Contact us at: sooddram@gmail.com

 

வைகாசி 2012 மாதப் பதிவுகள்

வைகாசி 31, 2012

இலங்கை தமிழர்களின் இன்றைய தேவை தமிழ் ஈழம் அல்ல

ஈழத் தமிழர்கள் இன்று ஒரு தோற்கடிக்கப்பட்ட மனநிலையில், கையறுநிலையில் உள்ளனர். இன்னொரு பக்கம் பெரும்பான்மையினரான சிங்கள இனம் வெற்றி மமதையில் திளைக்கிறது. இன்றைய சூழலில், சிங்களர்களுக்கு தமிழர்களை எழும்பவிடாமல் தடுப்பதற்கு இந்த வெற்றிப் பெருமிதத்தை மிகவும் தந்திரமாக பயன்படுத்தகிறது சிங்கள பேரினவாத அரசு. நான் இலங்கை சென்றிருந்தபோது ஒரு தமிழ் நாளிதழ் ஆசிரியர் இப்படிசொன்னார், 'போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் தமிழகத்திலிருந்து குரலெழும்பும் ஒவ்வொரு முறையும் அது சாத்தியமாகிறதோ இல்லையோ, ராஜபக்ஷே அரசுக்கு இன்னொரு 5 சத சிங்கள ஆதரவு அதிகமாகிறது. தமிழர்களிடம் இருந்து தாம் விலகிப் போவது குறித்து அவர்கள் கவலைப்படுவது இல்லை, ஏனெனில் அவர்கள் எந்நாளும் தமிழர்களின் ஆதரவை நம்பியிருந்ததில்லை. ஒரு நாற்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்திற்குப் பின் ஒரு சமூகம், அதுவும் தோற்கடிக்கப்பட்ட சமூகம் என்னென்ன துயங்களையும் என்னென்ன பிரச்சினைகளையும் சந்திக்க நேருமோ, அத்தனையையும் இன்று ஈழத் தமிழர்கள் சந்தித்து கொண்டுளள்னர். (மேலும்....)

வைகாசி 31, 2012

'குலப்பன்' காய்சலில் சுரேஷ்

தமிழ் கூட்டமைப்பை சம்பந்தர் பலவீனப்படுத்துகிறார்

மட்டக்களப்பில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுக்கு தலைமை வகிக்கும் கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தும் போக்கை நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விமர்சித்துள்ளார். அண்மையில் நடந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், அதன் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்ட சில கருத்துக்கள் தொடர்பில் தாம் முரண்படுவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை (ஈபிஆர்எல்எஃப்) சேர்ந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார். (மேலும்....)

வைகாசி 31, 2012

ஆசியாவில் இராணுவ பலத்தை அதிகரிக்க அமெரிக்கா வலியுறுத்து

ஆசிய பிராந்தியத்தில் தனது இராணுவ சக்தியை வலுப்படுத்துவது கட்டாயம் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பெனட்டா குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவின் எதிர்கால பாதுகாப்பு மேற்கு பசுபிக் மற்றும் இந்திய சமுத்திரத்தில் இராணுவத்தை பலப்படுத்துவதில் தங்கியிருப்பதாகவும் பெனட்டா குறிப்பிட்டார். அமெரிக்காவின் அனபொலிஸில் நேற்று முன்தினம் நடந்த கடற்படை பட்டமளிப்பு வைபவத்தில் உரையாற்றும் போதே லியோன் பெனட்டா இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் கூறும்போது, “அமெரிக்கா கடலாதிக்கத்தை தன்னகத்தே கொண்ட தேசமாகும். எனவே எதிர்காலத்திலும் எமது ஆதிக்கத்தை நிலைநாட்டவேண்டும்” என்றார். இதில் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, அவுஸ்திரேலிய மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்துவது கட்டாயமாகும். அதேபோன்று சீனாவுடனான அமெரிக்கா இராணுவ உறவுகளை வலுப்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார். லியோன் பனட்டா பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக வியட்னாம், இந்தியா மற்றும் சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அதேபோன்று இந்த ஆண்டு இறுதியில் அவர் முதல் முறையாக சீனாவுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார்.

வைகாசி 31, 2012

ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் பொலிஸாரினால் சுற்றி வளைக்கப்பட்டு சீல்

ரூற்றிங் முத்துமாரி அம்மன் ஆலயம் பொலிசாரினால் சுற்றி வளைக்கப்பட்டு இன்று (மே 22 2012) அதிகாலை 3:30 மணியளவில் சீல் வைக்கப்பட்டு உள்ளது.  வாடகை செலுத்தாத காரணத்தினால் ஆலயம் இன்று சீல் வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. ஆனால் செலுத்தப்படாமல் இருந்த வாடகை மே 18, 2012இல் செலுத்தப்பட்டதாகவும் அதனால் பொலிசாரின் நடவடிக்கைக்கு எதிராக ஆலயம் நீதிமன்றம் சென்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றது. செப்ரம்பர் 09, 2011இல் ரூற்றிங் முத்துமாரி ஆலயம் வெளியேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்ட போதும் ஆலயத்துக்கான புதிய இடம் அமையும் வரை குறித்தகாலத்துக்கு ஆலயம் அங்கே இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவ்விடத்திற்கு நாளாந்த வாடகை செலுத்தப்பட வேண்டும். (மேலும்....)

வைகாசி 31, 2012

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்ற கோருவது சாதாரண மக்கள் அல்ல - கோதாபய ராஜபக்ஷ

வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றக் கோருவது அங்கு வாழும் சாதாரண மக்கள் அல்லர். வடக்கின் அரசியல் அதிகாரத்திலிருந்து சரிந்து செல்லும் தமிழ்க் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளே இவ்வாறு கோருகின்றன. கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களைப் பார்க்கிலும் அநுராதபுரம் - பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இராணுவ முகாம்கள் அமைந்துள்ளதை அந்த அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்ட தாம் விரும்புவதாக பாதுகாப்பு, செயலர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் அநுராதபுர - பொலன்னறுவை மக்கள் அந்த மாவட்டங்களில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றுமாறு ஒருபோதும் கோஷம் எழுப்பவில்லை என்பதையும் அந்த அமைப்புக்களுக்கு சுட்டிக்காட்ட தாம் விருப்பமாக இருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 31, 2012

உள்ளூர் பால், முட்டை, காய்கறி உற்பத்திகளுக்கு சிறந்த சந்தை வாய்ப்பு

சில சுயநலவாத சமூக விரோதிகள் மேற்கொண்ட தவறான செயற்பாடுகளினால் இலங்கையின் பால் உற்பத்தியாளர்கள் குறிப்பாக மலையகத்தின் பால் உற்பத்தியாளர்கள் சமீபகாலத்தில் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்தார்கள். இவர்களின் கஷ்ட நிலையை உணர்ந்து அரசாங்கம் எடுத்த உடனடி செயற்பாட்டினால் ஒரு போத்தல் பாலின் விலை கட்டுப்பாட்டு விலையான 50 ரூபாவில் இருந்து உயர்ந்து 60 ரூபாவுக்கு இன்று விற்பனை செய்யப்படுகின்றது. அது போன்று, முட்டை 3 ரூபா 50 சதம் வரை வீழ்ச்சியடைந்ததால் துன்பத்தில் மூழ்கியிருந்த கோழிப் பண்ணையாளர்களின் பிரச்சினையும் இப்போது நல்ல முறையில் தீர்க்கப்பட்டுள்ளது. இப்போது முட்டையின் விலை 8 ரூபா 50 சதம் முதல் 10 ரூபா வரை அதிகரிக்கின்றமையால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக ஒரு அரசாங்க அதிகாரி தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 31, 2012

அல் கொய்தா குறித்து ஒபாமா ரகசிய ஆய்வு

பாகிஸ்தான் மற்றும் யெமனில் பதுங்கி இருக்கும் அல் கொய்தா அமைப்பினரில் கொல்லப்பட வேண்டியவர்கள் பட்டியல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ரகசிய ஆய்வு ஒன்றை நடத்தி வருகிறார். அந்த ஆய்வு தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளவும் ஒபாமா ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒபாமா தயாரித்து வரும் கொல்லப்பட வேண்டிய அல் கொய்தா அமைப்பினர் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்களின் பெயர்களை ஒபாமாவே தீர்மானிப்பதாகவும், அவர்களை எவ்வாறு அருகில் மற்றும் தொலைவில் இருந்து தாக்குதல் நடத்துவது என்பது குறித்தும் ஒபாமா முடிவு செய்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒபாமாவின் பார்வையில் உலகின் நிலைப்பாட்டிற்கு அமெரிக்காவே முக்கிய பொறுப்பு வகிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். இது வரை 12 முக்கிய அல் கொய்தா தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகாசி 31, 2012

ஆழ் கடலுக்கு சென்று டொல்பின் சாகசங்களை கண்டுகளிக்க வாய்ப்பு

ஆழ்கடலில் டொல்பின் களின் சாகசங்களை கண்டு களிக்கும் பொருட்டு திருகோணமலை துறைமுகத்திலிருந்து அதிசொகுசு கப்பல் சேவையொன்று ஆரம்பிக் கப்படவுள்ளது. திருகோணமலை துறைமுகத்திலிருந்து எதிர்வரும் 2ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள இந்த கப்பல் சேவை எதிர்வரும் நவம்பர் மாதம் வரை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது. பிரதி சனி, ஞாயிறு தினங்களில் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை இந்த கப்பல் சேவை இடம்பெற வுள்ளது. எதிர்வரும் 2ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந்தக் கப்பல் சேவையின் முதற்கட்டமாக பரீட்சார்ந்த சேவை நேற்று முன்தினம் இடம்பெற்றது. சகல வசதிகளையும் கொண்ட இந்த கப்பலில் சுமார் 300 பேர் பயணிக்கும் வகையில் ஆசனங்கள் உள்ளன. இந்தக் கப்பலின் கப்டன் உட்பட 40 கடற்படை வீரர்கள் இதில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உளவியல் மருத்துவ நிபுணத்துவம் கொண்ட குழுவினரும் இதில் அடங்குவர். மேற்படி கப்பலில் பயணம் செய்ய விரும்பும் உள்ளூர் வயது வந்த உல்லாச பயணி ஒருவரிடமிருந்து 3500 ரூபாவும் 6 வயது தொடக்கம் 12 வயது வரையிலானோரிடமிருந்து 2000 ரூபாவும், வெளிநாட்டு வயது வந்த பயணியிடமிருந்து 100 அமெரிக்க டொலரும், 6 வயது தொடக்கம் 12 வயது வரையிலானோரிடம் அரைவாசி கட்டணமும் அறவிடப் படவுள்ளதாக அந்தக் கப்பலின் கெப்டன் தெரிவித்தார். இந்தக் கப்பலில் பயணித்து ஆழ்கட லில் திமிங்கிலம், டொல்பின்களின் சாகசங்களை கண்டுகளிக்க விரும்புபவர்கள் 0777323050 என்ற ஹொட்லைன் மூலம் தொடர்பு கொள்ள முடிவதுடன், www.whalewatching.navy.lk என்ற இணையத்தள முகவரி ஊடாக மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள முடியும்.

வைகாசி 31, 2012

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்

ஒபாமாவுக்கு எதிராக ரொம்னி போட்டியிடுவது உறுதி

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் பராக் ஒபாமாவுக்கு எதிராக குடியரசு கட்சி சார்பில் ரொம்னி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. குடியரசு, கட்சியின் வேட்பாளர் போட்டிக்கான டெக்சாஸ் மாநில வாக்கெடுப்பு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மிட்ரொம்னி 152 பிரதிநிதிகள் ஆதரவை வென்றார். இதன் மூலம் அவருக்கு இதுவரை 1,086 பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வாவதற்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் 1,144 பிரதிநிதிகளின் ஆதரவை பெறவேண்டும். இந்த இலக்கை எட்டுவதற்கு மிட் ரொம்னிக்கு இன்னும் 58 பிரதிநிதிகளின் ஆதரவே தேவைப்படுகிறது. குடியரசு கட்சி வேட்பாளர் போட்டியில் தற்போது மிட்ரொம்னி மாத்திரமே எஞ்சியுள்ள நிலையில் அவருக்கு இந்த இலக்கை எட்டுவது இலகுவானது என நம்பப்படுகிறது. இதன்படி எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரொம்னி, பராக் ஒபாமாவுக்கு எதிராக போட்டியிடவுள்ளார்.

வைகாசி 31, 2012

மத்திய அரசுக்கான ஆதரவை தி.மு.க மீளப்பெறும்

பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் மத்திய அரசு அலுவலங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கருணாநிதி பேசுகையில், முதலில் மக்களுக்குத் தந்த உறுதிமொழிகளை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கொள்கைகளை மத்திய அரசு அமுலாக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் விரோத செயல்கள் தொடர்ந்தால் அதை எற்றுக் கொள்ள முடியாது. அது தி.மு.கவின் கொள்கைகளுக்கு விரோதமானது. இதே செயல்கள் தொடர்ந்தால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை தி.மு.க. மீளப் பெறவும் தயங்காது. அந்த நிலைமைக்கு தி.முகவை மத்திய அரசு தள்ளாது என்று நம்புகிறேன் என்றார். தி.மு.கவுக்கு 18 எம்பிக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆட்சியில் நீடிக்க 277 எம்பிக்கள் தேவை என்ற நிலையில், திமுக ஆதரவை மீளப் பெற்றால் மத்திய அரசு தப்பிட்ட 13 மற்ற கட்சி எம்பிக்களின் ஆதரவு தேவைப்படும். அதேபோல மம்தாவின் திரிணமூல் காங்கிரசிடம் 19 எம்பிக்கள் உள்ளனர். அவரும் மத்திய அரசை அவ்வப்போது மிரட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 31, 2012

நவநீதம்பிள்ளை உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது - அரசாங்கம் _

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையோ அவரது குழுவினரோ இலங்கை வருவதான் அரசிற்கு எவ்விதமான ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் நாட்டின் உள்ளக நிர்வாகங்களில் தலையிடுவதாகவோ அழுத்தங்களை பிரயோகிப்பதாகவோ அவர்களின் விஜயம் அமையக் கூடாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இலங்கையின் உள்ளார்ந்த நிர்வாக கட்டமைப்புக்கு சர்வதேசத்தின் ஆலோசனைகள் தேவையில்லை. வடக்கு கிழக்கில் முகாம்களை நிர்மாணிக்க அரசியல் தீர்வை ஏற்படத்தல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளை ஆராய்வது போன்ற விடயங்கள் உள்நாட்டு விவகாரங்களாகும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட்டு நாட்டின் நீதிமன்ற பொறிமுறையினை இழிவுபடுத்துவதை அனுமதிக்க முடியாது என்றும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையும் இலங்கைக்கு வந்து விட்டுச்செல்லலாம். ஆனால் நவநீதம்பிள்ளையின் இலங்கை மீதான பார்வை ஓரக்கண் பார்வையாகவே காணப்படுகின்றது. எனவே இவரின் வருகையும் நிலைப்பாடும் நாட்டிற்கு எதிராக காணப்படுமாயின் அதனை அரசு அனுமதிக்காது.

வைகாசி 31, 2012

ஈழக் கோரிக்கையுடன் கருணாநிதி டில்லியில் உண்ணாவிரதம் இருப்பாரா? - டாக்டர் ராமதாஸ்

தமிழீழம் பற்றி பேசிவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி முடிந்தால் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் டில்லியில் உண்ணாவிர தமிருக்கட்டும் பார்க்கலாம் என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கருணாநிதி எப்போதும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது தமிழ் ஈழத்தைப் பற்றிப் பேசுவார். 18 எம்.பி.க்களை வைத்துள்ள கருணாநிதி துணிச்சல் இருந்தால் டில்லிக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கட்டும் எனத் தெரிவித்தார்.  இலங்கை மக்களின் அவலத்தை முன்வைத்து தமிழ்நாட்டில் அரசியல் நாடகம் நடத்தும் வைகோ, சீமான், பழ. நெடுமாறன் ஆகியோரை விஞ்சும் வகையில் ஈழம் கிடைத்த பின்பே உயிர்துறக்கப் போவதாகக் கூறியுள்ள கருணாநிதியை நோக்கி இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார் ராமதாஸ்.

வைகாசி 30, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 18)

(அ.ஆனந்தன்)

தி.மு.க. இவ்வாறு பிராந்திய முதலாளிகளின் ஆதரவையும் பின்பலத்தையும் பெற்று படிப்படியாக வளர்ந்து வந்த போதிலும் அந்த ஆதரவு வெளிப்படையாக தலைகாட்டி உறுதிப்பட்டது இந்தி திணிப்பு எதிர்ப்புப் போரின் போதுதான். அது சாதாரண மக்களாலும் மாணவர்களாலும் தமிழ்நாட்டின் மீதான கலாச்சார படைஎடுப்பு என்று கருதப்பட்டது. உண்மையில் ஆங்கிலத்தை இணைப்பு மொழி ஸ்தானத்தில் இருந்து அகற்றி அவ்விடத்தில் இந்தியைக் கொண்டு வருவதற்காகவே மத்திய அரசின் அதுகுறித்த ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அகற்றப்படவிருந்த ஆங்கிலம் பிரதானப்படுத்தப்படாமல் இந்தி திணிப்பு தமிழ் மொழிக்கு எதிரான ஒன்று என்ற சித்திரமே முன்வைக்கப்பட்டது. அதன் விளைவாக பிராந்திய முதலாளிகளின் முழு ஆதரவுடன் தி.மு.க. 1967ல் ஆட்சிக்கு வந்தது. அதன் பின்னர் பிராந்திய முதலாளிகளின் சுதிக்கு ஏற்ற விதத்தில் தனது தாளத்தை மாற்றி மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்று மாறிமாறி வாய்ப்பந்தல் போட்டு தனது நாடாளுமன்ற அரசியலை தி.மு.க. நடத்திக் கொண்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 30, 2012

புலிகளின் கப்பலில் கடமையாற்றிய ஆறு இலங்கையர்கள் கைது!

புலிகளின் கப்பலில் கடமையாற்றிய ஆறு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கானா நாட்டிலிருந்து இலங்கைர்களை கனடாவிற்கு அழைத்துச் செல்லத் தயாரான கப்பல் ஒன்றில் குறித்த இலங்கையர்கள் கடமையாற்றியுள்ளனர். கானா நாட்டு பொலிஸார், குறித்த இலங்கையர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் கனேடிய இரகசிய பொலிஸாருக்கு கானா அதிகாரிகள் அறிவித்துள்ளனர். கானா நாட்டுக்கு விஜயம் செய்துள்ள கனேடிய இரகசிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இத்துடன் கானா நாட்டின் பல இடங்களில் தங்கியிருந்த 164 தமிழர்கள் பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளன.

வைகாசி 30, 2012

அமெரிக்காவுக்கு சமர்ப்பித்த யோசனை

ஆணைக் குழுவின் முக்கிய பரிந்துரைகளும் தெரிவுக் குழுவில் கலந்துரையாடப்படும்

நல்லிணக்க ஆணைக் குழுவின் முக்கியமான பரிந் துரைகளை அடிப்படையாக வைத்து பாராளுமன்ற தெரிவுக் குழுவில் கலந்துரை யாடல்களை நடத்துவது என்ற யோசனையை இலங்கை அரசாங்கம் அமெரிக்க இராஜாங்கத் திணைக் களத்திடம் சமர்ப்பித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டனிடம் வெளி விவகார அமைச்சர் ஜி. எல். பீரீஸ் சமர்ப்பித்த செயற் திட்டம் குறித்த சில தகவல்களை அந்த ஊடகம் வெளியிட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்துரையாடுவதற்கான 33 பிரதான பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் இந்த செயற் திட்டத்தில் முன் மொழிந்துள்ளது. (மேலும்....)

வைகாசி 30, 2012

ஏகாதிபத்தியத்தையும் முதலாளித்துவத்தையும் இந்நாட்டு மக்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்

ஜனநாயக ஜேர்மன் குடியரசு, வியட்நாம், கொரியா மற்றும் வியட்நாம் புரட்சிவாத தற்காலிக அரசாங்கங்களுடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்கும், தற்போது இஸ்ரேலுடன் இருந்து வரும் ராஜதந்திர உறவுகளை முறித்து கொள்வது என்ற கருத்தும், அணிசார நடுநிலை கொள்கை ஒன்றை கடைப்பிடிப்போம் என்ற கருத்தும், ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான தூரதரிசன கொள்கையுடன் நடுநிலை வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடிப்போம் என்று தெரிவித்து இருக்கும் கருத்து குறித்தும் இந்நாட்டு மக்கள் அதிக விசுவாசத்தை கொண்டுள்ளார்கள். இந்நாட்டின் பொதுமக்கள் ஏகாதிபத்தியவாதத்தை அங்கீகரிக்கமாட்டார்கள். அதுபோன்று முதலாளித்துவவாதத்தையும் அங்கீகரிக்கமாட்டார்கள். அதுபோன்று சகல விதமான சூறையாடல்களையும் அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் மூன்றில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை இந்த அரசாங்கத்திற்கு பெற்றுக் கொடுத்தும் இந்த இலட்சியக் கனவை நிறைவேற்றுவதற்காகவே என்பதை ஞாகப்படுத்த விரும்புகிறேன். (மேலும்....)

வைகாசி 30, 2012

சுவிஸர்லாந்தில் 90 வீத தொலைபேசி - தொலைபேசி அட்டை விற்பனை நிலையங்கள் புலிகளுக்குக்கு சொந்தமானவை

சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் இயங்கும் கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்கள் மற்றும் தொலைபேசி அட்டை விற்பனை நிலையங்களில் 90 வீதமானவை புலிகள் அமைப்புக்கு சொந்தமானவை என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தான் அண்மையில் ஜெனிவாவுக்கு சென்றிருந்த போது, இது குறித்து அறிந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். ஜெனிவாவில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தில் கலந்துக்கொள்ள சென்றிருந்த இலங்கை பிரதிநிதிகள் அனைவரும் இந்த கடைகளிலேயே கையடக்க தொலைபேசிகளையும், தொலைபேசி அட்டைகளையும் கொள்வனவு செய்திருந்தனர். அறிந்தோ அறியாமலோ இவர்கள் புலிகள் அமைப்புக்கு நிதியை வழங்கியுள்ளனர். ஜெனிவா செல்லும் எவராக இருந்தாலும் அங்கு தொலைபேசியை மற்றும் தொலைபேசி அட்டைகளை கொள்வனவு செய்தாக வேண்டும். அவை விற்பனை செய்யப்படும் கடைகள் புலிகளுக்கு சொந்தமானவை என்பதால், தான் தொலைபேசியை பயன்படுத்தவில்லை என தெரிவித்துள்ள அமைச்சர், ஜெனிவா செல்லும் இலங்கையர்கள் இதனை அறிந்திருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜெனிவாவில் தொலைபேசிகளையோ, தொலைபேசி அட்டைகளையோ கொள்வனவு செய்வதானது, புலிகள் அமைப்பு உதவுவதாகும் எனவும் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மேலும் கூறியுள்ளார்.

வைகாசி 30, 2012

வவுனியாவில் 27-28/05/2012ல் நடைபெற்ற ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஏழாவது தேசிய மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்மக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி புதிய அக-புற அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை நிறைவேற்றுகின்றது.

1. இலங்கைத் தீவில் புரையோடிப் போயுள்ள, கடந்த அறுபது வருடங்களாக பல்வேறு அழிவுகளுக்கும் இழப்புக்களுக்கும் கரணமாக அமைந்த அரசியல் முரண்பாட்டுக்கான தீர்வு அணுகுமுறையில்; ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பின்வரும் விடயங்களில் உறுதி பூணுகிறது. (மேலும்....)

வைகாசி 30, 2012

கைதிகளை வைத்து அரசியல் இலாபம் தேடாதீர்கள்

புனர்வாழ்வு பெற்று வரும் முன்னாள் புலி உறுப்பினர்களை முறைப்படி விசாரணை செய்து விரைவில் விடுவிப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். குறுகிய அரசியல் இலாபத்திற்கு இதனைப் பயன்படுத்தக்கூடாது என அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். தேசிய சர்வதேச அழுத்தங்களினாலன்றி மனிதாபிமான ரீதி யில் இவர்களை விடுவிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகு மெனவும் அமைச்சர் தெரிவித்தார். இதேவேளை, உலகிலேயே இத்தகையானோரை இவ்வளவு விரைவாக விடுவித்து வரும் நாடு இலங்கைதான் எனக் குறிப்பிட்ட அமைச்சர், புனர்வாழ்வளிப்பதற்காக அரசாங்கம் பொறுப்பேற்றவர்களில் தற்போது 698 பேரே மீதமாக உள்ளனர் எனவும் தெரிவித்தார். அத்துடன் புனர்வாழ்வு பெற்று சமூகத் தோடு இணைந்துள்ளோர் மீண்டும் குற்றமிழைத்ததாக எந்த ஒரு பதிவும் இதுவரை இடம்பெறவில்லை எனவும், இது சிறந்த புனர்வாழ்வளித்தலுக்கு முன்னுதாரணமாக உள்ளதெனவும் அவர் தெரிவித்தார். இவ்வாறான கைதிகள் 15 சிறைச்சாலை களில் உள்ளனர். இவற்றில் மூன்று சிறைச்சாலைகளிலிருந்த 229 பேரே உண்ணாவிரதமிருந்தனர். ஏனைய அனை வரும் அத்தகைய செயல்களில் ஈடுபட வில்லை. இதனை வைத்து சில சக்திகள் அரசியல் தேட முனைகின்றனர்.

வைகாசி 30, 2012

தமிழர் பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் - யாழ்.ஆயர் _

"தமிழர் பகுதிகளில் அதிகளவான இராணுவப் பிரசன்னம் காணப்படுகிறது. இது குறைக்கப்பட வேண்டும். சிவில் கடமையில் இவர்களது தலையீடு அதிகமாகவே உள்ளது. இலங்கை இனப் பிரச்சினைத் தீர்வுக்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலம் தாழ்த்தாது அரசுடன் பேச வேண்டும்" என யாழ்ப்பாணம் வந்த அவுஸ்ரேலியத் தூதுவரிடம் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார். எங்களுக்கு இவ்வளவு தொகையில் இராணுவம் தேவையில்லை. தேவைக்கு அதிகமான இராணுவத்தினரை குறைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சிவிலியன்களுடைய விடயங்களில் தலையிடாது அவர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும். (மேலும்....)

வைகாசி 30, 2012

நாட்டின் பாதுகாப்பிற்கும் மக்களின் நல்வாழ்வுக்கும் பணிபுரியும் சிறந்த அரசாங்க அதிகாரி

இலங்கை பிரஜை ஒருவருக்கு நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று காணிகளை வாங்கி, அங்கு நிரந்தரமாக குடியிருப்பதற் கான பூரண சுதந்திரம் இருக்கிறது. இதற்கு இலங்கையின் அரசி யல் சாசனத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வடபகு தியில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் அதனை தமி ழர்களுக்கு மட்டுமே சொந்தமான பிரதேசம் என்று எவரும் சிந்திப் பது தவறாகும். பாதுகாப்புச் செயலாளரும், நகர அபிவிருத்தி அமைச் சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஷ இந்தக் கருத்தை பி.பி.சி. தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தியுள்ளார். பி.பி.சி. நிருபர், வடபகுதியில் உள்ள உயர் அரசாங்க அதிகாரிகள் இடமா ற்றம் செய்யப்பட்டுள்ளார்களே இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்று வினவியபோது அதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், 30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் வடபகுதியில் பணி யாற்றிய அரசாங்க ஊழியர்களில் பெரும்பான்மையானோர் சிங்களவர் களாக இருந்தார்கள் என்றும் தென்னிலங்கையில் பெரும்பாலான தமிழ் அரசாங்க அதிகாரிகள் கடமையாற்றினார்கள் என்றும் கூறினார். (மேலும்....)

வைகாசி 30, 2012

விடலைப்பருவத்தை சீரழிக்கும் செல்லிட தொலைபேசி

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி அறிமுகமாகி 22 ஆண்டுகளில் இது செல்வந்தர்களுக்கு மட்டுமல்ல சாதாரண பாமர மக்களுக்கும் இன்றியமையாத ஒரு சாதனமாக மாறியிருக்கிறது. இன்று தெருவில் பிச்சை எடுப்பவர்கள் கூட கையடக்கத் தொலை பேசிகளை இரகசியமாக வைத்திருப்பதை நாம் பலரும் பார்த்திருக்கிறோம். கையடக்கத் தொலைபேசிகள் மனிதர் களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்கின்ற அதே நேரத்தில் அது விடலைப் பருவத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் இணை யத்தள தொடர்பை ஏற்படுத்தி ஆபாச படங்களை பார்ப்பதற்கும் உதவி வரு வது உண்மையிலேயே வேதனைக்குரிய விடயமாகும். ஒரு நாடு அபிவிருத்தி அடைந்து கொண்டிருக்கும் போது இ த்தகைய பாதிப்புகள் ஏற்படுவதை எவரும் தவிர்த்துவிட முடியாது. இன்று இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடி இலக்கை தாண்டியிருக்கிறது. (மேலும்....)

வைகாசி 30, 2012

ஜனாதிபதி தேர்தல் முடிவுக்கு எதிராக எகிப்தில் மக்கள் ஆர்ப்பாட்டம்

எகிப்து ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்றில் போட்டியிட தகுதிபெற்ற ஹொஸ்னி முபாரக் அரசில் பிரதமராக இருந்த அஹமட் ஷபிக்கின் அலுவலகம் எதிர்ப்பாளர்களால் தீ மூட்டப்பட்டுள்ளது. அத்துடன் சட்டவிரோதமான தேர்தல் செயற்பாடுகளுக்கு எதிராக எகிப்தின் பல்வேறு நகரங்களில் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கெய்ரோவில் உள்ள அஹமட் ஷபிக்கின் தேர்தல் அலுவலகம் நேற்று முன்தினம் இரவு இனந்தெரியாதோரால் தீ மூட்டப்பட்டது. எகிப்து ஜனாதிபதி தேர்தல் ஆணையம் முதல் சுற்று தேர்தல் முடிவுகளை உத்தியோகபூர்வமாக அறிவித்து ஒரு சில மணி நேரங்களிலேயே ஷபிக்கின் அலுவலகம் தீ மூட்டப்பட்டுள்ளது. (மேலும்....)

வைகாசி 30, 2012

பேஸ்புக் கையடக்க தொலைபேசி தயாரிக்க திட்டம்

பேஸ்புக் சமூக இணையத்தளம் அடுத்த ஆண்டில் தனது நிறுவனத்தினால் கையடக்க தொலைபேசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பல பொறியியலாளர்களை அது பணியில் அமர்த்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. தமது கையடக்க தொலைபேசி பாவனையா ளர்களை கவரும் வகையிலேயே பேஸ்புக் இந்த புதிய முயற்சியைப் மேற்கொண்டி ருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பேஸ்புக் தமக்கான கையடக்கத் தொலைபேசியை விரைவில் தயாரிக்காவிட்டால் ஏனைய கையடக்க தொலைபேசிகளிடம் தங்கியிருக்க வேண்டி வரும் என அதன் நிறுவனர் மார்க் சுகர்பி அச்சப்படுவதாக பேஸ்புக் ஊழியர் ஒருவரை மேற்கொள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு ள்ளது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் கையடக்க தொலைபேசி தயாரிப்பதற்காக மென்பொருள் மற்றும் வன்பொருள் பொறியியலாளர்கள் பலரை பணியில் அமர்ந்தியிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

வைகாசி 30, 2012

காங். ஜனாதிபதி வேட்பாளர் யார்? ஜூன் 4ம் திகதி முடிவு

ஆளும் காங்கிரஸ் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் முக்கிய செயற்குழு காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் வரும் 4ம் திகதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் பிரணாப் முகர்ஜிதான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதீபா பாட்டிலின் பதவிக் காலம் முடிவதை அடுத்து வரும் ஜுலை மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இருக்கும். பா.ஜ. தரப்பில் வேட்பாளர் யார் என்று இன்னும் முடிவு ஆகவில்லை. தி.மு.க, அ.தி.மு.க., சமாஜ்வாடி, திரிணாமுல் காங். கட்சியின் ஆதரவு இந்த தேர்தலில் முக்கியத்துவம் பெறுகிறது. பா.ஜ. தரப்பில் பி.ஏ. சங்மாவை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெ. வலியுறுத்தி வருகிறார். காங்கிரஸ தரப்பில் ஜனாதிபதி வேட்பாளர் களத்தில் பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி முகம்மது அன்சாரி, சபாநாயகர் மீராகுமார் ஆகியோர் முதன்மை பட்டியலில் இருக்கின்றனர். இந்நிலையில் வரும் 4ம் திகதி நடக்கும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பிற்கு பின்னர் சோனியா ஒரு வார வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். எனவே 4ம் திகதி அவர் விரும்பும் பிரணாப் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

வைகாசி 30, 2012

வெனிசூலாவில் நிர்க்கதியாகியிருந்த இலங்கையர் மாயம்

வெனிசூலாவின் கராகாஸ் சர்வதேச விமான நிலையத்தில் நான்கு மாதங்களாக நிர்க்கதியாகியிருந்த இலங்கையர் ஒருவர் மர்மமாக காணாமல் போயுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த பரமேஸ்வரன் எனும் இந்நபர் விஸா இல்லாமல் வெனிசூலாவுக்கு வந்ததாக இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. பயண ஆவணங்கள் எதுவுமில்லாதிருந்ததால் விமான நிலைய கட்டிடத்திலிருந்து வெளியேற வேண்டாமென அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். பணமெதுவும் இல்லாத நிலையில் விமான நிலைய ஊழியர்களின் தயவில் அவர் தங்கி வாழ்ந்தார். விமான நிலையத்தின் தரையில் உறங்கிய அவர், அங்குள்ள குளியலறையில் குளித்துக்கொண்டார். இவர் வெனிசூலாவுக்கு எந்த நாட்டிலிருந்து வந்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. மெக்ஸிகோவிலிருந்து வெனிசூலாவுக்குச் செல்லும் விமானமொன்றில் அவர் தவறுதலாக ஏறிவிட்டதாக சர்வதேச மன்னிபுப் சபையின் வெனிசூலா பிரதிநிதியொருவர் தெரிவித்துள்ளார்.

வைகாசி 29, 2012

சமதர்ம யுகத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்லும் வெற்றிப் பயணம்

இலங்கையின் சமீபகால வரலாற்றில் இடம்பெற்ற எங்களில் பலரும் மறந்து இருக்கும் ஒரு நிகழ்வை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 1948 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு அகன்று செல்லும் போது தங்களால் நன்கு பயிற்சியளிக்கப்பட்ட கறுப்பு இன ஆங்கில முதலாளித்துவவாத சக்திகளிடம் நாட்டின் நிர்வாகத்தை ஒப்படைத்து சென்று விட்டனர். இவர்களுக்கு சிங்கள மொழி தெரியாது. சிங்கள நாட்டையும், சிங்கள வரலாற்றையும், சிங்கள கலாசாரத்தையும் இவர்கள் தெரிந்து வைத்திருக்கவில்லை. அதனால், அன்று சிங்கள மொழி ஒரு சிலரினால் தான் பயன்படுத்தப்பட்டது. இதன் எதிரொலியாக சங்கைக்குரிய மகாசங்கத்தினரும், பெருமதிப்புக்குரிய சுதேச வைத்தியர்களும், அரசாங்கத்தின் அனுக்கிரகம் இன்றி அனாதை நிலைக்கு தள்ளப்பட்டனர். இவ்விதம் மக்கள் அடைந்து வந்த துன்ப, துயரத்தை பார்த்து வேதனையடைந்த, அன்றைய அரசாங்கத்தின் தூரதரிசன கொள்கையை கடைப்பிடித்து வந்த ஒரு நல்ல மனிதர் தனது முதலாளித்துவ கொள்கையையும், தனது சகாக்களையும் கைவிட்டு அரசாங்க கட்சியிலிருந்து வெளியேறி எதிர்காலம் எப்படி அமையுமோ என்று தெரியாது இருந்த போதிலும் திடமான கொள்கையுடன் துன்பம் அனுபவிக்கும் இந்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக 1951 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 12ம் திகதியன்று தனது அமைச்சர் பதவியை துறந்து எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். இந்த மகத்தான தீர்மானத்தை எடுத்த பாராட்டுக்குரிய பெரியவர் அமரர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஆவார். (மேலும்....)

வைகாசி 29, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 17)

(அ.ஆனந்தன்)

விடுதலைப் புலிகளின் அரசியல் வரலாற்றிலேயே மிக அப்பட்டமான தவறான இராஜீவ் காந்தியின் கொலை நிகழ்ந்தது. இது எத்தனை தவறானதென்றால் மக்களின் விடுதலையை இலக்காக கொண்டுள்ள எந்தவொரு சரியான அமைப்பும் உயர்ந்த இலக்குகளற்ற தனிநபர்கள் போல் பழிவாங்கும் மனநிலையில் செயல்பட்டு தனக்கு உயிரூட்டமான சாதக தளமாக உள்ள ஒரு பகுதி மக்களின் ஆதரவினை இழக்கும் விதத்தில் செயல்படவேபடாது; அந்த அடிப்படையில் இராஜீவ் காந்தியின் கொலை விடுதலைப்புலிகளால் செய்யப்பட்டிராது என்று பலர் நம்பினர். அப்படி நம்பியவர்களை அதிர்நது போகச் செய்யும் விதத்தில் பிரபாகரனிடம் இருந்தே மறைமுகமான ஒரு ஒப்புதல் வாக்குமூலம் வந்தது. அது ஒரு துன்பியல் நிகழ்வு என்று அக்கொலையில் தங்களின் பங்கினை மறுக்காத வகையிலான ஒரு பதிலினை அவர் பின்னர் முன்வைத்தார். (மேலும்....)

வைகாசி 29, 2012

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 119 பேர் கைது

சட்ட விரோதமாக அவுஸ்திரே லியாவுக்கோ அல்லது வெளிநாடு ஒன்றுக்கோ அனுப்பி வைக்கப்பட இருந்த 113 பேர் காலிமுகத்திடல் உட்பட நீர்கொழும்பு பகுதிகளில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை கொழும்பு மோசடி புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதலின் போது இவர்கள் கைதாகினர். இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப ஏற்பாடு செய்த ஆறு முகவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை படகு வரை ஏற்றிக் கொண்டு சென்ற லொறியும் ஏழு டொல்பின் ரக வான்களும் கைப்பற்றப் பட்டன. ஒருவரிடம் இருந்து 02 லட்ச ரூபா வரை பெறப்பட்டுள்ளது. இவர்கள் நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த ஆட்களை வெளி நாடுகளுக்கு அனுப்பும் தொழிலை மேற்கொண்ட நபர் 316 இலட்சம் ரூபாவை பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளது. இவர் சிலாபம் பகுதியைச் சேர்ந்தவர். இத் தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். இத்தகைய மனித வியாபாரத்துக்குள் சிக்கி ஏமாறி பணத்தை மட்டுமன்றி வாழ்வையும் அழித்துக் கொள்ள வேண்டாமென்றும் அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

வைகாசி 29, 2012

2013 மே மாதத்திற்குள் இனப்பிரச்சினை ஜனாதிபதியினால் தீர்த்து வைக்கப்படும்

இலங்கையில் உள்ள பிரபல ஜோதிடரும், இந்து சமய அலுவல்கள் விவகார திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருமான எஸ். தெய்வநாயகம் அவர்கள் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு எழுதிய வியாழன் பார்வையும் விளையும் பலாபலன்கள் என்ற ஜோதிட ஆய்வுக் கட்டுரையில் இலங்கையைப் பொறுத்த வரை வியாழன் நான்காம் வீட்டுக்கு வந்துள்ள தென்றும் இதனால் எதிர்பார்க்கும் பாரிய தீய விளைவுகள் இலங்கைக்கு ஏற்படப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். தமிழர்களின் ராசிக்கு 2ம் வீட்டுக்கு வியாழன் வந்துள்ளதால் தமிழ் அரசியல் தலைவர்களும் பொறுமையுடனும், விட்டுக்கொடுப்புடனும் நடந்து கொண்டால் 2013ம் ஆண்டு மே மாதத்திற்குள் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இலங்கையின் பாரிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணக் கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தி, இலங்கை ஐக்கிய நாடாக விளங்குவதற்கு வழிசமைத்திட வியாழன் பார்வை உண்டு. (மேலும்....)

வைகாசி 29, 2012

டானியல் கல்லறையின் இன்றைய நிலை..?

நினைவுச் சின்னம் மறைந்த மாயம் என்ன..??தஞ்சை நகரசபை கவனிக்குமா..???

இலங்கை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க அமைப்பாளரும் - மக்கள் கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவரும் - தலித் இலக்கியப் பிதாமகர் - முன்னோடி எனப் போற்றப்படுபவரும் - பொதுவுடமைவாதியுமான கே. டானியல் 23 - 03 - 1986 -ல் தஞ்சாவூரில் காலமானார். அங்கு வடவாற்றங்கரையில் நாத்திகர்கள் - பொதுவுடமைவாதிகள் அடக்கம் செய்யப்படும் இடத்தில் பெருமளவிலான கலை இலக்கிய - அரசியல் தோழர்கள் முன்னிலையில் அவரது அடக்கம் இடம்பெற்றது. புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட கல்லறை - நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் பா. கல்யாணி 1987 -ல் திறந்து வைத்தார். சில வருடங்களுக்குப் பின்னர் டானியல் புதல்வர்கள் - பேராசிரியர் அ. மார்க்ஸ் ஆகியோர் முயற்சியினால் அது புதுப்பிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலை கவலையளிக்கிறது. (மேலும்....)

வைகாசி 29, 2012

அரசாங்கத்தின் வருமான வீதத்தை அதிகரிக்க தேசிய திட்டம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமான வீதத்தை அதிகரிப்பதற்கான செயற்றிட்டங்களை அரசு முன்னெடுத்திருப்பதாக மனித வளங்கள் சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார். இதன் ஒரு அங்கமாக வட மாகாண அரச நிருவாக அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்ப தாகவும் அவர் குறிப்பி ட்டார். யாழ். மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று ஆரம்பமான அரச நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான பாராளுமன்ற சட்டவாக்கங்கள் பற்றிய இரண்டு நாள் செயலமர்வில் உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், 1977 ஆம் ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமானம் 24 வீதமாகக் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றங்களில் இந்த வருமான வீதம் குறைவடைந்து 2009 ஆம் ஆண்டு 13 வீதமாகக் காணப்பட்டது. எனினும் கடந்த வருடம் அரசாங்கத்தின் வருமான வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.5 வீதமாக அதிகரித்துள்ளது. (மேலும்....)

வைகாசி 29, 2012

நேபாள பாராளுமன்றம் கலைப்பு: நவம்பர் 22 இல் தேர்தல்

நேபாள அரசியல் நிர்ணய சபையின் கால அவகாசம் முடிவடைந்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தலுக்கு பிரதமர் அறிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி நேபாளத்தில் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. நேபாளத்தில் புதிய அரசியல் அமைப்புக்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக இயங்கி வந்த அரசியல் நிர்ணய சபையின் கால அவகாசம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் நேபாளத்தில் அரசியலில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்போதுள்ள பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. நேபாளத்தில், கடந்த 2008 ல், மன்னராட்சி முடிவுக்கு வந்த பின், மாவோயிஸ்டுகள் தலைமையில் ஜனநாயக ஆட்சி அமைக்கப்பட்டது. ஆனால், இதுவரை அங்கு ஸ்திரமான ஆட்சி அமையாததால், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு அனைத்து கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாமல் உள்ளது. இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் பங்குகொண்ட தேசிய அரசு அமைக்கப்பட்டது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் அரசியலமைப்பு சட்டத்தை இம்மாதம் 27 ஆம் திகதிக்குள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. (மேலும்....)

வைகாசி 29, 2012

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சினிமாவுக்கு திரும்புகிறார் மனோரமா

உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருந்து வந்த ஆச்சி மனோரமா மீண்டும் புதுப் பொலிவுடன் நடிக்க வருகிறார் ஹரி இயக்கும் சிங்கம் 2 படத்தில் மனோரமா நடிக்கிறார். மனோரமாவுக்கு கடந்த சில மாதங்களாக நேரம் சரியில்லை. அடுத்தடுத்து உடல் நலக் குறைவில் விழுந்தார். ஹோட்டலுக்குப் போன இடத்தில் வழுக்கி விழுந்து அடிபட்டு விட்டது. இதனால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இடையில் அவரது உடல் நிலை மோசமாகவும் செய்தது. செயற்கை சுவாசம் கொடுக்கப்படும் நிலைக்கு அவரது உடல் நிலைபோனது. அதேபோல சிறுநீரகக் கோளாறு, சர்க்கரை, இரத்த அழுத்தம் என பல பிரச்சினை களில் சிக்கித் தவித்து வந்தார் மனோரமா. தற்போது அனைத்துப் பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுள்ளார் மனோரமா. நல்ல உடல் நலத்துடன் பூரண ஓய்வில் இருந்து வரும் மனோரமா மீண்டும் நடிக்க வரப் போகிறார். சிங்கம் 2 படத்தில் அவரை நடிக்க இயக்குநர் ஹரி அழைத்துள்ளார். மனோரமாவும் சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து சிங்கம் 2 மூலம் நடிப்புக்கு மறு பிரவேசம் செய்கிறார் மனோரமா.

வைகாசி 29, 2012

நியூட்டன் போட்ட கணக்குக்கு தீர்வு கண்டு சாதனை படைத்த இந்திய மாணவன்

கடந்த 350 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் இருந்து வந்த ஒரு கணிதப் புதிருக்கு விடை கண்டு அனைவரையும் வியக்கவைத்துள்ளார் 16 வயதேயான இந்திய மாணவன். இந்தக் கணிதப் புதிரைப் போட்டவர் மறைந்த சர் ஐசக் நியூட்டன் ஆவர். கடந்த 350 ஆண்டுகளாக உலக கணிதவியலாளர்களை குழப்பி வந்த புதிராகும் இது. கணித மேதைகள் பலரும் கூட இந்தப் புதிருக்கு விடை காண முடியாமல் திணறி வந்தனர். ஆனால் இதற்கு விடை கண்டுள்ளார் செளரியா ராய் என்ற இந்திய வம்சாவளி மாணவன். ஜெர்மனியின் டிரட்சென் பகுதியில் வசித்து வருகிறார் ராய். இவர் விடை கண்டுள்ள கணிதப் புதிர், டைனமிக்ஸ் தியரியில் வருகிறது. டிரட்சென் பல்கலைக்கழகத்திற்கு ராய் பள்ளிச் சுற்றுலாவாக சென்றபோதுதான் இந்தக் கணிதப் புதிர் குறித்து ராய்க்குத் தெரிய வந்தது. (மேலும்....)

வைகாசி 28, 2012

இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படும் - இந்திய உயர் ஸ்தானிகர்

இலங்கையில் சமூக நல்லிணக்கப்பாட்டினையும், புரிந்துணர்வையும் மீள கட்டியெழுப்புவதுடன் இலங்கையின் இறைமையையும் தன்னாதிக்கத்தையும் பேணிப் பாதுகாப்பதில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. இவ்வாறு நேற்று முன்தினம் (25) கல்முனைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான இந்திய தூதுவர் அசோக். கே. காந்தா கல்முனை வர்த்தகர்கள், சிவில் சமூகத்தினர், மாநகர சபை உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும் போது தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 28, 2012

கொழும்பு & கண்டி,  அம்பாறை & நுவரெலியா

3.3 ரிச்டர் ஒரு வாரத்தில் இரு நில அதிர்வு

கொழும்பு, கண்டி, அம்பாறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று முன்தினம் இரவு உணரப்பட்ட நில அதிர்வு 3.3 ரிச்டர் அளவு என புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார். இந்த நில அதிர்வு இலங்கையில் நில அதிர்வுகளைப் பதிவு செய்யும் மூன்று மத்திய நிலையங்களிலும் பதிவாகி இருப்பதாகவும் அவர் கூறினார். இது உள்ளூர் நில அதிர்வு என்றாலும் ஒரு வாரத்திற்குள் உணரப்பட்டிருக்கும் இரண்டாவது நில அதிர்வு எனவும் அவர் குறிப்பிட்டார். இந்த நில அதிர்வு தொடர்பாக அவ்வதிகாரி மேலும் கூறுகையில், கடந்த 20 ஆம் திகதி நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, கண்டி போன்ற பிரதேசங்களில் உணரப்பட்ட நில அதிர்வு 3.6 ரிச்டர் அளவில் பதிவாகியது. அதன் பின்னர் நேற்று முன்தினமிரவு 9.52 மணி க்கு நில அதிர்வு உணரப்பட்டி ருக்கின்றது. இந்த நில அதிர்வு வெளிநாடு களிலுள்ள நில அதிர்வுகளை பதிவு செய்யும் மையங்களில் பதிவாகவில்லை என்றார்.

வைகாசி 28, 2012

மண்டபம் முகாமில் இலங்கை அகதி மர்மமான முறையில் மரணம்

தமிழ்நாடு, இராமதாதபுரம் மாவட்டத்திலுள்ள மண்டபம் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதியொருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மன்னார் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (வயது 18) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முகாமுக்கு அருகில் உள்ள வீடொன்றில் ஆள் இல்லாத அறையில் உறங்கிக்கொண்டிருந்த இவரை அருகில் உள்ளவர்கள் அதிகாலையில் சென்று பார்த்தபோது பிணமாகக் கிடந்துள்ளார். கைகள் மடக்கப்பட்ட நிலையில், வலது தொடை மற்றும் பிறப்புறுப்பு பகுதியில் போத்தலால் கீறப்பட்ட காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மரணம் தொடர்பில் மண்டபம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வைகாசி 28, 2012

இராணுவ முகாம்களை அகற்றினால் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கும்

நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதியில் இருந்து இராணுவ முகாம் கள் அகற்றப்பட்டால் தீவிரவாதமும், பயங்கரவாதமும் மீண்டும் தலைதூக்கும் என்று சர்வதேச ரீதியில் பயங்கர வாத எதிர்ப்பு நிபுணரான பேராசிரியர் ரொஹான் குணரத்ன எச்ச ரிக்கை விடுத்துள்ளார். இராணுவ முகாம்கள் வடக்கிலும், கிழக்கிலும் குறைக்கப்பட வேண் டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்த கருத்து இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் துளிர்விடுவதற்கு உதவியாக அமையும் என்றும் கூறியிருக்கும் ரொஹான் குணரத்ன சில அரசியல் கட்சி களும் எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களும் பயங்கரவாதம் மீண்டும் இலங்கை யிலும் இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தலை தூக்குவதற்கு உறு துணை புரிந்து வருகின்றார்கள் என்று எச்சரிக்கை செய்துள்ளார். (மேலும்....)

வைகாசி 28, 2012

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர் திடீர் மரணம்

சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த நபரொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையைச் சேர்ந்த லால்சிங் பரசுராம் (55) என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று மதியம் 1.30 மணியளவில் நாடு திரும்பவுள்ள நிலையில் நேற்று முன்தினம் மாலை சென்னை விமான நிலையத்திற்கு சென்று அங்குள்ள பயணிகள் காத்திருக்கும் அறையில் தங்கியுள்ளார். இந்நிலையில் அங்குள்ள கழிவறைக்குச் சென்று நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் விமான நிலைய ஊழியர்கள் கழிவறைக் கதவை உடைத்து உள்ளே சென்றதும் அங்கு குறித்த நபர் சடலமாக கிடந்துள்ளார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு எற்பட்டது. குறித்த நபர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்பது பற்றி பிரேத பரிசோதனையின் பின்னர் தான் தெரியவரும் என்று விமான நிலைய பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. _

வைகாசி 28, 2012

வடக்கு மாலி இஸ்லாமிய நாடாக பிரகடனம்

வடக்கு மாலியை கைப்பற்றிய இரு இஸ்லாமிய கிளர்ச்சிக் குழுக்களும் தமது பகுதியை சுதந்திர இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ளன. வடக்கு மாலியின் கொவா நகரில் கூடிய துர்கா கிளர்ச்சியாளர்களும், இஸ்லாமிய குழுவான அன்ஸார் தின் கிளர்ச்சிக் குழுவும் இணைந்து இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதில் அன்ஸார்தின் கிளர்ச்சியாளர்கள் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புபட்டவர்களாவர். இவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் ஏற்கனவே இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலில் உள்ளது. மாலியில் கடந்த மார்ச் மாதம் இராணுவப் புரட்சி ஏற்பட்ட சந்தர்ப்பத்தை பயன்படுத்த இந்த இரு கிளர்ச்சி குழுக்களும் வடக்கு மாலி முழுவதையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் வடக்கு மாலியை மீட்பதற்கு 3000 பேர் கொண்ட படை அங்கு அனுப்பப்படும் என பிராந்திய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. எனினும் மேற்படி படை அனுப்பப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படவில்லை.

வைகாசி 28, 2012

பல்கலைக்கழகங்களை புதிதாக ஆரம்பிக்கும் நோக்கம் இல்லை

இருக்கும் பல்கலைக்கழகங்களை மேம்படுத்துவதே அரசின் திட்டம் - ஜனாதிபதி

புதிய பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது. தற்போது இயங்கும் பல்கலைக்கழகங் களின் வசதிகளை அதிகரிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களின் வசதிகளை அதிகரித்து அவற்றை மேம்படுத்துவது தொடர்பாக உயர் கல்வி அமைச்சருக்கு வழிகாட்டல்களை வழங்கவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைத் துரிதமாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்த ஜனாதிபதி, இது தொடர்பில் கல்வியமைச்சு உரிய செயற்திட்டங்களை முன்னெடுப்பது அவசியமெனவும் தெரிவித்தார். இதற்கு முன்னுரிமை வழங்குமாறு கல்வியமைச்சின் அதிகாரிகளுக்குப் பணிப்புரையும் விடுத்தார். பொலனறுவை மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நாடளாவிய ரீதியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆயிரத்துக்கு மேற் பட்ட வெற்றிடம் உள்ள போதும் 281 ஆங்கில பட்டதாரி ஆசிரியர்களே தற்போதுள்ளனர். பாடசாலைகளுக்குத் தேவையான ஆசிரியர்களைப் பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இது தொடர்பில் பல்கலைக் கழகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான பாடங்களுக்குரிய பட்டதாரிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வைகாசி 28, 2012

அஸ்திவாரம் இல்லாத வீடு!

ஒரு கட்டடம் கட்ட வேண்டுமானால் முதலில் அஸ்திவாரம் அமைப்பது வழக்கமான நடைமுறை. அஸ்திவாரம் அமைக்காமலே கட்டடம் கட்டும் முறை ஒன்று இருப்பது உங்களுக்குத் தெரியுமா? யூரி விளாசவ் என்பவர் கண்டுபிடித்த இந்த முறை ‘மண்ணை அழுத்துதல்’ என்று கூறப்படுகிறது. 1968 ஆம் ஆண்டு நோவோசி பிர்ஸ்க் என்ற இடத்தில் குடியிருப்புகள் கட்ட ஆரம்பித்தனர். அந்த இடம், களிமண்ணும், மணலும் கொண்ட பரப்பு உடையது. எனவே அங்கு 16 மீற்றர் ஆழத்துக்கும் அஸ்திவாரம் தோண்டினால்தான் கட்டடம் உறுதியாக இருக்கும் என்று தீர்மானித்தனர். ஆனால் 11 மீற்றர் அளவுக்குத் தோண்டும்போதே அதற்கு மேல் முன்னேற முடியவில்லை. அதற்குக் கீழே கடும் பாறையாக இருந்ததுதான் காரணம். உடனே மண்ணைப் பற்றி ஆராயத் தொடங்கினர். (மேலும்....)

வைகாசி 28, 2012

நோர்வேயில் புலிகளின் கொடூரத்தை வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி

முப்பது வருடங்கள் புலிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனம் மற்றும் நாடு பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் இடம் பெறுகின்ற துரித அபிவிருத்தி என்பன தொடர்பாக வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கு அறிவூட்டும் நோக்கிலான புகைப்படக் கண்காட்சி ஒன்று ‘உயிர்தெழும் இலங்கை’ என்ற பெயரில் நோர்வே நாட்டின் ஒஸ்லோ நகரில் கடந்த 25ம், 26ம் திகதி களில் நடைபெற்றது. ஒஸ்லோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கேட்போர் கூடத்திலும், ஹெப்ஸன் வித்தியாலயத்திலும் நடைபெற்ற இக் கண்காட்சி சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்த இரு நாள் புகைப்படக் கண்காட்சியைப் பெருந்திரளான மக்கள் பார்வையிட்டனர். (மேலும்....)

வைகாசி 28, 2012

தமிழரசு கட்சியின் 14வது மாநாடு மட்டு நகரில் நடைபெற்றது

இலங்கை தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாடு நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை 9.30 மணிக்கு மட்டக்களப் பிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத்தலைவருமான இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு போன்ற இடங்களிலிருந்து வருகை தந்துள்ள பெருமளவிலான ஆதரவாளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். மண்டப நுழைவாயிலில் இருந்து ஊர்வலமாக அதிதிகள் அழைத்துவரப்பட்டு தமிழரசுக் கட்சியின் கொடி தலைவர் சம்பந்தனினால் ஏற்றி வைக்கப்பட்டது. இதில் தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வாவின் உருவப்படத்துக்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா மலர் மாலை அணிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஏ. சுமந்திரன், பொன் செல்வராசா, பி. அரியநேத்திரன், சி.யோகேஸ்வரன், சி. சிறிதரன், ஈஸ் சரவணபவன், அப்பாதுரை விநாயகமூர்த்தி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டையொட்டி மாநாட்டு வளாகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் மாநாட்டு மண்டபத்திற்குள் சென்ற சிலரும் சோதனை செய்யப்பட்ட பின் அனுமதிக் கப்பட்டனர்.

வைகாசி 28, 2012

தமிழ் கைதிகளின் விசாரணைகளை துரிதப்படுத்தல்

ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை ஜூன் இறுதிக்குள் தொடங்க திட்டம்

தமிழ் கைதிகளின் விசார ணைகளை துரிதப்படுத்தும் நோக்கில் உயர் மட்டக் கூட்டத்தில் முன்னெடுக்கப்ப ட்டிருக்கும் தீர்மானங்களின், ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எதிர்வரும் ஜூன் இறுதிக்குள் தொடங்குவ தற்கென துரித கதியில் வேலைத்திட்டங்கள் முன்னெடு க்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார். தமிழ் கைதிகள் விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரி உண்ணாவிரதம் இருப்பதற்கு முன்பதாகவே நாம் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற உயர் மட்ட கூட்டத்தில் முடிவு செய்திருந்தோம். அந்த செயற்பாடுகளை நடைமுறைப் படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கென மே 22 ஆம் திகதி மீண்டும் உயர் மட்டக் கூட்டத்தை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த வேளையிலேயே, இதனை நன்கு அறிந்து வைத்திருந்த சில அரசியல் வாதிகள் சுய இலாபம் தேடும் நோக்கில் தமிழ் கைதிகளை உண்ணா விரதமிருக்க தூண்டி விட்டிருந்தனர் எனவும் அமைச்சர் கஜதீர கூறினார். தங்களால்தான் தமிழ் கைதிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப் பட்டது என்று பெயர் சூட்டிக் கொள் வதற்காக சிறைக் கைதிகளை உண்ணா விரதமிருக்க தூண்டி விட்டு இந்த அர சியல் வாதிகள் வேடிக்கை பார்த்தனரெனவும் அவர் குறிப்பிட்டார். இறுதியாக உண்மையை புரிந்து கொண்ட தமிழ் கைதிகள் தமது போராட் டத்தை கைவிட்டு அமைச்சுக்கும் அரசாங் கத்துக்கும் நன்றி தெரிவித்து எமக்கு மடல் ஒன்றை அனுப்பி வைத்திருந்தார் களெனவும் அமைச்சர் கஜதீர மேலும் கூறினார்.

வைகாசி 28, 2012

நடிகர் அருண் பாண்டியன் யாழ்ப்பாணத்திற்கு இரகசிய விஜயம்!!

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான அருண் பாண்டியன் யாழ்ப்பாணத்திற்கு இரசிய விஜயமொன்றை மேற்கொண்டதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. அருண் பாண்டியன் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்சியின் தலைவராக பிரபல நடிகர் விஜயகாந்த் கடமையாற்றி வருகின்றார். பிரபல வர்த்தகர் ஒருவருடன் அருண் பாண்டியன் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளார். ஒரு மாத வீசாவில் அருண் பாண்டியன் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். யாழ்ப்பாணத்தின் இணுவில் பகுதியல் அருண் பாண்டியன் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. அருண் பாண்டியன் சில தமிழ் அரசியல்வாதிகளுடன் இரகசிய சந்திப்பு நடத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

வைகாசி 28, 2012

வர்த்தகரின் மூக்கை கடித்த ஐ.தே.க. எம். பி. கைது?

கொழும்பு நகரின் வர்த்தகர் ஒருவரை தாக்கி அவரது மூக்கை கடித்த குற்றச்சாட் டின் பேரில் இரத்தினபுரி மாவட்டத்தின் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துனேஷ்கங்கந்தவை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் விசேட குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். கொழும்பு – 03, கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள இரவு களியாட்ட விடுதியில் பாராளுமன்ற உறுப்பினருக்கும், வர்த்தகருக்கும் இடையில் நேற்று முன்தினம் மோதல் இடம் பெற்றுள்ளது. இதன் போது ஆத்திரமடைந்த எம். பி, வர்த்தகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் அவரது மூக்கையும் கடித்துள்ளதாக குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. காயமடைந்த வர்த்தகர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனை அடுத்து எம். பி. யை கைது செய்வது தொடர்பில் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வைகாசி 27, 2012

மக்களின் பிழையான முடிவுகளும், ஆதரவுகளும்

பிழையான தலைவர்களையே அவர்களுக்கு வழங்கும்

(அ.வரதராஜப் பெருமாள்)

ஒரு பிரளயம் கடந்து ஒரு யுகம் முடிந்தது போல் சம்பவங்கள் நடந்து முடிந்துள்ளன.! புலிகளை யாரும் வெல்ல முடியாது.! புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டிருக்கிறார்கள்.! காற்றுப் போக முடியாத இடங்களுக்குள் கூட புலிகளின் உளவுப்படை புகுந்து எதிரியின் தகவல்களை எடுத்து விடும்.! புலிகள் இலங்கையின் தேவேந்திர முனையிலிருந்து இமயத்தின் அடிவரை யாரையும் மனிதக் குண்டால் வெடித்துக் கொல்லும் வல்லமை கொண்டவர்கள்.! புலிகள் தீர்மானித்தால் சங்கானை தொடக்கம் சென்னைவரை, வல்லை தொடக்கம் டெல்லி வரை, பலாலி தொடக்கம் பாரிஸ் வரை, அரியாலை தொடக்கம் அயர்லாந்து வரை, தொண்டமானாறு தொடக்கம் ரொறன்ரோ வரை, பூநகரி தொடக்கம் பெர்லின் வரை யாரையும் அவர்கள் கொல்லுவார்கள். அவர்கள் யார் காலையும் கையையும் அடித்து முறிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.! (மேலும்....)

வைகாசி 27, 2012

இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவராக சம்பந்தன் மீண்டும் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின்  தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மீண்டும் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெறும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய நாளை மட்டக்களப்பில் நடைபெறவுள்ள நிலையில் கட்சியின்பொதுச் சபை கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றபோது புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டனர். பொதுச் செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவாளார். நிருவாகச் செயலாளராக  குலநாயகம், பொருளாளராக எஸ்.ரி.ஆர். தியாகராஜா, சிரேஷ்ட உப தலைவர்களாக நாடாளுமன்ற பொன் செல்வராசா, பேராசிரியர் சிற்றம்பலம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுடன், பிரதிச் செயலாளர் நாயகமாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைராசசிங்கம், தொழிற்சங்கச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன், கலாச்சாரச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன், சட்டம் மற்றும் வெளி விவகாரங்களுக்கான செயலாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரும் தெரிவாகினர். இவர்களுடன் 8 மாவட்டங்களுக்குமான உப தலைவர்களும், 12 செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதேவேளை, பலத்த பாதுகாப்புக்களுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மாநட்டுக்கு  கறுப்புக் கொடிகள், துண்டுப்பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வைகாசி 27, 2012

தமிழ்க் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கும் அமைச்சர் ஹக்கீம்

பாராளுமன்ற தெரிவுக் குழுவிற்குள் நிச்சயம் வருவார்களாம்

தேசியப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கொள்ளும் எனவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் நம்பிக்கை வெளியிட்டார். இது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இடம்பெற்று வரும் பேச்சுக்கள் சாதகமான நிலையில் செல்வதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டீன் ரொபிச்சன் உடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் இலங்கை அபிவிருத்தியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு நாட்டில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

வைகாசி 27, 2012

தாய்க்குப் பின் தாரம்....!

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...

வைகாசி 27, 2012

மாற்றுக் கருத்துடையோர் அரசின் உளவாளிகள், துரோகிகள் என வர்ணிப்பு

புலிகளின் அழிவின் பின்னரும் திருந்தாத ஜென்மங்களாக தீவிரவாத தமிழர்கள்

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும் பாலானோர் அகதிகள் அல்லரென்றும் அவர்கள் பொருளாதார அகதிகளே என்றும் மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் அருண் தம்பி முத்து சுட்டிக்காட்டினார். லண்டனில் புரொண்ட் லைன் கிளப் நடத்திய இலங்கை தொடர்பான கலந்துரையாடலில் தாம் இந்த உண்மையை தெளிவுபடுத்தியபோது தீவிரவாத தமிழ் இணையத்தளங்கள் தன்னை விமர்சித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த உண்மையை ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் உள்ளத்தால் ஏற்றுக்கொண்ட போதும் உதட்டளவில் சொல்ல மறுக்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். சுமார் 15, 20 இலட்சங்களை ஏஜென்ஸிகளுக்கு தாரை வார்த்து அந்நாடுகளுக்கு சென் றுள்ள இந்த தமிழர்கள் உண்மையில் அகதிகளா? என அவர் கேள்வி யெழுப்பினார். (மேலும்....)

வைகாசி 27, 2012

உத்தேச மாகாண சபைத் தேர்தல்களும் பூர்வாங்க நிலைப்பாடுகளும்

மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்குரிய அரங்கை அரசாங்கம் ஆயத்தம் செய்துள்ளதாக தெரிய வருகிறது. அண்மையில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி மீள்புனரமைப்பு வேலைத் திட்டம் தொடர்பாக கருத்துக் கூறிய அரச குரல்தரவல்ல அதிகாரி வட மத்திய மாகாண சபைக்கான தேர்தலையும் நடத்துவதன் பொருட்டே அந்த மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான அநுராதபுரம் பிரதேசத்தில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அதேபோன்று மறுசீரமைப்பு வேலைத் திட்டங்களை விரைவில் சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நடத்த இருப்பதாகவும் சுட்டிக்காட்டத் தவறவில்லை. (மேலும்....)

வைகாசி 27, 2012

வீடு தேடிவந்து வக்கிர உணர்விற்கு வித்திடும் தமிழ் மெகா தொடர்கள்

தென்னிந்திய தமிழ் சினிமாக்களினதும், தொலைக்காட்சி மெகா தொடர் களினதும் வளர்ச்சி விண்ணைத் தொட்டு அதற்கும் அப்பால் சென்று விட்டது என்றே கூறவேண்டும். தமிழையும், கலையையும் இலக்கியச் சுவையுடன் அதேவேளை நாசூக்காக நாலு விடயங்களையும் புகுத்தி தமிழர் பண்பாடு, கலாசார விழுமியங்களுக்கு அப்பாற்சென்றுவிடாது பாதுகாத்து வளர்த்தது அந்தக்காலம். தமிழை டமிலாகவும், கலைகளை காமமாகவும், இலக்கியத்தை இல்லறங்களை பிரிப்பதாகவும், இரட்டை அர்த்த வசனங்களில் இளைய சமுதாயத்தைச் சீரழிப்பதாகவும் பெருமையுடன் வளர்ப்பதாக நினைப்பது இந்தக்காலம். (மேலும்....)

வைகாசி 27, 2012

அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிறந்த வழிமுறை பாராளுமன்றத் தெரிவுக் குழுவே

வடக்கு சிவில் நிர்வாகத்தில் இராணுவத் தலையீடு இருப்பதாக சரத் பொன்சேகா கூறுவது அப்பட்டமான பொய்யாகும்

சுமார் 30 வருட கால அழிவிலிருந்து மீண்டெழுந்துள்ள தமிழினம் மீண்டும் தலைநிமிர்ந்து வாழும் வகையில் அவர்களின் பல்வேறு அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. போர் முடிவடைந்து மூன்று வருடங்கள் நிறைவுற்ற நிலையில் தமிழ்ச் சமூகம் நிம்மதியான வாழ்க்கையைத் தொடங்கியுள்ள போதும் அவர்களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்ட பல்வேறு உரிமைகள் மீண்டும் வழங்கப்பட வேண்டியுள்ளதாக ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். வடக்கு – கிழக்கு மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் அவர்களுக்கு முறையான அரசியல் தீர்வொன்று கிடைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். (மேலும்....)

வைகாசி 27, 2012

அந்தமான் கடலுக்கும், வங்காள விரிகுடாவுக்கும் இடையில் 800 கிலோ மீற்றர் தூரத்தில் பரவிக் கிடக்கும் அந்தமான் - நிக்கோபார் பவளத் தீவுகளில் தொகை சுமார் மூவாயிரத்து 500. அவற்றில் சுமார் 100 தீவுகள் மக்கள் வாழ்கின்றார்கள். அந்தமான் தீவில் மட்டும் அண்ணளவாக ஐந்து இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். ஹிந்தி, தமிழ், வங்காள மொழிகள் அவர்களால் பிரதானமாக பேசப்படுகின்றன. கொல்கத்தா சட்டமன்ற ஆளுநர் நாயகத்தின் நேரடி ஆட்சி அங்கு நடக்கிறது. அந்தமானைத் தவிர ஏனைய தீவுகள் அடர்ந்த காடுகளாகவே காட்சியளிக்கின்றன. பல்வேறு விதமான மரங்கள், நீர்த்தவாரங்கள், சதுப்பு நிலத் தாவரங்கள் பார்க்கும் இடமெல்லாம் நிறைந்து காணப்படுகின்றன. ஓர்க்கிட் போன்ற அழகிய மலர்கள் எழிற்கோலம் காட்டுகின்றன. தென்பகுதி தீவுகள் பலவிதமான பறவைகளும், வண்ணத்துப்பூச்சிகளும், பாம்புகளும், பன்றிகளும், மான்களும் சரண் புகுந்திருக்கும் மனிதனின் கைபடாத கன்னித் தீவுகளாகவுள்ளன. அத்தகைய தீவுகள் 86 சதவீதமானவை என்பதை அறிந்து கொண்டோம். வெப்ப வலயத்திற்குரிய காலநிலை, அந்தமான் பிரதான நிலப்பரப்பின் பல்வேறு பிரதேசங்கள் எமது மத்திய மாகாணம், குறிப்பாக மாத்தளையை நிகர்த்துள்ளன. அந்தமானும் நிக்கோபாரும் 150 கிலோ மீற்றர் அகலமான கால்வாய் ஒன்றினால் பிரிக்கப்பட்டிருகின்றன. நிக்கோபாரில் 22 பிரதான தீவுகள் உள்ளன. (மேலும்....)

வைகாசி 27, 2012

பாலையூற்று தூய லூர்து திருநாள் இன்று

தூய லூர்து அன்னையின் வருடாந்த வைபவம் மிக விமர்சையாக இன்று பாலையூற்றில் கொண்டாடப்படுகி ன்றது. திருநாளில் அடையாளமாக அன்னையின் விழாக் கொடி கடந்த 18 ஆம் திகதி ஆலய வளவில் அடியார்களின் பங்களிப்புடன் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த ஆரம்ப வைபவத்தில் திருகோணமலை மாவட்டத்தை சார்ந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அன்னையின் ஆலயம் திருகோணமலை நகரிலிருந்து சுமார் மூன்று மைல்களுக்கப்பால் அமைந்துள்ள பாலையூற்று எனும் பிரதேசத்திலுள்ளது. இப்பிரதேசம் அன்று கொடிய மிருகங்களின் அட்டகாசத்தை கொண்ட ஒரு பிரதேசமாகும். இன்று இப்பிரதேசம் மிகவும் அபிவிருத்தியடைந்து பல துறைகளிலும் முன்னேற்றம் கண்ட பிரதேசம் என்று கூறினால் தவறில்லை. (மேலும்....)

வைகாசி 27, 2012

மன்னார் ஆயர் தொடர்பான கருத்து மோதல் விவகாரம்

மன்னிப்பு கேட்குமாறு கோரிய செல்வம் எம்.பி.யும் எதற்கு மன்னிப்பு எனக் கேட்ட அமைச்சர் ரிசாத்தும்

மரியாதைக்குரிய மன்னார் ஆயர் குறித்து என்னால் சொல் லப்பட்ட உண்மையான ஆதாரபூர் வமான தகவல்களுக்காக மன்னிப்பு கோருமாறு தமிழ் கூட்டமைப் பினர் அறிக்கைவிட்டு வருகின்றனர். நான் ஏன் மன்னிப்புக் கோர வேண்டும். மதிப்புக்குரிய ஆயர் அவர்களின் மத விவகாரங்களிலோ அல்லது தனிப்பட்ட விடயங்கள் குறித்தோ நான் எதுவும் பிரஸ்தாபிக்கவில்லை. மாற்றமாக முஸ்லிம் சமூகத்தின் உரிமை சார்ந்த விடயங்களில் அவர் தலையிட முற்பட்ட போதுதான் நான் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினேன். பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்து நியாயமானது. தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டில் இருந்தால் வத்திக்கானுக்கும், ஜெனீவாவுக்கும் சென்று உண்மையை சொல்ல தயங்க வேண்டியதில்லை. மன்னார் நானாட்டான் காணி விடயமாக நடவடிக்கையெடுத்த போது, அதற்கு எதிராக ஆயர் செயற்பட்டதை அதிகாரிகள் மற்றும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். (மேலும்....)

வைகாசி 26, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 16)

(அ.ஆனந்தன்)

இந்த நிலையில் அதிகாரம் முழுவதும் தங்களது கரங்களிலேயே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் ஈழத்திற்காக போரிட்ட பல குழுக்களின் தலைவர்களை கொலை செய்து அவர்களின் அமைப்புகளை நிர்மூலமாக்கும் வேலையை விடுதலைப் புலிகள் அமைப்பு செய்யலாயிற்று. இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணம் முழுவதையும் விடுதலைப்புலிகள் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். ஆனையிரவைத்தாண்டி இலங்கை இராணுவமும் அதன் நிர்வாகமும் நுழைய முடியாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது. போருக்கு ஆகும் செலவுகளை ஈடுகட்ட யாழ்ப்பாணப்பகுதியின் வசதிபடைத்த மக்களிடம் பெரும் தொகைகள் வசூலிக்கப்பட்டன. பொதுவாக மக்கள் இயக்கப்பின்னணி தொடர்ச்சியாக இல்லாது ஆயுதப் போராட்டத்தை மட்டும் நம்பியிருக்கும் அமைப்புகளிடம் தோன்றும் கோளாறுகள் பல விடுதலைப்புலிகளிடம் தோன்ற ஆரம்பித்தன.  (மேலும்....)

வைகாசி 26, 2012

தாய்மை தன்னை இழந்தும் சேயை காக்குமோ...? காக்கும்!

வைகாசி 26, 2012

இழந்து போன எமது மக்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது வாழ்கின்ற மக்களுக்கான அரசியலுரிமையை வென்றெடுப்பதேயாகும்

கடந்த கால கொடிய யுத்தத்தின் போது உயிரிழந்து போன எமது மக்களுக்கு நாம் செலுத்தும் மரியாதை என்பது இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் எமது மக்களுக்கான அரசியலுரிமைகளை வென்றெடுப்பதேயாகும் என்றும், நடந்து முடிந்த அழிவுகளில் இருந்து எமது மக்கள் நிமிர்ந்தெழ இதுவே அவசியத்தேவை என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் பேசும் மக்கள் அழிவுகளையும், அவலங்களையும் சந்தித்திருப்பது முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, அதற்கு முன்னராகவே நீண்ட காலமாக எமது மக்கள் அழிவுகளையும் அவலங்களையும், இடம்பெய ர்வுகளையும் சந்தித்து வந்திருக்கிறா ர்கள். ஆரம்ப கால ஆட்சியாளர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இனக்கலவரங்களும், தனி மனித உயிர்வாழ்வுக்கு எதிரான அச்சுறுத் தல்களும், தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமைகள் மறுக்கப்பட்ட ஒரு சூழலும் ஒரு உரிமைப் போராட்டத்திற்கான தேவையை அன்று எமக்கு வலியுறுத்தியிருந்தது. (மேலும்....)

வைகாசி 26, 2012

இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்புக்கு விஜயம்:-இலங்கைக்கான இந்தியத்தூதுவர்-கூட்டமைப்பு இன்று சந்திப்பு!

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்த்தானிகர் அசோக்கே காந்தா இன்று (25.5.2012) மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார். இந்திய உயர்ஸ்த்தானிகரின் இந்த விஜயத்தின்போது மட்டக்களப்பு நகரில் புனரமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலையை பார்வையிட்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மலர்களை தூவி வணக்கம் செலுத்தினார். காந்திசேவா சங்கம், மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாடு செய்த இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன், மற்றும் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் ஜோர்ஜ் பிள்ளை, மாநகர ஆணையாளர் கே.சிவசாதன் உட்பட மாநகர சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், காந்திசேவா சங்கத்தின் தலைவர் செல்வேந்திரன் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். கடந்த மாதம் இந்த மகாத்மா காந்தியின் உருவச்சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்திய உயர்ஸ்த்தானிகர் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல் வேறு வைபவங்களிலும் இன்று கலந்து கொண்டார்.

வைகாசி 26, 2012

போதைப் பொருட்கள் பட்டியலில் ஃபேஸ்புக்?

மனரீதியாக அடிமையாக்கும் போதைப் பொருளாக ஃபேஸ்புக் மாறி வருகிறது என்று நார்வேயின் பெர்ஜன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். எந்த அளவுக்கு ஒரு மனிதர் அதற்கு அடிமையாகிறார் என்பதை அளப்பதற்கான அளவீட்டையும் அவர்கள் உருவாக்கியுள்ளனர். ஃபேஸ்புக் என்ற சமூக வலைத்தளம் தகவல் தொழில்நுட்பத்துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. தகவல் பரிமாற்றங்கள், கூட்டுச் செயல்பாடு போன்றவற்றை புதிய பரிமாணத்திற்கு இது எடுத்துச் சென்றுள்ளது. (மேலும்....)

வைகாசி 26, 2012

சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்த இரு இந்திய பிரஜைகள் புத்தளத்தில் கைது

சட்ட விரோதமாக நாட்டுக்குள் நுழைந்து விஸா அனுமதியின்றி புத்தளம் தில்லையடிப் பிரதேச வீடொன்றில் தங்கியிருந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த இரு இளைஞர்களை புத்தளம் பொலிஸார் நேற்று முன்தினம் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். இந்த இரண்டு இளைஞர்களுக்கும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான விஸா அனுமதியிருக்கவில்லையெனவும் இவர்கள் இந்தியா இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதி வழியாக மன்னார் வந்து வியாபார நோக்கத்திற்காக புத்தளத்திற்கு வருகை தந்திருந்ததாக ஆரம்ப கட்ட விசார ணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக கூறிய புத்தளம் பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின் றனர்.

வைகாசி 26, 2012

ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்கப் படைக்கு உதவிய அப்ரிடிக்கு சிறை வழங்கியதை எதிர்த்து பாகிஸ்தான் நிதியுதவியை குறைக்க அமெரிக்க செனட் சபை தீர்மானம்

ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்கப் படைக்கு உதவிய பாகிஸ்தான் மருத்துவர் ஷகில் அப்ரிடிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானுக்கான நிதி உதவியை நிறுத்த அமெரிக்க செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி பாகிஸ்தானுக்கான 33 மில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்த செனட் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதில் ஷகில் அப்ரிடிக்கு பாக். நீதிமன்றம் விதித்த 33 ஆண்டு சிறை தண்டனைக்கமைய பாகிஸ்தானு க்கான நிதி உதவியில் ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ஒரு மில்லியன் வீதம் நிறுத்தப்படவுள்ளது. அமெரிக்க செனட் சபையின் லண்ட்சே கிரகம் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆளும் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. ‘பாகிஸ்தானுக்கு நாம் தேவை, அதேபோன்று பாகிஸ்தான் எமக்கு தேவை. ஆனால் பாகிஸ்தான் இரட்டை செயற்பாட்டில் ஈடுபடுவதை ஏற்க முடியாது’ என்று செனட் சபையில் இந்த தீர்மானத்தை கொண்டுவந்த லின்சே கிரஹம் குறிப்பிட்டார்.

வைகாசி 26, 2012

உள்நாட்டு உற்பத்திக்கே அரசு முன்னுரிமை

நாட்டில் உணவுப் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதோடு உணவுப் பொருட்களின் விலைகள் குறிப்பிட்ட மட்டத்தில் பேணப்பட்டு வருவதாக சிரேஷ்ட அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். உள்நாட்டு உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கே எமது அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது. விவசாயத் துறையில் உள்ள சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக விவசாய உற்பத்திகளுக்கு நியாய விலை வழங்குதல், தேவையான விதைகளை வழங்குதல், பசளை நிவாரணம் வழங்குதல், இயந்திரங்களுக்கான இறக்குமதி தீர்வையை அகற்றுதல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. தனியார் மற்றும் அரசாங்க பங்களிப்புடன் உற்பத்திகளில் தன்னிறைவை அடையவும் உணவு பாதுகாப்பை ஏற்படுத்தவும் என ஆய்வுகளுக்காக வரிச் சலுகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதார அபிவிருத்திக்கென கிராமங்களை அடையாளம் கண்டு அவற்றுக்குத் தேவையான பொருளாதார அபிவிருத்தி வசதிகள் வழங்கப்படுகின்றன. இதனால் அரிசி, மரக்கறி, முட்டை, பழவகை என்பவற்றின் விலைகள் குறைவடைந்துள்ளன. பல வருடங்களின் பின்னர் பண வீக்கம் தனி இலக்கத்திற்கு குறைவடைந்துள்ளது.

வைகாசி 26, 2012

ஐ.நா. மனித உரிமைகள் தலைவராக நவி பிள்ளை தேர்வு

ஐ.நா. மனித உரிமை கள் தலைவராக நவி பிள்ளை தேர்வு செய்யப் பட்டார். ஐ.நா. பொதுச்சபை ஐ.நா. மனித உரிமைகள் தலைவராக நவி பிள்ளையை ஒரு மனதாக தேர்வு செய்தது. தேர்வு செய்யப்பட்ட நவி பிள்ளை இரண்டு ஆண்டுகாலம் அப்பதவி வகிப்பார். இது தொடர்பாக நேற்று முன்தினம் வாக்கெடுப்பு நடத்தப்படாமல் பிள்ளை தேர்வானார். பிள்ளை தென்னாப்பிரிக்காவில் முன்னாள் மூத்த நீதிபதியாக பதவி வகித்தவர். பின்னர் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ-மூன் குழுவில் முக்கிய உறுப்பினராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 26, 2012

சூரிய சக்தி விமானத்தின் பயணம் ஆரம்பம்

சூரிய சக்தியால் இயங்கக்கூடிய விமானம் பரிசோதனை ரீதியாக நேற்று முன்தினம் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து பயணத்தை ஆரம்பித்தது. சூரிய சக்தியால் முழுக்க முழுக்க இயங்கும் விமானம், சுவிட்சர்லாந்து நாட்டின் பேயர்னி பகுதியிலிருந்து நேற்று முன்தினம் பயணத்தை ஆரம்பித்தது. ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் இந்த விமானத்தை ஸ்பெயின், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு ஓட்டிச் செல்கின்றனர். ஸ்பெயின் நாட்டின் மெட்ரிட் நகரில் தரையிறங்கும் இந்த விமானம் 70 கி. மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைப் பிரிக்கும் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்லும் இந்த விமானத்தின் இறக்கை 63 மீற்றர் நீளமுடையது. இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மொராக்கோ மன்னர் முகமதுவின் அழைப்பின் பேரில் இந்த விமானம் மொராக்கோ நாட்டின் ரபாத் நகருக்கு செல்ல உள்ளது. உலகில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை மொராக்கோ நாடு உற்பத்தி செய்கிறது. சூரிய மின் உற்பத்தி மையங்கள் இந்த நாட்டில் அதிக அளவில் செயல்படுகின்றன.

வைகாசி 26, 2012

ஜனாதிபதி அளித்த சுதந்திரத்தை சரத்பொன்சேகா துஷ்பிரயோகம் செய்கிறார்

வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடுவதாகவும் படை முகாம்கள் அங்கிருந்து அகற்றப்பட வேண்டும் என்றும் சமீபத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அளித்த மன்னிப்பின் கீழ் சிறையில் இருந்து விடுதலை பெற்றிருக்கும் சரத் பொன்சேகா ஒரு தமிழ் தினசரிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்திருக்கிறார். பதில் ஊடக, தகவல் துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், நேற்று நடத்திய ஊடகவியலாளர் மகாநா ட்டில், ஜனாதிபதி அவர்கள் நல்லெண்ணத்துடன் சரத் பொன்சேகாவை சிறையில் இருந்து விடுவித்துள்ள போதிலும், சரத் பொன்சேகா மீண்டும் வடக்கில் பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் கருத்துக்களை தெரிவித்திருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் என்று சொன்னார். (மேலும்....)

வைகாசி 26, 2012

ஈரான் காப்பீட்டு நிறுவன உதவியுடன்  இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல்-அமெரிக்காவின் தடையை மீறியது

ஈரான் நாட்டில் உள்ள அணு ஆயுத வளத்தின் காரணமாக அந்நாட்டின் மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடு கள் மேற்கொண்டு வருகின் றன. இத்தடையை உலக நாடுகளும் கடைபிடிக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் நாட்டின் காப்பீட்டுக் கழ கத்தின் உதவியோடு மிகப் பெரிய அளவில் கச்சா எண் ணெய்யை இந்தியாவின் மங்களூர் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனம் கொள்முதல் செய்துள்ளது. இதன் மூலம், ஈரானிய காப் பீட்டுக் கழகத்தின் மூலம் கச்சா எண்ணெய் கொள் முதல் செய்த முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமை யை இந்நிறுவனம் பெற் றுள்ளது. மேலும், இதன டிப்படையில் தொடர்ந்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய்யை இந்நிறுவ னம் கொள்முதல் செய்யும் எனவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. ஈரானின் கச்சா எண் ணெய் வாடிக்கையாளர் களில் இந்தியா பெரும் பங்கு வகிக்கிறது. ஈரானின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஆசிய நாடுக ளின் பங்கு 10 சதவிகிதத்திற் கும் அதிகமாக உள்ளது. இதன் மூலம், பன்னிரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

வைகாசி 25, 2012

எதிர்க்கட்சி பிரதிநிதிகளை தெரிவுக்குழுவுக்கு அழைத்து வர ஐ.தே.க. திட்டம் தயாரிப்பு

  • எட்டப்படும் இணக்கப்பாடுகளுக்கு ஐ.தே.க. பூரண ஒத்துழைப்பு நல்கும்

  • தமிழ்க் கூட்டமைப்பு, ஜே.வி.பிக்கு இந்த யோசனைகள் கையளிப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழுவை துரிதமாக நியமித்து பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தெரிவுக்குழுவின் பணிகளை முன்னெடுக்கவும் இங்கு எட்டப்படும் இணக்கப்பாடுகளை செயற்படுத்தவும் ஐ.தே.க முழு ஒத்துழைப்பு நல்கும் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க் கட்சிகளின் பிரதிநிதிகளை பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு அழைத்து வருவதற்காக திட்டமொன்றை தயாரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவற்றை த. தே. கூட்டமைப்பிற்கும் ஜே. வி. பியிற்கும் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் கூறினார். (மேலும்....)

வைகாசி 25, 2012

சகோதர இன தோழரின் சிறு வரிகள் ...

வடக்கு முனையிலும் தெற்கு முனையிலும் நடந்து போன தந்தையரின் பிரிவுக்கு, சிந்தும் சூடான கண்ணீருக்கும் தெரியாது யாருடைய தவறு , பிழைத்தது எங்கு என்பதை ?

(முதலாது படம் அரசால் கொல்லப்பட்ட புத்தளம் மீனவர் அந்தோணியின் மகள் , மற்றது கடத்தப்பட குகனின் மகள் )

வைகாசி 25, 2012

கிளிநொச்சியில் கனேடிய பிரஜை கொலையுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்கள் நால்வர் கைது

கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் ஒரு கனேடிய பிரஜை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அருளம்பன் அகிலன், அப்பாகு ஆனந்தராஜா, நல்லுசாமி பாலச்சந்திரன் மற்றும் அபேசிங்க முதியன்சலாகே மைக்கல் பிரதீப் குமார ஆகிய நான்கு சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். (மேலும்....)

வைகாசி 25, 2012

இலங்கையின் முதலாவது செய்மதி தொழில்நுட்ப கம்பனி

சுப்ரீம் சற் பிறைவற் லிமிட்டட் (Supreme Sat (PVT) LTD)   ழிஹிளி) முதலீட்டுச் சபையுடன் செய்மதி தொழில் நுட்பம் சம்பந்தமான ஒப்பந்தம் ஒன்றை நேற்று செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின்படி அமைக்கப்படவுள்ள செய்மதி நிறுவனம் இலங்கையின் முதலாவது செய்மதி கம்பனியாக அமையும். 20 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இக் கம்பனி சீனாவின் அரச உரிமையுள்ள சீனா கிறேற் வோல் இன்டர்ஸ்ட்றி கோர்ப்பறேசன்  (China Great Wall Industry Corporation) (CGWIC)  (CGWIC)  உடன் பிரத்தியேக பங்குதாரர் ஒப்பந்தம் ஒன்றையும் செய்துள்ளது. இது செய்மதிகளின் வடிவமைப்பு, தயாரிப்பு, செய்மதிகளை ஏவுதல், சந்தை வாய்ப்புக்களைத் தேடுதல் போன்றவற்றை மேற்கொள்ளும் ஒரு நிறுவனமாகும். இது 1980 இல் உருவாக்கப்பட்டது. சீன அரசினால் இது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், இதற்கு செய்மதிகளை வழங்கலும் வர்த்தக சேவைகளை மேற்கொள்ளவும், சர்வதேச விண் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. (மேலும்....)

வைகாசி 25, 2012

எச்.பியில் 27000 பணியாளர்கள் குறைப்பு

உலகின் மிகப்பெரிய கணனி உற்பத்தி நிறுவனமான ஹெல்வட் பெக்காட் (எச்.பி) 2014 ஆம் ஆண்டு இறுதியில் 27000 பணியாளர்களை குறைக்க திட்டமிட்டுள்ளது. சர்வதேச அளவில் 300,000 பேர் பணிபுரியும் எச்.பி. நிறுவனம் தமது 8 வீதமான பணியாளர்களை குறைப்பதன் மூலம் ஆண்டுக்கு 3.5 பில்லியன் டொலர்களை சேமிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையை நிறுவனத்திற்காக முதலீடு செய்ய முடியும் என எச்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த பணியாளர் குறைப்பு நடவடிக்கை எவ்வாறு நடைமுறைப் படுத்தப்போவது என்பது குறித்து அந்த நிறுவனம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

வைகாசி 25, 2012

கனடா

100வது நாளாக போராட்டம்  லட்சக்கணக்கான மாணவர்கள் குவிந்தனர்

கல்விக்கட்டண உயர்வு மற்றும் அதற்கெதிரான போராட்டத்தை அடக்குவ தற்கான சட்ட மசோதா ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லட் சக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத் தியுள்ளனர். பரிசோதனை முயற்சி யாக முதலில் கியூபெக் மாகாணத்தில் கல்விக்கட் டண உயர்வு நடை முறைக்கு வந்தது. இதற்கு எதிரான மாணவர்கள் போராட்டம் பெரும் எழுச் சியுடன் நடந்து வருகிறது. போராட்டம் 100 நாட்க ளைத் தொட்டுவிட்ட நிலையில், மற்ற மாகாணங் களின் அரசுகள் இந்த மக் கள் விரோத நடவடிக் கைக்கு இதுவரை செல்ல வில்லை. ஆனால், கல்விக் கட்டண உயர்வுக்கு எதி ரான போராட்டம் மற்ற மாகாணங்களுக்குப் பரவி விட்டது. (மேலும்....)

வைகாசி 25, 2012

தீவிர அரசியலில் மீண்டும் சாவேஸ்

கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக, கியூபாவில் புற்று நோய் சிகிச்சைக்கு சென்று வந்த வெனிசுலா அதிபர் ஹூயூ கோ சாவேஸ், பொதுமக்கள் பார்க்கும் வகையில் செவ்வா யன்று தொலைக்காட்சி ஒளிபரப்பில் தோன்றினார். சிகிச்சைக்கு பின்னர் சாவேஸ், பொதுமக்கள் பார் வைக்கு வருவது இது முதல்முறையாகும். சாவேஸ் உறுதி யான குரலில் பேசினார். அவர் சோர்வாக இல்லை. இந்த ஒளிபரப்பு 2 மணி நேரம் நீடித்தது. இந்த நேரத்தில், உற்சா கத்துடன் பேசினார். அவரது உரையில் உடல்நலம் குறித்து தெரிவிக்கவில்லை.  (மேலும்....)

வைகாசி 25, 2012

நெருக்கடியைத் தீர்க்க முடியுமா?  ஐரோப்பிய தலைவர்கள் ஆலோசனை

ஐரோப்பிய நெருக்கடி யால் உலக அளவில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவ தால் நெருக்கடியைச் சமா ளிக்க என்ன செய்வது என் பதை ஆய்வு செய்ய பெல் ஜிய தலைநகர் பிரஸ்ஸல் சில் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ளனர். பொருளாதார நெருக்க டியை விட அதற்கான தீர்வு, பெரும் நெருக்கடியாக இருப்பதாக கிரீஸ் மக்கள் கருதுவதால் யூரோ மண் டலத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற நிர்ப் பந்தம் ஏற்பட்டுள்ளது. டாலருக்கு எதிராகக் கடந்த 21 மாதங்கள் இல்லாத அளவுக்கு யூரோவின் மதிப்பு சரிந்திருக்கிறது. இது பற்றி ஐரோப்பிய யூனிய னின் 27 நாடுகள் ஆலோ சனை செய்து வருகின்றன. ஒருவேளை, கிரீஸ் யூரோ மண்டலத்தில் இருந்து வெளியேறினால் என்ன தற் காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று விவாதித்து வருகிறார்கள். (மேலும்....)

வைகாசி 25, 2012

ஐபிஎல் கிரிக்கெட் = சர்ச்சைகள்

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட்டின் ஐந்தாவது சீஸன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. களத்தின் உள்ளே வழக்கம்போல் இந்தத் தொடரிலும் வீரர்கள் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அதேநேரத்தில் களத்திற்கு வெளியே நடந்துவரும் ஸ்பாட் ஃபிக்ஸிங், விடுதிகளில் நடிகைகளுடன் விருந்து என்ற போர்வையில் கூத்து, கும்மாளம், இதர பலான சமாச்சாரம் என வரம்பை மீறும் அசிங்கங்களும் உச்சக்கட்டத்தைத் தொட்டுள்ளன. (மேலும்....)

வைகாசி 25, 2012

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க - வவுனியாவில் போராட்டம்!

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை ஒன்பது மணியளவில் ஆரம்பமான இந்த சத்தியாக்கிரக போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்யவேண்டும், அல்லது அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமும் , பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீரங்கா உள்ளிட்ட தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். (மேலும்....)

வைகாசி 24, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 15)

(அ.ஆனந்தன்)

இந்திய அமைதிப்படை தமிழர்-சிங்களர் என்ற பாகுபாடு இன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்கள் அனைவராலும் ஒரு ஆக்கிரமிப்பு படை என்றே பார்க்கப்பட்டது. வழக்கமாக அனைத்து முதலாளித்துவ அரசுகளும் பராமரிக்கும் இராணுவங்கள் எத்தகைய மனநிலையோடு செயல்படுமோ அத்தகைய மனநிலையுடனேயே இந்திய இராணுவமும் இலங்கையில் செயல்பட்டது. ஒருபுறம் அதன் செயல்பாடு குறித்து பல புகார்கள் எழுந்தன. மறுபுறம் அதற்கு தலைமை ஏற்ற இந்திய இராணுவ தளபதிகள் ஒரு கையையும் காலையும் கட்டிக்கொண்டு சண்டையிடுவது போன்ற ஒரு சண்டையில் தாங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளோம் என்று கூறினர். அதாவது பொது மக்களுக்கு தீங்கெதுவும் இழைக்க கூடாது என்று பொதுவாக இந்திய அமைதிப்படையினருக்கு கொடுக்கப்பட்டிருந்த அறிவுரை குறித்தே அவர் அவ்வாறு கூறினார். இந்த நிலையில் இந்திய அமைதிப் படை அங்கு எதற்காக அனுப்பப்பட்டதோ அந்த நோக்கத்தை அதனால் நிறைவேற்ற முடியவில்லை. (மேலும்....)

வைகாசி 24, 2012

என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது ஆனால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும்  - பொன்சேகா

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்கு இன்னும் 5 அல்லது 10 வருடங்கள் செல்லும் என சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். "என்னால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஆனால் அரசியலில் ஈடுபட முடியும்'' என சரத் பொன்சேகா ரொய்டர் செய்திச் சேவைக்கு வழங்கியுள்ள தொலைபேசி செவ்வியில் தெரிவித்துள்ளார். "என்னால் மக்களுக்குக் கற்பிக்க முடியும். என்னால் மக்கள் மத்தியில் உரையாற்ற முடியும். கூட்டங்களை நடத்த முடியும்.'' ,"இந்த அரசாங்கத்தைக் கவிழ்த்து மற்றுமொரு அரசாங்கத்தை ஏற்படுத்தி மக்களின் நலன் காக்க என்னால் முடியும்'' இவ்வாறு சரத் பொன்சேகா கூறியுள்ளார். மேலும் மேற்குலக நாடுகளின் அழுத்தங்கள் காரணமாகவே தனக்கு விடுதலை கிடைத்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். ___

வைகாசி 24, 2012

வைகாசி 24, 2012

வட்டுக்கோட்டை முதல் தேசியக்கொடி வரை வரலாறு பேசவேண்டிய காலமா இது

(இரா.வி.விஷ்ணு )

தமிழ் தேசியம் என்பது காலா காலமா எமது தமிழ் சமூகத்தில் பின்னிப்பிணைந்து வந்திருக்கிறது. ஆனால் தமிழ் தேசியத்தை பயன்படுத்துகிற நபர்கள் ஓர் இருவர் தவிர்த்து கால காலமாக மாறுபட்டுக்கொண்டே வருகின்றனர். ஒன்று அவர்கள் முன்னாள் தமிழ் தேசியவாதிகளாக (தற்போது தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்தாதவர்கள்) அல்லது இந்நாள் தமிழ் தேசிய வாதிகளாக (முன்னர் தமிழ் தேசிய வார்த்தையையே பயன்படுத்தாதவர்கள் ) இருக்கின்றனர். அவர்கள் யாரென்று பட்டியலிட்டால் வாசகர்களை ஏதும் தெரியாதவர்கள் என்று நான் இழிவுபடுத்துதல் போலாகிவிடும். ஏனெனில் உங்களுக்கு யார் யாரென்று நன்றாக தெரியும். மேதின தேசிய கோடி விவகாரம் ஆரோக்கியமான சூடான விவாதத்துக்கான களம் என்பது ஆமோதிக்கவேண்டியவிடயமாகத்தான் (விவாதம்) தென்படுகிறது. இங்கு ஆச்சரியமான விடயம் என்னவென்றால் தமிழ் ஊடகங்களுக்கான எமது தலைவர்களின் அறிக்கைகளின்படி இவ்விடையத்தை ஆதரிப்பதற்கும், எதிர்ப்பதற்கும் வலுவான தைரியம் தமிழ் சமூகத்திலும், அரசியல் செயற்பாட்டாளர்களிலும் ஏற்பட்டிருப்பதுதான். (மேலும்....)

வைகாசி 24, 2012

மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே கல்வியின் இலக்காக முடியாது

பன்னிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண் பெறு வது முக்கியம்தான். ஆனால், அந்த மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற உதவுவ தில்லை. தேர்ச்சி பெறவில்லை என்பதற்காக தற் கொலை செய்துகொள்வதெல்லாம் பைத்தியக் காரத்தனம். அது நம் கல்வி முறையின் கோளாறு. இது வாழ்க்கையின் இறுதி அல்ல. தேர்வு முடிவு வரும் முன்பும், வந்த பின்பும் மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு இவற்றை படிப்பதுதான் பெருமைக்குரிய ஒன்று என்பது போல் ஊடகங்களும் செய்திகள் மூலம் ஒரு மயக்கமான கருத்தோட்டத்தை உருவாக்குகின் றன. பெற்றோர்கள் மத்தியிலும் இப்படிப்பட்ட தவறான கருத்தோட்டம் உள்ளன. இவற்றை களைவதற்கு பெரும்முயற்சி மேற்கொள்ளப்படா விடில் சமூகம் சகல துறைகளிலும் தலைநிமிர வும் ஆற்றல்களை வெளிப்படுத்தவும் உள்ள வாய்ப்பை இழந்துவிடும். (மேலும்....)

வைகாசி 24, 2012

ஸ்பெயின்

கல்விச் செலவினத்தில் வெட்டு  ஆசிரியர்கள் - மாணவர்கள் வேலைநிறுத்தம்

கல்விக்கான செலவினத் தை ஸ்பெயின் அரசு குறைத் துள்ளதைக் கண்டித்து, அங்குள்ள பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அர சை கண்டித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளம் பெற்றோரும் இந்த போராட்டத்தில் பங் கேற்றனர். பட்ஜெட்டில் கல்விச்செலவினத்தை குறைப்பதைக் கண்டித்து நடக்கும் வேலைநிறுத்தத் தை குறிக்கும் வகையில் போராட்டக்காரர்கள், பச்சை நிற டி-சர்ட் அணிந் திருந்தனர். தலைநகர் மாட்ரிட்டில் செவ்வாய்க்கிழமையன்று பல்லாயிரம் ஆசிரியர்கள் நீண்ட கறுப்பு மற்றும் வெள்ளை நிற பேனர்களை எடுத்துவந்தனர். அதில், ‘கல்வி, செலவினம் அல்ல’ என எழுதப்பட்டிருந்தது.  அது ஒரு முதலீடு, கல் விச்செலவினத்தை குறைக்க வேண்டாம் எனத் எழுதப் பட்டிருந்தது. (மேலும்....)

வைகாசி 24, 2012

கொழும்பு, அநுராதபுரம், வவுனியா, மன்னார்

தமிழ்க் கைதிகளின் வழக்குகளை துரிதமாக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள்

தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்வதற்காக ஒரு மாத காலத்தினுள் கொழும்பு, அநுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் மேல் நீதிமன்றங்களை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களுடன் தொடர்புள்ள வழக்கு ஆவணங்களை ஒருமாத காலத்தினுள் நிறைவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தில் விசேட பிரிவொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பான விசாரணைகளை துரிதமாக நிறைவு செய்து அவர்களை விடுதலை செய்யவோ அல்லது வழக்குத் தொடரவோ அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  (மேலும்....)

வைகாசி 24, 2012

களனி ஆற்றில் 24 கரட் தங்கம்

சந்தை விலைக்கு தான் கொள்வனவு செய்ததாக கூறுகிறார் தங்க வியாபாரி

களனி ஆற்றில் பூகொடை குமாரிமுல்லை ஜம்புத்துறையில் தங்கத் துகள்கள் கண்டறியப்பட்டதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆற்றில் தங்கம் தேடுகின்றனர். நேற்று அப்பகுதிக்கு சென்ற புவியியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகளும் மாணிக்கக் கல் அதிகார சபை உறுப்பினர்களும் தங்கம் தேடுதலில் ஈடுபட்டுள்ளோருடன் உரையாடினர். பின் இவ்வதிகாரிகள் இப்பிரதேச தங்க வியாபாரிகளுடனும் கலந்துரையாடினர். புவியியல் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், கனிய வளங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்குச் சொந்த மானவை. களனி ஆற்றில் தங்கத் துகள்கள் கிடைப்பது இதுவே முதற் தடவை. இப்பணியில் ஈடுபடுவோர் பாரிய இயந்திரங்களைப் பயன்படுத்தாமல் பாரம்பரிய முறைகளையே கையாள்கின்றனர். மேலும் இரசாயனப் பதார்த்தங்களைக் கொண்டு தங்கத்தை வேறுபடுத்தும் முறையினை கையாளவில்லை என்பதனால் சூழல் மாசடைதலும் ஏற்படவில்லை. இதன் காரணமாக நாம் இதைத் தடை செய்யவில்லை என்று கூறினார்கள்.

வைகாசி 24, 2012

ஒசாமா பின்லேடனை கொல்ல சி. ஐ. ஏ.க்கு உளவுபார்த்த மருத்துவருக்கு 33 ஆண்டு சிறை

அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்காவின் சி. ஐ. ஏ. உளவுப் பிரிவுக்கு வேலை பார்த்த பாகிஸ்தான் மருத்துவர் ஷகில் அப்ரிடிக்கு பாக். நீதிமன்றம் 33 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து பெஷாவர் மத்திய சிறைச்சாலைக்கு அப்ரிடி அனுப்பப்பட்டதாக பாக். நிர்வாகம் உறுதி செய்துள்ளது. சி.ஐ.ஏ. உளவுப் பிரிவின் திட்டத்திற்கமைய அபோதாபாத் நகரில் போலியான மருத்துவ முகாமை நடத்திய அப்ரிடி அங்கு ஒசாமா பின்லேடன் இருப்பதை உறுதி செய்து அமெரிக்காவுக்கு தகவல் அளித்துள்ளார். இதனை அமெரிக்கா பாதுகாப்புச் செயலாளர் லியோன் பெனட்டா கடந்த ஜனவரியில் உறுதி செய்தார். எனினும் பாகிஸ்தானின் கைபர் மாவட்ட நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அப்ரிடி அரச மருத்துவ சேவையில் இருந்து இரு மாதங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டார். அத்துடன் அபோதாபாத்தில் அப்ரிடியுடன் போலியான மருத்துவ முகாமில் பங்கேற்ற 17 பேரையும் பாக். சுகாதார அலுவலகம் பணி நீக்கம் செய்தது. ஒசாமா பின்லேடன் கடந்த 2011 மே மாதம் அபோதாபாத் நகரில் அமெரிக்கப்படையால் கொல்லப்பட்டார்.

வைகாசி 24, 2012

என்னைக் கொல்ல சதி

வடகொரியா, வெனிசுலா, ஹங்கேரி ஆகியவற்றின் நிதியுதவியுடன் மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சிகள் மாவோயிஸ்டுகளுடன் இணைந்து திட்டம்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசு பதவியேற்று, ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, தனியார் தொலைக்கட்சி ஒன்று முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மம்தா பானர்ஜி பற்றி பேஸ் புக்கில் கார்ட்டூன் வரைந்து வெளியிட்ட பல்கலைக்கழக பேராசியர் பற்றி மாணவர்கள் அதிகமாக கேள்வி எழுப்பினார்கள். இதனால் கோபமுற்ற மம்தா பானர்ஜி, மாணவர்களை பார்த்து ‘நீங்களெல்லாம் மாவோயிஸ்டுகள்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்’ என்று ஆவேசமாக கத்தினார். இதனையடுத்து இவர் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.இந்நிலையில், வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க பத்திரிகை மம்தா பானர்ஜியை பேட்டி கண்டது. அப்போது அவர், ‘மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி, மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து என்னைக் கொல்ல சதி செய்துள்ளது’ இந்த திட்டத்துக்கு வடகொரியா, வெனிசுலா, ஹங்கேரி போன்ற வெளிநாட்டு சக்திகள் நிதியுதவி அளித்துள்ளன. இந்த சதி திட்டத்தை நிறைவேற்ற உதவுமாறு, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ. எஸ். ஐ. யுடன் பேசி உள்ளனர். மேற்கண்ட சக்திகள் அனைத்தும் சேர்ந்து எனக்கு மரண தண்டனை விதித்துள்ளன. பேஸ் புக், இணைய தளம், இ- மெயில் வாயிலாக தினமும் என்னைப்பற்றி அவதூறு செய்திகளையும், போட்டோக்களையும், பொய்யான பெயர்களில் வெளியிட்டு வருகின்றனர் என்றார். அண்மையில் இந்தியா சென்ற கிளாரி கிளிங்ரன் ஜெயலலிதாவைப் போல் இவரையும் மாநில முதல்வர் நிலையில் உள்ளவரை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகாசி 24, 2012

மனிதன் விண்வெளிக்குள் பிரவேசிக்கும் நீண்ட கால கனவு நனவாகிய வரலாறு

தியில் விண் வெளியில் அதிக தொலை தூரத்தில் பயணிப்ப தென்பது மனிதனின் கனவாகவே காணப் பட்டது எனலாம். இதற்கு காரணம் வாயு மண்ட லத்துக்கு அப்பால் காற்றே கிடையாது. காற்றே இல்லாத வான் வெளி யில் விமானம் பறக்க இயலாது. நாளடைவில் நவீன ரக ரொக்கெட்டுகள் உருவாக்கப்பட்டதும் விண்வெளிப் பயணம் சாத்தியமாகியது. திரவ அல்கஹோலும், திரவ நிலைக்கு மாற்றப்பட்ட பிராண வாயுவும் கலந்த கலவையை பற்ற வைத்து எழுப்பப்படும் உந்து விசையை கொண்டு ரொக்கெட்டுகளை மிக வேகமாக செலுத்தலாம் என்று சோவியத் ரஷ்யா, அமெரிக்க மற்றும் ஜேர்மனிய விஞ்ஞானிகள் ஆய்வுகளின் மூலம் கண்டறிந்தனர். (மேலும்....)

வைகாசி 23, 2012

ஏழு ஆண்டுகளுக்கு பொன்சேகா தேர்தலில் போட்டியிட முடியாது

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் படைத் தளபதி சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது மாகாண சபை உறுப்பினராகவோ பதவியேற்க முடியாது என சட்டமா அதிபர் ஈவா வனசுந்தர தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடவோ முடியாது என அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ள போதிலும், நாட்டு அரசியலமைப்பின் பிரகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை பெற்றவர்கள் ஏழு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவோ அல்லது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாது. ஜனாதிபதி வழங்கிய பொது மன்னிப்பு என்பது சரத் பொன்சேகாவின் சிறைவாசம் அனுபவிக்கும் காலத்தை மட்டுமே குறைத்துள்ளது. ஆயினும் அவரின் சிறைத் தண்டனைக்கான காலம் குறைக்கப்படவில்லை. இந்நிலையில், சரத் பொன்சேகாவின் சிறைத் தண்டனைக்கான காலம் குறைக்கப்பட்டால் மட்டுமே, அவர் அரசியலில் ஈடுபட முடியும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வைகாசி 23, 2012

தெரிவுக்குழுவில் பங்கேற்பது குறித்து இவ்வாரம் அறிவிப்பு - ஐ.தே.க _a

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து இறுதி தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாரம் அறிவிக்கவுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பின் பின்னரே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். இது தொடர்பாக அவர் எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது தெளிவுபடுத்துகையில் அரசியல் தீர்வு விடயங்கள் மிக விரைவில் தீர்க்கப்படவேண்டும். இது குறித்து தமிழ் தேசியக்கூட்மைப்புடன் விசேட சந்திப்பொன்றை ஐ.தே.க நடத்தியது. எனவே அரசாங்கம் உத்தேசித்துள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்றுவது குறித்து இவ்வாரத்தில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளார் என்றார்.

வைகாசி 23, 2012

இறுதி யுத்தத்தில்

30,000 அல்லது 40,000 பேர் இறந்தனர் என்பது நடைமுறை சாத்தியமல்ல -  பொன்சேகா

போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான எந்த சர்வதேச விசாரணைக்கும் இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பென்சேகா கூறியுள்ளார். சிறையிலிருந்து நேற்று முன்தினம் விடுதலையான நிலையில் பிபிசியிடம் அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கையர்கள் சிலர் போர் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றவாளிகளைப் போல் தமது முகங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர் என அவர் கூறியுள்ளார். எனினும் யுத்தத்தின் போது ஆயிரக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டனர் என்ற குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார். 30,000 அல்லது 40,000 பேர் இறந்தனர் என்பது நடைமுறை சாத்தியமல்ல. யுத்தத்தை நாம் நடத்திய விதம் பாவித்த ஆயுதங்களின் வகை நாம் பயன்படுத்திய கையேடுகள் எல்லாவற்றிலும் பொது மக்களின் பாதுகாப்பு குறித்து நாம் கரிசனை செலுத்தினோம் என அவர் தெரிவித்தார். இலங்கைத் தலைவர்கள் சிலர் தாம் சில விடயங்களில் குற்றவாளிகள் என்பதைப் போன்ற அபிப்பிராயத்தை உலகிற்கு கொடுக்கின்றனர் என பொன்சேகா கூறினார். எனினும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமைக்கு அரசியல் தலைமைத்துவம் அல்லாமல் தானே பொறுப்பாக இருந்ததாகவும் யுத்தம் முடிந்தமை குறித்த கேள்விகளை எதிர்கொள்வதற்கு எவரின் முன்னாலும் சமூகமளிக்கத் தயார் எனவும் பொன்சேகா கூறினார். தான் ஜனாதிபதியாகவோ பாராளுமன்ற உறுப்பினராகவோ தெரிவு செய்யப்படாவிட்டாலும் நாட்டின் ஊழல் அரசியல் கலாசாரத்தை மாற்றுவதற்காக தான் அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வைகாசி 23, 2012

தனி மாவட்டக் கோரிக்கையை முன்வைத்தே கிளிநொச்சியை தனி மாவட்டமாகப் பிரித்தேன - வீ.ஆனந்தசங்கரி

கிளிநொச்சி மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்ட நான் இத்தொகுதியின் எம்.பி.யாக இருந்த வேளை தனிமாவட்டக் கோரிக்கையை முன்வைத்து யாழ்.மாவட்டத்துடன் இருந்த கிளிநொச்சியை தனி மாவட்டமாக பிரித்தேன் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் கிளிநொச்சி தொகுதி எம்.பி.யுமான வீ.ஆனந்தசங்கரி குறிப்பிட்டார். கிளிநொச்சி நகரில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தந்தை செல்வா நற்பணி மன்றம் ஏற்பாடு செய்த சமகால சமூக, பொருளாதார புனர்வாழ்வு, கல்வி அபிவிருத்திக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையற்றுகையில் முன்னாள் எம்.பி. வீ.ஆனந்தசங்கரி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (மேலும்....)

வைகாசி 22, 2012

ஜனாதிபதியின் மன்னிப்பில் சரத் பொன்சேகா விடுதலை

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்கப்பட்ட சரத் பொன்சேகா நேற்று பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து வெளி யேறினார். நீதிமன்றத்திலிருந்து வெலிக்கடை சிறைச்சாலையை வந்தடைந்த சரத் பொன்சேகாவின் வாகனம் மெகசின் சிறைச்சாலையின் பின்பக்கமாக அமைந்துள்ள குறுக்கு வீதியொன்றின் ஊடாக வெலிக்கடை சிறைச்சாலையின் விளையாட்டு மைதானத்தைச் சுற்றி அதன் பிரதான நுழைவாயில் வழியாக சிறைச்சாலையில் நுழைந்தமை முக்கிய அம்சமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மன்னிப்பின் பின்னர் சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பான கடிதமொன்று ஜனாதிபதி செயலகத்தினால் நீதி அமைச்சிற்கு அனுப்பப்பட்டதுடன் அதன் பிரகாரம் அந்த அமைச்சின் செயலாளரது கையொப்பத்துடன் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான கடிதம் மற்றும் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவு அடங்கிய கடிதத்தின் பிரதி என்பன சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (மேலும்....)

வைகாசி 22, 2012

அதிக குற்றச்செயல்கள் பட்டியலில் யாழ்ப்பாணம் முதலிடம்

யாழ். மாவட்டத்தில் அதிக குற்றச் செயல்கள் அண்மையில் இடம்பெறும் பொலிஸ் பகுதியாக யாழ்ப்பாணம் பொலிஸ் பிரதேசம் காணப்படுவதாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜி.எல்.பெரேரா குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதைத் தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில் குற்றச் செயல்கள் அதிகம் இடம்பெறும் பகுதிகள் பட்டியிலில் முதலாம் இடத்தில் யாழ்ப்பாணப் பொலிஸ் பிரதேசமும் இரண்டாம் இடத்தில் சாவகச்சேரி பொலிஸ் பிரதேசமும் மூன்றாம் இடத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரதேசமும் காணப்படுவதாகவும் இந்நிலைமையைத் தொடர விடாது குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதுடன் குற்றவாளிகள் பலரும் இப் பகுதிகளிலிருந்து கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.

வைகாசி 22, 2012

தமிழக பாதுகாப்புத் துறையால் கைதான இலங்கை மீனவர்கள் 27 பேர் விடுதலை

தமிழ்நாட்டுப் பாதுகாப்புத் துறையினரால் கைது செய்யப்பட்ட 27 இலங்கை கடற்றொழிலாளர்களும் 5 படகுகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த ஏப்ரல் மாதம் 19 - 24ஆம் திகதி வரை கைதானவர்களே இவ்வாறு விடுதலையாகியுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவிக்கின்றது. இந்தியாவில் கைதானவர்களில் இன்னும் 21 பேரும் 4 படகுகளும் விடுவிக்கப்படவில்லை என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. கபிலபுதா, பொடிமல்லி, நிகினி, மினோலி-6, சாருனி-2 ஆகிய படகுகளில் கைதானவர்களுடன் அவர்களது படகு களும் விடுவிக்கப்பட்டுள்ளன. ___

வைகாசி 22, 2012 ___

அமெரிக்காவின் அழுத்தமே பொன்சேகாவின் விடுதலைக்கு காரணம்: பாகிஸ்தான் பத்திரிகை தகவல்

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசாங்கம் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தெ நியூஸ் இன்டர்நெசனல் தெரிவித்துள்ளது. சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதில் சர்வதேச அழுத்தங்கள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்து வருகிறது. எனினும் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அமெரிக்கா அழுத்தம் அன்றி வேறு காரணத்தினால் சரத்பொன்சேகாவின் விடுதலை அமைய வாய்ப்பில்லை என்பதே தெ நியூஸ் இன்டர்நெசனலின் கருத்தாக உள்ளது. ___

வைகாசி 22, 2012

மும்மொழி வலயங்களாக 30 இடங்கள் அடையாளம்

மொழிமூலமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த சமூக மேம்பாட்டு உதவுனர்கள்

சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங் களிலும் மொழிப் பிரச்சினை களைக் கையாள்வதற்கு சமூக மேம்பாட்டு உதவுனர்கள் நியமிக்கப்படவிருப்பதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணய கார தெரிவித்தார். கூடிய விரைவில் அனைத்து மாவட் டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும், இவர்களுக்கு மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் இடம் ஒதுக்கிக் கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ராஜகிரியவிலுள்ள அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.  (மேலும்....)

வைகாசி 22, 2012

Winning Sri Lanka’s Peace

To return to international respectability, Colombo needs to deepen its democracy.

(By SADANAND DHUME)

On the face of it, Sri Lankahas much to celebrate this week as it marks the third anniversary of its military victory over the terrorist Liberation Tigers of Tamil Eelam (LTTE). After that scarring 26-year civil war, which was among the bloodiest in modern Asia, ended, the economy is the hottest in its neighborhood: Last year GDP grew by 8.3%, the fastest expansion since independence in 1948. Tourist arrivals were up about 30% from a year earlier. In President Mahinda Rajapaksa, Sri Lanka boasts a leader whose regional peers can only envy his popularity with the masses and robust parliamentary majority. (more...)

வைகாசி 22, 2012

தமிழ்க் கைதிகள் தொடர்ந்தும் நேற்று உண்ணா விரதம்

தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நேற்றும் தொடர்ந்தது. தமது நீதி விசாரணைகளை துரிதப்படுத்தக் கோரியும் இல்லையேல் விடுதலை செய்யுமாறு தெரிவித்து இவர்கள் தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இவர்களின் கோரிக்கைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு உயர்மட்ட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது. இந்த உயர்மட்டக் கூட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைக்கு சாதகமான தீர்மானமொன்று கிடைக்கும் பட்சத்தில் மாத்திரமே எமது உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படும். இல்லையேல் எமக்கு சாதகமான தீர்வு கிட்டும் வரை எமது இந்த போராட்டம் தொடருமெனவும் மகசின் சிறைச்சாலை கைதிகள் உறுதியாக தெரிவிக்கின்றனர். மகசின் சிறைச்சாலையிலுள்ள 180 கைதிகளும் அநுராதபுரம் சிறைச்சாலையின் 80 கைதிகளும் வெளிக்கடை பெண்கள் பிரிவின் 32 கைதிகளும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. போருக்கு இராணுவத் தலைமை தாங்கிய சரத் பொன்சேகாவை மன்னித்து விடுவித்த மகிந்த சகோதரைய நீண்ட காலமாக விசாரணைகள் ஏதும் இன்றி தமது வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் தொலைத்த தமிழ் கைதிகளை விடுதலை செய்வீர்களா...?

வைகாசி 22, 2012

100 வருட வரலாற்றில் முதற் தடவை தானிய ஏற்றுமதி

10,000 மெ. தொ. சோளம் தாய்வான், கனடாவுக்கு இன்று ஏற்றுமதி

வெளிநாட்டிற்கு தானியம் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையின் முதற் கட்ட மாக 10,000 மெற்றித் தொன் சோளம் தாய்வான் மற்றும் கனடா நாடுகளுக்கு இன்று ஏற்றுமதி செய்யப் படுகின்றது. ஏற்றுமதிக்குப் பொருத்தமான தரம் வாய்ந்த அரிசியை உற்பத்தி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவ துடன் விரைவில் 20,000 மெற்றிக் தொன் சிவப்பு அரிசியைத் தென்னா பிரிக்காவுக்கு அனுப்பவும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். விவசாய திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு நூறு வருடங்கள் நிறைவடையும் நிலையில் இவ்வளவு காலமும் வெளிநாடுகளிலிருந்தே இலங்கைக்குத் தானியங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. அரசாங்கத்தின் காத்திரமான வேலைத் திட்டங்களின் பயனால் முதன் முறையாக தற்போது சோளம் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். (மேலும்....)

வைகாசி 22, 2012

தேர்தல் நடந்தால் பா.ஜ.வெற்றி பெறும்?

2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையை சீர்குலைத்து விட்டதாக 54 சதவிகிதம் பேர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த ஊழலில் ப. சிதம்பரத்துக்கு பங்கு இருக்காது என்று 10 சதவிகிதம் பேர் மட்டுமே நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால், பாரதீய ஜனதா வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மீது தற்போது பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விலைவாசி உயர்வு, ஊழல்கள், ஊழல்கள் மீது நடவடிக்கையின்மை, கட்சிக்குள்ளேயே பெரும் குழப்பம், மூத்த தலைவர்கள் பலர் மீது செக்ஸ் புகார் என்று காங்கிரஸ் தலைமை மத்திய அரசு தத்தளித்து வருகிறது.  (மேலும்....)

வைகாசி 21, 2012

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 21 ஆண்டு பூர்த்தி

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி எல். ரீ. ரீ. ஈயின் தற்கொலை குண்டுதாரியினால் படுகொலை செய்ய ப்பட்ட 21வது ஆண்டு நிறைவு (21) இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி அன்று எதிர்கட்சித் தலைவராக இருந்த ராஜீவ் காந்தி தமிழ் நாட்டின் ஸ்ரீபெரம்பூர் எனும் இடத்தில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ள சென்றபோது தானு என்ற எல்.ரீ.ரீ.ஈ இயக்க பெண் தற்கொலை குண்டுதாரி கொடுத்த பூ கொத்திலிருந்த குண்டு வெடித்ததில் ஸ்தலத்திலேயே மரணமானார். அவருடம் மேலும் 14 பேர் உயிரிழந்தனர். தானு என்ற இந்த தற்கொலை குண்டுதாரியின் இயற்பெயர் தேன்மொழி ராஜரட்ணம் ஆகும். ராஜீவ் காந்தி 1984ல் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பிரதமரானார். இறக்கும்போது இவருக்கு 46 வயதாகும். ராஜீவ் காந்தியின் மரணத்துடன் இந்தியாவின் நேரு குடும்ப ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்த குண்டு வெடிப்பின்போது கொல்லப்பட்ட புகைப்பட கலைஞரின் கமரா சேதமடையாத நிலையில் இருந்ததனால் தான் இந்திய புலனாய்வு அதிகாரிகள் அந்த கமராவிலுள்ள புகைப்படத்தை பார்த்து புலிகள் இயக்கமே ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது என்பதை ஊர்ஜிதம் செய்தது.

வைகாசி 21, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 14)

(அ.ஆனந்தன்)

எந்த ஒரு நாட்டிலும் எந்தவொரு ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியும் அதனால் பயன்பெரும் மக்கள் மத்தியில் வேரூன்றியுள்ள - பரந்துபட்ட மக்களின் போராட்ட வலிமையினைப் பறைசாற்றவல்ல- இயக்கங்களின் பின்னணியிலேயே நடைபெற்றுள்ளன. ஆனால் இலங்கையை பொறுத்தவரை எல்.டி.டி.ஈ தலைமை இலங்கை தமிழ்மக்களின் போராட்டத்தில் தலைஎடுத்த நாள் முதற்கொண்டு சாதாரண தமிழ் மக்களின் ஒற்றுமையினை சாத்வீக முறையில் இயக்கங்கள் மூலம் பறைசாற்றும் போக்கு படிப்படியாக மட்டுபடுத்தப்பட்டது. நாளடைவில் அது அறவே இல்லாமலும் போய்விட்டது. (மேலும்....)

வைகாசி 21, 2012

சரத் பொன்சேகா இன்று விடுதலை?

சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் இன்று 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் காரணங்களைச் சமர்ப்பித்த பின்னர், அவருக்கு விடுதலை கிடைக்குமென பதில் ஊடக அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவி த்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பேரில் சரத் பொன்சேகாவின் விடுதலைக்கான கடிதத்தில் 18 ஆம் திகதி கைச்சாத்தி டப்பட்டதாக அவர் தெரிவித்தார். மாத்தறை, பம்புரண அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடக மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 19ம் திகதியும் 20ம் திகதியும் அரச விடுமுறை தினமாதலால் நீதிமன்ற அலுவல்கள் நடக்கமாட்டாது. அதனால், சரத் பொன்சேகாவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கு சட்டம் தொடர்பான காரணங்களை சமர்ப்பித்த பின்னர் இத்தீர்வு நடைமுறைக்கு வருமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வைகாசி 21, 2012

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மிக விரைவில் பொறியியல் பீடம்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மிக விரைவில் பொறியியல் பீடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் 7வது பொதுப் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை (19) ஒலுவில் வளாகத்தில் வேந்தர் பேராசிரியர் அச்சி எம். இஸாக் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் திஸாநாயக்க மேற் கண்டவாறு கூறினார். இன்று பல்வேறு துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வரும் இப்பல்கலைக்கழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாராட்டத்தக்கது. இதன் ஒவ்வொரு துளிப் பெருமைக்கும் நன்றிக்கும் உரியவராக மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரப் திகழ்கின்றார். சமூக ஒருமைப்பாட்டையும் சமாதான விழுமியங்களையும் கட்டியெழுப்பும் வகையில் செயற்படுகின்ற இப்பல்கலைக் கழகமானது தேசிய ரீதியில் முன்னணி வகிக்கின்றது.

வைகாசி 21, 2012

சென்னையில் மாவோயிஸ்ட் தீவிரவாதி கைது மனைவி தப்பி ஓட்டம்

சென்னையில் மாவோயிஸ்டு தீவிரவாதி கைது செய்யப்பட்டார். அவரது மனைவி தப்பி ஓடிவிட்டார். வடமாநிலங்களில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் வலுவாக உள்ளது. சத்தீஸ்கார் மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கலெக்டர் அலெக்ஸ்பால் மேனன் மாவோயிஸ்டு தீவிரவாதிகளால் அண்மையில் கடத்திச் செல்லப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் தமிழகத்திலும் தங்கள் தளத்தை அமைக்க மாவோயிஸ்டுகள் முயற்சி எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2007ம் ஆண்டு பெரியகுளம், தேனி பகுதியில் உள்ள முருகமலை காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடும் பயிற்சி தளம் அமைத்து பயிற்சி பெற்றனர். அப்போது பொலிஸார் அதிரடி வேட்டை நடத்தி, மாவோயிஸ்டுகள் அமைப்பின் தலைவர் சுந்தரமூர்த்தி உட்பட 4 பேரை கைது செய்தனர். மாவோயிஸ்டு அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த விவேக் (வயது 45) என்பவர் தப்பி ஓடிவிட்டார். (மேலும்....)

வைகாசி 21, 2012

எலும்புச் சிதைவைத் தடுக்க...

‘ஆஸ்டியோபோரோசிஸ்’ என்ற எலும்புச் சிதைவு நோயில் இருந்து தப்பிக்க விரும்புகிaர்களா? அப்படியானால் நிங்கள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கூடைப்பந்து அல்லது கைப்பந்து விளையாட்டில். உடம்பு எடையைத் தாங்குவதை ஊக்குவிக்கும் இந்த விளையாட்டுகள், எலும்புச் சிதைவைத் தடுக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அவர்கள் மேலும் கூறுகையில், இதுபோன்ற விளையாட்டுகளில் வாரம் நான்கு மணி நேரம் அல்லது அதற்கு மேல் ஈடுபடுவது எலும்பு அடர்த்தியை அதிகரிக்கிறது. அது, வாழ்நாளின் பிற்காலத்தில் ஆஸ்டியோ போரோசிஸ் உருவாவதைத் தடுக்கிறது என்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் பெரும்பாலும் இந்த எலும்புச் சிதைவு நோய்க்கு உள்ளாவதில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்

வைகாசி 21, 2012

சிகாகோவைக் கலக்கி வரும் நேட்டோ எதிர்ப்பு அலைகள்

நேட்டோ ராணுவ அமைப்பு நாடுகளின் தலை வர்கள் ஒபாமாவின் சொந்த ஊரான சிகாகோவில் கூடு கின்றனர். சிகாகோ நகர காவல்துறை கைகளைப் பிசைந்தபடி அமைதி காக்க முயற்சி எடுத்து வருகின்றது. நேட்டோ ராணுவ அமைப் பின் எதிர்ப்பாளர் கள் ஆயி ரக்கணக்கில் கூட்ட அரங் கின் முன்கூடி ஆர்ப்பாட் டம் நடத்தவுள்ளனர். கடந்த ஆறு நாட்களாக நடந்து வரும் நேட்டோ எதிர்ப்பு பேரலையின் உச்ச கட்டம் இது. ஆறு நாட் களாக அமைதியான முறை யில் போராட்டங்கள் நடந்து வந்தபோதும் சிகாகோ நகர காவல்துறை சுமார் 25க்கும் மேற்பட்ட போராளிகளைக் கைது செய்துள்ளது. அவர் களில் மூவர் மீது பயங்கர வாதக் குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில் நேட்டோ நடத்திவரும் போரை எதிர்த்து நடைபெ றும் பேரணியில் பல்லா யிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என்று பேர ணிக்கு ஏற்பாடு செய்யும் நேட்டோ-ஜி 8க்கு எதிரான கூட்டணி அமைப்பு கூறி யுள்ளது.

வைகாசி 21, 2012

IN MEETING WITH EXTERNAL AFFAIRS MINISTER PEIRIS, SECRETARY OF STATE CLINTON PRAISES SRI LANKA'S PLAN TO IMPLEMENT LLRC RECOMMENDATIONS

U.S. Secretary of State Hillary Clinton Friday praised Sri Lanka’s plan to implement post-conflict recommendations made by an independent commission recently, during a meeting with Prof. G.L. Peiris, Sri Lanka’s minister of external affairs.During their 45-minute meeting, Minister Peiris outlined the mechanism adopted by Sri Lanka’s presidential secretariat that will be used to implement recommendations made by the independent Lessons Learnt and Reconciliation Commission (LLRC), which examined Sri Lanka’s successful conflict against the Liberation Tigers of Tamil Eelam. The commission issued its final report, and 285 recommendations, late last year. The government at that time announced its intention to adopt many of the recommendations, and several have already been put in place. (more.....)

வைகாசி 21, 2012

ஸ்ரீதர் என்னும் தமிழர் ஒருவரின் சாதனை!

(by barthee)

இன்றைக்கு அமெரிக்காவில் உள்ள தொழில் வல்லுனர்கள் எல்லாரும் திரும்பிப்பார்க்கும் மனிதர் - ஒரு தமிழர் - அவர்தான் ஸ்ரீதர். புளூம் எனர்ஜி என்ற ஆற்றல் நிறுவனத்தை தொடங்கியவர். இந்தியாவின் தமிழ் நாட்டில் பிறந்த (1960) இவர் திருச்சி தேசிய தொழிநுட்ப கழகத்தில் இயந்திரப் பொறியியல் பயின்றார்; பின்னர் 1980-ல் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் தொழில்நுட்பம் பயின்று முதுகலைப்பட்டமும், அதே பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றார். இவர் தற்போது அமெரிக்காவின் கலிபோரினியாவில் வசித்து வருகிறார். (மேலும்....)

வைகாசி 21, 2012

LTTE Youth FROM Toronto Universities vandalizing Provincial and City Property

Concerned Canadians have started lets keep Toronto, CANADA Clean project as Radical youth has been posting LTTE propaganda “Project Rajapaksa stickers” in Prohibited city of Toronto subway stations, Ontario Provincial property and University/College premises.This was started by the York University Tamil Student Association along with York University Indian cultural Association and similar Tamil Student groups who are brainwashed by LTTE groups in Greater Toronto Area.  Most of these stickers have been posted along Queens Park, Bay Street, Queen Street, University Ave intersections. Many Canadian citizens has already removed or scratched out propaganda titles of these LTTE affiliated stickers. Let’s do our part and keep our beautiful city clean, if you find these stickers or posters on city property and prohibited areas please contact City of Toronto # 311 OR MAYORS OFFICE TO LODGE A COMPLAINT

+ 1 416-397-FORD (3673)

PLEASE DO YOUR PART TO KEEP YOUR CITY FREE FROM THESE RADICLS!

வைகாசி 21, 2012

திருமதி.முருகேசு சிவபாக்கியம்(பாக்கியம்) சோளங்கன், கரணவாய் மேற்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. முருகேசு சிவபாக்கியம் அவர்கள் 12.05.2012(சனிக்கிழமை) அன்று கனடாவில் காலமானார்.

எமது நண்பன் செல்வத்தின் பாசமிகு தாயாரின் மறைவுக்கு

எமது இதய அஞ்சலி - சூத்திரம் இணையத்தளம்

வைகாசி 20, 2012

கிழக்கு மாகாண சபை தேர்தலும் தமிழ் பேசும் தமிழ்-முஸ்லிம் மக்களும்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெகு விரை வில் அதற்கான அறிவிப்பு உத்தியோக பூர்வமாக விடுக்கப்படவுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்படலாம் என்னும் செய்தி செவி வழியாகப் பரவியதுமே அரசியல் கட் சிகள் பலவும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டன. இப்போது அது ஓரளவு உறுதியாகிவிட்டதால் ஏற்பாடுகள், பேச்சுவார்த்தைகள், கூட்டு முயற்சிகள் என்று தேர்தல் சூடு பிடித்துள்ளதைக் காண முடிகிறது. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அது மூவின மக்களும் வாழும் ஒரு மாகாணம். அங்கு மூவின மக்களும் ஓரணியில் ஒற்றுமையாகத் திகழ்வதன் மூலமே தாம் விரும்பும் ஒரு வரை முதலமைச்சராக்க முடியும் என்பது உண்மை. தமிழரோ அல்லது முஸ்லிம் ஒருவரோ தனி த்து நின்று தாம் சார்ந்த இன மக்களின் வாக்குகளால் மட்டுமே முதலமைச்சராக வரலாம் என் பது இலகுவில் கைகூடக்கூடிய ஒன்றல்ல. (மேலும்....)

வைகாசி 20, 2012

சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டார்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்வதற்கான ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இந்த ஆவணத்தில் ஜனாதிபதி கடந்த வௌ்ளிக்கிழமை கையொப்பமிட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்டாருக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொள்வதற்கு முன்னர் ஜனாதிபதி குறித்த ஆவணத்தை தமது பிரதம அதிகாரி காமினி செனரத்னவிடம் ஒப்படைத்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் நாளை நீதி அமைச்சிடம் கையளிக்கப்படும் என பேச்சாளர் பந்துல ஜயசேகர வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைகாசி 20, 2012

ஜனாதிபதி-எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு நல்லிணக்கத்துக்கான திறவுகோலாக அமையுமா?

புரையோடிப்போன இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு தேடல் நடவடிக்கைகளும், முன்னெடுப்புக்களும், கடந்த 25 ஆண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான உயிர்களையும், பல கோடிக்கணக்கான பெறுமதிமிக்க சொத்துக்களையும் இலங்கை இழந்துவிட்டது. உயிர்களையும், உடைமைகளையும் இழந்தமை ஒருபுறமிருக்க பரஸ்பர நம்பிக்கையீனம் காரணமாக நித்தம், நித்தம் மன உணர்வுகளையும் இழந்து கொண்டிருக்கிறோம். சகலருடனும் சகல கட்சிகளுடனும் கலந்து பேசி ஏகோபித்தடிப்படையில் அல்லது பெரும்பான்மை அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது ஜனநாயகப் பாரம்பரிய முறை. (மேலும்....)

வைகாசி 20, 2012

முல்லைத்தீவு

மீண்டும் துளிர்விடும் நம்பிக்கை

தெளிந்த நீரில் பல்வேறு வகையான பறவைகள் தமக்கான இரையைத் தேடிக்கொண்டிருக்கின்றன. நன்னீர் மீன்கள் நிறைந்து காணப்படுவதால், இரை தேடுவதற்காக பல இடம்பெயர் பறவைகள் அங்கு குழுமியிருக்கின்றன. அப்பகுதியைச் சூழவிருந்த கண்ணிவெடிகள் அப்புறப்படுத்தப்பட்டதால், நந்திக் கடல் ஏரிப் பகுதி இப்போது மீன்பிடிப்பில் மீண்டும் பிரசித்தமாகியிருக்கின்றது. கடந்த காலப் பயங்கரங்களையெல்லாம் தன்னுள் விழுங்கிய படியே நிச்சலனமற்றிருக்கிறது நந்திக் கடல். இன்று அப்பகுதி அமைதியாகக் காட்சி தந்தாலும், தயானி (வயது 24), ஜெகதாஸ் (வயது 36) தம்பதியினருக்கு, நந்திக்கடல் இன்னமும் பயங்கரமானதாகவே இருக்கிறது. காரணம், இன்று அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நந்திக் கடலில்தான், அவர்களது 3 மாதமே நிரம்பிய மகளை அவர்கள் இழந்தார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னர் என பேச ஆரம்பித்த தயாணிக்கு அதற்கு மேல் பேச முடியவில்லை. அழ ஆரம்பித்துவிட்டார். ஆம் மூன்று வருடங்களுக்கு முன்னர் தயானி மட்டுமல்ல, அனேகமாக அப்பகுதியின் எல்லாக் குடும்பங்களும் இதே பயங்கரங்களை அனுபவித்தவர்கள் தான். (மேலும்....)

வைகாசி 20, 2012

தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்

சென்னையில் செயல்படும் இலங்கை துணைத் தூதரகத்தில் துணைத் தூதுவர் அனுர ராஜாகருணா தலைமை யில் முதன்மை செயலாளர் அஜ்மல் முதன்மை அலுவலக பொறுப்பதிகாரி திருமதி திலானி விஜயசேகர மேற்பார் வையில் தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ்- சிங்கள மக்கள் மற்றும் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களும் ஒற்றுமையாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் மகிழ் ச்சியாக சிறப்பித்தார்கள். போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்க ளுக்கு திரு. அனுரா ராஜா கருணாவும் திருமதி ராஜா கருணாவும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்கள். (மேலும்....)

வைகாசி 20, 2012

நேட்டோ மாநாடும் நேச நாடுகளின் நலனும்

நேட்டோ அமைப்பின் மாநாடு இன்றும் நாளையும் அமெரிக்காவின் சகானோ மாநிலத்தில் நடைபெறுகின்றது. ஜனாதிபதி பராக் ஒபாமாவின் தாயக மாநிலத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தீர்மானங்கள் எதிர்கால செயற்பாடுகள் என்பன பராக் ஒபாமாவின் அடுத்த அரசியல் தலைவிதியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றும் என்பது எல்லோரதும் எதிர்பார்ப்பு. நேட்டோவின் இராணுவ நடவடிக்கைகள் கடந்த ஒரு தசாப்தமாகப் பாரிய சவால்களைச் சந்தித்து வரும் சூழ்நிலையில் இன்று மாநாடு ஆரம்பமாகியுள்ளது. 1999ம் ஆண்டு நேட்டோ மாநாடு கடைசியாக நடைபெற்ற பின்னர் இன்று இந்த அமைப்பின் தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளனர். 1949ம் ஆண்டு இந்த நேட்டோ அமைப்பு ரஷ்யாவின் சவாலுக்கு எதிராகத் தோற்றம் பெற்றது. இன்றைக்கு 28 நாடுகள் இந்த அமைப்பிலுள்ளன. (மேலும்....)

வைகாசி 20, 2012

1990ல் முஸ்லிம்கள் விரட்டப்பட்ட போது ஆயர் இராயப்பு மெளனம்

தமிழ் - முஸ்லிம் மக்களிடையே இன விரிசலை ஏற்படுத்தி நல்லுறவை சீர்குலைக்கின்றது TNA

தமிழ், முஸ்லிம் உறவை சீர்குலைத்து இனங்களுக்கிடையே பிளவை உருவாக்கி அரசியலில் குளிர்காய தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் முற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக் எம்.பி. தெரிவித்துள்ளார். மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பின் நடவடிக்கைகள் தொடர்பாக பாராளுமன்றத்தில் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் தெரிவிக்கப்பட்டிருந்த நியாயமான குற்றச்சாட்டுக்களை பூதாகரப்படுத்தி, இனங்களுக்கிடையேயான நல்லுறவை சீரழிக்க கூட்டமைப்பு எம்.பிக்களான வினோநோகராதலிங்கமும், மாவை சேனாதிராஜாவும் முயற்சி செய்வதாக ஹுனைஸ் எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார். (மேலும்....)

வைகாசி 20, 2012

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது அதற்கெதிராக குரல் கொடுத்தவன் நான் !

மன்னார் மாவட்டத்தில் அரசாங்க காணிகளை சிலர் ஆக்கிரமிப்பதையே நான் எதிர்க்கின்றேன். முஸ் லிம்கள் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதை நான் எதிர்க்கவில்லை. முஸ்லிம்கள் வடக்கிலிருந்து புலிகளால் வெளியேற்றப்பட்ட போது அதற்கு எதிராக குரல் கொடுத்தவனும் நானே என்று மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். மன்னார் மாந்தை மேற்குப் பிரிவைச் சேர்ந்த விடத்தல் தீவு முஸ்லிம்கள் அரச அங்கீகார மின்றி சன்னார் கிராமத்திலுள்ள காணிகளை தமது சொந்தப் பாவனைக்கெனக் கூறி ஆக்கி ரமிக்கின்றனர். இதே போன்று நானாட்டான் அச்சன் குளத்திலும் காணி ஆக்கிரமிப்பு இடம்பெறு கிறது. இதேவேளை, விடத்தல் தீவைச் சேர்ந்த 470 தமிழ் குடும்பங்கள் அரச காணிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மாந்தை மேற்கு கிராம சேவகரிடம் முறையாக விண்ணப்பித்துள்ளன. இந்த விண்ணப்பங்கள் இன்னமும் பரிசீலிக்கப்படாமல் மாந்தை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கிடக்கின்றன. மேற்கண்டவாறே நான் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். அரசாங்க காணிகளைப் பெற்றுக் கொள்வதில் ஒரு வழிமுறை இருக்கின்றது. அதைப் பின்பற்ற வேண்டும். விடத்தல் தீவில் 470 தமிழ் குடும்பங்கள் காணிக்கு விண்ணப்பித்திருக்கின்றன என்றும் அவர் கூறினார்.

வைகாசி 20, 2012

“இனப்பிரச்சினைக்கு தமிழீம் தீர்வாகாது”

1977ல் இராஜதுரை கூறியமை துரோகமெனில் இன்று TNA யும் அதனையே கூறுவதை என்னவென்பது?

இனப்பிரச்சினைக்கு தமிbழம் தீர்வாகாது என்பதை 1977ல் செல்லையா இராஜதுரை தெரிவித்தமையை வைத்து இன்று வரை அவரைத் துரோகி என்று கூறும் சிவாஜிலிங்கம் போன்றவர்கள் இரா. சம்பந்தனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள சில முக்கியஸ்தர்களும் தமிbழம் தேவையில்லை என்று இன்று கூறுவதை ஏன் எதிர்க்கவில்லை, ஏன் இவர்களையும் துரோகிகள் என்று கூறி கறுப்புக் கொடி காட்டவில்லை எனும் கேள்வி இப்போது மக்கள் பலராலும் கேட்கப்படுகிறது. இராஜதுரை இப்போது அரசியலிலிருந்து ஓய்வாகி விட்டார். அவரை வைத்து வேண்டுமான அறிக் கையை விடலாம். ஆனால் கூட்டமைப்பு தலைமையை பகைத்துக் கொண்டால் அடுத்த தேர்தலில் வேட்பாளராக போடமாட்டார்கள் என்பதே சிவாஜியின் சிந்தனை. தமிbழம் தேவையில்லை, அதனை தமிழ் மக்களும் கேட்கவில்லை என்று கூறும் தலைவர்களே நாளை வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பொறுப்பில் இருப்பர். ஏன் சிக்கல், என்பதனாலேயே சிவாஜிலிங்கம் போன்றவர்கள் இவ்விடயத்தில் அமைதியாக உள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது. (மேலும்....)

வைகாசி 20, 2012

கலைஞரின் திடீர் ஈழப்பாசம் போலி நாடகம்

ராஜீவ் காந்தி கூறியதாக கதையளப்பதை நம்பிவரும் இலங்கை - இந்திய ஊடகங்கள்

ஜனநாயக வழியில் இலங்கைத் தமிழர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தருவோம் என்றும் தமிழ் ஈழம் பெற்றுத் தருவதே நமது ஒரே மூச்சு, தமிழ் ஈழத்தை வலியுறுத்தி, சென்னையில் விரைவில் மாநாடு நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணா நிதி தெரிவித்துள்ளார். திமுக ஆட்சி அமைந்து நான் முதல்வராகப் பொறுப்பேற்ற நேரத்தில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியை மரியாதை நிமித்தமாகச் சந்திக்கவும் வாழ்த் துப் பெறவும் டெல்லி சென்றேன். ராஜீவ் காந்தியைச் சந்தித்த போது என்னிடம் பிரபாகரன் பற்றி விசாரித்த ராஜீவ் காந்தி, பிரபாகரன் சிறந்த வீரர் என்று சொன்னதோடு பிரபாகரனின் அதிகாரத்தின் கீழ் தமிழ் ஈழம் உருவாகத் தம்மாலான உதவி களைச் செய்வதாகச் சொன்னார். (மேலும்....)

வைகாசி 20, 2012

பலாலி ஆசிரியர் கலாசாலை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு

யாழ். பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையை கோப்பாய் ஆசிரி யர் பயிற்சிக் கலா சாலையுடன் இணைப்பது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பிரச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுத் துள்ளார். பழைமை வாய்ந் ததும் முன்னணி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுமான பலாலி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியானது கடந்த கால அழிவு யுத்தம் காரணமாக உயர் பாதுகாப்பு வலையத்தினுள் அமைந்தி ருந்ததனால் அதன் செயற்பாடுகள் திருநெல்வேலி முத்துத்தம்பி பாடசாலையில் குறுகிய இடத் தில் குறைபாடுகளுடன் மேற் கொள்ளப்பட்டு வந்த நிலையில் இதனை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையுடன் இணைப்பது தொடர்பிலான கருத்துக்கள் அண்மைய காலமாக நிலவி வந்தன. (மேலும்....)

வைகாசி 20, 2012

காதோடு காதாக...

மனிதராகப் பார்த்து மாகாணத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்!

கிழக்கில் முதல்வராக வர பலருக்கும் விருப்பம், ஆனாலும் ஒருவர்தானே அப்பதவிக்கு வர முடியும். அதுவும் கிழக்கில் மூவின மக்களும் வாழ்வதால் ஒற்றுமையா நின்று ஒருவருக்கு ஆதரவளிப்பதே புத்திசாலித்தனம். இல்லாவிட்டால் மூன்றாம் அணி இலகுவாக வென்றுவிடும். மத்திய அரசுடன் இணைந்து சென்று மாகாணத்தை அபிவிருத்தி செய்ய அரசாங்க கட்சிக்கு இன, மத பாகுபாட்டைப் பாராது ஓரணியில் நின்று ஆதரவளித்து சேவை செய்யக்கூடிய ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டும். அவரைத் தமிழரா, முஸ்லிமா என்று பாராது மனிதராகப் பார்க்க வேண்டும்.

சிங்கத்தின் கதை உண்மையோ? நடுச்சாமத்தில் போனில் தொல்லை!

வடக்கில் மாகாண சபை தேர்தல் வந்தா பத்திரிகைத்துறை சார்ந்த வேட்பாளர்களே அதிகமாக இருப்பர் போலத்தெரியுது. சிங்கத்தைச் சிபார்சு செய்ததால அவருக்கு ஆதரவா நிண்டு தாங்களும் போட்டி போட்டு வாக்குகளை சேகரித்து அண்ணரை முதலமைச்சராக்குவோம் எண்டு பல இளம் பத்திரிகையாளர்களும் குரல் கொடுத்திருக்கினம். நல்ல விஷயம் தான். ஆனா, எல்லாரும் அரசியலுக்கு வர ஆசைப்பட்டா பத்திரிகையை யார் நடத்துறது. சிங்கம் உண்மையாக வந்திடுமோ எண்டு ஒருவர் படுகலக்கத்தில் தூக்கமில்லாமல் இருக்கிறாராம். நடுச் சாமத்திலயும் போன் எடுத்து அந்த விஷயம் உண்மையோ எண்டு நண்பர்களைக் கேட்டுத் தொல்லை கொடுக்கிறாராம்.

வைகாசி 19, 2012

இது கவிதையல்ல…

மனிதமுள்ள உலகத்தாருக்கு…!!!

மரணித்துக் கொண்டிருக்கும்

மக்களின் குரலிது…!!!

 போரினால் துரத்தப்பட்டோம்

வளமான வன்னிவிட்டு…!!!

பட்டினியால் புதைக்கப்பட்டோம்

துயர் சுமந்த மாத்தளனில்…!!!

(மேலும்....)

வைகாசி 19, 2012

மூன்றாவது தமிழியல் மாநாடு – ரொறன்ரோ

தமிழியலா? அல்லது புலிகளுக்கு LOBBY இயலா?

(Nadchathran Chev-Inthiyan )

7 ஆவது தமிழியல் மாநாடு இந்த மே மாதம் 11, 12 Toronto  இல் கூட்டப்படுகிறது. 2009 ம் ஆண்டுவரை

(புலிகள் அழிவதுவரை) இதனை "லொக்கா" சேரன் எவ்வாறு புலிகளுக்கு வக்காலத்து வாங்க பயன்படுத்தினார் என்பதை நான் 2008 இல் விளக்கி எழுதிய கட்டுரை.

(நட்சத்திரன் செவ்விந்தியன்.)

 கனடாவின் வின்சர் பல்கலைக்கழக சமூக மானுடவியல் துறையினரும் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கற்கைநெறிகளுக்கான அமையமும் இணைந்து நடத்தும் வருடாந்த கல்விசார் தமிழியல் மாநாடு என்ற கோதாவில் 2006, 2007 ஆகிய ஆண்டுகளில் இரண்டு மாநாடுகள் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுள்ளன. குறித்த அதன் அமைப்பாளர்களே மூன்றாவது மாநாட்டை எதிர்வரும் மே 16 ம் திகதி வெள்ளிக்கிழமை ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் கூட்டுகிறார்கள். இம்மாநாட்டின் அமைப்பாளர்களையும் அவர்களது உள்நோக்கங்களையும் இக்கட்டுரை அலசி ஆராய்கிறது.(மேலும்....)

வைகாசி 19, 2012

மத்தள விமான நிலையம்

விமான சேவையை ஆரம்பிக்க நிறுவனங்கள் முன் வருகை

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள விமான நிலையம் திறந்து வைக்கப்படும் நாளிலிருந்து விமான சேவைகளை வழங்க பல விமான சேவை நிறுவனங்கள் முன்வந்தி ருப்பதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண தெரிவித்தார். இவ்விமான நிலை யத்தின் 70 வீதமான நிர்மாண பணிகள் பூர்த்தி செய்யப்பட்டி ருப்பதுடன், விரைவில் அது திறந்துவைக்கப்பட வுள்ளது. இந்த விமான நிலையம் திறந்து வைக்கப் பட்டதும் இதன் ஊடாக 40 வீத பயணிகள் சேவையும், 60 வீத பொதிகள் சேவையும் மேற்கொள் ளப்படவுள்ளன. மத்தள விமானநிலைய கட்டுமானப் பணிகள் பற்றி மாறுபட்ட கருத்துக்களைக் கூறி மக்களைக் குழப் பாமல் உண்மை நிலைமைகளை நேரில் வந்து பார்வை யிடுமாறு எதிர்க்கட்சி உறுப் பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இவ்விமான நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தியடைந்ததும் இதன் ஊடாக ஒரு மில்லியன் பயணிகள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கின் றோம். அதேநேரம், உள்ளூர் விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. முதற்கட்டமாக இரத்மலானை விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத் துள்ளோம். படிப்படியாக ஏனைய உள்ளூர் விமான நிலையங்களும் அபிவி ருத்தி செய்யப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந் ததும், வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் நாட்டின் எந்தப் பாகத்திற்கு செல்ல விரும்பினாலும் ஒரே டிக்கட்டில் அவர் கள் விரும்பிய பகுதிக்குச் செல்ல முடியும். அதற்கேற்ற வகையில் இலங்கை யின் உள்ளூர் விமான சேவைகளும் தரமுயர்த்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

வைகாசி 19, 2012

ஜனாதிபதி தலைமையில் இன்று யுத்த வெற்றிவிழா

  • 13,680 வீரர்கள் பங்கேற்பு

  • முப்படை வீரர்கள், பொலிஸார் அணிவகுப்பு

  • விமானப்படை, கடற்படை போர் கலங்கள் சாகசம்

யுத்த வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வெற்றி விழா அணிவகுப்பு மற்றும் தேசிய படை வீரர்கள் நினைவு தின நிகழ்வு வைபவங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகிறது. காலி முகத்திடலில் நடைபெறவுள்ள வெற்றி அணிவகுப்பு வைபவத்தில் இம்முறை இராணுவம், கடற்படை, விமா னப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் என்ற அடிப் படையில் 13,680 வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இவற்றில் 852 அதி காரிகளும், 12,828 வீரர்களும் அடங்குவர். யுத்தத்தின் போது அங்கவீனமுற்ற படைவீரர்களில் சுமார் 200 பேர் சக்கரநாற்காலியில் இந்த அணிவகுப்பில் செல்லவுள்ளனர்.

வைகாசி 19, 2012

Beijing – shanghai (1381 Km) Train

With the design speed of 350 km, the maximum speed of 300 km initial operation is completed.

Put into trial operation of trains is divided into

first-class car, second-class cars, dining cars, business cars and VIP tourist area.

To meet the special requirements of passengers,

there are dedicated disabled riding area, wheelchair accessible bathrooms and corridors.

The initial operation, plans to open daily operations EMU trains arranged 90 pairs,

the implementation speed of 300 km and 250 km running mixed mode.

Shortest time from Beijing to Shanghai for 4 hours and 48 minutes.

The full fare: second-class seat 555 yuan, 935 yuan first-class seat,

seat (including tourist seats, seat first-class package) 1750 yuan.

வைகாசி 19, 2012

இலங்கையில் போருக்கு பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்க பணிகள்

அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் விளக்கம்

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க தேசிய பாதுகாப்பு உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அமெரிக்காவின் வர்த்தகக் குழுவினரையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேற்றுமுன்தினம் வொஷிங்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்புக்களில் இலங்கையின் தற்போதைய நிலைவரம் மற்றும் அரசாங்கத்தால் முன்னெடுக் கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்தார். போருக்குப் பின்னரான அபிவிருத்திப் பணிகள், நல்லிணக்க நடவடிக்கைகள் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங் கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் பீரிஸ் தலைமையிலான குழுவினர் அமெரிக்க அதிகாரிகளுக்கு விரிவாக எடுத்துக் கூறியிருந்தனர். அதே நேரம், அமெரிக்காவின் பிரதி வர்த்தக பிரதிநிதி மரன்டிசையும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் தனியாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இலங்கையின் பொரு ளாதார நிலைமை மிகவும் ஸ்திர மாக இருப்பதுடன், 2011ஆம் ஆண்டில் இலங்கை 8.3 பொருளாதார அபிவிருத்தி யடைந்திருப்பதையும் அமைச்சர், அமெ ரிக்கப் பிரதிநிதிகளுக்கு எடுத்துக் கூறியி ருந்தார்.

வைகாசி 19, 2012

வர்த்தகம், முதலீடு, சுற்றுலா

இலங்கைக்கு உச்ச அளவிலான ஒத்துழைப்பை வழங்க சீனா தயார்

இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு சீனா உச்ச அளவில் ஒத்துழைப்பு வழங்க முன் வந்துள்ளது.  உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள சீன அரசியல் பேரவையின் தூதுக் குழுவினர் நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே இந்த இணக்கப்பாட்டைத் தெரிவி த்துள்ளனர். அலரிமாளிகையில் நடைபெற்றுள்ள இந்த பேச்சுவார்த்தையில் சீன அரசியல் பேரவையின் உறுப்பினர்கள் மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர் மட்டப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். இலங்கையின் விவசாய உற்பத்திப் பொருட்களை பெருமளவில் சீனாவில் சந்தைப்படுத்துதல் சீன சுற்றுலாப் பயணிகளை மென்மேலும் இலங்கைக்கு வருகைதரச் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் இங்கு முக்கியத்துவம் பெற்றன. இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய் யப்படும் சில பொருட்களுக்கான வரி தற்போது சீனாவில் அதிகரித்துக் காணப் படுகின்றதைச் சுட்டிக்காட்டியுள்ள ஜனாதி பதி அந்த வரித் தீர்வையைக் குறைப்பது தொடர்பிலும் மேற்படி குழுவினரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

வைகாசி 19, 2012

இடம்பெயர்ந்தவர்களுக்கு மட்டுமன்றி முன்னாள் போராளிகளுக்கும் அரசு மீள்வாழ்வளிக்கிறது

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தில் அரச படைகள் வெற்றிகண்டு, இந்நாட்டு மக்களை பயங்கர வாத பிடியில் இருந்து விடுவித்து, அவர்களுக்கு சுதந்தி ரமான சூழலில் நிம்மதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் பெரும் சாதனையை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டதை அடுத்து யுத்தத்தினால் சீர்குலைந்து போன நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய் யும் பணியில் அரசாங்கம் தீவிரமாக ஈடுபட்டு மக்களின் வாழ்க்கை க்கு அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நெடுஞ்சா லைகள், மேம்பாலங்கள், பாலங்கள் ஆகியவற்றையும் செய்து முடி க்கும் இன்னுமொரு சாதனையையும் வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டிருக்கிறது.(மேலும்....)

வைகாசி 19, 2012

நிகரகுவா  வளர்ச்சிப் பாதைக்கு உதவும் அல்பா

தென் அமெரிக்க நாடு கள் இணைந்து இயங்கி வரும் ‘அல்பா’ அமைப்பின் உதவியால் நிகரகுவா பல் வேறு வளர்ச்சிப்பணிகளை செய்திருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் கியூபா மற்றும் வெனிசுலா ஆகிய இரண்டு நாடுகளின் முன்முயற்சியால் அல்பா (தென் அமெரிக்க நாடுகளுக் கான பொலிவாரிய மாற்று) என்ற அமைப்பு உருவாக் கப்பட்டது. இதில் கியூபா மற்றும் வெனிசுலாவோடு, பொலிவியா, ஈக்குவடார், நிகரகுவா மற்றும் சில கரீபிய நாடுகள் உறுப்பு நாடுகளாக இருக்கின்றன. தங்களுக்குள் வர்த்தக ரீதி யான ஒப்பந்தங்களைச் செய்துள்ளதோடு, தேவை யான துறைகளில் கூடுதல் உதவிகளைச் செய்யவும் ஒப்புக் கொண்டிருக்கின்றன.(மேலும்....)

வைகாசி 19, 2012

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டு யாழ். வைத்தியசாலை அவசரசேவைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 8.30 மணியளவில் யாழ். கலட்டிப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இன்று காலை 10.30 மணியுடன் பல்கலைக்கழக விரிவுரைகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் தர்ஷானந்த் பரமலிங்கம் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டார். கடும் காயங்களுக்கு உள்ளான அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாக்குதலில் ஈடுபட்டோரை கண்டுபிடிக்கக் கோரியும் தற்போது ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

வைகாசி 18, 2012

என் 'தலைவன்' இறந்து விட்டான்! உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்!

அவனை நினைத்து அழுவதற்கு உரிமை தாருங்கள்!

(ஜோர்ஜ் குருஷ்சேவ்)

ஒரு மரணத்தினால் வரும் இழப்பின் வேதனை எங்களுக்குத் தெரியும்! அதிலும் சம்பந்தமே இல்லாத மனைவியும், மகளும், அப்பாவிக் குழந்தையும் நாய்கள் போலக் கொல்லப்பட்டு அடையாளமே இல்லாமல், மறைக்கப்பட்ட மிருகத்தனத்தின் கொடுமையும் எங்களுக்குத் தெரியும்! வாழும் காலத்தில் செய்தது சரியோ, தவறோ, சரணடைந்தவர்களுக்கு சர்வதேச விதிகளின்படி பாதுகாப்பு அளித்து, பின்னால் விசாரணைகளுக்கு உட்படுத்தடும் பாரம்பரியம் இல்லாமல், இவர்கள் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டதற்கு காரணமான சூத்திரதாரிகள், மனிதத்திற்கு எதிரான, யுத்தக் குற்றங்கள் புரிந்த குற்றச்சாட்டில் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அளவுக்கு எங்களுக்கு மனிதாபிமானமும் உண்டு. கடவுள், கர்மம், காலம், விதி என்று எதிலெல்லாம் நம்பிக்கையோ. அது அளித்த தண்டனை, பரிசு என்றெல்லாம் குத்திக் காட்டி துயர் அடைந்தவர்களைப் புண் படுத்தும் அளவுக்கு, நாங்கள் மனிதம் சிதைத்து வந்தவர்கள் இல்லை. எங்கள் அப்பாவித் தமிழ் மக்கள் அழியும் போது ஏற்பட்ட அதே மனவேதனை தான்! உங்கள் தலைமையின் அழிவிலும் எங்களுக்கு உண்டு. தன் பதவி வெறிக்காக ஒரு இனத்தின் எதிர்காலத்தையே நிர்முலமாக்கிய கொடுங்கோலனாக இருந்தாலும், எதிரிக்குக் கூட இப்படியான முடிவு இருக்கக் கூடாது என்று நினைக்கும் பண்பு எங்களுக்கு நிறையவே உண்டு! (மேலும்....)

வைகாசி 18, 2012

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜா உரிமை

இரட்டைப் பதிவு பெற முதலில் இலங்கையில் தம்மை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படுபவர்கள் குறைந்த பட்சம் 5 வருடங்கள் அரசாங் கத்தினால் கண்காணிக்கப் பட உள்ளனர். அதன் பின்னர் அவர்கள் இரட்டை பிரஜா உரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்ய தகுதி பெறுவர். இதேவேளை ஏதும் ஒருவருக்கு இரட்டை பிரஜா உரிமை வழங்குவதன் மூலம் நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என ஜனாதிபதி தீர்மானிக்கும் பட்சத்தில் பதிவு செய்யாமலே இரட்டை பிரஜா உரிமை பெற சலுகை வழங்கப்படும். ஏற்கனவே இரட்டைப் பிரஜா உரிமையுள்ளவர்களுக்கு இந்த புதிய திட்டத்தினால் எதுவித பாதிப்பும் ஏற்படாது. (மேலும்....)

வைகாசி 18, 2012

ஆயரின் அரசகாணி அக்கறை

மூன்று தசாப்த கால ஆயுதப்போராட்டம் போதும் போதும் என்னும் அளவிற்கு அழிவுகளையும் அவலங்களையும் அள்ளிஅள்ளி தந்திருக்கிறது. அந்தவிடயத்தில் யுத்தம் சாதி, மத பேதம் ஏதும் காட்டவில்லை. அதே போல யுத்தம் மொத்தமாகவும் சில்லறையாகவும்  வெவ்வேறு தவணையடிப்படையில் உயிருடைமைகளை பறித்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்குள் ஏகமனதாக ஒரு கருத்து இருந்ததென்றால் அது, தாயகத்தில் மீள்குடியேறும் தாகம் ஒன்றுதான்.உயிரிழந்து, உடமையிழந்து, சொந்த நிலமும் இழந்து போன முஸ்லிம்கள் எங்கெல்லாமோ அலைந்து தாயகம் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். வடக்கே அவர்களை வாஞ்சையுடன் வரவேற்க ஆயிரம் ஆயிரம் நல்லுள்ளங்கள் காத்திருக்கின்றார்கள். ஆதலால் அவர்கள் உங்களிடம் இருந்து உபத்திரவம் எதனையும் இனிமேலும் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் ஆயர் அவர்களே! ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதமாக உங்களை முஸ்லிம்கள் பார்க்கவும் இல்லை. (மேலும்....)

வைகாசி 18, 2012

சரத் பொன்சேகாவை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்

சிறையிலுள்ள சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சரவைக்கு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று ஜனாதிபதியின் பேச்சாளர் பந்துல ஜயசேகர நேற்றுத் தெரிவித்தார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் அமைச்சரவை அலரி மாளிகையில் நேற்று முன்தினம் கூடியது. இச்சமயம் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அவர் கூறினார்.

வைகாசி 18, 2012

Sri Lanka calls for Tamils to return

(by noelnadesan)

SRI LANKA has offered Immigration Minister Chris Bowen an escape for Tamil refugees branded a threat by security agencies and locked in indefinite detention in Australia - saying they are needed back home. ''Help is required in Sri Lanka now,'' the country's top envoy to Australia, Thisara Samarasinghe, told The Age. ''Those who have got a negative assessment, please come back to Sri Lanka. Even if you have been sent out from the place, you will be treated justifiably and fairly and you will be permitted to meet up with your families. Of course, law of the land will prevail.'' (more....)

வைகாசி 18, 2012

சீன கம்யூனிஸ்ட் கட்சி உயர்மட்ட  குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைகு வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை நேற்று மாலை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் மற்றும் சட்ட விவகார குழுக்களுக்கான பிரதிச் செயலாளர் வேவ் லிகுவான் தலைமையில் 20 பேர் அடங்கிய உயர் மட்ட குழுவினர் நேற்று மாலை கொழும்பு வந்தடைந்தனர். இவர்கள் கொழும்புக்கு வந்து சேர்ந்ததும் ஜனாதிபதியினை சந்தித்து இருநாட்டு நல்லுறவினை மேலும் வலுப்படுத்தி மேம்படுத்துதல் உட்பட பல விடயங்கள் குறித்து பேச்சு நடத்தியுள்ளனர். இக்குழுவினர் இன்று (18) காலி துறை முகத்தை நேரில் சென்று பார்வையிடவுள் ளனர். அதேநேரம் நாளை (19) எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துவரென வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

வைகாசி 18, 2012

ஆங்கில நாவல் இப்போது

தமிழில் சிவத்தம்பியும் நாற்பது கோமாளிகளும் என்ற திரைப்படமாக வருகிறது.

(நட்சத்திரன் செவ்விந்தியன்)

தாயகம் ஜோர்ச் குருச்சேவ் ஆங்கிலத்தில் எழுதிய Nutty Professor and Forty Evil Clowns என்ற உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவல் இப்போது தமிழில் சிவத்தம்பியும் நாற்பது கோமாளிகளும் என்ற திரைப்படமாக வருகிறது.

(மே 18 இல் உலகெங்கும் வெளியிடப்படவிருந்த மேற்குறித்த படம் சில நாடுகளின் தணிக்கை குழுவினரின் சிக்கல் காரணமாக மே 19 ல் வெளிவரவுள்ளது. மே 17ல் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் என்று தாய்லாந்தின் புக்கே நகரில் காட்டப்பட்ட சிறப்புக் காட்சியைப்பார்த்து புலம்பெயர் திரைப்பட விமர்சனச் செம்மல் நட்சத்திரன் செவ்விந்தியன் விசேடமாக Facebook க்கு எழுதியது இது) (மேலும்....)

வைகாசி 18, 2012

இப்போது இந்திய தூதரின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியையும் பழிக்கிறது ராஜபக்சே கும்பல் என்ன செய்யப்போகிறார் திருமதி சோனியா காந்தி ?

(by vimarisanam - kavirimainthan )

ராஜபக்சே தலைமையில் நடைபெறும் ஒரு புத்தக வெளியீட்டு  விழாவிற்கு இந்திய தூதரை அழைக்கிறார்கள். இந்திய தூதர் – அசோக் கே.காந்தாவும் கலந்து கொள்கிறார். இந்த விழாவில்  ராஜபக்சேயின்  செயலாளர் லலித் வீரதுங்க – ஜனாதிபதியின் முன்னிலையிலேயே ராஜீவ் காந்தியைப் அவமதித்துப் பேசுகிறார்  -   ராஜபக்சேயின்  தூண்டுதல்  இல்லாமல் இது  நடந்திருக்க முடியுமா ? பாதுகாப்பு செயலாளரும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சேயின் சகோதரருமான கோத்தபய ராஜபக்சே நான்காவது ஈழப்போரில் ஆற்றினாரே  “அரும்பெறும் செயல்” – அதை பாராட்டி எழுதப்பட்டுள்ள ஒரு புத்தகம் – இலங்கை ஊடகவியலாளர் சி.ஏ.சந்திரப்பிரேம  எழுதிய  –  ” கோத்தாவின் போர்இந்த புத்தகத்தின்  வெளியீட்டு விழா நேற்று முன்தினம்  கொழும்பில் நடைபெற்றிருக்கிறது. தம்பியின் புகழ் பரப்பும் இந்த நூலை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வெளியிட்டு மகிழ்ந்திருக்கிறார். (மேலும்....)

வைகாசி 18, 2012

63 இலங்கையருடன் அவுஸ்திரேலியா சென்ற மற்றுமொரு அகதிப் படகு!

அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ் தீவுகளுக்கு 63 இலங்கை அகதிகளுடன் சென்ற படகொன்றை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். பேர்த் நகரில் இருந்து 2750 கிலோ மீற்றர் தொலைவில் கொக்கோஸ் தீவு அமைந்துள்ளது. ஆள்நடமாட்டம் இல்லாத இந்தத் தீவிலேயே அகதிகள் படகு தரையைத் தொட்டுள்ளது. அகதிகளை ஏற்றிச் சென் றபடகொன்று இவ்வருடத்தில் கரையைத் தட்டிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இந்தப் படகில் இருந்த அனைவரும் ஆண்கள். இவர்கள் அகதிகள் முகாம் அமைந்துள்ள கிறிஸ்மஸ் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருடத்தில் மாத்திரம் 88 படகுகளில் வந்த 2,946 பேர் அகதி அந்தஸ்து கோரும் நோக்கில் அவுஸ்திரேலியா வந்துள்ளதாக அவுஸ்திரேலியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வைகாசி 18, 2012

அமெரிக்காவில் சிறுபான்மை இனத்தவர் அதிகரிப்பு

அமெரிக்காவில் வெள்ளை இனத்தவர் தொடர்ந்தும் பெரும்பான்மையினர் அல்ல என அமெரிக்க சனத்தொகை கணக்கெடுப்பு சபையை மேற்கோள்காட்டி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிறுபான்மை இனத்தவர்களான ஹிஸ்பானியர், கறுப்பினத்தவர், ஆசியர் மற்றும் ஏனைய கலப்பினத்தவரின் பிறப்பு வீதம் கடந்த ஓராண்டுக்கு மேலாக 50 வீதத்தை தாண்டி இருப்பதாக ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான மாற்றத்திற்கு உள்ளாகி இருப்பது அமெரிக்க வரலாற்றில் இது முதல்முறையாகும்.

வைகாசி 18, 2012

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்!

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க போவதாக அறிவித்துள்ளனர். அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப் பட்டுள்ள தம்மை யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டபோதிலும் விடுதலை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தம்மால் பல்வேறு தடவைகளில் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தப்பட்ட போதிலும் அரசியல் வாதிகளின் உறுதிமொழிகளால் அவை கைவிடப்பட்டன. இருப்பினும் இம்முறை வெறுமனே உறு திமொழிகளால் எம்மை ஏமாற்ற முயற்சிக் கக் கூடாது, மாறாக எமது விடுதலைக்கு வழிவகுக்க வேண்டுமென்றும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

வைகாசி 18, 2012

சிரியாவில் ஏற்பட்டுள்ளது மக்கள் எழுச்சியல்ல, கலகம்;' - ஜனாதிபதி அசாத்

சிரியாவில் மக்கள் எழுச்சி ஏற்படவில்லை என்றும் கலகம் ஒன்றே இடம்பெற்றுள்ளதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி பஷர் அல் அஸாத் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் ஐ. நா. கண்காணிப்பாளர்கள் நிலைகொண்டிருக்கும் நிலையிலும் அங்கு வன்முறைகள் நீடிக்கின்றன. இந்நிலையில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார். “சிரியாவில் ஏற்பட்டிருப்பது மக்கள் எழுச்சியல்ல. அது ஒரு கலகம் என்பதில் சிரிய நாட்டு தலைமை தெளிவாக இருக்கிறது. இவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் நிதி மற்றும் ஆயுதங்களைப் பெற்று நாட்டின் சட்டங்களுக்கு முரணாக செயற்படுகி ன்றனர்” என அஸாத் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சிரியாவின் பெரும்பான்மை மக்கள் தமது அரசுக்கே ஆதரவளிக்கின்றமை அண்மைய தேர்தலில் தெளிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே சிரிய அரசுக்கு ஈரான் ஆயுதங்களை விநியோகித்து வருவதாக ஐ. நா. அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

வைகாசி 18, 2012

வீதி விபத்து மரணங்களை தடுக்க வாகன ஓட்டிகள் தண்டிக்கப்பட வேண்டும்

எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத யுத்தம் முடிவடைவதற்கு முன்னர் அனேகமாக ஒவ்வொரு நாளும் பயங்கரவாதிகளின் தாக் குதலினால் குறைந்தபட்சம் ஓரிருவர் அல்லது பெருந் தொகையினர் கொல்லப்பட்ட செய்திகள் நாளாந்தம் பத்திரிகைகளி லும், வானொலி, தொலைக்காட்சி செய்திகளிலும் வெளிவருவதுண்டு. இதனால், பொதுமக்கள் அன்றைய காலகட்டத்தில் எந்த இடத்தில் பய ங்கரவாதிகளின் தாக்குதல் இடம்பெறுமோ என்ற சந்தேகத்தில் வெளி ப்பிரயாணங்களை தவிர்த்துக் கொண்டு கூடியவரையில் தங்கள் வீடுக ளிலேயே முடங்கிக் கிடந்தார்கள். (மேலும்....)

வைகாசி 17, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 13)

(அ.ஆனந்தன்)

ஜுலை 23 அன்று தொடங்கிய கலவரத்தை 29ம் தேதி வரை முழுவீச்சில் நடக்க அனுமதித்துவிட்டு 29ம் தேதியன்று கலவரத்தைக் கட்டுப்படுத்த என்று துப்பாக்கிச் சூடு ஒன்றினை நடத்தி கலவரத்தை அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்துப்பாக்கிச் சூட்டில் 15 சிங்கள கலவரக்காரர்கள் கொல்லப்பட்டனர். சிங்கள வெறியர்கள் இத்தகைய மிருகத்தணத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது தாக்குதலுக்கு ஆளாகி ஒளிய இடமின்றி அலைந்த பல தமிழர்களுக்கு சாதாரண சிங்கள மக்கள் பலரும், முஸ்லீம் குடிமக்களும் புகலிடம் தந்து காப்பாற்றினர். ஆயிரக்கணக்கில் இக்கலவரத்தில் தமிழ் மக்கள் கொலையுண்டதோடு அவர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைகளும் சூறையாடவும், களவாடவும்பட்டன. பல லட்சகணக்கான மக்கள் அரசு முகாம்களில் தஞ்சமடைந்தனர், லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வந்து குவிந்தனர். (மேலும்....)

வைகாசி 17, 2012

தனி ஈழம் சாத்தியமில்லை, கசக்கும் உண்மைகள்

''தனித் தமிழ் ஈழம் அமைந்திட, ஐ.நா மன்றம் வாயிலாக இலங்கையில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்'' என்ற குரல் உலகம் முழுக்க இப்போது ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. 27 ஆண்டுகள் கழித்து, மீண்டும் டெசோ(தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு) அமைப்பைக் கையில் எடுத்திருக்கும் தி.மு.க தலைவர் கருணாநிதி, ''வாக்கெடுப்பின்போது, புலம்பெயர் இலங்கைத் தமிழர்களையும் அனுமதிக்கவேண்டும். தமிழர் பகுதிகளில் புதிதாகக் குடியேற்றப்பட்ட சிங்களர்களுக்கு வாக்குரிமை வழங்கப்படக் கூடாது'' என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் சாத்தியமா? இதற்கு தமிழ்நாட்டு மக்கள் எவ்வளவு தூரம் ஆதரவு அளிப்பார்கள்? என்ற கேள்விக்கு தமிழகத்தில் வாக்காளர்கள் இதுவரை ஈழப் பிரச்னையை வைத்து எந்தத் தேர்தலிலும் வாக்களித்ததில்லை. ஈழத் தமிழர் விடுதலைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவதில்லை. சொல்லப்போனால், இருந்த இடம் தெரியாத அளவுக்கு இக்கட்சிகளை ஒதுக்கி விடுகிறார்கள். இதற்கு, நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கபட்ட வைகோவே உதாரணம். (மேலும்....)

வைகாசி 17, 2012

யாழ்., மட்டு. அரச அதிபர்கள் நேற்று கடமையேற்பு

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக வவுனியா அரசாங்க அதிபராக நீண்டகாலம் பணியாற்றிய திருமதி பி. எச். எம். சாள்ஸ் நேற்று புதன்கிழமை மதியம் 11.05 மணிக்கு கடமையேற்றார். நேற்று காலை மாவட்ட செய லகத்திற்கு வருகை தந்த புதிய அரசாங்க அதிபருக்கு மாவட்ட செய லக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. மாவட்ட செயலகத்தில் இடம் பெற்ற சமய வழிபாடுகளையடு த்து இந்து, முஸ்லிம், பெளத்த, கத்தோலிக்க சமயத் தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் இவர் கடமைகளை பொறுப்பேற்றார். இதேவேளை முன்னர் மட்டு.மாவட்ட அரசாங்க அதிபராக கடமைபுரிந்த சுந்தரம் அருமைநாயகம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக நேற்று கடமையேற்றார். இவருக்கு யாழ். செயலக அதிகாரிகள் மற்றும் முக்கியஸ்த ர்களினால் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. முன்னர் யாழ். அரச அதிபராக கடமையாற்றிய திருமதி இமெல்டா சுகுமார் இடமாற்றம் பெற்று சென்றதை தொடர்ந்து சுந்தரம் அருமைநாயகம் யாழ். அரச அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வைகாசி 17, 2012

கிரீஸில் ஆட்சி அமைக்கும் முயற்சி தோல்வியில் முடிவு, மீண்டும் தேர்தல்

கிரீஸில் கூட்டு அரசொன்றை அமைக்கும் கடைசி முயற்சியும் தோல்வியடைந்ததை தொடர்ந்து அங்கு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. கிரீஸில் அரசொன்றை அமைக்க நேற்று முன்தினம் கட்சிகளுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையும் எந்த தீர்மானமும் இன்றி தோல்வியடைந்தது. கடந்த 6 ஆம் திகதி கிரீஸில் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை. இதில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸில் முன்னெடுக்கப்படும் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக பெரும்பாலானோர் தமது வாக்குகளை பதிவு செய்திருந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் பிணையை பெறுவதற்காகவே கிரீஸ் உள்நாட்டில் சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டி ருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரீஸில் கூட்டு அரசொன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி கார்லொஸ் பபவ்லிஸ் கடந்த ஒருவாரமாக முயற்சி மேற்கொண்டார். எனினும் கூட்டு அரசொன்றை அமைப்பதற்கு கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் ஒரு முறை தேர்தலை நடத்த வேண்டி ஏற்பட்டுள்ளது.

வைகாசி 17, 2012

அமெரிக்காவில் இலங்கை அரசு தெரிவிப்பு

சர்வதேசம் பரிந்துரைக்கும் தீர்வை விட தேசிய தீர்வே பொருத்தமானது

சர்வதேச சமூகம் பரிந்துரை செய்யும் வகையிலன்றி இலங்கையில் நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை செளபாக்கியம் என்பவற்றை தேசிய தீர்வின் மூலமே பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத்தை வெற்றிகரமாக தோல்வியுறச் செய்து மூன்று வருடங்களே நிறைவடைந்துள்ள நிலையில் இலங்கை பாரிய பல வெற்றிகளைப் பெற்றுக் கொண்டுள்ளதென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் அமெரிக்க செனட் சபையினரைச் சந்தித்த போது தெரிவித் துள்ளார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அந்நாட்டின் செனட் சபை உறுப்பினர்களைச் சந்தித்து இலங்கையின் தததற்போதைய நிலைமைகள் குறித்தும், எதிர்காலச் செயற்பாடுகள் சம்பந்தமாகவும் விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார். யுத்த வெற்றியின் பின்னர் உருவாகியுள்ள வாய்ப்புகள் தொட்ரபில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன் அதற்கேற்ப செயற்பாடுகள் தேசிய ரீதியானதாக அமைய வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் இந்த செயற்பாடுகள் சர்வதேச மற்றும் பலமுள்ள நாடுகளின் அனுமதியுடன் செயற்படுத்த வேண்டியதல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். கற்றுக்கொண்டு பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளைத் தற்போது நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதில் அரசாங்கம் விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வைகாசி 17, 2012

யூரோ நிதி நெருக்கடி

ஒன்றிணைந்து செயற்பட ஜெர்மனி - பிரான்ஸ் இணக்கம்

பிரான்ஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற பிரான்கொயிஸ் ஹொலன்டே யூரோ நிதி நெருக்கடிக்கு தீர்வுகாண ஜெர்மனியுடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியாக நேற்று முன்தினம் பதவியேற்ற ஹொலன்டே பதவியேற்ற கையோடு ஜெர்மனிக்கு விரைந்தார். அங்கு அவர் ஜெர்மனி அதிபர் அன்ஜலா மெர்கலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் கிரீஸ் மீதான கடன் பிணையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இரு நாட்டுத் தலைவர்களும் இனங்கினர். அத்துடன் எதிர்வரும் 23 ஆம் திகதி இது தொடர்பில் விளக்கும் யூரோ மாநாட்டை கூட்டவும் தீர்மானிக்கப் பட்டது. முன்னதாக ஹொலன்டே தனது தேர்தல் பிரசாரத்தில் யூரோ நாடுகளின் பட்ஜட் கட்டுப்பாட்டு திட்டத்தை மீள்பரிசீலனை செய்வது குறித்து தாம் பேச்சு வார்த்தை நடத்தவுள்ள தாக குறிப்பிட்டிருந்தார். எனினும் இதற்கு ஜெர்மனி அதிபர் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யூரோ மண்டல நாடுகளின் நிதி நெருக்கடியில் தீர்மானமிக்க சக்திகளாக பிரான்ஸ், ஜெர்மனி விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

வைகாசி 17, 2012

பொலிஸ், பொதுமக்கள் நல்லுறவு இன்று வலுவடைந்து வருகிறது

பொலிஸ் அதிகாரம் வேண்டும், காணி அதிகாரம் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து, இவை குறித்து அரசாங்கம் உத்தரவாதமளிக்காத பட்சத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள மாட் டோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியோ விரும்பாமலோ இனப்பிரச்சினைக்கான தீர்வை காலதாமதப்படுத்துவதற்கான இந்த நிலைப் பாட்டில் இருந்து சற்றேனும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லையென்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள். பொதுவாக ஒரு கட்சி பிளவுபடுவதற்கு அக்கட்சியின் பிரதான தலைவர்க ளுக்கிடையில் இருந்துவரும் கொள்கை அடிப்படையிலான கோபதாபங்க ளும் ஒரு காரணம். அது போன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு சாரார் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருக்கும் போது இன்னொரு சாரார் நாம் எமது கொள்கையை விட்டுக் கொடுக்கக் கூடாதென்று வாதாடுகிறார்கள். (மேலும்....)

வைகாசி 17, 2012

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதியை குறைக்க இந்தியா முடிவு

ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க இந்தியா முடிவுசெய்துள்ளது. கடந்த வாரம் மூன்றுநாள் சுற்றுப் பயணமாக இந்தியாவிற்கு வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ஈரானிடமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை இந்தியா குறைத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார். இதனையடுத்து ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் மசகு எண்ணெய்யை 11 சதவீதத்துக்கும் மேல் குறைத்து 15.5 மில்லியன் தொன் எண்ணெய் மட்டும் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. மாநிலங்களவையில் பெட்ரோலியத்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என். சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் இதைத் தெரிவித்தார். ஈரானிடமிருந்து மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் பொருளாதாரத் தடையை சந்திக்க நேரி டும் என்றும் உலக நாடுகளை அமெரிக்கா எச்சரித்து வருகிறது. தற் போது இந்தியாவும் அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு பணிந்து ஈரானி டமிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை குறைத்துள்ளது. இப்படி மசகு எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு குறைத்தால், ஏற்கனவே அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோலியப் பொருள்களின் விலை மேலும் உயரக் கூடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வைகாசி 17, 2012

யாழில் பொலிஸார் இரவில் ரோந்து நடவடிக்கை: 22 பேர் கைது

யாழ் மாவட்டப் பொலிஸார் இரவு நேரத்தில் மேற்கொண்டுவரும் ரோந்து நடவடிக்கைகள் காரணமாக நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டவர்களும் மற்றும் இரவு நேரத்தில் போதிய காரணங்கள் இன்றி நடமாடியவர்களும் கடந்த 6 ஆம் திகதிக்கும் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு வார காலத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரீ குகணேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக யாழ். மாவட்டப் பொலிஸ் நிலையங்கள் தமது பகுதிகளில் இரவு வேளைகளில வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமின் டி சில்வாவின் பணிப்புரைக்கு ஏற்ப யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக இரவு ரோந்து சேவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்ட சந்தேக நபாகள் 12 பேரும் போதிய காரணங்கள் இன்றியும் தம்மை அடையாளப்படுத்த முடியாதவர்கள் என சந்தேகத்தின் பெயரில் 22 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸாரால் 4 பேரும் சாவகச்சேரிப் பொலிஸாரால் 2 பேரும் ஊர்காவற்துறைப் பொலிஸாரால் 8 பேரும் தெல்லிப்பழை பொலிஸாரால் 3 பேரும் பருத்தித்துறை பொலிஸாரால் 7 பேரும் நெல்லியடி பொலிஸாரால் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ___

வைகாசி 17, 2012

அமெரிக்க நெருக்கடிக்கு அடிபணியும் அவலம்

அண்மையில் இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், ஈரானிலிருந்து மேற்கொள் ளும் எண்ணெய் இறக்குமதியை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார். அவ்வாறு செய்யாவிட்டால் அமெரிக்கத் தரப்பி லிருந்து இந்தியாவுக்குத் தரப்படும் நிதியுதவி திட்டங்கள் வெட்டப்படும் என்றும் கோடிட்டுக் காட்டினார். அமெரிக்காவின் மிரட்டலை ஏற்காத சில ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா நிதி வெட்டு மூலம் அண்மைக் காலங்களில் தண் டனை வழங்கியுள்ளது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி யுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய மேலாதிக்க ஊடுருவலைத் தீவிரப்படுத்தி வரு கிறது. இதற்காக நேட்டோ ராணுவ அமைப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறது. மேற்கு ஆசியப் பகுதியில் பெரும் அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் கொண்ட ஒரே நாடான ஈரான் அமெரிக்காவின் முக்கிய இலக்காக உள்ளது.(மேலும்....)

வைகாசி 16, 2012

முஸ்லிம்கள் தாக்கப்பட்ட வேளைகளிலெல்லாம் கூட்டமைப்பும் கருணாநிதியும் கண்டிக்காதது ஏன்?

மாவை சேனாதிராஜா அவர்கள் இச்சபையில் முன்வைத்துள்ள பிரேரணையின் ஆரம்பத்திலே, “சொல்லப்பட்ட ஆயுதப் போராட்டம் நடைபெற்ற பொழுது” எனக் குறிப்பிட்டார். அவர்கள் ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. தாம் ஆயுதம் தூக்கி னார்கள் என்பதை ஒத்துக்கொண்டிருக் கின்றார்கள். அத்துடன் “ஆயிரக்கணக் கான தமிழர்களும் ஏனையவர்களும் வடக்குக், கிழக்கிலுள்ள தமது வதி விடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் ளார்கள்” எனக் குறிப்பிட்டார். “ஏனையவர்கள்” என்று யாரைக் குறிப்பிட்டீர்கள்? அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தவர்களா, கன்னடப் பிரதேசத்தவர்களா? ஏன் உங்களுக்கு “முஸ்லிம்கள்” எனக் குறிப்பிடுவதற் குக் கூச்சம்? என்று நான் கேட்க விரும்புகின்றேன். 20 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து எழுபத்தை யாயிரம் முஸ்லிம்கள் விரட்டப்பட்டார்கள். 75 ஆயிரம் மக்கள் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்டனர். இது தங்கள் தாயகம் என்றும் அதில் தாங்களே ஆட்சி நடத்துவோம் என்றும் அவர்கள் கூறினார்கள். எங்களுடைய முஸ்லிம்களும் அங்கிருந்தார்கள். மோசமான உடை அணிந்திருந்த அவர்கள் தங்களால் எடுத்துக் கொள் ளக்கூடிய உடைமைகளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்கள். இந்தக் கதை உங்களுக்கு நன்கு தெரியும். இது இவ்விதம் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதற்காக கண்டனத்தையோ அந்த மக்களுக்காக கவலையையோ தெரிவிக்கவில்லை. (மேலும்.....)

வைகாசி 16, 2012

பிரான்ஸ், கிரீஸ் தேர்தல் உணர்த்துவது...

பிரான்சிலும் கிரீஸிலும் நடைபெற்ற தேர் தல்களில் முடிவுகள் அதிர்ச்சியை ஒன்றும் கொண்டுவரவில்லை. உக்கிர மான உலகப் பொருளாதார நெருக்கடி மக் கள் மீது சொல் லொண்ணா துன்பத்தைத் திணித்துள்ளது. இந்நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக உலக முதலாளித்துவமும், சர்வதேச நிதிமூலதன மும் கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வந்த நடவடிக் கைகளுக்கு எதிராக மக்கள் கிளர் ச்சிகள் மிகவும் விரிவடைந்து வந்ததைப் பார்த் தோம். பொருளாதாரநெருக்கடியிலிருந்து மீள்வதற்காக அவை மேற்கொண்ட நட வடிக்கைகள் ஒவ்வொன்றும் புதிய நெருக்கடிகளை உருவாக்கி, மக்களின் வாழ்வாதாரங்களின் மீது மேலும் கடு மையான பாதிப்புகளை உருவாக்கின. கடைசியாக அவை மேற்கொண்ட முயற் சிகளில் முக்கியமானது ‘‘சிக்கன நட வடிக்கைகள்’’ (`யரளவநசவைல அநயளரசநள’) என்ற பெயரில் மக்களுக்கு அளித்து வந்த நலத்திட்டங்கள் பலவற்றை நீக்கியதாகும். இதனால் மக்களின் வாழ் நிலை மிகவும் மோசமாக சரிந்தது. இவை மக்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது இயற்கையாகவே கோபமடைய வைத்தது. (மேலும்.....)

வைகாசி 16, 2012

பின்னணியில் சில திரைமறைவு சக்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்கும் இரகசிய முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பா.அரி​யநேந்திரன்

2004 இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் புலிகளின் மட்டக்களப்புக்கான வேட்பாளர்கள் பட்டியலில் கௌசல்யனூடாக இடம்பிடித்துக் கொண்ட அரியநேந்திரனால்  தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. அன்று புலிகள் இயக்கத்தில் கருணாவின் பிரிவால் ஏற்பட்டிருந்த குழப்பநிலையை சாதுரியமாக பாவித்து அப்போது வெற்றிபெற்றிருந்த சிறந்த சமூக சேவையாளரான கிங்ஸ்லி இராசநாயகத்தை பதவியில் இருந்து விலக்குவதன் மூலம் தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வருவதற்கான சதி முயற்சியை அரியநேந்திரன் எடுத்தார். கௌசல்யனின் ஊடாக கிங்ஸ்லி இராசநாயகத்தை இராஜினாமா செய்யுமாறு அரியநேந்திரன் தூண்டியிருந்தார். ஆனால் இராசநாயகம் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் என்றவகையில் புலிகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்திருக்கவில்லை. இதன் விளைவாக ஒக்டோபர் 14-2004 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் படுகொலை செய்யப்பட்டு அவரது இடம் அரியநேந்திரனுக்கு வழங்கப்பட்டது. கிங்ஸ்லியின் கொலைக் குருதியால் பாக்கியசெல்வம் அரியநேந்திரன் தனது பட்டாபிசேகத்தை நிறைவு செய்து கொண்டார். (மேலும்.....)

வைகாசி 16, 2012

குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்.

யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். (மேலும்.....)

வைகாசி 16, 2012

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் தூக்குத் தண்டனை நிறைவேற்றம்

ஈரான் அணு விஞ்ஞானியை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஈரானில் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரான் அணு விஞ்ஞானியான மசூத் அலி மொஹமதி கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரியில் அவரது வீட்டுக்கருகில் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவரை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 வயதான மஜித் ஜமாலி பாஷி என்பவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் பாஷி இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொஸாட்டிற்கும் உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பாஷி, மேற்படி அணு விஞ்ஞானியை கொல்ல மொஸாட்டிடம் இருந்து 120,000 டொலர்களை வாங்கியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மசூத் அலி மொஹமதி தெஹ்ரான் பல்கலைக்க ழகத்தின் அணு பெளதீ கவியல் விரிவுரையாளர் ஆவார். ஈரான் அணு விஞ்ஞானிகள் தொடர்ச் சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தமது அணுச் செயற்பாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, இஸ்ரேல் தொடர்ந்து செயற்பட்டு வருவதாக ஈரான் குற்றம்சாட்டுகிறது. தூக்குத் தண்டனைக்கு உள்ளான பாஷி கடந்த ஜனவரியில் ஈரான் தொலைக்காட்சியில் வாக்குமூலம் அளித்திருந்தார். இதில் உளவுச் செயற்பாடுகள் குறித்து தகவல் அளித்ததோடு அணுவிஞ்ஞானியை கொலை செய்வதில் தொடர்பு பட்டிருந்ததாகவும் ஒப்புதல் அளித்தார்.

வைகாசி 16, 2012

கருத்து சுதந்திரத்திற்கு எதிரான மம்தா பானர்ஜியின் நடவடிக்கைகளை கண்டித்து கண்டனக் கருத்தரங்கம்

ஆட்சியாளர்கள் நமது சமூக அமைப்பை வெகு வேகமாக பாசிசத்தை நோக்கி கொண்டு சென்று கொண்டுருக்கிறார்கள் வரலாற்றில் ஹிட்லர் , முசோலினி ஆகியோர் தங்கள் நாடுகளில் நிலை நாட்டிய பாசிசத்தின் ஐந்து முக்கிய கூறுகள் இருந்தன. ஓன்று மிதமிஞ்சிய தேசிய வெறிவாதம், இரண்டு நாடளுமன்றங்கள் அரட்டை அரங்கங்களாக குறைக்கப்படுவது, மூன்று அரசின் தாளத்திற்கு ஏற்ற வகையில் ராகம் போடும் நீதி அமைப்பை உருவாக்குவது, நான்கு தொழிற்சங்கங்கள் போன்ற உழைப்பாளரின் நலன்களுக்காக பாடுபடும் ஜனநாயக அமைப்புகள் ஒடுக்கப்படுவது, ஐந்து கருத்து சுதந்திரத்தின் குரல் வலை நெறிக்கப்படுவது. பாசிசத்தின் இந்த ஐந்து அம்சங்களும் சிறிய பெரிய அளவுகளில் நமது நாட்டில் தலைதூக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது. பாரளமன்றத்தின் மாண்பும், மரபும் எவ்வாறு சீரழிந்து கொண்டுள்ளது என்பதை நிறைய வார்த்தைகளில் விளக்கத் தேவையில்லை. (மேலும்.....)

வைகாசி 16, 2012

எழுத்தாளர் விழா 2012 - அவுஸ்திரேலியா

வைகாசி 16, 2012

‘பா’ பட குழந்தை நட்சத்திரம் நேபாள விமான விபத்தில் பலி

நேபாளில் நேற்றுமுன் தினம் காலை நடந்த விமான விப த்தில் அமி தாபின் “பா” படத்தில் நடி த்த குழந்தை நட்சத்திரம் தருணி சச் தேவ் பலியா னார். ரஸ்னா விளம்பரம் உட்பட 50 விளம்பரப் படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் தருணி சத்தேவ் (14). அமிதாப் பச்சன் நடித்த ‘பா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் தருணி பிரித்விராஜ் மற்றும் பிரியாமணியுடன் வெள்ளி நட்சத்திரம் மற்றும் சத்யம் ஆகிய மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இது தவிர ஷாருக்கானின் ரியாலிட்டி வினாடி வினா நிகழ்ச்சியிலும் தோன்றியுள்ளார். அவரும், அவரது தாயாரும் நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து பிரபல சுற்றுலாத்தலமான ஜோம்சோமுக்கு சிறிய ரக விமானத்தில் சென்றனர். அந்த விமானத்தில் 21 பேர் இருந்தனர். நேற்று முன்தினம் காலை 9.45 மணிக்கு ஜோம்சோம் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது அந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் தருணி மற்றும் அவரது தாயும் பலியாகினர்.

வைகாசி 16, 2012

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் அரசு அக்கறை - ஐ.தே.க.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான உண்மையான அக்கறை அரசாங்கத்திற்கு இருப்பதாக எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஐ. தே. க. சிரேஷ்ட எம்.பியுமான ஜோன் அமரதுங்க கூறியுள்ளார். ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க அடங்கலான ஐ. தே. க. தூதுக் குழு நேற்று முன்தினம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இந்த சந்திப்பில் ஜோன் அமரதுங்கவும் கலந்து கொண்டார். இந்த சந்திப்பு குறித்து பி. பி. சி. செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்த ஜோன் அமரதுங்க; இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு உண்மையான தேவை உள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவு குழுவுக்கு அழைத்து வர ஐ. தே. க. ஒத்துழைக்க வேண்டுமென இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி கோரினார். இரு பிரதான கட்சிகளும் இணைந்து ஏனைய கட்சிகளை தெரிவுக் குழுவுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். தாம் முன் வைக்கும் விடயங்களை அரசாங்கம் ஏற்குமானால் த. தே. கூட்டமைப்பை தெரிவுக் குழுவுக்கு அழைத்துவர வாய்ப்பாக அமையும் என ஐ. தே. க. சுட்டிக்காட்டியது.

வைகாசி 16, 2012

2 ஜி ஊழல் வழக்கு

முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு பிணை

2 ஜி ஊழல் வழக்கில் கைதான இந் திய முன்னாள் தொலைத் தொடர் புத்துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு நேற்றுப் பிணை வழங்கப்பட்டது. இதையடுத்த திகார் சிறையிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். 2ஜி ஊழல் வழக்கில் ஆ. ராசா கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தி.மு.க எம். பி. கனிமொழி உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டு திகாரில் அடைக்கப்பட்டனர். அவர்களில் 12 பேர் பிணையில் விடுதலையாகி வெளியே உள்ளனர். மொரிசியஸ் நாட்டில் உள்ள டெல்பி இன்வஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்தில் ராசாவுக்காக ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை மாற்றித் தந்துள்ளது. இந்நிலையில் ராசாவை விடுதலை செய்தால் அவர் சாட்சிகளை குலைத்துவிடுவார் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை 15ம் திகதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று ராசாவுக்கு பிணை வழங்கி நீதிபதி சைனி உத்தரவிட்டார். இதையடுத்து கிட்டத்தட்ட 15 மாதங்களுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையிலிருந்து ராசா விடுதலையாகிறார்.

வைகாசி 16, 2012

சகலவித இனவாதத்தையும் நிராகரிக்கிறோம் - ஜனாதிபதி

தேசிய ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய சாதி, மத, பிரதேச பேதங்களை ஏற்படுத்தும் செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வேண்டுகோள் விடுத்தார்.  “சிங்களவர்களாக இருந்தாலும் தமிழர்கள் அல்லது முஸ்லிம்களாக இருந்தாலும் அனைத்துவிதமான இனவாதத்தையும் நாம் நிராகரி க்கிறோம். இலங்கையில் எந்தவித இனவாத சக்திகளும் தலைதூக்க நாம் இடமளிக்க மாட்டோம்” என ஜனாதிபதி கூறினார். இலங்கையின் முன்னேற்றத்தையும் அதன் நல்லிணக்க நடவடிக்கைகளையும் இனவாதம் சீர்குலைத்துவிடுவதன் காரணமாக வானொலி, தொலைக்காட்சி அலைவரிசைகள், பத்திரிகைகள் ஆகியவற்றின் ஊடாக எந்தவிதத்திலும் இனவாத ஆக்கக்கூறுகள் தலைதூக்க இடமளிக்க வேண்டாமென அனைத்து ஊடக தலைவர்களையும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். இலங்கையிலிருந்து பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின்னர் இலங்கை வாழ் மக்கள் அனைவரும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும் வாழ்வதையே தான் பார்க்க விரும்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வைகாசி 16, 2012

புலிகளால் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீ மஹா போதி படுகொலையின் 27 ஆவது ஆண்டு நிறைவு!

புலி பயங்கரவாத அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான படுகொலைகளில் ஒன்றான, 146 பௌத்த பக்தர்களை அவர்களது புனித் தளமான அநுராதபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மஹா போதி விகாரையில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்த சம்பவத்தின் 27 ஆவது ஆண்டுநிறைவு இன்றாகும். 1985 ஆம் ஆண்டு மே 14 அம் திகதி நிகழ்ந்த இக் கொடூர சம்பவமானது, முழு நாட்டையும், முழு உலகத்தாரையும் திகைக்கவைத்த ஒரு சம்பவமாகும். சிறுவர்கள், பெண்கள் மற்றும் மதகுருக்கள் என பாரபட்சம் பாராமல் இப் பயங்கரவாதிகள் அனைவரையும் கொண்றுகுவித்தனர். பின்னர் இச் சம்பவமானது புலிபயங்கரவாத அமைப்பின் தலைவரான பிரபாகரனின் தந்திர உத்தியாகும் என்பது தெரியவந்தது. ஏனெனில் இதன் மூலம் அப்பாவி தமிழ் மக்கள் மீது இனவாத வெறுப்பை ஏற்படுத்தி இனக் கலவரத்தை தூண்டுவதே பிரபாகரனின் பின்னணி நோக்காக இருந்தது. புலிபயங்கரவாதிகள் இதன் போது சரமாரியான துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டனர். இதில் 85க்கு மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமும் அமைந்தனர். புனித தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மஹா போதி விகாரை ஆகிய பௌத்தர்களின் மிக முக்கிய புனித்தளங்களில் ஒன்றாகும்.

வைகாசி 16, 2012

விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தீவிரவாத போக்குடன் உள்ளனர் - கே.துரைரட்ணசிங்கம்!


விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தீவிரவாத போக்குடன் உள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினத்தின் 26 ஆவது ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

வைகாசி 15, 2012

புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் விடுதலை

புலிகள் அமைப்பிற்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இருவர் அமெரிக்க நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட கனடியரான ரமணன் மயில்வாகனம் மற்றும் அமெரிக்கரான கருணாகரன் கந்தசாமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை அமெரிக்க நீதித்துறை குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன. அமெரிக்காவின் நீதிமன்ற நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பின் பிரகாரம் ரமணன் மயில்வாகனம் திங்கட்கிழமையும் கருணாகரன் கந்தசாமி கடந்த வெள்ளிக்கிழமையும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். (மேலும்.....)

வைகாசி 15, 2012

தெரிவுக்குழுவுக்கு ஆதரவு

ஐ.தே.க., தமிழ் தேசிக் கூட்டமைப்பும் கலந்துகொள்ளும்?

நாடாளுமன்ற தெரிவுக் குழுவை பயனுள்ள கட்டமைப்பாக்குவதற்கு பூரண ஆதரவை வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த நிலைப்பாட்டை வெளியிட்டார். தெரிவுக்குழு தொடர்பில் அரசாங்கம் தமது முழு அர்ப்பணிப்பை செலுத்துமாயின், எதிர்கட்சியினதும் ஏனைய அரசியல் கட்சிகளினதும், ஆதரவினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டார். எதிர்வரும், ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தவுள்ளதாக எதிர்கட்சி அறிவித்துள்ளது. எதிர்கட்சித் தரப்பில் உள்ளடங்கும் அரசியல் தலைவர்களுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க. தனது இரு தெரிவுக்குழு உறுப்பினர்களின் இடத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு விட்டுக் கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் ஐதே கட்சி அறிவித்துள்ளது.

வைகாசி 15, 2012

இலங்கைத் தமிழர் பிரச்னை - ஓர் ஆய்வு (பகுதி 12)

(அ.ஆனந்தன்)

இந்த அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகவும் இலங்கையை அடுத்தடுத்து ஆண்ட கட்சிகள் தமிழர் பிரச்னையை ஓரளவேனும் தீர்க்க எடுத்த நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. இதன் விளைவாக தமிழ் இளைஞர்களின் மனதில் ஒரு கடுமையான வெறுப்பும் விரக்தியும் மேலோங்கி நின்றது. தமிழர் விடுதலை முன்னணி போன்ற நாடாளுமன்றவாத கட்சிகள் கடைபிடித்த சிங்கள ஆளும் வர்க்கத்துடனான சமரசப்போக்கு அவர்களுக்கு உடன்பாடானதாக இல்லை. எனவே அவர்களது குட்டி முதலாளித்துவத் தன்மை வாய்ந்த மனக்கொதிப்பினை உரியவிதத்தில் பிரதிபலித்த பல இளைஞர் அமைப்புகள் உருவாயின. அவற்றில் மிக முக்கியமானது "பிளாட்' என்ற அமைப்பாகும். அந்த அமைப்புகள் தமிழ் உரிமைக்காக ஒருபுறம் போர்க்குணம் மிக்க போராட்டங்களை நடத்தியதோடு அப்பாவி தமிழ் மக்கள் இராணுவத்தால் தாக்கப்படும் போது அதனை எதிர்த்து தாக்கவும் செய்தனர். இந்த போக்குகள் இதை ஒத்த வேறுபல அமைப்புகள் உருவாவதற்கும் வழிவகுத்தன. (மேலும்.....)

வைகாசி 15, 2012

தெரிவுக்குழு பற்றிய கூட்டமைப்பின் அறிவிப்பு சாதகமான சமிக்ஞை

பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்குகொள்வதற்குத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூறியிருப்பது சாதகமானதொரு சமிக்ஞை. இதனை வரவேற்பதாக சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தேச பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் நிபந்தனைகளுடன் கலந்துகொள்வதற்குத் தயார் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப் பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்தார். கூட்டமைப்பின் இந்த அறிவிப்புக் குறித்து கருத்துத் தெரிவித்த சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸவிதாரண, இந்த அறிவிப்பு நல்லதொரு சமிக்ஞை. அவர்கள் பாராளு மன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வோம் எனக் கூறியிருப்பது சாதகமானது. இதனை நான் வரவேற்கின்றேன். (மேலும்.....)

வைகாசி 15, 2012

President - Ranil agree on formula to persuade TNA

(By Rasika Jayakody)

Before the crucial talks between Foreign Minister G.L. Pieris and US Secretary of State Hilary Clinton in Washington, the Government held discussions with the UNP yesterday over the Parliamentary Select Committee (PSC) on the National Question. The Government has promised the UNP that it will walk the extra mile to get the TNA to participate in the PSC. The United National Party has urged the President to form the PSC with the support of the TNA. The UNP has also stated that the Government should be ready to compromise on its rigid stance in an effort to get the TNA to participate in the PSC. The UNP has made this request when a delegation led by Party Leader Ranil Wickremesinghe met President Mahinda Rajapaksa at Temple Trees yesterday morning to discuss the proposed Parliamentary Select Committee. Several senior UNP Parliamentarians namely Tissa Attanayake, John Amaratunge, Joseph Michael Perera, Lakshman Kiriella and Ravi Karunanayake took part in the discussions with the President on behalf of the UNP. (more...)

வைகாசி 15, 2012

சீ-4 6550 கிலோ வெடி மருந்து புதுக்குடியிருப்பில் மீட்பு

  • புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியிலிருந்து கண்டெடுப்பு

  • இதுவரை மீட்கப்பட்ட பெருந்தொகை வெடி மருந்து

புதுக்குடியிருப்பு மற்றும் இரணமடு பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6550 கிலோ எடையுள்ள சீ-4 ரக அதி சக்தி வாய்ந்த வெடிமருந்துகளை இராணுவம் மற்றும் பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர். புலிகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதுங்கு குழியிலிருந்து இதுவரை காலமும் மீட்டெடுக்கப்பட்ட சீ-4 ரக வெடி மருந்துகளில் அதி கூடிய தொகை இதுவாகும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார். (மேலும்.....)

வைகாசி 15, 2012

யாழ். குருநகர் தொடர்மாடி புனரமைப்புக்கு ரூ.70 மில்.

யாழ்ப்பாணத்தில் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத்திட்டத்தினை நவீனமயப்படுத்தி மீள நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு அமைச்சு 70 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. 1994ம் ஆண்டு யாழ் குருநகர் தொடர்மாடி வீடமைப்புத் திட்டம் திறந்து வைத்து மக்களிடம் கையளிக்கப்பட்டது. இவ் வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக் கப்பட்டு 18 வருடங்கள் ஆகியும் தற் பொழுது மக்கள் வாழ முடியாத நிலை யில் உள்ளனர். இத் திட்டத்தில் 160 வீடுகளில் 160 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவ் வீடமைப்புத்திட்டம் 8 வீடமைப்புத் தொகுதிகளாக உள்ளன. கடந்த காலத்தில் நடைபெற்ற சமரின் போது இவ் வீடமைப்புத் திட்டங்கள் கட்டடங்கள் அழிந்துள்ளன. கடந்த 4 மாதங்களுக்கு முன் அமைச்சர் விமல் வீரவன்ச யாழĮ