Contact us at: sooddram@gmail.com

 

தை 2011 மாதப் பதிவுகள்

தை 31, 2011

புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி அபி. உதவ முன்வர வேண்டும்

வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் முதலீடு செய்து பசுமைப் புரட்சியை ஏற்படுத்தினால் நாடு பிரகாசிக்கும்

30 ஆண்டு கால பயங்கரவாத அச்சுறுத்தல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும் நிலையில் புலம்பெயர்ந்தோர் நாடு திரும்பி நாட்டைப் பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்வதற்கு உதவ முன்வர வேண்டும் எனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் புலம்பெயர்ந்திருக்கும் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் நாடு திரும்பி தமது நாட்டின் எந்தப் பகுதியிலும் குறிப்பாக வடக்கு, கிழக்குப் பகுதிகளில் முதலீடு செய்து கைத்தொழில் மற்றும் பசுமைப்புரட்சி ஒன்றை ஏற்படுத்த முன்வர வேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கும் பிரதி அமைச்சர், இதன் மூலமே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் நல்ல நிலைக்குக் கட்டியெழுப்ப முடியும் என்றும் தெரிவித்தார். (மேலும்....)

தை 31, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப்பயணம் 13,14 மற்றும் 15நாள் நிகழ்வுகள்!

28-01-2011 வெள்ளிக்கிழமை நெடுந்தூர நடைப்பயண வீரர்கள் அதிகாலை 05:30 மணிக்கு தேனீர் அருந்திவிட்டு பிடிகுருலா நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சரியாக 08:35 மணிக்கு பிடிகுருலா நகரத்தில் கால் பதித்தனர். பிடிகுருலா நகரத்தில் சி.பி.எம். என்ற பத்திரிகையிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களுக்கு 10நிமிடம் ஒதுக்கப்பட்டு பத்திரிகையாளர் பேட்டி எடுத்தார். நடைபயணத்தை தலைமையேற்று நடத்தும் உயர்திரு. ஞா.ஞானராஜா அவர்களும் திரு. சி. தயாபரன் (டேவிட்) அவர்களும், சீ. வசீகரன் அவர்களும் பேட்டி கொடுத்தார்கள். பேட்டி முடிந்ததும் காலை உணவை நடைபயண வீரர்கள் பிடிகுருலாவிலே முடித்துக் கொண்டார்கள்.(மேலும்....)

தை 31, 2011

கிளிநொச்சி மாவட்டம்

தமிழரசுக் கட்சி ஆதரவாளர் மத்தியில் பலத்த அதிருப்தி

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்பாளர் தெரிவிலும் நியமனப்பத்திர தாக்கலில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்களிடையே பலத்த அதிருப்தி ஏற்பட்டுள்ளதுடன் இதுவிடயத்தில் பாரபட்சமும் குளறுபடிகளும் மேற்கொண்டவர்கள் மீது கண்டனமும் தெரிவிக்கப்பட்டது. பளை பச்சிலைப்பள்ளிக்கும், பூனகரிக்கும் 26ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழரசுக் கட்சியின் இரு எம்.பிக்களால் சரிபார்க்கப்பட்ட நிலையில் கிளிநொச்சி கச்சேரியில் உள்ள தேர்தல் திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இவ் விண்ணப்பத்தில் ஏற்பட்ட தவறுகளால் நிராகரிக்கப்பட்டது. (மேலும்....)

தை 31, 2011

"America, America'" - sung by a Tamil girl

http://axisoflogic.com/artman/publish/Article_61682.shtml

தை 31, 2011

மன்மோகன்- கருணாநிதி இன்று டில்லியில் சந்திப்பு

இந்திய வெளியுறவு செயலர் கொழும்பு வருகை

இந்திய வெளியுறவுச் செய லாளர் திருமதி நிருபமா ராவ் நேற்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தார். நேற்றிரவு 7.30 மணியள வில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந் தடைந்த இந்திய வெளியுறவுச் செயலாளரை வெளி விவகார அமைச்சின் உயரதிகாரிகள் வரவேற்றனர். இன்றைய தினம் காலை இவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந் தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ள துடன் அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிசையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி யொருவர் தெரிவித்தார். (மேலும்....)

தை 31, 2011

நச்சுத்தன்மையற்ற உலகை உருவாக்கும் வகையில் இரசாயன சக்தியின் பயன்பாடு

(கலாநிதி யசோதரா பிரபாகரர் இராசாயனவியல் துறை)

இரசாயனவியலானது உலகளாவிய ரீதியில் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலத்தின் தேவைகளை புதியவகை சக்தி மூலங்களை உருவாக்கி காலநிலை மாற்றங்களை புரிந்துகொள்ளல், நிலம், நீர், வளி என்பவற்றை உள்ளடக்கிய நச்சுத் தன்மையற்ற சூழலை உருவாக்குதல் போன்றவற்றிற்கு இரசாயனவியல் அறிவு வேண்டப்படுகிறது. திண்மங்கள், திரவங்கள், வாயுக்கள் ஆகிய சடப்பொருட்கள் யாவும் இரசாயன மூலகங்கள் அல்லது அவற்றின் சேர்வைகளால் ஆனவை. அத்துடன் ஆழ்ந்து நோக்கினால் உயிர்வாழ்வதற்குரிய எல்லாச் செயற்பாடுகளும் இரசாயனத் தாக்கங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் இரசாயனவியற் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டுவது மிகப் பெரிய தேவையாகும். (மேலும்....)

தை 31, 2011

எகிப்திய ஜனாதிபதி முபாரக்கின் ஆட்சி ஆட்டம் காண்கிறது

82 வயதான ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு செவிமடுத்து அந்நாட்டின் புலனாய்வுப் பிரிவின் அதிபர் ஒமர் சுலைமானை தனது உப ஜனாதிபதியாக நியமித்து மக்களை சாந்தப்படுத்த முயற்சி செய்த போதிலும் அம்முயற்சியை நிராகரித்த மக்கள் ஹொஸ்னி முபாரக் இராஜிநாமா செய்தால்தான் எகிப்து மக்களுக்கு சுதந்திரமும் பொருளாதார சுபீட்சமும் ஏற்படும் என்று தெரிவித்து தங்கள் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேலும் அதிகரித்துள்ளனர். ஹொஸ்னி முபாரக்கின் மகன் கமால் முபாரக் தமது தந்தைக்குப் பின்னர் தான் ஜனாதிபதிப் பதவியை ஏற்றுக் கொள்ள முடியுமென்று கனவு கொண்டிருந்த போதிலும் அவரது இந்த இலட்சியக் கனவும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் சின்னாபின்னாமாகியுள்ளது. (மேலும்....)

தை 31, 2011

புதுப்புது கிரகங்கள் கண்டுபிடிப்பு

விண்ணில் சூரிய குடும்ப கிரகங்கள் மட்டுமன்றி எண்ணிலடங்கா கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் உள்ளன. இது குறித்து ஆராய்ச்சி செய்துவரும் விஞ்ஞானி கள் புதுப்புது கிரகங்களை கண்டு பிடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு கிரகத்தை கண்டு பிடித்துள்ளனர். டபிள்யூ. ஏ. எஸ். பி. 33 பி என்று இதற்கு பெயரிட்டுள்ளனர். இதை எச்.டி. 15082 என்றும் அழைக்கின்றனர். இது மிகவும் கடுமையான வெப்பம் உடைய கிரகமாகும். 7160 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் இது உள்ளது. தற்போது இதுதான் மிகுந்த வெப்ப முடைய கிரகம் என கருதப்படுகிறது. ஏனெனில் சூரியனின் வெப்பம் 5,600 டிகிரி செல்சியஸ்தான். இதற்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்ட கிரகம் 3,200 டிகிரி செல்சியஸ் வெப்பம் கொண்டதாக இருந்தது. இது அதை மிஞ்சி இரு மடங்கு வெப் பத்தை வெளிப்படுத்துகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இந்த கிரகம் விஞ்ஞானிகள் அறிந்தனர். அதன் பின்னர் தான் ஆய்வு மேற்கொண்டனர். இது வியாழன் கிரகத்தை விட 4 1/2 மடங்கு பெரியது.

தை 31, 2011

போக்குவரத்து வசதிக்காக மண் அணை அகற்றப்பட்டது

சேத்தான்குளம் முதல் அம்பணை வரை போடப்பட்டிருந்த மண் அணையை பாதுகாப்புப் பிரிவினர் முற்றாக அகற்றியுள்ளனர். இப் பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்துள்ளதால், இம் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இம் மண் அணை தடையாக இருப்பதாக மீளக் குடியமர்ந்த மக்கள் யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியிடம் தெரிவித்திருந்தமைக்கு அமைவாக அது அகற்றப்பட்டுள்ளது. இவ் மண் அணை நீக்கப்பட்டதால், அளவெட்டி, அம்பணையூடாக தெல்லிப்பழைக்கு பஸ் சேவையை நடாத்தவும், வசதியேற்பட்டுள்ளது. விரைவில் பலாலி பாதுகாப்பு வலயத்தினுள் கருகம்பணை மக்களையும் மீள்குடியமர்த்த பதிவுகள் இடம்பெற்று வருகின்றன. கருகம்பணை கீரிமலைக்கு அடுத்த கிராமமாகும். கருகம்பணை மக்கள் தமது வீடுகள் காணிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தை 31, 2011

வவுனியா ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை வசதி

வவுனியாவில் உள்ள புற்றுநோயாளர்கள் மகரகம வைத்தியசாலைக்கு சென்றே சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. வவுனியா வைத்தியசாலை அத்தியட்சகரின் நடவடிக்கையால் நீண்டகாலத்திற்கு பின்னர் வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலையில் புற்றுநோய்க்குரிய சிகிச்சை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. யாழ். போதனாவைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சை வைத்திய நிபுணர் மாதம் ஒரு தடவை மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சிகிச்சையை வழங்கி வருகின்றார் என தெரிவிக்கப்படுகின்றது.

தை 31, 2011

அநுராதபுர சிறையிலிருந்து கைதிகள் இருவர் தப்பியோட்டம் _

அநுராதபுரம் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த இரு கைதிகள் சனிக்கிழமை காலை தப்பியோடியுள்ளதாக அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். காலை வேளையில் அன்றாட வேலைகளைக் கைதிகளுக்குப் பகிர்ந்தளித்துக் கொண்டிருந்த வேளையில் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரியாமல் சிறைச்சாலையை விட்டு ஓடி மல்வத்து ஓயாவினூடாக தலைமறைவாகியுள்ளனர். சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் இருவரையும் பிடிப்பதற்காக பின்தொடர்ந்து ஓடியபோதும் அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர். இவர்கள் இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிறைச்சாலை அதிகாரிகளும் அநுராதபுரம் பொலிஸாரும் வேறுவேறாக மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். _

தை 31, 2011

தலைமைப் பதவிக்கு இலக்கு

கூட்டமைப்புக்குள் குழப்பம் சிவாஜிலிங்கம் பலம் சேர்க்கும் ஒருவரென சித்தார்த்தன் புகழாரம்

கருத்துத் தெரிவிக்காமல் மாவை சேனாதிராஜா மெளனம்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கட்டுக்கோப்பைச் சிதைக்கும் வகையில் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரனும் செல்வம் அடைக்கலநாதனும் அறிக்கையினை விடுத்து வருகிறார்களென்று அவ்விருவர் மீதும் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஏற்கனவே இவ்விருவர் மீதும் கூட்டமைப்புக்குள் அதிருப்தி நிலவி வரும்வேளையில், தற்போது கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுவரும் முயற்சியை விமர்சித்து அறிக்கை விடுத்ததன் மூலம் இவர்கள் மீதான வெறுப்பு மேலும் வலுவடைந்திருப்பதாக கூட்டமைப்பின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்....)

தை 31, 2011

அப்படிப் போடு அரிவாளை

அமெரிக்காவின் கோரிக்கை பாகிஸ்தான் அரசால் நிராகரிப்பு

பாகிஸ்தானின் லாகூர் நகரின் வீதியில் பாகிஸ்தானியர்கள் இருவரை சுட்டுக்கொன்ற அமெரிக்கரை உடனடியாக விடுதலை செய்யுமாறு அமெரிக்கா விடுத்த கோரிக் கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளதுடன் இவ்விடயம் தொடர்பாக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க இடமளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. ரேமன் டேவிஸ் என்ற மேற்படி அமெ ரிக்கர் இஸ்லாமாபாத்தில் உள்ள அமெ ரிக்க தூதரகத்தில் பணிபுரிபவர். லாகூரில் வீதியில் கடந்த வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை சுட்டுக் கொன்றார். சம்பவம் நடந்த பின்னர் இதுவரை டோவிஸ் லாகூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை இவர் மாஜிஸ்தி ரேட் முன்னிலையில் தோற்றினார். (மேலும்....)

தை 31, 2011

கூட்டமைப்பு - அரசிற்கு இடையில் வியாழனன்று மற்றுமொரு சுற்று பேச்சு _

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மற்றுமொரு சுற்றுப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இருதரப்பிற்கும் இடையில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வடக்கு கிழக்கின் மனிதாபிமான, மீள்கட்டமைப்பு பணிகள், அரசியல் தீர்வு உள்ளிட்ட இனங்காணப்பட்ட விவகாரங்களுக்கு சீரான வகையில் தீர்வுகாண்பதற்காக இருத்தரப்பும் தொடர்ந்தும் நல்லிணக்கத்துன் பேச்சுக்களை முன்னெடுப்பது தீர்மானித்தது.
இந்த சுற்றுப்பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தரப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல்.பீரிஸ், ரட்ணசிறி விக்கிரமநாயக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினரும் குழுவின் செயலாளருமான சஜின்வாஸ் குணவர்த்தன ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பிலும் அதன் செயலாளர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

தை 30, 2011

நாடு கடந்த தமிழீழ தனிநாடு அரசின் மாண்புமிகு பிரதமர் திரு உருத்திரகுமாரின் கன்னியுரை இப்படியும் இருந்திருக்கலாம்

(மோகன்)

பெரும்பாலான புலம் பெயர்ந்த மக்களுக்கு தமிழ் மக்களுக்கான தனிநாடு எமது சொந்த மண்ணிலேயே அமையவேண்டும் என்ற அவா இன்னமும் தணியாத தாகமா இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக்கொள்ளாமல் இல்லை. எங்களுக்கும் அந்த ஆசை இல்லாமல் இல்லை. ஒருவேளை அதற்ககான சந்தர்ப்பம் கடைசிவரை இல்லாது போய்விட்டால் எமது கனவுகள் நிராசையாக விடக்கூடாது என்பதற்க்காகவே இந்த நாடு கடந்த தனியரசு என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஆனானப்பட்ட தேசியத்தலைவராலேயே முடியாமல் போன ஒன்றை தேசம் விட்டு ஓடி வந்து எங்களால் முடித்து காட்டமுடியுமா என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும் அதற்காக சிங்கள அரசிடம் மண்டியிட்டு போனதென்று அர்த்தமில்லை சிங்கள தலைவர்களெல்லாம் புலம் பெயர்ந்த நாடுகளுக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு வேளையிலும் ஆர்ப்பாட்டம் செய்து எங்கள் கோபங்களை இப்போதைக்கு தீர்த்து கொள்வதே எங்கள் உடல் நலத்திற்கு ஏற்ற ஒன்று. இல்லாதுவிட்டால் துரோகக் குழுக்களால் நாம் அழைக்கபடுவது போல் உண்மையிலேயே புலன் பெயர்ந்த மக்களாக மாறிவிடும் சாத்தியக்கூறுகள் உண்டு. (மேலும்...)

தை 30, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப்பயணம் 11வது மற்றும்12 வது நாள் நிகழ்வுகள்!

அடங்கி சாலையில் நடைபயண வீரர்கள் தங்கியிருக்கும் போது அருகில் உள்ள கிராமத்திலிருந்து ஒருவர் வந்தார். தன்னுடைய பெயர் சங்கர் என்றும் தான் மதுரை பக்கத்தில் உள்ளவர் என்றும் ஆந்திராவில் கடந்த 38 ஆண்டுகளாக முறுக்கு வியாபாரம் செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஆந்திரா தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் படித்து எங்களைப் பற்றி அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார். மிகுந்த பாசத்துடன் பழகிய அவர் நடைபயண வீரர்கள் இரவு உணவு சாப்பிடுவதைப் பார்த்தார். உங்களுடைய கஸ்ரங்கள் எனக்குத் தெரிகிறது என்று பாசத்துடன் பேசிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் 2 மூடை அரிசியுடன் திரும்பவும் முகாமிற்கு வந்தார். நடைபயண தலைமைக் குழுவின் தலைவர் மங்களராஜா அவர்களிடம் கையளித்து, தங்களுடைய நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றுச் சென்றார். (மேலும்...)

தை 30, 2011

Current Tar Sands Mines if it were in my home

The mining of Canada's tar sands is the largest (and one of the most destructive) industrial project in human history. The harvesting of petroleum from the tar sands destroys the land, pollutes the water and is poisoning downstream communities. It is the largest contributor to greenhouse gas emission growth in Canada. The tar sands already produce over 30 million tonnes of CO2 emissions per year; by 2020 that number could grow to over 140 million tonnes. Harvesting the tar sands requires the destruction of trees, ecosystems, brush, muskeg and topsoil and requires a massive amount of water. The tar sands are also creating huge health concerns in downstream communities, trampling on treaty and Indigenous rights, and contributing to the destruction of traditional way of life for First Nation peoples in the area. Imagine if this was your home - what would you do?

தை 30, 2011

அரசாங்கத்தைக் கலைத்தார் எகிப்து ஜனாதிபதி

எகிப்தில் இடம்பெற்றுவரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தினால்; அந்நாட்டு அதிபர் ஹொஸ்னி முபாரக் தனது அரசாங்கத்தைக் கலைத்து புதிய அரசாங்கத்தை அமைக்கவுள்ளார். டூனிசியாவில்; இடம்பெற்ற போராட்டங்களினால் அந்த நாட்டு அதிபர் பென் அலி பதவியை விட்டு விலகினார். அதன் எதிரொலியாக எகிப்திலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் எகிப்தின் முக்கிய நகரங்களான கெய்ரோ, சூஸ், அலெக்ஸ்சாண்ட்ரியா ஆகிய நகரங்களில் இடம் பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சூஸ் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 13 பேரும், கெய்ரோ நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 பேரும் உயிரிழந்தனர். (மேலும்...)

தை 30, 2011

இலங்கையின் அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைத்திடுக!

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங் கைக் கடற்படையினர் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜெயக்குமார் என்ற மீனவரின் கழுத்தில் கயிற்றால் சுருக்கிட்டு இழுத்ததில் சனிக்கிழமை இரவு அவர் உயிரிழந்தார். கடந்த 12ம் தேதி ஜெகதாபட்டினம் கடல் அருகே பாண் டியன் என்ற இளைஞரை இலங்கை கடற்படை யினர் சுட்டுக் கொன்றனர். அந்தப் பதட்டம் தணி வதற்குள் மீண்டும் ஒரு படுகொலை நடந்தேறியுள்ளது. வழக்கம்போல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கண்டனம் தெரி வித்துள்ளார். இந்தியத் தூதரகத்திடம் இதுகுறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இலங்கை கடற் படை இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது என்று கூறுவது அடிப்படையற்றது என்று இலங்கை கடற்படையின் செய்தித்தொடர்பாளர் நாடகம் ஆடியுள்ளார். இதே பதிலை இலங்கை அரசு தரக்கூடும். (மேலும்...)

தை 30, 2011

ஈபிடிபியின் மருதங்கேணி பகுதிப் பொறுப்பாளர் கொல்லப்பட்டுள்ளார்!

ஈபிடிபி அமைப்பின் மருதங்கேணி பகுதிக்கான பொறுப்பாளரும் மற்றும் வன்னயிலிருந்து மீளக் குடியமர வந்த மக்களுக்கான நலன்புரி அமைப்புக்கான பிரமுகருமான 36 வயதுடைய ராசரத்தினம் சதீஸ் இன்று காலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை வடமராட்சி கிழக்கிற்கு செல்லும் பருத்தித்துறை மருதங்கேணி வீதியில் ஆனைவிழுந்தானை அண்டிய சுடலைப் பகுதியில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. (மேலும்...)

தை 30, 2011

தை 30, 2011

ஒட்டுத் துணியும் மேலாடையும்

எப்பொழுதெல்லாம் பசித்தீயால்

கருகிக் கரைகிறோமோ

அப்பொழுதெல்லாம் ஓடிவந்து

முழங்குகிறீர்கள்.



“இது இனியும் நீடிக்கக் கூடாது”

முடிகின்ற எல்லா வழிகளிலும் உதவி செய்வோம்.

உற்சாகம் நிரம்பியவர்களாய்

நீங்கள் எஜமானிடம் ஓடுகிறீர்கள்;

நாங்களோ,

பசித்தீயில் கருகியபடி காத்துக் கொண்டிருக்கிறோம்.

(மேலும்...)

தை 30, 2011

உப்புக்கல்லை வைரமென்று நம்பி கெடப்போகும் தமிழ்மக்கள்.

தமிழரங்கம் மட்டுமல்ல எந்தவொரு அரங்கமும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு சவாலாக இனி வருவதெண்டால் .இந்த விண்ணாதி விண்ணன்களை சமாளிக்கிற தைரியத்துடனும் தந்திரோபாயத்துடனும்  வரவேண்டும். டக்ளசால் அது முடியாது. டக்ளசுடன் இருப்பவர்களுக்கு அந்த ஆற்றல் கிடையாது. டக்ளசின் பணத்திற்காக சேர்ந்த கூட்டம் டக்ளசின் இருக்கிற கொஞ்ச நஞ்ச மதிப்பையும் கெடுத்து விடுவதில் முன்னிற்கிறது. அரசியல் ஆளமை கிடையாது. இது தெரிஞ்சுதான் மகிந்த அரசு டக்ளசை யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிட அனுமதிப்பதில்லை. கிரிமினல்கள், சுழியோடிகள், முடிச்சுமாரிகள், மொள்ளைமாரிகள் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பிடம் தாராளமாக நிறைந்து கிடக்கிறார்கள். இவர்களையெல்லாம் பிரபாகரனால் மட்டும்தான் அடக்கி வைத்திருக்க முடிந்தது. தமிழ்ச்செல்வனிடம் அரசியல் வகுப்பெடுத்த பெருமை தமிழ்த்தேசியக்கூட்டமைக்கு மட்டுமே உரியது. (மேலும்...)

தை 30, 2011

மகிந்த ராஜபக்ஷ மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷே மீது சட்டத்துக்குப் புறம்பாக படுகொலைகள் செய்ததாக குற்றம்சாட்டி அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இலங்கை ராணுவத்தால் ரஜீகர் மனோகரன், பிரேமாஸ் ஆனந்தராஜா மற்றும் கலைசெல்வி லவனின் கணவர் ஆகியோர் கொல்லப்பட்டதாகவும், அவர்களின் சார்பாக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள தான் 3 கோடி டாலர் நஷ்ட ஈடு தொகை கேட்டுள்ளதாகவும் அமெரிக்க வழக்கறிஞர் புரூஸ் ஃபெய்ன் என்பவர் தெரிவித்துள்ளார். சித்ரவதை மற்றும் சட்டத்துக்கு புறம்பான கொலைகள் அமெரிக்க மண்ணுக்கு வெளியே நடந்து இருந்தாலும், சட்டப்படி அவற்றுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன், இலங்கையில் மறைந்து கொண்டாலும் அதிபர் ராஜபக்ஷே, நீதியிடம் இருந்து தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே,  இந்த வழக்கு ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வர வேண்டும் என்பதற்காகவே செய்யப்பட்ட முயற்சி என இலங்கை அதிபர் அலுவலகம் கருத்து தெரிவித்துள்ளது.

தை 29, 2011

உள்ளுராட்சித் தேர்தலில் எமது கட்சி பங்குபற்றாது - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

தமிழ்மக்களுக்கான ஓர் அரசியல் அதிகார விடுதலையைப் பெறல், சமூக அடிமைத் தளைகள் ஒடுக்குமுறைகளை ஒழித்தல், பொருளாதார சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டல், முற்போக்கான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துதல் என்ற அடிப்படையில் தோழர் நாபாவின் வழிகாட்டலில் ஒரு புரட்சிகர இயக்கமாகச் செயற்பட்ட நாம் காலப்போக்கில் தேர்தல்களில் பங்குபெறுவதற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டியவர்களானோம். புலிகள் வல்லமை கொண்டவர்களாக இருந்த போது மக்களோடு உறவுகளைப் பேணுவதற்கும் எமது அரசியல் வேலைத்திட்டங்களை மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்காகவும் நாம் தேர்தல்களில் பங்குபற்றினோம். இன்று மக்களோடு நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் தேர்தல்களில் எமது கட்சி வெற்றிகரமான ஒன்றாக இருப்பதற்கான மக்கள் பலம் இப்போது எம்மிடம் இல்லை. அதனை வெற்றிகரமாக ஆக்குவதற்கான கட்சிக் கட்டமைப்புப் பலத்தையும் நாம் இன்னமும் அடையவில்லை, தேர்தல்களைச் சந்திக்கும் பணபலமும் எம்மிடமில்லை. (மேலும்....) 

தை 29, 2011

புலம்பெயர்ந்த வடக்கிற்கு கிழக்கிலிருந்து ஒருகடிதம்!!

(வாவிமகன்)

தமிழ் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக நடைமுறைக்கு ஒவ்வாதவற்றைக் கைவிட்டு இதய சுத்தியுடனும் எல்லாப் பிரதேசமக்களின் நம்பகத் தன்மையையும் உறுதி செய்யவேண்டியது உங்கள் கடமையாகும். தற்போது நாட்டில் ஒரு சுமூகமான சூழல் ஏற்பட்டுள்ள இவ்வேளையில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய கட்டாயமும் கடப்பாடுமுள்ளது. அவ்வகையில், தாயகத்திலுள்ள மக்களின் அபிலாசைகளைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதமுறைகளை நிதானத்துடன் கையாளவேண்டிய தார்மீகப் பொறுப்பு புலம்பெயர்ந்த வடக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இருபாலாருக்கும் உண்டு. இவை சம்பந்தமாக அமைக்கப்படும் எந்த குழுவிலோ அமைப்பிலோ இரு மாகாணத்தவருக்கும் சமமான இடமும் அவர்களுக்கான முக்கிய பொறுப்பும் சமமாக வழங்கப்படவேண்டும். அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து ஆயுதம் தாங்கிய போராட்டம் அல்லது இலங்கை அரசிற்கு எதிரான தீவிர பிரச்சாரம் செய்யும் அமைப்புக்களை புறக்கணித்து நேர்மையான அரசியல் சாணக்கியத்தை பயன்படுத்தி உலகநாடுகளின் உதவியுடன் நம் மக்களுக்கான உரிமைகளை இலங்கை அரசின் சம்மதத்துடன் பெற்றுக்கொள்ள வேண்டியதும் நமது தலைமுறையின் கடமையாகும். (மேலும்....)

தை 29, 2011

விக்கிலீக்ஸால் சர்வதேச உறவுகள் வலு பெற்றுள்ளது - ரஷ்ய ஜனாதிபதி

விக்கிலீக்ஸின் காட்டிக்கொடுக்கும் இணையதளத்தினால் சர்வதேச உறவுகள் மேலும் வலுப்பெற்றுள்ளன, என்று ரஷ்ய ஜனாதிபதி டிமெட்ரி மித்வடே கூறியுள்ளார். கடந்த ஆண்டு விக்கிலீக்ஸ் இணைய தளம் ஈராக், ஆப்கான் ஆகிய நாடுகளுடனான அமெரிக்காவின் போர் குறித்த ரகசிய ஆவணங்களை வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை உண்டாக்கியது. இதன் நிறுவனர் ஜூலியன் அசேஞ்ச் சர்வதேச அளவில் பிரபலமானார். இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய ரஷ்ய ஜனாதிபதி டிமெட்ரி மித்வடே கூறியதாவது: விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்ட ரகசிய ஆவணங்களால் சில நாடுகள் கடும் விமர்சனம் செய்து வருகின்றன. ஆனால் விக்கிலீக்ஸினால் சர்வதேச உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இது சர்வதேச அளவில் பொது அரசியல் இணையதளமாக விக்கிலீக்ஸ் உள்ளது. இன்று பலகோடி மக்கள் இணையதளத்தினை பயன்படுத்து கின்றனர். அந்த வகையில் விக்கிலீக்ஸ் சர்வதேச நாடுகளிடையேயான உறவில் நல்ல செல்வாக்கினை பெருக்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தை 29, 2011

'சிவாஜிலிங்கத்தை சேர்ப்பதற்கு த.தே.கூட்டமைப்பில் உத்தியோகபூர்வ பேச்சு இடம்பெறவில்லை': சுரேஷ், செல்வம்

இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக மாவை சேனாதிராசாவினால் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும்

சிவாஜிலிங்கத்தினை தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வமாக எந்தப் பேச்சுவார்த்தைகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இடம்பெறவில்லை. இரண்டு நபர்களுக்கிடையிலான ஒப்பந்தம் என்ற பெயரில் சிவாஜிலிங்கம் தமிழரசுக் கட்சியில் உள்வாங்கப்பட்டு தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கூட்டமைப்பு எடுத்த முடிவுகளுக்கு எதிராக மாவை சேனாதிராசாவினால் தமிழரசுக் கட்சியின் செயலாளர் என்ற வகையில் எடுத்த தனிப்பட்ட முடிவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிறேமச்சந்திரன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் ஒப்பமிட்டு அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

தை 29, 2011

இலங்கை அரசு போரில் வெற்றிபெற உதவிய மூலோபாயங்கள் எவை

'ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்துகொண்டு புலிகள் தங்களை மீளொழுங்குபடுத்துவதற்காக வாய்ப்பினை ஏற்படுத்தக்கொடுக்ககூடாது என்பதில் நாங்கள் உறுதியுடன் இருந்தோம்'
 

புலிகளின் முதலாவது வான் வழித் தாக்குதல் இடம்பெற்றபின்னர்தான், தாழ்வாகப் பறந்து தாக்குதலை நடாத்தும் விமானங்களை முறியடிக்கும் திறன் எங்களிடம் இல்லை என்பதை நாம் விளங்கிக்கொண்டோம். இந்த உண்மையினை நாங்கள் தெரிந்துகொண்டவுடன் தாழ்வாகப் பறக்கும் எதிரி விமானங்களை இலக்குவைப்பதற்கு ஏதுவாக தாக்குதல் அபாயம் இருந்த பகுதிகளில் விமான எதிர்ப்புப் பீரங்கிகளை நிலைப்படுத்தினோம், என்கிறார் அவர். இதுபோன்ற இன்னொரு சம்பவத்தினையும் கோத்தபாய விபரித்தார். "படை நடவடிக்கை ஒன்று அதன் இறுதிக்கட்டத்தினை நெருங்கும் போது இந்திய அரசாங்கத்திடமிருந்து எழும் அழுத்தங்களில் விளைவாக குறிப்பிட்ட படை நடவடிக்கைகளை நாம் பலமுறை கைவிட்டிருக்கிறோம். உதாரணமாக, இந்தியாவின் தலையீட்டினைத் தொடர்ந்துதான் வடமராட்சி மீது முன்னெடுக்கப்பட்ட படை நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது. ஆதலினால் இம்முறை இந்தியாவுடன் சிறந்த உறவினைப் பேணும் அதேநேரம் அவர்களது இதுபோன்ற அழுத்தங்களுக்குப் பணிந்துகொடுப்பதில்லை என்ற நிலைப்பாட்டினை நாம் எடுத்திருந்தோம்". ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்துகொண்டு புலிகள் தங்களை மீளொழுங்குபடுத்துவதற்காக வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்ககூடாது என்பதில் நாங்கள் உறுதியுடன் இருந்தோம். இலங்கை அரசியல் நிலைமைகள் தமிழ்நாட்டின் மீது அதிக செல்வாக்கினைச் செலுத்தும் என்பதாலேயே இந்தியா தலையிட முனைந்தது". (மேலும்....)

தை 29, 2011

யாழ்ப்பாணத்தில் குட்டிப் புலிகள் குதூகலிக்க கிழக்கு மாகாணத்தின் தலைநகரான திருகோணமலையில் கிழட்டுப் புலியின் சாராயக்கடைக்காரர்காரர்களின் சாம்ராஜ்யம்!

ராஜபக்ஸ ஓர் சிங்கள இனவாதி அவனால் தமிழ் மக்களுக்கு எதனையுமே வழங்கமுடியாது என முழங்கியவர் ஜனாதிபதி திரு ராஜபக்ஸ அவர்களின் காலடியில் மண்டியிட்டு தமக்கும் தமது சகாக்களான மாபியாக்களுக்குமான வாகன இறக்குமதிக்கான பேமிற்றுகளை பெற்றதற்கமைய ஒரே மொத்தத்தில் புலிக்கூட்டமைப்பின் மாபியாக்கள் அனைவரும் (5) ஐந்து மில்லியன் ரூபாய்களுக்கு திடீர் அதிபதியானார்கள். சம்பந்தனினதும் அவரின் சகாக்களான மாபியாக்களினதும் அரசியல் வாழ்க்கை தொடர்பான சரித்திரத்தினை எழுதுவதானால் பத்துப் பக்கங்களில் எழுதினாலும் இடம் போதாத நிலையே ஏற்படும். எது எவ்வாறாயினும் பிள்ளையார் பிடிக்கப்போய் இன்று பூதத்தின் வாயிலகப்பட்ட கதையே திருமலை மக்களின் நிலை! (மேலும்....)

தை 29, 2011

The High Commissioner,

High Commission for Britain,

New Delhi  110021.

Honourable Sir,

                        Greetings from E.N.D.L.F.  The participants of the epoch making long journey on foot from Chennai to Delhi seeking justice for the Eelam Tamils, are the members of Eelam National Democratic Liberation Front (E.N.D.L.F) Our Front was a partner in the Northern and Eastern provincial coalition government during the brief period 1988 - 1990. We had the strong hope of finding a permanent solution for the grave problems confronted by the Eelam Tamils through Indo-Sri Lankan Accord signed in 1987. With this end in view we accepted the said Accord and the reign of the provincial government. In this Endeavour thousands of our members lost their precious life. (more...)

தை 29, 2011

காப்பாற்றப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப்பை ஏன் சேர்க்கவில்லை என கேள்வி எழுந்திருக்கிறது.  தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்குள் ஈ.பி.ஆர்.எல்.எப் சேர்க்கப்படாமல் இருப்பது சரியானது. தமிழ்த்தேசியமைப்பு அயோக்கியர்களின் கூடாரம். அதற்குள் ஈ.பி.ஆர்.எல்எப் போய் ஏன் பெயரைக் கெடுத்துக்கொள்வானேன். அவர்கள் சேராமல் இருப்பது சிறந்த முடிவுதான். ஈ.பி.ஆர்.எல்.எப் மீதான குற்றச்சாட்டுக்கள் இந்திய ராணுவ காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பானவை. அப்போது அதற்கு பொறுப்பாக செயற்பட்ட சு ரேஷ் பிரமச்சந்திரன் நேர காலத்தோடு புலிகளுடன் போய் ஞானஸ்நானம் பெற்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இணைந்து விட்டார். மற்றைய பிரிவினரான பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப்பினர் புலிகளிடம் தமது முக்கிய உறுப்பினரான சுபத்திரனை இழந்து பகிரங்க அரசியல் செய்ய முடியாதவாறு முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். (மேலும்....)

தை 29, 2011

Canadian Tamils for Peace and Democracy (CaTpad) strongly condemns attack on Buddhist Vihara and monks in Chennai and Thanks Buddhist community in Srilanka for showing greater patience

Canadian Tamils for Peace and Democracy (CaTpad) condemns the cowardly attack on the Buddhist Vihara in Chennai by LTTE sympathizers and anti social elements backed by LTTE. The attack on place of worship and Buddhist monks clearly demonstrate the LTTE’s impatience and anger of growing friendship and stronger relationship between the Tamil and Sinhalese communities in Srilanka and the frustration due to strong Diplomatic ties between Srilanka and India. (more....)

தை 29, 2011

கைதிகளை நல்வழிப்படுத்தும் நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்பட வேண்டும்

சிறைச்சாலைகளில் கைதிகள் மேற்கொள்ளும் வன்முறைக ளும், கலவரங்களும் இன்று, இலங்கையில் அதிகரித்து வருகின்றமை உண்மையிலேயே ஜனநாயகத்தின் மீது நம் பிக்கை வைத்துள்ள மக்களுக்கு வேதனையை அளிப்பதாக இரு க்கிறது. எமது சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதி களில் 98 சதவீதமானோர் இலங்கைப் பிரஜைகளாவர். அவர்க ளுக்கும் எமது நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போன்று சகல உரிமைகளையும் அனுபவிக்கும் தகுதியிருக்கிறது. சிறைச்சாலைகள் குற்றமிழைக்கும் ஒரு மனிதனை திருத்தி மீண் டும் நல்வழிப்படுத்தும் புனர்வாழ்வளிக்கும் ஒரு ஸ்தானமாகவே இருக்க வேண்டும். இதுவே, ஜனநாயகப் பாரம்பரியத்தின் ஒரு சிறப்பம்சமாகும். கைதிகளுக்கு சிறைக்கூடங்களில் பிரச்சினை கள் இருக்கலாம். (மேலும்....)

தை 29, 2011

டூனிசியா, எகிப்தை தொடர்ந்து யெமனிலும் போராட்டம்

யெமன் நாட்டில் ஜனாதிபதி பதவி விலகக் கோரி, எதிர்க்கட்சியினரும் இளைஞர் அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. டூனிசியாவில் ஜனாதிபதி அபிதின்பென் அலியை பதவி விலகக் கோரி நடந்த போராட்டத்தின் காரணமாக அவர் தலைமறைவாகி சவூதியில் தஞ்சம் புகுந்தார். அங்கு நடந்த போராட்டம் வெற்றியடைந்ததால், தற்போது எகிப்திலும் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்குக்கு எதிராக போராட்டம் வெடித்துள்ளது. தற்போது இந்த போராட்டம் யெமனையும் தொற்றிக்கொண்டுள்ளது. யெமன் நாட்டு ஜனாதிபதி அலி அப்துல்லா சலே 32 ஆண்டு காலமாக ஆட்சியில் உள்ளார். இவரது பதவிக் காலம் 2013இல் முடிவடைகிறது. அதற்குள் தன்னுடைய மகனை ஜனாதிபதியாக்க முயற்சி செய்து வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். (மேலும்....)

தை 29, 2011

NATIONAL DAY of Sri Lanka

We cordially invite you to attend the

63 rd NATIONAL DAY of Sri Lanka On Friday, 4 th February 2011 at the  Celebrations Banquet Hall, 174 Bartley Drive (Victoria Park Avenue and Eglinton Avenue), North York, Toronto, Ontario, M4A 1E1, (416) 759-7772

From  6;30 P:M to 9:00 P:M

Consulate General Of Sri Lanka

40 St Clair W

Toronto, ON M4V 3A1

(416) 323-9133

தை 29, 2011

தொடர்ந்தும் அதிகரித்துவரும் உலக முஸ்லிம்களின் சனத்தொக

உலகம் முழுவதும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் வரும் 2030 ஆம் ஆண்டளவில் உலக மொத்த மக்கள் தொகையில் 25 வீதத்திற்கும் அதிகமானவர்களாக இஸ்லாமியர்கள் இருப்பார்கள் என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக வொஷிங்டனை சேர்ந்த மத மற்றும் பொதுவாழ்க்கை குறித்த ஆராய்ச்சி மையம் ஒன்று நடத்திய ஆய்வில் அடுத்த இருபது ஆண்டுகளில் முஸ்லிம் அல்லாதவர்களின் எண்ணிக்கையிலிருந்து இரு மடங்கு அதிகமாக முஸ்லிம்களின் எண்ணிக்கை இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அடுத்த இருபதாண்டுகளில் 35 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு 35 சதவீதம் அதிகரித்தால் 2010ல் 1.6 பில்லியனாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2030ல் 2.2 பில்லியனாக அதிகரித்து காணப்படும். (மேலும்....)

தை 29, 2011

நிருபமாராவ் இன்று இலங்கை வருகை

இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இன்று இலங்கை வரவுள்ளார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா வின் வேண்டுகோளு க்கு அமைய அவ ரது பயணம் அமை ந்துள்ளதாக வெளி நாடு செய்திச் சேவையொன்று அறிவித்துள் ளது. இன்று இலங்கை வரும் நிருபமா ராவ் இலங்கை அரசின் முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார். இதேவேளை, முக்கிய பேச்சுவார்த்தைகளி லும் இவர் கலந்து கொள்வார் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கு அமைய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, செயலாளர் நிருபமா ராவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாகவும் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

தை 29, 2011

Members of Sri Lanka's Tamil minority on Friday filed a lawsuit in the United States against the island's president, seeking $30 million in damages over alleged extrajudicial killings

Members of Sri Lanka's Tamil minority on Friday filed a lawsuit in the United States against the island's president, seeking $30 million in damages over alleged extrajudicial killings. Activists from the Tamil diaspora spearheaded legal action after President Mahinda Rajapakse quietly traveled to the United States, in a test of how much deference US authorities show to visiting heads of state. Bruce Fein, a prominent Washington lawyer, said he filed the suit on behalf of three plaintiffs under a 1991 act that allows for action in the United States against foreign officials over torture and extrajudicial killings. "President Rajapakse will not escape the long arm of justice secured by the Torture Victims Protection Act by hiding in Sri Lanka," Fein said after the filing in the US District Court in Washington. (more...)

தை 29, 2011

 

6 இலங்கையர் உட்பட

கொள்கலனில் அடைக்கப்பட்ட நிலையில் 219 பேர் மீட்பு

இலங்கையர்கள் அறுவர் உட்பட சட்ட விரோத குடியேற்றக்காரர்கள் 219 பேரை மெக்ஸிகோ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் ‘ட்ரக்’ வண்டியொன்றில் ரகசியமான முறையில் அடைத்துக் கொண்டு செல்லப்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளனர். 177 ஆண்கள், 33 பெண்கள், ஒன்பது குழந்தைகள் அடங்கலாக இந்த 219 பேரில், குவாத்தமாலாவைச் சேர்ந்த 169 பேரும், எல்சல்வடோரைச் சேர்ந்த 22 பேரும், ஹொண்டூராஸ் நாட்டைச் சேர்ந்த 18 பேரும் அடங்குவதுடன் ஆறு இலங்கையர்களும் இருந்துள்ளனர். நேபாள நாட்டைச் சேர்ந்த நால்வரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனைச் சாவடியொ ன்றில் ‘ட்ரக்’ வண்டியை நிறுத்துமாறு விடுத்த அறி வித்தலை மீறி சாரதி சென் றதால், அதனைத் துரத்திச் சென்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். அதன்போதே 219 பேர் மிகவும் மோசமான முறையில் ஈவிரக்கமின்றி கொண்டு செல்லப்பட் டமை தெரியவந்துள்ளது. பின்னர் இவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இரண்டு பேர் பொலிஸா ரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தை 29, 2011

காலநிலையில் திடீர் மாற்றம்

கிழக்கு உட்பட பல பிரதேசங்களில் சில தினங்களுக்கு கனத்த மழை

இலங்கைக்கு அருகில் வீசும் காற்றின் சீரற்ற தன்மையால் காலநிலையில் திடீரென மாற்றம் ஏற்பட்டிருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானி லையாளர் சமிந்திர டி சில்வா நேற்றுத் தெரிவித்தார். இம்மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு கனத்த மழை பெய்யும் என்னும் அவர் கூறினார். நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை வீழ்ச்சி ரன்டம்பே நீரேந்து பகுதியில் 100.5 மில்லி மீற்றர்களாகப் பெய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், தற்போது வடகீழ் பருவபெயர்ச்சி மழைக்கால நிலையே நிலவுகின்றது. என்றாலும் வடகிழக்காக நாட்டுக்குள் வருகின்ற காற்றில் சீரற்ற தன்மை திடீரென ஏற்பட்டிருகின்றது. இதன் விளைவாக கிழக்கு, தெற்கு, ஊவா, மத்திய, வடமத்திய மாகாணங்களில் இடையிடையே கனத்த மழை பெய்யக்கூடிய காலநிலை ஏற்பட்டிருக்கின்றது. அதேநேரம் பிற்பக லிலோ, மாலைவேளையிலோ சப்ர கமுவ, மேல், மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேவேளை கிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்புக்கள் சிறிதளவில் கொந்தளிப்பாகக் காணப்படும். நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி பதுளை, ஹந்தகெட்டியவில் 93.3 மி. மீ. மகியங்கனையில் 77.9 மி. மீ., ரந்தெனிகலயில் 74.5 மி. மீ. என்ற படி மழை பெய்துள்ளது என்றார்.

தை 29, 2011

இலங்கை தூதரகம் நோக்கி பேரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது  

சென்னையில் இலங்கை தூதரகம் நோக்கி நேற்று பேரணி சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பொலிஸார் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பின்மை தொடர்கிறது. எனவே, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசை நிர்ப்பந்திக்கவும், தமிழக மீனவர்கள் உயிரை பாதுகாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கக் கோரி மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை இலங்கை தூதரகம் நோக்கி பேரணி நடத்தினர். இந்த பேரணியை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் உட்பட 100 பேரை பொலிஸார் கைது செய்தனர்.

தை 29, 2011

நம்பிக்கை ஒளியேற்றும் போராட்டத் தீ

துனீசியா என்ற வார்த்தை ஆப்பிரிக்க மக்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அந்நாட்டு மக்கள் தங்களை வதைத்துக் கொண்டிருந்த அரசை வெளியேற்றியுள்ளனர். மக்களின் இந்த வெற்றி ஆப்பிரிக்காவில் உள்ள மற்ற நாடுகளுக் கும் பரவி வருவதால் பல ஆட்சியாளர்களுக்கு கிலி பிடித்துள்ளது. எகிப்து மற்றும் ஏமன் நாடு களிலும் கொள்கை மாற்றத்தோடு கூடிய மாற்று தேவை என்ற முழக்கங்களோடு லட்சக்கணக் கானோர் வீதிகளில் வலம் வந்து கொண்டிருக் கிறார்கள்.1987 ஆம் ஆண்டில் பிரதமராக அபேதின் பென் அலி பொறுப்பேற்றார். ஒரே மாதத்தில் ஜனா திபதியாக இருந்த ஹபீப் போர்கிபாவை அப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு ஆட்சியைக் கைப் பற்றினார். அதன்பிறகு “மக்கள்” ஆதரவோடு தொடர்ந்து பதவியில் நீடித்தார். 1994 ஆம் ஆண்டு தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகளும், 1999 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 99.4 விழுக்காடு வாக்குகளும் அவருக்கு விழுந்ததாக அறிவிக்கப் பட்டது. தங்களுக்கு ஒரு எடுபிடி கிடைத்துவிட் டார் என்ற மகிழ்ச்சியில் அமெரிக்க நிர்வாகமும் ஆமாம் என்று தலையாட்டியது. (மேலும்....)

தை 28, 2011

புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய நண்பர் கொழும்பில் கைது!

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நெருங்கிய நண்பராக இருந்த ஒருவர் கொழும்பில் வைத்து புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
கைது செய்யப்பட்டுள்ள பிரஸ்தாப நபர் கொழும்பின் மிகப் பெரும் வர்த்தகர்களில் ஒருவராக விளங்கும் கோடீஸ்வரர் என்றும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிது காலம் அவர் வெளிநாட்டிலும் வசித்துள்ளார். கொழும்பு 07 மற்றும் வெள்ளவத்தைப் பிரதேசங்களில் இரண்டு ஹோட்டல்களைக் கொண்டிருக்கும் குறித்த கோடீஸ்வரர், பன்னிரண்டு வர்த்தக நிலையங்களுக்கும் உரிமையாளராக இருந்துள்ளார்.
(மேலும்....)

 

தை 28, 2011

வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு

யாழ். கோப்பாய் பகுதியில் 9 சந்தேக நபர்கள் கைது

யாழ். நகரில் வீடுடைப்பு, வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். கோப்பாய் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பொன்றின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக் குட்படுத்தப்பட்ட போதே ஏனைய எட்டுப் பேரும் யாழ். குருநகர் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட தாக யாழ். கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்க தெரிவித்தார். யாழ். கோப்பாய் பகுதியில் வீடுடைப்பு சம்பவம் தொடர்பாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட இராணுவத் தினர் இரவு சந்தேக நபரை கைது செய்து பொலிஸாரிடம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். (மேலும்....)

தை 28, 2011

சிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி

மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணிகளாகவும், சுயேச்சைகளாகவும் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன. அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றது. வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன. (மேலும்....)

தை 28, 2011

இலங்கையில் இனப்பிரச்சினை விடையத்தில் இந்திய அரசாங்கத்தின் தலையீடு இன்றியமையாததொரு விடயமாகும்!

இன்று இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மிக மோசமான அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் பெரும்பாலான தமிழ் மக்கள் தாங்கள் உணர்வுகளற்ற நடைப்பிணங்களாக வாழ்கின்றோமே என்ற உள்ளக் குமிறல்களுடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலமை ஒரு சாதாரண பொது மகனுக்கு மட்டுமல்ல பெரும்பாலான தமிழ் அரசியல் தலைமைகளின் நிலையும் இதுதான். (மேலும்....)

தை 28, 2011

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தின் நல்லூர், வலிகாமம் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, தென்மேற்கு, சாவகச்சேரி நகரசபை, சாவகச்சேரி பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேசசபை, வல்வெட்டித்துறை, வடமராட்சி வடக்கு, தெற்கு, காரைநகர், ஊர்காவற்துறை, வேலணை ஆகிய 16 சபைகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு (நெடுங்கேணி), வவுனியா தெற்கு (தமிழ் பிரதேசசபை), வெங்கல செட்டிகுளம் ஆகிய 03 சபைகளுக்கும், மன்னாரின் மன்னார் நகரசபை, மன்னார் பிரதேசசபை, நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய 05 சபைகளுக்கும் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ததுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைந்துறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய 04 பிரதேச சபைகளுக்கும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது. கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி, கரைச்சி ஆகிய சபைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டபோதிலும், இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியில் அச்சபைகளுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கரைச்சி சபைக்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளது. அம்பாறையின் நாவிதன்வெளி, திருக்கோவில், காரைதீவு, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, பொத்துவில் ஆகிய 06 பிரதேச சபைகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் சம்மாந்துறைக்கான வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமலை மாவட்டத்தில் திருமலை நகரசபை, தம்பலகமம், உப்புவெளி, மூதூர், குச்சவெளி, ஈச்சிலம்பற்று, மொறவௌ, தம்பலகமம் உள்ளிட்ட சபைகளுக்கு தமிழக் கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல் செய்தநிலையில் தம்பலகமம், மொறவௌ ஆகிய சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தை 28, 2011

அ’புரம் சிறைச்சாலை போராட்டம் முடிவு; காயமடைந்த கைதி மரணம்

அநுராதபுரம் சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் காயமடைந்த மற்றொரு கைதி நேற்று முன்தினம் இரவு மரணமடை ந்துள்ளார். இதன் மூலம் இறந்தோர் தொகை 2 ஆக உயர்வடைந்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் கூறியது. இதேவேளை, கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டமும் முடிவடைந்துள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலை கைதிகள் கடந்த 24ம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் மாலை கைதிகளுக்கும் அதிகாரி களுக்குமிடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு கைதி கொல்லப்பட்டதோடு 8 அதிகாரிகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். காயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக் கப்பட்டிருந்த அநுராதபுரம் போதானேக மவைச் சேர்ந்த சதுன் சானக குமார (24) என்பவரே நேற்று முன்தினம் இரவு இறந்ததாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் கூறின. இதேவேளை மேற்படி மோதல் சம்பவம் குறித்து ஆராய சிறைச்சாலை மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் மேலதிகச் செயலாளர் தலைமையிலான குழு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அடுத்த வாரம் இதன் அறிக்கை அமைச்சருக்கு கையளிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சு அதிகாரி ஒருவர் கூறினார். நேற்று முன்தினம் மீண்டும் உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்ட கைதி கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதா கவும் சிறைச்சாலை, புனர்வாழ்வு அமைச்சு கூறியது.

தை 28, 2011

அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் நாடு திரும்பினார். கடந்த 19ம் திகதி அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி தமது ஒரு வாரகால பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

தை 28, 2011

குச்சவெளி நீர்க்கசிவுகள் பூகம்பத்தின் அறிகுறியல்ல - பூகற்பவியலாளர்கள்

குச்சவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட பூகம்பமோ, எரிமலை வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல என்று புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக பூகற்பவியலாளர்கள் நேற்று அறிவித்தனர். நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு காரணமாக உருவான அமுக்கத்தின் விளைவாகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்ட பிரதேசத்தின் 50 முதல் 100 மீற்றர்கள் வரையான பகுதிக்கு தற்காலிகமாக செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதேசவாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர். (மேலும்....)

தை 28, 2011

யாழ். பொலிஸ் நிலையத்துக்கு தமிழ்ப் பொலிஸார் நியமனம்

யாழ். மாவட்டத்தில் இருந்து பொலிஸ் சேவைக்குத் தெரிவு செய்யப்பட்டு பயிற்சியை முடித்துக் கொண்ட தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களுக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையங்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளமையால் மக்கள் தமது முறைப்பாடுகளை தமிழில் பதியவும், பொலிஸ் பதிவு சம்பந்தமான ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் மக்களுக்கு வசதி கிட்டியுள்ளது. புதிதாக சேவையாற்றும் தமிழ் பொலிஸ் கான்ஸ்டபிள்களுக்கு பயிற்சியின் போது சிங்கள, ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்பட்டதால் இவர்கள் மற்றைய மொழிகளிலும் சரளமாக உரையாடி வருகின்றனர்.

தை 28, 2011

இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வியடையும் அபாயம் - அமெரிக்க ஜனாதிபதி

கல்வி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா, சீனாவிடம் அமெரிக்கா தோல்வி அடையும் ஆபத்து ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா எச்சரித்துள்ளார். ஒபாமா அமெரிக்க பாராளுமன்றத்தில் வருடாந்திர உரை நிகழ்த்துவது வழக்கம். அதன்படி அவர் நேற்று முன்தினம் உரையாற்றினார். ஒரு மணி நேரம் அவர் பேசிய போது அவர் 3 முறை இந்தியாவை பற்றி குறிப்பிட்டார். இந்தியாவுடன் புதிய பங்குதாரராக அமெரிக்கா சேர்ந்து உள்ளது. புதிய நட்பு பாலத்தை என் நிர்வாகம் கட்டி உள்ளத. உலகில் அமைதியையும், வளத்தையும் ஏற்படுத்துவதற்காக என் நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இந்த புதிய நட்பு பாலம் கட்டப்பட்டுள்ளது. (மேலும்....)

தை 28, 2011

நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதி

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது வழக்கமான மருத்துவ பரிசோதனை தான் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. இன வெறிக் கொள்கையினை எதிர்த்து போராடி சிறை சென்ற நெல்சன் மண்டேலா (92), கடந்த சில மாதங்களாக பொது மக்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். உடல் நிலை காரணம் என கூறப்பட்டு வந்த போதிலும், கடந்தாண்டு நடந்த உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் நிறைவு நாள் நிகழ்ச்சியின் போது தான் கடைசியாக பொது மக்களை சந்தித்தார். அதன் பின்னர் கேப்டவுணில் உள்ள தனது இல்லத்தில் தான் வசித்து வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனால் கேப்டவுண் நகரிலிருந்து ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர் எனவும், இது வழக்கமான உடல் பரிசோதனை தான் தற்போது அவர் உடல் நிலை நன்றாக உள்ளது என்றும் ஜோஹனஸ்பெர் ஆர்ச் பிஷப் டெஸ்மான்டூட்டு தெரிவித்தார்.

தை 28, 2011

இந்தியக் குடியரசு தின விழாவில்

இராணுவ வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு

இந்தியாவின் 62 வது குடியரசு தினம் நாடு முழுவதும் மிகவும் உற்சாகத்தோடும் கோலாகலத்தோடும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டில்லியில் வழக்கமான உற்சாகத்தோடு நடைபெற்ற அணிவகுப்பு இந்தியாவின் இராணுவ வலிமையை பறைசாற்றுவதாக அமைந்தது. வேற்றுமையில் ஒற்றுமையைப் பறைசாற்றுவதாக இராணுவம், பொலிஸ் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு இருந்தது. அணிவகுப்பும், கலாசார நிகழ்ச்சிகளும் சுமார் 100 நிமிஷங்கள் நடைபெற்றன. (மேலும்....)

தை 27, 2011

நீங்கள் தேர்தல் திருவிழாவில்.....? நாங்கள் வாழ்வைத் தேடும் போராட்டத்தில்.....? - அப்பாவி மக்கள்

(நன்றி: (படம்)பூந்தளிர் இணையம்)

தை 27, 2011

பூநகரி - பச்சிலப்பள்ளி பிரதேச சபைகளிற்காக TNA தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படலாம்!

யாழ் மாவட்ட உள்ளுராட்சிசபைத் தேர்தலில் எதிர்பார்த்ததைப் போன்று தேர்தல் பரபரப்பு சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் பொது சன ஐக்கிய முன்னணி, ஈபிடிபி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக்கட்சிகள் இணைந்த கூட்டு வெற்றலைச்சின்னத்தில் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே சிவாஜிலிங்கமும் உள்ளீர்க்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை நகரசபைக்கான முதன்மை வேட்பாளராக சிவாஜிலிங்கம் அறிவிக்கப்பட்டிருக்கின்றார். புளொட், ரெலோ, (சுரேஸ் அணி) தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என பல கட்சிகள் முதன் முறையாக இணைந்து இந்த தேர்தலை சந்திக்கவுள்ளன.  (மேலும்....)

தை 27, 2011

யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிப்பு


யாழ்ப்பாண மாவட்டத்தில் 16 உள்ளுராட்சி சபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாக்கல் செய்த வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதற்கு முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற பெயரில் பதிவுசெய்திருந்த ஆளும் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்ற பெயரில் வேட்புமனுவை தாக்கல் செயத்தால், அவை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் யாழ்ப்பாண மாவட்டத்தில் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த மூன்று சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நுவரெலியா பிரதேச சபை, லிந்துல-தலவாக்கலை நகர சபை ஆகிய உள்ளுராட்சி சபைகளுக்காக தாக்கல் செய்திருந்த, வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத் தரப்பினர் தமது கடசியினுடைய பெயரை தவறாக எழுதியதன் காரணமாக இவ்வாறு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஜீரீஎன்னிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தை 27, 2011

மன்னாரில் முஸ்லீம்காங்கிரஸ் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது போனது.

மன்னார் நகர சபைக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு முடியாமல் போயுள்ளது. உள்ளுராட்சி சபைகளுக்காக வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 12 மணியுடன் முடிவடைந்துடன் இதற்கு முன்னர், முஸ்லீம் காங்கிரஸால் வேட்புமனுவை தாக்கல் செய்ய முடியாது போனதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் மன்னார் நகர சபைக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

தை 27, 2011

முல்லைத்தீவில் சிறீரங்காவின் பிரஜைகள் முன்னணியின் பின்னால் அரசாங்கம்!

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட 5 அரசியல் கட்சிகளும், 3 சுயேச்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கென மொத்தமாக 5 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த போதிலும், அவற்றில் இரண்டு சுயேச்சை குழுக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஜேவிபி ஆகிய 3 கட்சிகளும் வவுனியா மாவட்டத்தில் உள்ள 4 பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சி வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வெங்கலச் செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளில் போட்டியிடுகின்றது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வவுனியாவில் தனித்து வெங்கலச் செட்டிகுளம், வவுனியா தெற்கு தமிழ் பிரிவு ஆகிய 2 பிரதேச சபைகளிலும் போட்டியிடுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சிறிரங்காவின் தலைமையிலான பிரஜைகள் குழு நான்கு பிரதேச சபைகளுக்கும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த போதிலும் துணுக்காய் பிரதேச சபைக்கான அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரஜைகள் குழு மூன்று பிரதேச சபைகளில் போட்டியிடுகின்றது.

தை 27, 2011

தமிழ் அரசியற் தலைமை என்பது என்ன?

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையான உறுதியான தமிழ்த் தலைமையா?

(லெனின் பெனடிக்ற்)

தமிழ்மக்களுக்கான அரசியற் தலைமை என்று வந்தால் கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழர் விடுதலைக் கூட்டணியினரும், இந்நாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரையும் குறிப்பிட வேண்டும். இதில் விஷேடமாகக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் கடந்த 30 ஆண்டுகளில் வடகிழக்குப் பிரதேசத்தில் எவ்வித பொருளாதார அபிவிருத்தியையும் முன்னெடுக்காமல் ஆளும் அரசுக்களைக் குறைகூறி மட்டுமே அரசியல் நடாத்தி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்துப் பாராளுமன்ற ஆசனங்களை அலங்கரித்தவர்கள் என்றபெருமை இவர்களையே சாரும். அதைவிடவும் விஷேடமாக எதையுமே இந்தக் கூட்டம் செய்யாது என்று சந்தேகமறத் தெரிந்தும்  இதே கூட்டத்தை மீண்டும் மீண்டும் பலமுறை பாராளுமன்றப் பிரதிநிதிகாளாகத் தேர்ந்தெடுத்த பெருமை வடகிழக்கு மக்களையே சாரும். அதுவே இலங்கைத் தமிழ் மக்களின் இழந்த உரிமைகளை வென்றெடுப்பதற்கான தகுதியினதும் தகுதியின்மையினதும் உரைகல்லாகும். (மேலும்....)

தை 27, 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பை தலை தூக்க அனுமதிப்பது, தமிழ் மக்களுக்கு ஆபத்தானது!

(செங்குட்டுவன்)

கொடூரப் புலிகளின் பினாமியாக இருந்து, அவர்கள் செய்த வகை தொகையற்ற கொலைகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை, உள்ளூராட்சி தேர்தலைப் பயன்படுத்தி மீண்டுமொரு முறை தமிழ் மக்கள் மத்தியில் தனது அசிங்கமான தலையை நீட்டியுள்ளது. அது தலையை நீட்டியது மட்டுமல்ல, அரும்பாடுபட்டு உருவாக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தையும் சீர்குலைப்பதற்காக,  தமிழ் கட்சிகளின் ஒற்றுமை, தமிழ் தரப்பின் பேரம் பேசும் பலத்தை அதிகரித்தல் என்ற வழமையான போலிக் காரணங்களைக் காட்டி உடைத்தெறிந்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக, அவ்வமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய பெரும்பான்மையான கட்சிகளை விட்டு வெளியேறிச் சென்றுமுள்ளன. அதன் மூலம் தமிழ் கட்சிகளின் அரங்கத்தை எப்படியும் உடைத்துவிட வேண்டும் என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. (மேலும்....)

தை 27, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 9வது மற்றும் 10வது நாள் நிகழ்வுகள்!

நடைபயண வீரர்களுக்கு மிகவும் சிறப்பான உணவு வகைகள் எதுவும் கொடுக்கப்படவில்லை, நடைபயண தலைமைக் குழுவினருக்கு பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அவர்களுக்கு தகுதியான அளவுதான் உணவாக தருகிறார்கள். நல்ல உணவு கொடுக்க முடியவில்லையே என்று நடைபயண தலைமைக்குழுவில் உள்ளவர்கள் மிகவும் கவலையடைகிறார்கள். ஆயினும் வீரர்கள் சாப்பாட்டை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. எங்களுக்கு நடக்கும் போது தேனீரும் பாணும் கொடுத்தாலே போதும், எப்படியாவது நடைபயணம் வெற்றிபெற வேண்டும், நாங்கள் முகாமில் சிறப்பான உணவு வகைகள் எதுவும் சாப்பிட்டதில்லை. அதனால் எங்களுக்கு எந்த உணவையும் சாப்பிட்டுப் பழக்கம்தான் ஆகையால் நீங்கள் யோசிக்க வேண்டாம், நடைபயணம் வெற்றிபெரும், நாங்கள் இன்னும் 5000 கிலோ மீற்றர் துரத்தையும் நடந்து செல்வோம் என்று தங்களது மன உறுதியை நடைபயண குழுத் தலைவரிடம் வெளிப்படுத்தினர். (மேலும்....)

தை 27, 2011

Request for Flood Relief Assistance

The High Commission of Sri Lanka in Canada wishes to draw the attention of the Sri Lankan expatriate community and well-wishers to the recent disaster in Sri Lanka due to the severe rainfall which continued for over three weeks.  As a result, over a million people have been affected in Sri Lanka and around 284,000 people are presently housed in welfare centres.  Ampara and Batticaloa are the worst affected districts. The Ministry of Disaster Management is soliciting financial assistance to provide relief services to the victims.Financial contributions could be directed to this High Commission by sending a cheque drawn in favour of the “High Commission of Sri Lanka”.Every contribution will be acknowledged with an official receipt and the financial contributions will be transferred to the General Deposit Account (GDA) of the Government of Sri Lanka, which will eventually be utilized by the Disaster Management Centre (DMC) for relief assistance measures.

High Commission of Sri Lanka, Ottawa, January 20, 2011

தை 27, 2011

ஜனநாயகத்துக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இலங்கையில் இல்லை

இலங்கையில் இலவச கல்வி நாட்டின் தேசிய தலைவர்களினதும் முன்னேற்றகரமான போராட்டங்களினதும் காரண மாகவே கிடைத்தது. 1947 முதல் பல்கலைக் கழகம் வரையிலான இலவச கல்வியை பெற்ற நாம் அனுபவித்து வருகிறோம். கல்விக்கான முதலீடு மக்களின் சுகாதாரத்துக்கான மறைமுக முதலீடு என்பதை நான் வலியுறுத்திக் கூறினேன். 1960 அளவில் நாட்டின் சுகாதார புள்ளி விபரங்களில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தியை காணமுடிந்தது. இலவச கல்வியை முதல் பரம்பரை தாய்மாரின் படிப்படியான முன்னேற்றத்தையடுத்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு எமது தடுப்பூசி எல்லை 100 சதவீதமாகும். (மேலும்....)

தை 27, 2011

We  like to inform you that the place is booked for PMC Canada Annual General Meeting on Saturday, February 12, 2011.

Location:             York Civic Centre (Council Chambers)

Address:              2700 Eglinton Avenue West ( Eglinton & Keele)

                            Toronto, ON.  M6M 1V1

Date and time:     February 12, 2011 at 2:00 pm

Please allocate some time join this meeting to input you ideas and interest.

"WE NEED MORE PARTICIPANTS FOR THIS MEETING"

தை 27, 2011

துனிசியா கலவரத்தில் பலியானோருக்கு  ரூ. 3 ஆயிரம் கோடி உதவி

துனிசியாவில் கடந்த ஒரு மாத காலமாக அரசியல் கலவரம் வெடித்தது. ஜனாதிபதியாக இருந்த ஜைன் அல் ஆபிதீன் பதவியில் இருந்து விரட்டப்பட்டு புதிய இடைக்கால அரசு அமைந்துள்ளது. இந்த நிலையில் கலவரத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ. 3 ஆயிரம் கோடி நிதி உதவியை துனிசிய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை ஊரக மேம்பாடு அமைச்சர் நெஜிப் தெரிவித்தார். இதுபோல வேலை இல்லாதவர்களுக்கு மாதந்தோறும் 150 தினார் உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர ஊழல் புகார் காரணமான பல்வேறு மகாணங்களிலுள்ள கவர்னர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

தை 27, 2011

யாழ்நகர் முற்றவெளியிலிருந்து தனியார் பஸ்கள் சேவையில்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிமாட்டங்களுக்கு பஸ் சேவைகளை நடாத்திவரும் சகல தனியார் பஸ்களும் முற்றவெளி தரிப்பிடத்திலிருந்து தான் சேவையை நடாத்த வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித் துள்ளார். தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுடன் நடாத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதற்கு அமைவாக இவ் ஒழுங்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். பகலிலும் சரி, இரவிலும் சரி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு கொழும்பு, கண்டி, திருகோணமலைக்கு சேவையை நடாத்தும் தனியார் பஸ்கள் முற்றவெளியில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். அண்மைக் காலமாக இப் பஸ்கள் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதியில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிவருவதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி நிலையேற்பட்டு வருகிறது. வெளி மாவட்ட தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றும் செயல்பாட்டை போக்குவரத்துப் பொலிஸார் கண் காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. முற்றவெளி தனியார் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் விரைவில் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளன.

தை 27, 2011

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக, அந்தக் கட்சியின் ஊடகச் செயலாளர் அசாத் மௌலான தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் தற்போது நடைபெறாத நிலையில், அம்பாறை மாவட்டத்துக்கான உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் தமது கட்சி தனித்துப்போட்டியிடவுள்ளதகாவும் அவர் கூறினார்.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனித்துப் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களிலும் இரு கட்சிகளுக்குமிடையிலான நல்லிணக்கம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.தற்போதுள்ள நிலையில் தமது கட்சியின் அரசியல் எதிர்காலம் கருதியே தனித்துப் போட்டியிடும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஊடகச் செயலாளர் அசாத் மௌலான தெரிவித்தார்.

தை 27, 2011

பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம பூஷன் விருது

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த ஆண்டு பத்ம பூஷன் விருது பெறுகிறார். பின்னணி பாடகர் இசை அமைப்பாளர், நடிகர் ஆகிய துறைகளில் அவர் சிறப்பாக பணியாற்றியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் அறிஞரும், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான அவ்வை நடராஜனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இலக்கியம் மற்றும் கல்விக்கு சிறந்த சேவை செய்ததற்காக அவர் இந்த விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி. வி. சந்திரசேகர் (பரத நாட்டியம்), டாக்டர் சூரிய நாராயணன் ராமச்சந்திரன் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறை ஆகியோருக்கும் பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வை நடராஜன் தவிர தமிழ்நாட்டை சேர்ந்த நடிகர் ஜெயராம் (சினிமா) எம். கே. சரோஜா (பரத நாட்டியம்), எஸ். ஆர். ஜானகிராமன் (கர்நாடக இசைப்பாடகர்), கோவை நாராயணராவ் ராகவேந்திரன் (விஞ்ஞானம் மற்றும் பொறியியல்), மெக்கா ரபீக் அகமது மற்றும் கைலாசம் ராகவேந்திரராவ் (வர்த்தகம் மற்றும் தொழில்), டாக்டர்கள் சிவபாதம் விட்டல், மாதனுர் அகமது அலி (மருத்துவம்) ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. (மேலும்....)

தை 27, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பு போட்டியிடவுள்ளது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தாவை தலைவராகவும் முன்னாள் எம்.பி. எம்.கே. சிவாஜிலிங்கத்தை செயலாளராகவும் கொண்டு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இயங்கிவருகின்றது. உள்ளூராட்சித் தேர்தலில் வல்வெட்டித்துறை நகரசபை தலைமைவேட்பாளராக எம்.கே. சிவாஜிலிங்கம் போட்டியிடவுள்ளார். ஏனைய சபைகளிலும் தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். (மேலும்....)

தை 27, 2011

உள்ளுராட்சி சபைத் தேர்தல்

வேட்பு மனுத்தாக்கல் இன்றுடன் நிறைவு!

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளன. இதன்அடிப்படையில் பல பிரதான அரசியல் கட்சிகள் இன்றைய தினம் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வேட்பு மனுத்தாக்கல் நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், அதற்கு எதிர்ப்புகளை வெளிப்படுத்த அரசியல் கட்சிகளுக்கு ஒன்றறை மணி நேரம் வழங்கப்படவுள்ளது. இதற்கிடையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், உள்ளுராட்சி சட்ட முறைகளுக்கு அமைய வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் செயற்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மக்கள் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை வேட்பாளர்களின் இல்லத்தில் மாத்திரமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வேட்பாளர்கள் தமது இல்லத்தையே தமது காரியாலயமாகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தை 27, 2011

சென்னையில் தாக்குதல்: புலிகள் கைவரிசையா?.

சென்னையில் புத்த பிட்சுகளின் சேவை மையத்தில் நடந்த தாக்குதலில், புலிகளின் கைவரிசை உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை துவங்கியுள்ளது. சென்னை, எழும்பூரில் உள்ள புத்த பிட்சுகளின் சேவை மையம், "மகா போதி சொசைட்டி' செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன், இரவு 9.30 மணிக்கு இந்த சேவை மையத்திற்குள் நுழைந்த 15 மர்ம நபர்கள், உள்ளே தங்கியிருந்த இலங்கை பல்கலைக் கழக துணைவேந்தர் உள்ளிட்ட நால்வரை தாக்கியதுடன், அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி விட்டு தப்பியது. (மேலும்....)

தை 27, 2011

இந்தியாவின் பாதுகாப்பு, விண்வெளி ஏற்றுமதி தொடர்பாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நிறுத்த அமெரிக்கா திட்டம்

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறைகளுக்கான ஏற்றுமதிகள் தொடர்பாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நிறுத்திக்கொள்ளப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது. அத்துடன் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை கிரமமாக திட்டமிடும் நாடுகளின் பட்டியலிட இந்தியாவையும் பராக் நிர்வாகம் சேர்த்துள்ளது. இதன்படி ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்ட நாடாக இருந்த இந்தியா தற்போது சர்வதேச ரீதியில் ஆயுத கட்டுப்பாடுகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இடம்பிடித் துள்ளமை குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

தை 26, 2011

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித்தலைவர் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுதலை

இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், மன்னார் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளருமான வி.ஸ்.சிவகரன் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மன்னார் மூர் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். எனினும் எவ்வித விசாரணைகளும் இன்றி பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இவரை மன்னரில் உள்ள சட்டத்தரணி ஒருவரின் கோரிக்கைக்கு அமைவாக இன்று முற்பகல் 11 மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.

தை 26, 2011

62 வது குடியரசு தினம்

டில்லியில் அணிவகுப்புகள் துவங்கியது!

நாட்டின் 62வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டில்லியில் மட்டும் சுமார் 35 ஆயிரம் பாதுகாப்பு படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர். காலை 9.55 மணிக்கு துவங்கிய குடியரசு தின விழா 11.30 வரை நடைபெறுகிறது. முன்னதாக காலை 9.30 மணிக்கு பிரதமர் மன்மோகன் சிங், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோர் தலைமையில் ராணுவ உயர் அதிகாரிகள் அமர்ஜவான் ஜோதியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். (மேலும்...)

தை 26, 2011

ஜனநாயகத்துக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் இலங்கையில் இல்லை

1945 நவம்பர் 10ஆம் திகதி  குறிப்பிடத்தக்கவொரு வருடமாகும். முழு உலகையும் தமது பிடிக்குள் கொண்டுவர நாஸி ஜெர்மனியும் பாசிசவாத இத்தாலி மற்றும் ஜப்பானும் எடுத்த முயற்சி சோவியத் யூனியன், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவினால் அந்த வருடம் தான் தோற்கடிக்கப்பட்டது. அந்த வெற்றிதான் மே 9 ஆகும். யுத்தத்தில் தோல்வியுற்றதை ஏற்றுக்கொண்டு நாஸிகள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுக் கொடுத்தது அன்றைய தினம்தான். நாஸி – பாசிசவாததுக்கு எதிரான மக்கள் வெற்றியின் 65 ஆவது நிறைவை முழு உலகமும் கடந்த வருடம் கொண்டாடியது. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் உலகில் எந்தவொரு யுத்தமும் ஏற்படக்கூடாது என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. இந்த நோக்கத்துடன் பல சர்வதேச அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இந்த அமைப்புகளில் ஒன்று இளைஞர் மற்றும் மாணவர்களின் உலக விழா ஆகும். இரு பிரதான நோக்கங்களுக்கமைய இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. (மேலும்...)

தை 26, 2011

புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் யாழில் அரசியல் நடவடிக்கையில்,அரசியல் சந்திப்புக்களில் குமரன் பத்மநாதன்!

இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் யாழ்ப்பாணத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்திவருவதாக தெரியவருகின்றது. கடந்த மூன்று நாட்களின் முன்னர் யாழ்.பல்கலைக்கழக உயர் நிலை விரிவுரையாளர்களைச் சந்தித்த அவர் அபிவிருத்திக்கு ஒத்துழைக்குமாறு கேட்டிருக்கின்றார். கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டும் செல்லாத விரிவுரையாளர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட கே.பி மிரட்டல் பாணியில் அவர்களை உடனடியாக வருமாறு அழைத்ததாக பல்கலைக்கழக வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. (மேலும்...)

தை 26, 2011

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களை கண்ணியமாக நடத்த அரசாங்கம் விரும்புகிறது

உள்ளூராட்சிமன்ற தேர்தல்களுக்கான அரசியல் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் இப்போது பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இதனால், இன்னும் பல வாரங்களில் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரம் இப்போது இருந்தே படிப்படியாக சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. கொழும்பில் பல இடங்களில் இருந்த சுவரொட்டிகளை மாநகரசபை ஊழியர்கள் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் காட்சி களைப் பார்த்து, பலர், வேட்பாளர்களின் பிரசாரத்திற்கான சுவ ரொட்டிகளை ஒட்டுவதற்கு இவர்கள் அடித்தளம் அமைத்துக் கொடுக் கிறார்களா என்று, கிண்டல் செய்த சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. (மேலும்...)

தை 26, 2011

செயற்கை சிறுநீரகங்களை உருவாக்கி இந்திய வம்சாவளி வைத்தியர் சாதனை

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த வைத்தியர் செயற்கை சிறுநீரகங்களை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த சூவோராய் என்ற மருத்துவ விஞ்ஞானி செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். தேநீர் கோப்பையை விட சற்று பெரியதான இந்த செயற்கை சிறுநீரகம், மனித உடலில் இயற்கை சிறுநீரகம் செய்யும் அனைத்து பணிகளையும் செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீரகம் முதலில், விலங்குகளின் உடலில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. விரைவில் மனித உடலில் பொருத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்படவுள்ளது. (மேலும்...)

தை 26, 2011

மொஸ்கோ குண்டு வெடிப்பு

சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க ஜனாதிபதி உத்தரவு

மொஸ்கோவில் தற்கொலை குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்ற ரஷ்யாவின் ஜனாதிபதி ‘திமிற்றி மெட்டிடோவ் எச்சரித்துள்ளார். மொஸ்கோவின் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இத் தாக்குதல் குறித்து 3 சந்தேக நபர்களை ரஷ்ய பொலிஸார் வலைவிரித்து தேடுகின்றனர். இச் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 2 பிரிட்டிஷ் பயணிகளும் கொல்லப்பட்டனர். கடந்த மார்ச் மாதத்தில் மொஸ்கோவி லுள்ள நிலத்துக்கு அடியில் செல்லும் புகையிரதத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதுடன் 80க்கு மேல் அதிகமானோர் காயமடைந்தனர். இத் தாக்குதலை இரு பெண் குண்டுதாரிகள் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ரஷ்யாவின் பிராந்தியங்களுக்கிடையிலான முரண்பாடுகளே இத் தற்கொலை தாக்குதல்களுக்கு பின்னணியாக இருந்ததாக அறிவிக்கப்படுகின்றது.

தை 26, 2011

குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்

குடாநாட்டில் அண்மைக் காலமாகக் குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இவற்றைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் முயற்சியில் பொலிஸாருடன் இராணுவத்தினரும் சேர்ந்து ஈடுபட்டு வருகின்றார்கள். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது யாழ். மாவட்டத்தில் குற்றச் செயல்கள் குறைவாகவே காணப்படுகின்றன. குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். 24 மணி நேரமும் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யாழ். மாவட்டத்தில் மானிப்பாய், சுன்னாகம், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் அதிக குற்றச் செயல்கள் அண்மைக் காலமாக இடம்பெற்றுள்ளன. (மேலும்...)

தை 26, 2011

போர்த்துக்கல் தேர்தலில் கவாகோ சில்வா மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு

போர்த்துக்கலில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி அனிபல் கவாகோ சில்வா மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் எதிர்வரும் 5 வருடங் களுக்குத் தொடர்ந்தும் ஜனாதிபதியாகப் பதவிவகிப்பார். நடைபெற்று முடிந்த தேர்தலில் கவாகோ சில்வா 53 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளதுடன், அனைத்துப் பெரும் பான்மைத் தரப்பினரது வாக்குகளையும் அவர் பெற்றுள்ளார். கவாகோ சில்வாவின் போட்டியாளராக, விளங்கிய மனுவல் அலேல்க் 20 வீதமான வாக்குகளை மாத்திரமே பெற்றிருப்பதாக போர்த்துக்கல் அரசாங்க ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்த்துக்கல் ஜனாதிபதியான சில்வா 2006 ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் திகதி யிலிருந்து ஜனாதிபதியாகப் பதவி வகித்து வருகிறார். போர்த்துக்கல் எதிர்நோக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசாங்கமும், அரசாங்கப் பிரதிநிதிகளும் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் நடைபெற்ற தேர்தலில் சில்வா வெற்றிபெற்றுள்ளார்.

தை 26, 2011

6000 முஸ்லிம்கள் மீள்குடியேற்றம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,000 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளதாக, மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். இவர்கள் யாழ்ப்பாண நகரம், சாவகச்சேரி மற்றும் வேலணை ஆகிய பகுதியில் மீள்குடியமர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். போரினாலும், இராணுவ உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களுக்கு வழங்கப்படுகின்ற உதவிகளைப் போன்றே முஸ்லிம் மக்களுக்கும் உதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவித்த அவர், அதற்கான வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

தை 26, 2011

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில்

இடிக்கப்பட்ட பஸ்தரிப்பிடங்கள் மீண்டும் அமைப்பு

பருத்தித்துறை - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் வீதி அகலமாக்குவதற்காக இடித்து அகற்றப்பட்ட பயணிகள் தரிப்பிடங்களை, வீதியிலிருந்து பின் நோக்கி நகர்த்தி புதிதாகக் கட்டும் பணியில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஈடுபட்டுள்ளது. இப்பிரதான வீதியில் மந்திகை, ஆவரங்கால், புத்தூர், சிறுப்பிட்டி, நீர்வேலி ஆகிய இடங்களில் அந்தந்த இடங்களில் இருந்த பஸ் தரிப்பிடங்கள் வீதி அகல மாக்கப்படும் போது இடித்து அழிக்கப்பட்டன. வீதி அகலமாக்கப்பட்ட தையடுத்து பயணிகள் தரிப்பிடங்கள் இருந்த இடங்களில் புதிய அகல மாக்கப்பட்ட வீதிக்கு அருகாக புதிதாகக் கட்டப்பட்டு வரும் பயணிகள் தரிப்பிடங்கள் சிலவற்றின் கட்டடப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன. ஏனைய பயணிகள் தரிப்பிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தை 26, 2011

ஜோர்ஜ், தயா மாஸ்டர் அடங்கலாக 11968 பேரும் இராணுவத்திற்கு எதிராக குற்றங்களை இழைக்கவில்லை - கோத்தபாய

வடக்கில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைவதற்கு வருகைதந்த விடுதலைப்புலிகள் அமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் உத்தரவின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா கூறியதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகின்றது. (மேலும்...)

தை 26, 2011

Tunisia

The 14th of January Front

On the 20th of January 2011 a number of Tunisian radical left organisations, notably the PCOT (Communist Party of the Workers of Tunisia) and the PTPD (Patriotic and Democratic Labour Party), constituted a Front. This Front was named the «14th of January Front» in reference to the date of President Ben Ali’s rout.The object of the 14th of January Front is to undertake the organisation of the resistance against the present transitional government, which still includes leaders of Ben Ali’s party the RCD (Rassemblement constitutionnel démocratique), and to build a popular alternative based on the existing vigilante committees that have been constituted in a number of neighbourhoods in Tunisia with the aim to defend the inhabitants against the terror disseminated by RCD thugs and the presidential police. The call is addressed to all the progressive political, trade-union, associative forces, asking them to fulfil the objectives intended by popular Tunisian revolution. (more....)

தை 26, 2011

 

தெல்லிப்பழையில் சேகரிக்கப்பட்ட நிவாரணம் கிழக்கில் கையளிப்பு

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கவென தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்ட பொருட்கள் கிழக்கு மாகாண பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தெல்லிப்பழை பூமா விளையாட்டுக் கழகத்தினால் சேகரிக்கப்பட்ட பொருட்களே வலி. வடக்கு பிரதேச செயலாளரிடம் கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பி வைப்பதற்காக கழகத் தலைவர் உமா மற்றும் கழக உறுப்பினர்களினால் கையளிக்கப்பட்டது. பொருட்களைப் பெற பிரதேச செயலாளர் குறிப்பிட்ட பொருட்களை உடனடியாக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளித்துள்ளார். இந்தப் பொருட்களில் பால்மா வகைகள் பிஸ்கட் வகைகள் மற்றும் குடிநீர், சவுக்காரம் என பல்வேறு பொருட்களும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். சுமார் அறுபதாயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தை 26, 2011

view Batti & Amparai districts flood affected areas and Reliefs.

அண்மையில் கிழக்கில் எற்பட்ட இயற்கை அனர்த்தங்கள்

(மேலும்...)

தை 26, 2011

How Prabhakaran shot dead Mahattaya near 'Red Chilly Garden!...

The details of the murder of former LTTE Deputy Leader, Mahendrarajah alias Mahattaya is now being revealed by LTTE men in Germany. Reports from Germany state that Baskaran,a close associate of Prabhakaran from childhood in Velvettithurai had unfolded the long kept secret.Baskaran worked in a Tamil magazine in Jaffna and later for a Tamil daily in Colombo before proceeding to Germany after the killing of Mahattaya. According to Baskaran's revelation, Mahattaya had continuously objected to LTTE killings of innocent Sinhalese living in border villages and that of Tamils opposed to the LTTE. The view point of Mahattaya had angered Prabhakaran and the rift between the two had widened. (more...)

தை 25, 2011

அரசியலுக்கு வழிவிட்ட இயற்கையும் , இணைந்த தமிழ் கட்சிகளும்.

(இரா.வி.விஸ்ணு)  

ஒன்று சேர்வதென்று முடிவெடுத்துவிட்டீர்கள் இதில் ஈ.பீ.ஆர் .எல் எப் அல்லது டெலோவோ  பழையபடி அனைவரும் ஒன்றாவதில் என்ன பிரசனை இருக்கிறது (சொத்து பிரச்னையா?) சில விட்டுக்கொடுப்புகளை செய்யலாமே. சிலர் விவாதிக்கலாம் தங்கள் தலைவரை கொன்றவரிடம் சரணடைந்தவர்கள் அவர்களோடு சேர முடியாதென்றும் மற்றவர்கள் அவர்கள் தமக்கு பிரசனையானவர்கள் என்றும் இருதரப்பும் யோசிக்கலாம். பழையவற்றை மறந்து தமிழர்களுக்காகவும் தமிழ் பகுதியில் ஒரு புதியதொரு அரசியல் சூழலை உருவாக்கத்தானே முயற்சிக்கிறீர்கள் அப்படியிருக்க பழையவற்றை மறந்து ஒன்றுபடுங்கள் அது எமது சமூகத்துக்கே ஆரோக்கியமானது. ஒருவேளை இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைக்கபடாத பட்சத்தில் இக்கட்சிகளில்  அரசியல் எதிர்காலம் இன்றைய நிலையிலேயே இருக்கும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இக்கட்சிகள் ஒன்றிணைக்கபடாத போதும் இவை இத்தேர்தலில் தற்போது உருவாகியிருக்கின்ற புதிய கூட்டணிக்கு நிச்சயம் ஆதரவை தெரிவிக்குமென்று எதிர்  பார்க்கலாம். வாருங்கால தமிழ் அரசியல் சூழ்நிலை ஆரோக்கியமாக இருக்கவேண்டுமென்று பிராத்திப்போம். (மேலும்....)

தை 25, 2011

Nehru Gunaratnam –Leader of Canadian LTTE
 

(by Roger Nallanayagam, Toronto, Ontario, Canada)

So to find out the veracity of the statement “some leadership is already here” I did some research on this subject and the findings absolutely shocked me.  My entire search on the internet and print media confirmed that one of the most important LTTE leaders in Canada is Nehru Gunaratnam. He joined LTTE in mid of 1980 and since then he is an active LTTE member. Until 2003 he was the ‘shadow-leader’ of the Canadian LTTE and in 2003 the LTTE officially appointed him as their Political Committee Member representing their Canadian operations.” This political committee compromised of LTTE leader V.Prabhakaran, LTTE Political wing leader S.P. Tamilchelvam, LTTE’s Ideologist Anton Balasingam , LTTE’s Women Political Wing leader Thamilini and seven other members from Diaspora each representing the country they live. This includes Canada, Britain, Denmark, Switzerland, France, Germany and Australia. As such Nehru Gunaratnam represented the LTTE in Canada. (more...)

தை 25, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 6 வது, 7வது மற்றும் 8வது நாள் நிகழ்வுகள்!

தமிழகத்துத் தமிழர்களும் மற்றும் ‘சிறிமா-சாஸ்திரி” ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையிலிருந்து இந்தியா வந்த தமிழர்களும் மற்றும் நெல்லூர் மக்களும் நடைபயண வீரர்களுக்கு உற்சாக வரவேற்பைக் கொடுத்தனர். நடைபயண தலைமைக் குழுவினர் ஆறுபேருக்கும்  பொன்னாடைப் போர்த்தி நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துக் கூறினர். அன்பு மழையில் திணறவைத்துவிட்டனர். மீண்டும் மதியம் 12:00 மணிக்கு தொடர்ந்த பயணம் நெல்லூர் தொடர்வண்டி நிலையத்தின் வழியாக சென்று 12:20 மணிக்கு நெல்லூர் பாலத்தை கடந்தது. (மேலும்....)

தை 25, 2011

The Federal Court of Canada has ruled that the World Tamil Movement of Ontario and the World Tamil Movement of Quebec should forfeit all their belongings to the Canadian Government.

The investigation on LTTE activity in Canada began in 2002, when the RCMP Integrated National Security Enforcement Team in Ontario launched what it called Project Osaluki. The following year, a similar probe called Project Crible began in Montreal. The Canada Border Services Agency and Royal Thai Police Force were also involved. Police kept WTM activists under surveillance as they organized rallies in Canadian cities and travelled to Sri Lanka to meet the Tiger leadership. Some of the activists were photographed holding heavy weapons. In 2006, police raided the WTM offices in Toronto and Montreal, hauling away paraphernalia and documentation. It took years to translate and analyze the seized evidence. (more...)

தை 25, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதன்கிழமை வன்னியில் வேட்புமனுத் தாக்கல்

எதிர்வரும் புதன்கிழமை அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கையளிப்பதற்கு முடிவு செய்துள்ளது. வன்னி மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களினால் வேட்புமனுக்கள் அந்தந்த மாவட்டத் தேர்தல் திணைக்களத்தில் கையளிக்கப்படவுள்ளன. (மேலும்....)

தை 25, 2011

Groundviews letter criticizing Cheran for signing GLF boycott

I am writing to you after seeing your signature on the petition circulated by the JDS (Journalists for Democracy in Sri Lanka) and RSF (Reporters without Borders) calling for a boycott of the Galle Literary Festival. I was really sorry to see your signature there. As you know I have dedicated the past thirty years of my life to defend human rights and media freedom in Sri Lanka, and continue to live and work in this country. The past years have been very difficult ones, especially as we face continuing attacks and intimidation from both state and non-state forces in the aftermath of the war and in the absence of any credible process of political negotiation with the Tamil community, let alone any process of reconciliation or healing. (more...)

தை 25, 2011

அநுராதபுரம் சிறையில் மோதல்

அநுராதபுரம் சிறைச்சாலையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் கைதிகள் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் சிறைச் சாலை அதிகாரிகள் 8 பேரும் அடங்குவதாக அநுராதபுர வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் டபிள்யூ. எம். ரி. பி. விஜேகோன் தெரி வித்தார். இரு தரப்பினருக்கும் இடை யில் ஏற்பட்ட மோதல் முற்றியதால் சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் கைதிகள் காயமடைந்தனர். கைதிகள் கற்களால் நடத்திய தாக்குதலால் சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்தனர். இந்த மோதலில் பிரதம ஜெயிலர் காமினி சில்வாவும் காயமடைந்துள்ளார். (மேலும்...)

தை 25, 2011

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த யாழ்.பொலிஸ் நிலையங்களில் சி.ஐ.டியினர்

யாழ். குடாநாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் அங்குள்ள பொலிஸ் நிலைய ங்களில் விசேட புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்பொழுது யாழ். மாவட்டத் தில் அமைதியான சூழல் காணப் படுவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர், எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாணத்தில் இரவு நேரங் களில் கூட அச்சமின்றி எங்கும் சென்றுவரக் கூடிய அளவுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். கொலை, கொள்ளை, திருட்டு, குற்றச் செயல்கள் இடம்பெற்ற பகுதி களில் இந்த விசேட புலனாய்வு அதிகாரிகள் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். (மேலும்...)

தை 25, 2011

திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ - பிளேன் விமான சேவை

உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் அடுத்த மாதம் முதல் திகாமடுல்ல மாவட்டத்திற்கு சீ-பிளேன் விமான சேவையை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக அம்பாறை மாவட்ட இராணுவ பயிற்சி பாடசாலையின் தலைமை அதிகாரி கேர்ணல் ஜயம்பதி திலக்கரட்ன தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திலுள்ள குளங்கள் துரிதமாகப் புனரமைப்பதாகவும் அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்; யுத்தம் முடிவடைந்த பின்னர் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இவ்வாறான நிலையில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள குளங் களைப் புனரமைப்புச் செய்து சீ – பிளேன் விமான சேவையை நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம். (மேலும்...)

தை 25, 2011

இந்தியாவுக்கான விசாவினை யாழ். துணை தூதரகத்தில் பெறும் வசதி

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் ஊடாக இந்தியாவுக்கான விசாக்கள் வழங்கப்பட்டு வருவதாக உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரி வீ. மகாலிங்கம் தெரிவித்தார். நாளாந்தம் 50 தொடக்கம் 100 வரையான விசாக்களை தற்போது வழங்கக் கூடியதாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். சாதாரணமாக விசா வழங்கும் நடைமுறையே இங்கும் பின்பற்றப் பட்டு வருவதாகவும், விண்ணப்ப தாரியின் விபரங்கள் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராயத் துக்கு அனுப்பிவைக்கப்பட்டு கடவுச் சீட்டு மற்றும் உண்மைத் தன்மை தொடர்பில் உறுதி செய்யப்பட்டதன் பின்னர் விசா வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பணிகளை மேற்கொள்வ தற்காக இந்தியாவில் இருந்து வரவ ழைக்கப்பட்டுள்ள மென் பொருள் கள் கிடைக்கப்பெற்றதும் யாழ். மக்களுக்கு மேலும் சிறந்த சேவையை வழங்க முடியும் என்றார்.

தை 25, 2011

யாழ். குடாநாட்டின் 24 பகுதிகளுக்கு இரணைமடு குளத்து நீர் விநியோகம்

கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வாழ்வாதார பிரச்சினையும் யாழ். குடாநாட்டு மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினையும் உள்ளது. எனினும், கடந்த 8 வருடங்களாக இரணை மடு குளத்து நீரை யாழ். குடா நாட்டுக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் 20 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக் கப்படுவதன் மூலம் அபிவிருத்தியில் உச்சியை அடையவுள்ளோம் என்றே சொல்லவேண்டும். இவ்வாறு யாழ். மாவட்ட அர சாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். – கிளிநொச்சி (இரணை மடு) நீர் விநியோக அமுலாக்க கூட்டம் யாழ். செயலகத்தில் இடம் பெற்றது. இதில் அரசாங்க அதிபர் திருமதி இ. சுகுமார் மேலும் தெரிவிக்கை யில், ஆசிய அபிவிருத்தி வங்கி, பிரெஞ்சு அபிவிருத்தி நிறுவனம், அரசாங்கம் என்பவற்றின் நிதி பங்களிப்புடன் இத் திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. (மேலும்...)

தை 24, 2011

மீண்டும் ஒரு தேர்தல்

தமிழ் கட்சிகள் தமிழ் மக்களின் தேவைகளை, விருப்புக்களை நிறைவேற்றுவார்களா...?

(சாகரன்)

தமிழ் கட்சிகளின் அரங்கம் தேர்தலை நோக்கமாக கொண்டு அமைக்கப்படவில்லை. இதன் வளர்ச்சிப் போக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும் ஐக்கியப்படுத்திக் கொண்டு செயற்படுதல் என்ற முயற்சியில் விடாப்பிடியாக செயற்பட்டே வந்தது. அரங்கத்தின் இந்தப் பிடிவாதம்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, அரங்கம் இடையேயான சந்திப்புக்களும், அரசியல் தீர்வுத் திட்ட வரைதலுக்கான குழு அமைப்புகளும், இதையொட்டிய சந்திப்புக்களும், அளவளாவல்களும், விருந்தோம்பல்களும். இதில் முன்னணியில் காட்டப்படாவிட்டாலும் பலரின் காத்திரமான விடாப்பிடியான உழைப்பும் விட்டுக் கொடுப்புக்களையும் எமது மூத்த தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஐயா அறிவார். இன்று இல்லாவிட்டாலும் என்றோ ஒருநாள் இந்த விட்டுக் கொடுப்புகளின் உண்மைகள் உறங்காமல் வெளிவரும், வெளிவர வேண்டும். தேர்தலுக்கு அப்பால் தமிழ் மக்களின் மீள்குடியேற்றம்., புனருத்தாரணம், புனர்வாழ்வு என்ற உடனடிப் பிரச்சனைகளும், அரசியல் தீர்வு என்ற பிரதான பிரச்சனைகளும் அரங்கம், கூட்டமைப்பிடையே சேர்ந்து பயணிக்க வேண்டிய கட்டாயம் நிர்பந்தம் தேவைகளை ஏற்படுத்தி இருக்கின்றன. (மேலும்...)

தை 24, 2011

 

குச்சவெளியில் 15 இடங்களில்  தரையில் விநோத மாற்றங்கள்
 

திருகோணமலை, குச்சவெளிப் பிரதேசத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் கூடிய நீர்க்கசிவுகள் வெளிப்பட்டதையடுத்து பிரதேசத்தில் அச்சமும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே இந்த நீர்க் கசிவுகள் உருவாகியுள்ளன. சுமார் 15 இடங்களில் நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக் கின்றன.இந்நிகழ்வு குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட இணைப்பாளர் ஏ.சி.ஏ. வாஹிர் கூறுகையில், குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சலப்பை ஆற்றுக்கு அருகிலுள்ள சேற்று நிலத்தில் சுமார் 15 இடங்களில் 500 மீட்டர்கள் நீத்தில் திடீரென வெடிப்புகள் ஏற்பட்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட்டுள்ளன. இந்த நீர்க்கசிவுகள் ஏற்பட்டிருக்கும் பிரதேசத்திற்கு மேற்காக 150 மீட்டர் தூரத்தில் சலப்பை ஆறு உள்ளது. அதே நேரம் இப்பிரதேசத்திற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் கடல் காணப்படுகின்றது. அத்தோடு இப்பிரதேசத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மேற்காக கருவாட்டு மலையும் இருக்கின்றது. இத்திடீர் நீர்க்கசிவுகள் உருவானதற்கான காரணத்தைக் கண்டறியும் ஆய்வுகள் விரிவாக இடம்பெறுகின்றன என்றார். (மேலும்...)

 

தை 24, 2011

பனம் உற்பத்திகளை நாடுமுழுவதும் சந்தைப்படுத்துவதற்கு திட்டம் - பனை அபிவிருத்தி சபை தலைவர் பசுபதி சீவரெத்தினம்

பனை அபிவிருத்திச் சபை பனம் உற்பத்திப் பொருட்களை நாடுமுழுவதும் சந்தைப்படுத்த வசதியாக காகில்ஸ் புட்சிற்றி நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்று செய்திருப்பதாக சபையின் தலைவர் பசுபதி சீவரெத்தினம் தெரிவித் துள்ளார். தற்போது பனங்கட்டி, பனம் வெல்லம், பனம்பாணி புழுக் கொடியல், ஒடியல், பனாட்டு ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் அதிக கிராக்கி நிலவு வதால் இப்பொருட்களை நவீன முறையில் பொதிசெய்து நாடுமுழுவதும் காகில்ஸ் புட்சிற்றி மூலம் விற்பனை செய்ய முடியுமென அவர் நம்பிக்கை தெரி வித்துள்ளார். இந்நடவடிக்கையால், பனக் கைத்தொழிலை நம்பி வாழும் குடும்பங்கள் பெரும் நன் மை யடையும்.

தை 24, 2011

கனேடிய நீதிமன்றம் உத்தரவு

உலக தமிழர் அமைப்பின் உடமைகளை முடக்க உத்தரவு

கனடாவின் ஒன்டாறியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் செயற்பட்டு வந்த உலகத் தமிழர் அமைப்பின் உடமை களை கனேடிய அரசாங்கத்திடம் கையளிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலகத் தமிழர் அமைப்பின் உடமைகள் பயங்கரவாத அமைப்பினால் பயன்படுத்தப் பட்டவை என்றும் அதன் சொத்துக்களை முடக்குமாறு கனேடிய நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பானது, கனடாவில் புலிகளுக்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட புலி ஆதரவு நடவடிக்கைகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும் கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  (மேலும்...)

தை 24, 2011

தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைபெறுவதற்கான நெடும் பயணத்தின் 7வது நாள்

தாங்கள் நெடும் பயணத்தை ஆரம்பித்து முதல் சற்றுசோர்வான நிலையில் இருந்தாகவும் ஆனால் தற்போது வழிநெடுகிலும் மக்கள் வழங்குகின்ற ஆதரவு எமது நெடும் பயணத்திற்காண வெற்றி எனவும் தெரிவித்தார். அதேவேளை தமிழ் நாட்டிலிருந்து மக்கள் வாகனங்களில் வந்து ஆதரவு தெரிவித்து செல்லுவதாகவும் தமிழ் நாட்டில் வாழ்கின்ற ஈழ தமிழர்கள் சமைத்து உணவுகளை தாங்களுக்கு இடையிடையே பரிமாரிவருவதாகவும் தெரிவித்தார். அத்தோடு தாங்கள் நெடும் பயணத்தை ஆரம்பித்தபோது தாங்களுடன் முன்னாள் ஈபிஆர்எல்எப் மற்றும் டொலோ போரளிகளும் இணைந்து கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். (மேலும்.....)

தை 24, 2011

சீமான் செல்லும் பாதை- மரணம் நிச்சயம் 

தேசிய தலைவரின் தம்பியான சீமானும், அவரது வழியையே தேர்ந்தெடுத்திருப்பதாக தெரிகிறது. இன துரோகியான தி.மு.க காங்கிரஸ் கூட்டணியை  வீழ்த்துவதற்கு அவர் எதிரியான அ.தி.மு.க வுடன் இணைந்துள்ளார். அடுத்த கட்ட ஈழ போர் ஈழத்து தமிழர்கள் ஆதரவுடன், புலம் பெயர் தமிழர்கள் உதவியுடன், நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பில் கண்டிப்பாக நடந்தே தீரும். அதற்கு  தேவை  தமிழர்களிடத்தில்  ஒற்றுமை, நம்பிக்கை மட்டுமே. 

சொன்னது நீ தானா சொல் சொல் சீமானே ....??????

இது ஓர் தேர்தல் வாக்குறுதி!

தை 24, 2011

கனடாவில் வானவில்

கனடாவில் 'வானவில்' என்ற பெயரில் மாதாந்த இதழ் வெளிவரத் தொடங்கியுள்ளது. கனடாவில் வெளிவருகின்ற தமிழர்களின் பத்திரிகைகள் இரண்டு வகைப்பட்டவை. ஒரு வகை புலிகளால் தமிழ் தேசியம் என்ற அழகிய பதாகையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வந்த பிற்போக்கு தமிழ் தேசிய வெறிப் பாசிசத்தை ஆதரித்துத் தொடங்கப்பட்டவை. மற்றயவை ஊடகத் தர்மம் பற்றியோ, ஊடகத்துறை சம்மந்தமாகவோ முன் அனுபவம் ஒரு போதும் இல்லாத சிலரால், வருமான நோகத்திற்காகத் தொடங்கப்பட்ட பிழைப்புக்காக புலிகளையே சார்ந்து இருக்கப் பழகிப் கொண்டதனால், தமிழ மக்களின் ஊடகத் தேவையைச் சரியான முறையில் பூர்த்தி செய்ய முடியாமல் போனவர்கள். (மேலும்.....)

தை 24, 2011

உரிமைக்கான நெடும்பயணம்! - ஈ.என்.டி.எல்.எப். தலைவர் ஞா.ஞானசேகரன்

விடுதலை இயக்கங்கள் என்று புறப்பட்ட அமைப்புகள் தங்கள் அணியினை முதன்மைப்படுத்த முற்பட்டனரே தவிர எங்களது மக்களின் விடுதலைக்கு என்ன வழி என்பதைக் கண்டுகொள்ளாமல் பாதைகளை மாற்றிக்கொண்டனர். புலிகள் இயக்கம் ஏனைய இயக்கங்களை அழித்து தான் மட்டுமே ஏகப்பிரதிநிதி என்று எங்கள் இனத்தின் பலம் எது பலவீனம் எது என்று தெரியாமல் ஆயுதம் மட்டுமே விடுதலையைப் பெற்றுத் தரும் என்று அராஜகத்தில் ஈடுபட்டனர். இவர்களது அநீதிக்குப் பயந்து சில இயக்கங்கள் எதிரியான சிங்கள அரசிடம் அடைக்கலம் தேடினர். பின்நாளில் அமைதிப்படைக்கு அஞ்சி விடுதலைப் புலிகளும் அதே எதிரியான சிங்கள அரசிடம் தஞ்சமடைந்தனர். (மேலும்.....)

தை 24, 2011

தேர்தல் கூட்டணி தொடர்பில் விரைவில் தீர்மானம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தெந்தப் பகுதிகளில் அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவது என்பது தொடர்பில் அடுத்துவரும் ஓரிரு தினங்களில் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளாரும். வர்த்தக மற்றும் கூட்டுறவுத்துறை பிரதி அமைச்ச ருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். இது தொடர்பாக அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், சில இடங்களில் தனித்தும், சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிடுவதற்குக் கட்சி ஏற்கனவே தீர்மானித்திருப்ப தாகவும் கூறினார். அரசாங்கத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான காலம் நெருங்கிவரும் நிலையில் தனித்துப் போட்டியிடவேண்டுமென்ற கோரிக்கைகள் கீழ்மட்டத்தில் விடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களுக்கான பட்டியல்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சியும், ஜே. வி. பி.யும் தெரிவித்துள்ளன.

தை 24, 2011

இந்தியாவில்

வாரிசு அரசியலால் வளர்ச்சிக்கு தடை சமூகவியலாளர்கள் கொதிப்பு

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடம் நிலப்பரப்பில் ஏழாவது இடம் அதிக இளைஞர்களின் எண்ணிக்கையில் முதலிடம் உலகின் மிகப் பழமையான பாரம்பரியம். அறிவியல் உண்மை செறிந்த இலக்கியங்கள் வற்றாத நதிகள், ஏராளமான இயற்கை வளங்கள் என உலக நாடுகளின் உச்சத்தில் நம் நாடு இருந்து வருகிறது. இத்தனை வளங்கள் இருந்தும் ஊழல் இலஞ்சம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், நேர்மையான அரசியல்வாதிகளுக்கு பற்றாக்குறை என பல்வேறு பிரச்சினைகளால், நாடு பின்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த பின்னடைவிற்கு பல்வேறு காரணங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. இவற்றில் ‘வாரிசு’களை முன்னிறுத்தி அரசியல், தொழில்துறை ஆகியவை இயங்குவது முக்கிய காரணமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு பொருளாதார சமூக வல்லுனர்களால் முன்வைக்கப்படுகிறது. (மேலும்.....)

தை 24, 2011

வைகோ போடும் கரணம்!

தற்போது ஈழத்தைச் சுற்றிப்பார்த்து விட்டு வந்திருக்கும் தமிழ் உணர்வாளரான பெண் வழக்கறிஞர் ஒருவர், ஈழத் தமிழர்கள் தமிழகத்துத் தமிழர்களின் உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள், இந்தியாவின் உதவியை எதிர்பார்க்கவில்லையென்று சொன்னார்கள். அவருக்கும் விளங்கவில்லை, தமிழகம் என்ன ஐரோப்பாவிலா இருக்கிறது? அதுவும் இந்தியாவில்தான் இருக்கிறது. தமிழகமும் இந்தியாவின் ஒரு பகுதிதான்!. இந்தப் பெண்ணை விடுவிக்க உதவிய பாரதப் பிரதம மந்திரி அவர்களுக்குத்தான் திரு. வைகோ அவர்கள் நன்றி சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் விமானத்தில் சென்னை திரும்பியுள்ளார். (மேலும்.....)

தை 24, 2011

யாழ். முஸ்லிம்களை முழுமையாக மீளக்குடியமர்த்த காணிகள் பற்றாக்குறை

இடவசதி போதாமையினால் யாழ். குடாநாட்டில் மீளக்குடியமர திரும்பிய முஸ்லிம் குடும்பங்களை மீளக்குடியமர்த்துவதில் சிக்கல் தோன்றியுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் பி.ஏ. எஸ். சுஃபியான் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் யாழ். குடாநாட்டில் மீளக்குடியமர விருப்பம் தெரிவித்துள்ளன. அத்துடன் மீளக்குடியமரும் ஆவலுடன் யாழ். குடாநாட்டுக்கு வந்து தமது மீள்குடியேற்றம் சம்பந்தமான பதிவுகளையும் மேற்கொண்டுள்ளனர். எனினும், மீள்குடியமர திரும்பியுள்ள குடும்பங்களை குடியமர்த்த காணி வசதிகள் போதாத காரணத்தினால் பல குடும்பங்கள் மீண்டும் திரும்பிச் சென்றுள்ளன. இந்த பிரச்சினையை தீர்ப்ப தற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. (மேலும்.....)

தை 24, 2011

உங்களின் தகவல் தொடர்பு சரியான அலைவரிசையில் செல்கிறதா?

(ருக்மணி பன்னீர்செல்வம்)

இயற்கையின் படைப்பில் மற்ற உயிரினங்களி லிருந்து மனித இனம் இன்றைய நிலையில் பெரும்வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடிப்படையாய் அமைந்தது தகவல் பரிமாற்றம் தான். மனிதனால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட தகவல் பரிமாற்ற வழிமுறையானது இன்றைக்கு பெரிதாகப் பேசப்படும் ஆர்க்ஹ் கஹய்ஞ்ன்ஹஞ்ங் எனும் உடலசைவுதான். மனித வாழ்க்கையில் பேச்சுக்கலை வளர்ந்த பிறகுதான் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நாம் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தகவல் பரிமாற்றம் வழி எந்த அளவில் மிகச் செம்மையாய் செய்யப்படுகிறதோ, அதைப் பொறுத்துத்தான் நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். (மேலும்.....)

தை 24, 2011

மேய்ச்சல்வெளி

(சுல்தான்)

உடனடித் தேவையாக ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இன்று எல்லாத் தமிழ்மக்களினதும் பொது எதிர்பார்ப்பல்லவா? இதற்கு ஆவேசப்பட்டு விரோதத்தைக் கக்கும் அதே பழைய வீரப்பேச்சுக்களால் ஆகுவது என்ன என்று இனியும் நாம் சிந்திக்க வேண்டாமா? வாக்குகளுக்கும், வாய்சாலகத்தைக் காட்டவும் என வெறுமனே குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருக்கும் இனரோசப் பேச்சுக்களால், இன்னுமின்னும் நாம் இருந்த இடத்தை விட்டுக் கீழே கீழே வழுக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதே யதார்த்தமல்லவா? பிடிக்கக் கிடைக்கும் சந்தர்ப்பங்களை நழுவ விட்டுச் சும்மா பீற்றிக் கொண்டிருக்கும் அரசியலால் மக்கள் அடைந்தது என்ன? இப்போதேனும் ஒன்றுகூடி யோசிக்க வேண்டாமா? இதற்கு மேலும் கற்பனை ரதங்களில் மக்களை ஏமாற்றி அழைத்துச் செல்லாமல், சாத்தியமான ஒரு தீர்வுக்கு தமிழ்க்கட்சிகள் முதலில் ஒன்றுபட்ட முடிவுக்கு வரப் பேசுதல் வேண்டும். அனைவரும் ஒன்றுபடும் புள்ளிகளை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும். (மேலும்.....)

தை 23, 2011

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை

யாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்ககும் நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கையெடுக்கவுள்ளனர். கடந்த இரண்டு மாத காலத்தில் யாழ் மாவட்டத்தில் பல்வேறு கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல், கொள்ளைகள், கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இது சம்பந்தமான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் இடம் பெற்றது. (மேலும்...)

தை 23, 2011

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் துரிதப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம்

1983 இல் ஜே. ஆர். அரசின் அனுசரணையோடுதான் தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான இன சங்காரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அது ஓர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை. இதைப்போன்றுதான் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையை புலிகள் கட்டவிழ்த்து விட்டார்கள். 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி சுமார் லட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வடக்கில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்டனர். சுமார் 40,000 க்கு மேற்பட்ட இந்த முஸ்லிம் குடும்பங்களின் வரலாற்று வாழ்விடங்களாக வடபகுதியே இருந்து வந்தது. இந்த மக்களின் அசையாத மற்றும் அசையும் சொத்துக்கள் அனைத்தையும் புலிகள் அபகரித்து விட்டு உடுத்த உடுப்புடனும் வெறுங்கையுடனும் விரட்டியடித்தனர். வேரோடும் வேரடி மண்ணோடும் புலிகளால் பிடுங்கி எறியப்பட்ட முஸ்லிம் மக்கள் நூற்றுக்கு மேற்பட்ட அகதி முகாம்களில் சந்தித்த அவலங்கள் அளப்பரியவை. (மேலும்...)

தை 23, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - ஐந்தாவது நாள் நிகழ்வுகள்!

(நெடுந்தூர நடைபயணத்தில் கலந்து கொள்பவர்களை ஊக்குவிக்க, வாழ்த்துச் சொல்ல, மற்றும் அவர்களது கஸ்ரங்களை அறிந்துகொள்ள தொடர்புகொள்ள வேண்டிய கைபேசி எண்: 00919490826037. இந்த கைபேசி எண் நெடுந்தூர நடைபயணத்தின் தலைமைக்குழுவில் நிதி மற்றும் கட்டுப்பாட்டிற்குப் பொறுப்பு வகிக்கும் உயர்திரு. தயாபரன் (டேவிட்) அவர்களிடம் இருக்கும்). ஐந்தாவது நாள் பயணம் 45 கிலோ மீற்றர்களைக் கொண்டதாக இருந்தது. சூலூர் பேட்டை (ஆந்திரா) தாண்டி நான்காவது கிலோ மீற்றரில் புறப்பட்ட நடைபயண வீரர்கள், நாயுடு பேட்டை தாண்டி 15 கிலோ மீற்றரில் ஓர் வயல்வெளியில் இரவு தங்கினர். (மேலும்...)

தை 23, 2011

யாழ். குடாநாட்டின் குற்றச்செயல்களுக்கு அரசாங்கமோ, அமைச்சர் டக்ளஸோ பொறுப்பல்ல - பிரதியமைச்சர் முரளிதரன் (கருணா)

யாழ். குடாநாட்டில் இடம்பெற்றுவரும் குற்றச்செயல்களுக்கு அரசாங்கமோ அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவோ பொறுப்பல்ல என்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா)  உறுதிபடத் தெரிவித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் வேண்டுமென்றால் குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம். ஆயினும் அதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையோ, அவரது கட்சியான ஈ.பி.டி.பி. கட்சியையோ குற்றம் சாட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். (மேலும்...)

தை 23, 2011

The New Lords Prayer by Bishop of Mannar (The Three Kings)

(by Lenin Benedict-Toronto)

Instead of replying to the Bishop of Mannar Rt.Rev.Dr.Joseph Rayappu and his associates Rev.Fr.Victor Sosai and Rev.Fr.Xavier Croos, for their submission in Lesson Learn and Rehabilitation Commission held in Mannar, I simply would like to answer it from my imaginative way by the new version of Lord’s Prayer. (more....)

தை 23, 2011

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தி குறித்து அதிகம் மகிழ்ச்சியடைந்தவர்கள் வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தான் - பிரபா கணேசன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணச் செய்தி குறித்து அதிகம் மகிழ்ச்சிக்குள்ளானவர்கள் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் தான் என்று பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வார இறுதி  சிங்களப் பத்திரிகையான சிலுமிணவுக்கு வழங்கியுள்ள நோ்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரது செவ்வியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்ற யுத்தம் வடக்கில் ஏராளமானவற்றை அழித்து விட்டது. அங்குள்ள மக்களுக்கு ஏராளம் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு மேலாக அம்மக்கள் அபிவிருத்தியின் வாடையைக் கூட கண்டறியாதவர்களாக இருந்தார்கள். பிரபாகரனின் கொலைவெறிக்கு அவர்கள் தங்கள் இன்னுயிரைப் பறிகொடுத்தார்கள். (மேலும்...)

தை 23, 2011

இணையத்தளங்களில் உலாவரும் கனவு ஈழம்

தற்போது உலகில் எண்ணிலடங்கா முகவரியற்ற இணையத்தளங்கள் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. இவற்றில் பல எங்கிருந்து எவரால் இயக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரியாமலே உள்ளது. இதனால் இவர்கள் தாம் விரும்பும் அரசாங்கங்களுக்கும், கட்சிக ளுக்கும், தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவாகவும் விரும்பாதவர்களுக்கு எதிராகவும் பிரசா ரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இணையத்தளங்களில் பல, தமிழ் மொழியில் சுதந்திரமாக இயங்கி வருகின்றன. அவற்றிலும் பல மறைந்த விடுதலைப் புலிகளுக்குச் சார்பான செய்திகளை வெளியிடுவதற் காகவே இயங்கி வருகின்றன. இந்தத் தமிழ் இணையத்தளங்கள் உள்நாட்டில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்த இணையங்களில் கனவு ஈழத்தை இவர்கள் கண்டு வரு கின்றனர். (மேலும்...)

தை 23, 2011

சரணடைந்த நிலையில் அரசுடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையவில்லை - பசீர் சேகுதாவூத்

நேர்காணல்:  சுஐப் எம். காசிம்

கேள்வி:- மு. கா. எதிர்க்கட்சி அரசியலை நடத்தும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஓர் உடன்பாடு கண்டதே. அந்த செயற்பாடுகள் எப்படி இருக்கின்றது.

பதில்:- இவ்விரண்டு கட்சிகளும் என்றும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு செயற்படவில்லை. ஆனால் இரண்டு தமிழ் பேசும் இனங்களுக்கிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தி அரசியல் அரங்கத்தில் செயற்பாட்டை ஏற்படுத்த சில முயற்சிகள் இடம்பெற்றன. இன்றும் அது தொடர்கின்றது. எனினும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆனால் பரஸ்பர விட்டுக்கொடுப்புகளும் புரிந்துணர்வுகளும் நிறையவே ஏற்பட்டுள்ளன. மு. கா. அரசுடன் இணைந்துவிட்டது என்பதற்காக தமிழ்ச் சமூகத்தை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஜனாதிபதியும் தமிழ் மக்களுக்குச் செய்கின்ற எல்லா உதவிகளையும் நலன்களையும் முறையாக மேற்கொள்ளத் தயாராகவே உள்ளார். அவ்வாறான செயல்பாடே நடக்கின்றது. வடக்கு கிழக்கிலே ஓர் அரசியல் தீர்வு என்று வரும்போது தமிழர்களும் முஸ்லிம்களும் பேசிய பின்னர் அரசுடன் பேசுவதே ஒரு முறையான, வெற்றிகரமான தீர்வைத் தரும். கடந்த காலத்தில் இனப்பிரச்சினைத் தீர்வில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளுக்கு காரணம் தமிழர்களின் அரசியல் சக்திகளும் முஸ்லிம்களின் அரசியல் சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படாமையே. (மேலும்...)

தை 23, 2011

தருணம் வரும் என்கிறார் செல்வம் எம். பி

தமிழ்க் கட்சிகளின் கூட்டணிக்கு பாடுபட்ட சிவாஜிக்கு கதவடைப்பு

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துப் பாரிய பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் முயற்சிகளை, சிவாஜிலிங்கம், ஆனந்தசங்கரி, சித்தார்த்தன் ஆகியோர் பிரதிநிதித்துவப் படுத்தும் நான்கு கட்சிகள் ஆரம்பித்திருந்தன. இவர்களில் ஆனந்தசங்கரி மற்றும் சித் தார்த்தனை இணைத்துக்கொள்ளத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுத்திருக்கும் நிலையில், சிவாஜிலிங்கம் பிரதிநிதித் துவப்படுத்தும் கட்சியான தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை இணைப்பது பற்றி இதுவரை தீர்மானம் எடுக்கப் படவில்லை. ‘எந்தவொரு கட்சியையும் ஒதுக்கிவைக்கும் தீர்மானத்தை நாம் எடுக்கவில்லை. சிவாஜிலிங்கத்தையும் இணைப்பது பற்றிக் கூட்டணிக் கட்சிகளுடன் பேசி வருகிறோம். (மேலும்...)

தை 23, 2011

உடப்பு

கோவிலை மையப்படுத்தி வாழும் வளரும் ஒரு தமிழ்க் கிராமம்

(அருள் சத்தியநாதன்)

புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்கள் ஒரு காலத்தில் தனித் தமிழ் மக்கள் வாழும் இடங்களாகக் காணப்பட்ட போதிலும் இன்று அந்த சூழல் வெகுவாக மாறிவிட்டது. மாற்றங்கள் சகஜம்தான். ஆனால் சிலாபத்தில் இருந்து 26 கி. மீ. தொலைவிலும் புத்தளத்தில் இருந்து 42 கி. மீ. தொலைவிலும் கடற்கரையோரமாக அமைந்திருக்கும் மீன்பிடிக் கிராமமான உடப்பு, எல்லாத் தாக்கங்களுக்கும் ஈடுகொடுத்து இன்றும் தனித் தமிழ் கிராமமாக விளங்கி வருகிறது. இது பலரும் அறியாத உண்மை.  இங்கே 90 சதவீதமானோர் தமிழ் இந்து மக்கள். ஏனையோர் தமிழ் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள். சிலாபத்தில் இருந்து பிரிந்து செல்லும் குண்டும் குழியுமான பாதையூடாக ஆடியசைந்து சென்றால் இக்கிராமத்தை சென்றடையலாம். (மேலும்...)

 

தை 22, 2011

ஹிட்லரை ஆதரித்தவர்

“முதலில் அவர்கள் யூதர்களைப் பிடிக்கவந்தனர்/ நான் பேசவில்லை; ஏனெனில் நான் யூதன் அல்ல/ பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்க வந்தனர்/ நான் பேசவில்லை; ஏனெனில் நான் கம்யூனிஸ்டு அல்ல/ பின்னர் அவர் கள் தொழிற்சங்க வாதிகளைப் பிடிக்க வந் தனர்/ அப்போதும் நான் பேசவில்லை; ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல/ பின்னர் அவர்கள் என்னைப் பிடிக்க வந்தனர்/ அப்போது எனக்காகப் பேச யாரும் இல்லை”. மனித மனங்களை நுட்பமாகப் படம் பிடித்து பாசிசத்துக்கு எதிராக ஆவேச உணர்வை ஊட்டிய இக் கவிதை வரிகளை எழுதியவர்யார்? அவர் வரலாறு என்ன? எதுவுமே தெரியாமல் கூட அன்றாடம் உல கெங்கும் பலரால் இக்கவிதை மேற்கோள் காட்டப்பட்ட வண்ணம் உள்ளது.(மேலும்...)

தை 22, 2011

தமிழ் கட்சிகளின் அரங்கம்,தமிழ் தேசிய கூட்டமைப்பு இனரிடையே உள்ள உறவு இனி என்னவாகும்?

(அ. விஜயன்)

தமிழ் கட்சிகளின் அரங்கம் உருவானபோது ஒற்றுமையை விரும்பும் பலர் சந்தோசமைடந்தனர், அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் அரங்கத்தினருக்கும் உறவு வளர்ந்த போது அந்த சந்தோசம் இரட்டிப்பாகி, சந்தேகங்களும் இனி அகன்று விடும் என்ற எண்ணமும் உருவானது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் இருப்பதனால் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளில் இலங்கை அரசு மறுதலிக்க முடியாத ஒரு தீர்வை தமிழ் மக்களுக்கு வைப்தற்கு அழுத்தங்களை பிரயோகிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை இன்று அவநம்பிக்கையாக மாறியது, அனைவரையும் கவலையடைய செய்துள்ளது. இதற்கு உள்ளுராட்சி சபை தேர்தல் எனும் அஸ்திரம் எய்தப்பட்டுள்ளது. (மேலும்...)

தை 22, 2011

மேய்ச்சல்வெளி

(சுல்தான்)

அப்பாவி மக்களின் வாழ்வு அல்லல்களுக்குள் சிக்குப்பட்டுக் கிழிந்து கொண்டிருப்பதை, அநீதிகளும் அநியாயங்களும் நடந்து கொண்டிருப்பதை யாரும் மறுக்க முடியாது. அவை எதிர்க்கப்பட வேண்டும் என்பதும் உண்மையே. ஆனால், அநியாயங்களை எல்லாம் ஆவேசமாய் எதிர்த்தபடி செல்வது என்ற ஒற்றைவழிப் போக்கில் இன்றைய சிக்கல்களை விடுவித்துவிட முடியாது. அப்பாவி ஒருவனின் காலடி கூட அவனறியாமல் பல்லாயிரம் உயிர்களைப் பலிகொண்டுவிடும் அமைப்பில் நாம் வாழ்ந்து வருகிறோம். உயிரழிவுகள் தவிர்த்த ஒரு எதிர்ப்பு வழிமுறையையே நாம் கண்டு கொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது, மீண்டும் உயிர்த்தெழுவதற்கான வாய்ப்புகளைத் தெரிந்திராதவர்கள், தாமே விரும்பிச் சிலுவையில் ஏறக்கூடாது என்பதையே இந்த முப்பது வருடப் பாடமாக நாம் பெற்றிருக்கிறோம். (மேலும்...)

தை 22, 2011

புதுடில்கியை நோக்கிய நெடும்பயண போரளிகளுக்கு நெல்லுரில் பெறும் வரவேற்பு அளிக்கபட்டுள்ளது

ஈழ தமிழர்களின் விடுதலைக்கான ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியின்  சென்னையிலிருந்து புதுடில்கியை நோக்கிய நெடுபயணம் 6 வது நாளான இன்று 250 கிலோமிட்டர் தூரத்தை கடந்து உள்ளது. ஆந்திரா மாநிலத்தின் உள்ள நெல்லுர் நகரத்தை ஊர்வலம் அடைந்து போது அங்கு கூடியிருந்து தமிழ் நாட்டு தமிழ்மக்களும் ஆந்திர மக்களும் இணைந்து வரவேற்றதுடன் தலைமை தாங்கி செல்கின்ற 6 பேருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்துள்ளதுடன் தற்காலிகாமாக அமைத்த மேடையில் உறையாற்றும் படியும் வலியுறுத்தியுள்ளனர். (மேலும்...)

தை 22, 2011

Organizations that allegedly raised money for Tamil Tigers ordered to forfeit belongings

The World Tamil Movement headquarters in Montreal, with Tamil Tigers flags and a poster of a Tigers leader. An audit found the group took in up to $763,000 a year, and most of the money went to a Malaysian account linked to the rebels. A pair of Canadian non-profit organizations the RCMP says raised millions of dollars for Sri Lanka’s Tamil Tigers rebels have been ordered to forfeit all their belongings to the federal government. The Federal Court ruled the property of the World Tamil Movement of Ontario and the World Tamil Movement of Quebec was owned or controlled by a terrorist organization and therefore had to be forfeited. The decision marks the official end of the WTM, which was formed in 1986 and became closely aligned with the fight for Tamil independence in Sri Lanka. It also marks the conclusion of a nine-year RCMP investigation that did not result in criminal charges. (more...)

தை 22, 2011

செய்திச் சிதறல்கள்......

  • யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கல் விழாவின்போது ராஜபக்சேவின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்து விட்டது.

  • சிங்கள நடிகை ஒருவருக்கு பென்ஸ் காரை பரிசாக அளித்துள்ளார்  கோத்தபயா.

  • பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி  இலங்கை வந்துள்ளார்.

(மேலும்...)

தை 22, 2011

நாடு முழுவதும் வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்

கொழும்பு மாவட்டத்தில் இரண்டு உள்ளூராட்சி சபைகளுக்கும், திருகோணமலை மாவட்டத்தில் ஒரு உள்ளூராட்சி சபைக்குமாக மூன்று வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட் டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் ஹோமாகம பிரதேச சபைக்கும் கெஸ்பாவ பிரதேச சபைக்கும் ஜனசெத பெரமுன வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா நகர சபைக்கு எம்.எம். ரிஸ்வான் மொஹமட் தலைமையிலான சுயேச்சைக்குழு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது என தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. (மேலும்...)

தை 22, 2011

தமிழ் அரசியல் தலைவர்கள் சிலர் வவுனியாவில் சந்தித்து பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் வீ. ஆனந்தசங்கரி ஆகியோர் ஒரே மேசையிலிருந்து பகல் போசனம் அருந்தினார்கள். கடந்த கால சம்பவங்கள் அனைத்தினையும் மறந்து ஒரு அணியில் நிற்கின்றோம் என்பதினை வெளிக்காட்டும் முகமாகவே சித்தார்த்தனினால் ஏற்பாடு செய்யப்பட்ட மதிய போசனத்தில் இவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். வைரவபுளியங்குளத்தில் உள்ள புளொட்டின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. (மேலும்...)

தை 22, 2011

சன் சீ ஆட்கடத்தல் கப்பல் விவகாரம் பிரதான சந்தேக நபர்(கள்) கைது

எம்.வி. - சன் சீ கப்பல் 492 இலங்கையர்களை பிரித்தானிய கொலம்பியத் தீவுகளுக்குச் சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரைக் கைது செய்திருப் பதாக தாய்லாந்து அதி காரிகள் தெரிவித்துள்ளனர். 48 வயதுடைய நடேசன் ஜீயநந்தன் என்பவரையும், சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களைக் கடத்தும் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் 7 பேரையும் தாய்லாந்து அதிகாரிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்திருப்பதாக குளோப் அன்ட் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. (மேலும்...)

தை 22, 2011

சுங்கத் திணைக்கள பணிகள் இன்று முதல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் சுங்கத் திணைக்களப் பணிகள் இன்று காலை (22.01.2011) மீண்டும் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் பிரதம தபாலக மேல்மாடியில் இவ் அலுவலகம் திறந்து வைக்கப் படவுள்ளது. வடபகுதி கடல் பிராந்தியம் பாது காப்பு வலயமாக கடற்படையின ரால் அறிவிக்கப்பட்டதால் யாழ்ப் பாணத்தில் செயல்பட்டு வந்த சுங்க அலுவலகப் பணிகள் இடைநிறுத்தப் பட்டிருந்தன. தற்போது நாட்டில் சமாதான சூழ்நிலை உருவாகி கடல் வலயச் சட்டம் நீக்கப்பட்டிருப்பதாலும், சுங்கத் திணைக்களப் பணிகளை விரிவுபடுத்துவதற்காகவும் முன்னர் இயங்கிய யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை, வல்வெட்டித்துறை, காரை நகர், பருத்தித்துறை சுங்கத் திணைக்கள பணிமனைகள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட சுங்கத்திணைக்கள அலுவலகம் வெளி நாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்ப டும் பொதிகளை உடனுக்குடன் பரி சோதனை செய்து உரியவர்களுக்கு கையளிக்கும் பணியினையும் வெளி நாட்டுப் பொதிகளை பரிசீலனை செய்து அனுப்பிவைக்கும் பணியி னையும் நிறைவேற்றவுள்ளது.

தை 22, 2011

சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியையே அமெரிக்கா எதிர்பார்க்கிறது - ஒபாமா

சீனாவுடன் ஆரோக்கியமான போட்டியையே அமெரிக்கா எதிர்பார்க்கிறது என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார். அமெரிக்காவில் நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சீன பிரதமர் ஹு ஜின்டாவோவை சந்தித்த பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியதாவது:-சீனாவிடமிருந்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை அமெரிக்கா எதிர்பார்க்கும் அதே சமயம் ஆரேக்கியமான போட்டியை எதிர்கொள்ளவே விரும்புகிறது. எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு இருப்பது அவசியம் என்பதை இருவருமே உணர்ந்துள்ளோம். நட்பு ரீதியிலான போட்டிதான் நீண்டகால அடிப்படையில் பலன் அளிக்கும் என்பது பேச்சுவார்த்தையில் தெரியவந்துள்ளது. (மேலும்...)

தை 22, 2011

உலகின் 7 அதிசயங்களில் தாஜ்மஹாலுக்கு முதலிடம்

உலகின் புதிய 10 அதிசயங்களை 10 கோடி பேர் சேர்ந்து இணையதளத்தில் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்தனர். இதில் இந்தியாவின் தாஜ்மஹால் முதலிடத்தை பிடித்துள்ளது. பழங்காலத்தில் அறிவிக்கப்பட்ட 7 அதிசயங்கள் அனைத்துமே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை. அவற்றில் இப்போதும் இருப்பது எகிப்தின்பிரமிட் மட்டுமே. இந்த உலக அதிசயங்களை கிரேக்க எழுத்தாளர் ஆன்டிபேட்டர் என்ற தனி நபர் ஒருவராகவே தேர்வு செய்ததாக நம்பப்படுகிறது. இந்த நிலையில் இப்போதைய காலகட்டத்தின் அடிப்படையில் உலகின் புதிய 7 அதிசயங்களை தேர்வு செய்வதற்காக புதிய கருத்துக் கணிப்பு உலகம் தழுவிய அளவில் நடத்தப்பட்டது. (மேலும்...)

தை 22, 2011

ஒரிசா பாதிரியார் கொலை வழக்க

தாராசிங்கிற்கு ஆயுள் தண்டனை! தூக்குத் தண்டனை அல்ல!!

கடந்த 1999ம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியாரான கிரஹம் ஸ்டெய்ன்சும் அவரது இரண்டு மகன்களும் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலையில் ஈடுபட்ட தாராசிங்குக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் தாராசிங்கிக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனையடுத்து இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். மேலும் தாராசிங்குக்கு ஒரிசா உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தும் தீர்ப்பளித்தனர். (மேலும்...)

தை 22, 2011

உள்ளூராட்சித் தேர்தல்களில் அரசுடன் இணைந்து போடடியிடுவதின் மூலமே, யுத்தத்தால் அழிந்து போன வடக்கு கிழக்கைக் கட்டியெழுப்ப முடியும்!

(வி.சின்னத்தம்பி)(யாழ்ப்பாணம்)

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளும், உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டு, சில பதவிகளைப் பெறுவதற்கு அங்கலாய்ப்பது தெரிய வந்துள்ளது. தமிழ் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் பெரிய கட்சிகளான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும், பெரும்பாலும் அரசாங்கக் கட்சியான பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடக் கூடிய சூழல் நிலவுவதால், அதனை ஏற்காத கட்சிகளின் நிலைப்பாட்டை உற்சாகப்படுத்துவதன் மூலம், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவான தமிழ் அரங்கத்தை உடைத்துவிடலாம் என கூட்டமைப்பினர் திட்டமிட்டுச் செயற்படுவது மிகவும் தெளிவாகத் தெரிகின்றது. இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சதிச் செயலுக்கு இரையாகாமல் இருப்பது தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு கட்சியினதும் தலையாய கடமையாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தக் கட்சிகள் சேர்ந்தால், அவர்கள் நிச்சயமாக இவர்களைக் கறிவேப்பிலையாகத்தான் பயன்படுத்திவிட்டு தூக்கி வீசுவாகள் என்பது நிச்சயம். எனவே, ஒரு அற்ப தேர்தலுக்காக, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைத் தீர்வுக்காக மிகவும் கஸ்டப்பட்டு உருவாக்கிய தமிழ் கட்சிகளின் அரங்கத்தை உடைத்துவிடாதீர்கள். (மேலும்...)

தை 21, 2011

சன் சீ கப்பலில் புலி உறுப்பினர்களை கனடாவிற்கு அனுப்ப உதவியதாக 8 பேர் கைது

விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 492 பேரை சன் சீ கப்பல் மூலம் கனடாவிற்கு அனுப்பிவைக்க உதவி புரிந்தனர் எனக் குற்றம் சாட்டப்பட்டு நடேசன் ஜயந்தன் (வயது 48) உட்பட எட்டுப் பேரை தாய்லாந்து பொலிஸார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக இலங்கை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்வதற்காக தாய்லாந்து செல்லவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. கனடாவில் உள்ள புலிப் பினாமி அமைப்புகளின் செயற்பாடுகளே சன் சீ கப்பலில் வந்தவர்களையும், இதற்கு ஒழுங்கு செய்தவர்களையும் 'மாட்டிவிட' பெரிதும் உதவியதாக புலனய்வு துறையினர் தெரிவிக்கின்றனர். புலிகளின் புத்தி சாதுர்சியம் அற்ற செயற்பாடுகள் முள்ளிவாய்காலில் முளம் தாளிட்டு மண் கவ்வ வைத்தது போல், தற்போதைய புலி முகவர்களின் செயற்பாடுகள் அமைகின்றன. உருத்திரகுமாரன் சற்று விளிப்படைந்தது போல் தெரிகின்றது. அதுதான் மகிந்தாவை விசாரணை செய்யவேண்டும் என்ற கோரிக்கைகளை மகிந்தாவின் அமெரிக்க தனிப்பட்ட விஜயத்தின் போது முன்வைக்கவில்லையோ....?

தை 21, 2011

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதியிடம் விசாரணை நடத்துமாறு கோரிக்கை

அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் விசாரணை நடத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் காலை 20 பிரதிநிதிகளுடன் அமெரிக்கா சென்றுள்ளார். சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டிய கடமை அமெரிக்காவுக்கு இருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் சேம் சரிப் தெரிவித்துள்ளார். கடத்தல், துன்புறுத்தல், நீதிக்குப் புறம்பான கொலைகள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

தை 21, 2011

மீண்டும் எழுந்து வரும் யாழ்

யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட இக் கண்காட்சியும் விற்பனையும் தொடந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன. யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலுடன் கண்காட்சியும் விற்பனையும் ஆரம்பிக்கப்பட்டது. இக் கண்காட்சியில் 300ற்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காட்சியறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளுர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

தை 21, 2011

குடாநாட்டில் பணம் பறிக்கும், சொத்துக்களை அபகரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்துக்கு நெருக்கமான குழு  - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

குடாநாட்டில் இடம்பெற்ற 24 சம்பவங்களையும் பார்க்கின்ற போது அவற்றுக் கிடையில் ஒத்த தன்மை காணப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பாதாள உலக கோஷ்டியினர் இல்லை. மக்களை பயமுறுத்தி, அச்சுறுத்தி பணம் பறிக்கும் சொத்துக்களை அபக ரிக்கும் செயற்பாட்டில் அரசாங்கத்திற்கு நெருக்கமான குழுவே ஈடுபடுகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியது. தமிழ் மக்களுடன் இணக்கம் காண விரும்பினால் அரசாங்கத்திற்குள் இருக்கின்ற குற்றவியல் சக்திகளை அரசாங்கம் அகற்றிவிட வேண்டும். இன்றேல் எங்களுடைய சாதாரணமான சந்தேகம் உண்மையாகிவிடும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக் காட்டியது. (மேலும்....)

தை 21, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் நான்காம் நாள் நிகழ்வு!

ஆந்திராவில் “ஈநாடு”, “சாக்சி” போன்ற பிரபல பத்திரிகைகள் உள்பட அனைத்துப் பத்திரிகைகளும் மற்றும் “ஜெமினி” டிவி போன்ற பிரபலமான அனைத்துத் தொலைக்காட்சிகளும் ஈழ தேசிய ஜனநாக விடுதலை முன்னணியினர் மேற்கொள்ளும் நடைபயணத்தின் நோக்கத்தை விரபரமாக உலகறியச் செய்துள்ளமைக்கும் பொதுமக்கள் தொடந்து வழங்கி வரும் ஆதரவுக்கும், தேசிய நெடுஞ்சாலையில் நகரும் நடைபயணத்திற்கு மிக சிரமங்களுடன் பாதுகாப்பை வழங்கி வரும் ஆந்திர காவல்துறையினருக்கும் ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்ணியின் தலைவர் ஞா.ஞானசேகரன் அவர்கள் நன்றினை தெரிவித்துள்ளார். தொடர்ந்து ஆதரவு வழங்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். (மேலும்...)

தை 21, 2011

FUND RAISING FOR FLOOD RELIEF BY

DISASTER EMERGENCY ASSISTANCE RELIEF – CANADA

Batticaloa and Amparai districts are the worst affected area in SRILANKA, The total number of persons  affected in Batticaloa area is 540,144. The second worst affected district is Ampara where 471443 persons are affected by floods.The number of deaths caused by floods and heavy rain has risen to 38 while four persons were missing and 52 persons were injured. Batticaloa recorded the highest number of deaths, numbering 18. While ten persons died in Ampara. (more...)

தை 21, 2011

கேரதீவு - சங்குப்பிட்டி ஊடான பஸ் போக்குவரத்து வழமைக்கு

கேரதீவு - சங்குப்பிட்டி ஊடான பஸ்சேவைகள் வழமைபோல் நடைபெறுவதாக இலங்கைப் போக்குவரத்துச் சபை வடபிராந்திய முகாமையாளர் கே. கணேசபிள்ளை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பூநகரி நல்லூர் வரையான பஸ்சேவை யாழ். பஸ் நிலையத்திலிருந்து காலை 7.00 மணிக்கும் பிற்பகல் 2.00 மணிக்கும் இரு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சேவையில் ஈடுபடும் பஸ்கள் சாவகச்சேரி தனங்களப்பு ஊடாக பூநகரி நல்லூர் வரை சேவையில் ஈடுபடும். (மேலும்....)

தை 21, 2011

கிளிநொச்சியில் உள்ளூராட்சி தேர்தலுக்கான நடவடிக்கைகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைக்கும் அரசு தரப்பில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட பலர் ஆர்வம் காட்டி வருவதுடன் தமது விண்ணப்பங்களையும் சமர்ப்பித்து வருகின்றனர். கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி, பிரதேச சபைகளுக்கு வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட இம்முறை புத்திஜீவிகள், விவசாயிகள் சமூக சேவையாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் முதலானோரை வேட்பாளர்களாக நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தை 21, 2011

யாழ். நகரில் நவீன வர்த்தக நிலைய தொகுதியை அமைக்கத் திட்டம்

யாழ். நகரில் நவீன வர்த்தக நிலையம் தொகுதியை அமைப்பது தொடர்பில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்துள்ளார். முன்னதாக கஸ்தூரியார் வீதியில் நகரக் குளத்திற்கு அண்மையாக அமைந்துள்ள வர்த்தக உரிமையாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். இதன்போது அமையப் பெறவுள்ள நவீன வர்த்தக நிலையத் தொகுதியில் முன்னுரிமை அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்து தரப்படுமெனவும் அதற்கு 4 மாத கால அவகாசம் தேவையென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் இவ்விடயம் தொடர்பில் யாழ். மாநகர முதல்வரிடம் தொடர்பு கொண்டு விளக்கங்களைப் பெற்றுக் கொள்ளுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அப்பகுதியில் அமையப் பெற்றுள்ள பாரவூர்தி, துவிச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள் தரிப்பிடங்களையும் பார்வையிட்ட அமைச்சர் நகரக் குளத்தையும் அதன் சுற்றுப் புறத்தையும் பார்வையிட்டார்.

தை 21, 2011

மத்திய மந்திரி சபை மாற்றம்

தி. மு. கவுக்கு அதிர்ச்சி மம்தா கட்சிக்கும் வாய்ப்பில்லை

மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் மாற்றி அமைக்கப்பட்டது. மூன்று பேர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவி உயர்வு பெற்றனர். மூன்று புதுமுகங்கள் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்து ஜெய்பால் ரெட்டி, பெட்ரோலியத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே நேரத்தில், தி. மு. க. மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங். கட்சியைச் சேர்ந்த யாருக்கும்அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. தொலைத் தொடர்பு அமைச்சராக கபில் சிபில் நீடிப்பார் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய அளவில் மாற்றம் இல்லை என்றாலும், எண்ணிக்கை அளவில் சில சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. (மேலும்....)

தை 21, 2011

மன்னார் வளைகுடாவில் மூழ்கிய தீவுகள்

21 தீவுகளில் கீழக்கரை அருகே உள்ள பூவரசன்பட்டிதீவு, தூத்துக்குடி அருகே உள்ள விலங்குசல்லி தீவுகள் அடையாளம் காண முடியாத வகையில் கடலில் மூழ்கிவிட்டன. 2010ல் மன்னார் வளைகுடா கடலின் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதற்கு பவளப்பாறைகளின் பாதிப்பே காரணமாகும். பவளப் பாறைகள், 560 ச.கி.மீ. பரப்பளவில் 117 வகை உள்ளன. “கப்பாபைகஸ் ஆல்வரேசி” பாசியால் இவை அழிவைச் சந்தித்து வருகின்றன. இதைத் தடுக்க வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டது.(மேலும்....)

தை 21, 2011

மக்களின் பங்களிப்புடன் உணவுப் பொருட்களின் விலை உயர்வை தடுத்துவிடலாம்

சமீபத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் நாட்டின் பல பகு திகள் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் வட மத்திய மாகாணத்தின் பல பிரதேசங்களிலும், நெல் விளை ச்சல் நிலங்களுக்கும், மக்களின் உடமைகள், வீடுகள், இருப் பிடங்களுக்கும் இலட்சக்கணக்கான கோழிகளுக்கும், ஆயிரக் கணக்கான கால்நடைகளுக்கும், பல மனித உயிர்களுக்கும் ஏற்பட்ட இழப்பு குறித்து, நாம் பத்திரிகைகளிலும், இலத்திரனி யல் ஊடகங்களான வானொலி, தொலைக்காட்சி சேவைகளி லும் அறிந்து வேதனைப்பட்டோம். (மேலும்....)

தை 20, 2011

தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற முயற்சிகளின் இறுதிகட்ட தீர்மானம் நாளை நண்பகல்

தமிழ் கட்சிகளின் ஒரு பாரிய கூட்டணி அமைக்கின்ற ஒரு முயற்சியிலே தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணி, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய நான்கு கட்சிகள் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து எடுகின்ற முயற்சிகளின் பலனாக ஈபிடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ் மக்கள் விடுதலை கூட்டமைப்பு ஆர்வம் காட்டமையால் அவர்களுடன் சந்திப்பு சாத்தியப்படவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பல சுற்று கூட்டங்கள் முடிவடைந்திருக்கின்ற சூழ்நிலையிலே, 7 கட்சிகள் உள்ளடங்களாக ஒரு பாரிய கட்சியினை அமைக்கின்ற முயற்சியிலே போதியளவிலே இருகட்சிகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது. (மேலும்...)

தை 20, 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவுக்கு விஜயம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது. ஜனாதிபதி தனிபட்ட விடயத்திற்காகவே அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது. அது சரி உருத்திரகுமார் என்ன செய்யப் போகின்றார்? அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்க போட்டு மகிந்தாவை கைது செய்ய முயற்சிக்க போகின்றாரா...?

தை 20, 2011

உள்ளுராட்சி தேர்தலில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இணைந்து போட்டி…?

உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா மாவட்டம் உட்பட கூட்டமைப்பு போட்டியிடும் சகல சபைகளிலும் இணைந்து ஓரணியில் போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, எம்.பிக்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், எம்.சுமந்திரன் ஆகியோருக்கும் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தனுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுக்களின்போது இந்த இணக்கம் ஏற்பட்டுள்ளது. (மேலும்...)

தை 20, 2011

குற்றச் செயல்களை தடுக்க யாழ். பொலிஸார் நடவடிக்கை

யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் உள்ள பொலிஸ் பிரிவுகளில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பொலிஸ் பிரிவு ரீதியாக பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், வணிகர் கழக பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளுடனான சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றார். வீடுகளிலும் வணிக நிலையங்களிலும் இடம்பெறக்கூடிய திருட்டுச் சம்பவங்களை கட்டுப்படுத்துவது சம்பந்தமான அறிவுரைகளையும் அவர் வழங்கி வருகின்றார். கிராம அலுவலர்கள் தமது பகுதிகளில் நடமாடுபவர்கள் பற்றிய விபரங்களில் அதிக அக்கறை எடுப்பதுடன் உரிய தகவல்களை பொலிஸாருக்கு வழங்கி குற்றச் செயல்களை கட்டுப்படுத்த முழுமையான பங்களிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

தை 20, 2011

20.01.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் மனித உரிமைவாதியும் ஊடாகதுறை செயற்பாட்ளாருமான சுனந்ததேசபிரியா ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ்ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு: 00 44 208 9304826 or 078107063682

Internet 24 hours: http://tbcuk.com or http://www.tamil.nl

தை 20, 2011

மட்டக்களப்பு ஆரையம்பதி ஆர்பாட்டத்தால், பூ.பிரசாந்தன் கைது!

ரீ.எம்.வி.பி எனப்படும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் இன்று காலை மட்டக்களப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல் விடுத்தார் மற்றும் அவர் மீது தாக்குதல் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தனின் கைதினைத் தொடர்ந்து மட்டக்களப்பில் பதற்றமான நிலைமை தோன்றியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார். குறிப்பாக பிரசாந்தனின் கைதினைத் தொடர்ந்து அவருடைய ஆதரவாளர்கள் சிலர் ஆரையம்பதி பிரதேசத்தில் ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டுவருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தை 20, 2011

டெல்கியிற்கான நெடும் பணயம் தொடர்கின்றது.

ஈழ தேசிய ஜனநாய விடுதலை முன்னணியின் புதுடெல்கியை நோக்கிய நெடும் பயணம் தொடர்பான செய்திகளை ஆந்திர மாநில தொலைகாட்சிகள் ஒலிபரப்பிவருகின்றன. மூன்றாவது நாளான புதன்காலை ஆந்திரமாவடட்த்தில் உள்ள நாயடுபேட்டையிக்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து ஆரம்பாகி நெல்லுர்க்கு அருகே உள்ள கிராமத்தை சென்றயடை உள்ளது  இன்று காலை நடைபணயம் ஆரம்பிக்கபட்டபோது பெரும் தொகை பத்தரிக்கையாளகள் ஆந்திர மாநில முன்னணி தொலை காட்சிகளான ஜெமினி, ஈநாடு, சொக்சி ஆகியன தொலைகாட்சி சேகரித்து ஒளிபரப்பியுள்ளன. (மேலும்...)

தை 20, 2011

Eastern University Damages Amount To Millions Of Rupees

The Eastern University located in the Batticaloa District has incurred damages amounting to millions of rupees due to the heavy floods experienced in the Eastern Province. Vice Chancellor of the Eastern University, Dr. K. Premkumar has told the media that the damages to the university amounted to about Rs. 130 million. The buildings in the university’s Vandaramulla faculty have reportedly been damaged along with computers and other equipment that were in the premises. Meanwhile, most of the roads in the East that were badly damaged due to the floods are currently being repaired with military assistance

(Ajantha Gnanamuttu)  (905 460 1667)

தை 20, 2011

புலிகளின் பலமுகம்

பிரித்தானிய தமிழர் பேரவையின் இரு முகம்....?

 பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் புதுடில்கி சென்று இந்திரா காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தியை சந்தித்த விடயம் புலி ஆதரவு இணையத்தளம் வெளியிட்டு உள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சென் கந்தையா அண்மையில் இந்தியா புதுடில்கி சென்று இந்திரா காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவரான ராகுல்காந்தியை சந்தித்த விடயம் புலி ஆதரவு இணையத்தளமான அதிர்வுவெளியிட்டு உள்ளது. பிரித்தானியாவில் வாழும் தமிழர்களியிடையே இந்தியாவிற்க்கு எதிரான போக்கினை கடைபிடிப்பது போல பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பிரித்தானிய தமிழர் பேரவையின்  உயர்மட்ட தலைவர்கள் இந்திய அரசின் நெருங்கிய தொடர்புகளை மேற்கொள்ளுவதாகவும் தெரியவருகிறது. (மேலும்...)

தை 20, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடை பயணத்தின் 3வது நாள் நிகழ்வு!

ஆந்திராவில் உள்ள அனைத்துப் பத்திரிகை நிருபர்களும், அனைத்துத் தொலைக்காட்சி நிருபர்களும் வந்து பேட்டி எடுத்து, விபரங்களைத் தெரிந்து கொண்டு, உங்கள் நடைபயணத்தின் நோக்கத்தை உலகம் அறியச் செய்வோம் என்று உறுதி கூறினார்கள். அங்கு நடந்த ஆந்திர மாநில பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியும், அவர்கள் கொடுத்த உறுதி மொழியும் நெடுந்தூர நடைபயண வீரர்களுக்கு மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது. ஆந்திரவில் உள்ள அனைத்துப் பத்திரிகைகளின் நிருபர்கள் அனைவருமே உங்களது நோக்கம் நிறைவேற எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று வாக்குக் கொடுத்து விடைபெற்றார்கள். (மேலும்...)

தை 20, 2011

கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி

கிழக்கில்விடாது பெய்தமழையினால் அம்பாரையில்- 4லட்சத்து 71ஆயிரத்து 443 பேரும் மட்டக்களப்பில்- 5லட்சத்து 40ஆயிரத்து 144 பேரும், மூதூரில் 98 ஆயிரத்து 985 பேரும் அடிப்படைவசதிகளின்றி மீண்டும்மீண்டும் அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தவிப்பதுகண்டு எம்இதயம் விம்மி வெடிக்கின்றது. சமையல்பாதிரங்களுடன்,படுக்கை, போர்வை, மாணவர்களின், பாடபுத்தகங்கள், கொப்பிகள், ஆடைகளென எல்லாமே வெள்ளத்தால் அடித்துச்செல்லபட்டு ஏங்கித்தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும், தாயின்மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படைவசதியின்றி நோயுற்றவர்கள், கர்ப்பிணிதாய்கள் மற்றும் வயோதிபர்களுக்காகவும்;  புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து மனம்திறந்து உதவும்படி அன்பாகக்கேட்கின்றோம். (மேலும்...)

தை 20, 2011

நச்சு வாயுவை வெளியேற்றும்
வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும்

வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுவாயு கலந்த புகை சுற்றாடலை அசுத்தப்படுத்தி தீங்கிழைப்பதனால், உலகில் வருடாவருடம் சராசரியாக 40 இலட்சம் மக்கள் மரணிக்கிறார்கள். இது இலங்கையிலும் பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நச்சு வாயு கலந்த கரும்புகையை வெளியேற்றும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எமது நாட்டின் வாகன போக்குவரத்து சட்டங்கள் போதியளவு அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்குகின் றன. என்றாலும், இது விடயத்தில் பொலிஸாரோ, வாகனங்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் அரசாங்க திணைக்களமோ இச்சட்டங் களை கடுமையாக கடைப்பிடிப்பதில் அந்தளவுக்கு ஆர்வமோ, அக்கறையோ காட்டி வருகிறார்கள் என்று கூறுவதற்கு இல்லை. (மேலும்...)

தை 20, 2011

2400 ஆண்டுகள் பழைமையான சூப்

சீனாவின் புராதன இராசதானிகளில் ஒன்றாக இருந்த ஸாஆங்ஸி மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாண வேலை ஒன்றின்போது 2400 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சூப் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த பாத்திரம் ஒன்றை வெளியில் எடுத்து திறந்து பார்த்தபோது அதற்குள் சூப் இருந்தது. மிருகம் ஒன்றின் எலும்புகளில் சூப் ஆக்கப்பட்டு இருக்கின்றது. இப்பாத்திரத்துடன் இன்னும் இரு பாத்திரங்கள் மீட்கப்பட்டு உள்ளன. அவற்றுள் ஒன்றுக்குள் ஒரு வகையான மதுபானம் உள்ளது. சூப் தயாரிக்கின்றமைக்குப் பயன்படுத்தப்பட்ட மிருகம் எது? மதுபானம் எதில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்கின்றது? என்கிற ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் இறங்கி உள்ளனர்.

தை 20, 2011

அமெரிக்க டொலருக்கு பதிலாக யுவான் பயன்படுத்த சீனா தீர்மானம்

அமெரிக்க டொலரினால் ஆதிக் கம் செலுத்தப்பட்ட சர்வதேச நாணய முறைமை கடந்த காலத்திற் குரியதென இவ்வாரம் அமெரிக்கா வுக்கான விஜயம் மேற்கொள்ள வுள்ள சீன ஜனாதிபதி ஹுஜிந் தாவோ தெரிவித்துள்ளார். அத்துடன் அமெரிக்க டொலரிற்கு பதிலாக சீன நாணயமான யுவானை சர்வதேச அளவில் புழக்கத்தில் விடு வதற்கு சீனா நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜிந்தாவோ தெரிவித் துள்ளார். (மேலும்...)

தை 20, 2011

வீடில்லாத அமெரிக்கர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

பொருளாதார நெருக்க டியின் பாதிப்பால் அமெ ரிக்காவில் ஏழைகளில் எண் ணிக்கை அதிகரிப்பதோடு, வீடில்லாமல் அவதிப்படுப வர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வீடின்மைக்கு முடிவு கட்டும் தேசியக் கூட்டணி என்ற அமைப்பு நடத்திய ஆய்வில்தான் இது தெரிய வந்துள்ளது. வீடில்லாமல் அவதிப்படும் அமெரிக்கர் களின் நலன்களுக்காகப் போராட இத்தகைய அமைப்பு உருவாக்கப்பட் டுள்ளது. 2008 ஆம் ஆண் டோடு ஒப்பிடும்போது 2009 ஆம் ஆண்டில் வீடில் லாதவர்களின் எண்ணிக்கை 3 விழுக்காடு அதிகரித்தது. சரியான புள்ளிவிபரங்கள் இல்லாவிட்டாலும், 2010 ஆம் ஆண்டில் இந்த எண் ணிக்கை பெரும் அளவில் அதிகரித்தது என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.(மேலும்...)

தை 20, 2011

இந்திய அமைச்சரவையில் மாற்றம்

தி.மு.க.வைச் சேர்ந்த ஆர். ராசா, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாலும், ஆதர்ஷ் கூட்டுறவு வீட்டு வசதி சங்க முறைகேடு தொடர்பாக மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவாண் விலகவே அவரது இடத்தில் பிரதமர் அலுவலக இணை அமைச்சராக இருந்த பிருதி விராஜ் சவாண் நியமிக்கப்பட்டதாலும், ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக இணை வெளியுறவுத்துறை அமைச்சர் சசி தரூர் விலகியதாலும் ஏற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதே இந்த அமைச்சரவை மாற்றத்தின் முக்கிய நோக்கம். ஊடக வளர்ச்சித்துறை அமைச்சர் சி.பி. ஜோஷி, கனரகத்தொழில் துறை அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் உள்ளிட்ட சில அமைச்சர்கள் கட்சிப் பணிக்கு அனுப்பப்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே. அந்தோனி, எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் வகிக்கும் நிதி, உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு ஆகிய முக்கிய அமைச்சுக்களில் மாற்றம் இருக்காது என்றும் தெரிகிறது. (மேலும்...)

தை 19, 2011

ஒவ்வொரு அமெரிக்கர் தலையிலும் ரூ. 22 லட்சம் கடன்!

கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவில், ஒவ்வொரு குடிமகனின் தலையிலும் 22 லட்சம் ரூபாய் கடன் ஏற்றப்பட்டுள்ளது. இதுவரையிலும் இல்லாத அளவுக்கு நாட்டின் கடன் உயர்ந்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்றவுடன், அதற்கு எத்தனை பூஜ்யங்கள் என்பதைக் கண்டுபிடிக்க பலரும் திணறினார்கள். அமெரிக்காவின் ஒட்டுமொத்த கடன் ஏழு கோடியே கோடி ரூபாய் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எவ்வளவு கடன் இருக்கலாம் என்று ஒரு வரம்பை அங்கு வைத்திருக்கிறார்கள். தற்போது அந்த வரம்பை மேலும் தளர்த்தி விடலாமா என்று அமெரிக்க நாடாளுமன்றம் ஆலோசனை செய்து வருகிறது. அப்படித் தளர்த்தாவிட்டால் திவால் நிலைக்குள் அமெரிக்கப் பொருளாதாரம் நுழைந்துவிடும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். (மேலும்...)

தை 19, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைப் பயணம் இரண்டாவது நாள் நிகழ்வு!

17-01-2001 (திங்கள்) காலை உணவை முடித்துக் கொண்டு 9: 00 மணியளவில் நடைப் பயண வீரர்கள் பயணத்தை தொடங்கினர். சப்பாத்து போட்டு நடக்க முடியாத வீரர்களுக்கு செருப்புகள் வாங்கிக் கொடுக்கப்பட்டது. நடைப்பயணம் சத்தியவேடு நோக்கி பயணித்தது. சரியாக 01:30 மணிக்கு நடைபயணம் சத்தியவேடு சென்றடைந்தது. அங்கேயே மதிய உணவை எடுத்துக்கொண்டார்கள். அங்கே வெப்பம் அதிகமாக இருந்ததால் சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு, மாலை 04:00மணியளவில் மீண்டும் நடைபயணம் ராசபாளையம் என்ற இடத்தை நோக்கிப் பயணித்தது. (மேலும்...)

தை 19, 2011

Mississauga West End Buddhist Temple Launching Flood Relief Campaign to help Hardest hit in Eastern Sri Lanka

 First for years the ravages of a brutal war; then a tsunami that killed or displaced half a million or so! Then war again and now, devastating floods! Our compatriots, Sinhalese, Tamil, Muslim and Malay brothers and sisters are in the grip of suffering and misery once again. UN, India and neighboring friendly nations in South Asia, China, Japan, USA, Canada, UK etc. have responded opening their hearts to this latest calamity that hit Sri Lanka with the dawn of the New Year 2011 by sending packages of generous aid - financially and by way of essential items. West End Buddhist Cultural Centre is launching a Flood Victims’ Relief Effort effective immediately with January 31, 2011, as cut off date. (more....)

தை 19, 2011

சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளின் பிராந்தியத் தலைவர் கைது

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நான்கு நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்த தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் நான்கு நாடுகளில் புலிகள் அமைப்பை இயங்க வைத்துள்ளார். கைது செய்யப்பட்டிருப்பவர் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையைச் சோ்ந்த செல்லையா ஜெயபாலன் எனும் பெயரைக் கொண்டவரும், புலிகள் அமைப்பில் அப்துல்லா எனும் பெயரில் இயங்கியவருமான புலிகளின் பிராந்திய தளபதியாவார் என்று சுவிட்சர்லாந்துப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
செல்லையா ஜெயபாலன் எனும் பெயர் கொண்ட அவர் தன் பெயரை ஜெயபாலன் செல்லையா என்பதாக மாற்றிக்  கொண்டு சுவிட்சர்லாந்தின் போ்ண் நகரில் இருந்து கொண்டு செயற்பட்டு வந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் மேலும்  தெரிவிக்கின்றன. கொழும்பு, இந்தியாவின் தமிழ்நாடு, கனடா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் அவர் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்துள்ளதுடன், அங்கெல்லாம் இயங்கும் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களை ஒருங்கிணைத்து வந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமன்றி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக அவர் பெருந்தொகையில் நிதியுதவி அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தை 19, 2011

ஈழத் தமிழ் இனமும், ஆட்சி உரிமையும்!

போர்த்துக்கீசியர் இலங்கைக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலைப் பகுதிகளைக் கைப்பற்ற முடியாமல் திணறினர். கொழும்பு, மன்னார் பகுதிகளை மட்டும் கைப்பற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். மன்னார் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்களை போர்த்துக்கீசியர் கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றினர், இதனைக் கண்டு ஆத்திரமடைந்த யாழ்ப்பாண தமிழ் அரசன் மன்னாருக்குப் படை எடுத்துச் சென்று போர்த்துக்கீசியரை அடித்து விரட்டி விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து அவர்களது தலையை வெட்டிவிட்டார். இப்படி அறுநூறு பேர் கொல்லப்பட்டனர். இதனைக் கண்டு கோபமுற்ற போர்த்துகீசியர் கோவாவிலிருந்தும், போர்த்துகீசியத்திலிருந்தும், கொழும்பிலிருந்தும் தங்களது படைகளைத் திரட்டி, யாழ்ப்பாணத்தின் மீது படை எடுத்தனர். இந்தப் படை எடுப்பில் யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்டது. தமிழர்களின் அனைத்து நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டன. ஐந்து சிவ ஆலயங்களும் தரைமட்டம் ஆக்கப்பட்டன. அரச மாளிகை உள்பட தமிழரது எந்த நினைவுச் சின்னங்களையும் போர்த்துக்கீசியர் விட்டுவைக்கவில்லை. 1560ஆம் ஆண்டு இந்த அழிவை தமிழர்களுக்கு ஏற்படுத்தினர் போர்த்துக்கீசியர். (மேலும்...)

தை 19, 2011

காணும் பொங்கல்

மெரினா கடற்கரையில் திரண்ட பொதுமக்கள்

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் 5 இலட்சம் மக்கள் திரண்டனர். பொருட் காட்சி, பூங்காக்களிலும் திருவிழாபோல் கூட்டம் இருந்தது. மெரினா கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. அப்பகுதியில் போக்குவரத்தும் மாற்றி விடப்பட்டது. நேற்று முன்தினம் காலை 11 மணி முதலே மெரினா கடற்கரையில் அதிகள வில் மக்கள் குவிய தொடங்கினர். சுட் டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தா மல் குடும்பத்துடன் வந்து இறங்கினர். எங்கு பார்த்தாலும் மனித தலைகள் தென்படும் அளவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக கடற்கரையில் நின்றிருந்தனர். எம். ஜீ. ஆர். சமாதி, அண்ணாசதுக்கம், உழைப்பாளர் சிலை அருகில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர. பலர் கட்டுச் சோறுடன் வந்து மரத்தடியில் அமர்ந்து சாப்பிட்டனர். மெரினா கடற்கரையில் கூட்டம் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 5 ஆயிரதம் பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடலில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

தை 19, 2011

Disbelief at defeat of LTTE needs to be unpacked

In the run up to the final military annihilation of the LTTE, there were two perceptible reactions from certain sections of the international community. There was freely expressed horror at the massacre of thousands upon thousands of innocent civilians that seemed to be inevitable. Mischief-makers started throwing out numbers and these took lives of their own and were eventually treated not as conjecture but fact, producing even greater horror. There was a scandalous readiness to treat LTTE propaganda as biblical truth. There were cries for international intervention to save the LTTE leadership. (more...) 

தை 19, 2011

புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!

புலிகளின் திரைப்படத்தில் நடித்த நபர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனுராபுர விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பான திரைப்படத்தில் குறித்த நபர் நடித்துள்தாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வினோதன் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாண மீனவர் என்ற போர்வையில் குறித்த நபர் கனடாவில் அடைக்கலம் கோரியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. வினோதன், தாக்குதலுக்கு தலைமை தாங்கிய நபரின் பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திரைப்படத்தில் நடிப்பதற்காக தமக்கு புலிகள் பணம் வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்தேக நபரை விளக்க மறியலில் வைத்து விசாரிக்குமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தை 19, 2011

வவுனியா மாவட்டத்தில் 98 வீதமான மிதிவெடி அகற்றும் பணிகள் பூர்த்தி

வவுனியா மாவட்டத்தில் 98 சதவீதமான மிதிவெடிகள், நிலக்கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளதுடன் 98 வீதமான மீள்குடியேற்றமும் பூர்த்தியடைந்துள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் திருமதி பீ. எம். எஸ். சார்ள்ஸ் தெரிவித்தார். மோதல்கள் உக்கிரமமாக நடைபெற்ற காலங்களில் புலிகளால் அமைக்கப்பட்ட முன்னணி காவலரன் பகுதிகளில் பெருமளவான மிதிவெடிகள் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இவற்றை மிகவும் எளிதாக அகற்றிவிட முடியாது. குறிப்பாக இம்மாவட்டத்தில் 98 சதவீதமான பகுதிகளில் மிதிவெடிகள் அகற்றும் பணி பூர்த்தியடைந்துள்ளது. எனினும் மிதிவெடிகள் ஆபத்துள்ளதாக கருதப்படும் பாதுகாப்பு அணை பகுதியான மகிழங்குளம் பகுதியிலேயே தற்போது மிதிவெடிகள் அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த அணைக்கு உட்புறத்திலும் வெளிப்புறத்திலும மீள்குடியேற்றங்கள் நடைபெற்றுள்ளன. (மேலும்...)

தை 19, 2011

ஏ - 9 சாலையில் பாரஊர்திகளுக்கு நிறை வரம்பு நடைமுறை விரைவில்

யாழ் - கண்டி ஏ-9 நெடுஞ்சாலையில் பயணிக்கும் பார ஊர்திகளுக்கான நிறைக்கட்டுப்பாட்டு முறையை இறுக்கமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். யாழ்.-கண்டி நெடுஞ்சாலை உட்பட யாழ். குடாநாட்டில் உள்ள பிரதான வீதிகள் பல விரைவில் சேதமடைந்து போகின்றன. இதற்கு அவ் வீதிகளில் பயணிக்கும் பார ஊர்திகள் அளவுக்கதிகமான சுமைகளை ஏற்றிச் செல்கின்றமையும் ஒரு பிரதானமான காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பார ஊர்திகள் மற்றும் கன ரக வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படக் கூடிய சமையின் நிறைக்கான வரம்பினை நிர்ணயம் செய்ய சட்டத்துக்கு அமைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. (மேலும்...)

தை 19, 2011

முல்லைத்தீவு மாவட்டத்தில் 1666 பேர் மீள்குடியேற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்த 1666 பேர் மருச்சியம்பற்று பிரதேச செயலக பிரிவில் மீள்கு டியேற்றப்பட்டதாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கூறியது. மோதல் காரணமாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் புத்தளம் பிரதேசங்களில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 12 ஆம் திகதி 289 குடு ம்பங்களைச் சேர்ந்த 1168 பேர் மீள்கு டியேற்றப்பட்டனர். இவர்களில் 547 ஆண்களும் 621 பெண்களும் அடங்குவர். இது தவிர கடந்த 13 ஆம் திகதி 134 குடும்பங்களைச் சேர்ந்த 498 பேர் மீள் குடி யேற்றப்பட்டனர். இவர்களி டையே 237 ஆண்களும் 261 பெண்களும் அடங்குவர். இன்னும் சிறிதளவானவர்களே முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்ற வேண்டியுள்ளதோடு இவர்கள் மிக விரைவில் மீள்குடியேற்ற உள்ளதாக மாவட்ட செயலகம் கூறியது.

தை 19, 2011

யாழ். பல்கலைக்கழக மாணவர் கிழக்கில் நேரடியாகச் சென்று உதவி

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளம் அனர்த்தம் காரணமாக மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட படுவான்கரைப்பகுதிக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நேற்று போரதீவுப்பற்று பட்டிப்பளை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள இடம்பெயர்ந்த முகாம்களுக்கு சென்ற மாணவர்கள் நேரடியாக இந்த உணவு விநியோகத்தை மேற்கொண்டுள்ளனர். யாழில் உள்ள மக்களிடம் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களே இவ்வாறு விநியோகிக்கப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். இந்த நிகழ்வை அரசியல் படுத்து விரும்பாத நிலையில் அதனை தாங்கள் நேரடியாக கொண்டு சென்று அந்த மக்களுக்கு விநியோகம் செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

தை 19, 2011

Paul Calandra at ribbon cutting ceremony for NCCT

was in shock and so did the others feel let down who have supported the Conservative Party during the last two elections after reading the news item by-lined Andrew Moran in the Examiner on January 16, 2011 which said – “Public officials help welcome National Council of Canadian Tamils office. The National Council of Canadian Tamils (NCCT) Chairman, Mohan Ramakrishnan, and Member of Parliament, Paul Calandra, took part in the traditional cutting of the ribbon..” at the launch of the official NCCT office in Northern Toronto, at 3510 Finch Avenue East, Unit 10, Saturday (15 January 2011). (more....)

தை 18, 2011

பிரிட்டன்  அரசுக்கு எதிர்ப்பு வலுக்கிறது

கடந்த வாரத்தின் நிறை வில் பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் அர சின் கொள்கைகளுக்கு எதிராக ஆயிரக்கணக் கானோர் பங்கேற்ற நிகழ்ச் சிகள் நடைபெற்றன. லண்டன் மாநகர், இங் கிலாந்தின் பல பகுதிகள் ஆகியவற்றில் மனு கொடுக் கும் போராட்டம், பொதுக் கூட்டங்கள் மற்றும் பேர ணிகள் நடைபெற்றுள்ளன. சுகாதாரத்துறை அமைச் சராக இருக்கும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பால் பர்ஸ்டோவின் தொகு தியில் பெருந்திரள் ஆர்ப் பாட்டம் நடந்துள்ளது. சுகாதாரத்துறை நிதி ஒதுக் கீட்டில் கடுமையான வெட்டை அரசு மேற் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப் பாட்டம் நடந்தது. (மேலும்...)

தை 18, 2011

கிழக்கு மாகாண வெள்ள அனர்த்த நிவாரணப் பணிகளில் பத்தமநாபா ஈபிஆர்எல்எவ்

மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரத்தினம் தலைமையில் வெள்ள அனர்த்த நிவாரணப்பணிகள் கிழக்கில் நடைபெற்று வருகின்றன. இவ்விடயம் சம்மந்தமாக கருத்து தெரிவித்த துரைரத்தினம் பல்வேறு அரச நிறுவனக்கள், அரசு சாராத நிறுவனங்கள் நிவாரண வேலைகளில் ஈடுபட்டிருப்பதையும், குறிப்பாக பிரதேச செயலா ர்கள் தொடக்கம் அனைத்து அரச ஊழியர்களும், பாதுகாப்பு படையினரும், சமூக நிறுவனங்களும் இரவு பகலாக கடும் பிரயத்தனங்கள் செய்வதையும் குறிப்பிட்டார். உடனடி நிவாரணத்தை பொறுத்தவரையில் கொடுக்கப்படும் உலர் உணவு மற்றும் உணவுக்கான கொடுப்பனவு 100  ரூபா போதுமானதாக இல்லை என்றும் இந்த விடயத்தில் மக்களுக்கு திருப்தி தரும் வகையில் செயற்படுவதற்கான வளங்கள் எம்மிடமில்லை என்றும் தெரிவித்தார்.  எனினும் இடர்படும் குடும்பங்களுக்கும் அவரது சுற்றத்தினர்க்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொட்டலம் ஒன்று விநியோகிக்க ஏற்பாடு செய்தால் பயனுடையதாக இருக்குமென்றார். (மேலும்....)

தை 18, 2011

சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் மேலும் இரு கப்பல்கள் கனடா நோக்கி பயணம்

சட்டவிரோதமாகக் குடியேறவிரும்பும் இலங்கைத் தமிழர்களை ஏற்றிக்கொண்டு மேலும் இரு கப்பல்கள் தென்கிழக்கு ஆசியா நாடொன்றிலிருந்து கனடா நோக்கி பயணிக்கவுள்ளதாக கனடிய புலனாய்வு அதிகாரிகள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எச்சரிக்கை செய்துள்ளனர். ஆசிய நாடுகளிலுள்ள இனங்காணப்படாத துறைமுகங்கள் இரண்டிலிருந்து சட்டவிரோதமாக ஆட்களை கடத்திவருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் புலி ஆதரவாளர்கள் உட்பட 400 இலங்கை தமிழர்கள் இந்தக் கப்பலில் பயணிக்க தயாராகுவதாகவும் தமக்கு இரகசிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கனடா அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். (மேலும்....)

தை 18, 2011

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்தக்கோரி இந்தியாவில் நெடும் பயணம்

இந்தியஇலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும். 1948 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை (முப்பது இலட்சம் சிங்களக் குடியேற்றவாசிகளை) வெளியேற்ற வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து கால்நடையாக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம்.  எங்களது இனம் மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுவது மட்டும் அல்லாமல் அவற்றுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படும். எங்கள் இன மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். (மேலும்....)

தை 18, 2011

புலிகள் இயக்கம் கனடாவை மையமாகக் கொண்டு இலங்கையில் மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சி கனடா பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்!

புலிகள் இயக்கம் கனடாவை மையமாகக் கொண்டு இலங்கையில் மீண்டும் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயற்சித்து வருவதாக கனடாவின் பாதுகாப்புத் தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இது எவ்வளவு தூரம் சாத்தியப்படும் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும், கனடாவில் ஏற்கனவே புலிகள் அமைப்பின் சில தலைவர்கள் இருப்பதாகவும் கனடா செய்தி வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், தெற்காசிய ஆட்கடத்தல்காரர்களால் மேலும் இரண்டு கப்பல்களில் பிரிட்டஷ் கொலம்பியா கடற்பரப்பை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், அதில் 50ற்கும் மேற்பட்ட புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்....)

தை 18, 2011

கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி

கிழக்கில்விடாது பெய்த மழையினாலும் ஆர்ப்பரித்து பொங்கியெழும் கடலும் நிரம்பிவழிந்து உடைப்பெடுத்த குளங்களாலும் கிராமம்கிராமமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அம்பாரையில் 4லட்சத்து 71ஆயிரத்து 443 பேரும் மட்டக்களப்பில் 5லட்சத்து 40ஆயிரத்து 144 பேரும், மூதூரில் 98 ஆயிரத்து 985 பேரும் அடிப்படை வசதிகளின்றி மீண்டும்மீண்டும் உணவின்றி உறைவிடமின்றி அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தமது ஊரிலேயே தவிப்பது கண்டு எம் இதயம் விம்மி வெடிக்கின்றது. சமையல் பாத்திரங்களுடன், படுக்கை, போர்வை, மாணவர்களின், பாடபுத்தகங்கள், கொப்பிகள், ஆடைகளென எல்லாமே வெள்ளத்தால் அடித்துச்செல்லபட்டு ஏங்கித்தவிக்கும் எம் சொந்தங்களுக்காகவும், தாயின் மடியில் பாலின்றி அலறும் மழலைக்கும் அடிப்படைவசதியின்றி நோயுற்றவர்கள், கர்ப்பிணி தாய்கள் மற்றும் வயோதிபர்களுக்காகவும் கல்வியின்றிதவிக்கும் இளம் சிறார்களுக்காகவும்  புலம்பெயர்ந்து வாழுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து மனம் திறந்து உதவும்படி அன்பாகக் கேட்கின்றோம்.(மேலும்....)

தை 18, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடும்பயணத்தின் முதல்நாள் நிகழ்வு!

16-01-2011 ஞாயிறு அன்று காலை 11:30 மணியளவில், அமரர் இராஜீவ்காந்தி நினைவு மண்டபத்திலிருந்து, திரு. மங்களராஜா அவர்களின் தலைமையில் புறப்பட்ட நெடும்பயணம் சரியாக 15 கிலோ மீற்றர் தூரத்தில் நெடும்பயண வீரர்கள் அனைவரும் மதிய உணவை எடுத்துக்கொண்டனர். மதிய உணவை முடித்துக்கொண்டு புறப்பட்ட நெடும் பயணத்தின் முன்னாள் சென்ற வாகனத்தில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியால் உருவாக்கப்பட்ட ஈழ விடுதலைப் பாடல் ஒலிப்பரப்பப்பட்டது. (மேலும்....)

தை 18, 2011

இப் புதிய முயற்சியை வரவேற்போமாக!

உள்ளூராட்சி தேர்தலில் ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டி

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தலில் ஏழு தமிழ்க் கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை தமிழரசுக் கட்சி என்ற பெயரின் கீழ், தமிழத் தேசிய கூட்டமைப்பு, ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எஃப் பத்மநாபா அணி, தமிழ் தேசிய விடுதலை முன்னனி ஆகிய கட்சிகள் உட்பட ஏழு கட்சிகள் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் தாம் போட்டியிடவுள்ளதாக தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் ஈ.பி.டி.பி மற்றும் ரி.எம்.வி.பி சிறீலங்கா அரசுடன் இணைந்து போட்யிடவுள்ளதாக தெரிவித்துள்ளன. வன்னி, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 1987 ஆம் ஆண்டுக்கு பின்னர் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

தை 18, 2011

பழைய செயற்கைக் கோள்களால் விண்வெளிக்கு ஆபத்து

கடந்த 50 ஆண்டுகளில் விண்வெளியில் ஏவப்பட்ட பல செயற்கைக் கோள்களும், அவற்றின் உடைந்த கருவிகள் துண்டு துண்டுகளாக விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதனால் தற்போது புதியதாக அனுப்பப்படும் செயற்கைக் கோள்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இது நமக்கு சவாலான ஒன்று பழைய செயற்கைக் கோள்களின் 10 செ. மீ. அளவு உடைந்த பாகங்கள் மட்டுமே 30 ஆயிரம் துகள்கள் வான்வெளியில் சுற்றிக் கொண்டு இருக்கின்றன. இவை வினாடிக்கு 10 கி. மீ. வேகத்தில் சுற்றி வருகின்றன. இவற்றால் ஆபத்து ஏற்படாமல் தடுக்க இவற்றை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம். (மேலும்....)

தை 18, 2011

மண்டேலா இறந்ததாக தென் ஆபிரிக்காவில் வதந்தி

தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா (92). இவர் இன வெறிக்கு எதிராக போராடியவர். அமைதிக்காக நோபல் பரிசு பெற்றவர். இவர் மரணம் அடைந்துவிட்டதாக ஒரு இணைய தளத்தில் செய்தி வெளியானதாக தெரிகிறது. இதனால் தென் ஆபிரிக்காவில் வதந்தி பரவியது. இதைத் தொடர்ந்து பரபரப்பும் பீதியும் ஏற்பட்டது. இந்த தகவலை நெல்சன் மண்டேலா அறக்கட்டளை மறுத்தது. மண்டேலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். விடுமுறையை மகிழ்ச்சியுடன் கழித்து வருகிறார். எனவே, இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அமைதியாக இருங்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை அந்த அறக்கட்டளையின் செய்தி தொடர்பாளர் ஷெலோ ஹட்டாய் வெளியிட்டுள்ளார். இந்த வதந்தி பரவ அந்த இணைய தளத்தை பயன்படுத்தியவர் தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த இணைய தளம் பல பிரபலங்கள் மரணம் அடைந்ததாக நகைச்சுவை களை வெளியிட் டுள்ளது. பாடகர் சுரேகா பிராங்க்களின், நடிகர்கள் சார்லி, ஜானிதிப், மெஹாகன் பிரீமன் ஆகியோர் மரணம் அடைந்து விட்டதாக செய்தி வெளியிட்டு பின்னர் அது நகைச்சுவை என மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தை 18, 2011

யாழ்.தேசிய பொங்கல் விழாவுடன் குறுகிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி

  • தமிழ்த் தலைவர்களும் மக்களுக்காக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும்

  • மாபிஃயாக்கள் ஒழிக்கப்பட வேண்டும்

  • எவரும் தனித்தோ பிரிந்தோ வாழமுடியாது

குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட முன்வர வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று யாழ்ப்பாணத்தில் அழைப்பு விடுத்தார். இன, மத, குல ரீதியில் மக்களைப் பிளவுபடுத்தும் குறுகிய அரசியல் யுகத்திற்குப் பொங்கல் விழா முற்றுப்புள்ளி வைக்கும். இயல்பு நிலையை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு என்றில்லாமல் மாபிஃயா எங்கும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது எனவும் ஜனாதிபதி கூறினார். (மேலும்....)

தை 18, 2011

உள்ளூராட்சி தேர்தல்

திட்டமிட்டபடி 20 முதல் வேட்புமனுக்கள் ஏற்பு

திட்டமிட்டபடி வடக்கு கிழக்கு உட்பட நாடு பூராவும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்கப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் நேற்று தெரிவித்தது. தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆராயும் உயர் மட்ட மாநாடு நேற்று தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக் கவின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி கள், மாவட்ட உதவித் தேர்தல் ஆணை யாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளப் பாதிப்பு காரணமாக கிழக்கு மாகாணத்தில் தேர்தல் ஒத்திவைப்பது குறித்து ஆராயவே இந்த கூட்டம் நடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தேர்தல் திணைக்களம் மறுத்தது. தேர்தல் பணிகள் மற்றும் ஒழுங்குகள் குறித்து ஆராயவே இந்தக் கூட்டம் நடைபெற்றதாக பிரதி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார். ஏற்கனவே அறிவித்த படி 20 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தை 18, 2011

கிழக்கில் கண்ணிவெடிகள் கரையொதுங்கலாமென எச்சரிக்கை

புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகள் வெள்ளம் காரணமாக மிதந்து வந்து இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதால் கிழக்கு பொதுமக்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென இராணுவத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் மழை, வெள்ளம் காரணமாக மிதந்து வந்து கரை ஒதுங்கி இருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் அச்சம் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மிதந்து வந்த கண்ணிவெடிகள் தொடர்பாக விழிப்புடன் செயற்படுமாறு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொது மக்களை இராணுவத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். கிழக்கில் 95 வீதத்திற்கும் அதிகமான பகுதிகளில் வெற்றிகரமாக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல, எஞ்சியுள்ள பகுதிகளில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகள் தொடர்பாகவே அஞ்சுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

தை 18, 2011

புதிய ஜனாதிபதி பதவி ஏற்புக்கு எதிர்ப்பு:

துனிசியாவில் கலவரம், கடைகள், வீடுகளில் கொள்ளை

புதிய ஜனாதிபதி ஏற்புக்கு எதிர்ப்பு தெரிவித்து துனிசியாவில் கலவரம் மூண்டுள்ளது. இதனால் கடைகள் மற்றும் வீடுகளில் கொள்ளைச் சம்பவம் நடக்கிறது. ஆபிரிக்க நாடான துனிசியாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் ஷின் எல் அபிடின் பென் அலி (74) ஜனாதிபதியாக இருந்தார். இவரது 23 ஆண்டு கால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது. வேலை இல்லா திண்டாட்டம் தலை விரித்தாடியது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள் அவர் பதவி விலக வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதற்கிடையே அவர் பதவி விலகக்கோரி துனிஷ் நகரில் லட்சக்கணக்கான மக்கள் கண்டன பேரணி நடத்தினார்கள். (மேலும்....)

தை 17, 2011

கிழக்கில் தேர்தலை நடத்துவதா, இல்லையா? இன்று முடிவு

கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தலை பிற்போடுவதா, இல்லையா என்று இன்று (17) தீர்மானிக்கவிருப்பதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கான விசேட கலந்துரையாடல் இன்று (17) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெறுகிறது. இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பிரதி சிரேஷ்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர் களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வேட்புமனு தாக்கல் செய்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு இடையூறு ஏற்படுமா என்பது பற்றி இன்று விரிவாக ஆராயப்படவுள்ளது. கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாவிடின் அவசரகால சட்டத்தின் கீழ் அப்பிரதேசத்தில் தேர்தலை பிற்போடு வதற்கு தேர்தல் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் கூறுகிறது.

தை 17, 2011

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஓரணியாகவும், ஏனைய தமிழ்க்கட்சிகள் இன்னொரு அணியாகவும் போட்டியிடுவது தமிழ்மக்களுக்கு  நல்லதல்ல - வீ. ஆனந்தசங்கரி, தலைவர் - தமிழர் விடுலைக் கூட்டணி. 

தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்), பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஜனவரி 1ம் திகதி கொழும்பில் கூடி தமிழ்க்கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஒரு பாரிய கூட்டணி அமைத்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வேண்டியதின் அவசியத்தை தீர்மானித்தோம். இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேசுவதாயும் ஈபிடீபி மற்றும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பிற்கும் அழைப்பு விடுவதெனவும் தீர்மானித்தோம். அதனடிப்படையில் ஈபிடீபியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தமிழ்மக்கள் விடுதலைப் புலிகள் ஆர்வம் காட்டாமையினால் பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. (மேலும்.....)

தை 17, 2011

ற்றறிந்த பாடங்கள் மீள் இணக்க ஆணைக்குழுவின் முன் -  ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையத்தின் தலைவர் எஸ்.எம்.எம்.பஷீர்

2006 ம் ஆண்டு மூதூரில் குடிமக்களின் பாதுகாப்பு குறித்து தேவை எழுந்த போதும் அவ்வாறே புலிகளிலிருந்து பிரிந்த சென்ற கிழக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் மீது பிரதான புலி அமைப்பினர் தாக்குதல்களை மேற்கொண்டு முன்னூற்றுக்கும் அதிகமானவர்களை கொன்றபோதும் கண்காணிப்பு குழுவினர் அப்பிரதேசத்தை விட்டு நீங்கிச் சென்றதுடன் புலிகளின் மிலேச்சதனத்துக்கு ஆதரவளித்தனர், தமது கண்காணிப்பு கடமைகளிருந்து தவறினர். கண்காணிப்பு குழுவினர் வேண்டுமென்றே 2006 ஆம் ஆண்டில் மூதூரிலிருந்து வெளியேறினார்கள். போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலத்தில் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் செயற்பட்ட கண்காணிப்புக் குழுவினர் அப் பகுதிகளில் வாழ்ந்த மக்களின் இருப்பைப் பலி கொடுத்துத்தான் தமது இருப்பைத் தக்கவைத்துக் கொண்டார்கள். புலிகளினால் யுத்த நிறுத்த உடன்பாடுகள் மீறப்பட்ட போதெல்லாம் வடக்கு கிழக்கில் முஸ்லிம்களே தங்களின் உயிர்களையும் உடைமைகளையும் பலியிட வேண்டி நேரிட்டது. இந்திய சமாதானப் படை இலங்கையை விட்டு வெளியேறத் தொடங்கியபோதும் இதுவே முஸ்லிம்களுக்கு நடந்தது. இந்நிலையிலே புலிகள் தாங்கள் முஸ்லிம்களின் நண்பர்கள் என்று பாவனை செய்து கொண்டு கிழக்கில் காலூன்றினார். ஆனால் அவர்களின் நட்பின் நிறம் மெதுவாக வெளிறத் தொடங்கியது அவர்களின் கொடூரங்கள் முஸ்லிம்களை கொன்றொழிப்பதிலும் வடக்கிலே வெளியேற்று வதிலும் உச்சநிலை அடைந்தது. (மேலும்.....)

தை 17, 2011

17 அரசியல் தலைவர்களால்  ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப் பாலம்

வடக்கு மக்களின் கனவு நனவானது, யாழ் - கொழும்பு பயணம் 120 கிலோ மீற்றரால் சுருங்கியது

வடக்கு மக்களும் அபிவிருத்தியின் முழுமையான பங்காளிகள் எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பிரித்தானிய நிதியுதவி மூலம் 1032 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சங்குப்பிட்டி பாலம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மக்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பான இப்பாலத்தின் நீளம் 288 மீற்றர். அகலம் 7.4 மீட்டர் பூநகரியையும் யாழ்ப்பாண நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் இரு வழிப்பாதையாக இப்பாலம் அமைந்துள்ளது. தெற்கிலிருந்து 320 கிலோ மீற்றர் என்ற குறுகிய தூரபயணத்தில் மக்கள் யாழ்குடா நாட்டை அடைய இப்பாலம் வழி வகுக்கின்றது. கொழும்பிலிருந்து சிலாபம், புத்தளம், மன்னார் ஊடான இப்பாதையில் யாழ்ப்பாண குடாநாட்டுக்குப் பயணம் செய்வோர் ஏ 9 பாதையினூடாக செல்வதைப் பார்க்கிலும் சுமார் 120 கிலோ மீற்றர் தூரத்தை மீதப்படுத்திக் கொள்ள முடியும். (மேலும்.....)

தை 17, 2011

விடுதலைப் புலிகளின் கை கூலி வைகோ, ஈ.என்.டி.எல்.எப் நடைபயணத்தை தொடங்கி வைத்து முன்னாள் கங்கிரஸ் எம்.பி இரா.அன்பரசு பேச்சு

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு ராஜீவ்காந்தியினால் அமுல்படுத்தப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தமே சரியான தீர்;வு அப்படி ஒரு அருமையான தீர்வை விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் முதலில் ஏற்று  கொண்டார் பின்னர் அதை பிரபாகரன் மறுதலித்தது கைகோ வின் பேச்சைக் கேட்டே அது மட்டுமல்ல, முல்லைத்தீவில் சண்டை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது வைகோ அமெரிக்கா சென்றார் அங்கு ஒபாமாவை சந்தித்தார் பிரபாகரனை சமாதானத்துக்கு வர விடாமல், அமெரிக்க உதவி கிடைக்கப் போகிறது என பிரபாகரனிடம் சொல்லி தடுத்தவர் வைகோதான் ஈ..என்.டி.எல்.எப் ஐ பார்த்து கை கூலி என்கிறார் வைகோ புலிகளின் கை கூலி என இரா.அன்பரசு தனது உரையின் போது கூறினார். (மேலும்.....)

தை 17, 2011

பிறேசிலில் வெள்ள அனர்த்தம்

நிவாரண செயற்பாட்டிற்காக றியோ டி ஜெனரோவில் இராணுவம் குவிப்பு

பிறேசில் நாட்டில் கடந்த 40 வருட காலத் தில் நிகழ்ந்த மிகப் பெரிய இயற்கை அனர்த் தத்தில் 600க்கும் அதிகமானோர் பலியாகியுள்ள னர். மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நகர்க ளில் ஒன்றான டெரிஸோ பொலிஸ் சோபோ வில் நகரத்திற்கு விரைந்து வந்த இராணுவத்தி னர் அங்கு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி னர். 600 பேர் வெள்ளத்தினால் இறந்து போயுள் ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உத்தி யோக ப்பற்றுள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன. நோவா பிறிபர்கோ நகரில் சவச்சாலைகளில் இடப்பற்றாக்குறையால் அடையாளங் காணப் படாத சடலங்கள் புதைக்கப்படுகின்றன. வெள்ள அனர்த்தத்திற்காக ஆளுநர் செர்ஜியோ கப்ரால் 7 நாட்களை துக்க தினமாக அறிவித் துள்ளார்.

தை 17, 2011

ஏ. ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது

இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுக்கு அமெரிக்க திரைப்பட விருது கிடைத்துள்ளது. தமிழகத் தைச் சேர்ந்த இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இவர் ‘27 அவர்ஸ்’ என்ற ஆங்கிலப் படத்துக்கு இசை அமைத்து இருந்தார். இந்தப் படத்தில் ‘இப் ஐ ரைஸ்’ என்ற பாடலை ரகுமான் இசையில் பாப் பாடகர் டிடோ பாடியிருந்தார். இந்த பாடலுக்கு இசை அமைத்ததற்காக ரகுமானுக்கு அமெரிக்காவின் திரைப்பட விருது கிடைத்துள்ளது. ஏ. ஆர். ரகுமான் ஏற்கனவே உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு இசை அமைத்ததற்காக 2 ஆஸ்கார் விருதுகள் அவருக்கு கிடைத்தது. லண்டனில் அவருக்கு கிராமி விருதும் வழங்கப்பட்டது. தற்போது லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள திரைப்பட அமைப்பு விருது வழங்கி உள்ளது.

தை 17, 2011

கிழக்கு வெள்ள நிவாரணத்திற்கு

இந்தியாவிலிருந்து மேலும் இரு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள்

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக் கவென இந்தியாவில் இருந்து மேலும் இரண்டு கப்பல்களில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்படுகின்றன. முதலாவது தொகுதி நிவாரணப் பொருள்கள் அண்மையில் விமானத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட்டதுடன் இரண்டாவது தொகுதி நிவாரணம் இரண்டு கப்பல்கள் மூலம் அனுப்பிவை க்கப்படுவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா நேற்று முன்தினம் மட்டக்களப்பில் வைத்து தெரிவித்துள்ளார். விமானத்தில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருள்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்போது இந்திய உயர்ஸ்தானிகர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

தை 17, 2011

துனிசிய சர்வாதிகார ஜனாதிபதி சவூதி அரேபியாவில் தஞ்சம்!

கடந்த வாரம் முதல் துனிசியா அரசுக்கு எதிராக அதிகரித்துள்ள பொதுமக்கள் எதிர்ப்பின் உச்சகட்டமாக அந்நாட்டு சர்வாதிகார ஜனாதிபதி சின் எல் அபிடைன் பென் அலி நாட்டைவிட்டு வெளியேறி சவூதி அரேபியாவில் குடும்பத்தினருடன் தஞ்சமடைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளால் பென் அலியின் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வேலையின்மை, பொருட்கள் விலையேற்றம், லஞ்ச ஊழல் என்பன துனிசிய மக்களை கடும் கோபத்தில் ஆழ்த்திய போதும், அரச அதிகார வர்க்கத்தின் ஊடக அடக்குமுறைகளினால் அரசுக்கு எதிராக பாரிய அளவில் வன்முறை வெடிக்காமல் அடங்கிப்போனது. எனினும் சமீப காலமாக சர்வதேச செய்தி இணையத்தளங்களின் துணையுடனும், பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூகவளி இணையத்தளங்கள் துணையுடனும், அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரமாக முன்னெடுத்த துனிசிய மக்கள் இத்தகவல்களை தமது நாட்டு மக்களிடையேயும் சர்வதேசத்திடமும் விரைவாக பரப்பத் தொடங்கினர். (மேலும்.....)

தை 17, 2011

மனிதர்களுக்கு மட்டுமல்ல மிருகங்களுக்கும் யோகா பயிற்சி

யோகாசனம் ஒரு சிறந்த உடற்பயிற்சி. மனிதர்களுள் இளையோர் முதல் பெரியோர் வரைக்கும் இது சிறந்தது. பின்னர் குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்குமான யோகா அறிமுகமானது. யோகாசனம் தீராத முதுகுவலி, மார்புப் புற்று நோய் போன்ற பல நோய்களையும் குணப்படுத்தக் கூடியது. ஒரு காலத்தில் ஆச்சிரமங்களில் மட்டுமே போதிக்கப்பட்ட தவத்தோடும் ஆன்மிக தியானங்களோடும் சம்பந்தப்பட்டிருந்த யோகாசனம் இப்போது நாய்களுக்கும் வந்துவிட்டது.(மேலும்.....)

தை 17, 2011

ஆறு மாவட்டங்களில் வெள்ளப்பாதிப்பு நெல் அறுவடை வீழ்ச்சியடையும் சாத்தியம்

அதிக அறுவடை எதிர்பார்க்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இம்முறை அறுவடை 4 இலட்சம் மெட்ரிக் தொன்னால் குறைவடையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதிக அறுவடை எதிர்பார்க்கப்பட்ட மாவட்டங் களில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, அனுராதபுரம், பொலன்னறுவை மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்கள் முன்னணி இடத்தைப் பெற்றிருந்தன. அதிக அறுவடை எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆறு மாவட்டங்களில் பயிர்ச்செய்கை இடம்பெற்ற மொத்த காணிப்பரப்பு 2 இலட்சத்து 75 ஆயிரம் ஹெக்டயர் ஆகும். இதில் வெள்ள நீரில் மூழ்கிய காணிப்பரப்பு 88 ஆயிரத்து 500 ஹெக்டயராகும். அதேவேளை முழுமையாக பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்ட காணிப் பரப்பு 9 ஆயிரத்து 250 ஹெக்டயர். (மேலும்.....)

தை 17, 2011

யாழ்ப்பாணத்தில் இன்று பொங்கல் விழா, ஜனாதிபதி பிரதம அதிதி

வட பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். யாழ். துரையப்பா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வின் போது, வட பகுதியைச் சேர்ந்த பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு பெறுமதியான பரிசில்களை ஜனாதிபதி அவர்கள் வழங்கவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். 2010 ஆம் ஆண்டு க. பொ. த. உயர்தரப் பரீட்சையில் தோற்றி அதிதிறமைச் சித்தி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான நூறு மாணவர்களுக்கு மடிக்கணனியும் வடபகுதியைச் சேர்ந்த நூறு இந்து மத குருக்களுக்கு பெறுமதியான பரிசில்களும் நாற்பது விவசாயிகளுக்கு உழவு இயந்திரங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் பொங்கல் பரிசாக வழங்கப்படவுள்ளது. (மேலும்.....)

தை 17, 2011

பால் குடிக்கும் போது பூனைக்கு  ஏன் மீசை நனைவதில்லை?

நாய் நீர் அருந்தும் போது தனது நாக்கை ஒரு கரண்டி போல் சுழற்றிச் சுழற்றிப் பாவித்து இயலுமானவரை நீரை இழுத்தெடுத்து குடிக்கின்றது. ஆனால் பூனை அப்படியல்ல தான் எதைக் குடிக்க வேண்டுமோ அந்தத் திரவத்தின் கீழ் பகுதியாக தனது நாவைச் செலுத்தி குடிக்க வேண்டிய பதார்த்தத்தை நாவின் மேற்பரப்பில் சேகரித்து துரிதமாக நாவை வாய்க்குள் இழுத்துக் கொள்கின்றது. இதனால் நாவின் மேற்பகுதியில் அது அருந்த வேண்டிய பதார்த்தம் ஒரு ஓடைபோல் சேர்ந்து கொள்கின்றது. நாவின் மேற்பரப்பில் பதார்த்தம் தேங்கியதும் புவியீர்ப்புத் தன்மையின் தாக்கத்தால் நாக்கு கீழே சரிவதற்கு முன் பூனை தனது நாக்கை உள்ளே இழுத்துக் கொள்கின்றது. (மேலும்.....)

தை 16, 2011

கூட்டமைப்பின் சொல் விளையாட்டால் தமிழ் மக்களுக்கு எவ்வித விமோசனமும் இல்லை - வட கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள்

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சரியான உபாயம் சமஷ்டித்தீர்வாக இருந்த போதும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் அதற்கு உடனடிச் சாத்தியமில்லை. 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவ்வாறான நிலையொன்று உருவாகியபோதும் அது இடம்பெறாது போய்விட்டது. எனினும் எவ்வாறான தீர்வொன்று தமிழ் பேசும் மக்களுக்கு உதவும் என்பதைத் தீர்மானிக்கும் பிரதான ஒருவராக ஜனாதிபதியே விளங்குகின்றார். அந்த வகையில் அரசு என்ன தீர்வை வைத்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது. எனினும் 13வது திருத்தத்தின் அடிப்படையில் தீர்வு சாத்தியம் எனக் கூறப்படுகின்றது. எல்லோரினதும் விருப்பு, வெறுப்புக்களுக்கு அப்பால் அரசியல் யாப்பில் கடந்த 22 வருடங்களாக இந்நாட்டில் இருக்கின்ற ஒரு விடயமே. ஆனால் அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அது சரியாகவும் நிறைவேற்றப்படவில்லை. இல்லையென்றால் அதன் அர்த்தம் புரிகின்றதல்லவா? எந்தத் தீர்வானாலும் இந்த நாட்டிலிருந்துதான் வரவேண்டும். இந்தியாவோ மேற்கத்தேய வல்லரசுகளோ யாரும் எதையும் திணிக்க முற்பட்டாலும் அது வெற்றிகரமாக அமையாது. இந்நாட்டில் அதிகாரப் பகிர்வு என்பது ஒரு சரியான முறையில் முன்னேறிச் செல்லும் அம்சமாக நடக்க வேண்டும் என்றால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை தம் வசம் வைத்துள்ள ஜனாதிபதியும் அவரது அமைச்சரவையும் தமக்கு சரியென்று எண்ணுவதை அதனைச் சரியாகவும் முழுமையாகவும் நிறைவேற்ற வேண்டும். (மேலும்.....)

தை 16, 2011

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் இருந்து ஈ.என்.டி.எல்.எப் டெல்லி வரை நடை பயணயம் சொல்வதும், சொல்லப்போவதும்

(அ. விஜயன்)

இந்த நடைப் பயணத்திற்காக, ஈ.என்.டி.எல.எப் இனர் தேர்ந்தெடுத்துள்ள இடம் சாலப் பொருத்தமானதாகும். இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி அதற்காக இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி அப் படையினரின் பாதுகாப்புடன் அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்தியவர் அதற்காக புலிகளால் கொலை செய்யப்பட்டவர். அவர் சின்னா பின்னமாக்கப்பட்ட இடம் இன்று ஒரு புனித இடமாக பாராமரிக்கப்படுகிறது.  எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் அந்த இடத்தில் தொடங்கும் ஈ.என்.டி.எல.எப் இனரின் நடைப்பயணம் வெற்றிபெற வேண்டும். அந்த இடத்தை பார்வையிடச்  செல்லும் இலங்கை  தமிழர்கள் ஒவ்வொருவரது  உள்ளத்திலும் ஒரு குற்ற உணர்வு ஏற்படும். நீங்களும் சென்று பாருங்கள் அதை உணர்வீர்கள். (மேலும்...)

தை 16, 2011

Liberal Party response

Thank you for expressing your concerns to our Leader Michael Ignatieff, and to his Chief of Staff, Peter Donolo, about the Leader's attendance at this year's Thai Pongal dinner being held by the Canadian Tamil Congress. As the Liberal Party Critic for Multiculturalism I am happy to respond to you. You are right that the Leader has not attended this particular event in the past. Last year, as in previous years, a number of the federal Liberal caucus members were there and I delivered greetings on behalf of the Leader. Paul Calandra, Conservative M.P. from Oak Ridges-Markham, delivered greetings on behalf of the Prime Minister and Jack Layton, Leader of the N.D.P. was the Chief Guest. Many dignitaries from all walks of life attended this dinner and celebrated the contributions of Tamil Canadians as citizens, volunteers, academics, artists, business owners and professionals. (more....)

தை 16, 2011

Fund raising meeting for our Community back home

It is time to unite for a meaningful cause to help communities affected by the flooding in Amparai and the Batticaloa district. Along with inviting all social organizations in the GTA, we kindly invite you to participate in a big fundraising activity for our communities back home.

Meeting location:VIMIKA BANQUET HALL # 1959, Finch Ave. west Downsview (Jane & Finch).

Date and Time:Sunday January 16th 2.00PM

(more...)

தை 16, 2011

Laabai Laabai, Yanda Yanda, Vegetables Laabai

Brave call from the Army that defeated Terrorist.

(by Lenin Benedict)

It was well known that the recruitment during two to three years before the war was done in a rapid way to strengthen the physical strength of the Armed forces and to meet the requirements. The nation was aware that most of the recruits are from rural areas of the country, with just basic education and are young men whom were given basic training. These young men who fought against the world notorious Terrorist are the treasures of Srilanka and whom to be honored and given a respect in our society. These brave men not only brought peace to the country but defeated the separatist and united the country as one from the de facto government run by LTTE. Is it necessary for the forces to be put to sell vegetables like vendors? Is this is the way to treat our brave soldiers? Do Srilankans are so ungrateful to forget the sacrifice that soon? (more....)
 

தை 16, 2011

13ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு! பொலிஸ் அதிகாரத்திற்கு இடமில்லை! தமிழ் கூட்டமைப்பினரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் ஜனாதிபதி

அரசியல் தீர்வானது 13 ஆவது திருத்தத்திற்கு அதிகமான அதிகாரங்களுடன் அமையும். ஆனாலும், மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது. என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நான் தெரிவித்துள்ளேன். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டுள்ளனர் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு அனைத்துக் கட்சிகளுடனான இணக்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார். (மேலும்...)

 

தை 16, 2011

Landmine-clearing undresses the pro-LTTE/Eelam clowns

 (by Malinda Seneviratne)

Military Spokesperson Major General Ubaya Medawala has said that a total of 307,200 mines have been cleared and destroyed by the Army Field Engineers in a land area of 1,872 square kilometers.  This has been done by both manual and mechanical methods. Close to 1,300 soldiers have been deployed for this task in Jaffna, Mannar, Mullaitivu, Trincomalee, Batticaloa, Polonnaruva and Vavuniya districts, he said.  The stretch from Oddusuddan to Nedunkerni has been completely de-mined by troops with the help of international and local organizations, he added. (more...)

தை 16, 2011

முஸ்லிம் கட்சிகளிடையே இணக்கப்பாடு அவசியம்

வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் நலன்கருதி மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அக்கட்சி அதன் சின்னமான மரம் போன்று பலமான ஆணிவேர் கொண்டுபல கிளைகளாகப் பரவி பெரு விருட்சமானது. முஸ்லிம் காங்கிரஸின் உதயத்தின் பின்னர் முஸ்லிம் அரசியல் இந்நாட்டில் இன்னும் வலுப்பெற்றது. எடுத்த எடுப்பிலேயே பல ஆசனங்களைக் கைப்பற்றிய அஷ்ரஃப் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான ஆசனங்களை பிரதான சிங்களக் கட்சிகளுக்கு வழங்குவதில் பெரும் செல்வாக்குப் பெற்றிருந்தது. இதனால்தான் அன்றுமுதல் காங்கிரஸ் ஒரு பேரம் பேசும் கட்சியாக மாற்றம் பெற்றது. தலைமைகள் கிழக்கிலிருந்து திடீரென்று உதயமான அக்கட்சியைப் பார்த்துப் பயந்தனர். (மேலும்...)

தை 16, 2011

வைகோ, சீமான், தொல்.திருமர்

இலங்கைத் தமிழரை நிம்மதியாக வாழவிடுங்கள்!

(க. சிவராசா)

இலங்கைத் தமிழருக்காகக் குரல் கொடுத்து வருவதில் தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர் எனக் கூறும் வைகோவும், சினிமா பட இயக்குநர் சீமானும் அண்மைக் காலமாகப் போட்டி போட்டுச் செயற்பட்டு வருகின்றனர். மூத்த அண்ணா பழ. நெடுமாறன் இப்போது தனது குரலைச் சற்றுத் தளர்த்தியுள்ளார். வயது போய் விட்டது போலுள்ளது. அதுவும் ஒரு வகையில் இலங்கைத் தமிழருக்கு நிம்மதி தரும் விடயம்தான். கலைஞருடன் இணைந்த பின்னர் தொல். திருமாவளவன் சில புதிய பாணியில் கூட்டங்களை நடத்தி இலங்கைத் தமிழரை மட்டுமல்லாது, உலகத் தமிழ் மக்களையே ஏமாற்றி வருகிறார். இன்னும் சிலர் அவ்வப்போது குரல் கொடுப்பதும் பின்னர் ஓய்வெடுப்பதுமாக காலத்தைக் கடத்தி வருகின்றனர். (மேலும்...)

தை 16, 2011

அண்ணன் என்னடா தம்பி என்னடா அரசியல் மயமான உலகத்திலே!

மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார் என்பதே கடந்த வாரம் தமிழ் மக்களால் அதிகம் பேசப்பட்ட விடயமாகும். ரணிலை ஒரு நம்பிக்கைத் துரோகி என்றும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவருடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது என்றும் அனல் பறக்கும் அறிக்கைகளை அள்ளி வீசி ஆறு மாதங்களே கடந்த நிலையில் அவரைச்சந்தித்துக் கலந்துரையாடியமை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அண்ணன் மனோவின் இந்தச் சந்திப்பு விவகாரம் குறித்துத் தம்பி பிரபாவிடம் கேட்டபோது பொரிந்து தள்ளினார். ரணில் எமக்கு முதுகில் மட்டுமல்ல நெஞ்சிலும் குத்தியவர். (மேலும்...)

தை 16, 2011

அரசுடன் பேச்சுவார்த்தை தொடருமாம்! அரசுக்கு எதிரான பிரசாரங்களும் தொடருமா?

அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடத்திய முதற்கட்டப் பேச்சுவார்த்தை திருப்தி அளித்துள்ளதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் இது தொடரும் எனவும் தெரிவித்துள்ளார். மகிழ்ச்சியான விடயம். எப்படியாவது பேச்சுவார்த்தையை நடத்தி தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு ஒன்றினை இவர்கள் பெற்றுத்தருவார்கள் என்பதே தமிழ் மக்களது நம்பிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஆனால் கூட்டமைப்பு வழமை போன்று, பேசிவிட்டு வந்ததற்காக இப்படி ஒரு சாதகமான அறிக்கையை விட்டுவிட்டு பின்னர் பழைய குருடி கதவைத்திறவடி என்பது போல அரசாங்கத்தை வசைபாடுவார்களோ எனும் சந்தேகம் தமிழ் மக்களிடையே உள்ளது. அப்படி அவர்கள் செயற்பட்டால் இவ்வாறான பேச்சுவார்த்தைகள் எதற்கு? எனும் கேள்வியும் மக்கள் மனங்களில் எழுகிறது. (மேலும்...)

தை 16, 2011

நாட்டு நடப்பு

(சுப்பு)

நாடு கடந்த தமி ழீழம் என்பது பெரும் புலு டாவிடும் கதை என்று வடக்கு கிழக்கு முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தி ருக்கிறார். அவருக்கு விளங்கியது இன்னும் பலரு க்குப் விளங்காதுள்ளமை ஆச்சரியமே. குறிப்பாக புலம்பெயர் சமூகம் இதை ஏதோ பெரிதாக தலையில் தூக்கி வைத்தாடுகிறது. அது நாடு கடந்த தமிழீழம் இல்லை. ஆழமான நடுக்கடலில் தமிழீழம். (மேலும்...)

கேரளாவின் சபரிமலை அருகே விபத்து

இலங்கை பக்தர் உட்பட 107 பேர் பலி, 90 பேர் காயம்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் சபரிமலை அருகே நேற்று அதிகாலை நடந்த விபத்தில் 107 பக்தர்கள் உயிரிழந்தனர். 90 க்கும் மேற்பட்டோர் காய மடைந்தனரென அறிவிக்கப்பட் டுள்ளது. சபரிமலையில் மகர ஜோதியை தரிசித்துவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருந்தவர்களே விபத்தில் சிக்கி யுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் இலங்கையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவரும் அடங்கு வார். இவர் தெனியாயவைச் சேர்ந்த உஷான் காந்த் (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். (மேலும்...)

தை 15, 2011

சங்குப்பிட்டிப் பாலம் திறப்பு

யாழ்ப்பாணம் - கொழும்பிற்கான பயணம் இலகுவாகின்றது.

யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமான போக்குவரத்துத் தூரத்தை 120 கிலோமீற்றரால் குறைக்கும் ஏ 32 வீதி ஊடான போக்குவரத்து எதிர்வரும் 16ம் திகதியுடன் சாத்தியப்படவுள்ளது. ஏ 32 போக்குவரத்துப் பாதையில் காரைதீவையும், புநகரியையும் இணைக்கும் 288 மீற்றர் நீளமான கேரதீவு-சங்குப்பிட்டிப் பாலம் எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்பட்டதும், ஏ 32 வீதி ஊடான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய நிலை ஏற்படும்.இதன்மூலம், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், புத்தளம் ஊடாகக் கொழும்பை அடைய முடியும் என்பதால், போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறைவடைந்து, பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறையும். ஐக்கிய இராச்சியம் வழங்கிய 800 மில்லியன் ரூபா கடனுதவி மூலம், கடந்த 8 மாத காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த 288 மீற்றர் நீளமான சங்குப்பட்டிப் பால நிர்மாணப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்து, எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனைத் திறந்து வைக்கவுள்ளார். இது வட பகுதி மக்களுக்கான ஜனாதிபதியின் தைப்பொங்கல் பரிசு என்றும், தொடர்ந்து 17ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வார்.

தை 15, 2011

நிரந்தர சமாதானத்துக்காக அனைவரும் ஒன்றிணைவோம் ஜனாதிபதி

தமிழ் இந்துக்களின் தனிப்பெரும் பாரம்பரியத்தையும் கலாசார விழுமியங்களையும் வெளிப்படுத்துகின்ற இன்றைய தைப்பொங்கல் உழவர்களின் திருநாள். இந்துக்களின் பெருநாள் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நன்னாள். சூரிய நமஸ்காரம் மூலம் தனிச்சிறப்புடன் உழவுத் தொழிலுக்கு நன்றி தெரிவிக்கும் உன்னதநாளாக தைப்பொங்கல் போற்றப்படுகின்றது. அபிவிருத்தி எனும் பொற்கதிரோனை நோக்கி வீறுநடைபோடும் இலங்கைத் திருநாட்டில் வாழ்கின்ற இந்துக்கள் இன்று உலக இந்துக்களுடன் இணைந்து கொண்டாடும் உவகைத் திருநாள். தைத்திருநாளில் மக்களிடையே நல்லுறவு வலுப்பெற்று பயம், சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை, புரிந்துணர்வு என்பன நீடித்து நிலைக்க வேண்டும். (மேலும்....)

தை 15, 2011

தமிழ் மக்கள் அரங்கம் என்பது அரசியல் கட்சியோ அல்லது தேர்தல் கூட்டணியோ அல்ல

தமிழ் கட்சிகள் ஒன்றினைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் அம் முயற்சியினால் தமிழர் விடுதலை கூட்டணி - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா அணி - தமிழ் ஈழ மக்கள் விடுதலை கழகம் - தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தற்போது ஒன்றினைந்து போட்டியிட சம்மதித்து உள்ளதாகவும் ஏனைய கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் ஆனால் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இப்பேச்சுவார்த்தையில்  அதிகம் அக்கறை காட்டமையினால் அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை இடைநிறுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். (மேலும்....)

தை 15, 2011

Why Prof.Ignatieff is supporting anti India, anti Sri Lanka group ?

There is absolutely no reason you, as the Leader of the Liberal party should be seen engaging the CTC. I'm not sure if you have seen all the facts, or rather even your staffers have all the facts, so I have taken the trouble to put it together for you. Politically it will be a disaster, as the moderates will fear the resurgence of the LTTE harassment days if the Liberals are seen too close to them andvoters will drift to the Conservatives. Ethically, I dont need to tell you what you have taught the world, supporting separatists and extremists is NEVER acceptable but most importantly at a time when the Sri Lankan diaspora is looking for leadership, your support to the Separatists is disturbing, to be put politely with respect, sir. (more...)

தை 15, 2011

தைப்பொங்கல் விழாவில்

Hon. Karunaratne Paranawithana Consulate General Of Sri Lanka in TORONTO.  & his wife attends  temple pooja  / Richmondhill Lord Sri Venkateswara temple and Thiruchchenthoor Murugan Temple, 2400 Finch Avenue West, Toronto

தை 15, 2011

தமிழரை “கொள்ளை- கொல்ல”வருகிறது

தைப்பொங்கல் வெளியீடு TERRORIST 24

நிகழ்ச்சி முன்னோட்டம்:

தேசியசிந்தனை: மாவீரர் திலகம் சூரியத்தேவனின் சிந்தனையில் இருந்து

 காசியின் உணர்ச்சிகானங்கள்

காலைச்சூரியன்: பூராயப்பார்வையில்

ஈழமுரசு, ஈழநாடு, புலத்தில், கறுப்பு, சங்கதீ, பதிவு, ரமிழ் நெற், வலம்புரி, ஈழம் ஈ நியூஸ், தமிழ்க்கதிர், ஈழம்பிறஸ், ஈயூரமிழ், ஈழதேசம், தமிழ்காடியன் ஆகியவற்றில் இருந்து வாசிக்கப்பட்ட தொகுப்பு

செண்பகத்தார்பார்வையில் இன்று.

சிரிக்க சிரிக்க சித்திரனின் முகத்தார் காமடி

ஆசைப்பிள்ளையின் 10 கட்டளை

நையாண்டி தவில்: GTV யா Tiger 24 

(மேலும்....)

தை 15, 2011

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு பூமி!

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப்போன்றே பாறைகள் கொண்ட புதிய கோளை அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது. நாஸா அனுப்பியுள்ள கெப்ளர் விண்கலம் இந்த கோளை கண்டு பிடித்தது. சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 700 கோள்களும் வாயுக்கள் நிறைந்ததாகவோ அல்லது மணல் போன்ற துகள்கள் மட்டுமே கொண்டதாக இருக்கும் நிலையில், முதல் முறையாக பாறைகளுடன் கூடிய பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய முதல் கோளும் இது தான். (மேலும்....)

தை 15, 2011

அணுசக்தி பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு இறுதி வாய்ப்பு

அடுத்த வாரம், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையில் நடக்கும் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கத்திய நாடுகளுக்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு என்று ஈரான் கூறியுள்ளது. ஈரானின் அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் சந்தே கம் கொண்டுள்ளன. ஆனால் தனது அணுசக்தி ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த 2009ல் இது பற்றி நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடை ந்ததை அடுத்து அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதனால், மீண்டும் பேச்சுவார்த்தைக் கிணங்க வேண்டிய சூழல் ஈரானுக்கு ஏற்பட்டது. இதையடுத்து, இம்மாதம் 21 மற்றும் 22ம் திகதிகளில் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் ஈரானுக்கும், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி ஆகியவற்றுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

தை 15, 2011

காலநிலை மாற்றம் பூமியின் எதிர்காலத்துக்கு எச்சரிக்கை

உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் மூலமாக பூமி எதிர்காலத்திற்கான எச்சரிக்கைகளை விடுத்து வருவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்பார்த்ததைவிட மிகத் தீவிரமான காலநிலை மாற்றம் ஏற்படும் என்பதை இந்த எச்சரிக்கை புரிய வைப்பதாகவும் விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஹெய்ட்டியில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பின்னர் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டுள்ளது. பூகோள வெப்பமயமாதலின் மூலம் கூடுதல் உஷ்ணம் நிலவும் என்பது தவறான கணிப்பாகும், உண்மையில் காலநிலை முறைமையில் கூடுதல் சக்தி ஏற்படுகிறது. இதனால் மோசமான விளைவுகளுக்கு வழிவகுக்கின்றனவென்று பிரித்தானியாவின் ஓர் ஆய்வாளர் தெரிவித்துள்ளார். (மேலும்....)

தை 15, 2011

இராணுவ ரகசியங்களை பெற விக்கி லீக்ஸ் லஞ்சம் கொடுத்தது - அமெரிக்கா

இராணுவ ரகசிய ஆவணங்களை பெற விக்கி லீக் இணையத்தளம் லஞ்சம் கொடுத்ததாக பிடிபட்ட இராணுவ வீரர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசின் இராணுவ ரகசியங்கள் அடங்கிய ஆவணங்களை விக்கி லீக் இணையத்தளம் வெளியிட்டது. இது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. மிகவும் பாதுகாப்பான ஆவணங்கள் விக்கி லீக் கையில் கிடைத்தது குறித்து அமெரிக்க இராணுவம் விசாரணை நடத்தியது. இந்தப் பணம் இராணுவ வீரர்கள் நலநிதிக்காக பெறப்பட்டது. பணத்தை பெற்றுக்கொண்ட பிராட்லி மேன்னிங் இராணுவ ரகசியங்களை விக்கி லீக் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இந்த விபரங்கள் விசாரணையில் தெரிய வந்துள்ளது. (மேலும்....)

தை 15, 2011

கிழக்கு பிரதேசத்துக்கு 345 மெ. தொ. உணவு நேற்று அனுப்பி வைப்பு

பொருளாதார அபி. அமைச்சு - 320 மெ. தொன் இந்திய அரசின் - 25 மெட்ரிக் தொன்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கவென இந்திய அரசாங்கத்தின் முதல் தொகுதி நிவாரணப் பொருள்கள் நேற்று (14) விமானம் மூலம் கொண்டுவரப் பட்டன. 110 மில்லியன் ரூபாய் பெறுமதியான 25 மெட்ரிக் தொன் உணவுப் பொருள்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்றுப் பகல் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது. பருப்பு, சீனி, போர்வை, தண்ணீரை சுத்தமாக்கும் மாத்திரைகள், குடிநீர், பாய் போன்றவை அடங்கிய இந்த முதல் தொகுதி நிவாரணப் பொருள்களை விமானப் படையினர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எடுத்துச் சென்றதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்தார். (மேலும்....)

தை 15, 2011

SUPPORT APRIL 9 ANTIWAR RALLIES

What makes the April 9th bi-coastal rallies, in New York City and San Francisco truly historic is this coalitions very strong solidarity with the Palestinian people as well as the strong opposition to racism and the wave of anti-Islamic hysteria that has been sweeping the country. The International Action Center has made these issues a cornerstone of our work for many years.This is an especially important time to respond with the greatest possible unity around the most difficult struggles. The Grand Jury subpoenas in Chicago and Minneapolis have especially targeted Palestinian solidarity activists, along with other international solidarity activists. The wave of anti-Muslim attacks, FBI sting operations and preventive prosecutions and racist frame-up must be challenged, along with the growing attacks and raids on all immigrant workers. (more....)

தை 14, 2011

இனிய உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்

உழைக்கும் மக்கள் திருநாளாம் தைப் பொங்கல்

தை 14, 2011

 

கிழக்கு வான் வெளுத்தது, அடைமழையும் ஓய்ந்தது

இரு வாரங்களாக நீடித்த அடை மழை நேற்று முதல் குறைவடைய ஆரம்பித்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் சமிந்திர சில்வா நேற்றுத் தெரிவித்தார். இரு வாரங்களுக்கும் மேலாக நீடித்து வரும் அடை மழைக் காலநிலையும் இன்று (14ம் திகதி) மாலையாவதற்குள் வழமையான நிலைக்குத் திரும்ப முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். வளி மண்டலத்தில் இலங்கைக்கு அருகில் கிழக்காக உருவாகி ஒரு வார காலமாக நீடித்த அமுக்க நிலை நேற்று முதல் பலவீனமடைய ஆரம்பித்துள்ளது. அதனால் இன்று மாலையாவதற்குள் காலநிலை சீரடைய முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த இரு வாரங்களாக தொடராக அடைமழை பெய்து வந்த மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் நேற்று மழை குறைவடைந்திருந்தது. வெள்ள நீரும் வடியத் தொடங்கியுள்ளது. (மேலும்...)

தை 14, 2011

இந்தியாவிலிருந்து விமானங்கள் மூலம் கிழக்கிற்கு நிவாரணப்பொருட்கள்

இந்தியாவில் இருந்து இரண்டு விமானங்கள் மூலம் கிழக்கு மாகாணத்திற்கு நிவாரணப் பொருட்கள் இன்று கொண்டுவ உள்ளதாக இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். படுக்கை விரிப்புக்கள், உலர் உணவுகள் போன்றன கொண்டுவர உள்ளதாகவும் அவை கிழக்கு மாகாணத்திற்கு அனுப்பிவைக்கப் படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தை 14, 2011

வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான களுவாஞ்சிகுடி பிரதேசத்துக்கு பிரதியமைச்சர் முரளிதரன் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் கடும் பாதிப்புக்குள்ளான களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் முகாம்களில் உள்ள மக்களை மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்தார்.(மேலும்...)

தை 14, 2011

தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களுக்கு ஒரு பகிரங்க வேண்டுகோள்! - ஓற்றுமைக்கும் சமாதானத்துக்கும் பிரித்தானியத் தமிழர் அமைப்பு.

எமது மக்கள் உரிமையுடனும், சமத்துவத்துடனும் வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் தேர்தல் அரசியல் என்பதற்கு அப்பால், உரிமைப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வடக்குக் கிழக்குப் பிரதேச நிருவாகங்களை பெரும்பான்மைக் கட்சிகள் நிருவகிக்கும் நிலையைத் தோற்றுவிக்காமல் தனிப்பட்ட கோபாதாபங்களை விடுத்து, துன்பப்பட்டு இருக்கும் எமது மக்களின் நலனுக்காக சுயநல அரசியலை விடுத்து, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் ஓரணியில் நின்று செயற்படும் வண்ணம் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம். இதுவே இன்றுள்ள சூழ்நிலையில் எமது மக்களுக்கு விடிவைத் தரக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தும். (மேலும்...)

தை 14, 2011

இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகியுள்ள நம் உறவுகளிற்கு உதவிடுவோம்!

கடந்த சில வாரங்களாக மட்டு, அம்பாறை உட்பட நாட்டின் பல பாகங்களில் இயற்கையின் சீற்றத்தினால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் வீடு வாசல்களை இழந்து நிற்கதியாகிய நிலையில் பாடசாலைகளிலும், ஆலயங்களிலும், பொது இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ் மக்களுக்கான நிவாரண உதவிகள் ப+ரணமாக கிடைக்காத நிலையில், சுகாதார சீர்கேடுகள் உட்பட பல சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர். கடந்த 25 ஆண்டுகளிற்கு மேலாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் கோரத்தினாலும் மற்றும் சுனாமியின் தாக்கத்தின் அழிவுகளில் இருந்து மீண்டெழுந்து வரும் கிழக்கிலங்கை மக்கள் மற்றுமொரு இயற்கையின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான நிலையில் அவ் மக்களிற்கு புலம்பெயர் மக்களும் உதவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். (மேலும்...)

தை 14, 2011

கிழக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியுதவி

செல்வச்செழிப்பும் இயற்கைவழமும் கொண்ட கிழக்கிலங்கையில் போர்ப்பறையால் உயிர் உடமைகள் என்பன சின்னாபின்னமாகி ஓய்ந்து பின்அதிலிருந்து எழும்பும் முன்னே எஞ்சியிருந்ததும் ஆழிப்பேரலையில் மீண்டும் அமிழ்ந்துபோக குறையுயிராக தலையை நிமிர்த்த மீண்டும் ஒரு வரலாறுகாணாத பெருவெள்ளம் மீதியிருந்த உடமைகளையும் காவுகொண்டுவிட்டது. தொடர்ந்து பெய்யும் மழையினாலும் ஆர்பரித்து பொங்கியெழும் கடலும் நிரம்பி வழிந்து உடைப்பெடுத்த குளங்கள் கிராமம் கிராமமாக அடித்துச்செல்கின்றது. அம்பாறை,  மட்டக்களப்பு, பொலனறுவை, மூதூர், திருமலை பிரதேசங்களில் அடிப்படை வசதிகளின்றி எம் உறவுகள் மீண்டும் மீண்டும் உணவின்றி உறைவிடமின்றி அகதிகளாய் ஒதுங்க இடமுமின்றி தமது ஊரிலேயே தவிப்பது கண்டு எம்இதயம் விம்மிவெடிக்கின்றது. (மேலும்...)

தை 14, 2011

'ஒரு தெய்வம் தந்த பூவே!'

'பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டி கட்டி
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு..’

இந்தத் தாலாட்டுப் பாடலைப் பலரும் அறிந்திருப்பார்கள். குழந்தை பிறந்தவுடன், வலிமையான இலுப்பை மரத்தால் செய்த தொட்டிலில் படுக்க வைப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நடைமுறை. பால் வடியும் மரமான இலுப்பை மரத்தொட்டிலில் குழந்தையை உறங்க வைத்தால், தாய்க்கு வற்றாமல் பால் சுரக்கும் என்பதும் நம்பிக்கை. இறுதிச் சடங்கின்போது, இறந்து போனவரின் தலையில் உறவினர்களெல்லாம் இலுப்பைப் பிண்ணாக்கு பொடித்து தயாரிக்கப்பட்ட அரப்பு வைத்து விடுவது இன்றளவும் தொடரும் ஒரு சடங்கு. (மேலும்...)

தை 14, 2011

நாடு முழுவதும் கடும் குளிர், கொழும்பு வெப்பநிலை 18.8 C

நாட்டில் நிலவிவரும் குளிரு டன் கூடிய காலநிலை காரண மாக கொழும்பு உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை குறைவடைந்து குளிர்காலநிலை நிலவி வருகிறது. கொழும்பு மாவட்டத்தின் வெப்பநிலை 18.8 செல்சியசாகக் குறைவடைந்துள்ளது. 61 வருடங்களின் பின்னர் கொழும்பு மாவட்டத்தின் வெப்பநிலை மிகவும் குறைவடைந்திருப்பதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் வெப்பநிலை 7.9 செல்சியசாகவும் குறைவடைந்துள்ளது. அது மாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளின் வெப்பநிலையும் குறைவடைந்திருப்பதாக காலநிலை அவதான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (மேலும்...)

தை 14, 2011

இலங்கைக்கேற்ற தீர்வை காண இந்தியா உதவினால் வரவேற்போம் - ஜனாதிபதி

முப்பது ஆண்டுகால யுத்தத்தின்போது நாட்டில் அராஜகம் புரிந்த எல். ரீ. ரீ. ஈ. இயக்கத்தையும் அதன் தலைவன் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் ஒழித்துக் கட்டி எங்கள் நாட்டில் மீண்டும் சமாதானத்தையும் அமைதியையும் இனங்களுக்கிடையே ஒற்றுமையையும் நல்லிணக்கப்பாட்டையும் ஏற்படுத்திய எனது அரசாங்கம் எக்காரணங் கொண்டும் மீண்டும் அந்தப் படுபயங்கர கொலையாளியான பிரபாகரனின் இலட்சியக் கனவை நிவைவேற்றுவதற்கு எவராவது முயற்சிகளை எடுத்தால் அவற்றை கடுமையான முறையில் செயற்பட்டு ஒழித்துக் கட்டிவிடும். (மேலும்...)

தை 14, 2011

நம்ப முடிகிறதா....?

2010ல் 1 டொலர் சம்பளம் வாங்கிய அப்பிள் தலைவர்!

அப்பிள் நிறுவனர்களின் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 3 ஆண்டுகளாக வெறும் 1 டொலர் அதாவது 110 ரூ. மட்டுமே தனது சம்பளமாக பெற்று வந்துள்ளார். கடந்த 1997ம் ஆண்டு ஜாப்ஸ் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தில் சேர்ந்தார். தற்போது வெற்றி நடை போடும் ஐபோன், ஐபேட் ஐபொட் உள்ளிட்ட பல தயாரிப்புகளுக்கு பின் உள்ளவர் ஜாப்ஸ். உலகின் பிரபலமான நிறுவனங்களின் சி. இ. ஓ.க்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்கி கொண்டிருக்கையில் ஜாப்ஸ் வெறும் 110 ரூபாவை தான் சம்பளமாக பெறுகிறார். கடந்த 2008ம் ஆண்டு முதல் அவர் இதே சம்பளத்தை தான் வாங்குகிறார். அவருக்கு 5.5 மில்லியன் மதிப்புள்ள அந்நிறுவனத்தின் பொது பங்குகள் உள்ளன. நாஸ்டாக் கணக்குப்படி அண்மையில் அப்பிளின் சந்தை விலை 308 பில்லியன் டொலராகும். அதேசமயம், ஜாப்ஸிற்கு அடுத்து அந்த இடத்திற்கு வருவார் என்று கருதப்படும் திமோதி குக் 59 மில்லியன் டொலர் சம்பளம் வாங்குகிறார். இதில் 5 மில்லியன் டொலர் ஊக்குவிப்பு கொடுப்பனவு 52.3 மில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகள் அடக்கம்.

தை 14, 2011

பிரேசில் நிலச்சரிவில் 260 பேர் பலி

பிரேசிலில் ஏற்பட்ட நிலச்சரிவில் 260 பேர் பலியாகியுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. சில நாட்களாக பிரேசில் நாட்டில் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் ரியோடி ஜெனீரோ மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் டெரசோ போலில் நகரத்தின் அருகே உள்ள ஆறு உடைந்து நகர பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் நிலச் சரிவும் ஏற்பட்டது. இதில் சிக்கி 260 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோரை காணவில்லை. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. நிலச் சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. (மேலும்...)

தை 14, 2011

நுரையீரல் புற்றுநோய்க்கு மருந்து - கியூபா மருத்துவர்கள் சாதனை

உலகிலேயே நுரையீரல் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய முதல் மருந்தை மருத்துவ உலகிற்கு கியூபா மருத்துவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹவானாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர் கிசேலா கொன்சால்வஸ், கியூபாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வெற்றிகரமாக சிகிச்சை பெற்றுள்ளனர். மிகவும் முற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்கூட சமாளிக்கும் நிலைக்கு வர இந்த மருந்து உதவுகிறது. சிமாவக்ஸ்-இஜிஎப்  என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து 15 ஆண்டுகால மருத்துவ ஆய்விற்குப்பிறகு கண்டுபிடிக் கப் பட்டுள்ளது. (மேலும்...)

தை 14, 2011

புதிய உத்வேகத்தோடு துவங்கியது வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு  சோசலிசத்தை கட்டுவதில் உறுதியேற்போம்

உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்டுகளின் இதயங்களில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு என்று சிறப்பான இடம் உண்டு. அமெரிக்கா வின் காட்டுமிராண்டித்தன மான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு தோற்கடித்ததோடு மட்டுமில்லா மல், நாட்டை அடிமைப்படுத்த நினைத்த அனைத்து காலனி சக்திகளையும் வெற்றிகரமாக புறமுதுகிட்டோடச் செய்ததே அதற்குக் காரணமா கும். 21 ஆம் நூற்றாண்டில் தனது அனைத்து பலத்தையும் பொருளாதார வளர்ச்சியில் செலுத்த வியட்நாம் முடிவு செய்திருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் வியட்நாமின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட் டுள்ளது. மாநாட்டு அறிக்கை யில் பொருளாதார வளர்ச்சி மற்றும் எதிர்வரப்போகும் கால கட்டம் பற்றியும் குறிப்பிடப் பட்டுள்ளது. வரும் காலகட்டத் தில் 7 முதல் 7.5 விழுக்காடு வரையில் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

தை 13, 2011

13-01-2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

13 01 2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல் இந் நிகழ்ச்சியில். தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம். ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு 00 44 208 9305313 078107063682

(மேலும்...)

தை 13, 2011

வன்முறை இல்லாமல்... போதைப் பொருட்கள் இல்லாமல்...

மிகவும் துயரமான ஒன்று எனது நினைவில் வருகிறது. பொய்களாலும், வெறுப்புணர்வாலும் தங்களை நிரப்பிக் கொள்ளாத நேர்மையான அமெரிக்க குடிமக்களை கவலையுறச் செய்யும் விஷயம் அது. உலகிலேயே மிகவும் மோசமான செல்வப்பகிர்வு உள்ள பகுதி லத்தீன் அமெரிக்காதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? வளர்ச்சி இல்லாததாலும், வறுமையாலும் அமெரிக்காவிற்குள் ஏராளமான லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் நுழைகிறார்கள். அவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பணமும், பொருட்களும் எல்லையைத் தாண்டலாம். ஆனால் மனிதர்கள் தாண்டக்கூடாது. போதைப் பொருட்களும், ஆயுதங்களும் தங்குதடையின்றி ஒரு திசையிலிருந்து மற்றொரு திசைக்கு இடம் மாறுகின்றன. உலகிலேயே அதிகமான அளவில் போதைப் பொருட்கள் அமெரிக்காவில்தான் பயன்படுத்தப்படுகிறது. ஆயுத விநியோகத்திலும் அமெரிக்காவுக்குதான் முதலிடம். (மேலும்...)

தை 13, 2011

Rising water levels threaten tank bunds

(by Yohan Perera)

The rising water levels due to continuous rains have caused threats to the stability of many large scale tank bunds in the North Central and Eastern provinces.    The bund of the Walathapitiya tank in Ampara had breached from two places and ten families were evacuated. The flood waters had inundated Ninthavur and Karativu areas as well. Most tanks in Anuradhapura, Polonnaruwa, Batticaloa, Trincomalee and Ampara districts were affected and continuously overflowing as spill gates were opened. Several small tanks in the area were also damaged. Spillway of the Nachchaduwa tank was widened by 20 feet using backhoes and the gushing waters had inundated many buildings including some Buddhist Temples. Spill gates of Kalawewa, several gates in Rajangana Wewa were opened yesterday.  Nuwarawewa, Eruwewa  and Thisa Wewa were also overflowing. (more...)

தை 13, 2011

நாங்கள் மனிதர்களாகலாம்... நினைப்போமா?

ஈழமண்ணுக்காய் நீங்கள் போராட

ஈழமண்ணைவிட்டு நாங்கள் ஓடினோம்

மண்ணுக்காய் நீங்கள் மண்ணுக்குள் விதைக்கப்பட்டீர்கள்

மண்ணின் நினைவை மண்ணுக்குள் நாங்கள் புதைத்தோம்

காட்டிலும் மேட்டிலும் ஈழக்கனவோடு நீங்கள் படுத்துறங்க

கட்டிலில் படுத்திருந்து காசுக்கனவுகண்டோம் நாங்கள்

(மேலும்...)

தை 13, 2011

மட்டக்களப்பில் கடந்த 11 நாட்களில் 898.4 மி.மீ மழை பதிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வருடாந்த மழைவீழ்ச்சியில் கடந்த 11 நாட்களில் மாத்திரம் 898.4 மில்லி மீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இன்று புதன்கிழமை காலை 8.30 மணி வரை 113.9 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்று புதன்கிழமை 12 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மண நேரத்தில் 151.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மாவட்டத்தின் வருடாந்த மழைவீழ்ச்சி 1600 மில்லிமீட்டராகும். காலநிலையில் எந்த விதமான முன்னேற்றமும் இன்றி தொடர்ச்சியான மழை பெய்து வருவதுடன் மேலும் சில நாட்களுக்கு இதே காலநிலை நிலவும் எனவும் வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளம் காரணமாக 5500 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் 1220 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளடன், 3452 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார். அதிகளவில் வாழைச்சேனை மத்திய செயலகப்பிரிவில் 512 வீடுகள் முற்றாக அழிந்துள்ளதுடன், 253 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தை 13, 2011

புகை என்றும் பகை...

பொது இடங்களில் தேவையற்ற குப்பை களை எரிப்பது நம் சமூக வழக்கமாக உள்ளது. கடந்த காலங்களில் பருத்தித் துணிகள், மக்கும் தன்மையுடைய பொருட்கள் மக்களால் எரிக்கப் பட்டபோது பாதிப்பு மிகக் குறைவாக இருந்தது. குறிப்பாக புத்தாண்டின் முதல் நாள் போகி என்று கொண்டாடி, வீட்டில் அடைந்து கிடக்கும் பழையவற்றை கொளுத்துவது வாடிக்கை. ஒரு வகையில் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள இது உதவுவது உண்மை. ஆனால், தற்போது பிளாஸ்டிக் உள்ளிட்ட வேதியியல் கலந்த ஆபத் தான புகை கக்குகிற பொருட்கள் கழிவாக வீட் டில் சேருகிறது. இவற்றை எப்படி அகற்றுவது என்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் மிகப்பெரும் சவாலாகவே உள்ளது. அமெரிக்கா போன்ற வல் லரசுகள் தங்கள் நாட்டின் நச்சுக்குப்பைகளை கப்பல் கப்பலாக ஏற்றி இந்தியாவில் கொட்டி வருவதை இந்திய அரசு வாய் மூடி மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. (மேலும்...)

தை 13, 2011

''ஈழத்தில் நடந்ததை மறந்து விடாதீர்கள்!'' - கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண்!

போர், தமிழ் மக்களின் சுயமரியாதை,, தன்மானத்தின் நாடிநரம்புகளையும் சேர்த்தே நசுக்கி இருக்கிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் பிச்சைக் காரர்களாக இதுவரை இருந் தது இல்லை. போரால் வாழ்வு இழந்த​வர்கள் எல்லோரும், மீனவர்களாகவும் விவசாயி​களாகவும் உணவு உற்பத்தியில் ஈடுபட்டும் இருந்தவர்கள். அரசனாகவோ அரசியாகவோ வாழா​விட்டாலும், உங்களைவிட என்னைவிட வசதியாக வாழ்ந்தவர்கள்தான் அவர்கள். ஆனால், இன்று  கையேந்தி நிற்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் நல்ல வளங்கள் இருந்தபோதும்... மக்கள் வேலையின்றி, வறுமையில்தான் வாடுகிறார்கள். இதனால், தமிழ் மக்கள் சொந்த கிராமங்களைவிட்டு வெளியேறுகிறார்கள். உடனடியாக, அந்தப் பகுதிகளில் மற்றவர்களைக் குடியமர்த்தி, அங்கே இனப்பரப்பல் விகிதத்தை மாற்றிவிடுகிறார்கள். இஸ்ரேல் - பாலஸ்​தீனம் போன்றதொரு மிக மோசமான நிலைமை இலங்கையில் உரு​வாகிறது. அதுவும் சீனா போன்ற நாடு களின் உதவியுடன் நடக்​கிறது! (மேலும்...)

தை 12, 2011

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே; புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது-வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள்!

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமே, புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு துன்பம் தரக் கூடாது! நாடு கடந்த தமிழீழ அரசு என்பது ஒரு கோமாளித்தனமானது. இதனைத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். பணத்துக்காகவும் பதவிக்காகவும் வர்த்தக நோக்கங்களுக்குமாகவே இந்தத் தமிழீழ அரசு செயற்படுகிறது. கடந்த 30 வருடங்களாக புலிகள் பண பலத்தையும் ஆயுத பலத்தையும் வைத்துப் போராடித் தோற்றுப் போன நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசினால் எதனைத்தான் சாதிக்க முடியுமெனக் கேள்வி எழுப்புகிறார். (மேலும்...)

 

தை 12, 2011

கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ முன் வாருங்கள் !

கிழக்கு மாகாணத்தில் தொடரும் கடும் மழை, வெள்ளம் காரணமாக அங்குள்ள மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். நீடித்து வரும் மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட, மக்கள் எல்லாவற்றையும் இழந்து இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர். இப் பணியில் உள உறுதியுடன் உங்கள் கரங்கள் இணைவதே வெண் மயில் அமைப்பின் ஆவல். எமது அன்பான உள்ளங்களே எமது மக்களுக்கு நீங்கள் செய்யும் சிறு துளி உதவி பெரு வெள்ளமாக பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் என்பதை யாகமாக கொண்டு செயற்படும் எம்மைப்பற்றி அறிந்து கொள்ள தொடர்புகளுக்கு... (மேலும்...)

தை 12, 2011

தமிழ் இனத் துரோகி வைகோவை அடையாளம் காண்க

நேற்றைய தினம் (11-01-2011) வைகோ ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் ஈழ மக்களின் துயரமும், தியாகமும் நிறைந்த கண்ணீர் வரலாற்றில், காக்கை வன்னியன்களும், கருணாக்களும் தொடர்ந்தும் துரோகம் இழைப்பவர்களும் தமிழ் ஈழ விடுதலை விரும்பிகளால் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், சோனியா பணமும் கொடுத்து மூன்று தளபதிகளையும் அனுப்பினார் என்றும், லண்டன் சேனல் 4 ஐ பார்த்து நெஞ்சில் நெருப்பு விழுந்து வெடித்ததாகவும், இவற்றையெல்லாம் மூடி மறைக்க இந்திய உளவுத்துறையின் ஏற்பாட்டில் ஒரு கூட்டம் திட்டம் வகுத்துள்ளது என்றும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக எண்ணற்ற துரோகங்களைச் செய்த ஈ.என்.டி.எல்.எப். தமிழ் ஈழப் பகைவர்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு, சிறிபெரும்புதூரிலிருந்து டெல்லிக்கு நடைபயணம் போவதாகவும் பொய்களை பரப்புரை செய்யவும், ஈழத் தமிழர் என்ற போர்வையில் தமிழ் ஈழ விடுதலைக்கு உண்மையில் போராடுவோரை கொச்சைப்படுத்தவும், தமிழ் இனத்துக்கு இழிவைத் தரும் காரியங்களில் ஈடுபடவும், தாய்த் தமிழகத்துத் தமிழர்களும், உலகம் எங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் ஈழ மக்களும் இந்தத் துரோகிகளைக் கண்டு விழிப்புணர்வு கொண்டு ஆரம்பத்திலேயே முறியடிக்க வேண்டும் என்று வைகோ தனது சிற்றறிவுக்கு எட்டிய வகையில் அறிக்கை விட்டுள்ளார். (மேலும்...)

தை 12, 2011

Presentation made by Douglas Wickramaratne,UK to LLRC

(by Douglas Wickramaratne,UK to LLRC)

Dear Mahinda,

Douglas has done a grand job, risking his life. Without people like Douglas, who has shown an excellent knowledge of our history and the current situation, the Tamils would have had a field day. In my view, until; recently, the Sinhalese poor were the underdogs and the Tamils projected to the world that they were discriminated. My written submission, in two parts,  to the commission is given below. (more....)

தை 12, 2011

சுவிற்சர்லாந்து நாட்டில் செயற்பட்டுவந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸ் கிளையின் முன்னால் பொறுப்பாளர் குலம், பரப்புரை பொறுப்பாளர் ஆல்பேர்ட், நிதித்துறைப்பொறுப்பாளர் அப்துல்லா, படப்பிடிப்பாளரும், இன்றைய பொறுப்பாளரும் ஆன ரகுபதி இன்னும் மூன்று செயற்பாட்டாளர்களையும் இன்று சுவிஸ் காவல்துறை கைதுசெய்துள்ளாதாக அறிய வந்துள்ளது. சுவிற்சர்லாந்து நாட்டில் செயற்பட்டுவந்த புலிகளின் முக்கியஸ்தர்கள் சுவிஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிற்சர்லாந்து நாட்டின் சட்டமா அதிபரின் உத்தரவுக்கமைய 10 மாநிலங்களில் 23 இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேடுதலின்போதே இக் கைது இடம்பெற்றுள்ளது. (மேலும்...)

தை 12, 2011

Tamils likely safe from persecution in Sri Lanka, Refugee Board says

(SUNNY DHILLON)

Although refugee board adjudicators aren’t forced to follow the new guideline, the IRB said such notes “are offered to members as models of sound reasoning that may be adopted in appropriate circumstances.”
The policy, which could affect refugee claimants who arrived in Canada aboard the Ocean Lady and MV Sun Sea, is being challenged in court by a lawyer who says it is not legally sound. The note was also criticized by activists, who suggested it could put lives in danger.
The IRB’s decision was released last month, just before the holidays. Persuasive decisions derive from individual cases that are identified as being of persuasive value in developing guidelines.
The case cited in the new IRB policy involved a 25-year-old Tamil male from Sri Lanka. (He did not arrive in Canada on either of the high-profile boats.) (more...)

தை 12, 2011

இயற்கை அனர்த்தங்களின் போது அரசாங்கத்தை கண்டிப்பது நியாயமற்றது

உலகின் செல்வந்த நாடான அவுஸ்திரேலியாவிலும் தற்போது பெரு வெள்ளத்தினால், பெரும் இழப்புக்களும், அழிவுகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த நாட்டின் தனி மனித வருமானம் 30,000 அவுஸ் திரேலிய டொலர்களாக இருந்தாலும், இந்த பொருளாதார வளம் பெற்ற நாடு கூட, பெரு வெள்ள அனர்த்தத்திலிருந்து மீண்டும் நாட் டில் சகஜ நிலையை ஏற்படுத்துவதற்கு வெளிநாட்டு உதவியை இன்று, கையேந்தி நிற்கிறது. அதுபோன்று, உலகின் செல்வந்த நாடான அமெரிக்காவையும், இயற்கை அனர்த்தங்களான சூறாவளிகள், பெரு வெள்ளங்கள், கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வருகின்றன. ஈரானில் பனி மழை பொழிந்து கொட்டுவதால், அங்கு கடந்த பல நாட்களாக மக்களின் சகஜ வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் இன்னுமொரு நாடான ஜேர்மனியிலும் பெரு வெள்ளம், பனிமழை, சீரற்ற கால நிலை ஆகிய அனர்த்தங்கள் தற்போது பெரும் அழிவுகளை ஏற் படுத்திய வண்ணம் இருக்கின்றது. அதுபோன்று, இலத்தீன் அமெரி க்க நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும் இயற்கை அன்னையின் சீற் றத்தினால், பெரும் அழிவுகளையும் பாதிப்புக்களையும் இன்று எதிர் நோக்கிய வண்ணம் இருக்கின்றன. (மேலும்...)

தை 12, 2011

ஆண்டுகள் செல்லச் செல்ல மூளையின் அளவு குறைகிறது

என் அப்பாவைவிட நான் புத்திசாலி. என்னைவிட என் மகன் புத்திசாலியாக இருக்கிறான். தொலைக்காட்சி, கையடக்கத் தொலைபேசி, வீடியோகேம்ஸ் எல்லாம் அத்துப்படி. இப்படி பேசாதவர்கள் அரிது. ஆண்டுகள் போகப் போக மனிதனின் அறிவு, புத்திக்கூர்மை அதிகரிக்கிறது என்பது இவர்களது கொள்கை, நம்பிக்கை. இதை தகர்க்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. மனிதனின் மூளை பற்றி அமெரிக்காவின் விஸ்கோசின் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் தெரியவந்த தகவல்கள்: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, மனிதனின் மூளை படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது. கடந்த 20 ஆயிரம் ஆண்டுகளாக மூளையின் அளவு படிப்படியாகக் குறைந்துவிட்டது. 1,500 கன செ. மீ பரப்பு இருந்த மூளை தற்போது 1,350 கன செ. மீ தான் இருக்கிறது. ஏறக்குறைய கிரிக்கெட் பந்து அளவு காலியாகியிருக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி, அளவுதான் சுருங்கியதே தவிர, திறமையும் கற்பனைத் திறனும் புத்திக் கூர்மையும் அதிகரித்திருக்கிறது என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் சொல்கின்றனர். ‘நாளுக்கு நாள் மனிதன் முட்டாள் ஆகிறான் என்றும் சிலர் சொல்கின்றனர்.

தை 12, 2011

விக்கிலீக்ஸ் உரிமையாளர் லண்டன் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார்?

விக்கிலீக்ஸ் உரிமையாளர் ஜுலியன் அசாஞ்சே நேற்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகவிருந்தார். பாலியல் குற்றச் சாட்டுக்காக இவரை சுவீடனுக்கு நாடு கடத்துமாறு கோரப்பட்டுள்ள வழக்கிலே இவர் ஆஜராகவிருந்தார். இச்செய்தி எழுதப்படும் வரை இதன் விபரங்கள் வெளியாகவில்லை. 39 வயதான ஜுலியன் அசாஞ்சே விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் இராணுவ, இராஜ தந்திர இரகசியங் களை வெளியிட்டதால் அமெரிக்கா உட்பட பல நாடுகளால் தேடப்பட்டார். சுவீடன் அரசாங்கம் இவரைப் பாலியல் குற்றச்சாட்டில் மாட்டியுள்ளது. இதனால் இவரை நாடு கடத்தும் படி பிரிட்டனைக் கேட்டுள்ளது. ஜுலியன் அசாஞ்சே தன்னை சுவீடனுக்கு நாடுகடத்த வேண்டாமெனக் கேட்டுள்ளார். இன்னும் பல நாடுகள் இராணுவ இராஜதந்திர இரகசியங்களை வெளியிட்டமைக்காக இவரை நாடு கடத்த வேண்டுமெனக் கேட்டுள்ளன. இந்நிலைமையில் பொலிஸாரிடம் சரணடைந்த ஜுலியன் அசாஞ்சே பிரிட்டன் அரசாங்கத்தின் விசேட தடுப்புக்காவலில் வைக்கப்பட் டுள்ளார்.

தை 12, 2011

மட்டு. அம்பாறை வெள்ளத்தில் மூழ்கின

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடராகப் பெய்துவரும் அடை மழை காரணமாக அனர்த்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சீரற்ற காலநிலை தொடர்வதால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களினதும் இடம்பெயர்பவர்களினதும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். அம்பாறை மட்டக்களப்பு மாவட்ட ங்கள் நீரினால் சூழப்பட்டிருப்பதால் அவசர நிவாரணப் பொருட்களை தரை வழியாக எடுத்துச் செல்லுவதிலும் பெரும் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். சீரற்ற காலநிலையால் தொடராக மழை பெய்து வருவதன் காரணமாக நாட்டில் 2 இலட்சத்து 28 ஆயிரத்து 78 (228078) குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 63 ஆயிரத்து 773 பேர் பாதிக்க ப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி நேற்றுத் தெரிவித்தார். (மேலும்...)

தை 12, 2011

ஓசோன் படலத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியம்

உலகில் வாழும் உயிரி னங்களை சூரியனின் புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்து வரும் ஓசோன் படலத்தின் பாதுகாப்பின் அவசியத்தை உலகமக்கள் அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் திங்கள் 16ம் நாளினை ஓசோன் படலம் பாதுகாப்பு தினமாக பன்னாட்டு அமைப்புகள் அனுசரித்து வருகின்றன. மண்ணில் உயிரினம் பிணியின்றி வாழ்ந்திட விண்ணில் ஓசோன் படலம் ஆற்றிவரும் பணி மகத்தானது. அதனை நினைத்து அதற்கு நன்றி நவிலவும் அதன் பாதுகாப்பின் அவசியத்தை உறுதி செய்திடவும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு அமைப்புகளும் செப்டம்பர் திங்கள் 16ம் நாளினை ஓசோன் நாளாக ஆண்டுதோறும் அனு சரிக்கின்றன. தற்போது ஓசோன் படலத்தில் ஏற்படும் மாற்றங்களையும் அதன் விரிவான சுற்றுச்சூழலின் பாதுகாப்பற்ற தன்மை குறித்தும் அனைவரும் பேசி வருகின்றனர். (மேலும்...)

தை 12, 2011

மத அடிப்படைவாதத்திற்கு அடிபணிய மறுத்த தீரரைப் பழிவாங்கும் தீவிரவாதம்

(எஸ்.வி.வேணுகோபாலன்)

இஸ்லாமிய மத அடிப்படையிலான நாடுகளுள், பாகிஸ்தான் நாட்டின் மத துவேஷ சட்டம் தான் மிகக் கடுமையா னது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்ற னர். ஜியா உல் ஹக் காலத்தில் 1986ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மேற்படி சட்டப்படி இதுவரை யாரும் மரண தண்டனைக்கு உட்படுத்தப் படவில்லை என்றாலும், அப்படியான குற்றம் சாட்டப் பட்டிருந்தவர்கள் (இதில் இஸ்லாமியர் அதிகம்) 34 பேர் காவல் துறையின் ‘நேரடி பார்வையில்’ பகிரங்கமாக கொல்லப்பட் டனர் அல்லது தற்கொலை (?) செய்து கொண்டனர் என்கிறது `இந்து’வில் ஜனவரி ஒன்றாம் தேதி வந்திருந்த அனிதா ஜோஷூவா அவர்களின் கட் டுரைக் குறிப்பு. (மேலும்...)

தை 11, 2011

அரசியல் தீர்வு தொடர்பாக வரதராஜபெருமாள் அவர்களின் கருத்து   காத்திரமானது

(அ. விஜயன்)

வரதராஜபெருமாள் என்வபர் தற்போதைய பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் ஒரு தலைவாராக பார்க்காமல் அவர் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்காக  அமைந்த மாகாண அரசின் முதல் முதல்வர் என்றே பார்க்கவேண்டும். வரதராஜபெருமாள் முதல்வராக இருந்த காலகட்டத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு ஒரு மாகாண அரசு அமைந்த போதும் அது அதிகாரங்கள் இல்லாத அரசாக இருந்ததென்பது அனைவருக்கும் தெரியும்.  இந்த அதிகாரத்தின் கடிவாளத்தை யார் கையில் வைந்திருந்தார், என்பது அனுபவபட்டவருக்கு மட்டுமே புரியும், அந்த வகையில் முன்னாள் முதல்வர் என்ற வகையில் வரதராஜபெருமாள் அவர்களை தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தெரிவு செய்யப்பட்ட குழுவில்  அவர்களின் பங்கு என்பது மிக, மிக முக்கியமானது தமிழ் பேசும் மக்களின அரசியல் தீர்வு தொடர்பான பல சிக்கலான பிணக்குகளை தீர்ப்தற்கு அவரின் சூத்திரத்தை பிரயோகிக்க வேண்டும். (மேலும்...)

தை 11, 2011

கூடுதலான சலுகைகளை பெறுவதற்கே சமாதான பேச்சிலிருந்து புலிகள் வெளியேறினர் -  விக்கிலீக்ஸ்

கூடுதலான சலுகைகளைப் பெறுவதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசாங்கத்துடனான சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து வெளியேறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட அதியுயர் இரகசிய இராஜதந்திர கேபிள் தெரிவித்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இந்த பயங்கரவாத அமைப்பிற்கு போதிய சலுகைகளை வழங்கிய பின்னரும் மேலும் சலுகைகளை பெறவே சமாதான பேச்சுவார்த்தையிலிருந்து விலகியதாக புலிகள் ஜப்பானிடம் கூறினர். விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆலோசகரான அன்ரன் பாலசிங்கம் இதனை ஜப்பானிய சமாதான தூதுவர் அகாஸி மற்றும் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் சிச்சிரோ ஒட்ஸ்சுகா ஆகியோரிடம் கூறினார்.  இதனை அன்ரன் பாலசிங்கம் கூறும்போது விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனும் கூடவே இருந்தார். (மேலும்...)

தை 11, 2011

தமிழ்கட்சிகளின் அரங்கம் தொடர்பில் வெளியான தவறான செய்திக்கு தமிழ்கட்சிகளின் அரங்கம் கண்டனம்!

தமிழ்க் கட்சிகளின் அரங்கமானது அரசியல் கூட்டணியோ தேர்தல் முன்னணியோ அல்ல. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கும் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையிலேயே நாம் இந்த அரங்கத்தை உருவாக்கினோம். இந்தக் கூட்டமைப்பில் அங்கம் பெறும் எந்தக் கட்சியும் எந்தத் தேர்தலிலும் அவர்களின் சுய விருப்பின்படி போட்டியிட முடியும். அவர்கள் தனித்துப் போட்டியிடுவதா அல்லது அரசுடன் சேர்ந்து போட்டியிடுவதா என்பது குறித்துத் தீர்மானிப்பதும் அவர்களின் உரிமை. ஆனால், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் என்று வரும்போது நாம் அனைவரும் இணைந்து செயற்படுவோம் என்பதில் உறுதியாகவுள்ளோம். எனத் தெரிவித்தார். கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இது தொடர்பில் எமது இணையத்தளத்துக்குத் தெரிவிக்கையில், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திலிருந்து நாம் வெளியேறியதாகக் கூறப்படுவது முற்றிலும் தவறானது. (மேலும்...)

தை 11, 2011

கிழக்கில் ஓயாத மழை

மக்கள் அவதி 14 பேர் பலி, ஹெலி, படகுகளில் நிவாரணம், 8 1/2 இலட்சம் பேர் பாதிப்பு

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டோர் தொகை 8 இலட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 86,344 பேர் 203 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் நேற்று கூறியது. வெள்ளம் மற்றும் மண் சரிவினால் இறந்தோர் தொகை 14 ஆக உயர்ந்துள்ள தோடு 12 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித் துள்ளது. வெள்ளத்தினால் கிழக்கு மாகா ணத்தில் இயல்பு நிலை முற்றாகப் பாதிக் கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பாடசாலைகள் நேற்று முதல் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதோடு கொழும்பு - மட்டக்களப்பு இரவு நேர ரயில் சேவையும் நேற்றும் ரத்துச் செய்யப் பட்டது. முப்படையினர் மக்களுக்கு உலர் உணவு வழங்குவதிலும் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதிலும் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர். (மேலும்...)

தை 11, 2011

அரச பிரதிநிதிகள் - தமிழ் கூட்டமைப்பு சந்திப்பு

பேச்சுவார்த்தைகளை தொடர இருதரப்பும் முடிவு

அரசியல் தீர்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் அரச - கூட்டமைப் பிற்கிடையிலான பேச்சுவார்த்தை நேற்று ஆரம்பமாகியுள்ளது. நேற்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்கள் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் பங்கேற்றதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப் பினர் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எம். ஏ. சுமந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர். வடக்கு, கிழக்கில் மனிதாபிமான மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இப்பேச்சுவார்த்தையில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் இணைந்த குழுவாக செயற்படவும் தீர்மானிக் கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சச்சின்வாஸ் குணவர்தன இக்குழுவிற்கு செயலாளராக செயற்படவுள்ளார்.

தை 11, 2011

வட மாகாண அலுவலகங்கள்

திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றும் நடவடிக்கை ஆரம்பம்

வட மாகாண சபை அலுவல கங்களை திருகோணமலையி லிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றும் நடவடிக்கைகள் இன்று முதல் மேற்கொள்ளப் படுகின்றன. திருமலை, வரோதயர் நகரில் இது வரை காலம் இயங்கி வந்த இந்த அலுவலகங்களே யாழ். நகருக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இடமாற்றும் நடவடிக்கைகள் இந்த மாத இறுதியில் பூர்த்திய டைய உள்ள நிலையில் திரு மலையில் கடமையாற்றிய அனைத்து ஊழியர்களும் இனி மேல் வடக்கில் கடமையாற்றவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். (மேலும்...)

தை 11, 2011

வெள்ளம் சூழ்ந்துள்ள

தொப்பிகல பகுதிக்கு ஹெலியில் 2500 கிலோ உணவு அனுப்பி வைப்பு

கிழக்கில் வெள்ளத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட சுமார் முப்பதிற்கும் (30) மேற் பட்டபொது மக்களை விமானப் படையினர் ஹெலிகொப்டர்களின் உதவியோடு நேற்று பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளனர். இதேவேளை, வெள்ளத்தினால் பாதிக் கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கவென பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் 2500 கிலோ எடையுள்ள உலர் உணவுகள் தொப் பிகலை பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டதாக விமானப் படைப் பேச்சாளர் தெரிவித்தார். (மேலும்...)

தை 11, 2011

ஈரான் விமான விபத்தில் 72 பேர் பலி 33 பேர் காயம்

ஈரான் விமானமொன்று விபத் துக்குள்ளானதில் 72 பேர் மரணமானதுடன் 33 பேர் காயமடைந்தனர். காயமடைந்தோரில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாயுள்ளதென அறி விக்கப்பட்டுள்ளது. ஈரானின் அஸர்பைஜான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த விமானம் விபத்துக்குள்ளானது. ஈரான் எயார் விமான நிலையத்துக்குச் சொந்தமான போயிங் 727 என்ற இந்த விமானம் மோசமான காலநிலை காரணமாக உரிய நேரத்துக்கு விமான நிலையத்தை வந்தடையவில்லை. கடுமையான பனி நிலவியதால் தெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து கிளம்பிய இந்த விமானம் உரிய நேரம் தவறி அஸர்பைஜான் மாகாண எல்லையில் விபத்துக்குள்ளானது. (மேலும்...)

தை 11, 2011

பெண்களுக்கான உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்

பெண்களுக்கு தங்களின் பிறப் புரிமையான ஜனநாயக உரிமைகளை வழங்குவதிலும், சில நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. இதனால் தான் இலங்கை உட்பட, பல்வேறு ஆசிய ஏன் மேற்கத்தைய நாடுகளில் கூட, பெண்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றங்களில் பிரதிநிதித் துவப்படுத்துவதற்கு உரிய வாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதில்லை. இந்தியா, இந்த விடயத்தில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்திய அரசாங்கம் இந்திய பாராளு மன்றத்திலும் ஏனைய மாநில ஆட்சிமன்றங்களிலும உள்ளூராட்சி மன்றங்களிலும், பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடுகளை வழங்கியுள்ளது. ஆயினும், இலங்கை இது விடயத்தில் இன்னமும பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றது. இப்போது, பாராளு மன்றம் உட்பட ஏனைய மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பெண்களுக்கு 5 சதவீத பிரதிநிதித்துவமே கொடுக் கப்பட்டு வருகின்றது. (மேலும்...)

தை 11, 2011

இஸ்ரேலை  அடக்கி வையுங்கள்  நியூயார்க்கில் அமெரிக்கர்கள் எதிர்ப்புக்குரல்

கடுமையான பனி நில வியபோதும் பாலஸ்தீனத் திற்கு ஆதரவாகவும், கடு மையான வன்முறைகளை மேற்கொண்டு வரும் இஸ் ரேலுக்கு எதிராகவும் முழக் கமிட்டவாறு நூற்றுக் கணக்கான நியூயார்க் நகர வாசிகள் அந்நகரத் தெருக்களில் வலம் வந்தனர். காசாவின் மீது இஸ் ரேல் கடுமையான போர் தொடுத்து இரண்டாண்டு கள் நிறைவு பெறுவதை அனுசரிக்கும் வகையில் இந்த ஊர்வலம் நடந்தது. அந்தப்போரில் காசாவைச் சேர்ந்த சுமார் 1,400 பேர் கொல்லப்பட்டனர். கொல் லப்பட்டவர்களில் பெரும் பாலானவர்கள் பெண் களும், குழந்தைகளும் ஆவர். இஸ் ரேலின் சட்டவிரோத முற் றுகையை கவனத்திற்குக் கொண்டு வருவதே தங்கள் நோக்கம் என்று ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் கூறினர். (மேலும்...)

தை 11, 2011

பூச்சி மருந்துகளுக்கு பலகட்டத் தடை  கேரள அரசு ஆலோசனை

மிகுதியான அபாயம் கொண்ட நச்சுத்தன்மை, உடைய பூச்சிக் கொல்லி மருந் துகளை கட்டம் கட்ட மாக தடை செய்வது பற்றி கேரள அரசு ஆலோசித்து வரு கிறது. குறிப்பாக காசர்கோடு , இடுக்கி மாவட்டங்களில் இதை நடைமுறைப்படுத்துவது என்று மாநில அரசு திட்டமிடுகிறது. மிகுதியான அபாயம் கொண்ட நச்சுத்தன்மை உடைய பூச்சி மருந்தை சிகப்பு என்றும் மற்றதை மஞ்சள் என்றும் வகைப்படுத்துகிறார்கள். பல்லுயிர் பெருக்கம் வளமிக்க பகுதிகளில் பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு அதிகமான பகுதிகளில் பூச்சி மருந்துத்தடை நடைமுறைப்படுத்தப் படும். ஆயினும் ஏலக்காய் மற்றும் தேயிலைத் தோட்டங் களில் தடை இருக்காது. பூச்சி மருந்துவிற்பனைக்கு விவ சாய அதிகாரி கையொப்ப மிட்ட மருந்துச் சீட்டு இருக்க வேண்டும். (மேலும்...)

தை 11, 2011

துனிஷியாவில் அரசுக்கெதிராக கிளர்ச்சி, 14 பேர் பலி

துனிசியா நாட்டில் வேலையில்லாதோர் அரசுக் கெதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். வட ஆபிரிக்க நாடான துனிசியாவில் வேலையில்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி நாட்டில் உள்ள வேலையில்லாதோர் கடந்த டிசம்பர் 17 ஆம் திகதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்தது. தலைநகர் தாலா நகரின் மேற்கு பகுதியில் நடந்த வன்முறையில் இருவர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து கமீல்லாபிடீ மாகாணத்தில் அரசு பொது கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு சூறையாடப்பட்டன. இதில் 3 பேர் பலியாயினர். இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த வன்முறை சம்பவங்களில் 14 பேர் பலியானதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

தை 10, 2011

இது எப்படியிருக்கு...?

புலிகள் தோற்கடிக்கப்பட்ட விதம் தொடர்பில் உலகிற்கு வெளிப்படுத்த மாநாடு

புலிகள் தோற்கடிக்கப்பட்ட விதம் தொடர்பில் உலகிற்கு வெளிப்படுத்தவும், எவ்வாறு தோற்கடிக்கப்பட்டார்கள் என்பதனை எடுத்தியம்பும் சர்வதேச மாநாடொன்று இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு 60 நாடுகளைச் சேர்ந்த இராணுவ அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக புலிகளைத் தோற்கடிப்பதற்குப் பாதுகாப்புத் தரப்பினர் எடுத்த முயற்சிகள் குறித்து இந்த மாநாட்டில் விளக்கமளிக்கப்படவுள்ளது.புலிகளைத் தோற்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் பயன்படுத்திய தந்திரோபாயங்கள் குறித்து அறிந்து கொள்ளப் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகள் பயன்படுத்திய வெளிநாட்டு ஆயுதங்கள் தொடர்பிலும் இந்த மாநாட்டின்போது அம்பலப்படுத்தப்படும். சில நாடுகளின் ஆயுத உற்பத்திகள் எவ்வாறு புலிகளின் கைகளுக்குக் கிட்டியது என்பது தொடர்பிலும் இங்கு விளக்கம் கொடுக்கப்படும். ஐநா சபைக்கு பதிலடியா? அல்லது விக்கிலீக்ஸ் இற்கு பதிலடியா? அல்லது மேற்குக்கு செய்தியா...?

தை 10, 2011

கிழக்கில்

கடும் மழை, பெருவெள்ளம் 8 இலட்சம் பேர் பாதிப்பு

வடகீழ் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண் சரிவினால் நாட்டில் சுமார் எட்டு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்றுத் தெரிவித்தனர். உயிரிழந்திருப்பவர்களில் மூவர் மண் சரிவு காரணமாகவும் ஒருவர் வெள்ளத் தினாலும் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். இம்மழை வீழ்ச்சியினால் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ள நிலைகளினால் சுமார் இரண்டு லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஏழு லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை, மட்டக்களப்பு இணைப்பாளர்கள் கூறினர். இவ்வெள்ள நிலையினால் இருப்பிடங் களை இழந்து சுமார் 14 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 55 ஆயிரம் பேர் 131 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர்கள் கூறினர். (மேலும்...)

தை 10, 2011

யாழ்ப்பாணம் சுபாஷ் ஹோட்டலை உரிமையாளரிடம் ஒப்படைக்க முடிவு

யாழ்ப்பாண நகரின் மத்தியில் இராணுவத்தின் 51வது படைப்பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் சுபாஷ் ஹோட்டல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் உரிமையாளரிடம் கையளிக்கப்பட விருப்பதாக யாழ். இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். 51வது படைப் பிரிவின் தலைமையகம் அமைந்திருக்கும் பகுதியிலுள்ள அனைத்து தனியார் கட்டடங்களும் பொது மக்களிடம் கையளிக்கப்படவிருப்பதுடன், 51வது படைப் பிரிவின் தலைமையகம் பிறிதொரு இடத்துக்கு மாற்றப்படவிருப்பதாக அவர் கூறினார். யாழ். சென்றிருக்கும் ஊடகவியலாளர்கள் குழுவைச் சந்தித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். யாழ்நகர மத்தியில் உள்ள இராணுவ முகாம்கள் அனைத்தும் அகற்றப்படவிருப்பது டன், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் ஆங்காங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

தை 10, 2011

அழைத்துச் செல்லப்பட்ட என் கணவர் எங்கே?

புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியின் மனைவி கேள்வி எழுப்புகின்றார்

விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதியாக இருந்த எனது கணவர் என் கண் முன் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும் ஆனால் தற்போது அவர் எங்குள்ளார் என்று தெரியவில்லை என அவரின் மனைவி ஆர்.வெரோணியா (வயது-40) மன்னார் மடு பிரதேசத்தில் நடைபெற்ற நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று ஞாயிறு சாட்சியமளித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ள விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட தளபதி யான் என அழைக்கப்படும் அந்தோனி ராயப்பு அவரின் மனைவி வெரோனியா ராயப்பு என்பவரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.  (மேலும்...)

தை 10, 2011

கல்முனைக்குடிவாசி நீரில் அடித்து செல்லப்பட்டு மரணம்

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி உகன வீதியில் பயணித்த பயணியொருவர் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். கல்முணைக்குடி 1ஆம் குறிச்சியைச் சேர்ந்த எம். ஐ. சுலைமாலெப்பை (றிஸானா றைஸ் உரிமையாளர்) வயது 60 என்பவரே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவராவார். 4 பிள்ளைகளின் தந்தையான இவர் கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி மினி பஸ்ஸில் இரவு 9.30 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த பொழுது உகன வீதியில் பக்கியல்ல எனும் இடத்தில் திடீரென வெள்ள நீர் அதிகரித்ததால் பஸ் வீதியை விட்டு விலகியதை யடுத்து பயணிகள் எல்லோரும் பஸ்ஸை விட்டு கீழே இறங்கியுள்ளனர். மீண்டும் திடீரென நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து இவர் நீரில் இழுத்துச்செல்லப் பட்டுள்ளார். இது தொடர்பாக பக்கியல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தை 10, 2011

SLMM tipped-off LTTE

A move by Sri Lanka Monitoring Mission (SLMM) made a gunrunning vessel belonging to the  Liberation Tigers of Tamil Eelam (LTTE), escape from Sri Lanka Navy, whistle-blower website- Wikileaks reveals. The highly confidential cable sent by Colombo US Embassy to Washington, dated October 23, 2003 was classified by Colombo’s Charge´ d´Affaires James F. Entwistle. Entwistle reports that this series of events led to then President Chandrika Bandaranaike Kumaratunga requesting the Norwegian government to remove the then incumbent SLMM chief Tryggve Teleffsen. (more....)

தை 10, 2011

சூடான் இரண்டாக பிரியுமா?

குறைந்தபட்சம் 90 சதவீதம் பேராவது நாடு இரண்டாக பிரிய ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெற்கு சூடானில் வசிப்பவர்கள் பெரும்பாலானவர்கள் கிறிஸ்துவர்கள், இவர்கள் தங்களை பெரும்பாலும் அராப் முஸ்லிம்கள் வசிக்கும் வடபகுதியினர் பல ஆண்டு காலமாக அடக்கி ஆண்டு வருவதாக எண்ணுகின்றனர். சூடான் 1956 ஆம் ஆண்டு பிரிட்டன் மற்றும் எகிப்தின் கூட்டாச்சியில் இருந்து சுதந்திரம் பெற்றது. அதன் பின்னர் 32 ஆண்டுகளுக்கு தெற்கு மற்றும் வடக்கு சூடானுக்கு இடையில் கடுமையான உள்நாட்டு போர் இடம்பெற்று வந்தது. தென் பகுதி கிளர்ச்சியாளர் கள் சூடான் மக்கள் விடுதலை இராணுவம் என்ற பெயரில் இயங்கி வந்தனர். தெற்கு மற்றும் வடக்கு சூடானுக்கு இடையில் இடம்பெற்று வந்த உள்நாட்டு போர் 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தோடு முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில் ஒன்றினைந்த நாடாக இருப்பது அல்லது சுதந்திரத்தை தேர்ந்து எடுப்பது என்பது தென்பகுதியின் விருப்பம் மற்றும் உரிமை என்று ஏற்கப்பட்டது. (மேலும்...)

தை 10, 2011

கண்ணாடியின் பயன்பாடு 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது

கண்ணாடியில் முகம் பார்க்காதவர்கள் எவருமே இல்லையென்று சொல்லலாம். ஏனெனில் அதில்தானே எவரும் தனது முகத்தைப் பார்த்து ரசிக்க முடியும். கண்ணாடிகளில் பல வகைகள் உண்டு. பண்டைக்கால எகிப்தின் அகழ்வாராய்ச்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஆபரணங்கள் செய்யப் பயன்பட்ட கண்ணாடி மணிகள் கி.மு. 2500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று கருதப்படுகின்றது. சிலிக்கா கலவையினால் செய்யப்பட்ட சிறு அச்சுகளை உருகிய கண்ணாடிக்குள் தோய்த்து சிறு கண்ணாடிக் குவளைகள் செய்யும் முறை கி.மு. 1500 ஆண்டுகளில் உபயோகத்திலிருந்ததும் அறியப்பட்டுள்ளது. (மேலும்...)

தை 10, 2011

குவாமி கட்சி மீண்டும் அரசுக்கு ஆதரவு

 

பாகிஸ்தானில் பிரதமர் கிலானி அரசு தப்பியது

 
பாகிஸ்தானில் பிரதமர் யூசுப் ரசாகிலானி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதற்கு முக்கிய கட்சியான முத்தாகிதா குவாமி இயக்கம் ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் இக் கட்சி திடீரென தனது ஆதரவை வாபஸ் பெற்றது. இதற்கு விலைவாசி உயர்வு, பெருகி வரும் தீவிரவாதம் உள்ளிட்ட காரணங்களை கூறியது. இதனால் கிலானியின் அரசு மெஜாரிட்டி இழந்து கவிழும் ஆபத்து உருவானது. இதைத் தொடர்ந்து குவாமி இயக்கம் கட்சி தலைவர்களுடன் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் சமரசம் ஏற்படவில்லை. (மேலும்...)

தை 10, 2011

குஜராத்தில் ஒரு நகல் தாஜ்மகால்

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள தோல்கா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கலை பொருட்கள் தயாரிப்பவர்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். கடவுள் சிற்பங்கள், நாட்டில் உள்ள, பாரம்பரிய சின்னங்கள் உள்ளிட்டவற்றை சிறு சிறு பொம்மைகளாக செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு தாஜ்மகாலை அதன் நிஜ அளவிலேயே உருவாக்கினால் என்ன என்று தோன்றியது. அதன்படி, கட்டடக்கலை நிபுணரும், கலைபொருள் தயாரிப்பாளருமான இஸ்தி யாக் அலி தலைமையில் 54 பேர் கொண்ட குழுவினர் இணைந்து 51 அடி உயரமும், 72 அடி நீள, அகலமும் கொண்ட மிகப்பெரிய தாஜ்மகாலை உருவாக்கினர். தெர்மாக்கோல் மற்றும் பிளைவுட்டுகளைக் கொண்டு அச்சு அசலாக, இந்த நகல் தாஜ்மகால் உருவாக் கப்பட்டது. ரூ. 90 இலட்சம் செலவில், நான்கு ஆண்டுகளில் இது உருவாக்கப்பட்டது. (மேலும்...)

தை 10, 2011

முதல் மனிதன் தோன்றியது எங்கே? வரலாற்றை திருத்தும் புதிய முடிவு

உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான்தோன்றினான் என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இது நாள் வரையில், கடந்த இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன் முதலில் ஆபிரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது. (மேலும்...)

தை 10, 2011

உலகின் பல நாடுகளில்

வானில் இருந்து மடிந்து விழுந்த 1000 புறாக்கள்

அமெரிக்காவின் ஆர்கன் சர்ஸ், டெக்காஸ் மற்றும் சுவீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வானில் இருந்து இறந்த நிலையில் பறவைகள் கீழே விழுந்தது ஆச்சரிய அலைகளை ஏற்படுத்தின. இவை வானில் இருந்து விழுந்தது எப்படி? என்ற ஆராய்ச்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் இத்தாலியில் 1000க்கும் மேற்பட்ட புள்ளிவடிவிலான புறாக்கள் வானில் இருந்து செத்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வடக்கு இத்தாலியில் உள்ள பாயன்ஷா நகரில் கடந்த 5 நாட்களாக இச்சம்பவம் நடக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 300க்கும் மேற்பட்ட புறாக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. (மேலும்...)

தை 09, 2011

உள்ளூராட்சி தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகள்

பிரதான கட்சிகளை விடுத்து எமது சிறுபான்மையினக் கட்சிகளை உற்று நோக்கினால் அவை மக் களுக்குத் தமது வாக்குறுதிகளையும், வீரவசனங்களையும் அள்ளி இறைப்பதற்கு முன்னதாகத் தமக்கிடையே பனிப்போரை நடத்த ஆரம்பித்துள்ளன. தமிழ்க் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பல சிறு சிறு தமிழ்பேசும் கட்சிகள் வாய் வீச்சுக்களில் ஈடுபட்டுள்ளன. எனினும் பிரதான சிறுபான்மைக் கட்சிகள் அனைத்தும் இப்போது அரசாங்கத்துடனேயே இருக்கின்றன. அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதையே இவற்றில் பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. ஆனாலும் ஒரு கட்சி அதற்கு விருப்பம் தெரிவித்தால் அடுத்த கட்சி அதைச் சாடுவதும், அதன் பின்னர் அந்தக் கட்சி இதைச் சாடுவதுமாக உள்ளது. வெளியே இவ்விடயங்கள் பெரிதாக வராவிட்டாலும் கட்சி வட்டாரங்கள் இதைப் பெரிதாக்கி அரசியல் இலாபமடைய முனைகிறது. (மேலும்...)

தை 09, 2011

பண்டிதருக்கு பாமரனின் வேண்டுகோள்

இது போன்ற ஆரோக்கிமற்ற கருத்துக்களை சூத்திரம் இணையத்தளத்தில் வெளியிடுவதில் எமக்கு அவ்வளவாக உடன்பாடுகளும் இல்லை. இது தமிழ் மக்கள் அரங்கத்தின் வலுப்பெற்றுவரும் ஐக்கியப்பாட்டையும், ஏற்பட்டுவரும் புரிந்துணர்வுகளை விரும்பாதவர்கள் செய்யும் செயற்பாடாகத்தான் பார்க்க முடிகின்றது. விமர்சனம், சுயவிமர்சத்தில் எமக்கு நம்பிக்கையும், உடன்பாடும் உண்டு. ஆனால் கொச்சைப்படுத்திய வார்த்தை பிரயோகங்களுடன் கூடிய 'தனிப்பட்ட' காழ்ப்புணர்ச்சியை வீசும் பண்டிதர்களின் சலசலப்புகளில் எமக்கு உடன்பாடும் இல்லை. இச் சலசலப்புகளை இனியும் தொடரா வண்ணம் இருத்தல் நாகரிகமாகவும், சரியானதாகவும் இருக்கும் என நம்புகின்றோம். எனவே இவை போன்ற தனி நபர் தாக்குதல்களை இத்தோடு நிறுத்திக் கொள்ளுமாறு விநயமாக யாபேரையும் கேட்டுக் கொள்கின்றோம். - சூத்திரம் ஆசிரியர் குழாம்

 "வெண்ணை திரண்டு வரும் வேளையில் தாழியை உடைக்க முனைவது போல் இன்று தமிழ் கட்சிகள் ஒன்று பட்டு சிந்தித்து பேசும் ஆரோக்கியமான தளம் ஒன்று உருவாகி வருகையில் அந்த முயற்சிகளை உடைத்து நாசம் செய்ய கிளம்பி விட்டார் பெருமாள் என்றும், "ஐக்கிய முயற்சிகளுக்கு கடந்த காலங்களை போல் கல்லறை கட்டி விடாதீர்கள் என்றும் கூறிக்கொண்டே அந்த முயற்சிகளில் நீங்கள்தான் ஈடுபட்டு, அந்த நோக்கத்தை எய்துவதற்காக பெருமாளைப் பலிக்கடாவாக்கும் தீர்மானம் செய்து மேற்கொள்ளப்படுவதுபோல் தெரிகிறதே! (மேலும்...)

தை 09, 2011

பிர்லா தப்பியோட வாஜ்பாய் உதவி!

(அருணன்)

ஜனதா கட்சி ஆட்சி வந்த பிறகும் அரசாங்கத் தில் என்ன நடக்கிறது என்பது பிர்லாவுக்குத் தெரிந்தது. உள்துறை மந்திரியின் வேண்டு கோளை நிராகரிக்கிற அளவுக்கு வெளியுறவுத் துறை மந்திரியின் அன்பைப் பெற்றிருந்தார் பிர்லா! அவரோ இந்திராவின் கையாள்! உருப்படுமா ஜனதா ஆட்சி? இந்த விஷயத்தில் இதுவல்ல உச்ச கட்டக் காட்சி. அது இனிமேல் தான் வரப்போகிறது. பிர்லாவின் பாஸ்போர்ட்டை முடக்குவதில் தோல்வி கண்ட சரண்சிங், விஷயத்தை அந்த அளவில் விட்டுவிடவில்லை. காங்கிரசுக்கு சட்ட விரோதமாகப் பணம் திரட்டித் தந்த விவகா ரத்தில் அவரைக் கைது செய்து விசாரிக்க முடிவு செய்தார். இது பற்றிய நம்பகமான தகவல் முன் கூட்டியே வந்து விட்டது பிர்லாவுக்கு. அவர் தரப்பு நடவடிக்கை-” நான் முதலில் அடல்ஜி யைச் சந்தித்தேன். நிலைமை எப்படி இருக்கி றது என்று கேட்டேன். நிலைமை மோசமாகத் தான் இருக்கிறது என்றும், எந்த நேரத்திலும் நான் கைதாகப்படலாம் என்றும் அவர் கூறினார்”. (மேலும்...)

தை 09, 2011

தட்டுத்தடுமாறும் கூட்டமைப்புத் தலைவர்கள்

நேற்று ஒரு அறிக்கை; இன்று அதற்கு முரணான கருத்து; நாளை மற்றொரு சம்பந்தமே இல்லாத அறிக்கை!

(க. சிவராசா)

தமிழக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்திற்கு எதிராகவும் மற்றும் சிலர் அரசாங்கத்தை மறைமுகமாச் சாடியும் வெளியிட்டுவரும் கருத்துக்கள் தொடர்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளது. இன்று தமிழ் ஊடகங்களை மட்டுமே நம்பி அதன் மூலமாக அரசியல் நடத்திவரும் கூட்டமைப்பு அரசியல் தீர்வில் இதுவரை தமது உண்மையான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை. நேற்று ஒரு அறிக்கை, இன்று அதற்கு முரணான கருத்து நாளை மற்றொரு சம்பந்தமே இல்லாத அறிக்கை என்பதாகவே இவர்களது காலம் கடந்து வருகிறது. தாளம்போடும் தமிழ் ஊடகங்கள் இவர்கள் சொல்வதுதான் தமிழ் மக்களது வேதவாக்கு என்பதாக அவர்களது சகல அறிக்கைகள் மற்றும் கருத்துக்களுக்கு அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறது கவலைக்குரிய விடயமே. (மேலும்...)

தை 09, 2011

'முதுகில் குத்திய ரணிலை மனோ சந்தித்தது பெருந்தவறு'

தம்பிபிரபா, அண்ணனுக்கு சாட்டை இணைந்து செயற்படவும் அழைப்பு

பொதுத் தேர்தலில் நம்பிக்கைத் துரோகம் இழைத்து முதுகில் குத்திய ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மனோ கணேசன் மீண்டும் சந்தித்துப் பேசியிருப்பது வெட்கித் தலைகுனியும் செயலாகுமென பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். தமிழ் மக்களின் நலன் கருதி அவர் அரசாங்கத்துடன் இணை ந்து செயற்படுவதே புத்திசாதுரிய மான அரசியலாகுமென்றும் அவர் தெரிவித்தார். அதேநேரம், ஐ.தே.கவுடன் இணைந்தோ, தனித்தோ மனோ கணேசன் கொழும்பு மாநகர முதல்வராகுவது வெறும் பகற்கனவாகுமென்று குறிப்பிட்ட அவர், அதற்கு ஒருபோதும் ரணில் விக்கிரமசிங்க இடமளிக்கமாட்டாரென்றும் கூறினார். (மேலும்...)

தை 09, 2011

பயம், அழுத்தம் காரணமாகவே புலிகளுடன் அப்பாவி மக்கள் இணைந்து செயற்பட்டனர்

வன்னிப் பிரதேசம் விவசாயமும், மீன் பிடியும் நிறைந்த ஓர் வளமான மாவட்டமாகும். இப்போது சில பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்காக அரசாங்கத்துக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இருந்தும் இன்னும் அதிகமாகப் பல செய்யப்பட வேண்டியுள்ளன. எனவே, காலநேரம் வரும்போது பல புதிய திட்டங்களையும், ஆலோசனைகளையும், முன் வைப்பேன் என்று மக்களுக்கு இச்சபையின் மூலம் வாக்குறுதியளிக்கின்றேன். கடந்த காலங்களில் மக்கள் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் பற்பல தேவைகளுக்காகவும் உதவிகளுக்காகவும் அலைந்து திரிந்ததைப் பார்த்திருக்கிறேன். அதுபோலவே மன்னாருடன் இணைப்பு மாவட்டங்களான வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்து வந்த மக்களும் அதே பரிதாப நிலையில் அலைந்ததைக் கண்டுள்ளேன். எனவே, நான் மன்னாரில் நிரந்தரமாகத் தங்கியிருந்து மக்களின் தேவைகளில் துணையாயிருப்பேன். உதவுவேன் என்று வாக்களிக்கின்றேன். எனது சேவை தாமதமின்றி கிடைக்கும் என்பதனையும் இச்சபையில் நான் உறுதியளிக்கிறேன். (மேலும்...)

தை 09, 2011

இனவாதம் பேசுவோர் தமது இனத்திற்காக பேசவில்லை தமது அரசியல் இருப்பிற்காகவே பேசுகின்றனர்

இன்று நாட்டில் இனவாதமாகப் பேசுவோர் தமது இனத்திற்காக அவ்வாறு பேசவில்லை. மாறாக இனவாதத்தைக் கக்கி எதிர்காலத்தில் தமது அரசியல் இருப்பைத் தக்கவைத் துக் கொள்வதே இவர்களது நோக்க மாகவுள்ளது. அந்த வகையில் தேசிய கீதம் தொடர்பான சர்ச்சையும் அத்த கைய இனவாதத்தின் ஒரு வடிவமே தவிர, இனத்திற்காகவோ அல்லது மொழிக்காகவோ அல்ல. இந்த தேசிய கீத விவகாரம் அரசியலமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அது தெரியாமலேயே ஒருசில அரசியல் வாதிகள் இனவாத ரீதியில் தமது கருத்துகளை முன்வைத்து வருகின்ற னர். அப்படியானால், இதுபற்றிக் கருத்துக் கூறும் இந்த அரசியல்வாதி கள் எமது நாட்டு அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லையா? (மேலும்...)

தை 09, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் ஒன்று கூடல்

மூன்று தசாப்த காலமாக இலங்கையில் இடம்பெற்று வந்த யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இத்தகைய முக்கியமான மாநாடு இங்கு நடைபெறுவது பாதிக்கப்பட்டிருந்த தமிழ்பேசும் சமூகத்திற்குப் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது என்றால் அது உண்மை. அதிலும் இதுபோன்ற மாநாடுகள் யாழ்ப்பாணத்தில் அல்லது கிளிநொச்சியில் நடைபெற்றால் அந்தப் பலன் தமிழ் மக்களை முழுமையாகச் சென்றடையும். யுத்த வடுக்கள் தற்போதுதான் அப்பகுதிகளில் ஆற்றுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் இந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு இடம்பெறும்போது அது நிச்சயம் கிளிநொச்சியில் நடத்தப்பட வேண்டும் என்பதே எமது கருத்தாகும். (மேலும்...)

தை 09, 2011

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

சிறுபான்மைக் கட்சிகள் தீவிரம், அரசுடன் இணைவதில் ஆர்வம்

தமிழ்க் கட்சிகள் ஓரணியாக இணைந்து போட்டியிடுவதற்காக மேற்கொண்ட முயற்சியும் தோல்வியில் முடிந்துள்ளது. இதனால், தமிழ்க் கட்சிகள் தனித்துக் களமிறங்குவதற்காக வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தச் சூழ்நிலையில் ஆளுந் தரப்புடன் இணைந்து போட்டி யிடுவதற்கும் பெரும்பாலான கட்சிகள் ஆர்வமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன. ஜனாதிபதி, பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, மாகாண சபை நிர்வாகம் இவை அனைத்து விடயங்களையும் சிந்தித்து சில தமிழ்க் கட்சிகள் அரசாங்கக் கட்சியுடன் இணைந்து போட்டியிடு வதெனத் தீர்மானித்துள்ளன. (மேலும்...)

தை 09, 2011

தலைமுறை இடைவெளியை நிரப்ப உதவும் மாநாடு

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 கொழும்பு - இலங்கை

மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அதன் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதி ஆற்றிய உரை

செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போன தேசத்தில் மொழிக்காகவும் பூர்வீக வாழ்விட உரிமைக்காகவும் உயிரிழந்து, சொத்திழந்து, இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து ஏதிலிகளாகிய போதிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளிலும் தமிழை ஒலிக்கச் செய்கின்ற எம்மவரின் அடுத்த சந்ததியின் நாவில் தமிழ் வாழுமா என்ற ஐயப்பாட்டுடன் சில ஆய்வாளர்கள் பாதகமாகச் சிந்திக்கும் தருணத்தில் பனி பெய்யும் தேசத்தில் பிறந்த தமிழ்க்குழந்தைகள் தமிழ் மெல்லத் துளிர்க்கும் என்று கவிதை எழுதி பாடிக் கொண்டிருக்கின்றனர். ஐரோப்பிய மொழிகளை கற்றவர்கள் அம்மொழிகளின் இலக்கியத்தை தமிழுக்கு பெயர்த்து புதிய வரவுகளை தருவதுடன், ஐரோப்பிய மொழிகளுக்கு எமது தமிழ் இலக்கியங்களை பெயர்த்துக் கொண்டிருக்கின்றனர். (மேலும்...)

தை 09, 2011

மட்டக்களப்பில் அடை மழை

24 மணி நேரத்தில் 312 மி. மீற்றர் மழை வீழ்ச்சி

நாட்டில் பல்வேறு இடங்களில் கடும் மழை பெய்து வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 312 மி. மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய மழை நிலவிவருவதால் வீடுகள் பல சேதமடைந்துள்ளதாகவும்,வீதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை வெல்லாவெளி பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு கிராமத்து மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான நிவாரண உதவிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தை 09, 2011

தீர்வு தொடர்பான அரசு - தமிழ்க்கூட்டமைப்பு இணைந்த குழு திங்களன்று சந்திக்க தீர்மானம்

அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 10 ஆம் திகதி திங்கட்கிழமை சந்திக்கவுள்ளது. அலரி மாளிகையில் இந்தக் குழுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட இக்குழுவின் அங்கத்தவர்களை 10 ஆம் திகதி கூட்டத்துக்கு வருமாறு ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்தக்குழுவில் அரசாங்கத்தின் சார்பில் முன்னாள் பிரதமரும் அமைச்சருமான ரட்னசிறி விக்கிரமநாயக்க, அமைச்சர்களான ஜி.எல். பீரிஸ், நிமல் சிறிபால டி சில்வா, ஆகியோர் இடம்பெற்றுள்ள அதன் தலைவர் இரா. சம்பந்தன், எம்.பி.க்களான மாவை சேனாதிராஜா, எம்.சுமந்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர். (மேலும்...)

தை 09, 2011

நாட்டு நடப்பு

(சுப்பு)

விடுவித்த புலிகளை மீண்டும் கைது செய்கிறார்கள் எனச் சிலர் கூச்சலிட்டு வருகிறார்கள். விடுவித்த சிலர் செய்யும் வேலைகள் இவர்களுக்குத் தெரியுமா? இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற ஒருசிலர் செய்யும் வேலைகள் பத்திரிகைகளில் வருவதுண்டு. அதேவேலையைத் தான் இவர்களில் ஒரு சிலரும் செய்கிறார்கள். அப்படியானவர்களைக் கைது செய்யாமல் வேடிக்கையாக பார்க்க முடியும்? இந்நாட்டில் எல்லோருக்கும் ஒரே சட்டம்தானே. (மேலும்...)

தை 09, 2011

தமிழ்க் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்

(சுஐப் எம். காசிம், பி. வீரசிங்கம்)

தமிழரின் உரிமை கோரி அரசியலில் ஈடுபட்ட தமிழ்க் கூட்டமைப்பு புலிகள் பலம் பெற்ற காலகட்டத்தில் அவர்களது எண்ணங்களையும் கருத்துக்களையும் பாராளுமன்றத்திலும் வெளியிடங்களிலும் விளம்பரப்படுத்தும் ஓர் அமைப்பாகவே செயற்பட்டதே தவிர சொந்தமாகத் தமது எண்ணங்களைத் தெரிவிக்கும் ஒரு கட்சியாக இயங்கவில்லை. புலிகள் ஒழிந்த பின்னர் தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் சிறிய மாற்றம் ஏற்பட்ட போதும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தொடர்பாக தெளிவான நிலைப்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. போர் முடிந்த பின்னரான அமைதிச் சூழலில் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு - கிழக்கு மக்களின் மீள்கட்டமைப்பு தொடர்பாக அரசு உள்ளன்போடும் அனுதாபத்தோடும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரியவில்லை. இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது. இன ஐக்கியத்தை வலுப்படுத்தவும் இன ஒருமைப்பாடு தொடர்பான ஆரோக்கியமான நிலைமையை ஏற்படுத்தவும் அவர்களது கருத்துக்கள் உதவுவதாக இல்லை. புலிகளின் அழுத்தங்களுக்கு உட்பட்டு செயற்பட்ட காலகட்டம் போலவே தற்போது ஏதோ ஒரு புற அழுத்தத்துக்கு ஆட்பட்டு இயங்குவது போலத் தெரிகின்றது. (மேலும்...)

தை 08, 2011

அம்பலப்படுத்துகின்றது விக்கிலீக்ஸ்

புலிகளின் குரல் வானொலி உருவாகியதன் பின்னணி

2002 ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியானது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலிகளின் குரல் வானொலிச் சேவைக்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய நோர்வேயிடம் உதவி கோரியதாக விக்கிலீக்ஸ் தளத்தினை ஆதாரமாகக் காட்டி நோர்வேயின் அப்டன் போஸ்ட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்திக்கமைய இவ்வுபகரணங்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் நோர்வே தூதுவராலயத்தின் பேரில் கொண்டுவரப்பட்டமையினால் வரி அறவிடப்படவில்லையெனவும், இது சமாதான செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பின்னர் பாதுகாப்பு அமைச்சினூடக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளன. (மேலும்...)


தை 08, 2011

கொழும்பில் நடைபெற்ற தமிழ்க் கட்சிகள் அரங்க கூட்டம்

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று காலை 10.00 மணியளவில், கொழும்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் இல்லத்தில் கூடியது. இதன் போது மூன்று முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கட்சிகளின் தனித்துவம் மற்றும் களநிலவரங்களைக் கருத்திற்கொண்டு எந்தவகையிலும் அரங்கத்தை தேர்தலுக்காகப் பயன்படுத்துவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாவதாக, யாழ் நிலவரம் மற்றும் மக்கள் பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமெனக் கோருவது, மூன்றாவது, தேசிய கீதம் போன்ற பிரச்சினைகளை உருவாக்கி தமிழ் மக்களை, பங்காளிகள் என்ற வகையில் துன்புறுத்தக் கூடாது எனக் கேட்டுக் கொள்வது என்பன குறித்து தமிழ் அரங்கத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. (மேலும்...)

தை 08, 2011

யாழ். குற்றச்செயல்களின் பின்னணியில் என்ன?

யாழ்ப்பாணத்தில் இன்று புதியதொரு கலாசாரம் காணப்படுகின்றது. இளைஞர்கள் காதில் தோடு அணிவது மற்றும் தலைமயிர் வளர்ப்பது உட்பட பல்வேறு கலாசார சீர்கேடுகளையும் காணக் கூடியதாகவுள்ளது. இதே போன்று அண்மையில் யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற களவுகள் கொலைகள் உட்பட பல்வேறு குற்றச்செயல்களின் பின்னணியில் தனிப்பட்ட காரணங்களே காணப்படுகின்றன. இத்தகைய குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதில் பொலிஸாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பை வழங்குவதன் மூலமே கட்டுப்படுத்த முடியும். யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி நிற்கும் இளைஞர்கள் வீதியில் செல்லும் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளின் மீது சேட்டை செய்யும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதனை அங்கீகரிக்க முடியாது. இதனையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன் இத்தகையவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். (மேலும்...)


தை 08, 2011

உள்ளூராட்சி மன்ற தேர்தல் - 2011

 

20ம் திகதி முதல் 27வரை வேட்பு மனுக்கள் ஏற்பு, தேர்தல் ஏற்பாடுகளில் கட்சிகள் மும்முரம்

 

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் எதிர்வரும் 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்கப்படுமென தேர்தல்கள் செயலகம் நேற்று அறிவித்துள்ளது. சுயேச்சைக் குழுக்கள் 26ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் எனவும் தேர்தல் செயலகம் கூறியது. இதேவேளை தமிழ் கட்சிகள் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக தமிழ் கட்சி வட்டாரங்கள் கூறின. இது தொடர்பில் தமிழ்கட்சிகளிடையே பேச்சு நடைபெறுவதாக அறிவிக்கப்படுகிறது. (மேலும்...)

தை 08, 2011

பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இலங்கை-இந்தியா ஒப்பந்தம் கைச்சாத்து

கொழும்பு-தூத்துக்குடி,  தலைமன்னார்-இராமேஸ்வரம், வாரம் மூன்று சேவைகள், பயணிக்கு 100 கிலோ எடுத்துச்செல்ல ஏற்பாடு

இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் பயணிகள் கடல் போக்குவரத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை நேற்று பிற்பகல் கொழும்பில் கைச்சாத்திடப் பட்டது.  இதன்படி கொழும்பு- தூத்துக்குடி, தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் போக்கு வரத்து சேவை ஆரம்பிக்கப்படவிருக் கின்றது. என்றாலும், கொழும்புக்கும், தூத்துக்குடிக்குமிடையில் முதலில் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. (மேலும்...)

தை 08, 2011

புதிதாக 336 தமிழ் பொலிஸார் நேற்றுமுதல் சேவையில்

அரசாங்கத்தின் முயற்சியால் கிழக்கு மாகாணத்திலிருந்து 2,000 தமிழ் பேசும் பொலிஸாரை சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்திருந்த நிலை யில், தற்பொழுது வட பகுதியிலிருந்து 16 பெண்கள் உட்பட 336 பேர் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். கடந்த காலங் களில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் புலிகளின் கட்டுப்பாட் டில் இருந்தபோது, பொலிஸ் மற்றும் முப் படைகளுக்குத் தமிழ் இளைஞர், யுவதிகள் இணைவதற்குக் கட்டுப்பாடுகள் காணப் ட்டிருந்தன. (மேலும்...)

தை 08, 2011

மட்டக்களப்பில் சுயேச்சைக் குழு கட்டுப்பணம் செலுத்தியது

முதலாவது சுயேச்சைக் குழு மட்டக் களப்பு மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கட்டுப்பணம் செலுத்தியது. காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஏ. ஜி. எம். ஹாறூன் என்பவர் சுயேச்சைக் குழுவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி வேட்பு மனுப்பத்திரத்தை பெற்றுக்கொண்டார். மட்டக்களப்பு மாவட்ட மேலதிக உதவித் தேர்தல் ஆணையாளர் எஸ். சுதாகரன் முன்னிலையில் இக்கட்டுப்பணத்தினை இச் சுயேட்சைக் குழு செலுத்தியது. எதிர்வரும் 26ம் திகதி நண்பகல் 12 மணி வரை சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்த முடியும்.

தை 08, 2011

அவுஸ்திரேலியாவில் தொடரும் வெள்ள அபாயம்

அவுஸ்திரேலியாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதி களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளன. குயின்ஸ்லாந்து மாகாணம் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள 40 நிலக்கரி சுரங்கங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் நிலக்கரி ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை வெள்ள நீரில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே மிக அதிக அளவில் நிலக்கரி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அவுஸ்திரேலியா நான்காவது இடத்தில் உள்ளது. இதில் பெருமளவு குயின்ஸ்லாந்து மாகாணத்தி லிருந்துதான் ஏற்றுமதியாகிறது. இங்குதான் மிகப்பெரிய நிலக்கரி ஏற்றுமதி மையம் உள்ளது. இங்கிருந்து வாரத்துக்கு 13 இலட்சம் டொன் நிலக்கரி ஏற்றுமதியாகிறது. வெள்ள நீரில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தை 08, 2011

நாட்டிற்கு தேவையான நற்குணசீலர்களை பல்கலைக்கழகங்கள் உருவாக்கும்

1940ஆம் ஆண்டு தசாப்தத்திலும் மற்றும் 1950ஆம் ஆண்டு தசாப்தத் தின் ஆரம்பத்திலும் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நாட்டில் புரட்சி செய்ய வேண்டும் என்ற உத்வேகம் இருந்த காரணத்தினால், சில சமூக சீர்திருத்த போராட்டங்களை அமைதியான முறையில் வன் முறைகளின்றி ஒழுக்கமாக நடத்தினார்கள். அன்று பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தங்களை இடதுசாரிகள் என்று வர்ணம் தீட்டிக் கொண்டு, இத்தகைய ஆர்ப்பாட்டங்களை செய்வதுண்டு. ஓரிரு சந் தர்ப்பங்களில் அவர்கள் பொலிஸாருடன் சிறு மோதல்களில் ஈடுபட் டாலும், அவை என்றுமே விஸ்வரூபம் எடுத்து நாட்டின் அமைதிக் கும், சட்டத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. (மேலும்...)

தை 08, 2011

புலிகளுக்குச் சொந்தமான கப்பல்களைக் கைப்பற்றுவதில் பல்வேறு சட்டச்சிக்கல்கள் நிலவுகின்றன - அரசாங்கம்

புலிகள் சூட்சுமமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் செயற்பட்டு மேற்படி கப்பல்களை சர்வதேச நாடுகளின் நிறுவனங்கள் சிலவற்றினூடாக பதிவுசெய்துள்ளமையினாலேயே இந்தச் சட்டச் சிக்கல்கள் நிலவுகின்றன. எனினும், இதனை முறியடித்து அந்தக் கப்பல்களை கைப்பற்றுவதற்கும் சர்வதேச மட்டத்தில் இயங்கி வருகின்ற புலிகளின் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு எஞசியிருக்கின்ற கப்பல்கள் மூலம் புலிகளது செயற்பாட்டாளர்களால் ஆட்கடத்தல், கள்ள வர்த்தகம் போன்ற சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதாக புலனய்வுத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக அண்மையில் கனடாவுக்குள் நுழைந்த ஈஸ்வரி கப்பலைக் குறிப்பிட முடியும். (மேலும்...)

தை 08, 2011

ஆப்கானுக்கு மேலும் 1400 அமெரிக்க இராணுவ வீரர்கள்

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 1400 இராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பவுள்ளதாக செய்தி வெளியாகி யுள்ளது. ஆப்கானிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்க தலிபான் அரசாங்கம் மறுத்ததால் அந்த நாட்டின் மீது அமெரிக்கா படை எடுத்தது. இதன் காரணமாக தலீபான்கள் ஆட்சியை கைவிட்டு விட்டு தலைமறைவானார்கள். இதை தொடர்ந்து அந்த நாட்டில் உள்ள தலீபான்களை ஒடுக்குவதற்காக ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு இராணுவ வீரர்கள் அங்கு முகாமிட்டு இருக்கிறார்கள். 2008 ஆம் ஆண்டு முதல் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல் தீவிரம் அடைந்து உள்ளது. இந்த போரில் கடந்த ஒரு ஆண்டுகாலத்தில் 700 வெளிநாட்டு இராணுவ வீரர்கள் பலியானார்கள். வரும் ஜூலை மாதம் முதல் அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க இராணுவத்தின் தாக்குதல் திறனை அதிகப்படுத்துவதற்காக 1400 இராணுவ வீரர்களை கூடுதலாக ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இந்த மாத மத்தியில் கூடுதல் இராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானை சென்றடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

தை 08, 2011

எட்டு தினங்களில் அடையாள அட்டைகளை பெற்று கொள்ளக் கூடிய வேலை திட்டம் ஆரம்பம்

எட்டு தினங்களில் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்ட மொன்றைத் தமது திணைக்களம் மேற்கொண்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் அனுராதா விஜேகோன் தெரிவித்தார். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன் அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து ஏனைய பணிகள் மிக துரிதமாக நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். _

தை 08, 2011

அஞ்சலி நிகழ்ச்சியில்

பேச்சை பாதியில் நிறுத்திய இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலில் கடந்த மாதம் நேரிட்ட காட்டுத் தீயில் உயிரிழந்த வர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவர்களது உறவினர் கள் எதிர்ப்பு கோஷமிட்டதால் அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு தனது பேச்சை பாதியி லேயே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இஸ்ரேலின் வடக்கே உள்ள ஸ்வாத்ஸ் காட்டுப் பகுதியில் கடந்த மாதம் தீப்பிடித்தது. இந்தக் காட்டுத் தீயில் 42 பேர் உயிரிழந்தனர். காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த உரிய தீயணைப்பு விமானங்கள் இஸ்ரேலிடம் இல்லாததால், உலக நாடுகளின் உதவியை அது நாடியது. அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தீயணைப்பு விமானங்களை இஸ்ரே லுக்கு அனுப்பிவைத்தன. (மேலும்...)

தை 07, 2011

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம்  ஜனாதிபதிக்கு கடிதம

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 70 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட வேளாண்மை பாதிப்புக்கு நட்ட ஈடு வழங்கக் கோரி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக இம்மாவட்டம் முழுவதும் வெள்ளத்தில் முழ்கியது. இவ் வெள்ளம் காரணமாக இயல்பு வாழ்கை ஸ்தம்பிதம் அடைந்தது. குறிப்பாக மீன்பிடி, வியாபாரம், கல்வி நடவடிக்கைகள், போக்குவரத்து, அரச நிர்வாகம், விவசாயச் செய்கை என்பனவற்றைக் குறிப்பிடலாம். (மேலும்...)

தை 07, 2011

யாழ்.குடா சம்பவங்கள்

முழுமையான விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

யாழ். குடாவில் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல்கள், கொலை, கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி அது தொடர்பிலான உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். யாழ். குடா விடயத்தை ஓரங்கட்டாது அது தொடர்பான பொறுப்பை ஏற்று அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார். இந்த சம்பவங்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றஞ் சாட்டப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர் அந்தக் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரித்தார். யாழ். குடாவில் இடம்பெறும் குற்றச் செயல்கள் குறித்து அமைச்சர் டக்ளஸே முதலில் சபையில் கேள்வி எழுப்பியதாகக் கூறிய அமைச்சர் அவர் மீது குற்றஞ் சுமத்த முடியாது என்றார். (மேலும்...)

தை 07, 2011

யாழ் நகரப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது – அவர் EPDP என தன்னை அடையாளப்படுத்தி உள்ளார்!

யாழ் நகரப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய கொள்ளையர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் நேற்று இரவு பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் திருக்குடும்பம் கன்னியர்மட பாடசாலையை அண்மித்த பகுதியிலே அதிஸ்டலாப சீட்டுக்களை சந்தேகத்திடமான முறையில் விற்றுத் திரிந்த இவரை பொதுமக்கள் பிடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து படையினருக்கு அறிவிக்கப்பட்டது. படையினரும் இந்தக் கைது நடவடிக்கைக்கு உதவி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவரால் விற்பனைக்கென வைக்கப்பட்டிருந்த அதிர்ஸ்டலாபச் சீட்டுக்கள் போலியானவை என தெரிய வருகின்றது. (மேலும்...)


தை 07, 2011

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நாடு திரும்ப ஆவல்

அரசாங்கப் படைகளுக்கும், புலிகளுக்குமிடையில் நடைபெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கை அகதிகளில் பலர் நாடு திரும்புவதற்கு விரும்புவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானி கராலயம் தெரிவித்துள்ளது. அவ்வாறு நாடு திரும்ப விரும்பும் அகதிகள் விரைவில் நாடு திரும்புவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளு க்கான உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைப் பிரதிநிதி மிஷேல் வக் தெரிவித்துள்ளார். (மேலும்...)

தை 07, 2011

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞர் வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு 10 மணியளவில் வீடு ஒன்றினுள் புகுந்த கொள்ளையர் குளுவினால் இளைஞர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய கந்தசாமி இருதயன் எனும் இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த இளைஞன் வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து நலன்புரி நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு பின் விடுதலை செய்யபபட்டுள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் வசித்துவந்த போது குறித்த இளைஞன் கொலை செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் யாழ் மாவட்டத்தில் 05 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தை 07, 2011

தெலுங்கானா விவகாரம்  ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி  அறிக்கை வெளியீடு

ஸ்ரீகிருஷ்ணா கமிட்டி அறிக்கையில் ஆந்தி ராவில் உள்ள தற்போதைய நிலையே நீடிக்கும் என்கிற கருத்து, மிகச்சிறிய சாதக வாய்ப்பாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கமிட்டியின் 4வது பரிந்துரையில் ஆந்திர மாநிலத்தை தெலுங் கானா மற்றும் சீமாந்திரா என இரு பிரிவுகளாக தற்போதைய எல்லைகளுடன் பிரிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இதன்படி தெலுங்கானா வுக்கு ஐதராபாத் தலைநகராகவும் ராயலசீமா மற்றும் கடலோர பிராந்தியங்களை உள்ளடக் கிய சீமாந்திராவுக்கு புதிய தலைநகர் ஏற்படுத்த லாம் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது. ஆந்திராவை பிரிக்க வேண்டாம்; ஒருங் கிணைந்த பகுதியாகவே இருக்கலாம் என்ற பரிந்துரைக்கான அம்சத்தில் தெலுங்கானா பிராந்தியத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பூரணத்துவ அதிகாரம் அளிக்கப்பட்ட தெலுங் கானா பிராந்திய கவுன்சிலை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்...)

தை 07, 2011

Special Thai Pongal Pooja

Special Thai Pongal Pooja at the Sri Varasithi Vinayagar Hindu Temple. The guest of honour is Hon. Karu Paranawithana, Consulate General of Sri Lanka in Toronto. Friday 14 – January – 2011Evening at 6:15 PMPlease come with your family and attend the Pooja and get the blessing of Sri Varasithi Vinayagar.
Located at
Sri Varasithi Vinayagar Hindu Temple

3025 Kennedy Road
Toronto, ON M1V 1S3
(416) 291-8500 Main intersection McNicoll Ave & Kennedy Road ( North of Finch Ave)

தை 07, 2011

8 கப்பல்கள் இன்னும் சர்வதேச கடற்பரப்பில்

புலிகளுக்கு சொந்தமான 20 கப்பல்களில்11 அழிக்கப்பட்டன

புலிகள் இயக்கத்திற்குச் சொந்தமான இன்னும் எட்டுக் கப்பல்கள் சர்வதேச கடற்பரப்பில் ஓடிக்கொண்டிருப்பதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சபையில் அறிவித்தார். புலிகளுக்குச் சொந்தமாக 20 கப்பல்கள் இருந்தனவென்றும் அவற்றுள் பதினொரு கப்பல்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், ஒரு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குக் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் கூறினார். (மேலும்...)

தை 07, 2011

கட்டடக் கழிவுகளை அகற்றி உதவ யாழ். மாநகர சபை முன்வருகை

தற்போது யாழ்ப்பாணத்தில் மீளக் குடியேறிவரும் முஸ்லிம் மக்களின தும் மற்றும் யாழ். மாநகர சபைப் பிரதேசத்திற்குள் வாழும் மக்களின தும் யுத்த அனர்த்தத்தினால் வீடுகள் அழிந்து காணப்படின் அவற்றின் உரிமையாளர்கள் கேட்டுக்கொள் ளும் பட்சத்தில் அவ்வீட்டினை அல்லது கட்டடங்களை யாழ். மாநகர சபை தன் தொழிலாளர் களைக் கொண்டு எவ்வித கட்டண முமின்றி கட்டடங்களை இடித்து அதன் இடிபாடுகளையும் அக்காணி யிலிருந்து அகற்றித்தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான தீர்மானம் சபைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றது. (மேலும்...)

தை 07, 2011

சவூதி அரேபியாவை உளவு பார்த்த இஸ்ரேலிய கழுகு

இஸ்ரேலிய மொஸாட் புலனாய்வு சேவையினால் உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கழுகு ஒன்றினை சவூதி அரேபிய பாதுகாப்புத் துறையினர் மடக்கிப் பிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக் கழுகானது சவூதியின் பின் தங்கிய பகுதியொன்றிலேயே பிடிக்கப்பட்டுள்ளது. இதன் கால்களில் டிரான்ஸ்மிட்டர் எனப்படும் ஒலி அனுப்பும் கருவி ஒன்று கட்டப்பட்டிருந்ததாகவும் அதில் இஸ்ரேலின் பிரபல ‘டெல் அவிவ்’ பல்கலைக்கழகத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்...)

தை 07, 2011

கொழும்பில் நடைபெறும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - ஒரு சிறப்புக் கண்ணோட்டம்

“செய்திகளை எழுதியவர்களே செய்திகளாகிப்போன தேசத்தில் - மொழிக்காகவும் பூர்வீக வாழ்விட உரிமைக்காகவும் உயிரிழந்து, சொத்திழந்து - இடம்பெயர்ந்து – புலம்பெயர்ந்து ஏதிலிகளாகிய போதிலும் அமெரிக்கா,அவுஸ்திரேலியா, கனடா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும், தென்கிழக்கு ஆசியாவில் சில நாடுகளிலும் தமிழை ஒலிக்கச் செய்கின்ற எம்மவரின் அடுத்த சந்ததியின் நாவில் தமிழ் வாழுமா என்ற ஐயப்பாட்டுடன் சில ஆய்வாளர்கள் பாதகமாகச் சிந்திக்கும் தருணத்தில், பனிபெய்யும் தேசத்தில் பிறந்த தமிழ்க் குழந்தைகள் தமிழ் மெல்லத் துளிர்க்கும் என்று கவிதை எழுதி பாடிக்கொண்டிருக்கிறார்கள். கொடிய யுத்தத்திலிருந்தும் எண்ணிலடங்கா இன்னுயிரிழப்புக்களிலிருந்தும் மீண்டெழுந்து உயிர்ப்புடன் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர்ந்துகொண்டிருக்கிறோம். (மேலும்...)

தை 07, 2011

இந்தியா அவசரப்பட கூடாத - சீனா

ஐ. நா. பாதுகாப்புக் குழுவில் இடம்பெற இந்தியா அவசரப்படக்கூடாது என்று சீனா கருதுகிறது. ஐ. நா. வின் பாதுகாப்புக் குழுவைச் சீரமைத்து விரிவாக்க வேண்டும் என இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த மாற்றங்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கொண்டு வரவேண்டும் என்றும் இவை கூறிவருகின்றன. ஆனால் ஐ. நா. பாதுகாப்புக் குழுவை விரிவாக்குவதில் சீனாவுக்கு எந்த அவசரமும் இருப்பதாகத் தெரியவில்லை. (மேலும்...)

தை 07, 2011

அதிபரை நியமிப்பது யார், எப்படி?

பாடசாலையின் தராதரத்திற்கு ஏற்பவும் சேவை மனப்பாங்கு, சமூக உணர்வு, தொழில்வாண்மை, நல்லொழுக்கம், மாணவர் நலன் கருதிய செயற்பாடு ஆகியவற்றைக் கொண்டவராகவும் உள்ள ஓர் அதிபரை நியமிப்பது கல்வித் துறைசார் அதிகாரிகளின் பொறுப்பும் கடமையுமாகும். ஆனால், நியமனத்தின் பின்னர் இந்த அதிபருக்கு இவை எவையுமே இல்லை என்ற முடிவுக்குப் பெற்றோர்களும் மாணவர்களும் வருகிறார்கள் என்றால் தவறு யார் மீது என்பதும் முக்கியமாக சிந்திக்க வேண்டிய விடயமாகும். (மேலும்...)

தை 07, 2011

Astronomy

N.B. girl, 10, youngest person to discover a supernova

(ROBERT MATAS)

Kathryn is the youngest person ever to have discovered a stellar explosion, the Royal Astronomical Society of Canada says. Her find was confirmed by Arizona-based Canadian amateur astronomer Jack Newton, who holds the record for the discovery of the most supernovas by an amateur in 2010, and Illinois-based amateur astronomer Brian Tieman. Kathryn was rather blasé on Monday about her discovery. She was not quite sure what to think about it, her mother Susan said in an interview: “She did not understand why everyone thought it was such an amazing thing. For her, it was just something she works on with her dad.” The girl has been part of her father’s amateur astronomy world as long as she can remember. She had a simple explanation for a supernova. “It’s just a really old star, really old. So, it just blows up,” she said from her home in Birdton, north of Fredericton. (more...)

தை 07, 2011

விமானி கோப்பியை சிந்தியதால் விமானம் தரையிறக்கம்

விமானி கோப்பியை சிந்தியதால், அமெரிக்க பயணிகள் விமானம் ஒன்று கனடாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அமெரிக்காவின் சிகாகோவிலிருந்து ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகருக்கு அமெரிக்க விமானம் ஒன்று 241 பயணிகள் மற்றும் 14 சிப்பந்திகள் என மொத்தம் 255 பேருடன் சென்று கொண்டிருந்தது. வானில் பறந்துகொண்டிருந்தபோது விமானி தனக்கு கொடுக்கப்பட்ட கோப்பியை பருகிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அதனை சிந்திவிட்டார். அவர் சிந்திய கோப்பி விமான கட்டுப்பாட்டு அறையுடன் விமானி தொடர்பு கொள்ளும் ரேடியோ மீது பட்டுவிட்டது. இதனால் தகவல் அனுப்புவதில் இடையூறு எற்பட்டதோடு விமானம் கடத்தப்பட்டதாக தெரிவிக்கும் சமிக்ஞ்ஞையையும் அது அனுப்பிவிட்டது. அக்கோளாறை உடனே விமானியும் இதர சிப்பந்திகளும் சரி செய்தபோதிலும் விமானத்தை தரையிறக்கி விடுவது என்று முடிவு செய்தனர். இதனையடுத்து அந்த விமானம் கனடா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தை 07, 2011

முஸ்லிம்களின் மீள்குடியமர்வுக்கு காலக்கெடு எதுவும் இல்லை

யாழ். முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் எதிர்வரும் 31ஆம் திகதியுடன் முடிவடை வதாகவும் இதற்கு முன்னர் மீள்குடியேற விரும்பும் அனை வரும் தங்கள் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற ஒரு வதந்தி மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகின்றது.இது தொடர்பாக உண்மை நிலையென்ன என்று யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரிடம் வினவியபோது இவ்வாறான எவ்வித காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை எனவும் மக்கள் எவ்வித குழப்பமும் அடையத் தேவையில்லை எனவும் சுய விருப்பத்துடன் மீள்குடியேற விரும்புகின்றவர்கள். அவர்கள் விரும்பும் வேளையில் தங்கள் பதிவுகளை மாற்றி யாழில் மீள்குடியேற முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். (மேலும்...)

தை 07, 2011

ரகசிய போருக்காக’   அமெரிக்காவின் புதிய மையம்!

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் ரகசியமான வேலைகளைச் செய்வதற்காக புதிய மையம் ஒன்றை அமெரிக்க ராணுவம் உருவாக்கியுள்ளது. இத்தகைய மையம் அமைக்கப்பட்டுள்ளது குறித்து இதுவரை வெளிப் படையாக அமெரிக்க அரசோ அல்லது ராணு வமோ கருத்து தெரிவிக்க வில்லை. ஆனால் அமெ ரிக்க அரசில் பணியாற்றிய முன்னாள் அதிகாரிகளில் சிலர் இந்த மையம் அமைக் கப்பட்டது குறித்து பத் திரிகைகளுக்கு பேட்டி களை அளித்துள்ளனர். அமெரிக்கக் கூட்டு சிறப்பு நடவடிக்கைக்குழுவின் கீழ் இந்த மையம் இயங்கி வருகிறது. (மேலும்...)

தை 06, 2011

சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தனக்கு உத்தரவிட்டார் - இமெல்டா!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற தேசிய அனர்த்த நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே தனக்கு உத்தரவிட்டதாக அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய வகையில் தேசிய கீத் பாடப்பட்டமை தொடர்பாக எழுப்பப்ட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவே சிங்கள மொழியில் தேசிய கீதத்தை பாடுமாறு தனக்கு பணித்ததாக இமெல்டா சுகுமார் தெரிவித்தார். ஆனாலம் தான் முன்னதாக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மாறி மாறி படிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அதன்படி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டதாகவும் இரு மொழிகளிலும் பாடப்பட்டாலும் தமிழ்ப் பாரிம்பரிய உடைகளிலேயே மாணவர்கள் தேசிய கீதத்தைப் பாட ஏற்பாடு செய்திருந்ததாகவும் இமெல்டா தெரிவித்தார். (மேலும்...)

தை 06, 2011

சர்வதேச தமிழ் எழுத்தாளர்  மாநாடு 2011 இன்று ஆரம்பம்
 

(கே. பொன்னுத்துரை)

இன்று இந்நாட்டில் வடகிழக்கில் வாழுகின்ற தமிழ் மக்களும், இதே பிரதேசத்திலும் தென்னிலங்கையிலும் வாழும் முஸ்லிம் மக்களும், மலையகத்தில் வாழும் மக்களும் தமிழ் பேசும் மக்களாவர். மதத்தினால் வேறுபட்டிருந்த போதிலும் இவர்களது பேசும் மொழியாகவும் எழுதுவும் மொழி யாகவும் தமிழே விளங்குகின்றது. இம் மக்களிடம் தமிழ் கலை, இலக் கிய எழுத்தூழியத்தில் ஈடுபடும் படைப்பாளிகளும் இதழியல்துறையில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் மொழி அடிப்படையில் சமூக விழிப்புணர்வுகளையும், புரிந் துணர்வு ஒற்றுமையையும் நடை பெறவுள்ள சர்வதேச எழுத்தாளர் மாநாடு ஏற்படுத்தும். நடைபெறவுள்ள மாநாட்டில் இலங்கையின் பல பாகங்களிலு மிருந்து பேராளர்கள் கலந்து கொள்கின்றனர். மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, வன்னி, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம், அநுராதபுரம் உட்பட மலையகத்திலும் பல பிரதேசங்களிலிருந்தும், தென்னிலங்கை மற்றும் வடமேற்கு பகுதிகளிலிருந்தும் சுமார் முந்நூறு பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொள்கின்றனர். (மேலும்...)

தை 06, 2011

 

தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில்

தைப்பொங்கல் பண்டிகையை யாழ்ப்பாணத்தில் கொண்டாட ஏற்பாடு

உழவர் திருநாளான தைப்பொங்கல் தினத்தை யாழ்ப்பாணத்தில் கொண்டாடு வதற்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் சதீஸ்குமார் தெரிவித்தார். யாழ். மத்திய கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்படவிருப்பதுடன், அன்றைய தினம் தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அன்றைய தினம் முன்னணி இசை கலைஞர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியொன்றையும் ஏற்பாடு செய்திருப்பதாக சதீஸ்குமார் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தை 06, 2011

 

யாழ். மாவட்டத்தில் 300 முஸ்லிம் குடும்பங்கள் மீள்குடியேற்றம்

யாழ். மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து தற்சமயம் புத்தளம் பகுதியில் வதியும் சுமார் 300 முஸ்லிம் குடும்பங்கள் தமது தாயக மண்ணுக்கு எதிர்வரும் ஞாயிறன்று மீள்குடியேற்றத்திற்காக செல்லவுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளனத்தின் அனுசரணையில் அன்றைய தினம் 7 பஸ் வண்டிகளில் மீள்குடியேறும் மக்கள் புத்தளம் தில்லையடி பகுதியிலிருந்து செல்லவுள்ளதாக சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் மெளலவி ஐயூப் அஸ்மின் தெரிவித்தார். இதேநேரம் யாழ். மாவட்டத் தில் குடியேறும் மக்களுக்கான நடமாடும் சேவையொன்று 11 ஆம் திகதி செவ்வாயன்று யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் இடம் பெறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தை 06, 2011

06.01.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் மனித உரிமைவாதியும் சர்வதேச புலம்பெயர் இலங்கையர் ஒன்றியத்தின் செயற்பாட்ளாருமான ரஞ்சித் ஏனயக்க ஆராச்சி ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம் ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 or 078107063682

(மேலும்...)

தை 06, 2011

CaTpad rejects Rudrakumaran’s claim

We Canadian Tamils for Peace and Democracy (CaTpad) totally rejects the claim by the Mr.V.Rudrakumaran of so called Transnational Government of Tamil Eelam (TGTE), as “ Thamil Eelam was the Thirst of Tamils” but was the thirst of LTTE. Until 2002 ceasefire agreement, the slogan of the LTTE is “Pulikalin Thaakam Thamil Eelath Thaayakam” (Thamil Eelam is the Thirst of Tigers). In the ceasefire LTTE agreed to abandoned their separate state claim and accepted the united Srilanka Constitution, they were forced to give up this slogan when its was questioned by Srilankan officials at various meetings and occasion that LTTE still promoting the ideology of separatism as its official position, LTTE was compelled to abandon this slogan and changed to “Thamilarin Thaakam Tamil Eelath Thaayakam” (Tamil Eelam is the Thirst of Tamils) to convince its hard core supporters and hard core Tamil Nationalist in the fear of loosing its image as a savior of Tamil Nation. (more....)

தை 06, 2011

அணுக்கதிர்வீச்சுத் தாக்கத்துக்குள்ளான ஒரு எலியைப் பிடிக்க அறுபது எலிப் பொறிகள் வைத்து தேடும் அமெரிக்கா

கதிர்வீச்சுத் தாக்கத்துக்குள்ளான ஒரு எலியைப் பிடிக்க அறுபது எலிப் பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிசயம் வேறு எங்குமல்ல உலக மகா வல்லரசு நாடான அமெரிக்காவில்தான். அமெரிக்காவில் உள்ள அணு உலை ஒன்றில் தான் இந்த எலி காணப்படுகின்றது. அறுபது பொறிகளை வத்தும் கூட இன்னும் அது சிக்கவில்லை. இந்த மாத முற் பகுதியில் வாஷிங்டனில் ஹன்பர்ட் அணு உலையில் கதிர் வீச்சுத் தாக்கத்துக்குள்ளான முயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு ஒரு எலியும் கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. முயலின் உடலில் இருந்து வெளியேறியிருந்த கழிவுகளைக் கண்டு அதைச் சோதித்துப் பார்த்தபோது அது கதிர்வீச்சுத் தாக்கத்துக்காளான விடயம் தெரியவந்தது. (மேலும்...)

தை 06, 2011

புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க முயற்சி - பிரதமர் கூறுகின்றார்


புலிகள் இயக்கம் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளின் மூலம் மீண்டும் தலைதூக்க முயற்சிப்பதாகவும் இதனை முறியடிக்க சூட்சுமமாக செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் டி. எம். ஜயரத்ன நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புலிகள் இயக்கத்திற்கென அண்மையில் பாரியளவு நிதி சேகரிக்கப்பட்டுள்ளது. சில அரச சார்பற்ற நிறுவனங்களும், வெளி நாடுகளும் பணத்தை வாரி வழங்கியுள்ளன. மேற்குலக நாடுகள் இன்னமும் தமது செயற்பாடுகளை மாற்றிக்கொள்ளாமல் உள்ளன. (மேலும்...)

 

தை 06, 2011

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர் மீது விசாரணை - ஸ்ரீலங்கா காடியன்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகின்ற தமிழ் மக்கள், இலங்கையின் புலனாய்வு துறையினரால் அதிக நேரம் விசாரணைக்கும் சோதனைக்கும் உட்படுத்தபடுவதாக ஸ்ரீலங்கா காடியன் தெரிவித்துள்ளது. புதிதாக வெளியான தகவல்களின் படி உள்வரும் மற்றும் வெளிசெல்லும் தமிழர்களை இலக்கு வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர். பெரும்பாலும் பயணசீட்டை பார்வையிட்டு அதன் அடிப்படையில் சில தமிழர்களை புலனய்வுத்துறையினர் கைது செய்வது விமான நிலையத்தில் வைத்து பல மணித்தியாலங்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. (மேலும்...)

தை 06, 2011

பஞ்சாப் மாகாண ஆளுநரின் படுகொலையில் 


தலிபான்களின் கைவரிசை, பாகிஸ்தானில் பதற்றம்


படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சல்மான் தாஸிரின் ஜனாஸா நேற்றுப் பெருந்திரளானோர் மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி பஞ்சாப் மாகாண பாதுகாப்பைப் பலப்படுத்திய பாகிஸ்தான் அரசாங்கம் நேற்று துக்க தினத்தைப் பிரகடனம் செய்தது. கடைகள், அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டன. வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. இராணுவ வாகனங்கள் வீதியெங்கும் ரோந்துப் பணியிலீடுபட்டன. முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ 2007ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய அரசியல் படுகொலை இதுவாகும். இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் பெரும் திண்டாட்டத்தில் மூழ்கியுள்ளது. (மேலும்...)

தை 06, 2011

கனடா இலங்கை தூதுவராலயத்தின் செய்திப் பத்திரிகை - டிசம்பர் மாதம்

 

 

(மேலும்...)

தை 06, 2011

பாரம்பரிய கைத்தொழில்களை வளர்ப்பதில் அமைச்சர் தேவானந்தா முன்னணியில்...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கில் பனம் பொருள் உற்பத் தியை லாபகரமான முறையில் மேற்கொள்ளும் பாரிய திட்டத்தை யும் நிறைவேற்றி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் பனம் பொருள் உற்பத்தி பொருட்களை உள்ளூரில் மட்டுமன்றி வெளி நாட்டிலும் சந்தைப்படுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் அமை ச்சர் இப்போது பூர்த்தி செய்துள்ளார். இந்த தொழில் முயற்சிகளை வர்த்தக ரீதியில் மேற்கொள்வதற்கு தேவையான இயந்திர உபகர ணங்களையும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் நியாய விலை க்கு பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் ஒன்றையும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்போது தயாரித்துள்ளார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வடக்கில் மட்டுமன்றி, நாடெங்கிலும் இந்த பாரம்பரிய தொழில் முயற்சிகளை அபிவிருத்தி செய்வதில் தனது முழு நேரத்தையும் செலவிட்டு, நாட்டின் நாலா பக்கங் களுக்கும் சென்று, இப்பணிகளை நேரில் கண்காணித்து வருவது உண்மையிலேயே பாராட்டுக்குரிய விடயமாகும்.  (மேலும்...)

தை 06, 2011

Terrible truth of the Trincomalee tragedy

(By D.B.S. Jeyaraj)

It was about 7.15 when a green three – wheeler coming along Dockyard road slowed down. A grenade was thrown from the vehicle. It exploded yards away from where the seven friends were seated. The three – wheeler then sped away on Koneswara road towards the Fort. The dazed friends realised the situation was taking a turn for the worse and cut short their conversation. They speedily mounted their cycles and motor cycle and prepared to get away from the spot. That was not to be Almost as if on cue a security force truck trundled in quickly. Instead of giving chase to the three- wheeler the occupants of the truck zoomed in on the seven Tamil youths. They surrounded them and forced them to kneel down. Rajihar took out his mobile phone and called his father Dr. Kasipillai Manoharan. The call was not answered. Rajihar however left a quick message saying they were being made to kneel down by security forces. The phone was snatched away by one of the assailants. They started checking their ID cards. Thereafter they began assaulting them. They were then put aboard the truck and assaulted again and again. Their explanations and protests were ignored. (more....)

தை 06, 2011

 

சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

தென்சூடான் வடக்குடன் இணைவதா? பிரிவதா?

சூடானின் தென்பகுதி வடக்குடன் இணைந்து இயங்குவதா, பிரிந்து செல்வதா என்பதற்கான ஆணையை மக்களிடம் கோரும் சர்வஜன வாக்கெடுப்பு நேற்று 05ஆம் திகதி ஆரம்பமானது. இதில் தென் பகுதி மக்கள் வாக்களித்தனர். சூடானின் வடபகுதிக்கு ஒமர் அல் பஷிர் ஜனாதிபதியாக உள்ளார். தென் பகுதிக்கு சல்வாகிர் ஜனாதிபதியாகக் கடமையாற்றுகின்றார். தென்பகுதி மக்களில் சிலர் வடக்குடன் இணைந்து செயற்பட விரும்பும் அதேவேளை இன்னும் சிலர் பிரிந்து செல்ல விரும்புகின்றனர். தென் பகுதியில் பல ஆயுத அமைப்புக்களும் போராடுகின்றன. டர்புர் போராளிகள் இதில் விசேடமானவர்கள். (மேலும்...)

தை 06, 2011

வன்னி மாவட்ட எம்.பியாக பாறுக்

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முத்தலிப் பாவா பாறுக் நேற்றுக்காலை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். வன்னி மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி யீட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி. நூர்தீன் மசூரின் மறைவையடுத்து நிலவிய வெற்றிடத்துக்கே முத்தலிப் பாவா பாறுக் நியமிக்கப்பட்டுள்ளார். நூர்தீன் மசூர் எம்.பி.க்கு அடுத்ததாக தேர்தலில் அதிக வாக்குகளை பாறுக் பெற்றிருந்தார். பாராளுமன்றம் நேற்றுப் பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் கூடியபோது முத்தலிப் பாவா பாறுக் புதிய எம்.பி.யாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அவர் நேற்றுச் சபையில் தமது கன்னியுரையை ஆற்றியதுடன் சகல இன, மத மக்களும் ஐக்கியமாகவும் சமாதானமாகவும் வாழும் சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்ப சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தை 06, 2011

 

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் இன்று 6ம் திகதி காலையில் ஆரம்பமாகின்றது.மாநாடு நடை பெறும் வெள்ளவத்தை தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள உருத்திரா மாவத்தை கொழும்பு காலி வீதியில் ஆரம்பமாகும் இடத்திலிருந்து எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர் கள் பங்குபற்றும் ஊர்வலத்துடன் ஆரம்ப மாகும். இம்மாநாடு எதிர்வரும் 9ம் திகதி வரையும் நான்கு நாட்கள் நடைபெற விருக்கின்றது. இம்மாநாட்டில், நாட்டின் பல பாகங்களி லிருந்தும் எழுத்தாளர்களும், கலைஞர்களும், ஊடகவியலாளர்களும் பங்குபற்றவுள்ளனர். அதேநேரம் அவுஸ்திரேலியா, இந்தியாவின் தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, டென்மார்க், ஜெர்மனி உட்பட பல நாடுகளிலி ருந்தும் தமிழ் எழுத்தாளர்களும், கலைஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளுகின்றனர்.

தை 06, 2011

 

வவுனியா, யாழ்ப்பாணம் தவிர்ந்த

 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் கொழும்பு, கண்டி, ஹம்பாந்தோட்டை தவிர உள் ளூராட்சி மன்றங்கள் கலைப்பு

சகல உள்ளூராட்சி மன்றங்களும் இன்று நள்ளிரவு முதல் கலைக்கப்பட உள்ளதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக கூறினார். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறி வித்தல் இன்று வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பெப்ரவரி, மார்ச் மாதங்களில் உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகளின் சில போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளதால் போட்டிகள் நடைபெறும் கொழும்பு, கண்டி மற்றும் ஹம்பாந் தோட்டை பிரதேசங்களில் உள்ள உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாது எனவும் அவற்றுக்கான தேர்தல் வேறொரு திகதியில் நடைபெறும் எனவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்தது. (மேலும்...)

 

தை 05, 2011

யாழ். குடாவில் இடம்பெறும் கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் தடுத்து நிறுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுகின்றார்

இனி இங்கு யுத்தமும் இல்லை, இரத்தம் சிந்தும் நிலையும் இல்லை என்ற நம்பிக்கையோடு காத்திருந்த எமது மக்களின் நம்பிக்கைகள் சிதைக்கப்படும் படியாக சில சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.மழைவிட்டாலும் தூவானம் விடவில்லை என்பது போல் குறிப்பாக யாழ். குடாநாட்டில் ஆங்காங்கே சில படுகொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல்கள் மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் எமது மக்கள் மறுபடியும் ஓர் அச்சம் தரும் சூழலுக்குள் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள். மறுபடியும் எமது வாழ்விடங்கள் இரத்தம் சிந்தும் பூமியாக மாறிவிடப்போகின்றன எனும் வதந்திகளும் ஆங்காங்கே திட்டமிட்ட வகையில் பரப்பப்பட்டு வருகின்றன. அப்பாவி மக்கள் எதை நம்புவது? எதை நம்பாமல் இருப்பது என்று திகைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள். (மேலும்...)

தை 05, 2011

கார்த்திகைப்பூ பக்கம் போகாதே காலைப்பிடிச்சு கெஞ்சுகிறேன்

குடத்தனையில் கொல்லப்பட்ட கேதீஸ்வரன் ஒரு புலிதீவிர ஆதரவாளர் என தெரியவந்துள்ளது. புலிகளின் தேசியப்பூவான கார்த்திகைப்பூவை கையில் வைத்தப்படி இந்த கேதீஸ்வரன் பேஸ்புக்கில் தனது படத்தை வைத்திருப்பதை  புலிகளின் இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளன. நாட்டில் இருக்கின்ற புலிகளை காட்டிக்கொடுக்க வெளிநாடுகளில் இருக்கின்ற இணையத்தளங்களே போதும். கேதீஸ்வரன் ஒரு பைத்தியக்காரன். பேஸ்புக்கில் கார்த்திகைப்பூவுடன் நிற்கிற படத்தைப்போட்டு போஸ் வேற கொடுத்திருக்கிறான். ஒரு காலத்தில் மாற்று இயக்கக்காரன்களைக் கண்டால் புலிகளுக்கு ஆகாது. கேட்டுக்கேள்வியில்லாமல் போட்டுத்தள்ளினாங்கள். இப்ப உலகம் மாறிவிட்டது. புலிகள் கார்த்திகைப்பூவைத் தொட்டாலே அவ்வளவுதான். ஆள்காலி. (மேலும்...)

தை 05, 2011

 

கம்பி இணைப்பின்றி மின்னேற்றம்

கம்பி இனைப்பு எதுவும் அற்ற முறையில் கையடக்கத் தொலைபேசிகளையும், ஏனைய உபகரணங்களையும் மின்னேற்றம் செய்யும் புரட்சிகரமான முறை வின்ட்ஸர் சர்வதேச விமான நிலையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது விரைவில் உலகமயமாக்கப்படும் என்று இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ள பல்தேசியக் கம்பனியின் தலைவர் தெரிவித்துள்ளார். மிஸோரியை தளமாகக் கொண்டு செயற்படும் லெகட் அன்ட் பிளட் நிறுவனமே இந்தத் தொழில் நுட்பத்தை உருவாக்கியுள்ளது. கையடக்கத் தொலைபேசிகளையும், பிளக்பெரி உபகரணங்களையும் வரையறையின்றி இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்னேற்றம் செய்துகொள்ளலாம். விமானங்களின் இருக்கைகள், சமையலறைகளின் மேல்தளம், கராஜ்ஜுகள், ரயில் மற்றும் பஸ் வண்டி நிலையங்கள் என பல இடங்களிலும் இதைப் பயன்படுத்தலாம்.

தை 05, 2011

மதவடி(யும்) தொலைக்காட்சி  நிகழ்ச்சி

கனடா டொராண்டோவில் தமிழர் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி "மதவடி" என்று அதை பார்ப்பதற்கும் நல்லாகத்தான் உள்ளது அத்துடன் இங்கு வாழ் தமிழ் மக்கள் என்னன்னா மாதிரி வாழ்க்கை வாழுகின்றனர் என்றும், எப்படியான தொழிகள் செய்கின்றார்கள் என்றும், தொழில்களை  கூறிப்பிடும் போது  (ஏம்மாத்து,பம்மாத்து,சுத்துமாத்து) செய்பவர்களை படம் போட்டு காட்டுவது போல நிகழ்ச்சி அமைந்துள்ளது. வேடிக்கை என்னவென்றால் அதில் சிலர் அவர்களின் தொலைக்கட்சியில் விளம்பரமும் செய்கின்றனர்.  இவ் தொலைக்கட்சி ஆனாது

காலத்திற்க்கு ஏற்ப மக்களை மாற்றுகின்றது....   

 - தமிழன்

தை 05, 2011

மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தலில் மீண்டும் வேட்பாளராக போட்டியிட போவதில்ல சிவகீதா பிரபாகரன்!

மட்டக்களப்பு மாநகர சபை கலைக்கப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தல் நடைபெற்றால் தான் அதில் வேட்பாளராக போட்டியிட போவதில்லையென மட்டக்களப்பு மாநகர சபை மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கான கால எல்லை முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை கலைக்கப்படுமா என்பது பற்றி சரியாக தெரியாது. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை கலைக்கப்பட்டு மீண்டும ஒரு தேர்தல் நடைபெறுமாயின் நான் அதில் வேட்பாளராக போட்டியிட மாட்டேன். எனினும் சிறலங்கா சுதந்திரக்கட்சியின் வெற்றிக்காக நான் உழைப்பேன் என மேயர் சிவகீர்த்தா மேலும் தெரிவித்தார்.

தை 05, 2011

துண்டு துண்டாக கிழிக்கப்பட்ட 2 இலட்ச ரூபாய் பணத்தாள்கள் ஒன்று சேர்க்கப்பட்ட அதிசயம்

தாய்லாந்தில் தவறுதலாகத் துண்டுதுண்டாகக் கிழித்து குப்பையில் போடப்பட்ட சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் உள்ளூர் பணத்தை (6600 அமெரிக்க டொலர்) தடயவியல் நிபுணர் ஒருவர் மீண்டும் ஒட்டி பாவனைக்கு ஏற்றவிதத்தில் உரியவரிடம் ஒப்படைத்து சாதனை புரிந்துள்ளார். இதற்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் ஏழு நாட்களாகும். ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரியும் லீ என்ற நபர் தனது கைகளில் இருந்த பற்றுசீட்டுக்களோடு இந்தப் பணத்தையும் கிழித்து குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டார். அதுவும் உரிய கழிவகற்றும் இயந்திரப் பகுதிக்குச் சென்று விட்டது. பின்னர் விடயம் தெரியவந்ததும் அதை நீதி அமைச்சின் தடயவியல் பகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். தாய்லாந்தின் நீதி அமைச்சின் தடய வியல் பிரிவுக்கு வருடாந்தம் இதுபோன்ற 250 முறைப்பாடுகள் கிடைப்பதாகவும் அவை அனைத்தும் இலவசமாகவே கையாளப் படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தை 05, 2011

ரஷ்ய ஜனாதிபதியின் இஸ்ரேல் விஜயம் ஒத்திவைப்பு

இஸ்ரேலுக்கான ரஷ்ய ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக்கப்பட்டது. இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சில் பணியாற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கி யுள்ளதால் பாதுகாப்பின் நிமித்தம் ரஷ்ய ஜனாதிபதியின் விஜயம் ஒத்திவைக் கப்பட்டது. இம்மாதம் 16ம் திகதி முதல் 19ம் திகதி வரை மெத்வடிவ் இஸ்ரேலில் தங்கி பேச்சுவார்த்தைகளிலீடுபடவிருந்தார். சம்பள உயர்வு கோரி இஸ்ரேல் வெளி நாட்டு அமைச்சில் பணியாற்றுவோர் வேலை நிறுத்தம் செய்துள்ளதால் ரஷ்ய ஜனாதிபதியை வரவேற்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியாதுள்ளது. பின்னர் இவரின் விஜயத்துக்கான திகதி அறிவிக்கப்படுமென இஸ்ரேல் வெளிநாட்டு அமைச்சு அறிவித்தது. இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு இம்மாத இறுதியில் எகிப்து செல்லவுள்ளார். பிரதமரின் விஜயத்தையும் தடுக்கப்போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல் தங்களது சம்பளத்தை அதிகரிக்கும்படி இவர்கள் கோரிவந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

தை 05, 2011

 

மேற்குலகின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் பெருமை

மேற்குலக நாடுகளின் உளவு விமானத்தை ஈரானின் புரட்சிகரப் படையினர் சுட்டுவீழ்த்தினர். இந்த விமானம் நவீன வசதிகளைக் கொண்டது. வானத்தில் பறந்த வண்ணம் பூமியைப் படம்பிடிக்கும் இந்த விமானம் மேற்குலகின் இராணுவ வளர்ச்சியைக் காட்டுவதாக ஈரான் புரட்சிகரக் காவல் படையின் தலைவர் விளக்கினார். ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகளில் தாக்குதலை நடத்தும் இவ்வாறான விமானங்கள் இரண்டை முன்னர் ஈரான் சுட்டுவீழ்த்தியது. ஈரானின் வான் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் எதிரி விமானங்களைத் தொடர்ந்தும் சுட்டுவீழ்த்துவோம் எனப் பெருமையுடன் கூறிய ஈரான் இராணுவ உயரதிகாரி மேற்குலகின் இராணுவ வளர்ச்சி வியக்கத்தக்க வகையிலுள்ளதை நிராகரிக்க முடியாதென்றும் கூறினார். வளைகுடாவிலுள்ள எதிரிகளின் இராணுவத்தளங்கள் விமானங்கள் அனைத்தையும் தாக்கியழிக்கும் வீச்சுடைய ஏவுகணைகள் எம்மிடமுள்ளன. இதனால் மத்திய கிழக்கில் எங்களுக்கெதிராக எவரும் செயற்பட முடியாது. ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க பாரிய கப்பல் ஒன்றையும் படையையும் அனுப்பப்போவதாக மிரட்டிய எதிரிகளுக்கு இது பெரும் பின்னடைவு என்பதையும் ஈரான் அரசாங்கம் சுட்டிக்காட்டியது. ஈரானின் புரட்சிகரக் காவல்படை 1979ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை வளைகுடாவில் மிகப் பெரிய இராணுவமாக இது உள்ளது. ஈரானின் இச் செயற்பாடு மேற்கு நாடுகளை ஆத்திரமடையச் செய்துள்ளது.

தை 05, 2011

தேசிய விழாக்களில்

மதக் கொடிகளுக்கு சம அந்தஸ்து

தேசிய விழாக்களில் பெளத்த மதக் கொடிக்கு வழங்கப்படும் அந்த ஸ்து ஏனைய மதக் கொடிகளுக்கும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குத் தேவையான அறிவுறுத் தல்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெளத்த மற்றும் மத விவகார அமைச்சுக்கும், அமைச்சின் அதிகாரிகளுக்கும் வழங்கியுள்ளார். தேசிய விழாக்களில் பெளத்த கொடிகளுக்கு வழங்கப்படும் மரி யாதையைப் போன்று இந்துக்களின் நந்திக்கொடி, முஸ்லிம்களின் பிறைக் கொடி மற்றும் கிறிஸ்தவர்களின் வெள்ளை மஞ்சள் கொடி ஆகிய வற்றுக்கும் சம அந்தஸ்தும் மதிப்பும் வழங்கப்பட வேண்டும் என அரசா ங்கம் தீர்மானித்துள்ளது.

தை 05, 2011

ஒடுக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைத்திருக்கிறதா அவர்களின் தலைவர்களால்?

ஆம் இப்போதய சூழ்நிலையில் விவாதிக்கப் பட வேண்டிய விஷயம்தான்.
நாடு சுதந்திரமடைந்து 50 வருடங்களுக்கு மேலாகிறது, நம் நாட்டில் எத்தனையோ மதங்கள், சாதிகள், சங்கங்கள். ஆண்டாண்டு காலமாக அடிமை படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்கள் வாழ்வு மேம்பட வேண்டும் என்று தலைவர்கள் போராடினர். இத்தனை வருடங்கள் கடந்த பிறகு கடந்த 15 அல்லது 20 ஆண்டுகளில் முக்கியமாக தமிழகத்தில் ஜாதியை உயர்த்தி பிடித்த கட்சிகள் தோன்றலாயின, அவர்களின் உரிமைக்காகவும், உயர்வுக்காகவும் போராடி பெற்றுத் தருவதாக சொல்லி அதன் தலைவர்கள் பெரு வாரியான மக்களை திரட்டினர்.
மக்களும் அவர்களின் மேடைப் பேச்சுகளை நம்பி அவர்களின் பின் சென்றனர்.அந்த வகையில் எனக்கு கிடைத்த, தெரிந்த , கட்சிகளை பற்றிய எனது கருத்துக்கள் உங்கள் பார்வைக்கு:-
(மேலும்...)

 

தை 05, 2011

பிரதமர் உருத்திரகுமாரனால் மறக்கப்பட்ட மாவீரர்களும், மறைக்கப்பட்ட தேசியத் தலைவரும்!

கே.பி. அவர்களால் முன்மொழியப்பட்ட நாளிலிருந்து 'நாடு கடந்த தமிழீழ அரசு' தமிழ்த் தேசியத்திற்கெதிரான அச்சுறுத்தல் தளமாகவே தன்னை நிறுவி வருகின்றது. நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் அவைகளும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தமிழீழ விடுதலைத் தளத்தில் இணைந்து பயணிக்கும் என்ற தனது முன்னைய வாக்குறுதியையும் மீறியே திரு. உருத்திரகுமாரன் அவாகள் செயற்பட்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டும் தமிழ்த் தேசிய விடுதலைத் தளத்தால் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தலை நடாத்தி முடிக்கும்வரை புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் சமரசம் செய்து கொண்ட திரு. உருத்திரகுமாரன், அதன் பின்னரான இன்று வரையிலான நாட்கள் வரை புலம்பெயர் தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்களுடன் மோதல் போக்கையே கடைப்பிடித்து வருகின்றார். (மேலும்...)

தை 05, 2011

 

2011ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சியில் சாதனை படைக்கும்

2010ம் ஆண்டில் பொருளாதாரத் துறையில் நாடு ஸ்திர நிலையை அடைந்து, நல்ல வளர்ச்சியை பெற்று உன்னதமான சாத னையை ஏற்படுத்தியுள்ளது என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் என். கப்ரால் தெரிவித்துள்ளார். கடந்த ஆண் டில் மத்திய வங்கி எடுத்த சகல நடவடிக்கைகளும், தீர்மானங்க ளும் பொருளாதாரத்தை வளர்ச்சி அடையச் செய்வதில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை பார்க்குமிடத்து புத்தா ண்டான 2011இல் பொருளாதாரம் மேலும் வளர்ச்சியடைந்து ஸ்திர நிலை அடையும் என்பதில் ஐயமில்லை என்றும் அவர் கூறியுள் ளார். பொருளாதாரத்தை உச்ச கட்டத்திற்கு வளர்ச்சி அடையச் செய்த அதே வேளையில், பணவீக்கத்தையும் பெருமளவில் கட் டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை எண்ணக்கருவில் ஓர் அங்கமாக இருக்கும் நாட்டின் பொருளாதாரத் துறையின் வளர்ச்சி ஒரு சிறந்த வழிகாட்டலாகவும், ஒளிவிளக்காகவும் அமைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். (மேலும்...)

தை 05, 2011

 

தேர்தல் திருத்த சட்ட மூலம் எந்தவொரு சமூகத்திற்கும் அநீதி ஏற்படாத வகையில் அமைய வேண்டும் - நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்

தேர்தல் திருத்த சட்ட மூலம் எந்தவொரு சமூகத்திற்கும் கட்சிக்கும் அநீதி ஏற்படாத வகையில் அமைய வேண்டும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாகுமென நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எப்போதும் இரண்டுங்கொட்டான் நிலையிலிருந்து செயற்படும் ஐக்கிய தேசியக் கட்சி இது விடயத்தில் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப் போட்டு சந்தர்ப்பவாத அரசியல் செய்ய முனைகிறது எனவும் அமைச்சர் தெரிவித்தார். (மேலும்...)

தை 04, 2011

யாழ். குடாநாட்டு மக்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு

யாழ்ப்பாண குடாநாட்டில் சமீப காலமாக இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களின் பின்னணியில் ஆயுதப் படையினரும், பொலிஸாரும், அரசாங்கமும் இருந்து வருவதாக சில சமூக விரோத தீய சக்தி கள் நாடெங்கிலும் போலிப் பிரசாரங்களை மேற்கொண்டு வரு கின்றன. இவற்றின் பின்னணியில் பாதாள உலகக் கோஷ்டியினர் இருந்துவருவதாக புலனாய்வுப் பிரிவினருக்கு இப்போது தகவல் கள் கிடைத்து வருகின்றன. யாழ்ப்பாண குடாநாட்டில் இடம்பெற்று வரும் இத்தகைய வன் முறைகளையும் சட்டவிரோத செயற்பாடுகளையும் உடனடியாக முற்றுப்புள்ளி வைத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டு பிடித்து தண்டிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு பொறுப் பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படையினருடன் இணைந்து செயலாற்றுவதற்கென மூன்று விசேட பொலிஸ் குழுக்களை தற் போது கடமையில் ஈடுபடுத்தியுள்ளார். (மேலும்...)

தை 04, 2011

யுத்தத்தின் போது காயமடைந்தவர்களில் 4,209 பேர் அழைத்துவரப்பட்டனர்

யுத்தத்தின்போது காயமடைந்த 3,021 பேர் கப்பல்களில் புல்மோட்டை ஊடாக பதவியா வைத்தியசாலையை வந்தடைந்தனர். அவர்களுடன் உதவியாளர்களாக 3,660 பேரும் வந்திருந்தனர். மேலும் தரை மார்க்கமாகவும் 1,188 நோயாளர்கள் வந்திருந்தனர். நோயாளர்கள் துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல்வீச்சுக்களிலேயே காயமடைந்திருந்தனர். பாரிய அர்ப்பணிப்புக்கு மத்தியில் நாங்கள் அவர்களுக்கு அக்காலத்தில் சிகிச்சையளித்தோம் என்று யுத்த காலத்தில் பதவியா வைத்தியசாலையில் அதிகாரியாக பணியாற்றிய டாக்டர் மஹிந்த உயன்கொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தை 04, 2011

வட, கிழக்கிற்கு தமிழ் நிர்வாக அதிகாரிகளை நியிமிக்க திட்டம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு நிர்வாகச் சேவைகளில் தமிழில் பணியாற்றக்கூடிய அதிகாரிகளை தெரிவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இம் மாகாணங்களில் நிர்வாகச் சேவைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. ஏற்கனவே நிர்வாகச் சேவைக்காக அதிகாரிகள் தெரிவு செய்யப்பட்ட போதும், தமிழ் மொழியில் பணியாற்ற அதிகாரிகள் இல்லாதமையால், இவர்களை தெரிவு செய்வதற்காக இம் மாவட்டங்களில் தனியான போட்டிப் பரீட்சை நடாத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தை 04, 2011

பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அதிகரிக்கிறது  சிலியும், பராகுவேயும் அங்கீகரிக்கின்றன

சிலி மற்றும் பராகுவே ஆகிய இரு நாடுகளும் பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள் ளன. 1967 ஆம் ஆண்டில் இருந்த எல்லைகளைக் கொண்ட பாலஸ்தீனத்தை அங்கீகரிப் பது தொடர்பாக லத்தீன் அமெரிக்க நாடுகள் மத்தி யில் பெரிய விவாதம் எழுந் தது. பாலஸ்தீன நிர்வாகமும் அனைத்து நாடுகளுக்கும் கடிதம் எழுதியது. ஏற்கெனவே 130 நாடுகள் பாலஸ் தீனத்தை 1967 ஆம் ஆண்டு எல்லைகளோடு கூடிய சுதந்திர நாடாக அங்கீகரித் துள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளும் அந்தப்பட்டியலில் இணைகின்றன.(மேலும்...)

தை 04, 2011

 

இயற்கையின் மொழியை புரிந்து கொள்வது அவசியம்

மெக்சிகோவில் உள்ள கான்சன் நகரில் ஐ. நா. வானிலை மாநாடு நடைபெற்று முடிந்துவிட்டது. அங்கு பணக்கார நாடுகளுக்கும் ஏழை நாடுகளுக்கும் இடையே போராட்டம் நடைபெற்றது என்பதே உண்மை. புவி வெப்பமடைதலுக்குக் காரணமான வளர்ந்த நாடுகள் ஏழை நாடுகளுக்கு உதவி செய்வதில் பேரம் பேசின. வெப்ப வாயு வெளியேற்றத்தைக் கடுமையாகக் குறைப்பது பற்றிய கியோட்டோ ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவையெல்லாமும் சுற்றுச் சூழல் என்பதை ஏதோ அரசுகளின் பிடியில் சிக்கியுள்ள விவகாரமாக்கியுள்ளது. (மேலும்...)

தை 04, 2011

பாகிஸ்தான் அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது

அரசு கவிழ்வதைக் காப்பாற்ற பிரதமர் பெரும் முயற்சி

பாகிஸ்தான் அரசாங்கத்திலிருந்து பிரதான ஆளும் கட்சி விலகிச் சென்றதையடுத்து பிரதமர் யூசுப் ராஸா கிலானி தலைமையிலான அரசாங்கம் பெரும்பான்மையை இழந்தது. இதன் பின்னர் ஏற்படும் பாரிய அரசியல் நெருக்கடியிலிருந்து விடுபடும் பொருட்டு பிரதான எதிர்க் கட்சியின் ஆதரவுகளை பெறும் முயற்சியில் பிரதமர் யூசுப் ராஸா கிலானி ஈடுபட்டுள்ளார். முதாஹிடா குவாமி முன்னணி என்ற கட்சியின் அமைச்சர் ஒருவரை பிரதமர் யூசுப் ராஸா கிலானி சென்ற மாதம் பதவி விலக்கினார். இதனால் உண்டான அரசியல் மோதல்களால் பிரதமர் தலைமையிலான கூட்டணியிலிருந்து முதாஹிடா குவாமி முன்னணி என்ற கட்சி வெளியேறியது. இக்கட்சி தலிபான்களுக்கு நெருக்கமான கட்சியாகும். (மேலும்...)

தை 04, 2011

கனடா சென்ற ‘சன் சீ’ கப்பலில் மேலும் 4 புலி உறுப்பினர்கள்

சன். சீ கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் கனடாவிற்கு புலம்பெயர்ந்த இலங்கையர்களில் மேலும் நான்கு பேர் பல்வேறு சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் மற்றும் புலிகள் அமைப்பு என்பவற்றுடன் தொடர்புடையவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர். கனேடிய புலம்பெயர் மற்றும் அகதிகள் சபையின் வழிநடத்தலின் மீது அந்நாட்டு பாதுகாப்புத் துறையினர் இந்த சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. (மேலும்...)

தை 04, 2011

உள்ளூராட்சி சபை தேர்தல்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இறுதித் தீர்மானம்

உள்ளூராட்சிச் சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான இறுதித் தீர்மானங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (4ம் திகதி) மேற்கொள்ளும் என கட்சியின் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் நேற்று தெரிவித்தார். கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் போதே எதிர்வரும் உள்ளூராட்சிச் சபை தேர்தல் குறித்த முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட வுள்ளதாகவும் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை அம்பாறை உள்ளிட்ட சகல மாவட்டங்களின் கீழுள்ள உள்ளூராட்சிச் சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறை போட்டி யிடவுள்ளது. வேட்பாளர் தெரிவு மற்றும் இதர விடயங்கள் குறித்து இன்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுமென தெரிவித்த அவர், தனித்துப் போட்டியிடுவதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா என்ற விடயம் குறித்தும் இன்று கலந்துரையாடப்படும் எனவும் குறிப்பிட்டார்.

தை 04, 2011

 

2009 வாக்காளர் இடாப்பின்படி உள்ளூராட்சித் தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் 2009 வாக்காளர் இடாப்பின் பிரகாரமே நடத்தப்படும் என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. சகல உள்ளூராட்சி சபைகளும் அடுத்த வாரம் கலைக்கப்பட உள்ளதோடு மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. 2010 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு மே மாதத்திலேயே பூர்த்தி செய்யப் படவுள்ளதால் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை 2009 வாக்காளர் இடாப்பின்படி நடத்த முடிவு செய்யப்பட்டதாக பிரதி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமணசிறி கூறினார். நாடு பூராவும் உள்ள 21 மாநகர சபைகள் 41 நகர சபைகள், 268 பிரதேச சபைகள் என்பவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படவுள்ளன. இதன்படி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஒரு கோடி 40 இலட்சத்து 88,500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். பல வருடங்களின் பின் இம்முறை வட மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வுள்ளன. கடந்த பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களும் 2009 வாக்காளர் இடாப்பின் படியே நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தை 03, 2011

உள்ளுராட்சி தேர்தலுக்காக

 

தமிழ்க் கட்சிகளை இணைத்து பரந்துபட்ட முன்னணி அமைக்க முயற்சி

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணியொன்றை ஏற்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகத் தமிழ் மக்கள் அரங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இனப்பிரச்சினைத் தீர்வில் தமிழர்கள் சார்பில் பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கிலேயே தமிழ்க் கட்சிகளின் அரங்கம் உருவாக்கப் பட்டது எனக் குறிப்பிட்ட அவர், இதேபோல எதிர்வரும் உள்ளூரா ட்சி சபைத் தேர்தல்களிலும் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து பரந்துபட்ட முன்னணி யொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிரு ப்பதாகவும் தெரிவி த்தார். (மேலும்....)

தை 03, 2011

கொலை, கொள்ளை, கடத்தலை தடுக்க

 

யாழ்ப்பாணத்தில் முப்படை, பொலிஸ் கூட்டு நடவடிக்கை


யாழ். குடா நாட்டில் இடம்பெற்று வரும் கொலை, கொள்ளை, கடத்தல் போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் முப்படையினரும், பொலிஸாரும் கூட்டு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். விஷேடமாக முப்படையினருடன் இணைந்து செயலாற்றவென விஷேட பொலிஸ் குழுக்கள் மூன்று ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக யாழ். மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி அமரசேகர தெரிவித்தார். இந்த விஷேட பொலிஸ் குழுக்களுக்கு மேலதிகமாக புலனாய்வுத் துறையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார். (மேலும்....)

தை 03, 2011

கனடாவில்

விசேட பூஜையில் ஸ்ரீலங்காவின் விசேட தூதுவர் உயர்திரு பறணவிதான.

 

புதுவருடப் பிறப்பன்று ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொண்டு தமிழ் சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களது இன ஐக்கியத்துக்காக வேண்டிக்கொண்ட ரொரன்றோவுக்கான ஸ்ரீலங்காவின் விசேட தூதுவர் உயர்திரு பறணவிதான.

தை 03, 2011

பிரேசிலில் முதல் பெண் ஜனாதிபதி பதவியேற்றார்

லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரே லின் ஜனாதிபதியாக முன் னாள் கொரில்லா வீராங் கனை டில்மா ரூசெப் பதவி யேற்றார். சனிக்கிழமை யன்று அவருடைய பதவி யேற்பு நடந்தது. கொட்டும் மழையிலும், பல்லாயிரக்கணக்கான மக்கள் சாலையின் இரு மருங்கிலும் அணி வகுத்து நின்று டில்மாவை கைதட்டி வாழ்த்தொலி கூறி வரவேற்றனர். 1953ம் ஆண் டைய ரோல்ஸ் ராய்ஸ் காரில் பவனிவந்த அவருக்கு முற்றிலும் பெண்களால் ஆன பாதுகாப்பு படை மெய்க்காப்பாளர்களாக வந்தனர். (மேலும்....)

தை 03, 2011

தேசிய பாரம்பரிய இடங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்

இலங்கையின் தேசிய பாரம்பரிய சின்னங்களான, நக்கில்ஸ் மலைத்தொடர், ஹொர்டன் பிளேன்ஸ் மற்றும் சிவனொளி பாதமலை ஆகியவற்றை யுனெஸ்கோ ஸ்தாபனம் உலகின் இயற்கை பாரம்பரிய சின்னங்களாக பிரகடனம் செய்திருப்பதை அடுத்து, அவற்றிக்கு சட்டபூர்வமான முறையில் பூரண பாதுகாப்பை வழங்குவதற்கு சுற்றாடல் பாதுகாப்பு அமைச்சு புதிய சட்டங்களை விரைவில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ளது. எங்கள் நாட்டின் தேசிய பாரம்பரிய சின்னங்களை வெளிநாட்டவர்கள் இங்கு வந்து சீர்குலைப்பதில்லை. எங்கள் நாட்டு பிரஜைகளே இந்த மனவேதனைக்குரிய தேசத்துரோகச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உல்லாசப்பிரயாணிகளாக இவ்விடங்க ளுக்கு பொழுதை மகிழ்ச்சியோடு கழிப்பதற்காக செல்லும் இவர்கள், இவ்விடயங்களில் மதுபான போத்தல்களையும், பொலித் தீன் பைகளையும் வீசி எறிந்து, அங்கு சுற்றாடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்துகிறார்கள். (மேலும்....)

தை 03, 2011

ஐவரிகோஸ்ட்டில் ஐ.நா. படையினர் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

ஐ. நா. அமைதிப் படையினர் அப்பாவிப் பொது மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டியுள்ள ஐவரிகோஸ்ட் ஜனாதிபதி பக்போ நாட்டைவிட்டு ஐ. நா. படைகள் உடனடியாக வெளியேற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார். இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய சர்ச்சைக்குரிய ஜனாதிபதி பக்போ ஐ. நா. படைகள் ஐவரிகோஸ்ட் அப்பாவி மக்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். (மேலும்....)

தை 03, 2011

விஞ்ஞானிகள் உருவாக்கிய எலி மனிதர்களை உருவாக்குவதற்கான முதல் படியா...?

பறவையைப் போல கீச்சிடும் எலியை ஜப்பானிய விஞ்ஞானிகள் மரபு வழி பொறியியல் (Genetic Engineering) மூலம் உருவாக்கியுள்ளனர். ஒசாகா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனை உருவாக்கியுள்ளனர். இந்த உயிரினமானது மரபணுப் பொறியியல் மூலம் மரபணுக்களை மாற்றி உருவாக்கப்பட்டதாகும். இதனை தாம் எதிர்பார்த்திருக்கவில்லையெனவும் ஆனால் தமக்கு இதன் குரல் மிக மகிழ்ச்சியளிப்பதாகவும் எலியை உருவாக்கிய விஞ்ஞானிகள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். இதன் உருவாக்கமானது விஞ்ஞான உலகில் பாரியதொரு மைல்கல்லெனவும் கலப்புப் பிறப்பாக்கத்திற்கும், பரிணாம வளர்ச்சிக் கொள்கைகளிலும் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக அவ்விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

தை 03, 2011

 

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் கடல் அடி மின் கேபிள் பரிமாற்ற திட்டம்

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் 250 முதல் 300 கி.மீ, நீளத்திற்கு மின் பரிமாற்றக் கேபிள் வயர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதில் 50 கி.மீ. நீளம் கடலுக்கு அடியில் அமைய உள்ளது. கடலுக்கு அடியில் அமையும் கேபிள் திட்டத்தை இந்திய மின் தொகுப்புக் கழகமும் இலங்கை மின்சார வாரியமும் இணைந்து மேற்கொள்ளும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை இன்னும் ஒரு மாதத்தில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும், இந்த திட்டப்பணிகள் 2014 ஆம் ஆண்டில் தொடங்கும், இந்த திட்டத்திற்காக 3,000 முதல் 4,000 கோடி வரை தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்....)

தை 03, 2011

உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டமூலம் நாளை சபையில் - பிரதமர்

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலம் நாளை (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக பிரதமர் தி. மு. ஜயரத்ன தெரிவித்தார். குறித்த திருத்தசட்டமூலம் தொடர்பில் பரிசீலனை செய்வதற்கும் அவை தொடர்பில் கருத்துக்களை முன்வைப்பதற்கும் பிரதான எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுக்கும் அவகாசம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்ட பிரதமர், முறையான தேர்தலொன்றை நடாத்துவதற்கான அனைத்து சிறந்த தீர்மானங்களையும் எதிர்க்கட்சியினர் முன்வைப்பார்கள் எனவும் பிரதமர் எதிர்ப்பு தெரிவித்தார். உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலங்கள் மார்ச் மாதம் நிறைவடைய வுள்ளன. இருந்தபோதும் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தற்போது நடைமுறையில் உள்ளவாறு இடம்பெறும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தனர்.

தை 03, 2011

 

கொழும்பில் வீதிக் கமராக்கள் ‘வேலை’யை காட்ட ஆரம்பித்துவிட்டன

வீதி ஒழுங்கு விதி முறைகளை மீறிய 200ற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த இரண்டு நாட்களுக்குள் சி.சி.ரி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடையாளம் காணப்பட்ட சகல வாகன உரிமையாளர்களுக்கும் தண்டப் பத்திரம் அனுப்பி வைக்கப்படும் என்று மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக்க விஜயதிலக்க தெரிவித்தார். (மேலும்....)

தை 03, 2011

டைனோசர்கள் சாகவில்லை!

கிட்டத்தட்ட 62 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் இந்த பூமியில் வாழ்ந்ததாக கூறப்படும் பல்வேறு டைனோசர்கள் அழிக்கப்பட்டன. அவை, இந்த பூமியுடன் மோதிய ஒரு வேறு கிரக துண்டால் (Jack Homer) ஏற்பட்ட அதிர்வில் கொல்லப்பட்டன என சொல்லப்படுகின்றது. அண்மையில் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியாளரின் கருத்துக்கள்  முற்றிலும் மாறுபட்டவையாக உள்ளதுடன், பல புதிய நம்பிக்கையையும் தந்துள்ளது. காரணம், இவர்கள் உறை நிலையில் உள்ள ஒரு கருத்தரித்த டைனோசரின் முட்டையை கண்டு எடுத்துள்ளனர். இதில் டைனோசரின் குருதிக்கலங்கள் எடுக்கப்பட்டுள்ளன என சொல்லப்படுகின்றது. ஆனால் முழு டி.என்.ஏ. எடுக்க முடியாது என சொல்லப்படுகின்றது. பறவைகள் டைநோசரில் இருந்து வந்தவை என கூறுகிறார். கோழிகளில் நீளமான வால், அவை முட்டைக்குள் இருக்கும்போது ஒரு கட்டத்தில் அழிக்கப்படுவதாக கூறியுள்ளார். டைனோசர்களை மீள உருவாக்க முடியாவிட்டாலும் டைனோசர் கோழிகளை உருவாக்குவோம் என்கிறார்.

தை 03, 2011

இலங்கையில்

புதிதாக 15 அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அங்கீகாரம்

புதிதாக பதினைந்து அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கு தேர்தல் செயலகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த வருடம் அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கென 85 விண்ணப்பங்கள் கட்சிகளிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றிலிருந்தே 15 புதிய அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக செயலகம் தெரிவித்தது. இவற்றைப் பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வு அடுத்த வாரம் நடை பெறவுள்ளது. தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட 66 அரசியல் கட்சிகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தை 03, 2011

2000 ஆண்டுகள் பழைமையான மருந்து வில்லைகள்

2000 ஆண்டுகள் பழைமையான கப்பலொன்றின் சிதைவுகளிலிருந்து தாவர மூலப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்து வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்துவுக்கு முன் 130 ம் ஆண்டில் இத்தாலியின் துஸ்கனி நகருக்கப்பால் மூழ்கிய ரெலிட்டோ டெல் பொன்ஸினோ என்ற கப்பலிலேயே மேற்படி வில்லைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தக் கப்பலானது 1989 ம் ஆண்டு முதன்தலாக கண்டு பிடிக்கப்பட்ட போதும் அதில் மருத்துவ வில்லைகள் இருப்பது தற்போதே கண்டறியப்பட்டுள்ளது. கிழக்கு மத்தியதரைக்கடல் பிராந்தியத்தில் பயணம் செய்த வேளை மூழ்கியதாக கருதப்படும் இந்தக் கப்பலிலிருந்து பெறப்பட்ட பொருட்களை ஆய்வுக்குட்படுத்திய அமெரிக்க வாஷிங்டன் நகரிலுள்ள சுமித் ஸோனியா பேணுகை மற்றும் கூர்ப்பு பரம்பரையியல் நிலையத்தைச் சேர்ந்த ரொபேர்ட் பிளேயிஸ்ஸர் இந்த மருந்து வில்லைகளை இனங்கண்டுள்ளார். இந்த பண்டைய மருந்து வில்லைகளிலுள்ள உள்ளடக்கமானது நவீன கால நோய்களை குணப்படுத்துவதற்கு உதவுமா என்பதை கண்டறிய தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

தை 02, 2011

யாழ்ப்பாண கலாசாரத்துக்கு என்ன நடந்தது?

யாழ்ப்பாணத்திலே உருவான தமிழர் கலாசாரம், பண்பாடு, உபசரிப்பு, ஒற்றுமை எல்லா வற்றுக்கும் என்ன நடந்தது என்ற கேள்வி இப்போது ஒவ்வொருவர் மனங்களிலும் எழ ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் அண்மைக் காலமாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளே! அதுவும் தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு மிகவும் கீழ்த்தரமான நடத்தைகள் தொடர்பான செய்திகள் முழுத்தமிழ்ச் சமூகத்தையும் பாதி ப்படையச் செய்துள்ளது. ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தாரைப் பார்த்து எமது பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளக் கற்க வேண்டும் என்று ஏனைய பிரதேச மக்கள் விரும்பியதுண்டு. ஆனால் இன்று அதே யாழ்ப்பா ணத்தில் நடப்பவற்றைக் கேட்டால் அப்பகுதிக்குச் சென்று வந்தாலே தீட்டு என்பதாக உள் ளது. கோயில், குளம், தீர்த்தம் என்று பண்பாட்டு விழுமியங்களுடன் மிளிர்ந்த யாழ்ப்பாணம் இப்போது பீச், ஹோட்டல், லொட்ச் என்று களியாட்டப் பிரதேசமாகிவிட்டது. (மேலும்....)

தை 02, 2011

ஓமந்தை வரை செல்லும் யாழ்தேவி புகையிரத சேவை

கொழும்பு தாண்டிக்குளம் இடையில் தற்போது சேவையில் உள்ள யாழ்தேவி புகையிரத சேவை ஓமந்தை வரை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சேவை இம் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை இயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதை நிர்மாணப்பணிகள் முடியும் நிலையில் உள்ளது. எனவே ஓமந்தை வரை யாழ்தேவி பயணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தை 02, 2011

ஏப்ரல் மாதத்தில் அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் - தமிழ் கட்சிகளின் அரங்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் என தமிழ் கட்சிகளின் அரங்கம் அறிவித்துள்ளது. இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் ஏப்ரல் மாத முதல் வாரமளவில் முன்வைக்கப்படும் என தமிழ் மக்கள் அரங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்காக ஏற்கனவே ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தக் குழுவினர் இந்த வாரத்தில் கூடி தீர்வுத் திட்டம் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

தை 02, 2011

தாய்லாந்தில் கைதானவர்கள் தாயகம் திரும்புகின்றனர்!

அரசியல் தஞ்சம் கோரி மூன்றாவது உலக நாடொன்றிற்கு சட்டவிரோதமாக செல்லும் நோக்கில் தாய்லாந்தில் தங்கியுள்ள பல தமிழர்கள் மீள தாயகம் திரும்புவதாக தெரியவருகிறது. கடந்த டிசம்பர் 23 ம் திகதிக்கு பின்னர் மேலும் 20 இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தாய்லாந்து காவல்துறையினர் குடிவரவு குடியகழ்வு சட்டங்களை இறுக்கமாக்கிய நிலையில், அங்கு உரிய பயண ஆவணங்கள் இல்லாமல் தங்கியுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுத்துவருகின்றனர். முன்னரும் 50 தமிழர்கள் நாடுதிரும்பியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஒக்டோபர் மாதம் தாய்லாந்து காவல்துறையினரும் குடிவரவு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 250 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

தை 02, 2011

ஆனந்த சங்கரி ஐயாவிற்கு அன்பான ஒரு அறிவு மடல்...

(க. சிவராசா )

புலிகளிடம் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் போன்று எவரும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது உண்மை. அதனால்தான் தமிழ் மக்களுக்கான உங்களது எச்சரிக்கையை நீங்கள் வலுவாக துணிச்சலுடன் விட்டிருந்தீர்கள். அன்று புலிகளுக்கு வால் பிடித்துவந்த அனைவரும் இன்று நீங்கள் அன்று சொன்னவற்றை நிச்சயம் இரை மீட்டிப் பார்ப்பர். புலிகளுக்கும், அதன் மறைந்த தலைவருக்கும் அன்று நீங்கள் துணிந்து எழுதிய மடல்கள் பலரை வியப்பில் இன்று ஆழ்த்துகின்றது. தமிழ் மக்களை பகடைக் காய்களாக எண்ணி புலிகள் இஷ்டம்போன போக்கில் நடந்து கொண்ட விதம் இன்று தமிழ் மக்களை அரசியல் அநாதைகளாக்கிவிட்டது. அரசாங்கத்தின் ஆதரவுக் கரம் மட்டுமே அம் மக்களுக்கு ஒரு தெம்பைத் தருகின்றது. நீங்கள் குறிப்பிட்டது போன்று புலிகள் உண்மையான இதய சுத்தியுடன் ஏதோ ஒரு அரசாங்கத்துடனாவது பேசியிருந்தால் இன்று அவர்களும் அழிந்திருக்கமாட்டார்கள். அவர்களால் தமிழ் மக்களும் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டிருக்க மாட்டார்கள். உங்களது தீர்க்கதரிசனமான யதார்த்தத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை. (மேலும்....)

தை 02, 2011

இனப்பிரச்சினை தீர்வில் புதிய அரசியல் திருப்பம்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பில் அரசாங்கமும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் அடுத்த வாரம் நேரடிப் பேச்சு வார்த்தையை ஆரம்பிக் கின்றன. அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்து வதற்காக ஜனாதிபதி அவர்களால் நியமிக்கப்படும் அமைச்சர்கள் குழுவுடன் இரா. சம்பந்தன் எம்.பி தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னோடியாக ஏற்கனவே இருதரப்பும் கலந்துரையாடல்களை நடத்தியிருப்பதுடன் அரசியல் தீர்வு தொடர்பான நேரடிப் பேச்சுவார்த்தையை அடுத்த வாரமே ஆரம்பிக்கின்றன. (மேலும்....)

தை 02, 2011

சுவிஸில் உள்ள வர்த்தக நிறுவனங்களால் ஒழுங்கு செய்யபட்ட மோசடி புத்தாண்டு விழா!!

சுவிஸ் நாட்டில் உள்ள சூரிச் நகரில் பல்வேறுபட்ட      வர்தக ஸ்தாபனங்கள் ஒன்று சேர்ந்து,       புத்தாண்டை முன்னிட்டு   ‘புத்தாண்டும் புது நிமிர்வும்’ என்ற ஓர் நிகழ்சியை (விழா) 01.01.2011 அன்று    நடத்தவிருப்பதாகவும்,     அந்த   நிகழ்சியில்      சீமான், சிலம்பரசன்     போன்ற முக்கியஸ்தாகள்    கலந்துகொள்ளவிருப்பதாகவும்     கூறி லங்காசிறி போன்ற    இணையதளங்களில் விளம்பரம் செய்தும்,    சுவிஸில் உள்ள    அனைத்து   தமிழ் வர்தக ஸ்தானங்களிலும் மற்றும நேரடியாகவும் ரிக்கற்றுக்களை    விற்றுவிட்டு காசுகளை    வாங்கிக்கொண்டு,      கடைசி நேரத்தில் சீமான், சிலம்பரசன் போன்றோர் வரமாட்டார்கள் என்று அறிவித்துள்ளார்கள். (மேலும்....)

தை 02, 2011

கனடாவில் வீரகேசரி...!!!

1930 ம் ஆண்டு தொடக்கம் ஈழத்தில் இருந்து வெளிவந்த வீரகேசரி இன்று முதல் (01-01-2011) கனடாவில் வெளிவரத்   தொடங்கியுள்ளது. வீரகேசரி பத்திரிகை கடந்த 80 ஆண்டுகளாக தொடர்ந்து ஈழத்தில் நடுநிலைமை பேணி வெளிவந்ததுடன், பலவாசகர்களை தன்னகத்தே கொண்டதுடன்... பல எழுத்தாளர்களையும் பத்திரிகையாளரையும் உருவாக்கியது. இவர்களில் குறிப்பிடும்படியாக கனடாவின் முன்னணிப் பத்திரையாக இருந்த மஞ்சரி பத்திரிகையின் ஆசிரியர் டீ.பீ.எஸ். ஜெயராஜ், தமிழர் செந்தாமாரையின் ஆசிரியர் மறைந்த அமரர் கனக அரசரத்தினம் வீரகேசரி பத்திரிகையின் பின்புலத்தை கொண்டவர்கள். (மேலும்....)

தை 02, 2011

சொந்த மண்ணிற்குத் திரும்பும் வடபுல முஸ்லிம் மக்கள்

வடபுலத்திலிருந்து புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்கள் இப்போது தமது சொந்த இருப்பிடங்களுக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த பல முஸ்லிம் மக்கள் அவ்வாறு சென்று மீளக் குடியேறி வருகின்றனர். அமைச்சர் றிஷாட் பதியுதீன் இதற்கான ஏற்பாடுகளை மிகுந்த கவனமாகவும், துரிதமாகவும் மேற்கொண்டு வருகின்றார். புலிகள் கொடிகட்டிப் பறந்த ஒரு காலகட்டத்தில் காரணம் எதுவுமின்றிக் கண்மூடித் தனமாக இந்த அப்பாவி முஸ்லிம் பொதுமக்களை உடுத்த உடுப்புடன் இடம்பெயர வைத்து இன்பம் கண்டனர். அப்போது சாதாரண தமிழ் மக்கள் கவலையும், அதிர்ச்சியும் அடைந்து மனவேதனைப்பட்டாலும் வாய்விட்டுக் கேட்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. (மேலும்....)

தை 02, 2011

காலைவாரியது ஐ.தே.க் சிறுபான்மை கட்சிகள் திண்டாட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியை நம்பி ஆதரவு வழங்கி வரும் சிறுபான்மைக் கட்சிகள் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கியுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணிக் கட்சியாக உடன்படிக்கை செய்து கொண்டு இனிமேல் அந்தக் கட்சிகள் போட்டியிட அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப் பட்டுள்ளதால் ஐ.தே.க. சார்பு சிறுபான்மைக் கட்சிகள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம், நீண்டகாலமாக அந்தக் கட்சியை நம்பிய தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் துரோகம் இழைத்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

தை 02, 2011

Washington’s “humanitarian” war and the KLA’s crimes

The KLA’s crimes only came to light at all because of the unravelling of an ongoing cover-up by the US, the United Nations and other major powers. Information about KLA detention facilities in Kosovo and across the border in Albania first reached the International Centre for the Red Cross in 2000, after KLA fighters reported that Serb civilians were taken there in 1999 and their organs removed and sold abroad for transplant operations. The allegations surfaced once again in a BBC investigation in April last year and in the publication of the memoirs of International Criminal Tribunal for the former Yugoslavia (ICTY) Chief Prosecutor Carla Del Ponte, revealing that a 2008 investigation into the “organ harvesting” had been dropped because it was supposedly “impossible to conduct.” (more...)

தை 02, 2011

முஸ்லிம் மக்களின் பயங்களுக்கு ஒரு முடிவு காணப்படாவிட்டால் நிரந்தரத் தீர்வு சாத்தியமில்ல - புளொட் அமைப்பின் தலைவர்

தமிழ் அரங்கிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றி ணைந்து செயற்படக்கூடியதொரு நிலையை தோற்றுவித்துள்ளது. ஒரேவிதமான கொள்கைகளைக் கொண்டிருக்கா விட்டாலும் தற்போது ஒன்று சேர்ந்திருக்கின்றன. அது வரவேற்கப்பட வேண்டிய விடயம். தற் போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது. அரசியலில் மாத்திரமல்ல தனிப்பட்ட வாழ்க் கையிலும் கூட அந்த ‘ஈகோ’ இருக்கிறது. தமிழ்க்கட்சிகளுடனான கலந்துரையாடலில் என்னால் ஒரு விடயத்தைப் பார்க்கக்கூடியதாக இருந்தது. எல்லாக் கட்சித் தலைவர்களும் ஓரளவுக்கு விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை யுடன் பேசினார்கள். தமிழ் மக்கள் மத்தியில் ஒரு ஒற்றுமையைக் கொண்டுவர வேண்டும் என்பதை உணர்ந்து பேசப்பட்டன. (மேலும்....)

தை 02, 2011

புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்தொழிப்பதற்கு அமெரிக்காவே உதவியது!

புலிகளுடனான போரின்போது புலிகளின் ஆயுதக் கப்பல்களை அழித்தொழிப்பதற்கு அமெரிக்காவே உதவியதாக ஆங்கில நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பிரஸ்தாப ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, புலிகளுடனான போரில் அமெரிக்காவின் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் இலங்கைக்கு மிகுந்த உறுதுணையாக இருந்தது. விடுதலைப் புலிகளோடு நடைபெற்ற போரில் இலங்கை அரசுக்கு அமெரிக்க இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் பல வழிகளில் உதவின. புலிகளுக்கு ஆயுதங்களை ஏற்றிவந்த பல கப்பல்கள் அமெரிக்காவின் புலனாய்வுத் பிரிவினால் இனங்காணப்பட்டு இலங்கைக்கு தகவல் வழங்கப்பட்டது. இதேவேளை போர் உச்சக்கட்டத்தை அடைந்தவேளை முள்ளிவாய்க்காலில் உள்ள மக்களை அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய படையணி காப்பாற்றும் எனவும் ஒரு நாடு நிச்சயம் தலையிட்டு யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவரும் எனவும் இறுதிநேரத்தில் புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் நம்பியிருந்தனர்.
 

தை 02, 2011

யூரோவுக்கு மாறிய  எஸ்தோனியா

ஐரோப்பிய யூனியன் நாடுகள் பொதுவான நாணயத்தைப் பயன்படுத்துவது என்ற முடிவின் அடிப்படையில் யூரோ அறிமுகப்படுத்தப்பட்டது. யூனியனில் 27 நாடுகள் இருந்தாலும் அனைத்து நாடுகளும் யூரோவுக்கு தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. 16 நாடுகள் மட்டுமே யூரோவை பொது நாணயமாக பயன்படுத்தி வந்தன. டிசம்பர் 31 ஆம் தேதி முதல் தங்கள் நாடும் யூரோவைப் பயன்படுத்தப் போகிறது என்று எஸ்தோனிய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்காவில் துவங்கிய பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய நாடுகளும், யூரோவின் மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எஸ்தோனிய அரசின் இந்த முடிவுக்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

தை 02, 2011

கட்சியின் எதிர்காலத் தலைமைப் பொறுப்பை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைப்பதற்கு தயார்? ஆனால் கால அவகாசம் தேவை. - ரணில் விக்ரமசிங்க

கௌரவமான முறையில் விலகிச் செல்வதற்கு போதியளவு கால அவகாசம் வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்காலத் தலைமைப் பொறுப்பை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் கபீர் ஹாசீம் சஜித் தரப்பினர் மற்றும் ரணில் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. (மேலும்....)

 

தை 02, 2011

வெளிச்சத்துக்கு வந்த உண்மை

யாழ்.வேலணை முதலாம் வட்டாரத்திலுள்ள வீடொன்றில் இரவு வேளை புகுந்து அங்கிருந்த யுவதியை இழுத்து வந்து பாலியல் குற்றம் புரிய முற்பட்டனரென்ற சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட இரு இளைஞர்களையும்  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவரும் தற்போதைய யாழ். மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான முடியப்பு றெமீடியஸ் பிணையில் விடுவித்துள்ளார் என அக் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களின் சார்பில் மன்றில் தோன்றிய சட்டத்தரணி மு.றெமீடியஸ் தாக்கல் செய்த பிணை மனுவின் அடிப்படையிலேயே இவர்கள் இருவரும்  விடுவிக்கப்பட்டமை யாழ்.மக்கள் மத்தியில் கடும் அதிர்ப்தியைத் தோற்றுவித்துள்ளது. (மேலும்....)

தை 01, 2011

தை 01, 2011

நாட்டை வெற்றிப் பாதையில் இட்டு செல்லும் ஆண்டாக அமையட்டும்

தாய் நாட்டினை ஒன்றுசேர்ப்பதிலும், நாட்டினை அபிவிருத்தி செய்வதிலும் முக்கிய காரணியாக தேசிய ஒற்றுமை காணப்படுகின்றது. எனவே, அனைத்து கோபதாபங்களையும் மறந்து ஒன்றிணைந்து முன்னேற வேண்டிய காலம் பிறந்துள்ளது. சகவாழ்வினை இல்லாதொழித்து மக்களையும், நாட்டையும் வீழ்த்துவதற்கு அணி திரண்டுள்ள அனைத்துச் சூழ்ச்சிகளும் அப்போது தான் தோல்வியடையும். நாம் மிகுந்த திடசங்கற்பத்துடன் செயற்பட்டு பொறுமையைக் கையாண்டு நாட்டு மக்களிடையே மிகுந்த பரஸ்பர புரிந்துணர்வையும், நாட்டைக் கட்டியெழுப்புவது பற்றிய நம்பிக்கையினையும் கட்டியெழுப்பினோம். (மேலும்....)

தை 01, 2011

அவுஸ்திரேலியா தமிழர்களை நாடுகடத்தக் கூடாது - சர்வதேச மன்னிப்புச் சபை _

அவுஸ்திரேலியாவுக்கு சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ள இலங்கைத் தமிழர்களை அவுஸ்ரேலிய அரசாங்கம் நாடுகடத்தக்கூடாது என சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக "ஓசியானிக் வைக்கிங்' கப்பலின் மூலம் காப்பாற்றப்பட்ட தமிழர்களில் 10 பேர் மீள்குடியேற்றத்துக்காக ரோமானியாவின் இடைத்தங்கல் முகாமில் தங்கவைப்பட்டனர். எனினும் பாதுகாப்பு காணங்களுக்காக அவர்களை ஏற்றுக்கொள்ள கனடாவும் அமெரிக்காவும் மறுத்தமையை அடுத்து அவுஸ்ரேலியா நாடு கடத்த முயற்சிப்பதாக மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையின் இராணுவ புலனாய்வு தகவல்களின்படியே இவர்கள் நாடுகடத்தப்படவுள்ளதாக மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது. (மேலும்....)

தை 01, 2011

இராணுவத்திலிருந்து தப்பியவர்களில் மூவாயிரம் பேர் இதுவரை கைது

இராணுவத்திலிருந்து தப்பியோடிய வீரர்களில் மூவாயிரம் பேர் இதுவரையிலும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் ஏழு உயர் அதிகாரிகள் அடங்கியிருப்பதாகவும் இராணுவபேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெதவெல தெரிவித்தார். இவ்வாறு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மறைந்திருப்பதற்கு இடமளிப்போருக்கெதிராகவும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அவர் தப்பியோடிய 50 ஆயிரம் படை வீரர்களையும் கைது செய்வதற்கான துரித நடவடிக்கைகைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். (மேலும்....)

 

தை 01, 2011

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வோருக்கு இணையத்தளம் ஊடாக வீசா

2011 சுற்றுலா ஆண்டை முன்னிட்டு, இலங்கைக்குச் சுற்றுலா மேற் கொள்கின்றவர்களுக்கு இணையத்தளம் ஊடாக வீசா பெற்றுக் கொடுக்கும் இலகுமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட் டுள்ளது. வெளிநாட்டவர்கள் தூதரகங்களுக்கு வருகை தராமல் இணையத் தளத்தைப் பயன்படுத்தி வீசா பெற்றுக் கொள்ளும் நடைமுறையை விரைவில் அறிமுகப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார். இணையத்தளம் ஊடாக வீசா பெற்றுக் கொடுக்கும் செயற்பாடு 24 மணித்தியாலமும் இடம்பெறும்.

தை 01, 2011

காலநிலை சீரடைந்ததும் வீதிகளை செப்பனிடப்படும்

கடந்த இரு மாதங்களாக நாடெங்கிலும் பெய்த பெரும் மழையினால், இன்று நாட்டின் நாலாபக்கங்களிலும் உள்ள வீதிகள் உடைந்து சீர்குலைந்து போயுள்ளன. பல கோடி ரூபா செலவில் புதிதாக செப்பனிடப்பட்ட நெடுஞ்சாலைகள் கூட, இந்த பெருமழையினால் சீர்குலைந்து போகின்றன. மழை தொடர்ந்தும் பெய்யும் போது, வீதிகளின் தார் படலத்தை ஊடுருவி தண்ணீர் வீதிகளுக்கு கீழ் உள்ள நிலப்பரப்பில் தேங்க ஆரம்பிப்பதனால் பஸ்கள் கொள்கலன் கள், லொறிகள் போன்ற பெரிய வாகனங்கள் வீதிகளில் செல்லும் போது அவை சிறிது சிறிதாக உடைப்பெடுக்க ஆரம்பிக்கிறது. (மேலும்....)

தை 01, 2011

ஐ. நா. பாதுகாப்புச் சபை

ஜப்பானின் முயற்சிக்கு வடகொரிய பத்திரிகை விமர்சனம்

“ஐ. நா. பாதுகாப்பு சபையில் ஜப்பான் நிரந்தர இடம் கோருவது என்பது கேலிக் கூத்தான விடயம்” என வடகொரிய பத்திரிகை ஒன்று விமர்சித்துள்ளது. ஐ. நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவதற்கு இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் சேர்ந்த “ஜி-4” அமைப்பு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந் நிலையில் வடகொரியாவுக்கும், ஜப்பானுக்கும் உள்ள உறவு சுமுகமாக இல்லாத நிலையில், ஜப்பானின் முயற்சி குறித்து வடகொரியப் பத்திரிகை ஒன்று கடுமையாக விமர்சித்துள்ளது. வடகொரியாவில் இருந்து வெளிவரும் “ரோடங் சின்முன்” என்ற பத்திரிகை இது குறித்து கூறியதாவது:- ஜப்பானின் வெளியுறவுக் கொள்கை முற்றிலும் அமெரிக்க நலன்கள் மற்றும் தேவைகளை சார்ந்ததே. நிரந்தர உறுப்பினராவதற்குரிய தகுதி, பாதுகாப்பு மற்றும் உரிமைகளை காக்கும் திறன் ஜப்பானுக்கு கிடையாது. இந் நிலையில், ஜப்பானின் கோரிக்கை வெறும் கேலிக்கூத்து தான். அதன் கோரிக்கை நிறைவேற இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

தை 01, 2011

டான் தமிழ் ஒளியின் 10 வது ஆண்டு விழாவில் அ.வரதராஜப்பெருமாள்

இன்றும் கூட முழுமையானதொரு ஜனநாயகச் சூழல் உருவாகிவிட்டதென கூறிவிட முடியாது. ஆனால் மக்களை அச்சமூட்டுவதாலோ, நம்பிக்கை இழக்கச் செய்வதாலோ பயன் ஒன்றும் விளையப்போவதில்லை. இங்கு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை வெளிக்கொண்டு வருவதற்கு ஊடகங்கள் பங்களிப்பு செய்யலாம். வீட்டுத்திட்டங்களை நிறைவேற்ற முடியாதுள்ள மக்களின் பிரச்சினைகளை அரசாங்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரலாம். இங்கு இடம்பெறுகின்ற கொலை கொள்ளை போன்ற சம்பவங்களை கூட துப்பறிவதற்கு உதவியாக உண்மைகளை கண்டறிந்து எழுதி குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் பங்களிக்கலாம். (மேலும்....)

தை 01, 2011

சர்வதேச வளர்ச்சிப் போக்கைக் காட்டுகிறது  பிரிக் விரிவாக்கத்திற்கு ரஷ்யா பாராட்டு

பிரேசில், ரஷ்யா, இந் தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து ஒத்துழைப்பது என்று முடிவெடுத்தபோது, இந்தக்கூட்டணிக்கு பிரிக் என்று கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் பொருளா தார வல்லுநர்களில் ஒருவ ரான ஜிம் ஓநீல் பெயர் சூட் டினார். இந்த அமைப்பின் முழு உறுப்பு நாடாக ஆவ தற்கு டிசம்பர் 23 ஆம் தேதி யன்று தென் ஆப்பிரிக்கா ஒப்புதல் தெரிவித்தது. இனிமேல், பிரிக்ஸ் என்று இந்த அமைப்பு அழைக்கப்படும். (மேலும்....)

தை 01, 2011

குடியிருப்புகளாகும் இன்டர்நெட் மையங்கள்!

“அது ஏப்ரல் மாதமிருக்கும். நாங்கள் குடியிருந்த வீட்டிற்கான குத்தகையை நீட்டிக்க வேண்டும். ஆனால் அதற்குத் தேவையான 500 டாலர்கள் எங்களிடம் இல்லை. உடைந்து போய் உட்கார்ந்திருந்தோம். உலகிலேயே விலைவாசி அதிகமாகயிருக்கும் டோக்கியோ நகரத்தில் வறுமையில் உழலத் துவங்கியிருந்தோம்...” டோக்கியோ நகரத்திற்கு சற்று வெளியே இருக்கும் இன்டர்நெட் மையத்திலிருந்து வலைப்பூ மூலமாக உலகிற்கு தனது நிலைமை பற்றி அறிவித்துக் கொண்டிருக்கிறார் ஜப்பானிய இளைஞர் ஒருவர். தான் இதை எழுதிக் கொண்டிருக்கும்போதே கண்கள் சுழன்று உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடுகிறார். பிறகு அந்த மையத்திலேயே உறங்கிவிடுகிறார். காலையில் எழுந்து பல் துலக்கிவிட்டு அங்கிருக்கும் எந்திரத்தில் தேநீரை அருந்திவிட்டு வேலை தேடச் செல்கிறார். 24 மணிநேரமும் இயங்கும் அந்த மையத்தையே தனது வீடாக அவர் மாற்றிக் கொண்டுவிட்டார்.
(மேலும்....)

தை 01, 2011

ஆஸ்திரேலியா  50 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத் தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உரு வான பெரு வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற் பட்டிருக்கிறது. இம்மாகாணத்தில் பண் டாபர்க் மற்றும் எமரால்டு ஆகிய பகுதிகளில் குடி யிருக்கும் ஆயிரக்கணக் கான மக்கள் தங்கள் வீடு களிலிருந்து வெளியேற்றப் பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்து கொண் டிருந்த மழை நின்று விட் டாலும், வெள்ளப் பெருக்கு இன்னும் நின்று விட வில்லை. தண்ணீர் வந்து கொண்டேயிருக்கிறது. எம ரால்டு நகரைப் பொறுத்த வரை, அந்த நகரத்தின் வர லாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் வந் துள்ளது. இந்நகரில் ஓடிக் கொண்டிருக்கும் நோகோவா ஆற்றின் தண்ணீர் மட்டம் மேலும் உயரப்போகிறது.(மேலும்....)

 

தை 01, 2011

பேச்சுவார்த்தையே தீர்வைத் தரும் - சீனா

ஒத்துழைப்பிற்கான சூழல் உருவாக வேண்டு மென்றால் வட கொரியா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகளும் பேச்சுவார்த்தைக்காக அமர வேண்டும் என்று சீனா கோரிக்கை வைத்துள்ளது. பெய்ஜிங்கில் சர்வதேச செய்தியாளர்களைச் சந்தித் துப் பேசிய சீன வெளியுற வுத்துறை செய்தித்தொடர் பாளர் ஜியாங் யு, பேச்சு வார்த்தைக்கு சீனா முழு ஆதரவு தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், இரண்டு கொரியாக்களும் விரைவில் சந்தித்துப் பேசும் என்ற நம் பிக்கை உள்ளது. இரண்டு தரப்பும் அமர்ந்து பேசி, ஆலோசனைகள் செய்து கொள்வதன் மூலம், உறவு களை கொஞ்சம், கொஞ்ச மாக மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். (மேலும்....)

 

தை 01, 2011

‘நெல்லு’ - சொல்ல வந்ததும், சொல்லியதும்

படத்தின் உச்சக் கட்டமாக பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று வெண்மணியின் ஒரு பாவமும் அறியாத உழைப்பாளி மக்களை ஒரு ஓலைக் குடிசைக்குள் பூட்டி உயிரோடு கொளுத்தும் மனிதத்தன்மையற்ற கொடுமை, அதன் கொடூரத்தாலேயே படம் பார்க்கும் ரசிகரை நெஞ்சு பதைக்கச் செய்து அப்படியே இருக்கையோடு உறைந்து போக வைத்து விடுகிறது. அங்கே பொசுக்கப்பட்டது ஏதோ ஒரு கிராமத்துக் கூலி மக்கள் மட்டுமல்ல. தமிழக பாட்டாளி மக்களின் உயிர்த் துடிப்பான வாழ்வும், பாசமும், மகிழ்ச்சியும், காதலும் அங்கே ஒட்டுமொத்தமாக கொளுத்திடப்பட்டது என்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதில் படம் வெற்றிபெற்றுள்ளது. (மேலும்....)

 

தை 01, 2011

ஆங்கில பேரகராதியில் ‘விக்கிலீக்ஸ்’

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையாக உள்ள ‘விக்கிலீக்ஸ்’ விரைவில் ஆங்கிலப் பேரகராதியில் இடம்பெறும் என உலக மொழி கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. விக்கிலீக்ஸ் நிறுவனம் முதலில் ‘விக்கி’ என்ற பெயரில்தான் ஆரம்பிக்கப்பட்டது. ‘விக்கி’ எனும் வார்த்தைக்கு, ஹவாய் மொழியில் வேகமாக அல்லது விரைவாக என்று பொருள். கணனி மொழியில் பார்த்தால், உலகில் உள்ள எந்த ஒரு சர்வரும் இந்த இணையத்தளத்தை எளிதில் பயன்படுத்த முடியும் என்பதாகும்.  (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com