Contact us at: sooddram@gmail.com

 

கார்த்திகை 2010 மாதப் பதிவுகள்

கார்த்திகை 30, 2010

பிரித்தானியா சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். இவர் விசேட விமானமொன்றில் இன்று மாலை பிரித்தானியா நோக்கிச் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி பிரித்தானியா சென்றுள்ளார். பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார். ஜனாதிபதி தனது இந்த விஜயத்தின் போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விசேட உரையொன்றினையும் நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். முன்னதாக ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவிருந்தபோதும் பல காரணங்களுக்காக அது பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 30, 2010

பட்ஜெட்டை எதிர்த்து கூட்டமைப்பு வாக்களிக்காது

‘ஜனாதிபதிக்கு தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவே இம்முடிவு’

ஜனாதிபதிக்கு எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்காதிருக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு எம். பி. மாவை சேனாதிராஜா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எமது மக்களின் மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் அரசியல் தீர்வுக்காக பங்க ளிக்கவும் தயாராக உள்ளோம். வடக்கிலும் கிழக்கிலும் உள்ள திட்டங்களை முன் னெடுக்கையில் அங்கிருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களை புறக் கணிப்பது ஏற்க முடியாதது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

SRI LANKAN OFFICIALS TARGET NEW LTTE LEADER VINAYAKAM

Sri Lankan defence authorities moved quickly last week to target the self-styled new leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization who is operating in Europe under the nom de guerre Vinayakam. A team of Police and intelligence officials sought and obtained on November 24, a warrant for the arrest of Sekarapillai Vinayakamoorthy alias Vinayakam from the Chief Magistrates Courts in Colombo. Since the person concerned is operating in areas beyond national jurisdiction, Sri Lankan officials have sought and obtained the services of the International Criminal Police Organization –INTERPOL – to issue an “INTERPOL Red Notice” regarding Vinayakamoorthy alias Vinayakam for the alleged offence of terrorism. (more...)

கார்த்திகை 30, 2010

தொடரும் 1883 இனக்கலவர மலையகத் தமிழ் அகதிகள் நிலை...

மலையகத் தமிழர் பல்லாயிரவர் யாழ்-குடாநாடு வந்தனர். பல மாதங்கள் அகதி முகாம்களில்…பல மாதங்களின் பின் பலர் மலையகம் திரும்பினர். 101 குடும்பங்களை அறவழிப்போராட்டக் குழுவினர் பொறுப்பேற்றனர். யாழ் குடாநாட்டில் தங்குமாறு கோரினர். யாழ்ப்பாணப் பொதுமக்களிடம் பணம் திரட்டி நிலம் வாங்கினர். வீட்டு நிலம் தோட்ட நிலம் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பகிர்ந்தனர். கெற்பலி என்ற ஊரில் 61 குடும்பங்கள். மறவன்புலவு என்ற ஊரில் 40 குடும்பங்கள். 1985இல் நிலங்களை அன்பளிப்பாக வெற்றுத் தாளில் கடிதம் கொடுத்தனர். சட்டபூர்வமற்ற கடிதம் அது. சட்டபூர்வ உறுதியைக் கேட்டு அகதிகள் 25 ஆண்டுகளாக அறவழிப் போராட்டக்குழுவிடம் அலைகின்றனர். (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

மூன்று ஆண்டுகள் நெருங்கும் இவ்வேளையில் வியத்தகு அடைவுகளை எய்தியிருக்கிறோம் -கிழக்கு மாகாண சபையின் பட்ஜட் உரையில் முதலமைச்சர்

வளம்மிக்க எமது கிழக்கு மாகாணமானது யுத்தத்தின் கோரப்பிடியிலும், ஆயுத அச்சுறுத்தலிலும், சகோதர முரண்பாட்டிலும் இருந்தது. இயற்கை கிழக்கு மண்ணுக்கு தனது அருட்கொடைகளை வாரி வழங்கியிருந்தது. அழகிய கடற்கரை, நெல் விளையும் விளைநிலங்கள், ஆறுகள், குளங்கள், மலைத்தொடர்கள் என அனைத்து விதமான வளங்கள் இருந்த போதிலும் அதனை முழுமையாக அனுபவிப்பதற்கோ, அதன் பலாபலங்களை பெற்றுக்கொள் வதற்கோ வாய்ப்புக்கள் எமக்கிருக்கவில்லை. தொடர்ந்து கொண்டிருந்த கொடிய ஆயுதப் போராட்டத்தின் மூலம் எம்மக்களுக்காக எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாது என்பதனை உணர்ந்து ஜனநாயக அரசியல் நீரோட் டத்தில் தான் எமது மக்களுக்கான அரசியல் அதிகாரங்களையும், அபிவிருத்தியினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான் எமது ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ கட்சி உதயமானது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

Interpol “Red Notice” issued for new LTTE leader Vinayakam

Sri Lankan defence authorities moved quickly last week to target the self-styled new leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) organization who is operating in Europe under the nom de guerre Vinayakam. A team of Police and intelligence officials sought and obtained on November 24th, a warrant for the arrest of Sekarapillai Vinayakamoorthy alias Vinayakam from the Chief Magistrates Courts in Colombo. (more...)

கார்த்திகை 30, 2010

அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள

இளவாலை, வித்தகபுரத்தில் ஒரு மாதத்திற்குள் மீள்குடியேற்றம் - விநாயகமூர்த்தி முரளிதரன்

இளவாலை வட மேற்கு, வித்தகபுரம், இளவாலை வடக்கு ஆகிய பகுதிகளில் ஒருமாத காலத்தில் மக்கள் மீள்குடியேற்றப்பட உள்ளனர். இதேபோன்று மயிலிட்டியில் கண்ணி வெடி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதோடு விரைவில் அங்கும் மீனவ குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவர். மயிலிட்டி அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் உள்ள மக்களை கட்டம் கட்டமாக மீள்குடியேற்ற பாதுகாப்பு அமைச் சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார். மயிலிட்டியில் மக்களை மீள் குடியேற்று வதற்காக கண்ணிவெடிகளை அகற்றுவதற்கு யாழ். இராணுவத்தளபதியுடன் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இங்கு மக்களை மீள் குடியேற்ற ஏற் கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

தோழர் செந்தில்வேல் என்ன நீங்க பேசுறீங்க……

கடந்தகாலங்களில் புலிகளின் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரித்த கட்சிகளில் தோழர் செந்தில்வேல்  அவர்களின் பு.ஜ.மா.லெ.கட்சி முக்கியமானது. புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் புலிகளை ஆதரித்து நின்றது. புலிக்கும் இடதுசாரிக்கொள்கை களுக்கும் ஏழாம் பொருத்தம். வர்க்கப்போராட்டம் என்றால் கிறுக்குப்போராட்டம் என விளக்கம் கொடுக்கும் புலிகளின் போராட்டத்தில் என்ன நியாயத்தை கண்டு பு.ஜ.மா.லெ.கட்சி ஆதரித்ததோ தெரியவில்லை. தற்போது புலிகள் இல்லை. தோழர் செந்தில்வேல் புலிகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். நல்ல விடயம். தமிழ்மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச இடதுசாரிச் சிந்தனைகளுக்கு ஆப்பு வைத்ததே புலிகள் இயக்கம் அது ஆடிய கரகாட்டத்தில் எல்லாச் சிந்தனைகளும் மழுங்கடிக்கப்பட்டு புலியிசம் மட்டுமே தமிழ்மக்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கையாக இருந்தது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

கடற்கரை பாதுகாப்பு, மாற்று செயல்திட்டம்

(முனைவர் தி.ராஜ்பிரவின்)

இந்தியாவின் மிக நீண்ட கடற் கரையை கொண்டுள்ள மாநிலங்களில் தமிழகம் ஒன்று. குறிப்பாக 1013 கி.மீ. நீளத் துடன் சுமார் 25 சதவீதம் மக்கள் தொகை யை கொண்ட தமிழக மீனவக் கிராமங் களில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும், மதச் சிறுபான் மையினர் மட்டுமே. கடல்செல்வங்களுடன் இயற்கை முறையில் அமைக்கப்பட்டுள்ள இப்பாரம் பரிய மக்களின் வாழ்க்கை, வாழ்வியல் தேவைகள், பொருளாதார நலன்கள் கடலை நம்பியே உள்ளது. மீன் சம்பந்தப் பட்ட தொழில்கள், மதிப்பு கூட்டும் தொழில்கள், கடலோரப்பகுதி வேளாண் மை கூட கடலின் தன்மை மற்றும் இயற்கை வளங்கள், கட்டமைப்புகளை சார்ந்தே உள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

நாட்டின் எப்பாகத்திலும்

இனவிகிதாசாரத்தை மாற்றும் முயற்சியில் அரசு ஈடுபடவில்லை - அமைச்சர் பசில் ராஜபக்ஷ

நாட்டின் எந்த ஒரு பிரதேசத்திலும் எந்த ஓர் இனத்தினதும் இன விகிதாசாரத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன விகிதாசாரத்தை மாற்றும் எந்த குடியேற்றத்தையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். வடக்கில் இந்திய இராணுவம் இருந்த போதும் சரி. போர் நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த காலமானாலும் சரி உயர் பாதுகாப்பு வலயங்களில் யாரும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முதன் முதலாகத் தமிழ் மக்களைக் குடியமர்த்தினார். 20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த முஸ்லிம்களைக்கூட குடியமர்த்தவில்லை. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

உலகம் முழுவதும் அமெரிக்கா அட்டூழியம்: தூதரக ரகசிய ஆவணங்கள் அம்பலம்  ஒபாமா நிர்வாகம் அதிர்ச்சி

இராக் போர்க்குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட் டதைத் தொடர்ந்து, ‘விக்கிலீக்ஸ்’ இணையதள நிறுவனம் தற்போது உலகம் முழுவதிலும் அமெரிக்க நிர்வாகமும், அமெரிக்க தூதர கங்களும் நடத்தி வரும் நாசகர பேச்சுவார்த்தைகள், பேரங்கள், அராஜகங்களை அம்பலப்படுத் தும் விதமாக லட்சக்கணக்கான ரகசிய ஆவணங்களை வெளியிட் டுள்ளது. இதனால் தனது நண்பர்கள், கூட்டாளிகளுடனான உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று அமெரிக்க நிர்வாகம் கதிகலங்கிப் போயுள்ளது. இதையடுத்து விக்கி லீக்ஸ் நிறுவனத்தை மூடுவதற்கும் முயற்சிகளை மேற்கொண் டுள்ளது.
(மேலும்.....)

கார்த்திகை 30, 2010

பிறரின் உணர்வை மதிப்பவர்கள் ஏழைகள்

‘பணக்காரர்களை விட ஏழைகளே பிறரின் உணர்ச்சிகளை அறிந்து கனிவுடன் அவர்களை பெருந்தன்மை யாக நடத்துகின்றனர்’ என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், பணத்துக்கும் மனித மனத்தின் மகிழ்ச் சிக்கும் இடையிலான உறவு குறித்து ஏற்கனவே ஓர் ஆய்வு செய்தனர். அதில், பணம் அதிகம் வைத்துள்ளவர் களைவிட சாதாரண மக்களே சந்தோ ஷமாக இருக்கின்றனர் என்பது தெரிய வந்தது. இப்போது அதே பல்கலையின் ஆய்வாளர்கள், இரு தரப்பினரின் குணங்கள் குறித்து ஆய்வு மேற் கொண்டதில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்துள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் அரபு நாடுகளுக்காக இந்தியா பேசும் - சிரியா நம்பிக்கை

ஐ.நா. பாதுகாப்பு கவுன் சிலில் நிரந்தரமற்ற உறுப் பினராக ஆகும் இந்தியா, அரபு விவகாரத்தை உல கிற்கு எடுத்துக் காட்ட, இந்த சர்வதேச அமைப்பை பயன்படுத்தும் என சிரியா நம்பிக்கை தெரிவித்தது. இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் 9 நாள் பயணமாக அரபு அமீரகம் மற்றும் சிரியா சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் சிரியா சென்றுள்ள பிரதிபா பாட்டீலுக்கு அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் - ஆசாத் விருந்து அளித்தார். அப்போது பஷார் பேசுகை யில், அரபு விவகாரத்தை உலகிற்கு கொண்டு செல்ல, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலை இந்தியா பயன் படுத்தும் என சிரியா நம்பு கிறது. அரபு நாடுகளின் உரி மைகளை இந்தியா ஆத ரித்து வந்துள்ளது.(மேலும்.....)

கார்த்திகை 30, 2010

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.

மாவீர்களும்… விற்பனர்களும்…

(அலெக்ஸ் இரவி)

ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராடடம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ… அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி… துயரும் வேளை புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்… ஓர் மாவீரர் திருவிழா…!!(மேலும்.....)

கார்த்திகை 30, 2010

செய்தி வலைத்தளத்தினை தொடங்குகிறது டுவிட்டர் இணையத்தளம

மிகவும் பிரபலமான சமூக வளைத் தளங்களில் ஒன்று டுவிட்டர். இந்த வலைத்தளம் விரைவில் செய்தி வலைத் தலங்களை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. டுவிட்டர் இணையத்தளம் ஒரு மைக்ரோ புளொக் இணையத்தளம் ஆகும். உலகம் முழுவதும் உள்ள அரசியல் தலைவர்கள் முதல் சாதாரண தொழிலாளர்கள் வரை தங்களது கருத்துக்களை இந்த வலையத் தளம் வாயிலாகத் தெரிவிக்கும் வகை யில் சேவையினைச் செய்து வருகிறது. இது 175 மில்லியன் உறுப்பினர்களை பதிவு செய்து வைத்துள்ளது. இந்நிலையில் செய்தி இணையத்தளம் ஒன்றை தொடங்க டுவிட்டர் முடிவு செய்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கை வெளியானதால் அரசியல், இராணுவ முக்கியஸ்தர்களுக்கு ஆபத்து

விக்கிலிக்ஸ் அறிக்கைகள் வெளியானதால் முக்கிய ராஜதந்திரிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்த இராணுவ இரகசியங்கள் அம்பலத்துக்கு வந்துள்ளதால் நேட்டோ படைகள் முன்னெடுக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான போர் இனி வருங்காலங்களில் பாரிய சவால்களுக்குள்ளாகுமென்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

ஜெகன் ரெட்டி விலகினார்

காங்கிரஸ் கட்சியில் இருந் தும், எம்.பி. பதவியில் இருந்தும் விலகுவதாக 37 வயது ஜெகன் மோகன் ரெட்டி திங்களன்று அறிவித்தார். தங்களது குடும்பத் திற்கு காங்கிரஸ் பெரும் மனப் புழுக்கத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து இந்த முடிவு எடுத்த தாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக 5 பக்கம் கொண்ட ஜெகன் ரெட்டியின் வெளிப்படையான கடிதம் அவ ரது சாக்ஷி தொலைக் காட்சியில் திங்களன்று காலை படிக்கப்பட்டது. ஜெகன் ரெட்டி மறைந்த முன்னாள் ஆந் திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும், கடப்பா எம்.பி.யும் ஆவார். தனது தாயாரும், புலிவேந் துலா சட்டசபை தொகுதி உறுப் பினருமான விஜயம்மாவும் பதவி விலகுவதாக அவர் தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

பலஸ்தீன மக்களுக்கான எமது ஆதரவு தொடரும் - அமைச்சர் பெளஸி

இலங்கை பல்வேறு சமூக மற்றும் மொழிகளைக் கொண்ட நாடாக இருந் தாலும் வேறுபாடுகளை மறந்து பலஸ் தீனத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. பலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை இலங்கை - பலஸ்தீனத்துக்கு ஒத்து ழைப்பு வழங்கும் என்றார். இந்நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக் கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி அன்வர்-அல்-அக்ஹான்; ஆறு தசாப்தங்களாக பலஸ்தீன மக்களை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி சர்வதேசம் அறியும். பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்குமிடை யிலான சமாதானப் பேச்சுக்கள் தடைப் பட்டிருப்பதுடன் இவை தொடரவேண்டு மென்றே உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. 10,000 பலஸ்தீனர்கள் இஸ்ரேல் சிறைச் சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். (மேலும்.....)

கார்த்திகை 30, 2010

இந்திய மாணவர் மீது கொலைவெறி தாக்குதல்

மெல்போர்ன்: கடந்த சில ஆண்டு களாக இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலிய நாட்டில் தொடர்ச்சியான இனவெறி தாக் குதல்களை சந்தித்து வருகின்றனர். அண் மையில் நடத்தப்பட்ட இனவெறி தாக்கு தலில் மனையியல் பயிலும் மாணவர் தாக் கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மே மாதம் முதல் சுமார் 100 இந்தி யர்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள் ளாகியுள்ள இந்தச் சூழலில் காவல்துறை யின் சார்பில் தேடுதல் மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கார்த்திகை 30, 2010

வடகொரிய ஜனாதிபதியின் கொடும்பாவி எரிப்பு, சீனத் தூதரகம் முன் ஆர்ப்பாட்டம்

வடகொரிய ஜனாதிபதி ஜோன் கீம்பின் கொடும்பா வியை எரித்த தென் கொரியர்கள் சீனாவின் தூதரகம் முன்னால் வடகொரியாவுக்கு எதிராகக் கோஷமெழுப்பினர். வட கொரியாவின் அத்துமீறல் நடவடிக்கைகளை சீனா கண்டிக்காததற்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வடகொரியாவுடனான உறவை சீனா உடனடியாகத் துண்டிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டனர். சீனாவின் வெளிநாட்டமைச்சர் தென்கொரியாவில் தங்கியுள்ள நிலையிலேயே இந்த ஆர்ப் பாட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. வட கொரியா வீழ்க. சர்வாதிகாரம் ஒழிக. வடகொரியாவை உடனடியாகத் தண்டிக்கவும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

கார்த்திகை 30, 2010

அனைவரும் சகல மொழிகளிலும் கருமமாற்றும் நிலை உருவாக்கப்படும்

மொழி உபயோகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு சகலரும் சகல மொழிகளிலும் செயலாற்றும் நிலையை உருவாக்கப் போவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்றைய தினம் தமது கடமை களை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சில் நேற்று நடைபெற்ற இந்த விசேட நிகழ்வில் அமைச்சர்கள் ஏ. எச். எம். பெளஸி, டக்ளஸ் தேவானந்தா, மைத்திரிபால சிறிசேன, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோருட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

கார்த்திகை 30, 2010

பெருந்தோட்ட தரிசு நிலங்களில் மலையக இளைஞர்களுக்கும் காணி

மலையகப் பெருந்தோட்டங்க ளில் தரிசாக கைவிடப்பட்டுள்ள காணிகளில் தோட்ட இளைஞர் களுக்கும் பெற்றுக்கொடுக்கப்படு மென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று பாராளுமன்ற த்தில் தெரிவித்தார். பெருந்தோட்டத் தரிசு நிலங்களில் மீள் பயிர்ச்செய்கை மேற் கொள்வதில் இளைஞர்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுமென்றும் அவர் குறிப்பிட்டார். ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போது விடுத்த கோரிக்கைக்கு உடனடியாக அமைச்சர் பசில் பதில் அளித்தார். பயிர்ச் செய்கை பண்ணப்படாத காணிகளை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு வழங்கப் போவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கார்த்திகை 30, 2010

 

பட்ஜட்டின் 2வது வாசிப்பு 104 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 104 மேலதிக வாக்குகளினால் நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 150 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆளும் கட்சி எம். பிக்கள் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பிற்கு ஆதரவாக வாக்களித்தனர். ஐ. தே. க, ஜனநாயக தேசிய முன்னணி என்பன எதிராக வாக்களித்ததோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சபையில் வழமையாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே வாக்கெடுப்பைக் கோருவார்கள். ஆனால், நேற்று ஜே. வி. பி. (ஐ. தே. கூ) உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியினரும் ஜனநாயக தேசிய கூட்டமைப்பினரும் எதிராக வாக்களித்தனர். தமிழ்க் கூட்டமைப்பினர் வாக்களிப்பில் கலந்துகொள்ள வில்லை. வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் கடந்த 23ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நேற்று 29ஆம் திகதி வரை ஆறு நாட்களாக நடைபெற்றது. விவாதத்தை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நிறைவுசெய்தார்.

கார்த்திகை 30, 2010

பதக்கங்களும் புகழும் உயர...

16வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் குவாங்சௌ நகரில் அழகுற, திறனுற நடந்து முடிந்தன. போட்டிகளை எவ்வித களங்கமும் இடையூறுமின்றி நடத்திய சீனா வுக்கு பாராட்டுகள். சீனா விளையாட்டுலகில் தான் ஒரு பெருவல்லரசு என்பதை 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் மீண்டும் ஒருமுறை அழுத்தமாக வெளிப்படுத்தியுள்ளது. இந்திய வீரர்களின் வெற்றியும் பாராட்டுக் குரியது. பதக்கப்பட்டியலில் 14 தங்கப்பதக்கங் கள் உள்ளிட்டு 64 பதக்கங்களை வென்று ஆறாவது இடத்தில் உள்ளது. வீரர்களின் அர்ப்பணிப்பும் திறமையும் போற்றுதலுக்குரியது. காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்தது. ஆசிய விளை யாட்டுகளில் இந்தியா ஆறாவது இடத்தைப் பிடித்தது. இரு போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்த அணிக்கும் இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளி மிகப்பெரியது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

ஆரம்பகால தமிழ் அமைப்புகள் உயிருடன் இருக்கின்றனவென்றால் விடுதலைப்புலிகளும் உயிருடன் இருந்தேதானே ஆகவேண்டும்...!

ஈழப்போராட்டம் பல உயிர்களை பலி கொடுத்திருக்கிறது அவர்கள் அனைவரும் ஒரு சந்தர்ப்பத்தில் நினைவு கூறப்படவேன்டியவர்கள் ஆயுதப்போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை உயிர் நீத்த அனைத்து தமிழ் பேசும் மக்கள் அனைவரயும்  தமிழர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் நினைவு கூறவேண்டும் அது பொதுமகனாக இருக்கட்டும் விடுதலை புலிகளிலிருந்து ஆரம்பகால் போராட்டகுழுக்கள் அல்லது மாற்று ஆயுத குழுக்கள் ,இறுதியாக தோற்றம்பெற்ற தமிழ்மக்கள் விடுதலைப்புலிகளில் இருந்து ஈழப்போராட்டம் காரணமாக உயிர் நீத்த அனைத்து உயிர்களும் உறவுகளும் நினைவு கூறப்படவேண்டியவர்களே . இதனை உயிர் இழப்புகளுக்கும் காரணங்கள் பல இருக்கின்றன சகோதர படுகொலை , துரோகம் , காட்டிக்கொடுப்பு , சுயலாப படுகொலைகள் , போர்களப்பலி, விபத்து இப்படி எத்தனையோ இருக்கின்றன இவை அனைத்தும்  ஆயுதபோராட்டம் என்றொன்று ஆரம்பித்ததன் பின்னே பலியெடுக்கப்பட்ட உயிர்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது . (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

ஐ. நா சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள  பலஸ்தீன ஒத்துழைப்பு தினம் இன்று


(இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்)


பலஸ்தீனம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேசத்தை உலக வரைபடத்தில் இருந்து அழித்தொழித்து இற்றைக்கு சுமார் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாகின்றன. இவ்வாறான சிதைவினை ஏற்படுத்திய ஏகாதிபத்திய பேரரசர்களின் தலைவர்கள் அந்தப் புனித பூமியில் இஸ்ரேல் எனும் நாட்டினை செயற்கையாக வளர்ந்தது, அந்த பூமியைத் தாயகமாகக் கொண்ட அதிகமான மக்களை அங்கிருந்து வெளியேற்றினர். பலஸ்தீன தாயக பூமியிலிருந்து வெளி யேற்றப்பட்ட தாய்மார்கள், தந்தையர்கள், குழந்தைகள் தமது மூல வாசஸ்தலங்களுக்குச் செல்வதற்கு இன்னமும் ஆவலாய் இருக்கின்றனர். பலவந்தமான முறையில் கைப்பற்றியுள்ள நிலப் பிரதேசங்களிலிருந்து இஸ்ரேலுக்கு வெளியேறுமாறு கூறப்பட்டுள்ள வற்புறுத்தலும் ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்டுள்ள வெறும் வார்த்தை களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

யாழ்., மன்னார், கற்பிட்டி, சிலாபம் பகுதிகளில் வெள்ளம்

பல பகுதிகளிலும் கடும் மழை, 9 ஆயிரம் குடும்பங்கள் பாதிப்பு

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக 8646 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 395 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார். மழை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் சமைத்த உணவு மற்றும் உலர் உணவு நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்கள் ஊடாக ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப் பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரியொருவர் கூறினார். இம்மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் 101 வீடுகளும், புத்தளம் மாவட்டத்தில் 21 வீடுகளும் பகுதியாக சேதமடைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையப் பேச்சாளர் கூறினார். யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் மழை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களில் 1283 குடும்பங்கள் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டி ருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

இந்தியா, இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்காளி - எஸ்.எம். கிருஷ்ணா

இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார். அம்பாந்தோட்டை புது வீதியில் இந்திய துணைத் தூதரக அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தியாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி சென்ற வருடத்திலிருந்து 50 சதவீதத்திற்கு கூடுதலாக அதிகரித்தது. இலங்கையின் நான்கு பாரிய முதலீட்டாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் இலங்கையின் முதலீடுகளும் குறிப்பிடத் தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளன. எங்கள் அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வடக்கு, தெற்கு உட்பட நாடுபூராவும் வளர்ச்சியடைந்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

கொரியன் குடாவில் பாரிய வெடியோசைகள், தீப்பிளம்புகள்

அமெரிக்கா, தென் கொரியா பயிற்சியை ஆரம்பித்ததால் விண்ணும் மண்ணும் அதிர்ந்தன

வட கொரியா மீது எத்தகைய தாக்குதல் கள் தொடுக்கப்பட்டாலும் அதன் எதிரொலி மிகக் கடுமையாக இருக்குமென வட கொரியா கடுமையான தொனியில் எச்சரித்தது. கொரியன் குடாவை நோக்கி அமெரிக்க தென்கொரிய இராணுவங்கள் முன்னேறிவரும் நிலையில் ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற மிகப் பெரிய போர்க்கப்பலும் களத்தில் இறங்கியுள்ளன. இதில் விமான ஓடுபாதைகள் ஏவுகணைத் தளங்கள் உள்ளிட்ட நவீன இராணுவ, ஆயுத உபகரணங்களும் உள்ளன. வட கொரியாவை இலக்கு வைக்கும் தாக்குதல் திசையை நோக்கி ஜோர்ஜ் வாஷிங்டன் என்ற இந்தக் கப்பல் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் தென் கொரிய, அமெரிக்க இராணுவங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த நான்கு நாள் போர்ப்பயிற்சியை நேற்று ஆரம்பித்த மைக்கான ஆதாரமாக பாரிய வெடியோசை கள் விண்ணையும், மண்ணையும் அதிர வைத்ததாகப் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

வெயிலுக்கும் நீரிழிவு நோய்க்கும் தொடர்பு

“சூரிய வெளிச்சத்துக்கும், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு உள்ளது” என இந்திய மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மனித உடலில், கணையப் பகுதியில் சுரக்கும் “இன்சுலின் ஹோர்மோன், இரத்தத்தில் உள்ள சீனியின் அளவை சீர் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. “இன்சுலின்” சுரக்க, “கல்சியம் மற்றும் விட்டமின் டி” அவசியம். இவற்றின் அளவு குறையும் போது இரத்தத்தில் உள்ள சீனியின் அளவு உயர்ந்து “நீரிழிவு நோய்” ஏற்படுகிறது. இந்தியாவில் நீரிழிவு நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவுக் கட்டுப்பாடு, மாறுபட்ட வாழ்க்கை முறைகள், உடல் பருமன் மற்றும் மரபணு, மன அழுத்தம் போன்றவையே இதற்கு காரணம். பால் சார்ந்த பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தானியங்கள் மற்றும் எண்ணெய் வகைகள், கொழுப்பு நிறைந்த மீன்கள் ஆகியவற்றில் “விட்டமின் டி” நிறைந்துள்ளது.(மேலும்.....)

கார்த்திகை 29, 2010

கிருஷ்ணாவுடனான தமிழ்க் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஆகியவற்றின் சந்திப்பு ரத்து

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சந்தித்து பேச இருந்த போதிலும் இந்தச் சந்திப்புக்கள் இறுதி நேரத்தில் ரத்துச்செய்யப்பட்டுள் ளன. நாட்டின் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டமையினாலேயே இந்தச் சந்திப்புக்கள் இரத்துச் செய்யப்பட்டதாக குறித்த கட்சிகளுக்கு இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இலங்கை வந்திருந்த கிருஷ்ணா, யாழ்ப்பாணத்திற்கான விஜயம் மற்றும் அங்கு ஏற்பாடாகியிருந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பையும், அதனைத் தொடர்ந்து தமிழ்க்கட்சிகளின் அரங்கம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் சந்தித்துப் பேச நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

கொளுத்திப் போடும் ஐ.தே.க

சிங்களவர்கள் குடியேறுவதற்கு ஏற்ப யாழ். தேசவழமைச் சட்டம் மாற்றப்பட வேண்டும் -ஐ.தே.க எம்.பி _

யாழ்ப்பாணத்தில் வழக்கிலுள்ள தேசவழமைச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான பிரேரணையின் மீது அவர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து உரையாற்றியபோது அவர் மேலும் கூறியதாவது, கொழும்பில் சகல இன மக்களும் ஒற்று மையாக வாழ்கின்றனர். இதேபோன்று யாழ்ப் பாணத்திலும் சகல இன மக்களும் வாழ வேண்டும். இதனால் சிங்கள மக்கள் அங்கு குடியேறுவதற்கு ஏற்ப தேச வழமைச் சட்டத் தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் இடம்பெறுவதாகத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியதற்குப் பதிலளிக்கும் முகமா கவே நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஓர் இனவாதி யல்ல எனவும் அவர் இவ்விடயத்தை ஆராய்வார் எனவும் சுஜீவ சேனசிங்க எம்.பி. கூறினார்.

 

கார்த்திகை 29, 2010

பாகிஸ்தானில் விமான விபத்து

நாசகார வேலை காரணமா....?

பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் நேற்று சரக்கு விமான மொன்று நிலையத்திலிருந்து புறப்படும் போது விபத்துக்குள்ளானது. இதில் நான்கு பேர் மரணமடைந்தனர். அருகிலிருந்த கட்டடங்கள் பல கடுமையாகச் சேதமுற்றன. சூடானுக்குப் புறப்பட்ட இந்த சரக்கு விமானம் கராச்சி ஜின்னா விமான நிலையத்திலிருந்து எழும்போது விபத்தானது. மீட்புப் பணியாளர்கள் மரணமடைந்த நான்குபேரின் சடலங்களையும் கண்டெடுத்ததுடன் தொடர்ந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பலியானோரின் சடலங்கள் அடையாளம் காண முடியாதவாறு சிதைவடைந்துள்ளன. நான்கு மாதங்களுக்குள் பாகிஸ்தானில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்து இதுவாகும். இதில் 07 பேர் காயமடைந்தனர். இவர்கள் அருகிலிருந்த வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கராச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்தில் இந்த சரக்கு விமானம் விபத்துக்குள்ளானது.

கார்த்திகை 29, 2010

அமெரிக்கா அலறல்  ரகசிய ஆவணங்களை வெளியிட வேண்டாம் : விக்கி லீக்ஸ் நிறுவனத்திற்கு ஒபாமா கோரிக்கை

இந்தியாவுடனான அணுசக்தி உடன்பாட்டிற் காக அமெரிக்க நிர்வாகம் என்னவெல்லாம் செய்தது என்பது உட்பட உலகம் முழுவதும் அமெரிக்கா எத் தகைய அட்டூழியங்களில் ஈடுபட்டுள்ளது என்பது தொடர்பான ரகசிய ஆவ ணங்களை ‘விக்கி லீக்ஸ்’ எனும் நிறுவனம் ஞாயிறன்று வெளியிடப்போவதாக அறிவித்தது. அமெரிக்க அரசின் இந்த ரகசிய ஆவணங்களை வெளியிடுவது, உலகளாவிய முறையில் அமெரிக்கா நடத்தி வரும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், தனது கூட்டாளிகளுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தும் என் றும் ஒபாமா நிர்வாகம் கருதுகிறது. எனவே, இத்த கைய ஆவணங்களை வெளியிட வேண்டாம் என்று ஒபாமா நிர்வாகம், விக்கி லீக்ஸ் நிறுவனத்துக்கு அவசர அவசரமாக வேண்டு கோள் விடுத்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

பூக்களை வெட்டி எறியக்கூடும்...

(ஜான் செரியன்)

ஜனாதிபதி கோரியா தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள முற்போக்கான இடதுசாரித் தலைவர்களில் ஒருவராவார். கலகக்கார காவல்துறைப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற போது கோரியா அவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டார். மேற்படி கலகக்காரர்கள் அவரைப் பதவியிலிருந்து விலகுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். ஆனால் ஜனாதிபதி கோரியா சிறிது கூடக் கலங்காமல் உருக்கு உறுதியுடன் தலைநிமிர்ந்து நின்றார். “நீங்கள் விரும்பினால் என்னைச் சுட்டுத்தள்ளுங்கள்” என்று அவர் கலகக்காரர்களைப் பார்த்து தலைநிமிர்ந்து கம்பீரமாகக் கூறினார். காவலர்களின் தாக்குதல்களில் காயம்பட்ட ஜனாதிபதி கோரியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து தொலைபேசி மூலம் பேசிய அவர் பின்வருமாறு கூறினார் “மருத்துவமனையை விட்டு நான் அதிபராக மீண்டு வருவேன் அல்லது பிணமாகக் கொண்டு வரப்படுவேன்”. மேலும் வெனிசுலா நாட்டுத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் மக்கள் கவிஞர் பாப்லோ நெருடாவின் கவிதை வரியொன்றை மேற்கோள் காட்டிப் பேசினார். “அவர்கள் பூக்களை வெட்டியெறியக்கூடும், ஆனால் மீண்டும் ஓர் புதுவசந்தம் வருவதை அவர்களால் தடுத்திட முடியாது” என்பதே மேற்படி கவிதை வரியாகும். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

இளைஞர் பாராளுமன்றத்திற்கு 329 உறுப்பினர்கள் தெரிவு

இளைஞர் பாˇளுமன்றத்தின் முதலாவது தேர்தலில் 329 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் 27ஆம் திகதி தெரிவாகியுள்ளனர். 332 மாவட்ட செயலாளர் பிரிவுகளை கேந்திரமயப்படுத்தி 1395 பேர் போட்டியிட்ட போதே மேற்படி 329 பேரும் தெரிவு செய்யப்பட்டனர். ஹொரவத்பத்தான, எஹலியகொடை ஆகிய மாவட்ட செயலக பிரிவுகளின் பெறுபேறுகள் ரத்துச் செய்யப்பட்டதாகவும் புதுக்குடியிருப்பு பிரிவில் தேர்தல் நடத்தப்படவில்லை என்றும் இளைஞர் விவகார மற்றும் தொழில் முயற்சிகள் அமைச்சின் செயலாளரும் பிரதான தெரிவத்தாட்சி அதிகாரியுமான சூளோ ஹேவாபதிரன கூறினார். இளைஞர் விவகார அமைச்சில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டி லேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன் ரத்துச் செய்யப்பட்ட இரு தேர்தல் பிரிவுகளில் மீண்டும் எதிர்வரும் 4ஆம் திகதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அதேவேளை ஆதிவாசிகளின் பிரதிநிதி ஒருவர் உட்பட மொத்தம் 335 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் புதிய பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் எதிர்வரும் ஜனவரி 12ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் நடைபெறும் என்றும் செயலாளர் மேலும் கூறினார்.

கார்த்திகை 29, 2010

 

சீனக் கப்பல்கள் ஜப்பான் படையினரால் தடுத்து வைப்பு

ஜப்பானிய கடற்படையினர் சீனாவின் இரண்டு கப்பல்களை நேற்று காலை 07 மணியளவில் தடுத்து நிறுத்தினர். இவை இரண்டும் சர்ச்சைக்குரிய கடல் எல்லைக்குள் பிரவேசிக்க முயன்ற வேளையிலே ஜப்பானிய கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது ஜப்பான் – சீனா ஆகிய இரண்டு நாடுகளும் பொதுவான கடற்பிரதேசத்தை உரிமை கோருகின்றன. சென்காகு என்று ஜப்பானும் டையாயு என்று சீனாவும் இக்கடல் பிரதேசத்தை அழைக்கின்றன. இக்கடல் சர்ச்சை நீண்டகாலமாக இவ்விரு நாடுகளிடையேயும் மோதல் போக்கை உண்டாக்குகின்றன. அண்மையில் சீனாவின் கப்பலையும் அதன் தலைவரையும் ஜப்பான் கடற்படையினர் கைதுசெய்தனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கார்த்திகை 29, 2010

அம்பாந்தோட்டையில் இந்திய துணைத் தூதரகம் திறப்பு

அம்பாந்தோட்டை புது வீதியில் நேற்று இந்திய துணைத் தூதரக அலுவலகம் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவினால் திறந்து வைக்கப்பட்டது. இது வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப் படவிருந்தது. சீரற்றகால நிலை காரணமாக இந்த திறப்பு விழா ஒத்திவைக்கப் பட்டிருந்தது. இதற்கமைய நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஸ்ரீ எஸ். எம். கிருஷ்ணாவுடன் இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், இந்திய இலங்கைத் தூதுவர் அசோக் கே. காந்தா, இந்திய வெளியுறவுச் செயலா ளர் நிருபமா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கார்த்திகை 29, 2010

போலித் தலிபான் தலைவருடன் பேச்சு நடத்தவில்லையென என்.டி.எஸ் அறிவிப்பு

ஆப்கான் அரசாங்கம் போலியான தலிபான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான செய்தியை அந்நாட்டு உளவுப் பிரிவான (என்.டி.எஸ்) நிராகரித்தது. அண்மையில் ஆப்கான் ஜனாதிபதி ஹமீத் அல்கார்ஸாயி தலிபான் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் தலிபான் அமைப்பின் உண்மையான தலைவரல்ல. அந்தப் பிரதேசத்திலுள்ள முக்கியஸ்தரே இவர் என லண்டன் வாஷிங்டன் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. தலிபான்களுக்குள் பல அமைப்புகள் உள்ளன. இவற்றில் பழங்குடி அமைப்புக்களின் தலைவர்களுடன் ஆப்கானின் அரசு பேச்சு நடத்தியவேளை பிரிட்டன் விமானப்படைத் தலிபான் தலைவரென ஒருவரை காபுலுக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்கச் செய்தது. இவருடன் பிரிட்டன் உளவாளியும் இருந்தார். பின்னர் பேச்சு வார்த்தையில் பங்கேற்றவர் உண்மையான தலிபான் அமைப்பைச் சேர்ந்த வரல்ல என பிரிட்டன். அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இதை நிராகரித்த ஆப்கான் உளவுத்துறை அவ்வாறு போலியான ஒருவர் ஆரம்பித்தில் பேச்சுவார்த்தையில் பங்கேற்றதாகவும் பின்னர் உண்மை தெரியவர அவரை பேச்சு வார்த்தையிலிருந்து அப்புறப்படுத்தியதாகவும் (என்.டி.எஸ்) அறிவித்தது.

கார்த்திகை 29, 2010

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் கோப் சிற்றி திறப்பு

ஒலுவில், தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் புதிய கோப் சிற்றி பல்பொருள் விற்பனை நிலையம் இன்று 29ம் திகதி திங்கட்கிழமை மு. ப. 10.00 மணிக்கு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப் படவுள்ளது. அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படவுள்ள இக் கோப்சிற்றி விற்பனை நிலையத்தை திறப்பதற்கான அனுமதியை கிழக்கு மாகாண சுகாதார, சுதேசிய வைத்திய த்துறை அமைச்சு வழங்கியுள்ளதாக அமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ் தெரிவித்தார். அட்டாளைச்சேனை கூட்டுறவுச் சங்கத் தலைவர் எஸ். எல். சனூஸ் தலைமையில் நடைபெறவுள்ள கோப் சிற்றி திறப்பு விழா வைபவத்தில் கிழக்கு மாகாண சுகாதார சுதேசிய வைத்தியத் துறை அமைச்சர் எம். எஸ். சுபையிர் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.

கார்த்திகை 29, 2010

பாகிஸ்தானில் வான் தாக்குதல்

பாகிஸ்தானின் வடக்கு வஸிரிஸ்தான் மாகாணத்தில் காட்டி கிராமத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் 6 பேர் பலியாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பலியானவர்களில் 3 பேர் பயங்கரவாதிகள் என்றும் 3 பேர் துறைமுகத்தை சேர்ந்தவர்கள் என்றும் கூறியுள்ளனர். வஸிரிஸ்தான் மாகாணத்தில் நேட்டோ படைகள் மேற்கொள்ளும் வான் தாக்குதல்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவ் வான் தாக்குதலால் அமெரிக்க, பாகிஸ்தான் உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படாம் என அரசியல் அவதானிகள் கருத்த தெரிவிக்கின்றனர். கடந்தமாதம் பாகிஸ்தான் வான்பரப்பை ஏவுகணைத் தாக்குதலுக்கு அமெரிக்கா பாவித்ததை பாகிஸ்தான் கண்டனத்துடன் எதிர்பையும் தெரிவித்திருந்தது.

கார்த்திகை 29, 2010

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தருக்காக மூவர் தெரிவுசெய்யப்பட்டு ஜனாதிபதிக்கு பிரேரணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. தற்போதைய துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் உள்ளிட்ட 12 பேர் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தனர். தெரிவு சபையில் இருந்து 21 பேர் தலா 3 வாக்குகள் மூலம் வாக்களித்தனர். இவர்களில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன், பேராசிரியர் வசந்தி அரசரத்தினம், பேராசிரியர் ரட்ணஜீவன் ஹோல் ஆகிய மூவரும் தெரிவு செய்யப்பட்டு பதிவாளரால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவரை ஜனாதிபதி புதிய துணைவேந்தராக தெரிவு செய்வார்.

கார்த்திகை 29, 2010

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையில் கப்பல் சேவை வெகுவிரைவில்

தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்படும் என இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அமைதியான சூழ் நிலையை தொடர்ந்து தூத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கார்த்திகை 29, 2010

இன உறவுக்கு அத்திவாரமிடும் வட்டாரத் தேர்தல் முறை

 

(கீர்த்தி ஸ்ரீ ஏ. பி. தாவூட் )

விகிதாசார தேர்தல் முறையால் தெரிவு செய்யப்படுபவர் குறித்து ஒரு பிரதேசத்தை பிரதிநிதித்துவப் படுத்த முடிவதில்லை, மாறாக அம்மன்றத்தின் முழுப் பிரதேசத்தை யுமே பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். இதனால் வாக்களித்த மக்கள் தங்களுடைய பிரதிநிதி யாரென்று இனங்காண முடியாமல் உள்ளது. அத்துடன் பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூறும் உரிமையையும் பிரதிநிதிகள் கொண்டிருப்ப துமில்லை. இவ்வாறான தேர்தல் முறைகளினால் தான் இனவாதக் குழுக்களும் தலை தூக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இத்தேர்தல் முறையால் இன ஒற்றுமைக்கு வேட்டு வைக்கப்படுகின்றது. வாக்காளர்கள் கட்சி ரீதியாக அன்றி இன ரீதியாக மத ரீதியாக சாதி ரீதியாக பிரிபடுவதற்கு விருப்பு வாக்கு முறை வழி கோலியுள்ளது. ஆனால் புதிய வட்டார அடிப்படையிலான தேர்தல் முறையால் மக்கள் கட்சிகளின் சின்னத்திற்கு மட்டுமே வாக்களிப்பர். இங்கு இன மத சாதி வேறுபாடுகள் பேணப்படுவதில்லை. நேரடியாகவே விரும்பும் கட்சிக்கு வாக்களித்து தங்களது பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும். (மேலும்.....)

கார்த்திகை 29, 2010

Top LTTE operative nabbed

(By Tissa Ravindra Perera)

A top operative of the international LTTE network who had returned to the country in the guise of an investor was nabbed last week by the State Intelligence Service (SIS) from a leading hotel in Colombo. The sleuths had been on the trail of this Tiger operative for sometime, informed sources said. It has been revealed that this Tiger operative, known as Kiran was among the Tiger leaders who had been handling the financial transactions relating to the LTTE’s illegal armament purchases via Thailand. He had been functioning as the leader of the LTTE fund-raising wing in Australia and Switzerland. He had also been engaged in human trafficking by sea. Kiran, who had been on the ‘most wanted’ list of the national intelligence services since 1999, had returned here under an assumed name purportedly to start a foreign exchange centre. He is also said to own a tea estate in Deniyaya. It has now come to light that about 50 former LTTE operatives and sympathisers who had skipped the country and found refuge in certain European countries have returned to Jaffna recently posing as investors.

கார்த்திகை 28, 2010

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி

யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார். இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

புலம்பெயர் தேசங்களில்

விடுதலைப் புலிகளின் மாவீரர்தின நிகழ்வு

இந்த நிகழ்வுகளுக்கு பல ஆயிரக்கணக்கான மேற்கத்தைய நாணயங்கள் செலவிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் போர் முடிந்து போன இலங்கையில், இந்த தமிழர்களால் மாவீரர்கள் என்று அழைக்கப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் போராட்டத்துக்காக தமது உயிர்களை பலிகொடுத்த அந்த அமைப்பின் உறுப்பினர்களின் குடும்பங்கள் பல எந்தவிதமான உதவிகளும் இன்றி சிரமப்பட்டுக் கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. அதேவேளை புலம்பெயர் அமைப்புக்கள் இந்த நிகழ்வை பெரும் எடுப்பில் அனுட்டித்தாலும், அவர்களின் மத்தியில் பிளவுகள் அதிகரித்திருப்பதோடு, அவர்களால் கடந்த ஒன்றரை வருடத்தில் ஆக்கபூர்வமாக எதனையும் சாதிக்க முடியவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகின்றது. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

அதிகாரப் பகிர்வு அரசியல் தீர்வுக்கான சூழலை ஏற்படுத்தும் - கிருஷ்ணா

13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் அமைந்த அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுப் பொதி ஒரு நிரந்தர அரசியல் தீர்வுக்கான சூழ்நிலையை ஏற்படுத்துமென நம்புவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்தார். யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத்துணைத் தூதரகத்தை நேற்றுத் திறந்துவைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். அனைத்து சமூகங் களையும் உள்ளடக்கி இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் ஆரம்பிக் கப்படும் எனக் கருதுகிறோம் என்றார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

இனவாதத்தை தூண்டுவதே மங்களவின் நோக்கம்

யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கைகோர்த்து பயணம் செல்ல வேண்டிய காலம் இது. ஆனால், மங்கள சமரவீர எம்.பி. பிரிவினைவாதத்தை தூண்டி, நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாதக் கருத்துகளை சபையில் வெளியிட்டார். அவரின் கருத்துகளை ஊக்குவிக்க வேண்டாமென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களை கோருகிறேன். ஏனென்றால், இத்தகைய நடவடிக்கை தேசிய பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதை தூரமாக்கும். இனவாதத்தை தூண்டிவிட்டு, அதனூடாக மீண்டும் யுத்தமொன்றை ஏற்படுத்துவதே மங்களவின் நோக்கமாகும். சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆற்றிய உரையின் காபன் பிரதியாகவே மங்களவின் உரை அமைந்தது. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

மாவீர்களும்... விற்பனர்களும்...

மாவீரர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்களே, ஆனால் விற்பனைக்குரியவர்கள் அல்ல.

(அலெக்ஸ் இரவி)

ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து பல உயிர்கள் தியாகங்கள் செய்து, வீரகாவியம் படைத்து எம்மை விட்டு துறந்தும் இன்றும் எத்தனையோ பெற்றோருக்கு தம் பிள்ளைகளின் உயிர் அகன்ற உடல்களை பார்க்கவோ... அவர்களின் நினைவு கல்லறை பார்க்கவோ கிடைக்காமல் தம் துயரை தம்மினுள்ளே அமிழ்த்தி... துயரும் வேளை, புலம் பெயர்ந்த நாடுகளிலோ பரநாட்டியம் பயிலும் தம் பிள்ளைகளின் நடனத்தை மேடையேற்றி பார்ப்பதற்கும்... ஓர் மாவீரர் திருவிழா...!!! தாயகத்தில் பாடசாலைக்கு சென்ற பிள்ளை வீடு திரும்பாமல் விடுதலை என்னும் பிள்ளை பிடித்த கூட்டத்தால் கூட்டிச்சென்று வயிற்றில் குண்டை கட்டி குற்றுயிராக்கப்பட்ட வேளை... புலம் பெயர்ந்த நாடுகளிலோ பாடசாலை செல்லும் பிள்ளைகளை தவறான வழியில் வழிநடத்தி வளரும் சமுதாயத்தை மரமண்டையக்குவதர்க்கு... ஓர் மாவீரர் திருவிழா...!! (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

உல்லாசப் பயணத் துறையில் சீனா 450 மில். அமெரிக்க டொலர் முதலீடு

சுற்றுலாக் கைத்தொழில் துறை யில் உலகின் முன்னணி நிறுவன மாகத் திகழும் சீனாவின் சங்கிரில்லா நிறுவனம் இலங்கையின் உல்லாசப் பயணத் துறையில் 450 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலிட முன்வந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். இந்த முதலீடு தொடர்பான உடன்படிக்கை நேற்று முன்தினம் நிதி அமைச்சில் கைச்சாத்திடப்பட்ட தாகவும் கூறினார். இந்த முதலீட்டின் மூலம் இராணுவ தலைமையகம் அமைவுற்றிருக்கும் பிரதேசம் அடங்கலான பகுதியில் உல்லாச ஹோட்டல் நிர்மாணிக்கப்படும் எனவும் அவர் குறிப் பிட்டார். இராணுவ தலைமையகம் உள் ளிட்ட முப்படை தலைமையகங்களும் பத்தர முல்லையிலுள்ள 55 ஏக்கர் விஸ் தீரணம் கொண்ட காணியில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

பாக். ஜனாதிபதிக்கு பிரமாண்ட வரவேற்பு

விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்பு மரியாதை, இருதரப்பு பேச்சு இன்று ஆரம்பம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாகப் பதவிப் பிரமாணம் செய்ததன் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் முதலாவது வெளிநாட்டுத் தலைவர் சர்தாரி ஆவார். இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீபா வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக ஆராயப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் இலங்கையுடன் மிக நீண்டகாலம் நட்புறவு பேணும் நாடு. பல்வேறு இக்கட்டான காலகட்டங்களில் இலங்கைக்கு கைகொடுத்து உதவிய நாடு. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

அபிவிருத்தியை நோக்கிய அடுத்த கட்ட நகர்வு

தமிழ்க் கட்சிகள் அரசியல் பேதங்களை மறந்து மக்களுக்காக வேண்டி நடுநிலையான தீர்மானங்களை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்புவதற்கும், தமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் ஒருமைப்பாட்டுடன் செயல்படுவ தற்காக ஜனாதிபதியினால் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அதனை அவர்கள் சரி யான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். விதண்டாவாத அரசியலோ அல் லது எதிரும் புதிருமான அரசியலோ தமிழ் மக்களுக்கு இனியும் தேவையில்லை. பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி தலைமையிலான இந்த அரசாங்கத்தினால் மட்டுமே தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வினைக் காணலாம் என்பது ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகவுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

இரணைமடு தண்ணீர் இன்னொரு காவிரிப் பிரச்சினையாகுமா?

(விசு கருணாநிதி)

விவாதத்தில் தமிழ்க் குரல்கள் ஓங்கி ஒலித்ததையும் காணக்கூடியதாக இருந்தது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ஈ. சரவணபவன் உரையாற்றுகையில், ‘கிளிநொச்சி இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக்கொண்டு செல்ல முயற்சி செய்வதாகக் கூறி பல தில்லுமுல்லுகள் இடம்பெறுகின்றன. இதனை முறையாகப் பலனளிக்கும் விதத்தில் மேற்கொள்ளாவிட்டால் காவிரி நீருக்காக தமிழகமும் கர்நாடகமும் மோதிக்கொள்வதைப் போன்று யாழ்ப்பாண விவசாயிகளும் கிளிநொச்சி விவசாயிகளும் மோதிக்கொள்ளும் நிலை உருவாகும் என்றார். வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் வெள்ளிக்கிழமை நான்காவது நாளாக நடைபெற்றபோது, அமைச்சர் விமல் வீரவன்ச உரையாற்றி விவாதத்திற்கு சூடேற்றினார். (மேலும்.....)

கார்த்திகை 28, 2010

இளைஞர் பாராளுமன்ற தேர்தல்

நாடுமுழுவதும் சுறுசுறுப்பான வாக்களிப்பு

332 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 1395 பேர் போட்டியிடும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்கள் நேற்று நாடு முழுவதும் 332 வாக்களிப்பு நிலையங்களில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது. தென் மாகாணத்தில் 46 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மேல் மாகாணத்தில் 40 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், மத்திய மாகாணத்தில் 36 பேரும், ஊவாவில் 20 பேரும், வடமத்தியில் 30 பேரும், வடமேல் பகுதியில் 46 பேரும், சப்ரகமுவவில் 28 பேரும், கிழக்கில் 44 பேரும், வடக்கில் 33 பேருமாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் எதிர்வரும் டிசம்பர் 12 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் விசேடமாக அமைக்கப்பட்டுள்ள மாதிரி பாராளு மன்றத்தில் நடைபெறும்.

கார்த்திகை 28, 2010

பேராதனை பல்கலைக்கழக

தமிழ் பேசும் கிழக்கு நண்பர்களின் ஒன்றுகூடல், பாராட்டு இன்று

1982/1983ஆம் கல்வியாண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்திற்கு அனுமதிக்கப்பட்டு கல்விகற்று 1985ஆம் ஆண்டு பட்டம் பெற்று வெளியேறிய பேராதனைப் பல்கலைக்கழக கிழக்கு நண்பர்களின் ஒன்றுகூடலும், பாராட்டு வைபவமும் இன்று 27ம் திகதி திருகோண மலை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும். பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளர் வி. பி. பாலசிங்கம் கலந்து கொள்வார். உயர் பதவி வகிப்பவர்களான கிழக்கு மாகாண சுகதார, சமூக சேவைகள் அமைச்சின் செயலாளர் யூ. எல். ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எம்.சீ.எம். ஷரீப், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பா ளர் எம்.ரீ.ஏ. நிஸாம், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி பீடாபதி ஏ. எல். ஏ. றஸுல், வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஆபிரிக்கப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ரி. ரவீந்திரன் ஆகியோர் இந்நிகழ்வில் பாராட்டி கெளரவிக்கப் படவுள்ளனர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட தமிழ் பேசும் பட்டதாரிகள் பட்டம் பெற்று கால் நூற்றாண்டு பூர்த்தியாவதை முன்னிட்டு உயர் பதவிகள் வகிப்போரை பாராட்டி கெளரவிக்க வேண்டுமென்பதற்காக இவ்வாறான விழா நடைபெறு கிறது.

கார்த்திகை 28, 2010

'ஈழமா? படிப்பா?" யாழ், பல்கலைக்கழகத்தில் மாணவர்களை அச்சுறுத்தும் சுவரொட்டிகள்

மாணவர்களை அச்சுறுத்தும் விதமாக 'ஈழமா? படிப்பா?" என்று வாசகமிட்ட சுவரொட்டிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழத்தில் ஒட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலும் விடுதிகளிலும் மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அச்சுவரொட்டிகளில் படிப்பா? ஈழமா? என்ற கேள்விக்குறியில் வீடுகள் எரிந்த நிலையிலான படங்களும், அழிவுகளின் படங்களும் காணப்பட்டன. இறுதியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என போடப்பட்டிருந்தது. இருந்தும் இது யாழ்ப்பாண மாணவர் ஒன்றியத்தினால் ஒட்டப்படவில்லையெனவும் இனந்தெரியாத யாரோ ஒட்டியுள்ளனர் என்றும் மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை 28, 2010

கொரிய தீபகற்பத்தில் போர் மேகம்: வடகொரியா மீண்டும் எச்சரிக்கை

தென் கொரியாவிற்கெதிராக எந் நேரத்திலும் போர் தொடுக்க தாம் தயாராக இருப்பதாக வடகொரியா எச்சரித்துள்ளது. மேலும் அமெரிக்கப் படைகளுடனான தென்கொரியாவின் போர் ஒத்திகைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அது தெரிவித்துள்ளது. 75 போ‌ர் ‌விமான‌ங்க‌ள், 6000 படைவீரர்களுடன் ‌வீர‌ர்களுட‌ன் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் யு.எ‌‌ஸ்.எ‌ஸ் வொ‌‌ஷி‌ங்ட‌ன் எ‌ன்ற போ‌ர் க‌ப்ப‌ல் கொ‌ரிய ‌தீபக‌ற்ப‌த்‌திற்கு வருகைதந்துள்ளது. அமெ‌‌ரி‌க்காவு‌ம், தெ‌ன் கொ‌ரியாவு‌ம் இணை‌ந்து அங்கு போ‌ர் ஒ‌த்‌திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேற்றும் வட கொரியா 'யொங்பயொங்' தீவுகளின் மீது 2 ஆவது தடவையாகவும் ஆட்லறித்தாக்குதல்களை நடத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து வட கொ‌ரியா ‌மீது போ‌ர் தொடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று தெ‌ன் கொ‌ரியாவில் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தெ‌ன் கொ‌ரியா‌‌வி‌ன் 'யொங்பயொங்' ‌தீ‌வி‌ல் வட கொ‌ரியா அண்மையில் பீரங்கித்தாக்குதல்களை நடத்தியது இ‌தி‌ல் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர். இத‌ற்கு ப‌‌திலடியாக தெ‌ன் கொ‌‌ரியாவு‌ம், வட கொ‌ரியா ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தியது. மேலும் அவ்விடத்தில் வசித்த சுமார் 1200 பேர் அங்கிருந்து வெளியேறினர். அங்கு தொடரும் இப்பதற்ற சூழ்நிலையால் எந்நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுவதாக கொரிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திகை 28, 2010

இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதிய விசாமுறை அறிமுகம்

இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விரும்பியபோது வந்து செல்வதற்கான விசா முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் இதுவரைகாலமாக சுற்றுலா விசாக்களிலேயே இலங்கைக்கு வருகின்றனர். எனவே விரும்பியபோது தடைகள் இன்றி இலங்கைக்கு வந்து செல்வதற்காக 'மல்டிபல்' விசா முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்

கார்த்திகை 28, 2010

தொண்டே துணையாய் உமாபாய்...

(இலங்கையில் போர்க் காலத்திலும் போருக்கு பிந்தைய கால கட்டத்திலும் பல 'தொண்டர்' அமைப்பக்கள் சிறிப்பாக தமிழ் பிரதேசங்களில் இயங்கி வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்ய இக்கட்டுரை உதவலாம் என்பதன் அடிப்படையில் இங்கு பிரசுரம் செய்யப்படுகின்றது.)

இன்று தொண்டு நிறுவனம் தொடங் குவது என்பது நல்ல தொழில். இன்னும் சொல்லப் போனால் நல்ல வியாபாரம். ஆனால், அரசு உத வியோ வெளிநாட்டு உதவியோ எது வுமே இல்லாமல் அந்தப் பெண் ஒரு தொண்டு நிறுவனம் தொடங்கு கிறார். அவ்வாறு தொடங்குமாறு அவருக்கு ஆணையிட்டவர் மகா த்மா காந்தி. இது நடந்தது 1946ஆம் ஆண்டு. அதாவது சுதந்திரத்திற்கு முன். கஸ்தூர்பாய் அறக்கட்டளை யின் கர்நாடகக் கிளையை உமாபாய் குந்தாபூர் தொடங்கினார். சல்லிக் காசு கையில் கிடையாது. கிராமப் புற மக்களை குறிப்பாக பெண்களை கைதூக்கிவிட வேண்டும் என்கிற காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற புயலெனப் புறப்பட்டார். இளம் விதவைகள், கணவனால் கைவிடப் பட்டோர், குழந்தைகள், அனாதை கள், இவர்களின் புகலிடமாய் அந்த நிறுவனம் உருப்பெற்றது.(மேலும்.....)

கார்த்திகை 28, 2010

மலையக மக்களை இந்திய வம்சாவளியினரென அழைக்கக் கூடாது  - பிரதமர்

ஏனைய நாடுகளை விட இலங்கைக்கு இந்தியாவின் மீதே கூடுதலான நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த நம்பிக்கையும் நீண்ட நாள் நட்புறவும் ஒரு போதும் பாதிப்படையக் கூடாது. மலையக மக்கள் இந்திய வம்சாவளியினர் என்று அழைக்கப்படுவதை நான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அவர்கள் இலங்கையர்களேயாவர் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவிடம் பிரதமர் டி. எம். ஜயரத்ன எடுத்துக் கூறியுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

தமிழ், முஸ்லிம் மக்கள் கொழும்பில் வசிக்கும் போது சிங்களவர்கள் ஏன் வடக்கில் மீள்குடியேற முடியாது - ஜனாதிபதி

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொழும்பில் வசிக்கும் போது சிங்களவர்கள் ஏன் வடக்கில் மீள்குடியேற முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழ் கட்சிகள் அரங்கத்திடம் கேள்வி எழுப்பியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்தது. இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக குருபரன் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தற்போது இராணுவத்தினருக்கு சொந்தமானவர்களை மீள்குடியேற்றம் செய்து வருவதாக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சுட்டி காட்டிய போது, ஜனாதிபதி மறு மொழியாக, கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் போது வடக்கில் சிங்களவர்கள் ஏன் மீள்குயேற முடியாது. இதனை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.  (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

 

K.A.Subramaniam's 21th Anniversary Memorial Lecture will be held at 5pm

on Sunday 28 November 2010

Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது

(மேலும்.....)

கார்த்திகை 27, 2010

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்
(ஜோர்ஜ் இ.குருஷ்சேவ்

(கார்த்திகை 20/21 ரொறன்ரோவில் நடைபெற்ற பன்முகவெளி 2 இல் ஜோர்ஜ் இ. குருஷ்சேவ் இனால் வாசிகப்பட்ட கட்டுரை இது.)

தன்னுடைய கருத்தக்களை ஒரு முழுமையான வசனமாகவேனும் ஒப்புவிக்கத் முடியாத ஒரு மனிதனின் துப்பாக்கி முனையில் எமது பேச்சுரிமையை இழந்து வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

 

இந்திய அரசின் 50,000 வீடுகள்

நிர்மாணப் பணிகள் இன்னும் 20 நாட்களில் ஆரம்பம்

இந்திய அரசின் உதவியுடன் அமைக்கப்படும் 50 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் இன்னும் 20 நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன நேற்று (26) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங்கின் உறுதிமொழிக்கு அமைவாக இந்த வீடமைப்புத் திட்டத்தின் நிர்மாணப் பணி ஆரம்பிக்கப்படுவதாகவும் முதற் கட்டமாக ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படுமென்றும் பொறுப்புடன் அறிவிப்பதாகவும் குணவர்தன எம்.பி. தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் எம்.பி. உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கில் மீளக்குடியமர்ந்தவர்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார். இதற்குப் பதில் அளித்து உடன் கருத்துத் தெரிவித்த சஜின் வாஸ் குணவர்தன, “நாமல் ராஜபக்ஷ எம்.பியும் அருகில் இருக்கிறார். நான் பொறுப்புடன் கூறுகிறேன். இன்னும் 20 நாட்களில் வீடமைப்பு நிர்மாணப் பணி ஆரம்பமாகும்” என்றார்.

கார்த்திகை 27, 2010

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர் ‘இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

(நேற்றைய தொடர்)

நான் அபிவிருத்திப் பணியில் கவனத்தைச் செலுத்துகின்றேன் என்பது எனது மக்களுக்கு விடுக்கும் செய்தியாகும். அறிவு, சக்தி, வர்த்தகம், கடல் வழிப்போக்கு வரத்து, விமானப் போக்குவரத்துப் போன்றவற்றில் அபிவிருத்தியடைந்த இலங்கையை உருவாக்க விரும் புகின்றேன். இதனை வெற்றி கொள்ள எமது மக்கள் ஒன்று பட்டிருப்பது அவசியமாகும். மக்களுக்காக அரசாங்கத்தின் ஆதரவளிக்க வேண்டும். சர்வதேச சமூகத்துக்கு நான் விடுக்கும் செய்தி எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென்பதாகும். நாங்கள் பயங்கரவாதிகளைத் தோற்கடித்திருக்கிறோம். சுதந்திரப் போராளிகளை அல்ல. முழு உலகுமே இப்பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. ஆதலால் நாங்கள் எதனை வென்றெடுத்துள் ளோம் என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு நாட்டை வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்ய உதவ வேண்டும். சமூகங்களுக்கிடையே இடை வெளியை அதிகரிப்பதற்கு அல்லாமல் அவர்களை நெருக்கமாக்குவதற்கு அவர்கள் உதவ வேண்டும். கடந்து சென்றது கடந்து சென்றவை தான். காயங்களைக் கிளற வேண்டாம். எதிர்மறையாக அல்லாமல் நாம் சாதகமாகச் சிந்திப்பது அவசியம். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

குழந்தைகளும் கனவு காண்கின்றனர்

‘புதிதாக பிறந்த குழந்தைகளும் கனவு காணும்’ என பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மனித மூளையில் ஞாபக சக்திக்கென தனிப் பிரிவு உள்ளது. நியூரோன்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள இப்பகுதியின் உதவியில்தான், நடந்தவற்றையும், எதிர்காலம் பற்றியும் காட்சி வடிவங்களில் நாம் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஞாபக சக்திக்கு மூளைகளில் உள்ள நியூரோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

ஐரோப்பிய யூனியன்  வேலையின்மையால் மக்கள் பரிதவிப்பு

வேலையின்மையின் அளவு ஐரோப்பிய யூனியன் நாடுகளில் அதிகரித்து வருவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்ற பட்டியலில் இருக்கும் ஐரோப்பிய இளைஞர்களில் பாதிப்பேருக்கு மேல் குறைந்தது ஓராண்டுக்கு வேலையில்லாமல் இருக்கிறார்கள். கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 30 விழுக்காடாகவே இருந்தது. ஒட்டுமொத்தத்தில் ஐரோப்பிய யூனியனின் வேலையின்மை விகிதம் 9.6 விழுக்காடாகும். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

வடக்கு ரயில் பாதை நிர்மாணம்

416 மில். டொலர் கடன் வழங்க இந்தியா இணக்கம்

வடக்கு ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு 416 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகையினை பெற்றுக் கொடுக்க இந்திய அரசு இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தமொன்று ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா ஆகியோர் முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (26) கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவியேற்பின் பின்னர் இந்திய வெளியுறவு அமைச்சர் முதல் முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடக்கிற்கான புகையிரதப் பாதையின் புனரமைப்புப் பணிகள் மூன்று கட்டங் களாக இடம்பெறவுள்ளன. மடு முதல் தலைமன்னார் வரையும் மதவாச்சியிலிருந்து மடு வரையும் மற்றும் ஓமந்தையில் இருந்து பலாலி வரையும் பூர்த்தி செய்யப்படவுள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

வட கொரிய - தென் கொரிய விவகாரம்

சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி பதற்றத்தை தவிர்க்க வேண்டும் - ஒபாமா

வட கொரியா விவகாரத்தில், சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அங்கு நிலவும் பதற்றத்தை குறைக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கேட்டுக்கொண்டுள்ளார். வட கொரியா- தென்கொரியா நாடுகளின் எல்லையையொட்டிய கடல் பகுதியில், தென்கொரியாவுக்கு சொந்தமான பியாயோங் தீவு உள்ளது. இங்கு தென்கொரியாவின் ராணுவ தளம் உள்ளது. இத்தீவின் மீது, வட கொரியா அண்மையில் குண்டுகளை வீசி, திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, வடகொரியா மீது தென்கொரியா தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.

பொதுவான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் அரங்கம் முன் வைக்குமானால் அதில் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியிருக்குமானல் கட்சியில் கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று ஆதரிக்கத் தயார் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா செந்திவேல் தெரிவித்தார். இன்றைய நிலையில் அரசுடன் சேர்ந்து இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தங்களின் சொந்த நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் சுயநலன்களுக்காகவும் எனவும் தெரிவித்த அவர், புலிகளின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பாதுகாத்து கொள்ளவே எனவும் குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

எய்ட்ஸ் நோயை தடுக்க மாத்திரை

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோயை தடுக்க புதிய மாத்திரையை அமெரிக்க டாக்டர்கள் கண்டு பிடித்துள்ளனர். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர், “துருவதா” எனப்படும் அந்த மாத்திரையை இரண்டு ஆண்டுகளுக்கு தினமும் சாப்பிட் டால் “எய்ட்ஸ்” கிருமிகள் அணுகாது என கலிபோர்னியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வுக்காக பிரேசில், பெரு, தென்னாபிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, ஈக்குவடார் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த 2500 ஆண்களிடம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது, எய்ட்ஸ் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் வரை குறைந்திருப்பது தெரிய வந்தது. இந்த மாத்திரையை சாப்பிட்டாலும் பாதுகாப்பான உடலுறவை தொடருவது சிறந்தது என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு “துருவதா” மாத்திரையை சாப்பிட எவ்வளவு செலவு தெரியுமா? ரூ. 18 லட்சம்.

கார்த்திகை 27, 2010

ஆரோக்கியமான சமுதாயத்தை அமைப்போம்

இலங்கையில் ஒவ்வொரு ஆயிரம் பிள்ளைகளில் 12 பேரே மரணிக்கிறார்கள். பிரசவத்தின்போது, ஒவ்வொரு லட் சம் தாய்மாரில் 45 பேர் மாத்திரமே மரணிக்கிறார்கள். இலங் கையில் ஆண்களின் ஆயுட்காலம் 77 வருடங்களாகவும், பெண் களின் ஆயுட்காலம் 68 வருடங்களாகவும் அதிகரித்து இரு க்கிறது. பெரும்பான்மையான வளர்முக நாடுகளுடன் ஒப்பி ட்டுப் பார்க்கும் இடத்து, எமது நாட்டின் சுகாதார துறையின் வளர்ச்சியை இது பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. எங்கள் நாட்டிலிருந்து இளம்பிள்ளை வாதம், அம்மைநோய் முற்றாக தடுக்கப்பட்டிருக்கிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர் களுக்கு நோய்த் தடுப்பு ஊசி போடுவதிலும் நாம் இன்று முன்னணியில் திகழ்ந்து வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு கூடுதலான காலப் பகுதியில் இந்நாட்டு மக்களுக்கு இலவச வைத்திய சிகிச்சையை வழங்கும் ஒரு நாடு என்ற சிறப்பை யும் நாம் பெற்றுள்ளோம். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

கிராமங்களை குறிவைக்கும்  பன்னாட்டு நிறுவனங்கள்

உலகமயத்தின் மூலம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஊடுருவியுள்ள ஏகாதிபத்தியம் ஏற்கெனவே பல துறைகளில் தனியாட்சி நடத்தி வருகிறது. தற்போது இந்திய கிராமங்களில் தனது கழுகு கண் பார்வையை திருப்பியுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களும், பெரிய கார்ப்ப ரேட் நிறுவனங்களும் தங்களின் உற்பத்திப் பொருட்களை நுகரும் சந்தையாக இந்திய கிராமங்களை தயார்ப்படுத்தும் வேலையை செய்து வந்தன. இதில் ஓரளவு வெற்றியும் பெற்றி ருக்கின்றன. அதன் எதிரொலிதான் தற்போது இந் திய கிராமங்களில் காலை உணவுக்கு பதிலாக 33 விழுக்காட்டினர் பிஸ்கெட்டுகளை சாப்பிடு கின்றனர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள் ளது. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி, மக்களின் வாழ்வாதாரம்

ஜனாதிபதிக்கு ஒத்துழைக்க தமிழ்த் தலைவர்கள் முடிவு

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி மற்றும் அப்பகுதி மக்களின் நலன், வாழ்வாதாரம் தொடர்பாக ஜனாதிபதி முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்குவதாக தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி தேர்தல் வெற்றியுடனும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற வெற்றியுடனும் எதிர் காலத்தில் மிகப் பெரிய சேவையை செய்வதற்கு ஜனாதிபதிக்கு இன்று சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என்பதையும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியது. (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

மதவாச்சி - தலைமன்னார் ரயில்பாதை நிர்மாணப்பணிகள் இன்று ஆரம்பம்

மதவாச்சி - தலைமன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணியின் ஆரம்ப வைபவம் இன்று மதவாச்சியில் இடம்பெறவுள்ளது. இந்திய அரசின் 120 மில். அமெரிக்க டொலர் செலவில் இப்பாதை நிர்மாணிக்கப் படவுள்ளது.வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கைத்தொழில் வாணிப அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தலைமையில் இடம்பெறும் இன்றைய நிகழ்வில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மற்றும் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோரும் கலந்துகொள்கின்றனர். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 27, 2010

தென் கொரியாக்கு எச்சரிக்கை

அமெரிக்க படைகளுடன் சேர்ந்து ராணுவத்தை குவிக்கும் நடவடிக்கையில் இறங்கினால் தென் கொரியா மீது அடுத்தடுத்து தொடர் தாக்குதல்கள் நடத்த தயங்க மாட்டோம் என வட கொரியா நேற்று எச்சரிக்கை விடுத்தது. இதனால், கொரியா தீபகற்ப பகுதியில் போர் மேகம் சூழ்ந்து பதற்றம் அதிகரித்து இருக்கிறது. எனினும் வழக்கமான கூட்டு ராணுவப் பயிற்சி மேற்கொள்ளவே அமெரிக்க கப்பல் தென்கொரியா செல்வதாக கூறப்படுகிறது. கொரிய கடற் பகுதியில் இரு நாட்டுப் படைகளும் அடுத்தவாரம் கூட்டு கடற்படை போர் பயிற்சி மேற்கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வட கொரியாவுக்கு சீனாவின் ஆதரவு இருந்து வருகிறது. எனவே, இந்த விவகாரம் குறித்து சீனாவுடன் பேச தென் கொரியா முடிவு செய்திருந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. ஏனெனில், தென்கொரியாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொள்ள இருந்த சீன வெளியுவு அமைச்சர் யாங் ஜியாச்சி, தனது பயணத்தை ஒத்திவைத்துவிட்டார். வட கொரியாவை சீனா பகிரங்கமாக கண்டித்தால் மட்டுமே இந்த போர் பதற்றம் தணியும் என அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

கார்த்திகை 26, 2010

யாழ் பல்கலைக்கழகத்தில்

புலிகளால் கொண்டாடப்படும் மாவீரர் தின நிகழ்வை கொண்டாடுவதற்கு கோரும் துண்டுப்பிரசுரங்கள்

இன்று காலை இனந்தெரியாத சில புலி நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் காணால் போய் விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. புலிகளின் தலைவர் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுடரை ஏற்றும் வகையிலான புகைப்படத்துடனேயே மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன. இதனிடையே பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளில் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தவோ அல்லது இது குறித்த தகவல்களை தெரிவிக்கவோ மறுத்து விட்டது. புலி செயற்பாடுகள் இருக்கும்வரை இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் அவசரகால தடைசட்டம் நடைமுறையில் இருக்கும். மக்களே சிந்தியுங்கள் புலி பயங்கரவாதத்தை இல்லாத செய்தால் இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழமுடியும்

கார்த்திகை 26, 2010

இலங்கையில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தியா-இலங்கை இரு நாட்டு நல்லுறவுகளைப் பேணும் விதமாக 4 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக இலங்கை வந்தடைந்தார். விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த பிறகு வருகை தரும் தலைவர் என்கிற வகையில் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுப் பணிகள் குறித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் வரவு இலங்கை யின் நிதி நலனுக்கு உதவும் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பெய்ரீஸ் கருத்து தெரிவித்தார்.  இலங்கை அதிபருடனான பேச்சு வார்த்தை மற்றும் இரு நாடுகளுக்கி டையேயான இருதரப்பு உறுதிமொழி களைக் காப்பது போன்ற விஷயங்கள் தவிர்த்து, இலங்கையில் இரண்டு தூத ரகங்களை எஸ்.எம். கிருஷ்ணா திறந்து வைக்கிறார். உள்நாட்டில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான 50,000 வீடுகளைக் கட்டித்தரும் திட்டத்திலும் பங்கேற்கிறார்.

கார்த்திகை 26, 2010

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர் ‘இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

(நேற்றைய தொடர்)

பல்வேறு தலைவர்களின் இரண்டாவது பதவிக் காலத்தை நான் பார்த்துள்ளேன். இலங்கையில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் இதனைப் பார்த்திருக்கிறேன். ஏனெனில் முதலாவது வருடத்தில் (இரண்டாவது பதவிக் காலத்தில்) உங்களால் வேலை செய்ய முடியும். நீங்கள் வாக்குறுதிகளை அளிப்பீர்கள். முதல் வருடத்தில் பணியாற்ற முடியும். இரண்டாவது வருடம் வரும் போது கட்சிக்குள் அடுத்த தலைவர் யாரென அறிவதற்கு மோதல் ஆரம்பிக்கும். அரச ஊழியர்கள், அடுத்த தலைவர் யாரென பார்த்துக் கொண்டிருப்பார்கள். அவர்கள் பணியாற்ற மாட்டார்கள். ஜனாதிபதி செயற்பட முடியாதவராக இருப்பார். சந்திரிகாவின் கடைசிப் பதவிக் காலத்தில் என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஜே. ஆர். ஜயவர்தனவிற்கு என்ன நடந்ததென்பதைப் பாருங்கள். ஏனையோருக்கு என்ன நடந்தது. நான் அதனைப் பார்த்துள்ளேன். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு லண்டனில் வசிக்கும் தமிழர் உபவேந்தராக நியமனம்?

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு சிங்களவர் ஒருவரை உபவேந்தராக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்த நிலையில் அதனை நிறுத்துவதற்காக பல்கலைக்கழகத்தின் அக்கறையுள்ள மாணவர்கள் மற்றும் பிரதியமைச்சர் முரளிதரன், தமிழ் தேசிய கூடடமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் ஆகியோர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பில் எமக்கு லண்டனில் இருந்து கருத்து தெரிவித்த கலாநிதி எஸ்.திருச்செல்வம், தம்மை மீள பல்கலைக்கழகத்தில் வந்து இணைந்துகொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

அவர்களே அவர்களைப்பற்றி கூறுகின்றார்கள்

ஐயா ஜெயானந்த மூர்த்தி அவர்களே! ஓய்வூதியம் அல்ல ஒற்றுமை ஐயா ஒற்றுமை வேண்டும்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே ! உங்களுக்கு மீண்டும் ஒரு மடல். பல மடல் எழுதியும் நீங்கள் பதில் தருவதில்லை என்பது எனது வருத்தம். ஆனாலும் தமிழீழ தேர்தலில் உங்களுக்கு வாக்களித்தவன் என்ற முறையில் ஒரு திறந்த மடல். உங்கள் ஓய்வூதியம் மாவீரர் குடும்பத்துக்கு அளிப்பது பற்றி அறிந்தேன். மிக்க மகிழ்ச்சி !. உங்கள் பணம் அல்ல மனம் இங்கே முக்கியமாக தெரிகிறது ! ஆனால் இது வெறுமனே இலங்கையில் செய்யும் அரசியலாக மாற கூடாது . உங்கள் ஓய்வூதியம் இங்கிலாந்தில் ஒருவருட அடிப்படை சம்பளத்தின் சிறு பகுதியாகத்தான் இருக்க முடியும் என்பது எனது கணிப்பீடு. இங்கேதான் நான் கூறுகிறேன் , இது அரசியல் பேச்சாக இருக்க வேண்டாம்.  நீங்கள் உண்மையில் எங்கள் மக்களுக்கு பல விதங்களில் உதவலாம். தமிழீழ அரசை நிர்மாணிக்கும் போது என்னை போன்ற சாதாரண மக்கள் எவ்வளவு மகிழ்வடைந்தோம் ! (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

யெமனில் ஷியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்

யெமனில் ஷியா முஸ்லிம்களை இலக்குவைத்து கடந்த புதன்கிழமை தற்கொலை கார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 23 ஷியா முஸ்லிம்கள் உயிரிழந்தனர். எமெனில் ஷியா சுன்னி மத மோதல்களை உண்டு பண்ணும் நோக்கில் அல் கைதா இத்தாக்குதலை நடத்தியதாக ஷியா முஸ்லிம்களின் அமைப்பு தெரிவித்தது. யெமன் அரசுக்கெதிராகப் போராடும் ஷெய்டி ஷியா அமைப்பின் ஆதரவாளர்களே இந்தத் தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்தனர். சவுதி அரேபியாவை அண்மித்துள்ள எமென் சுன்னி முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. 2004ம் ஆண்டு முதல் ஷியா முஸ்லிம்களின் அமைப்பு எமென் அரசுக்கெதிராகப் போரிடுகின்றது. சென்ற பெப்ரவரியில் ஷியா அமைப்புக்கும், எமென் அரசுக்கும் தற்காலிக யுத்த நிறுத்தம் கைச்சாத்தானது. இந்நிலையில் ஷியா முஸ்லிம்களை நோக்கி அல்கைதா தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல், அமெரிக்காவின் உளவுத் துறையும் இத்தாக்குதலின் பின்னணியிலுள்ளதாக ஷியா அமைப்பு குற்றம் சாட்டியது. உயிரிழந்த 11 பேரை ஷியா அமைப்பு பொறுப்பேற்று அடக்கம் செய்தது. ஏனைய 12 பேரையும் ஹித் இனத்தவர்கள் அடக்கம் செய்தனர்.

கார்த்திகை 26, 2010

மோதல் காரணமாக

 

பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகளுக்கு விசேட திட்டம்

மோதல் காரணமாக பெற்றோரை இழந்த பிள்ளைகள் 1746 பேர் உள்ளனர். இவர்களுக்கு கல்வி, சுயதொழில், தொழிற் பயிற்சி என்பன வழங்க விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்தது. வாய்மூல விடைக்காக அநுர திசாநாயக்க எம்.பி. எழுப்பியிருந்த கேள்விக்கான பதிலை மீள்குடியேற்ற அமைச்சர் சார்பாக ஆளும் கட்சி பிரதம கொரடா, அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபையில் சமர்ப்பித்தார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; பெற்றோரை இழந்த பிள்ளைகளில் பாடசாலை மாணவர்கள் 1608 பேர் உள்ளனர். அதில் 1551 பேர் பாடசாலை செல்கின்றனர். இவர்களுக்காக அவுஸ்திரேலிய உதவி வழங்கும் அமைப்புகள் நிதி உதவி வழங்குகின்றன. பாடசாலை மாணவர்களுக்காக சீருடை, சப்பாத்து, தைத்த உடை என்பன வழங்கப்படுகின்றன. மாலைவேளையில் விசேட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தொழிற்பயிற்சி வழங்க 17 நிலையங்கள் அமைக்கப்பட்டு ள்ளதோடு சுயதொழில் மற்றும் பாடசாலை மாணவர்களின் கல்வி அறிவை மேம்படுத்த விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கார்த்திகை 26, 2010

பீகார் மாநிலத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மறக்கமுடியாத அடி

பீகார் மாநிலத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தனித்து நின்று ஆட்சியை பிடிப்போம் என்று மார் தட்டிய காங்கிரஸ் கட்சிக்கு இத்தேர்தல் முடிவு மறக்க முடியாத அடிதான். பீகார் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியாவும் அவரது புதல்வர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பீகார் மாநிலத்தை சீரழித்து விட்டதாக சாடினார்கள். இந்தியாவிலேயே பீகார் மாநிலம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்க அக்கட்சிகளே காரணம் என்றும் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பீகாரை வளமான பாதைக்கு கொண்டுசெல்லமுடியும் என்றும் வறுத்தெடுத்தனர். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

போதைக்கும்பல் கடத்தல்காரர்களுக்கு எதிராக

பொலிவியாவில் இராணுவம் பொலிஸார் சுற்றிவளைப்பு

பொலிவியாவில் போதைக் கும்பல் ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்தும் பொருட்டு பொலிஸாரும் இராணுவமும் உஷார் நிலையில் வைக்கப்பட்டனர். ஹெலிகொப்டர்கள் பறந்த வண்னம் நிலைமைகளை அவதானித்தன. பீரங்கிகள், கவச வாகனங்கள் வீதியெங்கும் நிறுத்தப்பட்டன. பொலிவியாவின் இருபது நகரங்களில் பொலிஸார், இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது பெருமளவான போதைப்பொருட்களும், ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. இந்த திடீர் நடவடிக்கையின்போது இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர். இன்னும் சிலர் கைது செய்யப்பட்டனர். போதைக் கும்பலையும் குற்றம் செய்வோரையும் தோற்கடிப்பதென்ற தீர்மானத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இராணுவம் எத்தகைய நிலையையும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக பொலிவிய ஜனாதிபதி லூலாடி சில்வா தெரிவித்தார்.

கார்த்திகை 26, 2010

ஜனநாயக காவலன் என கூறும் நாடுகள் பயங்கரவாதத்திற்கு துணைபோகின்றன

அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி இலக்கை வெற்றிகொள்வதில் சிறுபான்மை மக்களும் பூரண பங்களிப்பு வழங்கவேண்டுமென தகவல் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரி வித்தார். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதென நாம் ஓய்ந்துவிட முடியாது. சர்வதேச நாடுகளில் அதன் செயற்பாடுகள் துடிப்புடன் இடம்பெறுகின்றன. ஜனநாயகத்தின் காவலர்கள் என்று கூறப்படும் நாடுகளே அதற்கு ஒத்துழைப்பை வழங்குகின்றன எனவும் அமைச்சர் தெரிவித்தார். புலிகளின் முக்கியஸ்தரான ருத்ரகுமாரைப் பிரதமராகக் கொண்ட நாடுகடந்த அரசாங்கம் அண்மையில் அமைக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் ஒத்துழைப்பை வழங்கியுள்ளன. அதேபோன்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த தமிழ்ச் செல்வனுக்கு பிரான்ஸில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் அந்நாட்டின் பிராந்திய ஆளுநர் ஒருவரே பிரதம அதிதியாகக் கலந்துகொண்டுள்ளார். அரசாங்கம் எத்தகைய தீர்மானங்களை எடுத்த போதும் அதனை சில மணித்தியாலங்களுக்குள் மாற்றவேண்டிய நிர்ப்பந்தத்தை எங்கோ பதுங்கு குழிக்குள் இருந்த ஒரு தனி மனிதன் ஏற்படுத்திய யுகம் ஒன்றை மறந்துவிட முடியாது. இன்றும் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்ட போதும் புலிகள் அரசாங்கம் அமைத்து தம்மை நிலை நிறுத்திக்கொள்ள முயலும் நடவடிக்கைகள் சர்வதேச மட்டத்தில் இடம்பெறுகின்றன. அதனை சில சர்வதேச நாடுகள் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ள நிலையையும் காணமுடிகிறது.

கார்த்திகை 26, 2010

காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனடாவில் ஐந்து வருட கடூழிய சிறை

மகளின் காதலுக்கு வில்லனாக மாறிய தகப்பனுக்கு கனேடிய நீதிமன்றம் ஒன்று ஐந்து வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளித்து உள்ளது. இளைய மகள், இளைய மகளின் காதலன், மூத்த மகளின் கணவன் ஆகியோரை 2007 ஆம் ஆண்டு வாகனத்தால் மோதி கௌரவக் கொலை செய்ய முயன்றார் என்று குற்றஞ்சாட்டி ஒன்ராரியோவில் உள்ள உயர்நிலை நீதிமன்றம் ஒன்றில் Scarborough நகரவாசியான செல்வநாயகம் செல்லத்துரை ( வயது-47) என்பவருக்கு எதிராக வழக்கு இடம்பெற்று வந்துள்ளது. இம்மூவர் மீதும் கடுமையான தாக்குதல் நடத்தினார் என்கிற குற்றச்சாட்டை செல்வநாயகம் ஒப்புக் கொண்டார். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

On The Outcome of the Obama Visit

The outcome of the visit of President Obama of the United States is to further strengthen the strategic alliance with the United States. The Joint Statement issued after the visit indicates that the main agenda was to prise open the Indian market for the business and commercial interests of the United States and its efforts to draw India into a closer security and military relationship. Against the backdrop of the deep recession and high unemployment afflicting its economy, the US is desperately trying to reduce imports and increase its exports worldwide. The framework for economic cooperation contained in the joint statement reflects this agenda. (more....)



கார்த்திகை 26, 2010

ஜனாதிபதியின் துணிச்சல் மிகு பேட்டி, பாராட்டு

எனக்கு இரண்டிற்கு மேற்பட்ட தவணைகள் ஜனாதிபதி ஆசனத் தில் வீற்றிருப்பதில் ஆர்வம் இல்லை. ஆனால், எனது 2வது தவ ணையின் போது, என்னுடைய அதிகாரத்தை கடைசி நாள் வரை நெறியாக வைத்திருப்பதற்கு ஒருவர் எத்தனை தவணை களும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற மாற்ற த்தை சட்டபூர்வமாக ஏற்படுத்தினேன். எனக்குப் பின்னர் மக்கள் எவரையும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கலாம். அதனை நான் தடுக்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தை உதாசீனம் செய்து தன்னிச் சையாக நாட்டில் ஆட்சியை மேற்கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் முகமாகவே, நான் அரசியல் சாச னத்தில் திருத்தம் செய்து ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத் திற்கு மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையாவது வந்து, நாட்டு மக்களின் இதயத் துடிப்பு எவ்விதம் அமைந்திருக்கிறது என் பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் பாராளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்கிறேன். (மேலும்.....)

கார்த்திகை 26, 2010

மன்னார் கடற்பரப்பு எண்ணெய் அகழ்வு

வழங்குநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய்க் கிணறுகளை அகழ்வதற்குத் தேவையான பொருட்கள், சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். முதற் கட்டத்தின்போது மன்னார் கடற்பரப்பில் மூன்று எண்ணெய்க் கிணறுகளை அகழ்வது தொடர்பில் கெயான் லங்கா கம்பனியுடன் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கம்பனிக்கு ஆய்வு செய் வதற்கு 3,000 சதுர கிலோ மீற்றர் பரப்பரளவு வழங்கப்பட்டுள்ளது. செயான் லங்கா கம்பனி ஆய்வுபூர்வ அகழ்வு நடவடிக்கைகளை 2011 அக்டோபர் 15ஆம் திகதி பூர்த்தி செய்ய வேண்டும். இதேவேளை, இலங்கையின் தெற்கு கரைகடந்த பிரதேசத்தில் வண்டல் படுக்கையில் எண்ணெய் வளம் இருப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மேலதிக தரவுகள் திரட்டப்படவுள்ளன. செய்மதித் தரவுகள் மூலம் இரு பிரதேசங்கள் அடையாளங் காணப் பட்டன. இதன்படி 740 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தரவுகள் திரட்டப் பட்டன.

கார்த்திகை 26, 2010

Given up for dead after 50 days adrift in South Pacific, 3 teens rescued by passing trawler

Three teenagers survived 50 days adrift in a tiny boat in the South Pacific by drinking rainwater and eating raw fish and a seagull before being rescued by a passing trawler, a senior crewman on the fishing vessel said. The trio — Samuel Pelesa and Filo Filo, both 15, and Edward Nasau, 14 had been given up for dead on their coral atoll in the Tokelau islands, where a memorial service was held for them after extensive searches failed to find them. The boys set off on Oct. 5 in their aluminum dinghy from their home island to one nearby. It's not known how they went missing, but the outboard motor on their boat may have broken down at sea. (more....)

கார்த்திகை 25, 2010

வடக்கு, கிழக்கு மக்களின் மீள்குடியேற்ற விவகாரம்

ஜனாதிபதியுடனும் எஸ். எம். கிருஷ்ணாவுடனும் பேச தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் மீள்குடியேறி வரும் மக்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதியுடனும் இலங்கை வரும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணாவுடனும் சந்தித்து பேச்சு நடத்த தமிழ்க் கட்சிகளின் அரங்கம் முடிவு செய்துள்ளது. இலங்கை விவகாரத்தில் இந்திய அரசின் காத்திரமான பங்களிப் பினைக் கருத்திற்கொண்டும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலை யிலும் மீள்குடியேற்ற நடவடிக் கைகளில் இந்திய அரசாங்கம் தற்சமயம் வழங்கி வரும் பங்களிப் பினை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திப்பானது அவசியமானது என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனிடையே இம்மாத இறுதிக் குள்ளாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் மக்களது மீள் குடியேற்றம் தொடர்பிலும் தற்சம யம் மக்கள் எதிர்நோக்கும் அத்தியாவசிய மற்றும் அன்றாட பிரச்சினைகள் தொடர் பிலும் கலந்துரையாடுவதற்கும் தமிழ்க் கட்சிகளின் அரங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியை நோக்கி மக்கள் சென்ற போது புலிகள் சுட்டனர் : சிவபாலன் _

யுத்தம் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்து அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு பொது மக்கள் செல்ல முற்பட்ட போது புலிகள் பொது மக்களை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக வைத்திய கலாநிதி சிவபாலன் தெரிவித்தார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கையிலேயே சிவபாலன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், பொது மக்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு செல்ல முற்பட்ட பொதுமக்கள் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். எனவேதான் பொது மக்கள் இரவு நேரத்தில் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கிச் சென்றனர். ஆனால் இராணுவத்தினர் இதனை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

கார்த்திகை 25, 2010

புலிகளின்சீறோ வன்பேஸ்வதை முகாம் கண்டுபிடிப்பு

26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் முல்லைத்தீவில் தோண்டி எடுப்பு

புலிகளால் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட 26 படை வீரர்களது எலும்புக் கூடுகள் நேற்று தோண்டி எடுக்கப்பட்டதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவர் தெரிவித்தார். தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் புலி உறுப்பினரொருவர் வழங்கிய தகவலையடுத்து, முல்லைத்தீவு, பரந்தன் வீதியில் 9 கி. மீ. தூரத்தில் வல்லிபுரம் என்ற இடத்தில் (காட்டுப் பகுதியில்) இந்தப் புதை குழி தோண்டப்பட்டுள்ளது. இந்தப் புதை குழியைத் தோண்டுவதற்கென 100 பேர் கொண்ட குழுவொன்று அங்கு சென்றிருந்தது. மேற்படி காட்டுப்பகுதியில் புலிகளின்சீறோ வன்பேஸ் என்ற பெயரில் வதை முகாமொன்று செயற்பட்டு வந்திருப்பது தெரிய வந்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

Expectations of Management

கார்த்திகை 25, 2010

இலங்கை பெண் அகதி தற்கொலை வழக்கு சி.பி.ஐ., விசாரிக்க மனு: அரசுக்கு நோட்டீஸ்!

இலங்கை பெண் அகதி தற்கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் அருகில் ராயனூரில் உள்ள அகதிகள் முகாமில் வசிக்கும் பத்மாவதி என்பவர் தாக்கல் செய்த மனு:அகதிகள் முகாமுக்கு வந்த போலீசார், என்னையும் எனது மகள் பத்மாதேவியையும் வேனில் ஏற்றிச் சென்றனர். கரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் வேனை நிறுத்தினர். என்னை வேனில் உட்கார வைத்து விட்டு, எனது மகளை மூன்று போலீசார், தொலைவில் உள்ள கட்டடத்துக்கு கூட்டிச் சென்றனர். எனது மகளின் கணவர் ஒரு கொலை வழக்கில் சிறையில் உள்ளார். அவரை பார்ப்பதற்காக மகளை அழைத்துச் செல்வதாக நினைத்தேன். பிறகு வேனில் இருந்து, சில நிமிடங்கள் கழித்து அதிர்ச்சியுடன் காணப்பட்ட, எதுவும்பேச மறுத்த என் பெண்ணிடம் வெற்று தாளில் கையெழுத்தும் பெற்றனர். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

அபிவிருத்தியையும் ஐக்கியத்தையுமே மக்கள் எம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றனர்

இரண்டாவது பதவியேற்புக்கு பின்னர்இந்து’வுக்கு ஜனாதிபதி பேட்டி

இலங்கை தற்போது ஒரே நாடு. அது பிளவுபட்டதாக இல்லை. ஆதலால் சகல அனுகூலங்களையும் முழு நாடும் பெற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்கு நாங்கள் விரும்புகின்றோம். ஒரு பிரதேசம் அல்லது ஒரு சமூகம் மட்டுமல்ல சகல மக்களுமே அனுகூலமடைவதற்காக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது.  முதலாவது பதவிக்காலத்தில் இந்த நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டு வந்துள்ளேன். பயங்கர வாதத்தை அழித்து சமாதானத்தை ஏற்படுத்தியுள்ளளேன். இப்போது நாட்டை அபிவிருத்தி செய்வதே எனது குறிக்கோளாகும். அபிவிருத்தி முக்கியமானதாகும். அபிவிருத்தியும் சமாதானமும் இல்லாவிடில் எம்மிடம் ஜனநாயகம் இருக்க முடியாது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மாவீரர் தினம் ஒரு பெரிய பிஸினஸ்

(பரா நவரஞ்சன்)

லண்டனில் புலிகள் 3லட்சம் பவுண்ட்ஸ் செலவழித்து மாவீரர் தினம் செய்யவுள்ளார்கள் மிகவும் ஆடம்பரமாக செய்யவுள்ளார்கள். ஆடம்பரமாக செய்து வருகிற மக்களிடம் அதை இதை வித்து காசு சம்பாதிக்க புலிகள் முயல்கிறார்கள். பூவுக்கு ஒரு விலை, கொடிக்கு ஒரு விலை, புத்தகத்திற்கு ஒரு விலை, கொத்துரொட்டி, குடிவகை என ஒரு மாபெரும் வியாபாரம் ஒன்று மாவீரர் தினமன்று நடைபெறவுள்ளது. இதனால் வரும் வருமானம் மாவீரர் குடும்பத்திற்கு பயன்படுமா என்கிற விசர்க்கேள்வியெல்லாம் கேட்ககூடாது. வந்தமா மாவீரர் தினத்தை பார்த்தோமா, அதை இதை வாங்கினமா எண்டு சத்தம் போடாமால் போயிடணும். கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

நேட்டோ கூட்டுப்படை ஒரு ராணுவ மாஃபியா பிடல் காஸ்ட்ரோ தாக்கு

கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும்போது, நேட்டோ நாடுகள் கூட்டுப்படை ஆப்கானிஸ்தானில் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்வதற்குத் திட்டமிட்டுள்ளன. நேட்டோ கூட்டுப்படை ஒரு ராணுவ மாஃபியாவாகச் செயல்படுகிறது என்று கியூப நாட்டின் புரட்சித் தலைவர் பிடல் காஸ்ட்ரோ கடுமையாகச் சாடியுள்ளார்.செவ்வாயன்று அவர் எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். குறிப்பாக ஆப்கனில் இருந்து நேட்டோ கூட்டுப் படைகள் வெளியேறுவதற்கு 2014ம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயித்துக் கொண்டாலும், அதற்கு பிறகும் அங்குத் தொடர விரும்புகின்றன. மேற்கு நாடுகளின் ராணுவ படைகள், ஆக்கிரமிப்பு நிறுவனங்களாகச் செயல்படுகின்றன. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மொத்த மூலதனச் செலவில் 25 வீதம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கீடுநாட்டின் மொத்த மூலதனச் செலவினத்தில் 25% வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக சபை முதல்வர்- அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு- செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, வடக்கு, கிழக்கை இராணுவ மயப்படுத்த அல்லவென்று தெரிவித்த அமைச்சர் சில்வா, வடக்கு மக்களுக்கு ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து எதிர்கால பணிகளை அரசாங்கம் முன்னெடுக்குமென்றும் அமைச்சர் குறிப்பிட்டார். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

ஆப்கானில் தோல்வி: அமெரிக்கா ஒப்புதல்

ஆப்கானில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலைமையிலான கூட்டுப் படைகள் ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடங்கி ஒன்பதாண்டுகளுக்குப் பிறகும் அங்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த முடியவில்லை என்று அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு பென்டகன் சமர்ப்பித்துள்ள புதிய அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக 9 ஆண்டு கால போரில் கடந்த 2007ம் ஆண்டு முதல் வன்முறைத் தாக்குதல் சம்பவங்கள் 300 சதவிகிதம் அதிகரித்து விட்டன. அதுவும் கடந்த ஆண்டு முதல் 70 சதவிகிதம் அதிகரித்து விட்டது என்றும் செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

வெளிநாட்டு பிரமுகர் வருகையால் கூடுதல் நன்மை

பாகிஸ்தான் ஜனாதிபதி, இந்திய அமைச்சர் ஆகியோரின் இலங்கை விஜயத்தால் நாட்டுக்கு பலகோடி பெறுமதியான நன்மைகள் கிடைக்கவுள் ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். இது தவிர இலங்கையில் முதலீடு செய்வதற்காக பெல்ஜியம் மற்றும் மலேசிய நாட்டு உயர் மட்ட வியாபாரிகள் குழுக்களும் இலங்கை வருவதாக அமைச்சர் கூறினார். வரவு - செலவுத்திட்ட இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மேலும் கூறியதாவது:- இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா இன்று (வியாழன்) இலங்கைக்கு வருகிறார். அவர் வெறும் கையுடனன்றி நாட்டுக்கு பல்வேறு நன்மைகளை எடுத்து வருகிறார். யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, மதவாச்சி ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் செய்வார். 250 அமெரிக்க டொலர் செலவில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தையும் கிருஷ்ணா ஆரம்பித்து வைக்க உள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

தென் கொரியா - அமெரிக்க இராணுவம் கொரியன் குடாவில் கூட்டுப் பயிற்சி

தென் கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து பாரிய இராணுவப் பயிற்சிகளில் ஈடுபடவுள்ளன. நேற்று முன்தினம் வட கொரியா நடத்திய எறிகணைத் தாக்குதலையடுத்து உஷாரடைந்த தென் கொரிய ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கொரியன் குடாவில் எழுந்துள்ள நிலைமைகளை ஆராய்ந்தார். நான்கு நாள் இராணுவப் பயிற்சிகளை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்க அமெரிக்க - தென் கொரிய ஜனாதிபதிகள் இணக்கம் தெரிவித்தனர். கொரியன் குடாவிலுள்ள செம்மஞ்சள் கடற் பிரதேசத்தில் இந்தப் போர்ப் பயிற்சிகள் இடம்பெறவுள்ளன. யுத்தக் கப்பல்கள் - விமானங்களும் இதில் பயன்படுத்தப்படவுள்ளதுடன் ஏவுகணைகளை இடையில் வழிமறித்து தாக்கியளிக்கும் பயிற்சிகளும் இடம்பெற வுள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

Canada

Rasanjali 2010

The Halton Peel Buddhist Society cordially invites you to Rasanjali 2010, a cultural and musical extravaganza showcasing local talent in aid of the new building complex. The event is scheduled for 6 P.M. on Saturday, November 27 at the Don Bosco Secondary School Auditorium in Etobicoke. As you are aware, the Halton Peel Buddhist Society since its inception in 1992 has been rendering religious, educational and cultural services to the Greater Toronto Area (GTA) under the mission “WEST END BUDDHIST CENTRE IS DEDICATED TO BUILDING A COMMUNITY OF SUPPORT IN THE LARGER CANADIAN COMMUNITY THAT NOURISHES INTELLECTUAL AND SPIRITUAL GROWTH WHILE EMBRACING OUR BUDDHIST TRADITIONS”.

கார்த்திகை 25, 2010

பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்காது

வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வை பெற்று தராது என்பது தெளிவாக புலப்படுகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். இன்று வரவு செலவுத் திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய சிவசக்தி, நாட்டில் தற்போது யுத்தம் முடிவடைந்தும் பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு கடந்த காலங்களையும் விட அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு இலகுவில் கிடைக்கப் பெறாது என்பது புலனாக எமக்கு விளங்குகின்றது. மேலும் வட, கிழக்கில் வாழும் மக்கள் பிரச்சினை தீர்வு தொடர்பில் வரவு செலவு திட்டத்தில் எவ்வித தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இதன் மூலம் நாட்டில் இனத்துவங்களுக்கு இடையிலான நட்புறவை ஏற்படுத்த முடியாது என மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 25, 2010

 

பொலிவியாவின் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட முடியாது

பொலிவியா விரும்பும் எந்த நாடுகளுடனும் உறவைப் பேண எமக்கு உரிமையுண்டு இவ்விடயத்தில் வேறு நாடுகள் தலையிட முடியாதென அந்நாட்டின் ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் தெரிவித்தார். பிராந்திய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றும் போதே ஈவோ மொரல்ஸ் இதைத் தெரிவித்தார். அம்மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்ஸ் பங்கேற்றார். கேட்ஸ் இங்கு உரையாற்றும் போது ஈரானுடன் இணைந்து பொலிவியா அணு ஆயுதத்தை தயாரிக்க முயல்வதாகத் தெரிவித்ததுடன் ஈரான், பொலிவியாவிடையிலான உறவுகளை வரவேற்க முடியாதென்றும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்துப் பேசிய பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரல்ஸ் நாங்கள் எந்த நாடுகளுடனும் உறவுகளைத் தொடர்வோம் அல்லது துண்டிப்போம் இது எமது உரிமை. பொலிவியாவின் உள், வெளி நாட்டு விவகாரங்களில் தலையிட வேறு எந்த நாடுகளுக்கும் உரிமை கிடையாது எனத் தெரிவித்தார். ரஷ்யாவின் உதவியுடனே ஈரான் யுரேனியத்தை செறிவூட்டி அணு ஆயுதத்தைத் தயாரிப்பதாக மேற்கு நாடுகள் சந்தேகிக்கின்றன.

கார்த்திகை 25, 2010

 

மதவாச்சி - மன்னார் ரயில் பாதை நிர்மாணப் பணிகள் 27 இல் ஆரம்பம்

மதவாச்சி முதல் மன்னார் வரையிலான ரயில் பாதை நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் 27ஆம் திகதி மதவாச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா தலைமையில் நடைபெறவுள்ளது. 7ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்வில் அமைச்சர்களான பெசில் ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், குமாரவெல்கம, பிரதி அமைச்சர் ரோஹன திஸாநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்

கார்த்திகை 25, 2010

 

தாய்லாந்தில் செஞ்சட்டை அணியினர் மீண்டும் ஆர்ப்பாட்டம்

தாய்லாந்தில் செஞ்சட்டை அணியினர் (முன்னாள் பிரதமர் தக்ஷின் ஆதரவாளர்கள்) நேற்று முன்தினம் மீண்டும் ஆர்ப்பாட்ட த்தில் இறங்கியுள்ளனர். 2007ம் ஆண்டின் அரசியலமைப்பை மாற்றச் செய்யும் அரசாங்கத்தின் யோசனைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. பாராளுமன்றத்தைச் சுற்றி சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்துக்குள் நுழைவதை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்கவில்லை. ஒலி பெருக்கிகளையும் பாவிக்கவில்லை மிக அமைதியான முறையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இது தொடர்பாக செஞ்சட்டை அணியினர் தெரிவித்ததாவது ரகளை செய்யும் எண்ணமில்லை இரவில் தங்கிநிற்கும் எண்ணமும் இல்லை. அரசியலமைப்பு மாற்றத்துக்கெதிராக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதே எமது நோக்கமெனத் தெரிவித்தனர். நிலைமைகளையறிந்த அரசாங்கம் உடனடியாக பொலிஸாரை அங்கு அனுப்பி வைத்தது.

கார்த்திகை 25, 2010

பனிக்கட்டி மனிதர்

காஷ்மீரைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆர்வலர் செவாங் நார்பல் (74), இந்தாண்டுக்கான ‘ஜம்னாலால் பஜாஜ்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் மக்களால் இவர் ‘பனிக்கட்டி மனிதர்’ என செல்லமாக அழைக்கப்படுகிறார். புவி வெப்பமயமாவதால் ஏற்படும் பாதிப்புகள், தற்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கி விட்டன. காஷ்மீரின், லடாக் பகுதியிலும் இதன் பாதிப்புகள் தென்படுகின்றன. உயரமான பனிமலைச் சிகரங்களுக்கு இடையில் உள்ள லடாக பகுதியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவுகிறது. பனிமலைகள் அதிகம் இருந்தாலும் கோடை காலங்களில் அவை வேகமாக உருகி விடுவதால், இங்குள்ள மக்கள் விவசாயத்துக்கு போதிய தண்ணீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மக்கள் சேவைக்கே முதலிடம்

சாதனை வீரரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னு டைய அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் முன் உரை யாற்றும் போது அரசாங்கத்தின் அமைச்சர்கள், பிரதி அமைச் சர்கள் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் அனைவரும் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நல்லெண்ணத்துடன் கடுமையான பங்களிப்பை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அரசாங்க நிர்வாக சேவையின் உயர்மட்டத்திலுள்ள அமைச்சர்கள் தலைமையிலான சகல உத்தியோகத்தர்களும், தங்கள் கடுமையான உழைப்பின் மூலமே மஹிந்த சிந்தனை எண்ணக் கருவை தங்குதடையின்றி நெறியாக செயற்படுத்த முடியும் என்றும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

சிரியாவின் எல்லைகள், இணைக்கப்பட்ட அரபு பிரதேசங்களிலிருந்து இஸ்ரேல் வெளியேறுமா?

கோலான்குன்றுகளுள்ள பிரதேசம், 1967ம் ஆண்டு இஸ்ரேல் இணைத்துக் கொண்ட பலஸ்தீனர்களின் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் வாபஸ் பெற வேண்டுமா இல்லையா என்பதை மக்களின் விருப்பத்துக்கு விட இஸ்ரேல் எண்ணியுள்ளது. இதையொட்டி இஸ்ரேலில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவுள்ளதாகவும் இஸ்ரேல் அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மையில் கூடிய இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. நீண்டகாலமாக இழுபறியில் தொடரும் இப்பிரச்சினையின் முடிவை இஸ்ரேல் மக்களிடம் கையளிப்பதே இந்த சர்வஜன வாக்கெடுப்பின் நோக்கமென்றும் இஸ்ரேல் கூறியது. சிரியா, பலஸ்தீன் என்பன இஸ்ரேலின் இந்த விசித்திர எண்ணத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளன. (மேலும்.....)

கார்த்திகை 25, 2010

மோசடி வர்த்தகத்தில்  ஒரு உள் மோசடி!

உள்நாட்டு ஊழல் கதைகள் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டிக்கொண்டிருப்பதால் சில உலகளாவிய திருவிளையாடல்கள் கண் ணுக்குத் தெரியாமல் மறைந்துகொள்கின்றன. உலகப் பங்குச்சந்தை சூதாட்ட அதிபர்களின் தலைமையகமான அமெரிக்க வால் ஸ்ட்ரீட் வட் டாரத்தில் அப்படியொரு விவகாரம் நடந்திருக் கிறது. அந்நாட்டுப் புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.) அதைப்பற்றித் துருவ ஆரம்பித்திருக்கிறது. பங்குச் சந்தையின் அடிப்படையிலேயே பலரது கண்களைக் கட்டிவிட்டு பங்குகளைக் கைப்பற்றி ஆதாயங்களைக் குவிப்பது, அதிலே சரிவு ஏற்படலாம் என்கிறபோது அந்த உண் மையை மறைத்துப் பங்குகளை மற்றவர்கள் தலைகளில் கட்டுவது என்கிற மோசடி ஏற்பாடு இருக்கிறது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

ஈழத்தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு, கருணாநிதி கிருஷ்ணாவிடம் வலியுறுத்து

இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் அரசியல் தீர்வொன்றுக்கு வலியுறுத்துமாறு தமிழக முதல்வர் மு.கருணாநிதி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளியுறவுத்துறை அமைச்சர் நாளை வருகை தரவுள்ளார். "மீளக்குடியமர்த்தப்படாமல் 30 ஆயிரம் மக்கள் முகாம்களில் தங்கியுள்ளனர். இது கவலைக்குரிய விடயமாகும். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இவ்விடயம் தொடர்பாக கவனத்தில் எடுக்க வேண்டும்" என மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் நிகழ்ச்சித் திட்டத்தினை உரிய காலத்திற்குள் பூர்த்தி செய்து கொடுக்கும்படி இந்திய அரசிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கார்த்திகை 24, 2010

இனப்பிரச்சினை தீர்வுக்காக குழு ஜனாதிபதி

தமது மனதில் தமிழர் பிரச்சினை தொடர்பான தீர்வு திட்டம் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். த ஹிந்து நாளிதழுக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றில் இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடனும் பொது மக்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகார பரவலாக்கம் தொடர்பில் மக்கள் மனதில் இருக்கும் விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்ன தேவை உள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இதன்போது தமது மனதில் உள்ள தீர்வு திட்டம் பொது மக்களுக்கு போதுமானதாக இல்லை என்ற நிலை ஏற்படலாம் எனவே அரசியல் கட்சிகள் மாத்திரம் அல்ல பொதுமக்களும் தீர்வு திட்டத்தை ஏற்று கொள்ள வேண்டும். இதனை அறிந்து கொள்வதற்காகவே தாம் குழுவொன்றை அமைத்து இரண்டு தரப்பினரும் கருத்துக்களை பெற்று கொள்ள உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

இனப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் இடம்பெற வேண்டும். - தி. ஸ்ரீதரன்

உலக வரலாற்றில் ஜனநாயகமும், சமூகங்களிடையே சமுத்துவமும் நிலைநாட்டப்பட்ட நாடுகளிலேயே வெற்றிகரமான சமூக பொருளாதார சாதனைகள் நிகழ்ந்துள்ளன. எனவே இலங்கை அனைத்து இன மக்களினதும் நாடு, பல்லினங்களின் நாடு என்பது உறுதிப்படுத்தப்படுவதும் தனி மனித ஜனநாயக உரிமைகள் உறுதிப்படுத்தப்படுவதும் நாம் முன்னேற்றப்பாதையில் செல்வதற்கான அடிப்படை நிபந்தனைகளாகும். தேசிய வாழ்வினுள் தமிழ், முஸ்லீம் மக்கள் உள்வாங்கப்படும் விதமாக அரசியல் அதிகாரப் பகிர்வு நிகழ வேண்டும். இதனை ஜனாதிபதி தனது பதவி காலத்தில் உறுதிப்படுத்தி சரித்திரத்தின் செழுமைமிகு பக்கங்களில் தனது பெயரை பொறிக்க வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். அதனை மேற்கொள்வதற்குரிய ஆற்றலும், பலமும் அவருக்கு இருக்கிறது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

25.11.2010 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில். புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி பொதுசெயலாளர் தோழர் சி. கா. செந்திவேல், ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு 00 44 208 9305313,      or 078107063682

V. Ramaraj (Thamil broadcasting corporation-London)

கார்த்திகை 24, 2010

முல்லையில் இராணுவ வீரர்கள் சடலம், விசாரிக்க குழு நியமனம்

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட 26 இராணுவ வீரர்களின் சடலங்கள் தொடர்பாக பரிசீலிக்க, விசேட விசாரணைக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய மெதவல வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார். இராணுவ வீரர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவல் குறித்துக் கேட்டபோதே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது புலிகளால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக ஏ.எப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆராய்வதற்கு மருத்துவ அதிகாரிகளுடன் விசேட புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று வடக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அந்தக் குழு விசாரணைகளை ஆரம்பிக்கும் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 24, 2010

எங்களை மிரட்ட வேண்டாம்: அமெரிக்காவுக்கு பொலிவியா பதிலடி

ஈரானுடன் உறவு வைத்துக் கொள்வது குறித்து மிரட்டும் தொனியில் பேசிவரும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அத்தகைய மிரட்டல்களை நிறுத்திக்கொள்வது நல்லது என்று பொலிவியாவின் ஜனாதிபதி இவோ மொரேல்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஈரானுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தங்களில் லத்தீன் அமெரிக்க நாடுகள் கையெழுத்திடக்கூடாது என்று அமெரிக்காவின் ராணுவத்துறை அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கருத்து தெரிவித்திருந்தார். பிராந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட மொரேல்ஸ் இதற்கு பதில் அளித்து கருத்து தெரிவித்திருந்தார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

மேஜர் சீலனின் கைங்கரியம்

காணாமல் போனோரின் பெற்றோரை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி

கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் பகுதிகளில் காணாமற் போனதாக கூறப்படும் நபர்கள் தன் பொறுப்பில் இருப்பதாகக் கூறி காணாமற் போனோரின் பெற்றோர் உறவினர்களிடமிருந்து பணம் பறிக்கும் மோசடிக் கும்பலொன்று இயங்குவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தின் “மேஜர் சீலன்” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் சில பாடசாலை அதிபர்களையும் நம்ப வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் குறித்து மிகவும் விளிப்பாக இருக்குமாறும் இராணுவத் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

கணனி மென்பொருட்களுக்கு வரிகள் நீக்கம்

கணனி மென் பொருட்களுக்கான பெறுமதி சேர்க்கப் பட்ட வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி என்பன முழுமையாக நீக்கப்படவிருக்கின்றது. இதற் கான திட்டத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2011ம் ஆண் டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அறிவித்திருக்கின்றார். இந்த அறிவிப்பு இந்நாட்டில் தகவல், தொழில் நுட்பத் துறை யுடன் தொடர்பு வைத்திருக்கும் சகலருக்கும் மகிழ்ச்சியை யும், சந்தோஷத்தையும் அளித்திருக்கும். அதேநேரம், இந்த அறிவிப்பு இந்நாட்டினர் மத்தியில் பெரும் வரவேற் பையும் பெறும். இவை மறைக்க முடியாத உண்மைகளாகும். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

THE MORNING INSPECTION

Where does ‘South’ end and ‘North’ begin, Mr. Elmore Perera?

(by Malinda Seneviratne)

Years ago, just after the 13th Amendment to the Constitution first found on-the-ground expression in the form of provincial councils, the EPRLF-led North-Eastern Provincial Council called itself ‘The Government of the North-East of Sri Lanka’.  I cannot remember Dayan Jayatilleke, at the time quite cosy in the lap of Eelamists and Eelamism, objecting to the nomenclature (then as now).  Language, ladies and gentlemen, is not innocent. The other day I was reading an interview given to the Ravaya by Elmore Perera.  The title picked up from the interview implied that somehow the Sinhalese are solely to blame for the so-called ‘ethnic’ conflict; that the onus is on the Sinhalese to reach out and that if this was not done the island would be divided. (more...)

கார்த்திகை 24, 2010

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்?

(க.ராஜ்குமார்)

அதிசயம் ஆனால் உண்மை! உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் உள்ளதைவிட, கருப்பு பணம் இந்திய நாட்டில்தான் அதிகம் உள்ளது. 2006-ம் ஆண்டு சுவிஸ் நாட்டு வங்கிகள் சங்கத்தின் (ளுக்ஷஹ) அறிக்கையின்படி இந்தியாதான் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்துள்ள நாடுகளில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.. அந்நாட்டு வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இந்தியாவில் இருந்து 1,456 பில்லியன் டாலர் அதாவது 72,80,000 கோடி ரூபாய் சுவிஸ் நாட்டு வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்திய அரசோ, கடந்த ஆகஸ்ட் மாதம் (2010) நாடாளுமன்றத்தில் கருப்புப் பணம் குறித்த அரசு ரீதியான மதிப்பீடு ஏதும் அரசின்; கைவசம் இல்லை என பொறுப்பற்ற முறையில் தெரிவித்துள்ளது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

வடக்கை பொருளாதார கேந்திரமாக மாற்றும் வரவு-செலவு திட்டம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு- செலவுத் திட்டமானது வட மாகாணத்தைப் பொருளாதார கேந்திரமாக மாற்றியமைக்கவும், இப்பகுதி மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கும் வழிவகுக்கும் என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். வட பகுதியை முழுமையாக அபிவிருத்தி அடையச் செய்து வட மாகாண மக்கள் மத்தியில் வளமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதே ஜனாதிபதியினதும், அரசாங்கத்தினதும் பிரதான நோக்கம் என்பதை இந்த வரவு- செலவுத் திட்ட முன்மொழிவுகள் காண்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணா நாளை இலங்கை வருகை

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா நாளை (25) வியாழக்கிழமை இல ங்கை வருகிறார். மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட அரசியல் முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விஜயத்தின் போது அம்பாந் தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கும் அவர் செல்லவுள்ளார். எதிர்வரும் 27 ஆம் திகதி வட மாகாணத்திற்கு செல்லும் எஸ். எம். கிருஷ்ணா, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

புலி

புல்லைக்கூட தின்னும்.

புலி இரண்டு மாவீரர் தினம் கொண்டாடுகிறது. ஜெர்மனி முன்சன் நகரில் புலிகள் இரணடாக இயங்கி வருகின்றனர். ஏதோ கொள்கைகளினால் முரண்பட்டு பிரிந்து இயங்கவில்லை. தேசியத்தலைவர் இனி வரமாட்டார் என்று தெரிந்தவுடன் புலிகளுக்கிடையில் சொத்துப்பிரச்சினைகள் ஏற்பட்டன. உயர்மட்ட புலிகளுக்கிடையில் புலிகளின் பணத்தை யார் யார் அபகரிப்பது என்கிற சண்டையில் ஏற்பட்ட பிளவுகள் ஏற்பட்டு பிரிந்து போயுள்ளனர். மாவீரர் தினம் கொண்டாடுவது இறந்து போன புலிகளுக்காக அல்ல. மாவீரர் தினத்தில் அதை இதை வித்து காசு பார்க்கலாம் என்பதினால் மாவீரர் தினத்தை பெரியளவில் புலிகள் கொண்டாடி வந்தனர். பூ முதல் கொத்துரொட்டி வரை ஓகோ என்றளவில் பிஸினஸ்தான்.(மேலும்.....)

கார்த்திகை 24, 2010

கிழக்கில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்

கிழக்கு மாகாணத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக செய்கைப் பண்ணப்படாமல் வேளான்மைச் செய்கை இவ்வருடம் செய்கை பண்ணப்படுகின்றது. சுமார் 30 வருடங்களுக்கு மேல் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படாமலிருந்த பகுதிகளிலும் இம்முறை பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பரவலாக பெரும்போக நெற் செய்கை செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சு மானியத்திட்டத்தின் கீழ் விதைநெல் உரம் ஆகியவற்றை மானியமாக வழங்கியுள்ளதுடன் விவசாயிகளின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்கும் பொருட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள வங்கிக் கிளைகள் அனைத்திலும் காரணமாக கடன் உதவிகள் வழங்கிவருகின்றது. இந்நிலை காரணமாக செய்கை பண்ணப்படாமல் இருந்த காணிகளிலும் நெற்செய்கை செய்யப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் 57,120 ஹெக்டயரிலும், திருகோணமலை மாவட்டத்தில் 41,050 ஹெக்டயரிலும் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

கார்த்திகை 24, 2010

ஈரானின் யுரேனியம் சர்ச்சை, புருஸெல்ஸில் அடுத்த மாதம் பேச்சு

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் சர்ச்சைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் 05 ஆம் திகதி பெல்ஜியத் தலைநகர் புருஸெல்ஸில் நடைபெறவுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ஜேர்மன் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன. 2009 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இது தொடர்பான இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. யுரேனியத்தை அளவுக்கதிகமாக செறிவூட்டுவதால் ஈரான் அணுஆயுதத்தை தயாரிப்பதாக சந்தேகம் கொண்ட மேற்கு நாடுகள் செறிவூட்டல் வேலைகளைச் சோதனையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தன. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

தன்னலம் பாராது சேவையாற்றிய பெருந்தகை கலாநிதி ஏ.எம்.ஏ. அஸீஸ்

அன்னாரின் ஞாபகார்த்த தினம் இன்று

(இராஜின்த்ர சி. இரத்னபுலி) (பட்டயப் பொறியியலாளர்)

1940 ஆம் ஆண்டு காலப் பகுதியில், அவர் கிழக்கு மாகாணக் கல்முனையில், உதவி அரச அதிபராகக் கடமை புரிந்த காலத்தில் பெரியதொரு சவாலை எதிர்கொண்டார். இரண்டாம் உலக மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த காலம் அது. இதன் காரணமாக, இலங்கையில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அச்சம் தலைதூக்கியது. கலாநிதி அசீஸ் அவர்களின் அயராத அர்ப்பணிப்புடனான உழைப்பின் பிரதி பலனாக இரண்டே இரண்டு வருடங்களில் அந்தப் பிரதேசம் உணவு உற்பத்தியில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. போற்றிப் புகழத்தகும் வண்ணம், அப்பிரதேசத்தை கிழக்கின் உணவுக் களஞ்சியமாகத் திகழச் செய்தவர் அரச அதிபர் அசீஸ் அவர்களே நாடு முழுவதற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவை இது என அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. 1980ஆம் ஆண்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், அதன் முதலாவது பட்டமளிப்பு விழாவின் போது, அவர் இறந்த பின்னான, இலக்கியக் கலைக் கலாநிதிப்பட்டம் வழங்கிக் கெளரவித்தது.  (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

முகமது ஹனீப் ஆஸ்திரேலியா திரும்பினார்

தீவிரவாதி என்று குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவரான முகமது ஹனீப்புக்கு நஷ்ட ஈடு வழங்குவது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அதில் கலந்து கொள்வதற்காக ஹனீப் ஆஸ்திரேலியாவிற்கு வருவார் என்று ஆஸ்திரேலியன் இதழ் தெரிவித்துள்ளது. முகமது ஹனீப்பின் சிம் கார்டு மூலமாக குண்டு வெடிப்பு நடந்தது. அதன்காரணமாக, 2007 ஜூலை மாதம் ஆஸ்திரேலிய காவல்துறை மருத்துவர் முகமது ஹனீப்பைக் கைது செய்தது. தீவிரவாத அமைப்புக்கு உதவி செய்ததாக குற்றம் சாட்டியது. (மேலும்.....)

கார்த்திகை 24, 2010

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அமைச்சர் டக்ளஸும் இணைய வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பார்த்துக் கொள் ளும் என்ற நினைப்பில் ஒரு சாரார் காத்திருக் கின்றனர். கூடவே அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா அரசுடன் இணைந்து ஏதேனும் பெற்றுத் தருவார் என்ற நினைப்பில் இன்னொரு சாரார் பார்த்திருக்கின்றனர். எதுவும் நடப்பதாக இல்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தங்களால் முடிந்த அளவில் குரல் கொடுக்கின்றனர். அறிக்கை விடு கின்றனர். அவர்களுக்கும் கட்சி ஊக்கம் கொடுப் பதாக இல்லை. ஏனையவர்கள் எம்.பி.பதவி யில் இருந்து கொண்டு பதவியுயர்வு பெறுவது எப்படி என்று திட்டம் போடுகின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் திட்டங்களும் முயற்சிகளும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவிடம் எடுபடுவதாக இல்லை. அரசைப் பொறுத்தவரை தமது நோக்கத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இப்போது இடைஞ்சலாக இருக்கின்றார் என்ற நினைப்பே உள்ளது.(மேலும்.....)

கார்த்திகை 24, 2010

டென்மார்க், சீனா, கொரியா உதவியுடன் வடபகுதியில் ஆறு மீன்பிடித்துறைமுகங்கள்

வடபகுதியில் ஆறு நவீன மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்பட உள்ளன. சர்வதேச தரங்களுக்கு ஏற்ற முறையில் இத்துறைமுகங்களின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பமாகும். டென்மார்க், சீனா, கொரியா ஆகிய நாடுகள் இத்துறைமுகங்களின் நிர்மாணப் பணிகளில் உதவ முன்வந்துள்ளன. மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் ஒன்றின் பேரில் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படும். டென்மார்க் வடபகுதியில் மூன்று துறைமுகங்களை நிர்மாணிக்கும். கொரிய சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஒரு துறைமுகத்தை மயிலிட்டியில் அமைக்கும். யாழ். தீபகற்பத்தில் சீனா இரு துறைமுகங்களை நிர்மாணிக்கும். இத்தகவல்களை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத் தலைவர் அமல் சேனாலங்காதி காரி தெரிவித்தார்.

கார்த்திகை 24, 2010

இந்தியாவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மும்பையில்

இந்தியாவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மும் பையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அனுமதியை இந்திய மத்திய அரசாங்கம் வழங்கியது. இர ண்டு பில்லியன் டொலர் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த விமான நிலைய கட்டுமானப் பணிகள் பத்து வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப் படவுள்ளன. 18 இலட்சம் மக்கள் வாழும் மும்பை நகரிலிருந்து ஐம்பது கி. மீற்றர் தொலைவில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக இந்தியாவின் சுற்றாடல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் தெரி வித்தார். இது புதிய மும்பை, அல்லது நேவி மும்பை என்ற இடத் தில் கட்டப்படவுள்ளதால் பொது மக்களின் எதிர்ப்பையும் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. ஆயிரக்கணக் கான ஏக்கர் நிலங்கள் இதற்கென துப்புரவு செய்யப்படவுள்ளன. பயிர் கள் தோட்டங்கள், காய், கனிகனைச் சொரியும் மரங்கள் வெட்டி அகற்றப் படவுள்ளதால் மக்கள் கடும் கண் டனம் வெளியிட்டுள்ளனர். (மேலும்.....)

கார்த்திகை 23, 2010

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

60 அமைச்சர்கள், 31 பிரதி அமைச்சர்கள், ஹக்கீம், வாசு, லக்ஷ்மனுக்கு கபினட் அந்தஸ்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வைபவத்தில் 59 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மற்றுமொரு அமைச்சர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த அமைச்சரவையில் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தி.மு. ஜயரட்னவும் இதில் அடங் குவார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும்பாலானோர் அதே அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கொழும்பில்

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்தக் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி காரியாலயத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்குக் கையளிக்கத் தீர்மானித்துள்ள மகஜர் குறித்தும் அதில் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்கள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது என்பன குறித்து இக்கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2010

ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி என்றழைக்கப்படும் கந்தசாமி நிசாந்தனுக்கு 10வருடங்களுக்கு ஒத்திவைக்கப் பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கல்முனை மேல்நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது. 2007.06.11ஆம் திகதி திருக்கோவில் பகுதியில் வைத்து தன்னை இனியபாரதி மிரட்டியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறியிருந்தார்.(மேலும்....)

கார்த்திகை 23, 2010

ராஜபக்ஷாவிற்கு எதிராக போர்கொடி தூக்கும் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கம்.

அண்மையில் இனியொரு இணையதளத்தில் ராஜபக்ஷாவின் பட்டாபிஷேகம் என்கிற தலைப்பில் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கத்தின் கட்டுரை ஒன்றை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ அரசை புகழந்து கொண்டிருந்த தோழர் அழகலிங்கம் திடீரென்று அந்தர் பல்டியடித்து ராஜபக்ஷ அரசை வசைபாடுவதற்கு என்ன காரணம் என மண்டையைப்போட்டு உடைத்தபோது இரு காரணங்கள் முக்கியமாக தெரிய வந்தன. முதலாவது டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ஸ மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி இரணடாவது வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய விஜயம் இதுபோதாதா தோழர் அழகலிங்கத்திற்கு. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

ஐந்து புதிய கோள்கள்

சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர் விண்தொலைக்காட்டி கண்டு பிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புதிய கோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம் தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங்களுக்குள் இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. நமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனைவிட அளவில் பெரிதாக இருக்கும் இந்த வெளிக்கோள்களுக்கு கெப்ளர் 4ஷி, 5ஷி, 6ஷி, 7ஷி, 8ஷி எனப் பெயரிடப்பட்டுள்ளன. வொஷிங்டன் டீசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனை அறிவித்தது. இவை அனைத்தும் தமது விண்மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9 நாட்கள் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவு 21 வருடங்கள்

மலர்வு: 05-03-1931                                                   உதிர்வு: 27-11-1989

இடதுசாரிக் கொள்கைகளில் சமத்துவம் கண்டு ஈடுபட விருப்பூ

நடக்கும் பாதையை வழிமறிக்கும் நில ஆதிக்க நீசர்களில் கடுப்பூ

ஊர்வலம்,போராட்டம் நடக்கையில் ஊக்கமான துடிப்பூ

ஊர்வாய்க்கு அடங்கி ஒடுங்கி கூனிக்குறுகுவோர்க்கு மறுப்பூ. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

அடங்க மறுக்கும் இஸ்ரேல்

காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்: விமான நிலையமும் சேதம்

இஸ்ரேல் விமானங்கள் நேற்று முன்தினம் காஸா மீது கடும் தாக்குதல்களை நடத்தின. மக்கள் வாழும் பிரதேசங்கள், கட்டடத் தொகுதிகள், சுரங்கப் பாதைகள் மீதும் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேல் விமானங்கள் வான் தாக்குதல் நடத்திய வேளை பீரங்கிகளும் காஸாவை நோக்கி தாக்குதல்களை நடத்தின. இதில் 06 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காஸாவிலுள்ள யாசிர் அரபாத் விமான நிலையமும் இதன் போது தாக்கப்பட்டது. இதில் விமான நிலையம் பலத்த சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள் ளது. வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது தாக்குதல்களை நடத்திவருவதாகவும் ஞாயிற்றுக்கிழமைவரை மூன்று முறைகள் தாக்குதல் நடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாசிர் அரபாத் விமான நிலையம் திட்டமிட்டு தாக்கப்படவில்லை எனத் தெரிவித்த இஸ்ரேல் இராணுவம் கடும் பனி மூட்டமாக இருந்ததால் வெளிச்சத்துக்காக தீச் சுவாலையை வீசியதாக தெரிவித்தது. காஸா நிலைமைகள் தொடர்பாக ஆராய இஸ்ரேல் அமைச்சரவை அவசரமாக கூடவுள்ளது.

கார்த்திகை 23, 2010

2011: வரவு-செலவுத் திட்ட உரை

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வட விடுவிக்கப்பட்ட திகதியிலிருந்து நாம் அடைந்து கொண்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கம் 263,000 பேரை மீள் குடியேற்றுவதற்கு இயலுமாக இருந்தது. 15,000 பேர் மாத்திரமே இன்னும் மீள் குடியேற்றப்படுவதற்குள்ளனர். பெருமளவிலான விவசாய நிலங்கள், பொது இடங்கள், குடியேற்றப் பிரதேசங்கள் என்பவற்றில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. மின்சாரம், நீர் வழங்கல் வசதிகள், பாதைகள் மற்றும் பாலங்கள் நிர்மாணம், பாடசாலைகளைப் புதுப்பித்தல், சுகாதார வசதிகள் மற்றும் பிற பொது இடங்களுக்கான எற்பாடு என்பன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வழமையான நிலைமைக்கு மாற்றியமைத்துள்ளது. இந்த முன்னெடுப்புகளினூடாக தாபிக்கப்பட்ட பொருளாதார தொடர்பு எமது பல்லின மற்றும் பல்வகை கலாசார சமூகத்தின் உள்ளங்களையும் எண்ணங்களையும் இணைப்பதனையும் இலக்காகக் கொண்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மெரபி எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் மெரபி எரிமலையின் சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை கடந்த இரண்டு மாதமாக குமுறிக் கொண்டிருந்தது. கடந்த மூன்று வாரங்களாக அந்த எரிமலை தீக்குழம்பை கக்கியதோடு, சூடான சாம்பலையும் வாயுவையும் வெளியேற்றி வருகிறது. தீக்குழம்புடன் சாம்பல் வீசியெறியப்பட்டதால், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். எரிமலையைச் சுற்றியுள்ள 18 கி.மீ., பரப்பளவில் சாம்பல் படிந்துள்ளது. காற்றில் சாம்பல் பறப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் எரிமலை சரிவில் இருந்து சாம்பலில் புதையுண்ட ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. மெரபி மலையை சுற்றியுள்ள பகுதியிலிருந்து நான்கு லட்சம் பேர், ஜாவாவின் யோக்யகர்த்தா நகருக்கு அருகே குடிபெயர்ந்தனர். தற்போது எரிமலையின் சீற்றம் தணிந்துள்ளதால், இரண்டு லட்சம் பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கார்த்திகை 23, 2010

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு உயர்வு

ஓய்வூதியம் பெறாத அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை ஊழியர்களது மாதாந்த கொடுப்பனவை 5 வீதமாக உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது உரையாற்றுகையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ''ஆயிரத்து 500 பட்டதாரிகள், நிதி நிறுவகங்கள் மற்றும் அரச வங்கிகளுக்கு முகாமைத்துவ பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஆயிரத்து 500 தாதிகள் உள்வாங்கப்படுவர். பொறியியல், விவசாயம் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.

கார்த்திகை 23, 2010

அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள தொழிலாளர் உரிமைகள் பறிப்பு!  நெருக்கடியைப் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்

2008 ஆம் ஆண்டு துவங்கிய நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் சலுகைகளைப் பறிக்கும் வேலையில் அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளன. நெருக்கடியைக் காரணம் காட்டி நஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் இரண்டு மட்ட ஊதியத்தை உருவாக்கின. முதல் மட்டத்தில் உள்ள ஊழியர்கள் வழக்கமான ஊதியங்களைப் பெற்று வருவார்கள். இரண்டாவது மட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் மற்றும் சலுகைகள் இருக்கும். நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து இரண்டாம் மட்டத்தில் உள்ளவர்கள், முதல் மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதற்கு ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களில் நிலைமை மோசமாகத் துவங்கியுள்ளது. இரண்டாம் மட்டம் என்ற அம்சத்தை நிரந்தரமாக்கிவிட சில நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. சில நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தை ஏழு ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கும் ஒப்பந்தங்களில்கூட தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேலையில்லாகால சலுகையை இழக்கும் அமெரிக்கர்கள்! லட்சக்கணக்கானோர் பாதிப்பு

அமெரிக்காவில் வழங்கப்படும் வேலையில்லா கால நிவாரணத்திற்கான திட்டத்தை புதுப்பிக்காமல்விட்டதால் லட்சக்கணக் கான அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் நிறுவனங்களுக்கான முடுக்கிவிடும் திட்டத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைந்து நிற்கும் அமெரிக்க அரசு வேலையிழந்த, வேலைகிடைக்காதவர்களின் சலுகைகள் பற்றி அலட்சியம் காட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத் தின் பிரதிநிதிகள் சபை இந்தத்திட்டத்தை புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. இதற்கு ஒருவர் மீது மற்றொருவர் என்று ஜனநா யகக்கட்சியும், குடியரசுக் கட்சியும் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப்பிறகு பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டம்

நாட்டில் வாழும் சகல மட்டத்தினரையும் இவ் வரவு-செலவுத் திட்டம் கருத்தில் கொண்டுள்ளது. அதனால் இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் இவ் வரவு-செலவுத் திட்டத் தின் நன்மைகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். முற்று முழுதாக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இவ் வரவு-செலவுத் திட்டம் நாட்டின் துரித அபிவிருத்திக்கும் அடித்தளமாக அமைந்திருக்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஐந்து சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. தனியார்த் துறையினருக்கென ஓய்வூதியத் திட்டமொன்றும் இவ் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழி யப்பட்டிருக்கின்றது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேறு வழியில்லாமல்

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ற்குள் நேட்டோ படைகள் வாபஸ்பெற முடிவு

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ம் ஆண்டுக்குள்நோட்டோ படைகளை வாபஸ் பெறுவதென தீர்மானிக்கப்பட்டு ள்ளது. போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நடந்த நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 48 நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 2014ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானிலிரு ந்து வாபஸ் பெறுவது என்ற தீர்மானத்துக் கமைய அடுத்த ஆண்டிலிருந்து படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படவுள்ளன. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை முழுமையாகப் பொறுப் பேற்கும் தகுதியையும் திறமையையும் ஆப்கான் இராணுவம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இடையில் வெளியேறி ஆப்கானை, தலிபான்களின் இரையாக்க நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் பாதுபாப்பை அக்கறையாக வைத்தே படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இறுதி முடிவெடுப்போம். இவ்வாறு ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார்.

கார்த்திகை 23, 2010

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

60 அமைச்சர்கள், 31 பிரதி அமைச்சர்கள், ஹக்கீம், வாசு, லக்ஷ்மனுக்கு கபினட் அந்தஸ்து

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை நேற்று பதவியேற்றுக் கொண்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடந்த வைபவத்தில் 59 அமைச்சர்களும் 31 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். மற்றுமொரு அமைச்சர் பாராளுமன்றக் கட்டடத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். இந்த அமைச்சரவையில் 10 சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தி.மு. ஜயரட்னவும் இதில் அடங் குவார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பெரும்பாலானோர் அதே அமைச்சுப் பொறுப்புக்களை மீண்டும் ஏற்றுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கொழும்பில்

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் அடுத்தக் கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. கொழும்பிலுள்ள ஈ.பி.டி.பி காரியாலயத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்குக் கையளிக்கத் தீர்மானித்துள்ள மகஜர் குறித்தும் அதில் உள்ளடக்கப்படக்கூடிய விடயங்கள் குறித்தும் இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பது, தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வது என்பன குறித்து இக்கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்படவுள்ளதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

கார்த்திகை 23, 2010

ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை இழிவான வார்த்தைகளை பிரயோகித்து கொலை செய்வதாக அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதி என்றழைக்கப்படும் கந்தசாமி நிசாந்தனுக்கு 10வருடங்களுக்கு ஒத்திவைக்கப் பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனையை கல்முனை மேல்நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்தது. 2007.06.11ஆம் திகதி திருக்கோவில் பகுதியில் வைத்து தன்னை இனியபாரதி மிரட்டியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் கூறியிருந்தார்.(மேலும்....)

கார்த்திகை 23, 2010

ராஜபக்ஷாவிற்கு எதிராக போர்கொடி தூக்கும் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கம்.

அண்மையில் இனியொரு இணையதளத்தில் ராஜபக்ஷாவின் பட்டாபிஷேகம் என்கிற தலைப்பில் ஈ.பி.டி.யின் சர்வதேச ஆலோசகர் தோழர் அழகலிங்கத்தின் கட்டுரை ஒன்றை வாசிக்கும் பாக்கியம் கிடைத்தது. சில மாதங்களுக்கு முன்பு வரை ராஜபக்ஷ அரசை புகழந்து கொண்டிருந்த தோழர் அழகலிங்கம் திடீரென்று அந்தர் பல்டியடித்து ராஜபக்ஷ அரசை வசைபாடுவதற்கு என்ன காரணம் என மண்டையைப்போட்டு உடைத்தபோது இரு காரணங்கள் முக்கியமாக தெரிய வந்தன. முதலாவது டக்ளஸ் தேவானந்தாவிற்கு ராஜபக்ஸ மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி இரணடாவது வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய விஜயம் இதுபோதாதா தோழர் அழகலிங்கத்திற்கு. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

ஐந்து புதிய கோள்கள்

சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஐந்து புதிய கோள்களை நாசாவின் கெப்லர் விண்தொலைக்காட்டி கண்டு பிடித்திருப்பதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது. புதிய கோள்களை அறிவதற்காக சென்ற ஆண்டு விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த அவதான நிலையம் தனது விண்வெளி ஆய்வுப் பணிகளை ஆரம்பித்து முதல் சில வாரங்களுக்குள் இவற்றைக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது. நமது சூரியக் குடும்பத்தின் நெப்டியூனைவிட அளவில் பெரிதாக இருக்கும் இந்த வெளிக்கோள்களுக்கு கெப்ளர் 4ஷி, 5ஷி, 6ஷி, 7ஷி, 8ஷி எனப் பெயரிடப்பட்டுள்ளன. வொஷிங்டன் டீசியில் அமெரிக்க வானியல் கழகம் இதனை அறிவித்தது. இவை அனைத்தும் தமது விண்மீன்களை (சூரியனை) 3.2 முதல் 4.9 நாட்கள் சுற்று வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

கே ஏ சுப்பிரமணியத்தின் நினைவு 21 வருடங்கள்

மலர்வு: 05-03-1931                                                   உதிர்வு: 27-11-1989

இடதுசாரிக் கொள்கைகளில் சமத்துவம் கண்டு ஈடுபட விருப்பூ

நடக்கும் பாதையை வழிமறிக்கும் நில ஆதிக்க நீசர்களில் கடுப்பூ

ஊர்வலம்,போராட்டம் நடக்கையில் ஊக்கமான துடிப்பூ

ஊர்வாய்க்கு அடங்கி ஒடுங்கி கூனிக்குறுகுவோர்க்கு மறுப்பூ. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

அடங்க மறுக்கும் இஸ்ரேல்

காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்: விமான நிலையமும் சேதம்

இஸ்ரேல் விமானங்கள் நேற்று முன்தினம் காஸா மீது கடும் தாக்குதல்களை நடத்தின. மக்கள் வாழும் பிரதேசங்கள், கட்டடத் தொகுதிகள், சுரங்கப் பாதைகள் மீதும் இத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இஸ்ரேல் விமானங்கள் வான் தாக்குதல் நடத்திய வேளை பீரங்கிகளும் காஸாவை நோக்கி தாக்குதல்களை நடத்தின. இதில் 06 பேர் காயமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. காஸாவிலுள்ள யாசிர் அரபாத் விமான நிலையமும் இதன் போது தாக்கப்பட்டது. இதில் விமான நிலையம் பலத்த சேதமடைந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள் ளது. வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது தாக்குதல்களை நடத்திவருவதாகவும் ஞாயிற்றுக்கிழமைவரை மூன்று முறைகள் தாக்குதல் நடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாசிர் அரபாத் விமான நிலையம் திட்டமிட்டு தாக்கப்படவில்லை எனத் தெரிவித்த இஸ்ரேல் இராணுவம் கடும் பனி மூட்டமாக இருந்ததால் வெளிச்சத்துக்காக தீச் சுவாலையை வீசியதாக தெரிவித்தது. காஸா நிலைமைகள் தொடர்பாக ஆராய இஸ்ரேல் அமைச்சரவை அவசரமாக கூடவுள்ளது.

கார்த்திகை 23, 2010

2011: வரவு-செலவுத் திட்ட உரை

விடுவிக்கப்பட்ட பிரதேசங்களிலும் வட விடுவிக்கப்பட்ட திகதியிலிருந்து நாம் அடைந்து கொண்ட முன்னேற்றம் குறிப்பிடத்தக்கதாகும். அரசாங்கம் 263,000 பேரை மீள் குடியேற்றுவதற்கு இயலுமாக இருந்தது. 15,000 பேர் மாத்திரமே இன்னும் மீள் குடியேற்றப்படுவதற்குள்ளனர். பெருமளவிலான விவசாய நிலங்கள், பொது இடங்கள், குடியேற்றப் பிரதேசங்கள் என்பவற்றில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன. மின்சாரம், நீர் வழங்கல் வசதிகள், பாதைகள் மற்றும் பாலங்கள் நிர்மாணம், பாடசாலைகளைப் புதுப்பித்தல், சுகாதார வசதிகள் மற்றும் பிற பொது இடங்களுக்கான எற்பாடு என்பன வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை வழமையான நிலைமைக்கு மாற்றியமைத்துள்ளது. இந்த முன்னெடுப்புகளினூடாக தாபிக்கப்பட்ட பொருளாதார தொடர்பு எமது பல்லின மற்றும் பல்வகை கலாசார சமூகத்தின் உள்ளங்களையும் எண்ணங்களையும் இணைப்பதனையும் இலக்காகக் கொண்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மெரபி எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக அதிகரிப்பு

இந்தோனேசியாவில் மெரபி எரிமலையின் சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை கடந்த இரண்டு மாதமாக குமுறிக் கொண்டிருந்தது. கடந்த மூன்று வாரங்களாக அந்த எரிமலை தீக்குழம்பை கக்கியதோடு, சூடான சாம்பலையும் வாயுவையும் வெளியேற்றி வருகிறது. தீக்குழம்புடன் சாம்பல் வீசியெறியப்பட்டதால், அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியாயினர். எரிமலையைச் சுற்றியுள்ள 18 கி.மீ., பரப்பளவில் சாம்பல் படிந்துள்ளது. காற்றில் சாம்பல் பறப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் எரிமலை சரிவில் இருந்து சாம்பலில் புதையுண்ட ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதன் மூலம் எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது. மெரபி மலையை சுற்றியுள்ள பகுதியிலிருந்து நான்கு லட்சம் பேர், ஜாவாவின் யோக்யகர்த்தா நகருக்கு அருகே குடிபெயர்ந்தனர். தற்போது எரிமலையின் சீற்றம் தணிந்துள்ளதால், இரண்டு லட்சம் பேர் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

கார்த்திகை 23, 2010

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு, அரச ஊழியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு உயர்வு

ஓய்வூதியம் பெறாத அரச ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு சேவை ஊழியர்களது மாதாந்த கொடுப்பனவை 5 வீதமாக உயர்த்தவுள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது உரையாற்றுகையில் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், ''ஆயிரத்து 500 பட்டதாரிகள், நிதி நிறுவகங்கள் மற்றும் அரச வங்கிகளுக்கு முகாமைத்துவ பயிற்சியாளர்களாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஆயிரத்து 500 தாதிகள் உள்வாங்கப்படுவர். பொறியியல், விவசாயம் மற்றும் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது" எனத் தெரிவித்தார்.

கார்த்திகை 23, 2010

அமைப்பு ரீதியாகத் திரண்டுள்ள தொழிலாளர் உரிமைகள் பறிப்பு!  நெருக்கடியைப் பயன்படுத்தும் அமெரிக்க நிறுவனங்கள்

2008 ஆம் ஆண்டு துவங்கிய நெருக்கடியைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் சலுகைகளைப் பறிக்கும் வேலையில் அமெரிக்க நிறுவனங்கள் இறங்கியுள்ளன. நெருக்கடியைக் காரணம் காட்டி நஷ்டத்தில் இருந்த நிறுவனங்கள் இரண்டு மட்ட ஊதியத்தை உருவாக்கின. முதல் மட்டத்தில் உள்ள ஊழியர்கள் வழக்கமான ஊதியங்களைப் பெற்று வருவார்கள். இரண்டாவது மட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம் மற்றும் சலுகைகள் இருக்கும். நிர்வாகங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான ஒப்பந்தப்படி குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து இரண்டாம் மட்டத்தில் உள்ளவர்கள், முதல் மட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவார்கள். இதற்கு ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களில் நிலைமை மோசமாகத் துவங்கியுள்ளது. இரண்டாம் மட்டம் என்ற அம்சத்தை நிரந்தரமாக்கிவிட சில நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன. சில நிறுவனங்களில் நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தை ஏழு ஆண்டுகளுக்கு முடக்கி வைக்கும் ஒப்பந்தங்களில்கூட தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்டுள்ளன. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேலையில்லாகால சலுகையை இழக்கும் அமெரிக்கர்கள்! லட்சக்கணக்கானோர் பாதிப்பு

அமெரிக்காவில் வழங்கப்படும் வேலையில்லா கால நிவாரணத்திற்கான திட்டத்தை புதுப்பிக்காமல்விட்டதால் லட்சக்கணக் கான அமெரிக்கர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் நிறுவனங்களுக்கான முடுக்கிவிடும் திட்டத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைந்து நிற்கும் அமெரிக்க அரசு வேலையிழந்த, வேலைகிடைக்காதவர்களின் சலுகைகள் பற்றி அலட்சியம் காட்டியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத் தின் பிரதிநிதிகள் சபை இந்தத்திட்டத்தை புதுப்பிக்காமல் விட்டுவிட்டது. இதற்கு ஒருவர் மீது மற்றொருவர் என்று ஜனநா யகக்கட்சியும், குடியரசுக் கட்சியும் குற்றம் சாட்டிக் கொள்கின்றன. அண்மையில் நடைபெற்ற தேர்தலுக்குப்பிறகு பிரதிநிதிகள் சபையில் குடியரசுக்கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

மக்கள் நலன் சார்ந்த வரவு செலவுத் திட்டம்

நாட்டில் வாழும் சகல மட்டத்தினரையும் இவ் வரவு-செலவுத் திட்டம் கருத்தில் கொண்டுள்ளது. அதனால் இந்த மண்ணில் வாழும் ஒவ்வொரு பிரஜையும் இவ் வரவு-செலவுத் திட்டத் தின் நன்மைகளை நிச்சயம் அனுபவிப்பார்கள். முற்று முழுதாக மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இவ் வரவு-செலவுத் திட்டம் நாட்டின் துரித அபிவிருத்திக்கும் அடித்தளமாக அமைந்திருக்கின்றது. அரசாங்க ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் ஐந்து சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நேரம் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான கொடுப்பனவும் அதிகரிக் கப்பட்டுள்ளது. தனியார்த் துறையினருக்கென ஓய்வூதியத் திட்டமொன்றும் இவ் வரவு-செலவுத் திட்டத்தில் முன்மொழி யப்பட்டிருக்கின்றது. (மேலும்....)

கார்த்திகை 23, 2010

வேறு வழியில்லாமல்

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ற்குள் நேட்டோ படைகள் வாபஸ்பெற முடிவு

ஆப்கானிஸ்தானிலிருந்து 2014ம் ஆண்டுக்குள்நோட்டோ படைகளை வாபஸ் பெறுவதென தீர்மானிக்கப்பட்டு ள்ளது. போர்த்துக்கல் தலைநகர் லிஸ்பனில் நடந்த நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 48 நாடுகளின் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். 2014ம் ஆண்டுக்குள் நேட்டோ படைகளை ஆப்கானிஸ்தானிலிரு ந்து வாபஸ் பெறுவது என்ற தீர்மானத்துக் கமைய அடுத்த ஆண்டிலிருந்து படிப்படியாக படைகள் வாபஸ் பெறப்படவுள்ளன. ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் அல் கார்ஸாயியும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை முழுமையாகப் பொறுப் பேற்கும் தகுதியையும் திறமையையும் ஆப்கான் இராணுவம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இடையில் வெளியேறி ஆப்கானை, தலிபான்களின் இரையாக்க நாங்கள் விரும்பவில்லை. அமெரிக்காவின் பாதுபாப்பை அக்கறையாக வைத்தே படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இறுதி முடிவெடுப்போம். இவ்வாறு ஜனாதிபதி பராக் ஒபாமா கூறினார்.

கார்த்திகை 22, 2010

புதிய வரிக் கட்டமைப்பு, சம்பள உயர்வு பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்கள்

இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக மாற்றியமைக்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படை விடயமாக இம்முறை வரவு செலவுத் திட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்க த்தினால் முன்வைக்கப்படும். புதி ய வரிக்கட்டமைப்பு, அரச ஊழிய ர்களுக்கு சம்பள உயர்வு, மக்களுக்கு நிவாரணங்கள், அபிவிருத்திக்கான தடைகளை நீக்குதல் போன்ற முக்கிய அம்சங்கள் வரவு செலவுத்திட்டத்தில் இடம்பெறும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் வீரவங்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

தனியார் துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம_

தனியார் துறையினருக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும் போது உரையாற்றுகையில் தெரிவித்தார். ஓய்வூதியம் பெறுவதற்கு தனியார் துறையில் குறைந்தது 10 வருடங்கள் பணியாற்றியிருக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இத்திட்டம் மக்களுக்கு நல்ல பயனைத் தருவதாக அமையும் என்றும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கார்த்திகை 22, 2010

பிரபாகரன் கூறியது போன்று மக்கள் இன்று நடப்பதை 2 வாரங்களில் மறந்து விடுகின்றனர் ஐதே கட்சி கரு  ஜெயசூரிய_

விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியது போல் எமது மக்கள் இன்று நடப்பதை இன்னும் இரண்டு வாரங்களில் மறந்து விடும் போக்குக் கொண்டவர்களாகவே உள்ளனர். கடந்த பொதுத் தேர்தலின் போது நாம் கூறியவை சிலருக்கு இன்று மறந்து விட்டது. அதன் பிரதிபலனாக இன்றைய அவலத்தை ஒவ்வொருவரும் சந்திக்கவேண்டி வந்துள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சயின்  பிரதித் தலைவரும் நாடாளுமன்ற அங்கத்தவருமான கரு ஜயசூரிய இன்று கண்டியில் வைத்துத் தெரிவித்தார். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

இலங்கை

புதிய அமைச்சரவை விபரம்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்தில் புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். டக்ளஸுக்கு அதே அமைச்சு. முஸ்லீம்காங்கிரஸ் ரவூப் ஹக்கீம் - நீதி அமைச்சர்  பதவி, கருணாவின் பெயர் அமைச்சர் பட்டியலில் இடம் பெறவில்லை. டியூ குணசேகராவிற்கு மனிதவள அமைச்சு. வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ன போன்றோர் தொடர்ந்தும் அமைச்சராக தொடர்கின்றனர். மேர்வின் சில்வா மக்கள் தொடர்பு அமைச்சராக தனது அமைச்சர் பதவியை தொடர்கின்றார். நாமல் ராஜபக்ஷ, அவரின் நண்பன் ரங்கா இருவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவில்லை. தி.மு.ஜயரத்ன தொடர்ந்தும் பிரதம மந்திரியாக தொடர்கின்றார். அமைச்சர்களான ரத்னசிறி விக்ரமநாயக்க, டியூ.குணசேகர,அதாவுட செனவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, பியசேன கமகே, பி.தயாரத்ன மற்றும் திஸ்ஸ விதாரன ஆகியோர் அமைச்சரவையின் சிரேஷ்ட அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சரவையின் புதிய மாற்றத்திற்கு அமைய சிரேஷ்ட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.(மேலும்....)

கார்த்திகை 22, 2010

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய பிரதநிதி ஒருவர் இலங்கை சென்று உள்ளார்

பிரான்ஸ் நாட்டின் நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் முக்கிய முக்கிய பிரதிநிதியாக செயற்பட்டு வரும் வேலுமயிலும் மனேகரன் இலங்கைக்கு சென்று உள்ளார் என தெரியவருகிறது. இவரின் விஜயம் தொடர்பாக நாடுகடந்த அரசின்  வெளியுறவுதுறை அமைச்சர் தயாபரனிடம் ரிபிசி செய்தி பிரிவு கேட்ட பொழுது இவரின் விஜயம் பற்றி தனக்கு தெரியாது எனவும் நாடுகடந்த அரசின் பிரதிநிதியாக செய்யபட்டு கொண்டு விஜயம் செய்வதை தாம் கண்டிப்பதாகவும், ஆனால் தனிபட்ட விஜயம் என்கின்ற போது தாம் ஒன்றும் செய்யமுடியாது எனவும் தெரிவித்தார். இவருக்கான பயண ஒழுங்களை இலங்கை அரசு ஒழுங்களை செய்து உள்ளாதாகவும் தெரிவிக்கபடுகிறது. அரசினால் ஒழுங்கு செய்யபட்டிருக்கும் உல்லாச விடுதியில் தங்கி உள்ளாதாகவும் தெரியவருகிறது. இதேவேளை நாடுகடந்த அரசின் பிரதிநிதிகளை இலங்கை கருப்பு பட்டியலில் இணைத்துள்ளதும் குறிப்பிடதக்கது

கார்த்திகை 22, 2010

ஏழ்மைக்கும் இரங்காத இராக்கதர்கள்!

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் எமது நாட்டுப் பணிப்பெண்கள் பலர் எதிர்நோக்குகின்ற துன்புறுத்தல்கள் தொடர்பாக இங்கு மீண்டும் குறிப்பிட வேண்டிருயிருக்கிறது. அந்நாடுகளில் உள்ள வீட்டு எஜமானர்கள் பலர் புரிகின்ற காட்டுமிராண்டித்தனமான கொடூர காரியங்கள் முடிவின்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. இலங்கைப் பணிப்பெண்களும் சித்திரவதைத் தழும்புகளை உடலில் சுமந்தபடி நாட்டுக்குத் திரும்பிக் கொண்டேயிருக்கிறார்கள். எத்தனை காலத்துக்குத்தான் இத்துன்பங்களை நாமெல்லாம் சகித்துக் கொண்டிருப்பதென்பது தெரியாதிருக்கிறது.(மேலும்....)

கார்த்திகை 22, 2010

INFOSYS in Kuwait soon which will be called as " COBRA TOWERS ".
Amazing buildings of Great Infy.

கார்த்திகை 22, 2010

Thanks and good luck Mr. President

 (by Malinda Seneviratne)

 Mahinda Rajapaksa officially began his second term as President yesterday.  I remember the day he was sworn in the first time, five years ago.  There is a marked difference in man, moment and nation.  This is as good a time as any to compare and contrast. In 2005, Mahinda was a man without a party, without funds, without big-name backers, without a team, without experience, without coherence or direction.  He was fresh. Young(er).  He was a politician and as such made of promises. (more...)

கார்த்திகை 22, 2010

ஈழ வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக இலங்கையில் விசேட வலையமைப்பு உருவாக்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஈழ வலையமைப்பை தகர்த்தெறிவதற்காக இலங்கையில் விசேட வலையமைப்பொன்று உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் சர்வதேச வலையமைப்பின் நடவடிக்கைகளை முடக்கும் வகையில் இந்த புதிய வலையமைப்பு செயற்படும் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள உயர் இராணுவ அதிகாரிகள் மற்றும் சிவில் மக்களை இணைத்து இந்த வலையமைப்பு உருவாக்கப்படவுள்ளது. குறிப்பாக புலிகளின் பிரச்சார வலையமைப்பை தகர்த்தெறிவதனை இலக்காக வைத்து இந்த புதிய வலையமைப்பை இலங்கை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளது. அதேவேளை, அரசாங்கப் படையினருக்கு எதிராக சுமத்தப்படும் காழ்ப்புணர்ச்சி மிக்க குற்றச்சாட்டுக்களுக்கு அவ்வப்போது உரிய பதிலளிக்கப்பட வேண்டுமென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கார்த்திகை 22, 2010

உலகமே விலகினாலும் உன்னுடன்  இருப்பவனே உண்மையான நண்பன்

இன்று உலகம் முழுவதிலும் உள்ள கணினிகளை இயக்கும் சிறந்த மென்பொருளான விண்டோஸ் என்னும் ஒபரேடிங் சிஸ்டம் வடிவமைத்த மைக்ரோசொப்ட(Microsoft)  என்னும் உலகின் முன்னணி நிறுவனத்தின் ஸ்தாபகர் ஆன பில்கேட்ஸ் தன்னுடைய நண்பனான பால் ஆலென் ஆரம்ப காலத்தில் செய்த உதவிகளால் தான் உலகின் தலை சிறந்த மென்பொருள் (Software )  நிறுவனத்தை உருவாக்க முடிந்தது. இன்று உலகின் தலை சிறந்த ERP  Software என்னும் அனைத்து விதமான தொழிற்சாலைகளையும் நிர்வகிக்கும் மிக சிறந்த மென்பொருளை வடிமைத்து உலக அளவில் முதன்மையாக விளங்கும் SAP (சேப்) என்னும் ஜெர்மனியை சேர்ந்த மென்பொருள் நிறுவனம் ஐந்து நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்டது தான். இன்று உலகின் அனைத்து ரக பெரிய நிறுவனங்களையும் சரியான முறையில் நிர்வகிப்பது இந்த மென்பொருள் தான். இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நிறுவனங்களையும் இயக்குவது  SAP  என்னும் மென்பொருள் தான். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

பாகிஸ்தான் மீதான வான் தாக்குதல்களால்  வாஷிங்டன், இஸ்லாமாபாத்திடையே முறுகல்

பாகிஸ்தான் எல்லைக்குள் அமெரிக்க விமானங்கள் வான் தாக்குதல் நடத்துவதை இனிமேல் அனுமதிக்கப் போவதில்லையென அந்நாட்டு அரசாங்கம் சென்ற சனிக்கிழமை அறிவித்தது. வஸிரிஸ்தான், பஜலுஸ்தான் மாகாணங்களில் ஆளில்லா விமான தாக்குதல்களை விஸ்தரிக்க வெள்ளை மாளிகை தீர்மானித்துள்ளதென கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. இச் செய்தியை பாகிஸ்தான் அரசாங்கம் சென்ற சனிக்கிழமை நிராகரித்தது. இது தொடர்பாக கருத்துவெளியிட்ட பாகிஸ்தான் அரசாங்கம், எங்களுடைய நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

வறுமை, வேலையில்லா பிரச்சினை ஒழிப்புக்கு முன்னுரிமை

பொதுவசதிகள் மேம்பாட்டுக்கு கூடுதல் நிதி

நகரமும் கிராமமும் வேறுபாடின்றி அபிவிருத்தி

வரவு செலவுத் திட்டம் ஜனாதிபதியினால் இன்று சமர்ப்பிப்பு 2011

2011ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.35 மணிக்கு வரவு - செலவுத் திட்டத்தைப் பாராளு மன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். நீண்டகால மற்றும் குறுகிய கால அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்டே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நிதிய மைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டி ருப்பதற்கு அமைவாகக் கிராமங்களை அபிவிருத்தி செய்து ஏழை, பணக்காரன் என்ற வர்க்க ஏற்றத்தாழ்வுகளை நீக்கி அனைவருக்கும் சமமாகப் பகிரக்கூடிய வகையிலேயே இவ் வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

கார்த்திகை 22, 2010

172 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் தீர்மானம்

புகையிலைஉற்பத்தி, சிகரட் விற்பனைக்கு புதிய தடைகள்

 
புகையிலை விற்பனை, பாவனை மற்றும் புகைப்பிடித்தல் தொடர்பான விளம்பரங்களில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர 172 நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன. உருகுவேயில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் இந்த இணக்கம் காணப் பட்டன. இளைஞர்களை கவரும் வண்ணம் சிகரட்களில் அதிக இரசாயனப் பதார்த்தங்களைச் சேர்ப்பதற்கும் மாநாட்டில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட துடன் பொதுமக்களைக் கவரும் வகையிலான புகைபிடித்தல் விளம்பரங்க ளையும் தவிர்க்க வேண்டியதன் அவசியமும் மாநாட்டில் உணர்த்தப்பட்டது. (மேலும்....)

கார்த்திகை 22, 2010

இந்திய அமைச்சர் கிருஷ்ணா 27ம் திகதி வடக்கு விஜயம்

இலங்கை வரவுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா எதிர்வரும் 27ம் திகதி சனிக் கிழமை வட மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்க ளுக்கு செல்லும் எஸ். எம். கிருஷ்ணா, இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு பாரிய அபிவிருத்தித் திட்டங்களையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பாரம்பரிய சிறுகைத்தொழில் ஊக்குவிப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வர்த்தக வாணிப த்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன், வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் கே காந்த் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ளனர். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கு உதவும் வகையில் நடமாடும் சேவை

தமிழக அகதி முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏதுவான ஆவணங்களை வழங்கும் நோக்கில் சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் வீ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடமாடும் சேவையொன்று நடத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மதுரையில் அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ஊடாக இம்மாதம் 20ஆம் 21ஆம் திகதிகளில் இந்நடமாடும் சேவை நடைபெற்றதாகத் துணைத்தூதுவர் தினகரனுக்குத் தெரிவித்தார். இதேபோல் இலங்கைத் தமிழர்கள் தங்கியிருக்கும் 115 அகதி முகாம்களில் அந்தந்தப் பகுதி மாவட்ட ஆட்சியாளர்கள் ஊடாக நடமாடும் சேவை முன்னெடுக்கப் படும். (மேலும்....)

கார்த்திகை 22, 2010

மத்திய மாகாண சபை ஒதுக்கீடு

யாழ். மிருசுவில் ரயில் நிலையம் ரூ. 20 மில்லியனில் புனரமைப்பு

யாழ்ப்பாணம், மிருசுவில் ரயில் நிலையம் 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் இந்த புகையிரத நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையிலான குழுவினர் எதிர்வரும் 27ம் திகதி சனிக்கிழமை மிருசுவில் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிடவுள்ளனர். ரயில் நிலையத்தை புதிதாக நிர்மாணிப்பதற்கென 20 மில்லியன் ரூபாவுக்கான காசோலையை அன்றைய தினம் மத்திய மாகாண முதலமைச்சர் டிக்கிரி கொப்பேகடுவ தன்னிடம் கையளிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். ரயில் நிலைய நிர்மாணப் பணிக்கான கேள்விப்பத்திரம் வடமாகாண சபையினால் வெகுவிரைவில் கோரப் படவுள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், மூன்று மாத காலத்திற்குள் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கார்த்திகை 22, 2010

புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம்

புதிய அமைச்சரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (22ம் திகதி) காலை 10.00 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள விருக்கின்றது. இந்நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்திற்காக கடந்த 19ம் திகதி சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார். அதற்கு ஏற்ப புதிய அமைச்சரவை ஜனாதிபதி முன்னிலையில் இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் கூறின. இச்சத்தியப் பிரமாண நிகழ்வின் போது புதுமுகங்களும் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய அமைச்சரவை சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் புதிய அமைச்சரவையின் முதலாவது அமைச்சரவைக் கூட்டமும் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தின் போது இன்று நண்பகல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2011ம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி புதிய அமைச்சரவைக்கு விபரிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கார்த்திகை 22, 2010

இலங்கை வர முயன்ற மூவர் இந்தியாவில் கைது

தமிழ்நாட்டிலிருந்து ராமேஸ்வரம் படகு மூலம் இலங்கை வர முயன்ற 3 அகதிகளை இந்திய பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இலங்கையைச் சேர்ந்த தனுஷன் (26வயது), பிரபாகரன் (25வயது), கமல் (35வயது) ஆகியோர் சென்னையில் தங்கியுள்ளனர். எனினும், தமிழகத்தில் அவர்கள் மூவரும் தங்களை அகதிகளாக இதுவரை பதிவு செய்யவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பேரையூரைச் சேர்ந்த ராஜா என்பவரின் உதவியுடன் அவர்கள் இலங்கைக்கு படகு மூலம் சட்டவிரோதமாக வர முயன்றுள்ளனர். இதற்காக ராஜாவுக்கு ஒவ்வொருவரும் தலா 35 ஆயிரம் இந்திய ரூபா பணம் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், மூவரும் படகு மூலம் இலங்கைக்குச் செல்வது குறித்து தகவல் அறிந்த இந்திய பொலிஸார், அவர்களை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கார்த்திகை 21, 2010

வாழ்த்துடன் நின்றுவிடக் கூடாது

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இது பொருத்தமான காலகட்டம். புலிகள் இயக்கம் வடக்கிலும் கிழக்கிலும் செயற்பட்டுக் கொண்டிருந்த காலம் அரசியல் தீர்வுக்குச் சாதகமானதாக இருக்கவில்லை. நடைமுறையில் ஒருபோதும் சாத்தியம் இல்லாத தனிநாட்டுக் கொள்கையின் கீழ் செயற்பட்ட புலிகள் அரசியல் தீர்வுக்கான சாத்தியக் கூறுகளைத் திட்டமிட்டு அழித்து வந்தனர். அரசியல் தீர்வுக்குப் பங்களிப்புச் செய்யத் தயாராக இருந்த தமிழ்த் தலைவர்களை ஒருவர் பின் ஒருவராகக் கொலை செய்தனர். அவர்களின் இந்த அணுகுமுறை பலனளித்தது. இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற தலைவர்கள் புலிகளின் தனிநாட்டு நிகழ்ச்சி நிரலை ஏற்று அவர்களோடு இணைந்து செயற்பட முன்வந்தார்கள். தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எடுத்த இந்த முடிவு தமிழினத்தின் பேரழிவுக்கு அடிகோலுவதாக இருந்தது. அண்மையில் ஏற்பட்ட உயிரிழப்புகள், அழிவுகள், இடம்பெயர்தல்கள் அனைத்துக்கும் இந்த முடிவு பிரதான காரணமாகியது. (மேலும்....)

கார்த்திகை 21, 2010

பாட்டாளி மக்கள் கட்சியின் பின்னோக்கிய நகர்வு

தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வருகின்றது. கூட்டணிகள் இப்போதே பிரசாரத்தில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. பாட்டாளி மக்கள் கட்சி எந்தக் கூட்டணியிலும் சேராமல் தனிமரமாக நிற்கின்றது. எந்தக் கூட்டணியில் இணைவது என்பது பற்றிப் பொங்கலுக்குப் பின் அறிவிப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறுகின்றார். இவர் கூட்டணியில் இணைவது அரசியல் கொள்கை நிலைப்பாட்டில் அல்லாமல் வாய்ப்புப் பார்க்கும் சந்தர்ப்பவாதத்தில் தங்கியிருக்கின்றது என்பதே இதன் அர்த்தம். போயஸ் கார்டனுக்கும் கோபால புரத்துக்கும் என்னை அலைய விட்டிருக்கின்றார்களே என்று அண்மை யில் இவர் கூறியது இவரது அரசியல் வங்குரோத்து நிலையையே வெளிப்படுத்துகின்றது. (மேலும்....)

கார்த்திகை 21, 2010

மக்களிடம் அதிகாரங்கள்

‘வடக்கில் மக்களிடம் அதிகாரங்களை ஒப்படைப்பதே எமது எதிர்பார்ப்பு’ என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது இரண்டாவது பதவிக் காலத்தை முறைப்படி ஏற்று ஆற்றிய உரையில் கூறினார். மக்களின் நீண்ட காலக் கோரிக்கையும் இதுவே. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையினராக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குப் பிரதேச சுயாட்சி என்று இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த கோரிக்கை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கை, பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டம் என்பன மக்களுக்கு அதிகாரங்களைக் கையளிக்கும் நோக்கத்தைக் கொண்டவை. பண்டா - செல்வா ஒப்பந்தமும் இதே அடிப்படையிலேயே அமைந்தது. ஆனால் இவை நடைமுறைக்கு வரவில்லை. நாட்டின் ஆள்புல ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற சந்தேகம் மக்களில் ஒரு பிரிவினருக்கு ஏற்படும் விதத்தில் அரசியல் தலைவர்கள் நடந்து கொண்டதாலேயே இவை நடைமுறைக்கு வர முடியவில்லை. (மேலும்....)

கார்த்திகை 21, 2010

இருபது வருடங்களின் பின் மியன்மாரில் தேர்தல்

இருபது வருடங்களுக்குப் பின் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலும் ஆங் சான் சூ கீயின் விடுதலையும் மியன்மாரில் ஜனநாயக ஆட்சி திரும்பிவிட்டது என்ற தோற்றத்தைக் கொடுக்கின்ற போதிலும், அந்த நம்பிக்கை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. நாடு பின்பற்ற வேண்டிய கொள்கை இராணுவ ஆணை மூலமாகவன்றிப் பாராளுமன்றத்தினது தீர்மானத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று இராணுவ ஆட்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது நாடு பின்பற்ற வேண்டிய கொள்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உண்டு. மேலோட்டமான பார்வைக்கு இது பாரிய முன்னேற்றமாகத் தோன்றுகின்ற போதிலும் நடைமுறையில் அவ்வாறாக இல்லை. புதிய அரசியலமைப்பின்படி, பாராளுமன்றத்தின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையில் கால்வாசி இராணுவத்துக்கு  ஒதுக்கப்பட வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

உலகின் செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள்

இலங்கையிலிருந்து தேசபந்து ஜெசீமா இஸ்மாயில் தெரிவு

அமெரிக்க றோயல் இஸ்லாமிய புள்ளி விபரக் கற்கை நிலையத்தில் இருந்து கலாநிதி ஜோசப் லம்பேட், கலாநிதி ஆரிப் அலி நேயிட் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் 2010ம் ஆண்டு அதிக செல்வாக்குள்ள 500 முஸ்லிம்கள் எனும் ஆய்வுத் தொகுதி நூலில் 136ம் பக்கம் இலங்கையைச் சேர்ந்த தேசபந்து ஜெசீமா இஸ்மாயிலின் தகவல் இடம்பெற்றுள்ளது. இத்தகவலின்படி இலங்கையின் முதலாவது முஸ்லிம் பெண்ணாக இவர் தெரிவாகியுள்ளார் என்பது இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்ல இலங்கையில் வாழ்கின்ற எல்லாப் பெண்களுக்குமே பெருமை சேர்க்கின்ற ஒரு விடயம் எனலாம். அது மட்டுமல்ல உலக முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் இது பெருமை தரும் ஒரு விடயமுமாகும். இந்த வகையில் தேசபந்து ஜெசீமா இஸ்மாயிலுக்கு நாம் இந்தப் பெருமையை - கெளரத்தைத் தேடித் தந்தமைக்காக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

பெருந்தோட்ட லயன் வாழ்க்கைமுறை மாற்றப்பட வேண்டும்

(இரா. சிவலிங்கம்)

லயன் குடியிருப்புக்களில் வாழ்கின்ற குடும்பங்கள் தினமும் அனுபவிக்கின்ற பிரச்சினைகள் சொல்லிலடங்காதவை யாகும். லயன் அமைப்பு முறையானது ஒற்றை வரிசை லயன், இரட்டை வரிசை லயன் என ஒரு பக்கத்தில் (வரிசையில்) 12 அறைகளையும், இரண்டு வரிசையில் 24 லயன் அறைகளையும் கொண்டுள்ளது. இதில் ஒரு அறையின் நீளம், அகலம் 12 x 10 (120 சதுர அடி) என்ற அளவுத் திட்டத்தில் ஆங்கிலேயர்களினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட தற்காலிக வாழ்விடங்களாகும். ஒரு லயன் அறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 முதல் 7 பேர் வரை வாழ்கின்றார்கள். தாய், தந்தை, சிறுவர், குழந்தை, பெரியோர், பெண்பிள்ளைகள், கர்ப்பிணிப் பெண்கள், நோயாளர்கள், கல்வி கற்கும் பிள்ளை கள், திருமண வயது இளைஞர், யுவதிகள், வயதுக்கு வரும் நிலையி லுள்ள பெண் பிள்ளைகள் என பல்வேறு வகையான உறப்பினர்கள் இந்தச் சிறிய இடப்பரப்பில் தினமும் தங்களுடைய வாழ்க்கைத் தேவை களை நிறைவேற்றி வருவது வேதனையளிக்கும் விடயமாகும். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக்காலம் அபிவிருத்தியை நோக்கிய இலக்காகும்'' - அமைச்சர் விநாயகமூர்த்தி

மக்களின் கண்ணீரை துடைக்கப்போவது இல்லை. இப்போது மக்கள் யுத்தம் வேண்டாம் என்ற விடயத்தில் தெளிவாக இருக்கிறார்கள். நாம் அவர்களை சந்தித்த போதெல்லாம் அவர்கள் பாடசாலையை கட்டித் தாருங்கள். கடற்றொழில் செய்வதற்கான உதவிகள் செய்யுங்கள். கமத்தொழில் செய்வதற்காக உதவி செய்யுங்கள் என அபிவிருத்தி பற்றித்தான் கேட்கிறார்களே தவிர வேறு சிந்தனை மக்களுக்கு கிடையாது. இனத்துவேசம் பேசிப் பேசியே மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை உருவாக்குகின்ற அரசியல்வாதிகளை மக்கள் இனங்கண்டுகொள்ள வேண்டும். அப்படியில்லாமல் இவர்களின் பேச்சைக் கேட்டு இவர்களது பின்னால் சென்றால் இன்னுமொரு பாரிய அழிவை நோக்கி செல்வதாகவே அமையும். தூண்டுதல்களை ஏற்படுத்துகின்ற அரசியல்வாதிகளை இனங்கண்டு புறம் தள்ளுவதோடு மட்டுமல்லாமல், தங்களுக்கு நன்மைகளைத் தேடித்தரும் அரசியல்வாதிகளை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். (மேலும்....)

கார்த்திகை 21, 2010

தமிழ்மொழியின் பூர்வீக வரலாறு

கோண்ட்வாணா எனும் கண்டத்திலே ஆபிரிக்கா, தென்னமெரிக்கா, அவுஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட இந்தியா, ஆசியா எல்லாமே ஒரு கண்டமாக இருந்ததாகப் புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, சுமாத்ரா, போன்ற இன்றைய நாடுகளும் இந்தக் கோண்ட் வாணாக் கண்டத்துடனேயே இணைந்திருந்தன. இக்காலகட்டத்தில் ஆதமுடைய பிற்சந்ததியினராகிய சுமேரியர்களும், கோண்வாணா, கண்டத்தில் குடியேறி வாழ்ந்துள்ளார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டிய விடயமல்ல. இவர்கள் பேசிய சுமேரிய மொழி (இன்றைய தமிழின் மூலமொழி) இக்கண்டமெங்கும் பரவி ஆட்சி செய்தது எனலாம். இதற்கு ஆதாரமாக இன்னுமொரு விடயத்தையும் இங்கு கூற முடியும். பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களின் ஆய்விலே ஜப்பான் மொழியில் 500 க்கு மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் கலந்திருப்பதாகக் கூறியதோடு மேலும் இது பற்றி ஆராய்ந்தால் இன்னும் பல தமிழ் சொற்களின் தொகை கூடலாம் எனவும் கூறியுள்ளார்.