|
||||
|
பங்குனி 2012 மாதப் பதிவுகள் பங்குனி 31, 2012 இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றம்! இந்தியா காலை வாரியதா? அல்லது சூழ்ந்நிலைக் கைதியாகியதா? - வானவில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 19வது கூட்டத்தொடரில் 2012 மார்ச் 21ஆம் திகதி இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம், பெரும்பான்மை வாக்குப் பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளில் இந்தியா முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்தத் தீர்மானம் வெளித் தோற்றத்துக்குப் பார்க்கையில் இலங்கைக்கு உதவுவது போலத் தோன்றினாலும், உண்மையில் இதை ஒரு 'சீனி பூசிய தோட்டா' என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கை நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்குக்கான ஆணைக்குழு அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை, இலங்கை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்கத் தீர்மானம் வலியுறுத்தியுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெளியிடப்பட்டு 3 மாதங்களே ஆகியுள்ள சூழ்நிலையில், அரசாங்கம் அதை அமுல்செய்ய முயற்சிகளை ஆரம்பித்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஏனைய மேற்குலக நாடுகளும் இலங்கைக்கு போதிய கால அவகாசம் வழங்காமல் இத்தகைய ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்ததின் உள்ளாந்த நோக்கம், நிச்சயமாக சந்தேகத்துக்கு உரிய ஒன்றாகவே இருக்கின்றது. (மேலும்.....) பங்குனி 31, 2012 முல்லைத்தீவு செல்லும் பயணிகளுக்கு அறிவுரை வடக்கில் முல்லைத்தீவு பகுதியைப் பார்வை இடுவதற்காக செல்வோர் கடைப்பிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகளை தேசிய பாதுகாப்பு மத்திய ஊடக நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல வெளியிட்டு ள்ளார். முல்லைத்தீவு பகுதியைப் பார்வையிட வரும் உல்லாசப் பிரயாணிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இப்பகுதியின் நிலைமையைப் போன்று இப்பகுதியில் வசிக்கும் மக்களின் கலாசார இலட்சணங்களையும் தெரிந்து அவற்றை மதித்து உல்லாச பிரயாணம் மேற்கொள்வது தொடர்பாகவும் பணிப்பாளர் நாயகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவது தடுக்கப்பட வேண்டும். பார்வையிட வருவோருக்கும் வசதிகள் வேண்டும். பின்வரும் விடயங்கள் தொடர்பாக அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது. (மேலும்.....) பங்குனி 31, 2012 பணம் பலதும் செய்யும்! தனது வாதத்திறமையை காட்டினார் சிறீகாந்தா சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றவாளி விடுதலையானார்! சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த 13 வயது ஏழைச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உடுவில் கோட்டக் கல்வி பணிப்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிணையில் இன்று வெள்ளிக்கிழமை வெளியில் எடுத்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டத்தரணியான என்.சிறிகாந்த தனது வாதத்திறமையினால் மன்றில் தூள் கிளப்பி ஏழைச் சிறுமியின் கண்ணில் இரத்தக் கண்ணீர் வடிக்கவிட்டுள்ளார். (மேலும்.....) பங்குனி 31, 2012 ஒற்றுமை தொடரட்டும் ! அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி உலகின் பன்முனைகளையும் ஆட்டம் காணச்செய்தது. இந்நிலையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்த பிரிக்ஸ் அமைப்பின் நான்காவது மாநாடு தில்லியில் கூடியது. இதில் மிக முக்கிய மான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இது உலக அரங்கில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. காரணம், உலகையே தனது ஆளுமையின் கீழ் வைத்திருந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் டாலரை, தங்களுக்குள்ளான பரிவர்த்தனையில் கைவிடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக தங்களுடைய கரன்சியை பயன்படுத்திக் கொள்வது என தீர்மானிக்கப்பட் டிருக்கிறது. (மேலும்.....)பங்குனி 31, 2012 மக்கள் வங்கியின் மக்கள் சேவை பல்லாண்டுகளுக்கு தொடர வேண்டும் 1956ம் ஆண்டில் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் தலைமை யில் பதவிக்கு வந்த மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கம் தன்னை ஒரு மக்கள் அரசாங்கமாக பிரகடனம் செய்த போதி லும் அவ் அரசாங்கத்தின் கீழும் ஏழைகள் தங்கள் பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்கு வங்கிகளில் வைப்புகளை ஆரம்பிப்பதற்கு பல்வேறு சிக்கல்களையும், முட்டுக்கட்டைகளை யும் எதிர்நோக்கினார்கள். திரு. எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட டாக்டர் டபிள்யு. தஹநாயக்கவும் இதுவிடயத்தில் அந்தளவிற்கு அக்கறை காட்ட வில்லை. இறுதியில் 1960ம் ஆண்டு ஜூலை பொதுத் தேர்தலில் பிரதம மந்திரியாகி, உலகில் பிரதம மந்திரி பதவி வகிக்கும் முத லாவது பெண்மணி என்ற சாதனையை படைத்த திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தில் சோஷலிச கொள்கையை நிறை வேற்றுவதில் அக்கறை கொண்ட பல அமைச்சர்கள் இருந்தார்கள். அவர்களின் அரசாங்கத்தில் நிதி அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்ட திரு. டி.பி. இளங்கரத்ன இந்நாட்டின் பாட்டாளி மக்களுக்கு பணி செய்த ஒரு பெரும் அரசியல் தலைவராவார். (மேலும்.....) பங்குனி 31, 2012 அரசரை மிஞ்சும் விசுவாசியாக ஜப்பான்! வடகொரிய ஏவுகணையை மறிக்க உத்தரவு வடகொரியா விண்ணில் செலுத்தவிருக்கும் செயற் கைக்கோளை இடைமறிக் கும் திட்டத்தை அமெரிக் காவின் கூட்டாளியான ஜப் பான் உருவாக்கியிருக்கிறது. இந்த செயற்கைக்கோள் வடகொரியாவால் சொந்த மாகத் தயாரிக்கப்பட்டதா கும். சொந்தக் கால்களில் எந்த நாடு நின்றாலும் அதை அமெரிக்காவால் பொறுத் துக் கொள்ள முடியாது. செயற்கைக்கோளை செலுத்தக்கூடாது என்று அமெரிக்கா முரண்டு பிடித்து வருகிறது. அதன் கூட்டாளி யான ஜப்பானோ ஒரு படி மிஞ்சும் வகையில், விண் ணில் செலுத்தப்படும் செயற்கைக்கோளை தேவைப்பட்டால் இடை மறித்து தகர்ப்போம் என்று கூறியுள்ளது. இந்நிலையில், உயிரைக் குடிக்கும் குண்டுகளைக் கொண்டு அமெரிக்காவும், தென் கொரியாவும் போர்ப் பயிற்சி நடத்திக் கொண்டி ருக்கின்றன. கொரியப் பகுதி யில் அமைதியைக் கேள்விக் குறியாக்கும் இந்தப் பயிற்சி பற்றி ஜப்பான் அமைச் சரவை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. தனது செயற்கைக்கோ ளை ஏப்ரல் 12 முதல் 16 ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்போவதாக வட கொரியா அறிவித்திருக்கி றது. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்திலும், அதன் மூலமாக தகவல்க ளைச் சேகரிப்பதிலும் வட கொரியா எந்த அளவுக்கு முன்னேறியுள்ளது என் பதை இந்த செயற்கைக் கோள் எடுத்துக்காட்டும் என்கிறார்கள் அந்நாட்டு விஞ்ஞானிகள். பங்குனி 31, 2012 இந்திய பாராளுமன்ற குழு இலங்கை வர முடிவு இந்திய பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்புக்கு வரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிட்டார். எதிர்வரும் ஏப்ரல் 16ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இந்தக் குழுவினர் இலங்கையில் தங்கியிருந்து பிந்திய நிலைமைகள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என சுஷ்மா சுவராஜ் இந்திய ஊடகவியலா ளர்களுக்குத் தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள தமிழர்களின் நிலைமைகளை நேரில் கண்டறியும் நோக்கில் தாம் இந்தப் பயணத்தை மேற்கொள்ள விருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கொழும்புக்கும், புதுடில்லிக்கும் இடையில் காணப்படும் பரஸ்பர அக்கறையின் அடிப்படையில் இக்குழுவினர் இலங்கை வரவிருப்பதாக உயர்ஸ்தானி கராலய வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. இலங்கை செல்லும் குழுவுக்குத் தான் தலைமை தாங்க விருப்பதாக இந்திய ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கும் சுஷ்மா சுவராஜ், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதி யில் நடைபெற்றுவரும் நிவாரணப் பணிகளை இந்தியப் பாராளுமன்றக் குழுவினர்கள் நேரில் பார்வையிடவிருப்ப தாகவும் கூறினார். பங்குனி 31, 2012 தொழிலாளர் விரோதப் போக்கைக் கைவிடுக! ஸ்பெயின் தொழிலாளர்கள் போர் முழக்கம் புதிய அரசு பொறுப் பேற்ற பிறகு நடைபெறும் நாடு தழுவிய வேலை நிறுத் தம், ஸ்பெயின் ஆட்சியா ளர்களை மிரளச் செய்திருக் கிறது. கடந்த ஆண்டு நவம்பர் 20 அன்று ஸ்பெயின் நாடா ளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்று மரியானோ ரஜோய் தலைமையில் அமைச்சரவை பொறுப் பேற்றுக் கொண்டது. நாட் டின் நிதிப்பற்றாக்குறை யைக் குறைக்க ஏராளமான அளவில் மக்களின் சலுகை களை வெட்டுவதற்கான நட வடிக்கைகளை அரசு எடுத் திருக்கிறது. இது மக்கள், குறிப்பாகத் தொழிலாளர் கள் மத்தியில் பெரும் அதி ருப்தியை ஏற்படுத்திவிட்டது. தொழிலாளர்களைத் தங்கள் இஷ்டத்திற்கு வேலையை விட்டு நீக்கிக் கொள்ள புதிய சட்டம் அனுமதியளிக்கிறது. இது குறித்துக் கருத்து தெரிவித் துள்ள தொழிற்சங்கங்கள், இது வேலைவாய்ப்புகளை மறுப்பதோடு, இருக்கும் வேலைவாய்ப்புகளையும் பறிக்கும் வேலையைச் செய் கிறது. மேலும், பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கான இழப்பீட்டை பெருமள வுக்கு வெட்டியுள்ளனர் என்று கூறியுள்ளன. உள்துறை அமைச்சகம் வெளியிட் டுள்ள அறிக்கையொன்றில், எட்டு லட்சம் தொழிலாளர் கள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டப் போராட்டங்கள் விரைவில் துவங்கும் என் றும் தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. பங்குனி 31, 2012 ஐ. நா. மனித உரிமை பேரவை அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதுஇலங்கையின் செயற்பாடுகளை ஜெனீவாவுக்கு வழங்க நாம் தயாரில்லை. தற்பொழுது நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற் பாடுகளில் எந்த மாற்றத்தையும் அரசாங்கம் ஏற்படுத்தப் போவதில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீதியை நிலைநாட்டு வதற்காக ஸ்தாபிக்கப்பட்டு ள்ள ஐ. நா. மனித உரிமை பேரவை தமது நோக்கங்களுக்கு அப்பால் சென்று அரசியல் மயப்படுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் பிரேரணை நிறைவேற்றப்பட்டமை இதனை உறுதிப்படுத்தியுள்ளதுடன் வெளிநாடுகளும் இந்த விடயம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கூறிவருவதாகவும் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார். (மேலும்.....) பங்குனி 30, 2012 ஜெனீவா தீர்மானம் தொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு விரைவில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட பிரேரணை தொடர்பான அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும். மனித உரிமைப் பேரவையில் இருந்து விலகுவது தொடர்பில் அரசாங்கம் எதுவித முடிவும் எடுக்கவில்லை. இலங்கைக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையென வாக்களித்த அமெரிக்கா, இஸ்ரேலுக்கு வெளிநாட்டுத் தலையீடு தேவையில்லையென வாக்களித்ததன் மூலம் அதன் இரட்டை வேடம் தெளிவாவதாக பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவினூடாகவே தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று கூறிய அமைச்சர், இதில் அங்கம் வகிப்பதினூ டாகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு எட்ட முடியும் எனவும் குறிப்பிட்டார். (மேலும்.....) பங்குனி 30, 2012 லிபிய சபா நகரில் உக்கிர மோதல் : 70 பேர் பலி இலங்கையிலும் இதனை பரீட்சித்துப்பார்க்க முயற்சி லிபிய சபா நகரில் போராளிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளதுடன் 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முன்னாள் கிளர்ச்சியாளர்களும் தோபோ துப்பாக்கிதாரிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மேற்படி போராளிக் குழுக்களிடையே புதன்கிழமை மோதல்களை நிறுத்துவதற்கு இணக்கப்பாடு காணப்பட்ட போதும் பின்னர் மோதல் கிளர்ந்தெழுந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறைகளையடுத்து ஆளும் தேசிய அதிகார மாற்று சபையின் உள்ளூர் அதிகாரிகளில் ஒருவரான அப்டெல் மஜீத் செயிப் அல் நாஸர் பதவி விலகியுள்ளார். அமெரிக்க, மேறகுலக கூட்டாளிகள் எதனை விரும்பினார்களோ அதுவே தற்போது லிபியாவில் நடைபெறுகின்றது. ஆமாம் தீராத உள்நாட்டுக் கலவரத்தையே அவர்கள் விரும்பினார்கள், சோமாலியாவில் நேட்டோ கூட்டாளிகளினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தீராத உள்ள நாட்டுக்கலவரங்கள் ஆபிக்காவின் புரூண்டி, ருவண்டா போன்ற நாடுகளில் நடைபெறுவதைப் போலவே இன்று லிpயாவிலும் நடைபெறுகின்றது. இலங்கையிலும் இதனை பரீட்சித்துப்பார்க்கவே அமெரிக்க, மேற்குலகம் விரும்புகின்றது என்பதை தமிழ் குறம் தேசியவாதிகள் புரிந்து கொண்டால் சரி.சிரியாவில் நடைபெறுவதும் இதன் ஒருவடிவமே. கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத விநியோகத்தை அமெரிக்க கூட்டாளிகளே வழங்குகின்றனர் பங்குனி 30, 2012 டாலரை கைவிட முடிவு பிரேசில்-ரஷ்யா-இந்தியா-சீனா-தென் ஆப்பிரிக்கா இணைந்து வளர்ச்சி வங்கி உருவாக்கவும் திட்டம் பிரிக்ஸ் உச்சிமாநாடு முக்கியப் பிரகடனம் அமெரிக்காவில் மையங் கொண்ட முதலாளித்துவ பொருளா தார நெருக்கடி மேலும் மேலும் ஆழமாக தீவிரமடைந்துவரும் நிலையில், தங்களது பொருளாதா ரங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் முகமாக தங்கள் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பரிவர்த்த னையில் டாலரை கைவிடுவது என பிரிக்ஸ் நாடுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த முடிவி னை எட்டியிருக்கின்றன. உலகின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேரை கொண்டிருக் கிற பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கூட்ட மைப்பான பிரிக்ஸ் மேற்கொண் டுள்ள இந்த முடிவு உலக அரங் கில் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது. (மேலும்.....)பங்குனி 30, 2012 பால் வெளியில் மனிதர் வாழ பல பில்லியன் கிரகங்கள் எமது பால்வெளியில் மனிதர்கள் வசிக்கத்தக்க பல பில்லியன் கிரகங்கள் இருப்பதாக சர்வதேச வானி யலாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறிந் துள்ளனர். பால்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரங்களை வலம் வரும் கிரகங்களை ஆய்வு செய்த ஐரோப்பிய வானியலாளர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இதன்படி எமது பால் வெளியிலுள்ள சிவப்பு குள்ள நட்சத்திரங்களை வலம்வரும் கிரகங்களில் 40 வீதமான வைகளில் நீருடன் கூடிய மனிதர் வாழ்வதற்கு பொருத்தமான கிரகங்கள் இருப்பதாக ஊகிப்பதாக ஐரோப்பிய வானியல் ஆய்வுக் குழுவின் தலைவர் எக்சாவிர் பொன்பில்ஸ் குறிப்பிட்டுள்ளார். பால்வெளியில் சிவப்பு குள்ள நட்சத்திரம் பொதுவாகக் காணப்படுகிறது. இவ்வாறான நட்சத்திரங்கள் 160 பில்லியன் அளவில் இருப்பதாக வானியலாளர்கள் ஊகித்துள்ளனர். எனவே இவைகளில் மனிதர்கள் வசிக்க பொருத்தமான பல பில்லியன் கிரகங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 100 க்கும் மேற்பட்ட சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் பூமியில் இருந்து 30 ஒளி ஆண்டுகளுக்குள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. பங்குனி 30, 2012 ரி.பி.சி. வானொலியில் மனநோய் ஆய்வாலர்களின் அமெரிக்க பற்றிய அலட்டப்போவது யாரு நிகழ்சி. இன்று ரி.பி.சி. வானொலியில்; ஆய்வு நடத்தும் ஆய்வாலர்களுக்கு மனநோய் வியாதி முத்திவிட்டதாக அறியக் கூடியதாக இருக்கின்றது. ஆகயால் இவர்களின் வியாதிக்கு அமெரிக்காவால் கூட மருத்துவம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் அமெரிக்கா மிகவும் அதிர்சி அடைந்துள்ளதாக அறிவித்ததாகவும் அறியகூடியதாக உள்ளது. எனவே நாங்கள் இனி இவர்கள் பற்றிய ஆய்வுக்கு வருவேம் இன்று ரி.பி.சி வானொலியின் இன்றைய நிலைமையை பார்க்கும்போது இவ் வானொலியை எத்தனை வீதமானவர்கள் இப்போது கேட்பார்கள் என்பது தான் சந்தேகம் என்பது எல்லோருக்கும் புரிகின்றது. (மேலும்.....) பங்குனி 30, 2012 பூகோள அரசியல் கற்பனை கணிப்பீட்டுக்காக இலங்கைத் தமிழரை பணயம் வைக்க முடியாது ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது ராஜபக்ஷ அரசாங்கத்தினதும் சிங்கள இன மேலாதிக்க வாதிகளினதும் நிலைப்பாட்டை இறுக்கமாக்கிய பெறுபேறை மட்டுமே ஏற்படுத்தியிருக்கிறது. அதேவேளை, நீதிக்கான இலங்கைத் தமிழர்களின் நீண்டகால விருப்பத்தை கற்பனை செய்யப்பட்ட பூகோள அரசியல் கணிப்பீடுகளுக்காக பணயம் வைக்க முடியாது. இவ்வாறு இந்தியா ருடே சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரு தரப்பிலும் விளையாட முயற்சிக்கும் பேராபத்துக்கள் எனும் தலைப்பில் எம்.சி.ராஜனின் கட்டுரையை நேற்று முன்தினம் புதன்கிழமை இந்தியா ருடே பிரசுரித்திருக்கிறது. (மேலும்.....)பங்குனி 30, 2012 அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான தீவில் அமெ. கடற்படைத் தளம்அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா உளவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்கவுள்ளது. கடந்தாண்டு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அவுஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளி டையே இராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் அவுஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலை நிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான கோக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது. மேலும் இந்த கோக்கோஸ் தீவிலிருந்து நவீன உளவு விமானங்களை பறக்கவிடவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா பல வகையான ஆளில்லா உளவு விமானங்களை வடிவத்திலும் திறனிலும் தம் வசம் வைத்துள்ளது. இவை அனைத்தையும் கோக்கோஸ் தீவில் களமிறக்கினால் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதுமே அமெரிக்காவின் கண்காணிப்பில் தான் இருக்கும். இதன் மூலம் இந்தியா, சீனா ஆகிய இருநாட்டு கடற்படை செயற்பாடுகளை முழுவதுமாக அமெரிக்கா உளவு பார்க்கும். பங்குனி 30, 2012 நெருக்கடிக்கு ஜெர்மனி, பிரான்ஸ் காரணம் இத்தாலி பிரதமர் குற்றச்சாட்டு யூரோ மண்டலம் தற் போது சிக்கியுள்ள நெருக் கடி உருவானதற்கு ஜெர் மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும்தான் காரணம் என்று இத்தாலி யின் பிரதமர் மரியோ மான்டி குற்றம் சாட்டியுள் ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள அவர், இது வரை யூரோ மண்டலத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கு இந்த இரு நாடுகளும் மோச மான எடுத்துக்காட்டுகளா கவே இருந்துள்ளன. இரு நாடுகளுமே நிதிக் கொள் கைகளை கறாராக அமல் படுத்தியதில்லை. 2003 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பிரச்சனை இருந்து வரு கிறது. அப்போது யூரோ மண் டலம் குழந்தையாகவே இருந்தது. அரசு நிதிப்பற் றாக்குறை மற்றும் கடன்கள் பற்றி இந்த நாடுகள் கவ லைப்பட்டதே கிடையாது. மேலும் அலட்சியமாகவே இருந்து வந்தன. பல முறை பட்ஜெட் பற்றாக்குறை வரம்பை மீறியுள்ளன. ஆனால் ஒருமுறை இந்த இரு நாடுகளுக்கும் எச்சரிக் கை கூட விடுக்கப்பட வில்லை. (மேலும்.....)பங்குனி 30, 2012 இராமர் பாலம் தேசிய சின்னமாகுமா? பதிலளிக்க அவகாசம் கோரும் மத்திய அரசுஇராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவித்து விடலாமா என்று உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விக்கு பதிலளிக்க மத்திய அரசு 2 வாரம் கால அவகாசம் கோரியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் கடந்த திங்கட்கிழமை நீதிபதிகள் எச். எல். தத்து, அனில் ஆர். தவே ஆகியோர் மத்திய அரசுக்கு ஒரு கேள்வியை எழுப்பினர். பழமையான இராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவித்து விடலாமா? இது குறித்து அரசின் நிலைப்பாடு என்ன? இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அரசு துறைகளில் அறிவுரைகள் பெற்று தெரிவியுங்கள். அரசு பதில் அளிக்கத் தவறினால், அதன் கருத்து கேட்கப்படாமல் விசாரணை நடத்தப்படும் என்றனர். தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இராமர் பாலத்தை தேசிய சின்னமாக்க பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. பங்குனி 29, 2012 வட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு இந்தியா இலங்கைக்கு இரகசிய அறிவுரை இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்தி, அப்பகுதிகளில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைபெறுவதற்கான வழிவகையை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசு ஓரளவாவது விடுபட முடியும் என இந்தியா, இலங்கை அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கில் இராணுவ நெருக்குதல்களால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கிளர்ச்சி அடைவதற்கு முன்பு அங்கு தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளிடம் அப்பகுதி நிர்வாகத்தை ஒப்படைப்பதால் தற்காலிகமாக மக்கள் இராணுவ நெருக்குதல்களில் இருந்து மீண்டும் நிம்மதியாக வாழ வழி ஏற்படும் என்று இலங்கைக்கு இந்தியா அறிவுரை கூறியுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயத்தை மறைமுகமாகவும் சூசகமாகவும் இலங்கை அரசுக்கு சுட்டிக்காட்டியுள்ள இந்திய அரசு, விரைவில் இது குறித்து பகிரங்க கோரிக்கை ஒன்றை வைக்கப்போவதாக இந்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பங்குனி 29, 2012 நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை வெற்றிகரமாக நிறைவேற்ற இன ஐக்கிய சூழல் பாதுகாக்கப்பட வேண்டும்! - ஈழ மக்கள் ஐனநாயக கட்சி நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதன் மூலம் தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகள் வெல்லப்பட வேண்டுமேயானால் இனங்களுக்கிடையிலான நல்லுறவும் ஐக்கியமும் நிலவுகின்ற சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், இன முரண்பாடுகளை வளர்ப்பதன் ஊடாக அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்பதே கடந்த கால அனுபவங்கள் எமக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்றும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் மத்திய குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)பங்குனி 29, 2012 ராஜீவ் காந்தி கொலை 3 பேரின் தூக்குத் தண்டனை வழக்கு தள்ளி வைப்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்கள் முருகன், சாந்தன், பேரறிவாளன், இவர்கள் கருணை மனுவை ஜனாதிபதி தள்ளுபடி செய்தார். எனவே இதை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் நாகப்பன், சத்திய நாராயணன் ஆகியோர் விசாரித்து 3 பேரையும் தூக்கில் போட இடைக்கால தடை விதித்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சட்டத்தரணி ரவீந்திரன் ஆஜராகி கொலை வழக்குகளில் தூக்குத் தண்டனை பெற்ற முல்லர், அசாமை சேர்ந்த பாஸ் ஆகியோரது கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு ள்ளன. இதை எதிர்த்து அவர்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அதன் நிலைமையை பார்த்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்றார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 3 பேரின் தூக்குத் தண்டனை ரத்து வழக்கு வருகிற 30 ஆம் திகதிக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளி வைத்தனர். அமெரிக்காவின் புண்ணியத்தினால் சீமான், வைகோ வகையறாக்களினால் மறக்கப்பட்ட 'அப்பாவிகள்' இவர்கள். பங்குனி 29, 2012 மேற்குலக சூழ்ச்சிக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஓரணியில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட சில மேற்கு நாடுகள் மேற் கொண்டுள்ள சூழ்ச்சியை எதிர்கொள்ள நாம் தயாராகவுள்ளோம். இத்தருணத்தில் நாட்டின் ஒருமைப்பாடு, இறைமை, தன்னாதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்க நாட்டு மக்கள் சகலரும் கொண்டுள்ள ஒருமித்த கருத்து எமக்கு மேலும் பலத்தையும் தைரியத்தையும் தருகிறது இவ்வாறு பிரதமர் டி.எம். ஜயரத்ன தெரிவித்திருக்கிறார். மிகவும் தீர்க்கமான ஒரு சூழ்நிலையில் நாம் தற்போது உள்ளோம். மேற்குலகம் எம்மீது இறுக்கமான நடவடிக்கையை மேற்கொள்ளப் பார்க்கிறது. நாம் தவறு இழைக்காமலேயே அவர்கள் எமக்கு எதிராக செயற்படுகின்றனர். ஆனால் இதன் பின்னணியில் மட்டும் ஒரு இரகசியம் இருப்பது தெளிவாகிறது. எனவே எமது தாய்நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு. இக்கட்டான இந்நேரத்தில் நாம் பொறுமைகாக்க வேண்டும். அனைத்து விடயங்களையும் விட நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதே நாட்டு மக்கள் அனைவர் மீதும் இன்றுள்ள முக்கிய பொறுப்பாகும். சர்வதேச ரீதியாக எமது நாட்டின் மீது ஏற்பட்டுள்ள அழுத்தத்திற்கு எதிராக சகல அரசியல் கட்சிகளும் ஒத்த கருத்தைக் கொண்டுள்ளமை முக்கிய அம்சமாகும். அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளினால் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சூழ்ச்சியை எதிர்கொள்ள நாம் தயாராகியுள்ளோம்.பங்குனி 29, 2012 சிரியாவில் யுத்த நிறுத்தத்திற்கு ஜனாதிபதி அசாத் ஒப்புதல்
சிரியாவில் உடனடி யுத்த நிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கான தனது ஆறு அம்ச பரிந்துரைகளுக்கு ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஒப்புதல் அளித்துள்ளதாக ஐ. நா. - அரபு லீக் சிறப்பு பிரதிநிதி கொபி அனான் தெரிவித்துள்ளார். அவரது இந்த திட்டத்திற்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்துள்ளன. ஜனாதிபதி பஷர் அல் அசாத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது ஜனாதிபதி இராணுவத்தை ஏவிவிட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்தப் போராட்டம் இன்று வரை நீடிக்கிறது. இதற்கிடையில், சிரியாவில் அமைதியை நிலைநாட்ட ஐ. நா. வும், அரபு லீகும் தங்கள் சிறப்பு பிரதிநிதியாக, ஐ. நா. முன்னாள் பொதுச் செயலர் கொபி அனானை நியமித்து சிரியாவுக்கு அனுப்பின. ஆனால், அப்போதைய நிலையில் ஜனாதிபதி அவரது திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அனானின் பயணம் தோல்வியில் முடிந்தது. எனினும், இதுகுறித்து பேச்சு நடத்த ஐவர் குழுவை அனான் சிரியாவுக்கு அனுப்பி வைத்தார். அதில் ஓரளவு பலன் கிட்டியது. இந்நிலையில் இரு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் சீனத் தலைநகர் சென்றார் கொபி அனான். அங்கு, பிரதமர் வென் ஜியாபோவுடன் இது குறித்துப் பேசினார். (மேலும்....) பங்குனி 29, 2012 1956 சிங்கள மொழிச் சட்டம் நாட்டுக்குச் செய்த பெரும் அநீதி இலங்கையில் 1956 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட தனிச் சிங்கள மொழிச்சட்டத்தால் நாடு பாரிய பின்னடைவைச் சந்தித்தது. இது தமிழருக்கு மட்டுமல்ல நாட்டுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி. இதனால் ஆங்கில மொழியை இழந்தோம். சமூக நல்லிணக்கத்தை இழந்தோம். நிம்மதியை இழந்தோம். இந்தியா எம்மை விட வறுமையானது தான். வறுமை என்பது அங்கு சனத்தொகை கூடியதனால் மட்டும் தவிர அறிவியல் வறுமை அல்ல. ஆனால் எம்மைப் பொறுத்த மட்டில் சனத்தொகையும் இல்லை. அறிவியலும் இல்லை. அதற்குக் காரணம் 1956 ஆம் ஆண்டு சட்டமே. (மேலும்....)பங்குனி 29, 2012 சோசலிசப் பாதையில் மாற்றமில்லை-வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் உறுதி வரும் ஆண்டுகளில் பொருளாதாரப் புரட்சியை நோக்கி வெனிசுலா நடைபோடும் என்று தற்போது கியூபாவில் சிகிச்சை பெற்று வரும் அந்நாட்டின் ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் கூறியுள்ளார். துணை அமைச்சர்களிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். கியூபா தலைநகர் ஹவானாவிலிருந்து வீடியோ மூலமாக அமைச்சர்களிடம் அவர் உரையாடினார். நாட்டின் தொழில் வளர்ச்சிக்காகக் கூடுதல் நிதியை அவர் ஒதுக்கித் தந்திருக்கிறார். இது பற்றி அந்த உரையாடலில் குறிப்பிட்ட சாவேஸ், நாட்டின் ஒட்டுமொத்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் புதிய தொழில் மாதிரியை வெனிசுலாவில் உருவாக்குவோம். வரும் ஆண்டுகளில் பொருளாதாரப் புரட்சியை வெனிசுலாவில் நடத்திக் காட்டுவோம் என்று குறிப்பிட்டார். (மேலும்....)பங்குனி 29, 2012 உறுதிமொழிகளை நிறைவேற்றாமையே இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்கக் காரணம் அமெரிக்க பிரேரணை மீது கணக்கீட்டு வாக்குப் பதிவு ஒன்றையே ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இந்தியா வழங்கியதாக இந்திய தேசியப் பாதுகாப்பு பேரவையின் செயலக இராணுவ ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் மேனன் தெரிவித்துள்ளார். இலங்கை தான் வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை போரை வெற்றி கொண்ட போதும் அமைதியை இழக்க நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 21 ஆம் நூற்றாண்டின் "இந்திய தேசிய பாதுகாப்புச் சவால்கள்' என்ற தலைப்பில் சென்னையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முடிவில் கூட்டணி அரசியல் தாக்கம் இருந்தது என்று பலர் சொல்லலாம். ஆனால் இறுதியில் அது தேசிய நலனை நோக்காகக் கொண்டதாகவே அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கூறியவற்றை செய்யவில்லை. இலங்கை செய்தது போதுமாக இல்லை என்பதன் அடிப்படையிலேயே இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது என இந்திய தேசிய பாதுகாப்புப் பேரவையின் செயலக இராணுவ ஆலோசகர் லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் மேனன் குறிப்பிட்டுள்ளார். ___ பங்குனி 29, 2012 கம்யூனிஸ்ட் கட்சி மீதான தடையை முறியடிப்போம்! கம்யூனிஸ்ட் கட்சிகள் அறைகூவல் கஜகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்து ஜனநாயகக் குரல்களை ஒடுக்க முயற்சிக்கும் அந்நாட்டு அரசின் நடவடிக்கைகளை முறியடிப்போம் என்று பல்வேறு கம்யூனிஸ்ட் கட்சிகள் குரல் கொடுத்துள்ளன. கஜகிஸ்தான் ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத மற்றும் கம்யூனிச விரோதத்தன்மை மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. கஜகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளனர். கட்சியின் நடவடிக்கைகள் திட்டமிட்டு தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியைப் பங்கேற்க விடாமல் செய்வதற்கே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். தற்போது, நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்கவில்லை என்று கூறி நிரந்தரமாக அக்கட்சியைத் தடை செய்யப் போகிறார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் உழைப்பாளர்களின் கட்சிகள் இந்த ஜனநாயக விரோதச் செயலைக் கடுமையாகக் கண்டிக்கின்றன. தடை முயற்சி தடுக்கப்பட வேண்டும். கஜகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாங்கள் முழுமையாக ஆதரவு தருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன், பெலாரஸ், ஆர்மீனியா, அஜெர்பைஜான், ஜார்ஜியா, மோல்டோவா, கிர்கிஸ்தான், அப்காசியா, தெற்கு ஓசெட்டியா, எஸ்தோனியா, லாட்வியா மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன. பங்குனி 29, 2012 இஸ்ரேல் ஐ.நா மனித உரிமைப் பேரவை உறவைத் துண்டித்தது இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால் ஐ.நா. மனித உரிமை அமைப்புடனானஅனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. பலஸ்தீனத்தின் உரிமையை அபகரிக்கும் வகையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றனவா? என்பது குறித்து சர்வதேச அளவிலான விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமிய நாடுகள் கடந்த வாரம் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அமெரிக்கா மட்டுமே தீர்மானத்தை எதிர்த்தது. இதைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமை பேரவையுடனான உறவைத் துண்டிப்பதாக இஸ்ரேல் அறிவித்திருக்கிறது. ___ பங்குனி 28, 2012 வலம்புரியின் முரண்நகை....? தயவுசெய்து உரிமை கோராதீர்கள்! அது மிகப் பெரும் துரோகம் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் தொடர்பில் ஒரு பெரும் புத்தகத்தையே வெளியிட்டு விடலாம். அந்த அளவிற்கு அது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியதைப் பலர் வரவேற்றுள்ளனர். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளடங்கு மாயினும், ஜெனிவாத் தீர்மான வெற்றியில் தங்களுக்கும் ஏதோ பங்கு இருப்பது போல கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருப்பதானது, வெற்றியின் மகிழ்ச்சியை உள்ளார்ந்தமாக அனுபவிப்பதற்குத் தடை செய்ததென்றே கூற வேண்டும். (மேலும்...) பங்குனி 28, 2012 யாழில் 9A பெற்ற கல்லூரிகள் கடந்த டிசம்பரில் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் தமிழ்மொழி மூலம் 14 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும், யாழ். இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் 11 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 4 மாணவர்களும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர். மேலும் யாழ். இந்து மகளிர் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் ஒருவரும், ஆங்கில மொழி மூலம் ஒருவரும், கொக்குவில் இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும், சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் தமிழ்மொழி மூலம் மூவரும் ஒன்பது பாடங்களிலும் அதிவிசேட (A தர) சித்தி பெற்றுள்ளனர். இதேவேளை வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியில் ஒருவருக்கு 8 Aயும், 1B யும், ஒருவருக்கு 4A யும், 3B யும், 1C யும், 3 பேருக்கு 3 Aயும், 3B யும், 3 Cயும் கிடைத்துள்ளன. _
பங்குனி 28, 2012
பங்குனி 28, 2012 India's UN 'yes' vote was a wrong move on Sri Lanka (KANWAL SIBAL)
Many arguments can be made against our decision to vote against Sri Lanka in the Human Rights Council in Geneva, a decision highly questionable from the foreign policy point of view. Domestic compulsions seem to have outweighed foreign policy considerations in this case. India and the West have been at odds on how best to address the issue of human rights internationally. India shares the view that the West uses the issue to embarrass, destabilise or topple politically uncongenial governments. During the Cold War the Soviet Union was succesfully destabilised through the human rights basket of the Helsinki Accords. Cuba has been a favourite target year after year. (more...) பங்குனி 28, 2012 அமெரிக்கா அப்பாவி மக்களை படுகொலை செய்கிறது அந்நாட்டு மனித உரிமை மேம்பாட்டாளர் கண்டனம் அமெரிக்காவின் முன்னணி மனித உரிமைகள் செயற்பாட்டா ளரான வண. ஜெசி ஜெக்ஸன் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இடம்பெற்ற பிறிதொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றி னார். இவர் அமெரிக்காவின் முன்னோடி மனித உரிமை மேம்பாட்டாளராக விளங்கி துப்பாக்கி குண்டுக்கு பலியான கறுப்பு இனத்தைச் சேர்ந்த மார்டின் லூதர் கிங்கின் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். ஜெனீவாவில் நடந்த இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், லக்பிம நிவ்ஸ் ஆங்கில வார இதழின் ஆசிரியர் ராஜ்பால் அபேநாயக்க, அமெரிக்காவின் கறுப்பு இன மக்கள் ஆட்சியாளர்களினால் கொடு மைப்படுத்தப்படுகிறார்களா என்று கேட்ட கேள்விக்கு 'ஆம்' என்று கூறுவதற்கு பதில் 'நான் என்ன சொல்வது' என்று கூறினார். (மேலும்...) பங்குனி 28, 2012 வடக்கு, கிழக்கு மீள் நிர்மாணத்துக்கு ரூ. 160 பில். செலவீடு2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அரசாங்கம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மீள் நிர்மாண நடவடிக்கை களுக்காக 160 பில்லியன் ரூபாவை செலவிட்டிருக்கிறது. பொருளாதார அபிவிருத்தி துறை அமைச்சின் மேலதிக செயலாளர் நிஹால் சமரவீர, வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்கு விப்பதற்காக அரசாங்கம் 15 பில்லி யன் ரூபாவை செலவிட்டிருக்கிற தென்று கூறினார். கிழக்கு மாகாணம் தேசிய பொருளாதாரத்திற்கு 6 சதவீத பங்களிப்பை இப்போது வழங்கு கின்றது. இது வடமத்திய மாகாணம் மற்றும் ஊவா மாகாணம் பெற்றுக் கொடுக்கும் பங்களிப்பை விட கூடுதலாகும். வடமாகாணம் தேசிய பொரு ளாதாரத்திற்கு 3 சதவீத பங்களிப்பை வழங்குகின்றதென்றும் அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் வடக்கு, கிழக்கு மாகா ணங்களில் பல்வேறு அமைச்சுகள் பலதரப்பட்ட அபிவிருத்தி திட்டங் களை நடைமுறைப்படுத்தி வருவதாக வும் அவர் கூறினார். தற்போது பல குறுகிய கால திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதுடன், நடுத்தர அளவிலான அபிவிருத்தி திட்டங்களும் இப்போது முடிவுபெறும் நிலையை எட்டியிருக்கின்றது. பங்குனி 28, 2012 புனர்வாழ்வு பெற்ற 328 பேர் நாளை உறவினரிடம் ஒப்படைப்புபுனர்வாழ்வு நிலையங்களில் தமது பயிற்சிகளை முடித்துக்கொண்ட முன் னாள் புலி உறுப்பினர்கள் 382 பேர் நாளை (29) தமது உறவினரிடம் ஒப்ப டைக்கப்படுவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் தெரிவித்தார். இதன் உத்தியோகபூர்வ நிகழ்வு நாளை காலை வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் அமைச்சரின் தலைமையில் நடை பெறவுள்ளது. இந்நிகழ்வுடன் ஒத்த தாக முன்னாள் புலி உறுப்பினர்களுக் கான புதிய கடன் திட்டமொன்று நாளையதினம் அறிமுகப்படுத்தி வைக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார். உறவினரிடம் ஒப்படைக்கப்படவிருக்கும் 382 முன்னாள் புலி உறுப்பினர்களுள் 63 பேர் பெண்களாவர். (மேலும்...) பங்குனி 28, 2012 லிபியாவில் கிளர்ச்சி வீரர்கள் மோதல், 20 பேர் பலி முஅம்மர் கடாபி அரசுக்கு எதிராகப் போராடிய கிளர்ச்சிப்படை வீரர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மோதலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லிபியாவின் நான்காவது மிகப்பெரிய நகரான சபாவிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் கிளர்ச்சிப் படையிலும், டைபு பழங்குடி இனத்தவர்களுமே மோதலில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. சபா விமான நிலைப்பகுதியில் ஏற்பட்ட மோதலின் போது டைபு போராளிகள் ஒரு சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளனர். இதில் ஒரு விமானமும் தாக்கப்பட்டுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார். லிபியாவில் ஆளும் இடைக்கால அரசு அந்நாட்டு அரச சொத்துக்களை பாதுகாப்பதில் தொடர்ந்தும் சிக்கலை எதிர்நோக்கி வரும் நிலையிலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. லிபியாவின் பல பகுதிகளிலும் கிளர்ச்சிப்படைவீரர்கள் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் தக்கவைத்துக்கொண்டுள்ளது. பங்குனி 28, 2012 இந்திய மீனவர் அத்துமீறலுக்கு எதிர்ப்பு, வடமராட்சியில் நேற்று ஆர்ப்பாட்டம்வடமராட்சிக் கடற் பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களைத் தடுக்கக் கோரி வடமராட்சிப் பகுதியில் நேற்று (22/03) 21 கடற்றொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்த அங்கத்தவர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றில் ஈடுபட்டனர். இந்தப் பேரணியில் சுமார் இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர். இதேவேளை வடமராட்சி மீனவர் சங்கங்களின் சமாசத் தலைவர் இ. அருள்தாஸ் தலைமையிலான சுமார் 25 பேர் அடங்கிய மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளப் பிரதிப் பணிப்பாளர் எஸ். கணேசமூர்த்தியிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கான மகஜர் ஒன்றையும் கையளித்தனர். இந்த மகஜரின் பிரதிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா ஆகியோரிடமும் கையளித்தனர். அந்த மகஜரில், கடந்த 30 வருட காலத்தில் யுத்தத்தினால் பெறுமதியான சொத்தழிவுகளை எதிர்கொண்ட வடமராட்சி மீனவர்கள் தற்பொழுது வங்கியில் கடன்பட்டு மீண்டும் கடற்றொழில் உபகரணங் களைக் கொள்வனவு செய்து தொழிலை ஆரம்பித்துள்ளனர். இந்தத் தொழில்களை அத்துமீறி இலங்கைக் கடற் பகுதியில் றோளர் தொழில் முறையில் மீன்பிடிக்கும் இந்தியர்கள் அதிகரித்து வருவதால் தமது மீனவர்கள் தொழிலை இழந்து வருவதாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது தொழிலையும் வளத்தினையும் இந்தியர்கள் சூறையாடுவதை இனியும் அனுமதிக்க முடியாது உடனடியாக தடுத்து நிறுத்த அரசாங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோசமிட்டமை குறிப்பிடத் தக்கது. பங்குனி 28, 2012 மகாராஷ்டிராவில் நக்ஸல்கள் கண்ணிவெடி தாக்குதல், 15பேர் பலிமகாராஷ்டிராவில் உள்ள புஷ்டோலா மாவட்டத்தில் நக்ஸ லைட்டுகள் நடத்திய கண்ணி வெடி தாக்குதலில் சி.ஆர். பி.எப். வீரர்கள் 15 பேர் பலியா கியுள்ளனர். சி.ஆர்.பி.எப். வீரர்கள் புஷ்டோலா விலிருந்து கட்டாவிற்கு செல்லும் வழியில் இந்த தாக்குதல் நடை பெற்றதாகவும், சம்பவ இடத்திலேயே 15 வீரர்கள் பலி யானதாகவும் மேலும் பலவீரர் கள் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன. இது குறித்து தகவலறிந்ததும் சி.ஆர்.பி.எப். தலைவர் கே. விஜயகுமார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந் துள்ளார். கட்சிரோலியிருந்து நான்கு கிலோ மீற்றர் தொலை வில் கர்வபா-புல்போடி குட்டாசாலை யில் இப்படை வீரர்கள் செல்லும் போது இத்தாக்குதல் நடை பெற்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி சம்பவம் நடைபெற்ற இடத்தை பொலி ஸார் சுற்றி வளைத்துள்ளனர் எனவும், அப்பகுதியை சுற்றி தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள் எனவும் நாக்பூர் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த கண்ணிவெடித் தாக்குதலில் படுகாயமடைந்த சி.ஆர். பி.எப். வீரர்க ளின் நிலைமை கவலைக்கிடமாக இருப் பதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. உடனடி மீட்பு பணிகளுக்காக மற் றொரு சி.ஆர்.பி.எப். படை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. இச்சம்பவம் குறித்த தகவல்களை திரட்டி வருவதாகவும் விரைவில் இது குறித்து சட்டசபையில் அறிக்கை தாக் கல் செய்வதாகவும் மகாராஷ்டிரா உள் துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டில் தெரிவித்துள்ளார். பங்குனி 28, 2012 இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் நியமனம் இலங்கைக் கான புதிய அமெரிக்கத் தூதுவராக அமெரிக்க சிரேஷ்ட இராஜதந்திரி யான மிசேல் சிஸன் (Michele J Sison) நியமிக்கப்பட்டுள்ளதாக அமெ ரிக்க தூதரக வட்டாரங்கள் கூறின. இவரின் பெயரை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரேரித் துள்ளார். பாகிஸ்தான், இந்தியா, கெமரூன், மோகோ, ஹெய்ட்டி, ஐக்கிய அரபு இராச்சியம், உட்பட பல தூரகங்களில் இவர் பணியாற்றியுள்ளதோடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் இந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான அமெரிக்க பிரதி உதவிச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். லெபனானுக்கான அமெரிக்கத் தூதுவராகவும் இவர் சேவையாற்றியுள்ளார். இவர் 1984 முதல் இராஜதந்திர சேவையில் ஈடுபட்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதியினால் சிபார்சு செய்யப்பட்டுள்ள இவருக்கு அமெரிக்க செனட் சபையின் அனுமதி வழங்கப்பட்ட பின் இலங்கைத் தூதுவராக பதவிப்பிரமாணம் செய்ய உள்ளார். பங்குனி 28, 2012 இந்தியாவிற்கு ரஷ்யா கண்டனம்! இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு ரஷ்யா கண்டனம்!நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தமைக்கு, ரஷ்யா கண்டனம் வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்தியாவுக்கான தூதுவர் எலக்ஷேன்டர் எம். கடாகின் இதனைத் தெரிவித்துள்ளார். புதுடில்கியில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் உரையாற்றும் போது கருத்து வெளியிட்ட அவர், நேரடியாக இந்தியாவை விமர்சிக்காத போதிலும், இந்தியா இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தமை அரசியல் ரீதியான நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என சுட்டிக்காட்டினார். இன்னொரு நாட்டின் சுயநிர்ணய உரிமையில் மற்றுமொரு நாடு தாக்கம் செலுத்துவதை ரஷ்யா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பங்குனி 28, 2012 இந்தியா உள்பட 12 நாடுகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை?.ஈரான் பயங்கர அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டி, அதன் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. அந்நாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதியை குறைத்து கொள்ள வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதனை இந்தியா நிராகரித்து விட்டது. ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் 23 நாடுகளில், இறக்குமதியை குறைத்து கொள்ளாத இந்தியா, சீனா உள்ளிட்ட 12 நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. இதுதொடர்பாக இந்த நாடுகளுடன் பேச்சு நடைபெற்று வருவதாகவும், வரும் ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நியுலேண்ட் நிருபர்களிடம் தெரிவித்தார். கோரிக்கையை ஏற்று ஈரானில் இருந்து இறக்குமதியை கணிசமாக குறைத்து கொண்ட ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மீது தடை இல்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. பங்குனி 27, 2012 இந்திய பிரதமரின் அறிக்கையால் ஜெனீவா நிலைமைகள் மாறினஇலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தபோதும் இரு நாடுகளுக்குமிடையிலான வரலாற்று ரீதியான உறவில் எதுவித விரிசலும் ஏற்படாது. இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பிரிஸ் தெரிவித்தார். மனித உரிமை பேரவை வாக்கெடுப்புக்கு முன்னர் இந்திய பிரதமர் வெளியிட்ட அறிக்கை வாக்கெடுப்பில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அமைச்சர் கூறினார். இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக பலமான வரலாற்று ரீதியான இராஜதந்திர உறவு காணப்படுகிறது. ஜெனீவா விவகாரம் தொடர்பில் இந்திய லோக் சபாவில் இரண்டரை நாட்களாக பேசப்பட்டது. அமெரிக்க பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக இந்திய பிரதமர் அறிவித்தார். இதனால் இலங்கைக்கு பாரிய தாக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் முடிவு எமக்கு பெரும் அதிருப்தியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. (மேலும்....) பங்குனி 27, 2012 புலிகளின் தாக்குதலிலேயே அன்டனோவ்-26 விழுந்து நொருங்கியது பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸா ரினால் கிளிநொச்சியில் வைத்து அண்மையில் கைதுசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலமே இந்தத் தகவல் தெரியவந்துள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். புலிகள் இயக்கத் தலைவர்களின் ஆலோசனைக்கு அமைய தாங்கள் இருவருமே வில்பத்து காட்டுப் பகுதியிலிருந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்ட தாக தமது வாக்குமூலத்தில் அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். (மேலும்....) பங்குனி 27, 2012 இலங்கைக்கு பயன்தரும் வகையில் இராஜதந்திர உறவில் மாற்றம் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் கூடுதல் முக்கியத்துவம் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் வாக்களித்த நாடுகள் தொடர்பில் இலங்கையின் சர்வதேச கொள்கையில் மாற்றம் ஏற்படாது. ஆனால், இலங்கைக்கு முழுமையான பிரயோசனம் கிடைக்கக் கூடியவாறு இராஜதந்திர உறவில் மாற்றம் செய்யவும் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் அதிக முக்கியம் வழங்கவும் கவனம் செலுத்த உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். வெளிவிவகார அமைச்சில் நேற்று நடை பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் ஜெனீவா மாநாட்டுக்கு முன்னரே ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட முடிவின்படி இராஜ தந்திர உறவில் மாற்றம் செய்யப்படும். 1948 இன் பின்னர் முன்னுரிமை வழங்க வேண்டிய நாடுகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை. ஆபிரிக்கா கண்டத்தில் 4 தூதரகங்களே உள்ளன. பல ஆபிரிக்க நாடுகள் எமக்கு ஒத்துழைப்பு வழங்கின. எனவே இந்த நிலை மாற்றப்பட வேண்டும். ஆசியா கண்டத்தில் இந்தியா தவிர சகல நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்கின. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்கனவே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் மேலும் முக்கியத்துவம் வழங்க அவசியமில்லை. வேறு நாடுகளுக்கு முக்கியம் வழங்க வேண்டும். கட்டம் கட்டமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பங்குனி 27, 2012 தொண்டமான் இராஜினாமா? இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான தொண்டமான் தனது அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளரை நியமிப்பது தொடர்பில் எழுந்த முரண்பாடே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. _ பங்குனி 27, 2012 பெஷாவரில் அமெ. எதிர்ப்பு பேரணி-அமெரிக்க - பாகிஸ்தான் மோதல் முற்றுகிறது அமெரிக்க- பாகிஸ்தான் மோதல் முற்றி வருகிறது. பெஷாவர் நகரில் மாபெரும் அமெரிக்க எதிர்ப்பு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் முகா மிட்டு தலிபான் தீவிரவாதி களை ஒடுக்கி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகளுக்கு பாகிஸ்தானில் இருந்து உணவு மற்றும் எரி பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் வட மேற்கு பகுதியில், அமெரிக்க விமானப்படையின் குண்டு வீச்சில் 24 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டனர். இதற்கு பாகிஸ் தான் கடும் கண்டனம் தெரி வித்தது. மேலும் பாகிஸ் தானில் இருந்து ஆப் கானிஸ்தானில் உள்ள அமெரிக்க ராணுவத்துக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்ட பாதைகள் அனைத்தையும் பாகிஸ் தான் மூடிவிட்டது. பாகிஸ் தானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவை அதிர்ச்சி அடைய செய்தது. இதை யடுத்து அமெரிக்க அரசு பாகிஸ்தானிடம் மன்னிப்பு கேட்டது. என்றாலும் பாகிஸ்தானில் உள்ள அரசி யல் கட்சிகள் அமெரிக் காவை மன்னிக்க தயாராக இல்லை. இதனால் அமெரிக்க - பாகிஸ்தான் மோதல் முற்றி வருகிறது. (மேலும்....)பங்குனி 27, 2012 Lobbyists, Guns and Money(By PAUL KRUGMAN)Floridas now-infamous Stand Your Ground law, which lets you shoot someone you consider threatening without facing arrest, let alone prosecution, sounds crazy and it is. And its tempting to dismiss this law as the work of ignorant yahoos. But similar laws have been pushed across the nation, not by ignorant yahoos but by big corporations. Specifically, language virtually identical to Floridas law is featured in a template supplied to legislators in other states by the American Legislative Exchange Council, a corporate-backed organization that has managed to keep a low profile even as it exerts vast influence (only recently, thanks to yeoman work by the Center for Media and Democracy, has a clear picture of ALECs activities emerged). And if there is any silver lining to Trayvon Martins killing, it is that it might finally place a spotlight on what ALEC is doing to our society and our democracy. (more...) பங்குனி 27, 2012 தமிழ் கூட்டமைப்பின் இழுத்தடிப்பே அரசியல் தீர்வு தாமதத்திற்கு காரணம் - இலங்கை அரசுஅரசியல் தீர்வு தாமதமாவதற்கு அரசாங்கம் காரணமல்ல. பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு தமது பிரதிநிதியை நியமிக்காது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே காலங்கடத்துவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்ப தற்காக பாராளுமன்ற தெரிவுக் குழு வொன்றை அமைத்துள்ளோம். இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தராதுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியை நியமிக்குமாறு அழைப்பு விடுத்தாலும் இதுவரை யாரும் நியமிக் கப்படவில்லை. அரசியல் தீர்வு தாமதமடைவதற்கு நாம் காரணமல்ல. தெரிவுக் குழுவுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதியை நியமிக்குமாறு கூறும்படி நாம் புலம்பெயர் அமைப்புகளிடமும் கூறினோம். ஜெனீவா வில் சக நாடுகளுக்கும் இது குறித்து அறிவூட்டினோம். பாராளுமன்றத் தெரிவுக் குழு 6 மாதங் களே செயற்படும். 6 மாதத்தில் அதன் அறிக்கை கையளிக்கப்பட வேண்டும். கடந்த கால முயற்சிகள் போன்று பாராளு மன்றத் தெரிவுக் குழுவுக்கு நீண்ட காலம் பிடிக்காது. இது தீர்வுக்கான சிறந்த அவகாசமாகும். 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது பற்றியும் தீர்வு யோசனை குறித்துப் பேசினாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவுக் குழுவுக்கு தமது பிரதிநிதியை அனுப்பாது எவ்வாறு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியும்? என்றார். தீர்வு யோசனையை அமுல்படுத்துவதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் இதற்காக பாராளுமன்றத் தில் 2/3 பெரும்பான்மையாக யோசனை நிறைவேற்றப்படுவதோடு சர்வஜன வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். எனவே இதற்கு பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைப்பதே ஒரே வழியாகும். இதனைத் தவிர வேறு மாற்றீடு கிடையாது என்றார்.பங்குனி 27, 2012 சிரிய அமைதி முயற்சி ரஷ்ய ஜனாதிபதி - கொபி அனான் சந்திப்பு சிரியாவில் உள்நாட்டு யுத்தம் ஒன்றை தடுக்கும் கடைசி முயற்சியிலேயே கொபி அனான் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியாவில் அமைதி முயற்சியில் ஈடுபட்டிருக்கு ஐ.நா. மற்றும் அரபு லீக் விசேட பிரதிநிதி கொபி அனான் நேற்று முன்தினம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி மெட்வடெவ்வை சந்தித்து சிரிய விவகாரம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் போதே மெட்வடெவ், அனானிடம் இந்த எச்சரிக்கையை விடுத்தார். சிரியாவில் மோசமான சிவில் யுத்தம் ஒன்று ஏற்படுவதை தவிர்க்கும் கடைசி வாய்ப்பு இதுவாகும் என்று மெட்வடெவ் கூறியதாக ரஷ்ய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சிரியாவில் மேற்கொள்ளப்படும் சமாதான நடவடிக்கைக்கு தமது முழு ஆதரவை வழங்குவதாக மெட்வடெல் கொபி அனானிடம் உறுதி அளித்துள்ளார். (மேலும்....) பங்குனி 27, 2012 ஐரோப்பிய கண்டத்தின் முதல் 10 பில்லினியர்கள் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள மொத்த பணக்காரர்களில் முதல் 10 இடங்களை பிடித்துள்ளவர்களின் பட்டியலை போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் பெர்னார்ட் அர்னால்ட் (பிரான்ஸ்) 41 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமானிசியோ ஒர்டெகா (ஸ்பெயின்) 37.5 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் இரண்டாமிடத்திலும், ஸ்டீபன் பெர்சான் (ஸ்வீடன்) 27 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர். நான்காமிடத்தில் கார்ல் ஆல்ப்ரெசட் (ஜெர்மனி) 25.4 பில்லியன் டாலர், ஐந்தாமிடத்தில் லிலியான் பெட்டன் கோர்ட் (பிரான்ஸ்) 24 பில்லியன் டாலர், 6 வது இடத்தில் மைக்கேல் பெர்ராரோ மற்றும் குடும்பத்தினர் (இத்தாலி) 19 பில்லியன் டாலர், 7 வது இடத்தில் அலிசர் உஸ்மனோவ் (ரஷ்யா) 18.1 பில்லியன் டாலர், 8 வது இடத்தில் பெர்தால்ட் மற்றும் தியோ ஆல்ப்ரெசட் (ஜெர்மனி) 17.8 மில்லியன் டாலர், 9 வது இடத்தில் மைக்கேல் ஓட்டோ மற்றும் குடும்பத்தினர் (ஜெர்மனி) 17.6 பில்லியன் டாலர், 10வது இடத்தில் ரினாட் அக்மெதோவ் (உக்ரைன்) 16 பில்லியன் டாலர் என்ற வரிசையில் பில்லினியர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர். பங்குனி 27, 2012 ஜெனீவா தீர்மானம் மக்கள் வீண் அச்சமடைய தேவையில்லை; பொருளாதார தடைகளும் விதிக்க முடியாது எந்தவித வெளிநாட்டுத் தலையீட்டிற்கும் அரசாங்கம் தலைசாய்க்காது. எமது நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற என்ன தேவையோ அதனையே அரசாங்கம் முன்னெடுக்கும். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எமது மக்களின் நலன்களுக்கேற்ற அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கு எதிராக எதுவித பொருளாதாரத் தடையும் விதிக்க முடியாது. இது குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவை யில்லை எனவும் இதனால் எமது பொருளாதாரம் பாதிக் கப்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்....) பங்குனி 27, 2012 தங்கள் யுத்தக் குற்றச்சாட்டுகளை மறைக்கும் அமெரிக்காவுக்கு இலங்கையை தண்டிப்பதற்கு அருகதை இல்லை (எஸ். தில்லைநாதன்)
இந்நாட்டு மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து மீட்டு, அவர்களின் வாழ்க்கையை வளமாக்கி வரும் புனிதப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தின் மீது அமெரிக்கா வீராவேசத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கண்டனப் பிரேரணை ஒன்றை நிறைவேற்றி இருக்கின்ற போதிலும் அமெரிக்கா அதைவிட படுமோசமான மனித உரிமை மீறல்களையும் யுத்தக் குற்றச் செயல்களையும் புரிந்துள்ளது என்பதை ஆதாரபூர்வமாக எடுத்துக் காட்டுவதற்காக நியூஸ் வீக் என்ற சர்வதேச அமெரிக்க சஞ்சிகையில் மார்ச் மாதம் 27ம் திகதி வெளிவந்த ஒரு கட்டுரையின் மொழிபெயர்ப்பை இங்கு தருகின்றோம். (மேலும்....) பங்குனி 26, 2012 அமெரிக்கப் பொறிக்குள் இலங்கை? ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த சர்வஜன வாக்கெடுப்பு? இலங்கை அரசாங்கத்தின் இந்த அணுகுமுறையை அமெரிக்கா உட்பட அதன் பின்னால் உள்ள சர்வதேச சமூகம் எவ்வாறு கையாளப் போகின்றன? என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டமாக இனிவரும் காலங்கள் அமையப் போகின்றன. இலங்கையைப் பொறுத்து அமெரிக்காவும் தமிழ்நாடுமே தமக்கு சாதகமான சூழ்நிலையை சுக்கு நூறாக்கின என்ற ஆதங்கத்தில் உள்ளது. அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹிலாரி கிளின்டன் கடந்த வருடம் ஜூலை 20 ஆம் திகதி சென்னை சென்றிருந்தவேளையில் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவைச் சந்தித்தார். அமெரிக்காவின் வர்த்தகம், முதலீடு தொடர்பானதாகவே ஹிலாரியின் சென்னை விஜயம் அமைந்திருந்ததாக கூறப்பட்டபோதும் அதற்குமப்பால் அமெரிக்கா ஜெனீவாவில் கொண்டு வந்த பிரேரணை தொடர்பாகவும் அவ்வேளையில் பேசப்பட்டதாகவும் தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன. (மேலும்....) பங்குனி 26, 2012 ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியும் இணைந்து செயற்படுவது குறித்த பேச்சுவார்த்தை?
ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பத்மநாபா அணியின் மட்டு.-அம்பாறை மாவட்ட தலைவர் இரா.துரைரெட்னத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியை ஒருங்கிணைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு மட்டக்களப்புக்கு வருகைதந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கட்சி உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடி வருகின்றார். இந்த சந்திப்பில் அக்கட்சியின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் கலந்துகொண்டார். இந்த சந்திப்புக் குறித்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்னம், ஈ.பி.ஆர்.எல்.எப்.சுரேஸ் அணியின் செயலாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் தனக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்தார். அத்துடன் எதிர்காலத்தில் மக்களின் பொதுவான நலன் தொடர்பில் இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதும் இதுவரையில் அது தொடர்பில் முடிவெதுவும் எட்டப்படவில்லையென அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் பேசுவதற்கு தாங்கள் முடிவெடுத்துள்ளதா அவர் தெரிவித்தார். பாம்புக்கு(பிரேமசந்திரன்) பால் வார்க்கும் செயல்பாடு இது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர் பங்குனி 26, 2012
பங்குனி 26, 2012 அமெரிக்க நிர்ப்பந்தத்துக்கு அடிபணியாதீர்! (கி.இலக்குவன்) எண்ணெய் வள நாடுகளில் எல்லாம் தனது கட்டளைப்படி இயங்கக்கூடிய ஆட்சிகளைத் திணிப்பதற்காக ஆட்சிமாற்றங்களைக் கொண்டுவருவதையே தனது அயலுறவுக் கொள்கையாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டுவருகிறது. ஆப்கானிஸ்தான், இராக், லிபியா என்று தொடரும் அதன் பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடு ஈரான். இந்த நாடு யுரேனியத்தை செறிவூட்டும் பணியைக் கைவிட மறுத்ததால் அதற்கு எதிரான கடுமையான வர்த்தகத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் விதித்துள்ளன. ஈரான் நாட்டிலிருந்து எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்று இந்தியாவின் மீது அமெரிக்கா வெளிப்படையான நிர்ப்பந்தங்களைக் கொண்டுவந்ததை அடுத்து மிகவும் இக்கட்டான சூழலில் இந்தியா வைக்கப்பட்டுள்ளது. (மேலும்....)பங்குனி 26, 2012 இலங்கைக்கு இந்தியா ஆதரவளித்திருந்தால் முடிவு மாறியிருக்கும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்திருந்தால் இறுதி முடிவு வித்தியாசமாக அமைந்திருக்கும் என அமைச்சர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எமது வெற்றிகரமான இராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் ஜெனீவாவில் உள்ள பல்வேறு இராஜதந்திரிகள் எமக்கு வரவேற்பளித்தனர். எனினும், பலம்மிக்க நாடுகளின் அழுத்தம் காரணமாக எமக்கு முன்னர் ஆதரவளித்த நாடுகள் இறுதியில் ஆதரவு வழங்கவில்லையென்றும் அமைச்சர்கள் கூறினார்கள். (மேலும்....) பங்குனி 26, 2012 பர்மாவும் புவி அரசியலும் மியான்மர் என்று அழைக்கப்படும் பர்மா, மேற்குத் திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் முதல், அந்நாட்டின் நாசகர உளவு ஸ்தாபனமான சிஐஏவின் இயக்குநர் டேவிட் பீட்ராஸ் வரை அமைச்சர்களும் அதிகாரிகளும் முன்னர் ரங்கூன் என அழைக்கப்பட்ட தலைநகர் யாங்கோனுக்கு வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களின் மூலமே ஜனநாய கத்தை மீண்டும் மலரச்செய்கிற அற்புதத்தை நிகழ்த்திவிட அமெரிக்கா முயற்சித்துக்கொண்டிருக்கிறது. அதை மறு பேச்சின்றி, ஜனநாயகப் போராளி ஆங் சான் சூ கியும் ஏற்றுக்கொள்ளச் செய்யும் விதத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்திக்கொண்டிருக்கிறது. உலகின் பல்வேறு நாடுகளில் ராணுவ பலத்தை பிரயோகித்து ஜனநாயகத்தை மலரச்செய்த அனுபவம், மியான்மரில் அமெரிக்கா வுக்கு உதவுகிறது போலும். (மேலும்....)பங்குனி 26, 2012 முப்பது வருடங்களின் பின்னர் துரித மேம்பாடு காணும் வட மாகாண வீதிகள்
வட பகுதியில் கடந்த 3 தசாப்தங்களுக்கு மேலாக நிலவிவந்த யுத்தசூழல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமார் இரண்டரை வருடங்களுக்கு மேல் கடந்துள்ள நிலையில் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு வீதிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பிரதான வீதிகள் உள்ளடங்கலாக உள்ளூர் வீதிகள் பலவும் செப்பனிடப்பட்டு வருகின்றன. வட பகுதியையும் நாட்டின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் பிரதான தரை வழிப்பாதையாகவிருக்கும் ஏ-9 வீதி புதிதாக புனரமைக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளின் உதவியுடன் மீள்புனரமைக்கப்பட்டு வரும் இந்த ஏ-9 வீதி முழுமையாகப் புனரமைக்கப்பட்டதும் குறைந்த நேர காலத்திற்குள் வட பகுதியை மக்கள் சென்றடைய முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதேநேரம், யாழ்ப்பாணத்தை இணைக்கும் மற்றுமொரு பிரதான வீதியான ஏ-32 வீதியின் அபிவிருத்திப் பணிகளும் நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ளன. குறிப்பாக ஏ-15 வீதியில் காணப்படும் சங்குப்பிட்டி பாலம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு புதிய தோற்றத்துடன் கம்பீராக காட்சியளிக்கிறது. (மேலும்....) பங்குனி 26, 2012 வட, தென் கொரிய எல்லையை ஒபாமா பார்வை
இராணுவமயமாக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய தென் கொரியாவின் வட கொரியாவுக்கான எல்லைப் பகுதிக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று பயணம் மேற்கொண்டார். தென் கொரியாவின் கண்காணிப்பு முகாமுக்கு சென்ற ஒபாமா அங்குள்ள அமெரிக்க வீரர்களை சந்தித்தார். ரொக்கெட் மூலம் செய்மதி அனுப்பவுள்ளதாக வடகொரியா அறிவித்து பிராந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே ஒபாமா தென் கொரிய எல்லைப் பகுதிக்கு சென்றுள்ளார். தென் கொரியாவில் 50க்கும் மேற்பட்ட நாட்டு தலைவர்கள் பங்கேற்கவுள்ள அணு சக்தி மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பங்கேற்கவே ஒபாமா தென்கொரியா சென்றுள்ளார். இதன்போது அவர் ஈரான், வடகொரியாவின் அணு செயற்பாடுகள் குறித்து சர்வதேச கவனத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஒபாமா இந்த மாநாட்டிற்கு இடையில் சீன மற்றும் ரஷ்ய நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதன்போது ஈரான், வட கொரியா விவகாரம் குறித்து கலந்துரையாடுவார் என நம்பப்படுகிறது. இன்று ஆரம்பமாகும் அணு சக்தி மாநாட்டில் குற்றவாளிகள் மற்றும் ஆயுதக் குழுக்களிடம் அணு ஆயுதம் செல்வதை தடுப்பது குறித்து சர்வதேச நாடுகள் கலந்துரையாடவுள்ளன. இந்த மாநாட்டில் வட கொரியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்குனி 26, 2012 ஜெனீவா தீர்மானமும் எதிர்விளைவுகளும்
யுத்தத்தின் இறுதி மாதங்களில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்த மற்றும்
மனிதாபிமானத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பாக பொறுப்புக் கூறுவதற்கான நடவடிக்கைகளை
எடுக்குமாறும் இலங்கையை இந்தியா வலியுறுத்தி நின்றது. பங்குனி 26, 2012 வட, கிழக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க நடவடிக்கை - கோதாபய ராஜபக்ஷ வடக்குக் கிழக்குப் பகுதிகளில் இராணுவத்தின் பிரசன்னத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்குக் கிழக்கில் பொலிஸ் படையில் 1600 தமிழர்கள் இணைத்துக்கொள்ளப்பட இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறியுள்ளார். கடந்த வருடம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான புலம்பெயர்ந்த தமிழர்கள் வடக்கு, கிழக்கிற்கு வருகை தந்திருந்தனர். தமது குடும்பங்கள் உறவினர்களைப் பார்ப்பதற்கு அவர்கள் வந்திருந்தனர். கடந்த மாதம் மட்டும் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வருகை தந்திருந்தனர். மோதலின் போது நாட்டை விட்டு வெளியேறிய தமிழ் மக்களில் பலர் இப்போது நாட்டில் சமாதானமும் ஸ்திரத்தன்மையும் ஏற்பட்டுள்ளது என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேலேயே வருகை தருகின்றனர். (மேலும்....) பங்குனி 26, 2012 சிங்களவர் அனுபவிக்கும் சகல உரிமைகளும் விரைவில் தமிழர்களுக்கும் கிடைக்கும் - மத்திய அமைச்சர் வாசன் இலங்கையில் சிங்களவர்கள் என்னென்ன சலுகைகள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள தமிழர்களும் விரைவில் அனுபவிப்பார்கள் என மத்திய அமைச்சர் வாசன் கூறினார். இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு கண்ணியத்துடனும் நிதானத்துடனும் செயற்பட்டு ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. முள் வேலியில் அடைபட்டுக் கொண்டிருப்பவர்களை விடுவிக்கும் நேரம் வந்து விட்டது. இலங்கையில் சிங்களவர்கள் என்னென்ன சலுகைள் அனுபவித்து வருகின்றார்களோ அத்தனை சலுகைகளையும் அங்குள்ள தமிழர்களும் விரைவில் அனுபவிப்பர்.மத்திய அரசு வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா மற்றும் வெளியுறவு செயலாளர், வெளியுறவுத் தூதரக அதிகாரிகள் மூலம் இலங்கை தமிழர்களின் நலன்கள் குறித்து கவனித்து வருகின்றோம். இலங்கை விடயத்தில் தொடர்ந்து இந்தியா கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. இலங்கை தமிழர்கள் பிரச்சினையைத் தொடர்ந்து மத்திய அரசு அணுகி வருகின்றது. பங்குனி 26, 2012 சாவேஸ் மீண்டும் கியூபா பயணம் கதிர்வீச்சு சிகிச்சை தொடரும் வெனிசுலா ஜனாதிபதி மீண்டும் கியூபா சென்றுள் ளார். சமீபத்தில் நடந்த புற் றுநோய் அறுவை சிகிச் சைக்குப் பின் தொடர வேண்டிய கதிர்வீச்சு சிகிச் சைக்காக அவர் கியூபா சென்றுள்ளார். மைகுவெட்டியா சர்வ தேச விமான நிலையத்தில் ஹவானா செல்லும் விமா னத்தில் வெனிசுலா நேரப் படி சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு அவர் புறப்பட் டார். ராணுவ மரியாதை யுடன் அவர் வழியனுப்பப் பட்டார். ஹவானா செல்வது குறித்து அவர் வெளியிட்ட செய்தி வெனிசுலா வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களிலும் ஒளிபரப் பப்பட்டது. ஞாயிறு முதல் ஹவானாவில் கதிர்வீச்சு சிகிச்சை பெறத் திட்டமிட் டுள்ளதாகவும், சிகிச்சை நான்கு அல்லது ஐந்து வாரங் கள் வரை நீடிக்கக் கூடும் என்றும் அவர் அச்செய்தி யில் குறிப்பிட்டுள்ளார்.(மேலும்....) பங்குனி 26, 2012 ஈழத்துக்கான படுகொலைகள் - சர்வதேசத்தின் தீர்மானம். - தேவன் (கனடா) கூட்டமைப்பில் இருக்கும் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்ட தமது தலைவர்களுக்கே இரங்கல் கூட்டம், கண்டிப்பு தெரிவிக்காதவர்கள். பொறுப்பு கூறல்கள் பற்றி கதைப்பது வேடிக்கையாக இருக்கிறது. அத்துடன் போர் பற்றி சாட்சி சொல்ல முன்வராதவர்கள் இன்று அதைப்பற்றி கதைப்பது அபத்தமாக இருக்கிறது. மேற்கு ஒரு விடையத்தை முக்கியமாக இலங்கை வரலாற்றில் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். சந்திரிகா அதிபராக இருந்தபோது வட- கிழக்கு பிராந்திய சுயாட்சி அல்லது சம்ஷ்டி அடிப்படையில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஒரு பொதி அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது சந்திரிகாவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாததாலும் எதிர்கட்சிகள் இனவாதக் கட்சிகள், தமிழ் தரப்பில் கூட்டமைப்பு, புலிகள் இம் முயற்சிக்கு ஆதரவு வழங்காதாலும் தீர்வு பொதியை நாடாளுமன்றத்தில் தீயிட்டு எரித்ததாலும் தற்போதைய தீர்வான 13வது திருத்தச்சட்டத்துக்கு மேலாக அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டதற்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தமிழ் சமூகத்துக்கு பொறுப்பு கூறவேண்டும். அத்துடன் இத்தகைய ஒரு சிறப்பான தீர்வை புலிகளும் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும் சதைகள் நீக்கப்பட்ட எலும்பு என நிராகரித்து யுத்தத்தையும் ஆரம்பித்து தமிழ் சமூகத்தை நந்திகடல் அழிவுவரை இழுத்துச் சென்றார்கள். இதற்கு யார் பொறுப்புக்கூறுவது? இலங்கையின் நீண்டகால அமைதியை சீர்குலைத்துவந்த புலிகளை மகிந்த அரசு வெற்றி கொண்டதன் பயனாக இலங்கை மக்கள் பெரும்பான்மை பலத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்த பெரும்பான்மை அரசியல் அதிகாரத்தை மகிந்த அரசு இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்துவதற்கும், இனமுரண்பாட்டை தீர்ப்பதற்கும் பதிலாக ஜனாதிபதிற்கு மேலதிகமான அதிகாரத்தை ஏற்படுத்துவதிலும் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அலட்சியப் போக்கை கடைப்பிடிப்பதாலும் மேற்குலக கழுகுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளன. மேற்குலகுக்கு இலங்கை மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் அல்லது ஆக்கபூர்மாக செய்ய ஏதாவது நினைத்தால் ஐநா சபை மனித உரிமை கவுன்சிலின் ஊடாக மகிந்த அரசுக்கு நெருக்கடிகள் கொடுத்து ஸ்திரத்தன்மைiயையும் இனங்களுக்கிடையில் பிளவுகள் ஏற்படுத்துபதற்குப் பதிலாக மகிந்த காலத்திலேயே தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வை எட்டுவதற்கு தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டும். (மேலும்) பங்குனி 25, 2012 இலங்கை அதிபர் ராஜபக்ஷவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அமெரிக்க தீர்மானத்தில், நடுநிலைத்தன்மையை உறுதி செய்ய இந்தியா பாடுபட்டதாக, இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எழுதிய கடிதத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்தை ஆதரித்து இந்தியா ஒட்டளித்த நிலையில், அதிருப்தியில் இருக்கும் இலங்கையை சமாதானப்படுத்தும் வகையில், பிரதமர் மன்மோகன் சிங் அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஐ.நா., தீர்மானத்தின் போது, இலங்கை குழுவினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு இந்திய குழுவை தான் கேட்டுக்கொண்டதாக கூறியுள்ளார். இதன்படி, அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நடுநிலைத்தன்மையுடன் அமைய இந்தியா முயற்சி மேற்கொண்டாகவும் பிரதமர் கூறியுள்ளார். எனினும், இலங்கை தமிழர்களுக்கு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு அளிப்பதே பிரச்னைக்கான தீர்வு என்பதை குறிப்பிட்டுள்ள அவர், இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் நேர்மையான, மதிப்புமிக்க, சமமான மற்றும் சுயமரியாதையுடன் வாழ வழி செய்ய வேண்டும் என்றும் ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார். (மேலும்.....) பங்குனி 25, 2012 இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது உள்நாட்டு அரசியலின் நெருக்கடியால்தான் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் பெரீஸ், வாக்கெடுப்பின்போது மறைமுகமாக இந்தியாவைக் குறிப்பிட்டாலும், இலங்கைத் தமிழர் விவகாரத்தில் முதல்முறையாக இந்திய அரசு இப்போதுதான் ராஜதந்திரத்துடன் செயல்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இவ்வாறு சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழான தினமணி தனது ஆசிரியத் தலைங்கத்தில் தெரிவித்துள்ளது. (மேலும்.....)பங்குனி 25, 2012 நீதி கேட்டு ஐ.நா.முன்றலில் திரண்ட தேசிய பற்றாளர்கள்! இலங்கை மக்கள் மத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள். ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனிதவுரிமைகள் தொடர்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் இலங்கைக்கு ஆதரவு தர அணிதிரண்டு வருகைதந்து ஐ.நா முன்றலில் தேசிய பற்றாளர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்பாட்ட பேரணிக்கு தார்மீக ஆதரவினை வழங்கும் பொருட்டு ஐ.நா மனிதவுரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பல நிகழ்ச்சி நிரல்களுக்கு மத்தியிலும் நேரடியாகச் சென்று அவ்விடத்தில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் உரையாற்றியதுடன் தனதும், அரசாங்கத்தினதும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். அவருடைய வருகைதனை சற்றும் எதிர்பார்த்திராத மக்கள் அவரைக் கண்டதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வரவேற்றதுடன், அவருடன் இணைந்து புகைப்படங்களும் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். பங்குனி 25, 2012 அச்சுறுத்தலுக்கு அடிபணிய போவதில்லை! - ஜனாதிபதி ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில், இலங்கை எதிர்கொண்ட தோல்வி குறித்து, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியடைவதாகவும், எனினும், எப்பொழுதும் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு அடிபணிய இடம்தரப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார். களுத்துறை மாவட்டத்தில் உள்ள பண்டாரகமவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (மேலும்.....) பங்குனி 25, 2012 இலங்கை தமிழ் அகதி குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை - ஜெயலலிதா தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கி வாழும் இலங்கைத் தமிழர்கள் நலன்காக்க தமிழக முதல்-அமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அகதிகள் முகாமில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி படிப்பதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் கூடுதல் இடங்கள் எற்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,தமிழக அரசால் பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியப் பலன்களையும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். (மேலும்.....) பங்குனி 25, 2012 Hiroshima and Nagasaki At 1945
Now =+= wow!!!!
பங்குனி 25, 2012 அமெரிக்க நீர்மோர் தீர்மானத்தை தண்ணீராக்கியது இந்தியா - விஜயகாந்த் அமெரிக்காவும், இந்தியாவை தன் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதி, திருத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஒரு நாட்டின் உள் விவகாரத்தில் தலையிட அனுமதிக்ககூடாது என்றும், அந்நாட்டின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு இந்தியா காரணம் கற்பித்துள்ளது. இறையாண்மை என்பதன் மூலம், தன் சொந்த மக்களை கொன்று குவிப்பதற்கு எந்த அரசையும் அனுமதிக்ககூடாது. அமெரிக்க தீர்மானம் நீர் மோர் என்றால், இந்தியாவினுடைய தலையீடு அதில் மேலும் தண்ணீரை சேர்த்து நீர்த்து போக செய்துவிட்டது. இலங்கை குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பட வேண்டும் என்ற போக்கை மாற்றி, அதை அப்பாவி நாடாக கருதுகிற அணுகுமுறையையே, இந்திய அரசு மேற்கொண்டது. தீர்மானத்தை திருத்தியதன் மூலம், தங்களுக்கு இந்தியா மிகப்பெரிய சலுகையை செய்துள்ளதாக, இலங்கை அதிகார வர்க்கம் மகிழ்ச்சி அடைந்துள்ளது. (மேலும்.....) பங்குனி 25, 2012 வரலாற்றில் மிகப்பெரிய தவறாக அமையும்-அமெரிக்காவுக்கு காஸ்ட்ரோ எச்சரிக்கை ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால் தனது வரலாற்றிலேயே அமெரிக்கா செய்யும் மிகப்பெரும் தவறாக அமைந்துவிடும் என்று கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு ஈரானைத் தாக்க அமெரிக்கா முடிவெடுத்தால், அதன் வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறாக அமைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஈரானின் அணுசக்தி மையத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இந்த நோக்கத்திற்காக தயாரிக்கப்பட்ட குண்டுகளுக்காக கோடிக்கணக்கான டாலர்களை அமெரிக்கா செலவழித்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, வரலாற்றிலேயே மிகப்பெரிய தவறை அமெரிக்கா செய்யத்தான் போகிறது. ஒரு குண்டைக்கூட பாய்ச்சாமல் ஈரான் ராணுவம் சரணடைந்துவிடும் என்று அமெரிக்கா நினைத்துக் கொண்டிருக்கிறது. அது தவறான எண்ணமாகும். (மேலும்.....)பங்குனி 25, 2012 வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடித்த TNA ! ஜெனீவா மனித உரிமை கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் முன்வைக் கப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வர வேற்பதாக அறிவித்துள்ளது. தமிழ் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பானது பாதையில் கிடந்த வழித் தேங்காயை எடுத்து தெருவோரப் பிள்ளையாருக்கு அடித்த கதையாகவே உள்ளதாகப் பலரும் தெரிவித்துள்ளனர். உள்ளூரில் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள தமிழ் கூட்டமைப்பு அதனைக் களைவதற்கு கச்சிதமாக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மீண்டுமொரு தடவை தமிழ் மக்களை மடையர்களாக்க எண்ணியுள்ளதாகவும் மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். (மேலும்.....) பங்குனி 25, 2012 அமெரிக்க மேலாதிக்கத்திற்கு சவால் விடுத்த ஜனநாயகம்! இலங்கைக்கு எதிராக போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுப் பிரேரணையை ஜெனீவாவில் முன்வைத்த அமெரிக்கா அதில் எதிர்பார்த்த வெற் றியைப் பெற முடியாது முதற் தடவையாக சர்வதேச அரங்கில் பாரிய தலைகுனி வைக் கண்டுள்ளது. உலக நாடுகளுக்கெல்லாம் தானே தலைவன் என்றும் எந்த நாட்டில் எது நடந்தாலும் அதனைக் கண்காணிப்பது மட்டுமல்லாது கட்டுப்படுத்தும் உரிமையும் தனக்குள்ளதாக மார்தட்டி வந்த அமெரிக்கா, இலங்கை விவகாரத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளது. பிரேரணைக்கு ஆதரவாக இருபத்து நான்கு நாடுகள் வாக்களித்திருந்தன எதிராக பதி னைந்து நாடுகள் வாக்களித்திருந்த நிலையில் எட்டு நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. உண்மையில் இந்த எட்டு நாடுகளும் எதிர்காலத்தில் அமெரிக்காவின் நெருக்குதல்கள் தமக்கு ஏற்படலாம் எனக் கருதியே வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லை. இல்லையேல் நிச்சயம் அந்நாடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சார்பாக வாக் களித்திருக்கும். (மேலும்.....) பங்குனி 25, 2012 தனது இருப்பை தக்கவைக்க பிரபாகரனை துணைக்கு அழைக்கும் கலைஞர் கருணாநிதி தன்னால் தான் இந்தியா ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகச் செயற்பட்டது எனக் கூறி தமிழகத்தில் தனக்கு வீழ்ச்சி கண்டிருந்த மக்கள் செல்வாக்கை மீண்டும் கட்டியெழுப்பவும், தனது குடும்பத்திற்கு எதிராக மத்திய அரசினால் தொடுக்கப்பட்டுள்ள நிதி மோசடி வழக்குகளைத் தள்ளுபடி செய்யவும் முன் னாள் முதல்வர் கருணாநிதி பகீரதப் பிரயத் தனம் செய்து வருகிறார். இதற்காக அவர் இப்போது மரணித்த பிரபாகரனையும் துணைக்கு அழைத்துள்ளார். தனி ஈழத்துக்கான பிரபாகரன் போராட்டம் தவறானது என்று கூறும் அளவுக்கு நான் முட்டாள் இல்லை. அவர் போராட்டம் சரியானதே. ஆனால் சகோதரச் சண்டை தான் தமிழ் ஈழம் அமைவதைக் கெடுத்தது என்று தி. மு. க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். (மேலும்.....) பங்குனி 25, 2012 துன்பங்களை இன்பங்களாக சுமந்து வாழும் எழுவை தீவு மக்கள்
வறுமையும் நேர்மையும் இம்மனிதர்களிடத்தில் இருப்பதை நான் உணர்கிறேன். பெண்களைக் கற்பழித்தல், கொள்ளையிடல், களவுகள் என்பன அவர்களிடையே இல்லை. இவை உருவாகக் காரணம் சமூகமொன்று சிக்கல்களுடன் ஒரு முகப்படுத்தப்படும்போது தான் என்று நான் நினைக்கிறேன். நாம் லேன்ட் மாஸ்டர் மூலம் எழுவை தீவின் பெரிய பாடசாலையான எழுவை தீவு முருகவேல் பாடசாலைக்குச் சென்றோம். உலக உணவு அமைப்பினால் கிடைத்த பருப்பு போன்றவை அந்த பாடசாலைகளின் முற்றங்களில் வெய்யிலில் காயவிடப்பட்டிருந்தன. சரியாக செருப்பு சப்பாத்து கூட இல்லாமல் சிறு பிள்ளைகள் அச்சந்தர்ப்பத்தில் பகல் போசனத்தை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிறிய பலகையினாலான ஒரு பலகைக் கட்டொன்றில் உட்கார்ந்து இருந்த இந்த சின்னஞ் சிறுசுகள் எல்லோரினது முகங்களிலும் துக்கத்துடன் கூடிய போஷாக்கின்மையால் வாடுவதன் அறிகுறிகள் வரைந்திருப்பதாக நினைக்கிறேன். (மேலும்.....) பங்குனி 24, 2012 அமெரிக்காவிற்கான எதிர்ப்பு இலங்கையில் வலுக்கின்றது
ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியதால், இலங்கை கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும்படி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் புலிகளுடன் உச்ச கட்ட போர் நடந்த போது,மனித உரிமைகள் குறித்து விசாரணை நடத்த வலியுறுத்தி, ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் கடந்த 22ம் தேதி நிறைவேறியது. இதையடுத்து, அமெரிக்காவுக்கு எதிராக கொழும்பு உள்பட பல இடங்களில் போராட்டங்கள் நடந்தன. கொழும்பு ரயில் நிலையத்தில் நேற்று நடந்த போராட்டத்தின் போது, கோதுமை மாவு, கோக கோலா, பெப்சி போன்ற எந்த அமெரிக்க பொருளையும் பயன்படுத்த வேண்டாம். அமெரிக்க பொருட்களை ஒழிப்போம், புறக்கணிப்போம்Υ என்று கோஷமிட்டனர்.இதுகுறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் குணதாசா அமரசேகரா கூறுகையில், அமெரிக்க பொருட்களை நாங்கள் புறக்கணிப்பதை பற்றி அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கிறோம். இதன் மூலம் அமெரிக்காவுக்கு எதிரான எண்ணத்தை இலங்கை மக்களிடம் அதிகரிப்போம் என்றார். பங்குனி 24, 2012 ஒரு புறம் இலங்கைக்கு எதிரான பிரேரணை மறு புறம் இலங்கைக்கு ஆயுத விற்பனை அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகிறது, இலங்கைக்கு ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா 1980களில் இலங்கை அரசுக்கு விதிக்கப்பட்ட ஆயுதக் கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தற்போது திடீரென தளர்த்தியுள்ளது. ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிய கையோடு, இந்த ஆயுத விற்பனை கட்டுப்பாடுகள் தளர்த்தல் என்பது அமெரிக் காவின் இரட்டை வேடத் தை அம்பலப்படுத்தியுள்ளது. ஆனால் இந்த இரண்டுக் கும் இடையே எந்தவித மான தொடர்பும் இல்லை என்று அமெரிக்க வெளி யுறவுத்துறை விளக்கம் கூறிக்கொண்டிருக்கிறது. எல்டிடிஇக்கு எதிரான போரின் கடைசிக் கட் டத்தில் தமிழ் மக்கள் மீது நடந்த மனித உரிமை மீறல் கள் தொடர்பாக இலங்கை அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை முக்கியமாக வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானம் வியாழ னன்று நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இலங் கைக்கான ஆயுத விற்பனை கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு தடாலடியாக தளர்த்தியுள்ளது. வியாழக்கிழமை முதல் இந்த கட்டுப்பாடு தளர்வு அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவுப்படி, இலகு ரக விமானங்கள், கண் காணிப்பு கேமராக்கள், அதுதொடர்பான பொருட் களை அமெரிக்காவி லிருந்து இலங்கை வாங்கிக் கொள்ள முடியுமாம். குறிப்பாக வான் மற்றும் கடல் மார்க்கமான கண் காணிப்புக்குத் தேவையான உபகரணங்களை இனி அமெரிக்காவிடமிருந்து இலங்கை பெற முடியும். இதனிடையே, இலங்கை அரசுடன் இணைந்து செயல் பட தயாராக இருக்கிறோம் என்றும், இலங்கையுடன் பேச ஆவலாக உள்ளோம் என்றும் அமெரிக்க வெளி யுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார். பங்குனி 24, 2012 அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்? ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா ஓட்டளித்ததால் அமெரிக்கா பக்கம் சாய்ந்ததாக அர்த்தம் இல்லை . ஏனெனில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தில் இலங்கையின் எதிர்கால நல்வாழ்வைச் சுட்டிக்காட்டும் வகையில் சில வாசகங்களை இந்தியா சேர்த்த செயல் அதற்கு ஆதாரம். ஐ.நா., மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கை மீது அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றது. இந்தியா உள்ளிட்ட 24 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. இந்தியா மேற்கொண்ட நிலை இலங்கையை சற்று பாதித்திருக்கிறது. அதே சமயம், தமிழகத்தின் கருத்துக்களைப் பிரதிபலிக்கும் வகையில் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆதரவாக இந்தியா இம்மாதிரி முடிவை எடுத்தது என்று பேசப்படுகிறது. தீர்மானம் கொண்டு வரப்படும் வரை, இந்தியா தனக்குத் தான் ஓட்டளிக்கும் என இலங்கை மிகவும் நம்பிக்கையுடன் கூறி வந்தது. (மேலும்....)பங்குனி 24, 2012 இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா.வில் அதிரடி- தனிமைப்படுத்தப்பட்டது அமெரிக்கா! இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு. இது தொடர்பான தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்லாமிய நாடுகள் சார்பில் பாகிஸ்தான் முன்வைத்தது. கியூபா, வெனிஸுலா நார்வே, இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட 36 நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தன. இத்தாலி, ஸ்பெயின், உட்பட 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. அமெரிக்கா மட்டுமே இஸ்ரேலுக்கு ஆதரவாக அதாவது தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தது. இத்தகைய தீர்மானங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு நிராகரித்துள்ளார். தங்களது பிரதேசத்தில் இத்தீர்மானம் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதும் இஸ்ரேலின் கருத்து. பங்குனி 24, 2012 ஜ.நா வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை மக்கள் மத்தியில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என யாழ் அரச அதிபரிடம் ஆலேசனை பெற்ற கனடா நாட்டு பாரளுமனறக் குழு!பங்குனி 24, 2012 சகலரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வை விரைவில் முன்வைப்போம் - டி. யூ. குணசேகர
எமது நாட்டின் பிரச்சினைகளுக்கு எமக்கே உரித்தான தீர்வை சகல தரப்பினரும்ஏற்கும் வகையில்உரிய காலப் பகுதிக்குள் நாம் முன்வைப்போம். வெளிநாடுகள் முன்வைக்கும் தீர்வை நாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை. இலங்கையின் எதிர்காலம் தொடர்பில் தெரிவிக்கப்படும் முன்னேற்றமான கருத்துகளை நாம் ஏற்கத்தயார். சர்வதேச சமூகம் எமக்கு ஒத்துழைப்பு வழங்கும் என எதிர்பார்க்கிறோம். உள்நாட்டு விவகாரம் தொடர்பில் வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க முடியாது. சில அயல் நாடுகளும் சம்பிரதாய நட்பு நாடுகளும் உள்ளக அழுத்தம் காரணமாக வேறு விதமாக முடிவு எடுத்தது குறித்து நாம் தெளிவாகவே உள்ளோம். ஆனால் எமது நாடுகளுக்கிடையிலான நீண்ட கால இராஜதந்திரி தொடர்புகள் இந்தப் பிரச்சினையால் குறையவோ வீழ்ச்சியடையவோ மாட்டாது. எக்காரணம் கொண்டும் எந்த நாட்டுக்கும் எமது நாட்டின் மீது அழுத்தம் மேற்கொள்ள இடமளிக்க மாட்டோம். எமக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு நன்றி கூறுவதோடு வாக்களிப்பில் இருந்து தவிர்த்த நாடுகளுக்கும் நன்றியை தெரிவிக்கிறோம். 24 நாடுகள் ஆதரவாக வாக்களித்த போதும் 23 நாடுகள் இதனை எதிர்த்தன. எனவே, ஒரு மேலதிக வாக்காலேயே இந்த பிரேரணை நிறைவேறியது. (மேலும்....) பங்குனி 24, 2012 முடிவல்ல... துவக்கம் தான் இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. சபை மனித உரிமை கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர் மானம் இந்தியா உள்ளிட்ட 24 நாடுகளின் ஆதர வுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட் டார்கள் என்றும், மருத்துவமனை, செஞ்சிலுவை சங்க மையங்கள் போன்றவை கூட ராணுவத் தினரின் தாக்குதலிலிருந்து தப்பவில்லை என்றும் ஐ.நா. சபை நியமித்த குழு கூறியது. எஞ்சியுள்ள மக்களுக்கு அளிக்கவேண்டிய நிவாரணம் குறித்த சில பரிந்துரைகளையும் அந்தக்குழு வழங்கியது. ஆனால் அவற்றை நிறைவேற்றுவதற்கான எந்தவொரு முயற்சி யையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. (மேலும்....)பங்குனி 24, 2012 எமது காதலின் பரிசு என்றும் எம்முடன்
பங்குனி 24, 2012 மாவை சேனாதிராஜாவிற்கு விசா வழங்குவதற்கு கனடிய தூதரகம் இழுத்தடிப்பு! கடந்த ஆண்டு நவம்பரில் கனடா சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவருமான திரு மாவை சேனாதிராஜாவிற்கு விசா வழங்குவதற்கு கனடியத் தூதரகம் பின்னடித்துள்ளது. இந்தக் குழுவினர் உத்தியோகபூர்வமாக வருகை தந்திருந்ததன் பிற்பாடு பாரளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் கனடியத் தமிழ்க்காங்கிரஸின் பொங்கல் விழாவிற்கான சிறப்பு விருந்தினராக கனடா செல்வதற்கு கனடியத் தூதரகம் விசா வழங்கியிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவில் இடம்பெற்ற பத்திரிகையொன்றின் நிகழ்விற்கு செல்வதற்காக சில வாரங்களிற்கு முன்னர் திரு. மாவை சேனாதிராஜா விசாவிற்கு விண்ணப்பித்திருந்த போதும். கனடாவிலிருந்து பதில் வரவில்லை என்ற காரணம் கூறி விசா விண்ணப்பம் இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாரமும் கனடாத் தூதரகத்திற்கு மாவை சேனாதிராஜா சென்றிருந்த போதும் அவருக்கு அதே காரணம் கூறப்பட்டதையடுத்து தான் கலந்து கொள்ள வேண்டிய விழா முடிவடைந்து விட்டது எனக் காரணம் கூறி அவர் தனது கடவுச்சீட்டை தூதரகத்திடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார். சுமார் நான்கு மாதங்களிற்கு முன்னர் கனடாவிற்கு சென்றிருந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் கனடா செல்வதற்கு வெளிநாட்டலுவல்கள் பணியகம் கனடாவிலிருந்து பதில் வரவில்லை என்று கூறியது வியப்பிற்குரியதாக நோக்கப்படுகிறது. பங்குனி 24, 2012 இலங்கை வானொலிக் குயிலின் ஓசை நிரந்தரமாகவே நின்று போனது!
இலங்கையின் 'வானொலிக் குயில்' என அழைக்கப்பட்ட புலமை வாய்ந்த வானொலி அறிவிப்பாளர் ராஜேஷ்வரி சண்முகம் இயற்கை எய்தினார். தனது பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் கொழும்புக்கு புறப்பட்ட வேளை மாரடைப்பால் அவர் காலமானார். கொழும்பில் வாழ்ந்து யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை காலமான அவர் இறக்கும்போது 72 வயதை அடைந்திருந்தார். இன்று உலகமெங்கும் கொடிகட்டிப் பறக்கும் பல மூத்த மற்றும் இளைய அறிவிப்பாளர்களை உருவாக்கிய இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தமிழ்ச் சேவையில் 35வருடங்களுக்கு மேலாக பணியாற்றியவர். 1980களுக்கு முன்னரே அறிவிப்புத் துறையில் கால் பதித்த ராஜேஸ்வரி என்ற வானொலிக் குயில் அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும், வானொலி நாடகங்களின் சிறந்த பாத்திரகர்த்தாவாகவும் தனது பல்துறை சார் திறமைகளை வெளிப்படுத்தியவர் பங்குனி 24, 2012 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அங்கத்துவம் வகிக்கும் 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்கள் கடந்த 14ம் திகதி அனுப்பிய அறிக்கையின் தமிழாக்கம். உண்மையைக் கூறுவது மற்றும் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக இலங்கை அரசாஙகத்துக்கு தீவிரப் பிரச்சனைகள் உள்ளன. 2011 செப்டெம்பர் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் (ஐநாமஉபே) 18 ஆவது கூட்டத்தொடரில் அமைச்சர் மகிந்தா சமரசிங்கா ஆற்றிய உரையை அடுத்து, அந்த உரையின் தவறுகளைத் திருத்தியும்;; 'இலங்கையின் நிலவரத்தை அனைத்துலகச் சமூகத்திற்கு எடுத்துரைக்கும்போது நேர்மையாகவும் உண்மையாகவும'; இருக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியும் அதற்கடுத்த நாளே தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) ஓர் அறிக்கையை வெளியிட்டது. துரதிஸ்டவசமாக, தற்போது நடைபெறும் ஐநாமஉபே இன் 19ஆம் கூட்டத்தொடரிலும் அரசாங்கம் அனைத்துலகச் சமூகத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றுகிறது. (மேலும்....) பங்குனி 24, 2012 தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம்
புரட்சி உங்களிடமிருந்து உணர்ச்சி வேகத்தையோ மரணத்தையோ வேண்டவில்லை. மாறாக உறுதியான போராட்டம் , துன்பங்கள் மற்றும் தியாகங்களையே அது வேண்டுகிறது". - பகத்சிங் மார்ச் 23 தியாகி பகத்சிங் 81 வது நினைவு தினம் பொதுக்கூட்டம் 25 .03 .2012 ( ஞாயிறு ) , மாலை 6 மணியளவில் சமயநல்லூர், தொலைபேசி நிலையம் அருகில் (மேலும்....) பங்குனி 24, 2012 சவுதி அரேபியா, குவைத், கட்டார், பிலிப்பைன்ஸ் போன்ற அமெரிக்காவின் மிக நெருங்கிய தோழமை நாடுகள் கூட இலங்கைக்கு ஆதரவு இலங்கையில் வாழும் ஒன்று இரண்டு அல்ல இருபது மில்லியன் மக்கள் அதுவும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற மூன்று இனங்களையும் சேர்ந்த பெளத்தர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என்ற நான்கு மதத்தவர்களதும் குரலை சிறிதளவேனும் கவனத்தில் எடுப்பதற்கு அமெரிக்கா தவறிவிட்டது. நீண்டகால வரலாற்று பெருமைக்குச் சொந்தமான தேசத்தின் குரலைக் கூட மதிக்காத இவர்கள் தான் மனித உரிமைகளினதும், ஜன நாயகத்தினதும் காவலர்கள் எனக் கூறிக்கொள்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19 வது மாநாட்டில், தாம் சமர்ப்பித்திருக்கின்ற பிரேரணைக்கு ஏன் இல ங்கை மாதாவே ஆட் சேபனை, தெரிவிக்கின்றது என்று ஒரு தரம் அமெரிக்கா நின்று நிதானித்து பார்த் திருக்கலாம். ஆனால் அதனை அமெ ரிக்கா செய்யவில்லை. அதற்கு அதன் அதிகார மமதையும், ஏகாதிபத்திய சிந்தனையும், எண்ணமுமே காரணமேயொழிய மனிதாபிமான பார்வை அல்ல. இலங்கையரின் எதிர்ப் பையும், ஆட்சேபனையையும் பொருட்படுத்தாமல் இப்பிரேரணையை அமெரிக்கா தூக்கிப் பிடித்து நிறைவேற்றி இருக்கின்றது. (மேலும்....) பங்குனி 24, 2012 உலகின் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக கூடங்குளம் உருவாகும் கூடங்குளம் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய அணுமின் உற்பத்தி மையமாக உலகில் அடையாளம் காட்டப்படும் என்று முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அப்துல் கலாம் வெளியிட்டுள்ள அறிக்கை, மின் தேவையில் இந்தியா தன்னிறைவு அடைய, அணு மின் உற்பத்தி தேவை என்று உணர, கூடங்குளம் சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. அணு மின் உற்பத்தி செய்யப் படும் முறை, அணு மின் நிலையங்களின் நம்பகத் தன்மை, அவற்றின் பாதுகாப்பு மட்டு மின்றி, 2030க்குள் மின் உற்பத்தியில் தன்னிறைவடைய அணு மின் சக்தி எவ்வளவு அவசியம் என்பதையும் உணர்ந்து கொள்ள இந்த அனுபவம் உதவியுள்ளது. இது தொடர்பாக எழுந்த விவாதங்கள், பொது மக்களின் மனதைத் தூண்டிவிட்டு, அணு மின் சக்தியின் மூன்று கட்டச் செயல்பாடு களையும், நிலையான எதிர்காலத்துக்கு அது தேவை என்பதையும் புரிந்து கொள்ள வைத்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில், கூடங்குளத்தை மிகப் பெரிய அணு மின் உற்பத்தி மையமாக உலகுக்கு அடையாளம் காட்ட இந்த அணு மின் திட்டம் பயன்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. பங்குனி 24, 2012 உள் விவகாரங்களில் தலையீடு செய்ய சர்வதேசம் பிரேரணையை பயன்படுத்தலாகாது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை மாநாட்டுக்கு கொண்டு வந்த இப்பிரேரணையானது காண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல் வீசும் செயலை ஒத்ததேயன்றி வேறில்லை. இதனை எவரும் மறுக்க மாட்டார்கள். ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், பலஸ்தீனிலும் இடம்பெறுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்காவோ அவர்களது கூட்டாளிகளோ கண்டு கொள்கிறார்களுமில்லை அவற்றை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகளை எடுக்கின்றார்களுமில்லை. அவை குறித்து பேசவே அவர்கள் தயாரில்லை. இப்படியானவர்கள்தான் எம்மை நோக்கி சுட்டு விரலை நீட்டுகின்றார்கள். எமக்கு எதிராகப் பிரேரணை கொண்டு வருகின்றார்கள். ஆனால் அவர்கள் தமது ஏனைய நான்கு விரல் களும் தம்மையே அடையாளம் காட்டுகின்றன என்பதை மறந்துவிடுகின்றார்கள். அதனால்தான் அடுத்தவரை குற்றம் சாட்ட முன்னர் அதற்குரிய தகுதி எம்மிடம் இருக்கிறதா என்பதை முதலில் பரிசீலித்துக் கொள்வது மிக அவசியம் என வலியுறு த்தப்படுகின்றது. (மேலும்....) பங்குனி 24, 2012 மாலியில் ராணுவக்கலகம் ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள குட்டி நாடான மாலியில் ராணுவக் கலகம் நடத்தி, ஜனாதிபதி மாளிகை கைப் பற்றப்பட்டுள்ளது. ஆயுதமுனையில் ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடு முழுவதிலும் ராணுவம் அவசர நிலையை பிரகட னம் செய்துள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவ தற்கு தடைவிதிக்கப்பட் டுள்ளது. இச்சம்பவம் ஆப் பிரிக்க நாடுகளில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆயுதமேந்தி 20 ராணுவ வீரர்கள் ஜனாதிபதி மாளி கையில் முக்கிய ஆலோச னை நடத்தும் காட்சியை மாலி தேசிய தொலைக் காட்சி ஒளிபரப்பியது. முன்னதாக ஜனாதிபதி மாளிகை முன்பு அரசு ஆதர வாளர்களுக்கும் ராணுவத் தின் ஒரு பிரிவினருக்கும் இடையே கடும் துப்பாக்கி மோதல் நடந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஜனாதிபதி யாக உள்ள அமதவ் டூரே, 2002ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவர். அடுத்த மாதம் இவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்நாட்டின் முக்கிய இனக்குழுவான தவ்ரக் இனத்தைச் சேர்ந்த மக்களுக்கு தனிநாடு கோரி மோதல் நடந்து வரும் நிலையில், ராணுவக்கலகம் நடந்துள்ளது. பங்குனி 23, 2012 இந்தியாவின் மனமாற்றம்? (பரம் ஜி) ஜ.நாவில் சிறீலங்காவின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானத்திற்கு தாம் ஆதரவாக வாக்களிக்கப்போவதாக இந்தியா அறிவித்துள்ளதானது, மக்கள் சக்த்தியே மகேசன் சக்தி என்பதனை, ஆயுத சக்தியை நம்பும் அல்லது விரும்பும் மனிதர்களுக்கு மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்தி இருக்கின்றது எனலாம். மதில்மேல் பூனையாக இதுவரை காலமும் இருந்து வந்த இந்தியா எந்தப்பக்கம் பாயும் என்பது கோள்விக்குறியாக சென்ற வாரம் வரை இருந்ததனால், அமெரிக்காவின் தீர்மானத்திற்கு எத்தனை நாடுகள் ஆதரவு கொடுத்தாலென்ன, எத்தனை நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலென்ன, அதாவது சிறீலங்காவிற்கு ஆதரவு தெரிவித்தாலென்ன, உலக நாடுகள் பார்த்து கொண்டிருப்பது இந்தியா என்ன செய்யப்போகின்றது என்பதையே பிரதமர் மன்மோகன்சிங் இப்போது தந்து இருப்பதானது ஜ.நாவில் சிறீலங்காவின் போர்க்குற்றங்கள் பற்றிய தீர்மான நிலைமைகளை சூடேற்றி வைத்துள்ளது எனலாம். இந்தியாவிடம் இந்த மனமாற்றத்தை கொண்டு வரவைப்பதற்கு பல விடயங்கள் காரணமாக இருந்திருப்பதாவே எண்ணத்தோன்றகின்றது.(மேலும்....) பங்குனி 23, 2012 இந்தியாவின் நிலைப்பாட்டின் மூலம் இரு தரப்பு உறவுக்கு பாதிப்பில்லை ஜெனீவா விவகாரம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாட்டின் மூலம் இலங்கைக்கும்- இந்தியாவுக்கும் இடையிலான நல்லுறவுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லை என்று தகவல், ஊடகத்துறை பதில் அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளரு மான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். ஜெனீவா பிரேரணை தொடர்பில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்ளூர் அரசியல் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை மிகவும் புரிந்துணர்வுடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜெனீவா விவகாரத்தை வைத்து சிலர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கின்ற போதிலும் இரு நாடுகளும் புரிந்துணர்வுகளுடன் செயற்படுகின்றன. மேலும் இரண்டு வருடங்களுக்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை இந்தியாவுக்கு உண்டு. நாங்களாக இருந்தாலும் சரி, அல்லது எந்தவொரு நாடாக இருந்தாலும் தமது ஆட்சியை பாதுகாத்துக் கொண்டே ஏனைய நாட்டும் உதவி செய்ய முன்வரும் என்றார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் பலம் வாய்ந்தது. எமது பிராந்தியத்தில் பலம் வாய்ந்த நாடுகளில் ஒன்று அந்த அடிப்படையில் இந்தியாவின் உதவி எமக்கு எப்போதும் தேவைப் படுகின்றது. அவர்கள் தங்களது உள்நாட்டு நிலைமையை கருத்திற் கொண்டு எந்த ஒரு தீர்மானங்களை எடுத்தாலும் பரவாயில்லை, அது தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு கேட்பது எமது பொறுப்பாகும். எனவே எதிர்காலத்திலும் இந்தியாவின் உதவி, ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் என்றார். பங்குனி 23, 2012 UN to probe West Bank settlements Netanyahu slams UN Human Rights Council as hypocritical after the passage of 5 resolutions condemning Israel ( ILAN BEN ZION and RAPHAEL AHREN) UN Human Rights Council passed five resolutions against Israel on Thursday, including one resolution calling for a UN investigation into Israeli settlements, triggering fierce reactions from Israeli and American diplomats. Thirty-six countries voted in favor of the resolution condemning Israels settlement policy and calling on Israel to reverse the settlement policy in the occupied territories, as a first step towards dismantling all of the Jewish communities in the West Bank, East Jerusalem, and Golan Heights. The resolution also called upon the Israeli government to adopt stricter measures against settlers, including the confiscation of arms and enforcement of criminal sanctions, in order to protect Palestinians. (more....) பங்குனி 23, 2012 ஜெனீவா தீர்மானம் இலங்கைக்கு இராஜதந்திர வெற்றி அமெரிக்காவின் இலங்கைக்கு எதிரான பிரேரணை வெற்றி பெற்றிருப்பது என்பது பெரும் ஆச்சர்யத்திற்குரியதல்ல. 47 நாடுகள் அங்கம் வகிக்கின்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 24 நாடுகள் பிரேரணையை ஆதரித்திருக்கின்றன. 15 நாடுகள் பிரேரணையை நேரடியாக எதிர்த்து வாக்களித்திருக் கின்றன. அதாவது இலங்கையை நேரடியாக ஆதரித்திருக்கின்றன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்காவின் நேரடி அச்சுறுத்தலினாலேயே இந்த 8 நாடுகளும் வாக்கெடுப்பில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளன என்றாலும் இந்த நாடுகள் அனைத்தும் இலங்கைக்குச் சார்பான கருத்துக்களை கூறிவிட்டே வாக்கெடுப்பிலிருந்து ஒதுங்கின. ஜோர்தான், மலேசியா, செனகல், அங்கோலா, தர்கிஸ்தான் உட்பட 8 நாடுகளுமே இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தி களை வெளிப்படையாகவே பாராட்டியுள்ளன. அமெரிக்காவின் அச்சுறுத்தல் இல்லாமல் இவைகளும் வாக்களித்திருந்தால் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் சமபலம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகி யிருக்கும். (மேலும்....) பங்குனி 23, 2012 ஐ.நா.மனித உரிமை பேரவை இந்தியாவின் முடிவுக்கு ப. சிதம்பரமே காரணம்ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்தமைக்கு பின்னணியில் இருந்து செயற்பட்டவர் இந்திய மத்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் என்று நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழ் நாட்டின் சிவகங்கை தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு ப.சிதம்பரம் தெரிவானார். இந்தத் தேர்தலில் ப. சிதம்பரம் மிகவும் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றியீட்டினார். இந்தத் தடவையும் தனக்கு தோல்வி ஏற்பட்டுவிடும் என்று அஞ்சியே, தமிழ் நாட்டு மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக இலங்கைக்கு எதிராக இவ்விதம் செயற் பட்டார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இவர் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கொண்டுவந்த அழுத்தங்கள் காரணமாகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்ததாகவும் கூறப்படுகின்றது. இந்தப் பிரேரணையை இந்தியா ஆதரித்து வாக்களித்தால் தமிழ் நாட்டில் உள்ள தி.மு.க. எம்.பிக்களும் வேறு தமிழ் ஆதரவு எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தற்போது விவாதத்திற்கு எடுத்துக் கொண்டுள்ள வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பர் என்று சிதம்பரம் தெரிவித்த கருத்தை அடுத்தே இந்திய மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. பங்குனி 23, 2012 அமெரிக்கா வென்றது அதிகாரம் நீதியை தோற்கடித்தது
உலக வல்லரசு என்ற போர்வையில் அமெரிக்கா தனது அதிகாரத்தை சிறு சிறு நாடுகள் மீது
பிரயோகித்ததால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இலங்கைக்கு எதிரான பிரேரணை
நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவின் அழுத்தங்கள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் ரஷ்யா,
சீனா, கியூபா, பங்களாதேசம், மாலைதீவு கொங்கோ, ஈக்குவடோர், இந்தோனேசியா, குவைத்,
மொரிட்டானியா, பிலிப்பைன்ஸ், கட்டார், சவூதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா ஆகிய 15
நாடுகளும் இப்பிரேரணைக்கு எதிராக இலங்கைக்கு ஆதரவளித்து வாக்களித்தன. இந்த நாடுகள்
இப்பிரேரணையை முழுமையாக நிராகரித்தன. இதேநேரம் அங்கோலா, பொட்சுவானா, புர்கினா பாகோ,
ஜோர்தான், கிர்கிஸ்தான், மலேசியா, செனகல், டிஜிபோட்டி ஆகிய எட்டு (08) நாடுகளும் இப்
பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இப்பிரேரணைக்கு ஆதரவாக அமெரிக்கா,
இந்தியா, இத்தாலி, நோர்வே, சுவிட்சர்லாந்து, செக் குடியரசு, ஒஸ்ரியா, பெல்ஜியம்,
பெனின், கெமரூன், சிலி, கொஸ்டாரிக்கா, கெளத்தமாலா, ஹங்கேரி, லிபியா, மொரீஸியஸ்,
மெக்ஸிகோ, நைஜீரியா, பேரு, போலந்து, மோல்டோவா, ருமேனியா, ஸ்பெயின், உருகுவே ஆகிய 24
நாடுகளுமே வாக்களித்தன.
(மேலும்....) பங்குனி 23, 2012 ஆண் வழுக்கைக்கு காரணி கண்டு பிடிப்பு ஆண்களுக்கு வழுக்கை விழுவதற்கான உயிரியல் காரணிகளை கண்டறிந்துள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இதன் மூலம் வழுக்கை விழுவதை தடுக்க அல்லது புதிதாக முடியை வளரச் செய்ய சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கு முடி இழப்பதற்கான காரணி பற்றி எலிகளைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் முடி இழப்பை தூண்டும் புரதம் ஒன்றே ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட காரணம் என அனு மானிக்க ப்பட்டுள்ளது. இதற்கு பகரமாக சிகிச்சை அளிக்க முடியும் என ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். நடுத்தர வயதை எட்டும் போது பெரும்பாலான ஆண்களுக்கு வழுக்கை ஏற்பட ஆரம்பிக்கிறது. இதற்கு ஆண்களின் மரபணு காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பங்குனி 22, 2012 ஐநா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான அமெரிக்கத் தீர்மான சுருக்கம்!
அமெரிக்காவினால் ஜெனீவா மனித உரிமைச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையின்
முன்வரைவு, 2012 மார்ச் 7 ஆம் திகதி, ஐநா மனித உரிமைச் சபையின் 47
உறுப்புநாடுகளுக்கும் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. அமெரிக்காவால்
சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் முன்வரைபு இவ்வாறு அமைந்திருந்தது
(மேலும்....) இலங்கைக்கு எதிரான பிரேரணை ஐநா பேரவையில் வெற்றி : ஆதரவாக 24 நாடுகள், எதிராக 15 நாடுகள் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சற்று முன்னர் சம்ர்ப்பித்த பிரேரணை வெற்றியளித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாக்களிப்பின் போது அமெரிக்காவுக்கு ஆதரவாக 24 நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகளும் வாக்களித்திருந்தன. இலங்கை தொடர்பில் அமெரிக்கா மிதமான சமச்சீரான பிரேரணை ஒன்றையே ஐநா மனித உரிமை பேரவையில் முன்வைத்ததெனவும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே பிரேரணையின் நோக்கம் எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கைக்கு 3 வருட கால அவகாசம் இருந்ததாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது. பிரேரணை நிறைவேறுவதன் மூலம் இலங்கையில் நல்லிணக்கம் அமைதி, சமாதானம் என்பவற்றை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரேரணை குறித்த விவாதத்தின்போது சபையில் இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், மகிந்த சமரசிங்க, மொகான் பீரிஸ் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இலங்கை தரப்பு வாதங்களை முன் வைத்து விசேட தூதுவர் மகிந்த சமரசிங்க உரையாறியிருந்தார். அமெரிக்காவின் பிரேரணை 9 அதிகப்படியான வாக்குளால் நிறைவேறியது. இப்பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா உட்பட 24 நாடுகளும் எதிராக சீனா மற்றும் ரஷ்யா உட்பட 15 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. பங்குனி 22, 2012 இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா, ஆதரவாக வாக்களித்த மலேசியா மனித உரிமைப்பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா ஆதரவாக வாக்களித்துள்ளது. வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா தனது வெளிநாட்டுக் கொள்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு அரசியல் அழுத்தம் காரணமாகவே இந்தியா இம்முடிவை எடுத்ததாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தற்போதைய காங்கிரஸ் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தி.மு.க உறுப்பினர் அரசிற்கான தமது ஆதரவினை வாபஸ் பெறப் போவதாக அறிவித்தமையே இதில் முக்கிய பங்குவகிப்பதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இந்தியாவின் இந்நடவடிக்கையானது இலங்கை மற்றும் இந்தியாவிற்கிடையிலான இராஜதந்திர உறவில் எத்தகைய தாக்கத்தினை ஏற்படுத்தப்போகின்றது என்பது தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிராக மலேசியா வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நாவிற்கான மலேசியாவின் விசேட பிரதிநிதி பரம் குமாரசுவாமியே இத்தகவலை வெளியிட்டுள்ளார். அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்தே இம்முடிவை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மலேசிய ஊடகமொன்றிற்குக் கருத்துத் தெரிவித்துள்ள குமாரசுவாமி, ஜெனீவாவில் இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அது குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை ஏற்படுத்தாது. இது ஒரு வலுவற்ற பிரேரணை எனவும் குறிப்பிட்டுள்ளார். ___ பங்குனி 22, 2012 ஜெனீவாவில் இன்று வாக்கெடுப்புஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட் டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. ஜெனீவா நேரப்படி காலை 9 மணிக்கு (இலங்கை நேரப்படி 12.30க்கு) இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுமென ஜெனீவா வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது. 47 நாடுகள் அங்கம் வகிக்கும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமானது. நாளை 23 ஆம் திகதியுடன் கூட்டத் தொடர் நிறைவடைகிறது. இந்த ஒரு மாதகால கூட்டத் தொடரின் ஆரம்பத்தில் அமெரிக்கா, இலங்கை மீதான பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித் திருந்தது. இதனைத் தோற்கடிப்பதற்கு இலங்கை நேசநாடுகளின் உதவியுடன் சகல முயற்சிகளையும் எடுத்துள்ளது. அமெரிக்கா கொண்டு வந்துள்ள போலிக் குற்றச்சாட்டுகள் அடங்கிய பிரே ரணையைக் கண்டித்து உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இலங்கையர்கள் ஆர்ப் பாட்டம் நடத்தி வருகின்றனர். பங்குனி 22, 2012 Best to abstain
But if India decides to support the resolution, it must first talk to Sri Lanka With the annihilation of the LTTE leadership, the Sri Lankan government and the Sinhala nationalists may have thought that the 80-year-old ethnic conflict in the country has been settled, fully and finally. But now the basic issues of the conflict have been resurrected in international fora, with allegations of war crimes and violations of human rights. The Sinhala-Tamil ethnic conflict ceased to be an internal affair of Sri Lanka in the 1980s it first became a bilateral issue between India and Sri Lanka, and after 2000 it caught the attention of international communities. Although the internationalisation of the ethnic problem of Sri Lanka began with the engagement of Norway in the talks between the Sri Lankan government and the LTTE, it escalated with the release of a UN expert panel report, called the Darusman Report, which blamed both the Sri Lankan government and the LTTE for war crimes during the final stages of war. Now with the Channel 4 videos and the US-proposed resolution, the Sri Lankan conflict has been entrenched as an important international issue. (more....) பங்குனி 22, 2012வழிகாட்டும் லத்தீன் அமெரிக்க நாடுகள்! (வெ.மன்னார்) வாழைக்குடியரசுகள் என்றும், அமெ ரிக்காவின் கொல்லைப்புற நாடுகள் என்றும் அறியப்பட்டிருந்த லத்தீன் அமெரிக்க நாடுகள், அமெரிக்காவின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட காலம் மலையேறி விட்டது. நிதி மூலதனம் தன் தாராளமயக் கொள்கையை முதன்முதலில் இங்குதான் பரிசோதனை செய்து பார்த்தது. ஜனநாயக அரசாக இருந்தாலும் சர்வாதிகார அரசாக இருந்தாலும் அவையனைத்தும் அமெரிக் காவின் இஷ்டப்படியே செயல்பட்டுக் கொண் டிருந்தன. இந்த நாடுகள் அனைத்தையும் ஓஏயு என்ற அமைப்பின் கீழ்கொண்டு வந்து தன் மேலாதிக்கத்தை செலுத்தி வந்த அமெரிக்கா, இன்று தானே நம்ப முடியாத அளவுக்கு செல்வாக்கிழந்து, வெறுக்கப்படும் நாடாக லத்தீன் அமெரிக்க மக்கள் மத்தியில் மாறிவிட்டது. இந்த பிராந்தியத்தில் உள்ள 33 நாடுகளும் செலாக் என்ற அமைப்பை உரு வாக்கி, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சவால் விடும் நிலைக்கு வளர்ந்து வருகிறது. (மேலும்....)பங்குனி 22, 2012 ஆஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக இலங்கை தமிழர்களை கடத்தியவர் கைது நாகபட்டினத்தில் சிக்கினார்
இலங்கையில் வாழ வழியின்றி தவிக்கும் இலங்கை
தமிழர்களின் மனதை மாற்றி அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு கடத்திச் சென்றவர் பொலிசில்
சிக்கினார். இலங்கையில் ஜப்னா பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்(43) இவர் சிறுவயதிலேயே
வீட்டை விட்டு ஓடிச் சென்று இத்தாலியில் குடிபுகுந்தார். இதனால் அவரை இத்தாலி ராஜன்
என்று அழைப்பார்கள். இவர் இலங்கைத் தமிழர்களை கடல் வழியாக நவீன படகு மூலம்
ஆஸ்திரேலியாவுக்கு கடத்தி செல்லும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.இது தொடர்பாக
இலங்கையில் இவர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது.தலைமறைவான இவரை இன்டர்போல்
போலிசாரும் தேடிவந்தனர். இந்நிலையில் இத்தாலி ராஜன், நாகபட்டினம் பகுயிதில்
சுற்றிதிரிவதாக கியூ பிரிவு போலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரை
பிடிப்பதற்காக போலிசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். நாகபட்டினம்
பகுதியில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஆட்களை கடத்தி செல்லதிட்டம் போட்டு செயல்பட்ட
இத்தாலி ராஜன் போலிசில் சிக்கினார். அவரை கைது செய்து போலிசார் சிறையில் அடைத்தனர்.
(மேலும்....) வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக்க முடியாது - ஜனாதிபதிமுப்பது வருட யுத்தத்துக்குப் பின் நாடு அபிவிருத்தியில் கட்டியெழுப்பப்பட்டு வரும் இத்தருணத்தில் வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இடமளிக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். அதேவேளை, நாட்டுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் வரும்போது அரசியல், கட்சி பேதம் பார்க்காது எதிர்க் கட்சி உட்பட சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டிற்கும் மக்களுக்குமான பொறுப்புகளை நிறைவேற்றுவதில் எவ்வித பேதங்களுக்கும் இடமில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அனைத்துத் தரப்பினரும் பொறுப்புடன் செயற்படுவது அவசியம் என தெரிவித்தார். மக்களுக்குப் பொறுப்புக் கூறுபவர்களாகவும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகவும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் செயற்படுவது முக்கியமெனவும் அவர் தெரிவித்தார். (மேலும்....) பங்குனி 22, 2012 பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தல் இடது முன்னணிக்கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு அதிகரிப்பு நடப்பாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவிருக்கும் பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இடது முன்னணி வேட்பாளரான ஜீன் லக் மெலென்சோனுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. போட்டியில் அவர் இருக்கிறார் என்ற செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஊடகங்கள் மறுத்து வருகின்றன. இந்நிலையில்தான் கருத்துக் கணிப்புகளில் இரட்டை இலக்க சதவிகித வாக்குகள் ஜீனுக்குக் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. இன்னும் பிரச்சாரங்கள் தீவிரமடையாத நிலையில் அவருக்கு 11 சதவிகித வாக்குகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய முன்னணியின் லீ பென் மற்றும் நடுத்தரக் கொள்கைகளை பின்பற்றுபவர் என்று முன்னிறுத்தப்படும் பிரான்கோயிஸ் பேய்ரூ ஆகிய இருவருக்கும் இணையாக அவர் வாக்குகளைப் பெறுவார். (மேலும்....)பங்குனி 22, 2012 இந்தியாவின் தீர்மானம் வரவேற்கத்தக்கது - புளொட் தலைவர் சித்தார்த்தன் அமெரிக்காவின் ஜெனீவாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு இந்தியா எடுத்த தீர்மானத்தை வரவேற்பதாகவும், இதற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளே உந்துசக்தியாக அமைந்ததாகவும் புளொட் தலைவர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நிறைவேற்றினால் சர்வதேசத்தின் நேரடித் தலையீடுகளுக்கு இடமே இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக இலங்கை இந்தியாவிடம் பல்வேறு உறுதிமொழிகளை வழங்கியது. ஆனால் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறானதோர் சூழ்நிலையிலேயே அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணையை முன்வைத்தது. அத்தோடு நல்லிணக்க ஆணைக்குழுவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே நிறுவியதோடு, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார். அதனை நிறைவேற்றுமாறே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் இப்பிரேரணை தமிழ் மக்கள் சுயமரியாதையுடன் உரிமைகளோடு வாழ வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்வதற்கு தமிழ் நாட்டு காங்கிரஸ் உட்பட திராவிட கட்சிகள் முக்கிய பங்களிப்பையும், அழுத்தத்தையும் கொடுத்தன. இவர்களின் தீவிரமான போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. இனி இலங்கை அரசாங்கத்தின் பக்கத்திலேயே பந்து உள்ளது. எனவே, பரிந்துரைகளை நிறைவேற்றி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு சர்வதேசத்தின் நேரடியான தலையீடுகளை இலங்கை அரசாங்கத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் என புளொட் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார். பங்குனி 22, 2012 American Resolution failed to recognize the contribution of Sri Lankan President to end LTTE terrorists Dr.Swamy Today when America presents the resolution against Sri Lanka in the 19th session of the UN Human Rights Conference, it is learnt that America intends to substitute a clause giving details of the atrocities of the LTTE. Dr. Subramanian Swamy, Janata Party President when speaking to Asian Tribune said that the first draft of the American resolution is insipid and it is one-sided. He said that the resolution has not got the horrendous atrocities committed by the LTTE for the last 26 years and more. He said that is not sufficient. He further said that the American resolution also does not recognize the contribution of Sri Lankan President who determinedly brought to an end to LTTE terrorists in Sri Lanka. Janata Party President Dr. Subramaniam Swamy also said, Therefore it is best if India brings a substitute resolution urging Sri Lankas President to devolve power in the constitution as per the 13th + amendmend and if there are any issues human rights it should be raised bilaterally as the requirement under the SAARC arrangements. By K.T.Rajasingham New Delhi, 22 March, (Asiantribune.com): - Asian Tribune பங்குனி 22, 2012 மே 1 அன்று முழு வேலை நிறுத்தம்-அமெரிக்க வரலாற்றில் புதிய திருப்பம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவில் கடந்த ஆறு மாதங்களாக கைப் பற்றுவோம் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தப் போராட்டங்கள் மீது அமெரிக்கா கடும் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டது. இந்த வாரத்தில் மட்டும் இதுவரையில் 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாயிரத்தைத் தாண்டிவிட்டது. முதன்முதலில் கடந்த ஆண்டு செப்.17 ஆம் தேதியன்று சுக்கோட்டி பூங்காவில்தான் இந்தப் போராட்டம் துவக்கப்பட்டது. ஆறு மாதங்கள் நிறைவு பெறுவதையொட்டி, அந்தப் பூங்காவை மீண்டும் கைப்பற்றப் போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அவர்களின் முயற்சியை முறியடிக்க கைது மற்றும் மிரட்டல் போன்ற வழிகளில் காவல்துறையினர் இறங்கினர். (மேலும்....)பங்குனி 22, 2012 நெருக்கடியை மீறி லத்தீன் அமெ.நாடுகள் வளர்ச்சி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற் பட்டுள்ள நெருக்கடியைத் தாண்டி லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்வ தில் வெற்றி பெற்றுள்ளன. அமெரிக்காவுக்கிடை யிலான வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவரான சாண் டியாகோ லெவி இதைத் தெரிவித்துள்ளார். இது குறித்துக் கருத்து தெரிவித்த அவர், லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளை பொறுத்தவரை நாங்கள் எச்சரிக்கையுடன் இருந்தாலும், வளர்ச்சியைப் பற்றி எந்தவித சந்தேகமும் கிடையாது. கடந்த ஆண்டு களில் இந்தப் பிராந்தியம் நல்ல வளர்ச்சியைக் கண்டி ருக்கிறது. பொருளாதார ரீதியாக ஏற்படவிருந்த அதிர்ச்சிகளைத் தாக்குப் பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சி இருந்தது. இந்த நிலைமைக்குக் காரணம் வலுவான கொள்கைகளை லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகள் உருவாக் கியதேயாகும் என்று குறிப் பிட்டார். (மேலும்....)பங்குனி 22, 2012 சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அ.தி.மு.க அமோக வெற்றி தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க டெபாசிட் இழப்பு அமைச்சர் கருப்பசாமி மரணம் அடைந்ததால் சங்கரன்கோவில்(தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 18ம் தகதி நடந்தது. அ.தி.மு.க சார்பில் முத்தச்செல்வி,தி.மு.க சார்பில் ஜவகர் சூரியகுமார்,ம.தி.மு.க சார்பில் சதன் திருமலைக்குமார்,தே.மு.தி.க சார்பில் முத்துக்குமார், பா.ஜ.க சார்பில் முருகன் உட்பட 13பேர் போட்யிட்டனர். 242 வாக்கு சாவடிகளில் நடந்த இந்த தேர்தலில் மொத்தம்1,59,760 வாக்குகள் பதிவாகின.இது 77.52 சதவீதமாகும். முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன.மொத்தமிருந்த 16 தபால் ஓட்டுக்களில் அ.தி.மு.க வுக்கு 13 ஓட்டுகளும்,ம.தி.மு.க வுக்கு 3 ஓட்டுகளும் கிடைத்தன.தி.மு.க,தே.மு,தி.க வுக்கு தபால் ஒட்டுக்கள் எதும் கிடைக்கவில்லை. (மேலும்....) பங்குனி 22, 2012 சிரியாவின் தலைமைத்துவம் குறித்து ரஷ்யா கடும் விசனம் சிரியாவின் தலைமைத்துவம் நாளுக்கு நாள் பல்வேறு தவறுகளை இழைத்து வருவதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் அமைதியான முறையில் நடத்தப்பட்டது முதல் இன்று வரை ஜனாதிபதி பஷார் அல் அசாத்தின் நிர்வாகம் நியாயமற்ற விதத்தில் செயற்படுவதாக ரஷ்யா குறிப்பிட்டுள்ளது. வழமையாக சிரியாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஷ்யா, முதற் தடவையாக கடும் விமர்சனம் வெளியிட்டுள்ளது. இதேவேளை, சிரியாவிற்கான ஐ. நாவின் விசேட பிரதிநிதி கொபி அனானின் சமாதானத் திட்டம் தொடர்பான பிரேரணையை ஐ. நா. வின் பாதுகாப்புச் சபை ஆதரிப்பது குறித்து தாம் கவனம் செலுத்தி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மேற்குலக நாடுகள் சிரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் சீனாவும் ரஷ்யாவும் ஜனாதிபதி பஷார் அசாத்துக்கு ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பங்குனி 22, 2012 யூதப் பாடசாலை துப்பாக்கிச் சூடு மொஹமட் மராஹ் என்ற சந்தேக நபர் பிரான்ஸ் பொலிஸாரால் சுற்றிவளைப்புபிரான்ஸில் யூதப் பாடசாலைக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று சிறுவர் உட்பட நால்வரை கொன்ற சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். அல்ஜீரியாவை பூர்வீகமாகக் கொணட மொஹமட் மராஹ் என்ற 24 வயது இளைஞனே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த இளைஞனை கைதுசெய்த தெற்கு பிரான்ஸில் உள்ள அவரது வீட்டை 300க்கும் மேற்பட்ட பொலிஸார் நேற்று சுற்றிவளைத்திருந்தனர். மொஹமட் மராஹ் என்ற சந்தேக நபர் அல் கொய்தா அமைப்புக்கு கீழ் செயற்படுவதாகவும் பலஸ்தீன சிறுவர்களுக்காக பழிக்கு பழி வாங்குவதாகவும் கூறியுள்ளார். இவரை கைதுசெய்ய பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் தம்மிடம் ஆயுதம் இருப்பதாக தனது வீட்டுக்குள் பதுங்கியிருக்கும் சந்தேக நபர் பொலிஸாரை எச்சரித்துள்ளார். இதன்போது இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு பொலிஸார் காயமடைந்தனர். பங்குனி 22, 2012
இலங்கையின் ஏகோபித்த குரலுக்கு செவிசாய்க்குமா
அமெரிக்கா?
|