சோனியா எழுதிய கடித விவரம்
தான் வெளிநாட்டில் கறுப்புப்பணம் பதுக்கி வைத்திருப்பதாக பா. ஜனதா கூறிய
குற்றச்சாட்டு தொடர்பாக, அத்வானிக்கு சோனியாகாந்தி எழுதிய கடித விவரம்
வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் உள்ள இரகசிய வங்கிகளில் காங்கிரஸ் தலைவர்
சோனியாகாந்தி, அவருடைய கணவரும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ்காந்தி
ஆகியோர் பெயர்களில் கறுப்புப்பணம் போட்டு வைக்கப்பட்டுள்ளதாக பா. ஜனதா
நியமித்த ஒரு குழு அறிக்கை வெளியிட்டது. இதற்கு மறுப்பு தெரிவித்து, கடந்த
15ந் திகதி பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானிக்கு சோனியா காந்தி கடிதம்
எழுதினார். அதையடுத்து, 16ந்தி திகதி சோகியாகாந்தியிடம் வருத்தம் தெரிவித்து
அத்வானி கடிதம் எழுதினார்.
(மேலும்....)
மாசி
21, 2011
Dear Canada grant of Rs.633,875/=
We are pleased to inform you that
we have completed the 1st phase of the Dear Canada grant of Rs.633,875/=
with which we supported 1111 families in Vellavely D.S division. The
delay was due to the lack of communication between the G.A’s office and
D.S office. We proceeded to Vellavely on the 15th with relief supplies
to Vellavely where we were informed by the D.S the goods are required to
another villages not mentioned in the G.A’s letter. We were then forced
to return with the goods without the letter from the G.A. Subsequently
the approval letter from the G.A was delivered and we went the following
day with the goods. Enclosed are the first letter from the G.A and
subsequent letter from D.S approved by the director planning for your
information. In all it took three days to complete distribution. Each
family was given a mat, a bed sheet and sanitary kits to 1111 families
in 4 villages in the Vellavely D.S division.
மாசி
21, 2011
மீண்டும்
தனி
தெலுங்கானா மாநிலம் கோரி போராட்டம்
ஐதராபாத்தில், தனி தெலுங்கானா மாநிலம்
அமைக்கக் கோரி போராட்டம் நடத்தி வரும் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள்
திடீரென்று வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது 5 பஸ்கள் தீ வைத்து
எரிக்கப்பட்டன. பொலிசாரின் கூடாரங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. ஆந்திராவை
இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி
தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினரும், தெலுங்கானா பகுதியில் உள்ள பிற
கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
(மேலும்....)
மாசி
21, 2011
60 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஒத்திவைப்பு
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு
ஆட்சேபனை தெரிவித்து நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்படிருப்பதால்
அறுபது (60) உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தேர்தல்
ஆணையாளர் தீர்மானித்துள்ளார். இதற்கேற்ப எதிர்வரும் மார்ச் மாதம் 17ம் திகதி
241 உள்ளூராட்சி மன்றங்களு க்குத் தேர்தல் நடாத்தப்படும் எனவும் அவர்
கூறியுள்ளார். இந்த 60 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் எதிர்வரும் 17ம் திகதி
தேர்தலை நடாத்துவதற்கான நடவடிக் கைகளை இடைநிறுத்துமாறும் தேர்தல் ஆணையாளர்
மாவட்ட மட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்களுககு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று
பிரதி தேர்தல் ஆணையாளர் மஹிந்த பாலசூரிய கூறியுள்ளார்.
(மேலும்....)
மாசி
21, 2011
மக்கள் போராட்டத்தால்
அரபு நாடுகளில் தொடர்ந்து பதற்றம்
லிபியா, பஹ்ரைன், ஜோர்டான், யெமன் உள்ளிட்ட
நாடுகளில் ஜனநாயக ஆட்சி முறை கோரி மக்கள் போராட்டம் நடத்துவதால், அரபு
நாடுகளில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. லிபியாவில் இராணுவம் தாக்கியதில்
84 பேர் பலியாகி உள்ளனர். துனிசியா, எகிப்து ஆகிய நாடுகளில் நீண்ட காலமாக
நடந்து வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த
இரண்டு நாடுகளிலும் ஜனாதிபதிகள் பதவி விலகி ஜனநாயக ஆட்சிக்கு வழி
விட்டுள்ளனர். இந்த சூழ்நிலையில், மற்ற அரபு நாடுகளிலும் இந்த கிளர்ச்சி
பரவி உள்ளது. அல்ஜீரியா, பஹ்ரைன், லிபியா, ஜோர்டான், யெமன் ஆகிய நாடுகளில்
ஆயிரக் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். குறிப்பாக
லிபியாவில் மிகத் தீவிரமாக போராட்டம் நடைபெறுகிறது.
(மேலும்....)
மாசி
21, 2011
யாழ்.
மாவட்டத்திலுள்ள 4 வீதிகள் புனரமைப்பு
யாழ்ப்பாணத்தில் எண்பத்தைந்து கிலோ மீற்றர்
நீளமான நான்கு நெடுஞ்சாலைகள் சீன அரசாங்கத்தின் நிதியுடன் அபிவிருத்தி
செய்யப்பட்டுவருவதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார்
தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில், யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி,
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம்-பலாலி வீதி, புத்தூர்-மீசாலை
வீதி என்பனவே இவ்வாறு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம்-பருத்தித்துறை வீதி ஆவரங்கால் சந்தி முதல் நெல்லியடி வரையான
பாதை அகலமாக்கப்பட்டு காப்பற் வீதியாக மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் -காங்கேசன்துறை
வீதியை அகலமாக்கும் பணி இலுவிலில் ஆரம்பமாகியுள்ளது. இவ்வீதிகளைப்
புனரமைக்கும் பணிகளை சீன அரசாங்கத்தின் ரயில்வே அபிவிருத்திச் சங்கம்
மேற்கொண்டுவருகிறது.
மாசி
21, 2011
உலகப் பொருளாதார சமச்சீரற்ற நிலைக்கு இந்தியா காரணம் அல்ல
சர்வதேச சந்தையில்
உற்பத்திப்
பொருட்களின்
விலை, அபரிமிதமாக
கூடுவதற்கும்
இந்தியா பொறுப்பாக
முடியாது. பொருளாதார வளர்ச்சியில்
முன்னேற்றப்
பாதையில்
உள்ள இந்தியா,
பருவகால காரணிகளால்
எளிதில் பாதிக்கப்படுகிறது.
அதனால், உணவுப்
பொருட்களின்
விலைகள் அதிகரிக்கின்றன.
பருவநிலை மாற்றம்
காரணமாக இந்தியாவில்
உணவுப் பணவீக்கமும்
அதிகரித்துள்ளது.
உணவுப் பணவீக்க
அதிகரிப்பு,
மக்களின்
நுகர்வு முறையிலும்
மாற்றத்தைக்
கொண்டு வந்துள்ளது.
(மேலும்....)
மாசி
21, 2011
ஐ.நா.வில்
இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக்
கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற இந்தியா மேற்கொண்டு வரும்
முயற்சிக்கு ஆதரவாக அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு
வரப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மிகப் பெரும் சக்தியாக இந்தியா உருவெடுத்து
வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு இது தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வர
முடிவு செய்யப்பட்டதாக பிரதிநிதிகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.
(மேலும்....)
மாசி
21, 2011
அவுஸ்திரேலியா
செல்ல முற்பட்ட 17 இலங்கையர் கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 17 இலங்கையர்களை கடற்படையினர் கைது
செய்துள்ளனர். அம்பாந்தோட்டை கடற்பரப்பிலிருந்து 20 கடல் மைல் தொலைவில் படகு
ஒன்றில் சென்றுகொண்டிருக்கும் போதே நேற்று முன்தினம் இரவு கடற்படையினரால்
கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய
தெரிவித்தார். கைப்பற்றப்பட்ட படகும் அதில் பயணித்துக்கொண்டிருந்த 17 பேரும்
காலி துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்
மேலும் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்
என்றும் குறிப்பிட்டார்.
மாசி
21, 2011
பிரபாகரனின்
தாயார் காலமானார்
பிணத்தை வைத்து வியாபாரம் நடத்தும் பிரபாகரனின் 'இறுதி' குடும்ப உயிரும்
மறைந்தது
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம் மாள் தனது
81வது வயதில் நேற்றுக் காலை காலமானார். நீண்டகாலமாகச் சுகயீனமுற்று
வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இவரின்
உடல்நிலை கடந்த சில வாரங்களாக மிகவும் மோசமடைந்திருந்தது. இவர் நேற்றுக்
காலை 6.10 மணியளவில் வைத்தியசாலையில் உயிரிழந்தார். இவருடைய இறுதிக்
கிரியைகள் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறும் என
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன் னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி
லிங்கம் தெரிவித்தார். பார்வதியம்மாளின் மூன்று பிள்ளைகள் கனடா, டென்மார்க்,
இந்தியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இறுதிக் கிரியைகளில் இவர்கள்
கலந்துகொள்ள மாட்டார்கள் எனத் தெரியவருகிறது. இறுதிக்கட்ட மோதல்களில்
பிரபாகரனின் பெற்றோரும் இடம்பெயர்ந்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்னர்
பிரபாகரனின் தந்தையாரான வேலுப்பிள்ளை உயிரிழந்திருந்தார். அதன் பின்னர்
தாயாரின் நிலைமை மோசமடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாசி
21, 2011
21 இலங்கை
மீனவர்கள், 4 படகுகள் இந்தியாவில் விடுவிப்பு
இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 இலங்கை மீனவர்களும் நான்கு
படகுகளும் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர்
கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார். கடற் படையினரால்
அழைத்துவரப்பட்ட 21 இலங்கை மீனவர்களும், 4 படகுகளும் காங்கேசன்துறை
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். ஏற்கனவே
திட்டமிடப்பட்ட படி இந்த 21 மீனவர்களும் இந்தியாவினால் விடுவிக்கப்பட்டதாக
அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, இலங்கை கடற் பரப்பை பாதுகாப்பதும்,
அத்துமீறல் இடம் பெறுவதை தடுத்து நிறுத்துவதும் கடற் படையின் பொறுப்பாகும்
என்று தெரிவித்த கொமாண்டர் வர்ண குலசூரிய, அதற்குத் தேவையான
வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் கடற்படைத் தளபதி வழங்கியுள்ளதாகவும்
குறிப்பிட்டார்.
மாசி
20, 2011
மீண்டும் மீண்டும் நிதி திரட்டும் புலிகளின் நாடுகடந்த தமிழீழக்காரார்
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின்
புலிகளின் பிரதமர் ருத்ரகுமாரன் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு
வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. புலம்பெயர் தமிழ்
மக்களிடம் நிதி திரட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு
வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தில் தங்களை
பதிவு செய்து கொள்வதற்காக சகல புலம்பெயர் தமிழர்களும் தலா 15 அமெரிக்க
லொலர்களை கட்டணமாக செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்படுகிறது. ருத்ரகுமாரனுக்கு எதிரான அமைப்புக்களை விடவும் தம்மை
வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு நிதி திரட்டப்படுவதாக இலங்கை
புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறெனினும் ருத்ரகுமாரனின் இந்தத்
திட்டத்தினால் புலம்பெயர் புலி தமிழர்களுக்கு இடையில் மேலும் பிளவு ஏற்படக்
கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு
சுட்டிக்காட்டியுள்ளது. புலிகளின் நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால்
விநியோகம் செய்யப்படும் அடையாள அட்டைகளில் பல்வேறு மோசடிகள் இடம்பெறக்
கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாசி
20, 2011
புரிந்துணர்வுடன் தீர்க்கப்படவேண்டிய இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை
இந்திய - இலங்கை மீனவர்கள் தொடர்பான
பிரச்சினை இன்றைய பேசு பொருளாக உள்ளது. இலங்கை மீனவர்களும் இந்திய
மீனவர்களும் ஒரே கடற்பரப்பில் மீன் பிடிக்கின்றனர். இரு நாட்டினருக்குமான
கடல் எல்லை தீர்மானிக்கப்பட்டு தத்தம் கடற் பிரதேசத்திலே மீன்பிடிக்க
வேண்டுமென்ற நிலைப் பாடே இருந்தபோதும் சில சந்தர்ப்பங்களிலே கடல் எல்லை
தெரியாது அடுத்தவரின் கடற் பிரதேசத் துக்குள் பிரவேசிக்க வேண்டிய
சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இரவிலே கடல் எல்லை தெரியா மல் ஏற்படும்
இத்தகைய சம்பவங்களை பொறுத்துக்கொள்ளலாம்.
(மேலும்....)
மாசி
20, 2011
நுரைச்சோலை அனல் மின்நிலையம் முழுமையாக நிலக்கரியில் இயக்கம்!
புத்தளம், நுரைச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின்நிலையத்திற்கு
முழுமையாக நிலக்கரி எரிபொருளை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும்
நடவடிக்கை நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம்
இந்த அனல் மின்நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் டிசல் எரிபொருளை
பயன்படுத்தி பரீட்சிக்கப்பட்டது. பின்னர், கிரமமாக நிலக்கரி பயன்படுத்தி
மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது 100 சத வீதம்
நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
மின்சக்தி வலுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
(மேலும்....)
மாசி
20, 2011
பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மரணம்!
பிரபல சினிமா பின்னணி பாடகர் மலேசியா
வாசுதேவன். 16 வயதினிலே படத்தில் “ஆட்டுக்குட்டி முட்டையிட்டு” என்ற பாடல்
மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டி எல்லாம் பிரபலம் ஆனார். தொடர்ந்து சினிமாவில்
ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார். வில்லனாகவும், குணசித்திர பாத்திரங்களிலும்
நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்தார். சென்னையில்
உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று
மதியம் 1.15 மணிக்கு இறந்தார். அவரது உடல் சாலி கிராமம் கம்பர் தெருவில்
உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. மலேசியா வாசுதேவன் மலேசியாவில்
பிறந்தவர். சினிமாவில் பாடுவதற்காக தமிழ்நாட்டுக்கு வந்தார். டெல்லி டூ
மெட்ராஸ் படம் மூலம் பாடகராக அறிமுகம் ஆனார். அவர் தமிழில் 8 ஆயிரம்
பாடல்களும், மற்ற மொழிகளில் 4 ஆயிரம் பாடல்களும் பாடி உள்ளார். இவரது மகன்
யுகேந்திரன், மகள் நிஷாந்தினி ஆகியோரும் பின்னணி பாடகர்களாக உள்ளனர்.
மாசி
20, 2011
எகிப்தின் திரொலி
அரபுலகில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்
சர்வாதிகார
ஆட்சியாளர்களுக்கெதிரான புரட்சி டியூனீஷியாவில் ஆரம்பமாகி இரண்டே
மாதங்களேயாகின்றன. டியூனீஷியாவில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பதற்கு
இளைஞனொருவனுக்கு பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டதையடுத்து அவன் தனக்குத்தானே
தீமூட்டி இறந்து போனான். டியூனீஷிய, எகிப்திய சர்வாதிகார ஜனாதிபதிகள் நாட்டை
விட்டு ஓட்டம் பிடிப்பதற்குத் தூண்டுகோலாய் அமைந்த சம்பவம் இதுதான். ஆனால்
அவ்விளைஞனின் மரணத்தோடு ஆரம்பமான புரட்சிகள், டியூனீஷியா, எகிப்து
என்பனவற்றோடு மட்டும் நின்று விடவில்லை. மாறாக யெமன், ஜோர்தான், லிபியா,
சவூதிஅரேபியா, பஹ்ரேன் என அரசுக்கெதிரான தொடர்ச்சியான மக்கள் புரட்சிக்கு
அது வழிகோலியிருக்கிறது.
(மேலும்....)
மாசி
20, 2011
நிர்ப்பந்தம் காரணமாக கூட்டமைப்பு புலிகளின் குரலாக செயற்பட்டது
மனித உரிமை மீறல் பற்றிப் பேசுவதற்கு பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அருகதை
இல்லை. வியாபாரத்துக்கு வந்த பிரித்தானியர் இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை
முதலிலும் பின்னர் கண்டியையும் கைப்பற்றியபோது நடைபெற்ற போரிலே
தேசாபிமானமிக்க சுதேசிகள் கொல்லப்படவில்லையா? அது மனித உரிமை மீறல் இல்லையா?
கடந்த காலங்களில் அரசியல் வாதிகளாகவும் தலைவர்களாகவும் இருந்து பணிபுரிந்த
பலர் கொல்லப்பட்டமை மனித உரிமை மீறல் இல்லையா? வடபுலத்திலுள்ள 75
ஆயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் ஓரிரு நாளில்
விரட்டியடிக்கப்பட்டமை மனித உரிமை மீறல் இல்லையா? உலக நாடுகள் பலவற்றிலே
போரினாலும் அதிகாரப் போட்டியாலும் எத்தனை உயிர்கள் மடிகின்றன. அவைகள்
ஐ.நாவுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் ஏன் தெரியவில்லை? இலங்கை விஷயம் தானா
அவர்களின் கண்ணில் புலப்படுகின்றது. காழ்ப்புணர்வு காரணமான இந்தச்
சேறுபூசும் நடவடிக்கை பொருத்தமற்றது என்பதே வெளிப்படையான உண்மை.
(மேலும்....)
மாசி
20, 2011
எகிப்து தந்த பாடம்
லெனின் பெனடிற்
ஜனநாயகப் புரட்சி என்பது ஆயுதம் தாங்கி அரசுக்கெதிராகப் போராடுவதே என்று
இத்தனை காலமும் சித்தரிக்கப்பட்டு வந்துள்ள நிலையில் ஆயுதமின்றி இரத்தம்
சிந்தாமல் மகத்தான மக்கள் எழுச்சியினாலும் ஒற்றுமையினாலும் ஜனனாயகத்தை
வென்றெடுத்த சாதனையை எகிப்திய மக்கள்
சாதித்திருக்கிறார்கள். இந்த புரட்சியின் சாதனையான இப்போராட்தைத்
தலைமைதாங்க எவ்வித தலைவர்களும் இன்றி அல்லது வழிகாட்டலின்றி எல்லோரும்
அந்நாட்டு மன்னர்களாக இந்த ஜனனாயகப் போராட்டத்தை எவ்வித சிதைவோ சீரழிவோ
இன்றி உறுதியுடன் முன்னெடுத்துச் சென்று இறுதியாக எகிப்திய சர்வாதிகாரியை
பதவியிலிருந்து விரட்டியடித்து ஓர் அற்புத சாதனையைப் படைத்துள்ளார்கள்.
(மேலும்....)
மாசி
20, 2011
மீனவர் பிரச்சினையில் அரசியல், தமிழக தலைவர்கள் தேர்தல் சித்து
(விசு கருணாநிதி)
இலங்கை தமிழர் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் லாபம் தேடிக்கொண்டதில்
தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்தான் காலத்திற்குக் காலம் முன்னணி வகிக்கின்றனர்.
தமிழகத்தில் சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் காலத்தில் பிரசாரம் செய்வதற்கு
இலங்கைத் தமிழர் பிரச்சினையே அவர்களுக்குக் கைகொடுத்து வருகிறது. தி.மு.க,
அ.தி.மு.க. என இரு பிரதான அரசியல் கட்சிகளும் இலங்கைத் தமிழர் பிரச்சினை
என்ற அஸ்திரத்தைக் கையில் எடுத்தே தமது அரசியல் காய்நகர்த்தலை முன்னெடுத்து
வருகின்றன. இதில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி கைதேர்ந்தவராகத்
திகழ்கிறார். இப்போது அவரது மகள் கனிமொழி அப்பாவின் வழியில் தப்பாமல்
இலங்கைப் பிரச்சினையைக் கையில் எடுத்துப் பிரசாரம் செய்வதில் தனது திறமையை
வெளிப்படுத்தி வருகிறார்.
(மேலும்....)
மாசி
20, 2011
பலமான எதிரணி
இன்மையால் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமக்கிடையே பலப்பரீட்சை
ஆளும் கட்சியின் வேட்பு மனுக்கள்
நிராகரிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் கூட்டமைப்பிற்கு
போட்டியாக பலமான எதிரணி இல்லாத காரணத்தினால் இப்போது கூட்டமைப்பு
வேட்பாளர்கள் தமக்கிடையே போட்டிகளில் ஈடுபட்டு பலப்பரீட்சை நடத்தி
வருகின்றனர். இந்நிலை மக்களிடையே பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீரங்கா
தலைமையிலான பிரஜைகள் முன்னணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு நிலவுவதாக
களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. பிரஜைகள் முன்னணியின் சார்பில் போட்டியிடும்
வேட்பாளர்களுக்கு மக்கள் பெரு வரவேற்பு அளித்து வருகின்றனர்.
(மேலும்....)
மாசி
20, 2011
இரட்டை
பிரஜாவுரிமை சர்ச்சை புலம்பெயந்தோரை பாதிக்காது
இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கைகள்
நவீனமயப்படுத்தப்பட வுள்ளதுடன் அரசுக்கும், பிரஜாவுரிமை பெறுபவர்களுக்கும்
அதிகளவு நன்மைகள் கிடைக்கும் விதத்தில் இந் நடை முறையை மேம்படுத்தும்
வேலைகளை குடிவரவு - குடியகல்வு திணைக்களம் மேற்கொண்டு வருகிறது என
திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்தபெரேரா
தெரிவித்தார். இப் புதிய நடவடிக்கை மூலம் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள்
உட்பட புலம் பெயர்ந்துள்ள இலங்கை யர்கள் மேலும் நன்மையடைவார்களே தவிர
எவ்விதத்திலும் பாதிக்கப் படமாட்டார் கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
(மேலும்....)
மாசி
20, 2011
இலங்கை மீனவர்களின் வலைகள் மீண்டும் அறுப்பு
தமிழக மீனவர்கள் 136 பேர் விடுதலையாகி சென்ற
அன்றும் கட லில் யாழ். மீனவர்களின் வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக
யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ்.
தவரட்ணம் தெரி வித்தார். பல இலட்சம் ரூபா பெறுமதி யான வலைகள்
நாசமாக்கப்பட்டு ள்ளன. இழுவைப் படகுகளினால் இவை அறுத்து எடுக்கப்படுகின்றன.
தமிழக மீனவர்களை பாதுகாப் பாக நாம் அனுப்பி வைக்கிறோம். மறுபுறம் மேலும்
வள்ளங்கள் உட்புகுந்து எமக்கு அழிவை ஏற்படுத்துகின்றன என்றும் அவர்
தெரிவித்தார்.
மாசி
20, 2011
எல்லைதாண்டும்
இந்திய இழுவைப் படகுகள், 30 வருடகால அநீதி தொடர வேண்டுமா?
“30 வருட காலம் சொல்லொணாத் துயர்களை அனுபவித்துவிட்டு பிச்சைக்காகச்
செல்லும் எமது மீனவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது” என வடமாகாண கடற்றொழி
லாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாஜத் தலைவர் எஸ். தவரட்ணம் தெரிவித்தார்.
“எல்லை தாண்டி அத்துமீறி இழுவைப்படகுகள் மூலம் தமிழக மீனவர்கள் வருவதைத்
தடுக்க எவரும் முன்வருவதாக தெரியவில்லை. முதலில் அவர்கள் வருவதை தடுத்தாலே
பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிடலாம்”.
(மேலும்....)
மாசி
19, 2011
தமிழக மீனவர் 136 பேரும் விடுதலை
தமிழகக் கடல்
எல்லை வரை இலங்கைக் கடற்படை படகுகள் பாதுகாப்பு
பருத்தித்துறை முனை மற்றும் மாதகல்
கடற்பரப்பில் யாழ். கடற்றொழிலாளர்களினால் சிறை பிடிக்கப்பட்ட 136 தமிழக
மீனவர்களும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து இலங்கை
கடற்பரப்பிற்குள் வந்த அவர்களது 25 வள்ளங்களிலேயே அவர்களை பாதுகாப்பாக
அனுப்புமாறு பருத்தித்துறை மற்றும் மல்லாகம் நீதிவான்கள் பொலிஸாருக்கு
உத்தரவிட்டனர். இரண்டு கடற்படை படகுகள் 136 தமிழக மீனவர்களையும் தமிழக கடல்
எல்லைவரை சென்று வழியனுப்பி வைத்தது. கடந்த 15ஆம் திகதி 18 இழுவைப்
படகுகளில் பருத்தித்துறை முனை கடற்பரப்பில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 112
தமிழக மீனவர்களை யாழ். மீனவர்கள் சிறைபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
(மேலும்...)
மாசி
19, 2011
உலகக் கிண்ண
கிரிக்கெட், விசேட பாதுகாப்பு ஏற்பாடு
இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண
கிரிக்கெட் போட்டிகளின் பாதுகாப்புக்காக முப்படையினர், பொலிஸார், விசேட
அதிரடிப்படையினர், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினர் உட்பட அனைத்துத்
தரப்பினரும் சேவையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாக பொலிஸ்மா அதிபர் மஹிந்த
பாலசூரிய தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்த பாதுகாப்புப் படையினர் உள்ள இலங்கையில்
நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான
அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன. இன்டர்போல் பொலிஸாரின்
உதவியும் பெறப்படவுள்ளது. அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் நாம்
இணைப்பாளர்களாகச் செயற்படுவோம்.
(மேலும்...)
மாசி
19, 2011
தமிழக மீனவர்களைக் கைது செய்தது சிறிலங்கா அரசுதான்!
தமிழகத்து மீனவர்களை கடத்திச் சென்று
யாழ்ப்பாணச் சிறையில் அடைத்தது யாழ்ப்பாணத் தமிழர்கள் செய்த செயலல்ல.
சிங்கள அரசின் உளவுத்துறையின் ஏற்பாட்டில் டக்கிளஸ் தேவானந்த என்ற
அமைச்சர்தான் இதனைச் செய்வித்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில
தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணக் குடாநாட்டு மீனவர்கள் சிலருக்கு
மீன்பிடிப் படகுகளை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்த வழங்கினார். அறுபது படகுகள்
வரை முற்பணம் செலுத்தாமல் சிங்கள அரசின் சார்பாக தவணை முறையில்
வழங்கப்பட்டது. அந்தப் படகுகளைக் கொண்டு அவர்கள் மீன்பிடித்து வந்தனர்.
(மேலும்...)
மாசி
19, 2011
Notice of
Annual General Meeting of the Past Pupil’s Association of St Michael’s
College (Batticaloa) North America - 2011
Members are kindly invited to attend the Annual General Meeting of the
Past Pupil's Association of St Michael's College (Batticaloa) North
America which will take place at the Best Western Primrose Hotel,
Toronto on Saturday 19th March, 2011 at 4pm. Please find enclosed the
agenda for the Annual General Meeting.
Thanks,
Yours Sincerely,
Stanley Chellapillai
General Secretary
P.P.A. of S.M.C.(North America)
மாசி
19, 2011
(மேலும்...)
மாசி
19, 2011
The Egyptian revolt is coming home
(by John Pilger)
The uprising in Egypt is our
theatre of the possible. It is what people across the world have
struggled for and their thought controllers have feared. Western
commentators invariably misuse "we" and "us" to speak on behalf of those
with power who see the rest of humanity as useful or expendable. The
"we" and "us" are universal now. Tunisia came first, but the spectacle
always promised to be Egyptian. As a reporter, I have felt this over the
years. At Tahrir ("liberation") Square in Cairo in 1970, the coffin of
the great nationalist Gamal Abdel Nasser bobbed on an ocean of people
who, under him, had glimpsed freedom.
(more....)
மாசி
19, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
34வது நாளாவது நாளின் துயரச்சம்வத்தின்
விவரம்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 34வது நாளான நேற்று 18-02-2011 வெள்ளிக்கிழமை இரவு 07:30
மணியளவில் நாக்பூர் மாநகரத்துக்கு 15கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்னால்
நடைபயண வீரர்கள் இரவு முகாம் அமைத்தனர். இரவு 07:40 மணியளவில் நடைபயண
வீரர்களுக்கு மருந்துகள் கொடுப்பதற்கு பொறுப்பாக இருந்த லேனாவிளக்கு,
புதுக்கோட்டை அகதிகள் முகாமைச் சேர்ந்த திரு. சந்திரதாஸ் சுதர்சன் அவர்களும்
நடைபயணக்குழுவின் லொறி ஓட்டுனரான தமிழகத்தின் ஈரோடு என்ற இடத்தைச் சேர்ந்த
திரு. ரஞ்சித் அவர்களும் குறைவாக இருந்த மருத்துகள் வாங்குவதற்காக மோட்டார்
சைக்கிளில் மருந்து கடைக்குச் செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக எதிரே
வந்த மாருதி வேனுடன் மோதுபட்டு விபத்து ஏற்பட்டது.
(மேலும்...)
மாசி
19, 2011
எல்லை தாண்டிய
மீன்பிடி, தடுத்து நிறுத்த நடவடிக்கை
எல்லைதாண்டிய மீன்பிடித்தலை தடுத்து
நிறுத்துவதனூடாக இலங்கை மற்றும் தமிழக கடற்றொழிலாளர் களிடையே ஏற்படும்
தகராறுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியும். இப்பிரச்சினைக்குத் தீர்வு
காணும் வகையில் பிரதிநிதி ஒருவரை உடனடியாக இலங்கைக்கு அனுப்பிவைக்க
நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதிக்கு அவசர
கடிதம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அனுப்பிவைத்துள்ளார்.
அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழக மக்களின்
முதல்வராகிய உங்கள் மீது ஈழத் தமிழ் மக்கள் தீராத பற்றுதலை கொண்டிருப்பதை
நீங்கள் அறிவீர்கள்.
(மேலும்...)
மாசி
19, 2011
கனிமொழியிடம்
விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு
முதல்வர் கருணாநிதியின் மகளும் மாநிலங்களவை
தி. மு. க. உறுப்பின ருமான கனிமொழியிடம் விசாரணை நடத்த சிபிஐ முடிவு
செய்திருப்பதாகத் தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை முறைகேடாகப்
பெற்றதாக ஸ்வான் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பால்வா அண்மையில் சிபிஐ
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரிடம் நடத்திய விசாரணையில், ஸ்வான்
நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு ரூபா 240 கோடி கொடுத்ததாகத் தெரியவந்தது. இந்த
நிலையில், ஸ்வான் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவிக்கு பணம் கைமாறியது
தொடர்பாக டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி சரத்குமார், இயக்குநர் கனிமொழி
ஆகியோரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக சில கேள்விகள் அடங்கிய பட்டியலை சில நாட்களுக்கு முன்பு சிபிஐ
அதிகாரிகள் கனிமொழிக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. எனினும்
கலைஞர் டி.வியின் மற்றொரு இயக்குநரான தயாளு அம்மாளை விசாரணைக்கு அழைக்கும்
திட்டம் சிபிஐக்கு இல்லை எனத் தெரிகிறது.
மாசி
19, 2011
லிபியா,
பஹ்ரைனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்
டுனீசியா, எகிப்தை தொடர்ந்து பஹ்ரைன்,
லிபியாவிலும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 40
ஆண்டுகளாக லிபிய ஜனாதிபதியாக இருக்கும் முஅம்மர் கட்டாபிக்கு எதிராக
இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் இதுவரை 14க்கும் மேற்பட்டோர்
கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அரச
எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், ஜனாதிபதி கட்டாபி ஆதரவாளர்களுக்கும்
இடையில் ஏற்பட்ட மோதலில் மேலும் பலர் கொல்லப்பட்டதாக தெரியவருகிறது.
இதன்போது 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
(மேலும்...)
மாசி
19, 2011
டில்லியில் சோனியா காந்தியுடன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டில்லியில் பா. ம. க. தலைவர் டாக்டர்
ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று முன்தினம் சந்தித்துப்
பேசினார். அரசியலில் கடந்த சில நாட்களாக ஒரு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
தி. மு. க. - காங்கிரஸ் கூட்டணியில் பா. ம. க. சேருவது பற்றி ஒரு முடிவான
சூழ்நிலை ஏற்படாத நிலை இருந்து வந்தது. கடந்த 3ம் திகதி சென்னையில் தி. மு.
க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல் அமைச்சர் கருணாநிதி பேசும்போது பா. ம.
கவை கூட்டணியில் சேர்ப்பதற்கு சோனியாகாந்தி அவ்வளவாக விரும்பவில்லை என்பது
போல பேசியதாக பரவலாக பேச்சு எழுந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம்
டில்லியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சோனியா காந்தி வீட்டுக்கு காலை 11.30
மணிக்குச் சென்றார். அங்கு அவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது என்றும், இருவரும் பல்வேறு விஷயங்கள்
குறித்து பேசினார்கள் என்றும் தெரிகிறது.
மாசி
19, 2011
பின்லேடன்
சிக்கினால் எங்கு சிறை வைப்பது?
சர்வதேச பயங்கரவாதியும் அல் கைதா அமைப்பின் தலைவருமான ஒசாமா பின்லேடன்
அமெரிக்க பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டால், அமெரிக்க இராணுவ
சிறையான குவாதனான்மோ சிறைதான் என அந்நாட்டு உளவு அமைப்பான சி. ஐ. ஏ.
அமைப்பின் தலைவர் லியோன் பெனிட்டா தெரிவித்துள்ளார். பாதுகாப்புத் தொடர்பான
உயரதிகாரிகள் கூட்டம் அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் உள்ள செனட் சபையில்
நடந்தது. இதில் அந்நாட்டு புலனாய்வு மற்றும் உளவு அமைப்பு தலைவர்கள்,
அட்டோனி ஜெனரல்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(மேலும்...)
மாசி
18, 2011
அரச எதிர்ப்புப்
போராட்டங்கள் பல நாடுகளில் தொடர்கின்றன
எகிப்திலும் டுனிசியாவிலும் நடந்த அரச
எதிர்ப்புப் போராட்டங்களையடுத்து மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க
நாடுகள் எங்கிலும் பரவியுள்ளது. அந்தந்த அரசாங்கங்களால் மக்கள் மீது
பிரயோகிக்கப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான அழுத்தமே அரச
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங் களுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எகிப்துக்கும் டுனிசியாவுக்கும் இடையில் இருக்கும் எண்ணெய் வள நாடான லிபியா
மற்றும் பஹ்றெயின், யெமன், ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் நேற்று முன்தினம்
அரச எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. வெகுசனத் தொடர்பு ஊடகங்களும் சமூக
வலைத்தளங்களும் மக்கள் மத்தியில் அரச எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி
பிரசாரத்தை மேற்கொள்வதில் பெரும் பங்காற்றுகின்றன.
மாசி
18, 2011
எகிப்திய இராணுவத் திட்டங்கள் மீது அமெரிக்க அரசு அதிக கரிசனை
எகிப்தில் முபாரக்கின் ஆட்சிக்குப் பின்னரான நடைமுறைகள் தொடர்பாக இராணுவ
ஆட்சியாளர்களுக்கு அமெரிக்கா பிரத்தியேகமாக அழுத்தத்தைப் பிரயோகித்து
வருகிறது. எகிப்தின் இராணுவத் திட்டங்களில் அதிக கரிசனையைக் கொண்டிருக்கிறது.
ஏனெனில் அவை எகிப்தில் ஜனநாயகத்தை நிலைநாட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த வெள்ளியன்று ஆட்சியைக் கைப்பற்றிய எகிப்து இராணுவம், அங்கு மிக
நீண்டகாலமாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டத்தை நீக்கத்தவரியிருந்தது.
முன்னைய அமைச்சரவை கலைக்கப்பட் டதாகக் கூறப்படுகின்றபோதும் பல அரச
அதிகாரிகள் இன்னும் தமது பதவியிலேயே இருக்கின்றனர். அரசியலமைப்பு
சீர்திருத்தங்களும் தேர்தல்கள் நடாத்துவதற்கான காலக்கெடு வும் உறுதியான
மக்கள் அரசை அமைக்கப்போதுமானதாக இருக் குமா என்பது கேள்விக்குறியாக இருக்
கிறது. இராணுவத்தின் அதிகாரம் மேலோங்குவதாக போராட்டக்காரர்கள் அதிருப்தி
தெரிவிக்கின்றனர். என்ன
இது ஆடு நனையுது என்ற ஓநாய் அழுத கதையாக இருக்கின்றது....?
மாசி
18, 2011
ஸ்டீவ் ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள்
மட்டுமா? _
அப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஸ்டீவ்
ஜொப்ஸின் ஆயுட்காலம் இன்னும் 6 வாரங்கள் மட்டுமே என ஊடகமொன்று செய்தி
வெளியிட்டுள்ளது. புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டீவ் ஜொப்ஸ்(55)
தற்போது மருத்துவ ஓய்வில் உள்ளார். இந்நிலையில் ஸ்டீவ் ஜொப்ஸ் பற்றி செய்தி
வெளியிட்டுள்ள 'த நெசல் என்குயரர்' என்ற சஞ்சிகையானது வைத்தியர் ஒருவரை
மேற்கோள் காட்டி குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவரின் நிலைமை தற்போது
மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் நோய் முற்றியுள்ளதால் அவரின் ஆயுட்காலம்
வெறும் 6 வாரங்களே என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் தோற்றம்
மிக மோசமாக உள்ளதாகவும் எடையும் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அப்பிள் நிறுவனம் இது தொடர்பில் மறுப்பு அறிக்கை எதனையும் இதுவரை
வெளியிடவில்லை.
மாசி
18, 2011
தமிழக முதல்வர்
கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் அவசர கடிதம்
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது
செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர்
மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அவசர கடிதமொன்றை
அனுப்பிவைத்துள்ளார். இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை
வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர்
கருணாநிதியின் பிரதிநிதி ஒருவர் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படுவது
வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மாசி
18, 2011
தேர்ந்து எடுக்கப்பட்ட ஜனாதிபதியிடம் 6 மாதங்களில் ஆட்சி ஒப்படைப்பு
எகிப்து நாட்டில் முபாரக் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதன்
காரணமாக அதிபர் முபாரக் நாட்டை விட்டு ஓடிவிட்டார். இராணுவ தளபதிகள் ஆட்சியை
கைப்பற்றி நிர்வாகத்தை கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் முபாரக்குக்கு
எதிராக போராட்டத்தை நடத்திய மக்கள் பிரதிநிதிகள் கெய்ரோ நகர சதுக்கங்களில்
இருந்து வெளியேறாமல் முழு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை தொடர்ந்து
சதுக்கங்களில் தான் இருப்போம் என்று கூறி வருகிறார்கள். இதற்கிடையில்
இராணுவ தளபதிகளின் கவுன்சில் வெளியிட்டு உள்ள அறிக்கையில், தேர்ந்து
எடுக்கப்பட்ட ஜனாதிபதியிடம் 6 மாதங்களுக்குள் ஆட்சியை ஒப்படைப்போம் என்று
கூறப்பட்டு உள்ளது. மேலும் தேர்தல் அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடைபெறும்
என்றும் இராணுவ தளபதிகள் ஆட்சியில் நீடிக்க மாட்டார்கள் என்றும், தற்போதைய
நிலைமை இராணுவத்தின் மீது திணிக்கப்பட்டு உள்ளது என்றும் அந்த அறிக்கையில்
கூறப்பட்டு உள்ளது.
மாசி
18, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
32,33வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 32வது நாளான 16-02-2011, புதன்கிழமையன்று காலை 06:00 மணியளவில்
கிராஞ்சி என்ற இடத்திலிருந்து நடைபயணம் தேசியநெடுஞ்சாலையில் தொடர்ந்தது. வழி
நெடுகிலும் பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெரியவர்கள் முதல் மாணவர்கள்
வரை நடைபயண வீரர்கள் கொடுத்த இந்தி மொழியிலான பிரசுரங்களை விரும்பி பெற்று
வாசித்து ஈழத் தமிழர் பிரச்சினைகளையும், அவர்கள் பட்ட துண்பங்களையும்
தெரிந்துகொண்டு வாழ்த்துச் சொல்கின்றனர்.
(மேலும்....)
மாசி
18, 2011
ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுகள் அதன் தோல்விக்கு அடித்தளம் அமைக்கின்றது
இலங்கையிலுள்ள யானைகளின் எண்ணிக்கை நாளாந்
தம் மனிதர்களுக்கும், யானைகளுக்கும் இடையிலான ஜீவமரணப் போராட்டம் காரணமாக
குறைந்து வரு கிறது. இதனால், எங்கள் நாட்டின் வரலாற்றில் முதல் தட வையாக
யானைகள் பற்றிய கணக்கெடுப்பு ஒன்றை எதிர் வரும் ஒகஸ்ட் மாதத்தில்,
மேற்கொள்வது என்று வன விலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அது போன்றே, கடந்த காலத்தில், நாட்டின் மேம்பாட்டிற்காக அரும்பாடுபட்டு
உழைத்த அரசியல் கட்சியான ஐக்கிய தேசிய கட்சிக்கும் இன்று யானைகளுக்கு
நடந்தது போன்ற அழிவு ஆரம்பமாகியிருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய
தேசிய கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் ஆதவா ளர்கள் எத்தனை பேர் இலங்கையில்
இருக்கிறார்கள் என்ற கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வது பொருத்தமாக இரு
க்கும்.(மேலும்....)
மாசி
18, 2011
இரணைமடுக்குள
அபிவிருத்திக்கு ஆசிய அபி. வங்கி நிதி உதவி
கிளிநொச்சி இரணைமடுக்குளம் புனரமைப்புக்கென,
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி தமக்கு கிடைத்திருப்பதாக கிளிநொச்சி
பிரதி நீர்பாசன பொறியியலாளர் என். சுதாகரன் தெரிவித்துள்ளார். இதன்படி
குளக்கட்டின் புனரமைப்புக்கென 1100 மில்லியன் ரூபாவும், வாய்க்கால்
உள்ளிட்ட புனரமைப்புக்காக 2200 மில்லியன் ரூபாவும் தற்போது தமக்கு
கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வாய்க்கால் உள்ளிட்ட திருத்த
பணிகளுக்கு ஐ. எப். ஏ. டி. அமைப்பு இந்த 2200 மில்லியன் ரூபாவையும்
வழங்கியுள்ளதாகவும் மழை காரணமாக தாமத மடைந்திருந்த திருத்த வேலைகள் மீண்டும்
தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதனைவிட இரணைமடுக்குளத்திலிருந்து
திருவையாறு பகுதிக்கு நீர்ப்பாசனம் வழங்குவதற்காக இயந்திரங்களை திருத்தும்
பணிகளும் நடைபெறவுள்ளதாகவும் இவ்வாறு இந்த ஏற்று நீர்ப்பாசனத்தின் மூலம்
1100 ஏக்கர் மேட்டு நிலப்பயிர்ச் செய்கை மேற்கொள்ள முடியும் எனவும் சுதாகரன்
தெரிவித்தார். எவ்வாறாயினும், இரணைமடுக்குளத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு
நீர் விநியோகம் செய்யும் திட்டத்தின் முதல் கட்டமாக இரணைமடுக்குளம்
புனரமைப்பு செய்யப்படுவது அவசியம் என்றும் அதனடிப்படையில் இந்த குளம்
புனரமைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாசி
18, 2011
சுயஸ் கால்வாயில் ஈரானிய போர்க் கப்பல்கள், பயணத்தை தடை செய்தது எகிப்து
சுயஸ் கால்வாயை கடக்கவிருந்த இரு ஈரானிய கப்பல்களையும் எகிப்து நேற்று
தடுத்தது. செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் இணைக்கும் நீர்ப்பரப்பே சுயஸ்
கால்வாயாகும். ஏலவே, இரு ஈரானியப் போர்க் கப்பல்கள் சுயஸ் கால்வாயைக்
கடக்கவிருக்கின்றனவென இஸ்ரேல் தகவல் வெளியிட்டிருந்தது. அந்த இரு
பக்கல்களின் பயணமும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சுயஸ்கால்வாய் அதிகாரசபை
தெரிவித்திருந்தது. அல்வான்ட், கார்க் என்ற அவ்விரு கப்பல்களும் சவூதியின்
ஜெட்டா துறைமுகத்திற்கு அருகில் இருக்கும் போதே அடையாளங்காணப்பட்டன. சுயஸ்
கால்வாயினூடாக பயணிக்கும் கப்பல்களின் பட்டியலில் தற்போதைக்கு எந்த ஒரு
ஈரானியக் கப்பலும் இல்லை என தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மேலும்....)
மாசி
18, 2011
யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் ஐந்து மாடி சந்தைக் கட்டடம்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஐந்து மாடிக் கட்டடத்தின் மூலம் நகரின் வர்த்தக
நடவடிக்கைகளும் அபிவிருத்தியும் முன்நோக்கி நகரும் என யாழ். மாநகர சபை
முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கூறினார். யாழ். நகரில் கஸ்தூரியார்
வீதியில் உள்ள மாநகர சபையின் காணியில் புதிய ஐந்து மாடி சந்தைக் கட்டடம்
கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டி வைத்து உரையாற்றும் போதே முதல்வர் திருமதி
யோகேஸ்வரி பற்குணராஜா இதனைத் தெரிவித்தார். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில்
குறிப்பிட்டபடி நகரின் அபிவிருத்தியிலும் அழகிலும் நாங்கள் அக்கறையுடன்
புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றோம். அமைச்சர் கே. என். டக்ளஸ்
தேவானந்தா யாழ். நகரை எழில் கொஞ்சும் நகராக மாற்ற வேண்டும் என்பதில்
நாட்டமுடன் செயற்பட்டு துரித அபிவிருத்திகளை முன்னெடுக்க எமக்கு உதவுகிறார்.
(மேலும்....)
மாசி
18, 2011
125 ஆண்டுகளுக்கு பிறகு
கோகோ கோலாவின் இரகசியம் அமெரிக்க வானொலியில் ஒலிபரப்பு
125 ஆண்டுகளுக்குப் பிறகு இரகசியமாக வைக்கப்பட்ட கோகோ கோலாவின் சூத்திரம்
வெளியாகியுள்ளது. கடந்த 1886ம் ஆண்டு தான் கோகோ கோலா முதன் முதலாக
தயாரிக்கப்பட்டது. முதலில் அட்லாண்டாவில் மட்டுமே விற்பனையான இந்த
குளிர்பானம் பிறகு உலகம் முழுவதும் விற்பனையாகி வருகிறது. கோகோ - கோலா
விற்பனையாகத் தொடங்கியது முதல் பலரும் அதற்கு பிரத்தியேக சுவை அளிக்கும்
சூத்திரத்தை தெரிந்துகொள்ள முயன்றனர். அதில் பலர் தாங்கள்
கண்டுபிடித்துவிட்டதாகக் கூட கூறினர். ஆனால் யார் கையிலும் சிக்காமல்
சூத்திரம் பரம ரகசியமாகவே பாதுகாக்கப்பட்டு வந்தது. அப்படிப்பட்ட
சூத்திரத்தை கண்டுபிடித்தவர் ஜான் பெம்பர்டன். இந்த சூத்திர இரகசியத்தை
அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஒரே ரேடியோ தெரிவித்துள்ளது. அதன்
நிகழ்ச்சி ஒரு இணையத்தளத்திலும் வெளியாகி உள்ளது. கோகோ - கோலாவின் அதிகார
பூர்வமான எழுத்துப் பிரதி அட்லாண்டாவில் உள்ள சன்டிரஸ்ட் வங்கியின்
பாதுகாப்பு அறையில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் 2
ஊழியர்களுக்கு மட்டும்தான் அந்த சூத்திரம் தெரியும் என்று கூறப்படுகிறது.
அவர்கள் இருவரும் ஒன்றாகப் பயணிப்பதில்லை என்று தெரிகிறது. இந்நிலையில்
அவ்விருவர் மூலமும்தான் இரகசியம் வெளியாகி இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
மாசி
18, 2011
வலிகாமம்
வடக்கில் வீதி புனரமைக்க நடவடிக்கை
உலக வங்கியின் நிதி உதவியுடன்
மானிப்பாயிலிருந்து இணுவில் ஊடாக கோண்டாவில் டிப்போவைச் சென்றடையும் வீதி
போக்குவரத்திற்கு வசதியாக அகலமாக்கப்படவுள்ளது. வட மாகாணத்தில் 100 கி.
மீற்றர் நீளமுள்ள வீதியைப் போக்குவரத்திற்கு வசதியாக அகலமாக்கி காப்பெற்
வீதியாக மாற்றி அமைப்பதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது. இதில் யாழ்.
மாவட்டத்தில் 25 கி. மீற்றர் நீளமான வீதி மாற்றி அமைக்கப்படவிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து மானிப்பாய் ஊடாக பொன்னாலை செல்லும் பிரதான வீதியில்
மானிப்பாயிலிருந்து இணுவில் ஊடாக கோண்டாவில் டிப்போவைச் சென்றடையும் சுமார்
5 கிலோ மீற்றர் நீளமான வீதி தற்பொழுது திருத்தி அமைக்கப்படவிருக்கிறது.
(மேலும்....)
மாசி
18, 2011
சமூக நலக் கொள்கைகள் தொடரட்டும் வெனிசுலா அரசுக்கு ஆதரவாக தொழிலாளர்கள்
பேரணி
ஜனாதிபதி ஹியூகோ சாவேஸின் சமூக நலக் கொள்கைகளுக்கு ஆதர வாகவும், தொழிலாளர்
களின் உரிமைகளை வலுப் படுத்தும் முயற்சிகளை அதி கப்படுத்தக் கோரியும் ஆயி
ரக்கணக்கான தொழிலா ளர்கள் வெனிசுலா தலை நகர் காரகாசில் நடந்த பேர ணியில்
பங்கேற்றனர். வெனிசுலா நாடாளு மன்றத்தை நோக்கிச் சென்ற இந்தப் பேரணியில்
சுகா தாரம், கல்வி, மின்சாரம், எண்ணெய் ஆகிய துறை களைச் சேர்ந்த தொழிலா
ளர்கள் பங்கேற்றனர். தொழி லாளர்களின் பிரதிநிதி களை நாடாளுமன்ற சபா நாயகர்
பெர்னாண்டோ சோடோ ரோஜாஸ், சந் தித்து அவர்களின் மனு வைப் பெற்றுக் கொண்டார்.
(மேலும்....)
மாசி
18, 2011
பருத்தித்துறை
நீதிமன்றக்
கட்டட தொகுதி நிர்மாணம்
பருத்தித்துறை மாவட்ட நீதிமன்றம், நீதவான்
நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களுக்கான புதிய கட்டடத் தொகுதியின் நிர்மாண
வேலைகள் சுமார் 66 மில்லியன் ரூபா செலவில் நடைபெற்று வருகின்றன. கரவெட்டிப்
பிரதேச செயலகப் பிரிவில் வதிரியில் உள்ள தனியார் கட்டடங்களில் இவ்விரு
நீதிமன்றங்களும் தற்காலிகமாக இயங்கிவருகின்றன. இக்கட்டட நிர்மாண வேலைகள்
பூர்த்தியடைந்ததும் இந்நீதிமன்றங்கள் பருத்தித்துறையில் புதிய கட்டடத்
தொகுதியில் இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசி
18, 2011
ஆட்சி மாற்றம் தேவை மூன்றாவது நாளாக பஹ்ரைன் மக்கள் போர் முழக்கம்
இவ்வளவு மக்கள் திரண் டுள்ளதால் எங்கள் கோரிக் கையான ஆட்சி மாற்றம் என்பது
நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கையுள்ளதாக பஹ்ரைன் அரசுக்கெதி ராகத்
திரண்டுள்ள போராட் டக்குழுவின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கான மக் கள் அரசுக்கெதிரான ஆர்ப் பாட்டங்களில் பங்கேற்று
வருகிறார்கள். அதோடு, போராடும் மக்களுக்கெ திராக கடுமையான வன் முறையை
பாதுகாப்புப் படையினர் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அதில் இரண்டு பேர்
கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ஃபாதல் அல் மத்ரூக்கின் இறுதி
ஊர்வ லத்தில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். அதில் பங் கேற்ற மாணவர்கள் தலை
வர்களில் ஒருவரான பக்கர் அகில், எங்கள் உரிமை களை அமைதியான வழி யில்
வலியுறுத்தி வருகி றோம். இவ்வளவு பெரிய மக்கள் கடல் திரண்டிருப்ப தால்
எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என நம்புகி றோம் என்று குறிப்பிட் டார்.
(மேலும்....)
மாசி
17, 2011
அரச எதிர்ப்புப்
போராட்டம் அரபு நாடுகளை தொடர்ந்து வட ஆபிரிக்காவுக்கும் பரவியது
லிபியாவின் கிழக்கு நகரில் போராட் டக்காரர்
ஒருவரை பொலிசார் கைது செய்ததையடுத்து கொந்தளித்த மக்கள் கூட்டம்
பொலிசாருடனும் அரச ஆதர வாளர்களுடனும் மோதியது. இதில் 14 பேர் காயமடைந்தனர்.
அதேவேளை லிபியாவின் தலைவர் கடாபிக்கு ஆதரவான போராட்டங்களும் வேறாக
நடைபெற்றன. பொலிசார் கைது செய்த மனித உரி மைகள் செயற்பாட்டாளரை
விடுவிக்குமாறு கோரி அரச அலுவலகமொன்றின் முன் னால் நின்று ஆர்ப்பாட்டம்
செய்த மக்கள் கூட்டம் பின்னர் சாகா சதுக் கத்திற்குச் சென்றது. அங்கு
அவர்களுக்கும் பொலிசார் மற்றும் அரச ஆதரவாளர்க ளுக்கும் இடையே மோதல்
ஏற்பட்ட போதும் பின்னர் கலவரம் கட்டுப்பாட் டுக்குள் கொண்டுவரப்பட்டது. 10
பொலிஸ் அதிகாரிகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.
(மேலும்....)
மாசி
17, 2011
புதுக்குடியிருப்பு
உதவி அரசாங்க
அதிபர் பணிமனை மீள் நிர்மாணம்
போரினால் சேதமடைந்துள்ள புதுக்குடியிருப்பு
உதவி அரசாங்க அதிபர் பணிமனை வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ்
புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கிறது. இதற்கான நடவடிக்கையில் உதவி அரசாங்க
அதிபர் என். கோணேஸ்வரன் ஈடுபட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில்
இடம்பெற்ற யுத்தத்தின் போது புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனை,
பிரதேச சபை ஆகியன இயங்க முடியாதவாறு பலத்த சேதத்திற்குள்ளாயின. இதனால்
தற்பொழுது உதவி அரசாங்க அதிபர் காரியாலயம், பிரதேச சபை காரியாலயம் ஆகியன
றெட்பானா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஒரு பகுதியில் இயங்கி
வருகின்றன. போரினால் சிதைவுண்டுள்ள வட மாகாணத்தை அபிவிருத்தி செய்யும்
நோக்குடன் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வடக்கின் துரித மீள்ச்சித்
திட்டத்தின் கீழ் பல அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தற்பொழுது துரிதமாக
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்பு உதவி
அரசாக அதிபர் பணிமனையும் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கின்றது. இதற்கான
ஒழுங்குகளை புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் மேற்கொண்டுள்ளார்.
மாசி
17, 2011
புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவத்தினர்
எகிப்திலே மிக நீண்டகாலமாகத் தடைசெய்யப்பட்டிருந்த முஸ்லிம்
சகோதரத்துவத்தினர் எகிப்தில் ஜனநாயகம் அமைந்த பின்னர் தாம் புதிய அரசியல்
கட்சி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக நேற்றுமுன்தினம் தெரிவித்திருந்தனர்.
அதேசமயம், ஜனாதிபதி வேட்பாளரை தாம் நியமிக்கப் போவதில்லை என உறுதி
கூறியுள்ளனர். எனினும் எகிப்தின் எதிர்கால அரசியலில் முஸ்லிம் சகோதரத்தினர்
முக்கிய பங்கு வகிப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
மாசி
17, 2011
தோப்புக்காடு வீதியை புனரமைக்கக் கோரிக்கை
கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப்படாதுள்ள தோப்புக்காடு
வீதியைப் புனரமைக்குமாறு இப் பிரதேச மக்கள் தோப்புக்காடு கிராம முன்னேற்றச்
சங்கத்தின் ஊடாக காரைநகர் பிரதேச சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 1991
ஆம் ஆண்டு இடப் பெயர்வின் பின்னர் கடந்த வருடம் மீண்டும் இப் பிரதேசத்தில்
மக்கள் மீளக் குடியமர்த்தத் தொடங்கினர். இவ்வருடம் ஜனவரி மாதத்தில்
தோப்புக்கூடு மறைஞானசம்பந்த வித்தியாசாலையும் மீளத் திறக்கப்பட்டு மாணவர்கள்
கல்வி கற்று வருகின்றனர். போக்குவரத்து செய்ய முடியாதளவில் குண்டும் குழியு
மாகக் காணப்படும் இவ் வீதியை விரைவில் புனரமைக் கும்படி வேண்டுகோள்
விடுக்கப்பட்டுள்ளது.
மாசி
17, 2011
டுனிசிய குடியேற்றவாசிகள் தொடர்பில் ஐரோப்பாவுக்கு இத்தாலி எச்சரிக்கை
இத்தாலியக் கடற்கரையில் டுனிசிய குடியேற்றவாசிகள் வந்திறங்கியதை யடுத்து
இத்தாலி ஐரோப்பிய நாடுகளை எச்சரித்துள்ளது. லம்பெரசா தீவில்
வந்திறங்கியிருக்கும் டுனிசிய குடியேற்ற வாசிகளால் ஐரோப் பாவின் சமூகக்
கட்டமைப்புக்கள் குலைக் கப்படுமென இத்தாலியின் உள்ளக அமைச் சர் றொபெடோ மரோனி
தெரிவித்திருந்தார். ஐரோப்பிய யூனியனின் எல்லை ஏஜென்சி தனது வேவுப்
படகுகளையும் வான்படையையும் இத்தாலிக்கு உதவிக்கு அனுப்புகிறது. அதே சமயம்
சிசிலிக்கு அருகாமையில் 30 பேருடன் சென்று கொண் டிருந்த படகொன்று
இடைமறிக்கப்பட்டது. அப்படகில் இருந்தோர் எகிப்திலிருந்து வந்தவர்களாக
இருக்கலாமெனச் சந்தேகிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் மட்டும்
டுனிசியாவிலிருந்து 5000 குடி யேற்றவாசிகள் லம்பெரசா பகுதியை
வந்தடைந்துள்ளனர்.
மாசி
17, 2011
யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் முகாமைத்துவ கற்கைநெறி
இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை யாழ்ப்பாணத்தில் ஹோட்டல் பாடசாலையொன்றை
ஆரம்பிக்க நடவடிக்கையெடுத்துள்ளது. யாழ். மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை
மேம்படுத்தவும், அத்துறையில், புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக்
கொடுப்பதற்கும் ஹோட்டல் பாடசாலையில் கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கற்கை நெறிகள் பகுதிநேர கற்கை நெறியாகவும் முழு நேர கற்கை நெறியாகவும்
நடத்தப்படவிருப்பதாக இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபை யாழ். பிராந்திய
இணைப்பாளர் இரா. அகிலன் தெரிவித்துள்ளார். கற்கை நெறிகளாக ஹோட்டல்
பராமரிப்பாளர், ஹோட்டல் உபச ரணை யாளர், ஹோட்டல் உணவு தயாரிப்பாளர் என்பன
ஆரம்பிக்கப்படவுள்ளன. பாடசாலையை விட்டு வெளியேறிய இளைஞர் யுவதிகள் இக் கற்கை
நெறியில் இணைந்து கொள்ளலாமெனவும் தமது விண்ணப்பங்களை இணைப்பாளர் இலங்கை
தொழில் பயிற்சி அதிகார சபை, இல 375, காங்கேசன்துறை வீதி, யாழ்ப்பாணம் என்ற
முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
மாசி
17, 2011
அமெரிக்காவுக்கு
ஆப்கான் போரினால் ஒரு நாளுக்கு ரூ. 1,500 கோடி செலவு
ஆப்கானிஸ்தான் போர் காரணமாக அமெரிக்காவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1,500 கோடி
செலவு ஆகிறது என்று இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான்,
ஈராக் 2012ம் ஆண்டுக்கு, அமெரிக்க இராணுவ பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை
ரூ. 5 இலட்சத்து 89 ஆயிரம் கோடி ரூபா ஆகும். இது கடந்த ஆண்டை விட 2
இலட்சத்து 27 ஆயிரத்து 500 கோடி ரூபா குறைவு ஆகும். ஈராக்கில் இராணுவ
வீரர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் செலவும் குறைந்து வருகிறது. ஈராக்கில்
எஞ்சி இருக்கும் 50 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இந்த ஆண்டு இறுதியில் நாடு
திரும்புகிறார்கள்.
மாசி
17, 2011
அரசாங்கம்
தேர்தல் இலாபத்தை எதிர்பாராமல் மக்கள் சேவையை தொடரும்
2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்படுத்திய அழிவுகளுக்கு அடுத்தபடியாக
பெருமளவு அழிவு இந்தத் தடவை ஏற்பட்டு ள்ளது. இதனால் 50இற்கும்
மேற்பட்டவர்கள் மரண மடைந்துள்ளார்கள். மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளா
ர்கள். இலங்கையில் இந்த வெள்ள அனர்த்தத்தினால் 123,740 ஹெக்டயர் நெற்காணிகள்
முழுமையாக அழிந்துள்ளன. இது இந்நாட்டின் மொத்த நெற்காணி பரப்பளவில் 40
சதவீதமாகும். இந்த வெள்ள அனர்த்தம் 400 ஏரிகளையும், நீர்த்தேக்கங்களையும்
சேதப்படுத்தியுள்ளது. இத்துடன் பல்லாயிரக்கணக்கான கால்நடைகளும்,
இலட்சக்கணக்கான கோழிகளும் வெள்ளத்தினால் அழிந்து போயுள்ளன.(மேலும்....)
மாசி
17, 2011
தமிழ்நாடு சட்டசபை
தேர்தல்
கூட்டணி பற்றி முடிவு செய்யவில்லை
திருமங்கலம் அருகே, குல தெய்வம் கோவிலுக்கு
நேற்று முன்தினம் சுவாமி தரிசனம் செய்ய வந்த, தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த், கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். திருமங்கலம் அருகே,
காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில்
உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு தரிசனம்
செய்வது வழக்கம். நேற்று முன்தினம் காலை விஜயகாந்த், குடும்பத்தினருடன்
அங்கு சென்றார். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள்
நடந்தன. அதில் அவர்கள் கலந்துகொண்டனர். பத்து நிமிடங்கள் அங்கிருந்து விட்டு
மதுரை புறப்பட்டனர்.
(மேலும்....)
மாசி
17, 2011
தமிழக மீனவர் 106 பேர் சிறைபிடிப்பு இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை!
புதுடெல்லி : தமிழக மீனவர்கள் 106 பேரை இலங்கை கடற்படை பிடித்து
சென்றுள்ளதற்கு பிரதமர் மன்மோகன்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘இது
போன்ற நடவடிக்கைகளை பொறுத்து கொள்ள முடியாது’ என்று இலங்கை அரசுக்கு
எச்சரிக்கை விடுத்தார். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக
மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள்
தொடர்ந்து நடக்கின்றன. சமீபத்தில் இலங்கை கடற்படையால் 2 மீனவர்கள் படுகொலை
செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழகத்தின் நாகை மாவட்டம் மற்றும் காரைக்காலை
சேர்ந்த 106 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க நேற்று முன் தினம் கடலுக்கு
சென்றனர்.
(மேலும்....)
மாசி
17, 2011
நாங்கள் செய்தது தவறு எங்களை மன்னியுங்கள்
- இந்திய மீனவர்கள்
வடபகுதி கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் மேற்கொண்டதை இந்திய
கடற்றொழிலாளர்கள் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதுடன் தமக்கு மன்னிப்பளித்து
விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்டனர். இதேவேளை,
ஒரேசமயம் நூற்றியாறு பேர் பருத்தித்துறை பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை
குறித்தும் அவர்களை பராமரிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்தும்
தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசிய
தேவைகளை வழங்குவதற்கு வடமராட்சி கடற்றொழில் சமாசத்தினர் முன்வந்துள்ளனர்.
இதனை வரவேற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரே தாய்மொழியினை பேசுவது
மாத்திரமல்லாமல் வாழ்வாதாரத்திற்காக ஒரே தொழிலை மேற்கொள்பவர்கள் என்ற
ரீதியில் வடமராட்சி சமாசத்தினரின் மனிதாபிமானத்தை பாராட்டியதுடன் சட்டம்
தனது கடமையினைச் செய்து தமிழக கடற்றொழிலாளர்கள் மீண்டும் தமது தாயகம்
திரும்பும் வரையில் அவர்களை கௌரவமாக பாதுகாத்து பராமரித்து அனுப்ப வேண்டியது
எமது கடமை என்பதையும் வலியுறுத்தினார்.
மாசி
16, 2011
எமது
பிரச்சினைகளை எம்மால் தீர்க்க முடியும்
‘எமது நாட்டுப் பிரச்சினை களை எம்மால் தீர்க்க முடியும் என்பது நிரூபணமா
கியுள்ள நிலையில் அவற்றை வைத்து வெளிநாடுகளில் தவறான பிரசாரங்களை
மேற்கொள்வது எந்த விதத்தி லும் நல்லதல்ல என இல ங்கை தொழிலாளர் காங்கி ரஸின்
தலைவரும் பிரதிய மைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். நாட்டில்
அமைதியற்ற யுகமொன்றிருந்தது. தற்போது அந்த யுகம் மாற்றமடைந்து பூரண அமைதி
நிலவுகின்றது. இத்தகைய தருணத்தில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்த முயல்வது
சிறந்ததல்ல எனவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
(மேலும்....)
மாசி
16, 2011
பருத்தித்துறை
கடற்பரப்பில் 112 இந்திய மீனவர்கள் கைது
யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில்
அத்துமீறி இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்த 112 இந்திய
மீனவர்கள் இலங்கை மீனவர்களால் சுற்றிவளைக்கப்பட்டு கரைக்கு
கொண்டுவரப்பட்டனர். அவர்களது 18 இழுவைப் படகுகளையும் இழுத்து வந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறைமுனைக்
கடற்பரப்பில் இடம்பெற்றுள்ளது. இந்திய மீனவர்கள் கடந்த சில நாட்களாக
இலங்கைப் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகுகள் மூலம்
மீன்பிடிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். இழுவைப் படகுகள் மூலம்
மீன்பிடிப்பதால் இலங்கை மீனவர்களின் வலைகள், மீன்பிடி உபகரணங்கள்
சேதமாக்கப்பட்டு, மீனவர்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருந்தது. இது
தொடர்பாக இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.
(மேலும்....)
மாசி
16, 2011
உலக அளவில் வேலை இல்லாதவர்கள் 20.50 கோடி
உலக அளவில் 20 கோடியே 50 இலட்சம் பேர் வேலையில்லாமலும், இந்தியாவில் ஆறு
கோடிக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்களும் வேலை இல்லாமல் உள்ளனர். சர்வதேச
அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையும், படித்தவர்களின் எண்ணிக்கை
அதிகரித்துள்ளதுமே இந்நிலைக்கு காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2007ம் ஆண்டு
முதல் 2009ம் ஆண்டு வரையிலான காலத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை ஏற்பட்டது. இதனால், உலகில்
உள்ள எல்லா நாடுகளும் பாதிக்கப்பட்டன. அதன் பின், பொருளாதார மந்த நிலை
சிறிது சிறிதாக மாறி வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி
சிறந்த முறையில் வளர்ந்து வருகிறது.
(மேலும்....)
மாசி
16, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 31வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயண
வீரர்கள் நேற்று இந்தியாவின் இரண்டு மாநிலங்களைக் (தமிழ்நாடு, ஆந்திரா)
கடந்து மூன்றாவது மாநிலத்திற்குள் (மகாராஸ்ரா) நுழைந்தனர். மகாராஸ்ரா
எல்லையிலிருந்து ஏழு கிலோ மீற்றர் தொலைவில் தேசிய நெடுஞ்சாலை (7) யின்
ஓரத்தில் முகாம் அமைத்திருந்தனர். வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால்
நேற்று நடைபயண வீரர்கள் 32 கிலோ மீற்றர் தூரமே கடந்திருந்தனர்.
(மேலும்....)
மாசி
16, 2011
சுவாமி விபுலாநந்தர் கலைமன்றம் - கனடா
Swami Vipulananda Arts Society – Canada
அன்புடையீர்,
சுவாமி விபுலாநந்தர் கலை மன்றத்தின்
ஒன்பதாவது வருடாந்த பொதுக்கூட்டம்
Date:
Saturday, March 05/2011
Time:
2.30 PM
Place:
York Civic Centre-
# 2700, Eglington-West
(Keel & Eglington)
சகல அங்கத்தவர்களையும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்து, நீங்களும்
புதியநிர்வாகத்தில் இணைந்து மன்றத்தின் வளர்ச்சிக்கும் அதன் நோக்கத்தையும்
மேலும்சிறப்பாக எடுத்துச்செல்ல உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் நாடி
நிற்கின்றோம். மேலும், இவ்வருட நிகழ்வுகளை சிறப்பாக நடத்திட புதியவர்
களையும் உங்களுடன் அழைத்துவந்து மன்றத்துடன் இணைய உதவுமாறு அன்புடன்
கேட்கின்றோம்.
நன்றி
S.
உதயகுமாரன்
செயலாளர்
தொடர்புகளுக்கு: 905-277 9440, 647-224
8871, 905-568 0551
மாசி
16, 2011
காலி – மாத்தறை அதிவேக ரயில் சேவை நாளை ஆரம்பம்!
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில்
புனரமைக்கப்பட்ட காலி – மாத்தறை அதிவேக ரயில் சேவையை போக்குவரத்து அமைச்சர்
குமார் வெல்கம நாளை புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
இது தொடாரபில் நாளை நடைபெறவுள்ள வைபவத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர்
அசோக் கே. சிறிகாந்தாவும் கலந்துகொள்கிறார்.
காலிக்கும் மாத்தறைக்கும் இடையில் மணித்தியாலயத்துக்கு 100 கிலோ மீற்றர்
வேகத்தில் ரயில்கள் பயணிக்கும் வகையில் ரயில் பாதைகள்
மறுசீரமைக்கப்பட்டுள்ளன.
இந்த புனரமைப்புப் பணிகள் காரணமாக கடந்த ஆறு மாத கலம் காலிக்கும்
மாத்தறைக்கும் இடையிலான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
மாசி
16, 2011
POTLUCK for Emergency Flood Relief
– February 19th 2011
“Sarvodaya is seeking donations to provide food, clothing and blankets;
medical supplies; sanitary items; and tents or other forms of temporary
shelter. Sarvodaya – JDC Community Disaster Management Centre (S-J-CDMC)
in Moratuwa is operating around the clock to coordinate the relief
efforts. “(http://www.sarvodaya.org)Please join us by donating a food
item and or by ordering lunch packets to help out in this meritorious
deed. Lunch packets will only be available on prior order please call as
soon as possible to order the lunch packets and/or to contribute a food
item. Menu: Rice, Chicken or Devilled Sprats (Hallmasso Bedum), Lentil
Curry (Parippu), Curried Beans, Coconut Sambol, Chutney…
Cost: $5.00 Each
Location: 71 Cass Avenue, Unit 12, Scarborough, M1T-3P8 (Gayan
416-824-6153)
Lunch packets will also be available at Westend Buddhist Centre
(905-891-8412)
Monetary Donations Please contact following:
Toronto /Scarborough area - Chamila Jayatilake at 416-298-3696
Mississauga/Brampton area – Westend Buddhist Centre 905-891-8412
Please contact following people for lunch packet orders and/or to
contribute a food item:
Suzan: 905-832-0638 / 647-779-2285
Chamila: 416-298-3696
Rupanjani: 416-321-6719
Girlin: 416-297-0972
மாசி
16, 2011
தி.மு.க ஆட்சி
தமிழர்களுக்கு
ஒரு பொற்காலம்!
தி.மு.க. ஆட்சி தமிழர்களுக்கு ஒரு பொற்காலம்
என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறினார். தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்
சார்பில் 2008, 2009, 2010ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது வழங்கும் விழா,
2007, 2008ம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா, பாரதி எம்.
எஸ். சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி விருதுகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும்
விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை
நடைபெற்றது. தமிழக அரசின் கவிஞர் பாரதி விருது ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்டது.
இதை பெற்றுக்கொண்டு அவர் பேசுகையில், தமிழர்களுக்கு இது ஒரு பொற்காலம்.
கலைஞர்கள் மீதும், தமிழ் மீதும் எல்லை கடந்த அன்பு கொண்டவர் முதல்வர்
கருணாநிதி அந்த அன்பை அவர் முதல்வராக இருப்பதால் தான் வெளிப்படுத்த
முடிகிறது.
(மேலும்....)
மாசி
16, 2011
பாகிஸ்தானில்
கைதான அமெரிக்கருக்காக வாதாடும் சட்டத்தரணிகளுக்கு
தலிபான்கள் எச்சரிக்கை
பாகிஸ்தானியர்கள் 2 பேரை சுட்டுக்கொன்ற
அமெரிக்கர் ரேமண்ட் டேவிஸ் மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆதரவாக
வாதாடும் சட்டத்தரணிகளும் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதியும், வழக்கில்
இருந்து விலகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை அவர்கள்
சந்திக்க நேரிடும் என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர். கடந்த மாதம் (ஜனவரி)
27 ஆம் திகதி லாகூர் நகரில் பாகிஸ்தானியர்கள் 2 பேரை சுட்டுக் கொன்ற
அமெரிக்கர் ரேமண்ட் டேவிஸ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டு
இருக்கிறார். தூதர் என்ற முறையில் அவர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை
எடுப்பதில் இருந்து விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரி
வருகிறது. விடுதலை செய்யக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்து உள்ளனர்.
(மேலும்....)
மாசி
16, 2011
கோமா நிலையில்
ஹொஸ்னி முபாரக்?
ஜனாதிபதி மாளிகையில் முபாரக்கின் இரு மகன்கள்
அலா மற்றும் கமாலுக்கு இடையில் தந்தையின் நிலை குறித்து வாக்குவாதம்
ஏற்பட்டது. முபாரக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளராக
கமால் இருந்த போது, தன் நண்பர்கள் பலருக்கும் தொழில்துறையில் சட்டவிரோமாகத்
தொழில் தொடங்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இதுதான் நாட்டை ஊழலுக்கு
இட்டுச் சென்றது என்று அலா குற்றம்சாட்டினார். வாக்குவாதம் முற்றி
இருவருக்கும் அடிபிடி சண்டை ஏற்பட்டது. அங்கிருந்த இராணுவத் தளபதிகள் சிலர்
தலையிட்டு சமாதானம் செய்து ¨வைத்தனர். இதையடுத்து பதவி விலகப் போவதாக உரை
எழுதி வைத்துள்ளார் தந்தை என்று கேள்விப்பட்ட கமால், அவருடன் பேசி
செப்டெம்பர் வரை பதவி விலகப் போவதில்லை என்று பேச சம்மதிக்க வைத்தார்.
(மேலும்....)
மாசி
16, 2011
வீதியில்
நடப்போரை பொலிஸார் கைது செய்வார்கள்
பாதசாரிகள் வீதி ஒழுங்குகளை கட்டாயம்
கடைப்பிடிக்க வேண்டுமென்றும் இல்லையானால் கடுமையான சட்ட நடவடிக்கைகள்
அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படுமென்றும் பொலிஸார் எச்சரிக்கை
விடுத்துள்ளார்கள். பாதசாரிகள் பாதுகாப்பாக வீதியில் செல்வதற்கு மேல்
மாகாணத்தில் உள்ள பெரும்பாலான வீதிகள் இப்போது நடைபாதைகள் அமைக்கப்பட்டி
ருப்பதனால் அவர்கள் இனிமேல் வீதிகளில் செல்லும் வாகனங்களுக்கு தடையாக
வீதியில் நடந்து சென்றால் அல்லது மஞ்சள் கோட்டைத் தவிர மற்ற இடங்களில்
வீதியைக் கடந்தால் பாதசாரிகளுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கையை
எடுப்பார்கள்.
(மேலும்....)
மாசி
16, 2011
கம்போடியா, தாய்லாந்து விவகாரம்
நிரந்தர
யுத்தநிறுத்தத்துக்கு ஐ. நா. அழைப்பு
கம்போடியாவையும் தாய்லாந்தையும் நிரந்தர
யுத்த நிறுத்த உடன்பாட்டுக்கு வருமாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை
அழைத்துள்ளது. தென் கிழக்காசியாவிலே அயல் நாடுகளாக இருக்கும்
கம்போடியாவினதும் தாய்லாந்தினதும் இராணுவத்தினர் எல்லைப் பிரச்சினை
தொடர்பில் மோதலில் ஈடுபட்டனர். உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில்
இருக்கும் இந்துக் கோயில் ஒன்றுக்கு உரிமை கோரியே இந்த மோதல் ஆரம்பித்தது.
பின்னர் பதற்றம் நிறைந்த சூழலில் யுத்த நிறுத்தம் பேணப்பட்டது. இந்நிலையில்
இம் முரண்பாட்டைத் தீர்த்து வைக்குமாறு தாய்லாந்தைப் பேச்சுக்கு
அழைக்குமாறும் ஐ. நா. பாதுகாப்புச் சபையை கம்போடியா கோரியுள்ளது. இரு
நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் ஆசியான் அமைப்பின் தலைவரும் இந்தோனேசிய
வெளியுறவு அமைச்சருமான மாட்டி நட்டலெகவா முன்னிலையில் சந்தித்தனர். நிரந்தர
யுத்த நிறுத்தத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என நட்டலெகவா கருத்துத்
தெரி வித்தார்.
மாசி
16, 2011
எகிப்து, டுனிசியாவை அடுத்து பஹ்றெயினிலும் மக்கள் போராட்டம்
நேற்றுமுன்தினம் பஹ்றெயினில் நடாத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை எதிர்த்த
பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் இறப்பர் குண்டுப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
இதில் ஒருவர் பலியானார். அரேபிய வளைகுடா மாநிலத்தின் தலை நகரான மனாமாவில்
போராட்டத்துக்காக ஷைத் முஸ்லிம்கள் கூடிய பகுதியைச் சுற்றி ஹெலிகொப்டர்கள்
வட்டமிட்டன. ஷைத் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பஹ்றெயினில் சுன்னி
முஸ்லிம்களின் அதிகாரமே காணப்படுகிறது. திராஸ் கிராமத்திலே தமது அரசியல்
உரிமைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட பொலிஸாரைச் சுற்றிவளைத்த ஷைத்
முஸ்லிம்கள் மீது அதிகாரவர்க்கத்தினர் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை
மேற்கொண்டனர். பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட போது 2000க்கும்
மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.
துப்பாக்கிக் குண்டு தலையிலும் காலிலும்பட்டதால் 24 வயது இளைஞர் பலியானார்.
டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களினூடே இந்த மக்கள் போராட்டம்
மற்றும் ஊர்வலங்களுக்கான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. பஹ்றெயின் சிறிய
எண்ணெய் வள நாடான போதிலும் சுன்னி அல் கைஃபா குடும்பத்தின் பாரபட்சங்களுக்கு
உட்பட்டதாகும். புதிய பிரதமரைத் தேர்வு செய்யக் கோரியும் சகல அரசியல்
கைதிகளையும் விடுவிக்கக் கோரியுமே ஷைத் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி
வருகின்றனர்.
மாசி
16, 2011
யெமனில் தொடர்ந்து போராட்டம்
யெமன் நாட்டில் ஜனாதிபதியைப் பதவி விலக கோரி நேற்று முன்தினம் நான்காவது
நாளாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பொலிசாருக்கும்,
மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. யெமனில், அலி அப்துல்லாசலே 32
ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வருகிறார். தற்போது எகிப்து மக்களின்
போராட்டத்தை அடுத்து யெமனிலும் அதிபருக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது.
நேற்று 4வது நாளாக, பல்கலைக்கழக மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள்,
வக்கீல்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர், சனா பல்கலைக்கழக வளாகத்தில்
இருந்து புறப்பட்டு அல் தாரிர் சதுக்கத்தை நோக்கி பேரணி நடத்தினர்.
அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியின் ஆதரவாளர்களும் சதுக்கத்தை நோக்கி பேரணியில்
ஈடுபட்டனர். பொலிசார் இரு தரப்பையும் பிரித்து சதுக்கத்தை நோக்கி செல்வதை
தடுக்க முயன்றனர். அப்போது எதிர்ப்பாளர்கள் மீது கம்பி வலைகளை வீசியும்,
லத்திகளால் தாக்கியும் பொலிசார் கடுமையாக செயல்பட்டனர். இதற்கு மனித உரிமை
ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எதிர்ப்பாளர்களுக்கும்
பொலிசாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. பேரணியில், அதிபர் பதவி விலக
கோரியும், ஊழலை ஒழிக்க கோரியும் கோஷங்கள் இட்டனர்.
மாசி
15, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 30வது நாள் ஆந்திராவை கடந்து
மகாராஸ்ராவினுள்.....
நாம் கடந்த 30 நாட்களாக ஆந்திரப் பிரதேச
மக்களின் ஆதரவினால் களைப்பில்லாமல் நடந்து நேற்று (14-02-2011 திங்கள் கிழமை)
ஆந்திரப் பிரதேச எல்லையைக் கடந்து மகாராஸ்ர மாநிலத்தில் எங்கள் பயணத்தைத்
தொடர்கிறோம். மகாராஸ்ர மக்களும், செய்தியாளர்களும், காவல்துறையினரும் எங்களை
வரவேற்றனர். நாம் இன்னும் 1173 கிலோ மீற்றர் தூரத்தை 35 நாட்களில் நடந்து,
வருகின்ற மார்ச் மாதம் 21ம் திகதி (2011) உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின்
தலைநகர் சென்றடைந்து எமது இனத்தின் இன்றைய நிலையையும், எங்கள் இனம்
காக்கப்பட வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைக்கவுள்ளோம்.
(மேலும்....)
மாசி
15, 2011
சாவகச்சேரியில்
வெள்ளை வானில் சுற்றிய ஐவர் கைது
வெள்ளை வானில் சந்தேகத்திற்கிடமான முறையில்
சுற்றித்திரிந்த ஐவரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியிலேயே நேற்றிரவு
இடம்பெற்றுள்ளது. வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே இவர்களை
கைதுசெய்துள்ளதாகவும், அவர்களில் ஒருவர் தப்பியோடிவிட்டதாகவும்
தெரிவிக்கப்படுகின்றது. சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள
வீதிவழியாக வந்துகொண்டிருந்த மேற்படி வெள்ளை வானை மறித்து சோதனையிட்ட
பொலிஸார், அதில் பயணம் செய்த மேற்படி ஐவரையும் சந்தேகத்தின் பேரில்
கைதுசெய்துள்ளனர். பொலிஸார் தம்மை நோக்கி வருவதைக் கண்ட அவர்களில் ஒருவர்,
வானிலிருந்து இறங்கி தப்பியோடிவிட்டதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கை
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாசி
15, 2011
சனசமூக நிலையத்
தலைவரையே எங்களால் மாற்ற முடியவில்லை!
நாட்டின் தலைவர் விடுக்கும் உத்தரவை ஏற்றுச்
சுட்டுத் தள்ளும் இராணுவ உலகில், எகிப்திய இராணுவம் மக்களின் புரட்சிக்கு
மதிப்பளித்த பெருந்தன்மையை, கொடூரமான போக்கைக் கடைப்பிடிக்கும் இராணுவங்கள்
உணர்ந்து கொள்ள வேண்டும். இதற்கு மேலாக ஆட்சியை மாற்றி நாட்டிற்கு
மீட்சியைப் பெற்றுக் கொடுக்க எகிப்திய மக்கள் தொடர்ச்சியாக நடத்திய
போராட்டம் தூய்மையானது. அவர்களின் ஒற்றுமை உலகிற்கு நல்லதோர்
எடுத்துக்காட்டு. எகிப்திய மக்கள் நடத்திய போராட்டம் பற்றி நினைக்கும் போது
நாம் எம்மட்டு.
(மேலும்...)
மாசி
15, 2011
Salute the people’s victory!
Long live the Egyptian revolution!
Message from the International Action Center
The International Action Center
joins with the people of Egypt and the world in celebrating the stunning
triumph of people's power and mass action in Egypt. The greatest
analysts of human society described real revolutions as “festivals of
the masses.” We see then that the 18 days that overturned the Hosni
Mubarak dictatorship is one of the greatest revolutions in the history
of humanity. Never before have so many in such a condensed period of
time become the actors and writers of their own history. We congratulate
the people of Egypt for their tremendous victory over a tyrant who for
30 years had the support of the “great powers” of the European Union and
especially of the United States until the final moments of his reign.
(more....)
மாசி
15, 2011
வவுனியா மாவட்ட
வேட்பாளர்களுக்கு விருப்பு இலக்கங்கள் வழங்கல்
வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேச
சபைகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் விருப்பு இலக்கங்கள்
வழங்கப்பட்டுள்ளன. இத்தகவலை வவுனியா உதவி தேர்தல் ஆணையாளர் ஏ. எஸ்.
கருணாநிதி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு,
மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசத்தில் இன்னமும் முழுமையான மீள்குடியேற்றம்
நடைபெறவில்லை இந்த பகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள் இன்னமும் நிவாரண
கிராமங்களிலும் நண்பர்கள் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர். குறித்த இரு
பிரதேச சபைகளின் களநிலவரங்கள் தொடர்பான முழுமையான அறிக்கையை தான் தேர்தல்
ஆணையாளருக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மாசி
15, 2011
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள், மதகுகள் புனரமைப்பு
வடக்கிலும், கிழக்கிலும் வெள்ள அழிவினால் பாதிக்கப்பட்ட வீதிகள் மதகுகள்
உடன் மீள்புனரமைப்பு செய்யப்படவுள்ளன. பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 3500
மில்லியன் ரூபாவினை மீள் எழுச்சி திட்டத்தின் ஊடாக வழங்கி இவற்றை
மீள்புனரமைப்பு செய்யவுள்ளது. உலக வங்கி மேற்படி அபிவிருத்திக்கான நன்கொடை
நிதியினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்கியுள்ளது. வடக்கு, கிழக்கு
மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக விபரங்கள் திரட்டப்பட்டு மதிப்பீடு
தயாரிக்கப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் அபிவிருத்தி
இடம்பெறும்.
மாசி
15, 2011
கரைச்சி வடக்கில்
இறால் பிடிக்க அனுமதி
கரைச்சி வடக்கு ஆணையிறவு, சுண்டிக்குளம்,காஞ்சிபுரம், போப்பாறை வரையான
கடலேரிப் பகுதியில் இறால் கூடுகளை அமைத்து இறால் பிடிப்பதற்கு அனுமதி
வழங்கப்படவுள்ளதாக கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின்
சமாசம் அறிவித்துள்ளது. கடந்த ஏழாம் திகதி கூடிய கடற்றொழிலாளர் சங்கங்களின்
சமாச பொதுச் சபையின் தீர்மானத்துக்கு அமைய எதிர்வரும் 20ம் திகதி
இக்கடலேரியல் பரீட்சார்த்தமாக இறால் கூடுகளை அமைத்து இறால் பிடிக்க அனுமதி
வழங்கப்படுமென அறிவித்துள்ளது. ஏற்றுமதியாளர்கள் மற்றும் உள்ளூர்
கொள்முதலாளர்கள் இறால் பிடிக்கும் கடற்றொழிலாளர் களிடம் இறால்களை கொள்முதல்
செய்வதற்கு கரைச்சி கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க சமாசத்தில் பதிவுகளை
மேற்கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளனர்.
மாசி
15, 2011
உலக பொருளாதார நிலையில் ஜப்பானை பின்தள்ளியது சீனா
1968 இலிருந்து உலகின் இரண் டாவது பாரிய பொருளாதார நாடாக இருந்த ஜப்பானை தற்
போது சீனா பின்தள்ளியிருக்கிறது. கடந்த வருடத்திற்கான ஜப்பானின் பொருளாதார
வளர்ச்சி வீதம் 3.9% ஆக இருந்த போதிலும் சீனாவுடன் ஈடுகொடுக்க ஜப்பானால்
முடியவில்லை. வயது முதிர்ந்தோரின் சனத் தொகையாலும், அரச கடன் அதிகரிப்பு
மற்றும் வேறுபல கார ணங்களாலுமே ஜப்பானின் பொரு ளாதாரம் பின்னடைவை எதிர்
நோக்கியுள்ளது. உலகின் மிகப் பெரிய கார் சந்தையைக் கொண்டிருக்கும் சீனா வோ
மிகப்பெரிய சக்தி நுகர்வையும் கொண்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவை
நோக்கியே சீனா வின் பார்வை திரும்பியுள்ளது. 2020 – 2030 வரையிலான காலப்
பகுதி க்குள் உலக பொருளாதாரத்தில் முதலி டத்தில் இருக்கும் அமெரிக்காவைக்
கூட சீனா பின்தள்ளி விடலாம் என ஊகங்கள் தெரிவிக்கின்றன.
மாசி
15, 2011
அல்ஜீரியாவில்
வாராந்த ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் தொடரும்!
நேற்று முன்தினம் அல்ஜீரிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர் வலத்தில்
ஈடுபட்டுள்ள எதிர்க்கட்சிக் குழுக்கள் அரசாங்கம் மாறும் வரை பிரதி
சனிக்கிழமை தோறும் ஆர்ப் பாட்டங்கள் நடைபெறும் என அறிவித்துள்ளன. எகிப்திலே
மக்கள் போராட்டத் தால் ஆட்சி கவிழ்க்கப்பட்டதைய டுத்து அல்ஜீரியாவிலும்
ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஆனால் நகரப்
பகுதியில் குவிக் கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கலகம் அடக்கும் பொலிஸாரினால்,
அந்த ஊர்வலம் நகருக்குள் செல் லாமல் தடுக்கப்பட்டதும் குறிப்பி டத்தக்கது.
எதிர்க்கட்சியின் ஊடகப் பேச்சாளராகச் செயற்படும் மொஹ் சன் பெலாபெஸ்
ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை முன்னின்று நடாத்தி வருகிறார். அவர் கருத்துத்
தெரிவிக்கையில், ஆட்சி மாற்றமொன்று நிகழும் வரை பிரதி சனிக்கிழமைகள் தோறும்
ஊர்வ லத்தை நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளோம் என்றார். கடந்த
சனியன்று நடாத்தப்பட்ட ஊர்வலம் பெரியளவில் நடைபெற் றாலும்
பெருந்தொகையானோரின் ஆதரவைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அல்ஜீரியாவில் ஏறத்தாழ 19 வருடங்களாக அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம்
இன்னும் சில நாட்களில் நீக்கப்படுமென அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெளராட்
மெடெல்சி தெரிவித்தார். எகிப்து, டுனிசியாவைத் தொடர்ந்து அல்ஜீரியாவிலும்
நடக்கும் மக்கள் போராட்டத்தால் 1992 இல் லிருந்து அமுலில் இருக்கும்
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு பெரும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
மாசி
15, 2011
Message of Solidarity by the Committee of Progressive
Pakistani-Canadians
The Saudi monarchy – the most
reactionary, despotic and US-dependent of the Arab regimes – has also
played a significant role in aiding and abetting undemocratic and unjust
regimes in the region – including those of Pakistan. King Abdullah had
personally phoned Mubarak to express his solidarity, calling the
protests an ‘attack against the security and stability of Egypt’ that
were being carried out by ‘infiltrators in the name of free speech’.
Like you we hope that the transformations in Egypt and Tunisia are the
beginnings of political and social change in the entire region.
(more....)
மாசி
15, 2011
எதிர்க்கட்சிகள் நேர்மையான தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட வேண்டும்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் மார்ச் மாதம் 17ம்
திகதியன்று, நாடெங்கிலும் நடத்தப்படுவதற்கான ஒழுங்குகள் தற்போது
துரிதகதியில் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் சகல அரசியல் கட்சிகளும் தேர்தல்
பிரசாரங்களை இப்போது தீவிரமாக முடுக்கிவிட ஆரம்பித்துள்ளன. தேர்தல்
பாராளுமன்ற தேர்தலாகவோ, ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகவோ
உள்ளூராட்சி மன்ற தேர்தலாகவோ இருந்தாலும், அதனை ஜனநாயக பாரம்பரியங்களுக்கு
அமைய சகல கட்சிகளும், சம்பிரதாயபூர்வமாக நடத்துவதற்கு தேர்தல்
ஆணையாளருக்கும், அவருக்கு இரு கரங்களைப் போல் இருந்து ஒத்துழைப்பு வழங்கும்
பொலிஸ் திணைக்களத்திற்கும், தபால் திணைக்களத்திற்கும் அரசியல் கட்சிகளும்
தேர்தலில் போட்டி யிடும் சுயேட்சை அணியினரும், பூரண ஒத்துழைப்பை அளிப்பது
அவசியமாகும்.
(மேலும்...)
மாசி
15, 2011
கருணாநிதி 6வது
முறையாகவும் முதலமைச்சராவார்
ஐந்தாம் முறையாக முதல் அமைச்சராக கலைஞர்
பொறுப்பு ஏற்ற பின்னர் ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி மாதம் நான் பெரம்பலூருக்கு
வந்து இருக்கிறேன். 2007ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கலைக்கல்லூ திறந்து
வைக்கவும் 2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட
விழாவுக்காகவும், 2009 ம் ஆண்டு பெப்பரவரி மாதம் மகளிர் சுய உதவி
குழுவினருக்கு சுழல் நிதி வழங்கவும், 2010ம் ஆண்டு பெப்ரவரி மாதம்
சமத்துவபுரத்தை திறந்து வைக்கவும் வந்து இருக்கிறேன். இப்போது 2011ம் ஆண்டு
மாவட்ட செயலாளர் மகன் திருமணத்தை நடத்தி வைக்க மட்டும் அல்லாமல் சற்று
தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை திறந்து
வைக்கவும் வந்து இருக்கிறேன். இன்னும் தேர்தலை ஒட்டி பிரசாரத்துக்காக
வருவேன். அதன் பின்னர் 6வது முறையாக தலைவர் கலைஞர் முதல் அமைச்சராக பொறுப்பு
ஏற்ற பின்னர் மீண்டும் அரசு திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதற்காக 2012ம்
ஆண்டு பெப்ரவரி மாதமும் வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
(மேலும்...)
மாசி
15, 2011
ஏப்ரல் 13, 2036
இல் பூமிக்கு அழிவா?
'அப்போஃபிஸ்' என்ற சிறிய கோளானது பூமிக்கு பாரிய அச்சுறுத்தல் எனவும் இக்
கோளானது எதிர்வரும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி பூமியுடன்
மோதலாம் எனவும் ரஸ்ய விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சென் பீட்டர்ஸ் பேர்க்
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை எதிர்வு கூறியுள்ளார்கள். இக்
கோளானது 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி சுமார் 37, 000 முதல் 38, 000
கிலோ மீற்றர் தொலைவில் பூமியை நெருங்கும் எனவும் 2036 ஆம் ஆண்டு ஏப்ரல் 13
ஆம் திகதி பூமியை மோதும் எனவும் பேராசிரியர் லியொனிட் சொலோகொவ்
தெரிவிக்கின்றார்.
(மேலும்...)
மாசி
14, 2011
எகிப்தில்
ஜனநாயகம் மலரும்!
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் பதவி விலகியதை
அடுத்து நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள எகிப்தின் புதிய
இராணுவ ஆட்சியாளர்கள், ஆத்திரமடைந்து அரச எதிர்ப்பு போராட்டங்களில்
தொடர்ந்தும் ஈடுபட் டிருக்கும் பொதுமக்களை அமைதியாக இருக்கச் செய்யும்
எண்ணத்துடன் விரைவில் அங்கு மக்களாட்சியை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநாட்டப்
போவதாக உறுதியளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை பொதுவாக அரசாங்கத்தின் புதிய
வாரத்திற்கான வேலை நாள் ஆரம்பிக்கும் தினமாகும். இராணுவ ஆட்சியாளர்கள்
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால் தாங்கள் மீண்டும் போராட்டங்களை
ஆரம்பிக்க போவதாக பொதுமக்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
(மேலும்......)
மாசி
14, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
29வது நாள் நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
29-02-2011 ஞாயிறு அன்று காலை 05:30 மணியளவில் புறப்பட்டது. மதிய உணவிற்காக
குடியாத்தனூர் என்ற இடத்தில் இடைநிறுத்தப்பட்டது. மதிய உணவை
முடித்துக்கொண்டு வீரர்கள் நடைபயணத்தைத் தொடர்ந்தனர். இறுதியாக அனைத்துப்
பொருட்களையும் ஏற்றிக்கொண்டு லொறியும் புறப்பட்டுச் சென்றது. கடைசியாக
உயர்திரு. ஞா.ஞானசேகரன் அவர்களின் புதல்வாரன திரு. ஞா. சுபேசன் அவர்களும்,
புதுக்கோட்டை முகாமைச் சேர்ந்த திரு. குலரூபன் அவர்களும் கனணி மற்றும் அவை
சார்ந்த பொருட்களை எடுத்துவைத்துக்கொண்டிருந்த போது, ஒரு பெண்
அலறியடித்துக்கொண்டு ஓடி வந்து இந்தியில் பேசி ஒரு கிணற்றைக் காட்டி
அழுதார்.(மேலும்......)
மாசி
14, 2011
திருட்டுக்களைக்
கட்டுப்படுத்த பொலிஸார் தீவிர நடவடிக்கை
யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும்
திருட்டு முயற்சிகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கும் வகையில் பொலிஸாரும்
இராணுவத்தினரும் கூட்டு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு
வேளைகளில் பிரதான வீதிகளில் மட்டுமன்றி கிராமப்புறங் களில் உள்ள சிறு
வீதிகள், ஒழுங்கைகள் மற்றும் சந்திப் பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான
முறையில் நடமாடுவோரை விசாரணை செய்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை மறித்து சோதனை செய்து வருகின்றனர். இதேவேளை,
பொது இடங்களில் தேவையற்ற முறையில் கூடி நிற்கும் இளைஞர்கள் மற்றும்
பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அறிவுரை கூறி வருவதையும் காண முடிகின்றது.
மேற்படி வீதிச் சோதனைகள் குடாநாடெங்கும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மாசி
14, 2011
வடக்கின் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் வன்னியில் அபிவிருத்தி நடவடிக்கை
வடக்கின் துரித மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் சர்வதேச அபிவிருத்தி
நிறுவனத்திடமிருந்து பெற்றுள்ள கடனின் மூலம் கிளிநொச்சி, வவுனியா, மன்னார்,
முல்லைத்தீவு மாவட்டங்களில் பல அபிவிருத்தி கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளன
என திட்டத்திற்கு பொறுப்பான பணிப்பாளர் கலாநிதி எஸ். எஸ். சிவகுமார்
தெரிவித்தார். கிளிநொச்சி பல நோக்குக் கூட்டுறவுச் சங்க கட்டடம் புனரமைத்தல்,
மன்னார் - முசலி, மடு, மாந்தை மேற்குப் பிரதேச உள் வீதிகளைப் புனரமைத்தல்,
மன்னார் பெரியபண்டிவிரிச்சான் குளம் புனரமைத்தல், வவுனியா பிரதேசத்தில்
உள்ள சில பாடசாலைகளைப் புனரமைத்தல், பனிச்சன்குளம், நொச்சிக்குளம், கற்குளம்,
பாவட்டன்குளம், நாகர்குளம், பரசன்குளம் ஆகிய சிறுகுளங்கள் புனரமைத்தல் ஆகிய
பணிகளும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவியில் மூலிகைத் தோட்டத்தை
புனரமைத்தல், வீதி அபிவிருத்தி திணைக்கள கட்டடங்கள், கத்தோலிக்க தமிழ்க்
கலவன் பாடசாலை, சிலாவத்தை பாடசாலை புனரமைத்தல், மேலும் கரைத்துறைப்பற்று,
துணுக்காய் பிரிவில் உள்வீதிகள் புனரமைத்தல் ஆகிய பணிகளும் இந்த திட்டத்தின்
கீழ் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாசி
14, 2011
Queensland floods - photos Australia
மாசி
14, 2011
தனித்து
போட்டியிடுவது குறித்து ராகுல் ஆய்வு, தமிழக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம்
தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டால் காங்கிரஸ¤க்கு செல்வாக்கு
எப்படியிருக்கும் என்ற நிலையை அறிவதற்கு ராகுல் தமிழகம் மற்றும் மும்பையை
சேர்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் இரகசிய ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வால்
காங்கிரஸார் உற்சாகமடைந்துள்ளனர். ஆய்வில் காங்கிரஸ¤க்கு ஆதரவாக கருத்து
வெளியாகியுள்ளது என தெரியவந்துள்ளது. ‘தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ்
கட்சி மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது ராகுலின் கனவாக உள்ளது. அந்த
கனவை நிறைவேற்றுவதற்கு மாநில அளவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தவும்,
மக்கள் ஆதரவை திரட்டும் வியூகத்தையும் ராகுல் அமைத்து வருகிறார்.
(மேலும்......)
மாசி
14, 2011
இலங்கைக்கு
எதிரான மனித உரிமைமீறல் குற்றச்சாட்டில் இந்தியாவும் தமிழ்க் கூட்டமைப்பும்
இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் சாட்சியங்களின் பின்னணியில் இந்தியா
உள்ளது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள சர்வதேச மனித உரிமைகள்
பேரவையின் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு
சர்வதேச உதவிகள் இடைநிறுத்தப்படலாம் என்று தேச ப்பற்றுள்ள தேசிய இயக்கம்
தெரிவித்துள்ளது. இந்த நிலைக்கு முகம் கொடுக்க ஜெனிவா செல்லும் இலங்கை
பிரதிநிதிகள் தயாராக இருக்க வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் எமது தாய்
நாட்டை காட்டிக் கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. நாட்டை
துண்டாடும் அந்நிய சக்திகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் அந்த இயக்கம்
குறிப்பிட்டுள்ளது.
(மேலும்......)
மாசி
14, 2011
ஜனநாயக சீர்திருத்தத்தை வலியுறுத்தி அல்ஜீரியாவில் ஆர்ப்பாட்டம்
அல்ஜீரியா தலைநகர் அல்ஜீர்ஸில் ஜனநாயக
சீர்திருத்தத்தை வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதில
சுமார் 400 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த போராட்டத்தின் போது
பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வறுமையும் வேலைவாய்ப்பின்மையும் என்பவற்றை இல்லாமல் செய்ய ஜனநாயக
சீர்திருத்தம் வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி அப்தெலாஸிஸ் போடஃப்லிகாவை
எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
மாசி
14, 2011
தப்பியோடிய இராணுவத்தினரில் இதுவரை 4ஆயிரத்து 630
பேர் கைது _
இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களில்
இதுவரையில் 4ஆயிரத்து 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 12
அதிகாரிகளும் அடங்குவதாக இராணுவப்பேச்சாளர் உபய மெதவெல தெரிவித்தார்.
தப்பியோடிய இராணுவ வீரர்களில் 4ஆயிரத்து 816 பேர் இதுவரையில்
சரணடைந்துள்ளதுடன் அவர்களில் 11 அதிகாரிகளும் அடங்குவதாக தெரிவிக்கும் அவர்
தப்பியோடியவர்களுக்கான சரணடையும் காலம் நிறைவடைந்துள்ளதாகவும் அவர்
தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,
இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருக்கும் இராணுவ வீரர்களை
சரணடையுமாறு நாம் அறிவித்திருந்தோம், அத்தோடு அதற்கான காலக்கெடுவும்
விடுத்திருந்தோம். அதனடிப்படையிலேயே பெருந்தொகையினர் சரணடைந்துள்ளார்கள்.
இவ்வாறு சரணடைவதற்காக கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு கடந்த சனிக்கிழமையுடன்
முடிவடைந்துள்ளது. எனவே இதுவரையிலும் சரணடையாமல் உள்ள தப்பியோடியவர்களையும்
கைது செய்யவுள்ளோம்.
_
மாசி
13, 2011
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இந்தியா தீர்வுத்திட்டமென்றை முன்வைக்கத்
தீர்மானம்!
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு இந்திய
மத்திய அசாங்கம் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக
இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய இனப்பிரச்சினைக்கான வரைவுத்
திட்ட தீர்வு ஒன்றை இந்தியா முன்வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இறுதித் தீர்வுத் திட்ட யோசனை தயாரிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை
அரசாங்கத்தின் கருத்துக்கள் கோரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஏனைய சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை
நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழக அரசியல் கட்சிகளினால்
இலங்கைத் தமிழர் தொடர்பில் மத்திய அரசாங்கத்திற்கு பிரயோகிக்கப்படும்
அழுத்தம் காரணமாக தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளது. முதலில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,
பின்னர் சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் இந்திய மத்திய
அசராங்கம் தீர்மானித்துள்ளதாக குறித்த இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாசி
13, 2011
எகிப்து எழுச்சி
வென்றது
ஓட்டம் பிடித்தார் முபாரக் ஜனநாயகம் மலரும், மக்கள் உறுதி
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாக 30 ஆண்டு காலம் எதேச்சதிகார ஆட்சி
நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை அதிகாரத்திலிருந்து அகற்றி, வர லாறு
படைத்தனர் எகிப்து மக்கள். 18 நாட்களாக நீடித்த எகிப்து மக் களின் மகத்தான
எழுச்சியின் விளைவாக, பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தலைநகர் கெய்ரோ வை
விட்டு குடும்பத்து டன் ஓட்டம் பிடித்தார் முபாரக். ஜனாதிபதி முபாரக்கின்
ஆட்சிக்கு எதிராக கடந்த ஜனவரி 25ம்தேதி துவங்கிய எகிப்து மக்களின் மகத் தான
எழுச்சியில், அடக்குமுறை களை மீறி, ராணுவத்தின் அச்சுறுத் தலை மீறி தலைநகர்
கெய்ரோவின் சுதந்திர சதுக்கத்திலும், அலெக் சாண்ட்ரியா, சூயஸ் உள்பட நாடு
முழுவதும் உள்ள நகரங்களிலும், லட்சோப லட்சம் மக்கள் அணி திரண்டனர். 18
நாட்களாக நீடித்த இந்தப் போராட்டத்திற்கு, வேறு வழி யின்றி ராணுவ வீரர்களும்
ஆத ரவு அளிப்பதாக கூறினர்.
(மேலும்....)
மாசி
13, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
மகாராஸ்ரா எல்லையை நோக்கி...
ஈழத் தமிழ் இனத்தின் சுதந்திரமான வாழ்வுக்கு
ஆதரவும் அங்கீகாரமும் உத்தரவாதமும் தேடி நாம் மேற்கொள்ளும் இந்த நெடுந்தூர
நடைபயணம் இன்று 28வது நாளாக (12-02-2011) ஆந்திர பிரதேசத்தின் எல்லையை
வந்தடைந்துள்ளோம். இன்னும் 1240 கி.மீற்றர் தூர எமது நடைபயணத்தின் மூலம்
நாம் எமது இனத்தின் பாதுகாப்புக்கு வழி தேடிச் செல்கிறோம். உலகத்தின்
மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைநகரை நாம் சென்றடைந்து ஈழத்தில் எம் இனத்தின்
உரிமைக்கு உத்தரவாதம் வழங்கும்படி கோரவுள்ளோம்.
(மேலும்....)
மாசி
13, 2011
‘எங்கள் தேசம் மீண்டும் பிறந்தது’ எகிப்து மக்களின் உற்சாகப் பெருவெள்ளம்
துனீஷிய தேசத்தின் மக்கள் தங் களது எதேச்சதிகார அரசை தூக்கி யெறிந்த பின்னர்,
சரியாக 4 வார காலத்தில் அரபு உலகின் மிகப் பெரும் நாட்டில் மக்கள் சக்தி
மகத்தான வெற்றி பெற்றுள்ளது. எகிப்தியர்கள் 30 ஆண்டு காலத் திற்கு பிறகு
ஹோஸ்னி முபாரக்கின் எதேச்சதிகார ஆட்சியை தூக்கியெ றிந்து புதிய சகாப்தத்தை
அடைந்தி ருக்கிறார்கள். முபாரக் ராஜினாமா செய்தபின், அவர் தலைநகர் கெய்ரோவை
விட்டு ஓட்டம் பிடித்து விட்டார் என்ற செய்தியை அறிந்தவுடன் எகிப்திய மக்கள்
மகிழ்ச்சி வெள் ளத்தில் ஆர்ப்பரித்தனர். முபாரக் கின் வீழ்ச்சி நாடு
முழுவதும் லட் சக்கணக்கான மக்களை மிகப் பெரும் உற்சாக கடலில் மூழ்கச்
செய்தது. வெள்ளியன்று இரவு முழுவதும் கொண்டாட்டங்கள்.
(மேலும்....)
மாசி
13, 2011
Lesson
Learnt in Revolution at Cairo (LLRC)
(By Lenin Benedict-Toronto)
History has once again proved
that any country or dictatorship will be over thrown by the united power
of people. The waves of Democratic revolution which starts at Tunisia,
followed by Egypt sweeping across the whole of Middle East changing its
political landscape. It is yet to reach the shores of Asia and other
parts of the Globe but it is certain it will rock each and every nation
that is governed by emergency laws and ruled by dictators. When it
reaches the shores of Asia, Srilanka will be definitely the first one to
get hit. The news of uprising by people in police state and the message
that carries will make the people of Srilanka to fall in line with them.
(more....)
மாசி
13, 2011
ஜனாதிபதிக்கு ஒரு கடிதம்
அண்மையில் எற்பட்ட இயற்கை
அனர்த்தங்களிலிருந்து மக்கள் மீண்டு வர உடனடியாக என்ன செய்ய வேண்டும்...(மேலும்....)
மாசி
13, 2011
எகிப்து
மக்கள் வரலாறு படைக்கிறார்கள்
(பிரகாஷ் காரத்)
எகிப்து மக்களின் பேரெழுச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் மிகவும் ஆவ
லுடன் கவனித்துக்கொண்டு வருகிறார்கள். ஜனவரி 25இலிருந்து பிப்ரவரி 9ஆம் தேதி
வரையிலான பதினைந்து நாட்களில் இப் பேரெழுச்சியில் லட்சக்கணக்கான எகிப்தி
யர்கள் பங்கேற்றுள்ளார்கள். அனைத்துப் பிரிவு மக்களும், குறிப்பாக இளைஞர்கள்,
தொழிலாளர்கள், மத்தியதர வர்க்கத்தினர், சாமானிய ஆண்கள் - பெண்கள் என
அனைத்துப் பிரிவினரும், ஹோஸ்னி முபாரக் கின் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக
அணி திரண்டு வருகிறார்கள். முபாரக் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதிலும்,
புதிய ஜனநாயக அமைப்பை உருவாக்குவதிலும் அவர்கள் அனைவரும்
ஒன்றுபட்டிருக்கிறார் கள். கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில்
குழுமிய மக்கள் காட்டிய வீராவேசம் மற்றும் உள்ள உறுதி அவர்கள் வரலாறு
படைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இப் போராட்டத் தில்
இதுவரை சுமார் முன்னூறு பேர் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத் திருக்கிறார்கள்.
(மேலும்....)
மாசி
13, 2011
உழவும் தொழிலும் முரண்பட்டதல்ல
உலக அளவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மிக முக்கிய பிரச்சனையாக முன்னுக்கு
வந்துள்ளது. தொழில் வளர்ச்சியோடு இணைந்த பிரச்சனை யாக ஆலைகளிலிருந்து
வெளியேற்றப்படும் கழிவுநீர், விவசாயம், விளைநிலத்தை பாழ் படுத்தும் பிரச்சனை
விவாதிக்கப்படுகிறது. விவசாயிகளும் விளை நிலமும் பாதுகாக்கப் படுவது
காலத்தின் தேவை என்பதை மன சாட்சியுள்ள யாரும் மறுதலித்துவிட முடியாது. அதே
நேரத்தில் தொழிலும், தொழிலாளர் வாழ் வாதாரமும் பாதுகாக்கப்படவேண்டும்
என்பதும் அவசியம்.
(மேலும்....)
மாசி
13, 2011
மொழிகளின் மரணம்
(பேராசிரியர் ஆர். சந்திரா)
26ஜனவரி, 2010 ... இந்தியாவின் அறுபதாவது குடியரசுதினம். முக்கியத்துவம்
வாய்ந்த தினம். ஆனால், அன்றுதான் அந்தமான் நிக்கோபார் தீவில் பேசப்பட்டு
வந்த 65 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த “போ” என்ற மொழி மரணமடைந்தது.
‘சிறப்பு அந்தமான்’ மொழிகளில் ஒன்றான “போ” மொழியை பேசிவந்த போவா சீனியர்
என்ற 80 வயது மூதாட்டி மரணமடைந்த போது அந்த மொழி யும் மரணமடைந்தது. 2004ம்
ஆண்டு டிசம்பர் சுனாமி அந்தமான்நிக்கோபார் தீவுகளை கோரமாக தாக்கிய போது
அதில் உயிர் தப்பிய சிலரில் போசீ னியரும் ஒருவர். சுனாமி தாக்கிய போது,
ராட்சத அலைகள் எழும்பி தணிந்ததையும், அதன் தாக்கத்தையும் “போ” மொழியில் அவர்
பாடி, வீடி யோவில் பதிவு செய்யப்பட்டது தான் “போ” மொழி வாழ்ந்ததற்கு
சாட்சியாக உள்ளது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மொழியியல் ஆய்வாளர்
அன்விதா அபி, “உலகின் மிகப்பழமையான மொழி அழிந்துவிட்டது” என இதுபற்றி
குறிப்பிட்டுள்ளார்.
(மேலும்....)
மாசி
13, 2011
அரபு
உலகில் பெரும் வரவேற்பு அடுத்து எந்த நாடு?
எகிப்திய மக்களின் எழுச்சிமிகு கிளர்ச்சி அரபு உலகெங்கும் வாழ்கிற
மக்களிடையே மிகப்பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்பிரிக்காவில்
துவங்கி, சவூதி அரேபியா வரை இருக்கிற பல்வேறு அரபு நாடு களில் நிலவும்
எதேச்சதிகார அரசுகளுக்கும், மன்னராட்சி அரசுகளுக்கும் எதிரான கிளர்ச்சி
உணர்வை, எகிப்திய மக்களின் வெற்றி மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஹோஸ்னி
முபாரக்கின் 30 ஆண்டுகளான அதிகாரம், மக்களால் தூக்கியெறியப்பட்ட செய்தியை
பாலஸ்தீனம், ஜோர்டான், துருக்கி, ஏமன், பஹ்ரைன், அல்ஜீரியா, லெபனான், சிரியா
மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் மக்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
வாணவேடிக்கைகள், வாழ்த்து பரிமாற்றங்கள் என வீதிகளில் குவிந்த மக்கள்
விடியவிடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
(மேலும்....)
மாசி
13, 2011
குமரன் பத்மநாதனை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில்
இணைத்துக் கொள்ளத் தயார்–பிரதமர்
டி.எம். ஜயரட்ன!
கருணா அம்மான் அனுமதிப்பாரா....?
புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைத்துக் கொள்ளத் தயார் என பிரதமர் டி.எம்.
ஜயரட்ன தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் குமரன் பத்மநாதனுக்கு கட்சி
அங்கத்துவம் வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு ஆதரவு
வழங்கியவர்களை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் நோக்கம் ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு
ஆதரவு வழங்கியவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டுமென அவர்
வலியுறுத்தியுள்ளார்.
(மேலும்....)
மாசி
12, 2011
18 நாள் எழுச்சி
எகிப்து மக்கள் வென்றனர் முபாரக் விலகினார்
காலம் எதேச்சதி கார ஆட்சி நடத்தி வந்த ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கை
அதிகாரத்தி லிருந்து அகற்றி, வரலாற்றுச் சாதனை படைத்தனர் எகிப்து மக்கள்.18
நாட்களாக நீடித்து வந்த எகிப்து மக்களின் மகத்தான எழுச்சியின் விளை வாக,
பதவியை ராஜினாமா செய்துவிட்டு தலைநகர் கெய்ரோவைவிட்டு குடும்பத்து டன்
ஓட்டம் பிடித்தார் முபாரக். ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சிக்கு எதி ராக கடந்த
ஜனவரி 25ம்தேதி துவங்கிய எகிப்து மக்களின் மகத்தான எழுச்சி, அரபு உலகம்
மட்டுமின்றி ஒட்டுமொத்த உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. முபாரக் அரசு
ஏவிய அடக்குமுறைகளை மீறி, ராணுவத்தின் அச்சுறுத்தலை மீறி தலை நகர்
கெய்ரோவின் சுதந்திர சதுக்கத்திலும், அலெக்சான்ட்ரியா, சூயஸ் உள்பட நாடு
முழுவதும் உள்ள நகரங்களிலும், லட்சோப லட்சம் மக்கள் அணிதிரண்டனர். 18 நாட்
களாக நீடித்த இந்தப் போராட்டத்திற்கு, வேறு வழியின்றி ராணுவ வீரர்களும் ஆத
ரவு அளிப்பதாக கூறினர்.
(மேலும்....)
மாசி
12, 2011
அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா நீதிமன்றில் ஆஜர், பிடியாணை ரத்து
பாரம்பரிய சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பிடிவிறாந்தை கொழும்பு மேல்
நீதிமன்றம் நேற்று வாபஸ் பெற்றது. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரின்
கொள்ளுப்பிட்டி அலுவலகத்தில் வைத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை
குண்டுதாரியொருவர் கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கில் அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இவ்வழக்கு விசாரணையில்
அமைச்சர் டக்ளஸ் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து அவருக்கு எதிராக
கொழும்பு மேல் நீதிமன்றினால் கடந்த 7ஆம் திகதி பிடிவிறாந்து
பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று சட்டத்தரணிகள் எம்.கே.பி.
சந்திரலால் மற்றும் அநுருத்த பண்டார மாகம்மன ஆகியோருக்கூடாக நீதிமன்றில்
சரணடைந்தார். அமைச்சருக்கு எதிரான பிடிவிறாந்தை வாபஸ் பெறுமாறு அவரின்
சட்டத்தரணிகள் நீதிமன்றத்தை கோரினர். அதையடுத்து நீதிபதி டபிள்யூ.எம்.பி.பீ.
வராவேவ மேற்படி பிடிவிறாந்தை வாபஸ் பெற்றதுடன் அமைச்சர் தேவானந்தாவை
எதிர்வரும் மே 26ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
மாசி
12, 2011
Norway arrests ex LTTE member
Crime branch of the Norwegian
Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in
Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has
been charged for three killings in his home country before coming to
Norway, which the lawyer representing the prosecutor said could be acts
of war or war-like scenario, reported a local newspaper, Bygdebladet, on
29 January. Per Zimmer, the lawyer representing the Norwegian Police
told the paper that the situation prevailing now in the island had
enabled them [the Norwegian authorities] to undertake investigations on
the ground. While questioning whether any agency of the war crimes
accused Sri Lanka would be recognized in such investigations, diaspora
Tamils wonder what action would be taken against the individuals
suspected in the commitment and facilitation of war crimes in the
island. (more....)
மாசி
12, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 27வது நாள் நிகழ்வுகள்!
இந்தியாவின் ஆதரவு ஈழத் தமிழர் பக்கம்
திரும்பாதா? சுதந்திர வாழ்வு கிடைக்காதா? ஏன்ற ஏக்கத்துடன்தான் தங்களை
வருத்தி இந்த நடைபயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தியாவும் உலகநாடுகளும் ஈழத்
தமிழர்கள் மீது அனுதாபம் கொண்டு ஈழத் தமிழர்கள் சார்பாக நாங்கள்
வைத்திருக்கும் நடைமுறை சாத்தியமான எங்களது நியாயமான கோரிக்கைகளை
ஏற்றுக்கொள்ள நாங்கள் எங்களை வருத்தி மேற்கொள்ளும் இந்த நடைபயணத்தை
வெற்றிபெற ஆதரவு வழங்குமாறு உலகநாடுகளையும், உலகில் வாழும் தமிழர்களையும்,
இந்திய மக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
(மேலும்....)
மாசி
12, 2011
ருமேனியர்கள் சொல்கிறார்கள் கம்யூனிசமே மேம்பட்டது!
ருமேனியாவில் தற்போதுள்ள முதலாளித்துவ ஆட்சியைக் காட்டிலும் கம்யூனிஸ்ட்
கட்சி ஆட்சியி லிருந்தபோது வாழ்க்கைத்தரம் சிறப்பாக இருந்ததாக சமீபத்தில்
நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் பங்கெடுத்தவர்களில் பெரும்பான்மையோர் கம்யூனிச சிந்தனையை
ஆமோதிக்கின்றனர், 60 சதவிகிதம் பேர் கம்யூனிசம் நல்ல சிந்தனை என்று
தெரிவித்துள்ளனர். 4 வருடங்களுக்கு முன்பாக இதே போல கருத்து வாக்கெடுப்பு
நடத்தியபோது இருந்ததைக் காட்டிலும் தற்போது கம்யூனிசம் மீதான ஈடுபாடு
அதிகரித்துள்ளதாக வாக்கெடுப்பை நடத்தியவர்கள் தெரிவித்தனர்.
(மேலும்....)
மாசி
12, 2011
Hosni
Mubarak resigns as president
Egyptian president stands down and hands over power to the Supreme
Council for the Armed Forces.
Hosni Mubarak, the Egyptian president, has resigned from his post,
handing over power to the armed forces.Omar Suleiman, the
vice-president, announced in a televised address that the president was
"waiving" his office, and had handed over authority to the Supreme
Council of the armed forces. Suleiman's short statement was received
with a roar of approval and by celebratory chanting and flag-waving from
a crowd of hundreds of thousands in Cairo's Tahrir Square, as well by
pro-democracy campaigners who attended protests across the country on
Friday. (more...)
மாசி
12, 2011
இயற்கை
சீற்றத்துக்கு கடந்த ஒரு ஆண்டில் 2 1/2 இலட்சம் பேர் பலி
ஒரு தலைமுறைக் காலத்தில் கடந்த 2010ம் ஆண்டு
தான் மிக மோசமான ஆண்டு ஆகும். இந்த ஆண்டில் இயற்கை சீற்றங்கள் காரணமாக 2
இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன்
தெரிவித்தார். ஐ.நா. பொதுச் சபையில் இயற்கை சீற்ற அபாய குறைப்பு குறித்து
அவர் பேசியபோது கூறியதாவது, சீனா, சிலி, ஹெய்டி ஆகிய நாடுகளில் பூகம்பம்,
பாகிஸ்தான், ஐரோப்பிய நாடுகளில் வெள்ளம், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகளில்
காட்டுத் தீ, ஆசிய நாடுகளில் புயல் ஆகியவை காரணமாக கடந்த ஆண்டு 20 கோடியே
80 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் பலியானார்கள்.
இதனால் 6 இலட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபா இழப்பு ஏற்பட்டது. எனவே, உயிர்
இழப்பை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் நாம் ஈடுபட வேண்டும். சிறுவர்கள் தான்
இதில் மிக அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மாசி
12, 2011
ஆ. ராசாவுக்கு மேலும் 4 நாள் சி.பி.ஐ காவல்
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவை
மேலும் 4 நாட்கள் சி. பி. ஐ. காவலில் வைத்து விசாரிக்க டில்லி நீதிமன்றம்
கடந்த வியாழக்கிழமை அனுமதி அளித்தது. இதே வழக்கில் ஸ்வான் தொலைத்தொடர்பு
நிறுவன நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வாவையும் வரும் 14 ஆம் திகதி வரை சி.
பி. ஐ. காவலில் வைத்து விசாரிக்க சி. பி. ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி
சாய்னி அனுமதி அளித்தார். “இருவரிடமும் ஒன்றாக விசாரணை நடத்த வேண்டும்
என்பதால் மேலும் 4 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்க
வேண்டும்” என்று சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது. இதனை நீதிபதி ஏற்றுக்
கொண்டார். விசாரணை நாட்களில் தனது வழக்கறிஞரை தினமும் சந்தித்துப் பேச
அனுமதிக்க வேண்டும் என்று ஷாகித் உஸ்மான் பல்வா விடுத்த கோரிக்கையை நீதிபதி
ஏற்க மறுத்து விட்டார். எனினும் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை மணி நேரம்
சந்தித்துப் பேசலாம் என்று நீதிபதி அனுமதி அளித்தார்.
மாசி
12, 2011
‘லங்கா ஈ நியூஸ்’ மீது தாக்குதல்: சந்தேக நபர் கைது
‘லங்கா ஈ நீயூஸ்’ இணையத்தள அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய பிரதான
சந்தேக நபர்களில் ஒருவரான ‘பூதயா’ (பூதம்) தலங்கம பொலிஸாரினால் கைது
செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று கடுவல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிசாந்த ஜயகொடி கூறினார்.
மாலம்பேயிலுள்ள லங்கா ஈ நியூஸ் அலுவலகம் கடந்த மாதம் 31 ஆம் திகதி
இனந்தெரியாத கும்பலால் தாக்கி சேதமாக்கப்பட்டது. கைதானார். ‘பூதயா’ எனும்
புனைப்பெயர் கொண்டு அழைக்கப்பட்ட ஜயலத் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக
பொலிஸாரினால் தேடப்பட்டு வந்தார். இவர் பாதாள உலகத்துடன் தொடர்புடையவர் என
பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸார்
தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாசி
12, 2011
ஜீவா என்றொரு கவிஞர்
தாலிகளேதுக்கடி... கற்பென்பதேதுக்கடி...
(சு.பொ.அ)
காதல் மணம் பேண வேண்டுமடி - பொய்மைக்
கட்டுடைத் தோங்கிட வேண்டுமடி
சாதலை வேண்டி நாம் வாழவில்லை - இங்கு
சங்கடம் வேண்டியும் வாழவில்லை”
என காதல் மணம் பேண ஜீவா அடிக் கும் ‘கும்மி’ அடடா... ஓசை நயமும் உயர்ந்த
நோக்கும் கொண்டவை. அதில் அவர் கூறுகிறார்
“கற்பென மாதரை நிர்ப்பந்தஞ்-செய்வதைக்
கட்டோடு குப்பையில் விட்டெறிவோம்”
(மேலும்....)
மாசி
12, 2011
கூடிய பயணிகளை
ஏற்றி செல்லும் ஆட்டோ சாரதிகள் மீது நடவடிக்கை
மோட்டார் சைக்கிள் ஓட்டிகளே வீதி
விபத்துக்களில் அதிகமாக உயிர் துறந்து வருகிறார்கள். இவர்களுக்கு அடுத்த
படியாக முச்சக்கரவண்டி சாரதிகளும் அவற்றில் செல்லும் பயணிகளுமே வீதி
விபத்துக்களில் அதிகமாக மரணிக்கிறார்கள் என்று பொலிஸ் திணைக்களத்தின் புள்ளி
விபரங்கள் சான்று பகிர்கின்றன. இலங்கையில் வீதி விபத்துக்களில் அதிகமாக
கொல்லப்படும் மோட்டார் சைக்கிள் ஓட்டிகள் 18 முதல் 27 வயதிற்குட்பட்ட
இளைஞர்கள் என்பதும் இப்போது பொலிஸார் நடத்திய ஆய்வுகள் மூலம்
தெரியவந்துள்ளது. மிதமிஞ்சிய வேகம், மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களை
ஓட்டுதல், வீதியில் மற்ற மோட்டார் சைக்கிளுடன் போட்டியில் தங்கள் மோட்டார்
சைக்கிள்களை அதி வேகமாக ஓட்டுதல் போன்றவையே இந்த இளைஞர்களின் மரணத்திற்கு
பிரதான காரணமாக இருந்து வருகிறது.
(மேலும்....)
மாசி
12, 2011
சவூதியில் மன்னர் ஆட்சிக்கு மத்தியில் புதிய கட்சி
ஆரம்பம் _
சவூதி அரேபியாவில் முதன் முறையாக
கல்விமான்கள் சிலர் இணைந்து புதிய கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளதாக
அறிவித்துள்ளனர். உம்மா இஸ்லாமியக் கட்சி என அக்கட்சி
பெயரிடப்பட்டுள்ளது.இக்கட்சியில் மனித உரிமை ஆர்வலர்கள், வக்கீல்கள் மற்றும்
வர்த்தகர் ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதனை
அங்கீகரிக்குமாறு அவர்கள் அந்நாட்டு மன்னரிடம் விண்ணப்பித்துள்ளனர். மன்னர்
ஆட்சி நிலவி வரும் சவூதி அரேபியாவில் அரசியல் கட்சிகளுக்குத்
தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒரே ஒரு தேர்தல் 2005 ஆம் ஆண்டு நகர சபை
உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்றது. இந்நிலையில் அரசாங்கமொன்றினை
தேர்ந்தெடுப்பதற்கான மக்களின் உரிமை, பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்
மற்றும் மறுசீரமைப்பு போன்றவற்றுக்கான சரியான தருணம் இதுவெனவும் புதிய கட்சி
தெரிவித்துள்ளது. எகிப்து மற்றும் டுனிசியா நாடுகளில் அந்நாட்டு
அரசாங்கங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றும் வரும்
இச்சந்தர்ப்பத்தில் இவ்வறிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
மாசி
12, 2011
2 பேரைக் கொன்ற அமெ. தூதர் சிறையிலடைப்பு பாக்.-அமெரிக்கா உறவில் விரிசல்
பாகிஸ்தானை சேர்ந்த இருவரை சுட்டுக்கொலை செய்த அமெரிக்க தூதரக அதிகாரி
ரேமண்ட் டேவிஸ் வெள்ளி யன்று நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். கைது
செய்த அதிகாரியை உடனடியாக விடுதலை செய்யாவிட்டால் விபரீத விளைவு ஏற்படும்
என, அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. கடந்த ஜனவரி 27ம் தேதியன்று லாகூரில்
அமெ ரிக்க அதிகாரி ரேமண்ட் டேவிஸ் தனது கை துப் பாக்கியால் பாகிஸ்தானை
சேர்ந்த இருவரை சுட்டுக் கொன்றார். தன்னிடம் கொள்ளை யடிக்க வந்தவர்களிடமி
ருந்து தப்பிப்பதற்காக இரு வரையும் கொலை செய் தேன் என டேவிஸ் கூறி னார்.
கடந்த ஜனவரி 28ம் தேதியன்று ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பாக டேவிஸ்
ஆஜர்படுத்தப்பட் டார். அவரை பிப்ரவரி 3ம் தேதி வரை போலீஸ்காவ லில் வைக்க
நீதிபதி உத்தர விட்டார்.
(மேலும்....)
மாசி
12, 2011
மட்டக்களப்பில் முகாம்களிலிருந்து வீடு திரும்பும்
மக்களுக்கு புளொட் உதவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும்மழை காரணமாக
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு
செல்;லுதல், மக்களின் அத்தியாவசிய போக்குவரத்து, நோயாளர்களை ஏற்றி இறக்குதல்,
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வைத்தியர்களை அழைத்துச் சென்று வருதல்,
மருத்துவ உதவிகள் போன்ற பணிகளுக்கு புளொட் உறுப்பினர்கள் உதவி வந்தனர்.
அத்துடன் பல்வேறு பகுதிகளின் நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு
சமைத்த உணவினையும் வழங்கி வந்தனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட
அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும்
மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
(மேலும்....)
மாசி
11, 2011
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலப்படுத்த
உங்களுக்கு எவ்வளவு "கோடி பணம் வேண்டும்"
சென்னையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை
பலப்படுத்த தயாராகும் தமிழக மக்கள், தமிழகத்தில் நாடுகடந்த தமிழீழ
அரசாங்கத்துக்கான தோழமை மையம் ஏற்பாடு செய்திருந்த “நாடுகடந்த தமிழீழ அரசு
ஏன்” எனும் தலைப்பிலான கருத்தரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதனை
சீர் குலைக்க கனடா, நோர்வே, பிரித்தானியா ஆகிய நாடுகழில் இருந்து
தொலைபெசிகள் சென்ற வண்ணம் உள்ளது. உங்களுக்கு எவ்வளவு "கோடி பணம்
வேண்டும்" , நீங்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை மூளகடிக்க கேவலம் எம்
இனத்தை அழிக்க இவ்வளவு தரம் குறைந்த நடவடிக்கையை (உலக தமிழர் இயக்கம் பெயர்
மாற்றப்பட்ட (NCCT ) அமைப்பும் சில வர்த்தக நிறுவனங்களும் ( கேட்டரிங் )
ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக இருந்த தமிழக உணர்வாளர்களை ஜனநாயக முறையில்
மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிக்க
வேண்டாம் என தமது பண பலத்தால் அந்த தமிழ் உணர்வாளர்களை வாங்க முனைகின்றனர்.
சென்னை செய்தியாளர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களின் போராட்டத்தை
கொச்சப்படுத்தும் இவர்களை வெகு விரைவில் பகிரங்கமாக அடையாளம் காட்டுவோம்
என்ன தெரிவித்தார்.
(செய்தியாளர் மகேசன்.)
மாசி
11, 2011
பெரும் மாற்றத்தைக் காணப் போகும் மேற்கு ஆசியா அரசியல் வல்லுநர்கள் கருத்து
துனீசியாவில் துவங்கி பல நாடுகளுக்குப் பரவி யுள்ள விடுதலைக்கான மக் கள்
இயக்கங்கள் மேற்கு ஆசியாவில் பெரும் மாற்றங் களை ஏற்படுத்தும் என்று
இப்பகுதியைத் தொடர்ந்து கவனித்து வரும் அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரி
வித்திருக்கிறார்கள். வல்லுநர்களில் ஒருவ ரான ஹசன் ஹனிசடே கூறுகையில்,
மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகள் மற் றும் இஸ்ரேலுடன் கூட்டு சேராத அரசுகள்
மேற்கா சிய நாடுகளில் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. எகிப்து போன்ற
கையாலா காத அரசுகளும் தூக்கியெ றியப்பட்டு விடும். மக்களின் நலன்களை
மையமாகக் கொண்டு மேற்காசிய அரசு கள் புதிய வடிவத்தை எடுக் கும். அமெரிக்கா
மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல் வாக்கு குறையத் தொடங்கும் என்கிறார்.
(மேலும்....)
மாசி
11, 2011
வவுனியா நகர அபிவிருத்திக்கு ரூபா.8 கோடி ஒதுக்கீடு
நகரத்தின் அபிவிருத்தியே எனது பிரதான
நோக்கமாகும் என தெரிவிக்கும் வவுனியா நகர பிதா ஜி. நாதன் இவ்வாண்டுக்குரிய
வரவு செலவுத் திட்டத்தில் நகரில் வாழும் வரிசெலுத்தும் மக்களுக்குரிய பல
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அடங்கியுள்ளன என கூறினார். கடந்த சனிக்கிழமை
நகர மண்டபத்தில் வரி செலுத்தும் மக்கள் மத்தியில் உரையாற்றிய போது இதனைக்
குறிப்பிட்டார். வவுனியா நகரத்தின் ஊடாக ஒரு நாளைக்கு மூன்று இலட்சம் மக்கள்
கடந்து செல்கின்றார்கள். இதன் காரணமாக நகரம் பல வழிகளிலும் அசுத்தமடைகின்றது.
ஆனாலும் நகரத்தை நாம் ஆழகாகவே வைத்துள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.
(மேலும்....)
மாசி
11, 2011
விஜயகாந்த்,
விஜயை பிரசாரத்துக்கு இழுக்க ஜெயலலிதா திட்டம்
தொகுதிப் பங்கீடு விஷயத்தில்
விஜய்காந்திடமிருந்து அ.தி.மு.கவுக்கு சாதகமான பதில் கிடைக்காததையடு த்து
நடிகர் விஜய்யை பிரசாரத்துக்கு இழுக்க அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா
தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். கூட்டணியில் சேர வேண்டுமானால் 80
ஆசனங்கள் துணை முதல்வர் பதவி தேர்தலை சந்திக்கத் தேவையானவற்றைத் தர வேண்டும்
என தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்த் நிபந்தனைகள் போட்டு அ.தி.மு.கவை
திகிலடையச் செய்துள்ளார். அவருடன் அ.தி.மு.க. தரப்பிலிருந்து பலரும்
பேசியதையடுத்து கொஞ்சம் இறங்கி வந்த விஜய்காந்த் குறைந்த பட்சம் 60 ஆசனங்கள்
தர வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால் அதிகபட்சம் 35 தொகுதி
தான் அதுக்கு மேல் தர முடியாது என்று அ.தி.மு.க. தரப்பு கூறிவிட்டதால்
பேச்சுவார்த்தைகள் அப்படியே அந்தரத்தில் தொங்குகின்றன.
(மேலும்....)
மாசி
11, 2011
காய்கறி தட்டுப்பாட்டை தவிர்க்கும் பொறுப்பை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்
கடந்த நான்கு மாதங்களில் இரண்டாவது தடவையாக
ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் நாட்டின் 18 மாவட்டங்களில் பெரு வெள்ளம், மண்
சரிவுகள், பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பத னால் ஆயிரக்கணக்கானோர் தங்கள்
இருப்பிடங்களை விட்டு வெளி யேறி தற்காலிக வாசஸ்தலங்களில் இருந்து
வருகிறார்கள். சமீபத்திய பெரு வெள்ளத்தினால் சுமார் 12 லட்சத்து 50 ஆயிரம்
பேர் ஏதோவொரு வகையில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தத னால், பொருள் இழப்பு,
பயிர்கள் அழிந்துவிட்டதனால் பெரும் நட்டம் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து
துன்பத்தில் ஆழ்ந்தி ருக்கிறார்கள். நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில்
தங்களுக்கு மீண்டும் அமைதி யான வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்பு
கிடைக்கும் என்ற நம்பிக்கையிலிருந்த மக்கள் மீண்டும் வெள்ள அனர்த்தத்தினால்,
துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
(மேலும்....)
மாசி
11, 2011
யாழ்.
பல்கலைக்கழகத்தில் கற்கும் வன்னி மாணவர்களுக்கு உதவி
வன்னி மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்காக
நிதியுதவி வழங்கி வரும் கொழும்பு இராம கிருஷ்ண மிஷன் யாழ்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 47 மாணவர்களுக்கு ஆறு மாதங்களுக்குரிய 4
இலட்சத்து 23 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளது. கொழும்பு இராம கிருஷ்ண மிஷன்,
இடம்பெயர்ந்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் வன்னி மாணவர்களின்
கல்வி வளர்ச்சிக்கு மாதாந்தம் 1500 ரூபா வீதம் பட்டப்படிப்பு முடியும் வரை
வழங்கி வருகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் 47
மாணவர்களுக்கான நிதி வழங்கும் நிகழ்வு மானிப்பாய் தாவடி வீதியிலுள்ள ஸ்ரீ
இராம கிருஷ்ண மிஷன் சமிதியில் இடம்பெற்றது.
மாசி
11, 2011
டார்ஜிலிங்கில்
கலவரம்
துணை இராணுவம் குவிப்பு
மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்
கூர்கா ஜன்முகி மோர்ச்சா அமைப்பினர் கலவரத்தில் ஈடுபட்டதால், அங்கு துணை
ராணுவ படைகள் குவிக் கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் உள்ள டார்ஜிலிங்,
டுயார்ஸ் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்கா தனிமாநிலம் அமைக்கும்படி,
கூர்கா ஜன்முகி மோர்ச்சா வற்புறுத்தி வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பை
சேர்ந்த இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இதைக் கண்டித்து, இந்த அமைப்பினர்
காலவரையற்ற கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று முன்தினம்
இவர்கள் நடத்திய போராட்டத்தின்போது பொலிஸார் தடியடி நடத்தியதால், கோபமடைந்த
இந்த அமைப்பினர் வனத்துறை மேம்பாட்டுத்துறை மேலாளரின் பங்களாவை தீ வைத்து
கொளுத்தினர். பீடாங் என்ற இடத்தில் புறநகர் காவல் நிலையத்தையும்,
சுற்றுலாத்துறை இயக்குனரின் வீட்டையும், மாவட்ட நீதிபதியின் வாகனத்தையும்,
பொலிஸ் வாகனத்தையும் தீ வைத்து கொளுத்தினர். நிலைமையை கட்டுப்படுத்த மத்திய
உள்துறை அமைச்சகம் இந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினரையும், மத்திய
ரிசர்வ் படை பொலிஸாரையும், துணை இராணுவத்தினரையும் பணியில்
ஈடுபடுத்தியுள்ளது. கலவரத்தால் பாதித்த பகுதிகளில் தடையுத்தரவு
அமுல்படுத்தப்பட்டுள்ளதால், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது.
மாசி
11, 2011
தூத்துக்குடி கொழும்பு படகு போக்குவரத்து இன்று ஆரம்பம்
இரண்டு ஆண்டுகளுக்குப் பின், தூத்துக்குடி கொழும்பு இடையேயான படகு மூலம்
சரக்கு போக்குவரத்து, இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. கடந்த பல
ஆண்டுகளாக தூத்துக்குடியில் இருந்து கொழும்பிற்கு படகில் உணவுப் பொரு ட்கள்,
கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. பின்னர் இலங் கையில் உள் நாட்டு
போர் தீவிரம் அடைந்ததால், படகு போக்குவரத்து கடந்த இரு ஆண் டுகளுக்கு முன்
நிறுத்தப்பட்டது. தற்போது இலங்கையில் போர் முடிந்து அமைதி திரும்பியதால்,
தூத்துக்குடி கொழு ம்பு சரக்கு போக்குவரத்தை, இன்று முதல் மீண் டும் இயக்க
முடிவு செய்யப்பட்டது. அதற் காக, தூத்துக்குடி பழைய துறைமுகத்தில்
நேற்றுமுன்தினம் தனியாருக்கு சொந்த மான ஒரு படகில் மஞ்சள், மக்காச்சோளம்,
வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் ஏற்றப்பட்டன. 300 தொன்
சரக்குடன் இந்த படகு, நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டதைத்
தொடர்ந்து இன்று கொழும்பை வந்தடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மாசி
11, 2011
_
ஜோர்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு
ஜோர்தான் மன்னர் அப்துல்லாஹ் அந்நாட்டின் புதிய அரசாங்கத்தை பதவிப்பிரமாண
வைபவத்தை தலைமை தாங்கி நடத்தினார். அமெரிக்காவின் நேச நாடான ஜோர்தான்
முன்னாள் பிரதம மந்திரி மரூப் வக்கித் புதிய பிரதம மந்திரியாக நியமனம்
பெற்றுள்ளார். இவர் பல ஆண்டுகளாக அந்நாட்டின் பலம்வாய்ந்த பாதுகாப்பு
அமைச்சின் பொறுப்பாளர் பதவியினை வகித்து வந்தவராவார். புதிய பிரதம
மந்திரியின் 27 அங்கத்தவரைக் கொண்ட அமைச் சரவையின் கன்சவேட்டிவ் அரசியல்
வாதிகளையும் மன்னர் ஆட்சியை ஆதரித்து வரும் பழங்குடி மக்களின்
பிரதிநிதிகளையும் புதிய அமைச்சர வையில் நியமித்துள்ளார். ஜோர்தானில் உள்ள
ஏழு மில் லியன் மக்களில் பெரும்பான்மை யானவர்கள் பலஸ்தீனியர்களாவர். இப்போது
பலஸ்தீனிய வம்சாவளி யைச் சேர்ந்த ஜோர்தானிய புதிய சமுதாயம் அங்கு
உருவாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஜோர்தானில் 2011ம் ஆண்டிற்காக
வரவு-செலவுத்திட்டத்தின் பற்றாக்குறையாகும் தொகை 2 பில்லியன் அமெரிக்க
டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாசி
11, 2011
புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியெழுப்ப 7 மில்லியன்
ரூபா கப்பம் கோரிய இருவர் கைது
வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 7 மில்லியன் ரூபா கப்பம் கோரிய இருவர்
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்கள் இருவரையும்
தொடர்ந்தும் தடுத்துவைத்து விசாரணை நடத்துவதற்கு கொழும்பு பிரதான நீதிவான்
அனுமதி வழங்கியுள்ளார். கொழும்பு கதிரேசன் வீதியைச் சேர்ந்த பீடி இலை
இறக்குமதி செய்யும் வர்த்தகரான ஆறுமுகம் மாணிக்கம் சுப்பிரமணியம் எனும்
வர்த்தகரிடம் இவர்கள் 7 மில்லியன் ரூபா கப்பம் கோரியிருந்தனர்.
பம்பலப்பிட்டியில் வசிக்கும் இந்த வர்த்தகரிடம் புலிகள் இயக்கத்ததை மீளவும்
இயங்கச் செய்வதற்கு 7 மில்லியன் ரூபா வழங்கவேண்டுöமன இவர்கள் தொலைபேசி மூலம்
மிரட்டியுள்ளனர். இவ்வாறு பணத்தினை வழங்காவிடில் வர்த்தகருக்கும் அவரது
குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கப்படும் என்றும் இவர்கள்
மிரட்டியுள்ளனர். இதனையடுத்து குறித்த வர்த்தகர் சம்பவம் தொடர்பில்
பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார். மொகமட் சலாகுதீன் மொகமட் அஸ்லம் மற்றும்
இந்தியப் பிரஜையான நூர் அமித் முகமட் அஸ்ரப் ஆகிய இருவருமே பொலிஸரால்
கைதுசெய்யப் பட்டவர்களாவர். இவர்களுக்கு புலிகள் இயக்கத்துடன் தொடர்பு உண்டா
என விசாரணை செய்வதற்காக இருவரையும் தடுத்து வைத்து விசாரிக்க
அனுமதிக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் நீதிமன்றத்தில் கோரி
நின்றனர்.
மாசி
11, 2011
தெற்கு சூடானில் அமைச்சர் மில்லா சுட்டுக் கொலை
தெற்கு சூடான் வருகிற ஜூலை மாதம் 9 ஆம் திகதி தனி நாடாகப் பிரகடனம்
செய்யப்பட விருக்கிறது. இந்த நிலையில் தற்போது சூடான் நாட்டின் ஒரு
மாநிலமாக இருக்கும் தெற்கு சூடானில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜிம்மி
லெமி மில்லா சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது அமைச்சரக கட்டடத்துக்குள்
நுழைந்த ஒருவன் அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். பிறகு அவரது
பாதுகாவலரையும் சுட்டுக்கொன்றான். பிறகு அவன் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு
செத்துப் போனான். இந்த கொலைக்கான நோக்கம் என்ன என்று தெரியவில்லை.
தனிப்பட்ட விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று ஆளும் கட்சித்
தலைவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மாசி
11, 2011
அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர் உட்பட 101
பேர் கைது _
இலங்கைத் தமிழர்கள் உட்பட சட்ட விரோத குடியேற்ற வாசிகள் 101 பேருடன்
அவுஸ்திரேலியா நோக்கி சென்ற இரு படகுகளை கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் வைத்து
அந்நாட்டின் கடற்படையினர் தடுத்து நிறுத்தியதுடன் அதில் பயணித்தவர்களைக்
கைதுசெய்துள்ளனர். அவுஸ்திரேலிய கடற்படையினருக்கு சொந்தமான கிமாஸ் மைற்லன்ட்
என்ற கப்பலே இரு படகுகளையும் கண்டுபிடித்துள்ளது. 97 பயிணகளுடன் 6
சிப்பந்திகளும் கைது செய்யப்பட்டு கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமொன்றில்
அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். ஒரு படகில் 53 பயணிகளும் 2 சிப்பந்திகளும்
மற்றைய படகில் 48 பயணிகளும் 4 சிப்பந்திகளும் இருந்துள்ளதாக
தெரிவிக்கப்டுகின்றது. இந்த சட்டவிரோதக் குடியேற்ற வாசிகளில் இலங்கையர்
பலரும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாசி
11, 2011
சூடான் மக்களின் தீர்ப்பை சீனா கெளரவிக்கும்
சூடான் சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பை சீனா
கெளரவிப்பதுடன் வட தென் சூடானிடையே நிலையான புரிந்துணர்வு ஐக்கியம் ஏற்படப்
பாடுபடுமென்றும் தெரிவித்துள்ளது. ஐ.நா.வின் பாதுகாப்புச் சபையில் சூடானில்
இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.நா.வுக்கான
சூடான் பிரதிநிதியே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட
ஐ.நா.வுக்கான சீனத் தூதுவர் வட தென் சூடானுக்கிடையே 2005 இல் செய்து
கொள்ளப்பட்ட சமாதான உடன்படிக்கையை அமுல்படுத்த நடந்து முடிந்த சர்வஜன
வாக்கெடுப்பின் முடிவுகள் உதவும். தற்போது ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலைகளில்
ஐ.நா. கூடிய கவனம் செலுத்தும். இரண்டு தேசங்களிடையே எஞ்சியுள்ள
முரண்பாடுகளையும் இலகுவாக தீர்த்துக் கொள்ள இன்றைய சூழல் வழிகோலும் என சீனா
நம்புகின்றது. சூடான் விடயத்தில் ஐ.நா.வின் தலையீட்டைப் பாராட்ட வேண்டும்.
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வட சூடானிலிருந்து தென் சூடான் பிரிந்து தனி
ராஜ்யமாக இயங்கவுள்ளது. இதற்கான ஆணை மக்களால் வழங்கப்பட்டது தெரிந்ததே.
மாசி
11, 2011
விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்ற சந்தேகத்தின் பேரில்
ஐவர் கைது _
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பைச்
சேர்ந்த ஐவர் தம்புள்ளையில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்புள்ளை கண்டலம பிரதேச ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்த போதே இவர்கள்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதின் போது இவர்களிடம் இருந்து விடுதலைப்
புலிகள் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் பாடல்கள், வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணத்தை சேர்ந்த சில குழந்தைகளுடைய புகைப்படங்கள் மற்றும் வேறு சில
ஆவணங்கள் அடங்கிய சீ.டீ என்பன கைப்பற்றப்பட்டதாக பொலீஸார் தெரிவித்தனர்.
மாசி
11, 2011
பிரித்தானியாவுடனான இராஜதந்திர உறவை துண்டிக்க ஈரான் தீர்மானம்
ஈரானிலுள்ள தற்போதைய பிரித்தானியத் தூதுவர் சிமன் கெஸ்வில்லை நேட்டோ அமைப்பு
காபூலில் தங்களின் புதிய சிவிலியன் அதிகாரியாக நியமித்துள்ளது. இப்பதவியில்
ஓராண்டு காலம் இருந்த மார்க் செட்வில் என்ற இன்னுமொரு பிரிட்டிஷ்
அதிகாரியின் சார்பிலேயே இப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இவர்
எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியன்று இப் பதவியை ஏற்றுக் கொள்வார் என்று
அறிவிக்கப்படுகிறது. இதேவேளையில் ஈரானிய பாராளுமன்றம் தங்கள் நாட்டின் மனித
உரிமைகள் துஷ்பிரயோகம் பற்றி பிரிட்டிஷ் தூதரகம் இணையத்தளத்தில் தவறான
தகவல்களை தெரிவித்ததை கண்டிக்கும் முகமாக பிரித்தானியாவுடன் உள்ள
இராஜதந்திரத் தொடர்புகளை துண்டித்துக் கொள்வதற்கான தீர்மானத்தை ஓரிரு
தினங்களில் நிறைவேற்ற இருப்பதாக அறிவிக்கப்படுகிறது.
மாசி
11, 2011
கப்பலினால் கனடா அரசுக்கு 25 மில்லியன் டொலர் செலவு
கடந்த ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய கரைக்கு அகதிகளை கொண்டு வந்த
கப்பலினால் கனடியர்களுக்கு 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு
ஏற்பட்டுள்ளது. இந்த கப்பலில் 492 இலங்கைத் தமிழ் அகதிகள் வந்திருந்தனர்.
இவர்கள் தமக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டுமெனக் கோருகின்றனர். இவர்களை
விசாரிப்பதற்காக மாத்திரம் 908,000 அமெரிக்க டொலர் செலவானதாக
கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கு சட்ட ஆலோசனைக்கு 2 மில்லியன் டொலர் செலவாகியது.
சமஷ்டி அரசாங்கம் மருத்துவ கவனிப்புக்காக செலவு செய்தது. இவை முதலில் கூறிய
25 மில்லியனுள் அடங்காதவை. கனேடிய மத்திய அரசு இவ்வாறு தொகையான அகதிகள்
வருகையைத் தடுப்பதற்காக கொண்டு வரவுள்ள சட்டத்தை எதிர்க்கட்சிகள்
மனிதாபிமானமற்றவையென்றும் அரசியலமைப்புக்கு முரணான தெனவும் கூறி எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.
மாசி
11, 2011___
தாய்லாந்து - கம்போடியா மோதல் விவகாரம்
விசாரணைகளை முன்னெடுக்க இந்தோனேஷியாவுக்கு ஐ. நா. அழைப்பு
தாய்லாந்தும், கம்போடியாவும் தங்கள் முரண்பாடுகளைத் தீர்க்கும் பொருட்டு ஐ.
நா. பாதுகாப்புச் சபையில் பேசவுள்ளன. இரண்டு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள்
எதிர்வரும் திங்கட்கிழமை ஐ. நா. பாதுகாப்புச் சபையில் சந்திக்கவுள்ளனர்.
இரண்டு நாடுகளின் எல்லைகளிலுள்ள 11 ம் நூற்றாண்டு கோயிலை உரிமை கொண்டாடும்
விடயத்தில் இரண்டு நாடுகளும் முரண்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக தாய்லாந்து,
கம்போடிய இராணுவங்கள் மோதலில் ஈடுபட்டதால் பலர் கொல்லப்பட்டனர். அச்சம்
காரணமாக இரு நாடுகளின் எல்லைகளிலுள்ளோர் வேறு இடங்களுக்குச் சென்றுள்ளனர்.
இரு நாடுகளின் இராணுவங்களும் மோதலில் ஈடுபட்டமை குறித்த விசாரணைகளை
முன்னெடுக்க ஆசிய நாடுகளின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இந்தோனேஷியாவை ஐ.
நா. பாதுகாப்புச் சபை அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கம்போடியாவும்
தாய்லாந்தும் ஒன்றுக்கொன்று சளைக்காமல் ஆயுதங்கள், தாங்கிகளையும், போர்
வீரர்களையும் தமது எல்லையில் குவித்துவரும் அதேவேளை, 900 ஆண்டுகள் பழைமையான
கோயில் சேதமடைந்துள்ளதாக சாட்சிகள் தெரிவிக்கின்றன. அவ்விரு நாடுகளும்
இதுவரை எந்த ஒரு உடன்பாட்டுக்கும் வரவில்லை.
மாசி
11, 2011
காசேதான்
கடவுளப்பா?
அன்றாடம் பெரும் போராட்டத்திற்கு மத்தியில்
வாழ்க்கையை நகர்த்தும் பெற்றோரிடம் நன்கொடையும் கேட்டு பாடசாலைக்குப் புதிய
கட்டடமொன்றை நிர்மாணிக்கவும் பணம் கேட்டால் அவர்களால் தாங்க முடியுமா?
ஹட்டன் பகுதியில் உள்ள ‘மேக நகல்’ பாடசாலையிலும் புதிய கட்டட நிர்மாண நோய்
அதிபரைத் தொற்றிக்கொண்டுள்ளதாகப் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.
கடந்தவாரம் பெற்றோரை பாடசாலைக்குக் கூட்டமொன்றுக்கு அழைத்திருந்த ‘காலைக்குமார்’,
“கட்டடம் கட்ட நீங்கள் காசு தரவேண்டும்” என்று கட்டளையிட்டிருக்கிறார்.
(மேலும்....)
மாசி
11, 2011
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு ஓய்வூதியம் கேரள பட்ஜெட்டில் அறிவிப்பு
இடது ஜனநாயக முன் னணி அரசு கேரளாவில் வியாழனன்று பட்ஜெட் டை தாக்கல் செய்தது.
நல் வாழ்வு நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு கட்டுப் பாடு திட்டங்கள், உள்கட்
டமைப்பு மேம்பாடு ஆகி யவற்றைக் கொண்டதாக இந்த பட்ஜெட் அமைந்தி
ருந்தது.பட்ஜெட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழே 40 லட்சம் குடும்பத்தினர்
பயன்பெறும் வகையில் இலவச காப் பீட்டுத்திட்டம் மேற் கொள்ளப்பட்டுள்ளது.
சமூகப் பாதுகாப்பை வலி மைப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கைகள் எடுக்
கப்பட்டுள்ளன. மேலும், இந்த வறுமைக்கோட்டில் உள்ள குடும்பத்திற்கு ரூ.2
விலையில் ஒரு கிலோ அரிசி வழங்கவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. மாநிலத்தில்
3 ஆயிரம் நியாய விலைக் கடைகள் மூலம் அத்தியா வசிய உணவுப் பொருட்கள்
வழங்கப்படுகிறது.
(மேலும்....)
மாசி
11, 2011
எகிப்து 16வது நாளை எட்டியது மக்கள் கிளர்ச்சி
எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது தலைமையிலான அரசு உடனடியாகப்
பதவி விலக வேண்டும் என்று கோரி நடைபெறும் மக்கள் போராட்டம் பதினாறாவது
நாளாகத் தொடர்ந்தது. தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திரச் சதுக்கத் தில்
மக்கள் கூட்டம் அதி கரித்துக் கொண்டே வரு கிறது. இத்தனைக்கும் துணை ஜனாதிபதி
முகமது சுலைமான் மிரட்டல் விடுத்த பிறகு மக்கள் மத்தி யில் ஆத்திரம்
அதிகரித்துள் ளது. புதிய பிரதமராக நிய மிக்கப்பட்ட அகமது ஷாபிக் கை, அவரது
அலுவலகத்திற் குள் நுழைய விடாமல் 50 ஆயிரம் பேர் வழிமறித்து போராட்டம்
நடத்தினர். இந்தப் போராட்டத்திற்குப் பிறகுதான் நாங்கள் போராட் டம் தொடர்வதை
அனும திக்க முடியாது என்று சுலை மான் மிரட்டல் விடுத்தார்.
(மேலும்....)
மாசி
11, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
- 26வது நாள் நிகழ்வுகள்!
இன்று காலையில் ஆந்திர மாநில தொலைக்காட்சி
நிறுவனமான “ஐ நியூஸ்” நடைபயண வீரர்களை வீடியோ எடுத்து செய்திகள் சேகரித்துச்
சென்று தொலைக்காட்சியில் ஒலிபரப்பி ஆதரவு வழங்கினர். மேலும் மாலை நேரத்தில்
சொக்ஸி மற்றும் ஈநாடு என்ற ஆந்திராவில் பிரசித்திப் பெற்ற பத்திரிகைகளும்
வந்து நடைபயணம் பற்றிய செய்திகளை மீண்டும் சேகரித்து தொடர்ந்து ஆதரவு
வழங்குவதாகக் கூறிச் சென்றனர். ஆந்திர மாநில தொலைக்காட்சி நிறுவனமான ஜீ
தொலைக்காட்சி உள்பட பல தொலைக்காட்சிகன் நேற்றும இன்றும் நடைபயணத்தை பற்றிய
செய்திகளையும் படங்களையும் ஒலிபரப்பி ஆதரவு வழங்கியிருந்தனர். இந்த இலட்சிய
வீரர்களின் நடைபயணம் வெற்றி பெற ஈழத் தமிழர்களும் இந்திய மக்களும் ஆதரவு
தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
(மேலும்....)
மாசி
10, 2011
கொந்தளிக்கும் உலகம்
உலகமய பொருளாதாரக்கொள்கை உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டபிறகு நாடு
களுக்கு இடையிலான பொருளாதார இடை வெளி அதிகரித்து வருகிறது. அத்துடன் ஒவ்
வொரு நாட்டின் மக்களுக்கு இடையிலான இடைவெளியும் அதிகரித்து வருகிறது. இதன்
விளைவுகளை பல்வேறு நாடுகள் சந்திக்கத் துவங்கியுள்ளன. உலக வங்கி, சர்வதேச
நிதியம், உலக வர்த்தக அமைப்பு போன்ற ஏகாதிபத்திய நிழல் நிறுவ னங்கள்
தாராளமய பொருளாதாரக் கொள்கை யை வளர்முக நாடுகளின் மீது திணித்து வரு கின்றன.
இந்தக்கொள்கை முதலாளித்துவச் சுரண்டலின் செயல்வடிவமாக உள்ளது. முதலா ளிகளின்
லாபத்தைப் பற்றி மட்டுமே தாராளமய, தனியார்மயக் கொள்கை கவலைப்படுகிறது.
பெரும்பகுதி உழைக்கும் மக்களைப் பற்றியோ, அவர்களது வாழ்க்கைத்தரம் பற்றியோ
இந்த கொள்கையை செயல்படுத்துபவர்களுக்கு கவலை இல்லை.
(மேலும்....)
மாசி
10, 2011
வெளிவந்துவிட்டது
கண்ணோட்டம்
–
57 வது வெளியீடு
ஜனவரி மாதத்திற்கான கண்ணோட்டம் இதழ் பல சிறப்பு அம்சங்களுடன்
வெளிவந்திருக்கின்றது.
தோழர்
வரதராஜப்பெருமாளின் நம்பிக்கை தரும் சிறப்புக்கட்டுரை,
தோழர்
சிறிதரனின் தென் ஆபிரிக்க பயணம் பற்றிய குறிப்புக்கள்,
தோழர் ரத்னத்தின் கிழக்கு மாகாண விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்
பற்றிய தகவல்கள் ஆகியவற்றை தாங்கி வெளிவந்திருக்கின்றது. மேலும் வாசகர்
கேள்விகளுக்கு அபிமன்யுவின் சிந்தனையை தூண்டும் பதில்கள் ஒவொருவரும் தவறாது
வாசிக்கவேண்டிய பகுதியாகும்.
இந்த
இதழில்
EPRLF
இலிருந்து ஜனவரி மாதத்தில் தியாகிகளாகிப்போன எழுபத்தியொரு தோழர்களின் பெயர்
விபரங்களும் நினைவு கூருகின்றோம் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அது
மட்டுமல்ல..உள்ளூராட்சி தேர்தல் பற்றிய ஒரு குறுக்குவெட்டுபார்வை,
அபிவிருத்தி,
சட்டம் ஒழுங்கு,
மீள்குடியேற்றம் பற்றிய தகவல்கள்,
அத்துடன் நச் என்றிருக்கும் குசும்பனின் குறும்புகள் என பல சுவையான
அம்சங்களையும் கொண்டுள்ளது.
உங்கள் பிரதிகளை அந்த அந்த நாட்டு EPRLF செயற்பாட்டாளர்களுடன்
தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்.
மாசி
10, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் 24 மற்றும் 25வது நாள்
நிகழ்வுகள்!
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர
நடைபயணத்தின் 24வது நாளான 08-02-2011 செவ்வாய்கிழமை காலை 05:30 மணியளவில்
புறப்பட்டு காட்டு வழியில் பயணத்தைத் தொடர்ந்தது. சாலைகள் சாயாக இல்லாததால்
நடைபயண வீரர்கள் வேகமாக நடக்க முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு நடந்த
நடைபயண வீரர்கள் தினமும் நடக்க வேண்டிய சராசரியான தூரத்தை கடக்க அதிக நேரம்
எடுத்துக்கொண்டார்கள். இரவு 10:00 மணியளவில்தான் இரவு முகாம் வந்து
சேர்ந்தனர். 24வது நாளான நேற்று செவ்வாய்கிழமை மிகவும் சிரமப்பட்டு 40 கிலோ
மீற்றர் தூரம் நடந்தார்கள். மொத்தமாக 788.5 கிலோ மீற்றர் தூரத்தைக் கடந்தனர்.
(மேலும்...)
மாசி
10, 2011
கோககோலா தேவையில்லை வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் கருத்து
வெனிசுலாவின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இயங்க விரும்பவில்லை என்றால்,
எங்களால் கோக கோலா இல்லாமலே இருந்து விட முடியும் என்று வெனி சுலாவின்
ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் உறுதியாகத் தெரி வித்துள்ளார். வெனிசுலாவில் உள்ள
கோக கோலா ஆலையில் பணிபுரியும் தொழிலாளர் களுக்கும், நிர்வாகத்திற்கு மிடையே
ஊதியம் தொடர் பான பிரச்சனையில், தொழி லாளர்கள் பக்கமே நியாயம் இருப்பதாக
சாவேஸ் கூறி னார். கோக கோலா இல் லாமல் மக்கள் இருக்க முடி யாது என்ற
நிலையெல்லாம் இல்லை என்று தெரிவித்த அவர், உயிர் வாழ்வதற்கு கோக கோலா மிக
அவசியம் என்பது போல் நிறுவனத் தினர் பேசுகிறார்கள். அப் படியெல்லாம் ஒன்றும்
இல்லை என்று குறிப்பிட் டார்.
(மேலும்...)
மாசி 09, 2011
ஆளும் கூட்டணிக்கு வடக்கில் ஏன் இந்த நிலை?
(கே.சஞ்சயன்)
ஆளும் கூட்டணியில் போட்டியிட முனைந்ததால் ஈபிடிபி
இப்போது சங்கடத்திற்குள்ளாகியிருக்கிறது. இணைக்க அரசியலுக்கான கதவை மூட விரும்பாமல்
ஈபிடிபி வெற்றிலைச் சின்னத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பட்டியலில்
போட்டியிட முன்வந்தது. அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு யாழ்ப்பாணத்தில்
உயிர் கொடுப்பதற்காக அங்கஜன் இராமநாதனை அமைப்பாளராக நியமித்திருந்தார் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஸ. அவரும் இந்தத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த முயன்றார்.
ஆனால் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பொறுப்பு ஈபிடிபியிடம் முழுமையாக
ஒப்படைக்கப்பட்டதால் அவர் ஒதுக்கிக் கொள்ள நேரிட்டது.
ஏற்கனவே பொதுத்தேர்தலில் இவருக்கும் ஈபிடிபிக்கும் இடையில் கடுமையான பிரசாரப் போர்
நடந்தது. ஒரு அறிக்கையை வெளியிட்டு விட்டு அங்கஜன் தனது அணியினருடன் தேர்தலில்
இருந்து ஒதுங்கிக் கொள்ள ஈபிடிபியே வேட்பாளர்களையும் நிறுத்தியது.
வேட்புமனுக்களையும் தயார் செய்தது.
(மேலும்...)
மாசி 09, 2011
ஜூலியன் அசாஞ்ச்
சுவீடனுக்கு கடத்தப்படும் அறிகுறி
சுவீடனைச் சேர்ந்த இரு பெண்கள், அசாஞ்ச் மீது
தொடுத்த பாலியல் வழக்கில், அவரை விசாரணைக்காக சுவீடனுக்கு கொண்டு செல்லும் வழக்கு
நேற்று முன்தினம் லண்டனில் உள்ள பெல்மார்ஷ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில்
ஆஜராவதற்காக, அசாஞ்ச் நீதிமன்றம் வந்தார். இது குறித்து, நேற்று முன்தினமே
செய்தியாளர்களிடம் பேசிய அவரது வக்கீல் மார்க் ஸ்டீபன்ஸ், ஐரோப்பிய யூனியன் கைது
வாரண்ட்டில் சில அடிப்படைச் சிக்கல்கள் உள்ளன. மேலும், அசாஞ்ச் சுவீடனுக்குக் கொண்டு
செல்லப் பட்டால், அவரது உயிருக்கு ஆபத்து நேரிடும். அதேநேரம், சுவீடன் அவரை
அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வாதங்களை
நீதிமன்றத்தில் முன்வைத்து வாதாடுவோம்’ என்று தெரிவித்தார்.
மாசி 09, 2011
National Day Celebrations in Toronto, Canada
(Walter
Michael)
The
Consulate General of the Democratic Socialist Republic of Sri Lanka in Toronto,
Canada with the Sri Lankan expatriate community commemorated The 63rd
Anniversary of Independence of Sri Lanka celebration was held at the Korean
Cultural Centre Feb. 4, 2011. The official program commenced with by a
multi-faith religious observances by the Buddhist, Hindu, Islam and Christian
priests to invoke blessings for peace and prosperity to Sri Lanka. In his
welcoming remarks, Consul General- Karunarathna Paranawithana recognized the
strong relations between the Canada and Sri Lanka, as well as the positive
results of the re-development policies of His Excellency Sri Lankan President
Mahinda Rajapaksa. He called upon the expatriate community living in Canada to
shed any differences and unite so that they could contribute to the greater
prosperity and peace in their Motherland. The official segment of the program
was followed by a cultural show, an event that featured traditional Sri Lanka
dances and songs. The children from the expatriate Sri Lankan community living
in GTA Toronto participated in the cultural performance.
மாசி 09, 2011
அரசியல் மோசடி.
(லெனின்
பெனடிற்)
கடந்த
30 வருடங்களில் இலங்கையின் தமிழ் பேசும்மக்களின் அரசியல் வரலாற்றில் பல்வேறு
நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. தமிழ் மக்களின் நியாயமான அரசியல் போராட்டமானது சாத்வீக
முறையிலும் பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட்டு இறுதியாக அது பாசிசப்
புலிகளின் தலைமையின்கீழ் மிகக் கோடூரமான பயங்கரவாதப் போராட்டமாக உருமாற்றம் பெற்றது.
இதன் பின்னணியில் இதை உருவாக்கிய மகத்தான பங்களிப்பின் உரிமைக்காரார்கள்
கூட்டணியினர் ஆவர். தமிழ் மக்களுக்கு இவர்கள் ஆற்றிய மிகப் பெரிய வரலாற்றுத் துரோகம்
இதுவாகும்- தமிழ் மக்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சூனியமாக்கிய கைங்கரியம்
இதுவாகும். தமிழ் இளைஞர்களை ஆயுதப் போராட்டத்திற்குக் களமிறக்கி எமது; ஒட்டுமொத்த
இளம் சந்ததியினரையும் பலிகடாவாக்கிய சாதனை இதுவாகும். இந்த வரலாற்றை மீண்டும்
ஒருமுறை தமிழ் மக்களின் கவனத்திற்குக் கொண்டுவருவது எமது கடமை என்று கருதுகின்றோம்;.
இந்த மூன்று தசாப்த வெற்றி தோல்வி காட்டிக்கொடுப்பு களுத்தறுப்புக்கள் அத்தனையையும்
என்றென்றென்றைக்கும் பசுமரத்தாணிபோல பதிய வைக்காவிடில், மீண்டும் புதிதாக நினைவு
கூர்ந்து தமிழ் மக்களின் மனங்களில் நித்தியம் அதிரவைக்காவிடில் பழைய தவறுகளுக்கு
அவர்களை மீண்டும் அழைத்துக் கொண்டு சென்றுவிடுவார்கள்.
(மேலும்...)
மாசி 09, 2011
பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க அரசு நடவடிக்கை
நாட்டில் என்றும் இல்லாதவாறு பெரும் பொருள் இழப்
பையும், பயிர்களுக்கு அழிவையும் ஏற்படுத்திய பெரு வெள்ளம் இப்போது, மக்களின்
வாழ்க்கையிலும் அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவல நிலைக்கு அவர் களை
தள்ளியுள்ளது. அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சகல நிவாரணப் பணிகளையும்
மேற்கொண்டு வருகின்ற போதிலும், காலநிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றமையால்,
அரசாங்கத்திற்கு கூட இந்த வெள்ள அனர் த்தத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு
நிலைமை மோசமடையலாம் என்று, காலநிலை அவதானிகள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
(மேலும்...)
மாசி 09, 2011
தாய்லாந்து - கம்போடியா மோதல் உக்கிரம்
தாய்லாந்து மற்றும் கம்போடிய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் தினங்களன்று 4 தினமாக
துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டதாக அறிவிக்கப்படு கிறது. இவ்விரு நாடுகளின்
எல்லையில் மலையுச்சியில் அமைந்துள்ள 900 வருடங் கள் பழமைவாய்ந்த இந்து ஆலயத்துக்கு
உரிமை கோரியே இந்த மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இரு நாடுகளுக்கிடையில் அரசியல்
மற்றும் இராஜதந்திர உறவுகள் முறிந்து விடும் அளவுக்கு கடந்த 4 நாட்களாக இரு தேச
படைகளும் ஷெல், மற்றும் துப்பாக்கி பிரயோகங்களை பரஸ்பரம் மேற்கொண்டனர். தென்
கிழக்காசிய நாடுகளான தாய்லாந்தும், கம்போடியாவும் பிரிவிஹார் கோயிலையும் அதனை
சூழ்ந்துள்ள 2 சதுர மைல் நிலப்பரப்புக்கு உரிமை கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில்
இதுவரை இரு தாய்லாந்து பிரஜைகளும் இவர்களை விட 48 பேரும் காயமடைந் துள்ளார்கள்.
நிலைமை மோசமடைந்து வருவதனால் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தலையிட்டு பிரச்சினைகளை சமரசம்
செய்ய வேண்டும் என்று கம்போடிய அரசாங்கம் கேட்டுள்ளது. மோதல் காரணமாக எல்லைப்
பிரதேசத்தில் வாழும் மக்கள் உணவின்றி கஷ்டப்படுவ தாகவும், அவர்கள் அரிசி, குடிநீர்
போன்ற வற்றுக்காக உதவி கிடைக்கும் வரையில் வரிசையில் நின்று காத்திருப்பதாகவும்
தெரிவிக்கப்படுகிறது.
மாசி 09, 2011
National Day Celebrations in Canada
The Sri Lanka High Commission in Ottawa
together with the Sri Lankan expatriate community commemorated the 63rd
Anniversary of the National Day in Ottawa, Canada on February 6, 2011. The
official program commenced with the hoisting of the National Flag by the High
Commissioner Chitranganee Wagiswara followed by a multi-faith religious
observances by the Buddhist, Hindu, Islam and Christian priests to invoke
blessings for peace and prosperity to Sri Lanka. Following the reading of the
message of President Mahinda Rajapaksa, greetings of the Canadian Government
were conveyed by Kenneth Macartney, Director General, South Asia & Pacific
Bureau of the Department of Foreign Affairs. Senator Mac Harb and Member of the
House of Commons John McKay also addressed the audience briefly to convey their
greetings. Referring to the President's message, the High Commissioner in her
address spoke of the two main challenges facing the country - the development of
the economy and the need to consolidate peace. She called upon the expatriate
community living in Canada to shed any differences and unite so that they could
contribute to the greater prosperity and peace in their Motherland. At the
function, the High Commissioner also made an appeal for contributions for the
flood victims in Sri Lanka and received a sum of C$ 1551.30. The collection will
be transferred to the Disaster Management Centre in Colombo in due course. The
official segment of the program was followed by a cultural show. The children
from the expatriate Sri Lankan community living in Ottawa participated in the
cultural performance trained by Sri Lankan teachers.
மாசி 09, 2011
நண்பர்கள்
தேர்ந்தெடுப்பதை மரபணுதான் தீர்மானிக்கிறது
தனக்கு ஏற்ற நண்பராக யாரை தேர்வு செய்ய வேண்டும்
என்பதை ஒருவரது மரபணு தான் தீர்மானிப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிந்துள்ளது. மனிதர்கள்
ஒவ்வொருவரும் தனிப்பட்ட குணநலங்கள், தனிப்பட்ட பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர்.
அவர்களின் குணநலன்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த இயல்புகளை அவனது
மரபணு தீர்மானிப்பதாக மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதேபோன்று, ஒருவர் தனக்கு
ஏற்ற நண்பர்கள் யார் என்பதை தேர்வு செய்ய வேண்டும் என்பதை, அவரது மரபணுதான்
தீர்மானிப்பதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக
விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரபியல் பண்பு அல்லது மரபணு வகைகளின்படி, குறிப்பிட்ட ஆறு
மரபணுக்கள், தங்களுக்கு ஏற்ற நண்பர் யார் என்பதை தீர்மானிப் பதாகவும் அவர்கள்
தெரிவிக்கின்றனர். இளம் வயதில், எதிர் பாலினத்தவரிடம் ஏற்படும் ஆர்வம் அல்லது
இனக்கவர்ச்சியைப் போன்றும், இனம் இனத்தோடு சேரும் என்பது போன்றும் இந்த மரபணுக்கள்,
தங்களுக்கு ஏற்ற நண்பர்கள் இவர்தான் என்று அடையாளம் காணுவதாக ஆய்வாளர்கள்
தெரிவிக்கின்றனர்.
மாசி 09, 2011
பெனாசிர்
கொலையில் முஷாரப் தொடர்பு
கடந்த 2007ல் நடந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில், முஷாரப்பை ‘தலை மறைவான குற்றவாளியாக அறிவிக்க
வேண்டும் என நீதிமன்றில்அரசு தரப்பு கோரியுள்ளது. பாகிஸ்தான் ராவல்பிண்டி நகரில்,
பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றில் பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு விசாரிக்கப்பட்டு
வருகிறது. இவ்வழக்கில் நேற்று முன்தினம் அந்நாட்டு புலனாய்வு துறையால், இடைக்காலக்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது, பூட்டோ கொலை
நடந்த போது அதிபராக இருந்த முஷாரப் விசாரணைக்கு போதிய ஒத்து ழைப்பு தர மறுக்கிறார்
என்றார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ‘முஷாரப் ஒத்துழைக்க
மறுத்தால் அவர் மீது நடடிவக்கை எடுக்கப்படும் என்றார்.
மாசி 09, 2011
யாழ். நூலகத்தில்
கதை சொல்லும் நேரம்
யாழ்ப்பாண பொது நூலக சிறுவர் பிரிவில் சிறுவர்களின்
ஆற்றலை வெளிப்படுத்தும் “கதை சொல்லும் நேரம்” என்ற நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யப்பட்டிருப்பதாக யாழ்ப்பாண பொது நூலக பிரதம நூலகர் எஸ். தனபாலசிங்கம்
தெரிவித்தார். இந் நிகழ்ச்சித்திட்ட ஆரம்பவிழாவில் சிங்கப்பூர் தேசிய பொது
நூலகத்தின் பணிப்பாளர் திருமதி புஷ்பகலா நாயுடு சிறப்பு அதிதியாக பங்கு
கொண்டிருந்தார். யாழ்ப்பாண பொது நூலக சிறுவர் பிரிவை அபிவிருத்தி செய்ய சிங்கப்பூர்
அமைப்பு முன்று மில்லி யன் ரூபாவையும் வழங்கியுள்ளது.
மாசி 09, 2011
கிரிக்கெட்டா? தாழைக் காடுகளா?
“இந்தியாவில் உள்ள வனப் பகுதிகளை பாதுகாக்கும் வகையில், பசுமை இந்தியா என்ற
திட்டத்தை செயல்படுத்த அரசு ஆர்வமாக உள்ளது” என மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். திருவனந்தபுரத்தில், தென் மாநிலங்களை சேர்ந்த வனத்துறை
அமைச்சர்களின் மாநாடு நடந்தது. இம்மாநாட்டை தொடக்கி வைத்து, மத்திய சுற்றுச்சூழல்
மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: புவி வேகமாக வெப்பம் மயமாகி
வருவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை
தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். நாட்டில் உள்ள வனப் பகுதிகளின் தரத்தையும், அளவையும்
அதிகரிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு, ஆர்வமாக உள்ளது. இதற்காக, பசுமை இந்தியா
என்ற திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.
(மேலும்...)
மாசி 09, 2011
இந்தியாவின் வீட்டுத் திட்டம்
புதுக்குடியிருப்பில் 184 வீடுகள் திருத்தியமைப்பு
போர்க்காலச் சூழ்நிலையால் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சேதமடைந்த 184 வீடுகள்
இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டத்தின் கீழ் திருத்தி அமைக்கப்பட இருக்கிறது.
இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ள புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் என்.
கோணேஸ்வரன் சேதமடைந்த வீடுகளின் விபரங்களை முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபருக்கும்
பாதுகாப்புப்படை உயர் அதிகாரிக்கும் அனுப்பி வைத்துள்ளார். இந்த வீட்டுத்
திட்டத்தின் கீழ் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சேதமடைந்த 184 வீடுகள் திருத்தி
அமைக்கப்படவிருக்கின்றன. திருத்தி அமைக்கப்பட வேண்டிய வீடுகளின் விபரங்களைப் புதுக்
குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் முல்லை மாவட்ட அரசாங்க அதிபருக்கும் படை
அதிகாரிகளுக்கும்
(மேலும்...)
மாசி 09, 2011
Statement of the Central Committee of
Tudeh Party of Iran
In Solidarity with the Revolutionary
Movement of the Egyptian People. What has been happening in the past two weeks
in the large cities of Egypt, from Cairo and Alexandria to Suez and others,
reflects the resolve of the people, the youth and the educated, the women and
public employees, peasants and workers, trade union activists and democratic and
progressive political forces of Egypt for fundamental changes in the economic,
political, and social governance of that country. The corrupt and dictatorial
regime of Hosni Mubarak by outlawing all the opposition forces through
establishing a suppressive security apparatus, and by scandalous manipulations
of the elections in the past decades (including widespread vote rigging during
the last parliamentary elections a few months ago), has facilitated the rule of
the reactionary and lackey regime in Egypt. The objective of the struggle of the
Egyptian people, in addition to putting an end to the despotic regime, is to end
the unprecedented corruption of the state apparatus, the plundering of the
national wealth of the country, and the fierce exploitation of the working
people in all its dimensions. The current popular movement aims at liberating
the country from the state of political subordination and dependency,
under-development and the rule of fear and intimidation that has devastated the
country and driven the majority of the people to abject poverty in the past
nearly 4 decades.
(more....)
மாசி 09, 2011
ஊழலை அம்பலப்படுத்தியது தணிக்கைத் துறை மத்திய அரசுக்கு 2 இலட்சம் கோடி ரூபா இழப்பு
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சர்ச்சை நீடிக்கையில், தொலைத்தொடர்பு துறையில் அடுத்த
மெகா ஊழல் அம்பலமாகியிருக்கிறது. 2005 இல் இஸ்ரோ செயற்கைக் கோள்களில், “எஸ்-பாண்ட்”
அலைவரிசையை ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு 2 இலட்சம் கோடி ரூபா இழப்பு
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொலைத்தொடர்புத் துறையில் “2ஜி” ஸ்பெக்ட்ரம் அலைவரிசை
ஒதுக்கீட்டில் நடந்த 1.76 இலட்சம் கோடி ரூபா ஊழலை, மத்திய தணிக்கை துறை
வெளிப்படுத்தியது. இது ஏற்படுத்திய அதிர்வலைகளுடன், விசாரணை, கைது என
பன்முகப்பரிமாண ஊழலாகப் பேசப்படுகிறது. தொலைத்தொடர்புத்துறையில் நடந்த மற்றொரு ஊழலை
தணிக்கை துறை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து அனைவரையும் வாய்பிளக்க செய்துள்ளது.
(மேலும்...)
மாசி 09, 2011
மாகாண உள்ளூராட்சி அமைச்சு கைதடியில்
வட மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் அலுவலகம் யாழ்ப்பாணம் கைதடி முதியோர் இல்ல
கட்டடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது. இப்பணிமனையில் மாகாண கூட்டுறவு அபிவிருத்தி
திணைக்களம், மாகாண உள்ளூரட்சி திணைக்களம் மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம்,
மாகாண கைத்தொழில் அபிவிருத்தி திணைக்களம், மாகாண சிறுவர் நன்நடத்தை மேம்பாட்டுத்
திணைக்களம் என்பன இயங்கி வருகி ன்றன. வட மாகாண சபையின் சகல பணிமனைகளும்
யாழ்ப்பாணத்துக்கு இடமாற்றப்பட்டு வருவதால், உள்ளூ ராட்சி அமைச்சின் செயலகமும்
யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
மாசி 08, 2011
சென்னை முதல் புதுடெல்லி வரையிலான நடைபயணம் 750 கி.மீற்றர் தூரத்தை 23வது நாளான
நேற்றுக் கடந்தது.
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினரால் நடத்தப்பட்டு
வரும் நெடும் பயணம் 23வது நாளான நேற்றைய தினம் (07-02-2011 )எழுநூற்று ஐம்பது கிலோ
மீற்றர் தூரத்தைக் கடந்தது. நடைபயண வீரர்கள் 22 வது நாளான ஞாயிற்றுக்கிழமையும் 23
நாளான திங்கட்கிழமையும் 80 கிலோ மீற்றர்கள் கடந்து மொத்தம் 750 கிலோ மீற்றர்
தூரத்தைக் கடந்தனர். 1987ஆம் ஆண்டின் “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக
நடைமுறைப்படுத்த வேண்டும்,1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர்களின் பூர்விகப்
பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்ற வேண்டும்-என்ற இரு
கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்படும் இந்த நெடுந்தூர நடைபயணத்தில் இதுவரை மூன்று
பேருக்கு மலேரியா நோயும் மூன்று பேருக்கு ரைபோய்ட் காச்சலும் தொற்றியுள்ளது. இவர்கள்
அனைவரும் மீண்டும் சென்னைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.(மேலும்...)
மாசி 08, 2011
2 வயதுக் குழந்தையிடம் வயது இளைஞன் கற்றுக்கொள்ள பத்து விடயங்களாவது இருக்கும் எனத்
தோன்றுகிறது.
அதனிடம் சோம்பல் இல்லை. ஓரிடத்தில் சும்மா
உட்கார்ந்திருப்பதில்லை. ஒரு பொம்மையை நீட்டினால் அதைப் பிடிக்க கால்களால் நம்
நெஞ்சில் ஊன்றி கைகளை அலைபாய்ந்து எத்தனை பிரயத்தனப்படுகிறது. அதன் விடா முயற்சியை
கவனியுங்கள். பசிக்கும்போது குரல் எழுப்பி தனது தேவையை தாய்க்கு உணர்த்துகிறது.
வயிற்று வலியோ வேறு உபாதைகளோ ஏற்பட்டால் வேறு முறையில் குரல் எழுப்பி தாய்க்கு
உணர்த்துகிறது. சொற்கள் இல்லாமலே பேசுகிறது.
(மேலும்...)
மாசி 08, 2011
கனடாவில் மாநிலங்களவை தேர்தல்
கொன்சவேட்டிவ் வேட்பாளராக ஈழத்தமிழர் தெரிவு
கனடாவின் மாநிலங்களில் பெரியதும், அதிக அளவில் தமிழ்
மக்கள் வதிவதுமான ஒன்ராரியோ மாநிலத்தின் பாராளுமன்றத்திற்காக வரும் ஒக்டோபர்
மாதத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் கொன்சவேட்டிவ் கட்சிக்கான வேட்பாளருக்காக மாக்கம்
- யூனியன்வில் தொகுதியில் சனிக்கிழமை பெப்பிரவரி 5ஆம் நாள் நடைபெற்ற தேர்தலில் கட்சி
உறுப்பினர்களால் சான் தயாபரன் கட்சியின் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டார் என்ற
அறிவித்தலை ஒன்ராரியோ கன்சவேட்டிவ் கட்சித்தலைவர் ரிம் கியூடாக் உத்தியோகபூர்வமாக
வெளியிட்டுள்ளார்.
(மேலும்...)
மாசி 08, 2011
Stephen Harper backs Mubarak's 'transition' plan
Contact your MPs to protest now!
Canada must support Egypt's democracy movement, not a dictator! Prime Minister
Stephen Harper has thrown Canada's support behind embattled Egyptian President
Hosni Mubarak, despite growing pressure in Egypt and around the world for the
82-year old dictator to resign immediately. Foreign Affairs Minister Lawrence
Cannon said on February 3 that the Conservative government prefers Mubarak's
plan to step down in September instead of now. Read the full article here:
http://bit.ly/gRMSP9. But even the Obama administration in the US believes
that Mubarak must resign immediately, in response to nation-wide protests of
millions of people in Egypt.In 2003, Stephen Harper - who was Leader of the
Opposition at the time - argued that Canada should join the US-led war in Iraq.
Harper was on the wrong side of history then, and he is on the wrong side of
history now. Contact your MPs to protest Canada's decision to back Mubarak.
Canada must support Egypt's democracy movement, not a hated dictator.
மாசி 08, 2011
காலநிலைமாற்ற இரகசியத்தை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள்...
இந்து சமுத்திரத் திலிருந்து குறிப்பாக, வங்காள
விரிகுடாவிலிருந்து உருவாகும் தாழ் அமுக்கமே இந்நாடுகளில் சீரற்ற காலநிலை
ஏற்படுவதற்கு பிரதான காரணம் என்று முன்னர் வானிலை ஆய்வாளர்கள் நம்பிக்கை
வைத்திருந்தார்கள். இன்று, அதைவிட ஏதோ ஒரு வினோதமான இயற்கை மாற்றமே இதற்கான காரணம்
என்று வானிலை ஆய்வு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள். கொழும்பில் நடைபெறும் இந்த
விஞ்ஞானி களின் மாநாட்டில், இந்து சமுத்திர நாடுகளில் காலநிலை இவ்விதம் பாரதூரமான
வகையில் மாற்றமடைவதற்கான காரணம் என்ன என்பதை கண்டறிவதில் விஞ்ஞானிகள் தங்கள் முழுக்
கவனத்தையும் திருப்பியுள்ளார்கள். அதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை
மாற்றங்களை வானிலை ஆய்வாளர்கள் எவ்விதம் சரியான முறையில் ஆய்வு செய்வதற்கும், உதவக்
கூடிய வழிமுறைகளையும் இந்த விஞ்ஞானிகள் கண்டறிவார்கள். இந்த ஆய்வுக்கு ஆசிரி என்று
பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் வட பகுதியில் ஆகாயத்திலும், கடலிலும்
ஏற்படும் காலநிலை மாற்றம் என்று இந்த ஆய்வுக்கு பெயரிடப்பட்டுள்ளது.
(மேலும்...)
மாசி 08, 2011
ஒட்டுசுட்டானில்
துரித மீள்குடியேற்ற நடவடிக்கை
ஒட்டு சுட்டான் பிரதேசத்தில் பாதுகாப்புப்படையினரால்
மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட கிராம உத்தயோகத்தர் பிரிவுகளில் மீளக்குடியமர
விரும்பும் குடும்பங்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு ஒட்டு சுட்டான் பிரதேச
செயலர் என். கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான்
பிரதேசத்தில் உள்ள 19 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் இதுவரை 6 பிரிவுகளில் இடம்
பெயர்ந்த மக்களை மீளக்குடியமரப் பாதுகாப்புப் படையினர் அனுமதித்துள்ளனர். ஏனைய
பிரிவுகளில் கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்வதால் மக்கள் மீள்குடியமர
அனுமதிக்கப்படவில்லை. மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட ஆறு கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளில் விஷ்வமடு மேற்கு, விஷ்வமடு கிழக்கு, மாணிக்கபுரம் ஆகிய மூன்று கிராம
உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றம் செய்யும்
நடவடிக்கைகள் இடம்பெறு கின்றன. பல மாவட்டங்களில் வாழ்ந்து வரும் இவர்கள் மீளக்
குடியமர விரும்பினால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர்
தெரிவித்துள்ளார்.
மாசி 08, 2011
அதிக ஆசனங்களை எதிர்பார்க்கும் காங்கிரஸ் தனிக்கட்சி ஆட்சி முடிவுக்கு வரும்
வாய்ப்பு
தி.மு க. கூட்டணியில் காங்கிரஸ் அதிக ஆசனங்களை எதிர்பார்க்கிறது. அ.தி.மு.க. அணியில்
தே.மு.தி.க. இடம்பெறுவது தாமதமாவதற்கும் அதிக ஆசனங்களின் எதிர்பார்ப்பே காரணமாக
உள்ளது. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., இடம் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதால்
அக்கட்சி அ.தி.மு.க. அணியில் இடம் பெறுமா அல்லது தனித்து போட்டியிடுமா? என்ற
குழப்பமும் நீடிக்கிறது. கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டினால் தமிழகத்தில்
தனிக்கட்சி ஆட்சியின் சகாப்தம் முடிந்து விடும் நிலை புதிய திருப்பமாக உருவாகவுள்ளது.
தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவதில் தற்போது சிக்கல்
ஏற்பட்டுள்ளது. காங்கிரசுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு
தி.மு.க. தொகுதி பங்கீடு குழுவும் அறிவிக்கப்பட்டுவிட்டது.
(மேலும்...)
மாசி 08, 2011
காங்கிரசில்
இணைந்தார் சிரஞ்சீவி
நேற்று டில்லி சென்ற சிரஞ்சீவி, காங்கிரஸ் தலைவர்
சோனியாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். கட்சியின் ஆந்திர மாநில பொறுப்பாளர்
வீரப்ப மொய்லி இராணுவ அமைச்சர் அந்தோணி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது ஆந்திர
மாநில அரசியல் நிலவரம் குறித்து, இரு தரப்பிலும் பேசப்பட்டது. சந்திப்புக்கு பின்
செய்தி யாளர்களிடம் நடிகர் சிரஞ்சீவி கூறுகையில், ‘பிரஜா ராஜ்யம் கட்சியை,
காங்கிரசுடன் இணைத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த நாள், வரலாற்றில்
மிக முக்கியமான நாளாக அமைந்து விட்டது. ஆந்திர மக்களின் நலன் கருதி, இந்த முடிவை
எடுத்துள்ளேன். ஆந்திர அமைச்சரவையில் நான் சேரப் போவதாக வெளியான தகவல் உண்மை அல்ல’
என்றார்.
(மேலும்...)
தாய்லாந்து -
கம்போடியா இராணுவத்தினரிடையே மோதல் உக்கிரம்
900
ஆண்டுகள் பழைமையான இந்துக்கோயிலையும் அதனை அண்டிய பகுதிகளையும் உரிமை கோரி
தாய்லாந்து கம்போடிய இராணுவத்தினரிடையே மோதல் கடந்த வெள்ளியன்று ஆரம்பித்தது.
மூன்றாவது நாளான நேற்று ரொக்கட்டுகள், இராணுவத்தாங்கிகள், துப்பாக்கிகளின்
பயன்பாட்டால் மோதல் உக்கிரமடைந்தது. 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரீவிகர், கோயிலைச்
சூழவுள்ள பகுதிளில் ஏறத்தாழ 4.6 சதுர கிலோமீற்றர் பரப்பளவிற்கு எறிகணைச் சத்தத்தைக்
கேட்கக் கூடியதாக விருந்தது. அயல் மற்றும் எல்லைக்கிராமங்களில் வசித்து வந்த
2500க்கும் மேற்பட்ட கம்போடிய வாசிகள் இடம்பெயர்ந்திரு க்கின்றனர். எல்லைப்
பகுதிகளில் தாய்லாந்து இராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டிருப்ப துடன் இராணுவத்
தாங்கிகள் பல நிறுத்தப்பட்டிருந்தமையே அவ்விடம் உயர்வுக்கான காரணமாகும்.
தாய்லாந்தின் கந்தரலக் மாவட்ட வைத்தியசாலையில் காயமடைந்த 10 இராவத்தினரும் 2 பொது
மக்களும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
(மேலும்...)
கைது செய்யப்படும் அபாயம்
பயணத்தை தவிர்த்த ஜோர்ஜ்
புஷ்
குவான்டனாமோ சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்திய
விவகாரத்தில் தான் கைது செய்யப்படுவோம் என்ற அச்சத்தால், அமெரிக்க முன்னாள் அதிபர்
ஜோர்ஜ் புஷ் தனது சுவிட்சர்லாந்து பயணத்தை இரத்து செய்துவிட்டார். “குவான்டனாமோ
சிறையில் உள்ள, சில கைதிகளை சித்திரவதை செய்யும்படி சிறை அதிகாரிகளுக்கு அப்போதை
அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ் உத்தரவிட்டார்” என்று அமெரிக்காவில் இயங்கி வரும் மனித
உரிமை அமைப்புகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், இம்மாதம் 12ம்
திகதி சுவிட்சர்லாந்தில் நடக்க உள்ள, ஒரு ஆண்டு விழாவில் முக்கிய பேச்சாளராக புஷ்
கலந்துகொள்ள இருந்தார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், அவர் மீது குற்றவியல்
வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அங்கு புஷ் வரும்போது அவரைக் கைது
செய்யும் படி அமெரிக்க மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனால் தான்
கைது செய்யப்படுவோம் என்று அச்சம் கொண்ட புஷ், தனது சுவிட்சர்லாந்து பயணத்தை இரத்த
செய்துவிட்டார்.
மாசி 07, 2011
நிவாரணப் பணிகளுக்கு மக்களின் பங்களிப்பு அவசியம்
ஆழிப் பேரலை இலங்கை மாதாவின் கடற்கரையின் பெரும் பகுதியை சின்னாபின்னப்படுத்தி,
பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை பறித்துதம், வீடுகள், கட்டடங்கள் போன்ற வற்றை
முற்றாக அழித்தும் பேரழிவையும், பொருள் நஷ்டத்தை யும் ஏற்படுத்தி, இப்போது
ஆறாண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பேரழிவிலிருந்து மீண்டும் நாட்டு மக்கள்
தங்கள் அழிவுகளை சரி செய்து சகஜ வாழ்க்கையை இன்றைய சுதந்திர இலங்கையில் ஆரம்பித்து,
பொருளாதார வளர்ச்சிக்கு சிறந்த ஒரு அடிதளத்தை அமைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில்
இயற்கை அன்னை இலங்கையின் மீது மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தின் மீதும், ஏதோ ஒரு
காரணத்திற்காக தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தி கடல் கொந்தளிப்பு சூறாவளி காற்று,
எரிமலை வெடிப்பெடுத்தல், மண் சரிவுகள், பூமியதிர்ச்சிகள், பெருமழை மற்றும் பாரிய
வெள்ள ங்களின் மூலம் தனது சீற்றத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளாள்.(மேலும்...)
மாசி 07, 2011
Egypt of protests: an eye-witness
account
- New Internationalist
The shutters on the local street
storefronts had rattled down an hour or so earlier. People looked apprehensively
out of windows. The smoky trails of tear gas canisters hung from the early
afternoon sky. Within hours, Egypt’s security apparatus would be overwhelmed by
hundreds of thousands of protestors across the country. I was following a crowd
of around 1,500 protestors heading east from Mohammad Nageeb station to Midan
Tahrir, the hub of downtown Cairo. It was just after midday on the fourth...
மாசி 07, 2011
மட்டக்களப்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புளொட் தொடர்ந்தும் உதவி
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும்
கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான
இடங்களுக்கு படகுகளில் கொண்டு செல்;வதற்கும், மக்களின் அத்தியாவசிய
போக்குவரத்துக்கும், மருத்துவப் பணிகளுக்கும் புளொட் உறுப்பினர்கள் உதவி வருகின்றனர்.
புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர்
திரு.கேசவன் உட்பட 30ற்கும் மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் ஆறு நாட்களாக நான்கு
இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான
இடங்களுக்கு கொண்டு செல்லுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவர்களை அழைத்துச்
செல்லுதல், நோயாளர்களை மட்டக்களப்பு மற்றும் நாவற்காடு வைத்தியசாலைகளுக்கு அழைத்துச்
செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(மேலும்...)
மாசி 07, 2011
Tamil Tigers infiltrate Federal and Provincial Conservative parties.
(Michael – Walter) (Cinnamon
Garden)
World Tamil Movement a banned
terrorist organization in Canada as a front organization for Tamil Tigers
successfully infiltrating Conservative Party.
Nehru Gunaratnam is the chief
organizer for Tamil Tigers (LTTE) in Canada for many decades. He was a one time
spokesperson for both World Tamil Movement (WTM) and also Federation of
Associations of Canadian Tamils (FACT). Both these entities are designated as
Tamil Tiger front organizations by both Canada and USA. Nehru Gunaratnam has
also officially served on LTTE’s 15 member Political Action Committee. Nehru
Gunaratnam was the mastermind of Tamil protests including the most notorious
protest blocking Gardiner Highway. Nehru Gunaratnam had also played the key role
of organizing the famous Paul Martin Dinner by Tamil Tigers. Raj Rasalingam a
lobbyist from Ottawa (President, Pearson-Shyoma Institute) with close ties to
Liberal Party (and Paul Martin) helped Nehru Gunaratnam. The other important
person who helped Nehru Gunaratnam with Paul Martin dinner is Anton Philip
formerly a Catholic Priest (Rev. Sinnarasa) in Sri Lanka. Anton Philip a
catholic priest then was jailed in Sri Lanka in the early eighties for acting as
LTTE’s treasurer holding funds robbed by LTTE in Sri Lankan banks. Anton Philip
escaped with other prominent LTTE members in the famous Batticaloa Jail break.
He was then moved to India illegally by LTTE and then to Norway. Anton Philip
has since moved to Canada as an LTTE organizer. He once worked as Executive
Assistant for Scarborough MPP Jim Brown and is currently working for federal
government funded settlement agency Tamil Eelam Society of Canada.
(more...)
மாசி 07, 2011
யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு இ.போ.ச.வின் மேலதிக பஸ் சேவை
யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிப் பகுதியில் கடமையாற்றும் அரச ஊழியர்களின் நலன் கருதி
மேலும் ஒரு பஸ் சேவை வட பிராந்திய போக்குவரத்துச் சபையினரால் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளது. தற்சமயம் காலை 5.30 க்கு யாழில் இருந்து புறப்படும் பஸ்
வண்டிக்கு மேலதிகமாக காலை 6.10க்கு இப் பஸ் வண்டி புறப்படும் வகையில் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. தினமும் 100க்கு மேற்பட்ட
அரச அலுவலகர்கள் யாழ். மாவட்டத்திலிருந்து வன்னிப் பகுதி அரச அலுவலகங்களில்
கடமைக்குச் செல்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அரச ஊழியர்களின் கோரிக்கையை
அடுத்தே இச் சேவை இடம் பெறுவதாக கூறப்பட்டது
மாசி 07, 2011
குப்பை கூளங்கள் கண்டபடி வீசப்படுவதால் சுகாதார சீர்கேடு
ஐந்து சந்திக்கும் மொஹிதீன் பள்ளி வாசலுக்கும் இடையே உள்ள மானிப்பாய் வீதியில்
குப்பைகூளங்கள் வீசப்படுவதால் இப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் பெரும்
அசெளகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலான வீடுகள் விடுதிகளாக
இயங்குவதால் இங்கு தங்குவோர் சாப்பாட்டுப் பார்சல்களையும் உணவுக் கழிவுகள், வெற்று
உணவுத் தகரங்கள் போன்றவற்றைக் கண்டபடி வீசுகின்றனர். இக்கழிவுப்பொருள்களை காகம்,
நாய் என்பன இப்பிரதேசத்தில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகள் கிணறுகளில் கொண்டு வந்து
போடுவதால் மக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்கியுள்ளனர். சில விடுதிகளின்
மலசல கூட குழிகள் நிரம்பி தூர்நாற்றம் எடுப்பதாகவும் கூறப்படுகிறது.
மாசி 07, 2011
Reflections by Fidel Castro: Mubarak's Fate is Sealed
Mubarak’s fate is sealed, not
even the support of the United States will be able to save his government. The
people of Egypt are an intelligent people with a glorious history who left their
mark on civilization. “From the top of these pyramids, 40 centuries of history
are looking down upon us,” Bonaparte once said in a moment of exaltation when
the revolution brought him to this extraordinary crossroads of civilizations.
(more....)
மாசி 06, 2011
நல்லிணக்க
ஆணைக்குழு சிபார்சுகளை நடைமுறைப்படுத்த இடைக்காலக் குழு
நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சுகளை
நடைமுறைப்படுத்த இடைக்கால குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும்
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஏற்று அவற்றை இடைக்காலத்துக்கு
நடைமுறைப்படுத்துவதன் மூலம் அந்த ஆணைக்குழுவை வலுப்படுத்த முடியும் என்றும்
அமைச்சர் பீரிஸ் சுட்டிக் காட்டுகின்றார். பிரஸ்தாப இடைக்காலக் குழுவில்
பாதுகாப்புச் செயலாளர், பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர், நீதியமைச்சின்
செயலாளர், புனருத்தாரண மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின்
செயலாளர், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர், பொருளாதார அபிவிருத்தி
அமைச்சின் செயலாளர், மற்றும் ஜனாதிபதி விசேட செயலணியின் செயலாளர் ஆகியோர்
அங்கம் வகிக்கவுள்ளனர். அதற்கான பணிப்புரையை ஜனாதிபதி வழங்கியுள்ளார்
என்றும் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார். நீண்ட கால
பிணக்கு மற்றும் மோதல்களில் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை மீள
ஆற்றுப்படுத்துவதன் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே குறித்த ஆணைக்குழு
அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவிக்கின்றார்.
மாசி 06, 2011
நிபுணர் குழுவின் ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தியடையாத நிலையில் உள்ளன
இலங்கை விவகாரம் தொடர்பில் தன்னால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு அதன்
ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தொடர்ந்தும்
அது தொடர்பில் இலங்கையுடன் பேச்சு நடத்துவதாகவும் ஐ.நா. செயலாளர் நாயகம்
பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியுடனும் இலங்கை அரச தலைவர்களுடனும்
நான் மிகவும் முக்கிய பேச்சுக்களில் ஈடுபட்டேன். மிகவும் நீண்டதும், மிகவும்
நெருக்கடி மிக்கதும், ஒருவகையில் குழப்பகரமானதுமான உரையாடல்களைத் தொடர்ந்து
என்னால் நிபுணர்கள் குழுவொன்றை அமைப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை
திருப்தியடையச் செய்ய முடிந்தது.
(மேலும்...)
மாசி 06, 2011
ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம்
-
16வது முதல் 21வது நாள்வரையான
நிகழ்வுகள்!
மதிய இடைவேளைக்குப் பிறகு வீரர்கள் அனைவரும்
ஒருவருடன் ஒருவர் கதைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்த வேளையில் ஒரு
துக்கமான செய்தி வந்து சேர்ந்தது. வீரர்கள் மிகவும் கவலையடைந்தனர். நடைபயணம்
மேற்கொண்டிருக்கும் கடலூர், குறிஞ்சிபாடி முகாமைச் சேர்ந்த திரு. சிவகுரு (அனில்)
என்பவரின் தந்தை (திரு. கந்தசாமி அவர்கள்) உடல் நலக்குறைவால்
மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி பெறப்பட்டது. திரு. சிவகுரு அவர்கள் மிகவும்
வேதனையடைந்தார். நான் எனது தந்தைக்கு மட்டும் தெரிவித்துவிட்டு வேறு
யாரிடமும் தெரிவிக்காமல்தான் சென்னை வந்தேன். எனது தந்தை தனக்கு உடல்நிலை
சரியில்லாத சூழ்நிலையிலும், இங்கு நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஆறுதல்
வழங்கி என்னை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.
(மேலும்...)
மாசி 06, 2011
Canadian Tamils for Peace and Democracy (CaTpad) wishes Happy
Independence Day to all Srilankans and calls on President to abolish
Emergency in Srilanka.
Canadian Tamils for Peace and Democracy wishes all the Srilankans living
in and out of the country a Happy Independence Day.
This day is a day of rejoice to all Srilankans and a day of remembrance
to all the souls who fought and support to free Srilanka from foreign
rulers. On this Day we take the pride of Saluting our National heroes
who laid down their lives to free Srilanka from separatist country
within. Their courage and braveness have lead to democracy in the North
and East, Peace to entire nation.
(more....)
மாசி 06, 2011
மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பது உள்ளிட்ட
நிவாரணப் பணிகளில் புளொட் உறுப்பினர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து
பெய்துவரும் கடும்மழை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை
மீட்பு பாதுகாப்பான இடங்களுக்கு படகுகளில் கொண்டு செல்;வதற்கும், மக்களின்
அத்தியாவசிய போக்குவரத்துக்கும், மருத்துவப் பணிகளுக்கும் புளொட்
உறுப்பினர்கள் உதவி வருகின்றனர். புளொட் அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட
அமைப்பாளர் திரு.சூட்டி, உதவி அமைப்பாளர் திரு.கேசவன் உட்பட 30ற்கும்
மேற்பட்ட புளொட் உறுப்பினர்கள் கடந்த நான்கு நாட்களாக நான்கு
இயந்திரப்படகுகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான
இடங்களுக்கு கொண்டு செல்லுதல், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவர்களை
அழைத்துச் செல்லுதல், நோயாளர்களை மட்டக்களப்பு மற்றும் நாவற்காடு
வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு
வருகின்றனர்.
(மேலும்...)
மாசி 06, 2011
பாகிஸ்தானில் அமைச்சரவை கலைப்பு
பொருளாதார நெருக்கடிகாரமாக தொடர்ந்து
பாகிஸ்தானில் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்றமை காரணமாகவும். இலஞ்ச
ஊழல் அதிகரித்துள்ளமை காரணாமவும். பாகிஸ்தான் அமைச்சரவை கலைகப்பட வேண்டும்
என பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் செரீப்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்
வலியுறுத்தி வந்தன. பாகிஸ்தான் பிரதமர் கிலானி அவர்களின் கோரிக்கைக்கு
பணிந்தார். எனவே தனது அமைச்சரவையை கலைக்க தீர்மானித்துள்ளார். இந்த முடிவு
ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்திலும் முடிவு
செய்யப்பட்டது. இதற்காக, தனது அமைச் சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களை தனது
பதவியை ராஜினாமா செய்யும்படி பிரதமர் கிலானி கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி
அனைத்து அமைச்சர்களும் தங்களது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.
புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். 10
முதல் 15 பேர் மட்டுமே அமைச்சர்களாக நியமிக்கப்படுவார்கள் என
தெரிவிக்கப்படுகிறது.
மாசி 06, 2011
பத்து முக்கிய புள்ளிகள் கைதின் எதிரொலி, சுவிஸில் புலிகளின் ஆட்டத்திற்கு
முற்றுப்புள்ளி!
தோற்பது உறுதியானபோது சுவிஸில் அவசர அவசரமாக தமிழரை மிரட்டி
சேகரிக்கப்பட்ட பெருமளவிலான நிதிக்கு என்ன நடந்தது? பணத்தைப் பறிகொடுத்த
மக்கள் சுவிஸ் மத்திய அரசின் பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம்!
சுவிற்சர்லாந்து மத்திய அரசின் நெடுநாள் கண்காணிப்பின் பின்னர் புலிகளின்
ஆட்டம் முடிவுக்கு கொண்டு வரப்படக்கூடிய சூழ்நிலை ஒன்று உருவாகியுள்ளது.
சுமார் 18 மாதங்களுக்கு மேலாக சகல செயற்பாடுகளையும் பின்தொடர்ந்த
சுவிற்சர்லாந்து மத்திய அரசின் குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு, நாடு
பூராகவும் 23 இடங்களில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட தேடுதலில் புலிகளின்
செயற்பாடுகளை சுவிற்ச ர்லாந்தில் முன்னெடுத்துச் சென்ற முக்கிய
செயற்பாட்டாளர்கள் 10 பேரை கைது செய்துள்ளனர்.
(மேலும்...)
மாசி 06, 2011
இந்தியாவில் கறுப்புப் பணம்17 பேருக்கு நோட்டீஸ்
சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணம் வைத்துள்ள
விவகாரம் தொடர்பாக 17 பேருக்கு மத்திய அரசு நோட் டீஸ் அனுப்பியுள்ளதாக நிதி
அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். எனினும் அவர்களின் பெயர்களை
வெளியிடுவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். சுவிஸ் வங்கியில் கணக்கு
வைத்துள்ள சில நபர்களின் பெயர்கள் கிடைத்துள்ளன. அவர்களுக்கு ஏற்கனவே
நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விசாரணை தொடங்கப்பட் டுள்ளதாக பிரணாப் தெரிவித்தார்.
நாடுகளிடையேயான உடன்படிக்கை காரணமாக சுவிஸ் வங்கியில் கணக்கு
வைத்துள்ளவர்களின் பெயர் களை அரசு வெளியிட முடியாது. வரி கட்டுவது தொடர்
பான நோக்கங்களுக்கு மட்டுமே அந்த தகவல்களை பயன்படுத்த முடியும் என அவர்
கூறினார்.
மாசி 06, 2011
ஹோஸ்னி முபாரக்கின் சொத்து மதிப்பு
நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள எகிப்து ஜனாதிபதி ஹோஸ்னி
முபாரக் மற்றும் அவரது குடும்பத் தினரின் சொத்து மதிப்பு சுமார் மூன்றரை
லட்சம் கோடி ரூபா யாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விமானப்படை
அதிகாரியாக அவர் இருந்த காலகட்டத் திலேயே ஆயுத ஒப்பந்தங்களில் அவர் ஏராளமாக
வருமானம் ஈட்டியிருக்கிறார். 1981 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற
பிறகு, தனது குடும்பத்தினரின் பெயர்களில் வியாபாரத்தைப்
பெருக்கியிருக்கிறார். தற்போது அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின்
ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாய் முதல் மூன்றரை லட்சம் கோடி
ரூபாய் வரையில் இருக்கும் என்று சில வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
(மேலும்...)
கிரிக்கட்
2011 - பத்தாவது உலகக் கோப்பை
அன்று தொல்லையாகக் கருதப்பட்ட இயற்கையின் விளையாட்டால் உருவான ஒருநாள்
கிரிக்கெட் போட்டிகளின் பரிணாம வளர்ச்சியின் பலனாகக் கிடைத்த ஒருநாள்
கிரிக்கெட் உலகக் கோப்பையின் பத்தாவது உலகக் கோப்பை போட்டிகள் இந்தியா,
இலங்கை, வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு முயற்சியில் வரும் பிப்ரவரி
முதல் இம்மூன்று நாடுகளில் நடைபெறவுள்ளன.இந்திய துணைக் கண்டத்தில் உள்ள
பாகிஸ்தான் உள்ளிட்ட நான்கு நாடுகளிலும் போட்டிகளை நடத்துவதென்று 2006
ஏப்ரல் 30ல் நடந்த சர்வதேச கிரிக்கெட் குழுவில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால்,
பாகிஸ்தானில் தலைவிரித்தாடும் பயங்கரவாதம் கிரிக்கெட்டையும்
விட்டுவைக்கவில்லை. 2009ம் ஆண்டில் லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி
பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. அதையடுத்து போட்டியை நடத்தும் நாடுகளில்
இருந்து பாகிஸ்தானை ஐசிஐ கழட்டிவிட்டது.
(மேலும்....)
மாசி 05, 2011
சன் சீயில் சென்றவர்களில் புலி தொடர்புடையவர்கள்!
கடந்த வருடம் சன் சீ கப்பலில் கனடாவிற்கு சென்ற இலங்கைதமிழர்களுடன் ஈழநாதம்
என்ற புலிகள் இயக்கத்தின் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் இருந்ததாக கனடா
குடிவரவு பிரிவினர் தெரிவித்துள்ளனர். அதேவேளை,புலிகள் இயக்கத்தில் ஆயுத
பயிற்சி பெற்ற ஒருவரும், பிரசார திரைப்படமொன்றில் தோன்றிய கராட்டே
பயிற்சியாளர் ஒருவரும் சென்றவர்களுள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகள் இயக்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட பதுங்கு குழிகளுக்கு தேவையான
கட்டுமாணப் பொருட்களை எடுத்துச் சென்ற உழவு இயந்திர சாரதி மற்றும்
உணவகமொன்றில் பணியாற்றிய ஒருவரும் சன் சீயில் சென்ற மக்களுள் அடங்குவதாக
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், சன் சீயில் வந்தவர்களுடன் 70
பேராவது தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் என
வான்கூவர் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மேலும்....)
மாசி 05, 2011
இலங்கையில் மீண்டும் மழை அதிக மக்கள் பாதிப்பு
கடந்த சில நாட்களாக நாடளாவிய ரீதியாக பெய்து வரும் அதிக மழை காரணமாக
ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக இதுவரை 8 லட்சத்து 42
ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். இவர்களுள் 1 லட்சத்து 77 ஆயிரத்து
55 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்
தெரிவித்துள்ளது. இவர்கள் 430 தற்காலிக முகாம்களில் தற்காலிக முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இயற்கை அனர்த்தங்களால்
மரணித்தவர்களின் எண்ணிக்கை 8 அதிகரித்துள்ளதாக மத்திய நிலையம்
வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அதேவேளை, 5 பேர்
காயமடைந்துள்ள நிலையில், 2 பேர் காணாமல் போயுள்ளனர்.
(மேலும்....)
மாசி 05, 2011
யாழ் பத்திரிகையின் தரம் தார்மீகம் பற்றிய ஒரு பார்வை
(தம்பா)
இந்த யுத்தம் உக்கிரமாக தொடர வேண்டும் என்று அணிவகுத்து நின்றவர்களை ஒரு
கணம் சிந்தித்து பாருங்கள்.
இழப்புக்களுக்கு ஏதோவிதத்தில் அவர்களும் பொறுப்பல்லவா?
குறிப்பாக கடந்த இருபது வருடங்களாக யாழ் பத்திரிகைகளில் இந்த போக்கு
புரையோடிப்போய்
இருந்ததை
காணலாம். இந்த பொறுப்பற்ற
போக்கே எல்லாளன் படை,
பொங்குதமிழ் போராட்ட வீரர்கள்,
இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் போன்ற வகையறாக்கள் புனிதர்கள் என்ற
எண்ணப்படிமத்தையும்;
மறுதலையாக ஒட்டுக்குழுக்கள்,
கூலிப்படைகள்,
துரோகிகள் கொன்று ஒழிக்கப்பட
வேண்டியவர்கள்
என்ற
சிந்தனைப்போக்கையும்
நியாயப்படுத்தி;
சமூகத்தை இருகூறுகளாக்கி
அதில்
விளைந்த வன்மத்தில் தங்களை வளர்த்துக்கொண்டவர்கள்.
நடந்து முடிந்த இந்த
யுத்தத்தில்
இந்த பத்திரிகைகளும் ஒரு கன்னையில் அணிவகுத்து நின்றவர்கள் என்ற வகையில்
யுத்தம் ஏற்படுத்திய விளைவுகளுக்கான தார்மீகப்பொறுப்பு அவர்களுக்கும்
உண்டு. எமது சமூகம் இன்றுள்ள கையறு நிலையிலிருந்து தார்மீக வலுவுள்ள
நேர்மையான சமுதாயமாக எழுச்சி பெற வேண்டுமாயின் பொறுப்புள்ள சமூக
தலைவர்களும்,
பத்திரிகையாளர்களும்
குறிப்பாக இளையதலைமுறையினரும் பழிவாங்குதல்,
வன்மம் பேசுதல்,
போலிவீரம் காட்டுதல்,
நேர்மையின்மை
போன்ற
போக்குகளை புறம்தள்ள வேண்டும். (மேலும்....)
கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள
தாங்கள் தயார்
- டக்ளஸ் தேவானந்தா!
புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராகச் செயற்பட்ட கேபி எனப்படும்
குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
தெரிவித்தார். ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம்.
அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த
கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் அவர்களுடைய அரசியல்
இருப்பை உறுதி செய்வது மக்கள் கைகளிலேயே உள்ளது." என்றார் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா.
மாசி 05, 2011
நூல் வெளியீடு
கொழும்பு பல்கலைக்கழக புவியியல்துறை
விரிவுரையாளர் பேராசிரியர் அன்ரனி நோபேர்ட் அவர்களால் எழுதப்பட்ட 'பூகோளம்
வெப்பமடைதல்' நூல் வெளியீட்டு நிகழ்வு
தலைமை: கலாநிதி செல்வி திருச்சந்திரன்,
பணிப்பாளர் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
ஆய்வாளர்கள்: திரு. த. இராசரத்தினம், பிரதி
அதிபர், கொழும்பு இந்துக்கல்லூரி
பேராசிரியர் எம்.கருணாநிதி
பேராசிரியர் சபா.ஜெயராசா
இடம்: பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனக்
கேட்போர் கூடம்
இல. 58 தர்மராம வீதி, கொழும்பு – 6
காலம்: 13 – 02 – 2011 ஞாயிற்றுக்கிழமை மாலை
4.30 மணி
நிகழ்வு ஏற்பாடு: இலங்கை முற்போக்கு கலை
இலக்கிய மன்றம்
தொடர்புகளுக்கு:
e-mail: kailashpath@yahoo.com
மாசி 05, 2011
15 வருடங்களின் பின் யாழ். மூளாய் கடற்படை முகாமுக்கு மூடுவிழா!
யாழ்ப்பாணம் மூளாய் அரசடிச் சந்தியில்
முகாமிட்டிருந்த கடற்படையினர் நேற்று அங்கிருந்து முற்றாக விலகிச்
சென்றுள்ளனர். இராணுவப் பொருள்கள் மற்றும் இரும்புக் கேடயங்கள் என்பனவற்றை
கடற்படையினர் எடுத்துச் சென்றுள்ளதாக எமது யாழ். செய்தியாளர்
தெரிவிக்கின்றார். வலிகாமம் மேற்கின் ஏனைய இடங்களிலிருந்து காரைநகருக்குச்
செல்லும்போது எதிர்நோக்க வேண்டிய முன்னணி கடற்படைக் காவலரணாக இதுவரை இந்தக்
காவலரண் விளங்கியதுடன், பொன்னாலை கடற்படை முகாமின் பிரதான முன்னணிக்
காவலரணாக இந்த காவலரண் இருந்துவந்தது. மூளாய் அரசடிச் சந்தியில்
சுற்றியிருந்த வீடுகள், கடைகள் மற்றும் சினிமா திரையரங்கு என்பற்றை
உள்ளடக்கி இந்தக் காவலரண் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு
முன்னர் திரையரங்கு கடைகள் என்பற்றை விடுவித்திருந்த கடற்படையினர் தமது
இந்தக் காவலரணின் எல்லையை குறுகியதாக மாற்றியிருந்தனர். பொன்னாலையில் மக்கள்
மீள்குடியேற்றப்படுவதற்கு வசதியாக இங்கிருக்கும் கடற்படை முகாம் தற்போது
திருவடி நிலைக்கு அண்மையில் உள்ள பௌத்த விகாரைக்கு அண்மித்த பகுதிக்கு
இடம்மாற்றப்பட்டு வருகிறது. இதேநேரம், கடந்த 15 வருடங்களாக யாழ்
பருத்தித்துறை வீதியில் இருந்த இராணுவ முகாம் ஒன்று அண்மையில்
அகற்றப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மாசி 05, 2011
வடமராட்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம்
யாழ். வடமராட்சி கிழக்கு மற்றும்
முல்லைத்தீவு பகுதிகளில் படையினர் மற்றும் கடற்படை முகாம்களுக்கு
அருகாமையில் முகாமிட்டு மீன்பிடித்துவரும் தென்னிலங்கை மீனவர்களின் தொகை
மிகக்குறுகிய காலத்தில் அண்மைய வாரங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.
தமிழ் மீனவக் குடும்பங்கள் மீளக்குடியமரவோ மீன்பிடிக்கவோ அனுமதி
மறுக்கப்பட்டுள்ள கடலோரப் பகுதிகளில் தென்னிலங்கையிலிருந்து
நூற்றுக்கணக்கான மீனவர்களை அழைத்துவந்து குடியேற்றுவதில் அப்பகுதி
முகாம்களின் இராணுவத் தளபதிகளே முக்கிய பங்கினை வகிப்பதாகவும் வடமராட்சி
கிழக்கு மீன்பிடியாளர் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
(மேலும்....)
மாசி 05, 2011
உணர்வுள்ள உள்ளங்களே உதவிக்கரம் நீட்டுங்கள்
மீண்டும் மீண்டும் பெய்து வரும் அடை
மழையினாலும், பெருவெள்ளத்தினாலும் படுமோசமாக பதிக்கபட்டிருக்கும்
எம்மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுங்கள். உதவிகளை வழங்க விரும்பும்
நிறுவனங்கள் மற்றும் பரோபகாரிகள் நிர்கதியாக உள்ள எமது உறவுகளிற்கு உடனயாக
உதவி செய்து, எமது உறவுப் பிணைப்பை உறுதிசெய்ய விரைந்து உதவு மாறும்
நிவாரணப் பணிகளை முன்னெடுத்துவரும் ACTION YOUTH அமைப்பினர் வேண்டுகோள்
விடுத்துள்ளனர் உதவிகளை வழங்க விரும்புமவோர் தயவுசெய்து தொடர்புகொள்ளவும்.
Action youth
Sri lanka
0094-754384493, 0094-778845366, 0094-773183999
actionyouthsl@ymail.com
மாசி 05, 2011
மக்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டம் எகிப்து கம்யூனிஸ்ட் கட்சி
உறுதி
ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டிய நேரத்தை
மக்கள் தீர்மானித்துள்ளனர். ஆட்சியாளர்களின் எஜமானர் களாக மேற்கத்திய
நாடுகளும் தங்கள் கைகளைக் கழுவி விட்டன. மக்களின் போராட் டம் தொடர்வதும்,
அது மற்ற நாடுகளுக்கும் பரவியதே இதற் குக் காரணமாகும். முபாரக் வெளியேற
வேண்டும் என்ற கோரிக்கையோடு இன்றைய தினம் லட்சக்கணக்கில் பங் கேற்ற மக்கள்,
சர்வாதிகாரியின் அனைத்து சதிகளையும் முறி யடிப்பார்கள். புரட்சியை முறி
யடிக்க அவரது கும்பல் மேற் கொள்ளும் முயற்சிகள் தோற் கடிக்கப்படும்.
(மேலும்....)
மாசி 05, 2011
தி.மு.க. பொதுக்குழுவில் ஆ.ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம்
‘கைது செய்யப்பட்டதால் மட்டுமே குற்றவாளி ஆகிவிடமாட்டார்’
முதல் அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடந்த
தி.மு.க. பொதுக்குழுவில் ஆ. ராசாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘கைது செய்யப்பட்டதால் மட்டுமே ஒருவர் குற்றவாளி ஆகிவிடமாட்டார்’ என்று
அதில் கூறப்பட்டுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு வழக்கு
தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவை சி.பி.ஐ.
அதிகாரிகள் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தி.மு.க. பொதுக்
குழு கூட்டம், தி.மு.க. தலைவர், முதல் - அமைச்சர் கருணாநிதி தலைமையில்
நடந்தது.
இந்த கூட்டத்தில், ஆ. ராசா கைதானது குறித்து தி.மு.க. வின் நிலைப்பாட்டை
விளக்கும் வகையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
(மேலும்....)
மாசி 05, 2011
மொகஞ்சதாரோ
அழிந்து போனோரின் நகரம்
1922 ல் பாகிஸ்தானிலுள்ள கராச்சியில் இருந்து 400 கிலோ மீட்டர் தொலைவில்
உள்ள சிந்து மாகாணத்தில் சிந்து ஆற்றின் அருகே தொல்லியலாளர்களால் மொகஞ்சதாரோ
நகரம் கண்டுபிடிக்கப்பட்ட போது வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
‘மொகஞ்சதாரோ’ என்றால் அழிந்து போனவர்களின் நகரம் என்ற பொருள் கொண்டது.
மொகஞ்சதாரோ தார்ப்பாலை வனத்திற்கு மேற்கிலும், பலுச்சிஸ்தானத்திற்குக்
கிழக்கிலும், பஞ்சாப் மாநிலத்திற்கு தெற்கிலும், கட்சு வளைகுடாவிற்கு
வடக்கிலும் உள்ள நிலப்பரப்பு. இதன் மொத்த அளவு 53,000 மைகல்கள். இதில்
ராஜஸ்தானிலுள்ள கலிபங்கள் என்னும் இடத்திலும், குஜராத்திலுள்ள லோதால் என்னும்
இடத்திலும் வாழ்ந்த பண்டைய மக்கள் திராவிடர்கள் என்று
கண்டுபிடித்திருக்கின்றனர்.
(மேலும்....)
மாசி 05, 2011
பாகிஸ்தான் செல்ல வேண்டாம்
அல் கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால்
பாகிஸ்தான் செல்வதை தவிர்க்குமாறு தமது நாட்டு மக்களை அமெரிக்கா
கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அயலுறவுத்துறை அமைச்சகம்
விடுத்துள்ள எச்சரிக்கை அறிவிப்பில் அல் கொய்தா மற்றும் தலிபான்
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருப்பதால் அவசியம் இல்லாமல் அமெரிக்கர்கள்
பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானின்
பெருநகரங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு
அதிகப்படுத்தியுள்ளது. எனினும் அமெரிக்கர்களும், மேற்கத்திய நாடுகளைச்
சேர்ந்தவர்களும் அடிக்கடி கூடும் மற்றும் பார்வையிடும் வணிக வளாகங்கள்,
ஹோட்டல்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களைத்
தாக்கும் நோக்கத்துடன் அவற்றை பயங்கரவாதக் குழுக்கள் தொடர்ந்து கவனித்து
வருவதால் அந்த இடங்களுக்குச் செல்லும்போது அமெரிக்கர்கள் கவனமாக இருக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
மாசி 05, 2011
மட்டு., அம்பாறை, திருமலை, பொலன்னறுவை,
அ’புரம் வெள்ளத்தில்
ஆறரை இலட்சம்
பேர் பாதிப்பு 430 முகாம்களில் மக்கள் தஞ்சம்
அடைமழை தொடர்ச்சியாகப் பெய்து வருவதால்
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் நீரில் மூழ்கி வெள்ளக் காடாகக்
காட்சியளிப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட மட்ட இணைப்பாளர்கள்
நேற்று தெரிவித்தனர். இதேநேரம் மலையகத்தின் பல பிரதேசங்களில் மண்சரிவுகளும்
ஏற்பட்டிருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட மட்ட
பூகற்பவியலாளர்கள் குறிப்பிட்டனர். தற்போதைய மப்பும், மந்தாரத்து டன் கூடிய
மழைக் காலநிலை இன்று (5ம் திகதி) நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின்
கடமை நேர வானிலையாளர்களுக்கான பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி
ஆகக்கூடிய மழை பொலன்னறுவையில் 232.4 மில்லி மீற்றர்கள் பெய்துள்ளது. அத்தோடு
திருகோணமலை, அரலகங்வில, கெளடுல்ல, வவுனியா, அநுராதபுரம், போவத்தென்ன,
மட்டக்களப்பு, கட்டுகஸ் தோட்டை ஆகிய பிரதேசங்களில் அதிக மழை வீழ்ச்சி
பதிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
(மேலும்....)
மாசி 05, 2011
நச்சுப் புகையை
வெளியேற்றும் வாகனங்களுக்கு ஆபத்து நெருங்குகிறது
ஸ்ரீ இலக்கங்களைக் கொண்ட பழைய வாகனங்களும்
பழுதடைந்துள்ள வாகனங்களும் வீதிகளில் ஓடுவதற்கு தகுதியுடையவை என்று வாகன
போக்குரவத்து திணைக்களத்திடம் இருந்து அல்லது திணைக்களத்தின்
அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களிடம் இருந்து சான்றிதழ்களை பெறாமல்
வீதிகளில் செல்வதை பொலிஸார் கண்டுபிடித்தால், அந்த வாகனங்களை உடனடியாக
பொலிஸ் நிலையங்களுக்கு எடுத்துச் சென்று தடுத்து வைப்பார்கள். அதையடுத்து
அந்த சம்பந்தப்பட்ட சாரதிகளுக்கும் வாகன உரிமையாளர்களுக்கும் எதிராக வழக்கு
தொடர்ந்து, தண்டனை பெற்றுக்கொடுப்பார்கள்.
(மேலும்....)
மாசி 05, 2011
பதவி விலகுமாறு
5 நாடுகள் கோரிக்கை
எகிப்து நாட்டில் உடனடியாக ஆட்சி மாற்றம்
தேவை என ஐரோப்பிய நாடுகள் வற்புறுத்தியுள்ளன. இது குறித்து ஐரோப்பிய
நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,
ஸ்பெயின் ஆகிய நாடுகள் ஒன்றாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
எகிப்தில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது
கண்டனத்துக்குரியது. எகிப்து நாட்டு மக்கள் அமைதியான முறையில்
பாராளுமன்றத்தை நடத்தும் சூழல் ஏற்பட வேண்டும். பாதுகாப்பு படையினரின் முழு
ஒத்துழைப்பு அவர்களுக்கு தேவை. எகிப்தில் தற்போது நிலைமை தலைகீழாக உள்ளது.
எனவே அங்கு உடனடியாக ஆட்சி மாற்றம் தேவை. இதன் மூலம்தான் தற்போது அங்கு
நிலவும் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும். எகிப்தில் வன்முறையை தூண்டுவோரின்
செயலும் கண்டனத்துக்குரியது. இவ்வாறு ஐரோப்பிய நாடுகள் விடுத்துள்ள
கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாசி 05, 2011
வவுனியாவில் கன
மழை ஏ-9 வீதியும் தடைப்பட்டது
வவுனியாவில் ஏற்பட்ட பெருமழை, வெள்ளம்
காரணமாக 17 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 65 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்காக 40 தற்காலிக நிலையங்கள்
திறக்கப்பட்டுள்ளன என மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. கொட்டும் மழையினால்
கால்நடைகள் வவுனியாவிலும் செட்டிகுளத்திலும் இறக்க ஆரம்பித்துள்ளன.
கடும்குளிர், உணவு இன்மையினால் மாடுகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் செட்டிகுளம் பகுதியில் சண்முகபுரம், கந்தசாமி நகர்
கிராமங்களிலிருந்து 250 பேர் இடம்பெயர்ந்து செட்டிகுளம்
மகாவித்தியாலயத்திலும் தங்கியுள்ளனர்.
(மேலும்....)
மாசி 04, 2011
63 சுதந்திர
தினம் இன்று
இலங்கையின் 63வது சுதந்திர தினம் இன்று கதிர்காமத்தில் கொண்டாடப்படுகிறது.
தேசிய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொள்ளவிருப்பதுடன்,
அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் எனப்
பலர் இச் சுதந்திரதின விழாவில் கலந்துகொள்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தி 21 மரியாதை வேட்டுக்களை தீர்ப்பதற்கு
இராணுவத்தினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பயங்கரவாதம் முற்றாக
ஒழிக்கப்பட்ட பின்னர் கொண்டாடப்படும் இரண்டாவது சுதந்திர தினமாக 63வது
சுதந்திர தினத்தில் மொனராகல, கதிர்காமம், பதுளை, கொழும்பு உட்பட நாட்டின்
பல பாகங்களிலிருந்து மக்கள் கலந்துகொள்கின் றனர்.
(மேலும்....)
மாசி 04, 2011
Toronto
National day celebration of Sri Lanka
When: Feb 4 2011 6pm – 9 pm
Where: Korean Cultural centre,
1133 Leslie st., Toronto, Ontario, M3C 2J6
(more....)
மாசி 04, 2011
ராசாவை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நேற்று கைது செய்யப்பட்ட முன்னாள் தொலைத்
தொடர்புத்துறை அமைச்சர் ராசா இன்று சிறப்பு நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் தனது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ
அனுமதி கோரியது. இதை நீதிமன்றம் ஏற்று அவரை சிபிஐ காவலுக்கு அனுப்பியது.
அதே போல முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா,
ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா ஆகியோரையும் 5 நாள் சிபிஐ
காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது நீதிமன்றம்.
(மேலும்....)
மாசி 04, 2011
LTTE Infiltrates into Canadian political parties. The growing danger of
Criminalization of Canadian politics.
(By Vigneswaran Kathesh
–Toronto)
Conservatives in Canada have a
long tradition of opposing LTTE as well as all other militant movements
like Hamas, Hezbollah, Taliban and Al-Qaida. The first thing that
Conservative did after winning a minority Government under Hon. Stephan
Harper was to ban the Liberation Tigers of the Tamil Eelam (LTTE),
prescribed as a Terrorist Organization. The Conservatives has not only
kept their election promised fulfilled but gained a vast support from
all section of the Canadian society. The Conservative Party of Canada
has made it as a policy announcement much before winning the election
and during its election campaign that it will ban the LTTE, if voted to
power and it was well known to the Tamil Diaspora tightly controlled by
LTTE, the danger of banning by Conservatives if elected to office.
(more...)
மாசி 04, 2011
ஜனாதிபதி
சுகதேகியாக இருக்கிறார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சமீபத்தில்
அலரி மாளிகையில் 2018ம் ஆண்டில் அம்பாந்தோட்டையில் பொதுநலவாய நாடுகளின்
விளையாட்டுப் போட்டியை இலங்கையில் நடத்துவதற்கான முயற்சிகளை எடுப்பதற்கான
ஒழுங்குகள் செய்யும் ஒரு நிகழ்வில் உரையாற்றிய போது தமது உடல் நிலை குறித்து
இணையத் தளங்களில் வரும் செய்திகளும் வதந்திகளும் பற்றி பிரஸ்தாபித்தார்.
நான் தேக ஆரோக்கியத்துடன் சுகதேகியாக இருக்கிறேன் என்று ஜனாதிபதி தம்மீது
நம்பிக்கையும் விசுவாசமும் வைத்துள்ள மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடிய
செய்தியை வெளியிட்டார். நிச்சயம் இந்த செய்தி புலிகளின் ஆதரவாளர்களுக்கு
மகிழ்ச்சியை அளிக்க முடியாது.
(மேலும்....)
மாசி 04, 2011
சுமார் ஒரு
இலட்சம் மக்கள் பாதிப்பு
வடக்கு, கிழக்கு, மலையகம்: தொடரும் இயற்கையின் சீற்றம்
வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்க ளில்
மீண்டும் பெய்து வரும் அடை மழை காரணமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர்
பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப்
கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். இதேவேளை இம்மழை காரணமாகப்
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் நிவாரண நடவடிக்கைகளை வழங்க
அரசாங்கம் 10 கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனடிப்படையில் நிவாரண
நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின்
அதிகாரியொருவர் கூறினார்.(மேலும்....)
மாசி 04, 2011
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை
அரசாங்கம் வழங்கும்
இந்நாட்டு மக்களை தேக ஆரோக்கிய சீலர்களாக
நீண்ட ஆயுளுடன் நிம்மதியான வாழ்க்கையை நடத்துதவதற்கு உறுதுணை புரியக்கூடிய
தேசிய போஷாக்கு கொள்கையொன்றை சுகாதார பராமரிப்பு மற்றும் போஷாக்குத் துறை
அமைச்சு தயாரித்துள்ளது. நாட்டின் பொருளாதார விருத்தி மற்றும்
அபிவிருத்திக்கு பயன்வாய்ந்த பங்களிப்பொன்றை பெற்றுக்கொடுக்கக்கூடிய வகையில்
இலங்கையில் போஷாக்கு நிலையை உறுதி செய்வதே இத்திட்டத்தின் இலக்காகும். சமீப
காலமாக இலங்கையில் இடம்பெற்று வரும் பெருமழை, பெருவெள்ளம் போன்ற
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டிருக் கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்று
தற்காலிக இடைத்தங்கல் இருப்பிடங்களிலேயே வாழ்ந்து வருகிறார்கள்.
(மேலும்....)
மாசி 04, 2011
அரச குழு -
தமிழ்க் கூட்டமைப்பு நேற்று சந்திப்பு
அரசாங்கக் குழுவும் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பும் நேற்று மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின. இந்தச்
சந்திப்பு மிகவும் சினேகபூர்வமாக இருந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. மீள்குடியேற்றம்,
உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் நீண்ட நாள் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்
தொடர்பிலும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என அவர்கள் தெரிவித்தனர்.
இதே வேளை, அதனைத் தொடர்ந்து அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான
பேச்சுவார்த்தைகள் ஆரம்பமானது எனவும் அது தொடர்பான விடயங்கள் தொடர்ந்து
வரும் கூட்டங்களிலும் பேசப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அடுத்த சுற்று
பேச்சுவார்த்தை மார்ச் மாத முதலாம் வார காலப் பகுதியில் இடம் பெறும் என
அவர்கள் தெரிவித்தனர்.
மாசி 04, 2011
எந்திரன்
இரண்டாம் பாகம்... உருவாவதாக தகவல்
ரஜினி- ஷங்கர் கூட்டணியில் வெளியாகி பெரும்
வெற்றியையும் வசூலையும் குவித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் ரோபோ 2
எனும் பெயரில் உருவாக விருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. எந்திரனை
உருவாக்கிய அதே குழு இந்த இரண்டாம் பாகத்திலும் தொடர்வதாகவும், சன்
பிக்சர்ஸ் பெரும் பொருட் செலவில் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. சன்
பிக்சர்ஸ் தரப்பில் இது குறித்துக் கேட்ட போது, ரஜினி- ஷங்கர் எப்போது
சொன்னாலும் நாங்கள் தயாரிக்க தயாராகவே உள்ளோம் என்றனர். ஷங்கர் இயக்கத்தில்
மீண்டும் நடிக்க தான் தயாராக இருப்பதாக ரஜினி ஏற்கெனவே கூறியுள்ளது
நினைவிருக்கலாம். இப்போது நண்பன் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்
ஷங்கர். வழக்கமாக அதிக நாட்கள் படப்பிடிப்பை நடத்தும் ஷங்கர், இந்தப் படத்தை
குறுகிய காலத்தில் உருவாக்கித் தரவிருக்கிறார். நண்பன் முடிந்ததும் ‘ரோபோ
2’ வேலைகளைத் தொடங்குவார் என்கிறார்கள்.
மாசி 04, 2011
An Open Letter to President Barack Obama
For thirty years, our government
has spent billions of dollars to help build and sustain the system the
Egyptian people are now trying to dismantle. Tens if not hundreds of
thousands of demonstrators in Egypt and around the world have spoken. We
believe their message is bold and clear: Mubarak should resign from
office and allow Egyptians to establish a new government free of his and
his family’s influence. It is also clear to us that if you seek, as you
said Friday “political, social, and economic reforms that meet the
aspirations of the Egyptian people,” your administration should publicly
acknowledge those reforms will not be advanced by Mubarak or any of his
adjutants. (more...)
மாசி 04, 2011
சமாதானத்திற்கான நோபல் பரிசுக்கு விக்கிலீக்ஸ் இணையத்தளம் சிபாரிசு
உலகின் இரகசியங்களை வெளிப்படுத் துவதில் சமீப காலமாக சாதனைகளை படைத்துவரும்
விக்கிலீக்ஸ் இணையத்தளம் 2011ம் ஆண்டின் நோபெல் சமாதான பரிசிற்கு சிபாரிசு
செய்யப்பட்டுள்ளது. இணையத் தளத்திற்கு வழங்கப்பட்ட இந்த உயர்ந்த
கெளரவத்திற்கு பின்னணியில் நோர்வே அரசியல் வாதிகள் இருந்ததாக
அறிவிக்கப்படுகிறது. நோர்வேயின் நோபெல் சமாதான பரிசுகளை தீர்மானிக்கும் குழு
விக்கிலீக்ஸ் இணையத்தளத்தை இதற்கு தெரிவு செய்யும் ஏனைய பெயர்களுடன்
இணைத்துக் கொள்வதென்ற தீர்மானத்தை இரு தினங்களுக்கு முன்னர் எடுத்தது.
(மேலும்....)
மாசி 03, 2011
பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை ஏன்? இணைக்க வில்லை?
(அ. விஜயன்)
இந்தக் கேள்வியானது பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களிடையே கவலையையும், இணைப்பு
பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை
முன்னணியை சேர்க்காமல் கழட்டி விட்டவர்கள் மேல் கோபத்தையும்
ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியில்
இருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான தோழர்சுரேஸ்,
தோழர்ஆனந்தன் ஆகியோர் தான் ஏன் சேர்க்கவில்லை என தெளிவுபடுத்த வேண்டும்
அடுத்தவர்கள் 'வாங்க' என்று சொல்வதை விட இவர்களுக்கு 'வாய்யா' என்று
சொல்லும் உரிமை உள்ளது. சேர்த்தால் ஆபத்து என யார் நினைத்ததார்களோ ஏனென்றால்
இவர்கள் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை சேர்ப்பதற்கு
வலியுறுத்தியிருக்கலாம். தோழர்களிடையே உள்ள கவலையும், கோபமும் நியாயமானது
என்ற காரணத்தாலும், ஒற்றுமையின் அவசியம் பற்றி இது வரை பேசி வந்தவர்கள்
பாசாங்கு செய்துள்ளதாகவே நினைக்க தோன்றுகிறது.
(மேலும்....)
மாசி 03, 2011
03.01.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல்
நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகளுக்கான சட்டத்தரணியுமான கௌரவ எம்.ஏ
சுமந்திரன் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம், ஜேர்மனிய
அரசியல் ஆய்வாளர் திரு .செ .ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ்
ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர்.
மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து
கொண்டு சிறப்பிக்கலாம்.
தொடர்புகளுக்கு: 00 44 208 9305313 00 44 208 9305313
or 078107063682
மாசி 03, 2011
'Mubarak, you're fired!'
Rally for freedom and democracy in Egypt and Tunisia
Saturday, February 5
Assemble at 1:00 p.m.
Queen's Park (south side)
TTC: Queen's Park
Nearest intersection: University
Avenue and College Street
March begins at 2:00 p.m.
(more....)
மாசி 03, 2011
இந்திய ஆண்கள்
வேலைக்கு போகும் பெண்களையே விரும்புகின்றனர்
இந்திய ஆண்களில் பெரும் பாலானோர், வேலைக்கு
போகும் பெண்களையே திருமணம் செய்ய விரும்புவதாக ஆய்வு ஒன்றில்
தெரியவந்துள்ளது. பெற்றோரால் ஏற்பாடு செய்து நடக்கும் திருமணங்களில்,
பெரும்பாலான ஆண்கள் எப்படிப்பட்ட பெண்களை விரும்புகின்றனர் என்பது குறித்து
இணைத்தளம் ஒன்று ஆய்வு நடத்தியது. அதில் பெரும்பாலான ஆண்கள் வேலைக்கு போகும்
பெண்களையே விரும்புவதாக தெரியவந்துள்ளது.
(மேலும்....)
மாசி 03, 2011
Long live the uprising of the Tunisian people!
The people´s revolt in Tunisia became a fire spark for our region and
has spread. It became a source of inspiration for the peoples and the
proletariat of the region and the world and a source of fear for the
fascist and reactionary dictatorships and the fake and formal bourgeois
democracy of the imperialists. The fire of freedom is growing in North
Africa, the Arab peninsula, Asia and the Balkans. The people of Tunisia
have destroyed the dictatorship of Ben Ali with the demands of bread,
freedom and justice. And now we experience a revolutionary period in
Tunisia. Doubtlessly, the development, new relations and balances of
power of this revolutionary process will be shaped and crystallized
according to the practical capacity and power of leadership, the
consciousness of the people and level of organization. (more...)
மாசி 03, 2011
வடக்கும்,
கிழக்கும் வளம்பெற்று வருகிறது
நாடெங்கிலும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள்
சூடு பிடிக்க ஆரம்பிக்கின்றன. தேர்தல்கள் ஆணையா ளர் திணைக்களம் கட்சி
வேட்பாளர்களுக்கும், சுயே ச்சை குழுக்களின் வேட்பாளர்களுக்கும் விருப்பு
வாக்கு களை பெறுவதற்கான இலக்கங்களை கொடுப்பதில் ஒரு சிறு தாமதம் ஏற்பட்டு
இருந்தாலும் தேர்தல் ஏற்பாடுகள் வேகமாக நடைபெறுகின்றன. வேட்பாளர்கள் பல்வேறு
இடங்களில் தங்கள் பிரசார காரியால யங்களை தேர்தல் சட்டத்தை உதாசீனம் செய்து
இப்போது திறந்த வண்ணம் இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையாளர் தயா னந்த திஸாநாயக்க பொலிஸாருக்கு விடுத்துள்ள பணிப்புரை
யில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனது வீட்டில் மாத்திரமே தேர்தல் பிரசார
காரியாலயங்களை திறப்பதற்கு சட்டபூர்வ மான அங்கீகாரம் இருக்கிறது.
(மேலும்....)
மாசி 03, 2011
Anti human smuggling Bill C-49 delivers golden promises to the terrorist
outfit LTTE
(By Albert George)
“Ocean Lady” and “Sun Sea” two
LTTE ships brought 564 refugees to Canada in the recent past. This
un-precedent action forced Canada to table a bill [C-49] to prevent
further human smuggling. To support this bill Conservatives obtained a
few letters from ethnic communities. One of them was from Peel Tamil
Community Centre issued by Balan Ratnarajah a member of LTTE’s
“Government in Exile” and he represents the World Tamil Movement Chapter
in Government in Exile. LTTE and World Tamil Movements are outlawed
associations in Canada. Later it turned out that Peel Tamil Community
Centre is not in operation and Balan Ratnarajah is not in favor of the
proposed bill C-49. In an interview Balan Ratnarajah revealed what
Minister Jason Kenney promised to them to obtain that support letter to
the bill. Indeed Balan Ratnarajah and few others had a private meeting
with the Minister of Citizenship and Immigration so it is very
interesting for all of us to see what Minister Jason Kenney promised to
the LTTEiers.
(more...)
மாசி 03, 2011
சங்கானையில் காணிகளை பகிர்ந்தளிக்க நடவடிக்கை
வலிகாமம் மேற்கு சங்கானை மத்தி ஜே. 181 கிராம உத்தியோ கத்தர் பிரிவல் நீண்ட
காலமாக வசித்துவரும் குடியிருப்பாளர்களின் வேண்டுகோளின் பேரில் அவர்களது
காணிப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் முகமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அஙகு
நேரடியாக விஜயம் செய்தார். ஏற்கனவே அக்குடியிருப்பு மக்கள் பிரதிநிதிகள்
கடந்த 18ம் திகதி அமைச்சரது யாழ். பணி மனைக்கு வருகை தந்து தமது
கோரிக்கையினைத் தெரியப்படுத்திய நிலையில் அமைச்சர் அப்பகுதிக்கு விஜயம்
செய்தார். இங்கு நடைபெற்ற சந்திப்பில் பிரதேச செயலாளரினால் பெறப்பட்ட
தகவல்களின் அடிப்படையில் இங்கு குடியிருப் போரில் ஏற்கனவே அனுமதிப் பத்திரம்
உள்ளோர்.
(மேலும்....)
மாசி 03, 2011
தமிழகத்தில்
காங்கிரஸ் தலைமையில் 3 வது அணி அமைக்க பரிசீலனை
டில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம்
முதல்வர் கருணாநிதி நடத்திய முதல் கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி
ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி பற்றி
காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யாததாலும், தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில்
மூன்றாவது அணி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி மேலிடம் பரிசீலனை
செய்து வருவதாலும் தி. மு. க., காங்கிரஸ் கூட்டணியில் பின்னடைவு
ஏற்பட்டுள்ளது.
(மேலும்....)
மாசி 03, 2011
பிரேஸில் -
ஆர்ஜன்டீனாவுக்கிடையில் அணு ஆயுத ஒத்துழைப்பு ஒப்பந்தம்
பிறேசில் தேசத்தின் ஜனாதிபதி டில்மா ரூஸோ
அயல்நாடான ஆஜன்டீனா ஜனாதிபதியுடன் அணுஆயுத ஒத்துழைப்பு தொடர்பான
சம்பந்தமாகவும் பால்நிலை சமத்துவம் பற்றியும் ஒரு ஒப்பந்தத்தை செய்து
கொண்டுள்ளது. ஆஜன்டீனாவின் ஜனாதிபதி கிறிஸ்டீனா கேர்ச்சனரை சந்தித்த இவர்
தங்கள் இருநாடுகளும் தென்னாபிரிக்க நாடுகளின் பலம்மிக்க பொருளாதார சக்தியை
கொண்டிருப்பதனால் இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு தாங்கள் தலைமைத்துவத்தை
அளிக்க வேண்டுமென்றும் கூட்டாக விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மாசி 03, 2011
Unusual year
This year we will experience 4 unusual dates....
1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11
.........
NOW go figure this out.... take the last 2 digits of the year you were
born plus the age you will be this year and it WILL EQUAL ....
111.......this is seriously true, try it.
மாசி 03, 2011
செப்டெம்பரின்
பின்னரே பதவி விலகுவேன்
-
ஹொஸ்னி முபாரக்
கடந்த 8 நாட்களாக நடந்த மக்கள் போராட்டத்தைத்
தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் தேர்தல் மூலம் தெரிவு
செய்யப்படுபவரிடம் சட்டப்படி அதிகாரத்தைக் கையளிப்பதாக கடந்த செவ்வாயன்று
இரவு ஹொஸ்னி முபாரக் அறிவித்திருந்தார். நாட்டில் வேலைவாய்ப்பு
குறைந்துள்ளது. இதற்கு காரணமான அதிபர் பதவியை விட்டு விலக வேண்டுமென்று கோரி
கடந்த ஒரு வார காலமாக ஆர்ப் பாட்டக்காரர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி
வருகின்றனர். இந்நிலையில் அதிபர் முபாரக் தொலைக்காட்சியில் தோன்றி பேசினார்.
(மேலும்....)
மாசி 03, 2011
எகிப்தில் வன்முறையின்றி அமைதியாக ஆட்சி அதிகாரம்
கைமாற வேண்டும் -
ஒபாமா
எகிப்தில் வன்முறையின்றி அமைதியாக ஆட்சி
அதிகாரம் கைமாற வேண்டுமென்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா எகிப்து
ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கிற்கு அனுப்பி வைத்துள்ள செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் காலதாமதமின்றி உடடினயாக நடைபெற
வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எகிப்திய ஜனாதிபதி தாம் இன்னும்
ஆறு மாதங்களுக்கு, பதவியில் வீற்றிருப்பேன் என்று விடுத்த அறிவித்தலை
அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதியின் இந்த செய்தி அமைகிறது.
(மேலும்....)
மாசி 02, 2011
வடபகுதியில் மீண்டும் அமைதி திரும்பும்
வடபகுதியில் இன்று இடம்பெறும் விரல்விட்டு
எண்ணக்கூடிய சில வன்முறைகள் எக்காரணம் கொண்டும் மக்களின் உரிமைகளை பறித்து
விடுவதற்கு எமது அரசாங்கம் இடமளிக்காது. நாம் வட க்கில் சட்ட விரோதமாக
ஆயுதம் வைத்திருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய அந்தஸ்து அதிகாரம்
ஆகியவ ற்றை பொருட்படுத்தாமல் கைது செய்து அவர்களுக்கு சட்டபடி தண்டனையை
பெற்றுக் கொடுப்போம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
கூறியிருக்கிறார். அரசாங்கம் இவ்விதம் வடபகுதியில் மீண்டும் வன்முறையற்ற சமு
தாயமொன்றை அமைப்பதற்கு இப்போது எடுத்துவரும் தீவிர பாதுகாப்பு
ஏற்பாடுகளினால் இன்னும் சில தினங்களில் இந்த வன்முறைகள் சூரியனைக் கண்ட
பனிபோல் இருந்த இடம் தெரி யாமல் மறைந்துவிடும் என்று நாட்டு மக்கள் அனைவரும்
நம் பிக்கையுடன் இருக்கலாம்.(மேலும்....)
மாசி 02, 2011
The Grand Gala 18th Anniversary of New Year &
Pongal celebration of Sri Lankan Tamil Community of Indian Origin
- Canada (Pudhuvai
N.Raman)
In Toronto all Hindu Temples,
various social community organizations and families celebrated this year
Pongal Festival in fitting manner, which attracted other ethnic
communities as well. On Pongal day everybody greet each other and offer
Pongal strengthening the mutual and friendly relationship among them.
Sri Lankan Tamil Community of Indian Origin – Canada, a charitable
social organization which has more than 300 Members, celebrated its 18th
anniversary New Year and Pongal - 2011 with varieties of cultural
events, held at Korean Cultural Centre on 15th January 2011.
(more....)
மாசி 02, 2011
சென்னை முதல் டெல்லி வரை நடைபயணம்!
(ஈழத் தமிழர் விடுதலைக்கான நடைபயணத்தில்
ஈ.என்.டி.எல்.எப். யினரால் தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வழங்கப்பட்ட
பிரசுரத்தின் தமிழாக்கம்!)
இலங்கை தமிழர்களாகிய நாங்கள் இரண்டு முக்கிய
கோரிக்கைகளை முன்வைத்து சென்னை முதல் டெல்லிவரை நடைபயணம் மேற்கொண்டுள்ளோம்.
(01) மதிப்புமிக்க இந்தியப் பிரதமராக இருந்த ஸ்ரீ ராஜீவ்காந்தி அவர்கள்
ஏற்படுத்திய “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.
(02) இலங்கையில் தமிழர்களின் பூர்விகப் பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு
மாகாணங்களில் சிங்கள அரசாங்கத்தால் அத்துமீறி குடியேற்றப்பட்ட சிங்களக்
குடியேற்றவாசிகளை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்.
(மேலும்....)
மாசி 02, 2011
ஐரோப்பிய
நாடுகளில் முஸ்லிம்கள் சனத்தொகை உயர்வு
ஸ்பெயின் தேசத்தில் இருக்கும் முஸ்லிம்களின்
சனத்தொகை தற்போது வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் 2030 ஆம் ஆண்டில் அது
82 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் அறிவிக்கப்படுகிறது. ஸ்பெயினில் தற்போது
கடந்த 7 ஆண்டு காலமாக முஸ்லிம் மதத்தை தழுவும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக
இருப்பதாக அறிவிக்கப் படுகிறது. இது போன்று ஐரோப்பிய நாடுகளிலும்
முஸ்லிம்களின் எண்ணிக் கையும் அதிகரித்து வருவதாக அறி விக்கப்படுகிறது.
ஸ்பெயினில் மாத்திரம் கடந்த 7 ஆண்டு காலத்தில் வேற்று மதங்களை சார்ந்த 20
ஆயிரம் பேர் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்கள்.
மாசி 02, 2011
கடலில் மூழ்கும்
துபாய் தீவுகள்
துபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி
வருகின்றன. எண்ணெய் வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த
தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஹோட்டல்கள், விடுதிகள், விண்ணை
முட்டும் கட்டடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின்
நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே இஙகுள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக
மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள்
கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால்
துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை
விடுத்துள்ளனர். தீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க
கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே இங்கு நடத்தி வரும் தொலை
நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.
மாசி 02, 2011
உஷாராகும்
சுங்கத் திணைக்கழகம்
யாழ். சுங்கத் திணைக்களத்துக்கு தெற்கிலிருந்து 19 அதிகாரிகள் இடமாற்றம்
யாழ்ப்பாண சுங்க திணைக்களத்துக்கு தென்னிலங்கை பணியாளர்கள் பத்தொன்பது பேர்
இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தமது பணிகளை
யாழ்ப்பாணத்தில் பொறுப்பேற்றுள்ளனர். யாழ். மாவட்ட சுங்கத் திணைக்களத்தில்
பணியாற்றியவர்களில் நால்வர்தான் பதவியில் இருப்பதால் வெற்றிடமாகவுள்ள
இடங்களுக்கு இவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சுங்கப் பணிகள்
கிரமமாக நடைபெறுவதால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் உறவுகள்
யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படும் பொருட்களில் சுங்கப் பரிசோதனை உடன்
நடத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து
வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்களும் சுங்கப் பரிசோதனையின் பின் ஒரே
நாளில் கொழும்புக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
மாசி 02, 2011
தி.மு.க கூட்டணியில் பா.ம.க சேர 35 ஆசனங்கள் கேட்கின்றது.
தி. மு. க. கூட்டணியில் பா. ம. க இடம்பெறும் என முதல்வர் கருணாநிதி,
டில்லியில் கடந்த ஞாயிறன்று அறிவித்ததும், நெய் வேலியில், ‘கூட்டணி குறித்து
இன் னும் முடிவெடுக்கவில்லை’ என பா. ம. க. நிறுவனர் ராமதாஸ் கருத்து
தெரிவித்தார். தி. மு. க. அல்லது அ. தி. மு. க. கூட்டணியில் குறைந்தது 35
தொகுதிகள் வேண் டும் என பேரம் பேசுவதற்காக ராமதாஸ் ‘இரட்டை வேடம்’ அரங்
கேற்ற முடிவு செய்துள்ளார். ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடி வின் அடிப்படையில்
தி. மு. க. கூட்டணியில் பா. ம. க. இடம் பெற்றுள்ளது என முதல்வர் கருணா நிதி
டில்லியில் கடந்த ஞாயிறன்று அறிவித்தார். உடனே, நெய்வேலியில் நடந்த பா. ம.
க. இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட ராம தாஸ்,
‘கூட்டணி குறித்து இன்னும் நாங்கள் முடி வெடுக்கவில்லை’ என கருத்து
தெரிவித்தார்.
(மேலும்....)
மாசி 02, 2011
கிளிநொச்சி,
நாச்சிக்குடா கடற்றொழிலாளருக்கு படகுகள்
வன்னிப் பிராந்தியத்தில், மீள்
குடியமர்ந்துள்ள மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் திட்டத்துக்காக
முன்னெடுக்கப்பட்டு வரும் சமுதாய செயல் திட்டங்களின் கீழ் கிளிநொச்சி
நாச்சிக்குடா கடற்றொழிலாளர்களுக்கு 25 படகுகளும் 25 வெளி இணைப்பு
யந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம்
ஐரோப்பிய யூனியனின் அனுசரணையுடன் முன்னெடுத்து வரும் கடற்றொழில்
அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி செயலகம்,
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களம், பூநகரி
கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் ஆகியவை இணைந்து பயனாளிகளை
தெரிவு செய்து இந் நிவாரண உதவியை வழங்கியுள்ளனர். இத்திட்டம், படிப்படியாக
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் பல பகுதிகளிலும் நடைமுறைப்படுத்
தப்படவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மாசி 02, 2011
வெள்ளப் பாதிப்புக்கு பின்னர் அவுஸ்திரேலியாவை சூறாவளி தாக்கும் ஆபத்து
நெருங்கிக் கொண்டிருக்கிறது
அவுஸ்திரேலிய கண்டத்தை கட்றினா என்ற சூறாவளி நெருங்கிக் கொண்டிருப் பதனால்
செவ்வாய்கிழமையன்று உல்லாச பிரயாணிகள் விரும்பிச் செல்லும் நகரங்களில்
இருந்தும் கரும்பு பயிர்ச்செய்கை, நிலக்கரி சுரங்கங்கள் அதிகமாக இருக்கும்
நகரங்களுக்கும் சூறாவளியினாலும் அதையடுத்து ஏற்படக் கூடிய பெரு
வெள்ளத்தினால் பாதிப்புக்குள்ளாக இருக்கும் மக்களை அந்நாட்டு அரசாங்கம்
பாதுகாப்பான இடங்களுக்கு வெளி யேற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு
கரையோரத்தில் உள்ள நகரங்களில் மணித்தியாலயத்திற்கு 175 மைல் வேகத்தில்
வீசவிருக்கும் இந்த கட்றினா சூறாவளியி னால் பாதிக்கப்படவுள்ளனர்.
இங்கிருந்து சூறாவளி நகர்ந்து சென்று அடுத்த வியா ழனன்று அவுஸ்திரேலியாவின்
குயின்ஸ் லன்ட் மாநிலத்தின் கரையோரப் பகுதி யையும் தாக்கி சேதப்படுத்தும்
என்று அறிவிக்கப்படுகிறது.
(மேலும்....)
மாசி 02, 2011
மியன்மாரில்
20 ஆண்டுகளுக்கு பின்னர் கூடிய பாராளுமன்றம்
மியான்மர் வரலாற்றில், 20 ஆண்டுகளுக்குப்
பின் நேற்று முன்தினம் முதன் முறையாக பாராளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.
இந்த முதல் கூட்டத்தில், நாட்டின் புதிய அரசியல் சாசனம் அமுலுக்கு கொண்டு
வரப்பட்டது. 50 ஆண்டுகளாக நாட்டில் நிலவி வந்த இராணுவ ஆட்சி முடிவுற்றதாக
அறிவிக்கப்பட்டது. அதேநேரம் நாடு முழுவதும் நேற்று முன்தினம் 14 மாகாண சட்ட
சபைகளும் முதன் முறையாகக் கூடின. மியான்மரில் 1962ல் இருந்து இராணுவ ஆட்சி
நடந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பர் 7ம் திகதி பொதுத் தேர்தல் நடந்தது.
இதில் சூங் சாங்சூச்சியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி கலந்துகொள்ளவில்லை.
தேர்தல் முடிவுகளில் இராணுவத் தலைமையால் இயக்கப்படும் ஐக்கிய ஒன்றுமை
மற்றும் மேம்பாட்டுக்கட்சி (யு.எஸ்.டி.பி.,) பெரும்பான்மை வெற்றி பெற்றதாக
அறிவிக்கப்பட்டது.
(மேலும்....)
மாசி 02, 2011
வசாவிளான் மகா வித்தியாலய புனரமைப்புக்கு நிதி
மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்திற்கு வடமாகாண
ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி அண்மையில் விஜயம் செய்து வித்தியாலய
மாடிக்கட்டடத்தைப் புனரமைப்புச் செய்ய 5 மில்லியன் ரூபாவை அதிபர் எஸ்.
கனகராசா விடம் வழங்கினார். ஆளுநர் தனது விஜயத்தின் போது போரினால் சேதமடைந்த
மாடிக்கட்டடத்தைப் பார்வையிட்டு அதனை உடனடியாகப் புனரமைத்து அக்கட்டடத்தில்
வகுப்புகளை நடத்த ஏற்ற ஒழுங்களைச் செய்யுமாறு அதிபரைக் கேட்டுக் கொண்டார்.
மாடிக்கட்டட புனரமைப்பு வேலை களை பாடசாலை அபிவிருத்திச் சங் கமே மேற்கொள்ள
வேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், வித்தியாலய அபிவிருத்திக்கு மேலும் நிதி
ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார். அதேவேளை மருதனார் மட்டத்தில்
இயங்கி வரும் வலி காமம் வலயக் கல்வித் திணைக்கள த்திற்கும் ஆளுநர் விஜயம்
செய்து வலயத்தின் தேவைகள், குறை பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன்
அவற்றை நிவர்த்திப் பதாகவும் உறுதி அளித்தார்.
மாசி 02, 2011
விக்கி லீக்ஸ் இணையத்தளத்தை நிரந்தரமாக முடக்கினால்
மேலும் பல தகவல்கள் வெளிவரும் -
அசாஞ்ச்
விக்கி லீக்ஸ் இணைய தளத்தை நிரந்தரமாக
முடக்க நேரிட்டால், அதிலுள்ள அளவற்ற தகவல்களின் ரகசியக் குறியீடுகளைத்
திறக்கும் விதங்களை வெளியிட வேண்டி வரும் என்று விக்கி லீக்ஸ் இணையத்தள
நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் எச்சரித்துள்ளார். ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனர்
அசாஞ்ச், இது குறித்து நேற்று சி. பி. எஸ். ‘டி.வி’க்கு அளித்த பேட்டியில்
கூறியிருப்பதாவது, விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் அடங்கியுள்ள, வெளிவராத
அளவற்ற இரகசிய தகவல்களின் ஆதாரநகல்கள், ஒரு இலட்சம் பேரிடம் அளிக்
கப்பட்டுள்ளன. அந்தத் தகவல்களுக்கான இரகசிய குறியீடுகளும் அவர்களுக்குத்
தெரியும். விக்கி லீக்ஸ் தொடர்பாக, பலர் கைது செய்யப்படுவதோ, தாக்கப்படுவதோ
தொடர்ந்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம். அந்தக் குறியீடுகளை மாற்றி
தகவல்களை வெளிக்கொண்டு வருவது எப்படி என்பதையும் வெளியிட வேண்டி வரும்.
நாங்கள் இல்லாவிட்டாலும் வேறு சிலர் இந்தப் பணியை மேற்கொண்டு தொடர்ந்து
செய்வர். இவ்வாறு ஆசாஞ்ச் தெரிவித்தார்.
மாசி 02, 2011
வளைகுடாவின் மிகப் பெரிய எண்ணெய் ஆலை ஈரானில்
வளைகுடா பகுதுயின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அராக் பகுதியில்
தொடங்குகிறது ஈரான். நாளொன்றுக்கு 16 மில்லியன் பெரல்கள் கச்சா எண்ணெயைச்
சுத்திகரிக்கும் திறன் கொண்ட பிரமாண்ட ஆலை இது. உலகின் முன்னணி எண்ணெய்
உற்பத்தி நாடாகத் திகழ்கிறது ஈரான். அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின்
பல்வேறு தடைகளையும் ஈரான் இன்று தாக்குப்பிடி க்கக் காரணம் இந்த எண்ணெய்
வளமும் அதை ஈரான் பயன்படுத்தும் முறையும்தான். கடந்த டிசம்பர் வரை 5
பில்லியன் பரல்கள் இருப்பாகக் கொண்டிருந்தது ஈரான்.
(மேலும்....)
மாசி 02, 2011
விண்வெளியில் வேற்று கிரக மனிதர்கள் இல்லை நிபுணர்கள்
அமெரிக்காவில் உள்ள ஹார்வேடு பல்கலைக்கழக விண்வெளி விஞ்ஞானி ஹோவர்ட் அமித்,
வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவும், அவர்கள் பூமிக்கு வந்து மனிதர்களைத்
தாக்கும் சூழ்நிலையை நிலவும், என்றும் கருத்துத் தெரிவித்து இருந்தார்.
இதற்கு விண்வெளி வீரர் ஒருவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். விண்வெளியில்
வேற்று கிரக மனிதர்கள் இல்லை. நாங்கள் மட்டுமே தங்கியிருந்து பரிசோதனை
நடத்தி வருகிறோம். ஆனால் விண்வெளியில் பூமியைப் போன்று பல கிரகங்கள் உள்ளன.
அங்கு மனிதர்கள் வாழ முடியாத சூழ்நிலை உள்ளது என்றார்.
மாசி 01, 2011
எகிப்து
வேண்டுமா? முபாரக் வேண்டுமா?
எகிப்து அதிபர் ஹொஸ்னி முபாரக் இன்னும் எட்டு
நாட்களுக்குள் பதவி விலக வேண்டும் என்று எல் பரேடி தலைமையிலான
எதிர்க்கட்சிக் கூட்டணி கெடு விதித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த முழு
அடைப்பை அடுத்து இன்று 10 இலட்சம் பேர் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தப்
போவதாகவும் அக்கூட்டணி அறிவித்துள்ளது. அதோடு, “எகிப்து வேண்டுமா? முபாரக்
வேண்டுமா?” என்று இராணுவத்திடம் அது கேள்வி எழுப்பியுள்ளது. தாடர்ந்து இன்று
10 இலட்சத்துக்கும் அதிகமான பேர் பங்கேற்கும் 10 இலட்சம் பேர் பேரணிக்கு
இக்கூட்டணி நேற்று அழைப்பு விடுத்துள்ளது. மேலும், அதிபர் முபாரக்கின்
உத்தரவுப்படி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவத்திடம், “எகிப்து
வேண்டுமா? முபாரக் வேண்டுமா? உடனடியாக முடிவெடுங்கள்” என்றும் கூட்டணி
கேள்வி எழுப்பியுள்ளது.
(மேலும்....)
மாசி 01, 2011
அரசசார்பற்ற அமைப்புக்கள் குறித்து அவதானமாக இருத்தல் அவசியமாகும்
இங்கு வந்து மக்களுக்கு பல்வேறு துறைகளில்
பணிபுரிந்து நாட்டின் மேம்பாட்டிற்காக உழைக்கிறோம் என்ற போர்வை யில் இயங்கி
வரும் சில அரச சார்பற்ற அமைப்புக்கள் உண்மை யிலேயே இலங்கைக்கு சர்வதேச
ரீதியில் அவப்பெயரை ஏற்படுத் தக் கூடிய முறையில், செயற்பட்டு வருவது
குறித்து, அரசாங்கத் தின் அவதானம் இப்போது திரும்பியுள்ளது. சுனாமி
அனர்த்தத்தின் போதும் இத்தகைய சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள்
காளான்களைப் போன்று நூற்றுக்கணக்கில் நாடெங் கிலும் தோன்றின.
(மேலும்....)
மாசி 01, 2011
மன்னாரில்
88,916 பேர் வாக்களிக்கத் தகுதி
மன்னார் மாவட்டத்தில் நடைபெறவுள்ள
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 88 ஆயிரத்து 916 பேர் வாக்களிக்கத்
தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருக்கும்
அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இதனடிப்படையில் மன்னார் பிரதேச
சபைக்கு 24 ஆயிரத்து 658 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 16 ஆயிரத்து
421 பேரும், முசலி பிரதேச சபைக்கு 13 ஆயிரத்து 151 பேரும், மாந்தை மேற்கு
பிரதேச சபைக்கு 18 ஆயிரத்து 707 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றிருக்கின்றனர்.
இதேவேளை மன்னார் நகர சபைக்கு 15 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத் தகுதி
பெற்றிருப்பதாக மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. மன்னார்
தேர்தல் திணைக்கள அலுவலகம் தேர்தல்கள் தொடர்பான புள்ளி விபரங்கள் அடங்கிய
கையேடுகளை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கின்றமை
குறிப்பிடத்தக்கது.
மாசி 01, 2011
ஒலி வேறு ஓசை
வேறு
தமிழர்கள் வரலாறு உருவாவதற்கு முன்பே
வாழ்ந்தவர்கள். இக் கருத்தைக் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன்
தோன்றிய மூத்தகுடி என்ற வழக்கு வலியுறுத்துகின்றது. தொடக்கக் காலத் தில்
முதிர்ச்சியுள்ள வளர்ச்சி நிலையை எட்டியிருந்த தமிழர், தம் மொழியை இயல்
தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என மூவகைப்படுத்தி வளர்த்து வந்தனர். இயல்,
இசை, நாடகம் என் னும் முத்தமிழ் பற்றியும், தமிழரின் வாழ்க்கை நிலை
பற்றியும் அறிந்து கொள்வதற்குத் தமிழிலக்கியங்கள் பெரிதும் துணை புரிகின்றன.
தமிழர் கள் முத்தமிழோடு கலை மற்றும் கலா சாரத்திலும் சிறந்து விளங்கிய
சிறப்பை யும் இலக்கியங்கள் தெளிவாக்குகின்றன. எனவே இலக்கியங்களே தமிழர் தம்
கலை மற்றும் கலாசாரம் பற்றி அறிய உதவும் முதற் சாதனங்களாக அமை கின்றன.
(மேலும்....)
மாசி 01, 2011
வற்றாப்பளை அம்மனுக்கு ஐந்து அடுக்கு இராஜகோபுரம்
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு ஐந்தடுக்கு இராஜகோபுரம்
அமைப்பு திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திலிருந்து
வரவழைக்கப்பட்ட சிற்ப சாஸ்திரிகளும் மேஸ்திரிகளும் கோபுர அமைப்பு பணிகளில்
ஈடுபட்டு வருகின்றனர். கோடிக்கணக்கான நிதி முதலீட்டில் மேற்கொள்ளப்படும்
திருப்பணி வேலைகள் பங்குனி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனைத்
தொடர்ந்து கோபுரவிழாவும் ஆலய கும்பாபிஷேகத்தையும் நடத்த ஆலய பரிபாலன
சபையினர் திட்டமிட்டுள்ளனர். யுத்த காலத்தில் இந்த ஆலயத்திற்கு பாதிப்பு
ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
மாசி 01, 2011
வானத்தில் புதிய சூரியன் தோன்றும் -
விஞ்ஞானிகள்
வானில் அடிக்கடி அதிசயங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் வானில் மிகவும்
சக்தி வாய்ந்த வெளிச்சம் ஏற்பட உள்ளது. பூமி தோன்றியதில் இருந்து இதுவரை
அதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டிருக்காது என்ற நிலை உருவாகும். அந்த வெளிச்சம்
இரவை பகல் போன்று ஆக்கும். அது ஒரு வாரம் முதல் 2 வாரங்கள் வரை ஏற்படும்
வாய்ப்பு உள்ளது. அதிசக்தி வாய்ந்த விண்மீன் கூட்டம் பூமியில் இருந்து 640
வெளிச்சம் ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இவை சிவப்பு நிறத்தில் இராட்சத
வடிவிலானவை. இவற்றின் ஆயுட் காலம் முடியும் போது அவை கூட்டம் கூட்டமாக
வெடித்துச் சிதறும். இவ்வாறு வெடித்துச் சிதறும் போது வானில் சிவப்பு
மற்றும் மஞ்சள் நிறத்தில் வெளிச்சம் தோன்றும். இது மற்றொரு சூரியன் புதிதாக
உதிப்பதை போன்ற தோற்றத்தை உருவாக்கும். இச்சம்பவம் இந்த ஆண்டு இறுதியில்
ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் அடுத்த 10 இலட்சம்
ஆண்டுக்குள்தான் உண்டாகும். இந்த தகவலை அவுஸ்திரேலியாவின் தெற்கு
குவின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவர் பேராசிரியர்
பிராட்கார்டர் தெரிவித்துள்ளார்.
மாசி 01, 2011
Study in Melbourne at NMIT
– use the
opportunity
Study programs offered: Music to
Engineering
*Agriculture and Management
*Arts
*Building Environment
*Business
*Computing
*Engineering
(more....)
மாசி 01, 2011
சுரேஷ் விடும் 'றீல்'
தமிழ்க் கட்சிகளுடனான கூட்டு, இறுதி இலக்கிற்காக அமைக்கப்படும் தளம் வெறுமனே
தேர்தலை நோக்கமாகக் கொண்டதல்ல-சுரேஷ்
பிரேமச்சந்திரன்!
தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் தமிழ்த்
தலைவர்கள் ஒன்றிணைந்து ஒருமித்த குரலில் பேச வேண்டும் என்பதன் அடிப்படையில்
தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடன் நாம் பேசிக்கொண்டிருந்தோம். அந்த நிலையில்
தான் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலும் அறிவிக்கப்பட்டது. எனவே அந்த
அரங்கிலிருந்த ஒரு சாரார் தாம் அரசுடன் இணைந்து போட்டியிடுவதெனவும் சிலர்
தாம் தனித்துப் போட்டியிடுவதெனவும் தீர்மானித்தனர். இன்னுமொரு சாரார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட விரும்பினர்.
அதனடிப்படையில் புளொட் அமைப்பினருடனும், தமிழர் விடுதலைக் கூட்டணியுடனும்
தேர்தலுக்காக மட்டுமல்லாமல் எதிர்காலத்திலும் இணைந்து செயற்படுவதென்ற
தீர்மானத்திற்கு வந்தோம். இதற்கு முன்பாக பாராளுமன்றத் தேர்தல் காலத்திலும்
தலைவர் இரா.சம்பந்தன், ஆனந்தசங்கரி மற்றும் சித்தார்த்தன் ஆகியோரை எம்மோடு
இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். எனினும் அது அன்று
நிறைவேறவில்லை.
(மேலும்...)
மாசி 01, 2011
சீனாவில் லஞ்சம் வாங்கியவருக்கு மரண தண்டனை
சீனாவில் வடகிழக்கு மாநிலமான லியோனிங்கில் சட்டமன்ற உறுப்பினர் சாங்யாங் 56
வயதான இவர் லஞ்சம் வாங்கியதற்காக இவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை
விதித்துள்ளது. மாகாண சட்டசபையின் நிலைக்குழுவில் துணைத்தலைவர் பதவி வகித்த
சாங்யாங் தனி நபர்கள் 23 பேருக்கும் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்
அரசாங்க ஒப்பந்தங்களை வாங்கிக்கொடுத்ததுடன் சிலருக்கு கடன் மற்றும் பதவி
உயர்வுகளையும் வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக 16 இலட்சம் டொலர்களுக்கு
பெறுமதியான சீன நாணயங்களை லஞ்சமாக வாங்கியிருக்கிறார். லஞ்சப் புகார் இவர்
மீது சுமத்தப்பட்டதையடுத்து அதிகாரிகள் இவரை விசாரணைக்கு உட்படுத்தினர்.
அப்போது அவர் எதனையும் மறைக்கவில்லை. குற்றத்தை ஒப்புக்கொண்டார். லஞ்சப்
பணத்தில் செலவழித்தது. போக மிச்சத்தை ஒப்புக்கொண்டார். சீனாவில் அரச
அதிகாரிகள் லஞ்சம் வாங்கினால் மரணதண்டனை விதிக்கப்படும். சிறையிலும் அவர்
திருந்தி நல்லவராக நடந்து கொண்டால் மரண தண்டனையில் இருந்து அவர் தப்புவதற்கு
வாய்ப்பு இருப்பதாகத் தெரியவருகிறது.
மாசி 01, 2011
Corruption
This evening, (31 Jan 11) CBC radio broadcast an interview with a New
York journalist Dexter Philkins (spelling may be incorrect). Dexter is
based in Afghanistan and is well versed in things there, official and
actual. He explained how corrupt the whole puppet regime there is, from
Hamid Karzai, his brother, the banks and all the way down to foreign
companies a la Blackwater. I bet you CNN never told you that uncle Sam
is financing the Taliban from the money IRS extorts from you, the
taxpayer.
(more....)
மாசி 01, 2011
தெற்கு சூடான் தனிநாடு ஆகின்றது
தெற்கு சூடானில் நேற்று நடைபெற்ற மக்கள் அபிப்பிராய தேர்தலை அடுத்து தெற்கு
சூடான் வடக்கு சூடானில் இருந்து பிரிந்து சுதந்திரத்தை பிரகடனம் செய்வதென்ற
தீர்மானத்தை தன்னிச்சையாக எடுத்துள்ளது. தெற்கு சூடானின் தலைநகரமான ஜுபாவில்
வடக்கு சூடானில் இருந்து பிரிந்து விடுவது பற்றிய தீர்மானம் எடுப்பதற்காக
நடத்தப்பட்ட அபிப்பிராய வாக்கெடுப்பில் இந்த யோசனையை ஆதரித்து 98.83
வாக்குகள் கிடைத்ததை அடுத்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அதன் பின்னர்
தெற்கு சூடான் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் கரகோசம் செய்து ஆடியும்
பாடியும் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
(மேலும்...)
மாசி 01, 2011
On getting lost among winners and losers
(by Malinda Seneviratne)
When the LTTE was militarily
crushed, there was visible anguish among certain sections of the Colombo
elite. There was horror expressed by some over something they chose to
call ‘triumphalism’. What most of the nation and especially the Sinhala
Buddhist majority took as a decisive victory over terrorism and
therefore an overwhelming cause for celebration on account of the
freedom of movement and freedom from fear, some took as untrammeled joy
over what they thought was a defeat of the Tamil community. (more...)
மாசி 01, 2011
வடகொரியாவின்
சமாதான முயற்சிகளை தென்கொரியா நிராகரிப்பு
அடுத்த பத்து நாட்களுக்குள் தங்களுடன்
இராணுவ நடவடிக்கைகள் பற்றிய பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று வடகொரியா
விடுத்த கோரிக்கையை தென்கொரியா நிராகரித்துள்ளது. கடந்தாண்டு இரு நாடுகளின்
எல்லையில் உள்ள ஒரு தீவின் மீது வடகொரியா மேற்கொண்ட தாக்குதல் குறித்து
பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காகவே அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த சமரச
பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டுமென்று வடகொரியா கேட்டுக் கொண்டது. இரண்டு
கொரியாக்களும் தங்களுக்கிடையில் இருந்து வரும் பகைமை உணர்வை சமாதானமாக
தீர்த்துக் கொள்வதற்காக இராணுவ மற்றும் அரசியல் மட்டத்திலான
பேச்சுவார்த்தைகளை இம் மாதம் 11ம் திகதியன்று ஆரம்பிப்பதென்று எடுத்த
தீர்மானமே தென்கொரியாவின் நிராகரிப்பினால் செயல் இழந்துள்ளது. தென்கொரியாவை
அமெரிக்காவும், வடகொரியாவும் சீனாவும் பகிரங்கமாக ஆதரித்து வருகின்றன. இந்த
கொரிய தீப கற்பம் உலகின் பொருளாதாரத்தில் ஆறில் ஒரு பங்கை தன்னகத்தே
கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.