Contact us at: sooddram@gmail.com

 

பங்குனி 2011 மாதப் பதிவுகள்

பங்குனி 31, 2011

இன்று காலை வடமராட்சிக் கிழக்கு உடுத்துறைக் கடலில் துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக் குண்டுகளுடன் மர்மப் படகு!

இன்று காலை வடமராட்சிக் கிழக்கு, முல்லைத்தீவு போன்ற கரையோரப் பகுதி மக்கள் மீது படையினர் கோவமாக நடந்துகொண்டதோடு, மக்கள் அனைவரையும் பொதுமைதானத்தில் நிறுத்தி வீடுவீடாக சோதனை மேற்கொண்டுள்ளனர்மக்களையும் சோதனைக்குள்ளாக்கி மிகவும் சிரமப்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச் சோதனைக்கு அடிப்படையான காரணம் உடுத்துறைக் கடலில் மர்மமான படகு கண்டுபிடிக்கப்பட்டமையே ஆகும். இச்சர்சைக்குரிய படகை படையினர் தமக்கு நெருக்கமான இளைஞர்கள் சிலருக்குக் காண்பித்துள்ளனராம். (மேலும்....)

பங்குனி 31, 2011

இந்தியாவின் மக்கள்தொகை 121 கோடி, உலக மக்கள்தொகையில் 17.5 சதவீதம்

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகை 18 கோடிக்கும் மேல் அதிகரித்து 121 கோடியாக உயர்ந்துள்ளது. இது உலகின் மக்கள்தொகையில் 17.5 சதவீதமாகும். புதிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. எனினும் 90 ஆண்டுகளில் முதன்முறையாக வளர்ச்சி விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 62.37 கோடி ஆண்களும், 58.65 கோடி பெண்களும் இந்தியாவில் உள்ளனர். 2001-2011 வரையிலான காலகட்டத்தில் 18 கோடிக்கும் அதிகமாக மக்கள்தொகை அதிகரித்துள்ளது.  2011-ல் வளர்ச்சி விகிதம் 17.64 சதவீதம்.  2001-ல் இது 21.15 சதவீதமாக இருந்தது. (மேலும்....)

 

பங்குனி 31, 2011

 

22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் ஆறு மாதத்திற்கு நீடிப்பு

கலைக்கப்படாத 22 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாத காலத்துக்கு நீடிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் திகதி வரையில் நீடிக்கப்படுகிறது. 2011 ஜுலை 30ஆம் திகதியுடன் பதவிக்காலம் முடிவடையும் 22 உள்ளூராட்சி சபைகளும் டிசம்பர் 31ஆம் திகதியுடன் காலாவதியாவதற்கு 2011ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க அவசர நிலை சட்டத்தின் கீழ் உள்ளூராட்சி நிறுவனங்கள் முகாமைத்துவ கட்டளையின்கீழ் அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது. இதன்படி மேற்படி 22 உள்ளூராட்சி சபைகளினதும் பதவிக்காலம் நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமான அறிவித்தல் 29ஆம் திகதி நள்ளிரவு வெளியிடப்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 31, 2011

கூட்டணி அரசை மக்கள் ஆதரிக்க மாட்டார்கள் - ஜெயலலிதா

தமிழகத்தில் கூட்டணி அரசை மக்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் தேவை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார்கள் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார். மாநில விவகாரங்களில் ஒரு தனிக் குடும்பத்தின் ஆதிக்கத்தால் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றார் அவர். தமிழகத்தில் திமுக அரசுக்கு காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. திமுக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸும் அரசில் இணையலாம் எனக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அதைச் சொல்லும். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என ஜெயலலிதா நம்பிக்கை தெரிவித்தார்.

பங்குனி 31, 2011

ஒட்டுசுட்டானில் மீள்குடியேற்றம் நாளையுடன் பூர்த்தி

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில் நாளையுடன் (1) மீள்குடியேற்றப் பணிகள் பூர்த்தியடைவதாக முல்லைத்தீவு அரச அதிபர் பத்திநாதன் கூறினார். ஒட்டுசுட்டானில் உள்ள 27 கிராம சேவகர் பிரிவுகளில் 26 இல் மக்கள் மீள்குடியேற்றப் பட்டுள்ளனர். எஞ்சியுள்ள ஒரே ஒரு கிராம சேவகர் பிரிவான மணவாளன் பட்டமுறிப்பில் நாளை 86 குடும்பங்களைச் சேர்ந்த 237 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர். இவர்கள் மெனிக்பாம் நலன்புரி முகாமில் இருந்து அழைத்து வரப்படவுள்ளனர். இது தவிர கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பில் உள்ள 22 கிராம சேவகர் பிரிவுகளில் மாத்திரமே மக்களை மீள்குடியேற்ற வேண்டியுள்ளதாக வும் அரச அதிபர் கூறினார். நேற்று முன்தினம் கருநாட்டுக்கேணி கிராம செயலாளர் பிரிவில் 99 குடும்பங்களைச் சேர்ந்த 197 பேர் மீள் குடியேற்றப்பட்டனர். மேலும் 9 கிராம செயலாளர் பிரிவுகளில் எஞ்சியுள்ளதோடு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில் 13 கிராம சேவகர் பிரிவுகளில் மிதிவெடிகள் அகற்றப்படுகின்றன.

பங்குனி 31, 2011

பாகிஸ்தானை 29 ஓட்டங்களால் வீழ்த்தி

இலங்கையுடனான இறுதிப் போட்டியில்  விளையாட இந்திய அணி தகுதி

பாகிஸ்தானுடனான அரையிறுதிப் போட்டியில் 29 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி இலங்கையுடனான இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாக டெண்டுல்கர் தெரிவானார். இதேவேளை பாகிஸ்தான் அணித் தலைவர் சஹீட் அப்ரிடி இந்திய நாட்டுக்கும், ரசிகர்களுக்கும், இந்திய அணியினருக்கும் பாராட்டுத் தெரிவித்தார். உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று மொகாலியில் நடைபெற்ற அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் நாணயச் சூழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இந்திய அணியில் அஷ்வினுக்கு பதிலாக ஆஷிஸ் நெஹ்ரா சேர்க்கப்பட்டார். இந்த போட்டியை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி ஆகியோர் பார்வையிட் டனர். இந்திய - இலங்கை அணிகள் மோதும் இறுதிப் போட்டி எதிர்வரும் சனிக்கிழமை மும்பாய் வெங்கடே மைதானத்தில் இடம்பெறுகிறது. (மேலும்....)

பங்குனி 31, 2011

Cost of Libya Intervention $600 Million for First Week, Pentagon Says

One week after an international military coalition intervened in Libya, the cost to U.S. taxpayers has reached at least $600 million, according figures provided by the Pentagon. U.S. ships and submarines in the Mediterranean have unleashed at least 191 Tomahawk cruise missiles from their arsenals to the tune of $268.8 million, the Pentagon said. U.S. warplanes have dropped 455 precision guided bombs, costing tens of thousands of dollars each. A downed Air Force F-15E fighter jet will cost more than $60 million to replace. And operation of the war craft, guzzling ever-expensive fuel to maintain their positions off the Libyan coast and in the skies above, could reach millions of dollars a week, experts say.

பங்குனி 31, 2011

பதவியில் 29 ஆண்டுகள் நீடித்து உலக சாதனை படைத்த மேற்குவங்க சபாநாயகர்

உலகத்திலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு தொடர்ந்து 29 ஆண்டுகள் மேற்குவங்க மாநில சபாநாயகராக பணியாற்றிய ஹசிம் அப்துல் ஹலிம், மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு “கவலை அளிக்கும் வேலையை” தொடர போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மேற்குவங்க சபாநாயகராக இருப்பவர் ஹசிம் அப்துல் ஹலிம், வயது 75 இம்மாநில சட்ட சபையில் தொடர்ந்து 29 ஆண்டுகள் சபாநாயகராக பணியாற்றி உலக சாதனை படைத்துள்ளார். அடுத்த அரசு பொறுப்பேற்கும் வரை இவர் தான் அம்மாநிலத்தின் சபாநாயகர் நாட்டை உயர் தொழில்நுட்பம் ஆக்கிரமித்துள்ள நிலையில், இவரது அறையில் மட்டும் தாத்தா காலத்து தொலைபேசி, பழங்காலத்து பெக்ஸ் என ஆச்சரியம் அளிக்கிறது. (மேலும்....)

பங்குனி 31, 2011

கிளர்ச்சிப் படையுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விசேட பிரதிநிதி நியமனம்

கடாபி நாட்டைவிட்டு வெளியேறுவாதாயின் அவருக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என இத்தாலி வெளியுறவு அமைச்சர் பஹான்கோ பெடினி தெரிவித்தார். கடாபி லிபியாவில் இருப்பது அவருக்கு பாதுகாப்பில்லை என்பதை அவர் விரைவில் புரிந்துகொள்வார் என மேற்படி மாநாடு முடிவில் நடந்த ஊடகவியலாளர் கூட்டத்தில் இத்தாலி வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை லிபிய கிளர்ச்சியாளர்க ளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா விசேட பிரதிநிதி ஒன்றை நியமித்துள்ளது. இந்த பிரதிநிதி கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான பெங்காசிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் என அமெரிக்க அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தன்படி திரிப்போலியில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரி கிறிஸ் ஸ்டீபன் கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். (மேலும்....)

பங்குனி 31, 2011

Reflections by Comrade Fidel

NATO’s FASCIST WAR

You didn’t have to be clairvoyant to foresee what I wrote with great detail in three Reflection Articles I published on the Cuba Debate website between February 21 and March 3: “The NATO Plan Is to Occupy Libya,” “The Cynical Danse Macabre,” and “NATO’s Inevitable War.”  Not even the fascist leaders of Germany and Italy were so blatantly shameless regarding the Spanish Civil War unleashed in 1936, an event that maybe a lot of people have been recalling over these past days.  Almost 75 years to the day have passed since then, but nothing that has happened over the last 75 centuries, or even 75 millenniums of human life on our planet can compare. (more....)

பங்குனி 31, 2011

மும்பை தாக்குதல் கைதிகளிடம் விசாரணை, பாகிஸ்தான் சம்மதம்

சம்ஜவுதா குண்டு வெடிப்பு, மும்பை பயங்கரவாத தாக்குதல் ஆகிய சம்பவங்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக, இருநாட்டு உள்துறை செயலர்களுக்கும் இடையே ஹொட்லைன் தொலைபேசி வசதி ஏற்படுத்தப்படும். மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு பாக்கிஸ்தான் சிறையில் இருக்கும் நபர்களிடம் விசாரணை நடத்துவதற்கு இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படும். மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பான விசாரணைக்காக பாகிஸ்தான் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆணைக்குழு இடம்பெற்றுள்ள அதிகாரிகள், இந்தியா வந்து விசாரணை மேற்கொள்வர். (மேலும்....)

பங்குனி 31, 2011

ஜப்பான் கதிர்வீச்சு இங்கிலாந்துக்கு பரவியது

ஜப்பான் கதிர்வீச்சு இங்கிலாந்துடன் இணைந்த ஸ்கொட்லாந்து பகுதிக்கு பரவி இருப்பதாக செய்திகள் தெரிவித்துள்ளன. ஸ்கொட்லாந்து பகுதியில் உள்ள கிளாக்ஸோ பகுதியில் கதிர்வீச்சு அபாயம் காணப்பட்டதாகவும் அவை சிறிதளவே இருப்பதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ஸ்கொட்லாந்து அரசு தெரிவித் துள்ளதாக ஸ்கை செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற பகுதிகளிலும் இதன் பாதிப்பு சிறிதளவு உள்ளது என்றும் ஏற்கனவே இங்கிலாந்து நாடு 92க்கும் மேற்பட்ட இடங்களில் காற்றில்கதிர்வீச்சு அளவு குறித்து கண்டறிந்து வருகின்றது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்குனி 31, 2011

இஸ்ரேலுக்கு எதிரான பலஸ்தீன எழுச்சி ‘பேஸ்புக்’ பக்கம் நீக்கம்

இஸ்ரேலுக்கு எதிரான எழுச்சி என்ற 350,000 க்கும் மேற்பட்டோர் பதிவான பலஸ்தீனியர்களின் பேஸ்புக் பக்கம் அகற்றப்பட்டுள்ளது. சமூக தொடர்பாடல் தளத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த பக்கம் இஸ்ரேலுக்கு எதிரான மூன்றாவது இன்திபாஷாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி மே 15ம் திகதி ஜும்ஆ தொழுகைக்கு பின் இஸ்ரேலுக்கு எதிரான எழுச்சி ஆரம்பமாகும் என அந்த பக்கம் அழைத்துள்ளது. எனினும் இந்த பக்கம் குறித்து இஸ்ரேல் அரசு பேஸ்புக் நிர்வாகிகளை அறிவுறுத்தியதை அடுத்து குறித்த பக்கம் அகற்றப்பட்டுள்ளது. மேற்படி பக்கம் வன்முறையை தூண்டும் வகையில் அமைந்திருந்ததால் அது அகற்றப்பட்டதாக ‘பேஸ்புக்’ ஊடாக பேச்சாளர் தெரிவித்தார். இந்த பேஸ்புக் பக்கம் மேலும் மூன்று பிரதிகள் எடுக்கப்பட்டுள்ளதோடு அவைகளில் 7000ற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் இணைந்திருந்ததாக ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசுக்கு எதிரான எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் பேஸ்புக் இணையத்தளத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டே ஆரம்பிக்கப்பட் டமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 31, 2011

ராஜினி வல்லுறவு, கொலை வழக்கில் இராணுவத்தினர் மூவருக்கு மரண தண்டனை

யாழ்ப்பாணத்தில் 1996 ஆம் ஆண்டு ஆண்டு வேலாயுதன் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்தமை தொடர்பான வழக்கல் குற்றவாளிகளாக காணப்பட்ட இராணுவ வீரர்கள் மூவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் நேற்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 22 வயதான ராஜினியை 1996 ஆம்ஆண்டு ஒக்டோபர் 20 ஆம் திகதியளவில் கோண்டாவில் பகுதியில் வைத்து ராஜனியை கடத்தி கொலை செய்ததாக இராணுவத்தைச் சேர்ந்த காமினி சமன் உயனகே, ஏ.பி.சரத்சந்திர, டி.கமகே கித்சிறி ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதில் மேற்படி மூவரும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். அம்மூவரில் காமினி சமன் உயனகேவும் டி.கமகே கித்சிறியும் ராஜினியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலும் குற்றவாளிகளாக காணப்பட்டனர். இம்மூவருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பி.டபிள்யூ.டி.சி. ஜயதிலக்க மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். வழக்குத் தொடுநர்கள் சார்பில் வழக்குரைஞர் லக்மினி கிரிஹகம ஆஜராகியிருந்தார்.

பங்குனி 31, 2011

மன்னார் பஸ் நிலையப் பகுதிகளில் அநாகரிகமாக காணப்படும் ஜோடிகள்

கலாசார விழுமியங்களுடன் காணப்பட்ட மன்னார் நகரப் பகுதியில் தற்போது அவை அழிந்துபோகும் நிலைமை ஏற்பட்டு வருவதாக மத,சமூக அமைப்புகளின் தலைவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக மன்னார் பஸ் நிலையம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் மாலை நேரங்களில் இளைஞர்,யுவதிகள் அநாகரிகமான முறையில் நடந்துகொள்வதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர். தெற்கில் இவ்வாறானவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுத்துவரும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் மன்னாரில் இவர்களைக் கண்டும் காணாமலிருப்பது ஏன் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஜோடிகள் பஸ் நிலைய பகுதிகளில் மறைவான இடங்களிலும் மாலையானதும் வெளிச்சமில்லாத இடங்களிலும் பஸ் பயணிகளுக்கு முன்பாகவும் அருவருக்கத்தக்கவாறு நடந்துகொள்கின்றனர். மாலை 6 மணிக்கு பின்னர் சில யுவதிகள் இளைஞர்களுடன் ஆட்டோக்களில் ஏறிச்செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் பாதுகாப்பு படையினர் மன்னார் பஸ் நிலையப்பகுதியில் கடமையிலிருந்தபோது இவ்வாறான சம்பவங்கள் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மன்னார் நகரின் புனிதத்தைப் பேணவேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பங்குனி 31, 2011

Estonia

The safest country in the world

If you're looking to escape the possibility of disaster, it might be time to move to Estonia. In the wake of recent natural disasters in Japan and New Zealand and recalling as far back as Haiti and New Orleans, statistics gathered by EM-DAT are suddenly very important to people wondering if it's possible to escape the earthquakes, tornadoes and hurricanes. The EM-DAT database, established in 1988, is run by Belgium's Centre for Research on the Epidemiology of Disaster and includes records of over 11,000 major natural disasters. (more...)

பங்குனி 31, 2011

உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகிறது

இலங்கையில் யுத்தம் முடிந்து, மீண்டும் சமாதானம் நிரந்தரமாக குடிகொண்டிருப்பதனால், இப்போது இங்கு வரும் இந்திய உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இலங்கைக்கு வருவதற்கு அதிக பணச்செலவு அவசியம் இல்லை என்பதால் இப்போது இந்திய உல்லாசப் பயணிகள் குறிப்பாக அங்குள்ள தமிழர்களும், மலையாளிகளும், வட இந்தியர்களும் அதிகமாக இங்கு வருகிறார்கள். யுத்தம் நடந்து கொண்டிருந்த போது இலங்கைக்கு வரும் இந்திய பயணிகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியளவில் இருந்த போதிலும், இப்போது இவர்களின் வருகை நாளாந்தம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஒருவர் இந்தியாவிலிருந்து இங்கு வந்து இரண்டு இரவுகளும், மூன்று பகல் பொழுதையும் கழிப்பதற்கு சில உல்லாசப் பயண முகவர்கள் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான சிக்கனக் கட்டணத்தையே அறவிடுகிறார்கள். அதுவும் இந்தியாவிலிருந்து இங்கு வருவதற்கான விமானக் கட்டணமும் சராசரியாக 4500 ரூபா வரையில் குறைக்கப்பட்டிருப்பதும் இதற்கான இன்னுமொரு காரணமாகும். (மேலும்....)

பங்குனி 31, 2011

உலகின் உயரமான ஹோட்டல் ஹொங்கொங்கில் திறப்பு

ஹொங்கொங்கின் விக்டோரியா துறைமுகத்தில் உலகின் உயரமான ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலின் உயரம் 490 மீட்டர். அதாவது சுமார் ஆயிரத்து 600 அடியாகும். கடந்த 2008-ம் ஆண்டு தற்காலிகமாக இந்த ஹோட்டல் மூடப்பட்டது. பின்னர் தற்போது தான் திறக்கப்பட்டு ள்ளது. இந்த ஹோட்டலின் ஒருநாள் வாடகையாக ஆறாயிரம் ஹொங்கொங் டொலர் அதாவது 770 அமெரிக்க டொலர் வசூலிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிரெசிடென்சியல் சூட்டின் வாடகை நூராயிரம் ஹொங்கொங் டொலராகும் என ஹோட்டலின் மூத்த அதிகாரி ஹெர்வே ஹம்ப்ளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பங்குனி 30, 2011

இன்று பரபரப்பான இந்தியா- பாக். அரையிறுதி 

முன்னாள் உலகச் சாம்பியன்களும் நெடுநாள் வைரிகளுமான இந்தியாவும் பாகிஸ்தானும் மொகாலி மைதானத்தில் உலகக் கோப்பை போட்டிகளின் இரண்டாவது அரைஇறுதி யில் மோதுகின்றன. இந்தியாவின் மட்டை வல்லுனர் களுக்கும் பாகிஸ்தானின் பந்து வீச்சாளர்களின் திறமைக்கும் இடையில் நடைபெறும் போட்டி இது. வெற்றி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் சமமாக உள்ளதாகக் கூற முடியாது. வலுவான மட்டைவரிசை, பதறாத நிதானமான தலைமை, சொந்த மண்ணில் ஆடும் அனுகூலம் ரசிகர்களின் உற்சாக ஆரவாரம் ஆகியவை இந்தியாவின் வாய்ப்பை கூடுதலாக்கியுள்ளது. (மேலும்....)

பங்குனி 30, 2011

லிபியாவில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தவறு செய்கின்றன -  ஈரான் ஜனாதிபதி அகமது நிஜாத்

லிபியாவில் மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து தவறு செய்து வருகின்றன என்று ஈரான் ஜனாதிபதி அகமது நிஜாத் குற்றம் சாட்டினார். பாரசீக புத்தாண்டை யொட்டி பிராந்திய நாட்டுத் தலைவர்களுக்கு ஈரான் ஜனாதிபதி அகமது நிஜாத் விருந்தளித்தார். அப்போது அவர் உரையாற்றுகையில், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் சர்வாதிகார ஆட்சி நடத்துபவர்களை எதிர்ப்பது சரியானது தான். ஆனால், லிபியா மீது ராணுவ நடவடிக்கை மேற் கொள்வது சரியானது அல்ல. இராக் மற்றும் ஆப் கானிஸ்தான் மக்கள் மிகத் தெளிவான பாடங்களை மேற்கத்தியப் படைகளுக்கு கற்பித்தனர்.  (மேலும்....)

பங்குனி 30, 2011

கடாபியில்லாத லிபியாவை கட்டியெழுப்ப லண்டனில் மாநாடு

லிபியாவுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகளை நேட்டோ பொறுப்பேற்றதையடுத்து ஆகாயம், தரைமார்க்கமான தாக்குதல்களில் அமெரிக்கப் படைகள் இறங்கியுள்ளன. முஅம்மர் கடாபியை ஆட்சியிலிருந்து அகற்றிய பின்னர் எவ்வகையான வேலைகளை முன்னெடுப்பது என்பதை ஆராயும் கூட்டம் பிரிட்டனின் தலைநகர் லண்டனில் செவ்வாய்க்கிழமை நடந்தது. இதில் 35 நாடுகள் பங்கேற்றன. கடாபியில்லாத லிபியாவை ஜனநாயக ரீதியாக கட்டியெழுப்புவது அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்வது, பொதுமக்கள் பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை புனரமைத்தல் போன்ற விடயங்களே இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன. இதில் ஏழு அரபு நாடுகளும் பங்கேற்றன. (மேலும்....)

பங்குனி 30, 2011

இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவு விடைபெற்றார் முரளி

கடைசி பந்தில் விக்கெட் வீழ்த்தி தனது சொந்த மண் ணில் விடை பெற்றார் இலங்கை நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். இந்த உலகக் கிண்ண போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முத்தையா முரளிதரன் நேற்று அரையிறுதியில் தனது சொந்த மண்ணில் விளையாடி னார். ஆர் பிரேமதாச மைதானத்தில் நேற்று நடந்த நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் முரளி தனது 10 ஓவர்களுக்கும் 42 ஓட்டங்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அவர் தனது சொந்த மண்ணில் வீசிய கடைசி பந்தில் ஸ்கொட் ஸ்னரிஸை எல்.பி.டபிள்யூ. முறை யில் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. இதேபோன்று முரளி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தனது கடைசி பந்துக்கு விக்கெட் வீழ்த்தியமை குறிப்பிட்டத்தக்கது. (மேலும்....)

பங்குனி 30, 2011

நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா - பாகிஸ்தான் சுமுக பேச்சு

இரண்டாண்டு இடைவெளிக்கு பின் இந்தியா - பாகிஸ்தான் உள்துறை செயலர்களுக்கு இடையேயான பேச்சு வார்த்தை நேற்று முன்தினம் டில்லியில் நடந்தது இதில் பயங்கரவாதத்தை கட்டுப் படுத்துவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் பட்டன. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக நீண்ட காலமாக இருநாட்டுத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த 2008ல் மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை இந்தியா நிறுத்தி வைத்தது. இந்நிலையில் இரண்டாண்டு இடை வெளிக்குப் பின் தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சூழல் உருவானது.(மேலும்....)

பங்குனி 30, 2011

மகாராஷ்டிர சுற்றுலாத்துறை விளம்பரத் தூதராகிறார் டெண்டுல்கர்

மகாராஷ்டிர மாநில சுற்றுலாத் துறையின் விளம்பரத் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரி விக்கின்றன. டில்லியைச் சேர்ந்த ஒரு பத் திரிகை ஒன்றிற்கு மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறியதாவது; குஜராத் கேரளா ஆகிய மாநிலங்கள் சுற் றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன. மாநில வரவு செலவுத் திட்டத் தில் சுற்றுலாத் துறைக்கென நிதியும் ஒதுக்கிறது. அது போன்று மகாராஷ்டிராவில், சுற்றுலாத்துறைக்கு ரூ. 25 கோடி நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட் டுள்ளது. நாக்பூரில் உள்ள புலிகள் சர ணாலயம் மேம்படுத்தப்படும். சுற்றுலாத் துறையின் விளம்பர தூதராக இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரை நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாத்துறை பெருமளவு வளர்ச்சிபெறும். ஜப்பான் போன்ற நாடுகள் சுற்றுலாத்துறைக்காக ரூ. 1000 கோடி வரை நிதி ஒதுக்குகின்றன. இவ்வாறு முதல்வர் பிருதிவி ராஜ் சவான் கூறினார்.

பங்குனி 30, 2011

வளர்ச்சித் திட்டமா? புலிகளா? மக்களே முடிவு செய்யட்டும்

இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டிலேயே புலிகளின் எண்ணிக்கை என்பது தென் மாநிலத்தின் மலைத் தொடர்களில் தான் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ச்சித் திட்டங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன. எனவே வளர்ச்சித் திட்டங்கள் வேண்டுமா அல்லது புலிகள் வேண்டுமா என்பதை நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. (மேலும்....)

பங்குனி 30, 2011

கிளர்ச்சியாளர்கள் புதிய ஆட்சி அமைக்க முடிவு

பெங்காசியை தலைநகராகக் கொண்டு புதிய ஆட்சியை அமைக்க கிளர்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். லிபியாவின் மேற்கு பகுதியில் தங்கள் வசமுள்ள நகரங்களை உள்ளடக்கி ஆட்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான அமைச்சரவையும் உருவாக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த அரசின் தலைமையை போராட்டக் குழு தலைவரும் முன்னாள் பேராசிரியருமான மக்முத் ஜிப்ரில் ஏற்க உள்ளார். இது குறித்து அவர் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹலாரி கிளின்டன் பிரான்ஸ் ஜனாதிபதி நிகோலஸ் சர்கோசி ஆகயோருடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர் ஒமர் அல்- ஹரிரி பாதுகாப்பு அமைச்சராகவும் காதர் அலி ஈசவாகி வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்படுகின்றனர். பொருளாதார நிபுணர் அவி தார்கோனி நிதி பொருளாதாரம் மற்றும் எண்ணெய் வளத்துறை அமைச்சராக ஏற்கனவே பொறுப்பு ஏற்றுவிட்டார். இதற்கிடையில் கட்டார் நாட்டுக்கு எண்ணெய் அனுமதி செய்வது குறித்து கிளர்ச்சியாளர்களின் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

பங்குனி 30, 2011

இது எப்படி இருக்கு?

அமெரிக்கா மீண்டும் தவறிழைக்க தயாரில்லை - ஒபாமா

லிபியாவில் இராணுவ ஆட்சி அமைப்பது ஏற்புடையதல்ல என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். ஈராக்கில் இராணுவ ஆட்சி அமைக்கப்பட்டதன் விளைவுகளை சான்றாகக் கூறிய ஒபாமா, அமெரிக்கா மீண்டும் ஒருமுறை தவறுசெய்ய தயாராக இல்லை என்றார். கடாபி ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் லிபியா வளமான எதிர்காலத்தை காணும் என்பதில் ஐயமில்லை என்றார். லிபியா மீது தாக்குதல் நடத்தியது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா நேற்று அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் விசேட உரையாற்றினார். இந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கூட்டுப் படையின் கட்டுப்பாட்டை நேட்டோ கையேற்றுள்ளதால் லிபியாவில் அமெரிக்கப் படையின் செயற்பாடு மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் எனவும் ஒபாமா கூறினார். செய்யிறதை செய்து போட்டு இப்படி பேசுகின்றது, இது எப்படி இருக்கு....?

பங்குனி 30, 2011

ஆங்கிலமொழி அறிவு மக்களுக்கு நல்வாழ்வை அளிக்கும்

இலங்கையில் சமாதானமும், அமைதியும், இன ஐக்கியமும் திரும் பிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், எங்கள் நாடு இரண்டு பாரிய சவால்களை எதிர்நோக்கியிருக்கின்றது. அதில் ஒன்று பொருளாதாரத் துறையை கைத்தொழில் மயமாக்கல் மூலமும், உணவு உற்பத்தியின் பசுமைப்புரட்சியின் மூலமும் மேற்கொள்ளவேண்டிய ஒரு பாரிய சவாலாகும். இரண்டாவது சவாலாக இருப்பது இந்நாட்டின் கல்வித் துறையை குறிப்பாக, உயர்கல்வித்துறையை மேம்படுத்துவ தற்கு மீண்டும் ஆங்கில அறிவை எமது மாணவ, மாணவிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான பெரும் பொறுப்பாகும். (மேலும்....)

பங்குனி 30, 2011

யாழ் பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம்!

யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக வசந்தி அரசரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான நியமனக் கடிதம் இன்று யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தேர்தல் நடைபெற்றிருந்த பொழுதும் அடுத்த துணைவேந்தரை தெரிவு செய்யாததினால் தொடர்ந்தும் துணைவேந்தராக பேராசிரியர் என்.சண்முகலங்கன் பணியாற்றினார். துணைவேந்தர் தெரிவில் தொடர்ச்சியாக இழுபறிநிலை நடந்தது. இதனிடையில் தன்னை துணைவேந்தராக ஜனாதிபதி நியமித்தாக போராசியர் இரட்ணஜீவன்ஹீல் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தில் உண்மையில்லை என்றும் தொடர்ந்தும் என். சண்முகலிங்கனே துணைவேந்தர் என்றும் உத்தியோக பூர்வ தகவல்கள் தெரிவித்தன. (மேலும்....)

பங்குனி 29, 2011

இறுதிப் போட்டிக்கு முன்னேற

இலங்கை - நியூஸிலாந்து இன்று பலப்பரீட்சை

மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை வெல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கை அணி முதலாவது அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் பலப் பரீட்சை நடத்தவுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ள இந்த போட்டியில் இரு அணிகளும் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு முன்னேறும் எதிர்பார்ப்புடன் விளையாட வுள்ளது. இதில் இலங்கை அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் அதிக நம்பிக்கையுடன் களமிறங்கும். இங்கிலாந்துடனான காலிறுதிப் போட்டியில் பந்துவீச்சு, துடுப்பாட்டம் என்று இரண்டு துறைகளிலும் இலங்கை அபாரமாக செயல்பட்டது. இது அரையிறுதியில் உத்வேகத்தை அளிக்கும். (மேலும்....)

பங்குனி 29, 2011

தமிழ் சகோதரர்கள் தொடர்ந்தும் சிறிய இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் - மௌலவி அஸீம்!

தமிழ் சகோதரர்கள் தொடர்ந்தும் சிறிய இடங்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்:- அவர்களின் அவலங்கள் நிலை- மௌலவி அஸீம். வன்னியில் இருந்து இடம் பெயர்ந்துள்ள தமிழ் சகோதரர்கள் உடனடியாக மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும். அவர்கள் சிறிய இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளமையினால் தொடர்ந்தும் பல்வேறுபட்ட துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் முகம் கொடுத்து வருவதாக மன்னார் மூர்வீதி யும்மா பள்ளிவாயல் மௌலவி செய்னுல் ஆப்தின் அஸீம் தெரிவித்தார். தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட மன்னார் மாவட்ட சர்வமதப்பேரவையின் பொதுச்சபைக் கூட்டம் நேற்று(27-03)மன்னார் அல்-அஸ்ஹர்ம.வி பாடசாலையில் இடம் பெற்ற போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு கருத்து தெரிவித்த அவர் சமுகத் தலைவர்களும், சமையத் தலைவர்களும் தமது கருத்துக்களை சிந்தித்து வெளியிட வேண்டும். குறிப்பாக முஸ்ஸிம் மக்களும் பாதீக்கப்பட்டுள்ளனர். ஏற்படும் ஒவ்வெரு பிரச்சினைகளையும் மத ரீதியாக பார்க்காது நாம் அதனை சமூக ரீதியாக பார்த்து அதற்காண தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் மௌலவி அஸீம் மேலும் தெரிவித்தார்.

பங்குனி 29, 2011

TNA’s true colours exposed

A significant feature that went almost unnoticed at the recent Local Government elections was the marked increase in the UPFA’s vote base even in Tamil-dominated areas in the Eastern Province. This trend was also evident at the previous LG polls in the Northern Province. During the height of the LTTE terrorist activities in the Northern and the Eastern Provinces, the Tigers compelled most Tamil politicians at gunpoint to form an alliance. This gave birth to the Tiger-proxy - the Tamil National Alliance (TNA) which eventually turned out to be the political mouthpiece of the terror outfit. The majority of Tamil leaders who cherished democracy had no option but to accept all conditions laid down by the LTTE which manipulated the TNA. It was none other than the former LTTE Political Wing leader S.P. Thamilselvan who had the ‘remote control’ to the TNA as most of the Tamil political leaders danced the fandango round the Tiger terrorists. (more...)

பங்குனி 29, 2011

லியோனியின் பட்டிமன்றத்திற்கு பிரதம அதிதியாக மக்கள் தொண்டனும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன்

மக்களை பரவச படுத்தி வரும் இந்தியாவில் மாத்திரமின்றி உலகம் முழுவதிலும் நகைச்சுவையில் மா மன்னராக திகழ்கின்ற திண்டுக்கல் லியோனி கலந்து சிறப்பித்த பட்டி மன்ற நிகழ்வு மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொது விளையாட்டரங்கு மைதானத்தில் நேற்று (26.03.2011) இரவு இடம் பெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்த கொண்டார். இச் சிறப்பு பட்டி மண்றத்தின் பேச்சாளராக பேராசிரியர் சுப்பையா, இலங்கைக்கு வருகை தந்து நாட்டின் பல பாகங்களிலும் நகைச்சுவை ஊடாக பேராசிரியர் நவஜோதி, இனியவன் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

பங்குனி 29, 2011

ஜப்பான் கதிர்வீச்சு அபாயத்தால் ஜெர்மன் சான்சலர் ஆட்சிக்கு பின்னடைவு

ஜப்பானில் கடந்த 11ம் திகதி ஏற்பட்ட சுனாமி தாக்குதலால், புகுஷிமா, டாய்ச்சி நகரங் களில் அணு உலைகள் வெடித்து கதிர் வீச்சினை ஏற்படுத்தின. இதன் எதிரொலியாக ஜெர்மனியில் பொதுமக்கள் தங்கள் நாட்டு அணு உலை பாதுகாப்பு குறித்தும், நாட்டின் மிகப்பெரிய அணு உலை அமையவுள்ளதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஜெர்மனியில் உள்ள முக்கிய அணு உலைகளின் உற்பத்தியை நிறுத்த மார்கெல் உத்தரவிட்டார். இதில் பேடன் வூட்டன்பேர்க் நகரில் 4 அணு உலைகள் முடக்கப்பட்டன. இதன் காரணமாகத்தான் தேர்தலில் மார்கெல் கட்சி தோல்வியுற்றதாக அந் நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டி ருந்தன. ஏற்கனவே கடந்தாண்டு மே மாதம் ஹம்பர்க் நகர தேர்தலில் மார்கெல் கட்சி தோல்வியுற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. (மேலும்....)

SUN SEA’S CANADIAN LINK

SUN SEA’S CANADIAN LINK 2

ZoomBookmarkSharePrintListenTranslateOn the smugglers’ trail, Part II

‘Nobody disagrees that human smugglers are opportunists’

Canada is now a target of Southeast Asia’s human smuggling syndicates. Today, in the second installment of a four-part investigative series, the National Post tells the story of the Canadians linked to the MV Sun Sea smuggling investigation. BANGKOK • In the office of Thailand’s Anti Human Trafficking Division, Colonel Panya Pinsook flips through photos of engine parts, sacks of food, plastic oil drums — and the Canadians caught with the cache of supplies.

ROYAL THAI POLICE Above: Canadian Nadarajah Mahendran, third from left, outside a Bangkok police station. (more....)

பங்குனி 29, 2011

தேர்தலுக்கு பிறகு

வைகோவின் நிலைதான் விஜயகாந்துக்கும்

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சில மாற்றங்களை செய்து தேர்தல் அறிக்கையாக அறிவித்துள்ளனர். ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். உடனே அந்த அம்மா 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றார். கருணாநிதி கிரைண்டர், மிக்சி கொடுப்போம் என்றதும், கிரைண்டர், மிக்சியுடன், மின்விசிறி கொடுப்போம் என்றார். திருமண உதவித் திட்டத்தை நிறுத்தியவரே இந்த அம்மையார்தான். திருமண நிதி உதவியாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவித்தார். அவர் திருமண நிதி உதவியாக ரூ. 25 ஆயிரத்துடன் 4 கிராம் தங்கம் தருவோம் என்று கூறி உள்ளார். கருணாநிதி வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சிறிது மாற்றி ஏட்டிக்கு போட்டியாகத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். (மேலும்....)

பங்குனி 29, 2011

கடாபி பிறந்தகமான - சிர்த் மீது கூட்டுப்படை விமானத் தாக்குதல்

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் பிறந்தகமான சிர்த்தின் மீது கூட்டுப்படை நேற்று வான்வழி தாக்குதல்களை நடத்தியது. அத்துடன் தலைநகரான திரிபோலி யிலும் கூட்டுப்படை வான் மற்றும் ஏவுகணைகள் மூலம் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. திரிபோலியில் பல்வேறு இடங்களிலும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன. லிபியா மீதான தாக்குதலின் முழு கட்டுப்பாட்டையும் நேட்டோ பொறுப் பேற்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(மேலும்....)

பங்குனி 29, 2011

லிபியா மீதான தாக்குதலை  ஐநா அங்கீகரிக்கவில்லை - ரஷ்யா

லிபியாவில் ஜனாதிபதி கடாபியின் படையினர் மீதான நேட்டோ படைகளின் விமானத் தாக்குதலுக்கு ஐநா அங்கீகாரம் வழங்கவில்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.“லிபியாவின் அதிபர் கடாபி படையினர் மீதான தாக்குதல் அந்நாட்டின் உள்நாட்டுப் போரில் நேட்டோ தலையிடுவதாக உள்ளது. அந்நாட்டின் பொதுமக்களை பாதுகாப்பதற்கு தான் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது. ஆனால், தற்போது நேட்டோ படைகளின் விமானத் தாக்குதல்கள் ஐநாவின் தீர்மானத்துக்கு விரோதமாக உள்ளது. லிபிய மக்களை பாதுகாக்கும் பொறுப்பில் நேட்டோ படைகள் ஒரு வரைமுறையுடன் செயல்பட வேண்டும்.” என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார். அதிபர் கடாபி படையினருக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடர்பான தீர்மானம் ஐநாவில் கொண்டு வரப்பட்டபோது, ரஷ்யாவும் சீனாவும் அந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி 29, 2011

கனடா பாராளுமன்றம் கலைப்பு,  மே 2 இல் தேர்தல்

கனடாவில் சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தி வந்த பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. இதை தொடர்ந்து பிரதமர் ஆளுனர் டேவிட் ஜோன்ஸ்டனை சந்தித்து பேசினார். அப்போது அவர் பாராளுமன்றத்தை கலைக்கும்படி கேட்டு கொண்டார். அவரது பரிந்துரையின் பேரில் ஆளுநர் அந்த நாட்டு பாராளுமன்றத்தை கலைத்தார். இதை தொடர்ந்து மே மாதம் 2ம் திகதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் கனடா நாட்டு மக்கள் மீது தேர்தலை திணித்து உள்ளன என்று பிரதமர் குற்றஞ்சாட்டினார்

பங்குனி 29, 2011

புவி வெப்பநிலையில் வரலாறு படைத்த 2010

1850ஆம் ஆண்டிற்குப் பிறகு அளவிடப்பட்ட கணக்கீடுகளின்படி புவியின் வெப்ப நிலை 1998, 2005, 2010 ஆகிய மூன்று ஆண்டுகளில் தான் அதிகளவில் இருந்திருக்கிறது. இந்த மூன்று ஆண்டுகளிலும் கூட 2010ஆம் ஆண்டில் பதிவான புவியின் வெப்ப நிலை தான் மிக உயர்ந்த அளவு என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை, புவிவெப்ப உயர்வு மனிதர்களின் செயற்பாடுகளால் நிகழ்ந்தது என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தொழிற் புரட்சி ஏற்பட்ட பிறகு புவியின் வெப்பநிலை 0.8 பாகை செல்சியஸ் உயர்ந்திருக்கிறது. கரீபியன் தீவுகளில் ஒன்றான கான்குன் தீவில் புவிவெப்பமடைவதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து கடந்த ஆண்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. (மேலும்....)

பங்குனி 29, 2011

ஜப்பானில் மீண்டும் நில நடுக்கம்

ஜப்பானின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான ஹோன் சூவுக்கு அருகே நேற்று காலை 6.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட் டுள்ளது. இதனையடுத்து சிறு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் விலக்கிக் கொள்ளப்பட்டது. பாதிக்கப் பட்ட மியாகி பகுதிக்கு மிக அருகிலேயே நில நடுக்கம் ஏற் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. உடனடி சேத விபரங் கள் ஏதுமில்லை என்றாலும் 1.6 அடி அளவுக்கு சுனாமி அலைகள் தாக்கலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது. இது மியாகி கடற்கரையைத் தாக்கலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும் அது பின்னர் விலக்கிக்கொள் ளப்பட்டது. இந்த நில நடுக்கம் கடலுக்கு அடியில் 3.7 மைல்கள் ஆழத்தில் ஏற்பட் டுள்ளது. மார்ச் 11 ஆம் திகதி ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் சுனாமி அணு உலைக் கதிர்வீச்சிலிருந்து ஜப்பான் இன்னமும் விடு படாத நிலையில் தொடர்ந்து அங்கு பின்னதிர்வுகள் பெரிய அளவில் ஏற்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.

பங்குனி 29, 2011

சாவகச்சேரியில் சம்பவம்

தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் உயிரிழப்பு

 யாழ்ப்பாணம், சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் குப்புலான் தெற்கைச் சேர்ந்த சம்பந்தன் சக்திதரன் (வயது28) என்ற ஆசிரியரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.  தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த இவர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்திப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (மேலும்....)

பங்குனி 29, 2011

விற்பனையில் சாதனை படைத்துவரும் ஐ பேட் 2

இவ்வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இலத்திரனியல் சாதனமாக அப்பிள் ஐபேட் 2 கருதப்படுகின்றது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் வெளியாகிய ஐபேட் 2 விற்பனையிலும் சாதனை படைத்து வருகின்றது. பிரித்தானியாவில் அது வெளியாகி 24 மணித்தியாலத்தில் அனைத்து ஐபேட்களும் விற்றுத்தீர்ந்து விட்டதெனெ அப்பிள் அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்கனவே பலபேர் ஐபேட் 2 இற்காக தங்களது பெயரைப் பதிவு செய்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

பங்குனி 28, 2011

கிழக்கில் இடம்பெற்ற பல படுகொலைச் சம்பவங்களுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்பு - யோகேஸ்வரன்!

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு தான் ஒருபோதும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை -  சிவநேசத்துரை சந்திரகாந்தன்

கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு தான் ஒருபோதும் அச்சுறுத்தல் விடுக்கவில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். (மேலும்....)

பங்குனி 28, 2011

யுத்த அழிவுகளைக் கண்டு அச்சமடைந்தேன் -  இயன் பொத்தம்

இலங்கையில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் முகங்கொடுத்து வரும் துன்பங்கள் மற்றும் அழிவுகளைக் கண்டு தாம் அச்சமடைந்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட்டின் ஜாம்பவானான சேர் இயன் பொத்தம் தெரிவித்துள்ளார். பொத்தம், ஞாயிறன்று யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள விளையாட்டு வளாகத்தினை மேற்பார்வையிட சென்றிருந்தார். இதன்போது, யுத்தத்தில் இளம் பிள்ளைகள் ஈடுபடுத்தப்பட்டதைக் கேள்வியுற்று தாம் வேதனையுற்றதாகவும் தெரிவித்துள்ளார். (மேலும்....)

 

பங்குனி 28, 2011

மியன்மார் பூகம்பத்தில் 15 ஆயிரம் பேர் பாதிப்பு, இரு நூறு சடலங்கள் மீட்பு

மியன்மாரில் அண்மையில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தால் அங்கு இயல்பு நிலைமைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லையென நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்புப் பணியாளர்கள் கூறினர். மியன்மாரை அண்மித்துள்ள தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடு களையும் இது பாதித்துள்ளது. சுமார் 15 ஆயிரம் பேர் இதில் பாதிக்கப்பட்டி ருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால் இது வரைக்கும் 150 பிரேதங்கள் கண்டெடுக் கப்பட்டுள்ளன. ஆயிரம் வீடுகள் முழுமையாக சேத மடைந்துள்ளன. குடிநீரைப் பெற பெரும் சிரமம் ஏற்பட் டுள்ளதால் இங்குள்ள மக்கள் பெரும் நிர்க்கதிக் குள்ளாகியுள்ளனர். மியன்மாரில் இராணுவ ஜுண்டாக்களின் ஆட்சி நடைபெறுகின்றது. வெளிநாட்டு ஊடக வியலாளர்கள் வருகை, வெளிநாட்டு உதவிகள் என்பன இந்த இராணுவ அரசாங்கத்தால் ஏற்கப்படுவதில்லை. (மேலும்....)

பங்குனி 28, 2011

தமிழ் நாட்டில்

தேர்தலுக்கு பின் கூட்டணிகள் மாறும்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்த தும், இப்போது இருக்கும் கூட்டணிகள் மாறிவிடும்.  சட்டசபை தேர்தலுக்கு பின் ராமதாஸ், விஜயகாந்த், காங், இவர்கள் எந்த அணியில் இருப்பார்கள் என தெரியாது. கூட்டணிகள் மாறும். ஜெயலலிதா என்ன பேசினாலும், சசிகலா நினைப்பது தான் நடக்கும். ஜெயலலிதாவும் அதைக் கேட்கும் நிலை தான் உள்ளது. (மேலும்....)

பங்குனி 28, 2011

On the human smugglers’ trail

It was just a rusty cargo ship. But when the MV Ocean Lady arrived off the British Columbia coast in 2009 carrying 76 migrants, it signaled that Canada had become a target of Southeast Asia’s human smuggling syndicates. The next ship, the MV Sun Sea, came last August, this time with 492 migrants on board, some of them former Sri Lankan rebels. And it’s not over yet.The RCMP believes the smugglers are working from Thailand, Malaysia and Laos to send yet another migrant ship to the West Coast. The smuggling runs are dangerous, as the images of a migrant ship breaking up off Australia’s Christmas Island last December attest. Twenty-eight died that morning. They are also costly. The Canadian government has spent $25-million to date dealing with the MV Sun Sea. But someone is making money from it. Who are they? In a four-part investigative series that begins Saturday, the National Post takes readers on the smugglers’ trail. (more....)

பங்குனி 28, 2011

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்​க லண்டனுக்கு விரையும் சிறிலங்கா புலனாய்வாள​ர்கள்!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும் நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாரிவிட்டனர் எனும் சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம் பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும் கொழும்பு ஊடகம் இதனை தடுத்து நிறுத்தும் முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. (மேலும்....)

பங்குனி 28, 2011

Moneybags

This year we are going to experience 4 unusual dates.1/1/11, 1/11/11, 11/1/11, 11/11/11 and that's not all...

Take the last 2 digits of the year in which you were born.... now add the age you will be this year,
and the result will be 111 for everyone!!! For example - Harry was born in 1957 and will be 54 this year, so 57+54=111....Good eh!!!!!!!! This is the year of money!!! Also this year October will have 5 Saturdays, 5 Sundays and 5 Mondays. This happens only once in 823 years. These particular years are known as "MONEYBAGS" The proverb goes that if you send this to 8 good friends today... money will appear in the next 4 days as explained in Chinese Feng Shui. Those who don't continue the chain won't receive anything. It's a mystery, and it's worth a try............

பங்குனி 28, 2011

விரக்தியின் விளிம்பில் வைகோ

இனி எந்தக் காலத்திலும் அ.தி.மு.க கூட்டணி இல்லை

ஜெயலலிதாவே செய்துவிட்டு மற்றவரின் மீது பழிபோடுவதாக நான் குற்றம்சாட்டுகிறேன். அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நாங்கள் தூக்கியெறியப்பட்டோம். அனைவரும் ஒருமனதாக முடிவெடுத்து, இந்தத் தேர்தலில் மட்டும் பங்கேற்பதில்லை என்று முடிவு செய்து அறிவித்தோம். காலம் சில படிப்பினையைத் தந்ததால் ஜெயலலிதா மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என நினைத்தேன். அவரின் ஆணவத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மீண்டும் அ.தி.மு.க. வுடன் சேர்வதற்கு ம.தி.மு.க. ஒருபோதும் நினைக்காது, மக்கள் மத்தியில் சாதி, மத பேதம், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்; தி.மு.க. - அ.தி.மு.க. வுக்கு மாற்றாக, ம.தி.மு.க திகழ வேண்டும். தமிழகத்தை ஆளவேண்டும் என்ற குறிக்கோளுடன், 10 ஆண்டுகளுக்கு முன் ம.தி.மு.க தீர்மானம் போட்டது. (மேலும்....)

பங்குனி 28, 2011

விமானிகளின் சாதுரியத்தால்  300 பயணிகள் உயிர் தப்பினர்

பாட்னா விலிருந்து பொங்களுரிற்கு விமானம் ஒன்று மாலை 6.47 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் சுமார் 180 பயணிகள் பயணம் செய்ய தயாராக இருந்தனர். அதேநேரத்தில் எதிர்த் திசையில் மும்பையிலிருந்து பாட்னாவிற்கு 140 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டது. பெங்களூர் விமானம் புறப்பட்டதற்கு எதிர்த்திசையில் மும்பை விமானமும் தரையிறங்க முற்பட்டது. இரண்டு விமானங்களுக்குமான உயர இடைவெளி குறைவாக இருப்பதை கண்ட மும்பை விமானி சாதுர்யமாக செயற்பட்டு விமானத்தை மேலெழுப்பினார். (மேலும்....)

பங்குனி 28, 2011

முஹம்மர் கடாபியின் விசேட குழு  ஆபிரிக்க யூனியனுடன் பேச்சு

லிபியாவில் ஏற்பட்டள்ள உள்நாட்டு மோதல்களை முடிவுக்கு கொண்டுவர ஜனாதிபதி முஹம்மர் கடாபியின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று எதியோப்பியா சென்றுள்ளது. எதியோப்பியாவின் தலை நகர் அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க யூனியன் அமைப்பின் உயர்மட்டக் குழுவுடன் இவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனடிப்படையில் மேற்கு நாடுகள் லிபியாவுக்கு எதிராக முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கை களைக் கைவிடல் ஆபிரிக்க யூனியனின் வீதி வரைபடத்துக்கமைய கிளர்ச்சிக்காரர் களுடன் சமாதானத்தை ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் பேசப்பட்டதாக எதியோப்பியாவிலிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

பங்குனி 28, 2011

மீண்டும் அமெரிக்காவுக்கு எதிராக உட்டோ தீர்ப்பு

பிரேசில் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஆரஞ்சுப் பழச்சாறு மீது கூடுதல் வரி விதித்தது சர்வ தேச வர்த்தக விதிகளுக்கு முரணானது என்று உலக வர்த்தகக் கழகம்(உட்டோ) அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பிரே சில் அளித்திருந்த புகார் மீது விசாரணை நடந்தது. விசா ரணைக்குப் பிறகு உட்டோ சார்பில் வெளியிடப்பட் டுள்ள அறிக்கையில், விசா ரணையின்போது கிடைத்த விபரங்களை வைத்துப் பார்க்கும்போது, சர்வதேச விதிகளின்படி அமெரிக்கா நடந்து கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்கி றோம் என்று கூறப்பட்டுள் ளது. உலகிலேயே பிரேசில் தான் அதிகமான அளவில் ஆரஞ்சுப் பழச்சாறு ஏற்று மதி செய்யும் நாடாகும். (மேலும்....)

 

பங்குனி 28, 2011

 

அணு உலைகளை குளிர வைக்கும் முயற்சிகள்
தாமதமானால் ஜப்பானில் பெரும் அழிவு ஏற்படும்

அணு உலைகளை குளிரவைத்து அவை வெடிப்பதிலிருந்து பாதுகாக்கும் முயற்சிகள் எப்போது முடியும் என்பதைக் கூற முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருவாரமோ அல்லது பல மாதங்களோ எடுக்கலாம். இந்நிலை மாதக் கணக்கில் நீடித்தால் கதிர்வீச்சின் கசிவுகளால் ஜப்பான் மோசமான பாதிப்பை சந்திக்கும் என உலக அணு முகவர் அமைப்பு எச்சரித்துள்ளது.ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தால் அணு உலைகளில் ஏற்பட்ட கசிவுகளால் உண்டாகவுள்ள அபாயங்கள் இன்னும் நீங்கவில்லையென அந்நாட்டு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் எச்சரித்துள்ளது. (மேலும்....)

பங்குனி 28, 2011

த. தே. கூ உறுப்பினர்கள் 76 பேர் 31 இல் திருமலையில் பதவியேற்பு

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களின் பதவியேற்கும் நிகழ்வும், சத்தியப்பிரமாணமும் எதிர்வரும் 31ஆந் திகதி (31.03.2011) வியாழக்கிழமை திருகோணமலை நகர சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.வடக்கு – கிழக்கு என்பது தமிழர் தாயகம். இதன் தலைநகரம் திருகோணமலைதான் என்று தந்தை செல்வாவினால் பிரகடனப் படுத்தப்பட்ட விடயம். தமிழ் மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக உள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் அழுத்திக் கூறியுள்ளதால் இந் நிகழ்வை யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை என உள்ள இடங்களில் நடத்தாமல் நாம் திருகோண மலையில் நடத்த உள்ளனர். (மேலும்....)

 

பங்குனி 28, 2011

நவீன மனிதர்கள் ஆபிரிக்காவை விட்டு வெளியேறியது எப்போது?

நவீன மனிதர்கள் ஏறத்தாழ 65,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆபிரிக்காவை விட்டு அரேபியா வுக்குப் புறப்பட்டதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் அவ்வாறு சென்றமைக்குக் காரணம் சுற்றுச் சூழலேயன்றி தொழில்நுட்பம் அல்ல என்கின்றனர் விஞ்ஞானிகள். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி அவர்கள் நைல் நதிப் பள்ளத்தாக்கினூடாகவே பயணித்தனர் எனக்கூறப்பட்டது. ஆனால் அந்தக் கூற்றைத் தற்போது விஞ்ஞானிகள் மறுத்துள்ளனர். (மேலும்....)

பங்குனி 28, 2011

உள்ளூராட்சி தலைவர்கள், உபதலைவர்கள் பெயர் இன்று வர்த்தமானியில் வெளியீடு

உள்ளூராட்சி சபைகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள், உப தலைவர்களின் பெயர் விபரம் இன்று 28ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று தேர்தல் செயலகம் நேற்றுத் தெரிவித்தது. கடந்த 17ஆம் திகதி 234 உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடைபெற்றது.இதேவேளை எஞ்சியுள்ள 101 உள்ளூ ராட்சி சபைகளுக்கும் எதிர்வரும் ஜூன் மாதம் தேர்தல் நடத்தப்படவிருக்கின்றது.  (மேலும்....)

பங்குனி 28, 2011

இதுவும் ஒரு வகை சந்தர்ப்பவாதமே

காங்கிரசும் சரி, பாஜகவும் சரி அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் நாட்டை அடகுவைப்பதில் ஒரே மாதிரியான நிலைபாட்டையே பின்பற்று கின்றன. எனவேதான் அவர்கள் இந்திய நாடா ளுமன்றத்தையும் இந்திய மக்களையும் விட அமெரிக்காவுக்கே விசுவாசமாக உள்ளனர். இதனால்தான் நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அமெரிக்க அதிகாரி களுடன் அவர்கள் தாராளமாகப் பகிர்ந்துகொண்டுள் ளனர் என்பதுமட்டும் மறுக்க முடியாத உண்மை. (மேலும்....)

பங்குனி 27, 2011

மட்டக்களப்பில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களின் குறைபாடுகள் குறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம்-(பத்மநாபா-ஈ.பி.ஆர்.எல்.எப்.)

தமிழ் மக்கள் யுத்தத்தால் பாதிப்படைந்து சொல்லமுடியாத துன்பத்தை அனுபவிக்கும் வேளையில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டு நீங்கள் மீள்குடியேற்ற அமைச்சராக நியமனம் பெற்றதையிட்டு தமிழ் மக்களாகிய நாங்கள் சந்தோசமும் மகிழ்ச்சியும் அடைந்தோம். நல்ல பல பணிகள் தொடரும் என எண்ணினோம். நீங்களும் விடாமுயற்சியுடன் செயல்பட முனைந்தீர்கள். ஆனால், எமது மக்களின் பாதிப்புக்கு ஏற்றவாறு மீள்குடியேற்றப் பணி அமையவில்லை என்பதே எம் மக்களின் கருத்தாகும். கிழக்கு மாகாணசபையிலும் மீள்குடியேற்ற அமைச்சு உள்ளது இதற்கு 2011ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் எந்த நிதியும் மத்திய அரசால் ஒதுக்கப்படவில்லை. மேலும் அந்த அமைச்சிற்கு மீள்குடியேற்றம் தொடர்பான அதிகாரங்கள் இல்லை. இருந்திருந்தால் சம்பூர் மக்களின் பிரச்சினை தீர்ந்திருக்கும். இருந்தும் கீழ் குறிப்பிடப்படும் விடயங்களை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றோம். (மேலும்....)

பங்குனி 27, 2011

'பித்... தூ'

(ஒற்றைக்காதுடையசெவியன்.)

உவன் என்னத்த மிச்சம் பிடிச்சவன் ஆ..! இருந்ததெல்லாத்தையும் அழிச்சான். ஊரான் வீட்டு சொத்தெல்லாத்தையும் அழிச்சான் என்றால் ஊரான் வீட்டு பச்சைப்பிள்ளைகளைக் கூட விட்டுவைக்க அவனுக்கு மனம் வரல்லையே... பாவி.. படுபாவி''......''இப்ப என்னத்துக்கு வானளவு கண்ணீர் வடிக்கிற''இப்படி ஒருபிள்ளய பெத்ததுக்காக அழுறன். வயிற எரியுதுங்க''க்கும்... இப்படி ஒரு பிள்ளையை பெத்ததுக்காக உன்ன தலேலை தூக்கிவைச்சு கொண்டாடுதுகள் வெளிநாட்டுச் சனம். தமிழீழத்தின் அன்னை என்றாங்கள். தேசத்தின் தாய் என்றாங்கள். ஆ... ஆ... புரட்சி கவிதைய பாடுறானுகள். தமிழ், உரிமை, சுதந்திரம் என்று பாட்டுகளாக கேட்கிறாங்கள் என்ன கொடுமை... உன்னையும் வைச்சு காசு பண்ணுறாங்கள்''இஞ்ச பேப்பரிருக்கே, ரேடியோ கேட்கலாமே''எல்லா கண்றாவியும் இஞ்ச இருக்கு. அதிலதான் அவன் அங்க இருக்கிறான் என்று கிடக்கு. அதனாலதான் நான் இஞ்ச நிம்மதியா இருக்கிறன். நீ என்னடா எண்ட...''நான் கேள்விப்பட்டன் ஆள மேல அனுப்பியாச்செண்டு''பைத்தியக்காரி சனம் பாயுறதுக்கு முன்னமே அவன் பாஞ்சிருப்பான்.(மேலும்....)

 

பங்குனி 27, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் - 69வது நாள் சிறப்புக் கூட்டம்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தின் 69வது நாளான (25-03-2011, வெள்ளி) நேற்று ராஜ்கோட் முகாமில் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்புக் கூட்டம் வீரநடை போட்டு வெற்றிகரமாக நடைபயணத்தை முடித்த நடைபயண வீரர்களுக்குப் பாராட்டுக் கூட்டமாகவும், விருது வழங்கும் விழாவாகவும், ஈழத் தமிழர் விடுதலைக்கான அடுத்தக்கட்ட நகர்வுக்கானக் கூட்டமுமாக நடைபெற்றது. இந்த சிறப்புக் கூட்டத்தின் ஆரம்பத்தில் ஈழ தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பின்னர், ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூரப் பயணத்தின் போது மரணத்தை தழுவிக் கொண்ட நடைபயண வீரர் திரு. சுதர்சன் அவர்களுக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தியபின் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தின் நிகழ்வுகளை நடைபயண தலைமைக் குழுவில் உள்ள திரு. சீ.தயாபரன் அவர்கள் தொகுத்து வழங்கினார். (மேலும்....)

பங்குனி 27, 2011

நவநீதம்பிளளை இலங்கைக்கு விஜயம் என்பது பொய்ப்பிரசாரம்

ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் திருமதி. நவதீதம்பிள்ளை இலங்கைக்கு அடுத்த மாதம் விஜயம் செய்வது பற்றி வெளியான செய்தி பொய்யானதென பிரான்ஸ் தமிழர் மனித உரிமை மையம் அறிவித்துள்ளது . இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அம் மையத்தின் பொதுச் செயலாளர் ச.வி. கிருபாகரன் இது நன்றாக திட்டமிடப்பட்ட பொய்ப் பிரசாரமென குறிப்பிட்டுள்ளார்.

பங்குனி 27, 2011

2018 ஆம் ஆண்டு

பொதுநலவாய விளையாட்டு போட்டி ஹம்பாந்தோட்டையில் ?

2018 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகளுக்காக ஹம்பாந்தோட்டை நகரத்தை தயார்படுத்தவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கென ஹம்பாந்தோட்டையில் பிரத்தியேகமாக விளையாட்டுத் தொகுதி ஒன்று அமைக்கப்படவுள்ளது. போட்டிகளுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் 2016 ஆம் ஆண்டளவில் நிறைவு செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகின்றன. _

பங்குனி 27, 2011

வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்குமுறை ஆட்சியை முழுநாடும் விரைவில் அனுபவிக்க நேரிடும் - சோமவன்ச _

அரசாங்கத்தின் வியூகங்கள் ஜனநாயக சூழலுக்கு அச்சுறுத்தலாகவே அமைகின்றன. தற்போது வடக்கு மக்கள் அனுபவிக்கும் இராணுவ அடக்கு முறையிலான ஆட்சியை எதிர்வரும் நாட்களில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் அனுபவிக்க நேரிடும் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கான முன்னேற்பாடே உள்ளூராட்சி சபைகளை உள்ளடக்கிய நகரக் கூட்டுத்தாபனமாகும். இதற்கு ஆளுனராக நியமிக்கப்படுபவர் 100 வீதம் இராணுவ அதிகாரியாகவோ அல்லது சர்வாதிகாரியாகவோ அல்லது சர்வாதிகார கொள்கையுடையவராகவோ இருப்பார் எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார். (மேலும்...)

பங்குனி 27, 2011

யாழ்ப்பாண இசை விழா

கலாசார ரீதியான நாட்டுப்புற கலை வடிவங்களின் கொண்டாட்டமான யாழ்ப்பாண இசை விழா 2011 நிகழ்வு நேற்று காலை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் ஆரம்பமாகி இன்றும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. நோர்வே நாட்டின் அனுசரணையுடன் நடைபெறும் இந் நிகழ்ச்சியை நேற்று தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக மூன்று தினங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. (மேலும்...)

பங்குனி 27, 2011

புதுச்சேரியில் ரங்கசாமிக்கு 17; அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு 13

புதுச்சேரி சட்டப் பேரவைக்கான தேர்தலில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி தொடங்கியுள்ள அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், அதிமுகவுக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் ரங்கசாமி கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 13 தொகுதிகள் அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. (மேலும்...)

பங்குனி 26, 2011

தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டும - கம்பவாருதி ஜெயராஜ் புகழாரம்

தமிழ் மக்களுக்கான சிறந்த தமைத்துவம் உள்ளவராக மட்டுமல்லாமல்,இனம் பற்றிய உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவராக இருப்பதுடன்,சுயமாக முடிவெடுக்கக் கூடியவருமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே விளங்கி வருகின்றார் என கம்பன் கழக ஸ்தாபகர் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். (மேலும்...)

பங்குனி 26, 2011

60 ஆண்டு கால இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் தீர்வு

60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு அவசியம். எனினும் இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனைச் செய்வதற்காக நான் சகல பிரிவினரையும் தனித்தனியாக அழைத்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகிறேன். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழுவினரை நான் விரைவில் சந்திக்கவிருக்கிறேன். அவர்கள் தீர்விற்கான தங்கள் யோசனைகளை இதுவரையில் முன் வைக்கவில்லை. பின்னர் அதனடிப்படையில் நாம் சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்து வோம் என்றும் ஜனாதிபதி கூறினார். (மேலும்....)

பங்குனி 26, 2011

பத்திரிகைச் செய்தி

இந்திய-இலங்கைஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்

ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினராகிய நாங்கள் கடந்த அறுபத்தேழு (67) நாட்களாக மேற்கொண்ட நடைபயணம் 2500 கி.மீற்றர் தூரத்தைக் கடந்து இன்று டெல்கி வந்தடைந்துள்ளது. இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி, காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியாகாந்தி, எதிர்க்கட்சித் தலைவர் திருமதி. சுஸ்மா சிவராஜ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிறநாட்டுத் தூதராலயங்களுக்கு எங்களது இனப் பிரச்சினை தொடர்பாக அறிக்கைகள் கையளித்துள்ளோம்.

  • “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்,

  • 48க்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் அத்துமீறி குடியமர்த்தப்பட்ட சிங்களக் குடியேற்றவாசிகளை வெளியேற்ற வேண்டும்.

(மேலும்....)

 

பங்குனி 26, 2011

அரசாங்கத்தின் வேண்டுகோளையடுத்து ஐ.சி.ஆர்.சி.யின் வவுனியா அலுவலகம் மூடப்பட்டது

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது வவுனியா அலுவலகத்தை நேற்றுடன் மூடியுள்ளது. இதன்படி வட பகுதியியில் இயங்கிவந்த ஐ.சி.ஆர்.சி.யின் ஒரேயொரு அலுவலகத்தின் பணிகளும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்தவாறு தமது பணிகளை முன்னெடுக்குமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளினையடுத்தே வவுனியா அலுவலகத்தை மூடி விடவும், கொழும்பு அலுவலகத்தின் மூலம் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானித்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. (மேலும்....)

பங்குனி 26, 2011

வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் பெற்றோர் நாடு திரும்ப விருப்பம்

இலங்கையில் மனிதாபிமானமற்ற முறையில் எங்களை துன்புறுத்துகிறார்கள் என்று கூறி, அவுஸ்திரேலியாவில் அரசியல் புகலிடம் பெற்றவர்களில் 75 சதவீதமானோர் இப்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பியுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இணையத் தளங்கள் இலங்கையின் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடத்தப்படுவதாக போலி வதந்திகளை பரப்பி எமது நாட்டின் உல்லாசப் பிரயா ணத்துறையின் வளர்ச்சிக்கு தீங்கி ழைக்கின்றன. (மேலும்....)

 

பங்குனி 26, 2011

 

பலாலி உட்பட

5 விமான நிலையங்களை தரமுயர்த்த வர்த்தகர்களின் ஒத்துழைப்பு

புதிதாக ஐந்து வர்த்தக விமான நிலையங்களை அமைக்கும் விமான சேவை வேலைத்திட்டத்திற்கு, இலங்கை வர்த்தகர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்ள உள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்தன தெரிவித்தார். பலாலி, இரத்மலானை, திருகோண மலை, கொக்கலை மற்றும் ஹிங்குரக் கொடை ஆகிய இடங்களில் புதிதாக வர்த்தக விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், அவற்றிற் கிடையே உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிப்பதற்காக விமானங்களை வழங்குவதற்கு இலங்கை வர்த்தகர்களுக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்படும் எனவும், அமைச்சர் மேலும் கூறினார். (மேலும்....)

பங்குனி 26, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணம் 67,68வது நாள் நிகழ்வுகள்!

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடைபயணத்தினை சென்னை, சிறிபெரும்புதூரிலிருந்து ஆரம்பித்து வைத்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான இரா. அன்பரசு அவர்கள் டெல்லியில் உள்ள அமரர் இராஜீவ்காந்தியின் நினைவிடத்தில் நடைபயணத்தை முடித்து வைப்பதற்காக சென்னையிலிருந்து வந்து, நடைபயண வீரர்களை வரவேற்று, நடைபயணத்தை வெற்றிகரமாக முடித்தற்காக நடைபயண வீரர்களுக்குக் கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். மேலும்  அவருடன் நடைபயண வீரர்கள் பயணத்தைத் தொடர்ந்து, முதலில், அகிம்சை வழிப் போராட்டத்தின் தலைவரும் இந்திய நாட்டின் பிதாவுமான அமரர். காந்திஜி அவர்களின் சமாதியில் மலர் வலையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். (மேலும்....)

பங்குனி 26, 2011

அரச சார்பற்ற அமைப்புக்கள் நாட்டுக்கு தீங்கிழைக்கின்றன

அரச சார்பற்ற அமைப்புக்கள் இலங்கையின் சுயாதீனத்துக்கு தீங்கிழைக்கக்கூடிய வகையில் போலிப் பிரசாரங்களையும் நாசவேலைகளையும் வெளிநாடுகளில் மேற்கொள்வதற்கு பின்னணியிலிருந்து செயல்படுகின்றன. இத்தகைய அரச சார்பற்ற அமைப்புக்களுக்கு சில சந்தர்ப்பங்களில் ஒரு மாதத்தில் 69 மில்லியன் அமெரிக்க டொலரும் சில அமைப்புக்களுக்கு 150 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வெளிநாடுகளிலிருந்து கிடைக்கின்றன. அவற்றின் பெரும் பகுதி அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்காகச் செலவிடப்படுகின்றன. இந்த அரச சார்பற்ற அமைப்புக்கள் வரி கூட அரசாங்கத்திற்கு செலுத்துவதில்லை. இந்த அமைப்புக்களினால் நாட்டுக்கு நன்மை ஏற்படுவதைவிட தீமையே அதிகமாக ஏற்படுகின்றன.

பங்குனி 26, 2011

 

லிபியா மீதான தாக்குதலுக்கான

கூட்டுப்படையின் கட்டுப்பாடு 'நேட்டோ' வசம்

லிபியா மீதான கூட்டுப்படை தாக்குதலுக்கான கட்டுப்பாட்டை பொறுப்பேற்க நேட்டோ முன்வந்துள்ளது. அமெரிக்க மற்றும் கூட்டுப்படையின் முக்கிய பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சு வார்த்தையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நேட்டோ அமைப்பின் செயலாளர் நாயகம் அன்டர்ஸ்பொக் ராஸ்முஸன் நேற்று முன்தினம் பிரஸெல்ஸில் நடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கூறினார். இந்த முடிவுக்கு துருக்கி உட்பட 28 நேட்டோ அங்கத்துவ நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ள தாகவும் கூறினார். எனினும் தற்போதைய கூட்டுப் படையின் வேறு செயற்பாடுகளுக்கு நேட்டோ பொறுப்பேற்காது என ராஸ்முஸன் கூறினார். இந்நிலையில் கூட்டுப் படையினை அமெரிக்கா விரைவில் நேட்டோவிடம் கையளிக்கும் என அமெரிக்க வெளி யுறவுச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் கூறினார். (மேலும்....)

பங்குனி 26, 2011

சிரியா மக்கள் கிளர்ச்சியில் 100 பேர் பலி

சிரியாவில் அரசுக்கெதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. நேற்று முன்தினம் நாட்டின் தென்பகுதி நகரான தாராவில் ஐய்மான்-அல்-அஸ்வாத் என்ற மனித உரிமை அமைப்பினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 18 ஆம் திகதி முதல் பொதுமக்கள் ஆங்காங்கே சிறிய அளவில் போராட்டம் நடத்தி வந்தனர். தற்போது தாஹரா நகரில் ஏற்பட்ட சம்பவத்தினைத் தொடர்ந்து நாட்டின் தலைநகரமான டமஸ்கஸிலும் மக்கள் போராட்டம் பரவியுள்ளது. இதில் 75 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பங்குனி 26, 2011

அப்பாவிகளைக் கொல்லாதீர்கள்’  அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

ஐக்கிய நாடுகள் சபை யின் இலக்கை நிறைவேற் றும் வகையில் நடவடிக்கை கள் இருக்க வேண்டுமே யொழிய, லிபியாவில் அப் பாவி மக்களைக் கொன்று குவிப்பதாக இருக்கக் கூடாது என்று ரஷ்யாவின் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வ தேவ், அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவிடம் தெரி வித்துள்ளார்.வான்வழியாக அமெ ரிக்கா தலைமையிலான படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள், தரையிலும் துவங்கப்படலாம். அப்ப டித் துவங்கப்பட்டால் அப் பாவி மக்கள் பெருமளவில் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தார்.  (மேலும்....)

 

பங்குனி 26, 2011

ஜப்பான் சுனாமி அனர்த்தம்

பலியானோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது

ஜப்பான் சுனாமி அனர்த்தத்தினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நேற்றைய உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி 10,035 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு 17,443 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் சுனாமி அனர்த்தத்தினால் 2775 பேர் காயமடைந்துள்ளதோடு மூன்று இலட்சம் அளவானோர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கிவருகின்றனர். இதேவேளை சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தை திருத்தும் பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த திருத்தப் பணிகள் மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்கும் என மேற் படி அணு மின் நிலையத்தை பராமரிக்கும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் கூறியுள்ளது. எனினும் புகுஷிமா அணு உலை களிலிருந்து கதிர்வீச்சு வெளியேறி வரு கிறது. இந்த கதிர்வீச்சு எங்கிருந்து வெளியேறுகிறது என்பது இன்னும் கணிக்க முடியாதுள்ளதாக தெரியவருகிறது.

பங்குனி 26, 2011

லிபியா தாக்குதலை எதிர்த்து கண்டியில் ஆர்ப்பாட்டம்

லிபியாவில் மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்று கண்டியில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. கண்டி மீராமக்காம் பள்ளியின் முன் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பே கடுவ மற்றும் மத்திய மாகாண சபை அங்கத்தவர் ரிஸ்வி பாருக் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

பங்குனி 25, 2011

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது போர் நிறுத்தத்திற்கு இந்தியா அழுத்தம - விக்கிலீக்ஸ் _

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் போர் நிறுத்தமொன்று தொடர்பில் இலங்கை அரசாங்கம் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்ததாக விக்கிலீக்ஸ் செய்திகளை வெளியிட்டுள்ளது. அன்றைய காலகட்டத்தில் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதராலயத்தில் பிரதான அதிகாரியாக கடமையாற்றிய பீட்டர் பர்லே தனது தகவல் குறிப்பின் மூலம் இராஜாங்கத் திணைக்களத்துக்கு மேற்குறித்த விடயத்தை அறிவித்துள்ளார். இறுதிக்கட்ட யுத்தம் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் ஆகியோர் இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்கள். (மேலும்....)

 

பங்குனி 25, 2011

Together and apart in Sri Lanka

(K. Venkataramanan)

When U.S. troops arrived in Sri Lanka for relief work in the aftermath of the December 2004 tsunami, alarm bells rang in sections of the Indian establishment, media and the strategic community over possible American ‘intrusion' into its backyard. But U.S. diplomatic cables of the time, accessed by The Hindu through WikiLeaks, show that the official thinking in the United States favoured utilising its military participation in relief efforts to strengthen “military-to-military” cooperation with other participants in the effort, especially India. (more...)

 

 

பங்குனி 25, 2011

க. பொ. த. சா/த

அகில இலங்கை மட்டத்தில் முதலிடம்

க. பொ. த. சாதாரண தர (2010) பரீட்சையில் கிரி/ கெகுணகொல்ல தேசிய பாடசாலை மாணவன் மொஹம் மது சாளிஹு மொஹ ம்மது அர்ஷாத் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலாம் இடத்தை பெற்றுள்ளார். 9 ஏ சித்திக ளைப் பெற்றுள்ளதுடன் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளியினை பெற்றுள்ளமை குறிப் பிடத்தக்கது. இளமை காலம் முதல் கல்வியில் திறமை காட்டி வரும் இம் மாணவனின் தாயாரான எம். வை. றஜீனா இதே பாடசாலையில் ஒரு விஞ்ஞான பட்டதாரி ஆசிரி யையாக கடமையாற்றி வருகிறார். இவரது தந்தையான மொஹம்மது சாளிஹு தோற கொடுவ முஸ்லிம் வித்தியா லயத்தில் ஆசிரியராக கடமை யாற்றுவதுடன் விஞ்ஞான மன்ற ‘அஸ்டா’ நிலையத்தின் செய லாளராக கடமையாற்றி பொது சேவையில் ஈடுபட்டு வருகிறார். இதேவேளை கெகுணகொல்ல தேசிய பாடசாலை அண்மைக் காலத்தில் க. பொ. த. சாதாரண தர, க. பொ. த. உயர் தர பரீட்சை முடிவுகளில் அகில இலங்கை ரீதியில் திறமை காட்டி வருகின்றது. இவ்வருடம் நான்கு மாண வர்கள் வைத்தியத் துறைக் கும் இரண்டு மாணவர்கள் கணித துறைக்கும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

பங்குனி 25, 2011

Events Planning Meeting - Sunday, March 27

The Sri Lankans Without Borders team has been in the process of developing ideas for key events to benefit the Tamil, Sinhalese, Muslim, Burgher and other Sri Lankan-Canadian communities in 2011.  We are excited to hold our first event planning meeting this Sunday, March 27th in Markham, at 2 p.m. and we welcome your participation. What does this mean? By attending you can learn about the upcoming events and take on a leadership role or support role. If you are interested to attend, please RSVP, as we would like to limit the number of people so that the meeting is productive.  For more information on the SLWB network please check out our website.

Thanks and we look forward to seeing you on Sunday,

Sri Lankans Without Borders

www.srilankanswithoutborders.ca

பங்குனி 25, 2011

 

தமிழர் கடலில் நடப்பது என்ன…??? சச்சி உடன் குரல் நேர்முகம் – பகுதி 1

மறவன்புலவு க.சச்சிதானந்தன், பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர். கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர். 23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.  கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர். இவரை 2011 மார்ச்சு 20ஆம் தேதி, சென்னையில் வல்லமை ஆசிரியர் அண்ணாகண்ணன், நேர்கண்டார். இந்திய மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடற்பகுதிகள், பாக்கு நீரிணை, மன்னார் குடா என அழைக்கப்பெறுகின்றன. இவற்றை இங்கே தமிழர் கடல் என்ற பொதுப் பெயரால் அழைக்கிறோம். இந்தத் தமிழர் கடலில் நடப்பது என்ன? என்பதை இந்த நேர்முகம், விரிவாக எடுத்துரைக்கிறது. இதன் முக்கியத்துவம் கருதி, இந்த நேர்முகத்தைச் சில பகுதிகளாக வெளியிடுகிறோம். இதன் முதல் பகுதியைக் கீழ்க்கண்ட தளத்தில்  கேட்கலாம். (மேலும்....)

பங்குனி 25, 2011

 

லிபியா மீது தாக்குதல் நடத்தும் கொலைகாரைத் தேடி.....?

 

லிபியா மீது நடத்தப்படுகின்ற வான் தாக்குதல்களை கண்டித்து பம்பலப்பிட்டியிலுள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்திற்கு முன்பாக தேசிய சுதந்திர முன்னணி நேற்று ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது எடுத்த படம். இதில் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்கா, தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹம்மட் முசம்மில் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

பங்குனி 25, 2011

 

மூத்த பிரஜைகளுக்கு அடையாள அட்டை

மூத்த பிரஜைகள் அனைவருக்கும் முதியோர் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக சேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா கூறினார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டதாவது, நாடு முழுவதும் 10 ஆயிரம் கிராமிய முதியோர் சங்கங்கள் உள்ளன. இது தவிர 206 பிரதேச சங்கங்கள், 17 மாவட்ட முதியோர் சங்கங்கள், 4 மாகாண முதியோர் சங்கங்கள் என்பனவும் காணப்படுகின்றன. முதியோருக்கு வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டைகள் அனைத்து அரச நிறுவனங்களிலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

பங்குனி 25, 2011

கூட்டுப்படை தாக்குதல் தொடர்கிறது

லிபிய வான் பரப்பில் 175 தடவைகள் தாக்குதல் விமானங்கள் பறந்தன

கூட்டுப்படைக்கு தலைமை தாங்குவதில் தொடர்ந்து சிக்கல்

லிபியா மீதான அமெரிக்க கூட்டுப் படை தாக்குதல் நேற்றைய தினத்திலும் தொடர்ந்தது. இதன்போது லிபியா தலைநகர் திரிபோலி மற்றும் தென் மேற்கு நகரான ஜாபர் பகுதிகளில் கூட்டுப் படையி னரால் ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் தலைநகர் திரிபோலியில் எட்டு இடங்களில் தொடர்ச்சியாக வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருக்கும் அல் ஜஸிரா ஊடகவி யலாளர் செய்தி வெளியிட் டுள்ளார். தவிர ஜாபர் பகுதியில் உள்ள முக்கிய இராணுவ தளங்களின் மீதும் கூட்டுப் படை தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தியுள்ளது. இதன்படி லிபிய வான் பரப்பில் கூட்டுப் படை தாக்குதல் விமானங்கள் நேற்றைய தினத்தில் மாத்திரம் 175 தடவைகள் பறந்ததாக அமெரிக்க விமானப் படை கூறியுள்ளது. (மேலும்....)

பங்குனி 25, 2011

Joint Statement of Communist and Workers' Parties Against imperialist aggression in Libya

 The imperialist killers headed by the USA, France, Britain and NATO as a whole and with the approval of the UN started a new imperialist war. This time in Libya. Their allegedly humanitarian pretexts are completely misleading! They throw dust into peoples' eyes! Their real goals are the hydrocarbons in Libya. We, the Communist and Workers' parties condemn the military imperialist intervention. The people of Libya must determine their future on their own, without foreign imperialist interventions. We call on the peoples to react and demand the immediate cessation of the bombings and of the imperialist intervention! (more...)

பங்குனி 25, 2011

ஹம்பாந்தோட்டை துறைமுகம்

சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம் ஜுனில்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து சர்வதேச வர்த்தக கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் ஆரம்பமாகும் என துறைமுக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுண வர்தன நேற்று பாராளும ன்றத்தில் தெரிவித்தார். இவ்வருட இறுதியில் கொழும்பு துறைமுகத்துக்கு ஈடாக சர்வதேச கப்பற் போக்குவரத்துடன் இணைந்து வர்த்தக நடவடிக்கைகளும் ஹம்பாந்தோட்டை துறைமுத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். (மேலும்....)

பங்குனி 25, 2011

யெமனுக்கு அரபு நாடுகள் கண்டனம்

யெமனில் அரசுக்கு எதிரான போராட்டக் காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்துவதற்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. யெமனில் ஜனாதிபதி சலேவுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகப் போரா ட்டங்கள் நடந்து வருகின்றன. தலைநகர் சானாவில் போராட்டக்காரர்கள் கூடியிருக்கும் பல்கலைக்கழக மையச்சதுக்கத்தில் பாதுகாப்புப் படையினர் அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்திவருவதாகக் கூறுப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை அங்கு தொழுகை நடத்துவதற்காகக் கூடியிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. (மேலும்....)

 

பங்குனி 25, 2011

ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் விஞ்ஞானத்துக்கு கிடைத்த இயற்கைக் கொடை

(பிரையன் ஹென்ட்வெர்க் )

‘பூமியின் மையம் வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம்? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் புவி அணு உலை (Geo – Reactor)  என்று குறிப்பிடுகிறேன். ‘பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும் அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். (மேலும்....)

பங்குனி 25, 2011

ஜெயலலிதா - கருணாநிதி பிரசாரத்தில் சூடுபிடிக்கும் தமிழ்நாட்டின் தேர்தல் களம்

தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று முன்தினம் தனது தேர்தல் பிரசாரத்தை திருவாஷரூரில் தொடங்கி விட்டார். அ. தி. மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று திருச்சியில் தொடங்கினார். இரு கட்சி வேட்பாளர்களும் முழு வீச்சில் களமிறங்குவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைத் தேர்தலுக்கு குறுகிய காலமே அவகாசம் இருந்ததால், கூட்டணிக்கான தொகுதிப் பங்கீட்டில் கட்சிகள் அவசரம் காட்டின. இதனால், அ.தி.மு.க.- தி. மு. க. இரண்டு கூட்டணிகளிலுமே சிக்கல் ஏற்பட்டது. எனினும் ம.தி. மு. க. விவகாரம் தவிர, அனைத்துச் சிக்கல்களும் தீர்க்கப்பட்டு, தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் போன்றவை வெளியிடப்பட்டன. (மேலும்....)

 

பங்குனி 25, 2011

புகுஷிமா அணு உலை

கதிர்வீச்சு தாக்கிய இருவர் மருத்துவமனையில் அனுமதி

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப் பட்ட புகுஷிமா அணு மின் நிலையத் தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பை தொடர்ந்து திருத்த வேளையில் ஈடுபட்டிருந்த இரண்டு பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். மூன்றாவது அணு உலையில் நேற்று முன்தினம் தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டதோடு வெள்ள புகை கக்கியது. இதனையடுத்து திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் மூன்றாவது அணு உலையை வழமை நிலைக்குக் கொண்டுவர முயன்ற இரண்டு பணியாளர்களுக்கு கதிர்வீச்சு தாக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களை உடனடியாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உலைகளைப் பராமரிக்கும் டோக்கியோ மின் சக்தி நிறுவனம் கூறியுள்ளது. இதன்போது மேலும் ஒரு பணியாளருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை. (மேலும்....)

பங்குனி 24, 2011

லிபியாவை பாதுகாக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை ஆதரவு
 

லிபியாவின் இறைமை, சுதந்திரம், ஜனநாயக உரிமைகள், மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் இலங்கை அரசு பூரண ஆதரவை வழங்கும். மேற்குலக நாடுகள் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை களை மதிக்காமல் இந்த தாக்குதல்களை மேற்கொள்கின்றன. லிபியா மீது நடத்தப்படும் வான் தாக்குதல்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. வான் தாக்குதல்கள் தீர்வாக அமையாது. லிபியாவின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான பேச்சு நடத்த முடியுமாக இருந்தது. எனினும் இந்த நாடுகள் இவற்றில் ஆர்வம் காட்டவில்லை. ஐ. நா. செயலாளர் நாயகம் ஒரு பிரதிநிதியையும் லிபியாவுக்கு அனுப்பி இருந்தார். (மேலும்....)

 

பங்குனி 24, 2011

மறுக்கப்பட்ட உரிமைகளுடன்  இந்தியாவில்  வாழ்ந்த ஓர் யாழ்ப்பாணப்  பிரஜை !!!

ஓமந்தை வந்தபோது இருபது வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்து வந்தது நினைவுக்கு வந்தது ,சுபாக்கு இரண்டு வயசு, சுமனுக்கு ஒரு வயசு. இராணுவத்துக்கு நாம் சளைத்தவர்கள் அல்ல என்ற குணத்துடன் போராளிகளின் அடாவடி தனத்தின் உச்சம் அங்கு நடந்தது. குழந்தைகள் அதிகம் சிரமப்பட்டினம் .வவுனியா வர்த்தகர்கள் மண்ணெண்ணை வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த நேரம் அது. பின் நாளில்  ஓமந்தை முகாம் விழுந்த காலத்தில் நாங்கள் வவுனியாவில் இருந்தோம்.ஜோசப் முகாமுக்கும் இதுக்கும் நடந்த உச்ச சண்டையை நேரில் பார்த்தோம். இந்த இடம் இப்போதும் நெருக்கடி மிகுந்த இடமாகவே இருக்கிறது. சோதனைசாவடி, வழமையான சோதனைகள் முடித்து புழுதி ரோடு, தார் ரோட்டு மாறி மாறி பயணம் தொடர்ந்தது. பாரிய சேதங்கள்,  இடிந்த வீடுகள் என்று எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாம் வெளி ஆக இருந்தது. ரோட்டு அகலப்படுதுவதற்காக சீன அரசாங்கம் வாகனங்களையும் , சிறிய குடில்களையும் போட்டு இருந்தனர். A9 ரோட்ல பயணம் செய்வேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை. (மேலும்....)

 

பங்குனி 24, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடுந்தூர நடையணத்தின் 65வது நாளான (21-03-2011, திங்கள்) நேற்று காலை 06:00 மணியளவில் புறப்பட்ட நெடும்பயணம் டெல்லி நோக்கி பயணித்தது.

எமது நடைபயண வீரர்களின் வெற்றியான நடைபயணத்தினால் அதிர்ந்து போன இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான ஒரு கூட்டம் டெல்லி நோக்கி பயணம் மேற்கொண்டு வருகிறது, அதை அனுமதிக்க வேண்டாம் என்று உத்தியோகபூர்வமாக இந்திய அரசுக்கு அறிவித்திருந்தது. ஆனால், ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியை (ஈ.என்.டி.எல்.எப்.) இந்தியாவில் அனைவரும் அறிவர். ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி கடந்த 22 வருடங்களாக ஈழத் தமிழர் விடுதலைக்காக இந்தியாவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமைப்பு என்பது இந்தியாவில் அனைவரும் அறிவர். டெல்லி காவல்துறையினர் இது நகைப்புக்குரிய விடயம் என்றும் தெரிவித்தனர். (மேலும்....)

பங்குனி 24, 2011

புலம்பெயர் இலங்கையர்களின் சமய கலாச்சார நிகழ்வுகளில் இலங்கை உயர்ஸ்தானிகர்

கடந்த ஞாயிறு அன்று கனடா நாட்டிற்கான இலங்கைத்தூதுவர் கௌரவ சித்ராங்கனி வாஹீஸ்வரா அவர்கள் புலம்பெயர் இலங்கையர்களின் சமய கலாச்சார நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஒட்டாவா நகரிலிருந்து டொரொன்டோ ஸ்கார்புரோ நகரிற்கு டொரொன்டோ துணைத்தூதர் கருணாரத்ன பரணவிதான‌ சகிதம் வருகை தந்திருந்தார். க‌ட‌ந்த‌ ச‌னிக்கிழ‌மை இர‌வு இளைய‌பார‌தியின் சீ.ரீ.பி.சீ(CTBC) வானொலியில் நேர‌டி தொலைபேசி உரையாட‌லில் க‌ல‌ந்துகொண்டு வ‌சிக‌ர‌னின் கேள்விக்க‌ணைகளுக்கு ந‌ன்கு பதிலளித்த‌மை குறிப்பிட‌த்த‌க்க‌து. க‌ன‌டா உத‌ய‌ன் ஆசிரியர் லோகேந்திர‌லிங்க‌ம்,இல‌ங்கை வீர‌கேச‌ரி ப‌த்திரிகை பிர‌த‌ம‌ ஆசிரிய‌ர் வி.தேவ‌ராஜா ஆகியோர் இந்நிக‌ழ்வில் க‌ல‌ந்து கொண்டு பேட்டி எடுத்த‌மையும் குறிப்பிட‌த்த‌க்க‌து. (மேலும்....)

பங்குனி 24, 2011

 

AYELASAH  is an evening of music

 Please join us for a night of performances by artists in solidarity with the peoples of Batticaloa and the East and Northern-Central areas of Sri Lanka who were recently affected by severe floods that destroyed livelihoods and homes and displaced hundreds of thousands. 

 AYELASAH is an evening of music,

Spoken word Dance as well as a display  Auction of artwork, sculpture  Photography to raise funds

for and celebrate the resiliency of the people of Batticaloa. (more...)

பங்குனி 24, 2011

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்திற்கு மின் இணைப்பு

பிரான்ஸ் வரை பரவிய ஜப்பானிய கதிர்வீச்சு

ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையத்தின் மூன்றாவது அணு உலையில் மீண்டும் வெள்ளை புகை கக்கியதால் நேற்று நண்பகல் பணியா ளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட னர். எனினும் இந்தப் புகை எங்கிருந்து வெளியேறுகின்றது என்பதை கணிக்க முடியாதுள்ளதாக டோக்கியோ மின் சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே நேற்று முன்தினத்திலும் இங்கு அதிகப் புகை கக்கியதைத் தொடர்ந்து பணியாளர் இரண்டுமுறை வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் புகுஷிமா அணு மின் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கும் பணி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

 

பங்குனி 24, 2011

சிரியாவில் பாதுகாப்பு படையின் துப்பாக்கிச் சூட்டில் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி

சிரிய பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் டெரா நகரில் அமைந்துள்ள ஒமரி பள்ளிவாயலுக்கு அருகில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதே இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு அளவில் மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளை துண்டித்துவிட்டு பாதுகாப்புப் படையினர் தம்மீது தொடர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ஆர்ப்பாட்டக் காரர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் பாத் கட்சியைச் சேர்ந்த பஷார் அல் ஆசாத் 50 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வருகிறார். 48 ஆண்டுகளாக அங்கு அவசரச் சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால் ஆசாத்துக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவரை எதிர்த்தும், ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கேட்டும் மக்கள் தெற்கத்திய டெரா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் நேற்று முன்தினம் ஆளும் பாத் கட்சியின் தலைமையகத்துக்கு தீ வைத்தனர். இதனைத் தொடர்ந்து அரச எதிர்ப்பு ஆர்ப்பாட் டங்கள் தீவிரமடை ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்குனி 24, 2011

தமிழ் சிங்கள புத்தாண்டு விழா 2011

வருடா வருடம் கனடிய ஜனநாயக தமிழ் கலாச்சார மன்றத்தினால் நடாத்தப்படும் தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா இவ்வருடமும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில்,

பரத நாட்டியம்

கண்டிய நடனம்

சீன சிங்க நடனம்

ஆபிரிக்க மேள வாத்தியம்

தமிழ்-சிங்கள இசை நிகழ்ச்சி

என்பன நடைபெறவுள்ளன.

காலம் : ஏப்ரல் 23 2011 சனிக்கிழமை மாலை 5:30

இடம் : Agincourt Collegiate Auditorium

2621 Midland Aveneu [Midland & Sheppard]

Scarbrough

மேலதிக விபரங்களுக்கும் நுழைவுச்சீட்டு பெறவும்

416 588 3230 - 416 264 2115 - 416 276 8287

 

பங்குனி 24, 2011

Tarmetla, A village in flames

On March 16 this year, about 200 Koya commandos of the Chhattisgarh police raided Tarmetla village in Dantewada district and burnt about 200 homes and granaries. Images of desolate homes and helpless villagers after the raid.

 

பங்குனி 24, 2011

லிபியா  அரசியல் பேச்சுவார்த்தையை நடத்துக! சீனா, ரஷ்யா வலியுறுத்தல்

அமைதியை நிலை நாட்ட வேண்டும் என்று ஐக் கிய நாடுகள் சபை போட்ட தீர்மானத்தைப் பயன்படுத் திக் கொண்டு லிபியா மீது தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதை நிறுத்தி விட்டு, அரசியல் ரீதியான பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் படைகள் லிபி யாவில் குறிப்பிட்ட சில இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரு கின்றன. கடந்த நான்கு நாட் களாக நடைபெற்று வரும் தாக்குதலில் சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலும்....)

 

பங்குனி 24, 2011

ஹொலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

அமெரிக்காவில் பிரபல ஹொலிவூட் நடிகை எலிசபெத் டெய்லர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இதய நோய்ப் பாதிப்பால் மரணம் அடைந்த அவருக்கு வயது 79. இரண்டு முறை ஒஸ்கார் விருதுகளைப் பெற்றவர். இருதய நோய் பாதிப்பு காரண மாக அவர் அண்மையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந் தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று மரணம் அடைந்தார். எலிசபெத் டெய்லர் இரண்டு முறை ஒஸ்கர் விருதுகளை வென்றவர் என்பது குறிபபிடத்தக்கது. நெஷனல் வெல்வெட், கிளியோபட்ரா, ஹுஸ் அஃப்ரெய்ட் ஆப் விர்ஜினியா வுல்ஃப்’ உள்ளிட்ட படங்கள் அவர் நடித்தவற்றில் மிகவும் பிரபலமானவை. நடிகர் ரிச்சர்ட் பர்டன் உட்பட 7 பேரை எலிசபெத் டெய்லர் திருமணம் செய்து, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். ரிச்சர்ட் பர்டனுடன் மட்டும் அவர் 12 திரைப்படங்களில் நடித்துள்ளார். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கு எலிசபெத் டெய்லர் ஆதரவு அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பங்குனி 24, 2011

அரசியல் தீர்வுத்திட்ட யோசனை அரசிடம் விரைவில் கையளிப்ப - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதல் தடவையாக அடுத்த மாதம் அதிகாரப் பகிர்வு உள்ளடங்கிய தீர்வுத் திட்டம் ஒன்றை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கிறது. அடுத்த மாதம் 27 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசு - கூட்டமைப்பு சந்திப்பின் போது இந்தத் திட்டத்தை தமிழ்க் கூட்டமைப்பு சமர்ப்பிக்கவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையில் இடம்பெற்றுவரும் பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டமாக தமிழ் மக்களின் சில அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியுள்ளன. ஏப்ரல் 7ஆம் திகதியும் ஏப்ரல் 27 ஆம் திகதியும் பேச்சுவார்த்தைகளுக்கு நாள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எமக்கு இருப்பதாக உறுதிபடத் தெரிவித்தார். (மேலும்....)

 

பங்குனி 24, 2011

 

மேற்குலக கூட்டுப்படைக்குள் குழப்பம்

அடிபணியப் போவதில்லையென கடாபி அறிவிப்பு

லிபிய தலைநகர் திரிபோலியில் தொடர்ந்து நான்காவது நாளாக நேற்று முன்தினம் இரவும் அமெரிக்க கூட்டுப்படை தாக்குதல்களை நடத்தியது. இதன்போது திரிபோலி நகரில் பலமுறை வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிரு க்கும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்த தாக்குதல் இடம்பெற்ற பகுதிகள் மற்றும் சேத விபரங்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதில் நேற்று முன்தினம் மாலை தொடக்கம் திரிபோலி யின் முக்கிய நகரங்களில் தானியங்கி விமான எதிர்ப்பு கதிர்கள் செயற்பட ஆரம்பித்ததாகவும் அங்கு தொடர்ந்து சூட்டு சத்தங்கள் கேட்டதாகவும் அல்ஜீரா ஊடகவியலாளர் அனிடா மக்னோட் தெரிவித்துள்ளார். (மேலும்....)

பங்குனி 24, 2011

ஐ. தே. க. தலைவராக ரணில் சஜித் பிரதித் தலைவர்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக மீண்டும் ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ. தே. க. செயற்குழு இவரை மீண்டும் தெரிவு செய்துள்ளது. புதிய தலைமையைத் தெரிவு செய்வது தொடர்பாக மூன்று நாட்கள் கூடியாராய்ந்த ஐ. தே. க. செயற்குழு பெரும் சர்ச்சைக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்கவைத் தலைவராகத் தெரிவு செய்துள்ளது. பிரதித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் கரு ஜயசூரியவும் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாரென ஸ்ரீகொத்த வட்டாரங்கள் தெரிவித்தன. (மேலும்....)

பங்குனி 23, 2011

வட மாகாண சபை தேர்தல் குறித்து விரைவில் ஆராயப்படும்

வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஜனநாயகமான முறையில் நடைபெற்றுள்ளதையடுத்து வடக்கு மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து ஆராய்வோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாடு ஒன்றில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில், வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஜனநாயகமாக நடைபெற்றுள்ளது. அந்த வகையில் விரைவில் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து ஆராயவுள்ளோம். கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டதும் முதலில் அங்கு உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. பின்னர் கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்தப்பட்டது. அதேபோன்று வடக்கில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் முழுமையாக நடைபெற்றதும் வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு செல்வோம்.

பங்குனி 23, 2011

சிறுவர்களின் அடிமைத் தொழில் ஒழித்துக் கட்டப்படும்

இந்தியா பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சிறுவர்க ளின் உரிமை பறிக்கப்பட்டு, அவர்கள் பலவந்தமாக தொழில் செய்ய வேண்டிய அவலநிலை இன்று அதிகமாக நிலை கொண் டுள்ளது. உலகின் அதியுன்னத தரத்தை உடைய பாகிஸ்தா னில் தாயரிக்கப்படும் கம்பளங்களை தயாரிக்கும் பணிகளை ஒட்டுமொத்தமாக சிறுவர்களே செய்து வருகிறார்கள். சிறுவர்களின் பிஞ்சுக் விரல்கள் மூலம் கம்பளங்களின் நூலை தொகு க்கும் பணியை அவர்கள் பெரியவர்களை விட சிறப்பாக செய் யக் கூடியதாக இருப்பதனால் தான் கம்பளத் தொழிற்சாலைக ளில் சிறுவர்கள் பணிபுரியுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். அதுபோன்று, இந்தியாவில் பீடி தயாரிப்பு தொழிலிலும், பட்டா சுகள் தயாரிக்கும் தொழிலிலும் சிறுவர்கள் ஈடுபடுத்தப்படுகி றார்கள். மத்திய கிழக்கு நாடுகளிலும் ஒட்டக ஒட்டப்போட்டிக ளில் சிறுவர்களே ஒட்டகம் ஓட்டும் பணியை மேற்கொண்டு வருகிறார்கள். (மேலும்....)

பங்குனி 23, 2011

கனடாவில் குடியுரிமை பெற்ற தம்பித்துரை பிரபாகரனுக்கு

புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக ஆறு மாத சிறை தண்டனை

புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் தம்பித்துரை பிரபாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் ரொறன்ரோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க கனடா நாட்டு சட்டத்தில் இடமுள்ளது.(மேலும்....)

பங்குனி 23, 2011

லிபியாவிலுள்ள சிவிலியன்களின் பாதுகாப்பில் இலங்கை அக்கறை

லிபியாவிலுள்ள சிவிலியன்களின் பாதுகாப்பு விடயம் ஏனைய சர்வதேச சமூகங்களுக்கு உண்மையிலேயே அக்கறையுள்ள விடயமாக இருப்பதைப் போல இலங்கைக்கும் அக்கறையுள்ள விடயமாக இருக்கின்றது. உண்மையிலேயே 1973 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தை பின்பற்றுவதற்கு இதே அக்கறையானது வழிவகுத்துள்ளது. எனவே, இத்தீர்மானத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சிவிலியன்களையும் சிவிலியன்கள் பெருமளவில் வாழும் பிரதேசங்களையும் பாதுகாக்கும் குறிக்கோளுடன் இணைக் கப்படல் வேண்டும். வன்முறையின் பயன்படுத்துகை காரணமாக அவர்களுடைய நிலைமை சீர்கேடு அடைவதை அனுமதிக்கக் கூடாது. சிவிலியன்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு சகல தரப்பினர்களும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென நாம் வலியுறுத்திக் கூறுகின்றோம். (மேலும்....)

பங்குனி 23, 2011

நிலக்கரி அனல்மின் நிலையம் ஜனாதிபதியினால் நேற்று அங்குரார்ப்பணம்

லக்விஜய மின்னுற்பத்தி நிலையம் எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்த மின்னுற்பத்தி நிலைய த்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள் சரியாக மாலை 5.50 மணியளவில் ஆரம்பமாகின. இந்தியாவிலிருந்து விஜயனும் அவரது தோழர்களும் கடல் வழியாக படகில் வந்து புத்தளம், தம்பபன்னியில் கரையேறி இலங்கைக்குள் வருகை தந்தனர். அந்நிகழ்வை நினைவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகில் வந்தவர்கள் இந்த அனல் மின் நிலையத்திற்கென அமைக்கப்பட்டிருக்கும் இறங்கு துறையில் கரையேறி இத்தேசிய வைபவத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு குறித்து அறிவிப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. (மேலும்....)

பங்குனி 23, 2011

தமிழக காங்கிரஸ் பட்டியலை நிராகரித்தார் சோனியா காந்தி

அடுத்த முதல்வராக கருணாநிதியும் ஆக முடியாது ஜெயலலிதாவும் ஆக முடியாது

தி.மு.க. காங்கிரஸ் - அ.தி.மு.க. ஆகியவற் றின் ஊழல் இலஞ்ச நடவடிக்கைகளினால் தமிழர்கள் இன்று சுயமரியாதையை இழந்து நிற் கின்றனர். அடுத்த முதல்வராக கருணாநிதியும் ஆக முடியாது ஜெயலலிதாவும் ஆக முடியாது. அடுத்த முதல்வர் யார் என்பதை அடுத்த புதிய கூட்டணி தீர்மானிக்கும். (மேலும்....)

பங்குனி 23, 2011

சகலதுறையினருக்கும் ஓய்வூதியம் வழங்கும் சட்டமூலம் அடுத்தமாதம்

அரச ஊழியர்களுக்கு மட்டுமே உரித்தாக இருக்கும் ஓய்வூதியத் திட்டம் வங்கி, கூட்டுத்தாபன, தனியார் துறையினர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளவர்களுக்கும் உரித்தாகும் விதத்திலான புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும். வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள், கலைஞர்கள், சுயதொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், கடற்றொழிலாளர்கள், வர்த்தகர்கள், போன்ற சகலருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் விதத்திலான சட்ட மூலம் கொண்டு வரப்படவுள்ளது. (மேலும்....)

பங்குனி 23, 2011

லிபியா மீது தாக்குதல்

கண்டித்து சபையில் ஒத்திவைப்பு பிரேரணை

லிபியா மீதான மேற்கு நாடுகளின் மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டிக்கும் சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை யொன்று பாராளு மன்றத்தில் கொண்டு வரப் படவு ள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் மேற்படி பிரேரணையை கொண்டுவரவுள்ளார். ஐ.ம.சு.முன்னணியின் பாராளுமன்றக் குழு இதற்கான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பங்குனி 23, 2011

இன்று உலக வளிமண்டல தினம்

வளிமண்டலத்தில் ஏற்பட்ட அசாதாரண மாற்றம்

(அருணா தருமலிங்கம்)

நம் நாட்டு மக்களுக்கு ஆண்டுதோறும் உண் டாகின்ற வட கீழ் பருவப் பெயர்ச்சி மற்றும் தென்மேல் பருவப் பெயர்ச்சி காலநிலைளை மாத்திரம் தான் நன்கு தெரியும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அனேகம் பேர் அறிந்திராத ‘லாலினோ’ காலநிலை வளிமண் டலத்தை ஆட்கொண்டதினால் நாம் அல்லலுற வேண்டியதாயிற்று. இவ் அசாதாரண காலநிலை எமது வளிமண்டலத்தை ஏன் ஆக்கிரமித்தது? என்பதைப் பார்ப்போம். பசுபிக் சமுத்திரத்தின் மேற்கே வெப்பநிலை வழமையைவிட உயர்வடைந்ததினால் அத்திசையில் அமைந்துள்ள அவுஸ் திரேலியா, இலங்கை போன்ற நாடுகளில் கடும் மழை பெய்தது. இதுவே குறுகிய கால இடை வெளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கான காரணியெனவும் கொள்ளலாம். (மேலும்....)

பங்குனி 23, 2011

ரஜினிகாந்துக்கு ஜப்பான் பிரதமர் அழைப்பு அஞ்சலி கூட்டத்தில் அவரே வெளியிட்ட தகவல்

பூகம்பம்-சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் நாட்டுக்கு வருகைதரும்படி நடிகர் ரஜினிகாந்துக்கு, அந்த நாட்டின் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார். இந்த தகவலை ரஜினிகாந்த் வெளியிட்டார். ஜப்பானில் பூகம்பத்தாலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் ‘இந்தோ- ஜப்பான் சேம்பர் ஆப் காமர்ஸ்’ சார்பில் சென்னை யில் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத் துக்கு அந்த அமைப்பின் தலைவர் வீர மணி தலைமை தாங்கினார். அஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு நடிகர் ரஜினி காந்த் பேசியதாவது, ஜப்பானிய மக்கள் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அதிலிருந்து மீண்டு, உடனே திரும்ப எழுந்துவிடுவார்கள். கடினமாக உழைக்கிற மக்கள் அவர்கள்.(மேலும்....)

பங்குனி 23, 2011

ஐ.தே.க. தலைவர் தெரிவில் முடிவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் காணப்படுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் உட்பட முக்கிய பதவிகளுக்குப் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்றையதினம் செயற்குழுக் கூட்டத்தை நடத்தத் தீர்மானிக்கப்பட்டு, நேற்று செயற்குழு மீண்டும் கூடியது. நேற்றைய செயற்குழுக் கூட்டத்திலும் தொடர்ந்து இழுபறி நிலை காணப்பட்டதைத் தொடர்ந்து கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஆராய்வதற்கு இன்று மாலையும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மீண்டும் கூடவுள்ளது.

பங்குனி 23, 2011

தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ

கடந்த 2006 சட்டசபை தேல்தல் முதல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த ம.தி. மு.க. தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. இரண்டு மாதத்துக்கு அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். குட்டிக் கட்சிகள் கூட களம் காணத் தயாராகும் இந்த நேரத்தில் வைகோ போன்ற முதிர்ந்த அரசியல்வாதிகள் இத்தகைய முடிவை எடுத்தது அரசியல் நோக்கர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட வைகோ, மீண்டும் 1999 லோக்சபா தேர்தலில் அக்கட்சியுடனே கூட்டணிக்கு சம்மதித்தது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. (மேலும்....)

பங்குனி 23, 2011

அமைச்சரவையை கலைத்தார் யெமன் ஜனாதிபதி சலே

யெமன் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி தீவிரமடைந்ததையடுத்து ஜனாதிபதி அலி அப்துல்லா சலே தனது அமைச்சரவையை கலைத்தார். இராணுவ உயரதிகாரிகளையும் பதவி விலகுமாறு கூறியுள்ளார். யெமன் நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக மக்கள் புரட்சி செய்து வருகின்றனர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் 80 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ஜனாதிபதிக்கு அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் சானா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜனாதிபதி சலே தனது அமைச்சரவையை கலைப்பதாகவும் இராணுவ உயரதிகாரிகளை பதவி விலக செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார். இதனிடையே ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான இராணுவ அதிகாரியான ஜெனரல் அலி முஹ்சான் அல் அஹ்மர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்குனி 23, 2011

PICTURES OF RECENT EARTHQUAKE AND TSUNAMI IN JAPAN....

An 8.9-magnitude earthquake hit off the east coast of Japan early today. The quake -- one of the largest in recorded history -- triggered a 23-foot tsunami that battered Japan's coast, killing hundreds and sweeping away cars, homes, buildings, and boats. Editors note: we'll post more as the story develops -- Lloyd Young (47 photos total)

பங்குனி 23, 2011

தமிழ் மூச்சு எனத் தடந்தோள் தட்டி வந்திடுவீர்!

ம.தி.மு.க.வுக்கு கருணாநிதியின் மறைமுக அழைப்பு

ஐயாயிரம் ஆண்டுக்கு மேலான வர லாறு கொண்ட திராவிட உணர்வு பட் டுப் போகாமல் காப்பாற்றி வந்த ஈ.வெ.ரா எனும் பேருருவில் பிரிவுக்கணைகள் புகுந்து இரு இயக்கமானோம். அதில் ஒன்று அண்ணாதுரை தலைமையில் இன உணர்வு பகுத்தறிவு இயக்கமாகவும் மற்றொன்று பகுத்தறிவு கவலையின்றி ஆனால் பண்பாடு காத்திடும் இயக்கமாக அருமை நண்பர் எம்.ஜி.ஆர். தலைமையிலும் இயங்கிய ஏற்றமிகு நிலை கண்டு அதன் எழிலை குறைத்திட எத்தனையோ சதிகள், சாகசங்கள் அத்தனைக்கும் ஈடு கொடுத்தோம். எந்த ஒரு இயக்கமும் ஜனநாயக வழித் தடத்தில் தேர்தலை சந்திக்க களம் இறங்கி விட்டால் ஜனநாயக்கத்தை கட்டிக் காக்க வேண்டிய பொதுமக்கள் மாத்திரமல்லாமல், அந்த பொதுமக்களிடத்திலே தமது கட்சிக்காக ஆதரவு திரட்டக் கூடிய தொண்டர்கள் தோழர்கள் அணி வகுத்து குவிந்திடுவது இயல்பே. ஓரிரு தம்பிமார்கள் எங்கெங்கோ சிதறிப் போயினர். (மேலும்....)

பங்குனி 23, 2011

ஆப்கானில் 7 பகுதிகளில் வெளிநாட்டுப் படை வெளியேற்றம்

ஆப்கானில் வெளிநாட்டுப் படைகளிடமிருந்து ஆப்கான் இராணுவத்திடம் கைமாறும் 7 பகுதிகளை அந்நாட்டு ஜனாதிபதி ஹமீட் கர்சாய் அறிவித்துள்ளார். இதில் தற்போது மோதல்கள் இடம்பெறாத காபுல், பன்ஜாரா, பமியான், ஹரத் நகர், மஸார் இ ஷரீப் மஹ்தர்லாம் ஆகிய பகுதிகள் ஆப்கான் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வரவுள்ளதாக ஹமீட் கர்சாய் குறிப்பிட்டுள்ளார். எனினும் தற்போது மோதல்கள் இடம்பெற்று வரும் ஹெல்மாட் மாகாணத்தின் லக்ஷர்கா பகுதியிலிருந்து வெளிநாட்டுப் படை வெளியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆப்கான் மக்கள் தொடர்ந்தும் தமது பாதுகாப்பிற்கு வெளிநாட்டவர் செயற்படுவதை விரும்பவில்லை என கர்சாய் இதன்போது தெரிவித்தார். ஆப்கானில் இருந்து வரும் 2014 ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் முழுமையாக வெளியேறவுள்ளன. இதற்கான கட்டம் கட்டமான வெளியேற்றம் தற்போது இடம்பெறவுள்ளது. இதன் முதல் கட்டமாக ஒரு தொகை வெளிநாட்டுப் படை ஆப்கானிலிருந்து வெளியேறவுள்ளது.

பங்குனி 23, 2011

நிலாவினால் பூமியில் நிலநடுக்கம்

பூமியின் தரைக்குக் கீழே 25 கி. மீ அடியில் ஏகப்பட்ட அழுத்தத்தில் தண்ணீர் இருக்கிறது. அதைச் சுற்றியுள்ள பாறைகள் தண்ணீரை நசுக்கியபடியுள்ளன. அதனால் தண்ணீரானது வழுக்கும் கிரீஸ் மாதிரி மாறிவிடுகிறது. பாறைகள் இதனால் ஒன்றன் மேல் ஒன்று சுலபமாக நழுவி நகருகின்றன. இலேசான விசை கொடுத்தாலும்கூட உடனே நிலநடுக்கம் ஏற்படுகிறது. நிலாவும் சூரியனும் நேர்கோட்டில் வரும்போது அவை தரையை இழுக்கின்றன. சில பாறைகள் நழுவி நில நடுக்கங்கள் ஏற்பட அந்த இழுப்பே போதும் என்று கலிபோர்னிய பல்கலைக்கழக நிலவியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். சேன் ஆன்டிரிஸ் பிளவு என்பது பூமியின் தரையில் காணப்படும் தழும்பு போன்ற கீறல், இந்தத் தழும்பு தரையின் அடியிலிருந்து மெல்ல மேலெழும்பிக் கொண்டிருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இதன் உயரம் அரிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதன் வளர்ச்சிக்குக் காரணம் நிலாவின் இழுப்பே என்று சொல்கிறார்கள்.

பங்குனி 22, 2011

 

இன்று குடிநீர் தினம்

 

நீர் இன்றேல் உயிர் இல்லை

(அருணா தருமலிங்கம் )

உலகெங்கும் வாழ்ந்து வருகின்ற சகல ஜீவராசி களுக்கும் உயிர் பிழைப் பதற்கு காற்று, குடி தண்ணீர், காலநிலை, உணவு, ஆடை என்பன தேவைப்படுகின்றன. காற்றிலிருந்து பெறப்படுகின்ற பிராண வாயு இல்லையென்றால் தன்னிச்சையாகவே இரத்தோட்டம் தடைப்பட்டு உயிருக்கு ஆபத்து உண்டாகலாம். அவ்வாறே குடி தண்ணீர் கிடைக்காவிட்டாலும் குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே சீவிக்கலாம் என்பது யதார்த்தமாகும். இன்று உலக தண்ணீர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 22, 2011

லிபியா மீது மேற்கு நாடுகள் தொடர்ந்தும் மிலேச்சத்தனம்

தாக்குதல்களை கண்டித்து இலங்கையில் போராட்டங்கள்

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் ஒன்றிணைந்து லிபியா மீது மேற்கொள்ளும் மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிராக அனைத்து மக்களும் குரல் எழுப்ப வேண்டுமென தொழிற்சங்கத் தலைவர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். லிபியா மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டுமெனத் தெரிவித்த தொழிற் சங்க தலைவர்கள் ஏகாதிபத்தியவாதிகளுக்கெதிராகத் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர். லிபியா மீது அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நாடுகள் கூட்டாகத் தாக்குதல் நடத்துவதைக் கண்டிக்கும் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடொன்று நேற்றுக் கொழும்பு பம்பலப்பிட்டியிலுள்ள மேல் மாகாண ஆளுநரின் பணிமனையில் நடைபெற்றது. (மேலும்....)

பங்குனி 22, 2011

கடாபி குடியிருப்பில் அமெ. ஆதரவுப்படை தாக்குதல்

உலக ஜனநாயக முற்போக்கு சக்தி நாடுகள் கண்டனம்

லிபியா மீதான தாக்குதலுக்கு பல உலக நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் போர் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘லிபியா மீதான பன்னாட்டு இராணுவ நடவடிக்கை குறித்து சீனா வருந்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. லிபியா மீதான இராணுவ நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் ‘அப்பாவி மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் விதத்தில் இரு தரப்பினரும் உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளது. வெனிசுலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் அளித்த பேட்டியில் ‘அமெரிக்கக் கூட்டணி லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்ற இந்தத் தாக்குதலை துவக்கியுள்ளது’ என்ற சாடியுள்ளார். ஆபிரிக்க யூனியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் லிபிய பிரச்சினைக்கு ஆபிரிக்காவில் தான் தீர்வு காணப்பட வேண்டும். உடனடியாக இராணுவக் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிபியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. (மேலும்....)

பங்குனி 22, 2011

சோனியாகாந்​தி அம்மையாருக்​கு எதிராக லண்டனில் நடத்தப்பட்​ட ஆர்ப்பாட்ட​த்தினை வன்மையாக கண்டிக்கின்​றோம்.

பொதுநலவாய நாடுகளின் 14வது கூட்ட தொடரில் பேரூரை நிகழ்த்துவதற்காக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான மாண்புமிகு சோனியா காந்தி அம்மையார் அவர்கள் பிரித்தானிய தேசத்தின் தலைநகரமான லண்டன் நகரிற்கு வந்திருந்தார். ஈழத் தமிழினத்தின் விரோதமான சக்திகளின் தூண்டுதலில் மார்ச் மாதம் 17ம் திகதி சில விஷமிகள் சோனியா காந்தி அம்மையாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தியிருந்தனர். இதனை தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சர்வதேச செயலகம் வன்மையாக கண்டிக்கிறது. (மேலும்....)

பங்குனி 22, 2011

கடாபியின் ஆறாவது மகன் மரணமா?

லிபிய ஜனாதிபதி கடாபியின் ஆறாவது மகன் காமிஸ் கடாபி மரணமடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திரிபோலியில் உள்ள பாப் அல்-அஸிஸியா கட்டடத்தில், நேற்று முன்தினம் கடாஃபியின் மகன் தங்கியிருந்தவேளை லிபியா விமானப்படை விமானி ஒருவர் ஜெட் விமானம் ஒன்றை அந்த கட்டடத்தின் மீது திட்டமிட்டு மோதி வெடிக்கச்செய்ததாக செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் படுகாயமடைந்த காமிஸ் திரிபோலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அரபு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் குறித்த செய்தி இதுவரை அந்நாட்டு அரசினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கடாபிக்கு மொத்தம் 10 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் 7 பேர் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை கடாபியின் மகன் காமிஸின் மெய்ப்பாதுகாவலராக சேவையாற்றியதாகக் கூறப்படும் நபர் காயமடைந்த நிலையில் உள்ள காணொளிக் காட்சியும் தற்போது இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பங்குனி 22, 2011

ஏறாவூர் பிரதேசத்தில் மர்ம நீருற்று; புவிச்சரிதவியல் நிபுணர்கள் விரைவு

ஏறாவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டு ள்ள மர்ம நீர் ஊற்றின் காரணத் தைக் கண்டறிய மேலும் சில நாட்கள் குறித்த பிரதேசத்தை அவ தானிக்க வேண்டியுள்ளதாக அனர் த்த முகாமைத்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணை ப்பாளர் ஏ. எம். எம். ஹkர் தெரி வித்தார். நீர்ப் பெருக்கு ஏற்பட்டு ள்ள பிரதேசத்தை புவிச்சரிதவியல் பணியகத்தின் பிராந்திய முகாமை யாளர் எம். ஆர். எம். பாரிஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகப் பார்வையிட்டனர். ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பல இடங்கள் மர்மமான நீர் ஊற்றெடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் வீடுகள் மற்றும் வீதிகளில் நீர் தேங்கியுள்ளது. நீர்ப்பெருக்குக் காரணமாக குறித்த பிரதேச மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். கிணறுகளிலும் நீரின் நிறம் மாற்றமடைந்துள்ளதனால் அருந்துவதற்கு மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். நீர் ஊற்றினை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்வையிடுகின்றனர்.

பங்குனி 22, 2011

KUMARAN PATHMANATHAN (KP) DESERVES DEATH SENTENCE AND NOT 100 ACRES

(Malin Abeyatunge)

Is Kumaran Pathmanathan (KP) worth more than a Dead Tamil Tiger? If the latest report to say that KP will be rewarded with 100 acres is true, there is something wrong somewhere with the Government’s attitude towards KP. The public would like to know what information the Government has managed to extract from KP so far to reward KP with a NGO ( Is the central Bank monitoring the funds this NGO gets?) and 100 acres. The public would wish to know whether the Govt. has captured with the help of KP any of LTTE’s remaining ships after the defeat of LTTE militarily. We are thankful for the excellent naval operations during the peak of LTTE power which destroyed six or seven LTTE floating warehouses of illegal arms (ships) in the mid seas. Nothing is heard of the remaining LTTE ships after the war albeit man behind the scene KP has been in custody for over an year but treated not as a terrorist but a right royal. (more....)

பங்குனி 22, 2011

கிளிநொச்சி மாவட்டம்

எஞ்சிய சகல குடும்பங்களும் இரு வாரத்தில் மீள்குடியேற்றம்

கிளிநொச்சி மாவட்டத்தில் எஞ்சியுள்ள சகல குடும்பங்களும் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் மீள் குடியேற்றப்படுமென மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். அதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்த அவர். சொந்தக் காணியற்றோருக்குக் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்டத்தில் பெரும்பாலும் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடைந்துவிட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்றதாலேயே அங்கு மீள் குடியேற்றம் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது கண்ணிவெடி அகற்றப்பட்டு விட்டமை தொடர்பான சான்றிதழ் கிடைத்துள்ளது. தற்போது வவுனியா மெனிக்பாம் முகாமில் 51 குடும்பங்கள் மீள் குடியேற்றத்திற்காக உள்ளன. இவர்களில் 26 குடும்பங்களுக்குச் சொந்தக்காணி இல்லாத நிலை உள்ளதால் இவர்களுக்கு காணிகளை வாங்குவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட் டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பங்குனி 22, 2011

நுரைச்சோலை அனல்மின் நிலையம் மின்விநியோகம் இன்று ஆரம்பம்

புத்தளம் நுரைச் சோலையில் 455 மில்லியன் அமெரிக்கன் டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையத்திலிருந்து முதற்கட்ட மின்சாரம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தேசிய மின் இணை ப்புக்கு வழங்கப்படுகி றது. இன்று மாலை நுரைச்சோலைக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 300 மெகாவாட் மின்சாரத் தினை தேசிய மின் இணைப்புக்கு உத்தி யோகபூர்வமாக வழங் கும் நடவடிக்கையை ஆரம்பித்து வைக்கவுள்ளார். நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகள் 2007ம் ஆண்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வினால் உத்தியோகபூர்வ மாக ஆரம்பித்துவைக்கப் பட்டன. (மேலும்....)

பங்குனி 22, 2011

Hands of Libya!

பங்குனி 22, 2011

ஈராக் மீதான தாக்குதலில் கூறியதைப்போல்

ஐ.நா.வின் உத்தரவுக்கமைய செயற்படுகின்றோம் எனநேட்டோ கூறுகின்றது

லிபிய ஜனாதிபதி முஹம்மர் கடாபியை கொலை செய்யும் நோக்கம் நேட்டோ படைகளுக்கில்லையெனத் தெரிவித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ரொபேட் கேட்ஸ் ஐ.நா வின் கட்டளைக் இணங்கியே லிபியா மீது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகக் கூறினார். பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் முஹம்மர் கடாபியை கொலை செய்ய போவதாக கூறியமை தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரைக் கேட்டபோதே ரொபேர்ட் கேட்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்....)

பங்குனி 22, 2011

நீரின் மகத்துவத்தை உணர்த்தும் உலக நீர் தினம் இன்றாகும்

இன்று உலகத்திற்கே பேராபத்தை உண்டாக்கக்கூடிய தண்ணீரை பண த்திற்கு விற்பனை செய்வது, கீழைத்தேய மக்களாகிய எமது பண் பாட்டிற்கும் மரபிற்கும் எதிரான ஒரு செயலாகும். பண்டைக் காலத்தில் ஒருவர் கடும் வெயிலில் ஒரு வீட்டுக்கு வந்து சேரு ம்போது, அந்த வீட்டில் உள்ளவர்கள் அவருக்கு ஒரு செம்பு தண்ணீரை அன்பாக கொடுப்பார்கள். இன்று அந்த பண்பாடு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. ஒரு மனிதன் தனது தாகத்தை தீர்த்து கொள்வதற்கு பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள நீரை விலைகொடுத்தே வாங்க வேண்டிய நிலைக்கு சுத்தமான நீருக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இலங்கையின் வட மத்திய மற்றும் வடமேற்கு பிரதேசங்களில் பயி ர்ச் செய்கைக்கு அளவிற்கு அதிகமாக உரமும், கிருமி நாசனிக ளும் பயன்படுத்தப்படுவதனால் அப்பிரதேசங்களில் மக்களுக்கு கிடைக்கும் தண்ணீர் நச்சுத் தன்மை கொண்டிருக்கிறது. அப் பகுதி மக்கள் தூய்மையற்ற நச்சுத்தன்மையுடைய நீரை பருகியத னால் தான் அவர்களில் பெரும்பாலானோர் சிறுநீரக அழற்சி போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். (மேலும்....)

பங்குனி 22, 2011

ஜப்பானில் இடிபாடுகளில் சிக்கிய 2 பேர் 9 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு

ஜப்பானில் வடகிழக்கு பகுதியில் உள்ள இஷினோமகி என்ற நகரில் பூகம்பம் ஏற்பட்டபோது வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த இடிபாடு களில் சிக்கி பலர் உயிர் இழந்தனர். இடிபாடுகளில் யாரும் சிக்கி இருப்பார் களா என்று கண்டறிவதற்காக பொலிஸ் மீட்புக்குழு இடிந்த வீடுகள் அருகே சென்று குரல் கொடுத்துக்கொண்டே சென்றது. இந்த குரல் அழைப்புக்கு 2 பேர் பதில் கொடுத்தனர். முனகலாக வந்த இந்த பதிலை தொடர்ந்து மீட்பு குழுவினர் உடனடியாக செயல்பட்டு அவர்களை மீட்டனர். 80 வயது பாட்டியும் 16 வயது இளைஞரும் மீட்கப்பட்டனர். அவர்கள் சுயநினைவுடன் இருந்தனர். 9 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் இருந்ததால் அவர்கள் பலவீனமாக இருந்தனர்.

பங்குனி 22, 2011

அமெரிக்காவின் அப்பட்டமான ஆக்கிரமிப்பு

லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான ‘நேட்டோ’ படை ராணுவத் தாக்குதலைத் தொடங்கியுள்ளது. போர் விமானங்களிலிருந்தும், கப்பல்களிலிருந்தும் கொடூரமான முறையில் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப் படுகின்றன. 2003ம் ஆண்டு இராக் மீது நடத்தப்பட்ட தாக்கு தலுக்குப் பிறகு அரபு பகுதியில் அமெரிக்கா தலைமையிலான படைகள் நடத்தும் அப்பட்ட மான ஆக்கிரமிப்பு இது. லிபியாவில் உள்நாட்டு மோதல் ஏற்பட்டுள்ளது. அதிபர் மும்மர் கடாபிக்கு எதிராக ஒரு பிரிவு மக் கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அது லிபி யாவின் உள்நாட்டுப் பிரச்சனை. இதற்காக எந்த விதத்திலும் தொடர்பில்லாத நேட்டோ ராணுவப் படைகள் லிபியாவின் பிரச்சனையில் தலையிடு வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.
(மேலும்....)

பங்குனி 22, 2011

ம.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த முயற்சி?

சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியில் பிளவு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அ.தி.மு.க. அணியில் தங்களுக்குக் கௌரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், கட்சியின் உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வைகோ தலைமையில் சென்னையில் கட்சியின் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்து தேர்தல் கூட்டணியில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் ம.தி.மு.க. பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. (மேலும்....)

பங்குனி 22, 2011

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஜப்பான் மீள 5 ஆண்டுகளாகும்

நிலநடுக்கத்தால் உருக் குலைந்த ஜப்பான், அதில் இருந்து மீள 5 ஆண்டுகள் ஆகும் என உலக வங்கி தெரிவித்தது. ஜப்பானில் மார்ச் 11ம் தேதியன்று நிலநடுக்கம், சுனாமி ஏற்பட்டது. இந்த இயற்கைப்பேரிடரில் 8 ஆயிரத்து 600 பேர் இறந் தனர். 12 ஆயிரத்து 800 பேர் மாயமாகியுள்ளனர். வட கிழக்கு ஜப்பான் பகுதியே உருக்குலைந்துள்ளது. இந்த நிலநடுக்கப் பாதிப்பால் ஜப்பானின் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி .5 சதவீதம் குறையும் என உலக வங்கி அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 21, 2011

லிபியா மீது குண்டு மழை

அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் கூட்டாகத் தாக்குதல்

தற்காப்புக்கு ஆயுதம் ஏந்துமாறு மக்களுக்கு அழைப்பு

லிபிய ஜனாதிபதி முஅம்மர் கடாபியின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய தளங்களின் மீது அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இணைந்து இரண்டாவது நாளாகவும் நேற்று தாக்குதல் நடத்தின. வான் மற்றும் கடல் மார்க்கமாக இந்த தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் நேற்று அறிவித்தது. இதில் அமெரிக்கா, பிரிட்டன் இராணு வம் கடல் மார்க் கமாக லிபியாவின் முக்கிய தளங்கள் மீது 110 மிசைல் களை ஏவிய தாகவும் பிரான்ஸ் விமானங்கள் மூலம் லிபிய இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் பென்டகன் மேலும் தெரிவித்தது. பெங்காசியில் கடாபி ஆதரவுப் படையின் இராணுவ வாகன மொன்றுக்கு முதலில் தாக்குதல் நடத்திய பிரான்ஸ் விமானம் தொடர்ந்து லிபிய அரசின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. (மேலும்....)

பங்குனி 21, 2011

நீங்க அறிவாளின்னா இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்க்கலாம்.


பாட்டி வடை சுட்ட கதையில, வடையை ‘சுட்டது’
அ) பாட்டியா?
ஆ) காக்காவா?

உடனடியா பதில் தேவை......!!!!

பங்குனி 21, 2011

புளொட் தலைவரும், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரு​மான திரு. தர்மலிங்கம் சித்தார்த்​தன் அவர்கள் அத தெரண இணையத்தின் சந்திப்பு நிகழ்ச்சியி​ல் பங்கேற்று வழங்கிய நேர்காணல்

தமிழ் அரங்கு என்பது ஒரு அரசியல் கூட்டு அல்ல. தமிழ் அரங்கம் என்று சொல்லுகின்ற விசயம் தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு சம்பந்தமாக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரு கருத்தை முன்வைப்பதற்காக, ஒன்றுபட்ட ஒரு பிரேரணையை முன்வைப்பதற்காக கூட்டப்படுகின்ற ஒரு அரங்கு. அந்த அரங்கிலே இருக்கின்ற கட்சிகள் விரும்பினால் அரங்கின் முழுக் கட்சிகளும் கூட்டாகவோ, அல்லது தனித்தனியாகவோ அல்லது வேறு கட்சிகளுடன் கூடியோ தேர்தல் என்று ஒன்று வந்தால் அதில் போட்டியிடலாமென்பதை ஆரம்பம் துவக்கமே நாம் கூறிவந்திருக்கின்றோம். ஏனென்றால் அதில் இருக்கின்ற கட்சிகள் மத்தியிலே எங்களுக்குள்ளே கருத்து வித்தியாசங்கள் இருக்கின்றன. ....... எங்களைப் பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசினாலே சரி, ஏனென்றால் இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நாங்களும் ஒன்றாக தேர்தலில் நிற்பது மாத்திரமல்ல, இந்த விசயங்கள் சம்பந்தமாக கலந்துரையாட ஆரம்பித்திருக்கிறோம். ஆகவே எங்களுடைய கருத்துக்களும் அங்கு கூறப்படும். புளொட் தான் அதில கலந்துகொண்டு பேசி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்கிற நோக்கம் எங்களுக்குக் கிடையாது. பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும். அதில் யார் பேசினாலும் தீர்வு வரவேண்டும். எங்களைப் பொறுத்தமட்டில் யார் குத்தினாலும் அரசிதான் வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது. (மேலும்....)

பங்குனி 21, 2011

தமிழக அரசியலில்

இல்லாமல் போகும் புலிகளின் வைகோ

தமிழக சட்ட சபைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் அ. தி. மு. க. பொதுச் செயலாளர் ஜெயலலி தாவின் அடம் பிடிப்பால் ஏப்ரல் 13 ஆம் திகதி நடைபெறவிருக்கும் தேர்தலைப் புறக்கணிக்கத் தீர்மானித்திருப்பதாக ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வை. கோபாலசாமி தெரிவித்துள்ளார். 243 ஆசனங்களைக் கொண்ட தமிழக சட்ட சபைத் தேர்தலில் 30 ஆசனங்கள் தமக்கு வழங்கப்பட வேண்டுமென ம. தி. மு. க. கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், 6 ஆசனங்கள் மாத் திரமே வழங்கப் படும் என அ. இ. அ. தி. மு. க. பொதுச் செய லாளர் ஜெயலலிதா விடாப்பிடியாக இருந்ததால் கூட்டணியிலிருந்து வைகோ வெளியேறினார்.(மேலும்....)

பங்குனி 21, 2011

அபிவிருத்தியின் பக்கமே தமிழ் மக்கள் திசை திரும்பியுள்ளமை தேர்தலில் தெளிவு

கடந்த தேர்தலில் 9 ஆசனங்களைப் பெற்ற தமிழரசுக் கட்சி இம்முறை போனஸ் ஆசனத்துடன் 05 ஆசனங்களை மட்டுமே பெறமுடிந்துள்ளமை அக்கட்சியின் செல்வாக்குச் சரிவை எடுத்துக்காட்டுகிறது. மக்கள் புதியமாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். இன்னமும் ஏமாறாமல் அபிவிருத்தியைக் காண மக்கள் துடிக்கின்றனர். ஆலையடிவேம்பில் ஆளும் ஐ.ம.சு. முன்னணிக்கு முதற்தடவையாக 2 ஆசனம் பெறப்பட்டிருக்கிறது. உண்மையில் இத்தொகை இரட்டிப்பாக இருந்திருக்கும். ஆனால், இப்பட்டியலில் தரமான தகுதியான மக்கள் சேவையாளர்கள் உள்ளீர்க்கப்படவில்லை. (மேலும்....)

பங்குனி 21, 2011

தமிழக காங்கிரஸில் அனுபவஸ்தர்களுக்கு வாய்ப்பு இல்லை

சட்டசபைத் தேர்தலில் போட்டியிட புதிதாக அரசியலில் குதித்து இளைஞர் காங்கிரஸில் இணைந்தவர்களும், தலைவர்களின் வாரிசுகளும், கோஷ்டித் தலைவர்களின் ஆதரவாளர்களும் தான் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்க உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் விடாப்பிடியாக 63 ஆசனங்களை பெற்றுவிட்டது. இதில் போட்டியிட உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகி உள்ளது. இவர்களில் பலர், தமிழகத்தில் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல், இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த எடுத்த முயற்சியின் விளைவாக, அரசியலில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதற்கு முன், இவர்களுக்கு பெரிய அரசியல் அனுபவம் இல்லை. ஒரு சிலர் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளில் இருந்துள்ளனர். இளைஞர் காங்கிரஸை பலப்படுத்தும் முயற்சி எடுத்து, ஓராண்டுக்குள் இவர்களுக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பங்குனி 21, 2011

புகுஷிமா அணு உலைகளுக்கு மின் விநியோக முயற்சி

 

ஜப்பானில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட புகுஷிமா அணு மின் நிலையத்தின் குளிரூட்ட கட்டமைப்புக்கான மின் விநியோக முயற்சி வெற்றியளித்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் நிலையத்தின் 6 உலைகளில் நான்கு உலைகளுக்கு மின் கம்பிகளை பொருத்தி முடிக்க முடியும் என பணியாளர்கள் நம்புகின்றனர். நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக இந்த மின் நிலையத்தின் அணு உலைகளை குளிரேற்றம் கட்டமைப்பு செயலிழந்து போனதையடுத்து உலைகளையும் அங்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எரிகுச்சிகளை சேமிக்கும் தொட்டியையும் குளிர்மைப்படுத்துவதற்காக கடல் நீரைப் பாய்ச்சும் முயற்சிகளில் பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக கடுமையாகப் போராடி வருகின்றனர். கடல் நீரை ஹெலிகொப்டர்களில் அள்ளிவந்து கொட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.(மேலும்....)

பங்குனி 21, 2011

மலடாக்கப்படும் பழங்கள் மனித குலத்திற்கு மேலும் தீமைகளை விளைவிக்குமா....?

திராட்சை, சீத்தா உள்ளிட்ட விதையுள்ள பழங்கள் சாப்பிடுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். விதைகளை நீக்குவதற்கு குழந்தைகள் சங்கடப்படுவதுண்டு. இந் நிலையில், விதையில்லாத சீத்தா பழத்தை விஞ்ஞானிகள் விளைவித்துள்ளனர். திராட்சை உள்ளிட்ட சில பழங்கள் நவீன கண்டுபிடிப்பில் விதையில்லாமல் உருவாக்கப்படுகின்றன. இந்த வரிசையில் சீத்தா பழமும் இடம்பெறப் போகிறது. ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விதையில்லாத சீத்தா பழத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அதாவது மலரில் உள்ள ஓவுல் என்ற ஜீன், பழத்தில் விதை உருவாவதற்கு காரணமாக உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். (மேலும்....)

ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை அரசாங்கமே முன்வைக்க வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது நம்பிக்கை வைத்து தமிழ் மக்கள் வாக்க ளித்திருக்கும் நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட விடயங்களுக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை அரசாங்கமே முன்வைக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார். கூட்டமைப்புக்கும் அரசாங்கப் பிரதிநிதி களுக்குமிடையில் 3 ம் கட்டப் பேச்சுவார்த் தைகள் இடம்பெற் றுள்ளன. இப்பேச்சு வார்த்தையில் தமிழ் மக் களின் உடனடிப் பிரச்சினைக்கான தீர்வு மற்றும் இனப் பிரச் சினைத் தீர்வு தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அரியநேத்திரன் எம்.பி. இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் கால அவகாசம் கோரி யிருப்பதாகவும் கூறினார். (மேலும்....)

பங்குனி 21, 2011

எண்ணெய் வளத்தை கைப்பற்ற லிபியா மீது  அமெரிக்கா-பிரான்ஸ்-பிரிட்டன் கொடிய தாக்குதல்  ஆக்கிரமிப்பை நிறுத்து

நேட்டோ படைகள் லிபியா மீது விமா னங்கள் மூலமும், கப்பல்களிலிருந்து ஏவு கணைகள் மூலமாகவும் வான்வழித் தாக்கு தல்கள் நடத்தியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள் கிறது. பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா வைச் சேர்ந்த படையினரை உள்ளடக்கிய நேட்டோ படைகளின் இத்தகைய ஆக்கிர மிப்பு நடவடிக்கை மிகவும் ஆபத்தான ஒன்றாகும். இராக்கில் பல்லாயிரக்கணக்கான மக் களைக் கொன்று குவித்ததைப்போல், பொருள்களை நாசப்படுத்தியதுபோல் இப் போது லிபியா மீதும் மோசமான தாக்குதல் நடவடிக்கையை நேட்டோ மேற்கொண்டி ருக்கிறது. முதல் நாள் தாக்குதலிலேயே 48 பேர் கொல்லப் பட்டுள்ளனர். (மேலும்....)

பங்குனி 21, 2011

சாய்பாபா ஜனாதிபதியின் விருந்தினராக இலங்கை வரவுள்ளார்

உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர்களைக் கொண்டுள்ள சாய்பாபா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருந்தினராக எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார். ஜனாதிபதியின் தனிப்பட்ட மருத்துவரும், புதுமையான சிகிச்சை முறைகள் மூலம் உலகப் புகழ்பெற்றவருமான எலியந்த வைட் இடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே சாய்பாபா இலங்கை வரவுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய பாதுகாப்பு மற்றும் பணிவிடைகளுக்கென அவருடன் சோ்ந்து மேலும் ஆயிரம் பேரளவிலானோரும் இலங்கை வரவுள்ளதாகவும் அத்தகவல் வட்டாரங்கள் மூலம் உறுதி செய்ய முடிந்துள்ளது. அதே நேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடக்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித்தலைவர் கரு ஜயசூரிய வரையான இலங்கையின் பல முக்கிய அரசியல்வாதிகள்ஈ, முக்கியஸ்தர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் என இலங்கையிலும் ஏராளமான பக்தர்களை சாய்பாபா கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பங்குனி 21, 2011

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அண்மையில் நிலத்தில் ஏற்பட்டுள்ள வெடிப்பு

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சனிக்கிழமை நிலத்தில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பின் ஊடாக நீர் வந்தவண்ணமுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அடி மட்டத்திலிருந்த நீர் மேல் மட்டத்திற்கு வந்தமையினாலேயே குறித்த வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. பூரண சந்திரனின் தாக்கத்தினால் அடி மட்டத்திலிருந்து நீர் மேல் மட்டத்திற்க வந்திருக்கலாம் என அனர்த்த முகாமைத்துவ நிலைய பேச்சாளரொருவர் தெரிவித்தார். இந்த நிலைமை தொடர்பாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள குறித்த பிரதேசத்திற்கு புவி ஆராய்ச்சியாளரொருவர் அனுப்பப்பட்டுள்ளதாக புவி மற்றும் சுரங்க ஆராய்ச்சி சபையின் தலைவர் டாக்டர் என்.பி. விஜேயனந்த தெரிவித்தார்.

பங்குனி 21, 2011

திமுக.! அதிமுக.!! ம.தி.மு.க.!!!

உன்னாலே நான் கெட்டேன்... என்னாலே நீ கெட்டாய்...

வைகோவின் முடிவு அரசியல் தற்கொலைக்கு நிகரானது என்பது உண்மை என்றாலும், இந்த முடிவினால் அ.தி.மு.க.வும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்கிற ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவின் தீர்மானம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ""கட்சியின் உயர்நிலை மற்றும் மாவட்டச் செயலாளர்களைக் கூட்டித் தீர்மானம் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தாலும், பெருவாரியான மாவட்டச் செயலாளர்களும், கட்சிப் பிரமுகர்களும், மனதிற்குள் வைகோவை சபித்தபடிதான் வெளியேறினார்கள் என்பதுதான் உண்மை. ஜெயலலிதாவுக்கு ஆட்சியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தம். வைகோவுக்குக் கட்சியைக் காப்பாற்றியாக வேண்டிய நிர்பந்தம். இருவரும் இதைப் புரிந்து கொள்ளாமல் பிடிவாதம் பிடித்தால்? (மேலும்....)

பங்குனி 20, 2011

பிரபாகரனை இராணுவம் நெருங்குவதை மேற்கு நாடுகள் சில விரும்பவே இல்ல

விடுதலைப் புலிகளின் தேசியத்தலைவர் வே.பிரபாகரனின் மறைவிடத்தை இலங்கை இராணுவம் நெருங்குவதையோ அவர் கைது செய்யப்படுவதையோ மேற்கு நாடுகள் சில விரும்பவில்லை என்று "விக்கி லீக்ஸ்" தெரிவித்துள்ளது. பிரபாகரனின் இருப்பிடத்தை இராணுவம் நெருங்குவதைத் தடுப்பதற்குக் கூட அவை முயன்றன என்று "விக்கி லீக்ஸ்" ஆவணங்கள் கூறுகின்றன. (மேலும்....)

பங்குனி 20, 2011

இந்தியா என்றும் தமிழர்களுடனேயே லண்டனில் சோனியா திட்டவட்டம், உரிமைகள் மீளளிக்கப்படவேண்டும்

இந்தியா தமிழர்களுடனேயே இருக்கிறது என்றும் தமிழர்களின் உரிமைகள் அவர்களிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டே ஆக வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார் இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிஸ் கட்சியின் தனிப்பெரும் தலைவியான சோனியா காந்தி. ஆயுதங்கள் ஏதுமற்ற அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளைத் தான் நேரடியாகப் பார்த்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.   லண்டனில் நடைபெற்ற பொதுநலவாய அமைப்பில் உரையாற்றிய பின்னர் லண்டனில் உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த போதே இவ்வாறு தெரிவித்தார் என்று பேரவை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. (மேலும்....)

பங்குனி 20, 2011

Abused' child monks handed to probation

A court in Sri Lanka has ordered the child protection authorities to hand over two young Buddhist monks -allegedly sexually abused by a senior monk- to the custody of probation department. Aparekke Punnananda thero, a former parliamentarian representing Sinhala nationalist Jathika Hela Urumaya (JHU) is accused of sexually abusing five underage novice monks. The Child Protection Authority (CPA) has produced the two monks before Colombo Magistrates Court as per a previous court order. The novice monks have made secret statements to the magistrate at her chambers. The court also ordered the police to produce other three child monks allegedly abused by Punyananda thero. After considering a report produced by the CPA, the magistrate ordered the authorities to submit a report whether there are any other underage novice monks in the Budhhist temple where the suspect is the chief incumbent. The CPA earlier informed the court that the suspect has admitted sexually abusing child monks under his custody. Aparekke Punyananda thero, who is on bail, appeared before the court on Friday with security provided by the Ministerial Security Division.

பங்குனி 20, 2011

இன்றைய தேவை தமிழர்கள் ஏற்கும் அதிகாரப் பகிர்வே...!

முறையான இன நல்லிணக்கமின்றி எங்கள் தேசத்தில் அமைதி ஒருபோதும் நீடித்து நிலைக்காது. அத்துடன் நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களும் போரினால் பாதிக்கப்பட்ட ஏனையவர்களும் தாங்கள் இழந்ததைப் பெறும்வரைக்கும், நம்பிக்கையான எதிர்காலத்தினை நோக்கி அவர்கள் பயணிக்கும் வரைக்கும் உண்மையான இன நல்லிணக்கம் ஏற்படப்போவதில்லை. எத்தனை பாலங்கள், பெருந்தெருக்கள் மற்றும் வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன என்பது இங்கு ஒரு பொருட்டல்ல. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்ப துயரங்கள் போக்கப்படும் வரைக்கும் நீடித்து நிலைக்கக் கூடிய அமைதி ஏற்படப்போவதில்லை. இந்த மக்களுக்கு உணவு, உடை மற்றும் தங்குமிடம் கிடைத்துவிடுவதால் மாத்திரம் இவர்களது துன்பதுயரங்கள் நீங்கிவிடாது. இந்த வசதிகளை பெறுவதற்காக மாத்திரம் கடந்த 30 ஆண்டு காலப் போர் தொடுக்கப்படவில்லை. எல்லாவற்றையும் விட முதன்மையாகத் தாங்கள் சுதந்திரமாக அவமானம் எதுவுமின்றி வாழுகிறோம் என்ற மனப்பதிவு சிறுபான்மையினரின் மத்தியில் ஏற்படவேண்டும். (மேலும்....)

பங்குனி 20, 2011

அமெரிக்கா   மாற்றத்தை ஏற்படுத்தும் விஸ்கோன்சின் போராட்டம்!

விடுதலை தேவையென்றால் சில சமயங்களில் தியாகம் செய்ய வேண்டும். தங்களின் சுதந்திரத்திற்காகப் பெரும்பாலான அமெரிக்கர்கள் எந்தவிதமான தியாகத்தையும் செய்யத் தயாராக இல்லை. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க மாகாண அரசுகள் கடைப்பிடித்த உத்திகளில் தொழிலாளர்களுக்குள்ள உரிமைகளைப் பறிப்பதும் ஒன்றாகும். விஸ்கோன்சின் மாகாண நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முன்னணி வகிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்குள்ள கூட்டுப்பேர உரிமையைப் பறிக்கும் மசோதா மாகாண செனட் சபையில் கொண்டு வரப்பட்டது. இந்த மாகாண நிர்வாகம் குடியரசுக்கட்சியின் வசம் உள்ளது. இந்த உரிமைப் பறிப்பை நடைமுறைப்படுத்துவதன் மூலம், பெரு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குள்ள ஆதரவைப் பறிக்க விரும்புகின்றன. (மேலும்....)

பங்குனி 20, 2011

For a Peaceful Political Solution to the Conflict.

Keep Canadian Military at Home.

MARCH 19 2011

CENTRAL EXECUTIVE COMMITTEE

COMMUNIST PARTY OF CANADA

On Thursday of this week, the U.N. Security Council passed Resolution 1973, authorizing the imposition of a “no-fly zone” on Libya and the use of “all necessary measures” short of an invasion – including naval blockades, bombardment and air strikes – against Col. Muammar Gaddafi’s forces in order “to protect civilians and civilian-populated areas” in the rebel-held Eastern part of Libya. The resolution also imposes a ban on all air travel (including civilian flights) in Libyan airspace, toughens the arms embargo, and widens the freeze of offshore Libyan assets. (more....)

பங்குனி 20, 2011

அணு உலைகளை புதைக்க ஜப்பான் திட்டம்

அணுக்கதிர்வீச்சு அபாய கட்டத்தில் உள்ளதால், பேரழி வைத் தவிர்க்கும் பொருட்டு புகுஷிமா அணு உலைகளை மண் ணுக்குள் புதைக்க ஜப்பான் அரசு முடிவு செய்துள்ளதாக செய் திகள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் கடந்த 11-ந் தேதி, பூகம்பமும், சுனாமியும் தாக்கி பேரழிவை உண்டாக்கின. புகுஷிமா என்ற இடத்தில் 6 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 4 அணு உலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெடித்து அணு கதிர்வீச்சு வெளியாகி வருகிறது. (மேலும்....)

பங்குனி 20, 2011

தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள்

கிரைண்டர்(அ) மிக்சி, லேப்-டாப் இலவசம்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த முறை இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. (மேலும்....)

பங்குனி 20, 2011

ஜப்பான் அணுஉலை அருகே மீண்டும் நிலநடுக்கம்

ஜப்பானில் ஏற்கெனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்துக்குத் தெற்குப் பகுதியில் சனிக்கிழமை 6.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கம் டோக்கியோ வரை உணரப்பட்டதாகவும், அங்குள்ள கட்டடங்கள் அதிர்ந்ததில் மக்கள் பீதியடைந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் சேத விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக டோக்கியோவின் நரீதா விமான நிலையம் தாற்காலிமாக மூடப்பட்டது. (மேலும்....)

பங்குனி 20, 2011

கச்சத்தீவு ஆலய விழாவிற்கு புனித பயணம்

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழாவில் கலந்து கொள்ள, ராமேஸ்வரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் படகில் புனித பயணம் மேற்கொண்டனர். அப்போது நடத்திய கடும் சோதனையில், மது பானங்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இலங்கை கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள, கடந்த ஆண்டைப் போல் ராமேஸ்வரத்திலிருந்து அதிகளவில் பக்தர்கள் படகில் சென்றனர். மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக சோதனைச் சாவடியில், படகுகள் மற்றும் பக்தர்களிடம் நேற்று அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை, குடியுரிமைத் துறை, வருவாய்த்துறை, மத்திய, மாநில புலனாய்வுத் துறை, போலீஸ், கஸ்டம்ஸ் மற்றும் பிளாஸ்டிக் கண்காணிப்பு குழுவினர் என 200க்கும் மேற்பட்டவர்கள், சோதனை நடத்தினர். (மேலும்....)

பங்குனி 19, 2011

ஐ.ம.சு.மு. அமோக வெற்றி

கோட்டைகளை இழந்து ஐ.தே.க. படுதோல்வி 9 சபைகளில் தப்பிப் பிழைப்பு

அனைத்தையும் இழந்து மண்கெளவியது ஜே.வி.பி, அரசியல் எதிர்காலம் சூனியம்?

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது. ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து படுதோல்வியடைந்ததோடு, அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி. தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. (மேலும்....)

பங்குனி 19, 2011

லிபிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை ஐ.நா பாதுகாப்பு சபை தீர்மானம

லிபியா வான்பரப்பில் விமானங்கள் பறப்பதற்கு ஐ.நா பாதுகாப்புச் சபை தடை விதித்துள்ளது. அத்துடன் பொது மக்களை பாதுகாப்பதற்காக தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் எந்த எதிர்ப்பும் இன்றி லிபிய வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கும் தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டுள்ளது. இதன் போது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 10-0 என்ற கணக்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்த வாக்கெடுப்பில் ரஷ்யா, சீனா, ஜெர்மனி, இந்தியா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (மேலும்....)

பங்குனி 19, 2011

தமிழரசுக் கட்சிக்கு பெரு வெற்றி

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி 14 சபைகளில் போட்டி யிட்டது. இதில் 12 சபைகளில் பெருவெற்றி பெற்றுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் நாவிதன்வெளி, ஆலையடிவேம்பு பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது. அதேபோல பொத்துவில் பிரதேச சபையில் போட்டியிட்டு ஒரேயொரு ஆசனத்தை மாத்திரமே பெற்றது. இதேவேளை, வடக்கில் மன்னார், முல்லைத்தீவு, வவுனியாவில் நடந்த தேர்தலில் முசலி பிரதேச சபை தவிர்ந்த சகல சபைகளையும் தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. தேசிய அரசியலுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, தமிழரசுக் கட்சி பிரதான கட்சியான ஐ. ம. சு. மு. வுக்கு அடுத்ததாகக் கூடுதல் சபைகளை (12) கைப்பற்றி தனது அரசியல் ஸ்திரத் தன்மையை வலுப்படுத்தியுள்ளதாகவே தென்படுகிறது

பங்குனி 19, 2011

ஈழத்தமிழருக்காக   

புதுடில்லியை நோக்கிய நெடும் நடைப் பயணம்

''இலங்கை இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும் மற்றும் வடக்கு கிழக்கில் திட்டமிட்டு அரசினால் மேற்கொள்ளப்பட்ட சிங்கள குடியேற்றங்களை அகற்ற வேண்டும்'' ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன் வைத்து கடந்த பெப்பரவரி 16ம் திகதி முதல் சென்னையிலிருந்து புதுடில்லியை நோக்கிய நெடும் நடைப் பயணத்தை, 'ஈழ தேசிய ஜனநாயக முன்னணியின் போராளிகள்' கடந்த 60 நாட்களாக, 2200 கிலோ மீற்றர் தூரத்தை மிகவும் துயரத்திலும், துன்பத்திலும், ஒரு உயிர் இழப்புக்கும் மத்தியிலும், தங்களின் உடலை வருத்தி கொண்டு, எமது மக்களின் அரசியல் உரிமைகளை பெறுவதற்காக அந்த நடைப் பயணத்தினை மேற் கொள்கிறார்கள். (மேலும்....)

பங்குனி 19, 2011

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை மீது தமிழ் மக்கள் அதீத நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் கொள்கைமீதும், அது அரசாங்கத்துடன் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகள் மீதும் தமிழ் மக்கள் அதீத நம்பிக்கை வைத்திருப்பது நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் மூலம் வெளிக்காட்ட ப்பட்டிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத் திருந்த தமிழ் மக்கள், தமிழரசுக் கட்சியின் மீது நம்பிக்கைவைத்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாகக் குறிப்பிட்ட தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, கட்சிக்கு வாக்களிக்காதவர் களையும் சந்தித்து எதிர்காலத்தில் அவர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் கூறினார். (மேலும்....)

பங்குனி 19, 2011

மு.கா.வின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரிப்பு

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி மேலும் பலப்படுத்தப்பட்டிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிட்டிருந்தது. ஆனால் இம்முறை தனித்துப் போட்டியிட்டு ஆதரவை வெளிக்காட்டியிருப்பதாக ஹசன் அலி தெரிவித்தார். இம்முறை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாகவிருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் சில இடங்களில் தனித்தும் சில இடங்களில் அரசாங்கத்துடன் இணைந்தும் போட்டியிட்டது. (மேலும்....)

பங்குனி 19, 2011

அணுக் கதிர்வீச்சு கலிபோர்னியாவுக்கு பரவலாம்

ஜப்பானின் சேதமடைந்த புகுஷிமா அணு உலைகளிலிருந்து வெளியாகும் அணுக் கதிர்வீச்சின் ஒரு பகுதி அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை அடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது சிறிய அளவிலேயே இருக்கும் என்பதால் மக்கள் பீதியடைய வேண்டியதில்லை என்று ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. கதிரியக்கத் தனிமங்கள் வட அமெரிக்கா நோக்கி வந்து கொண்டிருக்கின்றன. பசுபிக் கடலின் மேல் வானில் உயரே உள்ளது என்றும் அது நேற்று கலிபோர்னியாவை அடையும் எனவும் கூறப்பட்டிருந்தது. அமெரிக்க அணு ஒழுங்க மைப்பு ஆணையம் மற்றும் மற்ற நிபுணர்கள் கருத்துப்படி அமெரி க்காவின் மேற்குக் கடற்கரை மாகா ணம், ஹவாய், அலாஸ்கா அல் லது அமெரிக்க உட் பகுதிகளுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் புகுஷிமாவின் சேதமடைந்து போன அணு உலைகள் எந்த அளவுக்கு சேதமடைந்துள்ளது என்பதையோ அதிலிருந்து எவ்வளவு கதிர்வீச்சு வெளியேறிக் கொண்டிருக்கிறது என்றோ ஜப்பான் தெரிவிக்காததால் கலிபோர் னியாவை எந்த அளவுக்கு கதிர்வீச்சு அளவு எட்டும் என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று வேறு மற்ற சில தகவல்கள் தெரிவித்துள்ளன.

பங்குனி 19, 2011

அதிமுக கூட்டணியில் குழப்பம் நீங்கியது

அதிமுக கூட்டணியில் கடந்த இரு நாள்களாக இருந்து வந்த குழப்பம் வெள்ளிக்கிழமை நீங்கியது. அதே சமயம் கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளைத் தேர்வு செய்து அறிவிக்கும் பணி போயஸ் தோட்டத்தில் மாலையில் தொடங்கி நள்ளிரவுக்குப் பிறகும் நீடித்தது. தொகுதிகளை ஒதுக்குவது குறித்து தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை மாலை போயஸ் தோட்டத்தில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். (மேலும்....)

பங்குனி 19, 2011

லிபியாவை ஆக்கிரமிக்க அமெரிக்கா திட்டம்?

மக்களைக் காப்பாற்ற எத்தகைய நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்க அனுமதி தரும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத் தைப் பயன்படுத்திக் கொண்டு லிபியாவுக்குள் நுழைய அமெரிக்கா திட்டமிட்டுள் ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் கூட்டாளியான பிரான்ஸ் ஒருபடி மேலே சென்று, தீர்மானம் போட்டுள்ள ஒரு சில மணி நேரங்களுக்குள் போர் விமானங் கள் குண்டு மழை பொழிய வேண்டும் என்று கூறியுள் ளது. இந்தத் தீர்மானம் போடப்பட்டுள்ள நிலையில் லிபியா ஜனாதிபதி கடாபி, போராடி வரும் மக் களுக்கு எதிரான நடவடிக் கைகளை முடுக்கிவிட்டுள் ளார். எதிர்ப்பாளர்கள் வசம் இருக்கும் பெங்காசி நகரை மீட்கும் பணியில் ராணுவம் இறங்கியுள்ளது. (மேலும்....)

பங்குனி 19, 2011

இரண்டாம் உலகப் போர் பேரழிவை விட பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஜப்பான்!

ஜப்பானை ஒட்டிய கடற்பகுதியில் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுச் செயலிழந்த டாய்ச்சா அணு மின் நிலையத்தின் உலைகள் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து, அதிலிருந்து வெளியேறும் அணுக் கதிர் வீச்சு மனித உடலைப் பாதிக்கும் அபாயம் அளவை எட்டி வருகிறது என்கிற உறுதியான செய்தி, ஜப்பானை மட்டுமின்றி, உலகத்தையே அச்சத்தில் தள்ளியுள்ளது. மானுட உயிர்களையும், இயற்கை ஆதாரங்களையும் அடியோடு அழிக்கக் கூடிய, தடுக்கவே முடியாத ஒரு ஆபத்தை தன்னகத்தே நிரந்தரமாகக் கொண்டுள்ளன அணு உலைகள். அதனால்தான் தங்கள் நாட்டின் மின் தேவையை 78% அளவிற்கு அணு மின் உலைகளின் மூலம் பெரும் நாடான ஃபிரான்ஸ், 17 அணு உலைகளை மட்டுமே இயக்கிவரும் ஜெர்மனி, அணு மின் சக்தியை அதிகரிக்கலாமா என்று ஆலோசித்த இத்தாலி ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு நாட்களாக அணு உலைகளை மூடு என்று கூறி பெரும் அளவிற்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடிப்பினால் ஏற்பட்ட தாக்கம் இதனால் ஏற்படும் அணு சக்தி அபாயம் குறித்து உலகளவில் ஏற்பட்டுள்ள பீதி என்பவற்றை தொடர்ந்து புதிய அணு உலைகளை அமைக்கும் செயற்பாடுகளை சீனா இடை நிறுத்தியுள்ளது. (மேலும்....)

பங்குனி 19, 2011

சுனாமி அனர்த்தம்

அணு உலைகளை குளிர்விக்கும் முயற்சி தொடர்கிறது

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்க ப்பட்ட புகுஷமா அணு மின் நிலை யத்தில் சூடேறியுள்ள அணு உலை களை குளிர்விக்கும் நடவடிக்கையில் பணியாளர்கள் தொடர்ந்தும் ஈடு பட்டு வருகின்றனர். அத்துடன் அணு மின் நிலை யத்திற்கு மின் சக்தி யை பெறும் முயற்சியிலும் தொழில் நுட்பவியலாளர்கள் ஈடுபட்டுள்ள னர். எவ்வாறாயினும் இந்த பணிகள் மிகவும் மந்த கதியிலேயே இடம் பெற்று வருவதாக தெரிய வருகிறது. இதேவேளை நேற்றைய தினத்தில் அணு உலைகளை குளிர்விப்பதற்காக ஜப்பான் விமானப் படையினர் கடல் நீரை மேற்படி அணு உலை களுக்கு பாய்ச்சினர். குறிப்பாக அதிகம் சேதமடைந்துள்ள மூன் றாவது அணு உலையை குளிர் விக்கும் பணியிலேயே பணியாள ர்கள் ஈடுபட்டு வருகின்றனர். (மேலும்....)

பங்குனி 19, 2011

20 ஆயிரம் ஆசிரியர்கள் வேலையிழப்பு  அமெரிக்காவில் தொடரும் துயரம்

பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கெனவே வேலையிழந்துள்ள நிலையில், மாகாண அள வில் கடும் நெருக்கடி உரு வாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே விஸ்கோ ன்சின் போன்ற மாகாணங் களில் மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகக் கட்சியின் 14 நாடாளுமன்ற உறுப்பினர் கள் மக்களோடு மக்களாக அந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றுள்ளனர். அரசின் கொள்கைகளுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப் பட்டு வருகின்றன. இந் நிலையில் பெரும் பட்ஜெட் பற்றாக்குறையைச் சந்திக் கும் மாகாணங்கள் பட்டி யலில் கலிபோர்னியாவும் இணைந்துள்ளது. மாகா ணத்தின் நிதி நிலைமை சீர டையாவிட்டால் உங்கள் வேலைக்கு உத்தரவாதம் எதுவும் தர முடியாது என்று அரசுப்பள்ளிகளில் பணி யாற்றும் 20 ஆயிரம் ஆசிரி யர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.(மேலும்....)

பங்குனி 18, 2011

ஆளுந்தரப்புக்குப் பாரிய வெற்றி 205 இலங்கைத் தமிழரசுக் கட்சி-12 ஐ.தே.க-09 முஸ்லிம் காங்கிரஸ் - 03.!

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றுள்ளது. இதன்படி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 205 ஆசனங்களை கைப்பற்றி முதலாவது இடத்திலும், இலங்கை தமிழரசு கட்சி 12 ஆசனங்களை கைப்பற்றி இராண்டாவது இடத்திலும், ஐக்கிய தேசியக் கட்சி 9 ஆசனங்களை கைப்பற்றி 3ஆவது இடத்தைலும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 ஆசனங்களை பெற்று 4ஆவது இடத்திலும், தேசிய காங்கிரஸ் 2 ஆசனங்களை பெற்று 5ஆவது இடத்திலும் உள்ளன. மேலும் மலையக மக்கள் முன்னணி மற்றும் சுயேட்சை குழு ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. (விபரம்....)

பங்குனி 18, 2011

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க. கூட்டணி இன்று உடன்பாடு: ம.தி.மு.க.வுக்கு 16 தொகுதிகள்!

அ.தி.மு.க. கூட்டணியில் கடந்த 2 நாட்களாக தொகுதி பங்கீட்டில் கடும் சிக்கல் நிலவி வந்தது. அ.தி.மு.க. 160 வேட்பாளர்களை அறிவித்ததால் தொகுதி பங்கீடு சிக்கல் முற்றியது. இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காணும் வகையில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் 3-வது அணி அமையலாம் என்ற யூகங்கள் கிளம்பின. ஆனால் இன்று மதியம் அதற்கு முற்றுப்புள்ளி விழுந்தது. (மேலும்....)

 

பங்குனி 18, 2011

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்தத சன் சீ கப்பல் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு!

எம்.வீ சன் சீ கப்பல் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்துமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த புகலிடக் கோரிக்கையாளர் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்ததாகவும், போராட்டங்களில் ஈடுபடவில்லை எனவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார். எனினும், தடை செய்யப்பட்ட இயக்கமொன்றில் அங்கம் வகித்த காரணத்தினால் குறித்த நபரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக குறித்த புகலிடக் கோரிக்கையாளரின் சட்டத்தரணி அறிவித்துள்ளார். மத்திய பொதுப் பாதுகாப்பு அமைச்சில் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளதாக சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார். எம்.வீ சன் சீ கப்பலில் பயணித்த 500 பேரில் 30க்கும் மேற்பட்டவர்கள் புலிகளுடன் தொடர்புடைய அல்லது சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

பங்குனி 18, 2011

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின் படி ஐ.ம.சு.மு.வுக்கு அதிக மன்றங்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள 207 மன்றங்களுக்கான பெறுபேறுகளின் பிரகாரம் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 182 மன்றங்களை வெற்றி கொண்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 8 உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றியுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உள்ளூராட்சி மன்றங்களையும், மலையக மக்கள் முண்னணி, தேசிய காங்கிரஸ், சுயேச்சைக் குழு ஆகியன தலா ஒவ்வோர் உள்ளூராட்சி மன்றத்தைக் கைப்பற்றியுள்ளன.

பங்குனி 18, 2011

இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு

வவுனியாவில் 7, மன்னாரில் 5 ஆசனங்கள்

வவவுனியா மாவட்டத்தின் வவுனியா தெற்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 11ஆயிரத்து 878 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை பெற்றுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 5ஆயிரத்து 488 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 1ஆயிரத்து 420 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 62 வாக்குகளை மாத்திரம் பெற்றுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை. இலங்கை தமிழ் அரசு கட்சி 5ஆயிரத்து 061 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 4ஆயிரத்து 619 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. அதேவேளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3ஆயிரத்து 906 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பங்குனி 18, 2011

சரிந்தன மக்கள் விடுதலை முன்னணியின் கோட்டைகள்..! ஐ.தே.கட்சி யின் கோட்டை..!

மக்கள் விடுதலை முன்னணியின் கோட்டையென வர்ணிக்கப்படும் திஸ்ஸமஹாராம பிரதேச சபையில் அக்கட்சி இம்முறை தோல்வியடைந்துள்ளது. இம்முறை அச் சபையில் 7,767 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது. ஐ.ம.சு.முன்னணி இம்முறை திஸ்ஸமஹாராம பிரதேச சபையில் 14,523 வாக்குகளை பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஐ.தே.கட்சி 8,344 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் பள்ளேபொல பிரதேச சபைக்கான தேர்தலில் சுயேச்சைக் குழுவொன்று வெற்றி பெற்றுள்ளது. மேற்படி சுயேச்சைக் குழுவிடம் ஐ.தே.க. தோல்வி கண்டுள்ளது. இதன்படி 7081 வாக்குகளைப் பெற்ற சுயேச்சைக் குழு 6 ஆசனங்களையும் 6180 வாக்குகளைப் பெற்ற ஐ.தே.க. 3 ஆசனங்களையும் பெற்றுள்ளன. கண்டி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் மக்கள் விடுதலை முன்னணி படுதோல்வியடைந்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 15 ஆசனங்களைப் பெற்றிருந்த மக்கள் விடுதலை முன்னணி இம்முறை 1 ஆசனத்தை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ளது.

பங்குனி 18, 2011

ஆளும் கட்சி அமோக வெற்றி

வடக்கில் வெற்றி பெற்றது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு

நேற்று நடைபெற்று முடிந்த 234 உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தலில் பெரும்பாலான சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக் கைப்பற்றி அதிக ஆசனங்களைப் பெற்று பெருவெற்றியீட்டியது. பிரதான  எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியால் குறைந்தளவு சபைகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. வடக்கில் தேர்தல் நடைபெற்ற தமிழ்ப் பகுதிகளில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றி சபைகளைத் தன்வசப்படுத்தியது.  தமிழ்த்தேசிய கூட்டமைப்பை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இந்தப் பகுதிகளில் படுதோல்வி கண்டது. (மேலும்.....)

பங்குனி 18, 2011

மூன்றாவது அணி உருவாகுமா....?

தமிழ்நாடு கூட்டணிக் குளறுபடியின் பின்னணிகள்!

 ஜப்பானைத் தாக்கிய ஆழிப்பேரலையைப் போல, தன்னிச்சையாக அ.தி.மு.க. தனது வேட்பாளர் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டபோது, அதிர்ந்து போய்விட்டனர் இடதுசாரிக் கட்சியினர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனும் வியப்பின் உச்சத்துக்குச் சென்றுவிட்டனர். எதற்காக இப்படி யாரையும் கேட்காமல், எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தடாலடியாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இப்படி ஒரு முடிவை எடுத்தார் என்று தெரியாமல் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல, அ.தி.மு.க.வினரே மிரண்டு போய்விட்டனர்.வேடிக்கை என்னவென்றால், அண்ணா அறிவாலயத்தில் பல தி.மு.க. அமைச்சர்களேகூட இது உண்மையான அறிவிப்புதானா இல்லை ஏதாவது தவறு நேர்ந்து விட்டிருக்கிறதா என்று குழம்பிப் போய் தங்களுக்குள் பேசிக் கொண்டார்களாம். பல பத்திரிகை அலுவலகங்களிலிருந்து ஜெயா தொலைக்காட்சி நிலையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது நிஜமான பட்டியலா என்று மீண்டும் மீண்டும் விசாரித்த வண்ணம் இருந்தனர். (மேலும்.....)

 

பங்குனி 18, 2011

 

ஜப்பான் அணு உலைகளின் தற்போதைய நிலை

அணு உலை 1:

கடந்த சனிக்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. தீமூட்டமும் ஏற்பட்டது. இந்த அணு உலையில் 70 வீதம் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

அணு உலை 2:

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அணுக் கசிவும் அதிகரித்தது. இந்த அணு உலையில் 33 வீதம் சேதமேற்பட்டுள்ளது.

அணு உலை 3:

கடந்த திங்கட்கிழமை வெடிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை புகைமூட்டம் ஏற்பட்டது. அணு உலையின் கூரைப்பகுதி முழுமையாக சேதமடைந்தது.

அணு உலை 4:

கடந்த செவ்வாய்க்கிழமை கடும் சத்தத்துடன் தீ ஏற்பட்டது. இங்கு வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. தொடர்ந்து புதன்கிழமையும் தீ மூட்டம் ஏற்பட்டது.

அணு உலை ?:  ??????????

பங்குனி 18, 2011

லிபியாவில் உடனடி யுத்த நிறுத்தம் தேவை - ஐ.நா. செயலர் பான் கீ மூன்

லிபியாவில் உடனடி யுத்த நிறுத்தம் ஒன்று தேவை என ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்தார். ஐ.நா பாதுகாப்புச் சபை கூட்டம் நேற்று முன்தினம் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் லிபியாவில் விமானங்கள் பறக்க தடை விதிப்பது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. இதன்போது லிபிய பிரச்சினைக்கு தீர்வாக திட்ட வரைவொன்றை அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதேவேளை, முஅம்மர் கடாபியின் மகன் சயிப் அல் இஸ்லாம் பிரான்ஸைச் சேர்ந்த யூரோ தொலைக்காட்சி சேவைக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கிளர்ச்சியாளர்களுடனான யுத்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் மேலும் 48 மணி நேரத்திற்குள் லிபியாவின் அனைத்து பகுதிகளும் அரசவசமாகும் என்று குறிப்பிட்டார். அத்துடன் அரசு படையினர் பெங்காசியை அண்மித்துள்ளனர். இந்த நிலையில் எடுக்கப்படும் எந்த முடிவும் பயனளிக்காது என்று அவர் குறிப்பிட்டார். (மேலும்.....)

பங்குனி 18, 2011

உற்பத்தியில் பெருந்திரளான மக்கள் ஈடுபடுவதே முக்கியம் -காந்தியடிகள்

(சங்கீதா ஸ்ரீராம்)

2004 டிசம்பரில் தாக்கிய சுனாமி, இந்திய, கிழக்காசிய நாடுகள் பலவற்றில் இல ட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களில் உப்பை வாரிக் கொட்டிச் சென்றது. பயிர்கள், பனைமரங்கள் என அனைத்தும் அதன் தாக்கத்தால் கருகிப்போயின.  ஆனால் இந்தியாவில் செலவற்ற பல முறைகளைக் கையாண்டு, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், ரேவதி ஆகியோரின் குழு மேற்கொண்ட மேல்மண் வளப்படுத்தும் உத்திகள் மூலம் தமிழ் நாட்டின் நாகை மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் ஆறே மாதங்களில் நெல்லில் நல்ல விளைச்சலைப் பார்க்க முடிந்தது. இந்த வெற்றியை அடுத்து, புயலாலும் சுனாமியாலும் தாக்குதலுக்குள்ளான இந்தோனேசியா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேச அரசாங்கங்கள் சேதமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீட்பதற்காக இவர்களை அழைத்தனர். எதிர்பார்த் தாற்போல, சில மாதங்களிலே பழைய விளைச்சலைக் கொண்டு வந்து காட்டியுள்ளனர். (மேலும்.....)

பங்குனி 18, 2011

இறுதி வீதி தடையும் நீங்கியது

யாழ். நகர் விக்டோரியா வீதி திறப்பு

யாழ். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள விக்டோரியா வீதி நேற்று முதல் பொதுமக்கள் பாவனைக் காக திறந்துவிடப் பட்டுள்ளது. யாழ். நகரின் மையத்தில் யாழ். போதனா வைத்திய சாலையின் பின்புற மாக உள்ள மேற்படி வீதி மின்சார நிலைய வீதி, மணிக்கூட்டு வீதி, பருத்தித்துறை வீதி ஆகியவற்றை இணைக்கும் பிரதானமான குறுக்கு வீதி ஆகும். கடந்த 15 ஆண்டுகாலமாக பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த இவ்வீதி நேற்று பொதுமக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது. இந்த வீதித் திறப்புடன் யாழ். நகரில் இருந்த இறுதி வீதித்தடைகளும் அகற்றப்பட்டு பாதுகாப்பு வலய வீதித் தடைகள் எதுவுமற்ற நகரமாக யாழ். நகரம் உருவாகியுள்ளது. இந்த வீதித் திறப்பு நிகழ்வில் யாழ். மாவட்ட இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கதுருசிங்க யாழ். நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, பாராளுமன்ற உறுப்பினர் எம். சந்திரகுமார் மற்றும் யாழ். அரச அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர். யாழ். நகரின் அபிவிருத்தி மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கவனத்தில் கொண்டு இவ்வீதி பாவனைக்கு விடப்பட்டுள்ளது.

பங்குனி 18, 2011

கனடா தனவந்தரால் மண்டூர் மகாவித்தியாலயத்துக்கு பல்லாயிரம் பெறுமதியான புத்தகங்கள் அன்பளிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுகோட்ட கல்வி வலயத்துக்குட்பட்ட மண்டூர் மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் கனடாவில் இருந்துவருகைதந்த முத்துக்குமாரன் சந்திரகுமார் என்பவரால் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் கையளிக்கப்பட்டன. மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் வேண்டுகோளின்பேரில் மண்டூர் மகா வித்தியாலய விளையாட்டுப்போட்டியின் போது இந்த புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதன்போது மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பாடசாலை மற்றும் கிராம மக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் இலங்கையர் இப்படியான செயல்களில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது.

பங்குனி 18, 2011

அ.தி.முக தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டது

சட்டப் பேரவை தேர்தலில் 160 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. அந்த தொகுதிகள் எவை என்பதையும், அவற்றுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்றுமுன்தினம் மாலை வெளியிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நிற்கும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்பளிக்கவில்லை. (மேலும்.....)

பங்குனி 18, 2011

உள்ளூராட்சி சபைத் தேர்தல்

ஐ.ம.சு.மு. முன்னணியில்

234 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கூடுத லான ஆசனங்களைப் பெற்று முன்னணியில் திகழ்கிறது. நடந்த தேர்தலின் முதலாவது உத்தி யோகபூர்வ முடிவு நேற்று இரவு 10.40 அளவில் வெளியாகியது. இதன்படி, மாத்தறை மாவட்டம் வெலிகம நகர சபையின் முடிவுகள் முதலில் வெளியாகின. இதில் ஐ. ம. சு. மு. 7,246 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. ஐ. தே. க. 3,622 வாக் குக ளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றது. ஜே. வி. பிக்கு 164 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. வெலிகம நகர சபையில் 2006 இல் ஒரு ஆசனத்தைக் கொண்டிருந்த ஜே. வி. பி. இந்தத் தேர்தலில் ஆசனம் எதனையும் பெறவில்லை.  இதே நகர சபையில் போட்டி யிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 353 வாக்குகளை மட்டுமே பெற்றது. (மேலும்.....)

பங்குனி 18, 2011

ஜப்பான் அணு உலை குறைபாடுகள்

பாதிப்புகள் பற்றி எச்சரித்தும் ஜப்பான் உதாசீனம்

ஜப்பானில் புகுஷிமாவில் அமைக்கப்பட்ட அணு உலையில் இருந்த குறை பாடுகள் தொடர்பாக சர்வதேச அணுசக்தி முகாமை அமைப்பு ஏற்கனவே ஜப் பானை எச்சரித்திருந்த தாகவும் அந்த எச்சரிக்கையை ஜப்பான் உதாசீனம் செய்தமையே ஜப்பானில் தற்போது அணு உலைகளில் கசிவு ஏற்பட்டமைக்கு காரணம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் டெய்லி ரெலிகிராஃப்ட் என்ற பத்திரிகை விக்கிலீக்ஸை மேற்கோள்காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அப் பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது, சர்வதேச அணுசக்தி முகாமை நிறுவனம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் ஏற்படும் என குறிப்பிடப்பட்டி ருந்தது. (மேலும்.....)

பங்குனி 18, 2011

ஜனாதிபதியின் நல்லாட்சி நடுநிலையான தேர்தலுக்கு தளம் அமைத்துள்ளது

1988ஆம் ஆண்டில் ஜே.வி.பியினர் ஆயுதம் தாங்கி, நாட்டில் படு கொலைகளை புரிந்தும் மக்களின் சகஜ வாழ்க்கைக்கு தீங்கி ழைத்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் ஜே. வி. பியினர் எம க்கு ஜனநாயக தேர்தல் முறையில் நம்பிக்கை இல்லை. எவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க கூடாது என்ற கடு மையான எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர். அதனையும் மீறி வாக்களிக்கச் சென்றவர்களை வாக்குச்சாவடிகளுக்கு முன்னால் ஜே.வி.பியினர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யவும் தய க்கம் காட்டவில்லை. ஜே.வி.பியினர் சர்வாதிகாரி ஹிட்லர், முசோலினி போன்ற மனித உருவில் நடமாடிய மிருகங்களை போன்று மக்கள் உயிரை துச்ச மாக மதித்து இலட்சக்கணக்கானோரை படுகொலை செய்ததைப் போன்று இலங்கையிலும் வன்முறைகளை 1971 ஆம் ஆண்டி லும் 1987, 1988, 1989 ஆண்டுகளிலும் கட்டவிழ்த்து விட்ட வன் முறைகளை எமது நாட்டு மக்கள் என்றுமே மறக்கமுடியாது. (மேலும்.....)

பங்குனி 18, 2011

புகுஷிமா அனர்த்தத்தின் எதிரொலி

அணுஉலை நிர்மாணத்தை இடைநிறுத்தியது சீனா

ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடிப்பினால் ஏற்பட்ட தாக்கம் இதனால் அணு சக்தி அபாயம் குறித்து உலகளவில் ஏற்பட்டுள்ள பீதி என்பவற்றை தொடர்ந்து புதிய அணு உலைகளை அமைக்கும் செயற்பாடுகளை சீனா இடை நிறுத்தியுள்ளது. ஜப்பானில் அண்மையில் ஏற்பட்ட நில நடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த சுனாமியால் அந்நாட்டின் அணு உலைகள் வெடித்து, கதிர் வீச்சு பரவி வருகிறது. ஜப்பானில் ஏற்பட்ட இந்த ஆபத்து உலகின் பல நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அணு உலைகள் வைத்திருக்கும் அனை த்து நாடுகளுமே, தங்களது அணு உலை களின் பாதுகாப்பு குறித்து மீள் பரிசீலனை செய்து வருகின்றன. இந்நிலையில், ஜப்பான் நில நடுக்கத்திற்கு முன்னதாக சீனாவில் புதிய அணு உலைகளை நிறுவ அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் தற்போது அந்த அனுமதியை பிரதமர் வென் ஜியாபோ தற்போது இரத்துச் செய்துள்ளார்.

பங்குனி 18, 2011

ஒவ்வொரு தீவிரவாதிக்கும்  50 அப்பாவிகள் பலி  அமெ. தாக்குதல் பற்றி பாகிஸ்தான் கருத்து

சர்வதேச சமூகத்தின் அனுமதி பெறாத ஆளில்லா விமா னங்கள் மூலம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அமெ ரிக்கப்படைகள் நடத்தும் தாக்குதலில் ஏராளமான அப் பாவிகள்தான் கொல்லப்படுகிறார்கள் என்று பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானிலிருந்து இயங்கும் பிரஸ் டி.வி. இச்செய்தியை வெளியிட்டிருக்கிறது. செவ்வாயன்று நடைபெற்ற தாக்கு தலில் ஐந்து அப்பாவி பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட் டனர். ஆப்கானிஸ்தான் எல்லைக்கருகில் உள்ள தத்தா கேல் தாலுகா ஆம்பிர் ஷாகா பகுதியில் சென்று கொண் டிருந்த வாகனம் ஒன்றைக் குறிவைத்து ஆளில்லா வாக னங்கள் ஏவுகணைகளை வீசின. அதில் பயணம் செய்து கொண்டிருந்த ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். (மேலும்.....)

பங்குனி 18, 2011

இந்தியாவில்

ஆட்சியைக் காப்பாற்ற எம்.பி.க்களுக்கு லஞ்சம்  பிரதமர் ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை

அமெரிக்காவுடனான அணுசக்தி உடன்பாட்டில் கையெழுத்திட மன்மோகன் சிங் அரசு முடிவு செய்த தைத் தொடர்ந்து, ஐ.மு.கூட் டணி-1 அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்தன. இதைத்தொடர்ந்து 2008ம் ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அரசுக்கு ஆதரவாக வாக் களிக்க எம்பிக்களுக்கு காங் கிரஸ் கட்சி லஞ்சம் கொடுத்த விவகாரம் அப்பொழுதே அம்பலமானது. விக்கிலீக்ஸ் இணைய தளம் மற்றும் இந்து பத்தி ரிகை இதுகுறித்து அமெ ரிக்க தூதரகத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட் டுள்ளது. (மேலும்.....)

பங்குனி 18, 2011

நிலநடுக்கத்தால் கொரிய தீப கற்பம் இடம்பெயர்ந்தது

கடந்த வாரம் ஜப்பான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கொரிய தீபகற்பத்தை கிழக்கு திசையில் நகர்த்தியுள்ளது. ஜப்பான் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 9 எனும் அலகாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால், கிழக்கு கடலைச் சேர்ந்த தென்கொரிய தீபகற்பத்தில் உள்ள, உல்லங்தீவு, டோக்டோ தீவுகள் ஆகிய பகுதிகள் ஒன்று முதல் 5 செ.மீ.வரை இடம்பெயர்ந்துள்ளன. நிலநடுக்கத்தின் மையப் பகுதியான ஜப்பானின் ஹோன்ஷ¤ தீவானது இந்தக் கொரியத் தீவுகளுக்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கொரியாவின் தென் மேற்குப் பகுதியில் உள்ள ஜேஜு தீவு மிகக் குறைவான அளவே நகர்ந்தது. இத்தகவலை கொரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது. புவிநிலை அறியும் கருவிகள் (ஜி.பி.எஸ்) மூலம் நடத்திய ஆய்வில் நிலப்பகுதிகள் நகர்ந்துள்ளன எனத் தெரிய வந்தது.

பங்குனி 18, 2011

ஜப்பான் உணர்த்தும் பாடம்!

சரித்திரம் இதுவரை சந்திக்காத சோதனை ஜப்பானில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்றன் பின் ஒன்றாக இயற்கையின் சீற்றமும் அதன் விளைவாக ஏற்பட்டிருக்கும் அணு உலைகளின் வெடிப்பும், மனித இனத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தின் அதிர்ச்சியை எதிர்கொள்ளத் தயாராவதற்குள், உயர்ந்தெழுந்த ஆழிப்பேரலை ஜப்பானின் வட கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கோர தாண்டவம் ஆடி அந்த தேசத்தையே நிலைகுலைய வைத்து விட்டிருக்கிறது. இத்தோடு விட்டேனா பார் என்று பூகம்பமும், ஆழிப்பேரலையும் அடங்குவதற்குள் கடற்கரை ஓரமாக அமைந்த அணு மின் நிலையங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அணு மின் உலைகள் வெடித்துச் சிதறத் தொடங்கின. அதன் தொடர் விளைவாக, ஜப்பானை மட்டுமல்ல, அந்த நாட்டைச் சுற்றியுள்ள கடல்கடந்த தேசங்களைக் கூட அந்த அணு மின் உலைகளிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு பாதிக்கக்கூடும் என்கிற செய்தி உலகையே பயத்தில் ஆழ்த்தி இருக்கிறது. (மேலும்.....)

பங்குனி 17, 2011

234 உள்ளூராட்சி சபைகளுக்கு இன்று தேர்தல்

234 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இன்று காலை 7.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நாடு முழுவதும் நடைபெறுகிறது. 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் 29,108 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3 மாநகர சபைகள், 30 நகர சபைகள், 201 பிரதேச சபைகளுக்கான தேர்தலில் 94 இலட்சத்து 38,132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்தது. 7396 நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெற உள்ளதோடு வாக்குகள் எண்ணுவதற்காக 1077 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. (மேலும்.....)

பங்குனி 17, 2011

17.03.2011 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் லண்டனில் நடைபெற்ற நெடும் பயணம்தொடர்பான ஆதரவுக்கூட்டம் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கலந்து கொள்கிறார்கள். திரு. ரவி சட்டத்தரணி அவுஸ்ரேலியா திரு. இரா ஜெயதேவன், தலைவர் தமிழ் ஜனநாயக காங்கிரஸ், திரு. செ. அரவிந்தன் தமிழர் விடுதலை கூட்டணி, ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் திரு .செ .ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்.

தொடர்புகளுக்கு:  00 44 208 866 1001

பங்குனி 17, 2011

தமிழீழத்தை அழித்து தன்னை வளர்க்கும் கனடா தேசியத் தொண்டர்

கனடா ஈழத்தமிழினத்தின் இரண்டாவது தாயகம். அங்கே தேசியத்தின் குரலாக நாம் நினைத்து இருந்தவர் சொல்வதைக் கேட்க ஏன் எமது இனம் தோற்றுப் போனது என்பது விளங்குகிறது. நெஞ்சு பொறுக்கிதில்லை இந்த விதி கெட்ட மாந்தரை நினைத்து.... என்று விம்மியள வேண்டும் போலிருக்கிறது. விடுதலைப்புலிகள் முற்றாக அழிந்து விட்டார்களாம். இனி அவர்களது கதையே தேவையில்லையாம். உலகத்தமிழர் இயக்கம் வன்முறை சார்ந்த அமைப்பாம். இப்படி நெஞ்சு கூசாமல் பொய் சொல்பவர்கள் வேறு யாருமல்ல. தேசியத் தலைவரின் வழிகாட்டலில் வந்தவர்கள் என்று இப்போதும் எங்களுக்கு கூறிக் கொண்டிருக்கிற கயவர்கள் தான். (மேலும்.....)

பங்குனி 17, 2011

திராவிட கட்சிகளையும் விட்டு வைக்கவில்லை ‘விக்கிலீக்ஸ்’

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த மு.க.அழகிரி, கார்த்தி சிதம்பரம்: அமெரிக்க தூதரின் ரகசிய செய்தி மூலம் அம்பலப்படுத்தியது விக்கிலீக்ஸ்

தேர்தல் நேரத்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுப்பது தென் இந்தியாவில் சாதாரண விஷயம் என்று அமெரிக்க அரசின் தலை மையிடத்திற்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி அனுப்பிய ரகசிய செய்தியில் கூறப்பட்டிருப்பதை ‘விக்கிலீக்ஸ்’ இணையதளம் அம்பலப்படுத்தி யுள்ளது. மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மற்றும் மத்திய உள்துறை அமைச் சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி ஆகியோர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார்கள் என்றும் அமெரிக்க தூதர் விலாவாரியாக அனுப்பியுள்ள ரகசிய செய்தி, ‘விக்கிலீக்ஸ்’ தகவல் மூலம் வெளிச் செத்திற்கு வந்துள்ளது. (மேலும்.....)

பங்குனி 17, 2011

ஜெர்மனியில் பழைய அணுமின் நிலையங்கள் கால அளவு நீடிப்பு நிறுத்தி வைப்பு

ஜெர்மனியில் உள்ள பழைய அணுமின் நிலையங்கள் இயங்கும் கால அளவை நீடிப்பதை மூன்று மாத காலத்துக்கு நிறுத்தி வைத்துள்ளதாக அந்நாட்டு சான்ஸலர் ஏங்கிலா மெர்கெல் கூறியுள்ளார். ஜப்பானில் சுனாமியைத் தொடர்ந்து அணுமின் நிலையத்தில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத விபத்துதான் ஜெர்மனியின் இந்த புதிய முடிவுக்கு காரணம். ஜெர்மனியில் உள்ள 17 அணுசக்தி நிலையங்களின் ஆயுள்காலத்தை நீட்டிப்பதை 3 மாத காலத்துக்கு ஒத்திப்போடுவதாக சான்ஸலர் மெர்கெல் அறிவித்தார். (மேலும்.....)

பங்குனி 17, 2011

அண்ணன் சிவாவுக்கு அகவை 64 அகமகிழ வாழ்த்திடுவோம்.

உலக மெங்கும் உள்ள தமிழகளிடம் குறிப்பாக அரசியவையும் எமது நாட்டின் சூழ்நிலையும்; சிந்திக்கின்ற அத்தனை பெயர் மத்தியிலும் அறியபட்ட பெயர் தோழர்  விஸ்வலிங்கம் சிவலிங்கம். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியச் செய்தியின் பின் அரசியல் ஆய்வினையும், வியாழன் தோறும் அரசியல் கலந்துரையாடலையும் அறிவுபூர்வமாகவும் ஆரோக்கியமாகவும் உலக வாழ் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் கொண்டு சென்ற பெருமை திரு. விஸ்வலிங்கம் சிவலிங்கம் அவர்களைச் சாரும் என்பதில் ஜயமில்லை. இவர் மழை, வெய்யில், பணி என்று பாராமலும் பல அச்சுறுத்தல் நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் 11 ஆண்டுகளாக தனது பணியை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக வழங்கி வருவதை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நேயர்கள் மறந்து விடமாட்டார்கள். (மேலும்.....)

பங்குனி 17, 2011

ஜப்பான் சொல்லும்  அணுவின் பாடம்

சுனாமிக்குப் பின்னால் ஜப்பானில் அணு உலைகளில் ஏற்பட்டுள்ள வெடிப்பும் அணுக் கதிர் வீச்சு அபாயமும் உலக மக்களை கலங்க வைத்திருக்கிறது. அந்தக் கதிர் வீச்சு ஆசிய நாடுகளை பாதிக்கும் என்கிற எச்சரிக்கை செய்தி மேலும் கவலை அளிப்பதாக உள்ளது. இந்தச் சூழலில் இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து மிகப்பெரிய ஐயமும் அச்சமும் மக்களிடையே வலுப்பெற்று வருகிறது. மத்திய அரசும் இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது சரி யானது. ஆனால், அது வெறும் கண்துடைப்பாகி விடக்கூடாதே என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. (மேலும்.....)

பங்குனி 17, 2011

3059 பேருக்கு ‘9A’ 1,95,112 பேர் A/L கற்க தகுதி

2010 ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் இம்முறை 195,112 பேர் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். இத் தொகையை சென்ற வருட பரீட்சார்த்திகளோடு ஒப்பிடும் போது 10.28 சத வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் அநுர எதிரிசிங்க தெரிவித்தார்.பரீட்சை திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கடந்த பத்து ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் பரீட்சைக்குத் தோற்றினர். சகல பாடசாலைகளிலும் மாணவர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில், கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டனர். சில பிரதேசங்களில் மாணவர்கள் அதிகாலையில் சென்று பாடசாலைகளில் ஆர்வத்துடன் கல்வி பயின்றதை காணக் கூடியதாக இருந்தது. (மேலும்.....)

பங்குனி 17, 2011

Sri Lankan suspected of having links with LTTE held in Navi Mumbai

A Sri Lankan national, suspected to having links with terrorist outfit Liberation Tigers of Tamil Ealam (LTTE), was arrested from his hideout in neighbouring Navi Mumbai by the Maharashtra Anti-Terrorism Squad (ATS).The accused Rajan Silithuriya alias Rajan alias Kartik, hailing from Sri Lanka, was picked up from his hideout in Koparkhairane area of Navi Mumbai on Tuesday night. He had been shifting places in the Mumbai suburbs since the past four years, the ATS said. According to the ATS, Narcotics Control Bureau (NCB) on April 13, 2007 had seized three kgs of heroin at the Chennai International airport. The concerned special court had declared Silithuriya as a wanted accused in the case and had also issued a non-bailable warrant against him. The ATS had received specific information that Silithuriya was staying in Navi Mumbai following which he was arrested. "We are probing if Silithuriya has any links with LTTE or any other group in Mumbai. Preliminary probe revealed the accused had stayed in Matunga, Chembur and Navi Mumbai areas since past four years," said additional director general (ATS) Rakesh Maria. The Chennai NCB would seek his remand from the ATS soon, the ATS officials said adding further probe was on.

பங்குனி 17, 2011

ஏகாதிபத்திய சதிகளுக்கு எதிராக விழிப்போடிருப்போம்  ஈரான் ஜனாதிபதி அறைகூவல்

சுதந்திரமாக இயங்கும் நாடுகள் ஏகாதிபத்தியத்தின் சதிகளுக்கு எதிராக விழிப் போடிருக்க வேண்டும் என்று ஈரான் ஜனாதிபதி முகமது அகமதிநிஜாத் எச்சரித்துள்ளார். ஈரானுக்கான வெனி சுலா தூதர் டேவிட் வேலாஸ் குஸ் கரபல்லோவுடனான விவாதத்தின்போதே அவர் இதைத் தெரிவித்தார். இரு வருக்கும் இடையிலான விவாதத்தில் சர்வதேச சமூகம் எதிர்கொண்டுவரும் பல்வேறு பிரச்சனைகள் இடம் பெற்றன. சுதந்திர மாக இயங்கவும், நீதியை நிலைநாட்டவும் விரும்பும் அரசுகள் ஏகாதிபத்தியத் தின் நிஜாத் கூறியிருக்கிறார். (மேலும்.....)

பங்குனி 17, 2011

கறிவேப்பிலையின் மகத்துவம்

உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால்தான் சாப்பிடும் போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவக் குணங்கள் இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.  கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது ஈரல் மற்றும் ஈரல் தொடர்பான நோய்களும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் காணப்படுகிறது. கறிவேப்பிலை இரத்தத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைக்கவும், அறிவைப் பெருக்கவும் உதவுகின்றது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள். கறிவேப்பில்லை சமிபாட்டுப் பிரச்சினை, மலச்சிக்கல். வாயு தொல்லை போன்றவற்றுக்கும் சிறந்த மருந்ததாகக் காணப்படுகிறது. கறிவேப்பிலை வாரத்திற்கு இரண்டு முறை சம்பல் செய்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளும் போது வாழ்நாளில் சுகதேகியாக வாழ முடியும்.

பங்குனி 17, 2011

பஹ்ரைனில் ஆர்ப்பாட்டக்காரர் படையினர் மோதல்

பஹ்ரைனில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் இருவர் கொல்லப்பட்டதோடு 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பஹ்ரைனில் கல்ப் நாட்டு இராணுவங்கள் குவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மூன்று மாத காலத்திற்கு அங்கு அவசர நிலை பிரகடனப்படத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்த பஹ்ரைனில் நேற்று முன்தினம் பல்வேறு இடங்களிலும் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதன்போது இராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலின் போது ஒரு பங்களாதேஷ் பிரஜை உட்பட இருவர் கொல்லப்பட்டனர். இதேவேளை பஹ்ரைன் நாட்டின் மீது முஸ்லிம் நாடுகள், இராணுவ நடவடிக்கை எடுக்க முன்வந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராமின் மெஹ்மன்பரசாத் வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பான கல்ப் கோ ஆப்ரேஷன் கவுன்சில் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். ஈரானின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தெஹ்ரானில் உள்ள பஹ்ரைன் தூதுவரை பஹ்ரைன் அரசு திருப்பி அழைத்துக் கொண்டுள்ளது. பஹ்ரைனில் சிறுபான்மையினரான சுன்னி முஸ்லிம் மன்னரே ஆட்சி நடத்தி வருகிறார். அங்கு பெரும்பான்மையினரான ஷியா முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

பங்குனி 17, 2011

ஜப்பான்

4 வது அணு உலையிலும் தீப்பிடிப்பு, பெரும் பீதி

பூமியதிர்ச்சியாலும், சுனாமியாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஜப்பான், அணு மின் நிலையத்தில் கதிர்வீச்சு அபாயம் அதிகரித்துள்ளது. சுனாமியால் புகுஷிமா டாய்ச்சி அணு மின் நிலையத்தில் அணு உலைகள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன. அணு உலைகளை குளிர்விக்க செய்ய எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன. ஒன்று முதல் மூன்றாவது அணு உலைகள் அடுத்தடுத்து வெடித்ததால் அணு மின் நிலையத்தை சுற்றியிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். 4வது அணு உலையில் 2 தீவிபத்துகள் ஏற்பட்டன. 4வது அணு உலை கதிரியக்க மூலப் பொருட்களை சேமித்து வைக்க பயன்படுத்தப்பட்டு வந்தது. அணுமின் நிலையத்தில் வெடிப்புக்குள்ளான 3 அணு உலைகளின் கலன்களில் இருந்தும் கசிவு இருக்கலாம். இது கதிர்வீச்சுக் கசிவின் அபாயம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது. 4வது அணு உலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முடிந்ததைத் தொடர்ந்து சேதமடைந்த அணு உலைகளில் பணிகள் நிறுத்தப்பட்டன. (மேலும்.....)

பங்குனி 17, 2011

NDP SOCIALIST CAUCUS ANNUAL FEDERAL CONFERENCE

Saturday, March 19, 2011  TORONTO , 10 a.m. – 5 p.m.

Registration:  9:30 a.m.  $5.00 (or PWYC)

ONTARIO INSTITUTE FOR STUDIES IN EDUCATION

252 BLOOR ST. WEST, Room 2-212, just above the St. George Subway Station.

10 a.m.  "Egypt, the Arab Uprisings, and the NDP"

GUEST SPEAKERS:

Dr. Mohammed Shokr, representative, Egyptian National Association for Change -- just returned from Cairo.

Barry Weisleder, Chair, NDP Socialist Caucus, (Alt.) Delegate to Ontario NDP Provincial Council for Trinity-Spadina NDP, and active member of OSSTF.

Lunch break film:  Myths for Profit – Canada's Role in Industries of War and Peace

RESOLUTIONS AND ELECTIONS The conference will update and supplement SC resolutions on many topics, including the freedom struggle in Libya, phasing out the Alberta Tar Sands, pension reform, public ownership, green energy conversion, solidarity with Palestine, opposition to the imperialist wars of occupation, legalizing marijuana, defending Cuba, Venezuela and Bolivia, and upholding workers' rights in Canada. Strategies and tactics to advance socialist policies within the NDP, leading up to the NDP Federal Convention set for Vancouver, June 17-19, will be discussed. There will be an opportunity to add new members to the Socialist Caucus Federal Steering Committee.

பங்குனி 17, 2011

விசுவாசத்தை மறந்துபோன தமிழக அரசியல்

இன்றைய தமிழக அரசியலில் விசுவாசத்திற்கு இடமில்லை என்பது, சாதாரண தொகுதிப் பங்கீட்டு விஷயத்திலேயே தெரிந்து விட்டது. இதில், அ.தி.மு.க., தி.மு.க. என்று கூட்டணிகளில் பாகுபாடு இல்லை.  கூட்டணி விசுவாசம் இழந்து, இழுபறிகளில் தொடங்கி, அவமானப் பட்டு, இறுதியில் தலைவர்கள் வேறு வழியின்றி தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளலாம். ஆனால், தேர்தலுக்கு உழைக்கும் தொண்டன் மனம் இணையுமா? இது கட்சித் தலைவர்க ளுக்கே வெளிச்சம் என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள். (மேலும்.....)

பங்குனி 17, 2011

லிபிய

அஜபியாவில் தொடர்ந்து மோதல்

லிபிய கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான பெங்காசிக்கு அருகாமை நகரான அஜபியாவில் தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன. கடாபி ஆதரவுப் படையினர் அஜபியா பகுதியில் எறிகணை தாக்குதல்களை நடத்திவருவதோடு விமானம் மூலமும் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில் எதிர்ப்பாளர்கள் இங்கு நீண்ட காலம் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்திக்கொள்வது கடினம் என அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அஜபியா பகுதியை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக அரச தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது. எனினும் இதனை கிளர்ச்சிப் படை முற்றாக மறுத்தது. அஜபியாவுக்குள் கடாபி ஆதரவுப்படை உள்நுழைய முயன்ற போது அதனை நாம் முறியடித்தோம் என கிளர்ச்சிப்படையின் பேச்சாளர் காலித் அல் சயா, தெரிவித்தார். (மேலும்.....)

பங்குனி 16, 2011

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஏற்பாடுகள் பூர்த்தி

234 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நாளை (17) நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களிக்க 2009 ஜூன் மாத வாக்காளர் பட்டிய லின் பிரகாரம் 94 இலட்சத்து 44 ஆயிரத்து 455 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 23 மாவட்டங்க ளில் 324 உள்ளூ ராட்சி மன்றங்களுக்காக 3036 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய 7 ஆயிரத்து 402 நிலையங்களில் இவர்கள் நாளை வாக்களிக்க வுள்ளனர். சுதந்திரமும் நியாயமுமான தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் உள்ளூராட்சி மன்றத்துக்கான வாக்களிப்பை பின் போடுவதற்கு கட்சி செயலாளர்களின் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாகவும் அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறும். (மேலும்.....)

பங்குனி 16, 2011

லிபிய கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான

பெங்காசியை நோக்கி முன்னகர்கிறது அரச படை

லிபிய கிளர்ச்சியாளர்களின் தலைமையகமான பெங்காசியை நோக்கி கடாபி ஆதரவு அரச படை முன்னகர்ந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரெகா நகரைக் கைப்பற்றிய கடாபி ஆதரவுப்படை பெங்காசிக்கு அண்மைய நகரமான அஜபியாவைக் கைப்பற்றப் போராடி வருகின்றது. பெங்காஸிக்கு தெற்காக 150 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள அஜபியாவில் தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றுவருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் வெளிநாட்டு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். அஜபியாவில் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு வான் தாக்குதல் இடம்பெற்று வருவதாக அங்கு வசிக்கும் அலிபவுஹில்பாயா அல் ஜீரா செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.  (மேலும்.....)

பங்குனி 16, 2011

சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக அரபு நாடுகளின் படைகள்?  பஹ்ரைனில் இறங்கியது சவூதி ராணுவம்

மக்களின் கிளர்ச்சியை அடக்குவதற்காக அண்டை நாடுகளிலிருந்து ராணு வத்தை அழைத்துள்ள பஹ் ரைன் அரசின் நடவ டிக்கை மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற் படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத கால மாக பஹ்ரைன் நாட்டவர் அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதி ராகப் போராடி வருகிறார் கள். பஹ்ரைன் அரசு கடு மையான அடக்குமுறை யைக் கட்டவிழ்த்துவிட் டது. ஞாயிறன்று நடை பெற்ற வன்முறையில் பொது மக்கள் ஏழு பேர் கொல்லப் பட்டனர். ஆனால் மக்கள் போராட்டம் ஓயவில்லை. இதனால் அண்டை நாடு களிலிருந்து ராணுவத்தை வரவழைக்க பஹ்ரைன் அரசு முடிவு செய்தது. (மேலும்.....)

பங்குனி 16, 2011

ஜப்பான் அணு உலையில் வெடிப்பு

கதிர்வீச்சுத் தாக்கம் இலங்கைக்கு இல்லை

ஜப்பானின் புகுஷிமா டைய்ச்சி அணுமின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட வெடிப்புக்களால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லையென அணு சக்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேயவிக்ரம தெரிவித்துள்ளார். எனினும், முற்கூட்டிய பாதுகாப்புத் தொடர்பில் இன்று முதல் அணுக் கதிர்வீச்சுத் தொடர்பான ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  இலங்கைக்கு உடனடியாக எந்தவிதமான பாதிப்புக்களும் இல்லையென்பதால் மக்கள் தேவையற்ற அச்சமடையத் தேவையில்லையென்றும் அவர் தெரிவித்தார். (மேலும்.....)

பங்குனி 16, 2011

புலிகளும் க&