http://indiatoday.intoday.in/site/video/sri-lankan-war-tamil-survivors/1/147592.html
|
||||
|
ஆவணி 2011மாதப் பதிவுகள் ஆவணி 31, 2011 ஈதுல் பித்ர் பெருநாள் வாழ்த்துகள்
ஆவணி 31, 2011 ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட தூக்கு மேடை தயார், பணியாளரும் வருகை
ராஜிவ் கொலையாளிகளை தூக்கில் போட ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மூன்று, (ஹெங் மேன்) அலு கோசுகள் வேலூர் வருகின்றனர். ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு செப்டம்பர் 9ம் திகதி வேலூர் மத்திய சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதற்காக தூக்கு மேடை சரி செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தூக்கு போடுவதற்கு, வேலூர் சிறையில் இருந்து, ஆறு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. மிகவும் முக்கியமான ராஜிவ் கொலை வழக்கில் மூன்று பேரையும் தூக்கில் போடுவது சாமானிய விடயமல்ல. அலுகோசுகளை கொண்டு தண்டனையை நிறைவேற்றும்படியும் அலுகோசுகள் கிடைக்காத பட்சத்தில் சிறைசாலை விதிகளின் படி வார்டன்களைக் கொண்டு தூக்கு தண்டனையை நிறைவேற் றும்படி மத்திய உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக மூன்று அலுகோசுகள் கிடைத்துள்ளனர் என்றனர்.(மேலும்....) ஆவணி 31, 2011 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரை விடுவிக்க விசேட சட்டமூலம் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப் பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 1200 பேரை விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவ ர்கள் தொடர்பான வழக்குக் கோவை களை சட்ட மா அதிபர் திணைக்களம் பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், அவசரகால சட்டத்தின் ஒழுங்கு விதிகளுக்கமைய தடுத்து வைக்கப்பட்டவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைக்க முடியாது என்ற கருத்தையும் தெரிவித்தார். அதேவேளை பாரதூரமான குற்றங்களுக்குள்ளானவர்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்த அமைச்சர், அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அவசரகால சட்ட பின்னேற்பாடுகள் சட்டமூலமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். (மேலும்....) ஆவணி 31, 2011 ஐரோப்பிய வங்கிகள் 40 ஆயிரம் ஊழியர்களை குறைக்க திட்டம் சுவிட்சர்லாந்தின் யு.பி.எஸ். வங்கி, 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. இந்த வங்கியோடு சேர்த்து, இந்தாண்டு மட்டும் ஐரோப்பாவில் உள்ள வங்கிகள், மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளில் பல, கடன் சுமையில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள வங்கிகள் தங்கள் செலவுகளைக் குறைத்து, வருவாயைப் பெருக்குவதற்கான உத்திகளைக் கையாண்டு வருகின்றன. கடந்த ஜூலை 28ம் திகதி சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய பன்னாட்டு நிதிக் குழுமமான “க்ரெடிட் சூசே” இரண்டாயிரம் ஊழியர்களைக் குறைக்கப் போவதாக அறிவித்தது. இதையடுத்து, ஸ்கொட்லாந்தின் ரோயல் வங்கி இரண்டாயிரம் ஊழியர்களையும், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் “பர்க்ளேஸ்” நிதி நிறுவனம், மூவாயிரம் ஊழியர்களையும் குறைக்கப் போவதாக அறிவித்தன. இதன் உச்சக்கட்டமாக எச்.எஸ்.பி.சி., வங்கி, இம்மாதம் 1ம் திகதி, 30ம் ஆயிரம் ஊழியர்களை, வீட்டுக்கு அனுப்பப் போவதாகத் தெரிவித்தது. இந்த வரிசையில் தற்போது சுவிட்சர்லாந்தின் மிகப் பெரிய நிதி மற்றும் வங்கிக் குழுமமான யு.பி.எஸ், கடந்த வாரம் 3,500 ஊழியர்களைக் குறைக்கப் போவதாக அறிவித்தது. ஆவணி 31, 2011 கடாபி குடும்பம் அல்ஜீரியாவில் தஞ்சம், இளைய மகன் காமிஸ் பலி லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் மனைவி, மகள் மற்றும் இரு மகன்கள் அயல் நாடான அல்ஜீரியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த தகவலை அல்ஜீரிய வெளியுறவு அமைச்சு நேற்று உறுதி செய்தது. முஅம்மர் கடாபியின் இரண்டாவது மனைவியான சபியா, மகள் அயிஷா மற்றும் மகன்களான ஹனிபல், முஹம்மட் ஆகியோருடன் அவர்களது குழந்தைகளும் அல்ஜீரியாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர். இவர்கள் கடந்த திங்கட்கிழமை காலை 8 மணி அளவில் லிபிய எல்லையை தாண்டி அல்ஜீரியாவை வந்தடைந்ததாக அல்ஜீரிய வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து அல்ஜீரியாவுக்கான ஐ.நா. தூதுவர் கூறுகையில், ‘அவர்கள் மனித நேய அடிப்படையில் வரவேற்கப்பட்டுள்ளனர்’ என்றார். (மேலும்....) ஆவணி 30, 2011 தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - திஸ்ஸ விதாரண
தற்போது யுத்தம் முடிந்துள்ள நிலையில் விரைவான தீர்வை ஏற்படுத்துவதில் அனைத்து தரப்புகளும் வெளிப்படையாக செயற்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அரச தரப்பினர் முன்னெடுத்து பேச்சுவார்த்த தற்போது இடைநடுவே கைவிடப்பட்டுள்ளது. இது நாட்டின் எதிர்காலத்திற்கு ஆரோக்கியமானதாக அமையாது. தெரிவுக் குழு ஊடாக தீர்வை ஏற்படுத்துவது சாத்தியமானதான விடயமாகும். எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு மற்றும் ஐ.தே.க உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் வெளிப்படையாக செயற்பட முன் வர வேண்டும். பல தீர்வுத் திட்டங்கள் ஏற்கனவே முன் வைக்கப்பட்டுள்ளன. எனவே வெறுமனே பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது தீர்க்கமான முடிவுகள் அரசியல் தீர்வில் எடுக்கப்பட வேண்டும். தேசிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தச் சட்டம் உள்ளது. அல்லது சர்வக் கட்சி குழுவின் தீர்வுத் திட்டம் உள்ளது. இவற்றின் ஊடாக பேச்சுக்களை முன்னெடுத்து விரைவாக தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்காணவேண்டும். (மேலும்....) ஆவணி 30, 2011 ராஜீவ் கொலையாளிகள் மூவரின் மரண தண்டணையை ஆயுள் தண்டணையாக குறைக்க கோரி சட்டபேரவையில் தீர்மானம் ராஜீவ் கொலையாளிகள் மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கோரி சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே இத்தீர்மானம் கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கருணை மனுக்களை பரிசீலித்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்கும்படி இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பேரவைத் தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி 30, 2011 பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை
இந்திய முன்னாள் பிரதமர் ரவ் காந்தியின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற சென்னை உயர் நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்ததுள்ளதாக சென்னை செய்தியாளர் தெரிவிக்கிறார். பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தூக்கு தண்டனைக்கு எதிராக பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நேற்று ஏற்றுக் கொண்டது. இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் இன்று விசாரணையைத் தொடங்கியது. மூவரின் சார்பில் மூத்த சட்டத்தரணிகள் ராம் ஜெத் மலானி உள்ளிட்டோர் ஆஜராகினர். இந்த நிலையில், மூவரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இந்தத் தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர். ஆவணி 30, 2011 ஜனாதிபதி அமெரிக்காவுக்கு விஜயம்? ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியுயோர்க் நகருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவக்கப்படுகின்றது. இவ் விஜயத்தின் போது, பல நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மகிந்த ஈடுபடுவார் என அறிவிக்க ப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட பலர் உடன் செல்லவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. _ ஆவணி 30, 2011 புது டெல்லி மகாநாட்டினைத் தொடர்ந்து, தமிழ் கட்சிகள் சென்னையில் சந்திப்பு! புது டெல்லியில் நடந்த இலங்கை தமிழ் கட்சிகளின் மகாநாட்டினைத் (23,24-08-2011) தொடர்ந்து 29-08-2011 அன்று காலை தமிழ் கட்சிகள் சென்னையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தின. தமிழர் விடுதலைக் கூட்டணி (ரி.யு.எல்.எப்.), பத்மநாபா. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (பத்மநாபா. ஈ.பி.ஆர்.எல்.எப்.), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) மற்றும் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) ஆகிய நான்கு கட்சிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டன. ஈழத் தமிழர்கள் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை இந்திய அரசிடம் எடுத்துச் செல்வதற்கு சரியான வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்வதென்றும், இது தொடர்பாக எமது நாட்டிலும், உலக நாடுகளிலும் வாழும் அறிவு ஜீவிகளின் ஒருங்கிணைப்பையும், ஆலோசனையையும் பெறுவதென்றும், தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஏற்ற வகையில் கூட்டுத் தலைமை ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பாக அடுத்த மாதம் மீண்டும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், பத்மநாபா.ஈ.பி.ஆர்.எல்.எப். ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி திகதி:- 29-08-2011 சென்னை. ஆவணி 30, 2011 தூக்குத்தண்டணையை இரத்துச் செய்யும் அதிகாரம் எனக்கு இல்லை – ஜெயலலிதா இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யும் அதிகாரம் தனக்கு இல்லை என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று நபர்களின் கருணை குடியரசுத் தலைவரினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், இதனை மாற்றுவதற்கு எந்த வித அதிகாரமும் மாநில முதலமைச்சர் என்ற முறையில் எனக்கு இல்லை என்பதை வலியுறுத்துகின்றேன். இந்த நிலையில் எனக்கு இதற்கான அதிகாரம் இருக்கிறது என்ற பிரசாரத்தை அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தப் பேரவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன். (மேலும்....)ஆவணி 30, 2011 நேபாள புதிய பிரதமராக பாபுராம் பட்டராய் தேர்வு நோபாளத்தின் புதிய பிரதமராக ஐக்கிய நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) துணைத்தலைவர் பாபுராம் பட்டராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு 340 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் உள்ள 575 எம். பி. க்களில், 340 பேரின் வாக்குகளை பாபுராமின் மாவோயிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. 5 கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகள் பெற்றதையடுத்த நேபாளத்தின் புதிய பிரதமராக பாபுராம் பதவியேற்கிறார். இதுவரை எதிர்த்து போட்டியிட்ட நேபாள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை பிரதமர் ராம சந்திரா பவுடேல் 235 வாக்குகளை மட்டுமே பெற்றார். புஷ்பா கமல் தஹலுக்குப் பின் நேபாளத்தின் பிரதமராகும் 2வது மாவோயிஸ்ட் தலைவர் பாபுராம் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு நேபாளத்தின் மிகவும் பின்தங்கிய கிராமத்தில் இருந்து வந்த பாபுராம், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆவணி 30, 2011அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டாலும் பொலிஸ் செயற்பாடுகளில் மாற்றமில்லை அவசரகால சட்டம் நீக்கப்பட்டதன் மூலம் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்புகளும் ஏற்படப் போவதில்லையென பொலிஸ்மா அதிபர் என். கே. இளங்கக்கோன் தெரிவித்தார். சிவில் சட்டத்தை அமுல்படுத்தும் போது பொலிஸ் திணைக்களம் இதற்கு முன்னர் செயற்பட்டதைப் போன்றே தனது நடவடிக்கைகளை முன்னெடுக்குமென்று அவர் மேலும் தெரிவித்தார். இதற்காக சட்டத்தில் இட முண்டு என்றும் பொலிஸ் மா அதிபர் சுட்டிக் காட்டினார். ஏதாவது சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைது செய்தல், ஓரிடத்தை சோதனையிடல், வாகனங்களை பரிசோதித்தல் போன்ற பொலிஸாரினால் முன்னெடுக்கும் சகல நடவடிக்கைகளும் வழக்கம் போல நடைபெறும். (மேலும்....) ஆவணி 30, 2011நிலநடுக்கத்தை முன்னதாக அறியும் விலங்குகள்ரஷ்ய விஞ்ஞானிகள், விலங்குகளின் செயல்பாடுகளில் ஏற்படும் மாற் றங்களைக் கவனித்து நிலநடுக்க முன்னறிவிப்புக்களைச் செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். 'கஸாக்' அறிவியல் நிறுவனத்தைச் சேர்ந்த நிலநடுக்கவியல் நிபுணர் பாவெல் மாரிகோவ்ஸ்கியின் தலைமையில் ஆல்மாட்டாவில் ஒரு நிலநடுக்க உயிரியல் மையம் அமையவிருக்கிறது. கி.மு. 328 இல் 'ஹெலைஸ்' நகரம் நிலநடுக்கத்தால் முற்றிலுமாக அழிவ தற்குப் பல நாட்களுக்கு முன்பே பெருச்சாளி இனத்தைச் சேர்ந்த 'மோல்' என்ற பிராணிகள் தமது வளைகளை விட்டு ஓடிவிட்டனவாம். கி.பி. 1792 இல் 'காம்சட்கா'வில் பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணி நேரத்துக்கு முன்னாலேயே குருவிகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. 948 இல் துர்க்மேனிஸ்தான் நாட்டின் தலைநகர் அஷ்காபாத் நகரில் நிலநடுக் கம் ஏற்படுவதற்கு முன் நாய்கள், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த தமது ஏஜமானர்களை எழுப்பி வெளியே இழுத்துவந்தன. இத்தகைய நடத்தை மாற்றங்களில் சிலவற்றைத் தான் விஞ்ஞானிகளால் அறிய முடிகிறது. விலங்குகள் நில நடுக்கத்துக்கு முன் தோன்றும் ஒலிகளை உணர்கின்றன. (மேலும்....) ஆவணி 30, 2011ராஜீவ் கொலை வழக்கில் 9-ந்தேதி தூக்கு தண்டனை:எனது தந்தையை காப்பாற்ற தமிழ்நாட்டுக்கு வந்து போராட விரும்புகிறேன் - லண்டனில் இருக்கும் முருகனின் மகள் அரித்ர வா மகளே வா இந்தியாவில் இது போராட்ட சீசன் .இப்போ வந்து போராடினால் நல்ல விளம்பரம் கிடைக்கும், 19 பேரை கொன்ற தாய் தந்தைக்கு பிறந்த உனக்கு மனசாட்சி கிடையாது, நீ லண்டனில் படிக்கிறாய் உன் அப்பன் அம்மாவால் கொலபட்டவர்களின் குடும்பம் நடுத்தெருவில் உள்ளது! முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது. இதனால் அவர்களுக்கு வரும் 9-ந்தேதி வேலூர் ஜெயிலில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. (மேலும்....) ஆவணி 29, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 18) (நேசன்) ஈழ விடுதலைப் போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல என்பதையும், சிறீலங்கா இனவாத அரசுக்கு மட்டுமே எதிரானது என்பதையும் புளொட் சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்தி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தது. இனவாதத்திற்கெதிரான தமிழ்மக்களின் போராட்டத்தில் சிங்கள முற்போக்கு சக்திகளினதும், சிங்கள உழைக்கும் மக்களின் ஜக்கியத்தை வலியுறுத்தி வந்தது. இத்தகைய பிரசாரம் பெருமளவுக்கு வெற்றியைத் தந்ததோடு மட்டுமல்லாமல் தமிழ்மக்கள் பேரினவாதத்தால் எதிர்நோக்கும் பிரச்சனைகளை சிங்கள மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வழிவகுத்தது. பல்வேறு சிங்கள முற்போக்கு அமைப்புகள் புளொட்டுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து வந்தன. (மேலும்......) ஆவணி 29, 2011 இலங்கை இந்திய அரசுகள் மீண்டுமொரு ஒப்பந்தம் செய்யும் நிலைமை உருவாகுமா? (சானக)
தமிழ் நாட்டில் ஒரு கட்சி ஆட்சி தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல்
மாற்றங்களை இலங்கை அரசு உணரவில்லை. தி.மு.க ஆட்சியில் ஏற்பட்ட ஊழல் காரணமாக
தமிழ் நாட்டு அரசியல் களம் மாற்றமடைந்துள்ளது. 13.04.2011 நடந்தேறிய
தேர்தலில் அ.இ.அ.தி.மு.க ஜெயலலிதா தலைமையில் 203 தொகுதிகளில் மாபெரும்
வெற்றியீட்டியுள்ளது. ராஜீவ் காந்தி மே 1991 கொல்லப்பட்ட பின்னர். தமிழ்
நாட்டில் புலிகளுக்கு ஆதரவு குறைந்த நிலையில் நெடுமாறன், வை.கோ., சீமான்
போன்றோரே இலங்கை தமிழருக்காக குரல் கொடுத்து வந்தனர். புலிகள்
தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர்களைப் பாதுகாப்பதற்காக தமிழ் நாடு மீண்டும்
உயிர்த் தெழுகிறது. தமிழ் தேசியத்திற்கான முயற்சியில் கோரிக்கைகளை
முன்னெடுத்து ஒருங்கிணைத்து தமிழ் நாட்டின் பெண் முஜிபூராக வர நினைக்கிறார்
ஜெயலலிதா. இந்தியா இலங்கை ஒப்பந்தம் 2 இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு
நடைபெறவுள்ள பொது தேர்தலில் பா.ஜ.கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மாநில
ஆட்சியாளரின் ஆதரவினை நாட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதன்
காரணமாக தமிழக ஆட்சியாளர்கள் டில்லியிலுள்ள மத்திய அரசின் மீது அழுத்தங்களை
பாவிக்க வாய்ப்புள்ளது. இலங்கை விவகாரம் குறித்து தமிழக அரசு பிரயோகிக்கும்
அழுத்தங்கள் மத்தியில் அரசையும் பாதிக்கும்.
(மேலும்....)
புலிகளின் போருக்கு உதவிய புலம்பெயர் தமிழர்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதும் அவசியம்! (கனடாவில் எழுத்தாளர் இராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்) புலம்பெயர் தமிழர்கள் மனித நேயத்துடன் இலங்கையில் வாழுகின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சகோதர மக்களுக்கு உதவுவது அவசியம். இந்த புலம்பெயர் தமிழர்கள்தான், புலிகள் போரில் ஈடுபட்ட காலத்தில் டொலர்களாகவும் பவுண்களாகவும் அள்ளி அள்ளி கொடுத்தவர்கள். அவர்கள் கொடுத்த பணத்தாலேயே, அந்த மக்கள் இன்று சொல்ல முடியாத துன்பங்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. இன்று புலிகள் அழிந்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் அழிவுக்குள்ளான மக்கள் அங்கு கண்ணீருடன் வாழ்கிறார்கள். அந்த மக்களை கண்ணீரில் மூழ்கடித்த புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழர்கள,; வெளிநாடுகளில் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்கிறார்கள். இனியாவது தமது தவறை உணர்ந்து, அந்த மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்வது புலம்பெயர் தமிழர்களின் கடமையாகும்.”(மேலும்.....)ஆவணி 29, 2011 PFHRGD யினால் ஒழுங்கு செய்யப்பட்டு புது தில்லியில் 2011 ஆகஸ்ட் 23ம் 24ம் திகதிகளில் நடைபெற்ற இலங்கை தமிழ் கட்சிகளின் கூட்ட அறிக்கை! இலங்கை தமிழ் கட்சிகளின் கூட்டம் 2011 ஆகஸ்ட் 23ம், 24ம் திகதிகளில், புது தில்லியிலுள்ள அரசியல் சட்ட அமைப்பு நிறுவன மண்டபத்தில் (Constitution Club of India) மனித உரிமைகளுக்கும் சர்வதேச வளர்ச்சிக்குமான பாராளுமன்ற அமைப்பின் (PFHRGD) அனுசரணையின் ஊடாக நடைபெற்றது. தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக இலங்கை தமிழ் கட்சிகளின் ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்;;வாங்கி, இந்திய அரசு எந்த விதத்தில் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வந்து மிக விரைவாக தமிழர்கள் அனுபவிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்பதை ஆராயும் முகமாக இந்த அமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன. மேலும் இந்த அமர்வுகளினால் இலங்கைத் தமிழ் கட்சிகள் தங்களது ஏகோபித்த கருத்துக்களை இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முன்வைப்பதினால் அவர்கள் இந்திய அரசுக்கு இலங்கை பரச்சினைகள் தொடர்பாக ஒரு வரைமுறையை, தூண்டுவதற்கு உதவி செய்யும் என்பதுவும் நோக்கமாக இருந்தது. (மேலும்....)(.English ver...) ஆவணி 29, 2011 மீண்டும் உண்டியல் ??
மக்களின் கேள்வி :
1) நாடுகடந்த தமிழீழத்துக்கும் வன்னிக்கும் என்ன தொடர்பு? ஆவணி 29, 2011 முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் இன்று வழக்குத்தாக்கல் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியி ருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தனித் தனி அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 24 மணி நேரமும் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு அடுத்த மாதம் 9ஆம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதால் இந்த செய்தியைக் கேட்ட அந்த மூவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தூக்குத் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து வேலூர் சிறையில் உள்ள அவர்களைத் தனித்தனி அறைகளில் சிறை அதிகாரிகள் அடைத்துள்ளனர். அறையைவிட்டு வெளியே வர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறைகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வெளியில் இருந்து வரும் உணவு பண்டங்களை அவர்களுக்கு வழங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. (மேலும்....) ஆவணி 29, 2011 ஹசாரேயின் 12 நாள் போராட்டத்திற்கு வெற்றி: பாராளுமன்றில் தீர்மானம் நிறைவேற்றியது அரசு பலமான லோக்பால் மசோதா வேண்டும் என வலியுறுத்தி, தொடர்ந்து 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசாரேக்கு, வெற்றி கிடைத்துள்ளது. லோக்பால் மசோதா தொடர்பான அவரது கோரிக்கைகள் நேற்று முன்தினம் பாராளுமன்றின் இரு சபைகளிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து ஹசாரே நேற்று காலை தன் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். (மேலும்....) ஆவணி 29, 2011 நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு ஊடகத்துறையின் பங்களிப்பு அவசியமாகும் பயங்கரவாதம் மற்றும் ஜே.வி.பி. யினர் நாட்டில் மேற்கொண்ட அராஜ கங்கள் விஸ்வரூபம் எடுத்து, நம்நாட்டு மக்களை அச்சுறுத்தி வந்த கடந்த காலத்தில் வெகுஜன ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் தங்கள் கடமைகளை செய்து, அவை பற்றிய செய்திகளை வெளியிட்டு வந்தன. நாட்டில் அதுபோன்ற அச்சுறுத்தல்கள் நீங்கி இன்று மீண்டும் அமைதி யும், சமாதானமும் மக்களிடையே பரஸ்பர நல்லுறவும், ஐக்கியமும் நிலைகொண்டிருப்பதனால் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இப்போதைக்கு நாட்டில் அவசரகால சட்டம் தொடர்ந்தும் நீடிப்பது அவசியம் இல்லை என்ற பாராளுமன்ற ஜனநாயகத்திற்கு வலுவூட்டும் ஒரு நல்ல தீர்மானத்தை அறிவித்தார். (மேலும்....) ஆவணி 29, 2011 ஆட்சி மாற்றத்திற்கு கடாபி தயார் சிர்த் நகரை நோக்கி கிளர்ச்சிப்படை ஆட்சி மாற்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தயாராக உள்ளதாக அவரது பேச்சாளர் ஒருவர் அறிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கடாபியின் மகன் சாதி தயாராக உள்ளதாகவும் அந்த பேச்சாளர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். லிபியாவின் பெரும்பகுதியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள நிலையில் முஅம்மர் கடாபி தொடர்ந்து லிபியாவிலேயே உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் முஅம்மர் கடாபி தொடர்ந்து லிபியாவிலேயே இருப்பதகாவும், அவர் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் கடாபி அரசின் பேச்சாளர் மூஸா இப்ராஹிம் ஏ.பி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். (மேலும்....) ஆவணி 28, 2011 குடாநாட்டில் மர்ம மனிதர்களின் தாக்குதலில் குடும்பஸ்தர் படுகாயம் யாழ். குடாநாட்டில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் மர்ம மனிதர்களின் தாக்குதலில் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் இராமகிருஷ்ண வீதி, கோண்டாவில் கிழக்கு கோண்டாவிலைச் சேர்ந்த ரி. தர்மகுலசிங்கம் (வயது 54) என்பவரே படுகாயமடைந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது குறித்த குடும்பஸ்தர் நேற்று முன்தினம் கொழும்பிலிருந்து நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவிற்காக தனது மனைவி பிள்ளைகளுடன் ஊருக்கு வந்திருந்தார். நேற்று பிற்பகல் 3 மணியளவில் மலசலகூடத்திற்குச் சென்றபோது அதற்குள் மறைந்திருந்த கறுப்பு உடையணிந்த மூன்று மர்ம மனிதர்கள் அவரைத் தாக்கிவிட்டு கண்களைக்கட்டி துணியொன்றில் அவரைக் கட்டி தோட்டக் காணியொன்றுக்குள் இழுத்துச் சென்று கையில் பொருத்தியிருந்த கூரிய ஆயுதங்களால் நெஞ்சு மற்றும் முதுகுப் புறங்களில் சரமாரியாகத் தாக்கிக் கீறியுள்ளனர். (மேலும்....)ஆவணி 28, 2011 வெடிவைத்தகுளம் முதல் முள்ளியவளை வரையான பகுதியினை மகாவலி எல் வலயத்துடன் இணைக்க அரசாங்கம் முயற்சி வன்னியில் வெடிவைத்தகுளம் முதல் முள்ளியவளை வரையான பகுதியினை மகாவலி எல் வலயத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இதேபோல் மண்ணின் மகிமை என்ற திட்டத்தின் கீழ் உரிமை கோராத காணிகளை அரசுடைமையாக்கும் செயற்பாடும் இடம்பெறுகின்றது. இவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நாம் ஆராயவேண்டியுள்ளது. இவ்வாறு புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். (மேலும்....)ஆவணி 28, 2011 மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடரில் கலந்துகொள்ள இலங்கையிலிருந்து ஐவர் விஜயம் ஜெனீவாவில் செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 18 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஐந்து பேர் கொண்ட குழுவொன்று செல்லவுள்ளது. இக்குழுவில் நான்கு அமைச்சர்கள் உட்பட பாராளுமன்ற உறுப்பினரொருவரும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ், மஹிந்த சமரசிங்க, நிமல் சிறிபாலடி சில்வா, அனுர பிரியர்தஷன யாப்பா உட்பட பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தனவும் இந்த பிரதிநிதிகள் குழுவுடன் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி 28, 2011 புது தில்லி மகாநாடு - ஈ.என்.டி.எல்.எப். அறிக்கை! சிங்கள அரசு, விடுதலைப் புலிகள், தமிழ்நாட்டின் புலிகள் ஆதரவுக் கட்சிகளால் வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய தீர்வு (ஒப்பந்தம்) தோல்வியில் முடிந்தது. இந்த மூன்று தரப்பினரும் ஓரணியில் கைகோர்த்து நின்று தமிழர் பாதுகாப்பையும், அவர்களது உரிமைகளையும் நாசம் செய்தனர் என்றால் அது மிகையல்ல! வடகிழக்கு மகாண அரசை குழப்பாமல் இருந்திருந்தால்,; இராஜீவ்காந்தி அவர்களை படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், சிங்கள அரசே தமிழர்கள் தனிநாடு ஒன்றினை பெறுவதற்கு வழி சமைத்துக் கொடுத்திருப்பார்கள். அதனை கெடுத்ததும் மேற்சொன்ன மூன்று தரப்பினரும்தான்.(மேலும்....) ஆவணி 27, 2011 வாழும் மனிதம் - 2 காலம்: ஆகஸ்ட் 27, 2011 – சனிக்கிழமை பிற்பகல் 3 மணி – 6 மணி வரை இடம்: ஸ்காபரோ சிவிக்சென்ரர் மண்டபம் (கனடா) (மக்கோவன் - எல்ஸ்மெயர்) சிறப்புரை: பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 'போருக்குப் பின்னரான சமூக மாற்றமும் முற்போக்குவாதிகளின் பங்களிப்பும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தேவன் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தொடர்புகளுக்கு: manitham1@hotmail.ca ஆவணி 27, 2011 Pathmanabha EPRLF welcomes the removal of the state of emergency
We welcome the announcement of His Excellency the President in the Parliament of Sri Lanka yesterday (25th August,2011) that has made the people of Sri Lanka free from the draconian rules of the Emergency Law. Emergency regulation has been in force for almost three decades except for small intervals. Though it was somewhat justified during the height of the war against LTTE and JVP, there has always been a considered view that there were excesses on the part of those who used it for indiscriminate killings, arbitrary arrests, indefinite detentions of suspects and denial of access for the detainees. (more....) ஆவணி 27, 2011 இனப்பிரச்சினையை தீர்க்க தகுந்த சூழல், பொய்யான பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி அவசரகாலசட்டம் நீக்கத்துக்கு கல்விமான்கள், மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள் வரவேற்பு அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டதை மதத்தலைவர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதேநேரம், தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதன் மூலம் தகுந்த சூழல் உருவாகியுள்ளதாகவும், இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். இலங்கைக்கு எதிராக சர்வதேச அழுத்தம் மற்றும் குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கை மூலம் பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் அவர்கள் கருத்துத் தெரிவித்தனர். அவசரகாலச்சட்டம் உடனடியாக அமுலாகும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இது தொடர்பில் மதத்தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்விமான்கள் கருத்துத் தெரிவித்ததாவது, (மேலும்....) ஆவணி 27, 2011 நல்லூர் தேர்த் திருவிழா இன்று யாழ் நல்லூர் நல்லைக்கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று நடைபெறுகிறது. அதிகாலை திருப்பள்ளியெழுச்சியுடன் ஆரம்பமாகும் தேர்த்திருவிழா உற்சவத்தில் காலை 7 மணிக்கு நல்லைக் கந்தன் வள்ளி தெய்வானையுடன் தேரில் வீதியுலா வரவுள்ளார். நாட்டில் நிலவிவரும் அமைதிச் சூழல் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து யாழ் குடாநாடு சென்றிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லூர் கந்தனின் தேர்த்திருவிழாவில் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த 4ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நாளை தீர்த்த உற்சவத்துடன் முடிவடைகிறது. இன்றையதினம் நடைபெறவிருக்கும் தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆவணி 27, 2011 பதுளை சிறையில் கைதிகள் மோதல் பதுளை பிரதான சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கும், பெரும்பான் மையின அரசியல் கைதிகளுக்குமிடையில் நேற்று (26.08.2011) அதிகாலை மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விரு தரப்பினரிடையில் நீண்ட காலமாக விருந்தே முறுகல் நிலை காணப்பட்டது. இன்று அதிகாலை கைதி கள் குளித்துக் கொள்வதற்கான நேரத்தின் போது இருதரப்பினருக்குமிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு தமிழ் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர். இது குறித்து, சிறைச்சாலை பொறுப்பதிகாரி அநுர ஏக்கநாயக்க உடனடியாக விரைந்து, இரு தரப்பினரையும் அழைப்பித்து சுமுக நிலையினை ஏற்படுத்தியுள்ளார். இச்சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த நீர்பற்றாக்குறையே சிறைச்சாலைக்குள் அமைதியின்மை நிலை ஏற்பட்டதற்கான காரணமாகும். சிறைச்சாலையில் ஏற்பட்டிருந்த அமைதியின்மை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, சிறைச்சாலை பொறுப்பதிகாரியிடம் வினவிய போது “பிரச்சினை ஏற்பட்டது உண்மைதான். கைதிகளுக்கிடையில் மோதல் ஏற்படவில்லை தற்போது சிறைச்சாலைக்குள் பூரண அமைதி நிலவுகின்றது. இயல்பு நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். ஆவணி 27, 2011 லோக்பால் விவகாரம் தொடர்பாக மன்மோகன் - ராகுல் சந்திப்புலோக்பால் மசோதா நாடாளுமன்றில் விவாதிக்கப்பட உள்ள நிலையில் நேற்றுக் காலை பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது இல்லத்தில் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ராகுல் காந்தி சந்தித்து பேசி னார். இதனிடையே லோக்பால் மசோதா தொடர்பாக இருவரும் ஆலோசனை செய் திருக்கக் கூடும் என தகவல்கள் தெரி விக்கின்றன. இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஹசாரே உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஹசாரேவுடன் நடத்திய சந்திப்பு குறித்து விலாஸ்ராவிடம் ஆலோசனை நடத்திய பிரதமர் பிரணாப் முகர்ஜி மற்றும் அந்தோணியுடன் ஆலோசனை நடத்தினார். இந்த சிறப்பு கூட்டத்திற்கு பின் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படுவது குறித்து மூத்த அமைச்சர்களான சல்மான் குர்ஷித், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் பன்சால், அம்பிகா சோனி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அரசு உறுதிமொழியை எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும் என ஹசாரே கேட்டிருந்தார். இந்த உறுதிமொழியை தயார் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. விவாதம் நடத்தப்பட உள்ள ஜன் லோக்பால் மசோதா குறித்த விவரங்கள் அடங்கிய கடிதம் தயாராகிவிட்டது. இக்கடிதம், இந்தி மற்றும் மராத்தி மொழியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இக்கடிதம் பார்லிமென்டின் விவாதம் துவங்குவதற்கு முன் ஹசாரேயிடம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. உறுதிமொழி கடிதத்தை ஹசாரே பெற்றுக் கொண்டதும், உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவணி 27, 2011 அமெரிக்காவை மிரட்டும் ‘ஐரின்’ சூறாவளிஅமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஓரிரு நாளில் ஐரின் சூறாவளி தாக்கும் என அமெரிக்க தேசிய சூறாவளி மைய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அட்லான்டிக் சீசனில் உருவாகியுள்ள முதல் சூறாவளியான ஐரின், கரீபியன் தீவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நிலவரப்படி பஹாமஸ் தலைநகர் நசாவுக்கு கிழக்கு வடகிழக்கில் 65 மைல் தொலைவில் (நியூயோர்க்கிலிருந்து 1000 கி.மீ.) மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன்படி, ஓரிரு நாளில் அமெரிக்காவை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, கிழக்கு கடற்கரை பகுதியில் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்றுடன் கன மழை பெய்யும் என்றும், கடலில் ராட்சத அலைகள் உருவாகும் என்றும் சூறாவளி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, வடக்கு கரோலினா மற்றும் நியூயோர்க் கடற்கரை பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
(மேலும்....) ஆவணி 26, 2011 இந்திய பாராளுமன்ற குழு இலங்கைக்கு விஜயம் இந்தியாவைச் சேர்ந்த பாராளுமன்றக் குழுவொன்று தமிழ் மக்களின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்திய பாராளுமன்ற ராஜ்ய சபாவில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை உயர்ஸ்தானிகர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தபோது ஜனாதிபதி மஹிந்தவின் அழைப்புக் குறித்து தெரிவித்திருந்தார். அவர் பாராளுமன்ற குழுவொன்றுக்கும் அழைப்புவிடுத்துள்ளதாக கிருஷ்ணா கூறியுள்ளார். பாரதீய ஜனதா கட்சித் தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா பாராளுமன்ற தூதுக்குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பவேண்டுமென தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கிருஷ்ணா இவ்விடயத்தைக்குறிப்பிட்டுள்ளார். ஆவணி 26, 2011 ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குமர நிழலில் நிறுகும் சாந்தன், முருகன், பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு வேலூர் சிறைக்கு இன்று மாலை அனுப்பப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் மூவருமே தங்கள் மீது கருணை காட்டுமாறு இந்திய ஜனாதிபதியிடம் கோரியிருந்த நிலையில் அவர்களின் கருணை மனுக்கல் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் அவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் மீதான தூக்குத் தண்டனையை நிறைவேற்றுமாறு வேலூர் மத்திய சிறைக்கு மத்திய அரசிடம் இருந்து உத்தரவு அனுப்பப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இன்னும் ஏழு வேலை நாட்களுக்குள் அவர்கள் தூக்கிடப்படலாம் என்று சில தகவல்கள் தெரிவித்தாலும் தமிழகம் முழுக்க இந்த தூக்கிற்கு எதிராக பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனத் தெரியவருகிறது. இன்னும் இவர்களைக் காப்பாற்ற நீதிமன்றத்தின் உதவியை நாட இறுதி முயர்சி எடுக்கப்படலாம் தமிழக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறித்து இந்திய அரசாங்க தரப்பிலோ அல்லது சிறைச்சாலை தரப்பிலோ, நீதித்துறை மட்டத்திலோ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்த முடியவில்லை. ஆவணி 26, 2011 அவசரகாலச்சட்டம் நீக்கத்தை வரவேற்கும் உலக நாடுகள் நாட்டில் அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளமையை வரவேற்பதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில்,நாட்டில் அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட அறிவிப்பை வரவேற்கின்றோம். இலங்கை மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புவதில் இதுவொரு முக்கிய கட்டமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டுள்ளமையை அவுஸ்திரேலிய அரசாங்கம்; வரவேற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்த நிலையில் இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் பிரதிபலிப்பாக விளங்குவதாகவும் அவ்வறிக்ககையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணி 26, 2011 அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க லஞ்சம் வாங்கிய இலங்கை அதிகாரிகள் - விக்கிலீக்ஸ் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக இலங்கை உயரதிகாரிகள் சீனாவிடமிருந்து பெருந்தொகை பணத்தை லஞ்சமாகப் பெற்றுள்ளனர் என அமெரிக்கா நம்புவதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் இடையில் 1986ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஜனவரி மாதம் வரையிலான காலப்பகுதியில பரிமாறிக் கொள்ளப்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இரகசியத் தகவல்களை விக்கிலீக்ஸ் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. (மேலும்....)
அவசரகால சட்டத்தை நீக்கும் தீர்மானத்திற்கு ரணில் நன்றி தெரிவிப்புஅவசரகால சட்டத்தை முற்றாக நீக்கும் தீர்மானத்தை நேற்று பாராளுமன்றத்தில் அறிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நன்றிகளைத் தெரிவித்தார். கடந்த ஒரு வருடகாலமாக எதிர்க்கட்சியினால் விடுக்கப்பட்ட கோரிக்கை தற்போது நிறைவேறியதில் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த அவர், அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதில் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அவசரகால சட்டத்தை முற்றாக நீக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றினார். அரசாங்கத்தின் இந்த வரலாற்றுத் திருப்பம் மிக்க தீர்மானத்தை பாராட்டி எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். இதன் போது மேலும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், யுத்தத்திற்காகவே அவசரகால சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டது. யுத்தம் முடிவடைந்து கடந்த ஒரு வருட காலத்திற்கு முன்பே நாம் அவசர கால சட்டத்தை நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரியிருந்தோம். எனினும், தற்போது அது நீக்கப்பட்டமை மகிழ்ச்சி தருகிறது. ஆவணி 26, 2011 கொழும்பு மாவட்டம் 9 கட்சிகள், 10 சுயேச்சைகள் போட்டி, இரண்டு நிராகரிப்பு கொழும்பு மாவட்டத்தில் 6 உள்ளூராட்சி சபைகளுக்காக சமர்ப்பிக்ப்பட்ட 87 வேட்பு மனுக்களில் 18 வேட்பு மனுக்கல் நிராகரிகப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட 37 அரசியல் கட்சிகளும் 32 சுயேச்சை குழுக்களின் வேட்பு மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதே வேளை 3 கட்சிகளினதும், 15 சுயேச்சை குழுக்களினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்ப ட்டுள்ளன. கொழும்பு மாநகரசபைக்கு 9 கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. கொழும்பு மாநகர சபைக்கு தாக்கல் செய்த புதிய ஜனநாயக முன்னணி, சமஜவாதி கட்சி என்பவற்றின் வேட்பு மனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. தெஹிவளை, கல்கிஸை நகரசபைக்கு 6 அரசியல் கட்சிகளும், 6 சுயேச்சை குழுக்களும், மொரட்டுவ நகரசபைக்கு 6 கட்சிகளும், 6 சுயேச்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளன. இவற்றில் ஒரு சுயேச்சையின் வேட்பு மனு நிரகாரிக்கப்பட்டுள்ளது. கோட்டே சிறி ஜெயவர்தனபுர மாநகரசபைக்கு தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில் ஒரு சுயேச்சை குழுவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது. கொழும்பு மாவட்டத்தில் 6 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் மொத்தமாக 2500 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஆவணி 26, 2011 உலகில் நாடற்றோராக 12 மில். பேர் நிர்க்கதிஉலகில் எந்த நாட்டினதும் பிரஜா உரிமை இல்லாத நாடற்றவர்களாக 12 மில்லியன் பேரளவில் வாழ்ந்து வருவதாகவும் அவர்கள் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர் எனவும் ஐ. நா. அகதிகளுக்கான ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நாடற்றவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் குறித்து ஐ. நா. கவலை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் குறித்து சர்வதேச நாடுகள் அக்கறை காட்ட வேண்டும் என அது கேட்டுக்கொண்டுள்ளது. தென் கிழக்காசியா, மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிராந்தியங்களில் இவ்வாறான பெரும்பாலான நாடற்றோர் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி 26, 2011 சிவில் பாதுகாப்பு குழுக்களை மீண்டும் செயற்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவுதற்போது நாட்டில் எழுந்திருக்கும் மர்ம மனிதன் அச்சுறுத்தல் தொடர்பாக மக்கள் பீதி அடைந்து, ஆர்ப்பாட்டங்கள் செய்வ தையும் சட்டத்திற்கு மாறாக நடந்துகொள்வதையும் உடனடி யாக தடுத்து விடுவதற்காக தற்போது செயலிழந்து இருக்கும் சிவில் பாதுகாப்பு குழுக்களுக்கு புத்துயிர் அளித்து, அவற்றை இம்மாதம் 30ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் செயற்படுத்த வேண்டும் என்று, பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அவர்களும், பொலிஸ் மா அதிபர் இளங்ககோனும் சம்பந்தப்பட்ட உத்தியோகஸ்தர்களுக்கு அவசர உத்தரவைப் பிறப்பித்துள்ளார்கள். (மேலும்....) ஆவணி 26, 2011 மனிதன் அறியாத 75 இலட்சத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள்பூமியில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை நாம் அறிந்தவரை 12 இலட்சமாகும். ஆனால் அறியாத உயிரினங்களின் எண்ணிக்கையோ 75 இலட்சமாக இருக்கலாம் என்று சர்வதேச ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்திருக்கிறது. 80 நாடுகளிலிருந்து 2,700 விஞ்ஞானிகள் கொண்ட ஸன்ஸ் ஒப் மெரீன் லைப் எனும் அமைப்பு 2000-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின் மொத்த எண்ணிக்கையையும் அறியும் பொருட்டு இந்த ஆராய்ச்சி தொடங்கப்பட்டது. பத்து வருட ஆராய்ச்சிக்குப் பின்னர் ஜீவராசிகளைப் பகுக்கும் முறையைக்கொண்டு இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளது. பறவைகள், பாலூட்டிகள் போன்ற அடிப்படையிலான இனக்குழு அளவில் உயிரினங்களைப் பிரித்து அவற்றின் உளப்பிரிவுகளில் இருக்கக் கூடிய சிறிய பிராணிகளின் எண்ணிக்கையை அனுமானித்தனர். (மேலும்....) ஆவணி 26, 2011 பிரணாப் - ஹசாரே குழுவினரின் 3ஆம் கட்ட பேச்சில் இழுபறி மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் அன்னா ஹசாரே குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் சுமுக முடிவு எட்டப்படாததால், மீண்டும் பேச்சு வார்த்தை தொடர்கிறது. அன்னா ஹசாரேவின் உண்ணா விரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, அரசு தரப்பில் ஹசாரே குழுவினருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஹசாரே தரப்பில் பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால், கிரண் பேடியும், அரசு தரப்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் நேற்று முன்தினம் பேச்சு நடத்தினர். இந்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. (மேலும்....) ஆவணி 26, 2011 அனைத்து எழுத்துகளும் அடங்கியது வெஸ்டர்ன் யூனியன் என்ற நிறுவனம் டெலக்ஸ் இயக்குனர்கள் ‘தி குய்க் பிரவுன் பாக்ஸ் ஜம்ப்ஸ் ஓவர் தி லேசி டோக்’ (the quick brown fox jumps over the lazy dog) என்ற 35 எழுத்துக்களைக் கொண்ட சொற்றொடரை உருவாக்கியது. ஆனால் ஆங்கிலத்தின் எல்லா எழுத்துகளையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மிகச் சிறிய சொற்றொடர் என்ற பெருமைக்குரியது வேறொன்று. அது ‘ஜேக்டாஸ் லவ் மை பிக் ஸ்பிங்ஸ் ஆப் குவார்ட்ஸ்’ (Jackdaws love my big sphinx of quarts) என்பதாகும். இதில் 31 எழுத்துக்களே உள்ளன. இச்சொற்றொடரை உருவாக்கியவர் யார் என்று தெரியவில்லை. ஆவணி 26, 2011 இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது - ரத்தன் டாடா இலஞ்சம் தராமல் தொழில் நடத்த முடியாது என ரத்தன் டாடா போன்ற தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மும்பையில், வர்த்தக மேலாண்மை கல்லூரியில் நடந்த விழாவில் கலந்து கொண்டு, பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா பேசுகையில் கடந்த 90ம் ஆண்டுகளில், தொழிற்சாலைகளுக்கான உரிமம் பெறுவதற்கு மட்டும் இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. தற்போது ஒப்பந்தம் போட ஒப்பந்தத்தை மாற்ற என எதற்கெடுத்தாலும் இலஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேர்மையான வழியைக் கையாண்டால், தொழில் நடத்த முடியாது. (மேலும்....) ஆவணி 25, 2011 அவசரகாலச் சட்டம் இலங்கையில் நீக்கப்பட்டது அவசரகால சட்டம் இனி நடைமுறையில் இல்லையென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை நீக்குவதுதொடர்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போதே அவசர காலச்சட்டம் இனி நடைமுறைப் படுத்தமாட்டாது என தெரிவித்துள்ளார். அவசரகாலம் சட்டம் நீக்கப்படுவது குறித்து கருத்து தெரிவித்த ஜேவிபி இது மக்களின் ஜனநாயகப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என கருத்த தெரிவித்துள்ளது. ஆவணி 25, 2011 மர்ம மனிதர்களின் நடமாட்டத்தால் அச்சத்தில் உறைந்துள்ள யாழ். மக்கள் மர்ம மனிதர்களின் நடமாட்டம் ஆங்காங்கே நடைபெற்றுவருவதால் யாழ். குடாநாட்டு மக்கள் பயப் பீதியில் உறைந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் போல் வடமராட்சி மற்றும் கொக்குவில், மல்லாகம் பகுதிகளிலும் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவில் நடமாடுவதைத் தவிர்த்து வருகின்றனர். கொக்குவில் கிழக்குப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 11 மணியளவில் வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய நான்கைந்து பேர் அவ்வீதியூடாக அச்சமூட்டும் வகையில் நடமாடித்திரிந்துள்ளனர். இதனை அவதானித்த மக்கள் ஒன்றிணைந்து அவர்களைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றபோது அவர்கள் தப்பியோடியுள்ளனர். (மேலும்....)ஆவணி 25, 2011 அகதிகளை பொறுப்பேற்பதற்கு நியூஸிலாந்து இணக்கம்
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை உள்ளிட்ட நாடுகளின் ஒரு தொகுதி அகதிகளை பொறுப்பேற்க நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது இந்தோனேஷியாவில் உள்ள 88 இலங்கை அகதிகளை பொறுப்பேற்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவர்கள் நியூஸிலாந்தை நோக்கி பயணித்தார்கள் என்பதற்கான எந்த ஆதாரங்களுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். அகதி விடயம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ள அவர், அவுஸ்திரேலியாவில் உள்ள அகதி முகாம்களில் இருந்து வருடாந்தம் 750 அகதிகளை கோட்டா முறையில் பொறுப்பேற்க தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனினும் அந்த அகதிகள், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையின் அடிப்படையில் நியாயமான அகதிகள் என தம்மை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நியூஸிலாந்தில் அகதி முகாம்களை நடத்தும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார்.
வவுனியா குடியிருப்பு, நெடுங்கேணி ஒலுமடு பகுதிகளில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் வவுனியா நகரில் உள்ள குடியிருப்பு பகுதியிலும், நெடுங்கேணி ஒலுமடு பகுதியிலும் நடமாடிய மர்ம மனிதர்களின் நடவடிக்கைகளினால் இந்தப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பதற்றம் நிலவியது. மர்ம மனிதர்களைப் பிடிப்பதற்குப் பொதுமக்கள் எடுத்த முயற்சியும் வெற்றி யளிக்கவில்லை. இந்தச் சம்பவங்கள் பற்றி தெரியவந்துள்ளதாவது, வவுனியா அரச செயலகத்திற்கு எதிரில் ஏ9 வீதிக்கு அப்பால் அமைந்துள்ள பொது வைத்தியசாலைப் பிரதேசமாகிய குடியிருப்பு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு கறுத்த உடையணிந்த 3 மர்ம மனிதர்கள் நடமாடியதைப் பொதுமக்கள் அவதானித்துள்ளனர். (மேலும்....)ஆவணி 25, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 17) (நேசன்) இராணுவப் பயிற்சி முடித்து வந்தவர்கள் தாம் மிகவும் கஷ்டங்களுக்கு மத்தியில் இராணுவப் பயிற்சி முடித்து வந்து பாதுகாப்பில்லாமல் இராணுவத்திடம் பிடிபட்டு இறக்க முடியாது என்ற வாதத்தை முன்வைத்தனர். இவர்களது இந்த வாதம் தவறானதாகும். ஆயுதங்கள் இருந்தால் மட்டுமே தம்மை இராணுவத்திடமிருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்ற வாதம், போராட்டத்தில் மக்களின் பாத்திரத்தையும், மக்களே ஒரு போராட்டத்தின் தீர்க்கரமான சக்தி என்பதையும், மக்களே எமது பாதுகாவலர்கள் என்பதையும் மறுதலித்து, ஆயுதங்கள் மட்டுமே தீர்க்ககரமான சக்தி என்ற தவறான முடிவுக்கு இட்டு செல்கிறது. புளொட் அமைப்பானது தன்னை ஒரு புரட்சிகரமான அமைப்பாக பிரகடனப்படுத்தி இருந்தது. ஆனால் இந்தியாவில் பயிற்சி முடித்து வந்த பெரும்பாலான புளொட் உறுப்பினர்களோ போராட்டம் பற்றிய அரசியல் பார்வை அற்றவர்களாக, அரசியல் வளர்ச்சி அற்றவர்களாக, வெறுமனே இராணுவப் பயிற்சி பெற்றவர்களாக இருந்தனரே தவிர, ஒரு புரட்சிகர அமைப்புக்கு, ஒரு புரட்சிகர இராணுவத்துக்கு இருக்கவேண்டிய அரசியல் பார்வை, அரசியல் வளர்ச்சி, சமூகம் பற்றிய, மக்கள் பற்றிய பார்வை போன்ற முற்போக்கு அம்சங்களை கொண்டவர்களாக விளங்கவில்லை. (மேலும்....) ஆவணி 25, 2011 தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முற்றாக அகற்ற இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் - தமிழ்க் கட்சிகள் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவத்தினரை முற்றாக அகற்ற இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ்க் கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்திய நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா போரம் சார்பில் புதுடில்லியில் நடைபெற்ற இரண்டு நாள் கலந்துரையாடல்களின்போது இலங்கையில் இருந்து சென்று கலந்துகொண்ட தமிழ்க் கட்சிகள் இராணுவத்தை தமிழர் பகுதியில் இருந்து அவசரமாக அகற்றுவதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இராணுவத் தினரின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் அடியோடு விரும்பவில்லை. சிவில் நிர்வாகம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் கீழ் அமைதியான முறையில் வாழவே மக்கள் விரும்புகிறார் கள். இதனை இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெளிவாக எடுத்து விளக்கியிருக்கிறோம். (மேலும்....)ஆவணி 25, 2011 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை அரசு கருத்தில் கொள்ளாது 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் - டியூ. குணசேகர! ![]() தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த கோரிக்கைகளை அரசு கருத்தில் கொள்ளாது, 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கருத்துக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளரும், சிரேஷ்ட அமைச்சருமான டியூ. குணசேகர தெரிவித்தார். வீதிகள் மற்றும் மதகுகளை அமைப்பதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது எனவும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்வைக்கும் யோசனைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்றுக்கொள்ள வேண்டும். யுத்தம் நிறைவடைந்துள்ளது. எனினும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டியதில்லை என சமூகத்தில் சில கருத்துகள் பரவியுள்ளன. இது ஒரு பயங்கரமான கருத்தாகும். அத்துடன், பொருளாதார அபிவிருத்தியே இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற கருத்தும் நிலவுகிறது. இதுவும் தவறானது. அபிவிருத்தியால் மட்டும் இனப்பிரச்சினைக்கு தீர்வு இல்லை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு அபிவிருத்தி மட்டும் போதுமானதல்ல. (மேலும்....) ஆவணி 25, 2011 இருப்பிட மாற்றம் என்பது தந்திரோபாய நகர்வு வெற்றி அல்லது மரணம் ஏற்படும் வரை போரிடுவேன் கடாபி ஆவேசம் யுத்த தந்திரமாக பாப் அல் அஸிஸியா வளாகத்தில் இருந்து பின்வாங்கியதாக லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கிளர்ச்சிப் படைக்கு எதிராக வெற்றி அல்லது மரணம் வரும் வரை போராடுவதாக அவர் தெரிவித்துள்ளார். முஅம்மர் கடாபி ஆட்சியின் மையமாக கருதப்பட்ட பாப் அல் அஸிஸியா வளாகத்தை கிளர்ச்சிப் படை கைப்பற்றியதைத் தொடர்ந்து கடாபி ஒலிநாடா ஊடாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். லிபிய செய்மதி தொலைக்காட்சி ஊடாக முஅம்மர் கடாபியின் உரை ஒளிபரப்பப்பட்டது. எனினும் இதனூடே அவர் எங்கு இருக்கிறார் என்ற எந்த தகவலும் வெளிவரவில்லை. (மேலும்....) ஆவணி 25, 2011 இன வன்முறைகளுக்கு தூபமிட வெளிநாட்டு சக்திகள் சதிமுயற்சி மர்ம மனிதன் போர்வையில் நாட்டில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுத்தி கலவரங்களை உண்டுபண்ணுவதன் மூலம் சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த சில வெளிநாட்டு சக்திகள் எடுக்கும் முயற்சிகள் தொடர்பாக இப்போது அரசாங்கத்துக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த வெளிநாட்டு நாசகார சக்திகளின் சதித்திட்டத்தினால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கக்கூடிய வகையில் மதத் தலைவர்கள் அவர்களுக்கு உண்மை நிலையை விளக்கிக் கூற வேண்டுமென்ற கருத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ நேற்று முன்தினம் பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது தெரிவித்தார். (மேலும்....) ஆவணி 25, 2011 பிரதமரை சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய ராசா கோரிக்கை 2ஜி ஏலத்தில் எந்தவித நஷ்டமும் அரசுக்கு ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை சாட்சிகளாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கூறியுள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு நேற்று சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது ராசா வாதிடுகையில, 2ஜி ஏல நடைமுறையால் நாட்டுக்கும், அரசுக்கும் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை. இதை நிரூபிக்க பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப. சிதம்பரம், தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபலை இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக சேர்க்க வேண்டும் அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படவில்லை என்பதை நிரூபிக்க முடியும் என்றார் ராசா. 2ஜி ஏல நடைமுறையில் பிரதமருக்குத் தெரியாமல் எதுவும் நடைபெறவில்லை என்று ஆரம்பம் முதலே ராசா கூறி வருவது நினைவிருக்கலாம். இந்த நிலையில் பிரதமரை சாட்சியாக சேர்க்க வேண்டும் என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆவணி 25, 2011 அமெரிக்காவில் கடும் நில நடுக்கம் வொஷிங்டன், நியூயோர்க்கில் மக்கள் பீதியில் ஓட்டம்அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் நேற்று முன்தினம் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் தலைநகர், வெள்ளை மாளிகை, பென்டகன் உள்ளிட்ட இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிட்டது. எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரழப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவித்த தீயணைப்பு அதிகாரிகள் வொஷிங்டனில் சிலருக்கு காயம் மட்டும் ஏற்பட்டது என்றனர். விர்ஜினியா, ரிச்மாண்டின் வடமேற்கே 64 கிலோ மீட்டரில் மையம் கொண்டிருந்த இந்த நில நடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.8 எனப் பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் வடக்கு மின் நிலையத்தில் உள்ள 2 அணு உலைகள் தானாகவே செயல்பாட்டை நிறுத்திக்கொண்டன என அமெரிக்க அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய செய்தித் தொடர்பாளர் ரொஜர் ஹன்னா தெரிவித்தார். (மேலும்....) ஆவணி 25, 2011
அன்னா
ஹசாரேவுக்குப் பிரதமர் கடிதம், பேச்சுவார்த்தைக்கு பிரணாப் நியமனம் வலுவான லோக்பால் மசோதா இயற்றக்கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் சமூக சேவகர் அன்னா ஹசாரேவுக்குப் பிரதமர் மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை கடிதம் அனுப்பியுள்ளார். ஹசாரே குழுவினர் தயாரித்துள்ள ஜன லோக்பால் மசோதாவை நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும்படி மக்களவைத் தலைவர் மீரா குமாரைக் கேட்டுக்கொள்ள மத்திய அரசு தயாராக உள்ளது என்று தனது கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியுள்ளார். தனது கடிதத்தில் பிரதமர் கூறியுள்ளதாவது, ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதில் உங்கள் நோக்கமும் அரசின் நோக்கமும் ஒன்றுதான். அந்த நோக்கத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதில் நமது வழிமுறைகள் வேறுபடலாம். பரந்த அளவிலான கருத்தொற்றுமையுடன் அரசியல் சாசனப்படி செல்லத்தக்க வலுவான லோக்பால் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது. (மேலும்....) ஆவணி 25, 2011 மறைந்து போன தமிழ் நூல்கள் தலைச்சங்கம் இடைச் சங்க காலத்தில் பாண்டி நாட்டின் தென் பகுதியில் இருந்த சில நிலப்பகுதிகள் பெரிய கடற்கோள்களி னால் மறைந்துவிட்டன. அப்போது அப்பகுதியில் இருந்த ஏட்டுச் சுவடிகளும் மறைந்து போயின.
'ஏரண முருவம் யோகம் இசை கணக் என்னும் செய்யுள், கடல் பெருக்கெடுத்தப் பாண்டிய நாட்டின் பகுதியை அழித்த போது முதற் சங்க இடைச் சங்க நூல்கள் மறைந்து போனதைக் கூறுகிறது. (மேலும்....)
மர்மமனிதர்களாக வருவோர் இராணுவத்தினரே - ஸ்ரீதரன் எம்.பி. மே 2009 இற்க முன்பு வன்னிலும் ஏனைய தமிழ் பிரதேசங்கள் எங்கும் சிறீதரனின் முன்னாள் எசமானர்கள்(தமிழ் இராணுவம்) 'மாமனிதர்' என்ற போர்வையில் 'லபக்' செய்த போது கை கட்டி ஆதரித்தவர் தற்போது சிங்கள் இராணுவம்? செய்யும் போது கொடுக்கு கட்டிக்கொண்டு புறப்பட்டது வீரம்தான்....? யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம மனிதர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்ட பொது மக்களின் வீடுகளுக்குள் நள்ளிரவு வேளையில் நுழைந்த இராணுவத்தினர் ஆண்கள் பெண்கள் என்ற பேதம் பாராது கும்பிட கும்பிடத் தாக்கியுள்ளனர் என்று யாழ். மாவட்ட எம்.பி. எஸ். ஸ்ரீதரன் நேற்று சபையில் குற்றஞ்சாட்டினார். (மேலும்....)ஆவணி 24, 2011 புத்தளம் நகரில் இன்று கடையடைப்பு புத்தளம் நகரப் பகுதியில் இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். நகர வீதிகளில் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புத்தளத்தில் மணல் குன்று பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற முறுகல் சம்பவத்தின் போதும் , துப்பாக்கிச் சூட்டின் போதும், பலியான புத்தளம் போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் கான்ஸ்டபிளின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறுவதால் புத்தளம் நகரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை எரித்த சிலரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ___ ஆவணி 24, 2011 லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய தயார் - பிரதமர் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மற்றும் அவர்களது குழுவிடம், பிரதமர் மன்மோகன் சிங் உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஜன் லோக்பால் மசோதா, பார்லிமென்ட் உயர்நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், சபாநாயகர் அனுமதித்தால், இந்த கூட்டத்தொடரிலேயே அம்மசோதா தாக்கல் செய்ய்ப்படும் என்று பிரதமர் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அரசுத் தரப்புடன் பேச்சு நடத்த அன்னா ஹசாரே ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து அன்னா தரப்புடன் பேச்சு நடத்த பிரணாப் முகர்ஜியை நியமித்து பிரதமர் உத்தரவிட்டார். அன்னாவின் சார்பில் 3 பேர் கொண்ட குழு பிரணாப் முகர்ஜியுடன் பேச்சு நடத்தும் என்று அரவிந்த் கெஜரிவால் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டு வரும் முன் அதை அனைத்துக் கட்சிகளும் கொண்ட நிலைக் குழுவுக்கு அனுப்பி, விவாதித்து, அனுமதி பெற்று பின்னர் சபாநாயகரின் அனுமதி கிடைத்த பின்னரே அதை சமர்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஜன் லோக்பால் மசோதாவை இப்போது அரசு ஏற்றுக் கொண்டாலும் நாடாளுமன்ற சட்ட திட்டங்களின்படி அதை நிறைவேற்ற குறைந்தபட்சம் 1 மாத காலமாவது ஆகும். இதை அன்னா ஒப்புக் கொண்டால் அவரது உண்ணாவிரதம் விரைவிலேயே முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. ஆவணி 24, 2011 நவீன வசதிகளைக் கொண்டதாக நெடுந்தீவு மாற்றமடைந்து வருகிறது சமீபத்தில் நடந்து முடிந்த நெடுந்தீவு பிரதேச சபை தேர்தல் பிர சாரத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நெடு ந்தீவை நான் சகல வசதிகளைக் கொண்ட ஒரு நவீன தீவாக மாற்றுவேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார். சொல்வதைச் செய் வேன், செய்வதை சொல்வேன் என்ற யதார்த்தத்தில் அசையாத நம்பிக்கையுடைய நம்நாட்டு ஜனாதிபதி இப்போது நெடுந்தீவின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்கு மாறு அத்தீவின் மேம்பாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருக்கும் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தெரிவித்துள்ளார். (மேலும்....) ஆவணி 24, 2011 ஸ்பெக்ட்ரம் ஊழல் விசாரணை மன்மோகன், சிதம்பரத்துக்கும் தொடர்பு: கனிமொழி நீதிமன்றில் பரபரப்பு சாட்சியம் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் மூலம் விற்பனை செய்வதில்லை என்று அப்போதைய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவோடு சேர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் சேர்ந்து தான் முடிவெடுத்தனர் என்று தி. மு. க. எம்.பி. கனிமொழி சி. பி. ஐ. நீதிமன்றத்தில் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார். டில்லி சி. பி. ஐ. நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு விசாரணையில் நேற்று கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்தார். மேலும், இது தொடர்பாக ராசா, பிரதமர், சிதம்பரம் ஆகியோர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான ஆதாரத்தையும் அவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். (மேலும்....) ஆவணி 24, 2011 தனிநாடாக பிரிந்த தெற்கு சூடான் மோதலில் 600 பேர் பலி; பேச்சுவார்த்தைக்கு ஐ.நா. அழைப்பு தெற்கு சூடான் நாடு தற்போது புதியதாக உருவாகியுள்ளது. இங்கு நடந்த மோதலில் 600 பேர் கொல்லப்பட்டனர். 26 ஆயிரம் கால்நடைகளும் திருடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் சிறப்பு பிரதிநிதி ஹில்டே எப். ஜோன்சன் முர்லே மற்றும் லோ நுயர் சமூகத்தினர் ஜோங்ளய் மாநிலத்தில் மோதிக் கொள்வதை நிறுத்த வேண்டும் என நேற்று வேண்டுகோள் விடுத்தார். அந்த மாநிலத்தில் நடந்த வன்முறை மோதலில் 600 பேர் கொல்லப்பட்டதுடன் 750 பேர்காயம் அடைந்தனர். கடந்த வியாழக்கிழமை காலை முதல் ஏற்பட்ட மோதல் நாள் முழுவதும் நீடித்தது என்று தெற்கு சூடான் தெரிவித்தது. இரு பகுதி மோதல்களில் ஏற்பட்ட விளைவு குறித்து மதிப்பீடு செய்ய ஐ.நா. கடந்த வெள்ளிக்கிழமை ஒரு குழுவை அனுப்பியது. முர்லே பழங்குடியினர் லோ நுயர் கிராம மக்களை தாக்கிய போது மோதல் வெடித்தது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் 2011 வரை 2400 பேர் 330 மோதல்களில் தெற்கு சூடானில் உயிரிழந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தெற்கு சூடானில் உள்ள பசுக்கள் அந்த பகுதியின் சொத்து வளத்தை காட்டுவதாக உள்ளது. அவை திருமணத்தின் போது வரதட்சணையாக தரப்படுகின்றன. ஆவணி 24, 2011 புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சாவெஸ் மீண்டும் கியூபா பயணம்
புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மூன்றாவது முறையாகவும் வெனிசுவெலா ஜனாதிபதி ஹுகோ சாவெஸ் மீண்டும், கியூபா செல்லவுள்ளார். இது குறித்து அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் அவர் பேசிய தாவது :- மூன்றாவது முறையாக கியூபா சென்று சிகிச்சை பெற அந்நாட்டு பாராளுமன்ற எம்.பிக்களின் ஒப்புதலை கோரியுள்ளேன். அனுமதி கிடைத்ததும் விரைவில் கியூபா செல்லவுள்ளேன் என்றார்.
ஆவணி 24, 2011 கடாபி தொடர்ந்தும் லிபியாவில், திரிப்போலியில் நேற்றும் மோதல்லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபி தொடர்ந்தும் அந்த நாட்டுக்குள்தான் இருக்கிறார் என்று நம்புவதாக அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. முஅம்மர் கடாபி வெளிநாட்டுக்கு தப்பியோடியதாக பல தரப்புகளில் இருந்து செய்தி வெளியானதைத் தொடர்ந்தே பென்டகன் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கடாபி லிபியாவில் தான் இருக்கிறார் என நம்புகிறோம். அவர் நாட்டை விட்டு சென்றதாக தகவல் ஏதும் இல்லை என பென்டகன் செய்தித் தொடர்பாளர் கலோனல் தேவ் லபான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த தகவலை முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாமும் உறுதி செய்துள்ளார். கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்ட சைபல் இஸ்லாம் கடாபி ஆதரவுப் படையுடன் நேற்று திரிபோலியில் தமது ஆதரவாளர்களை சந்தித்தார். இதன் போது முஅம்மர் கடாபி திரிபோலியில் சுகமாக உள்ளார் என சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்தார். எனினும் கடாபி இருக்கும் இடம் குறித்து அவர் எந்த தகவலும் வெளியிடவில்லை.(மேலும்....) ஆவணி 24, 2011 யாழ்.குடாநாட்டில் மர்மமனிதர் பின்னணியில் அரசியல் சக்திகள்? யாழ்ப்பாணம் நாவாந்துறை மற்றும் வடமராட்சி பொலிகண்டிப் பகுதியில் பாதுகாப்புத் தரப்பினருக்கும், பொதுமக்களுக்குமிடையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து நாவாந்துறை மற்றும் பாசையூர் பிரதேசத்தில் 102 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் இருவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 100 பேரும் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்தார். பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராகச் செயற்பட்ட இவர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார். (மேலும்....) ஆவணி 23, 2011 இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கான மாநாடு புதுடில்லியில் ஆரம்பமானது ![]()
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கான இலங்கைத் தமிழர் மாநாடு புதுடில்லியில்
உள்ள இந்திய அரசியல் அமைப்பு அரங்கத்தில் இன்று (23-08-2011)
செவ்வாய்க்கிழமை காலை 12:30மணியளவில் ஆரம்பமானது. இம்மாநாடு இந்திய
பாராளுமன்ற உறுப்பினர் திரு. நு.ஆ. சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் தலைமையில்
ஆரம்பமானது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களை பெங்களூரில் இருந்து
வந்திருந்த “இந்திராகாந்தி சர்வதேச பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் மலர்
கொத்து கொடுத்து வரவேற்றனர். மாநாட்டின் தொடக்கமாக ஈழத்தில் விடுதலைப்
போரினால் மரணமடைந்த பொதுமக்களுக்கும், வீரர்களுக்கும் மௌன அஞ்சலி
செலுத்தப்பட்டது.
(மேலும்...) இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் இன்று விவாதம்! இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பாராளுமன்றில் இன்று விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் நோக்கில் சிரேஸ்ட அமைச்சர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம், நீதி அமைச்சர் சல்மான் குர்ஷிட் மற்றும் அரச விவகார அமைச்சர் வீ.நாரயணசாமி ஆகியோர் நாளைய தினம் ஆளும் கட்சியினர் தரப்பில் வெளியிடப்பட வேண்டிய கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் குறித்து உரையாடப்படவுள்ளது. இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து கருத்துக்களை வெளியிட சில அரசியல்வாதிகள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் திகதி நடைபெற்ற விவாதத்தில் இலங்கை விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இடம்பெயர் மக்களின் வாழ்வாதாத்தை மேம்படுத்தல் மற்றும் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைத்தல் போன்ற விவகாரங்கள் குறித்து முக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆவணி 23, 2011 புதுடில்லியில் நடைபெறும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கருத்தரங்கில் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு பயணமாகியுள்ளனர்! இந்திய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பனின் ஏற்பாட்டில் புதுடில்லியில் நடைபெறும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் ஆராயும் கருத்தரங்கில் பங்கு பற்றுவதற்காக வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பயணமாகியுள்ளனர். மனித உரிமைகள் மற்றும் உலக அபிவிருத்திக்கான பாராளுமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த கருத்தரங்கில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல் கட்சிகளின் சார்பில் பிரதிநிதிகள் பங்கு பற்றுகின்றனர். (மேலும்...)ஆவணி 23, 2011 யாழ். நாவாந்துறையில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரி இன்று ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் நேற்று இடம்பெற்ற முறுகல் சம்பவம் தொடர்பில் சுமார் நூறு பேர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ். மனித உரிமைகள் அலுவலகத்தின் முன்பாக கைது செய்யப்பட்ட நபர்களின் பெறோர்கள் மற்றும் உறவினர்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். நாவாந்துறைப் பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான சிலரின் நடமாட்டத்தையடுத்து பொது மக்களுக்கும் படைத்தரப்பிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, படையினர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு சுமார் நூறு பேர் வரை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்ககோரியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை கைது செய்யப்பட்டவர்கள் இன்று யாழ். நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டதாகவும் தெரிய வருகிறது. ஆவணி 23, 2011 வதந்திகளை நம்பாதீர், போராளிகளின் முதுகெலும்பு உடைந்துவிட்டது - சயிப் அல் இஸ்லாம் கடாபி _
லிபிய தலைநகரைக் கைப்பற்றிவிட்டதாகவும், கடாபி தலைமறைவாகியுள்ளதாகவும், அவரது மகன்மார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் நேற்று கைது செய்யப்பட்டதாகக் கருதப்பட்ட கடாபியின் மகன்மாரில் ஒருவரான சயிப் அல் இஸ்லாம் நேற்றிரவு தனது ஆதரவாளர்களையும், ஊடகவியலாளர்களையும் திரிபோலியில் உள்ள ரிக்சொஸ் விடுதியில் சந்தித்துள்ளார். இதன்போது, "கடாபி பத்திரமாக உள்ளாரா...?" என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "ஆம் பத்திரமாக உள்ளார்..." என அவர் பதிலும் அளித்துள்ளார். தனது கைது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், தாம் போராளிகளின் முதுகெலும்பை உடைத்து விட்டதாகவும், தங்களில் எவரும் கைது செய்யப்படவில்லையெனவும் அது வெறும் பிரசாரப் பொறியெனவும் தெரிவித்துள்ளார். மேலும் இது தமது நாடு எனவும் இதை மீட்க இறுதி வரை போராடப் போவதாகவும் அவர் சூளுரைத்துள்ளார். கடந்த ஞாயிறன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும் சயிப் கைதுசெய்யப்பட்டதாக உறுதி செய்திருந்தது. இச்சம்பவமானது அங்கிருந்து வரும் தகவல்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது. ஆவணி 23, 2011 புத்தளத்தில் பதற்றம் தணிவு; பலத்த பாதுகாப்பு பொலிஸ் மா அதிபர் நேரில் விஜயம்; சம்பவங்கள் தொடர்பில் விசாரணைபுத்தளத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பதற்ற நிலைமைகளையடுத்து பொலிஸ்மா அதிபர் என். கே. இலங்கக்கோன் தலைமையிலான உயரதிகாரிகள் அடங்கிய குழுவினர், நேற்று நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்தனர். புத்தளத்துக்கு நேரடியாகச் சென்ற பொலிஸ்மா அதிபர், சம்பவம் நடைபெற்ற இடங்களைப் பார்வையிட்டதுடன், புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக விசேட கூட்டமொன்றை நடத்தியிருந்தார். இதன்போது அந்தப் பிரதேசத்தின் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கினார். அதேநேரம், புத்தளத்தில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையொன்றை சமர்ப்பிக்கும் நோக்கில் கொழும்பிலிருந்து விசேட புல னாய்வுப் பிரிவுக் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டிருப்பதுடன், பிரதேச பொலிஸ் அத்தியேட்சர்கள் தலைமையில் மேலும் இரு குழுக்கள் நியமிக்கப் பட்டுள்ளன. (மேலும்...) ஆவணி 23, 2011 தமது ஆட்சி முடிவுக்கு வந்ததை கடாபி உணர வேண்டும் - ஒபாமாசரணடையப்போவதில்லை - ஜனாதிபதி கடாபி
தமது ஆட்சி முடிவுக்கு வந்ததை முஅம்மர் கடாபி உணர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா குறிப்பிட்டு ள்ளார். திரிபோலியை கிளர்ச்சி ப்படை கைப்பற்றியதைத் தொடர்ந்து, வெள்ளை மாளிகையிலிருந்து வெளியி டப்பட்ட அறிக்கையில், கடாபி ஆட்சி ஒரு முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது என்பதை அவர் உணர வேண்டும். லிபியா நாட்டை அவர் கட்டுக்குள் வைக்க தவறிவிட்டார் என்ற உண்மையையும் அவர் தெரிந்து கொள்ள வேண்டும். லிபியா ஜனநாயக பாதைக்கு திரும்பும் வரை நாட்டின் இறையாண்மை, அமைதி மற்றும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தந்து கிளர்ச்சிப் படையின் மாற்று கெளன் ஸில் அமைப்பு செயல்பட வேண்டு மென்றும், நிலைமை¨ ய
புரிந்து கொண்டு அதிகாரத்தை மாற்று கெளன்ஸிலிடம் ஒப்படைக்க கடாபி தாமாக முன்வர வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, கிளர்ச்சியாளர்களிடம் ஒரு போதும் சரணடையப் போவதில்லை என்றும், லிபிய தலைநகர் திரிபோலியை விட்டுக் கொடுக்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி கடாபி தெரிவித்துள்ளார். அவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ஒலி நாடா தகவலில் கடாபி கூறியி ருப்பதாவது:- “ஆக்கிரமிப்பாளர்களிடமும், அவர்களது முகவர்களிடமும் ஒருபோதும் திரிபோலியை கைவிட முடியாது. போரில் நான் உங்களுடன் இருக்கிறேன் நான் ஒரு போதும் சரணடையப்போவதில்லை. கடவுளின் கிருபையால் நாம் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார். ஆவணி 23, 2011 அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதல்களுக்கு அல்கொய்தாவுக்கு ஈரானும் சவூதியும் உதவி அமெரிக்க இரட்டைக் கோபுரத்தின் மீது 9/11 தாக்குதல் நடத்தப்பட்டு 10ஆவது ஆண்டு ஞாபகார்த்த தினம் அனுஷ்டிக்கப் படவுள்ள நிலையில், இத்தாக்குதலை நடத் துவதற்கு அல் கொய்தா போராளிகளுக்கு சவூதி அரேபியாவும் ஈரானும் உதவியதாக புதிய புத்தகமொன்று உரிமை கோருகிறது. மேற்படி இரட்டைக் கோபுரத் தாக்குதல் களுக்கு இந்த இரு நாடுகளும் பகிரங்கமாக எதிர்ப்புத் தெரிவித்திருந்ததுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஆரம் பிக்கப் போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் அந்தோனி சமர்ஸ் மற்றும் ரொபின் ஸ்வான் ஆகியோரால் எழுதப்ப ட்ட "தி லெவன்த் டே' புத்தகமானது மேற் படி இரு நாடுகளுக்கும் குறிப்பிட்ட தாக்கு தலுடன் தொடர்புள்ளதாக வாதிடுகிறது. (மேலும்...)ஆவணி 23, 2011 மர்ம மனிதர்களை தண்டிக்கும் பொறுப்பை மக்கள் தங்கள் கையில் எடுக்கலாகாது மர்ம மனிதன் என்ற போர்வையில் சில சமூக விரோதிகள் நாடெங் கிலும் மேற்கொண்டு வரும், மக்களை அச்சுறுத்தும் நிகழ்வு கள் இப்போது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பொலிஸார் மர்ம மனிதர்கள் என்று எவரும் இல்லை, பொதுமக்கள் எதற்கும் அஞ்சாமல் நாளாந்த சகஜ வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தல்கள் விடுத்துள்ள போதிலும், மர்ம மனிதர்கள் என்ற பெயரில் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் நடந்துகொண்டே இருக்கின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் கொழும்பு பஞ்சிகாவத்தை பிர தேசத்திலும் ஒரு மர்ம மனிதனின் நடமாட்டம் இருந்ததாகவும், அதனை அன்று அதிகாலையில் தானும் தனது 18 வயது மகளும் நேரில் கண்டதாகவும் ஒரு நடுத்தர வயது குடும்பப் பெண் அறி வித்ததை அடுத்து, அப்பகுதி மக்கள் கம்பு, பொல்லுகளுடன் வீதி யில் இறங்கி அவனை தேட ஆரம்பித்தனர். நல்ல காலம் அவன் அவர்களிடம் சிக்கவில்லை. சிக்கியிருந்தால் மக்களுக்கு இருந்த ஆத்திரத்தில் அவனை அடித்தே கொன்றிருப்பார்கள். (மேலும்...) ஆவணி 23, 2011 அமெரிக்கா என்றும் கடனில் மூழ்கி விடாது “அமெரிக்கா இன்று மட்டுமல்ல இனி எப்போதுமே கடன் நெருக்கடிக்கு ஆளாகாது. அதனால் சீனா தனது முதலீட்டைப் பற்றி கவலை கொள்ள வேண்டியதில்லை” என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்தார். சீனாவில் ஐந்து நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை ஜனாதிபதி ஜோபைடன் நேற்று முன்தினம் தன் பயணத்தை முடித்துக் கொள்வதற்கு முன் சீனாவின் தொழில் நகரமான செங்டுவில் பேசிய போது கூறியதாவது; பொருளாதார ரீதியில் இப்போதும் அமெரிக்கா தான் மிகப் பெரிய நாடு. சீனாவை விட இரண்டரை மடங்கு பெரிய நாடு. முதலீட்டாளர்களின் பாதுகாப்பான நாடாக இன்றும் அமெரிக்கா தான் உள்ளது. எனினும் “சீனா, அமெரிக்காவில் செய்துள்ள முதலீடு குறித்து கவலை கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நிதிச் சொத்துக்களில் 87 சதவீதமும், நிதியமைச்சக கடன் பத்திரங்களில் 69 சதவீதமும் அமெரிக்கர்களிடம் தான் இருக்கிறது. அமெரிக்காவின் மொத்த நிதி சொத்துக்களில் சீனாவிடம் இருப்பது வெறும் 1 சதவீதம் தான். கடன் பத்திரங்களில் சீனாவிடம் இருப்பது வெறும் 8 சதவீதம் தான் என்பதை நினைவூட்டுகிறேன். அதனால் உங்களை மட்டுமல்ல, அமெரிக்க முதலீட்டாளர்களையும் பாதுகாப்பது தான் எங்கள் நோக்கம். அமெரிக்கா ஒரு போதும் கடன் நெருக்கடியில் சிக்கி மூழ்கி விடாது என்றார். ஆவணி 23, 2011 அமெரிக்கா ஒரு செல்வந்த நாடு ஆனால் அமெரிக்கர்கள் கடனாளிகள் அமெரிக்கா உலகிலேயே முன்னணியில் திகழும் ஒரு செல்வந்தநாடு. ஆனால், அமெரிக்கர்கள் செல்வ செருக்கோடு வாழ்ந்தாலும் அவர்களை செல்வந்தர்களாக நாம் கருதமுடியாது. ஒரு சராசரி அமெரிக்க ரிடம் வசதியான வீடு இருக்கும். ஒரு நல்ல வாகனம் இருக்கும். வீட்டிற்குத் தேவையான சகல மின்னியல் உபகரணங்களும் இருக்கும். அவர்களின் பிள்ளைகள் பல்கலைக் கழகங்களில் பெருமளவு கட்டணத்தைச் செலுத்தி உயர் கல்வியைப் பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களிடம் இந்த வசதிகள் அனைத்தும் இருந்தாலும் வட்டிக்கு வாங்கும் கடன் மூலமே இந்த சலுகைகளை அனுபவித்து வருகிறார்கள். மாத இறுதியில் சம்பளம் கிடைத்தவுடன் இந்தக் கடனை செலுத்திய பின்னர் ஒரு சொச்சத் தொகையை வைத்தே அவர்கள் அடுத்த மாதத்தை ஒப்பேற்ற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். (மேலும்...) ஆவணி 23, 2011 அமைச்சர் பீலிக்ஸ் தலைமையில் விசேட குழு மூடநம்பிக்கைகள், போலி கட்டுக்கதைகள், அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வதந்திகளை பரப்பும் சமூகவிரோதிகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது. சமூக சேவைகள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளையும் சகல பிரதான மதத் தலைவர்களையும் உள்ளடக்கும் வகையிலேயே இந்த விசேட குழு அரசாங்கத்தினால் நியமிக்கப்படவுள்ளது. மர்ம மனிதன் என்ற ஆதாரமற்ற மக்களிடையே இன்று வலுவூன்றியிருக்கும் மூடநம்பிக்கை டெங்கு நோயைவிட ஆபத்தானதாகும். அதனால் நாட்டில் அமைதி யின்மையும், கலவரங்களும் ஏற் பட்டு மக்களுக்குப் பெரும் தீங்கிழைக்க முடியும் என்று அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார். புத்த பெருமான் மஹி யங்கனை பெளத்த விகாரைக்குச் சென்று அப்பகுதியிலிருந்த பேய்களை விரட்டி யடித்தார். அதையடுத்து இலங்கையில் பேய்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்த அமைச்சர், எங்கள் நாட்டில் பேய்கள் இருந்தால் பிரபாகரன் போன்ற தொரு பயங்கரவாதத் தலைவன் தோன்றியிருக்க முடியாதென்றும் கூறினார். ஆவணி 23, 2011 நாட்டின் அதிவேக நெடுஞ்சாலை செப்டம்பர் 2 ஆம் திகதி முதல் பொதுமக்கள் பாவனைக்குகொட்டாவையிலிருந்து மாத்தறை வரையான 132 கிலோ மீற்றர் பாதை ஜப்பான் நாட்டு நட்புறவு நிதியத்தின் உதவித் திட்டத்தின் கீழ் 2005 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மீண்டும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனூடாக வெளிநாடுகளுக்கு மாத்திரமே உரித்தாகவிருந்த அதிவேக நெடுஞ்சாலை எமது நாட்டின் கனவும் நனவாக ஆரம்பித்ததோடு இதற்காக 2000 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட நிர்மாணப் பணிகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு முதல் கட்டமாக காலி வரைக்கும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு ஒவ்வொரு கட்டத்திற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சீன நாட்டு ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகியன இத்திட்டத்திற்கு உதவியுள்ளமையும் இதன் விசேட அம்சமாகும். இந் நெடுஞ்சாலையின் விசேட அம்சமாவது எல்லா பிரதேசங்களிலிருந்து இப்பாதைக்கு பிரவேசிக்கவும் வெளியேறவும் முடியாது. குறிப்பிட்ட சில பிரதேசங்களிருந்து மாத்திரமே உட்பிரவேசிக்கவும், வெளியேறவும் முடியும். (மேலும்...) ஆவணி 22, 2011 மர்ம மனிதனால் புத்தளம், மன்னாரில் பதற்றம்; வன்முறைகளில் கான்ஸ்டபிள் பலி; பலர் காயம் புத்தளம் மணல்குன்று பிரதேசத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் ஊடுருவியுள்ளதாக தக வல் பரவியதையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலை மற்றும் வன்முறைச் சம்ப வங் களி ன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயம் டைந்துள்ளனர். இதேவேளை, மன்னார் பேசாலைப் பகுதியில் வீடுகளுக்குள் நுழைய முற்பட்ட மர்ம மனி தர்களை துரத்திச் சென்ற பொதுமக்களுக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக சிறுவர்கள் பெண்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். புத்தளத்தில் களேபரம் புத்தளம் நகர சபைக்குட்பட்ட மணல் குன்று கிராமத்தில் மர்ம மனிதர்கள் இருவர் பிரவேசித்துள்ளதாக தகவல் பரவியதையடுத்து குறித்த நபர்களை தேடிச் சென்ற பொது மக்களுக்கும் கடமையிலிருந்த பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐவர் படுகாயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்து இவர்களுள் நால்வர் மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். (மேலும்....)
ஆவணி
22, 2011 Federal NDP Leader Jack Layton dies after second cancer battle
Federal NDP(Leftist) Leader Jack Layton has died.The party issued a statement this morning, just weeks after a gaunt Layton held a news conference to announce he was fighting a second bout of cancer. The party says Layton died peacefully at 4:45 a.m. ET today at his Toronto home, surrounded by family and loved ones. Funeral details have not yet been announced.
ஆவணி 22, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 16) (நேசன்) இந்தியாவிலிருந்து பயிற்சி முடித்து யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் செலவுகளுக்கு பணமும் அவர்கள் பாதுகாப்புக்கென ஆயுதங்களும் வழங்கப்படும் என்று உமாமகேஸ்வரன் உறுதியளித்திருந்தார். இதனால் இராணுவப் பயிற்சி முடித்து வந்தவர்கள் தமது செலவுகளுக்கு பணமும் தமது பாதுகாப்புக்கு ஆயுதமும் தருமாறு தளத்தில் செயற்பட்டு வந்த மத்தியகுழு உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்த்திருந்தனர். தளத்தில் அவர்களது செலவுகளுக்கு பணம் கொடுக்கப்பட்டதே ஒழிய, பாதுகாப்புக்கென ஆயுதங்கள் வழங்கப்பட வில்லை. ஏனெனில், அப்பொழுது புளொட்டிடம் பெருமளவுக்கு மக்கள் பலம் இருந்தது. மக்கள் அமைப்புக்கள், மாணவர் அமைப்பு, மகளீர் அமைப்பு, தொழிற்சங்க அமைப்பு என மக்களை போராட்டத்துக்காக அணிதிரட்டிக் கொண்டிருந்தோம். ஆனால் அன்று புளொட்டிடம் ஒரு சில ஆயுதங்கள் மட்டுமே இருந்தன. அன்றிருந்த ஒரு சில ஆயுதங்களை கொண்டுதான் பார்த்தன் மட்டக்களப்பில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தார். (மேலும்....) ஆவணி 22, 2011 ஊழலுக்கு எதிராக ஹசாரே நடத்தும் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும்
இந்தியாவில் ஊழல் மோசடிக்கு எதிராக காந்தியவாதி அன்னா ஹசாரே நடத்திவரும்
உண்ணாவிரதப் போராட்டத்தின் தாக்கம் இலங்கையிலும் ஏற்பட்டிருப்பதற்கான
அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் என்
சில்வா ஊழலுக்கு எதிராக மக்கள் எழுச்சிபெறுவது அவசியம் என்று அழைப்பு
விடுத்திருக்கின்றார். ஆவணி 22, 2011 மர்ம மனிதன் அட்டகாசம் நாடெங்கிலும் தொடர்கிறது எவ்வளவுதான் பொலிஸார் உண்மைத் தகவல்களை எடுத்துரைத்தாலும், மர்ம மனிதர்களின் நடமாட்டம் தொடர்ந்தும் நாட்டின் நாலா பக்கங்களிலும் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் அறிவித்தவண்ணம் இருக்கிறார்கள். சில சமூகவிரோதிகளும் திருடர்களும் பெண் பித்தர்களுமே இவ்விதம் பதற்ற நிலையை நாடெங்கிலும் ஏற்படுத்தி வருகிறார்கள் என்று பொலிஸார் கூறுகின்ற போதிலும், இப் போது நிலைமை மேலும் மோசம டைந்து வருவதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் சான்று பகர்கின்றன. (மேலும்....) ஆவணி 22, 2011 ஊறணிச் சம்பவத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தொடர்புபடுத்துவது விஷமத்தனம் நிறைந்ததாகும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராய்வு
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தொடர்பில் காத்தான்குடி நகரசபை தலைவர்
தெரிவித்திருக்கும் கருத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சட்ட
நடவடிக்கை எடுப்பது குறித்த ஆராய்ந்து வருவதாகக் கூட்டமைப்பு விடுத்துள்ள
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 17.08.2011 ஆம் திகதியன்று பிற்பகல் மட்டக்களப்பு ஊறணியில்
மர்மமனிதனின் கீறல் காயத்துக்கு பெண் ஒருவர் உள்ளானதாகவும், இதனை அடுத்து
அந்த பகுதி மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதாக நாம்
அறிந்தோம். நாங்கள் அங்கு சென்ற போது ஒரு பதற்ற நிலை காணப்பட்டது. மக்கள்
மத்தியில் அச்சநிலை காணப்பட்டது. பொலிஸாரும் இராணுவமும் அங்கு
காணப்பட்டார்கள். இவ்வேளை எங்களுக்கு முன்னதாக அந்த இடத்தில் கிழக்கு மாகாண
சபை உறுப்பினரான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த
பூ.பிரசாந்தன் தனது வாகனத்துடன் காணப்பட்டார். ஐக்கிய தேசியக் கட்சி
மாகாணசபை உறுப்பினர் அ.த.மாசிலாமணியும் அங்கு வந்திருந்ததை எங்களால்
காணமுடிந்தது. ஆவணி 22, 2011 ஒற்றுமையின்மையால் சீர்குலையும் நிலையை ஐ.தே.க. நெருங்கிக்கொண்டிருக்கிறது ஐக்கிய தேசியக் கட்சி இன்று எல்லோரும் பார்த்து கேலி, கிண்டல் செய்யும் ஒரு கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது. கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி சட்ட விதிகளுக்கு மாறாக நடந்துகொண்டார் என்று கூறி பாராளுமன்ற உறுப்பினர்களான ரோசி சேனாநாயக்க, சுஜீவ சேரசிங்க, தினேஷ் கங்கந்த, புத்திக பத்திரண ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கிறேன் என்று பகிரங்கமாக அறிவி த்துள்ளார். கடிதங்கள் மூலம் இது குறித்து சம்பந்தப்பட்ட நால்வரிடமிருந்து விளக்கமும் கேட்டிருப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ஆனால், ரோசி சேனாநாயக்கவும் ஏனைய மூவரும் அப்படியான ஒரு கடிதம் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அடித்து மறுப்புக் கூறுகின்றனர். இதுபற்றி சஜித் பிரேமதாசவிடம் வினவியபோது, கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது என்ற தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். ஆவணி 22, 2011 வடகொரிய ஜனாதிபதி கிம் 9 ஆண்டுகளுக்கு பின் ரஷ்யா பயணம்வடகொரியா ஜனாதிபதி கிம் ஜோங் இல் தனி ரயில் மூலம் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள காசன் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிழக்கு சைபீரியாவில் உள்ள 3 வது பெரிய நகரான உலான் உடே நகரில் அவர் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடேவை சந்தித்து பேசவுள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் இப்போது தான் முதல் முறையாக வட கொரிய ஜனாதிபதி கம் ரஷ்யாவுக்கு செல்கிறார். அவர் ரஷ்யாவில் ஒரு வாரம் தங்கி இருப்பார் என்று தெரிகிறது. கடந்த ஒரு ஆண்டு காலத்தில் அவர் சீனாவுக்கு 3 முறை சென்றார். அதன் பின்னர் அவர் இப்போது ரஷ்யாவுக்கு சென்று இருக்கிறார். பேரழிவை ஏற்படுத்திய வெள்ளம், பொருளாதாரத் தடை ஆகியவை காரணமாக பெரும்பாதிப்புக்கு உள்ளான வடகொரியாவுக்கு இப்போது பொருளாதார உதவி தேவைப்படுகிறது. இதன் காரணமாக தான் அவர் ரஷ்யாவுக்கு சென்று இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஆவணி 22, 2011 அன்னா ஹசாரேயால் மத்திய அரசு தடுமாற்றம்; ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் இந்திய மத்திய அரசு திணறிப்போயுள்ளது. ஊழல் எதிர்ப்புக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்து வருவதும் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாராளுமன்றத்தில் பலமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி காந்தியவாதி அன்னா ஹசாரே மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரண்டு வரும் மக்கள் ஹசாரேவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். டில்லியில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஊழலுக்கு எதிரான மக்களின் எழுச்சி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. படித்தவர்களும், பணக்காரர்களும் மட்டுமே ஹசாரேயின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் என்ற அரசின் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் அனைத்துத் தரப்பு மக்களும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது மத்திய அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. (மேலும்....) ஆவணி 22, 2011 திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் இரகசிய அறையில் இருந்து கடலுக்கு சுரங்கப்பாதையா? திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளை திறந்து அங்கிருக்கும் நகை மற்றும் பொருட்களை மதிப்பீடு செய்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்து உத்தரவிட்டது. இக்குழுவினர் கோவிலின் 5 அறைகளை திறந்து ஆய்வு செய்ததில் மட்டும் பல லட்சம் கோடி மதிப்பிலான நகைகள் இருந்ததை கண்டனர். அடுத்து அறாவது அறையை திறக்க முயன்றபோது அதற்கு கோவிலை நிர்வகிக்கும் மன்னர் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே கோவிலில் இருந்து கடலுக்கு ஒரு சுரங்கப்பாதை இருப்பதாக பக்தர்கள் மத்தியில் ஒரு தகவல் பேசப்பட்டு வந்தது. தற்போது இந்த சுரங்கப்பாதை திறக்கப்படாத 6வது அறையில் இருந்து தொடங்குவதாகவும் எனவே அந்த அறையை திறக்கக்கூடாது என்றும் சிலர் பேசி வருகிறார்கள். (மேலும்....) ஆவணி 22, 2011 விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு! விண்வெளியில் ஆய்வு நடத்த அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் கெப்லர் என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. அது விண்ணில் பறந்து ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு புதிய கிரகம் இருப்பதை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்து படம் எடுத்து அனுப்பியுள்ளது. அது அளவில் பெரிய கிரகமான வியாழனை விட மிக பெரியதாக உள்ளது. அதற்கு ‘ட்ரெஸ்-2 பி’ என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது மஞ்சள் நிறத்திலான நட்சத்திரங்களின் இடையே பதுங்கி கிடக்கிறது. அதன் மீது சூரியனின் 1 சதவீத வெளிச்சம் மட்டுமே விழுகிறது. இதனால் இந்த கிரகம் கரியைவிட மிகவும் கறுப்பு நிறத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பில் பல கியாஸ் பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில் இந்த கிரகம் கடும் வெப்பமாக உள்ளது. இங்கு 1800 பாகை பரனைட் வெப்பம் நிலவுகிறது. அதிலிருந்து வெளியாகும் வெப்ப கதிர்கள் மங்கலான சிவப்பு கதிர்களாக தெரிகிறது. ட்ரெஸ்-2 பி கிரகம் குறித்து கெப்லர் விண்கலம் மூலம் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆவணி 21, 2011 இலங்கைத் தமிழர் விவகாரம்:டில்லியில் மாநாடு 10 தமிழ்க் கட்சிகளுக்கு தனித்தனியே அழைப்பு! இலங்கைத் தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாட்டை ஏற்படுத்துவதை நோக்கம் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் இந்த வாரம் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக இரு நாள் மாநாடு இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு 10 இலங்கை தமிழ்க் கட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருக்கிறது. துயரும் தீர்வும்' என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது. உலக முன்னேற்றத்திற்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பினால் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 23, 24 ஆம் திகதிகளில் பகல் 11 மணி5 மணி வரை இந்த மாநாடு இடம்பெறவிருக்கிறது. தமிழகத்தின் சிவகங்கை தொகுதியைச் சேர்ந்த இராஜ்ஜிய சபா எம்.பி.யான டாக்டர் இ.எம். சுதர்ஷன நாச்சியப்பன் மாநாட்டின் ஏற்பாட்டாளராவார். உலக முன்னேற்றத்திற்கான மனித உரிமைகள் தொடர்பான இந்திய பாராளுமன்ற அமைப்பில் 150 எம்.பி.க்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையான லோக்சபா, மாநிலங்கள் அவையான இராஜ்ஜிய சபா ஆகியவற்றின் எம்.பி.க்களே இதில் இடம்பெற்றுள்ளனர். (மேலும்...) ஆவணி 21, 2011 அதிர்ச்சித் தகவல்களும் அம்பலமாகும் உண்மைகளும் யாழில் சமூக சீர்கேடுகள் கலாசாரத்தின் ஆணிவேரை அழிக்கின்றனவா? ![]() முப்பது வருடகால யுத்தம், அழுகை, கதறல், ஓலம், ஒப்பாரி என துன்பியல் வாழ்க்கையைக் கடந்து மற்றுமொரு பரிமாணத்தில் குடாநாடு காலடி எடுத்துவைத்திருக்கும் காலம் இது. எதிர்காலத்தை ஏக்கத்தோடு பார்த்த காலம் தள்ளிப்போய் எதிர்பார்ப்புகளை மனதில் விதைத்து நாளைய பொழுதுகளை நம்பிக்கையோடு எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது நம் தமிழச் சமூகம். இந்நிலையில் யாருக்கும் தெரியாமல் முளைவிட்டு எமது சமூகத்தின் ஆணிவேரையே அசைக்க முற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு பிரச்சினையாக கலாசார சீர்கேடு மாறியுள்ளது. ஆங்காங்கே நடக்கும் விபச்சாரம், பள்ளிக்குச் செல்லும் இளம் பெண்களின் கர்ப்பம் தரிப்பு வீதம் அதிகரிப்பு, சூறையாடப்படும் சிறுவர் வாழ்க்கை, கயவர்களின் கையில் சிக்கித் தவிக்கும் திருமணமாகாத பெண்கள், தென்னிலங்கை மக்களின் வருகை மற்றும் வெளிநாட்டு மோகம் ஏற்படுத்தியுள்ள நாகரிகத் தாக்கம் என இதனை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். (மேலும்...) ஆவணி 21, 2011 இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன் இந்தியாவை மிரட்டும் இலங்கை அரசின் துருப்புச் சீட்டு குமரன் பத்மநாதன் என ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மத்திய குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளராக செயற்பட்ட முன்னாள் அதிகாரி மோகன்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் விசாரிக்க வேண்டிய மிக முக்கிய நபர்களென சந்திரசுவாமி சுப்பிரமணிய சுவாமி குமரன் பத்மநாதன் ஆகியோரைக் குறிப்பிடுகின்றார். இவர்கள் கைது செய்யப்பட்டு நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் போது அக்கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை விட பாரதூரமான குற்றவாளி களான பலர் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார். (மேலும்...)
ஆவணி
21, 2011 ![]()
யாழ். குடாநாட்டின் தீவுப் பகுதியை நோக்கி தெற்கின் கவனம் திரும்பியுள்ள
நிலையில் உள்ளூர் மீனவர்களிடையே அச்சமான சூழல் எழுந்துள்ளது. அண்மையில்
புங்குடுதீவை வந்தடைந்த தெற்கு பெரும்பான்மையின மீனவர்கள் தொடர்ந்தும் அங்கு
தங்க வைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் மீனவர்களிடையே சந்தேகம் தொடர்கின்றது.
அதேவேளை நெடுந்தீவிற்கும் தெற்கு மீனவர்கள் வருகை தரவுள்ளதாக வெளியாகியுள்ள
தகவல்கள் அங்கும் குழப்பகரமான சூழலொன்றை ஏற்படுத்தியுள்ளது.
(மேலும்...) ஆவணி 21, 2011 வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது! ![]() வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் புலி உறுப்பினர்கள் தொடர்ந்தும் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்ந்தும் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டுக்கான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பயங்கரவாதம் தொடர்பான அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. எவ்வாறெனினும், 2010ம் ஆண்டில் இலங்கையில் எதுவித பயங்கரவாத நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலிகள் அமைப்பினை அமெரிக்கா தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. (மேலும்...) ஆவணி 21, 2011 சுரேஷ் பிரேமச்சந்திரனும் வருடாந்த மாநாடும் – கற்றவை குறித்த குறிப்புக்கள் (சபா நாவலன்) 80 களில் இந்திய அரசு ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதற்கு சற்று முற்பட்ட காலப்பகுதியில் தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிரான மக்கள் இயக்கங்களின் நம்பிக்கை தரும் ஆரம்ப நிலை வளர்ச்சி அதிகார வர்க்கத்தை அச்சுறுத்தியது. சிறு குழுக்கள் மக்கள் திரள் அமைப்புக்களை உருவாக்கின. எழுச்சி மிக்க மாணவர் போராட்டங்கள், ஆரோக்கியமான கருத்து மோதல்கள், கிராமப் புறங்களில் உருவான வெகுஜன அமைப்புக்கள் என்பன எல்லாம் சமூகத்தில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும் இயக்கங்களாக அமைந்தன. இவற்றில் குறிப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (E.P.R.L.F) சமூக இயக்கத்தில் குறித்துக்காட்டத்தக்க பாத்திரத்தை வகித்திருந்ததை யாரும் மறுக்க முடியாது. (மேலும்...) ஆவணி 21, 2011 பிரபாகரன் உயிருடன் இருந்தால் கொழும்பு - 7 உள்ள வீடொன்றில் இருந்திருப்பார் - பொன்சேக்கா! தனது சிறைக்கூடத்திற்கு மின்விசிறியொன்றை பொறுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவை பெற நேரிட்ட போதிலும் கே.பியை கொழும்பு - 7 உள்ள வீடொன்றில் வைத்து தாலாட்டி வருவதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா தெரிவித்துள்ளார். உடற்கூற்று சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்துவரப்பட்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார். பிரபாகரன் உயிருடன் இருந்தால் அவரும் கொழும்பு – 7 இல் உள்ள வீடொன்றில் இருந்திருப்பார் என தெரிவித்த சரத் பொன்சேக்கா இராணுவ வீரர்கள் இது தொடர்பில் நன்கு அறிந்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஆவணி 21, 2011 கனடா - ரொறன்ரோ நகரில் வளரும் தொழிலதிபராகத் திகழ்ந்த மார்க் பகவத்சிங் அகாலமரணமானார் கனடா - ரொறன்ரோ நகரில் தொழிலதிபராக வளர்ந்துவந்த இளந்தமிழ்மகன் மார்க் பகவத்சிங் கடந்த 18 -ம் திகதி (18 - 08 - 2011) வியாழக்கிழமை அகாலமரணமானார். கட்டிடமொன்றில் ஏணிமீது நின்று தமது வேலைகளை மேற்பார்வைசெய்யும் வேளை தவறி விழுந்து காலமானார் எனத் தெரியவருகிறது. எம் மக்கள் மத்தியில் கடின உழைப்பின்மூலம் தொழிலதிபராக முன்னேறிவந்தவர் மார்க் பகவத்சிங். கட்டிட நிர்மாண நிறுவனத்தின் (Markwood Construction) அதிபராகத் திகழ்ந்தவர். சிரித்த முகத்தோடு அன்பொழுகப் பழகுவதோடு, சமூகநலன்களுக்கும், கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கும் உதவுவதில் பின்னிற்காத இனிய சுபாவமுடையவர். இலங்கையின் வடபுலத்தில், மார்க்சிச தத்துவ அரசியல் வழிவந்தவரும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க மூத்த தோழருமான யாழ் -நாவாந்துறையைச் சேர்ந்த சூசை மார்க் அவர்களின் மூத்த புதல்வர்தான் பகவத்சிங். இவரது இழப்பு எம் மக்கள் மத்தியில் முற்போக்கு சக்திகளுக்கும், கலை இலக்கியச் செயற்பாட்டாளர்களுக்கும் பேரிழப்பாகும். அவரோடு பழகிய இனிய காலங்கள் என்றும் மனதில் நிலைத்து நிற்கும். வி. ரி. இளங்கோவன் (பிரான்ஸ்) ஆவணி 21, 2011 ஆர்க்டிக் கடலில் அதிரடி மாற்றம்! பனி உருகுவது நின்றது? வெப்பமயமாதல் பிரச்சனையால் பனிக்கட்டிகள் உருகி வழிந்தோடிக் கொண்டிருந்த நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு இப்போதைக்கு பனி உருகுவது நின்று போயுள்ளதாக ஆர்க்டிக் கடல் பகுதி பற்றி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆர்க்டிக் பனிக்கட்டி உருகுவது பற்றி ஏராளமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை இழந்த பனிக்கட்டிகளை மீண்டும் பெற முடியும் என்று சில ஆய்வுகள் தெரிவித்தன. இத்தகைய சாதகமான நிலை உருவாவதற்கான சூழல் ஏற்பட்டாலும், தட்பவெப்ப நிலை மாறினால் மீண்டும் பனிக்கட்டிகள் உருகிவிடும் என்கிறார்கள் புதிய ஆய்வை மேற்கொண்ட சுற்றுச்சூழல் ஆய்வுக்கான தேசிய மையத்தின் ஆய்வுக்குழுவினர். இந்த மையத்தின் பேராசிரியர் ஜென்னிபர் கே ஆய்வுக்குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். இவர்களின் ஆய்வுப்படி தற்போதைய தட்பவெப்ப நிலையில் பனிக்கட்டிகள் விரிவடைகின்றன என்பது உண்மைதான். ஆனால், வரும் காலங்களில் வெப்பமயமாதல் பிரச்சனையால் வேகமாக உருகப் போகின்றன என்று தெரியவந்துள்ளது. (மேலும்...)ஆவணி 21, 2011
யாழ்.கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் காரணம்! ??? யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் கலாசார சீர்கேடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார். சமீப காலமாக யாழ்.நகரத்தில் கலாசார சீர்கேடுகள் குறித்த பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் கேள்வி எழுப்புகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ். நகரில் இயங்கும் விடுதிகளில் (லொட்ஜ்) சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அந்த விடுதிகளைப் பதிவு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் எனவும் தெரிவித்தார். (மேலும்...) ஆவணி 21, 2011 TNA கைப்பற்றிய உள்ளூராட்சி சபைகள் அரசிடமிருந்து நிதியை எதிர்பார்க்கும் சம்பந்தன்:தவறினால் புலம்பெயர் தமிழரிடமிருந்து உதவி பெறப்படும் எனவும் மிரட்டல்!!அரசாங்கம் தமிழ் மக்களுக் குரிய உரிமைகள் கிடைக்கக் கூடிய வகையிலான தீர்வுத் திட்டங்களை முன்வைத்து பேச்சு(புலி)வார்த்தைகளில் ஈடுபடுமேயானால் நாம் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்புப் பிரதிநிதிகளின் பதவியேற்பு நிகழ்வு நேற்று நல்லூரியில் நடைபெற்றது. (மேலும்...) ஆவணி 20, 2011 பிரபாகரனுக்கு ஒரு முடிவுகட்டி எனது மக்களைக் காப்பாற்றியதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் (நோயல் நடேசன்) சுதந்திரம் பெற்ற காலம் முதற்கொண்டே தமிழ் அரசியல்வாதிகள் முன்யோசனையின்றி அதீத ஆர்வத்துடன் ஒரு நெருக்கடியிலிருந்து மற்றொரு நெருக்கடிக்குள் தலையை நுழைத்து தமிழ் சமூகத்தை பாரிய விலை கொடுக்கவேண்டிய நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளார்கள். நான் ஒருபோதும் சந்தித்திராத மோசமான சூதாட்டக்காரர்கள் இவர்கள்தான். இந்துமத இதிகாசமான மகாபாரதத்தில்கூட, தருமர் தனது மனைவி திரௌபதியை மட்டும்தான் பணயம் வைத்து சூதாடினார், ஆனால் எங்களின் இந்த அரசியல்வாதிகளோ ஒவ்வொரு தமிழனின் உயிரையும் பணயம் வைத்து சூதாடுகிறார்கள். அவர்களின் தவறான அரசியல் நிகழ்ச்சித் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கை 1920ம் காலகட்டத்துக்கு பின்தள்ளியுள்ளது. எங்கள் அரசியல்வாதிகளை மகிழ்வடையச் செய்ய முயன்று தமிழ்மக்கள் பட்ட அவலங்கள் போதாதா? பாராளுமன்ற அங்கத்தவர்களாகவும்,அமைச்சர்களாகவும்,மற்றும் பல்வேறு சிறிய நிருவாகங்களிலும் இருந்துகொண்டு அவர்கள் கொழுத்த காசோலைகளைப் பெற்றுக்கொண்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்களை எமது மக்கள் பெறும் அதே வாய்ப்பை வழங்காமல் தங்களை விடுதலை வீரர்கள் எனப்பாசாங்கு செய்துகொண்டு நாளுக்குநாள் அவைகளை கண்டனம் செய்து வருகிறார்கள்.தமிழ்மக்களின் விடுதலையாளர் எனப் பறைசாற்றிக்கொண்டு பிரபாகரன் செய்ததையே சரியாக இவர்களும் செய்கிறார்கள்.(மேலும்...) ஆவணி 20, 2011 New Delhi conference aims at forging unified political stance among Sri Lankan Tamil parties Ten Sri Lankan Tamil political parties may seek solace from agony for two days on August 23rd & 24th in the Indian capital of New Delhi. 10 Tamil parties are invited to attend a conference named “Agony & Solace” to be held at New Delhi’s prestigious Constitutional club of India.This move is expected to influence Indian policy makers leading to a possible shift in New Delhi’s approach towards the Lankan Tamil issue. 2 representatives from each Tamil party at leadership level (President&secretary or their nominees) have been invited by PFHRGD to New Delhi.Though ten Tamil parties have been invited it is not clear as to whether all those invited will participate in the New Delhi conference. (more...) ஆவணி 20, 2011 டான் டிவியின் நேருக்குநேர் நிகழ்ச்சியில் வரதராஜப்பெருமாள்
கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் டான் தொலைக்காட்சியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப் பெருமாள் அவர்கள் கலந்துகொள்கிறார். இந்நிகழ்ச்சி 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 (இலங்கை நேரம்) மணிக்கு ஒளிபரப்பாகும். நேரடி ஒளிபரப்பை இணையத்தளம் ஊடாக பார்பதற்கு: http://www.dantv.tv/ ஆவணி 20, 2011 தமிழ்க் கட்சித் தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது இந்தியா? இந்திய அரசாங்கத்தின் பின்புல ஆதரவுடன் புதுடெல்லியில் அடுத்த வாரம் நடைபெறவள்ள கருத்தரங்கிற்கு 10 தமிழ் அரசியல்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வடக்கு அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஈபிடிபிக்கு இந்தக் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன. எதிர்வரும் 23,24ம் நாட்களில் புதுடெல்லியில் நடைபெறவுள்ள இந்தக் கருத்தரங்கை உலக அபிவிருத்திக்கும், மனிதஉரிமைகளுக்குமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. தமிழரசுக் கட்சி சார்பில் மாவை சேனாதிராசாவும், ஈபிஆர்எல்எவ் சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரனும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஆனந்தசங்கரியும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதனும், புளொட் சார்பில் சித்தார்த்தனும், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சார்பில் வரதராஜப்பெருமாள் மற்றும் சிறிதரன் ஆகியோரும், ஈஎன்டிஎல்எவ் சார்பில் பரந்தன் ராஜனும் இந்தக் கருதரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.ஆவணி 20, 2011 இலங்கையின் வட, கிழக்குக்குள் மட்டுப்படுத்தப்பட்டுவரும் இந்தியா இலங்கையின் வட,கிழக்குப் பகுதியை மட்டுமே இந்தியாவின் பார்வை மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.இப்போதும் இந்தியா மயிரிழையில் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பது 1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஒரு சரத்தே ஆகும். இலங்கையிலுள்ள திருகோணமலையோ அல்லது எந்தவொரு துறைமுகமோ எந்தவொரு நாட்டிற்கும் இராணுவ ரீதியான பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இந்தியாவின் நலன்கள் தொடர்பாக தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தும் தன்மையைக் கொண்டதாக எந்தவொரு நாட்டுக்கும் இலங்கைத் துறைமுகங்கள் பயன்படுத்தப்படக்கூடாது என்பதுவே அந்த உடன்படிக்கையின் சரத்து என்று இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையின் முன்னாள் தளபதி அசோக் மேத்தா குறிப்பிட்டுள்ளார். (மேலும்...) ஆவணி 20, 2011 பள்ளிவாயலுக்குள் படையினர் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் கிண்ணியா மத்திய பள்ளிவாயலுக்குள் திங்கட்கிழமை அதிகாலை புகுந்த படையினர் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது தாக்குதல் நடத்தியதோடு பள்ளிவாயலுக்கு சேதம் விளைவித்தமை குறித்து பொதுமக்கள் கடும் விசனமும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். புனித ரமழான் மாதமாக இது இருப்பதால் அதிகமானோர் பள்ளிவாயலுக்கு வந்தே தஹஜ்ஜத் தொழுகையில் ஈடுபடுவது வழக்கமாகும். சம்பவ தினமும் தொழுகையில் ஈடுபட்டோரே தாக்கப்பட்டுள்ளனர். அத்தோடு பள்ளிவாயல் பணிகளில் ஈடுபட்ட முஅத்தினும் தாக்கப்பட்டுள்ளார். பள்ளிவாயல் தொழுகை என்பன பற்றி எவ்வளவு எடுத்துக் கூறியும் தாக்குதல் நடத்தியவர்கள் அதைக் காதில் வாங்கவில்லையெனப் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.அது மட்டுமல்லாது புனிதமான பள்ளிவாயலுக்குள் சப்பாத்துகளுடன் நுழைந்த படையினர் சில குர்ஆன் பிரதிகளை காலால் மிதித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.யன்னல் மற்றும் பள்ளிவாயலுக்குள் இருந்த சில பொருட்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதோடு பள்ளிவாயல் எல்லைக்குள் இரண்டு வெற்றுத் தோட்டாக்களும் காணப்பட்டதாக நிர்வாக சபையினர் தெரிவிக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் விசனமும் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். ஆவணி 20, 2011 ஜெயலலிதா என்கிற ஆச்சரியக்குறி! (புருஜோத்தமன்) யாருக்கும் வளைந்து கொடுக்காத மனநிலையுடனேயே சந்திரிகா தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதும் செயற்பட்டார். லஷ்மன் கதிர்காமரை இலண்டனிலிருந்து அழைத்துவந்து வெளிநாட்டு அமைச்சராக்கியதன் மூலம் சர்வதேச ரீதியிலும் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பெருமையை சந்திரிகா கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் மீதான வன்முறையும்- தாக்குதல்களும்கூட குறைவின்றி நடைபெற்றன. ஆனாலும், அவரின் அண்மைக்கால மனநிலை மாற்றங்கள் சிந்திக்க வைப்பதற்குப் பதில் சிரிக்க வைக்கின்றன. அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவுடன், தமிழர்கள் மீதான பழைய பாசம் பற்றிக் கொண்டிருக்கிறது. அதுபோலவே, ராஜிவ் காந்தியின் கொலையுடன் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிராக முடிவுகளை எந்தவித சமரசமுமின்றி எடுத்து வந்தவர் ஜெயலலிதா. ‘முள்ளிவாய்க்கால் இறுதிக்கணம் வரை' ஈழத் தமிழர்களின் மீது அக்கறையின்றியிருந்த ஜெயலலிதாவுக்கு எப்படி, 2009 மே 19க்குப் பின்னர் அப்படியொரு பாசமும்- அக்கறையும் ஒட்டிக்கொண்டது. விடுதலைப் புலிகளை அவர் எதிர்த்தமை தொடர்பில் எனக்கு பெரிய கருத்துக்கள் எதுவுமில்லை. ஆனால், ஈழத்தமிழர்களை ஜெயலலிதா ஓரக்கண்ணால்கூட பார்க்கத் தயாராக இருக்கவில்லை. அது என்றைக்குமே உறுத்தலான விடயம். (மேலும்...) ஆவணி 20, 2011 முல்லைத்தீவு கரைதுறைப்பற்று, கோம்பாவில் மீள்குடியேற்றம் முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில் இன்னும் 10 தினங்களில் மக்கள் சொந்த காணிகளில் குடியமர்த்தப்படவுள்ளதாக பிரதேச செயலாளர் தயானந்தா நேற்று தெரிவித்தார். கருநாட்டுக்கேணி பகுதியில் மிதிவெடிகள் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமைக்கான சான்றிதழ்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீள்குடியேற்றத்துக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஐந்து மாதங்களாகிவிட்டபோதிலும் தமது சொந்தக் காணிகளுக்கு இன்னும் தங்களை அனுப்பிவைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கருவாட்டுக்கேணி மக்கள் கவலை தெரிவித்திருந்தனர். (மேலும்...) ஆவணி 20, 2011 நெருக்கடியில் சிக்காத வெனிசுலா ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பொருளாதார நெருக்கடியால் கடுமை யாகப் பாதிக்கப்பட் டுள்ளன. அதே வேளையில் வெனிசுலாவின் பொருளா தாரம் நிலையாக இருப்ப தோடு, ஒவ்வொரு நாளும் பலப்பட்டு வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன் பாக சர்வதேச ஊடகங் களில் ஒரு செய்தி வெளி யானது. உலகம் முழுவதும் பங்குச்சந்தைகள் சரிவடைந் துள்ளன. அந்த சரிவில் வெனி சுலாவின் பங்குச்சந்தை மட்டுமே பாதிக்கப்பட வில்லை என்பதுதான் அந் தச் செய்தியாகும். ஐரோப்பிய நாடுகளில் உள்ள நிலைமைக்கு மாறாக சர்வதேச நிதிநிறுவனங் களின் பிடியில் சிக்காமல் சுயேச்சைத்தன்மையோடு வெனிசுலா இயங்கிக் கொண் டிருக்கிறது. இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ள ஸ்பெயின் மற்றும் கிரீஸ் போன்றவை சர்வதேச நிதி நிறுவனங்களின் வசம் சிக் கிக் கொண்டுள்ளன. நெருக் கடியிலிருந்து அமெரிக்கா தப்பித்துக்கொள்ள முடி யாது. (மேலும்...) ஆவணி 20, 2011 மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் உறுதிப்படுத்தப்பட்டால் இலங்கை பொருளாதாரத்தில் தன்னிறைவு மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வள ஆய்வுப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு எண்ணெய் வள இருப்புத் தொடர்பான உண்மையான, முழுமையான தகவல்களை 2012 ஆம் ஆண்டிலேயே வெளிபடுத்த முடியும் என்று அகழ்வுப்பணியில் ஈடுபட்டுள்ள கெய்ன் லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது எண்ணெய் வளத்தை அறிந்துகொள்வத ற்கான அகழ்வுப் பணிகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அகழ்வுப் பணிகளுக்காக சீனாவின் தயாரிப்பான அதிநவீன அகழ்வுக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. ‘சிக்கு’ என்ற பெயருடைய சகல வசதிகளையும் கொண்ட இந்த அதிநவீன கப்பல் ஆழ்கடலில் நங்கூரமிட்டு அகழ்வுப் பணிகளை வெற்றிகரமான முறையில் முன்னெடுத்து வருவதாக இந்தியாவிலிரு ந்து இலங்கை வந்த இந்த நிறுவனத்தின் உயரதிகாரியொருவர் பிரத்தியேக பேட்டியில் குறிப்பிட்டார். (மேலும்...) ஆவணி 20, 2011 ஆப்கானிஸ்தான் அமெரிக்க ராணுவமுகாம் தரைமட்டம் ஆப்கானிஸ்தான் பாக் டியா மாகாணத்தின் தலை நகரான கார்டெஸ் நகரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 27 அமெரிக்க ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அமெரிக்க ஏகாதிபத் தியத்தின் ஆக்கிரமிப்பு வெறிக்கு அந்நாட்டின் ராணுவத்தினர் பலியாவது தொடர்ந்து கொண்டிருக் கிறது. கார்டெஸ் முகாமிற் குள் ஏராளமான வெடி குண் டுகள் வைக்கப்பட்டிருந்த வாகனம் ஒன்றை அனுப்பி இந்தத் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. பெரும் அள வில் குண்டுகள் வெடித்த தால் முகாமில் இருந்த 27 ராணுவத்தினர் அதற்குப் பலியானார்கள். மேலும் 34 பேர் காயமடைந்து, மருத் துவமனைகளில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். (மேலும்...)ஆவணி 20, 2011 வடஇலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது வடபகுதியின் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய வேண்டுமா யின், தென்னிலங்கையை வட இலங்கையுடன் இணைக்கும் பாரிய வீதிகளை திருத்தி அமைத்தல் அவசியம் என்பதனால், இன்று வட பகுதிக்கான பிரதான வீதிகள் மட்டுமல்ல, கிராமங்களை இணைக் கும் சிறிய வீதிகளும் வேகமாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், வடபகுதியிலுள்ள சகல கிராமங்களுக்கும் மின்சார இணை ப்பை பெற்றுக் கொடுப்பதுடன், தரைக்கண்ணிவெடிகளை முற்றாக அகற்றி விளைச்சல் நிலங்களில் மீண்டும் விவசாயத்தை ஆரம்பிப் பதற்கான உரப்பசளை, உழவு இயந்திரங்கள் மற்றும் நீர்ப்பாசன வசதிகளையும் அரசாங்கம் இப்போது துரித கதியில் பெற்றுக் கொடுத்து வருகிறது. (மேலும்...) ஆவணி 20, 2011 அன்னா ஹசாரே முக்கிய கோரிக்கையை எதிர்க்கட்சிகள் நிராகரித்தன ஊழலுக்கு எதிராக உண் ணாவிரதப் போராட்டம் மேற்கொண்ட அன்னா ஹசாரேவை கைது செய்த மத்திய அரசு 12 மணி நேரத் தில் அவரை விடுதலை செய்ய வேண்டிய நெருக்கடிக்கு ஆளானது. அன்னா ஹசாரே எதிர்ப்பு விவகாரத்தில் அரசு தவறுதலாக நடந்து கொண் டது. ஹசாரேவின் எதிர்ப் பை ஆதரித்த பாஜக உள் ளிட்ட கட்சிகள், அவரது முக் கிய கோரிக்கையான தங்க ளது ஜன்லோக் பால் மசோதா வரைவை சட்டமாக்க வேண் டும் என்ற கோரிக்கையை நிராகரித்தன. (மேலும்...)ஆவணி 20, 2011 நேபாளத்தில் பிரதமர் பதவிக்கு போட்டி நேபாளத்தில் பிரதமர் பதவி தங்கள் கட்சிக்குதான் வேண்டும் என மாவோயிஸ்டுகளும் நேபாள காங்கிரஸும் முரண்டு பிடித்துவருவதால் சிக்கல் நீடித்து வருகிறது. நேபாளத்தில் 2008ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாவோயிஸ்டுகள் 238 இடங்களையும் நேபாள காங்கிரஸ் 114 இடங்களையும் பெற்றன. இதனால் அதன் பிறகு நிலையான அரசு அமையவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் 21ம் திகதிக்குள் புதிய பிரதமர் பதவி ஏற்க வேண்டும் என அதிபர் ராம் பரண் யாதவ் கெடு விதித்துள்ளார். இதையடுத்து, இரு கட்சிகளின் தலைவர்களும் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். அரசுக்கு தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்தான் தலைமை வகிக்க வேண்டும் என இரு கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியதால் சுமுகத் தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே மற்ற கட்சிகளின் தலைவர்களையும் இரு கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆவணி 20, 2011 லிபியாவில் கடாபி தலைமறைவானார் புரட்சிப்படை திரிபோலியை நெருங்குகிறதுலிபியாவில் புரட்சிப்படை திரிபோலிக்கு கிழக்கேயும், மேற்கேயும் கடாபி ஆதரவுப் படைகளுடன் மோதி வருகின்றன. எண்ணெய் கிணறுகளை தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வருவதற்காக புரட்சிப்படைகள் இராணுவத்துடன் சண்டை செய்து வருகின்றன. லிபியாவை கண்காணிப்பதற்காக ஆள் இல்லாத கண்காணிப்பு விமானங்களை அமெரிக்கா புரட்சிப்படைக்கு அனுப்பி உள்ளது. அந்த விமானங்கள் நேற்று முன்தினம் லிபியாவுக்கு வந்து சேர்ந்தன. பிரேகா நகரில் புரட்சிப் படை நடத்திய தாக்குதலில் இராணுவ வீரர் 18 பேர் பலியானார்கள். 35 பேர் காயம் அடைந்தனர். 69 வயதான ஜனாதிபதி கடாபி எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். மேற்கு தெற்கு, கிழக்கு ஆகிய 3 திசைகளில் இருந்தும் திரிபோலியை நோக்கி புரட்சிப் படை முன்னேறி வருகிறது. விரைவில் திரிபோலி புரட்சிப்படைகளிடம் வீழ்ந்து விடும் என்று கூறப்படுகுறது. ஆவணி 19, 2011 வாழும் மனிதம் - 2 காலம்: ஆகஸ்ட் 27, 2011 – சனிக்கிழமை பிற்பகல் 3 மணி – 6 மணி வரை இடம்: ஸ்காபரோ சிவிக்சென்ரர் மண்டபம் (கனடா) (மக்கோவன் - எல்ஸ்மெயர்) சிறப்புரை: பிரித்தானியாவிலிருந்து வருகை தரும் மூத்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 'போருக்குப் பின்னரான சமூக மாற்றமும் முற்போக்குவாதிகளின் பங்களிப்பும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தேவன் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு தொடர்புகளுக்கு: manitham1@hotmail.ca ஆவணி 19, 2011 ஐ.நா.வின் பின்னணியில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு எதிராக ஐ.நா. போர்க்குற்ற அறிக்கை தயாரித்தமை; அதனை ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கையளித்துள்ளமை ஆகிய நடவடிக்கைகள் அரசியல் உள் நோக்கம் கொண்டவையாகும். இதன் பின்னணியில் புலம்பெயர் தமிழர்களேயுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை சீர்குலைக்கும் நோக்கில் புலம் பெயர் தமிழர்கள் உலக நாடுகளில் தமது செயற்பாட்டை ஆரம்பித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார். (மேலும்...)ஆவணி 19, 2011 மூன்று மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி போராட்டம் தொடரும் என சிலி மாணவர்கள் அறிவிப்பு கல்வியை வியாபார மாக்க வேண்டாம் என்ற கோரிக்கையுடன் காலவரை யற்ற உண்ணாவிரதம் இருக் கும் சிலி மாணவர்களில் மூன்று பேர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள் ளனர். ஒரு மாதத்திற்கு முன்ன தாக எட்டு மாணவர்கள் காலவரையற்ற உண்ணா விரதத்தைத் துவக்கினர். மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களின் எண் ணிக்கை தற்போது 30 ஆக உயர்ந்துவிட்டது. இதில் மூன்று மாணவர்களின் உடல் நிலை மோசமான தால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட் டனர். அங்கும் அவர்கள் உணவருந்த மறுத்தனர். பின்னர், மாணவர்களின் வலியுறுத்தலால் ஒரு லிட் டர் நீரை மட்டும் மூவரும் பகிர்ந்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.(மேலும்...)ஆவணி 19, 2011 மர்ம மனிதர்களின் அச்சுறுத்தலைக் கண்டித்து வவுணதீவிலும் மக்கள் ஆர்ப்பாட்டம் ![]() மர்ம மனிதர்களின் அச்சுறுத்தலைக் கண்டித்து வவுணதீவு பொதுமக்கள் நேற்று வவுணதீவு பொலிஸ் நிலையம் முன்பாக ஒன்று திரண்டு பாரிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுணதீவு பிரதேசத்தில் மர்ம மனிதர்களின் அச்சுறுத்தல் இருப்பதாகவும் அதேபோன்று மர்மமனிதர்கள் எனும் சந்தேக நபர்கள் சிலர் நேற்று முன்தினமிரவு அங்கு நடமாடியதாகவும் தெரிவித்த பொதுமக்கள் இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (மேலும்...) ஆவணி 19, 2011 அமெரிக்காவில் பெண்னைக் கடித்து இரத்தம் குடிக்க முயன்ற இளைஞன் கைது அமெரிக்க டெக்ஸாஸ் மாகாணத்தில் பெண்களின் கழுத்தைக் கடித்து அவர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இளைஞன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். 19 வயதான குறித்த இளைஞன் அங்குள்ள தொடர்மாடி மனையொன்றிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணின் கழுத்தைக் கடித்து இரத்தத்தை குடிக்க முற்பட்ட வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளான். தற்போது அந்நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் மனநல சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தான் 500 வருடங்கள் பழமையான 'வெம்பயர்' என அந்நபர் கைது செய்யப்பட்டபோது தெரிவித்ததாக அம் மாகாண பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்காவில் தற்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க இளைஞர் கலாசாரத்தில் வெம்பயர் தொடர்பான புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை அதிகமாக கலந்துள்ளமையே இதற்கான காரணமெனவும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆவணி 19, 2011 மதவாச்சியிலிருந்து திருமலை வரை புதிய ரயில் பாதை அமைக்கத் திட்டம் மதவாச்சியிலிருந்து திருகோணமலை வரையில் புதிய ரயில் பாதையொன்றை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சுமார் 90 கிலோ மீற்றர் நீளத்தில் இப்புதிய பாதையை அமைப்பதற்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை நடத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான ஆய்வுகளை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மனித வள பிரிவு மேற்கொள்ளவுள்ளது. போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கமவின் ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருக்கிறது என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். ஆவணி 19, 2011 சிங்கப்பூரில் வேலை செய்வோருக்கு கடுமையான விதி அமுல்சிங்கப்பூரில் வெளிநாட்டவர்கள் வேலைவாய்ப்புப் பெறுவதற்கான விதிகளை அந்நாட்டு அரசு மேலும் கடுமையாக்கியுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் அடித்தள வேலைவாய்ப்புகள் பிற நாட்டவருக்குக் கிடைப்பது இனி சிரமமாக இருக்கும். சிங்கப்பூரில் தற்போது 35 சதவீதம் வெளிநாட்டவர்கள் வசித்து வருகின்றனர். அந்நாட்டு சட்டப்படி, அங்குள்ள வெளிநாட்டவர் தற்போது, மாதம் குறைந்தபட்சம் 2,800 சிங்கப்பூர் டொலர் சம்பாதித்தால் தான், அங்கு பணிபுரிவதற்கான அனுமதியைப் பெறலாம். இந்த விதி திருத்தப்பட்டு, மாதம் 3,000 சிங்கப்பூர் டொலர் சம்பாதிக்க வேண்டும் என்ற புதிய விதி, 2012ம் ஆண்டு முதல் அமுலுக்கு வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக அங்கு வேலைக்காக வரும் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்து வருவதால், குறைந்த சம்பளம் உள்ள வேலை கூட உள்நாட்டவர்களுக்குக் கிடைக்கவில்லை என்ற புகார்கள் அதிகரித்து வந்தன. ஆவணி 19, 2011 நெருக்கடி நேரத்தில் ஆடம்பரச் செலவா? ஸ்பெயினில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் போப் வருகையை யொட்டி ஆடம்பரமான அளவில் செலவுகள் செய்து ஏற்பாடு கள் நடந்து கொண்டிருப் பதைக் கண்டித்து ஆயிரக் கணக்கானோர் ஸ்பெயி னின் மாட்ரிட் நகரில் ஆர்ப் பாட்டம் நடத்தியுள்ளனர். கடுமையான பொருளா தார நெருக்கடியை சந்தித் துக் கொண்டிருக்கும் ஸ்பெ யினில், நடுத்தர மற்றும் சாதா ரண மக்கள் மீதுதான் அந்த சுமை ஏற்றப்பட்டுக் கொண் டிருக்கிறது. இந்நிலையில் நான்கு நாள் பயணமாக ஸ்பெயினுக்கு வரும் போப் புக்கு வரவேற்பு தருவதற் காக ஏராளமாக செலவு செய்யப்படுகிறது. எம்-15 உள்ளிட்ட பல்வேறு அமைப் புகள் இத்தகைய செலவு களைக் கடுமையாக விமர் சனம் செய்துள்ளன.(மேலும்...)ஆவணி 19, 2011 ஹசாரே போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா?அன்னா ஹசாரே போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது. சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நடக்கும் ஒரு போராட்டத்துக்கு ஆதரவாக அமெரிக்கா ஏன் பேச வேண்டும் எனக் கேட்டுள்ள காங்கிரஸ் கட்சி இந்த போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருக்கலாம் என்று சூசகமாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவை சீர்குலைய வைக்க மறைமுகமாக முயற்சிக்கும் சக்தி குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் கட்சி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் வரைவு லோக்பால் மசோதாவை திணிப்பதன் மூலம் அன்னா ஹசாரே குழுவினர் மிரட்டுகின்றனர் என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. (மேலும்...) ஆவணி 19, 2011 காதை உறுத்தும் இரைச்சல் இரைச்சல் 130 டெசிபலை எட்டினால் நமது காதுகள் தாங்காது. பொத்திக்கொண்டு விடுவோம். டெசிபல் என்பது சத்தத்தின் அளவை அளவிடப் பயன்படும் ஓர் அலகு. சப்த அலைகளின் பலத்தைக் குறிப்பது அது. காற்றில் இருக்கும் இலட்சக் கணக்கான மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று உரசி மோதிக்கொள்வதால் சப்தம் எழுகிறது. தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹம்பெல்லை பெருமைப்படுத்துவதற்காக விஞ்ஞானிகள் உருவாக்கிய வார்த்தை தான் டெசிபல் என்பது. சப்த அலைகளில் கிரஹம்பெல் கொண்ட ஆர்வம்தான் அவர் தொலைபேசியை கண்டுபிடிக்கக் காரணமானது. நம் அன்றாட வாழ்வில் நிகழும் சில நிகழ்வுகளின் டெசிபல் அளவு எவ்வளவு தெரியுமா? மரத்தின் இலைகள் காற்றில் இலே சாய் அசைந்து ஒருவித சப்தத்தை உண்டாக்குகின்றன அல்லவா? அதன் அளவு 10 டெசிபல்கள். சில அடிகளுக்கு அப்பாலிருந்து ஒருவர் இரகசியக் குரலில் பேசினால் அது 20 டெசிபல். தொலைக்காட்சிப் பெட்டியை போட்டுவிட்டு ஒரு வீட்டின் சப்த அலைகளைக் கணக்கிட்டால் அது 50 டெசிபல். ஒரு கார் தொழிற்சாலையின் இரைச்சல் 95 டெசிபல். ஒரு நிமிடத்துக்கு 16 ஆயிரம் தடவைகள் சுழலும் விமானத்தின் ‘புரொப்பெல்லர்கள்’ ஏற்படுத்தும் ஓசை 120 டெசிபல்கள். ஆவணி 19, 2011 ஊழல் குற்றச்சாட்டு பிரேசிலின் நான்காவது அமைச்சர் ராஜினாமாஊழல் குற்றச்சாட்டு காரணமாக பிரேஸின் நான்காவது அமைச்சரும் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரேஸில் விவசாயத்துறை அமைச்சர் வொக்னர் ரொஸ்ஸி நேற்று தனது பதவியை ராஜினாமாச் செய்தார். வொக்னர் ரொஸ்ஸி ஊழலில் ஈடுபட்டதாகவும், விவசாய நிறுவனங்கள் மூலம் இலவசமாக விமானப் பயணங்களில் ஈடுபட்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே அவர் தமது பதவியை ராஜினாமா செய்தார். எனினும் அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என ஜனாதிபதி பில்மா ரொஸ்ஸேப் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ரொஸ்ஸேப்பின் ஆட்சியில் பதவி விலகும் 4 ஆவது அமைச்சர் இவராவார். இதற்கு முன்னர் பிரேஸில் பாதுகாப்பு அமைச்சர் நெல்சன் ஜொபின், போக்குவரத்து அமைச்சர் அல்பெர்டோ நசிமென்டோ, அமைச்சரவையின் பிரதானி அன்டோனியோ பெலொசி ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தமது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தியாவும் பிரேசிலை முன்மாதிரியாகக் கொண்டு செயற்படுமா என அரசியல் ஆர்வலர்கள் கேட்கின்றனர். ஆவணி 19, 2011காந்தியின் வழியை பின்பற்றும் ஹசாரே?தேசத் தந்தை மகாத்மா காந்தியின் வழியை, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பின்பற்றுவதாக, காந்தியின் பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, காந்தியின் வழியை பின்பற்றும் ஹசாரேவுக்கு, அவருக்கு கிடைத்த வெற்றியைப் போல, இவருக்கும் நிச்சயம் மகத்தான வெற்றி கிடைக்கும் காந்தியின் போராட்டம், நண்பகர்களுக்காக பகைவர்களை எதிர்த்து போராடினார். ஹசாரேவின் போராட்டம், எதிரிகளிடமிருந்து (ஊழல் பெருச்சாளிகளிடமிருந்து) நாட்டை காப்பாற்றுவதாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார் ஆவணி 18, 2011 இலங்கையில் கிறிஸ் பூதமும், பதட்டமும் (அ. விஜயன்) இலங்கையில் போர் எனும் பூதம் ஓய்ந்து மக்கள் நிம்மதியாக வாழ தொடங்கிய நேரம் இந்த பூதம் புறப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட பூதங்கள் மத்தியில் மக்கள் சின்னாபின்னமாக்கப்பட்டு சீரழிந்து தற்போது இயல்பாக வாழத் தொடங்கிய போது இந்த பூதத்தின் பின்னணி யார் இதை ஏன் செய்கிறார்கள் என்ற உண்மை யாருக்கும் இதுவரை தெரியவில்லை. கிழக்கு மாகாண மக்களிடம் கேட்டால், பூதத்தின் கதையை சொல்லி கதிகலங்குகிறார்கள். யார் இதை செய்கிறார்கள் எனக்கேட்டால் வழக்கம் போல் இலங்கைப் படைகளை குற்றம் சொல்கிறார்கள். மக்கள் துரத்தினால் அந்த பூதம் நேராக படை முகாம்களுக்குள் நுழைவது அதற்குச் சான்றாக அமைகிறது. (மேலும்.....) ரொராண்டோ கொண்டாட்டங்களும் நட்சத்திர திருவிழாக்களும் (தமிழன்) கனடா ரொராண்டோவில் தமிழர் மத்தியில் நடை பெறுகின்ற கொண்டாட்டங்களும் நட்சத்திர திருவிழாக்களும் தமிழ் மக்களிடம் பணத்தை சுரண்ட நடாத்தும் கூத்துக்களில் இதுவும் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் இப்படி பல கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் என்று நடாத்தி மக்கள் பணத்தை வசூலித்தவர்கள் 2009ஆம் ஆண்டு காலபகுதியில் அதை நிறுத்தி தற்போது மீண்டும் மக்கள் மத்தியில் அரங்கேற்றியுள்ளனர். இங்கு வாழும் இவ் மக்கள் மீண்டும் இவ்வாறான கொண்டாட்டங்களும் திருவிழாக்களும் சென்று தங்கள் பணத்தை வாரி வாழங்குவர்களா? மக்களை முட்டாள்கள் ஆக்கும் கூட்டம் உள்ளவரை முட்டாள்ளாகும் மக்களும் இருப்பார்களா? அதில் சந்தேகம் இல்லை. (மேலும்.....) ஆவணி 18, 2011 கிறீஸ்' மனிதர்களின் மர்ம உலா, இலங்கையில் என்ன நடக்கிறது? (எம்.ரிஷான் ஷெரீப்)
'எல்லாள மன்னனைப் போரில் வென்ற துட்டகைமுனு மன்னனுக்குச் சொந்தமான போர்வாளைக் கண்டுபிடித்துத் தன்னகத்தே வைத்திருக்கும் அரசனின் ஆட்சி நீடிக்கும்' என்ற ஆதி நம்பிக்கைக்கிணங்கி, ஜனாதிபதி ஒவ்வொரு ஊருக்கும் இராணுவத்தினரை இரவில் அனுப்பி அவ் வாளைத் தேடுகிறார் என்பது பாமர மக்களின் கருத்து. எவ்வாறாயினும் எல்லோரையும் பீதியில் ஆழ்த்தியிருக்கும் இம் மர்ம மனிதர்கள் அரசைச் சார்ந்தவர்கள் என்பது மட்டும் எல்லோரதும் ஒருமித்த ஏக கருத்தாக இருக்கிறது. அவ்வாறில்லையெனில் அதனை நிரூபிக்க வேண்டியதுவும், சம்பந்தப்பட்ட மர்ம மனிதர்கள் யாரெனக் கண்டுபிடிப்பதுவும் அரசின் அத்தியாவசியமான கடமையாக உள்ளது. (மேலும்....) ஆவணி 18, 2011 அமெரிக்க அரசுக் கடன் நெருக்கடி (இ.எம்.ஜோசப்) தர நிர்ணய வரலாற்றில் முதல்முறை யாக அமெரிக்க அரசாங்கத்தின் கடன் மிக உயர்ந்த AAA நிலையிலிருந்து AA+ என ஒரு படி கீழிறக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் என்ற தர நிர்ணய நிறுவனம் இதைச் செய்திருக்கிறது. (அமெரிக்கா வில் 2008ல் திவாலான பல கம்பெனி களுக்கு, அதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை உயர்நிலை தரச்சான்று வழங்கி, அதனால் சந்திசிரித்த நிறுவனமே இது என்பது தனிக்கதை) அமெரிக்க அரசின் கடன் அளவு 14.3 டிரில்லியன் (இலட்சம் கோடி) டாலர் அளவினைத் தாண்டிய நிலையில், ஆளும் ஜனநாயகக் கட்சிக் கும், எதிர்க்கட்சியான குடியரசுக்கட்சிக் கும் இடையில் சட்டப்பூர்வமான கடன் உச்சவரம்பினை உயர்த்துவது குறித்த சர்ச்சை நடந்துகொண்டிருக்கும் நிலை யில்தான் இந்தக் கீழிறக்கம் நடை பெற்றிருக்கிறது. இதையடுத்து, அமெரிக் காவில் மட்டுமல்லாது இந்தியா உட்பட உலக முழுவதுமுள்ள பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன. முதலில் அமெரிக்கக் கதையினைப் பார்ப்போம். (மேலும்....)ஆவணி 18, 2011 கிண்ணியா பகுதியில் படையினர் குவிப்பு கிண்ணியா பகுதியில் மர்ம மனிதனின் ஊடுருவலையடுத்து ஏற்பட்ட கலகத்தினால் உருவான பதற்றம் தணிந்துள்ள நிலையில் நேற்று அதிகாலை முதல் இப்பகுதிகளில் படையினர் பெருமளவில் பாதுகாப்புக்கென நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர். வீதியால் செல்லும் வாகனங்களையும் மக்களையும் படையினர் சோதனை செய்து வருகின்றனர். கிணியாவின் முக்கிய சந்திகளில் 8 தொடக்கம் 10 வரையான படை வீரர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் வீதிகளில் 100 மீற்றருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மர்ம மனிதன் ஓடி ஒளிந்த இடத்திலிருந்து குட்டிக்கராச்சி சந்தி வரைக்கும் இப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அடையாள அட்டைகளைப் பரிசீலிப்பதோடு, ஊர், பெயர் என்பனவற்றையும் கேட்டு அறிவதில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும்....)ஆவணி 18, 2011 ‘உகண்டா பாலா’ சி.ஐ.டி.யினரால் கைது சட்டவிரோதமாக ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி பணம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த பாலா அல்லது ‘உகண்டா பாலா’ என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு பாலச்சந்திரன் சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மலேசியாவிலிருந்து வருகைதந்த சந்தேகநபரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சி.ஐ.டி.யினர் மடக்கிப்பிடித்துள்ளனர். முல்லைத்தீவின் தெற்கு பிரதேசத்திலுள்ள மூளாய் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவியமை, வெளிநாடுகளுக்கு ஆட்களை கடத்தல், பணமோசடி போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டவர் என்று இரகசிய பொலிஸ் திணைக்களம் தெரிவிக்கின்றது. (மேலும்....) ஆவணி 18, 2011 அரசின் பதில் கிடைத்தாலே அடுத்த கட்ட நடவடிக்கை - தமிழ்க்கூட்டமைப்பு அரசாங்கத் தரப்பிடமிருந்து பதில் வழங்கப்பட்ட பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசாங்கப் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் 10 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருக்கும் நிலையில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கான திகதியைத் தீர்மானிப்பதாயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்பட வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இரண்டு கிழமைகளுக்குள் அரசாங்கத்தின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்கமுடியும் எனக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இதுவரை அரசாங்கம் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லையெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட்டாலே அடுத்தகட்ட நடவடிக்கை பற்றித் தீர்மானிக்க முடியும் என்றும் அவர் மேலும் கூறினார். ஆவணி 18, 2011 தமிழக முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவினால் உதவிப் பொருட்கள்முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதல் அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார். முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தலைமைச் செயலகத்தில், தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத் திட்டங்கள் அனைத்தும் முகாம் வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கிணங்க பல்வேறு திட்டங்களின் கீழ் 17 இலங்கை தமிழ் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினார். (மேலும்....) ஆவணி 17, 2011 யார் இந்த மர்ம மனிதர்கள்? (சாகரன்) ஆரம்பத்தில் மலையகத்தில் இந்த மர்ம மனித விவகாரம் உருவெடுத்தது. இலங்கையின் தேசியவருமானத்தில் பெரும் பங்கை வகிக்கின்ற ஆனால் கடைநிலை வாழ்க்கைத் தரத்தை உடைய மக்களுக்கு ஏற்பட்ட இந்த விவகாரத்தை அரசு சீரிய முறையில் அணுகி அன்று முற்று புள்ளி வைத்திருந்தால் இன்றைய நிலமைகள் ஏற்பட்டிருக்க வாய்புக்கள் மிகக் குறைவாக இருந்திருக்கும். இதில் அரசைத் தவிர ஏனைய அரசியல் கட்சிகளும் தமது அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தைக் கையாண்ட கையாளுகின்ற முறமையும் இன்னொரு காரணமாக அமைகின்றது. பத்திரிகை போன்ற ஊடகத் துறைகளும் உண்மை நிலையை கண்டறிந்து செய்திகளை வெளியிட்டு மக்களை விழிப்படையச் செய்வதற்கு பதிலாக தங்கள் பத்திரிகை வியாபாரத்திற்காக 'பரபரப்பு' செய்திகள் வெளியிடுவதில் மர்ம மனிதன் செய்தியை பயன்படுத்திக் கொண்டனர். இவைகளே 'மர்ம மனிதன்' விடயம் இன்று பூதாகார நிலையை அடைந்ததற்கு காரணங்கள் ஆகின்றன. (மேலும்.....) ஆவணி 17, 2011 ராஜீவ் கொலையாளிகளுக்கு தூக்கு `கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம்' ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட, கவர்னரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்று சிறைத்துறை இயக்குனர் கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. டோக்ரா தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற விடுதலைப்புலிகள் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டார். இதனால் அவர்கள் 3 பேரும் தூக்கில் போடப்படுவது உறுதியாகி விட்டது. இதற்கிடையில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மீண்டும் கோர்ட்டுக்கு போவோம் என்று வக்கீல் புகழேந்தி அறிவித்துள்ளார். இந்த நிலையில் இவர்களுக்கு தூக்கு தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது குறித்து சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி டோக்ரா அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருப்பதாவது:- ராஜீவ் கொலையாளிகளின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ உத்தரவு கவர்னரிடம் இருந்து வர வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். கவர்னரின் உத்தரவு வந்த 7-வது நாள் தூக்கு தண்டனை வேலூர் ஜெயிலில் வைத்து நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆவணி 17, 2011 ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தலைவர் யார்?
ஆவணி 17, 2011 குகநாதன் மீதான தாக்குதலின் பின்னணியில் பிரபல சட்டத்தரணி உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞா. குகநாதன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று பேரிடமிருந்து பொலிஸார் வாக்கு மூலங்களைப் பதிவுசெய்துள்ளனர். களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதாள உலக நபர் வழங்கிய தகவலின்படி பிரதான சூத்திரதாரி குடாநாட்டின் பிரபல சட்டத்தரணி என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 56 பலதரப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரும், பல வழக்குகளில் தேடப்படும் நபருமான நல்லூரைச் சேர்ந்த இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்பவரை பிணையில் விடுதலை செய்வதற்கு தானே முன்வந்து, கட்டணமின்றி ஆஜரான சட்டத்தரணி ஒருவரே குகநாதனைத் தாக்குமாறு கூறியதாக சந்தேகநபர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். (மேலும்.....) ஆவணி 17, 2011 இராணுவத் தலையீட்டினால் பூநகரி மக்கள் பய பீதியில் - ஆனந்தசங்கரி இந்த நாட்டிலுள்ள பூநகரிப் பகுதியில் வாழும் இந்த மக்கள் இராணுவத்தினரின் தலையீட்டால் பயத்துடனும் பீதியுடனும் வாழுகின்றனர். இவ்வாறு இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ள அரசியல் கட்சியானது ஒவ்வொரு ப.நோ.கூ. சங்கத்தினிடமிருந்தும் ரூபா பத்து இலட்சம் ரொக்கமாகப் பெற்றுள்ளது. இத்தகைய சம்பவங்களை ஐ.நா.சபை மட்டத்திலோ அல்லது வேறு நாடுகளுக்கோ முறையிட முடியாது. தயவு செய்து தாங்கள் இதில் தலையிட்டு கூட்டுறவு உதவி ஆணையாளர் மூலமாக இந்த முறைகேடுகள் சம்பந்தமாக ஒரு விசாரணை நடத்தி நடந்த தேர்தலை இரத்துச் செய்து புதிதாக தேர்தலை நடத்தும்படி கேட்டுக் கொள்கின்றேன். (மேலும்.....)
ஆவணி
17, 2011 யாழ்.மாவட்டத்தில் இளவயது கர்ப்பந்தரித்தல் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக அந்த மாவட்டத்தின் சுகாதாரப் பணிமனை தெரிவிக்கிறது. யாழ். குடாநாட்டில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாத காலப்பகுதியில் 211 இள வயதினரும்; திருமணமாகாத பெண்கள் 69 பேரும் கர்ப்பம் தரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்த ஐந்து மாத காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 242 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இத்தகவலை வீரகேசரி இணையத்தள செய்திப்பிரிவினருக்கு உறுதிப்படுத்திய யாழ். மாவட்ட சுகாதார பணிமனையின் தாய்சேய் நல வைத்திய அதிகாரி திருமதி.தி.சிவசங்கர், கலாசார சீர்கேடுகள் குறித்து தமது கவலையையும் வெளியிட்டார். ஆவணி 17, 2011 கிரீஸ் மனிதன் என்ற மாயை தோற்றுவித்து அரசியல் இலாபம் - கிழக்கு முதல்வர் தற்போது நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதன், மர்ம மனிதன் என்கின்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டு குறித்த சில பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலை சில அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை மீண்டும் பீதியில் உறையச் செய்து வருகிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். (மேலும்.....)ஆவணி 16, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 15) (நேசன்) பாண்டி வெலிக்கடைச் சிறையில் நீண்டகாலமாக குட்டிமணி, தங்கத்துரை போன்றோருடன் இருந்தவர். 1983 வெலிக்கடைச் சிறைப்படுகொலையின் பின் மட்டக்களப்புச் சிறைக்கு மாற்றப்பட்ட பாண்டி மட்டக்களப்புச் சிறையுடைப்பின் போது தப்பிவந்தவர்களில் ஒருவர். மட்டக்களப்புச் சிறையுடைப்பில் இருந்து தப்பிவந்த பின்பும் கூட, புளொட்டினுடைய படகை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செலுத்திவந்த தன்னலமற்ற, ஒரு துணிச்சல்மிக்க போராளி. மட்டக்களப்பு சிறையுடைப்பில் இருந்து தப்பி வந்தவர்கள் எல்லோரும் சொந்த மக்களிடமிருந்து அன்னியப்பட்டு இந்தியா சென்று பாதுகாப்பாக இருந்த வேளையில் ( இதில் பரந்தன் ராஜன், அற்புதன் விதிவிலக்கானவர்கள், இருவரும் நடக்கமுடியாத அளவுக்கு காயமடைந்தவர்களாக இருந்தனர்) பாண்டியோ இலங்கை அரசபடைகளால் தேடப்பட்ட நிலையிலும் கூட விடுதலைப் போராட்டத்துக்காக தனது உயிரைப் பணயம் வைத்து செயற்பட்ட ஒருவர். 1985ம் ஆண்டு பிற்பகுதியில் படகில் இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வந்துகொண்டிருந்தபோது கடற்படையினருடன் ஏற்பட்ட சமரில் பாண்டி, சின்னமலை உட்பட பலர் உயிரிழந்தனர். (மேலும்.....) ஆவணி 16, 2011 மர்ம மனிதர்கள் மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன? "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே''மகாகவி பாரதியாரின் கவிவரிகள் முணுமுணுக்கப்பட்ட காலம் மாறிப்போய் சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாகவே வீடுகளுக்குள் அடங்கி, அன்றாட கடமைகளைக் கூட மறந்து ஏக்கம், பயம், பதற்றம், சந்தேகம் மட்டுமன்றி ஒருவகையான மனப்பிராந்தியில் வாழவேண்டிய நிலையே நாட்டின் சில பாகங்களில் நிலவுகின்றது. யுத்தத்திற்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நிம்மதிப்பெருமூச்சுவிட்டு சுறுசுறுப்பான வாழ்க்கையை ஆரம்பித்து அதில் பயணித்துக்கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் "மர்ம மனிதன்' "கிறீஸ் மனிதன்" எனும் அச்சத்தினால் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. (மேலும்.....) ஆவணி 16, 2011 குகநாதனை தாக்கிய முக்கிய சந்தேகநபர் கொழும்பில் கைது உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வந்த விசேட பொலிஸ் குழுவினரே களுபோவில ஆஸ்பத்திரியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் ரத்ணசிங்கம் சந்திரகுமார் 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வட மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்றும் பாதாள உலகத்தைச் சேர்ந்த முக்கிய நபர் எனவும் அவர் தெரிவித்தார். (மேலும்.....) ஆவணி 16, 2011 ஜீவாவும் டொமினிக் ஜீவாவும் (என்.மருத்துவமணி) கணேஷ் அவர்களைச் சந்தித்ததற்குப் பின்னால் அதே வீட்டில் அதே இடத்தில் இன்னொருவரையும் சந்திக்க முடிந்தது. அந்தச் சந்திப்பு என் வாழ்க் கையை - ஏன் என்னுடைய பெய ரையே மாற்றி அமைத்துவிடும் என அப்பொழுது நான் நினைக்க வில்லை. கற்பனை கூடப் பண்ணிப் பார்க்கவில்லை. தோழர் கார்த்திகேசன் தான் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். பக்கத்தே என்னை இலக் கியத் துறைக்கு அறிமுகப்படுத்திய ராஜகோபாலன் மாஸ்டரும் உடனி ருந்தார். இன்னும் சிலரும் இருந்தனர். பெரீய்.... ய மீசை.... ஸ்டாலின் மீசையைப் படங்களில் பார்த்திருப் பீர்கள் அல்லவா, அப்படிப்பட்ட மீசை. குறும்புத்தன்மை மிளிரும் கண்கள். புன்முறுவல் பூத்த உதடுகள். கதர் பைஜாமா. கதர்ச் சட்டை தோளில் ஒரு துண்டு. சிவப்புத் துண்டு. எளிமை என்றால், மகா எளிமை! (மேலும்.....)ஆவணி 16, 2011 மர்ம மனிதன் பற்றிய கதை பகலில் தூங்கி இரவில் விழிக்கும் மக்கள் அம்பாறை, மட்டு. மாவட்டங்களில் கடந்த நான்கு தினங்களாக பொது மக்கள் பகலில் தூங்கி இரவில் விழிக்கும் போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். தொழிலுக்குச் செல்வோர் இரு வேளையும் விழித்திருக்க வேண்டிய நிலையில் சிறுவர்கள் பலமான பீதியிலும் மன அழுத்தத்துக்கும் உள்ளாகி வருவதாக தெரிகிறது. பெண்கள் தமது ஆண் துணைகளை வலுக்கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் முடக்குகின்றனர். நோன்பு காலமாகையால் பள்ளிக்கு தொழுகைக்கு செல்ல முடியாத துர்ப்பாக்கிய நிலையும் எழுந்துள்ளது. 3 வருடங்கள் படித்த உயர் தர மாணவர்கள் திருப்தியாக பரீட்சை எழுத முடியாத நிலையில் உள்ளனர். எங்கு பார்த்தாலும் மர்ம மனிதன் பற்றிய கதையே நடக்கிறது. மக்களின் மன நிலை வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. எதனையும் நிம்மதியாக செய்ய முடியாமல் மனிதன் திண்டாடுகிறான். தினமும் புதுப்புதுச் செய்திகள் உண்மையாகவோ, வதந்தியாகவோ குவிகின்றன. பலர் கேட்டுக் கேட்டு, அலுத்துப் போயுள்ளனர். எனினும் பயம் பீதி மக்களை இரவானால் ஆட்கொள்கிறது. ஆவணி 16, 2011 நேபாள பிரதமர் ராஜினாமா நேபாள பிரதமர் ஜலால் நாத் கனால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முக்கிய கூட்டணியான நேபாள மாவோயிஸ்டுகள் கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான நேபாள காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் நெருக்கடி கார ணமாகவே கனால் ராஜினாமா செய்துள்ளதாகத் தெரிகிறது. ஜனாதிபதி ராம் பரன் யாதவிடம் அவர் ராஜினாமா கடிதத்தை அளித் தார். அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை பொறுப்பில் தொடருமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண் டுள்ளார். முன்னதாக நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கூட்டத்தில் பிரதமர் கனால் பங்கேற்றார். அப்போது தனது தனிப்பட்ட விடயம் காரணமாக பதவியில் தொடர முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவர் பிரதமராகப் பொறுப் பேற்றார். இம்மாத இறுதியில் நேபாள நாடாளு மன்றத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வருகிறது. இதற்கு முன் அரசியல் சாசன சட்டத்தையும் இறுதி செய்ய வேண்டும். இந்த நிலையில் பிரதமர் பதவி விலகி யிருப்பது அந்நாட்டில் அரசியல் நெருக் கடியை அதிகரித்துள்ளது. ஆவணி 16, 2011 நோர்வே துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற தீவுக்கு சந்தேக நபர் பயணம்நோர்வே குண்டு தாக்குதல், துப்பாக்கிச் சூடு சந்தேக நபர் அன்டர்ஸ் பிரவிக்கை துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற தீவுப் பகுதிக்கு பொலிஸார் அழைத்துச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைக்காகவே அவர் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மேற்படி தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரவிக் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடைய அங்குள்ள பல இடங்களையும் சுற்றிக் காண்பித்துள்ளார். எனினும் இந்த சம்பவம் குறித்து அவர் எந்த கவலையையும் வெளிக்காட்டவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜுலை 22 ஆம் திகதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அங்குள்ள தீவுப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 69 பேர் கொல்லப்பட்டனர். ஆவணி 15, 2011 தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்றது
பாராளுமன்ற தெரிவுக் குழு அமைப்பதற்கு
முன்பு எம்முடன் பேச வேண்டும்
பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லையெனத் தெரிவித்திருக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், ஆனால் தெரிவுக்குழு தொடர்பில் விளக்கமளித்து எம்முடன் கலந்துரையாடுவது அவசியமானது எனக் கூறியுள்ளார். பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் காலம், அதில் ஆராயப்படவிருக்கும் விடயங்கள், இத னூடாக அரசாங்கம் வடக்கு, கிழக்கிற்கு என்ன செய்யவுள்ளது போன்ற விடயங்கள் குறித்து அரசாங்கம் எம்முடன் கலந்துரையாடல்களை நடத்த வேண்டுமென்றே தாம் கோருவதாக அவர் தெரிவித்தார். (மேலும்...) ஆவணி 15, 2011 மக்களோடு மக்களாய் திருமலையில் கண் மருத்துவ சிகிச்சை முகாம்
பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி திருகோணமலை மாவட்ட தோழர்களால் இன்று (14.08.2011) காலை திருகோணமலை கும்புறுபிட்டி மெதடிஸ்ட் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையிலும் மதியம் திருகோணமலை 6ம் கட்டை மெதடிஸ்ட் மிஷன் சிறுவர் பாடசாலையிலும் இலவச கண் மருத்துவ சிகிச்சை முகாம் மற்றும் இலவச கண்ணாடி வழங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோழர் சக்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி ஆரம்பித்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர். இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் செயற்பாட்டுக் காலத்து நினைவுகளை கலந்து கொண்ட மக்கள் தமக்குள் பகிர்ந்து கொண்டனர். ஆவணி 15, 2011 பின்லேடன் கொலை சிதைவடைந்த அமெரிக்க விமானத்தினை பார்வையிட சீனாவிற்கு அனுமதியளித்த பாகிஸ்தான்? பாகிஸ்தானில் வைத்து ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, சேதமடைந்த அமெரிக்க ஹெலிகொப்டரை பரிசோதிக்க சீன பொறியியலாளருக்கு பாகிஸ்தான் அனுமதியளித்ததாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த மே மாதம் 2ஆம் திகதி, பாகிஸ்தானின் அபோதாபாத்தில் மறைந்திருந்த ஒசாமா பின்லேடனைப் பிடிப்பதற்கு அமெரிக்க நேவி சீல் படை அங்கு பயணம் செய்திருந்தது. ராடார்களின் கண்களில் சிக்காமல் பாகிஸ்தானில் வந்திறங்கிய அவர்கள் 'ஸ்டீல்த்' தொழிநுட்பத்துடன் கூடிய ஹெலிகொப்டர்களைப் பயன் படுத்தியமை அதன் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. (மேலும்...)ஆவணி 15, 2011 கலவரம் அல்ல, எழுச்சி! லண்டன் மாநகரம் பற்றி எரியும் என்று வெளிநாட்டு மோகிகள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். உலகக் கடன் தர வரிசையில் முதல்முறையாக அமெரிக்காவின் தரம் ஒருபடி கீழே இறங்கியதைப் போலவே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தலையில் இடியாய் இறங்கியது லண்டன் ‘கலவரம்.’ பர்மிங்ஹாம், மான்செஸ்டர் உள்பட பிரிட்டனின் அனைத்து நகரங் களுக்கும் அடுத் தடுத்த நாட்களில் வேகமாக பரவிய இந்தக் ‘கலவரத்தை’ ஒடுக்க வீதிகள் தோறும் ஆயுதம் ஏந்திய போலீஸ் படையை குவித்திருக்கிறது பழமை வாத கூட்டணியின் பிரதமர் டேவிட் கேமரூனின் ஆட்சி. கடந்த 6ம்தேதி சனிக்கிழமை லண்டனின் ஒரு பகு தியான டொட்டன்ஹாமில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 29 வயது இளைஞர் மார்க் துக்கான் என்பவர் கொல்லப்பட்டார். ஏற்கனவே கனன்று கொண்டிருந்த இளைஞர்களின் குமுறல், காவல் துறை நிகழ்த்திய இந் தப் படுகொலையை தொடர்ந்து வெடித்தெழுந்தது. (மேலும்...)ஆவணி 15, 2011 அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம் அதிக கடன் பெற்றுள்ள வளரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. எனினும் இந்தியாவின் கடன் தீர்க்கக் கூடியதே என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கூறியுள்ளார். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் நடந்த கேள்வி நேரத்தின் போது, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், உலகில் அதிக கடனுள்ள வளரும் நாடுகளின் பட்டியலை, உலக வங்கி வெளியிட்டுள்ளது. 2009ம் ஆண்டு கணக்குப்படி கடனுள்ள 20 நாடுகளில், இந்தியா 5வது இடத்தில் உள்ளது. சீனா, ரஷ்யா, பிரேசில், துருக்கி ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முன் உள்ளன. இந்தியா பெற்றுள்ள கடன் தொகை திரும்ப செலுத்தும் வகையில் கட்டுக்குள் உள்ளது. எனவே இது குறித்து கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆவணி 15, 2011 சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைதுமர்ம மனிதர்கள் எனும் போர்வையில் போலி நாடகமாடிய 200 பேர் இதுவரையில் நாடளாவிய ரீதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதாக பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் தெரிவித்தார். கைது செய்யப்பட்டிருக்கும் அனைவரும் ஆண்கள். உண்மையில் இவர்கள் பேயோ, பூதமோ அல்லது மர்ம மனிதர்களோ இல்லை. திருடர்களும், கொள்ளையர்களும், வெண்சந்தன மரக் கடத்தல்காரர்களுமே, நாட்டு மக்களால் சித்தரிக்கப்பட்டிருக்கும் மர்ம மனிதன் எனும் நாமத்தை சாதகமாகப் பயன்படுத்தி நாளுக்கு நாள் தமது அட்டூழியங்களை அதிகரித்து வருகின்றனர். கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களும், காமவெறியர்களும் இதனை சாதகமாகக் கொண்டு பெண்களுடனான சேஷ்டைகளை அதிகரித்துள்ளனர். இவ்வாறானவர்களையே நாம் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளோம். தற்போது பரவலாகப் பேசப்பட்டுவரும் இந்த மர்ம மனிதர்களை முற்றாக ஒழிக்கவேண்டுமாயின் முதலில் எமது மக்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மர்ம மனிதர்களோ, பூதங்களோ அல்லது பேய்களோ இங்கு நடமாடவில்லை என்பதை அவர்கள் மனப்பூர்வமாக நம்ப வேண்டும். இதற்காக நாம் நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்திவருகின்றோம். ஆவணி 15, 2011 தமிழர்களை அவமதித்த அமெரிக்க துணை தூதர் மன்னிப்பு கேட்க வேண்டும்முதல் அமைச்சர் ஜெயலலிதா சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்இன்டைருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அமெரிக்க துணை தூதர் மவுரீன் சாவ், எஸ். ஆர். எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியது, பத்திரிகைகளில் வெளியாகி உள்ளது. அதில், நான் டெல்லியில் இருந்து ஒரிசாவுக்கு ரெயிலில் சென்றேன். இந்த பயண நேரம் 24 மணி நேரம்தான். ஆனால் 72 மணி நேரம் ஆகியும், அந்த ரெயில் ஒரிசா போய்ச் சேரவில்லை. அதனால், எனது சருமம், தமிழர்களைப் போல அழுக்காகவும், கறுப்பாகவும், ஆகிவிட்டது என்று மவுரீன் சாவ் பேசியுள்ளார். இன வெறி கொண்ட இந்த பேச்சு, மிகவும் கண்டனத்துக்கு உரியது. இந்த கருத்து ஓட்டுமொத்த தமிழர்களையும் அவமதிக்கக் கூடியது என்று தங்களுக்கே தெரியும். எனவே, இந்த கருத்துகளை வாபஸ் பெற்றுக்கொண்டு, தமிழர்களைப் பற்றி இத்தகைய கருத்து தெரிவித்தற்காக மன்னிப்பு கேட்குமாறு மவுரீன் சாவை தாங்கள் வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். ஆவணி 15, 2011 ரணிலின் தலைமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம், சத்தியாக்கிரகம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கட்சியின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை திரட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவதற்கு சஜித் பிரேமதாச அணியினர் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரியவருகின்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் 17ம் திகதி ஐ. தே. கட்சியின் சிறிகொத்தா தலைமையகத்திற்கு அருகில் நடாத்தப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. ஐ.தே.க.வின் விஷேட செயற்குழுக் கூட்டம் 17ம் திகதி சிறிகொத்தாவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக் கும் கட்சி தலைமைத்துவம் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க சரியான தீர்வைப் பெற்றுத் தரத் தவறுவாராயின் அதற்கு எதிராக சாகும் வரையும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க விருப்பதாக அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். கட்சி தலைவர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்க வெளியேறும் வரையும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். ஆவணி 15, 2011 லண்டன் கலவரம்அமெரிக்காவிடம் ஆலோசனை கேட்டதற்கு பிரிட்டிஷ் பொலிஸ் அதிருப்திபிரிட்டனில் 5 நாட்கள் நீடித்த வன்முறை பிரச்சினைகளை ஒடுக்குவது தொடர்பாக பிரதமர் அமெரிக்காவின் முன்னாள் பொலிஸ் தலைவர் உதவியை எதிர்பார்த்தார். நியூயோர்க்கின் முன்னாள் பொலிஸ் தலைவரை ஆலோசனைக்கு அழைத்து இருப்பது பிரிட்டன் பொலிஸ் அதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகளின் சங்க தலைவரான சர் ஹியூ ஓர்டே கூறுகையில், “400 நபர்களை கொண்ட படைப்புரிவு வலிமைமிக்காத இருக்கும் என கருத முடியாது. அவர்களிடம் நாம் ஆலோசனை பெற வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அமெரிக்கா வன்முறைக்கும், பிரிட்டன் வன்முறைக்கும் வேறுபாடு உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க முன்னாள் பொலிஸ் அதிகாரியை அழைப்பது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார். பிரிட்டன் பொலிஸாரின் அணுகுமுறை மிகச்சிறந்ததாக கருதுகிறோம். நாம் ஐரோப்பிய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அமெரிக்க நடைமுறையை பார்க்க கூடாது என்றும் பிரிட்டன் உள்துறை அமைச்சர் கவனத்திற்கு தெரிவிக்க விரும்புகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். ஆவணி 15, 2011 எமது இணைபிரியா நட்பு நாடாக சீனா இருந்து வருகிறதுஎமது நாட்டிற்கு ஏற்படும் துன்பத்திலும், இன்பத்திலும் எந்நேர மும் ஒன்றிணைந்து உறுதுணை புரிவதற்கு இரண்டு நட்புநாடு கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று இந்தியா, மற்றது சீனா. இந்தியாவுடன் நாம் கலாசார பாரம்பரியங்களின் ஊடாக பல்லாண்டு காலம் நெருங்கிய தொடர்பினையும், நட்புறவையும் கொண்டுள் ளோம். அது போன்றே, சீனாவும், இலங்கையும் பல்லாண்டு கால நட்பு நாடாக இருந்து எங்களுக்கு பலவிதத்திலும் உறுதுணை புரிந்து வருகின்றது. சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் நாம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தாலும், இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் இடையில் இருந்து வந்த உறவு வலுவாக இருந்தது. அன்று, நாட்டின் எந்த நகரத்திலும் இந்தியர்களின் புடவைக் கடைகளை நாம் பார்க்கலாம். இந்திய வர்த்தகர்களை விட மிஞ்சிவிடக் கூடியளவுக்கு சீன வர்த்தகர்களின் கடைகள் நாடெங்கிலும் இருந்தன. சீனர்களும், அன்று பெரும் பாலும் புடவை விற்பனையையே செய்து வந்தார்கள். (மேலும்...) ஆவணி 15, 2011 மிகவும் பலவீனமான நிலையில் பொருளாதாரம்உலக பொருளாதாரத்தில் காணப்படும் ஸ்திரத்தன்மையற்ற போக்கால் பல ஆபத்தான கட்டங்களை எதிர்நோக்கும் அபாயம் இருப்பதாக உலக வங்கித் தலைவர் இராபர்ட் ஸோயலிக் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் பொருளாதாரத்தின் தரத்தை கடந்த வாரம் “ஸ்டாண்டர்ட் அன்ட் புவர்” நிறுவனம் குறைத்து அறிவித்தது. இதன் எதிரொலியால் சர்வதேச பங்கு சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. போதாக்குறைக்கு ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார நிலையிலும் சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதனால் அடுத்த பொருளாதார சரிவை உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ளன. இந்த நிலையில் உலக வங்கியின் தலைவர் ரொபர்ட் ஸோயலிக் அவுஸ்திரேலியாவின் பிரபல பத்திரிகையான வீக்கண்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. தற்போது நாம் புதிய பொருளாதார சரிவின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். ஆனால் இது கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார சரிவு போன்று இருக்காது. கடந்த சில வாரங்களாக அவுஸ்திரேலியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஓரளவுக்கு வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளன. ஆனால் வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம் தொடர்ந்து ஆபத்தான கட்டத்தை எதிர்நோக்கியுள்ளன. வளர்ந்த நாடுகள் பொருளாதார கொள்கைகளை சீர்படுத்தினால் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்ப முடியும் என்றார். ஆவணி 14, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 14) (நேசன்) யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைப்பாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றிப் பேசும் பொருட்டும், அமைப்பு செயற்பாடுகளை முன்னோக்கிக் கொண்டு செல்லும் பொருட்டும் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கூட்டத்தை கூட்டவேண்டியிருந்தது. திருநெல்வேலியில் இதற்கான இடத்தை விபுல் மூலம் ஒழுங்கு செய்து அங்கு யாழ்மாவட்ட குழு கூடியது. இதுவே புளொட்டின் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து உதவி அரசாங்க அதிபர் பிரிவு அமைப்பாளர்களையும் ஒன்றுசேர்த்துக் கூட்டப்பட்ட முதலாவது குழுக் கூட்டமாக அமைந்தது.(மேலும்......) ஆவணி 14, 2011 யாழ். குடாநாட்டில் வீதிச் சோதனை நடவடிக்கைகள் அதிகரிப்பு _ யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாகப் படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. குறிப்பாக, யாழ். நகரை அண்டிய பகுதிகளிலேயே இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவு வேளைகளில் பயணம் செய்யும் சகல வாகனங்களும் வழிமறிக்கப்பட்டு அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்ட பின்னர் வாகன இலக்கங்கள் பதி வு செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் கையொப்பம் பெற்ற பின்னரே பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். மாலை வேளைகளில் மேற்கொள்ளப்படும் இந்த சோதனை நடவடிக்கைகள் நள்ளிரவு வேளைகளையும் தாண்டி இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக யாழ். பல்கலைக் கழகத்தை அண்டிய இராம நாதன் வீதியில் மட்டும் மூன்று வீதிச் சோதனைகள் இடம்பெறுகின்றன. இந்தச் சோதனைகளால் இரவில் பயணத்தினை மேற் கொள்ளும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஆவணி 14, 2011 நவம்பர் 5, பேஸ்புக்கின் இறுதித் தினமா? பேஸ்புக் சமூக வலையமைப்பானது கடந்த மார்ச் மாதம் முதல் நிறுத்தப்படுமென ஜனவரி மாதமளவில் செய்தி வெளியாகியிருந்ததுடன் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. தற்போது பேஸ்புக் சேவையை 'யுழெலெஅழரள' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு தாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதியுடன் பேஸ்புக் சேவை நிறைவிற்கு வருமெனத் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பிலான அறிவிப்பு அடங்கிய காணொளியானது கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதி வெளியாகியிருந்தது. எனினும் தற்போதே அது தொடர்பில் தகவல்கள் வெளியுலகிற்கு கசிய ஆரம்பித்துள்ளன. ஆவணி 14, 2011 இந்திய சுதந்திர தினநாளில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம் சுதந்திர தினத்தன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் 64வது சுதந்திர தினத்தைக் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு ஏற்பாடுகள் களைகட்டியுள்ளன. இந்நிலையில் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் ஒரு சில பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறினார். இது பொதுவான எச்சரிக்கை தான். பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. 15ஆம் திகதி நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சில இயக்கங்கள் ஆகஸ்ட் 14ஆம் திகதியை வேறு மாதிரி அனுசரிக்க திட்டமிட்டுள்ளன. ஒட்டு மொத்த இந்தியாவும் சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில் ஒரு சில இயக்கங்கள் அதை சீரழிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து முந்தைய ஆண்டுகளைப் போன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார். ஆவணி 14, 2011 It turns out LTTE leader Prabhakaran is not even a true Tamil. He's half Malayali.!
ஆவணி 14, 2011 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் வன்னி மாவட்டத்தில் அதிகரிப்பு வன்னியில் இறுதி யுத்தக் காலப் பகுதியிலும் அதைத் தொடர்ந்தும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் மோசமானதோர் சூழலைத் தோற்றுவித்து வருவதாக எச்சரிக்கப்படுகின்றது. இடைத்தங்கல் முகாம்களிலும், தடுப்பு முகாம்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் பெண்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் இப்போது சொந்த இடங்களில் தமது குடும்பத்துடன் குடியமர்ந்தும் வருகின்றனர். அறிந்த வகையில் அண்மை நாட்களில் கிளிநொச்சியில் மட்டும் பன்னிரெண்டு குழந் தைகள் முறை தவறிப் பிறந்துள்ளன. அவற்றை பிரசவித்தவர்களுள் மூவர் காணாமல் போயுள்ள முன்னாள் போராளிகளது மனை வியர் என்கிறார் மூத்த ஊடகவியலாளரொ ருவர். ஆனால் நடக்கும் விடயங்கள் சமூகத் துக்கு அபாயமானவை. உண்மை கடண்டறி யப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்கிறார் அவர். (மேலும்......)ஆவணி 14, 2011 லிபியாவில் நேட்டோவின் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்கள் பொய்யான தகவலகளையும், பிழையான எண்ணங்களையும் முன்னிலைப்படுத்தும் மேற்குலக ஊடகங்களிற்கு சவால் விடுவதற்காகவே, குறிப்பிட்ட ஊடகவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் படப்பிடிப்புக் கலைஞர்களை கொண்ட குழுவொன்றினால் திரிப்போலி பகுதியில் தயாரித்து நெறிப்படுத்தப்பட்ட வீடியோ காட்சியே இது. நேட்டோவின் கட்டளைகளிற்கிணங்க, லிபிய மக்களின்மீது நடாத்தப்பட்டுவரும் மனிதக் கொலைகளையும், அங்கு அவர்கள் துன்புறுத்தப்படுவதையும், இக் குற்றச்செயல்களில் நேட்டோவின் ஈடுபாட்டினையும், அதே நேரம் அவற்றில் மேற்குலக ஊடகங்களின் ஈடுபாட்டையும் இவ் வீடியோ வெளிக்கொணர்கின்றது. சர்வதேச யுத்த குற்றங்களிற்கான சட்டத்தில் இந்த யுத்த ஏற்பாட்டாளர்கள் அடையாளப்படுத்தப்படல் வேண்டும். (மேலும்......) (காணொளியை பார்பதற்கு.....) ஆவணி 14, 2011 இலங்கை பாதுகாப்பு செயலாளரை கண்டித்து சபையில் அ.தி.மு.க. கோஷம் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மானத்தையும், முதல்வரையும் அவமதிக்கும் வகையில் பேசிய இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கண்டித்து, பாராளுமன்றத்தில் எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டன. இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தியும், போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டுமென்றும், தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை கேலிசெய்யும் வகையிலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையிலும், இலங்கை பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ சமீபத்தில் பேட்டியளித்து இருந்தார். இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்கள் வலியுறுத் தினர். அ.தி.மு.க. எம்.பி.க்கள் எழுப்பிய கோஷங்களால் சிறிது நேரம் பரபரப்படைந்த சபையில் பின்னர் “அமைதி திரும்பியது. ஆவணி 14, 2011 நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு: ஒபாமா வேதனை “கடன்களை திருப்பி செலுத்த அமெரிக்காவுக்கு உள்ள திறனுக்கான மதிப் பீட்டை, தரச்சான்றிதழ் வழங்கும் நிறுவனம் ஒரு புள்ளி குறைத்து விட்டது. ‘ஏஏஏ’ என்ற தர மதிப்பீட் டில் இருந்து ‘ஏஏ பிளஸ்’ என்ற மதிப்பீட்டை கொடுத் துள்ளது. இது நமக்கு நாமே போட்டுக்கொண்ட சூடு ஆகும்” என அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா கூறினார். அமெரிக்காவில் விரை வில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர் தலில் மீண்டும் போட்டி யிட இருக்கும் ஒபாமா அதற்கான பிரச்சாரத்தில் இறங்கிவிட்டார். மிக்சிகன் நகரில் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத் தில் பேசியபோது, அவர் மேற்கண்டவாறு கூறினார். (மேலும்......)ஆவணி 14, 2011 குலுங்கியது ஏமன்! லட்சக்கணக்கான மக்கள் பேரணி ஜனநாயக உரிமைகள் கோரி ஏமன் நாட்டில் நடைபெற்ற பேரணிகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதியாக இருக்கும் அலி அப்துல்லா சலே, தற்போது சவூதி அரேபியாவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நாடு திரும்ப மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எதிரிக்கட்சிகள் மற்றும் மாற்றத்திற்காகப் போராடி வரும் இளைஞர்கள் அமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஒரு தேசிய கவுன்சிலை உருவாக்க வேண்டும் என்று போராடி வரும் அமைப்புகளிடமிருந்து கோரிக்கை எழுந்து வருகிறது. (மேலும்......)ஆவணி 13, 2011 2000 குற்றவாளிகளை பிடிக்க வெளிநாட்டில் வலை விரிப்பு கொலை, கற்பழிப்பு, கொள்ளை, போதைவஸ்து கடத்தல் போன்ற பலதரப்பட்ட படுபயங்கரமான குற்றச் செயல்களை செய்து பொலிசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு தலைமறைவாகிய 2000ற்கும் மேற்பட்டவர்கள் நாட்டைவிட்டு, சட்டவிரோதமாக தப்பியோடி விட்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் அறிவித்தார். இந்த குற்றவாளிகள் போலிக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தியும், மீன்பிடி படகுகளின் உதவியுடனும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றிருப்பதாக பொலிசார் கூறுகிறார்கள். இந்த குற்றவாளிகள் உள்ளூரில் செல்வாக்கு மிக்க கொள்ளை கோஷ்டிகளின் தலைவர்களாக அல்லது முக்கியஸ்தர்களாக இருந்து தேர்தல் காலத்தில் பல அரசியல்வாதிகளுக்கு பண உதவி செய்தும் தங்கள் குண்டர்கள் மூலம் வன்முறைகளுக்கு உதவி செய்தும் இருந்திருப்பதாகவும், அதனால் அவர்கள் சில அரசியல்வாதிகளின் உதவியுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் கூறுகிறார்கள். இந்த குற்றவாளிகளில் சிலர் இப்போது வெளிநாடுகளில் இன்ரபோல் பொலிசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்கள் விரைவில் இங்கு அழைத்துவரப்படுவார்கள் என்றும் பொலிசார் கூறுகிறார்கள். இவர்களின் பலர் பாதாள உலகைச் சேர்ந்த படு பயங்கரமான கொலையாளிகள் என்றும் பொலிசார் தெரிவித்தனர். ஆவணி 13, 2011 152 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்தில் இணைப்பு மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக புனர்வாழ்வு பெற்ற 152 முன்னாள் போராளிகள் நேற்று வெள்ளிக்கிழமை வவுனியா நகர சபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் சமூகத்துடன் இணைக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் புனர்வாழ்வு நிலையங்களுக்கு பொறுப்பான இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சரணடைந்தவர்களை கட்டம் கட்டமாக விடுவிக்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஆவணி 13, 2011 அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் ஒரே இரவில் மர்ம மனிதர்கள் ஊடுருவல் அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் ஆறுக்கு மேற்பட்ட இடங்களில் ஒரே இரவில் பல்வேறு கோணங்களில் கிறீஸ் மனிதர்கள் (மர்ம மனிதர்கள்) ஊடுருவியமையினால் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 7 மணி முதல் 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்திற்குள் சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, மருதமுனை, பெரிய நீலாவணை, பொத்துவில் உள்ளிட்ட இடங்களில் கிறீஸ் மனிதன் ஊடுருவியதாக செய்தி பரவியமையை அடுத்தே மேற்படி நிலைமை தோன்றியுள்ளது. (மேலும்......)ஆவணி
13, 2011 வவுனியா நகரசபை எல்லைக்குட்பட்ட பட்டாணிச்சி புளியங்குளம் மையவாடிக்குச் சொந்தமான காணியில் கடைகள் கட்டப்படுவதை உடன் நிறுத்தக் கோரியும், நகரசபைத் தலைவர் மற்றும் உபதலைவர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதைக் கண்டித்தும் நேற்று வவுனியா நகரசபை முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. முஸ்லிம் மையவாடிக்குச் சொந்தமான காணிக்குள் கடைகள் கட்டப்படுவதற்கு நகரசபை எதிர்ப்புத் தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் கடைகள் கட்டுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டி ருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் நகரசபைத் தலைவர் மற்றும் உபதலைவருக்கு சில தரப்பினர் அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகவும் வவுனியா நகரசபை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆவணி 13, 2011 பொத்துவிலில் குழப்பம்பொத்துவில் நகரில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். பொத்துவில் பொலிஸாருக்கு எதிராக நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கண்ணீர் புகைக்குண்டுகள் வீசி கூட்டத்தை கலைக்க பொலிஸார் முற்பட்டனர். இதேவேளை கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இந்த குழப்ப நிலை காரணமாக ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் நேற்று பிற்பகல் பொத்துவில் நகரில் மீண்டும் ஏற்பட்ட குழப்பத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மாஜீட்டின் இல்லத்தருகே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. திருக்கோயில் பொலிஸ் நிலையத்துக்கு முன்னாலும் இதேபோன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் இடம்பெற்ற வன்முறைகளில் இருவர் காயமடைந்து ள்ளனர். திருக்கோயில் விநாயகபுரம் பகுதியில் பிடிக்கப்பட்ட இரண்டு கிaஸ் மனிதர்களை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆவணி 13, 2011கடாபியின் தூதர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் - பிரித்தானிய அரசு உத்தரவுபிரிட்டனில் உள்ள லிபிய ஜனாதிபதி கடாபியின் தூதர்கள் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் தங்களது கார் மற்றும் சொத்துக்களை உடனடியாக விற்பதற்கு தீவிரம் காட்டி வருகின்றனர். லிபியாவில் கர்னல் கடாபி இராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து லண்டனில் உள்ள கடாபி தூதர்கள் நாட்டைவிட்டு வெளியேற பிரிட்டன் அரசு உத்தரவிட்டது. நாட்டைவிட்டு துரத்தப்படுவதற்கு முன்னர் அந்தத் தூதர்கள் சொத்துக்களை விரைவாக விற்று வருகிறார்கள். லிபியாவில் பணத்தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என கடாபி தூதர்கள் தங்கள் சொத்துக்களை வந்த விலைக்கு விற்று வருகிறார்கள். இதனை பிரிட்டன் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். லிபியாவில் தனது இராணுவத்திற்கு தேவையான எரிபொருள் பெறுவதிலும் கடாபிக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது என அந்த அதிகாரி தெரிவித்தார். கடாபிக்கு எதிரான போராட்டக்காரர்களின் தேசிய மாற்ற கவுன்சிலை பிரிட்டன் கடந்த மாதம் அங்கீகரித்தது. இந்தக் கவுன்ஸிலில் லிபிய அரசு உரிமை உள்ளது என பிரிட்டன் தெரிவித்துள்ளது. லிபியாவில் கடாபி இராணுவத்தை ஒடுக்க மார்ச் மாதம் முதல் நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. ஆவணி 13, 2011 ஒருங்கிணைந்த செயற்பாடுகளின் மூலமே மக்களுக்கு நன்மைகளை செய்ய முடியும் ஒரு பக்கத்தில் அவசர காலச் சட்டத்தை நீக்குவதைப் பற்றிப் பேசப்படுகிறது. மறுபக்கத்திலே அவர்களே அவசர காலச் சட்டத்தை நீடிப்பதற்கான காரணங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யினராகிய நாம், அவசரகாலச் சட் டத்தை அடிப்படையில் எதிர்க்கின்றோம் என்பதை இந்த அவையிலே தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன். அவசரகாலச் சட்டத்தை நடைமுறை ரீதியாக நீக்குவதற்காகவே நாங்கள் பாடுபடுகின்றோம். நாட்டிலே நிரந்தர அமைதியும் முழுமையான இயல்புச் சூழலும் உருவாகும்போது இந்த மாதிரியான நெருக்கடிகள் தானாகவே தீர்ந்துவிடும். ஆனால், நாட்டிலே அமைதி நிலை உருவாகுவதைச் சிலர் விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் இன முரணை வளர்த்து, பிரச்சினைகளை உருவாக்கி, அதிலேயே பிழைப்பு நடத்த விரும்புகின்றனர். (மேலும்......) ஆவணி 12, 2011 புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் (பாகம் 13) (நேசன்) 1984 தைமாதம் ஒன்பதாம் திகதி, இனக் கலவரத்துள் அகப்பட்டு பாதிக்கப்பட்டதனால் இடம் பெயர்ந்த தமிழ் பல்கலைக்கழக மாணவர்களின் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பமானது. இப் போராளிகளுள் மதிவதனியும் ஒருவர். பல்கலைக்கழக மாணவர்களின் அகிம்சை வழியான போராட்டத்தை வெற்றிகரமான வெகுஜன போராட்டடமாக மாற்றுவதற்கு, அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் கேதீஸ்வரனும் ஒருவராக இருந்தார். ஆனால் மக்கள் போராட்டத்திலோ, மக்கள் அரசியலிலோ நம்பிக்கை அற்ற, வெறுமனே ஆயுதங்களை மட்டுமே நம்பியிருந்த, மன நோயாளிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோ மாணவர் போராட்டத்தில் ஈடுபட்ட, சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் இருந்தோரை ஆயுத முனையில் கடத்தி செல்வதற்கு திட்டமிட்டிருந்தது, பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் கசிந்திருந்தது.(மேலும்......) ஆவணி 12, 2011 Indian Parliament to debate Sri Lankan situation Parliament would have a short duration discussion on August 16 on the steps taken by the Indian government for ‘relief and resettlement of Tamils in Sri Lanka and other measures to promote their welfare.' It would be taken up simultaneously in both Houses. Several members are eager for an opportunity to express their views on the situation of Tamils in the post-conflict situation in the island nation and the need for an early political solution to address the grievances of Tamils and other minorities in Sri Lanka.The discussion was originally slated for an earlier date but due to various factors, including disruptions, the matter could not be taken up. Floor leaders of various parties and the government representatives have assured concerned members that the discussion would take place at the earliest possible time next week. (more....) ஆவணி 12, 2011 ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைசெய்யப் பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த படுகொலை வழக்கில் எல்டிடிஇ இயக்கத்தைச் சேர்ந்த முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் நளினி ஆகியோருக்கு 1999-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை உச்சநீதிமன்றமும் 2000-ம் ஆண்டில் உறுதிசெய்தது. எனினும் நளினியின் மரண தண் டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. உச்சநீதி மன்றம் மரணதண்டனையை உறுதிசெய்த தைத் தொடர்ந்து 3 பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர். 3 பேரும் தாக்கல் செய்த கருணை மனுக்களை குடிய ரசுத் தலைவர் பிரதிபா பாட் டீல் கடந்த வாரம் நிராகரித்துவிட்டதாக குடியரசுத் தலை வர் மாளிகை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆவணி 12, 2011 கொலைகளத்தின் கண்
கண்டசாட்சி: புதிய காணொளி
புதுடில்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஹெட்லைன் ருடே என்ற தொலைக்காட்சி இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான இரண்டு மணி நேர புதிய ஆவணப்படம் ஒன்றை நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.30 தெராடக்கம் 9.30 வரை ஒளிபரப்பியது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப் படத்தை 3 நாட்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பியதும் இந்த ஹெட்லைன் ருடே தொலைக்காட்சியே ஆகும். இந்த நிலையில் இன்றிரவு இனப்படுகொலையின் கண்கண்ட சாட்சி- இலங்கையில் நடந்த கொலைக்களங்கள் (I witnessed Genocide: Inside Lanka's Killing Fields) என்ற ஆவணப்படத்தை இத்தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இத் தொலைக்காட்சியின் நிருபர் ஒருவர் நேரடியாக கிளிநொச்சி சென்று பொதுமக்களைச் சந்தித்துள்ளார். மிகவும் இரகசியமாக எடுக்கப்பட்டுள்ள சில காணொளி ஆதாரங்கள் இப் பதிவில் இடம்பெற்றுள்ளன. கீழ் காணும் தொடர்பை அழுத்தி காணொளியை பார்வையிடவும். இலங்கைத் தமிழர்களுக்கு சம அந்தஸ்து கிடைக்கும் வரை போராட்டம் ஓயாது- ஜெயலலிதா
இலங்கையில் இனப்படு கொலையை நடத்தியவர் களை போர்க் குற்றவாளி கள் என
அறிவிக்க மத்திய அரசு, ஐக்கிய நாடுகள் சபையை வற்புறுத்த வேண் டும் என்றும்,
இது மட்டு மல்லாமல், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத்
தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் முழு சம உரிமை கிடைக்கும் வரை அந்நாட்டின்
மீது, பொருளாதாரத் தடை விதிக் கப்பட வேண்டும் என்றும் தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் 8.6.2011 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. தமிழ்நாடு சட்டமன்
றப் பேரவையில் நிறைவேற் றப்பட்ட தீர்மானத்திற்கு களங்கம் கற்பிக்கும் வகை
யில் அதனை விமர்சித்து இலங்கை அரசின் பாதுகாப் புச் செயலாளர் கோத்தபய
ராஜபக்ஷே ஹெட் லைன்ஸ் டுடே தொலைக் காட்சிக்கு பேட்டி அளித்து இருப்பது,
இலங்கை அரசு தான் செய்த தவறை நியா யப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இந்தத்
தீர் மானத்தை நான் அரசியல் ஆதாயத்திற்காக கொண்டு வந்து நிறைவேற்றியதாக
கோத்தபய ராஜபக்ஷே கூறி யிருக்கிறார். இது வன்மை யாகக் கண்டிக்கத்தக்கது.
(மேலும்......)
Humanitarian Operation – Factual
Analysis: July 2007- May 2009 Click here for the full text of the report "Humanitarian Operation: Factual Analysis" ஆவணி 12, 2011 யாழ்., கிளிநொச்சி மாவட்டங்கள் வாக்காளர் இடாப்புகளில் அனைவரும் பதிவு செய்ய வேண்டும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழும் சகல வாக்காளர்களும் தவறாது தங்களது வாக்காளர் விண்ணப்பப் படிவங்களை நிரப்ப வேண்டும் என்று பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்விரு மாவட்டங்களையும் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் விண்ணப்பப் படிவங்களை தவறாது நிரப்புவதற்கு அங்கு செயற்படும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியுள்ளது. சுமார் பத்தாயிரம் வாக்காளர்களின் எண்ணிக்கை 2011 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் அதிகரிக்கும் போது யாழ் குடா நாட்டுக்கான எம்.பி.க்களின் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிக்கும். யாழ். குடாநாட்டில் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பதிவாகியுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்ததால் எம்.பிக்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளது. இந்நிலைமையைக் கருத்தில் கொண்டு செயற்படுமாறும் அவர் வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். ஆவணி 12, 2011 Amnesty International: Channel 4's Sri Lanka's Killing Fields One happened to be a woman Vany Kumar who was exposed to have had three different aliases to suit her strategy. She was also called Damilvany Kumar, Vany Kumar and Damilvany Gnanakumar. She was exposed as a military trained Tamil Tigress who operated from the UK where she lived under the LTTE front Tamil Youth Organization (TYO) and had entered Sri Lanka in 2008 on orders from terrorist Castro and wore the terrorist graduation loyalty symbol of a cyanide capsule around her neck. She was no witness of Sri Lankan Govenment atrocities in the Wanni more than my dog Mookey who lives with us in Ottawa.This woman was exposed as a blatant liar by the Tamil Doctor who she had accused on camera that he did amputations on Tamils with a kitchen knife without any anesthetics. The Doctor exposed this Vany Kumar as a liar as there was no such butchery done by him and he couldn’t keep his smirk off his face talking about her lie. (more...) ஆவணி 12, 2011 கொழும்பு முகத்துவாரத்தில் ரூ. 60 இலட்சம் கொள்ளைநகைக் கடை யொன்றுக்கு கொள்வனவு செய்யப்பட்ட 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கம் கொழும்பு முகத்துவாரம் புளுமெண்டல் வீதியில் வைத்து கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார். புளுமெண்டல் வீதியிலுள்ள நகை கடையொன்றில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கடைக்குத் தேவையான தங்கத்தை செட்டியார் தெருவில் இருந்து வாங்கிக் கொண்டு செல்கையிலேயே அவை கொள்ளையிடப்பட்டுள்ளன. இவர் செட்டியார் தெருவில் உள்ள நான்கு கடைகளில் இருந்து சுமார் 946 கிராம் எடை யுள்ள தங்கத்தை வாங்கி தனி த்னியாக பார்சலிட்டு தனது மோட்டார் சைக்கிளில் எடுத்து வந்துள்ளார். புலுமெண்டல் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவரை வழிமறித்து தங்கப் பொதிகளை பறித்துக் கொண்டு தலைமறை வாகியுள்ளனர். இவரின் அடையாள அட்டை கையடக்கத் தொலைபேசி என்பனவும் கொள்ளையிட ப்பட்டுள்ளதாக பொலிஸில் முறையிடப் பட்டுள்ளது. 60 இலட்சத்து 18 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கம் கொள்ளை யிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக புளுமெண்டல் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஆவணி 12, 2011 "News & Views" High Commission Newsletter. (News LetterJuly 2011 ஆவணி 11, 2011 இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசு காலம் கடத்தவில்லை
பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை ஆறு மாத
காலத்திற்குள் கையளிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழு தன்னுடைய அறிக்கையை 6 மாதங்களுக்குள் சபாநாயகரின் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்குமென்று பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை கொழும்பில் நேற்று சந்தித்து உரையாடிய அவர் இவ்வாறு கூறினார்.அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதை காலதாமதப்படுத்துவதற்காகவே பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அதனை அனுப்புவதாக அறிவித்து ள்ளதென்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் ஆதாரமற்றது என்பது நிரூபணமாகுமென்றும் அவர் சொன்னார். இலங்கையின் அரசியல் சாசனம் சகல உரிமைகளையும் இந்நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கிறதென்று தெரிவித்த அமைச்சர், அதிலுள்ள முக்கிய அம்சங்களை அமுலாக்குவதில் சில காலதாமதங்கள் ஏற்படுவது ஏதோ உண்மைதான் என்று சொன்னார். (மேலும்....) ஆவணி 11, 2011 கருணாநிதியின் பல ஆயிரம் கோடி சொத்து விபரத்தால் பரபரப்பு ![]() முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத |