|
||||
|
ஐப்பசி 2010 மாதப் பதிவுகள் ஐப்பசி 31, 2010 பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேசக் கிளைகளின் மகாநாடு
கடந்தவாரம் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச கிளைகளின் மகாநாடு ஐரொப்பாவில் நடைபெற்றது. இது தொடர்பாக அவர்களின் சர்வதேசப் பொறுப்பாளர் த. சாந்தன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை. (மேலும்...) (english Ver...)
ஐப்பசி 31, 2010 13 வது திருத்தத்தை நிராகரிக்கலாமா? (ஆர். கே. ராஜலிங்கம்)
பதின்மூன்றாவது அரசிய லமைப்புத் திருத்தத்தை ஏற்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடித்துக் கூறுவது இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் பிரதான தடைக்கல்லாக இருக்கின்றது. பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்க் கட்சிகள் மத்தியில் எண்ணிக்கையில் கூடுதலான பிரதிநிதிகளைக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்வு நடைமுறையில் பிரதான பங்காளியாக இருக்க வேண்டிய அவசியத்தைக் கூட்டமைப்புத் தலைமை உணர்ந்து செயற்படுகின்றதா என்ற கேள்வி இங்கு எழுகின்றது. அரசியல் தீர்வை அடைவதற்குத் தமிழ்க் கட்சிகளுக்கிடையே ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்று ஜனாதிபதி அண்மையில் கூறியதில் அர்த்தம் உண்டு. தீர்வு முயற்சியை முன் னெடுப்பதற்குத் தடையாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருப்பதை மனதில் வைத்தே ஜனாதிபதி அவ்வாறு கூறியிருக்க வேண்டும். (மேலும்...) ஐப்பசி 31, 2010 சர்வதேச 'வாய்ப்பாடு' இனப் பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில் சர்வதேசம் என்ற ஒரு மாயை தமிழ்த் தலைவர்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றது. காலங்காலமாகத் தலைவர்கள் சர்வதேச வாய்ப்பாடு சொல்லிக்கொண்டிருப்பதால் மக்களும் அதில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினர். ஒருபோதும் சாத்தியமற்ற இரண்டு விடயங்களில் தலைவர்கள் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்கள். ஒன்று தனிநாடு அமைக்க முடியும் என்ற நம்பிக்கை. மற்றது சர்வதேசம் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் என்ற நம்பிக்கை. தமிழ் மக்கள் முகங்கொடுத்த இழப்புகளுக்கும் பின்னடைவுகளுக்கும் இவ்விரு நம்பிக்கைகளுமே பிரதான காரணம்.(மேலும்...) ஐப்பசி 31, 2010 அரசியல் கட்சிகளின் அராஜகம் பல்கலைக்கழக மாணவர்களின் வன்முறைச் செயற்பாடுக ளும் இச்செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி வெளியிடப்படும் கருத்துகளும் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் முக்கிய இடம் பிடித்து வருகின் றன. பல பல்கலைக்கழகங்களின் உபவேந்தர்கள் அண்மையில் ஜனாதிபதியைச் சந்தித்து மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் பற்றிப் பேசியிருப்பதிலிருந்து ஏறக்குறைய எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் அமைதியற்ற நிலை இருப்பதைப் புரிந்துகொள் ளலாம். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அண்மையில் மாணவர்குழுவொன்று உயர் கல்வி அமைச்சுக் குள் அத்துமீறிப் புகுந்து தளபாடங்களையும் உபகரணங்களை யும் சேதப்படுத்திய சம்பவம் தொடர்பாகவே இவர் கைது செய் யப்பட்டார். ஐப்பசி 31, 2010 அரசியல் வட்டத்துக்குள் முடக்கப்பட்ட தமிழ் சினிமாவும், மழுங்கிப் போகும் கலைஞர்களின் திறமைகளும்
கடந்த சில மாதங்களாக வெளிவந்த வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்த படங்கள் அனைத்துமே அரசியல் செல்வாக்குள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது மற்றவர்கள் தயாரித்து அவர்களால் வெளியிடப்பட்டவை. அவர்களோடு தொழில் ரீதியாக மோத முடியாத சிறிய தயாரிப்பாளர்கள் தாங்கள் தயாரித்த படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். தமிழத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சிலரே கைப்பற்றியதுதான் காரணம். சினிமா பெரும் முதலீட்டில் உருவாக்கப்படுகிறது என்பதால் அதன் வெற்றி என்பது விமர்சனங்கள், விருதுகள், அனைத்தையும் தாண்டி வியாபாரத்லும் இருக்கிறது. (மேலும்.....) ஐப்பசி 31, 2010 பெண்கள் மீதான ஊடக வன்முறை (அனிச்சா) பெண்கள் ஓரளவுக்காவது முன்னேறியிருக்கிறார்கள் என்று சொல்லப்படும் இந்த இருபத்தியோறாம் நூற்றாண்டிலும் பெண்கள் மீது ஊடகங்கள் செலுத்தி வரும் வன்முறை குறைந்திருப்பதாகத் தெரியவில்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக மட்டுமே பார்க்கும் பெரும்பாலான ஊடகங்கள் அவர்களை சுரண்டுவதன் மூலமே லாபத்தையும் நுகர்வோரின் ஆதரவையும் பெற முடியும் என்று நம்புகின்றன. ஊடகத்தின் பெரும்பாலான நடவடிக்கைகளும் இந்த அவல நம்பிக்கை பொருந்தும். பொது புத்தியிலிருந்து விலகி பெண்களை மதிக்கக் கூடிய ஊடகங்கள் இருந்தாலும் அவை சிறுபான்மை எண்ணிக்கையிலேயே இருப்பதால் எந்தப் பெரிய பாதிப்பையும் அவை ஏற்படுத்துவதில்லை. பெண்களின் மீது மிகப்பெரிய வன்முறையை மிக நீண்டகாலமாக செலுத்திவரும் மிக முக்கியமான ஊடகம் திரைப்படங்கள். தமிழில் வெளியாகும் பல திரைப்படங்களை எடுப்பவர்கள் தங்களை தாங்களே கலாசாரக் காவலர்களாக நியமித்துக் கொண்டிருக்கிறார்கள். ஐப்பசி 30, 2010 அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் ‐ கொமின் தயாசிறி ! நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்தின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிய அவலங்களுக்கு எரிக் சொல்ஹெய்மும் ஒர் முக்கிய பொறுப்பாளி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எரிக் சொல்ஹெய்ம் புலிகளுக்கு ஆதரவான முறையில் செயற்பட்டு வந்தாகவும், அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புலிகளுடன் சொல்ஹெய்ம் நட்புறவினைப் பேணியதாகவும், சமாதான ஏற்பாட்டாளராக செயற்படவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். புலிகளுடனான சமாதான முனைப்புக்களின் போது நோர்வேயை சமாதான ஏற்பாட்டாளராக தெரிவு செய்தமை பாரிய தவறாகும் என அவர் தெரிவித்துள்ளார். (மேலும்...) ஐப்பசி 30, 2010 ஜனாதிபதி சீனாவை சென்றடைந்துள்ளார்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பலத்த வரவேற்பு!
சீனாவிற்கான விஜயத்தை மேற்கொண்டு
இன்று அதிகாலை பயணமான ஐப்பசி 30, 2010 Ottawa says Tamil arrests send warning to people smugglers Authorities in Thailand say they have arrested another 100 Tamil migrants, and Canada’s Immigration Minister says the bust ought to send a strong message to human-trafficking syndicates: Don’t target Canada. “We’ve increased our police and intelligence presence in human-smuggling transit countries, including Thailand,” Jason Kenney said in an interview, alluding to pre-emptive actions now being taken by federal agents. It is unclear if the migrants were headed for Canada and Mr. Kenney could not speak to the details of the bust, but he said it “underscores for us the ongoing threat to the integrity of Canada.” He added that there are “several efforts under way by smuggling syndicates to send vessels to Canada.” (more....) ஐப்பசி 30, 2010 ரிஷானாவின் கருணை மனு விவகாரம் சவூதி மன்னரின் அதிகாரிகளிடம் ஜனாதிபதியின் கடிதம் கையளிப்புஇலங்கைப் பணிப்பெண் ரிஷானா நஃபீக்கிற்கு மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி சவூதி அரேபிய மன்னருக்கு எழுதிய கருணை மனு மன்னரின் அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெழுத்திட்ட கருணை மனு சவூதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ஊடாக கருணை மனுவை ஏற்கும் மன்னரின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு விட்டதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இது தொடர்பில் சவூதி அரசிடமிருந்து பதிலை எதிர்பார்த் திருப்பதாகவும் அவர் கூறினார். (மேலும்...) ஐப்பசி 30, 2010 அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய அமைப்பாளர் உதுல் பிரேமரட்ன கைது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உதுல் பிரேமரட்னவை நேற்று பகல் பொலிஸார் கைது செய்தனர். இராஜகிரிய பகுதியில் வைத்தே இவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பதற்றத்தைத் தோற்றுவித்து அமைதியைச் சீர்குலைக்க அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் அந்த அமைப்பின் முக்கியஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை உயர் கல்வி அமைச்சு வளாகத்தில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. இவர்கள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ஐப்பசி 30, 2010 இந்தியாவின் புலிகளாக நக்சலைட் தீவிரவாதிகள் உள்ளனர்
நக்சலைட் தீவிரவாதம் நக்சல்வாடி பிரதேசத்தில் 1967 ஆம் ஆண்டு தோன்றியது. கடந்த 42 வருடங்களில் இந்தியாவின் 16 மாநிலங்களில் இவ்வியக்கம் விஸ்தரித்துள்ளது.முன்பு கட்டுப்பாட்டில் இருந்திராத புதிய இடங்களில்கூட ஸ்திரமாக கால் ஊன்றி நிற்கின்றார்கள். அதில் ஒன்றுதான் Bhopal நகரம். அங்கு ஒரு தொழில்சாலையை அமைத்து இருந்தனர். 16 மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக 40000 சதுர கிலோ மீற்றர் பரப்பு உடைய நிலம் இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 'Red Corridor' என்று இது அழைக்கப்படுகின்றது. 16 மாநிலங்களில் உள்ள 194 மாவட்டங்களில் இவர்களின் பிரசன்னம் உண்டு.(மேலும்...) ஐப்பசி 30, 2010 நல்லிணக்க ஆணைக்குழு மூலம் கூடுதல் நன்மைகளைப் பெறலாம் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ள விடயங்களுள் மிகப் பெரும்பாலானவை தமிழ் பேசும் மக்களின் நாளாந்த வாழ்க்கையுடனும் அவர்க ளின் இனத்துவ அபிலாஷையுடனும் நேரடியாகச் சம்பந் தப்பட்டவை. எனவே இவ்வாணைக்குழுவின் விசாரணை களில் முழுமையாகப் பங்கு பற்றித் தமிழ் பேசும் மக்க ளின் பிரச்சினைகளை விரிவாக எடுத்துக் கூறி அம் மக் களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தார் மீகப் கடப்பாடு தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகை யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. அக் கட ப்பாட்டை நிறைவேற்றாமல், ஆணைக்குழுவினால் எவ் வித பலனும் இல்லை எனக் கூறிப் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது தலைமைத்துவப் பண்பாகாது. (மேலும்...) ஐப்பசி 30, 2010 மாணவர் வன்முறைக்குப் பின்னால் வங்குரோத்து ஜே.வி.பி. கடந்த காலத்தில் வன்முறைகளை கைவிட்டு, மீண்டும் ஜனநாயக அரசியலில் சேர்ந்து விடுவதைப் போன்று பாசாங்கு செய்து வந்த ஜே.வி.பி.யினர், தங்களுக்கு மக்களின் வாக்குப் பலத்தின் மூலம், அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றுவது என்றுமே சாத்தியப்படாது என்ற உண் மையை உணந்திருக்கின்ற காரணத்தினால், வேறு வழியின்றி அப்பாவி ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவ, மாணவி களையும் அங்கு பட்டதாரி படிப்பை மேற்கொள்ளும் பெளத்த பிக்கு மாணவர்களையும், பகடைக் காய்களாக பயன்படுத்தி, தங் களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற் காக வன்முறை களை கட்டவிழ்த்த வண்ணம் இருக்கி றார் கள். (மேலும்...) ஐப்பசி 30, 2010 அமரர் தொண்டமானின் 11வது சிரார்த்த தினம் இன்று காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்ட உன்னத தலைவர் (கே. மாரிமுத்து) இவரது வேகமான, விவேகமான சேவை காரணமாக இலங்கை- இந்திய காங்கிரஸின் கம்பளை மாநாட்டில் வரவேற்புக்குத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1947ஆம் ஆண்டு இலங்கை பாராளுமன்றத்திலே அமரர் தொண்டமானுக்கு பிரவேசம் கிடைத்தது. மலையக மக்கள் சார்பாக தானே தலைமைதாங்கி 7 பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அழைத்துச் சென்ற பெருமை அவரைச் சார்ந்ததாகும். அன்றிருந்த அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களின் பிரஜாவுரி மையையும், வாக்குரிமையையும் பறித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 1952ஆம் ஆண்டில் 7 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார். மூன்று மாதம் வரையும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி அதில் வெற்றிகண்டார். (மேலும்...) ஐப்பசி 30, 2010 நல்லிணக்க ஆணைக்குழு முன் யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார்யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக் குழு முன்னிலையில் அடுத்த வாரம் சாட்சியமளிக்கிறார். யுத்த காலத்தில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய அவர் எதிர்வரும் நவம்பர் நான்காந் திகதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பாரென்று அதன் இணைப் புச் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, கண்டி மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் இயக்குநர் பீ. முத்துலிங்கம் நாளை மறுதினம் (முதலாம் திகதி) ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறார். அதனைத் தொடர்ந்து 03ஆம், 04 ஆம் திகதிகளிலும் 8 ஆம் திகதி முதல் 10 ஆந் திகதி வரையிலும் கொழும்பில் விசாரணைகள் நடைபெறும். எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் 15 ஆந் திகதி வரை யாழ்ப்பாணத்தில் பகிரங்க அமர்வு நடைபெறவுள்ளது. பொதுமக்களிடம் சாட்சியங்களைப் பெறுவதற்காக ஆணைக்குழுவின் தலைவர் சீ. ஆர். டி. சில்வா மற்றும் உறுப்பினர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி மாலை யாழ்ப்பாணம் செல்கின்றனர். ஐப்பசி 30, 2010 யாழ். ஆதார வைத்தியசாலைகளுக்கு சத்திரசிகிச்சை படுக்கைகள் கையளிப்பு யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்காவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்திலுள்ள நான்கு ஆதார வைத்தியசாலைகளுக்கு அவசர சத்திரசிகிச்சைப் படுக்கைகளும் மற்றும் நோயாளர்களின் படுக்கைகளும் யாழ். நகரப்பகுதியில் அமைந்துள்ள படைகளின் பொது மக்கள் தொடர்பு அலுவலகத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்வில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இரண்டு சத்திரசிகிச்சை படுக்கைகளும் 14 நோயாளர் படுக்கைகளும் வழங்கப்பட்டன. பருத்தித்துறை வைத்தியசாலைக்கு ஒரு சத்திரசிகிச்சை படுக்கையும் இன்று வழங்கப்பட்டன.(மேலும்...) ஐப்பசி 30, 2010 பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு, ஒலுவிலில் ஆர்ப்பாட்டம்ஒலுவில் முதலாம் பிரிவு அஷ்ரப் நகரில் யானைப் பாதுகாப்புக்கு வேலி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டம் நேற்று மு.ப. 11.00 மணியளவில் அஷ்ரப் நகரில் யானை வேலி அமைக்கப்படும் இடத்தில் இடம் பெற்றது. இதில் பெருந்திரளான அஷ்ரப் நகர் மக்கள் கலந்து கொண்டனர். எனி னும், பொலிஸ் பாதுகாப்புடன் யானை வேலி அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. ஐப்பசி 30, 2010 கெற்பலி - மறவன்புலவு அகதி மக்களுக்கான நீதி. 2010 பங்குனி முதலாகக் கேட்டு வாங்கப்படும் இந்தத் தொகைகளுக்கு அறவழிப் போராட்டக் குழுவினர் எந்தவிதப் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. இந்தப் பணம் அறவழிப் போராட்டக்குழு வைத்திருக்கும் 12 வங்கிக் கணக்குகள் எதற்குள்ளும் செலுத்தப்படவிவ்லை. 101 குடும்பங்களுக்கும் காணிகளை அளந்து உறுதி எழுதிக் கொடுப்பதற்காக ரூ. 61,000 தொகையை 1985இலேயே இந்தக் குடும்பங்கள் அப்பொழுது தமக்கு வந்த உதவித் தொகையில் கொடுத்துள்ளன. இதற்கும் அப்பொழுதும் பற்றுச் சீட்டுக் கொடுக்கவில்லை. (மேலும்...) ஐப்பசி 30, 2010
1983 இனக் கலவர அகதிகள், 1983 racial riots
displaced வணக்கம்
அன்னலட்சுமியின் அழுகை செல்வரத்தினத்தின் சோகம் பொன்னம்பலத்தின் பொருமல்
மனித உரிமை மீறலா? அறவழி வாழ்வா?
தென்மராட்சியாரின் நன்கொடை
தீதும் நன்றும் பிறர் தர வாரா
பார்க்க காணொலி http://www.youtube.com/watch?v=a8lGy0KFN-4 ஐப்பசி 30, 2010 புலிவாலும் தூஷணமும் கடந்த ஞாயிறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ரி.பி.சி வானொலியில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தார். நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபோது வழக்கம் போல் ஒரு புலி வால் ஒன்று தூஷணம் ஒன்றை சொல்லிவிட்டு சென்றது. புலிவால்கள் பற்றிய கருத்தில் தூஷணம் மிக முக்கியமானது. கருத்துக்களை எதிர்கொள்ள வக்கில்லாத அல்லது அரசியல் அறிவு கெட்ட ஞானசூனியங்கள் இறுதியாகப் பயன்படுத்துவது தூஷணவார்த்தைகளைத்தான். கிட்டு முதல்கொண்டு அன்ரன் பாலசிங்கம் வரை தூஷணம் கொட்டுவதில் வல்லவர்களாக இருந்தபோது புலிவால்கள் அவ்வழியே இருப்பது வியப்பொன்றுமில்லைத்தான்.(மேலும்...) மாற்றம் கொண்டு வர போராடு சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ தயாரில்லாமல் இன்னும் கூப்பாடு போட்டுக்கொண்டே இருக்கிறது. இத்தனை அழிகளிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள முடியாமல் இன்னும் குளறிக்கொண்டு இருக்கிறது. நாட்டில் இருக்க முடியாது இராணுவம் என்னைத்தேடுது என்று அரசியல் தஞ்சம் கேட்டு அக்ஸ்ப் பண்ணியவுடன் செய்யிற முதல் காரியம் இலங்கை பாஸ்போர்ட் எடுக்கிறது. பிறகு டிக்கட் போட்டிட்டு உல்லாசப்பயணமாக இலங்கைக்குப் போகிறது. இலங்கை தூதராக அதிகாரிகளே இதைச் சொல்லி கவலைப்பட்டார்கள். போயிட்டு திரும்பி வந்து சொல்லுகிற வார்த்தை சிங்களவன் ஒண்டும் தரமாட்டான். பக்கத்து வீட்டுக்காரனுக்கே உதவி செய்ய முடியாத தமிழன், தாழ்த்தப்பட்ட மக்களையே தலையெடுக்க விடாத தமிழன் சொல்லுகிற வார்த்தை சிங்களவன் ஒண்டும் தரமாட்டான். (மேலும்...) ஐப்பசி 29, 2010 மீண்டும் தமிழர்கள் கைது தாய்லாந்து பொலிஸார் நேற்று மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளின்போது நூற்றுக்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் அங்கு கைது செய்யப்பட்டனர். மலேசிய- தாய்லாந்து எல்லைப் பகுதியில் அமைந்துள்ள songkhla, hatyai ஆகிய கிராமங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தவர்களே கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அந்நாட்டில் சட்டரீதியாக தங்கி இருக்கின்றனர் என்பதை நிரூபிக்கும் வகையில் கைது இடம்பெற்றபோது இவர்களிடம் உரிய ஆவணங்கள் இருக்கவில்லை என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கப்பல் ஒன்றின் மூலம் கனடா செல்ல தயார் நிலையில் இருந்தார்கள் என்று பொலிஸ் சந்தேகிக்கின்றது. இவர்களில் பெண்கள், சிறுவர்களும் அடங்குகின்றார்கள். ஐப்பசி 29, 2010 ஜெர்மனியில் அரசியல் கலந்துரையாடல்கள்
தோழமையுடன் வணக்கங்கள். பத்மநாபா EPRLF கட்சியின் தலைமைக்குழு உறுப்பினரும், முன்னாள் வட-கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சருமான தோழர் வரதராஜப்பெருமாள் அவர்கள் கட்சியின் சர்வதேச பிராந்திய மாநாட்டிற்காக வருகைதந்திருந்தார். ஏனைய ஐரோப்பிய நாடுககளுக்கும் விஜயம் செய்து மக்களையும் தோழர்களையும் சந்தித்து வருகின்றார். ஜெர்மனியிலும் கட்சிப்பணிகளை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையின் ம கால அரசியல் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்ங்கள் போன்ற விடங்களை கலந்துரையாடவுள்ளார். நீங்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றி ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்குமாறு தோழமையுடன் அழைக்கின்றோம். கலந்துரையாடல் நடைபெறும் இடங்கள். காலம்: 30.10.2010 நேரம்: மாலை 17.30 மணி இடம்: Landhaus Str-62 70190 Stuttgart Germany. தொடர்புகளுக்கு: 015204302710
காலம்: 01.11.2010 நேரம்: பி.பகல் 14.30 இடம்: Wilheim Schuroeder Str-13 47441 Moers Germany தொடர்புகளுக்கு: 017686354418
பத்மநாபா EPRLF (ஜேர்மன் கிளை) திருமாவளவன் கூறுகின்றார்_ பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் விமர்சித்ததில் குற்றம் இல்லை _
புலிகளை ஆதரித்து புலியையும் புலித் தலைவரையும் இல்லாமல் செய்து விட்ட திருமாவளவன் போன்றவர்கள் தற்போது 'கிளம்பிடான் ஐயா கிளம்பிட்டான்' என்று காஷ்மீரிகளை இல்லாமல் செய்ய முனைகின்றனர் போலும். அருந்ததி ராய், மாயா, திருமா போன்றவர்களுக்கு ஏகாதிபத்தியத்தின் பணப் பட்டுவாடா இருக்கும் வரை இவர்கள் வாலாட்டிக்கொண்டு, குரைத்துக் கொண்டுதான் இருப்பார்கள். இவர்கள் வெளியாருக்கு மட்டும் அல்ல தங்கள் வீட்டிற்கும் உதவாதவர்கள். காஷ்மீரியளுக்கு பிரச்சனை உண்டு. இதனை இந்திய அரசு பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க பாகிஸ்தான் கூடாக இந்தியாவின் 'நண்பர்கள்?' விடமாட்டார்கள். இதுவே கடந்த பல ஆண்டுகளாக நடைபெறுகின்றது. சண்டையை பாவித்து இந்திய இராணுவத்திலுள்ள சிலரின் பொது மக்களுக்கெதிரான அத்து மீறல்கள் மேலும் காஷ்மீரிகளை பாகிஸ்தானின் வலைக்குள் விழச் செய்கின்றது என்பது ஒரு பரிதாப நிலைதான். (மேலும்...) ஐப்பசி 29, 2010 இலங்கையின் வடக்கு கிழக்குமுன்னாள் முதலமைச்சர் தோழர்வரதராஐப்பெருமாள் புலம்பெயர் மக்களை நேரில் சந்தித்து கலந்துரையாட சுவிஸ்நாட்டிற்கு 31.10.2010 அன்று விஐயம்..............
சர்வதேசபிராந்திய மகாநாட்டில் கலந்து கொள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு விஐயம் மேற்கொண்டிருக்கும் தோழர் வரதராஐப்பெருமாள் பிரான்ஸ் நாட்டில் மகாநாட்டை நடாத்தி முன்னணிதோழர்களையும் மக்களையும் சந்தித்தபின் சுவிஸ் நாட்டிற்கு எங்கள் மக்களை காண வருகைதரவுள்ளார். வடக்கு கிழக்கு முன்னாள் முதலமைச்சரை நீங்கள் நேரில் சந்தித்து உரையாடுவதற்கும் உங்கள் கருத்துக்கள் எதுவானாலும் அமைச்சரிடம் கூறி அவரிடமிருந்து தெளிவான பதில்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். புலம் பெயர் மக்களையும் தோழர்களையும் சந்தித்து உரையாட முன்னாள் முதலமைச்சர் மிகவும் ஆவலாகவுள்ளார் என்பதினை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்!!! (மேலும்....) ஐப்பசி 29, 2010கனடாவில் கொண்டாட்டம்….. கொண்டாட்டம்…. தமிழ் CMR, TVI குஸ்தி போடும் கொண்டாட்டம் தலைவரின் சரணடைவுக்கு பின்பு மௌனித்திருந்து உண்டியல்காரர் இப்படியே எவ்வளவு காலத்திற்கு குலுக்காமல் இருக்கலாம் என்று விரக்தியின் விளிம்பிற்கு வந்து இம்முறை இலையுதிர் காலத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டம் என்று TVI உடன் குஸ்தி போடும் கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர். இதோ அவர்களைப்பற்றி அவர்களே கூறுகின்றனர். (மேலும்....) ஐப்பசி 29, 2010மாணவரை போதைப் பழக்கத்துக்கு உட்படுத்த முற்படும் விஷமிகள்! பாடசாலை முடி ந்து மாணவர்கள் வெளியே வரும் போது அவர்களு க்கு போதைப் பொருளை விற்பனை செய்வதற்கெ ன்றே பல கும்பல்கள் இயங்கி வருகின்றமை விசார ணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு மாணவருக்கு போதைப் பொருள் விற்பனை செய்து வந்த பலர் பொலிஸாரிடம் அகப்பட்டுக் கொண்டுள்ளனர். பொலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள் ளன. மாணவர்களை போதைப் பொருளுக்கு அடிமையாக்குவ தன் மூலம் போதைப் பொருள் வியாபாரத்தை வெற்றி கரமாக நடத்துவதற்கு பல கும்பல்கள் முயற்சித்து வந் தமை தெரியவந்துள்ளது. (மேலும்....) ஐப்பசி 29, 2010பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த இந்தியா எப்போதும் தயார் பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா விரும்புவதாக பிரதமர் மன்மோகன்சிங் கூறினார். ஜப்பானில் 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் மாலை மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் போய்ச்சேர்ந்தார். அங்கு அந்த நாட்டின் பிரதமர் முகமது நஜிப் துன் அப்துல் ரசாக்கை அவர் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இருவரும் பேச்சு நடத்தினார்கள். இதன்போது பாகிஸ்தானின் விவகாரங்களும் பேசப்பட்டன. இந்தியா, பாகிஸ்தானிடையேயுள்ள முரண்பாடுகளைத் தீர்க்க பேச்சுவார்த்தைகளே சிறந்த வழி. இவ்விடயத்தில் இந்தியா இதயசுத்தியுடன் உள்ளதென்றார் பிரதமர் மன்மோகன்சிங். ஐப்பசி 29, 2010தேசிய பாதுகாப்புத் தினத்தை யாழ். நகரில் நடத்த ஏற்பாடு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட டிசம்பர் 26 ஆம் திகதியை நினைவுகூரும் நோக்குடன் எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ‘தேசிய பாதுகாப்பு தினம்’ அனுஷ்டிக்கப்படவுள்ளது. அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் ஆலோசனைக் கமைய தேசிய பாதுகாப்பு தின விசேட நிகழ்வுகளை யாழ். நகரில் நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அமைச்சரவை இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ள தாக அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் இவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குவதுமே இந்த நிகழ்வின் நோக்கமாகும். பெருந்தொகையான மக்களின் பங்களிப்புடனும் தனியார் மற்றும் சிவில் அமைப்புகளின் பங்களிப்புடனும் யாழ். நகரில் இந்த தேசிய நிகழ்வு நடத்தப்படவுள்ளது. ஐப்பசி 29, 2010கிளிநொச்சி மாவட்டத்தில் மீள் குடியேற்றம் 99 வீதம் பூர்த்தி, 52 குடும்பங்களே மிகுதிகிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் 52 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட வுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். பளை பிரதேச செயலகப் பரிவில் முகமாலை மற்றும் கிளாலி பகுதிகளில் மிதிவெடி அகற்றும் நடவடிக்கை தற்போது இடம் பெற்றுவருவதாகக் குறிப்பிட்ட அவர்; இந்த நடவடிக்கைகள் நிறைவு பெற்றதும் எஞ்சியுள்ள மேற்படி குடும்பங்களும் மீள் குடியேற்றப்படுமெனவும் அவர் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை 99 வீத மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு பெற்றுவிட்டன. எஞ்சியுள்ள 59 குடும்பங்களிலும் 25 குடும்பங்கள் காணி கள் இல்லாதவர்கள். ஆகையால், அவர்க ளுக்கு காணி வழங்குவதற்கான நடவடிக்கை களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஐப்பசி 29, 2010கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளரின் இடமாற்றம் ரத்துகிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜாவின் திடீர் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கற்றலை மேம்படுத்தும் நேக்கில் வலயக் கல்விப் பணிப்பாளர் குருகுலராஜாவின் உடனடி இடமாற்றத்தினை பரிசீலிக்க வேண்டுமெனக் கோரி வலயக் கல்வி அலுவலக ஊழியர் நலன்புரி சங்கத்தினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று மனுவொன்றினை நேரில் கையளித்திருந்தனர். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி, மீள்கட்டுமானம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கடந்தகால அர்ப்பணிப்பு மிக்கதான அவரு டைய சேவையினையும் கருத்தில்கொண்டு மேற்படி வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்ஐப்பசி 29, 2010கந்தஹார் இராணுவ நடவடிக்கைகள் நிறைவடையும் கட்டத்தில்இது தொடர்பில் தலிபான்கள் தங்களது இணையத்தளத்தில் செய்தியை வெளியிட்டனர். கந்தஹார் மாகாண இராணுவ நடவடிக்கை எங்களைப் பொறுத்தவரை சிறிய விடயம். இதை எதிர்கொள்ளும் இராணுவ, ஆயுத பலம் எம்மிடம் உண்டு. விரைவில் இதை நிருபிப்போம் எனத் தெரிவித்துள்ளனர்.2001ம் ஆண்டு தலிபான்களின் அரசாங்கத்தை பதவி கவிழ்க்கவும், அல்கைதா தலைவர் ஒஸாமா பின்லேடனைக் கைது செய்யவும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. இதுவரைக்கும் ஆப்கானிஸ்தானை நேட்டோ படைகள் முழுமையாக மீட்கவில்லை. நான்கு, ஐந்து மாகாணங்கள் தலிபான்களின் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்....) ஐப்பசி 29, 2010எண் விளையாட்டு விளையாடுவோமா....? 111 111 111 என்ற எண்ணை 111 111 111 என்ற எண்ணால் பெருக்கினால் வேடிக்கையான விடை கிடைக்கும். அந்த விடை 1234 5678 98765 4321 என்பதாகும். ஐப்பசி 28, 2010மீண்டும் அகதிகள் தமிழகம் வருகை : கியூ பிரிவு போலீசார் விசாரணை!(சாகரன்) இலங்கை இராணுவத்தினால் முள்ளக்கம்பிக்கு பினால் அடைக்கப்பட்ட அல்லது சரணடைந்த தீவிர புலி உறுப்பினர்கள் இலஞ்சம் கொடுத்து முகாமிலிருந்து தப்பி வெளியே கடந்த சில மாதங்களாக வாழ்ந்து வந்ததாகவும், ஆனால் இவர்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் சிறப்பாக பொது மக்களிடம் இருந்து ஏற்பட்டிருப்பதால் தமிழ் நாட்டிற்கு தப்பி வருவதாக அறிய முடிகின்றது. இவர்கள் முகாங்களிலிருந்து பணம் கொடுத்து தப்பி வந்ததை இராணுவத்திக்கு அறிவிப்பதில் இவர்களால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தீவிரமாக இருந்ததாகவும் அறிய முடிகின்றது. மேற்கத்தைய நாடுகளுக்க தப்பிச் செல்வதற்கான இடைத்தங்கல் சரணாலயமாக தமிழகத்தை அல்லது நிரந்தரமாக தங்கிவிடும் இடமாக தமிழகத்தை முன்னாள் புலி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருப்பதாக அறிய முடிகின்றது. (மேலும்....) ஐப்பசி 28, 2010 'பிரபல' எழுத்தாளர் அருந்ததி ரோய் மீது தேசத்துரோக வழக்கு : டில்லி தகவல் பிரபல இந்திய எழுத்தாளரும் 'புக்கர்' பரிசு பெற்றவருமான அருந்ததி ரோயின் மீது தேசத்துரோகம் வழக்கு பதியப்படலாம் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட அவர், காஷ்மீரானது இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதியல்லவெனவும் இந்திய அரசை விமர்சித்தும் கருத்து தெரிவித்திருந்தார். இக்கருத்தானது பாரிய சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. இந்திய ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதல் எதிர்க்கட்சியினர் வரை அனைவரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். (மேலும்....)ஐப்பசி 28, 2010 முதலீட்டாளர் குழு இன்று வன்னி விஜயம் வட மாகாணத்தில் பல கோடி ரூபா செலவில் பாரிய முதலீடுகளை மேற்கொள்ளவுள்ள ஆறு முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் முதற்கட்டமாக இன்று வவுனியா விஜயம் செய்யவுள்ளனர். ஒவ்வொரு நிறுவனமும் பல கோடி ரூபா செலவில் தாம் புதிதாக நிர்மா ணிக்கவுள்ள தொழிற்சாலைகளை அமைப்பதற்குத் தேவையான இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு அடையாளம் காணவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட மாகாணத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்த பிரென்டிக்ஸ், ஹைத்ராமணி, மாஸ் ஹோல்டிங், டைமெக்ஸ் ஓவிட் ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், தனக்கும் இடையில் வவுனியாவில் இன்று விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் மேலும் தெரிவித்தார். (மேலும்....) ஐப்பசி 28, 2010 தவறான வழிகாட்டலில் பல்கலைக்கழக மாணவர்கள் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவதோ தேசிய அரசியலில் உயர் நிலையை அடைவதோ சாத்தியமற்ற போதிலும் மக்கள் விடு தலை முன்னணித் தலைவர்கள் வன்முறைச் செயற் பாடுகளுக்கு மாணவர்களைத் தூண்டுகின்றார்கள். இதன் மூலம் மக்கள் விடுதலை முன்னணிக்கு நன் மைகள் இல்லாதது போலவே இழப்புகளும் இல்லை. ஆனால் மாணவர்கள் பாரிய இழப்புகளைச் சந்திக்க நேரிடும். அவர்களின் கல்விச் செயற்பாடு வெகுவாகப் பாதிப்படையும். தங்கள் பிள்ளைகள் தாமதமின்றிப் பட்டப்படிப்பை முடித்து வந்து தங்களுக்குப் பொரு ளாதார ரீதியாகக் கைகொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப் புடன் வாழும் ஏழைப் பெற்றோர் ஏமாற்றமடைவர். மாண வர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் பற்றி அவர் களை ஊக்குவிக்கும் அரசியல் தலைவர்களுக்குச் சிறி தளவேனும் கவலை இல்லை. மாணவர்கள் தங்கள் எதிர்காலம் பற்றிச் சிந்தித்துச் செயற்பட வேண்டும். (மேலும்....) ஐப்பசி 28, 2010 மலேஷியா, இந்தியா வர்த்தக உறவில் இணைவு மலேஷியாவும், இந்தியாவும் அடுத்த வருடம் ஜுலை மாதத்துக்குள் வர்த்தக உடன்படிக்கையை அமுலுக்கு கொண்டுவரவுள்ளன. ஏற்கனவே செய்யப்பட்ட இந்த வர்த்தக உடன்படிக்கை நீண்டகாலமாக செயலிழந்து காணப்பட்டது. இதை அடுத்த வருடம் ஜுலை மாதமளவில் செயலுருவாக்க இரு நாடுகளும் எண்ணியுள்ளன. 2015ம் ஆண்டளவில் 15 பில்லியன் டொலரளவில் வியாபாரத்தை விஸ்தரிக்கவும் ஏற்பாடாகியுள்ளது. இந்தியப் பிரதமரைச் சந்தித்த மலேஷியப் பிரதமர் நஜீப் ரஸாக் இது குறித்துப் பேசுகையில், இரு நாடுகளில் வர்த்தக உறவுகள் செயல்வடிவம் பெறவுள்ளதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இதனூடாக இரு நாடுகளினதும் பல்வகையான உறவுகள் விருத்தியடைய வாய்ப்பேற்படும் அரசியல், கலாசார உறவுகளைப் பலப்படுத்தும் என்றார். மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மலேஷியா சென்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஐப்பசி 28, 2010 அமெரிக்காவின் “ஆயுத பூஜை”! ![]()
செப்டம்பர் 15 அன்று அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் உள்ள நெவேடா
மாகாணத்தில் அணுஆயுதத்தை வெடித்து அமெரிக்கா சோதனை நடத்தியுள்ளது. இந்தச்
செய்தி பெரும்பாலான நாடுகளின் ஊடகங்களால் மறைக்கப்பட்டுவிட்டன.
சொந்தக்காலில் அணுசக்தி தயாரிக்கும் முயற்சியில் இருக்கும் ஈரானுக்கு
எதிராக பல அஸ்திரங்களை அமெரிக்கா ஏவிவிட்ட வண்ணம் உள்ளது. அணுகுண்டு சோதனை
நடத்தியதால் வடகொரியா மீது ஏராளமான தடைகள். இதையெல்லாம் செய்த அமெரிக்கா,
தனது அணு ஆயுதச்சோதனையை நடத்தவும் தவறவில்லை. முழுப்பரிமாணம் கொண்ட
சோதனையாக அது இல்லாததாக இருந்தாலும், 1997 ஆம் ஆண்டுக்குப்பிறகு அது போன்று
24 முறை சோதனைகளை அமெரிக்கா நடத்தியுள்ளது.
(மேலும்....) பம்பலப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டது பம்பலப்பிட்டி காலி வீதியில் செயற்பட்டு வந்த வீதி சோதனைச் சாவடி நேற்று முதல் முழுமையாக அகற்றப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவள கூறினார். இதன்படி, கொழும்பு நகரிலுள்ள பிரதான வீதி சோதனைச் சாவடிகளை படிப்படியாக களைவது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் குறிப்பிட்டார். கொழும்பின் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதனை தொடர்ந்து வீதிச் சோதனை சாவடிகளை படிப்படியாக களைவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார். ஐப்பசி 28, 2010 270 நாட்களில் 253 இலங்கையர்களின் சடலங்கள்! கடந்த 270 நாட்களுக்குள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக சென்றவர்களுள் 253 பேரின் சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 253 சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் கடந்த 2009ம் ஆண்டில் 365 நாட்களில் 333 இலங்கையர்களின் சடலங்கள் இலங்கைக்கு எடுத்து வரைப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தே அதிக அளவில் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை மரணம், கொலைகள், விபத்துக்கள், தற்கொலை பணியாளர்களினால் தாக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறுப்பட்ட காரணங்களினால் அவர்கள் உயிரிழக்கின்றனர். ஐப்பசி 28, 2010 ஈரானிடம் பணம் வாங்கினேன் ஆப்கான் அதிபர் ஒப்புதல் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் அல் கர்சாய், அமெரிக்காவிடம் நட்பு கொண்டவர். ஆனால், அவர் அமெரிக்காவின் எதிரியான ஈரானியிடம் தனது உதவியாளர் உமர் தவுத்சை மூலம் பை நிறைய பணம் வாங்கியதாக தகவல் வெளியானது. இதுபற்றி பேட்டி அளித்த ஹமீத் அல் கர்சாய், பணம் வாங்கியது உண்மைதான் என்று ஒப்புக்கொண்டார். அவர் மேலும் கூறுகையில், ‘எனது அதிபர் அலுவலகத்துக்கு எத்தனையோ நாடுகள் நிதி உதவி செய்து வருகின்றன. அதுபோல், ஈரானும் ரூ. 5 கோடி வரை நிதியுதவி செய்துள்ளது. இதில் ஒளிவுமறைவு கிடையாது’ என்றார். இதற்கிடையே, இந்த நிதிஉதவி பற்றி கேள்வி எழுப்ப மாட்டோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஐப்பசி 28, 2010யாழ்ப்பாணத்தில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர்!
யாழ் நகரப் பகுதிகளிலும் யாழ் மாவட்டப் பகுதிகளிலும் வியாபார நடவடிக்கைகளில்
ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 20க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நேற்று
அதிகாலை கடத்தப்பட்டுள்ளனர். வெள்ளை வானில் வந்தவர்களாலேயே இவர்கள்
கடவுச்சீட்டு சகிதம் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தென்னிந்தியாவிலிருந்து சென்றுள்ள இந்த புடவை வியாபாரிகள் துவிச்சக்கர
வண்டிகள் சகிதம் யாழ் நகரத்தில் புடவை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
(மேலும்....) ஏழு மாதம் கடலில் தத்தளித்தவர் நாடுதிரும்பினார்
ஐப்பசி 28, 2010 பெனாசீர்பூட்டோவை தலிபான்களே கொலை செய்தனர் - புலனாய்வுக் குழு நீண்ட காலமாக வெளிநாட்டில் தங்கி இருந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர், கடந்த 2007ம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பினார். அதே ஆண்டு டிசம்பர் 27ம் திகதி அவர் ராவல்பிண்டி நகரில் திறந்தவேனில் நின்றபடி, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, அவரை ஒரு மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். அதைத் தொடர்ந்து மனித வெடிகுண்டு தாக்குதலும் நடந்தது. இதில் பெனாசீர் பலியானார். மேலும் 24 பேரும் உயிரிழந்தனர். கொலை தொடர்பாக, தலிபான் அமைப்பை சேர்ந்த ரபாகத், உசைன், ஷெர் சமான், அத்சாஸ் ஷா, அப்துல் ரஷித் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். கொலையில் அவர்களின் தொடர்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. (மேலும்....) ஐப்பசி 28, 2010 ஈராக் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸை தூக்கிலிடுமாறு உத்தரவு ஈராக் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸ் தூக்கிலிடப்படவுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை ஈராக் நீதிமன்றம் இத்தீர்ப்பையளித்தது. இதற்கு எதிராக மேன் முறையீடு செய்ய தாரிக் அஸிஸுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவரைத் தூக்கிலிடவேண்டாமென வத்திக்கான் கத்தோலிக்க திருச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ¤ஸைன் காலத்தில் தாரிக் அர்ஸ் வெளிநாட்டமைச்சராகக் கடமையாற்றினார். சதாம் ஹுஸைனின் அரசாங்கத்தில் உயர் பதவி வகித்த ஒரேயொரு கிறிஸ்தவர் இவராவார். அமெரிக்காவின் படையெடுப்பிற்குப் பின் கைதான சதாம் ஹுஸைன் அரசாங்க அதிகாரிகளில் முன்னாள் வெளிநாட்டமைச்சர் தாரிக் அஸிஸம் ஒருவர். நீண்டகாலமாக அமெரிக்காவின் விசாரணையிலிருந்த இவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் ஈராக் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டார். ஈராக் நீதிமன்றமே இவரைத் தூக்கிலிட உத்தரவிட்டுள்ளது. வத்திக்கான் திருச்சபை இதை நிறைவேற்ற வேண்டாமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. ஐப்பசி 28, 2010 நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் ' கோப்' முன் சாட்சியம் - டியூ. குணசேகர
நட்டத்தில் இயங்கும் அல்லது இலாபமீட்டத் தவறிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் ' கோப்' குழுவின் (பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு) முன் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர் என மேற்படி குழுவின் தலைவரும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார். வர்த்தக ரீதியில் அமைக்கப்பட்ட சில நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதன் காரணமாக, அவற்றின் நட்டத்தை திறைசேரி நிறைவு செய்துள்ளது. திறைசேரி என்பது பொதுச் சொத்து. எனவே பொதுச் சொத்துக்களை விரயம் செய்வது பொது மக்களுக்கு இழைக்கும் தீங்காகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். எனவே அவ்வாறான நிறுவனங்களின் தலைவர்கள் அல்லது முன்னாள் தலைவர்கள் தெரிவுக்குழு முன் சாட்சியம் அளிக்க வேண்டிவரும் என அவர் மேலும் தெரிவித்தார். ஐப்பசி 28, 2010 ‘இவரைப் போல மோசம் வேறு யாரும் இல்லை’ - சர்கோஸி பற்றி பிரான்ஸ் மக்கள் கருத்து கடந்த 50 ஆண்டுகளில் ஆட்சிப்பொறுப்பில் இருந்த ஜனாதிபதிகளிலேயே சர்கோ சியைப்போல மக்கள் மத்தி யில் பெரும் வெறுப்பை யாரும் சம்பாதிக்கவில்லை என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. பிவிஏ ஆரஞ்சு எல் எக்ஸ் பிரஸ் பிரான்ஸ் மக்கள் மத்தி யில் கருத்துக் கணிப்பை நடத் தியது. அதில் சர்கோசிக்கு எதிராக 71 விழுக்காடு மக்கள் அதிருப்தியைத் தெரிவித்துள் ளார்கள். இந்த அளவுக்கு மக் களிடம் எதிர்ப்பை கடந்த 50 ஆண்டுகளில் யாருமே பெற்ற தில்லை. இதற்கு முன்பாக ஒருவர் 68 விழுக்காடு மக்க ளின் எதிர்ப்பை சம்பாதித்தி ருந்தார். அவர் வேறு யாரு மல்ல, இதே சர்கோசிதான். 2008 ஆம் ஆண்டில் நடந்த கருத்துக் கணிப்பில்தான் அவ ருக்கு இவ்வளவு எதிர்ப்பு காணப்பட்டது. (மேலும்....)ஐப்பசி 27, 2010 பிரபாகரன் மீதான ராஜிவ் கொலை வழக்கு தள்ளுபடி! முன்னாள் பிரதமர் ராஜிவ், 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்தி, புலிகள் தலைவர் பிரபாகரன், அந்த அமைப்பின் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மான், நளினி, சந்தானம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. நளினி, முருகன் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர். சிவராசன் உட்பட 12 பேர் மரணமடைந்தனர்; பிரபாகரன் உட்பட நான்கு பேர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கை ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் நடந்த சண்டையில்,புலிகள் தலைவர் பிரபாகரன் மரணமடைந்ததாகவும், அவரது உடல் நந்திகடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. இந்திய சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்டவர் இறந்துவிட்டால், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.ராஜிவ் கொலை வழக்கில் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபாகரனும், பொட்டு அம்மானும் மரணமடைந்துவிட்டனர். அதன் அடிப்படையில், அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து, வழக்கை கைவிடப்பட்டுள்ளது. (மேலும்...)ஐப்பசி 27, 2010சந்திரிகா கொலைமுயற்சி குற்றவாளிக்கு சிறை!முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயற்சித்த பிரதான குற்றவாளிக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. இந்த சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் 28 குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு கொண்டமையை ஏற்றுக்கொண்ட வவுனியா நாவற்குளத்தைச் சேர்ந்த சத்திவேல் இளங்கேஸ்வரனுக்கு 30 வருட கடூழிய சிறைத்தண்டனையை மேல் நீதிமன்ற நீதிபதி நீதிபதி டப்ளியூ.ரி.எம்.பி.டி. வராவௌ, விதித்துள்ளார். சம்பவத்தின் போது தற்கொலை குண்டு வெடிப்பினால் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு மரணித்திருந்தால் ஜனாதிபதித் தேர்தல் இடைநிறுத்தப்பட்டிருக்கும். இதனால் தேர்தல்கள் திணைக்களத்திற்கு சுமார் ஆறு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருக்கும் என நீதிபதி தமது தீர்ப்பின் போது குறிப்பிட்டார். அத்துடன், கொலைமுயற்சியின் போது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தியிருக்க கூடிய நிலையிருந்த போதும் குண்டை வெடிக்கவைத்து பல உயிர்களை காவுகொண்டமை தொடர்பில் குற்றவாளிக்கு இந்த தண்டனையை வழங்குவதாக நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டார். ஐப்பசி 27, 2010அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ. அதற்காகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள் வன்னியில் இருக்கும் மாணவர்களைப் பெற்றோரை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் மிகுந்த கஸ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கல்விக்குக் கொடுக்கின்ற முக்கியத்துவத்தை நமது பிரதேசத்து மக்கள் கொடுப்பதில்லை. நான் அபிவிருத்தி செய்ய வேண்டாம் என்றோ, வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன் என்றோ, இடமாற்றம் பெற்றுத் தருவேனென்றோ கூறி தேர்தலில் போட்டியிடவுமில்லை. வெற்றி பெறவுமில்லை. அரசாங்கத்திற்கு தென்பகுதி மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ. அதற்காகவே வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தார்கள். இதனை இப்போது ஒரு தேர்தலை நடத்தினாலும் நாங்கள் எங்களுடைய பலத்தை நிரூபித்துக்காட்டத் தயார் என்றார். (மேலும்...) ஐப்பசி 27, 2010 நாடெங்கும் போதைவஸ்து வேட்டை இரு வாரங்களில் 7098 பேர் கைது-7927 கிலோ போதைப்பொருள் மீட்பு! நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரு வாரங்களாக நடத்தப்பட்ட பாரிய சுற்றிவளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 7098 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி நேற்று தெரிவித்தார். கடந்த 13 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை நடத்தப்பட்ட இந்த சுற்றி வளைப்பு தேடுதலின் போது போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பான 7050 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ள்ளதுடன் 7927 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப் பொருட்களை மீட்டெடுத்துள்ள தாக அவர் மேலும் தெரிவித்தார்.(மேலும்...)ஐப்பசி 27, 2010
மத்தல விமான நிலைய பணிகள் துரிதம் 2012 இல் முதல் விமானம் தரையிறக்கம், 5000 கொள்கலன்களுக்கு களஞ்சிய வசதி மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கான 3 1/2 கிலோ மீட்டர் நீளமான ஓடு பாதைக்கான நிலத்தை சுத்திகரிக்கும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதோடு 40 மீட்டர் உயரமான கட்டுப்பாட்டுக் கோபுரம், தீயணைப்புப் படை மற்றும் பாதுகாப்பு அலுவலகம் என்பவற்றை நிர்மாணிக்கும் பணிகள் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக துறைமுகங்கள் விமான சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார். 2012 ஆம் ஆண்டு பிற்பகுதியில் முதலாவது விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் எனவும் அவர் கூறினார். (மேலும்...) ஐப்பசி 27, 2010 20 லட்சம் சுற்றுலாப்பயணிகள்! தொடர்ந்து சாதனை படைக்கிறது கியூபா அமெரிக்காவின் பல்வேறு தடைகளை மீறி கியூபாவைச் சுற்றிப் பார்ப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை நடப்பாண்டிலும் 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது. ஏழாவது ஆண்டாகத் தொடர்ந்து 20 லட்சம் சுற்றுலாப் பய ணிகளை கியூபா ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டைவிட 12 நாட் களுக்கு முன்னதாக 20 லட்சமாவது பயணியை கியூபா வர வேற்றுள்ளது. கியூபாவுக்கு அதிகமான அளவில் சுற்றுலாப் பய ணிகள் கனடாவிலிருந்தே வருகிறார்கள். அதற்கடுத்த இடங் களில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், மெக் சிகோ, அர்ஜெண்டினா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. (மேலும்...)ஐப்பசி 27, 2010 இலங்கையின் அமைதியான சூழலை காண விஜயம் செய்யுங்கள்! இந்திய அரசானது பல சந் தர்ப்பங்களில் இலங்கையில் வாழும் பதினான்கு லட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இலங்கைத் தமிழர்க ளுடன் இணைத்துப் பார்த்து இரு சாராரையும் ஒன்றாகக் கணிக்க முற்பட்டுள்ளது. இந்தத் தவறான அணுகுமுறையைப் பற்றி பலமுறை இந்திய அரசிடம் நாம் சுட்டிக் காட்டி யுள்ளோம். இலங்கைத் தமிழர்க ளின் உரிமைப் போராட்டங்களை பெரிதும் மதிக்கின்ற அதே வேளை எமது தனித்துவத்தை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றோம். இலங்கை அரசு எமது தனி அடையாளத்தை ஏற்றுள்ளது. இலங்கை வாழ் இந்தியவம்சாவளி மலையக மக்களின் மேம்பாட்டுக்கு உழைத்த பல இந்திய தலைவர்களை இவ்விடத்தில் நினைவுகூர விரும்புகின்றேன். கே. ராஜலிங்கம், செள. தொண்டமான், எம். ஏ. அர்ஸ் என்னுடைய தந்தை வி. பி. கணேசன், வெள்ளையன், சி. வி. வேலுப்பிள்ளை, எஸ். நடேசன், பெ. சந்திரசேகரன், இரா சிவலிங்கம் ஆகியோர் இவ்விடத்தில் குறிப் பிடத்தக்கவர்கள். (மேலும்...) ஐப்பசி 27, 2010
உருக்கமான ஒரு வேண்டுகோள்!
சவூதியைப் பொறுத்த வரை வேறு நாட்டவர் வழக்கை எதிர்கொள்வதில் அதிக சிக்கல் கள் உள்ளன. மொழியும் பிரதான பிரச்சினையாகிறது. இலங்கை போன்ற நாடுகளைப் பொறுத்தவரை குற்றமொன்றை நிரூபிப்பதா யின் ருசுப்படுத்தப்பட்ட சான்றுகள் அதிகம் தேவைப்படுகின்றன. இவையெல்லாம் ரிஷானாவின் இன்றைய நெருக்கடி நிலையில் அப் பாற்பட்ட விடயங்களாகின்றன. சவூதியின் குற்றவியல் சட்டத் தைப் பொறுத்தவரை அப்பெண்ணானவள் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள குற்றவாளியாகிறார். இவர் பொதுமன்னிப்புப் பெற்று விடுதலையாகி வர வேண்டுமென்பதே மனிதாபிமானம் கொண்டோரின் உருக்கமான வேண்டுகோளாகும். (மேலும்...) ஐப்பசி 27, 2010‘Cash’ சொல் எவ்வாறு உருவானது தங்கம், வெள்ளி இவற்றின் எடையைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல் கர்ஷா. இதிலிருந்தே தமிழில் காசு என்ற சொல் தோன்றியது. காசு என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து காஷ் என்ற ஆங்கிலச் சொல் வந்தது. ஐப்பசி 27, 2010யுரேனியம் செறிவூட்டலை ஈரான் ஆரம்பித்தது ஈரான் யுரேனியம் செறிவூட்டும் வேலைகளை நேற்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து ரஷ்யாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ஆயிரம் மெகாவோல்ட் அணு உலைகளில் இந்த யுரேனியம் செறி வூட்டப்பட்டது. மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யவே இந்த அணு உலை ரஷ்யாவால் நிர்மாணித்துக் கொடுக் கப்பட்டது. உயர் ரக பெற்றோலை 20 வீதம் செறிவூட்டினால் மின்சாரமும் 80 வீதத்துக்கு மேல் செறிவூட்டினால் அணு ஆயுதத்தை தயாரிப்பதற்கான மூலப் பொருளையும் பெற முடியும். (மேலும்...) ஐப்பசி 27, 2010திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா முஸ்லீம்களின் புனித நகரமாகின்றது.திருகோணமலை மாவட்டத்தில் பள்ளிவாசல்களுக்கு அண்மையில் இருக்கும் பாதுகாப்பு படையின ரின் முகாம்கள் விரைவில் வேறு இடங்களுக்கு மாற்றப்படும். திருகோணமலை மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் பிரதேசங்களையும் ஒன்றிணைத்து அதனூடாக கிண்ணியாவில் இஸ்லாமிய கலாசாரத்தினூடாக ஒரு பெரிய பள்ளிவாசலை நிர்மாணித்து புனித நகரமாக உருவாக்குவதற்கு மத விவகார அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார். (மேலும்...) ஐப்பசி 27, 2010கண்ணிவெடி அகற்றும் பணி யாழ். குடாவில் துரிதம் யாழ். குடாநாட்டிற்குள் தற்போது பொதுமக்களது பாவனைக்காக விடப்பட்டி ருக்கும் பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்றுக் காலை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் அமைச்சரது யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது மிதிவெடிகளை அகற்றுவதில் நிலவுகின்ற தடைகள், பிரச்சினைகள் குறித்தும் ஏனைய பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவது தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் பிரகாரம் யாழ். வசந்தபுரம், கடற்கரை வீதி, துண்டி போன்ற பகுதிகளில் மிதி வெடிகளை அகற்றும் நடவடிககைகளை உடன் ஆரம்பிப்பது எனத் திர்மானிக்கப்பட்டது. ஐப்பசி 27, 2010கிளிநொச்சியில் தே. வீ. அ. சபை அலுவலகம் நவம். 1 இல் திறப்பு கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகக் கட்டடம் புனரமைக்கப்பட்டு எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது. புனரமைப்பு செய்யப்பட்ட கட்டடத்தை நிர்மாணத்துறை பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச திறந்து வைப்பார். அன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வீடமைப்பு நிர்மாணப் பணிகள் பற்றிய அபிவிருத்திக் கூட்டமும் புதிய அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பொன் நகரில் ஐம்பது பயனாளிகளுக்கு வீடமைப்புக் கடன்களை வழங்கியுள்ளது. ஐப்பசி 27, 2010பொலிவிய ஜனாதிபதி ஈரான் விஜயம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் பொலிவியாவுக்கான வர்த்தக உறவு களை 287 மில்லியன் டொலராக அஹ்மெதி நெஜாத் விஸ்தரித்தார். இதை அடிப்படையாகக் கொண்டு நிலக்கரி வெடிமருந்துகள் கைத் தொழில் பொருட்களை ஈரான் பொலிவியாவுக்கு ஏற்றுமதி செய்ய வுள்ளது. உணவு உற்பத்தி கைத்தொழில் சாதனங்கள் மற்றும் சிமெந்து உற்பத்திகளை ஆரம்பிக்கும் புதிய உடன்படிக்கையில் கைச்சாத்திடவும் இரு நாடுகளும் எதிர்பார்க்கின்றன. இரண்டு வருடங்களுக்குள் பொலி விய ஜனாதிபதி ஈரானுக்கு மேற் கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும். வெனிசுலாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணும் பொலிவியா தனது எரிபொருள் கைத்தொழில் தேவைகளுக்காக ஈரானுடனும் உறவாகவுள்ளது.(மேலும்...) ஐப்பசி 27, 2010 இந்தோனேஷியாவில் சுனாமிக்கு பலி 23; 160 பேர் காணவில்லை இந்தோனேஷியாவில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து எழுந்த சுனாமியில், 23 பேர் பலியானதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமத்ரா தீவின் மேற்கு கடற்பகுதிக்கு அடியில் திங்கட்கிழமை நள்ளிரவு கடுமையான பூகம்பகம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி அலைகள் எழுந்தன. மெந்தாவய் தீவுப் பகுதியில் இந்த அலைகள் 10 அடி நீளத்துக்கு எழுந்ததாக, இந்தோனேஷிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. இந்த சுனாமியால் 10 கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேரிடரில் 23 பேர் பலியானதாகவும், 160க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஐப்பசி 27, 2010 பிரிட்டனில் முன்னேற்றம்? சிறிய அளவு முன்னேற்றம் இருந்தாலும் துள்ளிக் குதித்துக் கொண்டாடும் நிலைக்கு பிரிட்டன் அரசு வந்துவிட்டது. நடப்பாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனின் பொருளாதாரம் 0.8 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று அதிகாரபூர்வமான புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. துள்ளிக்குதிப்பதற்குக் காரணம் என்னவென்றால், 0.4 விழுக்காடுதான் வளர்ச்சி இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தார்கள். தங்கள் கணிப்பு பொய்யாகிவிட்டது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இது முன்கூட்டியே வெளியிடப்பட்ட மாதிரி ஆய்வின் முடிவுகள்தான். வளர்ச்சி விகிதத்தின் முழு ஆய்வில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் அவர்கள்.ஐப்பசி 26, 2010பிரான்சில் மக்கள் கருத்து கேட்கும் நிகழ்வில்-சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்!
பிரான்சில்(பத்மநாபா-EPRLF)ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின்
சர்வதேசக்கிளைகளின் பிராந்திய. மாநாடு இம்மாநாட்டில் புலம்பெயர் தேசங்களில்
கட்சிப்பணிகளில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் மற்றும் கட்சியின்
தலைமைக்குழு தோழர்களும் பங்குபற்றினர்கள். இலங்கையின் சமகால அரசியல்
நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக
இம்மாநாட்டில் சில காத்திரமான முடிவுகள் எடுக்கபட்டுள்ளது.
(மேலும்...) ஐப்பசி 26, 2010 ரொறன்ரோ தேர்தல் முடிவுகள்! ரொப் போர்ட் மேயராகத் தெரிவு! மார்க்கம் நகரசபை தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி!! (சாகரன்) ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல்கள் கனடிய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு முடிவுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதன்பிரகாரம் ரொப் போட் ரொறன்ரோவின் மேயராக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார். இதேவேளை இதே தேர்தலில் இப் பிரதேசத்திற்கான கல்விச்சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட செல்வி. யுவனிதா நாதன் 8,252 வாக்குக்களைப் பெற்றுத் தெரிவானார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 1,968 வாக்குகளைப் பெற்றார். (மேலும்...) ஐப்பசி 26, 2010 ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரபாகரனின் பெயர் நீக்கம் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் பிரதான குற்றவாளியென குற்றம் சுமத்தப்பட்டிருந்த வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்து விட்டதாக ஒப்புக்கொண்ட இந்தியா, அவரின் பெயரை அப்பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் சென்னையில் அவர் மீது தொடரப்பட்டு வந்த வழக்கு நடவடிக்கைகளையும் கைவிட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவ் வழக்கின் பிரதான குற்றவாளிகளின் பெயர் பட்டியலில் இருந்து பிரபாகரன் மற்றும் பொட்டம்மன் என அழைக்கப்படும் சண்முகநாதன் சிவசங்கரன் ஆகியோரின் பெயர் நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஐப்பசி 26, 2010 உங்கள் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றிபெற வேண்டும் - தோழர் மோகன்
கடந்த 23 வருடங்களிலும் தமிழ் அரசியல் அரங்கில் நிலவிய புலிகளின் பாசிசம் அனைத்தையும் சிதைத்து சின்னாபின்னப்படுத்திவிட்டது. இன்று 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர், யுவதிகள் பெரும்பாலானவர்கள் எமது கட்சியின் அரசியல் இலட்சியம், நடவடிக்கைகள் குறித்து அறியாதவர்களாக உள்ளனர். தமிழ் அரசியல் சூழலில் நிலவிய அராஜகம், ஜனநாயக விரோதம், சுத்துமாத்துக்கள், இதுவரை கால இழப்புக்கள் பொதுவாகவே அரசியல் மீதான நாட்டத்தை தடுத்துவிட்டிருக்கின்றது. கடந்த 30 வருடங்களிலும் பல்வேறு இழப்புக்களை சந்தித்த மக்கள் இயல்பாகவே மானியங்களையும், இலவச உதவிகளையும் எதிர்பார்க்கின்றனர். அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் மாத்திரமல்ல அரசியல் கட்சிகளையும் அதே கண்ணோட்டத்துடனேயே அணுகுகின்றனர். மக்களின் இந்த இழி நிலையை அரசியல்வாதிகளும் வாக்கு சேகரிப்பதற்கான மூலதனமாக்கும் மோசடியும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. (மேலும்....) ஐப்பசி 26, 2010 சமகால யதார்த்தமும் பதின்மூன்றாவது திருத்தமும் நியாயமான அரசியல் தீர்வுக்கான அரசியலமைப்புத் திருத்தத்துக்குத் தேவைப்படும் பாராளுமன்றப் பெரும்பான்மை அரசாங்கத்துக்கு உள்ள போதிலும், சர்வசன வாக்கெடுப்பில் அத் திருத்தத்தை அங்கீகரிப்பதற்குத் தேவையான மக்களாதரவு இல்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த நிலையில், உடனடியாக நடைமுறைப்படுத்தக் கூடிய தீர்வாகப் பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தமே உள்ளது. பதின்மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தத்திலுள்ள குறை பாடுகளையும் அதன் சில சரத்துகள் நடைமுறைப்படுத்தப் படாதிருப்பதையும் சுட்டிக் காட்டித் தீர்வுச் செயற் பாட்டிலிருந்து ஒதுங்கியிருப்பது இனப் பிரச்சினையின் தீர்வுக்கு எவ்விதத்திலும் பலனளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் நடைமுறைத் துன்பங்கள் தீர்வதற்கும் அது வழிவகுக்காது. (மேலும்....) ஐப்பசி 26, 2010 வடபகுதியில் அரசாங்கத்தின் ஆதரவில் இடம்பெரும் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு - சித்தார்த்தன் தனிப்பட்ட ரீதியில் யாரும் வடக்கில் வசிக்கலாம். வர்த்தகங்களை நடத்தலாம். நாங்கள் அதனை எதிர்க்கவில்லை. ஆனால் அரச ஆதரவில் குடியேற்றங்கள் இடம்பெறுவதையே எதிர்க்கின்றோம். தற்போது இராணுவத்தினர் காட்டுப்பகுதியில் முகாம்களை அமைக்கின்றனர். அது பிரச்சினையில்லை. ஆனால் பண்டிவிரிச்சானில் எதற்கு பௌத்த விகாரை? இவ்வாறு சந்தேகத்தை ஏற்படுத்தும் விடயங்கள் இடம்பெறுகின்றன. அதாவது வடக்கின் மக்கள் தொகையியலை மாற்றுவதற்கு முயற்சிக்கப்படுகின்றதா? என்ற சந்தேகமும் ஏற்படுகின்றது என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான தருமலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். இலங்கையில் தனிநாடு அமைவதற்கு இந்தியா ஒருபோதும் இடமளிக்காது. இலங்கை அரசாங்கம் விரும்பினாலும் இந்தியா அதற்கு ஒருபோதும் இணங்காது. (மேலும்....) ஐப்பசி 26, 2010 மாவீரர் தினம் நெருங்கி வரும் நிலையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் கே.பியின் பேச்சு!
இலங்கை இராணுவத்துடன் ஆன யுத்தத்தில் உயிர் இழந்த மாவீரர்களின் பிள்ளைகள் மீது நாங்கள் எல்லோரும் கவனம் எடுக்க வேண்டும், ஏனெனில் அம்மாவீரர்கள் எமது தாய் மண்ணுக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் என்று புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தராக இருந்த கே.பி கிளிநொச்சியில் தெரிவித்து உள்ளார். அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார் என்று கூறப்படும் கே.பி கடந்த வாரம் அம்மாவட்டத்துக்கு சென்றிருந்தார். அவர் கண்ணகை குடியிருப்பு என்கிற முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலிகள் இயக்கப் போராளிகளின் பிள்ளைகளை நேரில் சந்தித்தார். அப்பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கினார். ஐப்பசி 26, 2010 எந்திரன் சிக்கலில் Endhiran is a film produced by Sun Oics, whose managing director is Kalanidhi Maran...This film was directed by Shankar..Rajinikanth and Aisvarya Roy are in the lead..Simultaneously made in Telugu and Hindi...as Robot..The story of this fil was published in a magazine in the year 1996... The story writer is Amudha Tamilnadan also known as AAroor Tamilnadan...Shankar, the Director of the film Shankar claims the story is His... Today the story writer preferred a complaint before the Commissioner of Police, Chennai giving all the publish material and prayed to take action against the director of the film Shankar and the Producer Kalanidhi Maran for violating copy right... ஐப்பசி 26, 2010 பாடசாலைக்கு சென்றால் பரிசு மேற்கு வங்க மாநிலம், மஹானந்த் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் நாள்தோறும் தவறாமல் பாடசாலைக்கு வரும் மாணவர்களுக்கு அப்பள்ளி தலைமை ஆசிரியர் பரிசளித்து வருகிறார். மேற்கு வங்க மாநிலம், ஹுப்ளி மாவட்டத்தில் உள்ள மஹானந்த் கிராமத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியின் தலைமையாசிரிய ராக இருப்பவர் ஸ்வப்பன் நியோகி. இந்தப் பாடசாலையில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. அதன் அருகிலேயே கட்டப்பட்டு வந்த புதிய வகுப்பறை கட்டடங்கள், போதிய நிதி இல்லாததால் பாதியி லேயே நிற்கின்றன. தலைமை ஆசிரி யர் தவிர, இந்த பள்ளிக்கூடத்திற்கு 3 ஆசிரியர்கள் மட்டுமே உண்டு. இந்த பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பெரும்பாலும், படிக்காத விவசாயிகள்.(மேலும்....) ஐப்பசி 26, 2010 கண்ணீர் அஞ்சலி
போருக்குப் பின்னரான சூழலில் நிரந்தர சமாதானத்தையும் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வையும் முக்கிய விடயங்களாக அடையாளம் கண்டவர்களுள் கிருபானந்தனும் ஒருவர். வெறும் இனவாத, பிரதேசவாத, மதவாத குறுகிய அரசியல்தான் எமது மண்ணைச் சிதைத்தது என்பதால் சகல இனங்களுக்குமிடையிலான உறவு என்பது அவருக்கு முக்கியமானதாக இருந்தது. இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு ஒன்றுதான் அரசியல் வியாபாரிகளை அகற்றி நிரந்தர சமாதானத்தைத் தரும் என்று நம்பியவர் தோழர் கிருபா. (மேலும்....) ஐப்பசி 26, 2010 கனடிய தேர்தலும் ஈழத்தமிழரும்... மக்கள் ஆணையை பொறுத்திருந்து பார்ப்போம்! - அலெக்ஸ் இரவி கனடாவில் மூன்று நிலைகளில் அரச அதிகாரம் செயற்பட்டு வருகிறது. ஒன்று தலைநகர் ஒட்டாவாவை மையமாகக் கொண்டு செயற்பட்டு வரும் மத்திய அரசாங்கமாகும். இரண்டாவது வகை, மாகாணங்களை மையப்படுத்தி நடைபெறுகின்ற மாகாண அரசுகளாகும். மூன்றாவது நிலையில் செயற்படுபவை மாநகர, நகர, கிராம மட்ட நிர்வாகங்களாகும். இவற்றில் கனடாவின் மிக முக்கியமான மாகாணமாகத் திகழும் ஒன்ராறியோவின் தநைகரான ரொறன்றோ நகரின் மாநகர சபைக்குத்தான் ஒக்ரோபர் 25 இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. (மேலும்....) ஐப்பசி 26, 2010 முல்லைத்தீவு மீள்குடியேற்றப் பணிகள் டிசம்பர் 31க்குள் பூர்த்தி ஒட்டுசுட்டானில் மேலும் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் புதுக்குடியிருப்பில் 14 கிராமசேவகர் பிரிவுகளிலும் கரைதுரைப்பற்றில் 16 கிராம சேவகர் பிரிவுகளிலும் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்துபுரம், திருமுருகண்டி மேற்கு, பனிச்சங்குளம், மாங்குளம், ஒலுமடு மற்றும் அம்பகாமம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் இன்று மீள்குடியேற்றம் நடைபெறுகிறது. வவுனியா மற்றும் யாழ். ஆகிய பிரதேசங்களில் தமது உற வினர் நண்பர்களின் வீடுகளில் உள்ளவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படுகின்றனர். (மேலும்....) ஐப்பசி 26, 2010 அமெரிக்கா சொல்கின்றது இராணுவ அழுத்தங்களை எதிர்கொள்ள இயலாத தலிபான்கள் பேச்சுவார்த்தையில் நாட்டம் தலிபான் தலைவர்களில் பேச்சுவார்த்தை களை விரும்புவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும் இதற்கான சமிக்ஞைகளை அண்மையில் தலிபான்கள் வெளிப்படுத்தியுள்ளதாகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் விசேட பிரதிநிதி ஹோல் புரூக் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கார்சாயி அண் மையில் தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். இதற்கென விசேட சமாதானக் குழுவொன் றையும் அமைத்து முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரை இக்குழுவிற்கு தலைவராகவும் ஆக்கியுள்ளமை விசேட அம்சமாகும். ஆப்கானிஸ்தானில் இயங்கும் தலிபான் களின் தலைவரான முல்லா ஒமர் பாகிஸ்தானில் இயங்கிவரும் அல்ஹகானி தலைமையிலான தலிபான்கள் மற்றும் லக்ஷர் இ இஸ்லாம் லக்ஷர் இ தொய்யா அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்த ஹோல் புரூக் அல் கைதாவுடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதை நிராகரித்தார். (மேலும்....) ஐப்பசி 26, 2010 வீட்டுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்தவருக்கு 4 மாத கடூழிய சிறை டெங்கு நுளம்பு பரவும் வகையில் வீட்டு சுற்றுச் சூழலை அசுத்தமாக வைத்திருந்த வீட்டுரிமையாளர் ஒருவருக்கு கண்டி மஜிஸ்திரேட்டினால் 4 மாத கடூழியச் சிறைத் தண்டனையும் 1500/= ரூபா தண்டப்பணமும் செலுத்தும் படியும் நேற்று (26) தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது. மேற்படி தீர்ப்பை மீள் பரிசீலனைக்காக கண்டி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது மாவட்ட நீதவான் பீர்த்தி பத்மன் ஏலவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்பையே உறுதி செய்யப்பட்டு மீள் பரிசீலனை நிராகரிக்கப்பட்டுள்ளது. மெனிக்கின்ன பிரதேசத்தில் அமைந் துள்ள வீடொன்றில் பாவித்த பழைய டயரொன்றுள் நுளம்பு பரவும் வகையில் அது அமைந்துள்ளமை குறித்து மெனிக் கின்ன பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். ஐப்பசி 26, 2010 சன் சீ கப்பலில் கனடா சென்றவர்களில் 30 பேர் விடுதலை எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவை சென்றடைந்தவர்களில் 30 பேர் இதுவரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம். வி. சன் சீ கப்பலின் மூலம் கடந்த ஒகஸ்ட் மாதம் 13ஆம் திகதி 492 இலங்கை அகதிகளுடனான கப்பலொன்று கனடாவை அண்மித்திருந்தது. அரசியல் புகலிடம் கோரி கனடாவை சென்றடைந்துள்ள இவர்களில் விடுதலை செய்யப்பட்டுள்ள 30 பேருக்கு அகதிகளுக்கான அந்தஸ்து கோருவதற்கான முழு உரிமை உள்ளதாக கனேடிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (மேலும்....)ஐப்பசி 26, 2010 மக்களின் கருத்தை மதிக்காது ஓய்வூதிய வயதெல்லை 62 ஆக உயர்வு புதிய சட்டம் விரைவில் அமுலாகும் நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பலத்த கொந்தளிப்பு காணப்படுகிறது. இது தவிர, வருகிற வியாழன் மற்றும் நவம்பர் 6 ஆகிய திகதிகளில் இரண்டு வேலை நிறுத்த போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய சட்டத்துக்கு பிரான்ஸ் பாராளுமன்ற மேல் சபை ஒப்புதல் அளித்தது. சட்டத்துக்கு ஆதரவாக 177 பேரும் எதிராக 153 பேரும் வாக்களித்தனர். முன்னதாக சட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்த சுமார் 1250 திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அடுத்த வாரம் இறுதி ஒப்புதல் பெறப்பட்ட பின், அந்த சட்டம் அமுலுக்கு வரும். ஆனால், இந்த சட்டத்தை கைவிடுமாறு சர்கோஸியை தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. (மேலும்....) ஐப்பசி 26, 2010 மஞ்சள் காமாலை வைரசை துடைத்தெறிந்தது கியூபா கியூபாவின் சுகாதாரத்துறை படைத்து வரும் சாதனை களில் அடுத்த மைல்கல்லாக மஞ்சள்காமாலை நோயின் உச்சகட்டமாகக் கருதப்படும் ஹெபாடிடிஸ் ‘பி’ வைரஸ் தாக்குதலை துடைத்தெறிந்த நிகழ்வு அமைந்துள்ளது. தொடர்ந்து தடுப்பு மருந்துகளை கொடுத்து வந்தாலும் பல நாடுகளில் பி வைரஸ் தாக்குதல் கட்டுப்படுத்த முடி யாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் கியூபாவின் தேசிய மரபணு மற்றும் உயிரியல் தொழில்நுட்ப மையம் தயா ரித்து வழங்கிய தடுப்பு மருந்துகள் நல்ல பலனைத் தந்துள் ளன. இந்த தடுப்பு மருந்துகளைக் கொடுத்ததால் கியூபாவில் இந்த வைரஸ் தாக்குதல் இல்லவே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் புதிதாக எந்தவொரு கியூபக் குடிமகனையும் இந்த வைரஸ் தாக்கவில்லை. இதே மருந்தை வெளிநாடுகளுக்கு கியூபா ஏற்றுமதி செய்துள் ளது. கிட்டத்தட்ட 12 கோடி மக்களுக்குத் தேவையான மருந்து கியூபாவிலிருந்து சென்றுள்ளது. சர்க்கரை நோயால் கால்களில் ஏற்படும் புண்ணைக் குணமாக்கும் ஒரே மருந்தையும் தங்கள் மையம்தான் கண்டு பிடித்தது என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார் மையத் தின் இயக்குநர் டாக்டர் லூயிஸ் ஹெர்ரிரா. ஐப்பசி 26, 2010 வெளிச்சத்துக்கு வரும் உண்மைகள் இராக் போர் தொடர்பான 4 லட்சம் ஆவணங் களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறி வித்த உடனேயே அமெரிக்காவும், அதன் அக்கி ரமங்களுக்கு துணை நின்ற நாடுகளும் பதறின. இந்தத் தகவல்கள் வெளியானதால் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டுள்ள அவப்பெயரை துடைப்பது குறித்து ஆராய பென்டகன் ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்த தகவல்கள் உண்மையல்ல என்று அமெரிக்காவினால் மறுக்க முடியவில்லை. மாறாக, இந்த ஆவணங் களால் இராக் மக்களுக்கும் அந்நாட்டில் உள்ள பன்னாட்டு வீரர்களுக்கும் ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறது அமெரிக்கா. இராக்கிற்கு எதிராக போர் தொடுக்க அமெரிக்கா கூறிய காரணங்கள் அனைத்தும் அப்பட்டமான பொய் என்பதை அந்த நாடே ஒத்துக்கொண்டுள்ளது. (மேலும்....) ஐப்பசி 25, 2010 பாரிஸ் மாநாடு ஓர் திருப்புமுனையாக அமையட்டும்
தமிழர்களின் பிரச்சினை பயங்கரவாததத்திற்கு முற்பட்டது 60 ஆண்டுகளுக்கு மேலாக நிலவுவது என்பதை உணர்ந்தும் உணராதவர்கள் போல் இவர்கள் நடக்க முற்படுகின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியில் 2009 வெற்றியின் பெருமித உணர்வுகள் பரவலாக இருந்தாலும் அவர்கள் இன்று தாம் அனுபவிக்கும் ஜனநாயக உரிமைகளும் காவுகொள்ளப்பட்டு விடுமோ என அச்சமுறுகின்றார்கள் இலங்கையில் இன சமூகங்களின் பிரச்சினைக்கு ஜனநாயகரீதியாக தீர்வு காணாத வரை இலங்கையின் பெரும்பான்மை இன மக்களும் ஜனநாயக உரிமைகளை அனுபவிக்க முடியாதென்பதே நிஜம். தென்னிலங்கையில் முற்போக்கு அரசியலும் பலவீனமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. கெடுபிடி யுத்தத்திற்கு பின்னரான உலகம் 1990இருந்து தீவிர மாற்றமடைந்து வந்திருக்கிறது. அது தென்னாசியாவையும் பாதித்தது. இந்தியா, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் சாரம்சத்தை அதன் அதிகாரப் பரவலாக்கத்திட்டத்தை நடைமுறையில் முழுமையாக சாத்தியமாக்குமாறு இலங்கையிடம் பல தடைவை நயந்து கேட்டிருக்கிறது. இலங்கையின் பல்லினத்தன்மையை உறுதிப்படுத்துமாறு கேட்டிருக்கிறது. நட்பான அயல்நாடு என்ற வகையில் பல்வேறு தடைவைகள் இலங்கையின் தலைவர்களிடம் பல தடைவைகள் இதனை வலியுறுத்தி வந்திருக்கிறது. (மேலும்....) ஐப்பசி 25, 2010 ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலில் நேருக்கு நேர் மோதும், புலி முகவரும், மக்கள் நலன் விரும்பியும்! (கனடா கந்தசாமி)
இலங்கையில் நெடுந்தீவு மண்ணை அடியாகக் கொண்ட, நீதன் சண்ணை எடுத்துக் கொண்டால், அவர் நமு பொன்னம்பலம் அளவுக்கு அரசியல் பாரம்பரியம் உள்ள ஒரு குடும்பத்திலிருந்து வந்தவரல்லர். நீதன் சண் தன்னைத் தீவிரமான புலி ஆதரவாளராகக் காட்டிச் செயற்பட்டதின் மூலமே, பிரபலம் தேடிக் கொண்டவர். ரொறன்ரோவில் நடைபெற்ற அநேகமான புலி சார்பு ஊர்வலங்கள், கூட்டங்கள் என்பனவற்றுக்கு இவரும் ஒரு முக்கியமான ஏற்பாட்டாளராகச் செயற்பட்டு வந்துள்ளார். அந்தச் செயற்பாடுகளின் உச்சக் கட்டமாக, 2004 டிசம்பரில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்டியங்கும் மனித உரிமைக் கண்காணிப்பகம் (Human Rights Watch), புலிகள் கனடாவில் மேற்கொண்டு வந்த கட்டாய நிதி வசூலிப்பை அம்பலப்படுத்திய பகிரங்க அறிக்கையொன்றை, கனடாவின் ஸ்காபரோ நகரில் வெளியிட்ட நிகழ்ச்சில் பெரும் கலாட்டா செய்த புலி ஆதரவாளர்களில் நீதன் சண் மிக முக்கியமானவராவார். (இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே கனடிய அரசாங்கம் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் இட்டுத் தடை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது) (மேலும்....) ஐப்பசி 25, 2010 புளொட் இயக்கத்தின் சர்வதேச கிளைகளின் மகாநாடு! தமிழீழ மக்கள் விடுதலை கழகம் தமது சர்வதேச கிளைகளின் மகாநட்டை எதிர்வரும் 30ம் 31ம் திகதிகளில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. எதிர்வரும் சனி, ஞாயிற்று கிழமைகளில் ஜேர்மன் ஸ்ருட்காட் நகரில் நடைபெறவுள்ள மகாநாட்டில் கட்சியின் சிரேஷ்ட்ட உறுப்பினர்கள்.வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளர்கள் பங்கு கொண்டு எதிர்கால செயற்திட்டங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராஜவுள்ளதாகவும், இவ் மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு கிளைகளின் கட்சி உறுப்பினர்கள், சிரேஷ்ட்ட உறுப்பினர்கள் ஜேர்மனுக்கு வந்த வண்ணமுள்ளதாக புளொட் அமைப்பின் சர்வதேச ஒன்றியம் அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒக்ரோபர் 24, 25 ம் திகதிகளில் பரிஸில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் சர்வதேச கிளைகளின் மாகா நாட்டைத் தொடர்ந்து நடைபெறும் இம் மகாநாடும் ஜனநாயக முற்போக்கு சக்திகள் புலத்திலும் தளத்திலும் பலம் பெற்று வருவதை எடுத்துக்காட்டுவதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஐப்பசி 25, 2010 கனடாவிலிருந்து மீண்டும் வர புதிய கடவுச் சீட்டு கோரும் இலங்கையர் கனடாவிலுள்ள இலங்கை அகதிகள் தமது நாட்டுக்கு வருவதற்காகப் புதிய கடவுச் சீட்டு மற்றும் ஆவணங்களைக் கோரி வருவதாக, ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது. கனடாவில் புகலிடம் கோரியுள்ள இலங்கையர்கள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் போது, தமது அகதி ஆவணங்களைச் சமர்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு அகதி அந்தஸ்து கோரியவர்களில் 70 சதவீதமான இலங்கையருக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. (மேலும்.....)ஐப்பசி 25, 2010 இலங்கைக் கடல் எல்லையில் தமிழக அரசியல்வாதிகளின் படகுகள் தமிழக அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான படகுகளே இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாகக் கடற்றொழில் நீரியல்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இரவுப் பொழுதில் பெரும் எண்ணிக்கையிலான இந்தியப் படகுகள் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் செய்மதியினூடாக அதற்கான ஆதாரங்களைப் பெற்றுள்ளதாகக் கூறினார். செய்மதியினூடாகப் பெறப்பட்ட படங்கள் ஊடகவியலாளர்களுக்கு அதன்போது வழங்கப்பட்டது. ஐப்பசி 25, 2010 The Vanni Crisis: You can make a difference! Recently I went to vanni got in touch with a number of people associated with schools. l I discovered that there are more than 4000 students from Vanni on the verge of financial and emotional calamity as their sources of livelihood and support have, over the past few months, simply disappeared! While I was there I met the director of education of vanni district and listen to these students’ plights. Most of students are do not have one of their parent or both. There is large number of widows I met and their stories are heart trenching but they still holding their breath for their children. They are asking us to give a hand so they can stand up again and see the light. (more....) ஐப்பசி 25, 2010
யாழ். வசாவிளான் கல்லூரி ரூ. 50 இலட்சத்தில் புனரமைப்பு யாழ். பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள வசாவிளான் மத்திய மகா வித்தியாலயம் ஐம்பது இலட்சம் ரூபா செலவில் உடனடியாக புனரமைக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். யாழ். பாதுகாப்புப் படைகளினதும் மேற்படி பாடசாலையின் அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் நலன்விரும்பிகளின் பூரண ஒத்துழைப்புடன் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்தப் பாடசாலை கடந்த மாதம் 29ம் திகதி பாதுகாப்புப் படையினரால் கல்வி நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்டது. சுமார் 20 வருடங்களுக்குப் பின்னர் மீளக் கையளிக்கப்பட்ட இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்தல், புனரமைப்பு தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. ஐப்பசி 25, 2010
விக்கிலீக்ஸ் அறிக்கை வெளியானதால் பெரும் பதற்றம்
|