Contact us at: sooddram@gmail.com

 

ஆடி 2010 மாதப் பதிவுகள்

ஆடி 31, 2010

தமிழ்க் கட்சிகளிடையே ஐக்கியம்

முன்னர் இடம்பெற்ற இரண்டு ஐக்கிய முயற்சிகளிலும் பார்க்க இன்றைய ஐக்கிய முயற்சி குணாம்சரீதியாக முக்கியமானது. தமிழர் விடுதலைக் கூட்டணியும் தமி ழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடைமுறைச் சாத்தியம ற்ற தனிநாட்டு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்பட்டதால் தமிழ் மக்கள் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர். தனி நாட்டுக் கொள்கை தமிழ் மக்களை நட்டாற்றில் தள்ளி விடும் என்பதை ஏற்றுக் கொள்பவர்களாலேயே இன் றைய ஐக்கிய முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதென்ப தால் இது தமிழ் மக்களுக்கு விமோசனப் பாதையைக் காட்டும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. (மேலும்...)

ஆடி 31, 2010

பிரபாகரனின் சாரதி பொலிஸாரிடம் சரண்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரத்தியேக சாரதியாக செயற்பட்ட வி.சதிகுமரன் திருகோணமலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சதிகுமரன், போரின் கடைசிக்கட்டத்தில் அவ்வமைப்பிலிருந்து தான் தப்பிச் சென்றதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆடி 31, 2010

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படுமானால் தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைய கூட்டமைப்பு தயார்'

தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடப்படுமானால் 'தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தில்' இணைவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.  தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, "கடந்த நான்கு கூட்டங்களின் போது அவர்கள் கூடி கலந்துரையாடியது, தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் இவ்வரங்கத்தில் இணைத்துக் கொள்வது தொடர்பாகத்தானே தவிர தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்கு எவ்வளவே இருக்கும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இணைப்பது தொடர்பில் மாத்திரம் கலந்துரையாடுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர். இதுவரைக்கும் அவர்கள் என்ன விடயங்கள் கலந்துரையாடினார்கள் என்று இன்று வரைக்கும் மக்கள் மத்தியில் கூறவில்லை. அக்கூட்டத்தில் என்ன விடயங்கள் கலந்துரையாடப்பட்டது என்பதை மக்கள் மத்தியில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு கழுவிற தண்ணீரில் நழுவிற மீன் போல இருக்கின்றது என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். 

ஆடி 31, 2010

உலக மரபுரிமைப் பட்டியலில் சிவனொளிபாதமலை, ஹோர்ட்டன் சமவெளி, நக்கிள்ஸ்

சிவனொளிபாதமலை, ஹோர்ட்டன் சமவெளி, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகியன பாதுகாக்கப்பட வேண்டிய உலக மரபுரிமைப் பிரதேசங்களாக ஐ.நாவின் யுனெஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பிரேஸிலில் நடைபெறும் யுனெஸ்கோவின் உலக மரபுரிமைக்குழுவின் 34 ஆவது மாநாட்டில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூலை 25 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை பிரேஸிலின் பிரஸில்லியா நகரில நடைபெறும் இம்மாநாட்டில்  பிரதியமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையிலான  இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று பங்குபற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 31, 2010

ஆரயம்பதி பொது மக்களின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது _

மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் நேற்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர். காத்தான்குடி நகரசபை தமது பிரதேச செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  நேற்று சுமார் 5மணியளவில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்திற்குச் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், நடைபெற்றுக் கொண்டிருந்த ஆர்பாட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவந்தார்.  (மேலும்...)

ஆடி 31, 2010

Foreign mediated efforts  won’t bring reconciliation:KP

Prabhakaran, his key commanders and an influential section of the Tamil Diaspora felt that Tamil Nadu would come to their rescue. They believed Tamil Nadu political parties could exploit a dicey political situation to compel Prime Minister Manmohan Singh to intervene in Sri Lanka. We also sought the assistance of some UN officials and President of East Timor to arrange for a truce before the Army overran the last few sq km of territory held by the LTTE in the third week of May 2009. (more...)

 

ஆடி 31, 2010

பிளாஸ்டிக் இல்லாத நாட்டை எப்போது உருவாக்கப் போகிறோம்?

சில காலங்களின் முன் ஸ்பெயின் நாட்டின் கடற்கரை ஒன்றில் 75 ஆயிரம் கிலோ எடை கொண்ட மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. உயிருடன் இருந்த அந்த திமிங்கிலத்தை மீண்டும் கடலுக்குள் திருப்பி அனுப்புவதற்காக புதிய கால்வாய் ஒன்றும் வெட்டப்பட்டது. ஆனால், முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்து திமிங்கலம் இறந்துவிட்டது. பின்னர் இறந்த அந்த திமிங்கலத்தின் உடலைப் பரிசோதித்துப் பார்த்தபோது அதன் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் குடலில் சுமார் 50 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகளும், கை உறைகளும் காணப்பட்டன. (மேலும்...)

ஆடி 31, 2010

IPad இற்குப் போட்டியாக Microsoft

உலகின் மிகப்பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தற்போது அப்பிளின் பிரபல ' ஐ பேட் ' ரக கணனிகளுக்குப் போட்டியாக ஒரு கணனியை உருவாக்கி வருவதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஸ்டீவ் பால்மர் தெரிவித்துள்ளார். இதற்காக தாம் எச்பி,லெனோவோ,எசூஸ்,டெல் மற்றும் டொஷிபா போன்ற மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் சேர்ந்து இயங்கி வருவதாகவும் தெரிவிக்கின்றார். அத்துடன் தமது மென்பொருள் வல்லுநர்களுடன் சேர்ந்து கடுமையாக உழைத்து வருவதாகவும் கூடிய விரைவில் மக்களின் தேவைக்கேற்ற விதத்தில் இது சந்தைக்கு வருமெனவும் தெரிவித்தார். இந்நிலையில் மைக்ரோசொப்ட் கொரியர் எனப்படும் இரட்டைத் திரைகளைக் கொண்ட கணனிகளை அதன் வல்லுநர் குழுவொன்று இரகசியமாக உருவாக்கி வருவதாகவும் தகவல் கசிந்திருந்தது. ஆனால் இது தாம் உருவாக்கிவரும் பலவகையான கணனிகளில் ஒரு வகை மட்டுமே என மைக்ரோசொப்ட் அண்மையில் தெரிவித்திருந்தது.

ஆடி 31, 2010

பாதுகாப்பு அச்சுறுத்தல் இலங்கையில் இல்லை

தனது பிரசைகளுக்கான பிரயாணக் கட்டுப்பாட்டை பிரிட்டன் நீக்கியது

இலங்கையின் வட மாகாணத்தின் நான்கு மாவட்டங்களுக்குச் செல்வ தற்காக பிரிட்டிஷ் பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நீக்கியுள்ளது. வடக்கில் முல்லைத்தீவு, கிளி நொச்சி, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்கு செல்லுவதற்கு பிரிட்டிஷ் தூதரகம் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. என்றாலும் வடக்கில் இப்போது பாதுகாப்பான நிலை ஏற்பட்டுள்ளதனால், தனது பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுக ளை அகற்றுவதாக பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகரகம் நேற்று அறிவித்தது. (மேலும்...)

ஆடி 31, 2010

கிறிஸ்மஸ்தீவு கடற்பரப்பில் படகு மூழ்கிய நிலையில் 81 அகதிகள் மீட்பு

கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வட மேற்கு கிரிஸ்மஸ் தீவுக் கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினம் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேஷிய ஆட்கடத்தல் காரர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படு கிறது. அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து அங்கு சென்ற 150வது படகு இதுவாகும். (மேலும்...)

ஆடி 31, 2010

தலீபான்களுக்கு நிதி உதவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தாதது ஏன்?

தலீபான்களுக்கு தஞ்சம் கொடுத்து, அவர்களுக்கு நிதி உதவியையும் அளித்த பாகிஸ்தான் மீது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தாக்குதல் நடத்தாது ஏன் என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் கேள்வி எழுப்பி இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான்களை ஒடுக்குவதற்காகவும் அங்கு இருந்த அல்கைதா தீவிரவாதிகளை விரட்டி அடிக்கவும் அமெரிக்கா அங்கு இராணுவத்தை அனுப்பி யுத்தம் நடத்தி வருகிறது. 9 ஆண்டுகளாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அந்நிய வீரர்கள் அங்கு முகாமிட்டு தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறார்கள். (மேலும்...)

ஆடி 31, 2010

தண்ணீர்...தண்ணீர்!

குடிநீர் இன்று கானல் நீராகி வரும் வேளை யில் ஐக்கிய நாடுகள் சபை, தூய்மையான குடிநீர் மனித உரிமை என பிரகடனப்படுத்தியிருக்கிறது. சரியான நேரத்தில் இந்த பிரகடனம் வெளியிடப் பட்டிருக்கிறது.  பூமியின் பரப்பில் 71 சதவிகிதம் தண்ணீர் இருந்தாலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் தண்ணீரின் அளவு 0.26 சதவிகிதம் மட்டுமே. மனிதனை தாக்கக்கூடிய நோய்களில் 62 சதவிகிதம் இந்த நீரினால் பரவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பரவும் ‘ தொற்று’ நோய்களில் 21 சதவிகிதம் தண்ணீர் மூலமே பரவுகிறது. ஆண்டுதோறும் வயிற்றுப் போக்கு நோயால் மட் டும் 7 லட்சம் இந்தியர்கள் பலியாகிறார்கள் என்ற ஆய்வு விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. (மேலும்...)

ஆடி 31, 2010

இந்தியாவில் தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானுடன் பேசுவேன் - இங்கிலாந்து பிரதமர்

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து புதிய பிரதமர் டேவிட் கமரூன், டில்லியில் பிரதமர் மன்மோகன்சிங் குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிறகு இரு தலைவர்களும் நிருபர்க ளுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது, டேவிட் கமரூன் கூறு கையில், இந்தியாவில் தீவிரவாத த்தை தூண்டி விடுவதை நிறுத்த வேண்டும். அதற்கு சிறந்த வழி, பாகிஸ்தானுடன் வெளிப்படையாக, திறந்த மனதுடன் பேச்சு நடத்துவது தான். அடுத்த வாரம் நான் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியுடன் இது தொடர்பாக பேச்சு நடத்துவேன் என்று கூறினார். இந்த கூட்டு பேட்டியில், பிரதமர் மன்மோகன்சிங் கூறுகையில், ஆப் கானிஸ்தான் எல்லையில் தீவிரவா தத்தை கட்டுப்படுத்த அக்கறை செலுத்துவது போல, இந்திய எல் லையிலும் தீவிரவாதத்தை கட்டுப் படுத்த பாகிஸ்தான் அக்கறை செலு த்த வேண்டும் என்று எதிர்பார்க் கிறேன். இதற்கு உலக நாடுகள் வற்புறுத்த வேண்டும் என்று கூறி னார்.

ஆடி 31, 2010

மட்டு.ஆரையம்பதி மக்கள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம்

மட்டக்களப்பு ஆரையம்பதி மக்கள் இன்று காலைமுதல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். காத்தான்குடி நகரசபை தங்களது எல்லைக்குரிய நிலங்களை ஆக்கிமிப்புச்செய்து வருவதைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாக உண்ணாவிரதமிருப்போர் தெரிவிக்கின்றனர்.  காத்தான்குடி நகரசபை தமது பிரதேச, செயலக எல்லையை நிர்ணயம் செய்து தமது பகுதிக்குரிய சவ நிலங்களை ஒப்படைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆடி 31, 2010

அமெரிக்க ராணுவ ரகசியங்கள் கூறும் உண்மை என்ன?

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியான ஆப்கானிஸ்தான் போர் ராணுவ ரகசியங்கள் பிரச்சனையில் ஓபாமா நிர்வாகம் உடனடியாக, நாம் ஊகித்தது போன்றே நடந்து கொண்டுள்ளது. இக்கசிவுகள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ஒபாமா அரசின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்களையும் உலக மக்களையும் தவறாக வழிநடத்தி ஆப்கானிஸ்தானிய அப்பாவிப் பொதுமக்களைக் கொன்றஅமெரிக்க ராணுவம் மன்னிப்புக் கோரி ஒருவார்த்தை கூடக் கூறவில்லை. தற்போது அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கையே சரியான கொள்கை, அமெரிக்க நிர்வாகம் அதையே கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜெனரல் ஜோன்ஸ் வலியுறுத்தியுள்ளார். உண்மையிலே, இத்துணிச்சலான வார்த்தைகளின் பின், வெளியே கசிந்துள்ள ஆவணங்கள் கூறும் கதையின் ஒரு பகுதி உண்மை தான் என்பது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. (மேலும்...)

ஆடி 31, 2010

UNAC registers anti-war unity

(by Barry Weisleder)  

Anti-war unity in action got a major boost from a gathering of over 700 peace and social justice activists, held July 23-25 in Albany, New York. The United National Antiwar Conference was the largest of its kind since 2001. It had the backing of thirty national organizations across the United States, including the National Assembly Against U.S. Wars and Occupations, US Labor Against the War, Arab American Union Members' Council, Black Agenda Report, Code Pink, International Action Center, Iraq Veterans Against the War, National Lawyers' Guild and Progressive Democrats of America. People came from as far away as California and Texas. Several activists from Canada attended too, including a War Resisters' Canada rep., and six members of Socialist Action/Ligue pour l'Action socialiste from Toronto and Montreal. (more...)

ஆடி 30, 2010

மக்கள் விடுதலை முன்னணியும் தமிழ் மக்களின் அங்கீகாரமும்

வடக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களை விரைவாக மீள் குடியேற்ற வேண்டும் என்றும் அவர்களின் மனித உரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படு த்த வேண்டும் என்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறுகின்றது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி மக் கள் விடுதலை முன்னணி பேசுவது வரவேற்புக்குரியது. ஆனால் அந்தப் பேச்சு சரிந்து செல்லும் அரசியல் செல் வாக்கைத் தக்க வைப்பதற்கான பேச்சாக அல்லாமல் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகளுக்கான தீர்வை நாடி நிற்கும் பேச்சாக இருத்தல் வேண்டும். சிங்களக் கடுங்கோட்டப்பாட்டு வாக்கு வங்கியை இலக்கு வைத்துச் செயற்பட்ட வரலாற்றைக் கொண்டுள்ள மக் கள் விடுதலை முன்னணி அந்த நிலைப்பாட்டிலிருந்து விடுபட்டு இனப் பிரச்சினையின் நியாயமான அரசி யல் தீர்வுக்காகக் குரல் கொடுக்கும் நிலையிலேயே தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெற முடியும். (மேலும்...)

ஆடி 30, 2010

மீண்டும் வெல்வது உறுதி

(கே.வரதராசன்)

இடதுசாரி அரசாங்கங்கள் நிலச்சீர்திருத் தம் தொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைக ளில் மிக முக்கிய அம்சம் என்பது பினாமி நிலங்களையும், உபரி நிலங்களையும் கைய கப்படுத்தி, நிலமற்ற விவசாயிகளுக்கு விநி யோகம் செய்ததேயாகும். கடந்த 30 ஆண்டு களில் மேற்கு வங்க அரசு கையகப்படுத்திய நிலத்தின் அளவு 13.37 லட்சம் ஏக்கர்களாகும். இதில் 10.63 லட்சம் ஏக்கர் நிலங்களை மேற்கு வங்க அரசு நிலமற்ற விவசாயிகளுக்கு விநியோகம் செய்து கொடுத்துள்ளது. இதன் மூலமாக 26.43 லட்சம் நிலமற்ற மற்றும் ஏழை விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இவர் களில் 47 சதவீதத்தினர் தலித்துகள், பழங் குடியினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினரா வார்கள். எனவேதான் நாட்டில் கையகப்படுத் தப்பட்ட நிலங்களில் 18 சதவீதமும், விவசாயி களுக்கு விநியோகிக்கப்பட்ட மொத்த நிலங்க ளில் 20 சதவீதமும் மேற்கு வங்கத்தில் இருக் கிறது என்று சொல்லும்போது அது விந்தை யாக இல்லாமல் இருக்கிறது.
(மேலும்...)

ஆடி 30, 2010

என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் அம்மணி?

(ஜீவிதன்)

தாம் கற்பிக்கும் மாணவர்களைத் தமது பிள்ளைகளாக எண்ணி அவர்களுக்குக் கல்வியை மாத்திரமன்றி நல்லொழுக்கத்தையும் சொல்லித்தர வேண்டியவர்கள் இவ்வாறு கீழ்த்தரமான சிந்தனைகளுடன் பாடசாலைக்குச் சென்று எவ்வாறு கற்பிப்பார்கள்? அரிச்சந்திரன் காத்த இடத்துப் பாடசாலையில் மட்டும் இல்லை. பொதுவாக இந்தப் பிரதேசத்தில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளின் நிலைமை இதுவாக உள்ளதுதான் வேதனைக்குரிய விடயம். (மேலும்...)

ஆடி 30, 2010

‘அதியுயர் பாதுகாப்பு வலயங்களை கட்டம், கட்டமாக அகற்றும் பணி ஆரம்பம்’

வட பகுதியிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களைக் கட்டம், கட்டமாக அகற்றும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் ஏ. பி. உபே மெதவல நேற்றுத் தெரிவித்தார்.  இத்திட்டத்தின் கீழ் கிளாலி, முகமாலை, கச்சாய், சாவகச்சேரி, மல்லாவி, காங்கேசன்துறை முதல் தெல்லிப்பளை வரையான பகுதி யாழ்ப்பாணம் - காங் கேசன்துறை வீதியில் மேற்கு பகுதி, மாங்குளம் உட்பட பல பிரதேசங்களின் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் ஏற்கனவே நீக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் இருப்பதாகவும் அவர் கூறினார்.  (மேலும்...)

ஆடி 30, 2010

கே.பி அரச சாட்சியாக மாறும் சாத்தியம்; பொதுமன்னிப்பு வழங்கவும் முடியும்

 

கே. பி. எனப்படும் குமரன் பத்மநாதன் அடங்கலான பல புலம்பெயர் தமிழர்கள் வடபகுதி அபிவிருத்திக்கு உதவ முன்வந்துள்ளனர். நாட்டின் அழிவுக்காக பயன்படுத்தப்பட்டவர்களை நாட்டின் நலனுக்காக பாதிப்பில்லாதவாறு பயன்படுத்த தயாராக உள்ளோம். இலங்கை சட்டத்தின் பிரகாரம் கே. பி. அரச சாட்சியாக மாறும் சாத்தியம் உள்ளதோடு அவருக்கு பொது மன்னிப்பு வழங்கவும் முடியும். (மேலும்...)

ஆடி 30, 2010

பிரிட்டன் பிரதமரின் கருத்து பிராந்திய அமைதிக்கு பாதிப்பு - பாகிஸ்தான் தூதுவர்

பிரதமர் டேவிட் கமரோன் இந்தியாவில் வைத்து வெளியிட்ட கருத்துக்கள் பாகிஸ்தானை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. தலிபான்களுக்கெதிரான போரில் பாகிஸ்தானின் மிகப் பெரிய பங்கை மலினப்படுத்துவதாயுள்ளது என்று பாகிஸ்தான் தூதுவர் பிரிட்டன் பத்திரிகைக்கு தெரிவித்தார். பென்டகனில் இரகசியமாகக் கசிந்த தகவல்களில் நாங்கள் சில உண்மையான தகவல்களைக் காண்கிறோம். அதில் பிரிட்டனின் நம்பகத் தன்மையில் குறைபாடு உள்ளது என்றும் ஹஸன் தெரிவித்தார். பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரோன் இந்தியாவில் தெரிவித்தார். (மேலும்...)

ஆடி 29, 2010

மட்டு. களுவாஞ்சிக்குடி அபிவிருத்திக் குழுக் கூட்டம்

மட்டகக்களப்பு - களுவாஞ்சிக்குடி பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பி.செல்வராசா, சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். களுவாஞ்சிக்குடி பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா திணைக்களத் தலைவர்கள் பிரதேச சபைத்தலைவர், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்திருந்தனர். இவ்வாண்டின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக அதன்போது விரிவாக ஆராயப்பட்டது.

ஆடி 29, 2010

KP speaks out

"Tamil Diaspora ready to work with President"

"Special Bank AC opened to raise funds"

Jaffna Mayor Alfred Duraiappah’s killing by Prabhakaran, the decision makers of the politico-militant movement at that time had removed Prabhakaran from the outfit. When he came to me, I was just an Advanced Level student, though I had to accommodate him in my room. There had been moves to kill him by some individuals, including the then TELO leader Thangadurai. (more.....)

 

ஆடி 29, 2010

 

’தமிழ்க் கட்சிகள் அரங்கம்’

9 கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு, கூட்டமைப்பை அழைக்க முடிவு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும் மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் ப.உதயராசா, பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் பொதுச்செயலர் தி.சிறீதரன், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன் ஆகியோரும், இக்கட்சிகளின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். தலைவர்கள் ஒன்பது பேரும் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ கடிதமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அனுப்பிவைக்கப்பட  இருக்கின்றது. (மேலும்....)

ஆடி 29, 2010

5 ஆவது இரட்டைச் சதம் குவித்தார் சச்சின்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 5 ஆவது டெஸ்ட் இரட்டை சதத்தை இன்று பூர்த்தி செய்தார். கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும் இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது நாளான இன்று டெண்டுல்கர் 203 ஓட்டங்களைப் பெற்றார். 347 பந்துகளை எதிர்கொண்ட அவர் ஒரு சிக்ஸர் மற்றும் 23 பௌண்டரிகளையும் விளாசினார். இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் பெற்ற 4 ஆவது வெளிநாட்டு வீரர் டெண்டுல்கர் ஆவார். இதற்குமுன் ஸ்ரீபன் பிளெமிங் (274) பிரையன் லாரா (221) வீரேந்தர் ஷேவாக் (201) ஆகியோர் ஏற்கெனவே இலங்கையில் இரட்டைச் சதங்களைப் பெற்றுள்ளனர்.

ஆடி 29, 2010

Is LTTE ideologue Balakumar dead or alive?

Velupillai Balakumar or Balakumaran was the one time leader of Ealam Revolutionary Organization of Students (EROS). He was also a member of Sri Lanka parliament for a brief period. In late 1980s or early 1990s, he split the EROS and joined the Liberation Tigers of Tamil Ealam (LTTE) with a number of his associates.  He is believed an influential adviser to the leader of the LTTE Velupillai Prabakaran. The importance of this man is that he is famous as a Marxist. If he is alive like the former LTTE chief of international relations, he may speak one day how his Marxist ideas influenced the Tiger leader. Asked by The Island today whether among the detained terrorists were Yogiratnam Yogi, one-time LTTE negotiator and Balakumaran of the EROS, who threw his weight behind Velupillai Prabhakaran, Rehabilitation Commissioner Brig. Ranasinghe said that he did not have them. (more...)

ஆடி 29, 2010

வவுனியா நகர சபை தலைவர் நாதனின் அராஜகம்

வவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்.

வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க மாட்டோமென்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதியாக எடுத்த முடிவின்படி இனிமேல் நகரசபை செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கப் போவதில்லையென்று தீர்மானிக்கப்பட்டது. (மேலும்...)

வாகரையில் 70 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றம்

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது போது இடம்பெயர்ந்து கதிரவெளி,சித்தாக்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். கதிரவெளியிலிருந்து இன்று காலை புறப்பட்டுச்சென்ற இவர்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், பிரதேசசெயவாளர், படையதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு வழியனுப்பிவைத்தனர்.

ஆடி 29, 2010

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

நளினியை விடுதலை செய்ய முடியாது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளான நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி ஆயுள் தண்டனையும், அவருடைய கணவர் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் மரண தண்டனையும் அனுபவித்து வருகிறார்கள். அவர்கள் 4 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருச்சி வேலுசாமி என்பவர் மனுதாக்கல் செய்தார். அம்மனுவை கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ந் தேதி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததுடன், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.  (மேலும்...)

ஆடி 29, 2010

லண்டன் கனவுகளின் தேசம் அல்ல

மட்டக்களப்பிலிருந்து எனது நீண்டகால நண்பர் திக்வயல் தர்மகுலசிங்கம் தொலைபேசி எடுத்துச் சொன்னார் 'உங்கை லண்டனுக்குத் எனது சொந்தக்காரப் பொடியன் ஒருத்தன் வாறான். அவன் ஸ்ருடன்ற் விசாவில் வாறான். ஒரு வேலை எடுத்துக் கொடுங்கோ'. இப்படியான தொலைபேசி அழைப்புக்கள் சிலோனிலிருந்து அடிக்கடி எனக்கு வரும். லண்டன் பெரும் சீமை என்று ஒரு பெருமை அந்தக் காலத்தில் இருந்ததுதான். பொருளாதாரச் சிக்கல்களுக்கான தீர்வின் இடமாக லண்டன் முன்பு ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் இப்பொழுது இல்லை. (மேலும்....)

ஆடி 29, 2010

தர்ஷிகாவின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைப்பு

வேலணை வைத்தியசாலை யின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் உடல் நேற்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் நேற்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது.  கடந்த 12ம் திகதி வைத்தியசாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் தர்ஷிகாவின் உடல் மீட்கப்பட்டது. இச்சம்பவத்துக்கு வைத்தியசாலையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவர் காரணமென தர்ஷிகாவின் குடும்பத்தினர்

ஆடி 29, 2010

பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாட்டை பாதுகாத்தவர் ஸ்ரீமாவோ

- ஜனாதிபதி

முழு உலகிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பிய போதும் அதனை எதிர்கொள்ளும் பலம் அவருக்கிருந்தது. அந்தப் பலமே எமக்கும் முன்னுதாரணமாகியது. நாட்டின் தனித்துவத்தைப் பாதுகாக்க அவர் எப்போதும் தயாராகவே இருந்தார். அரச வளங்கள் எதனையும் அவர் விற்கவில்லை. காப்புறுதிக் கூட்டுத்தாபனம், வங்கிகள் போன்றவற்றை பாதுகாத்ததுடன் பூகொட, துல்கிரிய, டயர் கூட்டுத்தாபனம் ஆகியன அவரது காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டன. கட்சிக்காக, நாட்டுக்காக அவர் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவிருந்தார். தமது கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது போன்று ஏனைய கட்சிகளின் ஜனநாயகத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்பதை அவர் வலியுறுத்தினார்.(மேலும்....)

ஆடி 29, 2010

 

அமைச்சர் முரளியின் பேச்சுவார்த்தை வெற்றி

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு நிவாரணம் அதிகரிப்பு

இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிக்க உள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் நிவாநயகமூர்த்தி முரளிதரன் கூறினார். உலக உணவுத் திட்டத்தினூடாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதோடு இதனை அதிகரிக்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார். உலக உணவுத் திட்ட வதிவிடப் பிரதிநிதி ஆத்நாத் கானுக்கும் பிரதி அமைச்சருக்கு மிடையில் அமைச்சில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இடம்பெயர்ந்த மக்களுக்கு அரிசி, பருப்பு, மா, சீனி, மரக்கறி எண்ணெய் உப்பு என்பன வழங்கப்படுகிறது. பருப்பு, மரக்கறி எண்ணெய், மா என்பன அமெரிக்காவில் இருந்தும் சீனி, அரிசி, உப்பு என்பன அரபு நாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகிறது. இவற்றை சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் கேள்வி மனுக்கோரி குறைந்த விலையில் பெற்றபின்னர் இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கும் உணவு நிவாரணத்தை அதிகரிப்பதாக உலக உணவுத் திட்ட பிரதிநிதி கூறியுள்ளார்.

ஆடி 29, 2010

பட்டையைக் கிளப்பும் சத்யராஜ், குட்டை உடைக்கும் கருணாஸ்

''நான் புதுக்கோட்டையில் பிறந்தவன். ஈழம்தான் என் பூர்வீக பூமி. தமிழீழம் பெறவேண்டும் என்கிற வெறி, சீமானைவிட எனக்கு அதிகம் உண்டு. நான், இயல்பாகவே முருகபக்தன். 'தமிழ்நாட்டில் அறுபடை வீடுகள் உண்டே... அதில் ஏதாவது ஒரு கோயிலுக்குப் போகலாமே...' என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அதெல்லாம் குலதெய்வத்தை வழிபடுவதுபோல் ஆகுமா? என் குலதெய்வமான முருகன் கோயில், கதிர்காமத்தில்தானே இருக்கிறது? அங்கே நான் நேர்த்திக்கடன் செலுத்துவது தப்பா? முதலில் வர்மா என்ற ஒருவர் செல்போனில் தன்னை, 'சீமான் உதவி யாளர்' என்று சொல்லிக்கொண்டு, 'இலங்கைக்கு நீ போகக்கூடாது. போனால், தொலைத்து விடுவோம்...' என்றார். அடுத்து, 'நாம் தமிழர்' இயக் கத்தைச் சேர்ந்த அதியமான் ரொம்பவும் மோசமாக மிரட்டினார்.  (மேலும்....)

ஆடி 29, 2010

இலங்கையில் இதுவும் நடக்கின்றது

1929 சிறுவர் துஷ்பிரயோகம் 1750 அழைப்புகள்

சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல் வழங்குவதற்கான 24 மணி நேர தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நேரடி தொலைபேசிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து இதுவரை 1750 அழைப்புகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாது காப்பு அதிகார சபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான இந்த நேரடி தொலைபேசி கடந்த 22ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. 1929 என்ற எண்ணில் 24 மணி நேரமும் இலவசமாக எவரும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தெரிவிக்க முடியும். (மேலும்....)

ஆடி 29, 2010

அமெரிக்காவின்  அணுஆயுத மிரட்டல்

தென்கொரிய யுத்தக்கப்பல் ஒன்றை வட கொரியா மூழ்கடித்துவிட்டதாக கடந்த இரண்டு மாத காலமாக தென்கொரியா புகார் கூறி வரு கிறது. அதற்கு அமெரிக்காவும் சொல்லி வைத் தாற்போல் பின்பாட்டு பாடி வருகிறது. தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்கு வடகொரியாவும், அமெரிக்காவும் திட்டமிட்டு செய்யும் வஞ்சகப் பிரச் சாரம் இது என்று வடகொரியா இடித்துரைத்துள்ளது. வரலாற்றில் அமெரிக்காவையும், அதன் அடி மைக் கூட்டாளிகளையும் முறியடித்து மகுடம் சூடிய நாடு வடகொரியா. தனது தோல்விகளை ஏற்றுக்கொள்ள முடியாத அமெரிக்க ஏகாதிபத்தி யம் வடகொரியாவுக்கு எதிராக தொடர்ந்து பல நெருக்கடிகளைக் கொடுத்து வருகிறது. பொரு ளாதாரத்தடை, உணவுப் பொருட்களுக்குத்தடை என பல மனிதாபிமானமற்ற தாக்குதல்களை வட கொரியா மீது அமெரிக்கா ஏவிவிட்டுள்ளது. தடைகளைத் தகர்த்தெறிந்து வளர்ச்சிப்பாதை யில் வடகொரியா கம்பீரமாக நடைபோடுகிறது.
(மேலும்....)

ஆடி 29, 2010

 

கொழும்பில் பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக நேற்று மாலை பல்கலைக்கழக மாணவர்களினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. றுஹுணு பல்கலைக்கழக மாணவனின் கொலையுடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரியே நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. நேற்று மாலை சுமார் 3 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணித்தியாலத்துக்கும் மேலாக நீடித்தது. ஆர்ப்பாட்டத்தையொட்டி புகையிரத நிலையத்துக்கு முன்பான ஒல்கொட் மாவத்தை போக்குவரத்துக்கு தடைசெய்யப்பட்டிருந்தது. பலத்த பாதுகாப்பும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆடி 29, 2010

152 பயணிகள் பலி

பாகிஸ்தானில் விமானம் விபத்து

பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 6 விமானிகள் உட்பட 152 பேர் பலியாகினர். நேற்றுக் காலை இந்தச் சம்பவம் நடந்தது. பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து தலைநகரம் இஸ்லாமாபாத்துக்கு நேற்று காலை ஏர்புளு என்ற தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. விமானத்தில் 153 பயணிகளும் 6 விமான ஊழியர்களும் இருந்தனர். கராச்சியில் இருந்து சில மணி நேரம் பயணம் செய்து விமானம் இஸ்லா மாபாத்தை நெருங்கி கொண்டி ருந்தது. இஸ்லாமாபாத் அருகே உள்ள மார் காலா மலைக்கு மேலே விமானம் பறந்துகொண்டிரு ந்தது. அப்போது விமானம் திடீரென விமான நிலைய ரேடாரில் இருந்து மறைந்தது. ரேடியோ தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. உடனே உஷார் அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்துக்கு என்ன ஆனது? என்று தேட தொடங்கினார்கள். விமானம் மார்காலா மலையில் மோதி நொறுங்கிக் கிடப்பது தெரியவந்தது. அந்த இடத்துக்கு ஹெலிகொப்டர் மூலம் மீட்பு படையினர் அனுப்பப்பட்டனர். ஆனால், வானிலை மோசமாக இருந்ததால் விமானம் விழுந்து கிடந்த இடத்தில் இறங்க முடியவில்லை. பல பயணிகள் இறந்து கிடந்தனர். உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலர் மீட்கப்பட்டனர். இதுவரை 45 பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். மீதம் உள்ள 114 பேரும் பலியாகி இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.  

ஆடி 28, 2010

துயரங்களில் பங்கு கொள்கின்றோம்

ஈ.பி.டி.பி.யின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தை இயற்கை எய்தினார்

 

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் சர்வதேசப் அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தையார் அந்தோனிமுத்து மரியாம்பிள்ளை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலியில் இயற்கை எய்தினார். ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிக நீண்ட காலமாக அர்பணிப்புடன் செயற்பட்டு வரும் தோழர் மித்திரனுக்கும், அவர் தம் குடும்ப உறவுகளுக்கும் இது பெரும் இழப்பாகும். அவர்களின் துயரத்தில் சூத்திரம் இணையத்தளமாகிய நாங்களும் இணைந்து கொள்கின்றோம். ஈழ மக்கள் ஜனநாய கட்சியினரின் துயரங்களுடனும் நாமும் இணைந்து கொள்கின்றோம்.

ஆடி 28, 2010

இலங்கையர் அறுவர் அமெரிக்காவில் கைது

அமெரிக்க பொலிஸார் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படும் 6 இலங்கையர்களை செவ்வாய் காலை கைது செய்துள்ளனர். புளோரிடா மாநிலத்தின் பாம் பீச் நகரில் காலை 6.40 மணியளவில் ஈரமான ஆடையுடன் மேற்படி நபர்கள் வீதியில் நடந்து சென்றதை அவதானித்த பொலிஸார் அந்;நபர்களை கைது செய்து எல்லைக் காவல்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர். முழங்கால் வரை அவர்களின் கால்கள் நனைந்திருந்ததால் அவர்கள் படகில் அழைத்துவரப்பட்டு கரையோரத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் நம்புகின்றனர். எனினும் சந்தேகத்திற்கிடமான படகுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நபர்கள் அனைவரும் 20-40 வயதானவர்கள் எனவும் அவர்கள் ஆரோக்கியமான நிலையில் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை மற்றும் அமெரிக்க நாணயத்தாள்கள் அவர்களிடம் இருந்ததாகவும் அவர்களால் ஆங்கிலம் பேசமுடியவில்லை எனவும் பொலிஸார் கூறுகின்றனர். அவர்களிடம் பை எதுவும் காணப்படாத போதிலும் செல்லிடத் தொலைபேசிகளை வைத்திருந்தனர்.

ஆடி 28, 2010

Hardcore Tigers among detainees identified, legal action awaited

A senior military official said on Monday (July 26) that those involved in major terrorist attacks would have to be legally dealt with. He said hardcore terrorists could not be released along with ordinary LTTE combatants, as they could pose a security threat. Brigadier Sudantha Ranasinghe, Commissioner General of Rehabilitation said that the 737 ex-LTTE personnel were among 7,948 persons held by authorities. He said that they were all men. Asked by The Island whether among the detained terrorists were Yogiratnam Yogi, one-time LTTE negotiator and Balakumaran of the EROS, who threw his weight behind Velupillai Prabhakaran, Brig. Ranasinghe said that he did not have them. (more...)

ஆடி 28, 2010

சிறப்பாக நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் திருவிழா _

வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் உற்சவத்தின் பத்தாம் நாள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். ஆலயத்தில் ஐந்து வருடங்களுக்கு மேலாக திருத்தப் பணிகள் இடம்பெறுவதால் கொடியேற்றம் நடைபெறாது திருவழாக் காலத்தில் உற்சவம் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஆடி 28, 2010

உலக அதிசயங்களுக்கு இலங்கையிலுள்ள இடங்கள் பிரேரணை _

உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும்படி இலங்கையிலுள்ள மூன்று இடங்களின் பெயர்களை பிரேரிப்பதற்காக சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா உட்பட அதிகாரிகள் குழுவொன்று பிரஸல்ஸ் நகரில் நடைபெறுகின்ற உலக ஏழு அதிசயங்களை தெரிவு செய்யும் மாநாட்டுக்கு சென்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. மத்திய மாகாணத்திலுள்ள நக்கில்ஸ் மலைத் தொடர், ஹோர்ட்டன் மலைத்தொடர், சிவனொலி பாதமலை என்பனவே அம்மூன்று இடங்களுமாகும். உலகில் ஏழு அதிசயங்களாக இதுவரை இடம் பிடித்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற இடங்களை மறுபரிசீலமைப்பதற்கு உலக அதிசயங்களை தெரிவு செய்யும் குழு தீர்மானித்துள்ளது.

ஆடி 28, 2010

அரசியலமைப்புத் திருத்தம் ஐ.தே.கவுக்கு சோதனைக் களம்

ஐக்கிய தேசியக் கட்சி 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தும் முதலாவது குடியரசு அரசியலமைப்பை நீக்கி விட்டுப் புதிய அரசியலமைப்பை நடைமுறைக்குக் கொண்டு வந்தது. இந்த அரசியலமைப்பு ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் இரகசியமாகத் தயாரித்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் புதிய அரசியலமைப்பு பற்றி எதுவுமே தெரிந்திருக்கவில்லை. பொதுமக்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அன்றைய அரசாங் கம் அரசியலமைப்பைத் தன்னிச்சையாகத் தயாரித்தது மாத்திரமன்றிப் பதினாறு திருத்தங்களையும் தன்னிச்சை யாகவே மேற்கொண்டது. (மேலும்....)

ஆடி 28, 2010

பொலித்தீன் குப்பைகளால் ஆபத்து

கடலோரத்தில் வசிக்கும் மக்களாலும், சுற்றுலா பயணிகளாலும் பயன்படுத்தப் படும் பொலிதீன் பைகள், பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், துணிகள், மரக்கட்டைகள், மீன்பிடி வலைகள், ரப்பர் மற்றும் உலோக பொருட்களால் மன்னார் வளைகுடா பகுதியில் பெரும் மாசு ஏற்படுகிறது. இப்பகுதி பலவகை உணவு மீன்கள், வண்ணமீன், மெல்லுடலிகள், கணுக்காலிகள், பவளப் பாறைகள், கடற் பசுக்கள், கடற் குதிரைகள், ஆமைகள் என பல உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. (மேலும்....)

ஆடி 28, 2010

அல்கைதாவால் கடத்தப்பட்ட பிரான்ஸ் பொறியியலாளர் சுட்டுக் கொலை

பிரான்ஸ் பொறியியலாளர் மைகல் ஜேர்மனியா வயது 78 அல்கைதாவால் கொலை செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டித் துள்ள ஜனாதிபதி நிக்கலஸ் சர்கோசி இதற்கான விலையை அல்கைதா கொடு க்க வேண்டியிருக்குமெனச் சூளுரைத்தார். மாலியில் பணியாற்றிய பிரான்ஸ் பொறி யியலாளர் மைகல் ஜேர்மனியா ஏப்ரல் மாதம் மாலியில் வைத்துக் கடத்தப்பட்டார். இவரை மீட்க மொரிட்டானியா பிரான்ஸ் இராணுவம் என்பன கடுமையாக முயன் றன. இம்முயற்சிகள் பலனளிக்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் பொறி யியலாளரைக் கொலை செய்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்தனர். (மேலும்....)

ஆடி 28, 2010

கொலம்பியாவின் எல்லையை நோக்கி வெனிசூலா இராணுவம்

கொலம்பியாவின் எல்லையை நோக்கி வெனிசூலாவின் இராணுவம் படை எடுத்துள்ளது. அசம்பாவிதங்களை எதிர்கொள்ள எந்நேரமும் விழிப்புடனுள்ளோம் என்று வெனிசூலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் குறிப்பிட்டார். கொலம்பியாவின் பார்க் போராளிகளை வெனிசூலா வளர்ப்பதாக கொலம்பியாவின் ஜனாதிபதி அல்வரோ யுரைப் அண்மையில் குற்றஞ்சாட்டினார். (மேலும்....)

ஆடி 28, 2010

பாகிஸ்தானின் உளவுத்துறை, இராணுவ உயர் அதிகாரிகளுக்கு தலிபான்களுடன் நெருங்கிய உறவு

பாகிஸ்தான் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள், உளவுத்துறை முக்கியஸ்தர்கள் சிலர் தலிபான்களுடன் இரகசிய உறவு களைக் கொண்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 2004 முதல் 2009ம் ஆண்டு வரை தலிபான் களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட இரா ணுவ நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகனால் வெளி யிடப்பட்டது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாகிஸ்தான் அரசாங்கம் தலிபான்களை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்று கின்றது. ஆனால் முக்கிய அதிகாரிகள் சிலர் தலிபான்களுடன் இரகசிய உறவு களைப் பேணுகின்றனர். (மேலும்....)

ஆடி 28, 2010

இந்திய பிரதிநிதிகளின் வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் இந்தியா சென்றிருந்தபோது அந்தக் குழுவில் நானும் இடம்பெற்றிருந்தேன். ஆளுங்கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களையும் சந்தித்தோம். அப்போது தமிழ் நாட்டைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரையும் சந்தித்தோம். அவர்களை, இலங்கைக்கு வந்து நிலைமைகளை நேரில் கண்டறியுமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு விடுத்தார். அதில் அரசியல் நோக்கம் கிடையாது. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விடுத்த அழைப்பு அரசியல் நோக்கம் கொண்டது. (மேலும்....)

ஆடி 28, 2010

35,333 பேர் மாத்திரமே மீள்குடியேற எஞ்சியுள்ளனர்

வடக்கில் இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 35,333 பேர் மாத்திரமே மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கும் அமைச்சரவைக்குமான பேச்சாளர் தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாளாந்தம் சுமார் 700 பேர் சொந்த வாழ்விடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இடம்பெயர்ந்த மக்களின் பதிவு செய்யப்பட்ட தொகை 267,393 எனக் குறிப்பிட்ட அமைச்சர், இவர்களுள் முழுமையாக 2,30,000 பேர் ஒரு வருடகாலத்தினுள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். (மேலும்....)

ஆடி 28, 2010

பயங்கரவாத ஒழிப்பு

வடக்கு, கிழக்கு புத்திஜீவிகளும் ஆய்வுகளில் ஈடுபடும் சூழல்

அறிவை தடைசெய்யவோ, மூழ்கடிக்கவோ முடியாது. இதனை நாமறிவோம். சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை சிறந்த முறையில் உணர்ந்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள் தான் என நான் நம்புகிறேன். அறிவுத்துறையின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அவற்றை சுதந்திரமாக வெளியிடுவதற்கும் உரிமை இருப்பது அவசியம் எனக் கருதுகின்றேன். இதற்கு இப்போது எமக்கு சுதந்திர சூழல் கிடைக்கப் பெற்றிருக்கின்றது. (மேலும்....)

ஆடி 28, 2010

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குரூர நாடகம்

(கி.இலக்குவன்)

தென் கொரிய நீர்மூழ்கிக் கப்பலான சியோனான் மீது மற்றொரு நீர்மூழ்கிக் கப்பலிலிருந்து குண்டு வீசப்பட்டுள்ளது. இத்தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்ட கப்பலில் இருந்த 40 தென்கொரிய கடற் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். வடகொரியா தான் இத்தாக்குதலை நடத்தி யுள்ளது என்ற பொய்யான செய்தி அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தால் பரப்பப்பட்டது. தென்கொரிய தீபகற்பத்தில் போர்மூளுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது, அத னைப் பயன்படுத்திக்கொண்டு ஒகினா வா கடற்படை தளத்திலிருந்து அமெரிக்கா வெளியேற வேண்டும் என்று கோரிவரும் ஜப்பானிய பிரதமர் ஹடயோமா மீது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவதே அமெரிக் காவின் நோக்கம் என்பது தெளிவாகி யுள்ளது. அதாவது ஜப்பானுக்கு அருகே உள்ள கடற்பகுதியில் அடாவடித்தன மான முறையில் செயல்பட்டுவரும் வட கொரியாவிடமிருந்து ஜப்பானைக் காப் பாற்றுவதற்கு ஒகினாவாவில் அமெரிக்கக் கடற்படைத்தளம் நீடிப்பது அவசியம் என்ற கருத்தை ஜப்பானிய மக்கள் மத்தி யில் ஏற்படுத்துவதற்காகவே இந்த கோர நாடகம் அரங்கேற்றப்பட்டது. ஒகினாவா கடற்படைதளம் நீடிக்கலாம் என்ற முடிவை ஹடயோமா எடுத்ததன் மூலம் அமெரிக்காவின் சதித்திட்டம் வெற்றி பெற்று விட்டது. (மேலும்....)

ஆடி 28, 2010

மதுரை விஞ்ஞானியின் பெயர் செவ்வாய்க்கிரகத்திற்கு செல்லும்

அமெரிக்காவின் “நாசா” விண்கலம், மதுரை விஞ்ஞானி சிவசுப்பிரமணியனின் பெயரை செவ்வாய் கிரகத்திற்கு “மைக்ரோ சிப்”பில் எடுத்து செல்கிறது. 2012 இல் இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்து, அதன் மண் வளம், நில மேற்பரப்பு, உயி ரினங்கள் பற்றிய ஆரா ய்ச்சியில் ஈடு பட உள்ளது. இந்த ஆய்வகத்திற்கு அமெரிக்க அழைப்பின் பெயரில் சென்ற சிவசுப்பிர மணியன், சில தொழில்நுட்ப யோசனை களைத் தெரிவித்தார். உலகில் உள்ள சிறந்த விஞ்ஞானிகள் தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயர்களை விண்கலத்தில் “மைக்ரோ சிப்”ல் பதிவு செய்து செவ் வாய் கிரகத்திற்கு அனுப்ப “நாசா” தீர் மானித்துள்ளது. (மேலும்....)

ஆடி 28, 2010

பாக். குறித்த இந்திய நிலைபாடு உறுதிப்பட்டுள்ளது

பாகிஸ்தானில் இருந்து தீவிரவாத சக்திகள் பரவி அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலை தருகின்றன என்பது இந்தியாவின் நிலைபாடாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பா ளர் கிரவ்லி கூறினார். இந் தியாவை பாகிஸ்தான் சமரசம் செய்ய விரும்பினால் உரிய அடிப்படை மாற்றங்களை மேற்கொள்ள வேண் டும். மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை பாகிஸ்தான் நீதியின் முன்பாக நிறுத்த வேண்டும். அத்தகைய நடவடிக்கை உரிய மேம்பாட்டு மற்றும் முக்கிய செயலாக திகழும் என்றும் கிரவ்லி கூறினார்.

(மேலும்....)

ஆடி 27, 2010

எழுந்திடுவோம் தோழர்களே!

(தோழர் மோகன்)        

உங்கள் கசப்பான வாழ்வுக்கு காரணங்கள் எதுவாகினும் மக்களின் இனிப்பான வாழ்வுக்கான உங்கள் கடமைகளை நிறுத்தி விடமுடியாது. கட்சியின் கொள்கைகளை தங்களுக்குள் உறுதியாக கொண்டவர்கள் தனித்து போவதற்கு தடைபோடும் அதிகாரம் யாரிடமும் இல்லை. உங்களை தலைமை தாங்குவது நீங்கள் கொண்ட இலட்சியமே தவிர வேறெதுவும் இல்லை. ஆகவே தோழர்களே! இது எங்கள் காலம் பல தசாப்பங்களாக அவதிப்பட்ட மக்கள் அமைதியான வாழ்வுக்கு திரும்பி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் மீண்டும் எங்களை நோக்கியே திரும்பிபார்க்கிறார்கள். காலம் எங்களிடம் மிகப்பெரிய கடமையை தந்திருக்கிறது அதை தட்டிக்கழிக்கமுடியாத உள்ளங்களை கொண்டவர்கள் நாங்கள்.  (மேலும்...)

ஆடி 27, 2010

ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுகின்ற நடிகர்களைவிட நான் ஒருபடி மேல் - நடிகை அசின்

ஈழத்தமிழருக்காக வாய்கிழிய பேசுகின்ற நடிகர்களைவிட நான் ஒருபடி மேலே சென்று, ஈழத்தமிழர்களை நேரில் சந்தித்து அவர்களின் சில பிரச்சினைகளை தீர்த்தவள் நான். ஆகையினால் நான் யாருக்கும் அடிபணிந்து போகவேண்டிய அவசியம் எனக்கில்லை. இந்திய அரசியல் சட்டத்தினையும் நடிகர் சங்கத்தின் கட்டளைகளையும் நான் இதுவரை மீறி நடக்கவில்லை, நடக்கவும் மாட்டேன். இதையும்மீறி நடிகர் சங்கம் எனக்கு தடைவிதித்தால் விதித்திட்டுப் போகட்டும். அதற்காக நான் கவலைப்படப்போவதில்லை என நடிகை அசின் கூறியிருக்கிறார். (மேலும்....)

 

 

ஆடி 27, 2010

Eelam war IV

Tiger captives down to 7,900, rehab programme on track

Brig. Ranasinghe said that 7,948 ex-combatants, including about 1,100 females were still undergoing rehabilitation. According to him, of the 1,100 females, about 700 are now working in the garment trade. About 400 are being trained as Montessori teachers (120). Others are learning English (100), IT (60) and drama ‘therapy’ (60). Brig. Ranasinghe said that garment workers received Rs 12,000 plus per month along with food, medical facilities and accommodation. An effort was being made to explore the possibility of securing the help and expertise of the British Council to teach English. The Montessori course, he said, would commence in the first week of August, while the remaining three programmes were already in progress. He appreciated versatile actress of international repute Anoja Weerasinghe’s support for a drama ‘therapy’ programme. (more....)

ஆடி 27, 2010

தனது முன்னாள் சகா

கே.பிக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது முட்டாள்தனமானது -பிரதியமைச்சர் முரளிதரன்

கே.பி. வடபகுதி அபிவிருத்திக்குப் பொறுப்பாக நியமிக்கப் போவதாக வெளியான செய்தி குறித்து கேட்டபோது,“இவை அனைத்தும் தவறான விடயம். இதேபோன்று கே.பியை முதலமைச்சராக அரசாங்கம் நியமிக்கப்போவதாக சரத் பொன்சேகா கூறினார். அடுத்த நாளே அதற்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்தது. கே.பியை அந்தளவுக்கு முக்கியத்தும் கொடுத்து பார்ப்பது தவறானதும் முட்டாள் தனமானதுமாகும். கே.பி. இலங்கை சட்டத்திட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்ட ஒருவர். அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதற்காக சிலர் இவ்வாறான கதைகளை கூறுகிறார்கள். (மேலும்...)

ஆடி 27, 2010

இலங்கைக்கு விசேட தூதுவரை அனுப்புகிறார் மன்மோகன்சிங்

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்துவது தொடர்பிலான முன்னேற்றங்களை மதிப்பிடுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவரை இலங்கைக்கு அனுப்பவுள்ளதாக இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு எழுதிய கடிதமொன்றில் மன்மோகன் சிங் இதனை தெரிவித்துள்ளதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்துள்ளது. (மேலும்....)

ஆடி 27, 2010

பதினேழாவது திருத்தம் மக்களின் உடனடித் தேவையல்ல

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவும் சந்தித்து அரசிய லமைப்புத் திருத்தம் பற்றிப் பேசியதற்குப் பின்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்குமிடையே பேச்சு வார்த்தை நடைபெற்றமை பற்றிய செய்தி மக்களிடம் நம் பிக்கையைத் தோற்றுவித்தது.  அத்தியாவசியமாகத் தேவைப் படும் அரசியலமைப்பு மாற்றங்களுக்கு எதிர்க்கட்சியின் ஆதரவு கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சிப் பிரதிநிதிகளின் செயற்பாடு மக்க ளின் நம்பிக்கையைத் தகர்ப்பதாக உள்ளது. (மேலும்...)

ஆடி 27, 2010

கோள் பட்டியலிலிருந்து புளுட்டோ வெளியே தள்ளப்பட்ட காரணம்

பள்ளிக் கூடத்தில் சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் (Planets) இயங்குகின்றன என்று படித்திருக்கிறோம். புதன், வெள்ளி, பூமி தொடங்கி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ என்று ஒன்பதையும் வரிசைப்படுத்தி சரியாக எழுதினால் புள்ளிகள் கிடைக்கும். இவை எல்லாம் சூரியனை மையமாகக் கொண்டு ஒரு நீள் வட்டப் பாதையில் (elliptical orbits) இயங்குகின்றன. இப்படிச் சூரியனைச் சுற்றும் கோள்களுக்கும் கோள்கள் உண்டு. அவை துணைக்கோள்கள், அல்லது உபக்கிரகங்கள் என்று அழைக்கப்படும். இவை கோள் களைச் சுற்றி இயங்குகின்றன. உதாரணமாக சந்திரன் பூமியின் துணைக்கோள் ஆகும். ஆனால் இன்றைய புரிதலின்படி சூரியனைச் சுற்றி எட்டு கோள்கள் தான் இருக்கின்றன. மூன்று குறுங்கோள்கள் - செரஸ், புளூட்டோ, ஈரிஸ். நாளை நம் தொலைநோக்கிகள் இன்னும் சக்தி வாய்ந்தவையாக மாறும் பொழுது இவையும் மாறலாம். (மேலும்...)

ஆடி 27, 2010

வெனிசூலா மீதான அச்சுறுத்தல் தொடர்ந்தால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகம் துண்டிக்கப்படும் - ஜனாதிபதி சாவெஸ்

வெனிசூலாவை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டால் அமெரிக்காவுக்கான எண்ணெய் விநியோகத்தை துண்டிப்போம். இதனால் நாங்கள் கல்லைச்சாப்பிடக் கூடிய நிலையேற்பட்டாலும் அதை எதிர்கொள்ளத்தயாரென வெனிசூலா ஜனாதிபதி ஹுசோ சாவெஸ் தெரிவித்தார். கொலம்பியாவுடனான இராஜதந்திர உறவுகளை கடந்த வாரம் துண்டித்துக் கொண்ட பின்னர் சாவெஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதை அறிவித்துள்ளார்.(மேலும்...)

ஆடி 27, 2010

ஜெரூஸலத்தில் ஆயிரம் வீடுகள் உடைப்பு, காஸா சுரங்கப் பாதைகள் மீதும் குண்டு வீச்சு

ஹமாஸின் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஸா எல்லைகளில் இஸ்ரேல் விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டுத்தாக்குதல்களை நடத்தின. இக்குண்டுகள் சுரங்கப் பாதைகள் மீது போடப்பட்டன. எகிப்தின் எல்லைகளை அண்டியுள்ள காஸா சுரங்கப் பாதைகளே தாக்குதலுக்குள்ளாகின. இதற்கான காரணத்தை இஸ்ரேல் இராணுவம் அறிவிக்கவில்லை. சுரங்கப் பாதைகளூடாக ஹமாஸ் ஆயுதங்களைக் கடத்துவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுவது வழக்கம். இதனால் அடிக்கடி சுரங்கப் பாதைகள் மீது இஸ்ரேல் இராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றது. (மேலும்...)

ஆடி 27, 2010

வடக்கு, கிழக்கில் கைத்தொழில் ஊக்குவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில் நுட்ப அறிவை வழங்கும் திட்டமொன்றை தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆரம்பித்துள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் செயற்படும் விதாதா வள நிலையங் களினூடாக கைத்தொழிலாளர்களுக்கு தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுகிறது. யோகட் கைத்தொழில், பேக்கரி கைத்தொழில், மரக்கறி சார் உணவு உற்பத்தி என்பவற்றிற்காக உயர் தொழில் நுட்ப அறிவு வழங்கப்படுவதாக அமைச்சு கூறியது. இதன் காரணமாக குறித்த துறைகளில் கைத்தொழில்களை ஆரம்பிக்க கூடுதல் ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.(மேலும்...)

ஆடி 27, 2010

உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று

வரலாற்றுப் பிரசித்திபெற்ற உகந்தை மலை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் இன்று செவ் வாய்க்கிழமை நடைபெறுகிறது. கடந்த 12ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான உற்சவம் தினமும் விஷேட பூஜைகள், அன்னதானத்துடன் நடைபெற்று வந்தது. தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலத்தினர் இன்று வரை அன்னதானத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காரைதீவு யாத்திரிகர் மட்டத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. இதேவேளை காரைதீவு ஸ்ரீ கந்தசுவாமி ஆலய வருடாந்த தீர்த்தோற்சவமும் இன்று நடைபெறுகிறது. கடந்த 15 தினங்களாக திருவிழா நடைபெற்று வந்தது.

ஆடி 27, 2010

தொடர்கதையாகும் மீனவர்களின் துயரம்

(சி.ஆர்.செந்தில்வேல்)

“ஒரு நாள் போவார் மறுநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்
ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்”

தற்போது இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கும் மேல்ஆகிவிட்ட நிலையில், இந்த ஓராண்டில் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்கள் மீது பல்வேறு தாக்குதல் களைத் தொடுத்தனர். ஆனாலும், இந்த ஓராண்டில் எந்தமீனவரும் உயிர்ப்பலி ஆகவில்லை என்றபோது மீனவர்கள் மத்தியில் ஓர் நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கை தகர்ந்து போகும் விதத்தில் நாகை மாவட்டம், வெள்ளப்பள்ளம் மீனவக் குப்பத்தை சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இலங்கை கடற்படையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அமைந்துள்ளது. இது தொடர் கதையாகுமோ என்ற அச்சமும் பீதியும், தமிழக மீனவர்களின் மத்தியில் மேலும் வலுப்பெற்றுள்ளது. (மேலும்...)

ஆடி 27, 2010

வசந்தபாலனுக்கு நேர்ந்த அவலம்

அங்காடித்தெரு திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது போலவே, அப்படத்தை உருவாக்கிய இயக்குநர் வசந்தபாலனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்திருக்கிறது. பெரு நிறுவனங்களில் நடக்கும் அவலங்களை அப்படியே அச்சு அசலாக வசந்தபாலன் தனது படத்தில் கொண்டு வந்திருந்தார். ஊடகங்களில் பெரும் பாராட்டுகள் குவிந்தன. படம் குறித்த விவாதங்களும் பெரிய அளவில்தான் இருந்தன. ஆனால் படம் வெளியான சமயத்தில் தான் எங்கே இருக்கிறோம் என்பதைச் சொல்ல முடியாத அவல நிலையில் வசந்தபாலன் இருந்திருக்கிறார். அரவான் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்ச்சியில் திமுக எம்.பி.யான திருச்சி சிவா இதை அம்பலப்படுத்தியுள்ளார். அதில் பேசிய சிவா, அங்காடித்தெரு படம் திரைக்கு வருகிற நாளன்று வசந்தபாலன் என்ன செய்தார் தெரியுமா? தனது மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவிட்டு தனது செல் போனையும் அணைத்துவிட்டு தலைமறை வாக இருந்தார். சமூக அவலத்தை வெளிச் சம் போட்டுக் காட்டுகிற ஒரு படைப்பாளி இப்படி தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை அமைந்தது வருத்தத்திற்குரிய விஷயம். அவரது படத்தைப் பாராட்டுகிற நமக்கு அந்த படைப்பாளியைக் காப்பாற்று கிற அக்கறையும் இருக்க வேண்டும் என்றார். சமூக அவலத்தைப் படமாக்கிய இயக்குநர் சில நாட்கள் தலைமறைவாக இருந்தார் என்று ஆளுங்கட்சி எம்.பி.யே பேசியது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆடி 27, 2010

பொருளாதாரத்தில் திவால்

அமெரிக்க அதிகரிக்கும்   நிதி பற்றாக்குறை!

அமெரிக்காவின் கூட்டு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவிகிதம் ஆகும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2009 ம் ஆண்டில் அமெரிக்காவின் கூட்டு நிதி பற்றாக்குறை ஒரு லட்சத்து 42 ஆயிரம் கோடி டாலர் ஆக இருந்தது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறையின் மதிப்பு சுமார் ஒரு லட்சத்து 56 ஆயிரம் டாலராக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தில் 10.6 சதவிகிதத்தை எட்டும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் நிர்வாக மற்றும் வரவு - செலவு திட்ட ஆணையம் மதிப்பிட்டுள்ளது.

ஆடி 26, 2010

கியூபா: சாதனை அல்ல... சரித்திரம்!

(எஸ். கண்ணன்)

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண் டுகள் முடிந்துவிட்டன. இன்றும் 30 சத வீதத்திற்கும் அதிகமான மக்கள் எழுதப் படிக்க அறியாதவர்களாக இருக்கிறார் கள். ஆனால் கியூபா 1959 ஜனவரி 1ம் தேதி ஹவானா நகருக்குள் புரட்சிப் படை நுழைந்ததன் மூலம் புரட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 61ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 100 சதவீதம் கியூப மக்களுக்கு எழுத்தறிவித்த வெற் றியை கியூபா அறிவித்த போது உலகமே வியந்து போனது. கியூபப் புரட்சியின் வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாத அமெரிக்கா, பல கொடூரமான தாக்குதல் களை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் கல்வியில் பெரும் சாதனையை கியூபா நிகழ்த்தியது சாதாரணமானதல்ல. (மேலும்...)

ஆடி 26, 2010

யாழ்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தொன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். தமது பிறந்தநாள் வைவத்தை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய வேளை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியொன்றுடன் அவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் மோதுண்டதால் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தடியைச் சேர்ந்த யாழ். பல்கலைக்கழக கலைப்பீட 3ஆம் வருட மாணவனான சாந்தகுமார் சந்துரு (வயது 25) மற்றும் சுண்டுக்குளியைச் சேர்ந்த பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல்பீட மாணவனான கலிஸ்ரஸ் கஜேந்திரன் (வயது 25) ஆகியோராவர்.இம்மாணவர்கள் இருவரின் சடலங்களும் மரண விசாரணைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஆடி 26, 2010

வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும்.
-
மனோ கணேசன்

வடகிழக்கிற்கான அரசியல் தீர்வு என்பதை வடகிழக்கை தளமாக கொண்டு செயற்படும் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் கட்சிகளுமே தீர்மானிக்கவேண்டும். இதில் நாம் தலையிட மாட்டோம். அதேபோல் தென்னிலங்கையில் மத்திய, ஊவா, சப்ரகமுவ, மேல்மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பிடமோ அல்லது வடகிழக்கு தமிழ் கட்சிகளிடமோ ஒப்படைத்துவிட்டு தென்னிலங்கை தமிழ் கட்சிகள் காத்திருக்க முடியாது. இன்று அரசியலமைப்பு திருத்தங்கள், தேர்தல் முறை மாற்றம், மலையகத்தின் பிரதேச செயலக எல்லைகளை தீர்மானிப்பது, மலையகத்தின் சகித்துகொள்ள முடியாத வறுமை மற்றும் கொழும்பிலும், மலையகத்திலும் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு ஆகியவை உட்பட பெருந்தொகையான பிரச்சினைகளை தென்னிலங்கையில் வாழும் இந்தியவம்சாவளி தமிழ் மக்களும், வடகிழக்கிலிருந்து இடம் பெயர்ந்து தெற்கில் நிரந்தரமாக வாழும் தமிழர்களும் எதிர்நோக்குகின்றார்கள். (மேலும்....)

ஆடி 26, 2010

வவுனியா சுத்திகரிப்பு ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

பஸ் சேவை பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது

வவுனியா நகர சபைத் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களுடைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்ட நிலையில் இன்று காலை முதல் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் வழமைபோல் நடைபெற்றன.  கடந்த மூன்று நாட்களாக சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாததினால்  நகரத்தினுள் குப்பை கூழங்கள் தேங்கிக் கிடந்தன. நகரசபை பணியாளர் ஒருவருக்கும் சுத்திகரிப்பு  தொழிலாளர்களுக்குமிடையில் ஏற்பட்ட  பிணக்கை தீர்ப்பதற்கு சபை நிர்வாகம் கவனம் செலுத்த தவறிவிட்டது என குற்றம் சுமத்தி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல மறுத்து வந்தனர். (மேலும்....)

ஆடி 26, 2010

வடக்கில் கைவிடப்பட்ட நிலங்களில் நெற்செய்கை

வடக்கில் கைவிடப்பட்ட வயல் நிலங்களில் நெற்பயிர்ச் செய்கையினை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான ஏர்பூட்டு விழா அடுத்த மாதம் நடுப்பகுதியளவில் நடைபெறவுள்ளது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் பெரும் வயல் நிலங்கள் நீண்டகாலமாக பயிர்ச் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன. புதர்களாக காட்சியளிக்கும் மேற்படி வயல் நிலங்களை சுத்திகரித்து பயிர்ச் செய்கைக்கு ஏற்ற விதத்தில் தயார்படுத்து வதற்கு பெரும் எண்ணிக்கையான ட்ரக்டர் வண்டிகள் தேவைப்படு கின்றன. தற்போது தேவையான ட்ரக்டர் வண்டிகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக எருதுக ளின் உதவியுடன் ஏர் பூட்டும் பழைமை யான முறையினை பின்பற்றி அவற்றை விளைச்சலுக்கு உகந்த நிலங்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளன.

ஆடி 26, 2010

தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்

இந்திய நடிகர்கள் இலங்கை செல்லலாம்

இந்திய நடிகர், நடிகைகள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியும். இந்நிலையில் “அவர்கள் அவ்வாறு செல்வதைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோர முடியாது என்றும் இந்தக் கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. (மேலும்....)

ஆடி 26, 2010

அமெரிக்காவின் பொலிஸ்காரத்தனம்

வடகொரியாவை எச்சரிக்க நான்கு நாள் போர் ஒத்திகை எட்டாயிரம் இராணுவம், 20 யுத்தக் கப்பல்கள், களத்தில்

அமெரிக்காவும் தென்கொரியா வும் இணைந்து நேற்று ஞாயி ற்றுக்கிழமை ஜப்பானின் கடல் பிராந்தியத்தில் போர்ப் பயிற்சியி லீடுபட்டன.  வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலுள்ள நிலையிலும் இவ் விரு நாடுகளும் போர்ப் பயிற்சியிலீ டுபட்டன. எட்டாயிரம் இராணுவத் தினர் இருபது யுத்தக் கப்பல்கள் இன்னும் தேவையான இராணுவ விமானங்கள் என்பன இப்போர்ப் பயிற்சியில் நேற்று ஞாயிற்றுக் கிழமை ஈடுபட்டன. (மேலும்....)

ஆடி 26, 2010

Canada probes LTTE aid agencies

The ruling on the Tamil Refugee Aid Society came after an engineer from Toronto, Thiruthanikam Thanigasalam was jailed for 25 years recently in the United States for attempting to pay US $ 1 million to buy missiles, launchers and 500 AK-47 assault rifles in August 2006. He has been identified as the Charity’s Toronto office Representative. According to a statement issued by the Canadian revenue agency, “The Ottawa Society had provided $713,000 to the Tamil Tigers, whose long revolt against the Sri Lankan government was crushed last year”, the National Post reported. (more....)

ஆடி 26, 2010

லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரி

‘மெக்ராஹி’ பிழையான வழிகாட்டலின்கீழ் விடுதலையானார்

லொக்கர் பி விமானக் குண்டு வெடிப்பின் சூத்திரதாரியான லிபியாவைச் சேர்ந்த மெக்ராஹி விடுதலை செய்யப்பட்டமை தவறான விடயம் எனத் தெரிவித்த பிரிட்டன் வெளிநாட்மைச்சர் வில்லியம் ஹேக் பிரிட்டிஷ் பெற்றோலியக் கம்பனிக்கும் லிபியாவுக்கும் இவ்விடயத்தில் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் குறிப்பிட்டார்.மெக்ராஹி சென்ற வருடம் ஸ்கொட்லாந்து சிறையிலிருந்து கருணையடிப்படையில் விடுதலை செய்யப்பட்ட விடயம் அமெரிக்காவின் பாரிய சந்தேகத்துக்குள்ளாகியுள்ளது. (மேலும்....)

ஆடி 26, 2010

வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிப்பு

கடந்த வெள்ளி இரவு கடத்தப்பட்ட வவுனியா வர்த்தகர் நேற்றுமுன் தினம் சனிமாலை விடுவிக்கப்பட்டுள்ளாரென வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகருடைய வீட்டில் வைத்து இனம் தெரியாத சிலரினால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். கடத்தியவர் கள் இவரை விடுவிக்க ஒரு தொகை பணத்தினை கப்பமாகக் கோரியிருந்தனர். அதில் ஒரு பகுதி வழங்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டாரென விசாரணை யின் போது தெரியவந்தது

 ஆடி 26, 2010

More about Moringa Leaves

Moringa leaves could practically wipe out malnutrition on our planet. Experts agree that the long-term solution to malnutrition is the use of foods rich in the essential nutrients often lacking in people's diets. Modern scientific research is proving that Moringa leaves are one of the richest sources of such nutrients. Even small amounts of the leaves could protect thousands of people from suffering and death. People in several countries have found that Moringa leaves are quite acceptable to taste, especially when added to common foods.

ஆடி 26, 2010

கறுப்பு ஜூலை நினைவாக...

கறுப்பு ஜூலைக்குப் பின்னரான காலகட்டத்தில் அதிகாரத்தில் இருந்த சகல அரசாங்கங்களுமே தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் இணக்கத்தீர்வைக் காண்பதற்கெனக் கூறிக்கொண்டு இராணுவத்தீர்விலேயே அக்கறை காட்டின. சகல ஜனாதிபதிகளுமே உலக ஒப்பாசாரத்துக்கு அரசியல் தீர்வைப் பற்றிப் பேசினார்களேதவிர, இராணுவத் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளுக்குத் தங்களாலியன்ற பங்களிப்பை வழங்கிவிட்டே சென்றார்கள். இந்தியாவின் தலையீடோ அல்லது சர்வதேச சமூகத்தின் பங்களிப்போ இலங்கையில் அரசியல் தீர்வொன்று காணப்படுவதற்கு உதவுவதற்குப் பதிலாக இராணுவத் தீர்வை நோக்கிய செயன்முறைகள் முனைப்படைவதை உறுதிசெய்ததையே காணக்கூடியதாக இருந்தது. இறுதியில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் நிகழ்வுப் போக்குகளில் ஏற்பட்ட மாறுதல்கள் வன்னியில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்குக் கிடைக்கச் செய்தன. (மேலும்....)

ஆடி 26, 2010

Tamils rally at Queen's Park

(By CHRIS DOUCETTE, Toronto Sun)

Hundreds of Tamil-Canadians gathered at Queen’s Park Sunday afternoon to remember countrymen who were killed 27 years ago during Black July — a time when a wave of violence swept through Sri Lanka. There are some 300,000 Tamils Canada, most of whom live in the GTA. Many have lost friends and family in the fighting in their homeland. Once it was dark, the south lawn at Queen’s Park was filled with candlelight as the Tamil-Canadians continued their vigil. (more...)

ஆடி 26, 2010

Leads on LTTE's global ring

“Officials are moving ahead with more than just tight scrutiny on Sivarasa Pirundaban alias Achchudan alias Suresh, Bahitharan alias Bhavi, Narendran Rathnasabapathi alias Naren, Ganeshruban alias Ruban and Ponnaiah Anandarajah alias Aiyya alias Rajah and a few more LTTE activists who are connected to arms procurement, and shipping while posing as businessmen,” the Ministry said. The Ministry said the recent recovery in Visuamdu of documents and diary notes of Castro — once head of LTTE's international wing — had thrown light on the terror outfit's overseas operatives and clandestine funding agencies. (more...)

ஆடி 25, 2010

1983 நினைவுகளும் நாம் செய்ய வேண்டியவையும்

'83 இன வன்முறையை சொல்லி சொல்லியே வன்முறையையும், குரோதத்தையும் வளர்க்க கூடாது' -  தி. சிறீதரன்

இலங்கையின் சமகால வரலாற்றின் கறைபடிந்த அத்தியாயமான ஜூலை 83 படுகொலைகள் நிகழ்ந்து 27 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. வழமைபோல் கண்ணீர் விடுவதிலோ, சுயபச்சாத்தாபத்தில் மூழ்குவதிலேயோ காலத்தை கடத்தாமல் ஆக்கபூர்வமான முறையில் சிந்திக்க வேண்டு;ம். 1983 இன வன்முறையின் பின்னர் குறிப்பாக தமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டின் அனைத்து இன சமூகங்களும் சிந்தியுள்ள ரத்தத்தையும் இழப்புக்களையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். (மேலும்....)

 

ஆடி 25, 2010

Crisis in transnational government of Tamil Eelam

(by Prof. Sisira Pinnawala)

The Transnational Government of Tamil Eelam has already run into trouble. The post Prabhakaran Tamil Diaspora which is divided into three rival factions as Rudrakumaran’s TGTE, Eezham People’s Assembly (EPA) or Makkal Peravai of Perinbanayagam Sivaparan (Nediyavan) and Father Emmauel’s Global Tamil Forum (GTF) are at loggerheads over the nature of the TGTE and a power struggle for control of the Constituent Assembly has been going on since the inception of the TGTE Project. Accusations of electoral fraud, intimidations of voters and similar other election malpractices were being hurled by the rival factions during the elections and there have been several resignations from the electoral contest in the UK and similar disputes have arisen in France. (more...)

ஆடி 25, 2010

நிபுணர் குழு விசா கோரவில்லை- இலங்கைக்கான உயர் அதிகாரி

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசா அனுமதி கோரி எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என அமெரிக்காவிலுள்ள இலங்கைக்கான உயர் அதிகாரி தெரிவித்தார். இந்த நிபுணர் குழு   இதுவரையில் எந்தவிதமான பூர்வாங்க கலந்துரையாடல்களையும் நியூயோர்க்கில் நடத்தவில்லை எனவும் அவர் கூறினார். 3 பேரைக் கொண்ட நிபுணர் குழுவினர் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்வதற்கான விஸா அனுமதி வழங்கப்பட மாட்டாது என ஏற்கனவே இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தனக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நிபுணர் குழுவை நியமித்திருப்பதாகவும் இது விசாரணைக் குழு அல்ல எனவும்  ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். இலங்கை செல்வதற்கான விஸா அனுமதி தமக்கு இலங்கை அரசாங்கத்தினால் மறுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உண்மையைக் கண்டறிவதற்கு தடையேற்பட்டிருப்பதாகவும் நிபுணர் குழுவின் தலைவரான மர்சூகி தஸ்மன் பி.பி.சி செய்திச் சேவைக்கு அண்மையில் பேட்டியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடி 25, 2010

கனடாவில்

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானி

கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார். கனடாவின் அல்பெட்டா மாநிலத்தில் வாரஇறுதி சர்வதேச விமான சாகச கண்காட்சி இடம்பெறவிருந்த வேளையில், அதற்கான பயிற்சியில் கப்டன் பிறைன் பெவ்ஸ் ஈடுபட்டிருந்தார். CF-18  ரக தாக்குதல் விமானத்திலேயே இந்த சாகசப் பயிற்சியினை மேற்கொண்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்பாராத விதமாக விமானத்தின் இயந்திரம் தீப்பற்றிக் கொண்டது. இதனை சற்றும் எதிர்பார்த்திராக விமானி சாதுரியமாக செயற்பட்டு விமானத்திலிருந்து பராசூட் மூலமாக எகிறி தப்பித்திருக்கிறார். சிறு காயங்களுக்கு மட்டுமே இலக்கான விமானி, அந்த விபத்துப்பற்றி விபரிக்கையில்… என் வாழ்நாளில் சற்றும் எதிர்பார்க்காமல் நடந்த விபத்தில் நான் செத்துப் பிழைத்திருக்கிறேன். இயந்திரத்தில் 'பொப்... பொப்... பொப்...' என சந்தம் வந்தபோது துரிதமாக செயற்பட்டு எனது அவதானத்தினை செலுத்தினேன். அப்பொழுது ஓர் இயந்திரத்தின் தீப்பற்றிக் கொண்டது. உடனடியாக பராசூட் இருக்கையை இயக்கி தப்பித்துக் கொண்டேன். சில செக்கன்களில் உயிர் தப்பியமை இன்னமும் வியப்பாக இருக்கிறது என அவ்விமானி குறிப்பிட்டுள்ளார்.

ஆடி 25, 2010

200 அகதிகளுடனான கப்பல் கனடா கரையை அண்மிக்கிறது: உறுதிப்படுத்துகிறது அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் கப்பல் என இலங்கை அரசாலும் மேற்குலக ஊடகங்களாலும் வர்ணிக்கப்பட்ட இக்கப்பலில் அகதி அந்தஸ்துக்கோரும் 200க்கு மேற்பட்டோர் பயணிக்கிறார்கள் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன. இக் கப்பலின் நிலை பற்றிக் கருத்துத் தெரிவித்த மேற்படி அமெரிக்க அதிகாரி, தாய்லாந்துக் கொடி யுடன் பயணித்துக் கொண்டிருக்கும் இக் கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பி யாவின் கரையை நோக்கிச் சென்று கொண்டி ருப்பதை தன்னால் உறுதிப்படுத்த முடியும் எனத் தெரிவித்தார். மேற்படி அமெரிக்க பசுபிக் பிராந்தியக் கடற் கண்காணிப்புப் பிரிவு தனது எல்லைக் குட்பட்ட 12 கடல் மைல் தூரத்தையே கண்கா ணிப்பதால் இக் கப்பல் கரையை அண்மித் தவாறே பயணிக்கிறது என்றே நம்பப்படுகிறது. (மேலும்....)

ஆடி 25, 2010

தமிழ் மக்களும் பாதுகாப்பு வலயங்களும்

எந்தவொரு இலங்கை அரசாங்கமும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளப்போவதில்லை. குறிப்பாக, பிரிவினைவாதப் போர் பல தசாப்தங்களாகத் தளராமல் தொடருவதற்கு வசதியாக இருந்ததுடன் தமிழ்த் தேசியவாத ஆயுதப்படையணியின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் தொகுதி வாழ்ந்ததுமான பகுதிகளில் இருந்து படைகள் வெளியேறப் போவதில்லை. அமெரிக்காவிலே பிரிவினைவாத வாதக்குரல்களை எழுப்பிய தென்மாநிலங்களில் மத்திய அரசின் இராணுவம் சிவில் யுத்தத்தின் முடிவுக்குப் பின்னரும் 12 வருடங்கள் நிலைகொண்டிருந்தது. செச்னியாவில் ரஷ்யப்படைகள் பத்து வருடங்கள் நிலைகொண்டிருந்தன. ஹிட்லரைத் தோற்கடிக்கப்போன அமெரிக்கப்படைகள் ஜேர்மனியிலும் ஜப்பானிலும் பல தசாப்தங்களாக நிலைகொண்டிருந்தன. இலங்கைப் படைகள் வடக்கு,கிழக்கில் தொடர்ந்து நிலை கொண்டிருக்கவே செய்யும்.பிரிவினைவாதக் கிளர்ச்சி மீண்டும் தலைகாட்டுவதை முன்கூட்டியே தடுப்பதற்கும் பிரிவினைவாத ஆதரவுக் குழுக்களைக் கொண்ட தமிழ் நாட்டுக்கு நெருக்கமாக இருக்கும் மாகாணத்தைப் பாதுகாப்பதற்கும் போதுமான அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் நிரந்தரமான படைகளின் பிரசன்னம் இருக்கும்; இருக்கவேண்டும். (மேலும்....)

ஆடி 25, 2010

அமரர் சிறிமாவின் 50ஆவது நிறைவைக் கொண்டாட அரசு தவறிவிட்டது : சந்திரிகா

சிறிமா பண்டார நாயக்கா உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கைப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருடங்கள் பூர்த்தியானதைக் கொண்டாட அரசாங்கம் தவறிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். இது குறித்து ஊடகம் ஒன்றுக்குக் கருத்துக் கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில், "பண்டாரநாயக்க குடும்பத்துக்கு எதிரான கொள்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது.  கடந்த 21 ஆம் திகதி, எனது தாயார் சிறிமா பண்டார நாயக்கா உலகின் முதல் பெண் பிரதமராக இலங்கைப் பிரஜைகளால் தெரிவு செய்யப்பட்டு ஐம்பது வருட நிறைவடைந்த தினம். ஆனால் அரசு இந்த 50 ஆவது வருட பூர்த்தியைக் கொண்டாடத் தவறி விட்டது" என்றார்.

ஆடி 25, 2010

மாவோயிஸ்டுகளுக்கு அஞ்சப் போவதில்லை : மன்மோகன் சிங் _

நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் தீவிரவாதிகளுடன் சமசரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. உள்நாட்டு பாதுகாப்புக்கு மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலாக உள்ளனர் என்பது சந்தேகமில்லை. மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் கரம் கோர்த்துள்ளன. ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகம் காணப்படுவதற்கு மத்திய அரசின் நலத்திட்டங்கள் சரிவர மக்களை சென்றடையாததே காரணம்.  (மேலும்....)

ஆடி 25, 2010

மாணவிகள் தற்கொலை

மலையகத்தில் அதிகரித்துவரும் தற்கொலைகள் : யார் காரணம்? _

மலையகத்தில் பாடசாலை மாணவிகள் தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணம் யார் என்ற கேள்வி தற்போது வலுவாக எழுந்துள்ளது. இவ்வாறான தற்கொலை சம்பவங்களுக்குப் பாடசாலைகள் தான் காரணம் என்று ஒரு சாரார் கூறிக்கொண்டு உண்மை நிலைமைகளை மறைக்கும் சூழலும் நிலவுகிறது. பாடசாலை மாணவிகள் அல்லது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கான உண்மையான காரணங்களைக் கண்டறிந்து அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வது இன்றைய தேவையாக உள்ளது. (மேலும்....)

ஆடி 24, 2010

எனக்கு உணர்ச்சி இல்லையா?

இலங்கை தமிழ் எம்.பி. க்களிடம் எகிறிய தமிழக முதல்வர்!

'இனத் துரோகி' பட்டம் சூட்டும் எதிர்க்கட்சி அரசியலுக்கு இடையில், கோபாலபுரத்தில் வெளிப்பட்ட வார்த்தைகள் கடுமையாகவும் உறுதியாகவும் வந்து விழுந்திருக்கின்றன. ''நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்களோ... எனக்குத் தெரியாது. நான் இந்தியா வின் எதிர்க் கட்சித் தலைவர் இல்லை. இந்திய இறையாண்மைக்குக் கட்டுப்பட்ட, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர். நீங்கள் நினைப்பதை எல்லாம் நான் இங்கு பேச முடியாது. தமிழர்களுக்காக என்னால் என்ன செய்ய முடியுமோ... அதைத்தான் செய்ய முடியும். இந்த நாடு ஒரு தலைவரை இழந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள். அவர்களின் உணர்வில் நான் குறுக்கிட முடியாது!'' என்றபடி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த் தைகளைக் கோத்ததுபோல இருந்திருக்கின்றன, தமிழக முதல்வரின் வார்த்தைகள். (மேலும்....)

ஆடி 24, 2010

The consequences of a US war crime

Cancer rate in Fallujah worse than Hiroshima

(By Tom Eley)

The Iraqi city of Fallujah continues to suffer the ghastly consequences of a US military onslaught in late 2004. According to the authors of a new study, “Cancer, Infant Mortality and Birth Sex-Ratio in Fallujah, Iraq 2005–2009,” the people of Fallujah are experiencing higher rates of cancer, leukemia, infant mortality, and sexual mutations than those recorded among survivors in Hiroshima and Nagasaki in the years after those Japanese cities were incinerated by US atomic bomb strikes in 1945. The epidemiological study, published in the International Journal of Environmental Studies and Public Health (IJERPH), also finds the prevalence of these conditions in Fallujah to be many times greater than in nearby nations. (more....)

 

ஆடி 24, 2010

 

இயல்பாக வாழவிட்டாலே போதும்

பாம்பு வித்தியாசமான ஒரு உயிரியாக இருப்பதாலும், சரசரவென சருகுகள் இடையே ஊர்ந்து செல்வதாலும், திடீரென தோன்றுவதாலும் நிறைய பயம் ஏற்படுகிறது. இது எல்லாவற்றையும்விட பெரிய பயம் எல்லா பாம்புகளும் விஷமுள்ளவை என்று தவறாக நம்புவது. ஆனால் பொதுவாகக் காணப்படும் பாம்பு வகைகளில் நான்கைத்தவிர மற்ற அனைத்தும் விஷமற்றவையே. விஷமுள்ள பாம்புகள் நல்ல பாம்பு (கோப்ரா), கட்டுவிரியன் (கிரெய்ட்), கண்ணாடி விரியன் (ரஸ்ஸல்ஸ் வைபர்), சுருட்டைப் பாம்பு (சாஸ்கேல்ட் வைபர்), மற்ற அனைத்தும் விஷமற்றவை. விஷமற்ற விஷமில்லாத பாம்புகள் இடையே வேறுபாடு கண்டறியத் தெரிந்து கொள்ள வேண்டும். எல்லா பாம்புகளும் ஒன்று என்று குருட்டுத்தனமாக நம்பிக் கொல்லக்கூடாது. (மேலும்....)

ஆடி 24, 2010

இன உறவுப் பாலமாகும் ஆடிவேல் உற்சவம்!

ஆடிவேல் விழாவில்  தமிழர்களைவிட பெளத்தர்கள் பக் திப் பரவசத்துடன் அதில் பங்கேற்பது குறிப்பிடத்தக்க அம் சமாகும். முருகக் கடவுளை ‘கதரகம தெவியோ’ என்று பெளத்தர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபடுகிறார்கள். இத னால், ஆடிவேல் விழாவில் இந்துகளான தமிழர்களும் பெளத்த சிங்களவர்களும் ஒன்றித்துப் போகிறார்கள். ஆனால், 1983 ஆடிவேல் விழாவுக்குப் பின்னர் இந்தப் பிணைப்பில் சற்றுப் பின்னடைவு ஏற்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது அந்தச் சூழ்நிலையில் நல்ல தொரு மாற்றம் பிறந்திருக்கிறது. ஆடிக் கலவரத்திற்குப் பின்னர் ஓரிரு தடவை ஆடிவேல் உற்சவம் நிகழ்த்தப்பட் டாலும் அது இனங்களின் முழுமையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமைந்திருக்கவில்லை. (மேலும்....)

ஆடி 24, 2010

சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சி வெற்றி பெறுமா?

‘இந்தியாவுடன் செய்துகொண்டது போல பாகிஸ்தானுடன் அணுசக்தி ஒப்பந்தம்’

இந்தியாவுடன் அமெரிக்கா மின்சார தேவைக்காக அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதும், அதுபோன்ற ஒப்பந்தத்தை எங்களோடும் செய்துகொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் தலைவர்கள் கோரினார்கள். ஆனால் அணுஆயுத தொழில் நுட்பத்தை அந்த நாட்டு விஞ்ஞானிகள் வெளிநாடுகளுக்கு விற்றதை தொடர்ந்து அது போன்ற ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் செய்துகொள்ள முடியாது என்று அமெரிக்கா கூறிவிட்டது.  இதைத்தொடர்ந்து சீனாவுடன் ஒரு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் செய்துகொண்டது. பாகிஸ்தானில் 2 அணு உலைக்கூடங்களை அமைக்கவும் சீனா உதவி செய்வதாக அறிவித்தது. சீனாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது. (மேலும்....)

ஆடி 24, 2010

சூரியனைவிட பெரிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு

சூரிய மண்டலத்துக்கு அப்பால் சூரியனைவிட பெரிய நட்சத்திரம் ஒன்று இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது சூரியனைவிட பல மடங்கு பெரியதாகும். அதன் எடை 320 சோலார் மாஸ் ஆகும். இது சூரியனைவிட ஒரு கோடி மடங்கு பிரகாசமானது. நமது பால் வளி வீதியில் இருந்து ஒரு இலட்சத்து 65 ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளது. இது 136 ஏ. எல். என்று அழைக்கப்படுகிறது. இதன் வெப்பம் சூரியனைவிட 7 மடங்கு அதிகம் உள்ளது. இதன் வெப்ப அளவு 40 ஆயிரம் டிகிரி செல்சியசுக்கும் அதிகம் ஆகும். இது போன்ற பெரிய நட்சத்திரங்கள் அதிக காலம் இருப்பது கிடையாது என்றும் இது 30 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே இருக்கும் என்றும் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ்ட் பால் குரோதெர் தெரிவித்தார்.

ஆடி 24, 2010

இப்படியும் சொல்கின்றார்கள்

இப்போது எங்கே பாலகுமார்? இறுதி நேரத்தில் பிரபாகரன் அருகில்...

(இரா.சரவணன்)

ஆரம்பத்தில் 'ஈராஸ்' அமைப்புக்குத் தலைவராக இருந்தவர் வே.பாலகுமார். 'இந்திய அமைதிப் படை' ஈழத்தில் வெறியாட்டம் போட்ட இக்கட்டான நேரத்தில் புலிகள் அமைப்பில் இணைந்து, தனது ஆதரவுத் தரப்பினரையும் புலிகளின் பின்னால் அணிவகுக்கச் செய்தவர். உலகளாவிய அரசியல் முன்னெடுப்புகளைப்பற்றி நல்ல ஆலோசகராக பிரபாகரனுக்கு உரைத்தவர். கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி, ஈழப் போர் முடிவுக்கு வந்தபோது புலிகளின் முக்கியத் தலைவர்கள் என்ன ஆனார்கள் என்பது இன்று வரை நீடிக்கும் புதிராக இருக்கிறது. அதேபோல், புலிகளின் சிறப்பு உறுப்பினர் வே.பாலகுமார், போர் ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி, பண்பாட்டுக் குழுத் தலைவர் கவிஞர் புதுவை இரத்தினதுரை போன்றவர்கள் என்ன ஆனார்கள் என்பதையும் சிங்கள அரசுத் தரப்பு அறிவிக்கவில்லை. (மேலும்...)

ஆடி 24, 2010

லெபனானிலிருந்து

3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்

பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களுக்காக இலங்கை திரும்ப முடியாமல் சுமார் 3000 பேரளவில் லெபனானில் தங்கியுள்ளனர். (மேலும்....)

ஆடி 24, 2010

உலகின் மிக விலை குறைவான லேப்-டாப்  இந்தியா தயாரிப்பு

மாணவர்களுக்காக வடிவ மைக்கப் பட்ட குறைந்தவிலை மடிக் கணி னியை மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் தொடங்கி வைத்தார். உலக அள விலான மொத்த உற்பத்திக்கு பெரு நிறுவனங் களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மடிக் கணினியின் மதர்போர்டு, சிப், டிஸ்ப்ளே, தொடர்புகள், நினைவாற்றல், செயல்முறை அனைத்தும் சேர்த்து மொத்தமாக ரூ.1,500-க்குள் உட்படும் என்று கபில் சிபல் தெரிவித்தார். தொடுதிரை வடிவமைப்பு, இணைய தள தேடுகருவிகள், பிடிஎப் ரீடர், மற்றும் வீடியோ கான்பரன்சிங் வசதிகளுடன் கூடியதாகும். எனினும், இதன் ஹார்டுவேர் உபயோகிப்பவருக்கேற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. லினக்ஸ் அடிப் படையிலான இக்கணினி உயர்கல்வி நிறுவனங்களுக்கு 2011 முதல் அளிக்கப் படும் என்று கபில்சிபல் தெரிவித்தார். இந்தியாவின் ஐஐடி போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களால் இக் கணினி வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆடி 24, 2010

பின்லேடன் இருப்பிடத்தை பாகிஸ்தான் தெரிவிக்க வேண்டும்

அல்கைதா பயங்கரவாதிகள் தலைவர் ஒசாமா பின்லேடன் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவிக்குமாறு பாகிஸ் தானை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பான பி. ஜே. குரோவ்லி வியாழக்கிழமை கூறியது : பின்லேடன் இப்போது எங்கு உள்ளார் என்பது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு தெரியும் என்று நம்புகிறோம். பின்லேடன் தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் அரசு தெரிவித்தால் அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்றார். (மேலும்....)

ஆடி 24, 2010

ஈராக் படையெடுப்பு சட்ட விரோதம்  காமன்ஸ் சபையில் பிரிட்டன் துணைப்பிரதமர்

பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தின் மக்கள் அவையான காமன்ஸ் சபையில் வெளி யிட்ட அறிக்கையில் ஈராக் படையெடுப்பு சட்ட விரோதமானது என்று பிரிட்டன் துணைப் பிரதமர் நிக் கிளக் கூறினார். இராக் கொள்கையில், கூட் டணிக் கட்சிகள் இடையே குழப்பம் உள்ளதை இந்த அறிக்கை வெளிக்காட்டி யுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரான் அமெ ரிக்கா சென்றுள்ளார். பிர தமரிடம் விடுக்கப்பட்ட கேள்விகளுக்கு துணைப் பிரதமர் நிக் கிளக் பதில் அளித்தார். அப்போது ஈராக் படையெடுப்பு சட்ட விரோதமானது என்று கிளக் குறிப்பிட்டார்.  தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஈராக் படையெடுப்பில் அமெ ரிக்காவுடன் இணைவது என்று பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கான வாக் கெடுப்பு காமன்ஸ் சபையில் நடந்தபோது தற்போதைய ஆளும் கூட்டணியில் உள்ள கன்சர்வேடிவ் கட்சி யும் அதற்கு ஆதரவாக வாக்களித்தது. நிக் கிளக்கின் லிப ரல் டெமாகிரட்ஸ் கட்சி படை யெடுப்பை எதிர்த்தது. (மேலும்....)

ஆடி 24, 2010

டயானா கொலை விசாரணை, வழக்கறிஞர் தகவலால் பரபரப்பு

இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கார் விபத்து மூலம் கொலை செய்யப்பட்டிருப்பதாக, அவ்வழக்கை விசாரித்த புலனாய்வுத்துறை வழக் கறிஞர் மைக்கல் தெரிவித்துள் ளார். இந்த கொலை சம்பவத்தில் கார் சாரதி பாலுக்கு முக்கிய பங்கு இருப்பதாகவும் அவர் தெரிவித் துள்ளார். விபத்து நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன் பாலின் வங்கிக் கணக்கில் பல கோடி மதிப்பிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாரதியின் வங்கிக் கணக்கில் திடீரென அதிகளவிலான பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறித்து வழக்கு விசாரணையில் ஒரு வரிகூட இடம்பெறாதது டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்வதாகவும் மைக்கல் தெரிவித்துள்ளார். டயானா கொலை சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த அவர் வழக்கு ஒன்றையும் பதிவு செய்துள்ளார். மைக்கேலின் இந்த தகவலால் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற் பட்டுள்ளது.

ஆடி 23, 2010

காட்டிக் கொடுக்கும் ஆவணங்கள்

விசுவமடுவில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதையடுத்து புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு வலைவீச்சு

சிவராசா பிருந்தாபன் அல்லது அச்சுதன் அல்லது சுரேஷ், பகிரதன் அல்லது பவி, நரேந்திரன் ரத்தினசபாபதி அல்லது நரேன், கணேஷ்ரூபன் அல்லது ரூபன், பொன்னையா ஆனந்தராஜா அல்லது ஐயா, அல்லது ராஜா மற்றும்  தமிழீழ விடுதலைப் புலிகளின் இன்னும் சில செயற்பாட்டாளர்கள் குறித்து அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்துவருவதற்கு அப்பால் அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்வதா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. (மேலும்...)

ஆடி 23, 2010

மனவடுக்களை போக்கும் மனமாற்றம்

‘அனைத்தையும் மாற்றும் வல்லமை படைத்தது காலம்’ என்ற கூற்றில் உண்மையுண்டு.

கிழக்கிலும் வடக்கிலும் தமிழ், முஸ்லிம் மக்களிடையே மீண்டும் துளிர் விடத் தொடங்கியுள்ள ஐக்கியமும் தென்பகுதியில் தமிழ், சிங்கள மக்களிடையே மீண்டும் உருவாகியுள்ள நட்புறவும் மனவடுக்கள் குணமடைந்து வருவதற்கான அடையாளங்களாகும். இரு இனங்கள் ஒன்று சேர்ந்து நடத்துகின்ற விழாக்களின் போது நாம் இன ஐக்கியத்தைக் காண்கிறோம். காரைதீவில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து கோலாகலமாக நடத்திய தமிழ் செம் மொழி விழாவில் விபுலானந்த அடிகளாரின் சிறப்பையும் தமிழ்மொழியின் மேன்மையையும்விட தமிழ், முஸ் லிம் இன ஐக்கியமே மேலோங்கியிருந்ததெனலாம். இது போன்று கதிர்காமம் உற்சவத்துக்காக இம்முறை யாத்திரை சென்ற பல்லாயிரக்கணக்கான தமிழ்ப் பக்தர்களை தென்னிலங்கையிலுள்ள சிங்கள மக்கள் உபசரித்துப் போஷித்த விதமும் இன ஐக்கியம் மேம்பட்டு வருவதற்கான அடையாளமாகவே தெரிகிறது. நயினாதீவு நாக பூஷணியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்துக்காக தென்னிலங்கை யிலிருந்து இம்முறை பெருமளவில் சென்ற சிங்கள மக்களும் அங் குள்ள தமிழ் மக்களால் இவ்வாறே உபசரிக்கப்பட்டனர். (மேலும்...)

ஆடி 23, 2010

கொழும்பில் பொலிஸ் பதியும் நடைமுறை தமிழர்களுக்கு மட்டுமானதல்ல

கொழும்பில் குடியிருப்பாளர்கள் தம்மை பொலிஸில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறை தமிழ் மக்களுக்கு மட்டுமேயான பாரபட்ச செயற்பாடு என காட்டுவதற்கு சில சுயநல அக்கறை கொண்ட தரப்பினர் முயற்சித்து வருவது தெரிய வந்துள்ளது. இது உண்மைக்கு மாறுபட்ட எந்த அடிப்படையும் அற்ற கூற்றாகும். அத்துடன் பாதுகாப்பு படையினர் இன விரோத நோக்குடன் அநீதியாகவும், கொழும்பில் வாழும் தமிழ் சமூகத்துக்கு பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக உலகத்துக்கு காட்ட முயற்சிக்கும் வகையிலானதாகும். இதற்கு மாறுபட்ட வகையில் பொலிஸ் கட்டளைக்கோவையின் கீழ் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அவ்வாறான ஆட் பதிவினை அதிக பட்ச சமூக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், பொறுப்புடைமை மற்றும் அனைத்து மக்களினதும் இன பாகுபாடு பாராமலும் இவ்வாறான பதிவு நடவடிக்கையை மேற்கொள்ளுகின்றனர். (மேலும்...)

ஆடி 23, 2010

இந்திய அரசுடன் பேசத் தயார் அஸாம் விடுதலை அமைப்பு அறிக்கை

இந்தியாவின் அஸாம் மாநில விடுதலை அமைப்பின் தலைவர் புரோ கோஹைன் இந்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என அறிவி த்துள்ளார். 75 வயதான புரோகோஹைன் அஸாம் விடுதலை அமைப்பின் தலைவராவார். 1979ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அஸாம் மாநில விடுதலைக்காகப் போராடுகின்றது. தற்போது இந்த அமைப்பின் தலைவர் சிறையிலுள்ளார். இந்திய புலனாய்வுப் பணியகத்தின் முன்னாள் தலைவர் சிறையில் சென்று புரோகோஹைனைச் சிறையில் சந்தித்த போதே பேச்சுவார்த்தைக்கான விருப் பத்தை வெளியிட்டார். சமாதான பேச்சு வார்த்தைக்கான அஸாம் மாநில மக்களின் விருப்பங்களை சகலரும் மதிக்க வேண்டுமென்றும் அஸாம் விடுதலை அமைப்பின் தலைவர் கூறினார். (மேலும்...)

ஆடி 23, 2010

மண்ணின் மைந்தனால் இலங்கைக்கு பெருமை - ஜனாதிபதி

133 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 800 விக்கெட்டுக்களை கைப்பற்றி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ள முரளிதரன் 18 வருட காலம் கிரிக்கெட் விளையாடிய பின் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அத்துடன் இதுவரை 337 ஒரு நாள் போட்டிகளில் 515 விக்கெட்டுக் களையும் கைப்பற்றியுள்ளார். முரளி என்று நாம் அனைவரும் அழைக்கும் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகில் ஒரு அலங்கார ஆபரணத்தைப் போல் இருந்து வந்துள்ளார். (மேலும்...)

ஆடி 23, 2010

ஓட்டை ஒடிசலுக்குப் பேரீச்சம்பழம்!

(ஜீவிதன்)

நல்ல ஆசிரியர்கள் இருந்தும் சிறந்த வழிகாட்டல்கள் இல்லா ததால் இந்தப் பாடசாலை சீரழி ந்து வருவதாக அவர் வருந்துகி றார். இதுவரை தேசிய பாடசா லையாகத் தரமுயர்ந்திருக்க வேண்டிய இந்தக் கலவன் பாட சாலை, அரிச்சந்திரன் பணியாற் றிய இடத்தில் இருப்பதாலோ என்னவோ உயிர் பெறாமலே இருக்கிறது. இந்த நிலையில் இங்கும் சூரிய குஞ்சு ஆசிரியர் ஒருவரின் விளையாட்டு பற்றியே இப்போது அதிகம் பேசுகிறார்கள். இவர் சில நாட்களுக்கு முன்பு “கட்டிப் பிடி ... கட்டிப்.... பிடிம்மா...” என்று பாடி ஆடியது காட்டுத் தீ போல் பரவிக்கிடக்கிறது. அதற்கு முன்பு ‘கட்டிப் பிடி கட்டிப்பிடிடா’ என்று ஆடிய ஓர் ஆசிரியர் ‘இன்ரர்டிக்ற்’ செய்யப்பட்டிருப்பதாகத் தகவல். (மேலும்...)

ஆடி 23, 2010

பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட குழு

அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை, சவால்களை எதிர்கொள்வோம்

ஐ.நா. செயலாளரின் குழு தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெளிவாக வெளியிட்டுள்ளோம். இந்தக் குழு சட்டபூர்வமற்றது என ஐ.நா. வில் உள்ள பல நாடுகள் தெரிவித்துள்ளன. பாதுகாப்பு சபையினதோ மனித உரிமை ஆணையத்தினதோ அனுமதி இன்றி இத்தகைய குழுவொன்றை அமைக்க அவருக்கு உரிமை கிடையாது என அந்த நாடுகள் அறிவித்துள்ளன. கடந்த வருடம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. வில் பிரேரணை முன்வைக்கப்பட்டபோது ஏனைய நாடுகளின் உதவியுடன் அதனைத் தோற்கடித்தோம். மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டால் அந்த சவாலுக்கும் முகம்கொடுப்போம். எல்லை தாண்டாது எமது எதிர்ப்பை காட்டியுள்ளோம்.(மேலும்...)

ஆடி 23, 2010

தொடரும் இயற்கை அனர்தங்கள்

ஈரானில் பூகம்பம், 15 பேர் காயம், சீனாவில் மழை வெள்ளம்; 41 பேர் பலி

ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள ஹார்முஸ்கான் மற்றும் பார்ஸ் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து 4 முறை பூகம்பம் தாக்கியது. பிறகு 11 நில நடுக்கங்கள் ஏற்பட்டன. பூகம்பங்களின் வீரியம் ரிக்டர் அளவில் 5.8 ஆகவும் அடுத்து 5.2 ஆகவும், பிறகு 4.1 ஆகவும், 3.9 ஆகவும் இருந்தது. இந்த பூகம்பங்களில் 4 கிராம ங்களைச் சேர்ந்த 15 பேர் காயம் அடைந்தனர். இதில் பண்டார் அப்பாஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தப் பூகம்பங்களின் காரணமாக சில வீடுகள் இடிந்த விழுந்தன. ஈரானில் அடிக்கடி பூகம்பம் ஏற் படுவது வழக்கம். கடந்த 2003ம் ஆண்டு பாம் நகரில் ஏற்பட்ட பூகம்பத்தில் 30 ஆயிரம் பேர் பலியானார்கள். இதேவேளை சீனாவில் ஷான்ஷி மாநிலத் தின் தெற்கு பகுதியில் உள்ள 22 மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரண மாக 41 பேர் பலியானார்கள். 107 பேரை காணவில்லை. 27 ஆயிரம் வீடுகள் இடிந்து விழுந்தன. 16 இலட்சம் மக்கள் பாதி க்கப்பட்டு உள்ளனர். அன் காங்க் என்ற இடத்தில் மட்டும் ஒரே நாளில் 2 பெரிய நிலச் சரிவுகள் ஏற்பட்டன. அதில் 14 பேர் பலியா னார்கள். 35 பேரை காணவில்லை.

ஆடி 23, 2010

ரொபேட் ஓ பிளக்கிற்கு கெஹலிய பதில்

“17 வது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரம்”

17 ஆவது திருத்தச் சட்டம் உள்நாட்டு விவகாரமாகும். அது குறித்து ரொபேட் ஓ பிளக் பேசத் தேவையில்லை. 17 வது திருத்தம் பற்றி எமது பாராளுமன்றம் கவனிக்கும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கைக்கு விஜயம் செய்த பிளக் ஜனநாயகம் குறித்தும் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்தும் கருத்து வெளியிட்டிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதலளித்த அவர், இலங் கையில் ஜனநாயகம் நிலைநாட் டப்பட்டுள்ளது. ஊடக சுதந்திரத்தை பாதுகாக் கவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத் துள்ளது. 17 ஆவது திருத் தத்தில் குறைபாடுகள் காணப்படு கின்றன. அவற்றைத் தீர்க்க வேண்டு மென்றார்.

ஆடி 23, 2010

நோய் வருமுன் காக்கும் பாரம்பரிய மருத்துவம்

(முத்தமிழ்)

இக்காலத்தைப் போல் இவ்வளவு அறுவை மருத்துவங்கள் அக்காலத்தில் இல்லை. இத்தகைய நோய்களும் அக்காலத்தில் இல்லை. இவ்வளவு பெரிய மருத்துவமனைகளும் அக்காலத்தில் இல்லை. எத்தனை மருத்துவமனைகள் கட்டினாலும் இப்போது நோயாளிகளுக்கு இடம் போதவில்லை என்கிறார்கள். இதற்கு நாள்தோறும் மக்களுக்கு நோய் அதிகப்படுவதே காரணமாகும். இதற்குக் காரணம், தற்போதைய மருந்துகளாலேயே வியாதிகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆகவே பாரம்பரிய மருத்துவமே பயன்மிக்கது. ஏனென்றால் வருமுன் காக்கும் திறன் உள்ளது அந்த மருத்துவமே. (மேலும்...)

ஆடி 23, 2010

Transnational Government of Tamil Eelam (part 2)

(Prof Sisira PINNAWALA)

Selvarasa Pathmanathan, better known as KP proclaimed himself LTTE leader after Tiger supremo Prabakaran’s demise. KP chose Visuvanathan Rudrakumaran, a US based lawyer who was one time legal adviser to the LTTE negotiating team with the Government and later its unofficial ideologue after Anton Balasingham’s death, to explore the ways and means of forming a Transnational Government of Tamil Eelam. After the extraordinary rendition of Pathmanathan by the Government the unofficial mantel of leadership of the LTTE and the responsibility of forming the TGTE fell into the hands of Rudrakumaran. He authored the initial concept paper for the Provisional Transnational Government of Tamil Eelam (PGTGE) which was further developed by a 14 member Advisory Committee consisting of representatives of the Diaspora and some prominent LTTE sympathizers of the International non-governmental sector that included Karen Parker, Professors Francis Boyle and Peter Schalk. The Advisory Committee report entitled Formation of a Provisional Transnational Government of Tamil Eelam (PGTGE) and detailing its objectives, form and functions was launched on March 15, 2010. (more....)

ஆடி 22, 2010

காட்டிக் கொடுக்கும் புலி காஸ்ரோவின் கணணிகள்

புலிகளுடன் தொடர்பிலிருந்த புலம்பெயர் தமிழர்களின்  இரகசியங்கள் இலங்கையின் கையில்?

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனும் தான் கைதியாக இருக்கும் சூழ்நிலையில் இருந்து கொண்டு தன்னால் இயலக்கூடியதைத் தான் அங்குள்ள சிறைப்பட்டவர்களிற்கு செய்வதாகவும், தான் அரசியல் பேசவோ, அதிகாரம் பற்றிப் பேசவோ வரவில்லை என்று தெரிவித்ததோடு தான் காட்டிக் கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்கு இவ்வாறு நேரடியாகப் பதிலிறுத்துள்ளார். “காட்டிப் கொடுப்போர், துரோகி என்ற சொற்பதங்களை தாராளமாக என் மீது குற்றஞ்சாட்டுவோர் கூறட்டும். ஆனால் உண்மை யாதெனில் எனக்கே தெரியாத பல விடயங்களை அவர்கள் கஸ்ரோவின் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றிய ஆவணங்கள் மூலமே எனக்குத் தெரிய வருகிறது. அந்த அவ்வளவுக்கு முழுமையாக போராட்டத்தைப் பற்றிய இரகசியங்களை அழிக்காமல் இலங்கைப் படைகளிடம் ஒப்படைத்து சென்றிருக்கிறர்கள் அந்த அலுவலத்தில் இருந்தவர்கள்” என கே.பி. தெரிவித்துள்ளார். (மேலும்....)

ஆடி 22, 2010

800 விக்கெட்டுக்களை வீழ்த்தி முரளி சாதனை!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி பெரும் சாதனை படைத்துள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சாதனையை இந்திய வீரர் பி.பி.ஓஜாவின் விக்கெட்டை வீழ்த்தி இவர் படைத்துள்ளார். இது அவரது 133 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை இவர் கைப்பற்றியுள்ளார். அவரது சாதனை ரசிகர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவர் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளுக்கு விடை கொடுப்பது அனைவரது மனதில் கவலையையும் தோற்றுவித்திருப்பதை மறுப்பதற்கில்லை.

ஆடி 22, 2010

Businessman arrested for building apartments with LTTE funds

(by Hemantha Randunu)

The Criminal Investigation Department yesterday arrested a leading businessman who had constructed an up-market condominium complex in Wellawatte allegedly with the money received from the LTTE.The alleged deal came to light following a CID probe into 11 condominium complexes in Colombo. The suspect Sivakumar, alias Siva, is a Canadian citizen. He had lived in Wellawatte for a long time after his return to Sri Lanka and engaged in the construction of luxury apartments, sources said. The suspect’s apartment complex consists of 78 units and 40 of them have already been sold at Rs. 15 million each, according to the police. The condominium project was launched in 2005 while the CFA between the LTTE and the government was in force. Investigations have revealed that the suspect had deposited large amounts of money with several banks.

(The Island)

ஆடி 22, 2010

தமிழைச் சரியாக எழுத சபதம் ஏற்போம்

ஒரு மொழியின் வளர்ச்சியில் ஊடகவியலாளர்கள் வகிக்கும் பாத்திரம் முக்கியமானது. அதே போல, மொழியின் வீழ்ச்சியிலும் அவர்களின் பாத்திரம் முக்கியமானது. பத்திரிகைகளை வாசிப்பதன் மூலமும் தொலைக்காட்சி மற்றும் வானொலிச் செய்தியறிக்கைகள் மூலமும் ஒருவர் தனது மொழி அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். அதே நேரம், பத்திரிகைகளிலும் தொலைக்காட்சி மற்றும் வானொலி செய்தியறிக்கைகளிலும் இலக்கணப் பிழைகள் இடம்பெறுவது ஒருவரின் மொழி அறிவு வீழ்ச்சி அடைவதற்குக் காரணமாகிவிடலாம். மொழி வளர்ச்சிக்கு உந்து சக்தியாக விளங்க வேண்டிய ஊடகங்களிலேயே இலக்கணப் பிழைகள் இடம்பெறுவது மிகவும் கவலைக்குரிய விடயம். ஊடகங்களில் தமிழைப் பிழையாக எழுதுவதும் கையாள்வதும் தமிழ் மொழிக்குச் செய்கின்ற துரோகம் என்பதை நாம் புரிந்துகொண்டு இலக்கணப் பிழை இல்லாமல் தமிழை எழுத வேண்டும். (மேலும்....)

ஆடி 22, 2010

புலம்பெயர் தமிழர் மனமாற்றம்

இலங்கையில் அபிவிருத்தி, மீள்கட்டுமானத்தில் பங்கேற்க விருப்பம் - ரொபட் ஓ பிளேக்

புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களைச் சந்தித்ததாகக் கூறும் அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலர் ரொபேர்ட் ஒபிளேக், இலங்கையின் அபிவிருத்தியில் அவர்களைப் பங்கெடுக்குமாறும் முதலீடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டதாகக் கூறினார். புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை தமிழர்களிடையே தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் பொருளாதார அபிவிருத்தி, மீள் கட்டமைப்பு மற்றும் மீள் இணக்க நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்கள் விரும்புகின்றனர் என்று அவர் மேலும் கூறினார். கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். கடந்த வருடம் புலிப் பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதை அமெரிக்கா வரவேற்கிறது. அமெரிக்கா நீண்ட காலமாகவே இலங்கையின் நண்பனாக இருந்து வந்துள்ளது. அந்த நட்புறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு அமெரிக்கா எதிர்பார்த்துள்ளது. (மேலும்....)

ஆடி 22, 2010

புனர்வாழ்வு முகாமில் 7980 பேர் மட்டுமே:

க. பொ. த. (சா/த) பரீட்சை முடிந்ததும் 364 பேர் பெற்றோரிடம் ஒப்படைப்பு - அமைச்சர் டியூ

புலிகளின் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்ட 1300 பேர் உட்பட ஏனையோர் இயக் கத்துடன் எவ்வாறு தொடர்புபட்டிருந்தனரோ அதே அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ் வளிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களுள் 98 சத வீதமானோர் பெற்றோருடன் தொடர்பு கொண்டுள்ளனர். பெற்றோருக்கும் இவர்களை சென்று நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. க. பொ. த. சாதாரண தரப் பரீட் சைக்கு இம்முறை 364 பேர் தோற்றுகின்றனர். பரீட்சை முடிந்த பின்னரே அவர்களை தம்மிடம் ஒப்படை க்குமாறு பெற்றோர் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

ஆடி 22, 2010

ராகுல் சாங்கிருத்யாயன்

வால்கா இலிருந்து கங்கை வரை எழுதிய ராகுல்ஜி

பல ஆண்டுகள் சிறையில் இருந்ததால் பல நூல்களை எழுதினார். அதில் முக்கியமான நூல் நமக்கெல்லாம் அதிகமாகத் தெரிந்த ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ என்ற நூல். இந்த நூல் 14 மொழிகளில் வெளிவந்துள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்நூல் மனித சமூக வரலாற்றை விஞ்ஞான வழியில் தொகுத்துக் கூறுகிறது. லெனின் கிராடு பல்கலைக் கழகம் இவர் புலமையைத் தெரிந்துகொண்டு 1945ம் ஆண்டில் சமஸ்கிருத பேராசிரியராக நியமித்தது. அங்கு இரண்டரை ஆண்டுகாலம் அந்தப் பதவியில் இருந்தார். ராகுல் ஜிக்குப் பல மொழிகள் தெரிந்திருந்தும் தாய்மொழியான இந்தியிலேயே பெரும்பாலான நூல்களை எழுதினார்.(மேலும்....)

ஆடி 22, 2010

‘3R’ முறைமை சொல்வது என்ன?

(சாரதா மனோகரன்)

அடிப்படையில் மூன்றாம் உலக நாடுகள், சிறந்த கலாசாரப் பின்னணியையும் இயற்கையுடன் இணைந்து செல்கின்ற வாழ்வியலையும் கொண்டவை. ஆனால் அபிவிருத்தியடைந்த மேற்குலக நாடுகள் தமது உற்பத்திகளையும், கழிவுகளையும் நவீன யுகம், உலக மயமாதல் எனும் போர்வைகளில் மூன்றாம் உலக நாடுகளிடம் சந்தைப் படுத்தின. விளைவு, பாவித்ததும் தூக்கியெறியும் கலாசாரம் உலகம் முழுவதும் பரவியது. அது மட்டுமன்றி, இயற்கை வளங்கள் மிகையாக நுகரப்பட்டன. பணக்கார நாடுகள், வறிய நாடுகளின் வளங்களைச் சுரண்டின. விளைவாக, சுற்றுச் சூழல் பிரச்சினைகள் உருவாகின. அவற்றைத் தொடர்ந்து சமூக பொருளாதாரப் பிரச்சினைகளும் அணிவகுத்தன. தொட்டிலைக் கிள்ளியவர்களே பிள்ளையையும் ஆட்ட வேண்டு மல்லவா? ‘3R’ முறையையும் அதே பணக்கார நாடுகள் உருவாக்கின. இன்று எம் மத்தியில் பிரபல்யப் படுத்துகின்றன. (மேலும்....)

ஆடி 22, 2010

ஒஸாமா பில்லாடன்

கைது செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை - ஹிலாரி கிளிண்டன்

ஒஸாமா பின்லேடன் பாகிஸ்தானில் இருப்பது அந்நாட்டு அரசுக்கு தெரியும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். இப்போது, பின்லேடன், அவரது கூட்டாளி அய்மன் அல் ஜவாஹிரி மற்றும் தலிபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா உமர் உள்ளிட்டோர் பாகிஸ்தானில் பதுங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பாகிஸ்தான் அரசிலும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயிலும் உள்ள சிலருக்கு இவர்களது இருப்பிடம் பற்றி தெரியும் என்றார். (மேலும்....)

ஆடி 22, 2010

கொழும்பில் ஆடிவேல் ஆரம்பம்

கொழும்பில் ஆறு வருடங்களுக்குப் பின்னர் மிகக் கோலாகலமாக நடைபெறும் ஆடிவேல் விழா நாளை ஆரம்பமாகிறது. முதலாம் குறுக்குத் தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா இன்று (22) மாலை மகேஸ்வர பூஜையுடன் ஆரம்பமாகிறது. நாளை காலை காவடி ரதம் பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் ஆலயத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்கிறது. அங்கு 26 ஆம் திகதி வரை சுவாமி திருஉருவச் சிலை வைக்கப்பட்டு அன்றைய தினம் மாலை மீண்டும் சம்மாங்கோட்டை வந்தடையும். இதேவேளை, செட்டியார் தெரு ஸ்ரீ புதிய கதிரேசன் ஆலயத்தின் வெள்ளி ரத பவனி நாளை (23) காலை 8 மணிக்கு பம்பலப்பிட்டியை நோக்கி ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளி ரதம் பம்பலப்பிட்டியிலிருந்து செட்டியார் தெருவை மீண்டும் வந்தடையும். ஆடிவேல் விழாவைச் சிறப்பிக்குமுகமாக 25 ஆம் 26 ஆம் திகதிகளில் நாதஸ்வர, மேள வாத்திய கச்சேரிகளும் நடைபெறும்.

ஆடி 22, 2010

முல்லைத்தீவில் 198 குடும்பங்கள்
சொந்த இடங்களில் நாளை குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த 198 குடும்பங்களைச் சேர்ந்த 602 பேர் நாளை சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் எஸ். ஸ்ரீரங்கன் கூறினார். இடம்பெயர்ந்து வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தங்கியுள்ள இவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 22 கிராமசேவகர் பிரிவுகளில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். ஏற் கெனவே 22 கிராமசேவகர் பிரிவு களிலும் மீள்குடியேற்றங்கள் இடம் பெற்றதோடு இதுவரை மீள்குடியேற்றப்படாதவர்களே நாளை மீள்குடியேற்றப்படு கின்றனர். கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 23 கிராமசேவகர் பிரிவுகளில் இதுவரை மீள்குடி யேற்றம் இடம் பெறவில்லை எனவும் அறிவிக்கப்படுகிறது.

ஆடி 22, 2010

156 ஆண்டு பழைமை

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பம்

சுமார் 156 வருடங்கள் பழைமை வாய்ந்த சிறைச்சாலைகளை மறுசீரமைப் பதற்காக மாறி மாறி வந்த அரசுகள் அனைத்தும் குழுக்கள் நியமித்துள்ளன. நான்கு பிரதான குழுக்கள் உட்பட அதிகாரிகள் மட்டத்திலான சிறு சிறு குழுக்களும் நியமிக்கப்பட்டன. இவை போன்று மேலும் ஒரு குழுவை நியமித்து காலத்தை இழுத்தடிக்க நான் விரும்பவில்லை. முதலாவதாக நியமிக்கப்பட்ட மறுசீரமைப்புக் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்க மூன்று வருடங்கள் ஆகின. அவ்வாறில்லாமல் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அவரச, குறுகிய மற்றும் மத்திம கால வேலைத் திட்டங்களை உடனடியாக நடைமுறைப் படுத்த அமைச்சு திட்டமிட்டுள்ளது. குழுவின் இடைக்கால அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டவைகளில் மிகப்பிரதானமாகக் கருதப்படுவது சிறைச்சாலைகளின் இடநெருக்கடிகளைப் போக்குவதும் சிறைக்குள் கைதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதுமாகும். (மேலும்....)

ஆடி 22, 2010

டெங்கு ஒழிப்பை துரிதப்படுத்தும் பணி
நாடு முழுவதும் 143 சுற்றாடல் பொலிஸ் பிரிவுகள்

சூழல் மாசடைவதால் டெங்கு நோய் துரிதமாக பரவுவதாக சுகாதார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் நடத்திய ஆய்வுகளில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் சூழல் மாசடைதல் மற்றும் நகரங்களில் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக கண்டறிய நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் போதாமையினால் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாவதாகவும் அந்த ஆய்வுகளில்இருந்து மேலும் தெரியவந்துள்ளது. மேலும் டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் வீட்டையும், சுற்றாடலையும், பாடசாலையையும் வைத்திருந்த பாடசாலை அதிபர் ஒருவருக்கும் ஏனைய மூவருக்கும் முப்பதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது. (மேலும்....)

ஆடி 22, 2010

ஏசியான் தலைவர்கள் நாளை வியட்நாமில் ஒன்று கூடுவர்

ஏசியான் அமைப்பின் மாநாடு நாளை வெள்ளிக்கிழமை வியட்நாமின் தலைநகர் ஹனோயில் ஆரம்பமாகின்றது. இதற்கு முன்னோடியாக ஏசியான் நாடுகளின் வெளிநாட்டமைச்சர்கள் திங்கட்கிழமை சந்தித்தனர். இந்த அமைப்பில் அமெரிக்கா, சீனா உட்பட 27 நாடுகள் அங்கம் வகிக்கின்றபோதும் 10 நாடுகளே தற்போதைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. பொதுமக்கள் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தல், பிராந்தியத்தில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இந்த மாநாடு நாளை தொடங்கவுள்ளது. (மேலும்....)

ஆடி 22, 2010

கடல் கன்னியா அல்லது கடல் கண்ணியா?

அனைவரையூம் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் கடற்கன்னி என சந்தேகிக்கப்படும் உருவம் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. உலகில் கடற்கன்னி தொடாபாக பல கற்பனைக் கதைகளைக் கேள்வியூற்ற போதிலும் அவ்வாறான ஒரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதற்தடவையாகும். முத்துத் தீவிற்கு சென்றிருந்த உல்லாசப் பயணிகள் எதிர்பாராதவிதமாக இந்த உருவத்தைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியூள்ளனர். விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வூகளை மேற்கொண்டு வருகின்றனா.

ஆடி 21, 2010

பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து எதுவும் தெரியாது- டி.யூ.குணசேகர

கடந்த சில தினங்களாக போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது. இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.யூ குணசேகரா அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார். தெள்ளிப்பளையில் இடம் பெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிகளும் அவரை சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் போது இவர்கள் தமது கணவர்கள் குறித்து தம்மிடம் ஏதும் பேசவில்லை என்றும், திருமதி பாலகுமார் மட்டும் தமது குழந்தைகள் குறித்து தம்மிடம் கேட்டதாகவும் அமைச்சர் டி.யூகுணசேகர கூறியுள்ளார். அதே போல யோகியின் மனைவி தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படி கோரியதாகவும் அமைச்சர் கூறுகிறார். பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது. (மேலும்.....)

ஆடி 21, 2010

கலப்பையில் மாடுகளுக்குப் பதிலாக மனிதர்கள்..!

அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவீனம் காரணமாக பாதிக்கப்படுபவர்கள் என்னமோ கிராமத்து மக்கள்தான். அன்றாட தேவைக்கே அல்லல்படுகின்ற மக்கள் இன்னமும் நம் மத்தியில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்தியாவின் அஹமதாபாத்திலிருந்து 70 கிலோமீற்றர் தொலைவிலுள்ள 'கெய்லா' கிராமத்தில் கஷ்டப்படுகின்ற குடும்பமே இது. நீண்ட நாட்களாக மழை பெய்யாதிருப்பதால் காய்ந்துபோயுள்ள பருத்தி விளைநிலத்தினை குடும்பத்தினரின் உதவியுடன் உழுது, பருத்திய விதைகளை விதைக்கின்றார் இந்த விவசாயி. கலப்பையில் மாடுகளைப் பூட்ட வேண்டுமென்றால் பல ஆயிரங்களை செலவழிக்க வேண்டும். அதனால் மாடுகளுக்கு பதிலாக தனது குடும்பத்தினையே கலப்பையில் பூட்டி உழுகின்ற பரிதாபமே இது…

ஆடி 21, 2010

"அம்மா நீங்கள் வரவே மாட்டீர்களா?"

அன்பின் அம்மாவுக்கு,

இந்தக் கடிதம் உங்கள் கையில் கிடைத்தவுடன் இலங்கைக்கு வர முயற்சி செய்யுங்கள். ஏனைய குழந்தைகளைப் போலவே தாய்ப்பாசத்தை நானும் முழுமையாய் அனுபவிக்க வேண்டும். எங்களுடைய தோட்டத்தில் நிறைய மாற்றங்கள் நடந்திருக்கின்றன அம்மா. நாங்கள் மட்டுமே அதே பழைய வீட்டில் இருக்கிறோம். டி.வி பார்ப்பதென்றால்கூட பக்கத்து வீட்டுக்குத் தான் செல்ல வேண்டும். கிழிந்த சட்டையுடன் அங்கு செல்ல எனக்கு வெட்கமாயிருக்கிறது. என்னால் முடியவில்லை அம்மா. உங்கள் மடியில் கிடந்து கண்ணீர்விட்டு இதுவரையான அத்தனை சோகங்களையும் கரைக்கவேண்டும். என்னையும் தம்பியையும் உங்களோடு அழைத்துச் சென்றிருக்கலாம்தானே? (மேலும்.....)

ஆடி 21, 2010

Transnational Government of Tamil Eelam

(Prof Sisira Pinnawala)

Now that the liberation struggle is no more and the de facto state of Eelam is effectively dead the pro LTTE Sri Lankan Tamil Diaspora leadership is creating a new make-believe in place of their dream that came down shattering on the banks of Nandikadal lagoon in Eastern Sri Lanka. This make-believe is the Transnational Government of Tamil Eelam (TGTE). Like the Barbie doll that became a craze and mesmerized teenage girls around the world the TGTE is taking over the LTTE sympathizers in the Diaspora. The realists in the Tamil community seem to be behaving like the parents who do not wish to hurt the feelings of their children by not commenting on the subject, at least openly and for now. This essay is a brief critique of the Transnational Government of Tamil Eelam Project and also an attempt to speculate on the future of the TGTE. (more.....)

ஆடி 21, 2010

முழுமைப்படுத்தப்பட்ட இறுதி ஆவணம் அல்ல

 

சர்வகட்சி குழுவின் அறிக்கையென்று ஐ.தே.க எம்.பிக்கள் வெளியிட்ட அறிக்கை

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையென்று ஐக்கிய தேசிய கட்சியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கை, முழுமைப்படுத்தப் பட்ட இறுதி ஆவணம் அல்லவென்று குழுவின் தலைவரான அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண  தெரிவித்தார். அதேநேரம், முழுமைப்படுத்த ப்படாத அறிக்கை வெளியானதால், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் எதிர்காலப் பணிகளுக்கு எந்தப் பாதிப்பும் கிடையாதென்றும் அமைச்சர் கூறினார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்ற கட்சிப் பிரதி நிதிகளுக்கிடையே இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அறி க்கையாகத் தயாரிக்கப்பட்டு அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. (மேலும்.....)

ஆடி 21, 2010

பயங்கரவாதம் குறித்த இந்தியாவின் கருத்தை சீனா ஆதரிக்கிறது

உலக சபாநாயகர்கள் மாநாட்டில் நிறைவேற்றப் படவுள்ள கொள்கை அறிக் கையில் பயங்கரவாதம் குறித்து இந்தியா முன்வைத்த கருத்துக்களை சீனாவும் ஆதரித்துள்ளது. மாநாட்டில் நிறைவேற் றப்பட விருக்கும் கொள்கை அறிக்கையில் பயங்கரவாதம் குறித்து ஒரு பத்தியை மக்க ளவை சபாநாயகர் மீரா குமார் முன்மொழிந் தார்.  மனிதகுலத்தின் சவா லாக உருவெடுத்துள்ள பயங்கரவாதத்தை ஒடுக்கிட கூட்டு நடவடிக்கை தேவை என்று அதில் அவர் குறிப் பிட்டிருந்தார். இதனை முழுமையாக ஆதரித்த மக் கள் சீனம், இதனை மேலும் வலுப்படுத்தும் விதத்தில் ஒருசில வார்த்தைகளில் திருத்தம் செய்துள்ளது. சீனா தெரிவித்த திருத் தங்களை உடனடியாக இந் தியா ஏற்றுக்கொண்டது. (மேலும்...)

ஆடி 21, 2010

படைப்பது பிரம்மன் அல்ல

 

உயிர்களைப் படைக்கும் தொழில்நுட்பம்

மனிதன் அச்சத்தினால் கடவுளைப் படைத்தான். ஆனால் கடவுள் தத்துவம் சுரண்டல்வாதிகளுக்கு வசதியாய் இருப்பதைக் கண்டு சுரண்டல்வாதிகள் அதை நிலைப்படுத்திக் கொண்டார்கள். ஆனால், மனிதன் அறிவியலில் சிறுது சிறிதாக முன்னேறும்போது கடவுள் தத்துவங்கள் சிறிது சிறிதாகச் சிதைய ஆரம்பித்தன. ஆனால் சுரண்டல்வாதிகளும் அவர்களுக்குத் துணையாக இருக்கும் மதவாதிகளும் அறிவியலுக்கு மதச் சாயம் பூசியும்.  அறிவியலை உள்வாங்கிக் கொண்டு செரித்தும் சுரண்டலையும் மதத்தையும் நிலைப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுடைய அசைக்க முடியாத வாதமாக இதுவரை இருந்து வந்தது என்னவென்றால் ‘மனிதன் அறிவியலில் எவ்வளவுதான் முன்னேறினாலும் உயிர்களைப் படைக்க முடியாது. அது கடவுளின் உரிமை என்பதுதான். ஆனால், இவ் வாதத்தை கிரெயிக் வெண்டெர் என்ற அறிவியலாளரும் அவரது குழுவினரும் 20.05.2010 அன்று தகர்த்துவிட்டார்கள். இப்பொழுது மனிதனால் உயிரற்ற செயற்கைப் பொருட்களை வைத்துக்கொண்டு உயிர்களைப் படைக்க முடியும் என்ற அளவிற்கு அறிவியல் வளர்ந்துவிட்டது. (மேலும்.....)

ஆடி 21, 2010

லைபீரியாவில் ரஷ்ய விமானி தடுத்து வைப்பு

லைபீரியாவில் வைத்து ரஷ்யாவின் விமானி தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ரஷ்யா ஐ. நா. வுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. எவ்வித முன்னறிவித்தலோ குற்றச்சாட்டோ இன்றி விமானி கைது செய்யப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எனவே விமானியை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென்றும் அக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. வாஷிங்டனிலுள்ள ரஷ்யத் தூதரகம் ஐ. நா. வுக்கும் அமெரிக்காவுக்கும் இக்கடிதத்தை அனுப்பியுள்ளது. மே 28ம் திகதி லைபீரியாவின் தலைநகர் பொஷன்கோவில் வைத்து ரஷ்ய விமானி அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவ்விமானி அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அமெரிக்காவின் தோழமை நாடான ஜோர்ஜியாவுடன் 2008ம் ஆண்டு ரஷ்யா நடந்து கொண்ட விதம் (ஆக்கிரமிப்பு ஏற்பாடுகள்) சென்ற மாதம் ரஷ்யாவின் 10 உளவாளிகளை அமெரிக்கா நடத்திய விதம் என்பவற்றால் அமெரிக்க - ரஷ்ய உறவுகளில் அடிக்கடி விரிசல்கள் ஏற்பட்டன.

ஆடி 21, 2010

வடக்கு கிழக்கில் 80,000 யுத்த விதவைகள்

அரசாங்கம் திருப்தியாக திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை - சஜித்

வடக்கு கிழக்கில் 80,000 விதவைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டமெதனையும் அரசாங்கம் திருப்திகரமாக மேற்கொள்ளவில்லை. "வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தலா 40,000 பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாகியுள்னர்.  உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 25,000 விதவைகள் உள்ளனர்.  இப்பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பற்ற நிறுவனங்கள் பல செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் திருப்திகரமாக செய்யவில்லை. (மேலும்.....)

ஆடி 21, 2010

மெக்ஸிக்கோ எல்லையை நோக்கி அமெரிக்க இராணுவம்

மெக்ஸிகோ எல்லையை நோக்கி அமெரிக்கா இராணுவத்தை அனு ப்பவுள்ளது. இந்த எல்லையில் அதி கரித்துவரும் போதைவஸ்துக் கடத் தல், ஆயுத விற்பனை, சட்ட விரோதக் குடியேற்றம் போன்ற குற்றச் செயல்களை ஒழிக்கும் நோக் குடன் இப்படைகள் ஓகஸ்ட் 01 ல் அனுப்பப்படவுள்ளன. இதுதவிர முன்னூறு சுங்க அதிகாரிகள், எல் லைத்தடுப்பு முகவர்களும் மெக் ஸிகோ எல்லைக்கு அனுப்பப்ப டுவர்.  மேலதிகமாக இராணுவ ஹெலி கொப்டர்கள் மற்றும் முக்கிய தள பாடங்களும் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மெக்ஸிகோவின் எல்லையிலுள்ள அமெரிக்க மாநிலமான அரிசோனா இவ்வாறான குற்றச் செயல்களால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மெக்ஸிகோவில் இடம்பெறும் போதைக் கடத்தல், ஆயுத விற் பனை அரிஸோனா மாநிலத்தைப் பெரிதும் பாதித்துள்ளதுடன் இங்கி ருந்து ஆயிரக் கணக்கான சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களும் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதைக் கட்டுப்படுத்த அரிசோனா மாநிலம் கடுமையான சட்டங்களை அமுல் செய்த போதும் அவை வெற்றியளிகக்வில்லை. (மேலும்.....)

ஆடி 21, 2010

வியட்நாமில் ஏசியான் மாநாடு

ஏசியன் வெளிநாட்டு அமைச்சர்கள் நேற்று முன்தினம் வியட்நாம் தலைநகர் ஹனோயில் ஒன்றுகூடினர். இந்த அமைப்பிலுள்ள 10 நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்கள் பிராந்திய நலன்கள் குறித்துப் பேசும் வகையில் இம் மாநாடு கூட்டப்பட்டது. 1967ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த ஏசியன் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. புருனை, கம்போடியா, இந்தோனேஷியா, லாஓஸ், மலேஷியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் என்பன இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ளன. இவை 4.5 மில்லியன் சதுர கி.மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் 570 மில்லியன் மக்கள் இந்நாடுகளில் வாழ்கின்றனர். நேற்று முன்தினம் நடந்த இந்த மாநாட்டில் ஏசியன் நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்தல் பொதுவாகச் செயற்பட்டு பிராந்தியம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளித்தல் போன்ற முக்கிய விடயங்கள் பேசப்பட்டன.

ஆடி 21, 2010

Ground Breaking Ceremony of New Mississauga Temple

West end Buddhist Centre or widely known as Mississauga Temple is planning to move into a new location in Cawatra Road. Ground breaking ceremony for the new building was held on 11th of July 2010 at an auspicious time at the new location. Hundreds of devotees and several Canadian and Sri Lankan distinguish guests took part in the event. Ontario Labour Minister Hon. Peter Fonseka, Her worship Susan Fennel the mayor of Brampton, Maja Prentice and Ann McFadden Mississauga city councillors, Her Excellency Chitrangani Vagiswara the Sri Lankan High Commissioner in Ottawa were among the guests. According to Chief Rev. Ven. K. Dammawasa Thera the new building will complete its construction by end of May in 2011 and “we are planning to celebrate next “wesak” at the new temple” he further said. The President of new Vihara Project Ven. Bikkhu Saranapala requests the help of everyone to building project to complete in time. If you want to get involved please contact Halton Peel Buddhist Cultural Society, 1569 Cormack Crescent, Mississauga, Ontario,L5E 2P8 and also by phone 905 891 8412, email info@westendbuddhist.com and web site www.westendbuddhist.com

ஆடி 21, 2010

தமிழக முதலமைச்சர் கருணாநிதியை த.தே.கூ. உறுப்பினர் இன்று சந்தித்தனர்

இலங்கைத் தமிழர்களை எந்தச் சூழ்நிலையிலும் கைவிட மாட்டோம் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி தங்களிடம் உறுதியளித்ததாக இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  இதன்போது, வன்னியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் தாமதமாவதற்கான காரணங்களை கருணாநிதிக்கு எடுத்துரைத்ததாகக் கூறியுள்ள கூட்டமைப்பு எம்.பி.க்கள், இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டினைப் பொறுத்தே ஏனைய நாடுகளின் தீர்மானங்களும் அமையும் என்றும் சுட்டிக்காட்டியதாக குறிப்பிட்டுள்ளனர். (மேலும்.....)

ஆடி 20, 2010

எதிர் கட்சியினர் சமர்பிப்பு _

ஒற்றையாட்சிக்குள் மாகாணசபைகளுக்கு அதிகாரம்

ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். தொகுதிவாரி முறைமையையும் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைமையையும் கொண்ட கலப்பு தேர்தல் முறை ஏற்படுத்தப்பட வேண்டும். மத்திய, மாகாண, உள்ளூராட்சி மட்டங்களில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது அவசியம் என்று சர்வகட்சிக் குழுவின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விட மாகாணசபை உறுப்பினர்களைக் கொண்ட செனட்சபை, இந்திய வம்சாவளி மக்களுக்கு சமூக சபை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய, மாகாண உயர்பதவி நியமன சபை அமைக்கப்படுதல் போன்ற யோசனைகளும் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

ஆடி 20, 2010

அவுஸ்திரேலியாவில்

புகலிடக் கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்கத் தவறுவோர் திருப்பி அனுப்பப்படுவர்

இலங்கையின் நிலைமையில் முன்னேற்றம் காணப்படுவதால் குறைந்த எண்ணிக்கையானோருக்கே அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்து வழங்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது. புகலிட கோரிக்கைக்கான தகைமையை நிரூபிக்க தவறுவோர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலும் இலங்கையில் நிலைமை முன்னேற்றமடைந்து வருகிறது என்று அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் நிறுவனத்தின் அகதிகள் தொடர்பான வழிகாட்டு நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாலும் அவுஸ்திரேலிய அரசாங்கம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகளின் விண்ணப்பங்களை இப்பொழுது நுணுக்கமாக பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது. (மேலும்...)

 
ஆடி 20, 2010

வடக்கு, கிழக்கின் அபிவிருத்திக்கு அனைத்து நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்

 

வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட் டங்களை வெற்றிகரமாக முன்னெ டுப்பதற்கு அனைத்து நாடுகளும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் டி. எம். ஜயரத்ன ஆகிய வலய வறுமை ஒழிப்பு மாநாட்டில் தெரிவித் துள்ளார்.  யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து அரசாங்கம் வடக்கிலும் கிழக்கிலும் துரித அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இதற்கு அனைத்து நாடுகளும் ஒத்து ழைப்பு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.  (மேலும்...)

ஆடி 20, 2010

காரைதீவில் தமிழ் செம்மொழி விழா : பேராசிரியர்கள், பேராளர்கள் கெளரவிப்பு

இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவ மாணவியரின் ஊர்வலத்துடன் அழைத்து வரப்பட்ட அதிதிகள் வித்தக மாமுனி விபுலானந்த அடிகள் பிறந்த வீட்டிற்குச் சென்று அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் பிறந்த வீடு, மற்றும் மணி மண்டபம் முதலானவற்றையும் பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து ஊர்வலம், விழா நடைபெற்ற விபுலானந்த மத்திய கல்லூரியை அடைந்தது. (மேலும்...)

ஆடி 20, 2010

எட்டுக்கால் ஏமாற்று வித்தை

மூட நம்பிக்கை எனும் ஆக்டோபஸ்!

(என்.சிவகுரு)

மனித குல வரலாற்றில் மூட நம்பிக்கை எப்போதும் ஒரு தடையாகவே இருந்து வந்துள்ளது. விஞ்ஞான தொழில் நுட்ப வளர்ச்சி வேகமாக நடந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் கூட இதுபோன்ற விஷயங்கள் பெரிதும் ஊதப்படுகின்றன. தனிமனித வாழ்விலிருந்து துவங்கி விளை யாட்டு வரை இது விரிவடைந்து, சமூகத்தை பாழ்படுத்தியுள்ளது. கிளி, முயல், பல்லி, பூனை என விலங்குகள் பட்டியல் ஆக்டோபஸ் வரை நீண்டுள்ளது. இந்த விஷபரவலை உடனடியாக விஞ்ஞானத்தின் மேன்மையோடும் அறிவியல் துணையோடும் முறியடித்திட வேண்டும். இன்று ஆக்டோபஸ் ஆரூடம் பலித்துவிட்டது என எழுதும்போது நமக்கு ஒரு எளிமையான கேள்வியும் கூடவே எழுகின்றது. இந்த ஆக்டோபஸ்ஸும், கிளியும், லீக் போட்டிகளின் போது (தகுதிச்சுற்று) ஏன் வரவில்லை? ஒரு வேளை கூடுதல் பணி என விட்டுவிட்டார்களா? (மேலும்....)

ஆடி 20, 2010

வடக்கு மீள் குடியேற்றத்தை ஆராய அமைச்சர் வன்னி விஜயம்

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் மீள் குடியேற்றப் பட்டுவிட்டனர். மேலும் சுமார் 30,000 பேரே எஞ்சியுள்ளனர். அவர்களும் மிக விரைவில் மீள்குடியேற்றப்பட்டு விடுவர். சில மீள்குடியேற்றப் பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன. அத்துடன் குறிப்பிட்ட சில இடங்களில் படையினரின் முகாம்கள் காணப்படுவதால் அப்பிரதேசங்களில் மக்கள் மீள் குடியேற்றப்படவில்லை. (மேலும்...)

ஆடி 20, 2010

இந்திய ரயில் விபத்து

52 பேர் பலிசிதைவுகளுக்குள் சிக்கியோரை மீட்பதில் சிரமம்

இந்தியாவின் கொல்கத்தா நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 52 பேர் பலியாகினர். இன்னும் பலர் பெட்டிகளின் இடி பாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். நேற்று திங்கட்கிழமை அதிகாலை இரண்டு மணியளவில் இந்த இரண்டு ரயில்களும் மோதின.  ஒரே தண்டவாளத்தில் இவ்விரண்டு ரயில் களும் எவ்வாறு பயணித்தன என்ற விசாரணைகளை இந்திய அதி காரிகள் ஆரம்பித்துள்ளனர். கொல்கத்தாவின் பேர்ம்பும் மாவட்டத்தில் இந்த ரயில் விபத்து நேர்ந்தது. இவ்விபத்து நடந்தவேளை அதிகாலை இரண்டு மணியாக இருந்ததால் மீட்புப் பணிகள் தாமதமடைந்தன. (மேலும்...)

ஆடி 20, 2010

Ontario to appeal for public-sector wage freezes

Ontario Finance Minister Dwight Duncan will meet public-sector employers and labour leaders on Tuesday, where he will appeal directly to them to impose wage freezes. Mr. Duncan put teachers, nurses and other unionized workers on notice in the provincial budget in March that there will be no money for wage hikes when their collective bargaining contracts expire. But Tuesday will be the first time he delivers that message face-to-face to about 60 public-sector executives and union leaders. (more....)

ஆடி 20, 2010

உழவு இயந்திரம் உழும், ஆனால் சாணம் போடுமா?

தன்னிறைவான உணவு உற்பத்தி, விவசாயிகளுக்கு சுயமாக விலை நிர்ணயிக்கும் உரிமை, சமூக, பொருளாதாரப் பின்னணியில் பெரும் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டிருப்பதால் அதற்கேற்ற விவசாயப் பொருளாதாரக் கொள்கைகளும் மானியங்களும், அதற்கு பொருந்திவரும் நட்பு நாடுகளுக்கு இடையிலான வணிக ஒப்பந்தங்கள் ஆகியவையே நமக்குத் தேவை ‘நாம் என்ன சாப்பிட வேண்டும்? நமக்கு என்ன நோய் வர வேண்டும்? நோய் வந்தால் என்ன மருந்து உட்கொள்ள வேண்டும்?’ என்பதை உலகில் ஏதோ ஒரு மூலையில் வாழும் பணக்காரன் தீர்மானிக்கும் நிலைக்கு நாம் ஏன் சம்மதிக்க வேண்டும்? விவசாயத்தில் உழவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்ட காலங்களில், மகாத்மா காந்தியின் பொருளாதார ஆலோசகர் ஜே.சி. குமரப்பா சொன்னதை இங்கே நினைவில் கொள்ள வேண்டும். ‘உழவு இயந்திரம் நல்லாத்தான் உழும். ஆழமாகக் கூட உழும்! ஆனால் சாணி போடாதே!’ என்றார் அவர். சாணியைப் பற்றி கவலைப்படாத நம் முன்னோர்கள் அந்த இயந்திரங்களைச் சார்ந்து மண்ணையும் உடலையும் அழித்ததுதான் மிச்சம். (மேலும்...)

ஆடி 20, 2010

மனிதர் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம்

160 மீட்டர் உயரமுடைய இந்தக் கட்டடம், 35 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டடம் 18 பாகை அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது பைசா கோபுரத்தின் சாய்வை விட நான்கு மடங்கு அதிகம் (பைசா கோபுரத்தின் சாய்வு 3.99 பாகை) இந்தக் கட்டடத்தின் 12 மாடிகள், செங்குததாக உள்ளன. அதற்கு அடுத்த நிலையில் உள்ள மாடிகள் படிப்படியாக சிறிய அளவில், சாய்ந்த வகையில் கட்டப்பட்டுள்ளன. கடந்த ஜனவரியில் இந்தக் கட்டடத்தின் வெளிப்புறத் தோற்றம் கட்டி முடிக்கப்பட்ட போது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதை கட்டுவதற்கு 10 ஆயிரம் தொன் இரும்புப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஐந்து நட்சத்திர ஓட்டல் மற்றும் அலுவலகங்கள் இதில் இயங்கவுள்ளன. (மேலும்....)

ஆடி 20, 2010

எழுத்து மூலமான உத்தரவாதம் கிடைக்கும் வரை இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில்லை

மேற்குக் கரையில் இஸ்ரேல் நிறுவும் யூதக் குடியேற்றங்களை நிறுத்தும் வரையும் கிழக்கு ஜெரூஸலம் தொடர்பாக எழுத்து மூல உத்தரவாதம் கிடைக்கும் வரை இஸ்ரேலுடன் நேரடிப் பேச்சுக்களுக்குச் செல்லமாட்டோம் என உறுதியுடன் கூறினார். மார்ச்சில் ஆரம்பமான இஸ்ரேல் பலஸ்தீன் மறைமுகப் பேச்சுக்களை அமெரிக்காவும் எகிப்தும் ஏற்பாடு செய்தன. அரபு லீக் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. இதுவரை இஸ்ரேல் நடந்துகொண்ட விதங்கள் அரபு லீக்கை எமாற்றிவிட்டது. (மேலும்...)

ஆடி 20, 2010

பிரிட்டன் பிரதமர் அமெரிக்கா விஜயம்,  சமீபகால முரண்பாடுகள் குறித்து பேச்சு

லொக்கர் பீ குண்டு வெடிப்பின் குற்றவாளியான லிபியாவைச் சேர்ந்த மெஹ் ரானியை விடுதலை செய்தமை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பேசப்படவுள்ளன. 1988ம் ஆண்டு அமெரிக்க விமானம் தாக்கப் பட்டதில் 188 அமெரிக்கர்கள் கொல் லப்பட்டனர். இதன் குற்றவாளி மெஹ்ரானி கைது செய்யப்பட்டு பிரிட்டனில் நீண்டகாலம் சிறைவாச மிருந்தார். பின்னர் புற்று நோய்க்கா ளாகியுள்ள மெஹ்ரானி மூன்று மாதங்களே உயிர் வாழ்வார் என வைத்தியர்கள் அறிவித்தமையால் கருணை அடிப்படையில் மெஹ்ரானி விடுதலை செய்யப்பட்டார். இச்சம்பவம் ஒரு வருடத்துக்குள் நடந்தது.  லிபியா சென்ற இவரை வைத்தியர்கள் சோதனை செய்த போது இன்னும் பத்து வருடங்கள் மெஹ்ரானி உயிர் வாழ்வார் என மருத்துவ சான்றிதழ்கள் தெரிவித்தன. (மேலும்...)

ஆடி 20, 2010

சீனாவில் தொடர் மழை: ஆறுகள் உடையும் அபாயம்

சீனாவின் வட மாகாணத்தில் இவ் வெள்ளம் ஏற்பட்டது. இரண்டு வாரங்களாக சீனாவில் பெரும் மழை பெய்து வருகின்றது. இதனால் ஆறுகள், நதிகள் உடைப்பெடுக்கும் அபாய மேற்பட்டுள்ளது. ஒருதசாப்தத்திற்குப் பின்னர் சீனாவில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வெள்ளம் இதுவென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. 1998ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 4150 பேர் பலியாகினர். ஆறுகள் நதிகள் உடைப்பெடுத்தமையால் இந்த அனர்த்தம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. (மேலும்...)

ஆடி 20, 2010

Canada expected to follow U.S. in economic slowdown

The mighty U.S. economy is slowing again, and with it Canada’s chances of escaping the global downdraft. A sudden plunge Friday in a closely watched index of consumer confidence is the latest clue the recovery has stalled in the U.S., Canada’s neighbour and largest trading partner. Economists warn that Canadian businesses and investors should brace for the inevitable spillover as the U.S. grapples with a slowing economy and a growing fiscal hangover from years of excess. Canada will still fair relatively better than the United Stateshttp://images.intellitxt.com/ast/adTypes/mag-glass_10x10.gif. But a slowdown in manufacturing and consumer spending here is now likely, and an uptick in unemployment and even some months of shrinking economic activity is not out of the question, argued David Rosenberg, chief economist and strategist at Gluskin Sheff & Associates Inc. in Toronto. (more....)

ஆடி 19, 2010

அரசாங்கத்திற்கு புறம்பாக

சர்வகட்சி குழுவின் இறுதி அறிக்கை இன்று பகிரங்கமாக்கப்பட்டது

"சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி அறிக்கையின் ஒரேயொரு பிரதி மாத்திரமே தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  சர்வகட்சி பிரதிநிதிகளாகிய நாங்கள், அக்குழுவில் அங்கம் விகிக்காத பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியுடனும் தமிழத்தேசியக் கூட்டமைப்புடனும் ஜனாதிபதி பேச்சு நடத்தி, அதன்பின் ஒரு புதிய அரசியல் யாப்புக்கான முன்மொழிவை எடுத்துரைப்பார் என எதிர்பார்த்தோம். எனினும் இறுதி அறிக்கையொன்று  குழுவின் தலைவரினால் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என ஊடகங்கள் மூலம் அறியக்கிடைத்தாலும் ஐ.தே.கவுக்கோ தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதன் பிரதி கிடைக்கவில்லை.  அக்குழுவில் பங்குபற்றிய பிரதிநிதிகளிடம்கூட அவ்வறிக்கையின் பிரதி இல்லை. (மேலும்....)

ஆடி 19, 2010

 

Hundreds of LTTE war widows seek government assistance
Rehab Minister says Mrs. Balakumaran and Yogi among them

Rehabilitation and Prisons Reforms Minister Dew Gunasekera says an urgent programme is needed to provide relief to war widows, including wives of the LTTE cadres killed during the war. Speaking to The Island after meeting groups of war widows in Vavuniya, Jaffna and Kilinochchi over a week ago, Minister Gunasekera emphasized the importance of meaningful measures to alleviate their suffering. General Secretary of the Communist Party of Sri Lanka, Gunasekera said that among the women whom he had met in Jaffna were the wives of K.V. Balakumaran and Yogiratnam Yogi, a member of the LTTE negotiating team for talks with the then President Ranasinghe Premadasa’s government. The Army killed Balakumaran on the Vanni east front early last year. (more...)

ஆடி 19, 2010

அ.இ. காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தி

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மீண்டும் சோனியா காந்தியே தேர்ந்தெடுக்கப்படவிருப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இந்த ஆண்டு இறுதியில் மும்பையில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அச்சமயம், காங்கிரஸ் கட்சி தொடங்கி 125 ஆண்டு நிறைவு கொண்டாட்டமும் இடம்பெறவுள்ளது. அதன்போது, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலும் நடத்தப்பட இருக்கிறது. அதில் சோனியாகாந்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட இருக்கிறார். (மேலும்....)

ஆடி 19, 2010

வைக்கற் பட்டறையில் படுத்திருப்பவர்களே வழிவிடுங்கள் மற்றவர்களுக்கு

(மோகன்)

அசின் போன்றவர்களே அசல் மற்றதெல்லாம் நசல், தமிழனாய் இருந்தும் மனிதர்களாய் வாழாதவர்களை விட எந்த இனத்தில் பிறந்திருந்தாலும் மனித நேயம் கொண்டவர்களால்தான் மனித இனத்திற்க்கே பெருமை. அந்த பெருமையை சேர்த்தவர்களில் அசினும் ஒருவள். மனித உயிர்கள் எல்லாம் ஒன்று, அதன் ஆசாபாசங்கள், உணர்வுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாம் பொதுவானவையே. ஒரு உயிர் துன்பப்படும் போது இன மொழி பேதமின்றி துடித்து போவதே மனித இனம். அதனால்தான் இலங்கைத்தமிழர்களின் துயர் கண்டு அசின் போன்றவர்களின் மனம் உதவிட நினைத்தது. வெறுமனே ஒரே மொழி பேசும் இனத்தின் பேரால் இன்னொரு இனத்தின் அழிவை விரும்பி நிற்பதும் அதன் துயரத்தை கண்டு உள்ளூர ரசித்து நிற்பதும் மனிதர்களின் குணாம்சம் அல்ல. இவர்களை போன்றவர்கள் தமிழ் இனத்தில் பிறந்திருப்பதே அந்த இனத்திற்கு பெரிய அவமானம் அதைவிட அவர்களை தமிழ் இனத்தின் தலைவர்களாக கொண்டாடுவது அந்த இனத்திற்க்கு செய்யும் மாபெரும் துரோகம். (மேலும்....)

ஆடி 19, 2010

சிறப்பாக நடைபெற்று வரும் கதிர்காம திருவிழா

கதிர்காம ஆடித் திருவிழாவானது கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் இம்முறை வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்து அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளதைக் காணக் கூடிய யுத்த சூழ்நிலை மறைந்துள்ள நிலையில் அச்சமின்றி செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளமை காரணமாக யாழ்ப்பாணம்இ கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டு, திருமலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலிருந்தும் இம்முறை கதிர்காம ஆடித் திருவிழாவுக்கு செல்வதற்கு இன்னமும் பலர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். பஸ்கள், கார்கள், வான்கள் மாத்திரமின்றி பெருமளவு பக்தர்கள் கால்நடையாகவும் இங்கு வந்து குவிந்த வண்ணமிருப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. எதிர்வரும் 22ஆம் திகதி தீ மிதிப்பும், 25ஆம் திகதி முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் வீதியுலா வருதலும், 26ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா நிறைவடைய உள்ளது. கதிர்காம திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் பெரஹரா ஊர்வலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது

ஆடி 19, 2010

Demise - Daughter of Daya and Sister of Santusht Perera - Suki Amerasekara

Dr. (Mrs.) Suki Amerasekara passed away this morning in US. She is the wife of Dr. Vimal Amerasekara of Toronto, and only daughter of Daya Perera (former Sri Lanka High Commissioner in Canada) and late Mrs. Perera.

Only sister of Dr. Santusht Perera of NJ.

Funeral details:

Highland Funeral Home3280 Sheppard Ave East, Scarborough. (Warden/Sheppard), Canada

Viewing: Tuesday July 20th - 5-9 p.m. & Wed July 21st - 5-9 p.m.Funeral: Thursday July 22nd - Late afternoon.

Time to be confirmed upon availability of Crematorium.

ஆடி 19, 2010

கனடாவில் இடம்பெற்ற வீரமக்கள் தினம்!

கனடா ரொறன்ரோவில் 21வது வீரமக்கள் நேற்றையதினம் சனிக்கிழமை(17.07.2010) மாலை நினைவு கூரப்பட்டது. செங்கிளேயர் வீதியில் அமைந்துள்ள சென்ற் கொலம்பியா மண்டபத்தில் இடம்பெற்ற வீரமக்கள் தின கூட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலை அமைப்புகள், அரசியல் கட்சிகளின் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டும், மரணித்த போராளிகளின் படங்களை திரையிலேயே காண்பித்தவண்ணம் மலரஞ்சலியுடன் வீரமக்கள் தின நிகழ்வுகள் ஆரம்பமாகியது. புளொட் அமைப்பின் மூத்த உறுப்பினர் மையூரனின் வரவேற்புரையுடன் அவரது தலைமையில் வீரமக்கள் தின கூட்டம் ஆரம்பமாகியது. (மேலும்....)

ஆடி 19, 2010

கிழக்கில் செம்மொழி மகாநாடு

கிழக்கு மாகாண தமிழ் மொழி செம்மொழி விழா நேற்று கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆரம்ப வைபவத்துக்கு வருகை தந்த அதிதிகளை ஆராத்தியெடுத்து வரவேற்பதைக் காணலாம்.

ஆடி 19, 2010

மலையகப் பிரதிநிதிகளுக்கு மனிதாபிமான வேண்டுகோள்!

கொழும்பு நகரத்தை எடுத்துக்கொண்டால் இங்கு செல்வந்த வீடுகள் பெரும்பாலானவற்றில் மலையகத்தைச் சேர்ந்த சிறு பெண்கள் தொழில் புரிகின்றனர். இவர்களில் சிலருக்கு மாத்திரமே மனிதாபி மானமுள்ள எஜமானர்கள் கிடைக்கின்றனர். ஏனையோர் மிகவும் துன்பப்படுகின்றனர். அதிகாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக வேலை வாங்கப்படும் அவலத்தை பலர் எதிர் கொள்கின்றனர். விடுமுறையென்பது இவர்களுக்குக் கிடையாது. போதிய வேதனம் பலருக்கு இல்லை. இடையிடையே வீட்டுக்குச் சென்று வர விடுமுறை வழங்கப்படுவதில்லை. ஒரு வீட்டின் அத்தனை வேலைகளையும் தனியொருத்தியாக நின்று செய்ய வேண்டிய கொடுமைக்கு சின்னஞ்சிறு பெண்கள் உள்ளாகின்றனர். இதுவொரு சமூகப் பிரச்சினையென்பதை மலையக தொழிற்சங்கங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்த அவலத்தை தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு மலையக தொழிற்சங்கங் களுக்கு உண்டு.  (மேலும்....)

ஆடி 19, 2010

சூடானில் பெருஞ் சமர் 75 படை வீரர்கள், 300 தீவிரவாதிகள் பலி

சூடானின் டர்புர் பிராந்தியத்தில் 2003 ஆம் ஆண்டு முதல் மோசமான வன்முறைகள் தலைதூக்கின. அரசுக்கெதிரான போரில் ஜே.ஈ.எம். எஸ்.எல்.ஏ. போன்ற அமைப்புக்கள் ஆயுதப் போரில் இறங்கியுள்ளன. இதனால் மூன்று இலட்சம் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் 27 இலட்சம் மக்கள் புலம் பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா. மதிப்பு செய்துள்ளது. ஆனால் 10 ஆயிரம் பேரே இறந்துள்ளதாக சூடான் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான கொலைக் குற்றச்சாட்டில் சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பர் சர்வதேச நீதிமன்றத்தின் பிடியாணைக்குள் சிக்கியுள்ளமை தெரிந்ததே. 2009 ஆம் ஆண்டு ஹேக்கிலுள்ள சர்வதேச நீதிமன்றம் சூடான் ஜனாதிபதிக்குப் பிடியாணை வழங்கியது. (மேலும்....)

ஆடி 19, 2010

காரைதீவில் இன்று செம்மொழி விழா; கல்முனை பிரதேசம் விழாக்கோலம்

கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடாத்தும் தமிழ்ச் செம்மொழி விழா இன்று காலை 9.30 மணிக்கு காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி மண்டபத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம். ரீ. ஏ. நிசாம் தலைமையில் நடைபெறவுள்ளது. இதனையிட்டு கல்முனைப் பிரதேசம் விழாக்கோலம் பூண்டுள்ளது. முத்தமிழ் முனிவர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவாக நடைபெறும் தமிழ்ச் செம்மொழி விழாவில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க கெளரவ அதிதியாகவும் கலந்துகொள்வர். (மேலும்....)

ஆடி 19, 2010

மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நிகழ்ந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும்  -அப்துல் கலாம்

மூன்றாவது உலகப் போர் என்று ஒன்று நிகழ்ந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு. அது நிஜம்தான். இந்தியாவை சுற்றி உள்ள சீனா, நேபாளம், மியான்மர், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் எல்லாம் மக்கள் தொகை அதிகம் கொண்ட, தண்ணீர் பிரச்னைகள் அதிகம் உள்ள நாடுகள். இவற்றில் பல ஆயுத பலங்களையும் கொண்டவை. நாளை இவை தண்ணீருக்காக இந்தியாவுக்கு தொல்லை கொடுக்காது என்பது நிச்சயம் இல்லை. தண்ணீருக்காக அடிதடியும், கலவரமும், யுத்தமும் ஏற்படக்கூடாது என்றால் அதற்கு தேவை தீர்க்க தரிசனம் கொண்ட ஒரு தலைமை. இளைஞர்களில் இருந்துதான் தண்ணீருக்கான அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்கும் ஒருவர் வரவேண்டும். எதிர்கால தண்ணீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய உடனடியாக செய்யவேண்டியது நதிநீர் இணைப்பு திட்டம்தான். (மேலும்....)

ஆடி 18, 2010

அரசியலமைப்புத் திருத்தமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும்

தேசிய முக்கியத்துவம் வாய்ந்தனவும் முற்போக்கானவையுமான சக லவற்றையும் எதிர்க்கும் பாரம்பரியத்தைக் கொண்டவர்களே தமி ழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் என்ற அபிப்பிராயம் பெரும்பாலான மக்களிடம் தோன்றியிருக்கின்றது. அரசியலமைப் பின் பதினேழாவது திருத்தம், அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் ஆகியவற்றுக்குக் காட்டிய எதிர்ப்பை உதாரணமாகக் கூறலாம். பதினேழாவது அரசியலமைப்புத் திருத்தத்தின் கீழ் அமையும் அரசியலமைப்புச் சபையில் இலங்கைத் தமிழர், இந்திய வம்சா வளியினர், முஸ்லிம் ஆகிய இனங்களின் பிரதிநிதிகள் அங்கத் துவம் வகிப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்த போதிலும் அத்திருத் தம் தமிழ் மக்களுக்குச் சம்பந்தம் இல்லாதது எனக் கூறித் தமி ழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்றத்திலிருந்து வெளிநடப் புச் செய்தது. இது கண்மூடித்தனமான எதிர்ப்பு மனோபாவத்தின் வெளிப்பாடு. இத்தகைய அணுகுமுறை எதிர்மறை விளைவைத் தருமேயொழியச் சாதகமான பலனைத் தராது.  (மேலும்.....)

 

ஆடி 18, 2010

ரணிலின் ஆதரவு நிலைக்குமா?

இந்த நம்பிக்கை நிலைத்து நிற்குமா என்பது பிரதான கேள்வி. ரணிலின் கடந்த காலச் செயற்பாடுகள் இந்தச் சந்தேகத்தைத் தோற்றுவிக்கின்றன. இவர் தோற்றுவித்த நம்பிக்கைகளை இவரே சிதைத்திருக்கின்றார்.  பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத்திட்டத்தை முன்வைத்தது. அதை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு இருக்கவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் உதவியை அரசாங்கம் நாடியது. ஆதரிப்பதாக ரணில் நம்பிக்கையூட்டிக் கடைசி நேரத்தில் காலை வாரினார். தீர்வுத்திட்டத்தை மகா சங்கத்தினரின் அங்கீகாரத்துக்காகச் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கூறி ரணில் ஓரத்தில் ஒதுங்கினார். (மேலும்.....)

ஆடி 18, 2010

உருத்திரகுமார், நெடியவனுக்கு இலங்கை அரசு ஆப்பு

புலிகளின் சர்வதேச வலையமைப்புக்கு எதிராக புதிய நகர்வு

புலிகளின் சர்வதேச வலையமைப்பை முற்றாக முடக்கும் வகையில் இன்டர்போல் ஊடாகவும் சர்வதேச புலனாய்வு முகவர் அமைப்பின் ஊடாகவும் அரசாங்கம் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் வெளிநாடுகளில் இயங்கும் புலிகளின் இரு முக்கியஸ்தர்களைக் கைது செய்வதற்கு இன்டர் போல் (சர்வதேச பொலிஸ்) நடவடிக்கை எடுத்து வருகிறது. புலிகளின் சர்வதேச இணைப்பாளரான காஸ்ட்ரோவின் வன்னி அலுவலகத்தில் இலங்கை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட இரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஐயா அல்லது ராஜா எனப்படும் பொன்னையா ஆனந்த ராஜாவை இன்டர்போல் பொலிஸார் தேடி வருகின்றனர். 60 வயதான இவர், யாழ்ப்பாணம் சங்கானையைச் சேர்ந்தவரா வார். இன்டர்போலால் தேடப்படும் மற்றவரான அச்சுதன் சிவராஜா அல்லது பிருந்தாவன் அச்சுதன் என்பவர் பிரான்சிலுள்ள விமான பயிற்சிப் பாடசாலையில் விமானியாக பயிற்சி பெற்றுள்ளார். (மேலும்.....)

ஆடி 18, 2010

இந்திய - பாக். பேச்சு தோல்வி

இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றச்சாட்டு

இந்தியா - பாகிஸ்தான் பிரதிநிதிகளுக்கு இடையில் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையின் போது இந்திய பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கவில்லை என பாகிஸ்தானிய வெளிவிவகார அமைச்சர் மஹ்மூத் குரேஷி தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் போது அவர் தொடர்ச்சியாக இந்திய அரசிடமிருந்து தொலைபேசி அறிவுறுத்தல்களைப் பெற்று சந்திப்பில் தடங்களை ஏற்படுத்தி யதாகவும் இந்திய தூதுக் குழுவினரின் செயற்பாடுகள் பற்றி மஹ்மூத் குரேஷி ஊடகவியலாளர்கள் மத்தியில் கடுமையாக சாடியிருந்தார். (மேலும்.....)

ஆடி 18, 2010

நல்லூர் திருவிழாவில்

தமிழர் பண்பாடு, கலாசாரத்தை பேணும் வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும்

யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா

நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவம் இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்ட திருவிழாவாகும். யாழ்ப்பாண மக்களுடன் இலங்கையின் ஏனைய பகுதிகளைச் சேர்ந்தவர்களும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் எதிர்பார்த்திருக்கும் உற்சவம் இது. தமிழ் மக்களின் பண்பாடு கலாசாரத்தின் சின்னமாக விளங்கும் இதன் பெருமைகளைக் காப்பாற்றும் வகையில் நமது செயற்பாடுகள் அமைய வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (மேலும்.....)

ஆடி 18, 2010

சர்வதேச முதலீட்டாளர்கள் யாழ் விஜயம்

யாழ். அச்சுவேலி பகுதியில் சுமார் 65 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள வர்த்தக வலயப் பகுதிக்கு சர்வதேச முதலீட்டாளர்கள் நேற்று விஜயம் செய்தனர். முதலீட்டு நிலைமைகளைப் பார்வையிடுவதற்கு வருகை தந்த இவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்துச் சென்றதுடன் நிலைமைகளை எடுத்துக் கூறினார்.  இலங்கையில் முதலீடு செய்துள்ள முன்னணி ஆடை உற்பத்தி தொழிற்சாலை நிறுவனங்களான பிரான் டெக்ஸ், மாஸ் ஹோல் டிஸ், டிமெக்ஸ் கார்மண்ட்ஸ், ஒமேகா லைன், ஒரிக் எப்பரல்ஸ் ஆகிய ஐந்து சர்வதேச நிறுவனங்களின் பங்குதாரர்களே யாழ். குடாநாட்டில் முதலீடு செய்வதற்காக நேற்று சென்றிருந்தனர். (மேலும்.....)

ஆடி 18, 2010

சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற கப்பல் முற்றுகை

கனடாவுக்கான புகலிடக் கோரிக்கையை முன்வைத்து சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கௌதமாலாவிற்கு அருகில் வைத்து முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த கப்பல் கௌதமாலாவிற்கு அருகில் நேற்று சனிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும், 'சன் சீ' என்ற கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும் 12 இந்தியத் தமிழர்களும் காணப்பட்டதாகவும் ஏசியன் றிபியூன் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு சென்ற சட்டவிரோதக் குடியேற்றக்காரர்களில் விடுதலைப் புலி சந்தேக நபர்கள் சிலர் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆடி 18, 2010

தமிழரின் மறுவாழ்வுப் பணிகளை அவதானிக்க சிறப்புப் பிரதிநிதி இலங்கை செல்ல வேண்டும் - கருணாநிதி

நலன்புரி நிலையங்களிலுள்ள  தமிழ் மக்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை அவதானிப்பதற்காக சிறப்புப் பிரதிநிதியை அங்கு  அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.கருணாநிதி தீர்மானமொன்றை முன்வைத்துள்ளார். இந்தியப்  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நேற்று சனிக்கிழமை அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, அவர் இந்தத் தீர்மானத்தை முன்வைத்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப் பணிகள் தொடர்பிலான விடயங்களை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை இந்திய அரசாங்கம்   எடுக்க வேண்டும் எனவும், இதன் மூலம்  இடம்பெயர்ந்த மக்களின் உரிமைகள்,  சாமாதனம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கான எதிர்காலத் திட்டங்களை முன்னெடுக்க முடியும்   எனவும் மு.கருணாநிதி குறிப்பிட்டார். (மேலும்.....)

 

ஆடி 18, 2010

The Canada Revenue Agency Revokes the Charitable Status of Tamil (Sri Lanka) Refugee-Aid Society of Ottawa

 

This funding included $713,000 provided to an organization which, on the basis of publicly available information detailed in our letter of February 22, 2010, the CRA believes was operating as part of the support network for the Liberation Tigers of Tamil Eelam (the LTTE), a listed entity under the United Nations Suppression of Terrorism Regulations and the Criminal Code of Canada. The CRA audit also indicates that fundraising conducted under the Society's auspices involved an individual who has been convicted in the United States of conspiring to provide material support to the LTTE. In addition, the Society's liaison officer for Sri Lanka was named in documents filed with the Federal Court of Canada as a contact for area sales coordinators with the World Tamil Movement, also a listed entity under the Criminal Code of Canada because of its ties to the LTTE. (more....)

ஆடி 17, 2010

கனடாவில் 21வது வீரமக்கள் தினம்!

விடுதலைக்காக தம்முயிரை தியாகம் செய்த பொதுமக்கள், போராளிகள் அனைவரையும் நினைவுகூரும் “வீரமக்கள் தினத்தில்” எமது அஞ்சலிகளை செலுத்திட அனைவரும் ஒன்று கூடுவோம்.

இடம்: 2723 St. Clair Ave East, East York, Toronto, Canada, M4B 1M8

காலம்: July 17, 2010

நேரம்: மாலை 5.00 – 9.00 (சனிக்கிழமை)

தொடர்புகளுக்கு: (416) 613 2771

மின்னஞ்சல்:  dplf_canada@plote.org.com

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி – கனடா

Democratic People’s Liberation  Front _ Canada (DPLF)

ஆடி 17, 2010

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடன் வாழ நடவடிக்கை- மன்மோகன்  சிங்

இலங்கை தமிழர்கள் சுயமரியாதையுடனும், மதிப்புடனும் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ளும். இலங்கை அதிபருடன் கடந்த மாதம் பேச்சு வார்த்தை நடத்தியதுடன் அண்மையில் இலங்கை நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டணி உறுப்பினர்கள் தூது குழுவும் என்னை சந்தித்து பேசியது இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ்வதற்குரிய நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதியாக மேற்கொள்ளும். போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் விரைவில் குடியமர்த்தப்பட தேவையான நடவடிக்கைகளை எடுக்க இந்திய அரசு வலியுறுத்தும். (மேலும்....)

ஆடி 17, 2010

Govt. Will Gradually Release HSZs Lands Says Deputy Minister Muralitharan

Deputy Resettlement Minister Vinayagamurthy Muralitharan (formerly known as Karuna) said the government would gradually release the lands occupied by security forces under High Security Zones (HSZs) in the North in order to resettle displaced civilians. Muralitharan told The Sunday Leader that the HSZs in the North have left 62,000 people displaced. “The Defence Secretary has promised to me that he would gradually release the lands occupied by HSZs to resettle civilians who have been displaced. We have already resettled some civilians in Vadamarachchi East,” he said. Muralithran’s comments come after Government Spokesperson Minister Keheliya Rambukwella yesterday stated that the HSZs in the North would remain and that the government was not going to dismantle them. However, EPDP Leader and Minister Douglas Devananda has also stated that Preisdent Mahinda Rajapaksa had assured him that the HSZs in the North would be dismantled to resettle civilians.

ஆடி 17, 2010

சிறுபான்மையினர் பிரச்சினை தீராமல் அரசியலமைப்புத் திருத்தமா? _

சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் அரசியலமைப்புத் திருத்தம் பற்றியும் நிறைவேற்று அதிகாரமுடைய பிரதமர் முறையை ஸ்தாபிப்பது பற்றியும் பேசிப் பயனில்லை என ஜனநாயக மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.நாட்டில் 13ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் என்ற கிழக்கு மாகாண முதலமைச்சரின் வேண்டுகோள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுமில்லை. இருப்பினும் 17ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். (மேலும்.....) 

ஆடி 17, 2010

Rebels have been routed for good, says Sri Lankan Tamil MP

(Allan Jacob)

The LTTE began its ruthless struggle for a Tamil state and carried out a series of attacks from the early eighties. A largely defensive Indian Peace Keeping Force was deployed on the island in 1987 to disarm the rebels, but made a hasty exit after three years. Former Indian prime minister Rajiv Gandhi was killed by a female suicide bomber in 1991. This turned Indian sentiment against the group, which had backers in the state of Tamil Nadu. Then Lankan president Premadasa met his end in 1994, again at the hands of a suicide bomber, a killing strategy the group had perfected. More political assassinations followed and a Norway-brokered peace deal in 2002 didn’t last. (more....)

ஆடி 17, 2010

தேர்தல் முறையில் விரைவில் மாற்றம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பியுடன் அரசியலமைப்புத் திருத்தம் பற்றிப் பேச்சு

அரசியலமைப்பு திருத்தத்தை இந்த வருடத்தினுள் துரிதமாக மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் புதிய தேர்தல் முறையில் கீழே நடத்தப்படுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சிரேஷ்ட தலைவர்கள் நேற்று தெரிவித்தனர். அரசியலமைப்பு திருத்தம் குறித்து ஐ.தே.க.வுடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாகவும் எதிர்வரும் நாட்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஜே.வி.பி. போன்ற கட்சிகளுடன் பேச உள்ளதாகவும் அவர்கள் கூறினர். (மேலும்...)

ஆடி 17, 2010

CANADA MONITORS SUSPICIOUS VESSEL

(Stewart Bell, National Post)

Canadian authorities are monitoring a Thai cargo ship after reports it may be on its way to the British Columbia coast with more than 200 migrants on board. The MV Sun Sea was last spotted in the Gulf of Thailand, where it was the subject of a lookout issued by the Philippine Coast Guard, which called it "a suspected people-smuggling vessel." On the weekend, Colombo's Sunday Observer newspaper reported that while the 59-metre vessel was originally headed for Australia it was now sailing toward the Canadian coast. (more....)

ஆடி 17, 2010

மட்டு. - பொலன்னறுவை ‘ரயில் பஸ்’ சேவை ஆரம்பம்

 

பொலன்னறுவை ரயில் நிலையத்திலிருந்து மட்டக்களப்புக்கு புதிய ‘ரயில் பஸ்’ சேவை ஒன்று எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. புகையிரத திணை க்களத்தின் இரத்மலானை பொறியியல் பிரிவினரால் மாற்றியமைக்கப்பட்ட இரண்டு இந்திய தயாரிப்பு பஸ் வண் டிகள் ‘ரயில் பஸ்’ வண்டியாக சேவை யிலீடுபடுத்தப்படவுள்ளன. அமைச்சர் குமார் வெல்கம, பொலன்னறுவை ரயில் நிலையத்தில் ரயில் பஸ் சேவையை ஆரம்பித்து வைப்பார்.

ஆடி 17, 2010

பொருளியல் அரங்கம்

மாற்று வழி கூறும் ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி

(கணேஷ்)

ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே அரசிடமி ருந்து மானியம் பெறுவதில் லை. கொள்கை ரீதியாக மானியத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட் டது. இந்த மானியத்தை நிறுத்தினால் 1,600 கோடி ரூபாய் மிச்சமாகும். மொத்த முள்ள 722 இடங்களில் 460 இடங்களை நீக்கிவிட்டால் என்ன மிச்சமாக்க முடியுமா அதை இதில் எடுத்துவிட முடியும். அதைவிட்டு விட்டு, மக்கள் கருத்தைப் பிரதிபலிக்கும் நாடாளுமன்றத்தில் இடங்களைக்குறைப் பதை ஒப்புக் கொள்ள முடியாது என்கிறது கம்யூ னிஸ்ட் கட்சி. (மேலும்...)

ஆடி 17, 2010

'ரூ' போய் குறியீடு வந்தது...!!

அடையாளக் குறியீடோடு இருக்கும் நாணயங்கள் அமெரிக்கப் பணமான டாலர், இங்கிலாந்து பணமான பவுண்டு ஸ்டெர்லிங், ஜப்பான் பணமான யென் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூரோ ஆகியவைதான். இந்தப் பட்டியலில் இந்தியாவின் ரூபாயும் இணைகிறது. பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் பணமும் ரூபாய் என்றே இருந்ததுதான் இத்தகைய குறியீட்டை உருவாக்குவதன் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது. தேவநாகரி எழுத்தான 'ர' என்பதையும், ரோமன் எழுத்தான 'ஆர்' என்ற எழுத்தையும் இணைத்து இந்தக்குறியீட்டை உதயகுமார் உருவாக்கினார். (மேலும்...)

ஆடி 17, 2010

மக்கள் படை

20 கிராமங்கள் மூழ்காமல் காப்பாற்றிய சீன ராணுவம்! 

அமைதிக்காலத்தில் பாலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளிலும் சீனாவின் ராணுவம் மற்றும் காவல்துறை இறங்குவது வாடிக்கையான ஒன்றாகும். வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும்போது மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்த ராணுவம் அந்தப் பகுதிகளிலிருந்து இயங்கத் துவங்கும். பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் பகுதிகளில் முகாம்கள் அமைப்பது, படுக்கைகள் விநியோகிப்பது போன்ற பணிகளை அதிவிரைவில் செய்வது ராணுவமும், காவல்துறையும்தான். அதேபோல் வெள்ள அபாயத்தை எச்சரிக்கை செய்ய மக்கள் மத்தியில் செய்திகளைக் கொண்டு போய்ச் சேர்க்கும் பணியையும் மிகுந்த கவனத்துடன் செய்து வருகிறார்கள். (மேலும்...)

ஆடி 17, 2010

Prime Minister on six-day official visit to China

Prime Minster D. M. Jayaratne will be on a six-day official visit to China from 16th to 21st July to discuss regarding the bilateral economic development of the two countries.During the visit Prime Minister will hold discussions with high ranked Chinese leaders and investors on approaches to develop Sri Lanka’s export sector and also on poverty alleviation in the region. The main event of the visit will be the Shanghai Expo 2010 held under the theme “Better City, Better Life”. Sri Lanka is among the 246 countries and international organisations participating at the event. Prime Minister during this official visit will discuss matters regarding signing of several agreements in the fields of Education, Tourism, Energy and Agriculture with Chinese leaders and in addition, he will also discuss on areas of technology transfer and training between the two nations. Furthermore, in connection with the grand event at Shanghai, two other events at Kunming and Beijing are also expected to take place where Prime Minister Jayaratne will speak on possibilities of Asian Approaches to Poverty Alleviation.  In addition, he will also talk about possibilities to increase thefrequency for Sri Lankan Airlines to arrive in Beijing, in order to cater to the increasing demand.

ஆடி 17, 2010

நெல்சன் மண்டேலா சர்வதேச தினம் நாளை

நெல்சன் மண்டேலா முதலா வது சர்வதேச தினம் நாளை ஜுலை 18 ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.நா. பொதுச் சபை அமர்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய உலகம் முழுவதும் நாளைய தினம் தென்னாபிரிக்கா வின் தந்தையெனப் போற்றப்படும் நெல்சன் மண்டேலாவின் முதலாவது சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஐ.நா. சபையில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளிலும் நெல்சன் மண்டேலாவின் பிறந்த தினமான ஜுலை 18 ஆம் திகதி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. நெல்சன் மண்டேலா நிற வெறிக்கு எதிராகப் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்ததோடு மனித உரிமைக்கும் ஜனநாயகத் திற்காகவும் ஆற்றிய பணிக ளைப் பாராட்டும் முகமாக ஐ.நா. சபை ஜுலை 18 ஆம் திகதியை நெல்சன் மண்டேலா சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆடி 17, 2010

இலங்கை தொடர்பான தீர்ப்பு, சொந்த மண்ணில் போரில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் எச்சரிக்கையாக வேண்டும் - பாக். பத்திரிகை ஆசிரியர் தலையங்கம்

மோதல்களின் இறுதிக்கட்டத்தின் போதான, சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான மீறல்கள் குறித்த பொறுப்புடைமை பொறிமுறை தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்குமாறு மேற்படி குழு கோரப்பட்டுள்ளது. ஆயுதப்போர்களின்  மாறிவரும் தன்மையானது  சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை வரையறுத்த ஜெனீவா ஒப்பந்தத்தின் விணைத்திறனை இல்லாமலாக்குவதாக உள்ளது. சீருடையிலுள்ள நபர்கள் இணக்கமில்லாதோருடனும் கிளர்ச்சியாளர்களுடனும் சண்டையிடும்போதுகூட இந்த ஒப்பந்தங்களின் கொள்கைகளை பின்பற்றவேண்டும் என்பது முக்கியமானதாகும்.    இலங்கை தொடர்பான தீர்ப்பானது சொந்த நாட்டில் யுத்தத்தில் ஈடுபடும் அனைத்து இராணுவங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக அமைய வேண்டும். பொதுமக்களிடமும் காயமடைந்த எதிரிச் சிப்பாய்கள் மீதும் மனிதாபிமானத்தைக் காட்ட வேண்டும் எனும் கொள்கை புனிதமானதும் மதிக்கப்பட வேண்டியதுமாகும்." (மேலும்...)

ஆடி 16, 2010

யாரும் இல்லாமல் போன எங்கள் குழந்தைகளை நாமே காப்பாற்றுவோம்

நடந்து முடிந்த இறுதியுத்தின் முன்னர் கிளிநொச்சி முல்லைதீவு பகுதிகளில் அதிகமான சிறுவர் சிறுமியர் காணாமல் போயுள்ளனர். கடந்த வருடம் பெப்ரவரிமாதம் எராளமான பிள்ளைகள் காணமல் போனதையடுத்து பெற்றோர்கள் மிகவும் வேதனையடைந்தவண்ணம் தெருத்தெருவாக பிள்ளைகளைதேடி வவுனியா இடம் பெயர்ந்த முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் கண்ணீருடன் விசாரித்து அலைந்தவண்ணம் உள்ளனர்அப்படி காணாமல் போன தனது ஒரேயொரு செல்ல மகளை தேடி தந்தையும் தாயும் மனநிலை பாதிக்கப்பட்டு வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. அன்பா புலம் பெயர்வாழ் உறவுகளே பாதிக்கப்பட்ட இந்த பெற்றோரின் கவலைதீர்க்க உங்களால் முடியுமா??இவர்களது ஒரேயொரு செல்லமகளை யாராவது பார்த்திருந்தாலோ அல்லது உங்கள் உறவுகள்மூலமாக அறிந்திருந்தாலோ மனிதநேயஅடிப்படையில் உதவி புரியகாத்திருக்கும் எங்களுடன் தயவு செய்து தொடர்கொள்ளுமாறு கேட்டுக்கொகிள்றோம் காணாமல் போனவரின்தகவல் தருவோர்க்குதகுந்த சன்மானம் வழங்கப்படும்

நன்றி

வணக்கம்

தொடர்புகட்கு s.p. karan 0041783130889

ஆடி 16, 2010

வவுனியாவில் வீரமக்கள் தினம்!

இன்றையதினம் வீரமக்கள் தினத்தின் இறுதி நாளாகும். தமிழீழ விடுதலை புலிகளால் கொழும்புநகரில் வைத்து படுகொலை செய்யப்பட்ட த.வி.கூ. யின் செயலர் அமரர் அமிர்தலிங்கம்கொல்லப்பட்ட யூலை-13ம் திகதியில் இருந்து புளொட் செயலர் அமரர் கதிர்காமர்உமாமகேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட யூலை 16ம் திகதி வரையிலான பகுதியை வீரமக்கள் தினமாக பிரகடனப்படுத்தி வீரமக்கள் தினம் கடந்த 20 ஆண்டுகளாக நினைவுகூரப்பட்டு வருகின்றது. கடந்த 13ம் திகதி மலரஞ்சலியுடன் ஆரம்பமாகிய வீரமக்கள் தினத்தின் இறுதி நாள் இன்றாகும். இன்றையதினம் வவுனியா கோயில் குளம் உமாமகேஸ்வரன் வீதியில் அமைந்துள்ள அவரது சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வினை தொடர்ந்து அஞ்சலி கூட்டமும் இடம்பெறும் என்று புளொட் இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றைய நிகழ்வில் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட அவ் கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் சக விடுதலை அமைப்புக்களின் பிரதிநிதிகள், தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மரணித்த போராளிகள், பொதுமக்;கள், தலைவர்கள், கல்விமான்களுக்கு தமது அஞ்சலியை தெரிவிப்பர் என்று புளொட் அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆடி 16, 2010

தமிழே இவர்களை மன்னித்து விடு

(மோகன்)

சினிமாவில் ஆடி களைத்து

உடல் கொஞ்சம் ஆட்டம் காண தொடங்கியதும்

அரசியலில் ஓய்வூதியத்துடன் ஓய்வெடுக்க

அதே ரசிகக் கண்மணிகள் ஓயாமல் உழைத்தும் கொடுப்பார்கள்

கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிகளுக்கு

பல்கலைக்கழங்களும்

தங்கள் பங்குக்கு தாராளமாக கொடுக்கும்

'டாக்டர்' பட்டம்

தமிழின் பெருமையை பேசிய

அண்ணாத்துரைக்கு 'அறிஞர்' பட்டம்

தமிழனாய் பெருமை சேர்த்த

விஞ்ஞானி அண்ணாதுரைக்கு

எதையும் கொடுப்பதில் இல்லை நாட்டம்

(மேலும்...)

ஆடி 16, 2010

கனடாவை நெருங்கும் அபாயம்

கிரீன்லாந்தில் ஏழு சதுர கி.மீ. பனிப்படிவம் நள்ளிரவில் உடைந்தது 

கிரீன்லாந்தில் உள்ள ஜேக்கப்ஷான் இஸ்ப்ரே பனிப் படிவத்தின் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பள வுள்ள ஒரு பகுதி ஜூன் 6 மற்றும் 7க்கும் இடைப் பட்ட இரவுப் பொழுதில் உடைந்து தனியாக மிதக் கிறது. கனடாவின் கிழக்கு கடற்கரையை இது நெருங் கக் கூடும் என்று ஆராய்ச் சியாளர்கள் கூறுகின்றனர். நூறு ஆண்டுகளுக்கு முன் டைட்டானிக் கப்பலை முட்டி மூழ்கடித்த பனிப்பாறை இங்கிருந்துதான் உடைந்து வந்ததாக நம்பப்படுகிறது. மறுபடியும் ஒரு பனிப்படிவம் உடைந் துள்ளது. இது தெற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. கனடாவின் கிழக்கு கடற் கரையில் கடல் வணிகப் பாதையை மறிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (மேலும்...)

ஆடி 16, 2010

இந்தியா - பாக். பேச்சுவார்த்தை

டேவிட் ஹெட்லி தந்த தகவல் அடிப்படையில் மும்பை தாக்குதல் குற்றவா ளிகள் மீது பாகிஸ்தான் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியு றவுத் துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷியிடம் இந் திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா வலியுறுத்தினார். இந்தியா-பாகிஸ்தான் இருநாட்டு நம்பிக்கை மேம் பாட்டு நடவடிக்கையாக இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச் சர்கள் பேச்சு வார்த்தை வியாழனன்று இஸ்லாமா பாத்தில் நடைபெற்றது. (மேலும்...)

ஆடி 16, 2010

மறதியைப் போக்க உடலுழைப்பு

உடல் உழைப்பில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு முதுமை மறதி நோய் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள் அமெரிக்காவின் பாஸ்டன் மாகாணத்தில் உள்ள பெண்கள் மருத்துவமனையைச் சேர்ந்த ஆய்வாளர்கள். சுமார் 1,200 முதியவர்களின் கடந்த 20 ஆண்டுகால மருத்துவ ஆவணங்களைப் பரிசோதித்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளார்கள். அதேபோல் தேநீர் அருந்துபவர்களுக்கும் இந்த மறதி நோய் முதுமையில் வருவது குறைவாகவே உள்ளது என்றும் தங்கள் ஆய்வில் அவர்கள் கூறுகிறார்கள். வைட்டமின் `டி’ குறைவும் இந்த மறதி ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது என்பது அவர்கள் கருத்தாகும்.

ஆடி 16, 2010

வாழத் துடிக்கும் ஒரு தொழில்

(இ.முத்துக்குமார்)

ஹூண்டாய், நோக்கியா போன்ற சில ஆயிரம் பேர் வேலை வாய்ப்பை பெறும் பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் பல வகையில் அரசு சலுகைகளை வழங்குகிறது. ஆனால் 6 லட் சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் கைத்தறிக்கு பெரிய முதலீடு எதுவும் வழங்கவில்லை. மின்சார பற்றாக்குறை உள்ள நமது மாநிலத்தில் மின் பயன்பாடே இல்லாமல் நடைபெறும் ஒரு மிகப்பெரிய தொழில் இது மட்டுமே இருக்க முடியும். 6 லட்சம் வேலைவாய்ப்புகளை பாதுகாப்பதில் அரசு தோல்வி அடைந்தால் பெரும் கொந்தளிப்பும் சமூக அமைதி யின்மையே உருவாகிடும் இதுதான் பல நேரங்களில் பட்டினிச்சாவு, கஞ்சித் தொட்டி திறப்பு என்கிற பல வெளிப்பாடுகளை அவ்வப்போது காண்கிறோம். இது மேலும் பெரிதாக வெடிக்காமல் இருக்க அரசு விழித் துக்கொள்வது நல்லது. (மேலும்...)

ஆடி 16, 2010

இந்திய ரூபாய்க்கு புதிய சின்னம் அறிமுகம்

இந்திய ரூபாய்க்கு சின்னம் உருவாக்கும் போட்டி அறிவிக்கப்பட்டது. வெற்றிபெறுபவருக்கு இந்திய ரூபாய் 2.5 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருந்தனர். அதற்கமைய அனுப்பிவைக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சின்னங்களை ஐந்துபேர்கொண்ட நடுவர்குழு பரிசீலித்து, அதில் ஐந்து சின்னங்களை மத்திய அரசுக்கு சிபாரிசு செய்தது. அந்த ஐந்து சின்னங்களிலிருந்து கான்பூரில் ஐஐடி படிக்கும் மாணவர் உதயக்குமார் உருவாக்கிய சின்னத்தினை தேர்வுக்குழு தெரிவுசெய்திருக்கிறது. இந்திய நாணயத்தின் மதிப்பு சர்வதேச மட்டத்தில் உயர்ந்திருக்கும் இத்தருணத்தில் இந்தச் சின்னம் அறிமுகப்படுத்தியிருப்பது பொருத்தமானதே. இன்றும் ஆறு மாதங்களில் இந்தச் சின்னம் நடைமுறைக்கு வரும்.  (மேலும்...)

ஆடி 16, 2010

வாழும் ஜனநாயகம்....?

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் பணி புறக்கணிப்பு _

மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் இன்று காலையில் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஒருவர் மதுபோதையில் சென்று மாநகரசபை ஊழியர் ஒருவரை ( மேற்பார்வையாளர்) முறைகேடான வார்த்தைகளால் பேசி தாக்கச் சென்றதாகவும் மாநகர சபை வாசலில் குந்தி இருடா என மிரட்டி வாசலில் இருக்க வைத்து அவமானப்படுத்தியுமுள்ளார் எனவும் அதற்கெதிராக அவர்கள் இந்த பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

ஆடி 16, 2010

இந்திய பெருங்கடலில் நீர்மட்டம் அதிகரிப்பு

இந்தியப் பெருங்கடலில் சில பகுதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இந்தியா, வங்காளதேசப் பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பசுங்கூட வாயு அளவு அதிகரித்து வருவதை தொடர்ந்து வெப்பநிலை அதிகரித்து கடல்நீர் மட்டமும் அதிகரித் துள்ளது என அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக் கழகத்தின் சூழ்நிலை மற்றும் கடல் அறிவியல் துறை இணை பேராசிரியர் வெய்கிங் ஹன் தனது ஆய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆய்வு அறிக்கை ‘ஜியோ சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. பசுங்கூட வாயு பெருக்கத்தால் வங்காள விரிகுடா, அரேபிய கடல் மற்றும் இலங்கை கடல் பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.(மேலும்...)

ஆடி 15, 2010

போர் குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்

(மோகன்)

ஓட்டகத்திற்கு இடம் குடுத்த கதையை போல நம்ம சிலோன் தமிழன்களுக்கு ஒட்ட இடம் கொடுத்த நிலையா போச்சு கனடாக்காரன்களுக்கு. இவன் என்னடாவென்றால் எலக்ஸன் நடத்துற சாக்கில கனடாவை தொகுதி, மாவட்டம், வட்டாரம் என அக்குவேற ஆணிவேறா பிரிச்சு வைச்சிருக்கிறான், கூடிய சீக்கிரம் கனடாவை பிளாட் போட்டு வித்தாலும் ஆச்சரியப்பட முடியாது. இப்ப லேட்டஸ்டா உலகத்தமிழரும் ஒரு எலக்ஸன் நடத்தினவையள். அதில இந்த இந்த தொகுதிக்கு இத்தனை இத்தனை மெம்பர் செலக்ட் பண்ணப்படுவினம் என்று வடிவா போட்டினம் அப்படியே கீழ போய் பார்த்தால் செலக்ட் பண்ணப்படவேண்டிய மெம்பரும் போட்டியிடுற நம்பரும் சேம், இது என்ன பப்பி சேம் அட அதுகூட பரவாயில்ல சில தொகுதிக்கு தேவையான வோன்டட் மெம்பருக்கே போட்டி போடுவதெற்கே நொட் இனப் மெம்பர். (மேலும்...)

ஆடி 15, 2010

CANADIAN SRI LANKANS MEET CANADIAN HIGH COMMISSIONER IN SRI LANKA

Members of “Friends of Sri Lanka-Canada” and a group of Tamil and Sinhala community members in Toronto met Canadian High Commissioner in Colombo, His Excellency Bruce Levy on July 12th 2010 at a Mississauga restaurant to discuss the present situation in Sri Lanka. Earlier Mr. Levy had promised “Friends of Sri Lanka-Canada” to meet Canadian Sri Lankans in Toronto when he visit to Toronto. At the discussion Mr. Levy described the situation in Sri Lanka is far better than he imagined before he went there and he even recommend Canadian foreign affairs to remove the travel advisory on Sri Lanka. “If I can travel from one end to the other end why not the others” he said. He commends the Sri Lankan government for resettling IDPs much faster than international community was ever expected. Also he expects progress in other avenues as well. He also made comments on VISA rejections of relatives to Canadian Sri Lankans. When raised the matter of local officials at the high commission mistreating visa applicants, High Commissioner said he will look in to that matter and promised there will be changes. High Commissioner promised to keep the dialog active, between Diaspora and the High Commissioner.

ஆடி 15, 2010

வெனிஸ் நகரம் உருவான கதை

ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்பட்டதல்ல என்று சொல்வார்கள். அந்த வசனம் வெனிஸ் நகருக்கு மிகவும் பொருந்தக் கூடியது. வரலாற்றின் மத்தியக் காலத்தில்தான் கல்லாலான கட்டடங்கள் கட்டப்பட்டன. அதற்கான அடித்தளமே ஆச்சரியம் தரக்கூடியது. மிக நீளமான பைன் மரங்களும் லொர்ச் மரங்களும் வெட்டப்பட்டு அப்படியே சதுப்பு நிலத்தில் புகுத்தப்பட்டன, வெண்ணெயில் தீக்குச்சிகளை நெருக்கமாக நட்டால் எப்படி இருக்குமோ அப்படி மரங்கள் நடப்பட்டு சதுப்பு மண் மறைக்கப்பட்ட மேலே அமைந்த சமதளத்தின் மீது கட்டடங்கள் எழுப்பப்பட்டன. உண்மையில் சொன்னால், வீட்டைக் கட்டிப்பார் என்பது இவர்களுக்குத்தான் பொருந்தும். வீடு கட்டியாகிவிட்டது. நீர் இருந்து கொண்டே இருந்ததை எப்படிச் சமாளிப்பது? இந்தக் கேள்விக்கான பதிலாக வடிகால் அமைப்பு முறையைக் கண்டுபிடித்தனர். (மேலும்...)

ஆடி 15, 2010

வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுங்கள்

வடபகுதி அரச ஊழியர்கள் மத்தியில் ஜனாதிபதி

ஜனாதிபதி தமிழில் உரையாற்றுகிறார். இன்று ஒரு வரலாற்று பூர்வமான நாளாகும். நாட்டின் தலைவர் ஒருவர் கிளிநொச்சியில் அரசாங்க அதிகாரிகளிடையே உரையாற்றுவது இது முதல் முறை என நான் நினைக்கிறேன். வட மாகாணம் முழுவதும் வாழ்வதற்கு மிகவும் உகந்த சூழலுடன் கூடிய இடமாக மாற்றப்பட்டுள்ள நிலையில் உங்களிடையே உரையாற்ற முடிந்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் அனைவரும் பொறுப்புமிக்க அரசாங்க ஊழியர்கள். உங்கள் சேவை நாட்டு மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது. அந்தக் காலத்தில் எமது தமிழ் நண்பர்கள் பலர் அரச சேவையில் இருந்தனர். அதனை கெளரவமான சேவை என்று மக்கள் கருதினர். அவர்களில் சிலர் முக்கியமான உயர் பதவிகளை வகித்தனர். அதனை எவரும் மறுக்கமுடியாது. காலனித்துவ நாட்களைப் போலன்றி இப்போது நாம் அனைவரும் சமமானவர்கள். எமக்கிடையே வர்க்கப் பாகுபாடு இல்லை. உங்களுக்கு இலவச கல்வியை பெறும் வாய்ப்பு இருந்துள்ளது. எனவே அதில் ஒரு பகுதியை நீங்கள் தாய்நாட்டுககு திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் வந்துள்ளது. (மேலும்...)

ஆடி 15, 2010

பாங்கி மூனின் ஆலோசனைக் குழுவை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

 

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை தொடர்பில் நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகம் முன்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். ஜெனீவாவில் நேற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுவிஸ் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறைமையை பாதுகாப்ப தற்கான அமைப்பொன்றினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதேவேளை, நியூயோர்க், பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆர்ப்பாட் டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்த க்கது.

ஆடி 15, 2010

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் உருவான தருணங்கள்

(சி. குமாரபாரதி)

இந்த மிலேனியத்தின் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு மைல் கல் கலீலி யோவின் பூமியையும் அண்டங்களைப் பற்றிய கோட்பாடுகள் பூமி தட்டை யானது அல்ல. அது உருண்டை என்பதை பல கணிப்புகளுடன் சரியா கவே அனுமானித்தார். பூமி உருண்டை வடிவானது என இப்போ நாங்கள் ஒத்துக்கொண்டாலும் பெரும்பாலும் அதை தட்டையாகவே இப்பொழுது கூட பாவனை செய்கிறோம்.  இந்தப் பாவனையில் நாளாந்த நன்மைகள் உண்டு. உதாரணமாக வீடு கட்ட திட்டம் போடவோ, வீதி அமைக்கவோ நில அளவை செய்யும் பொழுதோ இந்த அண்ணளவு பிரமாணம் கயிறடித்து சாலை அமைக்கிறோம். தவிரவும் நம்மில் எத்தனை பேர் பூமி உருண்டையானது என்னும் நினைப்பில் வாகனங்களை ஓட்டுகிறோம். ஆக உலகம் தட்டையானது என்று சொல்வது அவ்வளவு முட்டாள்தன மாகாது. (மேலும்...)

ஆடி 15, 2010

சி.ஐ.ஏ யின் பிடியிலிருந்த ஈரான் விஞ்ஞானி
வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தஞ்சம்

நேற்று முன்தினம் ஷெஹ்ராம் அமிரி அமெரிக்க உளவுப் பிரிவினரின் பிடியிலிருந்து தப்பி வாஷிங்டனிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்னர் சி.ஐ.ஏ. யிடமிருந்து தப்பிய இவர் எவரது கண்ணிலும் படாமல் வேஜினியா மாநிலத்திலிருந்து வாஷிங்டன் வந்துள்ளார். இதையடுத்தே அமெரிக்கா முதற்தட வையாக ஈரான் விஞ்ஞானி பற்றி வாய்திறந்தது. இவரைத் தாம் கடத்தவில்லையென்றும் சுயவிருப்பத்தின்படியே அமெரிக்க உளவுப்படையினருக்கு ஈரான் குறித்த தகவல்களை வழங்கியதாக அமெரிக்கா கூறியது. ஆனால் ஜுன் மாதம் வெளியான இவரது ஒளிநாடாவில் தான் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறியிருந்தார். (மேலும்...)

ஆடி 15, 2010

‘கேரளம்’ என பெயர் மாறுகிறது கேரளா

கேரளா மாநிலத்தின் பெயரை “கேர ளம்” என்று மாற்றுவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் தெரிவித்தார். புதனன்று சட்டப்பேரவையில் அவர் பேசுகையில் இத்தகவலைத் தெரிவித்தார். எனினும், நிபுணர் குழு ஒன்றை அமைத்து ஆலோசனைகள், விவாதங்கள் ஆகியவற்றை நடத்தி அதன் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அச்சு தானந்தன் கூறினார். மலையாளத்தில் “கேரளம்” என்று தான் உச்சரிக்கப்படுகிறது. அம்மொழியில் எழு தும்போதும் அவ்வாறு தான் குறிப்பிடப் படுகிறது. எனவே, மாநிலத்தின் பெயரை கேரளம் என்று அதிகாரப்பூர்வமாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ஆடி 15, 2010

உளவாளிகள் பரிமாற்றம்

(வாகுலன்)

பத்து ரஷ்ய உளவாளிகளையும் பற்றிய விபரங்களை அறிந்த அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் உடனடியாக அவர்களைக் கைது செய்யவில்லை. ரஷ்ய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு உளவாளிகளுடன் இவர்ளைப் பரிமாற்றம் செய்வது பற்றிய பேச்சுவார்த்தையை மிக இரகசியமான முறையில் நடத்தி உடன்பாடு கண்ட பின்னரே அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதும் உடனடியாக வியன்னா விமான நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். அதே நேரம் ரஷ்யா தனது சிறையில் இருந்த நான்கு உளவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி வியன்னா விமான நிலையத்துக்கு அனுப்பியது. இந்த நால்வரில் மூவர் இரட்டை உளவாளிகள் ரஷ்ய உளவு சேவையில் இருந்துகொண்டு அமெரிக்காவுக்காக உளவு பார்த்தவர்கள். (மேலும்...)

ஆடி 15, 2010

சூழலியலில் செய்மதி தொழில்நுட்பம்

(சாரதா மனோகரன் )

சூழலியல் நோக்கிலும் செய்மதித் தொழில்நுட்பத்தின் பங்கு அளப்பரியது. முக்கியமாக காடுகள் அழிக்கப்படுதல் நிலங்கள் வரண்டு போதல் போன்ற சூழல் பிரச்சினைகளை இலகுவாக இனங்காண்பதற்கான அடிப்படையாகவும் செய்மதித் தொழில்நுட்பமே அமைந்து விடுகிறது. வனப்பகுதிகளிலோ தோட்டங்களிலோ நோய்களின் பீடிப்பால் ஏற்படும் தாக்கத்தை இனங்காண்பதற்கும் இந்தச் செய்மதிப் புகைப்படங்களே துணைபுரிகின்றன. அடர்ந்த காடுகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகளை இனங்காணவும் இந்தச் செய்மதிப் படங்கள் வழிவகுக்கின்றன. (மேலும்...)

ஆடி 14, 2010

மக்களோடு மக்களாய்

பிரான்சில் தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

  • தோழர்கள் உயரிய இலட்சியங்களுக்காக போராடியவர்கள் -  தோழர் அலெக்ஸ்

  • நான் நேசிக்கின்ற தலைவர் அவர்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கின்றார். - தோழர் தமிழ் நேசன் 

  • தோழர்கள் கண்ட தொலைதூரக் கனவுகளை நனவாக்குவோம் - தோழர் பெர்னாண்டோ

  • EPRLF மக்களின் எதிர்காலம் தொடர்பாக தீர்க்கதரிசனத்துடன் முடிவுகளை எடுத்தது. - தோழர்  கவிஞர் அருந்ததி

  • தோழமையும், ஒற்றுமையான செயற்பாடுகளும் தோழர் நாபா எப்படியான தலைமைப் பண்பைக் கொண்டிருந்திருப்பார் என்பதை என்னால் உணரமுடிகின்றது. - தோழர் லோகநாதன் ஆசிரியர்

  • தோழர் நாபாவின்  சிந்தனையும் செயற்பாடுகளும் அனைத்து இனமக்களின் நலன் சார்ந்ததாகவே இருந்தது - JVP நந்தன குணசிங்கா 

  • இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு , முழு இலங்கைக்குமான சுபிட்சமான  எதிர்காலம்  என்பதெல்லாம் நாட்டின் சகல துறைகளிலும் ஜனநாயக விழுமியங்களை பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது - தோழர் சிவலிங்கம்

  • தோழர்கள்  தமிழ் சமுகத்தில் இருக்கின்ற சகலவிதமான பிற்போக்கு தனங்களையும், ஏற்றத் தாழ்வுகளையும் நிராகரித்தவர்கள். - தோழர் சாந்தன்

(மேலும்....)

ஆடி 14, 2010

திருமலை கிரிக்கெட் மைதானப் பணிகளை ஆளுநர் பார்வையிட்டார்

திருகோணமலை முற்றவெளி மைதானத்தில் நகரசபையினால் அமைக்கப்பட்டு வரும் கிரிக்கெட் மைதானத்தை முதல் தர போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக  அமைக்கப்பட்டு வருகின்றது. மட்டுப்படுத்தப்பட்டு புற்கள் பதிக்கப்பட்ட பின்னர் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இதன் அமைப்பு வேலைகளை முன்னெடுக்கவுள்ளது. 2012ஆம் வருடம் இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் முன்னேற்றமாக நாட்டின் பல இடங்களிலும் முதல்த்தர கிரிக்கெட் மைதானங்கள் அமைக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது. முதல் கட்டமாக  மைதான மத்தியில் ஒரு ஆடுகளமும், 3 பயிற்சிக்கான பக்க ஆடுகளங்களும் இதில் அமைக்கப்படவுள்ளன. (மேலும்...)

ஆடி 14, 2010

கிளிநொச்சி மீள்குடியேற்ற மக்கள் - ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தனது கிளிநொச்சி விஜயத்தின் போது மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்துக் கொண்டிருப்பதாக சற்று முன்னர் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் குழுவினர் இணைந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். கிளிநொச்சி நகரத்தில் இதுவரை ஒரு லட்சம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆடி 14, 2010

அமிர் இருந்திருந்தால் தமிழர்களின் துன்பங்களைத் தீர்க்க அயல் நாடுகளின் உதவியைப் பெற்றிருப்பார்  – மாவை

‘அமிர் இல்லாது இருந்திருந்தால் தமிழ் மக்களின் துயர் தீர்க்கப்பட்டிருக்கும்’ - அன்று சொன்னார்கள்

‘அமிர் இருந்திருந்தால் தமிழ் மக்களின் துயர் தீர்க்கப்பட்டிருக்கும் ‘- இன்று சொல்கின்றார்கள்

(மேலும்....)

ஆடி 14, 2010

அருந்ததிராய்க்கு சில கேள்விகள்

(கே.ஆர்.)

ஆனந்தவிகடனே மீண்டும் ஒருமுறை அருந்ததிராயிடம் பேட்டி கண்டு நாம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கான அவரது விடை களைப் பிரசுரித்தால் நல்லது. ‘முற்போக்கு முகம்’ என்றால் சகட்டு மேனிக்கு மாவோ யிஸ்ட்டுகள் தவிர உள்ள எல்லோரையும் வசைபாடுவதுதானா என்பதை ஆனந்த விகடன் நமக்குச் சொன்னால் நல்லது. மாவோயிஸ்ட்டுகள் போலவே மாற்றுக் கருத்தாளர்களையும் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளையும் அப்பாவி சிங்கள், முஸ்லீம், தமிழ் மக்களை கொன்று குவித்த புலிகளை ஆதரித்து செயற்பட்ட கருத்து வெளியிட்ட அருந்ததி ராய் இதற்கும் விளக்கம் அளிப்பாரா?  (மேலும்....)

ஆடி 14, 2010

தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரை கைது செய்ய உத்தரவு

வேலணை வைத்தியசாலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பாக சந்தேக நபரான வைத்தியர் செனவிரட்னவை கைது செய்யுமாறு இன்று  ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊர்காவற்றுறை பொலிஸாரிடமே இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.  இதேவேளை, இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  ஏற்றுக்கொண்டததை அடுத்து இன்று நண்பகல் 12 மணியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது. தர்ஷிகாவின் குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட வேண்டும், குறித்த வைத்தியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வைத்தியரை பணிநீக்கம் செய்ய வேண்டும், அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், மரணம் தொடர்பில் அனுதாபம் தெரிவிக்காமைக்கு காரணம் கூற வேண்டும், தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் வரை தாம் இரவு நேரத்தில் வேலை செய்யமாட்டோம், மருத்துவ தாதிமார்களை அடிமைப்படுத்தும் செயலை நிறுத்த வேண்டும் ஆகிய 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆடி 14, 2010

திரு. அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் செயலாளர்நாயகமும், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கையின் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களினதும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான திரு.வெ.யோகேஸ்வரன் அவர்களினதும் 21வது நினைவு தினம் இன்று தமிழர் விடுதலைக்கூட்டணியின் யாழ்.மாவட்டத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டணியின் யாழ். மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா தலைமையில்  இன்று முற்பகல் 10.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்ற இந்நிகழ்வில் ஈகைச்சுடரை கூட்டணியின் முன்னால் உடுவில் கிராமசபை தலைவர் ச.முத்துலிங்கம்.  கூட்டணியின் முத்த உறுப்பினர்களில் ஒருவரான த.பூலோகரட்ணம் ஆகியோர் ஏற்றினர்.  அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரது உருவப்படங்களுக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலத்தப்பட்டது. தொடர்ந்து நினைவுரைகள் இரா.சங்கையா தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் செ.முத்துலிங்கம், முன்னாள் மாநகரசபை உறுப்பினர் செ. விஜயரத்தினம், ச.முத்துலிங்கம், திருஞானசம்பந்தர் ஆகியோர் நினைவுரைகள் நிகழ்த்த நன்றியுரையினை தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஊடகச்செயலாளர் த.கஜன் நிகழ்த்தினார். தமிழர் விடுதலைக்கூட்டணியின் ஆதரவாளர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஆடி 14, 2010

அரசியல் தலைவர்களுடன்

பழம்பெரும் தொழிற்சங்கவாதியும், மேல் மாகாண ஆளுநருமான அல்ஹாஜ் அலவி மௌலானா அவர்களுடனான சந்திப்பில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பொருமாள்


 

ஆடி 14, 2010

இணைப்புக் கோரிக்கை தீர்வைச் சிக்கலாக்கும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பை வலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் இவ்விரு மாகாணங்களினதும் இணைப்பு நீக்கப் பட்டதில் தங்களுக்கும் பங்கு உண்டு என்பதை வசதியாக மறந்துவிடுகின்றனர். வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட முடியாத நிலையைத் தோற்றுவித்ததில் தங்களுக்கு எவ்வித பங்கும் இல்லையென்று கூட்டமைப்புத் தலைவர்கள் கூற முடியாது. இரு மாகாணங்களையும் வரலாற்று ரீதியான வாழ்புலங்களாகக் கொண்ட தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் அந்த மாகாண சபை தொடர்ந்து செயற்பட்டிருந்தால் தற்காலிக இணைப்பு இதுவரையில் ஒருவேளை நிரந்தரமானதாக மாறியிருக்கலாம்.  (மேலும்....)

ஆடி 14, 2010

 

சட்டவிரோத கடல்மண் அகழ்வு:

கடுமையான நடவடிக்கை எடுக்க பிரதி அமைச்சர் ரோஹித திட்டம்

 

சட்ட விரோதமாக கடல்மண் அகழும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரதி துறைமுக அபிவிருத்தி மற்றும் விமானச் சேவை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறினார். துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  கடந்த காலங்களில் சட்டவிரோதமாக கடல்மணல் அகழும் நடவடிக்கைகளைத் தடுக்க ஒழுங்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று கூறிய அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகக் கூறினார். கடலோரமாக உள்ள பொலிஸ் நிலையங்களின் ஒத்துழைப்பையும் இதற்காகப் பெறவுள்ளதாகவும் கடலோரப் பாதுகாப்பு சட்டம் குறித்து பொலிஸாரை அறிவூட்ட திட்டமிட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். இதே வேளை நாடு பூராவும் கட லோர பூங்காக்கள் அமைக்கத் தீர்மானித் துள்ளதாகவும் முதலாவது கடலோரப் பூங்கா களுத்துறையில் அமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் ஐயா இதனை யாழ்பாணத்திலும் கடுமையாக, ஒழுங்கா கடைப்பிடியுங்கோ உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும் ஐயா என யாழ் மக்கள் அலறுகின்றனர். யாழ்ப்பாணத்தில் (கள்ள, நல்ல?)மணலின் விலை விண்ணைத் தொடுகின்றனவாம்.

ஆடி 14, 2010

பேரரசர் ஒகஸ்டஸ் சீசர்

ஒரு சாம்ராஜ்யத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்..... மீண்டும் எழுச்சியும்
(கு.வெ.கி. ஆசான)

ஜுலியஸ் சீசருக்கு முன்பு இருந்தே பல ஆண்டுக் காலம் உராம பேரரசு உள்நாட் டுப் போரி னால் அலைக் கழிக்கப்பட்டது. மக்கள் மிகப் பெரும் இடர்களுக்கு ஆட்பட்டனர். ஒக்டேவியன் உறுதியான வகையில் ஆட்சிப் பீடம் ஏறினார். அமைதியை ஏற்படுத்தினார். அவர் தன்னைச் சர்வாதிகாரி என்றோ அரசர் என்றோ அறிவித்துக் கொள்ளவில்லை. குடியரசு முறைக்கு உரிய சட்ட மன்றம், ஆட்சிமன்றம் (செனட்) ஆகியவற்றைக் கலைக்கவில்லை. அந்த மன்றங்களும் அவருடைய விருப்பத்திற்கு எதிராக நடக்கவில்லை. மக்கள் நலம் நாடிய மா மன்னர் போன்றே நடைமுறையில் அவர் ஆட்சி செய்தார். அவருக்கு அகஸ்டஸ் (பெருமிதமானவர்) என்ற பட்டத்தைச் செனட் சபை அளித்தது. பேரரசு மேலும் விரிவடைய வேண்டும் எனும் நோக்கில் தொடர்ந்து போர்களை நடத்துவதை அகஸ்டஸ் நிறுத்திக்கொண்டார். (மேலும்....)

ஆடி 14, 2010

மீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா

 

அமெரிக்கா வாழ் இந்தியரான விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், வரும் 2012ம் ஆண்டில் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க வாழ் இந்தியரான சுனிதா வில்லியம்ஸ், குஜராத்தை பூர்விகமாகக் கொண்டவர். விண்வெளி வீராங்கனையான சுனிதா ஏற்கனவே விண்வெளிக்கும் பயணம் மேற்கொண்டு திரும்பியவர். அப்போது, விண்ணில் அமைக்கப்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையத்தில் 195 நாட்கள் தங்கியிருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொண்டார். இந்நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவதற்காக சுனிதா, வரும் 2012 ஜூனில் மீண்டும் விண்வெளி பயணம் மேற்கொள்கிறார். இதை, அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சுனிதா வில்லியம்ஸ் 1998ம் ஆண்டு நாசாவில் விமான இன்ஜினியராக பணியில் சேர்ந்தார். கடந்த 2006ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற 14 பேர் குழுவின், சுனிதா இடம் பெற்றார். சர்வதேச விண்வெளி மையத்தில் 195 நாட்கள் தங்கியிருந்த அவர், நான்கு முறை விண் நடை மேற்கொண்டு சாதனை படைத்தார். விண்வெளியில் அதிக நாட்கள் தங்கியிருந்த விண்வெளி வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆடி 14, 2010

யாழ். அரச அதிபராக இமெல்டா நேற்று பொறுப்பேற்பு

 

யாழ்ப்பாண அரசாங்க அதிபராக தாம் நேற்று பதவியேற்றுள்ளதாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ்ப்பாண செயலகத்தில் நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு அவர் தமது பொறுப்புக்களை முன்னாள் அரசாங்க அதிபர் கே. கணேஸிடம் இருந்து ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே இந்தப் பதவி ஏற்பு கடந்த முதலாம் திகதி நடைபெறவிருந்த போதும், அது பின்னர் பிற்போடப்பட்டது. பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரின் பணிப்பிற்கு ஏற்ப தாம் யாழ்ப்பாண அரசாங்க அதிபராகக் கடமையை ஏற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

ஆடி 14, 2010

நேபாளத்தில் ப