Contact us at: sooddram@gmail.com

 

ஆனி 2014 மாதப் பதிவுகள

ஜுன் 30, 2014

உறவுகள் தொடர்கின்றன! உணர்வுகள் புரியப்படுகின்றன!!

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (PEPRLF) தலைவரும், இலங்கை வடக்கு, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வருமான தோழர் வரதராஜ பெருமாள் அவர்கள் கடந்த வாரம் (சுமார் 27 வருடங்களுக்கு பிறகு) கோவைக்கு வருகை தந்தார். தோழர்களுடன் கலந்துரையாடிய தோழர் வரதராஜ பெருமாள் அவர்கள் ஈழப்போராட்டம் குறித்தும், தற்போதைய சூழல் குறித்தும் எடுத்துரைத்தார்.

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தோழர்கள் மீளக் குடியமர்ந்த மக்களுடன் சந்திப்பு.

திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக் கிராமமான தென்னமரவாடி என்னும் இடத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களை நேற்று (28.06.2014) தோழர் சத்தியன் தலமையில், பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தோழர்கள் சந்தித்துக் கலந்துரையாடினர். இந்த மக்களின் அடிப்படை வசதிகளை பார்வையிட்டதுடன் அவர்களது வாழ்வாதார பிரச்சனைகளையும் கேட்டறிந்து கொண்டனர். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பதனையும் மக்களுடன் கலந்தாலோசித்தனர். தற்காலிக குடியிருப்பில் இருக்கும் எங்களுக்கு நிரந்தர வீட்டு வசதி, அவற்றுக்கான மின்சார இணைப்புகள், வீதிகளுக்கு மின்விளக்குகள் பொருத்துதல் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும். தற்போது யானைகள் தொல்லையினால் ஒரு மூட்டை விதைநெல்லை கூட பாதுகாத்து வைத்திருக்க முடியவில்லை. இங்கு நிரந்தர கட்டடம் இல்லாததால் 8 மைல் தூரத்திற்கு அப்பால் இருக்கும் புல்மோட்டை பிரதேசத்திற்கு கொண்டுசென்று வைத்து பாதுகாக்க வேண்டியுள்ளது எனவும் கவலையுடன் தெரிவித்தனர்.

இவர்தான் உருகுவே நாட்டின் அதிபர் Jose Mujica,

அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற தனது முறைக்காக வரிசையில் காத்திருக்கிறார். இவர் வசிக்கும் வீடு, தினசரி வாழ்க்கை போன்றவற்றை பார்க்கும்போது தலைசுற்றுகிறது. கக்கன், காமராஜ், பத்மநாபா  வகையறாக்கள் உலகெங்கும் உண்டுபோல இவரைப்பற்றி பிபிசியின் செய்தித்தொகுப்பு http://www.wimp.com/poorestpresident/

அளுத்கமை சதியை போட்டுடைத்த அமைச்சர்

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் தாக்குதல்களின் பின்னால் சதியொன்று இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்சவும் நீண்ட காலமாக கூறி வருகிறார்.7 வீதமான முஸ்லிம் வாக்குகளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்காமல் செய்து ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதே இந்த சதியின் நோக்கமாகும் என வீரவன்ச கூறுகிறார். ஆனால் வெளிவிவகார அமைச்சரைப் போலல்லாது அவர் சதி காரர்களாக பொது பல சேனாவையே குறிப்பிடுகிறார். அவ் அமைப்பினருக்கு நோர்வேயிடமிருந்து இந்த சதிக்காக நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
 உண்மையிலேயே அவரது குற்றச்சாட்டுக்கு அடித்தளம் இல்லாமல் இல்லை. 2011 ஆம் ஆண்டு பொது பல சேனா அமைப்பின் தலைவர்கள் 8 பேர் நோர்வேக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அப்போது இந்த அமைப்பு அமைக்கப்பட்டு இருக்கவில்லை. ஆனால் அந்த விஜயத்தை அடுத்து அதே குழுவினர் தான் பொது பல சேனா அமைப்பை உருவாக்கினர்.
(மேலும்....)

ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரிட்டன் பிரதமர் தோல்வி

ஐரோப்பிய யூனியன் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் படுதோல்வி அடைந்து ள்ளார். 28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோ ப்பிய யூனியனின் டேவிட் கெமரூனுக்கு ஆதரவாக 2 வாக்குகளே கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட சுவிடன் சார்பான வேட்பாளர் கிளவூட் ஜங்கருக்கு 26 வாக்குகள் கிடைத்து ஐரோப்பியூனியனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டன் பிரதமரின் இத்தோல்வியானது அவரது உள்நாட்டு அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளதாவது:- இது எனது கடைசி நிலைப்பாடல்ல ஐரோப்பிய யூனியனில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கான எனது முயற்சிகள் தொடரும். தற்போது இந்த அமைப்பு க்குள்ள அதிகாரங்கள் பாராளுமன்ற அதிகாரங் களையும் விஞ்சியதாகவுள்ளது. பிரிட்டனின் அங்கத்துவம் தொடர்பாக அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பிரிட்டனில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார். இத் தேர்தல் குறித்து சுவிடன் பிரதமர். ஐரோப்பிய யூனியன் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியில் நெருக்கமாக செயற்படாது. இது ஒரு தனி அமைப்பு என்றார். ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் இது பற்றிக் கூறுகையில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் கொண்டுள்ள அக்கறைகளை தான் வெளியிட யிருந்ததாகத் தெரிவித்தார்.

ஜுன் 29, 2014

புலம்பெயர் தேசமெங்கும் தியாகிகள் தினம்

கனடாவில் தியாகிகள் தினம்

ஜுன் 29, 2014 (ஞாயிற்றுக்கிழமை) 10 மணிக்கு நடைபெறும். மக்களின்விடிவிற்காக மரணித்த அனைவரையும் இந்நாளில் நினைவு கூர்வோம். கலந்துரையாடல் என்ற வகையில் சமகால அரசியல் பற்றி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுவோம் எம்மக்களுக்கான விடுதலைக்கான உந்துதலை எவ்வாறு முன்னெடுக்கலாம் என்று கடந்த கால அனுபவங்களிலிருந்து எதிர்காலத் திட்டங்களை வரைவதற்கான ஒரு களமாக இதனைப் பயன்படுத்துவோம்.

தொடர்புகளுக்கு:  தோழர் ஜேம்ஸ் - 416 271 8467

சென்னை கனமழையில் 11 மாடி கட்டிடம் இடிந்து

புதையுண்டது - 11 பேர் பலி- 40 பேர் கதி என்ன?

சென்னையை அடுத்த போரூர் அருகே மவுலிவாக்கத்தில் கட்டுமானம் நடந்து கொண்டிருந்த 11 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மீதமுள்ள 40 பேரை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிறுவனத்தின் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்த மவுலிவாக்கத்தில் புதிதாக 11 மாடி கட்டிடம் ஒன்றுக் கட்டப்பட்டு வருகிறது. இன்னமும் இதன் கட்டுமான பணிகள் முழுமையடையவில்லை. இந்த நிலையில் நேற்று மாலை சென்னையில் திடீர் கனமழை பெய்தது. அதில், அந்த கட்டிடம் அப்படியே இடிந்து விழுந்து தரைமட்டமானது.  கனமழையில் 11 மாடி கட்டிடம் இடிந்து புதையுண்டது - 11 பேர் பலி- 40 பேர் கதி என்ன? இந்த இடிபாடுகளில், அங்கு கட்டடப் பணிக்காகத் தங்கியிருந்த 200க்கும் மேற்பட்டோர் சிக்கியியதாகக் கூறப்படுகிறது. கட்டிடத்தின் அடித்தளம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடி தாக்கியே விபத்து நிகழ்ந்ததாக கட்டிடத்தை கட்டிவரும் கட்டுமான நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

அம்பலத்திற்கு வந்த அதிசொகுசு வாகன விவகாரத்தால் அதிர்ச்சி

வட மாகாண சபை முதல்வர், அவைத் தலைவர் மற்றும் அமைச்சர் நால்வரினதும் இரகசிய சுகபோக ஆடம்பர வாழ்க்கையை மாநகர முதன்மைப் பெண்மணி அம்பலப்படுத்தியதனால் தமது முகத்திரை கிழிந்துவிட அவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்களாம். சட்ட விதிமுறைகளுக்கு முரணாக சி. எம். ஆன சி.விக்கு 15 மில்லியன் ரூபாவிலும். சி. வி. கே. உட்பட நான்கு அமைச்சர்களுக்கும் தலா 7.5 மில்லியனிலும் அதிசொகுசு கார்களை வாங்க இருந்தனராம். வாக்களித்த சனம் பஸ்ஸில் செல்லவே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் இவர்களுக்கு இது தேவையா ஐயாமாரின் திருகுதாளத்தை காட்டிக் கொடுத்தது வேறு யாருமல்ல, அதே கட்சியைச் சேர்ந்த அதே மாகாண சபை உறுப்பினரான அனந்தமான பெண்மணிதானாம்.

இலங்கையின் அடுத்த திடுக்கிடும் தாக்குதல்

புலம்பெயர் தமிழர்களை குறிவைத்து உள்ளது !

இலங்கை அரசு, ‘விடுதலைப் புலிகள் சந்தேக நபர்கள்’ என்று ஐ.நா.வில் 424 வெளிநாட்டு தமிழர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் இலங்கை சொத்துக்கள் அரசுடமையாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவர்கள் யாருமே, இலங்கைக்கு பயணம் செய்ய முடியாது. மற்ற நாடுகளை பொறுத்தவரை, பட்டியலில் உள்ள சிலருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு சிலர், இரு ஆசிய நாடுகளின் விமான நிலையங்களில் அனுமதி மறுக்கப்பட்டு, அங்கிருந்து இவர்கள் கடைசியாக எங்கிருந்து புறப்பட்டார்களோ அந்த இடத்துக்கே (ட்ரான்சிட் பாயின்ட்) திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்கள். (மேலும்....)

Canada’s Emerging Politics Of Terror

By Camelia Nathaniel

 

CTC’s National Spokesperson David Poopalapillai receiving Prabhakaran’s biography, a guide to the revival of terrorism

Canadian law enforcement authorities and intelligence services are concerned about the LTTE’s penetration of their political establishment. A number of Sri Lankan Tamils tainted by their support for the Tigers seeks to infiltrate the spectrum of Canadian political parties – the New Democratic Party, the Liberal Party and the Conservative Party. After Rathika Sitsabaiesan, the first Canadian of Tamil heritage, won a parliamentary election in May 2011, she engaged in promoting LTTE interests in Canada. Canadian authorities have observed that Rathika and aspiring nominees are participating in events in Canada and overseas organized by the LTTE, to racialise and radicalize the Tamils. (more....)

சிறுபான்மையினர் தமக்கு கீழ் இருப்பதே பெரும்பான்மையினரின் விருப்பம் - சி.வி.

சிறுபான்மையினர் தமது கைக்கு அடங்கும் விதத்தில் வாழ்வதையே இலங்கையிலுள்ள பெரும்பான்மையினர் விரும்புகின்றனர். மாறாக சிறுபான்மையினர் அபிவிருத்தி அடைந்து நல்ல நிலையை அடைந்து சென்றால் பெரும்;பான்மையினத்தவர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சிறுபான்மையினர் முன்னேறினால், எங்களையும் பார்க்க விரைவில் முன்னேற இவர்களுக்கு என்ன உரித்து இருக்கின்றது என்று பெரும்பான்மையினர் சிந்திக்கத் தொடங்கி விடுகின்றார்கள். பின்னர் அதைத் தடை செய்ய முற்படுகின்றார்கள். இந்த விழாவில் சகோதரர் ரிஷாத் பதியுதீனுடன் சேர்ந்து பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அரசாங்க அமைச்சருடன் மாகாண அரசு இணைந்து இவ்விழாவில் ஈடுபட்டுள்ளது என்பதிலும் பார்க்க தமிழ் - முஸ்லிம் ஒத்துழைப்புக்கு இது வழிவகுத்துள்ளது என்பதே எனது மகிழ்ச்சிக்குக் காரணம். (மேலும்....)

Next Year Will Mark 100 Years Since The 1 st Racial Riot In Sri Lanka

by S. V. Kirubaharan

(June 28, 2014, Paris, Sri Lanka Guardian) We, Tamil Centre for Human Rights - TCHR are deeply concerned about and strongly condemn the heinous violence that has been meted out this month against the Muslim community in Sri Lanka. Looking at history - ethnic violence, sectarian violence and cultural violence against the Tamils and Muslims in the island are nothing new. Impunity is deeply entrenched and has continued for many decades. The first racial riot in the island was in June 1915. It was between the Sinhala Buddhists and the Muslims - 136 Muslims were killed and 205 injured and raped. Nearly 85 mosques were damaged and more than 4,075 muslim-owned shops were looted by the Sinhala rioters, from Central province to the Western and North Western provinces. (more...)

அனந்திக்கு ஆயுதம் எதற்கு? எவரால் ஆபத்து?

மக்களிடமிருந்து தப்பிக்கவே பொலிஸ் பாதுகாப்பு கோரல்

தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப் பட்டிருப்பதைத் தொடர்ந்து தனது பாதுகாப்பிற்காக துப்பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் மாகாண சபை அமர்வில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உறுப்பினர் அனந்தி தனக்கு எவரால் ஆபத்து ஏற்படுமென வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டு மெனவும், வடக்கில் படையினரை வெளி யேறுமாறு கோரிவரும் அவர் எவ்வாறு பொலிஸாரின் பாதுகாப்பைக் கோருவார் எனவும் யாழ் மக்கள் கேள்வியெழுப் பியுள்ளனர். தேர்தலின்போது உறுதியளித்த வாறு மக்களுக்கு எந்தவிதமான சேவை யையும் செய்யாது, கடந்த நான்கு வருடங் களாக மக்கள் பணியாற்றி வந்த அரசாங் கத்தின் செயற்பாடுகளையும் குழப்பிய மையால் பொதுமக்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவா இவர்கள் பொலிஸ் பாதுகாப்பினைக் கோருகிறார்கள் எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். எமது மக்கள், எமது பிரதேசம், எமது மாகாண சபை, எமது ஆட்சி எனக் கூறிவரும் தமிழ்க் கூட்டமைப்பின் வடமாகாண சபையினர் பாதுகாப்பிற்கு மட்டும் பொலிஸாரை அழைப்பது ஏன் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தாம் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், அரசியல் பணியினை தொடர்ந்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு நீக்கப் பட்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றால் நவீன துப்பாக்கிகளை வழங்குங்கள் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

நல்லாட்சிக் கட்சிக்காரரின் நையாண்டி நகைக்கு எதிர்ப்பு

வட மாகாண சபையில் தமிழ்க் கூட்டமைப்பு போனஸ் ஆசனம் தந்தமைக்காக தனது சமூகத்தைக் காட்டிக் கொடுத்துத்தான் தனது விசுவாசத்தையும். நன்றியையும் தெரிவிக்க வேண்டும் என நினைப்பது தவறு. பேருவளையில் சனம் கஷ்டப்பட்டதை நையாண்டி செய்வது போல வடக்கில் உரையாற்றிய நல்லாட்சி கட்சியாளின் பெயரைப் பரும் கண்டித்துள்ளனர். பிரபாகரன் இருக்கும்போதுதான வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விரட்டப்பட்டதையும், காத்தான்குடி பள்ளியில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதையும் அன்று பால்குடியாளராக இருந்த இவர் அறிய வாய்ப்பில்லை. வரலாறுகளைத் தெரிந்து கொண்டு மேடையேற வேண்டும். தெரியாவிடின் தெரிந்தவர்களிடம் கேட்பதில் வெட்கப்படக் கூடாது. வால் பிடிப்பதற்கும் ஓர் எல்லை உள்ளது.

ஜுன் 28, 2014

போதையால் வருடாந்தம் 21,000 பேர் மரணம்

வெளிநாட்டுக் கம்பனிகள் மனித உயிர்களை பொருட்படுத்தாது வியாபாரத்தில் மட்டுமே அக்கறை

வர்த்தகம் வீழ்ச்சியடைவது பற்றியே சிந்திக்கின்றன. நாட்டில் வருடாந்தம் போதையினால் மரணிக்கும் 21,000 பேரைப் பற்றி கவலைப்படாது தமது வியாபாரம் வீழ்ச்சியுறுவதைப் பற்றியே இங்கு வரும் அமெரிக்க, இங்கிலாந்து வெள்ளை அதிகாரிகள் கவலைப்படுகின்றனர் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். எனினும் இன்றுள்ள சவால்களுக்கு மத்தியில் போதையற்ற சமூக மொன்றை கட்டியெழுப்புவது எவ்வாறு என்பதைப் பற்றியே நாம் சிந்திக்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 2014ம் ஆண்டிற்கு போதையற்ற சமூகம் என்ற பெயரை சுகாதார அமைச்சு வைத்துள்ளது. கடந்த 2013ம் வருடத்தை ‘தொற்றா நோய்களைத் தடுப்பது’ என்ற பெயரில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டன. எமது நாட்டில் புகையிலை பாவனையினால் வருடாந்தம் 21, 000 பேர் மரணிக்கின்றனர். நாளொன்றுக்கு 60 ற்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். இதிலிருந்து சமூகத்தை மீட்டெடுப்பது எவ்வாறு என்பது பற்றியே நாம் சிந்தித்து வருகிறோம்.

காணாமல் போனோர் ஆணைக்குழு முல்லைத்தீவில் சாட்சியங்கள் பதிவு

காணாமல் போனவர்கள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு எதிர்வரும் 5ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் சாட்சியங்களைப் பதிவுசெய்யவுள்ளது. 5ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை முல்லைத்தீவு மாவட்டத்தில் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவிருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் குணதாச குறிப்பிட்டார். 5ஆம் 6ஆம் திகதிகளில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிலும், 7ஆம் 8ஆம் திகதிகளில் கரைதுறைபற்று பிரதேச செயலகப் பிரிவிலும் சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன. காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விடம் இதுவரை 13,789 சிவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது மட்டுமன்றி காணாமல்போன இராணுவத்தினர்கள் தொடர்பில் 5000 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட் டிப்பதாக ஆணைக்குழு தெரிவித் துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நடத்தப்பட்ட அமர்வுகளில் சுமார் 657 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டார்.

முன்னோர் காலத்து பாரம்பரிய வேலைகளை கைவிட்டதால் நோயாளியாக மாறுகிறான் மனிதன்

எமது மூதாதையர் கடைப்பிடித்த பாரம்பரிய முறைகளைக் கைவிட்டு இன்று நவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றிக் கொண்டதன் காரணமாக மனிதனது வேலைகள் இலகுபடுத்தப்பட்டுள்ளன. இதன் விளைவினால் அதிகமானவர்கள் இன்று தொற்றா நோய்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இன்று வைத்தியசாலையில் வெளிநோயாளர். பிரிவு. சிகிச்சைப் பிரிவுகளிலும் இவர்களையே காணக் கூடியதாகவுள்ளது. தொற்றா நோய்கள் வேகமாக மக்களுக்கு ஏற்படுகின்றன. தொற்றா நோய்கள் அதிகளவு பெண்களுக்குத் தான் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் எமது மூதாதையர்களின் பழக்க வழக்கங்கள்.  அவர்களின் உணவுக் கட்டுப்பாடு. கூடிய நேரம் பாரம்பரிய வேலைகளை செய்வது போன்றவற்றை இன்றைய சமுதாயம் கைவிட்டதனால் ஆகும். இவ்வாறான தொற்றா நோய்கள் வந்து இன்றைய பெண்கள், ஆண்கள் துன்பப்படுவது போன்று அவர்கள் அக்காலத்தில் துன்பப்படவில்லை. (மேலும்....)

ஜுன் 27, 2014

83 கலவரத்தை கட்டுப்படுத்த ஐ.தே.க.தவறிவிட்டது - ரணில்

தமிழர்களுக்கு எதிரான 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தை தடுப்பதற்கு அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக்கட்சி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். அதே போன்றதொரு தவறையை இன்றைய அரசாங்கம் இன்று அரசாங்கம் செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடைபெற்ற சமய தலைவர்கள் மற்றும் சமூகத்தலைவர்களுடனான சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வன்முறைகள் நிறைவுற்றாலும் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான பிரச்சினைக்கு இன்னும் முடிவடையவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பெளத்த, முஸ்லிம் வரலாற்றுக்கு பேரிடி - அமைச்சர் ராஜித

வன் செயலால் அழித்தொழித்து நாசமாக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் புனரமைத்து சீராக்கலாம். ஆனால் நொந்துபோன உள்ளங்களை சீராக்குவதை நினைத்தும் பார்க்க முடியாது. வன் செயலில் இறங்குவோரும் அதனை தூண்டுவோரும் இதனை உணர வேண்டும். அளுத்கமை சம்பவம் வரலாற்றில் அழிக்க முடியாத வடுவை ஏற்படுத்திவிட்டது என அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன கூறினார். பாதுகாப்பு தரப்பினர் தமது பணியில் விட்ட அலட்சியம் காரணமாக சிறிய சம்பவம் பெரும் மோதலாக மாறி யுள்ளது. காவியுடை அணிந்திருப்பதற்காக அவருக்கு மட்டும் ஒரு சட்டம் என்று இந்நாட்டில் இல்லை. அளுத்கமை தர்கா நகர் பேருவளை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் அவர்களுக்கு மட்டுமல்லாது என் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இனவாதிகளின் நோக்கம் இதில் வெற்றி கண்டுள்ளது. வீடுகளில் உள்ள நகை, பணம், பெறுமதியான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னரே வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் தீ வைத்து கொளுத்தியும், தாக்கியும் உள்ளனர். பேருவளை முஸ்லிம்கள் சிங்கள மக்களுடன் மிகவும் ஒற்றுமையுடன் சகோதரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இந்த ஒற்றுமை பொது பல சேனாவின் அராஜகத்தினால் விரிசல் அடைந்து விட்டது.

ஜுன் 26, 2014

வடமாகாண சபை உறுப்பினர்கள் மூவரின் காவல் வாபஸ்

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு, புதன்கிழமையுடன் (25) வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவது தொடர்பில் பொலிஸ் பாதுகாப்புப் பெற்ற உறுப்பினர்களுக்கு யாழ். மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொஹான் டயஸ், கடிதம் மூலம்  தெரிவித்துள்ளார். வடமாகாண சபை உறுப்பினர்களாக பாலச்சந்திரன் கஜதீபன், சந்திரலிங்கம் சுகிர்தன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரே பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றிருந்தனர். அவர்களின் பொலிஸ் பாதுகாப்பே வாபஸ் பெறப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன் தெரிவிக்கையில், தங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பினை வழங்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதனாலேயே உங்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகின்றது. உங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமாயின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் அனுமதியைப் பெற்று பாதுகாப்பை பெற்றுக்கொள்ள டியும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக கஜதீபன் தெரிவித்தார். இக் கடிதம் மேற்படி மூன்று மாகாண சபை உறுப்பினர்களுக்கும் அந்தந்த பொலிஸ் நிலையங்களினூடாக அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புலிகளின் கப்பல் கப்டன் ரவிஷங்கர் பிடிக்க இன்டர்போல் உதவியை நாடுகிறது இலங்கை

புலிகளுக்கு மூன்று ஆயுதக் கப்பல்களை கொண்டுவந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வவுனியா மேல் நீதிமன்றத்தால் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட கனகராஜா ரவிஷங்கர் என்பவரை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் (இன்டர்போலின்) உதவி நாடப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது. கனடாவில் தற்போது வசித்து வரும் இவரை கைது செய்வதற்கு ‘Red Alert’ அறிவித்தலும் பொலிஸ் தலை மையகம் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவி த்தார். (மேலும்....)

பொய்யான முறைப்பாடு வட்டரெக்க விஜித தேரர் கைது

பொய்யான முறைப்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் வட்டரெக்க விஜித தேரர் நேற்று பொலிஸரினால் கைது செய்யப்பட்டுள்ளார். காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சைப் பெற்று வந்த வட்டரெக்க விஜித தேரர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறிய போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரி வித்தார். கைது செய்யப்பட்ட தேரர் நேற்று பாணந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்டு 2 ஆம் திகதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொலிவிய பாராளுமன்றத்தில் தலைகீழாக சுழலும் கடிகாரம்

பொலிவிய தலைநகர் லாபாஸில் இருக்கும் அந்நாட்டு பாராளுமன்ற கட்டிடத்தின் பிரதான முகப்பில் உள்ள கடிகாரம் தலைகீழாக சுழ லும் வகையில் அமைக்கப்பட்டுள் ளது. இந்த கடிகாரத்தின் முட்கள் இடதுபுறமாக சுழல்வதோடு நேர த்தை குறிக்கும் இலக்கங்களும் 12 இல் இருந்து தலைகீழாக பொருத் தப்பட்டுள்ளது. இது "தெற்கின் கடிகாரம்" என்று பொலிவிய வெளி யுறவு அமைச்சர் டேவிட் சகு ஹொன்ஸ் பெயர் சூட்டியுள்ளார். பொலிவிய மக்களின் பாரம்பரியம் மற்றும் எந்த விதியையும் கேள்விக் குட்படுத்த முடியும் என்பதையும் அவர்களது ஆக்கபு+ர்வமான சிந்த னையையும் இந்த கடிகாரம் வெளிக் காட்டுகிறது என்று அவர் மேலும் விபரித்துள்ளார். "எம்மிடம் சிக்க லான விடயங்கள் இல்லை. நாம் வடக்கிலல்ல தெற்கில் வாழ்கிறோம் என்பதை உணர்த்தியிருக்கிறோம்" என்றார். பொலிவியாவின் இடதுசாரி அரசு இந்த இடதுபுறமாக சுழலும் கடிகா ரத்தை நாட்டில் அமுலுக்கு கொண் டுவர முயற்சிப்பது குறித்து வெளி யுறவு அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது, இது குறித்து எவரும் கட்டாயப்படுத் தப்பட மாட்டார்கள் என்றார். பொலிவியாவின் பழங் குடி இனத்தைச் சேர்ந்த ஜனாதிபதி யான இவோ மொராலஸ் நாட்டின் பழங்குடி பாரம்பரியங்களை வெளிக் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைக ளையும் செய்து வருகின்றது.

கிளர்ச்சியாளர்களுடனான மோதலில் ஈராக்கிற்கு உதவ முதல்கட்ட அமெ. துருப்புகள் விரைவு

சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான மோத லில் ஈராக் படைக்கு உதவுவதற்கான முதல் கட்ட அமெரிக்க துருப்புகள் அங்கு சென்று பணி களை ஆரம்பித்திருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் குறிப்பிட்டுள்ளது. பாதுகாப்பு ஆலோசனை அல்லது முன்ன ணியில் நின்று யுத்தத்தில் ஈடுபடுவதற்காக 300 விசேட அதிரடிப்படையினரை பக்தாத்திற்கு அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உறுதி அளித்திருந்தார். ஈராக்கின் பெருமளவான நிலப்பகுதியை கைப் பற்றியிருக்கும் ஐசிஸ் என்று அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் கிளர்ச்சியாளர்களை வெளியேற்ற பிராந்தியத்தில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி வலியுறுத்தியிருந்தார். ஐசிஸ் தலைமையில் போராடும் சுன்னி கிளர்ச்சியாளர்கள் ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூல் உட்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கணிசமான நிலத்தை கைப்பற்றியுள்ளனர்.

ஜுன் 25, 2014

புலி இளைத்தால் எலி…..?

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள இளம் அரசியல் செயற்பாட்டாளரொருவரின் மின்னஞ்சல் வந்திருந்தது. இடம்பெயர்ந்த மக்கள் கடந்த 16ம் திகதி கோப்பாயில் நடத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பனுப்பியிருந்தார், அந்த மின்னஞ்சலின் தலைப்பு மக்கள் போராட்டம் என்றிருந்தது. இதற்கு முன்னர் முல்லைத்தீவில் காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்திய போராட்டத்தின் போதும், இதேவிதமான அழைப்பொன்றை மற்றுமொருவர் அனுப்பியிருந்தார். அப்பொழுது அவரிடம் சொன்னேன்- இது மக்கள் போராட்டமல்ல காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் நடத்தும் போராட்டம் என சொல்லுங்கள் என. அவரிற்கு கோபம் வந்துவிட்டது. காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும், அந்த விவகாரத்தையும் கொச்சைப்படுத்துவதாக சினந்தார். கடந்த ஐந்து வருடங்களில்- நந்திக்கடல் தோல்வியின் பின்னர்- ஈழத்தமிழர்களில் ஏற்பட்டுள்ள முக்கிய பண்பு மாற்றங்களில் ஒன்று இது. எதற்கெடுத்தாலும் ஒன்றில் விக்கிவிக்கி அழுகிறார்கள், அல்லது முகம் சிவக்க கோபப்படுகிறார்கள். இந்த கோபம் எப்படிப்பட்டதெனில், எனக்கு மூக்குப் போனலும் பரவாயில்லை, எதிராளிக்கு சகுனம் பிழைத்தாலே போதும் என்ற வகையானது. இதனாலேயே விடயங்களில் நிதானித்து செயற்பட முடியாதவர்களாகிவிட்டார்கள். நந்திக்கடலோரத் தோல்வி நினைவுகளில் செரிமானம் அடையுமட்டும் இந்த நிலை நீடிக்கலாம். (மேலும்....)

ராஜினாமா செய்கிறார் அஸ்வர்? எம். பி. ஆகின்றார் கீபி

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவருமான A.H.M. அஸ்வர் தனது பாலாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலக உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விலகலின் பின்னர் அவர் மாகாணமொன்றுக்கு ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இது சம்பந்தமாக அஸ்வர் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றும் அந்த முயற்சி கைகூடவில்லை. இலங்கை பனை அபிவிருத்தி சபை தலைவரும் மிகவும் சொற்ப்ப வாக்குகளில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தவறவிட்டவரும் ஆனா கிபீ என்று அழைக்கப்படும் பசுபதி சீவரத்தினம் அவர்கள் தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்ற உறப்பினர் கதிரையை சுகதரித்து கொள்ளும் வாய்ப்பு வைத்திருக்கிறது. ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பு தேசியபட்டியல் MP அஸ்வரின் ராஜினாமா மூலம் ஏற்படும் வேற்றுடதிட்கு திரு பசுபதி சீவரத்தினம் நியமிக்க படலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்

"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer) "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்." (மேலும்....)

டொமினிக் ஜீவாவின் 88 வது பிறந்த தின ஒன்றுக்கூடலும், தெணியானின் நூல் வெளியீடும்

நண்பர்களே!

 

இந்த அழைப்பிதழை  உங்கள் இல்லம் தேடி வந்த அழைப்பிதழாக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

US Nearly Used Nukes During Viet Nam War

(by Marjorie Cohn )

Vietnamese civilians were terrorized by U.S. soldiers during the war on a mass scale. The Full Disclosure Campaign, organized by Veterans for Peace, represents a clear alternative to the Department of Defense's current efforts to sanitize and mythologize the Vietnam war and to thereby legitimize further unnecessary and destructive wars. (Image: vietnamfulldisclosure.org) We came dangerously close to nuclear war when the United States was fighting in Viet Nam, Pentagon Papers whistleblower Daniel Ellsberg told a reunion of the Stanford Anti-Viet Nam War Movement in May 2014. He said that in 1965, the Joint Chiefs assured President Lyndon B. Johnson that the war could be won, but it would take at least 500,000 to one million troops. The Joint Chiefs recommended hitting targets up to the Chinese border. Ellsberg suspects their real aim was to provoke China into responding.  If the Chinese came in, the Joint Chiefs took for granted we would cross into China and use nuclear weapons to demolish the communists. (more....)

ஆறு இலங்கைப் பிரஜைகள் தமிழக பொலிஸாரால் கைது

சென்னையில் போலி கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதிப் பத்திரம் தயாரித்து விற்பனை செய்து வந்த இலங்கையைச் சேர்ந்த 6 பேரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூர்த்தி என்ற கிருஷ்ணமூர்த்தி (வயது 55) தலைமையிலான ஆறு பேரையே சென்னை பொலிஸார் கைது செய்துள்ளனர். 1982 ஆம் ஆண்டு அகதியாக சென் னைக்கு சென்றுள்ள கிருஷ்ணமூர்த்தி, அங்கு போலி கடவுச்சீட்டு மற்றும் விசா அனுமதிப்பத்திரம் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை தொடங்கியுள்ளார். இது தொடர்பாக கடந்த 2003 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இவரை சென்னை மத்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்திருந்தனர். சென்னை ஆலப்பாக்கத்தில் வசிக்கும் ராஜன் (வயது 42) என்பவரை கைது செய்த பொலிஸார், அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கிருஷ்ணமூர்த்தியை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

ஜுன் 24, 2014

தற்போதைய சூழலும் இலங்கைத் தமிழர்களும்

(ஸ்ரனிஸ்)

புலம்பெயர்ந்து வாழும் சிலர் சில அமைப்புகளை உருவாக்கி தற்போதைய சூழலில் பல கருத்துக்களை கூறிவருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் நடைமுறைக்கு சாத்தியமற்ற பல கருத்துக்களை கூறி வருவதுடன் அழிவுற்று இடம்பெயர்ந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்கு கொண்டு செல்லும் நிலமைகளையே உருவாக்குகின்றனர். இலங்கை அரசின் இனவாத போக்கு காரணமாக ஈழம் என்றோம் வடக்கு-கிழக்கே கிடைத்தது. மீண்டும் ஈழம் என்றோம் வடக்கு வேறாகவும் கிழக்கு  வேறாகவும் ஆனது. மீண்டும் விடமாட்டோம் என்ற கருத்தே பலராலும் முன்வைக்கப்படுகிறது. இன்று 13 வதை பெறுவதற்கே பாடாய் படுகின்றோம். (மேலும்....)

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான குரோத பேச்சுக்கு தடை

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையிலான குரோத பேச்சுகளை இந்நாட்டில் தடைசெய்யும் நோக்கில் அமைச்சரவைப்பத்திரமொன்று விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவே இந்த அமைச்சரவைப்பத்திரத்தை தாக்கல் செய்யவுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவின் தலைமையிலான அமைச்சரவை உப-குழு, தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு முன்வைத்த ஆலோசனைகளை அங்கீகரித்து விட்டதென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இந்த அமைச்சரவைப் பத்திரம், காழ்ப்புணர்வு பேச்சுகளுக்கு எதிரான தண்டனைக் கோவை சட்ட ஏற்பாடுகளை பொதுச்சட்டத்தின் பகுதியாக்கி, இன மோதல்களையும் அமைதியின்மையினையும் தடுப்பதற்கு முயல்கின்றது. அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இச்சட்டத்தின் மூலம் தணிக்கைக்கு உள்ளாகலாம். சமுதாயங்களுக்கிடையே காழ்ப்புணர்வை தூண்டியமை நிரூபிக்கப்படின் மறியல் தண்டனை அல்லது தண்டம் இல்லையேல் இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அமைச்சர் கூறினார்.

ஈழத் தமிழர் கட்சி

(அறிவு)

தமிழ் அமைச்சர் ஒருவரின் நெருக்கமான உறவினர் ஒருவரின் தலைமையில் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு அரசியல் கட்சி ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படுகின்றது என தகவல்கள் வெளியாகி உள்ளன. தேசிய கட்சி ஒன்றில் வேட்பாளராக தேர்தலில் நின்ற ஒருவரும், சிறிரெலோ கட்சியின் அமைப்பாளர் ஒருவரும் சேர்ந்து கட்சியை ஆரம்பிக்கின்ற வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்கள் அரச உயர் தரப்பினரை கடந்த வாரங்களில் சந்தித்து பேசி உள்ள அதே சமயம் புலம்பெயர் தமிழர்களின் உதவி, ஒத்தாசை, ஆலோசனை ஆகியவற்றையும் கோரி உள்ளார்கள். இந்நிலையில் ஈழத் தமிழர் கட்சி என்று இதற்கு பெயர் சூட்ட வேண்டும் என்றும் தமிழரின் தனித்துவத்தை காட்டக் கூடிய வகையில் இதன் சின்னம் அமைய வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் பிரமுகர்களால் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. கார்த்திகைப் பூவை சின்னமாக்க வேண்டும் என்று இதில் ஒரு சாராரால் விருப்பம் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் இதில் சட்ட சிக்கல்கள் ஏற்படக் கூடும் என்பதால் ரைகர் ஓர்க்கிட் என்கிற பூவை சின்னம் ஆக்குவது குறித்து சாதகமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.

தேசிய தலைவராக மஹேஸ்வரன் தெரிவு

Council of Justice of Peace அமைப்பின் தேசிய தலைவராக மஹேஸ்வரன் தெரிவாகியுள்ளார், 2013 ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட Council of Justice of Peace  இலங்கையில் ஊடகவியலாளர்களாக இருக்கும் சமாதான நீதவான்களால் உருவாக்கப்பட்டதாகும். இவ்வமைப்பின் ஊடகவியலாளர் பஹத் ஏ.மஜீத் ஜே.பி துவக்கினார். தற்பொழுது 50 அங்கத்தவர்களை கொண்டுள்ளது. கடந்தவாரம் நடைபெற்ற வருடாந்த அலுவலக கூட்டத்தில் கொழும்ப மாநகரசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான மஹேஸ்வரன் ஜே.பி ஐ ஏகமனதாக தேசிய தலைவராக அவ்வமைப்பு தெரிவு செய்தது. இவ்வமைப்பின் நிறைவேற்று செயலாளாராக பஹத் ஏ.மஜீத் ஜே.பி அவர்களும் நிறைவேற்று பொருளாராக சரீப்டீன் ஜே.பி அவர்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஊடகவியலாளர்கள் முகம் கொடுக்கும் நிதிப்பிரச்சினைகள் தொடர்பாகவும் உத்தியோகபூர்வமற்ற ஊடகவியலாளர்களின் செயற்பாடுகள் குறித்தும் இவ்வமைப்பு எதிர்காலத்தில் கவனமெடுக்கவிருக்கிறது. இவ்வமைப்பிற்கு அங்கத்தவர்களாக இணைய விரும்பியவர்கள் சமாதான நீதவான் அடையாள அட்டை மற்றும் ஊடகவியலாளர் அடையாள அட்டையின் பிரதியோடு சுயவிபரத்தையும் ammfahath@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் என்று அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி திணிப்பு

மொழிப்போர் மீண்டும் தலை தூக்கி விடுமோ என்று தமிழகத்தில் அனைவரும் அச்சப்படும் சூழ்நிலை அரங்கேறியது. இலங்கை தமிழர்களுக்காக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் தமிழுக்காக தொடங்கி விடுமோ என்ற எச்சரிக்கை உணர்வு சட்டம், ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டிய சீனியர் அதிகாரிகளுக்கே ஏற்பட்டது. ஹிந்தி மொழியை தமிழகத்தில் திணிப்பது என்பது அந்த அளவிற்கு தமிழகத்தில் உள்ளவர்களின் உணர்வுகளோடு ஒன்றிப் போன பிரச்சினை என்பதுதான் இதற்கு காரணம். ஹிந்தி திணிப்பை எதிர்த்து 1938லிருந்து ஏகப்பட்ட போராட்டங்களைப் பார்த்தது தமிழகம். ஹிந்தியை எதிர்த்ததற்காக முதலில் சிறை சென்ற தலைவர் மூக்கையாத் தேவர் என்பது வரலாறு.  (மேலும்....)

தனித்துச் செயற்படுவதால் முஸ்லிம் சமூகம் சாதித்ததாக வரலாறுகள் இல்லை

முஸ்லிம் சமூகம் தனித்து நின்று செயற்படுவதனால் ஒரு போதும் உரிய தீர்வுகளை அடைய முடியாது. அவ்வாறு அடைந்ததற்கான வரலாறும் கிடையாது. இவ்வாறு உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பசீர் சேகுதாவுத் தெரிவித்தார். முஸ்லிம்களின் 1100 வருட வரலாற்றை எடுத்து பார்த்தால் சமூகம் எவ்வாறு அரசியல் நகர்வை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது புலனாகும். இன்று முஸ்லிம்கள் நாட்டுக்காக என்ன செய்தார்கள் என்று சில பேரினவாதிகள் கேள்வியெழுப்புகின்றனர். மேலும் ஊடகங்கள் மூலமாக குறிப்பாக சமூகவலைத்தளங்களின் மூலமாக இல்லாத பொல்லாத விடயங்களை உள்வாங்கி முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கும் நாம் ஆற்றல் மிகுந்த ஆரோக்கியமான சிந்தனை ரீதியான பதில்களை அளிக்க வேண்டும். ஆகவே எமது வரலாற்று தளர்வுகளையும் தடங்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் ஒல்லாந்தர்களினால் விரட்டப்பட்ட சமயம் செனரத்மன்னன் எமக்கு புகழிடம் அளித்தான் அன்று அந்த நிலைமை தோன்றா விட்டால் இன்று இந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் இருந்திருந்த முடியுமா? அன்று சிங்களவர்களுடன் இணைந்து அவர்களையும் அரவணைத்து சென்றமையினால் நாம் எமக்கான தேவையை பெற்றுக் கொள்ள முடிந்தது.

மோடியின் புதிய நிதி நகரத் திட்டத்தால் 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள்

பிரதமர் நரேந்திர மோடியின் "கிப்ட்"; எனப்படும் புதிய நிதி நகரத் திட்டத்தால் குஜராத் மற்றும் நாடு முழுவதும் 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் சு+ழல் ஏற்பட்டுள்ளது. கிப்ட் எனப்படும் இந்தத் திட்டமானது குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரமாக உருவெடுத்து வருகிறது. திட்டம் முழுமையாக அமுலுக்கு வரும்போது குஜராத் மற்றும் நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டு அளவில்; 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்குமாம். இது குஜராத் அரசு உருவாக்கிய திட்டமாகும். மோடி முதல்வராக இருந்தபோது இந்தத் திட்டத்தை தனிப்பட்ட அக்கறை எடுத்து கண்காணித்து வந்தார். சர்வதேச நிறுவனங்களுக்கு இந்தியாவில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளை, நிதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இது மோடியின் செல்லத் திட்டம். தனிப்பட்ட முறையில் இதில் அக்கறை காட்டி வந்தார். தற்போது அதை முழுமையாக அமுலாக்கும் வேலைகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். புதிய முதல்வர் அனந்தி பென் படேலும் இதில் தீவிரம் காட்டி வருகிறோம் என்று கிப்ட் நிர்வாக இயக்குநர் ரமாகாந்த் ஜh தெரிவித்துள்ளார். கிப்ட் திட்டமானது 886 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. இதில் 673 ஏக்கர் நிலம் ஏற்கனவே அரசால் கையகப்படுத்தப்பட்டு விட்டதாம். அகமதாபாத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் சபர்மதி ஆற்றங்கரையில் இந்த நிதி நகரத்தை உருவாக்கி வருகிறார்கள். இங்கு ஏற்கனவே பல வங்கிகள், ஐடி நிறுவனங்கள் தங்களது கிளைகளைத் தொடங்கி விட்டனவாம்.

ஜுன் 23, 2014

தகுதியிருந்தும் அகதி என்பதால் மருத்துவம்படிக்க அனுமதி மறுப்பு:’ஈழத்தாய்’ கொடுத்த வரம்

இலங்கை அகதிகள் முகாமில் தங்கி தமிழகத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லை என்பதால், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. உலகின் மனித உரிமைச் விழுமியங்களை அவமதிக்கும் வகையில் தமிழ் நாட்டில் ‘ஈழத் தாய்’ ஆட்சியில் மூன்று தசாப்தங்களாக நடைபெறும் அவமனம் இது. ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் நந்தினி, இந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170 மதிப்பெண் பெற்றுள்ளார். மருத்துவம் படிக்கும் தகுதிக்கும் அதிகமாகவே மதிப்பெண்கள் பெற்றிருந்தால் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் என்பதால், இந்திய குடியுரிமை அவருக்கு இல்லை என்ற காரணத்தால் அவருக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பப் படவில்லை என மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். (மேலும்....)

அமெரிக்காவை அச்சுறுத்தும் அடுத்த பின்லேடன்!

அபுபக்கர் பாக்தாதி

அடுத்த ஒசாமா பின்லேடன் என்று அஞ்சப்படுபவர் 43 வயது அபுபக்கர் அலி பாக்தாதி. சுமார் 10,000 தீவிரவாதிகள் உள்ள இவரது ஐசஸ் (ISIS) என்கிற தீவிரவாதிகள் அமைப்பு, இன்று ஈராக்கைத் தீக்கிரையாக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த நாட்டில் இருக்கும் எண்ணெய் வயல்களை இவரது ஆட்கள் சொக்கப்பனைகளாக்கிக் கொளுத்தி விளையாடி வருகிறார்கள். எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்குள் வெடிகுண்டுகளை உருட்டி வெடித்து வேடிக்கைப் பார்க்கிறார்கள். அதனால் விலை மதிப்பில்லாத உயிர்கள் மட்டுமல்ல, உலகின் பொருளாதாரமே சீட்டுக்கட்டு மாளிகையாகச் சரிந்துகொண்டிருக்கிறது. (மேலும்....)

 

 

 

புலம் பெயர் தேசம் எங்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தியாகிகள் தினம்(சுவிஸ்)

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த தோழர்கள். சகோதர இயக்கங்களின் போராளிகள், பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து வருடம் தோறும் அனுஷ்டிக்கப்படும் தியாகிகள் தினம் சுவிற்சர்லாந்தின் அரோ மாநிலத்தில் நேற்று (21.06.2014) அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் தோழர்கள், அனுதாபிகள் பலரும் குடும்பமாக கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். தோழர் பத்மநாபா மற்றும் தோழர்களின் உருவப்படங்களுடன் ரெலோ இயக்கத்தின் தலைவர் சிறி சபாரத்தினம், புளொட் இயக்கத்தின் தலைவர் உமா மகேஸ்வரன் ஆகியோரது உருவப்படுங்களும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தன. திருமதி பெனான்டோ அவர்கள் தீபம் ஏற்ற தோழர்கள் பெனான்டோ – மட்டக்களப்பு, வையாபுரி – யாழ்ப்பாணம், பாஸ்கரன் – மட்டக்களப்பு, ராகவன் – வவுனியா, பத்மபிரபா – யாழ்ப்பாணம், நியூட்டன் – யாழ்;ப்பாணம், சுதா- மட்டக்களப்பு, ஈசன் – யாழ்ப்பாணம் ஆகியோர் அஞ்சலி உரையாற்றினர். பத்மநாபா ஈபிஆர்எல்எவ் செயலாளர் தோழர் சுகு அவர்களால் வெளியிடப்பட்ட தியாகிகள் தின செய்தியும் அஞ்சலி நிகழ்வில் வாசிக்கப்பட்டது. தோழர் நிமல்ராஜ் நன்றியுரை ஆற்றி நிகழ்வுகளை நிறைவு செய்தார்.

புலம் பெயர் தேசம் எங்கும் பத்மநாபா ஈபிஆர்எல்எவ் இன் தியாகிகள் தினம்(பிரித்தானியா)

பத்மநாபா ஈபிஆர்எல்எவ் ஏற்பாட்டில் லண்டனில் நேற்று (21.06.2014) தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. தோழர் சிறாப் தலைமையில் இடம்பெற்ற தியாகிகள் தின வைபவத்தில் தோழர் ரவி வரவேற்புரை நிகழ்த்தினார். கனவு கண்ட தோழர்களே என்ற தலைப்பில் தோழர் ஸ்ரான்லி தான் எழுதிய கவிதை ஒன்றை வாசித்தார். வெளிநாடுகளில் கட்சிப் பணிகளில் ஈடுபட்டு மரணத்தைத் தழுவிக்கொண்ட தோழர்கள் தொடர்பாக தோழர் ரவி தயாரித்த ஒலி, ஒளி வடிவிலான விவரண சித்திரம் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்சிப் பத்திரிகையான கண்ணோட்டம் பத்திரிகையில் பிரசுரமான அபிமன்யு பதில்கள் என்ற கேள்வி பதில் பகுதி தொகுக்கப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ள அபிமன்யு பதில்கள் புத்தகம் வெளியிட்டு வைக்கப்பட்டது. புத்தகம் பற்றிய அறிமுக உரையை அரசியல், சமூக ஆய்வாளரும் செயற்பாட்டாளருமான சிவலிங்கம் நிகழ்த்தினார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பிரதிநிதி தயா, ரெலோ பிரதிநிதி சாம் சம்பந்தன் தியாகிகள் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். (மேலும்....)

நாடு திரும்புவோருக்கு 10,000 டொலர் வழங்க ஆஸி தீர்மானம்

அவுஸ்திரேலியாவின் தென்கிழக்கு ஆசிய முகாம்களிலுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் தாமாக முன்வந்து நாடு திரும்புவோருக்கு 10,000 அவுஸ்திரேலிய டொலர்களை வழங்கு வதற்கு அவுஸ்திரேலியா தீர்மானித்துள்ளது. பப்புவா நியூகினி தடுப்பு முகாமிலுள்ள லெபனானைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது புகலிட விண்ணப்பத்தை மீளப்பெற்று தமது நாட்டுக்குத் திரும்ப விரும்பினால் அவர்களுக்கு 10,000 அவுஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படவிருப்பதாகவும், ஈரான் மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 7000 அவுஸ்திரேலிய டொலர்களையும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு 4000 அவுஸ்திரேலிய டொலர்களும், பாகிஸ்தான், நேபாளம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3,300 அவுஸ்திரேலிய டொலர்களையும் வழங்குவதற்கு அவுஸ்திரேலியா முன்வைந்திருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களைக் குறைக்கும் நோக்கிலேயே இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், 2013ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் இதுவரை 283 பேர் தாமாக முன்வந்து நாடு திரும்பியிருப்பதாகவும் அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

ஈராக்கின் மேலும் பல நகரங்கள் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தன

சுன்னி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான யுத்தத்தில் ஈராக் அரசு பெரும் சிக்கலை எதிர்நோக்கி வருவதாக இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளனர். ஐசிஸ் என்று அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் போரா ளிகள் ஈராக்-சிரிய எல்லையை கடக்கும் பகுதி மற்றும் வட மேற்கு ஈராக்கில் இரு நகரங்களை கைப் பற்றியுள்ளனர்.  ஐசிஸ் போராளிகள் ஈராக் இராணுவத்தை விடவும் சிறந்த பயிற்சி பெற்றவர்களாகவும், ஆயுத பலமும் அனுபவமும் கொண் டவர்களாக இருப்பதாக அங்கிருக் கும் செய்தியாளர்கள் விபரித்துள்ள னர். ஒரு வாரத்திற்கு முன் ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூலை கைப்பற்றிய கிளர்ச்சியா ளர்கள் அது தொடக்கம் வேகமாக முன்னேறி நாட்டின் கணிசமாக நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளனர்.

வடமத்திய கால்வாய் திட்டம்

யாழ்குடா, கிளிநொச்சி உட்பட பல்வேறு பிரதேசங்களில் நீர்ப்பற்றாக்குறைக்குத் தீர்வு
(லக்ஷ்மி பரசுராமன்)

மூன்று தசாப்தங்களுக்கு அதிக காலம் பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கித் தவித்த யாழ். மக்களுக்கு முழுமையான சுதந்திரக் காற்றை அனுபவிக்க வழிசமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அம்மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றி வருகின்றார். அந்த வகையில் யாழ். மக்களுக்கான சுத்தமான குடிநீர் தேவையையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மறந்துவிட வில்லை. 1960 ஆம் ஆண்டளவில் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலா அரசாங்கத்தின் முன்மொழிவிற்கிணங்க ஐக் கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால் (UNDP) முழு இலங்கை யின் அபிவிருத்தியையும் கருத்திற்கொண்டு வரையப்பட்ட ‘மகாவலி பாரிய செயற்திட்டம் (Mahaweli Master Plan) 1968ம் ஆண்டு இலங்கை அரசினால் அங்கீகரிக்கப்பட்டது. (மேலும்....)

ஜுன் 22, 2014

இனி வேண்டவே வேண்டாம்

தென்ன்னிலங்கையிலும் மலை யகத்திலும் அமைந்த பல கிராமங்கள், நக ரங்களில் கணிசமான தொகையினராக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றார்கள். மதரீதியான, இனரீதியான தனித்துவ நடைமுறைகளும் வாழ்க்கை முறை யும் கொண்டுள்ள முஸ்லிம்கள் தென் னிலங்கையில் வாழும் பெளத்த, சிங் கள சகோதரர்களுடன் அன்புபேணி ஐக்கியம் வளர்த்து வாழ்ந்து வருப வர்கள். பரம்பரையாக வணிகத்தில் ஈடுபடும் இம்மக்கள் விடாமுயற்சி உடையவர்கள். துணிகள், பொருட்களைச் சுமந்து சென்று ஊருக்கு ஊர் விற்கும் நடை வியாபாரிகள் தொடக்கம் பெரிய வியாபாரத் தாபனங்களை நிர்வகிக்கும் வியாபாரிகள் வரை அனைவருமே வணிகத் தொழிலே வளமான தொழில் என நினைத்து முயற்சியு டன் தொழில் செய்பவர்கள். தொழி லின்மையால் சோம்பிக்கிடந்து தீய வழியில் திருடி, வழிப்பறியில் ஈடுபட்டு குற்றம் புரிபவர்கள் முஸ்லிம் சமூகத் தில் மிகக் குறைவாகும். புத்தி சாதூ ரியமாக தொழிலில் ஈடுபடும் முஸ்லிம் கள் பலர், தென்னிலங்கை கிராமங்க ளில், நகரங்களில் வாழ்க்கை வசதிக ளுடன் வாழ்கிறார்கள். அதேவேளை தம்முடன் வியாபாரத்தில் ஈடுபடும் பெளத்த, சிங்கள சகோதரர்களுடன் அன்புடனும், புரிந்துணர்வுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். (மேலும்....)

புரிந்துகொள்ள வேண்டிய யதார்த்தங்கள்

'இனவாத தீயை பற்றவைப்பதை போல் அணைப்பது சுலபமானது அல்ல'

எந்த ஓர் இனத்துக்கும், குழுமத்திற்கும் தமது சமூகம் பற்றிய மதிப் பும் மரியாதையும் இருக்கின் றது. அது தவறே இல்லை. தமது இனம் சார்ந்த நலன்க ளில் அக்கறை கொள்வதும் அதற்காகப் பணியாற்றுவதும் இனத்துவம் சார்ந்த செயற்பாடு கள் என்கிறார்கள் அறிஞர்கள். அந்தச் செயற்பாடுகள் இன் னோர் இனத்திற்குப் பாதக மாக, குந்தகமாக அமையும் போதுதான் இனவாதமாகின்றது. எனினும் ஓர் இனத்தின் நலனு க்காக வன்முறைகளையும் பலாத்காரத்தையும் பிரயோகிப்ப தென்பது அழிவுக்கே இட்டுச் செல்லும். அவ்வாறான ஒரு சூழ்நிலை தான் அண்மையில் அளுத் கமையிலும் பேருவளையிலும் ஏற்பட்டிருக்கிறது. அளுத்கம பத்திராஜகொட பிரதேசத்தில் ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரச்சினை பூதாகரமாகி, சுவாலையாக எழுந்திருக் கிறது. பத்திராஜகொட சம்பவத்தை எடுத் துக்கொண்டால், நாட்டில் நாளாந்தம் போக்குவரத்தின்போது ஏற்படுகின்ற வழமையான ஒரு சிறு சம்பவமே என்பதை யாவரும் புரிந்துகொள்வர். (மேலும்....)

வட்டரக்க விஜித்த தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டார் - பொலிஸ்

மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வட்டரக்க விஜித்த தேரர், பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார் என்றும் இது தொடர்பில் நீதிமன்றில் அவர் பதிலளிக்க வேண்டி ஏற்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. தன்னை சிலர் தாக்கியதாக வட்டரக்க விஜித்த தேரர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இருப்பினும் இது தவறான முறைப்பாடாகும். விஜித்த தேரர், தன்னைத் தானே தாக்கிக் கொண்டுள்ளார் என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தேரருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து அவதானிக்கும் போது அவை அவராலேயே ஏற்படுத்திக் கொள்ளப்பட்டவையா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் இக்காயங்கள் பாரதூரமற்றவை என்றும் தேசிய வைத்தியசாலையின் வைத்திய பிரிவு தெரிவிக்கின்றது. பேசாமல் இருப்பதற்கோ அல்லது பேச முடியாத அளவுக்கோ அவருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ள வைத்திய பிரிவு, அவரின் மௌனம் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வீடு செல்லக்கூடிய நிலைமையில் அவர் இருந்த போதிலும் தான் இன்னும் குணமடையவில்லை என்று கூறிக்கொண்டு வைத்தியசாலையிலேயே தங்கியிருக்க முற்படுகின்றார் என்றும் வைத்தியசாலை தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.

தேரர் படுகொலை

சந்தேகநபரின் பாதணிகள் மீட்பு

மாத்தளை,எலஹேர பிரதேசத்தில்  எலஹேர பக்கமுன ஹீரடியே புண்ணியவர்தன விஹாராதிபதி அலகொலமட தம்மரத்ன(வயது 47) படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும் நபரின் பாதணி ஜோடி,சிகரெட் மற்றும் மதுபான போத்தலொன்று விஹாரை வளாகத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிணங்களின் மீதமர்ந்து
பிறைச் சோறுண்பவனே...

(எஸ்.ஹமீத்) 

***உனது ஆட்சிக்கான சாவுமணியை
நீயே அடிக்கிறாய்..
நாமென்ன செய்ய..? 

***உன் அழிவுக்கான குழியினை
நீயே வெட்டுகிறாய்...
யார் என்ன செய்ய..?

(மேலும்....)

முஸ்லிம்கள் மீதான திடீர் விசுவாசம்?

அளுத்கம மற்றும் பேருவளை போன்ற இடங்களில் சில அசம்பாவிதங்கள் இடம்பெற் றுள்ளன. ஜனாதிபதி நாட்டில் இல்லாத நேரத்தில் இடம்பெற்ற மேற்படி சம்பவங்களில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன. இது குறித்து சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பான வர்கள் விரைந்து நடவடிக்கைகளை எடுத்து நிலைமைகளை கட்டுக்குள் கொண்டு வந் துள்ளனர். ஜனாதிபதி விசாரணைகளுக்கு உத்தரவிட்டிருக்கின்றார். ஆனால் நான் இங்கு பேச வந்த விடயம் வேறு. இதுவரைக் கும் முஸ்லிம்களை தமிழர்களின் விரோதிகளாகவும் அரசாங்கத்தின் எடுபிடிகளாகவும் குறிப்பிட்டு வந்த புலிப்பினாமிகளும் அவர்தம் ஆதரவாளர்களும் திடீரென்று முஸ்லிம்க ளுக்காக வரிந்து கட்டிக்கொண்டு கிளம்பியிரு க்கின்றனர். (மேலும்....)

இலங்கை விமானசேவைகளை புறக்கணிக்க தவ்ஹீத் ஜமாத் தீர்மானம்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை இனவாதிகள் நிறுத்த வேண்டும் என்றும், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்படாத வரை இலங்கையின் விமான சேவைகளான ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் மற்றும் மிஹின் லங்கா ஆகியவற்றை புறக்கணிப்பதுடன், இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களையும் புறக்கணிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அண்மையில் கடந்த 14ஆம் திகதியில் இலங்கை அளுத்கம பகுதி முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடூர தாக்குதலை கண்டித்து, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முற்றுகையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இயங்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மண்டலங்கள், இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பில் தமது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. அந்தத் தொடரிலேயே குவைத் மற்றும் மஸ்கட் மண்டலங்கள் இந்த முடிவை அறிவித்துள்ளன.

Sri Lanka

Who Is Responsible For Attack Against Innocent Sinhalese in Aluthgama ?

Government affiliate JHU says Muslim groups should take responsibility if clashes resume due to the hartals being called by them.In a statement, JHU leader Ven. Omalpe Sobhitha Thera says the Muslims who were linked to violent incidents in the past few days are still at large. The statement asks the police to arrest them and enforce the law equally. It says Muslim parties and religious and civil organizations are planning to raise black flags, close shops and hold hartals tomorrow as the situatioan in Aluthgama and Darga Town is returning to normal. They should also take responsibility if Sinhala business places, Buddhist places of worship or Buddha statues by the roadsides are damaged. The JHU also asks the police to protect the lives and properties of the Sinhalese in Muslim-majority areas, and wants relevant authorities to inquire into such losses at Darga Town, Pathirajagoda and Welipenna and pay compensation.

ஜுன் 21, 2014

24வது தியாகிகள் தினம்

19.06.1990 அன்று   தோழர்பத்மநாபா மற்றும் பன்னிரெண்டு பேரை புலிகள் சென்னை கோடம்பாக்கத்தில் வைத்து சுட்டுக் கொன்ற தினமான ஜீன்19 ஐ தோழர்பதமநாபா சார்ந்த கட்சியினர் தியாகிகள் தினமாக உலகமெங்கும் அனுஷ்டிக்கின்றனர். இத்தினத்தில் ஜனநாயகம், சுதந்திரம், அமைதிக்காக போராடி மரித்த போராளிகளையும், பொது மக்களையும் நினைவு கூர்ந்து அவர்களின் தியாகங்களை கௌரவப்படுத்தி அவர்களுக்காக அஞ்சலி செலுத்தி  வருகின்றனர். தோழர்பத்நாபா அவர்கள் சுயநலமற்ற வாழ்க்கையையே வாழந்தார்.அவரிடம் மனிதநேயம் இருந்தது. கட்சி அங்கத்தவர்களை பெரிதும் மதிக்கும் மனித பண்பும் காணப்பட்டது.அவர் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து கட்சியை உரிய மரிதையுடன் நடத்தினார்;.அரவது காலத்தில் கட்சி கட்டமைப்பு குலையாமல் சீரிய முறையில் செயல்பட்டது. அவருக்கு பின்னரான காலத்தில் கட்சியின் கட்டமைப்பை சீரமைக்க பலர் முயற்சி செய்தாலும அது சிலரது சுயநலபோக்கால் சீரழிவு பாதைக்கே சென்றது. (மேலும்....)  

Build a protective wall around your land-ownership deed- Some insightful information for those who own land and those who wish to buy land

(By Kirthimala Gunasekera)

‘Land fraud’ is a broad term used to describe a wide range of deception practised by some engaged in the ‘business’ of real estate; the term includes impersonation of owners and forging of signatures to defraud owners and banks.Recently reported incidents of alleged land fraud have had a disturbing effect on the minds of land owners. An alarming feature of these incidents is that fraudsters have reportedly been successful in infiltrating the sacred inner sanctum of the land registry to destroy and deface the vital documents safely stored to support and protect the land rights of land owners.The CID has frequently warned the general public that its investigations have often failed due to the victims not being able to substantiate their (the victims’) case with evidence that normally should have been available with the custodian, the Land Registry; the ‘evidence’ having been altered, defaced, missing or torn. (more.....)

யாழ். பள்ளிவாசல் மீது தாக்குதல்

யாழ்.நாவாந்துறை எம்.ஓ வீதியில் அமைந்துள்ள கமால் பள்ளிவாசல் மீது இன்று சனிக்கிழமை (21) அதிகாலை இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இதனால், பள்ளிவாசலின் 5 யன்னல் கண்ணாடிகள் சேதடைந்துள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவுக்கு இந்தியா பதிலடி

இருநாட்டு எல்லையில் 5 ஆயிரம் கோடி ரூபாவில் உட்கட்டமைப்பு

இந்திய - சீன எல்லையில் உட்;கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5 ஆயிரம் கோடியை ஒதுக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே 28 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு மூலம், வீதி, குடிநீர், மருத்துவமனை, மின்சார வசதியை எல்லைப்பகுதியில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. எல்லையில் போதிய வசதியில்லாத காரணத்தால், சீன எல்லையில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில்தான் அருணாச்சல பிரதேச மாநில மக்களின் கிராமங்கள் அமைந்துள்ளன. இதனால் சீனா எளிதாக ஊடுருவ முடிகிறது. எல்லைக்கு அருகே அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து மக்களை குடியமர்த்தினால் மக்கள் உதவியுடன் ஊடுருவலை தடுக்க முடிவதுடன், அந்தப் பகுதி இந்திய எல்லைதான் என்பதற்கான வாதத்திற்கும் வலு சேர்க்க முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது. உள்துறை இணை அமைச்சர் கிரேன் ரிஜpஜ{ அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் எல்லை பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துவருவதாகவும் கூறப்படுகிறது. எல்லைப்பகுதியில் நடைபெறும் கட்டமைப்பு பணிகளுக்கு சுற்றுச்சு+ழல் அமைச்சும்; விரைந்து அனுமதியளிக்கும் என்று அத்துறைக்கான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜhவேத்கர் தெரிவித்திருந்தது நினைவு கூரத்தக்கது.

நியாயத்திற்கு குரல் கொடுத்தால்...........?

நீதிக்காகக் குரல் உயர்த்திய புத்த பிக்கு வட்டரக்க விஜித தேரர் கடத்தப்பட்டு வெட்டி வீசப்பட்டார். பொதுபல சேனா காடையர்களின் வன்முறைகளை எதிர்த்தும், முஸ்லிம் மக்களுக்காகக் குரல் கொடுத்தும் வந்த வட்டரக்க விஜித தேரர் அவர்கள் கை கால் கட்டி, வெட்டப்பட்ட நிலையில் பாதையோரத்தில் மீட்கப்பட்டார். தற்போது கொழும்பு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்.

யூன் 19 தியாகிகள் தினம்

காலம்.....
பல வரலாற்று நாயகர்களை இந்த உலகிற்கு தந்துமிருக்கிறது, தந்துகொண்டுமிருக்கிறது. அந்த வரிசையில் ஈழமண்ணில் இருந்து பத்மநாபா எனும் மாமனிதனை நல்ல தலைவனாகவும், வழிகாட்டியாகவும் அது  அடையாளம் காட்டியது. ஆனால்...  
அகாலம் ,

அந்த மனிதநேயமிக்க மானுடனை, அவன் நேசித்த மக்களின் விடுதலை நெருங்கிவரும் வேளையில், அவர்களை அவன் தலைமையேற்று வழி நடத்திய பாதி தூரத்திலேயே  கள்ளத்தனமாகக் கவர்ந்து சென்றுவிட்டது. நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெடப் புழுதியில் எறிந்துவிட்ட மூடர்களுக்கு துணையாகிப் போனோமோ என்று புலம்பினர் மக்கள். காதகன் காலனையும் நோவதைத் தவிர அவர்களால் வேறு எதுவுமே செய்திருக்க முடியவில்லை அப்போ. (மேலும்....)

ஜுன் 20, 2014

திருகோணமலையில் தியாகிகள் தினம்

திருகோணமலை மாவட்ட பத்மநாபா ஈபிஆர்எல்எவ் கட்சியின் தியாகிகள் தின வைபவம் திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள கற்பகப்பிள்ளை யார் கோயில் வாசிகசாலையில் இன்று 19.06.2013 இடம்பெற்றது. இந் நிகழ்வில் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் தோழர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். அதனை தொடர்ந்து தோழர் பத்மநாபா நினைவாக தோழர்

நியூட்டன் தலைமையிலான குழுவினரால் கண்பரிசோதனை செய்து, இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இம் மருத்துவ முகாமில் பெரும் அளவிலான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இந் நிகழ்வுகள் அனைத்தும் திருகோணமலை மாவட்ட பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் அமைப்பாளர் சத்தியன் தலமையில் நடைபெற்றது. கோவில் நிர்வாகத்தினரின் மனப்பூர்வமான ஒத்துழைப்போடும், தோழர்களின் பங்களிப்போடும் திருகோணமலை மாவட்ட தியாகிகள் தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது.

முஸ்லிம்கள் மத்தியிலும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் - ஐங்கரநேசன்

'தமிழ் மக்கள் மீது காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்டுவந்த பேரினவாத ஒடுக்குமுறைகள் தான் பிரபாகரன் என்ற ஆளுமையின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தது. அதேபோன்று, முஸ்லிம்கள் மீதான இனரீதியான ஒடுக்குமுறைகளும், அழிப்புகளும் தொடருமாக இருந்தால் முஸ்லிம்களின் மத்தியில் இருந்தும் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என்பதை இந்த அரசாங்கம் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லை' வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். (மேலும்....)

ஞானசார தேரரை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

பொது பால சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரரை கைது செய்யுமாறு வலியுறுத்தி காத்தான்குடியில் இன்று (20) ஜும் ஆ தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற ஜும் ஆத் தொழுகையை யடுத்து பள்ளிவாயல் வீதியில் சில இளைஞர்கள் சுலோகங்களை தாங்கி நின்று இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.சியாதின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசேர தேரரை கைது செய், பொது பல சேனாவை தடை செய் போன்ற வசனங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை தாங்கி நின்றனர். இதேநேரம், காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலில் இடம் பெற்ற ஜும் ஆத் தொழுகையின் பின்னர் அளுத்கம மற்றும் தர்கா நகர் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது கொல்லப்பட்டவர்களுக்கான ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டதுடன் பிராத்தனையும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் தியாகிகள் தினம்

பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் தியாகிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. தமிழ் மக்களின் விடிவிற்கான போராட்டத்தில் தம் உயிரை அர்ப்பணித்த கட்சித் தோழர்கள், சகோதர இயக்கங்களின் போராளிகள், பொதுமக்கள் ஆகியோரை நினைவு கூரும் தியாகிகள் தின நிகழ்வுகளில் தோழர்கள், ஆதரவாளர்கள், உயிரிழந்த தோழர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், நலன்விரும்பிகள் பலரும் கலந்துகொண்டனர். பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் இன் யாழ் பிராந்திய செயலாளர் தோழர் மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் தி.ஸ்ரீதரன் உயிர் நீத்த தோழர்களின் உருவப்படத்துக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். (மேலும்....)

எம்மை விட்டகலா தோழனே

வருடங்கள் பல கடந்தும்

உன் நினைவுகளின் ஒருதுளியும்

மனதைவிட்டு நீங்கவில்லை.

ஏனென்று எண்ணிப்பார்த்தேன்.

எல்லோருக்கும் அன்பான அப்பா, அம்மா

பாசமுள்ள அண்ணன், தம்பிகள்

அக்கா, தங்கைகள்

தன்னலமற்ற நண்பர்கள்

இப்படி ஒவ்வொருவரும் தனித்தனியாக இருப்பார்கள்

நீ ஒருவனே எங்களுக்கு எல்லாமாகவே இருந்தாய்.

பிறர் நலன் பாதிக்காத

தனிமனித சுதந்திரத்தை மதித்தாய்.

தோழர்களின் நியாயமான ஆசைகளை

கட்டுப்பாடு கொண்டு கட்டுப்படுத்தவில்லை.

தவறுகளை சுட்டிக்காட்டாமலேயே

அதை திருந்தவைத்தாய்.

இதோ நீயில்லாத இந்த மண்ணும், மக்களும்

ஏதோ ஒன்றை இழந்தது,

அது நீயென்று புரியாமல் தவித்து நிற்கிறது.

மக்களின் பிரதிநிதிகள்

நீ விட்டுச்சென்ற இடத்திற்க்கு

திரும்பிசெல்வதற்க்கே விரக்தி அடைந்ததாய் கூறுகிறது.

எமது சமூகம் பாரிசவாதம் வந்தது போல்

ஒரே இடத்தில் நிலைத்துவிட்டது.

உன்னை அழித்தவர்கள் நிம்மதியாய் சென்றுவிட்டனர்.

உன் அழிவை ஜீரணித்தவர்கள்

ஊமைகளாய் விக்கித்து நிற்க்கிறார்கள்.

என்ன செய்வது தோழனே?

மூடநம்பிக்கையில் நம்பிக்கை இல்லைத்தான,;

இருந்தாலும் பிரார்திக்கிறேன்

நீ மறுபடியும் வந்துவிடு நீ நேசித்த மக்களுக்காய்

(மோகன்)

சென்னையில் 24வது தியாகிகள் தினம்

சென்னை புழல் அகதிகள் மகாமில் தங்கியுள்ள தோழர்கள் தியாகிகள் தினம் அனுஷ்டித்தனர். தோழர்ஸ்ரனிஸ் தலைமையில் 19.6.14 அன்று கலை7.00 மணிக்கு நடந்த நிழழ்ச்சியில் சுயநிர்ணய உரிமைப்போராட்டத்தில் உயிர்தியாகம் செய்த போராளிகள் பொதுமக்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு பத்மநாபா திருஉருவ படத்துக்கு துரையப்பா (தோழர்வெள்ளையன்) மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.தோழர்கள் பலரும் கலந்து கொண்டு பதம்நாபா திருவஉருவ படத்தக்கு பூ தூவி மரியாதை செலுத்தினார்.

இன மோதல்களில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனம்

இனங்களுக்கு இடையே நல்லுறவை ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், இன மோதல்களில் ஈடுபடுவது காட்டுமிராண்டித்தனமான செயல் என உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திஸா நாயக்க தெரிவித்தார். நாட்டில் அனைத்து பகுதிகளிலும் சகல இன மக்களும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இன முறுகல் ஏற் படும் இடங்களில் எல்லாம் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.ஒரு சிறு சம்பவத்தை காரணம்காட்டி நாடு முழுவதும் பரவச் செய்வது மிகவும் மோசமான செயல். ஒவ்வொரு குடிமகனும், அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் பொறுமைகாக்க வேண்டும். அப்பாவி மக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிடுவது என்பது காட்டுமிராண்டித்தனமான செயல். இவ்வாறான செயல்களில் ஒருவரும் ஈடுபடக் கூடாது. நடந்து முடிந்துள்ள சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வர வேண்டும். இனங்களுக்கு இடையே மீண்டும் புரிந்துணர்வை ஏற்படுத்த இருசாராரும் செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்தார்.

தோழர் நாபா இவ் உலகில் நல் திசைகாட்டி


உன் தெளிந்த புன்னகை தேடி

உன்னிடம் வந்தவர் கோடி-தோழா

உன் நற்சிந்தனை கண்டு

உலகில் பலமுகம் வாடி நின்றது -தோழா 

...

உரிமை  குரல் எழுப்பி- நல் 

உச்சரிப்புகள் தாங்கி நின்றவரே  தோழா

உங்கள்  இனத்துக்காக  புறப்பட்டு

உருமாறிய தீயவர்க்கு  உன்பொன்-

உடல் கொடுத்தவரே எங்கள் தோழா

....

உண்மைகளை உண்மை என்று-  பூமியில்

உதித்த நற்கருத்துகள் தந்தவரே தோழா

உதிரம் தோய்ந்த கரங்களைவிட்டு

உன்னதமான பணிகளை தொடர்ந்த தோழா

....

உத்தமன் நீங்கள் என்றும்

உலகத்தார் பறைசார்றினரே தோழா

உணர்வுகள் பொங்க உரிமை பேச்சுக்கள்

உணர்தியவரே எங்கள் தோழா

.....

உவமானம் நீயென்று உன்மக்கள்

உதடு சிவக்க அன்றும் என்றும்

உரைத்தனரே எங்கள் தோழா

உலகில் மறுபடியும் மலர்ந்து வா எங்கள் தோழா

....

உபயோகம் பெற்ற பலர்-உனை

உதறிதள்ளிபோன வரலாறும் உண்டு தோழா

உவமேயமாய் நீங்களிருக்க

உங்கள் தோழர் எமக்கென்ன துயரம் தோழா

.....

உங்கள் வரவுக்காக காத்திருக்கும் 

உங்கள் உயிரானவர்கள் நாங்கள் தோழா

உங்கள் மடியிலிருந்து மறுமடியும்

உறுதியான அரசியல் பயில-எங்கள்

உள்ளத்தினுள் பன்மடங்கு ஆவல் தோழா

....

உயிர் மெய்யெழுத்து அரசியலில் 

உண்மையாய்அடியெடுத்து தந்தவர் நீங்கள் தோழா

உரக்க சொல்கிறோம் ஒரு முறையாவது

உத்தம  பூமியில் அவதாரமாய் வாருங்கள் தோழா

 

நாம் மக்களில்லாத மண்ணை நேசிக்கவில்லை

மக்களுக்காவே மண்ணை நேசிக்கின்றோம்

---தோழர் க.பத்மநாபா---

 

புரட்சி வேட்கை தோழமையுடன்

---தோழர் வவி--

யாழ்., வவுனியா, மன்னார், முல்லைத்தீவில் ஹர்த்தால்

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்தழிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை (19), யாழ்ப்பாணம், முல்லைத்தீவுமற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த கடையடைப்புப் போராட்டத்திற்கான அழைப்பினை முஸ்லிம் உரிமைக்கான அமைப்பு விடுத்திருந்தது. அதன்படி இன்றைய நாள் முழுதும் யாழ்ப்பாணம் மற்றும் வலுனியாவிலுள்ள முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, அமைதியான முறையில் தமது கண்டனத்தினைத் வெளிப்படுத்தி வருகின்றனர். எவ்வாறாயினும், குறித்த மாவட்டங்களிலுள்ள தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் வழமை போன்று இயங்கி வருகின்றன. இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா முஸ்லிம் வர்த்தகர் சங்கம், 'அளுத்கமையில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இந்த தாக்குதல் சம்பவமானது, நாட்டுக்குள் ஏற்பட்டிருக்கும் சமாதானத்தை சீர்குலைக்கும் வகையிலேயே அமைந்துள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என அச்சங்கம் கூறியது.

ஜுன் 19, 2014

24 வது தியாகிகள் தினம் – 19 ஜூன் 2014

பத்மநாபா  ஈழ மக்கள்  புரட்சிகர  விடுதலை  முன்னணி,  இல.249, கண்டி வீதியில் அமைந்துள்ள யாழ் தலைமை காரியாலயத்தில்  நாளை (19-06-2014) பிற்பகல்  3.00  மணியளவில்  தியாகிகள்  தினம்  அனுஷ்டிப்பு

தியாகிகள் தினம்

மாற்று அணிக்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்போம் என்று உறுதி பூண்போம்

(தோழரஜேம்ஸ)

இன்று 40 வருடங்களுக்கு மேலான மிதவாத அரசியல் போராட்டம், 30 வருடங்களுக்கு மேலான ஆயுதப் போராட்டம் என்று கடந்து இன்று இறுதியில் மகாணசபைக்கு அதிகாரம் காணாது, இருக்கின்ற அதிகாரங்களை செயற்படுத்தவிடுகின்றார்கள் இல்லை என்ற நிலைக்குத்தான் இத்தனை அழிவுகளுக்கு பின்பும் தமிழ் பேசும் சமூகம் வந்திருக்கின்றது. இதுதான் சாத்தியம் இதனை இன்னும் பலமான பரந்துபட்ட நிலையில் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு முன்பே சொல்லி நின்று செயற்படுத்த முயன்றவர் தோழர் நாபா. இந்த வரலாற்றை மறைக்க முடியாது எனவே தோழனே உன்னையும் உன்வழியில் இன்றுவரை தடம் பதித்து நடப்பவர்களையும் வரலாறு விடுதலை செயற்தே விட்டது இன்று என்பது நிதர்சனமான உண்மைகள் ஆகிவிட்டன. (மேலும்....)

இனசமூகங்களின் சமத்துவத்திற்காகவும், சர்வதேச சகோதரத்திற்காகவும்,  மானிடவிடுதலைக்காகவும் தோழர் நாபா மறைந்து 24 ஆண்டுகள்!

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தினடிப்படையில் அமைந்த அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை அதனை தீண்டுவார் யாரும் இல்லாத காலத்தில் -1987 இல்- அதுபற்றிய குழப்பங்கள் தடுமாற்றங்கள், அகத்திலும், புறத்திலும் நிலவிய காலத்தில் அதனை முன்னெடுத்து செயற்படுத்த வேண்டும் என்று சிந்தித்த யதார்த்தமான திட உறுதி கொண்ட புரட்சியாளர்.  சக போராட்ட இயக்கங்கள், முற்போக்கு சத்திகளுடன் சமூகங்களுடன் ஐக்கியம், சர்வதேச சகோதரத்துவம் எமது சமூகத்தில் நிலவும் சாதி, பால் ,பிரதேச, வர்க்க ரீதியான ஒடுக்குமுறைகள் பற்றிய ஆழமான பிரக்ஞையுடன் பிரச்சனைகளை அணுகிய மனிதநேயன். அவருடைய முயற்சிகள், கனவுகள் நனவாகியிருந்தால் அதற்கு சரியான ஒத்துழைப்பு எமது சமுதாயத்தில் கிடைத்திருந்தால் இத்தனை  பேரழிவுகளை எமது மக்கள் சந்தித்திருக்கமாட்டார்கள். வரலாறு தியாகிகளை தற்காலிகமாக மறந்தாலும் அது தன்னைச் சரிசெய்யும் என்றே கருதுகிறேன். (மேலும்....)

இந்த அபகீர்த்தியான வரலாறு தொடரவேண்டாம்! - பத்மநாபஈழமக்களபுரட்சிகர விடுதலைமுன்னணி

பேருவள -அழுத்கம -தர்கா நகர் பகுதியில் முஸ்லீம்கள் மீதான தாக்குதல் இது இருதரப்பினரிடையேயுமான மோதல் அல்ல. முஸ்லீம் மக்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல். முஸ்லீம்களுக்கு அல்லது சிறுபான்மையினருக்கு பாடம் படிப்பித்தல் என்ற முறையில் காரியங்கள் நிகழ்கின்றன. நாட்டின் அதிகாரசக்திகள் சிறுபான்மைச் சமூகங்கள் மீது வெறுப்பையும் குரோதத்தையும் உமிழும் பேரினவாத, மதவாத சக்திகளுக்கு வரையறையற்ற சுதந்திரத்தை வழங்கியுள்ளன . காலம் காலமாக இந்த நாட்டை உருப்படவிடாமல் தடுத்து வருவது பிரதானமாக இந்த 'சத்திராதி' நடவடிக்கைகளே. வரலாறு முழுவதும் அனேகமாக இனவன்முறைகள் திட்டமிட்டமுறையிலேயே சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன. அரசியல் பொருளாதார மற்றும் கல்வியில் சிறுபான்மைச் சமூகங்களின் வளர்ச்சி இந்த சக்திகளால் சகிக்க முடியாததாக இருக்கிறது.(மேலும்....)

முஸ்லிம்களைப் பாதுகாப்பது அரசின் பொறுப்பும் கடமையும்

இந்நாட்டு முஸ்லிம்களைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையும், பொறுப்புமாகும் என்று சுற்றாடல் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் பொறுமையாக இருக்க வேண்டும் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். நாம் ஏனைய சமூகங்களுடன் எப்போதும் போன்று ஒற்றுமையாகவும், புரிந்துணர்வுடனும் வாழவேண்டும். நாம் தனித்து வாழ முடியாது. தர்காநகர், பேருவளை அளுத்கம, வெலிப்பன்ன போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை துரதிஷ்டமானதும் கவலைமிக்கதுமாகும். இச்சம்பவங்கள் தொடர்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் அனுரசேன நாயக்கவுடன் சுமார் ஒரு மணி நேரம் கலந்துரையாடி நிலமைகளை எடுத்துக் கூறி பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தேன். பேருவளை, தர்காநகர், அளுத்கம உள்ளிட்ட பிரதேசங்களில் எனக்கு உறவினர்களும், நண்பர்களும் இருக்கின் றார்கள் அவர்கள் என்னுடன் தொடர்பு கொண்டு வழங்குகின்ற தகவல்களை உடனுக்குடன் பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு வழங்குகின்றேன். பாதுகாப்பு ஏற்பாடுகளை மென்மேலும் பலப்படுத்து வதற்கு நாம் வழங்குகின்ற தகவல்களும் அவருக்கு உதவுகின்றன. இதேவேளை ஆளும் கட்சி குழுக் கூட்டத்தில் துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுவிட்டது. என்றாலும் முஸ்லிம்களையும் அவர்களது உடமையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதையும் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

அப்பாவி முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

அளுத்கம மற்றும் பேருவளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்பாவி முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஐ.நா விசாரணைக்கு அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இனவாதக் குழுக்கள் மக்களை தூண்டிவிடும் வகையில் ஆற்றிய உரைகளினால் அளுத்கமவிலும் பேருவளையிலும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. இவை தொடர்பில் போதுமான ஆதாரங்கள் இருந்தபோதும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இவை தொடர்பில் நடவடிக்கை எடுக்க யாப்பில் சட்ட அனுமதி காணப்படுகிறது. மக்களின் பாதுகாப்புத் தொடர்பில் தெளிவான உத்தரவாதமொன்று வழங்கப்பட வேண்டும். தாக்குதலினால் ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இவற்றுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யவும், எதிர்காலத்தில் மக்களைத் துண்டிவிடுவோர் தொடர்பில் செயற்படவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுகவில் இருந்து விலகியது ஏன் ? கருணாநிதிக்கு குஷ்பு விளக்கம்

திமுகவில் ஏற்பட்ட மன அழுத் தத்தின் காரணமாக கட்சியில் இருந்து கனத்த இதயத்துடன் விலகு வதாக திமுக தலைவர் கருணா நிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். என்னை (குஷ்பு) தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு திமுகவில் உறுப்பினராக பொதுவாழ் வில் என்னை ஈடுபடுத்திக் கொண் டேன். அந்த நாள் முதல் திமுகவில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை திமுகவில் பொறுப் பில் உள்ளவர்கள் முதல் அடிப்ப டைத் தொண்டர்கள் வரை அனை வரும் அறிவர். ஆனால் என் அர்ப்ப ணிப்பும் உழைப்பும் ஒரு வழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்பதால் நான் தேர்ந்தெடுத்த பாதையும் பயணமும் தாங்க இய லாத மன அழுத்தத்தை ஏற்படுத்து கிறது.  எனவே திமுகவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்வதாக அவர் கூறியுள் ளார்.

கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றத்தை தடுக்க ஈராக் அரச படை தாக்குதல்

ஈராக்கில் கடந்த ஒரு வாரத்திற் குள் பாரிய முன்னேற்றம் கண்டுவ ரும் சுன்னி இஸ்லாமிய கிளர்ச்சியா ளர்கள் மீது அரச படை பெரும் மோதலில் ஈடுபட்டுள்ளது.  எனினும் தலைநகர் பக்தாதில் இருந்து 60 கிலோமீற்றர் (37 மைல்) தொலைவில் இருக்கும் பகுபா நகரின் ஒரு பகுதியை கிளர்ச்சியாள ர்கள் கைப்பற்றி இருப்பதாக அங்கி ருந்து வரும் செய்திகள் குறிப்பிடு கின்றன. பக்தாதில் இருக்கும் மிகப் பொரிய அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பி ற்காக 275 இராணுவத்தினரை அமெ ரிக்கா அங்கு அனுப்பியுள்ளது. ஈராக்கின் குர்திஷ் சுயாட்சி பிரா ந்திய பிரதமரான நசிர்வான் பர் சானி, "ஈராக் ஒன்றிணைந்த தேச மாக தொடர்ந்தும் இருக்காது என நான் நினைக்கிறேன்" என்று குறிப் பிட்டுள்ளார். வடக்கு நகரான மொசூல், டிக்ரித் ஆகியற்றில் மிகவேகமாக முன்னேற்றம் கண்டு திங்கட்கிழமை டெல் அபார் வரை முன்னேறிய ஈராக் இஸ்லாமிய தேசம் எனும் சுன்னி ஆயுததாரிகள் முன்னிலை யில் ஈராக் மீண்டும் வழமைக்கு திரு ம்புவது மிக கடினமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்....)

இலங்கையில் கும்பல் ஒன்றின் தாக்குதல்களில் முஸ்லீம்கள் கொலை

சிங்கள-முஸ்லிம் மக்கள் சகோதரத்துவத்துடன் இந்த பிரதேசங்களில் வாழ்ந்து வருகிறோம். தாக்கியவர்கள் எவரும் இந்த பிரதேசங்களில் உள்ளவர்கள் அல்லர். அவர்கள் வெளியார். 200க்கும் மேற்பட்டவர்கள் ஆவேசத்துடன் ஆயுதங்களுடன் வந்து வீடுகளை சேதப்படுத்தி, தீ வைத்து, பலரை காயப்படுத்திய போது எங்களால் அவற்றை கட்டுபடுத்த இயலாது போய்விட்டது. குறுக்கிட்ட எங்களையும் தாக்க முற்பட்டார்கள். உரிய நேரத்தில் போலீசார், படையினர் வந்திருந்தாள் விபரீதங்களை தடுத்திருக்கலாம்..." முஸ்லிம் மக்களுடன் சுமுகமாக வாழ்ந்துவரும் சிங்கள அயலவர்கள் பி.பி.சி.க்கு கூறியவை.

நச்சென்று நாலு வார்த்தை

இனவாதக் கட்சிகள் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும்

நான் பல அமைச்சர்களிடம் போரின்பின்பேசிய போது இலங்கையில் இனம் மதம் சார்ந்த கட்சிகள் தடைசெய்யப்படவேண்டும். மொத்த மக்கள் நலன்சார்ந்து மட்டுமே அரசியல்கட்சிகள் இருக்கவேண்டும். என வலியுறித்தினேன் . பிற்காலத்தில் அரசாங்கமும் இதைகச் சட்டமாக்க முயற்சித்தது. சிறுபான்மைக்கட்சிகள் எதிர்த்தன. முக்கியமாக இஸ்லாமியக்கட்சிகள் அரசாங்கத்தில் இருந்துகொண்டே எதிர்த்தால் கைவிடப்பட்டது. இந்த ச்டமூலம் வந்திருந்தால் பொதுபலசேனாவும் தமிழர் கட்சிகளும் இஸ்லாமிக் கட்சிகளும் இருந்திராது நாட்டில் சமாதான நிலவும். ஒவ்வொரு இனமும் மதமும் இலங்கையில் அடுத்த இனத்தின் செலவில் தனித்தன்மையை வளர்க்க விரும்பும் மூன்றாம் தர அரசியல்வாதிகளை தேர்ந்தெடுப்பதால் பிரச்சனைகள; உருவாகிறது.

(நடேசன்)

இலங்கை முஸ்லிம்களுக்காக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் - கருணாநிதி

இலங்கையில் தாக்குதலுக்கு ஆளாகும் முஸ்லிம்களைப் பாதுகாக்கும் வகையில்இந்திய மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறிஸ்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிய சிங்களவர்கள், கடந்த சில நாட்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான முஸ்லிம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார்கள்.(மேலும்....)

அமெரிக்கா தேவையில்லை வீரவன்சவே போதும்

தமிழ் பேசும் மக்கள் இந்த அரசை விட்டு விலகிச்செல்ல, விமல் வீரவன்சவே போதும். இவரும், இவரை போன்ற இந்த அரசில் உள்ள தீவிரவாத கட்சிகாரர்கள் செய்யும் காரியங்களே அரசாங்கத்தில் இருந்து, தமிழ், முஸ்லிம் மக்களை தூர தள்ளி வைக்கின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். தமிழ், முஸ்லிம் மக்கள் அரசாங்கத்தை வெறுத்து, விலகி செல்லும் திட்டத்தை மேற்குலகம் நடைமுறை படுத்துகின்றது என்றும், அளுத்கம கலவரத்தை சவூதி அராபியா மூலமாக அமெரிக்கா தூண்டி விட்டுள்ளது என்றும், இதன்மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்குகளை மகிந்த ராஜபக்சவுக்கு கிடைக்காமல் செய்ய மேற்குலகம் சதி செய்கின்றது என்றும் அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். (மேலும்....)

கோரிக்கைகளை முன்வைத்து முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியினரின் பேரணி

இந்திய மீனவர்களின் அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று கோரிக்கைகளை முன்வைத்து முற்போக்குக் தமிழ்த்தேசியக் கட்சியினரால் இன்று காலை யாழ்ப்பாணத்தில் பேரணியொன்று நடத்தப்பட்டுள்ளது. அதேவேளை இந்தியாவின் புதிய பிரதமரான நரேந்திர மோடிக்கும் அக்கட்சியினரால் யாழ்.தூதரகம் ஊடாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்.கோவில் வீதியிலுள்ள கைலாசப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் பேரணியாக சென்றே இந்த மகஜரை அக்கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந்த் யாழ்.இந்தியத் துணைத்தூதரகத்தின் உயரதிகாரி எஸ்.தட்ஷணாமூர்த்தியிடம்  கையளிததார். (மேலும்....)

சீனாவில் தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பில் 13 பேருக்கு மரண தண்டனை

சீன மேற்கு மாகாணமான ஸின்ஜியாங்கில் தீவிரவாத தாக்குதல்களை நடத்தியமைக்காக 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 24 பேர் பலியாவதற்கு காரணமாக அமைந்த தாக்குதல் உள்ளடங்கலாக 7 வழக்குகள் தொடர்பில்  உய்குர் இனத்தவர்கள் உட்பட 13 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பீஜிங்கில் கடந்த வருடம் இடம்பெற்ற கார் விபத்து தொடர்பில் மூவருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையிலேயே மேற்படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. தீவிரவாதக் குழுக்களுடன் பங்கேற்றமை, படுகொலை, தீ வைப்பு, கொள்ளை மற்றும் சட்டவிரோத உற்பத்தி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே மேற்படி 13 பேருக்கு  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜுன் மாதம் 26ம் திகதி லுக்கின் நகரிலுள்ள பொலிஸ் நிலையம் ஹோட்டல்கள் ஏனைய தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுடன் தொடர்புபட்டிருந்ததாக மூவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 24 பொலிஸ் உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பலியானதுடன் 23 பேர் காயமடைந்திருந்தனர்.

முஸ்­லிம்­களை ஒரு­போதும் எதி­ரி­க­ளாக நினைக்­க­வில்லை - ஞான­சார தேரர்

பொது­பலசேனா இன­வாத அமைப்பு அல்ல. புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் செயற்­பட வேண்­டிய தேவையும் எமக்­கில்லை. முஸ்­லிம்­களை ஒரு­போதும் எதி­ரி­க­ளாக நாம் நினைக்­க­வில்லை என்று பொது­பலசேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்தார். புல­னாய்வுப் பிரிவின் ஆத­ர­வுடன் பொது­பல சேனா பௌத்த அமைப்பு செயற்­ப­டு­வ­தாக ஐக்­கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்­தி­யுள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்கண்ட­வாறு தெரி­வித்தார். நாம் இன­வாத அமைப்­பென்று பலர் சுட்டிக் காட்­டு­கின்­றனர். சிறு பான்மை மக்­களை அடக்­கவோ, முஸ்­லிம்­களை அழிக்­கவோ நாம் ஒரு­போதும் முயற்­சிக்­க­வில்லை. எமது நோக்கம் பௌத்த மதத்தை காப்­பாற்ற வேண்டும் என்­ப­தே­யாகும். அதற்­கா­கவே போராடிக் கொண்­டி­ருக்­கிறோம். (மேலும்....)

ஜுன் 18, 2014

கிழக்கு மாகாண சபையில் எதிர்ப்பு

பேருவளை, அழுத்கம, வெலிப்பன்ன மற்றும் பலப்பிட்டிய சம்பவங்களை கண்டிக்கும் வகையில் கிழக்கு மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் வலது கையில் கறுப்புப் பட்டியணிந்து செவ்வாய்க்கிழமை (17)  மாகாணசபை அமர்வுகளில் கலந்துகொண்டனர். அமைச்சர் நஸீர் அஹமட்; கறுப்பு ஆடை அணிந்து சபைக்குச் செல்ல ஏனைய உறுப்பினர்களான அன்வர் றம்ழான் முஹம்மட், ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவாம் ஆகியோர் வெள்ளை உடையுடன் வலது கையில் கறுப்புப் பட்டியணிந்து மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அளுத்கமை மற்றும் தர்ஹா நகரிலிருந்து இன்று நண்பகல் 12 மணிவரை வாபஸ் பெற்றுகொள்ளப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.அளுத்கமை மற்றும் தர்ஹா நகரிலிருந்து இன்று நண்பகல் 12 மணிவரை வாபஸ் பெற்றுகொள்ளப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் மறு அறிவித்தல் வரை மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.

‘அபிமன்யு பதில்கள்’ புத்தக வெளியீட முன்னுரை

கண்ணோட்டம் பத்திரிகையில் மே 2007 இலிருந்து டிசம்பர் 2012 வரை வெளியிடப்பட்டஅபிமன்யு பதில்கள் பகுதி மொத்தமாக முப்பது தொகுப்புக்கள் இந்நூலில் உள்ளன. இதில்ஒரு சில பகுதிகள் கண்ணோட்டம் வெளிவராமையினால் வெளியிடப்பட முடியவில்லை எனநம்புகின்றேன். இந்த கேள்வி பதில்  பகுதியில் அங்காங்கே கலை, இலக்கியம், சினிமா விளையாட்டு  எனதொடப்பட்டு இருந்தாலும் பிரதானமாக மேற்குறிப்பிட்ட கால பகுதியில் தமிழ் பேசும்மக்களின் அரசியல் போக்கு மற்றும் நிலவி வந்த சிந்தனைகள் தொடர்பாக எழுந்த நியாயமானகேள்விகள், வாதப்பிரதிவாதங்களை விளங்கிக்கொள்ள முயல்வோருக்கு ஒரு சாளரமாக இப்பதிவுகள்உள்ளன. (மேலும்....)

இன ஒற்றுமையைக் குழப்பும் சதிமுயற்சிகளுக்கு எவரும் துணை போக வேண்டாம்

இனங்களுக்கிடையில் காணப்படும் இன நல்லுறவை குழப்பும் வகையில் மேற்கொள்ளப்படும் சதிகளுக்கு மத்தியில் மக்கள் அறிவுபூர்வமாக செயற்பட வேண்டும் என சர்வ மதத் தலைவர்கள் கோரியுள்ளனர். பல்வேறு சம்பவங்களினூடாக மோதல்களை உருவாக்கி அதனூடாக அரசாங்கத்தை தனிமைப்படுத்தவும் அதனூடாக அரசியல் லாபம் பெறவும் சிலர் முயல்வதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அஸ்கிரிய பீட சிரேஷ்ட தேரர் வண. மெதகம தம்மானந்த, குருணாகல் ஆயர் வண. சென் பிரான்ஸில், கண்டி பிரதான மெளலவி பஸ்லுர் ரஹ்மான் உட்பட பல மத தலைவர்கள் இது தொடர்பில் கருத்து தெரிவித்தனர். இனங்களுக்கிடையில் காணப்படும் நல்லிணக்கத்தின் மூலமே நாடு பலமடையும் உணர்ச்சிகளுக்கு அடிமையாகாமல் மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயற்பட வேண்டும். இவ்வாறான நிலைகளில் ஊடகங்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.  (மேலும்....)

அரசை இக்கட்டான நிலைக்குத்தள்ளி சந்தர்ப்பவாத அரசியல் நடத்த மு. கா. தயாரில்லை

 “அரசாங்கம் சர்வதேச ரீதியில் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் இருக்கும் தருணத்தில் அளுத்கம சம்பவத்தை வைத்துக்கொண்டு அரசை இக்கட்டான சூழ்நிலைக்குத்தள்ளி சந்தர்ப்பவாத அரசியலை செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தயாரில்லை. எனினும் அளுத்கம சம்பவம் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் பதில் நடவடிக்கைகள் குறித்து எமது கட்சி உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கிறது” என நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். உணர்வு பூர்வமான பேச்சுக்களைப் பேசி இனவாதத்தைத் தூண்டும் வகையில் மக்களை வன்முறையில் ஈடுபடச் செய்யும் வகையில் பொதுபலசேனா செயலாளர் பேசிய விடயம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார். இதேவேளை, கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்தும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் முதல் அளுத்கம சம்பவம் வரையிலான விடயங்கள் தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றையும் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

உக்ரைனுக்கான எரிவாயுவை நிறுத்த ரஷ்யா தீர்மானம்

உக்ரைனுக்கான எரிவாயு விநி யோகத்தை நிறுத்தப்போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் நிலுவையில் இருக்கும் கட்டணத்தை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செலுத்தாதது மற்றும் புதிய கட்ட ணத் தொகை தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல் வியடைந்ததை அடுத்தே ரஷ்யா நேற்று இந்த முடிவை எடுத்தது. உக்ரைன் பெறும் எரிவாயுவுக்கு எந்த கட்டணமும் செலுத்தாத நிலை யில் சட்ட அடிப்படையில் ரஷ்யா வால் தொடர்ந்தும் எரிவாயு விநியோ கிப்பதற்கு முடியாதுள்ளது என்று ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரி வாயு நிறுவனமான காஸ்பிரோனின் பேச்சாளர் செர்கெய் குப்ரியானொவ் குறிப்பிட்டுள்ளார்.  ரஷ்யா உக்ரைனூடாக செல்லும் எரிவாயு குழாய் ஊடாகவே ஐரோப் பாவுக்கும் எரிவாயு விநியோகித்து வருகிறது.  ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகம் திட்டமிட்டபடி தொடரும் என்று குறிப்பிட்ட குப்ரியானொவ் ஐரோப்பா வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சென்றடைவதை உறுதி செய்வது உக்ரைனின் கடப்பாடு என்று வலியுறுத்தினார். கிழக்கு உக்ரைனில் போராடும் பிரிவினைவாதிகளுக்கு ரஷ்யா உதவுவ தாக உக்ரைன் குற்றம் சாட்டுகிறது.

ஜுன் 17, 2014

தோழரறொபேடகுறுகிய எல்லைகளகடந்தமக்களநேசித்தவரதோழரறொபேட் (தம்பிராஜசுபத்திரன்) 11வது ஆண்டநினைவாக 14.06.2014


தனது இளமைக்காலத்திலேயே தமிழ் சமூகத்தில் நிலவுகின்ற ஒடுக்குமுறைகள், அநீதிகள், பாரபட்சங்கள் குறித்தும் பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகள் பற்றியும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடப் பழக்க வழக்கங்கள் தொடர்பாகவும் தோழர் றொபேட் தனது நண்பர்களோடு சேர்ந்து சிந்திக்கவும், செயற்படவும் தலைப்பட்டார். எல்லாகாலங்களிலும் விடலைபருவத்தினரிடையே காணப்படும் குறும்புகள், குசும்புகளுக்காக தோழர் றொபேட்டும் அவரது நண்பர்களும்  ஊரிலுள்ள பெரியவர்களால கடிந்துகொள்ளப்பட்ட காலங்களும் உண்டு. ஆனாலும், அவர்கள் காட்டிய சமூக அக்கறை, கருணை அவர்களுக்கு சமூகத்தில் நன்மதிப்பையும் பெற்றுக்கொடுத்தது. தனது நண்பர்களில் மிகவும் இள வயதினரான தோழர் றொபேட் அரசியல் ஈடுபாட்டில், சமூக அக்கறையில் மற்ற எல்லோரையும் விடவும் முதிர்ச்சி உடையவராக அவர்களுக்கு வழிகாட்டியாக ஆகியிருந்தார்.
(மேலும்....)

அழைப்பவிடுத்துமசி.வி. வரவில்ல - விமல

யுத்தத்தினால் தம்முடைய வாழ்கையினை இழந்த சிங்களக் குடும்பங்களும் இருக்கின்றனர். அதேபோல யுத்தத்தால் உயிரிழந்தவர்களை கொண்ட தமிழ் குடும்பங்கள் எவ்வளவு வேதனை அடைகின்றதோ அதேபோல யுத்தத்தால் உயிரிழந்தவர்களின் சிங்கள குடும்பங்களும் வேதனை அடைகின்றனர். அந்த இருள் சூழ்ந்த யுகத்தை மீண்டும் மீண்டும் எடுத்து பேசுவதன் மூலம் எனக்கும் உங்களுக்கும் கிடைக்கக்கூடிய நன்மை தான் என்ன?. எனவே அந்த இருள் சூழ்ந்த அந்த காலத்தை மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டி உங்களுடைய பிள்ளைகளையும் அந்த காலத்திற்கு கொண்டு செல்வதா, அல்லது அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுப்பதா என்பதே இப்போது உள்ள கேள்வி.  நாங்கள் இனவாத அரசியல் வாதியாக இருந்தால் எங்களுக்கு இந்த குருநகரிலுள்ள வீட்டுத் தொகுதியை புனரமைக்காமல் கொழும்பிலுள்ள வீட்டுத் தொகுதியை புனரமைத்து இருப்போம்.  நாங்கள் இந்த வீட்டுத் தொகுதியை புனரமைப்பு செய்ய தொடங்கியவுடன் வடக்கு கிழக்கு என பார்க்கவில்லை. எம்மால் செய்யக்கூடிய ஆகக் கூடுதலான வேலையை செய்துள்ளோம். அதேபோல எதிர்காலத்திலும் இவ்வாறான திட்டங்களை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்பதையும் கூறிக் கொள்கின்றேன். (மேலும்....)

அளுத்கமையில்

இருவர் பலி, அறுவரின் நிலை கவலைக்கிடம்

அளுத்கமையில் நேற்று முதல் இடம்பெற்றுவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதுடன்  60 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  இவர்களில் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் அஸ்லம்  தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் தற்சமயம் தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அஸ்லம் எம்பியும் சென்றுள்ளார். இந்நிலையில்  களநிலவரம் பற்றி எம்முடன் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 25இற்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வீடுகள் முற்றாக எரயூட்டப்பட்டுள்ளன. இவைதவிர மேலும் பல வீடுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. இதேவேளை, இன்று அதிகாலை வல்பிட்டி பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவர் பலியாகியுள்ளனர். மேலும் அறுவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. சிறு காயங்களுக்கு உள்ளான நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் இங்கு குழுமியிருக்கிறார்கள். ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதிலும், பாதுகாப்பு படையினர் புடைசூழ நின்றிருந்த வேளையிலுமே மேற்படி தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதனால், காவல் துறையினர்மீது நம்பிக்கையிழந்தவர்களாக எம் மக்கள் காணப்படுகிறார்கள்.

நான் அமைச்சராக இருக்க வெட்கப்படுகின்றேன் - ஹக்கீம்

எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். தர்ஹாநகர் பகுதிக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ஹக்கீம் அங்கு குழுமியிருக்கும் மக்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்பது தொடர்பில் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்ற அரசியலிலிருந்து ஆனந்த சங்கரி ஓய்வு

55 வருட அரசியல் வாழ்விலி ருந்தும் பாராளுமன்ற அரசியலி ருந்தும் ஒதுங்கிக் கொள்வதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி அறிவித்துள்ளார். 1952 ம் ஆண்டில் தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து 59 ம் ஆண்டிலிருந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சலிக்காது தொண்டாற்றி வந்ததாகவும், இந்த வாழ்க்கையிலிருந்து ஒதுங்கிக் கொள்ளத் தீர்மானித்திருப்பதாகவும் ஆனந்தசங்கரி வெளியி ட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். யுத்தமஏற்பட்டபல்லாயிரககணக்கான மக்களபலியானதுதானஉண்மை. யுத்தத்தாலபாதிக்கப்பட்ட மக்களுக்காக மக்களினஅங்கீகாரத்துடனஒரபதவியிலஅமர்ந்தஅவர்களுக்கசேவசெய்யலாமஎன்ற எண்ணத்தினால்தானயாழமாநகர சபைததேர்தலிலும், வடமாகாண சபைததேர்தலிலுமபோட்டியிட்டேனதவிர, பதவி மோகத்தினாலஅல்ல. மக்களினநலனகருதியஅத்தேர்தல்களிலபோட்டியிட்டேன். அதையுமதிட்டமிட்டபொய்பபிரசாரங்களமூலமஎன்னதோற்கடித்தனர்.  (மேலும்....)

ஜுன் 16, 2014


இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் – 11)

சுயநிர்ணய உரிமையுன் கூடிய அமைப்பு, கனடாவில் இருப்பது போன்ற அமைப்பு, இந்தியாவில் இருப்பது போன்ற மாநில அரசுகள் ஏற்பாடு, சுயாட்சி, சமஷ்டி எனப்பல கோஷங்கள் கோரிக்கைகள் காணப்படடாலும் 80 வருட நாடாளுமன்றத் தேர்தல் அரசியலூடாகவும் 30 வருட யுத்த அரசியலினூடாகவும் தமிழர்கள் யதார்த்தத்தில் இதுவரை பெற்றுக் கொண்ட ஒரேயோரு அரசியற் தீர்வு 13வது அரசியல் யாப்பு திருத்தத்தினூடாக ஆக்கப்பட்டுள்ள மாகாண சபை மட்டுமே. இந்த மாகாண சபை அமைப்பும் அது உருவாக்கப்பட்ட 1987ம் ஆண்டு கொண்டிருந்த சட்டவாக்க, நிதிவருமான மற்றும் நிறைவேற்றதிகாரங்களிற் பலவற்றை இழந்து விட்ட நிலையிலேயே இன்று இருக்கின்றது என்பதை மறுப்பதற்கில்லை (மேலும்....)

நெதர்லாந்தில் புலிகளின் ஆதரவாளர்களுக்கு சிறை

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் 5 பேருக்கு 16வருட தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரப்பட் டுள்ளது. நெதர்லாந்து ஹேக்கின் உள்ளூர் நீதிமன்றம் ஒன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 5 விடுதலைப்புலி ஆதரவாளர்களுக்கு 10 முதல் 16 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இவர்கள் 2003 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட குற்றங்களுக்காகவே இந்த தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று நீதிமன்றில் அரசதரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். குறித்த ஐந்து பேரும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டங்களை நடத்தினர். தமிbழத்துக்கு ஆதரவாக நாட்டுக்கு வெளியே பிரசாரங்களை மேற்கொண்டனர். போரின் காரணமாக உயிருக்கு பயந்து நெதர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள தமிழர்கள் மத்தியில் குறித்த ஐந்து பேரும் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தனர் என்றும் சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தினர். குறித்த ஐந்துபேருக்கும் நெதர்லாந்து நீதிமன்றம் 2 முதல் 6 வருட சிறைத்தண்டனையை விதித்த போதே அரச தரப்பில் இந்த காரணங்கள் கூறப்பட்டு தண்டனை அதிகரிப்பு கோரப் பட்டுள்ளது.

புலம்பெயர்தமிழர்களதுசிறிலங்காப் பயணம் தொடர்பில்நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் அறிவுறுத்தல்

பாதுகாப்புகருதியும்ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கானபயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக்கொள்ளுமாறு, நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்குஅறிவுறுத்தல்விடுத்துள்ளது. புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டஅரசாங்கம் என்ற வகையில் எமது மக்களின் பாதுகாப்பு குறித்து நாம் மிகவும்அக்கறை கொண்டுள்ளோம். அந்த வகையில் அண்மைக் காலமாகசிங்களஇனவாதஅரசினால் திட்டமிட்ட வகையில் புலம்பெயர ்மக்களை நோக்கி அவர்களுக்கு பாதகங்களை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதனை எமது நட்பு நாடுகளினூடாக நாம் அறிந்துள்ளோம். (மேலும்....)

பத்துரூபா பாதினியமும் விவசாய அமைச்சர் ஐங்கரநேசனும்

யாழ்ப்பாணத்தில் ஒரு பிடி முளைக்கீரை விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்யும் விலை பத்து ரூபாவாகும். நாள் கூடிய கீரை ஒரு பிடி 7 ரூபா அல்லது அதற்கும் குறைவாக விலையில் யாழ் விவசாயிகளிடம் இருந்து மொத்த வியாபாரிகள் கொள்வனவு செய்கின்றார்கள். சிறு பாத்தி கட்டி பல நாள் பாடுபட்டு நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபடும் விவசாயிக்கு கீரையால் கிடைக்கும்  வருமானம் தனது குடும்பத்தை கொண்டு செலுத்தவே போதுமானதாக சில வேளை இருப்பதில்லை. இந் நிலையில் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் முடிந்தவுடன் விவசாய அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சூழலியலாளர் என்ற கௌரவப் பட்டம் கொண்ட ஐங்கரநேசனே இவ்வாறு நியமிக்கப்பட்டவராவார். இவர் பதவிக்கு வருவதற்கு முன்னர் பிரச்சாரத்திற்கு எடுத்தக் கொண்ட விடயம் தமிழ்த்தேசியமும் மாகாணசபை அதிகாரமும் குடாநாட்டை விட்டு இராணுவத்தைக் கலைப்பதுமே ஆகும். ஆனால் அவருடைய இந்தக் கோசங்களை அவர் அமைச்சராக வந்தவுடன் விட்டுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஜதார்த்தம் தெரியும். ஆனால் பிரச்சாரத்திற்கு இப்படிக் கோசங்கள் போட்டால் தான் வோட்டு விழும் என்றும் தெரிந்தவர் அவர்.  (மேலும்....)

ஆஸி. யிலிருந்து 1,200 அகதிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்!

அவுஸ்திரேலியாவிலிருந்து கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் ஆயிரத்து 200 இலங்கை தமிழர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அகதிகளுக்கான சபையின் தலைவர் பில் கிலென்டனின் தெரிவித்தார். எதிர்வரும் 20 ஆம் திகதி உலக அகதிகள் தினம் சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. உலகளாவிய ரீதியாக உள்ள 4 கோடியே 37 லட்சம் அகதிகள் குறித்து சர்வதேசத்திற்கு விழிப்பிணை ஏற்படுத்தும் நோக்கில் இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.  இப்படியான, நடவடிக்கைகள் மூலம் உலக சமூகத்திடம் கருணையையும் அனுதாபத்தையும் பெற முடியும் என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. (மேலும்....)

எத்தனைகாலம்தான் ஏமாறுவர், தமிழ் மக்கள்?

(கே. வாசுதேவன்)

புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மக்களின் மீட்பர்கள் நாமே என்று கூறிக்கொண்டு தெருவிற்கு வந்த கூட்டமைப்பினர், கடந்த ஜந்து வருடங்களாக தமிழ் மக்களை இன்னுமொரு மாயைக்குள் முடக்கி வைத்திருக்கின்றனர். சர்வதேச அழுத்தம் என்பதே கூட்டமைப்பி னர் கையில் இருக்கும் அந்த மாய மான். அந்த மாயமானை அவ்வப் போதும், தேர்தல் காலங்களிலும் தமிழ் மக்கள் மத்தியில் அவிழ்த்து விடுகின்றனர். பலம்பொருந்திய நாடு கள், சிறிய நாடுகள் மீது, தங்களின் பிடியை இறுக்கும் நோக்கில் மேற் கொண்டுவரும் நடவடிக்கைகளின் உண்மைத்தன்மையை தமிழ் மக்க ளுக்குச் சொல்லாத கூட்டமைப்பினர், அதனை வைத்து, கடந்த ஜந்து வரு டங்களாக குதிரை ஓட்டி வருகின்ற னர். (மேலும்....)

யாழ். பல்கலைக்கழக மாணவரை வன்முறைக்குள் தள்ளிவிடுவது யார்?

புலிகள் இல்லாத நிலையிலும் இம்மாணவர்கள் அதேபோன்ற செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். அன்று புலிகள் செய்ததை இன்று வடக்கிலுள்ள தமிழ்த் தேசியம் பேசும் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் நாடுகளில் ஈழக்கனவு காணும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களும் மேற்கொண்டு வருகின்றன. இது புரியாது இந்த அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள் தமது கல்வியையே கேள்விக்குறியாக்கும் வகையில் அவர்களது நிகழ்ச்சி நிரலுக்கு தம்மை ஈடுபடுத்தி வருகின்றனர். உண்மையில் வடக்கிலுள்ள தமிழ் மக்களின் பெரும் சொத்து கல்விச் சொத்தாகவே இருந்து வருகிறது. புலிகளின் போராட்டத்தினால் அது சற்றுப் பின்னடைவைக் கண்டிருந்தாலும் இன்று அரசாங்கத்தின் பூரண அரவணைப்பில் அம்மக்களின் கல்விச் செல்வம் மீளக் கிடைத்து வருகின்றது. இதனைப் பொறுத்துக் கொள்ளாதவர்களே இக்கல்வி செயற்பாடுகளுக்குக் குந்தகத்தை ஏற்படுத்தி வருவது மட்டு மல்லாது அப்பழியை உதவி செய்து வரும் அரசாங்கத்தின் மீதே அதாவது படையினர் மீது சுமத்தி வருகின்றனர். (மேலும்....)

ஜுன் 14, 2014

சதாம் குசைனால்

அமெரிக்காவிற்கு மேலும் தலை இடி

ஈராக் மீண்டும் யுத்த பூமியாகிவிட்டது.. அமெரிக்காவால் வீழ்த்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனின் ஆதரவுப் படையினர் விஸ்வரூபமெடுத்து பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி வருகின்றனர். இதனால் பதட்டம் அடைந்த ஈரான் தனது படைகளை ஈராக்கின் பாதுகாப்புக்காக அனுப்பி வைத்துள்ளது. எல்லைகளில் ஈரான் ராணுவத்தை குவித்து வருகிறது. ஈராக்கில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் ஷியா முஸ்லிம்கள். அதற்கு அடுத்தது சன்னி முஸ்லிம்கள். ஈராக் ஜனாதிபதியாக இருந்த சதாம் உசேன் சன்னி பிரிவைச் சேர்ந்தவர். 2003ஆம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா யுத்தத்தைத் தொடுத்தது. அமெரிக்காவின் இந்த யுத்தத்துக்கு ஷியா பிரிவினர் ஆதரவு கொடுக்க சதாம் உசேனும் சன்னி பிரிவினரும் ஒடுக்கப்பட்டனர். 2006ஆம் ஆண்டு சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார். ஈராக் மீதான அமெரிக்காவின் யுத்தம் தொடங்கிய போதே ஏராளமான சதாம் உசேன் ஆதரவாளர்களான சன்னி பிரிவினர் அல்கைய்தா இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். (மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

வடக்கின் இராணுவ பிரசன்னம் ஏமாற்றம், விரக்தியை ஏற்படுத்தியுள்ளது - வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

விரக்தி படுவதற்க்காகவா வீரவசனம் பேசி பதவிக்கு வந்தீர், ஆமா அரசு எல்லாம் தானா தருமென்றால் எதுக்காக மக்களிடம் ஆணை பெற்று ஆட்சிபீடம் ஏறினீர்கள். உரிமைகள் தரப்படவில்லையென்றால் அதற்க்கான போராட்டம் எப்போ, என்ன வடிவில் (உங்களை மாதிரி எல்லா மக்களும் ஏ.சி காருக்குள் ஏறி போராடமுடியாது, அந்த போராட்ட வடிவை மட்டும் தவிர்த்துவிடவும்)

(மோகன்)

எல்.ரி.ரி.ஈ அமைப்பை பலநாடுகளில் கட்டியெழுப்ப முயற்சி

எல்.ரி.ரி.ஈ அமைப்புகள் பலநாடுகளில் செயற்படுவதாகவும் நிதிசேகரித்தல் மற்றும் பணச்சலவை வழியாக தமது கட்டமைப்பையும், செயற்படும் ஆற்றலையும் மீளக் கட்டியெழுப்பும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம், அதன் பயங்கரவாதம் மற்றும் அதன் போக்கு பற்றிய அறிக்கையில் கூறியுள்ளது. (மேலும்....)

புலிகள் மீதான தடையை மீளாய்வு செய்ய தீர்ப்பாயம் அமைத்தது இந்திய அரசு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதித்துள்ள தடை சரியா என்பதை விசாரிக்க நீதிபதி ஜி.பி.மித்தல் தலைமையில் சட்டவிரோத செயல்கள் தடுப்பு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு அதற்கான உத்தரவு இந்திய மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிப்பதற்கு மத்திய அரசு தெரிவித்த காரணம் சரியானதுதானா என்தை அந்த அந்த தீர்ப்பாயம் விசாரிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தீவிரவாத இயக்கம் என்று கூறி ஒரு அமைப்புக்கு தடை விதிக்கப்பட்ட பிறகு அது சரியா என்பதை கண்டறிய இதுபோன்ற தீர்ப்பாயம் அமைக்கப்படுவது வழக்கமான நடவடிக்கைதான். இதன் மூலம், தடையை விலக்க கோரும் வாய்ப்பு சம்மந்தப்பட்ட அமைப்புக்கோ, அதன் ஆதரவாளர்களுக்கோ வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த மே 14ஆம் திகதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் விடுதலைப் புலிகளுக்கு ஐந்தாண்டுகள் தடை விதிக்க மத்திய அரசு சில காரணங்களை கூறியிருந்தது. இலங்கையில் விடுதலை புலிகளை வீழ்த்த இந்திய மத்திய அரசே காரணம் என்றும் அவர்கள் கூறிவருகிறார்கள், இதுபோன்ற பிரசாரங்களால் இந்தியாவில் உள்ள மிக முக்கிய பிரமுகர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே பிரிவினையை தூண்டும் இதுபோன்ற குழுக்களை ஊக்குவிக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தை தொடர்ந்து சட்டவிரோத அமைப்பாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி மாணவிகள் பலாத்கார விவகாரம், கோவை வாலிபர் கைது, விடுதி மூடல்!

 

கொண்டிருந்த இரண்டு மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த கோவையை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் ஏழை குடும்பங்களை சேர்ந்த 17 மாணவர்கள், 3 மாணவிகள் என மொத்தம் 20 பேர் தங்கியிருந்து படிக்கின்றனர்.  நள்ளிரவு விடுதியில் புகுந்த 2 மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த 2 மாணவிகளை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தனர். கோவை சேரன் நகரை சேர்ந்த கோபி(எ) கோபிநாத் என்பவரை நேற்றிரவு தனிப்படையினர் பிடித்தனர். விசாரணையில், திருப்பூரை சேர்ந்த வீராசாமி என்பவரும் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். தலைமறைவாக உள்ள வீராசாமியை பிடிக்க தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.


ஜுன் 13, 2014

தோழர் றொபேட் மறைந்து 11ஆண்டுகள்

சமூக விடுதலை இயக்கத்தில் சம்பந்தமில்லாத பல பேர் ஊரையும் மக்களையும் ஏமாற்றும் கலி காலத்தில் கனவுகள் நிராசையாகிப்போன காலத்தில் நாம் தோழர் றொபேட்டை நினைவு கூருகிறோம். இப்படி சிலர் வாழ்ந்து மடிந்தார்கள் என்ற பிரக்ஞையே வறண்டு போன காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எமது சமூகத்தின் வாழ்வைச் சீராக்குவதற்கு பலபேர் முயற்சித்திருக்கிறார்கள். சமூக அநீதிகள், பாரபட்சங்கள் ஒடுக்குமுறைகள் மூடநம்பிக்கைகளுக்கெதிராக பலரும் போராடி இருக்கிறார்கள். தன்னலமற்ற பெருந்திரளானவர்கள் எமது சமூகத்தில் இருந்திருக்கிறார்கள். இன்றும் வாழ்கிறார்கள். மக்களின் வாழ்வை செம்மையாக்குவதற்கு சீராக்குவதற்கு இன்று வாழ்பவர்கள் பங்களிக்கமுடியும். பங்களிக்க வேண்டும். ஆனால் அவநம்பிக்கைகள்  அதிகரித்துள்ளன. (மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

கனடிய ஒன்ராறியோ மகாணத் தேர்தலில் போதடடியிட்ட அனைத்து தமிழர்களும் தோல்வி

இங்கே கனடிய அரசியல்வாதிகளுக்கு தமிழர்கள் சம்பந்தமான ஒரு ஜோக்ஸ் சொல்ல விரும்புகின்றேன் அதாவது உலகபோர் முடிந்து பலநாட்டு கைதிகளை பிடித்து மிகவும் பாதுகாப்பான சிறைக்குள் அடைத்தார்களாம் ஆனால் தமிழர்களை நட்டவேளியில் ஒரு வட்டத்தை கீறி அதற்க்குள் விட்டுவிட்டார்களாம் அதை எதிர்த்து கேள்விகேட்டவர்களிடம் அவர்கள் சொன்ன பதில் அதில் ஒரு தமிழன் வட்டத்தைவிட்டு வெளியே வந்தாலும் மற்ற தமிழன் பிடித்துநிறுத்துவான் இங்கே நடந்ததும் அதுதான். (அறுதிப் பெரும்பான்மை பெற்று அடசியமைத்த லிபரல் கட்சியில் எந்த தமிழனும் தேர்தலில் நிற்கவில்iயாம்)

(மோகன்)

நம் முன்னோர்களின் அறிவியல்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும் . இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள் அவர்கள் . காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள் . அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும் . அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். (மேலும்....)

கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள

சர்வதேச பெண்கள் தினத்தில் ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கி ன்றன.அவர்களில் ராஜனி திரணகம, செல்வி,சிவரமணி, சரோஜினி யோகேஸ்வரன்,மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்க ளாயுள்ளோம்.இந்த இழப்புகள் இயற் கையில் வந்தவை யல்ல.தவிர்த்திருக்க முடியாதவையுமல்ல. ஆனால் கடந்த காலத்தில் இலங்கையில் கோலோச்சிய வன்முறை சூழலும் அதன் மீதான கண்மூடித்தனமான வழிபாட்டு கலாசாரமுமே நாம் இழந்துபோன இந்த ஆளுமைகளை தீர்த்து கட்டியிருந்தது.  (மேலும்....)

இயற்கை வேளாண்மைக்கான சந்தையை ஒழுங்கு செய்வோம்!
(ம.செந்தமிழன்)

இயற்கை வேளாண் விளை பொருட்களை உற்பத்தி செய்துவிட்டு விற்க இயலாமல் திணறும் விவசாயிகளை நான் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். ஒருவிதத்தில் நானும் அவர்களில் ஒருவனே. உண்மையான இயற்கை விளை பொருட்களை வாங்கும் வழி அறியாமல் அலைபாயும் மக்களையும் சந்திக்கிறேன்.  ஒருபுறம் தேவை, மறுபுறம் உற்பத்தி. நல்ல சந்தையின் இலக்கணங்கள் இவை. இவற்றோடு வேறொன்றும் இணைய வேண்டியுள்ளது. நியாயமான ஆதாயம் எனும் நேர்மைதான் அது. இன்றைய இயற்கை வேளாண் விளை பொருள் சந்தை நியாயமான ஆதாயத்தில் இயங்கவில்லை என்பதை யாவரும் அறிவர். இந்த நிலைக்கான காரணங்கள் ஏராளமாக உள்ளன. எல்லா விற்பனையாளர்களும் வேண்டுமென்றே விலை ஏற்றுவதில்லை. வாடகை, வட்டி, சரக்குக் கையாளுகைச் செலவு, பராமரிப்புச் செலவு உள்ளிட்ட பல காரணிகள் விலை ஏற்றத்தை உருவாக்கியுள்ளன. ஆனாலும், இந்தக் காரணங்களை இப்படியே நியாயப்படுத்திக் கொண்டிருந்தால், இந்த உன்னதமான பணியில் பெரும் நிறுவனங்களின் அதிரடி வருகையைத் தவிர்க்க இயலாமல் போகும். (மேலும்....)

சிற்பியின்விம்பம் 3

கொடிபிடித்து கூச்சல் போடும் ஒருசிலபுலம்பெயர் தேசத்தவரே இதையும் தெரிந்து கொள்ளுங்கள். போரின்போது கொல்லப்பட்ட பொதுமக்கள் நிராயுதபாணிகள் சம்பந்தமாக உயர்த்தி குரல்கொடுத்து வருகிறீர்களே.  இந்தியராணுவத்தினருடனானபோரின் பின்னர்ஆயுதமற்ற நிலையில்சரண் அடைந்தபோராளிகள் மற்ரும் பொதுமக்கள் 2000க்கும்அதிகமானொர் சிறைபிடித்துபின் படிப்படியாகதினமும் 40,50,60.பேர்விகிதம் படுகொலை செய்யப்பட்டு அடையாளம் தெரியாமல் எரியூட்டிஅழிக்கப்பட்டனர் இதைஅந்தநாளைய உறுப்பினர்களைவைத்து உடனடியாக விசாரணைக்குழு அமைத்து திறந்தவெளி விசரணை நடத்தி குற்றவாளியை இனங்கண்டால்,அவ்விசரணைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல தமிழகம் உட்பட இந்தியாவும் முளுமையாக ஆதரிக்க வேண்டிய கடமையும் கடப்பாடும் ஏற்படும் மேலும் குற்றவளிகள் இனங்கணப்பட்டால் பிரித்தானியா உட்பட வெளிநாடுகளில் தலைமறைவாய் வாழ்பவர்களை வரவைத்து தண்டிக்கும் நிலைவரச் சந்தர்ப்பம் நிறையவே உண்டு புரிந்து கொள்ளவும்
- அன்புடன் க திரு.

ஈராக் இஸ்லாமிய ஆயுததாரிகள் பக்தாத் வரை முன்னேற முயற்சி

ஈராக்கின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மொசூல் ஈராக் இஸ்லாமிய தேசம் ஆயுதக் குழுவிடம் வீழ்ந்த நிலையில் நாட்டின் தலைநகர் பக்தாத் உட்பட மேலும் பல நகர்கள் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. "எமது சீற்றம் தொடரும் நாம் மேலும் முன்னேறுவோம்" என்று இசிஸ் என்று அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையின் பேச்சாளர் அபு+ முஹம்மத் அல் அத்னனி அந்த குழுவின் இணையதளம் ஊடே குறிப்பிட்டுள்ளார். "இந்த படை யெடுப்பு பக்தாத் மற்றும் கர்பலா வரை செல்லும். அதற்கு தயாராகவே இருக்கி றோம்" என்றார்.எனினும் 17 நிமிடங்கள் நீடிக்கும் ஒலி நாடா செய்தி குறித்து சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. நீங்கள் விடுதலை செய்த நிலத்தின் ஒரு கை அகல இடைவெளியைக் கூட விட்டுக்கொடுக்க வேண்டாம்" என்று அந்த ஒலிநாடா செய்தியில் இசிஸ் போராளி களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

ஜுன் 12, 2014

ஹிட்லர், முசோலினி, பிரபாகரன் படங்களுடன் பிரதமர் மோடி படம் பிரசுரிப்பு! பாலிடெக்னிக் முதல்வர் கைது!!

கேரளாவில் அரசு பாலிடெக்னிக் ஆண்டு மலரில் தீவிரவாதிகள், சர்வாதிகாரிகள் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாலிடெக்னிக் முதல்வர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிகிறது. நாடு முழுவதும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இந்த விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கேரள மாநிலம், திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளத்தில் அரசு பாலிடெக்னிக் உள்ளது. இங்கு 2012-13ம் ஆண்டுக்கான பாலிடெக்னிக் மலர் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இந்த மலரின் உள்பக்கத்தில் ‘negative faces’ என்ற தலைப்பில் தீவிரவாதிகள் பின்லேடன், அஜ்மல் கசாப், சர்வாதிகாரிகள் ஹிட்லர், முசோலினி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோரது படங்களுடன், பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

அர­சியல் தீர்­வுக்கு செல்­வதன் மூலமே சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­பட முடியும்

புலிகளசெய்த தவறைத்தானஅரசாங்கமும். செய்கிறது, தங்களதவறுகளதிருத்துவதனமூலமநெருக்கடிகளதவிர்த்துக்கொள்ளலாமஎன்றதெரிந்திருந்துமஆணவப்போக்குகொண்டபிரச்சனைகளகையாள்வது. தமிழ்பேசுமமக்களதஅரசியலபிரச்சனதீரும்போதபுலம்பெயர்ந்த புலிகளினநிகழ்ச்சி நிரலிலஇயங்குமகூட்டமைப்பினஆட்டமுமஅடங்குமஅதனாலசர்வதேசத்தினஅழுத்தமுமமறையும். ஐக்கியநாடசபையாலஇலங்கசம்பந்தமான நடத்தப்போகுமபோர்க்குற்றமநடவடிக்கஉடன்பாடஇல்லாத ஒன்றாக இருந்தாலுமஇலங்கஎன்ன செய்யவேண்டுமஅவதெரிவித்தாலஅதஎமதநாடசெய்யுமஎன்பதகொஞ்சமஅதிகப்படியான நம்பிக்கை.

(மோகன்)

பொருத்­த­மான அர­சியல் தீர்­வுக்கு செல்­வதன் மூலமே சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­பட முடியும்

சகல இன மக்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய அதி­காரப்பகிர்வில் அமைந்த அர­சியல் தீர்­வுத்­திட்டம் ஒன்­றுக்கு சென்றால் மட்­டுமே சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து இலங்­கை­யினால் விடு­பட முடியும் என்று அமைச்­சரும் முன்னாள் சர்­வ­கட்சிப் பிர­தி­நி­திகள் குழுவின் தலை­வ­ரு­மான பேரா­சி­ரியர் திஸ்ஸ விதா­ரண தெரி­வித்தார். அவ்­வா­றான அதி­காரப் பகிர்வில் அமைந்த பொருத்­த­மான அர­சியல் தீர்­வுக்கு செல் லும் பட்­சத்தில் சர்­வ­தேச அழுத்­தங்­க­ளி­லி­ருந்து இந்­தி­யாவே எம்மை விடு­விக்கும். சர்­வ­தேச மேடையில் இந்­தியா எமது பக்­கத்­தி­லேயே இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்­பிட்டார். இலங்கை விவ­காரம் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் சபையின் விசா­ரணை நடத்­தப்­ப­டு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. கொள்கை அடிப்­ப­டையில் அதற்கு இட­ம­ளிக்­கவே முடி­யாது என்றும் அமைச்சர் கூறினார். ஐக்­கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேர­வையின் 26 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்­ப­மா­க­வுள்­ளமை மற்றும் விசா­ரணை குழு அறி­விப்பு இடம்­பெ­ற­வுள்­ளமை தொடர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.(மேலும்....)

மோடி ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆபத்துவரும் - நடிகை நந்திதா தாஸ்...!!

நரேந்திரமோடி ஆட்சியின் கீழ் கருத்துச் சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அஞ்சுவதாக பிரபல நடிகையும் இயக்குநரும் எழுத்தாளருமான நந்திதா தாஸ் கூறினார். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் தான் இதை கூறுவதாகவும் நந்திதா தாஸ்“அவுட் லுக்’’ பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். “நான் உடனே எதிர்பார்ப்பதும் மிகவும் பயப்படுவதும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரான தாக்குதல் தான். மக்களின் மனதைமாற்றவும் அரசுகளை மாற்றவும் முடிகின்ற வகையில் மாறுபட்ட கருத்துகளை தெரிவிக்கவும் ஜனநாயக ரீதியிலும் கண்ணியத்துடனும் குரல் எழுப்பவும் வாய்ப்புஇருப்பதால் தான் ஜனநாயகம் நிலைபெற்றுள்ளது.
(மேலும்....)

ஈராக்கில் இஸ்லாமிய ஆயுததாரிகளிடம் வீழ்ந்த நகரிலிருந்து அரை மில்லியன் பேர் வெளியேற்றம்

ஈராக்கின் இரண்டாவது மிகப் பெரிய நகரான மொசூல் இஸ்லா மிய ஆயுததாரிகள் வசம் வீழ்ந்த தையடுத்து அங்கிருந்து சுமார் 500,000 மக்கள் வெளியேறி வரு வதாக புலம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள் ளது. இவ்வாறு நகரை விட்டு வெளியேறுவோரில் இராணுவத்தின ரும் அடங்குகின்றனர். மொசூல் நகரை கைப்பற்றி யிருக்கும் இசிஸ் என்று அழைக் கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையினர் அதன் சூழவுள்ள பகுதி களையும் ஆக்கிரமித்து முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் ஈராக் கின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இருக்கும் பெய்ஜp பகுதியையும் ஆயுததாரிகள் கைப்பற்றி இருப்பதாக புதிய செய்திகள் குறிப்பிடுகின்றன. அல் கொய்தாவின் ஒரு கிளை அமைப்பான இசிஸ், இப்போது கிழக்கு சிரியா, மேற்கு மற்றும் மத்திய ஈராக் ஆகிய பகுதிகளில் கணிசமான அளவுக்கு நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுதவிர ஈராக்கின் கிர்குக் மற்றும் சலாஹதீன் மாகாணங்களிலும் அந்த அமைப்பினர் முன்னேறி வருகின்றனர். எனினும் சிரியாவில் தற்போதைய நிகழ்வை பார்க்கும்போது மத்திய கிழக்கு குழப்பத்தில் மேற்குலகம் நேரடியாக பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று அவதானிகள் குறிப் பிட்டுள்ளனர்.

மருதமுனையின் பாரம்பரிய கைத்தொழிலான நெசவுத்துறை ஊக்குவிக்கப்பட வேண்டும்

சீம்பாறை மாவட்டத்திலுள்ள மருதமுனை பிரதேசத்தில் நெசவுத் தொழில் அபிவிருத்தி கண்டு வருகின்றது. இந்தியாவின் உற்பத்திகளையொத்த துணிகள். ஆடைகள் மருதமுனையில் உற்பத்தி செய்யப்படுகின்றமை இத்தொழிலின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மருதமுனை பிரதேச மக்களினால் பரம்பரை பரம்பரையாக மேற்கொள்ளப்பட்டு வரும் நெசவுக் கைத்தொழில் இன்று நவீன சவால்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் துரித வளர்ச்சி கண்டுள்ளது. நெசவுத் தொழிலில் மருதமுனை மக்கள் கொண்டுள்ள ஆர்வம், தேர்ச்சி என்பன தொழில் சிறப்புக்கு பிரதான காரணங்கள் எனலாம். சர்வதேச ரீதியில் நமது நாட்டுக்கு கீர்த்தியைப் பெற்றுத் தரும் நெசவுத் தொழிலையும். அதன் உற்பத்தியாளர்கள், பணியாளர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டுமக்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. (மேலும்....)

ஜுன் 11, 2014

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது சிறந்தது?

கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்துக்கு இம்மாதம் (யூன் -2014) 12ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல் நடைபெறவுள்ளது. கத்லீன் வைன் அம்மையார் (Kathleen Wynne)  தலைமையிலான லிபரல் கட்சியின் (Liberal Party)  சிறுபான்மை அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்கி வந்த அன்றியா கோவாத் (Andrea Howath)  அமை;மையார் தலைமையிலான நியு டெமக்கிறாற்றிக் கட்சி (New Democratic Party) தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் (வரவு செலவுத் திட்டத்தை ஆதரிக்க மறுத்ததால்) இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. (மேலும்....)

ஒண்ணுமே புரியல்ல உலகத்திலே......?

சர்வதேச விசாரணைக்கான சூழலில் “சகோதரப்படுகொலைகள்” பற்றி பேசுவது சரியா?

கிழக்கு மாகாணசபை தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் மூவர் தொடர்பில் அண்மைக்காலமாக எதிர்மறையான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்று கிழக்கை பீடித்துள்ள இந்த வைரஸ், நாளை வடக்குக்கும் பாய்ந்து பரவிப்படர்ந்து கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரையும் பதம் பார்த்து தமிழ் மக்களின் அரசியல் அடையாளமாகிய தமிழ் தேசியக்கூட்டமைப்பை மரணப்படுக்கையில் வீழ்த்தி விடும் பேராபத்து இருப்பதால், இந்த உயிர்கொல்லி கிருமியை சாகடிக்கும் விழிப்பு நிலையில் தமிழ் மக்கள் இருப்பது தம் தேகத்துக்கும், தேசத்துக்கும் தேசியத்துக்கும் நலம் பயக்கும். (மேலும்....)

விமான ரகசியங்கள்!

(ஜூரி )

விமானத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்பட்டு, உங்கள் முகத்துக்கு நேராக திடீரென ஆக்சிஜன் மாஸ்குகள் தொங்கும். விமானத்தின் கூரை முழுக்க ஆக்சிஜனாக நிரப்பியிருப்பார்கள். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தாங்கும் என்ற மிதப்பு வேண்டாம். அதிகபட்சம் அது 15 நிமிஷங்களுக்குத் தான். ஐயையோ! அவ்வளவுதானா என்று அலறவும் வேண்டாம். அதற்குள் பைலட், விமானம் பறக்கும் உயரத்தைக் குறைத்து ஆக்சிஜன் இருக்கும் காற்று மண்டலத்துக்குக் கொண்டுவந்துவிடுவார். எனவே, ஆக்சிஜன் மாஸ்கை முதலில் நீங்கள் மாட்டிக்கொள்ளுங்கள், குழந்தை மீது உள்ள பாசத்தில் அதற்கு முதலில் ஆக்சிஜனை வழங்க எத்தனிக்க வேண்டாம். குழந்தை உங்களைவிட அதிக வினாடிகள் ஆக்சிஜன் இல்லாமல் தாக்குப் பிடிக்கும். முதலில் நீங்கள் சுருண்டுவிழாமல் பார்த்துக்கொண்டு, பிறகு நிதானமாகக் குழந்தைக் கும் மாஸ்கைப் பொருத்துங்கள்.  (மேலும்....)

நான் எப்போது அடிமையாயிருந்தேன்!

(நேர்காணல்: புஸ்பராணி)

அது அரசியல் சித்தந்தப் பலமற்ற ஒரு வீரதீர மனநிலையும் பொறுப்பற்ற முட்டாள்தனமும் என்பதை நான் இப்போது ஒப்புக்கொள்வேன். ஆனால் அன்றைய நிலையில் வெகு சுலபமாகத் தனிநாட்டுக் கோரிக்கையின் பின்னால் தமிழர்களை அணிதிரட்டி ஆயுதப் போராட்டத்தின் மூலம் ஈழத்தை வென்றெடுக்கலாம் என்று நாங்கள் நினைத்தோம். 1975ல் நான் ஹட்டன் நகரில் ஒரு கூட்டத்தில் பேசியபோது எப்போது தமிழீழத்தை அடைவீர்கள் என்று என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நான் ‘இன்னும் அய்ந்து வருடங்களில் நாங்கள் ஈழத்தை வென்று விடுவோம்’ எனப் பதில் கூறினேன். அது உண்மையென்றும் நினைத்தேன். அந்தக் கூட்டத்தில் என்னிடம் இன்னொரு கேள்வியும் கூட்டணியின் ஆதரவாளர்களால் கேட்கப்பட்டது. தமிழரசுக் கட்சியாலும் பின்பு தமிழர் கூட்டணியாலும் வளர்க்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட இளைஞர்கள் கூட்டணியினருக்கு எதிராகவே திரும்புவது என்ன நியாயம் எனக் கேட்டார்கள். ‘நல்லாசிரியன் எல்லாக்காலமும் தவறிழையான் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை, இப்போது கூட்டணியினர் பாராளுமன்றப் பதவிகளிற்காகத் தமிழர்களின் உரிமைகளை அடகு வைக்கத் தயாராகிவிட்டார்கள்” என்றேன் நான். இந்த இடத்தில் நான் இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன். கூட்டணியினர் தமது அப்புக்காத்து மேட்டுக்குடிக் குணங்களை எந்த இடத்திலும் விட்டுக் கொடுத்தார்களில்லை. கூட்டணித் தலைவர்களில் பலர் மேட்டுக்குடிச் செருக்கும் திமிரும் கொண்டவர்கள் என்பதே எனது அனுபவம். (மேலும்....)

என்னது, விமர்சனமா!! எடடா துவக்கை!!!

உலக சமாதானம் வேண்டி நாடு நாடாக ஒரு சிறுபறை ஒன்றை முழங்கிக் கொண்டு திரிந்த ஒரு ஜப்பானிய புத்தபிக்கு தமிழ் பிரதேசம் வந்த போது உளவாளி என்று இந்த மூர்க்கரால் கொல்லப்பட்டார். இப்படி உளவாளிகள் என்று அப்பாவிகள் பலரைக் கொன்ற கொள்கைக்குன்றுகள் இன்று இலங்கையின் பேரினவாத அரசுடன் கொஞ்சமும் வெட்கமின்றி கொஞ்சிக் குலாவுகின்றனர். ராஜினி திரணகம மக்களின் மேல் அதிகாரத்தை செலுத்துபவர்களின் மேல், அராஜகம் செய்பவர்களின் மேல் விமர்சனத்தை வைத்தார். இலங்கை அரசு, இந்திய அரசு, இயக்கங்கள் என்று எல்லோரது அநியாயங்களையும் கேள்வி கேட்டார். மற்றவர் கருத்துக்கு மதிப்பளிக்கும் மாணிக்கங்கள் ஆயுதம் எதையும் தொட்டுக்கூடப் பார்த்திராத அந்த அபலைப் பெண்ணை அய்ந்தாறு பேர் சேர்ந்து கொன்றனர். (மேலும்....)

Norway, Main Venue For LTTE Terror Revival

(By Camelia Nathaniel)

After a hiatus of four years, an attempt to revive the LTTE was spearheaded by the group of Nediyawan-Irumporai. From its safe haven in Norway, a traditional base for LTTE operations, the Nediyawan-Irumporai Group is determined to plunge Sri Lanka back to conflict. Although enabled by two other factions – the Global Tamil Forum (GTF) in the UK and the Transnational Government of Tamil Eelam (TGTE) in the US – Nediyawan-Irumporai Group and the Headquarters Group in France want a return to violence. Of the four LTTE factions, Nediyawan-Irumporai Group is the largest and the most resourceful. It is ironic but true that the Nediyawan-Irumporai Group is partially subsidized by the Norwegian government. With its headquarters in the heart of Europe, Nediyawan inherited the massive LTTE global network that hitherto supported the violence in Sri Lanka. (more....)

விசாரணைக்கு ஒத்துழைக்க மாட்டோம்

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையினால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினரின் விரிவான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைப்பு வழங்க போவதில்லையென இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படுமென, இன்று ஜெனிவாவில் ஆரம்பமான  மனித உரிமைகள் பேரவையின் 26 ஆவது அமர்வின் போது, மனித உரிமை ஆணையாளர் நவி பிள்ளை, ஆற்றிய உரையினை அடுத்து இலங்கை பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ரவிநாத ஆரியசிங்க இதனை தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் இயக்கம் இலங்கையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச ரீதியில் இந்த அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குப்பை போடும் தமிழன்

அதனால்

'குட் பாய்' பெற்ற தமிழன்

குப்பைத் தமிழன் போட்ட குப்பைகளை இராணுவம் சுத்தம் செய்கிறது. நானும் தமிழ்தான் மில்லி நைற் அண்ணா. தமிழனின் மனம் எவ்வளவு குப்பையோ அது போலத்தான் செயலும். கனடாவின் குபெக் மாகாணத்தில் வல்மொறின் என்ற இடத்தில் ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கே வருடா வருடம் திருவிழா நடைபெறும். ஒருதடவை தேர்த் திருவிழாவிற்கு நானும் சென்றிருந்தேன். தேருக்கு பின்னால் சென்றுகொண்டிருந்த தமிழ்ப் பக்தகோடிகள் மோர் குடித்த கோப்பைகளை குப்பைத் தொட்டிக்குள் போடாமல் வீதியில் வீசிக்கொண்டு சென்றார்கள். வெள்ளையினத்தவர்கள் சிலர் அவைகளைப் பொறுக்கி பைகளுக்குள் போட்டுக்கொண்டே சென்றார்கள். அதே போல மொன்றியாலுக்கு அண்மையில் ஒரு கிறீஸ்தவ ஆலயம்.உருளைக்கிழங்கு மாதா கோவில் என்று அழைப்பார்கள். அங்கே திருவிழா செய்வதற்கு தமிழர்களுக்கு ஒருநாள் அனுமதி வருடாவருடம் கொடுக்கப்பட்டது. இந்தக் குப்பைத் தமிழர்கள் அங்கு சென்றூ தண்ணி அடித்தார்கள். சாப்பிட்ட கோப்பைகளையும், குளிர்பானம் அருந்திய கப்புகளையும். எலும்புத் துண்டுகள் எல்லாவற்றையும் அந்த ஆலசுற்றாடல் எங்கும் வீசினார்கள்.மது அருந்திவிட்டு தாறுமாறாக நடந்து கொண்டார்கள். மதுபோதையில் பற்றைக்குள் விழுந்து கிடந்த் தமிழ்க்குடிமகன் ஒருவரை பொலிசார் வந்து தூக்கிச்சென்றார்கள். அந்தப் பகுதி மக்கள் நகரசபையிடம் முறையிட்டதனால் தமிழர்கள் அந்த ஆலயத்தில் திருவிழா செய்யும் சந்த்ர்ப்பம் ஆலய நிர்வாகத்தினால் நீக்கப்பட்டது. வெளிநாடுகளிலேயே இப்படி நடந்துகொள்ளும் தமிழர்கள் நாட்டில் எப்படி இருப்பார்கள்? வற்றாப்பளை அம்மன் கோவில் திருவிழாவில் தமிழர்கள் வீசிய குப்பையை இராணுவம் சுத்தம் செய்வது உங்களுக்கு அவமானமாகத் தெரியவில்லை.

ஜுன் 10, 2014

செழியன்

தெளியவும் வேண்டும்! தெரியவும் வேண்டும்!!

(புஸ்பராணி)

நீண்ட நாட்களாக என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு விடயம். பல தடவை இது பற்றி எழுத நினைத்துத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்து விட்டேன் .இப்படியான பொய் கக்கும் தகவல்கள் கசிந்து ....எமது போராட்ட வரலாறு திரிபு படுத்தப்பட்டு புதிய சந்ததியினரைச் சென்றடையும்போது அது எவ்வளவு மோசமான நம்பிக்கையீனத்தை அவர்கள் மத்தியிலே உருவாக்கும் என்பதை மனதில் இருத்தி, வரலாறு படைப்போர் நேர்மைகொண்டு ,புனைவுகள் இன்றி நடந்த உண்மைகளையே மக்கள் முன் வைப்பார்களாக 'ஈழப்போராட்ட நாட் குறிப்புகளாக செழியன் எழுதியுள்ள ,"வானத்தைப் பிளந்த கதையில் வரும் ஒரு பொய்யான பகுதியைப் பார்த்ததும் திகைத்துவிட்டேன் .ஏனென்றால், அவர் குறிப்பிடும் சம்பவத்தில் நேரடியாகக் கலந்துகொண்டோரில் நானும் ஒருத்தி. நேரடிச் சாட்சிகளில் பலர் இன்னும் உயிருடனுள்ளனர். (மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

வடக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதித்து அந்த மக்களுக்கு சேவையாற்ற விக்னேஸ்வரன் முன்வரவேண்டும் - வீரகேசரி செய்தி

எங்கள் மக்களுக்கு சேவையாற்ற செய்யச்சொல்வதற்கு இவர் யார்? என்று சொல்லாதவரைக்கும் சந்தோ|ஷம். என்னது மக்களுக்கு சேவையா? இதைத்தானே ஈ.பி.டி.பி போன்ற கடசிகளும் சொல்கிறது. அதை நாங்க செய்திட்டா எங்கள் தனித்துவம் என்னாவது, எங்களுக்கு ஓட்டுப்போட்ட மக்களே இதைப்பற்றி வாயை திறக்கிறதில்லை, வந்திட்டேனும் ஆளாளுக்கு அட்வைஷ் பண்ணுவதற்க்கு,
என்ன விக்கி நான் சொல்லிறது சரிதானே?

(மோகன்)

தமிழ் பிரதேசங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் திரும்பியதற்கு கூட்டமைப்பின் ஆணவமே காரணம்

தமிழினத்திற்கு சாபக்கேடு த.தே.கூட்டமைப்புதான். இராமாயணத்தில் கூனியாகவும் பாரதத்தில் சகுனியாகவும் இயங்கும் இவர்களால் தமிழினம் விடிவுகாணுமா? திருமண வீட்டிற்குச் சென்று தாசிகளைப் பாராட்டும் த.தே.கூ. நல்லவைகளைப் பாராட்டும் என்று எதிர்பார்க்க முடியாதென பியசேன எம்.பி. தெரிவித்தார். அங்கு மாகணா சபை உறுப்பினர் கலையரசன் உரையாற்றுகையில், அன்று தொடக்கம் இன்றுவரை தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைக்காக கொண்ட கொள்கை மாறாமல் பலவித போராட்டங்களை முன்னெடுத்து இன்றும் போராடிவரும் ஒரே கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். தேர்தலில் த.தே.கூட்டமைப்பினர் நின்று தமிழ் மக்களது வாக்குகளால் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராகி அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் நீங்கள் பொத்துவில் முதல் நீலாவணை ஈறாகவுள்ள தமிழ்ச்சமூகம் நிம்மதியாக வாழ இதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான திட்டத்தையாவது முன்னெடுத்துள்Zர்களா? அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் தாய்மார்களுக்கு வாழ்வாதார உதவிகளைச் செய்துள்ளாரா என்று கேள்வியெழுப்பினார். (மேலும்....)

போர்க்கால பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் கொடுமைகள் மானிட சீரழிவுகள்: அகங்காரம், ஆதிக்கம், ஆணவம், ஆணாதிக்கம்.

(பாலா)

போரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றிய தரவுகள் எமது சமூகத்தில் குறைவாகவே இருப்பினும் வெளிக்கொணரப்பட்ட உண்மைகள் மனிதாபிமானமிக்க மக்கள் நெஞ்சைப் பிழிவன. பாதிக்கப்பட்டோரினது இன்னல்களும் வேதனைகளும் பாறாங்கல்லென அவர்கள் நெஞ்சில் கனக்கிறது. இன்னும் எவ்வளவு காலம் உயிர் வாழ்வது என்ற அங்கலாய்ப்புடன் இவர்கள் வாழ்க்கை நகர்கிறது. அங்கு ஒன்று இங்கு ஒன்று என நிதமும் நிகழும் தற்கொலைகளுக்குப் பின்னால் இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் அட்டூழியங்கள் கொடுமைகள் மௌனித்திருக்கும். எமது சமூகம் சார்ந்த பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதார முயற்சிகளுக்கும் அவர்களது மன அழுத்தங்களுக்கும் உதவுவது தொடர்பில் தமது அக்கறையை வெளிப்படுத்தியுள்ளனர். (மேலும்....)

மோடி உடை அணியும் பாணிக்கு அமெரிக்க ஊடகங்கள் புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி யின் உடை அணியும் பாணிக்கு அமெரிக்காவின் பிரபல ஊடகங்கள் புகழாரம் சூட்டியுள்ளன. பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட் டதில் இருந்து நாடு முழுவதும் சுற் றுப்பயணம் செய்த மோடி, ஒவ் வொரு மேடையிலும் விதவிதமான வண்ணங்களில் தைக்கப்பட்ட பைஜh மாக்களையும், அரைக் கை மற்றும் முழுக்கை குர்தாக்களையும் அணிந்து புதுப் பொலிவுடன் காணப்பட்டார். பாராளுமன்ற தேர்தலில் வென்று பிரதமரான பின்னர், உடைகள் வி'யத்தில் அதிக அக்கறை காட்டி வரும் மோடி, ஒரே நாளில் இரு வேறு உடைகளிலும் தோன்றி கலக்கி வருகிறார். அவரது இந்த உடை தேர்வு, உடைகளின் பாணியையும் அமெரிக் காவின் பிரபல நாளிதழ்கள பாராட்டி, புகழாரம் சூட்டியுள்ளன. சேற்றில் இறங்கி உழுபவனுக்கு கொவணத்திற்கே வழியல்லையாம். திரு நாட்டின் தலைவர் ஒரு நாளில் பல உடைகளை அணிகின்றாராம்.

ஜுன் 09, 2014

செய்தக்க அல்ல செயற்கெடும்!

இப்பதவிக்கு வருவதாய்த் தாங்கள் முடிவு செய்ததும், தீர்க்கதரிசனமாய்ச் சில முடிவுகளை எடுத்திருப்பீர்கள் என நினைந்தேன். 'எண்ணித்துணிக' எனும் வள்ளுவன் வாக்கை, நான் உங்களுக்குச் சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை. இதுவரை நடந்த போராட்ட வரலாறுகளை அலசி ஆராய்ந்து, புதிய பாதை அமைத்து இனத்தை வழிநடத்துவீர்கள் எனப் பெரிதும் எதிர்பார்த்தேன். தமிழர்கள் கொண்ட இலட்சியம், அந்த இலட்சியத்தில் இருந்த தவறுகள், இதுவரையான போராட்டப்பாதையில் நிகழ்ந்த பிழைகள், அப்பிழைகளைச் சரிசெய்து போராட்டத்தைப் புதுப்பிக்கும் வழி முறைகள், முடிந்த பாதிப்புக்களிலிருந்து மக்களை வெளிக்கொணர்ந்து, உரிமைப் போராட்டம் நோக்கி சமயோசிதமாய் நகர்த்தும் முறைகள் என்பவற்றோடு, வினைவலி, தன்வலி, மாற்றான்வலி, துணைவலி என்பவற்றையும் சீர்தூக்கி, நன் முடிவுகளால் வெற்றிப்பாதையில் இனத்தை விரைந்து நடைபோட வைப்பதற்காய், பலவற்றையும் சிந்தித்தே இப்பாரிய முடிவினை எடுத்திருப்பீர்கள் என, எண்ணி இறுமாந்தேன். ஆனால் என் எண்ணங்கள் மண்ணாகின. நீங்களும் சாதாரண அரசியல்வாதிகள் போல, யதார்த்தம் உணராது மக்கள் உணர்வுகளைத் தேவையின்றித் தூண்டி, வாக்குச் சேகரிக்க முயன்றீர்கள். தங்களின் பேச்சுக்களும் அறிக்கைகளும், தமிழர்களின் உரிமைப் போராட்டம் என்பது, சிங்கள மக்களுக்கு எதிரானது என்பதுபோன்ற தேவையற்ற விம்பத்தை உருவாக்கி, நடுநிலைகொண்ட சில சிங்களத் தலைவர்களையும் சிங்களப் பொதுமக்களையும் கூட, தமிழர்மேலும் தங்கள்மேலும் வெறுப்புக்கொள்ள வைத்தன. 'வெளிநாடுகளின் ஆதரவைக் கோருவேன்' என்றும், 'இது மூன்றாவது ஈழப்போர்;' என்றும் தங்களால் வெளியிடப்பட்ட தேர்தல் கோஷங்கள், தமிழர்களையும் சிங்களவர்களையும் வேறு வேறு விதங்களில் தூண்டின. (மேலும்....)

கராச்சி விமான நிலையத்தில் மோதல்: 21 பேர் பலி

பாகிஸ்தானின் மிகவும் சுறுசுறுப்பான விமான நிலையமான கராச்சி ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில்  இடம்பெற்ற மோதலில் 21 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆயுதங்கள் மற்றும் கிரேனட்டுகளுடன் விமான நிலையத்தின் சரக்கு பகுதிக்குள் புகுந்த தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் நேற்றிரவு 11.30 மணியளவில் மோதல் ஆரம்பமானது. இரு தரப்பினருக்கும் இடையில் சுமார் 5 மணிநேரம் மோதல்கள் இடம்பெற்றன. இதில் இரண்டு விமானங்களும் சேதமடைந்துள்ளன. இந்த சம்பவத்தில் தீவிரவாதிகள் 10 பேர் கொல்லப்பட்டதாகவும் பலியானவர்களில் விமான நிலையத்தின் பணியாளர்கள் இருவர் அடங்குவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) -1906-03-28

 "என் பாட்டிதான் மனித வாழ்வை எனக்கு முதன்முதலில் போதனை செய்தார். அவளது வாழ்க்கை அனுபவங்களிலிருந்து எனக்குச் சொன்ன ராஜா ராணிக் கதைகள்தான், எனக்கு அறிவுப் பாடம் நடத்தின." என்று கூறிய கோர்க்கி ,குழந்தைத்தொழிலாளியாக மாறிய காலத்தில் இருந்து அவர் தனது படைப்புகளைப் பென்சிலால்தான் எழுதினார். பின்னாளில் தன எழுத்துகள் பற்றி சொல்லும் போது "நான் எந்தக் கல்லூரிக்கும் செல்லவில்லை. உலகம் என்ற பெரிய பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு புத்தகமாகத் தோன்றினார்கள். அவர்களைத்தான் படித்தேன் "என்றார். சோசலிச யதார்த்தவாதத்தினதும் ,முற்போக்கு இலக்கியத்தின் வழிகாடியாகவும் திகழ்கின்றார். அவரின் "தாய்" உலகத்தில் அதிக மொழிகளில் வந்த நூலாகும்,தாய்' இருக்கும் வரை அவரின் நூல்களும் வாழும்.

ஐ.டி நிறுவனங்களும், தேர்தல் திருவிழாவும்.......

உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி இந்தியா என்றும், மக்களாட்சியின் விழுமியங்களை நாம் போற்ற வேண்டும் என்றும்... இம்மக்களாட்சியின் திருவிழாவான தேர்தலில் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வாக்களிக்காதவர்களுக்கெல்லாம் அரசு எவ்வித சலுகையும் கொடுக்கக்கூடாது என்றும் கூறிவரும் இந்த இந்திய நாட்டில் ஏப்ரல் தொடங்கி மே வரை நடைபெற்ற தேர்தலில் தங்களது சனநாயகக் கடமையான வாக்களிக்கும் உரிமையை மறுத்து அவர்களை வேலைக்கு வரச்செய்ததைத் தமிழகத்தில் பார்த்தோம். விப்ரோ (WIPRO), ஹெச் சி எல் (HCL), டெக் மகிந்திரா (TechMahindra), சுடக் ஷோ (Sodexho) 4 தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களூம்(சுடக் ஷோ தவிர்த்த) தேர்தல் நாளான ஏப்ரல் 24 அன்று பணிசெய்தன.  அதை அறிந்த தேர்தல் ஆணையம் அந்நிறுவனங்களுக்குச் சென்று ஊழியர்களை வெளியேற்றியது, அது மட்டுமின்றித் தேர்தல் நாளில் பணி செய்ததற்கு அந்நிறுவனங்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தன. (மேலும்....)

கொன்சலிற்றா விவகாரம்

அம்பலமானது பாதிரியின் புகைப்படங்கள்!

குருநகரில் மரணமான யுவதியின் மரணத்துடன் கிறிஸ்தவ பாதிரிகளிற்கு தொடர்பிருப்பது பெரும்பாலும் உறுதி செய்யப்பட்டு விட்டது. மரணமான கொன்சலிற்றாவுடன் பாதிரிகளில் ஒருவரான குயின்ரன் உடல்ரீதியிலான தொடர்பை பேணியிருக்கலாம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. யுவதியின் கையடக்கத் தொலைபேசியை ஆய்விற்குட்படுத்திய சமயத்தில் அதில் இருந்த புகைப்படங்கள் இருவரிற்குமிடையில் இருந்த நெருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. குயின்ரனின் படுக்கையறையில் இருவரும் ஒன்றாக புகைப்படம் எடுத்துள்ளனர். படுக்கையில் இருந்த பாதிரியை கொன்சலிற்றா புகைப்படம் எடுப்பதும், பாதிரிய தனது முகத்தை மறைப்பதும் பதிவாகியுள்ளது. அது தவிர, கொன்சலீற்றாவின் கையடக்கத் தொலைபேசிக்கு பாதிரியார் தனது ஏராளம் புகைப்படங்களை அனுப்பியிருப்பதும் வெளிப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தமிழ்பக்கத்திற்கு கிடைத்துள்ளன. (மேலும்....)

நாவாந்துறை மக்களுக்குப் பகிரங்க வேண்டுகோள்!

துறை முகங்களும், கடற்கரையோரப் பிரதேசங்களும் மீனவக் கிராமங்களுக்குப் பொதுவானையாக இருப்பது மிக அத்தியாவசியமானதும், தேவையானதும்கூட. தோணிகள், படகுகள் தரித்து நிற்கும் களக் கடலும், அதனைச் சார்ந்த கரையோரங்களும் தனியார் மயப் படுத்த முடியாததாகும். யாழ். தென்மேற்குக் கரையைப் பொறுத்தவரை கொட்டடியிலிருந்து குடாக்கரைவரை மீனவர்களின் இறங்குதுறையாகப் பாதுகாக்கப் பட வேண்டியதாகும். ஏற்கனவே பாதுகாக்கப் படவேண்டிய கல்லுண்டாய்க் கரையோரம் குப்பைத் தொட்டியாக்கப் பட்டுவிட்டது. எஞ்சியுள்ள நாவாந்துறைச் சந்தையான றாத்தலடியின் தெற்குப் பக்கத்திலிருந்து வடக்கே குடாக்கரை வரையுமுள்ள கடற்கரைப் பிரதேசங்களாவது பாதுகாக்கப் பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். (மேலும்....)

சின்னத்திரை நாடகங்கள்

வீட்டுக்குள்ளும் பல தீவிரவாதிகள்

 ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் பல தீவிரவாதிகள் ஊடுருவி இருக்கிறார்கள் என்றால் அது அதிர்ச்சியாகத்தானே இருக்கும்? ஆம் அது உண்மையும் கூட, சின்னத்திரை நாடகங்கள் என்ற ஒன்றின். வாயிலாக நம் எல்லோரின் மனதையும்,குறிப்பாக குழந்தைகளின் மனதை தீவிரவாத குணம் கொண்டவையாக இந்த சின்னத்திரை நாடகங்கள் மாற்றி வருகின்றன என்றால் மிகையல்ல. தீவிரவாதிகள் வசம் நீண்ட நாட்களுக்குப் பிணைக்கைதிகளாக இருப்பவர்கள், அதிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், அந்த தீவிரவாதிகளின் அருகாமையில் ஈர்க்கப்பட்டதன் அடிப்படையில் அவர்களின் அனுதாபிகளாகி விடுவார்கள். போதிய மனப்பக்குவம் அவர்களின் வளர்ப்பு முறையில் கிடைக்காததன் கோளாறு மற்றும் வெகுளித்தனத்தின் வெளிப்பாடுதான் இது.இது மருத்துவத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. (மேலும்....)

தகவல் தருமாறு கோரிக்கை

யுத்த காலத்தில் விடுதலை புலிகளால் புதைக்கப்பட்ட குண்டுகளை தோண்டி எடுத்து அதனுள் உள்ள டி.என்.டி ரக வெடிபொருட்களை  மீனவர்கள் மற்றும் ஏனைய நபர்களுக்கு விற்றதாக சந்தேகிக்கப்படும் நபரொருவரை கைது செய்வதற்கு பொலிஸார், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். தமீழீழ விடுதலை புலி உறுப்பினர் என கூறப்படும் சிறில் நிலங்க ஜீட் அன்ரனி(வயது 28) என்பவர் தொடர்பிலேயே பொலிஸார் தகவல் கோரியுள்ளனர். மன்னார் மடு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே மேற்படி நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார். இச்சந்தேக நபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் 0112451636 மற்றும் 0112451634 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பதிமூன்று படுத்தும் பாடு

(எம்.எஸ்.எம். ஐயூப்)

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது பதவிப்பிரமாண வைபவத்திற்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விடுத்த அழைப்பை இலங்கையின் ஆளும் கட்சியின் பலர் ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட பெரும் கௌரவம் என நினைத்திருக்கலாம். ஆனால் அந்த வைபவத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி இந்திய பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் மோடி, ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்காமலே விட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக் கூடும். ஏனெனில் மறக்கப்பட்டு இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்திருந்த ஒரு விடயம் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் காரணமாக மேலெழுந்து மீண்டும் அரசியல் அரங்கில் பிரதான தலையங்கமாக மாறியிருக்கிறது. அதாவது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பூரணமாக அமுலாக்க வேண்டும் என இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்தியமையையே இங்கு குறிப்பிடுகிறோம்.
 (மேலும்....)

ஜுன் 08, 2014

இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! (கடிதத் தொடர் - 10)

(வரதராஜப்பெருமாள்)

13வது திருத்தத்தை மாற்றி அதைவிடவும் கணிசமான அளவு சிறப்பான ஓர் அரசியல் யாப்பு ஏற்பாடுகள் இப்போதைக்கு - இன்னும் சில ஆண்டுகளுக்குள் கிடைப்பதற்கு ஏதாவது வாய்ப்புக்கள் உண்டா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி ஏதும் ஒரு மாற்றம் ஏற்படக் கூடிய வாய்ப்பை அனுமானிக்கவும் எனது அறிவோ அல்லது எனது அனுபவமோ இடமளிக்கவில்லை. எனக்குத் தெரிந்த வரை – புரிந்த வரை இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு இந்தியா என்றாலென்ன தமிழர்கள் மீது அனுதாபம் கொண்ட உலக நாடுகளென்றாலென்ன இந்த 13வது திருத்தத்தை மையமாக வைத்தே குரலெழுப்பப்போகின்றன. அதிகபட்சம் எதிர்வரும் பத்தாண்டுகளுக்குள்ளாக இலங்கைவாழ் தமிழர்களின் நியாயமான அரசியல் அபிலாஷைகளுக்கு இலங்கையில் அரசியல் யாப்பு வகையாக காத்திரமான ஓர் அரசியல் ஏற்பாடு நடைமுறைக்கு வரவில்லையெனில் அதன்பின்னர் தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது தேர்தல் மேடை அரசியல் நடைபெறுவதைத் தவிர வேறேதுவும் நடைபெற மாட்டாது என்பதே எனது அறிவுக்கு எட்டிய அபிப்பிராயம். இந்தியாவும் சர்வதேச சமூகமும் இலங்கைத் தமிழர்களை மறந்து போய் விடக் கூடியவை. அதற்குப் பின்னர் தமிழர்களின் தலைவர்கள் சுடுகாடு சுடுகாடாகச் சென்று கிடந்து புரண்டு அழுது புலம்பினாலும் அதனைக் கண்டு கொள்ள யாரும் இருக்க மாட்டார்கள். (மேலும்....)

தன்னை வெளியேற்றுவது தெரியாது படையை வெளியேற்றப் போகிறாராம்

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவதுதானாம் தனது குறிக்கோள். இது முன்னுக்குப் பின் முரணான அறிக்கை விடும் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனது சவால். ஐயாவை தமிழ்க் கூட்டமைப்சீபிலிருந்து வெளியேற்றுவதற்கு உள்ளே சதி நடக்குது. இது தெரியாமல் ஐயா வெளியே இவ்வாறான சவால்களை விட்டு வருகிறார். ஐயாவின்ர வேகத்தைப் பார்த்துப் பயந்துதான் சேம் சைட் கோல் போட்டு ஐயாவை அடக்கி வைத்திருக்கின்றனர். இல்லாவிட்டால் இப்போது இருக்கும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.ஒருவர் அடுத்த தேர்தலில் தோற்றுப் போய்விடுவாரே.

செய்தியும் சிந்தனையும் (7)

(அபிமன்யு)

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் தென்னாபிரிக்க மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சு இடம்பெறுவதற்கான சாத்தியம் உள்ளதாகவும், அதன்போது தீர்வுத்திட்டம் ஒன்றைத் தயாரித்துச் சமர்ப்பிப்பதற்கு கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளதாகவும், இந்தத் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து பொது மக்கள், பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கருத்துக்களை இந்த மாத இறுதிக்குள் கூட்டமைப்பினரிடம் சமர்ப்பிக்குமாறு அச்சுவேலியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளை அலுவலகத்தில் 04 ஜூன் 2014 இடம்பெற்ற சந்திப்பில் அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

சிந்தனை

ஐயய்யோ! இந்தத் தமிழர்களின் மத்தியில் என்னதான் நடக்கிறது?. யாராவது சொல்லுங்களேன்!!.

கடந்த மாதம், இனப்பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கே வரவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா தெரிவுத்துள்ளமை குறித்து அக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கருத்துக் கேட்டபோது, அவர்கள் தங்கள் அரசியலுக்காக ஒவ்வொன்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதற்கெல்லாம் பதில் கூறிக்கொண்டிருக்க முடியாது. நாங்கள்  நடத்தையால் அவர்களுக்கு உரிய பதிலடி கொடுப்போம் என இரா சம்பந்தன் காட்டமாகத்’ தெரிவித்தார் என்ற செய்தி வந்தது.

உரிய பதிலடியாக குறிப்பாக என்ன நடத்தைகூட்டணித் தலைவர் இரா, சம்பந்தன் எடுக்கப்போகிறார் என ஆவலுடன் விசாரிக்க முற்பட்டபோது, அவர் இந்தியாவில் வசிக்கும் தன் குடும்பத்தினரைப் பார்க்கப் போய்விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த நடத்தையைத்தான் உரிய பதிலடி என்று அவர் எண்ணிச் சொல்லியிருப்பாரோ என ஐயம் கொண்டபோது, இப்பொழுது சுரேஸ் பிரேமச்சந்திரன்: நாங்கள் தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தத்திற்குச் சமர்ப்பிக்கப்படவிருக்கும் தீர்வுத்திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து பொது மக்கள், பொது அமைப்புக்கள், புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் தத்தமது கருத்துக்களை என்ன? என்று தெரிவிக்கும்படியும், அதுவும் இந்த மாத இறுதிக்குள்  சமர்ப்பிக்குமாறும் கேட்கிறார்! தயவுசெய்து எல்லோரும் கவனத்தில் கொள்ளுங்கள்: இந்த மாதம் முடிய இன்னமும் மூன்று வாரங்களே இருக்கின்றன!. (மேலும்....)

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக இனியபாரதி நியமனம்

கிழக்கு  மாகாண சபைக்கான கடந்த தேர்தலின் போது  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட இனியபாரதி என்றழைக்கப்படும் புஷ்பகுமார் கிழக்கு மாகாண சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கிழக்கு மாகாண சபையின் அடுத்த அமர்வின் போது இவர், உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். கிழக்கு மாகாண சபையின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினரான துரையப்பா நவரத்தினராஜா தனது பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார். அவரது வெற்றிடத்திற்கே இனியபாரதி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண  கால்நடை அபிவிருத்தி மற்றும் விவசாய அமைச்சராக பதவி வகித்த துரையப்பா நவரத்தினராஜா, 2012ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில் போனஸ் ஆசனம் மூலம் மீண்டும் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கூட்டமைப்பை பொருட்படுத்தாத ஜயலலிதா

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உருகி, உருகி எழுதிய மடலுக்கு, தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா, தனது மனுவின் ஊடாக பதில் வழங்கியிருக்கின்றார். ஜெயலலிதாவின் பதிலால் ஆடிப் போனாராம் சம்பந்தன். இந்திய மத்திய அரசின் தீர்வு முயற்சிகளுக்கு உதவுமாறு சம்பந்தன் ஜெயலலிதாவை கேட்டிருந்தார். அதற்கு பதிலாக ஜெயலலிதாவோ, சம்பந்தனுக்கு அரசியல் வகுப்பெடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் ஜெயலலிதாவை கண்டுகொள்ளாத சம்பந்தன் குழுவினர், பி.ஜே.பி வெற்றி பெற்ற பின்னர் தங்களின் நிலைப்பாட்டை தடாலடியாக மாற்றிக் கொண்டனர். தமிழ் நாட்டில் தன்னை மிஞ்சி இனி எவருமே இலங்கை தமிழர் குறித்து அக்கறைப்பட முடியாதென்று அனைவரும் மூக்கில் விரல் வைக்குமளவிற்கு ஜெயலலிதா ஒரு தடாலடி அறிவிப்பை செய்திருக்கின்றார்.(மேலும்....)

முப்பது வருட கால அழிவும் 300 வருட கால அழிவும்

தமிழ் மக்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என ஆய்வு நடத்தி தீர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரிக்கப் போகிறதாம் தமிழ்க் கூட்டமைப்பு. சுரேஷ் எம்.பி.யின் இந்த அறிக்கையைப் பார்த்ததும் சிரிப்புத்தான் வந்தது. இவ்வளவு காலமும் தமிழரின் எதிர்பார்ப்பு தெரியாமலா தேர்தலில் போட்டியிட்டார்கள் அல்லது மக்கள் இவர்களுக்கு வாக்களித்தார்கள். பிரபாகரன் முப்பது வருடத்தை சீரழித்தால் இவர்கள் முந்நூறு வருடத்தைச் சீரழிப்பார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. தந்தை செல்வா அவர்கள் கூறியது போல தமிழ் மக்களை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஜுன் 07, 2014

முள்ளிவாய்காலும், தமிழ்மக்களும், தமிழ்தேசிய கூட்டமைப்பும்

(எழில்நேசன்)

எங்கள் பிரதேசத்தில் சாதாரண ஒரு வீடு கட்டுவதற்குக் கூட தென்னிலங்கையிலிருந்தே தொழிலாளர்கள் வருகிறார்கள். ஒன்று எம்மிடம்  தொழில் பயிற்சி உள்ளவர்கள் இல்லை. அடுத்து எம்மவர்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் பண்பை இழந்து விட்டார்கள். வெளி நாடுகளிலிருந்து வரும் பணத்திலேயே அநேகமானவர்களது வாழ்க்கை தங்கியுள்ளது. மேலும் பாரிய இயந்திர சாதனங்கள் இல்லை, அவற்றை இயக்கும் இயக்குனர்கள் இல்லை. மொத்தத்தில் எம்மவர்களிடம் மூலதனம் இல்லை. பாரிய மூலதனத்தைக் கொண்ட வர்த்தகர்கள் தொழில் வழங்குபவர்கள் இல்லை. நீண்ட யுத்தத்தின் தாக்கங்கள் இவைகள். இதனால் எமது பிரதேசத்தில் தென்னிலங்கைச் சக்கிகள் பாரிய மூதலீடுகளை செய்ய முயற்சிக்கின்றனர் .  எம்மவர்களிடம்  பெருந்தொகை பணத்தை கொடுத்து நிலங்களை கட்டிடங்களை வாங்குகின்றனர், வீடுகளை வாங்குகின்றனர், இதனை நாம் தெரிந்து கொண்டே போலித்தனமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறோம். (மேலும்....)

கடற்கரநிலங்களதனியாரமயமாக்காதே!

அரசாலும், முதலாளிகளாலும் மீண்டும் மீண்டும் அபாயங்களுக்குள் திட்டமிட்டே தள்ளப்படும் மீனவர்கள்

(தமயந்தி) 

ஏற்கனவே கடல் வளங்களையும், தொழில் செய்யும் உரிமைகளையும், கடல்மீது பயணம் செய்யும் சுதந்திரங்களையும் இலங்கை இந்திய அரசுகளிடமும், இந்திய ட்ரோலர் முதலாளிகளிடமும் பறி கொடுத்து விட்டு அரைப் பட்டினியோடுதான் வடபிரதேசத்து மீனவர்கள் அல்லற்படுகிறார்கள். தவிரவும் 2009இற்குப் பின் பல்லாயிரம் ஏக்கர் கடற்கரைப் பிரதேசங்கள் தனியார் மயமாக்கப் பட்டு, உல்லாச விடுதிகளாகவும், தனியார் சொத்தாகவும் ஆக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு, திருகோணமலை, மன்னார், யாழ் பிரதேசங்களின் கடற்கரையோரங்கள் பல ஆயிரம் ஏக்கர் தனியார் மயமாக்கப் பட்டதால் அப் பிரதேசங்களின் மீனவர்கள் பல்வேறு இன்னல்களுக்குள் தள்ளப் பட்டுள்ளார்கள். அது மட்டுமல்லாமல் கரையோரங்களில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஆமைகள் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் முற்றாக அழியும் நிலையும் ஏற்கனவே ஏற்பட்டுள்ளது. கடலோரக் கனிமங்கள் சூறையாடப் படுகின்றன. மொத்தத்தில் தேசத்தின் வளங்கள் தரகுகளாலும், சிறு முதலாளிகளாலும், பெரு முதலாளிகளாலும் கொள்லையிடப் படுகின்றன.  (மேலும்....)

மகளின் சாவுக்கு நீதி வேண்டும்

கொன்சலிற்றாவின் பெற்றோர் போராட்டம்

வழக்கு விசாரணைகளின் பின்னர் கொன்சலிற்றாவின் பெற்றோர்களிடம் இன்றைய வழக்கு விசாரணை தொடர்பாக கேட்ட போது, இன்று எங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை பொலிசாரே சாட்சியம் அளித்திருந்தனர். இந்த வழக்கு விசாரணைகளில் எமக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ என தற்போது எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எமது மகளின் மறைவுக்கு பின்னர் வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது தானாக முன்வந்த யாழில் உள்ள பிரபல சட்டத்தரணி ஒருவர் தான் இந்த வழக்கில் ஆஜராகி உங்களுக்கு நீதியை பெற்று தருவேன் என்று கூறினார். அதனை நாங்கள் நம்பி அவரை ஏற்றுகொண்டோம். அதன் பின்னர் அவர் கடந்த இரண்டு தவணைகளுக்கும் மன்றுக்கு சமூகமளிக்க வில்லை. நாம் அவரை தொடர்பு கொண்டபோது தனக்கு வேறு வழக்கு இருபதாகவும் தான் இந்த வழக்குக்கு சட்ட தரணியையும் ஒழுங்கு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். (மேலும்....)

பஞ்சாப் பொற்கோவிலுக்குள் பயங்கர வன்முறை

சீக்கியர்களின் புனித தலமாக விளங்கும் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள பொற்கோவிலுக்குள் நேற்று மிகப்பெரிய வன்முறை வெடித்தது. சீக்கியர்களில் இரு பிரிவினர்களுக்குள் ஏற்பட்ட இந்த வன்முறையில் பலரும் கைகளில் ஈட்டி, கத்தி போன்றவற்றை எடுத்துக் கொண்டு எதிர் தரப்பினரை பயங்கரமாக தாக்கினர். இதில் பலர் காயமடைந்தனர்.1984ல் பஞ்சாப் பொற்கோவிலில் இராணுவம் நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் 30 வது ஆண்டு நாள் நேற்றாகும். இது குறித்த விவாதக் கூட்டம் நேற்று பஞ்சாப் பொற்கோவிலில் நடந்தது.கூட்டத்தின்போது சிரோன்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் பங்கேற்றனர். இதில் புளுஸ்டார் ஒப்ரே'ன் தொடர்பாக ஐ.நா. குழு விசாரணை வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர். ஆனால் சிலருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்க முற்பட்டனர். இதில் வன்முறை வெடித்து சிலர் தங்கள் கையில் வைத்திருந்த நீள வாள் மற்றும் பல அடி நீளம் கொண்ட ஈட்டி போன்றவற்றால் பலரை வெறியுடன் ஓட ஓட விரட்டி தாக்கினர். பொற்கோவிலுக்குள் வெறியுடன் ஆயுதங்களை கையில் ஏந்தி சீக்கியர்கள் மோதிக் கொண்ட சம்பவம் ஒரு போர்க்களம் போல காணப்பட்டது. இந்தத் தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈழத் தமிழர்களுக்கு மோடியால் நன்மை விளையும் !

(டி.அருள் எழிலன்)

''நீங்கள் வெளியிட்டுள்ள இனப்படுகொலை குற்றவாளிகள் பட்டியலில், இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவின் பெயர் உள்ளது. ஆனால், ரணில் விக்கிரமசிங்கே பெயர் விடுபட்டுள்ளது. இனக்கொலையாளிகள் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?''

''சந்திரிகா குமாரதுங்க சிறிலங்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் என்ற முறையில், முப்படைகளின் மேன்மைத் தளபதியாகவும் இருந்தவர். ரணில், ராணுவ நடவடிக்கையில் நேரடியாக ஈடுபட்டது இல்லை. யாழ்குடா நாட்டின் மீதான 'சூரியக்கதிர்’, வன்னி பெரு நிலம் மீதான 'வெற்றி நிச்சயம்’ போன்ற ராணுவ நடவடிக்கைகள், சந்திரிகாவின் தலைமையில் நடந்தவைதான். சந்திரிகாவின் யுத்த முன்னெடுப்புகளின் தொடர்ச்சிதான் ராஜபக்ஷேவின் தலைமையில் உச்சம் பெற்று இன அழிப்புப் போராக முள்ளிவாய்க்காலில் முடிந்தது. தமிழ் இன அழிப்பு முயற்சிகள் ராஜபக்ஷேவால் மட்டும் மேற்கொள்ளப்பட்டவை அல்ல!'' (மேலும்....)

ஜுன் 06, 2014

முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (வீடியோ இணைப்பு)

முல்லைத்தீவிற்கு விஜயம் மேற்கொண்ட சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்த வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட தரப்பினரை இடைமறித்து தட்டயமலை கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமது கிராமத்திற்கு குடிநீர் மற்றும் வயல் நிலங்களுக்கான நீரைப் பெற்றுதருமாறு கோரியே தட்டயமலை மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்த கிராமமக்கள், முதலமைச்சர் பயணித்த வாகனத்தை இடைமறித்து எதிர்ப்பை வெளியிட்டனர். இழப்பதற்கு ஏதும் அற்ற மக்கள் எல்லாம் இருப்பவரகளிடம் நீதி கேட்டுப் போராட்டம் நடத்தினர். இறுதியில் முதல் அமைச்சருக்கு பாதுகாப்பிற்கு சென்ற இலங்கைப் பொலிசார் முதல் அமைச்சரையும், ஏனைய மகாண அமைச்சர்களையும், அவரின் குழாத்தையும் போராடும் மக்களிடம் இருந்து மீட்டுக் காப்பாற்றினர் (வீடியோ இணைப்பு 1......) (வீடியோ இணைப்பு 2.....) (வீடியோ இணைப்பு 3......)

The Dhamma School in Jaffna that Teaches Buddhism in Tamil

 (A Translation of the Article published in the Sinhala ‘Divaina’ newspaper of May 11, 2014)

At a time when archeological sites and artifacts were still being discovered as evidence of Buddhist heritage in the Jaffna Peninsula, the dark omen of terrorism started clouding the peace of the entire Buddhist nation. People in the peninsula drifted away from Buddhism not leaving even a scant clue evidencing its Buddhist heritage. This was a time when one could not even find one person who could recite a Buddhist prayer leave alone a monk that could deliver a Budddhist sermon. There was no one to spread the message of kindness and loving compassion to youth falling rapidly into the clutches of terrorism. (more......)

அம்பாறை, ஆலையடிவேம்பு இராணுவ முகாமில், புலிகளின் முன்னாள் தளபதி ராம்

காணாமல் போய்விட்டதாக கூறப்பட்ட விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதிகளுள் ஒருவரான ராம், தற்போது விடுவிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள ஆலையடிவேம்பு இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண செய்திகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அவர், தற்போது விடுதலைப் புலிகளது முன்னாள் போராளிகளை சந்தித்து தனது இயலாமையை எடுத்துக் கூறியுள்ளதுடன், கிழக்கை கல்வி ரீதியினில் மேம்படுத்த பங்கெடுக்க அழைப்பு விடுத்து வருவதாகவும் தெரிய வருகின்றது. தொடர்ந்தும் படையினரது கண்காணிப்பின் கீழேயே அவர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பயணத்தின் போதெல்லாம் அவர்களும் இணைந்து வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையிலேயே வெலிகந்த புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வளிக்கப்பட்டு ராம் விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாணவி செல்வி.டிமாஷா கயனகி

இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்

சம்பவம் - மாணவி செல்வி.டிமாஷா கயனகி, தனது கல்வி நடவடிக்கைகளுக்காக கொழும்பு செல்வதற்காக 24.05.2014 அன்று விடிகாலை 3.30 மணிக்கு, எல்பிடிய பஸ் நிலையத்துக்கு வந்தவேளை, அங்கு நின்றிருந்த இராணுவ வீரனொருவனால் அருகிலிருந்த பாழடைந்த கட்டிடமொன்றுக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். மாணவி அங்கிருந்து தப்பிக்க முற்பட்ட வேளையில் இராணுவ வீரனால் கத்தியால் பல தடவை குத்தப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். மோப்பநாயின் உதவி கொண்டு தப்பித்துச் சென்ற குற்றவாளியைக் கைது செய்துள்ள போதிலும், குற்றவாளி இராணுவத்தினன் என்பதால் 'இராணுவ வீரனது விருப்பத்துக்கு இணங்க மறுத்ததால் அவனுக்கு ஏற்பட்ட சடுதியான கோபத்தின் காரணமாகவே கொலை நிகழ்ந்துள்ளது. திட்டமிட்டுச் செய்ததல்ல' என இராணுவத்தரப்பும், இலங்கைக் காவல்துறையும் சம்பவத்தை மூடி மறைக்கவும், குற்றவாளியைத் தப்பிக்கச் செய்யவும் முயற்சிக்கிறது. 21 வயதான செல்வி.டிமாஷா கயனகி, இலங்கை, கட்புல ஆற்றுகைக் கலைகள் (University of Visual & Performing Arts) பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மாணவி. சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் கூட கொழும்புக்குச் சென்று, தலவத்துகொட பிரதேசத்திலுள்ள முதலாம் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையுள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்து வந்த, சமூக சேவை மனப்பான்மை கொண்ட இளம் பெண்.

இன்று முல்லைத்தீவில் போலிஸ் ஒருவரிடம்

மிகக் கேவலமாகப் பேச்சு வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ்..!

யுத்தத்தில் காணாமல் போன தங்களது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மாவட்டச் செலயகத்துக்கு முன்பாக காணாமல் போனோரின் உறவினர்கள் ஒன்றிணைந்து இன்று வியாழக்கிழமை (05) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை கவனயீர்ப்பு போராட்டத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனை அங்கிருந்த முதியவர் ஒருவர் தாக்க முற்பட்டார். இதனைத் தடுத்து நிறுத்திய பொலிசார் சம்பந்தப்பட்ட இருவரையும் விலக்கி வைத்தனர். இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனை அங்கே பாதுகாப்பு கடமையிலிருந்து பொலிஸார் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினரை, முதுகில் தொட்டு “நீங்கள் போங்கள்” என்று கூற…..பொதுமக்கள் மத்தியில் முதியவர் ஒருவர் தாக்க முயன்றதினால் ஆத்திரத்தின் உச்சியில் இருந்த, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் அப்பொலிசைப் பார்த்து, “ஏய், தொடாதே.. உதைச்சுப் போடுவேன்” என்று கூற, அப்பொலிசும் “உதைப்பது என்றால்…” என்று கேட்க, “நீ பிறகு வா சொல்கிறேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் கூற, அப்பொலிஸ் தன்னுடைய தொப்பியையும், துப்பாக்கியையும் மற்றைய போலீசிடம் கொடுத்து விட்டு நாடாளுமன்ற உறுப்பினரை தாக்க முற்பட, எனினும் அதற்குள் அங்கிருந்த ஏனைய பொலிஸார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாவலர் ஆகியோர் குறித்த முரண்பாட்டை தடுத்து விட்டனர். ஆயினும் அப்பொலிசினால் “பொலிசிட்ட காணுவத ஹரி உட்தோ” (“போலிசுக்கு அடிக்க வாரியா, கரிப் பு…. மகனே”) என்று மிகக் கேவலமாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரனுக்கு நேரடியாக ஏசப்பட்டது குறிப்பிடத் தக்கது. (வீடியோ இணைப்பு ......)

மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளப் போகிறது யாழ்ப்பாணம்! அதிர்ச்சி தரும் தகவல்!

கடந்த காலப் போரின் பின்னால் அந்தப் போர் நடந்த பூமியில் விஸ்வரூபம் எடுக்கப் போகின்றது இயற்கைக்கும் எமக்குமான கொடிய போர். இப் போர் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். அதவாது, உலகின் சகல மனிதர்களுக்கும் அவர்களது உயிர் வாழ்க்கைக்கும் மிகவும் அத்தியாவசியமானது குடிநீர். அந்த வகையில் யாழ்.குடாநாட்டிலும் இன்றுள்ள பிரச்சினைகள் எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு நீர் விநியோகமும் சிக்கலானதாக அமைந்துள்ளது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின் பல நாடுகள் சந்தித்த இயற்கை மாற்றத்துடனான எதிர்பார்ப்புக்கள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். அவ்வாறானதொரு குடிநீர் குறித்த பெரும் பிரச்சினைக்கு இப்போது யாழ். குடாநாட்டு மக்கள் சிக்கிக்கொண்டுள்ளார்கள். (மேலும்....)

ஒபாமாவின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்கிறார் மோடி

வெளியறவுக் கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும் படி ஜனாதிபதி; ஒபாமா, இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக் கொண்டார். இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி நியு+யோர்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார். அச்சமயத்தில் இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு நிகழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டி மோடி அமெரிக்கா வருவதற்கான விசாவை அந்நாடு ரத்து செய்திருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் மோடி அமோக வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பு விழாவின் போது சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து உலக நாடுகளின் தலைவர்கள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இதனையடுத்து அமெரிக்காவும் தன்னுடைய நிலையிலிருந்து இறங்கிவந்து மோடிக்கு தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா புதிய பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக உறுதி அளித்திருப்பது வெளியுறவுக் கொள்கையில் புதியமாற்றத்தை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜுன் 05, 2014

அனைவரையும் உள்வாங்கிய இயக்கமொன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியம்

(குமாரவடிவேலகுருபரன)

தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு,  சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம்  தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக, வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது, தொடர்ந்து அடக்குமுறைகளுக்கு உட்பட்டு வாழும் மக்கள், அதற்கு எதிராக செயற்பட முன்வராமல் இசைவாக்கம் அடைந்துவிடுவார்கள் என்றே தோன்றுகிறது. இதனைத்தான் இலங்கை அரசும் எதிர்பார்க்கின்றது. ஆகவே, புதிதாக சிந்தித்து, முற்போக்கான முறையில், பரந்துபட்ட அரசியலாக, தீர்வுகளை தரக்கூடிய வகையிலான சிந்தனைக்கொண்ட தலைமை (அனைவரையும் உள்வாங்கிய இயக்கம்) இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு அவசியமாக இருக்கிறது. (மேலும்....)

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் இல்லை  

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். இந்த விஷயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார். நரேந்திர மோடி இந்தியப் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு சென்ற இலங்கை ஜனாதிபதி தலைமையிலான குழுவினர், அவர் பதவியேற்ற அடுத்த நாள்இ அதாவது மே 27 ஆம் திகதியன்று நடத்திய  பேச்சுவார்த்தைகளின் போது இது தெரிவிக்கப்பட்டது என்று பீரிஸ் தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றபோது, இந்தியப் பிரதமருடன் அதிகாரப் பகிர்வு உட்பட விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் குறித்து இந்தியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாயின. இதற்கு இனத்துவ காரணங்களோ அல்லது வடகிழக்குப் பகுதி தொடர்பாக அரசு கொண்டுள்ள கொள்கைளோ காரணங்கள் இல்லை என்பதையும் தமது தரப்பு கூறியதாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதேவேளை, அரசியல் பிரச்சினைக்கான தீர்வு நாடாளுமன்றத் தேர்வுக் குழுவின் மூலமே ஏற்பட முடியும் என்பதை இலங்கைத் தரப்பு மீண்டும் இந்தியாவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

மெக்சிகோ மற்றும் அமெரிக்காவினது எல்லைக்கோடு

வெறும் சில யார் தூரங்களால் தலை கீழாய் இருக்கும் வேறுபாடு

ஜுன் 04, 2014

இருதரப்பிலும் இதயசுத்தி இருக்கிறதா?

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை உண்மையில் பிரச்சனைகளுக்கு  தீர்வுகாண விரும்புகிறதா? உணர்ச்சிகளுக்கு இடமளியாமல் யதார்த்தமாக தமிழர்களின் இருப்பை - சுயமரியாதை கண்ணியத்துடன் ஒரு வாழ்வை உறுதி செய்ய விரும்புகிறதா? அல்லது உணர்ச்சியூட்டும் யதார்த்தமல்லாத நாடகபாணியிலான அதே மாமூலான அரசியலை நடத்த விரும்புகிறதா? தமிழ் மக்களின் வாழ்வு இந்த மண்ணில் சிறப்பாக அமைய வேண்டும் என்ற அக்கறைகள் இருக்கின்றனவா? அதேபோல் இலங்கையின் சமூக வாழ்வின் சகல அம்சங்களிலும் தமிழர்கள் சிறுபான்மையினர் சமத்துவமாக வாழ்வதற்கான அக்கறைகள் இலங்கையின் ஆட்சி அதிகார மட்டத்தில் இருக்கிறதா ? அல்லது சிறுபான்மை மக்களை நிரந்தரமாக விரட்டிக் கொண்டும் அச்சுறுத்திக் கொண்டும் கீழ்ப்படிவை உறுதிப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும் என்ற காலம் காலமான பேரினவாத நிலைபாட்டில் தான் யுத்தம் முடிவடைந்த 5 ஆண்டுகளின் பின்னரும் இருக்கிறார்களா ? தமது தேர்தல் ,அதிகார வெற்றிகளுக்கு இந்த இனமேலாண்மை அரசியல் தான் உதவும் என்று கருதுகிறார்களா? (மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

13வது திருத்தசட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டுமென்பதே எமது நிலைப்பாடு
- பா.ஜ.கவின் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.
தனி ஈழத்துக்கான கருத்துக்கணிப்பை ஜ.நாவிடம் வலியுறுத்தப்படவேண்டும், பிரதமர் மோடியிடம் - தமிழக முதல்வர் ஜெயலலிதா
ஒரு அம்மணியின் தொலைநோக்கு பார்வையும்,
இன்னொரு அம்மணியின் தொல்லைநோக்குபார்வையும்

- மோகன்

சாதனை படைத்த சி.வி, பஞ்சத்தில் மக்கள்

வடமாகாண முதலமைச்சருக்கு மூன்றரை லட்சம் ரூபாய்

வடக்கில் தமிழ் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி இருக்கின்ற நிலையிலும் வன்னியில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகள் புட்டிப்பாலுக்கு அழுகின்ற நிலையிலும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உத்தியோபூர்வ இல்லத்திற்கும் அலுவலகத்திற்கும் மாதாந்தம் மூன்றரை இலட்சம் ரூபா வாடகை செலுத்தப்படுகின்றமை தொடர்பாக வடமாகாணத்திலுள்ள பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசு என்றிருக்கின் வடக்கு மாகாண சபையின் முதல்வர் இப்படி பெருந்தொகைப் பணத்தை வாடகையாகச் செலுத்துவதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் துரோகம் இழைக்கின்றது என்றும் வடக்கிலுள்ள புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். (மேலும்....)

உங்களால் மட்டும்தான் முடியும் கருணாநிதி!

(சமஸ் )

டுமையான விமர்சனங்களுடன் நரேந்திர மோடியை எதிர்கொள்பவர்கள்கூட ஒரு விஷயத்தில் இன்றைக்கு அவரை மெச்சுகிறார்கள். சமூகத்தில் பின்தங்கிய ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து, நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவியை நோக்கி அவர் உயரக் காரணமாக இருந்த அவருடைய கடுமையான உழைப்பு. சற்றேறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்ந்த கருணாநிதியின் குடும்பப் பின்னணி, தமிழகத்தின் அன்றைய சமூக நிலை ஆகியவற்றோடு மோடியின் சூழலை ஒப்பிட்டால், கருணாநிதியின் உழைப்பு இன்னும் அபாரமானது, அசாதாரணமானது. அதற்குப் பிறகும் கிட்டத்தட்ட மோடியின் வயதில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமான காலம் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார் கருணாநிதி. ஆனால், காலம் எத்தனை இரக்கம் அற்றது? கருணையே இல்லாமல் இன்னும் கருணாநிதியிடம் உழைப்பைக் கேட்கிறது! (மேலும்....)

விஜய் தொலைக்காட்சியின் தொடரும் அயோக்கியத் தனங்கள்.

கோபிநாத்தும் ஆண்டனியும் இந்த இழிநிலை விளையாட்டுக்களை நிறுத்த வேண்டும். 
(பிரியா பாபு)

நேற்று முன் தினம் விஜய் தொலைக்காட்சியின் நீயா? நானா?வில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் நீண்ட வற்புறுத்தலாலும் தோழிகள் என் வருகையை விரும்பியதாலும் நிகழ்வில் கலந்துக்கொண்டேன். ஆனால் தற்போது அந்த நிகழ்வில் கலந்துக்கொண்டதை குறித்து வெட்கப்படுகிறேன், .என் வாழ்வில் கலந்துக்கொண்ட மோசமான நிகழ்வாக இதை கருதுகிறேன் இந்நிகழ்வினாலும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்களாலும் காயம்பட்ட ,மனஉளைச்சலுக்கு ஆளான என் திருநங்கைகள் தோழிகள் மற்றும் எங்களுடன் தொடர்ந்து இணைந்து பணியாற்றுகின்ற சில தோழமைகளிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன். (மேலும்....)

கூட்டமைப்பின் விலாங்கு மீன் செயற்பாடுகள்....!

அதிகாரபகிர்வு சம்பந்தமான இலங்கை அரசுடன் கொடுத்த அறிக்கை சம்பந்தமான விளக்கம் பற்றி இதுவரையும் மக்களிடம் மூச்சுவிடாத கூட்டமைப்பு ஜெனீவா தீர்மானம் பற்றி மக்களிடம் விளக்ககூட்டம் நடத்துவதன் மர்மம் என்ன? ஜெனீவா தீர்மானம் சொல்வது இருதரப்பாலும் மீறப்பட்ட குற்றங்களை விசாரிப்பது என்பது, அதாவது புலிகளுக்கும் எதிராக என்பதும் அடங்கும். இதனால் வெகுண்டெழுந்த புலிப்பினாமி கூட்டமைப்பு எங்கே மக்கள் புலிகளுக்கும் எதிராக சாடச்சி சொல்லிவிடுவார்களோ என்று பயந்து மக்களிடம் புலிகள் சம்பந்தமாக மூச்சுவிடக்கூடாது என்று மறைமுகமாக எச்சரிக்கும் விளக்ககூட்டமே இது. (மேலும்....)

ஜுன் 03, 2014

இந்தியா இந்தியாவே தான்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் நடுப்பகுதி வரை, இந்தியாவில் நடைபெற்ற லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெறுவதற்கு ஊடகங்களே முக்கிய காரணமாக இருந்தன. சில அரசியல் விமர்சகர்கள் கூறுவதைப் போல், அந்தத் தேர்தல் வெற்றியானது, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் ஊழல் மலிந்திருந்தமை தான் காரணம் என்று கூற முடியாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஊழல் மலிந்திருந்தமை உண்மை தான். ஆனால், ஊழல் என்ற விடயம் மக்களால் விளங்கிக்கொள்ளக்கூடிய விடயமா என்பது சந்தேகமே. மக்கள் ஊழல் என்ற விடயத்தை புரிந்துகொண்டு தேர்தல்களின் போது நடந்து கொள்வதாக இருந்தால், இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற பல தேர்தல்களில் பெருமளவில் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவர்கள் படு தோல்வியடைந்திருக்க வேண்டும். ஆனால், ஊழலுக்குப் பெயர் போன சிலர், தமது மாவட்டங்களில் ஆகக் கூடுதலான வாக்குகளை பெற்றவர்களுள் அடங்கியிருந்தனர்.
(மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

வடக்கிலிருந்து இராணுவத்தைவெளியேற்றுவதே எமது குறிக்கோள் - சிவிவிக்னேஸ்வரன்

சந்தோஷம், எந்த குடிமகனும் இராணுவ கெடுபிடிக்குள் வாழ்வதை விரும்பமாட்டான், ஆனால் இராணுவம் தமிழ்பிரதேசங்களில் நிலைகொள்ள அவசியமில்லை என்ற அபிப்பிராயத்தை சாதாரண சிங்கள குடிமகனும் உணரும் அரசியலை செய்யுங்கள். முக்கியமாக சிவாஜிலிங்கம், அரியேந்திரன், சுரேஷ் பொன்றவர்களின் இனவாத பேச்சுக்களை நிறுத்த முயர்ச்சியுங்கள்.

- மோகன்

 

மத்திய அமைச்சரவை ஜூனில் விரிவாக்கம், மேலும் 25 பேருக்கு வாய்ப்பு

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை வரும் ஜூன் மாதம் 2வது வாரம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. மேலும் 25 இணையமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 26ம் தேதி 45 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. இதில் 23 பேர் கேபினட் அமைச்சர்கள். இந்நிலையில், அருண் ஜெட்லிக்கு நிதியமைச்சகத்துடன், பாதுகாப்புத்துறை கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல், ரவி சங்கர் பிரசாத் மற்றும் பிரகாஷ் ஜாவ்தேகர் ஆகியோருக்கும் கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. முக்கிய துறைகளான நிதி மற்றும் பாதுகாப்பு ஒருவருக்கே வழங்கப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், விரைவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் போது, பாதுகாப்புத்துறைக்கு புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. (மேலும்....)

உலக மக்களின் புகைப்படங்களை இரகசியமாக சேகரிக்கும் அமெரிக்கா

அமெரிக்க உளவுத்துறையால், உலகம் முழுவதும் இலட்சக்கணக்கானோரின் முகத்தோற்ற படங்கள் நாள் தோறும் ரகசியமாக சேகரிக்கப்பட்டு வருவதாக அந்நாட் டின் பிரபல பத்திரிகையான நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பான என்.எஸ்.ஏ.யின் முன்னாள் உளவாளி ஸ்னோடன் வெளி யிட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி, அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், "என்.எஸ்.ஏ. அமைப்பு, முன்பு தனது உளவு வேலைகளுக்காக கையடக்க தொலைபேசி வாயிலாக அனுப்பப்படும் குறுந்தகவல்கள், மின்னஞ்சல் செய்திகள், பிறரது தொலைபேசி உரையாடல்களை ஒட் டுக் கேட்டது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் உள்ள மக்களின் முகத்தோற்றம், கைரேகை பதிவுகள் உள்ளிட்டவைகளை சேகரித்து வரு கிறது. கடந்த 4 ஆண்டுகளாக புதிய தொழில்நுட்பத்தின் மூலம், மின்னஞ் சல், கையடக்க தொலைபேசி மூலம் அனுப்பப்படும் செய்திகள், சமூக வலை தளங்கள், வீடியோ கொன் பரன்சிங் ஆகியவற்றில் இருந்து முகத்தோற்ற படங்களை சேகரித்து வருகிறது. இந்த புதிய முறை மூலம், உலகம் முழுவதும் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பிற நாடுகளின் உளவாளிகளை அடையாளம் காண முடியும் என அமெரிக்கா கருதுகிறது.

ஒரு படுகொலை!  ஒரு பாடசாலை!!

ஒக்ரோபர் மாதம் ஏழாம் திகதி(2006) அதிகாலை ஏழு மணியளவில் தெல்லிப்பளை மஹாஜனாக்கல்லூரியின் முன்னாள் அதிபரான 68 வயதான கதிர்காமத்தம்பி நாகராஜா(மண்) பாசிஸப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அதிபராக இருந்த காலப்பகுதியான 1985 இலிருந்து 1998 வரையான காலம் வட கிழக்கிழக்கிலுள்ள பெருமளவிலான பாடசாலைகள் நடைபெற்று வந்த யுத்தம் காரணமாக மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொண்ட காலம். மஹாஜனாக் கல்லூரியும் பல நெருக்கடிகளை எதிர்கொண்டதோடு சிலகாலத்துக்கு தெல்லிப்பளையிலிருந்து இடம்பெயர்ந்து வேறு இடத்தில் இயங்கவேண்டிய பெரும் இடருக்கும் உள்ளாகியது. இவற்றையெல்லாம் சமாளித்து ஏறத்தாழ 12 ஆண்டுகளாக சோர்வின்றி அப்பாடசாலையை இயக்கியவர் நாகராஜா. ஆனால் அவர் தன் மரணத்தின்போது பெற்றதோ தமிழ் பாசிஸத்தினது தேசத்துரோகி என்ற அவமந்திர உச்சாடனம்.  (மேலும்....)

ஜுன் 02, 2014

யாழ் பொதுநூலகமும் சாதி வெறியர்களும்

ய்க்கிய தேசியக் கட்சியின் அப்போதைய அமைச்சர்களான காமினி திஸநாயக்க, சிறில் மத்தேயு, பெஸ்டஸ் பெரேரா ஆகியோரின் ஆணையின்பேரில் 1981ல் யாழ்பொது நூலகம் முற்றாக எரியூட்டப்பட்டது. 1994ல் சமாதானத்தின் பெயரால் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய சந்திரிகா பண்டாரநாயக்க ‘சமாதானத்திற்கான யுத்தத்தை’ நடாத்தி ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினார். சமாதானத்திற்குப் பதிலாக அடக்குமுறைச் சட்டங்கள், சிறைகள், செம்மணிப் புதைகுழிகளெனத் தமிழ் மக்களுக்கு வழங்கிய சந்திரிகா யாழ் மக்களுக்கு அரிசி, பருப்பு, மின்சாரமெனச் சில கவர்ச்சிகரமான திட்டங்களையும் வழங்கினார். அவற்றில் முக்கியமானது யாழ் பொதுநூலகப் புனரமைப்புத் திட்டம். சனாதிபதியின் சிறப்பு நிதி ஒதுக்கீடும் புனர்வாழ்வு அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீடுமாக மொத்தம் 120 மில்லியன் ரூபாய் யாழ் பொது நூலகத்தைப் புனரமைக்க ஒதுக்கப்பட்டது. (மேலும்....)

நச்சென்று நாலு வார்த்தை

சிங்கம் எமது நூலகத்தை எரித்தது, புலிகள் எம் இனத்தையே எரித்தது, சிங்கத்துக்கு வாலையையும், புலிக்கு முகத்தையும் காட்டி தப்பிப்பிழைத்த கூட்டமைப்பு எரியிறதில் புடுங்கி தின்று அரசியல் நடத்துகிறது

(மோகன்)

நகைச்சுவைக்குரிய ஒருவராக ஆகிக்கொண்டிருக்கும் விக்கினேஸ்வரன்

சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக, வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனை நிறுத்த வேண்டுமென முன்மொழிந்திருக்கிறார். இது குறித்து, ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆகிய எதிரணிகள் என்ன நினைக்கின்றன? என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதே ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மனோகணேசனும் இதற்கு ஆதரவாக பேசியதுடன், எதிர்க் கட்சியினர் விக்னேஸ்வரன் ஒரு தமிழர் என்பதை காரணம்காட்டி, இந்த முன்மொழிவை நிராகரிக்க மாட்டார்கள் என்று தான் நம்புகிறார் என குறிப்பிட்டிருந்தார். இது ஊடக மட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இம்மாதம் 7ஆம் திகதி ‘ராவய’ பத்திரிகையில் அரசியல் ஆய்வாளர் குசேல் பெரேரா எழுதியிருந்த கட்டுரை ஒன்றிலேயே இந்தக் கருத்தை முதன் முதலாக வெளியிட்டிருந்தார். இதனை அடியொற்றியே சுமந்திரன் இந்த விடயத்தை ஊடக அரங்கிற்கு கொண்டு வந்திருந்தார். (மேலும்....)

புலிகளின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவியின் பேட்டியை முன்வைத்து

(ப.வி.ஸ்ரீரங்கன்)

புலிகள் அமைப்பின் பன்முகச் செயற்பாட்டாளர் தமிழ்க்கவி அவர்களது பேட்டியைப் படித்ததிலிருந்து அவரைச் சந்திக்கவும்,அவரது எழுத்துக்களைத் தேடியெடுத்துப் படிக்கவும் ஆர்வம் மேலோங்குகிறது.இதுவரை ,அவர் நாம் அறியாதயெதையும் பேசவில்லை!கடந்த 30 ஆண்டுகளாகப் புலிகள் குறித்த எமது மதிப்பீட்டை , விமர்சனத்தை அவர் உறுதிப்படுத்துகிறார் -அவ்வளவுதாம்!நாம் பரந்தப்பட்ட மக்களை அண்மித்துப் புலிகள்மீதும்,தமிழ்த் தேசியத்தின் மீதும் வைத்த விமர்சனத்தைப் பலர் கிரகிக்கமுடியாது நம்மைத் துரோகியென எச்சரித்தனர்.ஆனால், நமது கருத்து உண்மையென்று நம் ஆயுட்காலத்திலேயே-நம் கண்முன்னேயே சாத்தியமாவது நமது மாற்றுக் கருத்துக்குக் கிடைத்த வெற்றியே! (மேலும்....)

குருநகர் தொடர்மாடி...

யாழ்ப்பாணத்தில் 100 மில்லியன் ருபா செலவில் மீளபுணர்நிர்மாணிக்கப்பட்டுள்ள குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை அடுத்த வாரம் அமைச்சர்களான விமல் வீரவன்ச, பசில் ராஜபக்ஷ, டக்லஸ் தேவானந்தா ஆகியோரினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இத் திட்டத்தில் 160 வீடுகள் கொண்ட 8 மாடி வீட்டுத் தொகுதிகள் உள்ளன. இவ் திட்டத்தில் மலசலகூட வசதிகள், சகல வீடுகளும் டையில் இடப்பட்டு கழிவு நீர், நீர்த்தாங்கி சனசமூக மண்டபம் ஆகியன மீள நிர்மாணிக்கப்பட்டுள்ளன. கடந்த யுத்த காலத்தில் செல் தாக்குதல்;களாலும்  குண்டுத் தாக்குதல் அகப்பட்டு மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் இவ் வீடமைப்புத் திட்டம் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  என்னதான் புனருத்தாரணம் செய்து மக்கள் குடியிருப்பாக மாற்றியிருந்தாலும் ஒரு காலத்தில் மக்கள் குடியிருப்பாக இருந்து பின்பு குருநகர் இராணுவ முகாமாக மாறிய அந்த நினைவுகளை மட்டும் அழிக்க முடியவில்லை. இது வெறும் இராணுவ முகாம் மட்டும் அல்ல.  இலங்கை இராணுவத்தின் மிகக் கொமடூரமான வதை முகாம் என்பது யாவருக்கும் தெரியும். பல உயிர்கள் சித்திரைவதையினால் பறிக்கப்பட்டதும் இவ் முகாமின் இரத்தக் கறை படிந்த வரலாறு ஆகும். ஈபிஆர்எல்எவ் இன் ஆரம்பகால உறுப்பினர் குமாரின் உயிரைக் குடித்ததும் இந்த இராணுவ முகாம்தான்.

LTTE Human Smuggling Links

(By Camelia Nathaniel)

The LTTE engaged in human smuggling, drug trafficking, bank and financial fraud and a range of other criminal activities to fund their operations. The LTTE used their own and other human smuggling networks to move its leaders, members and their families to other countries. The favoured destination for LTTE families to move were North America (Canada, US), Europe (UK and continental Europe) and Australia and New Zealand. According to the Toronto police Tamil task force, there were as many as 8,000 members of, “Tamil terrorist factions” in Toronto in 2000. In 2012, a Canadian analyst John Thompson suggested that the LTTE created a Sri Lankan Diaspora as a mechanism to maintain an international support structure. The authorities estimate the number of former LTTE fighting cadres living in Canada at several thousand. (more.....)

சட்டவிரோத ஆயுதங்களுடன் முன்னாள் போராளி கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத ஆயுதங்களை வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் இன்று(01) தெரிவித்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்தே சந்தேக நபரான கண்ணமுத்து யோகரா (48) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் விடுதலை புலிகள் அமைப்பில் இருக்கும் போது வீரமணி என்று அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனேரி குளத்து மடுவவைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் யானை வழங்கி எனும் வயல் பிரதேசத்தில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரிடம் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் இன்னும் இருப்பதாக விசாரணைகளில் தெரிவித்துள்ளதாகவும் அது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும் இவருக்கு எதிராக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தின் மூலம் பகிரங்க பிடியானை பிறப்பிக்கப்பட்ட நிலையில் தேடப்பட்ட நிலையில் தலைமறைவாக வாழ்ந்து வந்த நிலையிலயே இன்று பிற்பகல் வாழைச்சேனை பொலிஸ் நிலைய புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட ஜனநாயகத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தாமல் பயங்கரவாதியை நினைவு கூர முடியாது''

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை உறுப்பினர் குழுவொன்று கடந்த 29ஆம் திகதி எல். ரி. ரி. ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நினைவாக “முள்ளிவாய்க்கால் நினைவு” நிகழ்வை நடத்த மேற்கொண்ட முயற்சியை யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா கடுமையாக எதிர்த்துள்ளார். இதனால் குறித்த அந்தக் குழு உறுப்பினர்களுக்கு அந் நிகழ்வை நடத்த முடியாமல் போயுள்ளது. அப்பாவி தமிழ் மக்களைக் கொன்று, அவர்களின் சுதந்திரத்தை இல்லாமற் செய்த பிரபாகரனை நினைவுகூர்ந்து வைபவம் நடத்துவதானால் அதற்கு முன்னர் எல். ரி. ரி. ஈ. யினால் கொல்லப்பட்ட மற்ற அரசியல்வாதிகள் உட்பட தமிழ்ப் பிரமுகர்களும் நினைவு கூரப்பட வேண்டும் அவர்கள் நினைவு கூரப்படாத நிலையில் பயங்கரவாத தலைவரை நினைவு கூரும் வைபவத்தை நடத்த அனுமதிக்க முடியாது. துரையப்பா, அமிர்தலிங்கம் உட்பட தமிழ் மக்களுக்காக பெரும் சேவைகளை புரிந்த தலைவர்கள் பலர் எல். ரி. ரி. ஈ. யினரால் படுகொலை செய்யப்பட்டனர். 1983ம் ஆண்டிலிருந்து படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்துவதாயின் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை அனுமதிக்க முடியும் என யாழ். மேயர் கூறினார்.  இதனை மறுத்துரைத்த ரி. என். ஏ.யின் உறுப்பினர்கள் “அவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டால் கொல்லப்பட்ட துரோகிகளுக்கும் நாம் அஞ்சலி செலுத்தியதாக அர்த்தப்படும். அவ்வாறான ஒரு கொள்கைக்காக தமிழ் மக்கள் எமக்கு வாக்களிக்கவில்லை என தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கானா இன்று உதயம்

இந்தியா விடுதலை பெற்ற போது தெலுங்கு பேசும் மக்கள் 22 மாவட்டங்களில் பரவி இருந்தனர். இந்த 22 மாவட்டங்களில் 12 மாவட் டங்கள் அப்போதைய தமிழகமான சென்னை மாகாணத்திலும் மீதமுள்ள 9 மாவட்டங்கள் ஐதராபாத் சமஸ்தானத்திலும் இருந்தன. 1953ம் ஆண்டு மொழி வாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்ட போது சென்னை மாகாணத்தில் இருந்த 12 மாவட்டங்களையும் ஐதராபாத் சமஸ்தானத்தில் இருந்த 9 மாவட்டங்களையும் தனியாக பிரித்து 'ஆந்திரா" எனும் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. பிறகு ஆந்திராவில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. இந்த 23 மாவட்டங்களிலும் தெலுங்கு பேசப்பட்டு வந்தாலும் வட பகுதியில் உள்ள மக் கள் 'தெலுங்கானா' என்ற பெயரில் தனிப் பகுதி யாக செயல்படவே விரும்பினார்கள். 1969ம் ஆண்டு தனித் தெலுங்கானா கோரி போராட்டம் வெடித் தது. கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரராவ் தலைமையில் போராட்டம் தீவிரமானது. (மேலும்....)

ஜுன் 01, 2014

இலங்கையின் மாகாணசபைகளை மக்களுக்குப் பயனுடையவைகளாக ஆக்குவதற்கு ஏதாவது வழியுண்டா! கடிதத் தொடர் – 9

(அ. வரதராஜப்பெருமாள்)

சிங்களத் தேசவாதிகள் இலங்கையில் செயற்பட்டுவரும் மாகாண சபைகளை தேவையற்ற செலவுகளை உண்டாக்குகிற வெள்ளை யானைகள் என்கிறார்கள். அதற்கு எதிராக, தமிழ்த் தேசவாதிகள் அதே மாகாண சபைகளை உள்ளடக்கம் எதுவுமில்லாத வெங்காயங்கள் என்கின்றனர். இதில் எது சரி? எது பிழை? என்பதற்கப்பால் இரு பகுதியிரும் மாகாண சபைகளை எப்படி இல்லாமற் பண்ணுவது என்பதில் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது மட்டும் சந்தேகத்திடமின்றித் தெரிகின்றது. எவரினதும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், மாகாண சபைகள் இலங்கையின் அரசியல் அமைப்பில் ஒரு பிரிக்க முடியாத பகுதியாகிவிட்டன என்பதுவும் யதார்த்தமாகும்.  இலங்கையின் மாகாணசபைகளுக்கான அதிகாரங்கள் பற்றிக் குறிப்பிடுகையில் இங்கு  அனைத்து மாகாண சபைகளுக்கும் பொதுவாக உள்ள மூன்று சட்டங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.  (மேலும்....)

யார் இந்த குசந்தன் மாஸ்ரர்? முழுமையான தகவல்கள்!

அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது. தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோதும், சில மாதங்களிலேயே விமானப்படையில் இணைக்கப்பட்டிருந்தார்.  (மேலும்....)

இதுதான் நிஜமான தரமான ரீமிக்ஸ். ஏனைய பல ரீ மிக்ஸ் பாடலையும், இசையும் கொலை செய்யும் முயற்சிகளே

”விடுதலைப் புலிகள் முற்றாக அழிந்தனர் சருகுப் புலிகளே இப்போது உள்ளனர்” - பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகளை இலங்கை அரசு முழுமையாக தோற்கடித்து விட்டது. இப்போது விடுதலைப் புலிகள் என்று யாரும் கிடையாது. ஆனால், ‘சருகுப்புலிகளை’ நடமாட விட்டுள்ளது இலங்கை அரசு” என்று கூறியுள்ளார், இலங்கை வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசன். “இன்னமும் விடுதலைப் புலிகள் உள்ளார்கள் என்று வெளிநாடுகளுக்கு காட்டுவதற்காக, தம் வசம் உள்ள சில சருகுப்புலிகளை, விடுதலைப்  புலிகளாக நடமாடவிட்டு, நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு”  என்றும் கூறியுள்ளார், முன்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் வடக்கு மாகாண சபையில் விவசாய அமைச்சராக உள்ள பொ.ஐங்கரநேசன். என்னது? விடுதலைப் புலிகள் இல்லையா? அப்போ, வெளிநாடுகளில் உள்ள நெடியவன் படையணி, விநாயகம் அணி, இன்னும் பெயர் தெரியாத அணிகள் எல்லாம், ‘சருகுப்புலிகள்’ என்றா சொல்கிறார் இவர்? இந்த விவசாயத்துறை அமைச்சர் ஐரோப்பா பக்கம் போனால், இவரையே உரமாக்கி விவசாயம் செய்து விடுவார்களே அங்குள்ள வீர வேங்கைகள்! சரி வெளிநாட்டுப் புலிகளை விடுவோம் இவர் யாராம்?. முன்னாள் புலி ஒறுப்பினர்தானே!. அமைச்சரே! கவனம் கோவிக்க போகினம் அனந்தியும் சிறீதரனும்....இன்னும் இவர் போன்ற வகையறாக்களும்.

யாழ் நூலக எரிப்பும் சரவணப்பொய் கையும்!...

1981 மே 31 நல்லிரவு வேளை யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்ட  தமிழினத்தின் வரலாற்றுப்பண்பாட்டு படுகொலையின் சூத்திரதாரி; யார் என்று தெரியுமா? சரவணபாவன் எம். பி யின் தந்தை ஈஸ்வரபாதம் தமிழின விரோத ஐக்கிய தேசிய கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். சிங்கள அரசு என்று இன்று சரவணபவான் கூறி வரும் அதே அரசின் சேவகனாக தொழில் புரிந்து வந்த ஓர் போலிஸ் அதிகாரிதான் இவரது தந்தை ஈஸ்வரபாதம். யாழ் கொக்குவில் சம்பியன் வீதியில் இருந்தது சரவணபவானின் வீடு. 1981 மே 31 மாலை வேளை சரவணபாவின் கொக்குவில் வீட்டில் ஒரே கூத்தும் கும்மாளமும். அன்றைய ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர் காமின திசநாயக்கா தலைமையில் தென்லிலங்கையில் இருந்து வந்த காடையர் கூட்டம் அந்த வீட்டு முற்றத்தில் குடி போதையில் கூத்தடித்துக்கொண்டிருந்தனர். சரவணபாவானுக்கு அப்போது 28 வாலிப வயது. தந்தை ஈஸ்வரபாதத்துடன் இணைந்து மது போத்தல் உடைத்து காடையர்களுக்கு விருந்து பரிமாறினார் சரவணபாவான். (மேலும்....)

கொபி அனானுக்கு விசா உயர் மட்டத்தில் சர்ச்சை

இலங்கை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஜக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் நியமிக்கப்படவுள்ள முன்னாள் ஜ.நா. செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இந் நாட்டுக்கு வருவதற்கு விசா வழங்குவது தொடர்பாக அரச சிரேஷ்ட தலைவர்கள் மத்தியில் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விசாரணைக்குழுவின் தலைவராக கொபி அனான் நியமிக்கப்பட்டால் அவருக்கு கட்டாயமாக இலங்கை வர விசா வழங்க வேண்டுமென அரசின் சில அமைச்சர்கள் தெரிவிக்கின்றனர். இருந்தும் மறு தரப்பினர் இலங்கைக்கு விசாரணைக்கென வரவுள்ள எவருக்கும் விசா வழங்குவதில்லை என்ற நிலைப்பாடு கொபி அனானன் விடயத்திலும் கடைப்பிடிக்க வேண்டுமென்ற கருத்தைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எப்படியிருந்தும் இது தொடர்பாக அரசாங்கம் இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

'ராஜபக்‌ஷே வருகையை எதிர்த்தது தவறு!'' - ஹரிஹரன்.

மோடியின் மேடைப் பேச்சுக்களை நாம் உற்றுக் கவனித்தால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியப் பாரம்பரியத்தின் வேர்களை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் ஊறிப்போய் இருப்பதை அதில் நாம் உணர முடியும்.  அந்த உணர்வுதான், சார்க் நாடுகளின் தலைவர்களை அவருடைய பதவியேற்புக்கு அழைக்க வைத்துள்ளது. இந்திய ரத்தத்தில் ஊறிப்போய் உள்ள பாரம்பரியப் பழக்கத்தின்படி விடுக்கப்பட்ட அழைப்பாக மட்டுமே இதைப் பார்க்க வேண்டும். பக்கத்து வீட்டுக்காரனோடு தீராத பகை இருந்தாலும், நம் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைப்போம் அல்லவா? அதுபோன்றதுதான் இந்தச் செயல். (மேலும்....)

 

உலகின் எந்தவொரு மூலையிலிருந்தும் புத்துயிர்பெற முடியாத நிலையில் புலிகள் அமைப்பு முடக்கம்

(எஸ். சுரேஷ்)

வெளிநாடுகளில் இருந்துகொண்டு விடு தலைப் புலிகளுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முயன்று வரும் புலி ஆதரவாளர்கள் முன்னெப்போதும் இல்லாதவாறு பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்றுள்ள உலக நாடுகள் பலவும் அந் நாடுகளில் வாழ்ந்துகொண்டே பயங்கரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து துணைபோகும் இலங்கையரை நாடு கடத்தி இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஆரம் பித்துள்ளன. போலியான தகவல்களை வழங்கி உலக நாடுகள் பலவற்றிலும் குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் புகலிடம் பெற்று வாழ்ந்துகொண்டே புலிகளுக்கு நிதி திரட்டலுடன் வேறு வழிகளிலும் உதவி, உள்நாட்டில் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்க முயலும் சகலரையும் அந்தந்த நாடுகளிலிருந்து வெளியேற்ற பல நாடுகள் தீர்மானித்துள்ளன. (மேலும்....)

உடன்பாடு இல்லாவிடினும் முரண்பாடு கிடையாது ஹக்கீம் - மாவை குழு பரஸ்பரம் பேச்சுவார்த்தை

தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் உயர்மட்டக் குழுவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸின் உயர்மட்டக் குழுவுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கல்முனையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.“பரந்தளவில் முஸ்லிம் காங்கிரஸ¤க்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மிடையில் கொள்கை அடிப் படையில் உடன்பாடுள்ளது. அரசியல் ரீதியான கூட்டான செயற்பாடுகள் குறித்து நாம் தொடர்ந்து பேசுவோம்” இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூம் ஹக்கீம் தெரிவித்தார். எதிர்காலத்தில் பிரச்சினை யில்லாத அணுகுமுறை பற்றித் தீர்மானித்தோம். தேசிய ரீதியான இணக்கப்பாடு தொடர்பில் தொடர்ந்தும் பேசுவோம். அனைத்து விடயங்களிலும் தேசிய மட்டத்தில் இணக்கமாக வேலை செய்ய உடன்பாடுகள் காண்போம். கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

துவங்கிய வேகத்தில் முடங்கிய ஆம் ஆத்மி !

மிக குறுகிய காலத்தில் துவங்கப்பட்ட ஆம் ஆத்மி என்னும் அரசியல் கட்சி, டெல்லி சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டு 28 இடங்களில் வெற்றியும் பெற்றது. ஆட்சி அமைப்பதற்கு போதிய 36 இடங்கள் இல்லையென்றாலும், எதிரும், புதிருமாக இருந்த காங்கிரஸ் வலியப் போய் தனது 8 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொடுத்து கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சி பீடத்தில் அமர்த்தியது. ஆம் ஆத்மியின் இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை தேசம் முழுவதுமுள்ள ஊழலுக்கு எதிரான மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். (மேலும்....)

மோடியின் வெற்றி

பதறிப் போய் நிற்கும் தமிழ்க் கூட்டமைப்பு

இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றிருக்கும் நரேந்திர மோடி அவர்களின் அபார வெற்றி எவருக்கெல்லாம் மகிழ்ச்சியை கொடுத்தது, ஆனால் யாரெல்லாம் துக்கத்தில் இருக்கின்றனர் என்பதை நாமறியோம் பராபரமே! ஆனால் கூட்டமைப்பினர் கதிகலங்கிப் போய் கிடக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சி ஸ்தானத்தைக் கூட தக்கவைத்துக் கொள்ள முடியாது தள்ளாடும் இந்திய காங்கிரஸ் கட்சி கூட இந்தளவிற்கு கதி கலங்கியிருக்காதாம். கூட்டமைப்பினர் மத்தியில் ஏனாம் இந்தக் கலக்கம்? காங்கிரஸ் ஆட்சியின் போது இலங்கை தொடர்பாக இந்தியாவின் நடவடிக்கைகள் பலவற்றை தங்களது ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக அல்லவா கூட்டமைப்பி னர் பறைசாற்றி வந்தனர். இப்போது அதில் பெரிய இடி விழுந்து விட்டது. உண்மையில் முன்னர் இடம்பெற்ற விடயங்களும் கூட்டமைபபினரின் நடவடிக்கைகளுக்கும் ஒரு தொடர்பு மில்லை என்பது அரசியல் தெரிந் தவர்களுக்கு விளங்கும். இலங்கையின் மீது அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட இரண்டு பிரேரணைகளுக்கு காங்கிரஸ் தலைமையிலான இந்தியா ஆதரவளித்திருந்தது. (மேலும்....)

ஒரு உறவு அழைக்குது மறு உறவு தடுக்குது!

புதிய ஊரில் புதிதாக ஒரு வீடு கட்டுகிறோம். புது மனை புகு விழாவிற்கு நமது உற்றார். உறவினர் நண்பர்களை மட்டுமல்ல, அண்டை அயல் வீட்டுக்காரர்களையும் அழைக்கிறோம். காரணம் அதன் மூலம் அவர்கள் நமக்கு அறிமுக மாகிறார்கள். நண்பர்களாகிறார்கள். நமக்கு அவசியம் அவசரம் என்றால் முதலில் வருவது அயலவர்கள்தான். உறவினர்கள் அல்ல. சில வேளை நாம் வீடு கட்டும் காலத்தில் அடுத்த வீட்டுக் காரர்களோடு சில மோதல் உரசல் இருந்திருக்கலாம். அதை எல்லாம் நாம் பொருட்படுத்துவதில்லை. நல்ல நிகழ்ச்சிக்கு அனைவரும் வரவேண்டும் பங்கு பெறவேண்டும் என்பதே நோக்கம். ஆகவே அழைக்கிறோம்.  (மேலும்....)

மாபியா கும்பல்களையும் “பாதிக்கும்” பொருளாதார நெருக்கடி

உலகப் புகழ்பெற்ற “காட்பாதர்” என்ற நாவலை எழுதிய மரியோ புஸோ கூட இந்த நிலையை கற்பனை செய்திருக்க மாட்டார். உலகில் தொடரும் பொருளாதார நெருக்கடி இத்தாலியின் (மாபியா சட்டவிரோதக் கிரிமினல்) கும்பல்க ளையும் பாதித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இத்தாலியின் மூத்த பொலிஸ் அதிகாரி அலெஸ்ஸாண்ட்ரோ பான்சா, கூறுவது உண் மையாக இருக்குமானால், இந்தப் பொருளாதார மந்த நிலை, இத்தாலியில் இருக்கும் சட்டவிரோத மாபியாக் கும்பல்கள் “பாதுகாப்பு தருகிறோம்” என்ற பெயரில் நடத்தும் பண வேட்டை மோசடிகளையும் பாதித்துவிட்டிருக்கிறது.

மாபியா கும்பல்களையும் “பாதிக்கும்” பொருளாதார நெருக்கடி

உலகப் புகழ்பெற்ற “காட்பாதர்” என்ற நாவலை எழுதிய மரியோ புஸோ கூட இந்த நிலையை கற்பனை செய்திருக்க மாட்டார். உலகில் தொடரும் பொருளாதார நெருக்கடி இத்தாலியின் (மாபியா சட்டவிரோதக் கிரிமினல்) கும்பல்க ளையும் பாதித்திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. இத்தாலியின் மூத்த பொலிஸ் அதிகாரி அலெஸ்ஸாண்ட்ரோ பான்சா, கூறுவது உண் மையாக இருக்குமானால், இந்தப் பொருளாதார மந்த நிலை, இத்தாலியில் இருக்கும் சட்டவிரோத மாபியாக் கும்பல்கள் “பாதுகாப்பு தருகிறோம்” என்ற பெயரில் நடத்தும் பண வேட்டை மோசடிகளையும் பாதித்துவிட்டிருக்கிறது.  (மேலும்....)

அகம்பாவத்தை வெளிப்படுத்திய ஆற்றலில்லா அரசியல் தலைமை

இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் தன்னுடன் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளாதது மட்டுமல்லாது அது தொடர்பாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் அனுப்பியிருந்த பதில் கடித மும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் வழமை போன்று விடுத்த அறிக்கையும் இவர்களது உண்மையான சுயரூபம், ஆற்றலும் விவேகமும் இல்லாத அரசியல் தலைமை, அவர்களது அகம்பாவம் என்ப வற்றை முழு உலகிற்குமே தெளிவாக வெளிக்காட்டியது. (மேலும்....)

 

உனக்கு நாடு இல்லை என்றவனைவிட நமக்கு நாடே இல்லை என்றவனால்தான் நான் எனது நாட்டை விட்டு விரட்டப்பட்டேன்....... 

 


rajaniThiranagama_1.jpg

ராஜினி திரணகம

MBBS(Srilanka)

Phd(Liverpool, UK)

'அதிர்ச்சி ஏற்படுத்தும் சாமர்த்தியம் விடுதலைப்புலிகளின் வலிமை மிகுந்த ஆயுதமாகும்.’ விடுதலைப்புலிகளுடன் நட்பு பூணுவது என்பது வினோதமான சுய தம்பட்டம் அடிக்கும் விவகாரமே. விடுதலைப்புலிகளின் அழைப்பிற்கு உடனே செவிமடுத்து, மாதக்கணக்கில் அவர்களின் குழுக்களில் இருந்து ஆலோசனை வழங்கி, கடிதங்கள் வரைந்து, கூட்டங்களில் பேசித்திரிந்து, அவர்களுக்கு அடிவருடிகளாக இருந்தவர்கள்மீது கூட சூசகமான எச்சரிக்கைகள், காலப்போக்கில் அவர்கள்மீது சந்தேகம் கொண்டு விடப்பட்டன.........'

(முறிந்த பனை நூலில் இருந்து)

(இந் நூலை எழுதிய ராஜினி திரணகம விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் முக்கிய உறுப்பினரான பொஸ்கோ என்பவரால் 21-9-1989 அன்று யாழ் பல்கலைக்கழக வாசலில் வைத்து சுட்டு கொல்லப்பட்டார்)

Its capacity to shock was one of the L.T.T.E. smost potent weapons. Friendship with the L.T.T.E.  was a strange and self-flattering affair.In the course of the coming days dire hints were dropped for the benefit of several old friends who had for months sat on committees, given advice, drafted latters, addressed meetings and had placed themselves at the L.T.T.E.’s  beck  and call.

From:  Broken Palmyra

வடபுலத் தலமையின் வடஅமெரிக்க விஜயம்

(சாகரன்)

புலிகளின் முக்கிய புள்ளி ஒருவரின் வாக்கு மூலம்

பிரபாகரனுடன் இறுதி வரை இருந்து முள்ளிவாய்கால் இறுதி சங்காரத்தில் தப்பியவரின் வாக்குமூலம்

 

தமிழகத் தேர்தல் 2011

திமுக, அதிமுக, தமிழக மக்கள் இவர்களில் வெல்லப் போவது யார்?

(சாகரன்)

என் இனிய தாய் நிலமே!

தங்கி நிற்க தனி மரம் தேவை! தோப்பு அல்ல!!

(சாகரன்)

இலங்கையின் 7 வது பாராளுமன்றத் தேர்தல்! நடக்கும் என்றார் நடந்து விட்டது! நடக்காது என்றார் இனி நடந்துவிடுமா?

(சாகரன்)

வெல்லப்போவது யார்.....? பாராளுமன்றத் தேர்தல் 2010

(சாகரன்)

பாராளுமன்றத் தேர்தல் 2010

தேர்தல் விஞ்ஞாபனம்  - பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்......

நடந்த வன்கொடுமைகள்!

 (fpNwrpad;> ehthe;Jiw)

சமரனின் ஒரு கைதியின் வரலாறு

'ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்.' வெகு விரைவில்...

மீசை வைச்ச சிங்களவனும் ஆசை வைச்ச தமிழனும்

(சாகரன்)

இலங்கையில்

'இராணுவ' ஆட்சி வேண்டி நிற்கும் மேற்குலகம்,  துணை செய்யக் காத்திருக்கும்; சரத் பொன்சேகா கூட்டம்

(சாகரன்)

ஜனாதிபதி தேர்தல்

எமது தெரிவு எவ்வாறு அமைய வேண்டும்?

பத்மநாபா ஈபிஆர்எல்எவ்

ஜனாதிபதித் தேர்தல்

ஆணை இட்ட அதிபர் 'கை', வேட்டு வைத்த ஜெனரல் 'துப்பாக்கி'  ..... யார் வெல்வார்கள்?

(சாகரன்)

சம்பந்தரே! உங்களிடம் சில சந்தேகங்கள்

(சேகர்)

அனைத்து இலங்கைத் தமிழர்களும் ஒற்றுமையான இலங்கை தமது தாயகம் என மனப்பூர்வமாக உரிமையோடு உணரும் நிலை ஏற்பட வேண்டும்.

(m. tujuh[g;ngUkhs;)

தொடரும் 60 வருடகால காட்டிக் கொடுப்பு

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பாடம் புகட்டுவார்களா?

 (சாகரன்)

 ஜனவரி இருபத்தாறு!

விரும்பியோ விரும்பாமலோ இரு கட்சிகளுக்குள் ஒன்றை தமிழ் பேசும் மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.....?

(மோகன்)

2009 விடைபெறுகின்றது! 2010 வரவேற்கின்றது!!

'ஈழத் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பாசிசத்தின் உதிர்வும், ஜனநாயகத்தின் எழுச்சியும்'

 (சாகரன்)

சபாஷ் சரியான போட்டி.

மகிந்த  ராஜபக்ஷ & சரத் பொன்சேகா.

(யஹியா வாஸித்)

கூத்தமைப்பு கூத்தாடிகளும் மாற்று தமிழ் அரசியல் தலைமைகளும்!

(சதா. ஜீ.)

தமிழ் பேசும் மக்களின் புதிய அரசியல் தலைமை

மீண்டும் திரும்பும் 35 வருடகால அரசியல் சுழற்சி! தமிழ் பேசும் மக்களுக்கு விடிவு கிட்டுமா?

(சாகரன்)

கப்பலோட்டிய தமிழனும், அகதி (கப்பல்) தமிழனும்

(சாகரன்)

சூரிச் மகாநாடு

(பூட்டிய) இருட்டு அறையில் கறுப்பு பூனையை தேடும் முயற்சி

 (சாகரன்)

பிரிவோம்! சந்திப்போம்!! மீண்டும் சந்திப்போம்! பிரிவோம்!!

(மோகன்)

தமிழ் தேசிய கூட்டமைப்புடன் உறவு

பாம்புக்கு பால் வார்க்கும் பழிச் செயல்

(சாகரன்)

இலங்கை அரசின் முதல் கோணல் முற்றும் கோணலாக மாறும் அபாயம்

(சாகரன்)

ஈழ விடுலைப் போராட்டமும், ஊடகத்துறை தர்மமும்

(சாகரன்)

அடுத்த கட்டமான அதிகாரப்பகிர்வு முன்னேற்றமானது 13வது திருத்தத்திலிருந்து முன்னோக்கி உந்திப் பாயும் ஒரு விடயமே

(அ.வரதராஜப்பெருமாள்)

மலையகம் தந்த பாடம்

வடக்கு கிழக்கு மக்கள் கற்றுக்கொள்வார்களா?  

 (சாகரன்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.!

(அ.வரதராஜப்பெருமாள்)

 

 

அமைதி சமாதானம் ஜனநாயகம்

www.sooddram.com