Contact us at: sooddram@gmail.com

 

மார்கழி 2010 மாதப் பதிவுகள்

மார்கழி 31, 2010

கெட்டுப் போனதா குட்டி யாழ்ப்பாணம்?

யுத்தக் கெடுபிடிகளுக்கஞ்சி வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்க நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்து, கைகால்களை நீட்டி, கொஞ்சம் காற்று வாங்கத் தொடங்கியிருக்கிறார்கள். காற்றில் கொஞ்சம் விஷக் கிருமிகள் கலந்திருந்தால் நோய்நொடிகள் பிடிக்கச் செய்யும்தான். உடனே, ‘அந்த விஷக்காற்றைச் சுவாசித்துவிட்டான் நோயாளி!’ என்று யுத்தப் பிரகடனம் செய்து மீண்டும் இருண்ட குகைகளுக்குள் இளைஞர்களைத் தள்ளிவிட எத்தனிப்பதா? நோய் வருமென்றால், நோய்க்காப்பு அவசியம். பிள்ளைகளுக்கு நோய் வராமல் காக்கவேண்டியது யாருடைய கடமை? வீட்டிலும், பாடசாலைகளிலும், பொதுச் சூழலிலும் நோய்த்தொற்றைத் தடுக்கவேண்டியது பெற்றோர், அதிபர், ஆசிரியர்களினதும், சமூகத்தினதும் கடமையல்லவா? (மேலும்....)

 

மார்கழி 31, 2010

 

அரச நிறுவனங்களின் பெயர் மாற்றம்

 

‘சிலோன்’ என்பதற்கு பதிலாக இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என்ற பதம்

 ‘சிலோன்’ எனப் பெயர் கொண்டிருக்கும் அனைத்து அரசாங்கத் திணைக்களத்தின் பெயர்களையும் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதுவரை காலமும் ‘சிலோன்’ என அழைக்கப்பட்ட அனைத்து அரசாங்க நிறுவனங்களும் இனிமேல் ‘ஸ்ரீலங்கா’ என மாற்றப்படவிருப்பதுடன், இதற்கு அவசியமான சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருப்பதாக நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறினார். உதாரணமாக இத்திட்டத்துக்கு அமைய ‘பாங்க் ஒவ் சிலோன்’ ‘பாங்க் ஒவ் ஸ்ரீலங்கா’, ‘சிலோன் எலக்ட்டிசிட்டி போர்ட்’ ‘சிறிலங்கா எலக்ட்டிசிட்டி போர்ட்’ என்றும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மார்கழி 31, 2010

வடபகுதியின் அபிவிருத்திக்கு புலம்பெயர்ந்த தமிழர்களின் ஆதரவு அவசியம்

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தத்தை அரசாங்கம் வெற் றிகரமான முறையில் கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதியன்று முடிவுக்குக் கொண்டுவந்ததையடுத்து, புலி உறுப்பினர்கள் 12,000 பேர் பாதுகாப்புப் படையினரிடம் சரண டைந்தனர். இவர்களில் 10,992 பேர் ஆண்கள். 2,098 பேர் பெண்கள். இவர்க ளுக்கு ஆயுதப் படையினர் எவ்வித உளவியல் ரீதியிலான, உடல் ரீதியிலான துன்புறுத்தலையும் செய்யாமல் சரியான விசார ணைகளின் பின்னர் நெறியான முறையில் புனர்வாழ்வு நிலையங் களில் சேர்த்து புனர்வாழ்வளிக்கும் நற்பணியை ஆரம்பித்தனர். இவர்களில் 8,894 பேர் திருமணம் முடிக்காதவர்கள். 4,143 பேர் மாத் திரமே திருமணமானவர்கள். இந்த எண்ணிக்கையில் 4,649 பேரைத் தவிர எஞ்சிய அனைவரும் புனர்வாழ்வு அளிக்கப்ப ட்டு பல்வேறு தொழில்களில் பயிற்சி பெற்றதை அடுத்து அவ ர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். (மேலும்....)

மார்கழி 31, 2010

Karuna deplores ‘US embassy lies’

by Shamindra Ferdinando

Deputy Minister Vinayagamoorthy Muralitharan aka Karuna  strongly denies former US Ambassador in Colombo Robert Blake’s claim that he fled Sri Lanka and secured refuge in Tamil Nadu in early 2004 with the help of the then President Chandrika Kumaratunga. "Ambassador Blake’s accusation is absurd," the National List MP told The Island. According to him, the US mission in Colombo, on the basis of unsubstantiated information received from those described as ‘trusted contacts’ in confidential US diplomatic cables had accused his former outfit (the TMVP) of illegal military operations directed at the LTTE. Blake in a secret diplomatic cable dated May 18, 2007, alleged that Karuna had directed his cadres while being in Tamil Nadu, where he remained till July 2006. (more...)

மார்கழி 31, 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க

ஐ.நா. நிபுணர் குழுவுக்கு இலங்கைக்குள் அனுமதி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக் கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கு ஐ.நா. நிபுணர்கள் குழு தனது விரு ப்பத்தைத் தெரிவித்துள்ளது. இந்த ஆணைக்குழுவின் முன்னி லையில் யாரும் சாட்சியமளிக்க முடியும் என்பதன் அடிப்படையில் ஐ.நா. நிபுணர்கள் குழுவும் இலங் கைக்கு வந்து ஆணைக்குழு முன் சாட்சி யமளிக்க விரும்பினால் அதற்கு அரசாங்கம் வீசா அனுமதி வழங்கும். உத்தியோகபூர்வமாக அனுமதி கோர ப்பட்டால் அதற்கு நிபுணர்கள் குழு வுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கும். ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு முன்னி லையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பலர் சாட்சியமளித்து ள்ளனர். (மேலும்....)

மார்கழி 31, 2010

Open letter to Canadian Tamil Congress - Saying CTC a lobbying organization is unconstitutional

Dear CTC board of directors, CTC officials,

It is very sad to see that CTC board unconstitutionally prevents members from raising transparency related concerns to our member of parliament. The reason I wrote this open letter to highlight the issues to other members and community. There is a need for any Tamil organization that try to represent Tamil Canadians to correct their mistakes and provide answers to their members responsibly. Fortunately, there are couple of good Tamil Canadian organizations emerging, so the expectation will become high for good organization practices. (more...)

யாழில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொலைக் கலாசாரம்: பூனைக்கு மணிகட்ட அஞ்சுகிறதா தமிழ்த் தலைமைத்துவம்?

யுத்தம் என்பதைத்தவிர தாம் எப்படியெல்லாம் பிரச்சினைகளுக்கு உள்ளாக்கப்பட்டோம் என்பதையும் அவர்கள் மறந்துவிடவில்லை. இந்தக் கசப்பான அனுபவங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூக்கியெறியும் முன்னர் மீண்டும் தொடங்கியிருக்கிறது காடையர்களின் அட்டகாசம். மழைக்காலம் தொடங்கியவுடன் அதனைச் சாதமாகப் பயன்படுத்திக்கொண்ட கொள்ளையர்கள் தமது கைவரிசையைக்காட்ட ஆரம்பித்தார்கள். வீடுகளில் கொள்ளை, இரவில் தனியாக நடமாடுவோரிடம் பணம் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபர்கள் உயிரைக் காவுகொள்ளவும் தயங்கவில்லை. சங்கானையில் பூசகர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகமும் நேற்றுமுன்தினம் வலிகாமம் வலய உதவிக் கல்விப்பணிப்பாளரின் கொலையும் மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. (மேலும்....)

மார்கழி 31, 2010

மானிடராய் பிறத்தல் அரிதா?

காற்றும், நீரும், வானும். நெருப்பும் பொதுவில் இருக்கின்றன. மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்கிறது என்று ஒரு கவிஞன் கூறியது போல இன்று பூமியை பிரித்து உனக்கு எனக்கு என்று சொந்தம் கொண்டு பாவங்களை செய்யும் இந்த பிறவி ஓர் அரிய பிறவியா? பெற்ற தாயை வீதியில் விட்டுவிட்டு அனாதை என்ற பட்டம் கொடுத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் இந்தப் பிறவி ஓர் அரிய பிறவியா? தேவைக்கு அதிகமாக வைத்துக் கொண்டு தவறு செய்வதும். செய்த தவறை பிறர் கண்டு கொள்ளாமல் இருக்க பிறரையும் தவறு செய்ய சொல்லும் இந்த பிறவி ஓர் அரிய பிறவியா? கால்நடைகள் நடக்கும் பாதையில் புல் பூண்டுகள் வளர்வதையும் மனிதன் தடம் பதித்த பாதையில் புல் பூண்டு ஒழிவதையும் கண்டிருப்போம். பணம் என்கின்ற உயிறற்ற பொருளைப் பற்றி, மனம் என்கின்ற பொக்கிஷத்தை உதறும் இப்பிறவி ஓர் அரிய பிறவியா? காற்றும் நீரும் மாசுபடுத்தி ஓசோன் படலத்தில் ஓட்டை உண்டாக்கிய இப்பிறவி ஓர் அரிய பிறவியா? (மேலும்....)

மார்கழி 31, 2010

நகரப் பகுதிகளில் கட்டடங்களை அமைப்பதற்கான வரி நீக்கம்

வெளிநாட்டு முதலீடுகள் இலங்கைக்கு வருவதை ஊக்குவிக்கும் வகையில் கட்டுமானப் பணிக்கென நகர அபிவிருத்தி அதிகார சபையால் அறவிடப்பட்டுவந்த ஒரு வீத வரியை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த மாநாட்டிலேயே ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இத்தகவலைத் தெரிவித்தார். எதிர்வரும் 10 ஆண்டுகளில் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை 40 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. இதற்கு ஏதுவாக வீடுகள் நீங்கலாக ஏனைய கட்டுமானப் பணிகளுக்கு விதிக்கப்பட்ட ஒரு வீத வரி நீக்கப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இத்திட்டத் துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி யிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மார்கழி 31, 2010

வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர், ஆலயகுரு கொலைகள்

அரசு மீது அபகீர்த்தி ஏற்படுத்த முயற்சி

உரிமைகளுக்கான வலையமைப்பின் அறிக்கையை முற்றாக நிராகரிக்கிறது அரசாங்கம்

தனது கருத்தை வெளிப்படுத்தியமை காரணமாக யாழ். வலிகாமம் கல்விப் பணிப்பாளர் சுட்டுக்கொலை என்ற தலைப்பில் உரிமைகளுக்கான வலைய மைப்பு  என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை முற் றிலும் தவறானது என்று அரசாங்க தக வல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாய கம் ஆரியரட்ன அத்துகல தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கையொ ன்றை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது யாழ்ப் பாணத்தில் உள்ள வலிகாமம் வலயத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் இனந் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டமை தொடர்பாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும் அந்த அறிக்கையில் விடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. (மேலும்....)

மார்கழி 31, 2010

The New Orleans fire and the conditions of youth in America

Five young men and three young women perished in a fire in an abandoned warehouse early Tuesday morning in New Orleans after lighting a fire to keep warm in the freezing temperatures. Flames engulfed the structure. Before firefighters could extinguish the blaze they were all dead, their bodies burned beyond recognition. (more...)

மார்கழி 31, 2010

திருமணத்திற்கு பின் ஆண்களின் குணநலன்களில் மாறுதல்

திருமணத்திற்குபின், ஆண்களின் குணநலன்களில் பெரும்மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிராபட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

மார்கழி 31, 2010

 

இணக்கம் ஏற்பட்டால் பேசுவோம், இல்லாவிட்டால் விடைபெறுவோம்

டர்புர் போராளிகளுடன் (ஜே.ஈ.எம்) இணக்கம் ஏற்படாவிட்டால் டோஹா பேச்சுவார்த்தைகளிலிருந்து அரசாங்கம் விலகிக் கொள்ளும் என சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தெரிவித்தார். இணக்கம் ஏற்பட்டால் இறைவனுக்கு நன்றி தெரிவிப்போம். இணக்கம் ஏற்படாது போனால் பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகிக் கொள்வோம். அரசுக்கெதிராக ஆயுதமேந்துவோருக்கெதிரான இராணுவ நடவடிக்கை தொடரும் அதேவேளை அபிவிருத்தியை விரும்புவோரின் தோள்களை அரவணைப்போம் என்றும் சூடான் ஜனாதிபதி உரையாற்றினார். ஜனாதிபதியின் இந்த உரையை டர்புர் போராளிகள் கண்டித்தனர். போரைப் பிரகடனம் செய்யும் உரையாகவே இதை நாங்கள் கருதுகின்றோம். (மேலும்....)

மார்கழி 31, 2010

கிழக்கில் எங்கும் வெள்ளக் காடு: மூன்று இலட்சம் மக்கள் பாதிப்பு

அடைமழையினால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பிதம்: வீடுகள், வயல்கள், வீதிகள் வெள்ளத்தில்

கிழக்கு மாகாணத்தில் பல தினங்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பெருமளவான பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் சுமார் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் பார்க்கும் இடங்களெல்லாம் வெள்ளக்காடாகவே காட்சியளிக்கின்றன. பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுவாசல்களை இழந்து பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளன. மக்கள் குடியிருப்புகள், வீதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் வீதிப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மழை இனிமேலும் தொடருமானால் வெள்ள நிலைமை மேலும் மோசமடையுமென அஞ்சப்படுகிறது. (மேலும்....)

மார்கழி 31, 2010

மறைந்து வரும் மார்கழியின் அடையாளங்கள்

மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ணக் கோலம் போடுவது வழக்கொழிந்து வருகிறது. கிராமங்களிலும் இதேநிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது. மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ணக் கோலங்களும், தூரத்தில் கேட்கும் பெருமாள் கோவில் சுப்ரபாத பாடலும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இவை அனைத்தும் கடந்த சில ஆண்டுகள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருந்தன. இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகின்றன. புவி வெப்பமடைந்து மார்கழி குளிரும் காணாமல் போகும் காலம் விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. (மேலும்....)

மார்கழி 31, 2010

கே.பி பத்மநாதன் இரகசியமாக யாழ் விஜயம், பிரத்தியேக நிகழ்வுகளிலும் விருந்துகளிலும் பங்குபற்றினார் முந் நாள் புலிகளின் உறுப்பினர்களில் சிலரையும் சந்தித்ததார்!

தன்னை இலங்கை புலனாய்வுத்துறையினரால் மலேசியாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த கே.பி என்று அழைக்கப்படும் பத்மநாபன் கடந்த 21ம் திகதி ரகசியமாக யாழ்ப்பாணம் சென்று அங்கு அவருக்காகவே நடாத்தப்பட்ட சில பிரத்தியேக நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார் என தெரியவருகிறது. தான் நடத்திவரும் நெரடோ என்னும் அமைப்பினூடாக உதவிகளைச் செய்யவே தான் யாழ் விஜயம்செய்ததாக அவர் செய்திகளைக் கசியவிட்டாலும், முந் நாள் புலிகளின் உறுப்பினர்களில் சிலரை இவர் அங்கு சந்தித்ததாகவும் அறியப்படுகிறது. புலிகளின் முந் நாள் ஊடகப் பொறுப்பளர் தயா மாஸ்டரைச் சந்தித்த கே.பி மேற்படி சில நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்துள்ளார். இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட சில முந் நாள் புலிகளின் உறுப்பினர்களையும் இவர் யாழில் சந்தித்ததோடு, தமது உறவினர்கள் வீட்டில் மதிய உணவு அருந்தியதாகவும் யாழில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. யாழில் ஏழைகளுக்கு உதவச் சென்றதாக இவர் பரப்பிவரும் கதைகளுக்கு பின்னணி என்ன என்பதே தற்போது புலப்படாத விடையமாக உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மார்கழி 30, 2010

 

மார்ச்சில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

  • 21 மாநகரசபைகள், 41 நகர சபைகள், 268 பிரதேச சபைகளுக்கு தேர்தல்.

  • ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் வேட்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • அடுத்துவரும் இரு வாரங்களுக்குள் சகல உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படும்.

(மேலும்...)

மார்கழி 30, 2010

இலங்கை வன்முறையற்ற அமைதியான நாடாக மாறும்

இப்போது இராணுவத்திலும் பொலிஸிலும் இருந்து சட்டவிரோதமாக தப் பிச் சென்றவர்கள் தங்களிடமுள்ள சீருடைகளையும் ஆயுதங்களை யும் பயன்படுத்தி அப்பாவி பொதுமக்களிடமிருந்து பணத்தையும், நகை களையும் கொள்ளையடிக்கும் வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக் கின்ற போதிலும் அவற்றின் எண்ணிக்கை இப்போது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்துள்ளன. பாதுகாப்புச் செயலாளர் பாதாள உலகைச் சேர்ந்தவர்களையும், கொள்ளை, கொலைகளில் ஈடுபடுபவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தும் பணியை தானே முன்னெடுத்து செல்ல ஆரம்பித்ததை அடுத்து இந்த வன் முறைகள் குறைந்துள்ளன. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு நகைக் கடையிலிருந்து பண த்தை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கொள்ளைக் கோஷ்டி மிக வும் குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் பொலிஸாரு டன் ஏற்பட்ட மோதலின் போது அனைவரும் கொல்லப்பட்ட சம்பவ த்தையும் நாம் இங்கு ஞாபகப்படுத்துவது பொருத்தமாக இருக்கும். (மேலும்...)

மார்கழி 30, 2010

 

வவுனியா சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்

வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை யிலிருந்து அநுராதபுரத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட ஒரு கைதியை மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்கு கொண்டு வரவேண்டும் என கோரி கைதிகளில் ஒரு தொகையினர் நேற்றுக் காலை முதல் உண்ணாவிரதம் அனுஷ்டித்து வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய கைதிகள் உணவு பரிமாறுவதினை உண்ணாவிரதிகள் தடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சிறைச்சாலையில் 86 கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மன்னாரிலிருந்து விளக்கமறியலுக்கு கொண்டுவரப்பட்ட பாதிரியார் மீது தாக்குதலை நடத்தியமைக்காக குறித்த கைதி அனுராதபுரம் விளக்கமறியல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மார்கழி 30, 2010

விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட" 

புலிகள் இயக்கம் – ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் போராளிகள்??

 

இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது. மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது. சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. (மேலும்...)

மார்கழி 30, 2010

படம் அல்ல - பாடம்

(செ.சண்முகசுந்தரம்)

அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய திரைப்படம் தமிழ் வடிவத் தில் சமீபத்தில் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது. பல நீண்ட தடங் களுக்குப் பின்னர் இப்படத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள். அண்ணலாக கேரளத்தின் மம் முட்டி அற்புதமான நடிப்பை வெளிப் படுத்தி உள்ளார். அம்பேத்கர் நவீன இந்தியாவின் சமூக வரலாற்றை வடிவமைத்தவர்களுள் மிகவும் முக் கியமானவர். பல நூறு ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்கள் அனுபவித்து வந்த கொடுமைகளை எதிர்த்து உரத்துக்குரலெழுப்பியவர். (மேலும்...)

மார்கழி 30, 2010

கட்டற்ற மென்பொருளுக்கு மாறுகிறது கியூபா

கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பெரும் சாதனை படைத்துள்ள கியூபா, கணினித்துறையில் சிறப்பு முத்திரை பதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. லாபத்தையே குறியாகக் கொண்டு இயங்கிவரும் பன்னாட்டு கணினி நிறுவ னங்களின் நடவடிக்கை களைக் கட்டுப்படுத்தும் வகையில் வெளிப்படை யான மற்றும் கட்டற்ற மென்பொருட்களை பயன்படுத்தும் முயற்சி சர்வதேச அளவில் உள்ளது. லாபம் என்பது ஒருபுறமும், மறுபுறத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் மென் பொருட்கள் நாட்டின் பாது காப்பையே கேலிக்கூத்தாக் கும் வகையில் அமைந்துள் ளன என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. (மேலும்...)

மார்கழி 30, 2010

 

2010ல் இந்தியாவின் சிறந்த மனிதர், போர்ப்ஸ் பட்டியலில் ரஜினி!

போர்ப்ஸ் இந்தியா இதழின் 2010ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை போர்ப்ஸ் வர்த்தக உலகின் மிக முக்கியமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010ம் ஆண்டு சிறப்பிதழ் வெளியாகியுள்ளது. இதில் தொழிலதிபர் ஆனந்த மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிரானி என 2010ம் ஆண்டில் பல துறைகளில் சாதனை படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அந்தப் பட்டியலில் எந்திரன் மூலம் சாதனை படைத்த ரஜினியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் தனது கட்டுரையில், ‘இருபது ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தார்... பாலிவுட்டை வென்றார்’, என்று புகழாரம் சூட்டியுள்ளது. அது மட்டுமல்ல, இந்திய அளவில் வசூலில் முதலிடம் எந்தப் படம் என்பதையும் தெளிவாக்கியுள்ளது இந்த பத்திரிகை. இதுவரை வசூலில் முதலிடத்தில் இருந்த ராஜ்குமார் ஹிரானியின் 3 இடியட்ஸ் படத்தை ரஜினியின் எந்திரன் இரண்டாம் இடத்துக்கு தள்ளிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

மார்கழி 30, 2010

ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழிப் பயிற்சி

தமிழ் மொழியில் சிறந்த முறையில் எழுத, வாசிக்க, பேசக்கூடிய வகையில் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சிகளை வழங்க பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அத்துடன், தமிழ் பேசும் இரண்டாயி ரம் பேரை பொலிஸ் சேவையில் இணைத் துக் கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார். நாட்டிலுள்ள ஆறு பொலிஸ் பயிற்சிக் கல்லூரிகளின் ஊடாக வருடாந்தம் 1200 பேர் வீதம் ஐந்தாண்டு காலத்தில் ஆறாயிரம் பொலிஸாருக்கு தமிழ் மொழி பயிற்சி வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போது தமிழ் மொழி மூலமான பயிற்சிகளை முடித்துக்கொண்ட 600 பொலிஸார் வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் கடமையில் ஈடுபடுத் தப்பட்டுள்ள தாகவும் அவர் சுட்டிக்காட் டினார். (மேலும்...)

மார்கழி 30, 2010

முல்லைத்தீவில் இன்று 800 பேர் மீள்குடியமர்வு

உறவினர், நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ள 200 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 800 பேர் இன்று முல்லைத்தீவு கரைதுறைப்பற்றில் மீள் குடியேற்றப்பட உள்ளனர். கரைதுறைப் பற்றில் உள்ள 33 கிராமசேவகர் பிரிவுகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதோடு, இதுவரை இங்கு மீள்குடியேற்றப்படாதவ ர்களே இன்று மீள்குடியேற்றப்பட உள்ளதாக முல்லைதீவு மாவட்ட திட்டப் பணிப்பாளர் ஸ்ரீரங்கன் கூறினார். மழை காரணமாக மீள்குடியேற்றப் பணிகள் தாமதமாகியுள்ள தாகவும் அவர் கூறினார். முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடி யேற்றப் பணிகள் பெருமளவு நிறைவடை ந்துள்ளதோடு, மேலும் 28 கிராம சேவகர் பிரிவுகளிலே மக்கள் மீள் குடியேற்றப்பட உள்ளனர். கரைதுறைப்பற்றில் 13 கிராம சேவகர் பிரிவுகளிலும், புதுக்குடியிருப்பில் 14 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஒட்டுச்சுட்டானில் ஒரு கிராம சேவகர் பிரிவிலும் மீள்குடியேற்றம் எஞ்சியுள்ளது.

மார்கழி 30, 2010

தமிழ் இனத்தின் உரிமைக்காக மேற்கொள்ளப்படவிருக்கும் நடைபயணத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிக்கும் “மாவீரன் நெடுமாறன்”!

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் ஈழத் தமிழர்களுக்கு நெடுமாறன் என்றால் நன்கு அறிமுகமானவர் என்பதை அனைவரும் அறிவர்! இவர் 1983ஆம் ஆண்டு முதல் ஈழத் தமிழரின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் நாட்டில் மக்கள் ஆதரவை இழந்து, தனிக்கட்சி ஆரம்பித்து அதனையும் இழந்து, இறுதியில் ஈழப்பிரச்சினைக்குள் நுழைந்து தனது வாழ்வை இன்றுவரை தமிழர் பணத்திலேயே நடத்தி வரும் இந்த நபர் வெளியில் நல்லவர், மறைவில் பெரும் சதிகாரர் என்பது யாருக்கும் தெரியாத விடயமாகும். பார்த்தால் அப்பாவி போன்ற தோற்றத்தை உடைய இந்த நபர் நயவஞ்சகத்திலும், சுய நலத்திலும் பெயர் பெற்றவர். (மேலும்...)

மார்கழி 30, 2010

சுதந்திர தெற்கு சூடானை உருவாக்க உதவுவேன் - ஒமர் அல்பஷிர்

தெற்கு சூடானுக்கு சுதந்திரம் பெற்றுக்கொடுக்க உதவப்போவதாக சூடான் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தெரிவித்தார். சூடானின் தெற்குப் பிராந்தியத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டுமா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க ஜனவரி 09 ஆம் திகதி சர்வசன வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி ஒமர் அல்பஷிர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். சூடானின் தென்பகுதியைக் கட்டியெழுப்ப நான் உதவி செய்வேன். தென்பகுதி மக்களுக்கு சகோதர நாடொன்றை உருவாக்குவதில் எமக்கு ஆட்சேபனையில்லை. அங்கு பிரச்சினையிருந்தால் எமக்கும் பிரச்சினையே. இதனால் உறுதியான நட்பு நாடொன்றை உருவாக்க வேண்டும். இதற்கு மக்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் வாக்களிக்க வேண்டும். அவ்வாறு மக்கள் வாக்களித்தால் சுதந்திரமான தெற்கு சூடானை உருவாக்கியவர் என்ற முதற் பெயருடையவராக நானே இருப்பேன். இப்போது பந்து மக்கள் வசம் உள்ளதென்றார்.

மார்கழி 30, 2010

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பின் ஊடாக 13 இலட்சம் அரச ஊழியர்கள் நன்மையடையவுள்ளனர். சுமார் 4 1/2 இலட்சம் ஓய்வூதியக்காரர் களுக்கும் நன்மை கிடைக்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். 1200 ரூபா முதல் 6000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்புகள் ஜனவரி மாதம் முதல் அமுலாகிறது. 6000 ரூபா முதல் 21,000 ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பு ஜுலை மாதம் முதல் அமுலாகும் எனவும் அவர் தெரிவித்தார். முகாமைத்துவ உதவியாளரின் அடிப்படை சம்பள படி வரிசையில் ஆரம்ப நிலையில் இருக்கும் ஒரு ஊழியரின் சம்பளம் 1,300 ரூபாவினால் அடுத்த மாதம் முதல் அதிகரிக்கும். அந்த சம்பள படி வரிசையின் உச்ச மட்டத்தில் உள்ள ஊழியரின் சம்பளம் 3050 ரூபாவினால் அதிகரிக்கும். தொழில் அதிகாரி முதல் சம்பள படி வரிசையில் உள்ளவரின் சம்பளம் 1450 ரூபாவினாலும் உச்ச மட்டத்தில் இருப்பவரின் சம்பளம் 4000 ரூபாவினாலும் அதிகரிக்கும். (மேலும்...)

மார்கழி 30, 2010

வட, தென் கொரிய முறுகலை களைய


கொரியன் உறவு அமைச்சு முன்வர வேண்டும்

வட கொரியாவை பேச்சுக்கு வருமாறு அழைத்துள்ள தென் கொரிய ஜனாதிபதி சமாதானத்தை அடையக் கூடிய சாதனைமிக்க முயற்சிகளை தங்களால் மேற்கொள்ள முடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென் கொரியாவின் உள்நாட்டு அமைச்சில் நடந்த முக்கிய கூட்டமொன்றில் உரையாற்றிய அந்நாட்டு ஜனாதிபதி மேலும் கூறியதாவது: வட கொரியாவுடன் உறவை ஏற்படுத்தும் எண்ணம் தூரத்தி லிருக்காது. கொரியர்களிடையே பேச்சுவார்த்தையை நடத்தி அச்சமான சூழ்நிலையை மாற்ற கொரியன் உறவு அமைச்சு உதவ வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார். வட, தென் கொரியர்களின் உறவுகளைப் பேண கொரியன் உறவு அமைச்சு என்ற அமைப்பு உள்ளது. இது 1950ம் ஆண்டு யுத்தத்தில் பிரிந்துபோன வட, தென் கொரிய உறவுகளையும் குடும்பங்களையும் கண்காணிக்கவென ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். தற்போது எழுந்துள்ள பதற்ற நிலையை இந்த அமைச்சே முன்நின்று தீர்த்துவைக்க வேண்டுமென தென் கொரிய ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டார். கடந்த இரண்டு மாதங்களாக வட, தென் கொரியாவுக்கிடையே சுமுகமான உறவுகள் இல்லை. போர் ஒத்திகைகளால் அங்கு பதற்றம் எழுந்துள்ளது.

மார்கழி 30, 2010

தாக்குதலுக்குள்ளான பாதிரியார் தனிமையாக தங்க சிறைச்சாலையில் ஏற்பாட

வவுனியா சிறைச்சாலையில் உள்ள பாதிரியாரை தனிமையாக தங்க சிறைச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்படுகின்றது. மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உட்படுத்தியதாக கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட போது பாதிரியார் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் குறித்த பாதிரியார் தனிமையாக தங்குவதற்கு ஏற்பாடுகள செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவிக்கின்றார். பாதிரியார் மீது தாக்குதல் மேற்கொண்ட மற்றும் சிறைச்சாலையில் பிரச்சினைகள் இடம்பெற காரணமாக இருந்த 11 கைதிகள் இன்று மாலை 5 மணியளவில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது வவுனியா சிறைச்சாலையில் 72 கைதிகள் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 30, 2010

1.1 திரில்லியன் டொலர்களை குவித்த வளைகுடா எண்ணெய் உற்பத்தி நாடுகள்

வளைகுடாவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தான் இந்த ஆண்டு எக்கச்சக்க வருமானம் பார்த்துள்ளன. 2010ம் ஆண்டு இந்த நாடுகளின் மொத்த வருமானம் 1.1 திரில்லியன் டொலர்கள் ஆக உயர்ந்துள்ளது. முன்னெப்போதும் இல்லாத உச்சகட்ட வருமானம் இது. எண்ணெய் உற்பத்தி வழக்கத்தைவிட அதிகமாக இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதாலும் இந்தளவு வருவாய் பெருகியுள்ளது. இந்த வருவாயின் அடிப்படையைக் கொண்டு எமிரேட்ஸ் தொழில் வங்கியின் தயாரித்துள்ள சமீபத்திய ஆய்வறிக்கையில் எண்ணெய் உற்பத்தி நாடுகளின் 2010 ஆண்டு வளர்ச்சி 5.4 சதவீதம் என்றும் 2011ல் இது 6.6 சதவீதமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இப்போதைய போக்கின்படி பார்த்தால், வரும் 2011ல் 1.15 திரில்லியன் டொலர் அளவு வருமானம் குவிக்கும் இந்த வளைகுடா நாடுகள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 40 சதவீதத்தை தங்கள் வசம் வைத்துள்ளன வளைகுடா நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 29, 2010

சுட்டுக்கொல்லப்பட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளர் உறவினருக்கு அமைச்சர் டக்ளஸ் ஆறுதல்

சுட்டுக்கொல்லப்பட்ட வலிகாமம் பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். மேற்படி நபர் இனந்தெரியாதவர்களால் உரும்பிராயிலுள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்தே அமைச்சர் அங்கு சென்றார். சம்பவம் குறித்து உறவினர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அங்கு விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் மற்றும் இராணுவ அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். இக்கொலை தொடர்பான விசார ணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை இனங்காண்பதற்கு உடனடி நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காத விதத்தில் பொலிஸார் மேற் கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக் கைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

மார்கழி 29, 2010

கூகுளுக்குப் பதிலாக புதிய தேடல் பொறி

சீன அரசு தன்னுடைய நாட்டிற்கே சொந்தமாக என தனியாக ஒரு தேடல் பொறியை உருவாக்கியுள்ளது. கோசோடாட்சின் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தேடல் பொறி கூகுளுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளதாக சீனாவிலிருந்து வெளிவரும் பீப்பிள்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்திற்கும் சீன அரசுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் நீடித்து வந்தது. இந்நிலையில் அரசுக்கு சொந்தமான இந்த கூகுள் சீனாவின் அதிகாரப் பூர்வ தேடல் பொறியாக இனிமேல் பங்கு வகிக்கும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவில் 420 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த தேடல் பொறியில் செய்திகள் வீடியோ, படங்கள் புளொக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் இவற்றுடன் இணைந்த பெய்டுடாட்காம் என்ற உள்ளூர் தேடல் பொறி மூலம் கூகுளில் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என தேடல் பொறி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மார்கழி 29, 2010

ஜனாதிபதி மஹிந்த - இந்திய பாதுகாப்பு செயலர் சந்திப்பு

இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு மேலும் வலு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பலப்படுத்தப்படுமென இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புச் செயலாளர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அவர், நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாட்டுப் படைகளையும் உள்ளடக்கி யதாக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் விஸ்தரிக்க வேண்டுமென இந்தியப் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார். (மேலும்...)

மார்கழி 29, 2010

கடற்றொழிலாளரின் குடும்ப வாழ்க்கையில் ஒளி வீசும்

தேசிய கடற்றொழிலாளர் சம்மேளனம் ஏற்கனவே களுத்துறை, திருகோணமலை, புத்தளம், சிலாபம் மற்றும் கொழும்பு மாவட்டங்களில் அதன் கிளைகளை ஏற்படுத்தி யுள்ளது. சம்மேளனம் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவர் களையும், கரைவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்களையும் அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டுள்ளது. தங்காலை, மாத்தறை, காலி, அனுராதபுரம், பொலன்னறுவை, மொன ராகலை, இரத்தினபுரி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், குரு நாகலை, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் மீன்பிடி சங்கங்களை ஏற்படுத்து வதற்கும் கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள 56 கடற்றொழிலாளர் சங்கங்களின் மூலம் தமது சம்மேளனத்தில் ஆகக்கூடிய அளவிலான அங்கத்தவர்கள் சேர்ந்துடுள்ளார்கள் என்று இந்த சம்மேளனத்தின் ஒன்றிணைப் பாளரான பிரேமசிறி பெரேரா தெரிவித்துள்ளார். (மேலும்...)

மார்கழி 29, 2010

கெமரா ஊடாக கொழும்பு நகரை கண்காணிக்கும் பணி இன்று முதல் ஆரம்பம்

பாதுகாப்பு கெமராக்களினூ டாக கொழும்பு நகரை கண்காணிக்கும் (சி.சி.ரி.வி.) பணிகள் இன்று 29ம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் புறக்கோட்டையிலுள்ள பொலிஸ் நலன்புரி கட்டடத் தொகுதியில் அமைக் கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு இன்று பிற்பகல் 4.00 மணிக்கு விஜயம் செய்யும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சி.சி.ரி.வி. செயற்பாடுகளை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார். முதற்கட்டமாக கொழும்பு நகரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வுள்ளது. பின்பு படிப்படியாக ஏனைய பிரதான நகரங்களில் கெமராக்கள் பொருத்தப்படவு ள்ளன. குற்றச்செயல்கள் மற்றும் விபத் துக்கள் போன்றவற்றை உரிய முறையில் கண்காணித்து உடனுக்குடன் தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.

மார்கழி 29, 2010

காலம் என்பது இயக்கத்தின் அளவீடு

ஒரு கல்லை கிழக்கு நோக்கி நாம் நகர்த்ததக்க ஆற்றலை கொடுக்கும் போது, அதன் இயக்கம் (வெளியாகி மீண்டும் பொருளாகுகையில்) கிழக்கு நோக்கி நகரக்கூடிய அறிவை கிரகித்தே கிழக்கில் மீண்டும் தன் மையத்தையும் எல்லையையும் நிர்ணயித்துக் கொள்கிறது. இது தான் அடிப் படை நகர்ச்சிக்கான தத்துவம். அடுத்து காலம் பற்றிய அடிப்படைக்கு போவோம். காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. இது அல்லாமல் காலம் என எதுவும் இல்லை. காலம் என ஒன்று தனியே இல்லை. காலம் ஒரு மாயையே அல்லாமல் உண்மை அல்ல. சரி உதாரணங்களுடன் பார்ப்போம். பொருளும் வெளியும் பரஸ்பரம் நிலைமாறுவது இயக்கம். இந்த இயக்கத்தின் படிப்படியான நிலைகளின் அளவீடை தான் காலம் என்கிறோம். இந்த அளவீடு என்பது அளக்கும் அல்லது அறியும் பொருளை பொறுத்தது. இதற்கு ஐஸ்ஸ்டீனின் சார்பியல் தத்துவமே மிகச்சிறந்த ஆதாரமாக இருக்கிறது. காலம் என்பது இயக்கத்தின் அளவீடு. அது அளக்கும் அல்லது அறியும் கருவியை (பொருளை) பொறுத்தது என்பது சரி.(மேலும்...)

மார்கழி 29, 2010

ஸ்தான்புல் பேச்சுவார்த்தை ஈரான் மேற்குலக முரண்பாடுகளை களையும்

ஸ்தான்புலில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை கள் நீண்டகால பிரச்சினைக்குத் தீர்வாய் அமையுமென ஈரானின் யுரேனியம் தொடர்பான பேச்சாளர் ஜாலிலி தெரிவித்தார். சிரியாவின் ஜனாதிபதி பஷிர் அல் அஸாத்துடன் தலைநகர் டமஸ்கஸில் ஈரான் உயரதிகாரி கள் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் மெஹ்ராபி ஜாலிலி ஆகியோர் ஈரான் சார்பாகக் கலந்துகொண்டனர். யுரேனியம் செறிவூட்டல் அணு விவகாரம் அனைத்துக்கும் இவர்களே பொறுப்பாயுள்ளனர். இவ் விருவரும் கூட்டாக இணைந்து நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்ததாவது, ஜனவரி 05ல் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகள் மேற்குல கிற்கும் ஈரானுக்குமிடையிலான நீண்டகால முரண்பாடுகளை முடித்துவைக்கும். இருதரப்பு நலன்களையும் பாதுகாக்கும் ஆனால் அவசரமாக ஐ.நா. ஈரான் மீது நான்காவது தடவையாகவும் பொருளாதாரத் தடை விதித்தமை ஆரோக்கிய மான முடிவல்ல எனத் தெரி வித்தனர்.

மார்கழி 29, 2010

கிழக்கு மாகாண வெள்ளப் பாதிப்பு

20 மில்லியன் ரூபா அவசர ஒதுக்கீடு; சேதமடைந்த வீடுகளுக்கு நஷ்டஈடு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 20 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று கூறினார். மட்டக்களப்பிற்கு 20 இலட்சமும் திருகோணமலை மற்றும் பொலன்னறு வைக்கு தலா 5 இலட்சமும் அனுப்பப்பட்டு ள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இதேவேளை சேதமடைந்த வீடுகளுக்காக நஷ்டஈடு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது. பொலன்னறுவை, திருகோணமலை, இரத்தினபுரி, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய மாவட்டங்கள் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் கூறியது. (மேலும்...)

மார்கழி 29, 2010

குடாநாட்டில் மீண்டும் வீதிச்சோதனை ஆரம்பம்

யாழ். மாவட்டத்தில் மீண்டும் ஆரம்பமாகியுள்ள படையினரின் வீதிச் சோதனை நடவடிக்கைகளால் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். குடாநாட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் படையினரின் வீதிச்சோதனை நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. குறிப்பாக நவாலி, சங்கானை, சித்தன்கேணி , தொடிலடி, மாசியப்பிட்டி, அளவெட்டி போன்ற பகுதிகளில் இவ்வாறான சோதனைகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேற்குறிப்பிட்ட இடங்களில் இராணுவத்தினரால் வீதிகளில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் சிறிய ரக வாகனங்கள் வழி மறிக்கப்பட்டு வாகன சாரதியின் அடையாள அட்டை இலக்கம், வாகனத்தின் இலக்கம் என்பன பதிவு செய்யப்படுகின்றன. இந்தப் பதிவு நடவடிக்கைகள் இராணுவ உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு அமைவாகவே தாம் மேற்கொள்வதாக வீதியில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருக்கும் இராணுவச் சிப்பாய் ஒருவர் தெரிவிக்கின்றார்.

மார்கழி 29, 2010

அமெரிக்காதான் மிகப் பெரிய மரண வியாபாரி!  மேற்கு ஆசியாவில் கொள்ளை லாபம்

அமெரிக்காதான் மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆயுதங் களை விற்பனை செய்யும் பெரிய வியாபாரியாக இருக் கிறது என்று ஸ்டாக் ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு மையம் கூறியுள்ளது. 2005 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை மேற்கு ஆசிய நாடுகளுக்கு போர் விமானங்கள், ஏவு கணைகள் உள்ளிட்ட ஆயு தங்களைப் பெருமளவில் விற்றது அமெரிக்காதான் என்று ஆய்வு மையம் சேக ரித்த புள்ளிவிபரங்களிலி ருந்து தெரியவந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பிரான்ஸ் நிறுவனங்கள் தான் அதிகமான அளவில் ஆயுதங்களைத் தயாரித்து வழங்கி வந்தன. தற்போது அமெரிக்க நிறுவனங்கள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டன. (மேலும்...)

மார்கழி 29, 2010

சீனா குறித்த பாப்பரசரின் உரைக்கு பீஜிங் அதிருப்தி

சீன விவகாரங்களில் தலையிடுவதை பாப்பரசர் நிறுத்த வேணடும் என அந் நாட்டு அரசின் பத்திரிகை கூறியுள்ளது. கடந்த 1949ல் சீனாவில் மா சே.துங் தலைமையிலான கம்யூ. கட்சி, ஆட்சியைப் பிடித்த பின், தாவோயிசம், பெளத்தம், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் புராட் டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஆகிய ஐந்து மதங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டன. சீன தலைமை கத்தோலிக்க திருச்சபைக் கும், வத்திகானுக்கும் சம்பந்தம் கிடையாது. ‘தேசாபிமான திருச்சபை என்ற பெயரில், சீன அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் அது இயங்கி வருகிறது. சீனாவில் திருச்சபை ஆயர்களை வத்திகான் நியமிக்க முடியாது. அரசு தான் ஆயர்களை நியமிக்கும். இதனால் சீனா வத்திகான் உறவு முறிந்து 60 ஆண்டுகளாகிவிட்டன. (மேலும்...)

மார்கழி 29, 2010

மதுபான விளம்பரத்தில் நடிக்க சச்சின் மறுப்பு

மும்பை: மதுபான விளம்பரம் ஒன்றில் நடிக்க மறுத்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு மகாராஷ்டிர அரசு பாராட்டு தெரிவித்துள்ளது. ரூ. 20 கோடி வருமானம் தரும் முன் னணி மதுபான விளம்பரத்தில் நடிக்க மறுத்ததற்கு பாராட்டு தெரிவித்து சச்சி னுக்கு சமூகநீதித் துறை அமைச்சர் சிவாஜி ராவ் மோகே கடிதம் எழுதியுள்ளார். சச்சினை நாங்கள் பாராட்டுகிறோம். மதுவுக்கு எதிரான அரசின் பிரச்சாரத் துக்கு சச்சின் மறைமுகமாக உதவிசெய் துள்ளார். மற்றவர்களுக்கும் ஒரு உதா ரணத்தை ஏற்படுத்தியுள்ளார் என மோகே தெரிவித்துள்ளார்.

மார்கழி 29, 2010

சிறிய இடைவேளைக்குப்பிறகு மீண்டும் அரசியல் - லூலா

பிரேசில் ஜனாதிபதி பொறுப் பிலிருந்து விலகிய பிறகு சிறிய இடைவேளை விட்டுவிட்டு மீண்டும் அரசியலில் தனது பங்கை செலுத்தப் போவதாக தற்போதைய ஜனாதிபதி லூலா டி சில்வா அறிவித்துள்ளார். பிரேசில் மக்களிடம் வானொலி மூலம் ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர், பிரே சிலை ஆட்சி செய்வது மிக வும் கடினமான விஷயம் என்று அனைவரும் என்னிடம் குறிப் பிட்டனர். அது சிக்கலானதாக எனக்குத் தோணவில்லை. மகிழ்ச்சிகரமாகவே அந்தப் பணியை நான் செய்தேன்.(மேலும்...)

மார்கழி 28, 2010

மனிதஉரிமைகள் - ஜனநாயகத்தின் மறுபக்கம்

(ரஞ்சித்குமார்)

மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்ற கருத்தியலின் அடிப்டையிற்தான் ஜனநாயகம் தங்கியிருக்கின்றது. நாட்டின் பிரஜைகள் உரிமைகளுடன் வாழுகின்ற பெறுமானத்தின் அடிப்படையிற்தான் நாடொன்றின் ஜனநாயகத் தன்மை அளவிடப்படுகின்றது. உண்மையிலேயே மனிதஉரிமைகள் மதிக்கப்படுமாயின் இந்நாட்டில் பெரும்பாலான அரசியற் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதற்கு வாயப்பிருக்கின்றது. உரிமைகள் மதிக்கப்படாமையே பிரச்சினைகளிற்கான முதற்காரணம் என்பதை நினைவிற் கொள்ளவேண்டும். இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அரசியலமைப்பிலும், ஏனைய சட்டங்களிலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் பிரசைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என்கின்ற கேள்வியே மனிதஉரிமைகள் தினத்தில் அனைவர் முன்னிலையிலும் முன்வைக்கப்படுகின்றது. (மேலும்...)

மார்கழி 28, 2010

“உள்ளே வரவிட மாட்டோம்”  சதிகாரரை தூதராக்கியதற்கு வெனிசுலா எதிர்ப்பு

தூதராக நியமிக்கப்படு வதற்கு முன்பே வெனி சுலாவுக்கு எதிரான கருத் துக்களைச் சொல்லி வந்த லாரி பால்மரை உள்ளே நுழைய அனுமதிக்க மாட் டோம் என்று வெனிசுலா அரசு அமெரிக்காவிடம் திட்டவட்டமாகக் கூறியுள் ளது. வெனிசுலாவின் இடது சாரி ஜனநாயக அரசைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்க முயற்சிகள் அனைவருக்கு தெரிந்த விஷயமான ஒன் றாகும். கூடுதலாக விக்கிலீக் சின் அம்பலங்கள் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தை தோலுரித்துக் காட்டின. இந்நிலையில் வெனிசுலா வுக்கான அமெரிக்கத் தூத ராக லாரி பால்மரை நிய மிப்பதாக அமெரிக்கா அறி வித்தது. இந்த அறிவிப்பைத் தாங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்று வெனிசுலா அரசு அறிவித்தது. (மேலும்...)

மார்கழி 28, 2010

இலங்கையில் இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர்

பாதுகாப்புத்துறையில் இந்தியா - இலங்கை இடை யிலான ஒத்துழைப்பை அதி கரிப்பது குறித்து விவாதிக்க இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் பிரதீப்குமார் கொழும்பு சென்றுள்ளார். மூன்று நாள் பயணமாக அவர், கொழும்பு வந்துள்ளார். இலங்கையில் உள் நாட்டு போர் முடிவுக்கு வந்த பிறகு மேற்கொள்ளப் பட்டுள்ள இநத்ப் பயணத் தின்போது இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட உதவி வழங்குவது குறித்து விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகின. இலங்கை ஜனாதிபதி ராஜபக்சே, அயல்துறை அமைச்சர் ஜி.எல்.பெய்ரிஸ், பாதுகாப்புத்துறை செயலா ளர் கோயபக்த ராஜபக்சே உள்ளிட்டோரிடம் பிரதீப் குமார் ஆலோசனை நடத்த வுள்ளார்.

மார்கழி 28, 2010

யாழில் தொடரும் துப்பாக்கிக் கலாசாரம் பிரதிக் கல்விப் பணிப்பாளரையும் பலிவாங்கியது

யாழ். வலிகாமத்தில் பிரதி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மார்க்கண்டு சிவலிங்கம் (வயது 55) நேற்று நள்ளிரவு இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்குக் கொள்ளையிட வந்த ஆயுததாரிகள் தங்க நகைகளைக் கேட்டு மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதக்காலப்பகுதியில் இடம்பெற்ற நான்காவது தப்பாக்கிப் பிரயோகம் இதுவாகும்.

மார்கழி 28, 2010

யாழ். பழைய பூங்கா ரூ. 10 மில்லியனில் புனரமைப்பு

யாழ்ப்பாணம், பழைய பூங்கா நவீன முறையில் புனரமைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதற்காக வட மாகாண சபை பத்து மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் ஏப்ரல் மாதம் அளவில் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டு ள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். வடபகுதியை நோக்கி வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமான முறையில் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மார்கழி 28, 2010

பி.பி.சி. ஒலிபரப்பிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பாக பி.பி.சி. சிங்களச் சேவையான சந்தேஷியா வெளியிட்ட செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் புலிகளுக்கு ஆதரவானவர்கள் இருக்கிறார்கள் என்ற தலைப்பில் பி.பி.சி. சிங்களச் சேவையான சந்தேஷியா செய்தி வெளியிட்டிருந்தது. எனவே, ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க வேண்டாமென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகரவுக்கு, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், இந்தச் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லையெனத் தெரிவித்திருக்கும் வெளிவிவகார அமைச்சு, வெளிவிவகார அமைச்சருக்கும், அமரசேகரவுக்குமிடையில் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லையென்றும் அறிவித்துள்ளது.

மார்கழி 28, 2010

நவீன நாசகார ஆயுத ஒழிப்பு உடன்படிக்கை: ரஷ்ய பாராளுமன்றம் அனுமதி?

அணு ஆயுத போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைக்கு ஆதரவளித்துள்ள ரஷ்ய பாராளுமன்றம் இந்த ஒப்பந்தத்தில் செய்யப்பட வேண்டிய திருத்த வேலைகள் அடுத்த ஆண்டில் இடம்பெறும் எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விவாதம் ரஷ்யப் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆளும் கட்சியான ஐக்கிய ரஷ்ய கட்சி எம்.பி.க்கள் இந்த நாசகார அணுஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தை வரவேற்றுப் பேசினர். அமெரிக்கா, ரஷ்யாவிடையே நல்லுறவைப்பேண இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும், இறுதிக்கட்ட வாக்களிப்பில் இத் திட்டத்தை ஆதரிப்போம் என அக்கட்சி எம்.பி.க்கள் தெரிவித்தனர். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜனாதிபதி பராக் ஒபாமா, மெத்விடிவ் ஆகியோரிடையே செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை ரஷ்யாவில் செல்லுபடியாக வேண்டுமானால் இதை ரஷ்ய பாராளுமன்றம் மூன்று வாக்கெடுப்பிலும் ஆதரிக்க வேண்டும்.

மார்கழி 28, 2010

பெண்களை தலிபான்கள் தற்கொலைக்கு பயன்படுத்துகின்றமை நிருபணம்

பாகிஸ்தானில் சென்ற சனிக்கிழமை நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் பெண்ணொருவரால் நடத்தப்பட்டது என அரசாங்கம் ஊர்ஜிதம் செய்துள்ளது. ஆப்கானிஸ்தானை அண்மித்துள்ள பாகிஸ்தானின் கஹார் என்ற ஊரில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. உலக உணவு ஸ்தாபனத்தினால் வழங்கப்படும் பொருட்களைப் பெறும் பொருட்டு மக்கள் இங்கு கூடியிருந்தபோதே இந்தத் தற்கொலைத் தாக்குதல் நடந்தது. அதில் 40 பேர் கொல்லப்பட்டனர். தலிபான்கள் இதை உரிமை கோரியிருந்தனர். ஆனால் தற்கொலைதாரி பெண் என்பதற்கான அனைத்து அடையாளங்களும் கிடைத்துள்ளாக பலுகிஸ்தான் மாவட்ட பொலிஸ் தலைமையதிகாரி தெரிவித்தார். பெண்ணின் கூந்தல், கைபாகம், புர்கா என்பவை சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார் இப்பெண் எப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும் ஆராய்ந்து வருகின்றனர். தலிபான்கள் தற்கொலை தாக்குதலுக்குப் பெண்களையும் பயன்படுத்துவதாக முன்னரும் பேசப்பட்டது. ஆனால் இம்முறை அது நிருபண மாகியுள்ளதாக பொலிஸார் கூறினர். புர்கா அணிந்த பெண்ணே இத்தாக் குதலை நடத்தியுள்ளார். பிரதமர் யூசுப் ராஸா கிலானி இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

மார்கழி 28, 2010

காற்றில் பறக்கிறது ஒபாமாவின் வாக்குறுதி  குவாண்டனாமோ சிறை மூடப்படாது

சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குவாண்டனாமோ சிறை யை மூடிவிடுவோம் என்று ஒரு ஆண்டுக்கு முன்னதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த வாக்குறுதி இப் போதைக்கு நிறைவேறாது என்று தெரிய வந்துள்ளது. ஒபாமாவின் வாக்கு றுதியைத் தொடர்ந்து ஒரு ஆண்டில் குவாண்டனா மோவில் இருக்கும் கைதி கள் இடமாற்றம் செய்யப் பட்டு, அந்த சிறை மூடப் படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவரது அறிவிப்பு ஒரு ஆண்டு ஆகி யுள்ள நிலையில், அமெ ரிக்க நிர்வாகத்தால் சிறையை மூட முடியாது என்று கூறப்படுகிறது. (மேலும்...)

மார்கழி 28, 2010

திமுக : மிசா முதல் ஸ்பெக்ட்ரம் வரை

(டி.கே.ரங்கராஜன் எம்.பி.)

இந்திய வரலாற்றில் 2010ம் ஆண்டு ஒரு ஊழல் நிறைந்த ஆண்டாகவே எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தப்படும். காமன் வெல்த் ஊழல், ஆதர்ஷ் ஊழல், ஐ.பி.எல் கிரிக்கெட் ஊழல், பூனா, கொல்கத்தா உள் ளிட்ட பல்வேறு இடங்களில் ராணுவத்திற்கு சொந்தமான நில ஆக்கிரமிப்பு ஊழல், இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் வெளிவந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஊழல் என ஊழல் கொடிகட்டி பறக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் இந்த ஊழல்கள் குறித்த செய்திகள் ஊடகங் களில் உலா வந்துகொண்டிருக்கின்றன.திமுகவை அண்ணா அவர்கள் துவக்கும் போது, இந்த கட்சி சாமானியர்களுக்காகவும், குப்பன்களுக்காகவும், சுப்பன்களுக்காகவும் துவக்கப்பட்டுள்ளது என்றும், பஞ்சை பராரி களுக்காக உருவாக்கப்பட்டுள்ள இயக்கம் இது என்றும் கூறினார். ஆனால் இன்றைக்கு திமுக என்பது டாடா, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு சேவை செய்யும் கட்சியாக மாறிவிட்டது. மாநில சுயாட்சி கேட்ட அந்த கட்சி, மத்திய அதிகாரத்திற்கு சென்றவுடன் மாநில சுயாட்சிகளுக்காக போராடவில்லை. மாறாக அனைத்து துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. (மேலும்...)

மார்கழி 27, 2010

புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய கடுந்தொனியிலான கடிதம் - விக்கிலீக்ஸஸ்

புலிகளுக்கும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கும் இடையிலான போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் ஓகஸ்ட் 18 2005 அன்று இந்த இரகசிய தகவல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த இரகசியத் தகவலில் இவ்வாறு என்ட்விசில் கூறியிருக்கிறார். ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது]. இலங்கை அரசாங்கத்திற்கு வேண்டுகைக்கமைய கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தினது தூதுவர் புலிகள் அமைப்பினை பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடுமாறு பிறசல்சுக்குப் பரிந்துரைக்கும். (மேலும்...)

மார்கழி 27, 2010

கனடாவில்

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று தமிழ இளைஞர்கள் கைது!

கடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட மூன்று தமிழ இளைஞர்கள் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் ஹல்பா பிரதேசத்தில் வைத்து குறித்த கடனட்டை மோசடி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இலங்கை இளைஞர்கள் மூவரும் ஏனையவர்களின் கடன் அட்டைத் தகவல்களை கொள்ளையிட முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா ரொரன்ரோவில் வசிக்கும், சுகிர்தன் ஸ்ரீஸ்கந்தராசா, பரணீதரன் சடாச்சரம் மற்றும் தயாபரன் தனிநாயகம் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளின் தன்னியக்க பணப்பரிவர்த்தனை இயந்திரம் மீது யாருக்கும் சந்தேகம் வராத வகையில் கடன் அட்டைத் தகவல்களைத் கொள்ளையிடும் கருவியைப் இவர்கள் பொருத்தியுள்ளனர். (மேலும்...)

மார்கழி 27, 2010

பலாலி விமானத்தளத்தை இராணுவத்திடமிருந்து பொறுப்பேற்று அதன் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாக விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது!

பலாலி விமானத்தளத்தை இராணுவத்திடமிருந்து பொறுப்பேற்று அதன் வசதிகள் மேம்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போக்குவரத்துக்கென தற்போதைக்கு ஆறு விமான நிலையங்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் நாட்களில் அவை வர்த்தக விமான நிலையங்களின் தரத்துக்கு அமைவாக மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் தற்போதைக்கு பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள பலாலி விமானத் தளம் மிக விரைவில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சினால் பொறுப்பேற்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின தெரிவித்துள்ளார். தற்போதைக்கு இரத்மலானை, கொக்கலை, வீரவில, அனுராதபுரம் மற்றும் பலாலி ஆகிய விமானத் தளங்களே உள்நாட்டுப் போக்குவரத்துக்கு தேவையான முறையில் மேம்படுத்தப்படவுள்ளன. அதற்கு மேலதிகமாக நுவரெலியாவின் சீத்தாஎளிய பிரதேசத்திலும் புதிய விமான நிலையமொன்றை அமைப்பது தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

மார்கழி 27, 2010

இந்தியாவின் இலங்கை அகதிமுகாம்களில் விசேட சோதனை!

தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளுக்கான முகாம்களில் விசேட நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ் நாட்டின் கியு பிரிவு காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அவுஸ்ரேலியாவில் அகதி அந்தஸ்து பெற்றுக்கொடுத்த தருகிறோம் என தெரிவித்து இவர்கள அவுஸ்ரேலியாவுக்கு கடத்தும் நபர்களை கைதுச் செய்வதற்கே இந்த விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆட் கடத்தல் மோசடி தொடர்பில், முகாம்களில் இருக்கும் மக்களுக்கு தெளிவுப்படுத்தல் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக கியு பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். (மேலும்...)

மார்கழி 27, 2010

தமிழ் மக்கள் ஒருமித்த குரலில் தேவைகளை முன்வைக்க வேண்டும் - திஸ்ஸ வித்தாரண

தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக தமது தேவைகளை ஒரு குழுவாக ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என விஞ்ஞான அலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் திஸ்ஸ வித்தாரண தெரிவித்தார். தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை ஆராயும் உபகுழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 உறுப்பினர்களும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மூவரும் அடங்குகின்றனர். இவ் உறுப்பினர்கள் ஒன்றிணை ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள், அரசியல் தேவைகள் போன்ற வற்றை ஆராய்ந்து ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்க வேண்டும். (மேலும்...)

மார்கழி 27, 2010

தேசிய கொடிக்கும், தேசிய கீதத்துக்கும், மதங்களின் கொடிகளுக்கும் மதிப்பளிப்போம்

தேசிய கீதத்திற்கும், தேசிய கொடிக்கும் என்றென்றும் மரியாதை யையும், மதிப்பையும் வைத்திருக்க வேண்டும் என்ற நல்லொழுக்கமும் இந்த பிள்ளைச் செல்வங்களின் மனதில் நிரந்தரமாக பதிந்து இருக்க வேண்டும். நாட்டின் பிரதான மதங்களின் கொடிகளான பெளத்த கொடி, இந்துக்களின் நந்திக்கொடி, இஸ்லாமி யரின் பிறைக் கொடி, கிறிஸ்தவர்களின் மதத்தை அடையாளம் காட்டும் கொடி ஆகியவற்றை ஜனரஞ்சனப்படுத்த வேண்டும். இந்நாட்டிலுள்ள சகல இன, மதங்களைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் நாட்டுப்பற்றுடன் துளிர் விட்டு வளரும் இதே வேளையில் அவர்கள் மனதில் மற்ற மதங்களை கெளரவிக்கும் நற்பண்பும் குடிகொள்ளும். இதன் மூலம், நாட்டில் உண்மையான இன ஐக்கியத்தையும், மதங்களிடையே பரஸ்பரம் நல்லெண்ணத்தையும், புரிந்துணர்வையும் வலுப்படுத்தி இலங்கையில் என்றென்றும் சமாதான வெண்புறா ஆகாயத்தில் அச்சுறுத்தல் எதுவுமின்றி கம்பீரமாக பறந்து செல்வதற்கான வாய்ப்பை நாம் ஏற்படுத்திக் கொடுக்க முடியும். (மேலும்...)

மார்கழி 27, 2010

மாணவனுக்கு ஆசிரியர் வழங்கும் தண்டனை மனோநிலையை பாதித்து விடலாகாது!

ஆழ் மனதில் எதிரான பதிவுகள் ஆபத்தானவை

(மருதமுனை ஏ. ஆர். ஆப்துல் ஹமீட் உளவளத்துணையாளர்)

தண்டனை பெறுகின்ற மாணவனின் மனோநிலை (Attitude) வேறு, தண்டிப்பவரின் மனோநிலை வேறு. இந்த இரு தரப்பினரதும் மனோநிலைகள் ஒன்றுபோலிருக்க நியாயமேயில்லை. மாணவன் குற்றம் புரிந்த மனோநிலையிலும், ஆசிரியர் அந்த மாணவனை திருத்தும் மனோநிலையிலும் காணப்படுவர். இவ்விடத்தில் இலகுவான தண்டனைகள் (Light beating) வழங்கப்படுவதில் யாருக்கும் ஆட்சேபனைகள் இல்லை. ஆசிரியர் வீட்டு வேலைகள் (Home Work) கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஆர்வம் காட்டாத மாணவர்களை ஆசிரியர் தட்டிக்கேட்பது நியாயமும்தான். தர்மமும்தான்!ஆனால் மாணவர்களுக்கு மனவழுத்தம் (Stress)  ஏற்படுத்தக்கூடியதும் கடுமையான காயங்களை விளைவிக்கக்கூடிய உடல் ரீதியான தண்டனைகளும் Physical Punishment  இந்த சாதாரண ‘வீட்டு வேலை செய்யாமை’ போன்ற விடயத்தில் பொருத்தமில்லை என்பதே முன்வைக்கப்படும் விவாதம். தண்டிப்பவரினதும், தண்டனை பெறுபவரினதும் மனோநிலைகள் (Attitude), மனோவெழுச்சிகளாக (Emotions) மாற்றடையும்போது அங்கே முரண்பாடுகள் ஆரம்பமாகும். இதுவொரு ஆபத்தான கட்டமாகும். (மேலும்...)

மார்கழி 27, 2010

'மில்ல சொயா' மெய்மை குன்றாத கலைப்படைப்பு

நல்ல சினமாவுக்கான ஒரு தேடல்

(ஜி. ரி. கேதாரநாதன்)

‘மில்ல சொயா’ திரைப்படத்தின் கதைக்களம் நீர்கொழும்புக்குப் போகும் வழியில் அருகிலுள்ள ‘கரையோர சிங்களக் கிராமத்தில் ஆரம்பிக்கிறது. தந்தையரோ அல்லது குடும்பத் தலைவர்களாக இருப்போரே துருப்பிடித்த என்ஜின்கள் கொண்டவள்ளங்களுடன் மல்லுக்கட்ட தாய்மார் வேறு வழியின்றி வருமானத்திற்காக (சட்ட விரோதமாக) கசிப்புக் காய்ச்ச வேண்டிய நிர்ப்பந்தம். தொழிலின்மையும் வறுமையும் இதனால் வன்முறை கோலோச்சும் ஒரு கரையோரக் கிராமம். அன்றாட வாழ்க்கைக்கே பெரும் போராட்டமாக இருக்கிறது. சராசரி நடுத்தர வர்க்கத்தினராக இருந்து ஓரளவு விளிப்பு நிலைக்கு வந்துவிட்டவர்கள். கிளர்ச்சி காலகட்டத்தில் சிறுவர்களாக இருந்தோர் வளர்ந்து, யுத்தம் தொடரும் காலகட்டத்தில் இளைஞர்களாயிருக்கின்றனர். நிரந்தர தொழிலற்ற இவர்களுக்கு ஒன்றில் இராணுவத்தில் சேரலாம். இல்லையேல் ‘கிரிமினல்’ வாழ்க்கை. இவையிரண்டும் இல்லையென்றால் எஞ்சியிருப்பது ஒன்றேயொன்றுதான். காணியை ஈடுவைத்தாவது எவ்விதத்திலும் வெளிநாடு சென்று உழைப்பது. ஒருவகையில் இலங்கையின் இருண்ட காலப் பகுதி இளைஞர்கள் இவர்கள். (மேலும்...)

மார்கழி 27, 2010

ஐவரிகோஸ்ட் நிலைமைகள் மோசமடைவதால் வெளிநாட்டுப் படைகள் அனுப்பப்படும் சாத்தியம்

ஐவரிகோஸ்டில் நிலைமைகள் நாளாந்தம் மோசமடைந்து செல்கின்றன. ஐவரிகோஸ்டின் கிழக்குப் பிராந்தியத்திலிருந்து இதுவரைக்கும் 14 ஆயிரம் பேர் ஸைபீரியாவுக்குத் தப்பி யோடியுள்ளனர். அரசியல் வன்முறைகளால் இதுவரைக்கும் இருநூறுக்கும் மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ஆபிரிக்க நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. ஜனாதிபதி கபகோ பதவி விலக வேண்டுமென ஐ. நா. செயலாளர் மற்றும் அமெரிக்க வெளிநாட்டமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளையும் கபகோ நிராகரித்துள்ளார். (மேலும்...)

மார்கழி 27, 2010

கிழக்கில் தொடர்ந்தும் அடைமழை

மட்டு. மாவட்டத்தில் நிலைமைமோசம், ஒரு இலட்சத்துக்கும் அதிகம் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கடும் மழையால் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 29 ஆயிரத்து 421 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்மழையால் திருகோணமலை மாவட்டமும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 594 குடும்பங்களைச் சேர்ந்த 2,464 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் செங்கலடி, கிரான், ஏறாவூர் நகர், வெல்லாவெளி, வாகரை, கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலேயே வெள்ளத்தினால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். (மேலும்...)

மார்கழி 27, 2010

வாகன நெருக்கடியால் திணறும் சீனா, கார்களை வாங்க புதிய விதிமுறை

சீனத் தலைநகர் பீஜிங்கில் பெருகிவரும் கார்களால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிகளைச் சமாளிக்க, அடுத்தாண்டு முதல் கார் வாங்குவதில் பல்வேறு கண்டிப்பான விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதாக சீன அரசு அறிவித்துள்ளது. உலகின் முதல் மிகப் பெரிய கார் சந்தை என்ற இடத்தை 2009 இல் அமெரிக்காவிடம் இருந்து தட்டிப்பறித்து பெருமை அடைந்தது சீனா. நகர மயமாக்கல் மற்றும் வாழ்க்கை நவீனமயமாதல் போன்றவற்றால் அந்நாட்டில் கார்களின் எண்ணிக்கை அதிகளவில் அதிகரித்து விட்டது. அதேநேரம் உலகில் மோசமான போக்குவரத்து நெருக்கடி மற்றும் மாசுபட்ட சுற்றுச் சூழலில் பீஜிங்குக்குத் தனியிடமும் உண்டு. தற்போது அந்நகரில் மட்டும் 48 லட்சம் கார்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்தாண்டில் மட்டும் ஏழு இலட்சத்து 80 ஆயிரம் கார்கள் புதிதாக வாங்கப்பட்டன. (மேலும்...)

மார்கழி 27, 2010

11 மாவட்டங்களில் பெரும் சோகம், கதறி அழுது கண்ணீர் அஞ்சலி

சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட ஆறாண்டு நிறைவை வடக்கு, கிழக்கு மற்றும் தென் பகுதி மக்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தனர். உறவுகளையும், உடன்பிறப்புகளையும் இழந்து தவிக்கும் பல்லாயிரக் கணக்கான மக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தினர். கிழக்கில் உறவுகளின் கல்லறைகளுக்கு தீபமேற்றி, மலர்த்தூவி நெஞ்சுருக நினைவு கூர்ந்ததைக் காணக்கூடி யதாக இருந்தது. மத வழிபாடு களில் கலந்துகொண்ட மக்கள் ஆழிப் பேரலை அள்ளிச்சென்ற உறவுகளின் நினைவாக அன்னதானம் வழங்கியதுடன் தண்ணீர் பந்தல்களையும் நடத்தினர். சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளுக்கு அருகில் ஒன்று கூடிய உறவுகள், கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். கிழக்கின் கரையோர கிராமங்களில் நேற்றுக் காலை பெரும் சோகம் கெளவியிருந்ததை அவதானிக்க முடிந்தது. தென் பகுதியில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட இடங்களிலும் மக்கள் சோகமே உருவாக உறவுகளை நினைவுகூர்ந்தனர். உறவுகளின் பிரிவுத்துயரில் தோய்ந்த மக்கள் நீண்ட நேரம் ஓரிடத்தில் குழுமியிருந்து அஞ்சலி செலுத்தினர். இவ்வாறு 11 மாவட்டங்களில் சுனாமியின் சோக வடு நேற்று மீண்டும் மக்களை ஞாபகமூட்டிச் சென்றுள்ளது.

மார்கழி 27, 2010

பதவி விலகும் பிரேஸில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இறுதி உரை

பிரேஸில் ஜனாதிபதி லூலாடி சில்வா நாட்டு மக்களுக்கு தனது இறுதி உரையை கிறிஸ்மஸ் தினத்தன்று நிகழ்த்தினார். எட்டு வருடங்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்த பதவி விலகவுள்ள லூலாடி சில்வா புதிய ஜனாதிபதியின் கீழ் உலகில் தலைசிறந்த நாடாக பிரேஸில் திகழும் என்றார். தனது எட்டாண்டு காலத்தில் நடத்திய சாதனைகளை அவர் பட்டியலிட்டார். வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சி, இயற்கை வளங்களை பாதுகாத்தமை, பாதுகாப்பான வாழ்க்கை முறை என்பவை தனது எட்டாண்டு கால சாதனை எனப் புகழ்ந்துரைத்தார். புத்தாண்டுடன் பதவி விலகி விடுவேன். அதன் பின்னர் எனது எதிர்காலம் என்னவென்பதை என்னிடம் வினவாதீர்கள். ஏனென்றால் முன்னர் எனக்கு செளகரியமான வாழ்க்கையை நீங்கள் தந்துவிட்டீர்கள். இனிமேல் என்னைப் பாராமல் நாட்டின் எதிர்காலத்தைப் பாருங்கள். (மேலும்...)

மார்கழி 27, 2010

ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வி:  இஸ்ரோ  விஞ்ஞானிகள்   தீவிர ஆய்வு

ஜிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வியில் முடிவடைந் தது குறித்து இந்திய விண் வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இதுதொடர்பாக செய்தி யாளர்களிடம் பேசிய இஸ் ரோவின் செய்தித் தொடர் பாளர் எஸ்.சதீஷ், ஜிஎஸ் எல்வி ராக்கெட் எப்படி தோல்வியடைந்தது என் பது குறித்து ஒரு விஞ்ஞானி கள் ஆய்வு செய்து வருகி றார்கள் என்றும், இது குறித்து ஓரிரு நாட்களில் ஒரு குழு அமைத்து விவா திக்கப்படும் என்றும் தெரி வித்தார்.  ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவி லிருந்து சனிக்கிழமை ஜி சாட் - 5 பி என்ற தொலைத் தொடர்பு சேவைகளுக் கான செயற்கைக்கோளு டன் ஜிஎஸ்எல்வி - எப்06 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் மேலெழும்பிய சிறிது நேரத் திலேயே ராக்கெட் வெடித் துச் சிதறியது. ரஷ்யாவின் கிரையோஜெனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட இந்த ராக் கெட், 30 மணி நேர கவுன்ட் டவுனில் மிகச்சரியான முறையில் இயங்கியது குறிப் பிடத்தக்கது. மேலெழும் பும் வரை துல்லியமாக செயல்பட்ட நிலையில் எப் படி வெடித்தது என் பதை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

மார்கழி 26, 2010

53 வது பிறந்த நாள் நினைவு தினம்

அமரர் றொபேட் தம்பிராசா சுபத்திரன்(மத்திய குழு உறுப்பினர், பத்மநாபா -ஈ.பி.ஆர்.எல்.எப்.முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

அமரர் தோழர் றொபேட் தம்பிராசா சுபத்திரன்
(ஈ.பிஆர்.எல்.எவ் மத்திய குழு உறுப்பினர் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்)

தேச விடுதலையை நேசித்து

மானிட தர்மத்தை மதித்து நின்றதால்
ஏக பிரதிநிதித்துவத்தின் எதிரியானாய் -

இடர்களின் நடுவேயும்
தஞ்சமென மண்டியிடாது

தலைநிமிர்ந்து நின்று வீர காவியமானாய்
காற்றில் கலந்த போதும்

சாய்ந்துவிட்ட வல்லாதிக்கம் - உன்
கருத்தின் வலிமையை பறைசாற்றி நிற்கின்றது.
இனி நிமிர்ந்தெழும்

நீ உயர்த்திப் பிடித்த மானிட தர்மம்

மார்கழி 26, 2010

'எல்லோருக்கும் என் இனிய நத்தார் வாழ்துக்கள் உரித்தாகட்டும்' - வே.பிரபாகரன்

யேசு பாலகனின் பிறப்பின் மகிமை அறியாதோர்; என்னைபோன்று பூலோகத்திலும், மேல்லோகத்திலும்  துன்பவியல் (நரக) வாழ்வை அனுபவிப்பார்கள் - வே.பிரபாகரன். சமாதானமும், சந்தோசமும் நமது நாட்டில் இப்பொழுது நிலவுவதாக நான் அறிகின்றேன். நான் இப்பொழுது மேல்லோகத்தில் (நரகலோகத்தில்)  இருப்பதால் இந்த மாதரியான ஒரு நல்ல சூழ்நிலை நமது நாட்டில் காணப்படுவதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகின்றேன். இருந்தாலும் எனக்கு அடிமைபபட்டிருந்த வன்னி மக்கள் என்னை அம்போ என்று விட்டு விட்டு ஓடியதால் இன்னமும் துன்பத்தை அனுபவித்து கொண்டிருப்பதாக இங்கு (இறந்த பின்) வருபவர்கள் சொல்லுகிறர்ர்கள் அதை நினைத்து கொஞ்சம் சந்தோசமாக இருக்கின்றேன். நான் நாட்டில் இப்பொழுதும் உயிருடன் இருந்திருந்தால இப்படியெல்லாம் மக்களை சந்தோசமாக இருக்கவிட்டிருப்பேனா? எத்தனை குண்டுகள் வைத்து எத்தனை உயிர்களை குதறி எடுத்திருப்பேன், எத்தனை கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் வாங்குதல், எத்தனை களம் அமைத்து பலபேரின் பிள்ளைகளை பலிகொடுத்திருப்பேன். அதற்குள் அற்ப ஆயுளில் என்னை இங்கு அனுப்பி வைத்துவிட்டார்கள். (மேலும்...)

மார்கழி 26, 2010

சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசிக்கும் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை!

சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசிக்கும் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் விசாரணை! சுற்றுலாப் பயணிகளைப் போன்று நாட்டிற்குள் பிரவேசிக்கும் புலிகளுக்கு ஆதரவளிக்கும் நபர்கள் குறித்து புலனாய்வுப் பிரிவினர் கண்காணித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் அரச சார்பற்ற நிறுவன முக்கியஸ்தர்களும், வர்த்தகப் பிரமுகர்களும் இலங்கைக்கு விஜயம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு நாட்டுக்குள் பிரவேசிக்கும் நபர்கள் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவளித்து வந்த முக்கிய வர்த்தகர் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து டுபாய் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த புலி முகவர் ஒருவரும் அண்மையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு மக்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டுக்குள் பிரவேசிக்கும் இந்த நபர்கள் போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகிறது.

மார்கழி 26, 2010

ஐ.தே.க. தலைவர் பதவிக்கு சஜித் போட்டியிடுவது ஊர்ஜிதம் _

ஐ.தே.கட்சி தலைவர் பதவிக்கு அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ போட்டியிடுவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி இரவு போதி ரணசிங்கவின் வீட்டில் நடந்த கூட்டமொன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது. இதுபற்றி மேலும் கூறப்படுவதாவது, கட்சியின் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச்சென்ற சஜித் பிரேமதாஸவின் ஆதரவாளர்கள் அன்றைய தினம் கூடி அவர் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டுமென ஏகமனதாக முடிவெடுத்துள்ளனர். (மேலும்...)

 

மார்கழி 26, 2010

Dear UN  Advisory Panel of Experts on Sri Lanka:

I have read with impassioned interest the National Council of Canadian Tamils  (NCCT) submission –Towards Global Justice: Accountability for War Crimes in Sri Lanka, which the four of the above Canadian politicians have endorsed. Although the submission made by the National Council of Canadian Tamils which claims to be a grassroots organization composed of elected representatives from across Canada, I am afraid this submission is suspect as it is an organization that is secretly working to re-establish and resurrect the Liberation Tigers of Tamil Eelam (LTTE) terrorists to fight another day to establish their mythical separate Tamil state, Eelam, thus they have an axe to grind which is far from being honourable. (more...)

மார்கழி 26, 2010

வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும- ஜனாதிபதி!

இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்தும், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் குறித்தும் புலம் பெயர்ந்து வாழும் புலிகளின் ஆதரவாளர்களுக்கு மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாடுகளிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்துள்ளார். (மேலும்...)

 

மார்கழி 26, 2010

தமிழகத்தில் மீண்டும் புலிகளின் உறுமல் சத்தம்!

இலங்கையில் இனி காலூன்ற முடியாத நிலையில், இந்தியா, கனடா, இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கொண்டு, புலிகள் இயக்கத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் புலிகள் ஊடுருவியுள்ளதாகவும், அவர்களால் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் உயிருக்கு,புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களால் தற்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது, புலிகள் மீண்டும் உயிர் பெற்றுள்ளதையும், தலைவர்களை கொல்லும் தங்களின் கொள்கையை கைவிடவில்லை என்றும் தெளிவுபடுத்துகிறது. (மேலும்...)

 

மார்கழி 26, 2010

வன்னியில் களமிறங்கியுள்ள இளம் தலைவர்கள்

யுத்தம் முடிவடைந்த பின்னர் தற்போது முழுமையான அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து வரும் வன்னிப் பிரதேச மக்கள் தமது எதிர்காலம் குறித்த சிந்தனையில் ஆழ்ந்துள்ளனர். இறுதி யுத்தத்தின் தாக்கம் இன்னமும் இவர்களது மனதை விட்டகலவில்லை. இருந்தும் தாம் இனிமே லும் பழையவற்றை பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்பதையும் இய ல்பு வாழ்வுக்கு முழுமையாகத் திரும்ப வேண்டும் என்பதையும் இவர்களுடன் உரையாடும்போது யாருமே உணரலாம். (மேலும்...)

மார்கழி 26, 2010

புலத்தில் ஒன்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேறொன்றும்!

(க. சிவராசா)

தமிழ்க் கூட்டமைப்பு அரசாங் கத்திற்குத் தமது நல்லெண் ணத்தைக் காட்டி வருவதாகவும், ஆனால் அரசாங்கம் அதனைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சாட்டி கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வரவு செலவுத் திட்டத்தின்போது எதிர்த்து வாக்களிக்காமை, அபிவிருத்தி மற்றும் நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் பங்கேற்றமை எனத் தாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கினாலும் அரசாங்கம் கைமாறாக எதுவுமே செய்யவில்லை என்பதே இவர்களது குற்றச்சாட்டாக உள்ளது. தமது நல்லெண்ணத்திற்கு அரசு என்ன கைமாறைச் செய்ய வேண்டுமென இவர்கள் எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் மாறாக தாம் இவ்வாறு அனுசரணையாகச் செயற்படுவதால் தம்மை ஒன்றும் குறைத்து மதிப்பிட வேண்டாம் எனவும், இதனைத் தமது பலவீனமாக அரசாங்கம் கருதக் கூடாது எனவும் சவால் விடுத்துள்ளனர். (மேலும்...)

மார்கழி 26, 2010

தமிழ் மொழியும் சீர்திருத்தங்களும்

இன்றைய எழுத்துச் சீர்திருத்தம் பின்வருமாறு அமைவது பொருத்தமுடையதாகும்.

அ) எழுத்துக் குறைப்பு

ஆ) தேவையான ஒலிகளுக்கு ஏற்ப எழுத்துக்களை உண்டாக்கல்

இ) வரிவடிவத்தில் மாற்றம் உண்டாக்கல்

ஈ) விஞ்ஞானத்தோடு இணைய சில ஆலோசனைகள்

என்றவாறு சீர்திருத்தங்கள் அமையலாம்.  (மேலும்...)

மார்கழி 26, 2010

50,000 வீடமைப்புத் திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுப்பு - இந்திய உயர்ஸ்தானிகரகம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்லப்படுவதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் தொடர்பாக சில ஊடகங்களில் சந்தேகங்கள் வெளியிடப்பட்டதை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரா லயம், வடக்கின் 5 மாவட்டங்களில் முதற்கட்டமாக ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. முதற்கட்ட நிர்மாணப் பணிகளை இந்திய நிறுவனமான ‘ஹிந்துஸ்தான் பேர்ஃவெப் லிட்டட்’ நிறுவனம் ஆரம்பித்திருப்பதாகவும், இதில் கிடைக்கும் அனுபவங்களைக் கொண்டு இரண்டாம் கட்டப் பணிகள் விரைவில் ஆரம்ப மாகும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் வெளியிட் டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (மேலும்...)

மார்கழி 25, 2010

மார்கழி 25, 2010

இலங்கைத் தமிழர் பிரச்சனையில் நான் நேரடியாகத் தலையிடுவேன் -ராகுல்காந்தி!

இன்று தமிழகம் வந்துள்ள ராகுல்காந்தியுடன் தமிழகத்தைச் சார்ந்த அறிவுஜீவிகள், திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களுடன் உரையாடுவதற்கான ஏற்பாடு ஒன்றை காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைத்திருந்தது. இச்சந்திப்பின் போது பல் வேறு விதமான கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதிலளித்தார். இலங்கைத் தமிழர் விஷயத்தில் இந்தியா நடந்து கொண்ட விதம் குறித்து கேள்வி எழுப்பிய போது இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு ஏராளமாகச் செய்திருக்கிறது என்றார். என்ன செய்திருக்கிறீர்கள் என்ற கேள்வியை ஊடகவியலாளர் கேட்ட போது என்ன செய்ய வேண்டும் என எதிர்ப்பாக்கிறீர்கள் என்று ராகுல் கேட்டுள்ளார். அதற்குப் பதிலளித்துள்ள பத்திரிகையாளர்கள் ஆட்சியில் இருப்பது நீங்கள்தான் உங்களுக்குத்தான் என்ன செய்ய வேண்டும் என்பது தெரிய வேண்டும். என்று சொல்ல நான் இலங்கைத் தமிழர் பிரச்சனையை அவதானித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விரைவில் நான் நேரடியாகத் தலையிடுவேன். என்று கூறியுள்ளார் ராகுல்காந்தி.

மார்கழி 25, 2010

"The 13th Amendment to the Constitution must be properly implemented": - Dharmalingam Siddharthan

(by Sergei DeSilva-Ranasinghe)

With the end of Sri Lanka’s civil war in May 2009 the situation facing the Tamil population is still dominated by genuine concerns for the future, perhaps most notably in the political arena. In this context, the views expressed by Dharmalingam Siddharthan, the leader of the moderate People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE), which has a support base in the Vanni and the Jaffna Peninsula, are of much interest. In an interview conducted by Sergei DeSilva-Ranasinghein June 2010, Dharmalingam Siddharthan provides his opinion on contentious issues such as war crimes allegations, the flight of asylum seekers, whether the Liberation Tigers of Tamil Eelam (LTTE) can revive, the aspirations and grievances of Tamils in Sri Lanka, and future of the LTTE and the Tamil diaspora. (more...)

மார்கழி 25, 2010

பெரும் மதிப்பிற்குரிய தமிழ்மூதறிஞர் கலாநிதி க.தா. செல்வராஜகோபால் (ஈழத்துப்பூராடனார்)அவர்கள் நேற்று  21-12-2010 அன்று மிஸ்ஸசாகாவில் இறைவனடிசேர்ந்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளயத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சுவாமி விபுலாநந்தரின் நேரடிமாணவரான புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை மற்றும் சிறந்த தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்றதுடன் ஒருபயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராக இலங்கையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 35 வருடங்களாக கனடாவில் வசித்து வந்த ஈழத்துப்பூராடனார் என அறியப்பட்ட கலாநிதி க.தா. செல்வராசகோபால் அவர்கள் கனடாவின் தமிழ் கலை, கலாச்சாரம் மற்றும் தமிழ்இலக்கியத்தின் முன்னோடியாவார். கனடாவில் முதன்முதலாக அச்சியந்திர சாலை நிறுவி தமிழ்பதிப்புக்களை மேற்கொண்டதுடன் 'நிழல்' என்னும் வாரமலரையும் கனடாவில் முதலில் வெளியிட்டவர். தமிழ் எழுத்துக்களை கணணியில் வடிவமைப்பதிலும் தமிழ்மொழிக்கல்வியை இலவசமாக தமிழ்மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதிலும் தன் மனைவி திருமதி பசுபதி செல்வராசகோபாலுடன் இணைந்து பணியாற்றிய ஒருசிறந்த சமூகநல நோக்கம் கொண்ட உயர்ந்த தமிழறிஞர் ஆவார். (மேலும்...)

மார்கழி 25, 2010

ஜூனியர் கோமாளியின் (விகடன்) சொதப்பல் செய்திக்கு ஈ.என்.டி.எல்.எப். தெளிவான விளக்கம்!

26-12-2010 தேதியிட்ட ஜூனியர் கோமாளியின் (விகடன்) “தமிழ் நாட்டில் தங்கி இருந்த “காட்டிக்கொடுப்பு” கருணா”, என்ற தலைப்பில் ஜூனியர் விகடன் “ஸ்பெசல் டீம்” என்ற சில கோமாளிகள் கதை எழுதியுள்ளனர். இந்தக் கோமாளிகள் பற்றி எங்களுக்குத் தெரியாது! வாராவாரம் ஈழத் தமிழர்கள் பற்றி கதை விட்டுப் பணம் சம்பாதித்து வரும் வார இதழின் இது போன்ற தவறான பிரசாரங்களுக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயம் எற்படுத்தப்பட்டிருக்கிறது எங்களுக்கு. கருணா துரோகி என்றால் இவர்களும் துரோகிகள் தானே என்ற தோரணையில் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுக்கதையில் விகடன் புலிகளிடம் பணம் பெறுவார்கள், சிங்கள அரசிடமும் பணம் பெறுவார்கள் என்பதை தங்களை அறியாமலேயே வெளிப்படுத்தியுள்ளனர் அந்த “டீம்”. (மேலும்...)

மார்கழி 25, 2010

தேசிய கீதம் தேசியப் பிரச்சனையா? இனப்பிரச்சனையின் ஒரு அங்கமா?

(இரா.வி .விஸ்ணு)

"இலங்கையில் தேசிய கீதம் ஒன்றே இருக்கவேண்டுமென்பது சாதகமாக பரிசீலிக்கப்படவேண்டிய விடயமே". அப்படியாக இருந்தால் தேசிய கீதத்தினை முற்றாக மறுசீரமைக்கலாம். தமிழ் , சிங்கள மொழிகள் கலந்த ஒரு தேசிய கீதத்தினை இலங்கையின் தேசியகீதமாக மறுசீரமைப்பது இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளியாக இருக்குமென தோன்றுக்கின்றது. அதுமாத்திரமல்ல போருக்கு பின்னதான இன ஒற்றுமையின் திறவுகோலாகவும், இலங்கையின் அனைத்து இன மக்களுக்கும் தேச பக்தியினை ஊட்டுவதாக தேசியகீதம்  அமைவதற்கு வாய்ப்புக்கள் இருக்கின்றது. ஆனாலும் ஒரு நாட்டின் தேசிய கீதத்தினை மறுசீரமைப்பதேன்பது சாதரணமான விடயமல்ல. மறு சீரமைப்பதற்கான கருத்துக்கள் இரு மொழிகள் கலந்த தேசிய கீதமாக மறுசீரமைக்கவேண்டும் அல்லது உருவாக்கப்படவேண்டும் என்ற ரீதியில்  சிங்கள, தமிழ், முஸ்லீம், மலையக முற்போக்குவாதிகளிடமிருந்து , அரசியல்வாதிகளிடமிருந்து பலமாக எழவேண்டும். (மேலும்...)
 

மார்கழி 25, 2010

WHY ARE THE SRI LANKAN OFFICIALS SO STUPID !!

(more...)

 

மார்கழி 25, 2010

Necklace makes Tamil woman suspect in Canada

Toronto, Dec 22 (IANS) Canadian authorities say that a Sri Lankan Tamil woman who entered the country aboard the smuggling ship MV Sun Sea in August is linked to the Tamil Tigers. The human smuggling ship had brought 492 Sri Lankan Tamils to Vancouver from Thailand after allegedly charging up to $50,000 from each of them. Since the Canada Border Services Agency (CBSA) fears that the Tamil Tigers might sneak into the country in the guise of asylum seekers, it has detained the passengers for screening them for their terror links. So far, 300 of them have been released after screening. But now a Tamil woman, who is in custody along with her children, has been identified as a security risk because of her alleged links to the Tamil Tigers. (more...)

மார்கழி 25, 2010

விக்கிலீக்ஸ் விவகாரத்தில் தமிழ் அமைப்புக்களின் மௌனம் மக்களுக்குக் கூறும் தகவல் என்ன?     

அமெரிக்க இராஜதந்திரத் தகவல் பரிமாற்றங்களை அம்பலப்படுத்திவரும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் பற்றிய பேச்சு உலக நாடுகளை இன்னும் ஆட்டம் காண வைத்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்கா எனும் தனியொரு வல்லரசு நாடு ஆசிய பிராந்தியத்தில் எந்தளவுக்கு தனது ஆதிக்கத்தைச் செலுத்த எத்தனிக்கிறது என்பதை விக்கிலீக்ஸ் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அதேநேரம் ஏனைய நாடுகள் தங்கள் உள்விவகாரங்கள் கசிந்ததை மறைப்பதற்கு மாற்றுவழிகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. எனினும் தமது நாடு குறித்து வெளியாகியுள்ள தகவல் பற்றி அந்தந்த நாடுகள் கட்டாயமாக பதிலளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. (மேலும்...)

 

மார்கழி 25, 2010

Tamil lady killed, her husband injered

A Brampton teen has been charged with drunk driving

A Brampton teen has been charged with drunk driving after an early-morning crash killed a 41-year-old mother of two, who was delivering newspapers with her husband. The collision occurred at Bramalea Rd. and Central Park Dr. before 5 a.m. Wednesday, when a Ford Focus and Honda Civic ran into each other. Two people were sent to hospital in critical condition. The crash impact was so powerful that the passenger in the Civic, Sivanermaikkarasi Parameswaran, was ejected from the car. She landed several metres down the road and was pronounced dead by first responders. (more...)

மார்கழி 25, 2010

 

வாகன போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக அமுல்படுத்த அரசு முடிவு

 

போக்குவரத்து விதிகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் பணிப்பிற்கமைய வாகனங்களில் ‘ஆசனப்பட்டி’ கட்டாயமாகப் பயன்படுத்தல் வேண்டும். இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் கையடக்கத் தொலைபேசியில் உரையாடியபடி வாகனம் செலுத்துவது தடை என்ற சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.  இறக்குமதி வரியை செலுத்தாமல் பல்வேறு முறைகளில் வாகன உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்து அவற்றைப் பொருத்தி முழுமையான வாகனங்களாக மாற்றி விற்பனை செய்வது தொடர்பாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும்  இதன் முதற்கட்டமாக கராஜ் இலக்கங்களுடன் (சீ. சீ. இலக்கம்) வாகனங்கள் வீதியில் செல்வது உடனடியாக தடைசெய்யப்படுகின்றது. (மேலும்...)


மார்கழி 25, 2010

 

 

மார்கழி 25, 2010

 

100 முஸ்லிம் குடும்பங்கள் யாழ்ப்பாணத்தில் மீள்குடியமர்வு

யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தில் மேலும் நூறு குடும்பங்கள் மீள குடியமரவுள்ளன. இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பும், குடிய மரவிருக்கும் முஸ்லிம் மக்கள் சமூக அமைப்புக்களின் சந்திப்பும் இன்று சனிக்கிழமை காலை, யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி புதுப்பள்ளிவாசலில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு முன்னாள் யாழ். மாநகர சபை பிரதி மேயர் எம். ஜி. எம். பஷீர் தலைமைதாங்குவார். யாழ்ப்பாணத்தில் இதுவரை 404 குடும்பங்கள் மீள்குடியமர்ந்துள்ள நிலையில் புத்தளத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பங்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர வருகை தரவுள்ளனர். (மேலும்...)

மார்கழி 25, 2010

Greetings and wishes from ORHAN, Vanny

Greetings and wishes from ORHAN. It is my pleasure to inform you that ORHAN is now preparing IEP which you instructed us during your visit to Puthuvalvu Poonka (TCMCC) on 23.07.2010. According to our discussion ORHAN is going to introduce IEP from 2011 academic year. For this purpose it has organized 1 day workshop on IEP for the teachers on 23rd of December 2010. In addition to these arrangements I would like to gently remain you the educational toys which are used in the developed countries like CANADA, more appropriate for the teaching to mentally challenged children and suggested by you during the same visits. I hope you are now taking some necessary measures such as fund raising regarding this issue, in order to donate us the educational toys. For this objective, hereby I would like to brief you some details of Puthuvalvu Poonka. (more...)

மார்கழி 25, 2010

வெள்ள நிவாரண நிகழ்வில், டக்ளஸ், கருணாவுடன், மாவை, விநாயகமூர்த்தி

யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வில், அமைச்சர் டக்ளஸ், பிரதியமைச்சர் முரளீதரன்(கருணா) ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை மற்றும் விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாண பிரதேச செயலக மண்டபத்தில் புதன்கிழமை(22-12-2010) நடைபெற்ற இந்த நிகழ்வில், மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோருடன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, விநாயகமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர். (மேலும்...)

மார்கழி 25, 2010

 

கொழும்பு தூத்துக்குடி கப்பல் சேவை

 

இந்திய கப்பல் சேவை நிறுவனம் கேள்வி மனு கோரல்

இந்திய மத்திய அரசு நிறுவனமான இந்திய கப்பல் சேவை கூட்டுத்தாபனம் (எஸ்.சி.ஐ) நிறுவனம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட் டுள்ளது. இதற்கான கேள்வி மனுக்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜனவரி முதல் இரு நாடுகளிடையே கப்பல் போக்கு வரத்து தொடங்க உள்ளது. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியில் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் இரு நாடுகளிடையே சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக இந்த சேவை தொடங்கப்படுகிறது. (மேலும்...)

மார்கழி 25, 2010

விக்கிலீக்ஸ் அறிக்கைகளால் வெளிநாட்டு உறவுகள் பாதிப்பு?

விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்ட ரகசியத் தகவல்களால் பிற நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டள்ளதா என்பதை ஆராய அமெரிக்க உளவுத் துறை (சிஐஏ) முடிவெடுத்துள்ளது. இதற்காக சிஐஏ சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் உளவுத் துறையைச் சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம்பெற் றுள்ளனர். விக்கிலீக்ஸ் முன்னதாக வெளியிட்ட தகவலைவிட அண்மையில் வெளியிட்ட தகவல்களால்தான் பிற நாடுகளுடனான உறவு பாதித்திருக்க வாய்ப்புள்ளதாக சிஐஏ நம்புகிறத. இதனால் சமீபத்திய தகவலுக்கு முன்னுரிமை அளித்து ஆராய திட்டமிட்டுள்ளது. இதனிடையே அமெரிக்கா, பிற நாடுகளுடன் பரஸ்பர நலத்தின் அடிப்படையில் உறவு வைத்துள்ளது. இதனால் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலால் பிற நாடுகளுடனான அமெரிக்க உறவு பாதிக்கப்படவில்லை. என்று அந்நாட்டு வெளியிறவு அ¨மைச்சகச் செய்தித் தொடர்பாளர் குரோவ்லே கூறினார். அமெரிக்காவுடனான நட்பு நாடுகளின் தலைவர்களுடன் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மார்கழி 24, 2010

 

கப்பம் கோரி அச்சுறுத்தினால் கடும் தண்டனை

நகைக் கடை உரிமையாளர்களை அச்சுறுத்தி கப்பம் கோருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டால் உடனடியாகத் தமது கவனத்திற்குக் கொண்டுவருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ நகைக் கடை உரிமை யாளர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். கடத்தி கப்பம் கோரும் முயற்சியில் எவராவது ஈடுபட்டால் தமது கவனத்திற்குக் கொண்டு வந்தவுடன் அவரைக் கைது செய்து தண்டிக்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கூறினார். கொள்ளையர்கள் தமது நலனுக்காக பொலிஸ் மற்றும் இராணுவச் சீருடைகளைப் பயன்படுத்தி கொள்ளை முயற்சிகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ள தாகவும் பாதுகாப்புச் செயலாளர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 24, 2010

பார்த்தால் பசுமரம்!

மார்கழி மாத காலைப் பனி உடலுக்கு இதமாக இருக்கும். பழக்கமில்லாதவர்களுக்கு குளிராக இருக்கும்! மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியில் குளிர் வாட்டி எடுத்துவிடும். இதனால் உடலுக்கு சூடேற்றிக்கொள்வதற்காக பெருந்தோட்டப் பகுதிகளில் விறகுகளைக் கட்டுக் கட்டாகக் குவித்து வைத்திருப்பார்கள். வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் இருப்பவர்களுக்கு, விறகு பொருக்குவதே ஒரு தொழில். இல்லாவிட்டால், தொழிலாளர்கள் தொழில் முடிந்து வீடு செல்லும்போது விறகு கட்டுகளையும் அணைத்துச் செல்வார்கள். (மேலும்.....)

மார்கழி 24, 2010

 

தென்கொரிய இராணுவம் பெரிய அளவில் போர் ஒத்திகை

தென் கொரியாவுக்கு சொந்தமான தீவான யியோங்பியாங் தீவில் வட கொரியா பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் பலியானார்கள். இதை தொடர்ந்து தென் கொரியா - வட கொரியா இடையே பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் வட கொரியாவை மிரட்டுவதற்காக தென் கொரியா அந்த தீவில் நேற்று 3வது நாளாக போர் ஒத்திகை நடத்தியது. நேற்று நடந்த ஒத்திகை பெரிய அளவிலானது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ஒத்திகையை விட இது மிகப் பெரிய அளவில் நடந்தது. இந்த ஒத்திகையின் போது பீரங்கிகள், போர் விமானங்கள், அதிக எண்ணிக்கையிலான இராணுவ வீரர்கள் பங்குகொண்டனர். 6 கடற்படை கப்பல்களும் இதில் கலந்துகொண்டன. வட கொரியா மீண்டும் எங்கள் நாட் டின் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று தென் கொரிய இராணுவ தளபதி ஜூ இயூன் சிக் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இதற்கு முன்பு 50 முறை போர் ஒத்திகை நடத்தப் பட்டபோதிலும் இந்த அளவு பெரியதாக இதுவரை நடந்தது இல்லை என்றும் அவர் தெரிவித்தார். போர் ஒத்திகைக்கு வட கொரியா எதிர்ப்பு தெரிவித்தது. போர் ஒத்திகை நடத்தினால், முழு அளவிலான போரை தென் கொரியாவுடன் தொடங்குவோம் என்று வட கொரியா எச்சரித்து இருந்தது. ஆனால் மிகப் பெரிய அளவில்போர் ஒத்திகை நடந்தபோது வட கொரியா அமைதி காத்தது.

மார்கழி 24, 2010

விடுதலைப் புலி எனச் சந்தேகிக்கப்படும் பெண்ணுக்கு விளக்கமறியல் 

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வவுனியாவல் வைத்துக் கைது செய்யப் பட்ட கமலினி அல்லது சுப்ரமணியம் சிவகாமினி என்ற பெண்ணை எதிர்வரும் ஜனவரி 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி கொழும்பு பிரதம நீதவான் ரஷ்மி சிங்கப்புலி உத்தரவிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் முக்கிய உறுப்பினர் எனச் சந்தேகிக்கும் இவர் அவ்வமைப்புக்கு ஆட்சேர்க்கும் பணிகளில் ஈடுபட்டதாச் சந்தேகிக்கப்படுகிறது. இவர் பற்றிய அறிக்கை சட்டமா அதிபரிடமிருந்து இன்னும் கிடைக்கப் பெறவில்லை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்ததை அடுத்தே நீதவான் இவ்வுத்தரவினைப் பிறப்பித்துள்ளார்.

மார்கழி 24, 2010

புகையிரத வீதி அமைப்பதற்கு கண்டியில் 116 வீடுகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவு

கண்டி - பேராதெனிய நகரங்களுக்கிடையே இரட்டைப் புகையிரத வீதி அமைப்பதற்குத் தடையாக இருந்த 116 வீடுகளை நீதிமன்றத்தின் உத்தரவின்படி உடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். கண்டி புகையிரத நிலையத்திலிருந்து கெட்டம்பே வரையிலான பகுதியில் இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருந்ததாக புகையிரத தினைக்களத்தின் கண்டி பிராந்திய காரியாலயம் தெரிவித்துள்ளது. இவ் வீடுகளில் இருந்த பொதுமக்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் வெளியேறாததன் காரணத்தால் நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளது. ___

மார்கழி 23, 2010

 

வடக்கு, கிழக்கில் சமாதானம் மற்றும்
அபிவிருத்திக்கான ஜப்பானின் உதவி

உலக சமாதானத்திற்கு செழிப்புடனும் அர்ப்பணிப்புடனும் பங்களிப்பு வழங்கும் நாடு என்ற வகையில் ஜப்பான் இலங்கையில் சமாதானம் மற்றும் மீள்கட்டமைப்பிற்கு தனது உதவியை வழங்குவதுடன் நடுத்தர மற்றும் நீண்ட கால அபிவிருத்தி நோக்கினைக் கொண்டுள்ளது. ஆகவே ஜப்பான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீள் கட்டமைப்பிற்கும் மக்களின் வாழ்க்கைத் தர உயர்விற்கும் அதி உயர்ந்த முன்னுரிமையளித்து செயல்பட்டு வருகின்றது. ஜப்பான் சமாதான நடவடிக்கைகளுக்கு தனது முழு உதவியை வழங்குகின்றது. சமாதானம் மற்றும் நல்லிணக்கம் நிலையான அபிவிருத்தி செளபாக் கியத்திற்கு இன்றியமையாததாகும்.

(மேலும்.....)

மார்கழி 23, 2010

 

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை

யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை யொன்றை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வி.ஆர்.சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மேலதிக வசதிகளை ஏற்படுத்துமுகமாகவே இந்தப் புதிய சிறைச்சாலை நிர்மாணிக்கப்படுவதாக அவர் கூறினார். இதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கி உள்ளதாகவும், நிர்மாணப் பணிகள் வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படு மென்றும் ஆணையாளர் நாயகம் கூறினார். யாழ்ப்பாண கோட்டையில் இருந்த சிறைச்சாலை 1985 ஆம் ஆண்டு சேதமானது. பின்னர் 1996 இல் இரண்டு தனியார் வீடுகளில் தொழிற்பட்டது. தற்போது சொந்தக் காணியில் சிறைச்சாலை நிர்மாணிக்கப்படவுள்ளதென்றும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.யாழ்ப்பா ணத்தில் சுமார் 225 கைதிகள் சிறைவைக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மார்கழி 23, 2010

 

தொடர் கொள்ளைச் சம்பவங்களை தடுக்க யாழில். கூட்டு ரோந்து

யாழ். மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரும், இராணுவத்தின ரும் இணைந்து கூட்டு ரோந்து நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அத்துடன் பொதுமக்களும் இது குறித்து விழிப்பாக இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர். யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் தொடர் கொள்ளைச் சம்பவங்களை தொடர்ந்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது. (மேலும்.....)

மார்கழி 23, 2010

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்புக்கு ஜப்பான் முதலீடு

வடக்கு, கிழக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஜப்பானிய நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளைச் செய்யவுள்ளன. இலங்கையின் தற்போதைய அமைதிச் சூழலை எடுத்துரைத்து ஜப்பானிய கம்பனிகளின் முதலீடுகளை அதிகரிக்கச் செய்வதாக ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தெரிவித்தது. ஜப்பான் - இலங்கை நட்புறவு பாராளுமன்ற ஒன்றியத்தின் சார்பில் இலங்கை வந்துள்ள ஜப்பானிய ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவே நேற்று (22) இதனைத்தெரிவித்தது. ஜப்பானிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சரும் தற்போதைய எம்.பியுமான ஹிரோபியுமி ஹிரானோ தலைமையிலான எட்டுப் பேர் கொண்ட குழு ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றது. (மேலும்.....)

மார்கழி 22, 2010

புலித்தோல் போர்த்திய பச்சோந்திகளும் புலி வியாபாரமும் - புலி ஊடகங்கள்

இடிக்குந்துணையாரை ஆள்வாரை
யாரே கெடுக்குந்த தகைமை யவர்
(குறள் 447)

தளபதி ரமேஸ் மட்டுமல் தலைவரும் கழுத்தில் கிடந்த சயனைட் குப்பியை கழற்றி எறிந்துவிட்டு, எதிரிகளின் பாசறையை நோக்கி வெள்ளைக் கொடியுடன் சென்றது காணொளியாக உள்ளது. யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சரணடைய ஏற்பாடு செய்யப்பட்ட நாடகத்தில் சரணடைந்தார். இந்த ஒளிப்பதிவு சிலரால் பார்க்கப்பட்டு உள்ளது. வே பிரபாகரனை என்ன செய்ய வேண்டும் என்ற முடிவை இந்தியா இலங்கையிடமே விட்டுவிட, வே பிரபாகரனுக்கு சயனைட் வழங்கப்பட்டது. ஆனால் வே பிரபாகரன் அதனை எடுக்கவில்லை. அதன் பின்னர் இடம்பெற்ற சித்திரவதைகளில் வே. பிரபாகரன் நிர்வாணமாக ஆட்டம் போட நிர்ப்பந்திக்கப்பட்டு இராணுவத்தினரின் பூட்ஸ்களை நக்கவும் பணிக்கப்பட்டு அவ்வாறு பூட்ஸ்களை நக்கியும் உள்ளார். அதன் பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டும் உள்ளார். (மேலும்.....)
 

மார்கழி 22, 2010

 

Rahul says Sri Lanka not giving justice to Tamils

Voicing concern over Sri Lanka government "not doing enough" for the Tamils there, Congress leader Rahul Gandhi on Wednesday said he would ensure that they get justice. "We are concerned that enough is not being done for Sri Lankan Tamils by the government there," the AICC General Secretary said during a brief interaction with a group of intellectuals here.Gandhi said he would take up the matter with "appropriate persons" at the Centre and see that Sri Lankan Tamils got justice. (more...)

மார்கழி 22, 2010

 

ஐ.நா. செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு இலங்கை வருவது நிச்சயமில்லை

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் இலங்கை விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கை வருவது நிச்சயமில்லையென ஐ.நா. செயலாளரின் பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார். ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும் ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கைக்கு வருவதோ அல்லது இக்குழு நல்லிணக்க ஆணைக்குழுவை எப்பொழுது சந்திக்கும் என்ற விடயமோ இதுவரை நிச்சயமாகவில்லையென ஃபர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

இலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாக

தூத்துக்குடியிலிருந்து பிரதான நகரங்களுக்கு ரயில் சேவை

இலங்கை - இந்திய கப்பல் சேவையுடன் இணைந்ததாகத் தொடர் ரயில் சேவைகளையும் நடத்துவது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தொடர் ரயில் சேவைகளை நடத்துவது பற்றி இலங்கை - இந்திய அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா தெரிவித்துள்ளார். உதாரணமாக கண்டியிலிருந்து கொழும்பு வந்து கப்பல் மூலம் தூத்துக்குடி வழியாக சென்னை செல்ல விரும்பும் ஒருவர், சென்னை வரையிலான கப்பல், ரயில் பயணங்களுக்கான பயணச் சீட்டைக் கண்டியிலேயே பெற்றுக் கொள்ள வசதிசெய்ய வேண்டு மெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 22, 2010

வடபகுதியில் வன்செயல்களால் பாதிக்கப்பட்டோருக்கு நட்டஈடு

பயங்கரவாத வன்செயல் காரணமாக 1983 ஆண்டுக்கு பின்னர் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்த 685 பொது மக்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால் நட்டஈடுகள் வழங்கப்படவுள்ளன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மற் றும் நெடுங்கேணியைச் சேர்ந்த இவ ர்களுக்கு நாளை மறுதினம் வெள் ளிக்கிழமை வைபவரீதியாக காசோ லைகள் வழங்கப்படும். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேருக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவு காலை 9 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திலும், முல்லைத்தீவைச் சேர்ந்த 110 பேருக்கும், நெடுங்கேணியைச் சேர்ந்த 85 பேருக்குமான முதல் கட்ட நட்டஈடு கொடுப்பனவு நெடுங்கேணி பிரதேச செயலகத்தில் வெள்ளி மாலை 3 மணிக்கு வழங்கப்படும். (மேலும்.....)

மார்கழி 22, 2010

 

இங்கிலாந்து

தீவிரவாத சந்தேகத்தில் இங்கிலாந்தில் 12 பேர் கைது

இங்கிலாந்து நாட்டில் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக சதித்திட்டம் தீட்டியதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் லண்டன் நகரில் 3 பேரும், கார்டிங் நகரில் 5 பேரும், மற்ற இடங்களில் இருந்து 4 பேரும் என 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 11 பேர் 17 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே கைது செய்யப்பட்டனர். ஒருவர் மட்டும் பர்மிங்ஹாம் நகரில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து நாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் மும்பை பாணியில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த ஒரு மாத காலமாக ஐரோப்பிய பொலிஸ் படை எச்சரித்து வந்தது. இதை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு பொலிஸார் இந்த 12 பேரை கைது செய்தனர்.

மார்கழி 22, 2010

 

யாழ். நகரில் சுங்க திணைக்கள அலுவலகம் 3 ஆம் திகதி திறப்பு

வட பகுதியை முழுமையாக கண்காணிக்கும் வகையில் சுங்கத் திணைக்களத்தின் அலுவலகமொன்று யாழ். நகரில் எதிர்வரும் 3 ஆம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவிக்கிறது. வட பகுதியில் நீண்டகாலமாக சுங்கத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் முடங்கிப் போய்க் கிடந்தன. வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கியதாக இந்த சுங்க திணைக்கள உப அலுவலகம் இயங்கும். திருகோணமலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் சுங்க திணைக்களத்தின் உப அலுவலகம் திறக்கப்படவுள்ளது.

மார்கழி 22, 2010

 

நாளைய வெற்றிக்காக இளைஞரை தயார் செய்வதே புதிய கல்வித் திட்டத்தின் இலக்கு

தொழில் நுட்பக் கல்வி யானது கணிதத் தையும் விஞ்ஞானத் தையும் பிரயோகித்துப் பணிகளைத் திறமையாகவும், வேகமாகவும், திருத்தமான முறையிலும் சிக் கனமாகவும் செய்து முடிக்கக் கூடிய அறிவை வழங்குகிறது. இதை உத்தேசித்தே கலைப்பிரிவு என்று ஒதுக்கி வைக்கப்படும் மாணவர்களையும் ஏனைய பிரிவினரோடு சமப்படுத்தி அவர்களின் இயல்பான திறமைகளை இனங்கண்டு சமூகத்திற்குப் பயனுள்ள பிரஜைகளாக உருவாக்க கல்வி மறுசீரமைப்புத்திட்டம் வழிவகுக்கிறது. (மேலும்.....)

மார்கழி 22, 2010

 

கிளி., முல்லை., மக்களுக்கு வெள்ள நிவாரணம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சகல வேலைத் திட்டங்களுக்கும் தமிழ்த் தேசிய கூட் டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என யாழ். மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் மாவை சேனாதி ராஜா நேற்று கூறினார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வரும் உதவிகள் குறித்தும் அவர் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

சோசலிசம் வலுவடையும்  சீர்திருத்தங்கள் குறித்து ரால் காஸ்ட்ரோ கருத்து

கியூபாவில் மேற்கொள் ளப்போகும் சீர்திருத்தங்கள் 1959 ஆம் ஆண்டுப் புரட்சிக் குப்பிறகு உருவான சோச லிச கியூபாவை மேலும் வலுவடையவே செய்யும் என்று கியூபாவின் ஜனாதிபதி ரால் காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார். கியூபாவில் மேற்கொள் ளப்பட்டு வரும் சீர்திருத்தங் கள் பற்றி தவறான செய்தி கள் பரப்பப்பட்டு வருகை யில், பிபிசி செய்தி நிறுவனத் தின் மைக்கேல் ஓஸ், கியூ பாவுக்கே சென்று நேரில் பார்த்தவற்றை தனது செய் தியில் விளக்குகிறார். புரட் சியை சாகடித்துவிடாமல் பார்த்துக் கொள்வதற்கு இந்த சீர்திருத்தங்கள் அவ சியம் என்று ரால் காஸ்ட்ரோ சொல்வதை அவர் பதிவு செய்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

 

வட கொரியாவின் எச்சரிக்கையை மீறி தென் கொரியா போர் விமானப் பயிற்சி

வட கொரியாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி தென் கொரியா கடந்த திங்கட்கிழமை இராணுவப் பயிற்சியை மேற்கொண்டது. வட கொரியாவை ஒட்டிய தீவுப் பகுதியில் தென் கொரியப் போர் விமானங்கள் சீறிப் பாய்ந்து பயிற்சியில் ஈடுபட்டன. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இராணுவப் பயிற்சி மதியம் 2.30 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு நிறைவடைந்தது. இப்பயிற்சி நிறைவடைந்ததும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிம் க்வான்-ஜின் பேட்டி அளித்தார். அப்போது எங்களது நாட்டு முப்படைகளும் வட கொரியா விடுக்கும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றன என்றார். (மேலும்.....)

மார்கழி 22, 2010

வங்கித்துறை பொதுச்சேவையானது  வெனிசுலா நாடாளுமன்றத்தில் தீர்மானம்

லாபத்தை மனதில் கொண்டு இயங்கி வந்த வெனிசுலாவின் வங்கித்துறை இனி மேல் பொதுச் சேவைத் துறையாக இயங்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித் துள்ளது. இதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. பொதுச் சேவைத்துறை என்பதற்கான விளக்கமும் அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. சோசலிசத்தை நோக்கிச் செல்வதன் ஒரு பகுதியாகவே இத்தகைய தீர்மானம் கொண்டு வந்ததாக ஆளும் சோசலிஸ்டு கட்சி யினர் குறிப்பிட்டார்கள். (மேலும்.....)

மார்கழி 21, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் ஒன்றிணைந்து செயற்படுவது ஆரோக்கியமான விடயம் -அரசாங்கம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் ஒன்றிணைந்து செயற்படுமாயின் அதனை ஆரோக்கியமான ஒரு விடயமாகவே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் நோக்குகின்றது. இரு தரப்பினரும் இணைந்து அரசாங்கத்துடன் செயற்பட முன்வருவார்களாயின் அவர்களுடன் ஒத்துழைத்து செயற்படுவதற்கு அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பும் தமிழ்க்கட்சிகளின் அரங்கமும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதா? இல்லையா என்பதனை அவர்களே தீர்மானிக்க வேண்டும். இவர்கள் இணைந்து ஒரு தீர்வு யோசனையினை முன்வைப்பார்களேயானால் அது குறித்து சாதகமாக பரிசீலிப்பதற்கும் அரசாங்கம் தயாராகவே உள்ளது என்றும் அவர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

தமிழ் கட்சிகள் ஏற்படுத்தியுள்ள குழுவில் முஸ்லீம் கட்சிகளும் இணைக்கப்பட வேண்டும் - ஹசன் அலி!

அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்காக கூட்டு முன்னணி ஒன்றை ஏற்படுத்த தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் எண்ணியுள்ளதாக தெரியவருகிறது. இந்த நோக்கத்தில் தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்படுத்திக் கொண்டுள்ள குழுவில் முஸ்லீம் கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹசன் அலி தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் கட்சிகளின் அரசியல் தீர்வு யோசனையை தயாரிப்பதற்கான கூட்டுக்குழுவின் உறுப்பினருமான சுமந்திரன், அது சிறந்த நடவடிக்கையாக அமையும் என கூறியுள்ளார். இந்த யோசனை குறித்து ஆராய கூட்டுக்குழு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் கட்சிகளின் அரங்கம் என்பன இணைந்து அரசியல் தீர்வு தொடர்பான யோசனையை தயாரிப்பதற்காக கூட்டுக் குழுவொன்றை ஏற்படுத்தின.

மார்கழி 21, 2010

கனடாவுக்கு எம்.வி. சன் சீ கப்பல் மூலம் சென்ற பெண்ணொருவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்!

கனடாவுக்கு எம்.வி. சன் சீ கப்பல் மூலம் சென்ற பெண்ணொருவர் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார் என கனேடிய அரசாங்கப் பிரதிநிதி ஒருவர் குற்றஞ் சாட்டியுள்ளார் என அந்நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பெண் புலிகள் இயக்கத்துடன் செயற்பட்டவர் என்றும் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கே உரித்தான கழுத்துப் பட்டி ஒன்றை வைத்திருந்தார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவரென சந்தேகிக்கப்படும் இந்தப் பெண்ணின் விபரங்களை வெளியிடுவதில் சில சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் இவர் மீதான விசாரணைகள நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்றன. தற்போது இந்தப் பெண்ணும் அவரது பிள்ளைகளும் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 21, 2010

தேசம் நெற், புலி ஊடகச்சண்டை: கருத்து தெரிவிக்குமா விக்கிலீக்ஸ்?

தமிழர்களுகளுடைய கருத்துச்சுதந்திரம் எப்போதும் ஒரு ஆரோக்கியமான விவாதமாக இருந்ததில்லை. அடுத்தவன் வீட்டு மதில் மேல் கண்டதையெல்லாம் எழுதுவது கூட கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. சிங்களவனின் தோலில் செருப்பு தைத்துப்போடுவோம் என்பது கூட அன்றைய தமிழத்தலைவர்களின் கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை துரோகி என புலிகள் அழைப்பது கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. தமிழில் தேசியகீதம் பாடக்கூடாது என சிங்கள இனவாதிகள் சொல்வது கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. ஆகமொத்தம் வாயில் என்ன கண்றாவிகள் வருகிறதோ அது எல்லாம் கருத்துச்சுதந்திரமாக இருந்திருக்கிறது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த

இந்திய பாதாள உலகக் குழு உறுப்பினரிடம் விசாரணை

புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கொழும்பில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இந்திய பாதாள உலகக் குழுவான தாவூத் இப்ராகிமின் குழு உறுப்பினரிடம் மும்பாய் குற்றத் தடுப்புப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு மே 8 ம் திகதி தாவூத் இப்ராகிம், குழு உறுப்பினர் மிர்சா முகைதீன்பெய்க் கொழும்பில் கைது செய்யப்பட்டிருந்தார். புலிகள் இயக்கத்துடன் ஆயுத விற்பனையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

இன்று 20-12-2010 அன்று சென்னையில் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணினரால் ஏற்பாடு செய்யப்பட்ட  பத்திரிகையாளரின் சந்திப்பில் கொடுக்கப்பட்ட அறிக்கை!

சென்னை முதல் டெல்கி வரை ஈழத் தமிழர்களின் நடைபயணம்!

நாள்: 16-01-2011 ஞாயிறு

நேரம்: காலை 10:00 மணி.

இடம் : இராஜீவ்காந்தி நினைவு மண்டபம், சிறிபெரும்புதூர்.

தமிழர்களைப் புறக்கணித்து, பிரித்தானியரை ஏமாற்றி இலங்கை அரசாங்கத்தைக் கைப்பற்றிய சிங்கள ஆட்சியாளர் 1948ம் ஆண்டு முதல் தமிழ் இனத்தை அழித்து வருகின்றனர். ஈழத் தமிழர்களின் விவசாய நிலங்களைக் கைப்பற்றி சிங்களக் குடியேற்றங்களை வடக்குக் கிழக்கு மாகாணங்களில் புகுத்தி வந்த சிங்கள அரசு இப்போது தமிழர்களின் வாழ்விடங்களையும் ஆக்கிரமித்துச் சிங்களக் குடியேற்றங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து வருகிறது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

வடகொரியா - தென்கொரியா மோதல்

ஐ. நா. கூட்டம் தோல்வியில் முடிவு

வடகொரியா - தென்கொரியா இடையிலான மோதலால் ஏற்பட்டு ள்ள பதற்ற நிலையை தணிப் பதற்காக நடைபெற்ற ஐ. நா. பாதுகாப்பு சபையின் சிறப்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. தென்கொரியாவுக்கு சொந்தமான தீவான பியோங்கியாங் மீது வட கொரியா அண்மையில் பீரங்கி தாக்குதல் நடத்தியது. இதில் 4 பேர் பலியானார்கள். இதைத் தொடர்ந்து இரு நாடுக ளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக ஐ. நா. பாதுகாப்பு சபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப் பட்டது. இந்த கூட்டத்தில் வட கொரி யாவை கண்டித்து அறிக்கை வெளி யிட மேற்கத்தேய நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் ‘வீட்டோ’ ரத்து அதிகாரம் உள்ள சீனாவும், ரஷ்யாவும் வட கொரியாவை கண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இரு தரப்பினரும் தங்களது நிலையில் பிடிவாதமாக இருந்த தால், எந்த முடிவும் எடுக்கப் படாமல் கூட்டம் தோல்வியில் முடிவடைந்ததாக செய்திகள் தெரி விக்கின்றன.

மார்கழி 21, 2010

உள்ளூராட்சி மன்றத் திருத்தச் சட்டம் மீதான விவாதம் பாராளுமன்றத்தில்

புதிய உள்ளூராட்சி மன்ற திருத்தச் சட்டமூலம் அடுத்த மாதம் 4ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுக்கப்பட உள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்தார். தொகுதி வாரி முறையையும்,விகிதாசார முறையையும் இணைத்து கலப்பு முறையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி உத்தேச தேர்தல் முறை திருத்தச் சட்டம் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சரினால் பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் புதிய முறைப்படி நடத்துவதா, பழைய விகிதாசார முறைப்படி நடத்துவதா என இதுவரை அமைச்சரவையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்த அரசாங்கம் ஏற்கெனவே தீர்மானித்திருந்தது தெரிந்ததே.

மார்கழி 21, 2010

இந்தியா - கொழும்பு கப்பல் சேவையை நடத்த ஐந்து தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன - ஜீ. கே. வாசன்

கொழும்புக்கும் இந்தியாவின் தூத்துக் குடிக்கும் இடையிலான கப்பல் சேவை அடுத்துவரும் இரண்டு மாதங்களுக்குள் ஆரம்பிக் கப்படும் என்றும் இக்கப்பல் சேவையை நடத்த தனியார் முகவர் நிறுவனங்கள் முன்வந்திருப்பதாகவும் இந்திய மத்திய கப்பற்துறை அமைச் சர் ஜீ. கே. வாசன் தெரிவித்துள்ளார். இதற்கான அனுமதியை இந்திய மத் திய அமைச்சரவை ஏற்கனவே வழங்கி யிருக்கும் நிலையில் வெகுவிரைவில் இக் கப்பற்சேவை ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஜனவரி மாதம் கொழும்பில்

மோதல்களால் இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை கலை ஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளால் தீர்க்க முடியும் என்பதற்கிணங்க எதிர்வரும் ஜனவரி 6ஆம். 7ஆம், 8ஆம், 9ஆம் திகதி களில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டை கொழும்பில் நடத்தவிருப்பதாக சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மோதல்களால் இனங்களுக்கிடையில் தோன்றியிருக்கும் இன முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையில் தமிழ் எழுத்தாளர்க ளையும், சிங்களக் கலை இலக்கியவாதிகளை இணைத்தும், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்கள், தமிழக எழுத்தாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் எழுத் தாளர்களுக்கிடையில் ஒரு உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் நோக்கிலும் 2011 ஆம் ஆண்டு சர்வதேச எழுத்தாளர் மாநாடு நடத்தப்படவிருப்பதாக இம்மாநாட்டின் பிரதம அமைப்பாளரும் சர்வதேச இணைப் பாளருமான முருகபூபதி தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

நாளைய வெற்றிக்காக இளைஞரை தயார் செய்வதே புதிய கல்வித் திட்டத்தின் இலக்கு

வகுப்பறையில் ஆசிரியரின் பாகமும் மாணவரின் பாகமும் புரட்சிகரமான முறையில் மாற்றத்திற்குள்ளாகவேண்டியுள்ளது. ஆசிரியரிடமிருந்து அறிவு வெறுமனே கடத்தப்பட்டு மாணவரிடம் படிப்பதற்குப் பதிலாக, மாணவர் மைய, தேர்ச்சிக்கமைய செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட முறைமை புகுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வகுப்பில் கற்கும் ஒவ்வொரு மாணவனதும் மாணவியினதும் சிந்தனைத்திறன்கள், சமூகத்திறன்கள், தனிப்பட்ட திறன்கள், அறிவைத் தேடியறியும் திறன்கள் என்பவற்றை விருத்தி செய்யும் பெரும் பொறுப்பை ஆசிரியர் தம் தோளின் மீது சுமக்கத் தயாராக வேண்டிய கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

அதிசய எண் ‘1111’ என்ன தெரியுமா?

‘1111’ என்ற விசேட எண்ணை விரைவில் நீங்கள் சந்திக்க இருக்கின்றோம். அது என்ன என்று தலையை சொறிந்தபடி யோசிக்க வைக்கிறதா? அது வேறொன்றும் இல்லை. வரப்போகும் புத்தாண்டைத் தான் குறிக்கிறது. வரப்போகும் புத்தாண்டும் 1ம் திகதி ஜனவரி மாதம் (1ம் மாதம்), 2011ன் சுருக்கம் ‘11’ இவற்றை சேர்த்து குறிப்பிடும் போது 1-1-11 என வருகிறது. இதன் பிறகு இதேபோல எண்கள் வர வேண்டுமானால், 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது 2022 ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 2ம் திகதியை குறிப்பிடும் வகையில் 2-2-22 எனவும் அதன் பிறகு 11 ஆண்டுகள் கழித்து 3-3-33 எனவும் இதே போல ஒவ்வொரு 11 ஆண்டுகள் கழித்தும், அதாவது 9-9-99 வரை குறிப்பிடலாம்.

மார்கழி 21, 2010

எல்லோருக்கும் பல்கலைக்கழக பட்டதாரிகளாகும் வாய்ப்பு கிடைக்கும்

இலங்கையில் கடந்த 60 ஆண்டு காலமாக இருந்து வரும் இலவச கல்வியை மேலும் மேம்படுத்தும் முகமாக, அரசாங்கம் இப் போது நாடெங்கிலும் உள்ள 340 தேசிய பாடசாலைகளில் சீர்த்திருத்தங்களை செய்வதற்கு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இப்பாடசாலைகளில் தொடர்ந்தும் 8 வருட காலம் பணியாற்றிவரும் ஆசிரியர்களை அடுத்த ஜனவரி மாதம் முதல் இடமாற்றம் செய்யப் போவதாக கல்வியமைச்சர் அறிவித்திருக்கிறார். ஒரே ஆசிரியர் ஒரே பாடசாலையில் அதிக காலம் கடமையாற்றினால், அவர் மாற்றங்கள் ஏற்படுத்துவதை விரும்பமாட்டார் என்பதற்காகவும், புதிதாக பட்டம் பெற்று வெளியேறும் திறமை மிக்க இளைஞர்களையும், யுவதி களையும் இப்பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிப்பதற்கும் கல்வியமை ச்சர் பந்துல குணவர்தன இந்த தீர்மானத்தை எடுத்திருக்கிறார். (மேலும்.....)

மார்கழி 21, 2010

தீவிரவாதத்தை தடுக்க பாக். எடுக்கும் முயற்சிக்கு சீனா பாராட்டு

பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்பதிகரமானதாக இல்லை என்றும் இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக ஆப்கானிஸ்தான் எல்லை அருகே உள்ள தீவிரவாத முகாம்களை மூட தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்து உள்ள நிலையில் அதற்கு எதிரான கருத்தை சீனா தெரிவித்துள்ளது. அமெரிக்கா மட்டும் அல்லாமல் மேற்கத்தேய நாடுகள் பலவும் பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை விமர்சித்து வரும் நிலையில் சீனா அதற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 21, 2010

சுவிஸ் வங்கி கடும் ஆடைக் கட்டுப்பாடு

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கி ஒன்று தனது ஊழியர்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகள், உலக அளவில் பிரசித்தமானவை. அங்குள்ள மிகப்பெரிய வங்கியான யூ. எஸ். பி. வங்கி, தன் ஊழியர்களுக்கு கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது தொடர்பாக ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள் அடங்கிய 40 பக்க புத்தகத்தை அந்த வங்கி தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மேற்கொள்ளப்பட வேண்டிய ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்த விதிமுறைகள், அந்த புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன. எப்படி தலை சீவிக்கொள்ள வேண்டும், எந்த மாதிரியான பாதணிகளை அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட குறிப்புகளும் விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. (மேலும்.....)

மார்கழி 20, 2010

அரசுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கும் நிலைப்பாட்டிலேயே செயற்பாடு - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

அரசியல்தீர்வு மற்றும் மீள் குடியேற்றம் உள்ளிட்ட உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களில் அரசாங்கத்திற்குப் பூரண அனுசரணை வழங்குவதென்ற நிலைப்பாட்டின் அடிப்படை யிலேயே செயற்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர். இது தொடர்பாகத் தினகரனுக்குக் கருத்துத் தெரிவித்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். (மேலும்.....)

மார்கழி 20, 2010

இந்திய இடதுசாரிகள்  அணிக்கு எதிராக  அமெரிக்கா சதி - விக்கி லீக்ஸ்

2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் முக்கிய பங்கு வகித்த மூன்றாவது அணி ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று அமெரிக்கா சதித்திட்டம் தீட்டியதை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட் டுள்ள புதிய தகவல்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசின் முதல் ஆட்சிக் காலத் தின்போது மக்களவையில் 61 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக் கட்சிகள், மதவெறி பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுக் கும் பொருட்டு, ஐ.மு.கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்தன. இந்நிலையில் இடதுசாரிக்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நவீன தாராளமயக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றியதோடு மட்டுமின்றி மன்மோகன் சிங் அரசு, அமெரிக்காவுடனான அணுசக்தி உடன் பாட்டில் கையெழுத்திட முயன்றது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பனி


சுவீடன் - பிரிட்டன் விமான நிலையங்கள் பூட்டு

பிரிட்டிஷ், ஜேர்மன், சுவீடன் போன்ற நாடுகளில் பெய்யும் கடுமையான பனியால் அங்கு இயல்பு நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. விசேடமாக விமான சேவைகள் அனைத்தையும் இந்நாடுகள் இடைநிறுத்தியுள்ளன. நெடுஞ்சாலைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்துள்ளதால் தரைமார்க்கமான போக்குவரத்துகளும் ஸ்தம்பித்தன. பாடசாலைகள் வைத்தியசாலைகள், அரச, தனியார் அலுவலகங்கள் இயங்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் மிக விசேடமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். பிரிட்டன் தனது உள், வெளிநாட்டு விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தியது. பிரிட்டனின் வட பகுதி ஸ்கொட்லாண்ட் என்பன மிகமோசமான பனிப்பொழிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இருபது சென்ரிமீற்றர் பனி பொழிந்ததாக அறிவிக்கப்பட்டது. விமான சேவைகள் திடீரென இடைநிறுத்தப்பட்டதால் அதிகளவான பயணிகள் வீதியோரங்களிலும் விமான ஓடுபாதைகளிலும் இரவுகளைக் கழித்தனர்.

மார்கழி 20, 2010

வடக்கு, கிழக்கில் வீடமைப்பு  திட்டங்கள் நிறுத்தப்படவில்லை


வடக்கு, கிழக்கில் தொண்டர் நிறுவனங் களின் நிதி உதவியில் மேற்கொள்ளப்படும் புதிய கட்டிடங்களின் நிர்மாண வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ‘சண்டே டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தியை அரசாங்கம் மறுத்துள்ளது. இந்தச் செய்தி முற்றிலும் தவறானதும் திரிபுபடுத்தப்பட்டதுமாகுமெனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கில் எதிர்காலத்தில் புதிய கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு மேலாக சேதமுற்ற கட்டடங்களை புனர் நிர்மாணிப்பதற்கு முன்னுரிமை வழங்கும் வகையிலேயே சுற்றுநிருபத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஆனால், தீர்மானத்தின்படி தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய கட்டடத்திட்டங்கள் எந்த வகையிலும் பாதிக்காது என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

பாதுகாப்பு அத்துமீறலும்  அமெரிக்க வரம்புமீறலும்

மத்திய அரசின் அணுகுமுறைகள் எந்த அளவிற்கு மக்களைக் கிள்ளுக் கீரையாக நடத்துவதாக இருக்கின்றன, அதை அமெரிக்க ஏகாதிபத்தியம் எந்த அளவிற்குத் தனது நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறது என்பதை அண்மையில் வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள ஆவணம் அம்பலப்படுத்துகிறது. காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் நாட்டின் வேறு சில பகுதிகளிலும் சிறைக்கைதிகள் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதை இந்திய அரசு “கண்டு கொள்ளாமல்” இருக்கிறது என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதராக 2002-04 காலகட்டத்தில் இருந்த டேவிட் முல்போர்டு ஒரு ரகசியத் தொடர்பு மூலம் தனது அரசுக்குத் தெரிவித்தார் என்று அந்த ஆவணம் கூறுகிறது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

மயக்க ஊசி ஏற்றும் டொக்டர்களுக்கு தட்டுப்பாடு

கண்டி பெரியாஸ்பத்திரியில்  சத்திர சிகிச்சைகள் இடை நிறுத்தம்

கண்டி பெரியாஸ்பத்திரியில் மயக்க ஊசி செலுத்தும் டொக்டர்கள் பற்றாக்குறை காரணமாக கண்டி பெரியாஸ்பத்திரியில் மேற்கொள்ளப்படும் அனைத்து சத்திர சிகிச்சைகள் நேற்று (19) முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 17ம் திகதி முதல் அவசர சத்திரசிகிச்சை மாத்திரம் இவ் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டன. நேற்று முதல் இச்சேவைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக கண்டி பெரியாஸ்பத்திரியின் பணிப்பாளர் டொக்டர் சந்திரா குணதிலக்க தெரிவித்தார். இருதயம் மற்றும் நரம்பு போன்ற அவசர சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ள தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதும் இந்த சத்திர சிகிச்சைக்குரிய டொக்டர் கள் இவ்வாறு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து நோயாளிகள் பல்வேறு அசெளகரியங்களுக்குள்ளாக்கப்படும் அபாயம் ஏற் பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் சுட்டிக் காட்டினார். ஏனைய ஆஸ்பத்திரிகளி லிருந்து சில டொக்டர்களை கண்டி பெரியாஸ்பத் திரிக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வுள்ளதாகவும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இலவசக் கல்வியை இலங்கையில் முடித்துவிட்டு வெளிநாடுகளுக்கு டாக்ரர்கள் ஓடினால் இது நடைபெறத்தான் செய்யும்.

மார்கழி 20, 2010

யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு 18,698 மில். ரூபா ஒதுக்கீடு

யாழ். மாவட்டத்தில் அடுத்த நிதியாண்டில் 1648 அபிவிருத்தித் திட்டங்களுக்கு 18,698 மில்லியன் ரூபா ஒதுக்கப்படவிருப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் அறிவித்துள்ளார். இதற்கான முன்மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப் பெற்றதும் வேலைகள் ஆரம்பமாகு மெனவும் கூறியுள்ளார். இவற்றுக்கு மேலாக யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு ஐந்தாண்டு செயல்திட்டமும் நிறைவேற்றப்படவுள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்றும் 18004 குடும்பங்களைச் சேர்ந்த 66605 பேர் நலன்புரி நிலையங்களிலும் நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனை வரும் வலிகாமம் வடக்கு பிரதேசங் களை சேர்ந்த வர்கள். இவர்கள் வாழ்ந்த பகுதிகளில் கண்ணி வெடிகள் இன்னும் அகற்றப்படாமையால் இவர்களை மீள்குடியமர்த்துவதில் தாமதம் நிலவுவதாக தெரிவித்தார்.

மார்கழி 20, 2010

முதலாளித்துவத்தால் தீர்க்கவே முடியாத முரண்பாடு

உலக முதலாளித்துவத் திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி படிப்படியாக அதன் ஆழத்திற்கே சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் இம்மாத துவக்கத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகளின் 12வது சந்திப்பு நடை பெற்றது. ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டிருக்கும் சூழலில், ஏகாதிபத்தியத் திற்கு எதிரான போராட்டத்தை - உலக அமைதி, முன்னேற்றம், சோசலிசத்திற் கான போராட்டத்தை மேலும் தீவிரப் படுத்த வேண்டிய அவசியம் குறித்து இக் கூட்டம் விவாதித்தது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

லண்டன் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிர்ப்பு யாழ். நகரில் உண்ணாவிரதம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் புலம்பெயர்ந்தோர் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அனுமதிக்காமையைக் கண்டித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசா தலைமையில் நேற்று யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்று நடத்தப்பட்டது. நேற்றுக்காலை 8 மணி முதல் மாலை வரை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் யாழ். குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலுமிருந்து வருகை தந்த ஏராளமானோர் கலந்துகொண் டிருந்தனர். (மேலும்.....)

மார்கழி 20, 2010

போர்ப் பயிற்சியை நிறுத்துமாறு ரஷ்யா - சீனா தென் கொரியாவுக்கு மீண்டும் அழுத்தம்

யுத்தப் பயிற்சிகள் எவற்றிலும் ஈடுபட வேண்டாமென ரஷ்யாவும், சீனாவும் கடுமையான அழுத்தங்களை தென் கொரியாவுக்குச் செலுத்தியுள்ளன. கொரியன் குடாவில் விமான மோதலையுண்டுபண்னும் வகையில் நடந்துகொள்ள வேண்டாமென ரஷ்யாவும் சீனாவும் தென் கொரியாவை மீண்டும் அழுத்தியுள்ளன. இன்று அல்லது நாளை தென் கொரியா ஒருநாள் யுத்தப் பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இதைக் கடுமையாக எதிர்த்துள்ள சீனா, ரஷ்யா என்பன இரண்டு நாடுகளும் (வட, தென் கொரியா) அமைதியைப் பேணவேண்டுமெனக் கேட்டுள்ளன. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தென் கொரியா யுத்தப் பயிற்சியைக் கைவிடும் எண்ணம் எமக்கில்லை. திட்டமிட்டபடி இந்த ஒருநாள் பயிற்சிகள் இடம்பெறும் என அறிவித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 20, 2010

திருகோணமலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலை மாவட்டம் கின்னியா பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட கல்லறப்பு பகுதியில் ஒருதொகை ஆயுதங்கள் சீனக்குடா பொலிஸாரினால் நேற்று இரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. சீனாக்குடா பொலிஸ் பிரிவின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவில் கடமை புரியும் உதவி பரிசோதகரின் தகவாளிக்கு கிடைத்த தகவலையடுத்து இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் கிளைமோர் கண்ணிவெடிகள் 3, மதிவெடிகள் 5, பெச்சினேட்டர் 86, சி.எப் ரக வெடிமருந்து ஒரு கிலோ 800 கிராம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாயுதங்கள் மாவிலாறு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட யுத்த நடவடிக்கையின் போது பயன்படுத்துவதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தவை என சந்தேகிக்கப்படுதாக தெரிவிக்கப்படுகின்றது.

மார்கழி 20, 2010

ஐரோப்பிய பாராளுமன்றம் புலி ஆதரவாளரின் களம்  - இலங்கை அரசாங்கம் _

இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தை பயன்படுத்துவதற்கு அப்பாராளுமன்றம் அனுமதியளிக்கிறது என இலங்கை குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பெல்ஜியம் மற்றும் லக்ஸம்பர்க் ஆகியற்றுக்கான இலங்கைத் தூதுவர் ரவிநாத ஆரியவன்ஸ இது தொடர்பாக கூறுகையில் கடந்த வாரம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கை தொடர்பாக பரிமாறப்பட்ட கருத்துக்களுக்கு இலங்கை பதிலளிப்பதற்கான வாய்ப்பு நிராகரிக்கப்பட்டதை தாம் கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 20, 2010

ஐ. நா. படைகளை வெளியேற உத்தரவு

ஐவரிகோஸ்ட்டில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவின் வெற்றியை ஐ.நா. அங்கீகரித்தது. இதனால் கோபமுற்ற அந்நாட்டின் ஜனாதிபதி கபகோ அனைத்து ஐ.நா. படைகளையும் வெளியேறுமாறு உத்தரவிட்டார். ஐவரிகோஸ்ட்டில் அண்மையில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருவரும் வெற்றிக்கு உரிமை கோரினர். இதனால் அங்கு பெரும் நிர்வாகச் சிக்கல் ஏற்பட்டது. அரசாங்கத்தின் ஒரு பகுதி நிர்வாகத்தை குவற்றா கட்டுப்படுத்த ஊடகம் உட்பட ஏனைய விடயங்களை கபகோ கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தார். இவ்விருவரை யும் சமாதானம் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதையடுத்து எதிர்க்கட்சி வேட்பாளர் குவற்றாவின் வெற்றியை ஐ.நா. உறுதிசெய்தது. இதனால் ஆத்திரமடைந்த ஜனாதிபதி கபகோ நாட்டிலுள்ள ஐ.நா. படைகளை வெளியேறும்படி உத்தரவிட்டார்.

மார்கழி 20, 2010

அமெரிக்காவின் இன்னும் பல இரகசியங்களை விரைவில் வெளியிடுவேன - ஜுலியன் அசாஞ்ஞே

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜுலியன் அசாஞ்ஞே இன்னும் பல தகவல்களை இணையத் தளத்தில் வெளியிடப் போவதாக தெரிவித் துள்ளார். அமெரிக்க நிதி நிறுவனமொன்று அவருடைய சொத்துக்களை முடக்கியுள்ள நிலையில் இதைப் பொருட்படுத்தாத ஜுலி யன் அசாஞ்ஞே தன்னை சுவீட னுக்கு நாடு கடத்தும் திட்டத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் இவ்விடயத்தில் தன்னைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் எனவே அமெரிக்க நிதி நிறுவனம் தனது பணம், சொத்துக்களை முடக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 19, 2010

Devananda, Karuna deny WikiLeaks revelations

Recruiting child soldiers, carrying out killings, running brothels among charges

(By Chris Kamalendran)

Both EPDP Leader Minister Douglas Devananda and Deputy Minister Vinayagamoorthy Muralitharan yesterday strongly denied the allegations that paramilitary groups linked to them were allowed by the Government of Sri Lanka (GOSL) to recruit child soldiers from IDP camps, carry out extra judicial killings and run brothels within Army camps, as revealed by WikiLeaks on Friday. (more....)

மார்கழி 19, 2010

பக்க சார்பான இணையதளங்களுக்கு 'விக்கிலீக்ஸ்' ஒரு பாடப் புத்தகம்

(அ. விஜயன்)

உலகத்தில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் அது அச்சு ஊடகமானால் என்ன, ஒளி ஊடகமானால் என்ன, ஒலி ஊடகமானால் என்ன, இலத்திரனியல் ஊடகமானால் என்ன பக்கசார்பான செய்திகளை பிரசுரித்து ஒரு நாட்டையோ அல்லது ஒரு கட்சியையோ அல்லது ஒரு சமூகத்தையோ, அல்லது ஒரு மதத்தையோ அல்லது ஒது இனத்தையோ அல்லது ஒரு தனிமனிதனையோ திருப்திபபடுத்தும் போக்கே காணப்பட்டு வந்துள்ளது. இதற்கு மாறாக அமைந்து தனித்தன்மையுடன் காணப்படுகிறது. 'விக்கிலீக்ஸ்' இணையதளத்தின் செய்திகள். (மேலும்.....)

மார்கழி 19, 2010

'விடுதலைப்புலிகளுக்கு உதவினர்' என்று குற்றச்சாட்டில் சிறைப்பிடித்து பிணையில் விடுதலையாகிய சுரேஷ்க்கு மீண்டும் சிறைத்தண்டனை

ஈழத்தமிழ் மகனாகிய சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜா தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என்று அமெரிக்காவினால் குற்றம் சாட்டப்பட்டு 2006ம் ஆண்டு கனடாவில் கைதுசெய்யப்பட்டார். 21-08-2006 இல் அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க கனேடிய காவல் துறையினர் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் சுரேஷை கனடாவில் கைது செய்தார்கள். தடை செய்யப்பட்ட ஓர் பயங்கரவாத அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) உதவினார் என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். கூடவே, கணனி போன்ற உபகரணங்களை வாங்கிச்சென்று யாருக்கு வழங்கினார் என்பது தொடர்பாக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

(பத்திரிக்கை அறிக்கை)

பிரித்தானியாவில் செயற்படும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் சமர்ப்பிக்கப்படட்ட அறிக்கை 22-11-2010

கற்க வேண்டிய பாடங்களையும் நல்லெண்ணத்திற்கான வழிமுறைகளையும் கண்டறிவதற்கென நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்கழு முன்னிலையில் எமது அவதானிப்புகளை வழங்கச் சந்தர்ப்பம் தந்தமைக்கு எமது நன்றியை முதலில் தெரிவித்தக்கொள்கிறோம். மேற்குலக நாடான பிரித்தானியாவில் கடந்த 10 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்ற பெயரில் இயங்கும் எமது வானொலிச் சேவை ஆபிரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு போன்ற பகுதிகளில் நேரடியாகவும், சர்வதேச அளவில் இணையத் தளத்திலும் தனது சேவையை வழங்கி வருகிறது. வெளிநாடுகில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களைப் பேணும் வகையில் செயற்படுமாறு தூண்டுதல், இன, மத, நிற, மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், சமத்துவம், சமஉரிமை என்ற சர்வதேச விழுமியங்களின் அடிப்படையில் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை எட்டுதல், இலங்கையின் ஐக்கியம், இனங்களுக்கிடையேயான நல்லுறவுகளை வளர்த்தல், பயங்கரவாதம், வன்முறை, மனித உரிமை மீறல் என்பவற்றிற்கெதிராக செயற்படுதல் என்பவற்றை பிரதான குறிக்கோள்களாகக் கொண்டு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தனது சேவையை வழங்கி செயற்பட்டு வருகிறது. (மேலும்.....) (Engilish Ver.....)

மார்கழி 19, 2010

இசைப்பிரியாவைக் கொன்றது யார்? அதற்கு துணை நின்றவர்கள் யார்?

புலத்துப் புலிகளின் துணையுடன் தான், வன்னிப் புலிகளை அரசு கொன்று குவித்தது. இல்லை என்கின்றாயா? அரசிடம் வன்னிப்புலிகள் சரணடைந்த செய்தியை மூடிமறைத்த புலத்துக் கூட்டம் தான், அவர்களை இரகசியமாக கொல்ல உதவியது. இதுவொரு உண்மையில்லையா? வன்னிப்புலிகள் உயிர் வாழ்வதற்காகத்தானே சரணடைந்தார்கள்? அதற்கு துரோகம் செய்தவர்கள் யார்? அதை இருட்டடிப்பு செய்து, அவர்களுக்கு அதை மறுத்தவர்கள் வேறு யாருமல்ல, நீ நம்பும் புலத்துப் புலிகளே தான். மக்களை ஏய்க்கும் தம் பிழைப்பை அவர்கள் தொடர, அதை மூடிமறைத்தனர். இதன் மூலம் அவர்களைக் கொல்ல, அரசுக்கு மறைமுகமாக உதவினர். சரணடைந்த புலிகளால், தம் பிழைப்புக்கு இனி எந்த விதத்திலும் உதவ முடியாது என்பதனால், புலத்து புலிகளின் பிழைப்பு அரசியலே இதைச் செய்தது. யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள், அப்படித்தான் புலிகள் இருந்தவரை பிழைப்புக்கு பஞ்சமில்லை. சரணடைவை விட செத்தால் தான் புலம்பெயர் புலிப் பிழைப்புவாதிகளுக்கு வாழ்வாகின்றது. இப்படி தான் இசைப்பிரியா சரணடைந்தது முதல் அவற்றை மூடிமறைத்ததன் மூலம் அவரைக் கொல்ல உதவினர். இப்படி மூடிமறைத்து கொல்ல உதவியவர்கள், அந்தப் பிணத்தைக் காட்டி புலம்பெயர் புலிக் கூட்டம் மீண்டும் உருவெடுத்து ஆடுகின்றது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை செல்லும் புலி ஆதரவாளர்கள் குறித்து விசாரணை!

ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டு பிரஜைகளில் புலிகளின் ஆதரவாளர்கள் வருகின்றனரா என்பதை கண்டறிய புலனாய்வுப் பிரிவினரால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பில் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கைக்குள் நுழைவதை தடுக்க பாதுகாப்பு புலனாய்வு பிரிவுகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக லண்டனில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டவர்கள் தொடர்பாகவும் முக்கியமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. ஆர்ப்பாட்டம் தொடர்பான வீடியோ படங்களை கொண்டு அதில் கலந்துக்கொண்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் தகவல்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

தகவல் தொழில்நுட்ப பயங்கரவாதம்

Channel 4 போலி ஒளி நாடாக்கள்

மனித உரிமை மீறல்களா? நீதிக்குப் புறம்பான படுகொலைகளா? யுத்தக் குற்றங்களா? சீச்சீ! இவை எதுவுமே இலங்கையில் இடம்பெறவில்லை, இப்படி எவனாவது அடித்துக் கூறுவானேயானால் அவன் அடிமுட்டாளாகவே இருப்பான். 1983ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக ஜே.ஆர். அரசு கட்டவிழ்த்து விட்ட கொடூரம் அப்பட்டமான மனித உரிமை மீறல். அது ஓர் இன சங்காரம். பிரேமாவதி மனம்பேரி, சாரதாம்பாள், அகிலாண்டேஸ்வரி, கிருஷாந்தி குமாரசாமி வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியலில் அடங்கும் வெகு சிலர். சந்திக்கு வந்த வெகுசில சம்பவங்கள் இவை. சந்திக்கும் சட்டத்திற்கும் முன்னால் வராமலேயே சமாதியாக்கப்பட்ட சம்பவங்கள் பற்பல. (மேலும்.....)

மார்கழி 19, 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியளிக்க

ஐ.நா. நிபுணர் குழு வந்தால் அரசாங்கம் உரிய ஏற்பாடு

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக விரும்பினால் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் சரத்துக்கமைய, 2010 ஆம் ஆண்டு ஜுலை 18 ஆம் திகதி பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட பகிரங்க அறிவிப்பின் கீழ், ஆணைக்குழு முன்னிலையில் யாரும் சாட்சியமளிக்க முடியும். (மேலும்.....)

மார்கழி 19, 2010

யாழ். முஸ்லிம்களை துரிதமாக மீள்குடியமர்த்த திட்டம்

யாழ்ப்பாணம் உட்பட வட பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடிய மர்த்துவதற்கான துரித செயற் திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருப்பதாகக் கைத் தொழில் மற்றும் வணிக அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரி வித்தார். முதற் கட்டமாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை அவர்களின் சொந்த இடங்களில், சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக் கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, அரசாங்கத்தின் செயற் திட்டத்தின் ஊடாக முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்த் திருப்பதாக அமைச்சர் கூறினார். (மேலும்.....)

மார்கழி 19, 2010

சென்னையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முயன்ற இலங்கை அகதிகள் பிடிபட்டனர்

சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் ஆளுக்கு 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தங்களை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்க தாங்கள் அங்கு வந்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். பிரகாஷ் இவர்கள் அனைவரையும் கோயம் பேட்டுக்கு வரச்சொல்லி அங்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வான் மூலம் ஈஞ்சம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார். இது போன்று பலமுறை இலங்கைத் தமிழ் அகதிகளை பிரகாஷ் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்று பிகாரஷ் தங்களிடம் கூறியுள்ளதாக பிடிபட்ட 5 பேரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். (மேலும்.....)

மார்கழி 19, 2010

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் இலங்கைத் தமிழர்கள்

முப்பது வருடங்களாக நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தம் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற தமிழ் மக்கள் தமது சொந்த நாட்டிற்குத் திரும்ப ஆரம்பித்துள்ளமை ஒரு வரவேற்கத்தக்க விடயம். யுத்தம் முடிவுற்றதும் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்புமாறு அழைப்பினை விடுத்திருந்தார். என்றோ ஒரு நாள் யுத்தம் முடிவுறும், தமது சொந்த ஊருக்குத் திரும்பிவந்து வீடுவாசலைத் திருத்தி உற்றார் உறவினருடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதே மண்டப முகாம்களில் தங்கியிருந்த இவர்களது எதிர்பார்ப்பாக இருந்தது. அது இப்போது நிறைவேற ஆரம்பித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 19, 2010

மூதூர் முஸ்லிம்களின் திருமண சம்பிரதாயங்கள்

(கலைமேகம்)

எப்படிப்பட்ட படித்த பட்டதாரி மாப்பிள்ளையாய் இருந்தாலும் மாப்பிள்ளை ஒரு வெள்ளைச் சாறமும், வெண்ணிற முழுக் கை சேட்டுமே அணிந்திருப்பார். தலையை கைக்குட்டை மூடியிருக்கும் இதுதான் மாப்பிள்ளையின் ஆடை. பின்னர் காவின் திருமணப் பதிவுயாவும் முடிந்ததும், பெண் வீட்டில் திருமணத்திற் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டி ரிபிசீ8t@னிu. இது முடிந்த கையோடு சகலரும் எழுந்து மாப்பிள்ளைக்கு கைலாகு கொடுத்து ஸலாம் சொல்லி பெண்ணிருக்கும் அறைக்கு கூட்டி செல்வார்கள் அங்கு மாபிள்ளையின் கால்களை தேங்காய் பாலால் பெண்ணின் வீட்டுப் பையனொருவன் கழுவ அவனுக்கு மணமகன் பணத்தைப் பரிசளிப்பார். அத்துடன் மணமகளின் தந்தை கைபிடித்துக் கொடுப்பார். மாபிள்ளை மஹரென்ற ஒன்றை நகையாகவோ, அன்றி நூற்றி ஒரு ரூபா பணமாகவோ வழங்குவார். பின்னர் அலங்கரிக்கப்பட்ட இரட்டைக் கதிரையில் உட்காரவைத்து பெண்களாகக் கூடி பெண் மாப்பிள்ளைக்கு பால் பழமும் பருகக் கொடுப்பார்கள். அதே சமயம் சில்லறைக் காசுகள் சிலவற்றை வெற்றிலைத் தட்டில் போட்டு மணமக்களின் தலையைச் சுற்றி உயர்த்தி கொட்டிவிடுவார்கள். அதனை அங்கிருக்கும் அனைவரும் பொறுக்கி எடுப்பார்கள். அத்தோடு மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் தாலியும் கட்டுவார். (மேலும்.....)

மார்கழி 19, 2010

தமிழை சாகாமல் காக்க...

தமிழ் மொழியைச் செம்மொழியாக்க நாம் என்ன செய்ய வேண்டும். இஃதே வேளை தமிழ் மெல்லாச் சாகாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய்வோம். தமிழைச் செம்மொழியாகக் கொள்ள வேண்டும் என இந்திய அரசை முதலில் கோரியவர் ஜோர்ஜ்ஹாட் என்ற அமெரிக்கரே. 1901 ஆம் ஆண்டு மதுரையில் நான்காவது சங்கம் என கருதத்தக்க அமைப்பொன்று இயங்கியது. இதில் அங்கம் வகித்த பரிதிமாக் கலைஞர் தமிழையும் செம்மொழியாக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். இப்படியான பலரின் வேண்டுகோளின்படி இந்திய மத்திய அரசு 12.10.2004 அன்று பிறப்பித்த அரச ஆணையால் தமிழ் செம்மொழியானது எனச் சிலர் கூறுகிறார்கள். சரி அப்படியே வைத்துக் கொள்வோம். (மேலும்.....)

மார்கழி 19, 2010

யாழ். பல்கலை உபவேந்தர் நியமனம் முடிவாகவில்லை _

யாழ். பல்கலைக்கழகத்தில் புதிய உபவேந்தர் தெரிவு பிற்போடப்பட்டுள்ளது. புதிய உபவேந்தர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தபோதும் அச்செய்தியில் உண்மையில்லையென கேசரி வார வெளியீட்டுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உபவேந்தருக்கான தெரிவு இடம்பெறும் வரை பேராசிரியர் என்.சண்முகலிங்கன் பதில் உபவேந்தராகத் தொடர்ந்தும் கடமையாற்றுவார் என்றும் மேற்படி தகவல்கள் தெரிவிக்கின்றன. கிடைக்கும் தகவல்களின் படி உபவேந்தர் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றவரே உபவேந்தராக நியமிக்கப்படும் சாத்தியங்கள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.

மார்கழி 19, 2010

அரசின் பங்காளிக் கட்சியாகப் புலிகள் அமைப்பு மாறலாம் - ரணில் _

விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவரான கே.பி. குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்வதற்கான அமைப்பின் தலைமைப் பொறுப்பை வழங்கியுள்ள ஜனாதிபதி, எம் மீது புலி முத்திரையை குத்த முயற்சிப்பது என்ன நியாயம்? மிகவிரைவில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அரசாங்கம் சந்தர்ப்பம் வழங்கலாம்" என்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறினார். ஈ.பி.டி.பி நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களை பதவிகளை கொண்டுள்ளது. ஆனால் கே.பி.எந்தப் பதவியும் இல்லாமல் அரச மாளிகையில் சுகபோகம் அனுபவித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். (மேலும்.....)

மார்கழி 18, 2010

போர் குற்றம்பற்றி கலந்துரையாட

ஐநா நிபுணர் குழு விரைவில் இலங்கை வருகை

ஐநா நிபுணர்கள் குழு வெகு விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை கூற அவரால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவே வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இக்குழு எதிர்வரும் ஜனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் ஐ.நா செயலாளர் நாயகத்துக்கு இறுதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன் குழுவினர் இங்கு வருவர் என்றும் இலங்கையின் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினரைச் சந்திப்பர் என்றும் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான இணக்கப்பாட்டை மகிந்த ராஜபக்ஷ வழங்கியிருப்பதாக அறிய முடிகின்றது.

காட்டுப் பன்றி சுடுவதற்கு பதில் மாணவனை சுட்ட சம்பவம் போன்று நடைபெற கூடாது -  இரா. துரைரெத்தினம்

மட்டக்களப்பு கரவெட்டி பிரதேசத்தில் காட்டுப் பன்றி வேட்டையாடச் சென்ற பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவன் ஒருவன் காயமடைந்தது போன்ற சம்பவம் ஒருபோதும் நடைபெறக் கூடாது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா. துரைரெத்தினம் கோரிக்கை விடுத்தள்ளார். மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வர்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கரவெட்டி கிராமத்தில் விளையாட்டு மைதானம் அருகாமையில், கடந்த 15 ஆம் திகதி மாலை 4 மணிக்கு வவுணதீவு பொலிஸில் கடமையாற்றுகின்ற பொலிஸ் உத்தியோகத்தர்; காட்டுப்பன்றி வேட்டையாடிய போது தவறி பாஸ்கரன் விஜயகுமார் என்ற 13 வயது மாணவனுக்கு வெடிப்பட்டுள்ளது. நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி கற்கும் குறித்த மாணவன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, இப்பகுதியில் அடிக்கடி துப்பாக்கி சத்தம் கேட்பதாகவும், மக்கள் குறித்த இடத்துக்குச் சென்று பார்க்கும் போது மிருகங்கள் வேட்டையாடப்படு வருவதாகவும், தெரியவந்துள்ளது. இப்பிரதேசத்தில் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். பொதுமக்கள் செறிந்து வாழும் இப்பிரதேசத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்கழி 18, 2010

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் கொழும்பில் சந்தித்துப் பேச்சு

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்றுமாலை 7.00மணியளவில் கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் சந்திப்பினை நடத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இருதரப்பு அங்கத்துவம் கொண்ட குழுவை நியமிப்பதென எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அரங்கம் சார்பிலான குழுவுக்கு இன்று மூவர் தெரிவுசெய்யப்பட்டனர். இதன்படி திரு.வீஆனந்தசங்கரி, திரு.த.சித்தார்த்தன், திரு.அ.இராசமாணிக்கம் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர். கடந்த 11.12.2010அன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ்; மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் என்பன தொடர்பாக ஒருமித்த குரலில் யோசனைகளை முன்வைப்பதற்காக ஒரு வரைபை யாப்பதற்கு இருதரப்பின் அங்கத்துவமும் கொண்ட ஒரு குழுவை அமைப்பதற்கு இணக்கம் காணப்பட்டிருந்தது. இதற்கமையவே இன்று அரங்கம் கூடி மேற்படி மூவரையும் தெரிவுசெய்ததுடன், மேலும் இருவரை குழுவில் இணைப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மார்கழி 18, 2010

விக்கிலீக்ஸ்

கருணா, டக்ளஸ் மீதும் குற்றச்சாட்டு வைக்கின்றது

விக்கிலீக்ஸ் புதிதாக வெளியிட்டிருக்கும் அமெரிக்க அரசின் மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய ராஜாங்க தகவல் பரிமாற்றங்கள், இலங்கை அரசு மற்றும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு இருதரப்பாரையும், கடுமையாக விமர்சிப்பவையாக இருக்கின்றன.லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன் பத்திரிகை மூலம் வெளியிடப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் தகவல்களில், இலங்கையில் செயற்படும் துணைப்படையினரின் கொலை, சிறார் கடத்தல் மற்றும் தொழில்ரீதியான விபச்சாரம் ஆகிய செயல்களில் இலங்கை அரசும் துணைபோயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் கட்டாயமாக படைகளுக்கு ஆட்சேர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் இந்தத் தகவல்கள் கூறுகின்றன. (மேலும்.....)

மார்கழி 18, 2010

கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பிய தமிழர் சடலமாக மீட்பு!

கனடாவில் இருந்து இருபது வருடங்களுக்கு பின் நாடு திரும்பி வந்த யாழ்ப்பாணத் தமிழர் ஒருவர் கொழும்பில் கொட்டாஞ்சேனையில் தங்கி இருந்த வீட்டின் இரண்டாவது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். அ. சுரேஸ்குமார் (வயது-33) என்பவரே உயிர் இறந்தவர் ஆவார்.  இவர் ஐந்து நாட்களுக்கு முன்புதான் வந்து இருந்தார்.  இவரது மனைவி இந்தியாவில் உள்ளார்.  இது படுகொலையா? தற்கொலையா? என்கிற புலனாய்வு விசாரணைகளை கொட்டாஞ்சேனைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் முடுக்கி விட்டு உள்ளார்கள்.

மார்கழி 18, 2010

US embassy cables

Human rights abuses by Tamil Tigers

1. (S) SUMMARY: In late May PolOff met the XXXXXXXXXXXX described the LTTE's complete control of all activities that take place in Tiger-controlled territory, including forced conscription and the use of the Tamil Rehabilitation Organization (TRO) to extract money from INGOs. XXXXXXXXXXXX also criticized the Sri Lanka Monitoring Mission's (SLMM) complacency in the face of coercive techniques the LTTE employs to maintain control of its northern stronghold. On June 8, after meetings with representatives from UNICEF, UNHCR and the World Food Program to discuss how these organizations fund projects operating in the Vanni, Emboffs confirmed that in some circumstances INGOs are required to work with TRO to accomplish their project goals. END SUMMARY. (more....)

மார்கழி 18, 2010

சீனாவிற்கு பயப்பட ஆரம்பிக்கும் அமெரிக்கா?

தேவையில்லாமல் இராணுவத்தை குவிக்கிறது சீனா - அமெரிக்கா

சீனா தன் பாதுகாப்புக்கு தேவையானதை விட அதிகமாக இராணுவத்தை குவித்து வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி உள்ளது. இது தொடர்பாக இராணுவத் துறை துணைத் செயலாளர் வொலஸ் சிப் கிரெக் சன் கூறுகையில். இராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு, இராணுவ நோக்கம், இராணுவத்தில் உள்ள ஆயுதங்களின் திறன் ஆகியவை குறித்து சீனா வெளிப் படையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் இந்த பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் கவலையை அமெரிக்கா பகிர்ந்து கொள்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மார்கழி 18, 2010

Greatest victory to Sri Lankans

(by Lenin Benedict-Toronto)

As the President Mahinda Rajapakse discussed in the latest cabinet meeting about scraping of the National Anthem sang in Tamil in the North and East by Tamils living in the area for decades, just trying to portrait himself as a Hardcore Sinhala Nationalist and a savior of Sinhala language in the south as a measure to save his popularity eroding and his slogan of victory over Terrorism as his personal achievement diminishing due to his mistakes committed one after their other. Though the President trying hard to regain his political power and strength by propagating the old trick practiced by the Tamil Nationalist as well as Sinhala Nationalist to get the support from the mass, whenever their support does in drain, The victory won by the sacrifice of the Armed forces has been reconfirmed by no empathy or no support shown by the majority community that Srilankans cannot be divided on Language or Communal lines and will remain united as one. Really this was the greatest victory achieved by Srilankans than any other victory achieved so far. The war against Terrorist was supported by the majority of Srilankans to defeat just Terrorism and not Tamils have been very clearly established by majority of Srilankans showing no support of the President’s Tamil Anthem issue. It is worth to mention here that Srilanka has finally won its political goal of uniting all Srilankans against communal politics and the sacrifices made has not gone in vain. (more...)

மார்கழி 18, 2010

பிரிட்டனின் செயற்பாட்டை கண்டித்து

யாழ்ப்பாணத்தில் நாளை உண்ணாவிரதப் போராட்டம்

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்தின்போது பிரித்தானிய அரசும் புலம்பெயர்ந்த தமிழர்களும் திட்டமிட்டு நடாத்திய அநாகரிகமான செயற்பாடுகளை கண்டித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் கலாநிதி வேல்முருகு தங்கராசாவின் தலைமையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் யாழ். பேரூந்து நிலையத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடாத்தப்பட விருக்கின்றது. மேற்படி உண்ணாவிரத போராட்டத்தில் யாழ். குடாநாட்டின் சகல இடங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கலந்துகொள்ளவுள்ளார்கள். உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட செயலாளர் அ. ரங்கா துஷார மேற்கொண்டுள்ளார்.

மார்கழி 18, 2010

புலிகளுக்கு ஆயுதக்கொள்வனவு செய்த இலங்கைத் தமிழருக்கு ஐக்கிய அமெரிக்காவில் சிறை

ஐக்கிய அமெரிக்காவில் 2006ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்ட இலங்கைத் தமிழர் ஒருவருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையை விதித் துள்ளதாக இலங்கைத் தூதுவராலய செய்திச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் மேரிலேண்ட் என்ற இடத்தில் 9 லட்சம் அமெரிக்க டொலர்களுக்கு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாக வழக்குத் தொடரப்பட்டது. இதில் குற்றமிழைத்தவராகக் கருதப்பட்டு ஐந்து வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ___

மார்கழி 18, 2010

சரத் தலைமையிலான அரசு விரைந்து செயற்படுமென அமெ. எதிர்பார்ப்பு - விக்கிலீக்ஸ்

ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவருமான சரத்பொன்சேகா வெற்றி பெற்றால் அவரது தலைமையிலான அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைவிட விரைந்து செயற்படும் என்று எதிர்பார்க்கலாம் என கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பட்ரீசியா புடெனிஸினால் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்துக்கு அறிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது. (மேலும்.....)

மார்கழி 18, 2010

அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு சோதனை தோல்வி

அமெரிக்க இராணுவத்தின் ஏவுகணை பாதுகாப்பு சோதனை தோல்வியில் முடிந்தது. கடந்த புதன்கிழமை இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது பசிபிக் பெருங் கடலுக்கு மேல் பாய்ந்த ஏவுகணையை இந்த சோதனை ஏவுகணை மறித்து தகர்க்க தவறிவிட்டது. ஏவுகணை பாதுகாப்பு சோதனை தோல்வி அடைவது என்பது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே நடந்த சோதனை யும் தோல்வியில் தான் முடிந்தது. இப்போது ஏற்பட்ட தோல்வி தொடர்ச்சியாக நடந்த 2வது தோல்வி ஆகும்.

மார்கழி 18, 2010

ஏ. ஆர். ரகுமானுக்கு மீண்டும் ஒஸ்கார் வாய்ப்பு

சென்னையைச் சேர்ந்த பிரபல சினிமா பின்னணி இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கடந்த 2009ம் ஆண்டு ‘சிலம்டோக் மில்லினர்’ என்ற சினிமா படத்துக்கு இசை அமைத்ததற்காக ஒஸ்கார் பரிசு பெற்றார். இதே வரிசையில் அவருக்கு மேலும் 2 ஒஸ்கார் பரிசுகளும் கிடைத்தன. இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் மீண்டும் ஒஸ்கார் பரிசு பெறும் போட்டி வரிசையில் இருக்கிறார். 44 வயதான அவர் “127 மணி நேரம்” என்ற ஆங்கில சினிமாவில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு சிறப்பான முறையில் இசை அமைத்து இருக்கிறார். அந்த பாடலுக்கான இசை அமைப்புக்கு, இந்த ஆண்டுக்கான ஒஸ்கார் பரிசு கிடைக்குமா? என்பது ஜனவரி 6ம் திகதி தெரிய வரும். ஏ. ஆர். ரகுமானுக்கு “கோல்டன் குளோப்” விருது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மார்கழி 17, 2010

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடையில்லை - இலங்கை அரசு

சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென அமைச்சர் வீரவன்ச கூறி யிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

தமிழில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை யில்லை. அரசியல மைப்பில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு தேசிய கீதம் இசைக்க முடியும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார். சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்க வேண் டுமென தவறான அபிப்பிராயம் பரப் பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரவை முடி வுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மா நாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, தேசிய கீதம் இசைப்பது தொடர்பில் அரசிய லமைப்பில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதன் மெட்டையோ உச்சரிப் பையோ மாற்றாது பாட முடியும். அதற்குரிய கெளரவம் வழங்கப் பட வேண்டும். யாழ்ப்பாணத்தில் சிங் களத்தில் தேசிய கீதம் பாட வேண்டும் என்று கூற முடியாது. அங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்க முடியும். ஐ.தே.க. ஆட்சியில் தேசிய கீதத்தின் மெட்டை மாற்ற முயற்சி நடந்தது. தேசிய கீதத்தை இசைத்து நடனம் ஆட இடமளிக்க முடியாது. சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென அமைச்சர் வீரவன்ச கூறி யிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தாகும்.

மார்கழி 17, 2010

 

புலிகளின் கொலை அச்சுறுத்தலின் எதிரொலி

 

கருணாநிதி, சிதம்பரத்திற்கான பாதுகாப்பை பலப்படுத்த முடிவு

இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் ஆகியோருக்கான பாதுகாப்பை பலப்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழக காவல்துறை தலைவர் லத்திகா சரண்கூறியுள்ளார். தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து கடலோர மாவமட்டங்களிலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரிந்து உள்ள புலிகள் அமைப்பினர் தமிழகத்தில் ஒன்றிணைய திட்டமிட்டுள்ளதாகவும், அவர்களால் முக்கிய பிரமுகர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய புலனாய்வுப் பிரிவு தகவல் ஒன்று அனுப்பி இருக்கிறது. இதையடுத்து நடைபெற்ற காவல்துறை உயரதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், மத்தயி அமைச்சர் சிதம்பரம், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கான பாதுகாப்பைப் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பொலிஸ் துறைத் தலைவர் லத்திகாசரண் தெரிவித்துள்ளார்.

மார்கழி 17, 2010

 

இந்தியாவுக்கு தல யாத்திரை செல்வோருக்கு இலவச வீசா

இலங்கையிலிருந்து இந்தியாவுக் குத் தல யாத்திரை மேற்கொள்கிற வர்க ளுக்கு இலவச வீசா வழங்கும் நடை முறை அமுல்படுத்தப் பட்டுள்ளது. இம் மாதம் முதலாந் திகதியிலிருந்து உடனடியாக அமு லுக்கு வரும் வகை யில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் தெரிவித்தார். ‘கோபியோ’ அமைப்பினர் இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவுடன் நடத்திய பேச்சுவார்த் தையை அடுத்து இதற்கான நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி யாத்திரை செல்பவர்கள் மத விவகார அமைச்சில் உறுதிக் கடிதமொன்றைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இலவச வீசாவைப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தது பத்துப் பேராவது ஒரு தடவையில் யாத்திரை செல்வதாக உறுதிப்படுத்த வேண்டுமென்றும் குறிப் பிடப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை யர்கள் இந்தியா சென்றடைந்ததும் கைய டக்கத் தொலைபேசிக்கான ‘சிம் கார்டை’ பெறும் நடைமுறையை இலகு வாக்குவ தாகவும் இந்திய உயர் ஸ்தானிகர் இணக் கம் தெரிவித்ததாக பிரபா கணேசன் எம். பீ. தெரிவித்தார். இந்தியா செல்லும் இலங்கையர்கள் ஏற்கனவே பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்குவதுபற்றி கோபியோ பிரதிநிதிகள் உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைத்தனர்.

மார்கழி 17, 2010

மரணத்தறுவாயில் மத்திய கிழக்கு பேச்சுவார்த்தை

மேற்குக்கரை, கிழக்கு ஜெருஸலத்தில் இஸ்ரேலின் யூதக்குடி யேற்றம் தொடர்வதை எதிர்த்தே பலஸ்தீன் நேரடிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகிக் கொண்டது. அண்மையில் ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்ட மைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இஸ்ரேல், பலஸ்தீன் முரண்பாடுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இரண்டு மக்கள் இரண்டு நாடு என்ற அடிப்படையில் இம் முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டுமென இக்கூட்டத்தில் வலியுறுத் தப்பட்டது. மீண்டும் பேச்சுக்களைத் தொடர வாய்ப்பை ஏற்படுத்தும் பொருட்டு இஸ்ரேல் தற்காலிகமாக யூதக்குடி யேற்றங்களை இடைநிறுத்தியுள்ளமை அமைந்துள்ளது. பாலஸ்தீனர்களின் விடாப்பிடியான போராட்டமே இந்நிலமை ஏற்பட்டதற்கு முக்கிய காரணமாகும். (மேலும்.....)

மார்கழி 17, 2010

 

கல்பிட்டி தீவுகளில்

முதலீடு செய்ய வெளிநாட்டு கம்பனிகள் முன்வருகை

கல்பிட்டி கடலில் உள்ள 10 தீவுகளில் முதலீடு செய்ய 10 பிரதான வெளிநாட்டு கம்பனிகள் முன்வந்துள்ளன. இவை சுமார் 500 மில்லியன் டொலர் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார். தகவல் தொழில்நுட்ப அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:- யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதோடு, முதலீடுகளும் அதிகரித்துள்ளன. கல்பிட்டியில் உள்ள 14 தீவுகளில் 2இல் ஏற்கெனவே முதலீடு செய்யப்பட்டுள்ளன. 10 தீவுகளில் முதலீடு செய்ய பிரதான நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் கொல்ப் மைதானம், பொழுதுபோக்கு இடங்கள் பூங்கா என்பன அமைக்கப்படும். இங்கு வாழும் மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாதவாறே இந்தத் தீவுகள் அபிவிருத்தி செய்யப்படும். முதலீட்டாளர்கள் தமது மொத்த முதலீட்டில் 5 வீதத்தை இங்குள்ள மக்களின் வீடு மற்றும் வசதிகளை மேம்படுத்த செலவிட உள்ளனர். சர்வதேச மட்டத்தில் கேள்விப் பத்திரம் கோரியே இந்தத் தீவுகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 30 முதல் 50 வருட காலத்திற்கு இவை குத்தகைக்கு வழங்கப்படும்.

மார்கழி 17, 2010

இரகசியம் காப்பதில் கோட்டைவிடும் நாசா

நாசா விற்பனை செய்த கணனிகளில் இரகசிய விபரங்கள்

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விற்பனை செய்த கண னிகளில் இரகசிய விவரங்கள் அழிக்கப்பட வில்லை. நாசா விண்வெளி மையம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தங்கள் வசமிருந்த பழைய கணனிகளை விற்பனை செய்தது. ஆனால் அதில் 2010 ம் ஆண்டில் ஸ்பேஸ் ஷட்டில் விண்வெளி ஓடம் குறித்து சேக ரித்து வைக்கப்பட்டிருந்த தரவுகள் மற்றும் விண்வெளி இரகசியங்கள் குறித்த தகவல்களை முறையாக அழிக்காமல் விற்பனை செய்தி ருப்பது தெரியவந்துள்ளது. மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ள கணனிகளில் நாசாவின் இணைய புரோட்டோகால் விலாசங்களும் அழிக்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவைகள் அனைத்தும் பயங்கரவாதிகள் கைகளில் கிடைத்தால் நாசாவின் உள்ளக கணனி வலையமைப்பில் புகுந்து சீர்கேட்டை விளைவிக்கக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்கழி 17, 2010

இலங்கை - இந்தியா கடற்போக்குவரத்து புரிந்துணர்வு ஒப்பந்தம்

தலைமன்னார்-இராமேஸ்வரம்; கொழும்பு-தூத்துக்குடி கப்பல் சேவைகள்

முதலில் கொழும்பு- தூத்துக்குடி மற்றும் தலைமன்னார்- இராமேஸ்வரம் இடையிலான கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படும். அதன்பின் ஏனைய துறைமுகங்களுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம் பிக்கப்படும். தற்பொழுது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் விமான போக்குவரத்து சேவை மாத்திரமே இடம்பெற்று வருகிறது. இரு நாடுகளுக்குமிடையில் ஆரம்பத்தில் கப்பல் சேவைகள் நடைபெற்ற போதும் யுத்தம் காரணமாகக் கடந்த 30 வருடங்களாக கப்பல் சேவை இடம்பெறவில்லை. மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதனூடாக பெருமளவு மக்கள் நன்மையடைய உள்ளனர். விமானத்தில் பயணம் செய்வதைவிட குறைந்த செலவில் கப்பலில் பயணம் செய்ய வாய்ப்புக்கிட்ட உள்ளதோடு பயணிகளுக்கு புதிய பயண அனுபவமும் கிடைக்க இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். (மேலும்.....)

மார்கழி 17, 2010

நாட்டிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் அடுத்த ஆண்டில் மின் ஒளி பரவும்

நாடெங்கிலும் உள்ள 320 பிரதேச செயலகங்களுக்கு கீழ் வரும் 14,000 கிராமசேவக பிரிவுகளில் உள்ள மக்களின் வீடுகளுக்கு, இலங்கை மின்சார சபை அடுத்த ஆண்டு முதல் சூரியசக்தி, காற்று சக்தியின் மூலம் அந்தந்த பிரதேசங்களில் பெற்றுக்கொள்ளக்கூடிய மின்சாரத்தை விநியோகித்து, இலங் கையிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் பின்தங்கிய கிராமங்களிலுள்ள ஏழை மக்களின் குடிசைகளுக்கும் மின்சார ஒளியை பரப்புவதற்கு அரசாங்கம் துரித கதியில் நடவடிக்கைகளை எடுத்து வருவது மஹிந்த சிந்தனை எண்ணக்கருவை நன வாக்கும் ஒரு செயற்பாடாக அமைந்துவிடும் என்பது திண்ணம். (மேலும்.....)

மார்கழி 17, 2010

இத்தாலியப் பிரதமருக்கெதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் போர்க்கொடி

இத்தாலியப் பிரதமர் பெர்லுஸ்கோனிக் கெதிராகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 630 ஆசனங்களை யுடைய பாராளுமன்றத்தில் 314 பேர் பிரதமரை ஆதரித்தும் 311 பேர் எதிர்த்தும் வாக்களித்தனர். இரண்டு பேர் நடுநிலைமை வகித்தனர். இதனால் பிரதமர் பெர்லுஸ் கோனியின் பதவி காப்பாற்றப்பட்டது. பல்கலைக்கழகச் சீர்திருத்தம், பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுக் கப்படும் மந்த கதியிலான வேலைகள் என்பவற்றை எதிர்த்து பாராளுமன்றத்தில் நம்பிக்கை யில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டது. இது வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இரண்டு மேலதிக வாக்குகளால் பிரதமர் வெற்றியீட்டினார். இதையடுத்து பிரதமருக்கு எதிராகப் பெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் இத்தாலியின் பிரதான நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு ரகளை செய்தனர். டயர்களை எரித்தனர். கற்கள், பொல்லுகளால் பொலிஸாரைத் தாக்கினர். பிரதமர் அலுவலகம் மீதும் கற்கள் வீசப்பட்டன. நிலைமை மோசமடைந்ததால் பொலிஸார் உஷாரடைந்தனர்.

மார்கழி 17, 2010

இப்போ வருகிற தமிழ்ப்பாட்டுக்களை விட சிங்களத்தில் தேசீயகீதத்தை கேட்பதில் தவறு ஏதுமில்லை.

ஸ்ரீலங்கா அரசாங்கம் புலிகளை ஒழித்துக்கட்டியதுடன் எல்லாம் முடிஞ்சு போச்சுது என நினைத்தால் அதைப்போல முட்டாள்தனம் வேறு எதுவுமில்லை. தமிழ் மக்களை கையாளுவதற்கு இன்னும் அரசுக்கு தெரியவில்லை. அதுவும் யாழ்ப்பாணத்தானை கையாள்வதற்கான தந்திரம் அரசுக்கு இல்லை. டக்ளசையும், கே.பியையும், கருணாவையும் வைத்துக்கொண்டு தமிழ்மக்களை கையாள நினைப்பது குண்டுச்சட்டிக்குள் குதிரையோட்ட நினைப்பதாகும். சும்மா கிடந்த புலிகளை லண்டனுக்குப்போய் தட்டியெழுப்பிவிட்டு வந்த மகிந்த கையோடு தேசீயகீதத்தை தமிழில் பாடக்கூடாது என விசர்த்தனமாக முடிவெடுக்க சும்மா படுத்துக்கிடந்த தமிழ்த்தேசியவாதிகளெல்லாம் எழுந்து கூச்சல் போட புலிகளுக்கு இன்னும் உசார் வந்துவிட்டது. (மேலும்.....)

மார்கழி 17, 2010

மூத்த மொழி தமிழ்

கொரிய மொழியில் 500 தமிழ் வார்த்தைகள்

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கில், கனடா நாட்டில் டெரான்டோ நகரைச் சேர்ந்த ஜூங்நாம் கிம் கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருப்பதாக தம் தமிழாய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். கொரிய மொழியில், தமிழ் வார்த்தைகள் கலந்திருப்பது பற்றி ஜூங்நாம் கிம் குறிப்பிடுகையில், தென்கொரிய நாட்டைச் சேர்ந்த நான், தற்போது கனடாவில் வசிக்கிறேன். கொரிய மொழியில் தமிழ் வார்த்தை கலந்திருப்பதை ஆய்வுசெய்து 500 வார்த்தைகளை கண்டறிந்துள்ளேன். (மேலும்.....)

மார்கழி 17, 2010

தேடல்தான் வாழ்க்கையின் வெற்றி

ஊனால் ஆகிய இந்த உடம்பு மதிப்பு மிக்க பல உறுப்புகளைப் பெற்றுள்ளது. இவற்றுள் ஏதேனும் ஒன்றிரண்டு குறைபாடுகள் பெற்றவர்களை ஊனுமுற்றவர்கள் என்கின்றோம். ஒரு குழந்தை எந்த இடத்தில் எந்த வீட்டில், எந்த இனத்தில் எந்த மதத்தில் பிறப்பது என்பதை பிறக்கப்போகும் அந்தக் குழந்தை தீர்மானிப்பதில்லை. பிறப்பும், இறப்பும் யார் சொல்லியும் வருவதில்லை. எப்படியோ நிகழ்ந்து விடுகின்றன. ஊனமும் அப்படித்தான். யாரும் விரும்பி ஊனமடைவதில்லை. பிறப்பாலோ, வியாதியாலோ, விபத்தாலோ எப்படியோ உடலில் ஊனம் ஏற்பட்டு விடுகின்றது. (மேலும்.....)

மார்கழி 17, 2010

பிலிப்பைன்ஸில் தாக்குதல், பத்து இராணுவ வீரர்கள் பலி

பிலிப்பைன்ஸில் இராணுவ வீரர்களைக் குறிவைத்த கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தியதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். பிலிப்பைன்ஸில் புதிய மக்கள் இராணுவம் என்ற கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினருக்கு எதிராக இராணுவ வீரர்கள் நடவடிக்கை எடுத்து வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அங்கு 18 நாள்கள் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவுள்ளது. போர் நிறுத்தம் அமுலுக்குவர உள்ள இரு தினங்களுக்கு முன்னரே இத்தகைய தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இதனால் மத்திய தீவான சமர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் தங்களது முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்து கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே 10 வீரர்கள் உயரிழந்தனர். போர் நிறுத்த அறிவிப்பை கம்யூனிஸ்ட் போராட்டக் குழுவினர் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

மார்கழி 17, 2010

சங்கானை இந்து மதக் குருக்கள் சுடப்பட்ட விவகாரம்

பாதுகாப்பு செயலரின் அறிவிப்பு தமிழருக்கு நம்பிக்கை தரக்கூடியது

கடந்த யுத்த காலத்தின் போது தமிழ் மக்களும் இந்து மதகுருமார்களும் பல் வேறு துன்பங்களுக்கு முகம்கொடுத்து வந்துள்ளனர். இவ்வாறான நிலைமையில் இன்று அமைதி சூழல் நிலவி வரும் சூழலில் இந்துமத குரு துப்பாக்கிகளால் சுட்டுக்கொல்லப்பட்டமை எமக்குள் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிகள் இரண்டும் படையினர் பாவிக்கும் துப்பாக்கிகள் என தற்போது பொலிஸாரால் இனங்காணப்பட்டுள்ளது. பொலிஸாரும், படையினரும் மேற்கொண்ட உயர் விசாரணையின் காரணமாக இர ண்டு படையினரும், ஆயுதக் குழுவைச் சேர்ந்த இருவரையும் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இத்துயரச் சம்பவத்துக்கு ஏ.கே. 47, டி 56 ரக துப்பாக்கிகளே பாவிக்கப்பட்டுள்ளன. வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் உள்ள ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை அர சாங்கம் களைய வேண்டும். அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்களிடமிருந்தும் ஆயு தங்களை களைய வேண்டும். அவ்வாறு அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பது அப் பகுதி மக்களின் வேண்டுகோளாக உள்ளது. (மேலும்.....)

மார்கழி 17, 2010

பெற்றோருடன் விளையாடும் போது குழந்தைகளின் அறிவு வளர்கிறது

குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவிடும் போது அவர்களின் சிந்தனைத் திறன் அதிகரிக்கும் என இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மார்க் லென்சன்வேகர் தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் விளையாடுதல், அவர்களோடு பேசுதல், அவர்களின் வீட்டு பாடங்களை செய்து தருதல் போன்றவற்றை செய்யும் போது குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் மன தைரியம், அதிகரித்து உடல் நலம் பெறச் செய்ய உதவும். மேலும் பிற நபர்களிடம் எளிதாக பழகும் தன்மையும் அதிகரிக்கும். அவை குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை அதிகரிப்பதோடு உலக விஷயங்களையும் கிரகித்து கொள்ளும் தன்மை உருவாகும் எனவும் தெரிவிக்கிறார். அதுமட்டுமல்லாமல் குழந்தைகளுடன் விளையாடினால் பெரியவர்களுக்கு ஏற்படும் மன குழப்பம் மற்றும் டென்ஷன் போன்றவை குறையும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.

மார்கழி 17, 2010

நிபந்தனையுடன்

சதாம் ஹு ஸைன் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் அனைத்தும் ஐ.நா பாதுகாப்பு சபையால் நீக்கம்

ஈராக் மீதான பொருளாதாரத் தடைகளை ஐ.நா. நேற்று முடிவுக்குக் கொண்டு வந்தது. ஐ.நாவின் பாதுகாப்புச் சபையிலுள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் இதற்கு ஆதரவு வழங்கின. பிரான்ஸ் மாத்திரம் நடுநிலைமை வகித்தது. நிதி தொடர்பான உத்தரவாதத்தை வழங்கும் வரை பிரான்ஸ் இதை எதிர்க் கவோ, ஆதரிக்கவோ மாட்டாதென ஐ.நா.வுக்கான பிரான்ஸ் தூதுவர் தெரி வித்தார். ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுஸைன் 1990ம் ஆண்டு குவைத்தை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து ஈராக் மீது 03 வகையான பொருளாதாரத் தடைகள் ஐ.நா. பாதுகாப்புச் சபையால் கொண்டுவரப்பட்டன. ஆயுத உற்பத்தி, ஏற்றுமதி, பொருளாதார கொடுக்கல் வாங்கல், எண்ணெய், உணவு மருந்துப் பொருட்கள் என்பனவற்றில் கடுமையான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டது. அணு, உயிரியல், இரசாயன ஆயுதங்களை ஜனாதிபதி சதாம் ஹுஸைன் உற்பத்தி செய்வதாகக் குற்றம்சாட்டியே இப்பொருளாதாரத்தடை கொண்டுவரப்பட்டது. (மேலும்.....)

மார்கழி 16, 2010

16.12.2010 ரிபிசியின் வியாழக்கிழமை அரசியல் கலந்துரையாடல்

இந் நிகழ்ச்சியில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சி சர்வேதேச அமைப்பாளர் தோழர் இ. தம்பையா ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் வி.சிவலிங்கம், ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் ஜெகநாதன், ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோர் இலங்கையின் இன்றைய அரசியல் நிலமைகள் தொடர்பாக கலந்துரையாட உள்ளனர். மாலை 8மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கலாம்

தொடர்புகளுக்கு:  00 44 208 or 078107063682

மார்கழி 16, 2010

சங்கானை வாள்வெட்டுச் சம்பவம் - சந்தேக நபர்களுடன் இராணுவத்தினரும் கைது

யாழ். சங்கானையில் பூசகர்கள் மூவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் அவர்களுக்கு ஆயுதம் வழங்கிய இராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். போதைக்கு அடிமையான இராணுவ சிப்பாய் ஒருவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கியுள்ளதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மானிப்பாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். இராணுவச் சிப்பாய்க்கு உதவிசெய்ததாகக் கூறப்படும் மற்றுமொரு இராணுவ வீரரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மார்கழி 16, 2010

பிரதமர் சிங், சிதம்பரம், கருணாநிதியை  கொலை செய்ய புலிகள் திட்டம்

இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கை கொலை செய்வதற்கு தமிbழ விடுதலைப்புலிகள் திட்டமிடுவதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று மாலை எச்சரிக்கை விடுத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் ஒன்றிணைவதற்கு முயற்சிப்பதுடன் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதல்களை தொடுப்பதற்கும் திட்டமிடுவதாக அச்செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (மேலும்.....)

மார்கழி 16, 2010

ஆனையிறவு உப்பளங்களின் உப்பு உற்பத்திகள்

ஆனையிறவு உப்பளங்களின் உப்பு உற்பத்திகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 2000 பேருக்கு வேலை வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்க முடியும் என அரசாங்கம் தெரிவிக்கிறது. இதற்கு ஏதுவாக இப்பகுதியில் சுமார் 50 ஹெக்டயருக்கும் அதிகமான நிலப்பரப்பில் புதையுண்டுள்ள கண்ணிவெடிகள், மிதிவெடிகளை அடுத்த சில வாரங்களில் முற்றாக அகற்றிவிட முடியும் எனவும் அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (மேலும்.....)

 

மார்கழி 16, 2010

தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் கதிகலங்கியுள்ள யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் தொடரும் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். யாழ். மானிப்பாய் வீதியின் ஆறுகால் மடச் சந்தியிலுள்ள வீட்டிற்குள் நேற்று நள்ளிரவுவேளையில் புகுந்த பத்திற்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய நகைகளையும் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்களை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சிறுமியொருவரை மாத்திரம் அழைத்து தங்கச்சாமான்கள் எங்கே இருக்கின்றன எனத் திருடர்கள் கேட்டுள்ளனர். பின்னர் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். கடும் மழை பெய்து கொண்டிருந்ததால் வீட்டாரின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. (மேலும்.....)

மார்கழி 16, 2010

அரசியலுக்கு அடுத்த கோமாளி தயார்?

ஒருவன், படுத்துக்கொண்டோ, உட்கார்ந்துக்கொண்டோ, நடந்துக்கொண்டோ, கனவு கான்பதையும், கற்பனை செய்வதையும் யாரும் தடுக்க முடியாது. ஆனால் நாம் காணும் கனவுக்கு ஒரு அர்த்தம் வேண்டும். அர்த்தமேயில்லாமல் கனவு கண்டு கொண்டுயிருப்பவர்கள் தற்போது அதிகமாகிவிட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் சொல்வது போல கோமளிகளுக்கும் நாடாளும் ஆசை வந்துவிட்டது. தற்போது அந்த ஆசை நடிகர் விஜய்க்கு வந்துள்ளது. யார் வேண்டுமானாலும் அரசியல்வாதியாகலாம், முதல்வர் ஆகலாம் என்பது என்ன நியாயம். அதற்கு ஒரு தகுதி, தராதரம் வேண்டாமா?. முதல்வர் பதவி என்பது என்ன வீட்டுக்கு வெளியில் போடும் கோலமா சரியில்லை என்றால் அழித்து விட்டு திருப்பி போட. (மேலும்.....)

மார்கழி 16, 2010

இயற்கையோடு இயைந்த தொழில்நுட்பம் தேவை

அது ஒரு குறிப்பிட்ட ஆதிக்கத்தின் கருவூலம் என்ற நிலை மாறி வளர்ந்த விஞ்ஞானம் ஐரோப்பாவில் 19 ஆம் நூற்றாண்டில் அரசியல் ஆதிக்கம் செய்த வணிக முதலாளிகளால் ஒரு பெரும் திருப்பத்தைச் சந்தித்தது. உற்பத்தியின் அடிப்படைக் குறிக்கோள் சமூகத் தேவை என்பது மாறி இலாப நோக்கமே அடிப்படையாகவும் தீர்மானிக்கும் கூறாகவும் மாறியது. நவீன விஞ்ஞானத்தின் உயர் தொழில்நுட்பமும் வணிகர்களின் கருவிகளாக மாற்றப்பட்டன. இத்தகு தொழில்நுட்பமே மக்களை அடிமைப்படுத்தவும் இயற்கைச் செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் பயன்படுத்தப்பட்டது. டார்வின் கொள்கையையும் இன்றைய தொழில்நுட்பச் சமூகத்தின் கணித மயமாக்கலையும் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக கூற இயலும். (மேலும்.....)

மார்கழி 16, 2010

அவுஸ்திரேலியாவுக்கு வந்த கப்பல்


கிறிஸ்மஸ் தீவில் விபத்து, பலர் நிர்க்கதி - சிட்னி


 
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் கப்பலொன்று சுண்ணக்கல் பாறையில் மோதியதில் அறுபது பேர் நிர்க்கதிக்குள்ளாகினர். இவர்களில் முப்பது பேர் கரை சேர்ந்துள்ளதாகவும் ஏனையோரை மீட்கும் பணிகள் தொடர்வதாகவும் அவுஸ்தி ரேலியப் பொலிஸார் கூறினர். அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடும் நோக்கில் கப்பலில் 60 பேர் வந்த கப்பலே விபத்துக்குள்ளானது. இதில் பெண்கள் சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களை மீட்கும் பணிகள் தொடர்கின்ற வேளையிலும் கடலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு இடைஞ்சலை ஏற்படு த்துவதாகவும் கூறிய பொலிஸார் எந்த நாட்டவர்கள் என்ற விபரங் களைக் கூறவில்லை. (மேலும்.....)

மார்கழி 16, 2010

யாழ். - கொழும்பு போக்குவரத்தில்


சட்டவிரோத சேவையில் 106 பஸ்கள்

கொழும்புக்கும் யாழ்ப் பாணத்திற்குமிடையில் 106 சொகுசு மற்றும் அரைச் சொகுசு பஸ்கள் சட்ட விரோதமாக சேவையில் ஈடுபட்டுள்ளன. இவற்றுக்கு சட்டபூர்வமான அனுமதி வழங்க நடவடிக்கை எடுத் துள்ளோம். இதற்காக கேள்வி மனு கோரப்பட்டது. இதன்படி சொகுசு பஸ்களுக்கு 11 இலட்சம் ரூபாவும் அரைச் சொகுசு பஸ்களுக்கு 7 இலட்சம் ரூபாவும் பஸ் உரிமையாளர் செலுத்த வேண்டும். மாட்டு வண்டி முதல் விமானம் வரை தனியார் போக்குவரத்து அமைச்சின் கீழே வருகிறது. அவை தொடர்பில் தனியான செயல்முறையொன்றை அமைக்க உள்ளோம். (மேலும்.....)

மார்கழி 16, 2010

சீனப் பிரதமர் இந்தியா வருகை


திபெத் ஆதரவாளர்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

சீனாவின் பிரதமர் வென் ஜியாபோ நேற்று இந்தியா வந்து சேர்ந்தார். இவருடன் சுமார் 400 வர்த்தகப் பிரமுகர்களும் வந்தனர். முற்றிலும் வர்த்தக நோக்கத்தை அடிப்படை யாகவுடைய இந்த விஜயத்தில் பல விடயங்களும் பேசப்படவுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பிரான்ஸ் ஜனாதிபதி நிக்க லஸ் சர்கோஸி ஆகியோரும் அண் மையில் இந்தியா வுக்கு வர்த்தக நோக்கிலான விஜய த்தை மேற் கொண்டிருந்தனர். இவர்களுடனும் அமெரிக்க, பிரா ன்ஸ் வர்த்தகத் தலைவர்கள் வந்திரு ந்தனர். ஆனால் இவற்றையும் விடக் கூடுத லான வியாபாரப் பிரதநிதிக ளுடன் சீனப் பிரதமர் இந்தியா வந்துள்ளார். (மேலும்.....)

மார்கழி 16, 2010

பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை

முன்னாள் வெளிவிவகார அமை ச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினை வுப் பேருரையை ஆற்றுவதற்காக பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ் இலங்கை வரு கிறார். திருமதி சுகந்தி கதிர்காமரின் அழைப்பின்பேரில் லியாம் பொக்ஸ் வருவதாக லக்ஷ்மன் கதிர்காமர் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் தினகரனுக்குத் தெரிவித்தார். சனிக்கிழமை லக்ஷ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரையை இவர் நிகழ்த்துவார்.

மார்கழி 16, 2010

ஐவரிகோஸ்டில் அரசியல் முரண்பாடு

கபகோ, குவற்றா அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள நேச உடன்படிக்கை?


ஐவரிகோஸ்ட்டில் இரண்டு வேட் பாளர்களும் வெற்றிக்கு உரிமை கோரி பதவியேற்றதால் பெரும் பிளவுகள் தலைதூக்கின. இதை முடித்து வைக்கும் பொருட்டு சென்ற செவ்வாய்க்கிழமை இரண்டு வேட்பாளர்களையும் இணங்கிச் சென்று நேச அணியை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கூட்டம் நடந்த ஹோட்டலைச் சுற்றி கபகோ, குவற்றா ஆகியோரின் ஆதரவாளர்களும் திரண்டு வந்தனர். முன்னாள் ஜனாதிபதி கபகோ, கெரில்லா அமைப்பின் தலைவர் குவற்றா ஆகியோர் அண்மையில் நடந்த தேர்தலில் போட்டியிட்ட போதும் இருவரும் வெற்றியை உரிமை கோரி னர். அரச இயந்திரங்களின் ஒரு பகுதி யை கபகோவும் ஏனைய பகுதியை குவற்றாவும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டனர். ஐரோப்பிய யூனியன் கபகோவை ஆதரித்தது செவ்வாய்க்கிழமை கபகோ தனது இராணு வத்தை குவற் றாவின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்தினார்.

மார்கழி  2010

போர்க்குற்றவாளிகளை இனங்காட்டுவோம்! வாருங்கள்

புலிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்கள் கோரப்படுகின்றன. கடந்தகாலங்களில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் வெளிக் கொணரப்படுகின்றன. பல போர்க்குற்றங்கள் புரிந்த புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளில் வாழுகின்றனர். இவர்கள் மேல் போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும். பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜாவைக் கொன்ற றிச்சாட் இன்று பிரான்ஸ் நாட்டில் வாழுகின்றார். (மேலும்.....)

அனுப்பவேண்டிய முகவரி :
panelofexpertsregistry@un.org

மார்கழி  2010

மார்கழி 13 ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த நாள். பிரபாகரனின் ஏகதலைமை ஆசை, வெறி ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடைசெய்துவிடும் முடிவுக்கு புலிகளை தள்ளிய நாள்.

மார்கழி 13 ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் கறைபடிந்த நாள். பிரபாகரனின் ஏகதலைமை ஆசை, வெறி ஈபிஆர்எல்எவ் இயக்கத்தை தடைசெய்துவிடும் முடிவுக்கு புலிகளை தள்ளிய நாள். ஈபிஆர்எல்எவ், ஈரோஸ், ரெலோ ஆகிய அமைப்புக்களுடன் ஈழ தேசிய விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பில் சேர்ந்திருந்து கொண்டே புலிகள் 1986 டிசம்பர் 13 ம் திகதி முன்னிரவில் ஈபிஆர்எல்எவ் ற்கு எதிராக தமது துப்பாக்கிகளை உயர்த்தினர். தமிழ் மக்களின் விடிவிற்காக அர்ப்பண உணர்வோடு உழைத்த பல ஆயிரக்கணக்காகன தோழர்களை கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்தனர் பலரை சுட்டுக்கொன்றனர். ஏற்கனவே 1986 முற்பகுதியில் ரெலோ இயக்கத்தை அழித்தொழிக்கும் முயற்சியில் பல ரெலோ அங்கத்தவர்களை உயிரோடு தீயில் கருக்கினர். பின்னர் புளொட் இயக்கத்தை தடைசெய்வதாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுத்தனர். இறுதியாக ஈபிஆர்எல்எவ் மீதான தாக்குதலை தொடுத்தனர் அன்றிலிருந்து இன்று வரை ஆயிரக்கணக்கான ஈபிஆர்எல்எவ் தோழர்கள் புலிகளின் அதிகார வெறிக்கு இரையாகி வி;ட்டபோதும் பல ஆயிரக்கணக்கான தோழர்களின் உழைப்பாலும், உதிரத்தாலும் ஸ்தாபிக்கப்பட்ட ஈபிஆர்எல்எவ் இன் மூச்சை நிறுத்தும் புலிகளின் நோக்கம் நிறைவேறவில்லை. (மேலும்.....)

மார்கழி 15, 2010

வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதா?

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தவுடன், நாட்டு மக்களிடம் பேசிய ஜனாதி பதி மகிந்தா ராஜபக்சே, இந்நாட்டில் உள்ள தமிழ்மக்கள் அனைவரும் என் மக்கள் என்றும், அவர்களது புனர்வாழ்வுக்கு பல்வேறு திட்டங்களை வைத்துள்ளேன் என்றும் கூறினார். ஆனால் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில்