Contact us at: sooddram@gmail.com

 

செப்ரம்பர 2014 பதிவுகள

செப்ரம்பர் 30, 2014

ஜெயலலிதாவின் கோரிக்கை ஏற்பு

ஜாமீன் மனு மீது நாளை விசாரணை!

ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள கர்நாடக உயர் நீதிமன்றம், நாளை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கடந்த 27ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இதனையடுத்து, தீர்ப்புக்கு எதிராக  ஜெயலலிதா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு  தாக்கல் செய்திருந்தார். மேலும் ஜாமீன் கேட்டும் மனு  தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனுவை இன்று விசாரித்த விடுமுறைகால நீதிபதி ரத்னகலா, மனு மீதான விசாரணையை அக்டோபர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். ஆனால், மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை நாளையே விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற  பதிவாளர் தேசாய், நாளை இந்த வழக்கை விசாரிக்க பட்டியலிட்டுள்ளார். விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி ரத்னகலாவே இம்மனுவை விசாரிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே,  கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பட்டேலை, பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா இன்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடந்தது. ஜெயலலிதா  ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளரை நீதிபதி மைக்கேல் டி குன்ஹா சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாய்மை வெல்லட்டும்!

இதுவரையிலான ஜெயலலிதாவின் எழுச்சிகள், வீழ்ச்சிகளோடு பட்டியலிட்டு ஒப்பிடக் கூடிய விஷயம் அல்ல இது. அதேபோல, ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு அரசியல் தலைவர் சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இதை அணுகுவதும் சரியான வழிமுறை அல்ல. இந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் போக்கோடு ஒப்பிட்டு நாம் அணுக வேண்டிய விவகாரம் இது. இந்திய அரசியலைச் செல்லரிக்கும் மிகப் பெரிய புற்றுநோயாக உருவெடுத்துவருகிறது ஊழல். அரசியல் வர்க்கத்துக்கு இணையாக அதிகார வர்க்கமும் ஊழலில் திளைக்கிறது. நாட்டின் எந்த மாநிலமும் ஊழலுக்கு விதிவிலக்கானதாக இல்லை. அறத்தின் மையமாக இருக்க வேண்டிய அமைப்புகளும், அதைப் பாதுகாக்க வேண்டிய மனிதர்களும் நெறி பிறழும்போது, சாதாரணக் குடிமக்கள் செய்வதறியாது நிற்கிறார்கள். ஒட்டுமொத்த அமைப்பின் மீது மட்டுமல்லாமல், அறத்தின் மீதே நம்பிக்கையற்றவர்களாக மாறிப்போகிறார்கள். (மேலும்....)

ஜனாதிபதி தேர்தல் குறித்து கலந்துரையாடல்

அடுத்தவருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறலாம் என பரவலாக கருத்துக்கணிப்புக்கள் நிலவி வரும் நிலையில், அது தொடர்பில் ஆராய்வதற்கான விசஷட கலந்துரையாடலொன்று இன்றைய அமைச்சரவை கூட்டத்தை தொடர்ந்து இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுடன், ஜனாதிபதி மஹிந்த ராஜப்பக்ஷ இக்கலந்துரையாடலில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க்குக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினார். இந்நிலையிலேயே இவ்விசஷட கலந்துரையாடல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது. தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து இங்கு கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாண சபை தேர்தலையடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடுவது இதுவே முதல்தடவையாகும்.

நட்புக்கு மிகப்பெரிய விலை கொடுத்தாரா ஜெயலலிதா?

மன்னார்குடியில் வந்த குடும்பத்தினருடனான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நட்பு ஒரு நாள் அவரது அரசியல் வாழ்வை முடக்கும் என்ற அவரது அரசியல் விசுவாசிகள் பலரது கணிப்பை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது சனிக்கிழமை வெளியான தீர்ப்பு.

1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது நடந்த சம்பங்கள் குறித்து நன்கு அறிந்தவர்களின் குற்றச்சாட்டு சசிகலா அந்தக் காலகட்டத்தில் அரசியல் சாசனத்திற்கு அப்பாற்பட்டு அதிகாரங்களை கையில் வைத்திருத்தார் என்பதாகவே இருக்கும். சசிகலாவும் அவரது சகாக்களும் தமிழகம் முழுவதும் இடங்களை வாங்கிக் குவிப்பதில் மும்முரமாக இருந்தனர். (மேலும்....)

திரையுலகின் ஜெயலலிதா ஆதரவு 'மவுன' உண்ணாவிரதம்: ஒரு முழுமையான பார்வை

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு வருத்தம் தெரிவித்து, தமிழ்த் திரையுலகினர் செவ்வாய்க்கிழமை மவுன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். சென்னை - சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. (மேலும்....)

செப்ரம்பர் 29, 2014

ஜெயாவுக்கு பிணை கோரி மனு தாக்கல்

பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தனக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், பிணை கோரியும் அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று செய்யப்பட்டது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் பிணை கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை நேரில் சந்தித்து மனுத் தாக்கல் செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், உயர்நீதிமன்ற எழுதுவிளைஞரிடம் இந்த பிணை மனுக்களை அ.தி.மு.க தரப்பு சட்டத்தரணிகள் கையளித்துள்ளனர். பிணை, தீர்ப்புக்கு எதிரான இடைக்கால தடை மற்றும் தண்டனையை நிறுத்தி வைப்பது என மூன்று மனுக்களை ஜெயலலிதாவின் சட்டத்தரணி தாக்கல் செய்துள்ளார். தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற அட்டவணை இன்று மாலை 5 மணி முதல் 6 மணிக்குள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போதுதான் ஜெயலலிதாவின் மனு எப்போது விசாரணைக்கு வரும் என்பது தெரிய வரும். தற்போது தசரா விடுமுறையில் உள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். ஒக்டோபர் 6ஆம் திகதி வரை நிதிமன்ற விடுமுறையாகும். அதேசமயம், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பெஞ்ச் அமர்வு நடைபெறும். எனவே, ஜெயலலிதாவின் மனு நாளையே விசாரணைக்கு எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

புரட்சித் தலைவியின் தீர்ப்பால் கலைஞர் அதிர்ச்சியில்......?

ஹரியானா, பீஹார் முதல்வர்கள் போன்று ஜயலலிதாவுக்கும் பிணை கிடைக்குமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பிணை எப்போது கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவருக்கு முன் ஊழல் தடுப்பு சட்டத்தில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இந்திய தேசிய லோக் தளம் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் ஆகியோரின் வழக்குகள் எடுத்துக்காட்டாகப் பார்க்கப்படுகின்றன. கடந்த ஜூன் 3ம் திகதி சகோதரரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. பின் சவுதாலாவின் உடல் நிலையைக் கருதி செப்டெம்பர் 26ம் திகதி வரை பிணை நீடிக்கப்பட்டது. கடந்த 25 ஆம் திகதி ஹரியானா சட்டசபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். இதையடுத்து அக்டோபர் 17ம் திகதி அவர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ளது.  ஜாக்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் பிணை கோரிய போது மறுக்கப்பட்டது. இதே வழக்கு தொடர்பாக மற்றொருவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. அதன் அடிப்படையில் லாலு பிரசாத்தும் உச்ச நீதிமன்றத்தில் பிணை கோரி மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 டிசம்பரில் அவருக்கு பிணை வழங்கியது. இதேவேளை 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

'அம்மா'... ஜெயாவின் ஆட்சி தமிழக வரலாற்றில் கரும்புள்ளி

அம்மா.... ஆடிய ஆட்டம் என்ன? படுத்திய பாடு என்ன?... கூடிய கூட்டமென்ன?....

இந்திய நீதித்துறை அதன் கடமையை சரியாகச் செய்திருக்கிறது. பல் வேறு ஊழல் வழக்குகளில் தப்பிப் பிழைத்த அ. இ. அ. தி. மு. க. தலைவி செல்வி ஜெயலலிதா, இன்று தமிழக முதலமைச் சராக கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கும் போதே ஊழலில் மாட்டி யிருக்கின்றார். 1991 ஆம் ஆண்டிலிருந்து 1996 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தவர் ஜெயலலிதா. அந்தக் காலப் பகுதியில் வருமானத் துக்கும் அதிகமான சொத்துக்களைக் குவித்தாரென்ற குற்றச் சாட்டில் தொடரப்பட்ட வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஜெயராமுக்குச் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 18 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த சனிக்கிழமை (27.09.2014) வழங்கப்பட்டது. தமிழகத்திலிருந்து இந்த வழக்கு கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூ ருக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணைகளை செவ்வனே நடத்தி வந்த சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை சனியன்று வழங்கியது. (மேலும்....)

காவல் துறை வெட்கி தலைகுனிய வேண்டும்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் நேற்று அ.தி.மு.க., தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.இந்த மோதல், கருணாநிதி, ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் அ.தி.மு.க.வினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. பல்லாவரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் அளித்துள்ள புகாரின் பேரில் இவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் - செய்தி.

இப்போதுதான் தி.மு.க தலைமை இந்த விவகாரத்தில் எப்படி பொறுப்புடன் நடந்துகொண்டது என்று பதிவிட்டேன்.அதற்குள் ஒரு பொய் வழக்கு. அதிமுகவினர் கடைகளை அடித்து நொறுக்குவதை, ஒரு காரை தலைகுப்புற கவிழ்த்து உடைப்பதை, பேருந்தை எரிப்பதை, கொடும்பாவி கொளுத்துவதை, கடப்பாறையால் சுவரை இடித்து தள்ளுவதை என்று எதை எதையெல்லாமோ டிவியில் நேற்றிலிருந்து காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் செய்தவர்கள் மீதோ இதை தூண்டிவிட்டதாக அதிமுக தலைமையின் மீதோ இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யபட்டு இருக்கின்றன? அதிமுகவினரின் இந்த வன்முறையை காவல்துறை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, கோவை போன்ற இடங்களில் காவல்துறையினரே உணவகங்களை அடைக்கும்படி மிரட்டியதாக பொதுமக்கள் கூறுவதை புதிய தலைமுறை பதிவு செய்கிறது. காவல் துறையினர் தமிழக மக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்குகிறார்களே தவிர போயஸ் கார்டனில் இருந்து அல்ல. இந்த அராஜகங்களின் வழியே நீங்கள் ஜெயலலிதாவை இதிலிருந்து காப்பாற்றிவிடலாம் என்று நம்புகிறீர்களா?

(Manushya Puthiran)

ஜெயா உண்மையில் தண்டிக்கப்பட்டாரா?

நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. மிழ்நாடு சட்டசபையில் ஆமாம் நான் பாப்பாத்தியென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் ஈழத்தாய் என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். (மேலும்....)

அதிமுக வினருக்கு நன்றி.. நன்றி.. நன்றி


புரட்சித் தலைவி அம்மாவிற்கு எதிராக வந்திருக்கிற தீர்ப்பை கண்டித்து அதிமுகவினர்.. திறந்திருக்கிற கடைகளை குறிப்பாக வாழப்பழம் விற்கிற வண்டி, ஜிகர்தண்டா கடை, டிபன் கடை, கையேந்தி பவன், மெடிகல் ஷாப் எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறார்கள். இப்படி எல்லாம் தங்கள் கோபத்தை வெளிபடுத்துகிற அவர்களிடம் ஒரு கண்ணியம் இருக்கிறது. டாஸ்மாக் மீது எந்த தாக்குதல்களும் நடத்தாதது... ஒரு அவசரம் என்றால் அதானே நமக்கு....
உண்மையில் பாராட்டப்படக் கூடிய பண்பு இது.

(வே மதிமாறன்)

செப்ரம்பர் 28, 2014

அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வத்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று ஒருமனதாக தேர்வு செய்ததை தொடர்ந்து அவரை ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனை அறிவிக்கப்பட்டதும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, முதலமைச்சர் பதவியை இழந்ததோடு, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ஜெயலலிதா இழந்தார். இதனால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சரை உடனடியாகத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குழுவினர் அடுத்த முதல்வரை ஒருமனதாக தேர்ந்தெடுத்து கையெழுத்திட்ட கடிதத்தை, ஆளுநரிடம் வழங்குவதற்காக தமிழக ஆளுநர் ரோசையாவை மாலை 6.45 மணி அளவில் சந்தித்தனர். முன்னதாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் முடிவடைந்ததும், பன்னீர் செல்வம் மற்றும் மூத்த அமைச்சர்கள் போயஸ்கார்டன் சென்றனர். அங்கு ஜெயலலிதாவின் இல்லத்தில் சிறிது நேரம் ஆலோசனை நடைபெற்றது. கடந்த முறை ஜெயலலிதா இதேபோல் நீதிமன்ற தீர்ப்பால் முதலமைச்சர் பதவி இழந்தபோது அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக அப்போது நியமிக்கப்பட்டார். அதேபோல் இந்தமுறையும் அவருக்கு மீண்டும் முதல்வர் ஆகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க மனுதாக்கல் செய்ய நடவடிக்கை

கர்நாடக சிறையில் அடைக்கப்பட்ட அதிமுக தலைவர் ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவிக்க திங்கட்கிழமை(28) கர்நாடக  உயர்நீதிமன்றத்தில் மனுசெய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா வழக்கறிஞர்கள் குழு, தண்டனையை தடைசெய்யக் கோரும் உத்திகளை பரிசீலித்து வருகின்றனர். 'நாங்கள் நாளை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்கிறோம்' என்று ஜெயலலிதாவின் மூத்த வழக்கறிஞர் பி.குமார் தெரிவித்துள்ளார். திங்களன்று மனு செய்தாலும் உயர்நீதிமன்றத்தின் விடுப்பு அமர்வு செவ்வாயன்றே மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என்று தெரிகிறது. ஏனெனில் உயர்நீதிமன்றம் தற்போது தசரா விடுமுறை நாளில் உள்ளது. ஜெயலலிதாவை உடனடியாக வெளியே கொண்டு வர வழக்கறிஞர்கள் குழாம் சட்ட உத்திகளுக்கும் வாதங்களுக்கும் இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். தண்டனை 3 ஆண்டுகளுக்கு மேல் விதிக்கப்பட்டுள்ளதால் உயர்நீதிமன்றமே ஜாமீன் அளிக்க முடியும். வழக்கறிஞர்கள் கையில் உள்ள ஒரு ஆயுதம், கிரிமினல் ரிவிஷன் பெடிஷன் ஆகும். இந்த மனுவைச் செய்தால் தண்டனை மற்றும் குற்றம் என்ற தீர்ப்பிற்கும் தடை வாங்கி விடலாம் என்று கணக்கிட்டு வருகின்றனர். ஒருவேளை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தால் எம்.எல்.ஏ.  தகுதி இழப்பு என்பது ஒன்றுமில்லாமல் ஆகிவிடும். ஆனால் உயர்நீதிமன்றங்கள் ஊழல் வழக்கில் பொதுவாக ஸ்டே ஆர்டர் கொடுக்காது என்றே கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி எம்.எல்.ஏ. அல்லது எம்.பி.ஆகியோர் வழக்கு ஒன்றில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு விட்டாலே அவரது பதவி தானாகவே தகுதி இழப்பு அடைந்துவிடும். இதற்கு முன்பு இவ்வகை தீர்ப்பிற்கு பின்பு 3 மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து தகுதி இழப்பை முறியடிக்கலாம். ஆனால் அது இப்போது முடியாது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் இந்த வழக்கு தீர்ப்பின் நகலைப் பெற்று அதை வைத்து விவாதித்து வருகின்றனர். (தி ஹந்து)

ராகுல் எதிர்ப்பு தெரிவித்ததால் ஜெயலலிதாவுக்கு பாதிப்பு

'ஊழல் உட்பட, குற்ற வழக்குகளில், 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறும், எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பதவியை உடனே பறிக்க வேண்டும்' என, 2013 ஜூலையில், உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு குறித்து, பல அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன. இந்த விவகாரத்தில், எம்.பி.,க்களை காப்பாற்ற, சட்டத் திருத்தம் தேவை என்றும் வலியுறுத்தின. அதனால், உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு சார்பில், மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், 'குற்ற வழக்குகளில், தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகளின் பதவியை, உடனே பறிக்க வேண்டும் என்ற தீர்ப்பு சரியானதே. ஆனால், இது தொடர்பாக, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தால், அதில், நீதிமன்றம் தலையிடாது' என, தெரிவித்தது. இதையடுத்து, மக்கள் பிரதிநிதிகளை காப்பாற்றும் வகையில், சட்ட திருத்தம் ஒன்றை கொண்டு வர, மத்திய அரசு முற்பட்டது. அந்த சட்ட திருத்தத்தின்படி, குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, 90 நாட்களுக்குள், அப்பீல் மனு அல்லது மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருந்தால், மேல் கோர்ட்டுகள், தண்டனைக்கு தடை விதித்திருந்தால், அவர்களின் பதவியை பறிக்க முடியாது. மேலும், தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், உயர் நீதிமன்றங்களில் அப்பீல் செய்து, அந்த மனுக்கள் நிலுவையில் இருந்தால், பார்லிமென்ட் மற்றும் சட்டசபை நடவடிக்கைகளில் அவர்கள் பங்கேற்கலாம். அதே நேரத்தில், சபையில் ஓட்டளிக்கவோ, சம்பளம் மற்றும் படிகளைப் பெறவோ, அவர்களுக்கு உரிமையில்லை என, தெரிவிக்கப்பட்டது.ஆனால், இந்தச் சட்டத் திருத்தத்திற்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், அது நிறைவேற்றப்படவில்லை. ராகுல் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டத் திருத்தம் நிறைவேறி இருக்கும். முதல்வர் ஜெயலலிதா உட்பட, இதற்கு முன் ஊழல் மற்றும் குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் பதவியும் தப்பி இருக்கும். (தினமலர்)

தமிழகத்தின் மன்மோகன் சிங் ரெடி!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார். பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது. 63 வயதான ஓ.பன்னீர்செல்வம் போடியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 3-வது முறையாக பன்னீர்செல்வம் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓ.பன்னீர்செல்வம் கடந்த 2001ல் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி வகித்தவர். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக அப்போது ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலகிய போதும் பன்னீர்செல்வமே முதல்வராக தேர்ந்தெடுக்ககப்பட்டது நினைவிருக்கலாம். (தினகரன்)

தனிமை சிறையில் ஜெயலலிதா அவதி, நேற்றிரவு சாப்பிடவில்லை

ரூ.66.56 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று நேற்று பிற்பகல் 2.30 மணிக்கே அறிவிக்கப்பட்டு விட்டது. அப்போதே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் தண்டனை கிடைப்பது உறுதியாகி விட்டது. பிற்பகல் 3.30 மணிக்கு ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை, ரூ.100 கோடி அபராதம் என்ற தீர்ப்பை நீதிபதி குன்கா வாசித்தார். இதை கேட்டதும் ஜெயலலிதா கடும் அதிர்ச்சி அடைந்தார். அடுத்தடுத்து நீதிபதி தீர்ப்பு விவரங்களை வாசித்தபோது ஜெயலலிதா அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டார். அவர் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார். (மேலும்....)

18 ஆண்டுகள்.. 6 நீதிமன்றங்கள்.. 90 நீதிபதிகள்..

தினமும் 18 மணி நேரம் இடைவிடாது பணியாற்றிய டி'குன்ஹா

கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம். இவ்வழக்கில் நீதிபதியாக நியமிக்கப்பட்டு ஓராண்டுக்குள் தீர்ப்பெழுதும் கட்டத்திற்கு நகர்த்தியதில் அவரது கடும் உழைப்பும்,அசராத அணுகு முறையும் உள்ளது. 1996-ம் ஆண்டு ஜூலையில் சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கிய சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை சிங்கார வேலர் சிறப்பு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் என கடந்த 18 ஆண்டுகளில் 6 நீதிமன்றங்களின் படிகளை ஏறி இருக்கிறது. சென்னை நீதிமன்ற நீதிபதி சம்பந்தம் என்பவரில் ஆரம்பித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா வரை சுமார் 90 நீதிபதிகள் இவ்வழக்கை விசாரித்துள்ளதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. (மேலும்....)

25 வருடங்களுக்கு முன்பு சென்ற ரயில் இன்னும் காங்கேசந்துறையில்...

வடக்கையும் தெற்கையும் ஒன்றிணைத்த யாழ். தேவி கொழும்பில் இருந்து முள்ளிக்குளம் வரையான பயணத்தை இற்றைக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன்பு நிறுத்தியது. புலிகளின் கெடுபிடிகளினாலேயே ரயில் சேவை இடை நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் யாழ். தேவி புறப்பட ஆயத்தமாகியுள்ளது. அன்றைய காலப்பகுதியில் யாழ். தேவியின் ரயில் சாரதியாக எஸ். இராஜகோபாலன் பணியாற்றினார். பணியில் இருந்து தற்போது இளைப்பாறியுள்ள அவர், 25 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பமாகியுள்ள யாழ். தேவி ரயில் சேவையை பார்வையிட வருகை தந்துள்ளார். அந்த பழைய நாள் ஞாபகம் இன்றுபோல் அவர் மனதில் காட்சியளிக்கின்றது. (மேலும்....)

பதவி இழந்தார் ஜெயலலிதா

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் மதியம் 1 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் நீதிமன்றத்தினுள் இருக்கும் வழக்கறிஞர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு தனி நீதிமன்ற சிறப்பு நீதிபதி குன்ஹா இன்னும் சற்று நேரத்தில், நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தீர்ப்பை வழங்க உள்ளார். ஜெயலலிதா தவிர்த்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா சுதாகரன், இளவரசி உள்ளிட்டோரும் ஆஜராகி உள்ளனர். அவர்கள் தற்போது தீர்ப்புக்காக நீதிமன்றத்தில் காத்திருக்கின்றனர். (மேலும்....)

 

உண்மையில் ஜெயலலிதா எங்கு இருக்கின்றார்.....?

உண்மையில் இன்று சிறைக்குச் சென்றிருப்பது ஜெயலலிதா அல்ல. மீடியாக்கள் உருவாக்கி வைத்திருந்த ஜெயலலிதா என்கிற பிம்பம். இதுதான் நான் என்று ஜெயலலிதாவே நம்பிவிட்ட அளவுக்கு சித்தரிக்கப்பட்ட பிம்பம் அது. ஆரம்பத்தில் ஜெயலலிதா என்ற பெண்ணுக்குள்ளும், அரசியல்வாதிக்குள்ளும் பல நியாயங்களும், நம்பிக்கைகளும் துளிர்த்திருந்தன. ஆனால் அவற்றை நசுக்கிவிட்டு பழிவாங்குதலையும், சர்வாதிகாரத்தையும் அரக்கத்தனமாக வளர்த்தது மீடியா. கருணாநிதி & கோவை முன்னிறுத்தி தன்னைத் தானே சுட்டுக்கொண்டு சுற்றியிருப்பவர்களையும் எரிக்கும் நெருப்பாக அவரை எப்போதும் தணலிலேயே வைத்திருந்தது, இன்னமும் வைத்திருக்கிறது. (மேலும்....)

தீர்ப்பு வந்ததும் ஜெயலலிதா எவ்வாறு செயற்பட்டிருக்க வேண்டும்

மாநிலத்தின் முதலமைச்சர், ஆளுங்கட்சியின் மிகப்பெரும் தலைவர் என்ற முறையில் தனது கட்சியின் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும் - தீர்ப்பு எப்படி வந்தாலும் அதை ஏற்று அமைதி காக்க வேண்டும் என்று. எது எதற்கோ உடனுக்குடன் அறிக்கை விடுகிற அவர் இந்த முக்கியப் பிரச்சனையில் ஏன் அப்படிப்பட்ட அறிக்கை வெளியிடவில்லை? தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டவர்களாக கோபத்தோடு செயல்படக்கூடும் என்ற நிலையில், அவர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிக்கை விடுத்திருந்தால் அது ஆரோக்கியமானதாக இருந்திருக்கும். (மேலும்....)

3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா ஜாமின் விண்ணப்பிக்க இயலாது

ஆண்டுகளுக்கு மேல் சிறை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணபிப்க்க இயலாது என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் தலா ரூ.10 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் வாதாடி அரசு வழக்கறிஞர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் பிறகு அவரது ஜூனியர் முருகேஷ் மராவடி செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்தபோது சொத்து சேர்த்தது நிரூபணமானதால் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சொத்துக்களை, ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் அனுபவித்ததால் அவர்கள் அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவின் பேரில் 4 பேரும் உடனே பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், ஜெயலலிதா உடனடியாக ஜாமினுக்கு விண்ணப்பிக்க இயலாது'' என்றார்.

அப்படி என்னதான் நடக்கப் போகின்றது ஜெயலலிதாவிற்கு

தமிழகம் பூரா ஆர்ப்பாட்டம் செய்து கடைகளை அடித்து நொறுக்கி பேருந்துகளை எரிக்கும் ஆதிமுகவினர் ஏதோ உணர்சசி வேகத்தில் செய்வதாக நான் நினைக்கவில்லை. இப்படி ஒரு தீர்ப்பு வரப் போகிறது என ஏற்கனவே கட்சியினருக்கு தெரியும். அதற்காக தயாராக தான் இருந்திருக்கிறார்கள். அவரக்ளின் இலக்கு எப்போதுமே பொதுமக்களும் சாதாரண வியாபாரிகளும் தான். ஒரு நட்சத்திர ஓட்டலுக்குள் போய் தாக்குவார்களா? நீதிமன்றம் முன்பு போய் தர்ணா பண்ணுவார்களா? மாட்டார்கள். டாஸ்மாக் அதன் பாட்டுக்கு திறந்தே ஜெகஜோதியாக இயங்குகிறது. அதை உடைக்க மாட்டார்கள். ஏனென்றால் அங்கு போய் குடித்து விட்டு கிடைக்கிற மிதப்பில் தானே ஆர்ப்பாட்டம் பண்ண முடியும். பொதுச்சொத்தை ஆளுங்கட்சியினர் உடைப்பதை வேடிக்கை பார்க்கும் போலீஸ்காரர்கள் ஏதோ பள்ளிக்கூட பிள்ளைகளை விளையாட விட்டு கண்காணிக்கும் டீச்சரை போல் தோன்றுகிறார்கள். (மேலும்....)

வடமாகாண சபை

முதலமைச்சர் வீட்டிற்கு மாத வாடகை 3 இலட்சம்

தமிழ் இளைஞர்கள் அர்ப்பணிப்புடன் போராடிப் பெற்றுக்கொடுத்ததே வடமாகாண சபை என்றும் போராடிய இளைஞர்களின் குடும்பங்கள் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தி நிற்க வியர்வை கூட சிந்தாத முதல்வர் விக்னேஸ்வரன் குடியிருக்கும் ஆடம்பர மாளிகைக்கு மாத வாடகையாக மூன்று இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது என ஈ.பி.டி.பி யின் சர்வதேச முக்கியஸ்தர் எஸ்.விந்தன் தெரிவித்துள்ளார். பாமர மக்கள் பம்பரம் போன்றவர்கள் அவர்களை சுழற்றிவிடும் பொறியாக இருப்பவர்கள் இளைஞர்களே. கடந்த காலங்களைப் போலன்றி மக்களை உணர்ச்சிப் பேச்சுக்களால் உசுப்பேற்றாமல் உணர்வுகளால் மட்டும் அரசியல் இலக் கின் திசை நோக்கி அவர்களை இயக்குவ தற்கு இளைஞர்கள் மாபெரும் சக்தியாக திரண்டு வரவேண்டும். ஒவ்வொரு இளைஞனுக்கும் ஒவ்வொரு கனவுண்டு. உங்களது வாலிய கனவுகளுக் கப்பால் இலட்சிய கனவுகளுக்காகவும் நீங்கள் உழைக்க முன்வர வேண்டும். வடமாகாண சபை என்பது நாங்கள் போராடிப் பெற்ற உரிமைகளில் ஒன்று. இந்த உரிமைப் போராட்டத்தில் அர்ப் பணித்தவர்களது குடும்பங்கள் நடுத்தெரு வில் நின்று பிச்சைப் பாத்திரம் ஏந்துகின்றார்கள். முதலமைச்சரின் ஆடம்பர மாளிகைக்கு மாதவாடகை மூன்று இலட்சம், அவைத் தலைவர் உட்பட ஐந்து அமைச்சர்களது ஆடம்பர மாளிகைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா வாடகை வழங்கப்படுகின்றது. (மேலும்....)

தமிழகத்தில் வன்முறை கலைஞர் வீட்டுக்கு கல்வீச்சு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப் பளித்ததையடுத்து, தமிழகத்தில் அ.தி.மு.கவினர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில், பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் பதற்றம் நீடித்துள்ளது. ஜெயலலிதாவின் சொந்தத் தொகுதியான ஸ்ரீரங்கத்தில் கோயில் அருகே உள்ள கடைகளை மூடக்கோரி அ.தி.மு.கவினர் அச்சுறுத்தியுள்ளனர். அங்கு இதனால் கடைகள் மூடப்பட்டு வருகின்றன. சிறிய அளவில் உள்ள பொலிஸாரும் அ.தி.மு.கவினரின் இந்தச் செயலை கண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். கோவையில் அவினாசி சாலையில் தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.வினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அங்கு சில கார்களின் கண்ணாடியை உடைத்து வாகனங்களை சேதப்படுத்தினர் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. மதுரையில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மதுரையிலிருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க தலைவர் கருணாநிதி வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. கருணாநிதி வீட்டிற்குள் அ.தி.மு.கவினர் சிலர் நுழைய முயன்றனர். அப்போது, தி.மு.கவினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

யாழ்தேவி வந்தபோது..

(சுகு- ஸ்ரீதரன்)

யாழ்தேவி பரீட்சார்த்தமாக யாழ் வந்தபோது புகையிரத -நீராவி யந்திரத்தை கண்டு பிடித்த -ஜோர்ஜ் ஸ்ரீபன்சனுக்கு ஏற்பட்ட அனுபவம் இங்கும் கிட்டத்தட்ட 3 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்டது. ரயிலில் எதேச்சசையாக மாடு ஒன்று அடிபட்டிறந்தது. ரயிலை வேடிக்கை பார்க்க தந்தையுடன் வந்த சிறுவனைப் பாம்பு தீண்டியது. இந்த சம்பவங்கள் துரதிஸ்டமானவை. ஆனால் இவையெல்லாம் நாசமாய்ப்போன சைத்தான் ரயிலால் வந்த வினை என்று யாழப்;பாணத்து வைபவக் குறைவான ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.(மேலும்....)

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி, லண்டன் Coventry ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நந்தன் ரதிராஜா அவர்கள் 25-09-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார், நந்தன் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,


துஷா(கனிஸ்ரா) அவர்களின் அன்புக் கணவரும்,


பிரிஸ்கா, யோவேல், ஆபேல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,


குலேந்திரராஜா(சிவா-  சுவிஸ்), சபாநந்தினி(ஜெர்மனி), தசியந்தராஜா(சபா- லண்டன்), பிறேமநந்தினி(லண்டன்), ரதீஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,


மஞ்சு, ஷனுயா, ஜெவிற்றா, ஜெனிற்றா, றிஜந், சானுஜி, துசண்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,


கெளரி(சுவிஸ்), உதயகுமார்(ஜெர்மனி), லலிதா(லண்டன்), ரூபன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,


சிமியோன், செகான், ஜெனன், ஜெசன், யோஸ்வா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.


அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அம்மா+அப்பா

சகோதரர் +சகோதரிகள்

மனைவி +பிள்ளைகள்
+4961814349375+41794172315+447741303873
+94777915762+442477982101

செப்ரம்பர் 27, 2014

உலகளாவிய நீதி

மாற்றம் என்பதே நிரந்தரமானது!

(சுகு-ஸ்ரீதரன்)

ஸ்கொட்லாந்து  ஐக்கிய ராச்சியத்தினுள் இணைந்திருக்கவேண்டுமா அல்லது பிரிந்திருக்கவேண்டுமா என்று சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது 55 வீதமான மக்கள் தாம் ஐக்கிய ராச்சியத்தின் அங்கமாக இருப்பதை விருப்புவதாக வாக்களித்தார்கள். அதற்காக மிகுதி 45 வீதத்தவரின் அபிலாசைகளைப் புறக்கணித்து விட முடியாது.  ஐக்கிய ராச்சியத்தின் அங்கமாக வாக்களித்தவர்களும் -அதிகாரப்பகிர்ந்தளிப்பு நிகழும் என தொழிற்கட்சி உட்பட பிரதான பிரித்தானிய கட்சிகளின் உறுதி மொழியை நம்பியே வாக்களித்தார்கள். (மேலும்....)

கடலில் கலக்கும் ஆறுகளை மறித்து நீர்த் தேக்கங்கள் அமைக்கத் திட்டம்

மக்களுக்கு பயன்படாமல் கடலில் கலக்கும் 33 ஆறுகளை வழிமறித்து நீர்த்தேக்கங்கள் அமைக்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரட்சியான காலநிலைகளின் போது விவசாயம் செய்யவும் குடிப்பதற்கும் தேவையான நீரைப் பெறுவதற்காக இவ்வாறான திட்டமொன்றை செயற்படுத்த இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இதற்கென நிதி ஒதுக்கிடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அண்மைக் காலத்தில் ஏற்பட்ட வரட்சி நிலையினால் 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்பட்டால் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் நீர் நிலைகளில் உள்ள சேறுகளை அகற்றும் திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக நீர் கொள்வனவு அதிகரித்து கூடுதல் நீரை தேக்கி வைக்க முடியுமென கூறிய அவர், அரசாங்கம் 17 பாரிய குடிநீர் திட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுடன் 3000க்கும் அதிகமான ஐரோப்பியர் இணைவு

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) போராளிகளுடன் இணைந்திருக்கும் ஐரோப்பியர்களின் எண்ணிக்கை 3,000 ஐ தாண்டியிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவரான ஜல்ஸ் டி கர்சோவ் குறிப்பிட்டுள்ளார். ஐ.எஸ். மீதான மேற்குலகின் வான் தாக்குதல்கள் அதிகரிக்கும்போது ஐரோப்பாவில் பதில் தாக்குதல் இடம்பெறும் அபாயம் இருப்பதாக அவர் எச்சரித்தார். ஈராக்கில் வான் தாக்குதலை முன்னெடுப்பது குறித்து பிரிட்டன் பாராளுமன்றத்தில் வக்கெடுப்பு நடத்தப்பட விருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் அண்மைய மாதங்களில் ஈராக் மற்றும் சிரியாவில் பெருமளவு நிலப்பகுதியை கைப்பற்றியுள்ளனர். இதில் பிராந்தியத்தில் யுத்தத்தில் ஈடுபடுபவர்கள் மற் றும் நாடு திரும்பியவர்கள் என்றே 3,000க்கும் அதிகமான ஐரோப்பியர் ஐ.எஸ். இல் இருப்பதாக கர்சோவ் சுட்டிக்காட்டினார். ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 31,000 ஐ.எஸ். போராளிகள் இருப்பதாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. அண்மையில் கணித்திருந்தது. ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் மீது வான் தாக்குதல்கள் அதிகரிக்கும் நிலையில் பதில் தாக்குதல்கள் குறித்தும் அவர் எச்சரித்தார். அதேபோன்று அல் கொய்தா போன்ற ஐ.எஸ். போட்டி அமைப்புகளும் தமது பலத்தைக் காட்ட ஐரோப்பா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கலாம் என்றார்.

மக்கள் தொகை அதிகரிப்பு

ந(ர)கர வாழ்க்கையில் சென்னை மக்கள்!

சென்னை மக்களின் நகர வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறி வருகிறது.சென்னை என்றாலே கிராமத்திலுள்ளவர்களுக்கு ஒரு வியப்பு. விண்ணை தொடும் வகையில் கண்ணாடி மாளிகைகள், சாலையில் விலை உயர்ந்த கார்கள், ஆடம்பரமான வாழ்க்கை என்று நினைக்கின்றனர். அனைத்தும் கிடைக்கும் சொக்கபுரியாகவே பலர் சென்னையை கற்பனை செய்து கொள்கின்றனர். ஆனால் சென்னையின் மறுபக்கம் பலருக்குத் தெரிவதில்லை. சென்னை நகருக்குள் வரும்போதே கூவம் ஆற்றின் துர்நாற்றம் புதிதாக வருபவர்களுக்கு ஒரு குமட்டலை ஏற்படுத்தும். அதை பொருட்படுத்திக் கொண்டு சென்னைக்குள் வருவதற்குள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சின்னாபின்னமாகி விடுகின்றனர். இருப்பினும் சொந்த ஊரில் வேலை வாய்ப்பு இல்லாததால், பிழைப்புத் தேடி சென்னைக்கு தினமும் பலர் படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. (மேலும்....)

செப்ரம்பர் 26, 2014

குப்புற கவிழ்க்குமா போர் வெற்றி?

ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுள்ள ஆறுதல் வெற்றி, அரசாங்கத்துக்கு கொடுக்கப்பட்ட சிவப்பு சமிக்ஞை என்றே எல்லோராலும் கருதப்படுகிறது. ஊவா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கு ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணத்தை கூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், ஊவாவில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் திடீர் எழுச்சிக்கும் அரச தரப்பின் பின்னடைவுக்கும் தனியொரு காரணம் மட்டுமே இருக்கிறதென்று கருதமுடியவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள்தான், ஊவா மாகாணசபைத் தேர்தல் முடிவில் பிரதிபலித்திருக்கின்றன. இது தேசிய அரசியலில் திருப்பமொன்று ஏற்படுவதற்கான பிரகாசமான அறிகுறிகளையும் வெளிப்படுத்தியிருக்கிறது. இந்தக் கட்டத்தில் ஊவா மாகாணசபையில் தாம் பெற்றுள்ள மயிரிழை வெற்றியைக்கூட, அரசாங்கத்தரப்பு பெரும் சாதனையாக சுட்டிக்காட்டி தப்பிக்கொள்ளப் பார்க்கிறது. (மேலும்....)

சமர் பகுதியை தொடர்ந்து இந்திய பெருங்கடலிலும் சீன போர்க்கப்பல் குவிப்பு!

இந்திய எல்லைப்பகுதியான சமர் பகுதியைத் தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியிலும் சீனா தனது போர்க்கப்பலை குவித்து வருகிறது. பிராந்திய போரில் வெற்றி பெறுவதற்காக சீன எல்லையில், மக்கள் விடுதலை ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என சீனா அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன. மேலும், இந்திய-சீன எல்லையான, இமாச்சல பிரதேச எல்லையில் அமைந்துள்ள சுமர் பகுதியில், சீன ராணுவம் கடந்த 10ஆம் தேதி அத்துமீறி நுழைந்தது. அங்கு தொடர்ந்து கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக சீன வீரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். இந்நிலையில், சமீப காலமாக கடல் பகுதியிலும் சீனா தனது படைகளை குவிக்க தொடங்கியுள்ளது. அதன்படி இந்திய பெருங்கடல் பகுதியில் ஏராளமான சீன போர்க்கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதை உறுதிப்படுத்தியுள்ள இந்திய ராணுவ தளபதி ராபின் தோவன், சீனாவின் எவ்வித சவாலையும் சமாளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு

குஜராத்தில் இருக்கும் போது மறுப்பு டெல்லில் இருக்கும் போது வரவேற்பு

ஐந்து நாள் பயணமாக அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி அங்குள்ள மடிசன் சதுக்க கார்டன் என்ற இடத் தில் உரையாறறவுள்ளார். ஒபாமாவின் அழைப்பை ஏற்று மோடி அமெரிக்காவில் 5 நாட்கள் சுற்றுப் பயணம் செய்கிறார். இந்த 5 நாட்களிலும் அவர் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். 28ந் திகதி பல்வேறு யூத அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்திக்கும் மோடி, பின்னர் மடிசன் சதுக்கத்தில் நடைபெறும் கூட்டத்தில் இந்திய வம்சாவளியினர் மத்தியிலும் பேசுகிறார். அமெரிக்காவில் இதுவரை சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெளிநாட்டு தலைவர்களில் போப் ஆண்டவருக்கு அடுத் தபடியாக மடிசன் சதுக்கத்தில் மிகப்பெரிய கூட்டத்தில் உரையாற்றப் போகும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. மோடி இங்கு ஆற்றும் உரை தொலைக்காட்சியில் நேரடியாகவும் ஒளிபரப்புச் செய்யப்படும். மோடி மடிசன் சதுக்கத்தில் ஆற்றும் உரையை கேட்க இந்திய வம்சாவளியினர் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளதாக தெரிகிறது.

பொதுச்சபையின் 69ஆவது அமர்வில் ஜனாதிபதி உரை

இலங்கை மீது சில தீய சக்திகள் அளவுக்கு அதிகமாக இலக்கு

கியூபா மீதான பொருளாதாரத் தடை நியாயமற்றது

பலஸ்தீனம் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட வேண்டும்

சர்வதேச ரீதியான சவால்களுக்கு நீடித்து நிலைக்கக்கூடிய தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டியது அவசியம். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு எதிரான தன்னிச்சையான பொருளாதார தீர்மானங்களை இலங்கை எதிர்க்கின்றது. நாடுகள் தொடர்பிலான விவகாரங்களின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்கள் கடுமையான கொள்கைகளை பின்பற்றுவதனை தவிர்க்க வேண்டும். கியூபா மீது எதேச்சாதிகார போக்கில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. கியூபா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டமை நியாயமற்றத.ு பயங்கரவாதம் உலகின் அனைத்து நாடுகளு க்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதால் இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை இலங்கை நன்கு உணர்ந்து கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைளை இலங்கை முழுமையாக எதிர்க்கும். இலங்கையின் சகல மக்களினதும் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிரிகளுடனும் நட்பு பாராட்டும் வெளியுறவுக் கொள்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும் நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்களுக்கு சர்வதேச சமூகம் காத்திரமான வகையில் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். (மேலும்....)

தஞ்சம் கோருவோரை கம்போடியாவுக்கு அனுப்ப அவுஸ்திரேலிய அரசு முடிவு

படகுமூலம் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது. படகுகள் மூலம் விசா இல்லாமல் வந்தவர்களையும் நெளரு, மனுஸ், பப்புவா நியூகினியா தீவுகளில் உள்ளவர்களையும் கம்போடியாவுக்கு அனுப்புவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. ஆனால் கிலார்ட் பதவியில் இருந்த போது புகலிடம் கோரியவர்களை மலேசியா அனுப்பியது போன்ற நடைமுறைதான் இதுவும் என மொரிசன் விளக்கியுள்ளார். இதேவேளை, இந்த நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கம்போடியாவில் அகதிகள் வாழ்வதற்கான சரியான சூழலும் இல்லை என மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மகாராஷ்ட்ரா

25 ஆண்டு கால சிவசேனா - பா.ஜனதா கூட்டணி முறிந்தது!

மகாராஷ்ட்ராவில் பா.ஜனதா - சிவசேனா இடையேயான 25 ஆண்டு கால கூட்டணி முறிந்தது. தொகுதி பங்கீடு விஷயத்தில் சிவசேனா தனது நிலையில் பிடிவாதமாக இருந்ததால் தாங்கள் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது. வருகிற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி மகாராஷ்ட்ரா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவுக்கு 130 தொகுதிகளை ஒதுக்க சிவசேனா ஒப்புக்கொண்டதாகவும், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு 7 இடங்கள் ஒதுக்கியதுபோக மீதமுள்ள 151 இடங்களில் சிவசேனா போட்டியிடுவது என்று தொகுதி உடன்பாடு எட்டப்பட்டதாக சிவசேனா வட்டாரங்கள் கடந்த 23 ஆம் தேதியன்று தெரிவித்தன. மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என நாங்கள் கூறினோம். ஆனால் சிவசேனாவோ முதலமைச்சர் பதவிக்குத்தான் அதிக ஆர்வம் காட்டியது" என்று குற்றம் சாட்டினார். பா.ஜனதாவின் இந்த அறிவிப்பின் மூலம் இரு கட்சிகளுக்கும் இடையேயான 25 ஆண்டு கால கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மகாராஷ்ட்ராவில் மொத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில் 41 இடங்களை பா.ஜனதா - சிவசேனா கூட்டணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மகாராஷ்ட்ராவில் 15 ஆண்டுகால காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையேயான கூட்டணியும் முறிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்சிகளுக்குள்ளும் தொகுதி பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. 

செப்ரம்பர் 25, 2014

இது எப்படி இருக்கு.....?

புலி பதுங்குவது பாயவே -சி.வி

புலி பதுங்குவது பாய்வதற்காகவே. தற்பொழுது வடமாகாண சபை பதுங்கிய நிலையில் இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த கூட்டத்தொடர், கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபை கட்டிடத்தொகுதியில் வியாழக்கிழமை (25) இடம்பெற்று வருகின்றது. இதன்போது, முதலமைச்சர் நிதி நியதிச்சட்டம் தொடர்பில் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது தொடர்பில் இனி சபை அமர்வுகளில் கதைப்பதில்லையென கூறினார். இதன்போது குறுக்கிட்ட எம்.கே.சிவாஜிலிங்கம், அனைத்து விடயங்களுக்கும் ஆளுநருக்கு பயந்து விட்டுக்கொடுக்க முடியாது என்று கூறினார். சிவாஜிலிங்கத்தின் கருத்திற்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மத்திய அரசிடமிருந்து நிறைய விடயங்களை நாங்கள் பெறவேண்டிய தேவை இருக்கிறது. ஆகையால், முதலமைச்சர் நிதி நியதிச்சட்டத்தைப் பற்றி கதைப்பதை விடுவோம்' என்றார். (மேலும்....)
 

ரஞ்சன்குடி கோட்டை ரகசியங்களை வெளிக் கொண்டுவர வேண்டும்: கோரிக்கை வைக்கும் கோட்டை காவலர்

ரஞ்சன்குடி கோட்டையை அகழ்வாராய்ச்சி செய்தால் அரிய பல வரலாற்றுத் தடயங்கள் கிடைக்கும் என்கிறார் அந்தக் கோட்டையில் 37 ஆண்டு காலம் காவலராக இருந்த ஹாசீம் பாய். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரஞ்சன்குடி கோட்டை நவாப்கள் ஆட்சி செய்த இடம். 55 ஏக்கரில் பரந்து விரிந்து கிடக்கும் இந்தக் கோட்டை வளாகம் இப்போது தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் முறையான பராமரிப்பு இன்றி கொஞ்சம் கொஞ்சமாக சிதிலமடைந்து வருகிறது. 1972-லிருந்து இந்தக் கோட்டையில் காவலராக இருந்தவர் ஹாசீம் பாய். 37 ஆண்டு காலம் பணி செய்து 2008-ல் விருப்ப ஓய்வு பெற்றுவிட்டாலும் ரஞ்சன்குடி கோட்டைக்குள் புதைந்து கிடக்கும் வரலாற்றுத் தடயங்களை உலகம் அறிய வேண்டும் என துடிக்கிறார் ஹாசீம்பாய். இதற்கு காரணம் பரம்பரை பரம்பரையாய் அவரது குடும்பத்துக்கும் அந்தக் கோட்டைக்கும் உள்ள தொடர்பு. (மேலும்....)

வடக்கு, கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் இருந்தனர் - சி.வி

முன்னொரு காலத்தில், வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் பௌத்தர்கள் வாழ்ந்தார்கள். அவர்களால் இங்கு வைக்கப்பட்ட பௌத்த சின்னங்களே இன்றும் இங்கு காணப்படுகின்றன என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தெரிவித்தார். சைவ சமயத்தில் தோன்றிய சமய குரவர்கள் நால்வரும் சைவ சமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்கள். பண்டைய காலத்தில் இலங்கையின் வட, கிழக்கு பிரதேசத்தில் இருந்த தமிழ் மக்கள் கூட சரித்திரப் படி பார்த்தால் இந்து தர்ம முறைப்படியே வாழ்ந்து வந்தவர்கள். கௌதம புத்தரின் தோன்றலுக்கு முன்னையதான சரித்திர சான்றுகளில் இவ்விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்னைய பௌத்தத்தின் உள்நுழைவால் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட காலத்திற்கு பௌத்தத்தால் கவரப்பட்டு பௌத்த சமயிகளாக மாறி, அதன்பின்னர் இந்து சமய குரவர்களின் வரவாலும் அவர்களின் சமய ஆதிக்கத்தாலும் பௌத்தத்தில் இருந்து விடுபட்டு சைவத்திற்கு சென்றவர்களே எமது மூதாதையர். (மேலும்....)

சிங்கள சாப்பாடு அது என்னவோ தனிச்சுவை தான் , சுவைகள் வித்தியாசப்படும், எங்களது சமையல் வேறு மாதிரி சுவை.

 

சிங்களவர் போல " கொஸ் கறி,," , " அம்புள் தியால் மீன் கறி,," ," கொட்டுக் கொளை சம்பல் " , " சுது மாலு ஓதி ," " தெல் தால கால் மெஸ்சோ பிறை ," " உம்பளக்கட உருட்டல் " ," காலி மிரிஸ் தாள அள பிரட்டல் " , " அழுத் அவருது சிங்கள அச்சாறு," செய்ய எங்களால் தலை கீழாக நிண்டாலும் முடியவே முடியாது. எனக்கு அதுகளின் டெக்னிகல் சமையல் விடயங்களை சொல்லித் தந்த செப் குனதாதாச(வின் மில் பீச் ஹோட்டல் ,ஏத்துக்கள ), செப் அன்டனி பெர்னாண்டோ( சீஜோய் , குடாப்பாடுவ ) ,செப் பீரிஸ் லியனகே (ஆசியான் இண்டர்னசினால் ஹோட்டல் ஸ்கூ ல், ,நுகேகொடை) இவர்களை இன்று நினைக்கிறன் , இந்த மூன்று பேருமே இப்ப மண் உலகில் இல்லை, விண் உலகில். (மேலும்....)
 

பாவப்பட்ட எழுத்தாளர்கள் பற்றி புஷ்பராணி.......!

சூடான் நாட்டைச் சேர்ந்த கவிஞரும், எழுத்தாளரும், இசைக்கலைஞருமான "முகமத் ஹூசைன் பஹ்னாஸ் " கெய்ரோ வீதியொன்றில் குளிரில் உறைந்து மரணமடைந்துள்ளார் இறக்கும்போது அவர் வயது 43. சூடானில் இருந்து அகதியாகப் புலம் பெயர்ந்த இவர் இடமேதும் கிடைக்காது இறக்குமட்டும் தெருவோர வாசியாகவே இருந்திருக்கின்றார். இந்தத் தகவலை நண்பர் பௌசர் மஹ்ரூப் தனது பக்கத்தில் எழுதியிருந்தார். இதைப் படித்து எனக்கு ஏற்பட்ட மனவருத்தம். என்னுள்ளே பல நாட்களாக ஓடிக் கொண்டிருக்கும் சில எண்ணங்களை இங்கு பதியவேண்டும் என்ற உணர்வைக் கிளறி எழுதத் தூண்டியது. (மேலும்....)


செப்ரம்பர் 24, 2014

ஆனந்த விகடனில் வரதராஜப்பெருமாள் பேட்டி

'தமிழ் ஈழத்தைப் பெற்றுத்தருவேன் என்ற நம்பிக்கையை ஊட்டினார். கடைசியில் எதையும் செய்து கொடுக்காமல் போய்விட்டார் பிரபாகரன்" 25 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்துக்கு வருகிறார் வரதராஜ பெருமாள் (காணொளியைப் பார்க்க.....)

தனிநாடு அமைக்கும் நோக்கம் கிடையாது

நீதிமன்றில் சத்தியம் செய்த த.தே.கூட்டமைப்பு !

தனி நாடு அமைக்கும் நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கோ அல்லது இலங்கை தமிழரசுக் கட்சிக்கோ கிடையாது என உச்ச நீதிமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தியக் கடதாசி மூலம் இது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அறிவித்துள்ளன. இலங்கை எல்லைக்குள் தனிநாடு ஒன்றை அமைக்கும் நோக்கம் கிடையாது என தெரிவித்துள்ளன. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா சத்தியக்கடதாசி மூலம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.(மேலும்....)

யாழ். பட்டமளிப்பு விழா ஒத்திவைப்பு

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பிறிதொரு திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அத்தினத்தில் நடைபெறாது எனவும், பிறிதொரு தினத்திலேயே பட்டமளிப்பு விழா நடைபெறும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது. இது தொடர்பில் பல்கலைக்கழக பதிவாளரை தொடர்புகொண்டு கேட்டபொழுது, 'தவிர்க்க முடியாத காரணங்களால் பட்டமளிப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது. பிற்போடப்பட்டமைக்கான காரணங்களை ஊடகங்களுக்கு வெளியிட முடியாது' என கூறினார். அத்துடன், பட்டமளிப்பு விழா நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஹிலாரி-மஹிந்த சந்திப்பு

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற காலநிலை உச்சிமாநாட்டில் வைத்தே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஹிலாரியை சந்தித்துப்பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

காங்கிரஸ் விதைக்க  பாஜக அறுவடை

செவ்வாய்க்கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்த மங்கள்யான்

மங்கள்யான் விண்கலம் செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக இணைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் விண்கலத்தை செலுத்திய பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளதாகவும் இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருந்த இந்த அரிய நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்திலிருந்து பார்வையிட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

பழைய மாணவர் குழு ஆப்பு

கண்டியில் உள்ள பாடசாலை புலிகளுக்கு நிதி வழங்கியது !

கண்டியின் பிரபலமான பாடசாலையொன்றின் நிர்வாகத்தால் 2005 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்தாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கியுள்ளது. குறிப்பிட்ட கல்லூரியின் பழையமாணவர்கள் குழுவொன்று இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. 2005 இல் குறிப்பிட்ட பாடசாலை அதிபராக வெளிநாட்டவர் ஒருவர் பதவி வகித்த வேளை இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டதாகவும், பாடசாலை நிதியத்திலிருந்தே இந்த பணம் வழங்கப்பட்டதாகவும், மேலும் 11 விடுதலைப்புலி உறுப்பினர்களை மாணவர்களாக பாடசாலை நிர்வாகம் சேர்த்துக்கொண்டதாகவும் குறிப்பிட்ட மாணவர்கள் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ச்சியான முறைப்பாடுகளுக்கு பின்னா குறிப்பிட்ட அதிபர் நாடுகடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த களத்தில் ஆளில்லா, ஆயுதம் தாங்கிய விமானங்களின் பயன்பாடுகள் அதிகரிப்பு

தீவரவாதத்தை முறியடிப்பதற்கான யுக்தியாக சர்வதேச நாடுகள், விமான ஓட்டி இல்லாத தன்னிக்க விமானம் மற்றும் ஆயுதம் ஏந்திய விமானங்களின் பாவனையை அதிகரித்து வருகின்றமை தொடர்பில் இலங்கை தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 27வது அமர்வில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்ட போதே ஆணைக்குழுவின் இந்த கொள்கைகளுக்கு ஆதரவளித்த இலங்கை இது தொடர்பில் தமது அதிருப்திகளையும் முன்வைத்தது. சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகளால் ஏனைய நாடுகள் மற்றும் வளிமண்டலம் பாதிக்கப் படுவதுடன் பொதுமக்கள் காயங்களுக் குள்ளாவதாகவும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கவலை தெரிவித்துள்ளது.  மோதல்களின் போது கண்மூடித்தனமாக ஏவப்படும் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஆயுதமேந்திய விமானங்களினால் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட சிவிலியன்கள் காயமடைவது குறித்து நாம் எமது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று இலங்கை தனது அதிருப்தியை வெளிக்காட்டியிருந்தது.

டில்லி ஜூவின் புலிகள் உலவுகிற குழிக்குள், இன்றைக்கு ஒரு சோகம் நிகழ்ந்தது.

எச்சரிக்கைகளையும், விதிகளையும் மீறி, கடைசி தடுப்பு சுவரின் மேல் மக்ஸூத் ஏறியதற்கான காரணம் சரியாக தெரியவில்லை. ஒரு வேளை, அவனுடைய நோக்கம் நெருக்கமாக போய் புலியை படமெடுப்பதாக இருக்கலாம். உள்ளே தவறி விழுந்த அவனுடைய இறுதி நேரம் மிக மிக பரிதாபமானது. பார்வையாளர் எடுத்த ஒரு புகைப்படத்தில், அவன் புலியின் முன்னால் கைகளை கூப்பிய நிலையில் காட்சி தருகிறான். இந்த நிலை சுமார் பதினைந்து நிமிடங்கள் நீடித்தது. அவனுக்கு யாரும் உதவவில்லை', 'அத்தாரிட்டிகளிடம் மயக்க ஊசி இல்லை' மற்றும் குழியில் தண்ணீர் இல்லை' என்கிற மாதிரி கூவல்களை ஊடகங்கள் எழுப்பினாலும், முழு தவறுமே அந்த பரிதாபத்துக்குரிய இளைஞனுடையதுதான்.. கால் மணி நேரம் புலியை நோக்கி கைகூப்பியே இருந்த இளைஞனை அமைதியாக பார்த்துகொண்டிருந்த புலி அவனின் கழுத்தை பிடித்து தன் குழிக்குள் இழுத்து சென்று அவன் கடைசி நிமிடத்தை முடித்தது. எல்லோருக்கும் இது ஒரு பாடம் .. பாதுகாப்பின்மை, அது இது என்று அரசை குறை சொல்ல நினைத்தாலும் , இது இன்றைய இளைஞர்களின் அடாவடித்தனத்துக்கும், பொறுப்பற்ற செயலுக்கும் கிடைத்த தண்டனை என்றே கொள்ளவேண்டும் ... பாடங்கள் என்றும் வெகு கொடூரமாகவே நடந்து முடிகின்றன. அதுசரி பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் எங்கே போனார்கள் அந்த பத்தது நிமிடம் வரை?

கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

மழைக்காலத்தில் கிடைக்கும் மிகவும் விலை மலிவான பழங்களுள் ஒன்று தான் கொய்யாப்பழம். இந்த கொய்யாப்பழமானது பல்வேறு நன்மைகள் உள்ளடக்கியுள்ளது. அதிலும் நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் . ஒரே ஒரு கொய்யாப்பழத்தில் உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. எனவே அத்தகைய கொய்யாப்பழத்தை தவறாமல் தினமும் வாங்கி சாப்பிடுங்கள். மேலும் மழைக்காலத்தில் எளிதில் நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்பதால், கொய்யாப்பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம். (மேலும்....)

செப்ரம்பர் 23, 2014

நியூயோர்க்கில் ஜனாதிபதி...

அவரை நோக்கி புலிப் பிரமுகர்கள்

ஐக்கிய நாடுகள் சபையின் 69ஆவது பொதுச் சபை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக பயணமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திங்கட்கிழமை பகல், நியூயோர்க் நகரை சென்றடைந்துள்ளார் என்று ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது பிறகென்ன . சிறப்பாக  கனடாவிலிருந்து புலிகளின் ஆதரவாளர்கள் ஊர்க்கோலம் போக தயாராகி வருகின்றனர் வேறு என்ன எதிர்ப்பு தெரிவிக்க. இப்போது எல்லாம் வெறும் 20 டாலர்களுக்கே ஆட்களைப் பிடிப்பது புலிகளின் பினாமி அமைப்புக்களுக்கு கஸ்டமாக இருக்கின்றது. அரசியல் தீர்வை உறுதிப்படுத்தும் கோஷங்களைத் தவிர மகிந்த தமது பிரபாகரனை கொன்று விட்டான் என்ற வன்மம் மட்டுமெ இவர்களிடம் மேலோங்கி நிற்கும் இந்த யாத்திரைகள் வெற்றியளிக்காது. இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இதில் ஒரு கோஷ்டி லைக்கா போல் மகிந்தா குழாமுடன் உறவை வளர்க்கவும் பயணமாம். எல்லாம் உருத்திரருக்கும் தெரியுமாமாம், கேபியின் ஆசீர்வாதத்ததுடன்

புலிகள் மன்னிப்பு கேட்டார்கள்.....?

புலிகள் மன்னிப்புக் கேட்டார்கள் என்பது உண்மைதான். மனம் வருந்தி, தவறை உணர்ந்து இதயபூர்வமாக அவர்கள் அதனைச் செய்யவில்லை. முஸ்லிம் தலைவர்களை வன்னிக்கு அழைத்துப் பேசியதும் மன்னிப்புக் கேட்டதுமெல்லாம் அப்போதிருந்த அரசியல் சூழ்நிலையைத் தற்காலிகமாகக் கையாளுவதற்கே! சர்வதேச மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசும், புலிகளும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த தருணத்தில் தாங்கள் வரலாற்றில் இழைத்த தவறுகளிலிருந்து தப்பிக்கின்ற தந்திரோபாயமாகவே புலிகளின் இவ்விரண்டு செயல்களையும் நோக்க முடியும். இவ்விரண்டும் உண்மையானவையாக, இதயசுத்தியானவையாக இருந்திருந்தால் மாவிலாறில் தொடங்கிய இறுதிக்கட்ட யுத்தத்தின்போது புலிகள், மூதூர் முஸ்லிம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றித் துடைத்தெறிந்த சம்பவம் நிகழ்ந்திருக்காது.
- ஸர்மிளா ஸெய்யித்

ரயில் பாதையோரம் குழுமி நின்று யாழ்தேவியை படம் பிடித்த மக்கள்

யாழ்ப்பாணம் புகையிரத சேவை மீண்டும் எப்போது ஆரம்பமாகுமெனக் காத்திருந்த வடபகுதி மக்கள் தற்போது பெருமகிழச்சியும் நிம்மதியும் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் ரயில் சேவையை மீண்டும் ஆரம்பித்து வைத்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வுக்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அமைச்ச ரும் ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவான ந்தா தெரிவித்துள்ளார். யாழ்தேவி புகையிரத சேவையின் பரீட்சார்த்த சேவை நேற்று நடைபெற்றது. இச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதையடுத்து, ஊடகவியலா ளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் டக்ளஸ் இவ்வாறு தெரிவித்தார். இந்த ரயில் சேவை மூலம் மக்களின் நீண்ட காலத் தேவையை ஜனாதிபதி நிறைவேற்றி வைத்துள்ளார். புகையிரத சேவை எமது மக்களுக்கு மிகவும் இன்றியமையாததாகும். இதற்காக எமது மக்கள் சுமார் இருபத்தைந்து வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இவ்வருட இறுதிக்குள் யாழ்தேவி சேவை காங்கேசன் துறை வரை சென்று விடும். யாழ்தேவி பரீட்சார்த்த ரயில் யாழ்ப் பாணம் நோக்கிச் செல்லும் போது ரயில்பாதையோரத்தில் குழுமி நின்ற பலர் தமது கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். மக்கள் ரயில் சேவையை எந்தளவு ஆவலுடன் காத்திருந்தனர் என்பது இதன் மூலம் தெரிகிறது எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

நாட்டைவிட்டு வெளியேற ஏழு இந்தியர்களுக்கு உத்தரவு

இந்தியாவில் இருந்து சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கல்முனை பிரதேசத்தில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட ஏழு இந்தியர்களையும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டுமெனவும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட புடைவைகளை அரசுடமையாக்குமாறும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் உத்தரவிட்டுள்ளார். கல்முனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கல்முனை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பிரதேசத்தில் வைத்து கடந்த சனிக்கிழமை, வீடு வீடாக புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு பேரை கல்முனை பொலிஸார் கைது செய்து விசாரணைக்குட்படுத்தியதுடன், அவர்களிடமிருந்த புடைவைகளையும் கைப்பற்றினர். இவர்களை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி அந்தோனி ஜுட்சன் முன்னிலையில் நேற்று (22) ஆஜர் படுத்தியபோது இவர்களிடமிருந்து வியாபார நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட புடைவைகள் மற்றும் துணிமணிகளை பறிமுதல் செய்து அரசுடமையாக்குமாறும், உடனடியாக இவர்கள் நாட்டை விட்டு வெளியேறவேண்டும் எனவும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

செப்ரம்பர் 22, 2014

கேள்வி எழுப்புவதற்கும் விமர்சிப்பதற்குமான உரிமை.

(சுகு-ஸ்ரீதரன்)

1970 களுக்குப் பின் கேள்வி கேட்பதும் விமர்சனம் என்பதும் குறைவடைந்து வந்தன. 1980களின் நடுப்பகுதியுடன் அவை உருவழிந்து போயின. கருத்துச் சுதந்திரத்தை இயல்பாக வெளிப்படுத்திய பலர் உடல் மீதியின்றி அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அல்லது காணாமல் போயிருக்கிறார்கள். தமிழ் சமூகத்தில் உள்ளும் புறத்திலுமிருந்து இது நிகழ்ந்திருக்கிறது. இதனை அலட்சியம் செய்யும் போக்கு சமூகத்திற்கு எவ்விதத்திலும் உதவாது. இந்த வரலாற்று விபரீதங்கள் நிகழாதிருந்தால் பெரும் ஆக்கசக்தி இன்றளவில் நிலவியிருக்கும். நாம் வாழும் ஊர் மனிதர்கள் வசிக்க விரும்பாத பாலைவனமாகிக்கெண்டிருப்பதற்கு காரணம் இந்த ஜனநாயக இடைவெளி குறுகிச்சென்றதே. (மேலும்....)

யாழ்தேவி ரெயிலா? அப்படி ஒன்று இருந்ததா?

யாழ்தேவி ரெயிலா? அப்படி ஒன்று இருந்ததா? ஆம் இருந்தது 1990 வரை இருந்தது. இந்திய இராணுவம் வெளியேறியபின் புலிப்பயங்கரவாதிகளால் யாழ்ப்பாணத்திற்கான ரெயில் சேவை தடுக்கப்பட்டது. தண்டவாளங்களையும் சிலிப்பர் கட்டைகளையும் அகற்றிய புலிப்பயங்கரவாதிகள் அதனைக்கொண்டு வல்வெட்டித்துறை அரக்கன் பிரபாகரனுக்கு பங்கர்கள் கட்டினார்கள். புலிகளால் கடத்திச்செல்லப்பட்டு சித்திரவதை முகாம்களில் இருந்த மாற்று இயக்க உறுப்பினர்கள், மாற்றுக் கருத்தாளர்கள்,ஊடகவியலாளர்கள், தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் என்று நூற்றுக்கணக்கான சிறைக் கைதிகளைக் கொண்டே புலிகள் தண்டவாளங்கள் சிலிப்பர்க் கட்டைகளை கழற்றி எடுத்தார்கள். (மேலும்....)

சுரேஸ்பிரேமச்சந்திரனின் தம்பி சா்வேஸ்வரனுக்கு எதிராக பட்டதாரிகள் போா்கொடி துாக்குகின்றனா்

பட்டதாரிகளை தகுதியற்றவர் எனக் கூறிய வடமாகாண சபை உறுப்பினரின் செயலைக் கண்டித்து யாழ்.நகரில் அகிம்சைப் போராட் டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக வடமாகாணப் பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். இம்மாகாண தமிழ்பேசும் பட்டதாரிகள் ஒன்றிணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் செயலாளராகப் பதவியேற்ற உள்ளூராட்சி உதவி ஆணையாளர் வடமாகாண ஆளுநரினாலும் பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளரினது நேர்முகப் பரீட்சையின் பின்னர் பட்டதாரி தரத்தில் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேர்முகப் பரீட்சைக்கு செல்லவில்லையென்ற காரணத்தைக் காட்டி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண ஆளுநருக்கு கடிதம் எழுதியதன் பேரில் செயலாளர் பதவி இரத்துச்செய்யப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க வடமாகாண சபை உறுப்பினரான கலாநிதி க.சர்வேஸ்வரன், பச்சிலைப்பள்ளி செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த செ.ரமேஷ் தகுதியற்றவர் ஒரு செயலாளர் என தெரிவித்து பட்டதாரிகளை இழிவுபடுத்தியுள்ளதாக வடமாகாண பட்டதாரிகளில் சிலர் விசனம் வெளியிட்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக குறித்த வடமாகாண உறுப்பினர் தனது தவறினைத் திருத்திக்கொள்ள வேண்டும் எனவும் பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு தனது தவறினை குறித்த மாகாண சபை உறுப்பினர் திருத்திக்கொள்ளாவிடின் வடக்கில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த பட்ட தாரிகளை ஒன்றிணைத்து அகிம்சைப் போரா ட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடமா காணத் தமிழ்பேசும் பட்டதாரிகள் தெரிவிக்கின் றமை குறிப்பிடத்தக்கது

Narmada Thiranagama

My sister and I wrote a joint statement for this weekend, this is a small part:
"While she might come across as a very serious person, we remember our joyful mother, who found something to love about life each day.......When people died or disappeared, our mother wept for them. We learned that every death was a tragedy and each life meant something. We are now the ones who grieve, grieve for all the years of life that were stolen from her, a person who was made to live and to love the world. A woman who was fierce in the fight for others, gentle with anyone in pain. If she could be with us today, we feel she would argue that it is when we fight for everyone, and for an inclusive and just society that we truly become free. When we are compassionate and humane our voices can never be extinguished. On the day that she died, we heard those shots without knowing that our lives were changing forever. We said "I wonder who they are killing now". Her answer to us and to you is, 'it is our mother, our father, our sister, our brother'. Let us not turn away

ஊவா மாகாண சபைக்கு, தமிழர்கள் நால்வர் தெரிவு

நடந்து முடிந்த ஊவா மாகாண சபை தேர்தல் பெறுபேறுகளின்படி, பதுளை மாவட்டத்திலிலுந்து 4 தமிழ் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து செந்தில் தொண்டமான்( 31,858 வாக்குகள்), ஆறுமுகம் கணேசமூர்த்தி (19,262வாக்குகள்) வடிவேல் சுரேஸ் (21,967 வாக்குகள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேலாயுதம் ருத்ரதீபன்(30,457 வாக்குகள்) ஆகியோரே இவ்வாறு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

ஆளுங்கட்சி இழந்த 6 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐ.தே.க

2009ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து இம்முறை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 69 ஆயிரம் வாக்குகள் குறைவாகக் கிடைத்துள்ளன. இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சிக்கு 1 இலட்சத்து 45 ஆயிரத்து 629 வாக்குகள் அதிகமாகக் கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணியும் கடந்த 2009ஆம் ஆண்டை விட 21 ஆயிரத்து 941 வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளது. இம்முறையும் ஊவா மாகாண சபையை ஐ.ம.சு.மு கைப்பற்றியுள்ள போதிலும், 6 ஆசனங்களை இழந்துள்ளது. இதேவேளை, ஐ.தே.க.வுக்கு 6 ஆசனங்கள் மேலதிகமாகக் கிடைத்துள்ளன. மக்கள் விடுதலை முன்னணியும் ஓர் ஆசனத்தை மேலதிகமாகப் பெற்றுள்ள அதேவேளை, கடந்த முறை ஓர் ஆசனத்தைப் பெற்றிருந்த மலையக மக்கள் முன்னணி, இம்முறை அந்த ஆசனத்தை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை ஒக்டோபர் 13இல் ஆரம்பம்

யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 1990ஆம் ஆண்டுடன் அஸ்தமித்திருந்த வடக்குக்கான ரயில் சேவை, யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து ஓமந்தை, பளை, கிளிநொச்சி வரை படிப்படியாக விஸ்தரிக்கப்பட்டு தற்போது யாழ்ப்பாணம் வரை சேவை இடம்பெறவுள்ளது. இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவையை விஸ்தரிக்கும் பணிகள் பூர்த்தியாக்கப்பட்டு, இன்று (22) பரீட்சார்த்த ரயில் சேவை இடம்பெறவுள்ளது. இன்று காலை 10 மணிக்கு பளையிலிருந்து ஆரம்பமாகும் பரீட்சார்த்த புகையிரதம், 10.30 மணிக்கு யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை வந்தடையும் என புகையிரத திணைக்களம் தெரிவித்தது. தொடர்ந்து ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவைகள், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படும் என்று புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்தது.

பேச்சுவார்த்தை, தீர்வுக்கா தேர்தலுக்கா?

தாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தைப் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தியாவில் வெளியிடப்படும் இந்து பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றின் போது கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்தைப் பற்றி அவரது சகோதரர்களான பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரும் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோரும் என்ன கூறுகிறார்கள் என்று அறிய நிச்சயமாக மக்கள் விரும்புவார்கள். ஏனெனில், இந்த நால்வரும் 13ஆவது திருத்தத்தை முற்றாக ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள். (மேலும்....)

செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையில் மங்கள்யான் விண்கலம்

மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையை நெருங்கி வருவதால் அதன் என்ஜினை இயக்குவதற்கான ஆயத்த பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மங்கள்யான் விண் கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் தனது பயண தூரத்தின் கடைசி கட்டத்தில் உள்ளது. மங்கள்யான் விண்கலம் இன்று செவ் வாய் கிரகத்தின் நீள் வட்டப் பாதையை அடை யும் என்று இஸ்ரோ விஞ் ஞானிகள் அறிவித்துள் ளனர். இதனால் விண்கல த்தை செவ்வாய் கிரகத் தின் நீள்வட்டப் பாதை யில் நிலைநிறுத்துவதற் காக விண்கலத்தின் என்ஜினை இயக் குவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திட்டமிட்டபடி எதிர் வரும் 24ம் திகதி மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் நீள்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப் படும் என்று நம்பிக்கை தெரிவித்துள் ளனர். அதன் பின் மங்கல்யான் தனது ஆராய்ச்சி பணியை துவங்கும் என்று தெரிகிறது.

 

செப்ரம்பர் 21, 2014

புலிகளின் அதி தீவிர கொலைக்களம் இங்கிருந்துதான் ஆரம்பமானது

முள்ளிவாய்க்கால் கொலைகளுக்கான தளமும் இங்குதான் உருவானது

ஊவா மாகாண சபை ஆளுங்கட்சி வசம், ஆனால் ஆதரவு குறைந்துள்ளது

பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களையும் உள்ளடக்கிய ஊவா மாகாண சபையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிகொண்டுள்ளது.தேர்தல்கள் திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் பிரகாரம், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 349,906 வாக்குகள்   51.25 சதவீதம்  (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 19 ஆசனங்கள்) ஐக்கிய தேசிய கட்சி - 274,773 வாக்குகள் 40.24 சதவீதம்  ( 13 ஆசனங்கள்) மக்கள் விடுதலை முன்னணி 36,580 வாக்குகள 5.36 சதவீதம்  ( 2ஆசனங்கள்)

2009 ஆம் ஆண்டு  இறுதி முடிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 418,906  72.39 (2 போனஸ் ஆசனங்கள் அடங்களாக 25 ஆசனங்கள்) ஐக்கிய தேசிய கட்சி - 129,144 வாக்குகள் சதவீதம் 22.32 சதவீதம் ( 7 ஆசனங்கள்) மக்கள் விடுதலை முன்னணி 14,639 வாக்குகள 2.53 சதவீதம்  ( 1ஆசனம்) மலையக மக்கள் முன்னணி 9,227 வாக்குகள 1.59 சதவீதம்  ( 1ஆசனம்)

யாழ். மக்களுக்கு அவசர வேண்டுகோள்!

யாழ். மக்களுக்கு இலங்கைப் புகையிரத திணைக்களத்தின் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளனர். பளைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையே புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புகையிரதப் பாதையில் அதிவேகமான புகையிரத பரீட்சார்த்த வெள்ளோட்டம் இடம்பெறவுள்ளது. புகையிரத பரிட்சார்த்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதால் புகையிரதப் பாதையின் அருகில் செல்லும் போது, அவதானத்துடன் செல்லுமாறும், மக்களின் கால்நடைகளின் நடமாட்டத்தை புகையிரதப் பதையருகில் கட்டுப்படுத்தும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ் அறிவித்தல்களை புகையிரத திணைக்களத்தினர் ஒலிபெருக்கியில் அறிவிப்பதுடன் துண்டுப்பிரசுங்களும் யாழ் நகரில் விநியோகிக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை பளையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு நேரடியான பரிட்சார்த்த பயணம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

வடமாகாண சபையினருக்கு எதிராக கேலி துண்டுப்பிரசுரங்கள்

வடமாகாண முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக மூன்று விதமான துண்டுப்பிரசுரங்கள் யாழ். மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. 'அன்றும் அவளே இன்றும் அவளே' என அனந்தி சசிதரனை கேலி செய்யும் விதத்தில் ஒரு துண்டுப்பிரசுரமும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் வாகனம் மற்றும் வீடு ஆகியவற்றின் கனவுகளுடன் வாழ்வதாக வரைபடங்கள் மூலம் சித்தரிக்கப்பட்ட ஒரு துண்டுப்பிரசுரமும் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினத்துடன் (21) ஒரு வருட காலம் முடிவடைந்த நிலையிலும் வடமாகாண சபை மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை செயற்படுத்தவில்லை என்பதுடன், மக்கள் இன்னமும் கஷ்டங்கள், சிரமங்களின் மத்தியில் வாழ்வதாகவும் குறிப்பிட்டு ஒரு துண்டுப்பிரசுமும் ஒட்டப்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகளும் கடும் எதிர்ப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள மாவை சேனாதிராஜாவின் அஹிம்சைப் போராட்டத்திற்கான அறிவிப்பும், அரசாங்கத் திற்கான காலக்கெடு விதிப்பும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக் கும் இதர கட்சிகளின் தலை வர்களைக் கடும் சீற்றத்திலும், அதி ருப்தியிலும் ஆற்றி யுள்ளதாகத் தெரிவிக் கப்படுகிறது. கூட்டணிக் கட்சி களுடன் கலந்தா லோசிக்காமல் தமிழரசுக் கட்சியின் தலைவர் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவு தம்மால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாததொன்று என அவர்கள் தெரிவித்துள்ளதாகத் தெரிய வருகிறது. இவ்விடயத்தில் கூட்டுக் கட்சிகளில் ஒன்றான தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி. ஆனந்தசங்கரி தனது எதிர்ப்பை வெளிப் படையாகவே தெரிவித்துவிட்டார். மற்றும் இரு கட்சிகளான புளொட் அமைப்பின் தலைவர் த. சித்தார்த்தனும். ஈ. பி. ஆர். எல். எப். அமைப்பின் தலைவரான சுரேஷ் பிரேமச்சந்திரனும் இதனை ஏற்க முடியாது என்பதனை மறைமுகமாத் தெரிவித்துள் ளதாகவும் தெரிய வருகிறது. மக்களது கருத்தறியா மல் மாவை சேனாதிராஜா அவசரப்பட்டு அறிக்கை விட்டுவிட்டார் என இவர்கள் இருவரும் குற்றம் சாட்டியுள்ளதாகவும் தெரிய வருகிறது. அதேபோன்று மற்றுமொரு கூட்டுக் கட்சியான ரெலோ அமைப்பின் முக்கியஸ்தரான எம். கே. சிவாஜிலிங்கம், தன்னால் மாகாண சபையில் கொண்டுவரப்படும் பிரேரணைகளை எதிர்ப்பவர்கள் தேவையற்ற இவ்விடயத்தை முதன்மைப்படுத்தியது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது. இதனைவிடவும் புதிய தலைவரால் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களை தமிழரசுக் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் சிலரும் எதிர்த்துள்ளதாகத் தெரிய வருகிறது.

மாவையின் தலைமையில் மீண்டும் சவடால் அரசியல் ஆரம்பம்

பழைய குருடி கதவைத் திறடி

தமிழரசு கட்சியின் தலைவராக எதிர் பார்த்தவாறு மாவை சேனாதிராஜா கட்சியின் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். கூட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிக ளின் தலைவர்களைப் பொறுத்தவரை யில், அவர்கள் மாவையின் தெரிவை மகிழ் ச்சியுடன் நோக்கவில்லை. மாவை தலைவராக தெரிவுசெய்யப்பட்ட உட னேயே, பழைய தமிழரசு கட்சியின் பாணியில் கோஷங்களும் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கோஷங்களை பார்த்தால் பழைய குருடி கதவைத் திறடி என் னும் பழமொழியே நினைவுக்கு வரு கிறது. அமரர் செல்வநாயகம் 1949இல் தமிழரசு கட்சியை தொடங்கிய காலத் திலிருந்து எத்தனையோ கோஷங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அப்படியான கோஷ ங்கள் கட ந்த அறுபது வரு டங்களாக எதைச் சாதித்ததென்று கோட் டால் பதில் சொல்வார் எவரு மில்லை. (மேலும்....)

கிழக்கில் குறைந்து வரும் மாட்டு வண்டி பாவனை

கிழக்கு மாகாணத்தில் மாட்டு வண்டிப் பாவனை வேகமாக குறைந்துகொண்டு வருகிறது. இதனால் மாட்டு வண்டினை நம்பி தொழில் செய்து வந்தவர்கள் வேறு தொழில்களை தேட வேண்டிய ஒரு நிலமை ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கு ஒல்லாந்தர், போர்த்துகேயர் வந்த காலத்தில் கொழும்பு, காலி, யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் கோட்டைகள் கட்டுவதற்கு அத்துறையில் திறமையான பறங்கிச் சமூகத்தைச் சேர்ந்த குழு ஒன்றை இலங்கைக்கு அழைத்து வந்து கோட்டைகள் கட்ட வேண்டிய இடங்களில் இவர்களை குடியமர்த்தினார்கள். கோட்டை கட்டி முடிந்ததும் அவர்கள் அந்தந்த இடங்களிலே நிரந்தரமாக இருந்து கொண்டு பல்வேறு தொழில்கள் செய்வதில் ஈடுபட்டு வந்தார்கள். (மேலும்....)

மலையக மக்கள் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக திகழ்ந்தவர் சி.வி

மக்கள் பண்பாட்டுக்கழகம் சி.வி. வேலுப்பிள்ளையின் நூறாவது ஜனன தினத்தையொட்டி நடத்திய ஆய்வரங்கு கடந்த 08ஆம் திகதி ஹட்டன் சமூகநல நிறுவன மண்டபத்தில் நடைபெற்றது. மக்கள் பண்பாட்டுக்கழக அமைப்பாளர் பா. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்டத்தரணி எல். ஜோதிகுமார், சி.வி பதித்துச் சென்ற இலக்கிய தடங்கள் என்ற தலைப்பிலும் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் எம். எம். ஜெயசீலன் சமகால இலக்கியத்தின் சி.வி. என்ற படைப்பிலக்கியத் தாக்கம் எனும் தலைப்பிலும் மலையக மக்களின் வரலாற்று அசைவியக்கத்தில் சி.வியின் அரசியல் தொழிற்சங்க பணிகள் என்ற தலைப்பில் மக்கள் பண்பாட்டுக்கழக செயற்பாட்டாளர். சு. விஜயகுமாரும் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். (மேலும்....)

செப்ரம்பர் 20, 2014

அதிகாரங்களை பகிர்ந்தால் பிரிவினையை தடுக்கலாம் - சம்பந்தன்

தமது அரசியல் தலைவிதி என்ன என்பது குறித்த முடிவை ஸ்கொட்லாந்து மக்களே எடுக்கும் வகையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பை ஒரு சிறந்த ஜனநாயக நடவடிக்கை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான  இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதேவேளை, ஸ்கொட்லாந்து மக்கள் எடுத்த முடிவு எதுவாக இருந்த போதிலும் ஐக்கிய இராச்சியத்தின் முக்கிய கட்சிகள் அனைத்தினதும் தலைவர்களும், ஸ்கொட்லாந்துக்கு இன்னமும் மேலதிக அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பதையும் அவர் வரவேற்றிருக்கிறார். ஆகவே, ஒரு தனியான வாழ்விடத்தில் உள்ள, தனியான இன மக்களுக்கு உரிய அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவதன் மூலம் பிரிவினையை தடுத்துக்கொள்ள முடியும் என்பது இலங்கைக்கு உட்பட பல நாடுகளின் தலைவர்களுக்கு ஒரு பாடம் என்றும் அவர் கூறினார்.(பிபிசி)

மாண்டலின் ஸ்ரீநிவாஸ் காலமானார்

இந்தியாவில் அதிகம் அறியப்படாத ஒரு வாத்தியத்தை தனது அதியற்புதமான திறமையினால் உச்சத்துக்கு எடுத்துச் சென்ற ஒரு பிறவிக் கலைஞரின் இசை இன்று அடங்கியது . ஸ்ரீநிவாஸ் என்று இசை உலகம் அறிந்த அந்தக் கலைஞர் தமது 45 ஆவது வயதில் அறுவை சிகிச்சை பலனளிக்காமல் சென்னையில் காலமானார்.  கல்லீரல் பிரச்னை தொடர்பான, சென்னை தனியார் மருத்துவமனையில், கடந்த 3ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஸ்ரீநிவாஸ், 19 செப்டம்பர், 2014  காலை 09.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். பிரபல இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ பத்மஸ்ரீ, சங்கீத ரத்னா உள்ளிட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார். மாண்டலின் என்ற இசைக் கருவியை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர் மாண்டலின் ஸ்ரீனிவாஸ். இசைக் குடும்பத்தில் பிறந்த மாண்டலின் ஸ்ரீனிவாஸ், தன்னுடைய மாண்டலின் இசைக் கருவி மூலம் பாடல்களை ஒலிக்கச் செய்து, இசை ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

பாவடைக்குள் பயங்கர ஆயுதம் வைத்துக் கொண்டு, ஆளுநரைப் பற்றி ஆராய்வதற்கு ஆயருக்கு அருகதையில்லை

சமயங்களைப் போதிப்பவா்கள் தற்போது அரசியல் போதிக்கும் நிலைக்கு உள்ளாகி வருகின்றார்கள். இலங்கையைப் பொறுத்தவரை தென்பகுதியில் சிங்கள பௌத்த பிக்குகள் சிலா் தீவிர அரசியல் களத்தில் குதித்து சமயபோதனைகளை விடுத்து மக்களுக்கு அரசியல் போதிக்கின்றனா். இதேபோல் வடபகுதியில்  வடக்கு மக்களின் அரசியல் வழிகாட்டிகளாக கிறீ்ஸ்தவ மதத்தைப் போதிக்கும் சமயத்தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா். வடபகுதி தமிழ்மக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையோர் சைவசமயத்தைச் சோ்ந்தவா்கள். ஆனால் இவா்களது மதத்தலைவா்கள் பெரும்பாலும் அரசியலுக்குள் நுழையவில்லை. இதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. இதைப் பற்றி பின்னா்  பார்க்கலாம்.(மேலும்....)

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இந்திராதேவி சந்திரகாந்தன் அவர்கள் 18-09-2014 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், சிவஞானம் தில்லைநாயகி தம்பதிகளின் அன்பு மகளும், நாகேந்திரம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகாந்தன்(சந்திரன்) அவர்களின் அன்பு மனைவியும்,

நீபா, திவிபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும், 

பகவதி(ரஜெனி-சுவிஸ்),சுமிதிரன்(அன்பு-சுவிஸ்), சுரேந்திரன்(குட்டி-இலங்கை), மீனநலினா(மீனா-இலங்கை), காஞ்சனா(ஜெர்மனி),(காலம்  சென்ற பாலசுப்பிரமணியம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசுப்பிரமணியம் கமலநாயகி, கந்தசாமி கோகிலநாயகி, பத்மநாயகி ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சண்முகராசையா விமலாசினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சக்திவடிவேல்  லிங்கமூர்த்தி, சத்தியபாமா, செல்வராணி, கிருபாமூர்த்தி,  லக்ஷ்மிகாந்தன், நிமலகாந்தன், உமாகாந்தன், சாந்தமலர், சங்கரன், சிந்தாகரன், ஷைலஜன், நிலானி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அலகேஸ்வரி, ராசரத்தினம், வனஜா ஆகியோரின் அன்புச் சகலியும்,

நிவேஸ். சிறிஷா, லவனேஸ், கஜந்தி, கிஷெக், அபராஜுதன், நந்திகா, வர்ஜிதா, மானசீதா, லவனேஸ், ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,

மோகனரூபன், காந்தசொரூபி, அகீசன், உமைகாந்த், விஷாலினி ஆகியோரின் அன்புச் சிறியதாயாரும்,

சிவானுஜன், மாதுஜன், விஷ்னுஜன், தர்மினி, கம்சிகா, சாய்சஜன், சுவாரகேசன், சிந்துகேசன், விதுர்ஷன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 19-09-2014 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு 

சந்திரகாந்தன்(கணவர்) இலங்கை 

0094776506767

பகவதி சகோதரி -சுவிஸ்

0041791059814

காஞ்சனா(சகோதரி) ஜெர்மனி

004915212299730

சிந்தா இலங்கை

0094775259046

பிரிட்டனுடன் இணைந்திருக்கவே ஸ்கொட்லாந்து மக்கள் விருப்பம்

ஸ்கொட்லாந்து தனி நாடாவது குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் பிரிட்டனிலிருந்து பிரிய ஸ்கொட்லாந்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிரேட் பிரிட்டன் என்ற ஐக்கிய இராச்சியத்திலிருந்து பிரிந்து தனி நாடாவது குறித்த பொது வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் வெளியாகத் துவங்கின. இதில் 55 வீத வாக்குகள் ஸ்கொட்லாந்து கிரேட் பிரிட்டனிலிருந்து பிரிய எதிர்ப்பு தெரிவித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. கிரேட் பிரிட்டனின் ஓர் அங்கமாக கடந்த 307 ஆண்டுகளாக நீடித்த ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிந்து செல்ல விரும்பியது. ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு அந்நாட்டிலேயே உள்ள ஆதரவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றின் உண்மையான நிலையறிய அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோர் ஸ்கொட்லாந்து பிரிட்டனுடன் இணைந்திருக்க வேண்டுமென தங்கள் விருப்பத்தைத் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஸ்கொட்லாந்து தனி நாடாகப் பிரிவதற்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்திருந்தால் வரும் 2016ம் ஆண்டு மார்ச்சுக்குப் பிறகு அந்நாடு தனி நாடாகி இருக்கும். அது பிரிட்டனின் செல்வாக்கை சர்வதேச அளவில் குறைப்பதோடு பிரதமர் கமரூனின் பதவிக்கு ஆபத்து ஏற்படுத்தியிருக்கும்.

மாற்று அமைப்பொன்றிலிருந்து இணைந்து செயற்பட்டவரே செந்திலை கொல்ல முயற்சி

பண்டாரவளையில் இடம்பெற்ற கொலை முயற்சி சம்பவத்தின் சந்தேகநபர் 17ம் திகதி இரவு பதுளை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததுடன் அடுத்தநாள் சந்தேக நபரை பண்டாரவளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டதும், நீதிபதி எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். மாற்று அமைப்பொன்றிலிருந்து இ. தொ.காவுடன் இணைந்து செயற்பட்ட எஸ். செல்வேந்திரன் என்ற நபரே, சந்தேகத்தின் பேரில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவராவார். கடந்த 17ந் திகதி பண்டாரவளை மாநகரில் நடைபெற்ற இ. தொ. கா. வின் பிரசார பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது வாகனமொன்றினை செலுத்தி, ஒருவர் மரணமாகியதுடன் 27 பேருக்கு காயங்களை ஏற்படுத்தியமை தொடர்பாகவே, குறிப்பிட்ட நபர், சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டி ருப்பவராகும். காயமுற்றவர்களில் வேட்பாளர் செந்தில் தொண்டமான், அல்து முள்ளை பிரதேச சபை உபதலைவர் சிங்கமுத்து அசோக்குமார் உள்ளிட்ட மூன்று பொலிஸாரும் உள்ளடங்கி யுள்ளனர்.

உலகத் தமிழர்களுக்கு அவசர வேண்டுகோள்!

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி என்ற பெயரில் பண மோசடி செய்த சிவாவதனி

யுத்தத்தின் விளைவுகளால் தனது கால் ஒன்றினை இழந்து மற்றைய காலும் செயலிழந்து போகும் நிலையில் வாழ்வாதாரத்திற்காக துடித்த முன்னால் பெண் போராளிக்கு உதவுவதாகக் கூறி 5000 கனடிய பணத்தை ஆட்டைய போட்ட சிவாவதனி. முன்னால் பெண் போராளிக்கு உதவு மாறு முகநூளில் சிலருக்கு வேண்டுகோள் விடுத்தது அவர்களும் அந்த வேண்டுகோளை ஏற்று 3 பேர் தனித்தனியாக சிவாவதனி இடம் பணத்தை கொடுத்துள்ளனர். ஆனால் இன்று வரை அந்த பெண் போராளிக்கு பணம் செல்லவில்லை அவரிடையே நீங்கள் நேரடிய கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்வது மட்டுமின்றி உதவும் நல் உள்ளம் கொண்டோரே உதவிக்கரங்கள் நீட்டுங்கள் 0094773256776 (மேலும்....)

செப்ரம்பர் 19, 2014

என் மனவலையிலிருந்து..!

ஊவா மாகாண சபைத் தேர்தல் சொல்லப்போகும் சேதி

(சாகரன்)

நாளை வாக்கு பதிவு நடைபெறப்போகும் ஊவா மாகாணசபைத் தேர்தல் எல்லோரினதும் கவனத்தையும் தன்பால் திசை திருப்பியுள்ள ஒரு தேர்தல் என்றால் மிகையாகாது. கடைசியாக இலங்கையில் நடைபெற்ற தென்மகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி வெற்றிபெற்றிருந்தாலும் அதன் இறங்கு முகத்தை எடுத்துக்காட்டிய ஒரு தேர்தல் என்றே அதனைக் கூறவேண்டும். சிங்கள பெரும்பான்மை மக்களிடத்தும் ஐக்கிய சுதந்திர முன்னணி பற்றிய கவர்ச்சி குறைந்து வருவதை எடுத்துக்காட்டிய தேர்தலாக அது அமைந்தது. சாதாரண மத்தியதர, அதற்கு கீழ்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்திற்கு சவால்விடும் இலங்கையின் இன்றைய பொருளாதார நிலமை சாதாரண சாமான்ய மக்களிடையே ஐக்கிய சுதந்திர முன்னணி அரசின் மீது வெறுப்பையே ஏற்படுத்தி வருகின்றது. அபிவிருத்தி என்றும், புதிய கட்டுமானம் என்றும் ஓடிக்கொண்டிருக்கும் இன்றை அரசின் செயற்பாடுகள் சராசரி உழைக்கும் மக்களின் வாழ்வை உறுதிப்படுத்த போதுமானதாக இல்லை. உழைப்பின் ஊதியங்களுக்கு மீறிய வாழ்க்கைச் செலவை கொண்டிருக்கும் விலைவாசி உயர்வை சாதாரண, சமான்ய மக்கள் முகம் கொடுக்க முடியாமல் தடுமாறுகின்றனர், தவிக்கின்றனர் என்பதே இன்றை இலங்கையின் நிலையாகும். அபிவிருத்தியும், கட்டுமானமும் வசதி படைத்த மிகச்சிலருக்கு மட்டும் சென்றடையும் அல்லது அனுபவிக்கக் கூடிய நிலமைகளே இலங்கையில் இன்று நிலவுகின்றது. சாதாரண மக்கள் மேல் ஏற்றப்பட்ட வாழ்க்கைச் சுமையின் பிரதிபலிப்பை இந்த ஊவாமாகாண சபைத் தேர்தல் முடிவுகள் எடுந்தியம்பி நிற்கும். அதிலும் சிறுபான்மை மக்களின் பெருவாரியான வாக்குகள் உள்ள மாகாணம் ஒன்றில் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசுக்கெதிரான வாக்குகள் வழமைபோல் இம்முறையும் ஐக்கிய தேசியக் கட்சி தமது நண்பன் என்ற மாயமான் மீது நம்பிக்கையை கூட்டும் முகமாவே அமையப் போகின்றது. இதன் அர்த்தம் ஐதே கட்சி நாட்டு மக்களுக்கோ அல்லது சிறுபான்மை மக்களுக்கோ உதவிகரமான கட்சி என்பது அல்ல மாறாக ஆளும் கட்சிக்கு எதிரான உணர்வலைகளை வெளிக்காட்டும் ஒரு மாற்றீடாக வாக்குகள் மாறப்போகின்றன அவ்வளவே. ஆனால் இந்த எதிர்பலை ஐக்கிய சுதந்திர முன்னணி அரசிற்கான ஆதரவு தளத்தை குறைத்துக்காட்ட மட்டும் உதவுமே ஒழிய அக் கட்சி ஆட்சியமைப்பதை தடுப்பதற்கு போதுமானதாக அமையப் போவதில்லை. இலங்கையில் இன்னமும் ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி மாற்றாக மக்கள் நலன் சார்ந்து மக்களுக்கு தலைமை கொடுக்க ஒரு அரசியல் கட்சி இருக்கின்றது என்று நம்பிக்கையைக் கொடுக்கக் கூடிய எந்த கட்சியையும் மக்களால் இனம் காண முடியவில்லை. இதே நிலமைதான் வடக்கிலும் தமிழ் தேசியக் கூட்டமைக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்ததற்கும் காரணம் ஆகும். இதையொத்த காரணம் இன்றும், இன்னமும் தென்னிலகையிலும் நிலவுகின்றது. ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற நிலையும், சோசலிச நாடுகளுடனான உறவு என்பதுவும், தேசிய நலன்களை முன்னிலைப்படுத்தும் செற்பாடுகளையும் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவிற்கேனும் தன்னத்தே கொண்டிருக்கும் கட்சி என்ற பெருமை மட்டும் ஐக்கிய சுதந்திர முன்னணியிற்கு போதுமானதாக இல்லை. ஆளும் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசின்மீதுள்ள வெறுப்பலையை அறுவடைசெய்ய யாரும் இல்லாத நிலையில் இவர்கள்தான் ஓரளவிற்கு நம்பிக்கைகு உரியவர்களாக தோற்றம் அழிப்பதினால் இத் தேர்தலிலும் அவர்களே சற்றுக் குறைவானாலும் வெற்றியை தமதாக்கிக் கொள்வர்.

(செப்ரம்பர் 18, 2014)

புலிகளுக்கு எதிராக யாழில் சுவரொட்டி


1989ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் மரணத்துக்கு தமிழீழ விடுதலை புலிகளே காரணம் என குற்றஞ்சாட்டில், யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'கொடிய எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளினால் 1989 செப்டெம்பர் 21ஆம் திகதி அன்று சுட்டு கொலை செய்யப்பட்ட மருத்துவரான ராஜனி திராணகமவின் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்' என அந்த சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகள், யாழ். மாவட்டதின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செந்தில் தொண்டமானை கொலை செய்ய சதி

பண்டாரவளை நகரில் வைத்து நேற்று முன்தினம் (17/09) மாலை நடந்த வாகன விபத்து ஒரு விபத்து அல்ல. திட்டமிட்டு செந்தில் தொண்டமானை கொலை செய்ய மேற்கொண்ட ஒரு சதித் திட்டமாகுமென இலங்கை தொழிலாளர் காங்கி ரஸின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார். நேற்று மாலை பண்டார வளை நகரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்தார். விபத்தின் போது 60 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்த ஜீப் வண்டி செந்தில் தொண்டமான் இருந்த இடத்தை நோக்கி செலுத்தியதையடுத்து இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார். மேலும் ஊவா மாகாணத்தில் பெரும் வெற்றியை செந்தில் தொண்டமான் எடுப்பதை தடுப்பதற்காக பல நாட்களாக திட்டமிட்டு குறித்த சாரதியை செந்தில் தொண்டமானிடம் அனுப்பியிருப் பதாகவும், இதேபோல் ஒரு சம்பவம் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிற்கும் நடந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வேட்பாளர் செந்தில் தொண்டமான் கொழும்பு மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் 24 பேர் கடுங்காயப்பட்டு பண்டாரவளை மற்றும் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக ஆயுதம் வழங்க அமெ. பிரதிநிதிகள் அவையில் அனுமதி

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவுடன் போராடுவதற்கு சிரியா வின் மிதவாத கிளர்ச்சியாளர் களுக்கு பயிற்சி மற்றும் ஆயு தங்களை வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் அவை அந்நாட்டு ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு அனுமதி அளித்துள்ளது. குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் இருக்கும் பிரதிநிதிகள் அவையில் இந்த திட்டத்திற்கு அதிக பெரும் பான்மை வாக்குகள் கிடைத்தன. இது செனட் அவையிலும் நிறை வேற்றப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது. ஈராக்கில் தரைவழியாக அமெரிக்க துருப்புகளை அனுப்பப் போவதில்லை என்று ஒபாமா உறுதி யளித்ததைத் தொடர்ந்தே அமெ ரிக்க பிரதிநிதிகள் இந்த திட்டத் திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த ஓகஸ்ட் மத்தியில் இருந்து ஈராக்கில் இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக அமெரிக்கா 174 வான் தாக்குதல்களை நடத்தி யுள்ளது. கடைசியாக கடந்த செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் வட மேற்கு இத்ரிப் மற்றும் தென்மேற்கு பக்தாதில் அமெரிக்க படை நடத்திய வான் தாக்குதல்களில் ஐ.எஸ். இன் இரு கவச வாகனங்கள் அழிக் கப்பட்டதாக அமெரிக்க கட்டளை தலைமையகம் குறிப்பிட்டிருந்தது. ஐ.எஸ். க்கு எதிரான ஒபாமாவின் யுத்த மூலோபாயத்தில் ஈராக்கை போன்றே அந்த குழுவுக்கு எதிராக சிரியாவிலும் வான் தாக்குதல்களை முன்னெடுக்க உறுதி அளிக்கப்பட் டுள்ளது

செப்ரம்பர் 18, 2014

என் இனமடா நீ!!! அடுத்த தேசியத் தலைவர். நீதான்டா!!!

(யாழ் வெடிவேலு)

இனிமேல் சிங்களவனுக்கு எதிராக போராடப் போகும் அடுத்த தேசியத்தலைவா் கடந்த சிலதினங்களுக்கு முன் தமிழரசுக்கட்சியால் தெரிவுசெய்யப்பட்டார். அவா்தான் மாவை சேனாதிராஜா அவா்கள். மாவை சேனாதிராஜா தான் தலைமைப் பதவிக்கு  வந்தவுடன்  இனப்பிரச்சனையைத் தீா்ப்பதற்குள் சிங்கள அரசிற்கு  மூன்று மாதகால அவகாசம் கொடுத்துள்ளார். அதற்குள் தமிழா்களுக்கு சரியான முறையில் அதிகாரம் கொடுக்கப்படாவிட்டால் அகிம்சைப் போரில் குதிக்கப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். அகிம்சைப் போர் என்பதன் அா்த்தம் என்னவென்று அவா் விளக்கமாகச் சொல்லாவிட்டாலும் பெரும்பாலும் ஊடகங்களுக்கு அறிக்கை விடுவதையே அவா் அகிம்சைப் போர் எனத் தெரிவித்திருக்கலாம். (மேலும்....)

அறிஞர் அண்ணாத்துரை பற்றி ஒரு கம்யூனிஸ்ட்

அண்ணா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது அவரது பல முக்கியப் பங்களிப்புகளில் நான்கு விசயங்களை முன்வைக்க விரும்புகிறேன். ஒன்று, மாநில சுயாட்சி. திமுக எதிர்க்கட்சியாகச் செயல்பட்ட காலத்திலும், பின்னர் ஆளுங்கட்சியாக மாறிய பின்னரும் இதை வலியுறுத்தியவர் அவர். வலிமையான மாநிலங்கள் அமைவதுதான் வலிமையான இந்தியாவை உருவாக்கும் என்ற தெளிவோடு மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்று கூறினார் அண்ணா. அடுத்து, மொழி உரிமை. அடிப்படையில் தமிழுக்காக அவர் குரல் கொடுத்தார் என்றாலும் அதன் பொருள், இந்தியா போன்ற பல்வேறு மொழிகளும் பன்முகப் பண்பாடுகளும் உள்ள நாட்டில் அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்படுவது முக்கியம். மூன்றாவதாக, விமர்சனங்களை அவர் எதிர்கொண்ட விதம். மாற்றுக் கருத்துகளையும், தன்னைப் பற்றிய எதிர்க்கருத்துகளையும் மனம் திறந்து வரவேற்றவர். இயக்கத்தின் வளர்ச்சிக்கும் அரசின் நல்ல செயல்பாட்டிற்கும் விமர்சனங்கள் தேவை என்று கருதியவர் அவர். (மேலும்....)

செப்ரம்பர் 17, 2014

அமெரிக்காவிலேயே அதிக மனித உரிமை மீறல்கள்

இலங்கை நாடு இன்று சகல இனங்களும் கெளரவத்துடன் வாழக்கூடிய சுதந்திர நாடாக உலகில் திகழ்கின்றது. சில உலக நாடுகளும் அமைப்புகளும் எமது அரசாங்கத்தையும், நாட்டையும் மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி வருகின்றன. இது ஒரு அப்பட்டமான பொய்ப் பிரசாரமே. அமெரிக்க அரசுக்கு எதிராக போராடி யவர்கள் இன்றும் சித்திரவதை முகாம்களில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மனித உயிர்களை அழித்து நாட்டில் சொத்துக்களை நாசப்படுத்தி அரசுக்கு எதிராக போராடியவர்களை இன்று அரசாங்கம் புனர்வாழ்வு அளித்து சந்தோசமாக குடும்பங்களுடன் ஒப்படைத்து அவர்களை சமூகத்தில் இணைத்துள்ளது. இதனை மனித உரிமை பற்றி பேசும் அமைப்புக்கள் மற்றும் உலக நாடுகள் சிந்திக்க வேண்டும். இவ்வாறு ஒரு பாரிய பிரச்சினைகளுக்கு தீர்வுகளை தேடிவரும் நிலையில் சில தீய சக்திகள் எமது நாட்டில் மத ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் அமைதியற்ற சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இதற்கு மக்கள் சோரம் போகாது சிந்தித்து செயல்பட வேண்டும். நாம் அக்கறையுடன் உங்களின் இடங்களுக்கு வருகை தந்து உங்களை பற்றியும் உங்களின் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும் சிந்திக்கின்றோம். நீங்கள் நம்பிக்கையுடன் எங்களுடன் இணைந்திருங்கள். நாம் அனைவரும் இன ஐக்கியத்துடன் இலங்கையில் ஒற்றுமையுடன் வாழ்வோம் என மேலும் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

ரஷ்யாவுடனான உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம்

பிரேசிலில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அப்போது ரஷ்யாவுடனான உறவுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று கூறினார். 'பிரிக்ஸ்' என்னும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய 5 நாடுகளின் உச்சிமாநாடு, பிரேசில் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரஷ்ய அதிபர் புட்டினை சந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே நல்லுறவு நீடிக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். சந்திப்பின்போது, பிரதமர் மோடி நாடு விடுதலை பெற்றது முதலே இந்தியாவுடன் ரஷ்யா நட்புறவு கொண்டுள்ளது. இது இந்திய குழந்தைகளுக்குக் கூட தெரியும். அணுசக்தி, இராணுவம் மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளில் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா உறுதியாக இருக்கிறது என்று கூறினார். மேலும் ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் கல்வி கற்கும் வசதியாக விசா நடைமுறைகளை எளிதாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட மீள்குடியேற்றத்தில் வெளிமாவட்டத்தவர்களுக்கு இடமில்லை

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சாராத எந்தவொரு முஸ்லிம் குடும்பங்களையும் அந்த மாவட்டத்தில் மீள்குடியேற்றப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர் ரிசாத் பதியுதீன், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் காணியில்லாதோருக்கு காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளை பணித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் காணியில்லாத முஸ்லிம் மக்களுக்கு காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறித்த மக்களுக்கு பொருத்தமான அரச காணியை பகிர்ந்தளிப் பதற்கு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரியும் நடத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களை மோதவிடும் சதிகளை ஒருசிலர் மேற்கொள்கின்றனர். இது விடயத்தில் எல்லோரும் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இந்த பிரதேசத்தில் காணியில்லாதோருக்கு காணிகள் வழங்கப்படும் அது தமிழ் மக்களாக இருந்தாலும் சரி, முஸ்லிம் மக்களாக இருந்தாலும் சரி அவர்களுக்கு காணியை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதேச செயலாளரை கேட்டுக்கொள்கிறேன். தண்ணிமுறிப்பு பிரதேசத்தில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் 89ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழங்கப்பட்ட வயல் காணிகளை உரிய வர்களிடம் ஒப்படைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள். ஒற்றுமையுடன் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றார்.

சர்ச்சைக்குரிய கடல் பகுதியிலிருந்து எண்ணெய் தளத்தை அகற்றியது சீனா

சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் சீனா மேற் கொண்ட எண்ணெய் கிணறு தோண்டும் பணி கள் முடிவடைந்துள்ளன. இந்த எண்ணெய் கிணறு விவகாரம் சீனாவுக்கும் வியட்னாமுக் கும் இடையில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியது.  சீன தேசிய பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டிருக்கும் அறிவிப் பில், குறித்த எண்ணெய் கிணற்றில் இருந்து பெறப்பட்ட தரவுகள் ஆய்வுக்கு உட்படுத் தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சீனா கடந்த மே மாதத்தில் பரகில் தீவுக்கு அருகில் எண்ணெய் கிணறு தோண்ட ஆரம்பித்தது. இந்த பகுதிக்கு வியட்னாமும் உரிமை கோருகிறது. இந்த சர்ச்சையால் இரு நாட்டு கப்பல்களுக்கும் இடையில் கடற்பகுதியில் மோதல்கள் ஏற்பட்ட தோடு. வியட்னாமில் சீன எதிர்ப்பு கலவரமும் ஏற்பட்டது. குறித்த எண்ணெய் தளம் தற்போது சீனாவின் ஹைனான் தீவை நோக்கி கொண்டு செல்லப்பட்டிருப்பதாக வியட்னாம் கடலோர பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.

செப்ரம்பர் 16, 2014

லைக்கா

குருதிபடிந்த கரங்கள்

இலங்கை இராணுவ விமானத்தில் சென்று இராணுவத்துடன் கைகுலுக்கும் லைக்கா

குமுதம் இதழுக்கு லைக்கா மோபைலின் நிறுவனரும் இயக்குனருமான சுபாஸ்கரன் வழங்கிய நேர்காணலில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். தவிர, இலங்கைக்குச் சென்ற சுபாஸ்கரன் தனியார் நிறுவனத்திடம் வாடகைக்கு எடுத்துக்கொண்ட ஹெலிக்கொபடரில் பயணம் செய்தார் என்றும், அத் தனியார் நிறுவனம் இலங்கை அரசின் ஹெலிகொப்டர்களை வியாபார நோக்கில் பயன்படுத்தி வருவதாகவும் அதனைச் சிலர் தவறாகப் பிரச்சரம் செய்வதாகவும் கட்டுக்கதை ஒன்றை உலாவ விட்டிருக்கிறார்கள். (மேலும்....)

செவ்வாயை நெருங்குகிறது மங்கள்யான்

இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் பரபரப்பு

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இஸ்ரோவால் ஏவப்பட்ட மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை நெருங்கி உள்ளதால் ஆய்வுக்குழு விஞ்ஞானிகள் ஆய்வுக்கு தயாராகி வருகின்றனர். எதிர்வரும் 24ம் திகதி மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளி ஆய்வில் இந்தியா பல சாதனைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறது. பல விண்கலங்களை விண்ணிற்கு வெற்றிகரமாக ஏவி, சர்வதேச நாடுகளுக்கு இணையாக விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தி வரும் இந்தியா, சந்திராயன் செயற்கைக்கோளை நிலவுக்கு ஏவி, தனது விண்வெளி தொழில்நுட்ப திறமையை உல கிற்கு பறைசாற்றியது. இதன் தொடர்ச்சியாக, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய மங்கள்யான் என்ற செயற் கைக்கோளை இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவன மான இஸ்ரோ ஏவி உள்ளது. (மேலும்....)

செப்ரம்பர் 15, 2014

பெங்களுர் நீதிமன்றம் வைத்த கழுத்துக் கத்தி

மிஸ்டர் கழுகு ->>>>>> முன்கூட்டியே ராஜினாமா?

கழுகார் உள்ளே நுழையும்போதே, ''எங்கே போனாலும் 'செப்டம்பர் 20-ம் தேதி என்ன நடக்கும்? என்பதுதான் கேள்வியாக இருக்கிறது!'' என்று சொன்னபடியே வந்தார். ''சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை வைத்துத்தானே அனைத்து நகர்வுகளும் இருக்கப்போகிறது. அதனால்தான் அனைவரும் அதைப்பற்றியே கேட்கிறார்கள்'' என்றோம் நாம். தலையாட்டியபடியே சொல்ல ஆரம்பித்தார் கழுகார். ''ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 20-ம் தேதி வரப்போகிறது. தீர்ப்பின் வடிவத்தை நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா எழுதிக்கொண்டு வருகிறார். சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெற்ற சிறப்பு நீதிமன்றம், நீதிபதியின் வீடு மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் மத்திய, மாநில அரசின் உளவுத் துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். அனைவருமே கண்காணிக்கப்படுகின்றனர். நீதிபதி குன்ஹா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் மொபைல் நம்பர்களை உளவுத் துறையினர் வேவு பார்க்க ஆரம்பித்துவிட்டனர். ஆங்காங்கே சி.சி.டி.வி கேமராக்கள் மூலமும் வாட்ச் செய்துகொண்டு இருக்கிறது உளவுத் துறை. தவிர, தனியார் உளவு நிறுவனங்களும் வேவு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

இலங்கை வரும் சீன ஜனாதிபதிக்கு நாளை செங்கம்பள வரவேற்பு

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஹிஜின் பிங் நாளை (16) இலங்கைக்கு வருகை தருகிறார். இவருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட இருப்பதோடு சீன ஜனாதிபதியையும் பாரியாரையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வரவேற்று அழைத்து வர இருப்பதாக ஜனாதிபதியின் சர்வதேச விவகார பணிப்பாளர் அநுராதா ஹேரத் தெரி வித்தார்.  28 வருடங்களின் பின்னர் சீன ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு வருகை தருகிறார். அவரின் விஜயத்துடன் இரு நாடுகளுக்குமிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்தி டப்பட இருப்பதாக வெளிவிவகார அமைச்சு கூறியது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் 2ஆம் 3 ஆம் கட்டங்கள் சீன மற்றும் இலங்கை ஜனாதிபதிகளினால் நாளை திறந்துவைக்கப்பட உள்ளன. மின் சக்தி தொடர்பில் இரு நாடுகளுக்கு மிடையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட இருப்பதாக மின்சார சபை தெரிவித்தது. சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தின்போது 500 ஏக்கர் துறைமுக நகரத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இடம்பெறும். இந்த திட்டம் 1400 மில்லியன் அமெரிக்க டொலர் சீன கடனுதவியுடன் முன்னெடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட இருப்பதாக துறைமுக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்தது. கடலை நிரப்பி காலிமுகத்திடலுக்கு அப்பால் இந்த துறைமுக நகரம் உருவாக்கப்பட இருப்பதோடு சைனா கொன்ஸ்ட்ரக்சன் கொமுயுனிகேசன் கம்பனி பிரதான முதலீடு மேற்கொள்கிறது. (மேலும்....)

இலங்கையிலும்

நிறை. பருமன் அதிகரித்த குழந்தைகள் உருவாக சாத்தியம்

2020ஆம் ஆண்டளவில் இலங்கையில் 50 வீதமான பிள்ளைகள் அதிக நிறை கொண்டவர்களாகவும், பருமனானவர்களாகவும் இருப்பரென உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. தற்போது 30 வீதமாக இலங் கைப் பிள்ளைகள் அதிக நிறை கொண்டவர்களாகவும் பருமனாகவும் இருப்பதாக உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள், சங்கத் தலைவர் மருத்துவ டொக்டர் அநுருத்த பாதெனிய தெரி வித்தார். போஷாக்காண உணவுக்குப் பதிலாக சுகாதாரத்துக்கு ஒவ்வாத உணவுகளைப் பிள்ளைகள் உண்பதால் இந்த நிலை உருவாவதாக அவர் தெரிவித்தார். அதிக நிறை காரணமாக குழந்தைகள் நீரிழிவு, இரத்த அழுத்தம், இருதய நோய், மூச்சு எடுப்பதில் கஷ்டம், சிறுநீரக நோய். இடுப்பு வலி போன்றவற்றுக்கு ஆளாகும் நிலை அதிகரித்து உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இறைச்சிகளைப் பார்க்கினும் குழந்தைகளுக்கு மரக்கறி, பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளப்பழக்க வேண்டும். அதனால் நோய்கள் குறையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (எப்.எம்)

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

இலங்கை மீனவர்கள் 10 பேர் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் ஊடக செயலாளர் நரேந்திர ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கை மீனவர்கள் 10 பேர் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து வடகிழக்காக 70மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது கைது செய்யப் பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் தெரிவித்தார். இவர்கள் சென்ற இரு படகுகளையும் கைப்பற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை இந்திய கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசித்து இவர்கள் 4,200 கிலோகிராம் டூனா மீன்களையும் பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி 10 பேரும் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் பிடித்த மீன் உட்பட படகினையும் பறித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

செப்ரம்பர் 14, 2014

பாக்., உளவாளியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவருமான, அருண் செல்வராஜ் காதலியிடம் விசாரணை

தமிழகத்தில் மிகப்பெரிய நாசவேலையை நடத்தும் சதித் திட்டத்துடன் உளவு பார்த்ததாக தேசிய புலனாய்வு குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையை சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியான,  அருண் செல்வராசனின் காதலி என்று சந்தேகிக்கப்படும் பெண்ணிடம் தேசிய புலனாய்வு குழுவினர் நடத்தியுள்ளனர். அருண் செல்வராசன் தங்கியிருந்த சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டுக்கும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கும்  இளம்பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். தேசிய புலனாய்வு குழுவினர் நடத்திய விசாரணையில், சென்னையை சேர்ந்த அந்த பெண்ணை அருண்செல்வராசன் காதலித்து வந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அருண் செல்வராசனுக்கு காதலியிடம் பொலிஸார் இரகசிய விசாரணை நடத்தி, அவரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதேபோன்று அருண் செல்வராசன் வீட்டை வாடகைக்கு அளித்த வீட்டு உரிமையாளர், அலுவலகத்தை வாடகைக்கு அளித்தவர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தோழர் பாலாதம்பு ஒருவரலாறு

தோழர் பாலாதம்பு கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் மனங்களில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தவர். தனது 90 களிலும் எழுச்சி மனநிலை கொண்டிருந்தார். இலங்கையின் அரசியல் வானில் நேர்மையாகவும், அர்ப்பண உணர்வுடனும உறுதியாகவும் தொழிலாளர் இயக்கத்திற்குப் பங்களித்தவர்களில் தோழர்பாலாதம்பு முதன்மையானவர். 1940களில் தீவிர இடது- தொழிலாளர் இயக்கத்தில் ஈடுபாடு செலுத்திய பாலா முதலாளித்துவ கட்சிகளுடன் சேர்ந்து சமூக சீர்திருத்தங்களையோ, மாற்றங்களையோ நிகழ்த்தலாம் என நம்பவில்லை. (மேலும்....)

மிகக் கொடூரமாக மனித அட்டூழியங்களை புரிந்த அமைப்பே தமிழீழ விடுதலை புலிகள்

முன்னாள் புலி உறுப்பினர் தனது நூலில் விபரிப்பு

உலகிலேயே மிகக் கொடூரமான மனித அட்டூழியங்களை புரிந்த அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள். இதை உலகத்தார் அனைவரும் அறிவர். இவர்கள் விடுதலை இயக்கம் என தம்மை பெயர்சூட்டிக் கொண்ட போதிலும், புரிந்து காரியங்கள் யாவும் விடுதலைக்கு மாறானவையே! போர்க்கைதிகளை தவிர, தமது சொந்த இனத்தை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் சித்திரவதை செய்வதற்கென இப் புலிகள் பிரத்தியோகமாக இரகசிய கொலை முகாமொன்றை நடத்திவந்துள்ளமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இவ்வாறானதொரு முகாமே வல்லிப்புறத்தில் அமைந்துள்ள விக்டர் படைத்தளம்-1 இம் முகாமானது விடுதலைப்புலிகளின் உயர்மட்டக் குழுவினரால் மட்டும் கையாளப்பட்டதுடன், மிகவும் இரகசியமாகவும் பேணப்பட்டுவந்துள்ளது. (மேலும்....)

பாக்., உளவாளியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவருமான, அருண் செல்வராஜ்

சென்னையில் கைது செய்யப்பட்ட, பாக்., உளவாளியும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தவருமான, அருண் செல்வராஜுடன், ரகசிய உறவு வைத்து இருந்த, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரின் பட்டியலை, மத்திய, மாநில போலீசார் தயாரித்து வருகின்றனர். மேலும், அவருடன் தங்கி, உளவு தகவல்களை சேகரித்த இளம் பெண்ணை தேடும் பணியும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 2008ல், இலங்கையில் இருந்து, பெற்றோருடன், அகதியாக, தமிழகத்திற்கு வந்து, விமான பயிற்சி பெற்று, பாக்., உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., உதவியுடன், மக்கள் தொடர்பு அலுவலகம் துவங்கி, பிரபலங்களின் நட்பை பெற்று, உளவு தகவல்களை சேகரித்த, அருண் செல்வராஜ் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. (மேலும்....)
 

ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்?

ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு முதல் இரண்டு வாரங்களுக்குள் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் ஜனவரி மாதம் 7ஆம் திகதிக்கும் 11ஆம் திகதிக்கும் இடைப்பட்ட நாளொன்றில் தேர்தல் நடைபெறும் என்றும் பெரும்பாலும் 8ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என்றும் அத்தகவல்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நவம்பர் 20ஆம் திகதி அறிவிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் நான்கு வருடங்கள் நவம்பர் 19ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. ஜனாதிபதி தேர்தலை 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இறுதிப்பகுதியில் நடத்துவதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்திருந்த நிலையில், பாப்பரசர் பிரான்சிஸ், ஜனவரி மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதனால் அவருடைய வருகைக்கு முன்னரே தேர்தலை நடத்தி முடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் ஊவாக மாகாண சபைத்தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட வேலைகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னெடுக்கவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருண் செல்வராசன் கைதின் எதிரொலி

தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிப்பு

பாகிஸ்தானுக்காக தமிழ் நாட்டில் ஊடுருவி உளவு பார்த்த இலங்கையைச் சேர்ந்த அருண் செல்வராசன் கடந்த புதன்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டார். இந்திய மத்திய உளவு துறை கொடுத்த தகவலின் பேரில் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். இலங்கை அரசு இவரை தேடி வரும் நிலையில், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. நன்கு திட்டமிட்டு, இவரை கொழும்பில் இருந்து தப்பச் செய்து, சென்னையில் குடியேற்றியுள்ளது. இவர் மீது யாருக்குமே சந்தேகம் வராததால் பல தகவல்களை ஐ.எஸ்.ஐ. பெற்று விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக கடலோரங்களில் எங்கெங்கு தீவிரவாதிகள் ஊடுருவ முடியும், சென்னையில் எந்தெந்த பகுதிகளில் நாச வேலை செய்து விட்டு எளிதில் தப்ப முடியும் என்பன போன்ற தகவல்கள் அருண் செல்வராசன் மூலம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைக்கு ஏற்கனவே சென்று விட்டது. இதைத் தொடர்ந்து அருண் செல்வராசன் படம் பிடித்து அனுப்பியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக கடலோர பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

வடமாகாணசபை இரங்கிப்பெற்ற பிச்சையல்ல

வடக்கு மாகாண சபை என்பது மயிலே மயிலே இறகு போடு என்று நாங்கள் இரங்கிப்பெற்ற பிச்சையல்ல. மாறாக நாங்கள் இரத்தம் சிந்தி போராடியதால் பெற்ற உரிமையாகும் என என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் எஸ்.விந்தன் தெரிவித்துள்ளார் . நேற்று வெள்ளிக்கிழமை(12) தெல்லிப்பளையில் நடந்த  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் புதிய அலுவலக  திறப்பு விழாவின்போது, விந்தன் இதனை தெரிவித்தார். (மேலும்....)

செப்ரம்பர் 13, 2014

நம்மை நாம் ஆள வேண்டும் - மாவை

"நாம் எம்மை ஆள வேண்டும். தன்னாட்சி செய்ய வேண்டும். எமது மக்கள் செய்த அர்ப்பணங்கள், போராட்டங்கள், தியாகங்கள் ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்ற வேண்டும்" என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்தார். தமிழ் மக்களுடைய எந்த போராட்டத்தையும் யாரும் நிராகரித்துவிட முடியாது. தமிழர்களின் போராட்டம் நியாயமான உரிமை போராட்டம். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. எங்கள் நிலங்களை அபகரித்து இனப்பரம்பலை இல்லாதொழிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. வடக்கு கிழக்கில் இராணுவத்தினர், சிங்களக் குடியேற்றம் என்று தமிழர்களின் நிலங்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன என அவர் மேலும் தெரிவித்தார். காலையில் தந்தை செல்வா சதுக்கத்திற்கு சென்ற மாவை அங்கு மலர்மாலையிட்டு வழிபாடுகளை மேற்கொண்டுவிட்டு, தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்று மரியாதையும் ஏற்றுக்கொண்டார்.

ஊடக உறவுகளுக்கு வணக்கம்


போருக்கு பிந்திய கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனை நகரத்தில் இந்தியாவின் விஜய் டி. வி சூப்பர் ஸ்டார் நட்சத்திரங்களை  வைத்து இசைக் கச்சேரி ஒன்றை முற்றிலும் அனுசரணையாளர்களை நம்பி எதிர்வரும் 06 ஆம் திகதி நடத்த உத்தேசித்து உள்ளேன். விஜய் டி. வி சூப்பர் ஸ்டார்கள் ஐவருடன் உள்நாட்டு பக்க வாத்திய கலைஞர்களும் பங்கேற்கின்ற இவ்விழாவுக்கு ஊடக அனுசரணையை எதிர்பார்க்கின்றேன். மட்டும் அல்லாது தொழிலதிபர்களின் அனுசரணை அவசியம் தேவையாக உள்ளது. தொழிலதிபர்களின் அனுசரணை உங்கள் மூலம் கிடைக்கப் பெறுகின்ற பட்சத்தில் உங்கள் சேவைக்கு மதிப்புக் கொடுத்து சிறிய தரகுத் தொகை தர உத்தேசித்து உள்ளேன்.

மேலதிக விபரங்களுக்கு 
 
அறிவு: 0772378851

முதலமைச்சர் முறைப்பாடு செய்தால் நடவடிக்கை

அநாமதேய புகைப்படப்பிடிப்பு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு பதிவு செய்தால் விசாரணை மேற்கொள்ள முடியுமென யாழ். பிரதேச சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யு.பி. விமலசேன வெள்ளிக்கிழமை தெரிவித்தார். வட மாகாண முதலமைச்சர் செல்லும் நிகழ்வுகளில் அநாமதேய நபர்கள் புகைப்படம் பிடிப்பதனால் மக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிதுள்ளார். அவ்வாறான புகைப்படம் பிடிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையிலேயே பிரதி பொலிஸ் மா அதிபர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறுகையில், வட மாகாண முதலமைச்சரின் பாது காப்பு சம்பந்தமாக அறிவிக்க முடியும். ஆனால் இவ்வாறு புகைப்படம் எடுப்பது தொடர்பில் எந்தவித முறைப்பாடுகளும் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்படவில்லை. முதலமைச்சரை தெரியாத சிலரும் இவ்வாறு போட்டோ எடுக்கலாம். எனவே, முறைப்பாடு செய்தால் நாம் விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்வோம் என யாழ். பிரதேச சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேலும் கூறினார்.

அரசியலமைப்பை மீறி மாகாண சபைகள் செயற்பட முடியாது

வட மாகாண சபையாகவிருந்தாலும் சரி எந்தவொரு மாகாண சபையாக விருந்தாலும் சரி நாட்டின் அரசியல மைப்பை மீறிச் செயற்பட முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார். நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளும் அரசியலமைப்புக்கு உட்பட்டே செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஐ.நா. விசாரணைக் குழுவை இலங்கைக்குள் வர அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வட மாகாண சபையில் தீர்மானமொன்று நிறை வேற்றப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவிய லாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரி வித்தார். மாகாண சபைகளுக்குத் தெரிவுசெய்யப் படுவர்கள் அரசியலமைப்புக்கு எதிராகச் செயற்படமாட்டோம் என உறுதிமொழியெடுத்துக் கொண்டவர்கள். எனவே அரசியலமைப்புக்கு எதிராக அவர்கள் செயற்பட முடியாது. வட மாகாண சபையில் நிறை வேற்றப்பட்டிருக்கும் பிரேரணை தொடர்பில் சுதந்திரக் கட்சியின் மத்திய குழு அடுத்த வாரம் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்திய வரைபடத்திலிருந்து கிராமம் மாயம் 53 குடும்பங்களின் நிலை என்ன?

காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 200 பேர் பலியானார்கள். வெள்ளத்தால் பாதித்த பகுதியில் தவித்த 1 இலட்சத்து 30 ஆயிரம் பேரை இராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மழை வெள்ளத்தை வெளியேற்றும் பணியில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. பல இடங்களில் வெள்ளம் வெளியேற வழியில்லாததால் மோட்டார் வைத்து வெளியேற்றப்படுகிறது. பல இடங்களில் மழையால் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் உதம்புர் மாவட்டத்தில் சடல் என்ற கிராமத்தையே காணவில்லை என்ற செய்தி பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. சடல் கிராமம் நெடுஞ்சாலையில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் சடல் கிராமம் முற்றிலும் மண்ணில் புதைந்து விட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு 53 குடும்பத்தினர் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த வீடுகள் மீது பெரிய பெரிய பாறைகளும் சகதிகளும் விழுந்து கிடப்பதால் அங்கு வசித்த ஒருவர் கூட உயிர் பிழைத்திருக்க முடியாது என அஞ்சப்படுகிறது. இதுவரை காஷ்மீரில் பல இடங்களில் மீட்பு பணிக்கு உள்@ர் அதிகாரி களோ ஊழியர்களோ வரவில்லை என்றும் இராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மட்டுமே மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் பொதுமக்கள் மாநில அரசு மீது குற்றம்சாட்டுகிறார்கள்.

அருண் செல்வரா

ஐஎஸ்ஐ உளவாளி, புலிகளின் உறுப்பினர்.

சென்னையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ உளவாளி என சந்தேகிக்கப்படும் இலங்கையரான அருண் செல்வராஜை,எதிர்வ வரும் 25ம் திகதி வரை சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த நபரை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இவரது வீட்டில் பொலிஸார் நடத்திய சோதனையில் டைரி, வரைபடங்கள், இந்தியா, இலங்கை கடவுச் சீட்டுக்கள் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவரது வங்கி கணக்கில் இந்திய ருபாய் 2 கோடி வரை பணம் இலங்கையில் இருந்து இணையம் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் இவருக்கு உளவு பார்த்ததற்கான கூலியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

செப்ரம்பர் 12, 2014

ஸ்காட்லாந்து பிரிவினைக்கான வாக்கெடுப்பு - சில குறிப்புகள்

செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள, ஸ்காட்லாந்து சுதந்திரத்திற்கான பொது வாக்கெடுப்பு, சில மாதங்களுக்கு முன்பு வரையில் கூட, வெளியுலகின் கவனத்தைப் பெறவில்லை. அதாவது, ஸ்காட்லாந்து மாநிலத்திற்கு வெளியே, இங்கிலாந்து ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஏனென்றால், கடந்த வருடம் வரையில், ஸ்காட்லாந்து பிரிவினையை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அண்மைக் காலமாகத் தான், பிரிவினைக்கு ஆதரவான வாக்குகள் அதிகரித்துள்ளன. கருத்துக் கணிப்புகள் இறுதியில் மாறலாம் என்றாலும், ஸ்காட்லாந்து பிரிவினை சாத்தியம் என்று பலரும் நம்புகின்றனர். (மேலும்....)

13 குறித்து கூட்டமைப்புடன் பேச தயார் - ஜனாதிபதி

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பகிரங்க பேச்சுக்கு தான் தயார் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவில் வெளிவரும் தி இந்து பத்திரைகைக்கு வழங்கிய செவ்வியிலேயே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது தொடர்பில் தான் அதிருப்தி அடைந்திருப்பதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின் போது இந்திய பிரதமரைச் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியமிருப்பதாக வெளியாகும் செய்திகள் மறுப்பதற்கில்லை என்றும் ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் போராளி, ரி.ஐ.டி யிடம் ஒப்படைப்பு


கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்ற செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்ட முன்னாள்
புலி இயகத்து போராளி ஒருவர், பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் வியாழக்கிழமை (11) தெரிவித்தனர். கடந்த திங்கட்கிழமை (08) கைது செய்யப்பட்ட கிளிநொச்சி விநாயகர்புரத்தை சேர்ந்த பீற்றர் விக்கினேஸ்வரன் (வயது 34) என்பவரே இவ்வாறு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள். கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அவரை ரி.ஐ.டி யினரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

தமிழர்கள் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்ற சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது - சி.வி

வடக்கு, கிழக்கில் சிங்களவர்களை பெருவாரியாக கொண்டுவந்த குடியமர்த்தி, வடக்கு, கிழக்கு பகுதியில் ஒரு காலத்தில் தமிழர்கள் இருந்தார்கள் என்ற நிலை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் நடப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டினார். இராணுவம் வட, கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து இருபத்து ஐந்து வருடங்களுக்கேனும் இருக்க வேண்டும் என்று ஆட்சியாளர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அந்த காலகட்டத்தில் சிங்களவரை பெருவாரியாக கொண்டுவந்து இங்கு குடியிருத்தி, இந்நாட்டில் பறங்கியர் ஒரு காலத்தில் இருந்தார்கள் என்று நாம் எவ்வாறு இப்பொழுது கூறுகின்றோமோ, அதேபோல் இங்கு தமிழ் பேசும் மக்கள் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்று கூறக்கூடிய ஒரு காலகட்டத்தை உருவாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்குக் கிடைத்த தகவலின் படி 2008ஆம் ஆண்டிலேயே அரசாங்கம் சார்ந்த உயர் அதிகாரி ஒருவர் 'போர் விரைவில் முடிந்து விடும். ஆனால் எமது இராணுவம் குறைந்தது 25 வருடங்களாவது வட, கிழக்கு மாகாணங்களில் நிலைநிறுத்தப்பட்டு தமிழ் பேசும் மக்களை தலையெடுக்கவிடாமல் பண்ண வேண்டும்' என்று கூறியுள்ளாராம். (மேலும்....)

இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிரான யுத்த திட்டத்தை அறிவித்தார் ஒபாமா

இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக முதல்முறை சிரியாவுக்குள் வான் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி அளித்துள்ளார். இஸ்லா மிய தேசம் போராளிகள் எங்கு இருந் தாலும் அவர்களை அழிப்பதற்கு ஒபாமா உறுதி அளிததுள்ளார். ஐ.எஸ். எனப்படும் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களுக்கு எதி ரான திட்டம் குறித்து கடந்த புதன் கிழமை ஒபாமா நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி ஊடே உரை யாற்றினார். அதில் ஈராக்கில் இரா ணுவ நடவடிக்கையை விரிவுபடுத்து வது மற்றும் ஈராக் அரச படைக்கு உதவியாக மேலும் 500 அமெரிக்க துருப்புகளை அங்கு அனுப்பவது குறித்த அறிவிப்பை அவர் வெளி யிட்டார். இதில் சிரிய ஜனாதிபதி ப'ர் அல் அஸாத் அரசு மற்றும் இஸ்லாமிய தேசம் குழுவுக்கு எதிராக போராடும் அந்நாட்டு கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சி மற் றும் ஆயுதங்களை வழங்குவதற்கு ஒபாமா கொங்கிரஸ் அவையின் அங்கீகாரத்தையும் கோரினார். (மேலும்....)

கம்யூனிசம்: ஒரு பகிரங்க விவாதம்
கம்யூனிசம் மட்டுமே உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே தீர்வு

முதலாளித்துவத்தின் சுரண்டலில் இருந்து மக்களை விடுவிக்க வல்ல ஒரே பாதை கம்யூனிசப் பாதை மட்டுமே. சோசலிசம் (பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்) என்பது கம்யூனிசத்தை நோக்கிய முதல் சமூக கட்டுமானம்.சோசலிச சமூகத்தில் அனைவரும் உழைக்க வேண்டும், சமூக வளர்சிக்கு ஒவ்வொருவரும் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கிறது. முதலாளிகளின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் அவர்களும் உழைத்தே ஆக வேண்டும், உழைக்காமல் வாழ முடியாது. சோசலிச சமுதாயத்தில் சுரண்டல் ஒழிக்கப்படுகிறது. சோசலிச உற்பத்தி மக்களின் தேவைக்கேற்ப இருக்கும், முதலாளித்துவ உற்பத்தி லாபத்தை மட்டுமே அடிப்படையாக கொண்டிருக்கிறது. உண்மையான மக்களாட்சி சோசலிச சமூகத்தில் மட்டுமே சாத்தியம். வலைப்பூவில் சிலர் கம்யூனிசம் தேல்வி அடைந்து விட்டதாக எழுதியதை வாசிக்க நேர்ந்தது, ஆதலால் இந்த பதிவை எழுத வேண்டிய சூழலில் உள்ளேன். (மேலும்....)

தோழர் பார்வதி கிருஷ்ணன்

இவர் 1919ம் ஆண்டு ஒரு ஜமீன்தார் குடும்பத்தில் பிறந்தார், இவர் தந்தை டாக்டர். சுப்பராயன் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்தவர்(தமிழ்நாடு என்று பெயர் வரும் முன்பு). இங்கிலாத்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் MA முடித்தார். இந்திரா காந்தியுடன் பட்டம் முடித்தவர் இவர். படிக்கும் போதே பல பெரிய போராட்டங்களில் முக்கியமான உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இளைஞர் அமைப்பின் முதல் தலைவராக இருந்தார். இரண்டாம் உலகப் போருக்கு எதிராக தீவிரமாக பங்குபெற்று, அனைத்து கல்லூரிகளின் சமாதானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது இந்தியாவுக்கே கிடைத்த பெருமை அல்லவா!

செப்ரம்பர் 11, 2014

ஹாங்காங்கில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது?

ஹாங்காங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவலை http://www.lankann.com/ என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும் http://www.lankann.com/ என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. இதுவரை இச்செய்தி பற்றிய உண்மைத்தன்மையும் உறுதிசெய்யப்படவில்லை.

Read more at: http://tamil.oneindia.in/news/india/pottu-amman-arrest-hong-kong-210651.html

செப்டம்பர் 11

இன்றுடன் 13 வருட நிறைவு

உலக வரலாற்றுப் போக்கை தலைகீழாகப் புரட்டிப் போட்ட அல்கொய்தா பயங்கரவாதம்!

செப்டெம்பர் 11 தாக் குதலுக்கு இன்றுடன் 13 ஆண்டுகள் பூர்த் தியாகிறது. அமெரிக்கா மீதான இந்தத் தாக்குதலை விடவும் கடந்த நூற்றாண்டில் உலக வரலாற்றில் எத்தனையோ மோசமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. என்றாலும் இன்றாலும் 2001ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டைக் கோபுர தாக் குதலைப் போன்று உலக மெங்கும் தாக்கத்தை செலுத்திய வேறு எந்த சம்பவமும் பதிவாக வில்லை.தெருவோரத்தில் பொரு ட்களின் விலையுயர்வு க்காக போராடும் சாதாரண மக்களின் எதிர்ப்புக் குர லுக்கு பின்னாலும் செப் டெம்பர் 11 தாக்குதல் சம்பவத்தின் பின்னணி இருப்பதாக அர்த்தம் கற் பிக்க முடியும். செப்டெ ம்பர் 11 சம்பவம் நிகழாத பட்சத்தில் உலக வரலாறு இன்று வேறு மாதிரி இருக்க சாத்தியங்கள் மிக அதிகம்.(மேலும்....)

வரதராஜப்பெருமாளை நோக்கி கேள்விகள்

வரதராஜப்பெருமாள் பதில் அளிக்கின்றார்

வரதராஜப் பெருமாள் மட்டுமல்ல
திருப்பதி பெருமாளே வந்து சொன்னாலும்
இனி இந்திய அரசை நம்புவதற்கு
ஈழத் தமிழர்கள் தயாரில்லை.
இந்திய அரசு தீர்வுக்கு உதவ முன்வந்ததாகவும் ஆனால் புலிகள் எந்த தீர்வையும் ஏற்க மறுத்துவிட்டதாக முன்னாள் மாகாணசபை முதல்வர் வரதராஜபெருமாள் கூறியிருக்கிறார்.
(மேலும்....)

 

 

குன்றென நிமிர்ந்து நில்!

இன்று பாரதியார் நினைவு நாள்

'சிதையா நெஞ்சு கொள்' எனும் சூத்திரமே பாரதியின் வாழ்க்கை நமக்கு வழங்கும் பாடம். வறுமையும் வெறுமையும் விடாது துரத்திய போதும் அஞ்சாமல் அக்கினிக்குஞ்சாய் வீறுகொண்டு எழுந்த மாகவிஞர் மகாகவி பாரதியார். பதினாறு வயதிற்குள் பாரதியைப் போல் வாழ்க்கைப் புயலை எதிர்கொண்டவர் யாரும் இருக்க முடியாது. வறுமை எனும் உளியால் செதுக்கப் பட்ட கலைச் சிற்பம் பாரதியார். நெருப்பாற்றில் நீந்திக்கொண்டும் அவரால் அழகியல் கவிதைகளைத் தரமுடிந்தது. "நல்லதோர் வீணைசெய்தே- அதைநலங்கெடப் புழுதியிலெறிவதுண்டோ?சொல்லடி சிவசக்தி- எனைச்சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்வல்லமை தாராயோ -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி-நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ? பாரதியின் வாழ்நாட்கள் வறுமையில் கழிந்தன. ஆனாலும் பாரதியிடம் என்றும் எனக்கலக்கமில்லை. தன்னலம் பாராமல், மாநிலம் பயனுற மாகாளியிடம் வல்லமை கேட்கிறான் பாரதி.

அரசுக்கு த.தே.கூ. 3 மாத காலகெடு விதிப்பு

தமிழரசுக்கட்சியின் 15 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம், தேசிய இனப்பிரச்சினைக்கு பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வு காண்பதற்கு அரசாங்கத்துக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையிலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு காலக்கெடு விதித்துள்ளது. அக்காலப்பகுதிக்குள் தீர்வு கிடைக்காவிடின் மகாத்மா காந்தி வழியில் அஹிம்சை போராட்டத்தை நடத்துவதை தவிர வேறு வழி இல்லை என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் நேற்று புதன்கிழமை (10) கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நாட்டிலே வாழ்வோர்க்கு வாழ்வதற்கு கூட உரிமையில்லாத ஒரு நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி வைத்துள்ளது. இதனை வாழ்வதற்கான உரிமையை பெற்றக்கொள்வதற்குரிய வாழ்வு போராட்டமாக வேறு வழியில்லாமல் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. நாங்கள் அநாவசியமான கோரிக்கைகளை கோரவில்லை. நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் முகமாக, இந்நாட்டில் கௌரவத்தோடும் சுயமரியாதையோடும் வாழ வேண்டும். மற்ற மக்கள் எப்படி தங்களுடைய அரசியல் அதிகாரங்களை உபயோகிக்கின்றார்களோ அதே போன்று நாங்களும் எங்களுடைய அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய வகையில் நாட்டினுடைய ஆட்சி முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்பது மட்டும்தான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கின்றது.

நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்! 29 ஆம் திகதி ஒபாமாவுடன் சந்திப்பு

நரேந்திர மோடி கடந்த மே மாதம் 26 ஆம் திகதி பிரதமராக பதவி ஏற்ற பின் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடியின தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து களை தெரிவித்தார். அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். அதை மோடியும் ஏற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அமெரிக்க வெளி யுறவு மந்திரி ஜோன் கெர்ரியும், இராணுவ மந்திரி சக் ஹேகலும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து பேச்சு நடத்தினர். இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி, அமெரிக் காவுக்கு 5 நாள் சுற்றுப்பயணம் செல்கிறார். வெள்ளை மாளிகையில் 29 ஆம் திகதி யும் 30 ஆம் திகதியும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று சந்திப்பதில் ஜனாதிபதி ஒபாமா ஆர்வமாக இருக்கிறார். இரு நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் நன்மை பயக்கக்கூடிய வகையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்பட அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல் பட ஒபாமா விருப்பம் கொண்டுள்ளார். மோடியின் இந்த பயணம் 9 ஆண்டுகளாக அவரை அமெரிக்கா புறக்கணித்து வந்ததை முடிவுக்கு கொண்டு வருகிறது. மேலும் மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு மோடி அமெரிக்காவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸில் முஸ்லிம் சுயாட்சி பகுதியை நிறுவுவதற்கு சட்டம்

ரோமன் கத்தோலிக்க நாடான பிலி ப்பைன்ஸின் தென் பிராந்தியத்தில் முஸ்லிம் சுயாட்சி பகுதி ஒன்றை நிறு வுவதற்கு விரைவில் சட்டம் இயற்றும் படி அந்நாட்டு ஜனாதிபதி பெனிங்கொ அக்கியுனோ கொங்கிரஸ் அவையை கோரியுள்ளார். பிலிப்பைன்ஸில் ஐந்து தசாப்தங் கள் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடி வுக்கு கொண்டுவரும் உடன்படிக்கை கடந்த மார்ச் மாதம் கைச்சாத்தான நிலையிலேயே இந்த நடவடிக்கை எடு க்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் உள் நாட்டு யுத்தத்தில் 120,000க்கும் அதி கமானோர் கொல்லப்பட்டதோடு இர ண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர் ந்தனர். இதில் பிரதான கிளர்ச்சிக் குழு வான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியுடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையில் சமூக, பொருளாதார அதிகாரங்களுக்கு பதில் ஆயுதத்தை களைய இணங்கினர். இந்நிலையில் ஜனாதிபதி அக்கியுனோ தனது பதவி க்காலம் முடிவடையும் 2016 முன்னர் இந்த உடன்படிக் கையை அமுலுக்கு கொண்டுவர எதிர்பார்த்துள்ளார்.

கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல்படுத்த நடவடிக்கை

கேரளாவில் படிப்படியாக மது விலக்கை அமுல் படுத்தும் நடவடிக்கையில் அம்மாநில முதல் மந்திரி உம்மன்சாண்டி ஈடுபட்டுள்ளார். மாநிலம் முழுவதும் 412 மதுக்கடைகள் சமீபத்தில் அதிரடியாக மூடப்பட்டன. தொடர்ந்து படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும் என்று கேரள அரசு தெரிவித்து உள்ளது. கேரளாவில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களைத் தவிர அனைத்து மது பானசாலைகளும் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கேரள பொலிஸ் அறிவித்து உள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் 732 பார் உரிமங்கள் வழங் கப்பட்டு இருந்தது. இதில் 420 பார் களின் உரிமங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ரத்து செய்யப்பட்டது. மீதம் உள்ள 312 பார்களில் 292 பார்களின் உரிமங்களை கேரள அரசு ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தில் செயல்படும் பார்களின் உரிமைத் தை ரத்து செய்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. ஹோட் டல்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக் கக் கூடாது என கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த மனுமீதான அவசர விசாரணை இன்று நடை பெறுகிறது.

செப்ரம்பர் 10, 2014

யாழ் பல்கலைக்கழக உளவியல் மாணவர்கள்

 

இன்று உலக தற்கொலை தடுப்பு தினமாகும்......... அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுக்கும் முகமாக யாழ் பல்கலைக் கழக உளவியல் மெய்யியல் துறையினரின் சமுதாய வழிகாட்டல் மையத்தினர் தற்கொலை விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றினை பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தனர்

ராஜனியை நினைவு கூருவோம்!

டாக்டர் ராஜனி திராணகம ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர், மருத்துவர், எழுத்தாளர், யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட உடற்கூற்றியல் துறையின் தலைவர். அவர் 1989 ம் ஆண்டு 35 வயதில் தனது வீட்டுக்கு அருகாமையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். ராஜனியின இறப்பு சமுதாயத்துக்கு நிகழ்ந்த ஒரு துன்பியல் சம்பவம். இறுதியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவுக்கு காரணமாகவிருந்த பயங்கரவாதமும் மானுட விழுமியங்கள் அற்றுப்போனதுமானதொரு அரசியல் சூழலுக்கு அவரது மரணம்  அவ்வேளை குறியீடாகவமைந்தது. ராஜனியின் மரணம், எமது எதிர்காலத்தை தொடர்ந்து பாழடிக்கும் சமூகத்தின் தார்மீக நெருக்கடி, ஆளுகை, கல்வித்துறைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை குறிகாட்டி நிற்கிறது. (மேலும்....)

சூளைமேடு கொலை வழக்கு

காணொளி காட்சி மூலம் ஆஜராக டக்ளஸுக்கு அனுமதி

சூளைமேடு கொலை வழக்கில் காணொளி காட்சி மூலம் ஆஜராகுவதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கில் அவர், நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. 1986இல் சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சென்னை அமர்வு நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் டக்ளஸ் தேவானந்தா மேல்முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமான கேள்வி!

பெண்கள் விபச்சாரத்தில் சிக்கினால் அவரது புகைப்படத்துடன் செய்தி வருகிறது. ஆனால் ஆண்களின் புகைப்படத்தை மட்டும் ஏன் வெளியிடுவது இல்லை? அவருக்கு அந்த குற்றத்தில் சம பங்கு இல்லையா?

நியாயமான கேள்வி!
சட்டம் அனைவருக்கும் பொது என்றால் ஆண்களின் புகைப்படங்களும் காட்டுப்பட வேண்டும்.

சமூகத்தை திருத்த வேண்டிய ஊடகங்களின் செயல் தவறானது.

ஒன்று சம்பந்தப்பட்ட அனைவரது படங்களையும் பிரசுரிக்க வேண்டும்.
அல்லது
அனைவரது படங்களையும் பிரசுரிக்காமல் இருக்க வேண்டும்.
தப்பாக இருந்தால் வாதிடுங்கள்???

ஆஸ்திரேலிய வரலாறு

ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே, தான்சானியவை நாட்டை சேர்ந்த ஆப்பிரிக்க கடலோடிகள், அவுஸ்திரேலிய கண்டத்தை கண்டுபிடித்திருந்தனர்! அவுஸ்திரேலியாக் கண்டத்தை ஐரோப்பியர்கள் "கண்டுபிடித்த" நாளில் இருந்து தான், அவுஸ்திரேலிய வரலாறு எழுதப் படுகின்றது. கேப்டன் குக்கிற்கு முன்னர், 17 ஆம் நூற்றாண்டில் டச்சு கடலோடிகள் அதனைக் கண்டுபிடித்ததது மட்டுமே எழுதப் பட்ட வரலாறு. உள்நாட்டு பூர்வகுடிகளான அபோரிஜின்களை தவிர, வேறெந்த நாட்டவரும் வரவில்லை என்று தான் நீண்ட காலமாக நம்பப் பட்டது. ஆனால், எந்த நாட்டின் வரலாறும் முழுமையானது அல்ல. அவுஸ்திரேலிய வரலாற்றையும் திருத்தி எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது. இங்குள்ள இரண்டு நாணயங்களும், அவுஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில் கண்டெடுக்கப் பட்டன. அவற்றில் அரபு எழுத்துக்கள் உள்ளன. இவை கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு உரியவை. தான்சானியாவுக்கு அருகில் சிறிய தீவான கிவ்லாவில் வார்க்கப் பட்டுள்ளன. அந்தக் காலத்தில், கிவ்லா தீவில் ஒரு தனியான ஆப்பிரிக்க - இஸ்லாமிய இராஜ்ஜியம் இருந்தது. அவுஸ்திரேலியாவில் இது போன்ற பல நாணயங்கள் இருக்கலாம் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். அபோரிஜின் மக்களிடம் விசாரித்த பொழுது, தமது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்த குகை ஒன்றில், இது போன்ற நாணயங்களும், ஆயுதங்களும் இருப்பதாக கூறியுள்ளனர்.

இறுதிப் போரில் மக்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளே காரணம் - அமெரிக்க நிதியில் இயங்கும் அமைப்பு

மக்கள் எழுச்சிகளை ஒடுக்குவதற்காகவும் போராட்டங்களை சிதைப்பதற்காகவும் அரச அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்காகவும் தோற்றுவிக்கப்படு அரச சாரா என்ற பெயரில் உலகம் முழுவதும் விதைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களில் மார்கா (Marga Institute ) தொன்மையானது. 1972 ஆம் ஆண்டில் ஆய்வு செய்யும் நோக்கோடு அமெரிக்க அரசின் நிதி வழங்கலில் இலங்கையில் மார்கா உருவாக்கப்பட்ட காலத்தில் தொண்டு நிறுவனங்கள் அறியப்படாதவை. இலங்கையில் அதன் வெற்றியே ஏனைய நாடுகளுக்கு அதனை விரிவுபடுத்தக் காரணமாக அமைந்தது. மார்கா என்ற தன்னார்வ நிறுவனம் இன்று வரை அமெரிக்க அரசின் நிதிக் கொடுப்பனவிலேயே இயங்கி வருகிறது. இலங்கையில் அரசியல் பிரச்சனைகள் தொடர்பாக ஆய்வு செய்து நூல்களையும் பிரசுரங்களையும் வெளியிடும் மார்கா அடிப்படையில் ஏகாதிபத்தியங்களின் தகவல் மையமாகவும் செயற்படுகிறது. (மேலும்....)

செப்ரம்பர் 09, 2014

இந்தப் படத்தைப் பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்படுகின்றது?

(முடிந்தால் ஈமெயில் எமக்கு தெரியப்படுத்துங்கள்)

அரசியல் இல்லாத ஆயுதம்தான் புலிகளை அழித்தது!

வரதராஜ பெருமாள், ஈழ அரசியல் அறிந்தவர்களுக்கு மறக்க முடியாத பெயர். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை ராஜீவ் காந்தி அமுல்படுத்திய நேரத்தில் வட கிழக்கு மாகாணத்தின் முதல்வராக நியமிக்கப்பட்டவர். புலிகளின் கொலைப் பட்டியலில் அவர் இடம்பெற்றதாகச் சொல்லப்பட்ட நிலையில் வரதராஜ பெருமாள் அங்கிருந்து தப்பினார். எங்கே இருக்கிறார் என்பதே தெரியாமல் இருந்த சூழலில் அவரைச் சென்னையில் சந்தித்த ஜூனியர் விகடன் நிருபருக்கு அவர் வழங்கிய செவ்வி வருமாறு,....அரசியலஇல்லாத ஆயுதம்தானஅவர்களஅழித்தது. வெறுமனஆயுதங்களமட்டுமநம்பி விட்டார்கள். உலக அரசியலமாற்றங்கள், இந்திய உபகண்டத்திலநடந்த அரசியலபோக்குகள், உறவுகளஆகியவற்றைபபுலிகளசரியாகககணக்கிட்டிருந்தால், அதற்குததக்கப்படி தங்களையுமமாற்றியமைத்தகொண்டிருந்தாலதமிழர்களுக்குபபெருமநன்மையசெய்திருக்க முடியும். (மேலும்....)

சிவராசனின் இரட்டை வேடம்!

பத்திரிகையாளரின் பகீர் பேட்டி தொடர்கிறது

''ராஜீவ் காந்தி படுகொலை ஒரு உள்வேலையா? என்ற தலைப்பில் டெல்லி பத்திரிகையாளர் ஃபெரோஸ் அஹ்மத் எழுதியுள்ள புத்தகம் பல்வேறு தரப்பில் பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. அவரது பேட்டி கடந்த இதழில் வெளியாகி இருந்தது. இந்த இதழிலும் தொடர்கிறது.

 இதோ ஃபெரோஸ் அஹ்மத் பேசுகிறார்...

சிவராசன் ஏன் டெல்லி போனார்?

''என்னுடைய வாதம், சிவராசன் சுயேட்சையாக செயல்பட்டு இருக்கலாம் என்பதுதான். இதனால்தான் அவர் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பவில்லை. உயிருக்கு பயந்துதான் அவர் போகவில்லை. டெல்லிக்கு போகக் காரணம் வேறு யாரோ அவருடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுத்திருந்துள்ளனர். யார் அது? இந்த கொலையில் இருவர் ஆதாயமடைந்தனர். ஒருவர் இலங்கை ஜனாதிபதியாக இருந்த பிரேமதாசா. மற்றொருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று இதனால்தான் சொல்கிறேன். (மேலும்....)

இலங்கை விவகாரம்

ஹுசேன் விடாப்பிடி

ஐ.நா. மனித உரிமை பேரவையால் நடத்தப்படும் விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கவேண்டும் என்று ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் அல் ஹுசேன், நேற்று திங்கட்கிழமை (08) தெரிவித்தார். ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 27ஆவது அமர்வில் தனது கன்னி உரையை ஆற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 27ஆவது அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் முன்னிலையில், அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். தனக்கு முன்னர் இப்பதவியை வகித்த நவிபிள்ளையின் வகிபாகத்தை புகழ்ந்துள்ள அவர், தனது அலுவலகத்தில் நடத்தப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும்படி இலங்கையை வற்புறுத்தியுளள்ளார். (மேலும்....)

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மோதகம் போய் கொழுக்கட்டை வந்தது

வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை(6) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். தமிழரசுச் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த நிர்வாக மாற்றம் தொடர்பாக தமிழ்ப் பற்றாளர்  ஒருவர் தெரிவிக்கையில் தமிழரசுக் கட்சிக்குள் உருவங்கள் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளதே தவிர வேறொன்றும் நடைபெறவில்லை என கருத்துத் தெரிவித்தார். மோதகம் போய் கொழுக்கட்டை ஒன்று வந்துள்ளது.  இந்த மோதகத்தினுள் இருக்கும் உள்ளீடுகளும், கொழுக்கட்டைக்குள் இருக்கும் உள்ளீடுகளும் கிட்டத்தட்ட 45 ஆண்டு காலப் பழமை வாய்ந்த புளித்த்து உளுத்துப் போனவைகள் எனத் தெரிவித்துள்ளார். அத்துடன் பழைய மோதகத்தைப் புதிப்பிப்பதற்காக சோ்த்துக் கொண்டவைகளும் அவற்றுடன் சோ்ந்து பழுதுபட்டுவிட்டது எனவும் தெரிவித்துள்ளார். இந்த மோதகங்களையும் கொழுக்கட்டைகளையும் உண்ணும் தமிழ்ச் சனங்களுக்கு வாந்தி பேதி வருவதைத் தவிர எதுவும் நடக்கப் போவதில்லை எனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

எட்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன கணவனுக்காக காத்திருப்பு!

உள்நாட்டு போர் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது 08 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன கணவன் உயிருடன் மீண்டு வருவார் என்கிற அதீத நம்பிக்கையில் சுழிபுரத்தில் பண்ணாகத்தை சேர்ந்த ஆசிரியர் தனலக்சுமி மோகனராஜன் வயது - 41 தவம் கிடக்கின்றார். இவரின் கணவர் துரைசிங்கம் மோகனரராஜன். வர்த்தகர். ஏ9 நெடுஞ்சாலை ஊடாக பயணித்துக் கொண்டிருந்தபோது 2006 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 03 ஆம் திகதி மிகவும் மர்மான முறையில் காணாமல் போய் உள்ளார். செஞ்சிலுவைச் சங்க சர்வதேச குழுவினர் மனைவி தனலக்சுமி மேற்கொண்ட முறைப்பாட்டின் பேரில் மோகனராஜனை தேடுகின்ற முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் போரில் ஈடுபட்ட எத்தரப்பினருமே இவரை கைது செய்யவில்லை என்கிற தகவலைத்தான் மனைவிக்கு கொடுத்து உள்ளார்கள். ஆனால் இவர் உயிருடன் உள்ளார் என்று சோதிடர்கள், பூசாரிகள் சொல்லி இருக்கின்ற வார்த்தைகளை மனைவிக்கு ஆறுதல்களாக உள்ளன. இத்தம்பதிக்கு இரு பிள்ளைகள். அதிகாரம் உள்ள தரப்பினர்கள் கணவனை கண்டு பிடித்து தர வேண்டும் என்று எழுத்துமூலம் கோரி உள்ளார். இவரின் கோரிக்கை ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் நந்தன விஜேசிங்க, இந்து - பௌத்த சங்க தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் ஆகியோரின் கவனத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

இலங்கை - சீன ஒப்பந்தம் ஆடை உற்பத்தி, ஏற்றுமதி துறைகளுக்கு மேலும் வலுவூட்டும்

இலங்கை - சீனாவுக்கிடையில் செய்து கொள்ளப்படவுள்ள ஒப்பந்தம் ஆடை உற்பத்தி ஏற்றுமதியாளர்களுக்கு பாரிய நன்மையாக அமையும். சுமார் 08 பில்லியன் அமெரிக்க டொலருக்குக் குறையாத வர்த்தக ரீதியான பங்களிப்பை இந்த ஒப்பந்தம் வழங்கும் என நியூயோர்க்கை மையமாகக் கொண்ட பாரிய ஆடை உற்பத்தி நிறுவனத்தின் நிறைவேற்று துணைத் தலைவர் தெரிவித்தார். சமீபத்தில் உலக வர்த்தக மையத்தில் அலுவலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது. இதனூடாக இலங்கையுடன் 80 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் நடைபெற்றது. உலக தர அடையாளம் கொண்ட உள்ளாந்த ஆடை தயாரிப்பான கால்வின் கிளைன் எங்களது வருவாய்க்கு மிகவும் முக்கிய பாத்திரமாகத் திகழ்கின்றது. இலங்கை வர்த்தகத் திணைக்களத்தின் படி, இ லங்கை- சீனா இடையிலான இருதரப்பு வர்த்தகம் 2012 ஆம் ஆண்டு 2.67 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது. அது 2013 ஆம் ஆண்டில் 15.2 ஆக உயர்வடைந்து 3.08 பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. சீனாவுக்கான இலங்கை யின் ஏற்றுமதி 2012 ஆம் ஆண்டு 108. 12 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்து 2013ஆம் ஆண்டில் 12.49 அதிகரிப்புடன் 122 மில்லியன் அமெரிக்க டொலரை ஈட்டியது. இலங்கையின் பொருட்கள் மீதான சீனாவின் பயண இலக்கு முதல் 20 ஏற்றுமதிகளுக்குள் காணப்படுகின்றது.

செப்ரம்பர் 08, 2014

ஊவாவில் வாழ்வா சாவா

தொகுதிவாரி தேர்தல் முறை நடைமுறையில் இருந்த காலத்தில், பொதுவாக இந்நாட்டின் பெரும்பாலான மக்கள், தேர்தல்களின் போது நடந்து கொண்டதைப் போல் தான் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் இப்போதும் தேர்தல்களின் போது நடந்து கொள்கிறார்கள். 1978ஆம் ஆண்டு விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னர் இந்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் ஒவ்வொரு தேர்தலின் போதும் அப்போதைய எதிர்க்கட்சியையே ஆதரித்தனர். எனவே, அக் காலத்தில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை அரசாங்கம் மாறியது. விகிதாசார தேர்தல் முறையோடு நாட்டில் அந்த நிலைமை மாறினாலும் வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இன்னமும் அதே வழமையை பின்பற்றி வருகிறார்கள். (மேலும்....)

பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் கருணை....?

சர்வதேச சமூகமே இந்த எரி குண்டுகள் உங்கள் கண்களில் படவில்லையா...?

பாலஸ்தீனம் என்னும் ஒரு தேசம்....?

"பாலஸ்தீன் என்றால், இஸ்ரேலுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு சுதந்திரதேசம் என்று இன்றுவரை தவறாகவே நினைத்துக் கொண்டிருப்போருக்கும், இஸ்ரேல் பாலஸ்தீன் விவகாரங்கள் எது ஒன்றுமே தெரியாமல், தினசரி அங்கிருந்து வரும் குண்டுவெடிப்புச் செய்திகளை மட்டும் வாசித்துக்கொண்டிருப்போருக்கும், பிரிட்டனின் காலனிகளாக இருந்து, இரண்டாம் உலகப்போருக்குப்பின் வரிசையாக ஒவ்வொரு நாடாகச் சுதந்திரமடைந்துவிட்ட நிலையில், இருபத்தொன்றாம் நூற்றாண்டு பிறந்தபிறகும் அடிமை வாழ்வைத்தொடரும் பாலஸ்தீனில் அப்படி என்னதான் பிரச்னை என்று அறிய விரும்புவோருக்கும் இது ஒரு சந்தர்ப்பம். (மேலும்....)

தமிழரசு கட்சியின் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல்

இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டின் போது 15 தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் இன்று (08) வாசிக்கப்பட்டன. இதன்போது, அம்மாநாட்டில் கூடியிருந்த சிலர், தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாக தீர்மானங்கள் எழுதப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தீர்மானங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்தியகுழு உறுப்பினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மத்தியகுழு, பொதுச்சபை என்பன கட்சியின் தீர்மானங்கள் தொடர்பான பல்வேறான கருத்துக்களை எடுத்தியம்பியிருந்தோம். தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் அவை அமையவேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், கட்சியின் தலைமைகள் தாம் எழுதிய தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் இன்றி அவற்றை இன்று வெளியிட்டிருந்தது. எனவே தான், அதனை நிராகரித்து மாற்றங்களை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

சரவணா ஸ்டோர்ஸ்

சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம். (மேலும்....)

அல் கோய்தா / அய்.எஸ் இயக்கங்களுக்கான மூலம்

அல் கோய்தா / அய்.எஸ் இயக்கங்களுக்கான மூலம் என்ன என்றால் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கி செல்ல வேண்டும். பனிப்போர் காலங்களில், ஆஃபகானிஸ்தானை அன்றைய சோவியத் ரஸ்ஸியா (நக்சல் தோழர்களின் பாசையில் சமூக ஏகாதிபத்தியம்)ஆக்கிரமித்து (பின் பாகிஸ்தானையும் ஆக்கிரமித்துவிடும் என்ற பயமும் ஏற்பட்டது) புரட்சியை ஏற்றுமதி செய்ய முயன்ற காலங்களில் இருந்து. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முட்டாள்தனமான, அபயாகரமான கோட்பாட்டை இரு தரப்பும் மிக சகஜமாக பயன்படுத்தியதால், ஆஃப்கானில் ரஸ்ஸியர்கள் எதிர்த்து போரிட முஜாகிதீன்களை அமெரிக்கா வளர்த்துவிட்டது. அல் கோய்தாவின் ஒசாமா பின் லேடன் அவர்களில் ஒருவர். 1979இல் ஈரானில் நடந்த புரட்சி யும் சிக்கல்களுக்கு ஒரு முக்கிய வித்து. இரானின் மதவாத்த்தை கண்டு அமெரிக்காவும் ,சோவியத் ரஸ்ஸியாவும், இதர நாடுகளும் பெரும் அச்சம் கொண்டன. சோவியத் ரஸ்ஸியாவின் மத்திய ஆசிய குடியரசுகளில் உள்ள முஸ்லீம்களை ஈரான் தூண்டி விட்டு, பிரிவினை, கலகத்தை விளைவிக்கும் என்ற அச்சம் சோவியத் ரஸ்ஸியாவை ஆட்டுவித்தது. இரானுக்கு எதிராக ஈராக்கை (சாதம் ஹ்சனை) வளர்த்துவிட்டு, பெரும் ஆயுத உதவிகளை மேற்குலக நாடுகளும், சோவியத் ரஸ்ஸியாவும் போட்டி போட்டு கொண்டு செய்தன. ரஸ்ஸியா தான் மிக அதிகம் ஆயுதம், இதர உதவிகளை அளித்தது அன்று. பின்னார் அதே சதாம் எதிரியாக மாறிபோனது வேறு கதை. ஈரான் - இராக் போரின் விளைவுகள், அதனால் திவாலான சதாம், குவைத்தை ஆக்கிரமித்தது என்று...

துரத்தும் மரண நிழல்கள்

(சமஸ்)

நாம் அறிந்திருக்கும் இலங்கையைவிட, தமிழகக் கடலோடிகள் அறிந்திருக்கும் இலங்கை நெருக்கமானது. பல்லாண்டு காலமாக அவர்கள் இலங்கையோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரு பக்கக் கடலோடிகளுக்குமே பக்கத்து நாடு ஒரு நாடாக இல்லை; பக்கத்து ஊராக இருந்திருக்கிறது, தொலைவில் மட்டும் அல்ல; கலாச்சார உறவிலும்.

எங்க முன்னோருங்க சொல்லுறது இது. பல ஆயிர வருஷங் களுக்கு முன்ன இந்த நெலப்பரப்பு முழுக்க ஒண்ணாதாம் இருந்திருக்கு. அப்புறம் கடக்கோளுல ஒடைஞ்சு இலங்கை தனியாவும் இந்தியா தனியாவும் ஆயிருக்கு. எடயில உள்ள சனம் முழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கா இருந்தாலும், தாயா புள்ளையா இருந்தவங்க நம்மல்லாம்பாங்க. (மேலும்....)

பிணை வழங்கிய நிலையில் தப்பிச் சென்ற புலி உறுப்பினர்கள் பெல்கிரெட்டில் கைது

நீதிமன்றத்தால் பெற்ற முறையில் பிணை வழங்கப்பட்டிருந்த நிலையில் நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ற புலிகளுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் துபாயிலிருந்து இத்தாலி செல்கையில் பெல்கிரெட் விமான நிலையத்தில் வைத்து கைதானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப்புலிகளின் பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்ட முல்லைத்தீவைச் சேர்ந்த பாலச்சந்திரன் மற்றும் முருங்கனைச் சேர்ந்த செபஸ்த்தியன் பிள்ளை ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஒப்பந்தமுறையில் பிணை வழங்கப்பட்டிருந் தனர். அவர்கள் திடீரென காணாமல் போயிருந்தனர். அதன் பின்னர் இவர்கள் துபாய்க்கு சென்று அங்கிருந்து முறைகேடாக விசாபெற்று இத்தாலி செல்லும்போது பெல்கிரெயின் விமான நிலையத்தில் சர்வதேச பொலிஸாரினால் அவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 150ஆக உயர்வு

காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத் தின் பல பகுதிகளை வெள்ளம் சு+ழ்ந்து கொண் டுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு கடுமை யான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. 10 மாவட் டங்களிலுள்ள 400 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு உத்தர காண்ட்டில் ஏற்பட்ட வெள்ளம் போல் காஷ்மீரில் 60 வருடத்துக்கு பின் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைப் பாதைகளில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது. ஜPலம் நதியில் அபாய கட்டத்தை தாண்டி பல அடி உயரத்துக்கு வெள்ளம் ஓடு கிறது. இதன் கரையில் உள்ள தலைநகர் ஸ்ரீநகரின் ஒரு பகுதியிலும் வெள்ளம் புகுந்தது.நேற்றுக் காலை நிலவரப்படி அங்கு வெள்ளத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 150ஐ நெருங்கியுள்ளது. வெள்ள மீட்பு பணிக்கு இராணுவம் வரவழைக் கப்பட்டது. அவர்கள் தாழ்வான பகுதியில் சிக்கி இருந்தவர்களை மீட்டு வருகிறார்கள். இராணுவம் இதுவரை 11000 மக்களை வெள்ள அபாயத்தி லிருந்து காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளது.

செப்ரம்பர் 07, 2014

தமிழர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் - வெங்கையா நாயுடு

இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். சென்னையில், செய்தியாளர்களை சந்தித்தபோது, அவர் இதனை கூறியுள்ளார். மத்திய அரசை பொறுத்தவரையில் மற்ற நாடுகளை போலவே இலங்கை அரசுடனும் நல்லுறவு கொண்டுள்ளது. இலங்கை பிரச்சினைக்கு தூதரகம் மூலம் அவ்வப்போது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இலங்கை தமிழர்களுக்கு இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என் அவர் இதன் போது  கூறினார்.

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வழிசமைக்கவும்

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு, வடமாகாண சபையில் 2015ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யுமாறும் அதற்கான பிரேரணையை ஏகமனதாக நிறைவேற்றுமாறும்  முற்போக்கு தமிழத்  தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந் தெரிவித்துள்ளார். தமிழர்களின் உரிமைக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலான அஹிம்சை வழிப்போராட்டத்திலும் 30 ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்திலும் நம்பிக்கை வைத்து, தமிழர்களாக பிறந்த ஒவ்வொரு இளைஞர், யுவதிகளும் அந்தந்த காலத்துக்கு ஏற்ப தங்களுடைய உயிர்  அர்ப்பணிப்புக்களை  செய்து தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமைக்காக போராடி வந்தார்கள். முன்னாள் போராளிகளில் எண்ணிலடங்காதவர்கள் தமது உடல் உறுப்புக்களையும் இழந்து அங்கவீனமானவர்களாகவும், ஆயிரத்துக்கு மேற்பட்ட போராளிகள் உளவியல் ரீதியாகவும் பாதிப்படைந்து இன்று தமிழ்ச் சமுதாயத்துடன் இணைந்து வாழ்ந்து வருகின்றார்கள். 2013ஆம் ஆண்டு நடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டி போட்டுக் கொண்டு தேர்தலில் களமிறங்கிய அனைத்து அரசியல் கட்சிகளும், பிரமுகர்களும் தாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடிய மாவீரர்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் ஒரு சுபீட்சமான வாழ்வை ஏற்படுத்தி தருவோம், என்ற அடிப்படையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு தேர்தலில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால், இன்று வடமாகாணசபையைப் பொறுப்பேற்று ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கின்ற நிலைமையிலும் கூட ஈழ போராட்டத்துக்கு தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களின் குடும்பத்துக்கும், முன்னாள் போராளிகளின் குடும்பத்துக்கும் வாழ்வாதார உதவிகள் செய்ததாக எந்தப்பதிவுகளும் இடம்பெறவில்லை.

மக்களுக்கு எவ்வித நன்மையும் இல்லாத வட மாகாண சபையை தொடர்ந்தும் வைத்திருப்பதில் என்ன பயன்?

பலவிதமான எதிர்பார்ப்புக்களுடன் தமிழ்க் கூட்டமைப்பை நம்பி வாக்களித்து வெற்றிபெற வைத்த வடபகுதி மக்களுக்கு வட மாகாண சபை மூலமாக இதுவரை எவ்விதமான பலனும் கிடைக்கவில்லை. மக்களுக்கான சேவை எதுவுமே இல்லாது ஒரு வருட காலம் வெறுமனே உருண்டோடி விட்டது. அடுத்த நான்கு வருடங்களையும், அதேபோன்று வீணாக்க அம்மக்களுக்கு விருப்பமில்லை. அதனால் வாக்களித்த தமக்கு எவ்விதமான நன்மையும் இல்லாத வட மாகாண சபையை அரசாங்கம் உடனடியாகக் கலைத்துவிட்டு அதனை மீண்டும் பொறுப்பேற்று வடக்கை முன்னர் போன்று அபிவிருத்தி செய்ய வேண்டும். (மேலும்....)

ஜெயலலிதா ஏன் கூட்டமைப்பை சந்திக்கவில்லை?

புதுடில்லி விஜயத்தை முடித்துக் கொண்ட கூட்ட மைப்பினர், சில நாட்கள் தமிழ் நாட்டில் தரித்து நின்றனர். இதன் போது அவர்கள் தமிழ் நாட்டின் முதலமைச்சரான செல்வி. ஜெயலலிதாவை சந்திப்பார்கள் என்னும் ஊகத்தை சில ஊடகங்கள் ஏற்படுத்தியிருந்தன. ஆனால் அப்படி ஒன்றும் நிகழவில்லை. ஆனால் அதற்கு மாறாக கூட்ட மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பி.ஜெ.பியின் தமிழ் நாட்டு தலைவர்களை சந்தித்து உரையாடியிருந்தார். சந் திப்பின் இறுதியில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலும் சம்பந்தன் பங்குகொண்டிருந்தார். இதன் போது சம்பந்தன் பிரிவினை பொருத்தமானதல்ல ஏனெனில் அதனை இந்தியா ஆதரிக்காது என்னும் பொருள்பட கருத்துத் தெரிவித்தி ருந்தார். சம்பந்தன் அவ்வாறு தெரிவித்ததுதான் தாமதம், பிரபாகரனின் இலட்சிய பாதுகாவலர்களாக தங்களை கருதிக் கொண்டிருக்கும் நெடுமாறன் மறுநாளே ஒரு அறிக் கைகை வெளியிட்டிருந்தார். அதில் தமிழ் தேசியக் கூட்ட மைப்பு மட்டும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லை என்ற வாறு சம்பந்தனின் கருத்திற்கு நெடுமாறன் பதலளித்திருந்தார்.  (மேலும்....)

செப்ரம்பர் 06, 2014

எமது யதார்த்த அரசியலை சம்பந்தனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார் - ஈ.பி.டி.பி

உணர்ச்சி பேச்சுக்களாலும் வெற்றுக் கோசங்களாலும் அரசியல் தீர்வை அடைய முடியாது என்றும், நடைமுறை யதார்த்த வழியிலேயே தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் கூறியிருப்பதோடு கடந்த காலங்களில் அரசியல் உரிமைப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கிடைத்திருந்த பல நல்ல வாய்ப்புக்களையும் இழந்திருக்கின்றோம் என்பதையும் எற்றுக் கொண்டிருக்கின்றார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. இது ஈ.பி.டி.பியினராகிய எமது நீண்டகால அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதன் வெளிப்பாடேயாகும். ஆகவே  நாம் அதனை வரவேற்கின்றோம்  இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று (06) விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(மேலும்....)

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராசா தெரிவு

வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று சனிக்கிழமை(6) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பொதுசபை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் செய்யப்பட்டுள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். அதேவேளை, செயலாளராக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கி.துரைராஜசிங்கம் தெரிவாகியுள்ளதுடன் செயற்குழு தலைவராக இரா.சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இணை பொருளாளர்களாக அன்ரனி ஜெகநாதன் மற்றும் இரட்ணசபாபதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். (மேலும்....)

ஜானக பெரேரா கொலை

புலி உறுப்பினருக்கு 20 வருட கடூழிய சிறை

வடமத்திய மாகாணசபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உட்பட 29பேரை குண்டுத் தாக்கி கொலை செய்தார் என்று குற்றஞ்சாட்டிப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான சண்முகநாதன் சுதாகரனை, குற்றவாளி என இனங்கண்ட அநுராதபுரம் மேல் நீதிமன்றம், அவருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குறித்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபரான சுதாகரன், தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே நீதிமன்றம் இன்று (05) இந்த தீர்ப்பை வழங்கியது.  புலிகள் இயக்கத்தில் கேணல் பதவிநிலை வகித்த செங்கலடியைச் சேர்ந்த சண்முகநாதன் சுதாகரன் என்பவருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட்டது.  கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி, குண்டுத் தாக்குதலை நடத்தி ஜானக பெரேரா உட்பட 29பேரை கொலை செய்தார் என்று இவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

'யுத்தத்தில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே'

கடந்த யுத்தத்தில்  அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 20,000 இற்கும் மேற்பட்ட குடும்பத் தலைவியர்கள் உள்ளார்கள் எனவும் அவர் கூறினார். தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வந்ததை நான் தான் நிறுத்தினேன். அவ்வாறு நிறுத்தியதுக்காக  பல கெட்ட பெயர்களையும் பெற்றுக்கொண்டேன். ஆனால், அந்நிலை தொடர்ந்திருந்தால் இளைஞர்கள் மாத்திரமின்றி வயோதிபர்களும் தற்போது உயிரோடு இருந்திருக்க மாட்டார்கள்.  பாரிய இழப்புக்களிலிருந்து எமது மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். தமிழர்களின் வரலாற்றில் சரியான அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொள்ளாததினாலேயே யுத்தம்  உருவாகியது. இதனாலேயே தமிழர்கள் யுத்தத்தினுள்  தள்ளப்பட்டனர்.  யுத்தத்தினுள் ஈடுபடாமலிருந்தால்  இன்னும் பாரிய வளர்ச்சி எம்மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கும். எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தலை எமது மக்கள் சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். வெல்லக்கூடிய ஒருவருக்கு வாக்களிக்க வேண்டும். ஆனால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எமது தமிழ் மக்களை கொன்றழித்த சரத் பொன்சேகாவுக்குத்தான் எமது மக்கள் வாக்களித்தார்கள். இந்த நிலைமை எதிர்காலத்தில்  ஏற்படக்கூடாது' என்றார்.
 

வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அக்கற்றப்பட மாட்டாது

யார் தலையிட்டு அழுத்தங்களை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. யார், எந்த அழுத்தத்தை பிரயோகித்தாலும் வடக்கிலுள்ள முகாம்களை அகற்ற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார். வடக்கில் மாத்திரமில்லை, கொழும்பிலும் 50 மீற்றருக்கு ஒரு முகாம் என்ற ரீதியில் படை முகாம்கள் காணப்படுகின்றன என்றும் அமைச்சர் கெஹெலிய மேலும் கூறினார்.

முதல் முறையாக யாழ்நகரில் அரச பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்

முதல் தடவையாக மாகாண ரீதியாக சென்று மாகாண அமைச்சுக்களின் பிரதிநிதிகளுடனும் திணைக்களத் தலைவர்களுடனும் கலந்துரையாடி 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை முழுமையாக தயாரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிரு ப்பதாக திறைசேரி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்தார். இலங்கையின் அனைத்து மாகா ணங்கள் மற்றும் மாவட்டங்களும் ஒரே மாதிரியாகவே அரசாங்கத்தால் பார்க்கப் படுகின்றன. அனைத்து மாவட்டங்களின் வளர்ச்சியிலும் ஜனாதிபதி அக்கறை கொண்டுள்ளார். இவ்வாறான கலந்துரையாடல் நிகழ்வில் வட மாகாண அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட அனைவரும் கலந்துகொண்டு வரவு- செலவுத் திட்டம் சம்பந்தமான தேவைகளை வெளிப்படுத் துகின்றமை வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். நாடு ஒரு முழுமையான ஜனநாயக நாடாகும். இங்கு எல்லா இடங்களும் வளர்ச்சி அடைய வேண்டும் அபிவிருத்தி அடைய வேண்டும் என்பதே ஜனாதிபதி யினதும் அனைவரினதும் விருப்பமும் ஆகும்.

கூட்டமைப்பு விந்தனின் சுயரூபம் அம்பலம்.

வறுமை காரணமாக தமது வாழ்ந்த வீட்டை ஈடுவைத்த குடும்பத்தை நடுத்தெருவுக்கு கொண்டு வரும் கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினரது செயற்பாட்டால் இரண்டு பிள்ளைகள் மற்றும் பெற்றோருடன் நடு வீதிக்கு வரும் நிலை சத்தியராணி என்னும் குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் வடமாகாணசபை உறுப்பினரான கனகரத்தினம் விந்தனிடம் ரூபா 6லட்சம் ரூபாவிற்கு ஒன்றரை வருட காலப் பகுதிக்குள் மீட்பதாக ஈடுவைத்திருந்தார். மீட்பதற்குரிய காலம் தாமதித்தபடியால் தற்போது அவ் வீட்டை மீட்கும் பொருட்டு அவரிடம் நாடிய அந்தப்  பெண்ணிடம் 18லட்சம் ரூபா பணத்தை தந்தால் தான் வீட்டை திரும்பத் தருவேன் என்றும் இல்லையேல் இம்மாதம் 5ம் திகதிக்குள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். இவரது அச்சுறுத்தலால் அச்சமுற்ற குறித்த பெண் தற்போது செய்வதறியாது தவித்து வருகின்றார். அவலக் கண்ணீரோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் சென்று தனது நிலையை கூறி வீட்டை மீட்டுத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளமையால்தான் இந்த விடயம் வெளிவந்துள்ளது. தமிழருக்கு உரிமை பெற்றுக்கொள்ள வேண்டும் தமிழர்கள் தான் தனது மூச்சு என நிமிடத்திற்கு நிமிடம் கூறிவரும் விந்தனது தேசிய உணர்வு பண மோகத்திலும் பதவி மோகத்திலும் மட்டும் தான் இருக்கின்றது என்பதை இவரது செயற்பாடு எடுத்துக்கட்டுகின்றது. கடந்த கால யுத்தத்தின் வடுக்களிலிருந்து மீளமுடியாத மக்களாக இருக்கும் தமிழ் மக்களின் சொத்துக்களை மறைமுகமாக கொள்ளையடிக்கும் வேலைகளில் தமிழ்த்தேசிய வாதிகள் எனக் கூறும் பலர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர் என்று குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண்ணிய உரிமைகளுக்கான மகளிர் ஒன்றியம் யாழில் உதயம்

பெண்களது பாதுகாப்பையும் உரிமைகளையும் பொருளாதார வசதிகளையும் மேம்படுத்திக் கொள்வதற்காக யாழ்.மாவட்ட ரீதியில் ஒவ்வொரு தொகுதி வாரியாக பெண்களுக்கான மகளிர் அமைப்பு அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது. பெண்களுக்கு ஒரு விடியலைத் தேடுவதற்கான அமைப்பாக எதிர்காலத்தில் பரிணாமம் அடைய வேண்டும் என்ற நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்பானது நாட்டில் நடக்கும் பெண்களுக்கெதிரான வன்முறைகளையும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் முகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல் சார்பற்ற அமைப்பாக உருவெடுத்துள்ள இந்த மகளீர் அமைப்பானது முதற்கட்டமாக நல்லூர்த் தொகுதியில் உதயமாகியுள்ளது. சுமார் நூற்றுக்கு மேற்பட்ட மகளிர், சமூ பெரியவர்கள், முக்கியஸ்தர்கள் முன்னிலையில் இதன் நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது. பாகுபாடற்றதும் சுயநலப்போக்கும் இல்லாது இவ் அமைப்பு செயற்படுமானால் சமூகத்தில் ஒட்டுமொத்த பெண்களிடையே மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி யாழ்.மாவட்டத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் வாழும் குடும்பங்களின் வாழ்வாதாரங்களை உயர்வடையச் செய்யும் என்பது உண்மை.

செப்ரம்பர் 05, 2014

சர்வதேச ஆசிரியர் தினம் இன்று

என்னையும் ஆசான் ஆக்கிய ஆசிரியை

(சிவா ஈஸ்வரமூர்த்தி)

சின்னக்கா எனது அரிவரி வகுப்பை தாண்டிப் போகும் போது என்னை அந்த வகுப்பில் காணமல் இருப்பதைக் கண்டார். வகுப்பு ஆசிரியர் செல்வரத்தினம் ஆசிரியையிடம் விசாரித்தார். ஆசிரியர் எனது மாமியும் கூட. சிவா பள்ளிக்கூடம் வருவதில்லையே என்று பதில் கூறினார் ஆசிரியர். என்னை மாடு மேய்ப்பதற்கு அல்லது தோட்ட வேலைகளில் ஈடுபடுத்துவதால் நான் பாடசாலைக்கு வருவதில்லை என அவர் எண்ணியதாக எமது அக்காவிடம் கூறினார். எனது இரு அண்ணன்மார்களும் படிப்பில் அவ்வளவு கெட்டிக்காரர்கள் அல்ல. மேலும் எனது ஐயா தோட்டக்காரன் பெண் பிள்ளைகளை 10ம் வகுப்பிற்கு மேல் பாடசாலைக்கு அனுப்புவது இல்லை என்ற எண்ணம் மேலோங்கி இருந்த கிராமத்தில் பிறந்தவர். இதன்தொடர்ச்சியாக கடைக்குட்டி என்னை தோட்ட வேலையில் ஒத்தாசையாக வைத்திருப்பதற்காக  பாடசாலைக்கு அனுப்புவதில் என்று ஆசிரியை நினைத்தது என்று ஒன்றும் புதிய விடயம் இல்லை. (மேலும்....)

பெண்களுக்கு ஆடுகள்

வழித்தேங்காயை தெருப்பிள்ளையாருக்கடித்தார் ஐங்கரத்தார்!

அளவெட்டி சைவமகாசபை மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வு சைவமகாசபைத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. வடமாகாணத்தில் பெருந்தலை என்று போற்றப்படும் முன்னாள் நீதியரசரும் தற்போதைய முதலமைச்சருமாகிய க.வி.விக்னேஸ்வரன் இந்த ஆடுகளைக் கையளித்தார். இந்த நிகழ்வில் விவசாய அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். ஆனால் ஆடுகளுக்குரிய பணத்தை வளங்கியவர்கள் ஒரு மூலையில் அமர்ந்து நிகழ்வில் திருப்தியுற்றனர். (மேலும்....)

இந்தியத் தோழர்களுடனான சந்திப்பில் வரதர்

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் தோழர் வரதராஜ பெருமாள் கோவை, ஈரோடு மாவட்டங்களில் நண்பர்களை, தோழர்களை சந்தித்தார். அந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களை அவர் சந்தித்தார்.

அல்-கொய்தாவின் அறிவிப்பு: இலங்கை தீவிர கவனம்

அல்-கொய்தா அமைப்பின் பிரிவை இந்திய துணைக்கண்டத்திலும் அமைக்க போவதாக அவ்வமைப்பின் தலைவரான அய்மான் -அல்-ஜவாகிரி மிரட்டல் விடுத்துள்ளது தொடர்பில் இலங்கை தீவிர கவனம் செலுத்தி வருவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரவாதிகள் தீவுக்குள் நுழைவதை தடுப்பதற்கு விஸா கட்டுப்பாடுகள் மற்றும் விஸா மீளாய்வுகளை இலங்கை பரிசீலிக்க உள்ளது என்றும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடுகள் சிலவற்றில் ஆதிக்கம் செலுத்தி வரும், அல்-கொய்தா ஆதரவு பயங்கரவாதியான, அபுபக்கர் அல் பாக்தாதி தலைமையிலான, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஈராக்,சிரியா ஆகிய நாடுகளில் யுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செப்ரம்பர் 04, 2014

'ராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை!'

பகீர் கிளப்பும் டெல்லி பத்திரிகையாளர்

24ஆண்டுகளான பிறகும் இன்னும் விலகாத மர்மக் கதையாகத் தொடர்கிறது ராஜீவ் காந்தியின் கொலைச் சம்பவம்!

குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களும் இந்தக் குற்றத்தை விசாரித்தவர்களும் இப்போது அளித்துவரும் வாக்குமூலங்கள் மூல வழக்கையே மொத்தமாக மாற்றிவிடக் கூடியவை. ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வழங்கிய மரண தண்டனை தீர்ப்பு, இப்போது உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன பெஞ்ச் முன்பாக இருக்கிறது. கொலைச் சதி சம்பந்தமாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்நோக்கு ஆணையம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தன்னுடைய விசாரணை காலக்கட்டத்தை நீட்டித்துக்கொண்டே போகிறது. ஜெயின் கமிஷன் குற்றம்சாட்டிய நபர்கள் இன்னமும் விசாரணையே செய்யப்படவில்லை. இந்த நிலையில் ராஜீவ் கொலைச் சம்பவம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்துவிட்டன. அவை கிளப்பும் சந்தேகங்கள் மலையளவு உள்ளன. அதற்குத்தான் பதில் சொல்வார் யாரும் இல்லை! (மேலும்....)

 

தஞ்சை பெரிய கோயிலில் புதைந்திருக்கும் ரகசியம் !

உலகின் பாரம்பரியச் சின்னமும் இந்தியாவின் பெருமையுமான தஞ்சைப் பெரிய கோயில் முழுக்க முழுக்க மணல் மீது கட்டப்பட்டுள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். 2010-ம் ஆண்டு நடந்த பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவின்போது கருவறையில் இருந்து சுமார் 100 அடி தொலைவில் ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து துளையிட்டதில் சுமார் மூன்று லாரி அளவுக்கு மணல் வந்தது. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கோயில் கட்டிடக் கலை நிபுணர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கோயில் கட்டிடக் கலைஞரும் ஆய்வாளருமான பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் தி இந்துவிடம் கூறியதாவது: (மேலும்....)

ஆடை தொழிற்சாலை யுவதி கொலை; வைத்தியருக்கு மரண தண்டனை

ஆடை தொழிற்சாலை யுவதியான சமிளா திசாநாயக்காவின் மரணம் தொடர்பான கொலை வழக்கின் சந்தேகநபரான வைத்தியர் இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்து இன்று புதன்கிழமை தீர்ப்பளித்தது. நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.ஏ.கபூர், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிலா திசாநாயக்க (23 வயது) என்ற இளம் யுவதியே 12-11-2007 அன்று பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டவராவார். சந்தேக நபரான வைத்தியருக்கு எதிராக  பாலியல் வல்லுறவு புரிந்தமை மற்றும் கொலை குற்றச்சாட்டு ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டடிருந்தன. (மேலும்....)

மதம் பற்றி ஒரு கம்யூனிஸ்ட்

காலை நடையின்போது வழக்கம்போல் என் செல்லியில் பண்பலை வானொலி கேட்டுக்கொண்டே வந்தேன். எப்எம் கோல்டு அலைவரிசையில் செய்தி முடிந்ததும் கந்தசஷ்டி கவசம் ஒலிபரப்பினார்கள். செல்லியை எடுத்து அலைவரிசையை மாற்றப் பொறுமை இல்லாததாலும், சூலமங்கலம் சகோதரிகளின் குரலினிமையில் சீரான ஏற்ற இறக்கங்கள் எனது நடைக்கான லயமாக அமைந்ததாலும் அதைக் கேட்டுக்கொண்டே நடந்தேன். (இதுதான் இறைவன் செயல், எப்படியோ அவனை வாழ்த்தும் பாடலை நீங்களும் கேட்கும்படி செய்துவிட்டான் பார்த்தீர்களா என்று ஆரம்பித்துவிடாதீர்கள் முருகபக்த நண்பர்களே...) பாடலில் ஒரு வரி மனதின் லயத்தைக் கெடுத்து அலைகளைக் கிளப்பியது: அசுரர் குடி கெடுத்த அய்யா வருக. ஆண்டவன் வேலை குடி கெடுப்பதுதானா? அன்பே கடவுள் என்பது, அசுரர் குடிகளுக்குப் பொருந்தாதா?  ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து தங்கள் பூர்வீக இடங்களைப் பாதுகாக்கப் போராடியவர்களின் குடியை அழித்த அந்த அய்யாவை எப்படி வருக என்று எனது குடிலுக்கு வரவேற்பது? (இந்து மத சாமிகளைப் பற்றி மட்டும்தான் இப்படி விமரிசிப்பீர்கள், மற்ற மதங்களின் கடவுள்களைப் பற்றிப் பேச மாட்டீர்கள் என்று, விவாதத்தைத் தடம் புரட்ட முயலாதீர்கள் இந்து மதப் பற்றாளர்களே.)

(Kumaresan Asak)

கோவைத் தோழர்களுடன் தோழர் வரதராஜப்பெருமாள்

இஸ்கப் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் தோழர் S.ராதாகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் தோழர் S.அன்பரசு அவர்களின் மகள் திருமண விழாவை முன்னிட்டு கலந்து கொண்ட தலைவர்கள், தோழர்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் புத்தக கண்காட்சியை பார்வையிட்டனர். இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் தோழர் வரதராஜ பெருமாள், EPRLF (சுரேஷ்பிரிவு) செயலாளர் நாயகம் தோழர் பிரேமச்சந்திரன், Dr. ரவீந்தரநாத், கவிஞர் புவியரசு, தோழர் குகன், தோழர் ப.பா.ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

20 நாட்களில் செவ்வாயை அடையும் மங்கள்யான் விண்கலம்

செவ்வாய் கிரகத்தை ஆராய அனுப்பப்பட்ட 'மங்கள்யான்'' விண்கலம் வெற்றிகரமாக விண் ணில் 300வது நாள் பயணத்தை நிறைவு செய்த தாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் இஸ்ரோவின் சமூக வலை தளத்தில் வெளியிட்டப் பட்டுள்ளது. இன்னும் 20 நாட்களில் மங்கள்யான் விண்கலம் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மக்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான மங்கள்யான் விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.சி-25 ரொக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. செப்டம்பர் 24ம் திகதி செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் மங்கள்;யானை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மங்கள்யான் விண்கலம் செவ் வாய் சுற்றுவட்டப்பாதைக்குள் செல்ல 20 நாட்கள் ஆகும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சீனாவின் ஆப்பிள் ஸ்யோமி!

ஸ்யோமி - கடந்த சில மாதங்களாக டெக் உலகில் அதிகம் உச்சரிக்கப்பட்ட் ஒரு மொபைல் நிறுவனத்தின் பெயர். இணையத்தில் எங்கு பார்த்தாலும் இந்த நிறுவனத்தின் மொபைல் பற்றிய பேச்சுதான். அப்படி என்னதான் இருக்கிறது இந்த ஸ்யோமியில். சீனத் தயாரிப்பான இந்த ஸ்யோமி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் சீனாவில் ஆரம்பிக்கப்பட்டது. எப்போதும் சீனத் தயாரிப்பு என்றால் நம்மவர்களிடையே, அது காப்பியடிக்கப்பட்ட தொழில்நுட்பம், நம்பகத்தன்மையற்றது என்ற பேச்சுகள் இருக்கும். ஆனால், இந்த மொபைல் அந்த பேச்சுகளை எல்லாம் தகர்த்துள்ளது. சீனர்களாலும் தரமான பொருட்களைத் தயாரிக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. (மேலும்....)

செப்ரம்பர் 03, 2014

யாழ். பல்கலை அபிவிருத்தி

இரு பீடங்கள் கிளிநொச்சிக்கு மாற்றம்

 

உயர்க்கல்வி அமைச்சினால், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இப்பல்கலைக்கழகத்தின் விவசாய மற்றும் பொறியியல் ஆகிய இரு பீடங்களும் கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்படவுள்ளன என்று அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், குறிப்பிட்ட சில வசதிகளுடன் மாத்திரம் இயங்கி வந்த யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தையும் சகல வசதிகளுடன் கிளிநொச்சியில் அமைக்கவுள்ளதாக அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.

புஷ்பராணியின் சிறை அனுபவங்கள்

நான் சிறையில் இருந்த காலத்தில், சிங்களவர், தமிழர் என்ற எந்தப் பிரிவும் எம்மிடையே இருக்கவில்லை. எம்முடனிருந்த ஜே .வி. பி. தோழிகளிடம் நட்பும், தோழமையும் நிறைந்திருந்தன. (நாங்கள் அரசியல் பிரிவுக்குட்பட்ட கைதிகளானபடியால் ஒரே பகுதியிலேதான் இருந்தோம்) இவர்களுடன் அரசியல் விவாதங்களும் இடையிடையே ஏற்படும். ஆழமான விவாதங்களுக்குச் செல்வதற்கு மொழி எங்களுக்குத் தடையாயிருந்தது. (மேலும்....)

புதைந்துபோன வரலாறு

மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர் திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. (மேலும்....)

விலைப் பட்டியல் விலைவாசியை எடுத்தியம்பும் ஒரு வரலாற்று ஆவணம்தான்


தமிழகத்தில் ஒரு விவசாயியின் நி(வி)லை

சென்றமாதம் என்னுடைய வயல் அறுவடையானது
அதில், கதிர் அறுக்கும் எந்திரம் மூலம் அறுவடையான
வயல் போக ஒரு அரை ஏக்கர் நெற்பயிர் பச்சயா இருக்கு
பிறகுதான் அருக்கமுடியும் என்று சென்றுவிட்டனர் ....

சென்றவாரம் அந்த அரை ஏக்கர் நெற்பயிரை அறுப்பதற்கு
கதிர் அறுக்கும் எந்திரம்அனைத்தும், அறுவடை சீசன் முடிந்து ஆந்திரா, கர்நாடகம் சென்றுவிட்டதால், ஆட்களை
கொண்டு வயலை அறுக்கும் நிலையாகிவிட்டது .....

 (மேலும்....)

அமைச்சரின் உரையை தடுத்தார் ஜனாதிபதி

பொது மக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் தாக்குதல் உரையை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இடையில் தடுத்து அவருக்கு அறிவுரை வழங்கிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண சபைத்தேர்தலுக்காக மொனராகலையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அமைச்சர் மேர்வின் சில்வாவும் கலந்துகொண்டு உரையாற்றினார். அமைச்சர் தமது உரையில், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.வி) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்து அவரை தனிப்பட்ட ரீதியில் தாக்கிப் பேசினார். இதனை அவதானித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரின் பேச்சை இடைநிறுத்தியதுடன் எவரையும் தனிப்பட்ட ரீதியில் தாக்கிப்பேசக்கூடாது என்று பணித்தார். ஜனாதிபதியின் அறிவுரையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் மேர்வின் தனது உரையை தொடர்ந்தார்.

மலேசியாவிலுள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப காலக்கெடு

வீசா காலம் முடிவடைந்த பின்னர் மலேசியாவில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு டிசம்பர் 31ஆம் திகதி வரை மலேசியா கால அவகாசம் வழங்கியி ருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. மலேசியாவுக்கு வேலைசெய்யும் நோக்கில் சென்று வீசா காலம் முடிவடை ந்த பின்னரும் தங்கியிருப் பவர்கள் இந்தக் காலப்பகுதி யில் எதுவித தண்டனையு மின்றி நாடு திரும்ப முடியும் என பணியகம் தெரிவித் துள்ளது. கடவுச்சீட்டைத் தொலைத்த நிலையில் நாடு திரும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள் கூட தற்காலிக பயண ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு நாடு திரும்ப முடியும். கடவுச்சீட்டைத் தொலைத்தவர்கள் தொலைந்த கடவுச்சீட்டின் போட்டோ பிரதி, பொலிஸ் முறைப்பாடு, புகைப்படங்கள் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துடன் தற்காலிக பயண ஆவணத்துக்கு விண்ணப்பிக்க முடியும். மலேசியாவிலுள்ள இலங்கைத் உயர்ஸ்தானிகராலயத்தில் இது தொடர்பில் விண்ணப்பிக்க முடியும். 165 ரிங்கிட்களைச் செலுத்தி இதற்கு விண்ணப்பிக்க முடியும். அதேநேரம் நாடு திரும்ப விரும்பு வோருக்கு விமானப் பற்றுச்சீட்டுக்களும் பெற்றுக் கொடுக்கப்படும்.

செப்ரம்பர் 02, 2014

தோழர் பத்மநாபா நினைவாக......

(புஸ்பராணி சிதம்பரி)

இன்றிலிருந்து நாற்பது வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணத்தின் கிடுகுவேலிக் கலாச்சாரத்துக்குள் இருந்து கல்யாணமாகாத இளம் பெண்கள் அரசியலுக்கு வருவதையும் ,ஆண் தோழர்களோடு ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்து திரிவதையும் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்.  சமூகத்திலிருந்து எத்தகைய கட்டுக்கதைகள் பிறந்திருக்கும் என்று உங்களால் இப்போது ஊகி